கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: பிறமொழிச் சிறுகதைகள் சில

Page 1


Page 2

பிறமொழிச் சிறுகதைகள் சில
கே.எஸ். சிவகுமாரன்
மீரா பதிப்பகம் 191/23, ஹைலெவல்வீதி, கொழும்பு - O6.

Page 3
நூலின் பெயர்
மீள் கூறல்
பதிப்புரிமை
முதற்பதிப்பு
நூல் கிடைக்குமிடம் :
பதிப்பு
அச்சிட்டோர்
பிறமொழிச் சிறுகதைகள் சில
கே.எஸ். சிவகுமாரன்
ஆசிரியருக்கே
0.1-10-2007
21, முருகன் பிளேஸ் கொழும்பு -06. TPhone : 01-94-11-2587617 Mobile: 07796.06283
மீரா பதிப்பகம் (67ஆவது பதிப்பு) 191/23, ஹைலெவல் வீதி கிருலப்பனை, கொழும்பு 06. T'Phone : O112513336
பேஜ் அண்ட் இமேஜ் 202/2B, றோயல் பேர்ல் கார்டின்ஸ் வத்தளை TPhone : OI-94-11-4959661 Mobile: 0777886238
ரூபா.100/=

This book is dedicated to my young grandchidren who live in Cincinatti, USA and Melbourne, Australia: Maya, Shyama, Jay Kiran and Meera.
அமெரிக்காவிலும் (சின்சினாட்டி) அவுஸ்திரேலியாவிலும் (மெல்பர்ன்) வசிக்கும் எனது இளம் பேரப்பிள்ளைகளான மாயா, வுரியாமா, ஜே கிரண், மீரா ஆகியோருக்கு இந்நூல் சமர்ப்பணம்

Page 4

என்னுரை
அன்புடையீர்!
இத்தொகுப்பில் இடம்பெறும் பதினொரு சிறுகதைகளும் பிறமொழிக் கதைகளின் தமிழாக்கங்களாகும். 1960கள் தொடக்கம் 1980கள் வரை வெளிவந்த எனக்குப் பிடித்த பிறமொழிக் கதைகளுள் சிலவற்றை மாத்திரம் தெரிந்து அவற்றை அக்காலப்பகுதியிலேயே தமிழாக்கம் செய்து, ‘தமிழின்பம்’, ‘மித்திரன் வாரமலர்’ போன்ற இதழ்களில் வெளிவரச் செய்தேன்.
சில கதைகளை முழுமையாகவும், சிலவற்றைத் தமிழ் வாசகர்கள் எளிதில் புரிந்து கொள்ளுமுகமாகச் சுருக்கமாகவும் தந்துள்ளேன்.
கே.எஸ். சிவகுமாரன் என்ற பெயரில் என்னை வாசகர்கள் அறிந்து கொள்வதற்கு முன்னர், அந்நாட்களில் (1966க்கு முன்னர்) எஸ். சிவகுமார், எஸ். சிவகுமாரன், ஈஸ்வரபுத்ரா, ரேவதி, விலோச்சனி போன்ற பெயர்களில் எழுதியிருந்தேன்.
இக்கதைகள் வெளிவந்த பத்திரிகைகளைத் தேடிப் படிப்பீர் களாயின் எனது இந்த மொழிபெயர்ப்புக் கதைகள், எஸ். சிவகுமாரன், ஈஸ்வரபுத்ரா என்ற பெயர்களில் வெளியாகி யிருப்பதை அறிவீர்கள்.
சில பிறமொழிக் கவிதைகளையும் நான் தமிழில் தந்திருக்கிறேன். ஆங்கிலத்தில் எழுதப்பட்ட சில திறனாய்வுக் கட்டுரைகளையும் தமிழில் தந்துள்ளேன். அதே போல சில ஆங்கிலக் கவிதைகளைத் தமிழிலும், சில தமிழ்க் கவிதைகளை ஆங்கிலத்திலும் தந்துள்ளேன்.
இந்த விபரங்களை இங்கு குறிப்பிட்டதன் நோக்கம், இவை பதிவாக இருக்க வேண்டுமென்பதற்காகவும், பிற்கால ஆய்வாளர்களுக்கு உதவுமுகமாகவுமே.
5

Page 5
இந்த நூலைப் பதிப்பித்தமைக்காக நண்பர்கள் ஆ இரத்தின வேலோன், ரஞ்சகுமார் ஆகியோருக்கு நன்றி தெரிவிக்கிறேன்.
மீரா பதிப்பகத்தினரின் 67ஆவது வெளியீடாக வெளிக் கொணரப்படும் இந்நூல் அவர்களது வெளியீட்டில் வரும் எனது பத்தாவது நூல் என்பது குறிப்பிடத்தக்கது.
மீரா பதிப்பகத்தினர் இதனை வெளியிட்டிருக்கும் அதே வேளையில் இந்த நூலை எனது முகவரியிலிருந்து நேரிற் பெற்றுக் கொள்ளலாம் என்பதையும் இங்கு தெரிவிக்க விரும்புகிறேன்.
எனது முகவரி :
K.S. Sivakumaran
21, Murugan Place,
(Off) Havelock Road, Colombo - 06.
Tel:(011-94-11) 2587617
Mobile : 07796.06283 e-mail : sivakumaranks Gyahoo.com
அன்பு மறவாத கே.எஸ்.சிவகுமாரன் ஒக்டோபர் 01,2007

υπΠGστGτυ
புளிப்பும் இனிப்பும்
கல்யாணத்துக்கு முன்னமே அவர்கள் காதலித்து மணம் செய்து கொண்டனர்.
கடற்கரையில்--
விண்ணகத்துத் தாரகைகள் தண்ணொளியை மண்ணகத்தே பாய்ச்சும் வேளையில் அவர்கள் முதன் முதல் ஒருவரை யொருவர் சந்தித்தனர். ‘கண்டதும் காதல்’ என்பார்களே, அதுதான் அவர்களுக்கும் நடந்தது.
வண்ணக் குடை பிடித்து, புத்தம் உடை தரித்து தன்னருகே ஒயிலாகச் சென்ற அந்த ரோஜா நிறக் கன்ன அழகியை அவன் கண்டான். அவள் நளின அசைவுகளில் பெண்மையின் மென்மையைக் கண்டான்.
தன்னழகைப் பார்த்து
அவன் இரஸிப்பதை அவள் கண்டாள். இளமைத்துடிப்பும் உயர் குடும்பத்தில் பிறந்த களையும் அவன் வதனத்தில் தாண்டவமாடுவதைக் கண்டாள். அவனை அவள் விரும்பி னாள். அவன் இனிக்க இனிக்கப் பேசினான். இவள் சொக்குப் பொடி போட்டாற் போன்று சிந்தை கிறங்கினாள்.
அதன் பின் --
கீடி மோப்பஸான்

Page 6
பிறமொழிச் சிறுகதைகள் சில
மூன்று மாதங்களாக--
அவர்கள் இல்லற வாழ்வு இனித்தது. துயிலில் ஒருவரை ஒருவர் நினைத்து இன்பக் கனவுகள் கண்டனர். தத்தம் மனதை வெளிக்காட்டாமல் உள்ளத்தாலும் உடலாலும் விரும்பினர். முதலில் உடல் ஐந்திரியங்களின் உறவை நாடும் சலிக்காத உத்வேக உணர்ச்சிப் பிளம்பம்! பின் பாராட்டத் தக்க மென்மையான உணர்வு! நாகுக்கான ஸ்பரிசம்! அதன் பின் புதுமையான பரிகசிக்கக் கூடிய கற்பனைகள்! அவர்களது செயலும் பார்வையும் அவர்களது உணர்ச்சி மேலிட்டை மேம்படுத்தின. முன்னைய இரவின் உறவில் இருந்து தெளிவடையாத மந்தகாசமான தோற்றத்தை அவர்கள் மறுநாள் கொண்டிருந்தனர். இதுதான் அவர்கள் உறவு!
ஆனால்!
நாட்கள் செல்லச் செல்ல அவர்கள் களைப்படைந்தனர். தம்மையறியாமலே, வெளிச் சொல்லாமலே ஒருவரை யொருவர் சலிக்கத் தொடங்கினர். பாலும் புளிக்குமாமே! காதற் பாலம் அவர்களை இணைத் திருந்தது என்பது உண்மையே! ஆனால் புதிதாகத் தம்மைப் பற்றி எடுத்துச் சொல்ல, புதிதான உணர்ச்சிகளைக் காட்டிக்கொள்ளப் புதிதாக அறிந்து கொள்ளப் புதிதான காதற் காவியங்களை உருவாக்க, அல்லது பழைய சொல்லுக்குப் புதிய கருத்துக் கொடுக்க, புதுத் தொடர்களைப் புனைய முடியாமற் தத்தளித்தனர்.
அணைந்து போகவிருக்கும் தமது முதற் காதற் தீபத்தைத் தூண்டிவிட அவர்கள் என்னவோ முயற்சித்தனர். விவாகமான முதல் நாட்களில் தாம் அனுபவித்த அந்த இன்ப நாட்களை நினைவு கூருவதற்காக ஒவ்வொரு நாளும் புதிய புதிய உத்திகளைக் கையாண்டனர். பயன் தந்தாற்தானே?
திங்களின் தங்க முலாம் பூசிய மரங்களிடையே நடந்து பார்த்தனர். மாலை வேளைகளில் உலாப் போந்தனர். பனிப்படலம் நிறைந்த கடற்கரைகளில் பவனி வந்தனர். புதுக்

கே.எஸ். சிவகுமாரன்
கேளிக்கைகளில் கலந்து கொண்டனர். ஒரு சில மணி நேரக் களிப்புக்குப் பின் மீண்டும் வெறுப் பெய்திய நிலையை அடைந்தனர்.
ஒரு நாள் காலை!
போளிடம் மனைவி கேட்டாள்:
“இரவுச் சாப்பாட்டிற்கு ஒரு உண்டிச்சாலைக்கு என்னை அழைத்துச் செல்கிறீர்களா?”
"ஏன்? ஆமாம் என் கண்ணே! கட்டாயம் அழைத்துச் செல்கிறேன்.”
“பிரபலமான ஒரு ‘கபேக்குக் கூட்டிச் செல்லவேண்டும், ஹற்ம்?"
“grf) 9y
"அந்த மாதிரியான ‘கபே. ஊஹூம் நான் மாட்டேன்!- இல்லை ஆண்களும் பெண்களும் சந்திக்கும் களியாட்டக் 'கபே' க்குத் தான் அழைத்துச் செல்ல வேண்டும்-சரியா?”
குறுநகை அவன் உதடுகளில் நெளிந்தோடிற்று.
"ஆமாம் புரிகிறது! ஒரு பெரிய பிரபல ‘கபே'யில் பிரத்தியேகமான ஒரு தனி அறை. பொஹிமியன் டைப் தானே?”
"ஆமாம் அதுதான். ஆனால் உங்களைத் தெரிந்த இடத்துக் குத்தான் போக வேண்டும். அதாவது-நீங்கள் உண்டுறங்கிய ஹற்ம். உங்களுக்குத் தெரியுந்தானே மிகுதி- மாட்டேன். நான் சொல்ல மாட்டேன்."
“வாய் திறந்து சொல் கண்ணே நமக்கிடையில் இரகசியம் என்ன? மற்றவர்களைப்போல் நாமும் ஒருவர் இரகசியத்தை மறைத்து வைக்க முடியுமா?”
“grf)..... சொல்கிறேன் ! ஒ சரி! நான். நான். உங்களுடைய கள்ளக்காதலி போல் நடிக்க விரும்புகின்றேன்.

