கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: சொன்னாற்போல 1

Page 1


Page 2

சொன்னாற்போல - O1
கே.எஸ். சிவகுமாரன்
மீரா பதிப்பகம் 74ஆவதுவெளியீடு 19123, ஹைலெவல் வீதி,கிருலப்பனை கொழும்பு 06. தொ.பே : 2513336

Page 3
நூலின் பெயர்
ஆசிரியர்
பதிப்புரிமை
முதற்பதிப்பு
நூல் கிடைக்குமிடம் :
பதிப்பு
அச்சிட்டோர்
விலை
சொன்னாற்போல - O1
: கே.எஸ். சிவகுமாரன்
: ஆசிரியருக்கே
O9-09-2008
21, (p(556it 566T6r 21. Murugan Place கொழும்பு 06 Off Havelock Road TP:0-94-1-2587617 Colombo 06 Mobile : O7796.06283 Sri Lanka. email: sivakumaranksGyahoo.com
மீரா பதிப்பகம் (74ஆவது பதிப்பு) 191/23, ஹைலெவல் வீதி கொழும்பு 06 TP:2513336
பேஜ் அன்ட் இமேஜ் 202/2B, ரோயல் பேர்ல் கார்டன்ஸ் வத்தளை.
ரூபா 150/=

பதிப்புரை
கடந்த அரைநூற்றாண்டு காலமாக திறனாய்வுக் கட்டுரைகளையும். திறனாய்வு சார்ந்த பத்தி எழுத்துக்களையும் தமிழிலும், ஆங்கிலத்திலும் எழுதி வரும் கே.எஸ். சிவகுமாரன் சிறுகதை, சினமா. பத்திரிகைத்துறை. ஒலிபரப்புத்துறை என பல்துறைகளிலும் ஆழ்ந்த தடம் பதித்திருக்கிறார்.
கே.எஸ். சிவகுமாரனின் திறனாய்வுக்குட்படாத புனை கதை இலக்கியங்களே ஈழத்தில் இல்லை என்னுமளவிற்கு அறுபதுகள் முதல் இன்று வரை வெளிவந்த நூல்களில் கணிசமானவற்றை தன் கவனத்துக்குட்படுத்தியிருக்கும் ஈழத்தின் ஒரேயொரு திறனாய்வாளர் கே.எஸ். சிவகுமாரனாகத் தான் இருக்க முடியும் என்பதில் இருகருத்து இருக்க (ւplգԱմf75l.
இத்தகு சிறப்பியல்பு மிக்க கே.எஸ். தான் இதுவரை அறுவடை செய்த 22 நூல்களுள் பாதி நூல்களை (11) மீரா பதிப்பகத்தினூடு வெளிக் கொணர்ந்து மீரா பதிப்பகத்தின் வளர்ச்சியிலும் பாரிய பங்களிப்பினை ஒசையின்றி நல்கி யிருக்கிறார்.
இந்த வகையில் தினக்குரல் பத்திரிகையில் தொடராக அவர் எழுதி வந்த சொன்னாற்போல’ பத்தியின் முதற் பாகத்தினை 74ஆவது வெளியீடாக வெளிக்கொணர்வதில் மீரா பதிப்பகம் பெருமை கொள்கிறது.
19123, ஹைலெவல் வீதி - இரத்தினவேலோன் கொழும்பு 06

Page 4
நூலாசிரியரின் விளக்க உரை
இந்த நூற்றாண்டின் (21) முதலாண்டிலே "தினக்குரல்" நாளிதழில் “சொன்னாற்போல” என்றதோர். பத்தியை எழுதி வந்தேன். பின்னரும் இடைக்கிடையே இந்தப் பத்தி தொடர்ந்து 2008 மத்தியில் முடிவடைந்தது. 1960கள் தொடக்கம் இற்றை வரை வெவ்வேறு பத்திரிகைகளில் பற்பல தலைப்புகளில் எனது பத்திகள் தமிழிலும், ஆங்கிலத்திலும் வெளிவந்து கொண்டிருக்கின்றன. பத்தி எழுத்தை Literary Journalism" என்கிறார் ஆய்வறிவாளர் கார்த்திகேசு சிவத்தம்பி
"பத்தி எழுத்தின்” (Column Writing) நோக்கமே சுருங்கச் சொல்லி, பல தகவல்களைத் திறனாய்வு நோக்கில், பொது வாசகர்களுக்கு எளிமையான முறையில் தவருவதுதான். இந்த எழுத்துமுறை விரிவான ஆய்வாகவோ, திறனாய்வாகவோ. விரிவான கட்டுரையாகவோ அமையமாட்டாது. ஆயினும் திறனாய்வு சார்ந்த மதிப்பீடுகளாகவும். தகவல் களஞ்சிய மாகவும் விளங்கக் கூடியவை.
எனது பத்தி எழுத்துக்களையும். கட்டுரைகளையும். மதிப்புரைகளையும், திறனாய்வுகளையும், சிறுகதைகளையும், கவிதைகளையும் கிரமமாகப் படித்துவரும் வாசகர்கள். 2005 ஆம் ஆண்டில் எனது “சொன்னாற்போல-02" வெளி வந்தமையை அறிந்திருப்பீர்கள்.
"சொன்னாற்போல-01” வெளிவருவதற்கு முன்னரே "சொன்னாற்போல-02" வெளிவந்துவிட்டது. இந்த வருகையின் முதலாவது தொகுதி. கனடாவில் வெளிவரவிருந்தது. ஆயினும். ஏதேதோ காரணங்களுக்காக அது வெளிவரவே யில்லை. கட்டுரை மூலப் பிரதிகளும் என்னிடம் இல்லாமற் போய்விட்டது.

அதிர்ஷ்டவசமாக, முழுவதுமே இல்லாவிட்டாலும் என்னிடமிருந்த காகிதக் குப்பைக்குள் சில இருந்ததைக் கண்டெடுத்து, பதிவுகள் நலன் கருதி "சொன்னாற்போல-01” இப்பொழுது வெளிவருகிறது.
"சொன்னாற்போல-03" விரைவில் வெளிவரும் அத்துடன் இத் தொடர் வரிசை நூல்களாக தொடர்ந்து வெளிவர மாட்டா.
இந்தப் பத்திகளை எழுத இடம் தந்து ஊக்குவித்தமைக் காக தினக்குரல் பிரதம ஆசிரியர் வீ. தனபாலசிங்கத்திற்கும், ஞாயிறு தினக்குரல் ஆசிரியர் ராஜநாயகம் பாரதிக்கும் நன்றிகள்.
தகவல்கள் தரும் இந்நூல்கள் ஆய்வாளர்களுக்கும் பயனளிக்கும் என நினைக்கிறேன். அன்பு வாழ்த்துகள்!
- கே.எஸ். சிவகுமாரன்
21, முருகன் பிளேஸ்,
கொழும்பு-06. தொ.பே : (01-94-11) 2587617 அவசர அழைப்பு : 0779606283 faita,6556) : sivakumaranksGyahoo.com

Page 5
உள்ளே.
யாழ்ப்பாண கலாசாரத்தின் தத்துவப் பின்னணி என்ன? புதிய "விமர்சகர்களும் புதுச் சிந்தனைகளும் பூடகமற்ற பதிவுகள்
இலக்கிய வகைமை ஒப்பாய்வு ஒரு படைப்பாளியின் "பத்தி எழுத்துக்கள். அசோகமித்திரன் மீரா நாயர் படங்கள் தமிழில் அறிந்திருக்க வேண்டியவை - மூன்றாவது கண் தமிழ் பிரெஞ்சு இலக்கியங்கள் சபா ஜெயராசாவின் கலையும் திறனாய்வும்"
ஈழத்துச் சிறுகதைத் தொகுப்புகள் - மதிப்பீடுகள்
சின்னப்பா கிங்ஸ்பரி - ஈழத்தின் முன்னோடி நாவலாசிரியர்? முல்லைக் காட்டிலுள்ளோர் முகிழ்வித்த சிறுகதைகள் ஜுனைதா ஷெரிபின் அரசியல் நாவல் "அங்கையன்’ கைலாசநாதனின் ‘செந்தனல் எஸ். நஜிமுதீனின் பாடற்கதை 'முள்ளில் படுக்கையிட்டு கலாநிதி என். சண்முகலிங்கனின் மரபுகளும் மாற்றங்களும்’ நீலாவணனின் கவிதை வரிகள்
சிற்சில சிறு நூல்கள்
சிவகாமியின் ஊடாக
1970 களில் கொழும்பு மேடை நாடகம்
சாந்தனின் ஆங்கில எழுத்து
சார்க் எழுத்தாளர் ஒன்றியம் இலங்கையில் திரைப்பட நுகருணர்வு - ஆரம்ப நிலை தமிழ்ப் படம்: பின்னோக்கு
8---rmwowww.wom vi የኅ»”wwxxxxxxxXx
57
61
64
68
71
73
76
78
82

யாழ்ப்பான கலாசாரத்தின் தத்துவப் பின்னணி என்ன?
உங்களுக்குக் கலாநிதி வேலுப்பிள்ளை இராம கிருஷ்ணனைத் தெரிந்திருக்க நியாயமில்லைத்தான். ஏனென்றால் அவர் மிக அடக்கமானவர். கொழும்பு போன்ற மாநகரங்களில் அவர் எந்தவித கலை, இலக்கியக் கூட்டங் களிலும் கலந்து கொண்டதாகத் தெரியவில்லை.
முதலில் அவரைப் பற்றிச் சொல்லிவிடுகிறேன். 1946 ஆம் ஆண்டு வரை மலேசியாவில் வாழ்ந்தவர். பத்திரிகை ஆசிரியராகவும், பள்ளிக்கூட ஆசிரியராகவும் கடமையாற்றிய பின் 1967-1997 காலப்பகுதியில் பல்கலைக்கழக விரிவுரை யாளராகப் பேராதனையிலும், யாழ்ப்பாணத்திலும், மட்டக் களப்பிலும் கடமை செய்து விலகியவர். இடையில், மதுரைத் தமிழ் பல்கலைக்கழகத்தில் சைவ சித்தாந்தப் பேராசிரியராக வும். பெனாரஸ் ஹிந்து பல்கலைக்கழகத்தில் சமய ஒப்பியல் பேராசிரியராகவும், இலங்கை இந்து அமைச்சின் ஆராய்ச்சித் துறை தலைவராகவும். அகில இந்திய சமூகவியல் ஆய்வுக் கழகத்தில் சிரேஷ்ட ஆய்வாளராகவும் செயலாற்றியிருக்கிறார். ' மேற்கு ஐரோப்பா. இந்தியா. மலேசியா. இந்தோனீசியா, நியூசிலாந்து ஆகிய நாடுகளில் விசேட ஆராய்ச்சி விரிவுரை களும், கருத்தரங்குகளும் நடத்தியவர்.
இலங்கையில் இந்து சமய பாட நூல்களின் ஆசிரியர் குழுவிற்குத் தலைமை தாங்கிய அறிஞர் வே. இராம கிருஷ்ணன் தமது கலாநிதிப் பட்டத்தை Lancaster பல்கலைக் கழகத்திலிருந்து பெற்றவர். இவர் சென்னைப் பல்கலைக்

Page 6
சொன்னாற்போல கழகத்தில் நிகழ்த்திய விசேட விரிவுரைகள் Perspectives in Saivaism (சைவத்தின் முழு வளக் காட்சி) என்னும் நூலாக அப் பல்கலைக்கழகத்தால் வெளியிடப்பட்டது. சுவாமி விபுலானந்தரது நூற்றாண்டு விழாவில் நிகழ்த்திய "சுவாமிகளது கல்வித் தத்துவம்” என்னும் விசேட பேருரையும் விழாக் குழுவினரால் நூல் வடிவில் வெளியிடப்பட்டது.
காரைநகரைச் சேர்ந்த இந்தக் கல்விமான் ஆரம்ப காலத்தில் இலங்கை கொம்யூனிஸ்ட் கட்சியின் திருகோண மலை மாவட்டச் செயலாளராகவும் பணி புரிந்தது ஒரு சுவாரசியமான தகவல்.
சரி, இனி இவர் எழுதிய "யாழ்ப்பாண கலாசாரம்: தத்துவப் பின்னணி” என்ற் சிறு நூலுக்கு வருவோம்.
2000 ஆம் ஆண்டு ஜூன் மாதம், மறைந்த பேராசிரியர் சோமசுந்தரம் செல்வநாயகத்தின் 12ஆவது நினைவுப் பேருரையைக் கலாநிதி வேலுப்பிள்ளை இராமகிருஷ்ணன் நிகழ்த்தினார். அதன் விரிவாக்கமே இந்த நூல். பேராசிரியர் இரா. சிவச்சந்திரன் அறிமுகவுரையை எழுதியிருக்கிறார்.
யாழ்ப்பாணம் என்றவுடன் எனக்கு முதலில் நினைவுக்கு வருவது பேராசிரியர் கார்த்திகேசு சிவத்தம்பி எழுதிய "யார் இந்த யாழ்ப்பாணத்தான்” என்ற கட்டுரை.
இந்த நூலிலே “யாழ்ப்பாணக் கலாசாரத்தின் அடித் தளமாகிய தத்துவத்தைத் தேடி விளக்க எடுத்துள்ள முயற்சி யாகும்” என்றும், இது ஒர் ஆய்வுக் கட்டுரை என்றும் தொடங்கு கிறது இந்நூல். யாழ்ப்பாண மக்களிடையே இந்த நூல் ஒரு பரபரப்பை ஏற்படுத்தி விவாதத்துக்குரிய பல விஷயங் களைத் தரும் எனலாம். உச்சாணிக் கிளைகளில் இருக்கும் நமது ஆய்வறிவாளர்களும், பேராசிரியர்களும், விமர்சகர் களும்’ (நொட்டை நொடி சொல்வதில் மட்டும் நாட்ட முடையவர்களைத்தான் மனதிற் கொண்டுள்ளேன்) ஆய்வாளர் களும் இந்த சர்ச்சையில் ஈடுபடக்கூடும்.
2

கே.எஸ். சிவகுமாரன்
இவருடைய நூலில் இருந்து எனது சிற்றறிவுக்கு
எட்டிய பிரகடனங்களை இங்கு தருகிறேன். சைவ சித்தாந்தத் தின் பின்னணியில் இவர் யாழ்ப்பாணக் கலாசாரத்தைப் பார்க்கிறார்.
★
முழுமை' எனும் ஆய்வுக்குரிய குறிக்கோளை சைவ சிந்தாந்தம் கூறும் அளவையியலில் காணக்கூடியதாக இருக்கிறது. சாதாரண அனுபவம், கையாளும் காட்சி. கருதல் அளவைகளை கட்டுப்பாட்டுடன் பக்குவப் படுத்திக் காணும் முடிவுகளையே விஞ்ஞானம் கூறும் உண்மைகள் என்பார்கள். யாழ்ப்பாணக் கலாசாரம் என்பது நிறைவை அடைய
உதவும் கல்விமுறை கொண்டதாகவே இருந்தது.
விஞ்ஞானம் தரவுகளை வகைப்படுத்திக் காரண காரியத் தொடர்பைக் கொண்டு வழிகளைக் காணமுயலும். ஆனால், ஆன்மீக ரீதியான உணர்வு ஒன்றுபடச் செய்யும். இதுவே அத் தத்துவம். இரண்டறக் கலந்த நிலை. தனி மனிதன் என ஒருவன் இல்லை. உறவுகளும், செயற்பாடுகளும் சமூகத்தோடு பின்னிப் பிணைப்பதாக வேயிருக்கும். ஆகவே, சமூகத்துக்கே சதசத்து நிலை இயல்பாக உள்ளது எனலாம். இவ்வாறுதான் யாழ்ப்பாண கலாசாரத்துக்கும் தெளிவான விளக்கம் கொடுக்க முடியும்.
ஆய்வாளர்களுக்கிடையே கலகம் பிறக்குமேயானால்
நாட்டில் ஞானம் பிறக்கும்.
தமிழர் வரலாறு பல ஆயிரம் ஆண்டுகள் கொண்டது என்பதை பேரம்பலம் ரகுபதியின் திட்டவட்டமான ஆய்வுகள் நிரூபித்துவிட்டன. நாம் வாழும் மண்ணை மாற்றான் வஞ்சகமாக அபகரிக்கும் நோக்கோடு எம்மீது

Page 7
சொன்னாற்போல திணிக்க முயன்ற வரலாற்று விளக்கங்கள் பொய்ப்பிக்கப் பட்டு விட்டன.
யாழ்ப்பாணச் சமூகம் கட்டியெழுப்பிய சமூக நிறுவனங் களுக்குரிய அடிப்படைத் தத்துவமாயிருந்தது 'அன்பே சிவம்’ என்பது சிறிய பராயம் முதல் முதுமை வரை கடைப்பிடிக்கப்படும் வழமைகள். கிரியைகள் இதனை உறுதிப்படுத்தும். யாழ்ப்பாணக் கலாசாரத்தின் தத்துவப் பின்னணி என்ன? சுலோக வடிவில் அது 'அன்பே சிவம்' என்பதாகும். உழைப்பின் வேகத்தால் கட்டி எழுப்பப்பட்டுப் பேணிப் பாதுகாக்கப்பட்டது."யாழ்ப்பாண கலாசாரம்" ‘எப்பவோ முடிந்த காரியம்' முழுவதும் உண்மை’. ஒரு பொல்லாப்புமில்லை'. 'விடுவானேன். பிடிப்பா னேன்’ என்னும் யோகர் சுவாமிகளின் மகா வாக்கியங் கள் அதன் தத்துவப் பின்னணியாக இருக்கின்றன. நாம் வாழும் உலகு படைக்கப்பட்டது' என்பதே சைவசித்தாந்தத்தின் முடிவு. நாம் வாழ்வதன் அர்த்தம்/ நோக்கம் என்ன எனும் விசாரணையில் என்ன”. எவ்வாறு’ எனும் கேள்விகளோடு ஏன்' என்பதும் ஆராயப்படுகிறது. ஏன் படைக்கப்பட்டது எனும் கேள்வி வாழ்வதன் அர்த்தத்தை / நோக்கத்தை உணர வைக்கும் அனுபவத்தைப் பெறச் செய்யும். படைத்த உலகத்தில் வாழ்க்கை ஊடாக ஆணவ மலத்தின் தொழிற்பாட்டை உணரக் கூடியதாக இருக்கிறது. இதனால் வாழ்க்கை என்பதுவே பரந்த கல்வியாகிறது.
பேராசிரியர் இராமகிருஷ்ணனின் கூற்றுக்களின்
சாராம்சமாக - சத் + அசத் - சதசத்து (மனித ஆன்மா + சாதாரண வாழ்நிலை + சைவசித்தாந்தம்) என்பதும், ஒவ்வொரு தனி நபரும் தாய்வழிச் சமூகத்துடன் சம்பந்தப் படுகின்றனர் என்பதும்; வாழ்முறையின் தன்மையைத்
4-ബ

கே.எஸ். சிவகுமாரன் தலைமைத்துவம் தீர்மானிக்கிறது என்பதும், யோகர் சுவாமிகள் போன்ற சித்தர்கள் வாக்குகளும், சாமான்ய நாட்டார் கதை களும், யாழ்ப்பாணக் கலாசாரத்துக்கு உருவகங்களாக அமைகின்றன என்பதும் ஓரளவுக்கு எனக்குப் புரிந்தது. ஆயினும், இவருடைய பார்வையை நுணுகி ஆராயத் தக்கவர்கள் சைவ சித்தாந்திகளும். மெய் நெறியாளர்களும், தத்துவ / சமூகவியலாளர்களுமே.
காசிநாதன் (அவுஸ்திரேலியா), கிருஷ்ணராசா, சிவத்தம்பி, சந்திரசேகரம், சிவசேகரம் மற்றும் கொழும்புத் தமிழ்ச் சங்கப் பண்டிதர்கள். கற்றறிந்த சான்றோர். தமிழ்ப் பிரதேசங்களில் வாழும் அறிஞர்கள் போன்றோர் இவருடைய இந்த நூலை பலவகையான ஆய்வுகளுக்கும் உட்படுத்தித் தமது கருத்துக்களை வெளிப்படுத்துவது. உண்மையைத் தேடும் நமது முயற்சியில் ஒரு படி முன்னேற உதவும்.
தினக்குரல்
28, O9.2OO1

Page 8
புதிய "விமர்சகர்களும் புதுச் சிந்தனைகளும்
பழையன கழிதலும் புதியன புகுதலும் கால வழுவல“ என்ற கூற்று இயல்பு செயலைக் குறித்து நிற்கிறது.
ஈழத்து இலக்கியத் திறனாய்வுத்துறையை எடுத்துக் கொண்டால் இது அண்மைக் காலத்தில் துலாம்பரமாகத் தெரிகிறது.
கொழும்பை மையமாகக் கொண்டு பார்க்குமிடத்து குறிப்பாக நடைபெற்றுவரும் ஏராளமான நூல் அறிமுக விழாக்களை நோக்குமிடத்து இந்த மரபுவழித் திறனாய்வு முறை படிப்படியாக ஓய்ந்து வருவதை அவதானிக்க முடிகிறது. வயதில் முதியவர்களும், பராயத்தில் இளையவர் களுமான பலரின் பிரசங்கங்கள் எம்மை வியப்பிலாழ்த்து கின்றன.
பழையவர்களுள் சிலர் முன்னரே தமது திறனாய்வுப் பங்களிப்புக்களைச் செலுத்தி வந்தாலும், கடந்த சில ஆண்டுக ளுக்குள் புதிதாகத் தடம் பதித்து வருகிறார்கள்.
இவர்கள் எல்லோருமே மார்க்ஸிய விமர்சகர்கள் அல்லர். சிலர் தவிர்க்க முடியாமலே இடதுசாரிப் போக்கு டையவர்களாகவும், மார்க்ஸியத்தின் வெவ்வேறு சார்பு நிலை யிலுள்ளவர்களாகவும் இருக்கின்றனர்.
இளையவர்களுள் பலர் முன்னர் ஆயுதப் போராட்ட இயக்கங்களில் தீவிரமாகச் செயற்பட்டுப் படிப்படியாக ஜனநாயக மயப்படுத்தப்பட்டவர்களாக மாறி வருகின்றனர். வேறு சிலர் தேசியத்துக்கு அழுத்தம் கொடுப்பவர்களாக
6

கே.எஸ். சிவகுமாரன்
விளங்குகின்றனர். தீவிர வலதுசாரிகள் என்று கூற முடியா விட்டாலும் இடதுசாரிப் போக்கையும் உள்ளடக்கும் மைய நிலையில் உள்ளவர்களாக சிலர் இருந்து வருகின்றனர். இவ்வாறான விமர்சகர்கள்’ குழுவில் பெண்களின் எண்ணிக்கை குறைவாக இருப்பதையும் அவதானிக்க முடிகிறது.
அண்மைக் காலங்களில் முஹம்மது சமீம், வ. இராசையா, எம்.கே. முருகானந்தன். நீர்வை பொன்னையன், சி. சிவசேகரம், சோ. தேவராஜா. சோ. சந்திரசேகரன். சி. வன்னியகுலம், செ. யோகநாதன். செங்கை ஆழியான், மு. பொன்னம்பலம். எம்ஏ நுட்மான். சி. மெளனகுரு. சித்திரலேகா மெளனகுரு. கோபாலகிருஷ்ணன், கே.விஜயன் இன்னும் ஓரிருவர் (பெயர்கள் உடனடியாக ஞாபகத்திற்கு வரவில்லை) நெடுநாட்களாக ஈழத்துத் தமிழ் இலக்கிய உலகில் பவனி வந்தாலும் தற்சமயம் வீறுகொண்ட பங்களிப்புகளைக் கொழும்பு மேடைகளில் பிரபல்யப்படுத்தி வருவது கண்கூடு.
இவர்களைவிட மற்றொரு இளைஞர் குழாமும் தீவிரமாகச் செயற்பட்டு வருகின்றது. இவர்கள் தாம் புறக்கணிக் கப்படுவதை உணர்ந்து சலிப்படைவது போலத் தெரிகிறது. ஆயினும், சந்தர்ப்பமளிக்கப்படும் போதும் இவர்களின் புதிய சிந்தனைகளை மரபுவழித் திறனாய்வோர் அங்கீகரிக்கும் பட்சத்திலும் பொது நீரோடையில் இவர்களும் சங்கமித்து ஆக்கபூர்வமாகச் செயற்படுவர்.
ஆகவே, இந்த புதிய விமர்சகர்களை நாம் இனங் கண்டு, மதித்து, ஊக்குவிப்பது ஆரோக்கியமான நல்லுறவுக்கு வழிவகுக்கும்.
இவர்களுள் சிதம்பரப்பிள்ளை சிவகுமார். எம். பெளஸர். பாலசுப்பிரமணியம் சிவகுமார், எஸ்.கே. விக்னேஸ்வரன். ரஞ்சகுமார், ஷாகிப், ஓட்டமாவடி அறபாத், இளையதம்பி தயானந்தா, புலோலியூர் ஆ. இரத்தினவேலோன், எம். தேவ கெளரி, சூரியகுமாரி பஞ்சநாதன், வானதி காண்டீபன்.
7

Page 9
சொன்னாற்போல காண்டீபன். மதிவாணம் ஆகியோரின் பங்களிப்புகள் குறிப்பிடத்தக்கவையாய் இருக்கின்றன என்பது எனது அவதானிப்பு.
புதிய சிந்தனையாளர்கள் பழைய வரலாறுகளில் அதிக கவனம் செலுத்தி நேரத்தை விரயம் செய்வதைவிட அண்மைக் கால அரசியல், சமூகப் பிரச்சினைகளின் பின்னணியில் கலை இலக்கியத்தை அணுகுவது போல் தெரிகிறது. இவர்கள் பழையதை ஒதுக்கவில்லையாயினும் புதிய பார்வைகள் வலியுறுத்தப்பட வேண்டும் என்பதில் கண்ணும் கருத்துமாய் இருப்பதை அவதானிக்க முடிகிறது. தமக்குள்ளே வெவ்வேறு அரசியல், சமூகக் கோட்பாடுகளை அவர்கள் வரித்திருந்தா லும், பழையதைக் கீழிறக்கிப் புதியதை மகுடமேற்ற மேற் கொள்ளும் பிரயத் தனங்களில் ஒன்றுபடுவதை அவதானிக்கலாம்.
எழுத்துத்துறை மாத்திரமல்ல, வானொலி, தொலைக் காட்சி போன்ற ஊடகத்துறைகளிலும் புதிய முயற்சிகள் ஆங்காங்கே செய்யப்பட்டு வருவதை அவதானிக்கவும். வியக்கவும் முடிந்தது.
2001 ஜூன் 15 இல் மூன்றாவது மனிதன்' என்ற ஏட்டின் ஆசிரியரான எம்.பெளஸர் தொகுத்த ஈழத்து இலக்கியத்தின் சமகால ஆளுமைகளும் பதிவுகளும்’ என்ற நூல் அறிமுகம் செய்யப்பட்ட போது உரையாற்றிய சிதம்பரப்பிள்ளை சிவ குமாரின் பேச்சும், எம். பெளஸரின் பேச்சும் மிக கனதியாகவும். ஏற்றுக் கொள்ளத்தக்கவையாகவும் இருந்ததை அவதானித்து வியந்தேன். அதுபோல ஒருபொறியியலாளரும். நல்ல சிறு கதை எழுத்தாளருமான எஸ்.கே. விக்னேஸ்வரன் திறனாய்வு அணுகுமுறை மரபையும், புதிய சிந்தனையையும் தழுவிச் சென்றதை அவதானித்தேன்.
இலங்கை வானொலி நடத்திய மெல்லிசை வானொலி நாடக விழாவிலும் பல புதிய பார்வை கொண்ட அதே வேளையில் வரலாற்றுச் செய்திகளைத் திரட்டக் கூடிய
8

