கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: சங்கானைச் சண்டியன்

Page 1
~,-----------
···---···~,
 


Page 2

алмапеоеолбаеволкаишел

Page 3

வி. சிவகுமாரன்
墨
ܟ݂
قم
32/9ஆற்காடு சாலை சென்னை 24 தமிழ்நாடு இந்தியா

Page 4
Chankaanai Chandiyan
By VJeevakumaran C)
Illustration:
Gouthaman
Vinoth Kamaraj (BFA)
First Edition September 2009
Mithra : 191 ISBN: 978-81 - 89748 - 78 - 4
Publication Editor Espo
Mithra Books are Published by Dr. Pon Anura
Pages : 448 Price:
Printed & Published by Mithra Arts & Creations Pvt Ltd., 32/9 Arcot Road, Kodambakkam, Chennai - 600 024. Ph : 2372 3182, 2473 5314
www.mithra.co.in

அணிந்துரை
“யாவும் கற்பனையல்ல" என்ற சிறுகதைத் தொகுதி யினையும், "மக்கள். மக்களால். ம்க்களுக்காக." என்ற நாவலையும் தந்து தமிழ் இலக்கிய உலகில் தனது இருப்பினை ஆழமாகப் பதித்துக் கொண்ட வி. ஜீவகுாரனின் மற்றுமொரு கதைத் தொகுப்புத்தான் இந்தச் "சங்கானைச் சண்முயன்’ இத்தொகுப்பில் பத்துச் சிறுகதைகளும் இரண்டு குறுநாவல் களும் அடங்கியுள்ளன.
ஒவ்வொரு எழுத்தாளனும் தான் பயிலும் இலக்கிய உலகில் தனது முத்திரையைப் பதிப்பது தரிசனத் தனித் துவத்தினாலேயே. அவ்வகையில் ஜீவகுமாரனின் கதைகளில் ஓர் இலக்கியச் சிரத்தை இருக்கும். களமும், கழலும் தத்ரூபமாகச் சித்தரிக்கப்பட்டிருக்கும். ஆத்மபலத்தோடு தானுணர்ந்த வலிகளைப் போக்கிக்கொள்ளும் தன்மையும் மானிடப் பெறுமானம் கொண்ட மனிதநிலைச் சித்தரிப்பும் முனைப்புற்றிருக்கும். இவை யாவும் இத்தொகுப்பிலுள்ள கதைகளிலும் தனித்துவத்துடன் தரிசனம் தருகின்றன.
இத்தொகுதியிலுள்ள முதலாவது சிறுகதை "வேட்டை". வன்னி மண்ணை மூன்று குறுநில மன்னர்கள் ஆண்டு கொண்டிருந்த காலத்தில் நடைபெறுகிறது. இதன்மூலம் ஒரு சரித்திரச் சிறுகதையை வாசிக்கும் உணர்வு வாசகனுக்கு ஏற்படுகிறது. இந்தக் கதையின் தொடர்ச்சியாக இலங்கையில் இனக் கலவரத்தின்போது நடைபெற்ற வேறொரு கதையை இணைத்துப் புதுமை செய்கிறார் ஜீவகுமாரன்.

Page 5
தென்னிலங்கை முழுவதும் தீப்பற்றி எரிந்து கொண்டி ருக்கிறது. தமிழரின் கடைகள், சொத்துக்கள் அனைத்தும் கறையாடப்பட்டுக் கொண்டிருந்தன. பாணந்துறை பிரதேசத்தில் பல கடைகளின் சொந்தக்காரர் வைத்திலிங்கம் முதலாளி. அவரது கடையையும் அவரையும் நோக்கி ஒரு கூட்டம் வந்து கொண்டிருக்கிறது. சாராயம் விற்கும் யாமினியும் அவளது மகன் விஜயசிங்காவும் அங்கு வருகின்றனர். சிங்கள மொழியில் "கொல்லுங்கடா அவனை” என வைத்திலிங்கம் முதலாளியைச் சுட்டுகிறர்ள் அவள். அடுத்த கணம் அவளது மகன் விஜயசிங்காவின் கையில் இருந்த நீண்ட கத்தி வைத்திலிங்கத்தாரின் நடு நெஞ்சில் பாய்ந்தது.
இந்தக் கதையைப் பழத்து முழத்ததும் வாசகர் மனதில் பலவாறான உணர்வுகள் தொற்றிக்கொள்கின்றன முன்னைய கதையில் செம்பருத்தி மன்னனைச் சுட்ழ் விரலை நீட்டுகிறாள். பின்னைய கதையில், யாமினி வைத்திலிங்கம் முதலாளியை நோக்கி விரலைச் சுட்டுகிறாள். இங்கே குறியீடாக ஆசிரியர் தான் கூறவந்த செய்தியைச் சொல்லாமல் சொல்லிவிடுகிறார். சிறுகதைக்குரிய ஒருமைப்பாடு குன்றாமல் சரித்திரக் கதை யுடன் பிற்பட்டகாலக் கதையை இணைத்துவிடும் பாங்கு ஆசிரியரின் படைப்பாற்றல் திறனுக்குச் சான்றாக அமைகிறது. இத்தொகுப்பில் உள்ள உச்சமான கதைகளில் இதுவும் ஒன்றாகும்.
"நானும் ஒரு அகதியாக." என்ற சிறுகதையில் கிராமப்புறம் சார்ந்த காட்சிகளையும் அவற்றுடன் கூடிய வாழ்க்கைக் கூறுகளையும், "உஞ்சு' என்னும் நாயினது பார்வையில் சித்தரிக்கின்றார் ஆசிரியர். முருகன் கோயில், கொழகாமம் ஸ்ரேஷன், இயக்கச் சண்டைகள், வைரவர்

7
கோயில் வேள்வி, காதல் முறிவினால் ஏற்பட்ட தற் கொலைகள், கொழும்பிலிருந்து கொண்டு வரப்பட்ட றோஸி எனும் நாய்க்கும் உஞ்சுவுக்கும் ஏற்பட்ட காதல் அனுப வங்கள், அதனால் ஏற்படும் வலிகள் போன்ற பல்வேறு விடயங்களை தற்புதுமையுடனும் கலாநேர்த்தியுடனும் சித்தரிக்கும் பாங்கு சிறப்புடையது. ஆசிரியர் இக்கதை யினுடே சமூக விமர்சனமாகப் பல விடயங்களைச் சொல்லிச் செல்வது அவரது திறமைக்குச் சான்றாக அமைகிறது. எடுத்துக்காட்டாக "எனக்கு இந்தச் சண்டைக்கான காரணங்களே விளங்குவதில்லை. பஞ்சத்தால் மழந்து கொண்டிருக்கும் எதியோப்பியாவும் சரி, பணத்தில் புரளும் அமெரிக்கா என்றாலும் சரி, இந்த இரண்டுக்கும் இடையில் தத்தளித்துக் கொண்டிருக்கும் எங்கள் நாடுகள் என்றாலும் சரி. எங்கள் நாட்டு மக்கள் புலம்பெயர்ந்து போய் வாழும் நாடுகளிலும் சரி இந்தச் சண்டைகளுக்குக் குறைவே இல்லை. அங்கே பெரும் பாலும் நடைபெறும் சண்டைகள் சாப்பாட்டுச் சண்டைகளல்ல. பதிலாக கெளரவச் சண்டைகள். தாங்கள் தாங்களாகவே தமக்கு முழகளைத் தூக்கி வைத்துக்கொண்டு தங்களுக்குள் பிழக்கும் சக்கரவர்த்திச் சண்டைகள்” இத்தகைய விவரணங்கள், ஆசிரியர் தமது அறிவையும் அகன்ற அனுபவத்தையும் பொருத்தமான இடங்களில் பயன்படுத்திக் கொள்ளும் முறைமைக்குச் சான்றாகின்றன.
“கிராமத்துப் பெரிய வீட்டுக்காரி”, “மெயின் லோஞ்ச்" ஆகியவை ஒருசேரப் பார்க்கவேண்டிய கதைகள். இக்கதைகள் நிறைவேறாக் காதலின் வலிகளைச் சித்தரிப்பவை. வாழ்க்கையின் கூறுகளை நேர்மையாகவும் உருக்கமாகவும் விவரிக்கும் இக்கதைகள் மானிடத்தின்

Page 6
8
இலலிதங்களை, இனிமைகளை மட்டுமன்றி, இன்னல்களை, இடர்களை, இழப்புக்களை கலாநேர்த்தியுடன் சித்தரிக்கின்றன. ஒரு சிறுகதையைப் பழத்து முழத்ததும் அது தரும் உணர்வுகள் பழப்பவர் மனதில் தொற்றிநிற்குமானால் அல்லது அதிர்வினை ஏற்படுத்துமானால் அதனை ஒரு சிறந்த சிறுகதையாகக் கொள்ளலாம். இத்தகைய சிறப்புக்களை இக்கதைகளிலே நாம் காணக்கூடியதாக உள்ளது.
"கழிப்பு” என்ற சிறுகதையில், நம்மவர்கள் சிலர் புலம்பெயர்ந்து சென்ற பின்னரும் சாதி ஏற்றத்தாழ்வு களையும் மேட்டுக்குழப் பெருமைகளையும் கைவிடாது பேணிக்காத்து வரும் ஒரு நிலையைக் காண்கிறோம். அகமன அழுக்குகள், வாழ்நிலை வக்கிரங்கள், எவ்வாறெல்லாம் நம்ம வர்கள் சிலரை புலம்பெயர்ந்த பின்பும் ஆட்ழப்படைக்கின்றன என்பதை இக்கதையிலே தரிசிக்க முழகிறது.
“செல்வி ஏன் அழுகிறாள்?”, “வலி” ஆகிய கதை களில் போர்க்கால அவலங்களும், அழிவுகளும் இடப்பெயர்வு களும் மிக அவதானிப்புடன் சித்தரிக்கப்பட்டிருக்கின்றன. “செல்வி ஏன் அழுகிறாள்?” என்ற கதை இடம்பெயரும் போது ஏற்படும் அவலங்களையம், அகதி முகாமொன்றில் ஒரு பெண்ணுக்கு ஏற்படும் சொல்லொணாத் துயரங்களையும் சித்தரிக்கின்றன. “வலி” என்ற கதை அகதி முகாமொன்றில் ஏற்படுகின்ற சிறுவர் துஷ்பிரயோகத்தை வெளிப்படுத்துகிறது. இக்கதைகளில் மனித இன்னல்கள், மனித அவல நிலை உள்ளிடாகவும் நேரடியாகவும் எடுத்துப் பேசப்படுகின்றன.
மக்கள் வாழ்வியலின் நெருக்கழகளிலிருந்துதான் இலக்கியம் தோன்றுகிறது. வாழ்வியல் நெருக்கழகளுக்கு எதிர்வினை என்ற முறையிலேதான் படைப்புகள்

9
அமைவதையும் கண்டுகொள்ளலாம். அவ்வகையில் “அகால மரணம்” என்ற கதையில், இயக்கத்தில் சேர்ந்து போர்க்களத்தில் இறந்துவிட்ட ஒர் இளம்பெண்ணின் உடலை நிர்வாணப்படுத்திக் காட்சிப்படுத்துகின்ற ஓர் இழிநிலைமையைக் கண்ட அவளது வயோதியப் பேரன் தன்னுயிரைத் தானே மாய்த்துக்கொள்ளும் அவலத்தைக் காண்கிறோம். சிறுகதை என்பது, குறித்த ஒரு கழ்நிலையின் அழயாக அல்லது சம்பவத்தின் அழயாக ஏற்படுகின்ற உணர்வு நிலையின் தர்க்கரீதியான பரிணாம மாகும். மேற்படி உணர்வு நிலை தொய்வடையாத வகையில் செறிவான சொற்களால் செய்நேர்த்தியுடன் இக்கதையைக் கட்டியமைத்திருக்கிறார் ஜீவகுமாரன்.
புலம்பெயர் நாடுகளுக்கு எமது பெண்கள் திருமண மாகிச் செல்லும்போது சிலருக்கு ஏற்படும் துரதிர்ஷ்டமான நிலைமைகளைப் பத்திரிகைகள் வாயிலாகவும், பலர் சொல்லக் கேட்டும் அறிந்திருக்கிறோம், சிலர் அனுபவ ரீதியாகவும் அறிந்திருப்பார்கள். "கோமதி” என்ற குறுநாவலில், புலம் பெயர்ந்த நாடொன்றுக்குத் திருமணமாகிச் சென்ற பெண் ணொருத்திக்கு ஏற்படும் அவலத்தையும் அதன் காரணமாக அவளது மனநிலை பாதிக்கப்படுவதையும் காண்கிறோம். நமது பாரம்பரியச் சமூகப் பெறுமானங்களின் தகர்வை, இழபாடுகளை, மாறிவரும் சமூக விழுமியங்களுக்கும் அவலங்களுக்கும் மத்தில் தமது இருப்பை அர்த்தப்படுத்திக் கொள்ள முயலும் ஒரு மனிதனின் நாமுத்துழப்பு இங்கே பதிவு செய்யப்படுகிறது. அவளின் மீது எமக்கு பரிவும் பாசமும் ஏற்படுகின்றன. எளிமையும் இனிமையும் சேர்ந்த நடைச்சிறப்பு இக் குறுநாவலுக்கு மேலும் வளம் சேர்க்கிறது.
இத்தொகுப்பின் மகுடக்கதையாக அமைவது "சங்கானைச் சண்டியன்” என்ற குறுநாவல். “கிறிஸ்துவுக்கு முன், கிறிஸ்துவுக்குப்

Page 7
10
பின் என்பது போல இலங்கையில் ஆயுதப் போராட்டத்திற்கு முன். ஆயுதப் போராட்டத்திற்குப் பின். மேலும் ஆயுதங்கள் மெளனமாகிவிட்ட காலம் என மூன்று கட்டங்களாகப் பிரித்துக் கொள்ள முடியும். அவ்வகையில் இது ஆயுதப் போராட்டத்திற்கு முன்னான கதை
அனைத்துத் தொகுதிகளிலும், “எங்களையே அனுப்புங்கள். உங்களுக்கு தனித்தமிழ் நாட்டைப் பெற்றுத் தருவோம்" என தமிழர் கூட்டணியினர் வாக்குறுதியளித்து பாராளுமன்றம் சென்ற காலகட்டத்தில் நடந்ததாகப் புனையப் பட்ட கதை!”
இவ்வாறு ஓர் எள்ளலுடன் இந்தக் குறுநாவலை ஆரம்பித்து சுவை குன்றாமல் நகர்த்திச் செல்கிறார் ஜீவகுமாரன். சங்கனைக் கிராமம், அவரது படைப்பியல் தொழிற்பாட்டுக்குத் தளமாக அமைகிறது. இக்குறுநாவலில் தனது இலக்கு பற்றிய பூரணத் தெளிவோடு ஆசிரியர் தனது சிருஷ்டியில் ஈடுபட்டிருப்பதை உய்த்துணர முழகிறது.
போரினால் இன்று தமிழ்க்கிராமங்கள் பல சிதை வடைந்துள்ளன. ஒரு காலகட்டத்தில் சங்கானைக் கிராமம் எத்தகைய பலத்தோடும் பலவீனத்தோடும் இருந்தது. அங்கு வாழ்ந்த ழக்களின் எண்ணங்கள், சிந்தனைகள், நம்பிக்கைகள்,
வழக்கங்கள், குணவியல்புகள், முரண் படுகின்ற தன்மைகள், குடும்ப உறவின் ஒப்பில்லாப் பெருமைகள், அவர்கள் வாழ்ந்த கழல், அவர்களது அரசியல் குரோதங்கள், அவற்றினால் ஏற்படுகின்ற கொலைகள் இவையாவும் எப்பழ இருந்தனவோ அப்பழயே இக்குறுநாவலில் சித்தரிக்கப்பட்டிருக்கின்றன. இற்றைக்கு மூன்று, நான்கு தசாப்தங்களுக்கு முன்னர்

11
யாழ்ப்பாணக் கிராமங்களின் இயக்கம் எவ்வாறிருந்தது என்பதை அறிந்து கொள்ள விரும்பும் ஓர் ஆய்வாளனுக்கு இந்தசங்கானைச் சண்டியன் குறுநாவலைச் சிபாரிசு செய்யலாம் எனக் கொள்ளுமளவிற்கு இக்குறுநாவல் ஆவணப் பெறுமானம் வாய்ந்தது.
ஜீவகுமாரனின் கதைகளின் சமூகப்பெறுமானம் யாது? என்று நோக்கினால், அவரது கதைகள் பலவற்றிலும் மனித நேயமே அழநாதமாகத் தொனிக்கிறது. மனித அவல விடுவிப்புத்தான் உண்மையான கலை இலக்கியத்தின் தேடற் பொருளாகும். ஜீவகுமாரனின் கதைகள் பலவும் இவற்றையே எமக்கு எடுத்தியம்புகின்றன.
ஜீவகுமாரனின் இத்தொகுப்பு தமிழிலக்கியத்திற்கு ஒரு சிறந்த வரவு என்பதில் எவ்வித ஐயமுமில்லை. அவருக்கு மேலும் பல வெற்றிகள் கிட்டவேண்டுமென வாழ்த்துகிறேன்.
தி. ஞானசேகரன் "ஞானம்" சஞ்சிகை ஆசிரியர்
3பி, 46வது ஒழுங்கை வெள்ளவத்தை. O4-09-2009
தொலைபேசி- +94 12586013

Page 8
முன்னீடு
யுகமாயினி சென்னையில் மாதாந்தம் நடத்தும் இலக்கியக் கூடல்களிலே, தமிழ் இலக்கியம் குறித்துக் காத்திரமான கருத்துப் பரிவர்த்தனை நடக்கின்றது. தமிழ்த் தேசியத்தைத் தொலைத்து, தமிழைப் பணம் ஈட்டுவதற்கான, அன்றேல் சில அதிகாரங்களையும் பதவிகளையும் தக்க வைப்பதற்கான ஓர் உபாயம் என்பதற்கு அப்பாலான சிரத்தைகள் இன்றி மரமாகி நிற்கும் ஒரு கூட்டத்தார் மத்தியில், இலக்கிய அடிப்படைகள் பற்றிய அக்கறைகளை உசுப்பி விடுதல் சங்கையான முயற்சி; சந்தேகமில்லை.
கருத்தரங்கில் விஷயம் அறிந்த பேராசிரியர்கள், விமர்சக ஜாம்பவான்கள், மூத்த எழுத்தாளர்கள், இலக்கிய முன்னெடுப்பில் மானசீகப் பற்றுள்ள இளைஞர்கள் எனப் பலரும் தமது கருத்துக்களை முன்வைத்து வழக்காடுதல் நன்னிமித்தமே. பின்நவீனத்துவம்', 'அமைப்பியல் வாதம், இலக்கியம் குறித்து இன்று மனைகோலும் தத்துவங்கள் பற்றி எல்லாம் பேசப்பட்டன. இன்று சகலமும் உலகமய மாக்கலிலே சிக்கிச் சுழலும்போது, தமிழ் இலக்கியப் போக்குகள் இந்தப் புதிய இலக்கிய வாதங்களிலிருந்து தப்பித்துக் கொள்ள முடியாது என்கிற அபியாயம் பெரும்பான்மையாகவும், தமிழ் இலக்கிய மரபுகளை நாம் முழுமையாகத் தொலைத் துவிடலாகாது என்கிற ஆதங்கம் சிறுபான்மையாகவும் ஒலித்தன. மூன்று மாதக் கருத்துக் கலகத்தின் முத்தாய்ப் பாக என்னுடைய அநுபவங்களை அவர்களுடன் பகிர்ந்து கொண்டேன். அதனை இந்த 'முன்னீடு'வுக்குத் தோற்று வாயாக அமைத்தல் மிகவும் பொருந்தும்.
கொள்கை என்கிற சொல்லின் வேரடியாக வந்தது கோட்பாடு. ஆனாலும், இரண்டும் ஒன்றல்ல. இரண்டையும் போட்டுக் குழப்புதல் அறிவுப் பிசக்கலுக்கு வழிகோலும். கொள்கை என்பது நெறிமுறை. சமரசமற்ற பற்றுறுதி. Theoryஐயும், கொள்கை எனக்கூறும் இடங்களும் உண்டு. அறிவுபூர்வமாக ஆராய்ந்து ஆதாரங்களும் முன் வைக்கப் படும் பொழுது ஒரு கோட்பாடு கொள்கையாக உயரலாம்.

13
E=mc என்கிற சார்பியல் கொள்கை அத்தகையதே. ஆனால், இலக்கியம் சம்பந்தமாக உலாவரும் கோட்பாடுகள் கொள்கைகள் அல்ல. சில பொதுமைகளை அடிப்படையாகக் கொண்ட, தர்க்கபூர்வமான எத்தனங்களே இலக்கியத்தில் கோட்பாடு களாக வலம் வருகின்றன. மனோரதியம், நவீனத்துவம், இயல்புவாதம், யதார்த்தவாதம், சோஷலிஷ யதார்த்தவாதம், மாந்திரீக யதார்த்தவாதம், பின் நவீனத்துவம், அமைப்பியல் வாதம் என்றெல்லாம் காலத்துக்குக் காலம் விமர்சனம் என்கிற பெயரால் பரப்புரை செய்கிறார்கள். அவர்கள் கோட்பாடுகள் பலவற்றைப் பற்றி விஸ்தாரமாகவோ அன்றேல் வித்தார மாகவோ பேசுகிறார்கள் எழுதுகிறார்கள். படைப்பிலக்கிய நபுஞ்சகர்கள் இலக்கியவாதிகளாக உயர இந்த 'வித்துவம்' உதவலாம். உண்மையைச் சொன்னால் இந்த வித்துவத் தண்டால்கள் பல எனக்கு விளங்குவதில்லை. அதைப் பற்றி, எனக்குத் துக்கமோ கவலையோ இல்லை. நான் பரம காட்டானாக இருப்பதே எனக்குத் திருப்தி தருகின்றது. இப்படி எடுத்தடி மடக்காகச் சொல்லுதல் தப்புகை உத்தி அல்ல. சமர்க்களத்தில் புறமுதுகிடுதல் என் இயல்பும் அல்ல. காட்டானாக வாழுதல் என் கொள்கை. கோட்பாடுகள் என் கொள்கையை அசைப்பதில்லை.
இதற்கு இன்றும் சில விளக்கங்கள் தேவை என்று உங்களிலே சிலர் நினைக்கலாம். அதனை ஆட்சேபித்தல் என் தர்மமல்ல. இன்று முகிழ்ந்து வரும் இலக்கியப் போக்கு களைப் பார்க்கின்றேன். இருபதாம் நூற்றாண்டின் முற் பகுதியில் வாகாக வலம் வந்த மனோரதியம் - மிகுகற்பனை - என்று சொல்லப்படும் Romanticism என்கிற வகை எழுத்துக்கள் இன்று புத்தாயிரத்தில் மறுஅவதாரம் எடுத்துள்ளதாகத் தோன்றுகின்றது. ஏன் இந்த மாற்றம்? இலக்கியக் கோட் பாடுகள் என்று பரப்புரை செய்யப்படுபவை பெரும்பாலும் Fads ஆகவும் Fashions ஆகவும் உலா வருபவை. அவற்றுக்கு எப்பொழுதும் ஆயுசு கம்மி. அறுபதுகளிலே வரிந்து கட்டிக் கொண்டு முற்போக்கு இலக்கியம் பற்றிப் பேசிய சநாதனக் கோட்பாளர்களுடன் கோதாவில் இறங்கி மல்யுத்தம் செய்தேன். What a colossal waste of time and energy gaipl -91.55 (upp(5urtig, இலக்கியக் கோட்பாடு காலத்தால் வெற்று வார்த்தை

Page 9
14
அலம்பல்கள் என்பது அம்பலமாகி விட்டது. அப்படியானால், இலக்கியஞ் சார்ந்த கோட்பாடுகள் இல்லையா என்று நீங்கள் கேட்கலாம். இல்லை என்பது என் மதம். இலக்கியத்திற்கு நிச்சயமாகக் கொள்கை உண்டு. இலக்கு உண்டு. அதற்கு மாறாத்தன்மைகளும், மாறும் தன்மைகளும் உண்டு. அவற்றை நிதானித்து இனங்கண்டு, என் தனித்துவத்தைத் தொலைக்காது அநுசரித்துத் தமிழ் செய்தலே அறுபது ஆண்டுகளுக்கு மேலான என் இலக்கிய ஊழியாக நிலைத்துள்ளது.
Y.
'பழையன கழிதலும் புதியன புகுதலும் வழுவல“ என்று இலக்கணம் வகுத்தவன் தமிழன். கழித்தலும், புகுத்தலும் என்று அவன் சொல்லவில்லை. கழித்தலையும் புகுத்தலையும் செய்ய முனைவோரையே நான் கோட்பாட்டாளர்கள் என்று நிராகரிக்கின்றேன். அவர்கள் ஒரு வகையில் வன்முறையாளர். கழிதலையும் புகுதலையும் ஏற்றுக் கொள்பவர்கள் கொள்கை யாளர். சங்கம் தொட்டு, பாரதி வரையிலும், அதன் பின்னரும் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு மேற்பட்ட தமிழ் இலக்கியச் செழுமைகளை முதுசொமாகப் பெறும் வாய்ப்பை இந்தக் கொள்கை சகாயித்துள்ளது.
மனிதம், மொழி, மரபு, உண்மை, உணர்ச்சி, சுவைப்பு, நெகிழ்ச்சி ஆகிய பல அம்சங்கள் இலக்கியத்துடன் சம்பந்தப் பட்டிருக்கின்றன. இலக்கியம் அடிப்படையில் கலை. கலையின் ஆன்மா அல்லது உயிர் மனிதத்தைச் சேவித்தல். மனித சேவிப்பு நம்மை எல்லாப் பிறவிகளுக்கும் மேலான பிறவியாக உயர்த்து கின்றது. கலையால் - இலக்கியத்தால் - அந்த நிமிர்வு அல்லது உயர்த்தல் நிகழுதல் வேண்டும். அதற்குக் கோட்பாடு தடையாக இருந்தால், அதனை நிராகரித்தல் தர்மம்.
கல் சிற்பத்திற்கான ஊடகம். சொல் இலக்கியத்திற்கான ஊடகம். அந்தச் சொல்லைத்தான் நாம் மொழி என விளங்கிக் கொள்ளுதல் வேண்டும். சொற்களை அடுக்கும் கொத்தனார் வேலைகளை மேற்கொள்பவனல்லன் படைப்பாளி. சொற்களைச் செதுக்கி, அதற்குப் பொருத்தச்சுருதி இசைத்தும் இணைத்தும் மொழியைச் செழிக்கச் செய்யும் பிரம்மாவே இலக்கியப் படைப் பாளி. இந்த மொழி இன்றி இலக்கியம் இல்லை. ஒவ்வொரு மொழிக்கும் தனி இயல்புகளும், வல்லமைகளும் உண்டு. இதனை

15
நாம் மறந்துவிடலாகாது. கிரேக்கம் தத்துவத்துக்கான மொழி யாகவும், லத்தீன் சட்டத்துக்கான மொழியாகவும் திகழ்ந்தன. ஹைகூவுக்கு ஏற்றது சென்பெளத்தத்தில் தோய்ந்த ஜப்பான் மொழி. இவற்றைக் கோட்டை விட்டுவிட்டு, அரசியல் - வணிகம் சார்ந்த போக்குகளை அநுசரித்து இலக்கியக் கோட் பாடுகளை வரித்துக் கொள்ளுதல் ஒரு fad மட்டுமே. அன்று ரூஷ்யாவை வைத்து முற்போக்கு இலக்கியக் கோட்பாடு வகுத்தோம். இன்று? வன்னியில் நடத்தப்பட்ட ராஜபக்ஷேக்கள் வெறியாட்டமே உச்ச மனித உரிமை உபாசனை என்று ரூஷியா கூச்ச நாச்சமின்றி வாதாடுகின்றது. எத்தகைய வீழ்ச்சி! இதனாலேதான், இலக்கியத்தின் மொழி அம்சம் குறித்து, தமிழ்த்துவம் என்று பேசுகின்றேன். தமிழ்க்கூறு செப்பமாக அமையாது தமிழ் இலக்கியம் தகைதல் சாத்தியமே அல்ல.
மொழி என்பது அகராதியிலே தொகுக்கப்பட்ட ஒரு மொழியின் சொற்களும் அதன் அர்த்தங்களும் மட்டுமல்ல. அந்தச் சொல்கள் பல காலத்தால் வீழ்கின்றன. வேறு சொற்கள் தோன்றுகின்றன. இந்தக் கழிதலையும் புகுதலையும் பல்வேறு காரணங்கள் சகாயிக்கின்றன. சங்க இலக்கியச் சுவைப்பிலே தோய்பவர்கள் இதனைச் சுலபத்தில் இனங்காணுவர். மண்ணுக்கும், மக்களுடைய வாழ்க்கைக்கும், அவர்கள் நம்பிக்கைகளுக்கும், சடங்கு சம்பிரதாயங்களுக்கும் இதில் பங்குண்டு. இதன் காரண மாக அமேரிக்க ஆங்கிலத்திற்கும், இங்கிலாந்து ஆங்கிலத்திற்கும் வேறுபாடு உள்ளது போல, தமிழ்நாட்டுத் தமிழுக்கும் ஈழ நாட்டுத் தமிழுக்கும் வேறுபாடு உண்டு. இந்த வேறுபாடுகளை உள்வாங்கி, உண்மையின் பரமார்த்த உபாசகனாய் மொழியிலே கலை படைத்தலையே புனைவு இலக்கியம் என்றும் அர்த்தப்படுத்திக் கொள்ளலாம்.
மொழி அல்லது இலக்கியப் படைப்புக்கான சொல் பற்றி தமிழ் ஈழன் மிக விழிப்புடன் வாழ்கின்றான். வரலாறு, பண்பாடு, சமூகவழக்காறு, உடனடி அயலவர்களாக வாழும் பிற சமூகத்தினரின் உறவு ஆகிய பல ஏதுக்கள் தொற்றி, சொற்களின் பயிற்சி உயிர்ப்புப் பெறுகின்றன. இந்தச் சொற்களின் இசைப்பும் அவனுடைய படைப்புக்கு அலாதியான மண்மணஞ் சேர்க்கின்றது. அதற்குத் தனி அகராதி தேவை என்று அலறுதல்

Page 10
16 பேதைமை. இஃது இலக்கியச் சுவைப்பின் அப்பட்ட கற்பழிப்பு நிகர்த்தது!
மரபு என்பது பலரால் பலகாலம் ஏற்றுக்கொள்ளப்பட்ட நியதி. இந்த நியதிகளையும் மதஞ்சார்ந்த நம்பிக்கைகளையும் போட்டுக் குழப்பக்கூடாது. ஒரு மொழிக்கும், அந்த மொழி பேசுபவர்கள் ஒரு குறிப்பிட்ட நிலப்பரப்பிலே வாழ்ந்து, அவர்கள் பயின்ற சடங்கு சம்பிரதாயங்களினால் முகிழ்ந்தவையே மரபு. மொழியின் அச்சாணி இந்த மரபுடன் சம்பந்தப்பட்டது. மரபு 6Teirl gy the still point of a turning wheel. Jj660a Gugi Sigil பிறிதாகிவிடும் சேரர் தமிழிலே மலையாளம் தோன்றியது போல! ஒருத்துவம் பார்த்து, மண்ணின் தனித்துவச் சடங்குகளைத் துறத்தலும் ஆகாது. புலம்பெயர்ந்தோர் இலக்கியத்தில் மொழியின் பயிற்சியில் இந்தக் கொள்கையைக் கடைப்பிடிப் பதினாலேயே தமது தனித்துவத்தைத் தக்க வைக்கிறார்கள்.
உண்மையை நாம் இலக்கியத்திலே உண்மையின் இடத்தில் வைக்கத் தக்க புனைவு என்று விளங்கிக் கொள்ளலாம். உணர்ச்சியும் உயிர்ப்பும் வெவ்வேறல்ல. உயிர்ப்பின் ரோஷமான அடையாளம் உணர்ச்சியே. இலக்கியச் சுவைப்பிலே, மகிழ்ச்சி யல்ல, நெகிழ்ச்சி நிகழுதல் வேண்டும். இந்த இரண்டு அம்சங் களும் நல்ல இலக்கியப்படைப்பின் பின்விளைவுகளாக ஏற்படுபவை. நெகிழ்ச்சியிலே கண்ணீர், அழுகை, கோபம், வெறுப்பு, பாசம், சிரிப்பு, வியப்பு, சிலிர்ப்பு எல்லாமே சாத்தியம். இவற்றின் இணைப்பே ஆநந்த!
இன்னும் ஒன்று நமது சிரத்தைக்குரியது. சுவைப்பினை - இலக்கியச் சுவைப்பினை - நெறிப்படுத்தலாம் என்று இலக்கியக் கோட்பாட்டாளரும் விமர்சகர்களும் காலம் காலமாக முயன்று வந்துள்ளனர். அவர்கள் தமது முயற்சியில் வெற்றிபெறவில்லை. 6)6) apGT Guņšģ56)6), One mans meat is another mans poison என்பதுதான் யதார்த்தம். மகிழ்ச்சி அல்ல, நெகிழ்ச்சியே இலக்கியத்தின் பலிதம் என்று நான் அழுத்திச் சொல்லுகின்றேன். மகிழ்ச்சி வேறுபலவற்றுடன் சார்புபட்டுள்ளது. நெகிழ்ச்சி மானிடத்தின் கலப்படமற்ற பிரதிபலிப்பு மாந்த நேயத்தின் பிறிதொரு வடிவம்! இந்த நெகிழ்ச்சி வலி நிறைந்ததாக இருந்தாலும் ஆநந்த, புரையோடிய புண்ணிலே சீழை நசித் தெடுத்தல் வலி நிறைந்தது. அதன் அந்தலை ஆநந்த, இதனைத்

17
தேர்ந்த படைப்பாளி விளங்கிக் கொள்ளுகின்றான். வலிகள் பற்றி எழுதுவது ஏன்?. சோகத்தைப் பெருக்குவது அல்ல. வலிகளி லிருந்து மனசை நெகிழ்ச்சியுறச் செய்தல்; தாங்கும் வலுவினைச் சேர்த்தல். இந்த வலியில் ஆநந்த புரையோடிக் கிடக்கின்றது.
ஜீவகுமாரன் வன்னிச் சம்பவங்கள் குறித்து அடைந்த மன வலிகளை தமது என்னுரையில், ". ஏதாவது ஒருநாடு வன்னியில் தினம் தினம் செத்துக் கொண்டிருக்கும் அவலத்தை நிறுத்துமா எனக் கணினித் திரைக்குள் கண்களைப் பதித்து வைத்துக் கொண்ட' என்கிற தனது கையறுநிலையை வெட்கமின்றிப் பதிவு செய்துள்ளார். படைப்பு எத்தனமே அந்த வலியைப் போக்கும் மருந்து என்பதை உணர்ந்தவர். அந்த உணர்வு அவரை ஒரு படைப்பாளனாக நிமிர்த்துகின்றது. ‘புலம் பெயர்ந்த தமிழனுக்குப் படைப்பு எத்தனம் தாங்க முடியாத சுமைகளை ஒரு கணம் இறக்கி வைத்து ஆசுவாசப் படுத்துவதற்கான சுமை தாங்கியும் என்று முன்னொரு சந்தர்ப்பத்திலே நான் எழுதியது நினைவுக்கு வருகின்றது. இதற்கு அவர் ஒப்புதல் சாட்சியம் அளிக்கின்றார். இந்த ஒப்புதல் அம்மண உண்மை. கொள்கைக்கு உடை தேவையில்லை. அதன் இயல்பே அதன் அழகு.
XXX தமிழர்களைப் போல என்று ஜிவகுமாரன் குறிப்பிடுவது கனடா என்ற மூன்றெழுத்தையா? அல்லது ஈழம் என்ற மூன்றெழுத்தையா? காரணம் இன்று தமிழ்நாட்டிலே தணிக்கை செய்யப்பட்ட சொல் "ஈழம்" என்றும் தோன்று கின்றது. பாதுகாப்பு இயக்கம் நடத்தப் புறப்பட்ட உணர்வாளர் களும், சமரசஞ் செய்து இலங்கை’ என்கிற சொல்லினை நுழைத்திருத்தல் யாரைத் திருப்தி செய்வதற்கு? எந்த வரலாற்றை மூடிமறைப்பதற்கு?
குறுந்தொகையிலே பாலை நிலம் பற்றிய ஒரு பாடல். தோழி கிழத்தியை உடன்போக்கு நயப்பது கூறுவதாகப் பாடப் பட்டுள்ளது. இதனைப் பாடியவர் ஈழத்துப் பூதன் தேவன். சங்க காலத் தமிழுக்கு வளமூட்டக்கூடிய புலமை தமிழ் ஈழனுக்கு இருந்தது என்பதற்கு இந்தப் பாடல் சான்று. ஈழம் என்ற பெய ருடைய ஒரு நாட்டினை சங்கம் வைத்துத் தமிழ் வளர்த்த காலத்திலேயே தமிழ்கூறும் நல்லுலகம் அறிந்திருந்தது. பத்துப் பாடலில் தொகுக்கப்பட்டுள்ள பட்டினப்பாலையில்,

Page 11
18
ஈழத்துணவும் காழகத்த7க்கமும் அரியவும் பெரியவும் நெரிய விண்டி. "(797-792
என்கிற வரிகளினால், அந்தப் பட்டினத்தில் ஈழத்து உணவு தமிழ் மக்களாலே பெரிதும் விரும்பப்பட்டது என்று பதிவாகின்றது. "Made in Elam' 67GirSp Trade - markie, Jiangsui Gol) 9Cl5 LDGyör இருந்தது. இவற்றால் ஈழம் என்கிற நாட்டில் தமிழ்ப் புலமையும், வாழ்க்கையும் செழித்தன என்பது நிறுவப்படும். சிங்கள மொழி தோன்றுவதற்கு முற்பட்ட காலத்தில் ஈழம் சர்வதேசிய அரங்கில் அங்கீகாரம் பெற்றது. சிலப்பதிகாரத்தில் வரந்தரு காதை"யில் "கடல்சூழ் இலங்கை கயவாகு வேந்தனும்’ (160) என்கிற அடி
வருகின்றது. உரைபெறுகட்டுரையில் கடல்சூழ் இலங்கைகயவாகு என்பான்’ என்கிறார் அடியார்க்கு நல்லார். அப்பொழுது சிங்களம் என்கிற ஒரு மொழி தோன்றவேயில்லை. கி. பி. பன்னிரண்டாம் நூற்றாண்டளவில், தாம்பதேனிய காலத்திலேயே சிங்களத்திற்கான இலக்கண நூல் தோன்றிற்று என்பது வரலாறு. தமிழ் மூலமே 'பத்தினி தெய்யோ வழிபாடு ஈழத்துக்குக் கடத்தப்பட்டது. ஈழத்தில் தமிழ்மூலமே மரபுரீதியான சடங்குகள் நிலைத்தன. இந்த உண்மைகள் சிங்களத்தில் அழித்தெழுதப்படுவதற்கான நியாயம் புரிகிறது. தமிழ்நாட்டில்? இந்த மெய்ம்மைகள் தமிழர் தேசிய அடையாளத்தினை மெதுமெதுவாக, ஆனால் நிச்சயமாக இழந்துவரும் நிலையில், தமிழும் ஈழமும் இணைந்த சொல்லாடலும் கருத்தும் தவிர்க்கப்படுகின்றன; தணிக்கை செய்யப்படுகின்றன.
இந்த விஷயங்களைச் சற்றே அழுத்திக்கூறுவதற்கு ஒரு காரணம் உண்டு. தமிழ் ஈழர்களிலே கணிசமான தொகையினர் புலம் பெயர்ந்த தமிழர்களாக வெள்ளைத்தோலர் நாடுகளிலே வாழ்கிறார்கள். இலங்கையிலே பிறந்த அனைவருக்கும் சிங்கள முகம் மட்டுமே உரியது என்று உலகநாடுகள் சபையின் பெரும்பாலான நாடுகள் கருதும் ஒரு சூழ்நிலை உருவாக்கப் பட்டுள்ளது. எனவே, புலம்பெயர்ந்து வாழும் ஈழத்தவருக்கு என்ன முகம்? தமிழ்முகம் மட்டுமே!
அவுஸ்திரேலியத் தமிழர் கனடாத் தமிழர் என்று எழுதுவது சரியானது அல்ல என்று நான் ஒரு தசாப்தமாகப் பேசியும்

19
எழுதியும் வருகின்றேன். தமிழ் அவுஸ்திரேயர், தமிழர்க் கனடியர் என்று சொல்லுதலே சரி. Afro-American என்கிற சொல்லாடல் இதற்கு முன்மாதிரி. பிரஜா உரிமை பெற்ற நாடுதான் ஈற்றிலும், இனத்துவத் தனியடையாளம் முன்னாலும் வருதல் மரபு. நாடற்ற நிலையில் தமிழ்மொழி மூலம் மட்டுமே இனத்துவத் தனித் துவத்தைப் புலம்பெயர்ந்துள்ள தமிழ் ஈழர் புலப்படுத்துதலே இப்பொழுது சாத்தியம். இதில் ஒரு சிக்கலும் உண்டு. ஆறு கோடி இந்தியர்களும் தமிழ்மொழிக்கு உரிமை உடையவர்களாக வாழ்கிறார்கள். அவர்கள் அரசியல் சூழ்நிலைகளாலும், வணிகத் தேவைகளினாலும் வழிநடத்தப்படுவதினால், அவர்களுடைய இலக்கியத் தேவைகளிலே பாரிய சுருதி மாற்றங்கள் ஏற் பட்டுள்ளன. இந்நிலையில் மிகத் தெளிவாகவே தமிழ் ஈழருடைய இலக்கியப் படைப்புகள் தமிழ் இலக்கிய வரலாற்றிலே புதிய முக்கியத்துவம் பெறுகின்றது. இன்று இதனுடைய தனித்துவம், அடர்த்தி, தேடல், படைப்பின் கூறுகள் என்றும் இல்லாத அளவுக்குப் புதிய கோலங்கள் தாங்குதல் தவிர்க்க முடியாததாகின்றது.
தாய்நாடாக இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு மேலாகவும் உரிமை பாராட்டிய மண்ணிலே அவர்கள் தங்களுடைய சுயாதீனத்தையும், இருந்தலையும், எதிர்காலத்தையும் முற்று முழுக்கத் தொலைத்த அகதிகளாகத் தடுமாறுகிறார்கள். அவர்கள் அநுபவிக்கும் துயர்களும், வலிகளும், அவமதிப்புகளும் சத்தான இலக்கியப்படைப்புகளுக்கான விளைநிலங்களேயாயினும், சிங்கள இனவெறி பயிலும் அரச இராகத்தின் கீழ், இலக்கியப் படைப்பாளிகள் தமது ஆளுமையையும், படைப்பாற்றலையும் பிறந்த மண்ணில் நாட்டுதல் சாத்தியமா?
இந்நிலையிலே புலம்பெயர்ந்து வாழும் தமிழ் ஈழப் படைப்பாளிகளே வெற்றிடம் தோன்றாது ஈழத்தின் படைப்பு ஒர்மங்களை முன்னெடுத்துச் செல்லும் பொறுப்பினைச் சுமத்தல் வேண்டும். பிறிவிலில் ஒடிக்கொண்டு வைர விழாக்களும், பவழ விழாக்களும் கொண்டாடியது போதும். இந்த விழாக்கள் இயலாமைகளின் நெட்டைப் பெருமூச்சு என்றே நான் கருது கின்றேன். புத்தம் புதியவர்கள், புதிய தேவைகளை உள்வாங்கி, சத்திய ஈடுபாட்டுடன் ஈழத் தமிழை வளப்படுத்த முன் வருதல் வேண்டும். அவ்வாறு வந்தவர்களுள் விஸ்வரூப வளர்ச்சி கண்டு

Page 12
20
உழைப்பவர் ஜீவகுமாரன். இதனாலும், இந்த முன்னிடு எழுதுதல் சுகமான அநுபவமாக இனிக்கின்றது.
'சங்கானைச் சண்டியன்' என்கிற மகுடத்தில் வெளிவரும் இக்கதைக் கோவையில் பன்னிரண்டு கதைகள் தொகுக்கப் பட்டுள்ளன. நீளத்தினை மட்டுமே இலக்கணமாகக் கொண்டு அவற்றுள் இரண்டு குறுநாவல்களாக வகைப்படுத்தப்பட்டுள்ளன. இதிலே 'சண்டியன் முழுக்க முழுக்க ஜீவகுமாரன் பிறந்து, தவழ்ந்து, நடந்து மண் அளைந்து, சுதந்திரம் சுவாசித்து வாழ்ந்த சங்கானையே கதை நிகழ் களமாகக் கொண்டுள்ளது. இளமைப் பருவத்தில் நனவிடை தேர்யும் பொழுது, இந்தச் சண்டியர்களைப் பற்றிய நினைவுகளைத் தவிர்க்கமுடியாது. அவ்வாறு பல சண்டியர்களைப் பற்றி, அழுக்கடை சண்முகம் உட்பட, என் நனவிடை தோய்தலில் நான் நினைவு கூர்ந்தேன். அவை வெறும் sketch போன்றோ அன்றேல் caricatures போன்றோ நினைவில் எழுந்தவை. ஜிவகுமாரனின் இலக்கிய வெற்றி அந்தச் சங்கானைச் சண்டியனைப் பற்றி ஒரு வரலாற்று ஆவணம் தயாரித்துத் தந்துள்ளமைதான்.
சண்டைக்காரன் என்ற சொல்தான் பண்டைய வழக்கு. அப்புறம் ROwdy, Rogue என்ற அர்த்தங்களுக்கு இசைவாக இருபதாம் நூற்றாண்டில் தமிழுக்கு வந்த சொல் சண்டியன். இந்தச் சண்டியர்கள் உருவாக்கப்படும் பகைப்புலம் அரசியல் அதிகாரம் தேர்தல் காலத்தில், அரசியல்வாதிகளுக்கு மிகவும் பக்கபலமாக இருந்தவர்கள் சண்டியர்கள். அக்காலத்தில் முன்னணி அரசியல்வாதிகளாகப் 'பிழைப்பு நடத்திய அனை வருமே வழக்குரைஞர்களே. இராமநாதன், பொன்னம்பலம், சுந்தரலிங்கம், செல்வநாயகம், திருச்செல்வம், சிவசிதம்பரம், அமிர்தலிங்கம் என்று யாரை எடுத்துக் கொண்டாலும் அவர்கள் வழக்குரைஞர்கள். அவர்கள் சண்டியர்களுக்கு ஆதரவு. சண்டியர்கள் இவர்களுக்கு ஆதரவு. பரஸ்பரம் ஆதாயம் சுகித்தார்கள். சண்டியர்களின் இடத்துக்கு இயக்கப் பொடியன்கள்களை உருவாக்கியவர்களும் அரசியல்வாதிகள். இந்த சமூகவியல் நுட்பங்களை நேர்மையின் உபாசகனாய்ப் பதிவு செய்துள்ளதினால், தமிழ் ஈழ இலக்கிய அக்கறைகளின் எல்லையை ஜீவகுமாரன் அகலிக்கிறார். வரலாற்று நிகழ்வுகளைப்

21
படைப்பாளியாக நோக்குவதிலே புதிய கோணமும் தரிசனமும் ஏற்படுத்துவதில் வெற்றியும் சாதிக்கின்றார்.
இதில் பத்துச் சிறுகதைகள் இடம் பெறுகின்றன. சில வன்னியின் அவலங்கள் பற்றியும் பேசுகின்றன. வேறு சில புலம் பெயர்ந்து ஜீவிக்கும் தமிழ் ஈழர் பாவனை பேசி வாழும் அவலங்களைப் பற்றியும் பேசுகின்றன. சடங்கு, சம்பிரதாயங் களின் வழியாகவும் தமிழ் அடையாளம் கிடைக்கின்றது என்ற உண்மையின் தரிசனம் பெற்றவராக ஜீவகுமாரன் படைப் பிலக்கியம் இயற்றுதல் மன நிறைவினைத் தருகின்றது. இந்தச் சடங்கு சம்பிரதாயங்கள் 'காகம் கொந்திக் கொண்டு போகும் வடையாக' மாறும் அவலம், வன்னித் திறந்தவெளிச் சிறைச்சாலையில் மாதவிடாய்கண்ட பெண்தன்பாவாடையைக் கிழித்து Sanitary - pad ஆகப் பயன்படுத்தும் அவலம், அகதி முகாமில் அடைபட்டிருக்கும் சிறுவர்கள் இலங்கைக்கு அந்நியச் செலாவணி கொண்டுவரும் உல்லாசப்பயணிகளின் பாலுணர்வு வக்கிரங்களுக்குப் பலியாக்கப்படும் சோகம் ஆகிய பல புதிய அநுபவங்களின் ஊடாக நம்மை அழைத்துச் செல்கின்றார். சின்னச் சின்ன ஹைகூக் கவிதைபோல நினைவுத் தவத்துடனும், பனங்கிழங்குக் கீற்றுடனும் வரும் பெரிய வீட்டுக்காரியும், இயக்கத்துக்குச் சென்ற காதலியின் கதையான "மெயில் லோஞ்சும் காதல் நினைவுகள் போன்று கோலங்காட்டி னாலும், அவை யாழ்ப்பாண மண்ணின் சில அடம்பிடித்த நம்பிக்கைகளைச் சொல்லும் நுட்பத்தையும் தன்னுடன் இணைத்துள்ளன. வேட்டையும் நானும் ஒரு அகதியாக." என்கிற இரண்டு சிறுகதைகளும் கதைசொல்லியாக புதிய பரிமாணங்களைத் தொடும் எத்தனத்திலே ஜீவகுமாரன் அடையும் வெற்றிகளுக்கு சான்றாகவும் அமைகின்றன.
சீட்டு, மொழிபெயர்ப்பு, கழிப்பு, கோமதி ஆகிய கதை களின் பகைப்புலம் டென்மார்க், இப்பொழுது குடியுரிமை ஏற்றுள்ள நாடு. இங்கு வாழும் தமிழர்கள் ஊரில் சடங்கு சம்பிரதாயங்களிலே மேன்மையானவையை மட்டுமல்லாமல், குப்பைகளையும் சக்கைகளையும் அள்ளி வந்துள்ள அவலத்தை நகை தவிர்க்கும் எள்ளலுடன் காட்சிப்படுத்துகின்றார். "கோமதி இதில் இடம்பெறும் இரண்டாவது குறுநாவல். மீண்டும் இலக்கியச் சுவைப்புக்கு வந்துள்ள மிகு கற்பனை சார்ந்ததாகக்

Page 13
22
கோலம் காட்டுகின்றது. மனைவியைக் கற்பழிக்கும் ஒருவனுக்கு, வன்னி அவலங்களுக்கு எதிராகப் பதாதை தூக்கும் அந்த ஆண்மையற்ற' தமிழனுக்கு, எதிராகச் சுழற்றும் சாட்டை சுளிர். இந்த கதையில் கோமதியின் அம்மாவின் கனவு ஒன்று இழைக்கப்பட்டுள்ளது, அந்தக் கனவு யாழ்மண்ணின் சடங்கு சம்பிரதாயங்களின் ஆணிவேரை அச்சாவாக இனங் காணுகிறது.
புலம்பெயர்ந்தோர் படைப்பு இலக்கியம் பயணிக்க வேண்டிய பாதையைத் தெளிவாக உணர்ந்து ஜீவகுமாரன் எழுதுவதினால் முக்கியமர்ன எழுத்தாளராகத் திமிர்த்து வருதல் மகிழ்ச்சியைத் தருகின்றது. இதுவரை மூன்று படைப்பிலக்கியத் தொகுதிகளை ஜீவகுமாரன் தந்துள்ளார். இரண்டு ஆண்டு களுக்குள் மூன்று தொகுதிகள் தருதல் சாதனையே. இலக்கிய வெற்றிகள் எண்ணிக்கை கொண்டு கணிக்கப்படுவன அல்ல. ஆனால், மூன்று தொகுதிகளின் ஊடாக அவர் படைப் பிலக்கியத் துறையிலே காட்டும் வளர்ச்சி பெருமிதமானது. இன்னொரு வகையிலும் எனக்கு நிறைவு. ‘புத்தாயிரத்தில் புலம் பெயர்ந்த ஈழத்தமிழர்களே தமிழ்ப் படைப்பிலக்கியத்துத் தலைமை தாங்குபவர்கள்’ என்கிற என் எதிர்வு கூறலை மெய்ப்பிக்க உழைக்கும் படைப்பாளிகளுள் ஜீவகுமாரன் முக்கியமானவர்.
Hat - trick என்பது அடுத்தடுத்த பந்துகளில் மூன்று விக்கெட்டுகளைச் சரிப்பது மட்டுமல்ல. அடுத்தடுத்து மும் முறை கிடைக்கும் வெற்றிகளும் Hat - trick தான். ஜீவகுமாரன் எழுத்தில் இந்த வெற்றியைச் சாதித்துள்ளார் என்பதை சொல்லும் umpire ஆக நான் இருந்தமை என் இலக்கிய ஊழியத்தில் இனிமையான அநுபவம். ஜீவகுமாரனின் வளர்ச்சியைக் கண்டு பெருமிதப்படுகின்றேன். இன்னும் புதிய உச்சங்களை அடைய என் வாழ்த்துகள்.
Tsu. 6LT
1/23 Mumo street Eastwood NSW 212, Australia
R: (612) 9868 2567

என்னுரை
மீண்டும் ஒருமுறை.
ஒரு குறுகிய காலத்தினுள் இத்தொகுப்பினுாடு உங்களைச் சந்திப்பதில் மகிழ்ச்சி அடைகின்றேன். மக்கள். மக்களால். மக்களுக்காக." என்ற எனது அரசியல் நாவல் வெளிவந்தது சித்திரை மாதம். இப்பொழுது ஆவணி.
இவ்வளவு குறுகிய காலத்தில் ஒரு தொகுப்பை வெளிக் கொணர்வேன் என நானோ. எனது படைப்புகளை வெளிக்கொணர்வதற்கு பக்கத் துணையாக நிற்கும் மித்ரா நிறுவனத்தினரோ நினைத்திருக்கவில்லை.
2008இன் இறுதி தொடக்கம் 2009 வைகாசி வரை உலக மக்களோடு மக்களாக இருந்து அனைத்து இணையத்தளங்களையும். அனைத்து ரீவி. சனல் களையும் தினமும் பார்த்து. பார்த்து. எங்கு எவரைக் கண்டாலும். எப்பிடி அண்ணை சிற்றிவேஷன் இருக்கு எனக் கேட்டபடி. எங்கேயாவது எம் மக்களுக்கு ஒரு விடிவு தோன்றுமா. எங்கேயாவது ஒரு நாடு யுத்த நிறுத்தத்தைக் கொண்டு வந்து வன்னியில் தினம் தினம்

Page 14
24
செத்துக் கொண்டிருக்கும் அவலத்தை நிறுத்துமா என கணினித் திரையினுள் கண்களைப் பதித்து வைத்துக் கொண்டு கையாலாகாத நிலையில் இருந்த இலட்சக்கணக்கான புலம் பெயர்ந்த தமிழர்களில் நானும் ஒருவன். ஆயுதங்கள் மெளனமாக்கப்பட்டு விட்டன என்ற செய்தியும், மக்கள் கம்பி வேலிகளுக்குள் அடைக்கப் பட்டு விட்டார்கள் என்ற செய்தியும் ஒன்றாக வந்தபோது உலகம் முழுக்க ஒரு நாளில் தோன்றிய வெற்றிடம். அல்லது அதன் வெறுமையை எனது தனிப்பட்ட சொந்த வாழ்வில் கூட அனுபவித்து இருக்கவில்லை. சின்னப் பையனாக அரைக்கால் சட்டையுடன் திரிந்த காலத்தில். தமிழ் ஆராய்ச்சி மகாநாட்டுக் குழப்பத்தில் மக்கள் நசிபட்டு பதினொரு உயிர் நீத்ததிற்கு அடுத்த நாள் யாழ்ப்பாணத்தில் நிலவிய ஒரு மெளனத்திற்குப் பிறகு. மீண்டும் இதை அனுபவித்து இருக்கின்றேன். சுமார் முப்பத்தைந்து ஆண்டுகளுக்குப் பிறகு தோன்றி யிருக்கும் மெளனம். அல்லது வெற்றிடம். அது எவ்வாறு நிரப்பப்பட வேண்டும் என்ற அறிக்கைகள் இப்போது ஆங்காங்கே வரத் தொடங்கி இருக்கின்றன. ஆனால் அதனைத் திரும்பிப் பார்ப்பதற்கு முதல் என் மனதில் தோன்றிய வலிகளை இறக்கி வைக்க. பகிர்ந்து கொள்ள. எனக்கு ஒரு சுமைதாங்கி தேவைப் பட்டது. அதுதான் உங்கள் கைகளில் தவழும் இந்தத் தொகுப்பு

25
வன்னி மண்ணில் வேதனைப்பட்டுக் கொண்டிருக்கும் மக்களின் வலிகள் மட்டும் என்னைத்தாக்குவதில்லை. என்னைச் சுற்றி இருக்கும் எனது மக்களின் வேதனை களும் வலிகளும் அவ்வப்போது என்னைத் தாக்கும். டென்மார்க்கின் பைத்தியக்கார ஆஸ்பத்திரியில் அனு மதிக்கப்பட்டிருக்கும் கோமதி உட்பட இவ்வாறு நான்தார்மீகக் கோபத்தோடும், தாங்கொணாத வேதனைகளோடும் இறக்கி வைத்த பதிவுகள்தான் இந்த பத்து சிறுகதைகளும், இரண்டு குறுநாவல்களும். எனவேதான், யாவும் கற்பனை என்று கதைகளின் முடிவில் போட்டு, நானே உயிர்கொடுத்த கதைகளுக்கு நானே கள்ளிப்பால் கொடுக்கவில்லை.
குளம்பழச்சத்தத்துடன் வரும் குதிரை மீது கம்பீரமாக ஏறிவரும் இளங்கோவனும். மீன் சந்தையில் மற்ற நாய்களோடு சண்டை போட்டுக்கொண்டிருக்கும் உஞ்சுவும். அரைகுறையாக ஆடையைக் கழற்றிப் போட்டு டைத்தியமாக நிற்கும் கோமதியும். ஒரு மனிதனின் வெற்றிக்கும் தோல்விக்கும் உருவகமாய் எங்கேயோ உலாவித் திரிந்து கொண்டிருக்கும் சங்கானைச்சண்டியனும்.
நீங்களும்.
நானும்.

Page 15
26
நன்றிக்குரியவர்கள் குருதி மலை என்ற வீரகேசரிப் பிரசுரத்தினை வாசகர் களாகிய நீங்கள் எத்தனை தடவைகள் வாசித்தீர்களோ தெரியாது. ஆனால் நான் குறைந்தது பத்து தடவை யாவது படித்திருப்பேன். வாழ்வின் வெவ்வேறு கட்டத்தில் அதனை வாசித்தபோது அந்த அந்தக் கட்டத்தில் நான் பெற்றிருந்த வாழ்வின் அனுபவங்கள் அதற்கு வேறு வேறு அர்த்தங்களைக் காட்டி நின்றன.
அப்படியான ஒரு சிறந்த எழுத்தாளரின் அறிமுகமும், இலங்கையில் இருந்து அவர் நடாத்தி வரும் சிறந்த ஒரு இலக்கிய சஞ்சிகையான ஞானம் இதழில் என் கதைகள் பிரசுரமாகக் களம் அமைத்துக் கொடுத்த தற்கும். மேலாக இந்த நூலுக்கு அவர் மனமுவந்து எழுதியிருக்கும் அணிந்துரைக்கும் என்றும் நான் கடப்பாடு உடையவன் ஆகின்றேன். எஸ்.பொ. - ஜெயமோகனின் பாஷையில் சொல்வ தானால் யாழ் நிலத்துப் பாணன்.
கோடம்பாக்கத்தின் ஒரு சந்தில் தன் தமிழையும் தன் மூச்சையும் இணைத்துக்கொண்டு பவளவிழாக் காணும் இலக்கியவாதி.
சேறு. கல்லடிகள். பூமாலைகள். எல்லாத்தையும் ஒரு புன்சிரிப்புடன் வேண்டிக்கொண்டு, மக்கள். மக்களால். மக்களுக்காக. வாசித்துவிட்டு, நான் முகஸ்துதி செய்யுற ஆள் இல்லை - உங்கடை நாவல்

27
மிகத் திறமாக வந்திருக்கிறது - வெல்டன்” எனப் பாராட்டியது என் காது களில் இன்றும் கேட்டுக் கொண்டு இருக்க. கதையில் உண்மை இருந்தால் அதில் உயிர் இருக்கும் என்று எனக்கு அறிவுரை கூறிக்கொண்டு தன்னுடைய மகாவம்ச மொழி பெயர்ப்பினிடையேயும் எனக்கு முன்னிடு எழுதித் தந்திருக்கும் எஸ். பொ. அவர்களுக்கு என்றென்றும் நன்றிகள். w எனது முதல் மூன்று நூல்களும் எவ்வாறு இருக்க வேண்டும் என்று நான் கற்பனை செய்தேனோ. அதில் எள்ளளவும் பிசகாமல் அந்தப் பணியை நிறைவேற்றித் தந்த மித்ரா பதிப்பகத்தின் நிர்வாகி இந்து, மற்றும் அவரது சக ஊழியர்கள் அனைவரும் என்றென்றும் என் நன்றிக்குரியவர்கள். இந்நூலின் அமைப்பிலே துரிதமாக உதவிய லலிதா, கிருஷ்ணகுமார் இருவரையும் பெயர் குறிப்பிடுதல் நன்றி சொல்லும் ஆசாரம் சார்ந்தது. எனது கதைகளுக்கு ஆஸ்தான ஓவியராக ஓவியங்கள் வரையும் என் மகள் முறையான வினோத் காமராஜா, இந்த முறை என்னுடன் இணைந்து கொண்ட மூத்த ஓவியர் திரு. கெளதமன். என் படைப்புகளை கணினியில் இருக்கும்போது வாசித்து விமர்சனம் செய்யும் என் நண்பன் கலாநிதி சிறிகணேசன் கந்தையா (சிரேஷ்ட ஆங்கில விரிவுரை யாளர் - யாழ் பல்கலைக்கழகம் - வவுனியா வளாகம்), திருமதி. ரேணுகா தனஸ்கந்தா - (ஆங்கிலப் பட்டதாரி - விமர்சகர் - அவுஸ்திரேலியர்).

Page 16
28
மேலும் பல்வேறு வர்ணப் பேனைகளை வைத்துக் என்பது கொண்டு. இந்த இடம் வாசகர்களைத் தொடும். இந்த இடத்தில் வாசகர்கள் கோபப்படு வார்கள். இந்த இட்த்தை இப்படி மாற்றினால் இன்னும் தூக்கலாக இருக்கும் என என் படைப்புகளுக்கு பைனல் டச்சிங் கொடுக்கும். என்னுடன் கூட்டாஞ்சோறு ஆக்கி உண்டதிருமதி கலாநிதி ஜீவகுமாரன். கணினிக்குள் மூழ்கி கதை எழுதுவதால் சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் பூந்தோட்டங்களுக்கும், கடற்கரைகளுக்கும் மக்டொனால்ட்ஸ்களுக்கும் கூட்டிச் செல்லாமல் தொடர்ந்தும் நான் ஏமாற்றி வரும் மிதிலா ஜீவகுமாரன், மீரா ஜீவகுமாரன் இரட்டையர்களுக்கும். என் நன்றிகள்.
Sѣuпѣш6лub
வி.ஜிவகுமாரன்
புவியியல் சார்ந்த கணனிப்பதிவு பொறுப்பாளர் (Administrator : Geographic Information System Odsherreds Municipal Council)
புலம் பெயர்ந்தோருக்கான அரச நூலகதமிழ்ப்பகுதி ஆலோசகர் (State Library for immigrants - Denmark)
passairf:
Hojvangsparken - 7
4300 Holbaek
Denmark தொலைபேசி : OO45-59 46 45 47 கைத்தொலைபேசி : OO45 - 22 3O 31 34 Lósörsorésso : jeevakumaran5@yahoo.com


Page 17
உள்ளுறை
8-66. Locol 3 *நானும் ஒரு அகதியாக. 49 *மெயில் லோஞ்ச் 65 &ခိရိစG アフ *epg5llL 95 *கிராமத்து பெரிய வீடீடுக்காரி. io7 *GoITý5GULLňůL 1927 8-665 45
«»ela5mTeo Loesoortb 157
*செல்வி ஏன் அமுகின்றாள்? 69

வின்னி மண்ணை மூன்று குறுநில மன்னர்கள் ஆண்டு கொண்டிருந்த காலம்,
முல்லை, நெய்தல், மருதம் என இயற்கை மண்ணின் வளத்தைப் பிரித்து வைத்த தையே தம் பிரதேசத்து எல் லையாகக்கொண்டு அவர்கள் ஆண்டு கொண்டிருந்தார்கள்.
குறிஞ்சியும் பாலையும் அங்கி
முல்லைக்கே உரிய அழகு காடும் காடுசார்ந்த அந்தப் பிரதேசங்களும் என்றாலும் இயற்கையுடன் சேர்ந்து

Page 18
32 வி. ஜீவகுமாரன்
கொத்துக் கொத்தாக மலர்ந்து சிரிக்கும் காட்டுவாசிப் பெண்களும்தான். கருகுமணியும், பாசிக்கயிறும் சேர்த்துக்கொண்டு திரியும் இந்தக் காட்டுவாசிகளின் கூட்டத்தில் செம்பருத்தி கொஞ்சம் வித்தியாசமானவள். வயது ஈரெட்டு. இரண்டு கூரிய விழிகள். மிகுந்த துணிச்சல்காரி. வில் வித்தையில் மிகவும் கெட்டிக்காரி. மாலைச் சூரியன் மறையத் தொடங்கி விட்ட நேரம். மந்தார மலர்களின் வாசனை எங்கேயோ இருந்து வந்து கொண்டிருந்தது. பாலை மரத்தின் உச்சாணிக் கொப்பில் நின்று கொண்டி ருந்தாள். பாலைப் பழங்களைப் பறித்துத் தின்றதால் வாயிலும் மேனியிலும் பால் ஒட்டியது போல இருந்தது. கீழே ஒடும் அருவியாற்றில் மரங்களில் இருந்து குதித்து நீச்சலடிக்க வேண்டும் என மனம் குறுகுறுத்தது. தெற்குப் பக்கத்தில் இருந்து குரங்குக் கூட்டம் ஒன்று மரங்கள் விட்டு மரங்கள் தாவிக்கொண்டு வருவது தெரிந்தது. யாரோ அன்னியர்கள் காட்டுக்குள் வருவதற்கான அறிகுறிகள் அவை, அவள் நின்றிருந்த பாலை மரக் கொப்பிலும் அவை ஒரு தாவுத் தாவி பின் அங்கிருந்து வாகை மரங்களுக்குத் தாவின.

சங்கானைச் சண்டியன் 33
அவள் நின்றிருந்த கிளைகள் ஒரு முறை தாழ்ந்து எழுந்தன. இராவணனின் புஷ்பக விமானமும் இவ்வாறுதான் தாழ்ந்து
எழுந்து பறந்திருக்கும் என நினைத்தபடி குரங்குகள் வந்த திசையை நோக்கிப் பார்த்தாள்.
குதிரையின் குளம்படிச் சத்தம் கேட்டது. இளங்கோவன் தனித்து குதிரையில் வந்து கொண்டிருந்தான். இளம் காளையின் கம்பீரம் குதிரையில் இருக்கும் பாங்கில் தெரிந்தது.
அவன் கண்களில் தேடல் தெரிந்தது.
'அரசகுமாரனாக இருக்கவேண்டும். அல்லது அரண் மனைப் போர்வீரனாக இருக்க வேண்டும்.’
செம்பருத்தியின் மனம் சொல்லிக் கொண்டது. தனித்து காட்டுக்குள் வரும் அவனைச் சீண்டிப் பார்க்க அவள் விருப்பம் கொண்டாள். அடுத்த கணம் அவளது கையிலிருந்த வில்லில் இருந்து புறப்பட்ட அம்பு அவனது முகத்தை அரும்பிச் சென்று வீரை மரத்தில் குத்தி நின்றது. இளங்கோவன் திடுக்கிட்டு விட்டான். கையில் வாளை உருவிக் கொண்டு, அம்பு வந்த திசையை நோக்கிப் பார்த்தான். செம்பருத்தி பாலையின் கிளைகளுக்குள் ஒளிந்து கொண்டாள்.
யாரையும் காணவில்லை.
குதிரையும் தனது வேகத்தைக் குறைத்துக் கொண்டது.

Page 19
34 வி. ஜீவகுமாரன்
நீண்ட தூரப் பயணமோ அன்றி கிட்டவாகத் தெரிந்த அருவியாற்றில் ஒடிக்கொண்டிருக்கும் தெளிந்த நீரோ. குதிரைக்கு தண்ணிர் விடாய் கண்டது. உறை!ள் இன்னமும் போடாத வாளுடன் ஆற்றங்கரையில் குதிரையில் இருந்து குதித்து இறங்கினான். ஆற்று மண்ணில் வாளைக் குத்திவிட்டு, அவனும் குதிரையும் பக்கம் பக்கமாய் நின்று குனிந்து தண்ணிர் அருந்திக் கொண்டு நிற்கும்பொழுது மீண்டும் குறும்பு செய்ய எண்ணினாள்.
ஒரு கணம் தான். பாலை மரக்கொப்பில் இருந்து தண்ணிர் பருகிக் கொண்டி
ருந்த அவனுக்கு முன்பாக ஒரே குதியலில் குதித்து நீருக் குள் மறைந்து விட்டாள்.
தண்ணீர் பெரும் ஒலியுடன் திடீரெனச் சிதற, குதிரையும் இளங்கோவனும் பயந்தே விட்டார்கள்.
குதிரை கனைத்தபடியே பின்வாங்கியது. இளங்கோவன் ஆற்று மண்ணில் குத்தி நின்ற வாளைத் திரும்ப உருவிக் கொண்டான். அங்கும் இங்கும் பார்த்தான்.
யாரையும் காணவில்லை.
ஒரு கணம் தான், ஆற்றைக் கிழித்துக்கொண்டு அழகிய செம்பருத்தி
ஆற்றின் மறுகரையில் இருந்த கற்களில் போய் அமர்ந் தாள்.
இளங்கோவனால் நம்பவே முடியவில்லை.

சங்கானைச் சண்டியன் 35
இத்தனை நாளாக இந்தக் காட்டினுள் இப்படி ஒரு அழகுப் பதுமையா?
“யார் நீ?” “இந்தக் காட்டின் மல்லிகை. தாங்கள் யாரோ?” “நீ வாழும் இந்தக் காட்டுக்கும் இதனைச் சுற்றியுள்ள மூன்று குறுநிலங்களுக்கும் மன்னன் - சிற்றரசர்களின் தலைவன்.”
மன்னன் என்பது அவளுள் ஒரு மரியாதையை ஏற்படுத்தி னாலும், அவனது வயதையும் தோற்றத்தையும் பார்த்த பொழுது மேலும் அவனுடன் குறும்பு செய்யவேண்டும் எனப் பட்டது. "அதனால்தான் ஒரு பெண்ணின் அம்புக்கும் நீச்சலுக்கும் பயந்தீரோ?” சொல்லிவிட்டு கலகல என்று சிரித்தாள்.
அவளது கண்களுக்குள் தான் சிறை பிடிக்கப்பட்டுவிட்டது போல உணர்ந்தான்.
அழகிய கண்கள். கறுத்து உருண்டையான அழகிய கண்கள். தன் வாள் வீச்சை விட வேகமாக மற்றவர்களை விழுத்தக் கூடிய அவளின் விழிவீச்சில் மயங்கி நின்றான். அடுத்த கணம் நீருக்குள் குதித்து மறைந்தாள். இளங்கோவனும் நீரினுள் பாய்ந்தான். சுழியோடிப் பார்த்தான்.
அவளைக் காணவில்லை.
மேலே வந்து பார்த்தான் - கற்களின் மீது அவளைக் காண வில்லை.

Page 20
36 வி. ஜீவகுமாரன்
மீண்டும் சுழியோடிவிட்டு மேலே வந்தான். “மன்னர் தற்போதுதான் நீச்சல் கற்றுக் கொள்கின்றாரோ?” கலகல என மீண்டும் சிரித்தாள், இளங்கோவனுக்கு கொஞ்சம் அவமரியாதையாகப் போய் விட்டது. ஆனால் அடுத்த வார்த்தை பேசவிடாமல் நீர்த்திவலைகள் கொட்டிக் கொண்டிருக்கும் அவளது கூந்தலும், கன்னங் களும். படபடவென வெட்டிக்கொண்டு இருக்கும் கண்களும் அவனைக் கிறங்கடித்துக் கொண்டிருந்தன. மேலாக நனைந்த ஆடையினூடு தெரியும் அவளின் மார்பகங்கள். தன்னை இத்தனை துணிவுடன் மடக்கும் மங்கையை அவன் இதுவரை சந்தித்திருக்கவே இல்லை. அது அந்தப் புரத்தில் என்றாலும் சரி. எதிரிகளின் பாசறைகளில் என்றாலும் சரி. இந்தக் காட்டுப் பிரதேசத்தில் என்றாலும்
சரி.
‘இன்று நான் தேடி வந்தவள் இவள்தான் - மனதுக்குள் சொல்லிக் கொண்டான்.
அவள் அவனைப் பார்த்துக் கொண்டே இருந்தாள். “உன் விழி அழகில் நீந்தியதால், என் நீச்சல் கலையை நான் மறந்து விட்டேன்.” “மழுப்புகின்றீர்கள் - நீச்சல் பழகும் பொழுது என் போன்ற பெண்களைப் பார்த்துக் கொண்டிருந்திருப்பீர்கள் - கவனம் சிதறியிருக்கும்.”
மீண்டும் 'கொல்லெனச் சிரித்தாள்.
"உன் சிரிப்பால் நீ என்னைக் கொல்கின்றாய்.”

சங்கரனைச் சண்டியன் 37
"நான் என்ன உங்கள் மீது போர் தொடுக்கும் அண்டை நாட்டு எதிரிகளா உங்களைக் கொல்லுவதற்கு?” “இல்லை பெண்ணே.” “என் பெயர் 'பெண்’ அல்ல - செம்பருத்தி.” "ஆஹா. அருமையான பெயர்.” “மீண்டும் பொய் சொல்லுகின்றீர்கள்.” “இல்லை, உண்மையாகச் சொல்லுகின்றேன் - காட்டு மல்லிகைகள் நடுவே ஒரு செம்பருத்தி - அவற்றின் இதழ்கள் போன்று உன் இதழ்களும் சிவந்து அழகாய் இருக்கின்றன.” அவளை இப்போ நாணம் கொஞ்சம் கவிழ்த்தது. நடுநீரில் நின்றவன் இப்போ மெதுமெதுவாய் அவளிருந்த கரையின் பக்கம் நகர்ந்து வந்தான். அவளுக்கும் கொஞ்சம் அச்சம் படர மெதுவாக எழுந்து கொண்டாள்.
"எங்கே போகின்றாய்?” "நான் வீட்டுக்குப் போகவேண்டும். பாலைப்பழம் பறிக்க வந்து அதிக நேரம் ஆகிவிட்டது. என்னை என் பெற்றோர்கள் தேடுவார்கள்.” − “இன்னும் கொஞ்ச நேரம் இருந்து என்னுடன் அளவளாவிவிட்டுப் போ. உன்னுடன் இருந்து அளவளாவும்பொழுது எனக்கு பொழுது போனதே தெரியவில்லை. காட்டில் பாதையைத் தவறவிட்ட பதைபதைப்பும் தெரியவில்லை.”
“என்ன. மன்னர் காட்டில் பாதையைத் தவற விட்டு விட்டீர்களா?”

Page 21
38 வி. ஜீவகுமாரன்
"ஆம் பெண்ணே. ஆனால் அதைப்பற்றி இப்பொழுது நான் கவலைப்படவில்லை.”
செம்பருத்தி நிமிர்ந்து பார்த்தாள். “பாதையைத் தவறவிட்டமையால்தானே உன்னைப் போன்ற ஒரு அழகான பெண்ணைச் சந்தித்தேன்.”
அது அவளுக்குள் ஒரு கிறக்கத்தைக் கொடுத்தாலும் ஒரு கணப் பொழுதில் விழித்துக் கொண்டாள். “மன்னா. உங்களுக்குத் திருமணமாகி விட்டது. கனி மொழி, அமுதினி என இரண்டு இளவரசிகள் நாலு வயதிலும் இரண்டு வயதிலும் இருக்கிறார்கள். இப்படி என்னைப் போன்ற ஒரு காட்டுவாசிப் பெண்ணுடன் ஊடலுடன் கதைப்பது தவறில்லையா?”
“தவறுதான் பெண்ணே. ஆனாலும் பட்டத்துக்குரிய இளவரசன் ஒருவன் இனி மகாராணியின் வயிற்றில் பிரவேசிக்க முடியாது என்ற கவலைதான் என்னை உன்னிடம் கவர்கிறது.”
“என்ன சொல்லுகின்றீர்கள்?” அவள் விழிகள் படபடத்தன. "ஆம் பெண்ணே. இனியொரு இளவரசனோ. இளவரசியோ மகாராணியின் வயிற்றில் தங்கமாட்டார்கள் என்று அரண்மனை வைத்தியர்கள் உறுதியாகச் சொல்லி விட்டார்கள். அதுதான் என் கவலை - பட்டத்துக்குரிய இளவரசன் ஒருவன் இல்லையே என்று.” “அதற்கேன் கவலை. இளவரசியின் கணவனாக வருபவர் இளவரசர் ஆவார்தானே?”

சங்கானைச் சண்டியன் 39
"ஆனால் அவன் எனக்குப் பிறந்தவன் இல்லையே. என் சிம்மானத்தில் இருப்பவன் என் விந்தில் இருந்து உதித்தவனாய் இருக்க வேண்டும்.” செம்பருத்தி தலையைக் குனிந்து கொண்டாள். அவன் தன்னை அண்மிப்பது போல உணர்ந்தாள். "அவனை நீ எனக்குத் தருவாயா?” மன்னனின் குரல் அவளுக்கு மிக அண்மையாய் அவளின் காதருகே கேட்டது.
மன்னனின் மூச்சுக் காற்று அவள் மீது பட்டது. அவள் கொஞ்சம் தடுமாறினாள். குனிந்த தலையுடன் ஓரடி எடுத்து முன்னே வைத்தாள். மன்னனின் வலிந்த கை அவளின் இடுப்பைச் சுற்றி அனைததது.
முகத்துக்குக் கிட்டவாக முகம். "அப்படி என்னைப் பார்க்காதே.”
“நான் தோற்றுவிடுவேனோ என பயமாக இருக்கிறது
LD6T6OTIT.'
“இல்லை, எனக்கொரு இளவரசனைத் தந்து என்னை வெற்றி கொள்ளப் போகின்றாய்!”
வார்த்தைகள் மெளனித்தன. புற்தரை பஞ்சு மெத்தையாகியது. குளிர்காற்று வீசிக்கொண்டிருந்தது.
இளம் சந்திரன் மேல் வந்து காட்டுப் பிரதேசத்தைப் பிரகாசிக்க வைத்துக் கொண்டிருந்தான்,

Page 22
40 வி. வேகுமாரன்
செம்பருத்தியை இளங்கோவனும். இளங்கோவனை செம்பருத்தியும் வென்றுகொண்டு இருந்தார்கள். அல்லது இருவரிடமும் இருவருமே மாறி மாறித் தோற்றுக் கொண்டு இருந்தார்கள். இறுதியில் வேட்டைக்கு வந்து வென்றது மன்னன் இளங்கோவன்தான்.
Uெண் வேட்டை மன்னன் இளங்கோவனுக்கு இந்த வேட்டை மிகவும் பிடித்தமானது. பட்டத்தரசி கோமளவல்லி அழகின் பொக்கிஷமாக அரண்மனையில் இருந்தாலும், வேட்டைக்குப் போகின் றேன் என்று இதர வீரர்களுடன் குதிரைகள், பரிவாரங் களுடன் புறப்பட்டு. பின் பாதிவழியில் அவர்களை அனுப்பி விட்டு. தனியே குதிரை மீது ஏறி காட்டுக்குள் திரிவது. காட்டுவாசிப் பெண்களைத் தேடுவது. வழிதெரியாமல் வந்துவிட்டேன் என அவர்களை நம்ப வைப்பது. அவர்களின் பெற்றோரின் அனுமதியுடன் அவர்களின் குடில்களுக்குள். அல்லது பெற்றோருக்குத் தெரியாமல் காட்டுப் புதர்களுக்குள். அருவி ஆற்றங்கரையில் பூரண சந்திரனின் வெளிச்சத்தில். எட்டவாக நிற்கும் குதிரை யின் கனைப்பில் அவர்களுடன் ஒதுங்கும் இந்தப் பெண் வேட்டை அவனுக்கு மிகவும் பிடித்தது. “பட்டத்தரசியாக இல்லாவிட்டாலும் உன்னை சிற்றரசியாக ஆக்குவதில் என் மனம் மிகவும் மகிழ்வுறும்” . இளங்கோவ னின் இந்த வார்த்தைகளில் பெண்ணின் பேதமை தோற்றுப் போக, பெண்மை சிலிர்த்துக் கொள்ளும்.

சங்கானைச் சண்டியன் 41
அந்தச் சிலிர்ப்பு. விதம் விதமான சிலிர்ப்புகள். அதில் எழும் முனகல்கள். அவைதான் அவனுக்கு வேண்டியவை. பட்டத்தரசியும் தானும் கலந்துகொள்ளும் உறவில் இரு வருமே அணிந்திருந்த பல கவசங்கள் ஆளை ஆள் தழுவி ஆலிங்கனம் செய்வதற்குத் தடையாக இருப்பதாக அவன் என்றுமே எண்ணிக் கொள்வான். எத்தனை கவசங்கள்? குறுநில மன்னர்களின் மன்னன். பட்டத்து மகாராணி. பிறக்க இருப்பது பட்டத்திற்குரிய இளவரசனா இல்லை மீண்டும் ஒரு இளவரசியா என்ற கவலைகள். வேலைக்காரர்கள், காவலாளிகள் பற்றி பட்டத்தரசி கட்டிலில் இருந்து வாசிக்கும் குற்ற அறிக்கைப் பத்திரங்கள். இத்தனையும் தாண்டி அவளை அவன் அணைக்கும்பொழுது ஆங்காங்கு கவச மணிகள் குத்தத்தான் செய்தன. காட்டுவாசிப் பெண்களிடத்தில் எந்த எதிர்பார்ப்பும் இல்லை. எந்தத் தடைகளும் இல்லை.
ஆண் - பெண்.
அவ்வளவு தான். பட்டுமெத்தை கொடுக்காத அனைத்தையும் பருத்திக் காடுகள் கொடுத்தன. பாவம், பழி. எவைபற்றியும் அவன் கவலைப்படவில்லை. கொடுத்த விலை பொன்னும், மணியும், பவள மாலையும்.
காடு பெரியது - அதனுள் இருந்த சிற்றூர்களும் அதிகம். அதனுள் காட்டுவாசிப் பெண்களும் அதிகம்.

Page 23
42 வி. ஜீவகுமாரன்
தேனாலும் தினையாலும் காட்டுக் கோழிகளின் முட்டை களினாலும் வளர்ந்து, சூரிய உதயத்திற்கு முன்னே எழுந்து கையால் இடித்த நல்ல எள் எண்ணையால் உச்சி முதல் உள்ளங்கால் வரை தடவி. பகல் முழுக்க சூரிய ஒளியில் காய்ந்து. சுத்தமான காற்றைச் சுவாசித்து. அந்திப் பொழுதில் அருவி ஆற்றில் நீச்சலடித்த அந்த ஆரோக்கிய மான வழுவழுப்பான உடல்களின் தழுவல்களின்பொழுது குறுநில மன்னனான அவன் சக்கரவர்த்தியாகப் பிரகாசித்
தான. R
சிலவற்றை மீண்டும் தேடிப்போனான். சில மீண்டும் அவனைத் தேடி வந்தன.
மீண்டும் பவளத்திற்கும் முத்துமாலைக்குமாக. அல்லது அவனின் முரட்டு முத்தங்களுக்காக.
கர்ப்பப்பை என்ற ஒன்றை ஆண்டவன் பெண்கள் வயிற்றில் வைத்து விட்டதால் எவ்வாறு அவர்கள் தெய்வங்கள் என்று பூஜிக்கப்பட்டார்களோ. அதேபோல் அந்தக் காட்டு மல் லிகைகள் கர்ப்பப்பையால் பாவப்பட்ட ஜீவன்கள் ஆகினர்.
வயிற்றில் வேண்டி வருபவற்றை காட்டுவாசிகளின் மருத்து வச்சி பச்சிலைகளின் வைத்தியத்தால் கருக்கி விட்டாலும் சில வேளைகளில் அப்பாவித் தாய்மரங்களும் கருகிப் போயின.
அதையும் தாண்டி மன்னவனின் ஒட்டுண்ணியாக வயிற்றில் வளர்ந்தவை காட்டுவாசி ஒருவனுக்கு சோறு கொடுப்பது மூலம் குடிமக்கள் ஆயின. அதுவும் இல்லாவிட்டால் என்றாவது ஒரு காலைப் பொழுதில் ஊரின் எல்லையில்
இருக்கும் வீரபத்திரனின் காலடியில் அழுகைச் சத்தம் கேட்கும்,

sestaparší stažrguUár 43
மீண்டும் காட்டுவாசிகள் கொண்டு போய் வளர்ப்பார்கள்! ஆனால் அவைகள் வீரபத்திரரின் பிள்ளைகள் என்று அழைக்கப்படும். வேட்டை ஆடவும், பயிர்கள் செய்யவும், தேன் பறிக்கவும். மன்னனின் வாரிசுகள் மந்தையில் சேர்த்துவிட்ட காட்டுவாசிக் கடாக்களாக ஆவார்கள்.
ஆண்கள் ஆயின் வேட்டை. பெண்கள் ஆயின் விவசாயம்.
இளங்கோவனின் வாரிசு செம்பருத்தியின் வயிற்றில் வளரத் தொடங்கியது. செய்தி சொல்ல தினமும் அருவியாற்றின் கரையில் காத்தி ருந்தாள். அவன் வரவில்லை - மனம் படபடக்கச் செய்தது. நகரத்தினுள் போய் அவனைக் காண விரும்பினாள்.
காட்டின் பாதையில் தவழ்ந்து விளையாடி அதன் வளைவு நெளிவுகள் அனைத்தும் அத்துப்படியான அவளுக்கு நகரத்தின் வாசனையே தெரியாது.
குண்டுமணியும் பாசிநூலும் விற்கும் பெண்கள் பாதை காட்டுவதாக முன்வந்தார்கள்.
செம்பருத்தி சிற்றரசி ஆகினால் அரண்மனைத் தோழிகள் அவர்கள் தானே.
நகரம் விழாக்கோலம் கொண்டிருந்தது.
காரணம் யாதென்று விசாரித்தார்கள்.

Page 24
44 வி. ஜீவகுமாரன்
இளவரசனுக்கு இன்று பெயர் சூட்டு விழாவாம். செம்பருத்தியின் பன்னீர்க்குடம் ஒரு கணம் தளும்பியது. பாலை மரத்தின் உச்சாணிக் கொப்பில் வில்லுடனும் அம்புடனும் நின்ற வீரவேங்கையைக் குள்ளநரியொன்று ஏமாற்றிப் போய் விட்டதாக மனத்துள் குமுறினாள். "ஆண்வாரிசு பிறக்காது என்று சொல்லி என் பெண்மையை வார்ந்து எடுத்தவனே, என் வயிற்றில் வளரும் உன் வாரிசுதான் உனக்கு எமன்!” அடுத்து வந்து பெளர்ணமியில் அருவி ஆற்றங்கரையில் மறுகரையில் அமைந்திருந்த வீரபத்திரனின் காலடியில் நின்று சபதம் செய்து கொண்டாள். பின் அருவி ஆற்றினுள் இறங்கி தலை முழுகினாள். நீர் புனிதமானது. மன்னன் அசிங்கப்படுத்திய தன் உடலை அது சுத்த மாக்கும் என முற்றாகவே நம்பினாள். அந்த எண்ணம் அவளுக்கு வாழ்வின் மீது நம்பிக்கையைக் கொடுத்தது. அடிவானத்தில் விடிவெள்ளி தெரியும் வரை அவள் தண்ணிரினுள்ளேயே நின்றாள்.
மேலும் எட்டுத் திங்கள்கள் கழிந்தன. செம்பருத்தியின் கன்னங்கரேல் என்ற நிறத்துடனும் அவளது விழி வீச்சுடனும் இளங்கோவனின் சாயலுடனும் பன்னிர்க்குடத்தில் இருந்து ஒரு ஆண்மகனை செம்பருத்தி இறக்கி வைத்தாள்.

சங்ாைனைச் சண்டியன் 45
வீரசிங்கன் எனப் பெயரிட்டாள்.
அவனை வீரபத்திரனின் காலில் அர்ப்பணித்து ஊராருக்கு தத்துப் பிள்ளையாக, மிருக வேட்டைக்கு அனுப்பவில்லை.
மனித வேட்டைக்குத் தயாராக்கினாள்.
தன்னைக் குதறிச் சென்ற இளங்கோவன் என்ற மிருகத்தை பழி வேண்டுவற்காக வளர்த்தாள்.
“என் தந்தை யார் அம்மா?” ஐந்து வயதில் வீரசிங்கன் கேட்டான். “யாரை என் சுட்டு விரலை நோக்கி 'கொல்' என்று கட்டளை இடுகின்றேனோ. அவன்தான் உன் தந்தை!” மல்யுத்தம். வில்வித்தை. வாள்வீச்சு. இளவரசனுக்குரிய அனைத்தும் அவனுக்குப் பழக்கினாள். தாயின் சுட்டுவிரலின் கட்டளைக்குக் காத்திருந்தான். காலம் ஓடியது. உலகம் அரசியல் மயமாகிக் கொண்டு இருந்தது.
வர்த்தக ஆதாயங்களும் அதனுடன் கை கோர்த்துக் கொண்டன.
1498ல் போத்துக்கீசரின் முதலாவது கப்பல் தென்னிந்தியக் கரைகளில் நங்கூரம் இடத்தொடங்கியபொழுது சிற்றரசர் களின் கோட்டைகளில் அபாயச் சங்குகள் ஊதப்பட்டன. இந்தியா மட்டும் போதாது என்று 1505ல் காலித் துறைமுகத்திலும் அவர்கள் கப்பல் தரைதட்டியது. காலனிய ஆட்சியை ஏற்றுக் கொள்ளும்படி இலங்கையின் சிற்றரசுகளும் பீரங்கித் தாக்குதலால் வற்புறுத்தப்பட்டன.

Page 25
46 * வி. ஜீவகுமாரன்
கோட்டை அரசு போத்துக்கீச மன்னனைத் தமது மன்னராக ஏற்றுக்கொண்டது. மற்றவர்கள் அனைவரின் குரல் வளைகள் நசிக்கப்பட்டன.
இலங்கையில் கொழும்பு, கோட்டை ராஜ்யம், யாழ்ப் பாணம். யாழ்ப்பாண அரசன் சங்கிலியன் வெல்லப் பட்டான். அடுத்து வன்னி மண். இளங்கோவன் தப்பிக்க வேண்டிய கட்டம்.
மகாராணி, பட்டத்துக்குரிய இளவரசன், இளவரசிகளுடன் காட்டின் நடுவே அமைந்திருந்த குகையுள் தஞ்சம் புகுந்தான் - மீண்டும் படை திரட்டுவதற்காக, காட்டுமக்கள் வரிசை வரிசையாக அவனுக்கு தானியங்கள், பதன் போட்ட இறைச்சி வகைகள், தேன், கள்ளு என உணவும் குடிபானமும் கொண்டு போய்க் கொண்டிருந் தார்கள்.
செம்பருத்திக்கு சேதி கிட்டியது. இருட்டும் வரை காத்திருந்தாள். அன்று போல் இன்றும் நிலவு காய்ந்து கொண்டிருந்தது. பாலை மரத்தில் பழங்கள் நிறைந்து அதன் மணம் அந்தப் பிரதேசம் முழுக்க வீசிக் கொண்டு இருந்தது. மனம் கனத்த இளங்கோவன் காற்று வேண்டுவதற்காக அருவியாற்றங்கரைக்கு வந்திருந்தான்.
ஒரு கணம் தான். பாலை மரத்தில் இருந்து வீரசிங்கன் அருவி ஆற்றினுள் குதித்தான்.

சங்கானைச் சண்டியன் 47
இளங்கோவன் தன்னைச் சுதாரித்துக்கொண்டு பார்த்த பொழுது வீரசிங்கன் கையில் வாளுடன் தண்ணிரில் இருந்து வெளியே வந்து கொண்டிருந்தான். தன்னையே நிலைக் கண்ணாடியில் பார்க்கின்றோமோ என அவனுள் எழுந்த அலைகள் அவனை அதிர வைத்தன. பின்னால் கற்பாறை மீது சுட்டுவிரலை நீட்டிக்கொண்டு செம்பருத்தி நின்றிருந்தாள். இளங்கோவனின் தலை வீரசிங்கனின் வாளுக்கு இரையானது.
தென் இலங்கை முழுவதும் தீப்பற்றி எரிந்து கொண் டிருந்தது. தமிழரின் கடைகள், சொத்துக்கள் அனைத்தும் சூறை யாடப்பட்டுக் கொண்டிருந்தன. பாணந்துறை பிரதேசத்தில் இருந்த கடைகளில் அரைவாசி வைத்திலிங்க முதலாளிக்குத்தான் சொந்தம். அவரே அங்கு ஒரு சமாதான நீதவானும் கூட. தன் சொந்த ஊருக்குப் போன காலத்தை விட அங்கு வாழ்ந்த காலம்தான் அதிகம். மனைவியின் பிரசவம், கோயில் கொடியேற்றம், வயலில் அரிவு வெட்டு இந்த மூன்றிற்கும்தான் அவர் ஊருக்குப் போவது. மற்றும்படி அவரின் வாழ்வு பாணந்துறையில் தான். ஆனாலும் தன் பிரதேசத்தில் இப்படி ஒரு அசம்பாவிதம் தன்னைமீறி நடந்துவிடும் என்று கனவில்கூட அவர் நினைத்திருக்கவில்லை.

Page 26
48 வி. ஜீவகுமாரன்
தொழிலாளிகளை முழுச்சாமான்களையும் லொறியில் ஏற்றும்படி பணித்துவிட்டு வழமைக்கு மாறாக வேட்டியை உயர்த்திக் கட்டிக் கொண்டு அனைத்தும் சரிவர நடை பெறுகின்றதா என்று அமைதி இல்லாது ரோட்டில் அங்கும் இங்கும் நடந்து கொண்டிருந்தார். அவர் கடையடியையும் அவரையும் நோக்கி ஒரு கூட்டம் வந்து கொண்டிருந்தது. - சிங்கள மொழியில் “கொல்லுங்கடா அவனை” என கை காட்டியபடி சாராயம் விற்கும் யாமினி வந்து கொண்டி ருந்தாள்.
யாமினிக்கு வயதாகியிருந்தது. பக்கத்தில் யாமினியின் மகன் - விஜயசிங்கா. தன்னையே பார்ப்பது போன்றிருந்தது வைத்திலிங்கத் தாருக்கு. அடுத்த கணம் விஜயசிங்காவின் கையில் இருந்த நீண்ட கத்தி வைத்திலிங்கத்தாரின் நடுநெஞ்சில் பாய்ந்தது. நிலத்தில் சாய்ந்து கொண்டிருந்தார். கண்கள் செருகிக் கொண்டு போயின. செம்பருத்தி கை விரலை நீட்டிக் கொண்டு நின்றாள். நெஞ்சில் செருகியிருந்த வாளை வீரசிங்கன் வெளியே இழுத்து எடுத்து அருவியாற்றில் கழுவிவிட்டு தன் உறையுள் போட்டுக் கொள்கின்றான்.
வைத்திலிங்கத்தாருக்கு அதற்குப் பின் எதுவுமே தெரிய வில்லை.
ŞM

* எங்கள் வீடு, வீட்டோடு சேர்ந்த ஒரு பூனை, நாலைந்து கோழிக் குஞ்சுகள், வீட்டின் பின் கொட்டிலில் கட்டி நிற்கும் ஒரு கிடாய் ஆடு, இரண்டு மறியாடு, மூன்று குட்டியாடுகள் எல்லோருக் கும் நான்தான் எப்பொழுதும் காவல்.
எனது வீட்டு எஜமான் சுத்தக் கஞ்சன்.

Page 27
50 வி. ஜீவகுமாரன்
இரவு வேளைகளில் நாலைந்து வீடுகளுக்கு கேட்கக் கூடிய
தாக கோப்பையை திண்ணையில் தட்டி, "உஞ்சு. உஞ்சு.” என மிகப் பலத்த சத்தத்துடன் கூப்பிடுவார்.
எங்கு நின்றாலும் ஓடிப்போவேன். கோப்பையில் ஒரு சோற்றுப் பருக்கை இருக்காது.
பின்புதான் எனக்குத் தெரியும் அக்கம் பக்கத்து வீடுகளுக்கு அவர் பவுசு காட்டுகின்றார் எண்டு.
மனைவிக்காரி பரவாயில்லை. பழைய சோறு கறி குழைத்து தோட்டத்து பெண்டுகளுக்கும் கொடுத்து மிகுதி இருந்தால் எனக்கும் கோழிகளுக்கும் கொஞ்சம் கிடைக்கும். அதிகமாக மீன் முள்ளுகள்தான் எனக்குக் கிடைக்கும். தொண்டையில் சற்றுக் குத்தினாலும் சமாளித்துக் கொள்வேன்.
வீட்டை விட றோட்டு முகப்பில் இருக்கும் முருகன் கோயில் பரவாயில்லை. மாமிசம் இல்லைத்தான் - ஆனாலும் பிள்ளைகள் ஐயரிடம் அடிபட்டு வாங்கிவிட்டு சாப்பிட முடியாமல் வீதியோரத்தில் போடும் பொங்கல், சுண்டல், அவல். சில வேளைகளில் வடை,
அங்கு நான் மட்டும் இல்லை. என் இனத்தவர் கொஞ்சம் பேர் நிற்பார்கள். ஆளுக்காள் கொஞ்சம் முறுகிக் கொள்வோம். ஆனாலும் பெரிதாக சண்டை எதுவும் வருவதில்லை - ஐரோப்பிய, அவுஸ்திரேலியத் தமிழர்கள் போல்.
அப்படிச் சண்டை வருவது மீன்கடையடிப் பக்கம்தான். XXX தமிழர்களைப் போல். (XXX தணிக்கைக் குழுவினால்

raisoarš staigUdr S1
தணிக்கை செய்யப்பட்டுள்ளது). பெரிய திருக்கை அல்லது சுறாவின் குடலை வெட்டி கறிக்கார ராசம்மா எறியும் போது அதற்குப் பெரிய போராட்டமே நடைபெறும். எம்மினமே எம்மினத்தை இரத்தம் வரும் வரை குதறிப் போடுங்கள். அவ்வளவு தூரம் சண்டை நடக்கும்.
எனக்கு இந்த சண்டைக்கான காரணங்களே விளங்குவ தில்லை. பஞ்சத்தால் மடிந்து கொண்டிருக்கும் எதியோப் பியா என்றாலும் சரி. பணத்தில் புரளும் அமெரிக்கா என்றாலும் சரி. இந்த இரண்டுக்கும் இடையில் தத்தளித்துக் கொண்டிருக்கும் எங்கள் நாடுகள் என்றாலும் சரி. எங்கள் நாட்டு மக்கள் புலம் பெயர்ந்து போய் வாழும் நாடுகளிலும் சரி. இந்தச் சண்டைகளுக்குக் குறைவேயில்லை. அங்கே பெரும்பாலும் நடைபெறும் சண்டைகள் சாப்பாட்டுச் சண்டைகள் அல்ல. பதிலாக கெளரவச் சண்டைகள். தாங்கள் தாங்களாகவே தமக்கு முடிகளைத் தூக்கி வைத்துக் கொண்டு தங்களுக்குள் பிடிக்கும் சக்கரவர்த்திச் சண்டைகள்.
எண்பதுகளில் ஒரு கைப்பையுடனும், சில வேளை கைப்பை போதாதபோது சாமான்கள் கட்டும் கறுத்த பிளாஸ்ரிக் பைகளுடனும் ஒரு அகதிமுகாமிலிருந்து இன்னோர் அகதி முகாமுக்கு அலைந்தபொழுது இருந்த ஒற்றுமை, சொகுசுக்கார்கள். சொந்த வீடுகள் வந்தபொழுது இல்லாமல் போய்விட்டதாம் என வெளிநாட்டால் கோடை விடுமுறைக்கு வந்த ஒரு குடும்ப ஆட்கள் சொல்லிக் கொண்டு இருந்தினம்.
நானும் திண்ணையில் நாக்கைத் தொங்கப் போட்டுக் கொண்டு இருந்து கேட்டுக் கொண்டிருந்தேன்.

Page 28
52 வி. ஜீவகுமாரன்
இவர்களுடன் ஒப்பிடும் பொழுது சாப்பாட்டுக்காக அடிபட நான் மீன் சந்தையடிப் பக்கம் போவதில்லை என நினைக்கப் பெருமையாய் இருந்தது.
இவ்வளவு தூரம் என் அப்பப்பா காலத்தில் இருக்கவில்லை.
எனது அப்பப்பா காலத்தில் யாழ்ப்பாணத்திற்கும் கொழும் பிற்கும் இடையில் றெயின் ஓடியதாம்.
அதன் தண்டவாளங்கள். அதிகமான இடங்களில் பெயர்க்கப் பட்டு விட்டாலும் அதற்கான அடையாளங்களை இன்றும் வடிவாகக் காண முடியும்.
எங்கள் கொடிகாம ஸ்டேசனில்தான் கொழும்புக்குச் செல்லும் இரவு மெயில் றெயின் சாப்பாட்டிற்கும், கை கழுவுவதற்கும், போத்தல்களில் தண்ணீர் நிரப்பி எடுத்து வருவதற்கும் அதிக நேரம் தரித்து நிற்கும். வடமராச்சிப் பிரதேசத்தில் இருந்து கொழும்பு செல்லும் அத்தனை பாசல் பொதிகளையும் புகையிரதத்தினுள் ஏற்று வதற்கு அதிக நேரம் வேண்டும் என்பது அடுத்த காரணம். எது எப்படியோ. கொடிகாமமே சாப்பாட்டுக்குரிய நிலையமாகிப் போய்விட்டதால் அப்பப்பா ஆட்களுக்குப் பிரச்சனையே இல்லையாம்.
வயிறு முட்ட சாப்பாடு கிடைக்குமாம் - எல்லாம் யன்னல் வழியே எறிந்த வாட்டிய வாழை இலையிலும் வாசித்த வீரகேசரிப் பேப்பரிலும் கட்டிய சாப்பாட்டுப் பாசல்கள் தான்.
பொதுவான பாசல்கள் இடியப்பம் அல்லது புட்டை, முட்டை அல்லது இறால் பொரியலுடன் சேர்த்து பிரட்டியதாக

சங்கானைச் சண்டியன் 53
இருக்கும். சிலவேளை சின்ன மீன் பொரியல் பக்கத்தில் வைக்கப்பட்டிருக்கும். இறைச்சியுடன் கட்டப்பட்ட சோற்றுப் பாசல்கள் மிகக் குறைவாக இருக்கும். ஒன்றில் யாழ்ப்பாண வெய்யிலுக் குள் சோறு வியர்த்து விடும் என்பது காரணமாக இருக் கலாம். அல்லது. இறைச்சிக்கறி மத்தியானத்துடனேயே வீட்டில் தீர்ந்து போயிருக்கலாம். பொதுவாக யன்னலினூடு வெளியே வந்து விழும் சாப்பாடுப் பாசலில் நிச்சயம் மிச்சம் மீதியாக ஏதும் இருக்கும். எதுவும் இல்லாமல் வந்து விழுபவை மிக அரிது. ஒரு நாள் முற்று முழுதாக ஒரு சாப்பாடு வெளியே வந்து விழுந்ததாம். தொடர்ந்து ஒரு பெண்ணின் அழுகைச் சத்தமும் கேட்டதாம். அப்பப்பா காதைக் கொடுத்துக் கேட்டிருக்கிறார்.
"கொம்மா கொப்பாட்டை எத்தினை தரம் புகையிலைக் காணியை ஈடுவைச்சுத் தரச் சொன்னனான். கொழும் பிலை வியாபாரத்துக்கை போட்டுட்டு இரண்டு வருஷத் துக்கை மீண்டு தருவன் எண்டு. அதுக்கு பயம். மருமேன் கொண்டு போய் குடிமுழுகிப் போடுவன் எண்டு. இப்ப கணவாய்க் கறியும். புட்டும். தாருக்கடி வேணும். உன்ரை கொம்மாற்றை சாப்பாடு.”
"கொஞ்சம். பேசாமல் இருங்கோ. ஆக்கள் பாக்கினம்” அவள் விம்மினாளாம். "ஆக்கள் பார்க்கட்டுமன். நாலு சனத்துக்கும் தெரியட்டுமன் கொம்மா கொப்பாற்றை.” சொல்லிக் கொண்டிருக்க றெயின் புறப்பட்டு விட்டதாம்.

Page 29
54 வி, ஜீவகுமாரன்
அன்று அப்பப்பாக்கு நல்ல வேட்டையாம்.
அரைவாசியைச் சாப்பிட்டுவிட்டு வாயால் கெளவிக் கொண்டு வந்து அப்பம்மாவிடம் மிகுதியைக் கொடுத்தவராம்.
எனக்கு மாமிசச் சாப்பாடு என்றால் எங்கள் வீட்டில் ஏதா வது விருந்துக்கு ஆட்கள் வந்து, அன்று அவர்களுக்காக ஆக்கப்பட்ட பிரத்தியேக மாமிசச் சாப்பாட்டை வெளியே கொண்டு வந்து வெளிவிறாந்தையில் எனக்குக் கிட்ட வாகக் கொட்டும் பொழுதுதான். அன்று விருந்துக்கு எங்கள் வீட்டில் வளர்ந்த கோழி யையோ. சேவலையோ. அவர்கள் கறியாக்கியிருந்தால் நான் சாப்பிடமாட்டன்.
எனக்கு எப்பவும் ஆச்சரியமாக இருக்கும். எப்படித்தான் காலையும் மாலையும் அரிசியும், கீரைத் தண்டுகளும் போட்டு வளர்த்துப்போட்டு ஒரு கழுத்துத் திருகலில் கதையை முடித்து சட்டிக்குள் போடுகிறார்களோ என்று.
நாய் நன்றியுள்ள மிருகம் என திண்ணையில் இருந்து பிள்ளைகள் பலமாகப் படிக்கும்பொழுது மனதுக்குள் மகிழ்ச்சியாக இருந்தாலும். அதை மனப்பாடமாக்கும் மனிதர்கள் நன்றியுணர்வு உள்ளவர்களா என எண்ணிப் பார்த்து நான் கவலைப்படுவதுண்டு.
கோழிகளைவிடப் பாவம் கிடாய் ஆடுகள். இலை. குழை. பள்ளிக்கூடத்தால் வந்த பிள்ளைகளைக் கொண்டு பலா இலைகளைக் கம்பியால் குற்றி குற்றி சேர்த்து. அதை இரண்டு மூன்று நாட்களுக்குக் கொடுத்து. அதுவும் போதாது என்று தவிடும் பிண்ணாக்கும் கொடுத்து. கடைவாய்ப் பல்லு வந்துவிட்டதா எனத் தினம் தினம்

சங்காணைச் சண்டியன் 55
பார்த்து வளர்த்து. பின் வைரவர் கோயில் வேள்வி என்று வரும்போது அதற்கு மாலை போட்டுக்கொண்டு போய். அதன் வேளை வரும் வரை காத்திருந்து. சில சமயம் அவ்வாறு காத்திருக்கும் பொழுது'ஆட்டுக்கு விடுபவனிடம் கொண்டு போனால் ஐந்தோ பத்தோ அழவேண்டும் என்பதற்காக இங்கேயே சிலர் தம் மறி ஆடுகளைக் கொண்டு வந்து இலவசமாக ஆட்டுக்கு விட்டு தம் சேமிப்புத் திறமையை சுருட்டைக் குடித்தபடியும் எச்சிலை வேலியில் துப்பியபடியும் கதைத்துக் கொண்டு நிற்க ‘பா’ என்று ஒரு சத்தம் அவலமாகக் கேட்கும். பின் எங்கள் வீட்டுப் பின் கொட்டிலில் பச்சைப் பனை ஒலைகளைப் பிரித்து வைத்து அதில் பங்கு இறைச்சி வேண்ட வந்த நாலைந்து பேர் குந்தியிருந்து பங்கு சரியாய் பிரிபடுகின்றதா எனப் பார்த்தபடி அரசியல் கதைத்துக் கொண்டிருக்க, என் கிடாய்த் தோழனின் அவயவங்கள் பங்கு பிரிக்கப்பட்டு ஒவ்வோர் உமலிலும் போய் விழும். ஈரல், நுரையீரல், இதயம், சதை, கொட்டை, மாங்காய், முன்னங்கால் சதை, பின்னங்கால் சதை, கழுத்தெலும்பு, விலா எலும்பு, இத்தியாதி இத்தியாதி. பின்பு சட்டிக்குள் கிடந்து கொதிக்கும் மணம் பிறம்பாய் காணியெங்கும் மணக்கும். எங்கள் வீட்டில் பழத்தேசிக் காய் மரம் இருந்ததால் அதற்கும் அக்கம்பக்கத்து வீட்டுப் பிள்ளைகள் அன்று ஓடி வருவார்கள். மத்தியானம் எல்லோருக்கும் எண்ணை வைத்து. அதைக் காயவிட்டு. கிணற்றடியில் நின்று பிள்ளைகள் எல்லோரும் கீயோ. மாயோ. எனச் சத்தமிட்டபடி முழுகி. அதற்கிடையில் வீட்டு எஜமான் பிள்ளைகளுக்குத் தெரியா மல் அலுமினியக் கோப்பையில் சின்னதாக கல்லோயா

Page 30
56 வி. ஜீவகுமாரன்
அடித்து. கடைசியில் அனைவரும் வரிசையாக அமர்ந் திருந்து அம்மா ஆட்டுக்கறி போடு. ஈரல் போடு. சுவரொட்டி போடு. என்று கூப்பாடு போட்டபடி கால் எலும்பை எடுத்து கடைவாய் வழியே எச்சில் வழிய அதன் மச்சையை உறிஞ்சும் பொழுது என் அடி வயிறு வறுகும்.
சாப்பிட்டு முடிந்த பின் வெளியே கொண்டு வந்து போடும் எலும்புத் துண்டுகளை நான் மறுதலித்த போது, "இவருக்கு இப்ப கொழுப்பு மெத்திப் போச்சு” என்ற விமர்சனங் களைக் கேட்கும்பொழுது என் மனம் என்னை நினைத்துப் பெருமைப்படும். எங்கள் ஊரில் நடந்த எத்தனையோ நன்றி கெட்ட. அல்லது துரோகச் சம்பங்களுக்கு நான் சாட்சியாய் இருந்திருக் கின்றேன். அவற்றை இப்பொழுது சொல்லி என்ன பிரயோசனம். பாதிக்கப்பட்டவர்கள் பாதிக்கப்பட்டவர்கள் தான். அவர்கள் வாழ்வு திரும்பப் போவதில்லை. பின்பு என்ன நடந்ததோ தெரியாது. எத்தனையோ நிகழ்ச்சிகளை மறக்கவே நினைக்கின்றேன். சிலவற்றை மறக்க முடிவதில்லை. அமைதியாய் போய்விட்டது கடல் என நினைக்கும் பொழுது, மீண்டும் எழுந்து வரும் அலை போல. இயக்கங்கள் என்ற சொல்லு அப்பொழுதுதான் எங்கள் ஊருக்குள் அறிமுகமாகியது. திடீரென புதுப்புது பையன்கள் வருவார்கள். கூட்டம் கூடுவார்கள். அல்லது கூட்டம் போடுவார்கள். வீடுவீடாக நகை, பணம் வேண்ட வருவார்கள்.

