கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: தமிழ்க் கடவுள் முருகன் வரலாறும் தத்துவமும்

Page 1


Page 2


Page 3

தமிழ்க் கடவுள் முருகன் : வரலாறும் தத்துவமும்
இராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம் (ராஜேஸ் பாலா) எம்.ஏ, (மருத்துவ மாந்தரியல்), பி.ஏ. (ஆனர்ஸ்) (திரைப்படம் & வீடியோ) ஆர்.ஜி.என், ஆர்.எஸ்.சி.என். & நலக் கல்விச் சான்றிதழ்
நிகழ் 123, காளீசுவரர் நகர், கோயம்புத்தூர் - 641009

Page 4
Title
Author "
Address
Copy Right
First Edition
Publisher
Typeset
Printed by
Pages
Prize
: Thamizhk Kadavul Murugan :
Varalaarum Thathuvamum (Murugan, the Tamil God in History & Philosophy)
Rajeswari Balasubramaniam (Rajes Bala)
47, Norman Avenue, Woodgreen, London N 22 SES UK
C Author
May, 2000
K. Palanisamy (Gnani) Nigazh 123, Kaleeswarar Nagar, Coimbatore - 641 009. Tamil Nadu, India.
G.M. Systems, 10th Street, Gandhipuram, Coimbatore - 12
G.M. Print Systems
120 + 8
Rs... 35/-

அணிந்துரை
முனைவர் சி. மகேசுவரன் அரசு அருங்காட்சியகம்
எம்ஏ, எம்ஏ, பிஎச்டி, கோயம்புத்தூர் மாவட்டம் காப்பாட்சியர்
"சமய வழிபாடு" ஒரு பண்பாட்டின் இன்றியமையாக் கூறாகும். எனவே, ஒரு சமுதாயத்தின் பண்பாட்டினை விளக்கமுறத் தெரிந்து, தெளிந்து கொள்வதற்கு அச் சமுதாயத்தில் கடைப்பிடிக்கப்படும் சமய வழிபாட்டு முறைகளை விரிவாக அறிந்து கொள்ள வேண்டியுள்ளது.
"சேயோன் மேய மைவரை உலகம் மாயோன் மேய காடுறை உலகம் வேந்தன் மேய தீம்புனல் உலகம்
என நானிலங்களின் சமய வழிபாட்டிற்கு இலக்கணம் வகுத்த தமிழர் வழி நின்று நோக்கும் எவரும் "முருகன் தமிழ்க் கடவுளே" என ஒரனியில் நின்று ஒருமித்த குரலில் உரிமைக் குரல் எழுப்புவர். இத்தகைய அணியிலிருந்து வந்துள்ள குரல்களுள் தெளிவுபடத் திறம்பட ஒலிக்கும் குரலாகத் தற்போது எழுந்துள்ளதே இலண்டன் தமிழ் எழுத்தாளர் திருமதி இராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம் அவர்களின் "தமிழ்க் கடவுள் முருகன் : வரலாறும் தத்துவமும்" எனும் இந் நூல்.
இந் நூலாசிரியர் - இந் நூலின் வாயிலாக - இந்தியாவிலும் இலங்கையிலும் தமிழ்க் கடவுள் முருகன் பெறும் இடத்தினை நன்கு நமக்குப் படம் பிடித்துக் காட்டுகிறார். தமது இந்நூலில் இராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம் தென்னிந்தியாவில்

Page 5
தமிழ்நாட்டுத் தெய்வமாக விளங்கும் 'முருகன்' வட இந்தியாவில் 'ஸ்கந்தனாக அடையாளப்படுத்தப்பட்டதற்கு அலெக்சாண்டரின் வட இந்தியப் படையெடுப்பைக் காரணமாகக் காட்டும்போது நம்முள் வியப்பு எழுகிறது. அதே நேரம், தமிழ்க் கடவுள் முருகன் இன்றைக்கு சிங்கள ஆரியரது காவல் தெய்வமாகக் கொண்டாடப்பட்டுத் தமிழரிடமிருந்து பிரித்துக் காட்டும் முயற்சி இலங்கையில் நடைபெறுவதைக் காட்டும் போது நம்முள் வருத்தம் தோன்றுகிறது.
தமிழர்க்கான கடவுள் என முருகனை அடையாளம் காட்டும் தமது முயற்சியின்போதே இந் நூலாசிரியர் ஆரியர் - திராவிடர் இன, மொழிச் சிக்கல்களையும் ஆங்காங்கே எடுத்துக் காட்டுகிறார். அதன் வாயிலாகத் திராவிடரின் - அதிலும் குறிப்பாகத் தமிழரின் - தொலைந்துபோன முகத்தையும் தொட்டுக் காட்டிச் செல்கிறார். இதற்குச் சான்றாகத், "திராவிடத் தொன்மையின் தொலைந்துபோன சில கோட்பாடுகள் அல்லது மறைக்கப்பட்ட அல்லது மறுக்கப்பட்ட உண்மைகளின் வெளிப்பாடே முருக வழிபாடாகும்" - எனும் இவரது வைர வரிகளைக் குறிப்பிடலாம்.
முருக வழிபாட்டின் இயல்பை, இனிமையை, வாழ்வை, வரலாற்றை, மெய்யியலை ஒரு துறைசார் ஆராய்ச்சியாக மட்டும் நோக்காமலும் மேற்கொள்ளாமலும் தொல்லியல், வரலாறு, மாந்தரியல், நாட்டுப்புறவியல், தமிழியில் எனும் பல்துறைசார் ஆராய்ச்சிகளின் வாயிலாக நிறுவும் இவரது ஆராய்ச்சிப் போக்கு "முருக வழிபாட்டு ஆராய்ச்சிப் பாதை"யில் ஒரு மைல் கல் எனலாம். சான்றாக, "இலங்கை வாழ் (மண்ணின் மைந்தராம்) ஆதிக் குடிகளான வேடுவர், முருகனைத் தமது "மைத்துனராகக் கொண்டாடுதலைக்" குறிக்கும்போது இவரது மாந்தரியல் ஆய்வுப் போக்கையும் "பக்தி மார்க்கம் ஆரியப் போலிகளைச் சிதறடித்து இந்தியா முழுதும் பரவியதாக வரலாறு கூறுகிறது"

எனும்போது இவரது வரலாற்று ஆய்வுப் போக்கையும் "கடவுளரது வரலாறுகளையும் ஒவ்வொரு காலகட்டத்தின் வரலாற்று நிகழ்வுகளோடு அல்லது தொன்மைக் கதைகளுடன் இணைத்துப் பார்த்தல் நலம்" என்று எடுத்துரைக்கும்போது வரலாற்று, நாட்டுப்புறவியல் ஆய்வுப் போக்கையும் "முருக வழிபாட்டு வளர்ச்சி தமிழ் என்ற மொழியின் வளர்ச்சியாகும். அந்த மொழிக்கும் பண்பாட்டிற்கும் தமிழர் கொடுத்த மிக மிக உயர்ந்த இடம்தான் முருக வழிபாடாகும்" எனும்போது தமிழியல் ஆய்வுப் போக்கையும் நம்மால் கண்டு, களிப்புற இயல்கிறது.
இந் நூலின் மைய இழையாக ஒடும் "சில கடவுளர்கள் காலத்திற்குக் காலம் மேன்மைப்படுத்தப்படுகின்றனர் அல்லது அவர்களது முதன்மையை வேறு சில கடவுளர்கள் எடுத்துக் கொள்கின்றனர். ஆனால், முருகன் மட்டும் தமிழர் பக்தியுடன், மொழியுடன், பண்பாட்டுடன், தத்துவத்துடன் வளர்ந்து கொண்டே போகிறார்" எனும் இந் நூலாசிரியரது கூற்றே இந் நூலின் மையக் கருத்து எனச் சுருங்கக் கூறலாம்.
தமிழரது பண்பாட்டு அடையாளத்தை மீட்டுருவாக்கம் செய்திடும் நெடிய ஆராய்ச்சிப் பயணத்தில் இதுபோன்ற நூல்கள் கலங்கரை விளக்கங்கள் எனில் அது மிகையாகாது. தமிழ் எழுத்துலகில் இலக்கியப் படைப்பாளி திருமதி. இராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம் அவர்களின் முதல் ஆராய்ச்சிப் பணி இது எனும்போது இது முதல் ஆராய்ச்சிப் பணி மட்டுமன்று முத்தான ஆராய்ச்சிப் பணியுமாகும் என வாழ்த்தத் தோன்றுகிறது.
வாழ்க இந் நூலாசிரியரது கருத்துப் பணி
இடம் :கோவை -641009 வாழ்த்துக்களுடன், நாள் :20-2-1999 (ஒ-ம்) சி. மகேசுவரன்

Page 6
ܥ
நிர்மலன் பாலசுப்பிரமணியம் அருணன் பாலசுப்பிரமணியம் சேரன் பாலசுப்பிரமணியம்
ஆகிய என் அன்பான குழந்தைகளுக்கு இந் நூல் காணிக்கை.
- இராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம்
நன்றி
இந்த நூல் வெளியிடுவதற்கான நிதி உதவி செய்தவரும் என் மரியாதைக்குரியவருமாகிய திரு. கே. நீலகண்டன் அவர்களுக்கு என் மனம் நிறைந்த நன்றி. அவரது முகவரி:
K. NEELAKANDAN
LAKSHMI JEWELLERS, 276, HIGH STREET NORTH, EAST AM, LONDON - El 2 6 S. A TEL : O2O - 847O - 56OO FAX O2O - 847O - 34.48 MOBILE : 07930 - 440 - 876
- இராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம்

7.
(உள்ளடக்கம்)
ஆரியர் பார்வையில் ஸ்கந்தன்
கிரேக்க அலெக்சாண்டரும் இந்து ஸ்கந்தனும்
தொல் தமிழரும் முருக வழிபாடும்
வள்ளியும் முருகனும்
முருக வழிபாட்டில் ஆரிய மரபும்
திராவிட மரபும் - ஓர் ஒப்பீடு
முடிவுரை
நெறித்துணை ஏடுகள்
நூலாசிரியரோடு நேர்காணல்
படைப்பாளர் வாழ்வியல் விவரங்கள்
29
41
81
89 -
94
,100
103

Page 7

1. முன்னுரை
'கலியுக வரதன்' என்று தமிழால் பெயர் அளிக்கப்பட்ட முருகன் இன்றைய காலகட்டத்தில் தமிழரின் மிகத் தலையாய கடவுளாகத் துதிக்கப்படுகிறான். ஒரு சமுதாயத்தின் வழிபாட்டு, வணக்கமுறைகள் என்பன அம் முறைகளின் பின்னணியிலமைந்த நம்பிக்கைகளை மற்றும் அச் சமுதாயத்திலிருந்து மறைந்துபோன அல்லது இன்றும் நடைமுறையிலிருக்கும் அல்லது புதிதாக மலர்ந்து, வளர்ந்து கொண்டிருக்கும் தத்துவக் கோட்பாடுகளின் வெளிப்பாடாகும்.
முருக வழிபாடும் தமிழர் பண்பாடும் ஒன்றுடன் ஒன்று இறுகப் பிணைந்திருக்கின்றன என்பதைத் தமிழரின் வரலாற்றையும் கடவுள் வழிபாட்டு முறைகளையும் பார்த்தால் எளிதாகப் புரியும். தமிழரின் தொன்மையும் முருக வழிபாடும் காலப் போக்கில் எவ்வாறு மாறின அல்லது அடுத்தவர் பண்பாட்டால் குழம்பின என்பதையும் வரலாற்றின் வாயிலாகத் தெரிந்து கொள்ளலாம். முருகனின் மூலத்தை ஆராய்ந்தால், வேத காலத்திலிருந்து இன்றுவரை படைக்கப்பட்ட பல படைப்புகளுள் முருகனைப் பற்றிய விவரங்களைக் காணலாம். அவ் விவரங்களுள் பல சிந்தனையைத் தூண்டுவனவாக உள்ளன. ஏனென்றால், அவற்றுள் எத்தனையோ தகவல்கள் முன்னுக்குப் பின் முரணாக இருக்கின்றன.
சமய வழிபாடு தொடர்புடையனவற்றை உணர்வுபூர்வமாக ஆராயும்போது அதைப் படித்தோர்க்குப் பக்தியும் பரவசமும் 'உண்மையென நம்பும் உணர்வு நிலையும் வரலாம். ஆனால், அதேசமயக் கருத்துக்களை அறிவுபூர்வமாக ஆராயும்போது அக் கருத்துகள் தோன்றியதன் அடிப்படைக் காரணிகள்