Page 7
பிறமொழிச் சிறுகதைகள் சில
ஹொட்டேல் சிப்பந்திகளும் அவ்வாறே நம்பவேண்டும். ஒரு மணிநேரத்திற்கு நீங்கள் என்னுடன் கொஞ்சிக் குலாவ வேண்டும். நீங்கள் அனுபவித்த பழைய . பழைய இன்ப நாட்கள். உங்களுக்கு அங்கு வராமலாபோகும்?. என்னைப் பார்க்காதீர்கள்! வெட்கமாய் இருக்கிறது.”
உள்ள நெகிழ்ச்சியுடன் சிரித்துக் கொண்டே அவன் பதிலளித்தான்.
"ஆம் இன்றிரவு நாங்கள் இருவரும் அங்கு போவோம். என்னை நன்கு தெரிந்த இடத்திற்கே போவோம்."
பூலேவாட் என்னும் இடத்திலுள்ள ஒரு சாப்பாட்டு விடுதியின் படிகளில் அவர்கள் இருவரும் கால் வைக்கும் பொழுது ஏழு மணி! வெற்றிப் பெருமிதத்துடன் அவன் நடந்து செல்ல, அவள் சிரித்துக் கொண்டே விஷமத்துடனும் வெகுளித் தனத்துடனும் அவன் கூடவே சென்றாள்.
சல்லாப அறை ஒன்றினை அவர்களுக்குக் காட்டினான் சிப்பந்தி சிவப்பு வெல்வெட் மெத்தை தைத்த ஒரு பெரிய சோபாவும், நான்கு பெரிய கதிரைகளும் அந்த அறையில் இருந்தன. உண்டிகளின் பட்டியலை போளிடம் நீட்டினான் சிப்பந்தி அதை அவளிடம் கொடுத்து விட்டு,
“என்ன சாப்பிட விரும்புகிறாய்?"
“ஏதேனும் நல்லதாகக் கொண்டுவரச் சொல்லுங்கள்” கோட்டைக் கழட்டி சிப்பந்தியிடம் கொடுத்து விட்டுக் கூறினான்:- "விஸ்கி-சூப்-உரித்த கோழிக்குஞ்சு-முயலின் பாகம் ஒன்று - வாத்து-மரக்கறி ஸலட் - டெஸேட்-சம்பேனும் கொண்டு வா."
அந்த இளம் சீமாட்டியைப் பார்த்துக் கொண்டே சிப்பந்தி கேட்டான்:
"போள் சீமான் அவர்களே! சம்பேனை இனிப் பாகக் கொண்டு வரட்டுமா? வேண்டாமா?”
10

கே.எஸ். சிவகுமாரன்
“வேண்டாம், வெறுமனே கொண்டு வா”
தனது கணவனின் பெயரைச் சிப்பந்தி அறிந்திருக்கிறான் என்றறிந்து அவளுக்குப் பெருமையாய் இருந்தது.
இருவரும் ஸோபாவில் அமர்ந்து உணவருந்தத் தொடங்கினர். அறையில் இருந்த பத்து மெழுகு திரிகளின் வெளிச்சம் அங்கிருந்த நிலைக்கண்ணாடியில் பிரதிபலித்து ஒளியைப் பன்மடங்காகக் காட்டியது.
ஹேரனியெடா கிளாசுக்கு மேல் கிளாசாக மதுவைக் குடித்துத் தள்ளினாள், முதலாவது கிளாஸ் அருந்தியவுடனேயே அவளுக்கு மயக்கம் ஆரம்பித்து விட்டது.
பழைய ஞாபகங்கள் வரப்பெற்றதும் மனைவியின் கரத்தைப் பற்றி அவன் அடிக்கடி கொஞ்சினான். அவள் கண்கள் ஒளி யைக் கக்கின. நடக்கும் சம்பவங்களினால் அவள் பூரிப்படைந்து போனாள்.
இரண்டு சிப்பந்திகள் அங்கு வருவதும், நடைபெறும் காட்சிகளைக் காண்பதும், பின் அவற்றை மறந்து வெளியில் போவதும், பின் மெதுவாக அறைக்குள் நுழைவதுமாக இருந்தார்கள்.
சாப்பாட்டில் பாதி முடிந்திருந்தது. அவள் குடிவெறியில் பிதற்றத் தொடங்கினாள். அவள் முழந்தாள்களை போள் தன் பலங்கொண்ட மட்டும் அமுக்கினான். கண்கள் துஞ்ச, கன்னங்கள் சிவக்க, போதையில் அவள் மழலை பயின்றாள்.
"கண்ணா! என்னிடம் எல்லாவற்றையும் கூறிவிடுங்கள்.”
“என்னத்தைக் கூறவேண்டும்?”
"நான் சொல்லித்தானா தெரியவேண்டும்?"
"நீ. சொல்லாமல். பின்."
“உங்களுக்குக் கள்ளக் காதலிகள்.எனக்கு முன்னமே. பல காதலிகள் இருந்திருக்கிறார்களா?”
11

Page 8
பிறமொழிச் சிறுகதைகள் சில
அவனுக்கு ஒரு கணநேரம் தயக்கம். உண்மையை மறைப்பதா அல்லது புளுகுவதா என்று தெரியவில்லை.
"ஐயோ! சொல்லுங்களப்பா எத்தனை பெண்களைக் காதலித்தீர்கள்?" - சிணுங்கினாள் அவள்.
“கொஞ்சப் பேர் தான்!”
“எத்தனை பேர்?"
"நான் எண்ணிப் பார்க்கவில்லை.”
"அப்படியென்றால் பலபேரைக் காமுற்றிருக்கிறீர்கள் என்று சொல்லுங்கள்!"
"அப்படி வேண்டுமானால் வைத்துக் கொள்ளேன்!”
"அப்படியென்றால்நூறு பெண்களுக்கு மேல் காதலித்திருக் கிறீர்கள், அப்படித் தானே?”
"இருக்கலாம்!”
“எனக்கு விரசமாய்ப் படுகிறது.”
"ஏன் விரசமாய்ப் படவேண்டும்?"
"அது விரசமான செயல் என்பதால் தான். அந்தப் பெண்களை நினைக்கும் போது. ஐயோ. எல்லோரும் அதே ரகப் பெண்கள்.”
அவள் 'விரசமான செயல்’ என்று குறிப்பிடுவது அவனுக்கு ஆச்சரியத்தைக் கொடுத்தது.
"ஆமாம். அது விரசமான செயல் தான், நூறு பெண்களைக் காதலிப்பது அசிங்கமானதென்றால் ஒரு பெண்ணைக் காதலிப்பதும் அசிங்கமானதுதான்!”
"ஊஹம்! ஒருநாளும் இல்லை!"
“ஏனோ?”
“ஒரு பெண் என்றால் தான் உண்மைக் காதல் நிலவும். அவளும் உங்களை உண்மையாகவே நேசிப்பாள். நூறு
- 12

கே.எஸ். சிவகுமாரன்
பெண்களுடன் அந்தக் காதற் பாலத்தை இணைக்க முடியாது. அவர்கள் தங்கள் உடல்களை விற்பவர்கள். அவர்களிடம் கெட்ட நடத்தையையும், காம விகாரத்தையும் தான் காணலாம். இப்படிப்பட்ட பெண்களுடன் எப்படித்தான் மனிதர்கள் உறவாடுகிறார்களோ!”
"அவர்கள் அப்படியொன்றும் அசுத்தமுள்ளவர்களல்லர்”
'துர்நடத்தையுள்ளவர்கள், பின் என்னவாம்"
"அவர்களது தொழில் அவர்களைச் சுத்தமாக வைத்திருக்கச் செய்கிறது.”
"நேற்று வேறொருவருடன் களித்த இரவை நினைத்துப் பார்த்தாலோ?”
“அதொன்றும் பிரமாதமில்லை. இன்று காலையில் யாரோ குடித்த கிளாசில் இப்பொழுது நான் குடிக்கிறேனே.”
உங்களுக்கு வெட்கமில்லை. இப்படியெல்லாம் ........ نئی““ பேசாதீர்கள். அமைதியாய் இருங்கள். நீங்கள் ஒரு புரட்சிக் காரர்.”
"நீ தானே எனக்கு எத்தனை கள்ளக் காதலிகள் என்று கேட்டுத் தொலைத்தாய்?"
"பொறுங்கள் ஒரு மலரிலிருந்து இன்னுமொரு மலருக்குத் தாவும் பொழுது வேடிக்கையாய் இருக்குமோ?”
"மிகவும் வேடிக்கையாய் இருக்கும்” கரங்களில் இருந்த விலையுயர்ந்த மதுபானத்தை ஒரே மூச்சாகக் குடித்துவிட்டு கிளாசை மேசையில் வைத்தாள். பின் கைகளிரண்டையும் சேர்த்து அவன் கழுத்தைக் கட்டிக் கொண்டாள். அவன் முகத்துக்கெதிரேதன் முகத்தை வைத்துக் கொண்டு.
"என்னுயிர்க் காதலனே! நான் உன்னை எவ்வளவு காதலிக்கிறேன் என்பதை நீ அறிவாயா?”
13

Page 9
பிறமொழிச் சிறுகதைகள் சில
அவளை இறுகத் தழுவிக் கொண்டான் அவன்.
அறைக்குள் பிரவேசித்த சிப்பந்தி காதலரின் நிலைகண்டு கால்களைச் பின்னுக்கிழுத்துக் கதவைத் தாளிட்டான். ஐந்து நிமிட நேரத்துக்குச் சிப்பந்திகள் எவரது உதவியுமே அந்தத் தம்பதிகளுக்குத் தேவையில்லாமல் இருந்தது.
கடைசியாக "டெஸேட் கொணர்ந்து வைத்தான் வெயிட்டர். அவள் கரத்தில் இன்னுமொரு கிளாஸ் மது இருந்தது. துல்லிய மஞ்சள் நிறமுள்ள அந்தப் பானத்தின் அடியில் ஏதோ கண்டறியாத காட்சிகளைத் தான் கண்டு விட்டதுபோல் பார்த்து நின்றாள். பின் ஏதோ நினைத்துக் கொண்டு முணுமுணுத்தாள்.
"ஆமாம் - எப்படியும் அது வேடிக்கையாய்த்தான் இருக்கும்!”
தமிழின்பம் ofThref 1961
- 14

g O பரானாஸ்
பரஸ்பர உடன்படிக்கை
இளமை பூத்துக் குலுங்கும் எழில் சீமாட்டி அவள் சென்ற கோடையில் தன் கணவனை வியன்னா நகரில் விட்டுவிட்டுத் தான் மாத்திரம் கார்ன்ஸ் பாட் என்னும் இடத்திற்குப் போயிருந்தாள். நாகரிகம் நடமாடும் அத்தகைய இடத்திற்குத் தனியாக அவள் போவது ஒன்றும் ஆச்சரியமில்லை! ஒத்த வயதுடைய பெண்கள் பலரும் அப்படித்தான் நடந்து கொள்வார்கள்.
சதாசிரிப்புடன் காணப்படும் அவள் இளம் கணவன் நல்ல அழகன். 'கிளப்"புகளுக்கும், குதிரைப் பந்தைய மைதானத்திற் கும், தியேட்டர்களின் 'கிரீன்ரூம்களுக்கும் அவன் செல்வது வழக்கம். மயக்கும் அழகுடைய அந்த மோஹன வல்லியோ ஒப்பராக்களுக்கும், மாரிகாலங்களில் தெற்கு ஐரோப்பா விற்கும், கோடையில் நாகரிகமான நீர்த்தேங்கல் இடங்களுக் கும் போவது வழமை.
இப்பொழுதும் கோடையைக் கழிக்கத்தான் கார்ன்ஸ்பாடி ற்கு வந்திருக்கிறாள். துணைக்குப் போலந்து இளைஞன் ஒருவனையும் கூட்டிவந்திருந்தாள். அவனும் பிரபு வம்சத்தின னாயினும், அடிமைபோல் அவளுக்குத் தொண்டுகள் புரிந்து வந்தான். சகல உரிமைகளுடனும் அவன் பழகத் தவறவு மில்லை. அவள் காதலன் அவன்.
கீடி மோப்பஸான்
15

Page 10
பிறமொழிச் சிறுகதைகள் சில
நகருக்கருகாமையிலுள்ள வட்டாரம் ஒன்றில் சிறிய வீடொன்றை வாடகைக்கு எடுத்துக் கொண்டாள். வேண்டிய தளபாடங்கள் எல்லாம் வாங்கிப் போட்டுத் தன் காதலனைத் தினமும் சந்தித்து வந்தாள்.
தனது வாடகை வீட்டில் காதலனைப் போய்ச் சந்திப்பது மாரிகாலங்களில் அசெளகரியமாயிருந்தது. எனவே அவனைத் தன் வீட்டிற்கே வரவழைக்க எண்ணினாள். அது எப்படி சாத்தியமாகும்?
அந்த போலந்து வாலிபன் பெண்மையின் மென்மையைத் தன்னகத்தே கொண்டிருந்தான். வீனஸின் சாயலையுடைய பக் குஸ் போன்று அழகாக இருந்தான். தனது காதலன் பெண்ணைப் போலிருப்பதால் அவனுக்குப் பெண்கள் அணியும் உடையணிவித்துத் தன் வீட்டிற்கு வரவழைப்பது என்று கங்கணம் கட்டிக்கொண்டாள். மாரிகாலத்தில் தடித்த உடைகள் அணிவது சந்தேகத்தைக் கிளப்பாததாகையால் சில தடித்த உடைகளை வாங்கிக் கொண்டாள்.
பின்
ஒரு இளம் போலிஷ் யுவதி தன்னைப் பார்ப்பதற்காக அடிக்கடி தங்கள் வீட்டிற்கு வருவாள் என்று ஒரு நாள் தன் கணவனிடம் கூறினாள். அதனை அலட்சியமாகவே அவள் கணவன் கேட்டான். தனது மனைவியின் சினேகிதிகளோடு எதுவித சரஸமும் ஆடுவதில்லை என்று அவன் எண்ணியிருந்த தால், தன் மனைவியின் கூற்றை அவன் பொருட்படுத்தவில்லை. வழக்கம் போலவே கிளப்புகளுக்கு அவன் போகலானான்.
கணவன் வெளியில் போய் அரைமணி தானாகியிருக்கும்! உள்ளே அவள் காதலன் பெண் உருவில் உட்புகுவான். இப்படியே அவர்கள் தொடர்பு வளர்ந்து வரலாயிற்று. பெண் உடை அவனை உண்மைப் பெண் போலவே ஆக்கிவிட்டது.
வீதிகளில் அவன் பெண்ணுடையில் திரியவும் தலைப் பட்டான். பிரபுக்களும் சீமான்களும் அவன் கடைக்கண்
16