F(boraðarrá sairegudr 57
இரவில் பக்கத்து பனை வெளியில் இரகசியமாய் J69 uu, சீனப்புரட்சி படம் பார்த்துக் கொண்டு இருப்பார்கள். நான் அந்த இடத்துக்குக் கிட்டவாகப் போனால் கல் லெடுத்து எறிந்து கலைப்பார்கள். நாளுக்கு நாள் அவர்களின் எண்ணிக்கை கூடியது.
பெண்பிள்ளைகளும் சேர்ந்து வரத் தொடங்கினார்கள் . ரவுசர் போட்டபடி.
ஒருநாள் ஊர் எல்லாம் வெடிச்சத்தம் கேட்டது.
அது பொங்கலுக்கு வெடிக்கும் வெடிச்சத்தம் இல்லை. வித்தியாசமான சத்தம். நானும் என் அக்கம் பக்கத்து உறவினர்களும் அமைதி யின்றி ஒடித் திரிந்துகொண்டிருந்தோம் - உடலில் உதறல் எடுத்தபடி. பின்பு பின்னேரம் போல் அந்தச் சத்தம் அடங்கி விட்டது. இரவு வந்த போதும் என்னால் தூங்க முடியவில்லை.
மனத்துக்குள் ஒரு குறுகுறுப்பு. பனைவெளியடியைப் போய்ப் பார்க்க வேண்டும் என்று.
அங்கே போன பொழுது ஏங்கிப் போய்விட்டேன்.
ஒன்றாய்த் திரிந்த பையன்களில் ஆறு பேரும் ஒரு பெண்ணும் பனைமரத்துடன் சேர்த்துக் கட்டப்பட்டிருந்தார்கள்.
மற்றவர்களின் துப்பாக்கிகள் அவர்களை நீட்டியபடி
அவர்கள் பேசிக்கொள்ளுவதில் இருந்து அவர்கள் இரண்டு குழுவாகப் பிரிந்து விட்டார்கள் எனத் தெரிந்தது.

Page 31
58 வி. ஜீவகுமாரன்
ஒரு கணம் தான்.
படபடவென துப்பாக்கிகள் நெருப்பைக் கக்கின.
நான் இளைக்க இளைக்க தூரத்தே ஒடிப்போய் நின்று பார்த்தேன்.
ஏழு சடலங்களையும் றைக்ரர்களில் ஏற்றிக்கொண்டு நின் றார்கள்.
ஏதோ ஒரு கடற்கரை மண்ணில் புதைக்கப் போவதாகப் பேசிக்கொண்டார்கள். எந்தக் கடற்கரை என்றது எனக்கு தெளிவாகக் கேட்கவில்லை.
ஆனாலும் எங்கள் கிராமத்திற்குக் கிட்டவாய் உள்ள கடற்கரையாகத்தான் இருக்க வேண்டும் என்று உள்மனம் சொல்லிற்று.
யார் பெத்த பிள்ளைகளோ. பிணங்களையாவது பெத்ததுகள் பார்க்க வேண்டாமா?
அடுத்த நாள் கடற்கரையடியில் நான் அமைதியில்லாமல் அங்கும் இங்கும் ஓடிக் கொண்டு திரிந்தேன். சில இடங்களை காலால் கிளறிக் கிளறிப் பார்த்தேன்.
ஏற்கனவே பரபரப்பாய் இருந்த ஊருக்கு என் சமிக்ஞைகள் ஏதோ சங்கேதத்தை உண்டு பண்ணியிருக்க வேண்டும். கடற்கரையில் காலடிகள் அதிகம் தெரிந்த இடங்களில் கிண்டத் தொடங்கினார்கள்.
நான் எட்ட எட்டவாகப் போய் நின்று பார்த்துக்கொண்டு நின்றேன்.

storaDari fairgudi 59
"தலைமுடி தெரியுது” என யாரோ ஒருவன் உரக்கச் சொன்னான்.
சனம் எல்லாம் குவிந்தார்கள். ஒன்றின் பின் ஒன்றாக. ஏழு சடலங்களும் கடற்கரையில் வரிசையில் கிடத்தப்பட்டன.
“உன்னை உதுக்குதானோ படிக்க அனுப்பி வைச்ச னாங்கள்” என ஒரு தாய் குமுறிக்கொண்டு கடற்கரை மண்ணில் தலை தலையாய் அடித்துக்கொண்டு ஓடிவர எனக்கு வலித்தது.
மறுபுறம் என்னை நினைக்க எனக்கே பெருமையாக இருந்தது. அப்படி நான் என்னைப்பற்றிப் பெருமைப்படும் பொழு தெல்லாம் ஏனோ எனக்கு அப்பப்பாவின் ஞாபகம் வரும். அத்துடன் றோஸியின் ஞாபகமும் வரும்.
அப்பப்பாவின் ஞாபகம் வருவதற்குக் காரணம் அவருக்கும் என்னைப் போலத்தான் அளவுக்கு மீறிய நேர்மையும் அளவுக்கு மீறிய கோபமும்.
அப்பப்பா றோட்டுக் கரையில் படுத்திருந்தபொழுது யாரோ ஒருத்தர் செக்கண்ட் ஷோ படம் பார்த்துவிட்டு சைக்கிளில் போய்க்கொண்டு இருந்தபொழுது எட்டி வயிற்றில் உதைத்திருக்கிறாராம். அவரை அரை மைல் தூரத்திற்குக் கலைத்துக் கொண்டு போய் சைக்கிளுடன் வேலி ஒன்றினுள் சாய்த்து விழுத்தி கடி கடி என்று குதறி எடுத்தவராம். குறிப்பிட்ட நபர் அடுத்த 21 நாட்களுக்கும் யாழ்ப்பாண ஆஸ்பத்திரிக்குப் போய் வயிற்றைச் சுற்றி ஊசி போட்டுக் கொண்டு திரிந்தவராம்.

Page 32
60 வி. ஜீவகுமாரன்
அதே மாதிரித்தான் நானும், றோஸி அப்போது சின்னக்குட்டி கொழும்பில் இருந்து பக்கத்து வீட்டுக்காரர் கொண்டு வந்து வைத்திருந்தவை. வெள்ளை வெளேரென பஞ்சு பூத்த தேகம். நீண்ட மயிர்கள். பள்ளிக்கூடம் விட்டு ஒழுங்கையால் போகும் பிள்ளைகள் அதனைத் தடவி விளையாடுவார்கள். எனக்குப் பொறாமை யாக இருக்கும். என்னை யாரும் தொட்டு விளையாடியதே இல்லை. ஆனாலும் என் றோஸியை மற்றவர்கள் ஆசையாகத் தொடுகிறார்கள் என்பதில் அந்தப் பொறாமை யிலும் ஒரு மகிழ்ச்சி.
அந்தப் பிள்ளைகளிடையே ஒரு குறும்புக்காரப் பையன், அதன் வாலை நோகத்தக்கவாறு நன்கு இழுத்துவிட்டு ஓடிவிட்டான். றோஸி அன்று முழுக்க முனகிக்கொண்டே இருந்தது.
எனக்குப் பார்க்க பாவமாய் இருந்தது. அடுத்த நாள் அவனுக்காகக் காத்திருந்தேன். யாரோ வீட்டில் பறித்த மாங்காயைத் தன் தோழர்களுக்கும் கொடுத்த வாறு அந்தச் சிறுவன் வந்து கொண்டிருந்தான்.
ஒரே பாய்ச்சல் அவன் மேல். எட்டு இடத்தில் இழைகள் போடப்பட்டதாம்.
அதன் பின் அவன் அந்த ஒழுங்கையால் வருவதே இல்லை. அதன் பின்பு றோஸி என்னுடன் நன்கு ஒட்டிக்கொண்டது.
என் சக பறட்டை நாய்களுக்கு எல்லாம் நான் கொழும்பு பெட்டையை வளைத்துப் போட்டேன் என்பதில் என் மீது கொஞ்சம். இல்லையில்லை. அதிக பொறாமை.

στώαύπωωτει σατιριυώτ 61
எப்போதும் பின்னேரங்களில் நான் றோஸி வீட்டில்தான். உரசல்கள். முத்தங்கள். உருளல்கள். பிரளல்கள்.
இதுதான் காதலா.
இதற்காகத்தான் கோயில் குருக்களின் மகள் குளத்தில் விழுந்து தற்கொலை செய்தவள் என்றால். பவானி ரீச் சருக்காக பியோன் மணி பள்ளிக்கூடத்திலேயே பொலி டோல் குடித்து உயிரை விட்டவன் என்றால், இதற்காக எதுவுமே செய்யலாம் போல் இருந்தது.
ரோஸி என்னிடம் வந்தது. நான் றோஸியிடம் போனேன்.
அது ஒரு மைமல் பொழுது. பின் வளவில் இருந்த பாவட்டைப் பற்றையடி. என்னிடம் அது எதையோ கேட்டு குனிந்து நின்றது. தலை நிமிர்ந்த என் ஆண்மைக்கு அது புரிந்து விட்டது.
விட்டுவிடுதலறியா விருப்புடன் நேரகாலம் தெரியாமல் சங்கமித்து கொண்டு நின்றோம்.
நேரம் போனதே தெரியவில்லை. அதன் முனகல் என்னை உயிர்ப்பித்துக் கொண்டிருந்தது.
அங்கே வந்த ரோஸியின் வீட்டுக்காரி, பின்னிப் பிணைந்து நின்ற எங்களைக் கண்டு விட்டாள்.
ஒரு பெரிய கல்லை எடுத்து எங்கள் மீது வீசினாள். என் பின்னங்கால் முறிந்தது போன்ற வலி.

Page 33
62 வி. ஜீவகுமாரன்
பிணைந்து நின்ற ரோஸியை விட்டு ஓடமுடியவில்லை.
அடுத்த கல்லெறியில் பிணைந்தபடி இருவருமே இழு பட்டு. இழுபட்டுக் கொண்டு அழுதபடி கொஞ்சத் தூரம் ஒடி. பின் பிரிந்து விட்டோம். அன்றிரவு முழுக்க சரியான வலி. காலிலும். மனதிலும். ஆண்குறிகூட உடம்பைவிட்டு விலகிவந்தது போல வலித்துக் கொண்டிருந்தது. றோஸியை நினைத்து மனம் கவலைப்பட்டுக்கொண்டு இருந்தது. அடுத்தநாள் எப்பொழுது விடியும், அவளைப் போய்ப் பார்ப்பேன் என மனம் துடித்துக் கொண்டிருந்தது. விடிய்ற்காலை வேலியடியில் நின்று ரோஸி வீட்டுக்காரரும் எங்கள் வீட்டுக்காரமும் கதைத்துக் கொண்டு நின்றார்கள். "நீங்கள் கவலைப்படாதையுங்கோ. நாங்கள் பார்த்துக் கொள்கிறோம்” என்று எங்கள் வீட்டார் சொன்னது கேட்டது. கொஞ்ச நேரமில்லை. என்னைச் சங்கிலியால் பிடித்துக் கட்டினார்கள். ரோஸியைக் காரில் ஏற்றி எங்கேயோ கொண்டு போவது வேலி நீக்கலின் ஊடே தெரிந்தது. வெயில் ஏறிக்கொண்டு வந்தது.
யாரோ ஒருவன் எங்கள் வீட்டு எஜமானுடன் வந்து கொண்டி ருந்தான். நான் வாயைத் திறக்க முடியாமல் எஜமான் அழுத்திப் பிடிக்க, வந்தவன் என்பின்னங்கால்தொடையில் ஒரு ஊசியை ஏற்றினான்.

füestaporã sfabrig Uór 63
மயங்கிக் கொண்டு போகின்றேனா? எனது விதைகளை அவன் நசுக்குமாப் போல் இருக்கிறது. உயிர் போகின்றது. பின்பு எனக்கு எதுவுமே தெரியவில்லை. கண்ணைத் திறந்த பொழுது மாலையாகி விட்டது.
கட்டியிருந்த கழுத்துச் சங்கிலியைக் கழற்றிவிட்டிருந் தார்கள்.
நொண்டி நொண்டி ரோஸியிடம் போனேன். என்னுள் எதையோ காணவில்லை - தொலைந்து விட்டது போன்றிருந்தது. என்னைக் கண்டதும் ரோஸி வீட்டுக்காரர்கள் கல்லால் எறிந்தார்கள்.
வேலிக்கு அப்பால் ஓடி வந்து விட்டேன். வேலி இடுக்கின் ஊடே ரோஸியைப் பார்த்தேன். ரோஸியின் கண்கள் - முகம் வீங்கி இருந்தன.
மிருக வைத்தியரிடம் கொண்டு போய் ஊசி ஏதோ போட்ட வர்களாம்.
இப்போதைக்கு ரோஸி குட்டி ஒன்றும் போடாதாம்.
வீட்டுக்காரர் விரும்பினால் என்றோ ஒருநாள் அல்சேஷன் இனத்துடன் சேர்த்து வைப்பார்களாம்.
அதன் பின் எனக்கு அங்கிருக்கப் பிடிக்கவில்லை.
வீட்டை விட்டு ஓடி வந்து விட்டேன்.

Page 34
64 வி. வேகுமாரன்
பள்ளிக்கூடம். கோயிலடி. சந்தையடி. இங்கேதான் என் காலம் இப்போது கழிகிறது.
என்றோ ஒரு நாள் அப்பப்பாவின் ஞாபகம் வரும். இல்லை, ரோஸியின் நினைவு வரும். இடைக்கிடை எம் வீட்டுக்குப் பின்னால் கட்டப்பட்டிருந்த கறுத்த கிடாய் ஆடும். அந்தப் பனைமரத்தில் கட்டப்பட்டு சுடப்பட்ட பிள்ளைகளும்.
SM
 

வடியில் இலாஞ்ச்
அனலைதீவு என்ற நினைப்பு வரும்பொழுது எவ்வாறு அதிகமானோருக்கு ஐயனார் கோயில் ஞாபகத்துக்கு வருமோ. அதேயளவு என் நினைவில் என்னை வந்து தாலாட்டிச்செல்வதுஅனலை தீவை வெளியுலகத்தோடு இணைக்கும் அந்த மெயில் லோஞ்சும் அதில்பயணிக்கும் சுகமான அனுபவமும்தான். கடற்காற்றை அனுபவித்தபடி அதன் தாலாட்டில் மிதந்து செல்வது ஒரு தனிச்சுகம்.
யாழ்ப்பாணப் பக்கத்தால் பஸ்சில் வந்து இறங்கும்

Page 35
66 வி. ஜீவகுமாரன்
பயணிகள், அதில் வரும் தபால் பொதிகள், காலைத் தினசரிகள், மேலாக கொழும்பு பயணக்காரர்கள். காரைநகர்ப் பக்கத்தால் வருகிறதா. இல்லை கடலில் நிற்கிறதா எனத் தெரியாமல் நத்தை வேகத்தில் ஊர்ந்து வரும் ஜெற்றிப் பாதை”. அதில் சங்கானை, பண்டத்தரிப்பு சந்தைகளில் இருந்து வரும் மரக்கறி வியாபாரிகள். இவை அனைத்தும் மெயில் லோஞ்ச் புறப்படும் வரை ஊர்காவற்துறையை களைகட்ட வைத்துவிடும்.
“என்ன செல்லரம்மான். டாக்குத்தர் என்ன சொன்னவர். கிழவி திருவிழா முடியுமட்டும் தாங்குமோ.” “பார்த்தியே உவள் கனகத்தின்ரை பெட்டை. ஒன்பது வயதுதான். மூலையிலை போய்க் குந்திட்டாளாம். நான் சாமத்தியப்படேக்கை எனக்கு பதினைஞ்சு வயது.”
"கேள்விப்பட்டனியோ. கனடாவிலை இருக்கிற உந்த சங்கக்கடை மணியத்தான்ரை மகனுக்கு பேசி அனுப்பிய பெட்டை அங்கை போய் இறங்கின உடனை மாட்டன் எண்டுட்டுதாம்.”
இவ்வாறு எனக்கு சம்மந்தா சம்மந்தமில்லாத எத்தனையோ சம்பாஷணைகள் என்னைச் சுற்றிப் போய்க்கொண்டி ருந்தாலும் அனலைதீவின் அன்றைய லேற்றஸ்ட் நியூஸ் களைத் தாங்கிய இலவச காலைப் பதிவாக அந்த சம்பாஷணைகள் அமையும்.
அனலைதீவுக்கும் ஊர்காவற்துறைக்கும் இடையில் பாலம் கட்டுவது என்ற ஒரு திட்டம் உருவாகி கைவிடப்பட்டதில் எத்தனை பேருக்கு வருத்தமோ இல்லையோ தெரியாது. எனக்கு அதில் மிக்க சந்தோஷம். இந்த லோஞ்சுப் படகுப் பயணமும் சேர்ந்ததுதான் அனலைதீவின் அழகு என்ற நம்பிக்கை எனக்கு என்றைக்குமே உண்டு.

சங்தானைச் சண்டியன் 67
இந்த மெயில் லோஞ்சைத் தவிர இன்னும் இரண்டு லோஞ்சுகள் இருந்தாலும் கூட இந்த மெயில் லோஞ்சுக்கு
என்று ஒரு சிறப்பு உண்டு. வெளியுலகத்தின் முழுத் தொடர்புகளையும் காலை வேளைகளில் அனலைதீவுக்கு அள்ளி வருவது நாகலிங்கத்தாரின் இந்த மெயில் லோஞ்சு தான.
கொழும்பு உத்தியோகத்தர்கள் அல்லது அவர்கள் தமது பிள்ளைகள் - மனைவிமாருக்கு போடும் கடிதங்கள், மணி யோடர்கள், காலைத் தினசரிகளான ஈழநாடு, வீரகேசரி அத்தனையையும் சுமந்து வந்து ஊருக்கு ஒரு புதுத் தென்பைக் கொடுப்பது இந்த மெயில் லோஞ்சுதான். அவ் வர்றே அன்று மாலையே ஊரின் இதயங்களைவெளியே எடுத்துச் செல்லுவதும் இந்த மெயில் லோஞ்சுதான்.
ஒரு நாளைக்கு மெயில் வண்டி வரப் பிந்திவிட்டால் போதும். மெயில் பொதிகள் இல்லாமல் வரும் மெயில் லோஞ்சு ஊரை நடைப்பிணமாக்கிவிடும். அனலைக் கடற்கரையில் நிறைந்திருக்கும் தொட்டாற்சிணுங்கி போல ஊரே சுருங்கி விடும்.
அடுத்து வரும் பத்து மணி லோஞ்சுக்குத்தான் அன்று ஹிரோப்பட்டம்.
இந்த ஒரு மணித்தியாலப் பயணமும் பருத்தித்தீவையும் எழுவை தீவையும் தாண்டிச் செல்லும்போது அந்தத் தீவுகளின் அழகும் என அனைத்தும் சேர்ந்து ஒரு குட்டி சாம்ராஜ்யத்துள் பயணிப்பது போலத் தோன்றும். பருத்தித்தீவில் எந்தக் குடிமனைகள் இல்லாவிட்டாலும் அந்தத் தீவைப்பற்றி இந்தப் படகுப் பயணத்தில் கேட்ட சின்னச் சின்ன கிசுகிசுப்புகள் ரொம்ப சுவாரஸ்யமாக இருக்கும்.

Page 36
68 வி. ஜீவகுமாரன்
மூலைவீட்டு கணவதியற்றை ஆட்டை பருத்தித்தீவுக்கு களவாய்ப் பொடியள் கொண்டுபோய் தண்ணியும் அடிச்சு ஆட்டையும் வாட்டி சாப்பிட்டது தொடக்கம்.
ஐயனார்கோயிலுக்கு என்று கூட்டி வந்த சின்ன மேளக் காரிகளை இராவோடு இராவாக நாலுபேராக பருத்தித் தீவுக்குள் கொண்டு சென்று அடித்த கூத்துகள் உட்பட அந்தக் கிசுகிசுப்புகளுள் அடங்கும். இலங்கையிலேயே பெரிய தேர் என்ற பெருமையோடு கட்டி முடிக்கப்பட்ட ஐயனார் கோயில் தேர் இழுக்க முடியாமல் வழக்கு அது இது என்று இழுபறிப்பட்டு பின்பு இணக்கம் கண்ட பின்பு நடைபெற்ற அந்த முதல் ஐயனார் கோயில் திருவிழாவுக்குத்தான் நான் முதல் முதல் அனலைதீவுக்குப் போயிருந்தேன்.
அப்போது நான் அட்வான்ஸ் லெவல் படித்துக் கொண்டி ருந்தேன். அன்று ஊர்காவற்துறையைப் பார்க்க வேண்டுமே. களை கட்டியிருந்தது. வள்ளம், வள்ளத்தில் ஏறும் படித்துறை அனைத்தும் தோரணங்களாலும், கலர் கலரான கொடிகளாலும் அலங் கரிக்கப்பட்டிருந்தன. அன்று அனலைதீவுக்கு அடியார்களை ஏற்றிச் செல்வதற் காக மெயில் லோஞ்சுடன் கூடவே இன்னும் இரண்டு லோஞ்சுகள். அனைத்தும் தோரணங்களாலும் இளம் வாழைக்கண்டுகளாலும் சோடிக்கப்பட்டு லோஞ்சின் முகப்பில் செவ்விளணியும் தொங்க விடப்பட்டிருந்தது.
ஆண்களும் பெண்களும் குழந்தைகளும் பட்டு வேட்டி களிலும் சரிகைச் சேலைகளிலும் மினுமினுக்க அனலைதீவு

சங்கானைச் சண்டியன் 69
ஐயனாரின் மண்வாசனை ஊர்காவற்துறையிலேயே வீசத் தொடங்கியிருந்தது. நாங்கள் நாலு பொடியள். மேல் தட்டில். சோளகக் காற்றில் எம் வாரிவிட்டிருந்த தலைமுடிகள் கலைந்து கொண்டிருக்க புதுக்க கட்டிய வேட்டி காற்றில் பட படத்துக்கொண்டு இருந்தது. ரிக்கற் குடுப்பவர் கீழே நின்று ஐயனாருக்கு அரோகரா என்று குரல் கொடுக்க அனைத்துப் பயணிகளும் அவருடன் சேர்ந்துகொள்ள, கரையை இணைத்துக் கட்டியிருந்த கயிற்றை ஒருவர் எடுத்து விட லோஞ்சு மெதுவாக அசையத் தொடங்கியது. கீழே எவ்வளவு சனம் என பார்க்கும் ஆவலில் மேற் தளத்தில் குப்புறப் படுத்தபடி கீழே குனிந்து பார்த்தேன். முழு இருக்கைகளும் நிரம்பியிருந்தன. என் கண்கள் சிவமணியின் கண்களில் குத்தி நின்றன. அவளுக்கு பதினைந்து வயதிருக்கும் என்று நினைக் கிறேன். தகப்பனுக்கும் தாய்க்கும் நடுவில் பாவாடை தாவணியுடன் அமர்ந்திருந்தாள். நெற்றியில் இடப்பட்டி ருந்த சின்ன விபூதிப்பூச்சும் சாந்துப் பொட்டும் அவளை மீண்டும் ஒரு தரம் பார்க்கச் சொன்னது.
9வளின் அந்த அழகு தினசரி யாழ்ப்பாண பஸ்களில் காணும் பள்ளிக்கூடப் பெண்பிள்ளைகளிடம் இருந்து முற்றாக மாறுபட்டு இருந்ததாலோ என்னவோ எனக்கு ரொம்பப் பிடித்திருந்தது.

Page 37
70 வி. ஜீவகுமாரன்
அன்று முழுக்க கோயிலடியில் சந்தர்ப்பவசமாகவோ அல்லது சந்தர்ப்பத்தை ஏற்படுத்திக் கொண்டோ குறைந்தது பத்து தடவையாவது அவளைப் பார்த்திருப்பேன். அவளும் என்னை அடிக்கடி பார்த்தது போலவே உணர்ந்தேன். வள்ளத்தில் இருந்து இறங்கிய பொழுது. கோயிலுக்குப் போகும் பொழுது. கோயிலின் உள்வீதியைச் சுற்றி வந்த பொழுது. தேரின் வடக்கயிற்றைப் பிடித்திருந்தபொழுது. கோயில் பின் வீதியில் மரநிழலில் கடலை சாப்பிட்டுக் கொண்டிருந்த பொழுது. கடைசியாக அவள் தனது வீட்டுக்குத் திரும்பிய பொழுது. நான் தனியே வள்ளத்துக்கு வந்த பொழுது. அதிகமாக வாலிப வயதில் எல்லோருக்கும் தோன்றும் கிறுக்குத்தனமான காதலாக அது எனக்குப் படவில்லை. நானும் என் எதிர்காலமும் இன்னும் எத்தனையோ மெயில் லோஞ்ச் பயணங்களில் இணைக்கப்படப் போகின்றோம் என முற்றாக நம்பினேன்.
இரண்டு கிழமை கழிந்திருக்கும். விக்னா ரியூட்டரிக்குள் போவதற்காகக் காத்திருந்தேன்.
அவள் வெளியே வந்து கொண்டிருந்தாள். இப்போதும் அதே சின்ன விபூதிப் பூச்சு.
என்னைப் பார்த்துவிட்டு மீண்டும் புத்தகங்களைக் கட்டி யணைத்தபடி போய் விட்டாள். இது போதுமே. நதிமூலம் ரிஷிமூலங்களை அறிய.
பெயர் சிவமணி. பிறந்தது அனலைதீவு. தற்போது இருப்பது கன்னாதிட்டி. தகப்பன் இந்துக் கல்லூரி ஆசிரியர். தாய்

சங்கானைச் சண்டியன் 71
வேம்படி ஆசிரியை. குடும்பத்துக்கு ஒரேயொரு பெண் பிள்ளை. “பிடிச்சாலும் புளியங்கொம்பாய் பிடிச்சாயடா” - அவள் காது பட என் நண்பர்கள் சொன்னபோது முதல் முதலாக அவள் சிரித்ததைக் கண்டேன்.
அடுத்த நாள் சைக்கிளில் விக்னா ரியூட்டரி வாசலில் அவளுக்காகக் காத்திருந்தேன். அன்று அவள் வரவில்லை. அது மட்டுமில்லை, விக்னா ரியூட்டரியில் அடுத்தடுத்த சில நாட்களாக சிவமணியைக் காணவில்லை. ஏதும் காய்ச்சல் வந்திருக்கும், இனி வந்திடுவாள், வந்திடு வாள் எனத்தான் நினைத்திருந்தேன். ஆனால் ஒரு கிழமைக்கும் மேலாக வரவேயில்லை. கால்கள் சைக்கிளை கன்னாதிட்டிக்கு உழக்கிச் சென்றன. சிவமணி வீடு பூட்டியிருந்தது. பக்கத்தில் இருந்த பெட்டிக்கடைக்காரனிடம் விசாரித் ததில், தகப்பனுக்கும் கல்விக் கந்தோர் பெரியவனுக்கும் ஏதோ பிரச்சனையாம். கட்டாய இடமாற்றத்தின் பெயரில் வன்னிக்கு மாற்றிப் போட்டார்களாம் என்று அறிந்து கொண்டேன்.
அதுக்குப் பிறகு அடுத்தடுத்த இரண்டு ஐயனார் கோயில் தேர் திருவிழாக்களில் சிவமணியைக் காணலாம் என்று நான் போயிருந்தாலும் அவளைக் காணவில்லை.

Page 38
72 ' வி. ஜீவகுமாரன்
கம்பசுக்குப் போன முதல் வருஷம் ஐயனாரைத் தேரால் இறக்கும் நேரத்தில் சிவமணியின் தகப்பனையும் தாயையும் கோயிலின் பின் வீதியில் கண்டேன். ஏதோ துணிவை வரவழைத்துக்கொண்டு கிட்டவாய் போய்க் கேட்டேன்.
“சிவமணியும் நாங்களும் விக்னா ரியூட்டரியிலை ஒண்டாய் படிச்சனாங்கள். பேந்து வன்னிக்கு போயிட்டா எண்டு கேள்விப்பட்டம். கம்பசுக்கு என்ரர் பண்ணிட்டாவோ?”
அவர்கள் என்னை மேலும் கீழுமாய் பார்த்தார்கள். “இல்லை தம்பி. அவள் இயக்கத்துக்குப் போட்டாள்.” ஏழாத்துப்பிரிவின் படகாக என் மனம் ஆடியது.
"நான் யாழ்ப்பாண கம்பசிலைதான் படிக்கிறன். அவா எப்பவாவது வந்தால் நான் விசாரித்ததாய் சொல்லுங்கோ.”
அதன்பிறகு சிவமணியைப்பற்றிய எந்தத் தகவலும் எனக்குக் கிடைக்கவில்லை. ஆனால் எந்த இயக்கத்தின் எந்தப் பெண்பிள்ளைகளைக் கண்டாலும் ஒரு தடவை உற்றுப் பார்ப்பேன். அதேபோல் கம்பசில் படித்த அடுத்த 4 வருஷமும் ஐயனாரின் தேர்த் திருவிழாவுக்கு அந்த மெயில் லோஞ்சில் போய்க்கொண்டுதான் இருந்தேன்.
ஒரு நாளாவது லோஞ்சின் மேல் தட்டில் இருந்து இருவரும் கடலையும் சாப்பிட்டு இலக்கியமும் கதைத்துக் கொண்டு 6muIJLDT ”GBLITLDT 6T60T LD60TLD ULULäs(guid,
கம்பஸ் முடிய நானும் கனடாவுக்கு வந்துவிட்டன்.

geogramparë: Fairgitudir 73
அப்பப்போது சிவமணியின் அந்த விபூதிக்குறியுடனான சிரித்த முகமும் வந்து வந்து போகும். ஊரிலை இருந்தும் கனடாவில் இருந்தும் அடிக்கடி சம்மந் தங்கள் வந்து வந்து போயின. நானும் அதுகளைத் தட்டிக் கழிக்க கழிக்க எனக்கும் வயது ஆக ஆக சம்மந்தங்கள் வருவதும் குறைந்து போக எனக்கும் வயது 45ஐத் தாண்டி விட்டது.
ஆனால் இப்பவும் அந்த சிரித்த முகமும். விபூதிக் குறியும்.
இப்ப முப்பது வருடத்துக்குப் பிறகு இந்த ஊர்காவற் துறையில் வந்து நிக்கிறன். ஊர் காவல்துறையின் கைகளுக்குள் போய்விட்டதாலோ என்னவோ அந்தப் படித்துறையில் எந்தக் கலகலப்பும் இல்லை - என் மனம் போல.
மனங்களையும் மகிழ்ச்சிகளையும் எங்கேயோ தொலைத்த படி மனிதர்கள் உயிர்களை மட்டும் சுமந்தபடி மெது மெதுவாய் வந்து லோஞ்சில் ஏறுகிறார்கள்.
மெயில் லோஞ்சிற்கு அடிக்கப்பட்ட பெயின்ற் பல இடங்களில் பெயர்ந்திருந்தது - கவனிப்பாரின்றி.
இப்பவும் இதற்குப் பெயர் மெயில் லோஞ்ச்தான். ஆனால் தபால் பொதிகள் மட்டும் தனக்கு வசதியான நேரத்தில் வசதியான லோஞ்சில் வந்து கொள்ளும். சில வேளைகளில் நேவிக்காரன் கொண்டுவந்து கொடுத்துச் செல்வானாம்.

Page 39
74 வி. ஜீவகுமாரன்
போன கிழமை கனடாவில் ஒரு புத்தக வெளியீட்டுக்குப் போயிருந்தபொழுது கிழக்காலை முருகேசரின் பேரன் ராசன்தான் சொன்னவன், சிவமணியை இயக்கத்திலை இருந்து வீட்டை அனுப்பிப் போட்டாங்களாம் என்று. எனக்குள் நயாகரா வீழ்ச்சியின் நடுவே நின்று குளிப்பது போலிருந்தது. “கான்சர் முத்திட்டுதாம். இனி அங்கை வைச்சு என்ன செய்யுறது. அவள் எங்கடை மண்ணிலை ஐயனாற்றை காலடியிலை தன்ரை உயிர் போகவேனும் எண்டு ஆசைப் பட்டவளாம்.”
அதே நயாகரா என்னை இழுத்துப் போய் ஒரு பாறையில் அடித்தது போலிருந்தது. ராசன் தொடர்ந்தும் சொல்லிக் கொண்டு இருந்தான். என்னால் எதையும் கிரகிக்க முடியவில்லை.
அடுத்தநாள். அடுத்த பிளைற். மீண்டும் அந்த மெயில் லோஞ்சை நோக்கி. மீண்டும் என் சிவமணியைத் தேடி.
இப்போ லோஞ்ச் கடற்கோட்டையைத் தாண்டி விட்டது. ரிக்கற் போடுபவர் அருகில் வந்தார். “தம்பியை அடையாளம் காணேலாமல் கிடக்கு.”
"நான் அனலைதீவில்லை. என்னோடைபடிச்ச ஒரு ஆளைப் பார்க்க வந்திருக்கிறன.”
"தாராக்கும்?”

சங்கானைச் சண்டியன் 75
“பேரம்பல மாஸ்டரின்ரை மகள் சிவமணி.” "அந்த இயக்கத்து பிள்ளையோ. தம்பிக்கு விசயம் தெரியாதோ.”
“இல்லை” எனத் தலையாட்டினேன்.
LD60TLD ULUL-555).
“முந்த நாள் எல்லாம் முடிஞ்சுது. கான்சர் எண்டு கை விட்டதுதானே. கெதியாய் பரவீட்டுதாம். இண்டைக்கு காடாத்து வைச்சிருக்கினம். வந்ததும் வந்தனிர் தேப்பன் தாயைப் பார்த்துவிட்டுப் போமன்.”
நான் கண்களை இறுக மூடிக் கொண்டேன்.
ன் அவர்கள் வீட்டை போனபொழுது வாசற்படியில் நாலைந்து பேர் கதைத்துக் கொண்டு இருந்தார்கள். கிரியை செய்வதற்காகப் போடப்பட்ட பந்தல் பிரிக்கப் படாமல் இருந்தது. கிரியை செய்த வாங்கு பிரட்டிப் போடப்பட்டிருந்தது. மஞ்சள் தண்ணி முற்றாகக் காய்ந்திருக்கவில்லை. தகப்பன் சரியாய் தள்ளாடிப் போயிருந்தார். என்னை நானே அறிமுகம் செய்து கொண்டேன் விக்னாவில் சிவமணியுடன் படித்ததாக, தாய் அழுது அழுது, சிவமணி இயக்கத்துக்குப் போனது. கான்சர் வந்தது. எல்லாத்தையும் எனக்குச் சொல்லி தன் கவலையை ஆற்றிக் கொண்டிருந்தார்.

Page 40
76 வி. விவகுமாரன்
அமைதியாக இருந்த நான் சிவமணியின்ரை படம் ஏதும் இருக்கோ எனக் கேட்டேன்.
“வாரும் தம்பி” எனக் கூட்டிச் சென்று ஹோலில் பின் பக்கமாக மாட்டியிருந்த சிவமணியின் படத்தைத் திருப்பிக் காட்டினார். சிவமணி இயக்க உடுப்புடன் பெரிதாக்கப்பட்ட படத்தினுள் சிரித்திருந்தாள். முதன் முதல் மெயில் லோஞ்சில் சிரித்திருந்த அதே சிரிப்பு.
தலையில் சில சில வெள்ளை முடிகள். ஆனால் அவளின் முகத்தில் ஏதோ ஒன்று குறைந்திருந்தது.
மூலையில் எரிந்துகொண்டிருந்த குத்துவிளக்குக்குப் பக்கத்தில் கற்பூரம் கொளுத்தி அணைக்கப்பட்ட விபூதித் தட்டு இருந்தது.
அதிலிருந்த விபூதியை கொஞ்சமாய் எடுத்து அவள் நெற்றியில் சின்னதாய் பூசிவிட்டேன்.
இப்போதுதான் அவள் என் சிவமணி. தாய் என்னை விளங்கிய மாதிரியும் விளங்காத மாதிரியும் பார்த்துக் கொண்டு நின்றார். வெளியில் இறங்கி நடக்கின்றேன். பின்னேரக் கடைசி மெயில் லோஞ்ச் தூரத்தில் வருகிறது.
இனியொரு மெயில் லோஞ்ச் பயணம் எனக்கில்லை.
ysf

(இந்தி மொழியில் chit என்ற சொல், தென்கிழக்காசிய ஆங்கில கலைக்களஞ்சியச் சொற்களுக்குள் எவ்வாறோ
நுழைந்து விட அதுவேதமிழில்
மருவி சீட்டாகிவிட்டது.)
சிரியாக ஒரு வருடத்துக்கு முதல்.
அன்றும் இன்றைக்குப் போலத் * தான் நன்கு வெயில் எறித்துக் జ్ఞ భ கொண்டிருந்தது.
ஞாயிற்றுக் கிழமையாதலால் பிள்ளைகளுடன் கடலுக்குப் போய் குளித்து விட்டு, பின்னேரச்

Page 41
78 வி. ஜீவகுமாரன்
சாப்பாட்டுக்கு கிறில் போடுவம் என வீட்டுக்கு வெளியில் நெருப்பு மூட்டிக் கொண்டு நின்றேன். கிறில் இறைச்சி என்றால் பிள்ளைகள் நன்கு சாப்பிடுவார்கள். அதை விடவும் சாப்பிட்ட பின்பு சமைத்த பாத்திரங்களைக் கழுவும் வேலையும் குறைவு. அப்பொழுதுதான் சிவானந்தன் அண்ணையின் திடீர் மரணச் செய்தி வந்தது. அது கேட்டு எங்கள் நகரமே ஒரு கணம் ஸ்தம்பித்துப் போனது. “இறைச்சியை நீங்கள் பார்த்துக் கொள்ளுங்கோ” என மனைவியிடம் சொல்லி விட்டு காரில் ஏறிப் பறந்தேன். அங்கு போய் இறங்கிய பொழுதுதான் காலில் செருப்பு கூடப் போடாமல் காரை ஓட்டிக் கொண்டு வந்திருக்கிறேன் எனப் புரிந்தது.
இந்த சீட்டின் நோக்கம் ஒன்றேதான். சேமிப்பு! சேமிப்பு! சேமிப்பு!!!
அதுவும் 95 வீதமான சீட்டுகள் அரசு அங்கீகாரம் இல்லாது. தனியே நம்பிக்கையின் அடிப்படையில் நடாத்தப்படும் சேமிக்கும் வங்கி ஆகும்.
இந்த சேமிப்பு பங்குதாரரின். அல்லது கிராம வழக் கியலில் சொல்வதானால் சீட்டுப் பிடிப்போரின் பொருளா தாரத்தை அடிப்படையாகக் கொண்டு அதன் மொத்த தொகையோ. பொருளோ. காலமோ தீர்மானிக்கப்படும்.

சங்கானைச் சண்டியன் . 79
பொருள் வகையில் பார்ப்பதாயின் சீலைச் சீட்டில் ஆரம் பித்து நகைச் சீட்டு வரை வளர்ந்து போகும். தொகை வகையில் பார்ப்பதாயின் பத்து, நூறு என்று ஆரம்பித்து இலட்சங்கள் வரை புரளும். காலவகையில் பார்க்கும்பொழுது கிழமைக்கோ அல்லது மாதத்துக்கோ ஒரு தடவை கூடும் இந்தச் சீட்டு சுமார் இரண்டு மூன்று வருடங்கள் வரை நீடிக்கும். உங்களில் எத்தனை பேருக்குத் தெரியுமோ. தெரியாது. 70களின் பின்னடியிலும் 80களின் ஆரம்பத்திலும் யாழ்ப் பாணத்தில் மினி பஸ்கள் அதிகமாய் ஓடிய காலகட்டத்தில் மினி பஸ்ஸின் நடத்துனர்கள் தங்கள் முதலாளிமாருக்குத் தெரியாமல் தினமும் நூறு ரூபாய் சீட்டுப் பிடித்தார்கள். இந்தச் சீட்டு ராணி தியேட்டருக்குப் பக்கத்தில் இருந்த கடை ஒடைகளின் கடைசி வரிசையில்தான் நடைபெற்றது. கடைசியில் மனோகரா தியேட்டரடியில் இருந்த கமலாக்கா வின் மகளுக்கு சீட்டுப் பிடித்தவர்களில் ஒருத்தன் தங்க அட்டியல் செய்து கொடுக்க வெளிக்கிட்டு அது பிடிபட்ட பொழுதுதான் முழு மினி வான் முதலாளிமாரும் முழித்துக் கொண்டார்கள். h
கமலாக்காவிற்கு இங்கு ஓர் அறிமுகம் தேவையில்லை.
சிவானந்தண்ணை வீட்டுக்கு முன்னும் ஹோலிலும் மக்கள் நிறைந்து நின்றார்கள். எல்லோர் முகத்திலும் சோகம் படிந்திருந்தது.

Page 42
80 வி. ஜீவகுமாரன்
அந்தளவு சிவானந்தண்ணை எல்லோருடனும் கடந்த இருபது வருடமாக இங்கு பழகி வந்தவர். சென்ரல் காம்பில் அகதி அந்தஸ்துக்காகக் காத்திருந்த பொழுது. அகதி அந்தஸ்து கிடைத்தபின் கலாச்சார வகுப்பு ஒழுங்கு செய்த சுற்றுலாக்களில் மகிழ்ச்சியாகக் காலம் கழிந்த பொழுது. அதன்பின் தமிழர்கள் டென் மார்க்கின் அனைத்து நகரங்களுக்கும் பிரித்து பிரித்து அனுப்பப்பட்ட பொழுது. எங்களுடன் இரண்டு வருடம் டெனிஷ் மொழி படிக்கும் பாடசாலைகளுக்கு வந்த பொழுது. பொதுவாக அனைத்து தமிழருக்கும் பொருளா தாரம் பெரிய பிரச்சினையாய் இருந்தபொழுது. ஏதாவது பொருட்கள் எங்கேயாவது மலிவாய் இருந்தால் அதை அறிந்து அனைவருக்கும் தனது தொலைபேசிச் செலவி லேயே அழைத்துச் சொன்னபொழுது. எல்லோர் மனங் களிலும் கொஞ்சம் கொஞ்சமாக சிவானந்தன் அண்ணை இடம் பிடிக்கத் தொடங்கினார்.
மேலும் இங்கு வந்தவர்கள் இந்த பொருளாதார சொர்க்க பூமிக்கு தம் தம் சகோதரங்களை, உறவினர்களை அழைக்க விரும்பினாலும் அதற்கு பெரிய தொகை பணம் தேவைப்பட்ட பொழுது சீட்டு தொடங்குவோம் என ஆலோ சனை சொன்னவரும் சிவானந்தன் அண்ணையே. எங்கள் நகரத்தில் இருந்த 20 குடும்பத்தினருக்கும் கிட்டத் தட்ட ஒரேயளவு தொகை மாதாமாதம் வங்கியில் வந்து விழுவதால் அந்த இருபது பேரும் ஆயிரம் குறோன்கள் வீதம் இருபது மாதத்திற்கு என்று இருபதினாயிரம் குறோன்கள் சீட்டு ஆரம்பமாகியது. உண்மையில் அந்த இருபதினாயிரம் குறோன்களினால் ஒவ்வொரு குடும்பத்திலும் எத்தனையோ நல்ல காரியங்கள்

Fabrandaorể Fair2UUdr 81
நிறைவேறின. இன்று எங்கள் ஒவ்வொருவராலும் எத்தனையோ ஆயிரங்களை அல்லது இலட்சங்களை வங்கியில் கடனாக எடுக்கலாம். ஆனால் அப்போது ஓர் ஐயாயிரம் குறோனைக் கூட வங்கியில் எடுக்க முடியாது.
தங்கவேலுவின் தம்பியை டென்மார்க்கிற்கு கூப்பிட்டது. சிவசுப்பிரமணியத்தின் தமக்கைக்கு ஊரில் கலியாணம் நடந்தது. செந்தில் ஊரில் வீடு கட்டி முடித்தது. சுருட்டுக் கனகரின் மகளின் சாமத்திய வீட்டை இங்கு பெரும் விமரிசையாகச் செய்தது என அனைத்திலும் சிவானந்தன் அண்ணை முன்னின்று நடாத்திய சீட்டுக்கு பெரிய பங்கு உண்டு.
இந்தச் சீட்டில், எழுதப்படாத சட்டங்கள் பல உண்டு.
முதலாவது உருட்டல் சீட்டு. இதில் சிக்கல்கள் குறைவு. எப்பொழுதும் முதல் சீட்டு, சீட்டு நடத்துனருக்கு(அவருக்கு தாச்சிக்கு நிற்பவர் என்று பெயர்), போக மிகுதிச் சீட்டு அனைத்தும் சீட்டுகளை குலுக்கிப் போட்டு அதிர்ஷ்டத்தின் வகையில் அந்த அந்த மாதம் காசோ, பொருளோ வழங்கப் படும். இந்த உருட்டல் சீட்டில் எந்தப் பிரச்சினையும் இல்லை.
நகைச்சீட்டு என்னும்பொழுது சீட்டு பிடிப்பவரிடமே நகை வேண்ட வேண்டும் என்பது ஒப்பந்தமாய் இருக்கும். எங்கள் பெண்களும், “மாதம் மாதம் கொஞ்ச காசுதானேயப்பா. பிள்ளையஞக்கு நகை நட்டு சேர்த்து வைத்தால் நல்லம் தானே. நீங்கள் குடிக்கிற சிகரட் காசுதான் வரும்” என

Page 43
82 வி. ஜீவகுமாரன்
ஆண்களின் பலவீனத்தை வைத்தே அவர்களுடன் வாதாடி. அதற்கு அனுமதி பெற்று விடுவார்கள்.
நான் சிங்கப்பூருக்குப் போகும் சமயங்களில் வேண்டி வரும் சின்னச் சின்ன நகைகளின் விலைகளுடன் ஒப்பிடும் பொழுது என் மனைவி நகைச்சீட்டுப் போட்டு வேண்டி வரும் நகைகளின் விலை மலிவாக இருப்பதில் எப்பொழுதும் எனக்கு ஆச்சரியம் தான்.
அடுத்த வருடம் நாங்கள் அனைவரும் சிங்கப்பூருக்குச் சென்றபொழுது டிசைன் மாற்றுவதற்காக நகைச்சீட்டு போட்டு வாங்கி வைத்திருந்த அனைத்து நகைகளையும் எடுத்து வந்திருந்தாள். சரியாக 32 பவுண்கள். ஒரு மஞ்சாடி கூடவும் இல்லை. குறையவும் இல்லை.
"பாத்திரே அப்பா. அந்த ஆள் நிறையிலை எந்த வஞ்சகமும் செய்யேல்லை" என என் மனைவி அடுத்த நகைச்சீட்டுக்கு என்னிடம் அத்திவாரம் போட்டுக்கொண்டு நிற்கும்பொழுது நடைக்கடைக்கார சீனத்துப் பெண் என் மனைவியின் நகை களை உரசி உரசி ஒரு கரையிலும், நான் முன்பு சிங்கப்பூரில் வாங்கிய நகைகளை மறுகரையிலும் வைத்துவிட்டு எனது நகைக்கு எடைக்கு எடை நகை தருவதாயும், மனைவியின் நகைக்கு 20 வீதம் கழித்தே நகை தருவதாயும் சொன்னாள்.
அன்று குனிந்த தலைதான். இன்று வரை எங்கள் வீட்டில் நகைச்சீட்டு என்ற கதையே இல்லை. அடுத்தவகைச் சீட்டு ஏலச்சீட்டு. பெரும் தொகையான பணம் புரளுவதும், மற்றவனின் கஷ்டத்திலும் கழிவிலும் பிறர் வாழ்வதும், கழிவைக் கூட்ட வெளிக்கிட்டு சிலர் தம் தலையில் தாமே மண்ணை அள்ளிப்

சங்தானைச் சண்டியன் 83
போடுவதும் என. பல சந்தர்ப்பங்களில் சீட்டை நடத்து பவர்கள், இலங்கையில் என்றால் தற்கொலை செய்வதும் அல்லது சண்டியர்களின் மிரட்டல்களுக்கு ஆளாகுவதும். வெளிநாடுகள் என்றால் எல்லோருக்கும் நாமம் போட்டு விட்டு இன்னோர் நாடுகளுக்கு மாறுவதும் என. மெகா சீரியல் போன்ற எத்தனையோ பெரிய சம்பவங்களும். அதில் வரும் கிளைக்கதைகள் போன்று சிறிய சம்பவங்கள் ஆயிரமாயிரமும் இடம் பெறுவதுண்டு. பொதுவாக எல்லாக் கதைகளிலும் பின்னால் ‘ஏமாற்று என்ற ஒரே ஒரு இழைதான் ஓடும். அதில்தான் வெவ்வேறான மணிகள் கோர்க்கப்பட்டிருக்கும். அத்தனைகளும் கறுத்த மணிகள்தான்-சிறியதும் பெரியதுமாகமுஹாரிஇராகத்தை காவும் கறுத்த மணிகள்.
முதல் சீட்டு நன்கு முடிய இரண்டு மாதம் இருக்கும் பொழுதேயே எல்லோரும் அடுத்த சீட்டை தொடங்கச் சொல்லி சிவானந்தன் அண்ணையை நெருக்கத் தொடங்கி விட்டார்கள். அத்துடன் மற்ற மற்ற நகரங்களில் இருந்த தம்தம் குடும்பத்தினர்கள், நண்பர்களும் சிவானந்தன் அண்ணையுடன் சீட்டுப் போட விருப்பம் தெரிவித்தார்கள். மொத்தம் 75 பேர்கள். 75 மாதத்துக்குச் சீட்டு போடுவது சாத்தியமில்லை என்பதால் அதை 25 பேர் கொண்ட மூன்று பிரிவாக மூன்று சீட்டாய் நடத்தத் தொடங்கினார்.
ஒவ்வோர் மாதத்தின் முதல் சனிக்கிழமையிலும் சிவானந்த அண்ணை வீடு கலபுலாதான். 75 ஆயிரம் குறோன்கள் புரளத் தொடங்கியது. அத்தனையையும் எல்லோரிடமும்

Page 44
84 வி. ஜீவகுமாரன்
இருந்து வேண்டி அதை உரியவர்களுக்குக் கொடுக்கும் வரையில் ஒழுங்காக சாப்பாடு தண்ணி வெண்ணி இல்லை என்று சிவானந்தன் அண்ணையின் அக்கா சொல்லுவா. சிவானந்தன் அண்ணையின் மனைவியைத்தான் மரியாதையின் காரணமாக சிவானந்தன் அண்ணையின் அக்கா என்று சொல்லுவது வழக்கம்.
அந்தச் சீட்டு தொடங்கி நாலாவது ஐந்தாவது மாதம் போயிருக்கும் என நினைக்கின்றேன். மூன்று சீட்டிலும் காசு கட்டிய ஒரு குடும்பத்தினர் மூன்று சீட்டையும் எடுத்துக் கொண்டு நாடு மாறிவிட்டார்கள் என்றபொழுது சீட்டு கட்டிய அனைவரும் அதிர்ந்து போனார்கள் - சீட்டு முறியப் போகின்றது என்று.
சிவானந்தன் அண்ணை வெளியில் காட்டாவிட்டாலும் உள் ளுக்குள் நல்லாய் கலங்கிவிட்டார். நான் எனக்குத் தெரிந்த அதிகம் பேருடன் கதைத்துப் பார்த்தேன் - சிவானந்தன் அண்ணைக்கு விழுந்த அடிக்கு எல்லோருமாய் கொஞ்சம் கொஞ்சம் உதவி செய்வோம் என்று.
"அவர் முதல் சீட்டு முழுதாய் எடுத்தவர்தானே.” “75 ஆயிர மும் சும்மா வந்த காசு போலத்தானே.” “வட்டிக்கு அவர் கொடுத்திருந்தாலும் அப்ப அவர் நல்லாய் உழைத்திருப் பார்தானே.” என்று ஆளுக்கு ஆள் தங்கள் தங்கள் அளவிலான நியாயங்களைச் சொல்லிக்கொண்டு நழுவி விட்டார்கள்.
நான் மட்டும் சிவானந்தன் அண்ணையிடம் போய்ச் சொன் னேன், “அண்ணை நீங்கள் என்ரை சீட்டு முழுக்காசையும் எடுத்துக்கொள்ளுங்கோ. அடுத்த சீட்டுப் போடும் பொழுது எனக்குத் தாங்கோ” என்று.

சங்தானைச் சண்டியன் 85
அவர் என் கைகளைப் பிடித்துக்கொண்டு அழுது விட்டார்.
அன்றுதான் முதன் முதலாக அவர் அழுது நான் பார்த்தது.
எனது காசு மட்டும் அவருக்கு விழுந்த அடியை நிமிர்த்த போதாமையால், சீட்டு எடுத்த இன்னொருவரிடம் வட்டிக்கு எடுத்து அந்த மூன்று சீட்டையும் நடாத்திய பொழுது அவர் கிட்டத்தட்ட ஐம்பதினாயிரம் குறோன்களுக்குக் கடனாளி ஆகிவிட்டார்.
அதிலிருந்து மீள பின் பெரிய தொகைச் சீட்டுகள் என தொடங்கி தொடங்கி நடாத்திப் பார்த்தார். கொஞ்சம் மீண்டும் தலை எடுக்கும் நிலை வந்தபொழுது இவரிடம் சீட்டுப் பிடித்த இன்னொருவர் வியாபாரத்தில் பெரிய சரிவைக் கண்டார். அவரால் தொடர்ந்து காசு கட்ட முடி யாமல் போனபொழுது சிவானந்தன் அண்ணை இன்னமும் கடனுக்குள் தள்ளப்பட்டார்.
பாவம் சிவானந்தன் அண்ணை.
இந்த முறை என்னால் உதவி செய்யமுடியவில்லை - எனது மனைவியின் தங்கச்சியாரை ஏஜன்ற் மூலம் டென்மார்க்கிற்குக் கூப்பிட்டு திருமணம் செய்து வைத்த வருஷம் அது.
சிவானந்தண்ணைக்கு ஊர் எல்லாம் கடன் பெருகியது, ஆனாலும் அவரின் நேர்மையான தன்மையால் கடனாய்க் காசை வேண்டியானாலும் சீட்டை நடத்திக்கொண்டு வந்தார்.

Page 45
86 வி. ஜீவகுமாரன்
ந்ெதக் கவலைகளில் மூழ்கி இருக்கும்பொழுதும் யாரோ ஒருத்தர் மிக இயல்பாகக் கதைக்கும் சில கதைகள் காலநேரத்தைப் பொறுத்து பெரிய நகைச்சுவைகளாவது போல. எமக்கு அடுத்த பெரிய சிற்றியில் வசித்த சிவனடி யான் ஐந்து லட்சம் குறோன்களை ஏப்பம் விட்டுவிட்டு தலைமறைவாகியபொழுது யார், யாருக்கு எவ்வளவு கொடுக்க வேண்டும்" என்று இங்கு டென்மார்க்கில் அதே சிவனடியான் தினமும் திருத்தொண்டு புரிந்த பிள்ளையார் கோயில் வசந்தமண்டபத்தில் இருந்துகதைத்துக்கொண்டு இருந்தார்கள். சிவனடியான் பட்டை போட்டவர்களில் அதிகம் பேர் வெள்ளி தோறும் பிள்ளையாரிடம் வந்து போனவர்கள்தான். அதை விட படித்தவர்கள் என்று சமுதாயத்தில் தங்களை அடை யாளப்படுத்துபவர்களும், ஆங்கிலத் தமிழில் பிள்ளை யாரின் வாசலில் நின்று இலக்கியமும், இலங்கை அரசிய லும் கதைக்கும் கூட்டமும்தான். சிவனடியானின் திறமையும் அதுதான். அவனால் ராட்டி னத்தில் ஏறி உச்சிக்குப் போகவும் முடியும். சுழியோடி கடலின் அடிமட்டத்திற்குப் போய் ஒரு பிடி மண்ணை அள்ளிக் கொண்டு வரவும் முடியும்.
யாரோ ஒரு இலக்கியவாதி யாரிடமோ வட்டிக்கு வேண்டி யதை அறிந்தபொழுது அதே இலக்கியவாதி எழுதிய சஞ்சி கையில் 'சொல்லும் செயலும் எழுத்தும் என்றொரு கட்டுரையில் சொல் - செயல் - எழுத்து மூன்றையும் கடைப்பிடிக்கக்கூடியவனே பேனாவைப் பிடிக்கவேண்டும் என்று அந்த இலக்கியவாதியைக் கிழிகிழியென்று கிழித்

rakotaparš sairgudr ... 87
தெழுதினான் - அதனால் எனக்கும் அவன் மேல் நல்ல அபிப்பிராயமே ஏற்பட்டிருந்தது. அந்த நல்ல அபிப் பிராயத்தில் அவனிடம் நானும் அடுத்த சீட்டுப் போட எண்ணியிருந்தேன்.
என்னுடைய நல்ல காலம். அடுத்த சீட்டுக்கு முதலே மற்றவர்களை ஏமாற்றிவிட்டு அவன் தலைமறைவாகி விட்டான். இல்லையென்றால் நானும் பிள்ளையாரின் வசந்த மண்டபத்தில் மற்றவர்களுடன் சேர்ந்து கணக்கு பார்த்துக் கொண்டு இருந்திருப்பேன். بر۔ கணக்கு பார்த்தவனின் நோக்கம் அவன் ஏமாற்றிப் போன சீட்டுகளை எப்படி நடாத்தி முடித்து ஏதாவது கொஞ்சத்தை யாவது காப்பாற்றி, அந்தத் தொகையை அவர் அவர்கள் ஏமாந்த விகிதாசாரத்திற்கு ஏற்ப பிரித்துக்கொள்வது தான.
அங்கே ஒரு இலட்சம் ஏமாந்தவர்கள். 50 ஆயிரம் ஏமாந்தவர்கள். 25 ஆயிரம் ஏமாந்தவர்கள். 10 ஆயிரம் ஏமாந்தவர்கள் என தங்கள் கணக்குகளைச் சொல்லிக் கொண்டிருக்கும்போது கோயிலில் சேமக்கலம் அடிக்கும் பென்சனியர் மாரிமுத்து கடந்த வாரம் தானும் 500 குறோன்கள் கொடுத்தவர் எனச் சொல்லி வாய்மூட முதல் "சும்மா இருங்கோ அண்ணை. என்னட்டையும்தான் அவன் ஐயாயிரம் வேண்டிப் போட்டு போட்டான். நானே இதெல்லாம் ஒரு கணக்கு எண்டு சொல்லுறதோ எண்டு மனத்துக்கை புளுங்கிறன். நீர் 500 எல்லாம் ஒரு கணக்கு எண்டு.” நாதஸ்வரக்காரர் ச்ெரல்ல அனைவரும் "கொல்' எனச் சிரித்தார்கள்.
சேமக்கல மாரிமுத்து அத்துடன் மெளனமானார்.

Page 46
88 வி. வேகுமாரன்
மாரிமுத்தண்ணை இலங்கையில்தான் பென்சனியர். இங்கு அவருக்கு எந்த சமூகநல உதவியும் இல்லை. மருமகளுக்குத் தெரியாமல் மகன் கைச்செலவுக்குக் கொடு.கும் ஐந்து பத்தில்தான் அந்த ஐந்நூறை சேர்த்து வைத்திருந்தவர். சிவனடியானைப் பற்றி எனக்கு நினைவு வரும்பொழுது எல்லாம் இந்த அப்பாவி மாரிமுத்தண்ணையைப் பற்றிய நினைவும் கூடவே வருவதுண்டு.
சிவானந்தன் அண்ணை தன் கடன் சுமையைக் குறைப் பதற்காக, தனது நிரந்தர பக்டறி வேலைக்குப் போக முதல். காலையில் பேப்பர் போடவும், மாலையில் இரண்டு பள்ளிக்கூடமும் ஒரு சுப்பர் மாக்கற்றும் சுத்தம் செய்ய மனைவி பிள்ளைகளோடும் போகத் தொடங்கினார் என்று அறிந்து சரியாய் கவலைப்பட்டன்.
போன சனிக்கிழமை எங்கள் சங்க ஆண்டு விழாவில் கண்டபொழுது “அண்ணை உந்த சீட்டுகள் எல்லாத் தையும் தலை முழுகுங்கோ. உங்களோடை சீட்டுப் போட்டவன்கள் அந்த மாதிரி கார், வீடு எண்டு சொகுசாய் திரிய நீங்கள் இப்பவும் இப்பிடிகஷ்டப்பட வேண்டும் எண்டு என்ன தலைவிதி” என்ற அவர்மீது நான் கொண்ட கவலையை வெளிப்படுத்தினேன்.
“இந்த இரண்டு வருஷமும் இழுத்துப் போட்டன் எண்டால் பிறகு சமாளித்துப் போடுவேன்” என்று வழமையான புன் முறுவலுடன் சொன்னவர்தான். மத்தியானம் சாப்பிட்டு

oraoqaDorð- sebrguðr 89
இருக்கும்பொழுது யாரோ கடன் காசைக் கேட்டு மரியாதை யில்லாமல் கதைக்க. யோசித்துக்கொண்டு இருந்த வராம். அவ்வளவுதானாம். இப்ப அந்த ஹோலின் நடுவே போடப்பட்ட வாங்கில் நீட்டி நிமிர்ந்து கிடக்க. மனைவி தலைமாட்டில் இருந்து தலையைத் தடவிக் கொண்டு இருக்க. வயதுக்கு வந்த 18, 16, 14 வயதுப் பெண்பிள்ளைகள் மூவரும் அதிர்ச்சியில் முழிசிக்கொண்டு இருக்க. என்னால் அந்த வீட்டினுள் ஒரு நிமிடத்துக்கு மேல் நிற்க முடியவில்லை.
வெளியில் இரண்டு மூன்று பேராய் கூடிக்கூடி நின்று கதைத்துக் கொண்டு நின்றார்கள்.
சிவானந்தன் அண்ணை இறந்ததை விடவும் தற்போது முறிந்துபோன அவரது சீட்டு. வீட்டிற்குக் கொடுத்த காசுகள். இதற்கு யார் இனிப்பொறுப்பு என்ற கவலைதான் அங்கு மேலோங்கி நின்றது.
மனைவிக்கு தொலைபேசி எடுத்து சிவானந்தன் அண்ணை யின் மனைவிக்கும் பிள்ளைகளுக்கும் ஏதாவது சமைத்து எடுத்து வரும்படி சொல்லிவிட்டு மற்றைய கருமங்களில் நான் இறங்கி விட்டேன்.
சிவானந்தன் அண்ணையின் உடலை கிரியை செய்யும் வரை ஆஸ்பத்திரிகாம்பிராவில் ஒப்படைப்பது. அவர் உறவி னர்களுக்கு அறிவிப்பது. அவரின் இறுதிக் கிரியைகளை அடுத்த சனிக்கிழமை எப்படிச் செய்வது. என மற்றவர் களோடு கலந்தாலோசித்து செயல்படத் தொடங்கினன்.
அதேவேளை சிவானந்தன் அண்ணையின் இறுதிச் சடங்கின்
ஏற்பாடுகளில் நான் காட்டிய ஈடுபாட்டை அவதானித்த அதிகம் பேர் என்னை நெருங்கி வருவதை உணரத்

Page 47
90 வி. சிவகுமாரன்
தொடங்கினேன் - சிவானந்தன் அண்ணையின் சீட்டு, கடன்கள் பற்றிக் கதைப்பதற்காக.
அதுவே எனக்கு ஒரு இடைஞ்சலாகப்பட கடைசியாகச் சொல்லியே விட்டேன், “எனக்கு சிவானந்தன் அண்ணை தனிப்பட்ட முறையில் அண்ணையோ தம்பியே இல்லை. உங்களைப் போலைதான் நான் அவரோடை பழகினனான்” என்று.
"அப்ப யார் எங்கடை கொடுக்கல் வாங்கல்களைப் பார்க்கிறது?”
எனக்கு ‘சுள்’ என்றது. ‘என்னைக் கேட்டே அவருக்கு அறாவட்டிக்கு காசு கொடுத்து வட்டி வேண்டினிங்கள்.”
எல்லோரும் கப்சிப். அடுத்து வந்த சனிக்கிழமை சிவானந்தன் அண்ணையின் இறுதிக் கிரியைகள் மிகச் சிறப்பாய் நடந்தன. நான் சவக்காலையில் இருந்து நேராக வீட்டை வந்து விட்டேன். அன்று பின்னேரம் கனடாவிலும், ஜேர்மனியிலும் இருந்து வந்த சிவனாந்தண்ணையிட் தம்பி, உறவினர்களுடன் சீட்டுப் பிடித்தவர்கள் பெரிய வாய்த் தகராறு நடாத்தி னார்கள் என்று கேள்விப்பட்டேன்.
கடைசி அவரின் அந்தியேட்டி வரை பொறுத்திருக்க முடியா விட்டாலும் அவரின் எட்டுச் செலவு வரை பொறுத் திருக்கலாமே எனப்பட்டது.

sadarši sairgudr 91
உண்மையில் எனக்கு இந்த சிற்றியில் இருக்கவே பிடிக்க வில்லை.
அடுத்த சிற்றிக்கு போனாற் போல் அது வேறு திறமாகவா இருக்கப் போகுது என்று விட்டு நானும். என் வேலையும். என் குடும்பமுமாக.
சிலவேளை வீட்டில் நல்ல பலகாரம் சாப்பாடு செய்தால் மனைவி, பிள்ளைகளுடன் சிவானந்தன் அண்ணை வீட்டுக்குக் கொண்டு போய் அவர்களுடன் பகிர்ந்து உண்டு விட்டு வருவோம்.
இப்போது சிவானந்தன் அண்ணை செத்து ஒரு வருடம் ஆகிவிட்டது.
ஆட்டத் திவசமும் முடிந்து விட்டது.
நல்லாய் பழகிற நாலைந்து குடும்பங்களைத்தான் கூப் பிட்டு அக்கா சாப்பாடு தந்தவா.
இதற்கிடையில் என் மூத்தவளுக்கு பதினெட்டாவது பிறந்த நாள் வந்த போதும் அதனைக் கொண்டாடுவதற்கு ஆட்டத் திவசம் முடியட்டும் என்று பொறுத்து இருந்தோம். இனி மகள் பொறுப்பதற்கில்லை.
சரி. சிறிய அளவில் எம் சிற்றியில் உள்ள தமிழ் ஆட்களுக்கும், அவளது பாடசாலைத் தோழியினருக்கும் சொல்லிச் செய்வோம் என்றுவிட்டு தொலைபேசி, டயறியை எடுத்து வைத்துக்கொண்டு அனைவரையும் அழைக்கத் தொடங்கினேன்.

Page 48
92 வி. ஜீவகுமாரன்
“அண்ணை உங்களுக்குத் தெரியும்தானே. அது மாதத்திலை வாற முதல் சனி. சீட்டுநாள். செல்வகுமார் அண்ணை சீட்டுக்கூறி முடிய எப்பிடியும் ஆறு மணி செல்லும். அதுக்குப் பிறகு வாறம்.” எனது உடலில் கம்பளிபூச்சி ஊர்வது போல இருந்தது.
Sf
 

கழிப்பு
*கோயில் குருக்களின் மகள் ருது ஆகிவிட்டாளாம்."
“புவனாரீச்சரின் பெண் சாமத் தியப்பட்டு விட்டாளாம்.”
“அரசடி ஆறுமுகத்தாரின் மகள் வயதுக்கு வந்துவிட் LT6TT b....”
"கனடா கடைக்கார சிவசிதம் ரத்தின் பேத்தி பூப்படைந்து விட்டாளாம்.” “செல்லடியில் செத்துப்போன மணியனின் கடைக்குட்டி வீட் டிலை குந்தி விட்டாளாம்.”
- என்று நீங்கள் எந்த முறை யில் அழைத்தாலும் இயற்கை

Page 49
94 வி. வேகுமாரன்
ஒரு பெண்ணுக்கு வழங்கும் ஓர் அங்கீகாரப் பத்திரத்தை அந்த அந்தப் பிரதேச வழக்கங்களுக்கு ஏற்றமாதிரி அவர வர்கள் கொண்டாடுகிறார்கள். அல்லது வேதனைப்படு கிறார்கள் என்பது தான் உண்மை.
எது எப்படியோ. பழைய கிரேக்க பண்பாடுகளின்படி ஒரு பெண் ருதுவாகும்பொழுது அந்த முதல் இரத்தத்தை எடுத்து நெற்றியில் இட்டு, தான் ஒரு பிள்ளையைப் பெற்று தன் சந்ததியைப் பெருக்கும் நிலையை அடைந்து விட்டதாக உலகத்துக்கு அறிவித்த இந்தப் பண்பாடே, பின் நாளில் ஒருதார மணமுடைய எங்கள் நாடுகளில் திருமணங்களின் பொழுது மணமகன் என்பவன், “இந்த மணமகள் எனக்கு பிள்ளை பெற்றுத்தர தகுதியாகின்றாள்" என்று உலகத்துக்கு அறிவிக்கும் பொருட்டு முதல் சிவத்த குங்குமப் பொட்டை மணமகளின் நெற்றியில் இடுகின்றான்.
அது மட்டுமில்லை. சிவப்பு என்பது காதலின் நிறம். சிவப்பு என்பது வளச்சடங்குகளின் நிறம். அதுவே எம் மங்களச் சடங்குகளில் எம்மவர் கட்டும் கூறைச்சேலைகளின் நிறங்களுமாக. தான் ஊரில் தனது திருமணத்துக்குக் கட்டிய சிவப்புநிற மாற்றுக் கூறையை இன்று போக விருக்கும் சாமத்திய வீட்டுக்கும் அணிவதற்காக ஆனந்தி எடுத்து வைத்தாள். ஆனந்தி டென்மார்க்கிற்கு வந்து முதல் தடவையாகப் போகவிருக்கும் சடங்கு அது.
காரைநகர் சிவன் கோயிலடியைச் சேர்ந்தவரும் கொழும் பில் பெரிய புகையிலை வர்த்தகருமான சிவநாயகத்தின் மகன் வழிப்பேத்தியும், கனடாவில் காசு மாற்றீடு செய்யும் பெரிய ஏஜன்ற் சுப்பிரமணியத்தின் மகள்வழிப்பேத்தியுமான

சங்கானைச் சண்டியன் 95
சுகன்யாவின் சாமத்திய வீடு இன்று பெரியளவில் டென்மார்க்கில் நடக்கவிருக்கிறது.
சுதன் முதன்நாள் இரவு எட்டு மணிபோல் விழா நடக்க விருக்கும் மண்டபத்துக்குப் போய் மற்றவர்களுடன் தானும் ஒருவனாய் நின்று கதிரைகளை அடுக்கி, மரக்கறிகளை வெட்டி, சோடனைக்கும் தன்னால் ஆன உதவிகளைச் செய்துபோட்டு வீட்டை திரும்பும்பொழுது அதிகாலை இரண்டுமணி.
டென்மார்க் அல்லது பொதுவாக மற்றைய புலம் பெயர்ந்த நாடுகளில் பெற்றோர்களின் விருப்பத்துக்கமைய பெண் பிள்ளைகளுக்கு நடைபெறும் சடங்கு சாமத்தியவீடுதான். திருமணம் என்பது பெற்றோரின் விருப்பத்தின்படி அமையுமா இல்லையா என்பது பெரிய கேள்விக்குறிதான்!
*கன ஆட்கள் வருவினமோ?.” “நான் இலங்கையிலை என்ன படிச்சது எண்டு கேட்பினமோ?.”
“முழு நகைகளையும் போட்டுக் கொண்டு வாறதோ?.” அடுக்காய் சுதனிடம் கேள்விகளை அடுக்கிக்கொண்டு போனாள் ஆனந்தி. "ஏன் ஆனந்தி பயப்பிடுகிறீர்? அங்கை வாறவை எல்லாம் இலங்கை ஆட்கள்தான். என்ன வித்தியாசம். அதிகமான ஆட்கள் 20 வருசத்துக்கு முதலே வந்தவை. நீர் இப்ப வந்திருக்கிறீர். தற்ஸ் ஒல்.”

Page 50
96 வி. ஜீவகுமாரன்
சுதன் பத்து வயதிலேயே தனது தாய்மாமனிடம் வந்து விட்டான். அவரிடம் பிள்ளைக்குப் பிள்ளையாய் வளர்ந் தாலும், தனது மூத்த மகளுக்குத் திருமண வயது வரும் பொழுது தனது மருமகனுக்குச் செய்து கொடுக்கலாம் என்ற அவரது எண்ணத்தில், மகள் கூட்டி வந்து காட்டிய டெனிஷ்காரன் மண்ணை அள்ளிப் போட்டதால் மூன்று வருடத்துக்கு முதல் மாரடைப்பில் அவர் போய்விட்டார்.
சுதனும் தனித்து வந்து விட்டான்.
சுதன் தனியே வந்த பின்பு தரகர்கள் மூலமாகவும், தெரிந்த வர்கள் மூலமாகவும் வந்த படங்கள், உண்மையான + பொய்யான சாதகங்கள் - பிறப்பு அத்தாட்சிப் பத்திரங்கள் எல்லாவற்றிலும் மேலாக நின்றவள் ஆனந்தி தான்.
இப்படியான எத்தனையோ டெலிபோன் திருமணங்களும், சிங்கப்பூர் திருமணங்களும், ஆள்மாறாட்டங்களும். தாம் பத்திய வாழ்வின் ஆரம்பங்களே நான்கு சுவர்களுக்குள் நரக வாழ்க்கை ஆகும் எத்தனையோ கதைகளை சுதனும் கேள்விப்பட்டிருந்தான். ஆனால் நல்ல காலம். ஆனந்தியின் எதிர்பார்ப்புகளை சுதனும், சுதனின் எதிர்பார்ப்புகளை ஆனந்தியும் ஈடுகட்டிய பொழுது வாழ்வில் எந்தச் சிக்கலும் தோன்றவில்லை. அம்மா, அப்பா, சகோதரங்கள் பக்கத்தில் இல்லையே என்ற சராசரியான அனைத்துப் புலம்பெயர்ந்த பெண் களுக்கும் உள்ள ஏக்கங்களைத் தவிர ஆனந்திக்கு வாழ்க்கை ஆனந்தமாகத்தான் இருந்தது. வெடிச்சத்தங்கள், கிபீர் விமானங்களின் ஒலிகள், ஆள் கடத்தல் செய்திகள் எதுவுமேயற்ற ஒரு நாடு. அதில் அமைதியான ஒரு வாழ்வு. மேலாக ஒரு கரண்டி உப்புக்

Taparš sairgJdr 97
காவது மற்றவன் கையை எதிர்பார்க்கத் தேவையில்லாத அடிப்படைப் பொருளாதாரச் சமநிலை. இப்படி ஒரு நாடாக என்றுதான் இலங்கை மாறுமோ என்ற கானல்நீர் கனவுகளும் அவளுள் அவ்வப்போது எழுந்து தாழாமல் இல்லை.
“பார்த்தீரோ உம்மடை சீலையை மட்டும் அயன் பண்ணி வைச்சிருக்கிறீர்? என்ரை சேட்டை மறந்திட்டீர்” . சுதன் சீண்டினான், “எது அந்த கறுப்பிலை வெள்ளைக்கோடு போட்டதோ?. சிங்கப்பூருக்கு கலியாணத்துக்கு வந்தது தொடக்கம் இங்கை எயர்போட்டுக்கு என்னைக் கூட்டி வந்தது வரை அந்த சேட்டுத் தானே?. அப்பா அம்மா அந்தச் சேட்டோடை உங்களை இனியொரு படத்திலை பார்த்தால் சேட்டு வேண்ட வழியில்லாத மருமகன் எண்டுதான் நினைப் பினம்.” - பதிலுக்கு ஆனந்தியும் அவன் கால்களை வாரினாள்.
"அப்ப நான் என்னத்தை இண்டைக்கு போடுறது?”
“என்ரை சேலைக்குப் பக்கத்திலை இருக்கிறதை பாருங்கோ.” - ஆனந்தி முதல்நாளே வேண்டி அயன் செய்து தொங்கவிட்டிருந்த மரூன் கலர் சேட்டில் சுதனின் கண்கள் படிந்தன. “ஒ. சுப்பராய் இருக்குது. இது பேமஸான றேட் மார்க். சரியான காசு வந்திருக்கும். உமக்கு எங்காலை காசு?”
"நீங்கள் மாதம் மாதம் என்ரை செலவுக்குத் தாற காசிலை சேமிச்சு வேண்டினனான்.”
சுதனுக்கு தன்னையும் அறியாது கண்கள் கலங்கின.

Page 51
98 வி. ஜீவகுமாரன்
"விசர் பெட்டை. நீர் ஏதும் ஐஸ்கிறீம் குடிக்கட்டும் அது இது எண்டுதான் காசு தாறனே தவிர எனக்கு சேட்டு வேண்டவோ." - கூறியபடியே ஆனந்தியை அணைத்து உச்சியில் முத்தமிட்டான்.
அந்த அணைப்பில் சிறிது நேரம் தன்னை மறந்து போய் நின்றவள். தன்னைச் சுதாரித்தபடி “நாங்கள் இப்பிடியே நிண்டால் மத்தியான சாப்பாட்டுக்குப் போகமாட்டம். பின்னேர கேக்வெட்டுக்குத்தான் போவம்” என்றபடி தனது கூறைச்சேலையை எடுத்துக் கொண்டு படுக்கை அறைக்குள் போய் தாழ்ப்பாள் போட்டுக் கொண்டாள்.
சுதன் அவள் வேண்டிக் கொடுத்த அந்த சேட்டை ஆசை யுடன் பார்த்துக் கொண்டு நின்றான்.
சிரியாக பதினொரு மணிக்கு ஆனந்தியும் சுதனும் விழா மண்டபத்துக்கு தம் காரில் வந்து இறங்கினார்கள். வாசலில் நின்றிருந்த இரண்டு சிறுமிகள் நீட்டிய விபூதி யையும் சந்தனம் குங்குமத்தையும் பெற்றுக் கொண்டு முன்வரிசையில் போய் அமர்ந்தார்கள். பத்தரை மணிக்கு என்று அழைப்பிதழில் போட்டிருந்தாலும் அரைவாசி மண்டபம் கூட நிரம்பவில்லை,
வந்தவர்கள் ஆங்காங்கே தமக்கு தமக்குத் தெரிந்தவர் களுக்குப்பக்கத்தில் இருந்துகொண்டுஏ-9 பாதைவிவகாரம் தொடக்கம் டென்மார்க் அம்மன் கோயிலுக்குராஜகோபுரம் 55LL எவ்வாறு அனுமதி கிடைத்தது

tradiotapati odrpu dr 99
வரையிலும். சிங்கப்பூர் நகைகளை எப்படி சிங்கப்பூரை விட இங்கு மலிவில் வேண்டக்கூடியதாக இருக்கிறது என்பதில் தொடங்கி நல்லையரின் சீட்டுக் கழிவை ஏற்ற வெளிக்கிட்டு ரமணன் தானே மாட்டிக்கொண்டுவிட்டான் என தமக்கு தமக்குப் பிடித்த சுவாரஸ்யமான விடயங்களில் மூழ்கிப்போய் இருந்தார்கள்.
நேரம் போய்க்கொண்டிருந்தது. சுகன்யா இன்னமும் மண்டபத்துக்கு வரவில்லை.
வழமைபோல வீடியோகாரன்தான் வைத்து மினக் கெடுத்திக்கொண்டு நிற்கின்றான் என்று ஆளுக்காள் பேசிக்கொண்டு நின்றார்கள். “என்ன சுதன் பொம்பிளையைக் கண்டாப்பிறகு வொலி போல் கிறவுண்ட் பக்கம் ஆளைக் காணக்கிடக்குதில்லை.” என்றவாறு சுதனின் நண்பன் ஒருவன் வந்து பக்கத்தில் அமர்ந்தான்.
“இல்லை மச்சான். ஆளுக்கு நாடு புதுசுதானே. ஐஞ்சு நாளும் வேலை. சனி, ஞாயிறுதானே வீட்டிலை நிற்கிறது," சுதன் நழுவினான். அவன் விடுமாப்போல் இல்லை. “சரி. அவாவை பெட்டையளோடை வொலிபோல் அடிக்க விட்டுப் போட்டு வரலாம் தானே.”
ஆனந்திக்கு எரிச்சலாய் இருந்தது.
சுதனுடன் ஒன்றாய் கடைக்குப் போய். சாமான்கள் வேண்டி வந்து. ஒன்றாக சமைத்து. ஒன்றாக சாப்பிட்டு. ஒன்றாக இருந்து ஒரு படம் பார்த்து கழிக்கும் அந்த இரண்டு நாட் களுக்குமாக, மொழி தெரியாத அந்த நாட்டில் மற்றைய

Page 52
100 வி. ஜீவகுமாரன்
ஐந்து நாளும் அவள் இருக்கும் தவம் அவளுக்குத்தான் தெரியும். “மற்றது மச்சான், எங்கடை சங்கத்துக்கை அல்லோ ஒரு புதுப்பிரச்சனை தொடங்கியிருக்கு. உனக்கும் மதன் ஆட்களுக்கும் ஆறுதலாய் சொல்ல வேணும் எண்டு நினைச்சனான். அவன்கள் வெளியிலை நிக்கிறாங்கள். நீயும் வாவன். இதுக்கை இருந்து புழுங்காமல்.’ சுதனை வலுக்கட்டாயமர்க இழுத்துக் கொண்டு போவதைப் பார்க்க ஆனந்திக்கு இன்னமும் எரிச்சலாய் இருந்தது. சுதனுக்கு ஆனந்தியைத் தனிய விட்டுப்போக கஷ்டமாய்த் தான் இருந்தது. கெதியாய் வருகிறேன் எனக் கண்ணால் சமிக்ஞை காட்டி விட்டு அந்த நண்பனுடன் மண்டபத்துக்கு வெளியால் போனான்.
சுதன் பக்கத்தில் இல்லாததால் ஆனந்திக்கு நேரம் நத்தையாக ஊர்ந்தது. இப்பொழுது மண்டபத்துக்குள் அதிகம் பேர் வரத்தொடங்கி விட்டார்கள். அதில் சிலர் ஆனந்திக்குப் பக்கத்திலும் வந்து அமர்ந்தார்கள். இதில் சுதன் இருந்தவர். இப்ப வந்திடுவார் எனச் சொல்ல ஆனந்திக்கு கொஞ்சம் கூச்சமாக இருந்தது. அதிகமாக வந்திருந்தவர்கள் பெண்கள்தான். ஆண்களுக்கு மண்டப வாயிலில் அல்லது மண்டபத்திற்கு வெளியால் நின்று உலக விடயங்கள் கதைப்பதில்தான் அலாதிப் பிரியம். ஆகவே பெண்களால்தான் மண்டபம் நிறைந்திருந்தது.

சங்தானைச் சண்டியன் 101
பெண்களும் ஆண்களைப் போலவே தமக்குத் தெரிந்தவர் களுக்குக் கிட்டவாய் போயும் அல்லது மண்டபத்தின் ஒவ்வோர் மூலையிலும் நின்று தங்களுக்குப் பிடித்த விடயங்களைப்பற்றிப் பேசிக்கொண்டு நின்றார்கள்.
ஒரு பெரியம்மா. வயதிலும் சரி. உருவத்திலும் சரி. புதிதாகப் பிரித்துக் கட்டிய பட்டுச் சேலையுடனும். கழுத்தை மறைக்கும் அளவு நகைகளுடனும் அனை வருக்கும் கிட்டவாக தானே போய் தன்னையும் தன் நகைகளையும் அறிமுகப்படுத்தும் தோரணையில் வலம் வந்து கொண்டிருந்தார். அவர் கனடாவில் இருந்து சாமத்தியச் சடங்குக்காக வந்தவராம். எட்டு மணித்தியாலம் பிளேனிலை பயணம் செய்ததால் காலும் கொஞ்சம் வீங்கி விட்டதாம். வந்தது தொடக்கம் சாமத்தியத்துக்கு ஆலத்தி செய்வதற்கு உரிய அனைத்து தட்டங்களையும் தானே முன்நின்று சுகந்தியின் தாய்க்கு சொல்லிக் கொடுத்தவாவாம். “நாங்கள் உதுகளைச் சொல்லிக் குடுக்காட்டி பிறகு யார் உதுகளைச் சொல்லிக் குடுக்கிறது” என்ற அவரது இந்த வாக்கியம் பதிவு செய்து வைக்கப்பட்ட ஒலிநாடா போல் எல்லோருக்கும் கொடுக்கப்பட்டது.
இப்போ அவாவின் நேர்காணலில் ஆனந்தி.
“நல்ல வடிவான நெக்லஸ் போட்டிருக்கிறாய் பிள்ளை. இஞ்சை வேண்டினதோ.”
"இல்லை. ஊரிலை இருந்து கொண்டு வந்தனான்.”
"ஆ. என்ன பிள்ளை. பவுணிலை சரியாய் கலந்து போடு வாங்கள். விக்கப்போனால் சேதாரம் எண்டு சரியாய்

Page 53
102 வி. சிவகுமாரன்
கழிச்சுப் போடுவாங்கள். இஞ்சை என்ரை நெக்லசைப் பார்த்திரோ. அசல் சிங்கப்பூர் தங்கம். எத்தினை வருஷம் போனாலும் சேதாரம் இல்லாமல் விக்கலாம்.” ஆனந்திக்கு சங்கடமாய் இருந்தது. அவளின் மூன்று அன்ரிமாரும் ஆளுக்கு இரண்டு பவுண் என்ற கணக்கில் கலியாணத்துக்காகக் காசு போட்டு வேண்டிக் கொடுத்த நெக்லஸ் அது. அதிலும் இளைய அன்ரி கடைகளுக்கு இடியப்பம் தோசை என்று சுட்டு வித்து சேர்த்த காசில் வேண்டியது. ஆனந்திக்குத் தான் தெரியும் அவர்களின் வலியும். வேதனையும். கனடா அன்ரிக்கென்ன? கனடா கவுமென்றின் அகதிக்காசு தானே. ஆனந்தியின் மனம் சொல்லிக் கொண்டது.
“அது சரி பிள்ளை, ஊரிலை நீங்கள் எந்த இடம்.”
“சங்கானை”
(Ké o
அப்பிடியே. நாங்கள் மானிப்பாய்தானே. சங்கானை எண்டால் எத்தனையாம் வட்டாரம்.”
வட்டாரத்தைச் சொன்னதும் அந்தப் பெரியம்மாவின் முகம் கொஞ்சம் இறுகியதை ஆனந்தி கவனிக்கத் தவறவில்லை.
y
“அப்ப எங்கடை சேர்மன்.' பெரியம்மா வாயெடுக்க முதல்,
என்று ஏதோ கேட்க
“நீங்கள் இஞ்சை என்ன செய்து கொண்டு நிக்கிறியள். அங்கை வாசலிலை பிள்ளை வந்து இறங்கீட்டுது. நீங்கள் தானே பூ, பழ, ஆலத்தி தட்டுகளை எடுத்து ஒழுங்காய் கொடுக்க வேணும்.” என்றவாறு சுகந்தியின் தாய் அவரை இழுத்துக் கொண்டு வாசலுக்குப் போனார்.

řů5raporší stažerguUdir 103
ஆனந்திக்கு அப்பாடா என்று இருந்தது. இப்போது எல்லோர் கவனமும் வாசல் மீதே.
வீடியோகாரன் முன்னேயிருந்து பின்நோக்கி நடந்துவர. ஜேர்மனியில் இருந்து வரவழைக்கப்பட்ட மேளக்காரர்கள் தவிலிலும் நாதஸ்வரத்திலும் தங்கள் திறமையைக் காட்ட. சின்னப் பெண்ணான சுகன்யா சிவப்புப் பட்டாடையில் ஜொலி ஜொலிக்க. ஒரே நிற ஆடையில் சிறுமிகளும் குமரிகளும் பூத்தட்டுகளும் குத்துவிளக்குகளும் ஏந்திவர. விழா மண்டபத்தின் இரண்டு பக்கங்களிலும் இருந்து பூ மத்தாப்புகள் சீறிவர. விழா மண்டபமே இந்திரலோகம் போல மாறிக் காட்சியளித்தது. இந்தியாவில் இருந்து முதல்நாள் வரவழைக்கப்பட்டிருந்த பூ மணவறையில் நடுவே சென்று சுகன்யா நிற்க. முன்னால் அழகாகப் போடப்பட்டிருந்த கோலத்தைச் சுற்றி பூ தட்டுகளும் குத்து விளக்குகளும் வைக்கப்பட்டன. வீடியோகாரன் தன் இருப்பிடத்தை மாற்றி மாற்றி அழகாக அனைத்தையும் படமாக்கிக்கொண்டு இருந்தான். அது பின்னால் இருந்த ஒரு வெண்திரையிலும் அழகாகக் காட்டப் பட்டுக் கொண்டிருந்தது. ஆனந்தி எல்லாவற்றையும் அதிசயமாகப் பார்த்துக் கொண்டு இருந்தாள். இப்போ ஆலத்தி எடுக்கும் படலம் தொடங்கியது. கனடா பெரியம்மாதான் சுகந்தியின் தாய்க்கு எந்த ஆலத்தி தட்டு முதல் வரவேண்டும், எது அடுத்ததாய் வரவேண்டும் என்று ஒழுங்குமுறையாய் சொல்லிக் கொடுத்துக் கொண்டிருந்தார்.

Page 54
104 வி. ஜீவகுமாரன்
அத்துடன் கூட்டத்தில் இருந்து ஆலத்தி எடுப்பதற்காக சுகந்தியின் அம்மா கூட்டி வந்த பெண்களுடன் கனடா பெரியம்மாவே எந்தப் பக்கத்தால் ஆலத்தி சுத்த வேண்டும் என்று காட்டிக்கொடுத்துக் கொண்டிருந்தா.
அதிக அளவில் முதல் வரிசைப் பெண்களே அழைக்கப் பட்டுக் கொண்டு இருந்தார்கள்.
ஆனந்திக்கு எப்போது தன் முறை வரும் என்பதிலும், கூட்டத்தில் பின்னே நிற்கும் சுதன் தன்னை அந்த அகலத் திரையில் பார்த்து மகிழ்வான் என்பதனையும் நினைக்க மனதுள் ஓர் ஆனந்தப் படபடப்பு எழுந்தது. இப்பொழுது ஆனந்திக்குப் பக்கத்தில் இருந்த பெண்ணை சுகந்தியின் தாய் அழைத்துச் சென்றார்.
அடுத்தது நான். ஆனந்தி இருந்தபடியே சேலையை சரி பண்ணிக் கொண்டாள். ஆனால் அதுதான் நடக்கவில்லை.
ஆனந்தியைப் பார்த்து அன்பு ஒழுக புன்னகைத்தபடி, ஆனந்திக்கு அடுத்ததாக இருந்த பெண்ணை ஆலத்தி எடுப்பதற்காக சுகந்தியின் தாய் அழைத்துக் கொண்டு (3urteoTIT... ஆனந்திக்கு நெஞ்சு நடுங்கியது. தொண்டையைக் கட்டுமாப் போல் இருந்தது. என்னைப் புறக்கணித்துப் போட்டினம் என்ற தோல்வி அவளை விம்ம வைத்தது. பக்கத்தில் இருந்து ஆலத்தி எடுக்கப் போன மனுஷி திரும்பி அந்தக் கதிரைக்கு வராது வெறுமனே இருக்க சுதன் அதில் வந்து இருந்து கொண்டான்.

øyebarampaorể Fairg Udir 105
"கனநேரம் விட்டுட்டுப் போட்டனோ. (885 'LT6öT.
சுதன் செல்லமாய்க்
“இல்லை” எனத் தலையாட்டிய ஆனந்தியின் கண்கள் கலங்கி இருந்தன.
சுதன் பதைத்துப் போனான்.
“என்ன நடந்தது?” "ஒண்டுமில்லை” என்று மெதுவாய்ச் சொன்னபடி சுதனின் கைகளைக் கெட்டியாகப் பிடித்தாள். அவளின் கை நடுக்கத்தை அவனால் உணரக் கூடியதாக இருந்தது.
இப்போது கழிப்பு கழிக்கும் ஆலத்தி. அதை கனடா பெரியம்மாவே இன்னுமோர் பெண்ணுடன் சேர்ந்து செய்தார். மூன்று பால் ரொட்டிகளை மூன்றுதரம் சுகந்தியின் தலையைச் சுற்றிவிட்டு சுகந்தியைக் கொண்டு மூன்று தரம் துப்ப வைத்துப் போட்டு கைகளால் பிசக்கி சுற்றி வர எறிந்தார்கள். அதில் ஒரு துண்டு ஆனந்தியின் மடியிலும் வந்து விழுந்தது.
ஆனந்திக்கு 'திக்கென்றிருந்தது.
ஒரு மாதம் கழித்து சுகன்யாவின் சாமத்திய அல்பமும் வீடியோவும் வந்திருந்தது.

Page 55
106 வி. ஜீவகுமாரன்
இரண்டிலுமே சுதனினதும், ஆனந்தியினதும் படங்கள் இருக்காதது சுகன்யா வீட்டாருக்கு ஆச்சரியமாக இருந்தது. ஆனால் வரவு செலவுக் கொப்பியில் சுதனின் பெயரில் ஆயிரம் குறோன்கள் பதிவாகியிருந்தது.
பிற்குறிப்பு:
வீரகேசரி வாரமலர் : தலைப்புச் செய்தி “எம் நாட்டைக் கட்டியெழுப்ப புலம் பெயர்ந்த தமிழர்களின் புதிய சிந்தனைகள் இன்றியமையாதது” என்று இலண்டன் வந்திருக்கும் தமிழர் அமைப்பின் செயலாளர் எடுத்துக் கூறினார். பாவம் இலங்கைத் தமிழர்கள். அவர்கள் தொடர்ந்தும் ஏமாற்றப்படுகின்றார்கள் என்று என் வாய் முணுமுணுக் கின்றது.
அன்புடன்
5. ஜீவத் ഗ്രഭ
 

(956) காதல், முதல் நாள் பள்ளிக் கூடம், முதல்நாள் ஒடிய சைக்கிள், முதல் நாள் விளையாடிய முன்நூற்று நாலு சீட்டாட்டம், முதல்நாள் களவாய்ப் போய் பார்த்த மனத்திலும் வாழ்வி லும் எப்போதாவது வலிகளும் நோக்களும் வரும்போது அவ்வப்போது வந்து ஒத்தடம் தந்துவிட்டுப் போகும்.
வரை எனக்கு பெரிதாக எந்த

Page 56
108 வி. ஜீவகுமாரன்
ஒத்தடமும் தேவைப்படவில்லை. அல்லது அந்த குட்டி சங்கரை நினைத்துப் பார்க்க நேரம் இருக்கவில்லை.
கோடை காலத்தில் ஒரு மணித்தியாலத்தை முன்னாலும், பனிக் காலத்தில் ஒரு மணித்தியாலத்தைப் பின்னாலும் மணிக் கூட்டில் திருகிவிட்டுவிட்டு அதன் பின்னால் அவசர அவசரமாக பணத்தையும் வசதிகளையும் தேடி ஓடும் வாழ்க்கையில் எம்மை ஐக்கியப்படுத்திக்கொண்டபிறகு அல்லது தொலைத்துவிட்டபின்பு எதையும் அதிகமாக யோசிப்பதற்கு நேரம் கிடைத்ததில்லை.
என்றோ ஒரு நாள் இலங்கையில் இருந்து வரும் கலியாணக் காட்டுகள். ஏதோ ஒரு கோடைகாலத்தில் இந்தியா. அல்லது முடிந்தால் இலங்கைக்குப் போய் உறவுகளைப் பார்த்து அவர்களுடன் கிணற்றடியிலும் செம்பருத்தி வேலி யடியிலும் தென்னைமரத்தடியிலும் எடுத்து வரும் படங்கள், இன்ரநெற்றில் வரும் யுத்தச் செய்திகள் இவைகள்தான் அதிகமான புலம்பெயர்வாழ் தமிழருக்கும் நாட்டுக்கும் உள்ள கடைசிநேர தொப்புள்கொடி உறவுகள்.
இதைவிடவும் சிலருக்கு தங்கள் குடும்பங்களை வெளி நாட்டுக்குக் கூப்பிடுதல், இலங்கையில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் யுத்தத்திற்கு தங்கள் பங்களிப்பைச் செய்தல் என பொருளாதாரச் சுமைகள் சற்று அதிகமாக இருந்தாலும் அனைவருக்கும் இருக்கும் பொதுவான உண்மை, ஆறுதலாய் நின்று சமைத்து, இருந்து சாப்பிட நேரமில்லாமல் மக்டொனால்ட்சில் பாஸ்ட் புட் சாப்பிடுவது போல் வாழ்க்கையை அவசர அவசரமாகத் தொலைத்து விட்டோம் என்பதுதான்.
ஆட்டுக்கு முன்னால் குழையை நீட்டிக்கொண்டு போகப் போக பின்னால் அது ஓடி வருமே. அதுபோலத்தான் பணத்தை ஈட்டுவதற்கு ஆயிரம் வழிகள் முன்னால் நிற்க,

skемарамš sabrupu dr 109
அதன் பின்னே ஓடும் ஆடுகளாய் நாங்கள். அப்பொழுது எந்த வலியும் தெரியவில்லை.
போன டிசம்பர் மாதத்தின் அதிகாலையில் சாந்தி பேப்பர் போடப் போக. பின்னால் வந்த ஒரு கார் பனியில் சறுக்கி. நடைபாதையில் போடப்பட்டிருந்த இரும்புக் கிராதிகளில் மோதி அதே வேகத்தில் திரும்பி அவள் மீதும் மோதி அவளை என்னிடம் இருந்து பிரித்து. அவளை ஆஸ்பத்திரி யின் சவக்காம்பிராக்குள்ளும் என்னையும் மகளையும் தனியே வீட்டையும் அடைத்த அன்றுதான் வாழ்க்கையை எங்கோ நான் தொலைத்திருந்ததாக உணர்ந்து கொண்டேன்.
எங்கள் இருவரின் பக்டறி வேலைகளினால் வந்த வரு மானம் எங்கள் வீட்டுக்கும், புதிதாக வேண்டியிருந்த காருக்கும், மகளின்படிப்புக்கும் நிச்சயம் போதுமானதாயே இருந்தது. பின் எதற்காக நான் இரவில் பிற்ஸா றெஸ் றோரன்ரிலும். சாந்தி காலையில் பேப்பர் போடவும் போயிருக்க வேண்டும்?
எல்லாம் காலம் கடந்த ஞானங்கள். அவர் அவர்களுக்கு வரும்வரை அவர் அவர்கள் ஒடிக்கொண்டுதான் இருப்
56. இப்போதிருக்கும் தனிமையில் அடிக்கடி மனம் இலங்கையை எட்டிப் பார்க்கின்றது. சுகிக்கு கல்யாண வயது வரும் பொழுது அங்கேயே ஒரு மாப்பிள்ளையைப் பார்த்து செய்து வைக்க வேணும் போல் மனம் ஏவுகிறது.
பகல் முழுக்க பக்டறி வேலை, பின்னேரத்தில் தனியே சமையல், இரவில் சுகிக்கு பள்ளிக்கூடவேலைகளில் உதவி செய்தல் என வாரத்தின் ஐந்து நாட்களும் அவசர அவசர மாக ஓடினாலும் சனி, ஞாயிறுகள் அசைவது கொஞ்சம் கஷ்டமாகவேயிருந்தது. சனி, ஞாயிறுகளில் கலியான

Page 57
110 வி. ஜீவகுமாரன்
வீடுகள், பிறந்தநாள் கொண்டாட்டங்கள் என வந்து போனாலும் சாந்தியில்லாது தனியே போயிருப்பதும் கஷ்டமாய்த்தான் இருந்தது. வழமைபோல எல்லா ஆண்களும் மூலைக்கு மூலை இருந்து தண்ணியடித்துக் கொண்டு நாட்டு அரசியல், நன்மை தீமை கதைத்துக்கொண்டு இருக்கும்பொழுது அவர்களுடன் என்னால் ஐக்கியப்படமுடிந்தாலும், அவர்கள் தங்கள் மனைவிமார், குடும்பங்கள் என்று கதைக்கத் தொடங்கும் பொழுது நானே எனக்குள்ளும் அவர்களிலும் இருந்து அன்னியப்பட்டுப் போயிருக்கின்றேன் என்பதை எத்தனையோ தடவை எனக்குள் உணர்ந்திருக்கின்றேன். மேலாக சாந்தி இருந்தபொழுது பொது இடங்களில் விழுந்து விழுந்து சிரித்துக் கதைக்கும் பெண்கள் கூட ஒரு புன்சிரிப்புடன் மட்டும் விலத்திப் போகும்பொழுது மனது இன்னமும் கஷ்டப்படும். எனவே, பொதுவாக இப்படியான ஒன்றுகூடல்களை பெரிதாகத் தவிர்க்கவே பார்ப்பேன். முடியாவிட்டால் விழாக் களுக்கு கொஞ்சம் பிந்திப் போவேன். அல்லது முந்தி வெளிக்கிட்டு வருவேன். விதவை என்று ஒரு பெண்ணை சமுதாயம் தள்ளி வைப்பது ஒரு ரகம் என்றால் ஆணைத் தள்ளி வைப்பது இன்னோர் ரகம் என்பதை இந்த ஒரு வருடத்துக்குள் நன்கு அனுபவித்திருந்தேன். எனவேதான் சனி, ஞாயிறு என்பது எனக்கு ஒரு போராட்டம் தான். அதிலிருந்து தப்ப பொதுவாக ரீ.வி அல்லது படங்கள் அல்லது எப்போதோ யாரோ ஊரில் இருந்து அனுப்பியிருந்த கலியாண வீட்டு டி.வி.டி. கொப்பிகள்.
இப்போ கொஞ்ச நாட்களாக இந்த டி.வி.டி. கொப்பிகளுள்
அதிகமாக ஐக்கியப்பட்டு விட்டேன். இது எனக்குத் தெரிந்த எங்கள் பகுதி ஆட்களினதும் சரி. அல்லது எனக்குத்

சங்தானைச் சண்டியன் 111
தெரியாத சாந்தியின் ஆட்களினதும் சரி. கலியாண வீட்டுக்குப் பின்னால் தெரியும் ஒரு யாழ்ப்பாணம் அல்லது கோப்பாய் அல்லது மருதனாமடம். ஆட்களை ஏற்றிக் கொண்டு ஒடும் மினி பஸ்கள். அவை கிளப்பும் புழுதிகள். பக்கத்தே தெரியும் பனைமரங்கள் என அன்று முழுக்க நான் யாழ்ப்பாணத்தினுள்தான். போனமாதம் நடுப்பகுதி என்று நினைக்கின்றேன். தங்கச்சி தனது மகளின் சாமத்தியச் சடங்கு கொப்பி அனுப்பி யிருந்தாள். சுகியும் வாரவிடுமுறைக்கு பள்ளிக்கூடத்துடன் நோர்வேக்கு காம்பிங் போயிருந்தாள். எனக்கு அந்தக் கிழமை சுகிக்கு சாப்பாடு செய்ய வேண்டும் என்ற வேலையும் இருக்கவில்லை. எனவே தங்கச்சியின் மகளின் சாமத்தியப் படக் கொப்பியும் நானும்தான். கட்டம் கட்டமாக லயித் திருந்தேன். அதில் இருந்தவர்கள் அத்தனை பேரும் எனக்குத் தெரிந்த வர்களே. ஆனால் காலம் அவர்கள் மீது போட்டிருந்த கஷ்டங்களின் கோடுகள் முகத்தில் மட்டும் எங்கேயோ தெரிந்திருந்தன. மற்றும்படி அவர்கள் இன்றும் அப்படியே தான். எனக்கு முன்நூற்றிநாலு சொல்லிக் கொடுத்த பொன்னையா தாத்தா. தமிழ் படிப்பித்த சண்முகராசா மாஸ்டர். அம்மாக்கு புளியங்காய் உடைத்துக் கொடுக்கும் தங்கமணி அக்கா. என்னுடன் களவாய் படத்துக்கு வரும் மனோகரன். நேரம் போவது தெரியாமல் பார்த்துக் கொண்டே இருந்தேன். ஒவ்வோர் கட்டம் கட்டமாக. அவர்கள் வாழ்க்கையையும் என்னையும் இணைத்தபடி. நேரம் போவது தெரியாமல் பார்த்தபடி. இப்பொழுது தங்கச்சியின் மகளுடன் படம் எடுக்க வந்தி ருக்கிறது. என் கைகள் கொஞ்சம் நடுங்குகின்றன. மேகலாதானா அது?. எப்பிடி மாறிப்போயிருக்கிறாள்?

Page 58
112 வி. ஜீவகுமாரன்
பக்கத்தில் வளர்ந்த மூன்று பெண்பிள்ளைகள், சின்ன இரண்டு பையன்கள். மற்றது புருஷனாகத்தான் இருக்க வேண்டும். என்ன கோலங்கள்.
நான் உன்னைக் காதலிக்கிறன். நான் உன்னைத்தான் கட்டிக் கொள்ளுவன் என நான் அவளுக்கோ. அவள் எனக்கோ எந்த வாக்குறுதிகளும் கொடுக்கவில்லையே தவிர நிச்சயம் ஒருவகையில் நான் அவளைக் காதலித்து தான் இருந்திருக்க வேண்டும். அப்படியே அவளும் இருந்திருக்க வேண்டும். அல்லது இப்ப எதற்காக இந்த வாக்குறுதிகளும் ஒப்பந்தங்களும் என அவை பற்றிக் கவலைப்படாது நாம் இருவருமே பள்ளிக்கூட காலத்தில் சந்தோஷமாக இருந்திருக்கின்றோம். சின்னச் சின்னச் சில்மிஷங்கள். சின்னச் சின்ன அன்பளிப்புகள். சின்னச் சின்ன சிரிப்புகள். சின்னச் சின்ன கோபங்கள்.
எங்கள் கிராமத்தின் பெரிய வீடு மேகலாவினுடையது. பேரன் மலேசியா பென்ஷனியர் என்று அம்மா சொல்லக் கேள்வி. எப்பொழுதும் வாசல் இரும்புக் கதவிற்கு தாழ்ப் பாள் போடப்பட்டிருக்கும். ஆட்கள் போய்த் தட்டினால் அல்லது பெரியதாய் குரல் கொடுத்தால் மட்டும் மேகலா வின் தாய் அல்லது பேத்தி வந்து ஏன் எதற்கு என்று கேட்டு கதவைத் திறப்பார்கள். பல சமயம் கதவைத் திறக்கா மலேயே பதில் சொல்லி அனுப்புவார்கள்.
ஆனால் எனக்கு மட்டும் அங்கு விதிவிலக்கு இருந்தது. சைக்கிளில் பெல் அடிக்கும் விதத்திலேயே அவர்களுக்கு நான் எனத் தெரிந்து விடும். வந்து கேற்றைத் திறப்பார்கள். நானும் மேகலாவும் கொஞ்சம் படிப்பும், கொஞ்சம் விளை யாட்டும் என செக்கல் வரும் வரை முன்கூடத்தில் இருப்போம். சிலவேளை அவர்கள் வீட்டிலேயே சாப்பிடுவதுமுண்டு.

