கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: பிரியமான சினேகிதி

Page 1


Page 2

BARBARON ୱିତୀଙ୍କି
ஜெனீரா தெளபீக் கைருல் அமான்
வெளியீடு : அல்-அக்தாப் இலக்கிய மன்றம் கிண்ணியா

Page 3
Title
Subject
Pages Author
Copy Right
First Editi in :
Publisher
Printed by
Price
பிரியமான சினேகிதி
"riyamana Sinekithi
Short Stories
VIII -- 63 = 71
Jeneera Thowfeek Kairul Aman
Ehuthar Hajiyar Road,
Kinniya - 6
Telephone: 026 2236487
Author
June 2009
Al-Aqthab Literary Association,
Kinniya.
UDH Compuprint 51/42, Mohideen Masjid Road,
Colombo 10.
Tel. : 011 2382481, 077366524
Rs. 150.00
ISBN: 978-955-0161-00-3
I

ஜெனிரா தெளUக் கைருல் அமான்
ஆசிச் செய்தி
முத்தின் பிறப்பிடமாய் திகழ்ந்த கிண்ணியாவின் முதன்மைப் பிரஜையாம் அல்ஹாஜ் எகுத்தார் அவர்களின் பரம்பரையில் உதித்து அறிவுச் சுடரால் "மகுடத்தின் முத்தாக” மிளிர்ந்து கொண்டிருக்கும் திருமதி ஜெனீரா ஹைருல் அமான் அவர்கள் ஆசிரியர் சேவையை திறம்பட ஆற்றுவதுடன், சமூகத்தின் கண்ணே தனது கண் என எழுத்தாற்றல் மூலமாக சமுதாய் விழிப்புணர்ச்சியை ஏற்படுத்த முயன்று கொண்டிருக்கிறார். இவரது ஆற்றலும் நோக்கமும் எழுத்தோவியமாக உருப்பெற்று இன்று சிறுகதைத் தொகுப்பாக வெளிவருவதையிட்டு இவர் கிண்ணியாவிற்கு பெருமை சேர்த்து விட்டார். சிறுகதை சிற்பியாக மாத்திரமன்றி, கவிஞராகவும் இவர் ஒளிர்ந்து கொண்டிருக்கிறார்.
இவரது ஆக்கங்கள் தினகரன், சிந்தாமணி, நவமணி, வீரகேசரி, மித்திரன் போன்ற தேசிய பத்திரிகைகளிலும், ஜனனி, சங்கமம், உணர்வுக்களம், சிகரம், அல்ஹஸனாத் போன்ற சஞ்சிகைகளிலும், மாதர் மஜ்லிஸ், இசையும் கதையும், பூவும் பொட்டும், மங்கையர் மஞ்சரி, இளைஞர் இதயம், பாவளம் போன்ற வானொலி நிகழ்ச்சிகளிலும் கடல் கடந்தும் பரவியதை நினைவூட்டாமல் இருக்க முடியாது.
இவ்வளவு ஆற்றல் நிறைந்த இவரது சிறுகதைத் தொகுப்பிற்கு ஆசியுரை வழங்குவதையிட்டு பெருமகிழ்ச்சியடைகிறேன்.
மென்மேலும் இவரது பணி ஓங்கி வளரவும், சமூகம் எழுச்சி பெறவும் வேண்டும் எனவும் எல்லாம் வல்ல இறைவனை வேண்டி பெருமனதுடன் நல்லாசி புரிகின்றேன்.
æúb&gssör Siusö9mav6ör (S.L.P.S.S.I.) முன்னாள் அதிபர் தி/அல்-அக்தாப் வித்தியாலயம் கிண்ணியா
III

Page 4
பிரியமான சினேகிதி
அணிந்துரை
1991 ஆணி டு, நான், அளுத்கமை ஆசிரியர் கலாசாலையில் விரிவுரையாளராகக் கடமையாற்றிக்கொண்டிருந்தேன். மகளிர் மட்டுமே ஆசிரியப் பயிற்சி பெறும் கலாசாலை அது.
பலரைப் போலவே ஒரு மாணவியும் வந்து சேர்ந்தார் கிண்ணியாவைச் சேர்ந்தவர் அவர், கலை இலக்கிய முயற்சிகளில் தனித்து மிளிர்ந்தார். சிறுவர் பாடல்களைச் சிறப்பாக எழுதினார். இப்பாடல்களைத் தொகுத்து நூல் வடிவாக்கினால் என்ன? என்ற எனது ஆலோசனையை, வினா வடிவில் தொடுத்தேன். அவரும் சம்மதித்தார். அதன் விளைவாக எழுந்ததே “பாலர் பாடல்” என்ற கவிதைத் தொகுப்பு. நூலின் வெளியீட்டு விழாவும்கூட கலாசாலையில் வெகு விமரிசையாக நடைபெற்றது. முன்னைநாள் மன்னார் மாவட்ட அமைச்சரும் அந்த மாணவியின் பெரியப்பாவுமாகிய மர்ஹும் எம்.ஈ.எச் மஹ்ரூப் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டார். பேராசிரியர் அல்லாமா காநிதி எம்.எம். உவைஸ் சிறப்பதிதியாகக் கலந்து கொண்டார் இது அளுத்கமை ஆசிரியர் கலாசாலையின் வரலாற்றுப் பதிவாகும். இரண்டு வருட பயிற்சியின் பின்னர் அம்மாணவி கலாசாலையை விட்டு சென்று விட்டார். ஆனால் அன்று தொடர்ந்த அவரது இலக்கியப் பணி இன்றுவரை தொடர்ந்துகொண்டே இருக்கிறது. கதையென்றும் கவிதையென்றும் கட்டுரையென்றும்.
அவர்தான் எனது மதிப்பிற்குரிய மாணவி, ஜெனீரா அமான் (ஜெனீரா தெளபீக்). அவரது இலக்கியப் பணிக்கு அவரது அன்புக் கணவர் அமானும் உற்ற துணையாகவும் ஊன்றுகோலாகவும் துலங்குகிறார். இது ஜெனீராவிற்கு ஒரு வாய்ப்பாகவும் வாலாயமாகவும் அமைந்து விட்டது.
பத்திரிகை மற்றும் இலத்திரனியல் ஊடகங்களில் மட்டும் தனது படைப்பாற்றலைப் பொறித்துக் கொண்டிருந்த ஜெனீரா, நூல் வெளியிடும் முயற்சியில் இறங்கினார். அதுவும் ஒரே நேரத்தில் இரு நூற்கள். நல்ல முயற்சி! ஆனால் பகீரத முயற்சி என்னுடன் தொலைபேசியில் அடிக்கடி கலந்துரையாடினார். ஆலோசனையும் கேட்டார்.
"ஓர் எழுத்தாளன் (அல்லது எழுதாளினி) நூல் ஒன்றை வெளியிடுவது பிரசவ வேதனையை ஒக்கும்” என்று எழுதியும் பேசியும் செவிமடுத்தும் வருபவர்களில்
IV

ஜெனிரா தெளUக் கைருல் அமான்
நானும் ஒருவன். ஆயினும் அந்தப் பிரசவத்தில் துணிச்சலுடன் இறங்குமாறு வற்புறுத்தினேன்! என் ஆணையைச் சிரமேற் தாங்கும் பண்புடையவரான ஜெனீரா, அவ்வாறே இறங்கினார். விதைந்தார் இன்று அறுவடை செய்திருக்கிறார்.
சிறுகதை - கவிதை என இரு துறைசார் நூற்களை வெளிக்கொணர்கிறார் ஜெனீரா. “சிறுகதை என்பது தீக்குச்சியின் உராய்வில் ஏற்படும் தீச்சுவாலை போல சில நிமிடங்கள் நின்று நிலைப்பது. அதேவேளை அதன் கெந்தக நெடிபோல் நீண்ட நேரம் நாசியை ஆட்கொள்வது” என்று அடிக்கடி கூறி வருபவன் நான்.
“சிறுகதையென்பது - ஒரு சிறு சம்பவத்தை மட்டும் குறிப்பது. ஒரு வீட்டின் 'அருகில் செல்லும்போது ஜன்னலால் எட்டிப் பார்த்துச் செல்வது போன்றது” என்பது
சிறுகதை மேதாவிகளின் கருத்தாகும். இதற்கும் நான் உடன்பாடே!
ஜெனீராவின் கதைகள் இக்தகைய தன்மையதே புதுமைப்பித்தன், பித்தன்ஷா, மருதூர்க் கொத்தன் , கே. டானியல் போன்றோருடைய சிறுகதைகளிலிருந்தும் ஜெனீராவின் கதைகள் மாறுபட்டவை. தீவிரம், புாட்சி, போராட்டம் இவரது கதைகளில் இல்லை. மனித நேயம், மெலிதான நெருடல், உளக் குமுறல், இரக்க சிந்தை ஜீவகாருண்யம் போன்ற பண்புக் கூறுகள் இவரது கதைகளில் இழையோடுவதை அவதானித்திருக்கிறேன்.
லகூழ்மி, இராஜம் கிருஷ்ணன், பத்மா சோமகாந்தன், நா. பாலேஸ்வரி போன்றோரது சிறுகதைகளில் காணப்படும் பெண்மையின் மென்மை , முள்போன்ற உறுத்தல், விம்மலினூடே எழும் விரக்தி அல்லது வேதனை, ஈற்றிலே மங்களகரமான முடிவொன்றை நோக்கி அழைத்துச் செல்லும் பாங்கு (பெரும்பாலும்). நெக்குருகி நீராக்கி விடும் சில சொற்பிரயோகங்களும் சம்பவங்களும் இவரது சிறு கதைகளில் விரவிக் கிடக்கின்றன. மயிலிறகு கொண்டு மெலிதாக இதயத்தை நெருடுவது போன்ற மன நெகிழ்வை ஏற்படுத்துகின்றன.
இத்தொகுப்பின் வெற்றிக்கான எனது இதய பூர்வ வாழ்த்துப் புஷ்பங்களைச் சொரிகிறேன்.
கலைவாதி கலீல் - முன்னைநாள் உப பீடாதிபதி தர்காநகர் தேசிய கல்வியியற் கல்லூரி
V

Page 5
பிரியமான சினேகிதி
என்னுரை
எனது ஆசிரியப் பணியின் ஆரம்ப காலங்களில் ஆரம்பக் கல்வி கற்பிக்)கும் ஆசிரிய, மாணவர்களின் நலன் கருதி சிறுவர் பாடல்களை வெளியிட ஆயத்தமான்ே. மாணவச் செல்வங்கள் பாடல்களைப் பாடி மகிழ்வதன் மூலம் அவர்களின் ஆற்றல்கள் வளர வாய்ப்பாக அமைகிறது. இதனால் அ(கூ)ச்சம் என்பன நீங்கி தலைமைப் பொறுப்பை ஏற்றுச் செயல்படும் திறமை அதிகரிக்கிறது. எனவேதான் சிறுவர் பாடல்களை எழுதுவதில் அதிக ஈடுபாடு கொண்டேன். சின்னக்குயில் பாட்டு எனது இரண்டாவது சிறுவர் பாடல் தொகுதியாகும். 1991/11/30 அன்று அளுத்கம ஆசிரிய பயிற்சிக் கலாசாலையில் எனது மதிப்பிற்குரிய விரிவுரையாளர் கலைவாதி கலீலினால் எனது முதலாவது நூல் வெளியிடப்பட்டது குறிப்பிடத்தக்கதாகும்.
நான் பாடசாலையில் கற்கும் காலங்களிலிருந்தே இலக்கியத் துறையில் அதிக ஈடுபாடு காட்டினேன். எனது முதற் படைப்பு 1979 ம் ஆண்டு தினகரன் சிறுவர் உலகம் பகுதியில் “எனது பொழுது போக்கு’ எனும் தலைப்பில் பிரசுரமானது. அன்றிலிருந்து இன்று வரை தினகரன், சிந்தாமணி, நவமணி, ஜனனி, வீரகேசரி, தினமுரசு, மித்திரன் போன்ற தேசிய பத்திரிகைகளிலும் செந்தூரம், அகரம், கலைமுத்து, உணர்வுக் களம், சங்கமம், அல்லி, ஊர்க்குருவி, சுனை, அன்னை, காற்று முதலிய சஞ்சிகைகளிலும் பூவும் பொட்டும் மங்கையர் மஞ்சரி, மாதர் மஜ்லிஸ், ஒலி மஞ்சரி, பாவளம், இசையும் கதையும், இளைஞர் இதயம், வாலிப வட்டம், கவிதைச் சரம் போன்ற வானொலி நிகழ்ச்சிகளிலும் அரங்கேறின.
என் இலக்கிய ஆர்வத்திற்கு ஆரம்பத்திலேயே என் பெற்றோர் ஆதரவு வழங்கினர். அதனால் எனது இலக்கியத் தாகம் பெருக்கெடுத்தது. திருமணத்தின் பின் இலக்கிய உலகில் நிலைத்து நிற்க எனது கணவர் பூரண ஒத்துழைப்பு வழங்கினார். இவ்வாறான பெற்றோரும், கணவரும் அமையப் பெற்றமைக்கு அல்லாஹ்வுக்கு நன்றி கூறுகின்றேன். சிறுவர் பாடல்களோடு சிறுகதையும் எழுதும் ஆர்வம் காரணமாகப் பல சிறுகதைகளை எழுதினேன். அவற்றைத் தொகுத்து இன்று நூலாக்கியுள்ளேன்.
இதனை நூலுருவிற் கொண்டு வர உதவி செய்த சகோதரர் றில்மி தெளபீக் அவர்களுக்கும். ஒத்துழைப்பும், ஆலோசனையும் வழங்கிய முன்னாள் விரிவுரையாளரும் உப பீடாதிபதியுமான கலைவாதி கலீல் அவர்களுக்கும். அணிந்துரை. ஆசியுரை வழங்கியவர்களுக்கும் எனது எழுத்தாற்றலை ஊக்குவிக்கும் அன்பர்களுக்கும் இந்நூலை அழகுற அச்சிட்ட கொழும்பு-10 UDH பதிப்பகத்தாருக்கும். அல்-அக்தாப் இலக்கிய மன்றத்துக்கும் எனது இதயபூர்வமான நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
திருமதி. ஜெனீரா தெளபீக் அமான்
எஹுத்தார் ஹாஜியார் வீதி,
கிண்ணியா - 06.
026 2236487
VI

ஜெனிரா தெளUக் கைருல் அமான்
ஆசிச் செய்தி
தமிழில் சிறுகதையின் வளர்ச்சியில் ஈழத்தவர்களுக்கும் ஒரு த்திரமான பங்களிப்பு இருக்கின்றது என்பதை எவரும் மறுக்க முடியாது. இதற்குதாரணமாக இலங்கையர்கோன், அன்புமணி, வ.அ.இராசரெட்ணம், திருமதி.பா.நல்லரெட்ணசிங்கன் போன்றவர்களை நாம் குறிப்பிடலாம். மேற்குறிப்பிட்டவர்கள் முத்திரை பதித்த மூத்த சிறுகதை எழுத்தாளர்கள் (R6 T.
மேற்கூறிய இவர்களுக்குப் பின்பும் சிறுகதை எழுத்தாளர்கள் உருவாகிக்கொண்டே இருக்கின்றார்கள். இவர்களுள் திருமலை சுந்தா, இராஜதர்மராஜா, கிண்ணியா எம்.ஐ.எம்.தாஹிர் போன்றேரை நாம் குறிப்பிடலாம்.
இந்த வகையிலே கதை எமுதும் முறைகளில் அவ்வப்போது மாற்றங்கள் ஏற்பட்டுக்கொண்டே வருகின்றன. அப்படியான மாற்றங்களையும், சமகாலப் போக்குகளைச் சித்தரிக்கும் வகையிலும் தற்போது சிறுகதைகள் எழுதப்பட்டு வருவதை நாம் பத்திரிகைகளிலும், சஞ்சிகை. களிலும், மற்றும் இலக்கிய ஏடுகளிலும் காணக்கூடியதாக இருக்கின்றது.
வுளர்ந்து வருகின்ற ஒரு இளம் எழுத்தாளராக நான் கிண்ணியாவைச் சேர்ந்த ஜெனிரா ஹைருல் அமான் அவர்களைக் காண்கின்றேன். இன்னார் 1979ம் ஆண்டிலிருந்து தினகரன் சிறுவர் உலகம் பகுதியில் ஆரம்பித்து இன்றுவரை எழுதி வருகின்றார். ஜெனிராவின் ஆக்கங்கள் தினகரன், சிந்தாமணி, நவமணி, வீரகேசரி போன்ற நாழிதள்களில் வெளிவந்துள்ளன. மேலும் இவர் வானொலியிலும் முஸ்லீம் நிகழ்ச்சி. களில் தன்னுடைய இலக்கிய ஆளுமையை வெளிப்படுத்தி வந்துள்ளார்.
இவரால் சமீபத்தில் நவமணி பத்திரிகையில் வெளியிடப்பட்ட சிறுகதைகளை நான் வாசித்தேன். அவற்றில் இவருடைய கதை எழுதும் திறன் சிறப்பாக அமைந்து விளங்குவதை என்னால் உணரக் கூடியதாக இருந்தது. இவரால் 17.02.2008 ல் எழுதப்பட்ட "கண்திறந்தது” என்னும் சிறுகதை மிக அருமையானதாகவும் யதார்த்தமாகவும் அமைந்திருந்தமை ஒரு சிறப்பம்சமாகும்.
இந்த இளம் சிறுகதை எழுத்தாளர் வளர்ச்சியடைந்து சிறுகதை உலகில் பிரகாசித்து விளங்க வாழ்த்துவதுடன் எல்லாம் வல்ல ஆண்டவன் இவருக்கு எழுத்துலகில் தொடர்ந்து சாதனைகளை நிலைநாட்ட அருள்புரிய வேண்டுமெனவும் வேண்டுகின்றேன்.
சட்டத்தரணி ஓ.எல்.எம். இஸ்மாயில் J.P.U.M 25, கனல் ஒழுங்கை, திருகோணமலை.
VII

Page 6
பிரியமான சினேகிதி
உள்ளே.
1)
2)
3)
4)
5)
6)
7).
8)
9)
10)
11)
12)
13)
14)
தன்னம்பிக்கை இழந்தவன்
சங்கமமாகும் சந்தோஷங்கள்
மனம்மாறா மனிதர்கள்
அவளெடுத்த முடிவு
எதிர்பாராத சந்திப்புக்கள்
கண் திறந்தது
உண்மை உயிர்த்தெழும் போது
மனசுக்கேற்ற வாழ்வு
துளிர்விடும் உறவுகள்
பிரியமான சினேகிதி
தொடர்கதையாகும் துயரங்கள்
நன்றிக் கடன்
ஒரு மழலையின் விடிவு
அவள் போட்ட சபதம்
VIII
01.
04
07
11
15
21
30
34
5
50
60
03
O6
10
14
20
24
44
49
54
59
63

ஜெனிரா தெளUக் கைருல் அமான்
தன்னம்பிக்கை இழந்தவன்
ஸம்ரூத், ஸஹர் செய்து விட்டு, சுபஹக்கு அதான் சொல்லும் வரை குர்ஆன் ஓதத் தொடங்கினாள். ஒர் ஐன் ஓதி முடித்தவளுக்குத் தன் மகனின் தன்னம்பிக்கையில்லா வாழ்க்கை நினைவுக்கு வரவே சிந்திக்கத் தொடங்கினாள்.
ஸம்ரூத்திற்கு இரு பெண்பிள்ளைகளும் ஒரு ஆண் மகனும் இருந்தனர். பெண் பிள்ளைகள் இருவரும் உரிய வயதில் திருமணமும் முடித்து வாழ்க்கை வண்டியைச் சந்தோஷமாக ஒட்டிச் சென்றனர். ஆனால் மகனோ, எதிலும் பிடிப்பில்லாமல் வாழ்ந்து கொண்டிருந்தான். அவனுக்கும் காலாகாலத்தில் திருமணம் செய்து வைக்க வேண்டுமென பெற்றோரின் உள்ளம் துடியாய்த் துடித்தது. ஊரில் அவனை போட்டாபோட்டி போட்டுக் கொண்டு மாப்பிள்ளை கேட்கும் படலம் ஆரம்பமானது.
பர்ஸானோ, தான் திருமணம் முடிக்க வேண்டுமே அல்லது தொழில் பார்க்க வேண்டுமே, நாலு பேரைப் போல சம்பாதித்து முன்னுக்கு வர வேண்டுமே என ஆசை கொள்ளவில்லை. மாறாக, பெற்றோரின் உழைப்பில் வாழ்ந்தால் போதும் நமக்கென்று எதுவுமே தேவையில்லை என நினைத்தான். இன்றைய கம்பியூட்டர் யுகத்தில் ஆண்பிள்ளை வீண்பிள்ளையாக வாழ்கிறானே எனக் குடும்பத்தினர் கவலைப்பட்டனர். அதிகம் செல்லம் கொடுத்து வளர்த்ததை யாரிடம் சொல்வதெனப் பெற்றோர் வேதனைப் பட்டனர். காலமும் நேரமும் சரியாக வரும்போது எல்லாம் கைகூடி வரும் என நம்பினர். அது போலவே பல வருடங்களாக ஒத்திவைத்து வந்த திருமணம், அன்று Ol

Page 7
பிரியமான சினேகிதி
கை கூடியது. பர்ஸான் திருமணத்திற்கு சம்மதித்தான். பெண்ணும் பிடித்து விட்டது. பெற்றோருக்கும், குடும்பத்தினருக்கும் அவனது சம்மதம் அளவு கடந்த உற்சாகத்தை ஏற்படுத்தியது.
பெற்றோர் தமது சொத்தில் அதிக பங்கை தன் மகனின் பெயரில் எழுதினர். ஆசைக்கொரு மகன் என்பதாலும், எவ்வித சம்பாதிப்போ, உத்தியோகமோ இல்லாததாலும் அவனுக்கே அதிகமாக எழுதுமாறு தாய் ஸம்ரூத் தன் கணவனுக்குக் கட்டளையிட்டாள். உடன் பிறப்புக்களுக்கும், உறவினர்களுக்கும் உண்மை புரிந்ததால் யாரும் எதையும் பேசவில்லை. எப்படியோ அவன் தன் எதிர்கால வாழ்வை ஒளிமயமாக அமைத்தால் சரி என எண்ணினர். காலம்தான் யாருக்காகவும் காத்திருப்பதில்லையே. பர்ஸான் மூன்று பிள்ளைகளுக்கு தந்தையானான். திருமணமாகி ஐந்து வருடங்களாகியும் பர்ஸானின் வாழ்வில் எதுவித முன்னேற்றமுமில்லை. வீட்டு மாப்பிள்ளையாகவே வாழ்ந்தான். தன் மனைவி மக்களுக்குத் தேவையானவைகளைப் பெற்றோரிடமிருந்தே எடுத்துச் செல்வான்.
இதனை கண்டும் காணாததுமாக இருந்த அன்வர் முதலாளி, ஒரு நாள் தன் மனைவியை நோக்கி “இந்தா. இது நல்லதல்ல. உனது மகனுக்குத் திருமணமாகி ஐந்து வருடங்களாச்சு, எப்போதும் செல்லப்பிள்ளைக இருப்பது சரியில்லை. அவனுக்கென்று பொறுப்பு வர வேண்டும். எப்போதும் நாம் இருப்போமா? நாம் கண்ணை மூடினால். அவன் நிலை என்னாகும்.? அவனுக்கென்று தன்னம்பிக்கை வர வேண்டாமா? தன் சொந்தக் காலில் நின்று உழைக்கத் தெரியணும்” எனக் கத்தினார்.
“இஞ்ச பாருங்க! அவன் யாரு.? நம்ம பிள்ளை. நாம கொடுக்கா விட்டா யாரு கொடுப்பாங்க? நமக்கிட்ட உள்ளதிலே கொஞ்ச நஞ்சத்த கொடுக்கிறதிலே குறைஞ்சா போயிடும்?”
“அதற்குச் சொல்லல்ல ஸம்ரூத், நம்ம பிள்ளை நாளைக்கு கஷ்டப்படக் கூடாது. சுயமா வாழக் கற்றுக் கொள்ளணும். அவ்வளவுதான். இனி உன் இஷ்டம்’ என்றார் அன்வர் முதலாளி. தாய் தனக்கு சாதகமாகப் பேசுவது மகனுக்குச் சாதகமாகப் போயிற்று. நாளுக்கு நாள் அவன் தேவை அதிகரித்தது. செலவுக்கு எங்கே போவது? தன்னிடமுள்ள சொத்துக்கள் பலவற்றையும் “வயலில் விளைச்சலில்லை, தோட்டத்தில் வருவாயில்லை, காணி பாழடைகிறது” என ஏதோ காரணத்தைக் கூறி தோட்டத்தை, வயலை, காணியைத் துண்டு துண்டாக அரைவிலைக்கு விற்று வாழ்வைச் செழிப்பாகக் கழித்தான். இவற்றைப் பார்த்து சகிக்க முடியாமல் அன்வர் முதலாளியின் உள்ளம் எரிமலையாகக் குமுறியது. ‘இவன் உழைத்து சம்பாதித்து இருந்தால்தான் அவனுக்கு
O2

ஜெனிரா தெளUக் கைருல் அமான்
அருமை தெரியும். உள்ளது ஒரு மகன். எல்லாம் இவனுக்கு எழுதப் போய் என் கண்ணில் மண்ணை அள்ளிப் போட்டு விட்டானே? எல்லாம் நீ கொடுத்த செல்லம். தான்றக் கொடுத்த பொல்லு உச்சியைப் பிளக்குது. தாய் தகப்பன் இல்லாமற் போனால் தெரியும். இவன நாய் கூட மதிக்காது’ அன்வர் முதலாளியின் வார்த்தைகள் யாவும் நேற்றுக் கூறியதுபோலவே இருந்தன.
இன்று அவனுக்கு அதே நிலை வந்தது. பர்ஸானை மனைவியும் மக்களும் வெறுக்கத் தொடங்கினர். நண்பர் கூட்டமும் விட்டு விலகியது. 'நல்லா இருந்து கெட்டா நாயிலும் கேடு” என்பார்கள். தன் பெற்றோர், சகோதரர் முகத்தைக் கூட பார்க்க லாயக்கற்று, அழுக்கான உடையுடன் ஒரு நடைப் பிணமாக வீதியில் அலைகிறான்.
ஒரு செல்வந்தனின் மகன் செல்லாக் காசாக சமூகத்தில் அலைவது உடன் பிறப்புக்களுக்கு மட்டுமே வேதனையாக இருந்தது. மற்றவர்கள் கைகொட்டிச் சிரித்து வேடிக்கை பார்த்தனர். ஆரம்பத்திலேயே பொறுப்புணர்வுடன் வளர்ந்திருந்தால் பர்ஸான் இந்நிலைக்கு ஆளாகி இருக்க மாட்டான். அவனும் எல்லோரையும் போல் ஒரு நல்ல குடும்பஸ்தனாக வாழ்ந்திருப்பான். இனி நொந்து என்ன பயன்?
சுபஹுக்கு அதான் கேட்டதும் தன் மகனின் நினைவிலிருந்து விடுபட்டு, அவனுக்காகத் தொழுகையில் அல்லாஹ்விடம் பிரார்த்திப்பதற்காக எழுந்தாள் ஸம்ரூத்.
நவமணி 05/11/2006
03