கே.எஸ். சிவகுமாரன் ஆர்வலர்கள் இருப்பதையும் அறிந்து கொள்ள முடிந்தது. வேதநாயகம். நடராஜசிவம், அருணா செல்லத்துரை. இரா. பத்மநாதன், வி.ஏ. திருஞானசுந்தரம், ராமச்சந்திரன். ராமதாஸ் போன்றோர் பல தகவல்களையும் தரவுகளையும் வழங்கினர். வானொலிக் கலைஞர்களின் பங்களிப்புக்களை ஆவணப்படுத்த இக்கூடல்கள் உதவின. அருந்ததி யூரீரங்கநாதனுக்குப் பாராட்டுகள்.
அண்மைக்காலங்களில் திறனாய்வு சம்பந்தப்பட்ட நூல்கள் சில வெளிவருகின்றன. எம்.ஏ. நுஃமான், சி. சிவ சேகரம், கிருஷ்ணராஜா. கே.எஸ். சிவகுமாரன். துரை மனோகரன். கா. அருணாசலம், ந. சுப்பிரமணியம், ஆ. இரத்தினவேலோன். மு. பொன்னம்பலம், முஹம்மது சமீம், சி. வன்னியகுலம் போன்றோர் "திறனாய்வு" "விமர்சனம்” போன்ற தலைப்புகளுடன் கூடிய புத்தகங்களைத் தந்துள்ளனர். இவற்றையெல்லாம் நமது இளைய வாசகர்கள் படித்துப் பார்க்க வேண்டும்.
திறனாய்வுத்துறையில் ஈடுபட்டு வரும் வெவ்வேறு பல்கலைக்கழகங்களின் பேராசிரியர்கள். விரிவுரையாளர்களின் பங்களிப்புகளும், ஆக்க இலக்கியப் படைப்பாளிகளாகவும் பத்தி எழுத்தாளர்களாகவும் இருந்து வரும் தெளிவத்தை ஜோசப், கே.எஸ். சிவகுமாரன். உமா வரதராஜன், மானா மக்கின் போன்றவர்களும் முன்னர் தமது பங்களிப்புகள் மூலம் பெரும் பணி புரிந்த பத்தி எழுத்தாளர்களின் பங்களிப்புக் களும் இங்கு நினைவு கூரத்தக்கவை. சில்லையூர் செல்வ ராஜன், ஈழத்துச் சோமு (சோமகாந்தன்). எஸ்தி (எஸ். திருச் செல்வம்) எச்.எம்.பி முகைதீன். சிற்பி சிவசரவணபவன். பாமா ராஜகோபால் போன்றோரின் பெயர்கள் நினைவுக்கு வருகின்றன.
இவர்களை விட, வட-கிழக்கு மாகாணங்களில் செயற் படும் திறனாய்வாளர்களின் பங்களிப்புகளும் கவனிக்கத் தக்கவை. இவர்களின் பங்களிப்புகள் பற்றிய போதிய

Page 10
சொன்னாற்போல விபரங்கள் தெரியாமலிருந்து வருகின்றன. அன்புமணியின் பெயர் குறிப்பிடத்தக்கது. இவர் ஒரு நல்ல திறனாய்வாளரும் gn.
தமிழ் இலக்கியம் தொடர்பாக ஆங்கிலத்தில் எழுதியுள்ள ஏ.ஜே. கனகரத்னா. கே.எஸ். சிவகுமாரன், செல்வநாயகம் கனகநாயகம், சுரேஷ் கனகராஜா. ஆ. தேவராஜன், செல்லத் தம்பி மாணிக்கவாசகர் போன்றவர்களின் பங்களிப்புக்களும் கவனத்திற்கு எடுத்துக் கொள்ளப்பட வேண்டியவை.
திறனாய்வுத்துறை புதிய பரிமாணங்கள் கொண்டு வளர வேண்டிய தேவை இப்பொழுது ஏற்பட்டுள்ளது.
தினக்குரல் 23-O7-2OO1.

பூடகமற்ற பதிவுகள்
கிர TLD சேவையாளரும், எழுத்தாளரும். பரோபகாரி யுமான கனகசபை-தேவகடாட்சம் எழுதிய புதிய புத்தகம் "குருதிமண்" இவர் கிழக்கிலங்கையிலுள்ள மல்லிகைத் தீவில் பிறந்து திருகோணமலை உவர்மலையிைல் வசிப்பவர். இவருடைய முன்னைய சிறுகதைத் தொகுப்புகள் "காலக் கீறல்கள்" "குமுறல்கள்" பழகுவதற்கும், பண்பாளரான இவர், தன்னலம் கருதாது பிறர் நலன் கருதித் தனது புத்தக விற்பனை மூலம் பெறும் பணம் அனைத்தையும் தரும நிறுவனங்களுக்கு வழங்கி முன்மாதிரியாக விளங்குகிறார். இவ்விதம் எல்லோராலும் நடந்துகொள்ள முடியாதிருக்கிறது.
தேவகடாட்சம் ஆக்க இலக்கியத்தில் ஈடுபடும் போது கூட அதன் கலைப்பண்புகளுக்கு அதிக அக்கறை காட்டாது யதார்த்த வாழ்வில் மக்கள் அடைந்துவரும் துன்பங்களை நேரிடையாகவே செய்தியாளர் போன்று பதிவு செய்து விடுகிறார். இது அவர் நெஞ்சுக்கு நேர்மையாய் நடந்து கொள்வதைக் காட்டி விடுகிறது.
ஆயினும், இலக்கிய வகைகள் என்று வரும் போது அவற்றின் உள்ளார்ந்த கட்டமைப்புகளுக்கும் வளைந்து அல்லது இசைவாக எழுத வேண்டியாகிறது. உதாரணமாகச் சிறுகதை ஒரு கலை என்பர். இந்த வடிவத்தில் நமது நாட்டில் பல நூற்றுக்கணக்கானோர் கதைகள் எழுதினாலும், ஒரு சிலரின் கதைகளே உள்ளடக்கத்திலும், உருவக் கட்டமைப்பிலும் சிறந்து விளங்குகின்றன. தேர்ச்சியும், செய்திறனும் எல்லாக் கதைகளிலுமுண்டு என்று சொல்ல முடியாததனாற்றான், ஓரிருவரின் பெயர்கள் மாத்திரம் பட்டியல்களில் சேர்க்கப் படுகின்றன.

Page 11
சொன்னாற்போல வெறுமனே உள்ளடக்க முக்கியத்துவத்துக்காகவோ, வெறுமனே உருவ நேர்த்திக்காகவோ எந்தவொரு கதையும் பாராட்டப்பட்ட காலம் ஒன்றிருந்தது. ஊக்கப்படுத்த வேண்டும், சமூகப் பிரக்ஞையை வளர்க்க, ஆதரவு வழங்க வேண்டும். சமூக சமநீதி இருத்தலை வலியுறுத்த உற்சாகப்படுத்தப்பட வேண்டும் என்ற நோக்கங்கங்களுக்காக நமது எழுத்தாளர் களின் சிறுகதைகளை நமது திறனாய்வாளர்களும், ஏன் குற்றங்குறைகளை மாத்திரம் சுட்டிக் காட்டும் "விமர்சகர்"களும் பாராட்டி வந்துள்ளனர். இருந்த போதிலும் எமது எழுத்தாளர். களின் படைப்புகளை உலக தரத்தின் அடிப்படையில் அணுகுவது இப்பொழுது தவிர்க்க முடியாத ஒன்று.
சென்னையில் இந்த நூல் வெளியாகியது.
"இம்மண்ணிலே மண்ணிற்காய் மரணித்த மானுடங் களுக்கு இந்நூல் படையலாகிறது” என்று ஆசிரியர் அர்ப்பணம் செய்கிறார்.
"குருதி மண்ணுக்கு" அணிந்துரை எழுதிய இளம்பிறை எம்.ஏ. ரஹற்மான் இவ்வாறு குறிப்பிடுகிறார். “சிறுகதை இலக்கணம் என்ன, அதில் இன்று புழக்கத்தில் உள்ள இசங்கள் என்ன என்ற சித்தாந்த விவகாரங்களில் சிக்காது. யுத்தக் களத்தில் எது அவசியமோ, அதை அங்கு மரபுக் குறுக்கீடுகள் இல்லாது அவசர நிவாரணமே முக்கியம் என்ற கோணத்தில் சிறுகதை இலக்கியப் பணியில் களமாய் இறங்கியுள்ளார் ஆசிரியர்.”
"கதைகளில் பெரும்பாலும் சிறுவர் கல்வி கற்றலின் பயன், ஆசிரியர் பணியின் புனிதம், கல்வியற்ற சிறுவரின் உளவியல் பாங்கு. இனவேற்றுமையிலும் மனிதநேயம் ஆகிய வற்றில் கவனஞ் செலுத்திக் கதைகள் பின்னப்பட்டுள்ளன.” இக்கதைப் புத்தகத்தின் உள்ளடக்கத்தை மேற்கூற்று ஓரளவு காட்டிவிடுகிறது. ஆசிரியர் கூற்றும் கவனிக்கத்தக்கது.
"இந்நாட்டின் அடக்கு முறைகளின் தாக்கங்களை உள்வாங்கி, அதனால் பாதிக்கப்படுகின்ற மக்களுக்கு
2

கே.எஸ். சிவகுமாரன் பரிகாரங்கள் அவசியம் என உணர்ந்தவர்கள் அதிகம் எம்மிடையே உள்ளார்கள் என்பது என் கருத்துக் கணிப்பு" இத் தொகுப்பில் 18 சின்னச்சின்னக் கதைகள் இருக்கின்றன. வாசிப்புக்குத் தடங்கல் ஏற்படாது. ஆயினும், "சிறுகதை ஒரு கலை” என்று பார்க்குமிடத்து, சில கதைகள் மேலும் செப்பனிடப்பட்டிருக்கலாம் என்று தோன்றுகிறது. அதேவேளையில் வடக்கு, கிழக்குப் பகுதிகளில் மனுக்குலம் எதிர்நோக்கும் பற்பல சீரழிவுகளைப் பதிவு செய்வதன் மூலம் எம்மை ஆத்திரங் கொள்ளச் செய்கிறார். அநீதி கண்டு சீறியெழ அவர் எழுத்து மெதுவாகத் தூண்டுகிறது. அது ஒரு வெற்றியே. எழுத எழுத கனகசபை தேவகாடாட்சம் சிறந்த சிறுகதை எழுத்து வல்லுநராக மாறிவிடுவார் என்பதில் எந்தவி சந்தேகமும் கிடையாது.
தினக்குரல் O5-1O-2OO1.

Page 12
இலக்கிய வகைமை ஒப்பாய்வு
"இலக்கிய வகைமை ஒப்பாய்வு' என்ற தலைப்பில் ஒரு புத்தகம். GENRE (ஜ்ஷொணர்) என்ற பிரெஞ்சுமொழி வார்த்தை ஆங்கிலத்திலும் பயன்படுத்தப்படுகிறது. இலக்கிய வகையை (உதாரணமாக தன்னுணர்ச்சிப் பாடல், காவியம், நாவல், சிறுகதை, இத்யாதி) இது குறிக்கும். தமிழ் நாட்டிலுள்ள பேராசிரியர் கி இராசா இதனை இலக்கி
வகைமை என்கிறார். *
மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் தமிழ் ஆய்வுத்துறைப் பேராசிரியராக விளங்கிய கே.ராஜா (தமிழில் கி. இராசா என்கிறார்) 17 வருடங்களுக்கு முன் எழுதிய இந்தப் புத்தகம் கிரேக்க இலக்கியம் தொடர்பான சில செய்திகளைத் தமிழில் அறிந்துகொள்ள வகை செய்கிறது. தமிழ் / கிரேக்க இலக்கிய வகைகளை ஒப்பீடு செய்கிறது இந்நூல்.
பத்து இயல்கள் இதில் அடங்கியுள்ளன. அவையாவன: வகைமை இலக்கியம், வகைமை இலக்கிய ஆய்வு, வீர நிலைக்காலப் பாடல்கள், அறநெறிப் பாடல்கள். தன் னுணர்ச்சிப் பாடல்கள், நாடகப் பாடல்கள். வரலாறு, தத்துவம், சொற்போர் இலக்கியம், முல்லைப் பாடல்கள், கிரேக்க இலக்கியம், நாடகம் போன்றவை பற்றிய பல விபரங்களை இந்நூல் திரட்டித் தருகிறது.
"சொன்னாற் போல” என்ற இந்தப் பத்தியில் தவிர்க்க முடியாமல் என்னைப் பற்றியும் சொல்ல நேர்ந்திருக்கிறது. தன்னடக்கம் இன்றிச் சுயபுராணமாய் இது இருக்கின்றது என நம்மில் சிலர் நினைக்கக்கூடும். ஆனால், என்ன செய்வது வரலாற்றில் இருட்டடிப்புச் செய்யப்படும் பொழுது, நாமே
4

கே.எஸ். சிவகுமாரன் நமது சுயவிபரத்தைப் பொருத்தமறிந்து சொல்வதில் தப்பில்லை என நினைக்கிறேன். நீங்கள் என்ன சொல்கிறீர்கள்.
وو
வீரகேசரி வாரவெளியீட்டில் “சாளரக் காட்சிகள் என்றொரு பத்தியைப் பல வருடங்களுக்கு முன் எழுதி வந்தேன். அதிலே, கிரேக்க நாடகங்கள். இலக்கியம் போன்றவை பற்றிய சில தகவல்கள், திறனாய்வுக் குறிப்புகளைத் தந்திருந்தேன். இதனை வரவேற்று "சொக்கன்" போன்ற முக்கிய எழுத்தாளர்கள் பாராட்டியிருந்தனர். எனது Lilljuquilds 35T35 Western Classical Culture (GLD606)& செவ்வியல் பண்பாடு) என்ற பாடத்தையும் ஆங்கிலம், தமிழுடன் படிக்க நேர்ந்தது. கிரேக்க / ரோமப் பண்பாட்டுக் கோலங்கள் இப்பாடம் மூலம் நான் படித்து இன்புற்று அறிய வகை செய்தது.
இனி "ஒப்பிலக்கிய ஆய்வு" (பக்.10) பற்றி கி இராசா என்ன சொல்கிறார் என்று பார்ப்போம்.
"வகைமை இலக்கிய ஆய்வென்பது ஒப்பிலக்கிய ஆய்வின் ஒரு பகுதியாகும். இலக்கியங்களின் தோற்றம், வளர்ச்சி, மலர்ச்சி, தளர்ச்சி போன்ற பல்வேறு படிநிலைகளை இலக்கிய வகைமைகள் காட்டுகின்றன. எனவே வகைமை இலக்கிய ஆய்வு, இலக்கிய வரலாற்று ஆய்வாக முடிகின்றது. இலக்கிய வரலாற்றை நேடியாக ஆய்வு செய்வதற்கும். வகைமை இலக்கிய ஆய்வின் மூலம் இலக்கிய வரலாற்றை அறிவதற்கும் வேறுபாடு உள்ளது.
"இலக்கிய வரலாற்று ஆய்வு என்பது, இலக்கிய ஆசிரியரின் பெயர், காலம், வரலாறு, நூல் முதலிய பொருள் என்பவற்றை பட்டியலிட்டுக் காட்டும் பொறிமுறை ஆய்வாகும். வகைமை இலக்கிய ஆய்வு என்பது இலக்கியத்தின் வளர்நிலைகளைச் சூழல் முதலியவற்றோடு அடியொற்றிப் புலப்படுத்தும் அறிவியல் ஆய்வாகும்.”
தினக்குரல்
O5-1O-2OO1
5

Page 13
ஒரு படைப்பாளியின் பத்திஎழுத்துக்கள் - அசோகமித்திரன்
"என் பயணம்” என்றொரு அருமையான புத்தகம் (என்னளவில்) 1988 இல் வெளியாகியது. நல்ல புத்தகங் களைத் தேடிப் படிக்கும் உங்களிற் சிலர் இதனை ஏற்கனவே படித்திருப்பீர்கள். ஏனையவர்கள்-எழுத்தாளர்கள், திறனாய் வாளர்கள். விமர்சகர்கள் (கண்டனக்காரர்). ஆராய்ச்சி யாளர்கள். ஆய்வறிவாளர்கள் (intelectuals). ஊடகத்துறை யினர் குறிப்பாகப் புதிதாக எழுத்துலகத்துள் நுழைய விரும்பும் "இளசுகள் கட்டாயம் இந்த நூலை ஒரு முறையாகுதல் படித்துப் பார்த்துவிட்டுத் தள்ளுவதைத் தள்ளிக் கொள்ளு வதைக் கொள்ள வேண்டும்.
சொன்னாற் போல அவர் பெயரை நான் இன்னமும் கூறவில்லையா? அவர்தான் அசோகமித்திரன்’ (ஐ. தியாக ராஜன்), முன்னரும் ஒருமுறை அவர் பற்றி இப்பத்தியில் எழுதியிருந்தேன் அல்லவா? சரி. அப்படி என்ன விஷேசம் இப்புத்தகத்தில்?
நேர்மை, எளிமை. பாசாங்கின்மை, பல்துறையறிவுத் திரட்டு, பரவலான அனுபவ வீச்சுப் பதிவுகள், பயண அனுபவங்கள், திரைப்படப் பார்வைகள், ஆழமான இலக்கிய நுண்மான் நுழைபுலம், இப்படிப் பல. நீங்களே உங்கள் தெரிவுகளைச் செய்து கொள்ளுங்கள்.
1971-1987 காலப்பகுதியில் அசோகமித்திரன் எழுதிய பத்திகளின் தேர்ந்தெடுக்கப்பட்ட 18 கட்டுரைகள் இடம் பெற்றுள்ளன. அத்துடன் "18 ஆவது அட்சரக் கோட்டில்” என்ற அவருடைய பிரசித்தி பெற்ற 53 பக்கக் கட்டுரை. "மரணச் சக்கரம்” என்ற கதை. "பிரயாணம்” என்ற அவரது கதை பற்றிய அவருடைய விளக்கம் அவரது "இனி வேண்டிய
l6-ബ

தில்லை” என்ற கதையில் தனக்குப் பிடித்த கதை மாந்தர் பற்றிய விளக்கம் ஆகியனவும் இடம்பெறுகின்றன.
இவை தவிர. எனக்குப் பிடித்த முக்கியமான அம்சம் இவர் அளித்துள்ள நேர்காணல்கள். சுவையான கேள்விகள்சுவையான பதில்கள். அப்பப்பா பத்தி எழுத்துக்களை "ஆழமில்லை" என்று ஒதுக்கி விடுபவர்கள் சற்று சிந்திக்க! "ஒரு கலந்துரையாடல்” 1980 இல் "புதிய நம்பிக்கை” என்ற சிறு சஞ்சிகைக்கு வழங்கிய பேட்டி, "தினகரன் வாரமஞ்சரி”க்கு (1977) என அவர் நமது எழுத்தாளர் சாந்தனுக்கு வழங்கிய பேட்டி, 1985 இல் இலங்கைத் தமிழ் மாணவன் ஒருவரிடம் உரையாடிய பதிவு, கவிஞர் நா. காம ராசனுடன் பேட்டி ஆகியன இந்நூலில் சேர்க்கப்பட்டுள்ளன. "ஈழத்துத் தமிழிலக்கியத்தின் போக்கையும், வளர்ச்சியை யும் பற்றித் தங்கள் அபிப்பிராயம் என்ன?” என்ற சாந்தனின் கேள்விக்கு (பக்கம் 176) அசோகமித்திரனின் பதில் இதோ: "நான் பங்குபெறும் கணையாழி" பத்திரிகையில் ஈழத்து எழுத்தாளர்கள் நுட்மான், இரத்னசபாபதி ஐயர், சாந்தன். யேசுராசா. இராசரத்தினம், திக்குவல்லை கமால், பெ. மனோகரன் போன்றோருடைய படைப்புகள் பிரசுரிக்கப்பெற்று. அவை தென்னிந்தியர்களிடையே நல்ல கவனம் பெற்றன. நுட்மானின் சதுப்புநிலம்' என்னும் சிறுகதையும், யேசுராசாவின் கவிதைகளும், சமீபத்தில் சாந்தனின் நீக்கல்கள்’ என்னும் சிறுகதை - இவையெல்லாம் என்னிடம் விசேஷமாக நல்ல அபிப்பிராயம் ஏற்படுத்தின.”
"கைலாசபதியின் தமிழ் நாவல் இலக்கியம்' என்னும் நூல் என்னிடமும் இந்தியத் தமிழ்ப் படைப்பாளிகளிடமும் மிகுந்த பாதிப்பு ஏற்படுத்தியது. சென்னை வாசகர் வட்டம் வெளியிட்ட "அக்கரை இலக்கிய" தொகுப்பு மூலம் இலங்கைப் பகுதி மிகவும் ஆழமான கவனம் பெற்றது. "கணேசலிங்கனின் படைப்புகள் மற்றும் முருகையன், கே.எஸ். சிவகுமாரன், தர்மு சிவராமு, மஹாகவி, தளையசிங்கம் இவர்களெல்லாம் எனக்கு அறிமுகமானவர்கள். என்னுடைய
7.

Page 14
சொன்னாற்போல இலங்கைத் தமிழ் இலக்கியப் பரிச்சயம் இன்னமும் பரவலாக வும் இருந்தால் நலமாயிருக்கும்"
சொன்னாற் போல, அசோகமித்திரன் மூன்று நான்கு தடவை இலங்கை வந்து போயிருக்கிறார். நாம் தான் அவரைப் போதிய அளவு அறிந்து வைத்திருக்கவில்லை.
பத்திரிகைத் துறையில் ஈடுபட்டுப் பத்திரிகைக் காரியாலயங் களில் பணி புரிபவர்கள் ஒரு தடவை அசோகமித்திரனின் 'சுதேசமித்திரன்" மற்றும் சில கட்டுரைகளைப் படித்துப் பாருங்கள். அனுபவம் பேசுகிறது.
தினக்குரல்
17-O9-2OO1
18 ബി

மீரா நாயர் படங்கள்
சொன்னாற் போல, மற்றொரு இந்தியர் அனைத் துலகத் திரைப்பட விழாவில் உச்ச விருதைப் பெற்றுள்ளார். இவர் இந்தியாவில் பிறந்து (கேரளம்) நியூயோர்க்கில் வாழும் மீரா நாயர் தான். நீங்கள் ஏற்கனவே இவரைப் பற்றி யறிந்திருப்பதுடன், இவருடைய படங்களைப் பார்த்து மிருப்பீர்கள்.
சலாம் பொம்பே (1988) தொடக்கம் மிஸிஸிப்பி மசாலா (1992), த.பெரேஸ் பெமிலி (1995), காமசூத்ரா (1997), மை ஒன் கன்றி (1998) ஊடாக இப்பொழுது “மொன்ஸன் உவெடிங்" வரை இவர் உலகத் திரைப்பட விழாக்களில் கொடி கட்டிப் பறக்கிறார்.
“பெரஸ் குடும்பம்" "எனது சொந்த நாடு" "பருவக் காற்றுக் கல்யாணம்” என்று தமிழில் அழைக்கக் கூடிய மேற் சொன்னவற்றுள் காணப்படும் மூன்று படங்களையும் இதுவரை நான் பார்க்கவில்லை. கடைசியாகக் குறிப்பிடப்பட்ட படத்தை ஒருவேளை எதிர்வரும் அனைத்துலகத் திரைப்பட விழாவில் பார்த்தாலும் பார்க்கலாம். சொன்னாற்போல, இந்த விழா 2001 ஒக்டோபர் 10 முதல் 20 வரை தென்னிந்திய சுவாத்திய அழகு நகரமாகிய பெங்களுரில் நடைபெறுகிறது.
இம்மாதம் முதல் வாரத்தில் இத்தாலிய நகரமாகிய வெனிஸில் நடைபெற்ற அனைத்துலகத் திரைப்பட விழாவில் மீரா நாயரின் "பருவக்காற்று கல்யாணம்" தங்கச் சிங்க விருதைப் பெற்றிருப்பது பாராட்டுக்குரியதே. மீரா நாயர் தமது 'சலாம் பொம்பே' மூலம் 1980 களின் இறுதிக் கூற்றில் சிறிது சலசலப்பை ஏற்படுத்தினார். ஓரளவு சமூகப் பார்வை இப் படத்திலிருந்த போதிலும், படம் எடுக்கப்பட்ட முறையில்
--- - 19.