கே.எஸ். சிவகுமாரன்
வீச்சுக்கு ஏங்கித் தவம் கிடந்தனர். அவனைப் பின் தொடர்ந்தனர். அவர்களை ஏமாற்றி வருவதில் அவன் பெருமகிழ்ச்சி கொண்டான்.
ஒருநாள்
அந்தப் போலிப் பெண் ஒப்பராத் தியேட்டருக்குள்ளேயே புகுந்துவிட்டான்.
பொக்ஸ் சீட்டில் தனியாக அமர்ந்துகொண்டு நாடகத்தை இரசித்துக்கொண்டிருந்தான்.
அவனுக்கெதிரிலிருந்த ஆணழகன் ஒருவன் இவளை இவனை) வைத்த விழி வாங்காமல் பார்த்துப் பிரமித்திருந் தான். 'கண்டதுமே காதல்’ என்பார்களே? அதுதான்! அந்த அழகன் தன்னையே பார்த்துக் கொண்டிருப்பதைக் கண்ட 'இவள் அவனை மயக்கும் விதத்தில் மோகனப் புன்னகை பூத்தாள்.
மூன்றாவது காட்சி முடிந்ததும் வெயிட்டர் இந்தப் போலி வீனஸுக்கு ஒரு பூச்செண்டும் ஒரு கடிதமும்கொண்டு வந்து கொடுத்தான். அந்தக் கடிதத்தில் பின்வருமாறு பென்ஸிலால் எழுதப்பட்டிருந்தது.
“உலகிலேயே தலை சிறந்த அழகி நீதான். எனக்கு ஒரு பேட்டியளிக்குமாறு முழந்தாளில் நின்று வேண்டுகின்றேன்.”
போலிப் பெண்ணாகிய அந்தப் போலந்து தேசத்தவன் விஷமமாகச் சிரித்து விட்டு வலஸ்கா’ என்று அச்சடிக்கப்பட்ட கார்டில் "நாடகம் முடிவுற்றதும்” என்று எழுதிக் கொண்டு வந்தவனிடமே கொடுத்தான்.
நாடகம் முடிந்ததும் இவள்” வெளியே வந்து வண்டியில் ஏறினாள். 'இவளுக்காக அங்கு காத்திருந்த அந்த வாலிபன் தலையிலிருந்து தொப்பியை எடுத்துக் கொண்டு வண்டியின் கதவை அவனுக்காகத் திறந்துவிட்டான். 'இவள் ஏறிக் கொண்டாள். அவனையும் ஏற்றிக்கொண்டாள். இருவரும் மிக அன்னியோன்னியமாக இனிக்க இனிக்கப் பேசிக்கொண்டே போனார்கள்.
17

Page 11
அதன் பின்பு
தினமும் இந்தப் புதிய காதலர்கள் இருவரும் சந்தித்து வந்தனர்.
O O O
பின் ஒரு நாள்
எதிர்பாராத சம்பவம் ஒன்று நடந்தது.
போலிஷ வாலிபன் தனது நிஜ உருவில் தனது காதலியாகிய அந்த வியன்னா நகரச் சீமாட்டியுடன் அவள் வீட்டில் சல்லாபித்திருக்கும் பொழுது, சீமாட்டியின் கணவன் உள்ளே வந்துவிட்டான். வந்த கணவன் திகைப்பினாலும் பொறாமை யினாலும் வெகுண்டெழுந்தான். கட்டிய மனைவியுடன் பிற புருஷன் சல்லாபிப்பதை எவன்தான் பொறுத்துக் கொள்வான்? தன் மனைவியை கண்டதுண்டமாக வெட்டிப்போடவேண்டும் என்றெண்ணி சுவரில் மாட்டியிருந்த்கத்தியை உருவி எடுத்தான். இதற்கிடையில் அந்தப் பெண் மயங்கி அருகில் இருந்த சோபாவில் விழுந்தாள்.
போலிஷ் வாலிபன் சட்டென்று பெண்ணுடையில் புகுந்து கொண்டான். தன் முன் நின்ற “பெண்ணைக் கண்டு பிரமித்த அந்தக் கணவன் -
“இது எல்லாம் என்ன வலஸ்கா?’ என்றான்.
“ஆமாம் ஐயா ஒரு சில காதற் கடிதங்களைத் தங்கள் மனைவியிடம் காட்டலாமென்று’ என்று கூறி நிறுத்திக் கொண்டான் இந்தப் போலிப் பெண்ணான போலிஷ் வாலிபன்.
“வேண்டாம், வேண்டாம். அது ஒன்றும் வேண்டிய தில்லை” என்று ஏமாந்த அந்தக் கணவன் நெஞ்சம் குறுகுறுக்க வேண்டிக் கொண்டான். எங்கே தான் எழுதிய கடிதங்களை இந்தப் போலிப் பெண்’ தன் மனைவியிடம் காட்டி விடுவாளோ என்ற பயம் அவனுக்கு. கத்தியையும் பழையபடி உறையில் போட்டு சுவரில் மாட்டி விட்டான்.
18

கே.எஸ். சிவகுமாரன்
தியேட்டரில் ஒரு வாலிபனை மயக்கினாளல்லவா, வலஸ்கா? அந்த ஆணழகன் வேறு யாருமல்ல. சாட்சாத் வியன்னா சீமாட்டியின் கணவனேதான்.
‘அப்படியானால் நமக்கிடையில் ஒரு பரஸ்பர ஒப்பந்தத் தைச் செய்துகொள்வோம்.’’ என்று கூறித் தன் நிஜ உருவத்தை வெளிப்படுத்தினான் அந்த வாலிபன். இருவரும் தலை குனிவதன் மூலம் பரஸ்பரம் மரியாதை செலுத்திக் கொண்டனர்.
அன்று முதல் -
மனைவி தன் காதலனைப் பகிரங்கமாகவே சந்தித்தாள். கணவன் 'வலஸ்கா’ என்ற நிஜப் பெயருடைய நிஜப் பெண் ணுடன் கூடிக்குலாவினான்.
நல்ல பரஸ்பர உடன்படிக்கை தான் இது!
மித்திரன் வாரமலர் 26-04-1981
19

Page 12
பிறமொழிச்சிறுகதைகள் சில
ப்ரான்ஸ்
அட்டியல்
மத்தில்ட்டா ஒர் அழகி, மனதைக் கவரும் தோற்றம். எவரையும் வசீகரிக்கும் குணம். ஆனால் அவளுக்கென்று ஆஸ்தியொன்றும் கிடையாது. மணஞ்செய்ய வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்ட பொழுது, பிரஞ்சு பொதுக்கல்வி அமைச்சில் பணிபுரியும் ஓர் எழுதுவினைஞரைக் கைப் பிடிக்க வேண்டியதாயிற்று. அவனுக்கோ சம்பளம் மிக மிகக் குறைவு.
மத்தில்ட்டா கற்பனையில் இன்ப சுகங் கண்டாள். ஆடம்பர மும், சொகுசும், ஐஸ்வரியமும் கொண்ட வாழ்க்கையை அவள் விரும்பினாள். கனாக்கண்டாள், புகழ் பூத்த பிரமுகர்களுடன் கைகோர்த்துப் பவனி வருவது என்றெல்லாம் அவள் மனோபாவனை செய்து கொண்டாள்.
உல்லாச வாழ்க்கை நடத்தும் மேல்தட்டு மக்கள் போல தானும் வாழ விரும்பி அந்த வாழ்க்கைக் கோலங்களைத் தானும் பூணதன்னைத் தயார்படுத்திக் கொண்டாள்.
அவள் கணவன் கஷ்டப்பட்டுச் சேமித்து வைத்திருந்தான் சில நாணயங்களை, அவற்றில் 400 பிராங்குகளை அவள் தனக்கென எடுத்துக்கொண்டு ஒரு புதிய ஆடையை வாங்கிக் கொண்டாள்.
மடாம் பொரஸ்டியே என்றொரு பணக்காரச் சினேகிதி இருந்தாள். அவளிடமிருந்து வைர அட்டியல் ஒன்றை
கீடி மோப்பஸான்
20

கே.எஸ். சிவகுமாரன்
மத்தில்ட்டா கடனாகப் பெற்றுக் கொண்டாள். இத்தனை ஆடம்பரமும் எதற்காக?
பொதுக் கல்வித்துறை அமைச்சர், அவளையும் அவள் கணவனையும் விருந்தொன்றுக்கு அழைத்திருந்தார். அவ் விருந்தில் கலந்துகொள்ளும் மற்றவர்களைப் போலத் தானும் தன் கணவனும் ஆடம்பரமும் நாகரிகமும் கொண்டவர்கள் என்பதைக் காட்ட வேண்டாமா? அதற்காகத்தான்.
விருந்தில் (அதாவது "பார்ட்டியில்) மத்தில்ட்டா எல்லோரை யும் விடச் சோபித்து நின்றாள். மயங்கினாள் அந்த மாது. ஆசையும் உணர்ச்சியும் ஒருங்கே அவளை ஆட்டிப் படைத்தன. ஆனந்த மிகுதியினால் அவள் கிளர்ச்சியுற்றாள். அவள் அழகின் பெருமிதம், அவள் முயற்சியின் பலிதம் யாவுமே அவளை மகிழ்ச்சி என்ற மனோரதிய மேகக் கூட்டங்களிடையே தவழ விட்டன. அவள் மீது பிறர் காட்டும் கரிசனை, பிறர் அவளைப் போற்றிப் புகழல், அவள் லாவண்யத்தில் மருண்டவர் பிதற்றிய ரசனை மொழிகள் யாவுமே அவள் ஆசைக் கதவுகளைத் திறந்து விட்டன. அந்தப் பூரண சுகம் அம்மங்கையின் இதய வீட்டில் இனிமையைச் சூழவிட்டது.
ஆனால் மத்தில்ட்டா ஒர் அப்பாவிப் பெண். அந்த ஆனந்தமான இரவின் பின் வீடு திரும்பியபொழுது கடனாக வாங்கிக் கட்டியிருந்த வைர அட்டியலைக் காணோம். பகீரென்றது அவளுக்கு. வீட்டில் எல்லா இடங்களிலும் தேடியாயிற்று. கடன் சொத்து காணாமலே போயிற்று. அவள் கணவன் அடைந்த துயரும் அவஸ்தையும் அவலமும் சொல்லொணா. அந்த வைர அட்டியலின் பெறுமதி 36 ஆயிரம் பிராங்குகள்.
ஒரு சிறிய உத்தியோகத்தன் இந்தத் தொகைக்கு எங்கு போவான்? கடன், கடன், கடன், கடனாகவே வாங்கிச் சேர்ந்த தொகையுடன் ஒரு வைர அட்டியலை வாங்கி, பொரஸ்டியே யிடம் மத்தில்ட்டா கொடுத்த பொழுது, அது வித்தியாசமான தனக்குச் சொந்தமில்லாத நகை என்பதை முன்னையவள்
21

Page 13
பிறமொழிச் சிறுகதைகள் சில
அறியவில்லை. தான் கடனாகக் கொடுத்த நகைதான் திரும்பி வந்திருக்கிறது என்று பொரஸ்டியே நினைத்தாள்.
மத்தில்ட்டாவும் கணவனும் துன்பக் கேணியில் நீந்தினார் கள். வறுமை அவர்களைத் தொடர்ந்தது. வாங்கிய கடனைத் திருப்பிக் கொடுக்க மாடாக உழைத்தார்கள். தன் கணவனுக்கு உதவ அவளும் மனம் மாறினாள். தனக்காகக் கணவன் செய்த தியாகங்களை நினைத்துப் பார்த்தாள். அவனுடைய உழைப்பில் தானும் பங்கு கொண்டாள்.
தனது தேவைக்கென வைத்திருந்த வேலையாளை நீக்கித் தானே வீட்டு வேலைகளைச் செய்தாள். தனக்கென்று செலவு கள் எதனையும் அவள் வைத்துக்கொள்ள விரும்பவில்லை. தனது ஆடம்பரத்தையும் சொகுசையும்துறந்தாள். மறந்தாள்.
கிழிந்து கசங்கிய உடைகளைத்தான் அவள் தரித்தாள்.
பூஞ்சணமும் பாசியும் பிடித்த சட்டி, பானைகள் போன்றவற் றைத் தானே தேய்த்து அலம்பினாள். அவள் பொன்னான கை புண்ணாக மாறுமட்டும் அவள் உழைத்தாள்.
ஒரு காலத்தில் கண்டவர் மயங்கும் கட்டழகியாக இருந்த மத்தில்ட்டா இப்பொழுது நடைப்பிணமானாள். தேய்ந்து போனாள்.
பத்து வருடக் கடும் உழைப்பு, கட்டவேண்டிய கடன் தொகையை அவர்களுக்குத் திரட்டித் தந்தது. அப்பாடா! கடனை அவர்கள் தீர்த்து விட்டார்கள்.
ஒரு ஞாயிற்றுக் கிழமை- யதேச்சையாக மடாம் பொரஸ்டியேயை மத்தில்ட்டா சந்தித்தாள். சந்தித்தபோது, பத்து வருடங்களாகத் தானும் தன் கணவனும் பட்ட பாட்டை எடுத்துரைத்தாள். பொரஸ்டியே கொடுத்த வைர அட்டியல் காணாமற் போனமை, கடன் வாங்கியமை, புதிய நகை வாங்கியமை, கடனைத் தீர்க்கக் கடும் உழைப்பு, உழைப்பின் பயனாகப் பணம் சேர்ந்தமை போன்ற விபரங்களை மத்தில்ட்டா எடுத்துக் கூறினாள்.
22