Page 8
பிரியமான சினேகிதி
சங்கமமாகும் சந்தோஷங்கள்
அபிலாசினியின் திருமணத்திற்கு இன்னும் ஒரு நாள் மட்டுமே இருந்தது. உற்றார், உறவினர்கள், நண்பர்கள், அயலவர்கள் எனப் பலரும் வீட்டுக்கு வருகை தந்த வண்ணமிருந்தனர். வீடோ கல்யாணக் கன்ளகட்டியிருந்தது. எல்லோரது முகங்களிலும் மகிழ்ச்சி ரேகைகள் படர்ந்து செல்ல, கலகலப்புடன் கல்யாண வேலைகள் தடல்புடலாக நடைபெற்றுக் கொண்டிருந்தன.
ஆனால், . அபிலாசினி மட்டும் எதையோ பறிகொடுத்தவள் போலச் சோகமே உருவாக நின்றிருந்தாள். அவள் தங்கை பிரபாலினி ஒரு மூலையில் குந்தியிருந்து அழுது கொண்டிருந்தாள்.
“என்ன இது.? நல்லது நடக்கும் போது இப்படி அழுது வடிக்கிறாள். வருகிறவர்கள் என்ன நினைப்பார்கள்? அழாதே. போய் முகத்தைக் கழுவிக் கொண்டு வா. தாயின் ஞாபகம் வந்து விட்டது போல. அதுதான் அழுறா உலகில் எல்லாவற்றையும் பெற முடியும். தாய் பாசத்தை பெற முடியுமா? அவள் உயிருடன் இருப்பது போல வருமா?’ என்றாள் கனகம் மாமி.
அபிலாசினியின் தாய் சரோஜினி மரணித்து மூன்று வருடங்களாகின்றன. நோயுடன் படுத்த படுக்கையாய், பாயுடன் கிடையாய்க் கிடந்தாள். மலசலம் கழிப்பதற்குக் கூட அவளால் எழுந்து நடமாட முடியாது. பாரிசவாதத்தால் அவதியுற்றாள். கணவன் சபேசனும் பிள்ளைகளுமே தூக்கிச் செல்வார்கள். நீராகாரம் மட்டுமே அவளுக்கு உணவாக இருந்தது.
பிள்ளைகள் இருவருக்கும் சிறு வயதிலேயே வீட்டுப் பொறுப்புக்கள் தலையில் ஏறின.
எனவே, சமைக்கவும் கற்றுக் கொண்டனர். காலையில் சமைத்து வைத்து விட்டே 04

ஜெனிரா தெளUக் கைருல் அமான்
பாடசாலைக்குச் சென்று வந்தனர். "படிக்கும் காலத்தில் என் பிள்ளைகளுக்குப் பாரிய பொறுப்புக்கள்’ என சபேசன் அடிக்கடி குமுறிக்கொள்வார். என்ன செய்வது. எல்லாம் இறைவன் செயல். எவ்வளவு வசதி வாய்ப்புக்களோடு வாழ்ந்தாலும் வீட்டுக்கு ஒரு ஆயா வைத்துக்கொள்ள அவர் விரும்பவில்லை. தன் மனைவி, பிள்ளைகளைக் கண்ணாய்க் காத்து வந்தார்.
சரோஜினி, உயிருடன் இருக்கும் போதே தன் மூத்த மகளைத் திருமணம் செய்து பார்க்க வேண்டும் என மனதில் பல ஆசைகளை வளர்த்திருந்தாள். ஆனால் . நோய் அவளது ஆசைகளை நிராசையாக்கி விட்டது. மகளின் திருமணத்தைப் பார்க்க தாய்க்கும் கொடுத்து வைக்கவில்லை. காலன் அவள் உயிரைக் கைப்பற்றிக் கொண்டான். தாயில்லா ஏக்கம் அவர்கள் உள்ளத்தில் ஏற்படக் கூடாது என்பதற்காக தாய்க்குத் தாயாக செயல்பட்டார். பிள்ளைகள் தாயிடம் எவ்வளவு நெருக்கமாகவும் பாசமாகவும் வளர்வார்களோ அவ்வாறே பிள்ளைகளையும் எவ்விதக் குறையுமில்லாமல் கேட்பதையெல்லாம் வாங்கிக் கொடுத்து வளர்த்து வந்தார்.
மூத்த மகள் அபிலாசினி திருமணச் சோலைக்குள் நுழையும் வயதுக்கு வந்து விட்டாள். அவளுக்கேற்ற வரனைத் தேடிக் கண்டு பிடித்து, தன் மகளுக்குச் சேர வேண்டிய சொத்துக்களையும் எழுதிக் கொடுத்தார். மாப்பிள்ளை வீட்டார் சீதனமாக எதையுமே எதிர்பார்க்க வில்லை. குறிப்பிட்ட நாளில் அபிலாசினியின் திருமணமும் சிறப்பாய் முடிந்தது. ஆயினும் தன் மகள் சீரும் சிறப்புமாக வாழ வேண்டும் என்பதை தந்தை விரும்பினார். மற்றவர்கள் கொடுப்பதை விட ஒரு படி மேலாகவே கொடுத்தார். இப்படிக் கொடுப்பதற்கு யாருக்குத்தான் மனசு வரும். தன் பிள்ளைகளை வாழ வைக்க வேண்டும் என்பதற்காக மனைவி மரணித்தும் வேறு திருமணம் செய்யாமல் பிள்ளைகளுக்காகத் தன் ஆசாபாசங்களைத் தியாகம் செய்து வாழ்ந்தவர் அபியின் தந்தை’ எனத் திருமண வீட்டுக்கு வந்தவர்கள் கதைத்துக் கொண்டனர்.
பக்கத்து வீட்டு துஷியந்தன் மாமா தன் தன் மனைவிக்குச் சுகவீனம் என்றதும், அவள் இறப்பதற்கு முன்னரே வேறொரு திருமணம் செய்து விட்டார். அவரது வளர்ந்த பிள்ளைகள் மிகவும் வேதனைப் பட்டனர். “எங்களது அம்மா மரணித்த பின்னராவது திருமணம் செய்திருக்கலாமே” என்று வருந்தினர். “ அபீ. உங்க அப்பாவை என்றைக்குமே கண் கலங்காம பார்த்துக் கொள்ளுங்கள். அவர் நினைத்தா எவ்வளவோ செய்திருக்கலாம். ஆனால் அவர் அவ்வாறு செய்யவில்லை. இன்னொரு திருமணம் கூட செய்து கொள்ளவில்லை. உங்களுக்காகவே வாழ்ந்தவர். பிள்ளைகளின் சந்தோசமே தன் சந்தோசம் எனஅடிக்கடி கூறுவார். அவரைத் தலையில் தூக்கி வைத்துக்கொள்ள வேண்டும்’ என்றாள் கனகம் மாமி.
“ஒரு பிள்ளையைக் கரை சேர்த்து விட்டேன். அடுத்த பிள்ளைக்கும் அதே போலக் கொடுக்க வேண்டும். நான் தீடீரெனக் கண்ணை மூடினால். எனது சொத்துக்களுக்கு
05

Page 9
பிரியமான சினேகிதி
என்ன நடக்குமோ. என் கண்ணோடு எல்லாவற்றையும் முடித்து விட வேண்டும். நாளை பிள்ளைகளுக்குக்கிடையில் சண்டை, சச்சரவுகள் ஏற்படக் கூடாது”. எனத் திடீரென யோசிக்கலானார் சபேசன்.
தன்னிடமுள்ள வளவொன்றை செல்லச்சாமி என்பவருக்கு சபேசன் தற்காலிகமாக குடியிருப்பதற்கு கொடுத்திருந்தார். அதனைப் பெற்று மகள் பிரபாலினிக்கு கொடுக்கலாம் என்ற நம்பிக்கையில் செல்லச்சாமியிடம் சென்று தன் வளவை மீளத் தருமாறு கேட்டார்.
செல்லச்சாமியோ. “இப்போது அது எனக்குரியது. உன்னால் முடிந்தால் எடுத்துப் பார்” என்றான் திமிருடன். செல்லச்சாமியின் கதையைக் கேட்டவருக்கு தூக்கிவாரிப் போட்டது. ‘என்ன கதைக்கிறீர். உமக்கு பைத்தியமா பிடிச்சிருக்கு. எனக்கு இதுவும் வேண்டும் இன்னமும் வேண்டும்” எனத் தன்னையே நொந்து கொண்டார்.
'யாரை எங்கே வைக்க வேண்டுமென்று தெரியாமல் என் தலையில் நானே மண்ணை வாரிப் போட்டுக் கொண்டேன். இப்போ எனது வளவைப் பெற நான் வழக்குத் தொடர வேண்டும். என்ன உலகமடா இது, ஊன்றக் கொடுத்த பொல்லு உச்சியைப் பிளந்து விட்டது' என்று புறுபுறுத்தார்.
உயர் நீதிமன்றம் வரை சென்று வாதாடினார் சபேசன். பல வருடங்களாகக் குடியிருந்ததனால் அது தனக்கே சொந்தமானது என்று ஆட்சியுறுதி முடித்திருந்தான். பல பொய் ஆதாரங்களைக் காட்டியும் செல்லச்சாமியால் வெல்ல முடியவில்லை. உண்மையின் முன் பொய் தோல்வி கண்டது. அவனது வீட்டை உடைத்து நொறுக்கும்படி நீதிமன்றம் கட்டளையிட்டது.
ஒரு நொடிப் பொழுதில் வீடு தரை மட்டமாகியது. இத்தனை வருடங்களாகச் சபேசனின் வளவில் குடியிருந்தமைக்கு அபராதம் விதிக்கப்பட்டது. பெருந்தொகைப் பணத்தை கட்ட முடியாமல் திண்டாடினான். உறவினர்கள், நண்பர்கள் உதவியை நாடினான். அவனுக்கு உதவுவதற்கு யாருமே முன்வரவில்லை. மாறாக, இவனும் ஒருமனிதனா? இருப்பதற்கு இடம் கொடுக்க சொந்தமாக நினைத்து விட்டானே. என்று ஊர்ச்சனங்கள் பேசவாரம்பித்தனர். யாருமே முகங்கொடுத்துச் செல்லச்சாமியுடன் சரிவரப் பேசவில்லை. குற்றமுள்ள அவன் நெஞ்சு குறுகுறுத்தது. அவமானத்தால் தலை கவிழ்ந்தான் வெளியில் நடமாட முடியாமல் வீட்டிற்குள் அடைக்கலமானான்.
எத்தனை நாட்களுக்குத்தான் வீட்டினுள் அடைந்து கிடப்பது? இரவோடு இரவாக குடும்பத்துடன் வேறு ஊரை நோக்கிப் பயணமானான் செல்லச்சாமி.
நவமணி :90/09/2007
O6

ஜெனிரா தெளUக் கைருல் அமான்
மனம் மாறா மனிதர்கள்
அப்போது மபாஸாவிற்கு நான்கு வயதுதானிருக்கும். ஒரு வேளை உணவு உண்டால், மறு வேளை உண்பதற்கு வழியில்லை. உடுப்பதற்கு உடையில்லை. அவளுடன் சேர்ந்து விளையாடும் குழந்தைகள் அணிந்து வரும் ஆடைகளைப் பார்த்து தானும் அணிய வேண்டுமென அடம் பிடித்து அழுவாள்.
மபாஸாவிடம் தன் ஏழ்மை நிலைமையைச் சொல்லி விளக்குவதற்கு அவளிற்கு புரிந்து கொள்ளும் வயதுமில்லை. என்ன செய்வது? ஏக்கப் பெருமூச்சுடன் தன் மூன்று பிள்ளைகளையும் வளர்த்து வந்தாள் தாய்.
இவ்வாறு இருக்கும் போதே அப்ராத், ஆயிஷாவின் மகளைத் தன் வீட்டில் வளர்ப்பதற்கு விருப்பம் தெரிவித்தார். இது கேட்டு பூரித்துப் போனாள் ஆயிஷா. ஆண் துணை இல்லாமல் மூன்று பிள்ளைகளையும் வளர்ப்பதற்கு மிகவும் சிரமப்பட்டாள். அவள் உழைக்கும் பணம் குழந்தைகளின் பால் மாவுக்குக் கூடப் போதாது. எனவே தன் மகள் பெரிய இடத்தில் வளர்வதைப் பெருமையாக நினைத்தாள்.
நான்கு வயதேயான மபாஸாவிடம் பணக்கார வீட்டின் சொகுசு வாழ்வு பற்றிக் கூறி ஆசைகாட்டினாள். அப்ரத் வீட்டில் உண்ணும் உணவையும், அணியும் வண்ண வண்ண ஆடைகளையும், விளையாடுவதற்கு விளையாட்டுப் பொருட்கள் உள்ளன என்பதையும் அவர்கள் கார், வேனில் தான் கடை, பீச் போன்றவற்றிற்குச் அழைத்துச் செல்வார்கள் எனவும் கூறினாள். தாயின் ஆசை வார்த்தையை நம்பி அங்கேயே வாழ்வதற்கு சம்மதித்தாள் மபாஸா.
O7

Page 10
பிரியமான சினேகிதி
மறுநாள் அப்ராத் வீட்டுக்கு மபாஸாவை அழைத்துச் சென்றாள். மபாஸாவின் வயதை ஒத்தவர்கள் அப்ராத்தின் வீட்டிலிருப்பதனால் சந்தோஷமாக அவ்வீட்டில் விளையாடலாம் என நினைத்து “உம்மா. நான் இவங்களோட விளையாடுவேன் நீங்க கவலைப்படாம
போங்க” என்றாள்.
மபாஸாவின் மழலை மொழியில் தைரியமிருந்ததால் ஆயிஷா தன்னை ஒருவாறு சமாளித்துக் கொண்டு பிரிய மனமில்லாமல் பிரிந்து சென்றாள். தன் தாய் செல்வதை வைத்த கண் வாங்காமல் பார்த்து நின்ற மபாஸா தேம்பித் தேம்பி அழுதாள்.
“என்னம்மா. நீ தான் உம்மாவைப் போகச் சொன்னாய். பின்ன ஏன் அழுகிறாய்? மபாஸாவைக் கூட்டிப் போய் விளையாட்டுச் சாமான்களைக் கொடுங்க. ஊஞ்சல்ல ஆட்டுங்க.” எனத் தன் பிள்ளைகளிடம் கூறினார் அப்ரத்,
தந்தை சொற்படி பிள்ளைகளும் விளையாட்டுப் பொருட்களைக் குவித்தனர். ஊஞ்சலில் மபாஸாவை ஆட்டினர். ஆயினும் அவள் மனம் தன் வீட்டை நோக்கியே ஒடியது. அவர்கள் நினைவிலிருந்து விடுபடுவதற்காக பீச், பார்க் என்று அழைத்துச் சென்றார்.
காலப் போக்கில் மபாஸா செல்வந்த வீட்டுப் பெண்ணானாள். அவர்கள் சொல்லும் வேலைகளை விருப்புடன் செய்தாள்.எல்லோர் உள்ளங்களிலும் நீங்கா இடம் பிடித்தாள். “எமது பிள்ளைகளுக்கு வீடு வாசல் கொடுக்காவிட்டாலும் என்னிடம் இருப்பதில் மபாஸாவிற்குக் கொடுத்து விட்டே, மற்றவர்களுக்குக் கொடுப்பேன்’ என அப்ரத் அடிக்கடி எல்லோரிடமும் கூறிக் கொள்வார்.
இப்போது மபாஸா திருமணத்தை எதிர் பார்த்து நிற்கும் பருவ மங்கை அவள் அழகு பல வாலிபர்களைக் கொள்ளை கொள்ள வைத்தது. செல்வந்தர் அப்ராத்திடம் மபாஸாவை பெண் கேட்டனர்.
என் பிள்ளைகள் இருக்க, இவளுக்கா திருமணம்.? இவளுக்குத் தடயுடலாகத் திருமணம் செய்ய எனது குடும்பம் சம்மதிக்குமா? அப்ராத்தின் உள்ளத்தில் கேள்வி மேல் கேள்வி எழுந்தது. முடிவெடுக்க முடியாமற் திண்டாடினார். அன்று கூறிய வார்த்தைகள் யாவும் நீர்க்குமிழியாகின.
முதல் நம்ம பிள்ளைகளைக் கட்டிக்குடுத்து அவங்களுக்கு கொடுக்க வேண்டியதையும் கொடுத்திட்டுத்தான் மற்றது. மபாஸாவை இவ்வளவுற்கு வளர்த்து ஆளாக்கியிருக்கம் O8

ஜெனிரா தெளUக் கைருல் அமான்
காணாதா?’ அப்ராத்தின் உள்ளத்தில் மெல்ல மெல்ல பொறாமைத் தீ கொழுந்து விட்டெரிய ஆரம்பித்தது.
ஆயிஷாவைக் கூப்பிட்டு மகள வெளிநாட்டுக்கு அனுப்பச் சொல்வோம். ரெண்டு வருசத்திலே நிறையச் சம்பாதித்திடலாம் என எண்ணிய வேளையில் ஆயிஷாவும் அப்ராத் வீட்டுக்கு வந்தாள்.
'மபாஸாவுக்கு வயதாகிறது. அவளைத் திருமணம் செய்து வைப்பதற்கு உங்கள் விருப்பத்தையும், ஒத்தாசையையும் அறிவதற்கே வந்திருக்கிறேன்’ என்றாள். "அப்படியா? ரொம்ப நல்ல விசயம். மபாஸாவை திருமணம் செய்து வைக்க இப்ப கையிலே மடியிலே ஒன்னுமில்ல. இருந்த கொஞ்ச நஞ்சத்தையும் என்ட பிள்ளையல்ட பேரிலே எழுதிட்டேன். மபாஸாவை வெளிநாட்டுக்கனுப்பினா ரெண்டு வருசத்திலே உழைச்சிடுவா. அவளுக்கென்று ஒரு வீடும் கட்டிடலாம்” என்றார்.
அப்ரத்தின் கதையைக் கேட்டவளுக்கு ஆத்திரம் ஆத்திரமாக பொங்கி எழுந்தது. என்ன செய்வது? நமது பிள்ளை சிறு பராயத்திலிருந்து அவர் போட்ட உணவை உண்டு வளர்ந்து விட்டாள் 'செஞ்சோற்றுக் கடனுக்காக எதையுமே பேசாது ஆத்திரத்தை அடக்கிக் கொண்டாள்.
தன் மகள் ஒரு செல்வந்தன் வீட்டில் வளர்வதால் ஏதும் உதவிகள் கிடைக்குமென எதிர்பார்த்தவளுக்கு ஏமாற்றமே கிடைத்தது. ஆயிஷா தன் மகளைப் பற்றி கட்டிய மனக்கோட்டை ஒரு நொடிப் பொழுதில் மண் கோட்டையாகி சுக்கு நூறாக நொறுங்கியது.
ஏழைகளுக்கு அரபுநாடு செல்வதைத் தவிர வேறு என்ன இருக்கிறது? அல்லாஹ் எங்களைக் கைவிட மாட்டான் என்றவாறு மகளை அழைத்துக்கொண்டு வெளியேறினாள். பலத்த முயற்சியின் பின்னர் மகளை மத்திய கிழக்கிற்கு அனுப்பி வைத்தாள்.
வெளிநாடு சென்ற மபாஸா முதல் மாதச் சம்பளத்தை தான் வளர்ந்த அப்ராத் வீட்டுக்கே அனுப்பி வைத்தாள். அடுத்தடுத்த மாதங்களிலேயே தன்னைப் பெற்றெடுத்த தாய்க்கு அனுப்பினாள்.
இரு வருடங்களில், மபாஸா அனுப்பிய பணத்திலிருந்து அழகிய சிறிய வீடொன்றைக் கட்டி முடித்தாள் ஆயிஷா வீட்டு வேலைகள் யாவும் நிறைவுற்றதும், தான் ஹஜ் கடமையை செய்வதற்கு வேண்டிய ஏற்பாடுகளையும் செய்தாள்.
09

Page 11
பிரியமான சினேகிதி
தான் ஹஜ் செய்யவிருக்கும் விடயத்தை அப்ராத்திடம் கூறினாள். அப்ராத்தோ “ஹஜ்ஜுக்குச் செல்வதென்பது பெரிய காரியமா என்ன? நான் நினைத்தால் இப்பவும் போவேன். ஆனால் நினைக்கவில்லை.” அப்ரத்தின் அகங்காரம் பேசியது. 'பாவம் செய்தவர்கள் தான் தவறுக்கு மன்னிப்புக் கேட்பதற்காக ஹஜ் செல்கிறார்கள்’ என்றார் ஏளனமாக,
அப்ராத்தின் வார்த்தைகள் ஒவ்வொன்றும் ஆயிஷாவின் அடி வயிற்றில் இடி விழுந்தது போல் இருந்தது. “பெரியவரே அல்லாஹ் தான் நாடியவர்களுக்கே ஹஜ் செய்யும் பாக்கியத்தைக் கொடுப்பான். மற்றப்படி முடியாது. பெரிய செல்வந்தராக வாழ்ந்தும் உங்களுக்கு ஹஜ் செய்ய அல்லாஹ் அமைக்கவில்லையே சீமானுக்கு ஈமானில்லை” என்றாள்.
ஆயிஷா கூறுவதைக் கேட்டு அப்ராத் மெளனியானார். "இஞ்சப் பாருங்க பெரியவரே! பணமிருந்தும் ஹஜ் செய்யாதவன் மறுமையில் பன்றியாகவும், நாயாகவும் எழுப்பப் படுவான் என அல்லாஹ் கூறுகிறான். மேலும் முஸ்லிம் ஒவ்வொருவருக்கும் ஐம்பெரும் கடமைகள் கட்டாயமானது. அதைப் பற்றி நகைப்பதற்கிடமில்லை. தொழுகை, நோன்பு என்பவற்றாலும் பாவமன்னிப்புக் கேட்கிறோம். துஆச் செய்வதை அல்லாஹ் அதிகம் விரும்புகிறான். தவறு செய்தவர்கள் தாம் செய்த தவறுகளுக்கு மன்னிப்புப்பெறுவதற்காகவே ஹஜ் செய்கிறார்கள் எனும் மனோ நிலையை மாற்றிக் கொள்ளுங்கள். நான் பரம ஏழையாக வாழ்ந்தும் எனக்கு ஹஜ் செய்யும் பாக்கியம் கிடைத்ததென்றால், அது எனதுள்ளத்தில் நான் வைத்த நிய்யத்தாகும். அல்லாஹ் ஒவ்வொருவரின் உள்ளத்தைத் தான் பார்க்கிறான். இல்லத்தையல்ல”
“எமது ஐவேளைத் தொழுகையிலும் பெருமானார் அவர்களின் பாதம் பட்ட புண்ணிய பூமியில் ஹஜ் கடமையை நிறைவேற்ற அல்லாஹ்விடம் இரு கரமேந்த வேண்டும்” எனக் கூறியவாறு அப்ராத்தின் பதிலை எதிர்பாராமல் “விறு விறு' என தனது வீட்டை நோக்கி வீறு நடை போட்டாள் ஆயிஷா. அவள் செல்வதையே பார்த்தபடி கற்சிலை போல் நின்றார் அப்ராத். ஆயினும் அவரது இதயக் குட்டை கலங்கிப் போயேயிருந்தது.
நவமணி 31/12/2006
10

ஜெனரீரா தெளUக் கைருல் அமான்
அவளெடுத்த முடிவு
நேரம் காலை 6.30 ஐக் காட்ட தர்ஷிக்கா அவசர அவசரமாக டிபன் பொக்சினுள் நூடில்ஸையும் ஒரு போத்தலினுள் கொதித்தாறிய நீரையும் ஊற்றி எடுத்து ஸ்கூல் பேக்கினுள் வைத்து விட்டு ஒட்டமும் நடையுமாக பஸ்தரிப்பு நிலையத்தை அடைந்தாள்.
வழமைக்கு மாறாக பஸ்ஸினுள் சன நெருக்கம் அதிகமாக இருந்ததால் அவற்றைப் பொருட்படுத்தாமல் ஏறிக் கொண்டாள். சன நெரிசலில் தனது சீருடை அழுக்காகி விடுமோ என அடிக்கடி பார்த்துக் கொண்டாள். பக்கத்து ஆசனத்தில் அமர்ந்திருந்தவர் சிகரட்டை புகைத்துக் கொண்டிருந்தார். சிகரட்டின் புகையை சகிக்க முடியாமல் மூக்கை கைக்குட்டையால் பொத்திக் கொண்டாள். நேர காலம் தெரியாமல் விடியற் காலையில் சிகரட்டைப் புகைக்கிறானே, இவனும் ஒரு மனுசனா? புகைத்தல் விலக்கப்பட்டுள்ளது என எச்சரிக்கப்பட்டிருப்பது இவன் கணிகளுக்குத் தெரியவில்லையா? தற்போது புகைப்பவருக்கு எதிராகக் கடும் அபராதம் விதிக்கப்பட்டும் எவ்வளவு துணிச்சலாகப் புகைக்கிறான்? யாராவது இவனுக்கு எதிராகச் சட்ட நடவடிக்கை எடுக்க மாட்டார்களா? தர்ஷிக்காவின் உள்ளம் ஏங்கியது. தலை சுற்றியது. வயிற்றைக் குமட்டியது.
அப்போது ஒருவர் எழுந்து தர்ஷிக்காவைத் தன் ஆசனத்தில் அமருமாறு கூறினார். பதிலுக்கு நன்றி கூறிக் கொண்டாள். சற்று நேரத்தின் பின் பஸ் பாடசாலைக்கு அண்மையில் நின்றது. தர்ஷிக்கா இறங்கிக் கொண்டாள். பாடசாலைக்குள் சென்றதும் தான் கொண்டு சென்ற காலை உணவைக் கெதிகெதியாகச் சாப்பிட்டு விட்டு வகுப்பறைக்குள் செல்ல ஆசிரியரும் வர நேரம் சரியாக இருந்தது.
ஒரு நாளைக்கு இரு தடவைகள் தர்ஷிக்கா பஸ் பிரயாணம் செய்வாள். ஒவ்வொரு l

Page 12
பிரியமான சினேகிதி
நாள் காலையிலும் துஷாந்தனைச் சந்திக்கும் வாய்ப்புக் கிட்டியது. (பஸ்ஸில் சீட் கொடுத்தவன்) ஆனால் கதைப்பது கிடையாது. பதிலுக்கு புன்னகைத்துக் கொள்வார்.
ஒரு நாள் அவளின் நண்பி கௌஷல்யா தன் தந்தையைச் சந்திக்கச் செல்வதற்கு நண்பி தர்ஷிக்காவை அழைத்தாள். முதலில் மறுத்தவள் பின் தன் நண்பிக்காக அவளுடன் சென்றாள். அவள் எதிர்பார்க்கவேயில்லை. “ஹாய். எங்கே இந்தப் பக்கம்’ எனக் கேட்டவாறு தர்ஷிக்காவிடம் வந்தான் துஷாந்தன். அவளுக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை தடுமாறியவாறு அவனிடம் “இவகூட வந்தேன்’ என்றாள்.
'நல்லது நீங்க அவ பிரண்டா. நான் இங்கே கிளரிக்கல் ஒபிஸரா உள்ளேன்” எனத் தன்னை சிறு அறிமுகம் செய்து கொண்டவன் இருவரையும் கென்டினுக்கு செல்வதற்கு அழைத்தான். இருவரும் அழைத்தமைக்கு நன்றி கூறிக் கொண்டனர். சற்று நேரத்தின் பின் ஒரு பார்சலை தர்ஷிக்காவிடம் நீட்டினான். அவள் அதனை வாங்க மறுத்தாள். எப்படியோ கஷ்டப்பட்டு அவளிடம் அந்தப் பார்சலை கொடுத்தே விட்டான். இதைக் கண்ட அவளது நண்பி தர்ஷிக்காவிடம் “அடி! இவரை உனக்கு முன்னமே தெரியுமா? இது பற்றி என்னிடம் மூச்சு விடவில்லையே, மறைத்து விட்டாய் என்ன?’ எனத் தர்ஷிக்காவைக் கேள்வி மேல் கேள்வி கேட்டு குழப்பிக் கொண்டிருந்தாள்.
“சும்மா போடி! அன்று பஸ்ஸில் அமர்வதற்கு இடம் தந்தார் அவ்வளவுதான். நீ நினைப்பது போல் ஒன்றுமில்லை” என்றாள். மறுநாள் கெளஷல்யா மூலம் தன் விருப்பத்தை சொல்லியனுப்பியிருந்தான் துஷ்யந்தன். அன்றிலிருந்து இருவரின் காதலும் மெல்ல மெல்ல வளர்ந்தது. கௌஷல்யா மூலம் தொடர்ந்து, இருவரும் நேரில் சந்தித்து கதைக்கும் அளவிற்கு வந்து விட்டது. இது தர்ஷிக்காவின் வீட்டுக்கு தெரிய வரவே பலத்த எதிர்ப்பு கிளம்பியது. பள்ளிப் படிப்பை பாதியிலே நிறுத்த பெற்றோர் முடிவெடுத்தனர்.
பரீட்சைக்கு இன்னும் ஆறு மாதங்களே இருந்தமையால் தன் படிப்பை நிறுத்த வேண்டாம் என அவள் தன் பெற்றோரிடம் கெஞ்சினாள். தான் இனி துஷாந்தனை சந்திக்க மாட்டேன் எனவும் அவனை மறந்து விடுவதாகவும் அவள் கூறினாள். இவ்விடயம் துஷாந்தனுக்கு தெரிய வந்ததும் அவன் வேதனையில் துடித்தான். அவளைக் காணாத ஒவ்வொரு வினாடியும் ஒரு யுகமாகவே அவனுக்கு இருந்தது. என்றாலும் தன்னால் தர்ஷிக்காவின் கல்விக்கு பாதிப்பு ஏற்படக் கூடாது என்பதற்காக அவன் தன்னைக் கட்டுப்படுத்திக் கொண்டான். அவளைச் சந்திப்பதையும் தவிர்த்தான். கெளசல்யா மூலம் தர்ஷிக்கா பற்றிய முக்கிய விடயங்களை தெரிந்து கொண்டான். அப்படியே பரீட்சை முடியும் வரை தான் காத்திருப்பதாகக் கூறினான்.
12