Page 8
(தமிழ்க் கடவுள் முருகன்:வரலாறும் தத்துவமும்) (10)
என்னவென்று ஆராய்தல் முகாமையாகும். அக் கருத்துகள் அச் சமயத்தில் பற்றுள்ள மக்களின் வாழ்க்கையுடன் எவ்வாறு தொடர்புபட்டிருக்கின்றன என்பதை உணர்தல் மேலும் முகாமையாகும்.
சமுதாய வாழ்க்கையின் மாற்றங்கள் அரசியல், பொருளியல்
காரணங்களால் நடக்கின்றன. இதனைத் தொடர்ந்து, கடவுளர்களும் அவர்களைப் பற்றிய கருத்துகளும் காலத்திற்கு
ஏற்றபடி மாறுகின்றன. m
இன்றைய கால கட்டத்தில் இந்தியத் துணைக் கண்டத்தில் அயோத்தியில் பாபர் மசூதி இடிக்கப்பட்ட நாளிலிருந்து 'இராமர் வழிபாடு தேசியமயமாக்கப்படும் நிலைவரை பிரச்சாரம் நடக்கிறது. இராமர் இந்துக்களின் கடவுளாக மேன்மைப்படுத்தப்படுகிறார். உலகத்தில் முதன்மையாக நிற்கும் பெரும்பான்மைச் சமயங்களான கிறித்துவம், இசுலாம், பெளத்தம், சமணம், சீக்கியம் என்பனவற்றின் வரலாறுகளைப் படிக்கும்போது அச் சமயங்களின் தோற்றங்கள் மிகத் தெளிவாக இருக்கின்றன என்பது புலப்படும். அச் சமய மாறுதல்களின் காரணங்களும் வரலாற்றோடு தொடர்புடையனவாகத் தெரிகின்றன. அந்தந்தச் சமயங்களின் முன்னோடிகளும் தெளிவாக அடையாளம் காணப்படுகின்றனர்.
ஆனால், இந்து சமயத்தை ஆராய்ந்து பார்த்தால் அவ்வாறான தெளிவானதோர் அமைப்புக் கிடையாது என்பது தெரிய வரும். உலகிலேயே மிகத் தொன்மையான சமயம் என்று அறியப்படும் இந்து சமயம் எத்தனையோ சமயங்களை உள்ளடக்கிய பெரியதொரு சமயம் என்பதும் புலப்படும். இந்தியாவின் நூறு கோடி மக்களுள் 3 சதவீதமான ஆரியர்கள்

தங்களை இந்து சமயக் காவலர்கள் என நினைத்துக் கொள்கிறார்கள். பிரத்துக்கும் மேற்பட்ட தெய்வங் e நான்காயிரத்துக்கும் மேற்பட்ட சாதியமைப்புகளையும் இந்து சமயத்தைவிட வேறு எச் சமயத்திலும் காணவியலாது.
இத்தகைய 'இந்து சமய வளர்ச்சிக்கும் மாற்றத்திற்கும் தமிழர்களால் தங்கள் கடவுள் என உரிமை கொண்டாடப்படும் - 'முருகன்' செய்த பங்களிப்பினை ஆராய்வதே இச் சிறு நூலின் நோக்கமாகும். 'முருகனை அல்லது ‘கந்தனை' அல்லது "ஸ்கந்தனைச் சொந்தம் கொண்டாட இந்தியாவிலும் இலங்கையிலும் எத்தனையோ வரலாறுகள் உண்டு. இவ் வரலாறுகளுள் எத்தனை உண்மையானவை - எத்தனை முரண்பாடுகளானவை என்று வரையறுத்தல் இயலாததோர் முயற்சியாகும். ஏனென்றால், இவ் வரலாறுகள் அனைத்தும் ஒருவராலோ ஒரு குறிப்பிட்ட காலத்திலோதான் படைக்கப்பட்டன என்று ஆணித்தரமாகக் கூறவியலாது. ஏனெனில், 'முருக வழிபாட்டு வரலாறு ஆரிய வேதங்களிலிருந்து கிரேக்க வீரன் அலெக்சாண்டர் வரை மருவுகிறது; தமிழ் பாண்டி நாட்டிலிருந்து இலங்கையின் தென்பகுதி கதிர்காமம் வரை தொடர்கிறது. இலங்கையில் முருக வழிபாடு மிக மிகத் தொன்மையானது.
சமத்கிருதத்தில் தொடங்கி தமிழின் சந்தக் கவிதைகள் வரை மனம் உருக்குகிறது முருக பக்தி ஒரு குறிப்பிட்ட கால கட்டத்தில் இந்தியாவில் 'சைவம் வளர 'தமிழ் மூலக் கருவாக முதன்மை பெறுகிறது. அக் கால கட்டத்திற்குப் முருகன் 'மக்கள் கடவுளாக உயர்கிறான். இம் மாற்றத்திற்கும் தமிழ்நாட்டில் ஊடுருவிய சமண சமயத்திற்கும் நிறைய

Page 9
(தமிழ்க் கடவுள்முருகன்:வரலாறும் தத்துவமும்)(12)
முருகன் தமிழர் கடவுளே என்பதைப் பண்டைத் தமிழர் வாழ்வையும் வழிபாட்டையும் ஆராய்வோர் நன்கு விளக்குவர். திராவிடத் தொன்மையின் சில கோட்பாடுகள் முருக வழிபாட்டில் வெளிப்படுகின்றன. ஆரிய மரபால் திரிபுபடுத்தப்படாத சில வழிபாட்டு முறைகள் முருக வழிபாட்டின் பல இடங்களில் வெளிப்படுகின்றன. சமய வழிபாடு ஒரு பண்பாட்டின் இன்றியமையாத கூறாகும். இவ் வழிபாடுகளின் பின்னணியில் சமுதாயக் கட்டுப்பாடுகளும் ஒழுங்குமுறைகளும் குடும்ப அமைப்புகளும் மரபு வழியாக அமைய உதவுகின்றன. தமிழரின் தொன்மையை ஆராய நமக்கு இன்றிருக்கும் தடயங்கள் அவர்களின் பழக்க வழக்கங்களும் நம்பிக்கைகளும் சமய வழிபாட்டு முறைகளும் சடங்குகளும் விழாக்களும் நோன்புகளுமேயாகும். −
எந்த ஒரு சமுதாயத்தின் மாற்றமும் அது எதிர்நோக்கும் அரசியல், பொருளியல் பின்னணியில் அமைகிறது. அம் மாற்றங்களினால் தமிழரின் வாழ்க்கை முறை எவ்வாறு மாற்றமடைந்தது, மாறியது என்பதை ஆராய்வது இந் நூலின் நோக்கங்களுள் ஒன்றாகும்.
தனி மனித வாழ்க்கை அவன் வாழும் சமுதாயத்தின் கோட்பாடுகளால் கட்டமைக்கப்பட்டிருக்கிறது அல்லது தாக்கமுறுகிறது. அக் கோட்பாடுகளைத் தாண்டினால் கிடைக்கும் தண்டனை LO பரிமாணங்களால் நிர்ணயிக்கப்படுகிறது. முருக வழிபாட்டில், சடங்குகளில் காணப்படும் தத்துவங்கள் ஏதோ ஒரு வகையில் இன்றைய தமிழரின் வாழ்வில் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கின்றன என்பது அண்மையில் ரஜினிகாந்தின் அமோகப் படைப்பான 'படையப்பா' திரைப்படம் வாயிலாக (1999 வெளியீடு) வெளிப்படக் காணலாம்.

(இராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம்)
தமிழ்க் கடவுள் முருகன் ஒருவிதமான அபரிமிதமான சக்தியாக 20-ஆம் நூற்றாண்டில் கொண்டாடப்படுகிறான். தமிழ்க் கடவுள் எனும் உணர்வை முருகன் கொடுப்பது மிகவும் அபூர்வமானது. அறிவியல் பரந்து நிற்கும் 21-ஆம் நூற்றாண்டிலும் உலகெங்கும் வாழும் தமிழர்கள் முருகனின் தலைமையிலே முதன்மைப்படுத்துகிறார்கள் என்பதற்கு இன்று உலகமெல்லாம் பரந்து வாழும் இலங்கைத் தமிழர் உருவாக்கும் முருகன் திருக்கோயில்கள் சீரிய சான்றாகும். தமிழ்க் கடவுளைப் பராமரிக்க வேண்டியது இந்தத் தமிழர்களுக்கு இன்றியமையாததாக இன்று இலங்குகிறது. தமிழ் வளர்ச்சிக்கும் இந் நம்பிக்கை பலம் கொடுக்கிறது. முருக நம்பிக்கை தமிழரின் உதிரத்தில் ஊறிப் போயிருக்கிறது.
தமிழர்களுள் பெரும்பாலோர் சைவத்தைப் போற்றுகின்றனர். சைவத்தின் முழு முதல் தெய்வம் ‘சிவன்'. அவ்வாறிருக்கச் சிவனின் மகனாக வரலாறு காட்டும் முருகன் எவ்வாறு இன்று தமிழரின் முழுமுதல் கடவுளாகப் பரிணாமம் பெறுகிறான் என்பதையும் முருக வழிபாட்டு நம்பிக்கைகள் உலகமெல்லாம் வாழும் தமிழர்களால் மேன்மைப்படுத்தப் படுதற்குரிய காரணம் என்ன என்பதையும் இந் நூல் ஆராய்கிறது.
முருகன் தொடர்பான வரலாற்றுச் செய்திகள், தொன்மக் கதைகள், நாடகங்கள், நடனங்கள் உள்ளிட்டவற்றில் புதைந்து கிடக்கும் பல தரப்பட்ட தத்துவங்கள் தமிழரின் தற்போதைய சமுதாய மரபு முறைக்கு வரைவிலக்கணம் படைத்திருக்கின்றன.
முருக வரலாறுகள் என்று கூறப்படும் தொன்மக் கதைகள் ஏதோ ஒரு உண்மையின் அடிப்படையில் தொடங்கப்பட்டதாக

Page 10
(தமிழ்க் கடவுள் முருகன்:வரலாறும் தத்துவமும்)(14)
இருக்கலாம். மானிடவியலாளர் கடவுளின் மகிமையை மனிதர்களின் மன வளர்ச்சி, அறிவாற்றல், நம்பிக்கை என்பனவற்றுடன் இணைத்து ஆராய்கின்றனர். மானிடவியல் அறிஞர்களுள் ஒருவரான பிரெளனிஸ்லா மலினோஸ்கி (Bronslow Moinowski) சமய வரலாற்று நம்பிக்கைகள் பற்றிக் குறிப்பிடும்போது, "வரலாற்றில் நடந்ததாகக் காட்டப்படும் நிகழ்ச்சிகள் ஏதோ உண்மைகளைக் கொண்டிருக்கலாம். அவ் உண்மைகள் காலத்திற்குக் காலம் அந்தந்தக் கால கட்டங்களில் வாழும் சமுதாயத்தின் உணர்வுகளை வெளிப்படுத்துதற்கெனத் திரித்துக் காட்டப்படுகின்றன. இதற்குக் காரணம் மனிதர்கள் தங்கள் சமுதாயத்தின் வரையறைகளை நியாயப்படுத்த இச் சமய அற்புதங்களைப் பயன்படுத்துகின்றனர்" என்கிறார். (Shely | Errington, 1979)
தமிழர்கள் பார்வையில்,
"உருவாய் அருவாய் உளதாய் இலதாய் மருவாய் மலராய்ப் மணியாய் ஒளியாய்க் கருவாய் உயிராய்க் கதியாய் விதியாய்க் குருவாய் வருவாய் அருள்வாய் குகனே" (கந்தரனுபூதி) என்று அனைத்துத் தத்துவங்களையும் உள்ளடக்கியவனா யிருக்கிறான் முருகன்.

(இராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம்) 2. ஆரியர் பார்வையில் 'ஸ்கந்தன்'
"முருகனே செந்தில் முதல்வனே மாயோன் மருகனே ஈசன்
மகனே
ஒரு கை முகன் தம்பியே நின்னுடைய தண்டைக்கால்
எப்போதும்
நம்பியே தொழுவேன் நான்" திருமுருகாற்றுப்படையில் இவ்வாறு பாடப்பட்டான் முருகன். இந்தச் சில அடிகளில் முருகனின் இணைப்பு சிவனுடன், திருமாலுடன், கணபதியுடன் தொடர்புபடுகிறது.
சமத்கிருதத்தில் ஸ்கந்த புராணம் எழுதப்பட்ட காலம் கி.பி. 7-ஆம் நூற்றாண்டுக்கும் கி.பி. 1150 -ஆம் ஆண்டுக்கும் இடைப்பட்டதாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது.
இந்தியாவிற்கு ஆரியரின் வருகை கி.மு. 4000 முதல் கி.மு. 1550 ஆண்டுகளுக்கு இடைப்பட்டதாக இருக்கலாம் என்று கருதப்படுகிறது. இருப்பினும், இந்தியாவிற்கு ஆரியரின் வருகை பற்றிப் பலதரப்பட்ட கருத்துக்களும் விவாதங்களும் நடந்து கொண்டிருத்தலை மறுத்தற்கில்லை. அவர்கள் வரும்போது இங்கிருந்த பூர்விகக் குடிகள் பலதரப்பட்ட கூட்டங்களாகப் பரவி வாழ்ந்திருக்கின்றனர் என்பதற்கு மொகஞ்சதாரோ, அரப்பா அகழ்வாய்வுகளில் கிடைத்திட்ட அரும்பொருள்கள் சான்று கூறுகின்றன. இவ் இரு இடங்களிலிருந்து கண்டெடுக்கப்பட்ட தொல்லியல் சின்னங்கள் 'ஆரியர் வருகைக்கு முன் ஓர் ஒழுங்கான, வளர்ச்சியடைந்த, சமுதாய அமைப்புடைய குழுக்கள் இருந்தன என்பதற்குச் சான்று பகர்கின்றன. இவற்றின் காலம் குறைந்தது கி.மு. 2500 ஆண்டுகள் எனக் கருதப்படுகிறது. (K.M. Sen, 1987: 43)