கே.எஸ். சிவகுமாரன்
பொரஸ்டியே அதிர்ச்சியானாள். தன்னிடம் திரும்பிக் கொடுக்கப்பட்ட அட்டியல் தான் கொடுத்த அதே அட்டியல் என்றுதான் அவள் இவ்வளவு காலமும் நினைத்து வந்திருக் கிறாள். ஆனால் மத்தில்ட்டா கூறும் கதையைப் பார்த்தால் கதை வேறெங்கோ அல்லவா போய்விட்டது என நினைத்தாள்.
பின்னர்தான் அவள் அந்த உண்மையை மத்தில்ட்டாவிடம் கூறினாள்.
தான் கடனாகக் கொடுத்த வைர அட்டியல் உண்மையில் வைர அட்டியலே அல்ல. அது ஒரு இமிட்டேஷன்நகை விலை ஆக 10 பிராங்குகள்தான்! -
மித்திரன் வாரம லர் Guð 15, 1981
23

Page 14
பிறமொழிச் சிறுகதைகள் சில
ருஷ்யா
வலியாரும் வமலியாரும்
சில நாட்களுக்கு முன் -
எனது பிள்ளைகளைப் பராமரிக்கும் தாதி ஜூலியா வசிலியேனா. அவளை எனது அறைக்குள் வரும்படி அழைத்தேன். வந்தாள் அவள்.
"உட்காரு ஜூலியா வசிலியேனா என்ன நமது கணக்கு களைத் தீர்த்துக் கொள்ளலாமா? உனக்குப் பணம் தேவையா யிருந்தாலுந் தான் நீ வாய்விட்டுக் கேட்க மாட்டாயே! அதுசரி மாதம் முப்பது ரூபிள்ஸ் சம்பளம் என்றுதானே நாம் பேசிக் கொண்டோம்?"
“இல்லை நாற்பது!”
“சே! சே! முப்பதுதான். நான் குறித்து வைத்திருக்கிறேன். நீ என்ன சொல்லுகிறாய்? பராமரிக்கும் தாதிக்கு நான் முப்பதுதான் கொடுப்பது வழக்கம். அது சரி விஷயத்துக்கு வருவோம். நீ இரண்டு மாதங்களாக வேலை பார்ப்பதால்.”
"இரண்டு மாதங்கள் அல்ல, அத்தோடு ஐந்து நாட்களும்!” "சும்மாயிரு, சரியாக இரண்டு மாதங்கள்தான். நான் அதைக் குறிப்பாக எழுதி வைத்திருக்கிறேன். அப்படியானால் உனக்கு அறுபது ரூபிள்கள். அதில் நீ வேலை பார்த்த நாட்களில் ஒன்பது
அன்டன்செகோவ்
24

கே.எஸ். சிவகுமாரன்
நாட்களைக் கழிக்கவேண்டும். ஞாயிற்றுக்கிழமைகளில் நீ வேலை செய்ததில்லை. உலாத்த மாத்திரம் சென்றாய். அத்தோடு மூன்று விடுமுறை நாட்கள்."
ஜூலியா செக்கச் சிவந்து பிளம்பானாள். ஊதிப் புடைத்திருந்த தனது உடையைச் சரி பார்த்துக் கொண்டாள். ஆனால் வாய் திறந்து ஒன்றுமே பேசவில்லை.
"மூன்று விடுமுறை நாட்களுடன் மொத்தம் பன்னிரண்டு நாட்களைக் கழித்துவிடு. நான்கு நாட்கள் கோல்யாவுக்குச் சுகமில்லை என்று பாடம் சொல்லிக் கொடுக்கவில்லை, வன்யா வுக்கு மாத்திரமே சொல்லிக் கொடுத்தாய். மூன்று நாட்களாகப் பல் வலி என்று எனது மனைவியின் அனுமதியின் பேரில் மதிய போசனத்திற்குப் பின் ஒய்வெடுத்துக்கொண்டாய், பன்னிரண் டும். ஏழும். பத்தொன்பதாச்சு அந்த விடுமுறை நாட்களை யும் கழித்தால். ம்..ம். நாற்பத்தொரு ரூபிள்கள் சரியா?”
ஜூலியாவின் இடது கண்கள் கனன்று பனித்தன. நாடி தளர்ந்தது. இருமினாள். மூக்கைச் சீறிக் கொண்டாள். ஆனால், வாய் திறந்து ஒரு சொல். ஊஹூம்.
"புது வருடத்துக்குக் கிட்ட ஒரு தேநீர் கோப்பையையும் தட்டையும் உடைத்தாய் அல்லவா? இரண்டு ரூபிள்களைக் கழித்துக்கொள். அந்தக்கோப்பை ஒரு பரம்பரைச் சொத்து மாத்திரமல்ல, விலையுயர்ந்ததும்கூட போகட்டும். எப்பதான் எனக்கு நட்டம் வரவில்லை! மற்றது உனது அசட்டையின் காரணமாக கோல்யா மரத்திலேறித் தனது சட்டையைக் கிழித்துக் கொண்டாள். அதற்காகப் பத்து ரூபிள்களைக் கழி. அத்துடன் உனது மடைத்தனம் காரணமாக வன்யாவின் சப்பாத்துக்களைப் பணிப்பெண் திருடினாள். எல்லாவற்றையும் கண்காணிப்பது உன் கடமை. அதற்கு என்று ஊதியம் வேறு பெறுகின்றாய். எனவே, அங்கும் ஐந்து ரூபிள்களைக் கழிக்க வேண்டும். ஜனவரி பத்தாந்தேதி பத்து ரூபிள்களைக் கடனாகத் தந்தேன்.”
25

Page 15
பிறமொழிச் சிறுகதைகள் சில
"நீங்கள் தரவில்லை” என்று மெல்லெனவே சிலிர்த்தாள் ஜூலியா.
"நான் குறித்து வைத்திருக்கிறேன். உன்னால் எப்படி மறுக்க முடியும்?"
"அது எப்படி? சரி சரி!” என்று உச்சரித்தாள் அவள்.
"நாற்பத்தொன்றிலிருந்து இருபத்தேழையல்லவா கழிக்க வேண்டும். மிகுதி பதினான்கு."
அவள் கண்கள் இரண்டும் கண்ணிர் உகுத்தன. நாசியில் வியர்வை துளிர்த்தது. பாவம் அந்தப் பெண்.
“ஒரு முறை தான் எனக்குப் பணம் கிடைத்தது. அதுவும் அம்மாதான் தந்தார்கள். தந்தது ஆக மூன்று ரூபிள்கள் தான்." என்று தளதளத்த குரலில் வாய்க்குள் முணுமுணுத்தாள்.
"அப்படியா சங்கதி? நீயே பாரேன்? இதெல்லாம் நான் குறித்து வைத்துக் கொள்ளவில்லையே? அப்படியென்றால் பதினான்கிலிருந்து மூன்றைக் கழித்தால் பதினொன்று இந்தா உனது சம்பளம். மூன்று. மூன்று. மூன்று. ஒன்று. ஒன்று. இருக்கிறதா? என்று பார்த்துக்கொள்?."
அவளிடம் பதினொரு ரூபிள்களையும் கொடுத்தேன். நடுநடுங்கும் விரல்களினால் அவற்றைப் பற்றிக் கொண்டு தன் சட்டைப்பைக்குள் திணித்தாள்.
"நன்றி” என அவள் குசுகுசுத்தாள். நான் குதித்தெழுந்து அறை நெடுக மிதித்தேன். கோபம் என்னை ஆட்கொண்டது.
"இந்த நன்றி எதற்காக?" - நான் தான் உறுமலுடன் கேட்டேன்.
"பணத்துக்காக!"பதுங்கினாள் அவள். "உன்னை நான் ஏமாற்றி விட்டேன். கடவுளின் பேரில் உன்னைக் கொள்ளை அடித்து விட்டேன் என்பதை நீ
- 26 -

கே.எஸ். சிவகுமாரன்
அறிவாய். உண்மையில் உனக்குரிய பணத்தை நான் களவெடுத்து விட்டேன். இப்படியிருந்தும் ஏன் இந்த நன்றி?”
"மற்றைய இடங்களில் நான் எதுவுமே பெறாததால்!”
“என்ன? எதுவுமே உனக்குக் கிடைக்கவில்லையா? அதில் ஆச்சரியம் இல்லை. உன்னிடம் சிறிது பகிடி, தமாஷ் செய்து பார்த்தேன், அவ்வளவுதான்."
"ஆனால், எத்தகைய கொடூரமான பாடம்.”
"இதோ இந்த உறைக்குள் உனக்குக் கொடுக்கத் தயாராயிருக் கின்றன எண்பது ரூபிள்களும். ஹலிம். முதுகெலும்பில்லாமல் இருக்கமுடியுமா? வாய்ப்பூச்சி நீ ஏன் பேசாமலிருந்தாய்? ஏன் எதிர்த்து உன் உரிமையைக் கோரவில்லை? வாயும் கையும் இல்லாமல் வாழ்க்கை நடத்த முடியுமா?"
முடியும் என்று அவள் முகத்தில் எழுதியிருப்பது போல விஷமமாகச் சிரித்தாள், பல தடவை "நன்றி நன்றி” என்று மிழற்றிக்கொண்டு வெளியே அவள் போனாள்.
மெலியாரை நோகச் செய்வது எவ்வளவு எளிதானது. புரிந்து கொண்டேன்.
மித்திரன் வாரமலர் 6tures 19, 1981
27

Page 16
count
எழுதுவினைஞரின் மரணம்
"லாகுளோச்சே டீகார்னிவேல் நடந்து கொண்டிருந்தது.
இரண்டாவது வரிசையில் அமர்ந்துகொண்டு அந்த பிரதம எழுதுவினைஞர் ஐவன் திமிட்ரிச் சேர்வியாக்கோப் பூதக் கண்ணாடி மூலம் நாடகத்தை இரசித்துக் கொண்டிருந்த அந்த இரவும் பிரமாதமானது தான்.
மாந்தருள் மகோன்னத குதூகலப்பிறவி தானே தான் என்று எண்ணிக்கொண்டே மேடையைப் பார்த்துக் கொண்டிருந்தார் சேர்வியாக்கோப்.
அப்பொழுது திடீரென அவர் முகம் சுருங்கியது. கண்கள் செருகின, மூச்சு அடைத்தது. பூதக்கண்ணாடியிடமிருந்து தன்னை விடுவித்துக் கொண்டு தனது ஆசனத்திலிருந்து இரண்டு அடி தள்ளிப்போய் ஒரு . 'கு'. அதன் அர்த்தம்: அவர் தும்மினார். is
தும்மல் வந்தால் இடம் எதுவாயிருந்தாலும் பாதகமில்லை. தும்முவதற்கு எவருக்கும் உரிமையிருக்கிறது. விவசாயிகள், பொலீஸ் அதிகாரிகள், அரசியல் வாதிகள் எவருமேதும்முவது இயற்கை. எவருக்கும் முன்னாலும் எவருமேதும்மலாம்.
சேர்வியாக்கோப் கைக்குட்டையால் மூக்கைப் பிடித்துக் கொண்டு தான் தும்மினார். அப்பொழுது அவருக்கு ஒருவித
அன்டன்செகோவ்
- 28

கே.எஸ். சிவகுமாரன்
கலக்கமும் இருக்கவில்லை! ஆனால் தான் தும்மியதால் எவருடைய ரசனை ஏதும் கெட்டுவிட்டதோ என்ற எண்ணம் அவரிடம் எழுந்ததும் உயர் குலத்தில் உதித்தோர் போல் சுற்றும் முற்றும் பார்த்துக் கொண்டார்.
அப்பொழுதுதான் அவருக்கு அந்த இக்கட்டான நிலை வந்தது.
அவருக்கு முன்னால் உள்ள முன்வரிசையில் ஒரு சிறிய வயோதிக மனிதர் உட்கார்ந்திருந்தார். அவர் தனது வழுக்கைத் தலையையும் கழுத்தையும் கையுறை அணிந்த கைகளினாற் தடவிக்கொண்டே ஏதோ முணுமுணுத்துக் கொண்டிருந்தார். போக்குவரத்து அமைச்சைச் சேர்ந்த சிவில் ஜெனரல் பிரிஸாலோப் தான் அந்த வயோதிக மனிதர் என்று இனங்கண்டு கொண்டார் சேர்வியாக்கோப்.
ஐயய்யோ! அவர் மேலே தும்மிப்போட்டேனே! அவர் எனக்குரிய தலைவரல்லாவிட்டாலும், இது பெரிய சங்கட மாயல்லவோ போய்விட்டது. நான் அவரிடம் மன்னிப்புக் கேட்க வேண்டும்!"
சிறிது கனைத்துக்கொண்டே எட்டி அந்த ஜெனரலின் காதில் "மாட்சிமை தங்கிய பெருந்தகையே! என்னை மன்னியுங்கள்! நான்தும்மிவிட்டேன்! வேண்டுமென்று செய்யவில்லை!” என்று சேர்வியாக்கோப் கூறினார்.
"பரவாயில்லை!"
"மன்னிக்கத்தான் வேண்டும். அது ஏற்கனவே நினைத்து நடந்த செயலல்ல!”
"கடவுளுக்காகச் சிறிது சும்மா இருக்க மாட்டாயா? நான் நாடக நிகழ்ச்சிகளைக் கேட்டு இரசித்துக் கொண்டிருக்கிறேன்.”
சிறிது சஞ்சலப்பட்டாலும் குள்ளத்தனமாகப் புன்சிரிப்பை உதிர்த்துவிட்டு மேடையில் தனது கவனத்தைச் செலுத்தினார் சேர்வியாக்கோப். மேடையில் நடிகர்களின் கூத்துக்களைப்
29