Page 15
சொன்னாற்போல முதிர்ச்சியின்மை காணப்பட்டது. இந்தப் படத்தைவிடச் சிறப்பாக மும்பாய் வாழ்க்கையை (சேரி மக்களது) சாய் பரான்ஜி என்ற மற்றொரு பெண் நெறியாளர் தந்திருக்கிறார்.
"மிஸிஸிப்பி மசாலா" இந்தியர்களின் (அமெரிக்காவில் வாழ்பவர்களின்) குடிபெயர் வாழ்வை யதார்த்தம் குன்றிய கலவையாகக் காட்டியது.
“காமசூத்ரா” ஆபாசமின்றி அழகியல் ரீதியாக தொன்மைப் படிமங்களுடன் காட்டி நின்றது.
"பருவக்காற்றுக் கல்யாணம்” குடும்பத்தினரிடையே நடக்கக்கூடிய தகாத உடலுறவு பற்றியும் சித்திரிக்கிறது என்று சி.என்.என். செய்தியாளர் குறிப்பிட்டார். நாமும் அது அப்படியா? என்று விரைவில் பார்த்து விடலாம்.
சொன்னாற்போல, "படிமம்” (Images) என்ற சொல்லை உபயோகித்த பொழுது, 2001 ஒக்டோபர் ஏழாம் திகதி "அசையும் படிமங்கள்” (The Moving images) என்ற தலைப்பில் திரைப்படத் திறனாய்வு பற்றியும் திரைப்பட நுணுக்கங்கள் பற்றியும் அறிமுகம் செய்யும் ஒரு புத்தகம், வெள்ளவத்தை கொழும்பு தமிழ்ச் சங்கத்தில் விற்பனையாக இருக்கிறது. விடியோ படங்களைத் தயாரிப்பவர்கள் திரைப்படத் தொழிலில் புதிதாக ஈடுபட விரும்புபவர்கள், ஊடகவியலாளர்களுக்கும் கூட இந்தப் புத்தகம் பெரிதும் பயனளிக்கும் என்று எதிர் பார்க்கப்படுகிறது.
இந்த நூல் கொழும்பு மீரா பதிப்பகத்தினரின் 25 ஆவது நூலாக வெளிவருகிறது. இதனை எழுதியவர் உங்களுக்குத் தெரிந்த ஒர் ஊடகவியலாளர்தான்.
தினக்குரல் 17-O9-2OO1

தமிழில் அறிந்திருக்க வேண்டியவை - மூன்றாவது கண்
பரமசிவனுக்கு மூன்றாவது கண் உண்டென்பர். கிரேக்கக் கடவுள் ஸியஸ் (Zeus) நெற்றிக் கண்ணன் என்பர். மூன்றாவது மனிதன் என்றொரு கலை இலக்கியச் சஞ்சிகையும் கொழும்பில் வெளியாகி வருகிறது.
மூன்றாவது மனிதன் என்ற பெயரில் ஓர் அருமையான ஆங்கிலப் படமும் பல தசாப்தங்களுக்கு முன்னர் வெளி வந்திருந்தது. அப்படத்தை இயக்கியதுடன் நடித்துமிருப்பவர் தலை சிறந்த நாடக, திரைப்பட நடிகரான ஓர்ஸன் உவெலஸ். இவர் உயிருடன் இப்பொழுது இல்லை. இந்தப் படம் ஒரு மர்மப் படம். விறுவிறுப்பான திகிலூட்டும் படம் நிலத்தின் கீழுள்ள வடிகால் குழாயினுள் முக்கிய கதை மாந்தர் உயிருக்குத் தப்பி மறைந்திருக்கும் சூழலில் திகிலூட்டும் சம்பவங்கள் இடம்பெறுகின்றன. இந்தப் படத்தின் சிறப்பம்சங்களில் ஒன்று ஸிதர் (Zither) என்ற வாத்தியக் கருவி மூலம் எழுப்பப்படும் விறுவிறுப்பான இசை
மூன்றாவது மனிதன் கதை மாந்தர் போலவே மற்று மொரு மறக்க முடியாத கதை மாந்தரை அதே அடித்தளச் சூழலில் பிரபல அமெரிக்க எழுத்தாளர் ரால்ப் எலிஸன் எழுதியிருக்கிறார். இந்த நாவலைப் பல்கலைக்கழகப் பட்டதாரிப் படிப்புக்காக நான் படித்துச் சுவைத்தேன்.
சொன்னாற்போல, இந்த விபரங்கள் என் மனத்திரையில் எழுந்தமைக்கான காரணம் 3 ஆவது கண் என்ற தலைப்பிலான ஒரு தமிழ்ப் புத்தகத்தை நான் படித்துப் பார்க்கையில் எழுந்த நினைவலைகள் தாம்.
.ത്ത 21

Page 16
சொன்னாற்போல
3வது கண்’ என்ற தலைப்பை 3 ஆவது கண்' என்று கொடுத்திருந்தால் உச்சரிக்க வசதியாய் இருந்திருக்கும். இது ஒரு தமிழாக்க நூல். பத்மா சிவகுருநாதன் (இவர் முன்னரும் அருமையாகத் தமிழாக்கம் செய்து சில கட்டுரைகளை எழுதியிருக்கிறார். இவருடன் மோஹ(க)னா பிரபாகரன். பின்னையவரே பதிப்பாசிரியருமாவார். புத்தகத்தின் அட்டையில் சில பூனைகளின் சித்திரங்கள் வரையப் பட்டுள்ளன. 'கட்ஸ் ஐ பிரசுரத்தினர் இதனை வெளி யிட்டுள்ளனர். இவர்களுடைய முகவரி: 425/15, திம்பிரி கஸ்யாய வீதி, கொழும்பு-05. இதனை 2 கின்ஸி ரெறஸ், கொழும்பு-08 முகவரியிலிருந்தும் பெற்றுக் கொள்ளலாம். விலை குறிப்பிடப்படவில்லை. இந்த நிறுவனத்தினர் வேறு சில தமிழாக்கங்களையும் தந்துள்ளனர். இவை ஆய்வறிவு சார்ந்த நூல்கள். இவையாவன: இலங்கையில் பெண்கள் உரிமைக்காக உழைத்த கனேடியப் பெண்ணான "டொக்டர் மேரி ரத்னம்' பற்றி கலாநிதி குமாரி ஜயவர்தன எழுதிய ஆங்கில நூலின் தமிழாக்கம்.
பெண்கள் உரிமைகளை மனித உரிமைகளாக அங்கீ கரித்தல் தொடர்பாக சார்லட் பஞ்ச் எழுதிய மனித உரிமைகள் பற்றிய ஒர் மீள்பார்வை நோக்கி’ என்ற நூலின் தமிழாக்கம்.
றொக்ஸானா காரியோ எழுதிய “பெண்களுக்கெதிரான வன்முறை அபிவிருத்திக்கு ஓர் தடை” என்ற நூலின் தமிழாக்கம்.
டெலரின் ப்ரோஹியர் எழுதிய "வைத்திய கலாநிதி அலிஸ் டி புவரும் முன்னோடிகளான சில பேகர் பெண் மருத்துவர்களும்” என்ற ஆங்கில நூலின் தமிழாக்கம்.
கம்லா பாஸின் எழுதிய "ஆண் தலைமை ஆட்சி என்றால் என்ன?” என்ற நூலின் தமிழாக்கம். (புஷ்பா சிவகுமாரன்)
கலாநிதி குமாரி ஜயவர்தன எழுதிய “பெண்ணிலை வாதமும் பேரினவாதமும்"

கே.எஸ். சிவகுமாரன்
கம்லா பாஸின் எழுதிய "ஆண் என்றால் என்ன? பெண் என்றால் என்ன?” என்ற நூலின் தமிழாக்கம்.
"3 ஆவது கண்” என்ற நூல் "சமகால விவகாரங்களில் பெண்ணியலாளர்களின் கண்ணோட்டம்" என்று வெளியீட்டாளர் கள் குறிப்பிட்டுள்ளனர். "Cats Eye" ஆங்கில கட்டுரைகளில் தெரிவு செய்யப்பட்ட கட்டுரைகளின் தமிழாக்கம் இந்நூலில் அடங்கியவை.
வரவேற்கத்தக்க, தமிழ் வாசகர்கள் நிச்சயம் படித்தறிய வேண்டிய பல கட்டுரைகள் அடங்கிய இத்தொகுப்பைப் பதிப்பித்தமைக்காக மோஹனா பிரபாகரன் பாராட்டுக்குரிய வராகிறார்.
"துணிகர எழுத்தாளர்களும், மெய் சிலிர்க்க வைக்கும் கவிஞர்களுமான" பின்வருபவர்களின் நினைவாக இந்நூல் வெளியிடப்பட்டுள்ளது.
செரீனா தென்னக்கோன், ரஜினி திரணகம (இவர் சிங்களவரை மணந்த தமிழ்ப் பேராசிரியை, கொல்லப்பட்டவர்), லீனா ஹபுதந்ரி, பத்மினி பள்ளியகுரு, சிவரமணி (கவிஞர். உயிர் நீத்தவர்). செல்வநிதி தியாகராஜா (விபரம் தெரியவில்லை).
இலங்கையில் "தி ஐலண்ட்” என்றொரு ஆங்கில நாளிதழ் வெளிவந்து கொண்டிருப்பதை உங்களிற் சிலர் அறிந்திருக்க மாட்டீர்கள். இதை ஏன் கூறுகிறேன் என்றால் பெரும்பாலான இன்றைய இளைய சமுதாயத்தினர் படிப்பது. வாசிப்பது குறைவு. அதுவும் ஆங்கிலப் பத்திரிகைகள் என்றால் தொட்டுமே பார்க்க மாட்டார்கள். அவ்வளவு துடக்கு மனப் பான்மை சரி. இந்த ஆங்கிலப் பத்திரிகை திவயின’ என்ற சிங்களப் பத்திரிகையின் நிறுவனத்தினரான உபாலி நியூஸ் பேப்பர்ஸ் லிமிட்டெட்டினால் பிரசுரிக்கப்படுகிறது. தினக்குரல் சில வேளைகளில் சிங்களப் பத்திரிகைகளின் ஆசிரியத் தலையங்கப் பொழிப்புக்களைத் தருகிறது. அவற்றைப் படித்திருப்பீர்களாயின் சிங்கள இனவெறியையும். தமிழ்
-ത്ത 23

Page 17
சொன்னாற்போல
துஷேசத்தையும் திவயின’ வெளிப்படுத்துவதை நீங்கள் அவதானித்திருப்பீர்கள்.
தி ஐலண்ட்’ நாளிதழில் 1985-1991 காலப் பகுதியில் சிறப்புச் சித்திராம்ச பகுதியின் ஆசிரியராக நான் பணி புரிந்த அனுபவம் உண்டு.
தி ஐலண்ட்’ பத்திரிகையில் "Cats Eye" என்றொரு பத்தி கடந்த ஐந்து ஆண்டுகளாகப் பல ஆய்வறிவு சார்ந்த வாசகர்களின் நன்மதிப்பைப் பெற்ற ஓர் எழுத்துக் கோவை யாகும். பல பெண்ணியவாதிகள் கூட்டாகச் சிந்தித்தும். சில வேளை தனியொருவரின் சிந்தனையாகவும் வெளிப்படும் எழுத்து இது. கலாநிதிகள் குமாரி ஜயவர்தன. ராதிகா குமாரசாமி, நெலூபர் டி மெல், செல்வி திருச்சந்திரன் போன்றோர் இதில் சம்பந்தப்பட்ட பெண்ணியவாதிகளாவர். அநேகமாக நெலூபர் டி மெல் (இவர் கொழும்புப் பல்கலைக் கழகத்தில் ஓர் ஆங்கில விரிவுரையாளராவார்) இப்பத்திகளை எழுதுவார். என்னிடம் இதனை அவர் ஒரு முறை கூறி யிருந்தார்.
கடந்த ஈராண்டு காலமாக வெளிவந்த பத்திகளில் சிலவற்றை மாத்திரம் தேர்ந்து, "தினக்குரல்" "இவள்-சக்தி பக்கத்தில் மூன்றாவது கண் என்ற தலைப்பில் சில கட்டுரைகள் வெளிவந்து கொண்டிருக்கின்றன என்றும். "கூர்விழி” என்ற தலைப்பில் "வீரகேசரி"யில் சில கட்டுரைகள் வெளிவந்தன என்றும் மோஹனா பிரபாகரன் தெரிவிக்கிறார்.
இந்தப் புத்தகத்தில் ஆறு அதிகாரங்கள் உள்ளன. "மதமும் பெண்களும், உழைக்கும் பெண்கள், பெண்களும் உரிமைகளும், பெண் என்ற பால் நிலையும் உயிர் துடிக்கும் இம்சைகளும், பெண்களும் அரசியலும், பெண் சாதனை யாளர்கள்” ஆகியன இவை.
இவற்றுள்ளே நான் முதலில் படித்துப் பார்த்தவற்றுள் சில தமிழ் வாசகர்கள் அவசியம் அறிந்து கொள்ள வேண்டியவை என நினைக்கிறேன்.
24

கே.எஸ். சிவகுமாரன்
"யூரீமாவோ நாட்டுப் பெண்களுக்கு விட்டுச் சென்றவை, அருந்ததிரோய், ஒளி தரும் வால் நட்சத்திரம், சரித்திரம் படைக்கிறார் சாவித்திரி. மனோராணிக்கு அஞ்சல். ஓர் பெளர்ணமியில் மரணம், நாடாளுமன்றத்தில் பெண்கள், அரசியலில் இஸ்லாமியப் பெண்களின் பிரவேசம். கோணேஸ்வரி முருகேசபிள்ளை கொலைச் சம்பவம். கிருஷாந்தி குமாரசாமி கொலை வழக்கில் சரியான நீதி வழங்கப்பட்டது. ரீட்டா ஜோனுக்கு இழைக்கப்பட்ட கொடுமை, தெற்காசியாவில் குழப்பநிலை, பெளத்த பிக்குனிகள்" இன்னுஞ் சில. வேறு பல கட்டுரைகள் அவரவர் தேவைக்கு ஏற்பப் பயன்படும்.
சில பெயர்கள் உச்சரிப்புப் பிழையாகத் தரப்பட்டதை அவதானிக்கலாம். லெஸ்பியனிஸம் (பெண் தன்னினச் சேர்க்கை) லிஸ்பினியனிஸம்" என்று தரப்பட்டுள்ளது. அனந்த் பட்டவர்த்தன் பெயர் பத்தவர்த்தன்' என்று தரப்பட்டுள்ளது. இலங்கையின் முதலாவது பாராளுமன்றத்தில் (1947) இடம் பெற்ற முதலாவது பெண் பாராளுமன்ற உறுப்பினரான ப்ளோரன்ஸ் சேனநாயக்க பற்றிக் குறிப்பிட்டிருக்கலாம். மனோ ராணியின் தாயார் ஆங்கிலேயர் எனக் குறிப்பிட்ட கட்டுரை யாளர், அவரின் கணவர் லூவியன் டி சொய்ஸா பற்றியும் குறிப்பிட்டிருக்கலாம். லூஷியன்-மனோ ராணிக்குப் பிறந்தவர் தான் கொலையுண்ட ரிச்சர்ட் டி சொய்ஸா என்ற ஊடகத் துறையினரும். நடிகருமாவார். இப்படிச் சில விடப்பட்ட தகவல்கள் இருந்தாலும். இப்புத்தகம் அருமையான பங்களிப்பு தகவல்களைத் தேடும் ஊடகத்தினருக்குப் பல விபரங்களையும், திறனாய்வு சார்ந்த குறிப்புகளையும் "விமர்சனங்களையும்" (கண்டனங்களை) தருகிறது.
தினக்குரல்
1O-O9-2OO1

Page 18
தமிழ் / பிவரஞ்சு இலக்கியங்கள்
1980 களின் முற்கூறில் கொல்கத்தாவிலிருந்து 1/4 என்ற தமிழ் சிற்றேடு ஒன்று வெளிவந்தது. ஓரிரு இதழ்களே 1981 இல் வெளிவந்தன. பின்னர் மடிந்து விட்டன. அந்த ஏட்டில் லக்ஷ்மி கண்ணன். அம்பை போன்ற எழுத்தாளர்களின் எழுத்துக்கள் உட்பட முன்னணி (AVANT GARDE-ஒவான் (G)காட்) எழுத்தாளர்களின் படைப்புக்கள் இடம்பெற்றன. நல்ல கட்டுரைகளும் உள்ளடங்கின. அவற்றுள்ளே ஒன்று சி.செ. பிலோமிநாதன் (சி.பி) எழுதிய கட்டுரை, அது தமிழ்-(F) பிரெஞ்ச் மொழிகள் சம்பந்தமானது. அக்கட்டுரையிலிருந்து திரட்டிய சில விபரங்களை உங்கள் தகவலுக்காக இங்கே தருகிறேன்.
தமிழில் பிரெஞ்சு இலக்கியம்
* யூரீநிவாச ஐயர் என்பவர் பியேர் கொர்னேய் எழுதிய "லெசித்’ என்ற நாடகத்தை சத்தியதேவி அல்லது தர்மசங்கடம்' என்னும் தலைப்பில் மொழியாக்கம் செய்துள்ளார்.
* தேசிகம்பிள்ளை என்பவர் ரொத்ரூ என்ற நாடகாசிரியரின் "வென்ஸெய்லாஸ்’ என்பதை நீதிவர்மன்’ எனத் தந்துள்ளார்.
* தேசிகம்பிள்ளை பெர்ணாதேன் தெசம்பியர் எழுதிய லாஷாமியேர் ஐந்தியேன்” என்பதனை 'இந்தியக் குடியரசு’ என்று மொழி பெயர்த்திருக்கிறார்.
26

கே.எஸ். சிவகுமாரன்
女
சுத்தானந்த பாரதியார். விக்தர் ஹியூகோவின் 'லெமிசெராபிள்' என்ற நாவலை 'ஏழைபடும் பாடு' என்று
தந்துள்ளார்.
சுத்தானந்த பாரதியார், விக்தர் ஹியூகோவின் 'லோம் கிரி என்ற நாவலை "இளிச்சவாயன்” என்ற தலைப்பில் தந்துள்ளார். ப. கோதண்டராமன், விக்தர் ஹியூகோவின் "நோத்ருதாம் தெ பரி” என்பதை "மரகதம்” என்று தமிழாக்கம் செய்துள்ளார். மண்டயம் சீனிவாச சாஸ்திரி. மொலியேரின் “லே. பூர்பரி தெஸ்காப்பேன்" என்ற நாடகத்தை “குப்பனின் பித்தலாட்டங்கள்" என்றுமொழி பெயர்த்திருக்கிறார். காரைக்கால் சுந்தரம்பிள்ளை, ரசீனின் "பிரித்தானிக் குய்ஸ்” என்பதைத் தமிழில் தந்திருக்கிறார். சுப்பிரமணிய பாரதியார் பிரெஞ்சுத் தேசியப் பாடலான “லா மார்ஸெயிலே” ஐ மொழி பெயர்த்திருக்கிறார்.
ஒ
காரை சிபி, வேர்லேனின் கவிதை ஒன்றை "சாவித்திரி என்ற தலைப்பில் தந்துள்ளார். முது கண்ணன், அல்பிரட்டி விக்னியின் கவிதை ஒன்றை "ஓநாயின் சாவு" என்ற தலைப்பில் தந்துள்ளார். றிராம், அல்பேர் கெமுவின் "லே ஸ்ரெஞ்சர்” என்ற நாவலை “அந்நியன்” என்று தமிழில் தந்துள்ளார்.
பிரெஞ்சில் தமிழ் இலக்கியம்
19 ஆம் நூற்றாண்டில் பிரெஞ்சுக்காரர்கள் பலர் தமது
மொழியில் நமது இலக்கியங்கள் சிலவற்றைத் தந்துள்ளனர்.
27.

Page 19
- .
திருக்குறளில் ஒரு பகுதி. பிள்ளைப் பெருமாள் அய்யங்கார் திருவரங்கக் கலம்பகம், தேவதாசிப் பாட்டு, தெருப் பாட்டு இவற்றை லாமே ரேஸ் என்பவர் மொழிபெயர்த்திருக் கிறார்.
சிந்தாமணியின் ஒரு பகுதியை ஸ்லியோன் வென் ஸோன் என்பவர் பிரெஞ்சாக்கம் செய்திருக்கிறார். அதேபோல தெவேஜ் என்பவர் அருணாசலப் புராணத்தை பிரெஞ்சில் மொழிபெயர்த்திருக்கிறார்.
ஆதம் என்பவர் ஆத்திசூடி, கொன்றைவேந்தன், வெற்றிவேற்கை, நல்வழி நன்னெறி, நீதிநெறி விளக்கம் ஆகியவற்றை மொழி பெயர்த்திருக்கிறார். திருக்குறள், நாலடியார். நான்மணிக்கடிகை, ஆசாரக்கோவை, கம்ப ராமாயணத்தின் பல பகுதிகள். அறநெறிச்சாரம் ஆகியவற்றை ஞானுதியாகு முதலியார் பிரெஞ்சில் மொழி பெயர்த்திருக் கிறார்.
காரைக்கால் அம்மையாரின் மூத்த திருப்பதிகம். திருவாசகம், தேவாரம், சிலப்பதிகாரம் ஆகியவற்றிலிருந்து சில பாடல்களை பிரெஞ்சில் மொழிபெயர்த்திருப்பவர் லெயோன் சென் ஜ்ஷோன். இவருடைய புனைபெயர் கார வேலன்.
சுப்பிரமணிய அய்யர் கிருஷ்ண லீலா, குமரக் கடவுள் பிறப்பு ஆகிய நூல்களை பிரெஞ்சில் தந்திருக்கிறார்.
இரா. தேசிகம்பிள்ளை. திருப்பாவை, சகலகலாவல்லி மாலை ஆகியவற்றை பிரெஞ்சில் தந்திருக்கிறார்.
இலங்கையைப் பிறப்பிடமாகக் கொண்ட கலாமோஹன் பிரான்ஸ் நாட்டுத் தமிழ் இலக்கியத்துக்கு ஆரம் சேர்ப்பது மாத்திரமன்றி பிரெஞ்சு மொழியிலும் கவிதைகளை எழுதி வருவது பாராட்டுக்குரியதே.

கே.எஸ். சிவகுமாரன் , பார்வைக்கு வந்த சில நூல்கள்
2001/2002 பொது அறிவுக் களஞ்சியம் (ப்ரைட் புக் சென்டர் வெளியீடு) மாணவர்களுக்கும் ஊடகத்துறை யினருக்கும் கைகொடுத்து உதவக் கூடிய தகவல்களின் திரட்டு கடந்த சில வருடங்களாக பொன். சக்திவேல் மேற்கொண்டு வரும் பயனுள்ள முயற்சிகளில் இதுவும் ஒன்று.
அவர் கூறுகிறார்:- இலங்கை, உலக தகவல்கள் அனைத்தையும் பல்வேறு தலைப்புகளின் கீழ் தொகுக்கப்பட்டு பலதும் பத்துமாகப் பல்வேறுபட்ட அறிவுக் களஞ்சியங்களைத் தொகுத்து வெளிவருவதே பொது அறிவுக் களஞ்சியமாகும். தகவல்கள் ரீதியிலும், வினா-விடையாகவும் விளக்கமாகவும், விரிவாகவும் வேறுபல தகவல்களையும் இணைத்துள்ளது இந்த அறிவுக் களஞ்சியம்.
யாழ்ப்பாணத்தை ஆண்ட மன்னர்கள். இலங்கிய நூல் வெளியீடுகள், இலக்கியச் செய்திகள் 1999, 20 ஆம் நூற்றாண்டில் தமிழ் இலக்கியமும், தமிழ் இலக்கியச் சிற்றேடுகளும் ஒரு நோக்கு, இலங்கையை ஆண்ட மன்னர்கள் விபரம் போன்றவை என் பார்வையில் பதிந்தன. ஓர் ஒழுங்கு முறையில் வகைப்படுத்தித் தொகுத்திருப்பின் தேடல் முயற்சிக்கு இலகு வழியாக நூல் அமைந்திருக்கும். ஆயினும், தமிழ் மொழி மாத்திரமே தெரிந்த இன்றைய மாணவர்களுக்கு இந்த நூல் பெரிதும் பயன் அளிக்கக் கூடியதொன்று.
தினக்குரல்
24-09-2OO1

Page 20
சபா வஜயராஜாவின் கலையும், திறனாய்வும்
இன்று இலங்கையில் மார்க்சியத் திறனாய்வுடன் சம்பந்தப்பட்ட விமர்சகர்'களாகச் சிலரின் பெயர்கள் நினைவுக்கு வருகின்றன: கார்த்திகேசு சிவத்தம்பி, செ. கணேச லிங்கன், சி. சிவசேகரம். எம்.ஏ. நுட்மான், ரவீந்திரன், லெனின் மதிவாணம், க. அருணாசலம், சி. தில்லைநாதன், சி. மெளனகுரு. சபா ஜெயராசா. கிருஷ்ணராஜா. சி. வன்னிய குலம், முருகையன், நீர்வை பொன்னையன், சோ. தேவராஜா. செ. யோகநாதன். முகம்மது சமீம் இப்படிப் பட்டியல் நீண்டு கொண்டு போகிறது. இவர்கள் நாட்டில் நன்மதிப்புப் பெற்ற ஆய்வாளர்கள்.
பத்தி எழுத்தாளர்களுள் கே. விஜயன் மார்க்சிய பார்வை கொண்ட ஒருவர். பெண்களுள் செல்வி திருச்சந்திரன், சித்திர லேகா மெளனகுரு ஆகியோரின் எழுத்துகளிலும் மார்க்சியப் பார்வை உண்டு. இவர்களுடைய எழுத்துக்களைத் தொகுத்து "இலக்கியத்தில் ஈழத்தவரின் மார்க்சிய நோக்கு” என்றொரு தொகுப்பு வெளிவந்தால் பிரயோசனமாயிருக்கும். இத் தொகுப்பில் மறைந்த க. கைலாசபதியின் கட்டுரைகளும் இடம்பெறலாம். ஆங்கிலத்தில் Marxist Literature என்றொரு நூல் இருப்பதையும் இங்கு குறிப்பிடலாம்.
நெடுநாட்களுக்குப் பின் பேராசிரியர் சபா.ஜெயராசாவின் நூலொன்று (1998) பார்வைக்குக் கிடைத்தது. இலகு தமிழில் எழுத முயன்றிருக்கும் சபா. ஜெயராசாவின் நூலின் பெயர் "கலையும் திறனாய்வும்”. தமிழ் மாத்திரமே தெரிந்த மாணவர்கள், எழுத்தாளர்கள், திறனாய்வாளர்கள்,
30

கே.எஸ். சிவகுமாரன்
விமர்சகர்கள் போன்றோருக்கு மேனாட்டுத் திறனாய்வு அளவு கோல்களை அறிமுகப்படுத்தும் சிறுநூலாக இது அமைந்துள்ளது.
சபா.ஜெயராசா கூறுகிறார்: "தமிழ்த் திறனாய்வு இயக்கத்தில் கருத்தியலின் முதன்மையை முன்னெடுத்தவர் பேராசிரியர் க. கைலாசபதி கலை இலக்கியத் திறனாய்வு களுக்கு கோட்பாடுகள் பற்றிய மறுமதிப்பீடுகள் எத்தகைய முக்கியமானவை என்பதையே அண்மைக்கால விசிறல்கள் மீள வலியுறுத்துகின்றன. மேலோங்கிய கோட்பாடுகள் சிலவற்றின் மறுமதிப்பீடு இந்நூலாக்கத்தில் மேற்கொள்ளப் பட்டுள்ளது.”
இந்த நூலில் பின்வருபவை உள்ளடங்கியுள்ளன.
இந்தியாவின் தொன்மையான திறனாய்வு மரபுகள், மானிடநிலைத் திறனாய்வு, தொன்மையியல், தள உணர்வியம், தொல்சீர் கோட்பாடு, மனோரதியக் கோட்பாடு, நடப்பியல், நவீனத்துவம், பின்நவீனத்துவம், நெறிய ஒன்றிணைப்புத் திறனாய்வு, கலைத் திறனாய்வில் பரதமும் பலேநடனமும்,
சபா. ஜெயராசாவின் அவதானிப்பொன்றை ஏனைய மார்க்சிய விமர்சகர்கள் உள்வாங்கிக் கொள்வது அவசிய
மாகிறது.
அவர் கூறுகிறார்:- "தமிழ்த் திறனாய்வு மரபில் பல புலமைகளை ஒன்றிணைத்தல் மார்க்சியத் திறனாய்வாளர் களால் முன்னெடுக்கப்பட்டதாயினும் அவர்களது அணுகு முறையில் உளவியல், சமூக மானுடவியல், இறையியல் முதலிய ஆய்வுப் புலங்களின் இணைப்பானது போதாமை நிலையில் இருந்தமை அவர்தம் ஆய்வு முறைக்குத் தமிழ் மரபிலே பின்னடைவுகளை ஏற்படுத்தியது. இத்துறையில் சிலர் மேலும் ஒருபடி முன்னேறி உளவியல் என்பது தனிமனித
31.