Page 11
(தமிழ்க் கடவுள்முருகன்:வரலாறும் தத்துவமும்) (16)
ஆரியர் படைத்த தொன்மக் கதைகளின் மூலங்கள் அவர்களுடைய வருகைக்கு முன்னரே இந்தியாவில் வாழ்ந்த பூர்வீகக் குடிகளின் மரபுவழிக் கதைகளாக இருக்கலாம். முருக வழிபாட்டைப் பொறுத்தவரையில், முருகன் முழு முதல் கடவுளாகக் காட்டப்படுகிறான். ஆனால், ஆரியக் கடவுளர் எவரும் பரம்பொருளாகக் காட்டப்படவில்லை; வெறும் கடவுளராக மட்டுமே காட்டப்பட்டுள்ளனர் என்பதை இங்குக் கருத்தில் கொள்ள வேண்டும். ஐம்பெரும் பூதங்களுள் பெரிய சக்தியாகச் சூரியனை ஆரியர்கள் உயர்த்திக் காட்டுகின்றனர். இருப்பினும், உலகத்திலுள்ள அனைத்து ஆதிக் குடிகளைப் போன்றே ஆரியரும் சூரியனை முதன்மைப்படுத்தியிருக்கின்றனர் என்பது கருத்தில் கொள்ள வேண்டிய ஒன்றாகும். திராவிடரின் 'உருவ வழிபாடு இயற்கைக்குச் சுயமை கொடுத்த நாகரிகத்தைக் காட்டுகிறது. ஆரியர்களின் வழிபாட்டு முறை திராவிட வழிபாட்டு முறைக்கு நேரெதிரானது. அதாவது, ஆரிய வழிபாடு திறந்த வெளியில் நெருப்பு எரித்து, வேள்வி இயற்றும் சடங்கு நிகழ்வாகவே அமைந்திருந்தது.
சூரியன், வாயு, வருணன், இந்திரன் என்று ஆரியர்கள் வணங்கிய காலத்திற்கு எத்தனையோ தலைமுறைகளுக்கு முன்னரே (திராவிடர் என்று கருதப்படும்) இந்திய ஆதிக்குடிகள் 'இறைமைக்கு உருவம் கொடுத்து அதனை ஆண், பெண் தெய்வங்களாக வணங்கியிருக்கின்றனர். மனிதத்தைத் தெய்வமாகப் படைக்கும் மனப்பாங்கு இது என்று கருதலாம்.
ஆரிய வழிபாட்டில் திருமூர்த்திகளாக சூரியன் (அக்னி), வாயு, இந்திரன் ஆகியோரே குறிப்படுகின்றனர். (John Dowson, 1992 : 3) காலப்போக்கில் இத்திருமூர்த்திகள் இந்திய ஆரியர்களின் கடவுளர்களான சிவன், விஷ்ணு இருவருடனும் இணைக்கப்படுகின்றனர். ஆரியர் வந்தபோது இந்தியா முழுதும்

(இராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம்)
பரவிக் கிடந்த மக்கள் கூட்டம் ஒரே விதமான இனத்தாராகவோ ஒரேவிதமான கடவுளரை வழிபடுவோராகவோ இருந்ததாக எந்தத் தடயமுமில்லை. சிவ வழிபாடு போல் கிருஷ்ண வழிபாடும் மிகவும் தொன்மையானது என்பதற்குத் தடயங்களுண்டு. பல தரப்பட்ட தொல் குடிகளின் வழிபாடுகள் இந்தியா மட்டுமல்லாது உலகம் முழுவதுமுள்ள ஆதிக்குடிகளின் வழிபாடுகளில் ஒரு விதத்தில் ஒற்றுமையுடையதாகத்தான் இருந்திருக்கின்றன. உருவ வழிபாடுகள் ஓர் இனத்தின் நம்பிக்கையில் வளர்ந்திருக்கின்றன. தொன்மங்கள் என்று நாம் கொண்டாடும் கடவுளர் கதைகள் ஒரு காலத்தில் தொல் குடிகளின் நாடோடிக் கதைகளாக இருந்திருக்கலாம். இந் நாடோடிக் கதைகள் அந்தந்தத் தொல்குடிகளின் நம்பிக்கை, அச்சம், எதிர்பார்ப்பு, இழப்புகள், வீரம், சோதனை, சாதனை என்பனவற்றின் அடிப்படையில் அமைந்திருக்கலாம் என்று அறிஞர்கள் கூறுகின்றனர்.
இத் தொன்மக் கதைகளை ஆராயும்போது அவற்றை ஒரு சமுதாயத்தின் வரலாறாக ஆராய்வதா? அல்லது சமய வளர்ச்சியின் அடையாளங்களாக ஆராய்வதா? அல்லது இக் கதைகள் அவர்களின் மொழி வளர்ச்சியைக் காட்டுவதாக ஆராய்வதா? அல்லது அச் சமுதாயத்தின் மனநிலையை விளக்குகிறதா? என்று நோக்கவேண்டும்.
இந் நூலில் முருக வரலாற்றை ஆராயும்போது தமிழர்களின் மொழி வளர்ச்சியையும் சுயமையையும் ஆராய வேண்டியுள்ளது. தமிழர்களின் 'சுயமை' என்று குறிப்பிடும்போது முருக வழிபாடு எந்த அளவிற்குத் தமிழரது தொன்மையை, வாழ்க்கை முறையை, மரபுகளைச், சடங்குகளை வெளிப்படுத்துகிறது என்று பார்க்க வேண்டும். தமிழரின் அறிவு, வீரம், செல்வம், ஆளுமை, அன்பு, கெளரவம் எனும் ஆறு கூறுகளையும் (ஆறுமுகங்கள்) முருகன்

Page 12
(தமிழ்க் கடவுள் முருகன்:வரலாறும் தத்துவமும்)(18)
வெளிப்படுத்துகிறான். தமிழர்களுக்கு முருகன் கலியுக வரதனாக இருக்கிறான். தமிழர்களின் வரலாறு எவ்வளவு தொன்மையானதோ அதே போல முருக வழிபாடும் மிகத் தொன்மையானதாக இருந்திருக்க வேண்டும்.
தமிழர்கள் நிலத்தை வணங்கிய வேளாண்மையாளர்; படைப்பின் முகாமையை முதன்மைப்படுத்தியவர்கள் என்பதற்கு இலிங்க வழிபாடும் யோனி வழிபாடும் ஆதாரங்களாக இருக்கின்றன. அதாவது, படைப்பின் உயர்வைத் தொழுதோர் தொன்மைத் திராவிடர். ஆரியர் வருகைக்கு முன்பே இந்தியாவில் சிவ வழிபாடு இருந்தது என்பதற்கு எத்தனையோ ஆதாரங்களை அறிஞர்கள் கண்டறிந்து வெளிப்படுத்தி இருக்கின்றனர்.
ஆரியக் கடவுளர்களான அக்கினி, வாயு, இந்திரன் என்போர் காலப் போக்கில் முகாமை இழந்து பிரம்மா, விஷ்ணு, சிவனாக மாற்றம் பெற்றனர். இக் கருத்தை எதிரொலிப்பது போல, வெண்டி டொனிகர் ஒ ஃபிலாஹற்றி (Wendy Donigar O' Flaherty (1985)) என்பார் எனும் தம் நூலில் கீழ்க் காணுமாறு பதிவு செய்கிறார் :
"ஒரு விதத்தில் பார்த்தால் எல்லா இந்து இதிகாசக் கதைகளும் ஒன்றுக்கொன்று வேறுபடுவது போன்றிருக்கும்; இன்னொரு விதத்தில் பார்த்தால் எல்லாக் கதைகளுமே ஒரே மாதிரியாகத் தோன்றும். இக் கதைகளில் கடவுளர்களின் வரலாறுகள் எத்தனை ஆழமாக இருந்தாலும் வியக்கத்தக்கனவாக இருந்தாலும் முன்னுக்குப் பின் முரணான தகவல்களைக் கூறுவன போலிருந்தாலும் எல்லாக் கடவுளர்களும் பிரபஞ்சத்தின் அனைத்து எல்லைகளையும் தாண்டியவர்களாகவே
இருந்திருக்கின்றனர்."

(இராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம்)
இவ்வாறு முன்னுக்குப் பின் முரணான தத்துவங்களை நிறைய உள்ளடக்கியது இந்து சமயம். இந்து சமயம் என்றால் என்ன? என்று ஒரு சாதாரண மனிதன் வினவினால் ஒட்டு மொத்தமாக ஒரு தத்துவத்தைக் கூற முடியாத அளவிற்குக் குழப்பங்களைக் கொண்டது இந்து சமயம்
20-ஆம் நூற்றாண்டு இந்திய அறிஞர்களுள் ஒருவரான இராகுல சாங்கிருத்தியாயன் (1893 - 1963) இந்தியச் சமயத் தத்துவங்கள் பற்றி (கணையாழி, ஜூலை, 1993 ப. 34),
"நம் பெளதிக அடிமைத்தனத்துடன் நம் புத்தி, சிந்தனை, பகுத்தறிவுகூட அடிமைத் தளையில் கட்டப்பட்டிருக்கின்றன. பொய்யும் புனைகருட்டுமாகப் பழம்பெருமை பேசுதல்; மந்திர தந்திரங்கள், சோதிடம், ஆருடம் இவற்றுள் ஊறியிருக்கும் விசுவாசம், சாதிச் சடங்குகள், பிறரைச் சுரண்டுவதை, ஏமாற்றுவதை, வதைப்பதைச் சாமர்த்தியமான பிழைப்பாகச் சிலாகிப்பது; கடந்த காலச் சமயத்தில் நிரம்பியிருந்த நெறிகேடுகளை மறந்து, மறைத்து நிகழ் காலத்தைச் சாடுவது; புராதன கிரந்தங்களையும் மகரிஷிகளையும்
போற்றுவது; Sp நாடுகளில் நிகழ்வதை உதாசீனப்படுத்துவது; இல்லாத பெருமைகளை ஏறிட்டுக் கொண்டு பெருமிதம் செருக்குடன் ஆர்ப்பளிப்பது எங்கள் மரபாகிவிட்டிருக்கிறது" என்று குறிப்பிட்டிருக்கிறார்.
இவர் அறுபது ஆண்டுகளுக்கு முன் குறிப்பிட்டதை இப்போது நடக்கும் மாற்றத்துடன் ஒப்பிட்டுப் பார்க்கலாம். 20-ஆம் நூற்றாண்டு வரை வளர்ந்துவிட்ட இந்த இந்து சமயக் குளறுபடிகள் ஒரு குறிப்பிட்ட கால கட்டத்தில் மட்டும் மகா

Page 13
(தமிழ்க் கடவுள் முருகள்: வரலாறும் தத்துவமும்)(20)
விருட்சமாக வளர்ந்து விட்டதா என்று பார்த்தால் பல உண்மைகள் விளங்கும்.
"இந்துக்கள் பெருமையாகச் சொல்லிக் கொள்ளும் இதிகாசம், புராணம், சாஸ்திரம், வேதம், உபநிஷத், வேதாந்தம், சமய கிரந்தங்கள், காவிய நாடகங்கள், நீதி உபதேசங்கள், சரித்திரம், கலை, கலாச்சார நூல்கள் முதலான பழம் பெருமை மூட்டைகளில் 75 சதவீதம் மடத்தனமான பேத்தல்களும் உதவாக்கரைப் பிதற்றல்களும்தான் நிறைந்திருக்கின்றன" என்றும் இராகுல்ஜி (06-09-1993) குறிப்பிடுவதை இங்கு ஒப்பு நோக்குக.
ஆனால், ஆரியரின் வருகைக்கு முன் இந்தியாவில் பரவிக் கிடந்த வழிபாட்டு முறைகள் வேறுபட்டனவாக இருந்திருக்கின்றன. ஆண் கடவுளர்களை முதன்மைப்படுத்திய ஆரிய வழிபாட்டுக்கு எதிராக இந்திய ஆதிக்குடிகள் சக்தி, தாய் வழிபாட்டில் ஊறியிருந்திருக்கின்றனர். ஆரியரின் வரலாறு கி.மு. 3000-க்கும், கி.மு. 1500-க்கும் இடையில் தொடங்குவதாக வைத்துக் கொண்டாலும் அதற்கு முன்பிருந்த நாகரிகம் ஆதிக்குடிகளின் நம்பிக்கைகளின் வெளிப்படையாகவே அமைந்திடக் காணலாம்.
இந்திய ஆதிக்குடிகளின் மொழிகளுள் திராவிட மொழிகளும் அடங்கும் (க.ப. அறவாணன், 1984). திராவிடத் தமிழரோடு தொடர்புள்ள சிந்துவெளி நாகரிக நினைவுச் சின்னங்களும் ஒரு காலத்தில் திராவிடப் பண்பாடு சிறந்து வளர்ந்திருந்தது என்பதை உறுதிப்படுத்துகின்றன.
ஒரு நாகரிகத்தின் வளர்ச்சிக்கு அந் நாகரித்திற்குரிய