ஜெனிரா தெளUக் கைருல் அமான்
அன்று தர்ஷிக்காவுக்கு பரீட்சையில் கடைசிப் பாடம். அது முடிந்ததும் அவளைச் சந்திப்பதாக துஷாந்தன் ஏற்கனவே கூறியிருந்ததால் அவள் அவசரமாக அப்பாடத்தை எழுதிவிட்டு வெளியில் வந்து அவனைச் சந்தித்தாள். நீண்ட நாட்களுக்குப் பிறகு இருவரும் ஒருவரை ஒருவர் சந்திக்கின்றனர். இருவரும் தமது இன்ப துன்பங்களை பகிர்ந்து கொண்ட பின் துஷாந்தன் அவளிடம், “தர்ஷி உனக்கு சோதனை முடிந்து விட்டது. இனிமேல்தான் உன் வீட்டுச் சிறைக்கூடத்திலிருந்து அதிக சோதனைகளைச் சந்திக்கப்போகிறாய். நாமிருவரும் சந்திக்கும் கடைசிச் சந்தர்ப்பம் இதுவாகக்கூட இருக்கலாம். நீ என்மீது நம்பிக்கை வைத்திருந்தால் உன் தந்தை வருவதற்குள் என்னோடு வந்துவிடு. இல்லையேல் உன் விருப்பம்’ என்றான்.
துஷாந்தன் எடுத்த முடிவுக்கு அவளால் ஒன்றுமே கூற முடியாமல் மெளனமானாள். பெற்றோரை நினைத்து ஒருகணம் கண் கலங்கினாள். பின் அவனோடு செல்வதென்று தீர்மானித்தாள். அவளை அழைத்துச் செல்ல வந்த அவளின் தந்தை தன் மகளைக் காணாது திடுக்கிட்டார். அவளின் நண்பிகளிடத்தில் விசாரித்தார். தர்ஷிக்கா பாடம் முடிந்ததும் வீட்டிற்கு சென்று விட்டதாகக் கூறினர். “வீட்டிலிருந்து தானே வருகிறேன். அவள் அங்கு வரவில்லையே” என்றார். அப்போது ஒரு சிறுவன் கடிதமொன்றை அவரிடம் நீட்டினான். அவர் அக்கடிதத்தை வாசித்தார்.
"அன்பின் தந்தைக்கு, நான் விரும்பியவருடன் செல்கிறேன். என்னைத் தேடாதீர்கள். மகள் தர்ஷிக்கா’ கடிதத்தை வாசித்தவருக்கு தலை சுற்றுவது போலிருந்தது. ஒரு கணம் உலகமே சுழன்றது. தன்னையறியாமல் பைத்தியம் பிடித்தவர் போல் அங்குமிங்கும் அலைந்தார். அவரின் நிலையைக் கண்ட ஒருவர் அவரை அவரின் வீட்டிற்கு அழைத்துச் சென்றார். தர்ஷிக்கா துஷாந்தனுடன் ஒடிச் சென்றது காட்டுத்தீ போல ஊரில் பரவியது. உலை வாயை மூடலாம் ஊர் வாயை மூட முடியுயமா? அவமானம் தாங்க முடியாமல் தர்ஷிக்காவின் பெற்றோர் விஷமருந்து குடித்து உயிரை மாய்த்துக் கொண்டனர்.
இவற்றையெல்லாம் அறியாத தர்ஷிக்கா எவ்வித கவலையுமின்றி துஷாந்தனுடன் தன் புது வாழ்வை சந்தோஷமாகக் கழித்துக் கொண்டிருந்தாள். அவளுக்கு எவ்வித குறையுமில்லாமல் அவன் அவளை வைத்திருந்தான். அவள் விரும்பிய இடங்களுக்கெல்லாம் அழைத்துச் சென்றான். மொத்தத்தில் தர்ஷிக்கா ஒரு சுதந்திரப் பறவையாக சிறகடித்துப் பறந்தாள். மின்னல் வேகத்தில் நாட்கள் நகர்ந்து சென்றன. தர்ஷிக்கா இரு குழந்தைகளுக்குத் தாயானாள். துஷாந்தனுக்கு தர்ஷிக்கா மீதிருந்த காதல் படிப்படியாக குறையத் தொடங்கியது. அவன் நடைமுறையில் ஏற்பட்ட மாற்றத்தைக் உன்னிப்பாக அவதானித்தவள் “உங்கள நம்பி எல்லோரையும் வெறுத்து
13

Page 13
பிரியமான சினேகிதி
வந்ததற்கு நீங்க செய்யும் கைம்மாறு இதுதானா? என்னையும், பிள்ளைகளையும் அநாதைகளாக்கிடாதீங்க.” அழாக் குறையாக கூறினாள். “உன்னை பெற்று வளர்த்து ஆளாக்கிய பெற்றோரை மறந்து என்னோடு வந்த நீ நாளைக்கு என்னைப் பார்க்க உயர்ந்த அந்தஸ்துள்ள ஒருவன் வந்தால் அவனோடு போக மாட்டாய் என்று என்ன உத்தரவாதம்.?’ என்றான். அவளுக்கு தேள் கொட்டியது போல் இருந்தது.
துஷாந்தனா இப்படிப் பேசுகிறான். அவளால் நம்ப முடியவில்லை. அவனது வார்த்தையைக் கேட்டு நாக்கைப் பிடுங்கிக் கொண்டு சாக வேண்டும் போலிருந்தது. யார் கண் பட்டதோ? அவர்கள் வாழ்வில் அடிக்கடி புயல் வீசத் தொடங்கியது. எதற்கெடுத்தாலும் தர்ஷிக்கா மீதும், குழந்தைகள் மீதும் சீறிப் பாய்ந்தான். வேண்டாத பெண்டாட்டி கை பட்டால் குற்றம், கால் பட்டால் குற்றம் எனச் செயல் பட்டான். வேலை முடிந்து நேரம் பிந்தியே ஊருக்காகவும், பேருக்காகவும் வீட்டுக்கு வந்தான்.
பாலுக்காக அழும் பச்சிளம் பாலகனின் பசியைப் பற்றியோ, தன்னை நம்பி வந்த அன்பு மனைவியைப் பற்றியோ சிந்திக்காமல் மது போதைக்கு அடிமையானான். அடிக்கடி கையடக்கத் தொலைபேசியில் ஒரு பெண்ணுடன் பேசிக் கொண்டிருந்தான். அவனது கொடுமைகளைச் சகிக்க முடியாதவள் பொங்கியெழுந்தாள். அவனது கையடக்கத் தொலைபேசியை பறித்து எறிந்தாள். அது தரையில் வீழ்ந்து அவளது மனதைப் போலவே சுக்கு நூறாய்ச் சிதறியது. அவளுக்காகப் பரிந்து பேசுவதற்கு யாருமில்லை என்ற தைரியத்தில் கையில் அகப்பட்டதையெல்லாம் எடுத்து அவளை அடித்து துன்புறுத்தினான். அவளை அழ வைத்து வேடிக்கை பார்த்து இன்புற்றான். பெற்றோருக்கு தான் செய்த துரோகத்தை எண்ணிக் கண்ணிர் வடித்தாள் தர்ஷிக்கா. காலம் கடந்து ஞானம் பிறந்து என்ன பயன்?
இனியும் துஷாந்தனுடன் சேர்ந்து வாழ்வதற்குத் தர்ஷிக்கா ஆயத்தமில்லை எனும் முடிவுக்கு வந்தாள். எப்படியாவது தன் சொந்தக்காலில் நின்று உழைத்துத் தன் இரு பிள்ளைகளையும் காப்பாற்ற அவளால் முடியும் என்ற நம்பிக்கையோடு கூலி வேலை செய்வதற்காகப் புறப்பட்டாள். ஒரு ஆணின் கையை எதிர்பார்த்து அவனது ஏச்சுக்கும், பேச்சுக்கும் அடிமைப்பட்டு வாழ்வதை விட அவளெடுத்த முடிவு நியாயமானதாகவே அவளுக்குப் பட்டது.
நவமணி 03/06/2007

ஜெனரீரா தெளUக் கைருல் அமான்
எதிர்பாராத சந்திப்புக்கள்
இயற்கை அன்னை ஈன்றெடுத்த எழில் கொஞ்சும் மலையகத்தின் நாலாபுறமும் தேயிலைச் செடியின் பசுமையான காட்சிகளும், அருவிகளின் சலசலப்பும் பர்சாத்தின் உள்ளத்துக்கு இதமாகவே இருந்தன. நடந்து வந்த களைப்பே அவனுக்குத் தெரியவில்லை. எங்கும் ஒரே அமைதியே நிலவியது. இயற்கையை அணுவணுவாக இரசித்தவன், ஒரு தடவை இலக்கிய உலகின் கதாநாயகனாக உலா வந்தான். மலையகத்தின் மாசில்லாக் காட்சிகள்
பர்சாத்துக்கு மிகவும் பிடித்து விட்டன.
அதே மகிழ்ச்சியுடன் புனிதமிகு ஆசிரியத் தொழிலை ஏற்பதற்காகச் சென்றார். அங்கே அதிபர் உட்பட சகல ஆசிரியர்களும் மாணவர்களும் ஆசிரியர் பர்சாத்தை அன்புடன் வரவேற்றனர், அதிபர் பர்சாத்தை அழைத்துச் சென்று ஒரு வகுப்பறையைச் சுட்டிக் காட்டினார். அது 5 ம் ஆண்டு என்பதை ஊகித்துக் கொண்டதும் அவ்வகுப்பை மகிழ்வோடு பொறுப்பேற்றுக் கொண்டார். தன் வகுப்பு மாணவர்களை ஒருதாய் வயிற்றுப் பிள்ளைகள் போல கவனித்து வந்தார். முன்பு வகுப்பறைக்குள் காலடி எடுத்து வைக்கப் பயந்து டிமிக்கி கொடுத்த மாணவர்களும் கூட இப்போது பாடசாலையே தஞ்சமென்று கிடந்தார்கள். இத்தனைக்கும் காரணம், புதிய ஆசிரியரின் அன்பான ஆழமான கற்பித்தல் முறைகளே ஆகும்.
கல்வித் தீனை நாடியிருக்கும் மாணவச் செல்வங்களுக்கு அறிவுப் பசியை போக்கி
இடையே இடாப்படையாளமிடுவது வழக்கம். ஆயினும் ஒரு மாணவன் மட்டும்
நேரம் பிந்தியே வகுப்பறைக்குச் சமூகமளிப்பான். ஆசிரியர் பல தடவைகள்
15

Page 14
பிரியமான சினேகிதி
அம்மாணவனிடம் உரிய நேரத்துக்குப் பாடசாலைக்குச் சமூகமளிக்குமாறு கேட்டும் அது "செவிடண் காதில் ஊதிய சங்கு’ போலத்தானி இருந்தது. இடாப்படையாளமிடப்படும் போது "அப்சென்ட்” பெற்ற வரலாறுகளும் இருக்கவே செய்தன. இடாப் படையாளமிடப்பட்ட பின்னரும் இம்மாணவன் பாடசாலைக்கு வருகை தந்துள்ளான். அது பற்றி இம்மாணவனிடம் கேட்கும் ஒவ்வொரு வேளையிலும் எந்தவிதமான விடையும் அவனிடம் பெற முடியாமலே இருந்தது.
அம்மாணவனை அழைத்து நேரம் பிந்தி வருவதற்குரிய காரணத்தைக் கேட்டால், அம்மாணவனோ பார்வையைக் கீழ் நோக்கிப் பெருவிரலால் நிலத்தைச் சுரண்டுவது வழக்கமாகி விட்டது. ஏனைய மாணவர்களோ, “சேர் இவன் கோலி குண்டு விளையாடுவான்’என்றார்கள். இன்னொரு சாரார் “இவன் மரத்தில் ஏறுவான். பக்கத்துப் பிள்ளைகளோட சண்டை பிடிப்பான். காலையில் நேரம் சென்று எழும்புவான்’ என்றெல்லாம் நீண்ட பட்டியலையே அடுக்கிக் கொண்டு போனார்கள். இத்தனைக்கும் அம்மாணவன் எதையுமே பேசாது மெளனமாக நின்றான். முகம் கறுத்து வாடிப்போயிருந்தது. “அஸாம்! இனிமேல் பாடசாலைக்கு ஒழுங்கா நேரத்துடன் வர வேண்டும். சரியா.?’ எனக் கூறி அம்மாணவனை அமரச் செய்வார் ஆசிரியர்.
பாடசாலை விட்டுச் சென்ற ஆசிரியரின் உள்ளத்தில் அஸாமைப் பற்றிய நினைவுகள் சலனப்படங்களாக ஓடத் தொடங்கின. அஸாம் ஒரு வறிய குடும்பத்தைச் சேர்ந்தவனாக இருக்க வேண்டும். அவனுள் ஆயிரம் சுமைகள் தேங்கிக் கிடப்பதை அஸாமின் முகம் தெட்டத் தெளிவாகப் படம் பிடித்துக் காட்டவே செய்தன.
அன்றொரு நாள் ஒரு மாணவனின் ஐந்து ரூபாய் பணத்தை அஸாம் திருடியதாகக் கூறிய போது "நான்.நா.ண். திருடல்ல சேர். ப்ளீஸ் என்னை நம்புங்க சேர். ஐந்து ரூபாயை எடுத்து யாரோ என்னுடைய பேக்கில் வச்சிட்டாங்க சேர்’ எனத் தேம்பித் தேம்பி அழுத விதம் பர்ஸாத்தின் உள்ளத்தில் வேதனையாகவே இருந்தது. உண்மையில் அவன் திருடவில்லை என்பதை உடன் நிரூபித்தும் காட்டி விட்டான்.
ஒருவன் அமைதியாக இருந்தால் எப்படியெல்லாம் குற்றஞ் சாட்டப்படுகிறான் என்பதை நினைக்க ஆசிரியரின் உள்ளத்தில் வேதனைத் தீ கொழுந்து விட்டு எரிந்து கொண்டே இருந்தது. அன்றிரவு முழுவதும் படுக்கையில் புரண்டு புரண்டு படுத்தார். தூக்கம் கண்களை தழுவ மறுத்தது. இதயத்தில் இனம் புரியாத வேதனை வேரூன்றிக் கிடந்தது.
மறுநாள் வகுப்ப்றையில் அஸாமை அழைத்து “தினமும் நேரம் பிந்திப் பாடசாலைக்கு ஏன் வள்றே.? என்னப்பா காரணம்.? வீட்டிலே ஏதும் பிரச்சினையா..? உனக்கேதும்
16

ஜெனரீரா தெளUக் கைருல் அமான்
பிரச்சினையிருந்தா சொல்லுப்பா. வாய் திறந்து பேசு. உனக்கு உதவ நான் இருக்கிறேன். பயப்படாதே.!’ என்ற போது தான் அஸாம் தன் வாயைத் திறந்து கூறத் தொடங்கினான். ஆசிரியரோடு மாணவர்களும் சேர்ந்து அவன் கதையை ஆவலோடு கேட்ட வண்ணமிருந்தனர்.
“நான் சிறுபிள்ளையாக இருக்கும் போது எனது பெற்றோர் என்னையும் அழைத்துக் கொண்டு பயணம் செய்தனர். அப்போது எதிர்பாராத விதமாக.” சொல்ல முடியாது விம்மி விம்மி அழுதான். “நாங்கள் சென்ற வாகனம் அறுபதடி உயரத்திலிருந்து சரிந்து பள்ளத்தில் விழுந்தது’ ஹ ஹு. ஹம் ஹ. அழத் தொடங்கினான். சிறிது தாமதித்து தன்னைச் சுதாகரித்துக் கொண்டு ஆசிரியரையும் மாணவர்களையும் கவனித்தான். அவர்களும் ஆடாமல் அசையாமல் வேதனை கொண்ட முகத்துடன் காதைக் கூர்மையாக்கிக் கேட்டுக் கொண்டிருந்தனர். அஸாம் தொடர்ந்தான். “நான். நான். சிறு காயங்களுடன் மூர்ச்சையானேன். பாதையில் வந்தவர்கள் என்னையும்
காயமடைந்தவர்களையும் வைத்தியசாலையில் அனுமதித்தனர்.”
“அவ்விடத்திலேயே எனது பெற்றோர் மரணமடைந்தனர். நான் இரவு பகலாக என் பெற்றோரின் ஞாபகம் வரும் போதெல்லாம் அவர்களைக் கேட்டு அடம்பிடித்து அழுவேன். அப்போதெல்லாம் ஏதேதோ பராக்குக் காட்டி என்னை ஏமாற்றி விடுவார்கள். ஆனால் என்னைப் பொறுப்பேற்று வளர்க்க யாரும் முன்வரவில்லை. சொந்தம் பந்தம் எல்லாம் பணம் உள்ளவரைதான். நான் ஏழை என்பதால் எவருக்கும் என்னைப்
பிடிக்காது.”
“இவ்வாறிருக்கும் போதே ஒரு பெண் என்னைத் தத்தெடுத்து அன்போடு உபசரித்து உரிய வயதில் பாடசாலையிலும் சேர்த்தாள். நானும் வளர்ந்தேன். மற்றவர்கள் என்னைத் திட்டித் தீர்ப்பதை உணர்ந்தேன். சனியன். மூதேவி. சின்ன வயதிலேயே பெற்றோரைப் பலி கொடுத்த பாவி! இவன் செல்லுமிடமெல்லாம் தரித்திரம் தான்’ என்றனர். ஆனால் என்னை வளர்த்த தாய் மட்டும் என் மீது மிகுந்த அன்பு வைத்திருந்தாள். எனக்கு வேண்டிய உதவிகளைச் செய்தாள்.”
“இப்போது என் குடும்ப நிலை பற்றி என்னால் ஒரளவு புரிந்து கொள்ள முடிகிறது.
என் தாய் அவித்துத் தந்த அப்பங்களை கடைகளுக்கும், வீடுகளுக்கும் கொடுத்து
வர நேரம் சரியாகவே இருக்கும். கல்வித் தீனைப் புசிக்க வேண்டும் என்ற ஆவலில்
ஓடோடி வந்து விடுவேன். பெரும்பாலும் பாடசாலைக்குப் பிந்தியே வருவேன். இது
7

Page 15
பிரியமான சினேகிதி
எனது தாய்க்கு விருப்பமில்லை. ‘இனிப் படித்தது போதும் எங்காவது ஒரு நல்ல கடையைப் பார்த்து அங்கே போய்ச் சேர் என்கிறார்’ என்றதும் தேம்பித் தேம்பி அழுதான். அவனது சோகக் கதையைக் கேட்டுக் கொண்டிருந்த ஆசிரியரின் நெஞ்சில் அஸாம் மீது அனுதாபம் பிறந்தது. கண்கள் குளமாகின. இந்தப் பிஞ்சு உள்ளத்தில் எத்தனை சோகங்கள் தேங்கியுள்ளன எனப் பெருமூச்சு விட்டார். அஸாமை ஆறுதல் கூறித் தேற்றினார்.
சகல மாணவர்களும் அஸாமின் சோகத்தில் கலந்து கொண்டனர். அவன் மீது அனுதாபம் கொண்டு படிப்பதற்குத் தேவையான உதவிகளைச் செய்வதற்கு முன் வந்தனர். தாம் கேலி செய்தமைக்காக மன்னிப்புக் கேட்டுக் கொண்டனர். ஆனாலும் அஸாம் அவர்களது எவ்வுதவிகளையும் ஏற்கவில்லை. ஏழையாக வாழ்ந்தாலும் கோழையாக மாறக் கூடாது என்ற வைராக்கியம் அவன் நெஞ்சில் வேரூன்றியிருந்தது. பட்டினி கிடந்து செத்தாலும் அடுத்தவனின் உதவிகளுக்கு அடிபணியக் கூடாது என நினைத்து அதன்படி செயல்பட்டான். இவ்வாறிருக்கும் போதே பர்ஸாத் ஆசிரியர் அஸாமின் வீட்டை அடைந்தார். அவரால் நம்ப முடியவில்லை.
வீடோ ஓலைக்குழசை விளக்கேற்றப் பணமும் இல்லை வயோதிபத் தாயவளின் வறுமையினை யாரறிவார்.?
எனக் கவி வரிகளை வாயினுள் முணுமுணுத்துக் கொண்டார். வீட்டுக்குச் சென்று ஸலாம் கூறியதும் “நீங்க அஸாமின் தாய் தானே.? தயவு செய்து அஸாமைப் பாடசாலையிலிருந்து மட்டும் நீக்கிடாதீங்க. அவன் படிப்பில் மிகவும் கெட்டிக்காரன். அவனது படிப்புக்கு வேண்டிய உதவிகளை நான் செய்கிறேன். மாலையில் என்னிடம் படிக்க அனுப்புங்கள்,” எனக் கூறி ஐநூறு ரூபாய் நோட்டை நீட்டினான். “வேண்டாம் தம்பி ! நீங்க யாரு? புண்ணியவானாக இருக்கிறீங்க ராஜா” என அன்பு ததும்ப வினவினாள். “நான் அஸாமின் ஆசிரியர். எங்கு சென்றாலும் அவனுக்கு உதவி செய்வேன். அவன் படிப்பை மட்டும் கெடுத்து விடாதீர்கள்’ எனக் கெஞ்சிக் கேட்டான். 'மறுக்காமல் இப்பணத்தைச் செலவுக்கு வைத்துக் கொள்ளுங்கள்’ என்றவாறு அஸாமின் தாயிடம் பணத்தைக் கொடுத்து விட்டு விடை பெற்றார்.
அன்றிலிருந்து அஸாம் மாலை நேரங்களில் படிக்கச் சென்றான். ஆசிரியரின் அறிவுரைகள் 18

ஜெனரீரா தெளUக் கைருல் அமல்
அவனை மென்மேலும் ஊக்கப்படுத்தியது. முயற்சி திருவினையாக்கியது. க.பொ.த. உத பெறுபேறுகள் அஸாமிற்கே அதி சிறப்பாக அமைந்தது. அவனைப் பாராட்டாதோர் யாருமில்லை. அவனது துரதிஷ்டமோ என்னவோ ஆசிரியருக்கு இடமாற்றம் கிடைத்தது. இருவரும் சொல்லொனாத் துயரமடைந்தனர். ஆசிரியரின் பிரிவை எண்ணி ஒ. வெனக் கதறி அழுதான். அஸாமை யாராலும் தேற்ற முடியாமல் போய் விட்டது. “இறைவா! என்ன சோதனை.? அநாதையான எனக்கு அன்பு காட்டி, நன்நிலைக்கு ஆளாக்கியது உனக்குக் கூடப் பிடிக்கலையா? இனியும் இப்படி ஒரு நல்லாசானை
எங்கு காண்பேன்.? எனக்கு உதவுவார் யார்.?’ என அழுது புரண்டான்.
எல்லோரிடமும் விடை பெற்ற ஆசிரியர் அஸாமிடம் சென்று “தம்பி உன் படிப்பைத் தொடர். வங்கியில் உன் பெயரில் பணம் போட்டுள்ளேன். இந்தா புத்தகம் தேவையான போது அவற்றைப் பெற்றுக் கொள். இடமாற்றம் கிடைத்தாலும் எனக்கு மனமாற்றம் கிடையாது. நீ ஒரு டாக்டர் என்பதை என் காதுகளால் நான் கேட்க வேண்டும். நமது பகுதி மக்களுக்கு வைத்தியம் செய்ய வேண்டும். என் மாணவனின் நிலை கண்டு நான் மகிழ வேண்டும். இதுவே நீ எனக்குச் செய்யும் பேருதவியாகும்.” ஆசிரியர் செல்வதை வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டிருந்தான். அஸாம்.
காலம்தான் யாருக்காகவும் காத்திருப்பதில்லையே. நாட்கள் வாரங்களாக, வாரங்கள் மாதங்களாக, மாதங்கள் வருடங்களாக உருண்டோடிக் கொண்டிருந்தன. ஒவ்வொரு மாதமும் ஆசிரியரின் அறிவுரைக் கடிதமும் காசும் வரும். ஆனால் முகவரி இருக்காது. ஆசிரியரை எங்கே காண்பது? எப்படி நன்றி மடல் அனுப்புவது? எனத் தினமும் திண்டாடினான்.
ஆசிரியரின் விருப்பத்திற்கேற்ப மருத்துவத் துறையை விரும்பிக் கற்றான். பலனும் பெற்றான். இப்போது அஸாம் ஒரு டாக்டர். நுவரெலியா வைத்தியசாலையில் முதல் நியமனத்தைப் பெற்றான். கடமை செயல் படச் செய்தது. அங்கே திடீர் அவசர சிகிச்சை ஒன்று வந்திருந்தது. அதனைப் பொறுப்பேற்று அதற்குரிய தீவிர பரிசோதனையை மேற் கொண்டான். யாரைப் பார்க்க வேண்டும் என ஆசைப் பட்டானோ அதே ஆசிரியரை, மாரடைப்புடன் படுத்த படுக்கையாய் சுய நினைவின்றிக் கிடப்பதை கண்டு அழுதான். என்னை இந்த நிலைக்கு ஆளாக்கிய ஆசானுக்கு என் முதல் வைத்தியம் கிடைத்து விட்டது. இறைவா இவரைக் காப்பாற்று ஆசிரியருக்காகப் பல கோடித் தடவைகள் துதி செய்தான் டாக்டர் அஸாம்.
அவன் பிரார்த்தனை வீண் போகவில்லை. ஆசிரியர் கண் திறந்தார். படிப்படியாக
9

Page 16
பிரியமான சினேகிதி
உடல் தேறியது. டாக்டரின் அயராத முயற்சியால் சுகம் கிடைத்ததைப் பலரும் பாராட்டினர். இது ஆசிரியரின் காதுகளுக்கும் எட்டியது. “சேர்! அதிகம் யோசிக்காமல் ஒய்வெடுத்துக் கொள்ளுங்கள்’ என்றதும் அது எங்கேயோ கேட்டுப் பழக்கப் பட்ட குரல் போல் ஆசிரியருக்குத் தோன்றியது.
“என்னை இந்நிலைக்கு ஆளாக்கியதே நீங்கதான் சேர். உங்க ஆசையைப் பூர்த்தியாக்கிட்டேன். என் முதல் வைத்தியமும் உங்களுக்கே சேர்” இருவரும் ஒருவரை ஒருவர் அணைத்து ஆனந்தக் கண்ணீர் வடித்தனர். “நான் உருவாக்கிய மாணவன் உயர்ந்த நிலையிலுள்ளான் என்பதை எண்ணி பகிழ்ச்சியடைகிறேன்.” என்று பூரித்துப் போனார் ஆசிரியர். இருவரின் ஆனந்தத்தில் வைத்தியசாலையே கலகலத்தது.
இலங்கை வானொலி (முஸ்லிம் நிகழ்ச்சி) ஒலிபரப்பு : 1997/04/18
2O
 