Page 17
பிறமொழிச் சிறுகதைகள் சில
பார்த்தாரானாலும் தான் முன்னர் எண்ணியது போல் மாந்தருள் குதுகலமான பிறவிதான் மாத்திரமே என்று அவர் இப்பொழுது எண்ணவில்லை. குற்றம் புரிந்தது போல் குறுகுறுத்தது அவர் நெஞ்சம்.
இடைவேளை வந்தது!
பிரிஸாலோட் உட்கார்ந்திருக்கும் இடத்திற்குத் தயங்கிக் கொண்டே அவர் போய் நின்றார். பின்பு தனது நெஞ்சைத் திடப்படுத்திக் கொண்டே, "மாட்சிமை தங்கிய பெருந்தகையே என்னை மன்னிக்க! நான் வேண்டுமென்றே செய்யவில்லை என்பது தங்களுக்குத் தெரியும்!” என்றார்.
"ஓ! உண்மையாகவே தெரியும் நான் அதை மறந்து விட்டேன். நீ இன்னுமா தொடர்ந்து மன்னிப்புக் கேட்க வேண்டும்?” என்று அந்த வயோதிக ஜெனரல் கேட்டார்.
ஜெனரலின் பக்கம் நம்பிக்கையில்லாமல் பார்த்துக் கொண்டே, தான் மறந்து விட்டதாகக் கூறுகிறார். ஆனால் அவர் பார்வை சரியாகவேயில்லை" என்று அங்கலாய்த்துக் கொண்டார் சேர்வியாக்கோப்.
“என்னுடன் பேச விரும்புகிறாரில்லை. நான் வேண்டு மென்றே செய்யவில்லை என்று அவருக்குப் புரிய வைக்க வேண்டும். இயற்கையின் சட்டம் தும் முதல் என்று எடுத்துரைக்க வேண்டும். இல்லாவிடில் அவர் மேல் நான் துப்புவதற்கிருந்ததாக மனுஷன் எண்ணிவிடும். இப்பொழுது அப்படி எண்ணாவிட்டாலும் பின்பு அப்படித்தான் எண்ணுவார்."
வீட்டிற்குப் போனதும் தனது அநாகரிகமான செயலைப் பற்றி தனது மனைவியிடம் கூறினார். மனைவியும் தனது கதையைப் பொருட்படுத்திக் கேட்பதுபோல் அவருக்குப் பட்டது. ஒரு கணநேரம் அவள் கூட திகைத்துப்போனாள்.
"நீங்கள் போய் அவரிடம் மன்னிப்புக் கேட்பதுதான் சரி. இல்லாவிட்டால் சபை நடுவே பழகத் தெரியாத ஜடம் என்று அவர் உங்களை நினைத்து விடுவார்” என்று கூறினாள்.
30

கே.எஸ். சிவகுமாரன்
"அதுதானே! நான் மன்னிப்புக் கேட்க முயன்றேன். ஆனால் அவர் வேறுவிதமாக நடந்துகொண்டார். உருப்படியாக ஒன்றும் சொல்லவில்லை. அத்துடன் பேசுவதற்கு நேரமும் இருக்கவில்லை."
அடுத்தநாள் தனது நடத்தையை விளக்குவதற்காக ஜெனரலிடம் சேர்வியாக்கோப் சென்றார்.
அங்கே மனுதாரர்கள் புடைசூழ முறையீடுகளைத் தாமே வாங்கி விசாரித்துக்கொண்டிருந்தார் ஜெனரல். அவர்களில் ஒரு சிலரைப் பேட்டி கண்ட பின் தனது முகத்தை சேர்வியாக்கோப் பக்கம் திருப்பினார் ஜெனரல்.
"நேற்று இரவு. ஆக் காடியா கொட்டகையில். உங்களுக்கு நினைவிருக்கும் என்று நினைக்கிறேன். மாட்சிமை தங்கிய பெருந்தகையே. நான் மன்னிப்புக் கோருகிறேன்..!"
“சீ. இதென்ன தொல்லை” என்று கோபத்துடன் அலுத்துக் கொண்டார் ஜெனரல்.
"இவர் என் பேச்சைக் கேட்கமாட்டார்” என்று எண்ணிக் கொண்டார் எழுது வினைஞர் சேர்வியாக்கோப்.
அவர் கோபமாயிருக்கிறார் என்பதை அம்முகம் காட்டு கின்றது. இத்துடன் நான் விடக்கூடாது. அவருக்கு நான் புரியும் படி செய்யவேண்டும்’ என நினைத்துக் கொண்டார்.
கடைசி முறையீட்டுக்காரரையும் அனுப்பிவிட்டு தனது அந்தரங்க அறைக்குப் போவதற்கு எழுந்தார் ஜெனரல். சேர்வியாக்கோப் அவர் பின்னால் சென்றார்.
“மன்னிக்கவேண்டும் மாட்சிமை தங்கிய பெருந்தகையே! நேற்றைய நிகழ்ச்சியின் விளைவு - எனது ஆழ்ந்த துக்கம் தங்களுக்குத் தொல்லைதரச் செய்கிறது பெருந்தகையே!”
வாய் திறந்து கத்த விரும்புவதுபோல் ஜெனரல் காணப் பட்டார். சேர்வியாக்கோப்பைப் போய்விடும்படி சைகை காட்டினார்.
31

Page 18
பிறமொழிச் சிறுகதைகள் சில
"நீங்கள் என்னைப் பார்த்துச் சிரிக்கிறீர்கள் ஐயா" என்று கூறிவிட்டே எழுதுவினைஞரின் முகத்தில் அறைவது போல் கதவை அடித்துச் சாத்திவிட்டுப் போய் விட்டார்.
“சிரிக்கிறேனா? இதில் சிரிப்பதற்கு என்ன இருக்கிறது? அவர் ஒரு ஜெனரலாய் இருந்தும் அவருக்குப் புரியவில்லையா, என்ன? நல்லது! அருமையான இந்தத் துரைக்கு நான் ஒரு மன்னிப்புக் கேட்டுக் கொண்டு தொல்லை கொடுப்பது சரியல்ல! அவருக்கு ஒரு கடிதம் எழுதுவதே மேல். இனி நான் அங்கு போகப்போவதேயில்லை.”
இவ்வாறு நினைத்துக் கொண்டே தனது வீட்டிற்குப் போனார் சேர்வியாக்கோப். ஆனால் அவர் அக்கடிதத்தை எழுதவில்லை. எப்படிக் கடிதத்தைத் தீட்டுவது என்று யோசித்து யோசித்துப் பார்த்தார். சொற்கள் தான் வருவதாக இல்லை. அடுத்த நாள் ஜெனரல் வீட்டிற்குச் சென்றார்.
ஜெனரல் இவரைப் பார்த்துவிட்டுப்புருவத்தை நெரித்தார்.
"நேற்று உங்களுக்குத் தொல்லை தரமுயன்றேன். மாட்சிமை தங்கிய பெருந்தகையே! தாங்கள் கூறியது போல் தங்களைப் பார்த்துச் சிரிக்கவில்லை நான்.தும்மியதால் தங்களுக்கு வசதிக் குறைவை விளைவித்துவிட்டேனாதலால் மன்னிப்புக்கோரியே வந்தேன். உங்களைப் பார்த்துச் சிரிக்க நான் ஒருநாளும் நினையேன். எங்ங்ணம் நான் அப்படி நினைப்பது? மனிதர் களைப் பார்த்து சிரிப்பது என்று நாம் கங்கணங் கட்டினால், மரியாதையேது? அதிகாரிகளுக்கு நாம் மரியாதை கொடுக்காமல்."
“வெளியே போ” என்று சினங்கொண்டு கத்தினார் ஜெனரல்.
“என்ன கூறினீர்கள்?" என்று நடுங்கிக்கொண்டே கேட்டார் சேர்வியாக்கோப்.
நிலத்தில் காலை உதைத்தபடி "வெளியே போ” என்று கத்தினார் ஜெனரல்.
- 32

கே.எஸ். சிவகுமாரன்
ஏதோ ஒன்று தன்னுள் தன்னையே கடித்து விட்டதாக உணர்ந்தார் சேர்வியாக்கோப்.
அறைக்கு வெளியே மெளனமாக வந்தார். அவருக்கு ஒன்றுமே தெரியவில்லை. ஒன்றுமே கேட்கவில்லை. வீதி வழியே அவர் கால்கள் சென்றன. வீடு சென்று ஆசனத்தில் அமர்ந்தார்.
இறந்தார்.
வீரகேசரி 22-01-1961
33

Page 19
cossum
புலம்பல்
அயோனாபொட்டபொப் ஒரு கிழவன், குதிரை வண்டிக்காரன். பனி பெய்கிறது. எங்கும் பனிப்படலம். அவன் மீதும், குதிரை மீதும், வண்டி மீதும், பனிக்கட்டிகள் வந்து விழுகின்றன. சவாரிக்கு யாராவது வரமாட்டார்களா என்று மாலை முழுவதும் தவங் கிடக்கிறான் வண்டிக்காரன். ஏன் அவன் குதிரை கூட.
இன்று அதிர்ஷ்டமில்லையாக்கும் என்று நினைத்துக் கொண்டிருந்தபொழுது, "விபோர்க் என்ற இடத்திற்குச் சவாரி செய்ய வர முடியுமா?" என்று பின்னாலிருந்து ஒரு குரல் கேட்டது.
பெரிய நிஸ்கோட்டணிந்து ஒர் உத்தியோகத்தர் வண்டியில் ஏறினார். சவாரி தொடர்கிறது. ஆனால் ஏனைய வண்டிக் காரர்களும், வழிப்போக்கர்களும், வண்டிக்காரக் கிழவனை ஏசித் தொலைத்தார்கள். அவன் தங்கள் பாதையில் வண்டியைச் செலுத்திச் செல்கிறானே என்று தான் இந்த ஏச்சும் பேச்சும்.
உத்தியோகத்தருக்கு இரக்கம் வந்தது. வண்டிக்காரன் மீது பச்சாதாபப்பட்டு இதமான ஒரிரு வார்த்தைகளைப் பேசினார் அவர். வண்டிக்காரன், உள்ளே திரும்பி “என் மகன் பாரின் இந்தக் கிழமைதான் செத்துப் போய்விட்டான்” என்றான்.
அன்டன்செகோவ்
- 34 -m

கே.எஸ். சிவகுமாரன்
"அவன் எப்படி ஏன் செத்தான்?" என உத்தியோகத்தர் கேட்டார்.
"யாருக்குத் தெரியும்? கடுங் காய்ச்சல் என்றார்கள். மூன்று நாள் ஆஸ்பத்திரியில் இருந்தான். அப்புறம் செத்துப் போனான். ஆண்டவன் சித்தம் எதுவோ அப்படித்தான் நடக்கும்” என்று கிழவன் கூறினான்.
அப்பொழுது இருட்டிலிருந்து யாரோ வண்டிக்காரனை ஏசினார்கள். அயோனா தன் சோகக் கதையைத் தொடர விரும்பினான். ஆனால் உத்தியோகத்தருக்கு அவசரம். கொஞ்சம் கெதியாக வண்டியை ஒட்டும்படி கேட்டுக் கொண்டார்.
கதையை எப்படியாவது சொல்லி முடித்துவிட வேண்டு மென்று அயோனாவுக்கு ஆதங்கம். ஆனால் உத்தியோகத்தர் கண்களை மூடிக் கொண்டிருந்தார்.
விபோர்க் வந்துவிட்டது. உத்தியோகத்தர் வண்டியில் இருந்து இறங்கினார். அயோனாவும் பக்கத்திலிருந்த சாராயத் தவறணைக்குச் சென்றான்.
பணி தொடர்ந்து பெய்தது. பல மணி நேரம் கழிந்தது. காத்திராப்பிரகாரமாக மூன்று இளைஞர்கள் சாராயத் தவறணைக்குள் வந்தார்கள். அவர்கள் ஏற்கெனவே நன்றாகக் குடித்திருந்தார்கள். "பொலீஸ் பாலம்’ என்ற இடத்திற்குத் தம்மைக் கூட்டிச் செல்லுமாறு அவர்கள் வண்டிக்காரனைக் கேட்டார்கள். அட்டகாசம் செய்தார்கள். கிழவனைத் துஷித்துப் பேசினார்கள்.
அயோனா அமைதியாகக் கேட்டுக்கொண்டிருந்தான். அவர்கள் மேலும் அட்டகாசம் செய்ய முன்னர், ஒரு கணப் பொழுது அமைதியாக இருந்தனர். அப்பொழுது வண்டிக்
காரன் சொன்னான்.
“என் மகன் இந்தக் கிழமைதான் செத்துப் போனான்."
- 35 -