Pakabarandarë Fahrguudår 113
நான் நினைக்கின்றேன், சுமார் நாலாம் வகுப்பில் தொடங்கிய எங்கள் இந்த உறவு அவள் வயதுக்கு வரும் வரை தொடர்ந்தது. பின்பும் அப்படி நான் போயிருந்து அவளுடன் விளையாடி வருவதை அவர்களின் வீட்டிலும் சரி, எங்களின் வீட்டிலும் சரி பெரிதாய் விரும்பவில்லை. எனினும் சந்தர்ப்பம் வரும் போதெல்லாம் இரண்டொரு மணித்தியாலம் மேகலா வீட்டுக்குப் போயிருந்து விட்டு வருவேன். ஆனால் பள்ளிக்கூடத்தில் எங்கள் பழக்கம் இருந்த மாதிரியே இருந்தது. எனக்கு நல்ல ஞாபகம் இருக்கு. ஒரு நாள் அட்வான்ஸ் லெவல் படிக்கும் வளர்ந்த தடித்த மாணவன் ஒருத்தன் ஒரு கடிதத்தை என்னிடம் தந்து மேகலாவிடம் கொடுக்கச் சொன்னான். அவனின் தோற்றத்துக்கு பயந்து வேண்டிக் கொண்டாலும் அடுத்த வினாடியே அவனுக்குத் தெரியாமல் அதைக் கிழித்து வயல் கிணற்றுக்குள் எறிந்து விட்டேன், இரண்டு நாள்களுக்குப் பின் அவனே என்ன பதில் எண்டு மேகலாவிடம் கேட்டிருக்கின்றான். அவள் அவனை முழிசிப் பார்த்துவிட்டு, என்னிடம் வந்து என்னை மிரட்டினது போல் கேட்டாள், ஏன் அவன் தந்த கடிதத்தை தன்னிடம் தரவில்லை என்று.
நான் தலைகுனிந்தபடியே நின்றேன். “என் செல்லமடா நீ” என என் தலையைக் கோதிவிட்டுப் போனாள்.
இப்பவும் இனிக்கிறது - இளமையில் நானும் அவளும் ஒன்றாய்த் திரிந்த காலங்கள்.

Page 59
114 af. aspuprger
இப்பொழுதோ. மேகலா சரிபாதியாய் இருந்தாள். கன்னங்கள் இரண்டும் குழி விழுந்து. கழுத்தில் சின்ன கயிறோ சங்கிலியோ. காய்ந்துபோய் பின்வளவில் விழுந்த கங்கு மட்டையாக, பக்கத்தில் நிற்கும் புருஷன். எங்கள் ஊர் ஆளாய்த் தெரியவில்லை. கண்கள் தாண்டு. பற்கள் மிதந்து. நிறை குடிகாரனாகக் காட்டியது. டென்மார்க்கிற்கு வந்த பின்பு சாந்தியின் சம்பந்தம் மாற்றுச் சடங்காக சீதன, பாதனத்துடன் சண்டிலிப்பாய் சாத்திரி யாருடன் கூடி வந்த போது மேகலாவை ஒரு கணம் மனம் நினைத்தது உண்மைதான். ஊரிலிருந்த மனோகரனிடம் மெதுவாக விசாரித்தேன்.
மேகலாவுக்கு இரண்டு வருடத்திற்கு முன்பே இளவாலையில் கலியாணம் முடிந்திருந்ததாம். வவுனியா பாங்க் ஒவ்வீசராம். தவிரவும் பெரிய பாட்ஸ் கடை ஒன்றில் பங்காம். கட்டி நல்லாய் இருக்கிறாளாம். வவுனியாவில்தான் இருக்கி றாளாம். நல்லது கெட்டதுக்கு ஊருக்கு வந்து போவாள் என மனோகரன் சொன்னபொழுது ஆறுதலாய் இருந்து விட்டேனோ என மனத்துள் என்னையே நான் நொந்து கொண்டாலும், எங்கை இருந்தாலும் அவளும் நானும் நல்லாய் இருப்பம் என்ற நினைப்புடனேயே சாந்தியின் கழுத்தில் தாலி கட்டினேன். இப்போ சாந்தியும் போய். இவளும் உருக்குலைந்து. என்ன நடந்தது?
தங்கச்சிக்கு தொலைபேசி எடுத்தேன். வீடியோ பார்த்தேன். நல்லாய் இருந்தது. இத்தியாதி. இத்தியாதிகளுக்குப் பின்பு மெதுவாகக் கேட்டன், மேகலாவுக்கு என்ன நடந்தது எண்டு.

சங்கானைச் சண்டியன் 115
கேட்க கஷ்டமாய் இருந்தது. நல்லாய்த்தான் இருந்தவர் களாம் வன்னியில். பாங்கில் காசை அளவுக்கு மீறிக் கடன் எடுத்து வியாபாரத்தில் போட்டிருக்கிறாராம். புருஷனுக்கு கூடாத கூட்டங்கள் வேறு. கொஞ்சம் குடி. அளவுக்கு மீறிய அளவில் வியாபாரங்கள். நாட்டின் சீரற்ற நிலை. கொடுத்த கடன்களைத் திருப்பி வேண்ட முடியாத நிலை. கொஞ்சம் கொஞ்சமாய் வட்டி வளர்ந்து முதலை அழுத்த, கடைசியில் வவுனியா சொத்துகளை எல்லாம் அரை விலைக்கும் கால் விலைக்கும் வித்துப்போட்டு ஊரோடு வந்து விட்டார்களாம். பணத்துடன் புரண்ட கை. காசில்லாதபோது கையைக் கடிக்கவே செய்தது. வங்கியில் கடன் கொடுக்கும் பிரிவில் இருந்துகொண்டு கை நீட்டி வேண்டிய லஞ்சம் ஆளை வீட்டுக்கு அனுப்பி விட்டது.
தவிரவும். இரண்டு ஆண்டுக்கு ஒன்றாக ஐந்து பிள்ளைகள் வேறு. வீட்டுக்காணியாலும் தோட்டக் காணியாலும் வரும் வருமானம் மட்டும்தான் வாழ்க்கையைக் கொண்டு போகு தாம். மேலாக புருஷன்காரன் ஊர் மூலையில் கள்ளச் சாராயம் காச்சுற ஆக்களோடை சேர்ந்து ஒரே குடியாம் என தங்கச்சி சொல்லி முடித்தாள். அன்றைய நாள் கழிவது எனக்கு பெரிய சங்கடமாய் இருந்தது. அச்சாணி ஆட வெளிக்கிட்டால் வண்டியின் குடை சாய்வது பெரிய விடயம் இல்லை. ஆனால் அது மேகலாவுக்கு நடந்திருக்க வேண்டாம் என மனம் அழுதது. ஊரில் பெரிய வீட்டுக்காரி இப்பொழுது ஊரின் நகைப்புக்கு இடமாக. பின்னேரத்தில் பிள்ளை களுக்கு கொஞ்சம் ரியூஷன் சொல்லிக் கொடுக்கிறாளாம்.

Page 60
116 வி. ஜீவகுமாரன்
இவற்றை எல்லாம் கேட்ட பின்பு ஒரு தடவை ஊருக்குப் போக வேணும் போல் இருந்தது.
மேகலாவைப் பார்க்க வேண்டும் போல் இருந்தது. அவளுடன் கதைக்க வேணும் போலிருந்தது. என்ன கதைப்பது என்று தெரியாவிட்டாலும், அவள் நல்லாய் இருந்த காலத்தில் அவளுடன் சிரித்துப் பேசி சந்தோஷ மாக இருந்த நாட்களுள் மீண்டும் ஒரு தடவை போய் முடங்க மனம் ஆசைப்பட்டது,
அன்று முழுக்க என்ன செய்தாலும், எங்கு சென்றாலும், எங்கு திரும்பினாலும் மேகலாதான்.
அவள் வீட்டின் பின்புறத்தே அமைந்திருந்த பெரிய மாட்டுத் தொழுவத்தில் நின்றுகொண்டு மாடுகள் இரைமீட்டுவது போல அன்று சனிக்கிழமை முழுக்க எனக்கு நினைவு மீட்டல் தான். ஒரு நாள் பகிடியாகவே அவளைப் பேசினேன், நீ இந்த மாடுகள் போல் பிறந்திருந்தாலாவது பள்ளிக்கூடத்தில் படிப்பதை வீட்டில் இரைமீட்டு நல்ல கெட்டிக்காரியாய் வந்திருப்பாய் என்று. வந்ததே அவளுக்குக் கோபம். மாட்டுக்கு முன்னால் வைத்திருந்த தவிட்டுத் தண்ணி என் மேல். நான் கோவித்துக் கொண்டு சைக்கிளை எடுத்துக் கொண்டு வீட்டை வந்துவிட்டேன். பின் இரண்டு கிழமையாய் இரண்டு பேரும் கோபம். பள்ளிக்கூடத்திலும் கதைக்க வில்லை. ஒருநாள் பள்ளிக்கூடம் முடியும் சமயம் அவள் எனக்குக் கிட்டவாக வந்து, “கோவக்காரனை அம்மா பின்னேரம் வீட்டை வரச்சொன்னவா” என்றாள்.

rraparš staigudr 117
நானும் சரி என்றுவிட்டு அன்று பின்னேரம் அவள் வீட்டை போனேன்.
வீட்டில் அவள் மட்டும்தான் நின்றிருந்தாள். "அம்மா எங்கை?”
“அவை கோயிலுக்கு போட்டினம்.” "அப்போ அம்மா வரச்சொன்னது எண்டு நீ சொன்னது?”
“அது சும்மாடா. இனியும் உன்னோடை கோபிச்சுக் கொண்டிருக்க ஏலாது. சொறியடா. எனக்கு இத்தனை நாளும் மனமே சரியில்லை. நீயாய் கதைப்பாய் எண்டு பார்த்துக்கொண்டு இருந்தன். நீ பெரிய ரோஷக்காரன். அதுதான் நானாக.” “போடி. நீயும் உன்ரை கோபமும் சமாதானமும்” என்றவாறு அவள் கையிலிருந்த பனங்கிழங்கைக் கேட்டு கையை நீட்டினேன்.
"பொறு. பொறு” என்றுவிட்டு வீட்டுப்படியில் இருந்து பனங்கிழங்கை தும்பு வார்ந்து வார்ந்து எனக்குத் தந்து கொண்டிருந்தாள். நானும் மாலை இருட்டாகும் வரை அதனை வேண்டிச் சாப்பிட்டுக் கொண்டிருந்தேன்.
சின்னச் சின்ன ஹைக்கூ கவிதைகள் போல அவளும் நானும் கழித்த அந்த இனிமையான நாட்கள். எப்படி எங்களைச் சுற்றி அப்படி ஒரு சின்ன நூல் வேலியை எங்கள் இருவராலுமே போட முடிந்திருந்தது. இன்று அவள் கோலத்தைப் பார்த்தபொழுது அப்படி ஒரு நூல் வேலியைப் போட்டிருக்க வேண்டாமோ என்று கூடத் தோன்றியது.
இளமையும் இனிதாக அமைந்திருக்கும். அவளுக்கும்
வாழ்வில் இப்படி ஒரு சறுக்கல் வந்திராது. நானும் கையில் ஒரு பன்னிரண்டு வயதுப் பெண்ணுடன் தன்னந் தனியே.

Page 61
118 வி. ஜீவகுமாரன்
எனக்கு நன்கு தெரியும் இந்தக் கூட்டல் கழித்தல் கணக்கு களை வாழ்க்கையில் போடமுடியாது என்று. ஆனால் வாழ்வின் தோல்விகளுக்கு ஒத்தடம் போட இந்த மனக் கணக்குகள் சிலநேரம் உதவும் போல் இருக்கும். அவ்வளவு தான்.
எப்படியோ இந்தக் கோடை விடுமுறைக்கு சுகியையும் கூட்டிக்கொண்டு ஒரு தடவை ஊருக்குப் போய் வருவது என்று முடிவெடுத்துக் கொண்டேன்.
டென்மார்க் - பிராங்பேட் வழியாக சென்ற ஏர்லங்கா அதிகாலை 4.45-க்கு கட்டுநாயக்காவில் தரையைத் தொட்டது.
பிளேனினுள் அடுத்து அடுத்து போட்ட மூன்று தமிழ்ப் படங்களுடன் சுகி ஐக்கியமாகியிருந்தாள். எனவே அவளுக்கு இந்த பதின்மூன்று மணித்தியாலப் பிரயாணம் பெரியதாக இருக்கவில்லை.
எனக்குத்தான். மேகலா வந்து வந்து குழப்பிக் கொண்டி ருந்தாள். சுமார் பதினாறு வருடங்களுக்குப் பின்பு. பக்கங்கள் தொலைந்த தொடர் நாவலின் பக்கங்களைத் தேடும் முயற்சி. என்ன கதைக்கப் போறம்.?
விடை தெரியாத கேள்விகளை மனம் அடுக்கிக் கொண்ட தாலோ என்னவோ ஒழுங்காக நித்திரையும் கொள்ள முடியவில்லை. சுகியைப் போல் சந்தோஷமாயிருந்து படங்களைப் பார்த்துக் கொள்ளவும் முடியவில்லை.
இடையில் சுகி கேட்டாள், “ஏதாவது பற்றிக் கவலைப் படுகிறீங்களா அப்பா” என்று.

reparš sairgu dir 119
“இல்லை. ஏன் கேட்கிறாய்.”
“கொஞ்சம் அப்நோர்மலாய் இருக்கிறமாதிரி இருக்கிறி யள்.”
“இல்லையடா. பதினாறு வருசத்துக்குப் பிறகு ஊருக்கு தனிய போறன். அதுதான்.”
"அம்மாவை நினைச்சிட்டீங்களா.” “ஓம்’ எனப் பொய்யாகத் தலையாட்டினன்.
இமிக்கிரேஷன். கஸ்டம்ஸ். அனைத்தையும் தாண்டி வர தங்கச்சி, மச்சான், மருமகள் அனைவரும் நின்றார்கள். தங்கச்சி ஓடி வந்து கட்டிப்பிடித்துக்கொண்டு அழுதாள். சாந்தியுடன் என்றைக்குமே அவள் நல்ல சகோதரி போலவே இருந்தவள். சராசரி யாழ்ப்பாணத்து மச்சாள் சண்டைகள் அவர்களுக்குள் என்றுமே இருந்ததில்லை. சரி. சரி. என அவளை நானே சமாதானப்படுத்திக் கொண்டு எயர்போட்டை விட்டு வெளியேறி நேராக இரத்மலானைக்குப் போனோம். அங்கு பத்து மணிக்கு புறப்படும் விமானத்தில் எமக்கு சீற் பதிவாகியிருந்தது. மீண்டும் ஒரு குட்டி விமானப் பயணம். சுகியும் தங்கச்சியின் மகளும் நன்கு சேர்ந்துகொண்டு அந்தப் பயணத்தை ரசித்தார்கள். நான் எனது மெளனத்துடன். அல்லது மேகலா பற்றிய நினைவுத் தவத்துடன். “என்ன பேசாமல் வாறாய்” என தங்கச்சி இரண்டொரு தரம் கேட்டாள்.

Page 62
120 வி. ஜீவகுமாரன்
“பிளேனிலை நித்திரை இல்லை அதுதான்.” மீண்டும் மணமறிந்த ஒரு பொய். “இன்னும் கொஞ்ச நேரத்திலை பலாலி வந்திடும்” . அத்தார் சொல்லி அதிக நேரம் இல்லை. பிளேன் ரன்வேயில் ஒடத் தொடங்கியது. பலாலி. அங்கிருந்து ஆமியின் பஸ்ஸில் யாழ்ப்பாணம். பின் ஒரு வாடகைக் காரில் மருதனாமடம்.
வழியெங்கும் போர் பதித்த தடங்கள் வடிவாகத் தெரிந்தன. அது கட்டடங்களில் என்றாலும் சரி. மக்களில் என்றாலும் சரி. இது நான் வாழ்ந்த யாழ்ப்பாணம் இல்லை என மனது சொல்லுகிறது. கார் இப்பொழுது மருதனாமடத்துள் நுழைகிறது. றோட்டுகள் இருந்த தெருக்கள் கல் ஒழுங்கை போல. நாடு நன்றாகத்தான் மாறிவிட்டிருந்தது. நாங்கள் போய் இறங்கும்பொழுது சாந்தி வீட்டாக்கள் முன்பே வந்து எங்களுக்காகக் காத்திருந்தார்கள். சுகியையும் என்னையும் கட்டிப் பிடித்து தங்கள் கவலை தீரும் வரை அழுதார்கள். எனக்கும் ஏதும் கதைக்க முடியவில்லை. என்ன நடந்தது ஏது நடந்தது என்று எல்லாம் விசாரித் தார்கள். எனக்காகவும் சுகிக்காகவும் மிகவும் கவலைப் Lu'LTřfa56T. தங்கச்சி வீட்டை முன்பே அத்தார் குடும்பம் வந்து எல்லோருக்குமாய் சமைத்து வைத்திருந்தார்கள்.
வந்த களை மாற நன்கு குளித்துச் சாப்பிட்டு முடிய பின்னேரம் நாலு மணியாகிவிட்டது.

சங்கானைச் சண்டியன் r 12
நான் வரப்போறதை முன்னே அறிந்திருந்த அயல் அண்டை ஆட்கள் கொஞ்சம் கொஞ்சமாய் வரத் தொடங் கினார்கள்.
பொன்னையா தாத்தா. சண்முகராசா மாஸ்டர். தங்க மணி அக்கா. மனோகரன். இன்னும் எத்தனை எத்த னையோ பேர். இரவு ஒன்பது மணியாகியும் ஆட்கள் வருவது குறையவேயில்லை. தங்கச்சிக்கும் எல்லோருக்கும் தேத்தண்ணி ஊத்தி கை ஓய்ந்திருக்கும். ஒவ்வொருத்தர் வரும்போதும் முன் படலை திறந்து மூடும் பொழுது என்னையும் அறியாமல் வாசல் கதவடியைக் கண்கள் திரும்பிப் பார்க்கும் - மேகலாவாக இருக்குமோ என்று.
அன்று முழுக்க அவள் வரவேயில்லை.
அடுத்தநாள் காலமை சாந்தி வீட்டார் வரச்சொல்லியிருந் தார்கள். நானும் சுகியும் நிலம் வெளிக்கும் முன்பேயே புறப்பட்டு விட்டோம். அப்போதுதான் நேரத்துடன் திரும்பி வரலாம் என்பது ஒரு காரணம். மேகலா என்னைப் பார்க்க வீட்டுக்கு வந்து ஏமாற்றத்துடன் திரும்பக் கூடாது எண்டது இரண்டாவது காரணம். அப்படி அவள் வராட்டியும் நானாக இருட்ட முதல் அவள் வீட்டிற்குப் போகவேண்டும் எண்டது மூன்றாவது காரணம். சைக்கிளில் முன்னேயிருந்து தோட்ட வெளிகளுக்கும் பனை வெளிகளுக்கும் நடுவே பயணிப்பது சுகிக்கு மிகவும் பிடித்திருந்தது.
"ஏன் படலைக்கு படலை ஆமி நிக்குது?. ஏன் டென்மார்க் போலை எல்லோரும் சந்தோஷமாய் இருக்க ஏலாது?.” வழி முழுக்க அவள் துருவித் துருவி எத்தனையோ

Page 63
122 வி. ஜீவகுமாரன்
கேள்விகள். முடிந்தவற்றை தெரிந்தளவிலும் முடியாத வற்றைக் கற்பனையுடனும் சொல்லிக் கொண்டு போனேன்.
சாந்தி வீட்டார் நேற்றளவு இன்று அழவில்லை. நடக்க முடியாமல் இருந்த சாந்தியின் பேத்திதான் சுகியை மடியில் வைத்துக்கொண்டு அழுதா. “எப்பிடி உன்னை விட்டுட்டுப் போக அம்மாக்கு மனம் வந்தது” என்று. சுகிக்கும் கண்கலங்கியது போல இருந்தது. பத்துமணிக்குக் கிட்டவாக வெயிலுக்கு முதல் போவம் என வெளிக்கிட சாந்தியின் பெற்றோர் விடவில்லை. கட்டாயம் மத்தியானம் சாப்பிட்டுவிட்டுப் போகவேண்டும் என வற்புறுத்தினார்கள். அத்துடன் சுகியை தம்முடன் இரண்டொரு தினம் வைத்திருக்க விரும்பினார்கள். நானும் மத்தியானம் அவர்கள் வீட்டில் சாப்பிட்டுவிட்டு வெளிக்கிட பின்னேரம் ஆகிவிட்டது. வீட்டை போனபொழுது இரண்டொரு ஆட்கள் வந்து எனக்காகக் காத்திருந்தார்கள். இன்னும் இரண்டொரு ஆட்கள் காலமை வந்துவிட்டு பொழுதுபட திரும்ப வாறம் என்றுவிட்டுப் போனவையாம் என தங்கச்சி சொன்னாள். யார் யார் வந்தது எனக் கேட்டேன். அதில் மேகலா இல்லாதிருந்தது எனக்கு பெரிய ஏமாற்றமாய் இருந்தது. மீண்டும் ஆட்கள். சுக துக்க விசாரிப்புகள். இரவாகி விட்டது.
அடுத்தநாள் விடியலுக்காகக் காத்திருந்தேன்.
காலமை தங்கச்சியுடன் இருந்து கதைத்துக் கொண்டி ருக்கும் பொழுது என்னைப் பார்க்க வந்தவர்களில் யார்

சங்கானைச் சண்டியன் 123
யாருக்கு உண்மையில் ஊரில் கஷ்டம். எவ்வளவு எவ்வளவு கொடுத்தால் உதவியாக இருக்கும் என ஒரு கணக்கு எடுத்துக் கொண்டேன்.
"நீ இன்னமும் மாறவேயில்லை” என செல்லமாக என்னைக் கண்டித்து விட்டு உள்ளே போனாள்.
நான் பாங்கடி மட்டும் போட்டு வாறன் எனச் சொல்லிவிட்டு சைக்கிளையும் எடுத்துக்கொண்டு முதலில் போய் பாங்கில் ஐந்து லட்சம் மாற்றக் கேட்டேன். அவர்கள் சிரித்தபடி, "உங்களுக்கு நாட்டு நிலைமை தெரியேல்லை. அவ்வளவு காசு நாங்கள் வைச்சிருக்கிற தில்லை. ஒரு நாளைக்கு ஒரு இலட்சமாக ஐந்து நாளுக்கு வந்து மாற்றுங்கள். அல்லது யாழ்ப்பாண வங்கிக்கு போய் மாற்றுங்கள்” என பதில் சொன்னார்கள்.
“சரி ஒரு லட்சத்தை தாருங்கள்” என வேண்டிக் கொண்டு நேரே மேகலா வீட்டை நோக்கி சைக்கிளை அழுத்தினேன். இதுதான் வீடு என்று நம்ப முடியாமல் இருந்தது. வீட்டிற்கு முன்னால் இப்பவும் அந்த இரும்புக் கதவு தாழ்ப்பாள் போட்டபடியேதானிருந்தது. ஆனால் கதவு முழுக்க கறள் பிடித்திருந்தது. பெயின்றைக் கண்டு அந்தக் கதவுகள் சரி. வீட்டின் முன் சுவர்கள் சரி எத்தனையோ வருடங்கள் இருக்கலாம். வீட்டைச் சுற்றிவர இருந்த வேலிகள் பாறிப்போயும். கறையான் அரித்தும் இருந்தன. அவள் வாழ்க்கையைப் போல. சைக்கிளில் இருந்தபடியே பெல்லை அழுத்தினேன். எத்தனையோ வருடங்களுக்குப் பிறகும். அதே தாள சுருதியில். எனக்கே அதிசயமாக இருந்தது. மேகலா வுக்குக் கேட்டிருக்க வேண்டும்.

Page 64
124 வி. விவகுமாரன்
அவசர அவசரமாக வீட்டுக்கு வெளியே வந்தாள். என்னைக் கண்டதும் அவள் கால்களின் வேகம் தானாகக் குறைந்தது. வெளிச்சுவரில் தொங்கியிருந்த திறப்பை எடுத்து வந்து கேற்றின் பூட்டைத் திறந்தாள். சைக்கிளில் இருந்து இறங்காமலே அவர்கள் வீட்டு முன்தாழ்வாரம் போய் வீட்டு முன்விறாந்தையில் உட்கார்ந்து கொண்டேன். மேகலா வந்து விறாந்தையின் முன்படியில் மற்ற திண்ணையில் உட்கார்ந்து கொண்டாள். நான் ஏதும் பேசாமல் இருந்தேன். கொஞ்ச நேரம் மேகலாவும் பேசாமல் இருந்தாள்.
“நான் இரண்டு நாளும் உன்னைப் பார்க்க வரேல்லை எண்டு தானே உம்மெண்டு கொண்டு இருக்கிறாய்.”
மேகலாவுக்கு என்னை நல்லாய்த் தெரியும். சின்னச் சின்ன கோபம் வந்தால் நான் உம் என்று முகத்தைத் தூக்கி வைத்துக்கொண்டு இருப்பேன் என்று. அந்த வினாடியில் நான் குட்டிச் சங்கராய் மாறியிருந்திருக்க வேண்டும்,
“ஓம்’ என்பது போலத் தலையாட்டினேன்.
“என்ன எண்டு உன்னை வந்து பார்க்கிறது. கண் காணாத தேசத்திலை நல்லாய் இருக்கிறாய் எண்டு நினைச்சு சந்தோஷப்பட்டுக் கொண்டிருந்தன். ஆனால் இந்த சின்ன வயதில கையிலை ஒரு பொம்பிளைப் பிள்ளையோடை நீ தனிச்சுப் போட்டாய் எண்டு கேள்விப்பட்ட இரண்டொரு நாளாய் என்னாலை எதுவுமே சாப்பிட முடியேல்லை.

errioriapari srairgiuidir 125
உன்னை நினைச்சு அழுதுகொண்டு இருந்தனான். இப்ப நீ வாறாய் எண்டு கேள்விப்பட்டனான். முந்த நாளே வந்து பார்க்க நினைச்சனான். எண்டாலும் என்னாலை முடியேல்லை.” என்னுள் நான் அதிர்ந்து போனேன். “பொறு. பொறு. வாறன். காலமை பனங்கிழங்கு அவிக்கேக்கையே உன்னை நினைச்சனான். எடுத்துக் கொண்டு வாறன்.” படியில் இருந்தபடியே தும்பை வார்ந்து எடுத்துவிட்டு எனக்கு கிழங்கைத் தந்தாள். “பிள்ளையஸ் பள்ளிக்கூடத்துக்கோ? எங்கை?” எனக்கு குரல் விக்கியது.
“ஓம்” எனத் தலையாட்டினாள்.
"அப்ப அவரெங்கை?” “நீ கட்டாயம் அறிஞ்சிருப்பாய்தானே. காலமையே கச்சேரிக்குப் போற மாதிரி வெளிக்கிட்டுப் போயிடுவார். பின்னேரம் இஞ்சை அங்கை வேண்டிக் குடிச்சிட்டு வருவார்.”
"6TLuq 5?" “என்ன செய்யுறது. ஏதோ அப்பர் அம்மா தேடி வைச்ச சொத்து இருக்கிறதாலை ஐஞ்சு பிள்ளைகளுக்கும் கஞ்சி ஊத்துறன்.” காலம் அவளை எப்படி மாற்றி வைத்திருக்கிறது. பாங்கில் எடுத்துக் கொண்டு வந்த காசுக்கட்டை மெதுவாக வெளியில் எடுத்தேன்.

Page 65
126 வி. ஜீவகுமாரன்
“என்ன உது?” “இதிலை ஒரு லட்சம் ரூபாய் இருக்கு." நான் சொல்லி முடிக்க முதல் அவள் பத்திரகாளியாக எழுந்தாள். அவள் மடியில் தட்டில் இருந்த அத்தனை பனங்கிழங்கும் நிலத்தில் சிதறின. “இப்பவே சொல்லிப் போட்டன். நீ உந்தக் காசோடை எழும்பு. நான் இப்பவும் யாரிடமும் கை நீட்டாமல் மரியாதையாகத்தான் வாழுறன். எனக்கு யாரும் பிச்சை போட வேண்டாம்.” "மேகலா நான் சொல்லுறதை” என்று தொடங்க முதல் தனது இரண்டு கைகளையும் எடுத்துக் குவித்தாள். “தயவு செய்து நீ போட்டு வா.” என்னால் மேலும் எதுவும் கதைக்க முடியவில்லை. சைக்கிளை உருட்டியபடி அவள் வீட்டின் கேற்றுக்கு வெளியே போனேன். கொஞ்ச தூரம் போன பின்பு திரும்பிப் பார்த்தேன். அந்தக் கிராமத்து பெரிய வீட்டுக்காரி வாசல் கேற்றைப் பூட்டிவிட்டு உள்ளே போய்க் கொண்டிருந்தாள்.
“என் மேகலா எங்கே தொலைந்து போனாள்?” விடைதெரியாத என் நாட்டு யுத்தமாய் மீண்டும் நான் எயர்லங்காவில் டென்மார்க்கை நோக்கி.
இப்போதைக்கு ஒரு இலங்கைப் பயணம் இனி எனக் கில்லை! Sf

வாசகர்களுக்கு மொழி பெயர்க் கப்பட்ட கட்டுரைகள், மொழி பெயர்க்கப்பட்ட கதைகள் என்ற அளவில்தான் அறிமுகமாகி யிருக்கும். அதையும்தாண்டினால் “சில தஸ்தாவேஜ்கள் மொழி இபெயர்க்கப்படுவதுண்டு.
கச்சேரி அல்லது கோட் வாசல் களின் முன்னால் உள்ள வாகை & 8: மரங்களின்கீழ் இருந்து, பழைய སྣ། தட்டச்சு இயந்திரத்தை வைத்துக் கொண்டு பிறப்பு, இறப்பு, V. N திருமண அத்தாட்சிப் பத்தி ரங்களை தமிழில் இருந்து

Page 66
128 வி. ஜீவகுமாரன்
விட்டு. அரசு அங்கீகாரம் பெற்ற மொழிபெயர்ப்பாளர் என்ற பெரிய றப்பர் ஸ்டாம் கொண்டு கத்தரிப்பூ நிற மையால் அச்சிட்டுக் கொடுப்போர் பலரை வாசகர்கள் சந்தித்து இருக்கலாம். சில வேளைகளில் அந்த மை காய்ந்துபோய் இருக்கும் சந்தர்ப்பங்களில் அதனுள் கொஞ்சம் பச்சைத் தண்ணிரை விட்டு இளக வைத்து. பின் தண்ணிர் அதிகமாய் பேப்பரில் பட்டதால் பேப்பரைக் காய வைத்துக் கொடுக்க. அந்த தண்ணிர் பட்ட இடம் சிறிது நேரத்தில் காய்ந்து போகும்பொழுது பேப்பர்கள் சுருளத் தொடங்குவதும் பலருக்கு ஞாபகம் இருக்கலாம். அந்த "அரச அங்கீகாரம் பெற்ற" என்ற றப்பர் ஸ்டாம்பில் உள்ள துலக்கம் அவர்கள் முகங்களிலோ உடைகளிலோ எப்போதும் இருப்பதில்லை.
சவரம் செய்யாத முகம். கொலர் கறுத்துப்போன வெள்ளைச் சேட்டு. முன்பொருகால் வெள்ளையாய் இருந்த வேட்ழ. பக்கத்தில் பாதி குழக்கப்பட்டு மிகுதி ஆறிப்போன முன்கடைக் காரளின் பால்தேத்தண்ணிக் கிளாஸ். அந்த கிளாஸ்களின் விளிம்பில் உட்கார்ந்திருக்கும் இலையான்கள். மரத்தின் கீழ் காத்திருக்கும் பொழுது காகமோ. குருவியோ போடும் எச்சங்களில் இருந்து தலைகளோ, தோள் மூட்டுகளோ தப்பினால் அது அன்றைய அதிர்ஷ்டம்.
இந்த மொழிபெயர்ப்புகளில் இருந்து நான் செய்யும் மொழி பெயர்ப்பு. அல்லது புலம் பெயர்ந்த தமிழர்கள் சந்தித்த என்னைப் போன்ற மொழிபெயர்ப்பாளர்கள் மிகவும் வேறுபட்டவர்கள். எங்களில் இரு பிரிவினர்கள் உண்டு. முதலாவது பொலிஸ் அல்லது நீதித்துறை பாவிக்கும் மொழி பெயர்ப்பாளர்கள். ஒருவருக்கு இந்த நாட்டில் தஞ்சம் கிடைப்பதில் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ இவர்களுக்குப்

சங்கானைச் சண்டியன் 129
பங்கு உண்டு. அளவுக்கதிகமாக மக்களின் பக்கம் நின்றால் அவரை தொடர்ந்து நீதித்துறை பயன்படுத்தாது. அளவுக்கதிக மாக நீதித் துறையின் பக்கம் நின்றால் தமிழர்களால் தள்ளி வைப்பது தொடக்கம் தர்ம அழ வேண்டும் வரை நிலைமை Conte-LD&DLuountih.
இவர்கள் நடந்து கொள்ளும் விதத்தையும், மக்களிடம் பேசிக் கொள்ளும் விதத்தையும் பார்த்தால் ஏதோ டென்மார்க்கின் இறைமையை நிலைநாட்டுவதற்காக வானத்தில் இருந்து தேவ தூதனால் அனுப்பப்பட்டு இருப்பது போல பாவனை செய்து கொள்வார்கள்.
எனக்கு நன்றாக ஞாபகம் இருக்கிறது. நான் ஏழாம் வகுப்பு பழத்துக் கொண்டிருந்த பொழுது நான் பாடசாலைக்குச் செல்லும் 787ம் நம்பர் பஸ்சில் யாழ்ப்பாண சிறைச்சாலையில் வேலை பார்த்துக் கொண்டிருந்த ஒரு ஜெயில் காட் பயணம் செய்வார். அவரின் கைகளில் எப்பொழுதும் கைதிகளுக்குப் போடும் கைவிலங்கு இருக்கும். அதனை ஒரு கையிலிருந்து மற்ற கைக்கு மாற்றுவதும் பின் அதனைத் திறப்பதும் பூட்டுவதும் என மற்றவர்களின் கவனத்தைத் தன்னில் திருப்புவதிலேயே இருப்பார். அந்த வயதில் அவரைப் பார்த்துச் சிரித்த அதே நமட்டுச் சிரிப்பு இந்த வயதிலும் இவர்களைப் பார்க்கும்பொழுது எனக்கு ஏற்படும். இரண்டாவது, டென்மார்க்கின் மருத்துவத்துறையும், சமூக சேவை அமைச்சும், செஞ்சிலுவைச் சங்கமும் பயன்படுத்தும் என் போன்ற மொழிபெயர்ப்பாளர்கள்.
"மருமகளுடன் இனியிருக்க முடியாது." "அக்காவின் புருஷன் க்ையைப் பிழத்து இழுத்தவர்." இன்னும் மூன்று மாதத்தில் நீங்கள் இறந்து விடுவீர்கள். அதுவரை வீட்டில் இருக்க விரும்புகின்றீர்களா. அல்லது ஆஸ்பத்திரியில் இருக்க விரும்புகின்றீர்களா". "டென்மார்க்கின் செஞ்சிலுவைச் சங்கம்

Page 67
130 வி. ஜீவகுமாரன்
உங்களை வரவேற்பதில் மகிழ்ச்சி அடைகிறது” என்ற வகையில் நடைபெறும் மொழிபெயர்ப்புகளில் பொதுவாக யாரையும் பகைக்க வேண்டி வராது. மேலாக எப்போதும் அதிகம் பேர் நட்பு பாராட்டும் உறவாக அமையும் - மனைவியின் தங்கையின் கையைப் பிடித்த அத்தான்மாரைத்தவிர.
சிலவேளைகளில் மனிதாபிமானமுறையில் நான் செய்யும் உதவிகள் என்னைச் சிக்கலில் மாட்டிவிடுவதும் உண்டு. 90களில் என்று நினைக்கின்றேன். ஐந்து பெண் பிள்ளைகளுடன் ஒரு தம்பதியினர், செஞ்சிலுவைச் சங்கத்தில் இருந்தவர்கள், எல்லா வழக்குகளும் முழவுற்று அவர்களை நாட்டுக்குத் திருப்பி அனுப்பும் நிலைக்கு வந்து விட்டிருந்தனர். எனக்கு மனம் கேட்காமல், "கொஞ்சம் மனநிலை சரியில்லாத மாதிரி நடித்தால் மனிதாபிமானச் சட்டத்தின் கீழ் இங்கு வாழும் உரிமை அளிக்கப்படலாம்" என்று கூறிவிட்டு வீட்டுக்கு வந்து விட்டேன். அந்தக் காம்புக்கும் எனது வீட்டிற்கும் 120 கிலோமீற்றர்தூரம். வீட்டை வந்து கால் வைக்க முதல் டெலிபோன் வருகிறது. நான் யோசனை சொன்ன குடும்பத்தின் பெண், காம்புக்கு அண்மையில் உள்ள ஆஸ்பத்திரியின் மனநோயாளர் பிரிவில் அனுமதிக்கப்பட்டு இருப்பதாயும், உடனே என்னை வரும் ւյքայւն. என்ன செய்வது? இருட்டிவிட்டதால் இரட்டைச் சம்பளம் வேறு.
மீண்டும் 120 கிலோ மீற்றர் - மனைவி ஊற்றித்தந்த தேநீரை காரில் ஒழயபழகுழத்துக்கொண்டே. அங்கு போன பொழுது நானே பயந்து விட்டேன். தலைவிரி கோலத்துடனும் கையில் கட்டுடனும் அங்கும் இங்குமாய் அந்தப் பெண் நடந்து கொண்டிருந்தாள்.

erausrandør Fairętudår 131
'அண்னை நீங்கள் சொன்னியள் என்று றெட் குறஸ் குசினிக்குள் கிடந்த கோப்பைகள் கிளாஸ்களையும் உடைத்து. போதாக் குறைக்கு சுவரிலை தொங்கிக் கொண்டிருந்த ரி.வி.யையும் உடைச்சுப்போட்டா. கையிலும் வெட்டிப் போட்டுது" - புருஷன்காரன் எனக்கு நிலைமையை எடுத்துச் சொல்லிக் கொண்டிருக்க, டாக்டரும் நேர்சும் பைல்களுடன் வந்தார்கள். மொழிபெயர்ப்பு ஆரம்பித்தது.
"உங்களுக்கு என்ன கவலை?"
"சிலர் சிரிப்பார். சிலர் அமுவார். நான் சிரித்துக் கொண்டே அழுகின்றேன்.”
அப்பாடா என்றிருந்தது எனக்கு - நல்ல காலம், என்னழ முனியம்மா உன் கண்ணிலே மையி. யாரு வைச்ச மையி என அந்தப் பெண் பாடவில்லையே என்று. நான் மொழிபெயர்த்து முழந்ததும் டாக்டர் மீண்டும் கேட்டார்.
நீங்கள் இன்று செய்தது பிழையில்லையா” என்று. “எது பிழை. ஐந்து பிள்ளைளையும் தாயையும் தகப்பனையும் நீங்கள் நாட்டை விட்டு அனுப்ப யோசிக்கிறீர்களே. அது பிழையில்லையா. பிழை என்றால் எல்லாம் பிழைதான். நெற்றிக் கண்காட்டினாலும் குற்றம் குற்றம்தான்.” நெற்றிக்கண்ணுக்கு டெனிஷில் என்ன வார்த்தை என்று நான் ஒரு கணம் தடுமாறி என்னைச்சுதாரிக்க முதல்,
"சங்கறுப்பது எங்கள் குலம். சங்கரனார்க்கு ஏது குலம். சங்கை அரிந்துண்டு வாழ்வோம். அறனே உம்மைப் போல் இரந்துண்டு வாழமாட்டோம்."
டாக்டர்திரும்பி என்னைப் பார்த்தார்.

Page 68
132 வி. ஜீவகுமாரன்
நான் சமாளிக்கப் பார்த்தேன்.
டாக்டர் விடுவதாயில்லை.
அந்தப் பெண் சொன்ன அனைத்தையும் வரிக்கு வரி மொழி பெயர்த்துச் சொன்னால்தான் தான் சரியான முறையில் வைத்தியம் செய்யலாம் என உறுதியாகச் சொன்னார்.
சங்கை. நொங்கை. அறுத்து. எனக்கு தடக்கத் தொடங்கி விட்டது. e டாக்டர் நேர்ஸின் பக்கம் திரும்பி அடுத்த நாள் நல்ல ஒரு மொழிபெயர்ப்பாளரை ஒழுங்கு செய்யச் சொல்லிவிட்டுப் Թւյոլն 6ճlւ՛ւmii.
பத்து வருட மொழிபெயர்ப்புத் துறையில் முதன் முதலாக என்னில் விழுந்த கறை அது. எனக்கு எட்டாம் மாடியில் இருந்து குதிக்க வேண்டும் போல் இருந்தது. லிவ்ற்றுக்கு காத்திருக்க பொறுமையில்லாமல் என்ன வேகத்தில் எட்டுமாழகளின் பழகளில் இறங்கிவந்தேன் என்று தெரியாது.
அதற்கிடையில் லிவ்ற்றில் இறங்கி வந்த கணவன் கேட்டார், "அண்ணை அவான்றை அக்ரிங்குக்கு அஆல் கிடைக்கு LDsbCount."
"அஆல் கிடைக்குதோ இல்லையோ அடுத்த ஒஸ்கார் அவார்ட் அக்காக்குத்தான்" - அது எனது ஆத்திரம், கவலை, ஏமாற்றம், தோல்வி, அவமானம், 120 +120 கிலோமீற்றர் ஒழய களையில் இருந்து வெளிப்பட்ட வார்த்தைகள்.
அவருக்குப் புரிந்திருக்க வேண்டும் - மெதுவாக நழுவி ճմlւ՛ւnii.

FøTampar Faiburg.UUdör 133
காரை எடுக்க முதல் சரியாக மூன்று சிகரட்டுகள். அடுத்து. அடுத்து. ஒன்றில் மற்றையதை மூட்டி ஊதித்தள்ளிய பிறகு தான் எனது இரத்த அழுத்தம் கொஞ்சம் குறைந்தது - சிகரட் பெட்டியில் புகை பிழத்தல் உடலுக்குத் தீங்கு விளைவிக்கும் என்று எழுதியிருப்பது எல்லாம் வேறு கதை. பின்பு பல நாட்களாக அவர்களைப் பற்றிய எந்த தகவல்களும் இல்லை - நானும் எனது வேலைகளின் பளுவில் அவர்களை மறந்து விட்டேன். திடீரென அவர்கள் வசிக்கும் வைத்திய சாலையின் மகப்பேறுப் பிரிவு என்னை அழைத்தது. போய்ப் பார்த்தபொழுது அந்தப் பெண் கட்டிலில் படுத்திருந்தாள். வயிறொன்றும் பெரிதாக வெளித்தள்ளியிருக்கவில்லை. கட்டில் காலில் எழுதப்பட்டிருந்த எண் அவர்களுக்கு டென்மார்க்கில் வசிக்க அனுமதி கிடைத்திருந்ததை உறுதிப் படுத்தியது. மனதுள் கொஞ்சம் சந்தோஷமாய்த்தான் இருந்தது. "அண்ணை வயித்துக் குத்து எண்டு வந்தனான். இங்கை கொண்டுவந்து அட்மிட் பண்ணிவிட்டான்கள்." எனக்கு ஒன்றும் விளங்கவில்லை.
டாக்டர் வந்து கர்ப்பத்தை உறுதி செய்து. பிறக்க இருப்பது ஆண் பிள்ளை என்றபிறகு, "ஐந்து பெண் பிள்ளைகளுக்கும் ஆண் சகோதரப் பலன் இருக்குது எண்டு அம்மா சாத்திரம் பார்த்துச் சொன்னவா” என்றாள். கணவன்தலை குனிந்தபடியே நின்றார்.
இப்பழயானவர்கள் ஒரு ரகம் என்றால், எங்களின் தெரு முனையில் வசிக்கும் "ரொப்" கந்தையர்கள் போன்று என் இதயத்தில் என்றும் நிறைந்திருப்பவர்கள் இன்னொரு ரகம். எங்கோ சிலரைக் காணும்பொழுது இவர்களுடன் வாழ்நாள்

Page 69
134 afà. alangsupcrdir
பூரா நட்பு வைத்துக்கொள்ளலாம் போலத் தோன்றுமே. அந்த வகைதான் "ரொப்”கந்தையர்.
மனைவி, பிள்ளைகள் இங்கு வருவதற்கு முன்பாக, வியாழக்கிழமைகளில் கைச்செலவுக்கு செஞ்சிலுவைச் சங்கம் கொடுத்த காசை எடுத்துக்கொண்டு பொழயள் டெனிஷ் பெண்களிடம் போய் வந்துகொண்டிருந்த காலகட்டத்தில் அவன்களின் கதைகளில் இழுபட்டு அவரும் ஒருநாள் போய் வந்திருக்கின்றார்.
"எப்பிடி அண்ணை" என்று கேட்டபொழுது "ரொப்படா பொழயள்” எனச் சொல்லவும், அடுத்த நாள் இன்னொரு கந்தையர் காம்புக்கு வரவும் இவர் "ரொப்” கந்தையர் ஆகிவிட்டார். இப்பொழுதும் இவர் எல்லோருக்கும் "ரொப்" கந்தையர்தான். ஆனால் கந்தையர் "ரொப்" கந்தையர் ஆகிய பூர்வீகக் கதைகள் அதிகமானோருக்குத் தெரியாது. தெரிந்தவர்களும் திருமணங்கள் செய்து. அவரவர்கள் அவரவர் மனைவிமாருக்கு "கல் என்றாலும் கணவன் - புல் என்றாலும் புருஷனாக" அவதாரம் எடுத்ததினால் அவர்களும் எந்த உண்மைகளையும் மற்றவர்களுக்கு சொல்லப் போவதில்லை,
ஆனால் அவருக்கு சலரோகம் வந்து முழங்கால் எடுத்த பின்பு செக்கிங்கிற்கு மொழிபெயர்க்கப் போனபொழுது என்னுடன் ஒருதடவைதனியக் கதைக்க விரும்புவதாகச் சொன்னார்.
நானும் சம்மதித்தேன்.
அடுத்த சனிக்கிழமை எமது தெருவுக்குப் பக்கத்தில் இருந்த துருக்கிகாரனின் பிற்ஸா கடையில் சந்திப்பதாக ஒப்பந்தம்.
சொல்லி வைத்தாற்போல் அடுத்த சனிக்கிழமை மோட்டார் பூட்டிய சக்கரநாற்காலியில் வந்தார்.
ஆளுக்கொரு குளிர்ந்த பியர் வாங்கிக் கொண்டோம்.

Fiebrandarễ starpuudår 135
கதைத்துக் கொண்டிருந்துவிட்டு தனது பொக்கற்றில் இருந்து ஒருதழத்த என்வலப்பை எடுத்து மேசையில் வைத்தார்.
அதனுள் பத்தாயிரம் குறோன்கள் இருந்தது. எனக்கு விளங்கவே இல்லை.
தம்பி. நாம் உம்மோடை நல்லாய் பழகாட்டியும் உம்மைப் பற்றி நல்லாய் அறிந்து வைத்திருக்கிறன். அதுபடியாலை நான் உம்மட்டை ஒரு உதவி கேட்கப் போறன். இந்தக் காசு ஊரிலை இருக்கிற வயது போன அம்மான்ரை செத்த வீட்டுக்கு என்று கொஞ்சம் கொஞ்சமாய் சேர்த்தது. அம்மாக்கு முதல் நான் செத்துப்போனால், மனுவுரி பிள்ளையஸ் இந்தக் காசைச் செலவழித்துப் போடுவாளவை. அம்மா அநாதைப் பிணமாய்ப் போயிடும். அதுதான் உம்மட்டை இருந்தால் பத்திரமாய் இருக்கும் எண்டு." எனக்கு கண்கள் கலங்கின - ஏதோ நான் தமிழ் ஆட்களுக்கு உதவி செய்கின்றேன் என்பதை சமுதாயம் அங்கீகரித்தது போல இருந்தது.
எனவேதான், இரண்டாவது வகையான மொழிபெயர்ப்பாளராக என்னைப் பதிவு செய்துகொண்டு. மொழிபெயர்ப்புக்குப் பயன்படுத்திய நேரத்துக்குரிய சம்பளம், அந்த இடத்துக்கு போக எடுக்கும் நேரத்துக்குரிய சம்பளம், காரில் ஒழய கிலோமீற்றருக்குரிய பணம் என நல்ல வருமானத்துடன் வாழ்ந்து வரும் சாதாரண யாழ்ப்பானத்தமிழன்நான்.
யாழ்ப்பாணத் தமிழன் என்னும்பொழுது புவியியல் சார்ந்து வடக்கு மாகாண எல்லையை வைத்துக் குறிப்பிடுவதா. அன்றில் குணவியல் சார்ந்து நாடுதழுவிய வகையில் வைத்து வகைப்படுத்துவதா என்ற குழப்பம் அதிகம் பேருக்கு இருக்கலாம். என்னைப் பொறுத்தவரை, மலைநாட்டுத் தமிழ ரையோ, தென் இலங்கை சிங்களவரையோ, கிழக்கிலங்கை

Page 70
136 வி. ஜீவகுமாரன்
மக்களையோ சுரண்டக்கூழய வல்லமை படைத்தவன் எவனோ, அவன்தான் உண்மையான யாழ்ப்பாணத் தமிழன் என்பது என்னளவிலான வியாக்கியானம்.
இதில் எதிலுமே நான் சம்மந்தப்படாவிடினும். என் தந்தை வழிப் பாட்டன் முழுக்க முழுக்க சம்மந்தப்பட்டிருப்பதால் நானும் யாழ்ப்பாணத்தவன் ஆகின்றேன். அவரின் சொத்தில் இன்றும் எனக்குப் பங்கு இருப்பதால் கட்டாயம் அவரின் பெயரிலும் எனக்குப் பங்கு இருக்க வேண்டும். எங்கள் வீட்டில் இருந்த தோட்டக்கார வேலைக்காரப் பெட்டைகள். மட்டக்களப்பில் விதை நெல்லுக்கு காசில்லாமல், முதல் போக அரிவு வெட்டின் பின் வாங்கி, முதலில் அடைவுக்கும் பின் வயலுக்கு மருந்தழப்பதற்காகவும் முற்றாக அப்பப்பாவிடம் சொந்தமாகிய புது றைலிச் சைக்கிள்கள். அப்பம்மாக்குத் தெரியாமல் பாணந்துறையிலும் களுத்துறையிலும் வைத் திருந்த பொழமெணிக்காக்கள். எல்லாவற்றிலும் அப்பப்பாவின் செம்பாட்டுக் கால்களினதும் சுண்ணாம்பு போடாமலே சிவக்கும் கடைவாய் வெத்திலையினதும் கறைகள் பழந்தி ருக்கும்பொழுது அவரின் மகன் வயிற்றுப் பேரன் நானும் யாழ்ப்பாணத்தான்தான். 80களில் ஐரோப்பாவிற்கு அகதியாக வந்த கூட்டத்தைச் சார்ந்தவன் நான் என்றாலும், இன்றைய சமூக கெளரவம் கருதியும், எனக்குப் பெண் பார்த்தபொழுது தம்பி ஸ்கொலசிப்பில் டென்மார்க்கிற்குப் போனவர்" என்று அம்மா சொன்னதைக் காப்பாற்றும் வகையிலும் ஸ்கொலசிப்பில் வந்தவன் என்றே இன்னமும் நான் சொல்லிக் கொள்கின்றேன். மக்களும் நம்பிக்கொண்டு இருக்கிறார்கள். மக்களை நம்ப வைப்பது. அல்லது முட்டாள்களாக்குவதைப் போல் எளிதான காரியம் ஏதுமில்லை என இலங்கை, இந்திய அரசியல்களைப் பார்த்தும், தென்னிந்திய திரைப்படங்கள்

சங்கானைச் சண்டியன் 137
மற்றும் ரீவி. சீரியல்களைப் பார்த்தும் நன்கு தெரிந்து வைத்துக்கொண்டு இருக்கின்றேன். அதற்கு நான் கொடுத்த விலைகள் அதிகம்.
"உப்ஸ். நோ. பொலிற்றிக்ஸ்"
நானும் ஒரு நாள் “ஆய்போவன்" சொல்லிக்கொண்டு எயர் லங்காவில் ஏறவேண்டும். "ஏழுகுண்டல வாசா. கோவிந்தா..." என்று திருப்பதியையும். 'ஹரிவராஷனம். விஷ்வமோகனம்" என சபரிமலையையும் சுற்றிவர வேண்டும்.
எயர் லங்காவின் எயர் ஹொஸ்ரேசும், காலி வீதியில் இளநீர் விற்கும் பெண்களும் ஒருவகை அழகு என்றால் அதன் அச்சிட்ட பிரதிதான் சபரிமலைக்குப் போகும் வழியில் சாப்பாட்டுக் கடை வைத்திருக்கும் நாயர்மாரின் மனைவி, மகள்மார்கள். இந்தப் பெண்களின் அழகை எம் யாழ்ப்பாணப் பெண்களின் கழுத்து நிறைந்த நகைகளுடனும், சள்ளை விழுந்த இடுப்புடனும், குத்திக் கால்களுடனும் ஒப்பிட்டுக் கதைக்க வெளிக்கிட்டு, ஒரு நாள் வீட்டில் சூரசம்காரம் நடைபெற்று, நான் விட்டுக் கொடுக்காமல் கதைக்க கடைசியாக நான் உண்மையில் அழகில்லையா?” என கட்டிலில் படுத்தபடியே கன்னங்கள் வழியே கண்ணிர் ஒட கேட்க, "என்ரை குட்டியை நான் அப்பழச் சொல்லுவனோ" என. மீண்டும் மக்களை நம்ப வைப்பது. அல்லது முட்டாள் களாக்குவதைப் போல் எளிதான காரியம் ஏதுமில்லை என்ற என் தனித்தத்துவத்தை வைத்து அவளை ஒரு நிலைக்குக் கொண்டுவந்தது இப்பவும் ஞாபகத்திற்கு வருகிறது. ஓகே மீண்டும் ஸ்கொலசிப் விவகாரத்துக்கு வருவோம்!
யாரும் என்னை என்ன ஸ்கொலசிப் எனறு இதுவரை கேட்க இடம் கொடாது கதைப்பதுதான் எனது கெட்டித்தனம். நான் கதைக்கும் பாங்கு, பாவிக்கும் தமிழ்ச்சொற்கள், மொழிபெயர்த்து எழுதும்போது இலக்கணம் பிசிறாத தன்மை, மேலாக தமிழ்

Page 71
138 வி. ஜீவகுமாரன்
மீது என் ஆதிக்கத்தைப் பார்த்து நான் யாழ்ப்பான அல்லது கொழும்பு பல்கலைக்கழகத்தில் தமிழ் சிறப்புப் பிரிவில் சித்தியடைந்திருக்க வேண்டும் என எண்ணிக் கொள்கிறார்கள் - அதற்கு நான் பொறுப்பும் அல்ல.
மொழிபெயர்ப்பு, மொழிபெயர்ப்பாளர்கள் பற்றிய இந்த நீண்ட முன்னுரையுடன் இனிநாம் கதையுள் செல்வோம்.
மிழில் எழுதப்பட்டிருந்த ஒரு கடிதத்தை டெனிஷ் மொழியில் மொழிபெயர்த்து அனுப்பும்படி செஞ்சிலுவைச் சங்கம் எனக்கு அனுப்பியிருந்தது.
“கனம் செஞ்சிலுவைச் சங்க அதிகாரிகளுக்கு, 76ம் எண் கட்டடத்தில் 236ம் எண் அறையில் வசிக்கும் வாசுகி சிதம்பரநாதன் எழுதிக் கொள்வது,
முதலில் இக்கடிதத்தை நான் எழுதினேன் என்று எந்தச் சந்தர்ப்பத்திலும் எனது கணவருக்குத் தெரியக்கூடாது. அவ்வாறு தெரிந்தால் நிச்சயம் எங்கள் குடும்பத்துக்குள் பல பிரச்சனைகள் வரும். மேலாக மாமிக்குத் தெரிந்தால் என்னை உண்டு இல்லை என்று ஆக்கி விடுவா.
வன்னி இடப்பெயர்வின் பொழுது குண்டடிபட்டு ஐயாவும், அம்மாவும், தங்கச்சியும் செத்ததுக்கு இவரின் அக்கா, அக்காபுருஷன், இளையமகன் சகிதம் மாமிவந்தபொழுது, கொடுக்க வேண்டிய சீதனப் பாக்கியை யாரிடம் இனி எப்படி வேண்டுவது என எம் பக்கத்து அறை அக்காவுடன் ஒப்பாரி வைத்து விட்டுப் போனவாவாம்.

சங்கானைச் சண்டியன் 139
மகளின் அழைப்பின் பெயரில், பிள்ளைப் பராமரிப்பு பார்க்க என்று ஆறு வருடத்துக்கு முதலே மாமி வந்து இங்கேயே தங்கிவிட்டா. இலங்கை கணக்குக்கு மாதா மாதம் அறுபதினாயிரம் ரூபாய் அகதிக்காசாக வருகிறது. - ஆனால் ஐயா கொடுக்க வேண்டிய ஐம்பதினாயிரத்தை அவா இன்னும் மறக்கவில்லை.
அவா மட்டும் என்ன, இவரும்தான்.
சாடிக்கேத்த மூடி மாதிரி அவரும் வந்து வாய்த் திருக்கின்றார். செத்த வீட்டுத் துக்கம் விசாரிக்க வந்தபொழுது மாமி இவருக்குப் பிடிக்கும் என்று இராசவள்ளிக் கிழங்கு கிண்டி வந்து கொடுக்க. பிள்ளைகளுக்குக் கொடுக்க வேண்டும் என்ற நினைப்பே இல்லாமல் தான் மட்டும் சாப்பிட்டுக் கொண்டிருந்தார். ஆறு வயதுப் பேரனை மடியில் வைத்துக்கொண்டு அவனுக்கு இராசவள்ளிக் கிழங்கு தீத்திக்கொண்டிருந்த மாமிக்கு. நாலு வயதும் இரண்டு வயதுமான என் பொம்பிளைப் பிள்ளைகள் கண்ணில் தெரியவில்லை . யாரோ பெத்த பொம்பிளைப் பிள்ளையஸ்தானே.
இந்த சின்ன குடும்ப விடயங்களை உங்களுக்கு எழுது வதற்குக் காரணம், எனது நிலையை அறிந்து நான் கேட்க இருக்கும் உதவியை நீங்கள் செய்வீர்கள் என நினைத்தே.
எனக்கு என்று இப்பொழுது மிஞ்சி இருப்பது வன்னியில் இருக்கும் என்னுடைய தம்பியும் நிறைமாதமாக இருக்கும் அவன் மனைவியும்தான். அவனுக்கு சின்ன வயதில் இருந்தே தொய்வு பெரிதாய் வேலைகள் செய்ய முடியாது.

Page 72
140 வி. ஜீவகுமாரன்
ஐயாதான் தோட்டத்து வருமானங்களிலை அவனுக்கு குடுத்துப் பார்த்து வந்தது. இனி அவனுக்கு என்று என்னைத் தவிர யாரும் இல்லை. ஆகவேதான் தயவுசெய்து அவனையும் அவன் மனைவி யையும் இந்த நாட்டுக்கு எடுத்துத் தரும்படி மன்றாட்ட மாகக் கேட்டுக் கொள்கின்றேன். தயவுசெய்து இவருக்கு முட்டும் தெரிந்து விட வேண்டாம்.
இதன் பதிலை லைலா நேர்சிற்கு தெரிவித்தால் அவா மூலம் நான் அறிந்து கொள்வேன்.
அன்புடன்
வாசுகி சிதம்பரநாதன்.”
ல்டிதத்தை வாசித்தபொழுது என்னையும் அறியாமல் என் கண்கள் கலங்கின. ரீ.வி.க்களிலும், இன்ரநெற்களிலும் பார்த்தபொழுது என்னை உலுக்காத ஒரு வன்னி அவலம் என்னை உலுக்கியது போல இருந்தது. பாவம் அந்தப் பெண். நாட்டில் போர் முடிந்துவிட்டதால் அகதிகளைத் திருப்பி அனுப்பவும் என இலங்கை அரசாங்கம் அறிவித்ததைத் தொடர்ந்து அனைத்து நாடுகளும் அவர்களைத் திருப்பி அனுப்ப கால நேரம் பார்த்துக் கொண்டிக்கிறது என்பது என்னைப் போன்றவர்களுக்கு நன்கு தெரியும்.

சங்கானைச் சண்டியன் 141
தானே திருப்பி அனுப்பப்படப் போவதை அறியாமல், தம்பியாரை எடுத்துத் தரும்படி கெஞ்சும் விண்ணப்பத்தின் பதில் எவ்வாறு இருக்கும் என எனக்கு நன்கு தெரியும். அவசர அவசரமாக ஒரு பேப்பரையும் பேனையையும் எடுத்தேன்.
9H eے
னபுடன அததாா, அககா, மருமககளுககு, கம்பி வேலிகளுக்கு அப்பால் நின்று கம்பி வேலிகளுக்கு இங்கால் நிற்கும் ஒருவருக்கு நான் சொல்லச் சொல்ல அவர் எழுதும் கடிதம் இது.
இப்பொழுது நிலைமை ஓரளவு மாறிக் கொண்டு வருகிறது. ஒன்றிரண்டு மாதத்தினுள் நாங்கள் ஊருக்குப் போய் விடுவோம். ஐயாவின் காணிகளை குத்தகைக்குக் கொடுத்தால் எங்களின் வயிற்றுப்பாட்டை வடிவாய் பார்த்துக் கொள்ளலாம். அத்துடன் கொஞ்சம் கொஞ்சம் மிச்சம் பிடித்தால் ஐயா உனக்குத் தரவேண்டிய சீதனக் காசு மிச்சத்தையும் தந்து விடலாம்.
அகதி வாழ்க்கை போதும் என்றாகி விட்டது. யார் யாரிடம் எல்லாமோ சாப்பாட்டுக்கும் உடுபுடவைக்கும் கை நீட்டியது போதும். அங்கு காம்புகளில் நீங்கள் ஒருவிதமான அகதிகள். இங்கு நாங்கள் வேறுவிதமான அகதிகள். வேறென்ன? ஆமிக்காரன் கிட்டவாக வருகின்றான். இத்துடன் நிற் பாட்டுகின்றேன்.

Page 73
142 வி. ஜீவகுமாரன்
உடம்பைக் கவனமாகப் பார்த்துக் கொள்ளவும். மருமகள்களுக்கு என் அன்பு முத்தங்கள், இங்ங்னம்
வாமதேவன்.”
கடிதம் எழுதி முடித்தபொழுது மனத்திலிருந்த பாரம் கொஞ்சம் குறைந்திருந்தது. அதனை எடுத்துக்கொண்டு லைலா நேர்ஸிடம் கொடுப் பதற்காகச் சென்று கொண்டிருக்கின்றேன். கைத்தொலைபேசி கிணுகினுக்கிறது. "இண்டைக்கு வெள்ளிக்கிழமை கோவிலுக்குபோகவேணு மல்லோ. எங்கை போயிட்டியள்.”
“கோயிலுக்குத்தான்.” “என்னைக் கூட்டிக்கொண்டு போகவேண்டும் எண்டு நினைப்பிருந்தால்தானே” - மனைவி சிணுங்குகின்றாள். மக்களை நம்ப வைப்பது. அல்லது முட்டாளாக்குவது போல்.
 

வலி
அதிகாலை நாலு மணி.
சற்றே நிலம் வெளுக்கத் தொடங்கி விட்டது. பெற்றோரை இழந்த பிள்ளை களுக்கான அந்த காம்புக்கு இரவில் பொறுப்பான தாதி களில் ஒருத்தி நித்திரையில் இருக்கும் பிள்ளைகளை டோச் வெளிச்சத்தினைப் பாய்ச்சி எண்ணிக் கொண்டு வந்தாள். இரவு படுக்கைக்குப் போன பிள்ளைகளுக்கும் இப் பொழுது படுத்துறங்கிக் கொண்டு இருக்கும் பிள்ளை களின் எண்ணிக்கைக்கும் வித்தியாசம் இருந்தது.

Page 74
144 வி. ஜீவகுமாரன்
திரும்ப எண்ணினாள்.
இப்பொழுதும் அதே நாலு எண்ணிக்கை குறைந்திருந்தது. இரண்டு ஆண் பிள்ளைகள் இரண்டு பெண் பிள்ளைகள்.
"அக்கோய். நாலு குறையுது.” “அநியாயப்பட்ட சீவன்கள். சரி. காணாமல் போட்டுது எண்டு எழுது.” பாதி நித்திரையில் இருந்து எழுந்த எரிச்சலுடன் மற்றவள் சொல்லிவிட்டு மீண்டும் கதிரையில் இருந்தபடி தனது பாதித்தூக்கத்தைத் தொடர்ந்தாள். மேசையில் இருந்த அரிக்கன் லாம்பின் மண்ணெண்ணை குறைந்து இப்பொழுது திரி கருகும் மணம் வந்து கொண்டிருந்தது.
இப்பொழுது ஐந்து மணியாகி விட்டது.
இன்னும் கட்டுநாயக்காவில் தரையிறங்க அரை மணித்தி யாலமே இருக்கின்றது.
பதினாறு மணித்தியாலப் பயணம் இன்னும் அரை மணித் தியாலத்தினுள் முடியப் போகின்றது என்பது மனத்துக்குள் மகிழ்ச்சியாக இருந்தாலும், ஏனோ மனத்துள் ஒரு பட படப்பு. கைப்பையை எடுத்துக்கொண்டு ரொயிலற்றுக்குள் போய் எனது இன்சுலின் ஊசியை எடுத்து இடது பக்கத் தொடையில் போட்டுக் கொள்கின்றேன். நேற்று வலப்பக்கத்தில் போட்டதால் இன்று இடப்பக்கம்.

saparš staigudr ~ 8ዖ} 145
அறுபது வயது வரிை குளிசைகளாலும் சாப்பாட்டாலும் கட்டுப்படுத்த முயன்றாலும் போன மாதம் தொடக்கம் இரத்தத்தில் சீனியின் அளவு கட்டுக்குள் இருக்கவில்லை. ஆகவேதான் தொடை மாறி தொடை மாறி ஊசி போடும் இந்த ஏற்பாடு. “இலங்கைப் பிரச்சனையால் ஸ்றெஸ் பண்ணுகின்றீர் களா?” என டாக்டர் கேட்டபோது “இல்லை” எனத் தலை யாட்டினேன் என்றுதான் ஞாபகம். ஆனால் டாக்டர் அதை நம்பியது போலத் தெரியவில்லை.
ஊசியைத் திரும்ப கைப்பையுள் வைக்கும்பொழுது செல்வநாதனுடனும், சியாமளாவுடனும் நின்ற அருணனின் படத்தில் கண் மீண்டும் பதிந்தது. பக்கத்தில் எழினி. இந்தக் கிழமையுள் அதி குறைந்தது நூறு தடவையாவது இந்தப் படத்தைப் பார்த்து இருப்பேன். இந்தப் படம் எடுத்து இரண்டு வருஷம் இருக்கும். அருணனின் துறுதுறுப்பு கண்களில் தெரிகிறது. நல்ல சுட்டியாய் இருக்கிறான். இப்ப பத்து வயதிருக்கும். கண்கள் மீண்டும் கலங்க எவ்வளவு நேரம் நின்றிருப் பேனோ தெரியாது.
யாரோ ரொயிலற் கதவைத் தட்ட படத்தை அவசர அவசர மாக சேட்டின் உள்பக்க பொக்கற்றுள் வைத்துவிட்டு மீண்டும் இருக்கையில் வந்து அமர்கின்றேன். மனம் தளராத விக்கிரமாதித்தன் போல மீண்டும் மீண்டும் அருணனின் நினைப்பு எழுந்து எழுந்து தாழ்கிறது - நான் பயணித்துக் கொண்டிருக்கும் விமானம் போல. எட்டு வருஷத்துக்கு முதல் செல்வநாதன் என்னை விமானம் ஏற்ற வரும்பொழுது அருணனுக்கு ஒரு வயது.

Page 75
146 வி. ஜீவகுமாரன்
தெத்துப்பல்லுத் தெரிய நல்லா வடிவாய்ச் சிரிப்பான். எழினிக்கு எட்டு வயது. நடன வகுப்பிற்குப் போகத் தொடங்கியிருந்தாள்.
என்னதான் மகன் எனக்கு ஸ்பொன்சர் செய்திருந்தாலும் மருமகளின் கூடப் பிறந்த சகோதரன் என்ற வகையில் செல்வநாதன்தான் பாஸ்போட் ஒவ்வீஸ் என்றும், விசா அலுவல்களுக்கு எம்பசி என்றும், பிளைற் ரிக்கற்றுக்கு றவல் ஏஜன்ற்கள் என்றும் ஒடி ஒடி அலுவல்கள் பார்த்தவன். அவன் மட்டும் இருந்திருக்காட்டி நான் டென்மார்க்கிற்கு வந்திருக்க ஏலாது எண்டுதான் நினைக்கிறன். வந்து இரண்டு வருஷம் எல்லாம் நன்றாகத்தான் இருந்தது - எழினி இயக்கத்திற்குப் போகும் வரை. விசயம் கேள்விப் பட்டது தொடக்கம் எங்கடை வீட்டிலை செத்தவீடு தான். மருமகள் இரண்டு மூன்று நாள் சாப்பிடவேயில்லை - நானும் மகனும் எவ்வளவோ சொல்லிப் பார்த்தோம் - முடியேல்லை.
பின்பு மருமகள் தம்பியாரையும் குடும்பத்தையும் டென்மார்க்குக்குக் கூப்பிட எத்தனையோ வழிகளில் முயன்றாள் - ஆனால் அவர்கள் வரவேண்டுமே!
எண்டைக்கோ ஒரு நாள் எழினி திரும்பி வருவாள். பிள்ளை எங்களைக் காணாமல் தவித்துப் போகும் என்ற பெத்த மனங்களின் தவிப்பு அவர்கள் கிளிநொச்சி நகரசபை எல்லையைத் தாண்டி வர விடவில்லை.
செல்வநாதனுக்கு நாட்டை விட்டு வர கொஞ்சம் விருப்பம் தான். ஆனால் சியாமளா கடைசிவரை மறுத்துவிட்டாள். அனுபவக்குறைவு - அதனால் போய்விட்டாள். எப்பிடியும் என் பிள்ளை திரும்பி வருவாள் என்ற பிடிவாதத்திலும் எதிர்பார்ப் பிலும் டென்மார்க்கிற்கு வர கொஞ்சமும் இசையவில்லை.

aparš sargudr 147
பதிலாக கோயில் கோயிலாக பூஜைகளும். நேர்த்திக் கடன்களும். விரதங்களும். வருடத்தின் முக்கால்வாசி நாட்களும் பிள்ளைக்கான விரதங்கள் தான். அருணனுக்கு மச்சம் மாமிசம் விருப்பம் எண்டபடியால் செல்வநாதன் சந்தியில் உள்ள சாப்பாட்டுக் கடையில் வாங்கி வந்து கொடுப்பானாம். அவனும் வீட்டுக்கு வெளியிலை உள்ள தாழ்வாரத்தில் இருந்து சாப்பிட்டுவிட்டு கோப்பையை வீட்டின் புறத் திண்ணையில் கவிழ்த்துவிட்டுப் போவானாம். ஒரு பிள்ளைக்காக இன்னோர் பிள்ளையை பட்டினி போடுறமோ என சியாமளாவின் மனம் துடிக்கத்தான் செய்யும். மறுபுறம் எழினி என்ன சாப்பிடுகிறாளோ. எந்தக் காட்டுக்குள் என்ன கஷ்டப்படுகின்றாளோ என எழினியின் நினைவுக்குள் போய்விடுவாள். அந்தக் கவலை யில் அருணனை மறந்து விடுவாள்.
அண்டை அயல்கள் கூட அவளைப் பேசும். விசரிபோல. சாப்பிடாமல் விரதங்கள் பிடித்துக்கொண்டு. மற்ற பிள்ளையையும் வடிவாகப் பார்க்காமல் எண்டு.
ஆனால் அவள் இருப்பது ஒரு தவம்! தன் பிள்ளைக்காக தாய் இருக்கும் தவம். தாய்மையின் எதிர்பார்ப்பு! அந்த எதிர்பார்ப்பிலேயே பேச்சுவார்த்தைகள். சமாதான ஒப்பந்தங்கள். பேச்சுவார்த்தை முறிவுகள். எனக் காலம் ஒட சுனாமி அனர்த்தத்துக்கு அடுத்த மாதம் சிறுமியாய் போன எழினி குமரியாய். கட்டையாக வெட்டிய தலை முடியுடன் வந்து இரவு தங்கி விட்டுப் போனாளாம். தாய் எவ்வளவோ மன்றாடிக் கேட்டுப் பார்த்ததாம். ஆனால் கடைசிவரை அவள் மசியவே இல்லையாம்.
பின்பென்ன, மீண்டும் எதிர்பார்ப்பு. பிள்ளை மீண்டும் ஒரு நாள் வருவாள் என.

Page 76
148 வி. ஜீவகுமாரன்
பிள்ளைக்கு பதிலாக யுத்தம் தான் வந்தது. என்ரை பெரும்பாலான நேரம் தமிழ் ரீவிக்களுக்கும் றேடி யோக்களுக்கும் முன்னாலைதான். மகனும் பேரப்பிள்ளை களும் இந்த வெப்சைட்டிலை இப்படி இருக்கு, அந்த வெப்சைட்டிலை அப்பிடி இருக்குது எண்டு மாறி மாறி எனக்கு தகவல் சொல்லுவினம். சிலவேளை ஆட்கள் செத்து சிதறிக்கிடக்கிற படங்களை எல்லாம் கொண்டு வந்து காட்டுவினம். எனக்கு வயிறு வறுகும். ஆனால் எது உண்மை. எது பொய் என்று தெரியாமல் இருந்தது.
என்னிலும் மேலாக மருமகள் நிம்மதியில்லாமல் திரிந்தாள்.
அதிகம் சனி, ஞாயிற்றுக்கிழமைகளிலை மகனும் பிள்ளை களும் கவனயீர்ப்பு போராட்டம், ஊர்வலம் அது இது என்று போய்விடுவினம். மருமகளும் நானும்தான் வீட்டில் தனிய. அவள் உலகம் எங்கும் டெலிபோன் அடித்து தம்பியார் குடும்பத்தைப் பற்றி ஏதாவது தகவல் வந்திருக்குதோ எண்டு கேட்டுக்கொண்டேயிருப்பாள்.
சொந்த ரத்தம் துடிக்கும்தானே! "நாங்கள் இப்பொழுது கட்டுநாயக்கா விமான நிலையத் தில் தரை இறங்கப் போகின்றோம். எனவே உங்கள் இருக்கை பட்டிகளை அணிந்து கொள்ளுங்கள்” என சிங்களம், ஆங்கிலம், தமிழ் என மூன்று மொழிகளிலும் எயர் லங்காப் பெண் சொன்னபொழுது நான் மீண்டும் விமானத்துள் திரும்பினேன். யன்னல் ஊடாக தென்னந்தோப்புகள் அழகாய்த்தான் இருந்தன. அருமந்த நாடு. அநியாயமாக்கிப் போட்டம் என்று மனம் நினைத்துக்கொண்டது. யார் அநியாயமாக்க காரணம் என்று ஆராய்ந்து ஆளுக்காள் குற்றச்சாட்டுகள்

r-susabati* sFadirşpuUdör 149
சொல்லலாம். ஆனால் அநியாயமாய் போனது என்பது தான் உண்மை. இப்பொழுது முன்சில்லு தரையைத் தொட விமானப் பாதையில் வேகமான குலுக்கலுடன் ஓடத் தொடங்கியது. முன்பென்றால் செல்வநாதன் குடும்பத்துடன் வந்து வரவேற்க நின்றிருப்பான் - இண்டைக்கு எனக்கென்று யாரும் அங்கு நிற்கப் போவதில்லை. நானேதான் வன்னி வரை தனியே போய்ச் சேர வேணும்.
எனக்குத் தெரியாத இலங்கை அல்ல. ஆனால் எனக் கென்று யாரும் இல்லாத இலங்கையை நினைக்கத்தான் கவலையாய் இருக்கு.
கடைசி நாள் யுத்தமும், நம்பிக்கையும், அவநம்பிக்கையும். உண்மை எது பொய் எது என்று தெரியாத நிலையில் பல செய்திகள் வந்து கொண்டிருந்த வேளையில்தான் செல்வ நாதனின் குடும்பத்தைப் பற்றிய அந்த அவலச் செய்தி இடியாக எங்கள் வீட்டிற்கு வந்தது. செல்வநாதனும், சியாமளாவும் ஒரு மாதத்திற்கு முதலே பங்கருக்குள்ளை செல்லடியிலை செத்துப் போச்சி னமாம். வெளியிலை நிண்ட அருணனை யாரோ சுழிபுர ஆட்கள் தங்களுடன் கூட்டிக்கொண்டு பாதுகாப்பு வலை யத்துக்குள்ளை வந்திட்டினமாம். எழினியைப் பற்றி எந்தத் தகவலும் இல்லை. அவளும் செத்திருக்கலாம். அல்லது தற்கொலை செய்திருக்கலாம். மருமகள் ஒலமிட்டுக் குழறினாள்.
வீடு செத்த வீடு போல இருந்தது. அக்கம் பக்க தமிழ்க் குடும்பங்கள் எல்லாம் வந்தனர். பின்வளவில் இருக்கிற டெனிஷ் கிழவனும் கிழவியும் கூட

Page 77
150 வி. ஜீவகுமாரன்
ஒரு பூங்கொத்தோடை வந்து தங்கடை அனுதாபத்தை செலுத்தி விட்டுப் போச்சினம். எல்லாரும் எத்தினியோ சொல்லியும் அவளை சமாதானப் படுத்த முடியேல்லை. கடைசியாய் நான்தான் சொன்னன், “எப்படியும் பொடி யனைக் கண்டு அவனை முதலிலை வெளியே எடுப்பம். பிறகு ஏதாவது வழியிலை டென்மார்க்குக்கு கொண்டு வருவம் எண்டு.” நாட்டு நிலைமையிலை யார் போறது எண்டு யோசிக்க முதலே நானே போய் வாறன் எண்டு வெளிக்கிட்டன்.
என்ரை வயது. ஊசி போடும் அளவுக்கு வளர்ந்திட்ட என்ர சலரோகம். இரண்டையும் யோசித்து மகனுக்கு என்னை விட விருப்பம் இல்லை. ஆனால் அதே என்ரை வயதுதான் எந்தப் பிரச்சனையும் இல்லாமல் வன்னிவரை போய் வர உதவும் எண்டு அவனைச் சமாதானப்படுத்திக் கொண்டு வெளிக்கிட்டன். மருமகள் என்னைக் கும்பிடாத குறையாய்ப் பார்த்தாள். விமானம் தனது வேகத்தைக் குறைக்கத் தொடங்க எயர் லங்காக்குரிய அந்த இனிய இசை இசைக்கத் தொடங்கியது. காலை வேளைக்கு அந்த இசை நன்றாகத்தான் இருந்தது. இப்பொழுது விமானம் ஆறுதலாகப் போய் தனது தரிப்பிடத்தில் நின்றது. இவ்வளவு நேரமும் அமைதியாக இருந்த அனைவரும் அவசரப்பட்டு எழுந்து கொண்டார்கள். நான் ஆறுதலாகவே எனது தோள்பையையும் கைப் பையையும் எடுத்துக் கொண்டு வெளியே வந்தேன்.
இமிக்கிரேஷனில் நீண்ட கியூ.

சங்கானைச் சண்டியன் 1. 51
ஒரு தமிழ்க் குடும்பத்தினரை மூலையில் வைத்து விசாரித்துக் கொண்டு நின்றார்கள். எனது பாஸ்போட்டை நீட்டினேன். நிமிர்ந்து என்னையும் பாஸ்போட்டையும் வடிவாகப் பார்த்தார்கள்.
நெஞ்சுக்குள் பயம் தொற்றிக் கொண்டது. சிங்களத்தால் ஏதோ தமக்குள் கதைத்துவிட்டு, சிரித்தபடி எனது பாஸ்போட்டில் என்றி அடித்துத் தந்தார்கள். வெளியே வந்து எயர்போட் டக்ஸியை அமர்த்திக் கொண்டு கோட்டைக்கு வந்தேன். வவுனியாவிற்குச் செல்லும் புகையிரதம் போய்விட்டிருந்தது. கொஞ்ச நேரத்திலை மினி பஸ்கள் போகும் என்றார்கள். ஏறி உட்கார்ந்து விட்டேன்.
அருணனைப் பற்றிய எண்ணங்களும். கவலை களும். எப்படி அவனை காம்பிற்கு வெளியே எடுப்பது என்ற யோசனைகளும் என்னை முற்று முழுதாய் நிறைத்திருந்தாலும் வன்னிக்கு வரும் வழியில் உள்ள சின்னச் சின்ன சிங்கள கிராமங்கள். தெருவோரத்தில் நிற்கும் இளனி விற்கும் சிங்களப் பெண்கள். புத்த விகாரைகள். தேமா மரங்கள். பாடசாலைக்குப் போகும் பிள்ளைகள். குழந்தைப் பிள்ளையாக கண்ணாடி யன்னலின் ஊடாகப் பார்த்துக் கொண்டு இருந்தேன்.

Page 78
152 வி. ஜீவிகுமாரன்
எனக்கு நல்ல ஞாபகம் இருக்கு. அப்ப நான் சின்னப் பிள்ளை. ஐந்தாம் வகுப்பு அல்லது ஆறாவது வகுப்பு படித்துக் கொண்டிருந்தன். எங்கடை சின்ன அன்ரி வீட்டிலை சந்திரா என்ற வேலைக்காரப் பெட்டையும் பெரிய அன்ரி வீட்டில் காமினி என்ற வயதான பொம்பிளையும் வேலைக்கு இருந்ததுகள்.
சந்திரா பாவம் சின்ன அன்ரியின் ஆறு பிள்ளைகளும் சாப்பிட்ட மிச்சம்தான் சந்திராவுக்கு. சனி, ஞாயிறுகளில் சின்ன அன்ரி வீட்டுக்குப் போனால், நான் சாப்பிட்ட மிச்சத்தையும் என்னையும் அவளிண்டை கோப்பைக்கை போடச் சொல்லுவார்கள். நான் மறுத்துவிட்டு நாய்க்கு போட்டுவிட்டுப் போய்விடுவேன். அந்த வயதிலேயே அப்பிடி ஒரு குணம் எனக்கு. காமினி விடயம் வேறு மாதிரி. அந்தக் குடும்பத்தையே அவள் நடாத்துவது போல இருந்தது. பெரிய அன்ரிக்கு இரண்டாவது பிள்ளை பிறந்தவுடனேயே உடம்புக்கு ஏலாமல் போனதும். பெரியஐயாக்கு அவளே எல்லாம் ஆனதும், அதுவே சிலவேளை அவளின் ஆதிக்கத்துக்குக் காரணமாக இருக்கலாம். ரொம்பத்தான் இடம் கொடுத்திட்டினம் என அக்கம்பக்கம் பேசிக்கொள்ளும்.
எல்லாம் பாவம் பழிகள். மனது சொல்லிக் கொள்ள பயணக்களையில் மினி வானுக்குள் நன்கு அயர்ந்து விட்டேன். “வவுனியா வந்துவிட்டது” என்றபொழுது திடுக்கிட்டு எழும்பினேன்.
பின்பு ஆளை ஆள் விசாரித்து. ஒரு ஆட்டோவைப் பிடித்துக் கொண்டு காம்புக்குப் போய், நீண்ட வரிசைகளில் காத்திருந்து. பொறுப்பதிகாரிகளிடம் அருணனின் படத்தைக் காட்டி விசாரித்தேன்.

சங்கானைச் சண்டியன் 153
சுமார் ஒரு கட்டை தூரத்தில் இருந்த காம்பைச் சுட்டிக் காட்டினார்கள் - வாசலில் போய்க் கேட்கும்படி. நல்ல வெயில்.
நடந்து தான் போக வேண்டும். நடக்க கஷ்டமாய்த்தான் இருந்தது. ஆனாலும் அருணனைக் கொண்டு போய் மருமகளிடம் கொடுக்க வேண்டும் என்ற உறுதி என்னை நடக்க வைத்தது. கிட்ட வந்த பொழுது கணக்க பிள்ளைகள் என்னை நோக்கி ஓடி வந்தன - தங்களைத்தான் தேடிக்கொண்டு வந்தனான் எண்ட நினைப்பிலை போலும். படத்தைக் காட்டி இவனைத் தெரியுமா என்று கேட்டேன். “ஓம்! ஓம்!” என்று குதூகலமாய்ச் சொன்னார்கள். எனக்கு என் பயணக்களையே போனது. அவனுக்காக வேண்டி வந்த அரைவாசி பிஸ்கட்டுகளை அந்தப் பிள்ளைகளிடம் கொடுத்தேன். எல்லோரும் சந்தோஷமாய் வேண்டிச் சாப்பிட்டார்கள். பெத்ததுகளைத் தொலைத்துவிட்டு சின்னச் சின்ன சந்தோஷங்களில் மிதக்கும் அதுகளைப் பார்க்கப் பரிதாபமாய் இருந்தது. “எங்கை அவன்?” "நேற்றுக் கண்டனாங்கள். இங்கைதான் விளையாடிக் கொண்டு இருந்தவன். இராத்திரி எங்களோடைதான் படுத்திருந்தவன்” என்று பதில்கள் வந்துகொண்டு இருந்ததே தவிர அவன் இப்போது எங்கே என்று யாராலும் சொல்ல முடியவில்லை.

Page 79
154 வி. ஜீவகுமாரன்
என்னைச் சுற்றி நின்ற பிள்ளைகளைக் கலைத்தபடி அன்று பகலுக்குப் பொறுப்பான ஊழியரும் இரண்டு பெண் தாதிமாரும் வந்தார்கள். அருணனின் படத்தைக் காட்டினேன். அவர்களின் முகம் மாறியது. “இராத்திரியிலை இருந்து காணேல்லை” - ஒருத்தி விக்கினாள். “இல்லை. அந்தப் பிள்ளையஸ் இராத்திரி கண்டதாம்.”
“ஓமய்யா. நாங்களும் கண்டனாங்கள். விடிய காணேல்லை. அவனோடை சேர்ந்து இன்னும் மூண்டு பேர்” மற்றவள் சேர்ந்து கொண்டாள்.
“எப்படி? இப்படி ஒரு காம்பிலை.”
“ஐயா நாங்கள் இரண்டு மூண்டு பேர்தான். இஞ்சை அறுநூறு பிள்ளையன். தினம் தினம் தேப்பன் தாயை யோசிச்சு சிலதுகளுக்கு விசர் பிடிக்கும். சிலதுகள் கிணத்துக்குள்ளை விழும். சிலதுகள் மற்றதுகளைப் போட்டு அடிக்கும். சிலதுகள் காம்புக்கு வெளியாலை வராமல் படுத்துக் கிடக்குங்கள். சிலதுகள் நித்திரையிலை எழுந்து நடந்து திரியுங்கள். பார்க்க பாவங்கள். நாங்கள் என்ன செய்ய ஏலும். அந்தப் பொடியன்ரை தேப்பன் தாய்க்கு ஏதாவது அந்தியேட்டி திவசம் செய்யேக்கை அவனுக்கும் சேர்த்துச் செய்துபோட்டு உந்த வயதிலை வீணாய் இஞ்சை திரியாமல் ஊருக்குப் போய்ச் சேருங்கோ.”
அவனது குரலில் அரவணைப்பும் இருந்தது. அதிகாரமும் இருந்தது. “ஒரு மாதத்தாலை வந்து பார்க்கலாமோ.”

нtивитеранi srairipueir 155
“ஒவ்வொரு நாளும் கூட நீங்கள் வந்து தேடலாம். ஆனால் நாங்கள் சொல்லிட்டம். நீங்கள் பட்டுத்தான் தெளிய வேண்டும் எண்டு நிக்கிறியள்.” இப்பொழுது அவன் கொஞ்சம் கோபப்பட்டான். என் நம்பிக்கைகள் என்னுள் தோற்றுக்கொண்டு இருந்தன.
ரிரத்தில் கடற்கரைக்குக் கிட்டவாக பெரிய ஹோட்டல். அதற்கு முன்பாக கடற்கரையை இன்னமும் அண்டியபடி தென்னோலையால் வேயப்பட்ட பல நவீன கொட்டில்கள். கொட்டில்களுக்கு வெளியே வெள்ளைக்காரர் நடமாடுவது. குளிப்பது. படுத்திருப்பது. குடிப்பது என தங்களது விடுமுறையைக் கழித்துக் கொண்டு நின்றார்கள். “அந்த வெள்ளைக்காரர் சொல்லுறபடி நடந்தால் எல்லாம் நல்லாய் நடக்கும். இல்லாட்டி உங்கடை அப்பா அம்மா போன இடத்துக்கு அனுப்பிப் போடுவம்.” மிரட்டலுக்கு பயந்த பிள்ளைகளின் கண்கள் நிலத்தை நோக்கித் தாழ்ந்தன. நாலு பிள்ளையஞம் அவன் பின் நடந்தார்கள். பின் நாலு வெள்ளைக்காரர்களின் கொட்டில்களுக்கு பிரிந்து சென்றார்கள். அருணன் போன கொட்டிலுள் பெரிய தடித்த ஒரு வெள்ளைக்காரன் ஒரு பெரிய சோபாவை முற்றும் நிறைத்தவாறு உட்கார்ந்து இருந்தான். தனக்கு பக்கத்தில் வந்து இருக்கச் சொன்னான். பக்கத்தில் எந்த இடமும் இருக்கவில்லை.

Page 80
156 வி. சீவகுமாரன்
அருணன் முழிசிக்கொண்டு இருக்க, சோபாவின் கரையைக காட்டினான. அருணன் போய் சோபாவின் கைப்பிடியில் அமர்ந்தான். அருணனின் தொடை மீது வெள்ளைக்காரனின் கை படிந்தது.
அருணனுக்கு கூச்சமாய் இருந்தது. இப்பொழுது அந்த வெள்ளைக்காரனின் கை கொஞ்சம் மேலே நகர்ந்தது.
அருணன் அருவருப்பால் நெளிந்தான்.
இரவு வேறு நெருங்கிக் கொண்டு இருந்தது. வவுனியா ரவுனில் எடுத்திருந்த அறைக்குத் திரும்பிக் கொண்டு இருந்தேன். அருணன் எங்கேயோ உயிருடன் இருக்க வேண்டும் என உள்மனம் சொல்லிக் கொண்டது.
ஆனால் எங்கே?
சந்திரா, காமினி போல அருணனும்.? என்னுள் வாழும் சந்தேகக்கீற்று என்னையே கொன்றுவிடும் போல் இருக்கிறது. அறைக்குத் திரும்பியதும் பின்னேரத்துக்குரிய ஊசி போட வேண்டும். இன்று தொடையில் ஊன்றியே குத்த வேண்டும் போல இருக்கிறது.
வலிக்கத்தான் செய்யும்! SM

இப்போ இங்கு ஸ்பிறிங் கால விடுமுறை. இருநூறு கிலோ | மீற்றர் தூரத்தில் உள்ள அம்மன் கோயில் சித்திரைத் தேருக்கு காலையில் کe![ID[ மணிக்கு வெளிக்கிட்டால் | தான் இரண்டு பஸ், ஒரு றெயின் என மாறி தேருக்கு சாமி ஏறும்பொழுது போய்ச் ॐ சேர (Մ»ւգեւյլb. భr " ஆகவேதான் அதிகாலை நாலு மணிக்கு எழும்பி தோய்ந்து விட்டு மனைவியையும் மகளையும் போய்த் தோயச் சொல்லி எழுப்பிவிட்டன். M. SK

Page 81
158 வி. ஜீவகுமாரன்
மகளுக்கு வீட்டுக்கு விலக்காம். எனவே கோயிலுக்கு அவளால் வர முடியாது.
எனவே மனைவி தோய்ந்துகொண்டு இருக்கும்பொழுது சூடாகக் கலக்கி எடுத்த கோப்பியையும் எடுத்துக்கொண்டு எனது கொம்பியூட்டருக்கு முன் இருந்து வன்னியைப் பிரட்டினேன்.
கடவுளே!.
எந்த வெப்சைட்டைப் பிரட்டினாலும். (அதை நடத்துபவர்கள் ஆளுக்காள் கொம்பியூட்டருக்குப் பின்னால் இருந்து கொண்டு தாங்கள் தாங்கள் சார்ந்த கட்சிகளின் அல்லது இயக்கங்களின் சார்பாக வார்த்தைகளாலும் கேலிகளாலும் அடிபட்டாலும்.) செத்துக் கொண்டிருக்கும் மக்களின் படங்களிலும் இடம்பெயர்ந்து போய்க்கொண்டிருக்கும் மக்களின் கண்களில் இருந்த மரணபயங்களிலும் ஒற்றுமை இருக்கத்தான் செய்தது. எதுவுமே இல்லை என்றதை அந்த வன்னி மக்களின் முகங்களில் பார்க்கக் கூடியதாக இருந்தது.
இரண்டு நாட்கள் பிரத்தியேகமாக விடுமுறை வருகின்ற தென்றால், அதற்கு முதன்நாள் இங்கு கடைகளில் நிரம்பி வழியும் சனக்கூட்டம். கொஞ்சம் உயரமாக வேலியில் உள்ள மரங்கள் வளர்ந்து விட்டால் புறுபுறுக்கும் அயல் வீட்டு டெனிஷ்காரி. சீட்டுக்கூறும்போது காசுடன் போகச் சுணங்கிவிட்டால் மற்ற ஆட்களுக்கு முன்னால் மரி யாதையை வாங்கும் மணியண்ணை. இந்த முகங்களில். எல்லாம் வேண்டும். அது எங்களுக்கு வேண்டும். எங்களுக்கு மட்டும்தான் வேண்டும் என்று பிரத்தி யேகமாகத் தெரியும். இப்படி பார்த்துப் பழகிப்போன

சங்கானைச் சண்டியன் 159
முகங்களுக்கு இந்த வன்னி மண்ணின் முகங்கள் முற்றும் புதிதாகவே தெரிகிறது. அந்த முகங்களில் ஏதுமில்லை. கண்கள் இருக்கின்றன. ஒடுங்கிய கன்னங்கள் இருக்கின்றன. எண்ணை.தண்ணி கண்டு எத்தனையோ நாளான தலைகள் இருக்கின்றன. ஆனால் அவைக்குப் பின்னால் எதுவுமே இல்லை. “என்னப்பா கம்பியூட்டருக்கு முன்னாலை இருந்திட்டி யளோ. கெதியாய் வெளிக்கிடுங்கோ.” தனது ஈரத் தலையைத் துவட்டியபடி நான் ஊற்றி வைத்த கோப்பியை அவள் கையில் எடுத்துக்கொண்டு உடுப்பு மாற்றுவதற்காக அறைக்கதவைச் சாத்துகின்றாள். டெலிபோன் மணி அடிக்கிறது.
இப்பெல்லாம் விடியப்புறத்தில் டெலிபோன் மணி அடித்தால் மனம் கொஞ்சம் படபடக்கும்.
அதிகமாய் இந்த நேரம் வாற டெலிபோன்கள் இலங்கை யில் அல்லது இந்தியாவில் இருந்து தான் வரும். அதுவும் இழவுச் செய்தியைக் கொண்டு வருவனவாயும் இருக்கும்.
மனுஷியே எடுக்கட்டும் என நான் தப்பிக்கப் பார்த்தேன்.
“அரைவாசி கட்டின சேலையோடை நிக்கிறன். உந்த கொம்பியூட்டரை விட்டுட்டு ஒருக்கா எடுங்கோவன்.”
கம்பியூட்டரின் மெளசில் இருந்து கை டெலிபோனுக்குத் தாவுகிறது.
எதிர்பார்த்ததுதான்!
மரணச் செய்திதான் - ஆனால் எதிர்பார்த்திருந்த மாதிரி வன்னியில் இருந்து இல்லை.

Page 82
160 வி. ஜீவகுமாரன்
மாமா தோட்டக்காணியில் உள்ள கொட்டிலில் பொலி டோல் குடிச்சு தற்கொலை செய்திட்டாராம்.
மூத்த அண்ணை கொழும்பில் இருந்து எடுத்துச் சொன்னார். அப்பிடியே இருந்து விட்டேன். மாமாக்கு எப்படியும் எழுபது வயதிருக்கும். “என்ன நடந்தது?” “அவள் சுகந்தி வீட்டாலை போனது தொடக்கம் அந் தாளுக்கு சனியன் தானே.”அண்ணா சுகந்தியைப் பேசத் தொடங்கினார். சுகந்தி, மாமாவின் ஒரே பெண். அவளாக விரும்பி வாம தேவனுடன் போய் இருக்காவிட்டால் சிலவேளை எனக்கும் சுகந்திக்கும்தான் கலியாணம் செய்து வைச்சிருப்பினம். எனக்கு நல்ல ஞாபகம் இருக்கு அப்ப தேர்தல் கூட்டங்கள் நடக்கும்பொழுது வாமதேவன் முன்னுக்குப் போய் பிளேடால் தன் கையைக் கீறி பேசிக் கொண்டு இருப்பவர்களுக்கு பொட்டு வைப்பான். அப்போது அவனுக்கு பதினைந்து பதினாறு வயதுதான் இருக்கும். அப்படி ஒரு தமிழ் உணர்ச்சி. அவனின் அந்தத் துடிப்புதான் சுகந்தியைக் கவர்ந்திருக்க வேண்டும். இருவருக்கும் இருபது வயதிருக்கும்பொழுதே சுகந்தி வீட்டை விட்டு அவனுடன் போய்விட்டாள். பின்பென்ன. வழமையான கோபங்கள். வாக்கு வாதங்கள். அழுகைகள். செத்தாலும் என்னிலை அவள் முழிக்கக்கூடாது - நானும் அவளிலை முழிக்கமாட்டேன் என்ற மாமாவின் பிரகடனங்கள். இத்தியாதி இத்தியாதி

raibaoarš sfair gudr 161
களுடன் அந்த வருட அம்மன் கோயில் திருவிழா வந்ததும் தெரியாது போனதும் தெரியாது எனப் போய்விட்டது.
நானும் டென்மார்க்கிற்கு வந்து விட்டேன். வரும்பொழுது மாமா என்னைக் கட்டிக்கொண்டு அழுதது நல்ல ஞாபகம் இருக்கு, "நீயும் என்னை விட்டுட்டுப் போறியோ” என்று. அதுதான்தாய்மாமன் உறவு. என்னிலை அவர் வைச்சிருந்த பாசம்,
பின்பு எல்லாம் காகிதங்களில் வரும் செய்திகள்தாம்.
சுகந்திக்கு ஒரு பொம்பிளைப்பிள்ளையாம் - சுகமாய் பிறந்ததாம் - புதுவருஷத்தன்று மருதடிப் பிள்ளையார் கோயிலுக்கை பிள்ளையைக் காட்ட மாமாவிட்டை போனவளாம் - திரும்பாமல் போய்விட்டு. பின் பஸ் ஸ்டாண்டில் நின்று அழுதவராம்-மாமி பேத்தியின் கையில் கைவிசேஷக்காசாய் ஆயிரம் ரூபாயைக் கொடுத்துவிட்டு போனவாவாம்.
வாமதேவன் யாழ்ப்பாணத்தில் மினி பஸ் ஒட்டித்தான் குடும்பத்தைப் பார்த்தவன். சுகந்தியையும் பிள்ளையையும் நல்ல விதமாகப் பார்த்தாலும் வாரத்தில் மூன்று நான்கு நாட்கள் வீட்டில் இருப்பதில்லையாம். யார் யாருக்கோ சாமான்கள் ஏத்தி இறக்க என்று வானுடன் போய்விடு வானாம். சில வேளை முன்பின் தெரியாத முகங்களுடன் வீட்டுக்கு வந்து இரவில் சுகந்தியை எழுப்பி சமைக்கச் சொல்வானாம். சுகந்திக்கு என்ன, எது நடக்கிறது என்று ஊகிக்கக் கூடியதாய் இருந்தாலும் கவனமப்பா, கவனமப்பா’ என்று எச்சரிக்கை செய்து கொண்டு இருப்பாளாம்.

Page 83
162 வி. சிவகுமாரன்
மகள்காரிக்கு எதுவும் புரிவதில்லை - அவர்கள் கொடுத்து விட்டுப் போகும் விளையாட்டுத் துவக்குடன் விளையாடு வதிலேயே அவளின் பொழுது போய் விடும்.
மகள்காரி விளையாட்டில் நல்ல சுட்டியாம். ஐந்தாம் வகுப்பு படித்துக் கொண்டிருக்கும் பொழுது முதலில் யாழ்ப்பாண மாவட்டத்திலும் பின்பு மாகாணரீதியில் நடந்த விளை யாட்டுப் போட்டியிலும் முதலாவதாக வந்ததை உதயன் பேப்பரிலைப் பார்த்திட்டு அதை வாங்கி வந்து மாமிக்குத் தெரியாமல் தலையணைக்குக் கீழை வைச்சிருந்தவராம்.
மாமி ஒருநாள் கண்டிட்டு, “பேத்தியை ஏன் இப்படி ஒழிச்சு ஒழிச்சு பார்ப்பான். விருப்பமெண்டால் நேரடியாய்ப் போய் பாக்கிறது தானே” என உரிமையுடன் ஏசினவாவாம்.
“போடி விசரி. இதிலை தோட்டத்துக்கு அடிக்கிற ஒரு மருந்து புதிசா போட்டிருக்கு. அதுதான் வாசிச்சுப் போட்டு வைச்சிருக்கிறன். எந்த நாய் எங்கை போய் வெற்றி எடுத்தாலும் எனக்கு என்ன” - சமாளித்துப் போட்டாராம்.
மாமி அந்த பேப்பர் துண்டை எனக்கு தபாலில் அனுப் பினதும், அந்தப் பிள்ளைக்குக் கொடுக்கும்படி நான் ஐயாயிரம் ரூபாயை மாமிக்கு அனுப்பினதும் மாமாக்குத் தெரியும்.
"ஏமாத்திப்போட்டுப் போன அந்தநாய்க்கு உதவஎவ்வளவு பெரிய மனசு வேணும். அவன் ராசாத்தியாய் வைச்சுப் பாத்திருப்பானே. இப்ப ரோஷமில்லாமல் காசு அனுப்பி இருக்கிறான். கொண்டு போய்க் குடு” என்றுவிட்டு அழுதவராம்.
சுகந்தி எனக்கு கடிதம் போட்டிருந்தாள்.

rebrandari Fairg.UUdır 163
"உங்கள் காசு கிடைத்தது. இனிமேல் காசு அனுப்ப வேண்டாம். அவர் என்னையும் பிள்ளையையும் நல்லாய் பார்க்கின்றார். உங்கள் அன்பு மட்டும் இருந்தால் போதும். மாமாவின் திமிர் அவளில் அப்படியே இருந்தது.
நானும் என் டென்மார்க்குமாய். இலங்கைத் தமிழனுமாய் இல்லாமல். டென்மார்க்காரனுமாய் இல்லாமல். சின்ன ஒழுங்கைகளில் இருபக்க வேலிகளில் பட்டும் படாமலும் மழைக்காலத்தில் சைக்கிள் ஓடிக்கொண்டு போவது போல் வீட்டில் இருக்கும்பொழுது தமிழ் - டெனிஷ்காரனாய்." வேலையிடத்தில் 'டெனிஷ் - தமிழ்க்காரனாய், தலையைக் காட்ட வேண்டிய இடத்தில் தலையையும், வாலை நீட்ட வேண்டிய இடத்தில் வாலையும் நீட்டிக்கொண்டு என் வாழ்வும் போனது - சுபாவுடனும் சுஜியுடனும், சுஜிக்கு சுகந்தியின் மகளை விட நாலு வயது இளமை.
சுஜி போனவருசம் தான் சாமத்தியப்பட்டவள். பெரிதாகவே இங்கு செய்தனாங்கள். சுகந்தியின் மகள் சாமத்தியப்பட்டபொழுதும் அங்கு பெரி தாகவே செய்தார்களாம்.
அதுக்கு மாமாவைக் கூட்டிக்கொண்டு போக எங்கள் சொந்தக்காரர் எல்லோரும் தானாம் பாடுபட்டது. மனுஷன் கேட்கவேயில்லையாம். கடைசியாக குருக்ஷேத்திரயுத்தத் தின் நாகாஸ்திரமாய் என்னைத்தான் மாமியும் சுகந்தியும் நாடினார்கள் - என்னை டெலிபோன் எடுத்து மாமாவுடன் கதைக்கும்படி.
அவர்களுக்குத் தெரியும் நான் சொன்னேன் என்றால் அவர் கேட்பார் எண்டு.

Page 84
164 வி. ஜீவகுமாரன்
நான் டெலிபோன் எடுத்தவுடனேயே மாமா சொன்னார், "நீ என்னத்துக்கு எடுத்தனி எண்டு தெரியும். அந்த வெக்கம் கெட்டவளின்ரை கதையை விட்டுட்டு வேற ஏதும் கதை” எண்டு.
பிறகு ஒரு முக்கால் மணித்தியாலம். மிரட்டல். கெஞ் சல். அழுகை என்று போய், கடைசியாய், “நான் உனக் காக போவன். ஆனால் அந்த வீட்டிலை கையோ வாயோ நனைக்க மாட்டன்” என்ற அளவில் எனது சமாதானப் பேச்சு வார்த்தை வெற்றியளித்தது.
மாமிக்கும் சுகந்திக்கும் நல்ல சந்தோஷம். "அந்த நாய் தான் ஓடிட்டுது எண்டால். இவர் பெரிய டென்மார்க் ராசா, தானும் என்னோடை கதைக்கமாட்டன் எண்டு வெருட்டு றார்.” என என்னைப் பேசிக்கொண்டே இருந்தாராம்.
எனக்குச் சொன்ன மாதிரியே சாமத்திய வீட்டுக்குப் போய் கையோ வாயோ நனைக்காது பேத்திக்கு பெரிய சங்கிலி போட்டுக் கொஞ்சிவிட்டு படமும் எடுத்து விட்டு வந்தாராம்.
அதன்பிறகு பேத்தி தனியே சைக்கிளில் வரத்தொடங்கி விட்டாளாம்.
மாமா சுகந்தியிலை வைச்சிருந்ததைவிட அவளிலை உயிராய் இருக்கிறார் என மாமி கடிதம் போடுவா. அவள் வீட்டை வரும் போதெல்லாம் அன்று வீட்டில் கொண்டாட்டம் தானாம். தன்னை ஒரு நிமிசம் சும்மா இருக்கவிடாமல் ஏதாவது செய்து கொடுக்கச் சொல்லி ஆக்கினைப் படுத்துவாரம்.
மாமியைக் கொண்டும் எனக்கும் ஒரு நாள் கடிதம் போட்டார், “உன்ரை பிள்ளை போட்டோவிலை போட்டி ருக்கிற மாதிரி அவளுக்கும் ஒண்டு வேண்டி அனுப்பு.”

giaoTaoarš sFabręuudår 165
வாசிக்க எனக்கு கண்கலங்கியது. மாமா வாழ்க்கையில் எதுவும் என்னிடம் கேட்டதில்லை.
அடுத்த நாளே பதிவுத் தபாலில் பாசலை அனுப்பி வைத்தேன். பாசல் போய் அடுத்தநாள் அவள் இயக்கத்துக்குப் போட் டாளாம் என மாமி டெலிபோன் எடுத்து அழுதா. மாமா முற்றாக இடிந்து போட்டாராம். "அந்த நாய் வீட்டை விட்டுப் போச்சு. இந்த நாய் ஊரை விட்டுட்டுப் போச்சுது” என அவளைப் பேசிப் பேசிக் கொண்டே அழுவாராம்.
அதுக்குப் பிறகு அவர் பெரியதாய் சந்தோஷமாய் இருந்து தான் பாக்கேல்லையாம் என மாமி சொல்லுவா. நான் டெலிபோன் எடுத்தால்கூட ‘ஒப்புக்காக கதைப்ப தாகவே பட்டது.
அந்தளவு தூரம் அது அவரைப் பாதித்திருந்தது. ஒருநாள் என்னையும் பேசினவராம்,"ஏன் உவன் என்னைக் கொண்டு போய் அந்தப் பெட்டையோடை சேர்த்தவன்” எண்டு. வாழ்வில் எப்போதும் ஒரு சமநிலை வேண்டும். ஆனால் மாமாக்கு அவர் பெற்றதை விட இழந்தது கூட. முதலில் சுகந்தி. பின் நான். இப்போ அவள். “எனக்குப் பக்கத்திலை ஒரு நாயும் இல்லை” என்றுதானாம் பேசிக் கவலைப்படுவார்.
மாமாவின் இந்த நிலை என்னையும் நேரடியாகவோ. மறைமுகமாகவோ தாக்கியிருந்தது. சிலவேளை ரீ.வி.