ஜைனிரா தெளUக் கைருல் அமான்
கண் திறந்தது
பெருநாளைக்கு இரண்டு நாட்களே மீதமுள்ளன. எங்கும் ஒரே ஆரவாரம். ரெடிமேற் உடுப்புக்கள் எடுப்பதும், தையற்கடைகளில் தைத்த உடுப்புக்களை எடுத்து வந்து அணிந்து அழகுபடுத்திக் களைவதுமாக இருந்தனர். இன்னும் பல வீடுகளில் விதவிதமாகப் பலகாரங்கள் தயாரித்த வண்ணம் இறுதி நோன்பைக் கழித்துக் கொண்டிருந்தனர். எல்லாவற்றையும் அவதானித்துக் கொண்டிருந்த நகீபா, தன் தாயிடம் சென்று அழத்தொடங்கினாள்.
“உம்மா. நான் எல்லா நோன்பையும் பிடித்தும், எனக்குப் பெருநாளைக்கு ஒரு உடுப்பு சரி எடுக்கவில்லையே! எனக்கும் எடுத்துத்தாங்க. நசீமா தாத்தாவின் மகள் மூன்று உடுப்புக்கள் எடுத்துள்ளா. அது போல என்ட கூட்டாளிப்பிள்ளைகளும் மூன்று, நான்கு எடுத்துள்ளாங்க. எல்லோரும் பெருநாளைக்கு குளித்துப் புத்தாடை அணிந்து பள்ளிவாசலுக்குப் போகும் போது, நான் மட்டும் பழைய உடுப்பா அணிவது..? என்னைய அவங்களோட விளையாடச் சேர்க்கமாட்டாங்க உம்மா. எனக்கும் பெருநாளைக்கு உடுப்பு வேணும். வாப்பா இருந்தா எடுத்துத்தராமலா இருப்பாங்க.!” நகீபாவின் கதைகளைக் கேட்டுத் தாயும் சகோதரிகளும் அழுதனர். அவர்களால் நகீபாவை எவ்வாறு சமாதானப்படுத்துவதெனத் தெரியாது தடுமாறினர்.
“எல்லாம் அல்லாஹ்ட சோதனை மகள். இப்ப உடுப்பு வாங்கக்கூட எம்மிடம் காசில்லை. அதற்காக யாரிடத்திலும் சென்று கைநீட்டமாட்டேன். நாம் கெளரவப்பிச்சைக்காரர்கள். 2

Page 17
Uரியமான சினேகிதி
எமது ஏழ்மை எம்முடனேயே இருக்கட்டும்’ என்றாள் நகீபாவின் தாய். "இஞ்சப்பாருங்க பிள்ளைகளா. அந்தக்காலத்திலே நாமதான் பேர்பெற்ற பணக்காரர்பெருநாள் என்றா. உங்க வாப்பா கொழும்புக்குக் கூட்டிப் போய் ஒவ்வொருவருக்கும் இரண்டு, மூன்று உடுப்புக்கள் வாங்கித்தருவார். பலகாரங்கள், ஐஸ்கிறீம் என்பவற்றுக்கு ஒடர் கொடுத்தா வீட்டுக்கே வந்து சேரும். பெருநாளன்று வீட்டில் சமைப்பதேயில்லை. ஹோட்டல் ஒன்றிலிருந்துதான் புரியாணிச்சோறு, வட்டிலப்பம் வரும். துன்பமென்பதே வாழ்வில் காணவில்லை. அந்தளவிற்கு வாப்பா எல்லாரையும் செல்வச் செழிப்பாய் வச்சிருந்தார். யார் கண்பட்டதோ திடீரெனவாப்பா மெளத்தானார். அதோடு செல்வப்பட்சியும் பறந்தது. இப்ப கஞ்சிகுடிக்கக்கூட வழியில்லை.” ஏக்கப் பெருமூச்சு விட்டாள் தாய்.
எல்லாவற்றையும் கேட்டுக் கொண்டிருந்த மூத்த மகள் பஸ்மியா பேசத் தொடங்கினாள். “உம்மா. நான் சொல்லுறேன்னு கோபிக்காதீங்க, இருக்கும் போது பலருக்குத்தலைகால் புரிவதில்லை. அல்லாஹ்வை மறந்து, பணமே உலகம் என நினைப்பார்கள். இல்லாமல்
போனதும் இறைவன் மீது பழியைப்போடுவார்கள்.”
“மனிதன் எப்போதும் மனிதனாக வாழ வேண்டும். இன்பமும் துன்பமும் எல்லோருக்கும் உள்ளது. இதை நினைத்து வாழ்வதுதான் வாழ்க்கை. இறைவன் மனிதனுக்காக வானம், பூமி, சந்திரன், கடல், மலை இவ்வாறு எவ்வளவையோ படைத்துள்ளான். அவனே பெருமைக்குரியவன். ஆனால் இன்று மனிதன் கொஞ்சம் கல்வி கற்றால். பணத்தைக் கண்டால். நான் படித்தவன்! நானே உலகில் தனவந்தன் எனத் தம்பட்டம்
அடித்துக்கொண்டிருக்கிறான்.”
“இறைவன் மனிதனுக்கு உலகில் கொடுத்துப் பார்ப்பான். அவன் அதை உரிய முறையில் பயன்படுத்த வேண்டும். பூமியில் பெருமையடித்துத் திரிபவனை அல்லாஹ் நேசிப்பதில்லை. அவனது கோபத்துக்கு ஆளாகாமல், ஒவ்வொருவரும் தன் ஈமானைப் பாதுகாக்க வேண்டும். அல்லாஹ் நினைத்தால். ஒரு நொடிப்பொழுதில் எப்படியெல்லாம் சோதிப்பான் தெரியுமா..? சுனாமி ஏற்பட்டு எத்தனை உயிர்கள் பலியாகின.? சேர்த்து வைத்த சொத்து பத்துக்கள் எப்படி அழிந்தன.? இச்சுனாமி இன்னும் சில நிமிடங்கள் நீடித்தால். மனிதனின் நிலைமை என்னாவாகும்.? இன்று சுனாமி ஏற்படும் அறிகுறிகள் தென்படுகின்றன என ஊடகங்கள் அறிவித்ததும், மனிதனின் உள்ளம் என்ன பாடுபடுகிறது. உயிர் தப்பினால் போதுமென ஒட்டமெடுக்கிறான். கட்டிய வீட்டைத் தூக்க முடியுமா..?
22

ஜெனிரா தெளUக் கைருல் அமான்
வாங்கிய வளவைச் சுமக்க முடியுமா..? வீடு நிறையச் சேர்த்து வைத்த பொருட்களை அவசரத்தில் எடுத்துக் கொண்டு ஓட முடியுமா? இது இவ்வாறிருக்க, மனிதன் அல்லாஹ்வை மறந்து கண்டதே காட்சி, கொண்டதே கோலம் எனக் கர்வத்தோடு
அலைகிறான்’ என்றாள் பஸ்மியா.
“எனது மகள் வயதில் சிறியவளாக இருந்தாலும் எவ்வளவு அறிவு பூர்வமாகப் பேசுகிறாள். அவளுக்கு இருக்கும் புத்தி எனக்கிருக்கவில்லையே. நான் கூட எல்லாம் மறந்தே வாழ்ந்தேன். யா அல்லாஹ்! எனது பிள்ளைகளுக்கு மேலும் அறிவைக் கொடு” எனப் பிரார்த்தித்தாள் தாய். “உம்மா. நேற்று நான் நசீமா தாத்தா வீட்டுக்குப் போனேன். பெருநாளைக்கு உடுப்பெடுத்தீங்களா? என விசாரித்தா. நான் இன்னும் எடுக்கலைன்னு சொன்னேன். அப்போ நாம் வாழ்ந்த சொகுசான வாழ்க்கையைப் பற்றியும், நோன்பு ஆரம்பத்திலேயே எமக்கு உடுப்புக்கள் எடுத்து விடுவதாகவும் கூறினா. அத்துடன், அன்று நசீமா தாத்தாவுக்கு வேலை கிடைத்த முதல் சம்பளத்தில் உங்களுக்கும் ஒரு ஒயில் சாறி வாங்கியனுப்பினாவாம். நீங்க அதை திருப்பியனுப்பிட்டீங்களாம். நாங்க இதெல்லாம் உடுக்கிறல்ல. இது பிச்சைக்காரங்க கட்டுற சாறி. பிச்சைக்காரங்களுக்கே கொடுக்குமாறு அனுப்பினீங்களாமே. அவ உள்ளம் வேதனைப்பட்டதாலே பழையதை மறக்காமல் சொல்றா. இப்ப பிச்சைக்கார சாறி கட்டக்கூட வக்கில்லாமல் இருக்கிறோம் பார்த்தீங்களா! நாம எவ்வளவுதான் வசதிவாய்ப்புக்களோடு வாழ்ந்தாலும் அடுத்தவங்கள மதிக்கத் தெரியனும். அவங்க தரும் பொருள் சிறியதாயினும் மனமுவந்து ஏற்கனும். அதாம்மா பெருந்தன்மை.” ". . .
“ஒரு காலத்திலே வறுமையில் வாடிய நசிமா தாத்தா இப்ப எப்படி வசதிவாய்ப்புக்களோடு வாழ்றா. இதத்தாம்மா சொல்வது "ஆண்டவன் கொடுக்க நினைத்தால் கூரையைப் பொத்துக் கொண்டும் கொடுப்பான்’ என்று. ஆனாலும் அவ பழைய நிலைமையை மறக்கல. பணம் வரும் போகும். குணம் தான் மனிதனுக்கு அவசியம் என அடிக்கடி நசிமா தாத்தா கூறுவா.”
பேசிக் கொண்டிருக்கும் போது ஸலாம் வந்த திசையை நோக்கினர் இருவரும்.
“அஸ்ஸலாமு அலைக்கும் பெரியம்மா’ எதிரில் நசிமா
“நசிமா வா. ஆயிசு நூறு. உன்னைத்தான் பேசிக்கொண்டிருக்கிறோம். அன்று நீ
23

Page 18
பிரியமான சினேகிதி
அனுப்பிய ஒயில் சாறியை திருப்பியது பற்றித்தான். உண்மையில் நான் அப்படிச் செய்திருக்கக் கூடாது. எனது தவறை இப்போது உணர்ந்திட்டேன்’ என்றாள் உம்மா.
'மனிதனாகப் பிறந்தவன் தவறு செய்வது இயற்கைதான் பெரியம்மா. அதை நினைத்து வருத்தப்படாமல், திருந்திய உள்ளத்தோடு வாழ்ந்தால் அதுவே போதும்” என்றவாறு தான் கொண்டு வந்திருந்த உடுப்புப்பொதியைக் கொடுத்து “இதைப் பிடியுங்க மறுக்காம பிடியுங்க அதில் எல்லோருக்கும் பெருநாள் உடுப்புள்ளது” எனப் பெரியம்மாவிடம் கூறி விட்டு அமைதியாக விடை பெற்றுச் சென்றாள். நசிமா.
அன்று தான் வாழ்ந்த ஆடம்பர வாழ்வையும் இன்றைய நிலையையும் எண்ணி அல்லாஹ்விடம் கண்ணிர் மல்கப் பிரார்த்தித்தாள். உடுப்புக்கேட்டு அடம்பிடித்த நகீபாவுக்கு, நசிமா தாத்தாவின் பொதியைப் பார்த்ததும் சந்தோசம் பெருக்கெடுத் தோடியது. அவளும் எல்லோரையும் போல பெருநாளைக் கொண்டாடுவதற்கு ஆயத்தமானாள்.
நவமணி :17/02/2008
24
 

ஜெனிரா தெளUக் கைருல் அமான்
உண்மை உயிர்த்தெழும் போது.
இன்னும் இருபத்தொரு நாட்களில் கண்ணியம்மிக்க ஆசிரியப் பதவியை ஏற்கப் போகிறோமே என்ற மகிழ்ச்சியில் ஆசிரியச் சகோதரிகள் பெட்டி படுக்கையுடன் மஹாவித்தியாலயத்தை நோக்கிச் சென்று கொண்டிருந்தனர். ஆனால் ஒருத்தி மட்டும் சோகமே உருவாக வந்து கொண்டிருப்பதை ஜாரியாவின் கண்களும் அவதானிக்கத் தவறவில்லை.
இருபத்தொரு நாள் பயிற்சி வகுப்பைச் சரிவர முடிக்க வேண்டும் என்பதற்காக எல்லா ஒழுங்குகளும் செய்யப்பட்டிருந்தன. ஒவ்வொருவருக்கும் தனித்தனியாக கட்டில் ஒதுக்கப்பட்டு நம்பர் குறிக்கப்பட்டிருந்தன. அதில் ஜாரியாவுக்கு பதினைந்தாம் இலக்கக் கட்டில் கிடைத்தது. அவளுக்குப் பக்கத்தில் ஏற்கனவே அவதானித்த அதே ஆசிரியை வந்திருந்தாள். இது போன்று பலர் வெவ்வேறு திசைகளிலிருந்தும் வந்து சேர்ந்ததால் ஒருவருக்கொருவர் அறிமுகமில்லாமல் இருந்தது. ஆகவே ஊர், பெயர் அறிமுகஞ் செய்யப்பட்டு ஒருவர் மற்றவருக்கு நண்பராகிக் கொண்டனர். இவ்வாறு மகிழ்வுடன் அந்நாள் கழிந்ததால் நேரஞ் சென்றதே தெரியவில்லை.
பத்து மணியளவில் எல்லோரும் தங்களது கட்டிலுக்குச் சென்று தூங்கும் போது
25

Page 19
பிரியமான சினேகிதி
ஹாஜரா மட்டும் அழுது கொண்டிருந்தாள். ஜாரியா அவள் பக்கம் திரும்பி “ஹாஜரா. ஏன் அழுகிறாய்.?’ என அன்போடு வினவினாள். “ஒன்னுமில்ல. ஜாரியா தடிமல்!” இதற்குப் பின் ஜாரியாவால் எதுவுமே பேச முடியாது மெளனமானாள். ஒவ்வொரு இரவும் ஹாஜரா கண்ணிர் வடிப்பது ஜாரியாவுக்குப் பெரிதும் வேதனையாக இருந்தது. எப்படியாவது பயிற்சி முடிந்து செல்வதற்குள் ஹாஜராவின் கண்ணிர் வடிப்புக்கான காரணத்தை அறிய வேண்டும் என அவளது உள்ளம் துடியாய்த் துடித்தது.
“ஹாஜரா இன்றைக்காவது உங்கள் கவலைக்கான காரணத்தைச் சொல்லுங்களேன்.” இதைக் கேட்டதும் ஹாஜராவின் கண்களிலிருந்து கண்ணிர் முத்துக்கள் சொரியத் தொடங்கின. ஆனால் அவள் வாய் மட்டும் லேசாகச் சிரித்துக் கொண்டது. “ஜாரியா! என் கதையைச் சொன்னால் நீயும் என் கூடச் சேர்ந்து அழுவாய். வேண்டாம்.”
"இஞ்சப்பாரு ஹாஜரா. ஒரு பெண்ணின் மனதை ஒரு பெண்ணால் தான் புரிந்து கொள்ள முடியும். ப்ளீஸ் ஹாஜரா ப்ளீஸ்’கெஞ்சினாள் ஜாரியா. தன் கதையைக் கூறத் தொடங்கினாள் ஹாஜரா.
“அன்று க.பொ.த. சா/த பாஸ் பண்ணியதும் க.பொ.த. உத படிப்பதற்கு எனது ஊரில் பாடசாலை இருக்கவில்லை. இதனால் எனது பெற்றோர் தொடர்ந்து படிப்பதற்கு என்னை அனுமதிக்கவில்லை. எனக்கோ. தொடர்ந்து படிக்க ஆசை. இதனால் உண்பதுமில்லை. உறங்குவதுமில்லை. அழுதழுது இருந்தேன். என் பரிதாபத்தைச் சகிக்க முடியாத எனது தாத்தாவும் மச்சானும் பட்டினத்திலுள்ள தங்கள் வீட்டிலிருந்து படிக்குமாறு கேட்டுக் கொண்டார்கள்.
எனது வீட்டில் எல்லோரது சம்மதத்துடனும் அங்கு படிக்கச் சென்றேன். எனக்குத் தந்தைக்குத் தந்தையாக மச்சானும், தாய்க்குத் தாயாக தாத்தாவும் செயல்பட்டனர். எனக்கு வேண்டிய கொப்பி, புத்தகங்கள், உடுப்புக்கள் என்பவற்றை அவர்களே வாங்கித் தருவார்கள்.
இவ்வாறு ஆறு வருடங்களை மிகச் சந்தோஷமாகக் கழித்தேன். அதன் பின் எனது வீட்டுக்கு வந்து சேர்ந்தேன். என் வீட்டில் கல்யாணப் பேச்சுக்கள் ஆரம்பமாகின. நானோ. மாப்பிள்ளையை நேரில் கண்டதுமில்லை, போட்டோவில் பார்த்ததுமில்லை. ஆனால் மாப்பிள்ளை நல்ல பையனாம். கெளரவமான குடும்பத்தைச் சேர்ந்தவனாம் என்றதும் சம்மதம் தெரிவித்தேன். அதன் படி திருமணத்துக்கு வேண்டிய ஏற்பாடுகளும் நடை பெற்றுக் கொண்டிருந்தன. அப்போது எனது தாத்தாவின் புருஷன் மட்டும்
26

ஜெனிரா தெளUக் கைருல் அமான்
எதிர்ப்புக் காட்டினார். அதனைப் பொருட்படுத்தாமல், எங்களது திருமணம் கோலாகலமாக நடந்து முடிந்தது.
ஒரு கிழமை தான் சந்தோஷமாக வாழ்ந்தேன். எனது கணவர் படிப்படியாக குடிக்கத் தொடங்கினார். “குடிக்காதீங்க. குடிக்காதீங்க’ன்னு எவ்வளவோ சொல்லிப் பார்த்தேன். அவர் கேட்கல்ல. ஒரு நாள் மிகவும் குடித்து விட்டுத் தள்ளாடி தள்ளாடி வீட்டினுள் வந்தவர், “நான் குடிக்கிறதுக்குக் காரணமே நீதாண்டி பெரிசா. படிக்கப் போனாவாம் படிக்க. அங்கே படிப்பா நடந்துச்சு.? மச்சானோடு கூடிக் குலாவத்தான் நேரமிருந்துச்சு’ என்று சீறினார்.
“என்ன சொல்றீங்க. அவர் எனக்குத் தந்தைமாதிரி. அவர் மீது வீண்பழி சுமத்தாதீங்க” என்றேன். “ஓ. உண்மையைச் சொன்னா. உடம்பெல்லாம் சுடுதோ..? உங்களிருவரின் வாழ்வில் நான் வந்து குறுக்கிட்டதற்கு எனக்குச் செருப்பாலடிக்கணும்’ என்றார். எனக்கு எதுவுமே புரியவில்லை. “குடிகாரன் பேச்சு விடிந்தால் போச்சு” என்பார்கள். அவ்வாறுதான் இதுவுமென நினைத்தேன். ஆனாலும் என் மனசு கேட்கல்ல.
“என்னங்க.? ஏதோவெல்லாம் பேசுறீங்க” என்றேன். அவ்வளவுதான் என் கன்னத்தில் “பளார். பளார்’ என அறை விழுந்தது. அத்துடன் நின்று விடவில்லை. தொடர்ந்து அடியும், உதையும் என்னைப் பதம் பார்த்தன, ஆனால், பிரச்சினை மட்டும் நின்றபாடில்லை. ஒவ்வொரு, நாளும் என்னையும், தாத்தாவின் புருஷனையும் இணைத்து ஏசத் தொடங்கினார். “தீயினால் சுட்ட புண் உள்ளாறும். ஆறாது நாவினால் சுட்ட வடு’ எத்தனைநாளைக்கு வீண் பழிகளுடன் வாழ்வது.? ஒரு முடிவுக்கு வந்தேன்.
“நீங்க தினமும் என்னையும், தாத்தாவின் புருஷனையும் இணைத்துப் பேசுறீங்களே. உங்களுக்கு என் மீது சந்தேகம்னா அவரையே அழைத்து விசாரியுங்க” என என் கள்ளமில்லா மனசைத் திறந்து கூறினேன்.
அப்போது அவர் பொக்கட்டிலிருந்து வெள்ளைக் காகிதமொன்று பறந்து வந்து என் முகத்தில் விழுந்தது. அது எனது தாத்தாவின் புருஷனின் கையெழுத்துத்தான். அதில் நான் அவனைக் காதலித்ததாகவும் கல்யாணம் முடிப்பதற்கு ஆயத்தமான போதே என் கணவர் வந்து குறுக்கிட்டதாகவும் எழுதியிருந்தார். தந்தைக்குத் தந்தையாக நினைத்திருந்தேன். அவனா இப்படி எழுதினான்.? என்னால் நம்ப முடியவில்லை. அழுவதைத் தவிர வேறு என்ன செய்ய முடியும்? குலுங்கிக் குலுங்கி அழுதேன்.
27

Page 20
பிரியமான சினேகிதி
“இதற்குப் பின்னும் நான் உன் கூட சேர்ந்து வாழ ஆயத்தமில்லை” என்றார். "என்னை நம்புங்க. நான் தவறான எண்ணத்தோடு என்றைக்கும் அவனோடு பழகல்ல. அல்லாஹ்வுக்காக என்னை நம்புங்க’ எனக் கெஞ்சிக் கேட்டேன். “இனியும் உன்ன நம்ப நான் ஆயத்தமில்லை’ எனக் கூறி அவரது பொருட்களையெல்லாம் எடுத்துக் கொண்டு சென்று விட்டார். அதோடு விவாகரத்துக்கு வேண்டிய ஏற்பாடுகளும் செய்யப்பட்டன. “ஹலாலானவைகளில் அல்லாஹ்வுக்கு மிக வெறுப்பான செயல் தலாக் ஆகும்” என நபி (ஸல்) அவர்கள் நவின்றுள்ளார்கள். அதனால் மாமி வீட்டுக்கு ஒடிச் சென்று, “என்னை விவாகரத்து மட்டும் செய்திடாதீங்க” என என் கணவனிடம் கெஞ்சிக் கேட்டேன். என் கணவர் உட்பட மாமி, பிள்ளைகள் எலலோரும் சேர்ந்து என்னை அடித்துத் துன்புறுத்தினார்கள்.”
நான் வர்றப்போ ஒன்றை மட்டும் சொல்லிவிட்டு வந்தேன். “நான் உத்தமி' என்றோ ஒரு நாள் என்னைப் பற்றிய உண்மைகள் வெளி வரும். அப்போ எனக்குச் செய்த துரோகத்தை நினைத்து வேதனைப்படுவீங்க” என்றேன். நாளுக்கு நாள் என்னைப் பற்றிய வ்தந்திகள் பெருகத் தொடங்கின. சமூகம் எப்போதும் ஆண்கள் பக்கமே சார்ந்திருக்கும். நான் செய்யாத குற்றத்தைக் கூட அமைதியாக ஏற்றுக் கொண்டேன். அல்லாஹ் மீது வைத்துள்ள நம்பிக்கை என்றும் வீண் போகாது. எனும் மனவுறுதியுடன் வாழ்ந்தேன்.” ஒரு நாள் இரவு கதவு தட்டும் சப்தம் கேட்டுத் திறந்தேன். என் கணவரேதான். என் கண்களையே நம்ப முடியாதிருந்தது. “ஹாஜரா. என்னை மன்னித்திடு. உன் மீது சந்தேகம் கொண்டு எப்படியெல்லாம் துன்புறுத்தினேன். நீ எவ்வளவு பொறுமைசாலி. உன் மேன்மை அறியாத இப்பாவியை மன்னிச்சிடு. ஆரம்பத்தில் உன்னை உயர்வாகவே மதித்தேன். அவன் கடிதத்தைக் கூட ஒரு தூசாகவே நினைத்தேன். ஆனால். நான் வேலை முடிந்து வரும் போது, நான் அனுபவித்து எச்சிற்படுத்தியதையே நீ அனுபவிக்கிறாய். உனக்கு வெட்கமில்லையா? நீ ஒரு ஆம்புள்ளைனா எனக்குச் சொந்தமானவளை நீ வைத்திருக்க மாட்டாய்” என்றான். இவ்வார்த்தை எந்த ஒரு ஆணுக்கும் ஆத்திரத்தை ஏற்படுத்தும். எனக்கும் உன் மீது கோபம் பொங்கி எழுந்தது. எனது வீட்டில் விடயத்தைக் கூறியதும். உடனே உன்னை தலாக் கூறும் படி சொன்னார்கள். நர்னும் அவ்வாறே செயல்பட்டேன்.
ஒரு நாள் எதிர்பாராத விதமாக அவனைச் சந்தித்தேன். “எப்படி? இப்ப பிரிஞ்சு வாழ்றிங்களா? அவளை முடிக்காதேன்னு ஆரம்பத்தில் சொன்னப்போ, நீ கேட்டிருந்தா இந்தளவுக்கு வந்திருக்காது. எனக்குச் சொந்தமாக வேண்டியவளை நீ கட்டிக்கிட்டா
28

ஜைனிரா தெளபீக் கைருல் அமான்
விடுவேனா?’ என்றான். “அடப்பாவி உனக்குத்தான் அவள் மீது ஆசையிருந்ததே தவிர அவளுக்கில்லை. “ஒரு கற்புள்ள பெண்ணை அவதூறு பேசுவது ஒரு புனிதஸ்தலத்தை எரிப்பதற்குச் சமன்’ அந்தப் பாவம் உன்னைச் சும்மா விடாது. அல்லாஹ்விடத்தில் அதற்குரிய கூலியைப் பெற்றுத்தானாக வேண்டும்” என்றேன். நான் கூட உன்னைத் தீர விசாரிக்காமல் உன்னைக் கொடுமைப் படுத்தினேன். என்னை மன்னிச்சிடுமா. நடந்ததை மறந்து இனிச் சந்தோஷமாக வாழ்வோம்’ எனக் கூறி வீட்டுக்குச் சென்றவர் வெகு நேரமாகியும் வரவில்லை.
அப்போது ஒருவர் வந்து, பவ்சான் வீட்டிலிருந்து வந்தப்போ “எக்ஸிடென்ட்’ பட்டு வைத்தியசாலைக்குக் கொண்டு போறாங்க என்றதும் என்னையறியாமலேயே என் கால்கள் வைத்தியசாலையை நோக்கி ஓடின. அங்கே. என் கணவரின் உயிரற்ற உடல் வெள்ளைத் துணியால் போர்த்தப்பட்டிருந்தது. அந்த வோர்டே அதிரும்படி கத்தினேன். அங்கிருந்த எல்லோரும் என்னைப் பரிதாபமாகப் பார்த்தாங்க. என் மாமியும், பிள்ளைகளும் என்னிடம் மன்னிப்புக் கேட்டார்கள். “நீங்க மன்னிக்காத வரை இறைவனும் மன்னிக்க மாட்டான். எங்களை மன்னிச்சிட்டேன்னு ஒரு வார்த்தை சொல்லிடும்மா’ எனக் குழுங்கிக் குழுங்கி அழுதாாகள.
நான் நிரபராதின்னு அறிந்ததே போதும்னு அல்லாஹ்வுக்காக அவர்களை மன்னிச்சிட்டேன். எல்லாவற்றையும் கேட்டுக் கொண்டிருந்த ஜாரியாவின் கண்களும் கண்ணிர் சிந்தின. ஆனால் எமது சமூகத்தில் இனம் கானப்படாத ஹாஜராக்களுக்காகக் கண்ணி வடிப்பது uiti?
இலங்கை வானொலி (முஸ்ஸிம் சேவை)ஒலிபரப்பு - 07/06/1992
29