Page 21
சொன்னாற்போல
அவலங்களை மட்டும் சித்திரிக்கும் அறிமுறை என்ற பொருத்த மற்ற முற்கோளையும் கொண்டிருந்தனர். ஆயினும் மனவெழுச்சி நிலையிலிருந்த தமிழ்த் திறனாய்வு மரபினை மேல்நோக்கி உயர்த்துவதற்கு அவர்களின் ஒன்றிணைந்த அணுகுமுறை உதவியதென்பதை மறப்பதற்கில்லை.”
சபா.ஜெயராசாவின் நூல்களில் எனக்கு மிகவும் பிடித்தது இந்நூல். அது தவிர ஈழத்து மார்க்சிய விமர்சகர்கள் எழுதுபவற்றுள் மிகத் தெளிவாக எழுதப்பட்ட நூலும் இதுவாகத்தான் இருக்கும். படித்துப் பாருங்கள்.
தினக்குரல்
24-O9-2OO1

ஈழத்துச் சிறுகதைத் தொகுப்புகள்மதிப்பீடுகள்
செம்பியன் செல்வன்,
கே.எஸ். சிவகுமாரன், புலோலியூர் ஆ. இரத்தினவேலோன்.
சிறுகதை ஆசிரியரும், திறனாய்வு சார்ந்த பத்திகளை இதழ்களில் எழுதிவருபவரும், பதிப்பாசிரியருமான புலோலியூர் ஆ. இரத்தினவேலோனின் "அண்மைக்கால அறுவடை” (2001 ஜூலை) என்ற திறனாய்வு நூல் ஈழத்து இலக்கிய வரலாற்றை எழுதுபவர்களுக்குப் பெரிதும் உதவக்கூடிய ஓர் உசாத்துணை நூல் எனலாம்.
சிறுகதைத்துறை தொடர்பான திறனாய்வு சார்ந்த மதிப்பீட்டுப் பத்திகளை புலோலியூர் ஆ. இரத்தினவேலோன் மிகவும் பயனுள்ள வகையிலும், பகுத்தாய்வு அதிகமின்றி ஆனால், வரலாற்றுச் செய்திகளின் பின்னணியிலும் எழுதி வருகிறார். 1990 களுக்குப் பின் வெளிவந்த சிறுகதைத் தொகுப்புகள் இவர் பார்வைக்கு உட்பட்டன. இவற்றைத் தொகுத்து. 1999 டிசம்பரில் "புதிய சகத்திரப் புலர்வின் முன் ஈழச் சிறுகதைகள்” என்ற முதல் திறனாய்வு நூலை வெளி யிட்டார். இந்த நூலிலே, பின்வரும் தொகுப்புகள் பற்றிய கணிப்புகளைக் காணலாம்.
'கசின்’ என்ற க.சிவகுருநாதனின் "கசின் சிறுகதைகள்", “செங்கை ஆழியான்" தொகுத்த "மறுமலர்ச்சிக் கதைகள்", நீர்வை பொன்னையனின் "பாதை" சாந்தனின் “யாழ் இனிது" கோகிலா மகேந்திரனின் "வாழ்வு ஒரு வலைப்பந்தாட்டம்", ஓட்டமாவடி அரபாத்தின் "நினைந்தழுதல்" லெ. முருகபூபதி யின் "வெளிச்சம்" தெளிவத்தை ஜோசப் தொகுத்த "மலையகச்

Page 22
சொன்னாற்போல சிறுகதைகள்” மானா மக்கீனின் "ஈகைப்பெருநாள் கதைகள்", அ. முத்துலிங்கத்தின் "வடக்கு வீதி" ராஜரீகாந்தன் தமிழாக்கிய அழகு சுப்பிரமணியத்தின் "நீதிபதியின் மகன்" தாமரைச்செல்வியின் "ஒரு மழைக்கால இரவு" புலோலியூர் க.சதாசிவத்தின் "புதிய பரிமாணம்" யூ.எல். ஆதம்பாவாவின் “காணிக்கை”, மண்டூர் அசோகாவின் "சிறகொடிந்த பறவை கள்", கனகசபை தேவகடாட்சத்தின் “குமுறல்கள்", புலோலியூர் க. தம்பையாவின் "அழியும் கோலங்கள்"
இவற்றுடன் வேறு சில தொகுப்புக்களுக்கும் இரத்தின வேலோன் மதிப்புரை எழுதினார். அவையாவன: கே.எஸ். சிவகுமாரனின் "இருமை", புலோலியூர் செ. கந்தசாமியின் "மெல்லத் தமிழினி." திக்குவல்லை ஸப்வானின் “உம்மாவுக்கு ஒரு சேலை”, சோ. ராமேஸ்வரனின் "பஞ்சம்" வாகரை வாணனின் "அரசி உலக நாச்சியார்", வெற்றிவேல் விநாயக மூர்த்தியின் "பொன்னாச்சி பிறந்த மண்", ஒலுவில் அமுதனின் "கலையாத மேகங்கள்", மரினா இல்யாஸின் "குமுறுகின்ற எரிமலைகள்" இவை தவிர, “தொண்ணுாறுகளின் இறுதிகளில் சிறுகதைகள் - ஒரு பொது நோக்கு” என்ற பகுதியும் இந்நூலில் சேர்க்கப்பட்டுள்ளது.
O O O
ஈழத்துச் சிறுகதை முன்னோடிகள் சிலரது கதைகளைத் தொகுத்துத் திறனாய்வு சார்ந்த குறிப்புகளை “செம்பியன் செல்வன்' என்ற இராஜகோபால் பல ஆண்டுகளுக்கு முன்னரே எழுதியிருக்கிறார். இது நூல் வடிவில் வெளிவந்தது. இந்த நூலின் பெயர் "ஈழத்துச் சிறுகதை மணிகள்"
O O O
இதனைத் தொடர்ந்து 1996 இல் 'திறனாய்வுப் பார்வைகள்” என்ற நூல் வெளியாகியது. இலங்கையர்கோனின் "வெள்ளிப் பாதசரம்” மறைந்த அஸ. அப்துஸ் ஸமதுவின் "எனக்கு வயது பதின்மூன்று", காவலூர் இராசதுரையின்
34-ബി-

கே.எஸ். சிவகுமாரன் "குழந்தை ஒரு தெய்வம்" நீர்வை பொன்னையனின் "மேடும் பள்ளமும்" பேராதனைப் பல்கலைக்கழக மாணவர்களின் "கலைப்பூங்கா" செ. கணேசலிங்கனின் "சங்கமம்" வ.அ. இராசரத்தினத்தின் "தோணி" டொமினிக் ஜீவாவின் “பாதுகை”, வரதரின் “கயமை மயக்கம்” ஆகிய சிறுகதைத் தொகுப்புகளில் இடம்பெற்ற ஒவ்வொரு கதையும் பகுப்பாய்வுக்கு உட்பட்டதாக இந்நூல் வெளியாயிற்று. இதனை எழுதியவர் கே. எஸ். சிவகுமாரன்.
இந்த நூலைத் தொடர்ந்து 1998 இல் மற்றொரு நூல் வெளியாகியது. "ஈழத்துச் சிறுகதைத் தொகுப்புகள் திறனாய்வு" என்ற இத்தொகுப்பிலே கே. டானியலின் ‘டானியல் கதைகள்" சிற்பி தொகுத்த "ஈழத்துப் பரிசுக் கதைகள்" பவானியின் "கடவுளரும் மனிதரும்" நாவேந்தனின் "வாழ்வு" மற்றும் "போட்டிக் கதைகள்” ஆகியனவற்றுள் உள்ள ஒவ்வொரு கதையும் பகுப்பாய்வுக்கு உட்படுத்தப்பட்டன.
எம்.ஏ. ரகுமான் எழுதிய "பூ" என்ற கதையும், சத்தியன் எழுதிய “சிரத்தை” என்ற கதையும் தனியாகப் பகுப்பாய்வு செய்யப்பட்டன.
இதே நூலில், செ. கதிர்காமநாதனின் “கொட்டும் பனி" என்.எஸ்.எம். ராமையாவின் "ஒரு கூடைக்கொழுந்து" செ. யோகநாதனின் “யோகநாதன் கதைகள்" முதளையசிங்கத்தின் "புதுயுகம் பிறக்கிறது”, பூங்கோதையின் “வேணிபுரத்து வெள்ளம்", செ. யோகநாதனின் "ஒளி நமக்கு வேண்டும்" புலோலியூர் க. சதாசிவத்தின் "யுகப்பிரவேசம்" மண்டூர் அசோகாவின் "கொன்றைப் பூக்கள்" நெல்லை க.பேரனின் "ஒரு பட்டதாரி நெசவுக்குப் போகிறாள்" அ. யேசுராசாவின் "தொலைவும் இருப்பும் ஏனைய கதைகளும்" சாந்தனின் "கடுகு" மு. திருநாவுக்கரசின் "இவர்களும் மனிதர்கள்", நா. முத்தையாவின் "தத்துவக் கதைகள்", யோ. பெனடிக்ட் பாலனின் "தனிச்சொத்து", சாந்தனின் "ஒரே ஒரு ஊரிலே" லெ. முருகபூபதியின் "சுமையின் பங்காளிகள்", சுதாராஜ்ஜின்
35.

Page 23
சொன்னாற்போல "பலாத்காரம்" மருதூர் மஜீதின் "பன்னீர் வாசம் பரவுகிறது", காவலூர் எஸ். ஜெகநாதனின் "வானத்து நிலவு" "உடைவுகள்" ஆகிய தொகுப்புகளில் உள்ள ஒவ்வொரு கதையும் ஆய்வுக்கு எடுக்கப்பட்டுள்ளது.
இதே நூலில், மேலும் சில சிறுகதைத் தொகுப்புகளின் ஒவ்வொரு கதையும் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டது. அவை யாவன: குப்பிளான் சண்முகத்தின் “கோடுகளும் கோலங் களும்", க. சட்டநாதனின் "மாற்றம்" காவலூர் எஸ். ஜெக நாதனின் “யுகப்பிரசவம்" தெளிவத்தை ஜோசப்பின் "நாமிருக்கும் நாடே" மாத்தளை தமிழ் எழுத்தாளர் ஒன்றியத்தின் "தோட்டக் காட்டினிலே". மு. கனகராசனின் “பகவானின் பாதங்களில்" செ. யோகநாதனின் “கண்ணீர் விட்டே வளர்த்தோம்" மகாஜனாக் கல்லூரி மாணவர்களின் "இவர்கள்" முல்லைமணியின் "அரசிகள் அழுவதில்லை” எஸ். பொன்னுத்துரையின் "வீ" டொமினிக் ஜீவாவின் "வாழ்வின் தரிசனங்கள்" நாகூர் எம். கனியின் "தூரத்துப் பூபாளம்" முத்து ராசரத்தினத்தின் ‘சிலந்தி வயல்" கோகிலா மகேந்திரனின் "முரண்பாடுகளின் அறுவடை" எஸ்.வி. தம்பையாவின் கடலில் கலந்தது கண்ணீர். கே. டானியலின் "மண்", சாந்தனின் “கிருஷ்ணன் தூது" எஸ். சோமகாந்தனின் “ஆகுதி" உமா வரதராஜனின் "உள்மன யாத்திரை". எம்ஐஎஸ். முஸம்மில்லின் “பிரார்த்தனை" எஸ்.எச். நிஹமத்தின் "எரிகொள்ளி", சுதாராஜ்ஜின் “கொடுத்தல்"
1998 மத்தியில் கே.எஸ். சிவகுமாரனின் மற்றொரு நூல் வெளியாகியது. இதன் பெயர் "திறனாய்வு அண்மைக்கால ஈழத்துச் சிறுகதைத் தொகுப்புகள்" இத்தொகுப்பிலே பின்வரும் சிறுகதைத் தொகுப்புகளின் ஒவ்வொரு கதையும் பகுப்பாய்வு செய்யப்பட்டது.
க. தணிகாசலத்தின் "பிரம்படி”, உடுவை தில்லை நடராஜாவின் “நிர்வாணம்" அருண் விஜயராணியின் “பெண்மை”, முஸ்லிம் மாதர் ஆராய்ச்சி செயல் முன்னணியின்
36

கே.எஸ். சிவகுமாரன்
"சுமைகள்" மாத்தறை ஸஹீனா வஹாப்பின் “வதங்காத மலரொன்று" சோ. ராமேஸ்வரனின் "சுதந்திரக்காற்று" ராஜ ஜீகாந்தனின் "கால சாளரம்" அ.முத்துலிங்கத்தின் "திகடசக்கரம்" மு. பொன்னம்பலத்தின் “கடலும் கரையும்" மாத்தளை சோமுவின் "அவர்களின் தேசம்" புலோலியூர் ஆ. இரத்தினவேலோனின் "புதிய பயணம்" கோகிலா மகேந்திரனின் "வாழ்வு ஒரு வலைப்பந்தாட்டம்" யோ. பெனடிக்ட் பாலனின் "விபசாரம் செய்யாதிருப்பாயாக" யூ.எல். ஆதம்பாவாவின் "காணிக்கை" நீர்வை பொன்னையனின் "பாதை" திருக்கோவில் கவியுவனின் "வாழ்தல் என்பது.” ரஞ்சகுமாரின் "மோகவாசல்”
இந்நூலையும் எழுதியவர் கே.எஸ். சிவகுமாரன்.
O
2001 இல் வெளிவந்த புலோலியூர் இரத்தினவேலோன் எழுதிய "அண்மைக்கால அறுவடைகள்” என்ற நூலில் "சம்பந்தன் சிறுகதைகள்" செங்கை ஆழியான் தொகுத்த "ஈழகேசரிச் சிறுகதைகள்", இளம்பிறை எம்.ஏ. ரஹற்மானின் "சிறுகை நீட்டி", அங்கையன் கைலாசநாதனின் "அங்கையன் கதைகள்" அன்ரன் செல்வகுமாரின் "சமுதாயத் தோப்பில் சாய்ந்த தென்னைகள்" புர்கான்பீ இப்திகாரின் "பிறந்தமண்" ந. பார்த்தீபனின் "மனத்துாறல்" சோ. ராமேஸ்வரனின் "புதிய வீட்டில்" லெ. முருகபூபதியின் "எங்கள் தேசம்” ஆகிய சிறுகதைத் தொகுப்புகள் தொடர்பான கதைகள் பற்றிய பொதுவான மதிப்பீடுகள் தரப்படுகின்றன.
வேலோனின் இதே நூலில் வேறு சில தொகுப்புகள் தொடர்பான திறனாய்வுக் குறிப்புகளும் இடம் பெறுகின்றன.
தொகுப்புகளாவன: வ. அ. இராசரத்தினத்தின் "கொட்டியாரக் கதைகள்" ச. அருளானந்தத்தின் "அந்த ஆவணி ஆறு", ராணி சீதரனின் "மாங்கல்யம் தந்து நீயே." ஆ.மு.சி வேலழகனின் “கமகநிலா" நீர்வை பொன்னையனின் *வேட்கை”, வண்ணை சே. சிவராஜாவின் "சிவாவின்

Page 24
சொன்னாற்போல சிறுகதைகள்" த. கலாமணியின் "நாட்கள், கணங்கள். நமது வாழ்க்கைகள்" பதின்மூவர் கதைகளின் தொகுப்பாகிய "எழு சிறுகதைகள்" கெக்கிராவ ஸஹானாவின் "ஒரு தேவதைக் கனவு", புலோலியூர் க. சதாசிவத்தின் "ஒரு நாட் பேர்", திக்குவல்லை கமாலின் "வரண்டு போன மேகங்கள்"
பல்கலைக் கழக மட்டத்தில் பயிற்றுவிக்கும் பேராசிரியர்கள் மதிப்பிட்டுத் தொகுத்து ஆய்வு நூல்களாக வெளியிடவேண்டிய பணி இவை. பத்தி எழுத்தாளர்களான செம்பியன் செல்வன். கே.எஸ். சிவகுமாரன், புலோலியூர் ஆ. இரத்தினவேலோன் ஆகியோர் தமது இந்த ஆறு நூல்கள் மூலம் ஈழத்துச் சிறுகதை எழுத்தாளர்களின் கதைகள் பற்றிய ஒரு கணிப்பைத் தந்துள்ளனர். பலரின் நூல்களை வாசகர் களும், இலக்கிய மாணவர்களும் அறிந்திலர். அந்த விதத்தில் இந்த நூல்கள் பெரும் பயனளிப்பது மட்டுமன்றி இலக்கிய வரலாற்று ஆசிரியர்களுக்கும் பல தகவல்களை வழங்குவதாக அமைகின்றன.
இந்தப் பத்தியில், மதிப்புரைக்கு உட்பட்ட தொகுப்பு களின் பட்டியலைத் தந்ததற்கான காரணம், இத்தொகுப்புகள் பற்றி அறிந்திராத வாசகர்களுக்கு நினைவூட்டவும். இவற்றை எழுதிய எழுத்தாளர்களுக்குத் தமது தொகுப்புகள் மதிப்பீடு செய்யப்பட்டுள்ளன என்பதை அவர்கள் கவனத்திற்குக் கொண்டு வருவதற்குமாகவேயாகும். இலக்கிய வரலாற்றா சிரியர்கள், மாணவர்கள் இப்பத்தியை ஓர் உசாத்துணை ஆவணமாகப் பயன்படுத்தலாம். பட்டியல்களும் முக்கிய
D6060D6.
செ. யோகநாதன் "ஆதவன்” இதழ்களில் எழுதிவரும் மதிப்புரைகளும் தொகுக்கப்பட்டு நூலாக வெளிவந்தால் பயனளிக்கும்.
தினக்குரல்
13-O7-2OO1

சின்னப்பா கிங்ஸ்வபரி ஈழத்தின் முன்னோடி நாவலாசிரியர்?
"சொன்னாற்போல” என்ற இப்பத்தியை காத்திரமான சில வாசகர்கள் வாசித்து வருகின்றனர் என்பது பறை சாற்றப்படுகிறது. சில உதாரணங்கள். திருகோணமலை யிலிருநது எழுத்தாளர் கனகசபை தேவகடாட்சம் கடிதம் மூலமும், தொலைக்காட்சி "உதய தரிசனம்’ நிகழ்ச்சி நேர்காணலின் போதும் (14.10.01) இப்பத்திகள் தொகுப்பாக வெளிவர வேண்டும் என்று அன்புக் கட்டளையிட்டுள்ளார். இன்னொரு தமிழபிமானி சா.ஆ தருமரத்தினம் வேறு ஒரு விஷயத்தை இப்பத்தி மூலம் தெரியப்படுத்தவேண்டும் என்று கேட்டிருக்கிறார். எனவே, ‘யாம் பெற்ற இன்பம். இவ்வையக மும் பெறுக’ என்ற நமது நோக்கம், "சொன்னாற் போல” பத்தி மூலம் நிறைவுறுகிறது குறித்து மகிழ்ச்சி
தெஹிவளை. ஹில் ஸ்ரீட், 66 ஆம் இலக்க இல்லத்தி லிருந்து பெரியவர் சா.ஆ தருமரத்தினம் முக்கியமானதொரு பொருள் பற்றி நமக்குச் சுட்டிக் காட்டியிருக்கிறார். அதன் முக்கியத்துவம் குறித்தும், பொதுநல அக்கறை கொண்டிருப்பது குறித்தும் சா.ஆ தருமரத்தினத்தின் கடிதம் கீழே தரப்படுகிறது. சம்பந்தப்பட்டவர்கள் ஆவன செய்க.
"ஈழத்தின் மூத்த இரு தமிழ் நாவலாசியர்களும் சம காலத்தினர் என்றும் ஒருவர் சின்னப்பா கிங்ஸ்பெரி. அடுத்தவர் திருமதி மண்டலநாயகம் தம்பையா' என்றும் தென் இந்தியத் திருச்சபையின் பேராயர் அதி.வண.எஸ். ஜெபநேசன் அடிகளாரால் (சமீபத்தில்) மறு வெளியீடு செய்து வைக்கப்பட்ட பின்னவரின் நூலுக்கு ஆய்வுரை வழங்கும் போது தினக்குரல்" பிரதம ஆசிரியர் ஆ. சிவநேசச்செல்வன் தெரிவித்திருந்தார்.
39

Page 25
சொன்னாற்போல மதுரைத் தமிழ் சங்கங்கள் காலத்து சமஸ்கிருதம் விரிவாகி பண்டைத் தமிழ் நூல்கள் பலவற்றை எதிர்காலத் தலைமுறையினருக்குப் பாதுகாத்துத் தரும் பொருட்டாக அச்சில் பதிவு செய்து தந்தமையே சின்னப்பா கிங்ஸ்பெரியின் மூத்த சகோதரராகிய தமிழ் மறு மலர்ச்சியாளர் ராவ் பகதூர் சீவை. தாமோதரம்பிள்ளை செய்த மிகப்பெரும் தமிழ்த் தொண்டாகும்.
நிகழும் (01.01.2001 முதல் 31.12.2001 வரை) இவ்வாண்டு தமிழ் மறுமலர்ச்சியாளர் ராவ் பகதூர் சீவை. தாமோதரம் பிள்ளை இறந்த நூற்றாண்டாக அனுஷ்டிக்கப்பட்டு வருதல் தெரிந்ததே. 'தொல்காப்பியம் பொருளதிகாரம் என ஒரு நூல் கிடையாதென அக்காலத்துத் தமிழ் அறிஞர்களே சாதித்து வந்த ஒரு காலகட்டத்தில் தமது தேடல் மூலம் அந்நூலை மீட்டு ஆய்வு செய்து அச்சில் பதிப்பித்து தமிழ் நாடெங்கும் பவனி வரச் செய்தவர் தாமோதரர். அவ்வாறாக விருக்க அவரது சகோதரர் சின்னப்பா கிங்ஸ்பெரி ஈழத்தின் முதல் நாவலாக எழுதி வெளியிட்டிருந்த நூல் இன்றைய தமிழ் வாசகர் கைக்குக் கிட்டாது போயிருத்தல் வியப்பைத் தருகின்றது. ஆகவே, தாமோதரரின் இறந்த நூற்றாண்டில் அவரது சகோதரர் சின்னப்பா கிங்ஸ்பெரி எழுதிய அத்தமிழ் நாவலை மீட்டு தமிழ் வாசகர் கைகளில் உலாவ விட முயலப்படுமா?
வழக்கில் இல்லாது அருகிவிட்ட மேற்படி நாவலின் பிரதி தேடிக் கண்டுபிடிக்கப்பட்டு மறுவெளியீடு செய்யப்பட்ட அந்நூல் குறித்த தகவல் அறிந்திருப்பவர்கள் அதனைத் தெரியப்படுத்தவேண்டும்.
பெரும் சிரமப்பட்டே அதிவண. ஜெபநேசன் ஆண்டகை திருமதி மண்டலநாயகம் தம்பையாவின் நாவலை மறு வெளியீடு செய்திருந்தார்கள். சின்னப்பா கிங்ஸ்பெரி எழுதிய நாவலைக் கடும் முயற்சிகள் மூலம் கண்டுபிடித்து மறு வெளியீடு செய்தல் அதனிலும் சிரமமாயினும் பண்டைத் தமிழ்

கே.எஸ். சிவகுமாரன்
நூல்களை மீட்டுத் தந்த தாமோதரருக்குச் செய்யும் ஒரு கைம்மாறாக அவரது இறந்த நூற்றாண்டில் இம்முயற்சி மேற்கொள்ளப்பட வேண்டாமா?
தலைநகர் கொழும்பில் அதன் முதல் தமிழ் சங்கமாக கொழும்பு பல்கலைக்கழகக் கல்லூரியில் ஒரு தமிழ் சங்கத்தை நிறுவியவர் தாமோதரரின் மைந்தர் வண. பிரான்சிஸ் கிங்ஸ்பெரி அடிகளார். மேற்படி கல்லூரியின் முதல் தமிழ் விரிவுரையாளராகவே அப்பணியை அவர் நிறைவேற்றி யிருந்தார்.
வண. பிரான்சிஸ் கிங்ஸ்பெரி நிறுவிய தமிழ்ச் சங்கம் அதனது பவள விழாவை 2002இல் பேராதனையில் கொண்டாடுவதாக பேராதனைப் பல்கலைக்கழகத்தின் தமிழ்த் துறைத் தலைவரும், மேற்படி தமிழ்ச் சங்கத்தின் தலைவருமான பேராசிரியர் எஸ். தில்லைநாதன் சமீபத்தில் நிகழ்ந்த தமிழ்ச் சங்கத்தின் தமிழ் விழாவில் தலைமையுரை நிகழ்த்தும்போது தெரிவித்துள்ளார்.
கொழும்பில் அதன் வெள்ளி விழாவைக் கொண்டாடிய கொழும்புப் பல்கலைக்கழகக் கல்லூரித் தமிழ்ச் சங்கமே 1952 இல் பேராதனைக்கு பின்னர் இடம் மாற்றப்பட்டது. ஆகவே, மேற்படி தமிழ்ச் சங்கம் அதனது பவள விழாவில் வண. பிரான்சிஸ் கிங்ஸ்பெரி அடிகளாரை உரியவாறு கெளரவிக்கும் என எதிர்பார்க்கலாம். சைவக் குரவர்களது தேவாரங்களின் தமது ஆங்கில மொழி பெயர்ப்பை ஒகஸ்பாட் பல்கலைக்கழக அச்சகத்தில் அவர் வெளியிட அந்நூல் ஏழு பதிப்புக்களைக் கண்டது. பெரும் பாராட்டையும் அவருக்குப் பெற்றுத் தந்தது.
- தங்கள் பணியில் சா.ஆ தருமரத்தினம்"
தினக்குரல்
22-1O-2OO1

Page 26
முல்லைக் காட்டிலுள்ளோர் முகிழ்வித்த சிறுகதைகள்
பல்கலைக்கழகங்களிலும், அவற்றிற்கு வெளியேயும் பல தரமான திறனாய்வாளர்கள் இருந்து வருகையில், திறனாய்வு சார்ந்த பத்தி எழுத்துக்களை மாத்திரம் கடந்த 40 வருடங்களுக்கு மேலாக எழுதிவரும் என் போன்ற வர்களுக்கு தமது நூல்களையனுப்பி மதிப்புரை எழுதுமாறு கேட்டுக் கொள்ளும் இனிய நண்பர்களுக்கு நான் ஒரு வேண்டுகோளை இப்பத்தி மூலம் விடுக்க விரும்புகிறேன்.
நீங்கள் அனுப்புபவற்றைப் படிக்கவோ. அவற்றை வீட்டில் வைத்திருக்கவோ முடியாத நிலையில் நான் இருக்கிறேன். வயது போய்க் கொண்டிருப்பதும். உடல் நலம் அவ்வளவு நன்றாக இல்லாதிருப்பதும் காரணங்கள். எனவே, புதிய, இளைய திறனாய்வாளர்கள், பத்தி எழுத்தாளர்கள், ஊடகங்களிலும், பல்கலைக்கழகங்களிலும், வெளியேயும் நிறையப் பேர் இருக்கின்றனர். நான் சருகு போன்றவன், (உண்மையில், "சருகுகள்” என்ற தலைப்பிலே “செய்தி” என்ற வார இதழில் ஒரு பத்தியை 1960களில் நான் எழுதி யிருந்தேன்) ஆதலால், புது மொட்டுகள் மலர்ந்து வளம் சேர்க்க விலகி நின்று வழிவிடுவதே சிறப்பு என நம்புகிறேன்.
V)
முல்லைத்தீவு, புதுக்குடியிருப்பு, 2 ஆம் வட்டாரத்திலுள்ள எழு கலை இலக்கியப் பேரவை அனுப்பி வைத்த "எழு சிறுகதைகள்” எமது பார்வைக்கு வந்தது.
42