Page 85
166 66. aanguDarpdir
முன்பே ஓடிக்கொண்டிருக்க நான் எங்கேயோ போய்விட, யாரும் டெலிபோன் பண்ணி என்னை விசாரித்தால், "அப்பா சிறிலங்காக்கு போய்விட்டார்” என என் மகள் பகிடி பண்ணுவாள்.
அவளுக்கு எங்கடை சொந்தங்கள், பிணைப்புகளைப் பற்றி எவ்வளவோ சொல்லிப் பார்த்திருக்கிறேன். பெரிதாக விளங்குவதில்லை. தாய், தகப்பனின் சவ அடக்கத்திற்கு அரைநேர லீவு எடுத்துக்கொண்டு போற சமுதாயத்திலை வளர்கிற அதுகளைக் குற்றம் சொல்லி என்ன பயன். மாமாக்கு எந்த ஆண்பிள்ளைப் பிள்ளையும் இல் லாததாலேயோ. எனக்கு அப்பா சின்ன வயதில் செத்துப் போனதாலேயோ. மருமகனான என்னை சுகந்திக்கு செய்து கொடுத்து மகனாகத் தத்தெடுக்க விரும்பின தாலேயோ அப்பிடி ஒரு நெருக்கம். இப்ப தொப்புள் கொடி உறவு போல் ஒரு பட்டாம்பூச்சி வந்து விளையாட்டுக் காட்டிவிட்டுப் போய்விட்டது. சுகந்தி அவரைப் பிரிந்தாலும் அவள் எங்கை இருக்கிறாள் என்று தெரியும். அவ்வாறே நானும். இது. எந்தக் காட்டில். எந்தக் குழியில். எந்தக் கடலில். “தெரியும் தானே எப்பிடியும் இவள் சாவள் எண்டு, அதை மாமாவும் எதிர்பார்த்துதானே இருந்தவர்.” “ஓமடா. ஆனால் செத்ததுக்குப் பிறகு நடந்ததுதானடா அந்த ஆளை துலைச்சது.”
“வடிவாய் சொல்லன்.”
"நீ கொம்பியூட்டருக்கு முன்னாலையே இருக்கிறாய்?"

rbraporš fair gudr 167 "நான் சொல்லுற வெப்சைட்டிலை இருக்கிற பேப்பருக்கு GLIT.'
“சரி. போயிட்டன்.” “முந்தா நாள் வந்த பேப்பரைத் திற.”
"திறந்திட்டன்.”
“மூன்றாம் பக்கத்தைத் திருப்பு. கீழை இருக்கிற படத்தைப் பார்.”
ஒரு பெண் பிள்ளை நிர்வாணமாக செத்துக் கிடந்தாள்! அல்லது செத்த பின்பு நிர்வாணமாக்கப்பட்டிருந்தாள்.
“ஓம் பார்த்திட்டன்.”
“அதுதான் சுகந்தியின்ரை மகள்.”
“கடவுளே!”
“உந்தப் படத்தை மாமாவும் பார்த்திட்டார்.” மூத்தண்ணா சொல்லிக் கொண்டேயிருந்தார். மனைவி வந்து ரிசீவரை என்னிடம் இருந்து வேண்டினாள். நான் சோபாவில் போய் அமர்ந்தேன். மார்கழிமாதக்கும்மிருட்டு. பனிக்குளிர் வேறு.நாலைந்து வாளி தண்ணியை தலையில் வார்த்தாயிற்று. யாரோ இழவு சொல்லிக்கெண்டு போகின்றார்கள் போலும். பெரியதோட்டக்கார தம்பிமுத்து அகால மரணம் அடைந்து விட்டார். நாளைக்கு பிரேதம் எடுக்கப்படும்.

Page 86
168 வி. விவகுமாரன்
அடைத்த தொண்டைக் குரலில் மிகப் பெலத்த சத்தத்துடன் இழவு சொல்பவன் சொல்லிக்கொண்டு போகின்றான்.
திடுக்கிட்டு முழிக்கின்றேன். அதற்கிடையில் ஏதோ ஒரு உலகத்திற்குச் சென்று விட்டேன் போலும்.
கோயிலுக்குக் கட்டிய சேலையை மாற்றிவிட்டு என் தலையைத் தடவியபடி மனைவி நிற்கின்றாள்,
மகளும் பக்கத்தில். "அவளை அவர் நன்கு நேசிச்சிருக்க வேண்டும்” - டெனிஷ் மொழியில் சொல்லுகின்றாள்.
"மாமா உனக்கு பக்கத்தில் இந்த நாய் இருந்திருக்க வேண்டும்.”
என்னை மீறி இப்போது நான் அழத் தொடங்குகின்றேன்.
 

இருந்த வீடு. வாழ்ந்த கிரா
மம். தெரிந்த முகங்கள்.
எ ல் லாம் . . . எ ல் லா மே தொலைந்து போய்விட்டன.
இப்பொழுது முழுக்க முழுக்க சனக் குவியல்கள் மத்தியில். இரத்த வாடைகளுக்கும். இலையான்கள் மொய்க்கும் சிதழ் பிடித்த புண்களுக்கும்
மத்தியில். யாராவது ஒரு ; ; ாப்பாட்டுப் பாசல் கொண்டு ந்து தருவார்களா என்ற ஏக்கத்துடன். புல்டோசர்

Page 87
170 வி. ஜீவகுமாரன்
கொண்டு இடித்து, தறித்து, அடிவேர்க் கட்டைகள் நீட்டிக் கொண்டிருக்கும் அந்த காட்டுப் பிரதேசத்தில் போடப்பட்ட கூடாரத்துக்கு கனகமும் செல்வியும் வந்து ஆறு நாளாச்சு.
வெயில் கொளுத்திக்கொண்டு இருந்தது.
இடம் மாறி இடம் மாறி ஓடிக்கொண்டு இருக்கும்பொழுது எதுவுமே தெரியவில்லை.
"கிட்டவாக வந்திட்டாங்க்ள்! ஒடுங்கோ!!” என்ற ஒன்றைத் தவிர எதுவுமே கேட்டிருக்கவில்லை.
வீடு, சந்தையடி, கோயிலடி என்ற கிராமத்தின் எல்லைகளை மட்டும் அறிந்து வைத்திருந்த சனங்களுக்கு. எந்தப் பக்கத்தாலை போறம்?. எந்த ஊருக்குள் போகின்றோம்? என்ற எந்த விளக்கமும் இல்லாமல் துப்பாக்கிச் சத்தங்கள் குறைந்த பக்கங்களை மட்டும் நோக்கி அள்ளுப்பட்டு. அள்ளுப்பட்டு.
இப்ப எல்லாம் கனவு போலை.
தவறிவிடாமல் இருப்பதற்காக சிவதம்புவும் கனகமும் செல்வியும் ஒருவரின் கையை ஒருவர் பிடித்துக்கொண்டு தான் வந்தார்கள். இருந்தாற் போல் சிவதம்புவின் கை கனகத்தை இழுக்குமாப் போல் இருக்க திரும்பிப் பார்த்தாள். சிவதம்பு சரிந்துகொண்டிருந்தார். காதடியில் இரத்தம் வடிந்து கொண்டிருந்தது. கண்கள் மூடாமல் திறந்தேயிருந்தன. கனகத்தினதும் செல்வியினதும் பெலத்த குரலிலான சத்தம் இந்த நெரிசலில் யாருக்கும் கேட்கவில்லை. பதிலாக நடுறோட்டில் இருந்து அழுதது பலருக்கும் இடைஞ்சலாய் இருந்தது.

valabraDorð: Fairgitudir 171
“றோட்டுக்கரையிலை இழுத்துக்கொண்டு போங்கோ.” யாரோ கூறியபடி சாமான்களால் நிறைந்த தனது சைக்கிளைத் தள்ளிக் கொண்டு விலத்திப் போனார்.
கனகமும் செல்வியும் சிவதம்புவை றோட்டின் கரைக்கு இழுத்து வந்தார்கள் - உடம்பு கனத்திருந்தது போல இருந்தது. கனகம் ஒலமிட்டு அழுதுகொண்டேயிருந்தாள் - செல்வி விறைத்தவளாய் பார்த்துக்கொண்டேயிருந்தாள் - றோட் டால் போய்க் கொண்டு இருப்பவர்களுக்கு இது பத்தோடு பதினொன்று.
ஒருவர் மட்டும் கிட்டவாக வந்து "சந்தியிலை வந்திட் டாங்கள் போலை கிடக்கு. கெதியாய் நடவுங்கோ” என எச்சரித்துப் போட்டுப் போனார்.
"பிள்ளை அப்பாவை அந்தப் பள்ளத்துக்கை கிடத்துவம்.” என்றபடி கனகமும் செல்வியுமாக சிவதம்புவை றோட்டுக்கு அருகேயிருந்த பள்ளத்துள் இறக்கினார்கள். கைகளாலும் காட்டுத்தடிகளாலும் மண்ணை வறுகி சிவதம்புவின் உடலை மூடினார்கள்.
கனகம் பொருமிப் பொருமி அழுதாள்.
"நான் உன்னை விரும்பிக் கட்டினதாலை தானே உன்னைக் கழிச்சு வைச்சவை. சிலவேளை உனக்கு முதல் நான் போனால் நீ பிள்ளையையும் கூட்டிக்கொண்டு போய் உன்ரை கொண்ணை ஆக்களின்ரை பகுதியோடை இரு” இரண்டு வருஷத்துக்கு முதல் செல்வி பெரியபிள்ளையான பொழுது வீட்டுத் தாழ்வாரத்தடியிலை இருந்து சிவதம்பு சொன்னது ஞாபகத்துக்கு வந்தது.

Page 88
172 வி. ஜீவகுமாரன்
காசு, பணம், கெளரவம் எல்லாத்தையும் தேடி கனகத் தையும் செல்வியையும் ஒரு கைப்பிடி உப்புக்காகக் கூட அயலட்டைக்கு அனுப்பாத சிவதம்பு இப்போது அதுவாகி றோட்டோர மண்ணுக்குள் மண்ணாக. கனகத்தின் கைகளை வலுக்கட்டாயமாகப் பிடித்துக் கொண்டு செல்வி சனத்தோடை சனமாக முன்னேறினாள்.
நெடுகலும் சிவதம்பு சொல்லுவார் - நான் ஒரு ஆண் பிள்ளைச் சிங்கத்தைப் பெத்து வைச்சிருக்கிறன் எண்டு. அவளே தலைச்சன் பிள்ளையாக தாயைக் கூட்டிக் கொண்டு மீண்டும் சனத்தோடு சனமாக. சனக்கூட்டமோ முன்னே போகும் ஆட்டுக்குப் பின்னால் போகும் மந்தையாக. கனகம் நடைப்பிணமாக செல்விக்குப் பின்னால்.
95இன் யாழ்ப்பாண இடப்பெயர்வின் பொழுது எங்கிருந்து வெளியேறினாலும் கிளிநொச்சியை அடைவதுதான் நோக் கமாய் இருந்தது. இப்பொழுதோ எங்கு போய் அடைவது என்று தெரியாமல் சனம் அள்ளுப்பட்டுக்கொண்டு இருந்தார்கள் - குண்டு விழாத இடங்களைத் தேடி.
வன்னியில் இருந்து ஒருதடவை செல்விதாய், தகப்பனுடன் நல்லூர்த் தேர்த்திருவிழாக்குப் போனபோது சனவெள் ளத்தைப் பார்த்து பிரமித்துப் போயிருந்தாள். அந்த சனக்கூட்டத்தில் தாய் அடியழித்துக் கும்பிடப்போன பொழுது தகப்பனையும் தவறவிட்டு பின் இரண்டு மூன்று மணித்தியாலங்களுக்குப் பின்னால் கண்டுபிடித்தது நல்ல ஞாபகம் இருக்குது. இது பத்துமடங்கு நல்லூர்த் திருவிழா. சுற்றிச் சுற்றித் தேடி வர இங்கு உள்வீதி, வெளிவீதி என்று ஏதும் இல்லை. தவறவிட்டால் அவ்வளவுதான். அதுவும் கனகம் இப்பொழுது இருக்கும் நிலையில்.

சங்கானைச் சண்டியன் 173
செல்விக்கு தன்னை நினைக்கவே ஆச்சரியமாய் இருந்தது . தாய் அழுதளவில் பத்தில் ஒரு மடங்கு கூட தகப்பனுக்குப் பக்கத்தில் இருந்த தான் அழவில்லையே என்று! மரணங்களும். மரணபயங்களும் தன் உணர்வுகளைக் கூட மரக்கவைத்துவிட்டனவோ என்று எண்ணிப் பார்த்தாள்.
ஊரில் என்றோ ஒரு மரணம் வர அதிகாலை சொல்லிச் செல்லும் இழவுச் செய்தியில் தொடங்கி. பாடை கட்டு. மரம் தறிப்பு. கொழும்பு பயணக்காரருக்கான காத்திருப்பு. கிரியைகள். பட்டினத்தார் பாடல்கள். சுடலையடியில் எழும் சின்னச் சின்ன சண்டைகள். எட்டுச் செலவுகள். காடாத்து. அந்தியட்டி என சுமார் ஒரு மாதமாய் அட்ட வணைப்படுத்தப்பட்டு நடக்கும் காரியங்களில் எந்த ஒன்றும் இன்றி. காகம் கொத்திக்கொண்டு போகும் வடையாக மனிதன் மறைந்து போகின்றான்.
இந்த ஒரு மாதத்துள் இப்படி எத்தனை?. எத்தனை?
ஏன் எதுக்கு என்று எவர்க்கும் சிந்திக்க அவகாசமும் இல்லை - அமைதியும் இல்லை. ஒடுங்கோ. ஒடுங்கோ என்ற கட்டளையும், கட்டளைக்குப் பணிதலும்தான். மக்கள் மக்களோடு ஓடியபடி.
நேற்றுக்காலைதான் கொஞ்சம் பாதுகாப்பான இடத்துக்கு வந்திருந்தார்கள். இங்கு இனிக் குண்டு விழாது என்று அனைவரும் நம்பியபோது இவ்வளவு நாளும் மறந்திருந்த பசி தலை தூக்கியது. தண்ணி விடாய்த்தது. குளிக்காத தால் உடம்பு பிசுபிசுத்தது. ஆனாலும் குளித்தாலும் மாற்றுவதற்கு சீலையோ சட்டையோ இருக்கவில்லை.
கனகத்திடம் உடுத்தியிருந்த சீலையைத் தவிரவும், செல்வியிடம் போட்டிருந்த சட்டையைத் தவிரவும் எதுவுமே

Page 89
174 வி. விவகுமாரன்
இல்லை . எதையுமே எடுத்துக் கொண்டு வர அவகாசம் இருக்கவில்லை. எடுத்துவந்தகாசும் வழிவழியேசெலவாக, கைகளில் இப்பொழுது இருக்கும் இரண்டொரு நகைகள் தான் மிச்சம்.
இனி இதுகளை வித்துதான் ஏதாவது வேண்டவேணும். வெளிநாட்டிலை இருக்கிற ஆரிட்டையும் உதவி கேட்க வேணும்.
கனகத்தின்ரை ஆட்கள் கன ஆட்கள் வெளிநாட்டிலை தான் - சிவதம்புவை கட்டினதாலை விட்டுப்போன உறவுகள். “இனி, அவையைத்தான் நாடவேணும்.” வாழ்வின் நிர்ப் பந்தங்களுள் ரோஷ உணர்வுகள் தோற்றுக்கொண்டு இருந்தன. எல்லாமே எங்களுக்குள் நாங்கள் போட்ட கதியால் வேலிகள்தான். கொஞ்சம் அகலப்படுத்தவோ அல்லது ஆழப்படுத்தவோ எங்குமே இடமிருக்கவில்லை. கனகமும் சிவதம்புவும் வேறு வேறு சாதி கூட இல்லை. ஆனால் சிவதம்புவின் பேரன் ஒரு சிங்களத்தியை வைத்திருந்ததும் 83 கலவரத்தின் பின் சிவதம்புவின் குடும்பம் வியாபாரத் திலும் இளைத்ததும்தான் அவர்கள் இளக்காரமாய் போய் விட காரணமாகி விட்டன. இன்று அந்தக் கனகம் கைம் பெண் கனகமாய் கையில் ஒரு குமர்ப்பிள்ளையுடன்.
“சாப்பாட்டு பாசல் குடுக்கினம்” . யாரோ சொல்லக் கேட்டு அரை உயிரும் குறை உயிருமாய் அத்தனை பேரும் அடித்துப் பிடித்துக் கொண்டு கம்பி வேலிக்குக் கிட்டவாக ஒடுகிறார்கள் - சிலருக்கு முள்ளுக் கம்பிகள் கீறிவிட்டன. ஆனால் பசியின் போராட்டத்தில் அதொரு பொருட்டல்ல.

gebrandør FairgeUdár 175 செல்வியும் அந்தக் கூட்டத்துள் போய்ச் சிக்கிக் கொண் டாள். எட்டியவரை கையை நீட்டினாள். எப்படியோ கையில் ஒரு பாசல் வந்து விழுந்தது. "அம்மாவுக்கு ஒரு பாசல் தாங்கோ.” "அப்பிடி எல்லாம் தர ஏலாது. ஆளுக்கொரு பாசல்தான்.”
செல்விக்கு கண்கள் கலங்கின. ஆனாலும் வேண்டிக் கொண்டு திரும்பினாள்.
"உப்பிடித்தான் வேண்டிக்கொண்டுபோய் உள்ளுக்கை விக்கினமாம்.”
செல்விக்கு யாரோ பிரடியில் அடித்தது போல் இருந்தது.
சாப்பாட்டுப் பாசலைத் தூக்கி மூஞ்சையில் எறிய வேணும் போல் இருந்தது - ஆனாலும் தாயை நினைத்துக் கொண்டாள்.
சுருண்டு கிடந்த தாயை எழுப்பி வற்புறுத்தி சாப்பிட வைத்தாள். சிவதம்புவின் நினைவுகள் மேலே வந்து அவளை விம்ம வைத்தன.
"அழாதை அம்மா.”
செல்வி தேற்ற முயன்று தோற்றாள். “பிள்ளை நீ சாப்பிடு.” தாய் சாப்பிட மறுத்த மிகுதிச் சாப்பாட்டை அவள் சாப்பிடத் தொடங்கினாள், ஆனாலும் சாப்பாட்டுப் பாசல் தந்தவன் சொன்னது காதில் மீண்டும் கேட்க சாப்பாடே அருவருத்தது. அருவருப்பை

Page 90
176 வி. ஜீவகுமாரன்
அடக்கிக் கொண்டு சாப்பிடப் பார்த்தாள் முடியவில்லை. தூக்கி வெளியில் போட்டுவிட்டு படுத்து விட்டாள்.
நேரம் நடுநிசியைத் தாண்டிக் கொண்டு இருந்தது. “ஏதாவது மருந்தைத் தந்து என்னைக் கொண்டு விடுங்கோ” என்று வலியின் வேதனையில் ஒருவர் குழறிக்கொண்டு இருந்ததைத் தவிர அதிகமானோர் நன்கு தூங்கிக் கொண்டு இருந்தார்கள். “கனகம், ஏன் நெடுக படுத்துக்கொண்டு இருக்கிறாய். பிள்ளை அழுது கொண்டு இருக்கிறாள்.” சிவதம்பு வந்து எழுப்பியது போலிருக்க கனகம் திடுக்கிட்டு எழும்பினாள். வியர்த்துக் கொட்டியது. திரும்பி செல்வியைப் பார்த்தாள். செல்வியைக் காணவில்லை. கூடத்தினுள் இருந்த மற்றைய ஆட்களை மிதித்திடாதவாறு கவனமாகப் போகவேனும் என எழுந்தபொழுது செல்வி உள்ளே வந்து கொண்டிருந்தாள். பாவாடையின் கீழ்ப்பகுதி கிழிக்கப்பட்டு தொங்கிக் கொண்டு இருந்தது இரவின் வெளிச்சத்திலும் நன்கு தெரிந்தது. கனகத்திற்கு 'திக்கென்றது.

சங்கானைச் சண்டியன் 177
பக்கத்து கூடாரப் பையன் ஒருத்தன் செல்வியையே முதன்நாள் வைத்த கண் வாங்காது பார்த்துக் கொண்டிருந் ததையும், வந்த இடத்தில் ஏன் பிரச்சனை என்று தான் பார்த்தும் பார்க்காமலும் இருந்ததும் ஞாபகத்திற்கு வந்தது. “எங்கையடி போனனி. என்ன நடந்தது.” தாய் பதைபதைத்தாள்.
'உஷ்' என விரலால் காட்டினாள் - மற்றவர்கள் எழும்பி விடுவார்கள் என்ற பதைபதைப்பில்.
ஆனால் கனகத்தினால் மெளனமாயிருக்க முடியவில்லை.
“சொல்லடி. இப்ப எனக்குத் தெரியவேணும்” என வெளியே இழுத்துக் கொண்டு போனாள்.
மத்தியானம் தூக்கியெறிந்த சாப்பாட்டுப் பாசல் பகல் முழுக்க வெயிலுக்குள் வெதுங்கி இருந்ததால் மணத்துக் கொண்டிருந்தது. அந்த மணம் வேறு வயிற்றைப் பிரட்டியது. “என்ன நடந்தது. ஏன் பாவாடை கிழிஞ்சு கிடக்கு?” தாயைக் கட்டிக் கொண்டு அழத்தொடங்கினாள். கனகத்தின் பெத்த வயிறு துடித்தது. “சொல்லடி பிள்ளை. சொல்லடி பிள்ளை. என்ன நடந்தது. யாரும் ஏதும். ”
“இல்லையம்மா. தீட்டு வந்திட்டுது. அதுதான் பாவாடைத் துணியை.”
கனகம் செல்வியை இறுகக் கட்டிக் கொண்டாள்.

Page 91
178 ി. (ത്രാസ്ത്രീr
செல்வி பலமாக விக்கி விக்கி அழத் தொடங்கினாள். "ஏனக்கா பிள்ளை அழுகுது?”
தூக்கம் கலைந்த ஒருத்தி கூடாரத்துள் இருந்தவாறு கேட்டாள்.
“பிள்ளைக்கு தேப்பன்ரை ஞாபகம் வந்திட்டுது!” இப்போ இன்னும் பலமாக செல்வி அழத் தொடங்கினாள். f
 


Page 92
கோமதி
புலம்பெயர் வாழ்வில் பெற்றதை விட இழந்ததே அதிகம் என்ற எனது இருபத்தைந்து வருடக் கூற்றிற்கு மேலும் ஒரு சாமசிதான் இந்த வன்னிமகள்
அன்புடன் வி. ஜீவகுமாரன்
 

இரவு மணி இரண்டே கால்.
டென்மார்க் தூங்கிக் கொண்டு இருந்தது.
'இந்தா. இந்தா. அவனை வரச்சொல்லுங்கோ. .இதுக் காகத்தானே. வெறிபிடித்து திரிஞ்சவன்.
நடுச்சாமத்தில் கோமதியின் வெறித்தனமான அலறலினால் அரைத் தூக்கத்தில் இருந்த டெனிஷ் நேர்ஸ் இருவரும் திடுக்கிட்டு கண் விழித்தார்கள்.
ஒடிப்போய் கோமதியின்
வாட் கதவைத் திறந்தபொழுது கண்ட காட்சி அவர்களைத்
திடுக்கிட வைத்தது.
கோமதி தனது ஆடைகளை அரைகுறையாகக் கழற்றிய

Page 93
182 வி. ஜீவகுமாரன்
நிலையில் அமைதியில்லாது அறைக்கு குறுக்கும் மறுக்கு மாக நடந்து கொண்டிருந்தாள். ‘என்ன நினைச்சவன் என்னைப்பற்றி. நான் யாரெண்டு இவனுக்குத் தெரியுமோ. நான் ரெயினிங் எடுத்தனான். ஏ.கே 47 இருந்தால் தாருங்கோ இவனைச் சுட்டுப்போட்டு என்ரை இரண்டு பிள்ளையளோடையும் ஊருக்குப் போயிடுறன்.
கண்களில் கோபம். இயலாமை. இரண்டும் தெரிந்தது. உடம்பு நடுங்கிக் கொண்டிருந்தது.
நேர்ஸ் இருவரும் ஓடிப்போய் அவளை ஆறுதலாக அனைத்தார்கள். கலைந்திருந்த ஆடையை சீர்செய்து விட்டார்கள். “ஊருக்கு போயிடுறன். ஊருக்கு போயிடுறன். என்னை கெதியாய் அனுப்புங்கோ.” இப்பொழுது கோமதி அழத்தொடங்கி விட்டாள்.
கோயில் தீர்த்தம் பார்க்கப் போனவள். போராட்டத்துக்கு என்று வீட்டுக்குத் தெரியாமல் போனபொழுது வயது 16.
போராட்டம் வேண்டாம் என வெறுத்து அதனை விட்டு விலகிப் பின் வீட்டை வந்தபொழுது வயது 19.
இந்த மூன்று வருட காலத்தினுள் போர்ப்பயிற்சி, மருவி உதிர்ந்த ஒரு காதல், வெளியேற முயன்றதால் அனுபவித்த தண்டனைக் காலம். இந்த அஞ்ஞான + வனவாச காலத்தை முடித்துப்போட்டு வீடு வந்த அடுத்த வருடம்தான் டென்மார்க் சம்மதம் கூடி வந்தது.

சங்கானைச் சண்டியன் 183
போராட்டம் நடக்கும் இந்த பூமியிலே பெண்பிள்ளை களைப் பெத்ததே முன் செய்த பாவம் என நினைத்து வசிக்கும் தமிழர் மத்தியில், போராட்டத்துக்குப் போய்விட்டுத் திரும்பிய ஒரு பெண்பிள்ளையை எப்படி வைத்திருக்க முடியும்? ஆமிக்காரன்களுக்கும் சரி, இதர இயக்கங்களுக்கும் சரி, அவரவர் பார்வையில் அவள் துரோகி தான். கைதானால் அவ்வளவு தான்.
ஆமிக்காம்பில் இருக்கும் அத்தனை பேருக்கும் அன்றைய விருந்து அவளே ஆவாள். அதன் பின்புதான் விசா ரணையே ஆரம்பிக்கும். எங்கே காம்ப்?. என்ன என்ன பயிற்சிகள்?. எத்தனை எத்தனைப் பேர்? எங்கே எங்கே கூடுவது? என்ன என்ன திட்டங்கள்?. பதில் தெரிந்ததும் தெரியாததுமான அத்தனை கேள்விகளுக்கும் அவள் பதில் சொல்லியே ஆக வேண்டும். சரியான பதிலைச் சொன்னாலும் சரி. சொல்லாவிட்டாலும் சரி. அவனவனின் கை விரல்கள் அவள் மீது வேறு வேறு ரூபத்தில் மேயும். அதன் பின் ஒரு நடைப்பிணம்தான். அல்லது மீண்டும் ஒரு போராளி தான். அவ்வாறுதான் இறைமையும் ஜனநாயகமும் கொண்ட இலங்கையின் சிங்கக்கொடி பட்டொளி வீசிக்கொண்டு பறந்துகொண்டு இருக்கிறது. அவ்வாறே மற்றைய மற்றைய கொடிகளும் ஆங்காங்கே. கோமதி செய்த புண்ணியமோ. இல்லை கோமதியைப் பெற்றவர்கள் செய்த புண்ணியமோ, டென்மார்க் சம்மதம் வந்து கதவைத் தட்டியது.

Page 94
... 184 வி. சிவகுமாரன்
மாப்பிள்ளை சுரேன். வயது 28. டென்மார்க் போய் 8 வருடம். டென்மார்க்கில் சிற்றிஷன்சிப். நிரந்தர வேலை. மேலாக கோமதியின் அதே இருமரபும் துய்ய வந்த சைவ வேளாளர் பரம்பரை. இதைவிட வேறென்ன வேண்டும்?
நாட்டு நிலைமையையும் கடந்த காலத்தில் கோமதியின் இயக்கத் தொடர்புகளையும் கருத்தில் கொண்டு கல்யாணத்தை சிங்கப்பூரில் வைத்துக் கொள்ளலாம் என முடிவாயிற்று.
19 வயது கோமதியை சுமார் 29 - 30 வயதுப் பெண்ணாக உருமாற்றி, கட்டையாக வெட்டியிருந்த தலைமுடி நெட்டை யாக வளரும்வரை காத்திருந்து. தாயின் தாலிக்கொடி யையும் கழுத்தில் போட்டு, தமக்கையின் பிள்ளையையும் கையில் கொடுத்து கொழும்பு வரை கொண்டு போய் ஏர் லங்காவில் ஏற்றிய பின்புதான் அனைவருக்கும் உயிர் வந்தது.
கோமதியுடன் மாப்பிள்ளையின் தாய் தகப்பன் மட்டும் பயணமானார்கள்.
கோமதியின் தாய் . தகப்பனுக்கோ மற்றைய சகோதரங் களுக்கோ சிங்கப்பூர் வரை செல்வதற்கு எந்த வசதியும் இருக்கவில்லை.
எவ்வாறு தனித்து வந்து நாம் பிறந்தோமோ, அவ்வாறே தன்னந்தனியே அவளின் வாழ்வின் இரண்டாம் அத்தியாயத்தில் காலடி எடுத்து வைப்பதற்காக முகில் களினூடு அவள் பயணப்பட்டுக் கொண்டு இருந்தாள் - எதிர்காலம் பற்றிய ஒரு படபடப்புடன்.

винитаратš sahrpudi 185
*டெக்டர், எனக்கு விசர் எண்டு நினைக்கிறிங்களோ?
கோமதி சொன்னதை பெண் மொழிபெயர்ப்பாளர் டெனிஷில் டாக்டரிடம் சொன்னார்.
“இல்லை. கோமதி. ஆனால் நீங்கள் குழம்பிப்போய் இருக்கிறியள்.”
இப்போது மொழிபெயர்ப்பாளர் டாக்டரிடம் சொன்னதை தமிழில் கோமதியிடம் சொன்னார்.
கோமதி பதில் ஒன்றும் சொல்லவில்லை. கொஞ்ச நேரம் மெளனமாக இருந்தாள். மூச்சு கொஞ்சம் அதிகமாய் அடிவயிற்றில் இருந்து வந்தது. மெதுவாய் எழுந்து யன்னல் பக்கமாய் போய் அந்த எட்டாவது மாடியில் இருந்து கீழே போகும் வாகனங்களை வெறித்துப் பார்த்துக்கொண்டு நின்றாள்.
நேர்ஸ் போய் கோமதிக்கு பக்கத்தில் நின்று கொண்டாள்.
டாக்டரும், மொழிபெயர்ப்பாளரும் அவளையே பார்த்துக் கொண்டு கட்டிலடியில் நின்றார்கள்.
திடீரென ஆவேசத்துடன் திரும்பி டாக்டரை நோக்கி ஒரு வெறியுடன் வந்தாள்.
“ஏன் நான் குழம்பிப் போயிருக்கிறேன் தெரியுமோ?. அந்த பொறுக்கியாலைதான். அந்தப் பொறுக்கியாலைதான். இங்கை இருந்து அங்கை வந்த பொறுக்கியாலைதான். நான் இயக்கத்திலை இருந்தனான். நாட்டுக்காகப் போராடி னனான். ஏ. கே. 47ல் சுடத்தெரியும். இப்ப. இப்ப. அந்தப் பொறுக்கியை. அவனை நடுச்சந்தியிலை கட்டிப் போடவேணும். மொட்டை அடிக்க வேணும். எனக்கு செய்ததை எல்லாம் அவன்ரைகழுத்திலை எழுதி தொங்கப்

Page 95
186 வி. ஜீவகுமாரன்
போடவேணும். கடைசியிலை கீழை சுடவேணும். எல்லாம் பறக்க சுடவேணும்.” கோமதியிடம் இருந்து வார்த்தைகள் ஆவேசமாய்ப் பறந்தன. டாக்டர் நேர்ஸிடம் நித்திரை ஊசியைப் போடுமாறு கண்ணைக் காட்டிவிட்டு அப்பால் நகர்ந்தார். டாக்டருக்குப் பின்னால் போக வெளிக்கிட்ட மொழிபெயர்ப் பாளரை கோமதி தடுத்தாள்.
"அக்கா, அவன் கெட்டவன். அவன் கெட்டவன். அவன் என்ன என்ன எல்லாம் செய்தவன் தெரியுமோ.”
நேர்ஸ் மொழிபெயர்ப்பாளரைப் போகச் சொல்லி சைகை யால் கூறினார்.
"அக்கா போகாதையுங்கோ. நீங்கள் கேட்டுட்டுப் போங்கோ. இனியொரு பிள்ளைக்கு இது நடக்கக் கூடாது. ஆனால் இதுகளை அப்பா அம்மாற்றை மட்டும் சொல் லாதையுங்கோ. பாவங்கள். பாவங்கள் அதுகள். சந்தைக்கை தேங்காய் வித்து கிடுகோலை பின்னி வித்து எங்களை வளர்த்ததுகள்.”
கோமதி அழத் தொடங்கினாள்.
கில்யாணக்கூறையுடன் கைகளில் பழத்தட்டையும் பால் ரம்ளரையும் ஏந்திக் கொண்டு தயங்கித் தயங்கி அறைக்குள் நுழைந்து. அவற்றை கட்டில் தலைமாட்டடியில் வைத்து விட்டு. கிட்டவாய் போய் சுரேனின் காலடியில் கும்பிடப் போக. அவளை ஆதரவாகத் தாங்கியபடி அவளை

rsradorā fair gudr 187
கட்டிலடிக்கு அழைத்துப் போய் இருத்தி. இருவருமாய் பால் பழம் உண்டு, பல கதைகளும் கதைத்து, பின் சுரேன் லைற்றையும் அணைத்து அவளையும் அணைக்க, அந்த அணைப்பில், சுரேனின் அரவணைப்பில் தன்னை இழக்க.
“இன்னும் பதினைந்து நிமிடத்தில் சிங்கப்பூர் சங்கை விமான நிலையத்தில் இறங்கவுள்ளோம்” என்ற பணிப் பெண்ணின் குரல் கேட்க திடுக்கிட்டு முழித்தாள் கோமதி.
“என்ன பிள்ளை நித்திரை கொண்டுட்டீரோ. போய் முகத்தைக் கழுவிக்கொண்டு மேக்கப் போட்டு வாரும். சுரேன் உம்மைப் பார்த்து சொக்கிப் போகவேணும்.” மாமியார் கூறவும் தன் கைப்பையை எடுத்துக்கொண்டு விமானத்தின் பின்புறமாய் இருந்த ஒப்பனை அறையை நோக்கிப் போனாள். கனவில் இருந்து அவள் இன்னமும் முற்றாக விடுபட வில்லை. முகத்தை குளிர்ந்த நீரால் நன்கு அலசிக் கழுவினாள். சென்றிக்கு நின்ற பொழுது செந்தில் அவளை வைத்த கண் வெட்டாது பார்த்தபொழுது அவளுடலில் பரவிய அந்த அதேயுணர்வு. பாவம் செந்தில் - மனது சொல்லிக் கொண்டது. இழப்புகள் இயல்பானவை. பலதடவை இந்தக் கோட் பாட்டால் அவள் தன்னைத் தானே தேற்ற முயன்றாலும் செந்திலின் இழப்பு அநியாயமானது என்பதில் அவள் இறுதிவரை உறுதியாகவே இருந்தாள். கசப்பான அனுபவங்களை ஒரு தடவை இரைமீட்டி மீண்டும் ஒரு தடவை தன் இயலாமையிடம் தோற்றுப்போக

Page 96
188 வி. சீவகுமாரன்
விரும்பாதவளாய், மாமியார் சொன்னமாதிரி தன்னை கொஞ்சம் மிகையாகவே அலங்காரம் செய்து கொண்டு. டெலிபோனில் மட்டும் பேசி அறிமுகம் ஆன சுரேனைக் கண்டவுடன் என்ன பேசுவது. என்ன கதைப்பது என்ற படபடப்புடன் மீண்டும் தன் ஆசனத்தில் வந்து இருந்தாள். சுரேன் இரண்டு நாட்களுக்கு முன்பே டென்மார்க்கில் இருந்து வந்து ஹோட்டலும் எடுத்து தங்கி. கல்யாண ஏற்பாடு களைச் செய்து கொண்டிருக்க. தாய், தகப்பன், கோமதி மூவரும் சிங்கப்பூர் வந்திறங்குவதாக ஏற்பாடாகி யிருந்தது. மாமியார் பழையபடி சுரேனின் புராணத்தைத் தொடங்கி யிருந்தா. "எத்தனையோ சம்மந்தங்கள் வந்தது. அதிலும் பல பெரிய சீதன பாதனங்களுடன். சுரேனுக்கு கோமதி யின் படம் மட்டும் பிடித்திருந்தது. மெல்லிய. உயர மான. நிறமான. பெண் கேட்டு ஒற்றைக் காலில் நின்றவன். உமக்குத்தான் அந்த அதிர்ஷ்டம்.” கீறுவிழுந்த இசைத்தட்டாய் மாமியார் சொல்லிக் கொண்டி ருக்க, இப்போது விமானம் தாழப்பறக்கத் தொடங்கியது.
காதுகள் இரையத் தொடங்கின.
மாமியாரின் கதைகளுக்கு தன் புன்னகையால் பதிலைச் சொன்னபடி. யன்னலினூடு சிங்கப்பூரின் அழகையும் பார்த்தபடி. எங்கையோ பிறந்த தன் வாழ்வு. எங்கையோ ஒரு வன்னிக் காட்டுக்குள். ஒரு வீரமங்கையின் சாவு. என்ற பெயருடன் முடிந்திருக்க வேண்டிய ஒரு வாழ்வு. எங்கோ பிறந்த ஒருவனுடன் இணைக்கப்பட இருப்பதை எண்ணிக்கொண்டு இருக்க விமானத்தின் முன்சில்லு தரையைத் தொட்டது.

சங்தானைச் சண்டியன் 189
மிக வேகமாக. பின் மெதுவாக. கடைசியாக ஊர்ந்து விமானம் தன் தரிப்பிடத்திற்கு வந்துசேர. தங்கள் ஆசனங் களில் இருந்து அனைவரும் எழுந்து கொண்டார்கள்.
பூமியின் மறுபக்கத்தில் இப்படி ஓர் அழகான உலகம் இருக்கின்றதா என்ற பிரமிப்புடன் கோமதி சிங்கப்பூர் விமானநிலையத்தினுள் நடந்தாள் - மாமன் மாமியாருக்குப் பின்னால். கொழும்பு கட்டுநாயக்கா விமானநிலையத்தினுள் கண்ட எந்தப் படைவீரரும் இங்கிருக்கவில்லை. நாட்டை நினைத்து மனம் வேதனைப்பட்டது. சீனர். தாய்லாந்துக்காரர். மலேசியர். இந்தியர்கள். வெளிநாட்டு உல்லாசப் பயணிகள் என அனைத்து இனத்தவரும். அதிலும் அவரவரை மதித்து அவரவர் பாதையில் செல்வதைப் பார்க்கும்பொழுது அழகாய்த் தான் இருந்தது. ஓரிடத்தில் மட்டும் இரண்டு சிங்கப்பூர் பொலிஸ்காரர் நாலைந்து சிங்களப் பெண்களுடனும் ஆறேழு தமிழ் நாட்டைச் சேர்ந்த பெண்களுடனும் போய்க் கொண்டிருந் தார்கள். அவர்களின் முகங்கள் காய்ந்துபோயிருந்தன. அழுதிருக்க வேண்டும். கோமதி மாமனாரைத் திரும்பிப் பார்த்தாள்.
"தொழிலுக்கு வந்திருக்குங்கள். விசா முடிஞ்சிருக்கும். பொலிஸ்காரங்கள் பிடிச்சு அனுப்புறாங்கள் போலை.” “உங்களுக்கு உந்த உலக விண்ணாளங்கள் எல்லாம் எப்படித் தெரியும்?” - மாமியார் துருவினார்.

Page 97
190 வி. வேகுமாரன்
"நீ பேப்பர் படிச்சால்தானே? வேண்டுற வீரகேசரிப் பேப்பரை மாவரிக்கத்தானே நீ பாவிக்கிறனி. பாவங் களப்பா உந்தப் பிள்ளையஸ். சிலதுகள் தெரிஞ்சு வாறதுகள். சிலதுகள் தெரியாமல் வந்து மாட்டுப் படுறதுகள். இனி புது பாஸ்போட்டோடை வருங்கள். இல்லாட்டி சவுதிப்பக்கம் வேலைக்குப் போகுங்கள். கடைசியிலை கண்ட கண்ட நோய்கள் வந்து. பாவப்பட்ட ஜென்மங்கள். அங்கை மட்டும் விடிவே பிறக்கப் போகுது?” போராட்டம் என்று திரிந்த கோமதிக்கும் சரி. கோயில்கள் விரதங்கள் என்று திரிந்த மாமியாருக்கும் சரி. மாமனார் சொன்ன இந்தப் பெண்களின் உலகம் புதியதே.
விமான நிலையத்தின் வழமையான விசா, சுங்க சம்பிரதாயங்களை முடித்துக்கொண்டு வெளியே வர சுரேன் கையில் ஒரு பூங்கொத்துடன் காத்திருந்தான். “என்ரை ராசாவைப் பார்த்து எத்தினை வருசமாச்சு.” என்றபடி தாய் மகனைக் கட்டியணைத்து கொஞ்சியழும் வழமையான படலம் முடிய கோமதியைப் பார்த்து “ஹலோ” என்றான் சுரேன். கோமதியும் பதிலுக்கு “ஹலோ” சொல்லிக் கொண்டாள். பின்பு என்ன?. நாலு பேரையும் ஏற்றிக்கொண்டு சிங்கப்பூரின் வீதிகளில் டக்ஸி மிதக்கத் தொடங்கியது. அந்திபடும் நேரம் என்றாலும் இயற்கையும் செயற்கையும் சேர்த்து சிங்கப்பூரை பச்சைப் பசேல் என காட்டிக் கொண்டிருந்தது. வீதியெங்கும் வண்ண வண்ண நிறங் களில் காகிதப்பூக்கள். “தமிழீழம் அமையும்பொழுது யாழ்ப்பாணம் குட்டி சிங்கப்பூராகும்” என மூத்த போராளி ஒருவன் சொல்லும்

rasaocorão sairgludir 191
போது, "அப்போது வன்னி என்னவாகும்?” எனக் கேட்க வாய் குறுகுறுக்கும். ஆனால் அடக்கிக் கொள்வாள். “மெளனித்திரு” என்பதன் அர்த்தத்தை இயக்கத்திற்குப் போன பின்புதான் கோமதி அதிகமாக அறிந்திருந்தாள். தாய் - தகப்பன் - மகனின் சம்பாஷணைகளிலும். நினைவுகளின் பின்னசைவுகளிலும் மூழ்கியிருந்தவளை சுமந்து வந்த டக்ஸி மெதுவாய் தன் வேகத்தைக் குறைத்து சிறங்கூன் வீதியில் காளி கோயிலுக்குக் கிட்டவாக அமைந்திருந்த ஹோட்டல் வாசலில் நிறுத்தியது. அவளுக்கு தன் கண்களையே நம்பமுடியவில்லை.
டக்ஸியால் இறங்க முடியாதளவு சனக்கூட்டம். நல்லூர்த் திருவிழா போல. அனைத்தும் இந்தியர்கள். பாக்கிஸ் தான்காரர். பங்களாதேஷ்காரர். இடைக்கிடை சில சிங்கள முகங்கள்.
அன்று ஞாயிற்றுக்கிழமை - விடுமுறைதினம் - ஆதலால் சிங்கப்பூரில் வேலைக்காக வந்து வெவ்வேறு பகுதிகளில் வாழும் அனைத்து தென்கிழக்காசிய நாட்டவரும் கூடும் இடம் அது. கடிதங்களைப் பெற. கடிதங்களை அனுப்ப. காசுப்பரி மாற்றம் செய்ய. ஊருக்குப் போக சாமான்கள் வேண்ட. கிழமைக்கு ஒரு தடவை சந்திக்கும் காதலர்கள் நாள் முழுக்கச் சுற்றித் திரிய. நல்ல மரக்கறி மீன் வகைகளை வேண்ட. புல்வெளிகளிலும், பார்களிலும் கூடியிருந்து கதைக்க. தண்ணியடிக்க. தேவைப்பட்டால் உடலின் உபாதைகளைக் குறைக்க இருபது வெள்ளியில் இருந்து ಡಿಠ್ಠಲ வெள்ளிகள் வரை வயதுக்கும் தரத்திற்கும் ஏற்ற LDs BSls...

Page 98
192 வி. ஜீவகுமாரன்
முஸ்தபா சொப்பிங் சென்ரரை மையமாகக் கொண்டு சுமார் ஒரு மைல் சுற்றளவுக்கு இந்த ஞாயிற்றுக்கிழமைத் திருவிழா நடைபெறும். சுமார் காலை பத்து மணிக்குத் தொடங்கி அடுத்தநாள் அதிகாலை இரண்டுமணி வரை இந்தத் திருவிழா நீடிக்கும். இந்த சனக்கூட்டத்துள் ஒரு டக்ஸிபிடிப்பது என்றால் அன்று ஒரு லாட்டரி சீட்டு விழுந்ததற்குச் சமன். எனவேதான் கோமதி ஆட்கள் இறங்குமுன்பே பலர் டக்ஸியைச் சூழ்ந்து கொண்டார்கள். அவர்களை ஏதோ டெனிஷில் திட்டியபடி சுரேன் எல்லோரின் பெட்டிகளையும் கீழே இறக்கிவிட்டு டக்ஸியை அனுப்ப முதலேயே ஓர் இந்தியப் பையனும் அவன் சீனக்காதலியும் டக்ஸியினுள் ஏறி உட்கார்ந்து கொண்டார்கள்.
சுரேன் பேசியது கெட்ட வாாத்தையாகத்தான் இருக்கும் என கோமதி ஊகித்தாலும், எதுவுமே கேட்காமல் தனது சூட்கேசுடன் ஹோட்டலினுள் நுழைந்தாள்.
சுரேன் தகப்பன் தாயின் சூட்கேசை வேண்டிக் கொண்டான்.
சுரேன் முன்னதாகவே ஒழுங்கு செய்திருந்த ஒரு அறையினுள் கோமதியும் அவன் பெற்றோரும் தங்குவதாக ஏற்பாடு. பக்கத்து அறை சுரேனுடையது.
"இன்னும் இரண்டு நாளைக்கு அப்பா, அம்மாவுடன்தான் நீர் தங்கவேணும்.” “இப்ப நான் கேட்டேனா” என்னுமாப்போல் நிமிர்ந்து பார்த்தாள். அவளுடன் கூடவே பிறந்த குறும்பு-அவனைப் பார்த்து வாயால் சுளித்துவிட்டு சுரேனின் பெற்றோரின் அறையினுள் நுழைந்து கொண்டாள்.

øyebaranoaorð sFabrçuudår 193
9டுத்த நாள் கலியாணத்திற்காக சாமான்கள் வேண்டு வதிலேயே அதிக நேரம் கழிந்தது.
கோமதிக்கு கூறைச்சேலை. திருமணத்துக்கான நகைகள். தாய்க்கு இரட்டைவடச் சங்கிலி. என்றே அன்றைய நாளின் பெரும்பகுதி ஓடிக்கொண்டிருந்தது. சுரேனின் தாய், தனக்கும் ஊரில் இருக்கும் தனது இன சனங்களுக்கும் என்று முன்னின்று வாங்கிய அத்தனை பொருட்களுக்கும் டென்மார்க்கின் குறோன்கள் விசாகாட் மூலமாக சிங்கப்பூரின் வெள்ளியாக மாறிக்கொண்டி ருந்தன. "நீர் என்ன விருப்பமோ வேண்டும்” என சுரேன் பலமுறை வற்புறுத்தியபொழுதும் வேண்டாம் என்ற தலையாட்டல் தான் கோமதியின் பதிலாக இருந்தது. மாறாக சுரேனின் தாயோ சிறங்கூனின் எந்தக் கடையையும் விட்டு வைக்கவில்லை. சீனக்காரரின் நகைக்கடைகள் தொடக்கம், மூன்று எடுத்தால் பத்து வெள்ளி எனக் கூக் குரலிடும் வட இந்தியர்களின் கடைகள் வரை இதில் அடங்கும். பிளேனிலை ஆளுக்கு இருபது கிலோதான் விடுவாங்கள் என்ற சுரேனின் தகப்பனின் எச்சரிக்கையையும் தாய் கேட்டது போலத் தெரியவில்லை.
கோமதி எதையும் வேண்டுவதில் ஆர்வம் காட்டாது, கடைகளில் காணப்படும் சின்னப் பொம்மைகளை மட்டும் ஆசையாகப் பார்த்து தடவிக்கொண்டு நின்றாள். “வேண்டித் தாறதோ”, என சுரேன் சிரித்தபடி கேட்க, அதே

Page 99
194 வி. ஜீவகுமாரன்
புன்முறுவலுடன் வேண்டாம் எனத் தலையாட்டிவிட்டு அப்பால் நகர்ந்து கொள்வாள். "என்ரை மருமகளுக்கு கலியாணத்துக்கு முதலே குழந்தைப் பொம்மையிலை ஆசை வந்திட்டுதாக்கும்” என்ற ‘ஏ’ ஜோக்கை ஏனோ அவளால் பெரிதாக ரசிக்க முடிய வில்லை.
கோமதியின் உலகம் என்றைக்குமே சின்னதாகத்தான் இருந்தது. ஊர்ப் பள்ளிக்கூடம். காலையிலும் மாலை யிலும் கும்பிட்டுச் செல்லும் சின்ன அம்மன் கோயில். வருடத்திற்கு ஒரு தடவையோ அல்லது இருதடவையோ யாழ்ப்பாணத்துக்குப் போய் ஒரு படம் பார்த்து, சுபாஸ் கபேயில் ஐஸ் கிறீம் குடித்து. அதே மாதிரி வருடத்துக்கு ஒரு தடவை வரும் நல்லூர் தேர். சன்னதிக்கு வண்டி கட்டிப் போய் வைக்கும் பொங்கல். இவைகள்தான் அவளது உலகம்
எப்பவும் எதிலுமே அவள் பெரிதாக ஆசைப்படவில்லை. வாழ்க்கையுடன் போராடி அதன் வெற்றி தோல்வியில் விழுந்தெழும்பாமல் வாழ்க்கையின் வழியிலேயே வாழ்ந்து பழகியிருந்தாள். சக மாணவிகள் பத்து பாடத்துக்கும் ஓடி ஓடி ரியூசன் எடுத்த பெறுபேறுகளை அவள் விளையாட்டுத் தனமாக இருந்தபடியே பெற்றிருந்தாள். அவளின் அந்தத் திறமைதான் அவளை போராட்டத்துக்குள் இழுக்கவும் காரணமாய் இருந்தது. விரும்பியே போனாள். விருப்பம் விடுபட்டபோது தானே வெளியேறினாள். எதற்கும் சலசலக்கவில்லை. இப்பவும் ஓர் அழகிய பொம்மையைக் கையில் எடுத்து. அதனை அசைத்து அதன் கண்களை வெட்டவைத்து. அதற்கு தானும் கண்வெட்டி. சின்னதாகச் சிரித்து.

yüksebaabayri sairopudör 195
மாமனார் எட்டவாக நின்று கோமதியைப் பார்த்து மகிழ்ந்து கொண்டிருந்தார். மொத்தத்தில் அன்றைய பொழுது சிறங்கூன் வீதியில் இருந்த அனைத்துக் கடைகளுக்குள்ளும் கழிந்தது. ஹோட்டலுக்கு வந்து சேர, நடந்த களையில் கையும் காலும் நன்கு நோக அடுத்த நாள் காலையில் தன் கழுத்தில் ஏற இருக்கும் தாலி. தன் வாழ்வை சுரேனிடம் அர்ப்பணிக்க இருக்கும் இனிமையான நினைவுகள் என சற்று வேளை யுடன் கோமதி அயர்ந்து விட்டாள்.
சிற்லைப்பொழுதின் கலகலப்பு என்பது கிழக்காசிய நாடுகள் எல்லாவற்றுக்கும் ஒன்றுதான். அது சிங்கப்பூராய் இருந்தால் என்ன?. சிதம்பரம் கோயில் மேல்மாடவீதியாய் இருந்தால் என்ன?. சுரேன், கோமதி, சுரேனின் பெற்றோர்கள் அதிகாலை யிலேயே எழுந்து ஆயத்தமாகி விட்டார்கள்.
உற்றார், சுற்றத்தார் இல்லாது பணக்கார அகதிகளாய் ஐரோப்பாவிலும், கனடாவிலும், அவுஸ்திரேலியாவிலும் இருந்து வந்து நடத்தப்படும் இந்தத் திருமணங்களில் பால் அறுகு வைத்தல், தோயவார்த்தல், மாப்பிள்ளை வீட்டு அழைப்பு, நாலாம் சடங்கு என்ற சம்பிரதாயங்கள் பல சுருக்கப்பட்டு, தாலி கட்டும் வைபவம் ஒன்றுதான் நிறைவாக அமைவது.
சுரேனின் தூரத்து உறவுகள் என மலேசியாவில் இருந்து வந்த குடும்பங்கள், வீடியோகாரன், கமராக்காரன் என

Page 100
196 வி. ஜீவகுமாரன்
காலையில் ஏழு மணிக்கு எல்லோரும் ஹோட்டலில் கூடி யிருந்தார்கள். பெண்ணையும் மாப்பிள்ளையையும் தனித்தனியே படம் பிடித்துக்கொண்டபின்பு சுரேனின் உறவினர்கள் கோமதி யின் பெற்றோர் ஸ்தானத்தில் நின்று அவளைக் கூட்டிக் கொண்டு முதலில் காரில் கற்பகவிநாயகர் கோயிலுக்குப் போனார்கள்.
சிறிது நேரம் கழித்து சுரேனின் காரும் பின்னால் சென்றது. முன்பே ஆயத்தம் செய்துகொண்டிருந்தபடி மணவறை யுடன் ஐயர், மேளக்காரர் அனைவரும் கோயிலடியில் தயார் நிலையில் இருந்தனர். பின்பு அனைத்தும் சொல்லி வைத்தது போல நடைபெறத் தொடங்கியது.
ஓமம் வளர்த்தல் - தாரைவார்ப்பு-தாலி கட்டுதல் - சுரேனின் கையைப் பிடித்துக்கொண்டு மேடையைச் சுற்றல் - பால் பழம் உண்ணல் - அறுகரிசி போடல் - கடைசியாக குருக் களுக்கு தம்பதியராய் தட்சணை கொடுத்தல் என அனைத் தும் நன்கு நிறைவேறின. ஒவ்வொன்றும் நடைபெற்றபொழுது கோமதி தாய், தகப்பன், சகோதரங்கள், சின்ன வயது தோழிகள் அனை வரையும் நினத்துக் கண்கலங்கினாள்.
சின்ன வயதில் இருந்தே காண்பவை மனத்தின் எங்கோ ஒரு மூலையில் சின்னச் சின்ன படச்சுருள்களாய்ப் பதிந்து விட. அவை நிறைவேறும்போது அவற்றை பெரிய பட மாக்கி ஹோலில் மாட்டி வைக்க மனம் ஆசைப்படும். ஒரு பெண்ணுக்கு தனது சாமத்திய வீடு பற்றித் தொடங்கும் கனவுகள். திருமணம். வளைகாப்பு. பிள்ளைப்பேறு.

parabarš staigudr 197
பிள்ளையின் முதலாவது பிறந்தநாள் என வளர்ந்து கொண்டே போகும்.
அவ்வாறே திருமணக் கனாக்களும். திருமணநாள் பற்றிய கனவுகளும். எண்பத்திமூன்று கலவரத்திற்குப் பின்னர் நடந்த பல வெளிநாட்டு, உள்நாட்டுக் கல்யாணங்களில் பெரும்பாலும் டெவலப் பண்ணாத படச்சுருள் கதைதான். காகிதத்தில் பதியாத கற்பனை நாவல்கள்தான். இதற்கு கோமதியும் விதிவிலக்கல்ல. அதுதான் கண்ணைத் தழும்ப வைக்கும் இந்தக் கண்ணிர்த் துளிகள். கோயில் மண்டபத்திலேயே மத்தியானச் சாப்பாட்டுக்கு ஒழுங்கு செய்திருந்தபடியால் மதிய சாப்பாடு முடிந்ததும் மலேசிய உறவினர்கள் விடைபெற்றுக் கொண்டார்கள். எல்லாம் ஒரு கனவுபோல நாலைந்து மணித்தியாலத் துக்குள் நிறைவேற. செல்வி கோமதி வெற்றிவேலு திருமதி கோமதி சுரேனாக. சுரேனுடனும், சுரேனின் பெற்றோருடனும் ஹோட்டலுக்குத் திரும்பியபொழுது பின்னேரம் இரண்டு மணியாகி இருந்தது. வெளியில் வெயில் நன்கு எறித்துக்கொண்டிருந்தது யாழ்ப்பாண காண்டவன வெயில் போல்,
"கோமதி, நீர் இனித் தம்பியின்ரை அறைக்குப் போம். நாங்கள் எங்கடை அறைக்குப் போறம்.”. கோமதிக்கு இந்தப் பகலில் சுரேன் அறைக்குப் போக பெரிய தயக்கமாய் இருந்தது,

Page 101
198 வி. ஜீவகுமாரன்
"இரவு ஆகட்டும். அப்புறம் போறனே. இப்ப உங்க ளோடை இருக்கிறேன்.”
“என்ன சின்னப் பிள்ளை போலை. நாளையண்டைக்கு நீங்கள் இரண்டு பேரும்தானே டென்மார்க்குக்குப் போய் ஒண்டாக வாழப்போறியள். இப்ப என்ன கூச்சம்.”
ஆனால் கோமதிக்கு என்னவோ தனியே அவன் அறைக் குள் போகக் கூச்சமாய் இருந்தது. தயங்கியபடியே நின்று கொண்டிருந்தாள்.
“என்ன யோசித்துக் கொண்டு நிற்கிறீர். வாருமன் அறைக் குள்ளை.” சுரேன் தன் அறைக்கு வெளியே வந்து கூப்பிட்டான். அவன் இப்பொழுது பட்டு வேட்டியில் இருந்து சாரத்துக்கு மாறியிருந்தான். சேட்டு இல்லாது வெறும் மேலுடன் நிற்பதைப் பார்க்க கோமதிக்கு என்னவோ போலிருந்தது. கோமதி தயங்கித் தயங்கி உள்ளே போனாள். “கதவைப் பூட்டும். ரூம் போய் வந்தாலும் வருவான்." கூறிக்கொண்டே குளிர்சாதனப் பெட்டியினுள் இருந்து ஓர் பியர் ரின்னை எடுத்து உடைத்து. அதிலிருந்து பீறும் நுரையை வாயை வைத்து உறிஞ்சினான். கோமதிக்கு அடிமனதில் ஒரு பயம் எழுந்தது. தயங்கியபடியே கதவைச் சாத்திப்போட்டு கதவு நிலை யோரத்துடனே நின்றாள். “என்ன ஒற்றைக்காலில் தவம் செய்கிறீர். கூறைச் சீலையைக் கழட்டுமன்."
6.
ஒம்.” மெதுவாய்த் தலையாட்டினாள்.

sebuanoaorể Fairņuudår 199
"நீங்கள் ஒருக்கா வெளியிலை போனிங்களெண்டால் நான் உடுப்பு மாத்திடுவன்.” சுரேன் மெல்லியதாய் சிரித்துக் கொண்டான். கோமதிக்கு அவனின் சிரிப்புக்கு அர்த்தம் விளங்க வில்லை. "நான் உம்மை சீலையை மாத்தச் சொல்லேல்லை. சீலையை கழட்டச் சொன்னனான்.” கோமதிக்கு திக் எண்டது! “என்ன சொல்லுறீங்கள். இந்தப் பகலிலை.” "அதுக்கு என்ன? நான் உம்மைப் பார்க்க வேணும். நீர் என்னைப் பார்க்க வேணும். அப்பிடித்தான் டென் மார்க்கிலை.”
"ஐயோ என்னாலை முடியாது” என்றவாறு கதவைத் திறக்கப் போன கோமதியின் கையை சுரேனின் கை வந்து கெட்டியாகப் பிடித்தது. "பிளிஸ். பிளிஸ். விடுங்கோ. விடுங்கோ.” கோமதியின் கெஞ்சல் எதுவும் சுரேனிடம் எடுபடவில்லை. அவனாகவே அவளைப் பிறந்தமேனியாக்கினான். பின் தனக்குத் தேவையானவற்றை எடுத்துக் கொண்டான். வன்னிக்காட்டுக்குள் திரியும் காட்டுப் பன்றிகள் மர வள்ளித் தோட்டங்களை நாசம் செய்துபோட்டுப் போவது போலை. தன்னை அவன் நாசம் செய்துபோட்டான்போல இருந்தது. விமானத்தில் வரும்பொழுது கண்ட முதல் இரவின் கனவுகள் அந்த முதல் பகலில் கரைந்துகொண்டு இருந்தது.

Page 102
200 வி. ஜீவகுமாரன்
கூறைச்சேலையினால் அவள் பிறந்த உடம்பைப் போர்த்தி விட்டு மீண்டும் ஒரு பியரை உடைத்துக் கொண்டு சுரேன் போய் கதிரையில் உட்கார்ந்து கொண்டான். அவள் நடுங்கிக் கொண்டு படுத்திருந்தாள். "ஏன் நடுங்கிக்கொண்டு இருக்கிறீர்? இதிலை என்ன இருக்கு? குளிருதா. எயர் கொண்டிசனைக் குறைச்சு விடட்டா. இல்லை போர்த்து விடட்டா..” என்று அவன் கிட்ட வந்த பொழுது தன்னைப் போர்த்தியிருந்த கூறைச் சேலையை இன்னும் இறுக்கிப் பிடித்திருந்தாள். "உதை விடும். இந்த பெட்சீற்றாலை போரும்” என கூறைச்சேலையை வலுக்கட்டாயமாகப் பறித்து இழுத்துப் போட்டு மீண்டும் அவளைப் பிறந்த மேனியாய்ப் பார்த்துக் கொண்டே பெட்சீற்றால் தன்னையும் அவளையும் போர்த்திக் கொண்டான். சென்றிக்கு நின்ற தன்னை மீண்டும் ஒரு காட்டுப் பன்றி மறுபுறத்தால் வந்து குதறுவது போல அவள் உணர்ந் தாள். குமுறும் நெஞ்சத்தில் இருந்து எழுந்து வந்த கவலைகள் எல்லாம் அவள் கண்கள் வழியே வழிந்தோடின. 'இதுதான் கல்யாணமா? இதுதான் தாம்பத்தியமா? ஆண்கள் எல்லோரும் இப்படியா? அப்பாவும் இப்படித்தான் அம்மாவைக் கொடுமைப்படுத்தி நான் பிறந்தேனா? விடை தெரியாத கேள்விகளை மனம் அடுக்கிக்கொண்டு போனது.
சுரேன் குறட்டை விட்டு தூங்கிக் கொண்டு இருந்தான்.
அவன் வியர்வையில் பியர் மணத்தது.

சங்கானைச் சண்டியன் 201
அது அவளின் வயிற்றைக் குமட்டியது. மெதுவாக எழும்பி தன் உடுப்புகளை எடுத்துக் கொண்டு குளியலறையினுள் போனாள். மேல் பைப்பைத் திறந்துவிட்டு கண்ணை மூடிக்கொண்டு நின்றாள். ஷவரில் இருந்தும் அவள் கண்களில் இருந்தும் நீர் ஓடிக்கொண்டே இருந்தது.
குளித்துக்கொண்டு இருக்கும்பொழுது சுரேன் எழும்பும் சத்தம் கேட்டது,
"கடவுளே” என அவள் வாய் முணுமுணுத்துக் கொண்டது. குளியலறைத் தாழ்ப்பாளைத் தான் நன்றாகப் போட்டு இருக்கின்றேனா எனப் பார்த்துக் கொண்டாள். தலையில் கொட்டும் தண்ணிரும் கண்களில் கொட்டும் கண்ணிரும் அவளுக்கு ஒரு ஆறுதலைக் கொடுத்துக் கொண்டிருந்தது. “என்ன குளிச்சுக் கொண்டு நிக்கிறீர். இப்ப பின்னேரம் ஏழு மணியாய்ப் போச்சு. போய் சாப்பிட்டுட்டு வரவேணும். அம்மா அப்பாக்கும் பசியாய் இருக்கும்.” “ஓம் வாறன்” எனச் சொல்லக்கூடத் தெம்பில்லாமல் அல்லது விருப்பமில்லாது தன்னை முற்று முழுதாக மறைக்கக் கூடிய ஒரு பஞ்சாபியை அணிந்துகொண்டு வெளியில் வந்தாள்.

Page 103
202 வி. ஜீவகுமாரன்
“நல்ல நித்திரை கொண்டிருக்கிறீர் போலை. கண் எல்லாம் சிவந்து கிடக்கு.” “ஓம்’ எனப் பொய்யாகத் தலையாட்டினாள். "எல்லாம் பிடிச்சுதோ.” இது என்ன அருவருப்பான கேள்வி.
இதுக்கு என்ன பதிலைநான் சொல்லுறது-மனம் தன்னைத் தானே கேட்டுக் கொண்டது. “ஓம்” என்பது போல் தலையாட்டினாள். "அதுதானே பார்த்தனான். என்னைப் பிடிக்காமல் இருக்குமோ." அவளைக் கட்டிப் பிடித்துக்கொண்டு தன் முகத்தை அவள் முகத்துக்குக் கிட்டவாகக் கொண்டு பேர்னான். “இனிமேல் இதெல்லாம் பகலிலை வேண்டாம்.” கண்ணை மூடிக்கொண்டு சொன்னாள். சுரேனின் கைப்பிடி நழுவியது. குளிப்பதற்காக அவன் குளியலறைக்குள் போனான். கோமதி யன்னலைத் திறந்து வெளியே பார்த்தாள். சாடையாக இருட்டத் தொடங்கியிருந்தது. வேலையால் வீட்டுக்குப் போவோரும், மரக்கறி வேண்டிக் கொண்டு நிற்போரும், காளி கோயில் வாசலில் நின்றும் - உள்ளே போய் கும்பிடுகிறவர்களும், அன்னியோன்னிய மாய் கைகளைக் கோர்த்தபடி செல்லும் சீனத் தம்பதியர் களும், புருஷன் முன்னே செல்ல தாங்கள் பின்னே செல்லும் தமிழ்நாட்டுப் பெண்களுமாக அந்த மாலை அழகாய்த் தான் இருந்தது.

Festirandari sarguUdr 203
தன் வயதை ஒத்த ஒரு வடநாட்டுப் பெண்ணும், அவள் கணவனும் என்ன அன்னியோன்னியமாய்க் கதைத்துக் கொண்டு போகிறார்கள். அவர்களின் தாம்பத்தியமும் என்னுடையது போலவா இருக்கும்?. சுரேன் வந்தது தொடக்கம் ஏன் என்னுடன் எதுவும் அன்னியோன்னிய மாய்க் கதைக்கவில்லை?. எயர்போட்டில் வந்து இறங்கி யது தொடக்கம் இப்போவரை எல்லாம் நேர அட்டவணை போட்டுக்கொண்டு ஓடிக்கொண்டு இருக்கிறமாதிரி இருந்தது. சுரேன் குளித்து முடித்து வெளியில் வந்தாயிற்று.
"வாரும், அம்மாக்களைக் கூட்டிக்கொண்டு சாப்பிடப் போவம்.”
நால்வரும் இறங்கி றோட்டோரமாய் நடக்கத் தொடங்கி னார்கள்.
“எப்பிடிப் பிள்ளை நல்லாய் நித்திரை கொண்டீரோ. கண்ணெல்லாம் சிவந்து போய்க் கிடக்கு?”
தான் பெரிய அர்த்தம் பொதிய கேள்வி கேட்ட திருப்தியில் புன்முறுவலித்தார் சுரேனின் தாய்.
“ஓம்” எனத் தலையாட்டினாள். மனது மட்டும் இல்லை என மறுதலித்தது. "சுரேன் எங்கை போறாய். இதுதானே கோமளா விலாஸ்." "உதிலை மரக்கறிச் சாப்பாடு மட்டும்தான் கிடைக்கும். வேறை எங்கையாலும் பார்ப்பம்.” “டே உனக்கு இண்டைக்கு தாலி கட்டின நாளடா. மச்சம் எல்லாம் சாப்பிடக்கூடாது.”

Page 104
204 வி. ஜீவகுமாரன்
“உந்த விசர் கதையளை விடுங்கோ. மத்தியானம் சாப்பிட்ட மரக்கறியே எனக்கு செமிக்கேல்லை. எனக்கு ஏதாவது நொன்-வெஜ்ஜும் ஒரு கூல் பியரும் அடிச்சால் தான் சாப்பிட்ட மாதிரி இருக்கும்.” சுரேனை ஒரு புழுப்பூச்சியைப் பார்ப்பது போல கோமதி பார்த்தாள். “நீர் என்ன சொல்லுறீர்” - கோமதியைப் பார்த்து சுரேன் கேட்டான். e “எனக்கு மாமியைப் போலை மரக்கறிதான்.” “ஒகே. இரண்டும் உள்ள இடமாய் போவம்.”. சுரேனின் தந்தை சமரசம் செய்தார். "நீ டென்மார்க்குக்குப் போய் நல்லாய் மாறிட்டாயடா. முந்தி உந்த கோயில் குளம் எண்டு ஒண்டும் விட LDITILITui..." "அது அங்கை. இப்ப டென்மார்க்கிலை அதுக்கேத்த மாதிரி.” "அப்ப வெள்ளிக்கிழமையிலை என்ன செய்யுறணி?”
"வெள்ளிக்கிழமையிலைதான் களைப்பையே ஆத்துறது.
வேலையாலை வந்து நல்லா குளிச்சு வெளிக்கிட்டு
வெளியிலை போய் சாப்பிட்டுட்டு. சிலவேளை பாருக்கு இல்லாட்டி டிஸ்கோக்கு போறது.”
கோமதிக்கு திக் என்றது. “ஏதடா. டெனிஷ்காரரோடை ஆடுற இடமோ?”
“உங்களுக்குத் தெரியுது. அங்கை எல்லா நாட்டு ஆக்களும் வருவினம். தனிய. அல்லது குடும்பமாக. ஜஸ்ற் ஜாலிதான்.”

சங்கானைச் சண்டியன் 205
9
"கோமதியை மட்டும் உதுகளுக்கு கொண்டு போயிடாதை. “வை நொற். விரும்பினால் அவாவும் வரலாம். நோ புறப்ளம்.” “தம்பி. இவ்வளவு நாளும் நீ விளையாட்டாய் இருந்திருக்கலாம். இப்ப குடும்பக்காரன். அந்தப் பொறுப் போடை இனிமேலும் நடக்கவேணும் கண்டியோ.” கதைத்தபடியே மூலையில் இருந்த சைவ - அசைவ உணவகத்துக்கு வந்தார்கள். சுரேன் மட்டும் பெரிய பாதிக்கோழி வறுவலையும் பெரிய கிளாசில் பியரையும் அனுபவித்துச் சுவைத்துக் கொண்டி ருக்க, கோமதியின் கை தோசையை தன்பாட்டில் பிசைந்து கொண்டு இருந்தது. “என்ன பிள்ளை யோசனை. வடிவாய் சாப்பிட வேணும்.” கோமதி தலையாட்டினாள். ஆனால் வாய் கையை மறுதலித்தது. நேரம் போய்க்கொண்டு இருந்தது. சுரேனின் சாப்பாட்டுத் தட்டு கோழி எலும்புகளால் நிறைந் திருந்தது. முகத்தில் வடிந்த வியர்வையைத் துடைத்தபடி பியரையும் குடித்தபடி டென்மார்க் கதைகளைச் சொல்லிக் கொண்டு இருந்தான். சுரேனின் பெற்றோர்கள் அவற்றை ரசித்துக் கேட்ட அளவுக்கு கோமதியால் அவன் கதைகளில் ஒட்ட முடியவில்லை. அன்றைய பகல் என்ற ஒன்று இல்லாமல் இருந்திருந்தால் அவன் கதைகளில் அவளால் ஒட்டியிருக்க முடியுமோ என்னவோ?

Page 105
206 வி. விவகுமாரன்
சிப்பாடு முடிய நால்வரும் காலாற நடந்துவிட்டு ஹோட்டலுக்கு வரும்பொழுது இரவு 10 மணியாகி விட்டது. "ஐயர் இண்டைக்கு முதலிரவுக்கு நல்லநாள் என்று சொன்னவர்” என சுரேனின் தாயார் கோமதியின் காதில் மெதுவாகச் சொன்னபொழுது கோமதிக்கு கண்களும் கலங்கி உடம்பும் நடுங்கியது. "ஒண்டுக்கும் பயப்பிடாதையும். இது உலகத்திலை ஒண்டும் புதிதில்லை." இத்துடன் அவர்கள் சம்பாஷணை முடிந்து அவரவரின் அறைக்குள் போனார்கள். அறைக்குள் போனதும் கோமதி எதிரே நிற்பதை எந்த விதத்திலும் பொருட்படுத்தாது தனது உடுப்புகளைக் கழற்றி எறிந்துவிட்டு ஒரு மெல்லிய அரைக்காற்சட்டைக் குள் சுரேன் நுழைந்து கொண்டான். கோமதி எதையும் பார்க்காத மாதிரி கட்டில் கால்மாட்டில் அமர்ந்து கொண்டாள். சுரேன் தனது சூட்கேசைத் திறந்து அழகாக பாசல் செய்யப்பட்டிருந்த ஒரு பெட்டியை அவளிடம் நீட்டினான். “என்ன இது” என்றவாறு நிமிர்ந்து பார்த்தாள். “டென்மார்க்கில் இருந்து உமக்குக் கொண்டு வந்தது” என்றவாறு கொடுத்தான். “தாங்ஸ்” என்றவாறு அதனை வேண்டி, அந்தப் பாசலைச் சுற்றியிருந்த நைலோன் நூலை மெதுவாகக் கழற்றினாள்.

seoranDaonrå FahrguUaðir 207 அடுத்து பாசலைச் சுற்றியிருந்த பேப்பரைக் கழற்றும் பொழுது டென்மார்க்கில் இருந்து ஏதாவது நைற் றெஸ்ஸாகத்தான் இருக்கும் என்ற ஐயப்பாட்டில் திறந்த வளுக்கு அருவருப்புதான் காத்திருந்தது. பெண்கள் போடும் உள்ளாடைகள் இரண்டு! மேலும் அவற்றைக் கையில் எடுக்காது தூக்கி கட்டிலின் ஒரு மூலையில் போட்டாள். "ஏன் பிடிக்கேல்லையோ”. சுரேன்தான் கேட்டான். தலைகுனிந்தபடியே இல்லை எனத் தலை ஆட்டினாள் “உமக்கு என்ன விலை எண்டு தெரியுமோ. உங்கடை இலங்கை காசுக்கு ஐயாயிரம் ரூபாய்.” “உங்கடை இலங்கை காசுக்கு’ என்றது மனதைக் கொஞ்சம் நெருடியது. “என்ரை வெடிங் பிறசண்டாய் வேண்டியந்தனான். அதை இண்டைக்கு நீர் போட்டுக் கொண்டு என்னோடை இருக்க வேணும்.” சுரேன் தொடர்ந்தான். கோமதிக்கு கை, கால்கள் எல்லாம் நடுங்கத் தொடங்கின. “வேண்டாம். பிளிஸ். வேண்டாம். பிளிஸ்.” குரல் கெஞ்சியது. அவன் கட்டில் காலடியில் கிடந்த அந்தப் பெட்டியைத் தூக்கிக்கொண்டு கிட்டவாக வந்தான். “எவ்வளவு ஆசையோடை வேண்டிக் கொண்டு வந்தனான் தெரியுமோ?”
அவனின் பிடிவாதத்துக்கு ஈடு கொடுக்க முடியாது தவித் தாள். அவனைக் கும்பிட்டுப் பார்த்தாள். முடியவில்லை.

Page 106
208 வி. ஜீவகுமாரன்
ஒரு கணவனுக்கு நல்ல மனைவியாக இருப்பது என்றால் என்ன என்ற வியாக்கியானங்கள் ஒன்றுமே அவளுக்கு விளங்கவில்லை.
கடைசியில் தன்னைக் கொஞ்சம் இளக்கிக்கொண்டு. “சரி, போட்டுத் துலைக்கிறன். உந்த லைற்றை கொஞ்சம் நூருங்கோ” என்றாள்.
“லைற்றை நூத்தால் எப்பிடி நான் பார்க்கிறது?” கோமதிக்கு அதன் பின் எதுவுமே நினைவில்லை.
எல்லாம் அவன் நினைத்தபடி. அவன் வெறி தீரும்வரை. அந்த வெளிச்சத்தில் மீண்டும் மீண்டும் அவன் வெறி தீரும்வரை. அந்தக் காட்டுப்பன்றி. அந்த மரவள்ளித் தோட்டங்கள். சென்றிக்கு நின்ற கோமதி. தப்பித் தப்பி வந்து. டென் மார்க்காரன் ஒருவனிடம் என்னை காவு கொடுத்து விட்டேனே என்ற தோல்வியில் அவள் துடித்திருந்தாள்.
இப்போ அவனாக எழுந்து போய் லைற்றை அணைத்து விட்டு தூங்கப் போனான்.
அவனால் அணிவிக்கப்பட்டு அவனாலே துச்சாதனம் செய்யப்பட்ட அந்த இரண்டு உள்ளாடைகளும் கட்டில் காலடியில் விழுந்து கிடந்தன. இதுக்காகத்தானா டென் மார்க்கில் இருந்து என்னிடம் வந்தாய்..? "இதுக்காகத்தானா அப்பா, அம்மா எல்லோரையும் விட்டு என் வாழ்க்கையை உன்னிடம் ஒப்படைக்க வந்தேன்?
மீண்டும் பதில் தெரியாத கேள்விகள் கண்ணிரில் கரைந்து போய்க் கொண்டிருந்தன.

சங்கானைச் சண்டியன் 209
பங்கர் கிடங்கு வெட்டும்பொழுது அவனது பங்கை முடித்து விட்டு தனக்காகக் கை கொடுக்கும் அந்த செந்திலின் முகம் மெதுவாக அவள் முன் வந்து போனது. நீ எண்டால் இப்பிடியா செய்வாய் செந்தில். அவள் மனது முணு முணுத்தது.
செந்தில்! கோமதி இயக்கத்துக்கு வந்து சேர்ந்தபொழுதுதான் அவன் இந்தியாவுக்கு றெயினிங்கிற்குப் போய்விட்டுத் திரும்பியிருந்தான். சவரம் செய்யாத தாடி. யாரையும் அலட்சியம் செய்யாத பார்வை. இடுப்பில் தொங்கும் சின்ன ரிவோல்வர், ஒரு எறிகுண்டு. இந்தியாவில் தங்கியிருந்தபொழுது யாரோ ஒரு ஆட்டோக் காரன் இவனை மலையாளி என நினைத்து கதைக்க, இவனும் சுத்தமான யாழ்ப்பாணத் தமிழில் கதைத்துக் கொண்டு போக, கடைசியாய் ஆட்டோக்காரன் கேட்டா னாம் - "மம்முட்டி உங்களுக்கு என்ன வேணும்” என்று. இவனும் தன் வாய்க்கு வந்தபடி "என்ரை பெரியப்பா மகனாக்கும்” என்று சொல்ல ஆட்டோக்காரன் அன்று காசே வேண்டவில்லையாம். அதிலிருந்து செந்திலுக்கு முன்னால் மலையாள என்ற அடைமொழியும் சேர, மல்லாகச் செந்தில் இயக்கப் பொடியன்களிடையே மலை யாளச் செந்திலாகினான். அதற்கேற்ற மாதிரி ஒரு முறுக்கு மீசை வைக்கத் தொடங்கியிருந்தான். செந்தில் கோமதியை விட நாலு வயது மூத்தவன்.
கோமதி இருந்த பிரிவுக்கு செந்தில்தான் றெயினிங் பொறுப்பு மிகவும் கடுமையாக நடந்துகொள்வான்.

Page 107
210 வி. ஜீவகுமாரன்
மீசையை முறுக்கிக்கொண்டு அவன் வருவதைக் கண்டால் அனைத்துப் பெண் பிள்ளைகளுக்கும் பயம். ஆனால் கோமதி அவனைச் சீண்டியபடியே இருப்பாள். ஒருநாள் கோமதி சக தோழிகளிடம், “மீசை முறுக்கினால் போலை வீரபாண்டிய கட்ட பொம்பனோ" என்று பகிடியாகக் கதைத்தது செந்திலுக்குக் கேட்டு விட்டது. அன்று அவளுக்கு தண்டனை றெயினிங் முடிந்தபின்பு றெயினிங் திடலைச் சுற்றி நூறு தடவை ஓடவேண்டும் என்பதுதான். ஒன்று. இரண்டு. என்று வெயிலுக்குள் ஓடத் தொடங் கியவள். அறுபத்தைந்தாவது தடவை மைதானத்தைச் சுற்றி வந்தபோது தள்ளாடித் தள்ளாடிப் போய் ஒரு கரையில் மயங்கி விழுந்து விட்டாள். செந்தில் பயந்து போய் விட்டான். மற்ற பெண் பிள்ளைகள் வந்து தூக்கிக் கொண்டு போக அவனும் அவர்கள் பாசறைக்குப் போய் அவளுக்குநினைவு திரும்பும் வரையிலும் பக்கத்திலேயே இருந்தான். கடற்பயணத்தில் தான் பாவித்துவிட்டு மிகுதியாய் வைத் திருந்த குளுக்கோசை எடுத்து வந்து அவளின் வாயினுள்
ணித்தான். கோமதிக்கு நினைவு கொஞ்சம் கொஞ்சமாகத் திரும்பியது.
செந்திலுக்கு உயிர் வந்தது போல இருந்தது.
ஒரு குறிப்பிட்ட தண்டனையை குறிப்பிட்ட நண்பர் நிறை வேற்றத் தவறும் பட்சத்தில் அவருக்கு வேண்டப் பட்டவர் அதற்கு உதவலாம் என்று ஒரு விதிவிலக்கு இருந்தது.

ssoqaDorð-sahregurdr 211
அதிகமாக பங்கர் வெட்டும்பொழுது இதனைப் பாவிப் பார்கள்.
கோமதிக்கு இன்னும் முப்பந்தைந்து சுற்றுகள் இருந்தன. சூரியன் மேற்கே போய்க் கொண்டு இருந்தான்.
செந்தில் மைதானத்தைச் சுற்றி ஓடத் தொடங்கினான். கோமதி அவனை வைத்த கண் எடுக்காமல் பார்த்துக் கொண்டே இருந்தாள். அன்று தான் அவளுக்குள் அவளின் பெண்மை துளிர்த்தது போன்றிருந்தது. ஆனால் செந்தில் எதையும் வெளிக் காட்டிக் கொள்வதில்லை. கட்டளைகள். நிறைவேற்றல்கள். நாட்டிற்கான இலட் சியப் போராட்டம். இந்த உலகத்தினுள்ளேயே அவன் வாழ்ந்தான் - மற்ற இயக்கத் தோழர்களுடன் தொடர்புகள் என உளவுப்பிரிவு அவனில் சந்தேகப்படும் வரை! அடுத்தநாள் கோமதி றெயினிங்கிற்குப் போகும்பொழுது செந்திலுக்குப் பதிலாக வேறு ஒருவன் நின்றிருந்தான். "செந்தில் எங்கே?” "அங்கே” என ஒருத்தி சுட்டிக் காட்டினாள். செந்தில் தூரத்தில் பங்கர் வெட்டிக் கொண்டு நின்றான். "ஏன்?” "போராட்டத்தில் எதுவும் நடக்கலாம். எவனும் எப் பொழுதும் துரோகி ஆகலாம். அதுபற்றி உனக்கு கனக்க தேவையில்லை.”
கோமதியின் முகம் சிவந்தது.

Page 108
212 வி. ஜீவகுமாரன்
'இது எனக்குரிய இடம் இல்லை' என அவளின் அடிமனம் சொல்லிக் கொண்டது. பாடசாலைக்குப் போக அடம் பிடிக்கும் பிள்ளையாகவே அடுத்த அடுத்த நாட்கள் அவள் றெயினிங்கிற்குப் போனாள். தூரத்தில் செந்தில் பங்கர் வெட்டிக்கொண்டு நிற்கும் பொழுது அவளால் றெயினிங்கில் கவனம் செலுத்தவே முடியவில்லை. விளைவு? தண்டனை - அடுத்த இரண்டு கிழமைக்கும் செந்தில் பங்கர் வெட்டும் பகுதியில் அவளும் பங்கர் வெட்ட வேண்டும்.
மனம் விரும்பி ஏற்றது. அந்த மீசைக்காரனின் புன்சிரிப்புக்குக் கிட்டவாக அவள் அண்மித்தபொழுது மண்வெட்டி ஆழமாகவே நிலத்தி னுள் பாய்ந்தது. அடுத்த ஆறு நாட்களும் பொழுது போனதே தெரிய வில்லை. அவளுக்குக் களைப்பு ஏற்படும்போது செந்திலும் ஒரு கை கொடுப்பான். இது அவளுக்கு நன்கு பிடித்தி ருந்தது. "செந்தில், உன் வாயைத் திறந்து உன் உள்ளத்துக்குள் இருப்பதைச் சொல்லமாட்டாயா' என மனம் இருந்து தவிக்கும்.
ஏழாம் நாள் செந்திலைக் காணவில்லை. எல்லோரிடத்தும் கேட்டுப் பார்த்தாள்.
பதில் ஒன்றுதான்.
“போராட்டத்தில் எதுவும் நடக்கலாம்.”

*6Tabaré sairepuUdir 2 13
அவன் தன்னுள் உடைந்து போனாள்.
செந்திலின் நினைவுக் கீறல்களிலும், தாம்பத்தியத்திற்கு சுரேன் காட்டிய வரைவிலக்கணத்தின் வேதனையிலும் கோமதி நித்திரை இல்லாது தவித்துக் கொண்டிருக்க. தன் மகனுக்கு நல்ல மனைவி கிடைத்துவிட்டாள் என்ற திருப்தியில் சுரேனின் பெற்றோரும். தங்கள் மகளை இலங்கை நரகத்தில் இருந்து டென்மார்க் என்ற சொர்க்கத்துக்கு அனுப்பிப் போட்டம் என்ற திருப்தியில் கோமதியின் பெற்றோரும் நிம்மதியாகத் தூங்கிக் கொண்டு இருந்தார்கள்.
சிங்கப்பூரில் இருந்த அடுத்த இரண்டு நாட்களும் கோமதிக்கு சுரேனினால் எந்தப் பிரச்சனையும் இருக்க வில்லை.
இயற்கை அவளுக்கு உதவியிருந்தது. இது சுரேனை எட்ட நிற்க வைத்தது. எப்பவும் இப்படியே இருந்தால் எவ்வளவு நன்றாய் இருக்கும் என ஒருகணம் யோசித்தாலும், 'இதுதான் இயற்கையா? இதுவும் சேர்ந்ததுதான் எம் திருமணபந்தங்களா? இந்த வேதனைகளிலிருந்துதான் பிள்ளைகளைப் பெற்றுக் கொள்ளுகிறோமா? என மீண்டும் மீண்டும் விக்கிர மாதித்தன் போல் விடைதெரியாத கேள்விகளை மனம் அடுக்கிக்கொண்டு போனாலும். மனத்தின் ஒரு மூலையில் தான் ஒரு பிழையான இடத்தில் சிக்கிக் கொண்டுவிட்டேனோ? என்ற ஒரு ஐயப்பாடும் அவளுள் எழாமல் இல்லை.

Page 109
214 வி. ஜீவகுமாரன்
இதைத் தவிர வெறுத்துத் தள்ளும் அளவுக்கு அவன் அந்தளவு மோசமாகவும் நடக்கவில்லை. அவள் விரும் பினாலும் சரி, விரும்பாவிட்டாலும் சரி, மாப்பிள்ளை தோரணையுடன் அவளுக்கு விதம் விதமான உடுப்புகளை வேண்டிக் கொடுத்தான். டென்மார்க்கின் காலநிலை மாற்றங்கள். அதற்கேற்ப மாறும் உடைக் கலாச்சாரங்கள் பற்றியெல்லாம் கதைகதையாக கோமதிக்கும் தன் பெற்றோருக்கும் சொன்னான். அல்லது. சொல்லுவதில் பெருமைப்பட்டான். ' டென்மார்க்கில் குடும்ப உறவுகள். திருமணத்துக்கு முன் சேர்ந்து வாழ்வது. பிடிக்காவிட்டால் வேறு துணையை நாடுவது. இது உன் பிள்ளை. இது என் பிள்ளை. இது எங்கள் பிள்ளை. என்ற வாழ்க்கைத் தத்துவத்தை எல்லாம் தானும் ஆமோதிக்குமாப்போல் கதைத்துக் கொண்டு இருந்தான். சுரேனின் பெற்றோருக்கு அவன் நன்கு மாறிவிட்டான் என்று தெரிந்தது. இப்பொழுதுதான் கோமதியின் மனதில் முதன் முறையாக ஒரு சின்னக் கீறல் விழுந்தது. சுரேனுக்கும் டெனிஷ்காரர் போல் ஏதாவது பாகம் ஒன்று?. தன் கற்பனைக்கு அவளால் நிஜ உருவம் கொடுத்துப் பார்க்கவே முடியவில்லை. ஆனாலும் மனதின் உறுத் தலை முற்றாகவும் தூக்கி எறிய முடியவில்லை. பகிடியாகக் கேட்போம் என நினைத்தாலும் அந்தக் கேள்வியால் தனக்கும் அவனுக்கும் பெரிய இடைவெளி வந்துவிடும் என்ற நினைப்பில் எதுவுமே கேட்கவில்லை.

sabarš staigudr 215
அறிவு சொல்வது. மனம் அதனைக் கேட்பது. அல்லது மறுதலிப்பது. இதொன்றும் புதிதில்லையே. ஆனால் போராட்டத்தில் இது எல்லாம் இயற்கை என்ற தத்துவத்தில் வளர்ந்த அவளுக்கு இதை மட்டும் ஏனோ இயற்கை என எடுத்துக் கொள்ள முடியவில்லை. எங்கேயோ. எதிலேயோ. ஏதோ ஒரு தவறு நடந்திருக் கிறது என்ற ஐயப்பாடு அவளுள் வளர்ந்துகொண்டே போனது. அது, திருமணத்துக்கு மூன்றாம் நாள் சுரேனுடன் டென் மார்க் விமானத்தில் ஏறி இருக்கும்வரை அவளுடன் கைகோர்த்துக் கொண்டே வந்தது.
கேரிமதியைக் கூட்டி வந்து மனநோய் மருத்துவருக்கு முன்னால் இருத்தினார்கள். மருத்துவருக்குப் பக்கத்தில் மொழிபெயர்ப்பாளரும் கோமதிக்குப் பக்கத்தில் இரண்டு நேர்ஸ்மாரும் அமர்ந் திருந்தார்கள். கடந்த மூன்று நாட்களாகக் கட்டிலில் கட்டிப் போட்டிருந்த தால் இரண்டு மணிக்கட்டுகளும் சிவந்து போய் இருந்தன. அதனை நேர்ஸ்மார் ஆதரவாகத் தடவி விட்டுக்கொண்டு இருந்தார்கள். “உங்களுக்கு நாங்கள் என்ன செய்தால் நீங்கள் சந்தோஷப்படுவியள்?” கோமதி சுற்றும் முற்றும் பார்த்தாள்.

Page 110
216 வி. ஜீவகுமாரன்
அவளின் முகம் இருண்டு கொண்டு வந்தது. “எனக்கு என்ரை இரண்டு பிள்ளையஞம் வேணும்.” மனோதத்துவ வைத்தியர் தலையைக் குனிந்தார். "அது நடக்காது எண்டு உங்களுக்குத் தெரியும்.” “பேந்தேன் என்னைக் கூப்பிட்டுவைச்சுக் கதைக்கிறியள்.” “உங்களுக்கு ஏதாவது வகையிலை உதவி செய்ய விரும்
DD...
ஏளனமாகச் சிரித்தாள்.
மருத்துவரின் கையில் இருந்த கொப்பியையும் பேனை யையும் பிடுங்கி எடுத்தாள்.
"அப்பிடி நீங்கள் செய்யக்கூடாது". மொழிபெயர்ப்பாளர் தன்னை மீறிச் சொன்ன பொழுது கோமதியின் கண்களில் ஓர் அனல் பாய்ந்தது. மொழிபெயர்ப்பாளர் மெளனமானார்.
மருத்துவரிடம் இருந்து பறித்த கொப்பியில் மிக வேக மாக. மிக மிக வேகமாக ஒரு துவக்கை வரைந்தாள்.
“இது எனக்கு வேணும்.”
"ஏன்?
"அவனைச் சுடவேணும். தேவையில்லாமல் கதைச்சால் இவளையும் சுடவேணும்.”
மொழிபெயர்ப்பாளருக்கு உடம்பெல்லாம் நடுங்கியது. கோமதி அத்துடன் அமைதியடையவில்லை.
“உங்களுக்கு டெனிஷ் பாஷை தெரிஞ்சால் நீங்கள் எல்லாம் கொம்போ? எனக்கு பாஷை தெரியாதபடியாலைதானே

சுங்தானைச் சண்டியன் 217
என்ரை இரண்டு பிள்ளையையும் பறிகொடுத்தனான். இரண்டு பிள்ளையையும் பறிகொடுத்தனான்.” இப்போது கோமதி பெரிதாக அழத் தொடங்கிவிட்டாள். அவளை இரண்டு நேர்ஸ்மாரும் ஆதரவாகத் தாங்கினார்கள். மருத்துவர் இன்னோர் நாளைக்கு சம்பாஷணையைத் தொடரலாம் என மொழிபெயர்ப்பாளரை அனுப்பிவிட்டு, நேர்ஸ்மாரிடம் அடுத்த முறைக்கு இன்னோர் மொழி பெயர்ப்பாளரை ஒழுங்கு செய்யச் சொல்லிவிட்டு எழுந்து போனார்.
"அம்மா அவைக்கு சசி எண்டும் சுசி எண்டும் பேர் வைக்கச் சொன்னவா. டென்மார்க்குக்கு கலியாணம் கட்டி வாற தாருட்டையோ சசிக்கும் சுசிக்கும் சட்டை குடுத்து விடுறன் எண்டவா.” நேர்ஸ்மார் ஒன்றும் புரியாமல் பார்த்துக்கொண்டு நின்றார்கள். ஆனால் கோமதி மகிழ்ச்சியாக ஏதோ கதைக்கிறாள் எனப் புரிந்தது. ஆனால் ஒரு வினாடிதான். அவளின் முகம் மாறி விகார மடைந்தது. “யாரையும் டென்மார்க்கிற்கு வரவேண்டாம் என்று சொல்லுங்கோ. வரவேண்டாம் என்று சொல் லுங்கோ.” இப்போவும் நேர்ஸ்மாருக்கு ஏதும் விளங்காவிட்டாலும் டென்மார்க், டென்மார்க் என்று அவள் திரும்பத் திரும்ப சொல்வது புரிந்தது.
“வட் டு யூ மீன் பை டென்மார்க்?”
கோமதி யன்னலை நோக்கிப் போனாள்.

Page 111
218 வி. விவகுமாரன்
யன்னல் கம்பிகள் இரண்டையும் அழுத்திப் பிடித்தபடி வெளியுலகத்தைப் பார்த்தபடி, “டென்மார்க் பாட். டென்மார்க் பாட்.”
மீண்டும் மீண்டும் அவள் குழறியது கிட்டத்தட்ட அனைத்து வாட்டுகளுக்கும் கேட்டிருக்க வேண்டும். பக்கத்து வாட்டில் நின்றிருந்த டாக்டர் ஓடிவந்து அடுத் தொரு கிழமைக்கும் கோமதியைக் கட்டியே வைத்திருக்கச் சொல்லிக்கொண்டு கொஞ்சம் அதிகமாகவே தூக்க மருந்தை ஊசிமூலம் ஏற்றினார். சிவந்திருந்த மாலைச்சூரியன் கடலுள் இறங்கிக் கொண்டு இருந்தான்.
டென்மார்க், இலங்கையை 180 பாகையால் திருப்பி விட்டது போன்றி ருந்தது கோமதிக்கு அது காலநிலை என்றால் என்ன. கலாச்சாரம் என்றால் என்ன. விமானத்தால் வந்திறங்கியபொழுது சுரேனின் தமிழ், டெனிஷ் நண்பர்கள் என ஒரு பட்டாளமே கைகளில் பூக்கொத்துகளோடும், டென்மார்க் கொடிகளுடனும் வரவேற்கக் காத்திருந்தார்கள். சுரேனை ஆண்-பெண் என்ற எந்த வித்தியாசமுமே இல்லாது அனைவரும் கட்டித் தழுவியும், கோமதிக்குக் கை கொடுத் தும் தங்கள் வாழ்த்தைத் தெரிவித்துக் கொண்டார்கள்.

sabarš sairgudr 219 "யூ ஆர் வெறி பியூட்டிபுல்” என ஒரு டெனிஷ்காரி பாராட் டியது கோமதிக்கு மகிழ்ச்சியையும், நண்பர் கூட்டத்துக்குள் இருந்த ஒருவன் தங்களுக்குள், "சூப்பர் கட்டையடா’ எனக் கதைத்தது அருவருப்பையும் கொடுத்தது. அனைவருமே அவரவர்கள் காரில் ஏறி டென்மார்க்கின் அகலத் தெருக்களில் மிதக்கத் தொடங்கினார்கள். டீசல் மணமும், மண்ணெண்ணெய் மணமும், ஹோர்ன் சத்தங்களும் இல்லாத அமைதியான தெருக்களில் போவது ஒரு புதிய அனுபவமாகவே இருந்தது. மேலாக எந்தத் தெருமுனையில் இருந்து எவன்மறிப்பான், எந்த றோட்டுக்கரையில் இருந்து எந்த வெடி தீரும் என்ற எந்தக் கவலையும் இல்லாது இப்படி காரில் மிதந்து போகும் நாள் என்றுதான் இலங்கையில் வருமோ என அவள் மனம் எண்ணிக் கொண்டது. “எப்படி இருக்கு கார்?” சுரேனாகவே பேச்சுக் கொடுத்தான்.
“நல்லாய் இருக்கு.”
“எவ்வளவு காசு தெரியுமா?”
“தெரியாது.”
“சும்மா சொல்லும் பார்ப்பம்.”
“தெரியாது." "பறவாயில்லை. சும்மா ஒரு கணக்குக்கு சொல்லும் பார்ப்பம்.”
"இலங்கை காசுக்கு ஒரு 5 லட்சம்?”
சுரேன் கடகட எனச் சிரித்தான்.

Page 112
220 வி. ஜீவகுமாரன்
"50 லட்சம். அதாவது 250 ஆயிரம் குறோன்கள்.” கோமதிக்கு நம்பவே முடியவில்லை. தனக்கு நகைகள் செய்து கொடுக்க ஒர் 2 லட்சத்துக்கு தாயும் தகப்பனும் பட்ட பாட்டை எண்ணிப் பார்த்தாள். “உங்களிட்டை இவ்வளவு காசு இருக்கா?” “இல்லை” எனக் கை விரித்தான்.
“பிறகு எப்படி இது?” “அதெல்லாம் பாங்கிலை இன்ஸ்ரோல்மென்ற்றிலை எடுக் கிறதுதான். மாதம் மாதம் சம்பளக்காசிலை கட்டுறது தான். இப்பிடித்தான் இங்கை எல்லாம். நான் இருக்கிற பிளட்ஸ்சும் அப்படித்தான்.” "அப்ப வேலை இல்லாமல் போய் விட்டால்.”
"எல்லாம் அம்போதான். வேலையில்லா காசு கிடைக்கும். அதுவும் கொஞ்ச நாளைக்குத்தான். இல்லாட்டி பாங் எல்லாத்தையும் திருப்பி எடுத்துப்போடும். அதாலைதான் இங்கை இரண்டு பேரும் சேர்ந்து வேலை செய்ய வேணும். உம்மையும் கெதியாய் ஏதாவது ஒரு இடத் திலை வேலைக்குச் சேர்க்க வேணும்.” அத்திவாரம் இல்லாக் கட்டடத்துள் இந்த மன்னர்கள் அரசாட்சி நடத்துகிறார்கள் என்று எங்கேயோ வாசித்த வரிகள் நினைவில் வந்து போயின. கார் ஓடிக்கொண்டேயிருந்தது. அடுத்த அரைமணி நேரத்தினுள் சுரேன் தான் வசிக்கும் அடுக்குமாடிக் கட்டடத்தின் முன்பாகக் காரை நிறுத்தினான். முன்னாலும் பின்னாலும் வந்த சுரேனின் நண்பர்களின் கார்களிலிருந்து அனைவரும் இறங்கினார்கள்.

artiarraidari ar airgiudir 221
பின்பென்ன?. சுரேன் வீட்டு சின்ன வரவேற்பறையில் சோபாக்களிலும். இடம் இல்லாதவர்கள் நிலத்திலும் இருந்து சுரேன் டியூட்டிபிறி கடைகளில் வேண்டி வந்த சிவாஸ் ரீகலையும் பிறின்ஸ் சிகரட் பெட்டிகளையும் தாமாகவே திறக்கத் தொடங்கினார்கள். நேரம் செல்லச் செல்ல ஆங்கிலம், தமிழ், டெனிஷ் அனைத்து மொழிகளிலும் ஆளுக்காள் அரசியலும். ஆங்கிலத் தமிழ்ப்பட விமர்சனங்களும். நடாத்தத் தொடங்கினார்கள். 58 கலவரம் தொடக்கம் அண்மையில் நடந்த கிளிநொச்சி தாக்குதல் வரையிலும். பராசக்தி தொடக்கம் பருத்திவீரன் வரையிலும் ஒன்றையுமே விட்டு வைக்கவில்லை. “டே பருத்திவீரனில் கடைசிலை அந்த குரூப் செக்ஸை இன்னும் வடிவாய் காட்டியிருக்கலாமடா.”
“டே. அது குரூப் செக்ஸ் இல்லையடா. குரூப் ரேப்படா.”
"நோ. நோ. அது குரூப் ரேப் இல்லையடா. குரூப்பாய் வந்தவங்கள் தனித்தனியாய் செய்த ரேப்படா.” கோமதிக்கு முகம் சுருங்கியது. "சொறி சிஸ்டர். நாங்கள் ஒன்றும் தப்பாய் கதைக் கேல்லைத்தானே.” கோமதி இல்லை என்பது போலத் தலையாட்டிவிட்டு அவ்விடத்தை விட்டகன்று சமையலறைக்குப் போனாள். சுரேன் நண்பர்கள் கொண்டுவந்திருந்த உணவை அனை வருக்கும் பரிமாற ஆயத்தம் செய்துகொண்டு இருந்தான். அவனது கையும் சாடையாகத் தடுமாறிக் கொண்டிருந்தது.

Page 113
222 வி. ஜீவகுமாரன்
“விடுங்கோ நான் போடுறன்.” “நீர் எனக்கும் வெறி எண்டு நினையாதையும். ஜஸ்ற். என்ஜோய்தான்.” கோமதியே உணவை எல்லாத் தட்டுகளிலும் போட்டு அனைவருக்கும் பரிமாறினாள்.
ஒரு டெனிஷ் பெண்ணும் கோமதிக்கு வந்து உதவினாள். அந்தப் பெண்ணின் வாயிலிருந்த சிகரட் புகை கோமதிக்கு செருமலெடுக்க வைத்தது. “சொறி. சொறி” என தன் சிகரட்டை அணைத்துக் கொண்டு, “யூ ஆர் கியூட்” என கோமதிக்கு முத்தமிட்டாள். அவ்வாறே திரும்பி, "யூ ஆர் லக்கி” என சுரேனுக்கும் முத்தமிட்டாள். “தாங்ஸ்” - சுரேன் வழியுமாப் போல் இருந்தது. குசினி மூலைக்குள் கிடந்த குப்பைப் பையினுள் அவளைப் போட்டு வெளியில் தூக்கி எறிய வேண்டும் போல் இருந்தது கோமதிக்கு. சாப்பிட்டு முடிய போத்தல்களும் முற்றாகக் காலியாக ஆளுக்காள் போவதற்காக எழுந்து கொண்டார்கள். “நாங்கள் பாருக்கு போறம். நீயும் வாறியா” என சுரேனிடம் ஒருவன் கேட்டான். “டே. அவனுக்கு டென்மார்க்கில் இண்டைக்கு பெஸ்ற் நைற். டோன்ற் டிஸ்ரேப்” என மற்றவன் அனைவரையும் இழுத்துக் கொண்டு போனான். பெஸ்ற் நைற் என்ற சொல் அவளின் வயிற்றைக் குமட்டியது - அங்கிருந்த சிகரட் புகையுடன் சேர்ந்து.

aparš sirguar 223
காலியான அறையை சிகரட் புகை முட்டவைத்துக் கொண்டிருந்தது. கோமதிக்கு அந்தப் புகை செருமலெடுக்க வைத்தது. எல்லோரும் போனபின்பு கோமதி வீட்டை ஒதுக்கத் தொடங்கினாள். சுரேன் சோபாவிலே தூங்கி விட்டான். அல்லது அவன் நண்பர்களுடன் சேர்ந்து குடித்த குடிவகைகள் அவனைத் தூங்க வைத்துக் கொண்டிருந்தது. குடித்துப் போட்ட பியர் போத்தல்கள், பியர் ரின்கள், நிலத்தில் விழுந்து கிடந்த சிகரட் கட்டைகள் அனைத்தை யும் அருவருப்புடன் எடுத்துக் கொண்டு போய் குப்பைத் தொட்டியில் போட்டாள்.
புகுந்த நாடும் சரி. புகுந்த விடும் சரி இரண்டும் புதிது என்பதற்கிணங்க அங்கிருந்த உணவு வகைகளும் சரி. பாத்திரங்களும் சரி. புதிதாகவும் வித்தியாசமாகவும் தோன்றின.
இப்பொழுதுதான் வீடு வீடாகியது.
ஒரு தரம் தலையில் குளித்தால் இரவுப் பயணக் களைப் பிலும், இவ்வளவு நேரமும் உடுப்பிலும் உடம்பிலும் படிந்த சிகரட் புகைகளிலும் இருந்து விடுதலை கிடைக்கும் போல் தோன்றவே குளியலறையுள் போய் தாழ்ப்பாளைப் போட்டுக் கொண்டு ஷவரை நன்கு திறந்து விட்டாள்.
கண்ணை மூடிக்கொண்டு ஷவரில் இருந்தும் தலையி லிருந்தும் கொட்டும் தண்ணிர் முகம் வழியாக ஓடிக் கொண்டிருக்க இதமாய் இருந்தது. இந்த சுகத்தை சுவரில் சாய்ந்தபடி அனுபவித்துக் கொண்டிருந்தாள். சுமார் அரை

Page 114
224 வி. ஜீவகுமாரன்
மணித்தியாலக் குளிப்பிற்குப் பின்பு புது ஆடை ஒன்றை அணிந்து கொண்டு வெளியே வந்தாள்.
சுரேன் இப்பவும் தூங்கிக் கொண்டு இருந்தான். நேரம் மாலை ஐந்து மணியை எட்டிக்கொண்டு இருந்தது.
குளித்ததற்கு சூடாக ஒரு கோப்பி குடித்தால் நன்றாக இருக்கும் போல் இருக்க அதையும் ஊற்றிக்கொண்டு வந்து சோபாவில் அமர்ந்தாள். ரீ.வியைப் போட்டுப் பர்ர்த்தால் தனிமைக்குத் துணையாக இருக்கும் போல் இருந்தாலும் ரீ.வியில் எந்த சனல், எங்கு இருக்கும் என்று தெரியாததாலும், ரீவிச் சத்தம் சுரேனின் நித்திரையைக் குழப்பிப் போடலாம் என்ற தயக்கத் தினாலும் அந்த ரீ.வி. திட்டத்தைக் கை விட்டாள்.
மாறாக ஏதாவது புத்தகங்கள் இருந்தால் வாசிக்கலாம் என்ற எண்ணத்தில் சுரேனின் கொம்பியூட்டர் அமைந் திருந்த புத்தக அலமாரியைப் பார்த்தாள். அனைத்தும் ஆங்கில அல்லது டெனிஷ் புத்தகங்கள் தான்.
ஆனால் நிலமட்டத்துடன் இருந்த கடைசித் தட்டில் ஒரு கடதாசிப் பெட்டியின் கீழ் சினிமாப்புத்தகங்களின் அளவில் பல சஞ்கைகள் அடுக்கி வைக்கப்பட்டிருந்தன.
அதில் ஒன்றை உருவி எடுத்த பொழுது அவள் கண்களை அவளால் நம்ப முடியவில்லை. மேலாக வயிற்றைக் குமட்டிக் கொண்டு வந்தது. அத்தனையும் பெண்களும், ஆண்களும் நிர்வாணமாக. வண்ண வண்ணப் படங்களில் . என்ன கேவலம் இது?. ஒரு பெண் பல ஆண்களுடனும். ஓர் ஆண் பல பெண் களுடனும். பெண்களும் பெண்களுமாக. ஒரு புத்தகம் மட்டுமில்லை. கட்டுக்கட்டாக.

spilsóTapari sabreguydr 225
கோமதிக்கு மனம் படபடத்தது. திரும்பி சுரேனைப் பார்த்தாள். அவன் இப்பவும் தூங்கிக் கொண்டுதான் இருந்தான். "இதுக்காகத்தானா என்னட்டை சிங்கப்பூருக்கு வந்தாய்? "இதுக்காகத்தானா என்னை இஞ்சை கொண்டு வந்து இருக்கிறாய்? இதற்கு மேல் அவளால் எதுவும் யோசிக்க முடியவில்லை.
கையில் எடுத்த புத்தகத்தை மீண்டும் இருந்த இடத்தில் கொண்டு போய் வைத்துவிட்டு அறைக்குள் போய் படுத்துக் கொண்டாள்.
ஆனாலும் கண்களை மூட முடியவில்லை.
இந்த ஒரு கிழமையில் சிங்கப்பூர் வந்தது தொடக்கம் தான் அனுபவித்த வேதனைகளும் சுரேன் அனுபவித்த சந் தோஷங்களும் அந்தப் புத்தகங்களின் பக்கங்களும் அவள் கண் முன்னே மாறி மாறி வந்து போயின.
மூன்று வேளை கஞ்சிக்கு கஷ்டப்பட்ட ஒரு குடும்பத்தில் பிறந்திருந்த போதிலும் சரி, இயக்கத்துக்குப் போய் அங்கு ரெயினிங் அது இது என்றும் கடைசியில் பங்கர் கிடங்கு கிண்டிய போதும் சரி. இயக்கத்தால் வந்தபிறகு ஆமிக் காரன்களுக்கு பயந்து ஒளிந்து திரிந்தபொழுதும் சரி. இந்த ஒரு கிழமையுள் அவள் உடல் + மனம் பட்ட இவ்வளவு வேதனைகளை முன்னொருபோதும் சந்தித்திருக்கவில்லை.
வெளிநாட்டுத் திருமணங்கள். ஏமாற்று வித்தைகள். இப்படி எத்தனையோ கதைகளைக் கேட்டிருந்தாலும், தனது அனுபவங்கள் போல் யாரிடம் இருந்தும் கேள்விப் பட்டிருக்கவில்லை. அல்லது தாம்பத்தியம் என்பது நாலு

Page 115
226 வி. ஜீவகுமாரன்
சுவருக்குள் உட்பட்ட விடயம் என்பதால் அமுக்கி வாசிக்கப்பட்டு விட்டதோ என அவளுக்குத் தோன்றியது. மேலாக இது சுரேனுக்கு மட்டும் பொருந்துமா?. அன்றில் அனைத்து வெளிநாட்டு மாப்பிள்ளைகளுக்கும் பொதுமைப்படுத்தப்படுமா? கேள்விகளை மீண்டும் மனம் அடுக்கிக் கொண்டு போனது. வெளியில் சுரேன் எழும்பிய அரவம் கேட்டது. ஐயையோ என்றது மனம். அவன் குளியலறைக்குள் போய் தாழ்ப்பாள் போட்டது கேட்டது. "அப்பாடா” என்று மீண்டும் மனம் இளைப்பாறியது. கொஞ்ச நேரத்தில் சுரேன் குளியலறையில் இருந்து வெளியே வந்து அவள் படுத்திருந்த அவர்களது படுக்கை அறையைத் திறந்தான். கோமதி கண்களை இறுக்க மூடிக்கொண்டாள். பக்கத்தில் வந்திருந்து மெதுவாக அவளின் தலையை வருடினான்.
கோமதி கண்ணைத் திறந்து பார்த்தாள். “என்ன நீரும் நித்திரை கொண்டனிரோ?” “இல்லை” எனத் தலையாட்டினாள். “கோப்பி ஊற்றித் தரட்டுமா” என்று எழுந்தவளை
மெதுவாக அணைத்துக் கொண்டான்.
அந்த அணைப்பு அவளுக்குப் பிடித்திருந்தாலும், சற்று நேரத்துக்கு முன் பார்த்த சஞ்சிகைகள் அவன் கைகளை விலத்த வைத்தன.

tr:ủawaborằ #ahrguJởr 227
எழுந்து குசினிக்குப் போனாள்.
சுரேனும் ஹோலில் இருந்து தான் சிங்கப்பூருக்குப் போயிருந்த சமயம் வந்திருந்த கடிதங்களைப் பார்வையிடத் தொடங்கினான். கட்ட வேண்டிய பில்லுகளும் தொகைகளும் எண்ணிக் கையில் நன்கு கூடியிருந்தது. கோப்பியைச் சுரேனுக்குக் கிட்டவாக வைத்துவிட்டு “இரவுக்கு என்ன சாப்பாடு செய்யுறது” எனக் கேட்டாள் கோமதி.
"நோ. நோ. இண்டைக்கு நோ சமையல். நாங்கள் இரண்டு பேருமாய் போய் ஏதாவது ரெஸ்றோறண்டிலை சாப்பிட்டு ஏதாவது படமும் பார்த்திட்டு வருவோம்.” அது அவளுக்குப் பிடித்திருந்தது. “தமிழ்ப் படமா?” வியப்புடன் கேட்டாள். "நோ. எப்பவாவதுதான் தமிழ்ப் படம் வரும். மற்றும்படி இங்கிலிஷ் படம்தான். பாஷை விளங்காட்டியும் படம் பார்க்கலாம்தானே” என்றவாறு சுரேன் உடுப்பு மாற்றத் தொடங்கினான்.
டென்மார்க் இரவில் அழகாய்த் தான் இருந்தது. அழகான லைற்றுகள். அமைதியான தெருக்கள். ஆளை ஆள் அணைத்தபடி செல்லும் அன்னியோன்னியமான உறவுகளின் நெருக்கம் - அது இருபதாய் இருந்தாலும் சரி. எண்பதாய் இருந்தாலும் சரி.