Page 21
ஜெனிரா தெளபீக் கைருல் அமான்
மனசுக்கேற்ற வாழ்வு
பிரதீப்பின் கண்கள் துக்கத்தைக தழுவ மறுத்தன புரண்டு புரண்டு படுத்தான். அவனது நினைவுகலெல்லாம் அவளது இலாவண்ய வதனமே காட்சி தந்தது. எத்தனையோ தடவைகள் அவன் நண்பனின் வீட்டிற்கு சென்றிருக்கின்றான். அவளை ஒரு முறை பனும் கண்டதில்லை
அன்று தான் முதல் தடவையாக அவள் மாடியிலிருந்து ஒவ்வெரு படியாக் கீழிறங்கி வரும் போது மெய்மறந்து வைத்த கண் வாங்காமல் அவளை உற்று நோக்கினான் பிரதீப் , தன் நண்பனிடம் வினவிய போது அவள் . நண்பனின் தங்கை எனத் தெரிய வந்ததும் மெல்லவும் முடியாமல் விழுங்கவும் முடியாமல் திண்டாடினான்.
இப்பேதெல்லாம் பிரதீப் நண்பன் அரவிந்தின் வீட்டுக்கு அடிக்கடி விஜயம் செய்ய ஆரம்பித்தான்.அவன் தங்கையை மணம்முடிக்கும் எண்ணத்துடன் பிரதீப் தன் விருப்பத்தை எத்தி வைத்தான். "டு லேட் பிரதீப், அவளுக்கு ஏற்கனவே பேசி முடித்து விட்டோம். அவர் தற்பொழுது வெளிநாட்டில் வேலை செய்கிறார்."
"எனது தங்கை பாடசாலை செல்லும் போது அவளைப் பின் தொடர்ந்தார். அவளது சம்மதத்தை பெறுவதற்கு எவ்வளவுமுயன்றும் முடியாது போகவே எங்கள் வீட்டிற்கு ஆளனுப்பியிருந்தார் . எனது பெற்றோருக்கும் அவரையும் அவரது குடும்பத்தையும் பிடித்துவிட்டது . எனது தங்கையின் படிப்பு முடிந்ததும் திருமணம் நடைபெறும்." என்றான். அரவிந் கதையை கேட்டவனுக்கு நெஞ்சு படபடக்னெ ஓராயிரம் தடவைகள் அடித்துக்கொண்டன.
பிரதீப் பல முறை யோசித்தான். படிப்பறிவில்லாதவனை விட என் போன்ற தொழில் 30

பிரியமான சினேகிதி
வாய்ப்புள்ளஒருவனைத் திருமணம் முடித்தால். அவள் வாழ்கை எவ்வளவு சந்தோசமாக அமையும் அவளுக்குத்தான் சின்ன வயசுநல்லது கெட்டது தெரியாது. அவள் பெற்ருேக்குமா புரியாமல் போய் விட்டது. யோசித்து. யோசித்து அவனுக்குப் பைத்தியமே பிடித்து விடும் போலிருந்தது.
லாவண்யாவை இலக்கு வைத்து வைத்து அவன் உள்ளத்தில் பல தீய எண்ணங்கள் தோன்றின. வெளி நட்டில் தெழில் புரியும் விவேக்குடன் நட்புக் கொண்டான். அவ்வப்போது லாவண்யாவைப் பற்றியும் எழுதத்தொடங்கினான். பிரதீப்பும் விவேக்கும் இணைபிரியாத நண்பர்களானார்கள். எனவே சந்தர்ப்பத்தை தனக்குச் சாதகமாக்கிக் கொண்டான்.
"அன்பின் விவேக் நீ வெளி நாட்டிலிருப்பதால் லாவண்யாவுக்கு படித்த தெழில் வாய்ப்புள்ளவரை பேசி முடிவாக்கி விட்டார்கள். இலவு காத்த கிளி போல உனது வாழ்க்கை அமையப் போகின்றது. இப்போது நீ வெளி நாட்டில் கைநிறைய சம்பாதித்திருப்பாய். உனக்கு லாவண்யாவைப் பார்க்க படித்த அழகுள்ள பெண் இல்லாமலா போய்விடுவாள்? இவள் போனால். இன்னொருத்தி உன் தங்கமான குணத்துக்குக் கிடைக்காமலா இருப்பாள்.? இது பற்றிக் கவலைப் படாதே’ என கடிதத்தை முடித்திருந்தான் பிரதீப்,
நண்பனின் நட்பின்மீது நம்பிக்கை வைத்த விவேக் லாவண்யா மீதிருந்ந ஆத்திரத்தில் காரசாரமாக கடிதம் எழுதினான். “உன் பெற்றோர் எனக்கு மாபெரும் துரோகம் செய்து விட்டனர். இவ்வுலகில் நீமட்டுமா பெண்? எனக்கென ஒருத்தி பிறக்காமலா போய்விடுவாள்? உன் பெற்றோர் பார்க்கும் படித்த மாப்பிள்ளையை மணந்து கொள். ஆனால் உன் தமையனுடன் வீட்டுக்கு வருவோரையெல்லாம் மாப்பிள்ளையாக்கிவிடாதே! இனியும் என் வாழ்க்கையில குறுக்கிடாதே.”
விவேக்கை மலை போல நம்பியிருந்த லாவண்யாவின் பெற்றோருக்கு விவேக்கின் தீடீர் மாற்றம் பெரிதும் வேதனையைக் கொடுத்தது. வலிய வந்து வாய்வைத்த விவேக் இன்று யாரை நம்பி இப்படி ஒரு திருப்பத்தைஏற்படுத்தினானோ தெரியவில்லை. லாவண்யாவை எவ்வளவு பேர் பெண் கேட்டனர். ஆனால் விவேக்கிற்கு வாக்குக் கொடுத்து விட்டோம். அவற்றை மீறக்கூடாது என்பதற்காக விவேக் வரும் வரை காத்திருந்தோம் பாவி! வயிற்றில நெருப்பை அள்ளிக் கொட்டிவிட்டான்.
அவனுக்கு எவ்வளவோ எடுத்துக் கூறியும் விவேக் புரிந்து கொள்வதாகத் தெரியவில்லை வருடங்கள் உருண்டோடின அவன் ஊர் வருவதாக இல்லை. இனியும் காத்திருப்பதில் பலனில்லை. வரன் தேடும் முயற்சியில் ஈடுபட்டனர்.
3

Page 22
ஜெனிரா தெளUக் கைருல் அமான்
இதை அறிந்த பிரதீப் தான் லாவண்யாவை மணமுடிக்கச் சம்மதித்தான். விவேக்கை விட பிரதீப் யாருக்கம் அநியாயம் செய்யவில்லையே இறைவன் எம்மைக்கைவிட மாட்டான். எல்லாம் நன்மைக்கே பிரதீப்புக்கு லாவண்யாவின் வீட்டார் பூரண சம்மதத்தைத் தெரிவித்தனர். இரு வாரத்துக்குள் திருமணம் நடைபெறுவதற்கான ஏற்பாடுகளும் நடைபெற்றுக் கொண்டிருந்தன.
இவ் விடயம் விவேக் கினி காதுகளுக்கும் எட்டியது. எவ்வித தொடர்புமில்லாதிருந்தவன் உடனே ஊர் வந்து சேர்ந்தான். பிரதீப் தனக்கு அனுப்பிவைத்த மடல்கள் யாவற்றையும் லாவண்யாவின் பெற்றோரிடம் ஒப்படைத்தான். பிரதீப்பின் நயவஞ்சகம் அம்பலத்துக்கு வந்தது. தான் லாவண்யா மீது கொண்ட ஒரு தலைக் காதலால் அவ்வாறு செய்ததாகக் கூறிய பிரதீப் தன் தவறை ஒத்துக் கொண்டான். விவேக்கிடமும் லாவண்யாவின் பெற்றோரிடமும் மன்னிப்புக் கேட்டான்.
விவேக் லாவண்யாவை அன்றிரவே திருமணம் செய்வதாகக் கூறினான். இது பற்றி லாவண்யாவிடம் ஒரு வார்த்தை கேட்டுச் சொல்வதாக விடைபெற்றுச் சென்றனர் பெற்றோர். இரு நாட்களாகியும் லாவன்யாவின் வீட்டிலிருந்து எவ்விதப் பதிலும் வராததால் விவேக்குக்கு பெரும் கவலையாக இருந்தது. நேரடியாக சென்று லாவண்யாவிடம் தனக்கேற்பட்ட நிலையை விளக்குவதற்காகச் சென்றான்.
அவளோ விவேக் கூடப் பேசத் தயாராக இல்லை. ஒருவனின் பேச்சை நம்பி தாறுமாறாக எழுதியவன் நாளைக்கு திருமணம் முடித்து என்ன செய்யக் காத்திருப்பானோ? இப்படிப்பட்டவனுடன் வாழ்வதை விட வாழா வெட்டியாக இருப்பதே மேல். வேண்டியபோது விரும்பவும் வேண்டாதபோது விட்டு விடவும் பெண்கள் என்ன கிள்ளுக்கீரைகளா? குட்டக் குட்டக் குனிந்த காலம் மலையேறிவிட்டது. இப்படிப் பட்டவன் எனக்குத்தேவையில்லை ஒரேடியாகக் கூறிமுடித்தாள் லாவண்யா. நேற்று வரை ஒரு வார்த்தை கூடப் பேசாதவளுக்கு இன்று இவ்வளவு துணிச்சல் எங்கிருந்து வந்தது? தீர விசாரிக்காமல் நண்பனின் நயவஞ்சகத்தை புரியாமல் நானும் தவறு செய்து விட்டேன். இனியும் இங்கிருந்தால் எனக்கே அவமானம் வந்த நோக்கத்தை நிறைவேற்றாமல் அவ்விடத்தை விட்டகன்றான் விவேக்.
"விவேக்கை திருமணம் முடிக்க மறுத்த நான், பிரதீப்பை மணமுடிப்பேன் எனக் கனவு காண வேண்டாம். தன் சுயநலத்துக்காக இன்னொருவர் வாழ்க்கையைக் குழப்பி தான் இன்பமாக வாழ நினைக்கும் பிரதீப் போன்ற நயவஞ்சகக் குணமுடையவர்களுடன் வாழ்வதை விட் வாழ்நாள் பூராகவும் கன்னியாகவே வாழ்ந்திடலாம். இருவரும் வேண்டாம்.”
32

பிரியமான சினேகிதி
"எனக்குப் பல்கலைக்கழக அனுமதி கிடைத்தால் . நான் தொடர்ந்து படிப்பேன். கல்யாணப் பேச்சை கூறி என் படிப்பை குழப்பாதீர்கள்" லாவண்யாவின் பேச்சில் நியாயம் இருந்தது அவள் பெற்றோர் கட்டுப்பட்டனர். அவள் எதிர்பார்த்துக் காத் திருந்த பெறுபேறுகள் வெளியாகின. லாவண்யா பல்கலைக்கழகம் செல்வதற்குத்தயாரானாள். அவள் அங்கு சென்று ஒரிரு மாதங்களில் அவளை எல்லோருக்கும் பிடித்துவிட்டது. அனைவரோடும் அன்பாகப் பழகினாள்.
விடுமுறையைக் கழிப்பதற்காக வீடு வந்தவளுக்கு, வேதாளம் முருங்கை மரத்தில் ஏறியதுபோல் மீண்டும் திருமணப் பேச்சசு ஆரம்பமானது. பட்டம் பெற்ற பின்னரே இல்லற வாழ்வில் இண்ைவதாகச் சூளுைைரத்தவளுக்கு இத் திருமணப்பேச்சு வெறுப்பையே ஏற்படுத்தியது. எவ்வளவோ மறுத்தும் அவளால் முடியவில்லை. சம்மதித்தாள்.
யாருமே எதிர்பாராத விதமாகக் கோலாகலமாக திருமணம் நடைபெற்றுமுடிந்தது.ஆனால் லாவண்யாவின் முகத்தில் மட்டும் ஏதோ சோகம் குடிகொண்டிருந்தது. அது வெகு நேரம் நீடிக்கவில்லை அதற்குக் காரணம் ஏற்கனவே பல்கலைக்கழத்தில் அவளுடன் படித்த மாதவனே மாப்பிள்ளையாக காட்சிதந்தான். அவளால் நம்ப முடியாமலிருந்தாலும் நம்பித்தான் ஆகவேண்டியிருந்தது.
இதழோரம் லேசாகப்புன்னகைத்துக் கொண்டாள். "ஹாய் லாவண்யா என்ன ஆச்சரியமாக இருக்குதா? எனது தந்தை வெளிநாடு செல்லவிருப்பதால் எனக்குத் திருமணம் செய்து வைத்துப் பார்க்க வேண்டுமென ஒரே பிடியாக இருந்தார். நானும் எவ்வளவோ சொல்லிப் பார்த்தேன். எனது தந்தை விடுவதாக இல்லை. உன்னை என் பெற்றோரிடம் அறிமுகம் செய்தேன். சம்பிரதாயப்படி உன்னைப் பெண் கேட்க, உன் வீட்டாலும் சம்மதம் கிடைத்தது. இப்போ நாம் கணவன்-மனைவி.’ மெதுவாக அவள் காதுகளில் கிசுகிசுத்தான் மாதவன். இருவரது உள்ளங்களும் இன்பலோகத்தில் சஞ்சரித்துக் கொண்டிருந்தன.
புதுமணத் தம்பதிகளிருவரும் தம் உயர் கல்வியைத் தொடர்வதற்காகப் பல்கலைக்கழகம் நோக்கிப் பயணமாயினர். அவர்கள் செல்வதை விவேக் வீதியில் நிறுை பார்த்துக்கொண்டிருந்தான், அசடு வழிய, மனசுக்கு ஏற்ற மாப்பிள்ளை கிடைத்த திருப்தியில் மாதவனுடன் தன் இலட்சிய இலக்கை எதிர்பார்த்து அடியெடுத்து வைத்தாள் லாவண்யா!.
33

Page 23
ஜெனிரா தெளUக் கைருல் அமான்
துளிர் விடும் உறவுகள்
ஆலமரத்தின் கீழ் வெண் மணல் பரந்து கிடக்க, சில்லென்ற காற்று மேனியைத் தொட்டுத் தாலாட்ட கடலும் வானும் ஒன்றையொன்று அரவணைக்க, இயற்கை அன்னை ஈன்றெடுத்த அலைக் குழந்தை பூமா தேவியின் மீது தத்தித் தத்தி அடியெடுத்து வைக்கும் கண் கொள்ளாக் காட்சியை இரசித்த காலம் போய், எல்லாவற்றையும் வெறுத்து, மனம் நொந்து கடலரக்கனின் கொடூர ஆட்சியை ஒரு கணம் எண்ணிப் பார்த்து கண்ணிர் வடித்தான் ஆகாசஷ்,
இரு வாரத்திற்கு முன்பே வெளிநாட்டுப் பயணத்தை முடித்துக் கொண்டு தன் ஆசை மனைவியையும், அன்புக் குழந்தைகளையும் பார்ப்பதற்காக ஐந்து வருடங்களின் பின் பிறந்த நாட்டுக்கு வந்தான். தந்தையின் வருகையை ஆவலோடு எதிர் பார்த்திருந்த குழந்தைகளும், கணவனை வழிமேல் விழி வைத்துக் காத்திருந்த மனைவிக்கும் தலைகால் புரியாத சந்தோசஷம் கரை புரண்டோடியது. குட்டி போட்ட பூனை போல தந்தையைச் சுற்றிச் சுற்றி வலம் வந்து கொண்டிருந்தனர், குழந்தைகள்.
"நான் ஆசையோடு வாங்கி வந்த பொருட்களை அணிந்து அழகு காட்டி மகிழ்ந்தார்கள். அவர்களின் மகிழ்ச்சியில் எனதுள்ளமும் பூரித்துப் போனது. இது எம்மைப் படைத்த இறைவனுக்குப் பிடிக்கவில்லை போலும் பேரிரைச்சல் காதைச் செவிடுபடுத்த எம்மையறியாமலேயே எம் கால்கள் ஒட்டமெடுத்தன. நான் எனது சின்ன மகளைத் தூக்கிக் கொண்டேன். மனைவி மூத்த மகளைக் கையில் பிடித்துக் கொண்டு என் பின்னால் ஓடி வந்து கொண்டிருந்தாள். யாரை யார் பார்ப்பது என்ற பரிதாப நிலை. எம்மோடு போட்டி போட்டுக் கொண்டு வந்த கடல் சர்ப்பம் என் மனைவியையும், மகளையும் என்னிடமிருந்து பிரித்து விட்டது.
34

பிரியமான சினேகிதி
நானோ. பனை மரத்தின் உச்சியில் எனது குழந்தையுடன் நின்றிருந்தேன். எனக்கோ மரம் ஏறத் தெரியாது. மகளையும், மனைவியையும் என் கண்கள் சுற்றும் முற்றும் தேடின. எங்கும் ஒரே கடல் மயம், மனிதர்களும், விலங்குகளும் கடல் நீரினால் அடித்துச் செல்லப்பட்ட வண்ணமிருந்தன. அதில் எனது மகளும் உயிருக்காகப் போராடிக் கொண்டிருந்தாள். அவள் அணிந்திருந்த சிவப்பு நிற ஆடையை வைத்தே அது எனது மகள் என்ற முடிவுக்கு வந்தேன். மரத்திலிருந்து என்னால் இறங்கவும்
(Ught4-Udfil gibl.
அவளைக் காப்பாற்றவும் முடியாத துர்ப்பாக்கிய நிலைக்கு ஆளானேன். மகளைக் காப்பாற்ற வேண்டும் எனும் நப்பாசையில் பக்கத்திலுள்ள மரத்தைப் பிடி. பிடி. எனக் கத்தினேன். எனது கூச்சல் அவள் காதுகளுக்கு எங்கே விழப் போகிறது? நீருடன் சேர்ந்து அவளது உயிரற்ற உடல் மிதந்து சென்றது. உலகமே கறுப்பு நிறமாக காட்சி தந்தது. எனது கையில் ஒரு குழந்தை. அதையும் விட்டு விடக் கூடாது. என்னையறியாமலேயே இறுக அணைத்துக் கொள்கிறேன். எல்லாமே கனவுலகில் நடந்தது போல. நிலைமை வழமைக்குத் திரும்புகிறது. நானும், குழந்தையும் பனை மரத்திலிருந்து இறக்கப்பட்டோம்.
என் மனைவியையும், மகளையும் காணாமல் திக்பிரமை பிடித்தவன் போல அவர்களின் பெயரைக் கூவிக்கூவி அழைத்தேன். எல்லோரும் என் பரிதாப நிலையைப் பார்த்துக் கண்ணி வடித்தனர். அப்போது எனது உறவினர் ஒருவர் என் மனைவியின் உயிரற்ற உடலைச் சுமந்து வந்து என்னிடம் காட்டினார். என்னால் நம்ப முடியவில்லை. காரணம் வெண்ணிற மேனி கரு நிறமாக மாறியிருந்தது. ஆற்று நீரின் அகோரப் பசி அவள் மேனி எங்கும் வரைபடம் வரைந்திருந்தது. கூளம், குப்பைகள் அவள் தலை முடியை அலங்காரம் செய்திருந்தன. அவளோ யாருடைய புலம்பல்களையும் செவி மடுக்காது அமைதியாக உறங்கிக் கொண்டிருந்தாள். என்னைப் போல எத்தனையோ குடும்பங்கள் தங்களது உடன் பிறப்புக்களை இழந்து தவித்துக் கொண்டிருந்தனர். அவர்களுக்கெல்லாம் தொண்டு நிறுவனங்கள் போட்டா போட்டி போட்ட வண்ணம் தங்களது உதவிகளை வழங்கின. எத்தனை கோடிச் செல்வங்களை வாரி வழங்கினாலும் அவை மனைவி மக்களுக்கு ஈடாகுமா? குடும்ப அங்கத்தவர்களை இழந்தவர்கள் சோகத்தில் ஆழ்ந்திருக்க, எவ்வித பாதிப்புக்களும் ஏற்படாதவர்கள் சொகுசாக வாழத் தொடங்கினர். யார் எப்படி வாழ்ந்தாலும் எனக்கென்ன? இப்போது எனது மகளுக்கு ஒரு தாய் வேண்டும்.
பகலில் எப்படியோ பொழுதைக் கழித்தாலும், இரவில் தாயைக் கேட்டு அடம் பிடிப்பாள். எவ்வளவு சமாதானம் கூறினாலும், பிடிவாதம் பிடித்தழுவாள். இல்லாத
35

Page 24
ஜெனிரா தெளUக் கைருல் அமான்
தாய்க்கு எங்கே போவேன்? அவள் கூடச் சேர்ந்து நானும் கண்ணிர் வடிப்பேன். எம் மனோநிலையை மாற்ற மன நிம்மதிக்காக மஸ்கெலியவுக்குச் சென்றேன். அங்கே. என் நண்பனின் உதவியுடன் புதியதோர் வேலையும் கிடைத்தது. மகளையும் அழைத்துக் கொண்டு வேலைக்குச் செல்வேன். அவள் என் பின்னாலேயே சுற்றிச் சுற்றி வருவாள். என்னை எல்லோரும் பரிதாபமாகப் பார்ப்பது பேசுவது எல்லாம்
எனக்கு சங்கடமாகவே இருந்தது.
சில நேரங்களில் பகலில் நித்திரைக்காக அழுவாள். என்னைத் தவிர வேறு யாரிடத்திலும் பழகவும் மாட்டாள். நானே அருகிலிருக்க வேண்டும். எனவே அரை நாள் லீவில் பல முறை சென்றிருக்கிறேன். ஒரு நாள் தோளில் அயர்ந்து தூங்கி விட்டாள். கட்டிலில் அவளைத் துங்க வைத்து விட்டு, அறையைப் பூ ட்டி விட்டு வேலைக்குச் சென்று விட்டேன். இடையில் விழித்துப் பார்த்தவள். திடுக்கிட்டு அழத் தொடங்கினாள். அவளது அழும் சத்தத்தில் அடுத்த வீட்டு நிருபா எட்டிப் பார்த்திருக்கிறாள். ஒரு குழந்தை யன்னலில் நின்று அழுததைக் கண்டு உதவிக்கு வந்திருக்கிறாள். நிருபாவின் அன்பான பேச்சினால் குழந்தையின் அழுகை மெதுமெதுவாகக் குறைந்திருக்கிறது.
என் மகளின் ஞாபகம் நினைவுக்கு வரவே. நான் தங்கியிருக்கும் வீட்டுக்கு ஓடோடி வந்தேன். அங்கே குழந்தையுடன் ஒரு பெண் பேசிக் கொண்டிருப்பதைக் கண்டு ஆச்சரியமடைந்தேன். நடந்ததை நிருபா கூறினாள். தான் பக்கத்தில் குடியிருப்பதாகவும். இவளை ஒத்த வயதுடைய மகள் தனக்கிருப்பதாகவும் கூறினாள். அன்றிலிருந்து நிருபாவின் மகளுடன் விளையாடுவதற்காக நான் என் மகளை அனுப்பினேன். இருவரும் நண்பிகளானார்கள்.
ஒரு நாள் ஆகாசவின் மகள் “அப்பா. இனி உங்க கூட நான் வேலைக்கு வர மாட்டேன். நான் நிருபா ஆன்டி வீட்டில் விளையாடுறன். நீங்க போங்க” என்றாள். இப்போது ஆகாசவிற்கு நிம்மதி ஏற்பட்டது. நாள் செல்லச் செல்ல நிருபாவின் வீட்டில் தங்குவதற்கும் ஆயத்தமானாள். ஆகாசஷ் எவ்வளவு கெஞ்சி அழைத்தாலும் மகள் லதா வர மறுத்து விடுவாள். நிருபா வீடே தஞ்சமெனக் கிடந்தாள். லதாவின் பிஞ்சு உள்ளத்தில் ஏற்பட்ட மாற்றத்தைக் கண்டு ஆகாக்ஷ மகிழ்ந்து போனான்.
லதாவை பாடசாலைக்குச் சேர்ப்பதற்கு ஆகாகூழ் ஆயத்தமானான். நிருபாவும் தன் மகளைச் சேர்ப்பதற்காகச் சென்றாள். இருவரும் ஒரே வகுப்பில் சேர்த்தனர். நிருபா தன் மகளைப் பாடசாலைக்கு அழைத்துச் செல்லும் போது லதாவையும் சேர்த்துக்
36

பிரியமான சினேகிதி
கொள்வாள். இதனால் ஆகாசவிற்குப் பாடசாலைக்கு அலைய வேண்டிய அவசியமிருக்கவில்லை. லாதாவின் வேலைகளை எல்லாம் நிருபா செய்வதால், ஆகாசவிற்கு சற்று ஆறுதலாக இருந்தது. எவ்வளவு கஷ்டப்பட்டு ஒரு குழந்தையை ஆண் வளர்த்தாலும், ஒரு பெண்ணிடம் வளர்வது போல அமையாது என்பதை ஆகாசுஷ் புரிந்து கொண்டான்.
அப்பா "நீங்க மட்டும் தனிமையில் இருக்காம. எங்களோட நிருபா ஆன்டி வீட்டுக்கு வாங்களேன்’ என்றாள் லதா. அவளது கதையைக் கேட்டு ஆகாக்ஷம், நிருபாவும் சிரித்துக் கொண்டனர். “இவ்வீட்டில் நீங்களும், மகளும் மட்டும் தானா?” ஆகாசவின் வார்த்தையைக் கேட்டதும். நிருபாவின் முகம் மழை வருவதற்கு முன் மேகம் கறுப்பது போல கறுக்க ஆரம்பித்தது. “தவறாகக் கேட்டிருந்தால் என்னை மன்னித்து விடுங்கள். நான் வந்ததிலிருந்து பார்க்கிறேன். நீங்களும், மகளும் மட்டுமே வாழ்கிறீர்கள். அதனால் தான் அப்படி ஒரு கேள்வியைக் கேட்டேன். மன்னித்து விடுங்கள்’ என்றான். “சேச்சே. அப்படி ஒன்னுமில்ல' என்றாள்.
நிருபா தன் சோகக் கதையைக் கூறத் தொடங்கினாள். நான் சிறுமியாக இருக்கும் போதே எனது மாமாவின் மகன் பரத்தைப் பேசி நிச்சயித்து விட்டார்கள். அவர் குவைத்திலுள்ள கம்பனி ஒன்றில் இலிகிதராக கடமையாற்றினார். நானும் மக்கள் வங்கியில் இலிகிதராக கடமையாற்றினேன். பெண்கள் தொழில் பார்ப்பது தனக்கு விருப்பமில்லை என்பதால், என்னை அவ்வேலையை விட்டு விலகுமாறு கூறியிருந்தார். எனக்கோ வேலையை விடுவதற்கு இகூழ்டமில்லை. பெற்றோர். குடும்பத்தார் வற்புறுத்தலால் வேலையிலிருந்து விலக வேண்டிய அவசியம் ஏற்பட்டது. திருமணம் முடிந்து ஆறு மாதத்தில் என்னையும் குவைத்துக்கு எடுத்தார். அங்கே சென்ற போதுதான் தெரிந்தது. அவருக்கு ஏற்கனவே திருமணமாகி மூன்று குழந்தைகளும் இருப்பது. முழுப் பூசணிக்காயைச் சோற்றில் மறைத்து விட்டார்.
என்னைக் கண்டதும் அவரின் மூத்த மனைவி எரிந்து விழுந்தாள். எனக்கோ.
ஏமாற்றித் திருமணம் முடித்தது எரிச்சலைத் தந்தது. அவரை விவாகரத்து செய்து
விட்டு நாடு திரும்புவதே சிறந்ததாகப் பட்டது. உடனே ஊர் வந்து சேர்ந்தேன். வேறு
திருமணம் செய்வதற்கு எனது பெற்றோர் எவ்வளவோ மன்றாடிப் பார்த்தனர். எனக்கோ
ஆண்கள் மீது நம்பிக்கை இல்லை. எனது குழந்தையுடன் என் வாழ்க்கை சந்தோஷமாகக் கழிகிறது’ என்றாள் நிருபா.
“ஒரு பானைச் சோற்றுக்கு ஒரு சோறு பதம்’ என்பது போல, எல்லா
37