Page 20
பிறமொழிச் சிறுகதைகள் சில
"நாங்கள் எல்லோரும் ஒரு நாள் சாகத்தானே வேண்டும்” என்றான் அந்த இளைஞர்களில் ஒருவன்.
வண்டியை இன்னும் வேகமாக ஒட்டும்படி கிழவனுக்குக் கழுத்தில் கசையடி கொடுத்தார்கள் அந்தப் பிரயாணிகள். கிழவனோ பணிவுடன் அந்த அடிகளை ஏற்றுக் கொண்டான். தன்னுடைய மகன் எவ்வாறு செத்தான் எனக் கூறுவதற்கு மீண்டும் கழுத்தைத் திருப்பி வண்டியினுள் பார்த்தான் கிழவன். ஆனால் அதற்கிடையில் அந்த இளைஞர்கள் இறங்கவேண்டிய இடம் வந்துவிட்டது.
அயோனா இப்பொழுது தனிமையாக விடப்பட்டிருந்தான். ஆழ்ந்த அளவிட முடியாத துயரம் அவனை ஆட்கொண்டது. வண்டியைக் கடந்து செல்லும் எவராவது தன் கதையைக் கேட்க மாட்டார்களா என்று அவன் ஆவலுடன் காத்திருந்தான்.
எல்லோர்முகத்தையும் அவன் தேடிப் பார்த்தான். ஊஹூம்! யாருமே இல்லை. எல்லோருமே தத்தம் கவலைகளில் மூழ்கி மும்முரமாகச் செயற்பட்டனர்.
கடைசியாக ஒரு போட்டர் அகப்பட்டான். அவனிட மாகுதல் தன் கதையைக் கூறி ஆறுதலடையலாம் என்று பார்த்தான். அவனும் செவிசாய்க்கவில்லை. மனிதரை நம்பிப் பயனில்லை. அவர்கள் ரொம்பவும் 'பிஸி” போலும்.
குதிரை வண்டிகள் நிற்பாட்டி வைக்கப்பட்டிருக்கும் இடத்திற்கு அயோனா சென்றான். அங்கு வேறு வண்டிக் காரர்கள் குறட்டை விட்டுக் கொண்டிருந்தார்கள். ஓர் இளம் வண்டிக்காரன் மாத்திரம் அரைத் தூக்கத்தில் எழுந்து, பக்கத்திலிருந்த தண்ணிர் வாளியருகே கையை நீட்டினான், அப்பொழுது-"உனக்குத் தெரியுமா நண்பனே, என்னுடைய மகன் இறந்து போனான்’ என்றான் அயோனா. அந்த இளைஞனோ தலையணையுள் தன் முகத்தைப் புதைத்து மீண்டும் துயிலலானான். அயோனாவுக்குப் பெருமூச்சுத்தான் வந்தது. தாங்கொணாத்துயரம் அவனை வாட்டிற்று.
- 36 -

கே.எஸ். சிவகுமாரன்
ஒரு வாரத்துக்கு முன்னர் தான் அவன் மகன் இறந்து போனான். அவன் எப்படிச் சுகயரீனமுற்றான், எப்படி ஆஸ்பத்திரிக்கு அழைத்துச் செல்லப்பட்டான், எப்படி அவஸ்தைப்பட்டான், எப்படிச் செத்தான் போன்ற விபரங்களை யெல்லாம் விரிவாக யாருக்கேனும் எடுத்துக் கூற முடிய வில்லையே என்ற மனவருத்தம் கிழவனுக்கு.
தனது துயரத்தையெல்லாம் யாரிடமாவது கொட்டிப்புலம்ப வேண்டுமென்ற தவிப்பு கிழவனுக்கு. ஆறுதல் பெற வேண்டும் என்று ஆசை அவனுக்கு. ஆனால் யாருமே செவி சாய்ப்பதா
அவன் கூற வருவதில் எதுவுமே இல்லையா?
சரிதான், குதிரைக்குத் தீனி வைக்கவேண்டும். நித்திரை செய்யவேண்டும். அவன் குதிரை ஏதோ சாப்பிட்டுக் கொண்டிருந்தது. அவன் உணர்ச்சி வசப்பட்டுத் தன் கதை முழுவதையும், தன் மைந்தனின் கதை முழுவதையும் குதிரை யிடம் கூறி ஆறுதலடைந்தான்.
மித்திரன் வாரமலர் 31-03-1981
37

Page 21
‘மண்ர கோலா"
புளோரன்ஸ் நகரிலே நிச்சியா என்ற ஒரு பணக்கார கிழ வழக்கறிஞன் இருந்தான். அவனுக்கு லுக்கிறீஸியா என்ற பண்புடைய கீழ்ப் படிவான மனைவி இருந்தாள், நிச்சியாவுக்குத் தன் மனைவியின் கற்பு பெரிதாகப்படவில்லை. தன்மானமும் அவனுக்கு இருக்கவில்லை.
அவனுக்கு வேண்டியதெல்லாம், பிள்ளைகள் என்று சொல்ல வாரிசுகளே, இவர்களுக்கு இதுவரை பிள்ளை களில்லை. லுக்கிறீஸியா கற்புடைய மங்கையாய் இருந்த போதிலும், அவள் உள்ளூர உடலின்பம் கிடையாதா என்று ஏங்கியிருந்தாள்.
லொஸ்ட்ராட்டா என்ற அவளது தாயாரே அவளது ஆசைக் குத் தூபம் போடுகிறாள். மகளின் கற்பொழுக்கத்தை விட நடைமுறைக்கு எது சாத்தியமோ, எது பயன் தருமோ அதுவே பண்பு என்னும் நோக்கைக் கொண்டவள்தான் இந்தத் தாய்.
நிச்சியா ஒரு மூடன் மட்டுமல்ல, எதனையும் நம்புபவன். அவனுடைய ஏமாளித்தனத்தைப் பயன்படுத்தி, சந்தர்ப்பத்தை உருவாக்கி, திட்டங்களைத் தீட்டிப் பணத்தைக் கறந்து விடுகிறான் ப்ரா டிமோட்டியோ என்ற ஒரு பாதிரி. இவர்களுக்கு மத்தியில் கள்ளி மாக்கோ என்ற கதாநாயகன்இவன் பாரிஸில் காமுகனாகக் காலங் கழித்தவன்.
நிக்கோலா மக்கியவெல்லி
- 38 -

கே.எஸ். சிவகுமாரன்
லுக்கிறீஸியாவின் மயக்கும் அழகைக் கேள்வியுற்று புளோரன்ஸ் வந்தான். காமாந்தகாரனான இவன் பெண்களைக் களித்துச் சுவைக்கும் போகப் பொருளாக மாத்திரமே கண்டான். இவனுக்கு மனோரதியக் காதலில் நம்பிக்கை யில்லை.
கள்ளிமாக்கோவுக்கு சிரோ என்ற பெயரில் விசுவாசமான ஒரு வேலையாள். லிகூரியோ என்ற ஒரு தரகனும் இருந்தான். அவன் செய்த வினையினால் கள்ளிமாக்கோ லுக்கிறீஸியா வைச் சுவைப்பதுடனல்லாமல் அவளின் கற்புநெறி சிதறு வதற்கும் காலாகினான்.
இதுவே நாடகக் கருப்பொருள்.
நாடகம் எப்படியமைகிறது?
கள்ளிமாக் கோ டொக்டர் மாதிரி வேஷமிட்டு லிசுரியோவின் உதவியுடன் நிச்சியாவைச் சந்திக்கிறான். மன்னர்களும், இளவரசர்களும் பருகிய பானம் ஒன்றிருப்ப தாகவும், அப்பானத்தை அருந்தினால், நிச்சியாவுக்கு பலம் அதிகரிக்கும் என்றும் கள்ளிமாக்கோ கூறினான். லுக்கிறீஸியா வும் அப்பானத்தைப் பருகி மூன்றாமவனொருவனுடன் தொடர்பு வைத்துக் கொள்ள வேண்டுமென்றும் அவன் மேலும் கூறினான்.
அது மாத்திரமல்ல, அவள் யாருடன் உறவு வைத்துக் கொள்கிறாளோ, அவன் ஒரு வாரத்துக்குள் இறந்து விடுவான் என்றும் பொய் கூறினான்.
தனது மனைவி பிற புருடனைத் தீண்டினால் பின்னர் அவளுடன் தொடர்ந்து உறவு கொள்வதைத் தான் விரும்ப வில்லை என்று நிச்சியா முதலிற் கூறிப் பாார்த்தான். ஆனால், கள்ளிமாக்கோ விடவில்லை, அதற்கு ஒரு திட்டத்தினையும் கூறுகின்றான்.
லுக்கிறீஸியா இத்திட்டத்திற்கிணங்கப் பாதிரியினதும், அவளுடைய தாயினதும் உதவியை நாடுவது என முடிவு
39

Page 22
பிறமொழிச்சிறுகதைகள் சில
செய்யப்பட்டது. பாதிரியின் சொற்கேட்டு நடப்பதே மேல் என்று தாய் மகளுக்கு உபதேசம் செய்தாள்.
"உனது கணவனின் விருப்பத்துக்கிணங்க நடக்காமல் இருப்பதுதான் பாவம்' என்றும் பாதிரி லுக்கிறீஸியாவுக்கு அறிவுறுத்தினான்.
லுக்கிறீஸியா பெருந்தயக்கத்துடன் இந்த ஏற்பாட்டுக்கு உடன்பட்டாள். கள்ளிமாக்கோ டொக்டர் வேஷத்தைக் கலைத்துவிட்டு வேறு உருவத்தில், நிச்சியாவும் லிகூரியோவும் தள்ளிவிட, லுக்கிறீஸியாவின் பள்ளியறைக்குள் புகுந்தான்.
அறைக்குள் புகுந்ததும், திட்டத்தை அறிவித்துக் கள்ளக் காமத் தொடர்பைத் தொடரவேண்டும் என்று கள்ளிமாக்கோ லுக்கிறீஸியாவைக் கேட்டுக் கொண்டான்.
லுக்கிறீஸியாவுக்கு முன்னர் ஒருபோதும் அனுபவித்தறியாத இன்பங் கிடைத்ததாகத் தன்னிடம் கூறினாள் என்று கள்ளிமாக்கோ பின்னர் லிகூரியோவிடம் கூறினான்.
"உனது களவொழுக்கம், எனது கணவனின் மடமை, எனது தாயின் காரியநோக்கு, பாதிரியின் விளக்கம், எல்லாமே சேர்ந்து நான் ஒருபோதும் செய்ய விரும்பாததைச் செய்யத் தூண்டி யிருக்கின்றன. இது வானுலகக் கட்டளை போலும். அதனை மீறுவது எனக்கழகல்ல" என்று லுக்கிறீஸியா கள்ளிமாக்கோ விடம் கூறுகிறாள்.
காலத்துக்குக் காலம் முன்னேற்பாடுகளின் பின் காமுகனும் காதலியும் கூடிக்கூடி மகிழ்கின்றனர். டொக்டர் வேஷத்தில் தான் கள்ளிமாக்கோ நிச்சியா வீட்டிற்குச் சென்று வருகிறான். தனது மனைவியுடன் உறவு கொள்பவனும் அவன்தான் என்பது நிச்சியாவுக்குத் தெரியாது.
மித்திரன் வாரமலர் 12-04-1981
40

இந்தியா
புயலில் சிக்கிய இலை
ஒரு காலத்தில்.
புறாவின் நெஞ்சம் போன்ற சிறிய இலையொன்று ஒரு மரத்தின் கொப்பில் தளிர்த்திருந்தது.
அம்மரத்தில் வேறு சிறிய அழகிய இலைகளும் இருந்தன, சாவின் விளிம்பில் நின்று எக்கணமும் உதிர்ந்து விழத் தயாராய் இருந்த பெரியவையும் இருந்தன,
புறாவின் நெஞ்சம் போன்ற மென்மையான அவ்விலை அளவில் சிறியதுமில்லை, பெரியதுமில்லை. வைகறைப் போதி போன்று அது தளிர்விட்டிருந்தது. அதன் விதி கணிக்கப்படுவது போல் அதனுடல் எங்கும் கோடுகள் கிளம்பின.
ஒரு நாள்பஞ்சாப் காற்று போன்றன்றி காற்று மந்தமாருதமாய் வீசிற்று. எங்கிருந்து அது வந்தது என்று யாருமறிந்திலர். புயல் காற்றுப் போன்று ஆகாயத்திலிருந்து அது வந்திருக்கலாம். அவ் விளங்காற்று மரத்தை உலுப்பிவிட்டது. அந்தச் சிறிய இலை காற்றுக்குக் கிழிந்து, கோடுகள் உருக்குலைந்து உருமாறின. உடனேயே அது காற்றின் தாக்குதலால் மெல்லென அசைந்து ஒரு பாட்டுப் பாடியது. அது ஐநதி பாயும் பஞ்சாப்பின்
பாட்டல்ல.
முல்க் ராஜ் ஆனந்த்
41