கே.எஸ். சிவகுமாரன் நன்கறியப்பட்ட இணுவையூர் சிதம்பர திருச்செந்திநாதன் முன்னுரை எழுதியுள்ளார். போர்க்காலச் சூழலில் கடந்த எட்டு ஆண்டுகளிற் பிரசுரமான 13 சிறுகதைகள் இதில் அடங்கி யுள்ளன. க.சா. அரியநாயகம் என்ற முன்னணி எழுத்தாளரைத் தவிர ஏனையோர் அனைவரும் எனக்குப் புதியவர்கள். கிழக்கில் பிறந்து. கடைசிக் காலத்தில் வடக்கில் வாழ்ந்து மறைந்தவர். முற்போக்கு எழுத்தாளரான க.சா. அரியநாயகம் அவருக்கே இந் நூல் சமர்ப்பணம்.
இத்தொகுப்பில் இடம்பெறும் கதைகளை எழுதிய புதியவர்கள்:
தமிழ்மாறன், சிந்துஜா வித்தியாசாகர், ந. மயூரன், ஆவரங்கால் சுதன், நாதவலை மனோரஞ்சிதம், சுதந்திரன், முல்லைக்கமல், கை, சரவணன், ஆந. பொற்கோ, பு. சத்திய மூர்த்தி, ஆதிலட்சுமி சிவகுமார், இணுவையூர் சிதம்பர திருச்செந்திநாதன்.
கடைசியாகக் குறிப்பிடப்பட்ட எழுத்தாளரின் ஆக்கத்தை இதுவே முதற் தடவையாகப் படித்தேன். அதனால் தான் அவர் எனக்குப் புதியவர்.
இக்கதைகள் வெளிவந்த பத்திரிகைகள் : ஈழநாடு, ஈழநாதம், சரிநிகர், வெளிச்சம்.
இயல்பு' கதையில் போராளி இயக்கத்தில் சேர்ந்த இளம்பெண் தொடர்பான மனப் பதிவுகள், அவள் தம்பியின் வாயிலாகச் சொல்லப்படுகிறது. இயல்பான நடை எழுதியவர் தமிழ்மாறன்.
சிந்துஜா வித்தியாசாகர். எழுதிய அவன் வருவானா' என்ற கதையில் போராளி இயக்கத்தில் சேர்ந்த மகன் திரும்பிவருவான் என்று காத்திருக்கும் தாயின் தவிப்புக் கூறப்படுகிறது. மற்றைய மகன் இறந்தது தெரியும். ஆனால், இந்த மகனின் கதிபற்றி அவள் அறியாள், வாசகர்களுக்கு இது தெரிவிக்கப்படுகிறது. கதையில் மெருகு தேவை.
43

Page 27
iങ്ങ8, 16
தேங்காய்ச் சொட்டு" கதை எழுதியவர் ந. மயூரரூபன். வெளிப்படையாகவே கதை என்ன கூறுகிறது என்பதை வாசகர்கள் அறிந்து கொள்கிறார்கள். அணில் குட்டி ஒன்று பொறியில் சிக்கி மடிவது போல கதை சொல்பவரும் சித்திர வதைக்கு உட்படுவதையும். சாவை எதிர்ப்பார்த்திருப்பதையும் கதை கூறுகிறது. இவர் தாம் எழுத எழுதச் சிறுகதைக் கலையைக் கையாளும் மெருகை அவர் பெற்றுவிடக்கூடும். ஆவரங்கால் சுதன் எழுதிய கதை நாகங்கள் கதைக்குப் பொருத்தமாக இருக்கிறதோ இல்லையோ இவர் எழுதிய உவமானங்கள் புதுமையாக இருக்கின்றன. “பனிக் குளிரிலே உறைஞ்சுபோற தேங்காயெண்ணை மாதிரி அப்பாவின்ர கதையைக் கேட்ட அம்மாவும் விறைச்சுப்போய் நிண்டா” ஆடாமல் அசையாமல், “வறுக்க வறுக்க செத்தல் மிளகாய் கருகி கறுப்பாகிறதப்போல”, “அடுப்புத் தணலுக்க போட்ட உப்பு மாதிரி" "எல்லாரும் சேர்ந்து பொது எதிரியை வீழ்த்தலாம்” என்பது கதை சொல்லும் செய்தி
ஈழநாடு ஆசிரிய பீடத்தில் பணிபுரிந்த தி.அ. றொபர்ட்டின் புனைபெயர் நாதவலை மனோரஞ்சிதன். இவர் எழுதிய கதை மீண்டும் மீண்டும். யுத்தக் களரி நினைவுகள் வந்து அலைக்கலைக்கும் அனுபவத்தை வடித்திருக்கிறார். இடையிடையே யுத்தம் தொடர்பான அவர் கூற்றுக்களும் வெளிப்படுகின்றன.
சுதந்திரன் எழுதிய ஊற்றுக்கண்' என்ற கதையில், மாதிரிக்கு ஒரு தாய் தனது குடும்ப இழப்பையும், பொருட் படுத்தாது போராளிகளுக்கு அன்பும் ஆதரவும் காட்டுவதாக எடுத்துரைக்கப்படுகிறது. வெளிப்படையாகவே செயற்பாட்டுத் தந்திரோபாயங்கள் எடுத்துக் கூறப்படுகின்றன.
ஈழநாடு ஏட்டில் பணிபுரிந்த பல்துறை எழுத்தாளர் முல்லைக்கமல் எழுதிய கதை துயர்ப்பொழுது எழுத்துத் திறன் இவரிடம் இருப்பதற்குச் சில உதாரணங்கள்: "வெறும் பகலின் நிசப்தம்”, “காற்றுக்கே குரல் முறிந்ததுபோல்”,
44

கே.எஸ். சிவகுமாரன்
"திகிலில் உறைந்து போயிருக்கிற அவர்களின் முகங்களில் வெய்யிலடித்ததுபோல்” ஆயினும் கதை சரளமாக எழுதப்படவில்லை. ஒன்றுக்கு மேற்பட்ட முறை படித்தால் மாத்திரம் ஓரளவு புரிகிறது. சிறுகதைக்குரிய பண்புகள் மீறப்பட்டவையாக இருக்கின்றன. காட்டிக்கொடுப்பவரிடையே சந்தேகத்துக்குரியவர்களாகச் சிலர் வாழநேரிடும் அவலங்கள் சூசகமாய் தெரிவிக்கப்படுகின்றன.
போதனை' என்ற கதையை கை, சரவணன் எழுதி யிருக்கிறார். இவரும் தம் ஆற்றலை இன்னும் செம்மையாக வெளிப்படுத்தியிருக்கலாம். நல்ல கதைக் கருக்கள் இந்த எழுத்தாளர்களிடம் இருப்பது Plus Point என்றால் எழுதும் முறை விருத்தி செய்யப்படல் வேண்டும். ஏனெனில் சிந்தாமல், சிதறாமல் எண்ணக் கருக்கள் பரிவர்த்தனை செய்யப்பட்ட கதைக் கட்டுமானமும் அவசியமல்லவா?
அடுத்த கதை புளியமரம்' எழுதியவர் ஆ.ந. பொற்கோ. சீரான எழுத்து நடை, யுத்த தந்திரோபாயங்களின் வருணனை. தியாகம் என்பது இக்கதையில் வருவது போலவும் இருக்க முடியும் என்பதைச் சுட்டும் கதை. போர் என்று பார்த்தால், நல்லதொரு இராணுவக் கதை.
ஈழநாடு, ஈழநாதம் பத்திரிகையில் பணி புரிந்தவர் பு சத்தியமூர்த்தி. இவர் கிழக்கிலங்கையைச் சேர்ந்தவரா யிருக்கலாம். கதை நிகழுமிடமும், மொழி நடையும் அவ்வாறு அமைகின்றன. மொழி, பண்பாடு தெரியாத, புரியாத ஆக்கிரமிப்புக்காரர்களின் மத்தியில் தமிழ் மக்கள் படும் பாட்டை பிற மாகாணங்களிலுள்ளவர்கள் அறிந்துணரக்கூடிய விதத்தில் இக்கதை எழுதப்பட்டுள்ளது. நல்ல முயற்சி. "எப்படியும் இருட்டு விடியத்தானே வேண்டும்” என்ற கடைசி வசனம் நம்பிக்கையூட்டுவதாக அமைகிறது.
கடந்த 20 வருடங்களாக கவிதை, கதை எழுதி வருபவ
ராக அறிமுகப்படுத்தப்பட்ட பெண் எழுத்தாளர் ஆதிலட்சுமி சிவகுமாரின் கதை 'வெள்ளைத்துணி' மனிதாபிமானம்,
45

Page 28
IsoHTC
தன்மானம், கோர யுத்தத்தின் விளைவு போன்ற பல விஷயங்களை நேர்த்தியாக ஆசிரியர் வெளிப்படுத்துகிறார். தமிழ் நடையும் நன்று.
ஈழநாடு வாரமலர், பிரதம ஆசிரியர் பதவி உட்படப் பல சஞ்சிகைகளில் பங்கேற்றிருந்த இணுவையூர் சிதம்பர திருச்செந்திநாதன் நாவல், சிறுகதை, குறுங்கதை, திறனாய்வு போன்ற துறையில் ஈடுபட்டுள்ள பிரபல எழுத்தாளராவார். இவர் எழுதிய கதையின் பெயர் "தேவர்கள்' சொல்லாமற் சொல்லும் செய்தியை கதாசிரியர் சொல்கிறார். அட்டகாசம் புரியும் ஆக்கிரமிப்பாளரை சிலவேளைகளில் மாமிசம் உண்ணும் மாடுகளுக்கு ஒப்பிட்டு எழுதியிருக்கிறார். இக் கட்டான சூழல்களை விபரிப்பவையாக அமையும் கதைகளில் இதுவும் ஒன்று.
கடைசியாக அமரர் க.சா. அரியநாயகம் எழுதிய பலிக்கடாக்கள் பற்றிப் பார்ப்போம். காசுக்காக இராணுவத்தில் சேரும் சிங்கள இளைஞர்களின் அவல முடிவுகளைக் குறிப் பிடும் ஆசிரியர் உண்மை நிலைவரங்களை பின்னணியாகக் கொண்டு கதையை எழுதியிருக்கிறார்.
இவரைப் பற்றியும், "எழு’ என்ற இத்தொகுப்புத் தொடர்பாகவும் பல பார்வைகளை, காப்பாளர் இ.சி. திருச் செந்திநாதன் தந்துள்ளார்.
போர்க்களத்திலும், சூழலிலும் நின்று ஆக்க இலக்கியம் படைப்பவர்களின் ஆற்றலை இனங்கண்டு ஊக்குவிக்கும் அதே வேளையில் செய்நேர்த்தியாய் எழுத அவர்கள் நிறைய வாசிக்கவும், எழுதவும் வேண்டுமென்பதை இங்கு குறிப்பிடலாம்.
தினக்குரல்
O3-O8-2OO1

அனைதா ஷெரிப்பின் அரசியல் நாவல்
புனைகதை (Fiction) என்ற இலக்கிய வகைக்குள் அடங்குபவை நாவலும் சிறுகதையும். இவை கற்பனை செறிந்த ஆக்க இலக்கியங்கள். நல்ல சிந்தனைகள், கருத்துக்கள் மூலம் வாசகர்களை ஆற்றுப்படுத்துபவை. களிப்பூட்டும் அம்சங்களுடன் பெறுமதியான சமூக விழுமியங்களையும் சொல்லாமற் சொல்பவை. கற்பனைச் சிறப்பும், கவிதாலயமும் எடுத்துரைக்கும் நேர்த்தியும், சொல்லின் மகத்துவமும், தெளிவான நீரோடை போன்ற நடையும் இப்படைப்புக்களின் முக்கிய உறுதிப்பொருளான உள்ளடக்கத்துடன் பிரித்துப் பார்க்க முடியாத அளவிற்கு இணைந்து, சங்கமமாகி உயிர்த்துடிப்புடன் விளங்கும் வாழ்க்கைத் தரிசனமாக இந்த உடன் நிகழ்கால இலக்கியங் களும் திகழ்கின்றன.
நொவல் (Novel) என்ற ஆங்கிலச் சொல்லைத் தமிழ்நாட்டு உச்சரிப்பில் ஈழத்தவராகிய நாமும் நாவல் என்கிறோம். பிரச்சினையில்லை. இந்த நாவல் பல வகைப் படும். வரலாற்று, சமூக, உளவியல், அரசியல், அறநெறி சார்ந்த, திகைப்பூட்டும், துப்பறியும், மர்ம, பயங்கர, சிறுவர்க்கான என்று வகைப்படுத்திப் பார்க்கலாம்.
ஈழத்து நாவல்கள் பலவற்றை இவ்வகைகளுக்குள் அடக்கலாம். எழுந்தமானமாகக் கூறினால், வ.அ. இராச ரத்தினம் இலங்கைப் புராதன வரலாற்றைப் பின்னணியாகக் கொண்டு ஒரு வரலாற்று நாவலை எழுதியிருக்கிறார். இதே போன்று உடனிகழ்கால ஈழத்து வரலாற்றை மையமாக வைத்து செ. கணேசலிங்கன் சில நாவல்களை எழுதியிருக்கிறார். இவ்வாறே பற்பல அம்சங்கள் அழுத்தம் பெற்ற நாவல்களை ஈழத்து எழுத்தாளர்கள் எழுதியுள்ளனர். ஈழத்து நாவல்கள் 9606015.5g)Gud felps Juds6065 (Social consciousness) சிறிதளவாகுதல் பிரதிபலிப்பது அவதானிக்கத்தக்கது.
47.

Page 29
தமிழ் நாட்டைப் போன்று ஒரு பெரிய களத்தில் விரிவான அனுபவங்களைப் பெற எமது எழுத்தாளர்களுக்கு வாய்ப்பில்லை. குறுகிய வட்டத்துக்குள் நின்றே அவர்கள் யதார்த்தபூர்வமான நாவல்களை எழுதி வருகிறார்கள்.
கிழக்கிலங்கையைச் சேர்ந்த ஜூனைதா ஷெரிப் (ஆண் தான்) அதிகம் கவனத்தைப் பெற்றிராத ஓர் சிறந்த எழுத்தாளராகத் திகழ்ந்து வருகிறார். இவர் எழுதிய நூல்களை நீங்கள் படித்துப் பார்த்திருக்கிறீர்களோ தெரியாது.
அவற்றுள் சில: அவன் ஒன்று நினைக்க, சாணைக்கூறை, அவளுக்கும் ஓர் இதயம், மூன்றாம் முறை, காட்டில் எறிந்த நிலா, ஒவ்வாமுனைக் காந்தங்கள். ஒரு கிராமத்தின் துயில் கலைகிறது. இது நம்ம சொத்து. சிதைவுகள். இவற்றைவிட இளநரை (சிறுகதைத் தொகுப்பு), பெட்டிசம் (லில் குணசேகர எழுதிய சிங்கள நாவலின் தமிழாக்கம்). இவளுக்காகவா? (சிறுகதைத் தொகுப்பு), பொன்னாடை (வானொலி நாடகத் தொகுப்பு) ஆகியவற்ைைறயும் ஜூனைதா ஷெரிப் தந்துள்ளார். இவருடைய புதிய நாவல் "ஜனநாயகர்கள்' மக்கள் தலைவர்கள் எவ்வாறிருக்க வேண்டும் என்ற இலட்சிய நோக்குடன் வரையப்பட்டுள்ள சுவாரஸ்யமான நாவலாகும். இது Democracy எனப்படும் ஜனநாயகம் என்ற கோட்பாட்டின் விளக்க நூலாகவும் விளங்குகிறது. அது மாத்திரமல்லாமல் குக்கிராமங்களின் அபிவிருத்திக்குத் தடையாகவுள்ள கற்கள் எவை என இனங்கண்டு அவற்றை அகற்ற எவை எவை மேற்கொள்ளப்பட வேண்டும் என்பதையும் தெரிவிக்கின்றது. எனவே, இது ஒரு அரசியல் /சமூகவியல் பாடநூலாகவும் கொள்ளப்படத்தக்கது. அரசியல்வாதிகள், நிர்வாகிகள், ஊடகத்துறையினர், உயர்கல்வி மாணவர்கள். இனவாதிகள் அனைவரும் பார்த்துப் பயன் பெறத்தக்கதோர் நூல் இது. இவ்வாறு கூறுவதனால் இது நாவல் அல்ல. ஒரு பாடநூலே என்று தப்புக் கணக்குப் போட்டு விடாதீர்கள்.
மேற்சொன்னவை அழகாக நெய்யப்பட்ட ஒரு கதை மூலம் விபரிக்கப்படுகின்றன. நாவல் இரண்டு பாகங்களைக் கொண்டது.

கே.எஸ். சிவகுமாரன்
அடிமட்டத்திலிருந்து தனது நேர்மையால் உயரும் ஓர் இஸ்லாமிய இளைஞனின் கதையையும், அவன் மீது காதல் கொண்ட ஒரு பெண்ணின் கதையையும் அவர்களிருவரது அகால மரணத்தையும். அதீத உணர்ச்சி மேலீட்டைக் காட்டாமல், அதீத நாடகப் பாங்காக இல்லாமல் மனதைத் தொடும் வகையில் ஆசிரியர் புனைந்துள்ளார்.
இந் நாவலாசிரியர் ஒர் உயர்தர அரச உத்தியோகத் தராகக் கடமையாற்றி இளைப்பாறியவர்.கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்தவர். இந்த நாவலில் இலக்கிய ரீதியாக நான் சுவைத்தவற்றுள் முக்கியமானது இவர் கையாண்ட சம்பாஷணைகள் கிழக்கு தென்கிழக்கு இஸ்லாமியரின் பேச்சு மொழியை ஆசிரியர் அழகாகப் பதிவு செய்கிறார். நண்பர் திக்குவல்லை கமால் எவ்வாறு தென் மேற்கு மாகாண இஸ்லாமியப் பேச்சுப் பாங்கைக் கச்சிதமாக் கொண்டு வந்து புதுப்புனைவாக்கம் செய்கிறாரோ. அவ்வாறே நண்பர் ஜூனைதா ஷெரிப்பும் செய்கிறார்.
ஆய்வாளர் சி வன்னியகுலம் புனைகதைகளில் பேச்சு வழக்கு தொடர்பான ஓர் அருமையான நூலைப் பல ஆண்டுகளுக்கு முன் எமக்குத் தந்தவர். ஜூனைதா ஷெரிப், திக்கவல்லை கமால், எஸ்.எல்.எம். ஹனிபா. முகம்மது மெயின் போன்றவர்களின் புனைகதை தமிழ் பேச்சு வழக்கை ஆய்வாளர்கள் எம்.ஏ. நுஃமான், சி. வன்னியகுலம் போன்றோர் ஆராய்ந்து தர வேண்டும்.
ஜனநாயகர்கள்’ என்ற நாவல் திருப்திகரமான ஓர் ஆக்கப்படைப்பு என்பதில் சந்தேகமில்லை. நடைமுறை அரசியல் போக்குகள் துலாம்பரமாகத் தெரிகின்றன. கதை மாந்தர் குணவியல்புகள் சமநிலையில் காட்டப்பட்டுகின்றன. ஆயினும், கொடியோர் இருவர் (தந்தையும், மகனும்) கொஞ்சமேனும் திருந்தாத மாந்தர்களாகக் கடைசி வரை இருந்து வருகிறார்கள்.
283 பக்கங்களைக் கொண்ட இந்த நாவலைப் படிக்கப் பொறுமை வேண்டுமே என்று நினைத்துத்தான் படிக்கத் தொடங்கினேன். ஆனால், ஆய்வறிவாளர் பேராசிரியர் சோ.
ത്ത് 49.1ത്ത

Page 30
சொன்னாற்போல
சந்திரசேகரம் தமது அணிந்துரையில் கூறியிருப்பது உண்மை தான் என்று பின்னர் உணர்ந்து கொண்டேன். அணிந்துரை யாசிரியர் என்ன கூறுகிறார்?
"நூலாசிரியர் வேறு பல நாவல்களை எழுதியிருந் தாலும் நான் முழுவதாக ஒரே மூச்சில் படித்து முடித்த ஷெரிப்பின் நாவல் இதுதான். அவ்வளவு விரைவாக நான் படித்து முடிக்க எனக்கிருந்த துாண்டு கோல் என்ன என்பதைச் சுருக்கமாகக் கூற விரும்புகிறேன். கைதேர்ந்த நாவலாசிரியர் என்பதனால், ஷெரிப் நாவலில் ஆங்காங்கு விறுவிறுப்பு வில்லைகளைத் தூவியுள்ளார் போலும், படித்தால் வைக்க மனம் வராத நாவல், அடுத்து என்ன நடக்கும் என்பதை வாசித்து அறியத் தூண்டும் முறையில் இலகுவாக கதையை நகர்த்திச் செல்லும் ஆசிரியரின் வன்மை ஆகிய இவ்வம்சங்க ளானது முற்றிலும் இலக்கியப் பாங்கானது என்று நான் சொல்ல வரவில்லை. ஆனால், வாசிக்கத் துாண்டும் விதத்தில் எழுது வதற்கும். வித்தியாசமான ஒரு கைத்திறன் தேவை. அது எழுத்தாளரிடம் செறிந்து அவருடைய நாவல் உருவத்தின் ஓர் அம்சம் பற்றியது என்றே கருதப்படல் வேண்டும். உள்ளடக்கத்தில் எவ்வளவு உன்னத இலட்சியம் குடி கொண்டிருந்தாலும், உருவம் சப்பென்று இருந்தால் அவ் வுள்ளடக்கம் இலக்கியமாக மிளிர்வதில்லை"
உண்மையில் செங்கை ஆழியான், செ. யோகநாதன் ஆகியோர் உயர்மட்ட அரச நிர்வாகிகளாக இருந்து பெற்ற அனுபவங்களை தமது புனைகதைகளில் பெய்தது போலவே ஜூனைதா ஷெரிப்பும் செய்திருக்கிறார்.
பத்திரிகைகளில் 'அரசியல் விமர்சகர்களாக பயன் படுபவர்கள் கூட இந்நூலில் இருந்து பல செய்திகளைத் தமது பத்திகளுக்குப் பயன்படுத்தலாம். அதாவது ஜனநாயகம் எவ்வழி செல்கிறது என்றறிய
தினக்குரல்
31-O8-2OO1

அங்கையன் கைலாசநாதனின் ‘செந்தணல்"
இருநூற்றி நாற்பத்தொரு பக்கங்களைக் கொண்ட ஒரு நீண்ட நாவல் “செந்தணல்" இதனை எழுதியவர் மறைந்த எழுத்தாளர் அங்கையன் கைலாசநாதன். இவர் வாழ்ந்ததோ 34 வயதுகள் தான். அருமையான எழுத்தாளர். வயதுக்கு மீறிய அனுபவமும், அறிவும், ஆற்றலும் கொண்டு விளங்கியவர். பத்திரிகை, வானொலி ஆகிய இரு ஊடகங் களிலும் புதுப்புனைவாக அமையும் விதத்தில் பங்களிப்புக் களைச் செய்தவர். பேராசிரியர் அ. சண்முகதாஸ், கவிஞரும், திறனாய்வாளருமான இ. முருகையன் மற்றும் சிலர் கைலாச நாதனின் ஆற்றலை ஊடுருவிப் பார்த்து நுண்ணிதாக எழுதி யுள்ளனர்.
இவர் எழுதியவற்றுள் கடற்காற்று', 'வைகறை நிலவு' ‘செந்தணல் ஆகியன இதுவரை வெளிவந்துள்ளன. சொர்க்கமும் நரகமும், சிட்டுக்குருவிகளும் வானம்பாடியும் அங்கையன் கைலாசநாதனின் சிறுகதைகள்' வெளியாக விருக்கின்றன. ஒய்வு பெற்ற உயர் அரச அதிகாரி இராஜ லட்சுமி அம்மாளின் கணவர் இந்த மறைந்த அங்கையன் கைலாசநாதன்.
இவருடைய செந்தணல் 12 நீண்ட அதிகாரங்களைக் கொண்டது. ஒரு கலைஞனின் தாம்பத்திய வாழ்வை இந்நாவல் சித்திரிக்கிறது. கதை நிகழும் காலம் 1950.1960 களாக இருக்கலாம். அக்காலப் பகுதிகளின் பின்னணியில் வைத்துப் பார்க்கும்பொழுது, இந்த நாவல் மகத்தானதொரு புதுமைப் படைப்பாக இருப்பதை அவதானிக்கலாம். ஆழமும், அனுபவ வீச்சுங் கொண்ட நாவல் இது.
அக்காலத்தில் ஐரோப்பிய நாவலாசிரியர்கள் பலர். அக்கால ஈழத்துத் தமிழ் எழுத்தாளர்களுக்குக் குறைந்த
5.