(2) (ഉള്ളേഖി ജിഞ്ഞി)
மக்களின் மொழி வளர்ச்சி இன்றியமையாதது. ஆனால், சிந்துவெளி நாகரிகப் பண்பாட்டுடன் தொடர்புள்ள மொழியின் அல்லது மொழிகளின் விவரங்கள் தெளிவாக இன்னும் Bhál iou-sáid சிந்துெ ரி நாகரிகத்தில் புலப்படும் ஒரு வளர்ச்சியடைந்த சமுதாயத்தின் முகாமையான மொழிக்கு என்ன நேர்ந்திருக்கும் என்று சிந்திக்க வேண்டியுள்ளது. இருப்பினும், இந்தியாவின் வடக்கிலிருந்து தெற்கு வரை தமிழர் பரந்து வாழ்ந்திருக்கின்றனர் என்பதை ஒட்டு மொத்தமாகத் தள்ளவியலாது.
ஆரியரின் இருக்கு வேதம் கி.மு. 1200 - இல் எழுதப்பட்டதாகக் கூறப்படுகிறது. இவ் வேதத்தில் வேள்விகள் w ік டுகிறது. விகள்
ஆரியரது சமஸ்கிருதம் இந்திய-ஐரோப்பிய மொழிகளின் அடிப்படையில் அமைந்தது என்பர். இது கிரேக்க - இலத்தீன் மொழிகளுடன் நெருங்கிய தொடர்புள்ளதாகக் கருதப்படுகிறது. எனவே, அவர்கள் படைத்த கடவுளர்களும் கிரேக்க - இலத்தீன் நாகரிகத்தின் வெளிப்பாடுகளாக இருப்பதில் வியப்பொன்றுமில்லை. ஸ்கந்தனையும் இவ் அடிப்படையில் உருவாக்கி யிருக்கலாமோ என்ற கோணத்திலும் ஆராயலாம். எடுத்துக்காட்டாக, கிரேக்க இதிகாசத்தில் மேன்மைமிகு கடவுளான ஜியஸ் (Zeus) உரோமானியப் பண்பாட்டில் ஜூபிட்டராக வழிபடப்படுகிறார். ஆரியரின் கடவுளான இந்திரனுக்கும் மேற் குறிப்பிட்ட கிரேக்க - உரோமானிய கடவுளர்களுக்கும் நிறைய ஒற்றுமைகள் காணப்படுகின்றன.
எடுத்துக் காட்டாக, ஜீயஸ் (Zeus) விண்வெளிக் கடவுளாக
ங்கப்படுகிறார். ஆரிய வேதங்களில் இந்திரன் தேவலோகக் கடவுளாகக் கருதப்படுகிறார். ஆரியக் கதைகளில் வரும்

Page 14
(தமிழ்க் கடவுள் முருகன்: வரலாறும் தத்துவமும்) (22) இந்திரன்போல் ஜியசும் எத்தனையோ பெண்டிரைத்
தேடியலைகிறார்; எத்தனையோ குழந்தைகளுக்குத் தந்தையாகிறார்.
இந்து சமயத்தில் உள்ளதுபோல் மூவாயிரம் கடவுளர்கள் கிரேக்க இதிகாசங்களில் இருப்பதாகத் தெரியவில்லை. ஆனாலும் காதலுக்கு மன்மதன்போல் ஈராஸும் காதல் தேவதையாக அஃப்ரோடைட்டும் வருகின்றனர். இத் தேவதையே ரோமரின் கற்பனையில் 'வீனஸ்' என்ற பெயரில் வலம் வருகிறாள். இந்து சமயத்து ரதி - மன்மதனைவிட இவர்கள் கிரேக்கரது இதிகாசங்களில் மிக முகாமையான இடத்தை வகிக்கின்றனர். இது போன்றே, ஆரிய ஸ்கந்த புராணத்தில் படைக்கப்பட்டிருக்கும் ஸ்கந்தனுக்கும் கிரேக்கக் கடவுளர்களுள் ஒருவரான டையோனியஸுக்கும் இடையே சில ஒற்றுமைகள் உள்ளன. உரோமானியப் பண்பாட்டில் வனங்களின், குறிப்பாக, மரங்களின் தெய்வமாக டையோனியஸ் கருதப்படுகிறார். இக் கடவுளின்மீது மிக ஆழ்ந்த பக்தி கொண்ட பெண்டிர் தங்கள் வீடுகளைத் துறந்து காடுகளில் திரிவதாகவும் குறிப்பிடப்படுகிறது.
ஆரியர்கள் தங்கள் வேதங்களைப் படைத்த பின்புதான் புராணங்களை எழுதினர். இவர்களால் கி.பி. 750 - கி.பி. 1150 கால கட்டத்தில் எழுதப்பட்டதாகக் கூறப்படும் ஸ்கந்த புராணமே மிக நீண்ட தொன்மம் என்று கூறப்படுகிறது. இக் கந்த புராணத்தில் வரும் முருகன் பிறப்பு பற்றிய கதையும் மகாபாரத, இராமாயண இதிகாசங்களில் முருகனின் (ஸ்கந்தனின்) தோற்றம் பற்றிய வரலாறும் முன்னுக்குப் பின் முரணாக இருப்பதற்குக் காரணங்கள் என்னவாக இருக்கும் என்பது ஆராயப்பட வேண்டிய விடயமாகும்.

(இராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம்)
இராகுல சாங்கிருத்தியாயன் (1949) தனது "வால்காவிலிருந்து கங்கை வரை" என்ற நூலில் ஆரியர் வருகைக்கு முன்பு இந்தியக் குடிகள் தொழில் அடிப்படையில் பிரிக்கப்பட்டிருந்தனர் என்று குறிப்பிடுகிறார். ஆனால், அவ்வாறு தொழில் அடிப்படையில் பிரித்தாலும் மனிதர்களை அடக்கி வைத்திருக்கவில்லை என்றும் வலியுறுத்துகிறார். மாறாக, ஆரியரின் 'நால் வர்ணப் பகுப்பு' மனிதனை மனிதன் அடிமைப்படுத்துவதற்கு அமைக்கப்பட்டது என்பதைச் சமூக வரலாற்றாய்வாளர் உறுதிப்படுத்துகின்றனர்.
மனிதர்களின் மன ஆசைகளின் வெளிப்பாடே கடவுளர்களின் படைப்பு என்பது பலரறிந்த உண்மை. ஆனாலும் காலத்துக்குக் காலம் ஆரியர்கள் தவிர்க்க முடியாதவாறு தங்கள் தத்துவத்திற்கு ஒத்துவராத சிலரையும் மேன்மைப்படுத்தி யிருக்கின்றனர். புத்தரை விஷ்ணுவின் அவதாரமாக்கியது இதற்கு ஓர் எடுத்துக் காட்டாகும். நந்தனாரை நாயனாராக்கியது இன்னொரு எடுத்துக் காட்டு. அதே போல, சைவர்களின் கடவுள் அல்லது திராவிடக் கடவுளான சிவனையும் காலப் போக்கில் உருத்திரனாக்கிவிட்டனர். இது போன்றே, ஆதிக்குடிகளின் கடவுளர்களும் ஆரியர்களின் கடவுளர்களான சூரியன், வாயு, இந்திரன் ஆகியோர்களும் காலப் போக்கில் இடம் மாறி மேன்மைப்படுத்தப்பட்டிருக்கின்றனர்.
தொன்மையான புராணக் கதைகள் பெரும்பாலும் எல்லா ஆதிக்குடிகளுக்கும் பொதுவாக இருந்திருக்கின்றன. இத்தகையத் தொன்மக் கதைகளை மனித வரலாற்றுடன் ஒப்பிட்டு ஆராய்வது அக் கால கட்டத்தில் வாழ்ந்த மக்களின் வாழ்க்கையை நாம் அறிய உதவுகிறது.

Page 15
(தமிழ்க் கடவுள்முருகன் வரலாறும் தத்துவமும்)(24)
இந்து சமயக் கதைகள் என்று குறிப்பிடப்படும் இந்தத் தொன்மக் கதைகள் ஒரு குறிப்பிட்ட குழுவினரின் கதைகளாக மட்டும் இருந்திருக்கவியலாது. உருவ வழிபாடு, இந்திய ஆதிக்குடிகளிடமிருந்து ஆரிய வழிபாட்டு முறைக்கு வந்திருக்கிறது. இயற்கையின் வெளிப்பாடுகளான சூரியன், சந்திரன், அக்கினி, பிரபஞ்சம், மின்னல், மழை, காலை நேரம் என்பன உருவமுள்ள கடவுளர்களாக உருப்பெற்றமை காலப் போக்கில் நடந்தேறியிருக்கிறது. இது போன்றே, சிவன், விஷ்ணு, கணபதி, காளி என்போரும் ஆரியக் கடவுளர்களாகக் காலப் போக்கில் மாற்றப்பட்டிருக்கின்றனர். மகாபாரதத்தில் 'கண்ணன்' காட்டப்படுவதற்கு முன்பே 'விஷ்ணு வழிபாடு அபிரா (Abhiro) இனக்குழுவினரால் மேற்கொள்ளப் பட்டுள்ளதை இதற்குச் சான்றாகக் காட்டலாம். கண்ணனை வணங்கிய இனக்குழுவினர் துவாரகைப் பகுதியில் வாழ்ந்த ஆதிக்குடிகளாவர். ஆரியர்களின் கடவுள் அல்லாத கிருஷ்ணன் வட இந்திய நாடோடி இனக்குழுவினரது கடவுளாக இருந்து, ஆயர்களின் முகாமையான கடவுளாகக் காலப் போக்கில் உயர்த்தப்பட்டிருக்கிறார். இதனால், தங்களின் மந்திரங்களைத் தொல்குடிகளின் கடவுளர்களுக்கு ஆரியர் பயன்படுத்தத் தொடங்கினர்.
ஆரியர்கள் இராமாயணத்திலும் மகாபாரதத்திலும் முன்னுக்குப் பின் முரணாக முருகனைப் படைத்திருக்கின்றனர். சான்றாக, ஐந்தாம் வேதமென்று பிராமணர்களால் போற்றப்படும் மகாபாரதத்தில் முருகன் மூன்று இடங்களில் வெவ்வேறுவிதமான வரலாற்றைக் கொண்டிருக்கிறான். அதாவது, மகாபாரதத்தில் ஒர் இடத்தில் அக்கினியின் மகனாக முருகன் படைக்கப்பட்டிருக்கிறான்; இன்னோர் இடத்தில் மகேஸ்வரனின் மகனாகப் பேசப்படுகிறான்; வால்மீகி

(இராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம்)
இராமாயணத்தில் 'ஸ்கந்தன்' அக்கினி புத்திரனாகத்தான் படைக்கப்பட்டிருக்கிறான்.
இதிலிருந்து ஆதிகாலத்திலேயே முருகன்' திராவிடரின் ஒரு குறிப்பிட்ட தெய்வமாக இருந்திருக்க வேண்டும் என்றும் ஆதிக்குடிகளின் கடவுளர்களைத் தங்களது சொத்தாக ஆக்கிக் கொள்ள ஆரியர் எடுத்த முயற்சியாக இது இருக்கலாம் என்றும் தெரிகிறது. அரசியல் அடிப்படையில் பார்த்தால் அலெக்சாண்டர் தன்னைச் சூரியனின் மரபினன் என்று கூறிக் கொண்டதன் காரணமாக இருக்கலாம். இந்தக் குளறுபடிகள் எல்லாம் ஆராய்ச்சியாளர்களின் கண்களுக்கு அகப்படாமல் தப்பிக்க, மக்களோ இத்தகைய கதைகளை 'ஆண்டவனின் மகிமையாக ஏற்றுக் கொள்ளப்பட வைக்கப்பட்டிருக்கிறார்கள்.
திராவிடக் கடவுளான சிவன் தொன்மைக் காலத்தில் ஒரு சமயப் பூசாரியாக இருந்திருக்கலாம் என்பது அறிஞர்களின் கணிப்பு. இவரின் 'ஊழித் தாண்டவம்' பூசாரிகளின் சமயச் சடங்குகளில் நடைபெறும் ஆட்டமாக இருந்திருக்கலாம்; இதுவே மருவி 'வெறியாட்டு' (முருக வழிபாடு) என்று பெயர் பெற்றிருக்கலாம்; இப் பூசைகளும் சடங்குகளும் மயானப் பகுதியில் நடந்திருக்கலாம்.
சிவனுக்கும் ஆரியர்களுக்கும் உள்ள தொடர்பின் ஆரம்பமும் வளர்ச்சியும் ஸ்கந்த வழிபாட்டின் வரலாற்றில் இன்றியமையாதவை என்பதால் சிவனைப் பற்றிய சில வரலாறுகளை இங்கு எடுத்துக் காட்டுவதும் இன்றியமையாததாகும்.
ஆரியர்கள் இந்தியாவை ஊடுருவிய காலம் கி.மு. 4000 - கி.மு. 1000 ஆக இருக்கலாம் என்று கூறும் ஸேஃனர்

Page 16
(தமிழ்க் கடவுள் முருகன்:வரலாறும் தத்துவமும்)(26)
(R.C. Zochner, 1987) என்ற அறிஞர், ஆரியர்கள் தங்கள் இருக்கு வேதத்தில் இந்திய மக்களைப் பற்றிக் கூறும்போது,
"இவர்கள் கறுப்பு நிறமுடையவர்களாகவும் அலங்கோலமான மூக்கமைப்பு உடையவர்களாகவும் அசிங்கமான தோற்றமுடையவர்களாகவும் இலிங்கத்தை வணங்குபவர்களாகவும் இருக்கிறார்கள்" என்று குறிப்பிடுவதாக எடுத்துரைக்கிறார்.
இதிலிருந்து, இலிங்க வழிபாட்டிற்குரிய சிவன், ஆரியரின் வருகைக்கு முன் எத்தனையோ ஆயிரம் ஆண்டுகளாக இந்திய மக்களின் வழிபாட்டில் இடம் பெற்றிருக்கிறார் என்று தெரிகிறது. இத்தகைய சிவன் ஆரியக் கடவுளாக மருவியது காலப் போக்கில் நடந்தேறியது. இதற்குச் சான்றாகச், சுவேதாஸ்வதா உபநிடதத்தில் பிரம்மனும் உருத்திர சிவனும் ஒன்று என்ற கருத்து இடையிடையே காணப்படுகிறது என ஆ. வேலுப்பிள்ளை (1985 : 63) குறிப்பிடுவதைக் காட்டலாம்.
வேள்வியில் அக்கினியைத் தூதுவனாக்கி முப்பத்து மூன்று தேவர்களுக்கும் குதிரை முதலிய மிருகங்களைக் கொல்லவே வேள்வி நடத்தினர். சிவ வழிபாடு தொடக்கம் பெறுவதற்கு முன்பு அக் காலத்தில் நடந்த சமய மாற்றங்கள் எந் நிலையிலிருந்தன என்று அறிவது முகாமையாகும். இவ்வாறு வேள்வி செய்தோர் தாம் விரும்பிய செல்வம், புத்திரப் பேறு, நீண்ட வாழ்வு, சத்துரு வெற்றி முதலியவற்றை வேண்டினர். ஆரிய வழிபாடுகள் ஆண்களின் மேன்மையில் உருவாகின. காலப் போக்கில் ஆரிய வழிபாட்டு முறையில் அக்கினிக்குப் பலியிடும்போது உருத்திரனுக்கும் ஒரு ஒதுக்குப் புறத்தில் பலிகளிட்டுப் பூசை செய்தனர் என்கிறார் ஆ. வேலுப்பிள்ளை (1985).