Page 116
228 வி. ஜீவகுமாரன்
சுரேனும் கோமதியின் கையைப் பிடித்தபடி அந்த நடை பாதையில் போய்க்கொண்டிருந்தான். இது கோமதிக்குப் பிடித்திருந்தாலும் மீண்டும் அந்த சஞ்சிகைகளில் பார்த்த படங்கள் அவள் கண்முன்னே வந்தபோது, அவன் கைகளை உதற வேண்டும் போல் இருந்தது.
இருவருமே ஒரு ரெஸ்றோறண்டுக்குள் நுழைந்து கொண்டார்கள். சிங்கப்பூரில் எல்லோரும்ாய் போய் சாப்பாட்டுக் கடைகளில் சாப்பிட்டதற்கு, இப்பொழுது மெல்லிய மெழுகுவர்த்தி வெளிச்சத்தில் சுரேனுடன் எதிர் எதிராய் இருந்து சாப்பிடு வது ஒரு புதிய அனுபவமாய் இருந்தது. வழமைபோல் சுரேன் ஒரு பியரை வரவழைத்து அதன் நுரையை அனுபவித்தபடியும் கோமதி கொக்கோ கோலாவைச் சுவைத்தபடியும் சுடச்சுடப் பரிமாறப்பட்ட அந்த பொரித்த டெனிஷ் கோழிகளை இரண்டு பேரும் உண்ணத் தொடங்கினார்கள். நேரம் போய்க் கொண்டிருந்தது.
சுரேன் அடுத்த அடுத்த நாள் எங்கு எங்கு போக வேண்டும், எப்படி பதிவுகள் செய்ய வேண்டும், எப்போ கோமதி டெனிஷ் பாஷை கற்க வேண்டும் என்று எல்லாம் சொல்லிக் கொண்டு இருக்க, புது உலகத்தில் தானும் எதிர்நீச்சலடிக்க தனக்குள் தான் தயார் ஆகிக்கொண்டிருந்தாள். இருவரும் சாப்பிட்டு முடித்தபொழுது சுரேன் தனது மணிக்கூட்டைத் திருப்பிப் பார்த்தான். “இப்ப ஏழரை மணி. எட்டு மணிக்கு படம் தொடங்கும். வாரும்” என இருக்கையில் இருந்து எழுந்து கொண்டான்.

சங்காணைச் சண்டியன் 229
கோமதியும் பின்தொடர்ந்தாள். தியேட்டருள் ஆங்காங்கே ஆட்கள் தனியாகவும் சோடி யாகவும் இருந்தார்கள். இந்தியா, இலங்கை போல் அதிக கூட்டமில்லாமல் இருந்தது கோமதிக்கு பெரிய ஆச்சரி uJLDTu (S(5jög5g5. சிறிது நேரத்தில் விளம்பர சிலைடுகள் போடப்பட்டன. தியேட்டரின் வெளிச்சம் படிப்படியாகக் குறைந்து வர படம் தொடங்கியது. திரையில் காட்டப்பட்ட படத்தின் ஆரம்பக் காட்சி கோமதிக்கு தெளிவாகப் புரியவில்லை. ஏதோ ஒரு சம்பவத்தை மிக அருகாகப் படம் பிடித்திருந்தார்கள். அடுத்த செக்கன்களில் கமரா பின்னால் போக கோமதிக்கு நம்பவே முடிய வில்லை. ஓர் ஆணும் பெண்ணும் உடல் உறவு கொள்ளும் காட்சி. இருவரும் நிர்வாணமாக. சுதனின் வீட்டில் ஒரு புத்தகத்தில் படங்களாகப் பார்த்தது. இங்கு திரையில் நிஜமாக. ஆணும் பெண்ணும் முனகும் சத்தங்களுடன். கடவுளே. கோமதி கண்களை மூடிக்கொண்டாள். சுரேனைத் திரும்பிப் பார்த்தாள். அவனின் கண்கள் சுவாரஸ்யமாக திரையில் பதிந்தபடி.
"எழும்புங்கோ போவம்.”
"சும்மா இரும். இதுகள் ஒண்டும் தப்பில்லை. இதுகளைப் பார்த்தால்தான் நீரும் நானும் சந்தோஷமாக இருக்க லாம்.” கோமதியை எழ விடாது சுரேன் அவளின் கைகளை இறுக்கமாகப் பிடித்துக் கொண்டான்.
கோமதிக்கு அருவருப்பு மீற கண்களை மூடிக் கொண்டாள்.

Page 117
230 வி. ஜீவகுமாரன்
என்ன கரும உலகத்துக்கு வந்து இருக்கிறன் என மனத்துக்குள் அழுதாள். இப்படி ஒரு படம் களவாக ஓடியதற்காக இயக்கம் நாலுபேரை மொட்டையடித்து முள்ளியவளைச் சந்தியில் லைற் போஸ்ற்றுடன் கட்டி வைத்து அடித்ததை அவள் அறிவாள். படம் பார்த்த அனைவரிடமும் ஆளுக்கு ஆயிரம் ரூபாய் அபராதமும் கோட்டைக்குக் கிட்ட மூன்றுநாள் பதுங்குகுழி வெட்டுமாறு பணிக்கப்பட்டதும் அவளுக்கு நன்கு தெரியும். இப்போது சட்டம் அங்கீகரித்த ஒரு தியேட்டரின் நடுவில் அம்மி மிதித்து அருந்ததி பார்த்து நன்னாளில் மங்கல நாண் பூட்டிய ஒருவனின் பக்கத்தில் வலுக்கட்டாயமாக இருந்து.
தூ!
திரையில். இதெல்லாம் மனுஷ ஜென்மங்களா. ஓர் ஆண் பல பெண்களுடனும். பல ஆண்கள் ஒரு பெண்ணுடனும். பெண்களும் பெண்களும். இந்த நாட்டின் கலாச்சாரங்களையா நான் அடுத்த ஒரு வருடம் படிக்க வேண்டும் எண்டு சொன்னவை?
வயிற்றைக் குமட்டிக் கொண்டு வந்தது. சீட்டிலேயே வாந்தி எடுத்து விடுவாள் போலிருந்தது. சுரேனின் கையை விடுவித்துக் கொண்டு எழுந்தாள்.
சுரேன் மிக இறுக்கமாகப் பிடிச்சுக்கொண்டு “எங்கை போநீர்?
“கையை விடுங்கோ. சத்தி வருகுது. ரொயிலெற்றுக்கு போயிட்டு வாறன்.”

சங்கானைச் சண்டியன் 231
சுரேனின் கைப்பிடி தளர விரைவாக வெளியே வந்து ரொயிலெற்றுக்குள் நுழைந்து கொண்டாள். அங்கே வோசிங்பேசினுக்குக் கிட்டவாகப் போகவே, இவ்வளவு நேரமும் அடக்கி வைத்திருந்த சத்தி அவளை முந்திக்கொண்டு வந்தது. அடிவயிற்றில் இருந்து நெஞ் சாங்கூட்டை மேலே இழுத்துக்கொண்டு தொண்டைக் குழியைப் பிய்த்துக்கொண்டு காலையில் இருந்து சாப்பிட்ட அனைத்தும் வெளியே வந்து கொட்டியது.
கட்டி கட்டியாக மஞ்சள் மஞ்சளாக மீண்டும் மீண்டும் அடிவயிற்றில் இருந்து. கடைசியாக தொண்டைக்குழி நோப்பட்டு கொஞ்சம் இரத்தமும் வந்தது. முகம் முழுக்க வியர்க்க வியர்க்க கண்ணாடியில் தன்னைப் பார்த்தாள். நெற்றி முழுக்க நன்கு வியர்த்துப்போய் இருந்தது. தண்ணிரை இரண்டு கைகளாலும் ஏந்தி முகத்தை நன்கு அலசினாள்.
என்னதான் அலசினாலும் தியேட்டருள் பார்த்த காட்சிகள் மீண்டும் மீண்டும் கண்கள் முன்னால். மீண்டும் வாந்தி வருமாப் போல் இருந்தது. மனுசர்களை மிருகப் பிறப்பு என்று மற்றவர்கள் பேச அவள் கேள்விப்பட்டதுண்டு. ஆனால் இது. மிருகங்கள் இப்படி. ஒரு மிருகத்துடன் மற்ற மிருகங்கள். ரொயிலெற் கதவு மெதுவாய் தட்டப்பட்டது. “கோமதி. ஆர் யூ ஒல் றைற்?” மீண்டும் அவளுக்கு வாந்தி வந்தது.
சுரேனுக்குக் கேட்க வேண்டுமென்றே மீண்டும் ஒரு தரம் பெலத்து ஓங்காளித்தாள்.

Page 118
232 வி. ஜீவகுமாரன்
ரொயிலெற்றுக்கு வெளியே நின்ற ஒரு டெனிஷ்காரி கோமதியின் வாந்தியின் சத்தம் கேட்டபொழுது, “உன் னுடைய மனுசிகர்ப்பமா?” என்று ஆங்கிலத்தில் சுரேனிடம் கேட்டது கோமதிக்கு கேட்டது.
“யெஸ் ஒவ் கோர்ஸ்” என சுரேன் சொல்ல மீண்டும் கோமதிக்கு வயிற்றைப் பிரட்டியது.
இனியும் தியேட்டருக்குள் போகவேண்டும் என நிச்சயம் சுரேன் அடம்பிடிப்பான். அதற்தாகவேனும் இன்னும் சத்தியெடுப்பது போலக் காட்ட வேணும் என நினைத்தபடி மீண்டும் மீண்டும் ஓங்காளித்தாள். அவளது யுக்தி கொஞ்சம் வேலை செய்துதான் இருக்க வேண்டும். “உமக்கு இன்னமும் வாந்தி வருமெண்டால் வாரும் வீட்டை போவம்.”
பலித்து விட்டது. நன்கு களைத்தவளாக கோமதி வெளியே வந்தாள்.
சுரேன் ஒரு டக்ஸியை அழைத்து அதில் கோமதியுடன் ஏறினான்.
கோமதி பின்சீற்றில் நன்கு தலையைச் சாய்த்தவாறு கண்களை மூடிக்கொண்டு இருந்தாள். கன்னங்கள் வழியே கண்ணீர் ஓடிக்கொண்டிருந்தது. மீண்டும். மீண்டும். ஏன்?. ஏன்?. ஏன் இது நடந்தது?. ஏன் இது எனக்கு நடந்தது என்று தன்னிடமே தான் கேட்டுக் கேட்டு தன்னிடமே தான் தோற்றுக் கொண்டிருந்தாள். அம்மம்மா அம்மாக்கு அடிக்கடி சொல்லுவாவாம். அப்பாவை பசியாயிருக்க வைச்சிடாதை, பக்குவமாய்

சங்கானைச் சண்டியன் 233
கவனி எண்டு. ஆனால் இஞ்சை என்னைச் சிதைத்து சிதைத்து எந்தப் பசியை இவன் தீர்த்துக் கொள்ளப் போகின்றான்? எதுக்காக?. எதுக்காக?. வீட்டை வந்த பொழுது இரவு ஒன்பது மணியாகி விட்டது.
வாந்தி எடுத்த களையில் கோமதி அப்படியே சோபாவில் படுத்தாள். சுரேன் தானே கோப்பி ஊற்றி எடுத்து வந்து கொடுத்தான். “இதைக் குடியும். எல்லாம் சரியாகும். பயணக்களை. அதுதான்.”
கோமதி எதுவும் சொல்லவில்லை. நிமிர்ந்து ஒரு தரம் பார்த்துவிட்டு கோப்பியைக் குடித்தாள்.
கொஞ்சம் ஆறுதலாய் இருந்தது. “இப்படியே தலையை மடியிலை வைச்சுக்கொள்ளும்” என அவள் தலையைத் தன் மடியில் வைத்து தடவி விட்டுக் கொண்டு ரீ.வியில் ஏதோ சனல்களை மாற்றி மாற்றிப் பார்த்துக் கொண்டு இருந்தான். இந்த மடித்துாக்கமும் அவன் அரவணைப்பும் அவளுக்குப் பிடித்துக்கொண்டாலும் தியேட்டர் நினைவுகள் அவளை அவனை விட்டு துரத்திக்கொண்டு இருந்தது. கண்கள் அயரத் தொடங்கின. ܖ
சுரேன் ஹோலில் இருந்த லைற்றுகளை அணைப்பதை அவளால் உணரக் கூடியதாய் இருந்தன. மீண்டும் அவன் அவளருகே. அவளை மெதுவாய் அணைத்த
படி. அவளது ஆடைகளை மெதுவாக அகற்றியபடி. கோமதி கண்களை முழிக்காது சடமாகவே இருந்தாள்.

Page 119
234 வி. ஜீவகுமாரன்
இப்போது கேட்ட ஒலி அவளைத் திகைக்க வைத்தது. தியேட்டரில் கேட்ட அதே ஒலி. திடுக்கிட்டு கண்களை விழித்துப் பார்த்தாள். தியேட்டரில் ஓடிய காட்சி போல் ரீ.வி.யில். எழுந்து உள்ளே ஓடப்போன கோமதியை சுரேன் வலுக் கட்டாயமாகப் பிடித்திழுத்தான். “ஐயோ விடுங்கோ. எனக்கு உதெல்லாம் வேண்டாம். நான் அறைக்குள்ளை போறன்.” "இல்லை எனக்கிது வேணும். அதைப் பார்த்துக்கொண்டு நானும் நீரும் அது போலை.” “கடவுளே என்னால் ஏலாது.”
“எனக்கு வேணும்" - சுரேனின் குரல் இறுகியது. "அப்பிடியெண்டால் நீங்கள் ஒரு டெனிஷ்காரியைத்தான் கட்டியிருக்க வேணும்.” “ஏன் நீங்கள் எல்லாம் பெரிய பத்தினியளோ.” “சுரேன் பிளிஸ். பெரிய கதையள் கதையாதையுங்கோ. என்னாலை ஏலாது.” “அதுக்காக நான் உம்மை வீட்டை வைச்சுக் கொண்டு ஒரு டெனிஷ்காரியை காசு குடுத்துப் பிடிச்சுக்கொண்டு திரியேலாது.” சோபாவில் இருந்து எழும்ப முயற்சித்த கோமதி முற்றிலும் சுரேனின் பிடியுள் இறுகினாள். பின்பென்ன. முன்னே ரீ.வி.யில் ஒரு பெண்ணின் முனகலுடன் அரங்கேறிக் கொண்டிருந்தவை இங்கே கோமதியின் விசும்பலில் அரங்கேறிக் கொண்டிருந்தது.

சங்கானைச் சண்டியன் 235
சுரேனின் வெறி தீரும் வரை. கோமதிக்கு மீண்டும் வயிற்றுப் பிரட்டல் எடுக்கும் வரை.
சுரேன் எழுந்து போய்விட்டான். படமும் முடிந்திருந்தது. கோமதியின் கண்களில் வழிந்திருந்த கண்ணிர் காய்ந் திருந்தது. சோபாவில் இருந்து எழுந்து அறைக்குள் போய் படுக்க மனமில்லாமலோ. அன்றித் தென்பில்லாமலோ சோபாவிலேயே படுத்திருந்தாள். ஆடைகள் அங்கும் இங்குமாக அரைகுறையாக அந்த இருட்டினுள் படுத்தி ருந்தாள். இருட்டு அவளுக்கு ஒன்றும் புதிதில்லை. எத்தனை சென்றிகள் இரவில். எத்தனை இரகசிய சமிக்ஞைகள். சங்கேத வார்த்தைகள். காட்டுப் பாம்புகள் பக்கத்தே சரசரவென்று ஊர்ந்து போகும். யானைகள் தண்ணிர் குடிக்க கூட்டம் கூட்டமாக வந்து போகும். எந்தப் பயமும் இல்லாமல் நிலத்தில் கண்ணிவெடிகளைத் தாண்டிக் கொண்டு போயிருப்பாள்.
இன்று பாம்பு ஊர்ந்த தேகமாய். கலைந்து போன தேன் கூட்டுக் குளவிகள் கொட்டிவிட்ட தேகமாய். காட்டுப் பன்றிகள் குதறிப்போட்ட தேகமாய்.
நான் இயக்கத்தில் இருந்து வந்திருக்கக் கூடாது. வந்திருந்தாலும் இப்படி ஒரு திருமண பந்தத்துள் போயி ருக்கக் கூடாது. அப்பிடிப் போயிருந்தாலும் இப்பிடி ஒரு வாழ்க்கை அமைந்திருக்கக் கூடாது.
அடர்காட்டுக்குள் அகப்பட்டவன் வெளியேற வழியில் லாமல் தவிப்பது போல அவளுக்கும் அடுத்த வழி என்ன என்று தெரியாமலே அயர்ந்துவிட்டாள். பாவம், மூளை கூட எத்தனை நாழிகைகள்தான் தொடர்ந்து சிந்திக்கும்.

Page 120
236 - ܐ - வி. ஜீவகுமாரன்
அதுவும் களைக்க அவளும் களைத்திருக்க வேண்டும் போலும்.
*தோமதிக்கு இப்ப எப்பிடிஇருக்கு?”-டாக்டர் நேர்ஸிடம்
கேட்டார்.
“முன்பிருந்த ஆத்திரம். ஆவேசம் எல்லாம் குறைஞ் சிருக்கு. பதிலாக அடிக்கடி அழத்தொடங்கிறா. அதுவும் சத்தமில்லாமல்.’
"சாப்பாடு எப்பிடி..?”
“அளவுக்கு அதிகமாக சாப்பிடுறா. எங்களுக்குத் தெரி யாமல் சாப்பாடுகளைக் கொண்டு போய் அலமாரிக் குள்ளை ஒளிச்சு வைக்கிறா. அது பழுதாய் போய் மணக்கத் தொடங்கத்தான் எங்களுக்கே தெரியுது. ஏன் எனக் கேட்டால் சசிக்கும், சுசிக்கும் எண்டு சொல்லுறா.”
“புருஷன் வந்து பார்க்கிறவரோ.”
“இல்லை. கடைசியாக தன்ரை டெனிஷ்கார நண்பர் களுடன் வந்த பொழுது, கோமதி பாண் வெட்டுற கத்தியை எடுத்துக்கொண்டு விரட்டி ஆஸ்பத்திரியே அல்லோல கல் லோலப்பட்டது உங்களுக்கும் தெரியும்தானே. அதுக்குப் பிறகு அவன் வருவதில்லை.” "ஓ. கே. இப்ப கொடுக்கிற மருந்தை தொடர்ந்து கொடுங்கோ. உடம்புதான் அளவுக்கு அதிகமாய் பருக் கும். ஆனால் மனம் அமைதிப்படும்.”

சங்காணைச் சண்டியன் f 237
அவர்கள் கதைத்துக்கொண்டு இருக்கும் பொழுது கோமதி ஒரு கொப்பியுடன் வந்தாள்.
"ஹாய் கோமதி. ஹவ் ஆர் யூ?” - டாக்டர் கேட்டார்.
66 ss
பைன்.” என தயங்கியவாறு சொன்னபடியே. அதே தயக்கத்துடன் "பெயின்ற் வேணும்” என நேர்ஸிடம் சொன்னாள்.
நேர்ஸ் கோமதியின் கொப்பியை வேண்டிப் பார்த்தாள்.
கொஞ்சம் அதிர்ந்து போனாள். கோமதியின் கொப்பியில் பென்சிலினால் கோட்டுச் சித்திரம் வரையப்பட்டு இருந்தது.
ஒரு பசுவுடன் நாலு சிங்கங்கள் பலாத்கார உடல் உறவு கொள்வது போல. பசுவின் கண்களில் மிரட்சியையும். சிங்கங்களின் கண்களில் வெறியையும் நன்கு வெளிக் காட்டியிருந்தாள்.
கொப்பியை நேர்ஸ் டாக்டருக்கும் காட்டிவிட்டு அந்த கோட்டுச் சித்திரங்களுக்கு வர்ணம் தீட்ட அவள் கேட்ட பெயின்ற் பெட்டியை கோமதிக்குக் கொடுத்து விட்டாள். டாக்டர் கொஞ்சம் யோசனையில் ஆழ்ந்தார்.
"அவளை புருஷன் மிஸ்யூஸ் பண்ணியிருப்பான் எண்டு நினைக்கிறீங்களா?” - நேர்ஸ் கேட்டாள்.
“நிச்சயமாக. ஆனால் அவன் தனியே செய்தானா. இல்லை இன்னும் நாலைந்து பேருடன் சேர்ந்து செய் தானா. அதுதான் புரியவில்லை. எனிவே. கோமதியை நல்லாய் ஒப்சேர்வ் பண்ணுங்கோ.” - கூறிவிட்டு டாக்டர் போய் விட்டார்.

Page 121
238 வி. ஜீவகுமாரன்
யாருக்கும் காத்திரா நிமிடக் கம்பிகள் சுற்றி வந்து காலை ஏழு மணியில் நின்று அலாரத்தை அடிக்க வைத்தன. கோமதி திடுக்கிட்டு எழுந்தாள். கலைந்து போயிருந்த உடுப்புகளைச் சரிசெய்து கொண்டு நேரே குளியலறைக்குள் போனாள். ஷவரில் தண்ணிரை நன்கு திறந்து விட்டு கீழே உட்கார்ந்து கொண்டாள்.
கண்ணை மூடிக்கொண்டு தியானத்தில் இருப்பது போல மனதை ஒருமுனைப்படுத்த முயன்றாள். முடியவில்லை. பலமுறை முயன்றாள். தோல்விதான் எஞ்சியது. தலை யில் வந்து விழும் தண்ணீர் கன்னங்கள் வழியே ஒடும் கண்ணிரையும் சேர்த்துக் கழுவிக் கொண்டு இருந்தது. ஆனால் மனம் ஒன்றை மட்டுமே வேண்டியது. விடுதலை!
சுரேனிடம் இருந்து விடுதலை!! இந்த ஐரோப்பிய அரியண்டங்களில் இருந்து விடுதலை!!! தோய்ந்து விட்டு வெளியே வந்த பொழுது சுரேன் ஹோலில் இருந்து காலைத் தினசரியைப் புரட்டிக்கொண்டு இருந்தான். “பேக்கரியிலை போய் பிரட் வாங்கியரட்டா.” முதன்நாள் எதுவுமே நடக்காதது போலவும். அனைத்தும் சர்வ சாதாரணம் போலவும் கேட்டான். “ஓம்” எனத் தலையாட்டிவிட்டு அறைக்குள் போய் தாழ்ப் பாளைப் போட்டாள்.

சங்கானைச் சண்டியன் 239
சுரேன் வெளிக்கதவைச் சாத்திவிட்டுப் போகும் சத்தம் கேட்டது. கோமதிக்கு அப்பாடா என இருந்தது. தனியே இருக்க வேண்டும் போல் இருந்தது. சுரேன் இல்லாது தனியே இருக்க வேண்டும் போல் இருந்தது. தனித்து எப்படி இந்த உலகத்துக்கு வந்தோமோ. இல்லை தனித்து எப்படி இந்த உலகத்தில் இருந்து போக இருக்கின் றோமோ. அப்படித் தனியே. அந்தத் தனிமையை மனம் நாடியது.
ஹோலில் டெலிபோன் மணி அடிப்பது கேட்டது. மறுமுனையில் கோமதியின் தாய் - வன்னியில் இருந்து. "ஏன் பிள்ளை டெலிபோன் எடுக்கேல்லை. நேற்று உங்கை போய்ச் சேர்ந்திருப்பியள் அல்லோ.” கோமதி அழத்தொடங்கினாள். “என்ன பிள்ளை. என்ன நடந்தது.” கோமதி தொடர்ந்து அழுதாள். “நல்ல பிள்ளையல்லோ. அழாமல் சொல்லு.” “எனக்கு எதுவும் பிடிக்கேல்லை. நான் உங்கை வரப்போறன்.”
“சின்னப்பிள்ளை மாதிரி கதைக்காதை. ஊர் நிலவரங்கள் தெரியும்தானே. ஏனடி. மாப்பிள்ளை குடி கிடி ஏதும்.”
"இல்லையம்மா.”
“ஏதும் நீ வாய்காட்டி அடிச்சுக்கிடிச்சு.”

Page 122
240 வி. ஜீவகுமாரன்
"இல்லையம்மா.” "அப்ப நீ என்னத்தை சொல்லுறாய்.” "அவர் சரியில்லையம்மா.”
“பிள்ளை. கலியாணம் கட்டிய புதிசிலை எல்லாம் அப்பிடித்தான். போகப் போக எல்லாம் சரி வரும்.”
“உங்களுக்கு ஒண்டும் தெரியாது. பாருங்கோ ஒரு நாளைக்கு உங்கை வந்து நேரிலை நிற்பன். இல்லாட்டி இஞ்சை தற்கொலைதான் செய்வன்.”
"ஐயோ பிள்ளை அப்பிடி அம்மாவோடை கதைக்காதை. நீ அழ அழ எனக்கு உடம்பெல்லாம் நடுங்குது.”
"யார் டெலிபோனிலை” சுரேன் கேட்டபடியே கதவைத் திறந்து கொண்டு பானுடன் உள்ளே வந்தான்.
கோமதி கண்களைத் துடைத்துக் கொண்டாள்.
"அது அம்மா.”
“மாமியோ. இஞ்சை தாரும். ஹலோ மாமியோ. எப்பிடிச் சுகமாய் இருக்கிறிங்களோ.”
“இல்லை, நீங்கள் நேற்று டெலிபோன் எடுக்கேல்லை. அதுதான் எடுத்தனான் தம்பி. கோமதி எப்பிடி இருக்கிறா தம்பி” - தாய் மனது கேட்டது
"அவா பைன். நேற்று ஒரே பிரண்ட்ஸ். பேந்து ராத்திரி படத்துக்குப் போட்டு வந்தனாங்கள். இண்டைக்கு சண்டே. இனி நாளைக்கு இவாவை பள்ளிக்கூடம் சேர்க்கிற வேலையள்பார்க்கவேணும். நீங்கள் ஒண்டுக்கும் பயப்பிட வேண்டாம். இந்தாங்கோ டெலிபோனை கோமதியிட்டை குடுக்கிறன்.”

சங்கானைச் சண்டியன் 241
கோமதி ரிசீவரை வாங்க சுரேன் பாண் பாக்கை குசினிப் பக்கமாய் எடுத்துச் சென்றான். “என்னடி கதைக்கிறாய். தம்பி அந்த மாதிரிக் கதைக் கிறார்.”
“சரி. சரி. வையுங்கோ. வீண் காசு.”
டெலிபோனை வைத்துவிட்டு கோமதி ஒரு வினாடி மெளனமாக நின்றாள்.
“என்ன தாய்ப்பாசமோ. தாய்நாட்டுப் பாசமுமோ.” சிரித்தபடியே சுரேன் கேட்டான்.
கோமதி பதில் சொல்லவில்லை.
“இந்தாரும் பாண்” என தானே பட்டரும் ஜாமும் பூசி கோமதிக்குக் கொடுத்தான்.
அது கொஞ்சம் ஆறுதலாய் இருந்தது. அம்மா சொன்னது போல போகப் போக எல்லாம் சரி வரும் என்பது. உடலுறவு என்னும் விடயத்தைத் தவிர மற்றும்படி சுரேன் காட்டும் அக்கறைகள், பரிவுகள் அவளுக்குப் பிடித்துதான் இருந்தன. ஆனால் ஆணிவேரில் புற்று இருக்கும் போது கிளைகளில் எத்தனை பூக்கள் இருந்தென்ன. எதுவும் கண்ணுக்கு அழகாய்த் தெரியலாம். ஹோட்டல்களின் சமையற்கட்டை எட்டிப் பார்க்காத வரை.
“பார்த்திரே சொல்ல மறந்திட்டன். எங்கள் இரண்டு பேரையும் பீற்றர் ஆட்கள் இரவுச் சாப்பாட்டுக்கு வரச் சொன்னவை.”
“யார் பீற்றர்.”

Page 123
242 வி. ஜீவகுமாரன்
"நேற்று குசினிக்கை நின்று உமக்கு ஹெல்ப் பண்ணின லேடியும் அவளின்ரை புருஷனும்தான். பீற்றர் சிறிலங்காதான்.”
“யார். அந்த சிகரட் குடிச்சுக்கொண்டு நின்ற லேடியோ.”
"நான் வரேல்லை. பிளிஸ்.”
"சிகரட் குடிச்சால் என்ன தப்பு. எங்கடை ஆச்சிமார் சுருட்டுக் குடிக்கேல்லையோ.”
"அதுக்கில்லை. எனக்கு என்னவோ அவளைப் பிடிக் கேல்லை.”
“சும்மா ஆட்களைப் பார்த்து எடை போடாதையும். அவ்ளைக் கட்டித்தான் பீற்றர் நல்லாய் இருக்கிறான். தவிரவும் நான் கார் வேண்ட கறன்டி சைன் பண்ணினதும் அந்த லேடிதான் தெரியுமா? மொத்தத்திலை இஞ்சை இருக்கிற தமிழ் ஆட்களுக்கு எவ்வளவோ உதவி.” அரை மனத்துடன் கோமதி ஒப்புக் கொண்டாள்.
மத்தியான சாப்பாட்டுக்குப் பின்பு சோபாவில் இருந்து ரி.வி.யில் ஒரு தமிழ்ப் படத்தைப் பார்த்தபடியே கோமதி கண்ணயர்ந்து விட்டாள். படம் ஓடிக்கொண்டிருக்கும் சத்தம் மட்டுமே கேட்டுக் கொண்டிருந்தது. சிறிது நேரத் தில் சுரேன் ஒரு தலையணையைக் கொண்டு வந்து அவள் மடியில் போட்டுவிட்டு அதன்மேல் தலையை வைத்துப் படுத்துக்கொண்டான். இந்த சின்னச் சின்ன சுகங்கள் கோமதி எதிர்பார்க்கும் ஒன்றுதான். ஆனால் அடுத்த செக்கன் என்ன செய்வானோ?. என்ன நடக்குமோ? என கற்பனை பண்ண முடியாது. தன்னை ஒரு பெண் பிறப்பாக

சங்கானைச் சண்டியன் 243
எண்ணிப் பார்க்காமல் நடத்தும் குரூர வேதனைகளை அவளால் எள்ளளவும் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.
கோமதி தான் நித்திரை கொள்ளுமாப்போல நன்கு கண்களை இறுக மூடிக் கொண்டாள்.
கூட்டுக்குள் உள்ள கிளிதானே, எங்கே பறந்துவிடப் போகின்றது என்ற எண்ணமோ என்னவோ கோமதிக்கு அன்றைய பின்னேரம் எந்த அசெளகரியமும் கொடுக்க வில்லை.
பின்பென்ன.
ஞாயிறு போய் திங்கள் வந்தது. சுரேனின் லீவு முடிந்து வேலைக்குப் போகத் தொடங்கினான்.
கோமதியும் டெனிஷ் மொழிக் கல்வி வகுப்புக்கு போகத் தொடங்கினாள்.
வேலை. களை. பள்ளிக்கூடம். வீட்டு வேலைகள். சாமான்கள் வேண்டுதல். சமைத்தல். கடிதங்கள். ரசீதுகள். என வாரத்தின் ஐந்து நாட்களும் விரைவாக ஒடத் தொடங்கின.
ரசீதுகள்தான் ஐரோப்பியத் தமிழருக்கு எப்பொழுதும் பெரிய தலையிடியாய் இருப்பது.
“இன்று சுகத்தை அனுபவி. நாளை அதற்கான தொகையைச் செலுத்து” அல்லது “தவணை முறையில் செலுத்து” என்ற கருத்து வருகின்ற மாதிரி விளம்பரங்கள் வீதியெங்கும் இருக்கும். ஒடும் பஸ், றெயினில் தொங்கிக் கொண்டு இருக்கும். சம்மர் காலம் ஆயின் வானத்தில் பறக்கும் பெரிய பலூன்களில் இருக்கும். அ.தில்லாது

Page 124
244 வி. ஜீவகுமாரன்
விட்டால் தபால் பெட்டியுள் விளம்பரக் கடிதங்களாக வந்து குவியும்.
இந்த இலவச சுகத்தை அனுபவித்து விட்டு ரசீதுகள் வரும் பொழுது கட்ட முடியாமல் தவிப்பதும். கட்டவேண்டிய நேரத்திற்குக் கட்டாவிட்டால் அதற்கு தண்டப் பணம் கட்ட வேண்டி வருவதும். அதையும் கட்டாவிட்டால் “எட்டாம் கட்டளை” பட்டம் குத்துவது என்று அந்தக் காலத்தில் சொல்லுவது போல. இங்குள்ள அப்புக்காத்துகளிடம் இருந்து மிரட்டல் கடிதம் வருவதும். பாவங்கள் தமிழர்கள்!
ஏன் டெனிஷ்காரரும்தான்.
சுரேனும் கல்குலேட்டரும் கையுமாக ரசீதுகளுடன் போராடுவதும் பின் டெனிஷ் மொழியில் தன் நண்பர் களுடன் கதைப்பதும், பொக்கற்றில் இருந்து தனது கிறடிக்காட்டை எடுத்து அதிலிருந்த நம்பர்களை வாசிப் பதும். கோமதிக்கு அவன் யாரிடமோ கடன்பட்டுக் கொண்டிருக்கிறான் என்பது மட்டும் புரியும்.
ஆனால் கோமதி தானாகவே எதுவும் கேட்கமாட்டாள். ஒருநாள் தானாகவே சொன்னான், “கெதியாய் நீர் டெனிஷ்பாஷை படிச்சு முடிச்சு நீரும் ஒரு வேலைக்குப் போனால்தான் இந்த பில்லுகளை எல்லாம் பிரச்சனை யில்லாமல் கட்டலாம்” என. அவளும் சம்மதம் எனத் தலையாட்டினாள். மற்றும்படி அவர்களுக்கிடையேயான தாம்பத்தியம் என்பது கொடுப்பதும் எடுப்பதும் என்ற நிலை இங்கு இல்லாமல் எடுப்பது மட்டுமே என்ற அளவில் போய்க் கொண்டி ருந்தது.

rtaparš staigudr 245
ஆனால் கோமதி இப்பொழுதெல்லாம் அழுவதில்லை. இதுவும் தன் வாழ்வின் ஒரு பகுதி என்று நினைத்து அதற்கு அவள் தன்னை இசைவாக்கிக் கொண்டாள் - தான் எதிர் பார்த்த வாழ்வு இது இல்லை என்ற உள்காயத்துடன். இரவு விடிந்தால் பகல். பகல் வந்தால் ஓட்டம். வாழ்விற்கான ஒட்டம். அதில் தன்னை நன்கு இணைத்துக் கொண்டு ஒட வெளிக்கிட்டபொழுதுதான் அந்த மாதம் தனக்கு வீட்டுக்கு விலக்கு வரவில்லை என்பது கூட மறந்து விட்டது என்பது உறைத்தது. ஒரு கணம் திகைத்து விட்டாள். இதையிட்டு சந்தோஷப்படுவதா. இல்லை கவலைப் படுவதா. இருவரின் சந்தோஷத்தில் இது அவதரித்ததா?. இல்லை, ஒருவரின் அழுகையிலும் மற்றவரின் ஆவேசத்திலும் தரித்ததா?. எதுவாயினும், யாருக்காகவும் காத்திராத காலம் போல அந்த ஒட்டுண்ணி தன் தாய் மரத்தை உறிஞ்சத் தொடங்கி விட்டது. கோமதிக்கு வாந்தி வரத் தொடங்கியது. சுரேன் தானாகக் கேட்டான், “ஏன், வெயிலுக்கை திரிஞ்ச னிரோ” என்று. கோமதி இதுவாக இருக்கலாம் என்றபொழுது அவனின் முகத்தில் தெரிந்த மாறுபட்ட உணர்ச்சிகளின் பிரதி பலிப்பை அவதானித்தாள். ஆனால் மகிழ்ச்சிக்கான பிரதிபலிப்பு அதுவல்ல என்பது கோமதிக்கு நன்கு தெரிந்தது.
“ஏன் உங்களுக்குச் சந்தோஷம் இல்லையோ?”

Page 125
246 வி. சீவகுமாரன் "நான் நினைச்சன் நீர் பில்ஸ் பாவிச்சுக் கொண்டிருக்கிறீர் எண்டு.”
கோமதி அதிர்ந்து போனாள்.
“என்ன சொல்லுறிங்கள்.” "தமிழிலைதான் சொல்லுறன். பிள்ளை பெறுகிறது எண்டது சும்மா இல்லை. நாங்கள் இரண்டு பேரும் வடிவாய் கதைச்சு. எங்கடை பொருளாதாரத்தை. வசதிகளை. லிவுகளைப் பார்த்து. பிளான் பண்ணிச் செய்யுறது.” "அப்படியே எங்கடை அம்மா அப்பாவும் செய்து நீங்களும் நானும் பிறந்தனாங்கள்?” "அது வேறை. எந்த யோசினையும் இல்லாமல் பெத்துத் தள்ளிப் போடுங்கள். இஞ்சை பிள்ளை எண்டது பெரிய ஒரு சிலவான விடயம் தெரியுமே. பிள்ளைக்கு ஒரு நாள் கட்டுற பம்மஸ் காசே எங்களுக்கு ஒரு நாளைக்கு சாப்பாட்டுக்குக் காணும்.” "அப்ப ஏன் நீங்கள்.” சொல்ல முடியாது தவித்தாள். “படுத்தெழும்பினிங்கள் எண்டு கேட்கப் போறிரோ?” கோமதி 'ஓம்' எனவே தலையாட்டினாள். "செக்ஸ் எண்டது வேறை. பிள்ளை பிறக்கிறது எண்டது வேறை. நான் நினைச்சனான் நீர் எல்லாம் பாதுகாப்பாய் தான் இருக்கிறீர். இரண்டு மூண்டு வருஷம் கழிச்சு நீரும் வேலை பார்க்கத் தொடங்க பிள்ளை பெறலாம் எண்டு.”
இப்பொழுது கோமதி அழத் தொடங்கினாள்.

saraoarš sairgudr 247
“இப்ப ஏன் அழுநீர் "நீங்கள் கலைக்கச் சொல்லிப் போடுவியளோ எண்டு பயமாய்க் கிடக்கு.” “ஏன் பழியை என்னிலை போடப் பார்க்கிறீர். நாங்கள் இரண்டு பேரும் இன்னும் இரண்டு மூன்று வருஷத்துக்கு சந்தோஷமாயிருக்க ஏன் அப்பிடி ஒரு பிள்ளை தடையாய் இருக்க வேண்டும் எண்டு யோசித்துப் பாருமன்.”
"சந்தோஷம் கொட்டித்தான் கிடக்குது” என்று சொல்ல வாயெடுத்தவள், "கடைசிவரை நான் இதுகளுக்கு சம்மதிக்க மாட்டன்” என்று சொல்லும்போது அடக்கமுடியாது பீறிக்கொண்டு வந்த அழுகையை அழுத்தியபடியே விம்மிக் கொண்டு ஒடிப்போய் கட்டிலில் விழுந்தாள். சுரேன் முன் வாசல் கதவை அடித்துச் சாத்திக் கொண்டு வெளியில் போவது கேட்டது. கோமதி எவ்வளவு நேரம் கட்டிலில் அப்படியே கிடந்தாளோ தெரியாது. மனவெளி எங்கும் நிர்வாணம். சின்ன வயது சந்தோஷங் களை இழந்த நிர்வாணம். நாட்டுக்காகப் போராடப் போன பொழுது அங்கு துளிர்த்து, உதிர்ந்து, மடிந்த காதலால் வந்த நிர்வாணம். நாட்டை. உற்றம் சுற்றம். தாய். தகப்பனைப் பிரிந்து வந்த நிர்வாணம். கடைசியாக இன்று தாயாகப் போகும் சந்தோஷம் நிலையாமல் போகப் போகின்றதோ என்ற மனவெளியின் நிர்வாணம்.
அப்படியே படுத்திருந்தாள். இருட்டி விட்டது.

Page 126
248 வி. ஜீவகுமாரன்
இரண்டு மூன்று மணித்தியாலங்களுக்குப் பின் சுரேன் கொஞ்சம் சிரித்த முகத்துடன் அறைக்குள் வந்தான். “சரி. உம்மடை விருப்பப்படி நாளைக்குப் போய் டாக்டரைப் பார்ப்பம்.”
குளிர்ந்து போனாள்.
முதல் முறையாக அவனின் கழுத்தைக் கட்டி அணைத்து முத்தமிட்டாள்.
அவனும் அவளை எடுத்துக் கொண்டான்.
அன்றைய பொழுது அவளுக்கு வாழ்வின் இரு முனைகளை ஒரே நேரத்தில் தொட்டுப் பார்த்தது போலிருந்தது. அடுத்த நாள் டாக்டரிடம் போனார்கள். சிறுநீர் சோதனை அவளின் கர்ப்பத்தை உறுதிப்படுத்தியது. டாக்டர் வாழ்த்துச் சொன்னார். மேலும் பிள்ளை பிறக்கும் வரை எப்பொழுது எப்பொழுது தன்னிடம் வரவேண்டும், எப்பொழுது வைத்தியத்தாதியிடம் போகவேண்டும், எப்பொழுது ஆஸ்பத்திரிக்குப் போய் பிள்ளையை ஸ்கேன் பண்ணிப் பார்க்க வேண்டும் என்று ஒரு பெரிய அட்ட வணையே கொடுத்தார்.
நன்றியுடன் இரு கைகளாலும் வேண்டிக் கொண்டாள். “வேலைக்குப் போகலாமோ என்று கேளுங்கோ.” சுரேன் டெனிஷில் கேட்டான்.
"வடிவாய்ப் போகலாம்."
சுரேன் மொழிபெயர்த்துச் சொன்னான்.

Forampaorể sairņuaudir 249
“நல்லதாய்ப் போச்சுது. உங்கடை கஷ்டங்கள் குறைஞ்
சிடும்.” “என்ன சொல்லுறா” - டாக்டர் ஆர்வ மிகுதியால் கேட்டார்.
சுரேன் கூற டாக்டர் பாராட்டினார் - நல்ல குடும்ப அக் கறையான பெண் என.
தொடர்ந்தும் டாக்டரே சொன்னார் - “பிள்ளை பிறக்கிறதுக்கு முதன் நாள் வரை வேலைக்குப் போகலாம் - உடல் உறவும் வைத்துக் கொள்ளலாம்.”
சுரேன் சிரித்தபடி மொழிபெயர்க்க அவள் கன்னங்கள் சிவக்க தலை குனிந்தாள்.
சுரேன் மாறி மாறி மொழி பெயர்ப்பதைப் பார்த்த டாக்டர், “உங்களுக்கு மொழிபெயர்ப்பாளர் ஒருவரின் உதவி தேவைப்பட்டால் நாங்கள் ஒழுங்கு செய்ய முடியும் என்றார். ஆனால் சுரேனோ, தானே அவளுடன் எல்லா இடத்துக்கும் கூட்டி வருவதாகச் சொன்னான். “மிக்க நல்லது" என்றபடி டாக்டர் இருவருக்கும் கைகுலுக்க, விடை பெற்றுக் கொண்டார்கள். வழியெல்லாம் அவள் சந்தோஷத்தில் மிதந்தாள், தனக் கென்று ஒரு உறவு தன் தொப்புள் கொடியில் வளர்வதை நினைத்து. வீட்டை வந்ததும் முதல் வேலையாக இலங்கைக்கு டெலிபோன் எடுத்து இரு வீட்டார்க்கும் சொன்னார்கள்.
பின்பென்ன. ஆயிரம் அறிவுரைகள். அப்பிடி இப்பிடி இருக்க வேணும். எந்த எந்த நாளில் தோய வேண்டும்.

Page 127
250 வி. ஜீவகுமாரன்
எந்த எந்த நாளில் முழுக வேண்டும். என்னென்ன எப்போது சாப்பிட வேண்டும். முடிந்தளவு நல்லாய் படுக்க வேண்டும். பாரங்கள் தூக்கக் கூடாது. சுரேனில் இருந்து தள்ளியிருக்க வேண்டும்.
டாக்டர் சொன்ன அறிவுரைகளுக்கும் இந்த அம்மா டாக்டர் மாரின் அறிவுரைகளுக்கும் நூற்றி எண்பது பாகை வித்தி யாசம் இருந்தது. வைத்தியம் சொல்லாவிட்டால் வருத்தம் பார்க்கப் போகிறவர்களுக்கு திருப்தி ஏற்படுவதில்லையே. இதுவும்
சேர்ந்ததுதானே அந்த வரிச்சு மட்டை வேலிகள். பலமும் இருக்கும். ஒட்டைகளும் இருக்கும். ஆனால் ஒட்டைகள் இருக்கிறதால் அவை என்றும் தம் பலத்தை இழந்து விடுவதில்லை. வயதாகிக் கறையான்கள் அரித்தால் தவிர. அப்பொழுதும் புது வேலிகள் முளைக்கும் - புதுக் கதியால் களுடன்.
அப்படிப் புதுக்கதியால்களுடன் புதுப் பனைஒலை மணத்துடன் நிமிர்ந்து நிற்கும் வேலியாக கோமதி தன்னை உணர்ந்தாள். பின்பென்ன. அடிவயிற்றின் ஒட்டுண்ணி தாய் மரத்தை நன்கு உறிஞ்சத் தொடங்கியது. அதை கோமதியால் நன்கு உணரக் கூடியதாக இருந்தது. மூன்று நான்கு மாதங்களில் வெளித்தள்ளும் வயிறு அவளுக்கு இரண்டாம் மாதத்தி லேயே மிதப்புத் தெரிந்தது. சுரேன் வீட்டில் இல்லாத நேரங்களில் சேலை உடுக்கும் பொழுது கண்ணாடியில் தன் வயிற்றைத் தடவிப் பார்த்துத் தானே மகிழ்ந்து கொள்வாள்.

சங்கானைச் சண்டியன் 251
அதில் சின்னச் சின்ன மகிழ்ச்சி. அதுதான் அவளே. எப்பொழுதும் சின்னச் சின்ன எதிர்பார்ப்புகள். சின்னச் சின்ன சந்தோஷங்கள். சிங்கப்பூரில் சின்னப் பொம்மை களைப் பார்த்துக் கொண்டு நின்றது போல.
கீம்லை ஒன்பது மணிக்கு வரவேண்டிய பெண் மொழி பெயர்ப்பாளர் கொஞ்சம் தாமதமாகவே வந்திருந்தார். கண்கள் கொஞ்சம் கலங்கி இருந்தன.
டாக்டருக்காக கோமதியும் நேர்ஸ்சும் காத்திருந்த பொழுது, மொழிபெயர்ப்பாளரைக் கவனித்த கோமதி “வீட்டிலை பிரச்சனையா. முகம் எல்லாம் காஞ்சிருக்கு” என அக்கறையுடன் கேட்டாள்.
மொழிபெயர்ப்பாளர் தன்னைச் சுதாரித்துக்கொண்டு, 'இல்லை எனத் தலையாட்டி விட்டு. தனது கைக்குட்டை யால் முகத்தைத் துடைத்துவிட்டு. கைப்பையைத் திறந்து அதிலிருந்து சின்னக் கண்ணாடியை எடுத்து தனது முகத்தைச் சரிபார்த்து மீண்டும் கலைந்திருந்த கண் மையைச் சரி செய்து கொண்டார். "நீங்கள் இல்லை எண்டு சொன்னாலும் அக்கா உண்மை அதுதான். இங்கை வந்திருக்கிற பொம்பிளைச் சென் மங்கள் எல்லாம் பாவங்கள். பத்து பதினைஞ்சு வருஷத்துக்கு முதல் இருபதோ முப்பதோ கட்டி இஞ்சை வந்ததாலை ஒவ்வொருத்தனுக்கும் தாங்கள் ராசாக்கள் எண்ட நினைப்பு. எனக்கு வருத்தம் வந்ததாலை அடிக்கடி அழுகிறன். நீங்கள் வருத்தம் வராமல் அழுகிறியள். அது தான் வித்தியாசம்.”

Page 128
252 . வி. ஜீவகுமாரன்
“கோமதி என்ன சொல்லுகின்றா?” - நேர்ஸ் மொழி பெயர்ப்பாளரிடம் கேட்டார்.
"அவா சும்மா அலட்டுகின்றா” என டெனிஷில் சொல்ல நேர்ஸ் மீண்டும் தன் பைலினுள் மூழ்கினார். “இந்த நேர்ஸ்க்கு மட்டும் வீட்டிலை பிரச்சனை இராது என நினைக்கிறிங்களோ. நாட்டிலை நடக்கிற போரிலை மரணம் ஒருநாள் மட்டும்தான். இஞ்சை வீடுகளுக்கை நடக்கிற போரிலை மரணம் ஒவ்வொரு நாளும்தான். இவளுக்கும் புருஷனுக்கும் கூட சண்டை வரும். யார் சாப்பாட்டுக் கோப்பையைக் கழுவுறது. யார் கச்சுடிசைக் கழுவுறது எண்டு.” கதைத்துக் கொண்டே இருந்தாள் கோமதி.
பெரியதாக அவள் கதையில் அக்கறை காட்டாவிடினும் அவள் சொல்லுவதில் முழுக்க முழுக்க உண்மை இருக்கிறது என்பது மொழிபெயர்க்க வந்தவளின் மனதுக்குத் தெரிந்தது. சிறிது நேரத்தில். தான் காலம் தாழ்த்தி வந்ததிற்கு மன்னிப்புக் கேட்டபடி டாக்டர் வந்து அமர்ந்தார். பின் நேர்ஸிடம் கோமதியின் நிலை எப்படி இருக்கிறது 6T6IOTäs G8a5"LITT.
"கோமதியின் நிலையில் மிக நல்ல முன்னேற்றம் வருகிறது. பின்னேரங்களில் என்னுடன் தோட்டத்துக்குள் நடக்க வருகின்றாள். பூக்களைப் பிடுங்கி சின்னக் கொத் தாகக் கட்டி எனக்கு அன்பளிப்பு செய்கிறாள். ஆனால் வழி தெருவில் ஏதாவது பிள்ளைகளைப் பார்த்தால். குறிப்பாக ஆண்பிள்ளைகளைப் பார்த்தால் முறைக்கின் றாள். பெண் பிள்ளைகளைப் பார்த்தாள் அழுகின்றாள்.”

ữủtotaporễ traồrgu Jeổi 253
நேர்ஸ் சொன்னவை மொழிபெயர்த்துச் சொல்லப்படு கின்றது.
"நீங்கள் என்ன சொல்லுகின்றீர்கள்.” “பெண்பிள்ளைகள் பாவம். ஆண் பிள்ளைகள் கொடுமைக்காரர்.”
“எனக்கு விளங்குது. கோமதி, உங்களுக்கு நாங்கள் இனி மருந்தைக் குறைக்கப் போறம். அதுக்குப் பிறகு. கிழமை யில் மூன்று நாளைக்கு ஒரு மனநல வைத்தியர் வந்து உங்களோடை கதைக்க ஒழுங்கு செய்யுறம். அப்பிடியே ஒரு மாதம் கொன்சல்ரேசனைத் தொடர்ந்தால் பிறகு சனி, ஞாயிறுகளில் வீட்டை போய் வருவது பற்றி யோசிக்கலாம்.”
கோமதியின் முகம் மாறிக்கொண்டுவந்தது."எந்த வீட்டைச் சொல்லுறியள்?”
“இந்த சிற்றியிலை இருக்கிற உங்கடை வீட்டைத்தான் சொல்லுறன்.” “தூ. அது வீடோ. அது சிறைச்சாலை. பாலியல் கொடுமை நடக்கிற சிறைச்சாலை. மனுஷ இதயம் இல் லாத ஒரு அரக்கன். கொலைகாரன் இருக்கிற இடம். நான் அங்கை போகமாட்டன். என்னை இலங்கைக்கு அனுப்புங்கோ.”
டாக்டர், நேர்ஸ், மொழிபெயர்ப்பாளர் மூவரும் ஒருவரை ஒருவர் பார்த்தனர்.
கோமதி எழுந்து விறுவிறு என்று தனது அறைக்குப் போனாள். அதே வேகத்தில் கையில் ஒரு உள்ளாடையை
எடுத்து வந்து மேசையில் எறிந்தாள்.

Page 129
254 வி. ஜீவகுமாரன்
“ஒரு புதுப்பொம்பிளைக்கு இதோ டென்மார்க்கிலை இருந்து கொண்டு வாறது. செக்ஸ் படமோ போட்டுக் காட்டுகிறது. மிருகம் திருந்தும் திருந்தும் எண்டு பார்த்தன். அவன் கொலைகாரனாக மாறிட்டான். அந்த நாயோடை நான் இன்னும் படுத்தெழும்ப வேணுமோ.” இப்போது கோமதி பழையபடி பெரிதாக அழத் தொடங் கினாள்.
நேர்ஸ் அவளை அரவணைத்தார். நேர்ஸின் நெஞ்சில் தலை வைத்துக்கொண்டு அழுதாள். “சரி. இதைப்பற்றி நகரசபையின் சமூகப்பிரிவில் கதைப் போம். உங்கள் விருப்பம் இல்லாமல் அங்கு உங்களை அனுப்ப மாட்டம்.” m “டாக்டர் அவனிட்டை சொல்லி வையுங்கோ. இலங்கைப் பக்கம் தலைகாட்ட யோசிக்க வேண்டாம் எண்டு. நெத்தி வெடி தான்.”
ஆவேசத்தை அமைதிப்படுத்தும் மாத்திரையைக் கொடுக்கும்படியும். மனநல வைத்தியருடனும். நகரசபை ஊழியர்களுடனும் கதைக்க ஏற்பாடு செய்யும்படியும் கூறிவிட்டு டாக்டர் எழுந்து கொண்டார். மொழிபெயர்ப்பாளரும் எழுந்து கொண்டார். "ஆக, வீட்டிலை விட்டுக் குடுக்காதையுங்கோ. மிதிச்சு சாகடிச்சுப் போடுவாங்கள்.” காதில் கேட்காத மாதிரி டாக்டரைப் பின்தொடர்ந்தாலும் மொழிபெயர்ப்பாளரின் மனம் கணக்கவே செய்தது.

சங்கானைச் சண்டியன் 255
கோமதியை அழைத்துக் கொண்டு நேர்ஸ் தன் அறைக்குத் திரும்பினார். −
“என்ரை பாஸ்போட் அவனிட்டைக் கிடக்குது.”
கோமதி என்ன சொல்லுகிறாள் என்று நேர்ஸ்சுக்கு விளங்கா விட்டாலும் பாஸ்போட் என்பது மட்டும் விளங்கியது.
“சரி” எனத் தலையாட்டியபடி மாத்திரைகளை எடுத்துக் கொடுத்தார். மாத்திரைகள் அவளை மயக்க நிலைக்குக் கொண்டு போனது.
முதலாவது ஸ்கேனிங்கிற்கு கோமதியும் சுரேனும் வந்திருந்தார்கள். இது கோமதிக்கு முற்றாகப் புதிது. பெரிய பணக்காரப் பெண்கள் யாழ்ப்பாணத்திலும் கொழும்பிலும் கர்ப்பமாக இருக்கும்பொழுது வயிற்றை ஸ்கேனிங் செய்து கம்பியூட்டரில் பிள்ளையின் தலையின் குறுக்கு நீளத்தை அளந்து அதன் தற்போதைய நிறை, பிறக்கும் பொழுது என்ன நிறையிருக்கும் என டாக்டர்கள் கூறுவதைக் கேட்டிருக்கின்றாள். அவளுக்குத் தெரிந்ததெல்லாம் குளத்தடி தைலக்காவின் தாய் சரசக்கா கடைசியாக மாதவிடாய் வந்த தேதியைக் கேட்பதும் கையைப் பிடித்துப் பார்த்ததும், உனக்கு இத்தனையாம் தேதி பிள்ளை பிறக்கும். போய் படுத்துப் படுத்துக் கிடக்காமல் குனிஞ்சு நிமிர்ந்து வேலை செய் எனச் சொல்லி விடுவதும்தான்.

Page 130
256 வி. ஜீவகுமாரன்
பன்னீர்க்குடமும் அதே தேதியில் உடையும். சிலவேளை ஒரு நாள் முந்தலாம். அல்லது ஒரு நாள் பிந்தலாம். இது புதிய உலகம். விஞ்ஞான உலகம். அதன் விதி முறைகள் வேறு. வரைவிலக்கணங்கள் வேறு. இயற்கை யின் விந்தைகளுக்கு காரண காரியம் மட்டும் அவர்களால் கூறமுடியுமே தவிர எதையும் தடுப்பதற்கு பலம் இல்லை. அது சுனாமி ஆனாலும் சரி. குளோபல் வோமிங் ஆனாலும் சரி. சுனாமி பற்றிக் கதைத்துக்கொண் டிருக்கும்பொழுதே ஊரே இராது. வோமிங் பற்றி பேஸ்மன்றினுள் தண்ணீர் புகுந்துவிடும். ஆனாலும் என்ன செய்வது. பாம்பு தின்னுகின்ற ஊருக்கு வந்துவிட்டோம். நடுத்துண்டு சாப்பிட்டாக வேண்டும் என்ற நினைப்புடன் அந்த வெயிற்றிங் ஹோலில் மாட்டியிருந்த படங்களின் அழகைப் பார்த்து வியந்து கொண்டிருந்தாள். அத்தனையிலும் குழந்தைப்பிள்ளைகள். ஒரு வயதுக்கு உட்பட்ட. ஆண் குழந்தைகளும். பெண் குழந்தைகளும். ஆடையுடன் சிலர். அம்மணமாய் சிலர். வெவ்வேறு நாட்டுக் குழந்தைகள். அழகாய்த்தான் இருந்தார்கள். "கொம். மதி” என கோமதியின் பெயரைத் தட்டுத் தடுக்கிக் கொண்டு நேர்ஸ் ஒருவர் கோமதியின் பைலுடன் வர, சுரேனும் கோமதியும் எழுந்து அவர் பின்னால் சென் றார்கள். பரிசோதனை செய்யும் அறையுள் ஒர் ஆண் டாக்டர்தான் இருந்தார். கோமதிக்கு கொஞ்சம் கூச்சமாய் இருந்தாலும் சுரேன் பக்கத்தில் நிற்கும் தைரியத்தில் கர்ப்பவதிகளைப் பரி

сивилератš srairigu dr 257
சோதனை செய்யும் அந்த பிரத்தியேகக் கட்டிலில் ஏறி நிமிர்ந்து படுத்துக் கொண்டாள். ஸ்கேன் செய்யும்போது பயன்படுத்தப்படும் அந்த வெண் ணிறக்களி போன்ற திரவத்தை டாக்டர் அடிவயிற்றில் தடவிய பொழுது அவள் கூச்சத்தில் நெளிந்தாள். அப்படியே பக்கத்தில் நின்ற சுரேனின் கையை ஆதரவாகப் பிடித்துக் கொண்டாள். வயிற்றின் இடப்பக்கமும் வலப்பக்கமும் ஸ்கேன் கருவி அசைய அவளும் இடமும் வலமுமாக கூச்சத்தில் நெளிந் தாள். கம்பியூட்டரிலும் கால்மாட்டிற்கு நேர் எதிரேயிருந்த பெரிய திரையிலும் அவளது கர்ப்பப்பை தெரிந்தது. அதில் திட்டாக இருந்த இடத்தைச் சுற்றி இப்போ டாக்டர் பரிசோதித்துக் கொண்டு இருந்தார். சோதித்துக் கொண்டு இருந்தபடியே, “உங்கள் குடும்பத் தில் யாராவது இரட்டைப் பிள்ளைகள் இருக்கிறார்களா?” எனக் கேட்க இருவருமே இல்லை எனத் தலையாட்டி விட்டு ஆளை ஆள் பார்த்தார்கள். "இப்பொழுது அவர்கள் உங்கள் குடும்பத்துக்குக் கிடைத்து விட்டார்கள். இரட்டைப் பெண் பிள்ளைகள். பாராட்டுகள்” என டாக்டர் ஆனந்தம் மலர இருவருக்கும் கை குலுக்கினார்.
இரண்டு தேவதைகள் வந்து தன் வயிற்றில் இறங்கியது போலிருந்தது.
கோமதியின் கடைக்கண்ணால் கண்ணீர் வடியத்தொடங்கி கன்னங்கள் வழியே ஓடி தலையணையை நனைத்தது.
சுரேனின் கைகளை இன்னமும் இறுகப் பற்றிக் கொண்டாள்.

Page 131
258 வி, ஜீவகுமாரன்
ஆந்த ஆதரவு அவளுக்கு இப்பொழுது அதிகமாகவே தேவைப்பட்டது.
சுரேனின் முகம் ஒரு கணம் இருண்டு முகிலுக்குள் மறைந்து கொண்டது. பின் டாக்டரின் புன்சிரிப்யைக் கண்ட பொழுது தன்னைச் சுதாரித்துக் கொண்டாள்.
மீண்டும் நாட்கணக்குகள். சந்திப்பிற்கான புதிய திகதிகள். என்ற சம்பிரதாய சம்பாஷணைகளுக்குப் பின்பு சுரேனும் கோமதியும் வெளியே வந்தார்கள்.
“உண்மையைச் சொல்ல வேணும்? உங்களுக்குச் சந்தோஷம்தானே?” அவனின் கையைப் பிடித்தபடி நெருக்கமாக நடந்து கொண்டே கேட்டாள்.
“ஊம்.”
“என்ன ஊம் கொட்டுறியள். நல்ல சந்தோஷம் எண்டு சொல்லுங்கோ.”
“சரி. நல்ல சந்தோஷம். போதுமா.”
“எனக்காகச் சொல்லாதையுங்கோ. நீங்கள் காசுக்கு யோசிப்பீங்கள். இரண்டும் பொம்பிளைப் பிள்ளையஸ் எண்டு யோசிப்பீங்கள். அடுத்து அடுத்து இரண்டு பிள்ளை யள் பிறந்தால் ஏற்றுக்கொள்ளுறதுதானே. இது கடவுளாய் ஒண்டாய்த் தந்து இருக்கிறார். நான் பள்ளிக்கூடம் போய் டெனிஷ் படிச்சு. பிறகு உழைக்கத் தொடங்கிவிட்டேன் எண்டால் உங்களுக்கு என்ன கவலை. இரண்டு பிள்ளை யளும் இராசாத்தியள் மாதிரி வளருங்கள்.” சுரேனின் மனக்கண்ணாடியை பிரதிபிம்பம் எடுத்துப் பார்த்த மாதிரி கோமதி கதைத்துக்கொண்டு வர அவனுக்கு கொஞ்சம் அரியண்டமாய் இருந்தது.

aparš. Fairga 259
"சும்மா. தொணதொணக்காமல் வாறிரோ.”
கோமதிக்கு ‘சுள் என்றது. ஆனாலும் சமாளித்துக் கொண் டாள். செலவுகளைப் பற்றி யோசிக்கிறார் போலும் என தன்னையே தான் சமாதானப்படுத்திக் கொண்டு பின்பு ஏதும் பேசாமல் போய் காரினுள் ஏறினாள்.
கார் கடற்கரை வீதி வழியால் ஓடத் தொடங்கியது,
அன்று காற்றழுத்தம் எதுவும் இன்றி கடல் மெளனமாக இருந்தது போலிருந்தது.
வீட்டை வந்து சேர்ந்ததும் மீண்டும் இலங்கைக்கும் மற்றைய நாடுகளில் உள்ள மற்றைய உறவினர்களுக்கும் தொலைபேசிகள் பறந்தன - இரட்டைச் சந்தோஷத்துடன்.
மீண்டும் அனைவரின் ஆலோசனைகள் . மிகக் கவனமாய் இருக்கும்படி. மேலாக எப்பிடி தனிய இரண்டு பிள்ளை களையும் பெற்று வளர்க்கப் போகிறியோ என்ற கரி சனையும். கடவுள் உன்னைக் கஷ்டம் இல்லாமல் பார்த்துக் கொள்வார் என்ற ஆறுதல் வார்த்தைகளும். அவளைக் குளிர்வித்துக் கொண்டிருந்தன.
தாய்மை - கருவிலேயே ஒரு குழந்தையின் அகவளர்ச்சியை ஆரம்பிக்கும் பணியை இயற்கை ஒரு பெண்ணிற்குக் கொடுத் திருப்பதைப் போலவும் அதற்கு ஏற்றவாறு ஆசிய நாடுகள் என்றாலும் சரி. ஐரோப்பிய நாடுகள் என்றாலும் சரி. மேலாக விலங்கினங்கள் ஆயினும் சரி. கலாச்சார அமைப்புகள் அமைந்திருப்பது வியக்கத் தக்கவையே.

Page 132
260 As. asanipalpagdir
கோமதிக்கு இது இரட்டைத் தாய்மை. இது கொஞ்சம் இயற்கைக்கு மாறானது. ஒன்றாக அழுங்கள். ஒன்றாக பால் கொடுக்கவேண்டும். ஒன்றாக சலம், மலம் போகும். ஒன்றாகத் துணி மாற்ற வேண்டும். மேலாக, இனிய தாம்பத்தியத்தில் உருவானதும் இல்லை. ஆனாலும் அவள் மகிழ்ந்தாள். இழந்து போன சுகங்களை எல்லாம் அந்தப் பிள்ளைகளே ஈடுகட்டுங்கள் என அவள் நம்பினாள்.
ஓய்வாக இருக்கும்பொழுதெல்லாம் பிள்ளைகளுக்கு என்ன பெயர்கள் வைக்க வேண்டும் என்ற ஆராய்ச்சி தொடங்கியது. ஊரில் இருந்தும் பல பெயர்த் தெரிவுகள். இலக்கியங்களில் இருந்து. இந்து சமய நூல்களில் இருந்து. என இத்தியாதி இத்தியாதிகளில் இருந்து பெயர்கள் பிரேரிக்கப்பட்டு கடைசியாக சசி, சுசி என்ற பெயர்கள் அவளால் பிரேரிக்கப்பட்டு அவளாலேயே ஏற்றுக் கொள்ளப்பட்டது.
சுரேனிடம் அவை நல்ல பெயர்களா என வினவப்பட்ட பொழுது “உமக்குப் பிடித்தால் சரிதான்” என்ற மொட்டை யான பதிலே வந்தது. அதில் அவளுக்குக் கொஞ்சம் ஏமாற்றமே.
சுரேன் முன்பு சொன்ன மாதிரி பிள்ளை என்ற ஒன்று எங்களுக்கு வேண்டும் என்று வயிற்றில் தரித்த பிள்ளைகள் அல்லவே இவை. அதனால்தானோ என்னவோ அவற்றில் சுரேனுக்கு ஈடுபாடு இல்லை என எண்ணிக் கொள்வாள்.
ஆனால் அவளுக்கு. அந்த முகம் தெரியாத இரண்டு இதயத் துடிப்புகளிலும் அளவில்லாத ஈடுபாடு வரத்தொடங் கியது. சின்னச் சின்ன சட்டைகள் தைத்து மகிழ்ந்தாள். சின்னச் சின்ன விளையாட்டுச் சாமான்கள் வேண்டி

erişsitapar* sabregudr 261
படுக்கை அறையுள் நிரப்பினாள். அவர்கள் சின்னச் சின்ன சண்டைகள் பிடிக்கும்பொழுது தான் எப்படி விலக்கித் தீர்க்க வேண்டும் என எண்ணிக் கொள்வான்.
இந்த நாட்டில் மற்றவர்கள் செய்யுமாப்போல் அவர்களுக்கு தனி அறை கொடுக்க தற்போதைய வீட்டில் இடமில்லை என்று சுரேன் சொல்ல, தானும் பிள்ளைகளும் ஹோலில் படுத்துக் கொள்வோம் என மிக இலகுவாகச் சொன்னாள்.
"அப்ப நாங்கள் இரண்டு பேரும் சந்தோஷமாய் இருக்க வேண்டும் என்று நீர் யோசிக்கிறதில்லையோ..” என்று சுரேன் கேட்டபோது, “எப்பவும் நீங்கள் மட்டும்தானே சந்தோஷமாய் இருந்தனிங்கள். தேவைப்பட்டால் அதை நீங்களாகவே எடுப்பியள்” எனச் சொல்ல வாய் வந்த பொழுதும்; தற்போதைய நிலைமையை யோசித்து, “நான் என்ன தூரத்திற்கே போயிட்டன்” எனச் சமயோசிதத்துடன் கூறியதை நினைத்து தனக்குள் சந்தோஷப்பட்டாள்.
சுரேனும் அதற்குப் பிறகு ஏதும் பேசவில்லை.
ஆனாலும் சுரேன் தன்னில் இருந்து ஏனோ சற்றுத் தூரத் தில் இருப்பது போல சில தடவைகள் அவளுக்குப் பட்டாலும், இரண்டு பிள்ளைகள் - செலவு- அது இது என்று யோசிக்கிறாராக்கும் என எண்ணிக் கொள்வாள்.
அடுத்து பதினைந்து நாட்களுக்கு டாக்டரிடம், வைத்தியத் தாதி, ஆஸ்பத்திரி, அவர்கள் இருக்கும் நகரசபை என்று எல்லாவற்றிலும் இருந்து கோமதியின் பெயருக்கு ஒரே கடிதங்களாய் வரத் தொடங்கின. சுரேன்தான் எல்லா வற்றையும் மொழிபெயர்ப்பான். சிலவற்றில் அவளது கையெழுத்தை வேண்டி மிகுதியை தானே நிரப்பி அனுப்புவான்.

Page 133
262 வி. ஜீவகுமாரன்
அவ்வகையில் அடுத்த வெள்ளிக்கிழமை காலை ஏழு மணிக்கு ஆஸ்பத்திரிக்கு வரச்சொல்லியும். முதன் நாள் இரவு பன்னிரண்டு மணியில் இருந்து எதுவும் சாப்பிடவோ. குடிக்கவோ வேண்டாம் என்றும் குறிப்பிட்டு இருந்தது. “ஏனப்பா போன முறை இப்பிடிச் செய்யேல்லை. இந்த முறை இப்பிடி.” "இந்த முறை உம்மை ஒப்பிரேஷன் தியேட்டருக்குள்ளை கொண்டு போய் இரண்டு பிள்ளையும் கருப்பையில் ஒரு பக்கத்தில் கருக்கட்டி இருக்கோ. அல்லது இரண்டு பக்கத்திலும் இருக்கோ என பார்க்கப் போகிறார்கள்.”
“ஒரு பக்கத்திலை எண்டால்தான் நல்லது. பார்க்க ஒரே மாதிரி இருக்கும். லவகுசா மாதிரி.” "யார் அது லவகுசா”
"அது இராமபிரானுக்கும் சீதாப்பிராட்டிக்கும் பிறந்த இரட்டை ஆண் குழந்தைகள். லவன் - குசன்” என்று சொல்லிக் கொண்டிருக்கும் பொழுது மனத்தினுள், “அந்த சீதை போலத் தானே நானும் ஒரு வனவாசத்தை அனுபவித் தேன்” என தனக்குத் தானே சொல்லிக்கொண்டு அயர்ந்து போனாள்.
கேரிமதி அனுமதிக்கப்பட்டிருந்த வாட்டிற்கு பொறுப்பான தலைமை டாக்டர், தினசரி கோமதியைக் கவனித்துக் கொள்ளும் வாட் டாக்டர், அதே மாதிரி தினசரி அவளைக் கவனித்துக்கொள்ளும் நேர்ஸ், நகரசபை உத்தியோ கஸ்தர், டெனிஷ் அகதிகள் சங்கத்தில் இருந்து வந்திருந்த

sFßassapavré- 5-aíburg2tUdbr 263
தென்கிழக்காசிய நாடுகளுக்கு பொறுப்பான அதிகாரி, மொழிபெயர்ப்பாளர், கோமதி அனைவரும் அந்த வட்ட மேசையைச் சுற்றி இருந்தார்கள்.
அந்தக் கலந்துரையாடலுக்கு வந்திருந்த அனைவருக்கும் கோமதியைப் பற்றிய அறிக்கையை தலைமை டாக்டர் வழங்கினார். கோமதிக்கு மொழிபெயர்க்கப்பட்டுச் சொல்லப் பட்டது.
கோமதியின் மனநிலை நன்கு தேறி வருகிறபடியினால் இனி தொடர்ந்தும் ஆஸ்பத்திரியில் இருக்கத் தேவை யில்லை என்றும், ஆனாலும் குறைந்தது அடுத்த இரண்டு வருடங்களாவது மனநிலையைச் சமன் செய்யும் மாத்திரைகளைத் தவறாது எடுக்க வேண்டும் என்றும், அதுவரை அவர்கள் சொந்த நகரத்தில் உள்ள டாக்டரிடம் மாதம் ஒரு தடவையாவது சென்று கலந்துரையாடுவது கட்டாயம் என்றும் அதில் சொல்லப்பட்டிருந்தது. மேலும் கோமதி சுரேனின் வீட்டிற்குப் போக மறுக்கும் காரணம் நகரசபைக்கு நியாயமாகப்படுவதால் நகரசபை கோமதிக்கு வாழ இரண்டு அறை கொண்ட வீடு எடுப்பதாக உறுதியளித்தது. ஆனால் கோமதியோ இலங்கைக்கே திரும்பப் போக வேண்டும் என்று கட்டாயப்படுத்துவதால், இலங்கையில் போர் உக்கிரமாகி இக்காலகட்டத்தில் அங்கு போவது உசிதம் இல்லை என அகதிகள் சங்கம் தனது கருத்தைத் தெரிவித்தது. மேலாக கோமதியின் பெற்றோர் எங்கு இருக் கிறார்களோ எனத் தெரியாத சூழ்நிலையில் கோமதியை இலங்கைக்கு அனுப்புவது விவேகமான காரியமில்லை என்றாலும் இறுதி முடிவு கோமதியின் கையில் தான் என அனைவரும் அபிப்பிராயப்பட்டார்கள்.

Page 134
264 di. síscaoiptigdir
கோமதியின் முடிவைக் கேட்க அனைவரும் காத்திருந் தார்கள். கைகளை நீட்டிக் கொஞ்சம் சோம்பலை முறித்தபடி, "இனி சுரேன் எண்ட பொறுக்கி இனியொரு தமிழ்ப் பெட்டையைக் கட்டிக்கொண்டு வந்து இஞ்சை வைச்சு கற்பழிக்க நீங்கள் யாரும் விடக்கூடாது.”
கோமதியின் கண்கள் சிவந்தன.
"கோமதி. நாங்கள் இப்ப உங்களுக்கு என்ன செய்ய வேண்டும் எண்டு சொல்லுங்கோ. அதுக்குதான் இவ் வளவு பேரும் கூடி இருக்கிறம்.”
"ஓம் டாக்டர், விளங்குது. இன்னும் நாலைஞ்சு வருஷத்திலை இந்த இடத்திலை இன்னொரு சுமதியோ. சுந்தரியோ இருந்து அழக்கூடாது எண்டதுக்குதான் சொல்லுறன்.” "சரி. அதை நாங்கள் பார்த்துக் கொள்ளுறம். நீங்கள் உங்கள் முடிவை சொல்லுங்கோ.” இது நகரசபையில் இருந்து வந்திருந்த பெண் உத்தியோகஸ்தர். "நன்றி. உங்களுக்கு கடவுள் புண்ணியம் கிடைக்குதோ இல்லையோ, என்னைப் போலை இன்னொரு பிள்ளை கஷ்டப்படாமல் இருக்க உங்களாலை உதவி செய்ய முடியும்.” "ஒகே. அவரைப்பற்றி தனிப்பட்ட அறிக்கையில் நாங்கள் பதிவு செய்து வைப்பம். இப்ப நீங்கள் உங்கடை முடிவைச் சொல்லுங்கோ.”
"சொல்லுறன். நான் இலங்கைக்குப் போகவேனும்" - உறுதியாகச் சொன்னாள்.

gebrandørk sFairUUidir 265
மற்ற அனைவரும் ஆளை ஆள் பார்த்தார்கள்.
“சனங்கள் எல்லாம் இடம் பெயர்ந்து கொண்டிருக் கிறார்கள். போர் நிறுத்தத்தை செய்யச் சொல்லி எல்லா நாட்டிலும் ஊர்வலங்கள் நடக்குது. இடம் பெயர்ந்த சனங்கள் எந்த வசதியும் இல்லாமல் கஷ்டப்படுகினம். இந்த நிலைமையிலை நீங்கள் அங்கை போய்.”அகதிகள் சங்க அதிகாரி இழுத்தார்.
"நீங்க சொல்றது விளங்குது. இங்கை மட்டும் என்ன. வீட்டுக்கை கிடந்து அடிபடுறம். பிரிஞ்சு போய் தனியக் கிடந்து கஷ்டப்படுறம். என்னதான் நிம்மதியாய் இருந் தாலும் கடைத்தெருவுக்குப் போகேக்கை நாங்கள் வேறை இன சனங்கள் என்று நீங்கள் எங்களைப் பார்ப்பது வடிவாய்த் தெரியும். இப்பவும் என்னை உங்களிலை ஒருத்தியாய் வைச்சுக் கதைக்கேல்லை. யாரோ ஒரு இலங்கைப் பொம்பிளையாய்த்தாய் வைச்சுக் கதைக் கிறியள். ஆனால் நாங்கள் எங்கடை நாட்டுக்குப் போனால், எங்கடை பூமியிலை சாகிறம் எண்ட நிம்ம தியோடை ஒரு நாள் செத்துப் போவம்.”
கோமதி தொடர்ந்து கதைத்துக்கொண்டு இருக்க தலைமை டாக்டர், "ஓ கே. உங்களுக்கு ஒரு பத்து நாள் தவணை தருகின்றோம். இந்த காலகட்டத்தில் உங்களுடன் தினமும் உரையாட ஒரு மனநல வைத்தியரை ஒழுங்கு செய்யுமாறு நகரசபைக்கு நாங்கள் பரிந்துரை செய்கின் றோம். அதுவரையில் நீங்கள் உங்கள் முடிவைப்பரிசீலனை செய்யலாம். இப்பொழுது போய் வாருங்கள்” என சம்பா ஷணையை முடிவுக்குக் கொண்டு வந்தார்.
கோமதியும் மொழிபெயர்ப்பாளரும் போக மிகுதியாய்
இருந்தவர்கள் தொடர்ந்தும் இருந்து கதைத்தார்கள். மேலாக கோமதிக்காகக் கவலைப்பட்டார்கள்.

Page 135
266 வி. ஜீவகுமாரன்
ஒரு பத்து நிமிடம் சென்றிருக்கமாட்டாது. கோமதியின் அறையில் இருந்து பெரிய அலறல் சத்தம் கேட்டது. அனைவரும் எழுந்து ஓடிப் போனார்கள்.
சில நிமிடங்களுக்கு முன்பு தபாலில் வந்திருந்த, தமிழில் மொழிபெயர்க்கப்பட்ட பல ஆஸ்பத்திரி அறிக்கைகளும், விவாகரத்திற்காக சுரேனின் வக்கீல் அனுப்பிய நோட்டீசும் கோமதியின் கட்டிலில் பரந்து கிடந்தன.
கோமதி விறைத்துப் போய் நின்றாள். “உங்கடை பிள்ளைக்கு எண்டால் நீங்கள் எல்லாரும் அவனை இப்பிடி விட்டு விடுவிங்களோ. கடவுளே.” “நீங்கள் விவாகரத்தை விரும்பிறிங்கள்தானே. பிறகேன் கோபப்படுகிறீர்கள்?”
"அதை நான் கேட்க வேணும். அப்பதான் அது அவனுக்கு தண்டனை. இப்ப அவன் கேட்கிறது எனக்கு அவமானம். என்னை விசரி எண்டு வக்கீல் எழுதியிருக்கிறான். நாய்கள். வக்கீலிண்டை பெண்டாட்டியோடை போய் படுக்கச் சொல்லுங்கோ. அவளவை தான் இவங்களுக்குச் சரி.” நேர்ஸ் ஓடி வந்து அவளைக் கட்டிப்பிடித்து சமா தானப்படுத்தினார். கோமதி அதிக நாட்களுக்குப் பின்பு இன்று அழத் தொடங்கினாள்.
“பாவப்பட்ட பெண்” என அவளுக்காகப் பரிதாபப்பட்டுக்
கொண்டு வந்திருந்த அதிகாரிகள் அனைவரும் அறையை விட்டு வெளியேறினார்கள்.

seraporš sairgUdr 267
வெள்ளி அதிகாலை சுரேன் எழும்ப முன்னே எழுந்து குளித்து தோய்ந்து சுவாமி படங்களுக்கு விளக்குகள் எல்லாம் கொளுத்தி தனது இரண்டு பிள்ளைகளும் சுகமாய்ப் பிறக்க வேண்டும் என்று பிரார்த்தித்துக் கொண்டாள்.
அத்துடன் அன்றைய சோதனைகளும் நன்கு அமைய வேண்டும் என ஆண்டவணை வேண்டிக் கொண்டாள்.
நேரம் காலை ஆறு மணியைக் காட்டியது.
இனி சுரேனை எழுப்ப வேண்டும் என்று நினைத்துக் கொண்டு சுப்பிரபாத சி.டியைப் போட்டுவிட்டு மின் அடுப்பினைத் தட்டி விட்டாள்.
வழமையாக வெள்ளிக்கிழமைகளில் அவள் விரதம் இருப்பது வழக்கம். இன்று காலையில் தோய்ந்துவிட்டு குடிக்கும் தேனீர் குடிக்கக் கூடாது; அவ்வளவுதானே என எண்ணியபடி சுரேனுக்கு மட்டும் தேனிரும் ஊற்றி பாணுக்கு பட்டரும் ஜாமும் பூசத் தொடங்கினாள். எம்.எஸ்.ஸின் சுப்பிரபாதம் சுரேனைப் படுக்கையில் இருந்து எழும்ப வைத்தது. சுரேன் குளிக்கப் போன கையுடன் தொலைபேசி அடித்தது. யார் இந்த நேரத்தில் விடியற்காலையில் என்று நினைத்த படி டெலிபோனுக்குக் கிட்டவாகப் போனாள். பொதுவாக அதிகாலை டெலிபோன்கள் இலங்கையில் இருந்து வருவன வாகத்தான் இருக்கும்.

Page 136
268 வி. சிவகுமாரன்
அதுவும் போர் மூட்டம் மூடிக்கொள்ள ஆரம்பித்த பொழுது அதிகமாக அவலச் செய்தியையே அவை காவி வரும்.
"ஹலோ நான் கோமதி” என அவள் ஆரம்பிக்கும் முன்பே, “அது நான் பிள்ளை”என தாய் தன்னை அறிமுகம் செய்து கொண்டாள்.
"என்னம்மா விஷேசம் விடியக் காலமை எடுத்திருக்கிறியள்?” “எப்படிப் பிள்ளை சுகமாய் இருக்கிறியோ?”
“ஓமம்மா...”
"டொக்டரிட்டை ஒழுங்காய் போறனியோ.”
“ஓமம்மா. இண்டைக்கும் செக்கிங் இருக்கு. இரண்டு பேரும் ஒரே மாதிரி இருப்பினமோ. இல்லாட்டி வேறு வேறு மாதிரி இருப்பினமோ எண்டு சோதிக்கப் போகினம்.”
"கடவுளே. வத்தாப்பளை அம்மன் ஒண்டும் வராமல் உன்னைக் காப்பாத்துவா.”
"அது சரி. ஏன் எடுத்தனிங்கள்?”
“இல்லை சும்மாதான்.”
“இல்லை. நீங்கள் ஏதோ சமாளிக்கிறியள். சொல் லுங்கோ.”
“இல்லைப் பிள்ளை. வத்தாப்பளை பொங்கலுக்கு நீ வந்து நிக்கிறாய் போலை கிடக்கு. வள்ளி தெய்வானை போலை உன்ரை இரண்டும் கோயில் நாவலடியிலை விளையாடிக் கொண்டு நிண்டதுகள். பிறகு பார்த்தால் காணேல்லை. அதுகள் வரும் எண்டுட்டு நீ கொஞ்சம் பராவாய் பண்ணா மல் மோதகம் பிடிச்சுக் கொண்டு இருக்கிறாய். போய்

சங்கானைச் சண்டியன் 269
பாரடி எண்டு நான் உன்னைக் களைச்சுப் போட்டுப் பார்த்தா. மோதகச் சட்டிக்கை அதுகளின்ரை தலை கிடக்குது. திடுக்கிட்டு எழும்பிட்டன். இப்ப மட்டும் அந்தப் பதற்றம் போகேல்லைப் பிள்ளை. அதுதான் நீ எழும் பட்டும் எண்டுட்டு பார்த்துக் கொண்டு இருந்தனான்.” "அம்மா. அம்மா..” என செல்லமாக தாயைக் கோபித்து விட்டுத் தொடர்ந்தாள் - “இண்டைக்கு அவை எப்பிடி இருக்கினம் எண்டு சோதிக்கப் போகினம். அதுதான் பேத்தியாருக்கு காட்டியிருக்கினம். பாத்தியளே அவை இப்பவே உங்களை இந்தப் பாடு படுத்தினால் வெளியிலை வந்தபிறகு என்ன பாடுபடுத்துவினம்.”
“சரி பிள்ளை. இப்பதான் மனதுக்கு ஆறுதலாய்க் கிடக்கு.
எதுக்கும் ஆசுபத்திரியாலை வந்தபிறகு ஒருக்கா டெலிபோன் எடுத்து சுகத்தை சொல்லிப் போட்டு வை.”
“ஓமம்மா கட்டாயம் சொல்லுறன்.”
டெலிபோன் உரையாடல் முடியவும் சுரேனும் ஆஸ்பத் திரிக்குப் போக வெளிக்கிட்டுக்கொண்டு வந்து சாப்பாட்டு மேசையடியில் கோமதி தயார் செய்திருந்த பாணை எடுத்து சாப்பிடத் தொடங்கினான்.
"அம்மாவோடை கதைச்சுக்கொண்டு இருந்ததாலை சுடு தண்ணி ஆறிப் போச்சு. பொறுங்கோ திரும்ப சுட வைச்சுத்தாறன். கேட்டீங்களா முஸ்பாத்தியை. சசியும் சுசியும் தொலைந்து போக அம்மா கனவு கண்டவாவாம்.” சுரேனின் முகத்தில் ஒரு வித்தியாசமான உணர்ச்சி தோன்றி மறைந்தது. ஆனால் கோமதி அதனை அவ தானிக்கவில்லை.
99.
“பிறகு.

Page 137
270 வி. ஜீவகுமாரன்
“பிறகு என்ன. பாவம். பயந்து போய் வந்து டெலிபோன் எடுத்தவா.” "ஏன் கோமதி. உலகத்திலை எத்தினியோ நடக்குது. பயணம் என்று வெளிக்கிட்டுப் போன சனம் விமான விபத்திலை இல்லாமல் போகுதுகள். போன வருஷம் சுவீசில் இருந்து போன எங்கடை தமிழ்க் குடும்பம் ஒன்று மாமல்லபுரம் றோட்டிலை அக்சிடன்ற்பட்டு தகப்பனும் தாயும் செத்துப்போக பிள்ளையஸ் அநாதையாய்த் திரும்பி வந்ததுகள். அப்பிடி எதுவும் எங்களுக்கும் நடக்கலாம். எங்கடை பிள்ளைகளுக்கும் நடக்கலாம்.”
“தயவுசெய்து நிற்பாட்டுறியளே. வெள்ளிக்கிழமையும் காலையுமாய். மாமியார் தொடங்கி வைக்க மருமகன் பின் பாட்டுப் பாடுறார். நான் செத்துப் போனால் என்ன நிலை எண்டு கதையுங்கோ. நீங்கள் செத்துப் போனால் என்ன நிலை எண்டு கதையுங்கோ. ஆனால் விளை யாட்டுக்கு மட்டும் அதுகளைப் பற்றிக் கதையாதை யுங்கோ. என்ரை பிள்ளையஞக்கு வாழ்க்கையிலை எந்த தீங்கும் வராது. அது மட்டும் உறுதி.” பேச்சுக்கு முற்றுப்புள்ளி வைத்துவிட்டு சுரேனுக்கு தேநீரைக் கொடுத்துவிட்டு தோய்ந்துவிட்டு உலரவிட்ட தனது முடியை வடிவாகப் பின்னிக் கொண்டாள்.
ஆஸ்பத்திரிக்குக் கொண்டுபோக வேண்டிய எல்லாப் பேப்பர்களையும் சரி பார்த்துக் கொண்டாள்.
சுரேனும் தேநீர் குடித்து முடித்து கார் திறப்பைக் கையில் எடுக்க, ஒரு தரம் சாமிப்படத்தடிக்குச் சென்று நெற்றியில் மீண்டும் ஒரு சின்னத் திருநீற்றுக் கீறை இட்டபடி வெளியே வந்தாள் கோமதி.

seraparāsairguar 271
கார் சின்ன றோட்டுகளை மெதுவாகத் தாண்டி பின் ஆஸ்பத்திரிக்குப் போகும் பெரும் தெருக்களில் விரைவாக ஒடத் தொடங்கியது.
ஸ்பத்திரிக்கு வருபவர்கள் கார் நிறுத்துவதற்கென பிர்த்தியேகமாக உள்ள இடத்தில் காரை நிறுத்தி விட்டு சுரேனும் கோமதியும் உள்ளே நுழைந்தார்கள். ஆஸ்பத்திரியின் வெவ்வேறு பகுதிகளுக்கும் செல் வதற்காகப் போடப்பட்டிருந்த வெவ்வேறு நிறங்களான கோடுகள் வழியாக குழந்தைப் பிள்ளைப் போல் கோமதி நடந்து போனாள். சுரேன் பாதையின் கரையாகவே நடந்து சென்றான். சுமார் நாலைந்து நிமிட நடைக்குப் பிறகு குறிப்பிட்ட அந்த வாட்டுக்கு இருவரும் வந்து சேர்ந்தனர். அங்குள்ள வெயிற்றிங் ஹோலில் வேறும் பல டெனிஷ் பெண்கள் வந்திருந்தனர் - சிலர் கணவன்மாருடன், சிலர் தாய், சகோதரங்களுடன். அவர்களைக் கூர்ந்து கவனித்துக் கொண்டு வரும்பொழுது பின் வரிசையில் கோமதியின் வயதை ஒத்த ஒரு தமிழ்ப்பெண் டெனிஷ் பத்திரிகை ஒன்றில் தலைமூழ்கி இருந்தாள். "அங்கையப்பா ஒரு தமிழ்ப் பொம்பிளை இருக்கு. எந்த இடம் எண்டு விசாரிப்பமோ.”
“சும்மா இரும். யார் ஆட்கள் எண்டு தெரியாமல் ஏன் வீணாய்.”

Page 138
272 வி. விவகுமாரன்
கோமதி மெளனமானாள்.
தற்சமயம் பத்திரிகையில் இருந்து தலை நிமிர்ந்த அந்தப் பெண்ணின் கண்களில், கோமதி தட்டுப்பட, தானாகவே அந்தப் பெண் எழுந்து வந்து “நீங்கள் தான் கோமதியோ” என நட்புடன் கேட்டாள்.
கோமதி பதில் கூற முதல் சுரேன் கொஞ்சம் கலவரப் பட்டவனாக, “நீங்கள் யார்” எனக் கேட்டான்.
“என்ரை பெயர் சாந்தகுமாரி. நான் உங்கடை வைவ்வுக்கு மொழிபெயர்க்க வந்து இருக்கிறன்.”
“உங்களை யார் வரச் சொன்னது?” - கொஞ்சம் விசனப் ULLT6öT.
"ஆஸ்பத்திரிதான் கூப்பிட்டவை.” “எனக்கு நல்லாவே டெனிஷ் தெரியும்.” "இருக்கலாம். இது மருத்துவ மொழிபெயர்ப்பு." "அப்பிடி ஒரு சீரியஸான வருத்தம் ஒண்டும் இல்லை. பிளிஸ் நீங்கள் போங்கோ.” "ஆஸ்பத்திரி தான் என்னைக் கூப்பிட்டது.” “எப்படி இருந்தாலும் இது என்ரை மனுசியின்ரை பிரச் சனை. என்னாலை வடிவாய் அவர்களுக்கு உதவி செய்ய முடியும்.” “உங்களுக்கு விருப்பமில்லாவிட்டால் நான் போறன். ஆனால் நேர்ஸிட்டை சொல்லிப்போட்டுப் போறன்.” "ஏனப்பா அவாவும் வரட்டுமன்.” என கோமதி தொடங்க முதல்.

சங்தானைச் சண்டியன் 273
“கொஞ்சம் பொத்திக் கொண்டு இருக்கிறீரோ” என சுரேன் தன்னை மறந்து தன் குரலை உயர்த்திய பொழுது அங்கி ருந்த அனைவரும் ஒருமுறை திரும்பிப் பார்த்தார்கள். சுரேனின் சத்தத்தைக் கேட்டு வெளியில் வந்த நேர்ஸிடம் மொழிபெயர்ப்புக்கு வந்த பெண் நிலைமையை விளக்கி னாள்.
நேர்ஸ் சுரேனிடம் வந்து தங்கள் றிப்போட்டில் கோமதிக்கு டெனிஷ் தெரியாது என்று இருந்தபடியாலே தாங்களாகவே மொழிபெயர்ப்பாளரை ஒழுங்கு செய்திருந்ததாகவும். சுரேனுக்கு பாஷை நன்கு தெரிந்தபடியால் தாம் மொழி பெயர்ப்பாளரைத் திருப்பி அனுப்புவதாயும் கூறி சமா தானப்படுத்தினாள். சுரேன் அந்தளவில் சமாதானப்பட்டாலும், அந்தக்கூடத்தை விட்டு வெளியேறிக் கொண்டிருந்த மொழிபெயர்ப்பாளரை முறைத்துப் பார்த்தது, “காசுக்கு அலையுறாளவை” என்று சொன்னது கோமதிக்கு என்னவோ மாதிரி இருந்தது. ஆனாலும் சுரேனுடன் ஏதும் கதையாமல் இருப்பதே நல்லது எனப்பட்டது, முகம் எல்லாம் சிவந்து பற்களுக்கிடையில் கை நகங் களைக் கடித்தபடி. சுரேனும் மிகவும் அமைதி இழந்த வனாகக் காணப்பட்டான்.
அடிக்கடி கை மணிக்கூட்டைப் பார்ப்பதும். தன் தலையைக் கோருவதாயும். கதிரையில் நன்கு சாய்ந்து தலையைப் பின்னோக்கிச் சாய்த்து முகட்டைப் பார்ப்ப தாயும் இருந்தான், கோமதியின் முறை வந்தபொழுது கோமதியும் சுரேனும் உள்ளே நுழைந்தார்கள்.

Page 139
274 வி. விவகுமாரன்
நேர்ஸ் முதலில் வந்து கைகளைக் குலுக்கிவிட்டு ஆஸ் பத்திரிக்குரிய பிரத்தியேக ஆடைகளை அணியும்படி நீட்டினாள்.
ஏன் என்பது போல கோமதி திரும்பி சுரேனைப் பார்த் தாள்.
“தியேட்டருக்குள்ளை கொண்டு போய் சோதிக்க இருப் பதால் ஆஸ்பத்திரிக்குரிய பிரத்தியேக உடைகளையே அணிய வேண்டும்” என சுரேன் விளங்கப்படுத்தினான்.
கோமதி ஒரு தடவை இலங்கையை நினைத்துப் பார்த்தாள்.
எந்த நோயாளிக்கும் வீட்டில் இருந்து வந்தால் தான் மாற்று உடுப்பு. மற்றும்படி எத்தனை நாள் சென்றாலும், எத்தனை தூரம் வியர்வையில் ஆடைகள் நனைந்தாலும் மாற்று உடுப்பு என்பதே அவர் அவர்களுக்குரியதுதான். அவர்கள் ஆடையில் அந்த நோயாளியின் பொருளாதார நிலைமை தெரியும். ஆனால் டென்மார்க்கின் ஆஸ்பத்திரிகளில் அனுமதிக்கப்பட்டிருக்கும் நோயாளிகளில் யார் பணக் காரன், யார் ஏழை என்று தெரியாது.
உடுப்புகளை மாற்றிக்கொண்டபின்பு நேர்ஸ் காட்டிய கட்டிலில் ஏறிப்படுத்துக் கொண்டாள். “என்ரை பிள்ளையஸ் சுகமாய்த்தான் பிறக்கும். இதெல் லாம் தேவையா?” எனச் சிரித்தபடியே சொன்னாள். சுரேன் ஒன்றும் சொல்லவில்லை. சிறிது நேரத்திற்கு முன் மொழிபெயர்ப்பாளருடன் நடந்த வாய்த் தகராறிலிருந்து முற்றாக அவன் விடுபடவில்லை போலும் என நினைத்துக் கொண்டாள்.

вићаитеранi srairgudr 275
அடுத்து வந்த மயக்கமருந்து கொடுக்கும் டாக்டர் தன்னை அறிமுகப்படுத்திக்கொண்டு ஊசியை வலது கையில் G8uTLLTi.
"ஏன் ஊசி போடினம்?” “இது உம்மை சோதிக்கும் பொழுது, நீர் நல்ல ஆறுதலாய் இருக்கிறதுக்கு போடினம்" - சுரேன் சொல்லிக் கொண்டு இருக்கும்பொழுது கோமதி ஆழ்ந்த தூக்கத்திற்குள் போய்க் கொண்டிருந்தாள். கையில் ஒரு பச்சைநிற ப்ொலித்தீன் தொப்பியைக் கொண்டு வந்து கோமதிக்கு அணிவித்தபடி, “நீங்கள் போய் வெளியில் காத்திருங்கள். உங்கள் மனைவிக்கு நினைவு திரும்பிய பின்பு உள்ளே கூப்பிடுகின்றோம்” என ஒரு நேர்ஸ் கூற சுரேன் கோமதியைத் திரும்பித் திரும்பிப் பார்த்தபடி வெளியே போனான். ஓடலி வந்து கோமதியின் படுக்கையை உள்ளே தள்ளிக் கொண்டு போனான்.
கோமதி தனது நினைவை இழந்து கொண்டிருந்தாள். தாயார் தனக்குப் பக்கத்தில் வந்து கொண்டிருப்பது போல் அவளுக்குப்பட்டது.
சிமார் இரண்டு மணித்தியாலத்துக்குப் பின்பு கோமதிக்கு சாடையாக நினைவு திரும்பிக் கொண்டிருந்தது.
வாய் ஏதோ பிசத்திக் கொண்டிருந்தது. நேர்ஸ் வெளியால் போய் சுரேனை உள்ளே கூட்டி வந்தார்.

Page 140
276 வி, வேகுமாரன்
சுரேன் வந்து தனக்குப் பக்கத்தில் நிற்கும் அசுமாத்தம் தெரிந்தது.
கஷ்டப்பட்டு கண்ணை முழித்தாள்.
அரை முழிப்பிலும் அரைக்குரலிலும், “பிள்ளையஸ் எப்படி இருக்கினமாம்?” கேட்டுவிட்டு மீண்டும் முற்றாக விடுபடாத மயக்கத்தில் வாய் பிதற்றினாள்.
அடிவயிறு நொந்தது.
"தண்ணி.”
“என்ன சொல்லுறா.” நேர்ஸ் கேட்டார்.
"தண்ணியாம்.” "நான் தேநீர் எடுத்து வருகின்றேன். குளிர்நீர் சில வேளையில் பிரக்கடிக்கப் பார்க்கும்” கூறிவிட்டுச் சென்ற நேர்ஸ் கொஞ்ச நேரத்தில் மெல்லிய சூட்டில் தேநீரைக் கொண்டு வந்து சுரேனிடம் கொடுத்தார்.
சுரேனோ அதனை அவளுக்குப் பருக்குவதோ. அல்லது எழுப்பிக் கொடுப்பதுவோ என தடுமாறுவதைப் பார்த்த நேர்ஸ், கோமதியின் தலையைத் தூக்கி தனது மடியில் வைத்துக்கொண்டு. அவளின் தலையை ஒரு கையால் வருடியபடி. தேநீரைப் பருக்கினார்.
கோமதிக்கு மிகவும் இதமாக இருந்தது. மெதுவாய் கண்ணைத் திறந்தாள்.
"அடிவயிற்றுக்குள் நோகுது” என சுரேனுக்கு வாயாலும். சைகையாலும் நேர்சுக்கும் சொன்னாள்.

Faksosramparể Fahrg.UUdr 277
"இரத்தோட்டம் கூடவாய் இருக்கின்றது” என டெனிஷில் சுரேனுக்குக் கூறியபடி இரண்டு மொத்த நப்பின்களை எடுத்து வந்து மாற்றினாள். கோமதிக்கு எதுவும் புரியவில்லை. மாற்றிய நப்பின்களை நேர்ஸ் கழிவுக் கூடையில் போடும்
பொழுது அவை இரண்டும் இரத்தத்தினால் தோய்ந்து போயிருந்ததைக் கண்டு அதிர்ந்து போனாள்.
அவளின் மயக்கம் முற்றாகத் தீர்ந்தது. “என்ன நடந்தது?” என துடிதுடித்தபடியே கேட்டாள்.
“அமைதியாய் இரும். நேற்றே வயிற்றுக்குள்ளை பிள்ளை யள் செத்துப் போச்சாம்” சுரேன் அவளின் முகத்தைப் பார்க்காமலேயே சொன்னான்.
“இல்லை. நீங்கள் பொய் சொல்லுறியள்.” மோதகச்சட்டியுள் பிள்ளைகளின் தலை இரண்டும். "அம்மா இவர் பொய் சொல்லுறார்!”
கோமதி அலறிய அலறலில் அந்த வாட்டுக்குள் இருந்த அத்தனை நேர்ஸ்களும் டாக்டர்களும் ஓடி வந்தார்கள். கோமதியின் நிலையைப் பார்க்க, ஏதோ விபரீதம் நடந்து விட்டது எனப் புரிந்து கொண்டார்கள். “என்ன நடந்தது?” என டாக்டர்கள் கேட்க, "அவா கவலைப் படுகிறா” என சுரேன் சமாளிக்கப் பார்த்தான். ஏதோ சுரேன் சமாளிக்கின்றான் என்று கோமதிக்குப் புரிந்து விட்டது.

Page 141
278 வி. வேகுமாரன்
தனக்குத் தெரிந்த அரைகுறை ஆங்கிலத்தில்,
“மை பேபீஸ். நோ. டை.
99
“மை பேபீஸ். நோ. டை.
99
“மை பேபீஸ். நோ. டை.
திரும்பத் திரும்ப அவள் சொல்லச் சொல்ல அவளின் முகம் விகாரமாகிக் கொண்டு வந்தது.
டாக்டர்கள், நேர்ஸ்மார் ஒருவரை ஒருவர் பார்த்தார்கள். “வை பிளிடிங்..” என நேர்ஸ் கட்டிய நப்பினைப் பிய்த் தெறிந்தாள். “அமைதியாய் இரும்.உம்மைப்பற்றிஎன்ன நினைப்பினம்” என கிட்டவாகப் போன சுரேனின் சேட்டைப் பிடித்துக் கொண்டு, “ஏன் இவங்கள் என்ரை பிள்ளையளைக் கொண்டவங்கள்.ஏன் நீங்கள் விட்டனிங்கள்” என டாக்டர்ம ாரைச் சுட்டிக்காட்டிக் கதைக்க அவர்களுக்கு பாஷை விளங்காவிட்டாலும் எங்கேயே ஒரு பிழை நடந்து விட்டது எனத் தெரிந்தது.
“என்ன சொல்லுறா?” “இற் வில் பி ஒகே." - சுரேன் சமாளித்தான். "நோ ஒகே.”
"நோ ஒகே.”
"நோ ஒகே.”
கோமதியின் நிலை மோசமாகிக்கொண்டு போக, "ஒரு மொழிபெயர்ப்பாளரைக் கூப்பிடுங்கள்” என ஒப்பிறேஷன் தியேட்டருக்குப் ப்ொறுப்பான டாக்டர் சொன்னார்.

skorabori sabriptudr 279
"ஏன் மொழிபெயர்ப்பாளர்?. எனக்கு நல்லாய் டெனிஷ் தெரியும்" சுரேன் முந்தினான்.
அப்போது காலையில் மொழிபெயர்ப்பாளரைத் திருப்பி அனுப்பிய நாடகத்தை மெதுவாக நேர்ஸ் டாக்டரிடம் சொன்னார்.
"அப்படியா?” “ஜெஸ். இப்பவும் என்னாலை மொழிபெயர்க்க முடியும்.”
“இப்ப நடக்க இருக்கிறது மொழிபெயர்ப்பில்லை. விசாரணை.”
சுரேனின் தலை குனிந்தது. ஆளுக்காள் குசுகுசுக்கத் தொடங்கினார்கள். மொழிபெயர்ப்பாளருக்கு டெலிபோன் பறந்தது. "அரை மணித்தியாலத்துள் வருகின்றாவாம்.” கோமதிக்கு எதுவுமே புரியவில்லை. கட்டிலால் இறங்கி கீழே குனிந்து பார்த்தாள்.
நேர்ஸ் ஒருவர் ஓடிவந்து என்னத்தைத் தேடுகிறாய் என சைகையால் கேட்டார்.
“மை பேபீஸ். சசி. சுசி."
“மை பேபீஸ். சசி. சுசி.”
“மை பேபீஸ். சசி. சுசி.” நேர்ஸ் பரிதாபமாய் டாக்டரைப் பார்த்தார். கருவைக் கலைத்த அந்த டாக்டரின் கண்களில் கண்ணிர் கசிந்திருந்தது.