Page 23
பிறமொழிச் சிறுகதைகள் சில
தினமும்.
முன்னைக் காட்டிலும் சற்று பலமாக அந்த மந்தமாருதம் வீசிற்று.
ஒரு நாள்
அக் காற்று மரத்தையே நிலை பெயர்த்தது. அப்புறா நெஞ்சு இலையையும் அடித்துக் கொண்டு சென்றது.
மெல்லென அசைந்து சென்ற அவ்விலை - பஞ்சாப் போல் வெப்பம் தரும் இடங்களல்லாத, சூரிய ஒளியற்ற ஒரு தனியிடத்தில் போய் யாருமற்ற அனாதையாய் விழுந்தது.
காலத்தின் முதிர்ச்சியால் பழுக்காமல் - ஞாயிறின் ஒளி காணாவிடத்தில் ஈரக்காற்று உருவாக்கும் - மஞ்சள் நிறமாக அவ்விலை மாறியது.
போதி மரத்தின் கிளையொன்று கடல் கடந்து இலங்கை சென்று அங்கே வேரூன்றி நிற்பதுபோல் - தானும் இடம்விட்டு வேற்றிடம் வந்து அஞ்ஞாதவாசம் செய்கின்றதாக அவ்விலை எண்ணிக் கொண்டது.
ஆனால்?
இலங்கை மரத்தில் வேரிருப்பதும், தனது மரத்தின் வேர் ஐநதி பாயும் பஞ்சாப்பில் காய்ந்து கருவாடாவதையும் அது அறிந்திருக்கவில்லை.
கடைசியாக ஒருநாள் - புள்ளினம் பறப்பது போல் தானும் பறக்க வேண்டும் என்ற ஆவல் சுடர் விட்டெரிய அது தான் விழுந்து கிடக்கும் இடமாகிய பிரதேசத்தில் இருந்து மெல்லப் பறந்து சென்றது.
மெதுவாக ஆடி, துள்ளுநடைபோட்டு, குதிரென விளையாடி, கீதமிசைத்து அது பறந்து சென்றது.
பருவகாலம் முடிந்ததும் தரைப்பகுதிக்கு மீண்டும் திரும்பும் பறவைபோல அவ்விலையும் பறந்து வந்து ஒரு கல்லில் தங்கி நின்றது.
42

கே.எஸ். சிவகுமாரன்
பரிதியின் கதிர்கள் அதன் இதயத்தை இதமாக்கின. மழைநீர் அதன்தாகத்தைத் தணித்தது. மலையின் வெடிப்புக்களினின்றும் குதிர்விடும் வேர்களை அவ்விலை ஆதாரமாகக் கொண்டது.
இப்பொழுது அவ்விலையைப் பார்த்தீர்களானால்!
அதன் விதி! துலாம்பரமாக அதன் முகப்பில் கோடுகள் விட்டிருப்பதைக் காணலாம். மண்ணின் நிறங் கொண்டு சூரியனின் சுடரில் வெந்நு முதிர்ச்சியடையாத புத்தர் போல அது வீற்றிருக்கக் காணலாம்.
மித்திரன் வாரமலர்

Page 24
இங்கிலாந்து
மிஸ்டர் ஓடி
டொமிபிரவுன் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் பயின்ற ஓர் இளைஞன். செல்சீ என்ற இடத்தில் அவன் வாழ்ந்து வந்தான். இலக்கிய விமர்சகன் என்ற முறையில் அவன் தனது எழுத்துலக வாழ்க்கையை ஆரம்பித்தான். செல்சீயில் அலிஸ் ஸிமித் என்ற இளநங்கையும் வாழ்ந்து வந்தாள். அவளும் ஒவியம் போன்ற கலைகளில் ஈடுபாடு உடையவள். இருவரும் கல்யாணம் செய்து கொள்வதாக இருந்தது.
ஆனால், டொமியின் நாவல்களையும், அவன் புத்தக மதிப்புரைகளையும் அலிஸ் கண்டித்துப் பேசிவந்தாள். அதே சமயத்தில் அலிஸின் விமர்சனப் பாங்கையும் ஆய்வறிவையும் டொமி வியந்து பாராட்டினான்.
ஒரு தேநீர் விருந்தின்போது அலிசுடன் சச்சரவுப்பட்டுக் கொண்ட டொமி ஒரு புத்தகக் கடைக்குள்நுழைந்தான். அங்கு பல மணிநேரமாகப் புத்தகங்களைப் புரட்டிப் புரட்டி வாசித்துக்கொண்டிருந்த போது, தன்னை யாரோ அவதானித் துக் கொண்டிருப்பதை டொமி உணர்ந்தான். தலையைத் திருப்பிப் பார்த்ததும் ஆஜானுபாகுவான தோற்றமுடைய தனக்குத் தெரிந்தவர் போல ஒருவர் நிற்பதைக் கண்டான். டொமியின் புத்தகங்கள் கீழே விழுந்து புழுதி கிளப்பின. அங்கு
ஹியூவோல்போல்
-- 44 -

கே.எஸ். சிவகுமாரன்
நின்ற அலிஸின் முகத்திலும் அப்புழுதி படிந்தது. ஆனால் அந்த ஆளோ எந்தவித பதற்றமும் இல்லாமல் டொமியுடன் உரையாடத் தொடங்கினார். சமகாலக் கலைகள், எழுத்தாளர் கள் போன்ற விஷயங்கள் பற்றி இருவரும் சம்பாஷரித்தனர். டொமியே முழு நேரமும் பேசினான். அந்த நபருக்கோ பல விஷயங்கள் தெரிந்திருக்கவில்லை. தனது அறியாமையை பல இடங்களிலும் காட்டி நின்றார், அவரே "மிஸ்டர் ஒடி'
இன்னொரு நாள் ஒரு பார்ட்டி நடக்கிறது. அங்கு நாயகனாக ஸ்பென்ஸர் ரஸல் என்பவர் விளங்குகிறார். அந்த விருந்தில் டொமியும் இருந்தான். டொமியின் அபிப்பிராயங்களைக் கேலி பண்ணிப் பேசினான் ரஸல். இதற்கிடையில் ரஸலின் அபிப்பிராயங்களை ஆதரித்து அலிஸ் பேசினாள். “வெளியே போய்விடுவோம் வா" என்று அலிஸைக் கேட்டான் டொமி. "ஹற்ஹரம் வரமாட்டேன்" என்றாள்.
டொமிக்கு என்னவோ போல் இருந்தது. தனியே அவன் வெளியேறினான்.
மிஸ்டர் ஓடியும் டொமியும் இரண்டாவது தடவை சந்தித்துக் கொண்டார்கள். தனது இலக்கியப் பணியை டொமி விபரித்துக் கூறினான். அலிசுடன் தான் சண்டை பிடித்திருப் பதையும் டொமி கூறினான். அவளுடன் மீண்டும் தொடர்பை ஏற்படுத்திக் கொள்ளும் படி மிஸ்டர் ஓடி ஆலோசனை σήμύσοτητή.
ஒடியும் டொமியும் மற்றொரு தடவை சந்தித்துக் கொண்டனர். அலிசுக்கும் தனக்குமிடையில் உறவு இன்னும் சரிப்பட்டு வரவில்லையென்று கூறினான் டொமி. ஸ்பென்ஸர் ரஸல், ஹென்றி கலிபோஸ் போன்ற பிரபல எழுத்தாளர்கள் ஒருவரையும் தனக்குத் தெரியவில்லை என்று ஒடி டொமியிடம் கூறினார். எழுத்தாளர்கள் கூடும் விருந்துகளுக்கு தன்னையும் அழைத்துச் செல்லுமாறு ஓடி கேட்டுக் கொண்டார். டொமி உடன்பட்டான்.

Page 25
பிறமொழிச் சிறுகதைகள் சில
மிஸ் தெல்மா பெனட் அளித்த விருந்தொன்றில் டொமியும், ஒடியும் கலந்து கொண்டனர். அந்த விருந்தின் போது ஹென்றி கலிபோஸின் நாவல்களை ஸ்பென்ஸர் ரஸல் காரசாரமாக விமர்சித்தார். டொமி அதற்குப் பதிலளித்தான். ஆனால், அலிஸ் உட்படப் பலரும் கிண்டல் செய்து டொமியை அடக்கினர். மனக்கசப்படைந்த டொமியும் ஒடியும் வெளியேறினர்.
பின்னர் ஒருநாள் டொமியின் அறையில் ஒடியும் டொமியும் சந்தித்தனர். டொமியின் அலுமாரியில் கலியோனின் நாவல்களும் இருப்பதை அவதானித்த ஓடி உள்ளுக்குள் சந்தோஷப்பட்டுக் கொண்டார். கலியோஸின் நாவல்கள் பற்றி இருவரும் ஆராய்ந்துகொண்டிருந்த பொழுது, அலிஸிட மிருந்து டொமிக்கு ஒரு கடிதம் வந்தது. அன்று காலை தானும் ரஸலும் திருமணம் செய்து கொண்டதாக அக்கடிதத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது. டொமி மனம் ஒடிந்து போனான் என்பதைச் சொல்லவும் வேண்டுமா?
ஒடியின் அழைப்பின்பேரில் டொமி, ஈடன் சதுக்கத்தில் உள்ள ஒடியின் இல் லத்திற்கு விஜயம் செய்தான். அங்கு சென்றதும் "மிஸ்டர் ஒடி' என்பவர் உண்மையில் டொமியின் அபிமான எழுத்தாளரான ஹென்றி கலியோஸ்தான் என்பதை அறிந்து டொமி அதிர்ச்சியுற்றான்.
மித்திரன் வாரமலர் ஏப்ரல் 05- 1981

நியுசிலாந்து
ஒரு கோப்பைத் தேநீர்
இளமை பூத்துக் குலுங்கும் செல்வந்தச் சீமாட்டியவள். நாகரிக மங்கை, நவீன மோஸ்தர்களில் நாட்டம் கொண்டவள் தான் அவள். பெயர் ரோஸ்மெரிபெல். வெளிவரும் அத்தனை புதிய புத்தகங்களையும் அவள் வாசித்திருக்கிறாள். படித்திருக்கிறாள். அவள் அளிக்கும் விருந்துகளில் பெரும் எழுத்தாளர்கள், கலைஞர்கள், அறிஞர்கள் போன்றவர்கள் கலந்து கொள்வார் கள். அவள் கணவனோ அவளைப் பூஜித்தான் என்றே சொல்ல வேண்டும். அவளைத் தான் அடைந்ததில் பெருமை கொண்டான். அவர்களுக்கு மைக்கல் என்ற புதல்வன், சிறுவன்.
அவள் கடைக்குச் சென்று சாமான்கள் வாங்கும் பொழு தெல்லாம் அவளைப் புகழ்ந்தும், அவள் ரசனையை வியந்தும், அவள் கலைத்தன்மையைப் பாராட்டியும், தங்கள் காரியத்தை முடித்துக் கொள்வார்கள் கடைச் சிப்பந்திகள். அவர்கள் புகழுரைக்கு மயங்கி, அவள் சிறிய பொருள்களையும் அதிக விலை கொடுத்து வாங்கி வந்து விடுவாள். அன்றும் அப்படித்தான். கேர்ஸோன் வீதியில் பழைய சாதனப் பொருட் கடையொன்றிருக்கிறது. அக்கடையின் முதலாளி இவளுக்குப் பாதபூஜை செய்யும் விதத்தில் இவளைப் புகழ்ந்து வானத்தில் மிதக்க விட்டிருப்பவன். அதனால் அவள் அக்கடைக்கு அடிக்கடி செல்வதுண்டு.
கத்தரின் மன்ஸ்பீல்ட்
47

