கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: சொன்னாற்போல 2

Page 1
சொன்னாற்ே
WIKIII
GRAVESSASSISWA MWASSASSARIANSAYANAWA
W E.
 

ரன்
DĪ
OSjİLD)

Page 2


Page 3

சொன்னாற்போல. -O2 ?0 മത്രUമ്പിസ്ക്
கே.எஸ். சிவகுமாரன்
மீரா பதிப்பகம் 191/23 ஹை லெவல் வீதி
கொழும்பு - 06. தொலைபேசி : 2513336

Page 4
“சொன்னாற் போல’ பத்தி எழுத்துக்களின் தொகுப்பு கே.எஸ். சிவகுமாரன் கிடைக்குமிடம் : 21, முருகன் இடம், ஹவ்லொக் வீதி வழியாக, கொழும்பு-06. Ggn. GL - 2587617 LE). gj. : kssivan.1 @juno.com. முதலாம்பதிப்பு: 10.05.2005 மீரா பதிப்பகம், 191/23, ஹை லெவல் வீதி, கொழும்பு -06. தொ.பே. 2513336 ஈகுவாலிட்டி கிராபிக்ஸ், 315, ஜம்பட்டா வீதி, கொழும்பு - 13.
விலை :150/-
Sonnot Pocala... - 02 (By the Way) literary Criticism by K.S. Sivakumaran
available at 21, Murugan Place, Colombo - 06, Tel : 2587617 First Edition: May 10, 2005
Meera Pathippakam, 91/23 High Level Road, Colombo - 06.T.P 2513336 Ekwality Graphics, 315. Jampeitah Street, Colombo - 13
T.P. 2389848 Price : Rs. 150/-

முன்னுரை
இலங்கையின் தலைசிறந்த கலை, இலக்கியத் திறனாய் வாளர்களில் ஒருவரான கே.எஸ். சிவகுமாரனுடனான எனது நீண்ட காலப் பரிச்சயம் நிச்சயமாக எனக்குப் பெருமை தருகின்ற ஒன்று. அவருடைய பங்களிப்புகள் கலை, இலக்கியத் துறைக்கு செழுமை சேர்ப்பதற்கு எம்மால் உதவக் கூடியதாக இருப்பது உண்மையில் பெரும் திருப்தியைத் தருகின்றது.
அண்மைக்காலமாக சிவகுமாரன் அவர்கள் தினக்குரலில் எழுதி வந்திருக்கின்ற சொன்னாற்போல. பத்திகளைத் தொகுத்து ஒரு நூலாக வெளியிடுகின்ற இந்த முயற்சியை வெறுமனே ஒரு நூல் வெளியீடாக அன்றி, ஏறத்தாழ அரை நூற்றாண்டுகாலமாக அவர் கடந்து வந்திருக்கும் கலை, இலக்கியப் பயணத்தின் அனுபவத் திரட்டுக்களின் பயனுறுதி யுடைய கூறுகளில் ஒன்றாகவே நான் நோக்குகின்றேன். சிவகுமாரன் அவர்கள் பத்திரிகைத்துறை, ஒலிபரப்புத்துறை என்பனவற்றில் கணிசமானகாலமாக தன்னைப் புடம் போட்ட ஒரு பல திறப் பயிற்சியுள்ள கலை, இலக்கியத் திறனாய்வாளர். அவர் தமிழ், ஆங்கிலப் பத்திரிகைகளில் எழுதிவரும் பத்திகளின் ஊடாக கலை, இலக்கியத்துறை சார்ந்தவர்களின் பங்களிப்புகளை அக உணர்வுகளுக்கு அப்பால் நின்று வாசகர்களுக்கு விமர்சன ரீதியாக எடுத்தியம்புவதுடன் அத்துறை களிலான தனது ஈடுபாட்டின் நீண்டகாலச் சரிதத்தின் ஒரு பகுதியையும் தரிசனத்துக்குத் தருகிறார்.
தினக்குரலில் வெளியான சிவகுமாரன் அவர்களின் பத்திகளின் இத் தொகுப் பின் கணிசமான பகுதி இலங்கையின் தமிழ் ஒலிபரப்புத்துறையின் வளர்ச்சிக்குப் பங்களிப்புச் செய்த திறமை

Page 5
சாலிகளை இன்றைய சந்ததியினருக்கு தெரியப்படுத்தியிருக்கிறது. இத்தகைய இனங்காட்டலை மனமுவந்து செய்வதற்கு இன்று அத்துறை சார்ந்த பலர் தயாரில்லை. இங்குதான் சிவகுமாரன் அவர்களின் நேர்மைத் திறம் துலங்குகிறது. தமிழ்க் கலை, இலக்கிய கர்த்தாக்களை ஆங்கில வாசகர்களுக்கு அறிமுகம் செய்யும் அரியதொரு பணியையும் இன்று அவர் செய்து கொண்டிருக் கிறார். அவருடய சுபாவத்தைப் போன்றே எழுத்து நடையும் எளிமை யானது. திரைப்படக்கலைத் திறனாய்விலும் சிவகுமாரன் அவர்கள் தனக்கெனத் தனி முத்திரையைப் பதித்திருக்கிறார்.
ஏற்கனவே பல நூல்களை வெளியிட்டிருக்கும் சிவகுமாரன் அவர்கள் கலை, இலக்கியத்துறைக்கான அவரது செழுமையான பங்களிப்புகளைத் தொடர எமது ஒத்தாசைகள் என்றும் உண்டு என்று கூறிக்கொள்ள விரும்புகின்றேன்.
படாடோபமின்றி கலை, இலக்கியப் பணி செய்து கொண்டிருக்கும் திறனாய்வாளார் சிவகுமாரன் அவர்கள் வளரும் எழுத்தாளர்களுக்கும் திறனாய்வாளர்களுக்கும் ஒரு உந்துசத்தியாக அவரது பணியை சளைக்காமல் தொடர வேண்டும்.
- வீரகத்தி தனபாலசிங்கம்
பிரதம ஆசிரியர்
கொழும்பு தினக்குரல்
2005 ஏப்ரல் 27
iv

உங்களிடம் சில நிமிடங்கள்
அன்புள்ள வாசகர்களுக்கு :
இந்தப் புத்தகத்தின் பெயர் சொன்னாற் போல - 02. சொன்னாற்போல - 01 இதற்கு முன்னர் வெளியாகி இருக்க வேண்டும். ஆனால், அது இப்பொழுது அச்சில் இருக்கிறது. எனவே, இந்தப் புத்தகம் அதற்கு முதல் வெளியாகிறது.
சொன்னாற்போல என்ற தலைப்பிலே 2002க்கு முன்னர் தினக்குரல் நாளிதழில் நான் எழுதிய பத்திகள் அச்சில் உள்ளன. இவையே சொன்னாற்போல - 01 என்ற தலைப்பில் வெளிவரும்.
இந்தப் பத்திகளை எழுத எனக்கு ஊக்கமும், ஆதரவும் தந்த "தினக்குரல்" ஆசிரியர் வி. தனபாலசிங்கம். இந்த தொகுப்புக்கு முன்னுரையும் எழுதித் தந்தமைக்காக நான் அவருக்கு நன்றி செலுத்துகிறேன்.
எனது நன்றி மீரா பதிப்பகத்தினருக்கும் உரியது. இப்பதிப் பகத்தினரின் வெளியீடுகளை நல்ல முறையில் அச்சிட்டுத்தரும் எஸ். ரஞ்சகுமாரும் என் நன்றிக்குரியவர்.
இப்பத்தி எழுத்துக்கள் மூலம் நான் எதனைச் செய்ய முயல்கிறேன்?
ஆய்வாளர்களும், ஆய்வறிவாளர்களும், திறனாய்வாளர்களும் தத்தமது துறைகளில் ஆழமாகத் தமது பணிகளைச் செய்யும் வேளையில் என் போன்ற பத்தி எழுத்தாளர்கள் சாதாரணமான வாசகர்களுக்காக ஓர் இணைப்புப் பாலமாக நின்று பல தகவல்களைத் திறனாய்வு சார்ந்த பத்திக் கட்டுரைகளாகத் தந்துகொண்டிருக்கிறோம்.

Page 6
பத்தி எழுத்தில் சுருங்கச் சொல்லி விளங்க வைக்கும் பாங்கு முக்கியமானது. இலகு நடை மற்றொரு பண்பு தகவற் களஞ்சியம் என்று சொல்லாவிட்டாலும், சிற்சில செய்திகளுடன் தொடர்பு படுத்திய தனிநபர் ஒருவரின் அனுபவ வெளிப்பாடு போன்றவை இப்பத்திகளில் அடங்கும். நீண்ட ஆய்வுக் கட்டுரைகளைப் படித்துப் பார்க்க நேரமும், வாய்ப்பும் இல்லாமற்போகும் சகல மட்ட வாசகர்களும் களிப்பு அடையவும், தகவல் போன்றவற்றைச் சுருக்கமாக அறிந்து கொள்ளவும் இப்பத்திக் கட்டுரைகள் உதவுகின்றன.
நீங்கள் இவை எல்லாம் பொய்யல்ல என்பதை ஏற்றுக் கொள்வீர் கள் என நம்புகிறேன். நல் வாழ்த்துக்கள்.
இந்நூலை எமது இரண்டாவது மகன் அனந்தராம் (ராம்) மருமகள் ஷெரி, பேத்தி ஷியாமா ஆகியோருக்குச் சமர்ப்பிக்கிறேன்.
அன்பன்
கே. எஸ். சிவகுமாரன்.
21. முருகன் இடம்,
கொழும்பு - 06,
இலங்கை. தொலைபேசி 011-94-1-2587617 e-mail : sivakumaranks Gyahoo.com

வானொலியில் சில அனுபவங்கள்
வானொலியில் குரல் வளங்கள் - 1 வானொலியில் குரல் வளங்கள் - 2 வானொலியில் குரல் வளங்கள் - 3 ரேடியோ பைத்தியமானேன் ஒலிவாங்கியின் பின்னால். * ஒரு சில அறிவிப்பாளர்கள்

Page 7

வானொலியில் குரல் வளங்கள்
அன்புள்ள வாசகர்களே! உங்களுக்குத் தெரியும் - கட்டுரைக்கும், பத்தி எழுத்துக்குமுள்ள வித்தியாசங்கள். கட்டுரை, கட்டப்பட்ட கட்டுக் கோப்பான கருத்துக் குவியல்கள். ஆரம்பம், நடு, முடிவு, என்ற தோரணையில், ஓர் ஒழுங்கு முறையில் அமையும். பத்தி எழுத்து ஒரு பொருள் பற்றியோ, பல பற்றியோ, ஓர் ஒழுங்கு முறையின்றி, ஆனால் தொடர்புடையதாகச் சிந்தனைத் திவலைகளாக அமையும்.
நமது இந்த சொன்னாற்போல' வாசகர்களாகிய உங்களுடன் உரையாடுவது போன்று தொடர்புடைய விஷயங்கள் சம்பந்தமாக எண்ணங்கள் எழுகையில் அவற்றைப் பதிவு செய்வதாக அமைவதே பத்தி எழுத்தாகும். அநேகமாக இது சுய அனுபவ வெளிப்பாடாகவே (Personal Experience) அமையும். அண்மைக்காலத் தமிழ் எழுத்துக்கு இது ஒரு புதுவகை எனலாம். எனவே, சம்பிரதாயமாக நாம் படிக்கும் பலக எழுத்துக்களினின்று இது வேறுபட்டு நிற்கக் காணலாம்.
女
2004 ஜூன், ஜூலை, ஓகஸ்ட் மாதங்களில் கொழும்பில் நான் சமுகமளித்த சில கலை, இலக்கிய நிகழ்ச்சிகளை முதலில் எண்ணிப் பார்க்கிறேன். இவற்றுக்கெல்லாம் அங்கு மாறி இங்கு என்று கால் வலியுடன் அலைந்து திரிந்தேன்.
அனைத்து நிகழ்ச்சிகளிலும் கலந்து கொள்வது சாத்தியமில்லை யல்லவா? கலந்து கொண்ட சில புத்தக வெளியீடுகள் இவர்களுடை
யவை. நீபி. அருளானந்தம், இபூரீஸ்கந்தராஜா, அனு.வை. நாகராஜன், டொமினிக் ஜீவா, முல்லை மணி குழந்தை சண்முகலிங்கம். இவை

Page 8
சொன்னாற்போல.
தவிர கம்பன் விழா, விபவியின் ஈரானியப் படக் காட்சி, ஜெகதீஸ்வரி நாகேந்திரனின் ஆங்கிலக் கவிதைத் தொகுதி வெளியீட்டையொட்டிய இராப் போசன விருந்து. TRIKOE ARTS CENTRE ஏற்பாடு செய்த தமிழ்க் கலைஞர் இருவரின் (கிக்கோ, வாசுகி ஓவியக் கண்காட்சி, ஸ்பெயின் ஆகிய நாடுகளில் அனைத்துலக விருதுகள் பெற்ற ரபீனா தயாரிக்கப்பட்ட உணவு ஏற்றுமதி நிறுவனத்தினரின் (லோகேஸ்வரன். கலா) விருது வழங்கும் வைபவம், மருதூர் கனியின் படைப்புகள் பற்றிய ஆய்வுரைகள், எம்.எச்.எம் ஷம்ஸ் நினைவு தினக் கூட்டம் எனப் பல நிகழ்வுகள் இடம் பெற்றன.
இவை பற்றியெல்லாம் விரிவாகத் திறனாய்வு சார்ந்த குறிப்புகளை இங்கு நான் எழுதுவேன் என்று நீங்கள் எண்ணக் கூடும். மாட்டேன். இந்தப் பத்தியில் அவற்றுக்கெல்லாம் இடமேது? சொன்னாற் போல' பத்தியின் நோக்கம், எனது அபிப்பிராயங்களை லேசாக இலகுவாக சொல்வதுதான். மிஞ்சிப் போனால் ஓரிரு குறிப்புகள், அவ்வளவே.
மல்லிகை, ஞானம் தீர்த்தக்கரை, யாத்ரா, ஒலை தெரிதல் குறிஞ்சிக் குரல், மூன்றாவது மனிதன் (-நின்று விட்டது - மீண்டும் உயிர்ப்புப் பெறுமாம்) போன்ற ஏடுகளில் புதிய தலைமுறையினர் மிகச் சிறப்பாகத் திறனாய்வுக் கட்டுரைகளையும், படைப்புக்களையும் தந்துகொண்டி ருக்கின்றனர். புதியவர்களுக்கு வழி விட்டுப் பழைமையின் எச்சச் சொச்சங்களாக இருக்கும் என்னைப் போன்றவர்கள் இளைப்பாறுவது தான் சரியானது. என்ன சொல்கிறீர்கள்?
நீங்கள் நம்புவீர்களோ தெரியாது. எனக்குத் தமிழில் எழுதுவது கஷ்டமாக இருக்கிறது. அதாவது, தமிழை நான் மறந்து விட்டேன் என்றில்லை. நேரம் ஒதுக்கி உட்கார்ந்து. கை எழுத்தில் என் எண்ணங்களைக் கட்டுரையாக எழுத உடம்பில் தெம்பில்லை; பொறுமையில்லை; விரல்கள் பேனாவை இறுகப் பிடித்து ஊன்றி எழுத மறுக்கின்றன.
大°

கே.எஸ். சிவகுமாரன்
இனி வானொலி பற்றிய விடயத்திற்கு வருவோம். மறந்து விட்ட சில விபரங்கள், தகவல்கள், உங்களுக்குச் சுவையளிக்கும் என்பது எனது நம்பிக்கை. பழைமையை மறந்து, நிகழ்மையை நாம் கணிக்கவோ, எதிர்வு கூறவோ முடியாதல்லவா?
எனவே தான், என்னுடன் தொடர்ந்து வாருங்கள், உங்களுக்குத் தெரியுமோ தெரியாது. நமது முதுநிலை வானொலியில் நானும் சம்பந்தப்படுகிறேன். அதுவல்ல முக்கியம். பழைய விபரங்கள் புதிய இளசுகளுக்குத் தெரியாமல் இருக்கக் கூடும். பழைய சங்கதிகளை நினைத்துப் பார்க்கும் பொழுது சுவாரஸ்யமான தகவல்களும் நமக்குக் கிடைக்குமெனக் கருதி, கடந்த நூற்றாண்டின் பிற்பகுதிக்கு உங்களை அழைத்துச் செல்லட்டுமா?
எத்தனையோ வானொலி நிலையங்கள் கொழும்பிலிருந்து போட்டா போட்டியாக இயங்கி வருவதை நாமறிவோம். இணைய தளங்களிலும், வடக்கிலும் கூட வானொலி நிகழ்ச்சிகள் ஒலிபரப் பாகின்றன. ஆனால் அந்தக் காலத்தில் - 1950 களில் இலங்கை வானொலியே தனிக்காட்டு ராஜாவாக அரசோச்சியது.
இலங்கை வானொலி தமிழ் ஒலிபரப்புக்களை நாம் எடுத்துக் கொண்டால், இப்பொழுது போலவே அப்பொழுதும், தேசிய சேவை, வர்த்தக சேவை' என இரு பிரிவுகள் இருந்தன.
தேசிய சேவையில் தரமான நிகழ்ச்சிகள் உயர்மட்ட ரசனைக் கேற்றவாறு நன்கு பயிற்சி பெற்ற ஒலிபரப்பாளர்களால் வழங்கப்பட்டன. செய்திகள், கர்நாடக இசை, மெல்லிசை இலகு சங்கீதம்), கச்சேரிகள், நாடகங்கள், கலையகக் கலை நிகழ்ச்சிகள், சிறுவர் மலர், இளைஞர் அரங்கம் (நாளைய சந்ததி) இசை நாடகங்கள், பேச்சுக்கள், சமய நிகழ்ச்சிகள். திரைப்பட விமர்சனங்கள், மாதர் பகுதி, இலங்கையில் இவ்வாரம், போன்ற பல நிகழ்ச்சிகள் ஒலிபரப்பாகின.
நமது நாட்டு இரு பெருங் கவிஞர்களின் பங்களிப்பு நினைவு கூரத்தக்கது. நவாலியூர் சோநடராசா, நாவற்குளியூர் நடராசன், இவர்கள் பின்னணியில் நின்று தமிழ்ச் சேவையைச் செம்மையாக நிர்வகித்துச்

Page 9
சொன்னாற்போல.
சென்றனர். இவர்களுடன், "சானா" (சண்முகநாதன்), சரவணமுத்து (றேடியோ மாமா, விவியன் நமசிவாயம் இவர் 'மறுமலர்ச்சி' என்ற வட புல எழுத்தாளர் குழாமைச் சேர்ந்தவர்), அருள் தியாகராஜா, பால சுப்பிரமணிய ஐயர், சுப்பிரமணிய ஐயர், மோனி எலியாஸ் (கல்வி ஒலிப்பரப்பு, ஞானம் ரத்தினம் இவ்வாறு பலர்.
இவர்களை விட, 'ஒலிபரப்புக் கலை' என்ற அற்புதமான வழிகாட்டியொன்றைத் தந்த சோ. சிவபாதசுந்தரத்தின் பணிகள் இவர் ஒர் இலக்கியச் செம்மலுங்கூட) தனியாகவே அலசப்பட வேண்டியவை.
மேற்சொன்னவர்கள் தேர்ச்சிபெற்ற நல்ல குரல்வளங் கொண்டவர் களாகவும் விளங்கினர்.
அதே சமயம், நேயர்களுடன் பரிச்சயமானவர்கள் இந்த அறிவிப் பாளர்கள் தான். அவர்களே ஒலிவாங்கிக்குப் பின்னால் இருந்து தமது வித்தியாசமான குரல் வளங்களால் நேயர்களைக் கவர்ந்திழுத்தனர்.
அந்த நாட்களில், நான் அறிந்த மட்டில் ஒரு சில அறிவிப்பாளர் கள் நேயர்களின் அபிமானத்திற்குரியவர்களாக ஒலித்தனர். வி.என் பாலசுப் பிரமணியம் (அற்புதமான ஒலிபரப்பாளர். இவருடைய துணைவியார் பிரபல சிங்கள அறிவிப்பாளர் பிரபா பெரேரா என்பதும் நினைவிற்கு வருகிறது), எஸ்.குஞ்சிதபாதம் இவருடைய துணைவியார் பின்னர் மோனி எலியாஸ்), எஸ். நடராஜா, செந்தில்மணி மயில்வாகனம். பி.சந்திரசேகரம், எஸ். புண் ணியமூர்த்தி (இவர் இப்பொழுது அமெரிக்காவில் வசிக்கிறார்), வி.ஏ.கபூர், வி. சுந்தரலிங்கம், (பி.பி.ஸி யில் ஒலிபரப்பாளராக இருந்தவர்) பத்மா சோமசுந்தரம் அப்துல் மஜீட் (மிகக் கனமான குரல் வளம்), எஸ். நடராஜன் நடராஜா ஐயர், வி.பி. தியாகராஜா, என்.சிவராஜா, சற்சொரூபவதி நாதன், இன்னும் சிலர் (பெயர்கள் உடனடியாக ஞாபகத்திற்கு வருவதில்லை) தேசிய சேவையில் கொடிகட்டிப் பறந்தனர். இவர்கள் முழு நேர அறிவிப்பாளர்களாகவும் நிகிழ்ச்சி தயாரிப்பு / அறிவிப்பு ஆகியவற்றில் ஈடுபட்டவர்களாகவும் சிலர் பகுதி நேர அறிவிப்பாளர்களாகவும் ஊக்கத்துடன் செயற்பட்டனர். இயக்குநரின் தரத்தைப் பேணல், அத்தியாவசியமாகக் கருதப்பட்டது.
(தினக்குரல் 24.08.2004) 女

வானொலியில் குரல் வளங்கள் - 2
முதற் கட்டுரையில் 1950 களில் சிறப்பிடம் வகித்த பெரும் பங்களித்த ஒரு சில அறிவிப்பாளர்கள் / ஒலிபரப்பாளர்கள் பெயர் களைக் குறிப்பிட்டிருந்தேன். சில பெயர்கள் ஞாபக மறதி காரணமாக விடுபட்டுப் போயிருக்கலாம். மன்னிக்க. இவர்கள் அனைவருமே ஆங்கில மொழியில் பரிச்சயங்கொண்டவர்களாக இருந்தனர். இது அவர்களுடைய பார்வை விரிவுக்கு உதவிற்றெனலாம். தவிரவும், அவர்கள் வாசிப்புப் பழக்கம் கொண்டவர்களாகவும், சுய தேடல் முயற்சிகளில் ஈடுபட்டவர்களாகவும் விளங்கினர். பல் திறமைகளைத் தம்மகத்தே கொண்டிருந்தனர் எனலாம். பிறரிடமிருந்து கற்றுக் கொள்ளவும், பயிற்சியை மேலும் விஸ்தரிக்கவும் அவர்கள் தயக்கம் காட்டவில்லை.
அந்த நாட்களில் என்னைக் கவர்ந்த தமிழ் அறிப்பாளர் எஸ். குஞ்சிதபாதம், கொழும்பில் இவ்வாரம்' இலங்கையில் இவ்வாரம்' போன்ற வாராந்த செய்தித் தொகுப்புகளை வழங்கி வந்தார்; செய்திகளையும் வாசிப்பார்; கலையகத்திலிருந்து வழமையான நிகழ்ச்சிக்கும் அறிவிப்புகளைச் செய்து வருவார். இவருடைய அறிவிப்புப் பாணி' என்னை மிகவும் கவர்ந்தது. இவரைப் போலவே நானும் அறிவிப்பாளராக வர வேண்டும் என எனது 12, 13 வயதிலேயே விரதம் பூண்டேன்.
இன்னுமொரு தமிழரும் (Dan Durairaj) எனக்கு ஆதர்ஸமாயி ருந்தார். இவர் ஓர் ஆங்கில அறிவிப்பாளர். ஆயினும், தமிழில் வர்த்தக சேவை ஆரம்பிக் கப்பட்ட பொழுது, இவரே முதலாவது தமிழ் அறிவிப்பாளராகக் கடமையாற்றினார். ஒரு தமிழர் தமிழிலும், ஆங்கிலத்

Page 10
சொன்னாற்போல.
திலும் அறிவிப்பாளாராக இயங்க முடியும் என்பது எனக்கு உற்சாகத்தை அளித்தது.
இவரைப் போலவே நானும் ஆங்கில/தமிழ் அறிவிப்பாளராக விளங்க வேண்டும் என்று ஆசை கொண்டேன். எனது ஆசைகள் நிறைவேறத்தான் செய்தன.
குஞ்சிதபாதத்துக்கு இவருடைய மகள் சென்னையில் சிறந்த இசைவல்லுநராக விளங்குகிறார்) வருவோம். 1942 - 1953 காலப் பகுதியில் பள்ளி மாணவனாக நான் மட்டக்களப்பு நகரின் புளியந்தீவுப் பகுதியில் வசித்துக்கொண்டு புனித மைக்கல் கல்லூரியில் படித்துக் கொண்டிருந்தேன். அதற்கு முன்னர் முல்லைத்தீவு, வவுனியா போன்ற இடங்களில் என் இளமைப் பருவம் ஆரம்பமாகியது.
முல்லைத்தீவில் எனது தந்தையார் உத்தியோகம் (அரச எழுதுவினைஞர்) பார்த்த பொழுது பக்கத்து வீட்டில் இலங்கையர் கோன் வசித்து வந்தார். (அறியாப் பருவத்தில் இந்த விபரத்தை நான் அறிந்திருக்கவில்லை. என் பெற்றோர் பின்னர் சொல்லக் கேட்டிருக் கிறேன். எங்கள் வீட்டில் கிட்டப்பா முதல் அசுவத்தாமா வரை, தியாக ராஜ பாகவதர் முதல் டி.கே. பட்டம்மாள் வரை, எம். எஸ். சுப்புலக்ஷமி முதல் என்.சி. வசந்தகோகிலம் வரை, முசிரி சுப்பிரமணிய ஐயர் முதல் ஜி. ராமநாதன் வரை - பலரின் 'கிரம போன் இசைத் தட்டுகள் இருந்தன.
இலங்கையர்கோன் ந.சிவஞானசுந்தரம் நமது சிறந்த எழுத்தாளர் களுள் ஒருவர் என்பதை இளைய பரம்பரையைச் சேர்ந்த நமது வாசகர்கள் ஒரு வேளை அறிந்திருக்கக் கூடும்) என் பெற்றோர் வீட்டுக்கு ஒவ்வொரு நாளும் வருவாராம். இசைப் பிரியர்களாகிய எனது பெற்றோர் அவர் இசையின்பம் நுகர உதவினர். அது தவிர, எனது தந்தையார் (கைலாயர் செல்லநயினார் தத்துவம், ஜோதிடம், இலக்கியம் போன்ற துறைகளில் ஈடுபாடு கொண்டதனாலும், இலங்கையர்கோனும், எனது தந்தையாரும் நண்பர்களாயிருந்தனர். எனது தாயார் (கந்தவனம் தங்கத்திரவியம்) கலைகளில் விருப்பம் கொண்டவர். நாட்டார் மொழி களில் (பழமொழிகள், விகடத்துணுக்குகள், மரபுச் சொற்கள் போன்ற வற்றில் பாண்டித்தியம் பெற்றிருந்தார். எனவே, எனது தாயார் வயிற்றில்

கே.எஸ். சிவகுமாரன்
கருவாக இருந்த போதும், பிறந்த போதும், கலை இலக்கியச் சூழலுக்கு உட்பட்டிருந்தேன் என்று என்னையே பாராட்டிக் கொள்ளட்டுமா?
இன்னுமொரு விடயத்தையும் சொல்லிவிட விரும்புகிறேன். எனது தந்தையாரின் மூதாதையர் (காசிநாதர், வைரவ நாதர், முருகப்பர். கைலாயர்) கந்த்ரோடையைப் பிறப்பிடமாகக் கொண்டவர்கள். எனது தந்தையாரின் பிறப்பிடம் திருகோணமலை வில்லூன்றிப் பகுதி, எனது தாயாரின் மூதாதையர் (முருகப்பர், கந்தவனம்) நல்லூரைப் பிறப்பிடமாகக் கொண்டவர்கள், எனது தாயார் மட்டக்களப்பு நகரின் புளியந்தீவுப் பகுதியிலுள்ள சிங்களவாடி என்ற இடத்தில் பிறந்தவர். வாவிக்கரை வீதி, இலக்கம் 1 இல், எமக்கொரு பெரிய வீடும் இருந்தது. அதன் பெயர் திருப்பதி'
1953 இற்குப் பின் நான் கொழும்பு வாசியாக மாறிவிட்டேன். அதற்கு முன் எனக்கு இந்த 'வானொலிப்' பைத்தியம் இருந்து வந்தது. அறிவிப் பாளர் மாத்திரமல்ல, என்னை மயக்கினர். "கொழும்பில் கந்தையா" "லண்டனில் கந்தையா" சிறுவர் மலர், கவிதை நாடகங்கள். இசையும் கதையும் (புண்ணிய மூர்த்தியும், வி.ஏ. கபூரும் அற்புதமான நிகழ்ச்சி களைத் தொகுத்து வழங்கினர்) போன்ற நிகழ்ச்சிகளும் என்னை ஆட்கொண்டன. இந்த வானொலிப் பைத்தியம் காரணமாக ஜே.எஸ்.சி. வகுப்பில் குறைந்த புள்ளிகளையே பெற்று வந்தேன். பள்ளிக்கூட அதிபர் (Rector) வண. சோமர்ஸ் என்ற அமெரிக்க கத்தோலிக்கப் பாதிரியார் என்னை அழைத்து, தமது அலுமாரியைத் (Cabinet) திறந்து, எனது பெயர் அடங்கிய கோவையை எடுத்து, அதில் "Radio Sickness" என்று சிவப்பு மையில் எழுதப்பட்ட குறிப்பைக் காட்டி, படிப்பில் கவனம் செலுத்தும் படி பணித்தார்.
இவற்றையெல்லாம் ஏன் சொல்கிறேன் என்றால், அனுபவங்கள் சில பாடங்களை நமக்குச் சொல்லித் தருகின்றன. அவை பகுப்பாய்வுக்கு உட்படுத்தப்பட்டுப் பிறரும் பயன் பெற ஏதுவாயும் அமையலாம் அல்லவா?
குஞ் சிதபாதத்தைச் சந்திக்க வேண்டும் என்று விரும்பி, டொறிங்டன் சதுக்கத்துக்கு நானும், எனது மறைந்த தம்பி திருக்குமாரனும்

Page 11
சொன்னாற்போல.
சென்றோம் (வயது 14, 13). உபசாரப் பணியாளர் தொலைபேசியில் குஞ்சிதபாதத்துடன் தொடர்பு கொண்டதும் அவர் எங்களைச் சந்திக்க வைத்தார். அவரை நேரிற் கண்டதும் பெரிய புளுகம் அடைந்தேன். அவர் கலையகங்கள் உட்பட, கட்டடத் தொகுதி முழுவதையும் எங்களுக்குக் காட்டி வைத்தார். அப்பொழுதுதான், காற்றில் மிதந்துவரும் குரல்கள் எவ்வாறு கலையகங்களில் இருந்து ஒலிபரப்பாகின்றன என்று அறிந்து கொண்டோம்.
- தினக்குரல் : 01.09.2004

வானொலியில் குரல் வளங்கள் - 3
அன்பார்ந்த வாசக நேயர்களுக்கு ஒரு வார்த்தை இது வானொலி வரலாற்றுக் குறிப்பேடு அல்ல. தயவு செய்து, அதிகம் எதிர்பார்க்காதீர் கள். இது வெறுமனே, வானொலியில் எனது சுமார் அரை நூற்றாண்டு அனுபவங்களின் மனப்பதிவுகள் மாத்திரமே. இவ்வாறு எழுதும் போது, சில சுவாரஸ்யமான, புதிய தகவல்கள் உங்களுக்கு அகப்படக் கூடும். மெச்சினால் சரி, சலிப்பூட்டினால், படிப்பதைத் தவிர்க்க. அது உங்கள் சுதந்திரம்.
தன்முனைப்பான தகவல்கள் இங்கு வந்து சேர்வது தவிர்க்க முடியாததே. வானொலியில் பணிபுரியும் நண்பர்களில் ஓரிருவர் என்னைப் பற்றி அறிவர். புதியவர்கள் அறிந்திலர். உங்களில் 40 வயதுக்கு மேற்பட்டோர் ஓரளவு என்னைப் பற்றிச் சிறிது ஞாபகம் வைத்திருப்பீர் கள். புதிய வானொலி நேயர்கள் அறியார். இது இயல்பே.
இளைஞர் மன்றம், கிராம சஞ்சிகையில் யுனெஸ்கோ செய்தி மடல் மொழிபெயர்ப்பும், வாசிப்பும், இலக்கியம் ! கலை பற்றிய பேச்சுகள், புத்தக விமர்சனம், திரைப்பட விமர்சனம் போன்றவற்றைத் தமிழ்த் தேசிய ஒலிபரப்பிலும், செய்திப் பிரிவுக்காகச் செய்தியின் பின்னணியில், செய்திச் சுருள், வெளி நாட்டுச் செய்தி விமர்சனம் போன்றவற்றையும் பிரத்தி யேகமாகச் செய்து வந்ததுடன், கலைக்கோலம் போன்ற நிகழ்ச்சிகளில் அடிக்கடி மதிப்பீடுகளைச் செய்தும் வந்துள்ளேன். கல்விச் சேவையில், படித்துச் சுவைப்போம், இலகு வழியில் ஆங்கிலம் போன்ற நிகழ்ச்சிகளில் ஒலிபரப்புக்களையும் செய்து வந்துள்ளேன்.
இவை யாவும் 1954-2002 வரை இடம் பெற்றன. இது தவிர தேசிய சேவையில் பகுதி நேர அறிவிப்பாளராகச் சில காலம் பணி புரிந்தேன். தமிழில் செய்தி வாசிப்பவராகவும் என் குரல் ஒலித்தது.