Page 142
280 வி. ஜீவகுமாரன்
"நோ கிறை. நோ கிறை. யூ குட்." "நோ கிறை. நோ கிறை. யூ குட்.”
gy
"நோ கிறை. நோ கிறை. யூ குட்..” என்று டாக்டரைப் பார்த்துச் சொல்லியபடி சுரேனை முறைத்துப் பார்க்கத் தொடங்கினாள். தூரத்தில் மொழிபெயர்ப்பாளர் வந்து கொண்டிருந்தார். நேர்ஸ் ஓடிச்சென்று சுருக்கமாக நடந்த விபரீதத்தைக் கூறி. அதனை விசாரிக்க வேண்டும் என டாக்டர்கள் விரும்புகிறார்கள் எனக் கூறியபடி கலந்துரையாடல் நடக்கும் அறைக்கு மொழிபெயர்ப்பாளரையும், கோமதி யையும் கூட்டிச் சென்றார்.
“புருஷனையும் கூப்பிடுங்கள்.” வெளியே நேர்ஸ் வந்து பார்த்தபொழுது சுரேன் அங்கிருக்க வில்லை.
"நான் சந்தேகப்பட்டது போல நடந்திருக்க வேண்டும்” என தனக்குள் டாக்டர் சொல்லிக்கொண்டு மொழிபெயர்ப் பாளரின் உதவியுடன் டாக்டர் கேள்வி கேட்கத் தொடங் கினார்.
"இந்த பேப்பரிலை இருக்கிற கையெழுத்து உங்களு டையதுதானே.”
“யெஸ். மை. மை. சிக்னேச்சர்.”
“எதுக்காக இந்தக் கையெழுத்தை வைத்தனிர்கள் எனத் தெரியுமா?”
“மை. பேபிஸ். செக்கிங்.”

சங்கானைச் சண்டியன் 281
அங்கிருந்த அனைவரும் ஆளை ஆளைப் பார்த்துக் கொண்டார்கள். “நீங்கள் தமிழிலேயே கதைக்கலாம். அதுக்காகத்தான் மொழிபெயர்ப்பாளரைக் கூப்பிட்டிருக்கிறம்.” "நோ. தமிழ். நோ. தமிழ். நோ. பிளிவ். நோ. தமிழ். நோ. தமிழ்.” சொல்லிவிட்டு சுற்றும் முற்றும் பார்த்தாள். எழுந்து போய் குப்பைக் கூடையினுள் பார்த்தாள். "வெயர் சசி.வெயர் சுசி.”
"வெயர் சசி.வெயர் சுசி.”
“வெயர் சசி.வெயர் சுசி.”
பின் மொழிப்பெயர்ப்பாளருக்கு அண்மையாக வந்து, "அம்மா காலமை சொன்னவா. பிள்ளையளின்ரை தலை மோதகச்சட்டிக்கை கிடந்தது எண்டு. அந்தப் பொறுக்கி தான் தூக்கி எறிந்திருக்க வேணும்” என்று சொல்ல மொழிபெயர்ப்பாளருக்கே அரைவாசிதான் விளங்கியது.
நிலைமையைப் புரிந்து கொண்ட டாக்டரில் ஒருவர், "ஆளை மனோநிலை பாதிக்கப்பட்டவரின் பிரிவுக்கு அனுப்ப வேண்டும்” என அபிப்பிராயப்ப்ட்டார். “அதற்கு முதல் மொழிபெயர்ப்பாளர் இங்கே இருக்கின்ற படியால் என்ன நடந்தது என தெளிவாகச் சொல்ல வேண்டியது எங்களின் கடமை.” அனைவரும் ஆமோதித்தனர்.
“கோமதி.”

Page 143
282 வி. ஜீவகுமாரன்
மேசைக்கு அடியில் ஏதோ ஒன்றைத் தேடும் பாங்கில் இருந்தவள் நிமிர்ந்து பார்த்தாள். “இன்று காலையில் உங்களுக்கு நடந்தது கருக்கலைப்பு.” "அப்ப சசி. சுசி.”
“அதைத்தான் சொல்ல வருகின்றோம். இரண்டு பிள்ளை களை உங்களால் பெற்று எடுத்து வளர்க்க முடியாததால், உங்களின் சுயவிருப்பத்தின்படி கருக்கலைக்க ஒப்புதல் அளித்து, நீங்கள் கையெழுத்து வைத்து எங்களுக்கு உங்கள் சொந்த டாக்டர் மூலம் விண்ணப்பித்த கடிதத்தின் பிரகாரம்தான் காலை 8.51 மணிக்கு கருக்கலைப்பு செய்தோம்.”
கோமதி விறைத்தவளாய் பார்த்துக் கொண்டு இருந்தாள்.
“சட்டப்படி அவன்மீது நடவடிக்கை எடுக்க முடியாதோ?” மற்ற டாக்டர் கேட்டார். “முடியும் என்று நான் நினைக்கவில்லை. நான் இதற்கு ஒத்துக்கொள்ளவில்லை என கோமதி சொன்னாலும், ஒத்துக்கொண்டேதான் கையெழுத்து வைத்தார் என கணவன் சொன்னால், சாட்சியம் இல்லாததால் அது கோட்டிலை எடுபடாது.”
கோமதி தொடர்ந்தும் விறைத்துப் பார்த்துக்கொண்டு இருந்தாள்.
“நடந்த நிகழ்வுக்கு நாங்கள் மனம் வருந்துகின்றோம்” என டாக்டர் தன் இருக்கையை விட்டு எழ, எட்டி டாக்டரின் ஸ்ரெதஸ்கோப்பைப் பிடித்திழுத்தாள்.
டாக்டர் திகைத்துப் போனார்.

paparš rairgUdā 283
“ஏனடா. டொக்டருக்கு படிச்சுப் போட்டு பிள்ளையளைக் கொல்லுறியள்.? ஏனடா. பொம்பிளையளைக் கட்டிக் கொண்டு வந்து இஞ்சை வைச்சுக் கற்பழிக்கிறியள். ஏனடா. கிடந்து எழும்பிப் போட்டு பிள்ளையளைக் கொல் லுறியள்.?” நிலைமை மோசமாகப் போய்க்கொண்டிருந்ததை அவதானித்த மற்ற டாக்டர் நேர்ஸிடம் ஊசியைக் கொண்டு வருமாறு கண் ஜாடையால் காட்டினார்.
“கொஞ்சம் அமைதியாய் இருங்கோ. எங்கடை தமிழாக் களுக்கு மரியாதை இல்லை” என மொழிபெயர்ப்பாளர் தானாகவே கோமதியைச் சமாதானப்படுத்த முயற்சித் தார். “என்னடி தமிழாக்களுக்கு மரியாதை.” என்றவாறு மொழி பெயர்ப்பாளரின் கன்னத்தில் அறைந்தாள். இதனைச் சற்றும் எதிர்பார்க்காத மொழிபெயர்ப்பாளர் கண்கள் கலங்க அறையை விட்டு வெளியேறினார்.
ஆனால் கோமதியோ, “நான் என்ன கள்ளப் பிள்ளையே பெத்தனான். மற்ற தமிழாக்கள் போலை சீட்டை எடுத்துக் கொண்டு ஓடினனானோ. கள்ள கிறடிக் காட்டிலை காசு எடுத்தனானோ. அவனவனோடை படுத்துப்போட்டு இஞ்சை வந்து அழிச்சுப்போட்டு போனனா. சொல்லிப் போட்டுப் போடி. எங்கை போறாய்” எனச் சொன்னவாறு பின்னாலே போய் மொழிபெயர்ப்பாளரின் தலைமுடியைப்
பிடித்து இழுத்தாள். ; : மொழிபெயர்ப்பாளர் திணறினார்.
ஆஸ்பத்திரி நடைபாதையில் நின்ற அனைவரும் விநோத மாகப் பார்த்தார்கள்.

Page 144
284 j ി. ജയ്പൂര്
அது மொழிப்பெயர்ப்பாளருக்கு இன்னும் அவமானமாய் இருந்தது. பின்னால் ஓடிவந்த இரண்டு நேர்சும் கோமதியைப் பிடிக்க, அமைதிப்படுத்தும் ஊசியை டாக்டர் அவளது முழங்கை யில் ஏற்றினார்.
“ஐயோ ஊசி போடாதையுங்கோ. என்ரை பிள்ளையஞக்கு நோகும். அதுகள் பாவங்கள். அதுகள் பாவங்கள்.” சொல்லிக்கொண்டே கோமதி மயங்கிக்கொண்டு போனாள்.
அனைவருக்கும் கோமதியின் நிலைமையைப் பார்க்க பரிதாபமாக இருந்தது - மொழிபெயர்ப்பாளர் உட்பட.
பின்பென்ன. மயக்க நிலையிலேயே மனநோயாளர் பிரிவுக்கு மாற்றப்பட்டு. முதலில் அதிக ஊசிகளும் குறைந்தளவு குளிசைகளுமாகத் தொடங்கி. நிலைமை முன்னேற குறைந்தளவு ஊசிகளும் அதிகமாக குளிசை களுமாக மாறி. கடைசிக் காலகட்டத்தில் ஊசிகள் அறவே நிற்பாட்டப்பட்டு தனியே குளிசைகளை வாழ்நாள் முழுக்க எடுக்கும் நிலைக்கு கோமதி மாறியிருந்த நிலையிலேயே. அடுத்தது என்ன என்ற கேள்விக்குறி வைத்தியத்துறைக் கும், அவள் வசிக்கும் நகரசபையின் சமூகசேவைப் பிரிவுக்கும் எழுந்தது.
“எங்கள் கடமை முடிந்துவிட்டது. நீங்கள் வீட்டிற்குப் போங்கள்” என்று அனுப்பி வைக்காமல் மிகப் பக்குவமாக நகரசபையின் சமூகசேவைப் பிரிவிடம் கையளிப்பார்கள்.

pskosIaoarš sažrguvár 285
அவ்வகையில்தான் கோமதியை அடுத்த பத்து தினங் களுக்கும் குறைந்தது பத்து தடவையாவது நகரத்தில் உள்ள யாரோ ஒரு மனநல வைத்தியரிடம் கலந்துரையாட வைப்பது நல்லது என வைத்தியத்துறை நகரசபையிடம் பரிந்துரைத்திருந்தது. மனநோயின் விசித்திரம் என்னவென்றால், தாயக்கட்டை போட்டு உருட்டும் பாம்பும் ஏணியும் போல அது திடீரெனவும் ஏறும் திடீரெனவும் சறுக்கும். அதேபோல் மெதுமெது வாகவும் ஏறும். மெதுமெதுவாவும் இறங்கும். எனவே தான் வாழ்வின் எக்காலத்திலும் மனவிரக்திக்கான மருந்துகளை நிற்பாட்டக்கூடாது என வைத்தியர்கள் சொல்கிறார்கள். சர்க்கரை வியாதிக்குப் போன்று.
அவ்வாறுதான் இன்று நடந்த சம்பாஷணையும். சுரேன் அனுப்பியிருந்த விவாகரத்து நோட்டீஸ் வரும் வரை அவள் நல்லாய்த்தான் இருந்தவள். அது வந்தபோது பாவம் குழம்பிவிட்டாள். பாம்பின் வழியே கீழே சறுக்கியவளாக,
தண்டனை பெறவேண்டியவன் தன்னைத் தண்டித்து விட்டதாக. மேலாக விசரி என்ற அடைமொழியுடன் வந்திருந்த வக்கீலின் கடிதம். நீதி தேவதையின் கண்கள் மட்டும் கட்டப்படவில்லை. காதுகளும் பஞ்சால் அடைக்கப் பட்டுவிட்டதே என வேதனைப்பட்டாள். இலங்கையில் நடைபெறும் அரசியல் போல. ஏன், அண்மைக்காலமாக அவுஸ்திரேலியா, கனடா, ஐரோப்பாவில் நடைபெறும் தமிழர்களின் ஊர்வலங்களை அந்த அந்த நாட்டு அரசாங் கங்களும் செய்தி ஸ்தாபனங்களும் தங்கள் கண்களைக் கட்டிக்கொண்டும், காதுகளுக்குள் பஞ்சை அடைத்துக் கொண்டும் கண்டுகொள்ளாமல் இருப்பது போல.

Page 145
286 வி. வேகுமாரன்
மனம் கொஞ்சம் ஆறுதல் பட்டாலும். உருக்கொண்ட இந்த யுத்தத்தின்போது தாய், சகோதரங்கள் எங்கே இடம் பெயர்ந்து போயிருப்பார்களோ என மனம் அடிக்கடி பதைபதைக்கும்.
தாயின் குரலை மூன்று மாதத்துக்கு முதல் கருக்கலைப்பு நடந்த அன்று அதிகாலையில் கடைசியாகக் கேட்டது தான். அதுக்குப் பிறகு ஏதுமில்லை. சில வேளை தாய் மீண்டும் தொலைபேசியில் அழைத்திருக்கலாம். சுரேன் என்ன சொன்னானோ தெரியாது. தான் செத்துப் போய்விட்டதாகக் கூறி இருக்கலாம். தன் வயிற்றில் வந்த இரண்டு ஜீவன் களை, தனக்கே தெரியாமல் தனது சம்மதக் கையெழுத் துடன் கருக்கலைப்புச் செய்ய தன்னை அணைத்துக் கொண்டு ஒப்பிரேஷன் வாசல் வரை வந்தவனுக்கு கோமதி செத்துப்போய்விட்டாள் எனச் சொல்ல எவ்வளவு நேரம் எடுக்கும்.
சொல்லுவான்!
சொல்லியிருப்பான்!
சொல்லக் கூடியவன்!!!
துரோகக் கும்பல். காட்டிக் கொடுப்பு அரசியல்கள் எல்லாம் இவனிடம் பிச்சை எடுக்க வேண்டும்.
வாழ்க்கையில் ஏற்பட்ட தோல்விகள் எல்லாம் சுரேனின் மீது கோபமாயும், பெண்ணாகப் பிறந்ததால் தன்னை முன்பின் தெரியாத ஒருவனிடம் அனுப்பி தான் வஞ்சிக்கப் பட்டும் எதுவும் செய்ய முடியாத இயலாமையில் எழும் கவலையாயும் சேர்ந்து அவளை அழுத்திக் கொண்டிருந்தது.
முதன் நாளே சிங்கப்பூரில் அந்த மிருகத்தினிடம் இருந்து தப்பி இருக்க வேண்டும். அவனையும் அவன் கட்டிய

substaparë saërguar 287 தாலியையும் தூக்கி எறிந்துவிட்டு சிங்கப்பூர் வீதிகளில் இறங்கி நடந்திருக்க வேண்டும். அவனின் நினைவுகளிலிருந்து மீளவேண்டும், மீள வேண்டும் என்று நினைத்தாலும் திரும்பத் திரும்ப மனம் செக்குமாடாய் சுற்றிக் கொண்டே வந்தது. நேரம் போனதே தெரியவில்லை.
இரவாகி விட்டது. இரவுக் கடமையில் உள்ள நேர்ஸ் சாப்பாட்டுத் தட்டுடனும், மாத்திரைகளுடனும் வந்திருந்தார். இப்பொழுது மாத்திரைகளின் அளவு மிகக் குறைவாக இருந்தது. “ஆர் யூ ஒல்றைற்' என விளங்கக்கூடிய எளிய ஆங்கிலத்தில் கோமதியின் சுகத்தைக் கேட்டாள். “ஓம்” எனத் தலையாட்டிய கோமதி, “சிலிப்பிங் ரப்ளற். பிளிஸ்” என நித்திரைக் குளிசை கேட்டாள். அன்று அது அவளுக்கு கட்டாயம் தேவை என உணர்ந்த நேர்ஸ் “ஒகே” எனச் சொல்லிவிட்டு அதனை எடுத்து வரச் சென்றார்.
கோமதி சாப்பிட்டுக்கொண்டு இருக்கும்பொழுது நித்திரைக் குளிசையுடன் திரும்பி வந்த நேர்ஸ் கையில் ஒரு கடிதத்தை எடுத்து வந்திருந்தார் அது தமிழில் மொழிபெயர்க்கப்பட்டிருந்தது.
அடுத்த பத்து நாளும் மாலை நாலு மணிக்கு தமிழிலேயே பேசக்கூடிய தமிழ்நாட்டைச் சேர்ந்த ஒரு பெண் மனநல

Page 146
288 தி. ஜீவதழாரன்
வைத்தியர் வருவார் என இருந்தது. பெயர்: ஜானகி சடகோபன். வயது 42.
கோமதிக்கு அது மனதுக்கு பெரும் நிறைவாக இருந்தது.
முதலாம் நாள் : கோபம்
இரண்டாம் நாள் : அழுகை மூன்றாம் நாள் : பழி வேண்டும் உணர்ச்சி
நாலாம் நாள்: கனவுகள்
ஐந்தாம் நாள் : பிரிவுகள்
ஆறாம் நாள் : கடந்த காலம்
ஏழாம் நாள் : நிகழ் காலம்
எட்டாம் நாள் : எதிர்காலம் ஒன்பதாம் நாள் : மீண்டும் எதிர்காலம் பத்தாம் நாள் ; டென்மார்க்கில் எதிர்காலம். இந்த பத்து நாளும் கோமதியில் பெரிய முன்னேற்றம் இருந்தது. தமிழ்நாட்டைச் சேர்ந்த அந்தப் பெண் மனநல வைத்தி யரின் அரவணைப்பும். ஆறுதலும். எதிர்காலத்தைப் பற்றி ஊட்டிய நம்பிக்கைகளும் கோமதிக்கு மாணிக்க கங்கையில் தோய்ந்து எழுந்தது போல இருந்தது. மொழி பயில ஆறு மாதம். வேலை பார்த்துக்கொண்டே தொழிற்கல்வி பயில குறைந்தது இரண்டரை வருடங்கள்.

Fiseorandørš sFairg Udör 289
மொத்தம் மூன்று வருடங்களில். ஒரு சசிக்கும் ஒரு சுசிக்கும் பகிர இருந்த அந்தத் தாய்மையை, பெற்றோர் இல்லாமல் போரால் சீரழிந்து வரும் ஆயிரம் பிள்ளை களுக்குப் பகிர முடியும் என்று நம்பிக்கை ஊட்டினார்.
பெற்றோர் இல்லாமல் வரும் பிள்ளைகளுக்கான செஞ் சிலுவைச் சங்கத்தின் அகதிநிலையங்கள் ஒன்று. இரண்டு என்று இருந்து இப்பொழுது மூன்றாவதும் திறந்தாயிற்று. அங்கு அந்த அந்த நாட்டுப் பாஷையில் பேசக்கூடிய ஊழியர்கள் அதிகம் தேவை. அல்லது அவர்களின் பணி தேவை. அதற்கு கோமதி போன்று தாய்மை நிறைந்த வர்கள் வேண்டும். வாழ்வின் தோல்விகளால் துவண்டு நிமிர்ந்த வர்கள் வேண்டும். அப்பொழுது தான் அவர்களால் மற்றவர்களின் துன்பத்தை விளங்கிக் கொள்ள முடியும்.
கோமதியின் இந்த மாற்றத்தையும் எதிர்கால விருப்பத் தையும் மனநல வைத்தியர் நகரசபைக்கு அறிவித்த பொழுது அவர்கள் மிகவும் மகிழ்ந்து போனார்கள்.
மேலாக, அடுத்தநாள், கடந்த பத்துநாளாக கோமதியுடன் தான் பணியாற்றிய அறிக்கையைக் கையளிப்பதற்காக கோமதியையும் நகரசபை உத்தியோகஸ்தரையும் தனது வீட்டிற்கு இரவுப் போசனத்திற்கு அழைத்திருந்தார் அந்தப் பெண் மனநல வைத்தியர். கோமதியும் மிக மகிழ்வாக ஏற்றுக் கொண்டாள்.
“டாக்டர் என்று உங்களைக் கூப்பிடாமல் ஜானகி அக்கா என்று கூப்பிடட்டுமா?”
ஜானகி சிரித்துக்கொண்டு ஆம் எனத் தலையாட்டினார்.

Page 147
290 வி. ஜீவகுமாரன்
அன்று பகல் முழுக்க ஆஸ்பத்திரியின் பின்வளவுகளில் இருந்த பூக்களைப் பறித்து அழகிய பூங்கொத்துகளாகச் செய்து தனது வாட்டில் உள்ள நேர்ஸ்மாருக்கும் கொடுத்து விட்டு பெரிய பூங்கொத்தை மனநல வைத்தியர் வீட்டுக்குப் போகும்பொழுது எடுத்துச் செல்வற்காக பெரிய கடதாசியில் சுற்றி வைத்திருந்தாள்.
கோமதியில் ஏற்பட்ட மாற்றம் ஆஸ்பத்திரியில் இருந்த அனைவருக்கும் மகிழ்ச்சியாக இருந்தது. கால் இழந்த ஒருவர் ஊன்றுகோல் கொண்டு நடக்கத் தொடங்கும்போது. கை இழந்த ஒருவர் பொய்க் கையுடன் சாப்பிடும் பொழுது ஏற்படும் மகிழ்ச்சி போலவே இதுவும். சூறாவளியினால் விழுந்த மரத்தின் ஒரு கிளையில் இருந்து மீண்டும் மரம் உதித்து வருவது போல் இந்த மனநோயா ளர்களின் வாழ்வில் மீண்டும் வசந்தம் வீசும்பொழுது அந்தப் பிரிவில் உள்ள அனைவருக்கும் மகிழ்ச்சியாக இருக்கும். தன் ஆடைகளையே கழற்றி எறிந்து கொண்டிருந்த ஒரு பெண். அழகாக ஆடை அணிந்து தலைசீவி, கைகளில் பூக்கொத்துகளுடன் நிற்பதைப் பார்க்க அவளுக்காகப் பணியாற்றிய அனைவருக்கும் மகிழ்ச்சியாக இருந்தது.
பின்னேரம் நாலு மணிபோல ஜானகி தனது காரில் வந்து கோமதியை அழைத்துக் கொண்டு சென்றார்.
சுமார் ஆறு மாத காலத்துக்குப் பின் கார் பயணம்.
காட்டுவழிப் பாதை வேறு. மரநிழல்களினூடு கார் செல்ல மனம் மிக மகிழ்வாக இருந்தது.

gytsas Tampaori saibreguludir 291
காட்டின் நடுவே அமைந்திருந்த ஒரு மேட்டுப் பிரதேசத்தில் அமைந்திருந்த வீட்டின் முன் அவர்களது கார் போய் நின்றது. காரால் இறங்கியபொழுது, தான் கொண்டு வந்திருந்த பூக்கொத்தை ஞாபகமாக இரண்டு கைகளாலும் கொடுத் தாள.
கொடுக்கும்பொழுது கோமதிக்கு சற்றுக் கண்கள் கலங்கின.
கோமதியைக் கட்டி அணைத்து நெற்றியில் முத்தம் கொடுத்துவிட்டு வீட்டினுள் போய் அழகிய கண்ணாடிச் சாடி ஒன்றை எடுத்து அதனை நீரால் நிரப்பி அதனுள் கோமதியின் பூக்களை வைத்து அந்தச் சாடியை சோபாவுக்கு முன்னால் இருந்த ரீபோட்டில் வைத்தார். ஜானகியின் வீடு மிகவும் துப்புரவாகவும் மிக நேர்த்தி யாகவும் இருந்தது. "நான் ரீ.வியைப் போட்டு விடுறன். நீங்கள் பார்த்துக் கொண்டு இருங்கள். றோல்ஸ் மட்டும் பொரித்தெடுத் தால் சரி. நகரசபை ஆட்கள் இன்னமும் அரை மணித் தியாலத்தில் வந்து விடுவினம்.”
"நான் உங்களுக்கு குசினியில் ஏதாவது உதவி செய்யட்டுமா?”
"இல்லை. நான் எல்லாம் செய்திட்டன். ரீ.வியைப் போட்டு விடுறன். பாருங்கள்” என ரீ.வியை ஜானகி அழுத்தினார்.
இலண்டன் தீபம் ரீ.வி.யில் "கலக்கப் போவது யாரு” போய்க் கொண்டிருந்தது.

Page 148
292 வி. ஜீவகுமாரன்
கோமதிக்கு அதில் பெரிய சுவாரஸ்யம் இல்லாமல் சோபாவில் இருந்தபடி சுற்றிவர சுவரில் மாட்டியிருந்த படங்களைப் பார்த்துக் கொண்டு இருந்தாள். அதில் எவற்றிலும் ஜானகிக்கு ஒரு குடும்பம் இருப்பது போலத் தெரியவில்லை. ஆனால் கேட்பது நாகரீகம் இல்லை என்று மெளனமாக இருந்தாள்.
தான் பிடுங்கி கட்டிய பூக்கள் கண்ணாடிச் சாடியில் அழகாக இருந்ததை ரசித்துப் பர்ர்த்துக் கொண்டு இருந்தாள். இப்பொழுது "கலக்கப் போவது யாரு" முடிந்து தீபத்தின் மாலைச் செய்தி ஆரம்பமானது.
கடவுளே!
இடப் பெயர்வுகள். குண்டடிகள். மரணங்கள். பசி. பட்டினிகள். இருபதாம் நூற்றாண்டின் பயங்கர இனப் படுகொலைகள் கண் முன்னே அரங்கேற்றப்படும் காட்சிகள்.
“பார்த்தியா கோமதி. இந்த மக்களுக்காகத் தான். இங்கே வரப்போகின்ற அநாதைப் பிள்ளைகளுக்காக நீ உழைக்க வேண்டும் என்று சொன்னேன். புரியுதா” என்றபடி கோமதி முன் பெரிய கிளாசில் ஜூஸைக் கொண்டு வந்து ஜானகி வைத்து விட்டு மீண்டும் குசினிக்குள் நுழைந்து றோல்ஸ் பொரித்தலைத் தொடர்ந்தார்.
கோமதியின் கண்கள் ரீ.வி. யிலேயே பதிந்திருந்தன. நிகழ்வுகள் மனத்துள் போராட்டத்தை வளர்த்தன.
நான் வந்திருக்கக் கூடாது. நின்று போராடியிருக்க வேண்டும். இறந்து கிடக்கும் போராளிகளுடன் நானும் போயிருக்க வேண்டும். அடுத்த கட்டதுண்டில் ஒரு பெண்

சங்கானைச் சண்டியன் 293
போராளியின் உடல் அம்மணமாக்கப்பட்டிருந்த கொடுமை காட்டப்பட்டுக் கொண்டிருந்தது. பக்கத்தில் ஒரு சிங்களச் சிப்பாய் சிரித்துக் கொண்டிருந்தான். அந்தச் சிங்கள வெறியனுக்கும் சுரேனுக்கும் என்ன வித்தியாசம்? மனம் கறுவியது.
திரையில் காட்சி மாறியது.
உலகமெங்கும் தமிழர்கள் உண்ணாவிரதம். கவனயீர்ப்பு போராட்டங்களை நடாத்திக்கொண்டு இருந்தார்கள். ஆயிரக்கணக்கில். இலட்சக்கணக்கில். குழந்தைகள். பெரியவர்கள். வயோதிபர்கள் என. கைகளில் கொடிகள். பதாகைகள். என அனைத்து நாடுகளிலும்.
560 TT...
அவுஸ்திரேலியாவில் சிட்னி. அது மறைய மெல்பேர்ன்.
அடுத்தது ஐரோப்பா.
இலண்டன். பிரான்ஸ். இத்தாலி. ஜேர்மனி. நோர்வே. சுவீடன்.
அடுத்தது டென்மார்க்கின் தலைநகரம். கிட்டவாகக் காட்டப்படுகிறது. அதில் முன் வரிசையில் சுரேன்!
கையில் சிவப்பு மஞ்சள் கொடியுடன் “கொல்லாதே. கொல்லாதே. தமிழரைக் கொல்லாதே" கோஷம் போட்டுக் கொண்டு நின்றான்.
கோமதியின் கைகள் நடுங்கின.

Page 149
294 வி. ஜீவகுமாரன்
முன்னேயிருந்த பூக்கள் வைக்கப்பட்டிருந்த கண்ணாடிச் சாடியை இறுக்கிப் பிடித்தாள். அடுத்த கணம் அது ரீ.வி.யின் திரையை நோக்கிப் பறந்தது. 'களிர் என்ற சத்தத்துடன் ரீவியின் திரை தூள்தூள் ஆனது. ஜானகி ஓடிவந்து பார்த்தார். கோமதி நடுங்கிக் கொண்டு இருந்தாள். முகம் விகாரமடைந்திருந்தது. “மன்னிச்சுக் கொள்ளுங்கோ. மன்னிச்சுக் கொள் ளுங்கோ.” என சோபாவில் மூலையில் குந்திக் கொண்டு பலமாக அழத்தொடங்கினாள்.
வீட்டின் உள்ளே வந்த சமூகசேவை உத்தியோகஸ்தர் எதுவும் புரியாமல் ஜானகியைப் பார்த்தார்.
எல்லாம் சரி வரும் என்பது போல ஜானகி அவருக்கு கண்சாடையில் சொன்னார்.
ஜானகியின் உறுதி சமூகசேவை உத்தியோகஸ்தருக்கு நம்பிக்கை கொடுத்தது, கோமதி அழுது கொண்டே இருந்தாள். ஜானகி அவளைத் தேற்ற முயற்சிக்கவில்லை.
அழுது முடிக்கட்டும் என விட்டுவிட்டு, சமூகசேவை உத்தி யோகஸ்தரைக் கூட்டிக் கொண்டு குசினிக்குப் போனார்.
அங்கு தயார் செய்து வைக்கப்பட்டிருந்த தேநீரையும் காரம் குறைவாகப் போடப்பட்டிருந்த வடையையும் எடுத்து பரிமாறினார்.

seosaporšairgud 295
"கோமதி இப்பொழுது முதலாவது கட்டத்தைத் தாண்டி, தினமும் எம்மைப் போல் போராடும் கட்டத்துள் வந்து விட்டாள். தற்பொழுது நிகழ்ந்ததைக்கூட அவளது வருத்தக்காலத்துடன் ஒப்பிடக் கூடாது. நீங்களோ, நானோ என்றோ ஒருநாள் கோபத்தில் கையில் இருந்த ஒரு பொருளைத் தூக்கி எறிந்திருப்போம். இப்பொழுது அதைத்தான் கோமதி செய்திருக்கின்றாள்” - ஜானகியின் மனோவியல் சார்ந்த வாதம், சமூகசேவை உத்தியோகஸ் தருக்கு கோமதியின் வாழ்வின் மீது நம்பிக்கையைக் கொடுத்தது. மணிக்கூட்டில் நேரம் ஓடிக்கொண்டிருந்தது. கோமதியின் அழுகை கொஞ்சம் கொஞ்சமாகக் குறைந்து கொண்டு வந்தது. மேற்கில் மறைந்து கொண்டிருக்கும் மாலைச் சூரியனின் கதிர்கள் யன்னிலினூடு நேராக கோமதி இருந்த சோபாவில் விழுந்தது.
நிமிர்ந்து பார்த்தாள். மறைந்து போகும் சூரியன் சிவந்து அழகாய் இருந்தான். எழுந்து வரும் சந்திரனும் அழகாய்த்தான் இருந்தான். இப்பொழுது கோமதி அழுவதை முற்றாக நிறுத்தி விட்டாள்.
அழுது முடித்த கோமதியின் கண்களுக்கு முன்னால் உடைந்து சிதறிய சாடியில் இருந்த பூக்கள் நிலத்தில் சிதறிப் போய் இருப்பதைப் பார்க்க பரிதாபமாக இருந்தது.

Page 150
296 வி. ஜீவகுமாரன்
கண்ணாடித் துண்டுகள் கைகளில் குத்தாத வண்ணமும் பூக்களைச் சேதப்படுத்தாத வண்ணமும் குனிந்து அவற்றைப் பொறுக்கினாள். மீண்டும் அவற்றைத் தண்ணிரில் வைக்க சாடி தேடிகுசினிப் பக்கம் போனாள்.
“ஹாய் கோமதி. பொறுங்கோ. உங்களுக்கு புதுச்சாடி எடுத்துத் தாறன்” என ஜானகி ஒரு புதுகண்ணாடிச் சாடியை எடுத்து அதனுள் தண்ணீர் விட்டு கோமதியிடம் கொடுக்க, கோமதி அந்தப் பூக்களை அதனுள் வைத்தாள். காலையில் மொட்டாய் இருந்த சில பூக்கள் இப்பொழுது விரியத் தொடங்கியிருந்தன
Sf


Page 151
கிறிஸ்துவிற்குமுன், கிறிஸ்துவிற்குப் பின் என்பது போல இலங்கையில் ஆயுதப் போராடிடத்திற்கு முன். ஆயுதப் போராமடத்திற்குப் பின். மேலும் ஆயுதங்கள் மெளனமாகி விமட காலம் என மூன்று காலகeடங்களாகப் பிரித்துக் கொள்ளமுடியும்.
அவ்வகையில் இது ஆயுதப் போராeடத்திற்கு முன்னான араOD05!
அனைத்துத் தொகுதிகளிலும், “எங்களையே அனுப்புங்கள் உங்களுக்கு தனித் தமிழ்நாடீடைப் பெற்றுத் தருவோம்" என தமிழர் கடிமடணியின வாக்குறுதியளித்து பாராளு மன்றம் சென்ற காலகடத்தில் நடந்ததாகப் புனையப்படeட dbag!
அன்புடன் வி. ஜீவகுமாரன்
 

TD 1
அவளுடைய வீடு ஒழுங்
கையின் கடைசியில் இருந்தது.
வந்தவன் தகராறு செய்து கொண்டிருப்பது அக்கம் பக்கத்திற்குக் கேட்டது.
இரவு நேரங்களில் ஒழுங் கைக்குள் சைக்கிள்கள் வருவதும். நாய்கள் குரைப்பதும். பின் அவை அடங்கி விடுவதும். பின் வந்த சைக்கிள்கள் திரும்பிப் போகும்போது நாய்கள் குரைப்பதும். இந்த ஒழுங் கையுள் வசிப்பவர்களுக்கு ஒன்றும் புதிதில்லை.

Page 152
300 வி. ஜீவகுமாரன்
ஆனால் இன்று வழமைக்கு மாறாக. சத்தங்கள் கேட்டுக் கொண்டு இருந்தன. அவள் ஏசுவதும். வந்தவன் அடிப் பதும். கொடுத்த காசைக் கேட்டுத் தகராறு பண்ணுவதும். நாய்கள் குரைப்பதும். ஊளையிடுவதும். அக்கம் பக்கத் தினரால் நிம்மதியாகத் தூங்கவே முடியவில்லை.
மினிவான் ஒடும் மனோகரனின் திருமண நாலாம் சடங்கிற்கு அச்சுவேலியில் இருந்து வந்து. தண்ணியும் நன்கு அடித்து. அச்சுவேலிக்குச் செல்லும் கடைசி பஸ்ஸை விட்டுவிட்டு. தனது வீட்டில் படுத்துவிட்டு அடுத்த நாள் போகலாம் என மனோகரன் சொல்லியும் கேளாமல் அவளைப் பற்றிக் கேள்விப்பட்டு அங்கு அவன் வந்திருந்தான்.
மணித்தியாலத்துக்கு இவ்வளவு, ஒரு இரவுக்கு இவ்வளவு என்று பேரம் பேசி சுமுகமாக ஆரம்பித்த உறவுதான். ஆனாலும் அன்று முழுக்க அவன் அளவுக்கு மீறிக் குடித் திருந்ததால் அவளால் அவனுக்கு எந்த விதத்திலும் உதவ முடியவில்லை. ஆண்மை என்பதற்கு அவரவர்கள் அகராதியில் அர்த்தங்கள் வேறு. அவனைப் பொறுத்தவரை 'இது அவனது ஆண்மைக்கு வந்த தோல்வியாகவே பட்டது. ஆனால் அவனது அச்சுவேலிச் சண்டித்தனம் தனது தோல்வியைத் தாங்க இடம் கொடுக்கவில்லை.
எனவே கொடுத்த பணத்தைக் கீழே வை என அடம் பிடித்தான்.
அவள் மறுத்தபொழுது அவனது கையும் காலும் வாயும் அளவுக்கதிகமாகவே பேசத் தொடங்கின.

சங்கானைச் சண்டியன் 301
அவளை மட்டுமில்லை. சங்கானையின் இதர பெண் களையும் இழுத்துப் பேசத் தொடங்க, அக்கம் பக்கத்தால் பொறுத்துக் கொண்டிருக்க முடியவில்லை. சண்டியனைத் தேடினார்கள். பொதுவாக கொழும்புக்கு சாமான் லொறிகள் வெளிக் கிடும்வரை அவன் சந்தையடியிலேயே நிற்பான். இன்று சனிக்கிழமை. அடுத்தநாள் பெற்றாவில் சந்தை கூடுவதில்லை. எனவே அன்று கொழும்பு லொறிகள் போகவில்லை. எங்கே போயிருப்பான் எனத் தேடிய பொழுது இரண்டாவது ஆட்டம் சினிமா பார்த்துக் கொண்டிருக்கிறான் என்று யாரோ ஆருடம் சொன்னார்கள். சைக்கிள்கள் தியேட்டரை நோக்கி விரைந்தன. விசயத்தைச் சொல்லி அவனை தியேட்டருக்கு வெளியே கூட்டி வந்து, வரும் வழியிலேயே தேத்தண்ணிக் கடை செல்லத்துரையண்ணையைத் தட்டி எழுப்பி அவரின் பின் கட்டிலிருந்து முழுச்சாராயப் போத்தலை வேண்டிக் கொடுத்துக் கூட்டி வந்தார்கள். ஒழுங்கையில் இறங்கிய போது ஆரவாரம் குறையவில்லை - அது இன்னமும் அதிகமாகவும் அதை மீறி அவளின் அழுகையும் பெரிதாகக் கேட்டது. சண்டியன் உள்ளே போனதும் ஏன் எது என்று எதுவுமே கேட்கவில்லை.
ஒரே விளாசல்தான்.

Page 153
302 வி. ஜீவகுமாரன்
அச்சுவேலியான் திகைத்துப் போனான்.
திகைப்பிலிருந்து விடுபட முதல் அவனின் சேட்டு சாரம் எல்லாம் கிழியக் கிழிய. முகம் வீங்கிப் போகும் வரை. "அண்ணை விட்டுவிடு. செத்துப் போனால் பிரச்சனை’ என்று ஆளுக்காள் சொல்லியும் கேட்காமல் சண்டியன் அவனை உதைத்துப் போட்டுக் கொண்டு இருந்தான்.
கடைசியில் அச்சுவேலியான் பின்வேலியால் ஒடித்தப்பிய பொழுது தான் சங்காரம் முடிவுக்கு வந்தது.
2லுருக்கொரு கோயில். ஊருக்கொரு பாடசாலை. ஊருக்கொரு விதானை. அதேமாதிரி ஊருக்கு ஒரு சண்டியன்!
இந்த சண்டியர்களுக்கு பொதுவாக அவர்கள் ஊர்ப் பெயர்கள், அல்லது ஏதாவது பட்டப்பெயர்கள் அவர்களை மற்ற ஊர்ச் சண்டியர்களிடம் இருந்து பிரித்தறிய உதவும்! அவ்வகையில் சங்கானையைச் சேர்ந்த இவன் ‘சங்கானைச் சண்டியன்'. மோகனராசு என அளவெட்டி வினாசித்தம்பி சாத்திரி யாரைக் கொண்டு நாள் நட்சத்திரம் எல்லாம் பார்த்து ஒரு பெயர் வைத்தவர்கள்தான் - அது பாடசாலை இடாப்பில் தினம் தினம் காலையில் வகுப்பாசிரியர் கூப்பிட்டதுடன் முடிந்து விட்டது. பின் கூப்பன் புத்தகத்திலும், வாக்காளர் அட்டையிலும் தான் தன் பெயரை தானே பார்த்ததாக ஞாபகம்.

sësestaparë sabriptUdr 303
ஐந்தாம் வகுப்பிலேயே அவன் பள்ளிக்கூட சண்டியன் ஆகிவிட்டான்.
பள்ளிக்கூடங்களில் விடுமுறை விடும் நாட்களில்தான் அதிகமாக சண்டைகள் நடக்கும் - காரணம் அடுத்த நாள் வகுப்பாசிரியரிடம் முறையிட்டு முட்டிக்காலில் நிற்க விட முடியாது என்பதினால்.
கடைசிநாள்!
பாடசாலை மைதானம். பாடசாலை ஒழுங்கை எல்லாம் புழுதி பறக்கும். சண்டியன் தனது கணக்கையும், தனது நண்பர்களின் கணக்கையும் சேர்த்து தீர்த்துக் கொண்டு திரிவான்.
இந்த சண்டித்தனம் எட்டாம் வகுப்பில் அவனாகவே பள்ளிக்கூடத்தால் நிற்கும் வரை தொடர்ந்து கொண்டு இருந்தது.
இவனைச் சங்கானை மட்டும் அறிந்திருக்கவில்லை.
யாழ் குடா நாட்டில் எங்கெங்கு சண்டித்தனத்தால் காரி யங்கள் நிறைவேற்றப்பட வேண்டுமோ. எங்கெல்லாம் இவன் உதவி தேவைப்படுகிறதோ அங்கெல்லாம் அவன் நிற்பான். ஆனால் எவரும் சங்கானையுள் வந்து சண்டித்தனம் விட அவன் அனுமதித்தது இல்லை. அதனால் சங்கானையும் அவனை அங்கீகரிக்காமல் அங்கீகரித்திருந்தது.

Page 154
304 வி. ஜீவகுமாரன்
முழங்கைக்கு மேல் மடித்து விடப்பட்ட சேட்டு. அதே மாதிரி முழங்காலுக்கு மேல் உயர்த்திக் கட்டிய சாரம். காலில் பாட்டா சிலிப்பர். வாயில் எப்பொழுதும் ஒரு சிகரட்! அதை ஊதி முடியும் தருணத்தில் யாரின் பொக் கற்றுக்குள் சிகரட்டைக் காண்கின்றானோ அது அவன் பொக் கற்றுக்குள் டோகும் - யாரும் ஏன் எது எனக் கேட்க முடியாது. மறுத்தால் சிகரட் பொக்கற்றுடன் சேர்ந்து பொக்கற்றுக்குள் இருக்கும் காசுகளும் போகும். எனவே, ஏன் பிரச்சனை என கொடுத்துவிட்டுப் போகவேண்டியது தான். அதையும் மீறி நியாயம், அநியாயம் கேட்க வெளிக்கிட்டால் அங்கே ஒரு களரிதான் - அதன் பருமன் மூளாய் பரியாரியின் பத்திலிருந்து யாழ்ப்பாண ஆஸ்பத்திரியில் சத்திரசிகிச்சை செய்து கிப்ஸ் போடும் அளவுக்கு மாறுபடும். இதனால்தான் அனேகமானோர் அவனில் முட்டுப்படாமல் விலத்தியே போய்க் கொண்டு இருந்தார்கள். இதனையும் மீறி சட்டத்திடம் போகலாம் - சங்கானையில் பொலிஸ் ஸ்டேசனும் இருந்தது - நீதிமன்றமும் இருந்தது தான்! பொலிஸில் யாரும் முறையிட்டால்தானே அவன்மீது நடவடிக்கை எடுக்க முடியும்!! பொலிசும் தன்பாட்டில் காணிவழக்கு. சின்னச் சின்ன திருட்டுகள். தவறணைக்கும் கள்ளு கொடுக்காமல் தமக்கும் தராது வீட்டில் வைத்து விற்ற வழக்குகள். சைக்கிளில் இரவில் லைற் இல்லாமல் போனாலோ அல் லது டபிள் போனாலோ இரண்டு சில்லுகளிலும் காற்றைப் பிடுங்கி விடுதல். சாந்தி தியேட்டரில் இரண்டாவது ஆட்டம் சினிமாவை இலவசமாகப் பார்த்தல் என கஞ்சி போட்டுத்

FøHitampaxể Faiburg.UUdr 305
தோய்த்து அயன் பண்ணிய காக்கி உடுப்புடன் தங்கள் கடமையை கண்ணும் கருத்துமாக நிறைவேற்றிக் கொண்டிருந்தார்கள். காலையில் ஐந்து மணிக்கு சந்தை கூடும் பொழுது அவனும் வந்து விடுவான். ஒன்பது பத்து மணிக்கு சந்தை கலையும் வரை சந்தையடியிலும், பின் பஸ் ஸ்டாண்டின் மறுபுறம் இருந்த மீன் சந்தையடியிலும் நடமாடிக்கொண்டு இருப்பான். தரகு செய்தால்தான் தரகர்மாருக்கு தரகுகூலி. இவனுக்கு அப்படி அல்ல. அன்று என்ன சமையல் தன் வீட்டில் நடக்க வேண்டும் என்று நினைக்கின்றானோ அந்த அந்தப் பொருட்களை வியாபாரி மாரிடம் எடுத்துக் கொண்டு போய்க்கொண்டிருப்பான்.
வியாபாரிகளும் மனத்தில் திட்டியபடியும் எடுங்கோ தம்பி என்று வலிந்திழுத்த புன்னகையுடனும் பேசாமல் இருப்பார்கள். அல்லது அவர்கள் கோபத்தை பக்கத்தில் நிற்கும் தங்கள் மனைவிமாரிடம், அல்லது பிள்ளைகளிடம், அதுவுமில்லாவிட்டால் சந்தைக்குள் ஒடித்திரிந்து கொண்டி ருக்கும் கட்டாக்காலி மாடு, நாய்களிடம் காட்டுவார்கள். இதை கப்பம் என்றாலும் சரி. மற்ற ஊராக்கள் சங்கானை யாரிலை கை வைக்காமல் இருப்பதற்கு ஊரே செலுத்தும் காணிக்கை என்றாலும் சரி. எது எப்படியோ அது அங்கு எழுதப்படாத சட்டம். அதில் ஏற்படும் நட்டங்களை வியாபாரிமார்கள் சங்கானைச் சனங்களின் தலையிலேயே கட்டி விடுவார்கள்.
வசூலித்த எல்லாப் பொருட்களையும் சங்கானையில் இருந்து தொட்டிலடி, மாசியப்பிட்டி, சுன்னாகம் ஊடாக

Page 155
306 வி. ஜீவகுமாரன்
அச்சுவேலிக்குப் போகும் பஸ்ஸில் றைவரின் சீற்றுக்குப் பக்கத்தில் வைத்து விடுவான். றைவர்மாரும் சங்கானையின் எல்லையில் இருந்த அவன் வீட்டுக்கு முன்னால் பஸ்சை நிறுத்தி அவனது பையை வைத்து விட்டுப் போவார்கள்.
இறங்க வேண்டிய பஸ் தரிப்பிற்குக் கிட்டவாக வந்து பெல்லை அழுத்தினால் அடுத்த பஸ் ஸ்ரொப்பில் பஸ்சை நிறுத்தும் இ.போ.ச. ஊழியர்கள் இந்த சண்டியனுக்கு மட்டும் அவ்வளவு அடக்கம்.
அவனின் வீடு என்பது பெரிய மாடமாளிகை இல்லை. பழைய ஒரு சிங்கப்பூர் பென்சனியர் 1920ல் கட்டிய வீடு. 58 கலவரத்திற்குப் பின் அவர் மலேசியாவில் குடியேறப் போனபொழுது சண்டியனின் தகப்பனைக் காவலுக்கு வைத்துவிட்டுப் போன வீடு.
சண்டியனின் தாய்தான் பென்சனியரின் மனைவிக்கு எல்லாமே - அவர்களின் குடிமனை ஆட்கள் போல. பென் சனியரின் மனைவிக்கு பாரிசவாதம் வந்து கடைசியாக படுக்கையில் விழுந்தபொழுது பென்சனியருக்கும் அவனின் தாயே எல்லாமே என்று சில உபகதைகள் இப்பொழுதும் ஊரில் உலாவுகின்றன. மலேசியாவிற்குப் போன பென்சனியரும் திரும்பி வர வில்லை. இவனும் வீட்டை அவரின் உறவினரிடம் கொடுக்கவில்லை.
அவர் மலேசியாவிற்குப் போவதற்கு முதல் கடைசியாக அடித்த பெயின்றுக்குப் பிறகு அந்த வீட்டின் சுவர்களுக்கு சுண்ணாம்பு வாசம் படவேயில்லை. அடித்திருந்த பெயின் றும் படிப்படியாகக் காறை பெயர்ந்தும். கறையான்களி

seorandari starburg.UUdr 307
னால் வேலிகள் பாறிப்போக பென்சனியர் நட்டு வைத்த கொங்கிறீற்றுத் தூண்கள் மட்டும் வளவின் நான்கு மூலைகளிலும். மேலும் வளவின் ஒரு மூலையில், பழைய கால கதவு வீழ்ந்துவிட்டதால் சாக்குத் துணியால் மறைக்கப்பட்ட சீமெந்துக் கக்கூசும் றோட்டால் போவோர் வருவோருக்கு நன்கு தெரியும். சண்டியனின் மனைவி தவத்துக்கும் இத்தனை மணி பஸ்ஸில் மத்தியானச் சமையலுக்கு சாமான்கள் வரும் என துல்லியமாகத் தெரிந்திருக்கும். கன நாட்களாக பற்றறி போடாததால் மணிக்கூடு பழுதாகிப் போய்விட்டதால் தன் நிழலை தன் காலால் அளந்து மணியை முன் பின்னாகக் கணக்கிட்டு வைத்திருப்பாள். ஒரு பத்து நிமிடம் கூடலாம். அல்லது குறையலாம். அவ்வளவு தான்.
தவம் வீட்டு வாசலில் இல்லாவிட்டாலும் அவன் கொடுத்து வீட்டிருக்கும் பையினுள் உள்ள மீனை அல்லது இறைச் சியை நாய்கள் இழுத்துக்கொண்டு போய்விடாமல் இருப்பதற்காக வேலியில் கொழுவி விட்டுப் போவார்கள். அவளும் ஒற்றைக் கையுடன் கஷ்டப்பட்டு எடுத்துக் கொண்டு போவாள். பருவத்தில் தோன்றும் உணர்ச்சியை காமம் என்று குறைத்து மதிப்பிட்டாலும் சரி, காதல் என்ற புனிதமான உறவு என பூஜித்தாலும் சரி, ஒரு பெண்ணுக்கும் ஆணுக்கும் இடையேயான இனக்கவர்ச்சி சண்டியனையும் விட்டுவைக்கவில்லை. அதிலும் வட்டுக்கோட்டைத் தொகுதியிலும் யாழ்ப்பாண மாவட்டத்திலும் எப்பவுமே பெண்களுக்கான சைக்கிள் ஒட்டப் போட்டியில் முதலாவதாக வரும் தவத்தின் அழகும் உடல் வாலிப்பும் சங்கானையில் அதிகம் பேரைக் கிறங்கடித்திருந்தது.

Page 156
308 வி. ஜீவகுமாரன்
ஆனாலும் காதலை வெளிப்படுத்த அவனுக்குத் தெரிந்த ஒரு பாஷை - ஆளைத் தூக்குவம் என்பதுதான். தூக்குவோம்' என்பதற்கு பிற்காலத்தில் இன்னும் பல அர்த்தங்கள் இலங்கையின் வடக்கு, கிழக்கு மாகாணங் களில் நிலவியிருந்தாலும், சண்டியன் காலத்தில் வலுக் கட்டாயமாக ஒருவரைக் கடத்திச் சென்று காரியமாக்க முயல்வதுதான் அதன் அர்த்தமாய் இருந்தது. அதற்கான நாளையும் தவம் பள்ளிக்கூடத்தால் வரும் நேரத்தையும் கணக்குப் பார்த்துக்கொண்டு ஆலடிச் சந்தியில் வெங்காயம் கட்டும் வானையும் வைத்துக் கொண்டு நின்றபொழுது தவம் தனது ஒன்றுவிட்ட தமை யனுடன் வந்துகொண்டிருந்தாள்.
இதை சண்டியன் எதிர்பார்த்திருக்கவில்லை.
ஆனாலும் சண்டியனுக்குப் பொறுமை இல்லை.
கிட்ட வந்ததும் தூக்குவோம் என முயன்றபொழுது, அதனைத் தடுத்த தமையன்காரனுக்கு ஓங்கிய வெட்டரு வாள் எதிர்பார்க்காமல் தவத்தின் கையில் விழுந்தது.
கையும் விழுந்தது - வானும் தவத்துடன் மறைந்தது. சங்கானையே அன்று ஸ்தம்பித்துப்போயிருந்தது. சந்தையடி. கோயிலடி. சாந்தி தியேட்டரடி. சந்தியடி தேத்தண்ணிக்கடை. அரசடிப் பள்ளிக்கூடம் எல்லாம் இதே கதைதான். ஆனால் குரல்கள் பெரிதளவில் வெளியே வராமல். தவத்தின் குடும்பத்தினர் மட்டும் பெரிதாகக் குத்தி முறிந்தார்கள் - ஆனால் என்ன செய்து விட முடியும்.

saraorš sairgUdžr 309
guj6)IT60)LD
பொலிசுக்கு போனார்கள் "உன்ரை பெட்டையும் விருப்பப்பட்டுத்தானாம் போனது. வந்ததும் விசாரிக்கிறம்” என்று பதில் வந்தது. மீண்டும் இயலாமை
இந்த இயலாமையும் அடக்கு முறைகளும் அளவுக்கதிகமாக ஜனநாயகக்குடியியல் உரிமை பேசுகின்ற தென்கிழக் காசிய நாடுகளில் தொடங்கி உலக ஜனநாயகத்திற்கு ஏகாதிபத்தியமாக விளங்கும் அமெரிக்கா வரை பொருந்தும். அப்படி இருக்கும்பொழுது சங்கானைப் பொலிஸ் ஸ்டேசன் மட்டும் என்ன? வெறும் தூசு.
ஒன்று. இரண்டு. மூன்று. கிழமையாயிற்று.
தவத்தைப் பற்றியோ அன்றில் சண்டியனைப் பற்றியோ எந்தத் தகவல்களும் வரவில்லை.
நாலாவது கிழமையின் நடுப்பகுதியில் தின்னவேலி தனி யார் ஆஸ்பத்திரியில் தவம் அனுமதிக்கப்பட்டிருக்கிறாள் என்ற செய்தி வர தவத்தின் பெற்றோரும் அக்கம் பக்கத் தாரும் சேர்ந்து சந்தையடி சிவத்தின் மினிவானைப் பிடித்துக் கொண்டு ஓடினார்கள். இவர்களைத் தூரத்தில் கண்டதும் சண்டியன் ஆஸ்பத் திரியின் பின்பக்கத்தில் உள்ள வாழைத்தோட்டத்தின் ஊடாகப் பின் ஒழுங்கையில் உள்ள கள்ளுத் தவறணைக்குப் போய் விட்டான்.
வாட்டுக்குள் போன தவத்தின் குடும்பம் முழுக்க நிலை குலைந்தது போல நின்றார்கள்.

Page 157
310 வி. ஜீவகுமாரன்
கழுத்திலை தாலியும் கைகளில் கட்டும் போடப்பட்டிருந்தது. இடது முழங்கைக்குக் கீழ் எதுவும் இல்லை. தவம் அவர்களைக் கண்டதும் பெரிதாகக் கத்தத் தொடங்கினாள். பெண்டுகளும் தங்கள் தங்கள் பங்கிற்கு தவத்துடன் சேர்ந்து கொண்டார்கள். ஆண்கள் அவனை எப்படியும் உள்ளே தள்ளி எட்டு வருஷ மாவது வேண்டிக் கொடுக்க வேண்டும் என்று ஆவேசப் பட்டுக் கொண்டார்கள். வாட் நேர்ஸ் வந்து கொஞ்சம் சமாதானப்படுத்திய பின்பு தான் அவர்கள் அமைதியானார்கள்.
நேர்ஸ் கட்டைப் பிரித்து தையல் காய்ந்து இருக்கின்றதா எனப் பார்த்தாள் - மற்றவர்களும் நேர்ஸை இடித்துத் தள்ளுமாப் போல் பார்த்தார்கள். தையல் நன்கு காய்ந்திருந்தது. அடுத்தநாள் இழையை வெட்டலாம் என்றும் அதற்கு அடுத்த நாள் வீட்டைக் கூட்டிக் கொண்டு போகலாம் எனவும் சொல்லி விட்டு வெளியேறினாள். துண்டு வெட்டிய பின் தாங்களே வந்து கூட்டிச் செல்லுகின் றோம் என்றபொழுது முதன் முதலாய் தவம் மாட்டேன் எனத் தலையாட்டினாள். எல்லோருக்கும் ஆச்சரியமாக இருந்தது. "ஐயோ என்ரை பிள்ளைக்கு ஏதோ குடுத்துப் புத்தியை மாத்திப் போட்டான்” என தவத்தின் தாய் தலைதலையாய் அடிக்கத் தொடங்கினாள்.

சங்காணைச் சண்டியன் 311
தவம் எதுவுமே பேசவில்லை.
கையை வெட்டியதும், வெங்காய வானில் தூக்கிச் சென்றதும் அவனை ஒரு முழுமுழு அயோக்கியனாகக் காட்டியிருந்தாலும், இந்த இருபத்தைந்து நாளும் தவத்துக்கு ஒரு தகப்பனாய், தாயாய் இருந்து கவனித்த கவனிப்பில் தவத்திற்குள்ளே இருந்த பாறாங்கல்லு மெல்ல மெல்ல கரைய. முதன்நாள் இரவுதான் அவள் தன்னை அவனிடம் அர்ப்பணிந்திருந்தாள். முடிவாய் என்ன சொல்லுறாய் என எல்லோரும் கேட்டுப் பார்த்தார்கள். தவத்தின் முடிவில் எந்த மாற்றமும் இல்லை. மனித மனங்களில் ஏற்படும் மாற்றங்களை எப்பொழுதும் எல்லோராலும்புரிந்து கொள்ள முடிவதில்லை - அவர் அவர்கள் தங்கள் தங்கள் கண்ணாடிகளினூடு பிரச்சனை களைப் பார்ப்பதாலோ என்னவோ!
அத்துடன் அவளைத் தலை முழுகு என்றவாறு தாயை இழுத்துக் கொண்டு சுற்றமும் முற்றமும் போய்விட்டது. அதன் பின் தவம் சண்டியனுடனேயே போய்விட்டாள். மழைவிட்டாலும் விடாத தூவானம் போல, சங்கானையில் சாதிக்கலவரம் ஏற்பட்ட பொழுது தமக்கு சண்டியனால் ஏற்பட்ட காயங்களுக்கு இந்த சந்தர்ப்பத்தை வைத்து அவனை கோட்டுக்கு இழுக்கலாம் என தவத்தின் தகப்பனுக்கு பலர் தூபம் போடத் தொடங்கினார்கள். சண்டியன்தான் மகளின் கையை வெட்டியது என வழக்குப் பதிவானது.

Page 158
312 வி. ஜீவகுமாரன்
கோடு கச்சேரி என்பது பணம் சம்மந்தப்பட்ட விடயம். வென்றவனை தோற்றவன் போலவும், தோற்றவனை செத்தவன் போலவும் ஆக்கிவிடும் அந்த கண்கட்டித் தராசு. தவத்தின் தகப்பன் பகுதி இரண்டு வட்டாரங்கள் பின்னால் நின்றது. சங்கானையில் சாதிப்பிரிவினால்தான் வட்டாரங்கள் வரை யறுத்துக் கொள்ளப்பட்டிருந்தன. நீங்கள் எந்த சாதி என்று அநாகரீகமாகக் கேட்கத்தேவையில்லை - பதிலாக நீங்கள் எந்த வட்டாரம் என நாகரீகமாகக் கேட்டால் போதும். அந்த வகையில் மூன்றாம் வட்டாரமும் ஐந்தாம் வட்டாரமும் கச்சேரிச் செலவுக்குக் கை கொடுத்தது.
சண்டியனுக்கு யாருமே கை கொடுக்கத் தயாராயில்லை - சாதிக்கலவரம் நடந்தபொழுது தேவைக்கு அவனைப் பாவித்தது உண்மைதான் என்றாலும், தேவை முடிந்த பொழுது சம்மந்தப்பட்ட இரு பகுதிகளிலும் அரசியலில் நல்ல நண்பனும் இல்லை, நிரந்தர எதிரியும் இல்லை என்ற சந்தர்ப்பவாதக் கோட்பாடுகளைத் தாங்கித் திரிவது போல இன்று இரு பகுதியும் சந்தையடியில் நின்று கூடிக்கும்மாளம் அடிக்கும்பொழுது சண்டியனுக்காக யாரும் காசு செலவு செய்யத் தயாராக இருக்கவில்லை.
அண்டாவில் போட்ட கறிவேப்பிலையாகத் தூக்கி எறிந்தாகி விட்டது.
பொலிஸ் பாதுகாப்புடன் போன பிரேத ஊர்வலத்தைக் கலைக்க பனைவெளிகளுக்குள் நின்று கல்லால் எறிந் தவர்களுக்கு, பாடையை இறக்கி வைக்காமலேயே சவப் பெட்டியினுள் ஒளித்து வைத்திருந்த துப்பாக்கியை எடுத்து சுட்டு விரட்டி பிரேதத்தை ஒழுங்காக சுடலை வரை கொண்டு

சங்கானைச் சண்டியன் 313
போக காசு கொடுத்த எல்லோரும், “நாங்களோ பொம் பிளையைத் தூக்கச் சொன்னனாங்கள்” என இப்பொழுது விலகிக் கொண்டார்கள்.
சண்டியன் மனத்துக்குள் கறுவிக் கொண்டே இருந்தான்.
வழக்கில் இருந்து முதலில் தப்புவோம். இதுதான் அவன் எண்ணமாய் இருந்தது. அவனின் நல்ல காலமோ. அன்றில் சங்கானையின் கெட்ட காலமோ. சங்கானைக்கு பட்டினசபைத் தேர்தல் அறிவிக்கப்பட்டது. தேர்தலுக்கு சண்டியன் தேவைப்பட்டான் - சண்டியனுக்கு தேர்தலில் சேர்மன் பதவிக்கு மீண்டும் போட்டியிடும் வக்கீல் தேவைப்பட்டார். தான் நேரடியாக சண்டியனுக்காக வாதிட்டால் பல தொகுதி களில் அவரின் ஆதரவாளர்கள் தங்கள் வாக்குகளை இழக்க வேண்டி வரும் என்பதால் சாவகச்சேரியில் வசித்த தன் சக தோழன் ஒருவன் சண்டியனுக்கு உதவுவதாக இரகசிய ஒப்பந்தம் செய்யப்பட்டது. பின்பென்ன? ஆளுக்காள் கைகுலுக்கிக் கொண்டார்கள். ஏன்தான் இலங்கையில் தமிழ் அரசியல்வாதிகள் பலர் வக்கீல் களாய் இருந்தார்களோ தெரியவில்லை. வக்கீல்கள் தான் தேர்தலில் நிற்க முடியும் என எந்த யாப்பிலும் இருந்த தாகத் தகவல்கள் இல்லை. ஆனாலும் நிஜம் அதுதான்.
வழக்கு யாழ். நீதிமன்றத்திற்கு வந்தது. கோட்டும் சூட்டும் போட்டுக்கொண்டு கம்பீரமாக நின்ற வக்கீல்கள் பாதி ஆங்கிலத்திலும் பாதி அதிசுத்த தமிழிலும்

Page 159
314 வி. ஜீவகுமாரன்
கேட்ட கேள்விகளில் சங்குமார்க் சாரங்களுடனும் பாட்டா செருப்புகளுடனும் கூனிக்குறுகி நின்ற அனைத்து சாட்சி களும் ஒவ்வொன்றாகக் கூட்டிலிருந்து இறக்கப்பட்டு, கடைசியாக தவத்தின் ஒன்றுவிட்ட அண்ணன் சண்டி யனை நோக்கி வீசிய கத்தியே தவறுதலாக தவத்தின் கையில் விழுந்தது என கணம் மேன்மை தங்கிய நீதிபதி அவர்கள் தனது தீர்ப்பை வழங்கினார்.
தீர்ப்பை வழங்குவதற்கு முதல் தவத்தை நேரடியாக விசாரிக்க வேண்டும் என்று எதிர்த்தரப்பு வக்கீல் கேளாமல் இருக்கவில்லை. அந்தக் கேள்வியை எதிர்பார்த்திருந்த சண்டியனின் வக்கீல், தவம் சித்த சுவாதீனம் காரணமாக மந்திகை ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு வைத்தியம் செய்யப்பட்டுக் கொண்டிருப்பதற்கான கடிதத்தை நீதிபதி யிடம் கையளித்தார். அதிகமான உரையாடல்கள் ஆங்கிலத்தில் நடந்ததால் தவத்தின் பகுதி ஆட்களுக்கு அங்கு என்ன நடந்தது என்று கூடத் தெரியவில்லை. தீயதைப் பேசாதே! தீயதைப் பார்க்காதே!! தீயதைக் கேட்காதே!!! சிரிப்புடன் கூடிய பொக்கைவாய் காந்தியின் படம் இலங்கை யின் நீதிமன்றங்களுக்குள் இல்லாவிட்டாலும், கோட்டுக்கு வெளியே குனிந்த தலையுடன் கம்பை ஊன்றிக் கொண்டு செல்லும் சிலை நன்கு பொருத்தமானதாகவே இருந்தது. சண்டியனின் ஆட்கள் நீதிமன்றத்துக்கு முன் பட்டாசு வெடித்து ஆரவாரித்தார்கள். வெற்றிப் பெருமிதத்துடன் சண்டியன் வீட்டைவர தவம் வாந்தி எடுத்துக் கொண்டிருந்தாள்.

சங்கானைச் சண்டியன் 315
இந்த மாதம் தள்ளிப்போயிருந்தது. சண்டியன் இரட்டைச் சந்தோஷத்தில் மிதந்தான்.
Uட்டினசபைத் தேர்தல் நன்கு சூடுபிடிக்கத் தொடங்கியது.
வழமைபோல பழைய சேர்மன் முதலாம் வட்டாரத்தில் போட்டியிட்டார்.
ஏழாம் வட்டாரத்திற்கு சங்கானையின் பழைய சாராய வியாபாரியின் மகனும், இந்த நாளில் கொழும்பில் பிரபல மாய் இருப்பவருமான ஒரு வக்கீல் வேட்பாளராக நிறுத்தப்பட்டிருந்தார் - கனகவேலு சட்டத்தரணி, மனைவி ஆட்கள் கொழும்பில் பிரபலமான துணிக் கடைக்காரர். பின்பென்ன, சாராயமும் சேலையும் வாக்குகளை வேண்டப் பயன்படுத்தப்பட்டன. இதன் மொத்த விநியோகம் சண்டி யனின் மேற்பார்வையிலேயே நடந்தது. எல்லா வட்டாரங்களிலும் தாங்களே வெல்ல வேண்டும் என்பதற்காக தமிழ், தனித்தமிழ், தனித்தமிழ்நாடு என்ற மூலமந்திரங்கள் இளைஞர் காதுகளில் ஒதப்பட்டன. எங்கும் பச்சை, சிவப்பு, மஞ்சள் கொடிகள்தான். எங்கும் கூட்டங்கள்தான். ஆங்காங்கே சில சுயேட்சை வேட்பாளரும், கொழும்பில் ஐக்கிய தேசியக்கட்சி அல்லது சிறிலங்கா சுதந்திரக் கட்சி களுடன் தொடர்புடைய ஆதரவாளர்களும் தேர்தலுக்கு விண்ணப்பித்து இருந்தார்கள். அவர்களின் கூட்டங்கள் நடைபெறும்பொழுது இருட்டில் பனைகளுக்குப் பின்னால் இருந்து கற்களை எறிந்து இந்தக்

Page 160
316 வி. ஜீவகுமாரன்
கூட்டங்களைக் குழப்பும் பணிக்கும் சண்டியனே நியமிக்கப் பட்டிருந்தான். முதல் இரண்டு கூட்ட்ங்களில் கல் விழுந்தவுடன், பின்பு நடந்த கூட்டங்களுக்கு யாருமே போகவில்லை. லவுட்ஸ்பீக்கர்காரனுக்கும் லைற்மிசின்காரனுக்கும் காசை அழுததுதான் மிச்சம். தவிரவும் இந்த ஏழு வட்டாரத்திற்கு முரிய கூட்டணிக்கு ஆதரவு இல்லாத அனைவர்க்கும் தமிழ்த் துரோகிகள் என்ற ஒரு முத்திரை குத்தப்பட்டது. இந்தக் குத்து தங்களின் மேல் விழுந்து விடாமல் இருக்க வேண்டும் என்பதற்காக இக்கூட்டணிக்குப் பலர் தம் வாக்குகளை அளிக்கத் தயாராய் இருந்தார்கள். எங்கே சாதிமாறிக் கல்யாணம் செய்தால் சாதிப்பிரஷ்டம் செய்து சமூகம் தங்களை தள்ளிவைத்துவிடும் எனப் பயந்ததோ அவ்வாறே சேர்மன் பகுதிக்கு வாக்களிக்கா விட்டால் தம்மை தமிழ்த் துரோகிகள்’ என தள்ளிவைத்து விடுவார்கள் என்ற ஒரு பயம் இருக்கத்தான் செய்தது. அல்லது உருவாக்கப்பட்டிருந்தது. இக்கூட்டங்களுக்கு ஆதரவாகப் பல முன்னாள், இன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களும் வந்து பிரச்சாரம் செய்து விட்டுப் போனார்கள். அவ்வேளையில்தான் தமிழர் கூட்டணி என்பது உருவாகி இருந்தது. அது இலங்கையின் மூத்த கட்சி அல்ல. பதிலாக பல மூத்த கட்சிகளின் கூட்டு. அந்தக் கட்சி இந்த சின்ன பட்டினசபைத் தேர்தலில் களம் இறங்காவிட்டாலும், இறங்கிய வேட்பாளருக்கு பின்பக்கப் பலமாய் நின்றார்கள் - அந்த அந்த பழைய கட்சியினருக்கு உரிய சுயத்தை இலக்காமல்.

srialtandari, is airgitudir 317
இம்முறையும் தேர்தலில் நிற்கும் முன்னாள் தமிழ்க் காங்கிரஸ் கட்சியின் மூத்த வேட்பாளரின் உறவினரின் கூட்டத்தில் யாராவது கேள்வி கேட்டால் அவர்களுக்கு சொல்லப்படும் ஒரே பதில் - “கேள்வி பதிலுக்கு என்று மட்டும் வைரவ கோயிலடியில் ஒரு கூட்டம் வைத்திருக்கின் றோம் - அங்கே வந்தால் உங்கள் அனைத்துக் கேள்வி களுக்கும் பதில் கிடைக்கும்” என்பதுதான்.
அங்கே போனவர்களுக்குத்தான் தெரியும் வைரவ கோயிலுக்குப் பக்கத்தில் சங்கானை ஆஸ்பத்திரி இருப்பதால்தான் அக்கூட்டத்தை அங்கே ஒழுங்கு செய்திருக்கிறார்கள் என்று. இவ்வாறு தம்தம் சுயத்தையும் இழக்காமல், கட்சியின் வெற்றியை மட்டும் தூரப்பார்வையில் கவனத்தில் கொண்டு வெள்ளை வேட்டிகளின் வீரப்படபடப்பிலும், இளைஞர்களின் வீர ஆவேசப்பேச்சுகளிலும், பெண் பிள்ளைகளின் தமிழ்க் கவிதைகளிலும், இன்னமும் தமிழ் உணர்ச்சி கூடியவர்கள் சவரம் செய்யும் பிளேட்டால் கையைக்கீறி வேட்பாளருக்கு இடும் இரத்தத்திலகங்க ளினாலும் சங்கானை முழுக்க பட்டொளி வீறியது. தவிரவும் எல்லாச் சந்தியிலும் வெற்றியை நாளை சரித்திரம் சொல்லும் என உரக்கமாக சீர்காழி கோவிந்தராஜன் பாடிக் கொண்டிருந்தார். "எங்கள் குலப் பெண்களுக்கு மஞ்சள் அரைத்துக் கொடுத் தாயா” எனவும் “வெள்ளையனே வெளியேறு” எனவும் வீரபாண்டிய கட்டபொம்மன் முழக்கமிட்டுக்கொண்டு நின்றான். பக்கத்தில் உள்ள பள்ளிகளிலும் ரியூட்டரிகளிலும் பாடங்கள் நடாத்தவே ஆசிரியர்கள் கஷ்டப்பட்டார்கள்.

Page 161
318 வி. விவகுமாரன்
வகுப்பாசிரியர்கள் தலைமை ஆசிரியரிடம் சொல்லிப் பார்த்தார்கள். சண்டியனுக்கும், தனது இடமாற்றலுக்கும் பயந்து அவரும் மெளனமாகி விட்டார்.
ஆகவே, அனேகமான பாட நேரங்கள் மாணவர்களுக்கு விளையாட்டு மைதானத்திலேயே கழிந்தது. இத்தனை எதிர்பார்ப்பும் அடங்கிய தேர்தலுக்கு வாக்களிக்க இன்னும் மூன்று நாட்களே இருந்தன. முதன் நாளுடன் தேர்தல் பிரச்சாரம் முடிந்திருந்தது. அடுத்த நாளில் இருந்து சண்டியன் முற்று முழுதாக சாராயப் போத்தல்களுடன் சீலை வேட்டி சாரங்களுடன் ஒழுங்கை ஒழுங்கையாக இறங்கினான். கடந்த ஒரு மாத மாக ஏற்றப்பட்ட சலைன்களின் வேகத்தை விட கடைசி நேரத்தில் ஏற்றப்படும் இந்த டோஸ் நன்கு வேலை செய்யும் என்பது 1948ல் இருந்து பெற்று வந்த அனுபவக் கணிப்பு. உண்மையில் பெரியளவில் எதிர்க்கட்சிப் பலம் இல்லாத இந்தத் தேர்தலுக்கு இந்த திரைமறைவு கொடுக்கல் வாங்கல்கள் தேவையில்லைதான். ஆனால் விகிதாசாரப் படி எந்த வேட்பாளர் அதிக வாக்குகள் பெறுகிறாரோ அவருக்கே அடுத்த தேர்தலில் சேர்மன் பதவி காத்திருந்த படியால் அவரவர்கள் தங்கள் செல்வாக்குக்குத் தகுந்த மாதிரி சாராயப் பந்தல் போட்டுக் கொண்டிருந்தார்கள். சண்டியன் இந்த இரண்டு மாதமும் வீட்டுக்கே ஒழுங்காகப் போகவில்லை.
சில வேளைகளில் தேர்தல் வேலைகள் முடிய. கொஞ்சம் தண்ணியும் அதிகம் ஏறினால். இரண்டாவது ஆட்டம்

вићамтеранi arairpмић. 319
சினிமா முடிந்து ஊர் அமைதியாக. பஸ் ஸ்டாண்ட் வாங்கிலேயே படுத்து விடுவான். காலையில் பஸ் ஸ்டாண்ட் அருகே உள்ள தேத்தண்ணிக் கடையும் திறந்து கொள்ள இவனும் முழித்துக் கொள்வான். தேத்தண்ணிக்கடை செல்லத்துரையண்ணையின் முட்டைக் கோப்பியில் தான் எப்போதும் இவன் வாய் கொப்பளிப்பது. இப்போது அவனுக்கு ஏற்பட்டு இருக்கிற அரசியல் தொடர்பு காரணமாக செல்லத்துரை அண்ணை அவனிடம் காசு வேண்டுவதே இல்லை - எப்பவாவது அவன் உதவி தேவைப்படும் என்று.
மேலாக ஏழு வட்டார உறுப்பினர்களையும் “ஐயா. ஐயா" என அவன் கூப்பிட்டாலும் அவர்கள் தோள் மீது கை போடாத குறையாக நடந்து செல்வதை ஊர் நன்கு அவதானித்துக் கொண்டிருந்தது. அதேவேளை அவனின் செல்வாக்கு வளர்வதைக் காண மூன்றாம் வட்டார ஆட்களுக்கும் ஐந்தாம் வட்டார ஆட் களுக்கும் கொஞ்சம் வயிற்றைக் கலக்கத்தான் செய்தது. தவத்தின் வீட்டாருக்கு தாங்கள் பக்க பலமாக இருந்து, அவனை கோடு கச்சேரிவரை கொண்டு இழுத்ததை மனதில் வைத்து தேர்தலுக்குப் பின்பு ஏதாவது செய்து போடுவானே என்பதுதான் அந்தப் பயம். அதனால்தான் அவர்கள் கூட அவனுக்கு சார்பான வேட்பாளருக்குவோட்டு போட்டு மறைமுக சமாதான ஒப்பந்தத்திற்கு ஆயத்தமாய் இருந்தார்கள்.
தேர்தல் நாளும் வந்தது. சங்கானையில் இருந்த அனைத்துப் பாடசாலைகளும் வாக்குப்பதிவு செய்யும் நிலையங்களாக மாறியிருந்தன.

Page 162
320 வி. ஜீவகுமாரன்
வயோதிப ஆட்களை ஏற்றி இறக்குவதற்காக அன்று வாடகைக்கு ஒடும் கார்களும் மிளகாய், வெங்காயம் கட்டும் தட்டி வான்களும் ஒழுங்கு செய்யப்பட்டிருந்தன. தவிரவும் ஊரைவிட்டு, உலகை விட்டுப் போனவர்கள் அனைவரின் வாக்குகளையும் போடுவதற்காக மற்ற மற்ற கிராமங்களில் இருந்து ஆட்களை ஏற்றி இறக்கும் பணியில் சண்டியன் மிக மும்முரமாக இருந்தான். பகல் பன்னிரண்டு மணியிருக்கும். தவமும் வந்து தனது வோட்டைப் போட்டு சண்டியனுக்கும் அவனது சக கூட்டாளிகள். நாலைந்து பேருக்கும் தான் எடுத்து வந்த சாப்பாட்டுப் பாசலை எடுத்துக் கொடுத்துக் கொண்டிருந்தாள். அவர்களும் தட்டிவானின் பின்னால் இருந்து சாப்பிட்டுக் கொண்டிருந்தார்கள். இப்பொழுது தவத்தின் வயிறு நன்கு வெளித்தள்ளியிருந் தது - இன்னும் நான்கு மாதங்கள் தான் இருந்தன. "அண்ணைக்கு ஆண் பிள்ளைதான்” ஆட்டுக்காலை நன்கு உறிஞ்சியபடி ஒருத்தன் குறி சொன்னான். சண்டியன் புன்னகைத்தான். மெல்லிய புன்னகை அல்லது கடும் கோபம்! இதுதான் சண்டியனின் இரு வேறுபட்ட துருவநிலைகள் அப்பொழுதுதான் அந்த துன்பகரமான சம்பவம் நடந்தது. யாரோ கள்ளவோட்டுப் போடப் போக. வாக்குப்போடும் நிலையத்தில் உள்ள ஒரு பழைய தலைமை வாத்தியார் அவனைப் பிடித்து பொலிசில் கொடுக்கப் போக. அவன் திமிறிவிட்டு ஓடி வந்து சண்டியனிடம் முறையிட்டான்.

soradorsahrgusdr 321
சாப்பாட்டை அப்படியே அரைவாசியில் விட்டுவிட்டு சண்டியனும் இன்னும் நாலைந்து பேரும் பாடசாலையின் உள்ளே போக, இதைப் பார்த்துக் கொண்டிருந்த, தலைமை ஆசிரியரிடம் கற்ற பழைய மாணவர்கள் ஆசிரியரைக் காப்பாற்றுவதற்காக உள்ளே போக, வாக்குவாதம் தொடங்கி கைகலப்பாக மாறத்தொடங்கியது.
இதைப்பார்த்ததும், வாக்களித்துவிட்டு வெளியில் நின்றவர் களும் உள்ளே ஒட ஒரே சனக்கும்பலாகியது. தலைகள் மட்டும்தான் தெரிந்தன. நடுவே சண்டியனின் அதிகாரக் குரலும் தூஷணத்தால் மற்றவர்களைத் திட்டுவதும் துல்லியமாகக் கேட்டது. அங்கு நின்றது இரண்டு பொலிஸ்காரர் மட்டுமே. அவர்களால் ஏதும் செய்ய முடியவில்லை.
கூட்டத்தினுள் இருந்து “உவன் என்ன சண்டியனோ. அல்லது ஊர்ச் சேர்மனோ” என்று சங்கானைக்கு அந்நியப்பட்ட ஒரு குரல் கேட்ட அடுத்த கணம் "அம்மா” என்றவாறு சண்டியன் நிலத்தில் விழுந்தான். "சண்டியனைக் குத்திப் போட்டாங்கள்” - ஊர் ஒரு கணம் அதிர்ச்சியால் அதிர்ந்தது. சண்டியனின் சாப்பிட்டு முடிக்காத அரைவாசிச் சாப் பாட்டை வானடியில் கையில் வைத்திருந்த தவம் பதறிக் கொண்டு பள்ளிக்கூடத்தினுள் ஓடினாள். காற்றுப்படுவதற்காக அவனை பள்ளிக்கூடத்தில் இருந்து வெளியேயுள்ள ஆலமரத்தடிக்கு தூக்கிக் கொண்டு வந்து கொண்டிருந்தார்கள்.
அவன் அங்கே மயங்கிக் கொண்டிருந்தான்.

Page 163
322 வி. வேகுமாரன்
கண்கள் மேலே செருகிக் கொண்டிருந்தன.
ஒரு கணம் தவம் உறைந்து போனாலும், அடுத்த கணம் தன்னைச் சுதாரித்துக்கொண்டு, “வானைக் கொண்டு வாங்கோ” என பலத்துச் சொன்னாள்.
தவத்தின் மடியில் சண்டியனின் தலை சாய்த்து வைக்கப் பட்டிருக்க வான் வீதி விதிமுறைகளை எல்லாம் தாண்டி யாழ்ப்பாண பெரியாஸ்பத்திரியை நோக்கிப் பறந்தது. ஓர் அரைமணி நேர் இடைவெளியினுள் சந்தையுள் வியாபாரம் செய்து கொண்டிருந்த இரண்டு முஸ்லீம் பாய் வியாபாரிகளுக்கு, சண்டியனுக்கு போல் கத்திக் குத்து விழுந்து. ஸ்தலத்திலேயே மரணித்த அவர்களின் உடல் களைக் கொண்டு இன்னோர் வாகனமும் யாழ்ப்பாண பெரியாஸ்பத்திரியை நோக்கிப் பறந்தது. ஆஸ்பத்திரிக்கு வரும்பொழுது சண்டியன் முற்றாக நினைவிழந்து போனான். அவசர அவசரமாக சத்திரசிகிச்சை அறைக்கு எடுத்துச் சென்றார்கள். வாசலில் தவமும் சண்டியனது சக கூட்டாளிகளும்.
தவம் அழுது கொண்டே இருந்தாள்.
“அழாதையுங்கோ. அண்ணைக்கு ஒண்டும் நடக்காது’ - ஆறுதல் சொல்லிக் கொண்டு நின்றார்கள். இரண்டு மணித்தியால சத்திர சிகிச்சையின் பின் அவன் உயிரைக் காப்பாற்றிய டாக்டர் வந்து சொன்ன தகவல்
பெரிய அதிர்ச்சியாக இருந்தது.

sosestaporš sairpuár 323
சண்டியனுக்கு குத்தப்பட்ட கத்தியில் விசம் பூசப்பட்டிருந்த தாம். −
அவ்வாறே சந்தையுள் குத்தப்பட்டு இறந்த இரண்டு முஸ்லீம் வியாபாரிகளின் உடம்பிலும் விசம் பரவியிருந்தது. சங்கானையே விறைத்துப் போனது.
யார் செய்தது? பழைய பகையை வைத்து மூன்றாம், ஐந்தாம் வட்டார ஆட்கள் செய்ததா? அல்லது அரசியல் நட்பைத் தேடிக் கொண்டதால் அரசியல் கட்சிகளுக்குள் இருக்கும் புகை பூசலினால் சண்டியனுக்கு ஏற்றிய கத்தியில் விசம் தடவப்பட்டதா? அவ்வாறாயின் எப்போது பூசப்பட்டது? அல்லது அன்றைய தினத்தில் எந்த சந்தர்ப்பத்திலாவது அவனுக்கு கத்திக் குத்து விழவேண்டும் என்று திட்டமிடப் பட்டிருந்ததா? கூட்டத்தினுள் இருந்து “உவன் என்ன சண்டியனோ. ஊர்ச் சேர்மனோ” என்று கத்தியவன் யார்? சண்டியனுக்கு கத்திக்குத்து விழுந்ததும் குத்தியவன் எங்கே மறைந்தான்? அவனைக் கொல்ல வேண்டும் என்று நோக்கம் இருந் திருந்தால். இரவில் தன்னை மறந்து வெறியில் பஸ் ஸ்டாண்டில் படுத்திருக்கும்பொழுது செய்திருக்கலாமே! கேள்விகளாலும், சந்தேகங்களாலும் சங்கானை மூழ்கி யிருக்க சண்டியன் இரவு பத்து மணிபோல் கண் விழித்தான்.

Page 164
324 வி. ஜீவகுமாரன்
Uபட்டினசபைக்குப் பக்கத்தில் இருந்த கலாச்சார மண்ட பத்தில் வாக்குகள் எண்ணப்பட்டுக் கொண்டிருந்தன. அதில் சண்டியனின் ஆதரவில் நின்ற வேட்பாளர்கள் விகிதாசாரத்தில் மற்றைய இடங்களில் நின்ற வேட்பாளர் களை விட முன்னே நின்றார்கள்.
“யார் செய்தது”. சுற்றி நின்றவர்களை சண்டியன் கேட்டான். “தெரியாது அண்ணை.” “பின்னை சிரைக்கவா இஞ்சை நிக்கிறியள்ஈ?” ஆளை ஆள் பார்த்து முழிசினார்கள்.
"நான் தையல் பிரிச்சு வரேக்கை எனக்கு குத்தினவன்
உயிரோடை இருக்கக் கூடாது. இல்லை நீங்கள் உயிரோடை இருக்கக் கூடாது.”
பெலத்துக் கதைக்க வயிறு வலித்தது. அனைவரும் அந்த இடத்தை விட்டு விலகினார்கள். தவம் மட்டும் அவனது நெற்றியை ஆதரவாகத் தடவிக் கொண்டு நின்றாள். வலி தெரியாமல் இருக்க நேர்ஸ் கொண்டு வந்து கொடுத்த மோபின் குளிசைகள் மீண்டும் அவனை மயக்க நிலைக்குக் கொண்டு போய்க் கொண்டிருந்தன. பக்கத்துக் கட்டிலில் இருந்தவர் தன் தலைமாட்டில் வைத்துக் கேட்டுக் கொண்டிருந்த பொக்கெற் றேடியோவில் மற்ற மற்றைய பட்டின, நகரசபைத் தேர்தல் முடிவுகளைச் சொல்லிக் கொண்டு இருந்தார்கள்.

சங்கானைச் சண்டியன் 325
தவம் தன் காதுகளைக் கூராக்கிக்கொண்டு கேட்டுக் கொண்டு நின்றாள். இப்பொழுதும் ஏழாம் வட்டார வேட்பாளர்தான் சங்கானை யில் முன்னே நின்று கொண்டிருந்தார். சண்டியனால் தான் அவர் முன்னால் நிற்கின்றார் என தவம் மனத்தினுள் மகிழ்ந்தாள். கச்சேரியடியில் நின்று நேரடியாக ஒலிபரப்பு செய்து கொண்டிருந்த வானொலி அறிவிப்பாளரின் பின்னால் வெடிச்சத்தங்களும் சந்தோஷ ஆரவாரங்களும் கேட்டுக் கொண்டிருந்தன. நேரம் இரவு இரண்டு மணியை நெருங்கிக்கொண்டு இருந்தது.
சண்டியன் மீண்டும் கண் விழித்தான். பசிக்குது என வாய் முணுமுணுத்தான். பின்னேரம் தனக்காக அவனது கூட்டாளிகள் வாங்கி வந்து கொடுத்த இடியப்ப பாசலை தான் சாப்பிடாமல் வைத்து இருந்தது ஞாபகத்துக்கு வந்தது தவத்திற்கு. முதுகிற்கு தலையணை கொடுத்து அவனை நிமிர்த்தி இருக்க வைத்துவிட்டு இடியப்பத்தைக் குழைத்துக் கையில் கொடுத்தாள்.
"வலிக்குதோ?” “ஓம்! கொஞ்சம் வலிக்குதுதான். அவன்களைக் கண்டு பிடித்து உயிரெடுக்கேக்கைதான் எல்லா வலியும் போகும்.”
சண்டியன் கறுவினான்.

Page 165
326 வி. ஜீவகுமாரன்
"எல்லாம் பேந்து பாக்கலாம். இப்ப இதை சாப்பிடுங்கோ. கடவுளாய் காப்பாற்றினது. இல்லாட்டி என்ரை பிள்ளைக்கு காட்ட தேப்பன் இருந்திராது." தவத்தின் குரல் விம்மியது. “நீ ஒண்டுக்கும் பயப்பிடாதை. அவ்வளவு கெதியிலை உன்னை விட்டுட்டுப் போகமாட்டன். ஒரு தேப்பனுக்கு பிறந்திருந்தால் கம்மணாட்டியள் நேரிலை வந்திருக்க வேணும். இப்பிடி சனத்துக்குள்ளை ஒழிச்சு நிண்டு. தூ.” “கொஞ்சம் சும்மா இருங்கோப்பா” தவம் சொல்லி முடிப் பதற்குள் பக்கத்து கட்டில்காரனின் வானொலி விசேட செய்தி ஒன்று என இவர்கள் இருவரின் கவனத்தையும் திருப்பியது.
"சங்கானை பட்டினசபைச் சேர்மனும் முதலாம் வட்டார வேட்பாளருமாகிய சீவரத்தினம் கொலை செய்யப் பட்டுள்ளார்.” தவமும் சண்டியனும் ஒரு கணம் திகைத்துப் போனார்கள்.
“இன்று இரவு சங்கானை கலாச்சார மண்டபத்தில் வாக்குகள் எண்ணிக் கொண்டிருந்த சமயத்தில் வெளியே கூடியிருந்த வேட்பாளர்கள், ஆதரவாளர்களுடன் கூடிக் கதைத்துக் கொண்டிருந்த சங்கானைப் பட்டினசபைச் சேர்மன் சீவரத்தினம் அவர்கள் இனம் தெரியாதவர்களால் கொலை செய்யப்பட்டுள்ளார்.”
சண்டியனுக்கோ, தவத்திற்கோ எதுவும் புரியவில்லை. செய்தி தொடர்ந்தது.
தேர்தல் முடிவுகளைப் பற்றி ஆராய்ந்து கதைத்துக் கொண்டிருந்துவிட்டு, தனது அலுவலகத்துள் நுழைந்த

seorandaorð: Faiburg.UUdr 327
பொழுது, அங்கு ஒளிந்திருந்த யாரோ கத்தியால் உடலின் பல பகுதிகளில் குத்தி அவரை உயிரிழக்கச் செய்திருக் கிறார்கள். மேலும் இன்று மதியம் சங்கானையில் நடந்த அசம்பாவிதத்திற்கும் இதற்கும் தொடர்பு இருக்குமா என புலனாய்வுத்துறை சந்தேகிக்கின்றது.” வானொலியில் செய்தி தொடர்ந்து கொண்டு இருந்தது. தவமும் சண்டியனும் ஒருவரை ஒருவர் பார்த்தார்கள். மொட்டையன், சீனியன், முருகன், சின்னவன் - கூட்டாளிகள் நால்வரும் வாட்டுக்குள் புன்சிரிப்புடனும் பெருமையுடனும் வந்து கொண்டிருந்தார்கள்.
சண்டியனுக்குப் புரிந்து விட்டது.
தவத்திற்கு மட்டும் சேர்மன் இந்த சதுரங்கத்துள் எப்படி வந்தார் என்பது தான் புரியவில்லை.
சிமார் ஒரு வருடத்துக்கு முதல். சங்கானை கலாச்சார மண்டபம் கட்டி முடிக்கப்பட்டு திறப்பு விழா நடாத்தப்பட்ட தினம்.
இதற்கு கலாச்சார மண்டபம் என்று பெயர் சூட்டப்பட்டு இருந்ததே தவிர இதன் முக்கிய நோக்கம், சங்கானையில் இருந்த பத்து நாடக மன்றங்களும் தங்கள் தங்கள் நாடகங்களை மேடைச் செலவு, லைற் செலவு, ஸ்பீக்கர் செலவு இல்லாமல் பட்டினசபையின் அனுசரணையுடன் அரங்கேற்றுவது தான்.

Page 166
328 வி. ஜீவகுமாரன்
ஆனால் கலாச்சார மண்டபம் என்ற பெயருக்கு எள்ளளவும் பொருத்தம் இல்லாது, பெரிய சீமெந்து மேடையும் திரைச் சீலைகள் கட்டுவதற்கு வசதியாக ஆறு கொங்கிறீற் தூண் களும் தான் அங்கு வெளித் தெரிந்தது. பின்னால் காற்றோட்டம் இல்லாத ஒரு சம்பாஷணைக் கூடமும் கட்டியிருந்தார்கள். அது பொதுவாக பாவிக்கப் படுவதில்லை. இதற்காக பெரிய தொகைப் பணமும் அரசாங்கத்தால் ஒதுக்கப்பட்டிருந்தது. சனங்கள் புல்தரையில் இருந்துதான் பார்க்க வேண்டும். குறிப்பிட்ட நாளில் மழைபெய்தால் அதற்கு பட்டினசபை பொறுப்பல்ல. நிகழ்ச்சி ஒழுங்காளர்கள்தான் பக்கத்தில் உள்ள அரசடி வைரவரிடம் அன்று மழை வரக்கூடாது என்று நேர்த்தி வைக்க வேண்டும். இதன் கட்டுமானப் பொறுப்பு முழுக்க முழுக்க ஏ.ஜி.ஏ. இடம்தான் இருந்தது. அவரே தனக்குத் தெரிந்த கட்டிடக் கொன்ராக்டரிடம் கதைத்து அதனைக் கட்டும் பணியை அவரிடமே கொடுத்து விட்டிருந்தார். சேர்மன் ஆட்கள் கட்டடக்கலைஞர் துரைராஜாவைக் கொண்டு படம் வரைய வேண்டும் என்றுதான் ஆசைப் பட்டார்கள். ஆனால் எ.ஜி.ஏ. இன் அதிகாரத்துள் அது இடம் பெறவில்லை.
இதனால் சேர்மன் மனத்துள் புளுங்கினாலும் அவராலோ அவரின் சகபாடிகளாலோ ஏ.ஜி.ஏ.யை எதுவும் செய்ய முடியவில்லை.
இதற்கிடையில் எ.ஜி.ஏ.யின் வீட்டின் முன்னே அமைந்
திருந்த கார் விடும் போர்ட்டிகோவை இடித்துவிட்டு பெரிதாகக் கட்டப்படுகிறது என்றும், கலாச்சார மண்டபத்தைக்

saraparš sairgudr 329
கட்டுபவர்களே பின்னேரத்தில் அதனையும் கட்டுகிறார்கள் என்றும் அரசல் புரசலாகக் கதைகள் வேறு வெளியாகத் தொடங்கியது - ஆனால் அடக்கியே வாசிக்கப்பட்டது.
தம்முடன் கலந்தாலோசியாமல், கலாச்சார மண்டபத்தை ஒரு நினைவு மண்டபம் போல் கட்டிய ஏ. ஜி. ஏ.யின் மூக்கறுப்பதற்கான சந்தர்ப்பத்தைப் பார்த்திருந்தார்கள். கலாச்சார மண்டபம் கட்டி முடிக்கப்பட்டு பட்டினசபையிடம் ஒப்படைக்கப்பட்டது. இப்போது தான் அது சேர்மனின் கைவசம். அதன் திறப்புவிழாவை ஒரு தமிழ்விழா போல சிறப்பாகச் செய்ய பட்டினசபை முடிவு செய்து, சங்கானை பாடசாலை களுக்கிடையில் கதை, கவிதை, கட்டுரைப் போட்டிகளும், சங்கானையில் இருந்த நாடகக் கழகங்களுக்கு இடையில் நாடகப் போட்டிகளும் நடாத்தப்பட்டு, அனைத்திலும் முன்னின்ற முதல் மூன்று ஆட்களுக்கும் அல்லது குழுக் களுக்கும் திறப்புவிழா அன்று மேடையில் அதனை அரங்கேற்றம் செய்ய சந்தர்ப்பம் அளிக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. பின்பென்ன, சங்கானை விழாக்கோலம்தான்!
விழாவிற்கு பிரதம விருந்தினராக வட்டுக்கோட்டை எம்.பி. யையும் சிறப்பு விருந்தினராக சங்கானை மக்கள் வங்கி முகாமையாளரையும் அழைத்திருந்தார்கள். மற்றும் யாழ். மாவட்டத்தில் உள்ள சிறந்த பேச்சாளர்கள், பிரமுகர்கள் எல்லோரும் அழைக்கப்பட்டிருந்தார்கள்.
ஏ. ஜி. ஏ. யைத் தவிர!
சந்தர்ப்பம் பார்த்து ஏ. ஜி. ஏ.யின் மூக்கை அறுத்து விட்டதாக சேர்மன் மனத்துள் ஆனந்தப்பட்டுக் கொண்டார்.

Page 167
330 வி. ஜீவகுமாரன்
ஒரு அரசாங்க அதிபர். கலாச்சார விழா மண்டபத்தைக் கட்டி பட்டினசபையிடம் ஒப்படைத்தவர். சிறப்பு விருந் தினராக இல்லாவிட்டாலும், மேடையில் இருக்க பத்தோடு பதினொன்றாகக் கூட வேண்டாம். ஆனால் ஒரு அழைப் பிதழாவது.
26ugsbub. ஏ.ஜி.ஏ. மனதுள் குமுறிக்கொண்டு வெளியே காட்டிக் கொள்ளாவிட்டாலும், அவரின் சகதர்ம பத்தினி காலையிலும் மாலையிலும் தூபம் போட்டுக் கொண்டே இருந்தாள்.
கலாச்சார மண்டபத் திறப்பு நாளும் வந்தது. சங்கானையே களைகட்டியது.
விழா மண்டபம் சந்தையடியில் இருந்து ஒரு மைல் தூரத்தில் அமைந்திருந்தாலும் சந்தையடியையும் அதனுடன் சேர்ந்த பஸ் ஸ்டாண்டையும் சிவப்பு, மஞ்சள், பச்சைக் கொடிகளால் அலங்கரித்து. சந்தியின் நாலு பக்கமும் வாழைமரங்கள் கட்டி. சந்தையின் கலகலப் பையே "ஒரு கிண்ணத்தை ஏந்துகின்றேன்.” என்று லவுட்ஸ்பீக்கரின் அலறிலினால் அமுக்கி. மேலும் அலங்காரப் பந்தல் போட்டு காலை முதல் மாலை வரை வெவ்வேறு மேளக்கச்சேரிகளை ஒழுங்கு செய்ததில் சண்டியனுக்கும் பெரிய பங்கிருந்தது.
பின்னேரம் ஐந்து மணிக்கு அரசடி வைரவ கோயிலில் விசேட பூஜை நடைபெற்று. விழாத்தலைவர் சேர்மன் பிரதம விருந்தினரையும் சிறப்பு விருந்தினரையும் மாலை யுடன் அழைத்துக்கொண்டு முன்னே வர. அவரின் சக பாடிகள் பின்னால் வர. பகல் முழுக்க சந்தையடியில் வாசித்த அத்தனை மேளக்காரரும் ஒன்றாக வீதியில் நின்று

sistraoară sfairgudr 331
கச்சேரி நடத்த. அதனைப் பார்த்து ரசிக்க. நன்றாய்த்தான் இருந்தது. அந்த ஒரு மணித்தியாலமும் யாழ்ப்பாணத்தால் வந்த பஸ், கார்கள் சரி. காரைநகர், மாதகல் பக்கத்தால் வந்த பஸ், கார்கள் சரி அசையமுடியாமல் அங்கேயே நின்றன. பஸ்ஸில் வந்த பிரயாணிகளும் தம் அவசரத்தை மறந்து ஒரு மணித்தியாலமாக இலவசக் கச்சேரி பார்த்துக் கொண்டு நின்றார்கள். அதன்பின் ஊர்வலம் மண்டபத்தை அடையத்தான் றோட்டில் வாகனங்கள் நகரத் தொடங்கின.
இதனிடையே மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் பெலத்த சத்தத்துடன் ஹோர்ன் அடித்துக்கொண்டு சனங்களை விலத்திக் கொண்டு செல்ல முயற்சிக்க, சனங்கள் விலத்த முடியாது அவதிப்பட அவ்விடத்துக்கு வந்த சண்டியன் சொல்லிப் பார்த்தான் - கொஞ்சம் பொறுக்கும்படி. ஆனால் யாழ்ப்பாணக் கச்சேரியில் வேலை செய்யும் அவர்களோ, “பொலிசிட்டை பெர்மிஷன் எடுத்துதான் எல்லாம் நடக்குதா?’ என்று சட்டம் கதைக்கத் தொடங்க முதலே ஒருவர் றோட்டின் கரையில் விழுந்தார். மற்றவர் தட்டுத்தடுமாறி மோட்டார் சைக்கிளை நிமிர்த்த முதல், “இந்தா போய்க் காத்தடிச்சுக் கொண்டு வா. அப்ப ஊர்வலம் முடிஞ்சிடும்” என இரண்டு சக்கரங் களிலும் இருந்து காற்றைப் பிடுங்கி விட்டான். சனங்களுக்கு அந்தச் சந்தர்ப்பத்திலே ஏனோ அவன் செய்தது சரி எனவே பட்டது.
ஊர்வலம் மண்டபத்துக்கு வரவும் வாணவேடிக்கை ஆரம்பிக்கவும் சரியாய் இருந்தது. வானத்தில் இருந்து

Page 168
332 வி. ஜீவருமாரன்
பூமழை பொழியுமாப்போல் இருக்க மக்களின் கரகோஷங்களுக்கு நடுவில் சிறப்பு விருந்தினர் சிவப்பு நாடாவை வெட்டி கலாச்சார விழாவை ஆரம்பித்து வைத்தார்.
அதன்பின் பேச்சுகள், கவிதைகள், நடனங்கள் என ஒன்றன் பின் ஒன்றாக. இப்படி ஒரு கலைவிழாவை சங்கானை தன் சரித்திரத்திலேயே கண்டிருக்கவில்லை என மக்கள் அனைவரும் பாராட்டியபடி அடுத்த அடுத்த நிகழ்ச்சிக் காகக் காத்திருந்த பொழுது மோட்டார் சைக்கிள்காரர்கள் கொடுத்த புகாரின் பெயரில் இரண்டு பொலிஸ்காரர்கள் சண்டியனைத் தேடிக்கொண்டு சனத்துக்குள் வர ஒரு சின்ன பரபரப்பு உருவானது. சண்டியனை உடனே தலைமறைவாகச் சொல்லிவிட்டு, சேர்மன் பொலிஸ்காரரின் முன் வந்து அவர்களைத் திரும்பிப் போகச் சொல்லியும், அடுத்த நாள் எல்லாத் தையும் பார்த்துக் கொள்ளலாம் எனவும் சொன்னார். அவர்கள் மறுத்தபொழுது சேர்மனின் குரல் கொஞ்சம் உயர்ந்தது. பொலிஸ்காரர் இருவரும் இன்ஸ்பெக்டர் சில்வாவுக்கு GLIT6öT (BLTLLTffä56T...
இன்ஸ்பெக்டர் சில்வா ஏ. ஜி. ஏ.க்கு போன் போட்டார். ஐந்து நிமிடத்தின் பின் ஏ. ஜி. ஏ. யிடமிருந்து இன்ஸ்பெக்டர் சில்வாவுக்கு போன் வந்தது. இன்ஸ்பெக்டர் பொலிஸ் நிலையத்தில் இருந்து அனைத்து பொலிஸ்காரருக்கும் போன் போட்டார்.
பத்தாவது நிமிடம் விழா நடந்த இடத்து மின்சாரம் நிறுத்தப்
L-35.

saparātaigUdr 333
“தாரடா லைற்றை நிற்பாட்டியது” என்று கேட்க முதல் வானத்தை நோக்கி இரண்டு மூன்று துப்பாக்கி வெடிகள் தீர்க்கப்பட்டன.
அவ்வளவுதான். சனம் கூயா மாயா என்று ஒடத் தொடங்கியது. கரண்ட் இல்லாததால் மைக்செற்றும் வேலை செய்யவில்லை. எனவே சனத்தை அமைதிப்படுத்த முடியவில்லை. சனம் விழுந்தும் எழுந்தும் அலறியபடி ஓடினார்கள். "ஐயோ உழக்கிறீங்கள்” என்று சனத்தின் குரல்கள் இருட்டினுள் கேட்டாலும் அதையும் பொருட்படுத்தாமல் ஒருவரை ஒருவர் இடித்துத் தள்ளியபடி. அடுத்து ஒரு மணி நேரமாகியும் லைற் வரவில்லை. சேர்மன் ஆட்களைத் தவிர கலாச்சார மண்டபத்தடி காலியாகி விட்டது.
அவமானத்தாலும் கோபத்தாலும் சேர்மன் சத்தம் போட்டுக் கொண்டு நின்றார். சண்டியனுக்கு பின்னேரம் வரை குடித்த அத்தனை சாராயத்தினதும் வெறி இறங்கிப் போயிருந்தது. அவனையும் கோபமும் ரோஷமும் போட்டு வதைத்தது. ஆனாலும் இது பொலிஸ்காரரின் வேலை என ஊகிக்கக் கூடியதாக இருந்ததால் சேர்மனே பார்த்துக் கொள்ளட்டும் என தனக்குள் கறுவிக்கொண்டு நின்றான். அப்பொழுது மீண்டும் மின்சாரம் வந்தது. எல்லாமே குலைந்து போயிருந்தது.

Page 169
334 வி. ஜீவகுமாரன்
மேடை, சீன்கள், தட்டிகள், கடலை - ஐஸ்கிறீம் - தும்பு மிட்டாய்காரர்களின் பொருட்கள். ஆட்கள் நிலத்தில் போட்டு இருக்க கொண்டு வந்த பாய்கள். எல்லாமே சிதறிப் போயிருந்தன. எல்லாத்துக்கும் மேலாக கடைசியாக மேடையில் ஆடிக் கொண்டிருந்த ஒரு ஐந்து வயதுப் பெண்பிள்ளை. நிலத்தில் தலை குப்புறவாகக் கிடந்தாள். சண்டியன் கண்டுவிட்டு ஓடிப்போய்த் தூக்கினான் - உயிர் பிரிந்து அதிக நேரமாய்ப் போயிருந்தது. யாரோ கழுத்தில் ஏறி மிதித்துக்கொண்டு ஒடியிருக்க வேண்டும்.
"இஞ்சை வந்து பாருங்கோ ஐயா.” சேர்மன் விறைத்துப் போனார்.
அவரின் அரசியல் வாழ்வில் முதன் முதல் படிந்துவிட்ட கறை.
நேரடியாக பொலிஸ் ஸ்டேசனுக்குப் போனார். இன்ஸ்பெக்டர் சில்வா வெளியே சிகரட் குடித்துக்கொண்டு நின்றார்.
“எதுக்காக இப்படிச் செய்தனிங்கள்?” "நாங்களாக எதுவும் செய்யேல்லை. பொலிசிட்டை பெர் மிஷன் இல்லாமல் மீற்றிங், ஊர்வலம் எல்லாம் நடத்தி னியள். சனத்துக்கு இடைஞ்சல் குடுத்தியள். கேட்க வந்த பொலிஸ்காரரை நீங்களே அவமானப்படுத்தினியள்.” “அதுக்காக இப்பிடியே. இது பட்டினசபை ஒழுங்கு
செய்தது. இதை நிப்பாட்ட ஏ. ஜி. ஏ.க்கு மட்டும்தான் பவர் இருக்கு.”