Page 25
ஜெனரீரா தெளUக் கைருல் அமான்
ஆண்களையும் ஒரே விதமாக நினைக்கக் கூடாது. என்றவன் “சுனாமியால் மனைவியையும், மகளையும் இழந்த நான். மன நிம்மதியை நாடியே இவ்வூருக்கு வந்தேன். அவளின் இடத்தில் இன்னொருவரைநினைத்துக் கூடப் பார்க்க முடியாது” எனக் கூறி விடை பெற்றான். அன்றிலிருந்து மகள் லதாவை, பாடசாலைக்கு ஆகாசேஷ அழைத்துச் சென்றான். நிருபாவின் வீட்டுக்குச் செல்வதையும் நிறுத்திக்கொண்டான். ஆண் துணையின்றி வாழும் நிருபாவின் வீட்டுக்கு அடிக்கடி ஆகாசுஷ் செல்கிறான் என்று யாரும் எண்ணி விடக் கூடாது என நினைத்தான். லதாவைக் காணாது நிருபாவும். அவளது மகளும் சொல்லொணாத் துயரம் அடைந்தனர். லதாவைத் தேடி நிருபா ஆகாக்ஷ வீட்டுக்குச் சென்றாள். நிருபாவைக் கண்டதும் லதா ஆனந்தத்தில் துள்ளிக் குதித்தாள். அவள் கன்னத்தில் முத்தமிட்டாள். அவர்களிடையே ஏற்பட்ட நெருக்கத்தைப் பார்த்து ஆகாசஷ் மெய்சிலிர்த்து நின்றான்.
“ஆகாசஷ் எம்மால் லதாவைப் பிரிந்து வாழ முடியாது. உங்களுக்கு ஆட்சேபனை இல்லையென்றால். உங்க வீட்டு வேலைக்காரியாக இருந்து விட்டுப் போகிறேன்” என்றாள். “அதெல்லாம் சரிவராது நிருபா ஏதோ ஒரு வகையில் நாமிருவரும் துணையிழந்து தவிக்கிறோம். எனவே நாம் ஒன்றிணைந்தால். எனது மகளுக்கு நல்ல தாயாகவும், எனக்கு மனைவியாகவும் இருப்பாய். உனது மகளுக்கு நான் நல்ல அப்பாவாகவும். உனக்குப் பிடித்தமான கணவனாகவும் வாழ்வேன்’ என்றான். நல்லதொரு எதிர் காலத்தை எதிர் பார்த்து அனைவரும் கூட்டுக் குடும்பமாக வாழ ஆயத்தமாகினர். அவர்களது உறவுகள் புதியதொரு வாழ்க்கைப் பயணத்தை நோக்கித் துளிர் விட ஆயத்தமாகின.
38
 

ஜெனிரா தெளUக் கைருல் அமான்
பிரியமான சிநேகிதி
தபாற்காரனின் சைக்கிள் மணியோசை கேட்டு பஸ்மியா முற்றத்திற்கு வந்தாள். தபாற்காரன் ஒரு பொதியைச் பஸ்மியாவிடம் நீட்டினான். அது ஹெம்மாதகம நஜியாவிடமிருந்து வந்ததாக அறிந்தாள். அதனைப் பிரித்துப் பார்த்தவளின் கண்கள் ஆச்சரியத்தால் அகல விரிந்தன. அவற்றுள் துணிகள். இனிப்புக்கள் வகைவகையான சிலைட்கள், காப்புகள், தோடுகள், சீப்பு. பென்சில்கள். பேனாக்கள். அல்பம், கலண்டர் இன்னும் பல அடுக்கிக் கொண்டே செல்லலாம். பக்கத்தில் நின்ற அவளது சகோதர சகோதரிகளுக்கு அளவு கடந்த சந்தோக்ஷம். −
“இது ஆணாகத்தான் இருக்க வேண்டும்” என்றான் அமீர். “இல்லையேல் இவ்வளவையும் அனுப்பி வைக்க முடியுமா?’ என்றான் இமாம். ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாகப் பேச, பஸ்மியாவின் உள்ளத்திலும் இது ஒரு ஆணாக இருக்குமோ? எனும் கேள்விக் கணை எழுந்தது. உடனே அனுப்பி வைத்த பொருட்களுக்கு நன்றி மடல் வரைந்து விட்டு. அதில் ஒரு வரி. ‘அடி நீ உண்மையில் ஆணா.? பெண்ணா.? என்பதைத் தெரிவிக்கவும்” என எழுதினாள். ஒரு வாரத்திற்குள் நஜியாவிடமிருந்து மடல் வந்திருந்தது. அதில் நான் “ஆணாக இருந்தால். உன்னையே திருமணம் செய்வேன்’ எனக் குறிப்பிட்டிருந்தாள்.
இதை வாசித்ததும், அவள் சகோதரி நிஹாரா கூறினாள். “ இது ஆண்
தான் என்ன செய்யப் போகிறாய்?’ என்றாள். “அவள் பெண் தான். நான் எப்படியும்
என் நட்பை நிறுத்தப் போவதில்லை’ எனக் கூறித் தொடர்ந்தாள் பஸ்மியா.
39

Page 26
பிரியமான சினேகிதி
நஜியாவிடமிருந்து அடிக்கடி ஞாபகமாக ஏதாவது வந்து கொண்டிருக்கும். பஸ்மியாவும் அனுப்புவாள். இருவரது நட்பும் வளர்ந்து சென்றது.
ஒரு நாள் பஸ்மியாவுக்கு “ஹோம் சயன்ஸ் பிரக்டிக்க்"லுக்குக கொழும்புக்கு அழைப்பு வந்தது. அவள் தந்தையும், தங்கை நிகாராவும் சென்றனர். “பிரக்டிக்கல்” முடிந்ததும் நஜியாவின் வீட்டுக்கு வருவதாக ஏற்கனவே கடிதமனுப்பினாள். அதுபோலவே மூவரும் சென்றனர். ஹெம்மாதகம செல்லும் வேனில் ஏறிக் கொண்டனர். மக்களை ஏற்றிக் கொண்டு மின்னல் வேகத்தில் வேன் பறந்தது. பஸ்மியாவின் தந்தையின் பக்கத்தில் அமர்ந்தவர், “நீங்கள் எங்கே செல்கின்றீர்கள்?’ என வினவினார். “ஹெம்மாதகம ரசலித் மௌலவி வீட்டுக்குச் செல்கிறோம்” என்றார்கள். “ஆ. அவர் எங்கள் சொந்தக்காரர்
தான். அவரை எப்படி உங்களுக்குத் தெரியும்?” என்று கேட்டார் ஊளர்க்காரர்.
பஸ்மியாவின் தந்தை"எனது மகள் தினகரன் சிறுவர் உலகத்தில் கட்டுரை எழுதினாள். அதைப் பாராட்டி ஏராளமான மடல்கள் வந்து குவிந்தன. அதில் அவள் மனதில் இடம் பிடித்தவள்தான் “ஹெம்மாதகம நஜியா’ என்றார். ‘அப்படியா?’ சிரித்துக் கொண்டார் அவர். பின் பஸ்மியாவைப் பார்த்து, “உங்களுக்கு நஜியாவைத் தெரியுமா? அப்ப, இப்ப தான் முதல் சந்திப்பு என்கிறீர்கள்! இதுவரை நேரில் காணவே இல்லையா?” என்று அடுக்கிக் கொண்டே போனார். பஸ்மியாவின் பக்கத்தலிருந்த அவரின் தங்கை நிஹாரா "இவர் கேள்வியில் ஏதோ மர்மமுள்ளது. அது ஆணாக இருந்தால் என்ன செய்வது?’ ’பார்த்துவிட்டு வருவதுதான்’ என்றாள் பஸ்மியா. வேன் மடுள்போலையை நெருங்கியது. “இதில் இறங்கிப் போங்கள். அதுதான் ரக்ஷத் மௌலவியின் வீடு” என்றார், அருகிலிருந்தவர்.
மூவரும் இறங்கி நஜியாவின் வீட்டை அடைந்தனர். நஜியாவின் பெற்றோர், சகோதரர்கள் அவர்களை இன்முகத்துடன் வரவேற்றனர். “நஜியா எங்கே.?’ பஸ்மியா விசாரித்தாள். வெகு நேரமாகியும் அவள் வரவில்லை. நிகாரா பஸ்மியாவைச் சுரண்டினாள். “சும்மா இரு உனக்கு ஏன் இவ்வளவு சந்தேகம்.?” மெதுவாக முணுமுணுத்தாள் பஸ்மியா. “இன்னுமேன் நஜியாவைக் காணவில்லை?’ நிகாரா கேட்டாள். “நாம் வந்ததும் வந்து விட்டோம். ஆணோ, பெண்ணோ பார்த்து விட்டே போவோம். அதற்குள் இன்னுமேன் அவசரம்?’ கூறிக் கொண்டிருக்கும் போதே “ஹாய். என்ன உங்கள காக்க வச்சிட்டேனோ..?’ நஜியாவே வந்தாள். அவளைக் கண்டதும் நிகாரா குலுங்கிக்
குலுங்கிச் சிரித்தாள். “ஏன் நிகாரா இன்ப அதிர்ச்சியோ’ என்றாள் நஜியா
40

ஜெனிரா தெளUக் கைருல் அமான்
"இவளுக்கு உன் மீது கொஞ்சம் கூட நம்பிக்கை இல்லை. நீ ஆணாகத்தான் இருப்பாய் என ஒரே முடிவுக்கு வந்துவிட்டாள்” என்றாள். “நானும் அதற்காகவே லேட்டாக வந்தேன். உங்களுக்குள் எவ்வளவு பெரிய கற்பனைகள் பார்த்தாயா. இப்ப திருப்தி தானே.?’ கூறி விட்டுச் சிரித்தாள் நஜியா, சுற்றம் சூழ, அக்கம் பக்கம் சொந்தங்கள் எனப் பலரின் வீட்டிற்கும் அழைத்துச் சென்றாள். நஜியா, “உண்ட பிரண்ட்
பஸ்மியாவா..?’ எனப் பலரும் கேட்டனர்
“ஏற்கனவே என்னைத் தெரிந்தது போலவே விசாரிக்கிறார்களே எப்படி?’ என்று பஸ்மியா ஆச்சரியப்பட்டாள் "நாம் நேரில் சந்திக்காவிட்டாலும், எல்லோருக்கும் உன்னை அறிமுகம் செய்து வைத்துள்ளேன். சொல்லப் போனால். எனதுாரிலுள்ள அரைவாசிப் பேருக்கு உன்னைத் தெரியுமென்றே சொல்ல வேண்டும். நீ அனுப்பும் கடிதங்களை எனது வகுப்பு மாணவர்கள். ஆசிரியர்கள் வரை காட்டுவேன். ஆதலால் எல்லோருக்கும்
உன்னைத் தெரியும்’ கூறிவிட்டு சிரித்தாள் நஜியா,
புவியை ஆட்சி செய்த சூரிய அரசனின் ஆட்சி மெல்ல மெல்ல மறைந்து, இரவு தேவனின் ஆட்சி புவி மீது பரவத் தொடங்கியது. குளிர்ந்த காற்று மேனியைத் தாலாட்ட வந்த களைப்பு ஒரு புறம். நித்திரா தேவியைச் சந்திக்க ஆயத்தமாகினர். நஜியாவின் சகோதரிகளோ விடுவதாக இல்லை. “உங்களுர்ப் பிரச்சினைகள் பற்றிச் சொல்லுங்களேன்.” தூக்கத்தோடு கூறிக் கொண்டிருந்தாள் பஸ்மியா. “உங்களைக் கண்டதும் எங்களுக்கு பெருநாள் மாதிரித்தான் சந்தோசமாக உள்ளது” என நஜியாவின் சகோதரி கூறினாள். “பெருநாள் என்டாலும் வருசத்துக்கொரு முறை வரும். இனி இவங்கள எங்கே காண்பது.?’ மன வேதனையுடன் கூறினாள் நஜியாவின் மூத்த தாத்தா. “ஆதலால் உங்களத் தூங்கவிட மாட்டோம். விடிய விடியப் பேசுங்க.” “நாங்க வந்திட்டோம். நீங்களும் வரப்பாருங்க” என்றாள் பஸ்மியா. “உம்மண்டோ. உங்க
ஊர்ப் பெயரைச் சொன்னாலே எங்க உடம்பெல்லாம் நடுங்குது’ - மூத்த ராத்தா
“நீங்க நினைப்பது போலில்லை. வந்தால் தான் தெரியும்’ நிகாரா சொன்னாள்.
விடிந்ததும் வீட்டிற்குச் செல்வதற்கு ஆயத்தமாகினர். ஒரு நாள் சந்திப்பில்
பல விடயங்களைப் பகிர்ந்து கொண்டனர். பிரிவதற்கு மனமின்றிச் சோகத்துடன்
விடை பெற்றனர். வீட்டுக்குச் சென்றதும் பஸ்மியா மடல் வரைந்தாள். இருவரது 41

Page 27
பிரியமான சினேகிதி
நட்பும் முல்லைக் கொடி போல படர்ந்து சென்றது. பஸ்மியா அழுத்கம ஆசிரியர் பயிற்சிக் கலாசாலைக்குச் சென்றாள். அங்கே ஹெம்மாதகம ஆசிரியைகளும் வந்திருந்தனர். அவர்கள் இரண்டாம் வருட ஆசிரியைகள். நஜியாவின் பிரண்ட் எங்கே? எனத் தேடி வந்தனர். அவர்களனைவரும் பஸ்மியாவுடன் மிக அன்போடு பழகினர்.
இப்போதெல்லாம் பஸ்மியாவின் நண்பிகள் கலாசாலைக்கே கடிதங்களை அனுப்பினர். அதில் நஜியாவின் திருமண அழைப்பிதழும் கிடைத்தது. “எப்படியாவது எனது திருமணத்திற்கு நீ வர வேண்டும். வேறு எந்த நொண்டிச் சாட்டும் சொல்லக் கூடாது. எனதுர் ஆசிரியைகள் அங்குள்ளனர். அவர்களுடன் சேர்ந்து வா. இல்லையேல் எமது நட்பில் எவ்வித அர்த்தமுமில்லாமல் போய்விடும்.” என்று நஜியா எழுதியிருந்தாள். பஸ்மியாவுக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை. பஸ்மியாவின் பெற்றோர் நஜியாவின் வீட்டுக்குச் செல்வதற்கு அனுமதி வழங்கினர். ஹுஸைமா டீச்சரும் தங்களுடன் பஸ்மியாவை ஹெம்மாதகமைக்கு அழைத்துச் சென்றாள். இரு நாட்களின் பின்பே கொலேஜுக்கு வர வேண்டும் என்றனர். நஜியாவின் திருமணம் முடிந்து மறுநாளே
கலாசாக்ைகுத் திரும்புவதாக பஸ்மியா கூறினாள். ஆனால் அவ்வாறு நடக்கவில்லை.
மணவறையை அலங்கரித்தவாறு புதுப் பொலிவுடன் மணமகள் வீற்றிருந்தாள். பஸ்மியாவும். ஹுஸைமா டீச்சரும் போய்ச் சேர்ந்தனர். புதுப் பெண்ணுக்குரிய நாணத்துடன் நஜியா தலை குனிந்திருந்தாள். மெதுவாக நிமிர்ந்தவள் பஸ்மியாவைக் கண்டதும், அவளையறியாமலே ஒடி வந்து வாரியணைத்து ஆனந்தக் கண்ணிர் வடித்தாள். திருமணத்திற்கு வந்தவர்களின் கண்கள் இருவரையும் மொய்த்துக் கொண்டன. "நமது நட்பின் ஆழத்தை நீ நிரூபித்து விட்டாய்” என்றவாறு மீண்டும் அழுதாள் நஜியா. வெடிச் சத்தம் காதைப் பிளக்க, மாப்பிள்ளை வீட்டார் காரிலும், வேனிலும் இறங்கிக் கொண்டிருந்தனர். பஸ்மியாவும். ஹுஸைமா டீச்சரும் நஜியாவை
மணவறையில் அமர வைத்தனர்.
சற்று நேரத்தில் எல்லோருக்கும் சாப்பாடு பரிமாறப்பட்டது. மாப்பிள்ளைக்கும் பெண்ணுக்குமாக சாப்பாடு தனிமையில் ஒழுங்கு படுத்தப்பட்டது. பஸ்மியாவும் ஹுஸைமா டீச்சரும் உட்கார்ந்து கொண்டனர். அவ்விடத்திற்கு நஜியாவும் வந்தாள். “என்னடி மாப்பிள்ளையை விட்டுவிட்டு இங்கே.”
42

ஜெனிரா தெளUக் கைருல் அமான்
“இனி அவருடன் சேர்ந்து வாழ்வதால், எப்போதும் அவர் கூடவே இருப்பேன்.
நீ அப்படியில்லையே! உன்னை எப்போது காண்பேனோ..?’ கண் கலங்கியது.
"அவரிடம் எல்லாம் சொல்லி விட்டேன். சரி. சரி. வா..!” என்று கூறிய நஜியா,
பஸ்மியாவுடன் சாப்பிட்டாள். “நீ ரெண்டு நாள் தங்கிவிட்டே போகோனும்’ என்றாள்.
“இல்லைடி நீ ஒன்னும் நினைக்காதே! நான் கொலேஜிலிருந்து வந்துள்ளேன். எப்படியும் நாளைக் காலை போயாகணும்’ என்றாள் “நீ என் மீது உண்மையான அன்பு கொண்டிருந்தால் போகக் கூடாது. நான் மாமி வீடு போனதும், மாலை திரும்பிவிடுவேன். அதுவரை எங்கள் வீட்டிலிரு அல்லது என்னோட குருனாகலுக்கு வா’ என்றாள் நஜியா, ஹஸைமாவும். வாஹிதா டீச்சரும் நஜியாவுக்கு ஆதரவாகவே பேசினர். பஸ்மியாவால் ஒன்றுமே செய்ய முடியவில்லை. ஏனென்றால். அவர்களுடனேயே பஸ்மியா வந்திருந்தாள். இப்போது எப்படித் திரும்பிப்போவது.? எனவே நஜியாவின் அன்புக்குக் கட்டுப்பட்டாள்.
விடிந்ததும் நஜியா மாமி வீட்டுக்குச் செல்வதற்கு ஆயத்தமானாள். குருனாகல் வருமாறு பஸ்மியாவைக் கெஞ்சினாள். அவள் மறுக்கவே அழுதழுது சென்றாள். அங்கே மதியச் சாப்பாடு வைக்கவே, ‘என் பிரண்ட் வீட்டிருக்கிறாள். அவள் கூடச் சேர்ந்து சாப்பிட வேண்டும்” என்றாளாம். “இங்கே கொஞ்சம் போல சாப்பிட்டு விட்டு உங்க சிநேகிதியுடன் போய்ச் சாப்பிடுங்கள்’ எனக் கூற, “என்னால் முடியாது’ எனச் சின்னக் குழந்தை போல அடம்பிடித்திருக்கிறாள். நஜியாவின் கணவரோ, மாமி வீட்டாரோ கோபிக்கவில்லை. மாறாக, “உங்க நட்பு எவ்வளவு தூய்மையானது. இன்று நேற்று ஏற்பட்டதல்லவே. எங்களை இப்போதுதான் தெரியும். ஆனால், நீங்களிருவரும் 1979 ஆம் ஆண்டிலிருந்து-சிறு பராயத்திலிருந்தே நட்பைத் தொடர்கிறீர்கள். உங்கள் நட்பை மதிக்கிறோம்’ என்றனர். இவர்களது வார்த்தைகள் நஜியாவை மேலும் உற்சாகப்படுத்தியன. மாலை மூன்று மணிக்கெல்லாம் ஹெம்மாதகம வந்து சேர்ந்து விட்டாள்.
“இஞ்ச பாருங்க பஸ்மியா, நஜியா ஒன்னுமே சாப்பிடலே, உங்களோட
சாப்பிடனுமாம். எல்லாத்தையும் கட்டிக் கொண்டு வந்திட்டாள்” கூறிவிட்டு நஜியாவின்
கணவர் கேலியாகச் சிரித்தார். "நஜியா! நீ இப்படிச் செய்வாய் எனத் தெரிந்தால் நான்
வந்திருக்கவும் மாட்டேன். மாப்பிளைைள என்ன நினைப்பார்.? அவர் வீட்டிலுள்ளவர்கள்
43

Page 28
பிரியமான சினேகிதி
என்ன நினைப்பார்கள்.?” “கடிந்து கொண்டாள் பஸ்மியா, “நீ நினைப்பக போலில்லை
டிந்து క్రి!
பஸ்மியா. எல்லோருக்கும் நமது நட்பின் நெருக்கத்தைத் தெரியும்’ என்றாள் நஜியா,
பாசத் தோடு கழிந்த இரு நாட்களையும் மறக்க முடியாத நினைவுச்சுமைகளுடன் ஆசிரியர் பயிற்சிக் கலாசாலையை நோக்கிப் பயணமானாள் பஸ்மியா. இருவரது நட்பின் ஆழத்தையும் வாஹிதா டீச்சரும். ஹுஸைமா டீச்சரும் கூறி மகிழ்ந்தனர். அன்றிலிருந்து இன்று வரை இருவரது நட்பும் தொடர்கிறது. உண்மையில் அது ஒரு தொடர்கதைதான்.
44
 

ஜெனிரா தெளUக் கைருல் அமான்
தொடர் கதையாகும் துயரங்கள்
மாலை மங்கிச் செல்ல, இரவு தன் பயணத்தைப் தொடர ஆரம்பித்தது. பறவைகள் தத்தம் இருப்பிடங்களை நாடிப் பறக்கத் தொடங்கின. நாரைகள் தன் கால்களை நீட்டியவாறு அணியணியாக வானில் பறக்கும் கோலம் பார்ப்போர் கண்களை ஈர்த்துக் கொண்டன. பகல் முழுவதும் இரைதேடி உண்டு கழித்த கோழி, சேவல்கள் தங்களுக்கு ஒய்வு தேடி மரங்களை நோக்கிப் பாய்ந்தன. காகங்கள் தங்கள் தொனிகளைக் கூட்டியவாறு பறந்து சென்றன. கிளிகளும் தம் இருப்பிடத்தை நாடி வான வீதியில் சிறகடித்துப் பறந்தன. இத்தனை மாலை நேர நிகழ்வுகளையும் ஒரு படிக்கட்டில் அமர்ந்தவாறு இரசித்துக் கொண்டிருந்தேன்.
மேகக் கூட்டங்கள் போருக்கு நாங்கள் தயார் என்பது போல, மும்முரமாக ஓடிக் கொண்டிருந்தன. மாயஜால வித்தைகள் ஆங்காங்கே தோன்றி மறைந்தன. முற்றத்தில் பூ வும், பிஞ்சுமாகக் காட்சியளித்த மா மரமும், கொய்யா மரமும் காற்றுக்குத் தலையசைத்து நர்த்தனமாடின. இத்தனைக்கும் மத்தியில் புதுமணப் பெண்ணாக நிலா மகள் அலங்காரங்களுடன் நாணிக் கோணிப் புவியினை எட்டிப் பார்க்கிறாள். அவளது பார்வையின் பிரகாசம் பூ மா தேவியிலுள்ள மக்களின் உள்ளத்தில் உவகையூ ட்டிக் கொண்டிருந்தன. எனது ஐந்து வயதுத் தம்பி, என்னிடம் கதை கேட்டுக் கெஞ்சிக் கொண்டிருந்தான். அப்பிஞ்சு உள்ளத்தின் ஆசையை எனது கதை நிறைவு செய்த வண்ணமிருந்தது.
தென்றலின் குளு குளு மேனியைத் தொட்டுத் தாலாட்ட வியர்வை தாங்காது
வீட்டினுள் அடைபட்டுக்கிடந்த சகோதரர்கள் வெளியே வந்து முற்றத்தில் அமர்கிறார்கள்.
மல்லிகைப்பூ வின் வாசனை மூக்கைத் துளைக்க, அதனையும் சுவாசித்தவாறு 45

Page 29
பிரியமான சினேகிதி
குடும்பமே மகிழச்சியில் சுவாரஸ்யமான கதைகளில் ஈடுபட்டனர். யார் கண் திருஷ்டி பட்டதோ? அது அதிக நேரம் நீடிக்கவில்லை.
எங்கிருந்தோ வெடிச் சத்தம் காதைச் செவிடுபடுத்த கால் போன திக்கில் ஒட்டமெடுத்தோம். சேர்ந்து அக்கம் பக்கத்தவர் என மொத்தத்தில் ஊரே திரண்டது. எங்கும் ஒரே அலறல் சத்தம். மின்னிக் கொண்டிருந்த மின்சாரம் ஒரு வினாடியில் தடைப்பட்டது. முன்பெல்லாம் இருளைக் கண்டாலே பயம். இப்போது உயிரைக் கையிலே பிடித்துக் கொண்டு தப்பினோம் பிழைத்தோம் எனப் பயமின்றி ஓடினோம். ஒலிம்பிக் போட்டியில் பங்கு பற்றிய கசந்திகாவை விட எமது கால்கள் அதிக துாரம் ஒடி விட்டன. தண்ணீர்த்தாகம் நாக்கைப் பிடுங்கியது. பசி வயிற்றைக் கிள்ளியது. என்னைப் போலவே எல்லோருக்கும் இதே நிலை. எம்மோடு எனது ஐந்து வயதுத் தம்பியுமல்லவா ஒடிக் கொண்டிருக்கிறான். நினைக்க வேதனையாக இருந்தது.
இனி எம்மால் ஓட முடியாது. கால்கள் ஒடுவதற்கு மறுப்புத் தெரிவித்தன. சரமாரியாகக் குண்டு பொழிந்த வண்ணமிருந்தன. எல்லோரும் நிலத்திலே வீழந்து படுங்கள். ஒரு பெரியவரின் சூரல் ஓங்கி ஒலிக்கின்றது. எல்லோரும் நிலத்திலே விழுந்து படுக்கிறோம். அது அடர்ந்த பற்றைக்காடு. பகலில் கூட அக்காட்டுக்குள் செல்ல மாட்டோம். பூ ச்சிப்பட்டை, பாம்பு கிடக்கும் எனப் பயமுறுத்துவார்கள். அப்படிப்பட்ட காட்டில் அதுவும் நடு நிசியில் விழுந்து படுக்கிறோம். இதுதான் விதி என்பதா.எங்களது துன்பத்தைச் சகிக்க முடியாத நிலாமகள், மேகத்துக்குள் மறைந்து கொள்கிறாள். எங்கும் ஒரே இருள் மயம். இறைவா எம்மைக் காப்பாற்று. குழந்தைகள் வீரிட்டழும் சத்தம். பெரியவர்களின் கூச்சல், ஷெல் தாக்குதல்களின் அதிர்ச்சியில் சில கர்ப்பிணிப் பெண்கள் பிரவச வலியால் துடிதுடிக்கின்றனர். வயோதிபர் சிலரின் உயிர் பிரிகின்றது. நாங்களிருக்கும் இடத்திலும் ஷெல் விழுகின்றது. என் பெற்றோர். சகோதரர்கள் என்னானார்கள்? புரியவில்லை.
எனது தம்பியை இறுகப் பிடித்துக் கொள்கிறேன். அவன் கோழிக்குள் பதுங்கியிருக்கும் குஞ்சு போல, என்னிடம் அணைந்து கொள்கிறான். எங்கிருந்தோ வந்த ஷெல் ஒன்று என் தம்பியின் மேல் விழுந்து, எம்மைப் பிரிக்கிறது. அவன் என்னைத் தாவித் தாவிப் பிடிக்கிறான். நானும் உதவிக்கரம் நீட்டி அபயமளிக்கிறேன். அந்த ஷெல் என்னையும் பதம் பார்க்கிறது. ஒரு கணம் உலகமே மஞ்சள் நிறமாகக் காட்சியளிக்கிறது. எனது தம்பி தண்ணிர். தண்ணி எனக் கேட்பது என் காதுகளுக்குக் கேட்டும். கேட்காமலும் போகிறது. மெல்ல. மெல்ல. என் உயிர் பிரிவது போன்ற பிரமை ஏற்படுகிறது. அதன் பின்னர் என்ன நடந்தது எனத் தெரியவில்லை.
46