Page 12
சொன்னாற்போல.
மறைந்த அறிவிப்பாளர் எஸ். நடராஜா இவர் செ. கணேச லிங்கன். குமரன். எஸ். தம்பிராஜா போன்றவர்களின் உறவினர். கணிரென்ற சாரீரம். அருமையான அறிவிப்பாளர், உரும்பிராயைச் சேர்ந்தவர்), பொன்மணி குலசிங்கம் (பின்னர் உயர்பதவி வகித்தவர்). மறைந்த சானா சண்முகநாதன், விவியன் நவசிவாயம், அருள் தியாகராஜா, பாலசுப்பிரமணிய ஐயர் போன்றவர்கள் எனது நிகழ்ச்சிகளின் தயாரிப் பாளர்களாக விளங்கினர்.
இலங்கை வானொலி வர்த்தக சேவையிலும் பகுதி நேரத் தமிழ் அறிவிப்பாளராக நான் பணிபுரிந்திருக்கிறேன். மறைந்த "சானா" சண்முகநாதன், மறைந்த விவியன் நவசிவாயம் ஆகியோரின் நிர்வாகத் தில் எனது பணி இடம்பெற்றது.
1966 - 1972 காலப்பகுதியில் பகுதி நேர அறிவிப்பாளர்களாகப் பலர் பங்கு கொண்டனர். 1966 ஏப்ரல் மாதம் பின்வருபவர்கள். வர்த்தக ஒலிபரப்பில் பகுதி நேர அறிவிப்பாளராகச் சேர்க்கப்பட்டனர். புவன லோஜனி வேலுப்பிள்ளை, யோகா தில்லைநாதன், எஸ். நாகராஜா. கேபூரீஸ்கந்தராஜா, கே.எஸ்.சிவகுமாரன்.
அப்பொழுது நான் உள்ளூராட்சிச் சேவை அதிகார சபை அலுவலகத்தில் தமிழ் மொழிபெயர்ப்பாளராகப் பதவி வகித்தேன் (1961- 1969). எனவே பெளர்ணமி தினங்களில் மாத்திரமே எனக்குப் பணிபுரியும் அவகாசமிருந்தது. ஏனைய நண்பர்கள் முழு நேரமும் பகுதி நேர அறிவிப்பாளர்களாக இருக்கக்கூடிய வாய்ப்புப் பெற்றனர்.
சிறிது வித்தியாசமான பாணியில் எனது அறிவிப்பு முறைகள் இருந்தன என்பதை தீவிர வானொலி நேயர் அ. கனகசூரியர் போன்றவர் கள் அவதானித்து வந்துள்ளனர். உதாரணமாக, ஆங்கிலச் சொற்களை சரியான ஆங்கில உச்சரிப்பில் நான் உதிர்த்ததைப் பலர் அவதானித்தனர். பாடல்களை அறிமுகப்படுத்தும் விதத்திலும், சில பின்னணித் தகவல் களைக் கொடுத்து அறிவிப்புகளைச் செய்து வந்தேன்.
இதனை அவதானித்து நண்பர் கே. பூரீஸ்கந்தராஜா. என்னுடைய பெயரின் முதல் எழுத்துக்களைப்போலவே தன்னுடைய பெயரின் முதல்
10

கே.எஸ். சிவகுமாரன்
எழுத்துக்களை "K.S" என்று மாற்றிக் கொண்டார். நான் அறிவிக்கும் பாணியைத் தழுவித் தனக்கே உரித்தான மிகைப்படுத்திய முறையில் அவர் தமிழை, ஆங்கில அறிவிப்பாளர்கள் செய்வது போல் செய்து கூடிய விரைவில் பிரபல்யம் பெற்றார். பல்கலைக்கழகப் படிப்பை ஒதுக்கி வைத்துவிட்டு, முழு நேரமும் வேலை செய்யக் கூடிய பகுதி நேர அறிவிப்பாளராக மாறினார்.
சிங்கள மொழியில், மறைந்த ப்ரொஸ்பர் பெர்னாண்டோ, சிங்கள அறிவிக்கும் பாணியை ஆங்கில அறிவிக்கும் பாணி போன்று எவ்வாறு மாற்றத்தைக் கொண்டு வந்தாரோ, அதேபோல கே.எஸ். ராஜாவும் கூடிய விரைவில் புகழைப் பெற்றார்.
வர்த்தக ஒலிபரப்பில் முதல் முதலாகத் தமிழில் ஒலித்த குரல் டான் துரைராஜ் என்ற ஆங்கில அறிவிப்பாளரின் குரலாகும். இவர் ஆங்கிலத்திலும், தமிழிலும் அடுத்தடுத்து அறிவிப்புகளைச் செய்தார். குஞ்சிதயாதம் போல் தமிழிலும், டான் துரைராஜ் போல் ஆங்கிலம் தமிழ் ஆகிய மொழிகளிலும் அறிவிப்பாளராக வர நான் ஆரம்பத்தில் சிந்தித்தது சித்தியாயிற்று.
இருந்த போதிலும் 10 தடவை முயற்சி எடுத்த பின்னரே இலங்கை வானொலித் தமிழ்ப் பகுதியின் நிர்வாகத்தினர் வேண்டா வெறுப்பாக என்னையும் பகுதி நேர அறிவிப்பாளராகச் சேர்த்துக்கொண்டனர். அவர்கள் அப்படியிருந்ததற்குப் பல காரணங்கள் இருந்திருக்கக்கூடும். இலங்கை வானொலிக்குள்ளும் "அரசியல்" இருக்கவே செய்கிறது. இது ஒன்றும் புதிய தகவல் அல்ல.
நான் தமிழ் அறிவிப்பாளராகப் பணி புரிந்ததுடன், ஆங்கில தேசிய வர்த்தக சேவையிலும் பகுதி நேர அறிவிப்பாளராகவும், செய்தி வாசிப்பவராகவும் இருந்திருக்கிறேன் என்பது உங்களில் பலருக்குப் புதிய செய்தியாக இருக்கக் கூடும். ஆம், இன்றும் ஆங்கில வர்த்தக சேவையில் பகுதி நேர அறிவிப்பாளராகப் பணி புரிகிறேன்.
இன்னொரு விஷயத்தையும் கூறி இத்தொடரை முடித்து வைக்க விரும்புகிறேன். அதாவது 1969 இலே செய்திப் பிரிவில் தமிழ் மொழி
11

Page 13
சொன்னாற்போல.
பெயர்ப்பாளர்கள் முதன் முதலில் சேர்க்கப்பட்டார்கள். அதற்கு முன்னர் செய்தி வாசிப்பவர்களே ஆங்கிலச் செய்திகளைத் தமிழில் பெயர்த்து வாசித்து வந்தனர்.
மறைந்த கே.எஸ். மகேசன் (பத்திரிகையாளர், நீதிவான். எஸ். ராசையா, கே.எஸ். சிவகுமாரன் ஆகியோரே இந்த ஆரம்ப மொழி பெயர்ப்பாளர்களாவர். எனது முதல் செய்தி மொழிப்பெயர்ப்பு 1245 செய்திகள், வாசித்தவர் எஸ். புண்ணியமூர்த்தி. பிரதான செய்தி "அப்போலோ" சந்திரனில் இறங்கிய வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த செய்தி. இது மறக்க முடியாததொன்று.
பின்னர் விநவரத்தினம், காசி நவரத்தினம் ஆகியோரும் தமிழ் மொழிபெயர்ப்பாளர்களாகச் சேர்ந்துகொண்டனர்.
செய்திப் பிரிவில் செய்தி உதவியாசிரியர் தரம் 2, தரம் 1 என்று பதவி உயர்வு பெற்று பின்னர் ஆகக் கூடிய பதவியாக அக்காலத்தி லிருந்த கடமை செய்தி ஆசிரியர் (Duty Editor) பதவியையும் வகித்து 1979 இல் விலகிக் கொண்டேன்.
இது எனது பணிகளின் சுருக்கமான ஒரு பதிவு
வேறொரு சந்தர்ப்பத்தில் இலங்கை வானொலியில் நான் நன்கு பழகியவர்கள் பற்றிய எண்ணக் கோலங்களைப் பதிவு செய்வேன். அற்புதமான திறமையுடையவர்கள் அன்றும், இன்றும் இலங்கை வானொலியில் பணிபுரிகிறார்கள்.
தினக்குரல் : 08.09.2004
12

ரேடியோபைத்தியமானேன்
வளரிளம் பருவத்திலேயே நான் "ரேடியோ" பைத்தியமானேன்.
'டைம்ஸ் ஒப் சிலோன்' ஓர் ஆங்கிலத் தினசரி. மடிந்து விட்டது. சனிக்கிழமைகளில் ஜூனியர் டைம்ஸ்' என்ற பெயரில் வளரிளம் பருவத்தினருக்காக ஓர் அனுபந்தம், பிரதான பத்திரிகையுடன் இணைந்து வந்தது. அந்த இகழ்களில் நான் அடிக்கடி எழுதி வந்தேன்.
அந்த அனுபந்தத்தின் ஆசிரியர், அதில் எழுதுபவர்களிடம், "நீங்கள் என்ன தொழில் செய்ய விரும்புகிறீர்கள்?" என்று கேட்டெழு தினார். ஒவ்வொருவரும் தாம் பிற்காலத்தில் என்ன பதவிகளை நாடுவார்கள் என்று எழுதித் தெரிவித்தனர். அவர்களுடைய படங் களுடன் அவர்கள் ஆசைகள் பிரசுரமாகின. பலரும் எதிர்பார்த்த படியே, உயர் தொழில்களை - வைத்தியர்கள், பொறியியலாளர்கள், கணக்காளர்கள், கட்டடக் கலைஞர்கள் போன்ற பதவிகளை அவர்கள் நாடி நின்றனர்.
நான் மட்டும். 'வானொலி அறிவிப்பாளராக வர விரும்புகிறேன், என்றெழுதினேன். என் விருப்பம் புகைப்படத்துடன் வெளியாகியது. அதே பக்கத்தில் இன்னொருவரின் விருப்பமும் படமும் வெளியாகியது. அவர் வேறு யாருமல்லர். தமிழ் கொங்கிரஸ் கட்சித் தலைவர் மறைந்த ஜி.ஜி. பொன்னம்பலம் அவர்களின் புதல்வி தான், அதாவது மறைந்த குமார் பொன்னம்பலத்தின் சகோதரியும், தற்போதைய பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திர குமார் பொன்னம்பலத்தின் மாமியுமாவார்.
அந்தக் காலத்தில் - 1950 களின் இறுதியில் - ஜூனியர் டைம்ஸ்' பத்திரிகையை உங்களில் பலர் படித்திருக்க மாட்டீர்கள். ஆனால், ஒருவர்
இதனை அன்று படித்ததாக என்னிடம் பின்னர் கூறினார். அந்த அளவில்,
13

Page 14
சொன்னாற்போல.
நான் மேலே கூறியிருப்பதை உறுதிப்படுத்த ஒருவர் இருக்கிறார் என்பதில் எனக்கு செளகரியமே. அவர் ஓர் எழுத்தாளரும், நாடக ஆசிரியரும், நெறியாளருங்கூட - மானாமக்கீன். முன்னாள் அமைச்சரும் எழுத்தாளரும் ஒலிபரப்பாளருமான ஜனாப் ஏஎச்.எம். அஸ்வர், தானும் அதனைப் படித்ததாகத் தெரிவித்தார்.
எனது வானொலிப் பைத்தியத்தின் விளைபொருளாக மற்றொரு அனுபவமும் உண்டு.
அப்பொழுதெல்லாம் Talent Scouting என்ற முறையில், ஆற்றலுடையவர்களை வானொலியில் சேர்த்துக்கொள்வார்கள். 1950களின் நடுப்பகுதியில், வெள்ளவத்தை 40 ஆவது ஒழுங்கையில் எனது பெற்றோருடன் வசித்து வந்தேன். அடுத்த ஒழுங்கை 41 ஆவது ஒழுங்கை. இப்பொழுது அதன் பெயர், ஈ.ஏ. கூரே மாவத்தை. அத்தெருவிலே, வர்த்தக ஒலிபரப்பின் அதிபர் லிவி விஜேமான வசித்து வந்தார். அப்பொழுது நான் பள்ளிக்கூட மாணவன். தெருவால் நான் போய் வரும் பொழுது அவர் தனது காரில் ஏறும் நேரமும் சரியாக இருந்தால், அவர் என்னைப் பார்த்து "ஹலோ, யங் மான். ஹௌ டு யூ டூ?" என்பார் நானும், "ஐ ஏம் ஃபைன், தாங் யூ" என்பேன். அவர் இன்னார் என்று அந்நேரம் அறிந்திலேன். பின்னர் அறிந்ததும், துணிவை வரவழைத்துக் கொண்டு, நான் அறிவிப்பாளராக வர விரும்புகிறேன் என்ற ஆசையை அவரிடம் தெரிவித்தேன். அவர் ஆச்சரியத்துடன் "நீர் பள்ளிக்கூட மாணவராயிருக்கிறீரே தந்தையாரிடம் அனுமதிக் கடிதத்தைப் பெற்றுக் கொண்டு நாளைக்கே கலையகத்துக்கு வாரும். 'ஒடிஷன்' வைப்போம்" என்றார். நான் துள்ளிக் குதித்தேன். பரவசம் உடல் எங்கும் பொங்கியது. ஆயினும், அது சாசுவதமற்ற கண நேர இன்பக் கிளர்ச்சி மாத்திரமே.
எதிர்பார்த்தவாறு எனது தந்தையார் மறுத்தே மறுத்து விட்டார். கைக்கு எட்டியது வாய்க்கு எட்டாமற் போய் விட்டது.
எனவே, வானொலியில் இடம்பெறும் நிகழ்ச்சிகளில் பங்கெடுத்துக் கொண்டு அதன் மூலம் அனுபவம் பெறத் துணிந்தேன்.
14

கே.எஸ். சிவகுமாரன்
1953 - 1955 காலப்பகுதியில், இரத்மலானை (கொழும்பு இந்துக் கல்லூரியில் படித்துக் கொண்டிருந்த பொழுது, சக மாணவர்களிடம் 'ரேடியோ சிலோன்' பற்றியே பேசிப்பேசி விபரங்களை அறிய முற்பட்டேன். சக மாணவர்களுள் ஒருவர் இப்பொழுது ஊடகத் துறையில் ஒரு பெரிய பிரமுகர். அவர் அந்நாட்களில் அதிகம் பேச மாட்டார். வகுப்பறையிலுங் கூட என்னுடன் அத்திபூத்தாற் போன்றே பேசுவார். ஆயினும், அவரின் நண்பர்கள் சிலர் எனது ஆர்வத்தையறிந்து அவர் கொடுத்த விபரங்களை என்னிடம் தெரிவித்தனர்.
அவர் வேறு யாருமல்ல. இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத் தாபனத்தின் பிரதி மா அதிபராகப் பதவி உயர்த்தப்பட்ட வி.ஏ. திருஞான சுந்தரம் அவர்களே.
கொழும்பு இந்துக் கல்லூரி உதவி அதிபர் மறைந்த பத்மநாதன் கொடுத்த அறிமுகக் கடிதத்தை எடுத்துக் கொண்டு, இளைஞர் மன்றத் தயாரிப்பாளர். மறைந்த அறிவிப்பாளர் எஸ் நடராஜாவிடம் சென்றேன். அவர் நிகழ்ச்சிகளில் பங்கு பற்ற உதவினார். அந் நாட்களில், பொன்மணி குலசிங்கம் இவர் பின்னர் தமிழ்ச் சேவை பணிப்பாளராகப் பதவி உயர்வு பெற்றார்) இந்த நிகழ்ச்சியை நடத்தி வந்தார். இப்பொழுது பெரிய வானொலிக் கலைஞர்களாக விளங்கும் பலர் இந்த நிகழ்ச்சியில் பங்கு பற்றினார்கள். அருந்ததி பூரீ ரங்கநாதனின் மூத்த சகோதரி அம்பிகா சிவசுப்பிரமணியமும் இந்நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கினார். இவர், எனது ஒழுங்கைக்கு அடுத்த தெருவான ராஜசிங்க வீதியில் வசித்து வந்தார். எனவே, அடிக்கடி நிகழ்ச்சிகளில் பங்குபற்றினேன். பின்னர் சில்லையூர் செல்வராசன், கா.சிவத்தம்பி போன்றோர் நடத்திய இளைஞர் மன்றம்' போன்ற நிகழ்ச்சிகளிலும் பங்கெடுத்தேன். ஓரளவு அனுபவம் பெற்றேன்.
ஆயினும், அறிவிப்பாளராக வரவேண்டும் என்ற ஆசை இன்னமும் நிறைவேறவில்லை. பல்கலைக்கழகப் புதுமுக வகுப்பில் படிப்பதற்காக கொழும்பு, புனித ஜோசப் கல்லூரியில் சேர்ந்தபோது, உயர் அதிகாரிகளாகப் பதவி பெற்று இப்பொழுது ஓய்வு பெற்றிருக்கும் இருவர் என்னுடன் மாணவர்களாயிருந்தனர். அன்ரன் அல்பிரட்,
15

Page 15
சொன்னாற்போல.
எஸ். கணேசநாதன் ஆகியோரே அவ்விருவரும். கணேசநாதனின் தாய் மாமனார் நாவற்குழியூர் நடராசன் அப்பொழுது தேசிய சேவையின் தமிழ் நிகழ்ச்சி அதிகாரியாகப் பணியாற்றினார்.
எனது நண்பர்கள் பல்கலைகழகம் சென்றார்கள். நான் இரு தடவை பரீட்சைக்குத் தோற்றினாலும் இலங்கை வரலாற்றில்' 'குண்டு' அடித்ததனால் பல்கலைக்கழகம் செல்ல முடியவில்லை. மகாவம்ச விவரணங்களுடன் ஒத்துப்போகாததும் நான் தோல்வியடைந்ததற்கு ஒரு காரணம். பின்னர், இலங்கை வரலாற்றை ஒதுக்கி விட்டு ஆங்கிலத்தை ஒரு பாடமாக எடுத்து, வெளிவாரிப் பட்டதாரியாகினேன் என்பதையும் இங்கு குறிப்பிட வேண்டும்.
கணேசநாதன் தன் மாமனாருக்கு என்னை அறிமுகம் செய்து வைத்தார். பின்னர் கலாநிதிப் பட்டம் பெற்று வானொலியில் உயர் பதவி வகித்த அவருக்கு எனது ஆங்கிலப் பாணி அதிகம் பிடிக்கவில்லை என்பது போல் தெரிந்தது. அத்துடன் ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தில் நிலவிய அரசியலும் இதற்குப் பின்னணியாக இருந்திருக்கலாம். ஆயினும், கே.எஸ். நடராஜா அவர்கள், நான் மொழி பெயர்ப்புச் செய்வேனா என்று வினவினார். 'ஓம்' என்றேன். உடனே அவர் "கிராம சஞ்சிகை" நிகழ்ச்சித் தயாரிப்பாளர், மறைந்த விவியன் நமசிவாயத்திடமும், பேச்சுப் பகுதிப் பொறுப்பாளர் மறைந்த அருள் தியாகராசாவிற்கும் என்னை அறிமுகப்படுத்தி வைத்தார்.
விவியன் நமசிவாயம் பரீட்சார்த்தமாக ஓர் ஆங்கிலச் செய்தி மடலைத் தமிழில் தருமாறு கேட்டுக் கொண்டார். நான் மொழியாக்கம் செய்து கொடுத்தேன். அவர் தொடர்ந்து தமிழில் இச்செய்தி மடலைத் தரும்படி பணித்தார். ஒவ்வொரு விய்ாழக்கிழமையும் இதனை நானே எழுதி வாசித்தேன். சன்மானமாக இந்தப் 15 நிமிஷ ஒலிபரப்புக்கு ரூபா 45 ஐத் தந்தார்கள். அருள் தியாகராஜா, புத்தக, திரைப்பட விமர்சனங்களைச் செய்யும்படி பணித்தார். ஒலிபரப்புகளின் பின்னர் எனது பெயரும் அறிவிக்கப்பட்டதனால், நேயர்களிடையே நானும் ஓரளவு அறிமுகமானேன்.
16

கே.எஸ். சிவகுமாரன்
நாடக நடிகர் தேர்வுக்கும் சென்றேன். மறைந்த ஒலிபரப்பு மேதையும் சிறந்த எழுத்தாளருமான சோ. சிவபாதசுந்தரம் உட்பட ஓரிருவர், பல நாடகப் பிரதிகளைத் தந்து என்னைப் பரீட்சித்தனர். அக்பர் சக்கரவர்த்தி யார்?' என்று வினவினார் சோ.சி. அவர் ஒரு மொகாலய மன்னர்' என்றேன். "பரவாயில் லையே" என்றார் சிவபாதசுந்தரம். ஆயினும், அவர்கள் என்னை வானொலி நாடக நடிகராகத் தெரிவு செய்யவில்லை. கொழும்பு புனித ஜோசப் கல்லூரி மாணவனாக இருந்த பொழுது, முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ராஜலிங்கம் எழுதிய மேடை நாடகம் ஒன்றில் கணேசநாதனும், நானும் நடித்தோம். சிறந்த நடிகர் பரிசு கணேசநாதனுக்குக் கிடைத்தது. நீதிபதிகளாக, மறைந்த தமிழறிஞர் எப்.எக்ஸ்.ஸி.நடராஜா, மறைந்த பத்திராதிபர் இ.சிவகுருநாதன் மற்றும் ஒருவர் (பெயர் ஞாபகமில்லை) கடமையாற்றினார்கள்.
வர்த்தக சேவையில், குண்டன்மால்ஸ் ஆதரவில் இடம்பெற்ற ஒரு தொடர் நாடகத்தில் கோகிலவர்த்தனி சுப்பிரமணியம் (சிவராஜா) உட்பட பல முக்கிய நடிகர்களுடன் நடித்தேன்.
- தினக்குரல் : 23.09.2004
17

Page 16
ஒலிவாங்கியின் பின்னால்.
இப்பொழுது தென்றல்' என்றழைக்கப்படும் ஒலிபரப்புச் சேவை, அந்நாட்களில் இலங்கை வானொலியின் வர்த்தக சேவை என்றழைக்கப் பட்டது. இப்பொழுது போலவே அப்பொழுதும், இலங்கை நேயர்களுக் கும், ஆசிய நேயர்களுக்கும் வெவ்வேறு அலைவரிசைகளில் நிகழ்ச்சி கள் ஒலிபரப்பாகின.
வர்த்தக சேவையில் டான் துரைராஜ், ஜஸ்டின், ராஜ்குமார், கிறிஸ்டி தயாளன் கந்தையா போன்ற பகுதி நேர அறிவிப்பாளர்கள் ஒலிவாங்கி யின் பின்னால் நின்று தமிழ் நிகழ்ச்சிகளை (சினிமாப் பாடல்கள், பாடியவர்கள் பெயர்கள், இடம்பெற்ற படங்கள், விரும்பிக் கேட்டவர் களின் பெயர்கள் - இவைதான் அறிவிப்பாளர் ஒலிபரப்பியவை) வழங்கிய தன் பின்னர், வானலைகளில் ஒரு புதிய குரல் கேட்டது. அக்குரல் வித்தியாசமாகவும், எம்முடன் நேரடியாகவே சரளமாகப் பழகு தமிழில் பேசுவது போன்றும் ஒலித்தது. அதுவே எஸ்.பி.மயில் வாகனத்தின் குரல், வர்த்தக சேவையின் முதலாவது நிரந்தர அறிவிப்பாளர் அவரே. அமரராகிவிட்ட மயில் அண்ணையின் துணைவியார், ஏற்கெனவே தேசிய சேவையில் நிரந்தர அறிவிப்புாளராக" இருந்தார். அவரே இலங்கை வானொலியின் முதலாவது பெண் அறிவிப்பாளராவார். அவர் பெயர் செந்திமணி மயில்வாகனம். சிறந்த செய்தி வாசிப்பாளர். இப் பொழுது லண்டனில் வசிக்கிறார்.
இலங்கை வானொலியின் வரலாற்றில் மாத்திரமல்ல - இந்திய, மலேசிய, சிங்கப்பூர் வானொலிகளின் வரலாறுகளிலும் ஒரு புதிய சகாப்தம் ஆரம்பமாகியது. ஆம், தமிழிலே வர்த்தக ஒலிபரப்பு இலங்கையில் தான் முதன் முதலில் ஆரம்பிக்கப்பட்டது. அந்த ஒலிபரப்பை இலகுபடுத்தி. ஜனரஞ்சகமாக, சாதாரண மக்கள் விரும்பும் ஒலிபரப்பாக்கிய பெருமை எஸ்.பி.மயில்வாகனத்தைச் சேரும்.
18

கே.எஸ். சிவகுமாரன்
மயில்வாகனம் தனது 'வானொலி ஆளுமை' யினால் புதுத்தடம் வகுத்துச் சென்றமை. அன்று புத்தம் புதிய பாணியாகும். நமது ஆய்வறிவாளர் கார்த்திகேசு சிவத்தம்பி, மயில்வாகனத்தின் முக்கியத்து வம் குறித்து எழுதியிருப்பதை இன்றைய ஒலிபரப்பாளர் அறியார் போலும்.
நீங்கள் கேட்டவை, நேயர் விருப்பம் போன்றவை நேயர்களிடத் தில் அதிக வரவேற்புப் பெறும் நிகழ்ச்சி என்பதை நாமறிவோம். பெரும் பாலான நேயர்கள் தமது பெயர்கள் வானொலியில் கூறப்பட வேண் டும் என்பதற்காகவே இந்நிகழ்ச்சிகளில் அதிகம் கலந்து கொள்வதுண்டு.
அந்நாட்களில் அகில இந்திய வானொலி வெளிநாட்டு நேயர்களுக்காகப் புதுடில்லியிலிருந்து சிற்றலை வரிசையில் நேயர் விருப்ப நிகழ்ச்சியையும் சேர்த்துக் கொள்ளும். அந்நாட்களில் நன்கறியப்பட்ட இந்திய செய்தி வாசிப்பாளர்களாக தர்மாம்பாள், சரோஜ் நாராயண சாமி ஆகியோர் நேயர் விருப்ப நிகழ்ச்சியிலும் கலந்து கொள்வார்கள். சிறுவனாக இருந்தபொழுது இந்நிகழ்ச்சிகளில் எனது பெயரும் இடம்பெறும், பெரிய ஆனந்தம். எனது பெயர் வானொலியில் ஒலிபரப்பாகும் நாட்களில், அன்று முழு நாளுமே பெரிய சாதனையைச் செய்து விட்டதாக நினைத்துக் கொள்வேன். இந்தப் பைத்தியம் வளர்ந்த பின்னும் தொடர்ந்தது.
மயில் வாகனம், எனது பெயரையும், எனது சகோதரர்களின் பெயர்களையும் நாம் அனுப்பும் தபால் அட்டைகளிலிருந்து வாசிப்பார். அவரை ஒரு நாளும் முன்னர் நேரிற் கண்டதில்லை. ஒரு நாளிரவு நாம் வசித்த வெள்ளவத்தை 40 ஆவது ஒழுங்கையில் ஒரு தம்பதியர் உலாப்போந்தனர். பின்னர், எங்கள் வீட்டுக்கு முன்னால் நின்று சிவகுமாரன் என்று கூப்பிட்டனர். யார் என்று விசாரிக்கச் சென்றதும், "நீர்தானா சிவகுமாரன்" என்று கணவர் கேட்டார். "ஆம்" என்றேன். "நான் மயில்வாகனம், பக்கத்து விவேகானந்த வீதியின் கடைசி வீட்டில் இருக்கிறோம்" என்றார். நான் குரலில் விக்கித்து நின்றேன். அடேயப்பா, ஒரு தெய்வமே வந்து நின்றது போல, அதிர்ச்சியினால் நாக்குழற அவர்களை வரவேற்றோம்.
19

Page 17
சொன்னாற்போல.
நாம் அனுப்பும் தபால் அட்டைகளில் முகவரி இருந்ததனால் எமது வீட்டு முகவரியை மயில்வாகனம் தம்பதியினர் அறிந்து கொண்டனர். அதனால் மயிலும் செந்தியும் என்னைப் பார்க்க வந்திருந்தனர். அப்பொழுது முதல் அவர்களுடனான நட்பு அதிகரித்தது.
தமது நிகழ்ச்சிகளுக்கு எழுதும்படி மயில் வாகனம் கேட்டுக் கொண்டார். இசையும் கதையும்' என்ற நிகழ்ச்சிக்கு குறிஞ்சிக் காதல் என்ற பெயரில் நான் விரும்பிய பாடல்கள் சிலவற்றைத் தொகுத்து
சங்ககாலக் கற்பனைக் கதையொன்றை அனுப்பி வைத்தேன். அது ஒலிபரப்பாகியது. நான் முகில்களில் தவழ்ந்தேன். மயில்வாகனம் காலத்தில், சலீம், சந்திரசேகரன், புலேந்திரன், ராஜகுரு சேனாதிபதி கனகரத்தினம், நகுலேஸ்வரன், பாலசுப்பிரமணியம், சில்வெஸ்ரர் பாலசுப்பிரமணியம், சரா இம்மானுவல் போன்ற பகுதி நேர அறிவிப் பாளர்களும் கடமையாற்றினர்.
மயில் வாகனத்துடன், எஸ்.கே. பரராஜசிங்கமும் நிரந்தர அறிவிப்பாளராகச் சேர்ந்துகொண்டார். வர்த்தக சேவை மிகமிக முக்கியத்துவம் வாய்ந்த ஒலிபரப்பாக மாறியது.
1966 க்குப் பின்னர், எம்மைத் தொடர்ந்து பி.எச். அப்துல் ஹமீட், நடராஜ சிவம், ஜோர்ஜ் சந்திரசேகரன் (தேசிய சேவை). ராஜேஸ்வரி சண்முகம், கோகிலா சுப்பிரமணியம், ஜோக்கிம் பெர்னாண்டோ போன்ற மிகப்புகழ் பெற்ற அறிவிப்பாளர்கள் பெரும் பங்களித்துத் தமது சாம்ராஜ்யத்தை அமைத்திருந்தனர்.
இலங்கை வானொலி அறிவிப்பாளர்கள் பயிற்சியும், தேர்ச்சியும் பெற்றே முன்னுக்கு வந்தனர். ஆயினும், அண்மைக்காலமாக இந்த நெறி இலங்கை வானொலி உட்பட ஏனைய நிலையங்களில் முற்று முழுதாகப் பிரயோகிக்கப்படுவதில்லை என்பது எனது அனுமானம், வாசகர்களாகிய நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?
- தினக்குரல் : 30.09.2004
20