Page 31
மட்டத்திலாகுதல் அறிமுகமாயினர். அல்பேர் கெமு, ப்ரான்ஸ் கஃப்கா, தொமஸ் மான், அல்பேர்ட்டோ மொறாவியா, இன்னாசியோ சிலோனே. டி.எச். லோரன்ஸ் சமர்செட் மோம், ஜ்ஷோன்போல் சாத்ரே போன்றோரின் எழுத்துக்கள் ஈழத்துத் தமிழ் எழுத்தாளர்கள் சிலரைக் கவர்ந்தன. அக்கால எழுத்தாளர்கள் ஆங்கிலத்தினூடாக இந்நாவல்களைப் படித்துப் பார்த்திருக்கக் கூடும். சில்லையூர் செல்வராசன், ஏ.ஜே. கனகரத்னா. கே.எஸ். சிவகுமாரன். மஹற்ரூப் போன்றோர் இவர்களை தமிழிற்கு அறிமுகஞ் செய்து வைத்தனர்.
அங்கையன் கைலாசநாதனின் ‘செந்தணல்’ நாவல் உடனிகழ்கால ஐரோப்பிய நாவல்களைப் படித்துப் பயன் பெற்றதனால் எழுந்ததொன்று எனக் கூறலாம். குறிப்பாக கலை தொடர்பான வியாக்கியானங்கள் அத்தகைய பாங்கைக் கொண்டவையாக அமைந்துள்ளன. மிகவும் சுவாரஸ்யமான கதை. மனித உறவு முறைகளை, சந்தர்ப்பத்தின் கைதிகளான இக்கதை மாந்தர் மூலம் கதாசிரியர் அற்புதமாகத் தீட்டுகிறார். நீண்ட நாவலாயிருந்தபோதிலும், கட்டம் கட்டமாக இரசித்துப் பயன்பெறும் விதத்தில் ஒவ்வொரு அங்கமும் விபரிக்கப் பட்டுள்ளன. 2001 இல் கதை நிகழ்வு சிறிது வேறுபட்டதாகத் தோன்றக்கூடும். ஆனால், கடந்த சகாப்தங்களின் வாழ்நிலைக் கூறும், சமுதாயமும் அவ்வாறுதான் இருந்தது என்பதை நாம் விளங்கிக் கொள்ள வேண்டும்.
இந்நாவலில் வரும் சில வரிகள் நோக்கத்தக்கன. அவற்றுள் என்னைக் கவர்ந்த சில பகுதிகளைத் தருகிறேன். "தணல் ஒன்று: உருகிப்போன வார்த்தைகளிலே உள்ளம் வெதும்பித் துடித்தது. குமைந்து நொந்தது அவனுடைய இளகிய அந்த உலகம்.குணத்தால் குறைந்தவர்களின் குறுகிய உடலம்போல.ஜீவ உரையாடலை முறிப்பவள் போல.
தணல் மூன்று: தானாக விரிய இருந்த மலரின் இதழ்களை அலமலக்காகப் பிய்த்து மணத்தைக்கூட நுகராமல், தேனைப் பருகாமல் உள்ளே என்ன இருக்கிறது என்று மட்டும்
52

கே.எஸ். சிவகுமாரன் பார்த்துவிட்டுச் சென்ற மூடர்களால் நான் இப்படி ஆகினேன். சிதறப்பட்ட இதழ்கள் விழுந்து தொங்க மலர்ந்த மலர் நான். இனி தலைக்கும் உதவ மாட்டேன். தெய்வத்துக்கும் அர்ச்சிக்க மாட்டேன். செல்வராணி சுடுபுளுங்கல் நெல்லை விழுங்கிய கோழிபோல் திக்கினாள்.செவ்வானம் போன்ற பொது மேனியழகும், எலுமிச்சம் பழம் போன்ற முக நிறமும். கரு நாவற்பழம் போன்ற நிறமும், ட்ராக்டர்கள் உழுது விட்ட வயல்களின் தோற்றம் போன்ற குட்டைகள் விழுந்து, குழிகளாகிவிட்ட முகமும், நெட்டை உருவமும், சிறிய கண்களும், கலையழகே இம்மியும் அற்ற தோற்றமும்.
தணல் ஐந்து: தமிழில் சிந்தித்து ஆங்கிலத்தில் பேசக் கற்றுக்கொண்டு நின்ற அந்த எதிர்கால உலகத்தின் பேச்சுக் களையும், அர்த்தமற்றவற்றுக்கான கபடச் சிரிப்புக்களையும் கேட்க அப்பொழுது அங்கு வந்த கமலேஸ்வரனுக்கு என்னவோ போலிருந்தது.”
இன்னுஞ் சில பகுதிகள் உண்டு. இந்த நாவல் தொடர்பான பகுப்பாய்வு இங்கு மேற்கொள்ளப்படவில்லை. அது திறனாய்வு வழியைச் சாரும். பத்தி எழுத்துக்களில் இதனை மேற்கொள்ள முடியாது.
இன்னுஞ் சொல்லப்போனால், ‘செந்தணல் பல்கலைக் கழக மட்டத்தில் ஆய்வுக்கு உட்பட வேண்டியதொரு நாவல்.
தினக்குரல்
O3-O9-2OO
53-ത്ത

Page 32
மரபிலமைந்த புதுப்புனைவாக்கம் நஜிமுதீனின் பாடற்கதை
தென்கிழக்கைச் சேர்ந்த வைத்திய கலாநிதி எஸ். நஜிமுதீன் தந்துள்ள ஒரு புத்தகத்தின் பெயர் முள்ளில் படுக்கையிட்டு. மரபிலுள்ள வாய்மொழி பாடல் கூறுகளைத் தொடர்நிலைச் செய்யுள் வடிவமாகத் தொகுத்து ஓர் கதை யாகப் புனைந்திருக்கிறார் ஆசிரியர். தவிரவும் விளக்கம் அளிக்குமாற் போன்று பொழிப்புரைகளும் எழுதிக் கற்பனை சார்ந்த நடைமுறை வாழ்க்கைக் கோலங்களை நாம் படித்துச் சுவைக்கவும் அவர் வகை செய்கிறார். ஊடுருவி நிற்கும் கதைத் தொடர் சாமான்யமாகத் தோற்றக்கூடும். இக்காலத்தில் இது புரிந்து கொள்ளக் கூடியதே. ஆயினும், நவீன மய மாதலில் கிராமியப் பண்பாட்டுக் கோலங்கள் அழிந்தொழியும் வேளையில் பழங்கால நாட்டம் (Nostalgia) கொண்ட நம்மில் சிலருக்கு இத்தகைய இலக்கிய ரீதியான ஆக்கங்கள் சிறிது தெம்பூட்டக் கூடியவை.
இங்கு கதையல்ல முக்கியம். சாமான்யமானதென்று கதையை நாம் கூறினாற் கூட அதனைப் புது வடிவத்தில் தருகையில் அங்கு ஆக்கலாற்றல் தென்படுவதைக் குறிப்பிட்டேயாக வேண்டும். பெரும்பாலான ஆக்கங்களின் சிறப்பு அவை எவ்வாறு கூறப்படுகின்றன/அளிக்கப்படுகின்றன என்பதிலும் தங்கியிருக்கிறது. இங்குதான் Structure (கட்டமைப்பு), FreshneSS (முன் உணரப்படாத) போன்ற பண்புகள் அவதானிப்புக்குரியதாகின்றன. இவ்வாறு நோக்குகை யில் நூலாசிரியர் எஸ். நஜிமுதீன் பாராட்டுக்குரியவராகிறார்.
இந்த நூலுக்கு அமரராகிப் போன கவிஞர் எம். எச். எம். அஷரப், பண்பாட்டுத்துறை ஆய்வாளர் எஸ்.எச்.எம்.
54

கே.எஸ். சிவகுமாரன்
ஜெமீல், மரபுக் கவிஞரும், நவபுனைகதையாளருமான ஜின்னாஹ ஷரிப்புத்தீன் போன்றோரின் திறனாய்வுக் குறிப்புகள் கெளரவத்தையளிக்கின்றன. அடக்கமான முறையில் தன்னுரையை வழங்கும் ஆசிரியர் இவ்வாறும் சில செய்திகளைத் தெரிவிக்கிறார்:
"இந்தக் கிராமிய இலக்கியத்தின் நதிமூலம், ரிஷிமூலம் யாரென்று தெரியவில்லை. கிழக்கு மாகாண கரையோரப் பிரதேசங்களில் தமிழரின் பாரம்பரியத்துடன் பின்னிப் பிணைந்தபடி வாழ்கின்ற முஸ்லிம் மக்களிடையே கவி இயற்றும் ஆற்றல், மொழியறிவு, செவியேறல் வழியே புறக்கணிக்க முடியாத அளவு செறிந்து கிடப்பது ஒன்றும் புதிதல்ல. நூறு மசாலா', 'கிழவியின் பாட்டு', 'கோலாட்ட அண்ணாவியாரின் விருத்தங்கள்’ என்று கிழக்கு மாகாண மெங்கும் கிளை பரப்பி நிற்கின்றன. கிராமிய இலக்கியத்திற்கு மீட்போன் இல்லாத குறையே உண்டு”
இந்த வரிசையில் 'கிழவியின் பாடல்’ எனும் ஒரு தொகுப்பினை எதிர்பாராத விதமாகச் சந்திக்க நேர்ந்த பொழுது அது நேர்த்தியான ஒரு கதையாகக் கோர்க்கப்பட்டிருந்ததனை அவதானிக்க முடிந்தது. பாட்டுக்கு இடையில் எந்தக் கதையு மில்லை. தொடர்புபடுத்திப் பார்த்தபோது அற்புதமானதோர் காவியம் அங்கே பிரசவமானது.
“காணமற் போகவிருந்த ஒரு காவியம் கையளவு புத்தகத்துள் கனகாலம் வாழட்டும் எனும் எனது கனவு நிறை வேற எல்லாம் வல்ல அல்லாஹ் நல்லருள் புரிய வேண்டும்." நூலாசிரியர் நுழைய முன்’ என்ற பகுதியையும் தந்து எம்மை நூலுக்குள் அழைத்துச் செல்கிறார்.
இந்தப் பாடற் கதையில் ஒன்பது கதைமாந்தர் வருகின்றனர். 12 அத்தியாயங்களைக் கொண்ட கதை சார் பாடல் தொகுப்பில் ஒரு குடும்பக் கதை நிகழ்கிறது. மாமன், மச்சான், மச்சாள், மாமி போன்ற கதை மாந்தர்கள்
55

Page 33
வருகிறார்கள். இது ஒரு துன்பீற்று (Tragedy) நாடகம் போல அமைந்துவிடுகிறது என்றும் கூறிவிடலாம்.
கதைப்போக்கை நான் இங்கு கூற விரும்பவில்லை. அங்கம் அங்கமாய் பிரித்துப் பகுத்து ஆராயவும் பத்தி எழுத்து இடங்கொடாது. இதுவரை இந்நூல் பற்றி நான் குறிப்பிட்டவை சரிதானா என்பதை உறுதி செய்து கொள்ள நீங்களே இந் நூலைப் படித்துப் பார்க்க வேண்டாமா?
இந்த நாடகத்தன்மை வாய்ந்த கதையில் கதை மாந்தர் உரையாடல், கதை சொல்பவர் குறிப்புரை. நூலாசிரியரின் விளக்கக் குறிப்பு, அபூர்வமான பேச்சு வழக்கு, கிராமிய சம்பிரதாயங்கள். இஸ்லாமிய அறநெறிகள். அராபியத் தமிழ்ச் சொற்கள். மந்திரச் செல்வாக்கு யாவரையும் வடிவானவர் என்றழைக்கும் சாதகமான சொற் சாதுரியம் போன்றவற்றை இனங்கண்டு கொள்ளமுடியும். கவனத்தை நாடி நிற்கும் நூல் இது.
தினக்குரல்
21-O9-2OO1

என். சண்முகலிங்கனின் மரபுகளும் மாற்றங்களும்
மரபுகள் பற்றிய மற்றொரு நூல் மாற்றங்களை நாடி நிற்கும் சமூகவியலாளர் ஒருவரின் நூல். அதன் பெயரே மரபுகளும் மாற்றங்களும் தான். ஆசிரியர் கலாநிதி என். சண்முகலிங்கன். சண்முகரத்தினம் (நோர்வே). க. சண்முக லிங்கம் ("பண்பாடு”முன்னாள் ஆசிரியர்). என். சண்முக லிங்கன் போன்றோர் சமூகவியலில் பாண்டித்தியம் பெற்ற ஆய்வறிவு ரீதியாகச் சிந்தித்து எழுதுபவர்கள். பெயர்களும் கிட்டத்தட்ட ஒரே மாதிரியாக இருப்பதனால் வாசகர் மனதில் சிறிது குழப்பம் ஏற்படலாம்.
என். சண்முகலிங்கன் என்றதும் மெல்லிசைப் பாடல்கள், இலங்கை வானொலி தமிழ் தேசிய சேவை அறிவிப்பாளர். மறைந்த பாடகரும், அறிவிப்பாளருமான எஸ்.கே. பரராஜ சிங்கம் இவ்வாறான சில படிமங்கள் நம்மிடையே எழக்கூடும். இவர் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் இப்பொழுது சமூகவியல் துறைப் பேராசிரியராகப் பணிபுரிகிறார். இவரு டைய சில நூல்கள் கவனத்தை ஈர்த்துள்ளன. அவற்றுள் ஒன்று தான் மரபுகளும் மாற்றங்களும்' ஒவியர் சனாதனின் வெளிப்பாடாக இச்சிறு நூலின் அட்டை விளங்குகிறது. வெளியீட்டாளர்கள்: நாகலிங்கம் நூலாலயம். நகுலகிரி, மயிலிட்டி தெற்கு, தெல்லிப்பழை.
யாழ். பல்கலைக்கழகத் துணைவேந்தர் பேராசிரியர் பொன். பாலசுந்தரம்பிள்ளை கூறுகிறார்: “புதிய பல எண்ணக் கருக்களை எளிமையான தமிழில் தரும் இந்நூல். தொடர்பிய லில் அவருக்குள்ள (என். சண்முகலிங்கன்) ஞானத்தினையும் வெளிப்படுத்தி நிற்கின்றது. ஏற்கனவே பல நூல்களை, ஆய்வுக்
57

Page 34
சொன்னாற்போல கட்டுரைகளை இத்துறைகளில் எழுதியுள்ள சண். பல சர்வதேச அரங்குகளிலும் கலந்து புகழ் பெறும் இளம் கல்வியாளர்.” பாதுகாவலன்’ இதழில் பதிவுபெற்ற சிந்தனைகளின் தொகுப்பாக இந்நூல் வடிவம் பெறுகின்றது.
கலாநிதி என். சண்முகலிங்கனின் முன்னுரையிலிருந்து சில பகுதிகள்:
"பண்பாடு என்பது வாழ்க்கை முறையாகவும், வாழ்வுக் கான அர்த்தமாகவும் அமைந்துள்ளது. சமூகத்தின் அனைத்து மக்களுக்கும் சமமான வாழ்வினைத் தரும் திசையில் பண்பாட்டினை ஜனநாயகப்படுத்தும் பாரிய பணியிலே சமூக மேம்பாட்டில் உழைக்கும் அனைவரும் இன்று இணைந்து செயற்பட வேண்டியுள்ளது.”
மேம்பாடு என்றாலே அது மேலை மயமாக்கம் தான் என்ற மயக்கம் கலைந்தாக வேண்டும். மரபு வழிப் பண்பாட்டின் செழுமையான அனுபவங்கள் பற்றிய மறதிக்குரிய மருந்தினை உடன் கண்டாகவேண்டும். கடந்த காலம் பற்றிய உணர்வை இழத்தலின் ஆபத்து, இன்றைய வாழ்வின் அனைத்து முகங்களிலும் உணரப்படுவது.
"உண்மையில் மரபும், நவீனத்துவமும் மனித சமூக மேம்பாட்டில் கைகோர்த்து நடைபோட வேண்டும். இந்தப் பயணத்தில் மரபின் தேவையற்ற கூறுகளைத் தவிர்ப்பதும், அநீதியான பகுதிகளை அகற்றுதலும் இயல்பாய் இணைதல் வேண்டும்.”
இவ்வாறு எழுதிச் செல்லும் கலாநிதி என். சண்முக லிங்கன் தமது புத்தகத்தில் 40 தலைப்புகளில் சுருக்கமாகப் பல விஷயங்களைத் தெளிவுபடுத்தித் தந்துள்ளார். இவர் ஆங்கில மொழியில் நன்கு பயிற்சி பெற்றிருக்கிறார் என்பதற்குச் சில ஆங்கிலச் சொல்லாக்கத்தின் கோட்பாட்டு விதிகளைத் தமிழில் அழகாகத் தருவதிலிருந்தே புலப்படுகிறது.
58

கே.எஸ்.சிவகுமாரன்
தமிழ் மாத்திரமே தெரிந்த வாசகர்கள் இத்தகைய நூல் களினால் பெரிதும் பயன்படலாம். பேராசிரியர் சோ. சந்திர சேகரம், பேராசிரியர் சி. சிவசேகரம், கலாநிதி என். சண்முக ரத்தினம், போராசிரியர் என். சண்முகலிங்கம், பேராசிரியர் சபா ஜெயராசா போன்றோரின் தமிழ்க் கட்டுரைகளினால் நான் பெரிதும் பயனடைந்துள்ளேன். இவர்கள் எழுதும் விஷயங்கள் பரவலாக வெளிப்படுத்தப்பட வேண்டும். மூன்று நூற்றாண்டுகளின் முன்னோடிச் சிந்தனைகள்’ என்ற கே.எஸ். சிவகுமாரனின் நூலும் பரவலாக வாசிக்கப்படவில்லை என்று தான் கூற வேண்டும்.
மரபுகளும் மாற்றங்களும்’ என்ற என். சண்முக லிங்கனின் நூலிலே எனக்குப் பிடித்த சில அதிகாரங்கள் உங்களுக்கும் பிடிக்கக்கூடும். வேறு சிலவும் பயன்படும், நான் குறிப்பிடுபவை:
"உறவுகள், சிந்தனை, முற்சாய்வு, மேலைமயமாக்கம், துன்பத்தில் இன்பம், பழையன கழிதலும் புதியன புகுதலும், பயனும் வழியும், இலட்சியமும் யதார்த்தமும், வாழ்வைத் தடுக்கும் தாழ்வு மனப்பான்மை, மக்கள் தொடர்பு சாதனங் களின் செல்வாக்கு.”
O O O
556)நிதி என். சண்முகலிங்கனின் மற்றொரு நூல், சமூக மாற்றத்தில் பண்பாடு' இது சென்னை சவுத் விஷன் வெளியீடு. இதன் உரிமையாளர் எம். பாலாஜி நீண்டதொரு முன்னுரையைத் தந்துள்ளார். இது தொடர்பான பின்னணியறிவு எனக்குப் போதாமையால், அகெடெமிக்’ (பல்கலைக் கழகங்களில் பணிபுரிவோர் எழுதுவது போன்ற) பாணியில் அமைந்த இந்த எழுத்தைப் பத்தி எழுத்தாளனாகிய என்னால் எளிதில் புரிந்துகொள்ள முடியாதிருக்கிறது. அதேசமயம், என். சண்முகலிங்கத்தின் முகவுரையும், கட்டுரைகளும் என் சிற்றறிவுக்கு இதமாக வாசிப்பின்பம் தருகின்றன.
59.

Page 35
resmi
இந்நூலில் 12 கட்டுரைகளும், பின் இணைப்பாக இரண்டு கட்டுரைகளும் உள்ளடங்கியுள்ளன. பின்னையதில் ஒன்று ஈழத்தில் இசையும் சமூக மாற்றமும் இது ஒரு முக்கியமான கட்டுரை. வானொலிப் பாடகர்கள், அறிவிப் பாளர்கள், தொலைக்காட்சி நிலைய அறிவிப்பாளர்கள், தயாரிப்பாளர்கள், இசைத் திறனாய்வாளர்கள் போன்றோர் இதனைப் படித்துப் பார்த்தல் பயனிக்கும்.
ஏனைய கட்டுரைகளில் "உறவும் தொடர்பும், உளப் பகுப்பாய்வும் சமூகமும், மாற்றமும் பதற்றமும் (ஆசிரியர் பதட்டம்' என்று எழுதியிருக்கிறார். இது பிழையான பிரயோகம் பதட்டம் அல்ல பதற்றம்), முதுமையில் தனிமை, பால் நிலை உறவுகள். பண்பாட்டு அதிர்ச்சி. கால மாற்றத்தில் குடும்பம்" போன்றவை எனக்குப் பயன் அளித்தன. உங்களுக்கும் அப்படியேயாகும். தேடுங்கள்.
தினக்குரல்
21-O9-2OO1

நீலாவணனின் கவிதை வரிகள்
கிழக்கிலங்கையைச் சேர்ந்த மறைந்த கவிஞர் நீலாவணன். இவர் இறந்தபின் வெளியாகியுள்ள இவரது புதிய கவிதை நூல் ஒத்திகை இன்றைய இளம் வாசகர்கள் இவரைப்பற்றி நன்கு அறிந்திருக்கமாட்டார்கள். இவரைப் பற்றிய முக்கிய தரவுகளை இந்நூலில் இருந்து பெற்றுக் கொள்ளலாம்.
கவிஞரும், மார்க்ஸிச விமர்சனம் தொடர்பாக நூல்கள் எழுதியவரும், தமிழ்மொழி வல்லுநரும், பாலஸ்தீன கவிதைகளைத் தமிழில் தரமுயன்றவருமான கலாநிதி எம்.ஏ. நுட்மான் முன்னுரை எழுதியுள்ள பல நூல்களில் சமீபத்தியது "ஒத்திகை" மறைந்த ஈழத்து முன்னணிக் கவிஞர்கள் இருவர் மகாகவி, நீலாவணன் தொடர்பாக அதிகாரபூர்வமாகப் பேசக் கூடிய ஒருவராக கலாநிதி எம்.ஏ. நுட்மான் இன்று உயர்ந்து நிற்கிறார்.
கிழக்கிலங்கையைச் சேர்ந்த இவருக்கு கிழக்கில் மாத்திரமல்ல, தமிழ்நாட்டிலும், இலங்கையிலும் நல்ல மதிப்பு உண்டு. 'காலச்சுவடு, மூன்றாவது மனிதன்' போன்ற ஏடுகள் அவரைச் செவ்வி காண முன்வந்ததில் இருந்தே அவருடைய முக்கியத்துவம் சிற்சில இலக்கியக் குழுக்களிடையே நன்கு உணரப்பட்டது.
மனிதநேயரும், பழகுவதற்கு இனியவருமான நுட்மான் மொழியியல் துறையில் விசேட தகைமை பெற்றவர். திறனாய்வுத் துறையிலும் அவர் ஈடுபடுவதனால் கைலாச பதி, சிவத்தம்பி ஆகிய இருவருடன் நுட்மானும் மூன்றாவது முக்கிய "விமர்சகராக” தமிழ்நாட்டுச் சிற்றேடுகள் சிலவற்றால் அங்கீகாரம் பெற்றிருக்கிறார்.
61.

Page 36
தமிழ் நாட்டுச் சிற்றேடுகளிலும், பிறநாடுகளில் வெளியாகும் தமிழ்ச் சிற்றேடுகளிலும் இலக்கியக் கடிதங்கள் எழுதியும், புத்தக மதிப்புரைகள் எழுதியும் மாக்ஸிச விமர்சகராக இன்று முக்கியத்துவம் பெற்றிருக்கும் சி. சிவசேகரம், தமிழ் நாட்டுச் சிற்றேடுகளினால் அங்கீகாரம் பெற்ற மற்றொரு ஈழத்து விமர்சகர்' (இவர்கள் எல்லாம் திறனாய்வாளர்கள்’ எனத் தம்மை அழைக்க மாட்டார்கள் விமர்சகர்கள் என்பதே இவர்கள் அடைமொழி) மு. பொன்னம்பலம், சு. வில்வரத்தினம் ஆகியோரும் தமிழ் நாட்டுச் சிற்றேடுகளில் அங்கீகாரம் பெற்ற ஈழத்தமிழ் விமர்சகர்கள்.
எம்.ஏ. நுட்மான், ஒத்திகை” கவிதை நூலுக்கு திறனாய்வு சார்ந்த அணிந்துரையை வழங்கியிருக்கிறார். படித்துப் பாருங்கள்.
நீலாவணனின் கவிதைகளை இன்று படிக்கும் பொழுது அவை சம்பிரதாயமாக இருப்பதைக் காணலாம். அவர் எழுதிய காலத்தில் அவர் கவிதைகள் முக்கியத்துவம் பெற்றிருந்தமை ஏற்றுக்கொள்ளத்தக்கதே.
நீலாவணனின் கவிதைகளிற் சிலவரிகள் எனக்கு உவகை அளித்தன. அவற்றை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன். 率 தமிழ் மாதரசே பசுந்தயிரிலே வெண்ணெயாய் தமியனின்
உள்ளம் வாழ் தையலே தமிழே.
率 நின்னுடைய பவள இதழ் நடுவினிலே பற்கள் என்று
குணம் உயர்ந்த நித்திலங்கள் குவிந்திடுக.
* வெண்கலத்தில் உன்மேனி விளங்கக் கண்டேன்.
விளையாட்டுப் பொருள்களில் உன் குறும்பு கண்டேன். தங்க நிறக் கனிகளிலே தனங்கள் கண்டேன். தத்தளிக்கும் கற்பூரச்சுடரில் உன்றன் கண்ணசைவு கண்டேன்.