27) (இராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம்)
சைவம் மருவிய 'இந்து (வைதிக) சமயம் கி.மு. 8-ஆம் நூற்றாண்டுக் கால கட்டத்தில் தொடங்கியிருக்கலாமா என்ற கேள்வி நியாயமானதே. கி.மு. 6-ஆம் 7-ஆம் நூற்றாண்டுகளில் இந்தியத் துணைக் கண்டத்தில் மட்டுமல்ல உலகின் பல பகுதிகளிலும் மனித சிந்தனையில் சமயம் முகாமையான இடத்தைப் பெற்றுள்ளது.
நீண்ட காலமாக ஆரியர்களின் வழிபாடுகள் அவர்களது தேவ மொழியான சமஸ்கிருதத்திலேயே நடத்தப்பட்டன. சாதாரண மக்களுக்குத் தெரியாத மொழியில் ஆரியர்கள் மந்திரங்களைச் சொல்லித் தங்களைப் பூலோகத் தேவர்களாகப் பிரகடனப்படுத்திக் கொண்டனர். இவ்வாறு தங்களது சமய ஆதிக்கத்தை மேம்படுத்திய ஆரியர்களுக்குச் சமண, புத்த சமயங்களின் வளர்ச்சிகள் எதிர்த் தாக்குதல்களைத் தருவனவாக அமைந்திருக்கலாம்.
இந்தியாவில் மகாவீரர் கி.மு. 6-ஆம் நூற்றாண்டில் சமண சமயத்தைத் தோற்றுவித்த காலத்தில் கெளதம புத்தரின் பெளத்தமும் தலையெடுக்கத் தொடங்கியது. அதே கால கட்டத்தில், கிரேக்க நாட்டில் சாக்கிரட்டிசும் சீனாவில் கொன்பூசியசும் தோன்றினர்.
இவ் அறிஞர் அனைவரும் சமயம் என்ற பெயரில் சமயவாதிகள் செய்யும் மோசடிகளை மக்களுக்கு எடுத்துரைத்தனர். இந்தியாவில் பெளத்தமும் சமணமும் மனிதத் தன்மையை மேம்படுத்தும் முறையில் வளர்ந்தன. சமணத்தையும் பெளத்தத்தையும் தழுவிய மக்களைக் கவர அக் கால கட்டத்தில் கடவுளின் படைப்பு ஒன்று இன்றியமையாததாக இருந்திருக்கலாம்; அதாவது,பாமர மக்களைக் கவர மிகவும்

Page 17
(தமிழ்க் கடவுள் முருகன் வரலாறும் தத்துவமும்)(28)
மேன்மையான கடவுளர்களை உண்டாக்குவது இன்றியமையாததாக இருந்திருக்கலாம். அக் கடவுள் ஆரிய சிந்தனையில் தோன்றிய 'ஸ்கந்தன்' என்றும் ஒரு அணுகுமுறையில் கொள்ளலாம்.
ஆரியர்கள் தமது வேள்விகளின்போது உயிர்ப்பலி கொடுத்தனர். இவ்வாறு உயிர்ப்பலி செய்வதை எதிர்த்து மகாவீரரும் புத்தரும் 'அகிம்சை பற்றி மக்களுக்குப் போதித்தனர். இதனால், கடவுளர்க்குப் 'பரிசுகள்' கொடுத்து வாழ்க்கையில் மேன்மை அடையலாம் என்ற ஆரிய தத்துவத்திற்கும் அகிம்சை நெறியைக் கடைப்பிடித்துத் தூய வாழ்க்கை நடத்தினால் உய்வடையலாம் என்ற சமண, பெளத்த போதனைகளுக்கும் இடையில் சமய எழுச்சிக்கான தத்துவப் புரட்சி நடந்துள்ளமையை அறியலாம். இத்தகைய தத்துவப் புரட்சியிலிருந்து பாமர மக்களைத் திசை திருப்ப ஆரியர்களுக்குப் 'புராணங்கள் தேவைப்பட்டன.
மேலும், அக் கால கட்டத்தில் 'சமஸ்கிருதம்' கடவுள் மொழியாக இருந்ததற்கு எதிரிடையாக சமணர்கள் மக்களின் மொழியாகிய பிராகிருதத்திலும், பெளத்தர்கள் தங்கள் பாலி மொழியிலும் தத்துவக் கருத்துகளைப் பரப்பினர். இதனால், சமண, பெளத்த சமயங்களின் வளர்ச்சி மக்களிடையே மிக வேகமாகப் பரவியது.
இதே கால கட்டத்தில் பல புராணங்கள் எழுதப்பட்டன. மக்களைத் தம் வயம் வைத்துக் கொள்ள எந்த அளவிற்கு கடவுளரை மேன்மைப்படுத்தி எழுதலாம் என்பதற்கான வெளிப்பாடே "ஸ்கந்த புராணம்'. இப் புராணத்தில், ஆரியரின் முகாமையான கடவுளான அக்கினியின் 'உதவியுடன் அன்றைய

(இராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம்)
கால கட்டத்தில் இந்தியா முழுதும் பரவிக் கிடந்த கடவுளான சிவனுக்கு மகனாக 'ஸ்கந்தன்' காட்டப்படுகிறார். ஆரிய தத்துவங்களில் ஆண் கடவுளரே முதன்மையாக இடம் பெறுகின்றனர். இதன் வெளிப்பாடே, 'ஸ்கந்தனுக்குத் தாய் இல்லை என்று மேற்படிப் புராணத்தில் காட்டப்பெறுவதுமாகும். சைவ சமய நம்பிக்கையான (யோனி) இலிங்க வழிபாட்டிற்கும் மனித இனப்பெருக்க முறைக்கும் எதிர்மறையானது 'ஸ்கந்தன்' உருவாக்கம் என்பதை இங்கு கருத்தில் கொள்ள வேண்டும்.
ஆரிய வேதங்களில் எத்தனையோ தொன்மக் கதைகள் முன்னுக்குப் பின் முரணாக இருப்பது போல் உலகில் முதல் படைப்பு யார் என்பதும் கேள்விக் குறியாக இருக்கிறது. உலகின் முதல் படைப்பு யமன் (சூரியனின் மகன்)' என்று சில இடங்களிலும் வேறு சில இடங்களில் (அதாவது, காலம் கடந்த பாடல்களில்) 'மனு' என்றும் குறிப்பிடப்படுகின்றது.
வேதங்களில் ஆண் கடவுளர்களுக்குக் கொடுக்கப்படும் முதன்மை பெண் தெய்வங்களுக்குக் கொடுக்கப்படவில்லை. மாறாகத் திராவிடரிடத்தில் ஆண்களுக்குச் சமமான வாழ்க்கை முறை பெண்களுக்கு இருந்திருக்கிறது. தொல்குடிகளிடையே சக்தி வழிபாடு (எனும் அம்மன் / தாய்த் தெய்வ வழிபாடு) இருந்தமைக்கு ஏராளமான ஆதாரங்கள் உண்டு. இன்றும் வங்காளத்தில் நிலவும் 'காளி வழிபாடும் நேபாளத்தின் 'குமரி வழிபாடும் இந்தியத் தொல்குடிகளது வழிபாட்டின் மிச்ச சொச்சங்களாகும்.
ஆரியக் கண்ணோட்டத்தில் 'ஸ்கந்தனின் மூலம் என்னவென்று திட்டவட்டமாகக் கூறவியலாத குளறுபடி இருக்கிறது. மாறாகத், தென்னிந்தியாவில் முருகனுக்கு

Page 18
(தமிழ்க் கடவுள் முருகன்:வரலாறும் தத்துவமும்) (30)
அழுத்தம் திருத்தமானதொரு குடும்ப அமைப்பு உண்டு சிவன் இவனது தந்தையாகவும் கொற்றவை இவனது தாயாகவும் வைத்து வணங்கப்படுதல் தென்னிந்தியத் திராவிட மரபிற்கே உரியதாகும்.
ஆரியர்கள் இந்தியாவில் ஊடுருவிய போது நாடோடி வாழ்க்கையையே அவர்கள் மேற்கொண்டிருந்தனர். இதற்கு நேர் மாறாக, சிந்துவெளி நாகரிகத்தின் எச்சங்களாக விளங்கும் புதைபொருள்களை வைத்துப் பார்த்தால், அதே கால கட்டத்தில் மிகவும் நாகரிகமடைந்த சமுதாயமும் இந்தியாவில் வாழ்ந்திருக்கிறது என்பது புலனாகும்.
நாடோடிச் சமுதாய வாழ்க்கையின் பின்னணியில் அமைந்த ஆரியக் குழுக்கள் வேள்விகளின் வாயிலாக அரசர்களுக்கும் வசதி மிக்கவர்களுக்கும் முன்னேற்றமான வாழ்வு கிடைத்ததற்குத் தங்களைக் கடவுளர்களின் தூதுவராகத் தாமாகவே பிரகடனப்படுத்திக்கொண்டு அதன்வாயிலாக இந்தியாவில் மேன்மை தங்கிய சாதியினராகத் தங்களை மாற்றிக் கொண்டனர்.
ஆரியர்கள் இந்தியாவிற்கு வந்து குடியேறியபோது, அவர்களுக்கு முன்பாகவே இந்தியாவின் பல பகுதிகளிலும் பல வகையான இனக்குழுவினர் பரந்து வாழ்ந்து வந்தனர். ஆரியர்கள் வந்தபோது இந்தியா முழுவதும் பரந்து வாழ்ந்திருந்த திராவிடக் குடிகள் போல இன்னும் பல இனக்குழுவினரும் இருந்ததாக வரலாற்றாய்வாளர் ரோமிலா தாப்பர் (Romilo Toper, 1968) குறிப்பிடுவதை இங்கு ஒப்பு நோக்கலாம்.
தாப்பர் கூற்றுப்படி, இந்தியாவில் கீழ்க்கானும் பல பெரிய இனக்குழுவினர் இருந்திருக்கலாம் என்று கருதப்படுகிறது:

31) (இராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம்)
1 நீக்ராயிடு இனக்குழுவினர் 2. தொல் ஆஸ்திரேலிய இனக்குழுவினர் 3. மங்கோலாயிடு இனக்குழுவினர் 4. மத்தியத் தரைக்கடல் இனக்குழுவினர்
சமஸ்கிருதத்தில் ஸ்கந்த புராணம் எழுதப்பட்ட காலத்தின்போது இந்தியாவின் பல பகுதிகளில் ஏற்பட்ட மாற்றங்களை ஸ்கந்த வரலாற்றுத் தொடர்புகளுடன் இணைத்துப் பார்க்க வேண்டும் (கிபி 4-ஆம், 5-ஆம் நூற்றாண்டு) 'மாதா வழிபாடும் இடம் பெறத் தொடங்கியிருக்கிறது என்கிறார் slěGsFóão (A.G. Mitchell, 1998). Lumrlygs Lorrgron unresů Quar தெய்வம் பெயர் பெற்ற கால கட்டம் இதுவென்கிறார் மிச்செல். வட இந்தியாவில் இம்மாதா வழிபாட்டின் வளர்ச்சியே இன்றைய கால கட்டத்தில் சந்தோஷி மாதா வழிபாட்டில் வெளிப்படுகிறது. ஆனாலும் புராண காலக் கடவுளர்களுள் ஆண் கடவுளர்களே முகாமை பெறுகின்றனர். ஸ்கந்தனின் பிறப்பு பற்றிய கதைகள் பல. அவற்றுள், மிச்செல் (1998) விவரிக்கும் கதை பின்வருமாறு
"சிவனும் பார்வதியும் தொடர்ந்து காதல் விளையாட்டில் ஈடுபட்டிருப்பதைப் பார்த்த தேவர்களும் பிற கடவுள்களும் உலகத்தின் பல தேவைகளை முன்னிட்டு இக் காதல் விளையாட்டை நிறுத்துமாறு கூறினராம். அதற்குச் சிவன் தான் தன் லீலையை நிறுத்தினால் தன்னுடைய விந்தை வெளியேற்றியாக வேண்டும் என்று சொன்னாராம் தேவர்களும் கடவுளர்களும் சிவனின் விந்தைப் பூமியில் போடச் சொன்னார்களாம். அவ்வாறு சிவன் வெளியிட்ட விந்தை அக்கினி தன்னுள் எடுத்துக் கொண்டாராம். அக்கினி பின்னர் தான் அவ்வாறு செய்ததற்காக வருந்தி சிவனின் விந்தை ஏற்றுக்கொள்ளுமாறு கங்கையைக் கேட்டாராம். கங்கையும்