ஒரு சில அறிவிப்பாளர்கள்
போவதும் வருவதுமாகப் பல அறிவிப்பாளர்களும், ஒலிபரப் பாளர்களும் டொரிங்டன் சதுக்க வானொலி நிலையத்திற் கால்பதித்துத் தடம் விட்டுச் சென்றுள்ளனர். ஆயினும், அவர்களைப் பற்றிய எந்த விதமான பதிவுகளும் இல்லை. நண்பர் வீ.ஏ. திருஞானசுந்தரம் தினகரன் வாரமஞ்சரியில் ஒரு தொடர் கட்டுரையை எழுதி வந்தமை நினைவிற்கு வருகிறது. அது புத்தகமாக இன்னும் வெளிவரவில்லை. அவசியம் விரைவில் அது வரவேண்டும். பல தகவல்கள் அதில் அடங்கியிருந்தன.
வீ.ஏ.தி. எனது சக மாணவர் என்பதை முன்னர் இப்பகுதியில் குறிப்பிட்டிருந்தேன். இவர் வீரகேசரி நாளிதழில் உதவி ஆசிரியராக 1950 களின் இறுதியில் பணி புரிந்து வந்தவர். இவருடன் கூடவே எஸ். எம். கோபாலரத்தினம் என்ற இப்போதைய முதிய பத்திரிகையாளரும் பணி புரிந்து வந்தார். இவர்களிருவரும், திரைப்படம் சம்பந்தமான ஒரு பக்கத்தைத் தயாரித்து வெளியிட்டனர். அந்தக் காலத்தில் அக்காலத் திரைப்படப் பாட்டுகளிலும் பாடகர்களிலும் ரசனை மிகுந்து இருந்தது. எனவே, நான் திரட்டிய தகவல்கள், தொடர்புகள் ஆகியவற்றைக் கொண்டு, அப்பக்கத்தில், "திரைமறைவில் இசை வழங்குவோர்" என்றொரு பத்தியை எழுதி வந்தேன்.
அக்காலத்தில் கே.வி.எஸ். வாஸ் தினசரி ஆசிரியராகவும். வீ. லோகநாதன். ஞாயிறு வீரகேசரி ஆசிரியராகவும் பணிபுரிந்து வந்தனர். ராமசாமி சிறுகதைகளைத் தெரிவு செய்து பிரசுரிக்கும் ஆசிரியராகவும், ஞாயிறு இதழின் சிறப்பம்சப் பகுதி ஆசிரியராகவும் பணிபுரிந்தனர். தற்போதைய வீரகேசரி நாளிதழின் ஆசிரியரான நடராஜா, தினக்குரல் ஊடக ஆலோசகர் டேவிட் ராஜூ, உதயன் நாளிதழின் பெருமாள்,
21

Page 18
சொன்னாற்போல.
கார்மேகம் போன்ற இப்போதைய சிரேஷ்ட எழுத்தாளர்கள் உதவி ஆசிரியர்களாகப் பணிபுரிந்தனர்.
ஒரு வானொலி நிலையத்தின் ஒலிபரப்புத் துTதுவராக அறிவிப்பாளர்கள் இருந்து வந்துள்ளனர். இலங்கை வானொலியிலும் அறிவிப்பாளர்கள் தமது குரல் மூலம் நேயர்களிடத்தில் அதிக பிரபல்யம் பெற்று வந்தனர்.
அக்கால அறிவிப்பாளர்கள் முதல் இக்கால அறிவிப்பாளர்கள் வரையுமுள்ள ஒலிபரப்பாளர்கள் பற்றி ஒழுங்கான, கிரமமான பதிவுகள் புத்தக வடிவில் இல்லை.
இந்தத் தேவையை உணர்ந்த ஓர் இளம் அறிவிப்பாளர். தாம் சந்தித்த அறிவிப்பாளர்கள் பற்றி மாத்திரம் ஒரு சில தகவல்களைத் திரட்டி ஒரு சிறு நூலாகத் தந்துள்ளார். மிகவும் உற்சாகமும், துடிதுடிப்புமுள்ள இந்த இளைஞரின் பெயர், இஸ்மாயில் உவைசுர் ரஹற்மான், புத்தகத்தின் பெயர் "நேயரின் பார்வையில்" அதாவது, தன்னை ஒரு நேயராகக் கருதிக்கொண்டு ஒரு சிலரைப் பற்றி (18 பேர்) இவர் எழுதுகிறார்.
இவருடைய பார்வையில் (பகுதி 1) படுபவர்கள்
எஸ். றபீக், எஸ். கணேஸ்வரன், ஏ.எல். ஜபீர், ஏ.ஆர்.எம். ஜிப்ரி, கே. நாகபூஷணி, ஜவஹர் பெர்னாண்டோ, அஷ்ரப் சிஹாப்தீன், ரேலங்கி செல்வராஜா, வி.என். மதியழகன். மஹற்தி ஹஸன் இப்ராஹிம், இளையதம்பி தயானந்தா, தம்பிஐயா தேவதாஸ், புர்கான் பீ. இப்திகார், பி.எச். அப்துல் ஹமீத், எஸ்.நடேச சர்மா, இராஜேஸ்வரி சண்முகம், சற்சொருபவதி நாதன், எஸ்.நடராஜன்.
இவர்கள் அனைவருமே (எஸ். நடராஜனைத் தவிர 1960 பிற்பகுதி முதல் 70/80 கள் வரை அறிமுகமானவர்கள், இவர்களுக்கு முற்பட்டவர் கள் பற்றி, என்னையும் உட்படுத்தி - ஒரு சில தகவல்களை இப்பகுதியில் நான் தந்திருந்ததை நீங்கள் மறந்திருக்க மாட்டீர்கள். இஉ ரஹற்மானின் பார்வையில் படாத பலருள் ஜோர்ஜ் சந்திரசேகரன், சரா இம்மானுவல் சந்திரமோகன், சில்வெஸ்டர் பாலசுப்பிரமணியம்,
22

கே.எஸ். சிவகுமாரன்
நாகலிங் கம், பாலசுப் பிர மணியம், வீ. சுந்தரலிங்கம், வீ.ஏ. திருஞானசுந்தரம், விமல் சொக்கநாதன், கோகிலா சிவராஜா போன்ற பலர் அடங்குவர். அவர்களைப் பற்றியும் பகுதி 2 இல் ஆசிரியர் எழுதுவார் போலும்.
இலங்கை வானொலி தொடர்பாக வீ.சுந்தரலிங்கம், ஜோர்ஜ் சந்திரசேகரன் ஆகியோரும் எழுதியிருப்பதை அறிந்தேன். அவற்றைப் படிக்கும் சந்தர்ப்பம் இன்னமும் எனக்குக் கிட்டவில்லை.
இளம் நண்பர் இஸ்மாயில் உவைசுர் ரஹ்மான் தனது புத்தகத்தை மதிப்புரைக்காகத் தந்தபொழுது, அப்புத்தக்கத்தில் பின்வருமாறு எழுதியிருந்தார்.
"கே. எஸ். சிவகுமாரனுக்கு
நிகழ்ச்சிகள் படைக்கின்றபோது
நேயர் நெஞ்சங்களை எழ வைக்கின்ற
சந்ததிக்குச் சந்ததி மாறுகின்றபோது
விழ வைக்கின்ற -
ஒலிபரப்பிலிருந்து ஓய்வு பெறுகின்றபோது -
அழ வைக்கின்ற
கலையே அறிவிப்புக் கலை"
என எழுதி எனக்கு ஏதோ சொல்ல முன்வருகிறார். துரதிஷ்ட
வசமாக. எனது சிற்றறிவுக்கு இது இன்னமும் புலப்பட்டதாயில்லை; போகட்டும்.
ஆயினும், பல்கலைக்கழக "விமர்சகர்கள்" உட்படப் பத்திரிகை யாளர்கள். ஒலிபரப்பாளர்கள் எல்லோரும் இவரைப் பற்றி நல்லதையே எழுதியிருக்கிறார்கள். அது மட்டுமா? வேறு பலரும் இவருடைய பல்துறை அனுபவங்களைப் பறைசாற்றியிருக்கின்றனர். எனவே, இவருடைய தகைமைகளை நிராகரித்து இவர் எழுத்து மீதான எனது அபிப்பிராயத்தைத் திணிப்பது உகந்ததாக அமைய மாட்டாது.
23

Page 19
சொன்னாற்போல.
சுயநலமின்றி சக ஒலிபரப்பாளர்கள் பற்றி எமக்குத் தெரிவிக்க அவர் முன்வந்ததிலிருந்தே இவரது பரந்த உள்ளம் புலனாகும். இவர் சட்டத்துறை மாணவர் என்பதும் குறிப்பிடத்தக்கது. இவருடைய வானொலிப் பங்களிப்புகள் பற்றியும் ஒரு நிரல் தரப்பட்டுள்ளது.
இஸ்மாயில் உவைசுர் ரஹ்மான் பல்திறனாற்றல் கொண்டவர் என்பது வெளிப்படை இவரது தமிழ் எழுத்தும் புதுமையாய் உள்ளது.
அ.கனகசூரியரைத் தவிர வேறு எவருமே இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் பற்றிய தகவல்களை முழுமையாக அறிந்திலர். நண்பர் இஸ்மாயில் உவைசுர் ரஹ்மானுக்கு என்னைப் பற்றி ஒன்றும் தெரியாதது அதிக வியப்பைத் தரவில்லை. ஏனெனில், அவர் பிறந்ததே 1973 ஆம் ஆண்டில்தான். எனது அறிவிப்புக் காலம் 1966-79 பரவாயில்லை. அவர் பார்வையில் தப்பிவிட்டவர்களைப் பற்றி அவர் பின்னர் எழுத நேர்ந்தால், எனது தமிழ் ஆங்கில / அறிவிப்புத்துறை, செய்திப்பிரிவுப் பங்களிப்பு போன்றவற்றையும், நான் இறக்கும் முன்னர் எழுதுவார் என்று எதிர்பார்ப்போம். ஏனெனில், நானும் வானொலிக் குடும்பத்தைச் சேர்ந்தவன் என்பது பலருக்கு இன்னமும் தெரியாது. வரலாற்றுப் பதிவுகள் அவசியம் என்பதற்காகவே தன்னடக்கமின்றி, என்னைப் பற்றி
நானே இப்பத்தியில் எழுதி வருகிறேன்.
நம்மைப் பற்றிய ஆவணங்கள் இல்லாததனாற்றான் அதி தீவிர பேரினவாதிகள் எமது நாட்டு வரலாற்றையே திரித்துக் கூறி வருகிறார்கள். உண்மையோ அல்லவோ?
தினக்குரல் 13.10.2004
24

அமெரிக்காவில் சில அனுபவங்கள்
மேற்குலகில் நெடு நாட்கள் மேற்குலகில் நெடு நாட்கள் மேற்குலகில் நெடு நாட்கள் மேற்குலகில் நெடு நாட்கள் மேற்குலகில் நெடு நாட்கள்
25
- 1
- 2
- 3
- 4
- 5

Page 20
மேற்குலகில் நெடுநாட்கள் - 1
"தினக்குரல் " தந்த இடத்தினூடாகப் பற்பல விஷயங்கள் தொடர்பாக நாம் தகவல்களையும், குறிப்புகளையும், திறனாய்வு சார்ந்த மதிப்பீடுகளையும் பகிர்ந்து கொண்டோம். வாசகர்களாகிய நீங்கள் இடையிடையே அறியத் தந்த எதிர்வினைகள் மூலம், இப்பத்தி மேலும் செழுமை பெற்றது எனலாம்.
இனி இரண்டு ஆண்டுகளாக நான் எங்கே சென்றிருந்தேன் என்று நீங்கள் கேட்பது எனக்குக் கேட்கிறது. ஆம், நான் மேற்கில் நெடு நாட்கள் இருந்து விட்டேன். உண்மையிலேயே "மேற்கில் நெடு நாட்கள்" (Too long in the West) GT66TL g5 UTG)355J Unggai GTOLpguj (b. 5TGSait பெயர். யார் அவர்? அவர் தமிழ் நாட்டைச் சேர்ந்த ஓர் ஆங்கில இலக்கியப் புலமையாளர். டி.எஸ். எலியட் (T.S. Eliot) என்ற ஆங்கிலக் கவிஞனைப் பற்றி ஆதாரபூர்வமாகவும், அதிகாரபூர்வமாகவும் எழுதப் பட்டது இந்நூல் என, அரை நூற்றாண்டுக்கு முன் அங்கீகாரம் பெற்றது.
எலியட் அமெரிக்காவில் பிறந்து இங்கிலாந்தில் வாழ்ந்த தலை சிறந்த 20 ஆம் நூற்றாண்டுக் கவிஞர் என்பதை நம்மில் பலர் அறிந்திருப்போம். சென்ற நூற்றாண்டுச் சிறந்த ஆங்கிலக் கவிஞர்களுள், L-L Îì6ỉTụ+.Lỉì.C3u JL°. Giò (W. B. Yeats). QTGiờ UT LJ6)ị60ốT L’ (Ezra Pound) டபிள்யூ.எச்.ஒடன் (W.H.Auden) போன்றோரும் அடங்குவர்.
இது இப்படியிருக்கையில், நான் சொல்ல வந்ததைச் சொல்ல மறந்து விட்டேன். பார்த்தீர்களா, வயது போனால் இப்படித்தான். போகட்டும். மேற்குலகைப் போலவே, இளமையாய் (தோற்றத்தில் இல்லாவிட்டாலும்) இருக்க நாம் முயல்வோம். சொன்னாற் போல, முயற்சி உடையார் இகழ்ச்சியடையார்' (Try, try, try again) என்பது மேனாட்டாரின் தாரக
26

கே.எஸ். சிவகுமாரன்
மந்திரம். அவர்கள் எப்பொழுதுமே பொஸிட்டிவ்' (எல்லாம் நன்மைக் கே) ஆகச் சிந்தித்து முன்னேறுபவர்கள். அதனால் தான், விண்வெளி யில் சஞ்சரித்துச் சந்திரனுக்கும் செல்லக் கூடியவர்களாக இருக்கிறார்கள்.
விண்வெளி என்றதும் விண்வெளிப் பொறியியலாளரான (Aerospace Engineer) எனது மூத்த மகன் ரகுராமின் (37) நினைவு ஞாபகத்திற்கு வருகிறது. இலங்கைத் தமிழர் ஒருவர் முதற் தடவையாக இத்துறையில் முதுமாணிப் பட்டம் பெற்றமை ஒரு சாதனை என்பது உண்மையே. ஆயினும், இதனை நானே எடுத்துக் கூறுவது சுய தம்பட்டந்தான். இருந்தாலும், தந்தை என்ற முறையில் நான் பெருமிதம் அடைகிறேன். ராம், இத்துறையிலும் வேறு படிப்புத் துறைகளிலும் முதுமாணிப் பட்டம் பெற்றிருந்தாலும், அவர் தற்சமயம் விண்வெளித் துறையில் தொழில் பார்க்காமல், கணினித் துறையில் மென்பொருள் நிபுணராகப் பணிபுரிகிறார்.
இவற்றையெல்லாம் ஏன் இங்கு குறிப்பிட வேண்டும்? நியாயமான கேள்விதான். விஷயம் இருக்கிறது. கடந்த 18 வருடங்களுக்கும் மேலாக அமெரிக்காவில் படித்து, பட்டம் பெற்று பணிபுரியும் எனது மகன், தனக்கிருக்கும் உரிமை காரணமாக அந்த நாட்டுக்கு வந்து வசிக்கும் படி அழைப்பு விடுத்தார்.
நான் ஓர் எழுத்தாளன் என்பதனால் பிற நாட்டு வாழ்க்கைப் போக்கு எப்படியிருக்கும் என்று அறிய, ஆர்வமுள்ள இயல்பு இருந்த தனால், 2002 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 18 ஆம் திகதி அமெரிக்காவிற் குப் புறப்பட்டேன்.
செல்லும் வழி, தென் கிழக்காசியாவூடாக இருந்தமை எனக்குப் பெரும் மகிழ்ச்சியைத் தந்தது. தென்னாசியாவில் வாழும் நாம் பெரும்பாலும், இலங்கைக்கு வெளியே சிந்திப்பதாயிருந்தால், அயல் நாடாகிய இந்தியா அல்லது கனடா அல்லது ஐரோப்பா, அமெரிக்கா, அவுஸ்திரேலியா ஆகிய கண்டங்களின் நாடுகள் பற்றியே அதிகம் அறிந்து கொள்கிறோம்.
27

Page 21
சொன்னாற்போல.
சிங்கப்பூர், மலேசியா, இந்தோனேசியா, தென்|வட கொரியா கம்பூச்சியா, தாய்லாந்து, தாய்வான் போன்ற தென் கிழக்காசிய நாடுகள் பற்றியோ, ஜப்பான், கரீபியத் தீவுகள், மெக்ஸிகோ, மத்திய, தென் அமெரிக்கா போன்ற நாடுகள் பற்றியோ அவற்றின் பண்பாட்டுக் கோலங்கள் பற்றியோ அதிகம் அறிந்தோமில்லை. மாலை தீவு, மத்திய கிழக்கு (மேற்கு ஆசியா) போன்ற இடங்களில் உள்ள இஸ்லாமிய நாடுகள் பற்றி ஓரளவுக்காகுதல் நம்மில் பலர் அறிந்து வைத்திருக் கின்றோம். எனவே, சிங்கப்பூர் எயர் லைன்ஸ் விமானத்தில் ஏறித் தாய் வான் வழியாக அமெரிக்கத் தென்மேற்கு மாநிலமான கலிபோர்னியாவின் தலைநகரான லொஸ் அன்ஜலிஸ் விமான நிலையத்தில் ஏப்ரல் 19 ஆம் திகதி இலங்கைக்கும் அமெரிக்காவிற்கும் இடையே நேர வித்தியாசம் சுமார் 8 முதல் 10 மணி வரையுமானது. அதாவது நமது நாட்டில் சூரியன் உதித்த பின்னர் தான் மேற்கில் உதயமாகிறது) சிங்கப்பூர் விமான நிலையத்தில் சில மணி நேரம் கழிக்கவும் / களிப்படையவும் வாய்ப்பு ஏற்பட்டது. அப்பப்பா எத்தனை விதமான கோலங்கள். பல்வேறு நாட்டவரின் கூடலாக மாத்திரமின்றி, தென் கிழக்காசியாவின் வேறுபட்ட மக்களின் நாகரிகப் போக்குகளையும் பேச்சோசைகளையும் கண்டு கேட்க முடிந்து வியப்புற்றேன்.
நாம் நினைக்கிறோம் - நாமே இற்றைவரையிலான (Up to date) தன்மைகளைக் கொண்ட நவநாகரிக மக்கள் என்று. இது எவ்வளவு தவறானது என்பதைப் பிரத்தியட்சமாகவே நான் கண்டேன். தாய்வான் தலைநகரான தாய்பேய் விமான நிலையத்தில் பாதுகாப்புப் பரிசோத னையை மேற்கொண்டார்கள். சிறிது நேரம் அங்கு தங்கியிருந்த வேளையில், மேற்கும் கிழக்கும் சந்தித்தாற் போன்று, அங்கு பல்வேறு ஆளுமைகளைக் கொண்ட பல்வேறு மக்களின் நடையுடை பாவனை களைப் பார்த்துப் பரவசமானேன்.
- தினக்குரல் : 07.07.2004 ★
28

மேற்குலகில் நெடுநாட்கள் - 2
தாய்வான் தலைநகர் அனைத்துலக விமான நிலையத்திலிருந்து நள்ளிரவு புறப்பட்ட விமானம் அடுத்த நாள் மாலையில் லொஸ் அன்ஜலிஸ் விமான நிலையம் வந்தடைந்தது. குபேர நாடாகிய அதிசய உலகம். அமெரிக்காவில் கால் வைத்ததும், நிர்வாக அனுசரணைகள் நடைபெற்றன. நடைமுறைகள் சாதகமாக அமைந்ததனால், அமெரிக்கா வின் நிரந்தரவாசியான அனுமதிச் சான்றிதழ் கிடைத்தது.
இனிச் செல்லவேண்டியது அமெரிக்காவின் ஒஹையோ (OHIO) மாநிலத்தின் இரண்டாவது மாநகரமாகிய சின்சினாட்டிக்கு (Cincinnai). அடுத்த நாள் காலைதான் டெல்டா (Delta) விமானம் புறப்படும். அதுவரை லொஸ் அன்ஜலிஸ் விமான நிலையத்தையும், அதனை அண்டிய பகுதிகளையும் சுற்றிப் பார்த்தேன்.
பார்த்த வேளையில், பல்வேறு மாதிரி மாந்தர்கள் பூமிப் பந்தின் வெவ்வேறு பாகங்களிலுமிருந்து வந்து பயணம் செய்வதைக் கண்டேன். அங்கு ஆங்கில, ஸ்பானிய, இத்தாலிய, வியட்நாமிய மொழிகளில் பேசுவோரையும், ஜப்பானிய, தென்னமெரிக்க நாடுகளைச் சேர்ந்தவர் களையும் கண்டு, கேட்டு, கதைத்து மகிழ்ந்தேன்.
இரவு, அங்கு பகலாய் பரபரப்புடன் ஒளிர்விட்டது. மெக்ஸிக்கன் உண்டிச்சாலையில், இரு இந்தியத் தம்பதிகளுடன் (ஆந்திரா மாநிலத்த வர் சம்பாஷித்து, உறைக்க உறைக்கி உணவருந்தியிருந்த வேளையில், வயதில் இளமையான ஓர் தத்துவத்துறை பேராசிரியரான அமெரிக்கர் நம்முடன் சேர்ந்து கொண்டார். நான் தமிழில் ஓரிரு வார்த்தைகளை என்னையறியாமலேயே எமது சம்பாஷணையில் சேர்த்துக் கொண்டேன். தெலுங்கு பேசும் இளந்தம்பதியருக்கு எனது மொழி புரிந்தது. அமெரிக்
கர் சுறுசுறுப்பானார்.
29

Page 22
சொன்னாற்போல.
நீங்கள் எந்த மொழிச் சொற்களைப் பாவித்தீர்கள்? என்று அமெரிக்க உச்சரிப்புடன் ஆங்கிலத்தில் என்னை வினவினார். "தமிழ்" என்று தமிழிற் பேசுவது போல உச்சரித்தேன். "அது Tamil ஆ" என்றார். "அதுவே" என்றேன். "நீங்கள் இந்தியரா?" "இல்லையே! இலங்கையன்" என்றேன் விளக்கமாக,
"I am a Sri lankan' GT6õT Gp6őT.
அவர் மளமள என்று இலங்கையைப் பற்றித் தான் அறிந்ததை யெல்லாம் எடுத்துக் கூறினார். எனக்குச் சந்தோஷம். பெரும்பாலான சராசரி அமெரிக்கர்களுக்குப் பிற நாடுகள் பற்றிய அறிவு பூஜ்யம் என்று தான் சொல்ல வேண்டும். ஆனால், இந்த நண்பர் சிறிது வித்தியாசமான வர். காரணம் - இவருக்கு நிறையத் தகவல் தெரிந்திருந்தமை. இவர் தந்தை பங்கொக்கில் தாய்லாந்துத் தலைநகரில் அமெரிக்கத் தூதுவராகப் பணிபுரிந்தவர். தவிரவும். இவர் மெய்யியல் பேராசிரியராய் இருப்பதனால் இணையான அறிவுத்துறைச் செல்நெறிகளிலும் ஆர்வங்காட்டி வந்ததனால் இலங்கை பற்றியும் அறிந்திருந்ததில் வியப்பில்லை.
பயணிகள் தங்குமறையில் உறங்குவது போன்று சிறிது நேரம் கண்ணயர்ந்தேன். பொழுது விடிந்தது. பொற்கோழி கூவவில்லை. ஆயினும், மதுரமான ஸ்பானிய மொழி இலத்தின் அமெரிக்க வாத்திய இசை கண்விழிக்கச் செய்தது.
காலைக் கடன்களைத் துப்புரவான 'Rest Room இல் (மலசல
கூடத்தை, றெஸ்ற் ரூம்" என்றுதான் பெரும்பாலான அமெரிக்கர்கள்
அழைக்கிறார்கள்). முடித்துவிட்ட புதுத் தென்புடன் சின்சினாட்டிக்குச் செல்லும் விமானத்திற்காகக் காத்திருந்தேன்.
நான் அமர்ந்திருந்த பாதைமுனைக் கோடியில் (Terminal) வெவ்வேறு திசைகளுக்குச் செல்லும் பயணிகள் காத்திருந்தனர். அவர்களுள் ஒருவர் எனது அவதானிப்புக்குட்பட்டார். தோற்றத்தில் இந்தியர்போல் காணப்பட்ட அந்த இளைஞர் உடையணிந்த முறையில் (சிறு காற்சட்டை, டீ - ஷேட் பெல்ட் ஸ்போர்ட்ஸ் ஷ9ஸ்) அமெரிக்க ராய் தோற்றினார். இருவரும் ஒருவரையொருவர் பார்த்து முறுவலித்
30

கே.எஸ். சிவகுமாரன்
தோம். பின்னர் பேசத் தொடங்கினோம். அவர் தன் பெயரைக் கூறவில்லை. நானும் அப்படித்தான். இலக்கியம், கலை, சமயம், மேலை / கீழைத்தேயப் பண்பாட்டுக் கோலங்கள் பற்றியெல்லாம் ஆங்கிலத்தில் உரையாாடினோம். - அவர் அமெரிக்க உச்சரிப்பில் நான் பிரிட்டிஷ் உச்சரிப்பில். நேரம் கழிந்தது பயனுள்ளதாய். நான் புறப்படும் நேரம் வந்து விட்டது. அவர் கனடாவின் டொறோன்டோவுக்குச் செல்ல விருந்தார்; விடைபெற்றோம்.
அந்த அவர் யார் என்று நான் முன்னமே அறிந்திருந்தால், ஒரு செவ்வியை மேற்கொண்டிருப்பேன் -ச்சா தவறிய சந்தர்ப்பமாயிற்று. தென்னிந்தியாவின் கர்நாடக மாநிலத்தில் பிறந்து அமெரிக்காவில் நெடு நாட்களாக வாழ்ந்து, இன்று ஹொலிவுட் திரைப்பட நெறியாளர்களுள் பிரபல்யம் பெற்றுவரும் ஷியாமளன் நைட் தான் (Shyamalan Knight) அந்த இளைஞர் ஆறாவது அறிவு' (The Sixth Sense) என்ற திரைப்படத்தின் மூலம் பரவலாக கவனிப்பைப் பெற்ற ஷியாமளன் நைட் இன்று மேலும் இருபடங்களை நெறிப்படுத்திப் பாராட்டைப் பெற்றுள்ளார்.
நிற்க, இவர் இன்னார் என்று முன்னமே தெரிந்திருந்தால், மேலும் பல தகவல்களை அவரிடமிருந்து பெற்றுத் தங்களுடன் பரிமாறிக் கொண்டிருக்கலாம்.
அவர் அட்டகாசமாகத் தன்னைக் காட்டிக் கொள்ளாமல், அமைதி யாக இருந்தார். உண்மைக் கலைஞர்கள் அப்படித்தான் அடக்கமாக இருப்பர். சாதாரணமான சாமான்யராக அவர் என்னுடன் உரையாடினார். அப்படியிருந்ததனாற் போலும் நான் அவர் பெயரையறிந்து கொள்ள முயலவில்லை. ஊடகத் துறையினனாக இருப்பதனால் இத்தவறை நான் விட்டிருக்கக் கூடாது.
Appearences are deceptive (வெளித்தோற்றம் சில வேளைகளில் ஏமாற்றும் இயல்புடையது) என்பது உண்மைதான். பின் அவர்தான் ஷியாமளன் நைட் என்பதனை எப்படியறிந்து கொண்டேன்?
31

Page 23
சொன்னாற்போல.
அவர் புகைப்படத்துடன் ஒரு சிறுகுறிப்பு ஓர் அமெரிக்க சஞ்சிகை யில் வெளியாகியிருந்தது. அப்பொழுதுதான் என் உதாசீனத்தைப் புரிந்து கொண்டேன். பல பிரமுகர்கள் சில வேளைகளில் தாம் இன்னார் எனக் காட்டார் (Incognito), தனியாக சுகானுபவத்தைப் பெறுவார்கள். இதுவும் அப்படியே.
லொஸ் அஞ்ஜலிஸிலிருந்து புறப்பட்ட விமானம் சில மணிநேரம் கழித்து சின்சினாட்டியை மதியத்தில் வந்தடைந்தது. அங்கு என் வருகைக்காக ஆவலுடன் என் மூத்த மகன் ராமும், மருமகள் மிஷேலும் காத்திருந்தனர். மகிழ்வுடன் வரவேற்றனர். புதிய வாழ்க்கை முறை அத்தருணம் ஆரம்பமாகியது.
- தினக்குரல் : 14.07.2004
32

மேற்குலகில் நெடுநாட்கள் - 3
அமெரிக்க மாநிலங்களிலொன்று ஒஹாயோ (Ohio) அதனை அண்டியுள்ள மாநிலங்கள் இந்தியானா (Indiana). கென்டக்கி (Kentucky), அந்த நாட்டின் மத்திய கிழக்குப் பகுதியில் இம்மும் மாநிலங்களும் (Tristates) அமைந்துள்ளன. ஒஹாயோ மாநிலத்தின் தலைநகர் கொலம்பஸ். அதற்கடுத்த பெருநகரங்கள் என சின்சினாட்டி (Cincinnati) க்ளீவ்லன்ட் (Cleavland) போன்றவற்றைக் குறிப்பிடலாம்.
KFC எனப்படும் கென்டக்கி பொரித்த கோழியிறைச்சியை எமது நாட்டிலும் தயாரித்துத் தருகிறார்கள் அல்லவா? அந்த மாநிலத்தைச் சேர்ந்தவர் 'கண்டுபிடித்த உணவுப் பதார்த்தம் இப்பொழுது உலகளாவிய விதத்தில் அறிமுகமாகியிருக்கிறது.
கென்டக்கியின் வட பகுதி சின்சினாட்டி நகரின் தெற்குப் பகுதியைத் தொடுகிறது. அந்த இடத்திற் தான் அனைத்துலக விமான நிலையம் இருக்கிறது.
நான் அங்கு சென்றிறங்கியதும் எனது மூத்த மகன் ராமும், அவருடைய துணைவியார் மிஷேலும் என்னை அன்புடன் வரவேற்றுத் தமது காரில் தமதிருப்பிடம் அழைத்துச் சென்றனர். அமெரிக்காவில் வாகனங்கள் வலது பக்கத்துப் பாதையில் தான் செல்லும். ஆயினும் கார்ச் சாரதி காரின் இடது பக்கத்து முன் ஆசனத்திலிருந்து தான் வாகனத்தைச் செலுத்துவார். இது நீங்கள் அறிந்ததொன்றே.
அங்கு அகன்ற பெரிய தெருக்களில் நான்கு ஒடு பாதைகள் உள்ளன. ஒரே திசையில் செல்லும் வாகனங்கள் இரண்டு (ஒன்று விரைவாகச் செல்வதற்கு அடுத்தது அவ்வளவு விரைவு தேவைப் படாமற் செல்வதற்கு பாதைகளைப் பயன்படுத்தலாம்.
33