கே.எஸ். சிவகுமாரன்
ஹனிபா விற்ற வண்ண வண்ண மிட்டாயில் வார்த்தை கண்டேன். வாடுகின்றேன் ஒடோடித் தேடுகின்றேன். நினைப்பில் குதிர்ந்த தொகுப்பின் விளக்கம் கவியாகும். இளமைக் கயிற்றில் கனவைத் தொடுதல் கவியாகும்.
உண்மையின் புன்முறுவல் போலக் கிழக்கெல்லாம் வெண்ணெய் பரந்து வெறுப்பாகி மெல்ல மெல்ல சிங்கம் பிடரி சிலிர்த்தாற்போல் செங்கதிரோன் தோன்றுதற்கு முன்பே துணைவி துயில் எழுந்து தேன் தமிழை காதில் தெளித்தாள் குளித்தேன் போய்.
தினக்குரல்
C7-O9-2OO

Page 37
சிற்சில சிறுநூல்கள்
முன்னர் கவிதைகளை எழுதிவந்த எம். பால கிருஷ்ணன் சிறுவர்களுக்கான நூல்களை எழுதி வெளியிட்டு வருகிறார். பெரிய எழுத்துக்களில் வண்ணப்படங்களுடன் வெளியாகியிருக்கும் இவரது நூல்களில் சில:
அரும்புகளுக்கு அறிவுக் கதைகள் (1,2), இருபது வருடங்களின் பின் தாய்நாட்டுக்கு தப்பிய கைதியின் கதை (இலங்கையில் நடந்த ஓர் உண்மைக் கதை), மந்திரவாதியின் தலையைத் தாக்கிய மாயச்செம்பு.’ இவை குழந்தைகள் சுவாரஸ்யமாக படித்து மகிழக்கூடிய சிறுவர் இலக்கியங்கள். இவற்றை புக்ஸ் பிரிஷாண்மி, 33பி, என்.எச்.எஸ். யூரீதம்ம மாவத்தை. கொழும்பு 10 இல் இருந்து பெற்றுக் கொள்ளலாம்.
கிழக்கிலங்கையைச் சேர்ந்த ஓ. ஏ. குணநாதன் ஒரு ஜனரஞ்சக எழுத்தாளர். சிறுவர்களுக்கான நூல்களையும் இவர் எழுதியிருக்கிறார். வீர ஆனந்தன், சுதந்திரம், மாயக்கிழவி, நரியின் தந்திரம் ஆகியன அவையாகும். வவுனியாவும் இலக்கிய வளர்ச்சியும்', 'மருதநிலா ஆகியன இவருடைய முக்கிய நூல்கள் ஆக்க இலக்கியத் துறையிலும் பல பரிசுகளைப் பெற்று தமது திறமையை நிரூபித்து வருகிறார். இவருடைய நூல்களை ஆசிரியரின் வீட்டு முகவரியில் இருந்து பெற்றுக்கொள்ளலாம்: 64. கதிராமர் வீதி, அமிர்தகழி. மட்டக்களப்பு.
O O O

கே.எஸ். சிவகுமாரன்
மட்டக்களப்பு மாவட்ட கூட்டுறவுச் சபையின் இணைகரம் மாணவர் சிறப்பிதழ் வெளிவந்திருக்கிறது. பல தரமான விஷயங்களை தாங்கி வந்துள்ள இந்த இதழில் மண்டூர் அசோகாவின் சிறுகதை, ஓ.கே. குணநாதன் நேர்காணப்பட்டமை ஆகியன குறிப்பிடத்தக்கன. நல்ல கட்டுரைகளும், கவிதைகளும், கதைகளும் இடம்பெற்றுள்ளன. பாராட்டும் படியான முயற்சி இதனை மட்டக்களப்பு மாவட்ட கூட்டுறவுச்சபை, பயணியர் வீதி, மட்டக்களப்பு என்ற முகவரி யில் இருந்து பெற்றுக்கொள்ளலாம்.
அடுத்த நூல் மின்னூடகங்களில் பால் நிலை சமத்துவத்தைப் பேணக் கையாளப்பட வேண்டிய ஒழுக்காற்று விதிகள்’ என்ற நீண்ட தலைப்புடன் வெளிவந்துள்ளது. பெண்கள் கல்வி ஆய்வு நிறுவனம் சிங்களம்/தமிழ் ஆகிய மொழிகளில் இதனை வெளியிட்டுள்ளது. கலாநிதி செம்மனச் செல்வி திருச்சந்திரன் பதிப்புரையைத் தந்துள்ளார். இச் சிறுநூலில் உள்ளடங்கியவை: 1. தொலைக்காட்சி நிலைய முகாமையாளர்களுக்கும். கொள்கை வகுப் பாய்வாளர்களுக்கும் சில ஆலோசனைகள். 2. தொலைக்காட்சி நிலையத் தயாரிப்பாளர்களுக்கு
உதவும் வழிமுறைகள் 3. விளம்பரங்களைக் கொள்கை ரீதியில் நெறிப்படுத்த
பின்பற்றவேண்டிய வழிமுறைகள் 4. ஊடகங்களில் பால் நிலைச் சமத்துவத்தைப்
பேணுவதற்கான செயற்திட்டம். இந்த ஆய்வுக்குழுவில் இடம்பெற்றவர்கள்: நாமல் வீரசேன, வாசுகி சோமசேகரம், ஷிராணி தேஜந்தி, பிரபா தேவராஜா. அ. நிக்ஸன், சிறியானி பெரேரா, தர்ஷினி குமார தாஸ். ܗܝ

Page 38
சொன்னாற்போல ஆலோசனைக்குழு அங்கத்தவர்கள்: டி.ஈ.டபிள்யூ குணசேகர, கிரஹாம் ஜயன்சைட், ஷாமினி போய்ல், ஷார்மி ஜயவர்தன, செல்வி திருச்சந்திரன், சி.கே, அபேயரத்ன.
இந்த ஒழுக்காற்று விதிகளை எழுத்தாக்கம் செய்தோர்: சித்ரா ரணவக்க, ரஞ்சன் சில்வா, ஷாமினி போய்ல், செல்வி திருச்சந்திரன்.
சிந்தியா
புத்தளத்தில இருந்து சிந்தியா காலாண்டு இதழ் வெளி வருகிறது. சுதாராஜ் கெளரவ ஆசிரியர். அன்ரன் செல்வ குமார் ஆசிரியர், பாலமுரளி, நமாஸ், வேலாயுதம், சனுான் மொகமட் ராபி, கே. நாகேந்திரன், ரிஸ்வான், ரபீக், தமிழ்நிலா, மெளயிர் ஆகியோர் இந்த வெளியீட்டில் சம்பந்தப் படுகிறார்கள். ஜவாத் மரைக்கார், புஷ்பராஜன் கெளரிகாந்தன், நாகராஜா, ரூபி குகநேசன், கதைவாணன், யூரீராமச்சந்திரன் ஆகியோர் ஆலோசகர்களாகப் பணிபுரிகிறார்கள்.
“சிந்தியா சஞ்சிகை பாடசாலை மட்டத்திலிருந்த இளம் எழுத்தாளர்களை உருவாக்கி வளர்த்துவிடும். மூத்த எழுத்தாளர்கள் மூலம் இளம் எழுத்தாளர்களுக்குப் பயிற்சி கொடுக்கும்” என்று ஆசிரியர் அன்ரன் செல்வக்குமார் குறிப்பிடுகிறார். புத்தளத்து எழுத்தாளர்களின் ஆற்றலை இந்த ஏடு எடுத்துக்காட்டுகின்றது.
O O O
கிழக்கரை பண்பாட்டுக் கோலங்கள்
துடிப்புமிக்க மானா மக்கீனின் ஆய்வு நூல் இது. இவர் எழுதியவை: லைட்ரீடிங் (இருபாகங்கள்) பேனா முனையில் அரை நூற்றாண்டு, முஸ்லிம் டைஜஸ்ட், என்னைக் கேளுங்கள், இளைய தலைமுறையினருக்கு இனிக்கும்
66

கே.எஸ். சிவகுமாரன்
இஸ்லாமிய கதைகள், இதழியல் முன்னோடி எங்கள் பாரதியார், இரு சமூகங்கள் - இரு கண்கள். மானா மக்கீனின் கதை மலர்கள், தியாகத் திருநாள் கதைகள், ஈகைப் பெருநாள் கதைகள். இலங்கை - கீழக்கரை இனிய தொடர்புகள். நீடூர் நெய்வாசல் நெஞ்சங்கள். கீழக்கரை பண்பாட்டுக் கோலங்கள்” தனக்கே உரிய நடையில் எழுதும் மானா மக்கீன் ஒரு ஜன ரஞ்சக எழுத்தாளர் மட்டுமல்ல, திறனாய்வுத் துறையிலும் நாட்டம் காட்டுபவர். இவரைப் பற்றிய போதிய கணிப்பு இன்னும் உருவாகவில்லை.
துரைவிநினைவலைகள்
மறைந்த கலாரசிகரும் வள்ளலுமான துரை விஸ்வநாதன் நினைவாக வெளிவந்துள்ள ஒரு தொகுப்பு இது. "அவருடைய தொண்டுக்கும் பிரபல்யத்திற்கும் காரணமாக அமைந்தவை யாவை என்பதை இந்நூலின் கட்டுரைகள் கூறுகின்றன” என்று அவர் குடும்பத்தினர் கூறுகின்றனர். தாம் வாழ்ந்த குறுகிய காலத்தில் "மலையக சிறுகதைகள், உழைக்கப் பிறந்தவர்கள், பாலாயி, மலையகம் வளர்த்த தமிழ், சக்தி பாலையா கவிதைகள், ஒரு வித்தியாசமான விளம்பரம்” ஆகிய நூல்களை துரைவி பதிப்பகத்தினர் வெளியிட்டுள்ளனர். வண்ணப் புகைப் படங்களும் சேர்க்கப்பட்டுள்ளன. துரைவி பற்றியதொரு முழுப் பார்வையை இந்நூல் தருகிறது. நன்றாக அச்சிடப்பட்டு வெளிவந்துள்ளது.
தினக்குரல் O7-O9-2OO
67

Page 39
சிவகாமியின் "ஊடாக"
தலித் என்ற மராத்தி மொழிச் சொல் தமிழிலும் இடம் பெறத் தொடங்கிவிட்டது. நமது மொழியில் தாழ்த்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட சாதியில் குறைந்தவர்களாகக் கருதப் படுபவர்களை இந்த வார்த்தை குறிக்கும். குறைந்த சாதியில் பிறந்தவர்களை ஏளனமாகச் சாதி வெறியர் பார்த்த காலம் ஒன்றிருந்தது. இது படிப்படியாக குறைந்து வந்த பொழுதிலும் சாதி வெறியாட்டம் இன்னும் சில இடங்களில் இருந்து வருவதை மறைக்க முடியாது. கடந்த அரை நூற்றாண்டாக நமது தமிழ் எழுத்தாளர்களில் சிலர் இந்தச் சாதிப் பாகுபாட்டை எதிர்த்து நிறையவே ஆக்க இலக்கியங்களைப் படைத்து வந்துள்ளனர். இவர்கள் தமது எழுத்துக்கள் மூலம் தமிழ்நாட்டு பின்தங்கிய வகுப்பினருக்கு முன்மாதிரியாக இருந்து வந்துள்ளனர். கே. டானியல், டொமினிக் ஜீவா. என்.கே. ரகுநாதன். எஸ். பொன்னுத்துரை போன்றோர் இவர்களில் சிலர். சாதியின் பெயரால் இடம் பெறும் அட்டூழியங்களை இச்சாதிகள் எனக் கூறப்படும் சாதிகளில் பிறக்காத ஏனைய எழுத்தாளர்களும் சுட்டிக் காட்டி எழுதியுள்ளனர். பொதுவாக இலங்கையில் உள்ள தமிழ் எழுத்தாளர்கள் அனைவருமே சாதி” என்ற மூடப்பகுப்பை நிராகரித்து வந்துள்ளனர். இங்கு விழிப்புணர்ச்சி அதிகம். எழுதப் படிக்கத் தெரிந்தவர்களின் எண்ணிக்கை அதிகம். முற்போக்குச் சிந்தனைகள் அதிகம்.
அம்பேத்கார் என்ற மராத்தியர் தமிழ் நாட்டில் உள்ள தாழ்த்தப்பட்ட மக்களிற் பெரும்பாலானோரைக் கவர்ந்த ஒரு சமூகச் சிந்தனையாளர். அவருடைய பாதிப்பினால் பல எழுத்தாளர்கள் அங்கு சாதியத்தை மறுவாசிப்புக்கு உட்படுத்தி எழுதி வருகின்றனர். அடிமட்டத்திலிருந்து பல ஆய்வறிவாளர் கள் தோன்றியுள்ளனர். அவர்களுள் சில பெண்களும் அடங்குவர். அத்தகையோரில் ஒருவரான சிவகாமி படித்துப்
68.

கே.எஸ். சிவகுமாரன் பட்டம் பெற்று உயர்மட்ட நிர்வாகியாக இருந்து வருகிறார். இவரை 1996 ஆம் ஆண்டில் புதுடில்லியில் சந்தித்தேன். அங்கு நடைபெற்ற அனைத்துலக திரைப்பட விழாவிற்கு அவர் வந்திருந்தார். கதைசாரா படமொன்றை (டொக்கியூ மென்டரி) அவர் நெறிப்படுத்தியிருந்தார். அக் குறும்படத்தின் பெயர் 'ஊடாக"
இரண்டு நாவல்களையும், இரண்டு சிறுகதைத் தொகுதிகளையும் அவர் ஏற்கனவே வெளியிட்டிருந்தார். இந்திய மத்திய அரசில் இவர் ஓர் உயர் அதிகாரி இவருடைய கணவர் போஸம் சென்னை துறைமுக நிர்வாகத்தில் ஓர் உயர் அதிகாரி
சிவகாமியின் முதற்படம் ஊடாக கதை சாரா/விவரணம் சார்ந்த அரைமணி நேர வண்ணப் படம். சந்துரு என்பவர் எழுதிய கதையைத் தழுவி, நெறிப்படுத்தி வெளியிட்டிருக் கிறார். இந்தப் படத்தில் சென்னை திரைப்படக் கல்லூரியில் பயின்றவரும், சிறப்பான நடிகரும், கலை இலக்கியங்களில் பரிச்சயமுடையவருமான நாசர் நடிக்கிறார். ஆனால், படத்தில் ஒரு வார்த்தை கூட அவர் பேசமாட்டார். படத்தில் அவர் ஒரு பயணி படத்தின் படிம இணைப்புக்கு அவர் உதவுகிறார். இந்தப் படத்தின் ஒளிப்பதிவு தங்கர் பச்சானுடையது. இவர் ஓர் எழுத்தாளரும் ஆவார். படநெறியாள்கையையும் மேற் கொள்வார். படத்தின் தொகுப்பு முன்னாள் நெறியாளர் பீம்சிங்கின் புதல்வர் லெனின். வி.டி. விஜயனும் துணை.
மனிதன் இயற்கையைக் கட்டி ஆளலாம் என்ற மமதை கொண்டவன். அதனால், இயற்கையான மனிதத் தன்மையை இழந்துவிடுகிறான். உண்மையில் இயற்கையின் மாண்பு மகத்தானது. இதனைத்தான் படிமச் சித்திரத் தொடர் மூலம் சிவகாமி காட்ட முயல்கிறார்.
இயற்கையோடியைந்த பண்டைய மரபு வாழ்க்கை முறைமை சொல்லாமல் சொல்லப்படுகிறது. இயற்கையின் வளங்கள் அபரிமிதமாகக் கிடைக்கின்ற பொழுதிலும் மனிதன் அவற்றை மாசுறுத்துகிறான். அலட்சியம் செய்கிறான். முரண்
69.

Page 40
சொன்னாற்போல பாடாக மனித வாழ்வு முழுவதுமே இயற்கையிலும், இயற்கை தரும் பலாபலன்களிலுமே தங்கியுள்ளது. இதனை உணர்த்து வதில் சிவகாமி பெருமளவு வெற்றி காண்கிறார்.
பொறுப்பற்ற முறையில், கூலிப்படையினர் போன்று இயற்கை விரோதிகள் இயற்கையைச் சூறையாடுகின்றனர். இயற்கை, இயற்கையோடு இணைந்து வாழும் பழங்குடி மக்கள்-இவையே துரித அசையும் படிமங்களாகப் படத்தில் சித்திரிக்கப்படுகின்றன. சமிக்ஞைகளும் பொருத்தமான இடங்களில் இடம்பெறுகின்றன.
மனிதன் தன்னையும் கடந்த நிலையில் மேற்கொள்ளும் இயற்கையளாவிய தேடலில்-போக்கையும், நெறியாளர் காட்டி நிற்கிறார். பயணம் தொடருகிறது. இந்த விதமான தத்துவ / இயற்கை வள விசாரத்தை நெறியாளர் கோடிகாட்டி நிற்கிறார். அண்மையில் கொழும்பில் நடைபெற்ற சில நோர்வே படங்களை (சுற்றாடல் தொடர்பானவை) பார்த்தபொழுது சிவகாமியின் ஊடாகவும் என் மனத்திரையில் ஓடியது.
இத்தகைய படங்கள் பரீட்சார்த்தமானவை. இவற்றை எளிதிற் புரிந்துகொள்ளத் தக்கவர்கள் உளவியலாளர்கள், ஆய்வறிவாளர், சமூகவியலாளர், இயற்கை நேசிகள் ஆகியோ ராவர். ஆயினும், மட்டரகமான, பாமரத்தன்மை கொண்ட பார்வையாளர் இத்தகைய படங்களைப் புரிந்துகொள்வார்கள் என்பது ஐமிச்சம். "படம் எப்படி?” என்று சிவகாமி என்னிடம் கேட்டார். "என்னால் புரிந்து கொள்ள முடிந்தது. நான் படத்தை வரவேற்கிறேன்” என்றேன்.
"ஆனால், ப்ரண்ட்ஸ் எல்லாம் வாய்க்கல்லே' என்று சொன்னாங்க” என்றார் சிவகாமி.
"அது அப்படித்தானுங்க, ரசனை என்பது தனிப்பட்ட தொரு அனுபவம் தானே, ஆளுக்கு ஆள் வேறுபடும்” என்றேன்.
"வாஸ்தவந்தான்” என்றார் சிரித்தவாறே சிவகாமி
தினக்குரல் 14-O9-2OO

1970களில் கொழும்பு மேடை நாடகம்
1970களில் பல குறிப்பிடத்தக்க தமிழ் நாடகங்கள் கொழும்பில் மேடையேறின. இவை பற்றி நிறையத் தமிழிலும், ஆங்கிலத்திலும் திறனாய்வுப் பத்திகளை எழுதி வந்தேன். அவற்றுள்ளே பின்வரும் நாடகங்கள் பற்றி ஆங்கிலப் பத்திரிகைகளில் எழுதியமை இங்கு குறிப்பிடப்பட வேண்டியது. ஏனெனில் சம்பந்தப்பட்ட நாடகங்களின் நெறியாளர்கள், தயாரிப்பாளர்கள். நடிகர்கள் ஆகியோர் இவற்றை ஆங்கிலத் தில் படித்திருக்க மாட்டார்கள். அவர்களுக்காகவும். இன்றைய இளம் வாசகர்களுக்காகவும், இந்நாடகங்களை அன்று பார்த்து மகிழ்ந்தவர்களின் இரை மீட்டலுக்காகவும் இந்த விபரங்களைத் தருகிறேன்.
நகரத்துக் கோமாளிகள் (கோர்க்கியின் நாடகம், ஸ்ஹேர் ஹமீட் நெறிப்படுத்தியது). தகுதி (பேராசிரியர் தில்லைநாதன் எழுதி நெறிப்படுத்திய நாடகம்), காலங்கள் அழிவதில்லை (மாத்தளை கார்த்திகேசு எழுதி நெறிப்படுத்தியது), ஐயா எலக்ஷன் கேட்கிறார் (மாவை நித்தியானந்தன்), ஏணிப்படிகள் (பெளஸ?ல் அமீர் எழுதியது. ஸுஹேர் ஹமீட் நெறிப் படுத்தியது), நளன், அக்கினிப்பூக்கள் (அன்ரனி ஜீவா), முறுவல் (எஸ். பொன்னுத்துரை), பிள்ளை பெற்ற ராஜா ஒரு நாயை வளர்த்தார் (பெளஸல் அமீர்). களங்கம், கோவலன் கூத்து, நல்லை தந்த வல்லவன். கந்தன் கருணை (என்.கே. ரகுநாதன்), காலம் சிவக்கிறது (இ. சிவானந்தன்), உதயம், கிருஷ்ண லீலா (கார்த்திகா கணேசர்), பிச்சை வேண்டாம் (அ. தாஸிஸியஸ்), விழிப்பு (நா. சுந்தரலிங்கம்), இனி என்ன.? சிறுக்கியும் பொறுக்கியும் (கலைச்செல்வன்). தோட்டத்து ராணி, போராட்டம், தீர்க்க சுமங்கலி, கர்ணன் கருணை, மழை (க. பாலேந்திரா), இரு துயரங்கள்
7

Page 41
சொன்னாற்போல (முருகையன்), மனிதனும் மிருகமும், ஒரு சக்கரம் சுழல்கிறது. காமன்கூத்து, இலங்கேஸ்வரன், பூதத்தம்பி, சாதிகள் இல்லையடி பாப்பா. நம்பிக்கை, நட்சத்திரவாளமி, பலி, கண்ணாடி வார்ப்புகள் (க. பாலேந்திரா). பசி, கூடி விளையாடு பாப்பா, பயணம், அலைகள், சக்கராம்பைண்டர், யுகதர்மம், நாற்காலிக்காரர் (ந. முத்துசாமி), கோடுகள். சலனங்கள். நடைமுறைகள், ஊசியும் நூலும், பொறுத்தது போதும், ஜானகி கல்யாணம், வேட்டை, காமன் கூத்து. உன் கண்ணில் நீர் வழிந்தால், துரோணர், ஒரு மலர் கருகியது. துயரத்தின் சுவடுகள். இவ்வாறு பல நாடகங்கள் கொழும்பு மேடைகளில் அரங்கேற்றப்பட்டுள்ளன.
இவற்றைத் தந்ததன் நோக்கம் இத்தகைய நாடகங்கள் புதுப்பரிமாணங்களுடன் இன்றும் மேடையேறக்கூடிவை என்பதை மறக்கப்பட்டுவிட்ட நாடகாசிரியர்கள்/நெறியாளர் களுக்கு நினைவூட்டவே.
தாஸிஸியஸ், க. பாலேந்திரா. சுந்தரலிங்கம். ஸஉஹேர் ஹமீட் (காலமாகிவிட்டார்) போன்றோர் பிறநாடுகளில் செயலாற்றுகின்றனர்.
தினக்குரல்
14-O9-2OO1

சாந்தனின் ஆங்கில எழுத்து
ஒக்ரோபர் முதலாம் திகதி முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி ஜிமி கார்ட்டர், மறைந்த நடிகர் சிவாஜி கணேசன், மக்கள் சீனக் குடியரசின் உதயம் போன்ற பல பிறப்புக்கள் இந்த ஒக்ரோபர் முதலாம் திகதியில் நிகழ்ந்துள்ளன. கே.எஸ். சிவகுமாரனுக்கு (01-10-2001) இன்று 65 வயதாகிறது. திருகோணமலை அவர் தந்தையின் பிறந்த ஊர். அந்த ஊரிலே இன்று அவருக்கும் ஒரு விருது காத்திருப்பதாக அறிவிக்கப் பட்டது. 1999 ஆம் ஆண்டு வெளிவந்த ஆய்வு நூல்களில் அவர் எழுதிய 'ஈழத்துத் தமிழ் நாவல்களிற் சில' என்ற நூல் சிறந்ததாகக் கணிக்கப்பட்டுள்ளது. வட - கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களம் இந்த இலக்கிய விழாவைப் பின்போட்டுள்ளது.
ஆங்கில எழுத்தாளராக சாந்தன்
SFITந்தனைப் புதிய வாசகர் அறிந்திருக்க மாட்டீர்கள். ஈழத்துத் தமிழ்ச் சிறுகதை எழுத்தாளர்களுள் மிக முக்கியமான ஓர் எழுத்தாளர் சாந்தன். அவருடைய பல சிறுகதைத் தொகுப்புகள் வெளிவந்துள்ளன. தமிழ் நாட்டிலும், ஈழத்திலும் அவர் மிகவும் பிரபல்யம் பெற்ற ஓர் எழுத்தாளர். அவருடைய சிறுகதைகள் சில ஆங்கிலம் உட்பட வேற்று மொழிகளிலும் வெளிவந்துள்ளன. இலஸ்ரேட்டட் வீக்லி ஒப் இந்தியா' என்ற இந்திய ஆங்கில வாரச் சஞ்சிகையில் அவர் கதைகள் மொழி பெயர்ப்பாய் வந்துள்ளன. அதன் மூலம் அவர் பரந்த இந்திய வாசகர்களுக்கும் அறிமுகமாகியவர்.
73.

Page 42
சொன்னாற்போல
சாந்தன் தமது கதைகளை இப்பொழுது ஆங்கில மொழியிலும் சுயமாக எழுதுகிறார். அத்தகைய கதைகள் "In theirown world" (அவர்கள் உலகிலே) என்ற தொகுப்பில் அடங்கியுள்ளன. இந்த ஆங்கில நூலைக் கொழும்பிலுள்ள கொடகே நிறுவத்தினர் வெளியிட்டுள்ளனர். இந்தப் புத்தகத்துக்கு இதுவரை பல பாராட்டு மதிப்புரைகள் வெளி வந்துள்ளன. லின் ஒக்கர்ஸ், கார்ள் மலர், நந்தா பேத்திய கொட, கந்தையா யூனி கணேசன் போன்றோர் கொழும்பில் வெளியாகும் "டெய்லி நியூஸ்", "தி ஐலண்ட்", "சண்டே ஐலண்ட்", "சண்டே லீடர்" ஆகிய பத்திரிகைகளில் பாராட்டி எழுதியுள்ளனர்.
இங்கு முக்கியமான விஷயம் என்னவென்றால் இலங்கைக் கலைக் கழகத்தின் ஆங்கில இலக்கிய மதிப்புரைக் குழு "இன் தெயார் ஒன் உவேள்ட்" என்ற இந்தப் புத்தகத்தை 2000 ஆம் ஆண்டுக்கான சிறந்த சிறுகதைத் தொகுப்பாக இன்னொரு நூலுடன் இணைத்து மதிப்பளித்திருக்கிறதுதான். இது பெரிய விஷயம். ஒரு தமிழ் எழுத்தாளன் முதற் தடவை யாக ஓர் ஆங்கில இலக்கிய நூலுக்கான பரிசை (இன்னொரு வருடன் பகிர்ந்து கொண்ட போதிலும்) பெற்றிருப்பதுதான்.
அந்த இன்னொருவர் ஏற்கனவே கவிதை, புனைகதை களுக்கான பரிசைப் பெற்றுள்ள ஜீன் அரசநாயகம். இந்த ஜீன் ஒரு பேர்கர் மாது. இவரது கணவர் அரசநாயகம் ஒரு தமிழர். இவரும் ஓர் ஆங்கில நாடக ஆசிரியர். இவர்களுடைய இரு புதல்விகளும் நல்ல ஆங்கிலக் கவிதைகளை எழுதி யுள்ளனர். இவ்விருவரில் ஒருவர் பார்வதி அரச நாயகம். கண்டியில் ஆசிரியையாகப் பணி புரிகிறார்.
அவர்களின் உலகம்' என்பது சாந்தனின் ஆங்கிலச் சிறுகதைத் தொகுப்பின் தமிழ்ப் பெயர் எனலாம். இந்த இடத்தில் அவர்கள் உலகம்' என்ற தலைப்பிலே மடிந்து போன சுதந்திரன் வார ஏட்டில் எஸ். சிவகுமார் என்ற பெயரில் கே.எஸ். சிவகுமாரன் எழுதிய கதையொன்று ஞாபகத்துக்கு
འཆལ་---,,མ- 74

கே.எஸ். சிவகுமாரன் வருகிறது. சுதந்திரன் சிறுகதைகள் தொகுப்பை விரைவில், தமிழ்நாட்டில் சில வாரங்களுக்கு முன்னர் பெரும் பரிசு பெற்ற "செங்கை ஆழியான்’ (கலாநிதி குணராசா) வெளியிட இருக்கிறார் என்று அறிகிறோம்.
தமிழ் நாட்டிலும் பரிசு பெற்ற எழுத்தாளர்களுள் செ. யோகநாதனும் ஒருவர். இவர் இன்று தமிழில் மிக முக்கியமான பிரகிருதியாகக் கருதப்படுகிறார். ஆக்க இலக்கியம். திரைப் படத்துறை அனுபவம், திறனாய்வு, பத்தி எழுத்து, சிறுவர் இலக்கியம், நூல் வெளியீடு என்று பற்பல துறைகளில் அயராது உழைத்து வருகிறார். தொலைக்காட்சி உட்படப் பல மேடைகளில் மடை திறந்தாற் போன்று எந்த விஷயம் பற்றியும் பேசக்கூடிய ஆற்றலுடையவர் செ. யோகநாதன். இன்று ஆதவன்' என்ற அரசியல் வாரப் பத்திரிகையில் சுமார் நான்கு பக்கங்களைச் சொந்தப் பெயரிலும், பல புனைபெயர்களிலும் இவர் சுவையான பத்திகள் மூலம் நிரப்பி வருகிறார். எனவே, சாந்தன், செங்கை ஆழியான். செ. யோகநாதன் போன்றோரின் பங்களிப்புக்களைத் தட்டிக் கழிக்க முடியாதிருக்கிறது. தவிர்க்க முடியாமல் இவர்களை முன்னிறுத்த வேண்டிய அவசியம் நமக்கு ஏற்பட்டுள்ளது.
சாந்தனுக்குரிய பரிசு 28-09-2001 இல் வழங்கப்பட்டது. ஆனால், அவர் அப்பொழுது யாழ்ப்பாணத்தில் தொழில் நுட்பத்துறை விரிவுரையாளராகப் பணிபுரிந்து வந்தார்.
தினக்குரல்
O1-1O-2OO1
Τς