Page 19
(தமிழ்க் கடவுள் முருகன் வரலாறும் தத்துவமும்)
பின்னர் தனது பாரத்தைத் தாங்காமல் அந்தப் பாரத்தை ஏற்குமாறு பிரம்மாவைக் கேட்டாராம். அதற்குப் பிரம்மா அவ் விந்தைக் கொண்டுபோய் வளரும் சூரிய மலையுச்சியில் கொட்டுமாறு கங்கையிடம் கூறினாராம். பத்தாயிரம் ஆண்டுகளுக்குப் பின் அவ் விந்து 'ஸ்கந்தன்' என்ற குழந்தையாகப் பிறந்ததாம்."
Shamassif (Wendy Donigar O Floherty, 1985) ஸ்கந்தனின் மூலம் பற்றிக் கூறும்போது, அக்கினியும் கிருத்திகை என்ற தேவர்களின் மனைவியர்களுக்குப் பிறந்ததாக அக்கினியைக் குறிப்பிடுகிறார். அதே நேரத்தில், அக்கினியின் (சூரியனின்) குழந்தை "ஸ்கந்தன்' என்று குறிப்பது சூரியனுடன் தொடர்புடைய இயற்கையின் ஆறு காலங்களையும் வெளிப்படுத்துவதாகும் என்கிறார் இவர்.
G6uG Tafäsm giunsirsu (Veronica lons, 1975) ஸ்கந்தனின் பிறப்பு குறித்துப் பின் வருமாறு எடுத்துரைக்கிறார்
"கார்த்திகேயன் அல்லது ஸ்கந்தன் என்பவர் போர்த் தெய்வமாகப் படைக்கப்பட்டிருக்கிறார். அக்கினி, இந்திரன் போன்றோர் பெற்ற இடத்தை இக் கார்த்திகேயன் பிடிக்கிறார். அதாவது, கடவுளர்களின் பாதுகாவலராக ஸ்கந்தன் படைக்கப்படுகிறார். கடவுளின் கடவுளாக வேத காலத்திலிருந்த இந்திரனின் இடத்தை ஸ்கந்தன் பெறுகிறார். அவர் போரில் வெற்றிக்கொடி பறக்க விடுவதையே விரும்புகிறார். பெண்களின்மீது ஆர்வம் காட்டாதவராக இவர் படைக்கப்பட்டிருக்கிறார். இவரை வட இந்தியாவில் பிரமச்சாரிக் கடவுளாகவே வணங்குகின்றனர். இவரின் கோவில்களுக்குப் பெண்டிர் செல்லக்கூடாது."

(இராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம்)
ஆனால், இதே கதையில் முன்னுக்குப் பின் முரணாக இவரது பெயர் 'குமரன்' என்றும் இவரது மனைவியின் பெயர் 'குமாரி" அல்லது 'தேவசேனை' என்றும் குறிப்பிடப்படுகிறது மேலும் ஆராய்தற்குரியது.
ஸ்கந்தன் தோற்றம் பற்றிய இன்னொரு கதையில், பின்வருமாறு கூறப்படுகிறது :
"முன்னொரு காலத்தில் அசுரர்களால் தாக்கப்பட்டு இன்னலுற்றபோது சிவன் தவசியாய் இருந்தாராம். இந்திரனும் தனது நாட்டை விட்டுக் காட்டில் அலைந்து கொண்டிருந்தாராம். அப்போது காட்டில் யாரோ ஒரு பெண்ணின் அழுகுரல் கேட்டு ஆபத்துக்கு உதவிடச் சென்றபோது எகசின் என்ற அரக்கனால் ஒரு பெண் துன்புறுத்தப்படுவதைக் கண்டு அவளைக் காப்பாற்றினான். அவ் அழகிய பெண் தன் பெயர் தேவசேனை என்றும் தனக்கு ஒரு நல்ல கணவன் கிடைக்க உதவி செய்ய வேண்டும் என்றும் இந்திரனிடம் வேண்டினாள். 'தேவசேனை' என்ற பெயருடைய அப் பெண்ணுக்குக் கணவனாக அமைய வேண்டியவன் படை பலத்தில் திறமையுள்ளவனாகத்தான் இருக்க வேண்டும் என்று நினைத்த இந்திரன் பிரம்மாவிடம் சென்று உதவி கேட்டான். அதைக் கேட்ட பிரம்மா சற்றுச் சிந்தித்து, இப் பெண்ணின் கணவனாக வரக்கூடியவன் அக்கினியும் கங்கையும் சேர்ந்து உருவாக்கப்படக் கூடியவனாகத்தான் இருக்க வேண்டும் என்று முடிவு கட்டினார். பின்னர், பிரம்மா ஏழு ரிஷிகளிடம் சென்று யாகம் செய்யுமாறு கேட்க, அவ்வாறு ரிஷிகள் வளர்த்த யாகத் தீயிலிருந்து வந்த அக்கினி உடனடியாக ரிஷிகளின் மனைவியர்மீது மையலுற்றான். ஒழுக்கத்தில் மேம்பட்ட ரிஷிகளின் மனைவியர் அக்கினியிடம் தங்களை இழக்க மறுத்துவிட, அக்கினி காட்டுக்குச் சென்றுவிட்டான். ரிஷிகளின் மனைவியர்மேல் கொண்ட

Page 20
(தமிழ்க் கடவுள் முருகன் வரலாறும் தத்துவமும்) (34)
மையலின் தாபத்தில் உருகிக் கொண்டிருந்த அக்கினியை ஸ்வாஹா என்ற தக்ஷஹா முனிவரின் பெண் காதலுற்றாள். ஆனால் அக்கினியோ ஸ்வாஹாவை ஏறெடுத்தும் பார்க்கவில்லை. இதன் காரணத்தைத் தனது தந்தைமூலம் அறிந்து கொண்ட ஸ்வாஹா மாறுவேடத்தில் ரிஷிகளின் மனைவிகளாய் அக்கினியை அடைந்தாள்; அவ்வாறு ஒவ்வொரு முறை அக்கினியை அடையும்போதும் ஒவ்வொரு ரிஷியின் மனைவி வேடத்தில் சென்றாள். இவ்வாறு, ஆறு முறை வந்து ஆறு விந்துகளை அக்கினியிடமிருந்து பெற்றுக் கொண்டு அவ் ஆறு விந்துக் குவியல்களையும் பாதுகாத்துக் கங்கையில் விட்டாள். விந்துக் குவியல்கள் ஆறுமுகமுடைய குழந்தையாக உருவெடுத்தது. பின், அக் குழந்தை வளர்ந்து தேவசேனாவை மணந்து கொண்டது."
இன்னொரு கதையின்படி, "தாரகனை அழிக்க சிவனின் மகனாகக் கார்த்திகேயன் அவதாரம் எடுக்கிறார். பிரம்மாவிடம் பெற்ற வரத்தின்படி தாரகன் உலகத்தை ஆட்டிப் படைக்கிறான். பிரம்மாவின் வரத்தின்படி தாரகனைச் சிவனின் மகன் தவிர யாரும் அழிக்க முடியாது. அந்தக் கால கட்டத்தில் சிவனுக்குக் குழந்தைகள் இல்லை. அதே நேரத்தில் அவர் மனைவியான சக்தி அவளின் தகப்பன் தக்ஷன் செய்த வேள்வித் தீயில் குதித்து அழிந்து போகிறாள். சிவனுக்கு இன்னொரு முறை திருமணம் செய்ய எண்ணமில்லை. தாரகன் என்ற அசுரன் முழு வலிமையுடன் அனைத்துலக பாதாளத்தையும் ஆட்டிப் பட்ைத்துத் தேவ உலகத்தையும் வதைக்கிறான்; இந்திரன் தன் அழகிய வெள்ளைக் குதிரையைக் கொடுக்கிறான்; காமதேனுவையும் தாரகன் கவர்ந்தெடுக்கிறான்; குபேரன் தனது ஆயிரம் கடல் குதிரைகளையும் கொடுக்கிறான்; வாயுவும் அடிமையாகிறான்; சூரியன் தனது சூட்டைக் கொடுக்கிறார்.

(35) (இராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம்)
சந்திரன் எப்போதும் முழுமதியாக இருக்கத் தாரகனால் ஆணையிடப்படுகிறான். கடவுளர்கள் தாரகனால் ஏற்படும் துயர் தாங்காமல் சிவனிடம் இன்னொரு திருமணம் செய்து கொள்ளுமாறு கூறுகின்றனர். தேவர்களும் முனிவர்களும் சிவனின் மனைவியான சக்தி இமாலயத்தின் மகள் பார்வதியாகப் பிறக்க வேண்டும் என்று வேண்டுகின்றனர். அதுபோன்றே, பார்வதி மறு பிறப்பெடுத்துப் பருவப் பெண்ணாகிச் சிவன்மீது ஆசைப்படுகிறாள். ஆனால், சிவனோ அவளை ஏறெடுத்தும் பார்க்கவில்லை. இதனால், இந்திரன் காதல் கடவுள் காமனை உதவிக்குக் கூப்பிடக் காமனும் கைலாயம் சென்று யோகாசனத்திலிருக்கும் சிவனிடம் செல்கிறான். மன்மதக் கணையுடன் நின்ற காமனைக் கோபத்தில் தன் நெற்றிக் கண்ணால் எரித்து விடுகிறார். அதற்குப் பிறகு, நீண்ட காலத்திற்குப் பின் பார்வதியைச் சிவன் மணக்கிறார். இருப்பினும், நெடுங்காலமாக அவர்களுக்குக் குழந்தை பிறக்கவில்லை. இந்திரனின் வேண்டுகோளின்படி கைலாயம் சென்ற அக்கினி அப்போதுதான் மனைவியிடமிருந்து பிரிந்த சிவனிடமிருந்து வெளியேறிய விந்தை எடுத்துக்கொண்டு தேவர்களிடம் செல்கிறான். அவ்வாறு செல்லும்போது விந்தின் பாரத்தைத் தாங்கவியலாத அக்கினி அதைக் கங்கையில் விடுகிறான். இதனால், மிகுந்த ஒளியுடன் கங்கைக் கரையில் ஒரு குழந்தை பிறக்கிறது: அக் குழந்தைக்குக் கார்த்திகேயன் என்று பெயரிடப்படுகிறது. அதே நேரம், அவ் இடத்திற்கு ஆறு இராஜகுமாரிகள் நீராட வருகின்றனர். ஒவ்வொருவரும் அக் குழந்தைக்குத் தங்கள் முலைப் பாலைக் கொடுக்கின்றனர். குழந்தை கார்த்திகேயன் தன் வலிமையால் தாரகனை அழித்துத் தேவர்களின் துயர் நீக்குகிறான்."
ஸ்கந்தனின் மூலத்தை அறிவது மிகவும் கடினமான விடயமென்று மேற்படி வேறுபட்ட கதைகளிலிருந்து தெரிகிறது.

Page 21
(தமிழ்க் கடவுள் முருகன்:வரலாறும் தத்துவமும்)(36)
மேற்குறிப்பிட்ட கதைகளுக்கும் தமிழ்நாட்டில் வழங்கும் முருகன் தோற்றக் கதைக்கும் வள்ளி - முருகன் திருமணத்திற்கும் எத்தனையோ வேறுபாடுகள் உள்ளன.
வேத காலக் கடவுளர்களான அக்கினியும் இந்திரனும் புராண காலத்து 'ஸ்கந்தனை உருவாக்குவதில் மிகவும் பங்காற்றியுள்ளனர். சிந்துவெளிக் கடவுள் சிவன் முழு முதற் கடவுளாக ஏற்றுக் கொள்ளப்படுவதும் அவர் மகனாக ஸ்கந்தன் படைக்கப்படுவதும் அந்த ஸ்கந்தன் தேவர்களைக் காப்பாற்றப் படைக்கப்பட்ட அதியற்புதத் தெய்வமாக உருவகப் படுத்தப்படுவதும் இங்கு கவனமாக நோக்கத்தக்து.
ஆரியக் கடவுளர்கள் மக்களிடம் செல்லுபடியாகாதவர்களாக இருந்தனரா? அல்லது சிவனுக்கும் மேலாக ஒரு கடவுளைத் தங்கள் தத்துவ நியதியின்படி படைக்க ஆரியர்களுக்குக் கட்டாயம் ஏற்பட்டதா என்று கேட்பது நியாயமான கேள்வியாக இருக்கும்.
ஸ்கந்தன் படைப்பில் இரு முகாமையான கூறுகள் உள்ளன. ஒன்று, அக்கினியின் ஈடுபாடு; அடுத்தது, ஏதோ ஒரு வழியில் ஸ்கந்தனுக்குத் தாயில்லாமல் செய்வது ஆரிய மரபுச் சிந்தனையின் சிதறலாகவே தோன்றுகிறது.
இச் சூரிய (அக்கினி) சக்தியின் வரலாறு ஆரிய தத்துவங்களில் மட்டுமல்ல ஆதிகாலப் பழங்குடிகள் பலரிடமும் இருந்திருக்கிறது. எடுத்துக் காட்டாக, எகிப்திய மக்கள் சூரியனைத் தங்கள் கடவுள் என்றும் எகிப்திய அரசர்கள் தங்களைச் சூரியனின் வழித் தோன்றல்கள் என்றும் நினைப்பதைக் குறிப்பிடலாம்.