Page 24
சொன்னாற்போல.
பொது மக்கள் போக்குவரத்துக்கான பஸ் வண்டிகள் சில இடங்களில் இருந்தாலும், பொதுவாக அங்குள்ள மக்கள் எல்லோரிடத்தி லும் வாகனங்கள் உள்ளன. பெரும்பாலான குடும்பங்கள் குறைந்தது இரண்டு வாகனங்களையாகுதல் வைத்திருப்பார்கள். இது டாம்பீகம்" அல்ல. அத்தியாவசியத் தேவையின் நிமித்தம் எனக் கொள்க.
அமெரிக்காவில் போர்ட் (Ford), ஷெவலே (Chervelot) போன்ற உள் நாட்டு மோட்டார் வண்டிகளைப் பலர் பயன்படுத்தினாலும், ஜப்பானியக் கார்களுக்குத் தான் 'மவுசு அதிகம். அவை செய்நேர்த்தியும், அதிகபட்ச வசதி சாதனங்களும் கொண்டவை. கொரியா, பிரான்ஸ், ஜேர்மனி, மற்றும் கிழக்கு ஐரோப்பிய நாடுகளில் உற்பத்தி செய்யப்பட்ட மோட்டார் வண்டிகளுக்கும் 'கிராக்கி" உண்டு.
சின்சினாட்டியைப் பொறுத்த மட்டில் பெரும்பாலான மக்கள் ஜேர்மனியப் பூர்வீகத்தைக் கொண்டவர்கள். அதனைப் பெருமையாகப் பேசிக் கொள்பவர்கள். அயர்லாந்து, இத்தாலி, லத்தீன் அமெரிக்க நாடு கள், வியட்நாம், சீனா, ஜப்பான் போன்ற நாடுகளிலிருந்து வந்து குடியேறியவர்களும், அமெரிக்கப் பூர்வீகக் குடியினரான செவ்விந்தியர் களின் வாரிசுகளும் சின்சினாட்டி என்ற பெரு நகரத்தில் வசிக்கிறார்கள். கணிசமானவர்கள் என்றில்லாவிட்டாலும் நூறு. இருநூறு இந்திய, பாகிஸ்தானிய மக்களும் ஏறத்தாழ இருபது. முப்பது இலங்கை குடும்பத்தினரும் இங்கு வசிக்கின்றனர். குத்துமதிப்பின்படி இலங்கையின் வடபகுதி மக்கள் என ஒரு இருபது குடும்பங்கள் இங்கு நிரந்தரமாக வாழ்கின்றன. சிங்கள மக்கள் சிலரும் நெடுங்காலமாக வசிக்கின்றனர்.
ஃபொன்சேகா (Fonseka) குடும்பத்தினர் சுவையான இலங்கைச் சாப்பாட்டை மேல் நாட்டுப் பாணியில் சமைத்துத் தருகின்றனர். தமது அரலிய சிற்றுண்டிச் சாலையில், வெள்ளைப்பூடு ரொட்டி (Garic Bread) 'கட்டசம்பல்' வெவ்வேறு காரமட்டத்திலான இறைச்சிக் குழம்பு, தேங்காய்ப்பூ மாசிச் சம்பல் போன்றவற்றை வெள்ளைக்காரர்களுக்கு ஏற்ற விதத்தில் பக்குவமாகத் தருகின்றனர்.
சின்சினாட்டியின் தெற்குப் பகுதியில் வெள்ளைத் தோலுடையவர் களே அதிகம். அங்குதான் பஸ் ஓடும் பாதைக்கருகே தனியான
34

கே.எஸ். சிவகுமாரன்
விசாலமான வசிப்பிடம் (Apartment) ஒன்றில் வசித்து வந்தேன். வெள்ளையருக்கடுத்ததாக ஆபிரிக்க அமெரிக்கர்கள் காணப்படுகிறார் கள். ஹிஸ்பானிக் (Hispanic) என்றழைக்கப்படும் ஸ்பானிய மொழி பேசும் மெக்ஸிக்கோ, பியூற்றோ ரிக்கோ (Puerto Rico) மத்திய தென் அமெரிக்க நாடுகளைச் சேர்ந்தவர்களும் அம்மாநகரில் வசிக்கிறார்கள்.
ஓய்வுக்கே நேரமில்லை என்று கூறுமளவிற்கு ஆண்களும், பெண்களும், கடுமையாக உழைக்கிறார்கள். சிலர் ஒன்றுக்கு மேற்பட்ட வேலைகளைப் பார்க்கின்றனர். வருவாய் அதிகம் இல்லாவிட்டால், செலவுகளைச் சமாளிப்பது பெரும் கஷ்டமாகிவிடும். எனவேதான் அவர்களுக்கு நேரம் பொன்னானது. சகலதையும் வசதியாகப் பெற அவர்களுக்கு நிறையப்பணம் தேவைப்படுகிறது. ஒரு பொத்தானை அமுக்கினால் போதும், சகல தேவைகளும் நிறைவேற்றப்படுகின்றன என்று கூறுமளவிற்கு அவர்கள் வசதிகளைப் பெற்றுவிடுகின்றார்கள்.
ஹொலிவுட் படங்களிலும், தொலை நாடகங்களிலும் (Soap Operatic & Teleplays) சித்திரிக்கப்படுவது போன்று அமெரிக்க மக்களின் வாழ்க்கை முறையில்லை. அதே போன்று அமெரிக்க அரசியல்வாதி களின் கொள்கைகள், கோட்பாடுகள், போன்றவற்றை மாத்திரம் மையமாக வைத்து அமெரிக்க மக்களின் மனப்பாங்கையும். வாழ்க்கை முறையையும் கணிக்க முடியாது. பண்பாடு வித்தியாசப்படினும் அவர்களும் நம்மைப் போன்றவர்களே.
- தினக்குரல் : 21.07.2004
35

Page 25
மேற்குலகில் நெடுநாட்கள் - 4
சின்சினாட்டி அன்டர்சன் பட்டணப் பகுதியில் எனது மகன் குடும்பத்தினருடன் ஓரிரு மாதங்கள் இருந்து வந்தேன். அவர்களிரு வரும் வேலைக்குச் சென்று மாலையில் வீடு திரும்பும்வரை நான் தனியாக இருந்து புத்தகங்கள், சஞ்சிகைகள், பத்திரிகைகளைப் படித்து வந்தேன்.
எத்தனையோ வானொலி நிலையங்களிலிருந்து ஒவ்வொரு ரக நேயர்களுக்கும் களிப்பூட்டும் வகையில் விதவிதமான இசை ஒலித்தது. இடையில் செய்திகள் (வெளிநாட்டுச் செய்திகள் எப்போதாவது இருந்து தான் ஒலிப்பரப்பாகும்.) காலநிலை அறிவிப்பு, நிகழ்வுகள் பற்றிய அறிவிப்புகள். எல்லா வானொலி நிலையங்களும் விளம்பரங்களை விடாமல் சேர்த்துக் கொள்கின்றன.
இவற்றுள் ஒரு நிலையம் மாத்திரம் (தேசிய பொது மக்கள் வானொலி - NPR) விளம்பரமின்றி, செய்திகள், செய்தி விளக்கங்கள், விமர்சனங்கள் ஆகியவற்றுடன் அற்புதமான இசையை வழங்கி வருகின்றது.
இந்த இசை மேனாட்டு சாஸ்திரிய இசை (பெயித்தோவன், வாக்னர், மோற்ஸாட், சைகொவ்ஸ்கி, ஹைடன், பாஃம்ஸ் போன்ற இசை மேதைகளின் ரம்மியமான வாத்திய இசை) மாத்திரமல்ல. ஒலி ஒத்திசைவு மீட்டல்கள் (Symphony Orchestration) மற்றும் பல்வேறு நாடுகளில் இசைச் செல்வங்கள் மேனாட்டிசைப் பாணியில் தழுவியளிக் கப்படும் பாங்கு போன்ற மதுரமான இசையனுபவத்தை இந்த நிலையம் வழங்குகிறது.
36

கே.எஸ். சிவகுமாரன்
நான் சொல்லாமலே நீங்கள் புரிந்திருப்பீர்கள், என்.பி.ஆர். வானொலியையே நான் அதிகம் கேட்பேன். இலங்கை உட்படப் பல வெளிநாட்டுச் செய்திகளும், அமெரிக்கா முழுவதிலுமான முக்கிய செய்திகளும், மாநில, சின்சினாட்டிச் செய்திகளும் ஒலிபரப்பாகின. இதுவும் இசையும் என்னை நிர்ப்பந்தம் செய்தன.
வாசிப்பும், வானொலியும் தவிர, இருக்கவே இருக்கிறது. தொலைக் காட்சி நிகழ்ச்சிகள் - 200 க்கும் மேற்பட்ட நிலையங்கள் - சனல்ஸ் - சின்சினாட்டியில் மாத்திரம் மூன்று முக்கிய நிலையங்கள். இவை தேசிய நிலையங்களுடன் இணைந்தும் நிகழ்ச்சிகளை ஒளிபரப்புகின்றன. இவை மாத்திரமா? கேபிள்', 'சற்றலைட்' மூலம் சுமார் 1,000 நிலைய நிகழ்ச்சி களை விரும்பினாலும் பார்க்கலாம்.
ஆயினும், இரண்டு நிலையங்களில் ஒளிபரப்பாகும் திரைப் படங்களையே நான் அதிகம் பார்ப்பேன். இவை IFC (அனைத்துலக திரைப்படக் காட்சி நிலையமும், சன்டான்ஸ்' நிலையமுமாகும். Sundance நிலையத்தின் உரிமையாளர் தலைசிறந்த அமெரிக்க நடிகரும், நெறியாளருமான ரொபர்ட் ரெட்பர்ட் ஆவார். உலகத் திரைப்பட விழாக்களை நேரில் சென்று பார்க்கக் கடந்த ஏழு வருடங்களாக எனக்குச் சந்தர்ப்பம் கிடைக்கவில்லை. அதனை ஈடு செய்யவோ என்னவோ, இந்த இரு நிலையங்களிலும் காட்டப்படும் அனைத்துலகப் படங்களையும் பார்த்து மகிழ ஒரு வாய்ப்பு ஏற்பட்டது.
இவ்வாறு எத்தனை நாட்களுக்கு நான் ‘ஹாயாக' இருக்க முடியும்? வேலை தேடும் படலம் ஆரம்பமாகியது. தடையாக இருந்தது போக்குவரத்துப் பிரச்சினை, எனக்கோ கார் இல்லை. வெவ்வேறு இடங்களுக்கும் சென்று வேலைதேட, பஸ் வண்டிகளும் எனது இருப்பிடத்திலிருந்து செல்லா. மூன்று சில்லு (ஓட்டோ வண்டிகள் கிடையா. வாடகைக் காரும் இலகுவில் கிடைக்கமாட்டாது.
என்ன செய்வது? பஸ் ஓடும் பாதையில் எனக்கொரு அப்பார்ட் மன்ட் பார்க்க வேண்டியிருந்தது. எனது மருமகள் மிஷேல் இவர் ஜப்பானிய மோட்டார் நிறுவனத்தில் நிர்வாகப் பணியை மேற்கொள்வ துடன், சட்டத்தரணி இறுதி வகுப்பை இன்னும் சில மாதங்களில்
37

Page 26
சொன்னாற்போல.
முடித்துக் கொள்வார்) எனக்காக ஒரு நல்ல வசிப்பிடத்தைத் தேடித் தந்ததுடன், வாரத்தில் ஐந்து நாட்களுக்கு நான்கு மணி நேரம் செய்யக் கூடிய வேலையையும் தேடித் தந்தார்.
அவர்களுடைய் பெரிய வீட்டிலிருந்து ஏழு நிமிடக் கார் ஓட்டலின் பின் அடையக் கூடிய இடத்தில் வசிப்பிடம் எனக்குக் கிடைத்தது. மெளன்ட் வொஷிங்டன் பகுதியில் பஸ் ஓடும் சற்றன் (Sutton) நெடுஞ்சாலையில் ஒரு குடியிருப்புக் கிடைத்தது. பெரிய படுக்கை அறை, சாப்பாட்டு அறையும், அதனையொட்டிய சமைக்கும் பகுதியும் ("ஸ்டோவ்" மின்சார அடுப்பு. குளிரூட்டிப் பெட்டி) இருந்தன. இவற்றை விட வசதியாக உட்கார்ந்து பேசிப் பழகப் பெரிய பகுதி. குளியலறை மற்றும் சாமான்கள், உடைபோன்றவற்றை வைப்பதற்கு நான்கு அலுமாரி கள் (Closets), உடைகளை துவைத்துக் காயவைக்கும் இயந்திரம் போன்ற சகல வசதிகளும் கொண்ட எனது apartment எனக்குப் பெரும் செளகரியத்தைத் தந்தது.
1935 என்ற இலக்கம் கொண்ட அந்த வீட்டுத் தொகுதியில் என்னுடன் மொத்தம் ஐந்து தனியாட்கள் வசித்தனர். என்னைத் தவிர்த்து ஏனையோர் வெள்ளை நிற அமெரிக்கர்கள். எனது வசிப்பிடத்துக்கு 425 டொலர் மாதாந்த வாடகை, இலங்கைக் கணக்கில் நீங்களே நாணய மாற்றைச் செய்து விடுங்கள்.
வசிப்பிடம் கிடைத்து விட்டது. இனி, வேலை?
- தினக்குரல் : 28.07.2004
38

மேற்குலகில் நெடுநாட்கள் - 5
என்னைப் பற்றித் தகவல்களைத் தரும் அதே வேளையில், அமீெரிக்க வாழ்க்கை முறையில் சில பண்புகளையும் உங்களுக்குத் தருகிறேன் என்று எனக்கொரு நம்பிக்கை. இது சரியா? அன்பர்களே நீங்களே சொல்லுங்கள். எதற்கும் இந்த அத்தியாயத்துடன் மேற்கில் நெடு நாட்களை முடித்துவிட்டு, அடுத்த சுவாரஸ்யமான அம்சங்களைப் பார்ப்போமா?
சரி, எனது முதல் உத்தியோகம், கணினியைப் பயன்படுத்தித் தரவுகளைப் பதிவு செய்யும் வேலை, ஹமில்டன் கவுன்டி பதிவாளர் அலுவலகத்தில், இந்தத் தரவுகளை விண்ணப்பங்களிலிருந்து பெற்ற கணினியிலேயே பதிவு செய்து, சேமித்து வைப்பது எனது பங்கு - வேலை. இதற்கு ஆகக் குறைந்த சம்பளமாக மணித்தியாலயத்துக்கு ஐந்து டொலர் 25 சதம் தந்தார்கள்.
நீங்கள் பெரிய பட்டதாரியாக இருக்கலாம். ஆனால், அமெரிக்கா வில் புத்தக ஞானத்தைவிட, Skils எனப்படும் தொழிற் தேர்ச்சியே அதிகம் விரும்பப்படுகிறது.
நான் பார்த்த வேலை தற்காலிகமானது. முழு நேர வேலை யொன்றைத் தேடினால் தான், ஆரோக்கிய நலன் வசதிகளைப் பெற முடியும். இந்த Health Benefits இல்லாவிட்டால், அமெரிக்காவில் வசிப்பது மிகக் கடினம். ஏனெனில், வைத்தியசாலையில் தங்கியிருந்து நீங்கள் சிகிச்சை பெறுவதாயிருந்தால், நாளொன்றுக்கு சுமார் 4,000 டொலர் களைச் செலவிட வேண்டியிருக்கும். நகைப்பாயிருக்கிறதா?
எனவேதான், சுடச்சுட முழு நேர வேலையொன்றைத் தேடும் முயற்சியில் ஈடுபட்டு வெற்றியுங் கண்டேன். வேலை எனக்கோ புதியது.
39

Page 27
சொன்னாற்போல.
அமெரிக்கா எங்கும் கிளை விரித்திருக்கும் ஒரு பெரிய சங்கிலி விற்பனை நிலையத்தில் (Stores என்பார்கள்) விற்பனை இணையாளர் (Sales Associate) பதவி எனக்குக் கிடைத்தது. வாடிக்கையாளருடன் சுமூக உறவு விற்பனைப் பொருட்களைக் கவர்ச்சியான விதத்தில் காட்சிப் பொருளாக (Display) வைத் திருத்தல், காசு இயந்திரத்தில் விற்பனைகளைப் பதிவு செய்தல், பணப் புழக்கம் போன்றவை எனது கடமைகள்.
இந்த ஸ்ரோர்ஸ் 'லாஸரஸ் மேஸிஸ் - தைக்கப்பட்ட ஆண், பெண் உடைகளையும் மற்றும் மின்னியக்கப் பொருட்கள், நூதனப் பொருட்கள், உடை தாங்கிகள் போன்றவற்றை விற்பனை செய்து வந்தது. எனக்கு ஆரம்பத்தில் 'லகேஜ்' விற்பனைச் சாவடியிலும், பின்னர் ஆண்களுக்கான சகல உடைகள் விற்பனைச் சாவடியிலும் வேலை கிடைத்தது. இரண்டு வருடங்கள், மணித்தியாலயத்துக்கு 87. டொலர் எனச் சம்பளம் வழங்கினார்கள்.
முற்றிலும் வெள்ளையரைக் கொண்ட ஆண்கள் பகுதியில் இரண்டு ஆசியர்கள் தொழில் பார்த்தார்கள். ஒருவர் நான். மற்றவர் ஒரு பாகிஸ்தானியப் பெண்மணி.
எமது நாட்டு மக்கள் இயல்பாகவே விருந்தோம்பல் பண்பு கொண்டவர்கள், நானும் அதனைப் பிரயோகித்து, சரளமாக உயர்மட்ட ஆங்கிலத்தைப் பேசி, சிரித்த முகத்துடன் பண்பாக வாடிக்கையாளருடன் தொடர்பை வைத்துக் கொண்டேன். எனது விற்பனைச் சாதனை (Sales Productivity) அதிகரிக்கவும், வாடிக் கையாளரின் நன்மதிப்பு நிர்வாகத்தினருக்குத் தெரிய வந்ததனாலும், ஆண்கள் பகுதியின் சிறந்த விற்பனையாளர்களுக்கான 32 Badges ஐப் பெற்றுக் கொண்டு பெருமிதமடைந்தேன். இருந்தாலும், மேலதிக பணம் தேவைப்பட்டது. எனவே, ஆசிரியத் தொழிலைத் தேடினேன். நிரந்தர ஆசிரியர் பதவி வேண்டுமானால் முதுமாணிப் பட்டமும், கல்வித்துறையில் டிப்ளோமா வும் தேவை. :ع
என்னிடம் கலைமாணிப் பட்டம் மாத்திரமே இருந்தது. அது Substitute Teacher (மாற்று ஆசிரியர்) பதவி பெறப்போதுமானதாய்
இருந்தது.
40

கே.எஸ். சிவகுமாரன்
Forest Hills கல்வி மாவட்டத்தில், உயர் கல்வி நிறுவனங்கள் மூன்றில் (High School) இந்தப் பதவியைப் பெற்றுக் கொள்ள முடிந்தது. LazaruS - Macy's இல் முழு நேர வேலையுடன், ஓய்வு நாட்களில் மாற்று ஆசிரியராகப் பணிபுரிந்தேன். ஆங்கில இலக்கியம் தான், எனது முக்கிய பாடம் என்றாலும் சமூகக் கல்வி, இதழியல், ஒலிபரப்பு, திரைப்படம் போன்ற பாடங்களை நடத்தவும் வாய்ப்புக் கிடைத்தது.
எனக்கு மகிழ்ச்சியை இந்தப் பணி தந்தது. மாணவர்களும், மாணவியரும் என்னை நன்கு புரிந்து கொண்டு அமோகமான வரவேற்பைத் தந்தார்கள் என்பது நிஜம். நாளொன்றுக்கு 77 டொலர் சம்பளமாகப் பெற்றேன்.
அமெரிக்காவின் கல்வி முறைகளுக்கிணங்க நான் பெற்ற அனுபவத்தை 2004 ஜூலை 19 ஆம் திகதி கொழும்பு தமிழ்ச் சங்கத்தில் இடம்பெற்ற ஒரு சந்திப்பில் சில கல்விமான்களுடன் பகிர்ந்து கொண்டேன். எனவே, அது பற்றி இங்கு எழுதேன்.
பள்ளிக் கூடங்கள் கோடை விடுமுறைக்காக மூடப்பட்டுள்ளன.
முழு நேர / பகுதி நேர வேலைகள் இப்பொழுது எனக்கில்லை.
இடையில் Cincinnai Enquirer என்ற ஆங்கிலத் தினசரியில் ஓரிரு கட்டுரைகளை எழுதினேன். அமெரிக்காவிலிருந்து கொண்டே ஈமெயில்' மூலம் கொழும்பு ஆங்கிலப் பத்திரிகையான டெய்லி நியூஸ்' நாளிதழின் Artscope அனுபந்தத்தில் Gleanings என்ற தலைப்பில் ஒரு கலை இலக்கியப் பத்தியை (Column) 2003 ஆம் ஆண்டு டிசம்பர் 3 ஆம் திகதி முதல் வாராவாரம் புதன்கிழமைகளில் எழுதி வருகிறேன். நீங்கள் படித்துப் பார்க்கவே மாட்டீர்களா?
- தினக்குரல் : 04.08.2004
41

Page 28
நூல் நுகர்வில் சில
* விடியலுக்கு முன்.
வர்ணங்கள் கரைந்த வெளி கே. செல்வராஜன் என்றொரு கவிஞன் சில வெளியீடுகள் : சில குறிப்புக்கள் * சிரிப்பென்று ஒரு மருந்து * அப்புற மென்ன?
42

விடியலுக்கு முன்.
புலோலியூர் ஆ. இரத்தினவேலோன் நாடறிந்த தமிழ் சிறு கதையாசிரியர், கவிஞர். திறனாய்வு சார்ந்த பத்தி எழுத்தாளர், நூல் வெளி யீட்டாளர். எல்லாவற்றிற்கும் மேலாக, அமைதியானவர். அன்புள்ளம் கொண்டவர். ஆயினும், அதனைப் பகிரங்கமாக வெளிப்படுத்தாதவர். முற்போக்குச் சிந்தனையாளர், சிறுமை கண்டு பொங்குபவர். பல விருதுகளைப் பெற்றவர். " சுமார் மூன்று தசாப்தங்களாக நல்ல சிறு கதைகளை எழுதி வருபவர். புதுமைப்பாங்கில் எழுதுபவர். தமிழ் இவருக்கு சேவகம் புரியும்.
தமிழில் சில விஷயங்களை நான் எடுத்துக் கூற முயலும் போது, நண்பர்கள் அ. யேசுராசா, ஆ, இரத்தினவேலோன் ஆகிய இருவரும் தனித்தனியே என்னுடன் உரையாடும் போது என்னை வியப்பிலே ஆழ்த்தி விடுவார்கள். நான் ஆங்கிலத்தில் சிந்தித்துத் தமிழில் விளக்க முற்படும் போது, அவர்கள் "சட்டென" நல்ல தமிழில் தந்து விடுவர். நண்பர் எஸ். ரஞ்சகுமார் (மற்றொரு தலைசிறந்த படைப்பாளி ! திறனாய்வாளர்) கூறியிருப்பது போல, "வேலோனது சிறுகதைகளில் குறிப்பிடத்தக்கது இன்னொரு அம்சம் திருத்தமான ஒரு மொழியை - இலக்கணத் தமிழ் அல்ல - அவர் கையாள்வதாகும். இத்தொகுப் பினுாடே ஒரு வாசகன் அதை நன்கு உணர்ந்து கொள்ளலாம்"
இரத்தினவேலோன் தனது ஆறு நூல்கள் உட்பட 40 க்கும் மேலாக, "மீரா பதிப்பக"த்தின் ஊடாக வெளியிட்டிருக்கிறார். இவற்றுள்ளே எனது சில நூல்களும் அடங்கும்.
"விடியலுக்கு முன்" இந்த ஆண்டு முற்பகுதியில் வெளியாகிய நூலாசிரியரின் 11 சிறந்த கதைகள் என தானே நிர்ணயித்துக் கொண்ட
43

Page 29
சொன்னாற்போல.
கதைகளின் (1977 - 2002 தொகுப்பு முன்னுரையாசிரியர் எஸ். ரஞ்சகுமார் இவ்வாறு எழுதுகிறார். "இத்தொகுதியில் காணப்படும் கதைகளுள் பெரும்பாலானவை ஆசிரியரின் மெய்யனுபவங்களிலிருந்து பிறந்தவை. அதன் காரணமாகவே நம்பகத் தன்மையை அதிகளவில் இக்கதைகள் கொண்டுள்ளன." இது மெய்யே. அது மாத்திரமல்ல. நூலாசிரியர் வேலோனின் இயல்பின் மற்றொரு பக்கத்தை நாம் கண்டு வியந்து போகிறோம்.
அது என்னவோ? வேலோன், உள்ளூர நகைச்சுவை உணர்வு கொண்டதுடன், அண்மைக்கால நவீனத்துவக் கோலங்களையும் புரிந்து வைத்திருக்கிறார் என்பதே அது.
இத்தொகுப்பின் சிறப்பம்சங்களை ஆசிரியரே எடுத்துக் கூறுவது எமக்கும் வசதியாயிற்று. கதைகளைப் படித்த பின் நாமும் அக் கூற்றுக்களை முழுமையாக ஏற்றுக் கொள்ளவும் வகையாயிற்று. வேலோன் பேசுகிறார் :
மூன்று தசாப்த கால கட்டத்தில் தனிப்பட்ட எனது வாழ்க்கைக் கோலத்தினுாடே தேசியத்தின் சமூக, அரசியல் மாறுதல்களை இப்பதினொரு சிறுகதைகளும் சித்திரிக்க முனைவதே இத்தொகுதியின் மிக முக்கியமான அம்சமென நான் கருதுகின்றேன். என்னுடன் எனது குடும்ப அங்கத்தவர்களும் சில நண்பர்களும் இக்கதைகளின் பாத்திரங் களாக நகர்ந்து என் உணர்திறனைத் தொற்ற வைப்பதில் தோள் கொடுத்துள்ளார்கள்."
அவர் மேலும் கூறுவார். "வடக்கு, கிழக்கு மக்களின் வேதனைகளையும், விம்மல்களையும், யுத்தத்தாலான வடுக்களையும், வலிகளையும் இயல்பானதாக வெளிக்கொணர இக்கதைகளிலெல்லாம் நனவோடை உத்தியில் கதையினை நகர்த்தியுள்ளேன்.
இவருடைய கதைகள் பெரும்பாலும் எனக்குத் தனிப்பட்ட முறையில் பிடிக்கும். புறவயமாக நின்று ஒவ்வொரு கதையையும் பகுத்தாய்வு செய்வது அவசியமாயினும், இது போன்ற பத்திகளில் இது சாத்தியமாகா. ஆயினும், ஒரு சில கதைகளில், ஒரு சில பகுதிகளை
44

கே.எஸ். சிவகுமாரன்
மாத்திரம் எடுத்துக் காட்டாகத் தருகிறேன் - ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்போம்.
米米米
புதிய பயணம்' கதையின் பெயர் :
"மாமா வந்தது நல்லதாப் போச்சு, என்ன திரையன்?" திரையனை அணைத்தவாறே அக்கா கேட்டா.
"அக்கா உண்மையிலை திரையன் தான் என்னைப் பவுத்திரமாகக் கூட்டிக் கொண்டுவந்து உன்னட்டைச் சேர்த்திருக்கிறான். நான் வெறும் உருப்படிக்குப் போனேனே தவிர, எனக்கு எல்லாம் சொல்லித் தந்தது, வழிகாட்டினது உன்ரை மகன் தான் அக்கா. உண்மையிலை தம்பியட்டை யிருந்து தான் நான் அறிய வேண்டிய சங்கதிகள் நிறைய இருக்கு. இவ்வளவு காலமும் பயணம் வந்து போயிருக்கிறன். ஆனால், இந்தப் பயணம் தான் எனக்கு ஒரு புதிய படிப்பினையைத் தந்திருக்கு அக்கா."
米米米
பாரதி' கதையில் ஆசிரியர் சொல்லாமற் சொல்வது ஒரளவு புரிகிறது. ஆயினும் திடமாக இது பின் நவீனத்துவம்' என்ற வகை உணர்த்தும் போலித் தாம்பத்திய உறவைச் சித்திரிக்கின்றதோ தெரிய வில்லை. ஆனால், கதை எனக்குப் பிடித்திருக்கிறது.
3දී ප්k (k
மற்றொரு கதை இருட்டினில் வாழும் உயிர்களுக்கு
"மீரா பரீட்சைக்குத் தயார் தானே? இப்போ உனக்குத் தரப் பட்டுள்ள எழுத்து கீ அல்ல கி" என்றேன். வானொலியில் பாட்டுக்கு பாட்டு நடாத்தும் பி. எச். அப்துல் ஹமீட் பாணியில்."
45

Page 30
சொன்னாற்போல. "என்னப்பா கினாவோ?" என்று கேட்டாள் மீரா,
"ஓம் மீரா கி கிளிக்கு வாற கி" என்றேன். மகள் சிந்திக்க ஆரம்பித்தாள்.
ஏறத்தாழ சாந்திக்கு மட்டுமே கேட்கும் வகையிலே சொல்கிறேன். "சாந்தி இந்த எழுத்தை வைச் சுக் கொண்டு சாதாரணமாகவும் சிந்திக்கலாம். சர்வதேச மட்டத்திலையும் சிந்திக்கலாம். இதே எழுத்தை கொழும்பிலை ஒரு நாள் ஐந்தாம் ஆண்டு படிக்கிற உன் ரை கொண்ணற்றை மகனுக்கும் குடுத்தன். அவன் கிளிங்ரன், கிளியோ பாத்ரா, கிரிஸ், கிற்றார் எனச் சர்வதேச மட்டத்திலை சிந்திச்சு எழுதியி ருந்தான்.
"டிவி. பார்த்து, ரேடியோ கேட்டு வளர்கிற பிள்ளையஸ் அதுகள். அழகு ராணிப் போட்டியையும், கிரிக்கெட் மாச்சையும் அன்றாடம் இருந்த இடத்திலேயே இருந்து பார்க்கிறதுகள். அப்படிச் சிந்திக்கிறதிலை என்ன வியப்பு? ஆறேழு வருஷங்களாக, பிறந்ததிலையிருந்தே இருட்டுக் 5ள்ளேயே வாழுகிற சீவன்கள் எங்கட பிள்ளையஸ், இதுகளிட்டை அப்படியெல்லாம் எதிர்பார்க்க முடியுமா?" என்பது சாந்தியின் அங்கலாய்ப்பு.
"பாப்பம். இந்த மண்ணிலை படிக்கிற ஒரு முதல்தர மட்டத்திலை இருக்கிற பிள்ளை எப்படிச் சிந்திக்கிறது எண்டு?" என்றவாறே திரும்பி மகளை நோக்கினேன்.
"சரியா அம்மா?"
"ஒமப்பா, எழுதிப் போட்டேன்"
"எங்கை மகள் எழுதினதை வாசியுங்கோ பாப்பம்."
'கி' னாாவிலை ஆணின் பெயர் கிட்டு. பெண்ணின் பெயர் கிருஷாந்தி, இடத்தின் பெயர் கிளாலி, பொருளின் பெயர் கிரனைட்டு."
சாந்தி என்னை நோக்கினாள். இதுவும் சர்வதேச மட்டத்துச் சிந்தனை தானே?' என்பது போலிருந்தது அவளது பார்வை.
46