சங்கானைச் சண்டியன் 335
"அவருக்கும் இது தெரியும்” சில்வா அடுத்த சிகரட்டை மூட்டினார். இத்துடன் சேர்மன் மெளனமானார்.
ஏ. ஜி. ஏ. தன்னை நன்றாகவே இருட்டினுள் உதைத்து விட்டுப் போய் விட்டார் எனப் புரிந்தது. "ஐயோ. உன்னை இங்கை ஆட வைச்சு பலி கொடுக்கவோ கூட்டிக்கொண்டு வந்தனாங்கள்” - கலாச்சார மண்டபத் தடியில் இருந்து வந்த தாயின் சத்தம் சேர்மனின் உயிரைக் குடித்தது.
அவரால் அங்கு மேலும் நிற்க முடியவில்லை.
ஏ. ஜி. ஏ.யை அழைத்து இருக்கலாம் என மனதின் ஒரு மூலை குத்தியது.
இது காலம் கடந்த ஞானம். ஞானம் வருவதற்குப் பதில் மனதுள் பழி உணர்ச்சிதான் வந்தது. சண்டியனையும் மற்ற தன் பட்டினசபை உறுப்பினர் களையும் அங்கத்தினரையும் கூப்பிட்டு எல்லாவற்றையும் பார்த்துக் கொள்ளுமாறு கூறிவிட்டு காரில் ஏறிப் போய் விட்டார்.
ஒரு உயிரை காவு எடுத்துவிட்டு உயிரிழந்து நின்ற அந்த கலாச்சார மண்டபத்தை எல்லோரும் கொஞ்சம் வெறுப் பாகப் பார்த்தபடி, சேர்மன் சொல்லிவிட்டுப் போன வேலை களைச் செய்து முடிக்கும்பொழுது அதிகாலை நாலு மணியாகி நிலமும் வெளிக்கத் தொடங்கி விட்டது.
எல்லோரும் மெளன ஊர்வலம் போவது போல் அதிகம் ஆளுக்காள் கதையாமல், ஆனால் மனதுள் மட்டும்

Page 170
336 வி. விவகுமாரன்
குமுறியபடி தேத்தண்ணீர் குடிப்பதற்காக சந்தையடி செல்லத்துரையண்ணையின் கடையை நோக்கி வந்து கொண்டிருந்தார்கள். பஸ் ஸ்டாண்டுக்குக் கிட்ட வந்தபோது சண்டியனுக்கு அடுத்த அதிர்ச்சி காத்திருந்தது. அவன் போட்டிருந்த அலங்கார வளைவு, சோடனைகள், வாழை மரங்கள் எல்லாம் வெட்டியும் வீழ்த்தியும் சிதைக்கப்பட்டிருந்தன. “இண்டைக்கு சந்தை கூடும் போலத் தெரியேல்லை” யாரோ ஒரு வாழைக்குலை வியாபாரி சொல்லிக் கொண்டு போனார்.
இந்தச் சம்பவம் சங்கானையின் பாதி உயிரைக் குடித்து விட்டிருந்தது. சேர்மனும் சண்டியனும் மனத்தளவில் நன்கு தாக்கப் பட்டிருந்தார்கள். அரசியல் ரீதியாக ஏ.ஜி.ஏ.யை ஏதாவது தண்ணி இல்லாக் காட்டுக்கு மாற்ற வேண்டும் என்று கங்கணம் கட்டிக் கொண்டு வேலை பார்க்கத் தொடங்கியிருந்தார். அவ்வகையில் வட்டுக்கோட்டை எம்.பியை அணுகிய அதே நேரத்தில் ஆளும்கட்சியின் யாழ்ப்பாணப் பிரதிநிதியை யாழ்ப்பாண லயன் கிளப்பிலும், அதன் பின்னர் சுண்டிக்குளி பாரிலும் குளிரவைத்துப் பேச்சு வார்த்தை நடாத்தினார்.
ஆனால் சண்டியனுக்குத் தெரிந்த ஒரே பாஷை போட்டுத் தள்ளுவது தான்.

roarš staigudr 337
அவனுக்குள் எரிந்து கொண்டிருந்த தீயை அணைக்க ஒரே வழி அதுதான். பெரிய இடம் என்பதால் கொஞ்சம் கவனமாக இருக்க வேண்டும் என்று நண்பர்கள் அனைவரும் ஆலோசனை சொன்னார்கள்.
இது சேர்மனுக்குத் தெரிய வந்தபொழுது சேர்மனே நேரடியாய் சொன்னார்.
"நீ செய்யுறதாலை எனக்கு எந்த ஆட்சேபணையும் இல்லை - எனக்கும் சந்தோஷம்தான். ஆனால் நீ அகப் பட்டுக்கொண்டால் எந்தவிதத்திலும் உனக்கு உதவேலாது. அது என்ரை பதவிக்கு இழுக்குத் தேடும். மற்றும்படி பெரிய சாமான் தேவையெண்டால் கள்ளியங் காட்டிலை போய் வேண்டு.”
சேர்மனின் காரியம் ஆகவேண்டும் என்ற அவாவிலும், அதற்குப் பின்னால் இருந்த எச்சரிக்கையிலும் நியாயம் இருந்தது. சேர்மன் உட்பட எவரும் மறைமுகமாவோ. அல்லது யாழ்ப்பாணத்தில் பிரசித்திபெற்ற எந்த வக்கீல்களும் நேரடி யாகவோ சண்டியனுக்கு உதவமாட்டார்கள் என்பது உறுதி. எனவே, மறைமுகமாகவே எதையும் நடாத்த வேண்டும் எனக் காத்திருந்தான். ஏ. ஜி. ஏ. காரணமாக சங்கானைக்கும் தனக்கும் ஏற்பட்ட தலைக் குணவு நிமிர வேண்டும் என்றால் அது ஏ. ஜி. ஏ.யின் தலைக்கு வைக்கும் குறிதான் என உறுதியாக நம்பினான். அவனும் அவன் நண்பர்களும் ஏ. ஜி. ஏ.யின் நடவடிக்கை களைக் கவனிக்கத் தொடங்கினர். திங்களில் இருந்து வெள்ளி வரை ஒரே அட்டவணை தான். எப்போதும் அரச வாகனமும், கூடவே சாரதியும்.

Page 171
338 w வி. ஜீவகுமாரன்
சனி, ஞாயிறுகளில் எப்போதும் குடும்பத்தினர் அவருக்குப் பக்கத்தில். தனியே அவர் எங்கே போவார் என்று கண்டுபிடிப்பது கொஞ்சம் கடினமாகத்தான் இருந்தது. ஆனால் மனம் தளராத விக்கிரமாதித்தனாய் அவன் தொடரத்தான் செய்தான். அப்போது ஒவ்வோர் செவ்வாய்க்கிழமை காலமையும் தெல்லிப்பளை அம்மன் கோயிலின் அதிகாலைப் பூஜைக்கு மனைவியுடன் போய்வருகிறவர் என்று தகவல் கிடைத்தது.
அது போதுமாயிருந்தது. சுமார் நான்கு கிழமைகள் வீட்டில் இருந்து தொடர்ந் தார்கள். வீட்டில் இருந்து வெளிக்கிடும் நேரம், கோயிலுக்குப் போய்ச் சேரும் நேரம், திரும்பி வரும் நேரம், சங்கானை, தொட்டிலடி, மாசியப்பிட்டி, மல்லாகச் சந்திகளைக் கடக்கும் நேரம் எல்லாம் பொதுவாக ஒன்றாகவே அமைந்தது - ஒரு நிமிடம் கூடியது அல்லது குறைந்தது. ஐந்தாவது கிழமை சண்டியன் மாசியப்பிட்டிச் சந்தியில் காத்திருந்தான் - முதன் நாளே கள்ளியங்காட்டில் போய் வாங்கி வந்த கைத்துப்பாக்கியுடன். ஏ.ஜி.ஏ. வீட்டில் இருந்து தனியே புறப்பட்ட செய்தியை அவரின் பின்னால் தொடர்ந்து வந்து. பின் அவரை விலத்தி வந்த தட்டி வான்காரன் ஐந்து நிமிடத்துக்கு முன்பே சொல்லி விட்டான்.
சண்டியன் உஷாரானான்.
நிலம் வெளித்துக்கொண்ட அந்த வேளையில் கார் தூரத்தில் வருவது தெரிந்தது.

சங்தானைச் சண்டியன் 339
சண்டியன் வேலியோரத்தில் மூத்திரம் பேய்வது போல இருந்தான். சந்தியில் திரும்புவதற்காக கார் தனது வேகத்தைக் குறைத்துக் கொண்ட பொழுது பின் சில்லுக்கு முதல் வெடி வைக்கப்பட்டது. டயர் வெடித்துவிட்டது என நினைத்தபடி இறங்கிய ஏ. ஜி. ஏ. சண்டியனைக் கண்டு திகைப்பதற்கு முன் நெற்றியில் அடுத்த வெடி! மறைந்திருந்த தட்டி வான் சண்டியனை ஏற்றிக்கொண்டு பறந்தது. காலமை யாழ்தேவி ரெயினுக்குப் போய்க் கொண்டிருந்த கார்காரர்கள் கண்டு சுன்னாகம் பொலிசுக்கு தகவல் சொன்னபொழுது யாழ்ப்பாண மாவட்டமே உறைந்து போனது. சேர்மன் இரண்டு கைகளாலும் விபூதியை அள்ளி அன்று அளவுக்கதிகமாகவே பூசினார்.
சண்டியன் எதுவும் தெரியாதது போல சந்தைக்கட்டில் போய்க் குந்தியிருந்தான். “நான் முடித்திருக்க வேண்டும். யாரோ முடித்து விட்டார்கள்” என எல்லோருடனும் சேர்ந்து கதைத்துக் கொண்டு இருந்தான். s கலாச்சார மண்டப நிகழ்விற்கு இது பழிக்குப்பழி என அனைவரும் நினைத்தாலும் சங்கானைக் கிராமத்திற்கு இது ஆரோக்கியமான நிகழ்வு இல்லை என அனை வருக்கும் பட்டது. அதேவேளை புலனாய்த்துறையின் கண்கள் சேர்மனையும் சண்டியனையும் நோக்கித் திரும்பின.

Page 172
340 வி. ஜீவகுமாரன்
ப்ெபொழுதும் குற்றவாளி ஒரு தடயத்தை விட்டுச் செல்லு கின்றான் என்ற குற்றப்புலனாய்வுத் துறையின் அனு மானத்திற்கும் எதிர்வு கூறலுக்கும் சண்டியனும் சேர்மனும் மட்டும் விதிவிலக்கல்ல. ஏ.ஜி.ஏ.யைச் சுட்ட கையுடன் வீட்டை போய்க் குளித்துவிட்டு சந்தையடிக்குப் போயிருந்தால் பிரச்சனையில்லை.
எந்தத் தடயமும் தன்னிடம் இருக்கக் கூடாது என்பதற்காக மாசியப்பிட்டியில் இருந்து கள்ளியங்காட்டுக்குப் போய் கைத் துப்பாக்கியைக் கொடுத்தது சண்டியன் விட்ட பெரும் தவறு. மனோகரா தியேட்டர் பின்பக்க வீதியால் வேகமாக ஓடிய தட்டி வான் - அதனைக் கவனித்த ஒரு பொலிஸ்காரன் - கள்ளியங்காட்டானுக்கும் சேர்மனுக்கும் இருந்த பால்ய நட்பு - அண்மைக் காலமாக சண்டியனுக்கும் சேர்மனுக்கும் இருந்த நெருக்கம் - கலாச்சார மண்டபக் கலவரத்தால் கொலை செய்யப்பட்ட ஏ. ஜி. ஏ.க்கும் சேர்மனுக்கும் இருந்த பனிப்போர் - இத்தனையும் கூட்டிக் கழித்துப் பார்த்த பொழுது சேர்மனின் திட்டமிடலில் சண்டியன் கொலை செய்திருக்க வேண்டும் என காகிதத்தில் போட்ட கணக்கின் விடை காட்டியது.
ஆனால் ஆதாரம்? அதன் முதல் கட்டமாக மூதூர் ஸ்டேசனில் கடமையில் இருந்த இருவர் யாழ்ப்பாண பொலிஸ் ஸ்டேசனுக்கு மாற்றப்பட்டு பாய் வியாபாரிகளாக சங்கானைக்குள் அனுப்பப்பட்டார்கள்.

Ferbrandarể FairwgUUdör 341
சண்டியன் தேர்தல் வேலையில் வாக்குகளை ஒருபுறம் சேகரித்துக் கொண்டிருக்க, மறுபுறத்தில் பாய் வியாபாரி கள் இருவரும் சண்டியனைப் பற்றியும், அவனது நண் பர்கள் பற்றியும், சேர்மனைப் பற்றியும் தகவல்களைச் சேகரித்துக் கொண்டிருந்தார்கள். இடியப்பத்தில் உள்ள சிக்கலை மெல்ல மெல்ல எடுப்பது போல பாய் வியாபாரிகள் சேகரித்த தகவல்கள் சேர்மனை நோக்கியும் சண்டியனை நோக்கியும் தூக்குக் கயிற்றை ஆட்டிக் கொண்டு இருந்தன. தேர்தலுக்கு இரண்டு நாட்கள் இருக்கும்பொழுது யாழ்ப் பாணத்தில் ஒருவருக்கு ஆதரவாக முற்றவெளிக் கூட்டத் தில் பேசப்போன சேர்மனுக்கு, சங்கானைச் சந்தையுள் பாய் வியாபாரம் செய்யும் இருவரும் யாழ்ப்பாண பொலிஸ் ஸ்டேசனுக்குள் போனது சந்தேகத்தைக் கிளறி விட்டது. கொழும்பு மட்டத்தில் தனது அரசியல் செல்வாக்கைக் கொண்டு விசாரித்தபொழுது, சண்டியனைக் கைது செய்யும் நேரம் நெருங்கிவிட்டது என்றும், அவன் கொடுக்கும் வாக்குமூலத்தில் தான் சேர்மனின் எதிர்காலம் இருக்கிறது என்றும் கணக்கிடப்பட்டது. சேர்மன் நடுநடுங்கிப் போனார். ஒன்றை மறைக்க இன்னொன்று! யாழ்ப்பாணம் வந்தவர் கள்ளியங்காட்டுக்குப் போனார். இரவிரவாக விழித்திருந்து திட்டம் போட்டார்கள் சண்டியனின் ஆயுளைக் குறிவைத்து. அதற்கு இரண்டு காரணங்கள் இருந்தன. ஒன்று. சண்டியன் அப்ருவராய் மாறினால் கயிறு சேர்மனின் கழுத்திற்குத்தான்.

Page 173
342 வி, வேகுமாரன்
இரண்டு. தேர்தல் நிலைமையைப் பார்க்கும்பொழுது புதிதாக ஏழாம் வட்டாரத்தில் சண்டியனின் செல்வாக்குடன் நிற்கும் வேட்பாளர் விகிதாசாரத்தில் அதிக வாக்குகள் பெற்றால் அடுத்த சேர்மன் பதவி தனக்கில்லாமல் போய் விடும் என்பதும்தான். எனவே, வாக்கு நிலையத்தில் குழப்பத்தை உண்டுபண்ணினால் அங்கு வாக்காளர் வருவதைக் குறைக்கலாம் என அரசியல் சாணக்கியம் ஆரூடம் சொன்னது. இரண்டு மாங்காய்களையும் ஒரு கல்லில் விழுத்த நாளையும் நேரத்தையும் குறித்தார்கள். சண்டியனை முடித்த கையுடன் அந்த இரண்டு முஸ்லீம் வியாபாரிகளும் உலகத்தில் இருக்கக் கூடாது என்ற ஒப்பந்தத்தில் மூன்று உயிர்களுக்கும் தலா ஒரு இலட்சம் படி மூன்று இலட்சம் பேசப்பட்டது. பேசப்பட்ட ஒப்பந்தத்தை ஒரே நேரத்தில் நிறைவேற்றும் பொழுது, இரண்டு முஸ்லிம் பொலிசார் கொலை செய்யப்படவும். சண்டியன் கத்திக்குத்தில் இருந்து உயிர் பிழைக்கவும். அதுவே சேர்மனுக்கு எமனாகியது.
சண்டியன் இப்பொழுது இன்னோர் தளத்துக்குப் போக வேண்டிய கட்டாயத்துக்குத் தள்ளப்பட்டதை நினைத்துக் கொண்டு நித்திரையில்லாது முகட்டைப் பார்த்துக் கொண்டிருந்தான். தவம் கட்டிலின் காலடியில் தூங்கிக் கொண்டிருந்தாள். பக்கத்துக் கட்டில்காரனின் வானொலியில் தேர்தல் செய்தி தொடர்ந்து ஒலித்துக் கொண்டிருந்தது. சங்கானை பட்டினசபைக்கு சண்டியனின் ஆதரவில் நின்ற ஏழாம் வட்டார வேட்பாளரே அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருந்தார்.

சங்காணைச் சண்டியன் 343
சேர்மன் கொலை செய்யப்பட்டதால் அவரின் முதலாம் வட்டாரத் தொகுதிக்கு மீளவும் தேர்தல் நடத்தப்படும் எனவும், எவ்வாறு இருப்பினும் விகிதாசாரத்தில் அதிக வாக்குகள் பெற்ற ஏழாம் வட்ட வேட்பாளரே அடுத்த சேர்மன் ஆவார் எனவும் அறிவிக்கப்பட்டது. அந்த இரவில் சேர்மனின் துக்கத்தில் முதலாம் வட்டாரம் மூழ்கி இருந்தாலும். ஏழாம் வட்டார ஆட்கள் ஆங்காங்கே வெடி கொளுத்தி தம் வெற்றியைக் கொண்டாடிக் கொண்டிருந்தார்கள். ஜனநாயகத்திற்கான தேர்தல் நடைபெற்ற அன்று "இன்று 3 கொலைகள்” என ஆசிரியர் தலையங்கத்துடன் ஈழநாடு பத்திரிகை அச்சாகிக் கொண்டிருந்தது.
அன்று வழமையை விட இருபதினாயிரம் பிரதிகள் அதிக மாகவே அச்சிட்டார்கள்.
ஒருவனின் இயல்பும் திறமையும் பிறப்பு, வளர்ப்பினால் நிச்சயிக்கப்பட்டாலும், கிடைக்கும் சந்தர்ப்பங்களும். அதனைப் பாவிக்கும் அல்லது தவற விடுதலினால் ஏற்படும் அதிர்ஷ்ட - துரதிர்ஷ்ட நிகழ்வுகளும் பாம்பும் ஏணியும் விளையாட்டுப் போல் அமைந்து விடுவதுண்டடு. அதைப்பற்றி நன்கு யோசிக்க இந்த மூன்று வார கட்டில் வாசம் சண்டியனுக்கு நன்கு உதவியது. அவனுக்கு உள்புண் மாறி கொஞ்சம் கதைக்கக்கூடிய நிலைக்கு வந்தபொழுது யாழ்ப்பாணம் பொலிஸ் ஒரு நாளும், கொழும்பில் இருந்து சி. ஐ. டி. பிரிவைச் சார்ந்த வர்கள் ஒரு நாளும் வந்து விசாரித்தார்கள்.

Page 174
344 வி. சீவகுமாரன்
தன்னைக் குத்தியது யார் என்பதில் இருந்து, சேர்மனைக் கொலை செய்தவர்கள் யார் என்பது வரை பதில் தெரியாது என்பதாகத்தான் இருந்தது.
ஒரு ஏ. ஜி. ஏ!
ஒரு ஊர்ச் சேர்மன்! இரண்டு மாறு வேடத்தில் இருந்த பொலிஸ்காரர்கள்!
பொலிஸ்காரரின் கழுகுக் கண்கள் சண்டியனையே சுற்றி வளையமிட்டாலும் கொத்திச் செல்வதற்கு சாட்சியங்கள் இல்லாது தவித்தார்கள்.
அடுத்து அப்ரூவராய் மாற்றக் கூடிய ஒரே சாட்சி கள்ளியங் காட்டான்தான். ஆனால் அவனும் தலைமறைவாகி விட்டான்.
இந்த மூன்று வாரமும் தினமும் மத்தியானமும், பின் னேரமும் ஹார்லிக்ஸ் போத்தலும் கையுமாக சங்கானை ஆட்கள் வந்து சண்டியனைப் பார்த்துக்கொண்டு போனார்கள். இதில் சந்தையில் கீரைக்கட்டு விற்கும் செல்லாச்சிக் கிழவி தொடக்கம், மிகப் பெரிய பலசரக்குக் கடை வைத்திருக்கும் வெற்றிவேலு முதலாளி வரை அடங்குவார்கள். தவமும் ஆஸ்பத்திரிக் கன்ரீனில் சுடுதண்ணீர் வாங்கி வந்து தனது ஒற்றைக் கையால் ஆட்களுக்கு தேனீர் அல்லது கோப்பி ஊற்றிக் கொடுத்து கவனித்தாள்.
வந்தவர்களும் இப்படி ஒரு சண்டியனுக்கு அப்படி ஒரு பொறுமைசாலி கிடைத்திருக்கிறாள் என மனத்துள் எண்ணிக் கொண்டார்கள். -

சங்காணைச் சண்டியன் 345
தவத்தின் பகுதி ஆட்கள் மட்டும் வரவில்லை - கத்திக் குத்தில் சண்டியன் செத்திருந்தால் சிலவேளை வந்திருப் பார்களோ என்னவோ!
அவர்கள் வராததையிட்டு சண்டியன் எந்தவிதத்திலும் அலட்டிக் கொள்ளவுமில்லை; கவலைப்படவுமில்லை தவத்துக்குத்தான் அது கஷ்டமாய் இருந்தது. ஆனால் யாருக்காக தான் உயிரைக் கொடுத்து வெற்றியும் வேண்டிக் கொடுத்து இன்று புதிய சேர்மன் கதிரையில் அமர வைத்தானோ. அந்த ஏழாம் வட்டார உறுப்பினர் கனகவேலு வராதது அவனுக்கு கஷ்டமாய் இருந்தது. சேர்மன் திரு. கனகவேலு (சட்டத்தரணி).
கை துடைத்துவிட்டு எறியும் காகிதம் போல தன்னைப் பாவித்து விட்டார்கள் என நினைத்துக் கவலைப்பட்டான்.
ஒரு நாள் பின்னேரம் கார் புறோக்கர் துரை வந்து அதிக நேரமாகக் கதைத்துக் கொண்டு இருந்தார். புறோக்கர் துரை தனியே கார் விவகாரங்களில் மட்டு மில்லாது உலக விவகாரங்களிலும் நன்கு அடிபட்ட பழுத்த அனுபவசாலி. சங்கானையில் சாதிக்கலவரம் வெடித்தபின் இரண்டு பகுதிகளிடமும் சமரசம் பேசி கடைசியில் முடிவுக்குக் கொண்டு வந்தவரும் அவர்தான்.
சண்டியன் மீது எப்பொழுதும் கரிசனை உடையவர். மாறாக, சாதிப்பிரச்சனையை முடிவுக்குக் கொண்டு வருதற்கு தன்னுடைய சொல்லை மதித்துக் கேட்டவர் களில் சண்டியன் ஒருவன் என்பதினால் அவன்மீது தனிப்பட்ட மரியாதை வைத்திருந்தார்.

Page 175
346 வி. ஜீவகுமாரன்
தற்போது அவனுக்கு விழுந்த கத்திக் குத்து சங்கானைக்கே ஒரு சரிவு எனக் கவலைப்பட்டார். இனி அவன் தன்னைக் காப்பாற்ற கட்டாயம் தன்னைச் சுற்றி ஒரு வேலி போட வேண்டும் என்புதை நன்கு உணர்த்தினார்.
நிச்சயம் அவனுக்கு எப்போதும் இனியொரு காவல் அரண் தேவை என உணர்த்தினார்.
இவ்வளவு நாளும் மற்ற மற்ற சண்டியர்களுக்கு உதவி தேவைப்படும்பொழுது அவனே போய் உதவியிருக் கின்றான் என்பது வேறு. இனி இந்த கள்ளியங்காட்டுச் சம்பவத்திற்குப் பிறகு எல்லாச் சண்டியர்களையும் அவனுக்குக் கீழ் கொண்டுவரவேண்டும் என ஆலோசனை சொன்னார்.
அவனும் தலையாட்டினான்.
ஊருக்கொரு சண்டியன் இல்லாது எல்லா ஊருக்கும் சேர்த்து ஒருவனே சண்டியனாக வேண்டும்!
அது சங்கானைச் சண்டியனாக வேண்டும்!
அரசியலில் செல்வநாயமும், ஜி.ஜி. பொன்னம்பலமும், திருச்செல்வமும் ஒன்று சேரும்பொழுது அவர்களுக்கு அடியாட்களாக இருக்கும் சண்டியர்கள் ஏன் ஒன்று சேரக்கூடாது? அப்படி அவர்கள் சேர்ந்தபொழுது செல்வ நாயகமே தலைவர் பதவியை எடுத்தமாதிரி இந்தச் சண்டி யர்கள் கூட்டத்திற்கு அவனே தலைவனாக வேண்டும். புறோக்கர் துரையின் ஆலோசனைக்கு தலையாட்டிக் கொண்டு அவரின் பொக்கெற்றில் இருந்த ஒரு சிகரட்டை எடுத்து வாயில் வைக்க, துரையே அதனைப் பற்ற வைத்தார்.
எதிர்காலத்தில் ஒரு நம்பிக்கை பிறந்தது போலிருந்தது.

resaporš sargudr 347
துரை போனபின்பும் வாட்டுக்கு வெளியே இருந்த சீமெந்துக் கட்டிலில் சண்டியன் தனியே இருந்து யோசித்துக் கொண்டிருப்பதைக் கண்ட தவம் வந்து பக்கத்தில் இருந்தாள். “என்ன யோசித்துக் கொண்டிருக்கிறியள்?” என அவன் கைகளை ஆதரவாகப் பிடித்தாள். “இல்லை. செத்துப் போன சேர்மனைப் பற்றி யோசிச்சுக் கொண்டு இருக்கிறன். எவ்வளவு நம்பிக்கைத் துரோகி.” "அதுதானே கடவுளாய் அவருக்கு தண்டனை கொடுத் திட்டார்.”
சண்டியன் மனதுள் சிரித்தான்.
"ஏன் சிரிக்கிறிங்கள்?” “பொறுத்திருந்து பாரன். உலகம் எப்பிடி மாறப் போகுது எண்டு.”
தவத்துக்கு பெரிதாய் எதுவும் விளங்கவில்லை. அவனது காலைக்கட்டிக்கொண்டு அவன் மடிமீது தலையைச் சாய்த்தாள். அவனும் அவள் தலையைத் தடவிக்கொண்டு. தூரத்தில் சிவந்திருந்த வானத்தில் வீடு திரும்பும் பறவைகளைப் பார்த்து ரசித்துக் கொண்டிருந்தான். கலைந்திருந்த முகில்களில் ஒன்றில் ஒரு வீரன் குதிரை மேல் போவது போல் இருந்தது. வேறொன்றில் ஒரு தாய் மகனுடன் நடந்து போவது போல இருந்தது. தண்ணிரை எந்தப் பாத்திரத்தில் விட்டாலும் அது அந்த பாத்திரத்தின் வடிவத்தைப் பெறுகின்ற மாதிரி மனிதர்

Page 176
348 வி. ஜீவகுமாரன்
களின் கற்பனைகளுக்கும் காற்றில் கலையும் முகில்களின் வடிவங்களுக்கும் எப்போதுமே பெரிய தொடர்பு உண்டு.
அதை சண்டியன் பார்த்து வியந்து கொண்டு இருந்தான்.
தாயுடன் நடந்து போகும் மகன். நாளை தன் மகனும். அவன் தாயுடனேயே நடந்து போகட்டும். இன்னொரு சண்டியனாக அவன் வளரவேண்டாம். இன்னொரு விசம் தோய்ந்த கத்திக்கோ அல்லது மதகுகளுக்குள் ஒளிந்திருந்து பாயும் சன்னங்களுக்கோ அவன் பலியாக வேண்டாம்.
"அவனை நீதான் வளர்க்க வேண்டும்.” தன்னையும் அறியாமல் அவனாக வாய் உளறிய மாதிரிச் சொன்ன பொழுது மடியில் தலை வைத்துக் கொண்டிருந்த தவம் திடுக்கிட்டு முழித்தாள். “என்ன சொல்லுறியள்” . அவள் கேட்டாள். “என்ன சொன்னனான்” . அவன் தன்னைச் சுதாரித்தான். பின் இரண்டு பேருமே சிரித்தார்கள்.
“வாங்கோ வாட்டுக்கை போவம். நல்லாய் இருட்டீட்டுது. குளிர்காத்தும் வீசுது” அவனைக் கூட்டிக்கொண்டு வாட்டுக்குள் போனாள். வாட்டுக்குள் போனாலும் சற்றுமுன் தான் பார்த்த முகிலின் கோலத்தில் இருந்து அவனால் உடனே வெளியில் வர முடியவில்லை - கண்களை முழித்தபின்பும் மீண்டும் கண்ணை மூடிப் பார்க்க விரும்பும் சில கனவுகள் போல.

striebsraparš sabraguudr 349
இப்பொழுது மீண்டும் சண்டியன் சுகமாகி சந்தையடிக்கு வந்துவிட்டான் - எந்த மாற்றமும் இன்றி. காலையில் மரக்கறிச் சந்தை - மதியத்தில் மீன் சந்தை - பின் தவறனை - மத்தியானச் சாப்பாட்டுக்குப் பின்னால் சின்னத் தூக்கம் - பின் கொழும்புக்கு சாமான்கள் ஏற்றப்பட்டு லொறிகள் ஒன்றன் பின் ஒன்றாகக் கிளம்பும் வரை மீண்டும் சந்தையடி. ஆனால் இப்பொழுது அவனின் இரு கூட்டாளிகள் எப்பொழுதும் அவனுடனே இருந்தார்கள். கார் புறோக்கர் துரை அடிக்கடி அவனைத் தன் காருக்குள் கூட்டி வைத்துக் கதைத்துக் கொண்டு இருந்தார். இவ்வளவு நாளும் கண்டும் காணாது விட்ட ஊர்ச் சண்டித் தனங்களை நிற்பாட்ட வேண்டும் என்று பொலிஸ் மேலிடம்
முடிவெடுத்திருப்பதாக தான் அறிந்திருப்பதாக புறோக்கர் துரை சொன்னார்.
இது அரசியல் மட்டத்தால் கொழும்பில் இருந்து பொலிசுக்கு கொடுக்கப்படும் நெருக்கடியாம். என்னதான் இந்த சண்டியர்களை அவர்கள் தங்களின் வீச்சரிவாள் போல் வைத்திருந்தாலும் சேர்மனின் கொலை மூலம் அது தங்களின் கழுத்துக்கே வந்து விட்ட பொழுது. அந்த வீச்சரிவாள்களைத் தலையைச் சுற்றி பற்றைக்குள் எறிவதைத் தவிர அவர்களுக்கு வேறு வழியில்லை. ஆனால் அதை வெளியே தெரியாதவாறு கச்சிதமாகச் செய்யத் தொடங்கினார்கள்.
"அப்ப என்ன செய்ய வேணும் அண்ணை?”

Page 177
350 வி. ஜீவதமாரன்
“ஆஸ்பத்திரியில் வைத்துச் சொன்னது போல நீங்கள் எல்லோரும் ஒண்டு சேர வேணும்.”
“6T'ISq?” “நான் ஒழுங்கு செய்யுறன் - நீ யோசியாதை.”
கார்க்காரத் துரை சொன்னது மட்டுமில்லாமல் காரியத் திலும் இறங்கினார். கொட்டடி, ஆரியகுளம், கீரிமலை, சுன்னாகம், கொடி காமம் என யாழ்ப்பாணத்தின் மூலை முடுக்கில் உள்ள அனைத்து ஊர்களுக்கும் போய் மொத்தம் பதினாறு சண்டியர்களையும் சந்தித்து அடுத்த சனிக்கிழமை சங்கானையில் சந்திப்பதற்கு ஏற்பாடு செய்தார்.
எல்லாருமே ஆளுக்கொரு கேள்வியை அவரிடம் கேட் டார்கள். அதில் அனேகம் பேர் கேட்டது இதற்கு சண்டியனா தலைவர் என்றதுதான். ஆனால் அப்பிடியல்ல என மிக ராஜதந்திரமாகக் கதைத்து, கள்ளியங்காட்டானைத் தவிர, மற்ற அனைவரையும் வரவழைத்தது துரை அண்ணையின் கெட்டித்தனம் தான். தனது துவக்கால் ஏ. ஜி. ஏ. சுடப்பட்ட விடயத்தில் தன் மீது இரகசியப் பொலிசுக்கு சந்தேகக்கண் விழுந்திருக்கும் வேளையில் இப்போது இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டால் மேலும் சந்தேகம் வலுக்கும் என்ற காரணத்தால் கள்ளியங்காட்டான் வரவில்லை. ஆனால் அதுதான் மேலும் சந்தேகத்தைக் கிளறிக் கொண்டு இருந்ததை அவன் அறியவில்லை. சொல்லி வைத்த நேரத்துக்கு மற்ற பதினைந்து பேரும் சங்கானைக் குளத்தடிக்குப் பக்கத்தில் இருந்த பாரில் சந்தித்துக் கொண்டார்கள்.

சங்கானைச் சண்டியன் 351
எல்லா மேசைகளிலும் சாராயப் போத்தல்களும், கலப் பதற்கு லங்கா லைம் சோடாவும், தொட்டுக்கொள்ள கண வாய் கறியும் இறால் பொரியலும் ஆட்டு இரத்த வறுவலும் வைக்கப்பட்டிருந்தன. ஏதாவது பிரச்சனை வந்தாலும் தங்கள் தங்களைக் காப்பாற்றிக் கொள்வதற்கு அவரவர் வான்களுக்குள்ளும், கார்களுக்குள்ளும் கத்திகளும் வாள்களும் இருந்தது வேறு கதை. துரையண்ணைதான் கூட்டத்தை அமைதியாகத் துவக்கி வைத்தார். அதில் சொல்லப்பட்ட பிரதான விடயம் - இவ்வளவு காலமும் அடியாட்களாக வைத்து தங்கள் காரியங்களைச் சாதித்த பட்டினசபை உறுப்பினர்கள், சேர்மன்மார்கள், மேலாக அவர்களுக்குப் பின்னால் நின்ற பாராளுமன்ற உறுப்பி னர்கள் அனைவரும் சேர்மனின் கொலைக்குப் பின்னால் இந்த அடியாட்களின் சகவாசத்தை முறித்துக் கொள்ளவும், முடிந்தால் கொஞ்சம் கொஞ்சமாய் உள்ளுக்குள் தூக்கிப் போடவும் முடிவு செய்துள்ளார்கள். அதற்கு அரச உதவி களையும் நாடியிருக்கிறார்கள். இப்படியே தனித் தனியாக ஊருக்கொரு சண்டியனாக இருந்தால் தனித்தனியே எல்லோரையும் இல்லாமல் பண்ணிப் போடுவார்கள். எனவே, ஒரு கூட்டாய் செயல் பட்டால் யாராலும் அசைக்க முடியாத பலத்தைப் பெறுவ துடன், அந்த அரசியல்வாதிகளை ஆட்டி வைக்கலாம்.
எல்லோரும் தலையாட்டினார்கள்.
அடுத்த கேள்வி எழுந்தது, யார் தலைவர் என்று.

Page 178
352 வி. ஜீவகுமாரன்
துரையண்ணை இந்தக் கேள்விக்கான பதிலை நன்கு தயார் பண்ணி வைத்திருந்தார். “நான் நினைக்கிறன் இங்கு 3 பெரிய அரசாங்கப் பிரிவு இருக்கு. மூன்று பிரிவுக்கும் ஒவ்வொருவரைத் தெரிவு செய்தால் அந்த மூவரும் சேர்ந்து கூடிக்கதைத்து எதையும் செய்யலாம். மற்றவர்கள் இவர்களுக்கு உதவி செய்யலாம். இப்படியே அடுத்த பட்டினசபை தேர்தல் வரை தொடர்ந்து இயங்கினால் அடுத்த தேர்தலுக்கு முதல் புதிய மூன்று தலைவர்களைத் தெரிவுசெய்யலாம்.” அனைவரும் ஆம் என ஆமோதித்தார்கள்.
அடுத்தது யார் இந்த மூவர் என்ற கேள்வி வந்த பொழுது முதலில் ஆறுகால்மடத்தானின் பெயரும் பின்பு கீரிமலை யான் பெயரும் பிரேகரிக்கப்பட்டது. மூன்றாவது யார் என ஆளுக்காள் குசுகுசுக்கத் தொடங்கியபொழுது துரை அண்ணர் செற் பண்ணி வைத்திருந்தது போல சுன்னாகத் தான் எழுந்து சங்கானை சண்டியனின் பெயரைப் பிரே ரித்தான். முதலில் தெரிவு செய்யப்பட்டிருந்த ஆறுகால்மடத்தா னுக்கும் சரி, அடுத்து தெரிவு செய்யப்பட்ட கீரிமலையா னுக்கும் சரி, சங்கானையான் வந்தது பெரிதாக மகிழ்ச்சி இல்லாவிட்டாலும் மரியாதையின் நிமித்தம் அனை வருக்கும் முன்னால் சங்கானையானுடன் கைகுலுக்கிக் கொண்டார்கள்.
அத்துடன் அன்றைய கூட்டம் இனிதே முடிவுற்றாலும் கள்ளியங்காட்டானுக்கு வேண்டப்பட்ட ஒருவன் அங்கு நடந்த அனைத்தையும் குறிப்பெடுத்துக்கொண்டு இருந்தான். அதை துரை அண்ணையர் கடைக்கண்ணால் கண்ட பொழுதும் வெளிக்காட்டவில்லை.

srgimendari, ar airgiuidir 353
எல்லோரும் போன பின்பு சண்டியன் துரையண்ணை யிடம் கேட்டான், “அடுத்த நாலு வருஷத்துக்குப் பின்பு நான் தொடர்ந்து இருக்க முடியாதோ?” என்று. துரை அண்ணை கொடுப்புக்குள் சிரித்தபடியே சொன்னார்.
“அடுத்த தேர்தல் வரும்பொழுது நீ மட்டும்தான் இருப்பாய்.” நீ மட்டும் என்று அழுத்திச் சொன்னது சண்டியனுக்குப் புரிந்தது மாதிரியும் இருந்தது, புரியாத மாதிரியும் இருந்தது. "அதை ஆறுதலாய் சொல்லுறன். ஆனால் உன்ரை தலைக்கு நேராய் இன்னமும் ஒரு பழைய கத்தி தொங்கிக் கொண்டு இருக்கு. அதை எடுத்துப் புதைத்தால்தான் சேர்மன், ஏ. ஜி. ஏ.யின் விடயத்தில் இருந்து நீ முற்றாய் விடுபடுவாய்.”
சண்டியனுக்கு ஏதும் விளங்கவில்லை. “கொஞ்சம் விளக்கமாய் சொல்லுங்கோ அண்ணை.” “இண்டைக்கு கள்ளியங்காட்டான் வரேல்லையே தவிர. அவன்ரை ஆள் ஒருத்தன் வந்திருந்தவன்.” "அப்பிடியோ” என்றவாறு சண்டியன் அவரைப் பார்த்தான்.
“ஓம். இஞ்சை நடந்தது முழுக்க அவனுக்குப் போயிருக்கும். தான் இல்லாது மூண்டு சண்டியர் முழு யாழ்ப்பாணத்துக்கும் எண்டது அவனுக்குப் பொறுக்காது. அதோடை அவன் எப்பவும் சேர்மனிண்டை ஆள். கள்ளியங்காட்டானிட்டை பொடியன் சேர்மனிட்டை பெட்டையோடை ஏதோ அப்பிடி இப்பிடி எண்டு கதையும் வந்தது. அதுபடியால் அவன்

Page 179
354 dà. alsosupruger
ஏதாவது ஒரு சந்தர்ப்பத்திலை அப்ரூவராய் மாறினால் அது உன்ரை தலைக்குத்தான் ஆபத்து.” “ஆளிலை காரை ஏத்த வேண்டும் எண்டு சொல்லு றிங்களோ?”
“ஓம்! ஆனால் நீயாய் செய்யக்கூடாது. இப்ப நீ ஒரு குழு விலை இருக்கிறாய். மற்ற இரண்டு பேரும் பிறகு உன்னை சந்தேகப்பட்டுத்தான் பார்ப்பாங்கள். அதுபடியாலை நீங்கள் மூண்டு பேரும் பிளான் பண்ணிப்போட்டு செய்யுங்கோ. பதினாறு பதினைந்தாய் குறையும். ஒவ்வொன்றாய் குறைக்கிற திட்டம் அவனிலையே தொடங்கட்டும்.”
"அண்ணை நீங்கள் சுப்பர் ஆள்.” துரை அண்ணை பெருமையாய் சிரித்துக்கொண்டு மீண்டும் தன்னுடைய கிளாசை சாராயத்தால் நிரப்பினார்.
தனக்குப் பக்கத்தில் இருந்த இறால் வறுவலை அவருக்குக் கிட்டவாக சண்டியன் அரக்கி வைத்தான்.
எல்லா சாணக்கிய சம்பாஷணைகளும் முடிந்தபிறகு துரை அண்ணர் சண்டியனைக் காரில் கொண்டு வந்து அவன் வீட்டடியில் இறக்கியபொழுது செக்கலாகி விட்டது. தவம் வீட்டுப் படியிலேயே காத்திருந்தாள்.
"ஏய் ஏன் செக்கலுக்கை இருக்கிறாய். வயித்துப் பிள்ளைக் காரி. வீட்டு விளக்கை கொளுத்திப் போட்டு இருக்கலாம் தானே. பூச்சி புழு வந்தாலும் தெரியாது.”

சங்தானைச் சண்டியன் 355
“பெரிய அக்கறைதான்” “என்ன சலிச்சுக்கிறாய்?”
“பின்ன என்ன. எனக்கு என்னவோ நீங்கள் உந்த ஆளோடை திரியுறது பயமாய்க் கிடக்கு. கடவுள் ஒருக்கா விசக்கத்தியிலை இருந்து காப்பாற்றீட்டார். நெடுக காப்பாற்றுவார் எண்டதுக்கு என்ன நிச்சயம்!” "சும்மா தொணதொணக்காதை. கடவுள் எப்பவும் காப்பாற்ற ஏலாது எண்டதுக்காகத்தான் எதிரியையே இல்லாமல் செய்யப் போறம்.”
"கடவுளே. திரும்பவும் வெட்டுக்குத்து எண்டு வெளிக் கிட்டு என்னையும் வயித்துக்கை இருக்கிறதையும் அநாதை ஆக்கப் போநீங்களோ?”
"சும்மா நொய் நொய் எண்டு தொணதொணக்காதை. நான் வேணுமெண்டோ போனனான். அவனவன் தான் தப்ப என்னை பலிகடாவாக்கப் பாத்தாங்க. இப்ப மற்ற வனை பலிகடா ஆக்கினால்தான் நான் உயிர் வாழலாம்.” "கடவுளே. உது எங்கை கொண்டுபோய் விடப்
போகுதோ. சரி, இப்ப வாங்கோ சாப்பிட.” என்றவாறு வாழையிலையை எடுத்துக் கொண்டு வந்து போட்டாள். “என்ன இண்டைக்கு மரக்கறியா. அப்ப மத்தியானம் குடுத்து விட்ட பாரையை என்ன செய்தனி?” “உமலிலை தொடாமலே அதை சின்னக்கிளியக்காட்டை குடுத்து விட்டனான், பொரிச்சு வைக்கச் சொல்லி, நாளைக்கு நான் வந்து எடுக்கிறன் எண்டு. உங்களுக்குத்தான் நாளும் கிழமையும் மறந்து போச்சு.”
நிமிர்ந்து பார்த்தான்.

Page 180
356 வி. சிவகுமாரன்
“சரியாய் என்ரை கழுத்திலை நீங்கள் தாலிகட்டி ஒன்பது மாதம். என்ரை வயித்துக்கை இருக்கிறதுக்கு எட்டு மாதம். அம்மாவோடை இருக்கேக்கை ஒவ்வொரு வருஷமும் துர்க்கை, அம்மன் கோயிலுக்குப் போய் அம்மா சுமங்கலி பூஜை செய்யேக்கை பக்கத்திலை இருக்கிறனான். பேந்தென்ன. உங்களைக் கட்டின பிறகு எல்லாம் மறந்து போனன். கத்திக் குத்து விழுந்து. பிறகு இந்த மாதம் பிடிக்கத் தொடங்கிட்டன். போன மாதம் நீங்கள் யாருக்கோ கார் எடுக்க எண்டு வவுனியாக்குப் போயிட்டியள். இண்டைக்கு காலமை மீன்கறி வேண்டாம் எண்டு சொல்ல முதலே நீங்கள் வெளிக்கிட்டுப் போயிட்டியள்.”
சண்டியனுக்கு கண்கள் கொஞ்சம் கலங்கத்தான் செய்தது. சாப்பாடு போட்டுக் கொண்டிருந்த அவளது கரண்டியை வேண்டி ஒரு கரையில் வைத்து விட்டு கிட்டவாக அவளை இழுத்து இறுக்கி நெற்றியில் முத்தமிட்டான். அவளது நெற்றிக் குங்குமம் அவன் மீசையிலும் ஒட்டிக் கொண்டது. அவனது இறுக்கிய பிடி அவளுக்கு இனிதாக இருந்தாலும் சப்பாணி போட்டிருந்த அவனின் முழங்கால் அவளது வயிற்றை அழுத்தியது. "ஐயோ விடுங்கோ. பிள்ளைக்கு நோகப் போகுது” என்றவாறு அவனிடம் இருந்து தன்னை விடாமல் விடு வித்துக் கொண்டாள், “சரியான முரடு" என மனத்துள் ஆசையாய் சொல்லியபடி.
“நீ பார்த்துக் கொண்டே இரு. என்ரை பிள்ளை என்னை விட பெரிய வீரனாய் வருவான்.”

Faksessaranoaorð startışUUdr 357
“அவன் வீரனாய் வரவேண்டாம். பெரிய படிப்பு படிச்சு நல்ல பெயர் எடுத்தால் போதும்.”
"ஏன் எங்களுக்கு நல்ல பெயரில்லையோ.” "ஆனால் உங்களைப் பார்த்து ஊர் பயப்படுதே.”
"அந்தப் பயம் வேணும். இல்லாட்டி இன்னொருத்தன் விசம் தோய்ந்த கத்தியோடை வந்திடுவான்.” "கடவுளே. முருகையா. எப்பதான் இந்த பயங்கள் இல்லாமல் வாழுறதோ. தெரியாது..!” சண்டியன் சாப்பிட்டுவிட்டு எழுந்த வாழையிலையில் அவள் தனது சாப்பாட்டைப் போட்டாள்.
சண்டியன் ஒரு சிகரட்டை மூட்டிக்கொண்டு போய் வாசல் திண்ணையில் உட்கார்ந்தான். வெறும் சண்டியனாய் வளர்ந்த அவனுக்கு உறவு என்று ஒருத்தியைக் கொடுத்து. அவளின் வயிற்றில் இப்பொழுது எட்டு மாதத்தில் ஒரு சிசுவையும் கொடுத்து. மீண்டும் தனக்கு ஒரு உயிரையும் கொடுத்து. எண்ணும்பொழுது முருகையாவை மறுதலித்து வந்த அவன் மனம், தவத் துடன் சேர்ந்து அவரை ஏற்கத்தான் வேண்டும் என்ற நிலைக்கு வந்ததை எண்ண அவனுக்கே அவன் மேல் வியப்பாய் இருந்தது.
மாற்றம் என்பது உலக நியதி. அதற்கேற்ப மாறுபவர்கள் தப்பித்துக் கொள்வார்கள். இப்பொழுது துரையண்ணை யுடன் சேர்ந்து தலைக்கு பட்டம் கட்டப் புறப்பட்டிருப்பது மாற்றமா?. இல்லை. மாற்றத்திற்கு எதிரான ஓட்டமா. அவனால் விடை காண முடியவில்லை.

Page 181
358 வி. ஜீவகுமாரன்
சாப்பிட்டு முடிந்த பின் தவம் வெற்றிலைத் தட்டுடன் வந்து பக்கத்தில் இருந்தாள். சண்டியன் ஆசையாக தவத்தின் வயிற்றைத் தடவினான். அவள் அவன் தோள் மீது சாய்ந்து வானத்தைப் பார்த்துக் கொண்டு இருந்தாள். சின்னச் சண்டியன் இடப்பக்க வயிற்றில் குத்த அவளுக்குக் கூச்சமாய் இருந்தது. “தொட்டுப் பாருங்கோ” என்றவாறு சண்டியனின் கையை எடுத்து தன் இடுப்பின் மீது வைத்தாள். இருவருக்குமே அந்தப் பிஞ்சுக் காலைத் தொட்டுப் பார்ப்பது ஆனந்தமாய் இருந்தது.
*கள்ளியங்காட்டானிடம் எத்தினை கைத்துப்பாக்கி இருக்கு?” “மொத்தம் எட்டு.”
“அவை எங்கே இருக்கிறது எண்டு உனக்குத் தெரியும் தானே?”
“அவை அத்தனையும் சண்டியனின் கைக்கு மாற வேண்டும்.”
“ஓமண்ணை. செய்யலாம்.”

radarš. FairgUdr 359
"உனக்கு என்ன வேண்டும்?” "கள்ளியங்காட்டான் போனபிறகு அவன்ரை இடம் வேண்டும்.”
"சண்டியனுக்கு ஒத்துழைப்பாய் இருப்பியா?” "நாயாய் காலடியிலை கிடப்பன் அண்ணை.” கள்ளியங்காட்டானின்வலதுகையைதுரைவிலைபேசியதில் வெற்றி கண்டார். இதே வேளையில் கள்ளியங்காட்டானுடன் பொலிஸ் இரகசிய பேச்சு வார்த்தை நடாத்திக் கொண்டிருந்தது. "நீ கொடுத்த துப்பாக்கியால்தானே ஏ.ஜி.ஏ.யைச் சுட்டது?”
“யார் சண்டியனுக்கு கொடுக்கச் சொன்னது?” "செத்துப் போன சேர்மன்.” “யார் துப்பாக்கியை உன்னிடம் வேண்டிக்கொண்டு போனது?”
“ச்ன்டியன்.” "யார் துப்பாக்கியை திருப்பிக் கொண்டு வந்து தந்தது?” “சண்டியன்.” “இவ்வளவையும் நீ கோர்ட்டில் பயமில்லாமல் சொல்லு 6urt?"
"சொல்லுவன். ஆனால் பிறகு அவனாலை என்ரை உயிருக்கு."

Page 182
360 வி. ஜீவகுமாரன்
"அதைப்பற்றி பயப்பட வேண்டாம். சண்டியன் உள்ளுக்கை போனால் பிறகு வெளியிலை வரவே மாட்டான்.” கள்ளியங்காட்டான் நிமிர்ந்து பார்த்தான்.
பயப்படாதே. அது அப்பிடித்தான்’ என்னுமாப்போல் இன்ஸ்பெக்டர் கண்ணசைத்தார். கள்ளியங்காட்டானும் ஒத்துக் கொண்டான். கையெழுத்துப் போடப்பட்டது. கள்ளியங்காட்டான் வீட்டை திரும்பிக் கொண்டிருந்தான். பொலிஸ் இன்ஸ்பெக்டர் சண்டியனைக் கைது செய்வ தற்காக நீதிபதியிடம் அனுமதிப் பத்திரம் வேண்டுவதற்கு விரைந்து கொண்டிருந்தார்.
கள்ளியங்காட்டான் துப்பாக்கிகள் பதுக்கி வைத்திருக்கும் இடத்திற்கு துரையண்ணையும் கள்ளியங்காட்டானின் வலது கையும் போய்ப் பார்த்தார்கள். அங்கு ஏழு துப்பாக்கிகள் மட்டும் இருந்தன. “மற்றது எங்கே?” "அவர் தன்னுடன் எடுத்துக்கொண்டு போயிருக்க வேண்டும்.” “சரி, ஒன்றை நீ கையில் எடு, மற்ற ஆறையும் இந்தப் பைக்குள் போடு.” தூரத்தே கள்ளியங்காட்டானின் கார் வந்து கொண்டி ருந்தது.
துரை தனது காரை பற்றைக்குள் ஒளித்து வைத்துக் கொண்டு நின்றார்.

og sørampavirš FahrgeUdr 361
வலதுகைக்காரன் கள்ளியங்காட்டானின் காரை மறித்தான்.
அவன் வேகத்தைக் குறைத்த போது ஒரு வெடிதான். கள்ளியங்காட்டானின் கார் தாறுமாறாய் ஒடி றோட்டோர மாய் இருந்த மரத்தில் மோதி நின்றது. "அண்ணை ஆள் அவுட்” என்றவாறு செத்துப்போன கள்ளி யங்காட்டானின் துப்பாக்கியையும் எடுத்துக்கொண்டு திரும்பிய வலதுகைக்காரனை நோக்கி துரையண்ணரின் வெடி தீர்த்தது. அவனின் கை இப்பொழுது இன்னும் துப்பாக்கியை இறுக்கிப் பிடித்திருந்தது. தனது துப்பாக்கியை கள்ளியங்காட்டானின் கையில் திணித்துவிட்டு ஆறு துப்பாக்கிகளுடன் மட்டும் துரை யண்ணர் சங்கானையை நோக்கி வேகமாகக் காரைச் செலுத்தினார். கள்ளியங்காட்டானும் அவனது வலது கையும் ஆளை ஆள் சுட்டுக் கொண்டார்கள் என்ற செய்தி காட்டுத் தீ போல யாழ்ப்பாணம் எங்கும் பரவியது. நீதிபதி வீட்டில் இருந்து சண்டியனைக் கைது செய்வதற்காக வாங்கிக்கொண்டு வந்த உத்தரவைப் பாதி வழியிலேயே இன்ஸ்பெக்டர் கிழித்துப் போட்டார். "இடியட்” என வாய்க்குள் முணுமுணுத்துக் கொண்டார். யார் செய்தார்கள் என்ற கேள்விக்குறியுடன் அன்று யாழ்ப்பாணம் இரவுறக்கத்திற்குப் போனது.

Page 183
362 வி, ஜீவகுமாரன்
இழநாடு கொண்டு வந்த அதிகாலைச் செய்தியுடன் காலைச் சந்தை பரபரப்புடன் கூடியது சண்டியன் வழமையாகக் குந்தியிருக்கும் திண்ணையில் குந்திக் கொண்டு பேப்பரைப் புரட்டிக் கொண்டு இருந்தான். "ஆ. ஊ. எண்டால் துவக்கைத் தூக்கத் தொடங்கீட் டாங்கள். நம்ம காலத்திலை அரிவாளும் கோடாலியும் தான்” பலமாகக் கதைத்துக்கொண்டு வந்த ஒரு பெரியவர் சண்டியனைக் கண்டதும் தனது குரலைத் தாழ்த்திக் கொண்டு “செளக்கியமா தம்பி.” எனச் சுகம் விசாரித்துக் கொண்டு அப்பால் விலத்திச் சென்றார். சண்டியனின் கண்கள் கார்க்கார துரையண்ணையைத் துழாவியது. இதை துரையண்ணைதான் செய்திருப்பார். அல்லது செய்வித்திருப்பார். எது என்றாலும் எனக்கு சேதி சொல்ல வந்திருப்பார்.
ஆனால் அவரை அங்கு காணவேயில்லை.
மனம் பதட்டப்பட்டது.
கள்ளியங்காட்டானை சிலவேளை ஆறுகால்மடத்தானோ. கீரிமலையானோ போட்டுத்தள்ளியிருக்கலாமோ. என எண்ணி முடிப்பதற்கிடையில் அவர்கள் இருவரும் நேர் எதிரில் இருந்த செல்லத்துரையண்ணையின் கடையில் இருந்து தேனீர் குடித்துக்கொண்டு தன்னைக் கண் காணித்துக்கொண்டு இருப்பதை சண்டியன் கண்டு விட்டான்.

sкампарамš sahrgu dr 363
இவன்கள் ஏன் இங்கே. என்ற நினைப்புடன் எழுந்து அவர்களிடம் போனான். அவர்கள் இருவரும் தம்மை சுதாரித்துக் கொண்டார்கள். கிட்டப் போன சண்டியன். “இதிலை எதுவும் வேண்டாம். மீன் சந்தையடிக்கு போறன். பின்னாலை வாங்கோ” சொல்லிவிட்டுப் போய் மீன் சந்தையில் மீன்பரப்பி விற்கும் மேடையில் ஏறி உட்கார்ந்துகொண்டு ஒரு சிகரட்டை மூட்டினான். "என்ன சண்டியா. மொத்த பழத்தையும் நீயே திண்டிடலாம் 6T6örgpl (ypiq6a5L'LOL' tqu IT?” “என்ன அண்ணை சொல்லுறியள்?”
"கள்ளியங்காட்டானை நீயே போட்டுட்டு எட்டு துப்பாக்கி யையும் எடுத்திட்டியா?” “என்ன அண்ணை விசர்கதை கதைக்கிறீங்கள். நேற்று முழுக்க நான் எங்கையும் போகேல்லை. தவத்துக்கு இடப்பக்கத்திலை ஒரே குத்து. இன்னும் ஒரு மாதம் இருக்கு. குறைமாதப்பிள்ளை பிறந்திடுமோ எண்டு பயந்து கொண்டு அவளுக்குப் பக்கத்திலேயே இருந்தனான்.” “நம்பச் சொல்லுறியா?”
"பின்னே. நான் பொய் சொல்லுறனா. அண்ணை நான் சண்டியன் மட்டும்தான். எனக்கு பொய் சொல்லத் தெரியாது. பிடிக்காட்டி போட்டுத் தள்ளிவிட்டுப் போய்க் கொண்டு இருப்பன்.” “போட்டுத் தள்ளுறத்துக்குத்தான் அவனிட்டை எட்டுத் துப்பாக்கி இருந்தது. இப்ப அத்தினையும் யாரிட்டை போயிருக்கோ.”

Page 184
364 வி. ஜீவனுமாரன்
“என்ன கணக்கு பாக்கிறிங்கள். அவனிட்டை இருந்தது எட்டு. சாகேக்கை அவன்ரை கையிலை ஒண்டு இருந் திருக்குது. மற்றவனிட்டை கையிலை ஒண்டு இருந்திருக் குது. ஆக மொத்தம் ஆறு கை மாறி இருக்குது. இல்லை, அவன் ஒளிச்சு வைச்ச ஏதோ ஒரு இடத்திலை இருக்க வேணும். அவன்டை காரியங்கள் முடிய மகனைத் தூக்கிக்கொண்டு தாயிடம் கேட்டால் நிச்சயம் அது கிடைக்கும்.”
"ஊஹம். சங்கானைக்கு மூளை வேலை செய்யுதுதான்” - கீரிமலையும் ஆறுகால் மடமும் ஒத்துக் கொண்டனர். சண்டியன் சிரித்தான். w “எப்பிடியும் நாங்கள் மூண்டு பேருமாய் அதைத் தேடுவம். சண்டியன் சொல்லுற மாதிரி. ஆறு கைத்
துப்பாக்கிகளையும் ஆளுக்கு இரண்டு இரண்டாய் பிரிப்பம்.”
மீன்சந்தை பக்கம் ஒன்றிரண்டு மீன் வான்கள் வரத் தொடங்கின. மூவரும் மெதுவாக அந்த இடத்தை விட்டுக் கலைந்தார்கள். சண்டியனின் கண்கள் துரையண்ணையைத் தேடியது. மீன் சந்தை கூடி பின் அது கலையும் வரை அவரைக் காண வில்லை.
அவன் மனம் மேலும் சஞ்சலப்பட்டது.
"ஏதாவது மாட்டிக் கொண்டாரோ” என மனம் பயப்பட் டாலும், "இந்த வருஷத்தில் இந்தக் காரில் இன்ன பிழை வரும் எனத் தெரிந்து அதற்கேற்றமாதிரி கார்களைத்

ưuủtowaporở #ahrgujør 365
தரகு செய்யும் துரையண்ணர் இப்படிப்பட்ட விடயங்களில் மாட்டிக்கொள்ளமாட்டார்” என தன் பயந்த மனதை தானே சமாதானம் செய்து கொண்டிருந்தான். சரி, பின்னேரமும் சந்தையடிக்கு வராவிட்டால் அவரின் வீட்டடிக்குப் போவோம் என நினைத்துக்கொண்டு மத்தி யானம் சாப்பிட தனது வீட்டுக்குப் போனான். அங்கு போனபொழுது வீட்டின் வாசலில் துரையண்ணை சிரித்தபடியே இருந்தார், தவம் ஊற்றிக் கொடுத்த தேனிரைக் கையில் வைத்தபடியே. “என்னண்ணை நான் சரியாய் பயந்து.” என்று தொடங்க தவம் அங்கு வந்ததால் அதை அப்படியே நிற்பாட்டினான். “என்னடி சாப்பாடு கொடுக்காமல் இந்த வெயிலுக்கை வந்த மனுஷனுக்கு தேத்தண்ணி குடுத்திருக்கிறாய்” பேச்சை மாத்தினான். "நீங்களும் வர ஒன்றாய் சாப்பிடுவம் எண்டு அவர்தான் சொன்னவர். அப்பிடித்தானே துரையண்ணை.” “ஏனடா. வாயோடையும் வயித்தோடையும் இருக்கிற பிள்ளையைப் பேசுறாய். நீ போய் மூண்டு பேருக்கும் GBLUTLDDT.” "சண்டித்தனங்களை சந்தையோடை மூட்டை கட்டி வைச்சுப் போட்டு வரச்சொல்லுங்கோ அண்ணை.” சண்டியன் சிரித்தான்.
“ரொம்பத்தான் வாய்.” "அப்பிடியெண்டால் நீ வாயில்லாத ஒரு பொம்பிளையைத் தான் செய்திருக்க வேணும்.”

Page 185
366 வி. விவகுமாரன்
“இல்லை அண்ணை, அவள் தெய்வம்” மெதுவாய் சொன்னான்.
தவம் இரண்டு பேருக்கும் சாப்பாடு பரிமாறிக் கொண்டி ருக்கும்பொழுது வாசலில் வித்தியாசமான ஒரு வாகனத்தின் சத்தம் கேட்டது. தவம் குசினி யன்னலினூடு எட்டிப் பார்த்தாள். பொலிஸ் இன்ஸ்பெக்டிரும் இன்னும் மூன்று நான்கு பொலிஸ்காரரும்.
தவத்துக்கு 'திக்’ என்றது. "இங்கை இரண்டு பேரும் என்ன செய்கிறிங்கள்?” “என்ன இன்ஸ்பெக்டர் ஜோக் அடிக்கிறிங்கள். சாப்பிட்டுக் கொண்டிருக்கிறம்.” “நக்கலா. துரை நீ நேற்று எங்கை இருந்தனி?” “காரை கராஜ்ஜிலை விட்டுட்டு மனேகரா தியேட்டரிலை படம் பார்த்துக் கொண்டு இருந்தனான். இங்கை ரிக்கற் பார்க்கிறீங்களா.” "படத்துக்குப் பிறகு எங்கை போனனி?” “தவம். கொஞ்சம் நீ அங்காலை போ அம்மா. படம் முடிய சின்ன சரோஜா வீட்டை போனனான். நீங்களும் அடிக்கடி வாறனிங்களாமே.” இன்ஸ்பெக்டரின் முகம் சிவந்தது. "கள்ளியங்காட்டான் செத்திட்டான் தெரியுமா?” “பார்த்தன். எல்லாப் பேப்பரிலையும் அந்தக் கருமம் தான்.”

சங்கானைச் சண்டியன் 367
“யார் செய்து இருப்பான்கள் எண்டு நினைக்கிறாய்” “என்ன இன்ஸ்பெக்டர் பகிடி விடுகிறீங்கள். காரிலை எங்கை என்ன சத்தம் வருது எண்டு சொல்லுங்கோ. பிழையை உடனை சொல்லுறன். இது உங்கடை வேலையை என்னட்டை கேட்கிறியள்.”
துரையரை விசாரிக்கும் முழு நேரமும் இன்ஸ்பெக்டரின் கண்கள் சண்டியன் மேலேயே இருந்தன. சண்டியனின் முகத்தில் எந்த அசுமாத்தத்தையும் காண வில்லை.
"நீ நேற்று எங்கை இருந்தனி?” கேள்வி சண்டியனின் பக்கம் திரும்பியது. "அவர் நேற்று முழுக்க என்னோடைதான் ஆஸ்பத்திரி யிலை நிண்டவர். இராத்திரியும் இங்கைதான் படுத்திருந்தவர். போதுமா." தவம் ஆவேசப்பட்டு குசினியால் வெளியே வந்து பதில் சொன்னாள்.
“ஏ. உன்னை யார் கேட்டது. நீ யார்?"
“பெண்டாட்டி.”
"பேப்பர் இருக்கா?”
9.
"பேப்பர் என்ன பேப்பர். இது இருக்கு.” தாலியைக் காட்டினாள். "ரைட்ஸ"க்குப் போனால் எல்லாரும் உதைத்தான் காட்டு றாளவை.”
தவம் விறைத்துப் போனாள்.

Page 186
3.68 வி. விவகுமாரன்
விம்மி வந்த கண்ணிரை அடக்க முடியாமல் குசினிக்குள்
ஓடினாள்.
“இன்ஸ்பெக்டர், விசாரிக்க வந்தால் மரியாதையாய் விசாரிச்சுப் போட்டுப் போங்கோ. வீணாய் தேவையில் லாமல் கதையாதையுங்கோ.”
சண்டியன் கறுவினான்.
“காலமை எதுக்காக ஆறுகால்மடத்தானும். கீரிமலை யானும் உன்னட்டை வந்தவங்கள். எதுக்காக மீன் கடைக்குப் போயிருந்து கதைச்சனிங்கள். அப்படி தனிச் சிருந்து கதைக்க என்ன இருக்கு?” சண்டியன் தான் பொறிக்குள் மாட்டப்பட்டுவிட்டதாக உணர்ந்தான். - “பொலிஸ் என்னைக் கண்காணிச்சிருக்கு” - அவனுக்கு உறைத்தது. “கார் விசயமாய் துரையண்ணையிட்டை வந்தவங்கள். அவரைக் காணாததாலை என்னோடை இருந்து கதைச் சவங்கள். சந்தையடியிலை நிண்டு கதைக்க சனம் வேடிக்கை பார்த்ததுகள். அதுதான் ஒதுக்குப்புறமாய் போய்க் கதைச்சனாங்கள்.”
இன்ஸ்பெக்டர் ஒரு தரம் மூச்சை உள்ளே இருந்து வெளியே விட்டுக் கொண்டார். “நீங்கள் இரண்டு பேரும் கேட்டுக்கொள்ளுங்கோ. ஏ. ஜி. ஏ, சேர்மன், இப்ப கள்ளியங்காட்டான். இந்த மூன்று கேஸையும் ஒழுங்காக முடிக்காமல் நான் கொழும்புக்குப் போகமாட்டன். அப்பிடிப் போனால் நான் ஒரு நல்ல கறுவாக்காட்டானுக்குப் பிறக்கேல்லை எண்டு அர்த்தம்.”

Karaeodor FabriguUdr 369
இன்ஸ்பெக்டர் சொல்லிவிட்டுப் போய்விட்ட மறுகணம் குசினியில் இருந்து எழுந்த தவத்தின் அவல அழுகுரல் சத்தம் சண்டியனையும் துரையரையும் பதற வைத்தது.
"உனக்கு கழுத்தை நீட்டினத்துக்கு எனக்கு நல்ல பெயர் வேண்டித் தந்திட்டாய். என்னை எங்கையாவது கொண்டு போய் கிணத்துக்கையோ குளத்துக்கையோ தள்ளிவிடு. உனக்கேன் மனுஷி. பிள்ளை குட்டியள். போ. போ. போய் இன்னும் நாலைஞ்சு பேரைக் கொலை செய்து போட்டு வா.”
சண்டியனுக்கு உடல் எல்லாம் பற்றி எரிந்தது. கண்கள் எல்லாம் சிவந்தது.
"அண்ணை காரை எடு.” தவம் எவ்வளவோ மறித்துப் பார்த்தாள். அவன் கேட்கவில்லை.
துரையின் கார் பாருக்குள் நுழைந்தது. “முதலிலை உவன் இன்ஸ்பெக்டரைப் போடவேணும். தவத்துக்கு பிள்ளை பிறக்க முதல் உவனைப் போட வேணும். எனக்கு இப்பவே ஒரு துவக்கு வேணும்.” துரை அண்ணர் நிமிர்ந்து சண்டியனின் கண்களுக்குள் பார்த்தார்.
சண்டியனுக்கு பார்வையின் அர்த்தம் புரியவில்லை. துரை அண்ணர் மெதுவாகப் புன்னகை புரிந்தார்.
“உனக்கு ஒரு துவக்கு இல்லை. ஆறு துவக்கு வைச்சிருக்கிறன்.”

Page 187
370 வி. ஜீவகுமாரன்
“அண்ணை.”
"அவனை மட்டும் நேற்றுப் போடாட்டி அவன் அப்ரூவராய் மாறினதாலை நீ இப்ப உள்ளுக்கை. அதுதான் நானே. நேற்று.” சண்டியன் துரையண்ணையின் கைகளைப் பிடித்துக் கொண்டு அழுதான். “கட்டாயம் காலமை பொலிஸ் சந்தைக்கு வரும் எண்டு தான் நான் வரேல்லை. ஆனால் நீ மோட்டுத்தனமாய். கீரிமலையானோடையும். ஆறுகால்மடத்தானோடையும் மீன்கடைக்கை வைச்சு வட்ட மேசை மகாநாடு நடாத்தி இருக்கிறாய். இப்ப நேர இன்ஸ்பெக்டர் அவன்களிட்டை தான் போவன்.” "அண்ணன் அவன்கள் தங்களுக்கு கட்டாயம் ஆளுக்கு இரண்டு துப்பாக்கி தரச்சொல்லிப் போட்டுப் போறான்கள்.”
"குடுப்பம். குடுப்பம். ஆளுக்கு இரண்டு இரண்டு ரவையள் குடுப்பம். நான் கூப்பிடுறன். நீ குடு.”
"அண்ணை.”
9
“வேறு வழியில்லை.” ஏ.ஜி.ஏ.யிலை தொடங்கினாய். இந்த இரண்டோடை ஐந்தாகும்.” “இல்லை அண்ணை. இன்ஸ்பெக்டரோடை சேர்த்து
துரையண்ணை சிரித்தார். “முதல் ஐந்தும் நீ விரும்பியோ விரும்பாமலோ நடக்கிற அரசியல் கொலைகள்.”
“ஆறாவது தவத்துக்கு நான் செய்யுற. அந்த கறுவாக் காட்டான் அவளை வேசி எண்டு சொல்லிப் போட்டான்

sësTabarë sakrepudit 371
அண்ணை. ஒரு நாள் நான் அவளுக்கு கை நீட்டினது இல்லை. ஒரு சொல்லு சொல்லுறதில்லை. இப்பிடி அழுது நான் கண்டதில்லை.” துரையண்ணர் சாராயத்தை சண்டியனின் கிளாஸில் ஊற்றிக் கொண்டிருந்தார். தவம் இன்னமும் விம்மியபடியே சண்டியனின் வருகைக் காக வாசல் கதவைத் திறந்துவிட்டு முன் விறாந்தையில் படுத்துக் கொண்டிருந்தவள் அயர்ந்து விட்டாள். எங்கேயோ ஒரு சாமக்கோழி கூவியது. துரையண்ணை வீட்டுக்குள் வராமல் அவனை வீதியில் இறக்கி விட்டு காரை எடுத்துக்கொண்டு போகும் சத்தமும் வெளிச்சமும் தெரிந்தது. சண்டியன் தட்டுத் தடுமாறி வீட்டுக்குள் வந்து கொண்டி ருந்தான். தவத்தை எழுப்பாது அவளின் காலடியில் படுத்துக் கொண்டான்.
“என்னை மன்னிச்சுக் கொள்ளடி. உன்னைக் கட்டி அசிங்கம் பண்ணியிருக்கக் கூடாதடி.” கொஞ்சம் வெறி. கொஞ்சம் சுயநினைவு. அரற்றிக் கொண்டு கிடந்தான். அவனின் அசுமாத்தம் கேட்டு எழுந்த தவத்திற்கு அவனின் நிலை பரிதாபமாயிருந்தது. அவனைத் தன் மார்புடன் இறுக்க கட்டி அணைத்துக் கொண்டாள்.

Page 188
372 a. assiopuorgaðir
சிம்ள்ளியங்காட்டானின் மரணத்திற்குப் பின் சண்டியனுக்கு சந்தையடியில் கொஞ்சம் மரியாதையும், மரியாதை கலந்த பயமும் அதிகரித்திருந்தது. எல்லோரும் சண்டியன்தான் செய்திருக்க வேண்டும் என நம்பினார்கள். யாரின் தேர்தலின் வெற்றிக்குப் பாடுபட்டு கத்திக் குத்து வேண்டினானோ. பழைய சேர்மனைப் போட்டுத் தள்ளிய தால் யார் புதிய சேர்மனாக அவதாரம் எடுத்தாரோ. தன் சால்வையில் எந்தக் கறையும் படக்கூடாது என்பதற்காக ஆஸ்பத்திரியில் கூட அவனைப் போய்ப் பார்க்காத அதே அரசியல்வாதி. சேர்மன். திரு. கனகவேலு - சட்டத்தரணி இப்பொழுதெல்லாம் காரில் சந்தையடியைத் தாண்டும் பொழுது சண்டியனைக் கண்டால் கையை அசைத்து விட்டுப் போகத் தொடங்கினார்.
சண்டியனுக்கு அரசியல் தெரியாது.
"உவங்களுக்காக ராத்திரியும் பகலும் போய்ப் பாடு பட்டமே.” சண்டியன் சலித்துக்கொள்ளும்பொழுது,
“பொறு சண்டியா. உனக்கான காலம் வரும்.” என கார்க்கார துரையண்ணை தைரியம் சொல்லுவார்.
“எனக்கு அது எல்லாம் வேண்டாம் அண்ணை. இன்ஸ் பெக்டரைப் போட வேண்டும். அதுவும் என்ரை கையாலை போட வேண்டும். தவத்துக்கு வயிற்றுவலி வாறத்துக்கிடை யிலை அவனைப் போட வேண்டும். அதுக்குப் பிறகு எனக்கு எதுவும் வேண்டாம் அண்ணை. நீங்கள் சொல்லுற பெரிய சண்டியன் பட்டம் எதுவும் வேண்டாம் அண்ணை.”

Forberapavrå staruudår 373
இன்ஸ்பெக்டர் தவத்தைக் கேட்ட கேள்வி அவனை எவ்வளவு தூரம் தாக்கிப் போட்டது என்பது துரையண்ண ருக்கு விளங்கக் கூடியதாய் இருந்தது. “பொறு சண்டியா. எனக்கு ஒரு கிழமை தா. எங்கடை பொடியளை விட்டு எங்கை போறார். எங்கை வாறார் எண்டு கண்காணிப்பம்." "ஆனால் அண்ணை. கள்ளியங்காட்டானை முடிச்ச மாதிரி நீங்கள் இதைச் செய்து போடாதையுங்கோ. இவனை நான் தான் போடவேண்டும்.” துரையண்ணை ஒம் எனத் தலையாட்டினார். துரையண்ணையின் உளவுப்படை இன்ஸ்பெக்டரைத் தொடரத் தொடங்கியது. இன்ஸ்பெக்டர் இப்பொழுது ஏதாவது வழியில் கீரிமலை யானையும் ஆறுகால் மடத்தானையும் தன் வசம் விழுத்தி சண்டியனுக்கு எதிராகத் திசை திருப்ப சமயம் பார்த்துக் கொண்டிருந்தார்.
மேலிடத்தில் தொட்ர்பு கொண்டார். முடிந்தால் இருவருக்கும் ஆயுதம் கொடுக்கும்படி கட்டளை வந்தது.
"ஆளை ஆள் அடித்துக் கொண்டு சாகட்டும்” என்று. இந்த சதுரங்க ஆட்டத்தில் யாரை யார் வெட்டி வீழ்த்துவது. யாருக்கு யார் செக் வைப்பது என்ற போர் தொடங்கியது.
துரையண்ணையின் சாதுரியம் ஒவ்வொரு தடவையும் சண்டியனைக் காப்பாற்றிக் கொண்டு வந்தது.

Page 189
374 வி. ஜீவகுமாரன்
முதலில் இன்ஸ்பெக்டரா. இல்லை கீரிமலையானும் ஆறுகால் மடத்தானுமா. காலம் செல்லச் செல்ல தவத்திற்கு வயிற்றுவலி தொடங்கும் நாளும் கிட்டியது. சண்டியனுக்கு நெஞ்சில் வலி ஏறிக்கொண்டு வந்தது.
வேலுப்பிள்ளை பரியாரியார் கைகைப் பிடித்துப் பார்த்து விட்டு, “டே சண்டியா. மூன்டு நாலு நாள்தான் இருக்கு. அவளை விட்டுட்டு ள்ங்கையும் போயிடாதை” எச்சரித்து விட்டுப் போனார்.
அடுத்தநாள் துரையண்ணை அவசர அவசரமாய் சண்டி யனைச் சந்தித்தார். “இண்டைக்கு இரவு இன்ஸ்பெக்டர் கொழும்புக்கு ஜீப்பில் போகப் போறார்.” "அண்ணை தவத்துக்கு வயித்து வலி.”
“நீ கிட்டவாய் இருந்தாலும் பிறக்கும். இல்லாட்டியும் பிறக்கும். ஆனால் பிறக்கும்பொழுது அவன் இந்த உலகத்திலை இருக்கக் கூடாது என நீ நினைத்தால் நீ இங்கை இருக்கக் கூடாது.”
சண்டியன் மெளனமாகத் தலையாட்டினான். சண்டியன் பகல் முழுக்க பதட்டத்துடன் திரிந்தான். யாரையோ கட்டி நல்லாய் இருந்திருக்க வேண்டியவள். கையையும் வெட்டி. கழுத்திலை தாலியையும் கட்டி. எப்பதாலிஅறும் எண்டு தெரியாமல், எனக்காக விரதங்கள் பிடித்துக்கொண்டு. கடைசியிலை வேசி எண்ட ஒரு பட்டத்தை அந்த கறுவாக்காட்டானிடம் வேண்டி. இப்ப வயிற்றுவலி வரேக்கை பக்கத்திலும் இருக்காமல்.

sFaßesTapaurğ* stadièrgatuMdbr 375
தன்னை நினைக்கவே அவனுக்கு கொஞ்சம் அசிங்கமாய் U-55.
ஆனால் பலி வாங்க வேண்டும் எனும் உணர்வு அவனை வென்று கொண்டு இருந்தது. தவம் கொஞ்சம் அயர்ந்து தூங்கிக்கொண்டு இருக்கும் போது மெதுவாகத் திண்ணையில் இருந்து வீதிக்கு வந்தான்.
அங்கே துரை அண்ணை காத்திருந்தார்.
"கட்டாயம் முருகண்டியிலை வாகனத்தை நிற்பாட்டுவான். அப்ப சீனியன் வந்து எங்களுக்கு தகவல் சொல்லுவான். முதலாங்கட்டையில் கயிறைப் போட வேண்டியதுதான். அவன் வெளிக்கிடும்பொழுது அவனுக்கு முன்னாலை மொட்டையன்டை மோட்டார் சைக்கிள் வெளிக்கிடும். மோட்டார் சைக்கிள் பாஸ் பண்ண நான் கயிறை இழுத்து இறுக்குவன். அதுக்குப் பிறகு உன்ரை பாடு. அவன்ரை பாடு.
சண்டியனுக்கு விளங்கி விட்டது.
அப்ப பின்னாலை வாற. முன்னாலை வாற வாகனங்கள்.”
"அதைப்பற்றி நீ கவலைப்படாதை. பின்னாலை வாறது களை றோட்டிலை யானை என்று சீனியன் நிற்பாட்டுவான். முன்னாலை வாறதை யானைக் கதை சொல்லி மொட்டையன் நிற்பாட்டுவான். உனக்கு ஐந்து நிமிடம் தான் இருக்கும்.”
“சரி அண்ணை.”

Page 190
376 65. augotgdr
முருகண்டிக்கு முதலில் வந்தவுடன் சண்டியன் கால், முகம் எல்லாம் நன்கு கழுவி தவத்தை நினைத்து கற்பூரமும் கொளுத்தி தேங்காயும் உடைத்தான். சுற்றாடல் முழுக்க பரவியிருந்த கற்பூர மணமும், கட்டையில் தேய்த்துப் பூசும் சந்தன மணமும் அவனுக்கு ஏதோ ஒரு நிம்மதியைக் கொடுத்துக் கொண்டிருந்தது. கொலை செய்யப் போகின்றோம் என்ற எந்தப் பதட்டமும் அவனுக்குள் இருக்கவில்லை. மாறாக, தவத்திற்காக ஒரு சங்காரம் செய்யப் போகின்றோம் என்ற ஓர்மம்தான் இருந்தது. “சாப்பிடுவம் வாவன்” முறிகண்டியில் இருந்த கடைக்கு துரையண்ணர் கூப்பிட்டார். “இல்லை அண்ணை. எல்லாம் முடியட்டும்.” “சரி. சோடா வேண்டிக் கொண்டு வாறன்.” துரையண்ணை சோடா வேண்டிக் கொண்டு சீனியனுக்கு சைகை கொடுத்து விட்டு காரை ஸ்டாட் செய்தார். கார் முதலாம் கட்டையடியில் போய் பற்றைக்குள் மறைந்து நின்றது. வெளியே கயிறும் நடுவே பலமான கம்பியும் கொண்ட கயிற்றை றோட்டின் ஒரு கரையில் இருந்த மரத்தில் துரையண்ணை கட்டினார். றோட்டின் குறுக்காகக் கயிற்றைப் போட்டு மறுகரையில் இருந்த கொப்புகளுக்கு நடுவால் அதனை இழுக்கக் கூடியதாக செற் பண்ணினார். சண்டியன் பார்த்துக்கொண்டு ஒரு பெரிய கல்லில் உட்கார்த்திருந்தான்.

FøTampaorė Fairgudir 377
“காருக்குள்ளே துவக்கு இருக்கு. வாள் இருக்கு. எது வேண்டும் எண்டாலும் எடுத்துக் கொள். ஆனால் ஐஞ்சு நிமிடம்தான்.”
சண்டியன் ஓம் எனத் தலையாட்டினான். அந்தத் தலையாட்டலில் அவன் விபரமாய் இருக்கிறான் எனத் தெரிந்தது. இருட்டினுள் றோட்டால் கார்களும், கொழும்பு லொறிகளும், பஸ்களும் போய்க் கொண்டு இருந்தன. இருவருமே சீனியனின் சமிக்கைக்காகக் காத்திருந் தார்கள். எதிர்பார்த்திருந்த நேரத்திற்கு முன்பாகவே சீனியன் வந்து சமிக்கை கொடுத்து விட்டுத் திரும்பினான். துரையண்ணர் கயிற்றை இழுக்கக் காத்திருந்தார். சண்டியன் ஒய்யாரமாக மரத்தடியில் சாய்ந்திருந்தான். துரையண்ணருக்கு வியப்பாக இருந்தது. அடுத்து ஐந்து நிமிடத்துள் மொட்டையனின் சமிக்கை வெளிச்சத்துடன் மோட்டார் சைக்கிள் வந்தது. பின்னால் ஜீப். மோட்டார் சைக்கிள் அவர்களைத் தாண்டியதும் றோட்டின் குறுக்காகப் போட்டு வைத்திருந்த கயிற்றை துரையண்ணை இழுத்தார். வேகமாக வந்த ஜீப் கயிற்றில் இழுபட்டுச் சுழன்றபடி கயிறு கட்டியிருந்த மரத்துக்குப் பக்கத்தில் இருந்த பற்றையினுள் புகுந்து கொண்டது.

Page 191
378 வி. விவகுமாரன்
இன்ஸ்பெக்டர் தன்னைச் சுதாரிக்க முதல் சண்டியனின் கைப்பிடியுள் இன்ஸ்பெக்டரின் கழுத்து. “தவத்தைப் பார்த்து என்ன கேட்டாய். கறுவாக்காட்டு நாயே!”
சொல்லியபடி பின்னங் கழுத்தில் ஒரு அடிதான். கழுத்து தொங்கியது. “போடண்ணை கழுத்திலை கயித்தை." இதுபோன்று சண்டியனின் குரலை என்றுமே துரை யண்ணை கேட்டதில்லை. காருக்குள் இருந்த தடக்கயிற்றை எடுத்து. மரத்தில் ஒரே தூக்கு. இன்ஸ்பெக்டரின் இடுப்பில் இருந்த துப்பாக்கியையும், ஜீப்பினுள் இருந்த சண்டியன் பற்றிய அனைத்து பைல் களையும் எடுத்துக்கொண்டு காரினுள் ஓடிப்போய் ஏறிக் கொண்டான்.
மொத்தம் நாலரை நிமிடங்கள். கார் மீண்டும் முருகண்டியை நோக்கி. சீனியனும். மொட்டையனும் முன்னால் போய்க் கொண்டு இருந்தார்கள். “வா கோயிலடியிலை தேத்தண்ணி குடிச்சுட்டு போவோம்.”
“வேண்டாம் அண்ணை. கொலை செய்துட்டு போறன். கோயிலுக்கு வேண்டாம்.”
துரையண்ணருக்கு கண்கள் பனித்தன.
"நீ மனுஷப் பிறவிதான்டா.”

praporš saigudr 379
கார் வீட்டைநோக்கிவிரைந்துகொண்டிருந்தது-தவத்திற்கு எப்படியோ என்ற தவிப்பில்.
அதிகாலையாகும் பொழுது கார் ஊருக்குள் நுழைந்தது.
வீட்டு வாசலில் அவனை இறக்கிவிட்டு துரையண்ணை போய்விட்டார்.
கட்டாயம் தவம் நித்திரையால் எழுந்து என்னைத் தேடியிருப்பாள்.
வீட்டுக்குள் போகும் பொழுது நன்றாக வேண்டிக் கட்டிக் கொள்ள வேண்டும் என்ற நினைப்புடன் வீட்டுக்குள் போனான்.
தவத்தைக் காணவில்லை. அவனுக்கு 'திக்’ என்றது. பின்வளவுக்குள் போய்ப் பார்த்தான். அங்கும் காணவில்லை.
அவன் வீட்டுக்கும் வெளியிலும் குரல் கொடுப்பதைக் கேட்டு பக்கத்து வீட்டு சாந்தினி, “அண்ணை. தவம் அக்காவுக்கு இராத்திரி வயித்துக் குத்து தொடங்கீட்டுது. நீங்களும் இல்லையாம். ஐயாதான் சைக்கிளிலை வைச்சு ஆஸ்பத்திரிக்கு கொண்டு போனவர். ஐயா இன்னும் வரேல்லையாம் எண்டுட்டு அம்மா காலமை எழும்பி போட்டுது” சொல்லி முடிக்க முதல் சண்டியன் தன் சைக்கிளை எடுத்துக் கொண்டு ஓடினான். சுற்றிப் போனால் கொஞ்ச நேரம் போகும் என்பதால் கரடு முரடான கல்லு றோட்டாலும் பனைவெளிக் குள்ளாலும் சைக்கிள் பறந்தது.

Page 192
380 வி. வேகுமாரன்
மனம் அடித்துக் கொண்டது - தனியே அவளை விட்டு விட்டுப் போய்விட்டோமே என்று.
ஆனாலும் அதே மனம் குதூகலித்தது - அவளைக் கண் கலங்க வைத்தவனின் கண்களை மூடியாயிற்று என்று. ஆஸ்பத்திரிக்கு வெளியே இருந்த வாங்கில் இருந்து தேனிர் குடித்துக் கொண்டிருந்த சின்னராசா அண்ணைக்கு சண்டியன் தூர சைக்கிளில் வேகமாக வருவது தெரிந்தது.
றோட்டின் கரைக்கு வந்து சண்டியனுக்குக் கை காட்டினார்.
“எப்பிடி இருக்கு அண்ணை?” “ராத்திரி முழுக்க குத்து. குளறிக் கொண்டு இருந்தவள். உன்னைக் காணேல்லை எண்டும் அழுதுகொண்டு இருந்தவள். இப்பதான் என்ரை மனுஷி வர அவளை பக்கத்திலை விட்டுட்டு நான் இதிலை தேத்தண்ணி குடிக்க வந்தனான்.”
சண்டியன் ஆஸ்பத்திரியுள் போனான். லேபர் அறைக்கு முன்னால் சின்னக்கிளியக்கா நின்று கொண்டிருந்தா.
உள்ளே தவம் குளறுவது கேட்டது. லேபர் அறையின் கதவை மெதுவாக நீக்கி, “தவம், தம்பி இஞ்சை வந்திட்டார். நீ ஒண்டுக்கும் கவலைப்படாதை” என்று சொல்லி முடிக்க முதல் தவத்தின் நீண்ட ஒரு அழுகைச் சத்தமும். அதைத் தொடர்ந்து ஒரு குட்டிச் சண்டியனின் குரலும் வெளியில் கேட்டது. சண்டியன் அப்படியே தூணுடன் சாய்ந்து ஆஸ்பத்திரியின் விறாந்தையில் கீழே இருந்தான்.

Faiostadorsahrguer 381
அவன் கண்களால் கண்ணிர் ஓடிக்கொண்டு இருந்தது.
“இப்பிடி நிறைமாதத்திலை இருக்கிற பிள்ளையை தனிய விட்டுட்டு போகலாமோ. எங்களிட்டையாவது ஒரு சொல்லு சொல்லிப்போட்டுப் போயிருக்கலாமே. அவளுக்கு யாரிட்டை உதவி இருக்கு. தாயோ. தேப்பனோ இருக்கினம். இப்பவும் கண்டறியாத ரோஷப்பூழலை வைச்சுக் கொண்டிருக்குதுகள்.”
சின்னக்கிளியக்கா கதைத்துக்கொண்டு இருக்க நேர்ஸ் வந்து உள்ளே போய்ப் பார்க்கும்படி கூறிவிட்டுச் சென்றாள். சண்டியன் ஏதோ ஒரு தயக்கத்துடன் மெல்ல எழுந்தான். பின்னால் வந்த சின்னராசா அண்ணை தானும் அறையுள் போக வெளிக்கிட, “ஏய். எங்கை போறாய். புருஷன்காரன் முதன் முதலிலை மனுஷி பிள்ளையைப் பார்க்கப் போறான். இரத்த சீலையையே ஒழுங்காய் எடுத்து கரையிலை போட்டிருக்க மாட்டாளவை. நீ எங்கை போறாய். பொம்பிளை நானே வெளியிலை நிக்கிறன். பொறு, வாட்டுக்கு கொண்டு வரட்டும், இரண்டு பேருமாய் போய்ப் பார்ப்பம்” சின்னக்கிளியக்கா தடுத்தா. தவத்தின் நெஞ்சில் குட்டிச் சண்டியன் குப்புறவாகக் கிடத்தி வைக்கப்பட்டிருந்தான். தவம் களைப்பில் கண்களை மூடியபடியே படுத்திருந்தாள் - ஆனாலும் கை பிள்ளையை கவனமாக அணைத் திருந்தது. சண்டியன் பக்கத்தில் வரும் அசுமாத்தத்தை அவன் காலடிச் சத்தத்தை வைத்தே அறிந்து கொண்டாள்.

Page 193
382 ി. (Logr
சண்டியன் மெதுவாகத் தலையைத் தடவினான். கண்ணைத் திறந்து பார்த்தாள். “வந்திட்டியா” என்று மெதுவாகக் கேட்க முதலே இவ்வளவு நேரமும் தன்னைத் தனியே தவிக்க விட்டுவிட்டுப் போன கோபம், ரோஷம் எல்லாம் சேர்ந்து குபிரென அழுகையாக வெடித்தது. "அழாதை. தவம். அழாதை." அவள் தலையைத் தூக்கி தன் மடியில் வைத்தான் - பிள்ளையைப் பார்த்தபடி "தாரும் உன்னைக் கேக்க ஆளில்லை எண்டுதானே என்னை தனிய விட்டுட்டு போனனி. அம்மா. அப்பா. தங்கச்சி. யார் இருக்கினம் எனக்கு." “தவம். நல்ல பிள்ளை. அமைதியாய். இரு. பச்சை உடம்பு. நீ அழ பிள்ளையல்லோ பயப்படும்.” “பெரிய பிள்ளைப் பாசம் வந்திட்டுது. கதைக்கேக்கை நல்லாய் கதை. பிறகு துரை அண்ணை வந்த உடனை பின்னாலை ஒடு. சத்தியமாய் சொல்லுறன். நீ அந்த
ஆளோடை சேர்ந்து திரியுறது எனக்கு நல்லாய் படேல்லை.”
“சத்தியமாய் தவம் எனக்கோ. உனக்கோ. அந்த ஆள் எந்த தீங்கும் செய்யேல்லை. நேற்றுக் கூட."
சண்டியன் தன் நாக்கைக் கடித்துக் கொண்டான். “சொல்லுங்கோ நேற்று.” குழந்தை முனகியது.
“சும்மா இருப்பியா. பிள்ளை அழுகுது” என்றவாறு பேச்சைத் திசைமாற்றி இரண்டு கைகளாலும் பிள்ளையைத்

substraporí- Sabregtudr 383
தூக்கப் போனவன் என்ன நினைத்தானோ, பின் வாங்கினான்.
“என்னைத் தூக்கிக் கொண்டு போன உனக்கு பிள்ளையைத் 5Tës" LJuJLDIT?".
இப்பொழுது தவம் சிரித்தாள்.
“நான் இன்னும் கைகால் கழுவேல்லை. மத்தியானம் வீட்டை போய் குளிச்சுட்டு வந்து பின்னேரமாய் தூக்குறனே.”
தவத்திற்கு அவனுக்கு பெரிய பொறுப்பு வந்து பேசுமாப் போல் இருந்தது. அறையுள் இருந்தவாறு "சின்னக்கிளியக்கா” என குரல் கொடுத்தான்.
அவா உள்ளே வந்தா.
"அக்கா. எனக்கு உந்தப் பத்தியம். சரக்கு அரைக்கிறது எதுவுமே தெரியாது. அவளாய் எழும்பி. சமைக்கத் தொடங்கும் வரை நீங்களே எல்லாத்தையும் பார்த்துக் கொள்ளுங்கோ.” என்றவாறு தனது பொக்கெற்றுக்குள் இருந்து பெரிய காசுக்கட்டை எடுத்தான். “சீ. உதை வை. மண்ணாங்கட்டிக் காசு. எனக்கு அவளுக்கு என்ன என்ன எல்லாம் செய்ய வேண்டும் எண்டு தெரியும். பெரிய காசோடை வந்திட்டார். அவள் வீட்டை வரும் வரை நீயும் எங்கடை வீட்டிலை வந்து சாப்பிடு.”
சண்டியனுக்கும், தவத்திற்கும் கண்கள் கலங்கின.

Page 194
384 வி. விவகுமாரன்
கொழும்பின் நாலாம் மாடிக்கட்டடத்தில் கலந்துரை யாடல் நடக்கும் அறையினுள் அனைவரும் கூடியிருந் தார்கள். * யாழ்ப்பாண மாவட்டத்தில் நடைபெறும் சின்னச் சின்ன சண்டித்தனங்கள். அண்மையில் நடைபெற்ற ஆறு கொலைகள் - ஏ. ஜி. ஏ., பழைய சேர்மன், இரண்டு முஸ்லீம் பொலிஸ்காரர், கள்ளியங்காட்டான், அவனது வலது கை - பற்றி ஆராய்ந்து அவை அத்தனையையும் அடக்குவது தான் நோக்கமாய் இருந்தது. பொலிஸ் சிரேஷ்ட மகா அத்தியேட்சகர். இரகசியப் பொலிஸ் பிரிவைச் சேர்ந்தவர்கள் சிலர். பாதுகாப்பு அமைச்சின் பிரதிநிதி ஒருவர், மேலாக இந்தக் கூட்டத்தை நடத்த வேண்டும் என தன் கட்சியின் மேலிடத்தை வற்புறுத்தி அதற்கு ஒழுங்கு செய்த சங்கானையின் புதிய சேர்மன் திரு.கனகவேலு - சட்டத்தரணி. இன்னும் வர வேண்டியது யாழ்ப்பாண இன்ஸ்பெக்டர் தான். காலை பத்து மணியாகி விட்டது. இன்ஸ்பெக்டரைக் காணவில்லை.
யாழ் பொலிஸ் நிலையத்திற்கு போன் போட்டுப் பார்த் தார்கள். மூன்று நாட்களுக்கு முன்னே ஜீப்பில் புறப்பட்டு விட்ட தாகத் தகவல் வந்தது. கொழும்பில் கறுவாக்காட்டு வீட்டிற்கு போன் போட்டார்கள்.
அங்கும் வரவில்லை என பதில் வந்தது.

GrassaanDaonrš sraiargudir 385
என்ன நடந்திருக்கும். வாகனத்திற்கு ஏதாவது. வாகனத்திற்கு வயர்லஸ் மூலம் தொடர்பு கொண்டார்கள்.
சமிக்கை போய்க் கொண்டிருந்தது.
பதிலில்லை.
அனைவருக்கும் குழப்பமாய் இருந்தது. அவர் வராமல் கூட்டத்தை நடாத்துவதில் பிரயோசனம் இல்லை. முற்றாகவோ. அரைகுறையாகவோ ஆதாரங் களைத் திரட்டி வைத்திருப்பவர் அவர்தான். அனைத்து பொலிஸ் நிலையங்களுக்கும் கட்டளை இடப் பட்டது - சமிக்கையின் ஒலிஅலை வீச்சை வைத்து ஜீப்பை அணுகும்படி. ஆனையிறவுக்கும் வவுனியாவுக்கும். மன்னாருக்கும் முல்லைத்தீவுக்கும் இடைப்பட்ட பிரதேசத்தில் இருந்து அது வருவதாக ஆரம்ப சமிக்கைகள் காட்டின.
நாலு நகர்களிலும் இருந்து ஒன்றை ஒன்று நோக்கியபடி நாலு பொலிஸ் வாகனங்கள் நகரத் தொடங்கின. அதே வேளை முருகண்டி வீதியின் முதலாம் கட்டையில் நின்ற வாகை மரத்தின் மேலாகக் காகங்களும் கழுகுகளும் பறக்கத் தொடங்கின.
றோட்டால் போய்க் கொண்டிருந்த மற்றைய வாகனங்கள் இதனை அவதானித்தாலும் ஏதோ மிருகம் செத்துப் போயிருக்க வேண்டும் என்று நினைத்துக் கொண்டு அந்த இடத்தைத் தாண்டிப் போய்க் கொண்டு இருந்தார்கள். காட்டுப் பிரதேசத்தில் இது ஒன்றும் அதிசயமில்லை. காட்டு மிருகங்கள் இறப்பதும். பின் அழுகுவதும். பின் கழுகுகள். காகங்கள். நரிகள் வந்து தின்பதும்.

Page 195
386 வி, சிவகுமாரன்
ஆனையிறவில் இருந்து புறப்பட்ட பொலிஸ் ஜீப் முதலாவ தாக சமிக்கையை அண்மித்துக் கொண்டு இருந்தது. அதேவேளை அச்சமிக்கைக்குக் கிட்டவாக வட்டமாய் காகங்கள் பறந்துகொண்டிருக்க மனத்தினுள்ளும் கொஞ்சம் பயம் தொட்டது. சமிக்கைக்குப் பக்கமாக வந்து விட்டார்கள். றோட்டின் கரையில் தமது வாகனத்தை நிறுத்திவிட்டு பார்த்தபொழுது ஜீப் றோட்டை விட்டு விலகி ஓடிய தடம் தெரிந்தது. தடம் சென்ற திசையில் பார்த்தபொழுது பற்றையினுள் ஜீப் நின்றது தெரிந்தது. ஆள் ஜீப்பினுள் மயக்கமாய் இருக்கவேண்டும் அல்லது செத்துப் போயிருக்க வேண்டும் என்ற நினைப்பில் ஜீப்பினுள் மெதுவாய் எட்டிப் பார்த்தார்கள்.
அங்கு யாரும் இல்லை. ஆனால் கிட்டவாக ஒரு மணம் வந்து கொண்டிருந்தது. காகங்களின் சத்தம் வந்த திசையை நோக்கி மேலே பார்த்தார்கள். உச்சாணிக் கொம்பில் தலை கழன்று விடும் நிலையில் இன்ஸ்பெக்டர்.
கொழும்பும் யாழ்ப்பாணமும் ஒன்று சேர உறைந்தது. இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் ஒலிபரப்பு 1,
வர்த்தக ஒலிபரப்பு 2 - இரண்டிலும் முருகண்டி முதலாம் கட்டை தலைப்புச் செய்தி ஆனது.

sadarši Fairpudr 387 வீரகேசரி தொடக்கம் ஈழநாடு வரையிலும், அவ்வாறே ஆங்கில, சிங்கள பத்திரிகைகளிலும் செய்திகள் அச்சாகத் தொடங்கின.
இன்று பிள்ளை பிறந்து மூன்றாம் நாள். துண்டு வெட்டிக் கொண்டு போகலாம் என டாக்டர் சொல்லி விட்டார்.
இன்று பிள்ளையின் பெயர் கொடுக்கவேண்டும். “நீ கட்டாயம் ஏதாவது யோசிச்சு வைச்சிருப்பாய், சொல்லு" சண்டியன் சொல்ல தவம் மெதுவாய் புன்னகைத்தாள். “எப்பிடி கரெக்டாய் சொல்லுறியள்.” “வீட்டுக் கணக்கு கொப்பியிலை பார்த்தன். பாதிக்கு மேலை ஆம்பிளைப் பேரும். பொம்பிளைப் பேருமாய் இருந்திச்சு.”
“பாத்தீட்டிங்களா. தவமோகன்.” தவம் என்ற தனது பெயரின் முதல் இரண்டு எழுத்தையும் மோகனராசு என்ற அவனின் பெயரில் முதல் மூன்று எழுத்தையும் சேர்த்து வைத்திருந்தாள். சண்டியனுக்கு அது பிடித்திருந்தது. தவத்திற்குக் கிட்டவாக வந்து நெற்றியில் முத்தம் இட்டான். “என்ரை பேர் ஊரிலை ஒருத்தனுக்கும் தெரியாது. பள்ளிக்
கூட இடாப்போடை சரி. இனித்தான் ஆளுக்காள் பாதிப் பேரைக் கூப்பிடப் போறான்கள் - டே மோகன் எண்டு.”

Page 196
388 வி. ஜீவகுமாரன்
அவள் சிரித்தாள். “என்ரை பிள்ளையை யாரும் "டே எண்டு கூப்பிட்டால் அறுத்திட மாட்டன்.”
இருவரும் சிரித்தார்கள். இந்த மூன்றுநாளும் பிள்ளைப்பேற்றைப் பார்க்க வந்த வர்கள் கொண்டு வந்து கொடுத்த அன்பளிப்பு பொருட்கள் அறையை நிறைத்திருந்தன. முன்பென்றால் இப்படி யில்லை. இப்போ நிலைமை அப்படியில்லை. என்றும் அவனின் ஆதரவு அவர்களுக்கு வேண்டும். அல்லது அவனுக்கு பயம் இல்லாது இருக்க வேண்டும். அதுக்காக ஊர்க் கடைக்காரர். பணக்காரர்கள் கொடுத்த அன்பளிப்புகள். மத்தியானம் வரை நின்றுவிட்டு பின்னேரம் துரை அண்ணையின் காரையும் கொண்டு வருவதாகச் சொல்லி விட்டுப் போய் விட்டான்.
பக்கத்தில் துணைக்கு எப்போதும் சின்னக்கிளியக்கா அல்லது அவள் மகள் சாந்தினி - எப்போதும் கையில் கொண்டு திரியும் பொக்கெற் றேடியோவுடன்.
“உனக்கு உந்த றேடியோவைத் தான் கட்டித் தரவேணும். பிறந்த பொடியனும் உன்ரை றேடியோக்குப் பின்னாலை திரியப்போகுது” என்று செல்லமாகத் தன் மகளை ஏசி விட்டு, துண்டு வெட்டிக்கொண்டு வீட்டுக்கு வரும் தவத் திற்கும் சண்டியனுக்கும் இரவுச் சாப்பாடு செய்ய சின்னக் கிளியக்கா போய்விட்டா.
சாந்தினியின் கை றேடியோவில், பூமாலையில் ஓர் மல்லிகை தவழ்ந்து கொண்டு இருந்தது.

sasaoarš staigudr 389
தவமும் அரைத்தூக்கத்தில் பாட்டைக் கேட்டுக்கொண்டு இருந்தாள். பூமாலை அரைவாசியில் தடக்கி நிற்க அவசரச் செய்தி என்று ஒன்று ஒலிபரப்பாகியது.
சேகுவாரா காலத்தில்தான் இப்படியான செய்திகள் ஒலிபரப்பப்படுவதுண்டு - இப்போ அப்படி என்ன என்று காதை கிளியக்காவின் மகளின் பக்கம் திருப்பினாள். இன்ஸ்பெக்டரின் மரணச் செய்தி. வயிற்றில் பாலை வார்த்தது போல இருந்தது. ஆனால் இது சண்டியனின் வேலையா என நினைத்த பொழுது அவளை பயம் கவ்வியது.
முந்தநாள் இரவு.
அவன் வீட்டை விட்டுப் போன நேரம். அவன் வீட்டுக்குத் திரும்பி வந்த நேரம். பிள்ளையைக் கையால் தூக்காமல் தயங்கிக் கொண்டு நின்ற விதம்.
எப்படிக் கணக்குப் போட்டுப் பார்த்தாலும் இரண்டும் ஒன்றும் மூன்றாவது போல அவளுக்குள் அது சண்டியனும் துரை அண்ணருமாய்த்தான் இருக்கவேண்டும் என்று உறுதியாகிக் கொண்டு இருந்தது. அவன் வரும் வரை காத்திருந்தாள். பின்னேரம் போல துரை அண்ணையோடை சண்டியன் வாட்டுக்குள் நுழைந்தான்.

Page 197
390 வி. ஜீவகுமாரன்
அவன் முகம் பிரகாசமாகவே இருந்தது. "நீயா செய்தாய்?”
“என்னத்தை கேக்கிறாய்.” “இன்ஸ்பெக்டரைப் பற்றி றேடியோவிலை.” "பைத்தியம் மாதிரிக் கதையாதை. பிள்ளைக்கு பாலைக்
குடுப்பியாம். அதை விட்டுட்டு நீ சி.ஐ.டி. வேலை பார்க்க வெளிக்கிடுறியா.”
"அண்ணை, எனக்கு சகோதரம் தாய் தகப்பன் யாரும் இல்லை. உங்களைத்தான் சொந்த அண்ணை போலை நம்பியிருக்கிறன். சொல்லுங்கோ.” துரை அண்ணை தலை குனிந்தார். தவம் திரும்பி சண்டியனைப் பார்த்தாள். சண்டியன் கை விரலை பற்களுக்கிடையில் வைத்து கடித்துக் கொண்டு நின்றான். "அண்ணை இரண்டு கையும் எடுத்துக் கும்பிடுறன். இவ்வளவு காலமும் நடந்தது போதும். இனி எல்லாத் தையும் நிற்பாட்டுங்கோ. இந்தப் பிள்ளையை அநாதை ஆக்கிப் போடாதையுங்கோ.” கட்டிலில் இருந்தபடி தவம் அழத்தொடங்க மடியில் இருந்த பிள்ளை பக்கத்தில் நின்ற சாந்தினியையும் தாயையும் முழிசி முழிசிப் பார்த்தது. துரை அண்ணர் வாட்டில் இருந்து வெளியேறி காருக்குள் போய் உட்கார்ந்து கொண்டார்.

Festandaonrå FabriguUdår 391
இன்ஸ்பெக்டர் கொலை!
எல்லா மட்டத்திலும் ஒரு பதற்றத்தை உருவாக்கி இருந்தது. அது அரசியல் மட்டம் என்றாலும் சரி. பாதுகாப்பு மட்டம் என்றாலும் சரி. மற்றைய சண்டியர்கள் மட்டம் என்றாலும் சரி. பொதுசனங்கள் மட்டம் என்றாலும் சரி. சண்டியனாக இருக்கலாமோ என்ற சின்னக் கீறல் அனைவர் மட்டத்திலும் இருந்தாலும், எதற்காக இன்ஸ்பெக்டரை இவ்வளவு கோரமாக, கொலை செய்திருக்க வேண்டும் என்பதற்கான காரணங்களை யாராலும் ஊகிக்க முடியா திருந்தது. ஒரு விடயத்தில் மட்டும் காவல்துறை உறுதியாய் இருந்தது. யாழ்ப்பாணத்தில் ஆங்காங்கே திரியும் சண்டியர்களை அடக்குவது என்பதுதான். அதற்குப் பின்னால் அவர்களாவே இல்லாமல் போய்விடு வார்கள் என புதிய சேர்மன் திரு.கனகவேலு - சட்டத் தரணி ஆரூடம் சொன்னார்.
"நீங்கள்தானே அவன்களை வளர்க்கிறது. " புது இன்ஸ் பெக்டர்.
“தப்புத்தான். இனிமேலும் அது நடக்காது.” சேர்மன் உறுதியாய்ச் சொன்னார்.
"அதை மட்டும் செய்யுங்கோ. மிச்சம் எல்லாத்தையும் நாங்கள் பார்க்கிறம். நாங்கள் தூக்கிக்கொண்டு போக நீங்கள் வருவியள். இல்லாட்டி உங்கடை ரெலிபோன் வரும். பிணையிலை விடச் சொல்லி.”