37 இராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம்)
ܫ
3. கிரேக்க அலெக்சாண்டரும் இந்து ஸ்கந்தனும்
வட இந்தியாவில் "ஸ்கந்த வழிபாடு' கிரேக்க மாவீரன் அலெக்சாண்டர் இந்தியாவிற்கு வந்த பின் தொடங்கியிருக்கலாம் என்று கருதும் அறிஞர்களுள் கோபால பிள்ளையும் ஒருவர்.
கிரேக்க நாட்டிலிருந்து மத்திய் ஆசியா வழியாக இந்தியாவிற்கு வந்த அலெக்சாண்டர் மத்திய ஆசியாவில் "ஸ்கந்தன்' என்று அழைக்கப்படுகிறான். இப் பெயர் அரேபியப் பழ மரபுக் கதைகளுடனும் கிரேக்க வனக் கடவுள் டையோனியஸுடனும் தொடர்புடையது. கிரேக்க மாவீரன் அலெக்சாண்டரின் வீர வரலாற்றுக்கும் இந்துக் கடவுள் ஸ்கந்தனுக்கும் நிறைய ஒற்றுமைகள் உள்ளன.
ஆதிகால மாசிடோனியா நாட்டின் தலைநகரான பெலா (Pela) என்ற இடத்தில் கி.மு. 323-இல் அலெக்சாண்டர் பிறந்தான். அலெக்சாண்டரின் தந்தையான இரண்டாம் ஃபிலிப் கொலை செய்யப்பட, அலெக்சாண்டர் தனது பதின்மூன்றாம் வயதில் அரசனாகிறான். அரச குடும்பத்தில் நடந்த பல சதிகளை வென்றெடுத்த அலெக்சாண்டர் மாசிடோனியாப் பகுதிக்கு மட்டுமல்லாது கிரேக்க பேரரசுக்கும் தலைவனாகிறான். தனது தந்தையின் சபதத்தை நிறைவேற்ற கி.மு. 325-இல் பாரசீகம் நோக்கி அலெக்சாண்டர் படையெடுக்கிறான்; டான்யூப் நதியைக் கடந்து வந்து தராசியன்ஸ் படைகளையும் முறியடிக்கிறான். அவ்வாறு வரும் வழியில் இலியரின்வைத் தோற்கடித்துத் தேபஸ் (Thebes) என்ற இடத்தைத்

Page 22
(தமிழ்க் கடவுள் முருகன் வரலாறும் தத்துவமும்)
தரைமட்டமாக்குகிறான்;8000 மக்களை அடிமைகளாக்குகிறான்; இவ் வெற்றி அலெக்சாண்டரை ஒரு மாவீரன் எனப் போற்றுகிறது; பின்னர், பாரசீகம் நோக்கி முன்னேறிக்கொண்டே செல்கிறான்; கி.மு. 334-இன் இளவேனிற் காலத்தில் 35,000 பீடை வீரர்கள் அவர் தரப்பிலிருக்கிறார்கள்.
கிரேனிகஸ் (Gronicus) நதியோரத்தில் நடந்த இம் மாபெரும் போர் டிராய் (Troy) என்ற நகரத்தை ஒட்டிய இடத்தில் நடந்தது. சிரியா அரசனான டாரியஸ் என்பவனுடன் நடந்த இப் போர் கி.மு. 333-இல் முடிவுற்றது. டாரியஸ் இப் போரில் தோற்றதும் தனது மனைவி, மக்கள், தாய் உள்ளிட்ட அனைவரையும் அனாதைகளாக்கிவிட்டு வடக்குப் பக்கம் ஓடிவிட்டான். இருப்பினும், அலெக்சாண்டர் டாரியசின் உறவினர் அனைவரையும் மிகவும் கெளரவமான அரசியல் கைதிகளாக நடத்துகிறார். பின்னர், கி.மு. 332-இல் எகிப்தியப் பகுதியான காசா (GOSO) வில் நுழைகிறார். எகிப்திய வெற்றிக்குப் பின் நைல் நதி தீரத்தில் மிகப் பிரம்மாண்டமான அலெக்சாண்டிரியா நகரை அமைக்கிறான். இந் நகரம் அறிவியல், இலக்கியம், பொருளியல் துறைகளில் மேன்மை தங்கிய பல்கலைக் கழகங்களைக் கொண்டிருக்கிறது. கி.மு. 331-இல் அலெக்சாண்டர் எகிப்தியரின் புனிதக் கோயிலான அமொன்ரா (Amon-Ro) என்ற (சூரியக் கடவுளின்) இடத்திற்குப் போகிறான்.
எகிப்திய மக்கள் நம்பிக்கையின்படி அவர்களது தலைவன் சூரிய மரபினனாக இருக்க வேண்டும். இப்போது, ஆலெக்சாண்டர் எகிப்தை வெற்றி கொண்டதன் அடிப்படையில் தன்னைச் சூரியக் கடவுளின் வாரிசாக ஏற்றுக் கொள்ளும்படி ஆணையிடுகிறான்; அவன் தன்னை ஒரு புனித அவதாரமாக நினைத்துத் தன் வெற்றிகளுக்கு நியாயம் கற்பித்தமை எகிப்திய

( Dinovaf ureussunamfund)
மக்கள் அவனை ஒரு தெய்வ அவதாரமாக வழிபடத் தொடங்கியதில் வெற்றியடைகிறது. அலெக்சாண்டர் திரும்பவும் வடக்கு நோக்கிச் சென்று தன்னிடம் தோற்று ஒடிப்போன டாரியசுடன் போரிட நேர்கிறது. கி.மு. 331-இல் டாரியஸ் மீண்டுமொரு முறை அலெக்சாண்டரிடம் தோற்று விட்டு ஒடுகிறான். இதனையடுத்து, அலெக்சாண்டர் பாரசீகத் தலைநகரான பெசபோலிஸ் (Pesepolis) என்ற இடத்தை அடைகிறான். பின்னர், கி.மு. 330 தொடக்கம் முதல் கி.மு. 327 வரை அலெக்சாண்டர் கரிபியன் கடல் பகுதி, இரஷியப் பகுதியான துரேக்கஸ்தான் (Turkestan) உள்ளிட்ட பெரிய நிலப் பரப்பினை வெற்றி கொள்கிறான்; கி.மு. 326-இல் பாரசீகம் முழுமையையும் மேற்கு இந்தியாவின் பல பகுதிகளையும் வெற்றி கொள்ளும் நோக்கத்துடன் சிந்து நதியைக் கடந்து வருகிறான். பிறகு, பஞ்சாப் பகுதியை ஆக்கிரமிக்கிறான். அதே நேரத்தில், அலெக்சாண்டரின் மெசபட்டோமியப் படையினருள் பலர் படையுடன் மேலே சென்றிட மறுக்கின்றனர். இருப்பினும், கி.மு.
அலெக்சாண்டர் பாரசீகக் குடாவை அடைகிறான்; பாரசீகத்தை வெற்றி கொண்ட பின் பாரசீகப் பெண்டிரைத் திருமணம் செய்கிறான். எருக்சனா, பார்சைன் எனும் இரு பெண்டிரைத் திருமணம் செய்கிறான். இதனை வரலாற்றாய்வாளர் கிழக்கையும் மேற்கையும் இணைக்கும் நிகழ்ச்சியாகக் கருதுகின்றனர். அத்துடன் மட்டுமல்லாமல் தனது படையில் உள்ளோரையும் பாரசீகப் பெண்டிரையும் திருமணம் செய்திடுமாறு ஆணையிடுகிறான்; பின்னர், கி.மு. 323-இல் பாபிலோனுக்கு வந்தபோது மிகக் கடுமையான காய்ச்சலுக்கு ஆளாகி இறந்து விடுகிறான்.
மேற்குறித்துள்ள அலெக்சாண்டரது வரலாற்று

Page 23
(தமிழ்க் கடவுள் முருகன்: வரலாறும் தத்துவமும்)0ே)
நிகழ்வுகளிலிருந்து அவன் ஒரு மாவீரனாக மட்டுமல்லாமலும் படித்தறிந்த மேதையாக மட்டுமல்லாமலும் மனிதர்களைச் சமமாக நடத்தும் ஒரு மனிதாபிமானியாகவும் வாழ்ந்தது மிகவும் தெளிவாக விளங்குகிறது. அதே நேரம், தனக்கு எதிர் நிற்பவரை ஒழிக்கவும் அவமானப்படுத்தவும் இவன் தயங்கவில்லை என்பதும் மிகத் தெளிவாகத் தெரிகிறது. மாமேதையாகவும் வீரனாகவும் வரலாற்றில் காட்டப்படும் அலெக்சாண்டர் மதுபோதைக்கு அடிமையானவனாகவும் காட்டப்படுகிறான்.
அலெக்சாண்டரின் தாய் ஒலிம்பியாஸ் - கிரேக்கப் பழமரபுக் கதைகளின் அடிப்படையில் ஒலிம்பஸ் மலைத் தாய் எனக் கற்பனை செய்யப்படுகிறாள். ஸ்கந்தனின் தாய் இமய மலையின் மகளான பார்வதி எனும் ஆரியத் தொன்மத்துடன் இது ஒத்திருக்கிறது.
பாரசீகப் பெண்ணான எருக்சனாவை அலெக்சாண்டர் திருமணம் செய்து கொண்ட நிகழ்ச்சியைக் கிரேக்க நாட்டில் ஒரு வெற்றி பெற்ற வீரனுக்குப் பரிசளிப்பது போலிருந்தது என்கிறார் இராபின் லேன்ஃபாக்ஸ் எனும் ஒரு வரலாற்றாய்வாளர் (Robin LOne Fox, 1973 317). இந் நிகழ்ச்சிக்கும் இந்திரன் மகள் தேவயானையை ஸ்கந்தனுக்குத் திருமணம் செய்து வைக்கப்பட்ட நிகழ்ச்சிக்கும் எத்தனை ஒற்றுமையுள்ளது என்பது இவ் இரு வரலாறுகளையும் ஒப்புநோக்கிப் படிப்போர்க்குப் புரியும்.
எருக்சனா - ஸ்கந்த புராணத்தில் வரும் இந்திரன் மகளான தேவயானை போல் - ஒரு பெரிய பிரபுவின் மகள். அக் கால கட்டத்தில் ஆசியாவிலேயே மிக அழகி எனக் கருதப்பட்டவள் எனத் தெரிகிறது. அலெக்சாண்டரின் முதல் காதலி பார்சைன் என்பவள். எருக்சனாவை ஒரு

(இராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம்)
விருந்தின்போது சந்தித்த அலெக்சாண்டர் மிகுந்த காதல் வயப்பட்டதாக வரலாறு கூறுகிறது. அலெக்சாண்டர் எருக்சனாவைத் திருமணம் செய்ய முடிவு செய்தது பார்சனை மிகவும் துன்புறுத்தியதாக வரலாறு எடுத்துரைக்கிறது. ஸ்கந்த புராணத்தில் இரு மனைவியரையுடைய கந்தனுக்குத் தேவயானை - மனைவி, வள்ளி - காதலி என்பதை இங்கு ஒப்பு நோக்கலாம்
வரலாற்று நிகழ்வான அலெக்சாண்டரின் பெரிய போர்க்களமான டிராய் சண்டை நிகழ்ச்சியே தாரகன் வதைப் படலமாக ஸ்கந்த புராணத்தில் மாற்றியமைக்கப்பட்டிருக்கிறது என்றும் சிலர் வாதாடலாம். அலெக்சாண்டர் பதின்மூன்று வயதில் போர் வீரனாகப் புறப்படுகிறான்; பாலசுப்பிரமணியமும் அப்படித்தான். ஃபிலிப் மாமன்னருக்கு நிறைய எதிரிகள் இருந்ததுபோல் தேவர்களுக்கும் நிறைய எதிரிகள் இருந்தனர். தாரகன் பல இடங்களில் தோற்கடிக்கப்பட்டும் மீண்டும் மீண்டும் போருக்கு வருவதுபோல் குறுநில மன்னனான டாரியகம் அலெக்சாண்டரது வரலாற்றில் வருகிறான்.
டிராய் போர்' எனும் பழ மரபுக் கதைக்கும் ஸ்கந்த புராணத்திற்கும் ஏதும் தொடர்பு உண்டா என்பதை மிகவும் கவனமாக ஆராய்ந்தால் மேலும் மிகுந்த வியப்பான உண்மைகள் வெளிப்படலாம். கி.மு. 356 முதல் கி.மு. 323 வரைக்கும்தான் அலெக்சாண்டரின் வாழ்க்கை வரலாறு மிக மேன்மையானதாக அமைகிறது. அலெக்சாண்டர் தனது முப்பத்து மூன்று வயதுக்குள்ளாகவே அய்ரோப்பா, ஆசிய, ஆப்பிரிக்க நாடுகளின் அதிபதியாக ஆகிறான். இவ்வரலாற்றுக்கும் மூவுலக முதல்வனாகும் ஸ்கந்தன் கதைக்கும் தொடர்புண்டா எனும் கேள்வி நம் மனதில் எழலாம். புத்தரை அவதாரமாக்கிய ஆரிய