கே.எஸ். சிவகுமாரன்
நான் அண்ணாந்து வானத்தை நோக்கினேன். பெருமழை ஒன்றைப் பொழிந்து ஓய்ந்திருந்தாலும் மறுபடியும் பெய்வேன் எனப் பயங்காட்டிக் கொண்டிருக்கிறது நீல வானம்.
米米米
மற்றொரு கதை : கனகசெந்தி கதாவிருது பெற்ற "வேட்டை" அதிலிருந்து இரு வெவ்வேறு பகுதிகள் - ஆசிரியரின் வேறுபட்ட எழுத்து நடையைக் காட்டுவதற்காக.
"சிம்ம ராசியிலை பிறந்தவள். இயல்பாகவே றாங்கியானவள். அடிபட்டு, சித்திரவதைபட்டு வாழுறதை விரும்பவா போறாள்? கிளிப் பிள்ளையாக வளர்த்து குரங்கின்ரை கையிலை குடுத்திட்டம். கிணத்துப் படி தெரியாமல் வளர்த்து - பாழ் கிணத்துக்கை தள்ளிப் போட்டம். அந்தக் கண்காணாத தேசத்திலை தனியாக இருந்து என்ர பிள்ளை என்ன செய்யப் போகிறாளோ?"
அடுத்த மாதிரி.
"கொடிய அரக்கனின் கபாலத்தைக் காலில் மிதித்து கைகளில் வாள். சூலத்துடன் நாக்கை வெளியில் நீட்டியவாறே அக்னிப் பிழம்புகள் மத்தியில் பத்ரகாளி அம்மன் கொடுஞ் சினத்துடன் தரிசனம் கொடுத்துக் கொண்டிருந்தாள்."
米米冰
இரத்தினவேலோன் தமது சிறுகதைகளில் உரையாடல்களைச் சிறப்பாக எழுதுவார். அதுவும் யாழ்ப்பாணப் பேச்சு மொழியை அவர் கையாளும் முறை என்னைப் பெரிதும் கவரும் புலோலித் தமிழிற் சில, மட்டக்களப்பு புளியந்தீவுப் பகுதியில் பயிலப்படுவதாகவும், எனது இளமைக்கால நினைவு
, 47

Page 31
சொன்னாற்போல.
சில உதாரணங்கள் :
"என்ன இழவெண்டு உந்த அலுப்புகளைச் சப்பித் தள்ளுறது?" திக்கற்றவர்கள்) "என்ன கிரந்தம் கதைக்கிறியள்? எனக்குப் பத்திக் கொண்டு வாற ஆத்திரத்துக்கு. "திக்கற்றவர்கள்) வேறும் பல உள.
இந்தப் பத்தியிலே நான் வேண்டுமென்றே கதைகளின் உள்ளடக் கம் பற்றியோ, ஆசிரியரின் சமூகப் பிரக்ஞை பற்றியோ ஒன்றுமே கூறிலேன். வழக்கமாக, மதிப்புரைகள், உள்ளடக்கத்துடன் ஆரம்பிக்கும். கதைகளின் சுருக்கங்கள் மீளத் தரப்படும். கதைகள் எழுதப்பட்ட முறை, கதை உள்ளடக்கத்துக்குப் பொருத்தமானதோ என்பதை நாம் அதிகம் பார்ப்பதில்லை. இதனால், கதைகள் நேர்த்தியாக, சிக்கனமாக, கலை நயமாக எழுதுபவர்கள் மிகவும் குறைவாகவே நம்மிடையே காணப்படுகின்றார்கள். வாய்ப்பாடாக சமூக யதார்த்தக் கதைகளுக்கே நாம் முக்கியத்தவம் அளித்து வந்திருக்கிறோம். இது நியாயமான, சரியான அளவுகோலாக இருந்தபோதிலும், கதைகள் எழுதும்பொழுது ஏனைய 2 s]glú (6)LT(56ir SGMG|Tu|d (Aspects of Short Story Writing) sbs'Lð கவனத்தில் கொள்ள வேண்டுமென்பது எனது விருப்பம்.
நண்பர் புலோலியூர் ஆ. இரத்தினவேலோன் உள்ளடக்கத்துக்கு எவ்வளவு முக்கியத்துவம் அளிக்கிறாரோ, அதேபோல இதர அம்சங் களுக்கும் ஏறக்குறைய அதே முக்கியத்துவத்தைக் கொடுக்க முன் வருவது பாராட்டத்தக்க விஷயம் என்பது தவிர, கதைகளை அவர் சுவாரஸ்யமாக எழுதிச் செல்லவும் வகை செய்கிறது.
மனதைத் தொடும் எழுத்தாளர்களின் கதைகளையே எனக்கு அதிகம் பிடிக்கிறது. உங்களுக்கும் அப்படித்தானே?
- தினக்குரல் 03.12.2004
米米米
48

வர்ணங்கள் கரைந்த வெளி
கவிஞனுக்கும் திறனாய்வாளனுக்குமிடையில் என்ன உறவோ? திறனாய்வாளனுக்கும் கவிதை நுகர்வோனுக்குமிடையில் என்ன தொடர்போ?
அது, பரஸ்பர உணர்வினால் சங்கமிக்கும் பாங்கு. பல தளங்களி லும் நின்று செயற்படும் தொடர்பாடலில் முக்கியமானதொன்று லயிப்பு
லயிப்பும், ஒரு நிலைப்படுத்தப்பட்ட மன அமைதியுமின்றி உள் ளார்ந்த பல சிறப்புகளாக அமையும் படைப்பை நாம் முழுவதுமாகவே அணுகி, நுண்ணம்சங்களைப் பகுப்பாய்வு செய்து, வெளிப்படுத்துவது இலகுவானதொன்றல்ல.
ஆயினும், திறனாய்வாளன் கவிஞன் சொன்னதையும், சொல்லாமல் விட்டதையும், தனது எல்லைக் கட்டுக்குள் நின்று புரிந்து கொண்டு வெளிப்படுத்த முயல்கிறான்.
அவன் முயற்சி, நுகர்வோனுக்குப் புரியும் விதத்திலும், அவன் ஏற்றுக் கொள்ளத் தக்க விதத்திலும் எளிமையாகச் சொல்லப்படல் வேண்டும்.
தா. பாலகணேசன் பிரான்ஸில் வாழும் இலங்கையர். இவரது முதலாவது கவிதைத் தொகுப்பான வர்ணங்கள் கரைந்த வெளி' நூலில் 37 கவிதைகள் அடங்கியுள்ளன. ஒரே மூச்சாக இவற்றை நான் மெளனமாகப் படித்துப் பார்த்தேன். கவிஞருடைய உணர்வுத் தளத்தி லும் அறிவுத் தளத்திலும் புக நான் முயன்றேன்.
இவருடைய எந்தவித எழுத்தையோ, நாடகத்தையோ நான் இதற்கு முன்னர் படித்துப் பார்த்து அறிந்ததில்லை. எனவே, இவருடைய
49

Page 32
சொன்னாற்போல.
படைப்புக்கள் பற்றிய எனது முதல் அனுபவம் இதுவேயாகும். பிரான்ஸ் நாட்டிலிருந்து வெளிவந்த ஒரு தமிழ் நூலை நான் படித்ததும் இதுவே முதற் தடவை.
இவருடைய கவிதைகளை வாய்விட்டுப் படிக்கும் பொழுது கவிதையின் சுகானுபவம் ஏற்படுகிறது. தவிரவும் லயம். ஒசையொழுங்கு, வார்த்தைகளின் முக்கியத்துவம், அவை விமர்சிக்கும் அர்த்தங்கள் போன்ற அம்சங்கள் வாய்விட்டுப் படிப்பதனாலும் பரிமளிக்கின்றன.
இத்தொகுப்பில் காற்று' என்ற தலைப்பில் ஒரு மனோரதியக் கவிதை இடம்பெற்றுள்ளது. Romantic Poetry என்றொரு வகைக் கவிதை மரபு 19 ஆம் நூற்றாண்டிலே, குறிப்பாக இங்கிலாந்திலே பயிலப்பட்டு வந்தது. வேட்ஸ்வர்த், ஷெலி, கீட்ஸ், கோலரிட்ஜ் பிளெக் போன்றவர்கள் இக்கவிதை மரபில் எழுதி வந்தனர். இயற்கையையும், இயற்கை யோடிணைந்த வாழ்க்கை முறைமையையும் விரும்பிய அதே வேளை, கைத்தொழிற் புரட்சியை விரும்பாதவர்களாகவும் இந்த ரொமன்டிக்' கவிஞர்கள் இருந்து வந்தனர். இந்த ரொமன்டிஸிஸம்" என்ற பதத்தையே நான் இங்கு 'மனோரதியம்' என்கிறேன்.
ck X >k
காற்று இயற்கையை வைத்துப் பாடினாலும், அது சமூகப் பார்வையை விவரணப் பாங்கில் எடுத்தோதுகிறது. உள்ளார்ந்த சோகத் தன்மை மெல்லென ரீங்காரமிடுகிறது. நீங்களும் என் கூற்றை நிச்சயமாக ஆமோதிப்பீர்கள். இதுதான் அந்தக் கவிதை.
கூந்தலை விரித்தழுகின்ற பெண்ணென
தென்னந் தோப்பிடைக் கிடந்து
குழைந்து குழைந்து வந்து
என் இதயக் கதவோரம்
ஊதித் திரிகின்ற காற்றே!
50

கே.எஸ். சிவகுமாரன்
கடற்கரை மணலைக்
கைகளில் வாரிக் கொட்டிட வருவதாய்க் காண்கின்ற கனவில் வெட்டி ஒரு கணம் மின்னுகிறதென் கண்கள்.
சுற்றிச் சுழன்று
சுருதி மழை பெய்து
நர்த்தனமிட்டு ஒளித்து, கூக்குரலிட்டு விளையாடும் கோலக் கண்ணனெனவும் ஆகித் திரிந்த என் உயிர்க்காற்றே!
தோற்று வாரின்றி
அந்நியத் தெருக்களில் அழுது புலம்புகையில் நல்லதொரு வீணையென மீட்டிக் காட்டுவாய் உன் நாதக் குழலை என் நெஞ்செங்கும் பரப்பி நவமெனச் சுடர்ப்பிப்பாய்!
பூவில் தேனருந்திய வண்டின் கீதமதை மாந்திக் கிறுகித் திரிகின்றதாய்க் காற்றே!
தாவணிச் சேலை தழுவித் தளர்த்திடக் கண்டவர் விழிகளை மேலுயர்த்தி நிற்க நீ விந்தைகள் புரிவாய்!
பொட்டுக்குள் ஓடி மறைந்த பூமணியை யாரோ
51

Page 33
சொன்னாற்போல.
உள்ளம் கவர் கள்வன் சீண்ட அவள் சிரிப்பினையும் எங்ங்ணம் எழிலாய் எடுத்துத் திரிவாய் போ காற்றே! உன் குறும்போ பேசி மாளாது
நீலக் கடலில் பாடலை, ஏந்தி வந்தென் நெஞ்சு முற்றத்து நின்று முகாரித்தழுகின்றது மேன்?
ஊரில்
எங்கோ ஓர் மூலையில் தூக்கம் கலைந்தழும் தொட்டில் குழந்தையின் குரலைத் தானும் விட்டிலையே
ஊர் அழுகின்ற போதுந்தன் உள்ளம் அழுகிறது யார்க்கெடுத்துரைப்பன் என் காற்றே! ஏழுலகம்
எடுத்துத் திரிந்துன் உடலம் எங்ங்ணமிளைத்தாய் ஊரே கூடி ஒப்பாரித் தழுகையில் கவலை மிக்கதொரு காவியத்தை ஏற்றி இறக்கி எந்தன் செவி அருகே துயரோடு திரிவாய்
எனினும் உடுக்கொலியும்
52

கே.எஸ். சிவகுமாரன்
பறை முழக்கும் ஊர்க்காளி கோயில் மணி ஒலிப்பும் கொணர்ந்து என் உளத்தை உலுப்பி உயிர்ப்பிப்பாய் எனின் வாழி காற்றே
★大★
நிலவுக்குப் போதல்' மற்றொரு கவிதை. இதிலிருந்து சில பிரயோகங்கள், உங்கள் உணர்வலைகளுக்காக.
"திசையெலாம் ஒடுங்கும்
மனிதர்களின் மூச்சை
சுமந்த வலியால்
உழலும் காற்று வெளியில்
இன்னும் கிடந்து காயும்."
அவதானியுங்கள். "காற்று வெளியில் இன்னும் கிடந்து காயும்.' இது புதுப் புனைவன்றோ!
இந்த உவமையைப் பாருங்கள்,
"திருவிழா முடிந்த
கோயில் தெருவீதி போல
என் நிலவு முற்றம் கிடக்கும்"
மற்றொரு உவமை ! "பூமிக்கு பாலாறு ஓடி வார்ப்பது போல பொழிகின்ற நிலவில் கனன்று. சுடர்ந்த காதல் வாழ்க்கை அந்திம காலத்தை நெருங்குகிறது"
53

Page 34
சொன்னாற்போல.
மற்றொரு உருவகம் ! "ஃப்டில் வாசித்தவனின் பேரப்பிள்ளையாகி" குறிப்பிட்ட இக்கவிதையின் பலம். அதன் Positive தன்மை தான். அதனை உடன்பாட்டுறுதி என்போம்.
பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் இயற்றிய திரைப் பாடல்களில் ஒன்று, ஆடைகட்டி வந்த நிலவோ' என்று தொடங்கும். இங்கு கவிஞர் ? பால கணேசன், "அந்தி வான் செங்கனியோ" என்கிறார்.
"கடலுள் சிதறிய
நிலவின் கனிகளுள்
செங்கனியை யாரங்கே காண்பர்?" எனவும் வினா எழுப்புகிறார். "நிலவெனும் பேடே" என்கிறார்.
"நிலமெனும் வீணை
கொண்டு
மீட்கும் பாடல் உயிரெங்கும் ஒடிக் காய்கிறதே." என்கிறார்.
இவையெல்லாம் "பரதேசம் போனவன் நிலவு" என்ற கவிதையில் இடம்பெறுகின்றன.
"அகதியின் கப்பலும் காலநதிக் கரையும்" என்ற தலைப்பில் ஒரு கவிதை. அக் கவிதை உள்ளடக்கும் தொனி வெள்ளிடைமலை. அதனையும் வாய்விட்டுப் படித்துப்பாருங்கள்.
"தாய்க்கோழியும் குஞ்சுகளும்" என்ற கவிதை கூட, "அழுகையை வெளியெங்கும் பறை" என்ற பிரகடனத்தையே உள்ளடக்குகிறது.
54

கே.எஸ். சிவகுமாரன்
ஆகவே, இக்கவிஞர் பாலகணேசன் எதிர்காலத்தில் நம்பிக்கை கொண்டு செயற்படுவார் என்பது புலனாகிறது. அவர் தேம்பினாலும், நம்பிக்கைப் பிடியைக் கைவிடவேயில்லை. இது வரவேற்கத்தக்கது.
★大女
இன்னொன்று
"அகதிக் குழந்தைகளும் சூரியனும்" என்ற கவிதையில் வருகிறது இந்த அழகிய உவமை.
"சேற்றுக் குளத்திலே கிடந்து
கும்மிருட்டுக் கலையை
மலரும் பொற்றாமரை போலும்"
"வெறி பிடித்த மனிதர்களும் தாயகப்
பயணிகளும்" என்ற கவிதை - பொருளும். பொருள் உணர்த்தும் செய்தியும், இறுக்கமாய் கட்டமைப்புக் கொண்ட கவிதையும் எளிதில் உங்கள் நுகர்வுக்குள் தொற்றிக் கொள்ளும்.
女女★
"தூங்காத இரவு" என்ற கவிதையில் வரும், "காற்றில் மந்தமாக ஒலித்த துப்பாக்கிச் சுடு குரல் வீட்டில் சாளரங்களையும் உதைத்தது" என்ற வரிகளில் உள்ள "உதைத்தது" என்ற வினைச் சொல், என்னளவில் ஒரு புதுப் பிரயோகம்.
★大★
"முற்றத்து வேம்பு" மற்றொரு அழகிய Narative Poem - கதை உருவான நிகழ்ச்சி விபரம் வாய்ந்த கவிதை என்போம். இதே மாதிரி உருக்கத்தையும். அதே நேரத்தில் நம்பிக்கையையும் வளர்க்கும் கவிதை. "இனி" யதார்த்த நிலையை உணர்த்தும் ஒரு கவிதை. "கத்தும்
956)
女女★
55

Page 35
சொன்னாற்போல.
| I |
குறும்பன்", "நாடகன்" போன்றவையும் கவனத்தை ஈர்க்கின்றன. "என்னுடைய சைக்கிள்" என்ற கவிதையில், "வழியோட்ட ஞாபகங்கள், குழி நண்டாகப் புறப்படுகின்றன" என்ற பிரயோகமும் என்னைக் கவர்ந்தது. "ரயில் பயணம்" மற்றொரு முக்கிய வெளிப்பாடு.
"நிலச்சுரங்க ஓவியங்கள்" இறுக்கமாகத் தரித்த கவிதைப் படி மங்கள்.
கவிஞர் பாலகணேசனின் அடிப்படைச் சிந்தனை என்னளவில் விரும்பத்தக்கதாய் அமைகிறது. அதாவது, நம்பிக்கை இழக்காமை வரவேற்கத்தக்கது.
"இருள் வெளி" என்ற கவிதையில், "வர்ணங்கள் கரைந்த வெளியாயினும் கனவோடு குழந்தைகளின் உள்ளம்" என்கிறார்.
கனவுகளே நிஜமாகும் என்பது எல்லாச் சந்தர்ப்பங்களிலும் சாத்தியமாகா விட்டாலும், கனவுகள், கற்பனைகள், வாழ்வு முன்னேற்றத்துக்கு முதற்படி என்பது பெரும்பாலும் உண்மையே.
இந்த நூல் ஒரு 'காலச்சுவடு பதிப்பக வெளியீடு - பாராட்டு தல்கள்!
- தினக்குரல் : 03.011.2004
女女★
56

கே. செல்வராஜன் என்றொரு கவிஞன்
கே.செல்வராஜன் எழுதிய "என் நினைவுகளும் நிஜங்களும்" என்ற நூலின் அறிமுகம் கடந்த 211104 இல் கொழும்பில் 'கலைத் திருவிழா 2004' என்ற பல்தரப்பட்ட நிகழ்ச்சிகள் மத்தியில் அரங்கேறியது. மருதானை எல்பின்ஸ்டன் கலையரங்கில் இது இடம்பெற்றது.
இந்தக் கதம்ப நிகழ்ச்சியில் நயவுரை நிகழ்த்துமாறு நூலாசிரியர் என்னைக் கேட்டிருந்தார். இவரைப் பற்றியோ. இவர் திறனாற்றல்களைப் பற்றியோ. இவரின் நாடகமேடை வெற்றிகளையோ நான் அதிகம் அறிந்திருக்கவில்லை. இவருடைய நாடகம் ஒன்றைப் பல வருடங் களுக்கு முன் பார்த்த ஞாபகம். அது திருப்தியளிக்கவில்லை என்பது மட்டும் லேசாக நினைவுண்டு.
அதனை நினைவூட்டுமுகமாக அன்பர் தமது இந்த நூலின் 84 ஆம் பக்கத்தில் தந்திருக்கிறார். "பூகம்பம்" என்ற இவருடைய நாடகம், "கே.எஸ். சிவகுமாரன் போன்றோரின் கடுமையான விமர்சனத்துக் குள்ளாகி, நாடக விழாவில் கடைசி இடத்துக்குத் தள்ளப்பட்டதுக்கு அதில் காணப்பட்ட அரசியல் சர்ச்சை ஒரு காரணமாக இருக்கலாம்" என்று அன்பர் எழுதியிருந்தார்.
அது ஒரு புறமிருக்க, இந்த நூல் ஈழத்து நாடக வரலாற்றில் முக்கியமான சுவாரஸ்யமான, பயனுள்ள நூல் என்பதில் எவ்வித ஐயமும் வேண்டாம். இது எப்படி? யாழ்ப்பாணம், வவுனியா, மன்னார், மலை நாடு, திருகோணமலை, மட்டக்களப்பு மட்டுமல்ல கொழும்பும் தமிழ் நாடகத் துறைக்குப் பாராட்டும்படியான பங்களிப்பைச் செய்திருக் கிறது என்ற வரலாற்று உண்மையை முன்பின்னறிந்திராத புதிய தகவல்களுடன் நூலாசிரியர் தந்திருக்கிறார். சுய விபரங்களைக் கூடப்
57

Page 36
சொன்னாற்போல.
பொதுவான நாடகத்துறை விபரங்களின் பின்னணியில் அவர் தருவது. இத்தகைய எழுத்துக்கு ஒரு முன்மாதிரி
1960 களிலிருந்து 1980 களின் பிற்கூறுகள் வரை கொழும்பு நாடகங்கள் பற்றி நான் அடிக்கடி எனது "மனத்திரை" சித்திரதர்ஸனி." "நாற்சாரம்" போன்ற பத்திகளில் எழுதி வந்திருக்கிறேன். அந்நாட்களில் தீவிரமாக நாடகத்துறையில் ஈடுபட்டு வந்த ரொபர்ட் ஜெயசீலன், மாத்தளை கார்த்திகேசு, அந்தனி ஜிவா, கலைச்செல்வன், தாஸிஸியஸ், ராஜபாண்டியன். சிதம்பரம், ஜெயந்தி, மணிமேகலை, ந. சுந்தரலிங்கம், இ. சிவாநந்தன். கே. பாலேந்திரா, எஸ். பொன்னுத்துரை, சிதில்லைநாதன் போன்றோரறிவர். உண்மையிலேயே நாடகத்திறனாய்வை உரிய முறையில் எனது பத்திகள் மூலம் தமிழில் அறிமுகப்படுத்தியவர்களுள் நான் ஒரு முன்னோடி எனக் கூறும்பொழுது அது சுய தம்பட்டமல்ல. தமிழில் மாத்திரமல்ல, ஆங்கிலத்திலும் அதனைச் செய்து வந்துள்ளேன் என்பது வரலாற்றுப் பதிவுக்குரியது. கே. செல்வராஜன் போன்ற இளவல்கள் இது பற்றியறிந்திராதது ஒன்றும் வியப்பல்ல. 'தேடுதல்' முயற்சிகள் நம்மிடையே மிகக் குறைவு.
1980 இல், "பூரணி" என்ற சிற்றேட்டில் "கொழும்பில் தமிழ் நாடகம் என்றதொரு நீண்ட கட்டுரையை எழுதியுள்ளேன். நாடகத்துறை விற்பன்னர்களாகக் கருதப்படும் பேராசிரியர்கள் கா.சிவத்தம்பி, மெளனகுரு போன்றோர் கொழும்பு நாடகங்களைப் புறக்கணித்து வந்தமையைப் பின்னர் உணர்ந்து வருந்தியிருக்கின்றனர்.
ஆக்க இலக்கியப் படைப்பாளியும் திறனாய்வு சார்ந்த பத்திகளை எழுதுபவருமான தெளிவத்தை ஜோசப், மேற்சொன்ன பேராசிரியர்களின் கூற்றுக்களைத் தந்திருப்பது இங்கு குறிப்பிடத்தகுந்தது.
இந்த நூலின் 27A பக்கத்தில் சிவத்தம்பி இவ்வாறு தெரிவித்ததாக ஜோசப் குறிப்பிடுகிறார்.
"கொழும்பை மையமாகக் கொண்ட ஒரு பிரதேசமாக ஜிந்துப்
பிட்டி திகழ்ந்தது. அந்த பகுதியில் வாழ்ந்த தமிழ் மற்றும் தமிழ் பேசும் இளைஞர்களுக்கு நாடகம் ஒரு மிக முக்கிய கலை வடிமாயிற்று.
58

கே.எஸ். சிவகுமாரன்
தங்களின் திறமைகளைத் தங்களுக்குத் தாமேயும் தங்கள் நண்பர்களுக்கும் நிரூபிப்பதற்கான ஒரு கலை வடிவமாக நாடகம் அமைந்தது. ஈழத் தமிழ் நாடக வளர்ச்சியில் இது ஒரு தனித்த நீரோட்டமாகவே இருந்து வந்துள்ளது. சிங்கள நாடக உலகோடு கணிசமான ஊடாட்டம் இருந்து வந்துள்ளது. தமிழ்க் கூத்து மரபின் ஆழ அகலங்களை இது பயன்படுத்தவில்லை. அத்துடன், வடக்கு, கிழக்கின் பிரச்சினைகளோடும் ஆற்றுகை வெளிப்பாடுகளுடனும் இணையவில்லை. துரதிஷ்டவசமாக இந்த வரலாறு இன்னும் எழுதப்படவில்லை. குறிப்பாக, இந்த நாடக அரங்கில் தொழில்முறை நடிக, நடிகைகளாக இருந்த கலைஞர்களின் ஆற்றல், பணி பற்றிய எவ்விதப் பதிவும் இல்லாமலிருப்பது மன வருத்தத்துக்குரிய ஒன்றாகும்." இது பேராசிரியர் கா.சிவத்தம்பியின் கூற்று.
தெளிவத்தை ஜோசப், பேராசிரியர் மெளனகுருவின் கூற்றையும் தருகிறார். அது வருமாறு :
"கொழும்பை மையமாகக் கொண்டு தனக்கென ஒரு புதுப் போக்குடன் வளர்ந்து வரும் இந்த நாடகத்துறை அனுபவஸ்தர்கள் தங்கள் அனுபவங்களை நூலாக்கித் தர வேண்டும். அது பயனுள்ள பணியாகும்."
இனி, நண்பர் கே. செல்வராஜன் இந்தப் பயனுள்ள நூலை ஏன் எழுதினார். இதன் உள்ளடக்கம் என்ன என்பதை நூலாசிரியர் வாயிலாகவே நாம் அறிந்து கொள்வோம். 198 பக்கங்களைக் கொண்ட இந்நூலிலே 155 ஆம் பக்கத்தில் தனது பரோபகாரச் சிந்தனையை வெளிப்படுத்துகிறார்.
இதோ, எம். செல்வராஜன் - ". எனதும் என்னோடிணைந்த அல்லது நான் வாழ்கின்ற காலத்தில் வாழ்ந்த - வாழ்கின்ற கலைஞர்களினதும் தகவல்களைத் தெரிவித்திருப்பீர்கள். நான் இதில் இவர்களைப் பற்றிய ஒரு சில தகவல்களைக் கோடிட்டுக் காட்ட
59

Page 37
சொன்னாற்போல.
வேண்டிய காரணம், அவசியம் என்னவென்று நீங்கள் நினைக்கலாம். காரணம், அவசியம் மட்டுமல்ல, இவர்களைப் பற்றி எழுத வேண்டியது எனது தார்மீகப் பொறுப்பென்று நான் கருதுகின்றேன்"
"கொழும்பைக் களமாகக் கொண்டு நாடகவுலகில் வலம்வரும் இவர்கள் கலைக்காகத் தம் வாழ்க்கையை அர்ப்பணித்தவர்கள். தனக் குக் கிடைத்த பல சந்தர்ப்பங்களை வெளிச்சத்தில் தொலைத்துவிட்டு நாடகமேடை இருட்டில் தேடிக் கொண்டு வறுமையெனும் நெருப் பாற்றில் நீந்தும் நித்திய போராளிகள், தம் வாழ்வில் விடிவெள்ளியை எதிர்பார்த்து ஏங்கிக் கொண்டிருப்பவர்கள், அதற்காகப் பல அரசியல் சாயம் பூசிக்கொண்டவர்கள், பூசிய சாயம் காயும் முன்னே புறக்கணிக்கப் பட்டவர்கள்."
செல்வராஜன் மேலும் கூறுகிறார்.
"இவர்களது தியாகங்களும், திறமைகளும் உங்கள் மனதில் ஒரு சிறிய கடுகளவாவது புகுந்து - உங்களை இவர்களுக்காக ஆதங்கப்பட வைத்தால் போதும். அதுவே எனது இப்படைப்பின் சாதனையெனப் பூரிப்படைவேன்."
நூலாசிரியரின் நோக்கம் நமக்குத் தெரிந்து விடுகிறது. இவ்வாறு பார்த்தால், இந்த நூலாசிரியர் ஒர் உண்மைக் கலைஞன் என்பது தெரிய வரும். இதனை ஹாசிம் உமர், உடுவை எஸ். தில்லைநடராஜா, ரேலங்கி செல்வராஜா, அ.சசாங்க சர்மா, ஏ.சி.எம். ஹo சைன் பாரூக், பூரீதர் பிச்சையப்பா, தெளிவத்தை ஜோசப், கலைச்செல்வன், எஸ். கந்தையா போன்ற நாடகத்துறைப் பிரமுகர்கள் தமது அபிப்பிராயங்களை வெளிப் படையாகவே உறுதிப்படுத்தியுள்ளார்.
இந்நூலிலே பல பொருத்தமான மேற்கோள்கள் தரப்படுகின்றன. இவற்றுள் சுவாமி விவேகானந்தர், கண்ணதாசன், வைரமுத்து, மு. மேத்தா, வாலி, எஸ். டி. சிவநாயகம், சில்லையூர் செல்வராஜன், ஆர். சிவகுருநாதன், டொமினிக் ஜிவா, எஸ். ஏ. அழகேசன், ஏ.எஸ்.எம். நவாஸ் ஆகியோரின் கூற்றுகளும் அடங்கும்.
60

கே.எஸ். சிவகுமாரன்
இலக்கிய ரசனையுடன் இந்த நூலாசிரியர் ஒரு நாடகாசிரியர், நெறியாளர், நடிகர், கவிஞர் என்பதனை இவர் வாழ்க்கையனுபவ வெளிப்பாடுகள் மூலம் அறிந்து கொள்கிறோம்.
வாசகர்களுடன் நேரிலேயே பேசுவதுபோல, சரளமான உரை யாடல் போன்று, தனது இளமைக் காலம் தொடக்கம் இற்றை வரையிலுமான நாடகத்துறை அனுபவங்களையும் தனது வாழ்வின் சவால்களையும் ஒளிவுமறைவின்றி ஒரு திறந்த புத்தகமாக கே. செல்வராஜன் எழுதியிருப்பது சுவாரஸ்யமான ஒரு அத்தியாவசியப் பதிவு
இந்த நூலை நான் படித்துப் பார்த்த பின்னர்தான், நண்பர் கே.செல்வராஜன் எத்தகையதொரு நல்லிதயம் கொண்ட பண்பானவர் என்பதனையும் அறிந்து கொண்டேன்.
தன்னடக்கம் காரணமாக நம்மில் சிலர், தம்மைப் பற்றிய விபரங்களைத் தன்னும் பதிவு செய்வதில்லை. இதனால் பிற்கால ஆய்வாளர்களுக்கு உண்மை நிலைமை தெரியாமற் போய்விடுகிறது.
நண்பர் டொமினிக் ஜிவா எதிர்கால நலன் கருதி, தமது சுய அனுபவங்களைத் தொகுத்துப் பதிவு செய்வது போலவே, கே. செல்வராஜனும் இப்புத்தகத்தில் செய்துள்ளார்.
இது போலவே, கூச்சமின்றி நானும் எனது பழைய முயற்சிகளைப் பதிவு செய்து "சொன்னாற்போல" பத்தியிலே எழுதி வருகிறேன்.
இந்த நூலில் பல அம்சங்கள் எனக்குப் பிடித்தன. அவற்றுள் ஒன்று ஆசிரியர் தமது குறைபாடுகளையும் வெற்றி முயற்சிகளையும் ஒருங்கே தெரிவிப்பதாகும். சுய விமர்சனப் பாங்கில் அவர் எழுதுவது அவருடைய நேர்மையைக் காட்டுகிறது. அது மாத்திரமல்ல, அவர் திட நம்பிக்கை கொண்டவராக இருப்பதும் பாராட்டத்தக்கது.
2004 நொவம்பரில் இடம்பெற்ற விழாவிலே, இவர் நூலை வெளியிட்டதுடன், கலை நிகழ்வுகளையும் சிறப்பு விருதுகளையும் வழங்கிக் கலைத்திருவிழா - 2004 ஐ நடத்திக் காட்டியிருக்கிறார்.
61