Page 198
392 வி. விவகுமாரன்
"அது பிழைதான். நாங்கள் வளர்த்துவிட எங்கடை தோளிலை கை போடுற நிலைக்கு வந்திட்டான்கள்.” “அது போதும்.” அனைத்து பொலிஸ் ஸ்டேசனுக்கும் ஒரு சுற்றறிக்கை அனுப்பப்பட்டது.
எந்த சண்டியனை கைது செய்ய வேண்டி வந்தாலும் எவ். ஐ. ஆர். போடமுதல் என்கவுன்டரில் போடச் சொல்லி அந்த அறிக்கையில் இருந்தது. அது சாத்தியப்படாத இடத்து வேறு வழிகளைக் கையாளுமாறு அதில் நாசூக்காகச் சொல்லப்பட்டிருந்தது. அடுத்த கிழமையே அது சாவகச்சேரி சந்தையில் நிறை வேறியது.
பிரச்சனை மிகச் சின்னது தான். தரகுகாரனை சாவகச்சேரியான் அடித்து விட்டான். சமாளித்துப் போங்கோ என ஆட்கள் சொன்னதால் அடி வேண்டிய தரகர் தனக்குள் அழுது கொண்டு மெளனமாய் போய்விட்டாலும். இதைப் பார்த்துக்கொண்டிருந்த தரகனின் மகன் ரோஷத்தில் பொலிசுக்குப் போய் விட்டான்.
இதைத்தானே காவல்துறை எதிர்பார்த்திருந்தது. அடுத்த நாள் காலை றிபேக் கல்லூரி வாசலில் சாவகச் சேரியானின் பிணம் கிடந்தது. எந்த அடி காயமோ. சூட்டுக் காயங்களோ இருக்கவில்லை.
மரண விசாரணை அதிகாரி வரவழைக்கப்பட்டார்.

seraparš sairgudr 393
பாடசாலையின் விளையாட்டு மைதானத்திலேயே உடல் கீறப்பட்டது.
நஞ்சு உண்டு இறந்திருக்கின்றான் என மரண அறிக்கை சொன்னது.
பின்னேரம் நாலு மணிக்கே அவனை வெளியே விட்டு விட்டோம் என பொலிஸ் அறிக்கை சொன்னது.
அதற்குப் பின் நடந்தது என்ன? ஆளுக்காள் தலையைப் பிய்த்தார்கள். நஞ்சைக் குடித்தானா?நஞ்சு கொடுக்கப்பட்டதா? காவல்துறை உள்ளாற மகிழ்ந்தது. சாவகச்சேரியானின் மரணம் சண்டியர்கள் மட்டத்தில் பெரும் பரபரப்பையும் கலக்கத்தையும் உண்டு பண்ணியது. உடனே கூட்டம் கூட வேண்டும் என சங்கானையானுக்கும், ஆறுகால் மடத்தானுக்கும், கீரிமலையானுக்கும் விருப்பம் தெரிவிக்கப் பட்டது. இந்த முறை கொடிகாமத்தில் கூடுவது என முடிவெடுக்கப் Lull-gil.
ஆனால் துரை அண்ணை வரவில்லை. அது எல்லோருக்கும் பெரிய குறையாக இருந்தது - சண்டி யனுக்கு மட்டும் குற்ற உணர்வாக இருந்தது. சாவகச்சேரியானைக் கொன்றது யார் என்ற பிரச்சனை அங்கு இருக்கவில்லை. பதிலாக, கள்ளியங்காட்டானை யார் போட்டுத் தள்ளியது?. கள்ளியங்காட்டானின் துவக்குகள் எங்கே?.

Page 199
394 வி. ஜீவகுமாரன்
இன்ஸ்பெக்டரை யார் மரத்தில் தூக்கியது?. இதுகள்தான் சாவகச்சேரியானின் மரணத்தில் வந்து நிற்கிறது என ஒருவன் கருத்துச் சொல்ல அனைவரும் ஆமோதித்தனர். இதற்கு என்ன செய்யலாம் எனக் கேள்வி எழுந்தபொழுது, தன்னுடன் சேர்ந்து பதில் சொல்ல வேண்டிய நிலையில் இருந்த கீரிமலையானும், ஆறுகால்மடத்தானும் மற்றவர் களுடன் நிற்க, தான் தனித்துப் போனதாக சண்டியன் உணர்ந்தான்.
துரையண்ணையை மனம் தேடியது. ஆஸ்பத்திரியில் தவம் கதைத்ததிற்குப் பின் துரையண்ணர் வீட்டுப் பக்கம் வந்ததேயில்லை. சண்டியனாகத் தேடிப் போனபொழுது அவர் வீட்டில் இருக்கவில்லை. இப்பொழுது அனைவரும் கேட்கும் கேள்விக்கு தனியே பதில் சொல்லத் தடுமாறினான். "கொஞ்ச நாளைக்கு அடக்கி வாசிக்கலாம். அதுதான் புத்தி அனைவரும் 'கொல்’ எனச் சிரித்தார்கள். “அடிக்கு அடி. அவன்தான் வீரன்” - கூடியிருந்தவர்களில் ஒருவன். "அப்ப அதைச் செய்யுங்கோவன். சாவகச்சேரியானுக்கு நடந்ததைப் பார்த்தனிங்கள் தானே.” “அப்ப சேலைகட்டிக்கொண்டு சைக்கிளோட்டப் போட்டிக்குப் போக வேண்டியதுதான்.”
சண்டியனுக்கு ‘சுள்’ என்றது.
நேரே போய் கழுத்திலை ஒரு பிடி.

вићемтараић, баћrgud, 395
“வாய் இருக்கிறது எண்டதுக்காக எதுவும் கதைக்கலாம் எண்டால். இன்ஸ்பெக்டர் போலை நீயும் மரத்திலை தொங்க வேண்டியது தான்.”
சண்டியன் தன் நாக்கை தானே கடித்துக் கொண்டான். அத்தனை பேரும் விறைத்துப் போனார்கள். அதற்குப் பிறகு யாரும் ஏதும் கதைக்கவில்லை. மெதுமெதுவாக ஆளுக்காள் கலையத் தொடங்கினார்கள்.
தங்களைப் பொலிசிடம் இருந்து காப்பாற்ற என்ன செய்ய லாம் என கதைக்க வந்த இடத்து இப்ப சண்டியனுக்கும் பயப்பட வேண்டிய நிலையாக இருக்கிறதே என மனத்துக் குள் கறுவினார்கள்.
கூட்டம் அரைவாசியில் கலைந்ததினால் வெங்காயம் கட்டும் சீவரத்தினத்திடம் இரவலாய் வேண்டிய தட்டி வானை எடுத்துக்கொண்டு சீனியனும், மொட்டையனும் சண்டியனுடன் திரும்பி விட்டார்கள். ஆனால் மற்றவர்களோ, சண்டியனும் துரையும் உயிரோடை இருந்தால் எல்லோருக்கும் ஆபத்து என முடிவு கட்டி ങ്ങTi5ണ്.
"மோட்டுத்தனமாய் நடந்துவிட்டோமோ” என அவன் மனம் அவனையே பல முறை கேட்டுக் கொண்டது. நேராக துரை அண்ணையின் வீட்டை போனான். துரையண்ணையின் தமக்கைதான் வாசலுக்கு வந்தாள். "அக்கா, அண்ணை எங்கை?” “தெரியேல்லையடா தம்பி. மனம் சரியில்லை, சன்னதிக் கோயிலை போய் இருக்கப் போறன் எண்டு சொல்லிக்

Page 200
396 வி. ஜீவகுமாரன்
கொண்டு இருந்தது. இப்ப இரண்டு நாளாய் காணேல்லை. சன்னதிக்கும் ஆட்களை விட்டுப் பார்த்திட்டன். ஆளைக் காணேல்லை.”
சண்டியனுக்கும் எதுவுமே புரியவில்லை. தவம் சொன்ன ஒரு வார்த்தை அவரை அப்படிப் பாதித்ததா? "நான் நாளைக்கு போய் பார்க்கிறன்.” “பொறு தம்பி. நீ வந்தால் இந்தச் சாக்கை கொடுக்கச்
சொன்னது" என விறகுக் கும்பிகளுக்குள் இருந்து ஒரு பழைய சாக்கை எடுத்து வந்தாள்.
சண்டியன் அதனை வாங்கிப் பார்த்தான்.
அதனுள் ஆறு துவக்குகள். கண் கலங்கியது.
“சரி அக்கா வாறன்.” போய் மீண்டும் தட்டி வானில் ஏறினான்.
வீட்டை போனபொழுது தவம் வாசலிலே பிள்ளைக்கு பால் கொடுத்துக் கொண்டிருந்தாள்.
அவளைப் பார்க்க அவனுக்கு வெறுப்பாய் இருந்தது. ஆனாலும் எதுவும் கதைக்கவில்லை. தவத்திற்கு அவன் நடத்தை விசித்திரமாக இருந்தது.
அடுத்த நாள் கெதியாக விடிய வேண்டும் என்ற பிரார்த்த னையுடன் அவன் சாப்பிடாமலே படுக்கப் போய்விட்டான்.
"சாப்பிட்டுப் படுங்கோவன்.”
"சாப்பாட்டைக் கொண்டு போய் உன்ரை.”

சங்கானைச் சண்டியன் 397
நிற்பாட்டிக் கொண்டான். “ஏன் என்னிலை கோவப்படுறியள்.” “உன்னாலைதான் எல்லாம் வந்தது.” "நான் என்ன அப்பிடிச் செய்தனான்.”
"துரை அண்ணை மூண்டு நாளாய் வீட்டுக்கு வரேல் லையாம்.”
தவம் விக்கித்து நின்றாள். அதுக்கு மேல் ஏதும் அவள் கதைக்கவில்லை. அவனும் கதைக்கவில்லை.
மெளனம் இருவரையும் கொன்று கொண்டு இருந்தது.
(P56, நாள் சொல்லிக்கொண்ட மாதிரி சீனியனும், மொட்டையனும் விடியப்புறத்துடனேயே வந்து விட்டார்கள் - சன்னதிக்கு போய்ப் பார்ப்பதற்காக, மூவரும் ஒரே மோட்டார் சைக்கிளில் போவோம் என பேசிக் கொண்டார்கள். மோட்டார் சைக்கிளில் ஏறப்போன சண்டியன் என்ன நினைத்தானோ. முதன் நாள் இரவு வீட்டுப் பற்றைக்குள் வைத்த கைத்துப்பாக்கியை எடுத்து இடுப்பினுள் செருகிக் கொண்டான்.
சீனியனுக்கும் மொட்டையனுக்கும் ஒவ்வொன்றைக் கொடுத்தான்.

Page 201
398 வி. ஜீவகுமாரன்
சீனியனே மோட்டார் சைக்கிளை ஒட்டினான்.
"அண்ணை செல்லத்துரை அண்ணை கடை திறந்தி ருப்பார். ஒரு கோப்பி குடிச்சுவிட்டு போவம்.”
“sî...” சந்தையடிக்குக் கிட்டவாகப் போக சந்தையடி கலபுலப்
L-35.
“என்ன நடந்தது?”
சண்டியனைக் கண்டதும் எல்லோரும் மெளனமானார்கள். “ஏதோ நடந்து விட்டது” சண்டியனின் உள்மனம் சொன்னது. “சொல்லித் துலையுங்கோவன். என்ன நடந்தது."
தேத்தண்ணிக் கடைக்கார செல்லத் துரையண்ணைதான் குரலைச் செருமிக் கொண்டு,
“பொறுமையாய் கேள் தம்பி. எங்கடை துரை.” "துரை அண்ணைக்கு என்ன?”
"அவர் சன்னதிக்கு போறன் எண்டிட்டு அங்கை போகேல்லை. கீரிமலை மடத்திலை போய் இருந்திருக் கிறார். நேற்று ராத்திரி. அவரை தாரோ போட்டுட்டாங்கள் தம்பி.”
சண்டியன் விறைத்துப் போனான்.
எல்லோரும் அவன் கோபப்படுவான் எனப் பார்த்தார்கள்.
அழுது புரள்வான் எனப் பார்த்தார்கள். எதுவுமே செய்யவில்லை.
“சீனியன், மோட்டார் சைக்கிளை எடு.”

скимтератi srairpикћ. 399
மொட்டையனும் தொற்றி ஏறிக்கொள்ள. “கீரிமலைக்கு விடு” சண்டியன் கட்டளையிட்டான். கீரிமலையான் வீட்டுக்கு தூரத்தில் மோட்டார் சைக்கிளை விட்டுவிட்டு சண்டியன் மட்டும் மதிலால் பாய்ந்து உள்ளே போனான்.
கீரிமலையான் கட்டிலில் படுத்திருந்தான். தலைமாட்டில் இரண்டு சாராயப் போத்தல்கள் வேறு. ஒரு வெடி, குசினிக்குள் இருந்த அவன் மனைவி குழறிக்கொண்டு வருவதற்கு முதல் சண்டியன் போய் மோட்டார் சைக்கிளில் ஏறிக் கொண்டான். "ஆறுகால் மடத்தடிக்கு விடு.” நிலம் நன்கு வெளித்துவிட்டது. ஆறுகால் மடத்தான் வீட்டை போனபொழுது அவன் வாசலில் உட்கார்ந்திருந்தான். சண்டியனைக் கண்டபொழுது எழுந்து ஒட வெளிக்கிட்டான். ஒரு வெடிதான்.
பின் மண்டை சிதறியது.
“சீலை கட்டிக் கொண்டு சைக்கிள் ஒடுற கதை சொன்னவன் எந்த ஊர்?”
“கொடிகாமம் அண்ணை.” "அங்கை விடு.”
தேடி வந்தவன் கொடிகாமச் சந்தையில் ஒரு பெண் ணுடன் உரசிக் கொண்டு நின்றான்.

Page 202
400 வி. வேகுமாரன்
“அண்ணை கவனம் . சுற்றிவரச் சனங்கள்” - மொட்டையன் எச்சரித்தான். "ஆம்" எனத் தலையாட்டிவிட்டு அவனுக்கு மிகப்பக்கமாக சண்டியன் போனான்.
அவன் இப்பவும் பெண்ணின் உரசலில் சுகம் கண்டு கொண்டு நின்றான். சண்டியன் கைத்துப்பாக்கியால் இடுப்பை அழுத்திய போது மெதுவாகத் திரும்பிய போது விறைத்துப் போனான். "அண்ணை எனக்கு ஒண்டும் தெரி.”
“சத்தம் போடாதை. கச்சுசடிக்கு வா.” இடுப்பில் அழுத்தம் இருந்து கொண்டே இருந்தது.
"அண்ணை, உன்ரை ஊர் சேர்மன்தான் துரையண் ணையைப் போட்டால்தான் உன்னை விழுத்தலாம் எண்டு கீரிமலையானுக்கு ஐடியாவும் காசும் துவக்கும் கொடுத்த.” சொல்லி முடிக்க வெடி தீர்ந்தது. மூத்திரவாடை வீசிக்கொண்டிருந்த மண்ணில் போய்ச் சாய்ந்தான். மூவரும் மீண்டும் மோட்டார் சைக்கிளில் ஏறிக்கொண் டார்கள்.
“சீனியன். மொட்டையன். இரண்டு பேரும் வடிவாய் கேளுங்கோ. துரை அண்ணையின்ரை பிரேதமும் எங் கடை புது சேர்மனின்ரை பிரேதமும் சங்கானைச் சுட லைக்கு ஒண்டாய் போகவேனும்.”
இருவரும் தலையாட்டினார்கள்.

srebraparł Fahrguudår 401
அடுத்தடுத்த துப்பாக்கிச் சண்டைகளால் யாழ்ப்பாணம் கலங்கிப் போயிருந்தது. லயன்ஸ் கிளப்பிற்குப் பக்கத்தில் இருந்த பாரில் புதிய இன்ஸ்பெக்டருடன் சியர்ஸ் சொல்லிக்கொண்டே, “பார்த் தீங்களா. இன்ஸ்பெக்டர். உங்களுக்கு வேலையே இல்லாமல் போயிட்டுது. நாங்கள் தொடங்கி விட்டால். அவன்களே அடிபட்டுச் சாவான்கள். அதைத்தான் நான் செய்திருக்கிறன்.” சேர்மனுக்கு பெருமை தாங்கவில்லை. “நல்ல வக்கீல். அசல் மூளை.”
"சங்கானையின்ரை பெருமை சொல்ல ஒருத்தன் மட்டும் இருக்க வேண்டும் - அது நான் மட்டும்தான் - சண்டியன் அவன். இவன். என்று வளரவிட்டதே எங்கடை பிழை. வளர்த்ததே நாங்கள் தான். இதோடை எல்லாம் சரி.”
இன்ஸ்பெக்டரின் தோளில் கை போட்டுக்கொண்டு வெளியில் வந்தார். “கவனமாய் போங்கோ” என இன்ஸ்பெக்டர் சொல்லிவிட்டு தன் ஜீப்பில் ஏறிக்கொண்டார்.
“டோன்ற் வொறி”
இன்ஸ்பெக்டரின் ஜீப் நகர்ந்தது. ஜீப் மறைந்த அடுத்த கணம் சீனியன், மொட்டையன், சண்டியன் மூவரும் லயன்ஸ் கிளப்பின் மூன்று மூலை களிலும் இருந்து வெளியே வந்தார்கள். மூவரின் கைத்துப்பாக்கிகளும் சேர்மனை நீட்டியபடி. சேர்மனுக்கு குடித்தது எல்லாம் இறங்கியிருக்க வேண்டும்.
“என்ன சண்டியா. ஏதும் என்ரை உதவி தேவை."

Page 203
402 வி. விவகுமாரன்
“ஓமடா. தேவடியாள் பய மகனே.” மூவரின் துப்பாக்கிகளும் ஒரே கணத்தில் நெருப்பைக் கக்கின.
சேர்மன் திரு. கனகவேலு - சட்டத்தரணி நிலத்தில். சிறிது நேரத்தில் எறும்புகள் ஊரத் தொடங்கின.
UrTeSub 2
இந்தப் பத்து வருடங்களுக்குள் எத்தனையோ மாறிவிட்டது. தவமோகனுக்கும் பத்து வயதாகி விட்டது.
ஐந்தாம் வகுப்பு சோதனை இந்த வருடம் எடுக்க வேண்டும்.
சின்னப் பிள்ளை என்றாலும் காலை, மாலை என்று சண்டியனும், தவமும் எல்லா ரியூஷன்களுக்கும் அனுப்பிக் கொண்டு இருந்தார்கள். தனக்கு நேரம் கிடைக்கும்பொழுது தவமும் பக்கத்தில் இருக்க, தவமோகனை தனது மடியில் வைத்துக் கொண்டு கார் ஒட்டுவான் - தவமோகன் ஸ்றேரிங்கை பிடித்துக் கொண்டு இருப்பான். சிலவேளையில் தவத்திற்குத் தெரியாமல் தவமோகனின் வயிற்றில் கயிற்றைக் கட்டி கோயில் குளத்தில் நீந்த விடுவான்.

aparš sairgUdr 403
தவம் ஒருநாள் கண்டு பயத்தில் குழறியபின்பு நீச்சல் பழக்குவதற்காகவே கீரிமலைக் கேணிக்கு கூட்டிப் போனான் - தவமும் சேர்ந்து போனாள்.
தவமோகன் நடை பழகிய போது. றோட்டுக்கு அடிக்கடி ஒடுகிறான் என்ற பொழுதுதான் முதன் முதலாய் அவன் வீட்டைச் சுற்றி வேலி அடைக்கப்பட்டது. பழைய பெயின்றுக்குள்ளால் பாசி வருது. பிள்ளை தும்முது என்ற பொழுதுதான் வீட்டிற்கே வெள்ளை அடிக்கப்பட்டது. இப்படி ஒரு தந்தை இந்தச் சண்டியனுக்குள் இருக்கின் றானா என அவள் பிரமிப்பது உண்டு. துரையண்ணர் கனவு கண்டது போல இப்போ யாழ்ப் பாணம் முழுக்க சண்டியனின் கட்டுப்பாட்டில்தான். இப்பொழுதும் முன்புபோல் பிரதேசப் பிரிவிலும் பதினைந்து சண்டியர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள். ஆனால் அனைவரும் சண்டியனின் ஆட்கள். அதேவேளை அவர்களுக்கும் தெரியாமல் அவர்களைக் கண்காணிக்க. அந்த அந்த கிராமங்களைக் கண்காணிக்க. அங்கு நடைபெறும் ஊழல்களைக் கண்காணிக்க. சீனியனின் கட்டுப்பாட்டில் ஊர் பிரிவுகளுக்கு பதினைந்து பேராக மொத்தம் முப்பது பேர். இந்த முப்பது பேரையும் ஒருவருக்கு ஒருவர் தெரியாது - சீனியனுக்கும் சண்டியனுக்கும் மட்டும்தான் தெரியும். அதேமாதிரி பதினைந்து கிராமத்திலும் உள்ள கடைகள், வியாபார ஸ்தாபனங்களில் கப்பம் வசூலிப்பது முருகனின் பொறுப்பில் இருந்தது. முதல் ஐந்து வருடம் அது

Page 204
404 வி. ஜீவகுமாரன்
மொட்டையனின் பொறுப்பில்தான் இருந்தது. ஆனால் ஐந்து வருடத்திற்கு முன்பு சண்டியனே மொட்டையனைப் போட்டுத் தள்ள வேண்டிய ஒரு துர்ப்பாக்கிய நிகழ்ச்சி.
அதன்பின் அந்த இடத்துக்கு மொட்டையனுக்கு உதவியாக முருகன் நியமிக்கப்பட்டான்.
முருகன் சரி, அவனுக்குக் கீழே இருந்த வரி வசூலிப் பவர்கள் சரி சண்டியனுக்குத் துரோகம் செய்து விடாமல் அவர்களை சீனியனின் ஆட்களே கண்காணித்துக் கொண்டார்கள்.
ஒவ்வோர் கச்சதீவுத் திருவிழாக்களின்பொழுதும் இந்தி யாவில் இருந்து வரும் துணி வியாபாரிகளிடம் இருந்து களவாக வேண்டி வரும் நாட்டு வெடிகுண்டு. எறி வ்ெடிகள். கைத்துப்பாக்கிகள். அதற்கான ரவைகள் அனைத்தும் சண்டியனின் வசம் இருந்தன.
இப்பொழுது எல்லாம் ஒரு ரவைக்குக்கூட அவசியம் இல்லாமல் ஒழுங்காக நடைபெற்றுக் கொண்டு இருந்தன.
அதையும் தாண்டி எங்காவது ஒழுங்கீனம் நடந்தால் அவர் கள் காணாமல் போய்விடுவார்கள் - அவ்வளவு தான்.
இந்தப் பயம் அனைவரின் காலடிக்கும் கீழே இருந்ததால் அனைத்தும் ஒழுங்காக நடந்தது. இலஞ்சம் இருக்கவில்லை. அதிகார மிரட்டல்கள் இருக்க வில்லை. ஊழல் இருக்கவில்லை. கற்பழிப்பு, கொலை, கொள்ளை இருக்கவில்லை. கிராமக்கோட்டுக்கோ. யாழ்ப்பாணக் கோட்டுக்கோ ஒரு வழக்குப் போவதாயின் அது சண்டியனின் கோட்டைத் தாண்டித்தான் போக வேண்டியிருந்ததால் அங்கெல்லாம் வழக்குகள் குறைந்து விட்டன.

srialtandari srairguidir 405
பட்டினசபைக்கு ஒழுங்காக லைற் பில் கட்டவில்லை, மாநகர சபைக்கு வீட்டு வரி ஒழுங்காகக் கட்டவில்லை என்ற வழக்குகள் மட்டும் கிராமக் கோட்டுகளிலும், யாழ்ப்பாணக் கோட்டிலும் நடந்து கொண்டிருந்தன. கிராமசபையிலோ, பட்டினசபையிலோ, நகரசபையிலோ, மாநகரசபையிலோ பிரேரிக்கப்பட்ட அனைத்துத் தீர்மானங்களும் அனைத்து அங்கத்தினரின் ஏகோபித்த கைத்தூக்கலுடன் நிறைவேறின. அங்கு எதிர்க்கட்சி என்ற ஒன்று இருக்கவில்லை அனைத்தும் ஆளும் கட்சிதான். காரணம், அனைவரும் சண்டியன் நிறுத்திய ஆட்களாய் இருந்தார்கள். அரசாங்கச் சம்பளமும், அரச வானகங்களின் வசதிகளும், மக்களின் கை தட்டல்களும், மாலைகளும் அவர்களுக்குக் கிடைத்துக்கொண்டு இருந்தாலும் பின்னால் சண்டிய னின் கையில்தான் அனைத்து வெள்ளை வேட்டிகளின் முடிச்சுகளும் இருந்தன. சிலருக்கு கொஞ்சம் வேதனைதான். மனங்களுக்குள் கறுவல்தான்.
ஆனாலும் உயிர்ப்பயம்! அடக்கியே வாசித்து, ஆளும் கட்சியின் அரசியல் நீரோட் டத்தில் கலக்கின்றோம் என்று ஆளுக்காள் சொல்லிக் கொண்டார்கள்.
ஆனாலும் மனதுள் ஒரு நப்பாசை. சண்டியன் ஒரு நாள் சாக மாட்டானோ என்று.
இந்தப் பயம் பத்து வருடத்திற்கு முதல் தொட்ட பயம்!

Page 205
406 வி. ஜீவகுமாரன்
சங்கானைச் சேர்மனை யாழ்ப்பாண லயன்ஸ் கிளப்பில் வைத்து சண்டியன், சீனியன், மொட்டையன் மூவரும் சுற்றி நின்று தங்கள் துப்பாக்கிகளில் இருந்த குண்டுகள் தீரும் வரை தீட்டிய வேட்டுக்கள் கொடுத்த பயம். அதைவிடவும் முதன்நாள் இரவு கீரிமலையானுக்கும், ஆறுகால்மடத்தானுக்கும், கொடிகாமத்தானுக்கும் வைத்த வெடிகள் கொடுத்த பயம். அதே பயத்தில் துரையண்ணையின் கடைசி ஊர்வலத் திற்கு முழு ஊரே திரண்டது. துரையண்ணைக்கு கலியாணமோ. பிள்ளை குட்டியோ இல்லாததால் சண்டியனே முன்னால் கொள்ளிக்குடத் துடன் போனான். ஊர்வலத்திற்குப் பின்னால் அவர் வளர்த்த நாய் சுடலை மட்டும் போனதாம் - பின் வீட்டுக்கு வரவே இல்லையாம் என இப்பொழுதும் சனங்கள் கதைப்பதுண்டு.
அவரின் காரியங்கள் மத்தியானம் அளவில் சுடலையில் முடிந்த பின்புதான் சேர்மனின் சவ ஊர்வலம் பின்னேரம் போல் போனது.
அதுவும் சந்தையடியால் போகாமல் ஊரைச்சுற்றிப் போனது.
முன்னே பொலிஸ் ஜீப் - பின்னால் சேர்மனின் நெருங்கிய உறவினர்கள்.
அவருடன் அரசியல் தொடர்பு வைத்திருந்த எந்த வெள்ளை வேட்டிக்காரரும் இறுதி ஊர்வலத்தில் கலந்துகொள்ள வில்லை - சிலர் முதன்நாள் வந்து மாலை சாத்திவிட்டுப் போயிருந்தார்களாம்.

soraoară sfairgudr 407
பயம்!
மரணபயம்!!
சண்டியனைப் பகைக்க விரும்பாத மரணபயம்!!!
இந்த மரண அல்லோலகல்லோலங்கள் முடிந்தபொழுது சேர்மனின் இடத்தை நிரப்புவதற்காக அரசவர்த்தமானியில் வேட்பாளர்களை சங்கானை ஏ. ஜி. ஏ. ஒவ்வீசில் பதியு மாறு கேட்கப்பட்டிருந்தது. ஆளுக்காள் பதவி நாற்காலியில் இருக்க ஆசைப் பட்டாலும் நடந்து முடிந்த அனர்த்தங்களின் பயம் இன்னும் முற்றாய்ப் போய்விடவில்லை. சண்டியன் மதியம் சாப்பிட்டுவிட்டு, தவழத் தொடங்கிய தன் மகனுடன் கொஞ்ச நேரம் விளையாடிக்கொண்டு இருந்துவிட்டு, வீட்டுக்குள் அதிக வெக்கை என்பதால் வீட்டுக்கு வெளியே சடைத்திருந்த வேப்ப மரத்தின் கீழ் சாய்மணைக் கதிரையைக் கொண்டு வந்து போட்டுவிட்டு நேராக கால்களை நீட்டிக் கொண்டு படுத்திருந்தான்.
“வீட்டிலை இருக்கிறதே கொஞ்ச நேரம். இராத்திரியிலை வர அவன் படுத்திடுவான். கொஞ்ச நேரம் கூட விளை யாடினால் என்ன குறைஞ்சே போவியள்.” என்றவாறு மகனைக் கொண்டு வந்து நீட்டிப்படுத்திருக்கும் இருகால் களுக்கிடையில் தொய்வாக இருந்த சாரத்தினுள் தவம் இருத்தினாள்.
இது மகனுக்கும் மகிழ்ச்சியாக இருந்தது.

Page 206
408 வி. ஜீவகுமாரன்
பெரிய ஏணைச் சீலையில் எழுந்து இருப்பது போல. மகிழ்ச்சியில் அவன் துள்ளிக் கொண்டு இருந்தான்.
பா. பா. பா.” ஆறுமாதத்தில் இதுதான் அவனின் மொழி. எட்டவாக வாசலில் இருந்து சுளகில் அரிசியில் கற்களைப் பொறுக்கியபடி கணவனையும் மகனையும் பார்த்து சந்தோஷப்பட்டுக் கொண்டு இருந்தாள் தவம். ஏணை விளையாட்டு கெர்ஞ்சம் அலுத்துப் போக அப்படியே மடியில் இருந்து தகப்பனுக்கு மேலே தவழ்ந்து போய் வயிற்றில் இருந்து கொண்டு சண்டியனின் நெஞ்சு மயிரைப் பிடுங்கத் தொடங்கினான்.
“டே. நோகுதடா.”
சண்டியன் நெளிந்தான். அவன் நெளிவது குழந்தைக்கு வேடிக்கையாய் இருந்தது. கீ. கி. கீ. என தவத்தையும் சண்டியனையும் பார்த்தபடி மேலும் சண்டியனின் நெஞ்சு மயிரைப் பிடுங்கினான். “தவம் இவனைத் தூக்கடி. நோகுது. படுக்க விடுறான் இல்லை.” “வேணும். பெரிய சண்டியன். அவன் வளர்ந்துதான் உங்களை அடக்குவான் பாருங்கோ.” “ஓம். ஓம். அவன் அடக்கட்டும். இப்ப தூக்கடி.” சண்டியன் பாவம். கொஞ்ச நேரம் படுக்கட்டும் என நினைத்தபடி, "வாடா. நீதான் இவருக்கு பாடம் படிப்பிக்க வேணும்" என்று சொல்லிக் கொண்டு தவம் வந்து அவனைத்

FøTampaorė Fairpuudír 409
தூக்கிக் கொண்டு போய் தனக்குக் கிட்டவாக வைத்து கொஞ்சம் அரிசியை எடுத்து சீமெந்து தரையில் போட்டாள். இப்பொழுது அவன் அதனுடன் விளையாடத் தொடங்கி விட்டான்.
அதிக நாட்களுக்குப் பின்பு தவம் ஆக்கிய இறால் போட்ட முருங்கையிலைச் சரக்குக் கஞ்சி. வேப்ப மரத்து நிழல். குளிர்ந்த காற்று. குழந்தை மார்பு மயிரை இழுத்து விளையாடிய இனிமையான சுகம். இப்பவும் அவன் சிரித்தபொழுது வாயில் இருந்து வடிந்து அவன் நெஞ்சில் இன்னமும் காயாமல் இருக்கும் வாநீர். அவன் சிரிப் பொலி. அதனிடையே கண்ணயர அது ஒரு பெரிய சுகானுபவமாக இருந்தது.
திண்ணையில் நடராசா வாத்தியார் போல் கிடக்கு. தவத்துடன் இருந்து கதைத்துக் கொண்டு இருக்கிறார். "துரையண்ணை என்னைத்தானாம் எலக்ஷனில் நிற்கட்டாம்." "துரை அண்ணை எங்கை.” "நீ பேசிப்போட்டாய் எண்டு வளவுக்கை வர மாட்டாராம்.”
“அவ்வளவு ரோஷமோ அவருக்கு. தமையனை தங்கச்சி பேசக் கூடாதே." "அப்ப போய்க் கூப்பிடன். நீ கூப்பிட்டால் அந்த ஆள்
99.
வரும.
தவம் எழுந்து தன் இரண்டு கைகளாலும் மயிரை முடிந்த படிறோட்டடிக்கு போகின்றாள்
தவத்திற்கு எப்பொழுது கை வளர்ந்தது. புரியவில்லை!

Page 207
410 வி. ஜீவகுமாரன்
துரை அண்ணை மதில் கரையுடன் அழுதுகொண்டு நிற்கிறார். “என்ன அண்ணை உள்ளுக்கை வராமல் இதிலை நிண்டு அழுது கொண்டு.”
“எனக்கு உள்ளுக்கை வர பயமாய்க் கிடக்கு.” “ஏன் அண்ணை?”
“உன்ரை பொடியன் என்னைச் சுட்டாலும் சுட்டுப் போடுவான்.”
தவம் கலகல எனச் சிரித்தாள்.
அரிசியுடன் விளையாடிக் கொண்டிருந்த குழந்தை கையில் துவக்குடன் துரையண்ணையை நோக்கி வந்து கொண்டு இருந்தான். “டே. விளையாட உனக்கு வேற ஒண்டும் கிடைக் கேல்லையா. கொப்பற்றை துவக்குதானோ கிடைச்சது.”
சொல்லி முடிக்க முதல் ஒன்றன் பின் ஒன்றாக ஆறு வெடிகள்.
துரையண்ணை வேப்பமரத்தடியில் வந்து விழுந்தார். சண்டியன் திகைத்துப் போய் எழும்பினான். உடம்பு எல்லாம் வியர்த்திருந்தது.
நெஞ்சு வேமாக அடித்தது. குழந்தை அரிசியுடன் விளையாடிக்கொண்டு இருந்தது.
தவம் இப்பொழுது கொஞ்சம் அயரத் தொடங்கிய மாதிரி இருந்தது.

вићемтaранi orairgueir 411
கண்ட கனவின் பயம் மாற கிணற்றடியில் போய் நன்கு முகம் காலைக் கழுவிவிட்டு மகனை மீண்டும் தூக்கிக் கொண்டு வந்து தன் நெஞ்சின் மேல் வைத்து விளையாடத் தொடங்கினான்.
அது சந்தோஷமாக இருந்தாலும் கனவின் பயங்கரத்தில் இருந்து விடுபடக் கொஞ்சம் கஷ்டமாய் இருந்தது.
வாசலில் சைக்கிள் மணி அடித்துக் கேட்டது. திரும்பிப் பார்த்தான்.
கேற்றடியில் நடராசா வாத்தியார் நின்றிருந்தார். கனவில் கண்ட அதே நடராசா வாத்தியார். “தம்பி வீட்டுக்கை வரலாமோ."
“வாங்கோ. வாத்தியார். தவம் எழும்பு, வாத்தியார் வாறார்.”
"தம்பியிட்டை ஒரு அலுவலாய் வந்தனான்” என்றபடி கனவில் அவர் வந்து இருந்த அதே திண்ணையில் உட்காந்திருந்தார்.
சண்டியனுக்கு வியப்பாய் இருந்தது. "சொல்லுங்கோ வாத்தியார். என்ன விசேஷம்?”
“இல்லைத் தம்பி. நாங்கள் குமர்ப்பிள்ளையை வைச்சு இருக்கிற நாங்கள்.”
“சொல்லுங்கோ.”
“உங்களோடை பின்வளவிலை இருக்கிற சின்னராசா. சின்னக்கிளி அக்கா நல்ல மாதிரி.”

Page 208
412 வி. சிவகுமாரன்
நடராசா வாத்தியார் கொஞ்சம் பயப்பட்டு சொல்லுற மாதிரி இருந்தது. “ஓம் நல்ல மாதிரித்தான். அதுக்கென்ன?”
“அவையின்ரை மகள் சாந்தினியோடைதான் என்ரை பிள்ளையும் படிக்குது. அவையின்ரை மகன்காரன் பள்ளிக்கூடம் போற வழி தெரு எல்லாம் பிள்ளைக்கு பிரச்சனை குடுக்கிறான். பிள்ளைக்கு என்ரை தங்கச்சின்ரை மகனை சின்னனிலேயே பேசி வைச்சிருக்கு. என்ரை மகன் கேட்கப் போக, உன்ரை தங்கச்சியோடை ஒரு நாளாவது படுத்துப் போட்டுத்தான் விடுவன் என்னு றானாம். எங்களை ஒண்டும் செய்யேலாது. எங்களுக்கு சண்டியன் மாமா இருக்கிறார் எண்டு சொன்னவனாம். அதுதான் தம்பி உங்களைப் பார்த்து.” சண்டியனுக்கு கண்கள் இருண்டு சிவந்து கொண்டு வந்தன. “மன்னிச்சுக் கொள்ளுங்கோ. தாய் தேப்பன் எங்களோடை நல்ல மாதிரித் தான். அதுக்காக. பொறுங்கோ. தவம். போய் சின்னக்கிளியக்காவையும் சின்னராசா அண்ணை யையும் பொடிப்பிள்ளையையும் கூட்டிக்கொண்டு வா."
கொஞ்ச நேரத்திலை மூவரும் வந்தார்கள். நடராசா வாத்தியாரைப் பார்த்ததும் பையன் கொஞ்சம் பயந்து விட்டான்.
“எப்ப வாத்தியாரிட்டை பெட்டையோடை படுக்கிற யோசினை. முதலே சொன்னால் பாதுகாப்பு தருவோ மல்ல.”
சின்னக்கிளியக்காவுக்கும் சின்னராசா அண்ணைக்கும்
விளங்கிவிட்டது.

sysseorandari saliburgudir 413
“தம்பி நீங்கள் இவனைக் கொண்டாலும் நாங்கள் கேட்க மாட்டம்” சின்னக்கிளியக்கா தைரியமாகச் சொன்னா.
“கேட்டியா. உன்ரை அப்பா அம்மா எங்களுக்கு பிள்ளைப் பெத்து பார்த்து. இப்பவும் அவனுக்கு எண்ணை வைச்சு. உடம்பு பிடிச்சு. குளிக்க வார்த்து சாம்பிராணி போடுறதுக்கு. உனக்கு கூலி வேணுமா.”
“இல்லை அண்ணை மன்னிச்சுக் கொள்ளுங்கோ.”
“உன்னை இண்டைக்கு கொல்லாமல் விடுறனே. அது தான் கூலி. இனிமேல் என்ரை பேரை நீ எங்கையாவது சொன்னாலும் கொப்பர் கொம்மாக்கு உன்ரை தங்கச்சி தான் கொள்ளி வைக்க வேண்டி வரும்.”
அத்துடன் அவன் ஓடிவிட்டான். சின்னக்கிளி அக்காவின் பக்கம் திரும்பி, “மன்னிச்சுக் கொள்ளுங்கோ அக்கா. அவனை வெருட்ட வேறை வழி தெரியேல்லை” என்றான்.
"சும்மா கிட தம்பி. உன்னை எங்களுக்குத் தெரியாதே. உன்னை என்ரை மூத்த பிள்ளை மாதிரித்தான் நாங்கள் வைச்சிருக்கிறம். அவனை உதைக்காமல் விட்டியே. ராத்திரி கொட்டிக்க வரத்தானே வேணும். அப்ப நாங்கள் பார்த்துக் கொள்ளுறம்.”
“தம்பி. வீணாய் நான் வந்து உங்களைக் குழப்பிப் போட்டனோ தெரியாது. ஆனால் இந்த உதவியை ஆயுளுக்கும் மறக்க மாட்டன்.”
"வாத்தியார் எனக்கு ஒரு உதவி நீங்கள் செய்ய வேணும்.” "சொல்லுங்கோ. தம்பி.”

Page 209
414 வி. ஜீவகுமாரன்
"நீங்கள் செத்த சேர்மனின்ரை இடத்துக்கு தேர்தலிலை நிற்க வேணும்.” எல்லோரும் வியப்புடன் பார்த்தார்கள்-நடராசா வாத்தியார் 9 L.
“தம்பி. அது ஒரு சுத்துமாத்து உலகம். அதிலை நேர்மை யாய் தாக்குப் பிடிக்க முடியாது.”
“இல்லை வாத்தியார். இனி அந்த சுத்துமாத்துகள் இல் லாமல் இருக்கத்தான் உங்களை நிற்கச் சொல்லுறன் - உங்களுக்குப் பின்னால் நான் நிற்பன் - கடவுளாய்த்தான் உங்களை இண்டைக்கு இஞ்சை அனுப்பினது.”
அவன் கண் முன்னே துரை அண்ணை வந்து போனார்.
வாத்தியார் ஒம் எனத் தலையாட்டினார்.
விரித்தியார் சேர்மன் நின்ற இடத்துக்கு நிற்கிறார் என்ற பொழுது, “உவரோ” என ஏளனமாகக் கேட்ட வாய்கள், "சண்டியனாம் பின்னாலே நிற்கிறான்” என்று அறிந்த பொழுது அடைத்துக் கொண்டன.
யாரும் அவரை எதிர்த்து வேட்பு மனு தாக்கல் செய்ய வில்லை.
நடராசா வாத்தியார் ஏகமனதாகத் தெரிவு செய்யப்பட்டார் என அறிவிக்கப்பட்டது.
இப்படி நடந்தது பல பழைய வெள்ளை வேட்டிகளுக்கு வயிற்றைக் கலக்கியது - அடுத்த தேர்தலுக்கு அவனின் ஆட்களே ஏழு தொகுதிகளிலும் நிற்கப் போகின்றார்கள் என்று.

saisoaradorš Fahrguér 415
எதிர்பார்த்த மாதிரி அதுவும் நடந்தது. அனைத்துத் தொகுதிகளிலும் அவன் சுட்டுவிரல் நீட்டிய வேட்பாளர்கள். துணிவுடன் எதிர்த்துக் கேட்டவர்களிடம் எந்த வன்முறையையும் அவன் பாவிக்கவில்லை - ஆனால் எதிர்த்தவர்கள் கட்டுக்காசை இழந்தார்கள். சங்கானையின் ஏழு வட்டாரங்களிலும் நடந்த இந்த மாற்றம் யாழ்ப்பாணத்தில் இருந்த அனைத்துக் கிராமங் களிலும், நகரங்களிலும் நிகழ்ந்தது. எல்லோருக்கும் பின்னால் அந்த அந்த இடங்களில் நின்ற சண்டியர்கள் நின்றார்கள். அவர்களுக்குப் பின்னால் சங்கானைச் சண்டியன் நின்றான்.
துரை அண்ணை கண்ட கனவு.
“யாழ்ப்பாணம் முழுவதிற்கும் ஒரு சண்டியன் இருக்க வேண்டும். அது நீயாக இருக்க வேண்டும்.” இப்பொழுதும் அவன் காதில் ஒலித்துக் கொண்டிருந்தது. “என்ன உங்கடை யாழ்ப்பாணத்திலை பாதாள அரசாங்கமா நடக்குது.” சிங்கள அரசியல்வாதிகள் தமிழ் அரசியல்வாதிகளை நையாண்டி செய்தபொழுது அவர்கள் ஏதும் செய்ய முடியாது மெளனமாய் இருந்தார்கள். அவர்கள் எம்.பி.க்கள் அது இது என்று இருந்தாலும் முழு நிர்வாகத்தையும் கிராம, பட்டின, நகர, மாகர சபைகள் நடாத்திக் கொண்டு செல்வதைக் காண அவர்களுக்கும் பொறாமையாய் இருந்தது.

Page 210
416 வி. ஜீவகுமாரன்
அவர்களிடம் பதவி இருந்தது. ஆனால் அதன் பவுசைக் காட்ட முடியாது இருந்தது பெரும் வேதனையாக இருந்தது. வட்டுக்கோட்டை எம்.பி.யின் ஆளுகைக்கு உட்பட்ட சங்கா னையின் சேர்மன் நடராசா வாத்தியாரை ஒருநாள் எம்.பி. கேட்டாராம். "என்ன உங்களுக்கு எம்.பி. சங்கானை யானோ” என்று. “இல்லை ஐயா. ஆனால் நீங்கள் இப்பிடி என்னிடம் கேட்டனிங்கள் என்று நான் அவருக்குச் சொல்லமாட்டன்.” அன்று எம்.பி கொஞ்சம் அளவுக்கு அதிகமாகவே தண்ணி போட்டிருந்தார். "ஏன், சொன்னால் கிழிச்சுப் போடுவனோ!” “இல்லை ஐயா. வட்டுக்கோட்டை தொகுதிக்கும் மறு எலக்ஷன் வைக்க வேண்டி வந்திடும்.” அத்துடன் அவர் காலையில் இருந்து கொஞ்சம் கொஞ்சமாய் அடித்தது அனைத்தும் இறங்கி விட்டது.
இந்தக் கதை அரசல் புரசலாக சண்டியனுக்கும் அவன் தோழர்களுக்கும் எட்டியது.
அடுத்த பாராளுமன்றத் தேர்தலுக்கு சண்டியனே எல்லாத் தொகுதிகளிலும் ஆட்களை நிறுத்த வேண்டும் என்று பிடிவாதமாக நின்றார்கள். ஆனால் சண்டியன் மறுத்து விட்டான். ஆனால் எம்.பி.க்கள் மட்டத்தில் ஒரு பயம் தொட்டது சண்டியன் தேர்தலில் ஆட்களை நிறுத்தாது இருக்க என்ன செய்ய வேண்டும் என்று.

Marš sargudr 417
ஆளுக்காள் தங்கள் கறுத்த கோட்டை மாட்டிக்கொண்டு ஆடு புலி வெட்டி யோசித்துப் பார்த்தார்கள்.
யாழ்ப்பாணத்துள் ஏதோ ஒரு பெரிய கட்டடத்தை, கோயிலை, கடைகளை எரித்து பயங்கரவாத நடவடிக் கையைப் பாயவிட்டால் அரசாங்கம் தேர்தல் நடத்து வதை நிறுத்தி வைக்கும் - நாங்களும் எங்கள் பதவிக் காலத்தை நீட்டிச் செல்லலாம் என்று. இதை நிறைவேற்றுவதற்காக பெருமளவில் பெரிய தொகைகள், பெரிய இடங்களில் கை மாறவும் தொடங்கியது. சீனியனுக்கு வேண்டிய வங்கி ஊழியர் ஒருவர் இந்த பண மாற்றம் பற்றித் தகவல் சொல்ல சண்டியன் உஷாரானான். சம்மந்தப்பட்ட எம்.பி.க்கள் அனைவரும் ஒன்றாகச் சாப்பிட்டுக் கொண்டிருக்கும்போது நேரடியாக அவர்கள் வீட்டுக்குப் போய் இறங்கினான். ஒரு பக்கத்தில் சீனியன். மறு பக்கத்தில் மொட்டையன். "நீங்கள் நினைக்கிற மாதிரி என்ரை ஆட்கள் யாரும் தேர்தலிலை நிற்கேல்லை. ஆனால் உங்களுக்கு பதவி வேண்டும் எண்டதுக்காக ஏதாவது கோயில், கடைகள், வாசிகசாலைகள் என்று ஏதாவது செய்ய வெளிக்கிட்டால் உங்களிலை ஒருத்தர் கூட உயிரோடை இருக்க மாட்டீங்கள். சனங்களின்ரை பொதுச் சொத்துகளுக்கு ஏதாவது நடந்தால் உங்களுக்கு என்று எந்த சொத்தும் இருக்காது.” இரண்டு நிமிட உரையாடல் - அவ்வளவுதான். மூவரும் போய்விட்டார்கள். "உவன் செத்தால்தான் எங்களுக்கு நிம்மதி.”
“நல்லாய் வளர விட்டிட்டம்”

Page 211
418 do assugar
அன்று இரவு முழுக்க. குடித்ததின் வேகம் இறங்கும் வரை பேசிக் கொண்டே இருந்தார்கள்.
வமோகனுக்கு ஐந்து வயதாகி விட்டது. பக்கத்து வீட்டு சின்னக்கிளி அக்காவின் மகள் சாந்தினிதான் அவனின் மிக நெருங்கிய தோழி. அவளுக்கு இருபத்தியொரு வயதா னாலும் அவளுக்கும் நெருங்கிய தோழன் அவன்தான். சாந்தினி கிழமையின் ஐந்து நாட்களும் நெசவு வேலைக்குப் போகும் நேரம் தவிர, காலையில் தான் வேலைக்குப் போகும்பொழுது பாலர் பாடசாலைக்குக் கூட்டிச் செல் வது. பின் வேலையால் இரண்டு மணிக்குத் திரும்பி வரும்பொழுது மீண்டும் போய் கூட்டி வருவது. பின் மத்தியானச் சாப்பாடு தீத்துவது. மாலையில் அவனுடன் விளையாடுவது. எல்லாம் அவனுக்கு அவள்தான். சின்னக்கிளியக்கா பகிடியாகவே சொல்லுவா. "உனக்கு மாப்பிள்ளைத் தோழன் உவன்தான்டி. கொண்ணன்ட்டை உயரம் உனக்கு ஒத்து வராது.” “என்ரை பிள்ளைக்கு இரண்டு விரலுக்கும் மோதிரம் போட்டால்தான் அவனை அனுப்புவன்” என தவமும் பதிலுக்குச் சொல்ல எல்லோரும் சிரிப்பார்கள்.
தவமோகனுக்கு எதுவும் விளங்காது. தானும் ஏதாவது சொல்லவேண்டும் என்றுவிட்டு, “எனக்கும் சாந்தினிக்கும் நாளைக்கு கலியாணம்” என்றுவிட்டு ஓடிப்போய் அவள் மடியில் இருப்பான். அவளும் அவனைக் கட்டிக்கொண்டு, அவனின் கன்னத் தோடை கன்னம் வைத்துக்கொண்டு ஏதாவது பாட்டுப் பாடுவாள்.

spraporš raigudr 419
அவனும் அப்பிடியே அவள் மடியில் தூங்கிப் போவான். சனி, ஞாயிறு பின்னேரங்களில் கிழமைக் கணக்குகள் பார்க்க சண்டியனிடம் சீனியனும், மொட்டையனும் வரும் பொழுது தவமோகனுடன் வீட்டுக்கு வெளியில் நின்று பந்தடித்து விளையாடுவார்கள். தவமோகன் சாந்தினியைக் கண்டால் விடமாட்டான். அவளையும் விளையாட வரும்படி வற்புறுத்துவான். அவளுக்கு ஆண்களுடன் விளையாடக் கூச்சமாய் இருந் தாலும் தவமோகனின் வற்புறுத்தலை அவளால் மறுக்க முடியாது - அப்படி மறுத்தால் அவன் மணலில் விழுந்து புரண்டு அழுவான். பின் அவள்தான் அவனைத் தோய வார்த்து பேன் சீப்பால் மண்ணை வார வேண்டும்.
சீனியனுக்கு கலியாணம் ஆகி இரண்டு வயதில் ஒரு பெண் குழந்தை இருந்தது. ஆனால் மொட்டையனுக்கு இருபத்தி யெட்டு வயது. கலியாணம் ஆகவில்லை. அதுதான் அவளுக்கு கூச்சம். அவர்கள் விளையாடும் பொழுது தவமோ. சண்டியனோ. இல்லை இருவருமோ வீட்டுத் திண்ணையில் இருந்து பார்த்து ரசித்துக் கொண்டு இருப்பார்கள். சில வேளையில் சண்டியனும் இறங்கி பந்தை இரண்டு உதை உதைப்பான். விளையாடி முடிய எல்லோரும் ஒன்றாய் இருந்து இரவு சாப்பிடுவார்கள். சாந்தினி மட்டும் தனது வீட்டைப் போகின்றேன் எனப் போய் விடுவாள். ஒருநாள் இரவு எல்லோரும் போனபிறகு வாசற்படியில்
இருந்து கதைத்துக்கொண்டு இருக்கும் பொழுது, “உங் கடை மொட்டையன் சாந்தினியைப் பார்க்கிற பார்வை சரி

Page 212
420 வி. ஜீவகுமாரன்
யில்லை. சின்னக்கிளியக்காவும் சின்னராசா அண்ணை யும் எங்களை நம்பித்தான் அவளை இங்கை அனுப் புறவை. பிறகு ஏதும் பிரச்சனை எண்டால் எங்களுக்குத் தான் கூடாது!” தவத்தின் குரலில் கொஞ்சம் எச்சரிப்புத் தொனி இருந்ததை சண்டியன் அவதானித்தான்.
"நீ சொல்லுறது சரிதான். ஆனால் எதுவுமே இல்லாமல் இருக்க நாங்களாய் போய் அதுகளைக் கேட்க. இல்லா மல் இருந்த ஒன்றை அதுகளாகத் தொடங்கினால் அதுவும் எங்களுக்குக் கூடாது. மற்றும்படி நீ சொல்லுறமாதிரி அது களுக்கை ஏதும் இருந்தாலும் எனக்குப் பிரச்சனை இல்லை. மொட்டையன் என்னோடை எட்டு வருஷமாய் இருக்கிறான். இதுவரை அவன் எனக்கு நேர்மையாய் இருந்திருக்கிறான்.” "சின்னக்கிளியக்கா ஆட்களின்ரை மனத்திலை என்ன இருக்குது எண்டு தெரியாதே. அவையின்ரை பொடியன் நடராசா வாத்தியாற்றை பெட்டையை விரும்புது எண்ட பொழுது நீங்கள் அதைத் தடுத்தியள். இப்ப மொட்டையன் உங்கடை ஆள் எண்டவுடனை சேர்ந்து நிக்கிறியள் என்று அல்லோ ஊர் சொல்லும்.”
முகட்டுவளையில் இருந்து ஒரு பல்லி சொல்லும் சத்தம் கேட்டது.
“இது வேறை. நடராசா வாத்தியார் தானே வந்து முறையிட்டதாலைதான் நான் தலையிட்டனான். அப்பவும் எனக்கு மனத்துக்குள்ளை ஒரு குறை. நானே உன்ரை கையை வெட்டித் தூக்கிப்போட்டு இப்ப பஞ்சாயத்து செய்யுறன் எண்டு. ஆனால் சின்னக்கிளியக்காவோ. சின்னராசா அண்ணையோ தங்களுக்கு விருப்பம் இல்லை எண்டு சொன்னால் நான் இந்தப் பிரச்சனையிலை கால் வைக்க மாட்டன். சரிதானே?”

rasaraDaorá sFairgitudir 421
தவமும் 'ஓம்' எனத் தலையாட்டினாள். "அப்படியே நானும் ஒரு கத்தியாலை என்னைத் தூக்கிய இந்தக் கையைப் போட்டிருக்க வேண்டும்” என்றவாறு அவனது கைகளை எடுத்து தன்னைக் கட்டிக் கொண்டாள். அந்தக் கதகதப்பில் அப்படியே இருந்தார்கள்.
இரவு இனிதே கழிந்தது.
அவர்கள் கதைத்து ஒரு மாதம் கூட ஆகவில்லை. வைரவ கோயில் திருவிழா நடந்து கொண்டிருந்தது.
ஏழாம் திருவிழா அன்று நெசவுக்குப் போற பிள்ளை களுடன் இரவு நாடகம் பார்க்கப் போன சாந்தினி வீட்டுக்கு வரவில்லை.
சின்னக்கிளியக்கா சண்டியனிடம்தான் ஓடிவந்தா.
"பொறு அக்கா, பயப்பிடாதை. கூட வேலை செய்யுற பிள்ளையஸ் வீட்டை போயிருப்பாள். வந்திடுவாள்.”
“இல்லையடா தம்பி. இவர் எல்லா வீட்டையும் போட்டு வந்திட்டார்.”
சண்டியனுக்கு எங்கோ உறைத்தது. தவம் இருந்து தன்னுடன் மொட்டையனைப் பற்றி கதைத் தது ஞாபகம் வந்தது. "பொறு அக்கா நான் எப்பிடியும் ஆளோடை வாறன்.”
மோட்டார் சைக்கிளை எடுத்துக்கொண்டு மொட்டை யனைத் தேடிப் போனான்.

Page 213
422 வி. வேகுமாரன்
வழியில் சீனியன் வந்து கொண்டிருந்தான். "மொட்டையனைக் கண்டனியா?”
“இல்லை அண்ணை.” “கண்டால் வீட்டை ஒருக்கா வரச் சொல்லு.” “ஓம் அண்ணை - ஏதும் அவசரமோ?”
“இல்லை.”
அப்பால் நகர்ந்தான். வைரவகோயிலுக்கும் சந்தையடிக்கும் இடையில் இருந்த குளத்தடியில் ஆட்கள் குழுமி நிற்குது போல இருந்தது. பொலிஸ் ஜீப் வேறு நின்றது. சண்டியன் கிட்டவாகப் போக கிட்டவாக நின்றவர்கள் எட்டவாகப் போனார்கள்.
சாந்தினி உயிரற்றுக் கிடந்தாள். அரைத்தாவணி கொஞ்சம் கலைந்திருந்தது. சண்டியனின் அருகே வந்த பொலிஸ்கார ஆறுமுகம், “அண்ணை இது தற்கொலை இல்லை - கொலை - அதுவும் கற்பழிச்ச பிறகு கழுத்தைத் திருகி இருக்கு எண்டு இன்ஸ்பெக்டர் சொல்லுறார்.” “உஷ். இன்ஸ்பெக்டரிட்டையும் டாக்குத்தரிட்டையும் சொல்லி தற்கொலை எண்டு எழுதச் சொல்லு. உடம்பைக் கீறி கிழிக்க வேண்டாம். நானே வந்து ஒரு மணித் தியாலத்துக்கை கொண்டு போறன்.” மோட்டார் சைக்கிளில் ஏறிப் பாய்ந்தான்.
மீண்டும் சீனியனையும். மொட்டையனையும் தேடி.

PaléoTaDario FairquUdor 423
சீனியன்தான் அகப்பட்டான். “சாந்தினி செத்துப் போனாள் தெரியுமோ?” “ஓமண்ணை. நான் இப்ப கேள்விப்பட்டனான்.” “வேறை ஏதாவது. கேள்விப்பட்டனையோ."
“ஓமண்ணை. மொட்டையன் அவள் நெசவுக்கு போகேக் கையும் வரேக்கையும் பின்னாலை திரிஞ்சவனாம்.” "அப்ப என்னத்துக்கு என்னட்டை நீ சொல்லேல்லை?” “இரண்டு பேருக்கும் விருப்பம் எண்டு நினைச்சனான் அண்ணை.”
"உன்ரை ஆட்களிட்டை சொல்லி மொட்டையனைத் தேடச் சொல்லு. எங்கை இருந்தாலும். எனக்கு தகவல் தா. சின்னராசா அண்ணை கொள்ளிக்குடம் உடைக்கேக்கை அவன் இந்த உலகத்திலை உயிரோடை இருக்கக் கூடாது.”
திரும்ப குளத்தடிக்கு வந்தான். சாந்தினியின் பிரேதத்தை வானில் ஏற்றிக்கொண்டு இருந்தார்கள். "ஆஸ்பத்திரியிலை வந்து வேண்டிக்கொள்ளுங்கோ அண்ணை.”
வான் புறப்பட்டது. பின்னால் சண்டியன் மோட்டார் சைக்கிளில், அடுத்த ஐந்து பத்து நிமிடத்துக்குள் ஊருக்குள் கதை
பரவிவிட்டது - சாந்தினி குளத்துக்குள் விழுந்து தற்கொலை செய்துவிட்டாளாம் என்று.

Page 214
424 Q. adsorgeovgdir
சின்னக்கிளியக்கா வீட்டு முற்றத்தில் ஊரே கூடிவிட்டது. சின்னராசா அண்ணை பைத்தியம் பிடித்தவர் போல அங்கும் இங்கும் அலைந்து கொண்டிருந்தார். தவம் கல்லாய் இறுகிப் போயிருந்தான். மடியில் மகன் எதுவும் புரியாமல் முழிசிக்கொண்டு இருந்தான். “என்ன குறையடி உனக்கு வைச்சனாங்கள்” என்ற சின்னக் கிளியக்காவின் அலறல் அனைவரையும் பிழிந்தெடுத்தது. எவராலும் அவளை ஆறுதல் படுத்த முடியவில்லை. தவமும் போய் கட்டிப் பிடித்துப் பார்த்தாள். தவத்தின் கையில் இருந்த பிள்ளையைப் பிடுங்கி எடுத்த படி, "யாரோடையடா. இனி நீ விளையாடுவாய். யாரடா இனி உன்னை பள்ளிக்கூடம் கூட்டிக்கொண்டு போறது. யாரடா உனக்கு சாப்பாடு தீத்திறது.” இவ்வளவு நேரமும் அடக்கி வைத்திருந்த தவம் இப்பொழுது உடைந்து போனாள். அவளின் அலறல் சின்னக்கிளியக்காவினதைவிட மோசமாய் இருந்தது. "தாரும் இல்லாமல் வந்த எனக்கு தங்கச்சி போலை இருந்தியேயடி. இப்ப ஏமாத்திப் போட்டுப் போட்டியே. இவனுக்கு இனி நான் என்னத்தை சொல்லுவன். பள்ளிக் கூடத்தடியாலை வந்து உன்னைத் தேடப் போறானே. சாப்பாடு தீத்த உன்னைக் கேட்பானே." இப்போது அங்கிருந்தவர்களுக்கு சின்னக்கிளியக்காவுடன் சேர்த்து தவத்தை சாந்தப்படுத்துவதே பெரிய வேலையாகப் போய்விட்டது.

rçonscrapario sairguUdir 425
அடுத்த ஒரு மணித்தியாலத்துக்கிடையில் வீட்டு வாசலில் ஆஸ்பத்திரி வாகனம் வந்து நின்றது. பின்னால் சண்டியனின் மோட்டார் சைக்கிள் வந்து நின்றது. அவனே இறங்கி பெட்டியை மற்றவர்களுடன் தூக்கிக் கொண்டு வந்தான். “எப்பிடியும் பிள்ளையோடை வருவன் எண்டுட்டு போனியே. இப்ப என்ரை பிள்ளையை இப்பிடிக் கொண்டு வாறியே." சின்னக்கிளியக்காவின் ஒப்பாரி அவனைப் பிழிந்தெடுத்தது. முற்றத்தில் போடப்பட்டிருந்த வாங்கில் பெட்டியை வைத்து விட்டு, அதைத் திறக்கும்பொழுது அதைப் பார்க்கும் தைரியமோ. இல்லை. எல்லோருமாய் குழற இருப் பதைக் கேட்கும் தைரியமோ இல்லாமல் பின்வளவுக் கிணற்றடியில் போய் உட்கார்ந்து கொண்டான். இரு நிமிடம் தான். எல்லோருமாய் சேர்ந்து "ஐயோ” என ஒலித்த சத்தம் அவனின் உயிரின் ஆணிவேர் வரை சென்று ஆட்டியது.
அடுத்தநாள் கிரியைகள் நடந்து கொண்டிருந்தன. தவமோகன் கிட்டக் கிட்டவாகப் போய் மாலையும் கழுத்து மாய்க் கிடத்தி வைக்கப்பட்டிருந்த சாந்தினியைப் பார்த்துக் கொண்டு நின்றான். மாப்பிள்ளைத் தோழனாய் வாறதிற்கு இரண்டு மோதிரம் கேட்ட கதைகள் ஞாபகத்திற்கு வந்து வந்து சின்னக்கிளி யக்காவையும் தவத்தையும் போட்டு வாட்டிக் கொண்டிருந்தது.

Page 215
426 வி. ஜீவகுமாரன்
இருவரும் தம்மை அடக்க முடியாது விம்மிக் கொண்டு இருந்தார்கள். “ஐயர் கிரியையை முடிக்கட்டும். பிறகு அழலாம். கொஞ்சம் பொறுங்கோ.” பின்னால் இருந்த செல்லம்மா ஆச்சி அவர்களை அமைதிப்படுத்தினாள். அராலிப் பாட்டுக்காரர்கள் பாடிக் கொண்டு இருந்தார்கள். ஒருமடமாதும் ஒருவனும்ஆகி இன்பசுகம்தரும் அன்புபொருந்தி உணர்வுகலங்கி ஒழுகியவிந்து ஊறுசுரோணிதமிதுகலந்து. சின்னராசா அண்ணையும் மகனும் அழுதபடி உலக்கையைப் பிடித்தபடி. சுண்ணம் இடித்தபடி. முதலில் சின்னராசா மட்டும்தான் கிரியை செய்வதாக இருந்ததாம். தமையன்காரன்தான் தானும் தங்கச்சிக் காரிக்கு கடமை செய்ய வேண்டும் என்று பிடிவாதமாய் நின்றானாம்.
சண்டியன் எட்டவாகவே நின்றான்.
சீனியன் தூரத்தில் வருவது தெரிந்தது. சண்டியன் வீட்டுக்கு வெளியில் போனான்.
"சொல்லு” “மொட்டையன்தான் அண்ணை செய்திருக்க வேண்டும். நேற்று பாஷையூர் மணியத்திற்றை தன்னை இந்தியா விலை கொண்டுபோய் இறக்கிவிடச் சொல்லி காசு குடுத்த வனாம் - மணியன் பழைய கள்ளியங்காட்டானிட்டை ஆள் - ஓம் எண்டு ஒத்துக் கொண்டுட்டானாம்.”
“எப்ப போகப் போறாங்கள்?”

rabotabari sabrngudr 427
“இண்டைக்கு இரவு.”
“இப்ப எங்கை நிற்கிறான்கள்?”
"மீன் வாடியிலை.”
"மோட்டார் சைக்கிளை எடு.” கடற்கரைக்கு எட்டவாக மோட்டார் சைக்கிளை நிற்பாட்டி விட்டு மெதுமெதுவாய் இருவரும் நடந்து போனார்கள். மணியன் கையில் பாசலுடன் வாடியை நோக்கிப் போய்க் கொண்டு இருப்பது தெரிந்தது. சாப்பாட்டுப் பாசலாய் இருக்க வேண்டும். இன்னமும் கிட்டவாக நெருங்கினார்கள். "கள்ளியங்காட்டானைப் போட்ட உடனேயே அவனைத் துலைச்சு இருக்க வேணும்”மணியன் வெறியில் கதைப்பது வெளியே கேட்டது.
மெதுவாக எட்டிப் பார்த்தார்கள். விரித்து வைக்கப்பட்டிருந்த சாப்பாட்டுப் பாசலுக்கும் சாராயப் போத்தலுக்கும் முன்பாக இருவரும் இருந்தார்கள். "நீ மணியனைப் போடு. மற்றதை நான் பார்த்துக் கொள்ளுறன்.” சண்டியன் சொல்லி வாய் மூட முதல் வாடிக்கு முன்னால் பாய்ந்த சீனியனின் கைத்துப்பாக்கியில் இருந்து ஆறு ரவைகளும் ஒன்றன் பின் ஒன்றாகப் பாய்ந்தன. பின்பக்கத்தால் ஒட வெளிக்கிட்ட மொட்டையனை சண்டியன் மறித்தான்.
"அண்ணை நான் வேணுமெண்டு.”

Page 216
428 வி. ஜீவகுமாரன்
மொட்டையன் சொல்லி முடிக்க முதல், "அண்ணை எண்டு சொல்லாதை நாயே.”
ஒரு வெடிதான்
மொட்டையனின் மண்டை சிதறியது. தலையைக் குனிந்தபடியே றோட்டை நோக்கி நடந்தான்.
பின்னால் வந்த சீனியனிடம், "சீனி. இரண்டு பேரிட்டை கையிலையும் துவக்கை'வைச்சுப் போட்டு வா.”
"ஏனண்ணை இரண்டை வீணாக்குவான்!”
“நான் சொல்லுறதை இப்ப செய்.” சண்டியன் சொன்னதை சீனியன் செய்துவிட்டு வந்தான். “சீனி. உன்ரை உயிர் இருக்கிறவரை தவத்திற்கோ. உன்ரை மனுஷிக்கோ. சின்னக்கிளியக்காவுக்கோ. மொட்டையன் ஏன் செத்தான் எண்டு தெரியக்கூடாது.” "அண்ணை எனக்கும் சாந்தினியின்ரை வயதிலை ஒரு
பொம்பிளைச் சகோதரம் இருக்கு. நான் யாருக்கும் GFIT6)6OLDITLL6it.”
“சரி. நீ வண்டியை ஒட்டு. ஐந்து வருஷமாய் தொடாமல் இருந்த சவத்துக்கு இண்டைக்கு வேலையை வச்சிட்டான்.”
மொட்டையனின் பிரிவின் வேதனை சண்டியனை எவ்வளவு தூரம் உள்ளுக்குள் போட்டு வதைத்துக் கொண்டிருந்தது. இனியும் எதிர்காலத்தில் போட்டு வதைக்கும் என்று எண்ணியபடியே சீனியன் சுடலையை நோக்கி மோட்டார் சைக்கிளைச் செலுத்தினான்.

Faerskrampaorė Fairg Udr 429
எல்லாம் முடிந்து ஆட்கள் போய் விட்டு இருந்தார்கள். தூரத்தில் சிதை எரிந்து கொண்டிருந்தது. மோட்டார் சைக்கிள் சின்னக்கிளியக்கா வீட்டுப் பக்கமாய் திரும்பியது. திண்ணையில் சின்னராசா அண்ணைக்குப் பக்கத்தில் இருந்த பரியாரி வேலுப்பிள்ளை, "சுடலையிலை பிள் ளைக்கு வாய்க்கரிசி போட உன்னைப் பார்த்துக் கொண்டு நின்றனாங்கள்” என்று சொல்லி முடிக்க முதல் சண்டியன்
Gé 9ʻy
ஒ” என அலறத் தொடங்கினான். அவன் இப்படி அழுது யாருமே பார்க்கவில்லை. தவம் ஓடி வந்து கட்டிப் பிடித்து ஆறுதல் படுத்தப் பார்த்தாள். முடியவில்லை.
மகன்காரன் பயந்து போய் ஒரு தூணைக் கட்டிப்பிடித்துக் கொண்டு நின்றான்.
சின்னக்கிளியக்கா. சின்னராசா அண்ணை. அங்குநின்ற எல்லோரும். முயற்சித்துப் பார்த்தார்கள். யாராலும் முடியவில்லை. ஏதோ சொல்லிச் சொல்லி அழுதான். யாருக்கும் புரியவில்லை. சீனியன் மெளனமாக அழுதுகொண்டு நின்றான்.
அனைவரும் அவனுடன் சேர்ந்து அழுதார்கள்.

Page 217
430 வி. ஜீவகுமாரன்
சிப்பொழுதும் நிழல் போல் பக்கத்திலேயே திரிந்து கொண்டிருந்த மொட்டையன். சின்ன வயதில் இருந்து கையுக்கும் காலுக்கும் இடையில் திரிந்துகொண்டிருந்து. பின் வளர்ந்து. பெரிய பெண்ணாகி. தவமோகனுக்குப்பின்னால் எப்பவும் திரிந்து கொண்டிருந்த சாந்தினி. இரண்டு பேரும் ஒரே தருணத்தில் அவனை விட்டுப் போனபொழுது. தான் தனித்துப் போய்விட்ட உணர்வே அவனுக்குள் நிறைந்திருந்தது. சின்னக்கிளியக்காவையோ. சின்னராசா அண்ணையையோ பார்க்கும்பொழுது அவனுக்குள் ஒரு குற்ற உணர்வு அவனைக் கொன்றுகொண்டு இருந்தது - தன் வீட்டை அவன்கள் வரத் தொடங்கியபடியால்தானே சாத்தினிக்கு அந்த நிலை வந்தது என்று. தவம் எச்சரித்தபொழுது கொஞ்சம் முழித்திருக்கலாம் தான். ஆனால் காலம் கடந்த ஞானம் - தோல்வி வந்தபின்தானே அனுபவம் வருகிறது. வெற்றி வரும் பொழுது அறிவை அது மறைக்கிறது. இப்பொழுது தவம்தான் காலையிலும் பின்னேரத்திலும் மகனை பள்ளிக்கூடத்துக்குக் கொண்டு போய்க் கொண்டு வருவது. எல்லோரையும் விட மகன் சரியாக பாதிக்கப்பட்டு இருந்தான். விளையாட்டு குறைவு. சாப்பாடு குறைவு. எதிலும் பிடிப்பில்லாதவன் போல். சிலவேளை சாந்தினி வீட்டு

gwieranawił sakrapudr 431
வேலியடியில் போய் நின்று வேலிக்கு காரணமில்லாமல் தடியால் அடித்துக் கொண்டு நிற்பான். சண்டியனும் தன்னுடன் காரில் கூட்டிக் கொண்டு திரிந்து பார்த்தான். நீந்துவதற்கு கடற்கரைக்குக் கொண்டு சென்று பார்த்தான். ஆனால் தவமோகனுக்கு எதிலுமே பெரிய பிடிப்பு இருக்க வில்லை.
சூறாவளி ஒன்று வந்து எல்லாவற்றையும் புரட்டிப் போட்டுப் போனது போல அந்த மரணம் அனைவரின் சந்தோஷங்களையும் வாரி எடுத்துக்கொண்டு போயிருந்தது. அந்தியேட்டி அன்று சண்டியன் முழு நேரமும் சின்னக்கிளி அக்கா வீட்டை நின்றுவிட்டு பின்னேரம் போல் தனியே கீரிமலைக்குச் சென்று மொட்டையனுக்கு ஆத்மசாந்திப் பூஜை செய்து போட்டு வந்தான். அதன்பின்தான் அவன் மனம் கொஞ்சம் நிம்மதியாய் இருந்தது.
debsoib.
அது ஒடிக்கொண்டுதான் இருந்தது. கவலைகள், சோகங்கள், நம்பிக்கைகள், எதிர்பார்ப்புகள். அத்தனையுடனும் அது ஓடிக்கொண்டு இருந்தது.
தவமோகன் இப்பொழுது பத்து வயது நிரம்பி ஐந்தாம் வகுப்புக்குப் போய்க் கொண்டிருந்தான்.
அடுத்த வருடம் மானிப்பாய் பள்ளிக்கூடத்தில் சேர்க்க வேண்டும். அதற்கு நல்ல மார்க்குகள் வேண்டும்

Page 218
432 வி. விவகுமாரன்
என்பதால் தவம் எப்பொழுதும் அவனுக்கு முன்னாலும் பின்னாலும் தான்.
சண்டியன் இப்போ சந்தையடிக்கும் மற்ற மற்ற ஊர்களுக் கும் போகத் தொடங்கிவிட்டான். வழமைபோல ஊர்ப் பஞ்சாயத்துகள் பார்ப்பதற்கே அவனுக்கு நேரம் சரியாய் இருந்தது. கோட்டுக்குப் போனால் அப்புக்காத்து, தவணைகள், அது இது என்றெல்லாம் இழுபட்டுப் போவதைவிட சண்டி யனிடம் போனால் அவன் தீர்த்து வைப்பான் என்று சனம் நம்பத் தான் செய்தது. இங்கு மேல் கோட்டு அது இது என்று எதுவுமில்லை. தீர்ப்பு இறுதியானது.
அதனால் வழக்குகளில் தோற்றவர்களிடம் அவன் தன் எதிர்ப்பை சம்பாதித்துக்கொண்டே போனான். தனக்கு எவ்வளவு ஆதரவு இருக்கின்றதோ அதேயளவு எதிர்ப்பும் இருக்கிறது என்பதை அவன் அறியாமலும் இல்லை. சிவப்புக் கம்பளத்தில் அவன் நிற்கும் தோற்றம்தான் எல்லோருக்கும் தெரியும். ஆனால் எத்தனையோ பேர் அதை இழுத்துக் கவிழ்ப்பதற்கு சந்தர்ப்பம் பார்த்திருக் கிறார்கள் என அவனுக்கு மட்டும்தான் தெரியும். எனவேதான் மிகக் கவனமாக இருந்தான் - ஆனால் யாரையும் முன்னைய காலங்களைப்போல் வேட்டை ஆடுவதில்லை. ஐந்து வருடத்துக்கு முதல் மொட்டையனைச் சுட்டபின் யாரையும் நோக்கி அவன் துப்பாக்கிகள் நிமிரவில்லை. அதற்குத் தேவையும் இருக்கவில்லை.

சங்கானைச் Faradik 433
இந்த வேளையில் மீண்டும் பாராளுமன்றத் தேர்தல் வந்தது. இந்த முறை தேர்தலில் கட்சிகள் தனித்தனியே போட்டி போடாமல், இலங்கை முழுக்க எல்லோரும் கூட்டாகச் சேர்ந்து குதிப்பது என முடிவெடுக்கப்பட்டது. எங்கு எங்கு தமிழர்கள் இருக்கின்றார்களோ அங்கங்கு எவ்வாறு வாக்குவேட்டை நடத்துவது என்று அனைத்து அரசியல்வாதிகளும் சேர்ந்து மண்டையைக் குழப்பிக் கொண்டு இருந்தார்கள். யாழ்ப்பாணப் பிரதேசம். அதிலும் குறிப்பாக சங்கானை யினதும் அதைச்சார்ந்த சுற்றுவட்டப் பிரதேச வாக்கு களுக்கு சண்டியனிடமே சமரசம் செய்ய வேண்டியிருந்தது. வெறுமே சாராயத்துக்கு சண்டித்தனம் செய்துகொண்டு இருந்த தன்னை காலத்திற்குக் காலம் எல்லா அரசியல் வாதிகளும்தான் இந்த நிலைக்குக் கொண்டு வந்து விட்டதை மிகவும் விளக்கமாய்ச் சொல்லி தன்னை இந்த விளையாட்டுக்குச் சேர்க்க வேண்டாம் எனச் சொன்னான்.
அவர்கள் பணத்தால் பேசிப்பார்த்தார்கள். பயனில்லை.
தாம் இலங்கையில் பெரிய எதிர்க்கட்சி ஆகினால் தமது
அரசியல் எவ்வாறு இருக்கும் என்று கொஞ்சம் மிரட்டல் தொனியில் கதைத்துப் பார்த்தார்கள்.
பயனில்லை.
9.
“சரி நல்லாய் குடும்பம் குட்டியளோடை சந்தோஷமாயிரு என்று சொல்லிவிட்டுப் போனார்கள்.
ஆனால் சொன்ன தொனி அவனுக்கும், பக்கத்தில் நின்ற சீனியனுக்கும், முருகனுக்கும் பெரிதாகப் பிடிக்கவில்லை.

Page 219
434 வி. கீகுைமாரன்
“போட்டுத் தள்ளியிருக்க வேணுமண்ணை.” "சும்மா இரடா. சீனி. அந்த நாயைப் போட்டதுக்குப் பிறகு எனக்கு துவக்கை தொடவே அரியண்டமாய் இருக்கு.” மொட்டையனின் பிரிவு அவனை இன்னமும் வாட்டுகிறது என சீனியனுக்கு நன்கு தெரிந்தது. "நீ சொல்லு அண்ணை. நாங்கள் செய்யுறம்.” "சும்மா விடுங்கடா. இனியும் முறுகினால் பார்ப்பம்.”
“அண்ணை அவன்கள் குடும்பம் குட்டியளோடை சந்தோஷ மாயிரு என்று சொல்லிப்போட்ட தொனி சரியில்லை அண்ணை - அக்காவையும் பிள்ளையையும் கொஞ்சம் கவனமாய் இருக்கச் சொல்லு அண்ணை.” அவனும் சரி எனத் தலையாட்டிவிட்டுப் போய்விட்டான்.
வீட்டை போன பொழுது, "இஞ்சை பாருங்கோ. சொல்லச் சொல்லக் கேட்கிறானில்லை. நாளையிண்டைக்கு சோதினை. படிக்காமல் படுத்துப் படுத்து கிடக்கிறான். எனக்கு இவனோடை கத்தி கத்தி தொண்டை வறண்டு போச்சு”தவத்தின் முறைப்பாடு தொடர்ந்தது.
தகப்பனைக் கண்டவுடன் எழும்பி சுவர்க்கரையில் இருந்தான்.
“டே. உனக்கு என்ன குறைவிட்டாங்கள். படி ராசா. அடுத்த வருஷம் நீ மானிப்பாய்க்குப் போய் படிக்கிறதுக் காகத்தானே கொம்மா குழறுறா. நீ நல்லாய் வந்தால் GBLJATEJDUT...”
"பெயில் விட்டால் அடிப்பீங்களா?”
“கொன்று போடுவன். உனக்கு எல்லா செல்லமும் தந்தாச்சு. இதிலை மட்டும் விளையாடாதை.”

சங்தானைச் சண்டியன் 435
மகனைப் பார்த்து முறைத்தபடி சொல்லிவிட்டு தவத்தின் பக்கம் திரும்பி கண்ணை வெட்டினான்.
தவமோகன் உண்மையில் பயந்து விட்டான்.
ஐந்து வருடம் கழிந்திருந்தாலும் சாந்தியின் மரணத்தின் பாதிப்பில் இருந்த அவன் இன்னமும் முற்றாக விடுபட வில்லை. பள்ளிக்கூடம் என்றாலும் சரி. விளையாட்டு என்றாலும் சரி. அவனுக்கு பெரிய ஈடுபாடு இருக்க வில்லை - எல்லாவற்றுக்கும் ஒரு பயந்த பிள்ளைப் போலை தனக்குள் தானே ஒரு தனி உலகத்தில் வாழ்ந்தான். என்றோ விளையாடிய கால்பந்து இப்பவும் உக்கிப்போய் கிணற்றடி வேலியுடன் கிடக்கிறது.
“பிள்ளைக்கு புத்தி சொல்லுற வடிவோ இது”இப்பொழுது தவம் மகனின் பக்கம் மாறிவிட்டாள்.
சிண்டியனிடம் இருந்து அவமானப்பட்டுத் திரும்பிய அரசியல் வாதிகள் அனைவரும் ஒரு முடிவுக்கு வந்தார்கள். ஒன்றில் புதுச்சண்டியன் ஒருவனை உருவாக்க வேண்டும். அல்லது சண்டியனின் கூட்டத்தை உள்ளுக்குள்ளால் உடைக்க வேண்டும். அல்லது அவனை மனத்தளவிலை ஆடவைக்க வேண்டும். அவன்ரை மனுஷி. அல்லது பிள்ளையைத் தூக்க வேண்டும். அவர்களில் வயதில் கூடிய, பழுத்து அனுபவம் மிக்க ஒருவர் சொன்னார், “அது மூன்றும் ஒரு நேரத்திலை நடக்க வேண்டும்.”

Page 220
436 வி. விவகுமாரன்
இந்த சம்பாஷணை நடந்து ஒரு கிழமை கூட ஆகவில்லை. பள்ளிக் கூடத்தால் தவமோகன் வீட்டை வரவில்லை. சண்டியனுக்கு உலகமே சுத்தியது. தவம் தலைதலையாய் அடித்துக் கொண்டாள்.
"அண்ணை அண்டைக்கு சொன்னதை அவன்கள் செய்து போட்டான்கள்” - முருகன் ஞாபகப்படுத்தினான்.
“யார் என்ன சொன்னவங்கள். சொல்லுங்கோ. என்ரை பிள்ளைக்கு என்ன நடந்தது.”
*சும்மா இரு. அவனுக்கு எதுவும் இல்லை. சும்மா எலக்ஷனுக்காக நிண்டவங்கடை கதையை இவன்கள் தேவையில்லாமல் கதைச்சுக் கொண்டு நிற்கிறான்கள்.”
தவத்தை சமாதானப்படுத்தினாலும் அவன் மனம் அடித்துக் கொண்டது.
“முருகன். வண்டியை எடு.”
தன்னுடன் வந்து சமரசம் பேசினவர்களை நேரே தேடிப் போனான்.
“சொல்லுங்கோ. பிள்ளையை என்ன செய்தனிங்கள்.” சண்டியனின் தோற்றம் அவர்களை நடுங்க வைத்தது. “உங்களுக்கு எத்தினை வோட்டு வேணும். பிள்ளையைத் திருப்பித் தாங்கோ.” அவனின் கெஞ்சல் அவர்களுக்குள் வெற்றிக் களிப்பை உண்டு பண்ணியது.
“என்ரை பிள்ளைக்கு ஏதும் நடந்திருந்தால் இஞ்சை எங்கேயும் எலக்ஷன் நடக்காது.”

wareaader Fahrpuydr 437
அவனது மிரட்டல் இப்போ அவர்களுக்கு ஏளனமாகப் பட்டது.
அதற்கான காரணம் அப்பொழுது சண்டியனுக்கு விளங்க வில்லை.
“சீனியன் வீட்டை வண்டியை விடு.” கார் சீனியன் வீட்டை போய் நின்றது விடுபூட்டியிருந்தது. "அண்ணை.” முருகன் தயங்கினான். “என்ன சொல்லு. எதை எண்டாலும் சொல்லித் துலை.” "அண்ணன் நான் தானே காசு சேர்க்கிறனான்.”
s 99
D.
"ஆனால் நான் இதுவரை காணாத அளவு காசுக்கட் டோடை சீனி அண்ணை முந்தநாள் பாங்குக்கு போய்க் கொண்டு இருந்தவர்.” சண்டியனுக்கு ஏதோ விளங்கிக் கொண்டு வருமாப் போல் இருந்தது.
"அண்ணை, அவனை வேண்டிப் போட்டாங்கள் எண்டு நினைக்கிறன்.” “இந்தப் பொறுக்கியும் எனக்கு துரோகம் செய்து போட்டுதோ. டே அவன் எங்கை இருந்தாலும் தூக்கு. நான் என்ரை பொடியனை தேடிக் கொண்டு வாறன்.” சண்டியன் விரைந்தான்.
கட்சி அலுவலகம் பெரிய ஆரவாரப்பட்டுக் கொண்டிருந்தது.

Page 221
4.38 வி. ஜீவகுமாரன்
சீனியனை தங்களுக்குள் கொண்டு வந்ததை பெரிய வெற்றியாக அவர்கள் கொண்டாடிக் கொண்டிருந்தார்கள்.
சண்டியன் வீட்டு முற்றத்தில் டேரிய கூட்டமே கூடியிருந்தது. தவம் தலை தலையாய் அடித்துக் கொண்டிருந்தாள். சங்கானையின் மூலை முடுக்குகள் எல்லாம் பிள்ளையைத் தேடிக் கொண்டு இருந்தார்கள். குளத்தடி. கிணறுகள். கோயில் கேணிகள். ஒன்றும்
டாமல் சல்லடை போட்டுத் தேடினார்க்ள். விசயம் அறிந்து பொன்னையா வாத்தியார் தனது சைக்கிளில் வீட்டை வந்து இறங்கினார். “தம்பி. நீ பிள்ளையை எதுக்கும் பேசினனியோ?” “இல்லை ஐயா.” “பிள்ளையை எதுக்கும் வெருட்டினனியோ?” “இல்லை. ஐயா.”
“வடிவாய் யோசிச்சு சொல்லு. ஏதும் கொண்டு போடுவன் என்று சொன்னனியோ?” “ஏனய்யா இப்பிடிக் கேட்கிறியள். அவனைச் சும்மா வெருட்டுறதுதான்.” பொன்னையா வாத்தியார் ஒரு கணம் மெளனமாய் இருந்தார். அந்த மெளனம் சண்டியனுக்கு பயத்தைக் கொடுத்தது.! "ஏனய்யா இப்படிக் கேட்கிறியள். எனக்கு பயமாய் கிடக்கு.”
பொன்னையா வாத்தியார் அதிக நேரம் சண்டியனோடு கதைத்துக் கொண்டிருப்பதையும், சண்டியனின் முகம்

சங்கானைச் சண்டியன் 439
கறுத்துப் போய்க்கொண்டு இருப்பதையும் அவதானித்த தவம் எழுந்து சண்டியனுக்குக் கிட்டவாக வந்தாள்.
சண்டியன் தவத்தின் கையை இறுகப் பிடித்தான். அவனின் கை உதறுவது நன்கு தெரிந்தது.
"நேற்று சோதினையில் அவன் பெயில். வீட்டுக்குப் போனால் அப்பா கொன்று போடுவார் எண்டு சொன் னான். நான் சிரித்துக்கொண்டு 'உன்ரை அப்பாவை எனக்கு நல்லாத் தெரியும். நீ பயப்படாமல் போ எண்டு. சொல்லி அனுப்பி வைச்சன்.” நடராசா வாத்தியார் சொல்லி முடியவில்லை. "ஐயோ தவம் அவன் எங்களை எல்லாம் ஏமாற்றிப் போட்டு எங்கடை தோட்டத்துக் கொட்டிலுக்கை கிடக்கிறான்." சின்னக்கிளியக்கா குழறிக்கொண்டு வந்தாள். தவம் அந்த இடத்திலேயே விழுந்தாள். சண்டியனுக்கு தான் என்ன செய்கின்றேன் என்றே தெரியவில்லை. "ஐயோ என்ரை பிள்ளையை சாக்கொல்லிப் போட்டனே" என்று வீடு.வளவு. றோட்டு. கிணற்றடி எல்லாம் ஒடிக் கொண்டு இருந்தான். அனைவருக்கும் அவனைப் பார்க்க பரிதாபமாய் இருந்தது. சங்கானையின் சண்டியன். ஒரு பைத்தியக்காரன் போல். சண்டியன் கிணற்றுக்குள் ஏதாவது விழுந்து விட்டாலும் எனப் பயந்து அவனைப் பிடித்து ஒரு நிலைப்படுத்த கொஞ்சப் பேர் முயற்சித்துக்கொண்டு இருக்க, மற்றைய ஆட்கள் சின்னக்கிளியக்காவின் தோட்டத்தின் நடுவே யிருந்த குடிலைச் சுற்றிச் சூழ நின்றார்கள்.

Page 222
440 வி. விவகுமாரன்
தவமோகன் குப்புறப் படுத்திருந்தான் - கைகளில் பொலி டோல் போத்தல்.
"
"ஐயா உன்ரை கொக்காட்டை நீயும் போட்டியோ
சாந்தினியை நினைத்து சின்னக்கிளியக்கா ஒப்பாரி வைச்சுக் கொண்டு இருந்தாள்.
கேனின் அந்தியேட்டி வரை சண்டியன் வீட்டை விட்டு வெளிக்கிடவே இல்லை. தவத்தை நிமிர்ந்து பார்க்கவே அவனுக்குக் கஷ்டமாய் இருந்தது.
அவன் தப்பு எதுவுமில்லை.
ஆனால் மனம் கஷ்டப்பட்டது.
ஒருநாள் தவம் சொன்னாள். “இப்பதான் எனக்கு ஒரு கை இல்லாமல் இருக்கிற மாதிரி இருக்கு.” சண்டியன் அவளைப் பரிதாபமாய்ப்பார்த்துவிட்டு மீண்டும் தலையைக் குனிந்து கொண்டான். சீனியன் பார்த்த எல்லாக் காரியங்களையும் முருகனே பார்த்துக் கொண்டு இருந்தான். பல இடங்களில் முன்பு காசு கொடுத்த ஆட்கள் இப்பொழுது சறுக்கப் பார்த்தார்கள். இதைவிட சீனியனும் புதிதாக தனக்கு என்று காசு கேட்கத் தொடங்கி விட்டானாம் என்று செய்திகள் வரத் தொடங்கின

samæar satregudr 44
- இது சண்டியனுக்குச் செலுத்திய கப்பத்தை விட அதிக மாய் இருந்ததாம். முருகன் தகவல் சொன்னபொழுது, "பிள்ளையின்ரை அந்தியேட்டி முடியட்டும். நான் வந்து பார்க்கிறன்" என முருகனை ஆறுதல் படுத்தினான்.
தோல்வி என்பது சரிவு. இந்தச் சரிவு மலையிலிருந்து மெதுவாய் இறங்கிப் போகும் நடைபாதை மாதிரியும் இருக்கலாம். அல்லது மண்ண ரிப்பு வந்து திடீரெனத் தோன்றும் பெரிய பள்ளம் மாதிரி யும் இருக்கலாம். சண்டியனுக்கு இந்த இரண்டும் ஒரே நேரத்தில் நிகழ்ந் திருக்கிறது. மொட்டையனின் மறைவு. சீனியனின் துரோகம். நடை பாதைச் சரிவு என்றால் மகனின் மறைவு. அது பள்ளத் தாக்கு. இது இரண்டிலும் இருந்து மெதுமெதுவாகத்தான் எழும்பி வர வேண்டும். அந்தியேட்டிக் காரியங்கள் முடிய அடுத்தநாள் சந்தைக்கு வந்திருந்தான். சவரம் செய்யாத முகம். ஒழுங்காய் வாராத தலை. அயன் செய்யாத சேட்டு. வேட்டி. பழையகாலச் சண்டியன் போல இருந்தான். போனமாதம் வரை அவனைப் பார்க்கும்போது இருந்த களை. தோற்றம். கம்பீரம். அனைத்தும் எங்கேயோ தொலைந்து போயிருந்தது. எலக்ஷனுக்கான கொடிகள் எங்கும் பறந்து கொண்டிருந்தன.

Page 223
442 வி. விவகுமாரன்
புதுச்சந்தை கட்டுவதற்காக பழைய சந்தையை இடித்துக் கொண்டு இருந்தார்கள். எங்கும் புழுதியும். கட்டடம் இடிக்கும் எந்திரங்களும். றைக்டர்களும். செல்லத்துரை அண்ணையின் கடையில் போய் உட்கார்ந் தான்.
அவன் வழமையாகக் காலையில் குடிக்கும் முட்டைக் கோப்பியைக் கொண்டு வந்து கிட்டவாக வைத்தார். “தம்பி. இந்த ஒரு மாதத்துக்கு இடையிலை சந்தை நல்லாய் மாறிப்போச்சுது.”
நிமிர்ந்து பார்த்தான். “எல்லாம் உங்களோடை இருந்தவன்ரை கூத்து. நீங்கள் வளர்த்து விட்டீங்கள். அவங்கடை அட்டகாசம் தாங்கு தில்லை. அவனுக்குப் பின்னாலை நல்ல அரசியல் பலம். பொலிசு வேறை.” “முருகன் எல்லாம் சொன்னவன். நான் வந்திட்ட னில்லை. இனிப் பார்த்துக் கொள்ளுறன்.” கோப்பியைக் குடித்துவிட்டு சந்தை இடிப்பதை புதினம் பார்ப்பதற்கு எழுந்து போனான். பழைய சந்தையின் முக்கால்வாசியைச் சுற்றி கம்பி வேலி போட்டிருந்தார்கள். வெளியே கொஞ்சப் பிரதேசத்தில்தான் சந்தை நடந்து கொண்டிருந்தது.
அவனைக் கண்டதும் எல்லோரும் துக்கம் விசாரித்தார்கள்.

radarši sairguar 443
மகனின் இறுதிச் சடங்கிற்குச் செல்லாத தூர இடத்து வியாபாரிகள் தங்கள் அனுதாபத்தையும் ஆறுதலையும் சொல்லிக் கொண்டு இருந்தார்கள். சண்டியனின் மகனுக்கு எப்பொழுதும் நல்ல கயர் உள்ள விளாம்பழங்களை வைத்திருந்து கொடுக்கும் சீரணி ஆச்சி அவனைக் கண்டதும் விம்மியழத் தொடங்கி விட்டா. "ஏன் ஆச்சி. நடு வெய்யிலுக்கை இருக்கிறிங்கள்.” அந்தக் கரையிலை ஒரு பத்தியைப் போட்டுட்டு உரச்சாக்கை மேலே போட்டுட்டு இருக்கலாமே.” “தார் மேனை உதுக்கு காசு செலவளிக்கிறது.”
"பொறு ஆச்சி. உங்கை பார். எத்தினை பழைய தடி தண்டுகள் அந்த கட்டிடத்துக்கை கிடக்கு. அதிலை நாலு தடி எடுத்தால் காணும். டே சிவலிங்கம். அதிலை போய் நாலு தடி எடுத்துக் கொண்டு வா.” சிவலிங்கம் கம்பி வேலிக்கு மேலால் தாவிப் போய் இடித்த தூண்களுக்கு இடையில் கிடந்த தடிகளை இழுத்தெடுத்தான். அப்பொழுது பழைய சந்தையை இடிப்பதற்கு ஏலத்தில் எடுத்த நவாலியான் “டே தாரடா கம்பி வேலியாலைப் பாய்ஞ்சு வந்து தடி எடுக்கிறது” என்றபடி வந்தான். சிவலிங்கம் திரும்பி சண்டியனைப் பார்த்தான். "நான் எண்டு சொல்லடா.” நவாலியான் சண்டியனைப் பற்றிக் கேள்விப்பட்டிருக்கின் றான். ஆனால் கண்டதில்லை. “எந்தக் கொம்பன் எண்டாலும். ஏலத்திலை எடுத்த வனுக்குதான் எல்லாம் சொந்தம். கறள் பிடிச்ச ஆணி எண்டாலும்.”

Page 224
444 வி, விவகுமாரன்
"சங்கானைக்குள்ளை வந்திட்டு என்ன நியாயம் கதைக் கிறியோ” என சண்டியன் வேலியைத் தாண்டப் பார்த்தான்.
கால்கள் சறுக்க கீழே விழுந்து விட்டான்.
ஆனாலும் எழுந்து பின் நிதானமாக வேலிமீது ஏறி உள்ளே போனான்.
ஒருவன் முதலாளியுடன் சண்டித்தனத்துக்கு வருகிறான் என்று புரிந்து கொண்டதும் நவாலியாவின் வேலையாட்கள் அனைவரும் தண்டு தடிகளை எடுத்துக் கொண்டார்கள். சண்டியன் யாரைப் பற்றியும் கவலைப்படவில்லை. நவாலியானுக்கு காலால் எட்டி ஒரு உதை. நவாலியான் எட்டவாகப் போய் விழுந்தான். அடுத்து காலை சண்டியன் தூக்க முதல் நவாலியானின் ஆட்கள் எல்லாம் அவனைச் சூழ்ந்து கொண்டார்கள்.
சண்டியனுக்கு ஒன்றும் செய்ய முடியவில்லை. அனைவரும் சேர்ந்து தாக்கத் தொடங்கினார்கள். சிவலிங்கம் தடுக்கப் பார்த்தான்.
அவனுக்கும் அடி விழுந்தது. வேலியால் பாய்ந்து போய், பஸ் ஸடாண்ட் பக்கம்
ஓடிப்போய் “அண்ணைக்கு அடிக்கிறாங்கள்” என்று குரல் கொடுத்துப் பார்த்தான். யாரும் கண்டுகொண்டதாகத் தெரியவில்லை - சண்டி யனுக்கு உதவினால் சீனியனைப் பகைக்க வேண்டும் என்று.

efKßebTamoari* 6FaiburgpzUdr 445
முருகன் வேறு யாழ்ப்பாணம் போயிருந்தான். சண்டியன் மயங்கிக் கொண்டு போனான். இப்பொழுது எல்லோரும் சண்டியனை விட்டு விலத்திப் போய்விட்டார்கள்.
முகம் எல்லாம் வீங்கியிருந்தது. மூக்கடியில் இரத்தம் வழிந்து கொண்டிருந்தது. செய்தி தவத்துக்கு அறிவிக்கப்பட்டது. சின்னக்கிளியக்கா, சின்னராசா அண்ணையுடன் ஓடி வந்தாள். ஒரு மலை புரண்டுபோய்க்கிடந்தது போன்றிருந்தது. எல்லோருமாய் அவனைத் தூக்கி வானில் கொண்டு போய் ஏற்றினார்கள்.
சங்கானை ஸ்தம்பித்து நின்றது. சண்டியனுக்கு துரை அண்ணை வந்து தன்னை அவரது தோளில் தூக்கிக்கொண்டுபோவது போல இருந்தது. "நீதவத்தோடை சன்னதிக்கு வந்திடடா" துரை அண்ணை சொல்லுமாப்போல இருந்தது.
இப்பொழுது சங்கானை முற்றாக மாறிவிட்டது. சீனியனின் அடக்குமுறையும் அதிகாரமும் கொடி கட்டிப் பறந்தது. நீதி. அநியாயம் என்ற கதைக்கே இடம் இருக்கவில்லை.

Page 225
446 en. eséase puDagdûr
எல்லாத்துக்கும் கப்பம். எதற்கெடுத்தாலும் வரி. சண்டியன் காலத்தில் கடைக்காரர் மட்டும் வரி செலுத்த வேண்டியிருந்தது. இப்பொழுது சந்தைக்கு வரும் கடலைக்கார ஆச்சி தொடக்கம் வரி செலுத்த வேண்டி இருந்தது. இப்பொழுதுதான் சண்டியனை தாம் இழந்துவிட்டதாக சங்கானை கவலைப்பட்டது. “அவன் இருக்கேக்கையும் கொஞ்சம் மனக்கஷ்டங்கள் இருக்கத்தான் செய்தது. ஆனால் இப்ப அவன் இல்லாமல் இருக்க முடியாமல் இருக்கு" - சில பெரிசுகள் பேசிக் கொண்டன.
சிண்டியன் எங்கே போனவன்? ஆறு மாதத்திற்குப் பிறகு யாரோ சன்னதி மடத்தில் கண்டதாகத் தகவல் சொன்னார்கள். முருகனும் நாலைந்து பேருமாய் சன்னதி மடத்துக்கு வானில் விரைந்தார்கள்.
“நேற்று வரை உதுலை தான் இரண்டு பேரும் இருந்தவை. தாரோ துரை அண்ணை வரச்சொன்னவர் எண்டு கதிர்காமத்துக்கு நடையாய் போட்டினம்” . சுவாமிமடத் தில் இருந்த ஒரு சாமியார் சொன்னார். முருகன் குனிந்த தலையுடன் வந்து வானில் ஏறினான்.
SM

Uottab ass8U-sobst disvev சிறுகதைகளாகிய கவிதைகளும், கவிதைகளாகிய சிறுகதைகளும்
Luässib: 248
இவரது கதைகள் - கவிதைகளில் பக்கச்சார்மையின்றி பிரச்சனைகளுக்கான வேர்0 களைச் சாடும் நேர்மை தென்படுகிறது. இவரது படைப்புகள், பாரம்பரிய விழுமியங்களை0 விமர்சிப்பதாயும், புலம் பெயர்ந்த நாட்டில் நிகழ்கால வாழ்க்கைப் பாதையை அலசு கின்றனவாகவும் அமைந்திருக்கின்றன.
- திருமதி ரேனுகா குனஸ்கந்தா, அவுஸ்திரேலியா 'காலங்களும் கருத்தோட்டங்களும் சம்பவக் கோர்வைகளாக ஒரு புதிய பரிமாணத்தை எட்டுகின்றன. ஆயினும் அவ்வப்போது சமூகம் மீதான அவரது விமர்சனம் எள்ளலாக ெ வெளிப்படும் அதே ே ாதத்துவ வீச்சுக் wம் வாழ்க்கைப் பிரகடனங் களகவும் வந்து விழுகின்றன.
- albwasgu Tr gyfatoBissaryder, aswortiwgal டென்மார்க்கில் எமது கால் ப் பதித்துக்கொள்ள ஆரம்பித்த அந்த நாட்களில் எனக்கு 0 அறிமுகமாகியவர்களில் ஜீவா ஒருவர்தான் இலக்கியம் சம்பந்தமான சங்கதிகளைப் 0 பகிர்ந்துகொள்ளவும், புலம்பெயர் வாழ்வின் பிரச்சனைகளையிட்டு யதார்த்தமாக, 0 கனதியாகக் கலந்துரையாடக் கிடைத்தார். இந்தக் கால்நூற்றாண்டுக் காலத்தில் அவர் 0 பல துறைகளிலும் அடைந்துள்ள வளர்ச்சியும், வெற்றியும் இங்கே வாழ் இளஞ் சந்ததியினர்க்கு ஒரு முன்னுதாரணம்.
- gwo&filws sw. umusungarnasydir, Lásranista ஜீவாவின் யாவும் aటడీ அல்ல’ என்ற இந்நூலிலே உரைநடை இலக்கியத்தில் D இடையிட்டு செய்யுள் வருகிறது. உரைநடை செய்யுளுள் புகுதல் ஆகுமாயின், 0 -60) ல் செய்யுள் புகுதல் இயல்பென அவர்கருதுகிறார் போலும், புலம்பெயர்ந்த0 ஆழத்தீழேர்கள் மத்தியில் மலர்ந்து வரும் புதிய இலக்கியப் படைப்பாற்றலின் 0 கைதொகைக் வும் கற்பனை அல்ல" என்கிற இந்நூலும் ஓர் எடுத்துக்காட்டாக 0
४**
-Tuñv.ua, saquiñggulum இங்கேயுள்ள எனது படைப்புகள் ஒன்றும் முன்பு சொல்லப்படாதவைகள் அல்ல. ஆனால் சொல்லப்பட்ட விதம் வேறுபட்டுள்ளதாக இதை விமர்சித்தவர்கள் சுட்டிக்காட்டியுள்ளார்கள். இது எனது தமிழுக்கு கிடைத்த கெளரவமாக எண்ணி மகிழ்கின்றேன். இங்கேயுள்ள பதிவுகள் எவர்களுடனும் எவையுடனும் சமரசம் செய்யாத பதிவுகள். எனவேதான்“யாவும் கற்பனை அல்ல” எனப் பெயர் சூட்டி இங்கிருப்போருடனும் அங்கிருப்போருடன் சரளமாக உரையாடியுள்ளேன். அது எனக்குப் பிடித்திருக்கிறது. உங்களுக்கும் பிடிக்கும் என எதிர்பார்க்கின்றேன்.
- siviilian, Leirints.

Page 226
** **
sF4ھی نقصنف Laéasettsu---
மக்களுக்க Esse os (நாவல்)
பக்கம் : 352
அன்புள்ள அம்மாவுக்கு, இந்தக் கடிதம் உங்கள் கைகளில் கிடைக்கும்பொழுது நான் தற்கொலை 7 செய்து கொண்டிருப்பேன். அல்லது கொலை செய்யப்பட்டிருப்பேன். ஒரு கோழை என்ற பெயருடன் தற்கொலை செய்வதா அல்லது கொலை செய்யப்பட்ட பின்பு அவர்கள் எனக்கு சூட்ட இருக்கும் துரோகி என்ற பி அவப்பெயருடன் எங்கள் சந்ததி முழுக்க வாழவேண்டுமா என்று தெரியவில்லை. எனது மரணத்தால் உலகம் ஒன்றும் ஸ்தம்பித்து நிற்கப் போவதில்லை.0 உண்மை கள் மறைந்துவிட்டது அல்லது மறைக்கப்பட்டுவிட்டது என்று யாரும் தலைதலையாய் அடித்துக்கொண்டு இருக்கப் போவதில்லை. காடாத்து, எட்டுச் சடங்கு, அந்தியேட்டி, ஆட்டத்திவஷம் என என் நினைவுப் களும் கொஞ்சம் கொஞ்சமாக அழிந்து விடும். அம்மா நிதான் அதிகமாய் அழுவாய். அப்பா இருந்திருந்தால் இன்னும் கவலைப்பட்டிருப்பார். நல்ல காலம் போய்ச் சேர்ந்து விட்டார். வாழ்க்கை என்பது எப்பொழுதும் நேர்கோடுகளாய் இருந்து விடுவதில்லை. ஒரு கணித மாணவன் இந்த வரைகோடு இப்படித்தான் நேர்கோடாய் இருக்க வேண்டும் என்று புள்ளிகள் போட்டு விரும்பியவாறு கோடுகள் போடலாம். ஆனால் வாழ்க்கையில் போடும் புள்ளிகளில் எங்கோ தவறுகள் வந்துவிடு கின்றன. எனவேதான் வாழ்க்கையின் கோடுகளில் வளைவுகள் வந்துவிடுகின்றன. ராசாத்தியோடு நேர்ந்தது என் வாழ்வில் பெரிய வளைவு என்று சொன்னால் இப்பொழுது ஏற்பட்டிருப்பது பெரிய ஒரு முறிவு அதுதான் இந்த மரண சாசனம். என் மரணத்துக்குப் பின்னால் என்னை வெட்டிக் கொத்திக் கூறுபோடாமல் இருக்க நான் முன்னெச்சரிக்கையுடன் எழுதும் இந்த மரணசாசனம்,
இந்த முன்னெச்சரிக்கை எனக்கு முன்பேயிருந்திருந்தால்வி இந்தக் கடிதத்துக்குத் தேவை வந்திராது.
மனத்தில் எழுந்த எண்ணங்கள் எழுத்துகளாய் காகிதத்தில் பதியத் தொடங்கியது. y DONATED BY
xx:3:x's f.G NA NASEKARAN
(diter - Gnanan) 3-3,46”Lane, Colombo -06, Sri Lanka.
اسب 2586013 11 (94) :tܧܓܰܪ
 
 
 
 
 
 
 
 


Page 227
இனி.
குளம்படிச் சத்தத்துடன் குதி இளங்கோவனும்.
வீட்டை விட்டு ஓடி வந்து மீ நாய்களோடு சண்டை போட்
உஞ்சுவும்.
கம்பி வேலிகளுக்கு அப்பால்
ஆடையைக் கழற்றிப் போட் பைத்தியமாக நிற்கும் கோம
ஒரு மனிதனின் வெற்றிக்கு எங்கேயோ உலாவித் திரிந்து
சங்கானைச் சண்டியனும்.
நீங்களும்.
நானும்.
=多ー乞。
ീ=ീഴ
9スg-g7
seaws2
9 スタg
 

ரை மீதேறி வரும்
ன் சந்தையடியில் மற்ற டுக் கொண்டிருக்கும்
தெரியும் பிஞ்சு முகங்களும்.
டு அரை குறைப் தியும்.
, தோல்விக்கும் உருவகமாய்
கொண்டிருக்கும் என்