Page 43
"சார்க் எழுத்தாளர் ஒன்றியத்துக்கான அங்குரார்ப்பணம்.
தென் ஆசிய நாடுகளின் பிராந்திய ஒத்துழைப்புக்கான அமைப்பு "சார்க்” எனப்படுகிறது. இந்தியா, பாகிஸ்தான். பங்களாதேஷ், இலங்கை, நேபாளம், பூட்டான். மாலைதீவு ஆகிய நாடுகள் இந்த அமைப்பில் அங்கம் வகிக்கின்றன. இந்த நாடுகளில் ஏராளமான எழுத்தாளர்கள் ஆங்கிலத்திலும், தத்தம் மொழிகளிலும் நிறைய எழுதி வருகின்றனர். இவர்கள் அனைவரையும் ஒரு குடையின் கீழ் கொண்டு வரும் நோக்கத் தில் சில இந்திய எழுத்தாளர்களும், நேபாள எழுத்தாளர்களும் முனைந்து வருகினறனர். இதன் பலனாக இவ்விபரம் இலங்கையைச் சேர்ந்த திஸ்ஸ அபேசேகரவிடம் தெரிவிக்கப் பட்டது. இவர் நேபாளத் தலைநகராகிய கத்மண்டுவில் ஏதோவொரு கருத்தரங்குக்குச் சென்றபொழுது இதனை திஸ்ஸ அபேசேகரவிடம் சம்பந்தப்பட்டோர் கூறி இலங்கையில் ஒரு கிளை அமைப்பை ஏற்படுத்துமாறு கேட்டிருக்கிறார்கள்.
இந்த திஸ்ஸ அபேசேகர. தேசிய திரைப்படக் கூட்டுத் தாபனத் தலைவரும் தலை சிறந்த சிங்களத் திரைப்பட நெறியாளரும். (மார்டின் விக்கிரமசிங்கவின் நாவலை 'விராகய’ என்ற பெயரில் நெறிப்படுத்தியவர்), சிங்கள/ ஆங்கில எழுத்தாளருமாவார். இரண்டாண்டுகளுக்கு முன் இவருக்குச் சிறந்த இலக்கியப் பரிசான "க்ரேஷன்’ விருதும் வழங்கப்பட்டது.
திஸ்ஸ அபேசேகர இது தொடர்பாக உத்தியோகப் பற்றற்ற எழுத்தாளர் சந்திப்பொன்றை கடந்த 28-09-2001 இல் தனது அலுவலகத்தில் நடத்தினார். அங்குமிங்குமாக சுமார் 20 சிங்கள, ஆங்கில, தமிழ் எழுத்தாளர்களும் கலந்து கொண்டனர். தமிழ் எழுத்தாளர்கள் அவர்களுடைய முக்கியத்
76

கே.எஸ். சிவகுமாரன் துவம் கருதி அழைக்கப்படாமல் ஆங்கிலம் தெரிந்த பழைய எழுத்தாளர்கள் சிலர் கலந்து கொண்டனர். குறுகிய கால அறிவிப்பில் இந்தத் தமிழ் எழுத்தாளர்கள் அழைக்கப் பட்டதனால் ஏதோ சதி காரணமாகச் சில முக்கிய எழுத்தாளர்கள் விடுபட்டும் போயினர் என்று தப்பாக விளங்கிக் கொண்டனர் போல் தெரிகிறது. இதனால் பழி என்னை வந்து சேருகிறது-காரணம் ஐந்தாறு தமிழ் எழுத்தாளர்களை சம்பிரதாயத்துக்காக இந்த உத்தியோகப்பற்றற்ற கூட்டத்திற்கு அழைக்கும்படி திஸ்ஸ அபேசேகரவும். பேராசிரியர் எஷ்லி ஹல்பேயும் என்னிடம் கேட்டதிற்கிணங்க நான் எழுந்த மானமாகச் சிலரை அழைத்திருந்தேன். இது பெரிய சங்கட மாய்ப் போய்விட்டது. இட வசதி போதாமையால் ஐந்து பேரே அழைக்கப்பட்டனர். அவர்கள் கொஞ்சம் பழைய பரம்பரையினர். தவிரவும் இந்தக் கூட்டம் மொழி பெயர்ப்பாளர் சம்பந்தப்பட்டதல்ல என்பதும் முக்கியம் இந்த சார்க் எழுத்தாளர் இலங்கை அமைப்பு விரிவடையாமலா போகப்போகிறது! அப்பொழுது எல்லாத் தமிழ் எழுத்தாளர்களுமே இடம்பெற்று விடுவார்கள்.
தினக்குரல்
O1-1O-2OO1

Page 44
இலங்கையில் திரைப்பட நுகருணர்வு ஆரம்பநிலை
ஆங்கிலத்தில் "எப்ரிஸியேஷன்' என்றொரு வார்த்தையுண்டு. அதற்குப் பல அர்த்தங்கள் உள்ளன. அவற்றுள் ஒன்று திறனாய்வு இந்த ஆங்கில வார்த்தைக்கு நுண்ணுணர்வு என்றும் பொருள் உண்டு.அந்த அடிப்படை யிலே நுண்ணுணர்வு' சார்ந்த சொல்லான நுகருணர்வை பயன்படுத்துகிறேன்.
நல்ல கலை, இலக்கியங்களை இனங்கண்டு நுகர்வதற் குப் பயிற்சியும், தேர்ச்சியும் அவசியம். அந்தப் பயிற்சிக்கு ஐம்புலன்களும் உதவுகின்றன என்றால் மிகையான கூற்றுப் போல் தென்படக்கூடும். எதனிலும் உயர்மட்ட செய்நேர்த்தியை நாம் எய்திடத் தீவிர தேடலும், பயிற்சியும். பரிச்சயமும் தேவை. வேறு சில தொடர்புடைய பண்புகளும் இன்றியமையாதவை. நமது மொழியைப் பயன்படுத்துபவர்களிற் சிலர் 1950 களின் பிற்பகுதியிலிருந்து இந்தத் தேடல் முயற்சியில் ஈடுபட்டு வந்துள்ளனர். சிலர் இன்னமும் தொடருகின்றனர். ஆயினும், நம்மில் பலருக்கு கிடைக்கக்கூடிய அற்பசொற்ப வசதிகளைத் தன்னும் பயன்படுத்த முடியாமற் போய்விடுகிறது. இதற்குக் காரணங்கள் பலவாக இருக்கலாம் என்பதையும் நாம் ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டும். யுத்த நிலைமை, செய்திகள் தெரியாமை, வரலாற்று, சமூக, பண்பாட்டுக்கோலங்களைப் புறக்கணித்தல், தவிர்க்க முடியாமல் நம்மீது ஆளுகை செலுத்தும் தரமற்ற தென்னிந்திய தொலைநாடகங்கள், திரைப்படங்கள், ஆங்கில / தமிழ் கொலை, வானொலி / தொலைக்காட்சி ஊடக அறிவிப்புகளும் / நிகழ்ச்சிகளும், சஞ்சிகைகள் இன்ன பிற.

கே.எஸ். சிவகுமாரன்
அதேசமயம் தமிழ் நாட்டிலிருந்து நல்ல இலக்கியங்
களும், கலைகளும், புத்தகங்களும், சில திரைப்படங்களும்
கூட நுகருணர்வை வெளிப்படுத்துகின்றன என்பதும்
உண்மையே.
இந்தப் பின்னணியில் திரைப்பட நுகருணர்வு நம்மவரிடையே ஆரம்ப நிலையில் எப்படியிருந்தது என்பதை நாம் இரை மீட்டல் அவசியம். இது ஏனெனில் வரலாற்றுச் செய்திகளிலிருந்தே கட்டமைப்பையோ, கட்டவிழ்ப்பையோ நாம் சிறப்பாக மேற்கொள்ளலாம்.
அக்காலத்தில் அதாவது 1940.1950 களில் ஈழத்தில் வெளிவந்த சிற்றேடுகளில் திரைப்படத் திறனாய்வுகள் ஒன்றிரண்டாகுதல் வெளிவந்திருக்கலாம். இதனை பாராட்டத் தகுந்த ஆய்வாளர்களாக நம்மிடையே தற்சமயம் விளங்கி வரும் செங்கை ஆழியான், செ. யோகநாதன், தெளிவத்தை ஜோசப், அன்புமணி, அனஸ் போன்றவர்கள் மேற்கொள்ள வேண்டும். Y
சோ. சிவபாதசுந்தரம், சி. வைத்திலிங்கம். எஸ்.டி. சிவநாயகம், ஏ.எஸ்.ஏ. சாமி போன்றோர் இத்துறையில் அக்கறை காட்டியிருக்கலாம். பிற்காலத்தில் சஞ்சிகைகளுடாக ஜோவலன் வாஸ், ஒகெஸ்டீன் மொறாயஸ், ஜெயசீலன், மணவைத்தம்பி, பாலு மகேந்திரா, சில்லையூர் செல்வராசன், மொழிவாணன், மானா மக்கீன், காவலூர் ராசதுரை. கார்த்திகேசு சிவத்தம்பி, செ. கணேசலிங்கன் போன்றோரும் அண்மைக் காலங்களில் அயேசுராசா, உமா வரதராஜன், ரஞ்சகுமார், ஆதவன். செ.யோகநாதன், சசி கிருஷ்ணமூர்த்தி, தம்பிஐயா தேவதாஸ் போன்றவர்களும் திரைப்படத்துறை நுண்ணுணர்வுகளை/நுகருணர்வுகளை வெளிப்படுத்தி வந்துள்ளனர்.
அதேபோல கிரமமான முறையில் தீவிரமாகத் திரைப் படத் திறனாய்வை மேற்கொண்ட ஒருவர் கே. முரளிதரன், இவர் கொழும்பில் Cinema-16 (16 மி. மீற்றர் திரைப்பட
-ത്ത 79.

Page 45
-
நுகர்வுச் சங்கம்) என்ற அமைப்பை நீல் ஐ பெரேரா என்ற
தீவிர உழைப்பாளியின் உதவியுடன் ஏற்படுத்திப் பல 16 மி.மீ. படங்களை, அனைத்துலக மொழிப்படங்களை பார்ப்பதற்கு வகை செய்தார். அது மாத்திரமல்லாமல், அன்றைய இலங்கை வானொலித் தமிழ் தேசிய சேவையில் இரு வாரத்துக்கொருமுறை திரைப்பட விமர்சனங்களைச் செய்து வந்தார். பின்னர் 1960களின் பிற்பகுதியில் இந்த வானொலித் திரைப்படத் திறனாய்வுகள் என்னால் முன்னெடுக் கப்பட்டன.
“சினமா சிக்ஸ்டீன்" செயற்படு முன்னர் கொழும்பு திரைப்படச் சங்கம் (லியோ த சில்வா, மிராண்டோ ஆகியோர் ஆணி வேர்கள்) மாதாந்தம் நல்ல பிறமொழிப் படங்களை கொழும்பு லயனல் உவெண்ட் மண்டபத்தில் காட்டி வந்தது. இங்குதான் ஆங்கில மொழியில் தரமான திரைப்படத் திறனாய்வுகளை எழுதி வந்த பல சிங்கள இசைக்கலை/ இலக்கியவாதிகளைச் சந்தித்துப் பயன்பெறும் வாய்ப்புக் கிட்டியது.1950களின் பிற்பகுதிக் காலம் இது ரெஜி சிறி வர்த்தன, மேர்வின் த சில்வா, சார்ள்ஸ் அபேசேகர, வேர்ணன் அபேசேகர. சாலி பராக்ரம, சீதா ஜயவர்தன, பிலிப் கூரே, நெவில் த சில்வா, டென்ஸில் பீரிஸ், திஸ்ஸ தேவேந்திர, காமினி ஹத்தொத்து வேகம, ஜயவிலால் விலேகொட (சிங்கள மொழியில் மாத்திரம்) போன்றோரின் திரைப்பட நுகருணர்வின் ரசமட்டம் மிக உயர்ந்ததாய் அமைந்தது.
இந்தக் காலகட்டத்தைத் தொடர்ந்து FCAJAC திரைப் படத் திறனாய்வாளர்களினதும், இதழியலாளர்களினதும் சங்கம் ஒன்று 1970களில் திரைப்படத்துறை நுகருணர்வுக்கு வழி காட்டியது. அனைத்துலக திரைப்பட விழாக்களை நடத்தி வந்தன. நீல் ஐ பெரேராவின் பணி மகத்தானது. திஸ்ஸ அபேசேகர, வஸந்த ஒபேசேகர, காமினி ஹத்தொத்துவேகம, ஏ.ஜே. குணவர்த்தன. லெஸ்லி பொத்தேஜ. அஷ்லி ரத்ன விபூஷண, பியால் சோமரத்ன, அமரசேன போன்றோர் சிங்கள, ஆங்கில மொழிகளில் திரைப்பட திறனாய்வுகளை மேற்
80

கே.எஸ். சிவகுமாரன் கொண்டு வந்தனர். இந்தச் சங்கத்தின் நிறுவகத் திறனாய்வாளர் களுள் ஒருவர் சிலலையூர் செல்வராசன் என்பது குறிப்பிடத் தக்கது. பிரேம்நாத் மொறாயஸ், காவலூர் ராசதுரையும் சங்க நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்தனர்.
இந்தியாவின் பூனே என்ற நகரில் திரைப்பட ! தொலைக்காட்சிப் பயிற்சி நிலையம் ஒன்றிருக்கிறது. அங்கு ஆறு வார கால திரைப்பட நுகருணர்வுப் பயிற்சியைத் தெரிவு செய்யப்பட்ட பயிற்சியாளர்களுக்கு அளித்து வருகின்றனர். பூனே திரைப்படத் தொலைக்காட்சிப் பயிற்சி நிலையத்தில் இந்தியாவின் தலை சிறந்த நெறியாளர்கள் திரைப்படத்துறை ஆய்வாளர்கள். திறனாய்வாளர்கள், தொழிநுட்ப விரிவுரை யாளர்கள் போன்றோர் மாணவர்களுக்கு திரைப்படக் காட்சி களுடன் விரிவுரைகளை நடத்துவர். இந்த மாணவர்களும் இலேசுப்பட்டவர்களல்லர். இவர்கள் தத்தம் மாநிலங்களில் பேராசிரியர்கள், விரிவுரையாளர்கள், திறனாய்வாளர்கள், செய்தியாளர்களாய் இருப்பர்.
முழுமையாகவும். ஒரிரு படங்களின் சில காட்சிகளாக வும் சிறந்த அனைத்துலகப் படங்கள் 2000 வரை மாணவர்கள் இந்த ஆறு வார காலப் பயிற்சியின் போது பார்த்து உள்வாங்க வேண்டியிருந்தது. நம்ப முடியாததாக இருக்கலாம். அதுவே உண்மை. இந்த நிலையத்தில் பயிற்சி பெற்ற என்னை பயிற்சிச் சான்றிதழ் வைபவத்தில் நன்றியுரையை நிகழ்த்தும்படி விரிவுரையாளர் பீடம் கேட்டுக் கொண்டமை இலங்கைக்குப் பெருமை தரும் விடயமாகும்.
தினக்குரல்
12-O6-2OO1
8.

Page 46
தமிழ்ப்படம்: பின்னோக்கு
அசையும் படிமங்கள்’ என்ற தலைப்பிலான நூல் நேற்று (07-10-2001) கொழும்பில் வெளியிடப்பட்டது. இது சினமா’ என்ற கலை வடிவத்தை எவ்வாறு நுகர்ந்து மதிப்பிடலாம் என்ற விபரங்களையும் திரைப்படம் கூறும் விளக்கங்களையும் தமிழில் அளிக்கும் ஒரு நூல். இப்பத்தி யாளர் அதனை எழுதியுள்ளார். ر
இந்தப் பின்னணியில். தமிழ்த் திரைப்படத் தொழில் வளர்ச்சியின் தொடக்க கால விபரங்களை அடுத்துப் பார்ப்போம்.
திரைப்படம் என்பது கலை மாத்திரமல்ல. அது ஒரு கைத்தொழில் என்பதனையும் அறிவீர்கள்.
முதலில், தமிழ் பேசும் படங்கள் மும்பாய், கொல்கத்தா, பூனே ஆகிய இடங்களில் உள்ள கலையகங்களிற் தான் படம் பிடிக்கப்பட்டுத் தயாரானவை. சென்னையில் முதலாவது திரைப்படக் கலையகம் 1934ஆம் ஆண்டு நிறுவப்பட்டது. சிவகங்கை நாராயணன் என்பவர் நிறுவிய இந்தக் (560dau Jaggai Guuit systidiaggia) "Sound City Seenivasa Cinetone."
ஆரம்ப கால தமிழ்ப் படங்களின் கதைகள் இந்துக் கற்பிதக் கதைகளைத் தழுவியதாக அமைந்தன. ஓரளவு வரலாற்றுப் பொருள்களைக் கொண்ட மனோரதியக் கதை களாகவும் அமைந்தன. இதனை Historical Romances என்பர். இந்தியா சுதந்திரம் பெறும் வரை இந்தப் போக்கே நிலவியது.
82-ബ

கே.எஸ். சிவகுமாரன்
ஆங்கிலத் துப்பறியும் நாவல்களைத் தழுவி வடுவூர் துரைசாமி ஐயங்கார் சில நாவல்களை அந்தக் காலத்தில் எழுதி வந்தார். அந்நாவல்களைத் தழுவி "மேனகா', ராஜாம்பாள் போன்ற படங்கள் வெளிவந்தன. 1935இல் இன்னொரு படமான டம்பாச்சாரியும் தயாரிக்கப்பட்டது.1937 முதல் பத்திரிகைகளில் வெளிவந்த தொடர்கதைகளைத் தழுவி சில படங்கள் தயாரிக்கப்பட்டன.
தமிழ் சினமா தொடர்பாக அறந்தை நாராயணன் ஓர் அருமையான நூலை எழுதியிருக்கிறார்.
உடனிகழ்காலத் தமிழ் புனைகதைகளைத் தழுவி எடுக்கப்பட்ட தமிழ்ப் படங்களுள் சிலவற்றின் பெயர்களை அவர் தந்துள்ளார். உங்கள் பரிச்சயத்திற்காக அவற்றின் பெயர்கள் வருமாறு:
இந்தப் பட்டியலில் அடைப்புக்குறிக்குள் இருப்பவை எனது சொந்த வியாக்கியானங்கள்.
கே. சுப்ரமணியத்தின் (இவர் பத்மா சுப்ரமணியம், எஸ். கிருஷ்ணசாமி ஆகியோரின் தந்தையாவர்) பாலயோஹினி, வி.எம். கோதைநாயகி அம்மாளின் அநாதைப் பெண், முன்ஷி பிரேம்சந்தின் சேவாசதனம், கல்கி கிருஷ்ணமூர்த்தியின் தியாகபூமி, எஸ்.ரி.எஸ். யோகியின் அதிர்ஷ்டம், ராம்குமாரின் பால்ய விவாகம், ரிகே, ஷண்முகத்தின் குமாஸ்தாவின் பெண். பி. நீலகண்டனின் நாம் இருவர் (தமிழ் சினமாவில் இது ஒரு திருப்புமுனைப் படம். சுப்பிரமணிய பாரதி மக்கள் கவியாகப் பிரபல்யம் பெற வழிவகுத்தவை இப்படத்தின் பாடல்கள்). பைத்தியக்காரன், சி.என். அண்ணாத்துரையின் வேலைக்காரி (மற்றொரு மைல்கல் படம்), நல்லதம்பி (என்.எஸ். கிருஷ்ணனின் பங்களிப்பு மகத்தானது), ஓர் இரவு (மேலைத்தேச இசையின் செல்வாக்கு), ரங்கூன் ராதா, முன்ஷா பரமப்பிள்ளையின் மணமகள்.
இவற்றை விட வேறு சில படங்களும் உள்ளன. மு. கருணாநிதியின் தேவகி, பராசக்தி (சிவாஜி கணேசனின்
83.

Page 47
ങ്ങ
அறிமுகம், மற்றொரு திசை திருப்பம்) சரச்சந்திரரின் தேவதாஸ், திருவாரூர் தங்கராசாவின் ரத்தக் கண்ணீர் (எம்.ஆர். ராதாவின் தத்ரூப நடிப்பு), யூரீதரின் ரத்தபாசம், எதிர்பாராதது (உடனிகழ்கால காதற் சிக்கல்கள்), கல்யாணப் பரிசு (மற்றொரு திருப்புமுனை) நெஞ்சில் ஓர் ஆலயம் (சினமா என்ற ஊடகத்தைச் செம்மையாகப் பயன்படுத்த எடுக்கப்பட்ட ஓர் எத்தனிப்பு), விந்தனின் கூண்டுக்கிளி (சிவாஜியும், எம்.ஜி.ஆரும் இணைந்து நடித்த ஒரே படம்), ஏ.பி. நாகராஜனின் நால்வர், மாங்கல்யம், நான் பெற்ற செல்வம். கண்ணதாசனின் மாலையிட்ட மங்கை (விஸ்வநாதன் - ராமமூர்த்தியின் ஆற்றல் வெளிப்படல்), கறுப்புப் பணம்.
இவை தவிர, தி ஜானகிராமனின் நாலுவேலி நிலம், எம்.எஸ். சோலைமலையின் பாகப்பிரிவினை (சிவாஜியின் உணர்ச்சிமிகு நடிப்பு), கே.எஸ். கோபாலகிருஷ்ணனின் தெய்வப்பிறவி (பத்மினியின் நடிப்பு), படிக்காத மேதை (மீண்டும் சிவாஜி), ஆர்.கே. கண்ணனின் பாதை தெரியுது பார் (இடதுசாரிக் கருத்துக்கள் கொண்ட மகத்தான படம்), பி.எஸ். ராமையாவின் பொலிஸ்காரன் மகள் (எஸ்.வி. சகஸ்ரநாமத்தின் இயல்பு நடிப்பு) ஆகியனவும்:
ஜெயகாந்தனின் உன்னைப் போல ஒருவன் (யதார்த்த சினமாவின் ஆரம்பம்), யாருக்காக அழுதான் (நாகேஷின் நடிப்பு), சில நேரங்களில் சில மனிதர்கள், ஒரு நடிகை நாடகம் பார்க்கிறாள் (லஷமியின் இயல்பு நடிப்பு - முக்கிய மான திருப்புமுனை), கே.பாலச்சந்தரின் அரங்கேற்றம் (தவிர்க்கப்பட்ட கதைப் பொருள்கள் தமிழ் சினமாவில் இடம் பெறத் தொடங்குகின்றன). அவள் ஒரு தொடர்கதை (சுஜாதாவின் அதியற்புத இயல்பு நடிப்பு), வறுமையின் நிறம் சிவப்பு (கமல்ஹாசன், யூரீதேவி இடதுசாரிப் பாவனை), அச்சமில்லை அச்சமில்லை, தண்ணீர் தண்ணீர் (கோமல் சுவாமிநாதனின் கதையைத் தழுவிய மிகச் சிறப்பான சினமா), சிந்துபைரவி (சுஹாசினி,சிவகுமார்; நடிப்பு, நாட்டுப்பாடல் மெட்டுத் தழுவிய இசை), அகிலனின் பாவைவிளக்கு போன்ற படங்களும் குறிப்பிடத்தக்கவை.

கேணல். சிவகுமாரன்
பாரதிராஜாவின் பதினாறு வயதினிலே, கிழக்கே போகும் ரயில் (ராதிகாவின் நடிப்பு), அலைகள் ஒய்வதில்லை (கார்த்திக்ராதா அறிமுகம்), வேதம் புதிது (சத்யராஜின் நடிப்பு), மகேந்திரனின் முள்ளும் மலரும் (சரத்பாபு, ரஜினிகாந்தின் நடிப்பு), உதிரிப்பூக்கள் (மற்றொரு சிறப்பான படம்), துரையின் பசி (நான் பார்க்கவில்லை), கோமல் சுவாமிநாதனின் அனல்காற்று (பார்க்கவில்லை), ஒரு இந்தியக் கனவு (வித்தியாசமான படம்), ரொபர்ட் ராஜசேகரின் பாலைவனச்சோலை (சுஹாசினியும், சந்திரசேகர் போன்ற ஆண் நடிகர்களும் காட்டும் புதிய நடிப்பு முறை), ரீதர் ராஜாவின் கண் சிவந்தால் மண் சிவக்கும். மணிவண்ணனின் இனி ஒரு சுதந்திரம் (நான் பார்க்கவில்லை) போன்றவை உடனிகழ்கால வாழ்க்கைப் போக்கின் சில அம்சங்களைக் காட்டி நிற்கின்றன.
வரலாற்றுச் சாயல் கொண்ட மனோரதியக் கதைகளாகப் பின்வரும் படங்களின் கதைகளைச் சொல்லலாம். மாத்ருபூமி, அஷோக் குமார், வீரபாண்டிய கட்டபொம்மன். கப்பலோட்டிய தமிழன் மற்றும் அரச படங்களான உத்தம புத்திரன், மனோன்மணி, சந்திரலேகா, பொன்முடி, மந்திரிகுமாரி, பாதாள பைரவி (என்.ரி. ராமராவின் நடிப்பு), மர்மயோகி. மனோகரா, சொர்க்கவாசல், சக்கரவர்த்தி திருமகள், நாடோடி மன்னன். ஆயிரத்தில் ஒருவன் (எம்.ஜி.ஆர்/ஜெயலலிதா. அரபி இசை). அடிமைப்பெண் போன்றவற்றைக் குறிப்பிடலாம்.
சமயம் மற்றும் இலக்கியங்களைத் தழுவிய சில படங்களும் குறிப்பிடத்தக்கன.
அம்பிகாபதி. சிந்தாமணி, சுந்தரமூர்த்தி நாயனார். யூரீ ராமானுஜர், திருநீலகண்டர், சகுந்தலை, காரைக்கால் அம்மையார், காளமேகம், பக்தசேதா, ஆர்யமாலா, சாவித்திரி. கண்ணகி, நந்தனார். சிவகவி, ஹரிதாஸ், மீரா, கிருஷ்ணபக்தி, மங்கையர்க்கரசி. ஒளவையார், சம்பூர்ண ராமாயணம், பூம்புஹார், திருவிளையாடல், சரஸ்வதி சபதம், திருவருட் செல்வர்.
85.

Page 48
செண்னற்போல மேலைச் சினமாவின் வார்ப்பில் சில படங்கள் தயாராகின. நிமால் கோஷ், ஜெயகாந்தன், ஜெயபாரதி (குடிசை), ஹரிஹரன் (ஏழாவது மனிதன்), கோமல் சுவாமி நாதன். பிரதாப் போத்தன். ஜோன் ஏப்ரஹாம் (அக்ரஹாரத்தில் கழுதை), பாலு மகேந்திராவின் அனைத்துப் படங்களும் இவ்வாறு குறிப்பிடப்படலாம் என நினைக்கிறேன்.
புதிய படங்கள் (1990 களுக்குப் பின் வந்தவை) பற்றிப் பின்னர் பார்ப்போம்.
தினக்குரல்
O8-1O-2OO1


Page 49
K.S. SiVaKumaran jS English Medium as a
English Columnist of Journalism Award (B.A. Sir the Sri Lanka Press institute Entry on Lankan Thamil L. World Literature (Ungar P. hami Literature in the Literature (USA). Writes Columns since 1950 to journals and also for foreig Short Stories to Winner of Subliminal Assault-given Society (USA) to English an Schools in Lanka, Mal OA (Graduate of the Univers as a subject Diplomas in
Film Appreciation and it London Trinity College of
and Newscaster over Corporation Author of
Aspects of Culture in S
achievements
löyI Leillä
 

also known through the
riter, critic and teacher.
he Year 2007-Excellence in Wardena Award) presented by
and the College of Journalism terature in the Encyclopedia of ess, USA) e Entry on Lankan ncyclopedia of 20th Century Literary Criticism, Reviews, arious Lankan newspapers, in journals Writes Poetry and Excellent Award for Poem. A away by International Poetry
English Literature Teacher in dives, Oman and the USA
ity of Peradeniya with English Journalism, Creative Writing e like Diploma in Speech
usic and Drama Presenter e Sri Lanka Broadcasting hamil Writing in Sri Lanka 8 ri Lanka o And many more and contributions
lil 7a