Page 38
சொன்னாற்போல.
சுவாமி விவேகானந்தரின் கூற்றொன்றை அவர் எடுத்துக் காட்டி யிருக்கிறார். இந்தக் கூற்று எனக்கும் பிடித்தது. அதனை உங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.
"நீ எதை நினைக்கிறாயோ அதுவாக நீ ஆகிவிடுகிறாய். நீ பலவீனமானவன் என்று நினைத்தால் உன் பலம் குறைந்துவிடும். நீ பலமுள்ளவன் என்று நினைத்தால் பலமுள்ளவனாகி விடுவாய், பிறர் என்ன வேண்டுமானாலும் சொல்லிக் கொண்டே போகட்டும். உன்னுடைய நம்பிக்கையில் உறுதியாய் இரு. இந்த உலகம் உன் காலடியில் வந்து விழும். வேதாந்தம் மனிதனுக்குக் கற்பிக்கும் முதற் பாடம் தன்னம்பிக்கை தான்!"
சுவாமி விவேகானந்தர் கூறியிருப்பது போல, தன்னம்பிக்கையுடன் இருக்கும்படி செல்வராஜனை வாழ்த்துகின்றேன்.
- தினக்குரல் : 24.11.2004
62

சில வெளியீடுகள் - சில குறிப்புகள்
நமது நாட்டில் மும்மொழிகளிலும் வெளிவந்து கொண்டிருக்கும் நூல்கள். இலக்கிய ஏடுகள், சஞ்சிகைகளின் தொகை ஏராளம், ஏராளம். இவற்றைத் தட்டிப் பார்க்கவே நேரம் கிடைக்காத வேளையில், இவை பற்றி ஆற அமர இருந்து விரிவான மதிப்புரைகளை எழுதுவது எங்ங்னம்? நான் பிரமித்துப் போய் இருக்கிறேன். இவை பற்றி வாசகர்கள் கவனத்திற்குக் கொண்டு வரவேண்டும் என்பது எனது ஆசை. ஒரு சிலவற்றிற்காகுதல் மதிப்புரை எழுதிவிட வேண்டும் என்றாலும், சிரமமாயிருக்கிறது. முக்கியமான படைப்புகளைக் கூட அறிமுக ரீதியில் கணித்துக் குறிப்பு எழுதுவது தான் தற்பொழுது சாத்தியமானது. தவிரவும், நாளிதழ்கள், வார இதழ்களில் எல்லாம் குறிப்புரைகளும், மதிப்புரை களும், ஆய்வுரைகளும், திறனாய்வுகளும் எழுத இப்பொழுது பல இளம் பரம்பரையினர் இருக்கிறார்கள். இவர்கள் பார்வை எமக்கு இப்பொழுது தேவையாக இருக்கிறது. என் போன்ற பழைய பரம் பரையினரின் அவதானிப்புகளுக்கு இப்பொழுது அதிக வரவேற்பில்லை என்பதை நான் அறிவேன். சொன்னாற்போல, 'ஒப்ஸ்வேஷன்' என்ற ஆங்கிலப் பதத்துக்கு அவதானங்கள்' என்று பிழையாகவே சிலர் மொழி மாற்றஞ் செய்கின்றனர். அவதானிப்புத்தான் சரியானது. அவதானம் என்றால் "Caution' எனப் பொருள்படுமல்லவா? அவதானியுங்கள் (ஒப்ஸேர்வ்) சரியா?
冰冰冰
அண்மையில் நான் படித்துப் பயன் பெற்ற நூல்களில் அநுவை நாகராஜனின் கருத்தும் எழுத்தும்' நீர்வை பொன்னையனின் "நாம் ஏன் எழுதுகின்றோம்?" கவிஞர் டி.எம்.ஷாஹoல் ஹமீதின் "கீத
63

Page 39
சொன்னாற்போல.
போதனாரஞ்சிதம்", "கலையமுதம்" என்ற பீ.எச் அப்துல் ஹமீத்தின் பாராட்டு விழா மலர், நாகபூஷணி கருப்பையாவின் "நெற்றிக் கண்" செங்கை ஆழியானின் "பெரியக்கா" ஆகியனவும் அடங்கும். இவற்றை விட வேறு பல நூல்களும் வந்து சேர்ந்துள்ளன. அவை பற்றிப் பின்னர் பார்ப்போம்.
水 米水
செங்கை ஆழியான் என்ற கலாநிதி க. குணராசா இன்று மிகமிக முக்கியமான ஈழத்து எழுத்தாளர். அவர் ஈட்டிய, ஈட்டி வரும் சாதனைகள் பல. இங்கு அவருடைய மூத்த சகோதரியின் மறைவு குறித்து அவர் பிரசுரித்த நினைவஞ்சலி பற்றியே ஓரிரு வார்த்தைகள் எழுதுகிறேன்.
சரிதைகள், சுயசரிதைகள் இன்று மிகவும் இலகுவான முறையில், வாசகருடன் நேரடியாகப் பேசுவது போன்ற நடையில் எழுதப்பட்டு வருவதை நீங்கள் அவதானித்திருப்பீர்கள். உதாரணமாக, சொன்னாற் போல' என்ற எனது பத்தியில் என்னைப் பற்றி நானே எழுதும் அதே வேளையில் மறந்துபோன தொடர்புடைய செய்திகளையும் நீங்கள் அறியும் வண்ணம் நான் எழுதுவதைக் கண்டுபிடித்திருப்பீர்கள்.
"பெரியக்கா"வும் பல விபரங்களை இத்தகைய நடையில் தருகிறது. காலப் போக்கிற்கேற்ப எழுத்தாளர்களும், தமது எழுத்து நடையை விரிவுபடுத்திக்கொள்கிறார்கள்.
米米米
நன்கறியப்பட்ட ஒலி / ஒளிபரப்பாளர் நாகபூஷணி கருப்பையா ஒரு கவிஞரும் கூட யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் தமிழ் சிறப்புப் பட்டதாரியான இவரின் கவிதைத் தொகுப்பே நெற்றி கண்'
இவரது கவிதைகளுக்கு நாம் வருமுன் எனக்கு உடன்பாடான ஒரு கருத்தை ஆற்றல்மிகு எழுத்தாளரும், கவிஞருமான வைத்திய கலாநிதி எஸ். நஜிமுதீன் எழுதியிருப்பதைத் தர விரும்புகிறேன். அவர் கூற்று இதுதான்
64

கே.எஸ். சிவகுமாரன்
"தான் கண்டவற்றை, தான் உணர்ந்தவற்றை, தன்னைப் பாதித்த வற்றைத் தன்னை மகிழ்வித்தவற்றை, தனது ஏமாற்றங்களை, தனது மாற்றங்களை, என்று எல்லாவற்றையும் தாமாகவே, தன்னிலை என்று பிறருக்குச் சொல்லும் போது, மனது மிகவும் திருப்தியுறுகிறது. அந்த உணர்வு வெளிப்பாடு சுய பாஷையில், சுய நடையில், சகல வித மழலைத் தன்மையுடனும் தான் தொடங்க வேண்டும். இதற்கு எவ்வித இலக்கண, இலக்கிய வரையறைகளும் இருக்கத் தேவையில்லை என்பதே எனது கணிப்பு"
பேராதனைப் பல்கலைக்கழகத்திலும் பயின்ற நாகபூஷணி, என்.எஸ்.எம். ராமையா தொடர்பாக ஆய்வை மேற்கொண்டார் எனப் பல்கலைக்கழகத் திறனாய்வாளரும், பத்தி எழுத்தாளருமான கலாநிதி துரை மனோகரன் தெரிவிக்கின்றார். இவர் "ஞானம்" இதழில் எழுதிவரும் பத்தியை நான் தவறாமல் வாசித்துப் பல தகவல்களைப் பெற்றுக் கொள்கின்றேன். W
"நெற்றிக் கண் "ணை வெளியிட்டிருக்கும் புன்னியாமீனும் நன்கறியப்பட்ட ஒரு நூலாசிரியரும், எழுத்தாளருமாவார். அவர் இளம் எழுத்தாளர்களை இனங்கண்டு, ஊக்கமளித்து, அவர்களுடைய நூல்களைப் பிரசுரித்து வருபவர். டி.எஸ். ஜவ்பர்கான், கவிதையில் நாகபூஷணியை வாழ்த்தியிருப்பதும் படிப்பதற்குச் சுவையாக இருக்கிறது. கவிஞர் பற்றிய தகவல்களைக் கலைமகள் ஹிதாயா ரிஸ்வி தந்திருக் கிறார்.
நாகபூஷணியின் அடக்கத்தையும், நம்பிக்கையையும், அவருடைய 'என்னுரையிலிருந்து நாம் அறிந்து கொள்ளலாம்.
"அரிச்சுவடி தொட்ட காலம் முதல் அறிவிப்பாளரான இற்றை வரை ஆற்றிய சாதனை ஏதுமில்லை. ஆயினும். ஆங்காங்கே சலசலக்கும் எதிர்ப்பொலிகள் ஆக்கிடலாம் என்னையோர் அக்கினிக் குஞ்சாய்."
இவருடைய மற்றொரு கவிதையும் எனக்குப் பிடித்தது. "ஏனில்லை." என்ற கவிதையைப் பாருங்கள்.
65

Page 40
சொன்னாற்போல.
"பிழையில்லை பிழையில்லை புதியன புகுதலில் பிழையில்லை சரியில்லை சரியில்லை களைகளை விதைப்பது சரியில்லை விலை தந்தே நாம் பெறுவதற்கு புகழொன்றும் ஒரு பொருளில்லை தலையெடுத்தொருவன் நிமிர்ந்துவிட்டால் தடைகளவனுக்குப் பொருட்டில்லை இலை மறைகாயென்றிருந்தாலும் இருக்கும் திறமைக்கும் திரையில்லை வெல்லும் துணிவு இருக்கையிலே வெற்றிக்கு வாழ்வில் வழியாயில்ைைல?"
இத்தொகுப்பில் 40 கவிதைகள் உள்ளன. பெரும்பாலானவை
நல்லவை.
水冰米
லண்டனில் ஜூலை 31 இல் உலகத் தமிழ் அறிவிப்பாளர், நிகழ்ச்சித் தொகுப்பாளர். பி.எச். அப்துல் ஹமீத்தைப் பாராட்டும் விழா மலர் எனக்கும் கிடைத்தது.
எஸ். கே. ராஜன் - சுந்தரம், சிறிஸ்கந்தராஜா ஆகியோர் இதனைத் தொகுத்தளித்துள்ளனர். 194 பக்கங்கள், அழகிய தயாரிப்பு வண்ணத்தில் படங்கள், உலகத் தமிழர்கள் அறிந்த பல முக்கியத்துவமானவர்களின் வாழ்த்துச் செய்திகள் ஆகியன அடங்கியுள்ளன. வாழ்த்துச் செய்தி களுள் ஒன்று பேராசிரியர் கா. சிவத்தம்பி எழுதியது. "தமிழின் முதல் நிகழ்ச்சி அளிக்கையாளர் பீ.எச். அப்துல் ஹமீத்." என்கிறார் அவர். பீ.எச். பற்றிய உலகளாவிய மதிப்பீடுகளையறிந்து கொள்ள இந்த மலர் உதவுகிறது. "வானின் ஒலி எல்லாம் வானொலி ஆகுமா? வானொலி எல்லாமே வாய்மை ஒலிகளா?" என்று கேள்விகளை எழுப்பி, சுதுமலை கந்தையா இராஜமனோகரன் விளக்கக் கட்டுரை ஒன்றை எழுதியுள்ளார். பிரயோசனமான தகவல்கள்.
66

கே.எஸ். சிவகுமாரன்
அப்துல் ஹமீத்தின் மின்னியக்க ஊடகத்தினூடான பங்களிப்பு களின் தீவிர அபிமானி நான். அவருடைய பண்பட்ட மெருகு படுத்தப் பட்ட குரல் வளம், உவகையான முறையில் அவர் உள்ளக் கிடக்கையை வெளிப்படுத்தும் பாங்கு, தகுந்த முறையில் சொற்களைப் பிரித்தும், இணைத்தும், உச்சரிக்கும் முறை, பரந்த அறிவு, தமிழ் மொழியைத் தனது தேவைக்கேற்ப வளைத்து எளிதாகச் சொற்களை தோற்றுவித்தல் போன்ற காரணங்களுக்காக அப்துல் ஹமீது இலங்கை பெற்ற பாக்கியம் என நான் கருதுகிறேன்.
3: 3ද 3:
ஆன்மிகம் - சமயம், தொல்லியல், மானுடவியல், வரலாறும் பண் பாடும். மொழி, கலை, இலக்கியம், நெஞ்சில் நிறைந்த பெருந்தகைகள், செவ்விகள் / அரங்க நிகழ்வுக் கண்ணோட்டங்கள், திறனாய்வுகள் ஆகிய 10 தலைப்புகளில் பெறுமதி மிக்க அரிய கட்டுரைகளைச் செம்மையான தமிழ் நடையில் தந்துள்ளார் அநு.வை. நாகராஜன், இவருடைய பங்களிப்புகள் இன்னமும் உரிய முறையில் பல்கலைக்கழக மட்டத் திறனாய்வாளர்களால் மதிப்பிடப்படவில்லை. கலாநிதி துரை. மனோகரனைத் தவிர, பேராதனைப் பல்கலைகழகத்தைச் சேர்ந்த ஏனைய பேராசிரியர்கள் பத்திரிகைகளைக் கூடப் படிப்பதாகத் தெரியவில்லை. தமிழ்நாட்டில், "காலச்சுவடு" போன்ற சிற்றேட்டு வட்டாரங்களில் திறனாய்வாளர் எனப் பெயர் பெற்றோர், ஈழத்து எழுத்தாளர்களின் படைப்புகளைத் தொட்டும் பார்க்க மாட்டார்கள் போலத் தெரிகிறது.
ck kick
மற்றுமொரு சிறந்த ஆக்க இலக்கியக் கர்த்தாவான நீர்வை பொன்னையனும் இந்த 'விமர்சகர்களினால் புறக்கணிக்கப்பட்ட உண்மையை, அவர் எழுதியுள்ள "நாம் ஏன் எழுதுகின்றோம்" என்ற நூலிலிருந்து நாம் அறிந்து கொள்ள முடிகிறது. தன்னடக்கமும், பணிவும் கொண்ட கூர்மையான சிந்தனையாளரும், செயல் வீரருமான நீர்வை பொன்னையன், உருவமும், உள்ளடக்கமும் இணைந்த சிறுகதைகளை
67

Page 41
சொன்னாற்போல.
எழுதியிருப்பதுடன், நல்ல கட்டுரையாளர் என்பதையும் நிரூபித்திருக் கிறார்.
பாட்டாளி வர்க்க இலக்கியம் படைத்து இவ்வுலகை மாற்றியமைக்க முற்படும் இலட்சியவாதியான நீர்வை பொன்னையன் இளகிய மனசு கொண்டவர். தார்மிக ஆத்திரத்தை வெளிப்படுத்துபவர். மீரா பதிப்பக வெளியீடான இவருடைய இக்கட்டுரைத் தொகுப்பு பல முறைகளில் இவரைப் பற்றியும், இடதுசாரி இலக்கியம் பற்றியும் நாம் தெளிவாக அறிந்து கொள்ள உதவுகிறது.
冰米米
'கீதபோதனாரஞ்சிதம் என்ற பெயரிலே ஒரு சிறு கவிதை நூல் 1972 ஆம் ஆண்டில் வெளியாகியது. இக்கவிதைகளைப் படைத்தவர் டி.எம்.ஷாஹoல் ஹமீது என்ற பள்ளிக்கூட அதிபராவர். அரபுப் பதங்களையும், உள்ளடக்கிய 18 கவிதைகள் இதில் அடங்கியுள்ளன.
"மக்களை உணர்ச்சியூட்டி உயிர்ப்பிக்க அடிகோலும் ஓர் உன்னத சாதனமாகக் கவிதையைக் கணிக்கலாம்" என்கிறார் இஸ்லாமிய / தமிழ் அறிஞர் எஸ். எம். கமாலுத்தீன். இந்நூலின் அணிந்துரையில் இஸ்லாமியர் பற்றிய பல தகவல்களை நாம் அறிந்து கொள்கிறோம்.
வெண்பாக்கள் கொண்ட இத்தொகுதியைக் கவிஞரின் மகன்களுள் ஒருவரான வைத்தியர் எச்.எம்.மஹற்ரூப் கண்டியிலிருந்து எமக்கு அனுப்பி வைத்தார்.
12/1 வீரக்கோன் கார்டின்ஸ், கண்டி என்ற முகவரியிலிருந்து இத்தொகுதியைப் பெற்றுக் கொள்ளலாம்.
நான் முன்னரே கூறியிருப்பது போன்று, விரிவாக அனைத்து நூல்களையும் பற்றிய மதிப் புரைகளை இப் பத்தியில் எழுத முடியாதிருக்கிறது.
- தினக்குரல் 07-10-2004 女
68

சிரிப்பென்று ஒரு மருந்து
நான் அதிகம் பிரயாணஞ் செய்பவன் அல்லன். ஆனால், நெருங்கிய நண்பர்கள் வாஞ்சையுடன் "உலகம் சுற்றும் வாலிபன்" என்று என்னைக் கேலி செய்வதுண்டு. உண்மையில் அவர்கள் பரிகாசத்தை நான் உள்ளூர ரசித்துக் கொள்வேன் - ஏனென்றால், 67 வயதுடைய என்னை வாலிபன் என்கிறார்களே அதுக்குத்தான்.
சொன்னாற்போல, அடுத்த விஷயத்துக்கு நாம் செல்லுமுன், இடைக்கிடையே, அவ்வப்போது எனது பிரயாண அனுபவங்களில் சுவையானவை என்று நான் கருதும் சிலவற்றை உங்களுடன் பகிர்ந்து கொள்ள ஆசை, ஏன் இந்த ஆசையோ? நாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்' என்ற நல்ல மனப்பான்மை தான். தவிரவும் புதிய தகவல்களைத் தர நான் முயலுவேன் என்பது எனது உத்தரவாதம்.
இந்தியா (பல முக்கிய மாநகரங்கள்), மாலை தீவு (மாலே, ஓமான் (மஸ்கட் சலேலா, டூபாய், அமெரிக்கா (சின்சினாட்டி, சிசாக்கோ), இவை
மாத்திரமே நான் சென்ற இடங்கள். பிறகு (பேந்து பார்த்துக் கொள்வோம். 米米冰
நமது எழுத்தாளர்கள் மத்தியில் உயர்தர நகைச்சுவை உணர்வு சிறிது வற்றிவிட்டது போலத் தெரிகிறது. வாழ்க்கைக் கஷ்டங்கள், போரனுபவங்கள் போன்ற காரணங்களை நாம் காட்டலாந்தான்.
"சிரித்திரன்" சிவஞான சுந்தரம். எஸ்.டி.சிவநாயகம், டி. பாக்கிய நாயகம் போன்ற மறைந்தவர்கள் நினைவுக்கு வருகிறார்கள். மாஸ்ட்டர் சிவலிங்கம், செ. குணரத்தினம், குணநாதன், இன்னும் சில நண்பர்கள் ஆங்காங்கே நகைச்சுவையாகவும் எழுதி வருகிறார்கள் தான்.
69

Page 42
சொன்னாற்போல.
என்றாலும் இடுக்கண் வருங்கால் நகுக' என்பதை நாம் அன்றாடப் புழக்கத்தில் கொண்டுவரத் தயங்கி விடுகிறோம்.
கல்கி ரா.கிருஷ்ணமூர்த்தி, புதுமைப் பித்தன் போன்ற தமிழ் நாட்டு எழுத்தாளர்களிடம் இயல்பாகவே நகைச்சுவையாக எழுதும் பாங்கு காணப்படுவதை அவதானிப்பீர்கள். நம்மவரில் சிலர் பேசும் பொழுது (குறிப்பாக வசையுரை கலந்த அங்கதமாக நகைச்சுவை ததும்பப் பேசுவார்கள். மேல்நாட்டுக் கவிஞர்களுள் அலெக்ஸாண்டர் போப் அத்தகையவர்களுள் ஒருவர். சி. சிவசேகரம் அப்படித் தான் சில வேளைகளில் பேசுவார். மறைந்த நாடகாசிரியர், வானொலி நாடக மேதை. ஒவியர், எழுத்தாளர், "சானா"வை (சண்முகநாதன்) நாம் மறந்துவிட முடியுமோ? மறைந்த உன்னதக் கவிஞன் மஹாகவி'யின் குறும்பாக்களில் நகைச்சுவை ததும்பி நிற்குமன்றோ?
Lost its (Qo) jushoot (Mark Twain), GurgOTT' Gaq ft (Bernard Shaw) போன்ற ஆங்கில எழுத்தாளர்கள் நம் நினைவிற்கு வருகிறார்கள்.
உமா வரதராஜனின் எழுத்துக்களை (ஆக்க இலக்கியமும் + ஏனைய பத்திகளும்) அவதானிப்புடன் படித்தால், அங்கு நகைச்சுவை ஒளிந்து கொண்டிருப்பதை உணர்ந்திருப்பீர்கள்.
யாழ்ப்பாணம், திருகோணமலை, மட்டக்களப்பு, கல்முனை, பதுளை, நாவலப்பிட்டி, கண்டி, நுவரெலியா, கொழும்பு, திக்குவல்லை, நீர்கொழும்பு, சிலாபம், புத்தளம், அனுராதபுரம் என்று பற்பல நகரங்களிலும், சுற்றுப்புறங்களிலுமிருந்து எத்தனையோ நகைச்சுவை யாளர்கள் நமது எழுத்துலகில் இருக்கக் கூடும். இவர்களை நாம் தெரிந்து கொள்ளாதது நமது குறைதான். ஆனால், அவர்களும் தம்மை வெளிப்படுத்த நம்முடன் தொடர்பு கொள்ளலாம் அல்லவா? என்னதான் இருந்தாலும். தொடர்பு' என்பது இரு வழிப் பாதையாகத்தானே இருக்க வேண்டும். என்ன சொல்கிறீர்கள்?
கொழும்பைப் பொறுத்தமட்டில் நகைச்சுவை வேந்து' என்ற அடைமொழி கொண்ட திருக்குறள் எடுத்தியம்பாளர் இ. சிறிஸ்கந்தராசா இருப்பதை நாம் அறிவோம். இவரை நான் முதலில் மாலைதீவு
70

கே.எஸ். சிவகுமாரன்
தலைநகரான மாலே" யில் சந்தித்தேன். புலவர்' என்று செல்லமாக அழைக்கப்பட்ட இவரை, அங்கு வசித்த இலங்கைத் தமிழர் நன்கு அறிவர். மிகவும் பிரபல்யமானவர்.
சொன்னாற்போல, மாலேயில் உள்ள மஜீதியா பாடசாலையில் உயர் வகுப்பு மாணவர்களுக்காக லண்டன் பரீட்சைக்கான ஆங்கில ! ஆங்கில இலக்கியப் பாடங்களை நான் சொல்லிக் கொடுத்தேன். இது 1990 களில் சாத்தியமானது. வரலாற்றறிஞர் கே. ரகுபதி, தலைசிறந்த நடிகரும் ஆங்கில ஆசிரியருமான முத்துலிங்கம் போன்றவர்களும் அச்சமயம் மாலேயில் பணிபுரிந்தார்கள்.
இந்த சிறிஸ்கந்தராசா ஒரு பெரிய நகைச்சுவைப் பேர்வழி. எப்பொழுதுமே அசிரத்தையுள்ள (Sombre) முகத்தைக் காட்டி நிற்பார். அத்தி பூத்தாற்போல சிறிது புன்னகையைச் சிந்துவார். ஆனால், எழுத்திலோ நல்ல நகைச்சுவையை நுகரும் பாங்கு தென்படும்.
இவர் 'சும்மா' இருக்கவேமாட்டார். பாருங்களேன் - ஏழு நூல்களை இதுவரை வெளியிட்டிருக்கிறார்; திருக்குறள் ஒவியத்தில் நிகழும் வர்ணஜாலங்கள். நகைச்சுவைக் கதம்பம், பஞ்சவர்ணக் கதம்பம், நகைச்சுவைப் பூங்கா, பல்சுவைக் கதம்பம், நகைச்சுவை முத்துக்கள், பல்சுவை மணிகள், இன்னும் புத்தகங்களைத் தருவாராம், நல்லது.
இ. சிறிஸ்கந்தராசா கூறுகிறார்
"இந்த நகைச்சுவைக் கதைகளைத் தொகுத்தும், எனது நடையில் எழுதிச் சில மாற்றங்கள் செய்தும், எனது கற்பனையில் உருவானவற்றை எழுதியும் பலவற்றை ரசனையுடன் சுவைபட மெருகேற்றியதும்தான் எனது முயற்சி எனலாம்"
(பல் சுவை மணிகள் - 2004)
இவருடைய பல்சுவை மணிகள்' என்ற நூலிலிருந்து ஒரு ஜோக்' "பேராசிரியர் ஒருவர் ஒரு மணிநேரம் விபரமாக வகுப்பில் பாடம் எடுத்துக் கொண்டிருந்தார். இறுதியில் சொன்னார் - மாணவர்களே மிக அழகாகவும், விளக்கமாகவும், விபரமாகவும் எல்லாம் சொல்லியி
71

Page 43
சொன்னாற்போல.
ருக்கேன். அதனால் இதில் சந்தேகம் வர்றதுக்கு வாய்ப்பு இருக்க முடியாது. இருந்தாலும், இது வரைக்கும் நடத்தின பாடத்தில் யாருக்காவது சந்தேகம் இருக்கா?" என்று கோட்டார். "எனக்கு ஒரு சந்தேகம் சார்" என்று எழுந்து நின்றான் ஒரு மாணவன். "என்ன" என்று கேட்டார் ஆசிரியர். "இதுவரைக்கும் நீங்க என்ன பாடம் சார் நடத்தினிங்க" என்று கேட்டான் மாணவன். ஆசிரியருக்கு தலை சுற்றியது.
நகைச்சுவை என்று நானே எண்ணிக் கொள்ளும் ஓர் அனுப வத்தை உங்களுடன் பகிர்ந்து கொள்ளட்டுமா?
சின்சினாட்டி அன்டர்ஸன் ஹைஸ்கூல் 'மாற்று ஆசிரியர் (Substitute Teacher) என்ற முறையில் ஒரு கணித வகுப்புப் பரீட்சை நிகழ்வை மேற்பார்வை செய்ய எனக்குப் பணிப்பு வினாத்தாள்களை மாணவரிடம் (ஒன்பதாம் வகுப்பு மாணவர்கள்) கொடுத்த பின், மாணவர்கள் மும்முரமாய் கணக்கைச் செய்து கொண்டிருந்தார்கள்.
பால் வடியும் முகத்துடன் ஓர் ஆபிரிக்க - அமெரிக்கப் பையன் வினாத்தாளைப் பார்த்தபடியே இருந்தான். அவனால் விடையைத் தரமுடியாது இருந்தது.
"What's Your Problem?" GT6, GD67.
உண்மையில் எனக்கு 'கணக்கு' என்பது அநேகமாக சுத்த சூனியம் என்ற ரகசியத்தைச் சொல்லி வைக்கிறேன்.
சிரித்த முகத்துடன் அந்தப் பையன் சொன்னான் "Mr. Siva, This Maths paper is damaging my brain" (gib5 GigoTT55 Tgit grg015 ep6061T60u உடைக்கிறது) என்றானே பார்க்கலாம். சகல மாணவர்களும் கொல்லென்று சலங்கையொலி எழுப்பினர். நானும் சேர்ந்து சிரித்துக் கொண்டேன். அது மாத்திரமல்ல. அவன் உள்ளத்தில் தோன்றியதைப் புதுப்புனைவான வெளிப்பாடாக (Expression) புலம்பியதைப் பாராட்டி னேன். இது நகைச்சுவையோ தெரியாது. நீங்கள் நினைப்பதை நானறியேன்.
ésupils, gir. When you smile the whole world Smiles with you. உங்கள் முகத்தில் 16 தசைநார்கள் மாத்திரமே இறுக்கமாக இருக்கும்.
72

கே.எஸ். சிவகுமாரன்
புன்னகையைத் தவழவிடாவிட்டால் 64 தசைநார்கள் இறுக்கமாக இருந்து உங்கள் வதனத்தை உம்மா மூஞ்சி' யாக வைத்துவிடும் என்கிறார்கள்.
'சிரித்த முகம் வேணுமடி பெண்ணே' என்ற வரியுடன் கூடிய ஒரு சினிமாப் பாட்டும் உண்டல்லவோ? ஆண்களுக்கும் இது பொருந்தும். விலங்குகளினின்றும் நாம் வேறுபட சிரிக்க வேண்டாமோ?
- தினக்குரல் 11.08.2004
73

Page 44
அப்புறமென்ன?
மதிப்பிற்குரிய நமது சிரேஷ்ட எழுத்தாளரும் திறனாய்வாளருமான தெளிவத்தை ஜோசப் ஓர் இளம் கவிஞரைச் சரியாகவே இனங் கண்டுள்ளார் என்றறிந்து வியந்தேன்.
குறிஞ்சி இளந்தென்றல் என்ற புதிய எழுத்தாளர் பற்றி எனக் கொன்றுமே இதுவரை தெரிந்திருக்கவில்லை. ஒரு மாதத்துக்கு முன், முன்பின் அறிந்திராத என்னிடம் தனது கவிதை நூலைத் தந்தார். நான் அதற்குரிய விலையைக் கொடுக்கு முன் "வைத்திருங்கள்" என்றார். இப்படிப் புத்தகங்களைத் தருபவர்களுடைய நூல்கள் பற்றிக் குறிப்பு களை நான் எழுத நிர்ப்பந்திக்கப்படுகிறேன்.
2004 ஓகஸ்ட் முதலாந் திகதி நண்பர் தனது கூட்டாளிகளுடன் நடுத்தெருவில் என்னை நிறுத்தி பல கேள்விகளை என்னிடம் கேட்டு என்னைத் திணறடிக்கச் செய்தார். ஒரு கேள்விக்குப் பதில் அளிப்பதற்கு முன்னமே மற்றொரு கேள்வி. அவர் எனது பதில்களைப் பொருட் படுத்தியதாகத் தெரியவில்லை. "உங்கட பெயர் நாடகப் பட்டறையில் இல்லை என்று விஜயனிடம் குறைப்பட்டுக் கொண்டீர்களே, அதற்காகு தல் நீங்கள் புத்தகம் போட வேண்டும். நீங்க தயாரியுங்க. புத்தகத்தை வெளியிட்டிடலாம்" என்றார்.
இவர் இளம் பிள்ளையாய் இருக்கிறார் என்பது எனக்குச் சட்டென்று புரிந்தது. "நீங்கள் விபரங்ளை முழுமையாக அறிந்து கொண்டு, நன்றாய் யோசித்து விட்டுப் பின் உங்கள் கேள்விகளைக் கேளுங்கள்" என்று அவரிடம் கூறினேன். "நீங்கள் என்னை அவமானப்படுத்தி விட்டீர்கள்" என்றும் கூறினேன்.
74.