Page 26
பிறமொழிச்சிறுகதைகள் சில
அன்று அக்கடைக்குப் போன போது, அவளுக்கென ஒரு சிறு எனாமல் பேழையை முதலாளி வைத்திருந்ததை அவள் பரிசீலித்தாள். அதன் விலை 28 கினி என்றான் அவன். உடனடி யாக அதனை அவள் வாங்குவதில்லை எனத் தீர்மானித்து வெளியே போக முயலும் பொழுது மழை பெய்து கொண்டிருந்தது. இருந்தாலும் தனது காரில் வீட்டுக்குப் போய் "சிறப்புத் தேநீர் அருந்த வேண்டும் என்று அவள் அவசரப் பட்டாள்.
அப்பொழுது நேரம் கருகலாயிருக்கும் அந்த வேளையில் பெரிய விழிகளும், நிறம் குறைந்த சருமத்தையுடையவளுமான அவளையொத்த வயதுடைய பெண் அவள் முன் எதிர்ப்பட்டு. “ஒருகோப்பைத் தேநீர்க்கான பணம் தருவீர்களா?" என்று இறைஞ்சினாள். டொயிஸ்டியோவ்ஸ்கியின் நாவல்களில் வருவது போல, அந்த மாலை வேளையில், தன்னிடம் ஒருபெண் தர்மம் கேட்பது உண்மையிலேயே ஒரு வீரதீரச் செயல் நிரம்பிய அனுபவம்தான் என்று அவள் நினைத்தாள். இந்தப் பெண்ணை வீட்டுக்கு அழைத்துச் சென்றால் என்ன?
“என்னுடன் வா வீட்டுக்கு தேநீர் குடிப்போம்” என்றாள்.
மற்றவள் சிறிது நேரம் தயங்கினாள். ஆயினும் ரோஸ்மெரி அவளை வலிந்து இழுத்துக் கொண்டு வீடு போய்ச் சேர்ந்தாள். தன் முன்னே பிரிந்திருந்த உல்லாச சொகுசான ஆடம்பர வாழ்க்கை உலகத்தை நேரிற் கண்டதும், புதிய பெண் பேச்சு மூச்சேயற்றுப் போனாள்.
அவளுக்குப் பசி, மயங்கி விழுந்து விடுவாள் போலிருந்தது. உடனே ரோஸ்மெரி நிறைய ஸேன்ட்விச், பாண்துண்டு, பட்டர் போன்றவற்றை அவளுக்குக் கொடுத்தாள். ஒவ்வொரு தடவையும் அவள் தேநீரைக் குடித்து முடிக்க, அவள் கோப்பையில் மீண்டும் மீண்டும் தேநீரை ரோஸ்மெரி ஊற்றினாள். چ

கே.எஸ். சிவகுமாரன்
இந்த நேரத்தில் அவள் கணவன் பிலிப் வீட்டுக்குள் நுழைந்தான். கண்டதும் அவனுக்குத் திகைப்பு. ரோஸ்மெரி யைத் தனியாக அழைத்து இந்த விருந்தை அவன் ஆட்சேபித் தான், ரோஸ்மெரி இதனைப் புறக்கணித்து, புதியவளுக்கு மேலும் மேலும் செளகரியங்களைச் செய்து கொடுத்தாள்.
பிலிப் பார்த்தான், ஒன்றும் சரிவரவில்லை, சடுதியில் அவனுக்கு ஒரு அலை மூளையில் தட்டியது. மனைவியை மீண்டும் அழைத்தான். புதியவள் மனதைக் கொள்ளை கொள்ளும் அழகுள்ளவள் என்றும், யெளவன எழிலுடையாள் என்றும் கூறினான். கணவனின் இந்தப் புகழாரம் ரோஸ்மெரிக் குப் பொறாமையை ஏற்படுத்திற்று.
உடனேயே தனது எண்ணத்தை மாற்றிக் கொண்டு, அந்தப் பெண்ணுக்கு 3 பவுணைக் கொடுத்து அவளை வீட்டுக்கு அனுப்பி வைத்தாள்.
பவளமாலையை அணிந்து கொண்டாள். ஒப்பனை செய்து கொண்டாள். தன் கணவனை நெருங்கி முத்தமிட்டாள்.
“பிலிப் நான் அழகி தானே?” என்றாள் அவள்.
மித்திரன் வாரமலர் LDITiráf 22, 1981
49

Page 27
ருஷ்யா
சொக்கோல்நிகியில் புதுவருடம்
அவர்களுக்கு ஒரு மரக்கொப்பு வேண்டியிருந்தது. அதற்காக அவர்கள் வெகுதூரம் போகவேண்டியிருக்கவில்லை. ஏன் என்றால் சொக்கோல்நிகி என்ற அவர்களது மாவட்டத்துக்கு அருகிலேயே ஒரு காடு இருந்தது. இருப்பவற்றுள் பசுமையான பெரிய கொப்பு ஒன்றை வெட்டிக் கொண்டு அவர்கள் சிறுவர்களின் வீட்டிற்குத் திரும்பினார்கள்.
சிறுவர்கள் தாமாகவே தயாரித்த சோடனைப் பொருள்கள் அடங்கிய ஒரு பெட்டியை மின்னியக்குனர் வோலோட்யா கொண்டு வந்து மரக்கொப்பினைச் சோடித்தார்.
மறு நாள் அவர்கள் முன்னதாகவே எழும்பி விட்டனர். லெனின் வருகைக்காகக் காத்திருந்தனர். வெளியில் இருள் அகலவில்லை ஆயினும் மேற்பார்வையாளரிடம் விசாரித்துக் கொண்டேயிருந்தனர்.
மேற்பார்வையாளர் மேற்றோகிராட் பழைய தொழிலாளி. லெனினை அவருக்கு வெகுகாலமாகத் தெரியும். அதனால்தான் அவர் என்ன கூறப்போகிறார் என்று அறியச் சிறுவர்கள் விரும்பினர்.
"வருவார் என்று சொன்னால் நிச்சயமாக அவர் வரத்தான் செய்வார்’ என்று உறுதியுடன் மேற்பார்வையாளர் சிறுவர் களுக்குப் பதில் கூறினார்.
ஏ.கோணனோவ்
50

கே.எஸ். சிவகுமாரன்
விழாவுக்கு நேரமாகிவிட்டது, வெளியே கடுமையான குளிர் காற்று வீசிற்று. ஜன்னற் கதவுகளில் உறைந்த பனிக்கட்டிகளை வீசி எறிந்தது காற்று. முன் வாசலில் கார் ஒன்று வந்து நின்றதை ஒருவரும் கவனிக்கவில்லை. வெளியே எத்தனையோ சப்தங்களும் ஒலிகளும் கேட்டுக் கொண்டிருந்தமையால், உள்ளிருந்த அவர்களுக்குக் கார் வந்த சப்தம் கேட்கவில்லை. காரை விட்டு வெளியே இறங்கினார் லெனின். மேன்மாடிக்குப் போய் தொப்பியையும், கோட்டையும் கழற்றினார், கைக்குட்டையால் முகத்தில் படிந்திருந்த ஈரப் பணித்துளிகளைத் துடைத்தெடுத்தார். அதன்பின் சிறுவர்கள் எல்லோரும் கூடியிருந்த அந்தப் பெரிய அறைக்குள் நேராகவே சென்றார்.
அவரை உடனடியாகவே அவர்கள் இனங்கண்டு கொண்டனர். அவரது படத்தை அவர்கள் முன்னர் பலதடவை பார்த்திருக்கிறார்கள். முதலில் எல்லோரும் வெட்கப்பட்டனர், வார்த்தை ஒன்றும் பேசாமல் சுற்றி நின்று லெனினைப் பார்த்துக் கொண்டிருந்தனர்.
லெனின் அவர்களைக் காத்திருக்கச் செய்யாமல் கள்ளத் தனமாக அவர்களைப் பார்த்து விட்டுக் கேட்டார்.
"எலியும் பூனையும் விளையாட யாருக்குத் தெரியும்?" அவர்களுள் வயது வந்த வேராதான் முதலிற் பதில் கூறினாள். “எனக்குத் தெரியும்!”
“எனக்குந் தெரியும்!” என்று லியோஷா என்ற சின்னப் பையன் தானும் கத்தினான்.
அந்த மரத்தைச் சுற்றி அவர்கள் வட்டமாய் நின்று கொண்டனர். சிறுமி கட்யாதானாம் எலி கட்யாவைத்துரத்தி லியோஷா ஓடினாள். அவளைப் பிடிக்கப் போகும் வேளையில் அவள் லெனினை இறுக்கிப் பிடித்துக் கொண்டாள். அவர் அவளை உயரத்துக்கிச் சுற்றினார்.
"உன்னை அந்தப் பூனை பிடிக்க முடியாது!” என்றார்.
51

Page 28
பிறமொழிச் சிறுகதைகள் சில
வெகு நேரம் அவர்கள் விளையாடினார்கள். எல்லாருக்கும் வியர்த்துக் களைத்துப் போயிற்று.
யாரோ கத்தினான்.
"குருடன் விளையாட்டு விளையாடுவோமே!”
லெனின்தான் குருடனாம், அவர் கைக்குட்டையால் கண்களைச் சுற்றிக் கட்டிக் கொண்டார். மரத்தை ஒரு மூலையில் வோலோட்யா கொண்டு வந்து வைத்தார். பிள்ளைகள் விளையாட நிறைய இடம் இப்பொழுது இருந்தது.
கையை நீட்டி விரித்துக் கொண்டு காற் பெருவிரலால் மெல்லமெல்ல சுற்றிவந்தார் லெனின். பிள்ளைகள் நின்றார்கள்.
இவ்விளையாட்டு அவர்களுக்கு நன்கு தெரிந்திருந்தது என்றும் கண்களை மூடிக்கொண்டு அவர்களைப் பிடிக்க வெகு நேரம் எடுக்கும் என்று அறிந்து கொண்ட லெனின், தான் இனி நடக்கப் போவதாகக் கூறிக் கொண்டே திரும்பி தனக்கருகில் நின்ற ஒரு சிறுவனைப் பிடித்துவிட்டார்.
“யார் என்று சொல்லுங்கள்" என்று எல்லோரும் கத்தினார்கள்.
பையனின் தலைமயிரைத் தொட்டுப் பார்த்தார் லெனின். அவன் கன்னங்களையும் முன்நெற்றியையும் விரல்களினால் வருடினார்.
“இவன் ஸென்யாதானே!"
அதன் பின் கட்யா ஒரு கீதம் பாடினாள். ஆனால் அதன் இறுதிப்பகுதி தனக்குத் தெரியாது என்று கண்டதும் அழத் தொடங்கினாள். அவளுக்கு ஆதரவாகச் சில வார்த்தைகள் லெனின் பேசி அவளை உற்சாகப் படுத்தினார். அவள் அழுகையை நிறுத்திக் கண்ணைத்துடைத்து விட்டுக் கூறினாள்.
“எங்களை விட்டுப் போகவேண்டாம் லெனின்.
எங்களுடனேயே நெடுகிலும் இருந்து விடுங்கள்."
52

கே.எஸ். சிவகுமாரன்
சிரித்துக் கொண்டே லெனின் கூறினார்.
"நான் கிட்டடியில் தானே இருக்கிறேன்!” அப்பொழுது லெனினின் சகோதரியும், மனைவியும், அன்பளிப்புப் பொருள்கள் நிறைந்த ஒரு பெரிய கூடையுடன் வந்தனர்.
லியோஷாவுக்கு ஒரு ஊதுகுழல். ஸென்யாவுக்கு ஒரு மத்தளம், வேராவுக்கு ஒரு புத்தகம். கட் யாவுக்கு ஒரு பொம்மை. ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு அன்பளிப்பு இருந்தது.
மரத்தைச் சுற்றிச் சிறுவர்கள் தமது புதிய விளையாட்டுப் பொருட்களுடன் கும்மாளம் அடிக்கையில், அறையை விட்டு நழுவிக் காரில் சென்று விட்டார் லெனின்.
1919ல் மொஸ்கோவை அடுத்த வெளியூரான சொக்கோல்நிகியில் நடைபெற்ற புதுவருட விழாவில் இவை எல்லாம் நடைபெற்றன.
சோவியத் நாடு
53

Page 29
நூலாசிரியர் இதுவரை எழுதிய தமிழ் நூல்கள்
10.
III.
12.
13.
14.
15.
16.
17.
ஈழத்துச் சிறுகதைகளும் ஆசிரியர்களும் : ஒரு பன்முகப் பார்வை
(1962-1979) – LungsLö 01 (2007)
பிறமொழிச் சிறுகதைகள் சில - தமிழாக்கம் (2007)
சினமா சினமா : ஒர் உலகவலம் (2006)
இந்திய - இலங்கை இலக்கியம் : ஒரு கண்ணோட்டம்(2005)
திறனாய்வு என்றால் என்ன? (2005)
சொன்னாற்போல - 2 (2004)
அசையும் படிமங்கள் (2001)
மரபுவழித் திறனாய்வும் ஈழத்துத் தமிழ் இலக்கியமும் (2000)
ஈழத்துத் தமிழ் நாவல்களில் சில (1999)
மூன்று நூற்றாண்டுகளின் முன்னோடிச் சிந்தனைகள் (1999)
திறனாய்வு: அண்மைக்கால ஈழத்துச் சிறுகதைத் தொகுப்புகள்
(1999)
இருமை : சிறுகதைத் தொகுப்பு (1998)
ஈழத்துச் சிறுகதைத் தொகுப்புகள் (திறனாய்வு) (1996)
திறனாய்வுப் பார்வைகள் (1996)
கைலாசபதியும் நானும் (1990)
கலை இலக்கியத் திறனாய்வு (1989)
சிவகுமாரன் கதைகள் (1982)


Page 30


Page 31
மீரா பதிப்பக
 

இருந்து வருகின்றார்.
இரு மொழிகளையும் த்துகின்றார்.