ஜெனிரா தெளUக் கைருல் அமான்
மூன்று நாட்களின் பின் கண் விழிக்கிறேன். என்னைச் சூழ பெற்றோர். உறவினர்கள். சகோதரர்கள். நண்பர்கள் எனப் பலரும் அழுது கொண்டிருந்தார்கள். எனதுள்ளம் தம்பியைத் தேடுகிறது. அவன் பக்கத்து அறையில் சிகிச்சை பெறுவதாகக் கூறினார்கள். நானும் அதை நம்பினேன். பூ ரண சுகமடைந்ததும் என்னை வீட்டுக்கனுப்பினார்கள். அப்போது தான் தெரிந்தது எனது தம்பி இவ்வுலகை விட்டுப் பிரிந்து ஒரு வாரமாகி விட்டது என்று. சோகம் நெஞ்சைக் கெளவியது. அவன் என்னோடு சேர்ந்து காடு. மேடாய் அலைந்தது. தண்ணீர் கேட்டழுதது. எல்லாமே என் நெஞ்சில் மறக்க முடியாத வடுக்களாய் மாறின. எனக்கு யாரோடும் பேசப் பிடிக்கவில்லை. நான் வடித்த கண்ணிர் கடலானது. எத்தனை பேர் ஆறுதல் வார்த்தைகளைக் கூறினாலும் என்னுள்ளம் அவற்றை ஏற்க மறுத்தது. எல்லோரையும் காணும் போது தம்பியில்லாதது பெரியதொரு ஏக்கமாகவும் தாக்கமாகவும் இருந்தது.
எனவே, ஒரு முடிவுக்கு வந்தேன். உடன் பிறப்புக்களையும், பிறந்து வளர்ந்த ஊரையும் விட்டு வெளிநாடு செல்வதற்குத் தீர்மானித்தேன். என் பெற்றோர் எவ்வளவு மறுப்புத் தெரிவித்தும், அவற்றைக் காதில் வாங்கிக் கொள்ளாது குவைத்துக்குச் சென்றடைந்தேன். அங்கே இன் முகம் காட்டி வரவேற்றனர். கணவனும், மனைவியும். உத்தியோகம் பார்ப்பவர்கள். அவர்களுக்கு மூன்று பிள்ளைகள். இரண்டு மகன்களும், ஒரு மகளும் உள்ளனர். மூத்தவன் நான்காம் ஆண்டு படிக்கிறான். மகள் இரண்டாம் ஆண்டு படிக்கிறாள். இளைய மகனுக்கு ஒரு வயது இருக்கும்.
பெற்றோர் வேலைக்குச் சென்று விடுவர். பிள்ளைகளிருவரும் பாடசாலைக்குப் போய் விடுவார்கள். நான் கைக்குழந்தையை வைத்துக் கொண்டு சமைக்க வேண்டும். வேலை முடிந்து வந்ததும், தாங்கள் வயிறாரச் சாப்பிட்டு முடிந்த பின்பே எனக்குச் சாப்பாடு தருவார்கள். அவர்கள் சாப்பிட்டு முடிய வெகு நேரமாகும். அதுவரை நான் பொறுமையோடு காத்திருப்பேன். சாப்பிட்டு முடித்த எச்சில்களைத் துப்பரவு செய்வதில் போதும் போதுமென்றாகி விடும். கொஞ்சங்கூட கருணையில்லாதவர்கள். கூலிக்கு மாரடிக்க வந்தவள் தானே! அடிமையாகப் பயன்படுத்தினால் சரி என்பதே அறபு நாட்டுத் தனவந்தர்களின் நிலை.
பிள்ளைகளின் அழுக்கான ஆடைகளை துவைத்துத் துப்பரவாக்கி அலுமாரியில் அடுக்கி வைப்பேன். அணிவதற்கு ஒரு சோடி ஆடை தேவையெனில் அடுக்கிய அத்தனை உடைகளையும் அள்ளி வீசி விடுவார்கள். மீண்டும் மடிக்க வேண்டும். பின் அடுக்க வேண்டும். பிள்ளைகளா அவர்கள்.? பேய்கள் ஆடையை மடிப்பதிலேயே அலுத்து விடும்.
47

Page 30
பிரியமான சினேகிதி
ஒரு நாள் உடுப்புகளை அயன் பண்ணிக் கொண்டிருக்கும் போது மூத்தவன் ஒடி வந்து, விழுந்தான். அது அதன் கைவரிசையைக் காட்டி விட்டது. வீறிட்டழுதான். ஏதோ நான் சூடு வைத்தது போல் எனக்கும் அவ்வாறு வைத்து விட்டாள். கை, கால் எங்கும் கொப்புளங்கள் ஏற்பட்டுப் புண்ணாகி விட்டன. தயவு தாட்சண்யமில்லாமல் வீட்டு வேலைகளைச் செய்யுமாறு பணிப்பாள். உங்க பிள்ளைகளுக்கு இந்நிலை ஏற்பட்டால், எவ்வளவு கரிசனையாக இருப்பீர்கள்? எனக்கு வலி தாங்க முடியவில்லை. கொஞ்சமாவது கருணை காட்டுங்கள் எனக் கெஞ்சினேன். ”அடியேய் உனக்குச் சரியான வாய். எனது பிள்ளைக்குச் சூடு வைத்தது போதாதா’ என்றாள்.
“உங்க மகன் அயன் பொக்ஸில் தானாக ஓடி வந்து விழுந்தானே தவிர, நான் அவனுக்குச் சூடு வைக்கவில்லை. எல்லாம் படைத்தவன் பார்த்துக் கொண்டிருக்கிறான்' என்றேன். என்னைக் கண்டாலே அவளுக்குப் பிடிக்காது. என் மேல் பாய்ந்து விழுவாள். எனது சம்பளத்தை உரிய நேரத்திற்கு தர மாட்டாள். வீட்டுக்கு அனுப்புவதற்குப் பணம் கேட்டால் தான் அனுப்பியதாகக் கூறுவாள். "நெற்றி வியர்வை காய்வதற்குள் அவனுடைய ஊதியத்தைக் கொடுத்து விடுங்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். இவனோ. எதிர் மாறாகச் செயற்படுகிறான்.
"என்னை எனது ஊருக்கு அனுப்பி வையுங்கள். நான் பல துன்பங்களை அனுபவித்தே இங்கே வந்துள்ளேன். எனது தம்பியை இழந்த வேதனையைச் சற்று மறப்பதற்கு ஆறுதல் கிடைக்குமென நினைத்தேன். ஆனால், துன்பங்கள் தொடர்கதையாகச் செல்கின்றன. எனக்கு எதுவுமே வேண்டாம் எனது பாஸ்போட்டைத் தாருங்கள்’ எனக் கேட்டேன். நான் நாடு திரும்பி விடுவேன் என்ற பயத்தினால் பாஸ்போட்டைத் தருவதற்கு மறுத்து விட்டாள். எனக்கு எப்படியாவது வீடு போய்ச் சுேர வுேண்டும் என்னும் மனநிலை தோன்றியது. வீட்டு நினைவு என்னை வாட்டி வதைத்தது. இனியும் என்னால் இங்கே இருக்க முடியாது. எவ்வளவோ எதிர்ப்புக்கு மத்தியில் வந்தது, தவறு என்பது இப்போதுதான் புரிந்தது.
எல்லோரும் துாக்கம் கலைந்து எழுவதற்கு முன்னர் சாளரத்தினுாடே வெளியே பாய்ந்து ஓடினேன். புது இடம் எங்கே போய் அடைக்கலம் புகுவது. நீண்ட துாரம் நடந்து விட்டேன். என்னருகில் பொலிஸ் வாகனமொன்று வந்து நின்றது. உனது பெயர் றிம்சா தானே.? தலையசைத்தேன். வாகனத்தில் ஏறுமாறு கூறினார்கள். ஏறிக் கொண்டேன். பொலிஸ் நிலையத்திற்குச் செல்ல, நானிருந்த வீட்டுக்காரியும், வீட்டுக்காரனும் காரிலேயே வந்திறங்கினர். எனக்கு விடயம் விளங்கி விட்டது. அவர்கள் புகார் செய்தே, இவர்கள் அழைத்து வந்துள்ளனர். வீட்டுக்காரி என்னிடம் வந்து
48

ஜெனிரா தெளUக் கைருல் அமான்
“என்னடி சொல்லாமல் வீட்டை விட்டு வெளியேறி விட்டாய்? எம்மை நம்பி உன்னையனுப்பி வைத்தவர்களுக்கு என்ன பதில் சொல்வது? நகையையும் பணத்தையும் திருடிவிட்டு ஆள் மாறி விட்டாய் என்ன? இவர்கள் தருவார்கள் நல்லா வாங்கிக் கட்டிக்கொள்’ என்றாள்.
"நான் வீட்டுக்குப் போக வேண்டும். நீங்கள் விடுவதாக இல்லை ஆதலால் தான் சொல்லாமல் வந்தேன். உங்கள் நகையோ, பணமோ நான் திருடவில்லை அல்லாஹ்வுக்காக என்னைப் பொலிஸில் மாட்டி விடாதீர்கள். எவ்வளவு கெஞ்சி மன்றாடினாலும் கல் மனசு எங்கே கரையப் போகிறது? துளியும் ஈவு இரக்கம் கிடையாது. சிறைவாசம் அனுபவிக்குமாறு கூறிச் சென்று விட்டாள். மூன்று வருடங்கள் சிறைவாழ்வை அனுபவித்தேன். எனது பெற்றோர் கடிதமனுப்பினார்கள். தந்தியனுப்பினார்கள். துாதரகம் மூலம் விசாரித்தார்கள். எப்பதிலும் கிடைக்கவில்லை நான் இருக்கின்றேனா. இல்லையா? எனத் திண்டாடினார்கள்.
மூன்று வருடங்களின் பின்னர் சிறையிலிருந்து நாடு திரும்பினேன். நான் வீடு வந்து சேர்ந்த செய்தி ஊர் முழுவதும் பரவியது. மக்கள் எனது சேமநலன் விசாரிக்க திரண்டு வந்தனர். எனக்கேற்பட்ட அனுபவத்தை கூறி ஆறுதலடைந்தேன்.
49

Page 31
பிரியமான சினேகிதி
நன்றிக் கடன்!
நீண்ட இடைவெளிக்குப் பின் கிண்ணியாவுக்கு வருகிறான் முஸ்தாக். இயற்கைத் துறைமுகத்தைத் தன்னகத்தே கொண்டுள்ள திருகோணமலையைத் தாண்டியே கிண்ணியாவுக்குச் செல்ல வேண்டுமென்பதால் 'திருமலை’ எனும் லேபல் ஒட்டப்பட்ட பேரூந்தில் ஏறிக் கொண்டான். பேரூந்து திருமலை நகரத்தை அடைந்ததும், அங்கிருந்து கிண்ணியா பஸ்ஸில் ஏறி துறையடியை வந்தடைந்தான். பாதை வழமையான தொழிலைச் சுறுசுறுப்பாகச் செய்து கொண்டிருந்தது. தொழிலுக்குச் செல்வோர் முண்டியடித்துப் பேரூந்தில் ஏறினர். மக்களை ஏற்றிக்கொண்டு இக்கரைக்கும் அக்கரைக்குமாக பாதை கடலில் நகர்ந்த வண்ணமிருந்தது. முக்கால் மணி நேரத்தில் இந்தியாவைச் சென்றடைந்திடலாம். ஆனால், இப்பாதையில் (Ferry) பயணம் செய்ய நீண்ட நேரம் காத்திருக்க வேண்டும். அவ்வூர் மக்கள் மிகப் பொறுமைசாலிகள். பொறுமையோடு காத்திருந்து பயணம் செய்வது வியப்புக்குரியதாகவே உள்ளது.
முன்புள்ள கிண்ணியாவுக்கும். இப்போதிருப்பதற்கும் நிறைய வேறுபாடுகள் உள்ளன. ஆங்காங்கே வானளாவ உயர்ந்து நிற்கும் மாடிக் கட்டிடங்களும், ஒற்றையடிப் பாதைகள் யாவும் தார் வீதிகளாகவும் மாற்றமடைந்திருந்தன. போக்குவரத்து செய்வதற்கு வாகனங்கள் தாராளமாகவும் காணப்பட்டன. மொத்தத்தில் கிண்ணியாவின் வளர்ச்சி கண்டு முஸ்தாக் யூ ரித்துப் போனான்.
முச்சக்கர வண்டியினுள் ஏறி குறிப்பிட்ட இடத்தைக் கூறினான். முஸ்தாக்கை ஏற்றிக் கொண்டு முச்சக்கர வண்டி மின்னல் வேகத்தில் சென்றது. "சேர் ஊருக்குப் 50

ஜெனிரா தெளUக் கைருல் அமான்
புதிதா?’ முச்சக்கர வண்டிச் சாரதி கேட்டான். 'இல்ல தம்பி நான் ஊருக்குப் பழையவர்
தான். ஆனால், நீண்ட வருடங்களின் பின்னர் வருவதால், கிண்ணியா வில் எவ்வளவோ
மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. ஆதலால் இடங்கள் யாவும் புதிதாகவே உள்ளன.” "அப்படியானால் நீங்கள் இவ்வூ ரைப் பிறப்பிடமாகக் கொண்டவரா?'
"அப்படியுமல்ல தம்பி`நான் கடுகண்ணாவையைப் பிறப்பிடமாகக் கொண்டவன். என்னை எனது பெற்றோர் ஒதுவதற்காக இங்குள்ள மத்ரஸாவில் சேர்த்தார்கள். நுாற்றி ஐம்பது பேர் வரை ஒதினோம். மத்ரஸாவிற்குப் போதிய வருமானமின்மையால், பக்கத்து வீடுகளில் மூன்று நேரச் சாப்பாட்டுக்கு ஒழுங்கு செய்தார்கள். நானும் யாக்கூத் என்பாரின் வீட்டில் சாப்பிட்டேன். அவர்கள் மிகவும் வசதி குறைந்தவர்கள். அப்படியிருந்தும், மனங்கோணாமல் இன்முகத்துடன் எக்கஷ்டப்பட்டாயினும் நேரத்துக்குச் சாப்பாடு தந்து விடுவார்கள். அவர்களுக்கு உள்ளதும் ஒரே மகன். அவனும் மூளை வளர்ச்சி குன்றியவன். அவனுக்குத் தேவையானவற்றை எல்லாம் தாயே செய்ய வேண்டும். என்னையும் தனது மகனாகவே கருதினார்கள்.’
"விடுமுறை என்றால் மட்டுமே வீடு செல்ல முடியும். ஆனால், இவர்களை ஒரு நாளைக்கு மூன்று வேளை பார்க்கக் கூடியதாய் இருந்தது. எனவே, அவர்களுடன் மிகுந்த அன்பும், மரியாதையும் எனக்கிருந்தது. அவர்களை 'உம்மா, வாப்பா என்றே சொல்வேன். அவர்களும் மகன். மகன் என அடுத்த வீட்டார் கொடுக்கும் உணவாக இருந்தாலும் எனக்கும் ஒரு பங்கு வைத்து விட்டே சாப்பிடுவார்கள். அந்தளவுக்கு என் மீது அதிக பாசம் வைத்திருந்தார்கள். அவர்கள் உணவில் வளர்ந்தது தான் இந்த உடம்பு, ஒதிக் கொண்டே க.பொ.த (சாத) (உ/த) பரீட்சைகளை எழுதினேன். ஒய்வு நேரத்தைப் படிப்பதிலேயே கழித்தேன். பின் வெளிவாரிப் பட்டப்படிப்பை மேற்கொண்டேன். இறுதிப் பரீட்சையிலும் சித்தியடைந்தேன். பட்டதாரி நியமனம் சொந்த ஊரிலேயே கிடைத்தது. மத்ரஸாவிலும் ஒதிப் பட்டம் பெற்றேன். போக வேண்டிய கட்டாய நிலை. அழுதழுதே பிரிந்து சென்றேன். அவர்களும் என்னைக் கட்டியணைத்து பிரியாவிடை தந்தனர். உறவிருந்தால் அங்கே பிரிவிருக்கும் என்பதை அன்றே உணர்ந்து கொண்டேன்.'
'எனது குடும்பத்தார் சகிதம் பெட்டி படுக்கையுடன் ஊர் சென்றடைந்த மறுநாள்
ஆசிரியப் பதவியேற்றேன். முதல் சம்பளத்திலேயே துணிமணிகள் எடுத்து அனுப்பினேன்.
மாதமொருமுறை அவர்களைப் பார்ப்பதற்காக வருவேன். எனது வீட்டில் திருமணப்
பேச்சுவார்த்தை ஆரம்பமானது. என்னை வளர்த்த பெற்றோர் கிண்ணியாவிலுள்ளார்கள்
அவர்களிடம் முடிவு எடுக்குமாறு கூறினேன். அதன்படியே அவர்களும் செய்தார்கள்.
51

Page 32
பிரியமான சினேகிதி
எல்லோரும் சேர்ந்து திருமணம் முடித்து வைத்தார்கள். இரு பிள்ளைகள் உள்ளனர். மூன்று வருடங்கள் வெளிநாடு சென்றேன். அங்கிருந்தும் அவர்களுடன் (யாக்கூத் வீட்டாருடன்) தொடர்பு கொள்வேன். அவர்களுக்குத் தேவையானவைகளையும்
அவ்வப்போது அனுப்பி வைத்தேன்.'
“நாடு திரும்பியதும் தலைநகரில் முகவர் நிலையமொன்றை ஆரம்பித்தேன். படித்த வேலை வாய்ப்பற்ற இளைஞர்களுக்கு, வேலைவாய்ப்புக் கிடைத்தன. யாராவது கிண்ணியாவிலுள்ளவர்கள் தலை நகருக்கு வந்தால் அவர்களிடம் என்னை வளர்த்த யாக்கூத் வீட்டாரை விசாரித்து ஏதாவது அனுப்பி வைப்பேன். கிடைத்தவுடன் எனது மகன் அனுப்பியுள்ளான் எனப் பக்கத்து வீட்டுக்குச் சென்று தொடர்பு கொள்வார்கள். "எதற்கப்பா உனக்கு வீண் சிரமம் நீ கஷ்டப்படாதே' என்றே அடிக்கடி கூறுவார்கள். எனக்கு ஒரு கஷ்டமும் இல்லை. வந்தவர்களிடம்தானே அனுப்பினேன் எனக் கூறுவேன். எனது உயர்வு கண்டு மிகுந்த ஆனந்தமடைவார்கள். விடுமுறை கிடைத்தால் போதும், உடனே குடும்பத்தோடு இங்கே புறப்பட்டு விடுவோம். இதனால் அவர்களுக்கும் எங்களுக்குமிடையில் நெருங்கிய பாசப் பிணைப்பு அதிகரித்துக் கொண்டே வந்தது.”
“ஒரு நாள் எமது முகவர் நிலையத்துக்கு வாட்டசாட்டமான நன்கு தெரிந்த ஒருவர் வந்தார். அவரிடம் ஐயாயிரம் ரூபா பணத்தை யாக்கூத் வீட்டில் கொடுக்குமாறு கூறிக் கொடுத்தனுப்பினேன். எவ்வித பதிலும் வரவில்லை. அவர்களிடம் விசாரித்த போது அந்நபரை பல தடவைகள் சந்தித்த போதும் அவர் எதுவுமே சொல்லவுமில்லை. எதையுமே தரவுமில்லை என்றார்கள். நம்பிக்கையாகக் கொடுத்த பணத்தைத் துஷ்பிரயோகம் செய்து விட்டான் பார்த்தீர்களா? அவனிடம் முஸ்தாக் தந்த பணத்தைப் பற்றி வினவினார்கள். என்னிடம் முஸ்தாக் பணம் தந்தது உண்மைதான். எனக்குச் செலவுக்குப் பணம் தேவைப்பட்டதால், அவற்றைச் செலவு செய்து விட்டேன். பணம் கிடைத்தால். அதனைத் திருப்பித் தருவதாக எவ்விதச் சூடு சுரணையுமில்லாமல் கூறினான். அதிக கடன் பட்டவனுக்கும் . கவலையில்லை' என்பார்கள். அது போலத்தான் இவன் கதையுமுள்ளது. இவன் இதைப் போல பலரிடம் பணத்தை வாங்கி ஏமாற்றியதாக அறிந்தோம். இனிமேல் இப்படியான ஏமாற்றுப் பேர்வழிகளிடம் ஜாக்கிரதையாக இருக்குமாறு என்னிடம் கூறினார்கள். அன்றிலிருந்து நன்கு பழகியவர்களிடமே அனுப்புவேன்.'
'திடீரென எற்பட்ட மாரடைப்பினால் யாக்கூத் காலமானார். அவர் மனைவி இத்தா
கடமையை அனுஷ்டிக்கும் போது அவருக்கு உதவுவதற்கு யாருமில்லை என
மையத்துக்கு வந்தவர்கள் பேசுவது முஸ்தாக்கின் காதில் விழுந்தது. தாய் தன்
52

ஜெனிரா தெளUக் கைருல் அமான்
குழந்தைகள் மீது வைத்துள்ள பாசத்தையும் விட பன்மடங்கு கருணையுள்ளவன் இறைவன். யாரை எங்கே வைக்க வேண்டும் என்பது அவனுக்குத் தெரியும். ஏதோ ஒரு வழிகாட்டுவான் “கல்லுக்குள்ளிருக்கும் தேரைக்கும் உணவளிப்பவன் இறைவன’ அவன் கைவிடமாட்டான் என முஸ்தாக் கூறினான். இத்தா அனுஷ்டிக்கும் தன் வளர்ப்புத் தாய்க்கு அடிக்கடி தன்னாலியன்ற உதவிகளைச் செய்தான்.
காலச் சக்கரம் உருண்டோட யாக்கூத்தின் மனைவி அஸிஸாவுக்கும் வயதாகிறது. கூனிக் குறுகி, கண் பார்வையும் மங்கலானது. முஸ்தாக் தன் வீட்டிற்கு வருமாறு கூறினார். பிறந்து வளர்ந்த ஊரை விட்டு வரப்போவதில்லை என் வீட்டிலிருந்தே எனது ஜனாஸா செல்ல வேண்டும். காடு வா. வா. என்கிறது வீடு போ. போக. என்கிறது இனி எங்கப்பா அலைந்து திரிவது.? நான் மெளத்தாகும் வரை வந்து பார்த்திட்டுப் போ.”
நான் கண்களை மூடினால். யார் இவனைப் பார்ப்பது? அதுதான் எனக்குக்
கவலையாக இருக்குது.?.
“ஏனம்மா நான் பார்க்க மாட்டேனா..?’ முஸ்தாக் கேட்டான். உனக்கேனப்பா வீண் தொல்லை.? உனக்கு ஆயிரத்தெட்டு வேலை இருக்கும் போது இவனைப் பார்க்க உனக்கு நேரம் கிடைக்கப் போகுதா.?”
“என்னால் முடியாவிட்டாலும் வேலைக்கு ஆள் வைததுப் பார்ப்பேன்’ முஸ்தாக் திடமாகக் கூறினான்.
“நீ சொல்வது சரிதான் தம்பி. என்னால் இவனை விட்டுப் பிரிய முடியாதே? என் உயிர் இருக்கும் வரை இவனைப் பார்ப்பேன். பின் ஆண்டவன் எழுத்துப்படி நடக்கட்டும” என்றாள் அஸிஸா என்னதான் குறைபாடுள்ள குழந்தையாக இருந்தாலும் தாய்க்கு தன் குழந்தை தங்கம் தான். மனதுக்குள் வியந்து கொண்டான் முஸ்தாக்.
ஒருநாள் அவசரத் தந்தி வந்திருந்தது. அஸிஸாவுக்கு கடுமையான சுகவீனம். உடனடியாக வருமாறு அறிவிக்கப்பட்டிருந்தது. முஸ்தாக் தன் குடும்பத்தாருடன் கிண்ணியா வந்து சேர்ந்தான். ஸஹ்ராதுடைய ஹாலில் அஸிஸாவின் உயிர் தவித்துக் கொண்டிருந்தது. முஸ்தாக் ஒரு சொட்டு ஸம்ஸம் நீரைத் தொண்டையில் விட்டதும் அஸிஸாவின் உயிர் இவ்வுலகை விட்டு, மறு உலகில் சங்கமமாகியது. எனது வருகைக்காகவே அஸிஸாவின் உயிர் ஏங்கிக் கொண்டிருந்தது. என்னைக் கண்டதும்
53

Page 33
பிரியமான சினேகிதி
உயிர் பிரிந்து விட்டதே. இந்நிகழ்வு முஸ்தாக்கின் நெஞ்சை உருக்கியது. கண்கள் குளமானது. அஸிஸாவின் குடும்பத்தார் முஸ்தாக்கை ஆறுதல்படுத்தினர்.
வறுமையிலும் வயிறார உணவளித்த பெருந்தன்மையை நினைத்து, வேதனையுடன் மையத்தோடு சென்றான் முஸ்தாக். இனி இவன் அநாதையாகி விடுவான். எப்படியோ இவனை எம்முடன் வாகனத்தில் கொண்டு சென்றால் சரி. இங்கிருந்தால் யார் பராமரிப்பது? தனிமையில் கிடந்து அவஸ்தைப்படுவான்.
பாவம் இதுபற்றிக் குடும்பத்தாருடன் கலந்தாலோசித்தான். “நீங்க அவ்வளவு துாரம் கொண்டு போகத் தேவையில்லை. நாங்கள் பராமரித்துக் கொள்வோம். நீங்கள் தாராளமாக வந்து போகலாம். அவர்கள் இல்லை என்று எங்களை மறந்து விடாமல் அடிக்கடி வாருங்கள் என்றனர். இவரை நீங்கள் கொண்டு சென்றால். இந்த உலகம் என்ன சொல்லும்.? இவனைப் பார்த்தெடுக்கக் குடும்பமில்லையா? எனப் பலரும் பலதையும் கதைப்பார்கள். பின் ஊர் வசவுக்கு ஆளாக வேண்டியிருக்கும். நன்கு சிந்தித்துப் பாருங்கள் முஸ்தாக்” எனக் கூறினர். இவர்கள் கூறுவதிலும் உண்மையில்லாமலில்லை. குடும்பத்திலுள்ள ஒருவர் இவர்களது வீட்டிலிருந்தே இவனைப் பராமரிக்க முன்வந்தார். நானும் மனத் திருப்தியுடன் ஊர் சென்றேன்.'
எல்லாவற்றையும் கேட்டுக் கொண்டிருந்த முச்சக்கர வண்டிச் சாரதி, இதுபற்றி நானும் கேள்விப்பட்டுள்ளேன். அந்நபர் யாரென்பதுதான் தெரியாது. இப்போது நீங்கள் தான் அது எனத் தெரிந்ததில் மகிழ்ச்சியடைகிறேன். நீங்கள் யாக்கூத் வீட்டாருக்குச் செய்யும் உதவியை எல்லோரும் பாராட்டுவார்கள். இந்தக் காலத்தில் இப்படி ஒரு மனிதனா? எவ்வளவு நன்றிணர்வு உள்ளவர். இவ்வாறான மனிதனை இன்று மருந்துக்குக்கூட காண முடியாதுள்ளது' எனக்கூறி பெருமூச்சு விட்டான்.
54