கே.எஸ். சிவகுமாரன்
எந்தவொரு நாடகப் பட்டறையிலும் நான் கலந்து கொள்ளவில்லை. என் பெயர் இடம்பெறவில்லை என்றும் குறைபட்டதில்லை. "எனது நாடகக் கட்டுரைகளைப் பயன்படுத்தி சிலர் புத்தகங்கள் போடுகிறார்கள். எனது பெயர்தான் இருட்டடிப்பு செய்யப்படுகிறது"
இவ்வாறுதான் எழுத்தாளர் விஜயனுடன் பேசிக் கொண்டிருந்த போது கூறியிருந்தேன். இளைஞர் பக்கத்திலிருந்திருக்கிறார் போல் தெரிகிறது. நாடகம் சம்பந்தமான கட்டுரைகளை "நாடகப் பட்டறை" என்று புரிந்து கொண்டு எனக்காகப் புத்தகம் போடவும் தயாராகிவிட்டார் இந்த இளைஞர்.
பாருங்கள், உதட்டளவே உறவு என்பது நம்மில் பலரிடையே இருக்கிறது. புதிய பரம்பரையினர் பலரிடமிருந்து என் போன்ற பழைய பரம்பரையினர் கற்பதற்கு நிறைய இருக்கிறது. ஆயினும் அவர்களுள் பலர் அவசரக் குடுக்கைகள். பழையவர்கள் பற்றியொன்றுமே தெரிந்திராத போதும் அவற்றையறிந்து கொள்ள விரும்பாத போதும், அவர்களைப் பற்றிப் பேச முன்வந்து விடுகிறார்கள். இதுதான் வேதனைக்குரியது.
ஜோசப் கூறுகிறார்: "பொருத்தமான வார்த்தைகளைத் தேடிப் பொறுக்காமல் உள்ளத்திலிருந்து அப்படியே வந்து விழும் வார்த்தைகள் இந்த இளம்தென்றலின் கவிதைக்கு ஓர் உயிர்ப்பைக் கொடுக்கின்றன."
மேலும் கூறுவார் : "கடின உழைப்பு விடாமுயற்சி, தன்னம்பிக்கை ஆகியவற்றுடனான இலக்கிய அர்ப்பணிப்பும், இவரை இக்கவிதைகள ஊடாக அடையாளப்படுத்துகின்றன."
மெய்தான் அதற்காகக் கவிஞரைப் பாராட்டவே வேண்டும்.
பூரீதர் பிச்சையப்பா என்ற கலைஞனின் சித்திரங்களுட மல்லிகைப் பந்தல் வெளியீடாக வந்துள்ள "அப்புறமென்ன" கவிதை நூலிலே, 1965 க்கும் 2000க்கும் இடையில் வெளிவந்த மலைநாடடுக கவிதைத் தொகுப்புகளின் பெயர்களை ஜோசப் தந்திருக்கிறார். பிரயோசனமான பட்டியல்.
75

Page 45
சொன்னாற்போல.
இத்தொகுப்பிலே கவித்துவமாக எனக்குத் தென்படும் சில வரிகளை அங்கொன்றும் இங்கொன்றுமாகப் பொறுக்கித் தருகிறேன் :
விடியலைத் தேடும் கறுப்பு இரவுகள்; இன்னும் எங்கள் விழி ஒரத்தில் இருக்கும் (கற்பனைக் கனவில் வாழ்ந்தது போதும்) பொய்கள் சோறாக வழங்கப்படுகின்றன. (பொய்யே உண்மையாக) சாராயக் குளத்தில் தவளையாக உறங்கும் கணவனையும், வறுமையில் வாடி பசிக்கீதம் பாடும் வாரிசுகளின் வறட்டு ஒலங்களையும் (புதிய விடியலைத் தேடி அடி வாங்கிய குழந்தையைப் போலத் தேம்பித் தேம்பி அழுகிறது மேகங்கள் (மழையும் மனிதர்களும்).
அப்புறமென்ன? உள்ளடக்கம் எப்படி என்று கேட்கிறீர்களா? அதுதான் பல தடவைகள் பலர் சொல்லக் கேட்டு ஆறின கஞ்சிதான்.
நண்பர் குறிஞ்சி இளந்தென்றல் அவர்களே! உங்களிடம் சமூகப் பிரக்ஞை இருக்கிறது. நல்லது. அது மாத்திரம் போதாது. நிறைய வாசியுங்கள். சிந்தியுங்கள். அவசரப்படாதீர்கள். நிறையக் காலம் இருக்கிறது. பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரத்துடன் மாத்திரம் நின்று விடாதீர்கள். பட்டுக் கோட்டையார் சிறந்த கவிஞனும் என்பது உண்மையே அல்லவா? ஏனைய கவிஞர்களையும் கற்றுக் கொள்ளுங் கள், வார்த்தைகளைத் தேர்ந்தெடுங்கள். சுலோகங்கள் கவிதைகளாகப் புற்றீசலாய்ப் பத்திரிகைகளில் வெளிவரும் வசனங்கள் கவிதையாகா. கவிதை என்பதே பல அம்சங்களை உள்ளடக்கியது.
நீங்கள் கவிஞனாக மிளிர வேண்டுமாயின், முதலில் நளவெண் பாவையும் கம்பராமாயணத்தையும், பாரதியையும், பாரதிதாசனையும், பட்டுக்கோட்டையாரையும், கண்ணதாசனையும், சிற்பியையும், வைர முத்தையும், நமது மஹாகவி, நீலாவணன், முருகையன், சண்முகம் சிவலிங்கன், எம். ஏ. நுஃமான், சிவசேகரம். வஜ.ச.ஜெயபாலன், சேரன், சோலைக்கிளி முதல் இப்பொழுது பல நல்ல கவிதைகளை எழுதி வரும் புதிய கவிஞர்களின் எழுத்தோவியங்களையும், ஆற அமர இருந்து படித்தச் சுவையுங்கள். பின்னர் உங்கள் சமூகப் பிரதிபலிப்பைத் தேர்ந்தெடுத்த சொற்களில், இசைப் பண்புடன், அணிகளுடன்
76

கே.எஸ். சிவகுமாரன்
சொல்லாமற் சொல்லிப் பதிவு செய்யுங்கள். நீங்கள் விரைவிலேயே கவிஞானாகி விடுவீர்கள். உங்களிடம் கவிஞனின் பார்வை ஒளிந்து கொண்டிருக்கிறது. அதை வெளிக்கொணரப் பொறுமை தேவை. அவதானிப்பு தேவை. நேர்த்தி வெளிப்பாடு தேவை.
உங்கள் முயற்சி வெற்றியடைய எம் போன்றோர் பலர் அனுபவ ரீதியாக ஆலோசனை கூறக் காத்திருக்கிறோம். இளங்கன்று பயமறியாதுதான்! முடிவு செய்வது உங்கள் சுதந்திரம்.
- தினக்குரல் : 18.08.2004
77

Page 46
மற்றுஞ் சில நுகர்வுகள்
ரவி தமிழ்வாணன், e ஹரிணி அமிர்தா விஸ்வநாதன் மிஷேல் ஃ(f)பூக்கோ
78

ரவி தமிழ்வாணன், ஹரிணி அம்ரிதா விஸ்வநாதன்
1947ஆம் ஆண்டில் இந்தியா சுதந்திரமடைந்த பின்னர், தமிழ் நாட்டிலிருந்து எக்கச்சக்கமான சஞ்சிகைகள், குறிப்பாக சிறுவர்களுக்கான ஏடுகள் வெளிவந்து கொண்டிருந்தன. பாப்பா மலர், அணில், அம்புலிமாமா, கண்ணன், கல்கண்டு போன்றவை இலங்கையில் கிடைத்த வற்றுள் சில. அறிவுத் தாகம் கொண்டவர்கள் இவற்றைப் படித்துப் பயன்பெற்று மகிழ்ந்தார்கள். பத்துப் பதினொரு வயதில் நானும் அப்படியிருந்தேன்.
அந்த நாட்களில் சேர் ஆர்தர் கொனன்டொயில் (ஷேர்லக் ஹோம்ஸ் ஆசிரியர், பெரிமேஸன், அகதா கிறிஸ்டி போன்ற ஆங்கிலத் துப்பறியும் நாவலாசிரியர்களின் நாவல்களை விழுந்து விழுந்து படித்து வந்தேன்.
தமிழிலும் வடுவூர் துரைசாமி ஐயங்கார் முதல் சகல துப்பறியும் நாவலாசிரியர்களின் தமிழாக்கங்களையும் படித்துக் கண்டறியாததைக் கண்டறிய ஆவல் கொண்டிருந்தேன். துப்பறியும் படைப்புகளையே அதிகம் விரும்பியதனால் (வயது அப்படி) வேறு படைப்புகளை நாடவில்லை.
இரண்டொரு வருடங்களுக்குப் பின் இள வயதின் உந்தல் இயல் பாகவே ஏற்பட்டது. அத்தகைய பத்திரிகைகளைக் கள்ளக் களவாகப் படித்து வந்தேன். படங்களுடன் காமரசக் கதைகள், ஓரிரு பத்திரிகை களில் வெளிவந்தன. இந்நூற்றாண்டில் வரும் அத்தகைய எழுத்து களுடன் ஒப்பிடும்பொழுது "சிரஞ்சீவி", "மோஹினி" "பொன்னி" போன்ற அக்காலத்து காமத்தை வெளிப்படுத்தும் கதைகள் லேசாகவே வெளி வந்தன. அக்கதைகளை எழுதியவர்களுள் பலர் தலை சிறந்த ஜனரஞ்சக
79

Page 47
சொன்னாற்போல.
எழுத்தாளர்களாக மாறினர். அவர்களுள் சிலர் அகிலன், ஜெகசிற்பியன் சாண்டில்யன், ஆர்.வி.சிதம்பர ரகுநாதன்.
இது அப்படியிருக்க, "கல்கண்டு" எனக்குத் தித்திப்பாய் பல தகவல்களைத் தந்து கொண்டிருந்தது. உலக அறிவை, சிறிய தொகுப்புக் கட்டுரைகளாகவும் கேள்வி - பதில் வாயிலாகவும் 'கல்கண்டு' ஆசிரியர் தமிழ்வாணன் தந்து கொண்டிருந்தார். 1947 - 1950 காலப் பகுதியில் எனக்குப் பிடித்த ஒரு மானசிகக் குருவாகத் தமிழ்வாணன் விளங்கினார். இவருடைய "துப்பறியும் சங்கர்லால்" பொது அறிவையும், கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த சில தந்திரோபாயங்களையும் எனக்குக் கற்பித்தன.
தமிழ் வாணனின் "அழகாய் இருப்பது எப்படி?" போன்ற ஆலோசனைப் புத்தகங்களை வெகு ஆர்வத்துடன் படித்து வந்தேன். அவர் காட்டும் வழிகளில் எனது ஆளுமையை விருத்தி செய்து கொண்டேன் என்றால் அது மிகையில்லை.
பின்பு எனது வளர்ச்சிப் போக்கு வேறு விதமாக மாறத் தொடங்கி யது எப்படி? அதனைப் பிறகு பார்ப்போம்.
தமிழ்வாணனுக்கு இரு புதல்வர்கள், ஒருவர் லேனா தமிழ் வாணன். இவர் சிறிது காலம். குமுதம்' பத்திரிகையின் ஆசிரியர் குழுவிலுமிருந்தார். "மானா" மக்கீன் தமது கொழும்புப் புத்தக வெளி யீட்டு விழா ஒன்றிலே பேசும்படி அழைத்தபோது, லேனா தமிழ் வாணனையும் அறிமுகம் செய்து வைத்தார். "லேனா"வுக்கு என்னை இப்பொழுது ஞாபகமிருக்குமோ தெரியாது. இருந்தபோதும், சென்னை யில், குமுதம்' அலுவலகத்தில் பின்னர் ஒரு நாள் சந்தித்ததாக ஞாபகம்.
தமிழ்வாணனின் மற்றைய புதல்வர் ரவி தமிழ்வாணன். இவரையும் முதற் தடவையாகச் சென்னையில் சந்தித்துப் பேசினேன். ஆனால் அவரை எனக்குப் பிடிக்காமல் போய்விட்டது. இதற்குக் காரணம், அவர் தோற்றத்தில் தற்பெருமை பிடித்தவராகவும், எச்சரிக்கையுடன் இருப்பவராகவும், கறார் பேர்வழியாகத் தென்பட்டதனாலும், சிரிக்க முடியாதவர் போல் காணப்பட்டதாலும் முதற் தடவையிலேயே அவரை
80

கே.எஸ். சிவகுமாரன்
நான் வெறுத்தேன். எனக்குத் தற்பெருமை பிடித்தவர்களை அறவே பிடிக் காது; இது தற்பெருமை அறியாமையே, மற்றப் பக்கம் தெரியாததனாலேயே, தம்மைச் சுற்றித்தான் உலகம் சுழல்கிறது என்ற தப்பான எண்ணங் கொண்டவர்களாயிருப்பதனாலேயே,
தவிரவும், ரவி தமிழ்வாணன் இலங்கை எழுத்துகளின் பெருமை பற்றியோ, எழுத்தாளர்களின் பங்களிப்புகள் பற்றியோ எந்தவித அக்கறையும், அறிவுமில்லாதவர் போல் காட்சியளித்தார். இவரிடம் ஏன்தான் என்னை அறிமுகப்படுத்திச் சிறுமை கொண்டேன் என்று கவலைப்பட்டேன். ரவி தமிழ்வாணன் ஒரு கைதேர்ந்த வியாபாரி என்று கணித்துக் கொண்டு நாடு திரும்பிவிட்டேன். இது நடந்து ஒரு பத்து ஆண்டுகள் இருக்கலாம்.
"Appearances are deceptive" (G5ITsipril 85Gir 6LDITsugi Gu GT60T இதற்கு நாம் பொருள் கொள்ளலாம்) என்பதுபோல, இந்த 2004ல் ரவி தமிழ்வாணன் அவர்கள் பற்றிய கணிப்புக் குறைபாட்டை மாற்ற வேண்டி ஏற்பட்டது.
ரவி தமிழ்வாணன் அவர்கள் மணிமேகலைப் பிரசுரம்' என்ற நூல் வெளியீட்டுப் பதிப்பகத்தின் அதிபர் என்பது உங்களுக்குத் தெரிந்திருக்கும். இலங்கை எழுத்தாளர்களின் 170 நூல்களை அவர் இது வரை தமது வர்த்தக வலைப்பின்னல் மூலம் உலகறியச் செய்தி ருக்கிறார். இது நமக்கெல்லாம் ஒரு வரப்பிரசாதம்.
கொழும்பு கம்பன் கழகத்தினரின் இவ்வாண்டு கம்பன் விழாவில் அவர் என்னை இனங்கண்டு கொண்டு எனது நூல் வெளிவர வேண்டும் என்று நச்சரித்து வலியுறுத்தி வந்தார். நான் தட்டிக் கழிக்கப் பார்த்தேன். அவர் விடவில்லை. சரி, நம்மைப் பற்றித்தான் வெளிநாட்டுத் தமிழபிமானிகளுக்கு இவர்களுள் இலங்கையரும் அடங்குவர்) ஒன்றுமே தெரியாதே - ஏன் நமது நாட்டு இளம் பராயத்தினருக்குந்தான் இது பொருந்தும் என்பதனால் அன்பர் ரவி தமிழ்வாணனின் அன்புத் தொல்லைகளுக்கு உடன்பட்டு, எனது "திறனாய்வு என்றால் என்ன?" என்ற புதுப்பிக்கப்பட்ட நூலை அவர் வெளியிடச் சம்மதித்தேன்.
81

Page 48
சொன்னாற்போல.
புத்தகமும் 2004 நொவம்பரில் கொழும்பு தமிழ் சங்கத்தில் நடைபெற்ற 22 ஈழத்து எழுத்தாளர்களின் படைப்புகளுள் ஒன்றாக வெளியாகியது. நீங்கள் அவசியம் இதனைப் படித்துப் பார்க்க வேண்டும். குறிப்பாக, பல்கலைக்கழகங்களில் தமிழ் பயிலும் மாணவர்களுக்கு இது ஒரு கைந்நூலாக இருக்கும் என்பதை நான் உறுதிப்படுத்துகிறேன்.
ரவி தமிழ்வாணன் சிறந்த நிர்வாகி, ஆணித்தரமாக, பொருத்தமான முறையில் பேசக் கூடிய ஒரு பேச்சாளர். உலக நாடுகளைச் சுற்றி, பெற்ற அனுபவத்தைப் பயன்படுத்துபவர்.
அன்றைய தினம் மண்டபம் நிறைவதற்கு அவரது வியாபார, நேர்மையான, உசிதமான, தந்திரோபாயங்களும் காரணம் எனலாம்.
ரவி தமிழ்வாணன் எனக்குப் பெருமை செய்திருப்பதையிட்டு மனம் பூரிப்படைந்திருக்கிறேன்.
米来米
"An Infant Prodigy" என்பார்களே - கருவிலே திருவுரு அப்படியானதொரு எட்டு வயதுச் சிறுமி தனது பரத நாட்டிய அரங்கேற்றத்தில் எம்மிடையே பிரமிப்பை ஏற்படுத்தியுள்ளார். ஹரிணி அம்ரிதா விஸ்வநாதன் ஒரு தெய்வீக வரம் பெற்ற பால்ய நர்த்தகி. நான் ஒரு நர்த்தனத் திறனாய்வாளன் அல்லன். ஆனால், இந்தச் சிறுமியின் பல்திறனாற்றலை நேரில் கண்டு பிரமித்துப் போயிருக்கிறேன். அந்த அரங்கேற்றம் - நிகழ்ந்தது. கொழும்பு நடன மேடையைப் பொறுத்த மட்டில் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஓர் அபூர்வ நிகழ்வு.
விஸ்வநாதன் தம்பதியினருக்கும் ஹரிணி அம்ரிதாவின் அத்தை வாசுகி ஜெகதீஸ்வரனுக்கும் இது ஒரு பெரிய வெற்றி. நர்த்தகியின் கொடைத்திறன் ஒரு புறமிருக்க, அரங்கேற்ற நிகழ்வு கூட ஒரு முன் மாதிரியாகப் பல விதத்திலும் அமைந்தது.
82

கே.எஸ். சிவகுமாரன்
பாடகர்கள். பக்க வாத்தியக்காரர்கள், மேடையலங்காரம், உடை/ ஒப்பனை, ஒளியமைப்பு அறிவிப்பு நேர்த்தி, நிர்வாகம் - அனைத்துமே ஒரு தொழிற் செய் நேர்த்திகரமாய் (Professionally Exquisite) அமைந்தமை பாராட்டுக்கும். மகிழ்ச்சிக்கும் உரியவை. வாழ்க!
- தினக்குரல் 16.11.2004
83

Page 49
LÓNGB6p6),(f) išGBEBIT (Michel FouCoult)
UblGaqcು ವಿ.(1) பூக்கோ என்ற பிரெஞ்சுத் தத்துவ வாதி (1926 - 1984) இறந்து 20 வருடங்களாகிவிட்டன. இவருடைய எழுத்துகள் சில தமிழ் நாட்டுச் சிற்றேடுகளில் தரப்பட்டுள்ளன. இவருடைய தத்துவ நோக்குடன் எனக்கு உடன்பாடு இல்லை. ஆயினும், இவர் என்ன கூற வருகின்றார் என்பதையறிய முற்பட்டுள்ளேன். இவருடைய அடிப்படைத் தத்துவத்தைப் பின்வருமாறு எடுத்துரைக்கலாம்.
"வரலாற்று நீரோட்டத்தில் மனித இயல்பு, சமூக மாற்றம் போன்றவை தொடர்பாக நிரந்தர உண்மை எதுவும் இல்லை" எனவே, இவர் கார்ல் மாக்ஸ், சிக்மன்ட் ஃ(f) புரொய்ட் ஆகியோரின் கருத்து களுடன் முரண்பட்டார். இருந்தபோதிலும், சில பொருட்கள் பற்றிய இவருடைய வியாக்கியானங்கள் ஏற்றுக்கொள்ளத்தக்கவையாயிருந்தன. உதாரணமாக, சிறைச்சாலைகள், பொலீஸார், காப்புறுதி. மன நோயாளர் பராமரிப்பு, சேமநலன் ஆகியவற்றைக் குறிப்பிடலாம். ஆண்களின் தன்னினச் சேர்க்கை பற்றிய கருத்துகள் எனக்கு உடன்பாடானவையல்ல. பிரான்ஸில் பிறந்தாலும், ஜேர்மனி உட்படப் பல பல்கலைக்கழகங்களில் இவர் விரிவுரைகளை நடத்தியிருக்கிறார்.
இனத்துவ ஆய்வுக்கான அனைத்துலக நிலையம் (ICES) 2004 லே கொழும்பிலே ஃ(f) பூக்கோவின் 20 ஆவது நினைவு தினத்தை முன்னிட்டு, கலாநிதி ராதிகா குமாரசுவாமி தலைமையில் ஒரு சம்பாஷணையை நடத்தியது. இந்த உரையாடலில் கலந்து கொண்டவர் கள் கலாநிதி பிரதீப் ஜெகநாதன், கலாநிதி மாலதி டி அல்விஸ் ஆகியோர். ஃ(f) பூக்கோவின் பார்வையில், ஜோர்ஜ் பூ(B) ச்சனரின் "உவொய் ஸெக்" தொடர்பாக, கலாநிதி அசோகா தி ஸொய்ஸா உரையாற்றினார்.
84

கே.எஸ். சிவகுமாரன்
இந்த விபரங்களை நான் ஏன் இங்கு தர வேண்டும்? தமிழில் எழுதும் நாம் எமது பார்வையை விரிவுபடுத்த தமிழுக்கும் வெளியே வந்து. பல தகவல்களைப் பெற்றுக்கொள்ள வேண்டும் என்ற விருப்பத்தினாற்தான்.
来来米
ஞானப்பிரகாசசிவம்
ஞானப்பிரகாச சிவம் (கணபதிப்பிள்ளை) என்ற தமிழ் ஆய்வாளரும், ஆர்வலருமான இவர், தமிழ் மாத்திரமல்லாது, ஆங்கிலப் பத்திரிகைகளையும், நூல்களையும் மிக நுணுக்கமாகப் படித்து, வரலாற்றுத் தவறுகளைச் சுட்டிக் காட்டி வருபவர். அன்னார். எனது ஆங்கிலப் பத்திகளையும் படித்து வருகிறார் என்றறிந்து மகிழ்வுற்றேன். தி ஐலன்ட்' பத்திரிகையில், "AS 1 Like lt" என்றொரு பத்தியைப் புதன் கிழமைகளில் நான் எழுதி வருவதைத் தமிழ் மாத்திரமே படிப்பவர்கள் அறிந்திருக்க மாட்டீர்கள். அதே போல, "டெயிலி நியூஸ்" பத்திரிகையில் புதன்கிழமைகளில் வெளிவரும் 'ஆர்ட்ஸ்கோப்' அனுபந்தத்தில் "Glcanings" என்ற தலைப்பில் ஒரு பத்தியை நான் எழுதி வருவதையும் நீங்கள் அறிதிருக்க மாட்டீர்கள். தற்பெருமையாக இதனை நான் ஏன் இங்கு குறிப்பிட வேண்டும்?
பலர் செய்ய முன்வராத இடத்து, பல விஷயங்களைப் (தமிழ், சிங்களம், ஆங்கிலம்) பற்றிய திறனாய்வு சார்ந்த குறிப்புக்களை எழுதி பெருகிறேன். தமிழ் இலக்கியம், கலைகள் பற்றித் தமிழ் தெரியாதவர் களுக்காக எழுதி வருவதுடன், நளின் தி சில்வா போன்ற தமிழ் வெறுப்பாளர்களுடன் மோதியும் சில கருத்துகளை வெளியிட்டு வந்துள்ளேன். இவையெல்லாம் வரலாற்றுச் செய்திகள். தமிழ் வாசகர்கள் இவை பற்றி அறிந்திருக்க வேண்டாமா?
சிங்கள இனத்தைச் சேர்ந்த பல புலமையாளர்களும், அறிஞர் களும் எனது பத்திகளைப் படித்துத் தமது அபிப்பிராயங்களைத் தொலைபேசி மூலம் தெரிவிக்கின்றனர். ஆனால், தமிழினத்தைச்
85

Page 50
சொன்னாற்போல.
சேர்ந்தவர்கள் ஓரிருவரே எனது ஆங்கில எழுத்துகளைப் படிப்பவர்கள் போலத் தெரிகிறது. அவர்களுள் மற்றொருவர் வவுனியா முன்னாள் அரசாங்க அதிபரும். அரசாங்கத்தில் மிக முக்கிய பதவி வகித்தவருமான எஸ்.டி. மார்க்கண்டு ஆவார். மற்றோர் அறிஞர் கே. சண்முகலிங்கம் ஆவார். ஆனால், நமது பல்கலைக்கழகப் பேராசிரியர்கள் - ஆங்கிலப் பத்திரிகைகளைத் தொட்டுமே பார்ப்பதில்லைப் போலும்.
ஞானப்பிரகாச சிவம் என்ற கணபதிப்பிள்ளைக்கு வருவோம். இவர் என்னைப் போலன்றித் தன்னை விளம்பரப்படுத்திக் கொள்ளாத ஓர் அறிஞர்.
எனது தி ஐலன்ட்' பத்தியில், டாக்டர் எஸ். தியாகராஜா என்பவர் எழுதிய தமிழ்க் கட்டுரையின் சாரத்தைக் குறிப்பிட்டு எழுதியிருந்தேன். இந்தத் தமிழ்க் கட்டுரை 'வீரகேசரி' வார வெளியீட்டில் "பண்டைத் தமிழர் வளர்த்த பெளத்தம் " என்ற தலைப்பில் வெளிவந்து கொண்டிருக்கிறது. அதிலே சில வரலாற்றுத் தகவல்கள் திரித்துக் கூறப்படுவதை உணர்ந்த கணபதிப்பிள்ளை அவர்கள். இவற்றைச் சுட்டிக்காட்டி தியாகராஜா அவர்களுக்கு எழுதிய கடிதத்தின் பிரதியை எனக்கும் அனுப்பி வைத்திருக்கிறார்.
இவ்வாறு, வாதப் பிரதிவாதங்கள் நடப்பது உண்மையைத் துலக்க உதவும். பல்கலைக்கழக ஆய்வாளர்கள் செய்ய வேண்டிய பணியை உதிரி உதிரியாக ஞானப்பிரகாச சிவம் (கணபதிப்பிள்ளை), என் போன்றோர் செய்து வருவதைக் கண்டும் காணாது இருந்து விடுவர் நமது ஆய்வறிவாளர்கள்.
இசை வேள்வி
கொழும்பு, கம்பன் கழகம் நடத்தும் நடாத்தும் என்பது பிழை) பூரீ ராமநாம கானாமிர்தம் என்ற இசை வேள்வி நிகழ்ச்சிகள் 2004, நொவெம்பர் 6 ஆம் திகதி முதல் 13 ஆம் திகதி வரை வெள்ளவத்தை இராம கிருஷ்ண மிஷன் மண்டபத்தில் நடைபெற்றன.
86

கே.எஸ். சிவகுமாரன்
இந் நிகழ்ச்சிகளில் தமிழ் நாட்டைச் சேர்ந்த சுதா ரகுநாதனின் பாட்டுக் கச்சேரியும் இடம்பெற்றது. இவருடைய கச்சேரியை 1998 இல் ஒமான் தலைநகரான மஸ்கெட்டில் நேரில் கேட்டுப் பரவசமானேன். அப்பொழுது நான் அங்குள்ள பூரீலங்கன் ஸ்கூலில் ஆங்கில ஆசிரியரா கப் பணி புரிந்தேன். கல்லூரி அதிபர் பந்துல கொடிக்காரவையும் இவரும் கர்நாடக இசையை ரசிப்பவர்) அழைத்துச் சென்றிருந்தேன். சுதா ரகுநாதன் அண்மைக் காலக் கர்நாடக இசை விற்பன்னர்களில் மிக மிக முக்கியமானவர் சம்பிரதாயத்தினின்றும் சற்றே விலகிப் பரிசோதனையாக இவர் பாடுவது என்னை மிகவும் கவர்ந்தது. இவரது கச்சேரி 2004 ஆம் ஆண்டு இடம் பெற்றது. ஆனால், அதேதினம், "திறனாய்வு என்றால் என்ன?" என்ற எனது நூல் கொழும்பு தமிழ்ச் சங்கத்தில் வெளியிடப்பட்டதனால் கச்சேரிக்குச் செல்லமுடியவில்லை.
இந்த இசை வேள்வியில் பங்களித்த மற்றொருவரின் கானத்தில் மயங்குண்டு போனவன் நான். இவருடைய குரலை முதலில் திரைப்படமொன்றிலேதான் கேட்டேன். அவர் தான் டி.என்.சேஷ கோபலன். இவருடைய கச்சேரிக்கும் என்னால் செல்லமுடியவில்லை அன்றைய தினம் நண்பரும் அறிஞருமான ஒருவரின் புதல்வனின் திருமணம், என்ன செய்வது?
"ஊரிப்பட்ட" நிகழ்ச்சிகள், எப்படி எல்லாவற்றிற்கும் இத்தள்ளாத வயதில் சென்று பயன் பெறுவது, தர்மசங்கடந்தான்.
米米水
இருபத்தியிரண்டு நூல்களில் வெளியீடு
சென்னை மணிமேகலைப் பிரசுரத்தின் 22 ஈழ எழுத்தாளர்களது நூல்களின் வெளியீட்டு விழாவும் லண்டன் தமிழினி மஞ்சரியின் பாராட்டு விழாவும், கொழும்புத் தமிழ்ச் சங்கத்தில் இடம்பெற்றன.
கே.விஜயன், பேராசிரியர் சண்முகலிங்கம், சி. சுதந்திரராஜா, விவரதசுந்தரம், க. அருள் சுப்பிரமணியம், சுதாராஜ் குரு அரவிந்தன். அன்டன் செல்வகுமார் சேமகரன், வசந்தா நடராசா, தனபாக்கியம்
87