ஜெனிரா தெளUக் கைருல் அமான்
ஒரு மழலையின் விடிவு.
மாலை நேர விளையாட்டை முடித்துக் கொண்டு கால் கைகளை அலம்பிச் சுத்தம் செய்தவாறு வகுப்புப் பாடங்களை படிப்பதற்கு ஆயத்தமானான் முகேஷ். ஆனால், அவன் எண்ணங்கள் யாவும் புத்தகத்தில் லயிக்கவில்லை. மாறாகத் தன் நண்பர்கள் கூறிய வார்த்தைகள் ஒவ்வொன்றும் அவன் காதில் ஈயத்தை உருக்கிப் பாய்ச்சுவது
போல் வேதனையாக இருந்தன.
அந்த விடயத்தைப் பெற்றோரிடமோ அல்லது உறவினர்களிடமோ கூறி ஆறுதல் பெறவும் முகேஷின் உள்ளம் இடம்கொடுக்கவில்லை. புத்தகம் படிப்பது போன்று பாசாங்கு செய்து கொண்டிருந்தான் அவன். இதை அவதானித்த முகேஷின் தாய் சுமதி 'என்ன மகன் நானும் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறன் நீ ஏதோ பெரிய யோசனையில மூழ்கி இருக்கிறாய். என்ன பிரச்சினை. உனது நண்பர்கள் கூப்பிட்ட போது நல்லாத்தானே போனாய். இப்ப என்ன நடந்தது? ஏதும் சண்டை கிண்டை பிடித்தாயோ..?’ சுமதி நிதானமாக கேள்விகளை அடுக்கிக் கொண்டே போனாள்.
"அம்மா நான் உங்ககிட்ட கேக்குறதுக்கு மழுப்பாமல் உண்மையைச் சொல்ல வேனும், எனது அப்பா யார் .?’
55

Page 34
பிரியமான சினேகிதி
மகனின் வார்த்தையைக் கேட்டதும், அதிர்ந்து போனாள் தாய். கூரிய ஆயுதத்தால் இதயத்தைத் துளைப்பது போன்று இதயம் வலித்தது. "ஏன் மகன். இப்படி ஒரு கேள்வியைக் கேட்டாய். அம்மாவும். அப்பாவும் உயிருடன் இருக்கும்போது இவ்வாறான சந்தேகம் உன் மனதில் ஏன் எழுந்தது.” பதட்டத்துடன் கேட்டாள்
5ETu.
”அம்மா. நான் பந்து விளையாடிக் கொண்டிருக்கும்போது. விளையாட்டுச் சண்டை வந்தது. அதற்குச் சுரேன்’அரேபியனுக்குப் பொறந்தவனே உன் புத்தியை அரேபியாவில் போய்க் காட்டு’ என்று கேட்டானம்மா. எல்லோரும் என்னைப் பார்த்து நக்கலாகச் சிரித்தார்கள். ஏன்தான் அவன் அவ்வாறு கூறினானோ தெரியவில்லை' என்று விம்மினான்.
உடனே முகேஷின் தாய் விருட்டென எழுந்து ஆவேசத்துடன் சுரேனின் வீட்டை நோக்கிப் பாய்ந்தாள். ”இஞ்சப் பாருங்க உங்கட பிள்ளைய நல்லா வளருங்க. தேவையில்லாத வார்த்தைகளைப் பேசினால். எனக்குப் பொல்லாத கோபம் வரும். அதன் பிறகு நான் நானாக இருக்க மாட்டேன்’ என்று கூச்சலிட்டாள். விடயம் என்னவென்று அறிந்து கொண்ட சுரேனின் தாய் அவன முதுகில் நாலு சாத்துச் சாத்தினாள்.
”இனி அப்படிச் சொல்ல மாட்டேன் அம்மா. எனக்கு மோகன் தான் இப்படிச் சொன்னான்’ என்று அடியின் வேதனை பொறுக்க முடியாமல் அழுதான் சுரேன்.
"யார் சொன்னாலும் நீ ஏண்டா இவ்வாறான வார்த்தைகளைப் பேச வேண்டும். முகேஷின் தாயிடம் மன்னிப்புக் கேள்’ என்றாள் சுரேனின் தாய். அவனும் அவளிடம்
மன்னிப்புக் கேட்டான்.
இச்சம்பவம் ஒரு நொடிப் பொழுதில் நடந்து முடிந்தாலும் கூட முகேஷின் தாய்க்கு அதுவே பெரிய பிரச்சினையாக விஸ்வரூபமெடுத்தது.
நாம் எவ்வளவு தான் மூடி மறைத்தாலும் உண்மை என்றோ ஒருநாள் வெளிவரவே செய்யும். இதை நினைத்தபோது அவளால் தாங்கவே முடியவில்லை.
சுமதி திருமணம் செய்து பத்து வருடமாகியும் குழந்தைப் பாக்கியம் கிட்டவில்லை. செய்யாத வைத்தியமுமில்லை, போகாத ஊருமில்லை. ஏறி இறங்காத கோயிலுமில்லை. இறுதியில் ஒரு பிள்ளையைத் தத்தெடுக்க முடிவு செய்தனர். அவளுக்குச் சந்தர்ப்பமும் சாதகமாக அமைந்தது.
56

ஜெனிரா தெளUக் கைருல் அமான்
நோயாளியைப் பார்ப்பதற்காக வைத்தியசாலைக்குச் சென்றபோது ஒரு குழந்தை அநாதரவாகக் கைவிடப்பட்ட நிலையில் கிடந்தது. உரிய முறைப்படி குழுந்தையைப் பெற்றுக் கொண்டு அதனை வாரியணைத்தபடி வீட்டிற்கு சென்றாள். தாலாட்டிச் சீராட்டி வளர்த்து வந்தாள். ஒரு மாதம் ஓடி மறைந்தது. சுமதியின் வீட்டுக்குத் திடீரென வந்த ஒரு பெண்
"எனது குழந்தை இங்கிருப்பதாக அறிந்தேன். அதை என்னிடம் ஒப்படையுங்கள்' என்று ஏக்கத்துடன் கேட்டாள்.
'நல்ல வேடிக்கை இது. இது உனது பிள்ளை தான் என்பதற்கு என்ன ஆதாரம். இவ்வளவு பற்றும் பாசமும் உள்ள நீ ஏன் குழந்தையை வீசி எறிந்து விட்டுச் செல்ல வேண்டும்?' முகேஷின் தாய் கோபத்துடன் கேட்டாள்.
"எனது பிள்ளையை என்னிடம் ஒப்படைக்காவிட்டால் வைத்தியசாலையில் பிறந்த என் குழந்தை காணாமல் போய் விட்டதாகவும் வைத்தியரும் தாதியரும் பணத்துக்காக அதற்கு உடந்தையாக இருந்ததாகவும் பொலிஸில் புகார் செய்வேன்’ என்று பயமுறுத்தினாள்.
"உனது மிரட்டலுக்கு நாம் பயப்பட மாட்டோம். ஒரு மாதமாகியும் உனக்குக் குழந்தை மீது பாசம் எழவில்லையா..? நீ அப்போதே பொலிஸில் புகார் செய்திருக்கலாமே..? குழந்தையைக் குப்பைத் தொட்டியில் வீசிய குற்றத்திற்காக உன்னைப் பொலிஸில் மாட்டி வைப்பேன். இப்போதே வா பொலிஸ் நிலையம் செல்வோம்’ என சுமதி ஆவேசமாகக் கூறினாள். வளர்ப்புத் தாயின் துணிச்சலைக் கண்டு சற்று பின் வாங்கினாள் வந்தவள்.
'உண்மையில் இது என்னுடைய குழந்தைதான். நான் வெளிநாட்டிற்குச் சென்றபோது உண்டானது. மீண்டும் வெளிநாடு செல்ல வேண்டும் என்பதற்காகவே ஆஸ்பத்திரியில் விட்டு விட்டு சென்றேன். என்னால் குழந்தையைப் பிரிந்து இனி வாழ முடியாது. உங்களுக்குக் கோடி புண்ணியம் கிடைக்கும் என் குழந்தையை என்னிடம் ஒப்படையுங்கள்' அழுது மன்றாடினான் அவள்.
”ஒரு பாவமும் அறியாத பச்சிளம் பாலகன் என்ன செய்தது. நீ அதற்கு இவ்வளவு பெரிய தண்டனை கொடுத்தது நியாயம் தானா..? குழந்தையை விட வெளிநாடு பெரிதாகி விட்டதா உனக்கு.’
57

Page 35
பிரியமான சினேகிதி
“என்னைப் போல பிள்ளையின்றி அல்லலுறும் பெண்களுக்கு இக்குழந்தையைக் கொடுக்கலாமே.” என்று சுமதி, குழந்தையின் தாயான திரிசாவை கண்டித்தாள்.
“எனது தவறை ஒத்துக் கொள்கிறேன். இப்போது என் குழந்தை எனக்கு வேண்டும் அழுது புலம்பினாள் திரிசா,
அன்று வைத்தியசாலையிலிருந்த பக்கத்து கட்டிலிலுள்ளவர்களிடம் விசாரித்தபோது உண்மையில் அது திரிசாவுடைய குழந்தைதான் எனத் தெரிய வந்தது. ஒரு மாதம் வளர்த்துப் பெயர் வைத்துப் பிரிவது கஷ்டமென்றால், பத்து மாதம் வயிற்றிலே சுமந்து பகலிரவாய்க் கஷ்டப்பட்டவளுக்கு எப்படி இருக்கும்.? மனிதாபிமானத்துடன் திரிசாவிடம் குழந்தை முகேஷை ஒப்படைத்தாள் சுமதி
அவளின் பெருந்தன்மையை திரிசா பாராட்டி விட்டு, குழந்தையுடன் விடை பெற்றுச் சென்றாள். குழந்தையை எடுத்துச் சென்ற திரிசா போதிய பொருளாதார வசதியின்மையால் முகேஷை பராமரிக்க முடியாமல் திண்டாடினாள். அவனை வளர்த்தவர்களிடமே
ஒப்படைத்திருந்தால் ஒரு குறையும் இன்றி வளர்ந்திருப்பான் என அடிக்கடி நினைத்தாள். நான் எல்லாவற்றையும் கெடுத்து விட்டேனே என்று மனம் வருந்தினாள். திடீரென ஒருநாள் குழந்தையோடு சுமதியின் வீட்டிற்கு சென்றாள். குழந்தையோடு திரிசாவைக் கண்ட சுமதி ஆச்சரியத்தோடு என்னவென்று விசாரித்தாள் “என்னால் எனது குழந்தையை ஒழுங்காக பராமரிக்க முடியவில்லை. அதற்கான வருவாயும் எனக்கு இல்லை. அது மட்டுமன்றி எனக்கு மீண்டும் வெளிநாடு செல்ல வீசா வந்துள்ளது. அப்படி நான் வெளிநாடு சென்றாலும் எனது குழந்தையை பார்த்துக் கொள்ளவும் யாரும் இல்லை. எனவே நீங்களே எனது குழந்தையை உங்கள் குழந்தையாக
தத்தெடுத்து வளர்த்துக் கொள்ளுங்கள்’ என்றாள்.
அவள் சொல்வதை அதிர்ச்சியுடனும் ஆச்சரியத்துடனும் கேட்டுக் கொண்டிருந்த சுமதி “இப்போது குழந்தையை தந்துவிட்டு வெளிநாடு சென்று வந்ததும் மீண்டும் முகேஷைக் கேட்கக் கூடாது! இனி அவன் எங்கள் பிள்ளை அவனை பார்க்க மட்டும் அனுமதிப்பேன். ஆனால், அதற்காக எனது மகன் என்று உரிமை கொண்டாடிக் கொண்டு அடிக்கடி என் வீட்டுக்கு வரக்கூடாது' என்று நிபந்தனைகளை அடுக்கிக்
கொண்டே சென்றாள்.
58

ஜெனிரா தெளUக் கைருல் அமான்
“சரி சரி. என்று அவளது ஒப்பந்தங்களுக்கு இணங்கிய திரிசா முறைப்படி அவளுக்கு தனது குழந்தையை தத்துக் கொடுத்து விட்டு வெளிநாடு சென்றாள். குழந்தை மீண்டும் கிடைத்ததால் சுமதி தொலைந்து போன சொர்க்கம் மீண்டும் கிடைத்த மகிழ்ச்சியை அடைந்தாள்.
அன்றிலிருந்து முகேஷை தான் பெற்றெடுத்த குழந்தையாக எவ்விதக் குறையுமின்றி அன்பு காட்டி வளர்த்து வந்தாள். அனேகமானோர் முகேஷ் சுமதியின் சொந்தப் பிள்ளை என்றே கருதினர். காலப்போக்கில் அவன் சாயல்கூட வளர்த்தவர்களைப் போன்றே
அமைந்தது.
அப்படியிருந்தும் முகேஷின் பள்ளி மாணவன் மோகனுக்கு எப்படியோ உண்மை தெரிய வந்துள்ளதே. வீட்டிலுள்ள பெரியவர்கள் பேசியதால் தானே இவ்விடயம் வெளிச்சத்துக்கு வந்திருக்கிறது.
இனிமேலும் முகேஷ் இதுபற்றி யோசிக்காமல் இருப்பானா. எவ்வளவு உயர்ந்த அந்தஸ்த்தில் வாழ்ந்தாலும் தான் பெற்றவளால் அன்றி வேறொருத்தியால்
வளர்க்கப்பட்டவன் என்றால். அவன் உள்ளம் என்ன பாடு படும். தன்னைப் பெற்றெடுத்த
தாயை சபித்துக் கொள்வானா? அல்லது தன்னை வளர்த்த அவளுக்காக அநுதாபப்படுவானா?.
விடிவை நோக்கிய சுமதியின் எண்ணம் மேகம் மூடிய நிலவாய்க் காட்சியளித்துக் கொண்டிருந்தது.
59

Page 36
பிரியமான சினேகிதி
அவன் போட்ட சபதம்
ஊரிலேயே பிரபலமான வழக்கறிஞன் என்பதால், எல்லோரும் இம்தாத்திடமே பிரச்சினைக்குத் தீர்வு காண்பதற்காகச் செல்வார்கள். தன்னிடம் வரும் வாடிக்கையாளர் அனைவரையும் தனது நாவன் மையாலும், புத் தி சாதுர்யத் தாலும் தன்வயப்படுத்தியிருந்தான் இம்தாத்.
அன்று எதிர்பாராத விதமாகத் தனக்குக் கற்பித்த முபஸ்ஸிர் ஆசிரியர் வந்திருந்தார். அவரை அன்போடு வரவேற்று நன்றாய் உபசரித்தான். பூ ரித்துப் போனார் முபஸ்ஸிர் ஆசிரியர். இம்தாத்தின் உயர்வு கண்டு மனம் திறந்து பாராட்டினார்.
"என் உயர்வுக்கு மூலகர்த்தா நீங்கதான் சேர். எப்படி உங்களை மறப்பது.?’ இம்தாத்தின் வார்த்தையில் பல்வேறு அர்த்தங்கள் மின்னி மின்னி மறைந்தன.
இம்தாத்தின் வார்த்தைகள் முபஸ்ஸிர் ஆசிரியரின் நெஞ்சைக் கோடரியால் பிளந்தது போலிருந்தது. என்ன இவன் பழைய விடயங்களை இன்னும் மறக்கவில்லையா? 'மறக்கக்கூடிய உறவா நம்முடையது. தமாசாகக் கேட்டான் இம்தாத்.
நெஞ்சிலே அடி விழுந்தால் நினைவிலே வலி இருக்குமென ஒர் அறிஞன் கூறியுள்ளான். அது எனக்கும் பொருந்துகிறது. அவ்வளவுதான். 'மன்னிக்கும் மனப்பான்மை மனிதனுக்கு வேண்டுமல்லவா? நான் எல்லாவற்றையும் எப்போதோ மறந்து விட்டேன்’ என இம்தாத்தின் வாய் கூறினாலும், அவனது உள்ளம் பழைய நினைவுகளையே இரை மீட்டியது.
60

ஜெனிரா தெளUக் கைருல் அமான்
அன்று ஐந்தாம் ஆண்டிலிருந்து ஆறாம் ஆண்டிற்குச் சித்தியடைந்திருந்த காலம். பெற்றோரின் பாசப் பிணைப்பில் திழைத்திருந்த பருவம். திடீரென ஏற்பட்ட நெஞ்சுவலியால் தாய் மெளத்தாகி விட்டார்.
எனவே, கல்லூரிப் படிப்பை இடையில் நிறுத்தி விட்டு, மத்ரஸாவில் ஒதுவதற்கு அனுமதித்தார்கள். குறிப்பிட்ட காலத்தினுள் குர்ஆனை மனனஞ் செய்து காபிழாக வெளியேறினான் இம்தாத்.
மீண்டும் பாடசாலைப் படிப்பைத் தொடருவதற்காக இப்தாத்தின் தந்தை, அதிபரைச் சந்தித்தபோது. முபஸ்ஸின் ஆசிரியர் பேசிய ஒவ்வொரு வார்த்தைகளும் உள்ளத்தைக் காயப்படுத்தின. ஒரு கணம் இதயமே இரத்த ஓட்டத்தை ஸ்தம்பிதமடையச் செய்து விட்டது.
'இவனையெல்லாம் இந்தப் பாடசாலையில் சேர்த்து குப்பைப் பெறுபேறுகள் எடுப்பதைவிட, சேர்க்காமலிருப்பது மேல், தந்தையைப் போல மகனையும் கடலுக்கு மீன் பிடிக்க அனுப்புங்கள் ஸேர். இவனுக்கெல்லாம் கல்வி தேவையா?’
”கடிக்கிற நாயை மூஞ்சியிலே பார்த்தால் தெரியும். படிக்கிற மாணவனை அவனது நடையிலே பார்த்தால் தெரியும் இதெல்லாம் ஒரு உதவாக்கரை வேறு எங்காவது கொண்டு போய்ச் சேருங்கள்.'
முபஸ்ஸிள் ஆசிரியரின் வார்த்தைக்குச் சபோட்' பண்ணி பாடசாலை அதிபரும் மறுத்து விட்டார். பிள்ளையார் வரம் கொடுத்தாலும் பூ சாரி வரம் கொடுக்க மாட்டார் என்பது போலிருந்தது அவர்களது நடவடிக்கைகள். இதுவரை அவர்கள் பேசியதை அமைதியாகக் கேட்டுக் கொண்டிருந்த இம்தாத்தின் தந்தை,
'நீங்கள் பேசியதற்கு எல்லாம் என்னாலும் பதிலடி கொடுக்க முடியும். ஆனால், அப்படி நான் பேசினால் உங்களுக்கும் எனக்கும் வித்தியாசம் இல்லாமல் போய் விடும்' என்று கூறிவிட்டு ஆவேசத்துடன் வெளியேறினார்.
மீனவனின் மகன் மீன் பிடிக்க வேண்டும் என்ற நிபந்தனை எந்த அகராதியிலுமில்லை. நெல்லில் பதருண்டு. ஆனால் மனிதரில் பதர் இருக்கக் கூடாது. நல்ல மாட்டுக்கு ஒரு சூடு போதும். இது எனது மகனுக்கு நல்லதொரு படிப்பனையாக அமையட்டும் என்று மனதிற்குள் நினைத்துக் கொண்டு.
61

Page 37
பிரியமான சினேகிதி
மகனே! நீ உயர்ந்த இடத்தில் இருந்தாலும் மற்றவரை ஏளனமாக எண்ணி விடாதே! முயற்சித்தால் முடியாதது ஒன்றில்லை. துணிந்து நில்! தொடர்ந்து செல். தோல்வி கிடையாது’ என்று உணர்ச்சிகரமாகக் கூறினார். பின்னர் இம்தாத்தை வேறு பாடசாலை ஒன்றில் சேர்த்தார்.
தந்தையின் அறிவுரைகளை மனதிற் கொண்டு படித்தான். க.பொ.த. (சாத) பெறுபேறு வெளியானது. இம்தாத் சிறந்த பெறுபேற்றைப் பெற்றான். எல்லோரது வாயிலும் இம்தாத்தின் பெயர்தான். தொடர்ந்து படித்தான். க.பொ.த. (உத) பெறுபேறும் வெகு சிறப்பாக அமைந்தது. சட்டக் கல்லுாரிக்குத் தெரிவானான்.
முபஸ்ஸிர் ஆசிரியர் தலையிலே கையை வைத்து "என்ன தவறு செய்தேன். கையில் அகப்பட்ட பூ னையை நழுவ விட்டுவிட்டு 'யூ ஸ் பூ ஸ். என்றால் வருமா? இம்தாத்தை நாம் சேர்த்திருந்தால் நமது பாடசாலைக்கே புகழ் கிடைத்திருக்கும். இனி என்ன செய்வது. சந்தர்ப்பத்தை நழுவ விட்டு விட்டேன்’ என் கை சேதப்பட்டார். இன்று அதே இம்தாத் ஒரு சட்டத்தரணியாக, மக்கள் பிரச்சினைகளை நுணுகி ஆராய்ந்து தீர்வு காணும் சிறந்த வக்கீலாக காட்சியளிக்கிறார்.
அன்று உதவாக்கரை என மட்டந்தட்டிய முபஸ்ஸின் ஆசிரியர், தனது மகனின் பிரச்சினை ஒன்றுக்காகவே இம்தாத்தின் உதவியை நாடி வந்துள்ளார். ஆனைக்கொரு காலம் வந்தால் பூ னைக்கொரு காலம் வராமலா போகும். இம்தாத்தின் விடா முயற்சி அவனை நல்லதொரு நிலைக்கு உயர்த்தியது. இதனை முபஸ்ஸிர் ஆசிரியர் கனவிலும் நினைத்திருக்க மாட்டார். அன்று தான் பேசிய வார்த்தைகள் ஞாபகத்துக்கு வராமலா போகும்.
தன் உள்ளத்தை சிறு வயதில் பாதித்த சம்பவங்களை மீண்டும் மீட்டிப் பார்த்ததை காட்டிக் கொள்ளாமல் ஆசிரியரின் பிரச்சினை பற்றி தான் யோசித்ததாக கூறி மழுப்பினான் இம்தாத்.
முபஸ்ஸிர் ஆசிரியர் தொடர்ந்தார். "என் மகனுக்கு வாகனம் ஒடுவதற்கு மிகவும் ஆசை. ஆனால், நான் அனுமதிப்பதில்லை. பதினெட்டு வயது நிரம்பாத உனக்கு வாகனம் ஒட்டுவதற்குச் சட்டத்தில் கூட இடமில்லை. வாகன அனுமதிப் பத்திரமும் எடுக்க முடியாது இந்த விடயத்தில் நீ ரொம்பக் கவனமாக இரு” என்பேன்.
நண்பர்களுடன் சேர்ந்தால் போதும். கூட்டத்தோடு கோவிந்தா. எதற்குமே அஞ்ச மாட்டான்.
62

ஜெனிரா தெளபீக் கைருல் அமான்
“ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாள் என்பதால், நண்பர்கள் சகிதம் சாப்பாடு சமைத்து உண்பதற்காக வயல் பக்கம் சென்றிருக்கிறான். வாலிபர்கள் ஒன்று சேர்ந்தால் கேட்கவும் வேண்டுமா? கூத்தும் கும்மாளமுமாகப் பயணத்தைத் தொடர்ந்திருக்கின்றனர். இடையிடையே வாகனத்தை தான் ஒட்டுவதாகப் பொறுப்பேற்றுள்ளான். இளங்கன்று பயமறியாது என்பார்கள். ஏற்கனவே ஒடிய அனுபவமுமில்லை. புதிய பழக்கம் கண் மண் தெரியாமல் வாகனத்தை ஒட்டியிருக்கிறான். நண்பர்கள் எவ்வளவு சொல்லியும்
அவன் கேட்கவில்லை.”
'திடீரென வீதியில் சென்று கொண்டிருந்த பாதசாரி ஒருவர் மீது வாகனம் மோதியுள்ளது. அவர் ஸ்தலத்திலேயே இறந்து விட்டார். வீட்டு மதில்கள் உடைந்து சுக்குநுாறாகி விட்டன. வாகனத்திலிருந்தவர்கள் சிறு சிறு காயங்களுடன் தப்பிக் கொண்டனர். சட்டம் சும்மா இருக்குமா? இப்போது அவன் விளக்க மறியலில்’.
”பிள்ளைகளின் கவனயீனத்தால் பெற்றோர் கண்ணிர் வடிக்க வேண்டிய துர்ப்பாக்கிய நிலை, அவனை பிணை எடுக்கவே உங்களை நாடி வந்தேன். நாளை மகனை நீதிமன்றம் கொண்டு வருகிறார்கள்.'
என்று தழுதழுத்த குரலில் கூறி முடித்தார் முபஸ்ஸிள் மாஸ்டர். முபஸ்ஸிர் மாஸ்டரை ஏற இறங்கப் பார்த்தார் இம்தாத், மனதில் அவர் மீது வைராக்கியம் இருந்தாலும் அவரைப் பார்க்க பரிதாபமாக இருந்தது. சிறிது நேரம் மெளனம் நிலவியது. பின்னர் உறுதியுடன் கூறினார் இப்தாத்.
“சரி உங்கள் மகன் விடயத்தில் என்னால் தட்டிக் கழிக்க முடியாது ஸேர். எனது ஆசிரியர் நீங்கள். நாளை நீதிமன்றத்தில் ஆஜராகிறேன். வெற்றி உங்கள் பக்கம் மகுடம் சூட முயற்சி செய்வோம். முதலில் உங்கள் மகனை பிணையில் எடுப்போம். முயற்சி திருவினையாக்கும்.”
நம்பிக்கை ரேகை முகத்தில் மெலிதாய்ப்படர அங்கிருந்து வெளியேறினார் முபஸ்ஸிர் ஆசிரியர்.
முற்றும்
63

Page 38


Page 39
அரசியல், கல்வி, கலை என்ற வாழ்வியலின் நான்கு சு ஒன்றிணைத்துப் புகழ் பெற்ற ( Uறந்த ஜெனரா அமானர்,எழு மு ன னாளர் அதரிUருமான எ தெளUக்கின் புத்திரியாவார். கிண் பூர்வீகமாகக் கொண்டவர்
குழந்தைப் பாடல்கள், சி நாடகங்கள், கலை இலக்கியம் 6 கட்டுரைகள், இஸ்லாமியக் க Uடைத்து வரும் ஆசிரியரான இ ஆணர்டு அளுத்கம ஆசிரியர் கல்லூரியில் கற்ற போது "பாலர் Uா கவிதைத் தொகுதியை வெளியிட்டா ஆரம்பக் கல்வி மாணவர்களின் ஆர்வத்தை வளர்க்க உதவியது.
இலங்கையின் பிரபல பத் Uலவற்றிலும் வானொலியிலும் Uடைத் துளி ள இவரது ஆகி பெரும்பாலானவை "நவமணி” வ பிரசுரமானவைகளாகும்.
செனினையில் நடைUெ இஸ்லாமிய இலக்கிய மாநாட்டி வெளியிடப்பட்ட சிறப்பு மலரில் Uெணி எழுத்தாளர்கள் சார்U Uெயரும் சுட்டிக் காட்டப்Uட்டமை தக்கது.
பிரUல ஆசிரியர் அமானி வியரான ஜென"ரா, இலக்கிய நிலையான ஓர் இடத்தைப் பிழத்து எவரும் மறுப்பதற்கில்லை. ஓயாம சாதிக்க வேண்டுமென்Uதே எமது ே
ISBN: 978-955-0161-00-3

கலாசாரம் றுகளையும் குடும்பத்தில் தி குTTெரும முர் , ஈ, ஏ அர் னியாவைப்
றுகதைகள், தாடர்பான ட்டுரைகள் இவர் 1992ம் Uயிற்சிக் டல்” என்ற ர். இந் நூல்
இலக்கிய
ந்திரிகைகள் இலக்கியம் கங்களிற் ார ஏட்டில்
ற்ற உலக 2ணர் போது இலங்கைப் ல் இவரது
குறிப்பிடத்
ன் துணை ப உலகில் 66T60)UO60)UU )ல் எழுதிச் வணவா!
கலைப்பிரியா பாணந்துறை