Page 51
சொன்னாற்போல.
t
குணபாலசிங்கம், செல்வகுமார், மெல்பர்ன் மணிவேதா இலங்கா திலக்க. யோகா யோகேந்திரன், எஸ். பேராசிரியன். உதயச்செல்வன், ஜெகன், நான், எழுதிய நூல்கள் வெளியிடப்பட்டன. மணிமேகலைப் பிரசுர அதிபர் ரவி தமிழ்வாணன் இவ்விழாவைக் கொழும்புத் தமிழ்ச் சங்கத்தில் நடத்தினார்.
லண்டன் தமிழினி மஞ்சரி
இரண்டு மாதங்களுக்கு ஒரு முறை "தமிழினி" என்ற சஞ்சிகை லண்டன் மாநகரிலிருந்து வெளிவருகிறது. இதன் ஆசிரியர் பெயர் குலேந்திரன். இதன் முதல் இதழ் வெளியாகிய பொழுது தமிழுக்குச் சேவை செய்த 20 பேர் பாராட்டப்பட்டார்கள். புதுக் கவிஞராக 1970களில் அறிமுகமான லோகேந்திரலிங்கமும் அதில் ஒருவர். இவர் இப்பொழுது கனடாவில் "உதயன்" என்ற செய்தித்தாளின் ஆசிரியராக இருந்து வருகிறார். 2003 ஆம் ஆண்டு டொரொன்டோவில் இவரையும், எஸ். திருச்செல்வம், வி.என். மதியழகன், விக்னேஸ்வரன் போன்ற மின்னியக்க ஊடகத் துறையினரையும், சில எழுத்தாளர்களையும் சந்தித்தேன்.
லண்டன் குலேந்திரன் ஈழத்தில் வசிக்கும் எழுத்தாளர்களின் புத்தகங்களை வெளியிட்டு வருகிறார். இது வரை ஒன்பது நூல்கள் வெளியிடப்பட்டுள்ளன. மேலும், மூன்று நூல்கள் கொழும்புத் தமிழ்ச் சங்கத்தில் வெளியிடப்பட்டன. அவையாவன : அன்னையின் நிழல் (கே.விஜயன்), ஊழித் தாண்டவம் (சண்முகலிங்கம்), மழைக்குறி (சுதந்திரராஜா).
88

நுகர்ந்த சிற்றேடுகளிற் சில
சிற்றேடுகள் சில * ஆய்வறிவின் கூறு சமூக அறிவு
89

Page 52
சிற்றேடுகள் சில
பூரணி" என்ற ஈழத்துச் சிற்றேட்டைக் குறிப்பிட்டிருந்தேன் அல்லவா? அதனைப் படித்த இளம் வாசகர் ஒருவர் - கே. ஆர். ரஜிவன் - அந்த ஏட்டை வவுனியா வாசிகசாலையில் தேடிப் பார்த்ததாகவும், அது பற்றி யாருமறிந்திலர் எனவும் எனக்கு எழுதியிருந்தார்.
எனது முன்னைய கட்டுரையொன்றில் '
"பூரணி" இற்றைக்கு 40 வருடங்களுக்கு முன் வெளிவந்த ஒரு தரமான ஏடு, இந்தச் சிற்றேட்டின் இதழ்கள் இப்பொழுது எங்கு கிடைக்குமோ தெரியாது. என்னிடம் "பூரணி" ஒரு இதழ் ஐப்பசி - மார்கழி 1972) மாத்திரம் உள்ளது. அதில் எனது கட்டுரையொன்று இடம் பெற்றிருந்த தனால் அதனை எனது கோவை ஒன்றுள் வைத்திருக்கிறேன்.
"பூரணி" பற்றிய தகவல்களை நண்பர் தெளிவத்தை ஜோசப்பிட மிருந்து பெற்றுக்கொள்ளக்கூடியதாக இருக்கும்.
வாசகர் நலன்கருதி, அந்த ஏட்டின் குறிப்பிட்ட அந்த இதழ் பற்றிய சில தகவல்களைப் பார்ப்போம்.
மறைந்த மறுக்கப்பட முடியாத ஆய்வாளரும், தத்துவதரிசனங் கொண்டவரும் ஆக்க இலக்கியப் படைப்பாளியுமான மு. தளையசிங்கம் இந்த "பூரணி" யின் பின்னால் செயற்பட்டவர். "Integral Yoga என்பதையே "பூரணி" உள்ளடக்கும்.
கொழும்பு - 13. சப்பாத்து வீதி 35 ஆம் இலக்க இல்லத்திலிருந்து இந்த இதழ் வெளிவந்தது. இதன் இணை ஆசிரியர்களாக என்.கே. மகாலிங்கம் (கனடாவில் தற்சமயம் வாழும் நல்ல எழுத்தாளரும்,
90

கே.எஸ். சிவகுமாரன்
மொழிபெயர்ப்பாளருமாவார்). க. சட்டநாதன் (யாழ்ப்பாணத்தில் வாழும் தலை சிறந்த சிறுகதையாசிரியர்) ஆகியோர் பணிபுரிந்தனர். "பூரணி" யின் ஏனைய உறுப்பினர்கள் மு. நேமிநாதன் இவர் இப்பொழுது இங்கிலாந்தில் வாழ்கிறார்), க. தங்கவேல் இவரைப் பற்றிய விபரங்கள் கிடைக்கவில்லை), இமையவன் இவர் யாழ்ப்பாணத்தில் வாழ்கிறார் என்று நம்ப இடமுண்டு, இரா. சிவச்சந்திரன் இவர் யாழ். பல்கலைக்கழப் பேராசிரியர், எழுத்தாளர்).
இந்த இரண்டாவது இதழ் பற்றிய தமது அபிப்பிராயங்களை, செங்கை ஆழியான், எஸ்.எம்.ஜே. பைஸ்தீன், திக்குவல்லை கமால், நீள்கரை நம்பி, பசிவானந்த சர்மா (கோப்பாய் சிவம்) ஆகிய எழுத்தாளர் களும் கயல்வண்ணன், காவலூர் இறைமகன் ஆகிய வாசகர்களும் எழுதியுள்ளனர்.
மறைந்துபோன சிறந்த சிறுகதை எழுத்தாளர்களுள் ஒருவரான செ. கதிர்காமநாதன் பற்றி க.சட்டநாதனும், மதுரகவி இ. நாகராஜன் பற்றி, தரமான 'மறுமலர்ச்சி' கால எழுத்தாளர் சு.வே.யும் உருக்கமாக எழுதியுள்ளனர்.
இப்பொழுது அவுஸ்திரேலியாவில் வசிக்கும் லெ. முருகபூபதியின் "அந்தப் பிறவிகள்" என்ற சிறுகதை, சமூகப் பிரக்ஞையைத் துலாம்பர மாக வெளிப்படுத்திய மறைந்த யோ. பெனடிக்ட்பாலனின் "ஒரு வழிப்பாதை" என்ற சிறுகதை. க. சட்டநாதன் எழுதிய "குருவியும் அந்த கிராமத்துச் சிறுமியும்" என்ற சிறுகதை. உருதுமொழிச் சிறுகதை எழுத்தாளரான கிருஷ்ண சந்தர் இந்திய முற்போக்கு எழுத்தாளர்) எழுதிய "அணைந்த சுவாலை" என்ற கதையின் தமிழாக்கம் (முக்தார் தமிழில் தந்திருக்கிறார்). இப்பொழுது சென்னையில் வாழும் முன்னாள் 'ரெயின்போ' பிரின்டர்ஸ் உரிமையாளர் எம். ஏ. ரஹ்மான் எழுதிய "ஆதாரம்" என்ற உருவகக்கதை ஆகியன இடம்பெற்றுள்ளன.
என்னிடம் உள்ள "பூரணி" ஏட்டில் 19 முதல் 22 வரையிலுமான பக்கங்களைக் காணவில்லை. அப்பக்கங்களில் நீண்ட கவிதை கவிதைகள் இடம்பெற்றிருக்காம் என ஊகிக்கிறேன்.
91

Page 53
சொன்னாற்போல.
குறிப்பிட்ட இந்த இதழில், அயேசுராசாவின் "நம்பிக்கை" என்ற கவிதை, ஜெயகாந்தனின் ஒரு கூற்று. லாசாராவின் கதையொன்றிலிருந்து பெறப்பட்ட சில பகுதிகள், திக்குவல்லை கமாலின் "மூன்று கவிதைகள்", மு.பொன்னம்பலத்தின் "மூன்று தத்துவ நோக்குகளும் உண்மையும்" என்ற கட்டுரை, சுந்தர ராமசாமியின் எழுத்திலிருந்து பெறப்பட்ட ஒரு பகுதி, மறைந்த குறிப்பிடத்தகுந்த புனைகதையாளரும், தத்துவ நெறி ஆய்வாளரும், திறனாய்வாளருமான மு. தளையசிங்கத்தின் "ஒளி படைத்த கண்ணினாய்" என்ற "மெய்யுள்" சு. மகாலிங்கம் எழுதிய "அபிவிருத்தித் திட்டங்களும் மக்களும்" என்ற கட்டுரை ஆகியன இடம்பெற்றுள்ளன. கு.ப. ராஜகோபாலனின் உரம்' என்ற கவிதையும் இடம் பெற்றதை மறந்து விட்டேன்.
சொன்னாற்போல "கொழும்பில் தமிழ் நாடகங்கள்" என்ற கே. எஸ். சிவகுமாரனின் கட்டுரையும் இடம் பெற்றுள்ளது. ஆமாம், இந்தப் பழைய விஷயங்களைப் பற்றி எல்லாம் நான் ஏன் இங்கு எழுத வேண்டும்? நல்ல கேள்வி தான். ஏனென்றால், இந்தப் பல்கலைக் கழகங்களில் பயிலும் மாணவர்கள் சிலர் தமது பேராசிரியர்களின் விதப்புரைகள் காரணமாக என்னிடம் வந்து பழைய சமாச்சாரங்களைக் கேட்டுத் தமக்கு உதவுமாறு கேட்கின்றனர். அவர்களுடைய ஆய்வு களுக்கு அவ்விபரங்கள் தேவைப்படுகின்றன போலும். இதில் வேடிக்கை என்னவென்றால், இவர்கள் சுயமாகத் தேடுதலை மேற்கொள்ளவோ, உடனிகழ்கால இலக்கியப் போக்குகளை உடனுக்கு டன் அறிந்து கொள்ளவோ அக்கறை காட்டுவதில்லை.
என்னிடமே விபரங்கள் கேட்கும் இவர்கள் என்னைப்பற்றி ஒன்றுமேயறிந்திராமல், "இங்கிலிஷ் பத்திரிகைகளில் தமிழ் இலக்கியம் தொடர்பாக அறிமுகஞ் செய்கிறார்களாமே!" என ஆச்சரியம் தெரிவிக் கின்றனர். ஆங்கிலப் பத்திரிகையில் நான் எழுதுவதை இவர்கள் பார்ப்பதில்லை. கேள்விப்பட்டு என்னிடம் கேள்வியாகக் கேட்கிறார்கள்.
it
"அறிமுகம்", "திறனாய்வு", "மதிப்புரை" "விமர்சனம்" போன்ற சொற்களின் வேறுபாடுகள், அர்த்தங்கள் போன்றவற்றை இந்த மாணவர்கள் மாத்திரமல்ல நமது தமிழ் எழுத்தாளர்களும் அதிகம்
92

கே.எஸ். சிவகுமாரன்
அறிந்துள்ளார்கள் என்று சொல்வதற்கில்லை. அவர்களைக் குறை கூறிப் பயனில்லை. அவர்கள் இந்த வேறுபாடுகளை உணராமல், சகட்டு மேனியாக எல்லாவற்றையும் "விமர்சனம்" என்றே கூறிவிடுகிறார்கள். அப்படி அவர்களுக்குப் பழக்கமாய் போய்விட்டது. என்ன செய்வது?"
ஆங்கிலப் பத்திரிகையில் நான் வெறுமனே "அறிமுகம்" செய்வது மட்டுமல்ல, அதற்கும் மேலாக தமிழ் / ஆங்கில / சிங்கள கலை இலக்கியங்கள் பற்றியும் திறனாய்வு செய்கிறேன் என்பதை அவர்கள் கவனிப்பதில்லை. இது எனக்கு மனத்தாங்கலை ஏற்படுத்துகிறது.
இதனாலேயே "திறனாய்வு என்றால் என்ன?" என்ற நூல் புதிதாக - மணிமேகலைப் பிரசுரமாக - வெளிவந்திருக்கிறது. அவசியம் படித்துப் பாருங்கள்.
“ஞானம்" - 55
கண்டி / கொழும்பு ஆகிய நகரங்களின் முகவரிகளைக் கொண்டு "ஞானம்" என்ற சிற்றேட்டின் 55 ஆவது இதழ் வெளியாகியிருக்கிறது. இந்த ஏடு நாடெங்கிலும் பரவலாகக் கிடைக்க அதன் ஆசிரியர், வைத்தியக் கலாநிதியும், கலைமாணியுமான திஞானசேகரன் இவர் ஒரு முக்கிய, அருமையாக எழுதும் புனை கதையாளரும், பயணக் கட்டுரை, திறனாய்வு போன்றவற்றை எழுதுப வருமாக நன்கறியப்பட்டவர்) எடுத்து வருவதைக் காணக் கூடியதாக இருக்கிறது.
"புஷ்பா" என்ற ஒவியர் "புஸ்பா" என்ற தனது சமஸ்கிருத பெயரைத் தமிழ்ப்படுத்துவது எனக்கு உடன்பாடில்லை. நம்மில் பலருக்கு வடமொழி எழுத்துகளின் உச்சரிப்புகளில் அதிக பரிச்சயமில்லை என்பது தெரியவருகிறது. உதாரணமாக "ஷ" "ஸ" "ஜ" போன்ற எழுத்துகளை அவற்றின் உச்சரிப்புக்கு ஏற்ற விதத்தில் பயன்படுத்தத் தவறி விடுகிறோம். புஷ்பா மீண்டும் தனது திறனாற்றலை நிலை நாட்டியிருக்கிறார். ஆமாம்,
93

Page 54
சொன்னாற்போல.
இந்த "புஷ்பா" யார் தெரியுமோ? நமது இளங்கவிஞர் - "குறிஞ்சி இளந்தென்றல்" தான்.
ஆய்வறிவாளர் கா. சிவத்தம்பியுடனான நேர்காணல் தொடர் சென்ற இதழுடன் முடிவடைந்த போதும் திறனாற்றல் கொண்டிருந்த போதிலும், காழ்ப்புணர்ச்சி கலையாத எஸ். பொன்னுத்துரையின் நேர்காணல் தொடர்கிறது. அவசியம் படித்துப் பார்த்து, அவருடைய பார்வையில் இலக்கியத் தகவல்களை நாம் கிரகித்துக் கொள்ளலாம்.
சிறுகதைகள், கவிதைகள், கட்டுரைகள், நூல் மதிப்புரை, புதிய நூலகம், வாசகர் பேசுகிறார் ஆகிய வாசிப்புக்குப் பயன்தரும் அம்சங்களும் இடம் பெற்றுள்ளன.
"பகிர்தலின் மூலம் விரிவும் ஆழமும் பெறுவது ஞானம்" என்பதில் உண்மையுண்டு. ஞானசேகரன் திட்டமிட்டுத் தமது ஏட்டை, பலத்த நஷ்டங்களுக்கு மத்தியிலும் தொடர்ந்து வெளியிட்டு வருவது துணிகர மான செயல் தான். இலண்டனில் நூலகவியலாளராக இருந்து வரும் என். செல்வராஜா எழுதிய "ஈழத்தின் வடபுலப் பெயர்வும் அது தொடர் பான இலக்கியங்களும்" என்ற கட்டுரை, ஆய்வாளர்கள் அவசியம் படித்துப் பயன்பெற வேண்டிய தொன்று.
"நெய்தல் நம்பி" ஒர் அருமையான எழுத்தாளரும், செய்தியாளரு மாவார். "நவமணி" பத்திரிகையில் சிறிது காலம் பிரதம ஆசிரியராக இருந்து அந்த வார இதழை நான் ஆரம்பித்து வைத்த போது, நண்பர் "நெய்தல் நம்பி" அங்கு பணிபுரிய வந்தார். அதற்கு முன்னர் சிலாபத்தில் நண்பர் எஸ்.எம்.ஜே. பைஸ்தீன், இவரை அறிமுகப்படுத்தியிருந்தார்.
பைஸ்தீன் இப்பொழுது தினகரன் வெளி நாட்டுச் செய்திப் பிரிவில் பணி புரிகிறார் என நினைக்கிறேன். நெய்தல் நம்பி "தினக்குரல் நாளிதழில் பணி புரிந்ததை நான் அறிவேன். ஏனெனில், நான் ஒமானில் இருந்த பொழுது (1997 - 2000) என்னைப் பேட்டி கண்டு "ஞாயிறு தினக்குர"லில் வெளியிட்டார். அந்தப் பேட்டியை எனது "திறனாய்வு என்றால் என்ன?" என்ற நூலில் சேர்த்திருக்கிறேன்."ஞானம்" இதழில்
94

கே.எஸ். சிவகுமாரன்
நெய்தல் நம்பி எழுதிய நியாயபூர்வமான கேள்விகளும் ஆலோசனை களும் வெகு பொருத்தமுடையன.
மலேசியா எழுத்துலகு பற்றிய ஒரு செய்திக் குறிப்பு அவசியம். நாம் அறிய வேண்டிய தகவல். "செங்கை ஆழியானின்" தொடர் போதனைகள், "இசை வேள்வி" பற்றிய குறிப்பு (உஷாதேவி பாலச்சந்திர ஐயர்) "சாரல் நாட"னின் தோட்டப்புறக் கதைகள் ஆகியன சுவாரஸ்ய மான முறையில் எழுதப்பட்டுள்ளன.
துரைமனோகரன் பல விஷயங்களையும் தொட்டு மிக எளிமை யான விதத்தில் தகவல்களையும், அபிப்பிராயங்களையும் தருகிறார்.
வீணைவேந்தன் சிறுவர்க்கான ஓர் அழகிய பாடலைத் தந்திருக் கிறார்.
நெடு நாட்களுக்குப் பின் "ஏழ்மை அவனுக்கொரு தூசி" என்ற பெயரில் ஒரு நல்ல சிறு கதையை முத்துமீரான் தந்துள்ளார்.
செ. சுதர்சனின் "பார்வையும் பதிவும்" ஒவ்வொரு இதழிலும் இடம் பெற வேண்டிய அத்தியாவசியப் பதிவுகள்.
வே. சுப்பிரமணியச் செல்வனின் "வீசி எறிகிறேன்" கவிதை அதன் திருப்பு முனை முத்தாய்ப்பு காரணமாகக் கவனத்தை ஈர்க்கிறது.
'ஞானம்' ஏட்டில் "நக்கீரன்" எழுதும் மதிப்புரைகளை நான் முன்னரும் பார்த்திருக்கிறேன். சிக்கனமாக அவர் எழுதும் மதிப்புரை கள் பெரும்பாலும் ஏற்றுக் கொள்ளத் தக்கவையாய் இருக்கின்றன. இந்த இதழில் இரண்டு மதிப்புரைகளை எழுதியிருக்கிறார். "வாதராயணன்" ஒன்றையும், நா. சோ இரண்டையும் மதிப்புரையாக எழுதியுள்ளனர்.
இவற்றை விட "புதிய நூலகம்" என்ற பகுதியிலும் சில வெளியீடு கள் அறிமுகமாகியுள்ளன. மட்டக்களப்பின் முன்னணி எழுத்தாளரும் கவிஞருமான செ. குணரத்தினத்தின் அண்மைக்கால கவிதையைப் படிக்க சந்தர்ப்பம் கிடைத்துள்ளது.
95

Page 55
சொன்னாற்போல.
"வாசகர் பேசுகிறார்" பகுதியில் பஞ்சமன் எழுதிய கடிதம் ஓர் அருமையான நையாண்டி,
காநடராஜா கடிதம் தொடர்பாக ஒன்றை நான் கூற விரும்புகிறேன். கம்பராமாயணத்தில் வரும் "அல்குல்" என்ற சொல்லின் விளக்கத்தைப் பலரும் தந்துள்ளனர். அகராதிகளில் கூட அது பெண்ணின் பிறப்புறுப்பு என்று சொல்லப்படுகிறது. எனக்கென்னவோ அந்தச் சொல் பெண்களின் இடுப்புக்கும் தொடைக்குமிடையேயுள்ள பின் பகுதி முழுவதுமையே குறிப்பதாகப்படுகிறது. கம்பரின் ராமாயணத்தில், குகன் படகில் பெண்களையும் ஏற்றிச் செல்லும் பாடல்களில் வரும் வருணனைகள் பெண்களின் பிருஷ்டப் பகுதியையே "அல்குல்" என்ற பிரயோகம் மூலம் உணர்த்தப்படுகிறது என்பது எனது வாசிப்பு.
வே. தினகரன், சாரங்கா தயானந்தன், இணுவையூர் சிதம்பர திருச்செந்திநாதன், ஓட்டமாவடி அறபாத், த. சித்தி அமரசிங்கம் ஆகியோ ரும் தமது குறிப்புகளைத் தெரிவித்துள்ளனர்.
நெடு நாட்களாகவே எழுதி வரும் முன்னணிக் கவிஞர்களுள் ஒருவர் கல்வயல் வே. குமாரசாமி, இவருடைய "புதுப்பஞ்ச தாண்டவம்" என்ற கவிதை இம்மாத "ஞானம்" இதழின் முத்திரைப் படைப்பு எனலாம். நாட்டு நடப்பின் உள்ளார்ந்த தன்மையை மிகமிகத் திடமாக அவர் சக்திமிகு வார்த்தைப் பிரயோகத்தால் எள்ளிநகையாடுகிறார். அற்புதமான சொல்லடுக்கு. அணிகள் சேர்ந்த கவிதை இது.
தினக்குரல் 09.12.2004
96

ஆய்வறிவின் கூறு சமூக அறிவு
சமூகம் - அதன் அசைவியக்கம் பற்றிய ஓர் ஆய்வேடு தமிழில், அதுவும் ஈழத்தில், வெளிவந்து கொண்டிருப்பது ஒரு பெரிய விஷயந் தான். இத்தகைய ஆய்வுறிவுத் தேடல்கள் நமது சிந்தனைப் பரிமாணத் தைச் செப்புவதுடன் நில்லாது அறிவுத் தேடலின் பரிணாம வளர்ச்சியை யும் காட்டி நிற்கும் அல்லவா?
ஜனரஞ்சகமான முறையில் ஊடகத்துறையினர். களிப்பூட்டலுடன் சிற்றறிவுப் பெருக்கத்துக்குத் துணை போகும் அதேவேளையில், உயர்கல்வி மட்டத்தில், எதனையும் ஆய்வறிவு ரீதியில் நோக்கும் பாங்கை வளர்ப்பதற்கான முயற்சிகள் அரிதாகவே இடம் பெறுகின்றன. அத்தகைய ஏடுகள், நான் அறிந்தமட்டில், தமிழில் இல்லை எனலாம். யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் பல ஆண்டுகளுக்கு முன் சிந்தனை' என்ற ஒரு பருவகால ஏட்டைக் கொணர்ந்தது. இடையில் அது நின்று விட்டது. ஆய்வறிவுப் பாங்கில் சிந்தித்து கூடிய வரை அவ்வாறு இயங்க முற்படும் கே. சண்முகலிங்கத்தின் ஆர்வம் காரணமாக "பண்பாடு" என்றொரு ஏடும் வெளிவந்து கொண்டிருந்தது. இந்த ஏடு தொடர்ந்து வருகிறதா என்று தெரியவில்லை.
இந்தப் பின்னணியிலே, சமூக அறிவு (Camuka Arivu) என்ற பெயரில் (தொகுதி - 1 இதழ் 1, 2 ஆகியன) 2004 ஜூலை மாதம் வெளியாகியிருக்கிறது என்பதனை நம்மில் பலர் அறிந்திலோம்.
ஆய்வறிவு' என்று நான் இங்கு குறிப்பிடுவதை ஆங்கிலத்தில் Intelectual Pursuits எனக் கூறலாம். இன்டலக்ஷ0வல்ஸ்' என்போரை ஆய்வறிவாளர்' என்று அழைப்பதையே நான் விரும்புகிறேன். இந்தப் பதத்தை அமரர் க. கைலாசபதி அறிமுகப்படுத்தினார். கவிஞர் இ. முருகையனும் இதனையே பயன்படுத்துவார். ஆயினும், எல்லா
97

Page 56
சொன்னாற்போல.
வற்றிற்கும் தமிழ்நாட்டு அறிஞர்கள், ஊடகத்துறையினர். சினிமாக்காரர் போன்றவர்களைப் பின்பற்றும் நாம் இன்டலெக்ஷ0வல்ஸ்' என்பதைப் 'புத்திஜீவிகள்' என அழைத்து வருகிறோம். இது தவறான விளக்கம் என்பதை நாம் அறிவதில்லை. 'புத்திஜிவிகள்' என்றால் புத்தியைக் கொண்டு ஜிவிப்பவர்கள் என்ற பொருள்படும் என்பது வெளிப்படை. இது ஆய்வறிவை மிகவும் மலினப்படுத்தும் ஒரு பிரயோகம் என்பதனைச் சிறிது சிந்தித்துப் பார்த்தால் தெரியும். போகட்டும்.
சரி, சமூக அறிவு என்ற இந்த 190 பக்க நேர்த்தியாகப் பிரசுரிக்கப் பட்ட ஆய்வேடு, யாரால், யாருக்கு, எதைக் கூறுகின்றது என்று பார்ப்போமா?
ஏறக்குறைய உயர்மட்ட ஆங்கில கல்விப் பாங்கான (Academical) ஏடு போன்று தொகுக்கப்பட்டிருக்கும் இந்த அருமையான புத்தகம் எப்படி அறிமுகமாகிறது?
"சமூக அறிவு" குமரன் புத்தக இல்லத்தினால் (201, டாம் வீதி, கொழும்பு - 12 தொலைபேசி 2421388) வருடம் இருமுறை (தை, ஆடி) வெளியிடப்படும் புலமைத் தர உசாவல்களுக்கு உட்படுத்தப்பட்ட சமூக அறிவு அதன் அசைவியக்கம் பற்றிய, புலமைப் பேறுகளை ஒருங்கிணைக்கும் ஓர் ஆய்விதழ் ஆகும்."
மேற்கண்ட விவரணையின் தமிழ் நடையை அவதானிக்கையில் அது நமது ஆய்வறிவாளர் கார்த்திகேசு சிவத்தம்பியின் செல்வாக்குக்கு உட்பட்டதோ என்று ஐமிச்சம் கொள்ள வைக்கிறது. அதனால் என்ன? யாவும் உள்ளடக்கிய (Comprehensive) இலக்கை அக் கூற்று வெளிப்படுத்தி நிற்கிறது என்போம்.
இந்த அருமையான ஏட்டின் நிர்வாக ஆசிரியர் - கணேசலிங்கம் குமரன். பல பேராசான்கள் துணை நிற்கிறார்கள் : கா. சிவத்தம்பி. நா. பாலகிருஷ்ணன், அ.சிவராசா, சோ. சந்திரசேகரன். எம்.எல்.ஏ. காதர் பி.வி. சிவநாதன் ஆகியோருடன் கலாநிதி க. ரகுராகவனும் இந்தக் குழுவில் இடம்பெறுகின்றார். இந்த ஏட்டின் ஆசிரியர் பேராசிரியர் வி. நித்தியானந்தம்.
98

கே.எஸ். சிவகுமாரன்
கட்டுரைகள், நூலாய்வு, நூல் விமர்சனங்கள் ஆகிய மூன்று தலைப்புகளில் சில ஆய்வாளர்கள் சமூக அறிவைப் பகிர்ந்து கொள்கின்றனர். அத்துடன், "அஞ்சலி" என்ற தலைப்பிலே, மறைந்த மேனாட்டு ஆய்வறிவாளர் பற்றிய குறிப்புகளும் இடம்பெறுகின்றன.
யாழ்ப்பாணச் சமூகப் பாரம்பரியத்தில் கட்டடம் பற்றிய எண்ணக் கரு (கா.சிவத்தம்பி), நிறுவனக் கோட்பாடுகளும் சந்தைப் படுத்தல் ஆய்வுகளும் - அவை மத்தியிலான கருதுகோள் ரீதியான தொடர்பு (க. ரகுராகவன், ஜ ரகுராகவன்), ஈழத்தமிழரும் மருத்துவக் கல்வியும் அதன் சமூகப் பொருளாதாரப் பரிமாணம் (வி. நித்தியானந்தம்), மேலாதிக்கமும் அதன் தடுமாற்றமும் (நோஆம் சொம்ஸ்கி, மோதலும் மோதல் தீர்வும் ஜயதேவ உயங்கொட) - இவை எழுதியவர்களும், எழுதப்பட்ட பொருள்களுமாகும்.
இக்கட்டுரைகள் ஒவ்வொன்று பற்றியும் எனது மதிப்பீட்டைத் தெரிவிக்குமளவுக்கு, இத்துறைகளில் எனக்குப் புலமையில்லை என்பதை நீங்கள் அறிவீர்கள். ஆயினும் இவற்றைப் படித்துப் பார்த்ததன் மூலம் பல்துறையறிவை நான் பெற்றேன் என்பது எனக்கு நிறைவைத் தருகிறது. உங்களுக்கும் அப்படித்தான் அமையும். படித்தறிய முயல்க.
பேராசிரியர் வி. நித்தியானந்தம் தனது ஆசிரியர் உரையில் கூறுகிறார்.
"ஈழத்தமிழர் இன்று பல நிலைகளிலும் எதிர் நோக்கும் பிரச்சினை கள் சமூக விஞ்ஞானிகளால், அவர்களது அறிவையும் அனுபவத்தையும் பயன்படுத்தித் தீர்க்கப்பட வேண்டியவையாயிருப்பினும், அத்தகைய பங்களிப்பைச் செய்யக் கூடிய சமூக விஞ்ஞானிகள் ஈழத் தமிழர் மத்தியில் இல்லையென்பது தான் யதார்த்தம்"
ஆங்கிலத்தைப் பயன்படுத்தாது தமிழிலேயே ஆய்வுகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்று ஆசிரியர் வலியுறுத்தியிருப்பது இங்கு குறிப்பிடத்தக்கது. அதே வேளையில், "மூல ஆக்கங்களுடன் தேவைக்கேற்ப ஒரு சில தழுவல் ஆக்கங்களையும் சமூக அறிவு
99

Page 57
சொன்னாற்போல.
பெரும்பாலும் கொண்டிருக்குமென எதிர்பார்க்கலாம்" எனவும் ஏட்டில் ஆசிரியர் சேர்த்துள்ளார்.
இந்த முதலாவது ஏட்டிலே, "அஞ்சலி" என்ற தலைப்பிலே எட்வர்ட் சயித், போல் மார்லர் சுவிசி ஆகியோர் பற்றிய விபரங்களை ஆங்கில்த்தில் படித்துத் தமிழில் தர நான் முற்பட்டிருக்கிறேன். படித்து மதிப்பீடு செய்க.
நூலாய்வுகளைப் பேராசிரியர்கள் வி. நித்தியானந்தம், கார்த்திகேசு சிவத்தம்பி ஆகியோரும், நூல் "விமர்சன"ங்களை (ஏன் மதிப்பீடு' என்று கூறமுடியாது, 'விமர்சனம்' ஒரு Negative கருத்தை உள்ளடக்குகின்றது என்பது என் கருத்து) முதுநிலை விரிவுரையாளர் த. பேரின்பநாதன், மேலதிக செயலாளர் க. சண்முகலிங்கம் ஆகியோர் எழுதியுள்ளனர்.
ஆழமாக நமது பிரச்சினைகளைப் பற்றிச் சிந்திக்க வேண்டிய வர்கள் இந்த சமூக அறிவுத் தேடலினால் மிகப் பயன்பெறலாம் என்பது எனது எதிர்பார்ப்பு.
தினக்குரல் 16.09.2004
100


Page 58


Page 59
Gaga Goo சிவகுமாரன் அவர்களின் பத் இத் தொகுப்பின் கணிசமான ി ി ഒിട്ടി ഖണ് ിക്കിട്ട് രാ இன்றைய சந்தியினருக்கு ിട്ടീട്ടിട്ടിട്ട് இத்தகைய இனங்காட்டை ബട്ട ബട്ടത്ര ി ട്ടാ 5 51 ിട്ടു ിഖാ പ്ര ിഭാ
നെ ട്ടിയെ ഖ5 | Օելլի տրանտո օծի ീ ബ്രിട്ട ബി
ബട് நடையும் எளிமையானது
on