Page 24
(தமிழ்க் கடவுள் முருகன் வரலாறும் தத்துவமும்)2ே)
தத்துவம் அலெக்சாண்டரை ஏன் ஸ்கந்தனாக்கியிருக்கக் கூடாது என இதற்கு விடையிறுக்கலாம்.
அலெக்சாண்டர் போல் ஸ்கந்தனும் மருத்துவத் தேவனாகப் படைக்கப்படுகிறான் (சித்தாகரன்). ஸ்கந்தன் வேதங்களை மற்றவர்களுக்குச் சொல்லிக் கொடுத்ததாகப் புராணங்கள் கூறுகின்றன. கிரேக்கரின் மிக முகாமையான தெய்வமான ஜியஸ் என்பவரின் மகனாக அலெக்சாண்டரை மக்கள் வழிபடுகின்றனர்; ஸ்கந்தனும் சிவனின் மகனாக வழிபடப்படுகிறான்.
எகிப்தை வெற்றி கொண்டதும்தான் அலெக்சாண்டர் தன்னை எகிப்தியக் கடவுளின் (சூரியனின்) மரபினன் - அவதாரம் என்றெல்லாம் பிரகடனப்படுத்திக் கொள்கிறார். ஸ்கந்த புராணத்தில் ஸ்கந்தன் தோற்றத்திற்குச் சூரியன் (அக்கினியின்) பங்களிப்பு குறித்து ஏற்கனவே கண்டோம்.
இந்து வைதிகக் கடவுளர்களுக்குச் சட்டபூர்வமாக இரு மனைவியர் கிடையாது. அதே போல, கிரேக்கக் கடவுள் அலெக்சாண்டருக்கு இல்லை. அதே வகையில், தேவயானையும் (எருக்சனா - ஒரு பிரபுவின் மகள்) வள்ளியும் (பார்சைன் - காதலி மட்டும்) ஸ்கந்தக் கதைகளில் வருகின்றனர்.
அலெக்சாண்டர் போல் ஒரு கடவுளை ஸ்கந்தன் என்ற பெயரில் உருவாக்குவதற்கு இன்னொரு காரணமும் அக் கால கட்டத்தில் இருந்திருக்கலாம். அலெக்சாண்டர் இந்தியாவை வெற்றி கொள்ள வேண்டும் என்ற திட மனத்துடன் வந்தார் என்பதற்குப் பல காரணங்கள் இருந்ததாம். அவற்றுள் சில பின்வருமாறு இராபின் லேன் பாக்ஸ்,1975:333-350 :)

Cymrcegoaf urocůrufuúO
இந்தியா முழுக்கத் தங்கம் பரவிக் கிடந்தது. இந்திய ஆடவர் 100 முதல் 200 வயது வரை வாழ்ந்தனர். இந்தியாவில் பகிரங்கமான இடங்களில் காதல் செய்தனர். சாதி (வர்ணம்) அடிப்படையில் மிக மேன்மையாக வாழலாம். கம்பளித் துணிகள் மரங்களில் கிடைத்தன. மிகவும் அற்புதமான வாசனைத் திரவியங்கள் காணப்பட்டன. வெள்ளியாலான பல கலைப் படைப்புகள் இருந்தன. காண்டாமிருகங்கள் சிவப்புத் தலையுடனும் நீலக் கண்களை உடையனவாகவும் காணப்பட்டன. * குள்ளர்களின் தந்திரங்கள் வாயிலாகவும் மந்திர வித்தைகளாலும் இடி, மின்னல்களை உண்டாக்கலாம்.
இத்தகைய அபரிமிதமான நம்பிக்கைகளுடன் அலெக்சாண்டருக்கு இந்தியாவில் நிறைய படிக்க வேண்டிய விடயங்கள் இருப்பதாகவும் கருதினாராம். இவற்றுக்கெல்லாம் மேலாகத் தன்னைக் கடவுளின் மகனாக மேன்மைப்படுத்திக் கொண்ட அலெக்சாண்டருக்கு அம் மேன்மையை நிலை நாட்ட இந்தியாவைக் கைப்பற்றுதல் மிகத் தலையானதாக இருந்தது.
இந்தியாவை, அதிலும் குறிப்பாகப் பஞ்சாப் பகுதியைக் கிரேக்க வனக் கடவுளும், ஒயின் போன்ற பானங்களின் அதிபதியுமான டையோனியஸும் ஹெரக்கிலியஸ் (Herecleus) எனும் கிரேக்க கடவுளும் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் வந்து பார்வையிட்டுச் சென்றதாகக் கிரேக்க நாட்டினர் நம்பினர். அத்துடன் ஸ்கைலாக்ஸ் (Scyllax) போன்ற மாலுமிகளும் இந்தியாவைப் பார்வையிட்டுத் திரும்பியதாக வரலாறுகள் olgirG.

Page 25
(தமிழ்க் கடவுள் முருகன்:வரலாறும் தத்துவமும்)(4)
கிரேக்கக் கடவுள் ஜியஸின் (Zeus) மகனென்று தன்னைப் பிரகடனப்படுத்திய அலெக்சாண்டர் இளவேனில் காலத்தில் இந்தியாவை அடைந்தபோது அவரின் காதலியான பார்சைன் ஒரு மகனைப் பெற்றெடுத்தாள். குழந்தைக்கு ஹெரக்கிலியஸ் என்று கிரேக்கக் கடவுளின் பெயரையிட்டு மகிழ்ந்தார் அலெக்சாண்டர்; இந் நிகழ்வு அலெக்சாண்டருக்கும் இந்தியாவுக்கும் உள்ள 'ஆன்மீகத் தொடர்பைத் திட்டவட்டமாக்கியதாகக் கூறுகின்றனர் வரலாற்றாய்வாளர்கள்.
இந்தியாவுக்கு வந்த அலெக்சாண்டர் பஞ்சாப் மாமன்னனது யானைப் படைகளை எதிர்நோக்க வேண்டியிருந்தது; எத்தனையோ போர்களைக் கண்ட மாவீரனான அலெக்சாண்டருக்கு இந்த யானைப் படைகள் பெருத்த வியப்பை உண்டாக்கின. தனக்கென ஒரு யானைப் படையை அமைக்க அலெக்சாண்டருக்கு ஐந்து ஆண்டுகள் ஆயின. அலெக்சாண்டரது பாசன்றயை யானைப் படை காவல் செய்தது. மேற்கு நாட்டாருக்கு 'யானை' என்பது ஒரு அபரிமிதமான விடயமாகவும் ஆனது; மேலும், யானை அடையாளங்கள் மிகவும் கெளரவமான சடங்குகளில் இடம் பெறத் தொடங்கின.
ஜூலியஸ் சீசர் ஒரு யானையைப் பிரிட்டனுக்குக் கொண்டு போனாராம். கிளாடியஸ் (Claudius) மன்னர் இரு யானைகள் வைத்திருந்தாராம்; பாம்பே (Pompey) என்ற தலைவன் யானையிழுத்த தேரில் அமர்ந்து நகரில் உலவிட்டானாம். ஆனால், ரோம் நகர வாசல்கள் யானை புகவியலாத அளவிற்குக் குறுகியனவாயிருந்ததால் வாசல்களை உடைக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.
இத்தகைய யானை மகோன்னதத்திற்கும் முருகனுக்குக் கணபதி (யானை) தமயனானதற்கும் ஏதும் தொடர்புண்டா என்று

(ഉേഖ urastusluosusuh)
ஆராய்ந்திட வேண்டும். சாதாரண வரலாறுகள் எவ்வாறு புராணங்களுக்குள் புகுந்தன என்பது சுவையான விடயமாகும்.
அலெக்ஸாண்டர் இந்தியப் புராணக் கதைகளை அறிந்திருந்தார். கடவுளர்களுக்கும் "மேரு' மலைக்குமுள்ள தொடர்பையும் அறிந்திருந்தார். கிரேக்கக் கடவுளர்களுக்கும் 'ஒலிம்பஸ் மலைக்கும் இதே வகைத் தொடர்பே உள்ளது.
டையோனிஸியஸ் (Dionysius) என்ற கடவுள் ஜியஸ் (Zeus) என்ற தெய்வத்தின் தொடையைப் பிளந்து கொண்டு பிறந்து, உலகத்திலுள்ள கொடுமைகளை அழிப்பதான கிரேக்கப் பழ மரபுக் கதையை நினைவுப்படுத்துகிறார்.
மேரு மலைக் கடவுள் சிவன் விலங்கின் தோலை அணிந்து நடனங்களை ஆடி இரசிப்பதுபோல் கிரேக்க கடவுளர்களுள் ஒருவரான பாச்சன்ட்ஸ் (BOcchants) என்பவரும் காட்டு விலங்குகளின் தோலை அணிந்து நடனங்களிலும் ஈடுபடுகிறார்.
கிரேக்க-இந்தியப் பண்பாடுகளுக்கு இடையேயான ஒற்றுமை அலெக்ஸாண்டரைப் பிரமிக்கச் செய்ததாக வரலாற்றாசிரியர்கள் குறிப்பிடுகின்றனர். இவ் இரு பண்பாடுகளுக்கும் இடையே ஒற்றுமை இருந்தமை ஆதிக்குடிகளின் வரலாற்றை ஆராய்பவர்களுக்கு வியப்பைத் தராது. பெரும்பாலான ஆதிக் குடிகள் விலங்குகளின் தோலைத்தான் உடுத்துகின்றனர்; மகிழ்ச்சி மிகும்போது ஆடல், பாடல்களில் தங்கள் பொழுதைப் போக்குகின்றனர்.
இன்றைக்கு ஆறாயிரம் ஆண்டுகளுக்கு முன் கிரேக்க முதற் கடவுளின் தொடையைப் பிளந்துகொண்டு பிறந்த

Page 26
(தமிழ்க் கடவுள் முருகன் :வரலாறும் தத்துவமும்)
டையோனியஸுக்கும் புராண காலத்தில் சிவனின் உக்கிரப் படைப்பில் உதித்த ஸ்கந்தனுக்கும் உள்ள ஒற்றுமை என்ன? அலெக்ஸாண்டரின் பெரும் வெற்றிகள் மனிதர்களைத் தோற்கடித்ததோடு மட்டுமல்லாமல் மழை, பனி, கொடிய வெயில், மலைகள், சூறாவளிகள், கொடிய விலங்குகள் என்பனவற்றை வெற்றி கொண்டதையும் புலப்படுத்துகிறது.
இவ் வெற்றிகளுக்கும் ஸ்கந்தனின் தாரக வதைப் படலக் கதைகளுக்கும் எவ்வளவு தொடர்புண்டு என்பதைச் சமூக, சமய, அரசியல், உளவியல் பின்னணிகளில் ஆராய்தல் நலம் பயக்கும்.
"சிக்கண்டர்" என்பது அலெக்ஸாண்டருக்கு இந்தியர் இட்ட பெயராகும். மேலும், மத்திய ஆசியாவில் "ஸ்கந்தா" என்ற பெயரில் அலெக்ஸாண்டர் போற்றப்படுகிறார்.
"சிக்கண்டர்" என்று சொல்லப்பட்ட அலெக்ஸாண்டருக்கும் அவருடன் உடன்படிக்கை செய்து கொண்ட இந்திய மாமன்னன் சந்திரகுப்த மெளரியனுக்கும் உள்ள தொடர்பையும் சந்திரகுப்த மெளரியனின் போர்த் திறமையையும் அவன் தன்னை அலெக்ஸாண்டருடன் ஒப்பிட்டுப் பல பெரிய போர்களை நடத்தி வெற்றி கொண்டதையும் "ஸ்கந்த குப்தா" என்று தன்னைப் பெயரிட்டு அழைத்துக் கொண்டதையும் இனி ஆராய்வோம்.
சந்திரகுப்த மெளரியனின் காலம் கி.மு. 322 - கி.மு. 298 ஆகும். முதலாம் சந்திரகுப்தனின் பிறப்பு பற்றிச் சரியான தகவல் இல்லை. எனினும், இவன் மகத நாட்டின் பெரிய பிரபுக் குடும்பத்தினன் எனக் கருதப்படுகிறது.
சந்திரகுப்தன் காலம் இந்தியாவின் பொற்காலம் என்று

(இராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம்)
கூறப்படுகிறது. முதலாம் சந்திரகுப்தர் இந்தியாவின் பல பகுதிகளை வெற்றி கொள்கிறார். அவரது மகனான சமுத்திரகுப்தனின் மகன் தனது பாட்டனார் பெயரைக் கொண்டு இரண்டாம் சந்திரகுப்தன் என அறியப்படுகிறார்.
இக் காலத்தில் மெளரிய அரச குடும்பத்தில் ஏற்பட்ட குழப்பத்தையும் மகாபாரதத்தில் பாண்டவ - கெளரவ சகோதரர்களுக்கிடையே நடந்ததாகக் கூறப்படும் குழப்பத்தையும் ஒப்பிட்டுப் பார்த்தால் எவ்வாறு அரசக் கதைகள் தெய்விகப் படைப்புகள் இதிகாசங்களகின்றன என்பது புரியும்.
முதலாம் சந்திர குப்தனின் மகன் இராமகுப்தன் எதிரிகளால் தோற்கடிக்கப்பட்டபோது தன் மனைவியான துருவ தேவியை எதிரிகளிடம் கொடுத்துவிடுகிறான். இதைக் கண்டு கோபமடைந்த சந்திரகுப்தன் துருவதேவி போல் வேடமிட்டு எதிரிகளின் இடத்திற்குச் சென்று எதிரியை அழிக்கிறான். அதன் பின், அண்ணன்-தம்பிக்கிடையே ஏற்பட்ட போரில் சந்திரகுப்தன் வெற்றி பெற்று மகுடம் ஏந்துகிறான். இவ் வரலாற்று நிகழ்வுக்கும் அதே கால கட்டத்தில் (அதாவது, கி.மு. 4-ஆம் நூற்றாண்டில்) எழுதப்பட்ட மகாபாரதத்திற்கும் இடையேயுள்ள ஒற்றுமையை மானுடவியல் அடிப்படையில் ஆராய்வது இன்றியமையாததாகும்.
இரண்டாம் சந்திரகுப்தன் தன்னைப் பரம வலிமை படைத்த அலெக்சாண்டருடன் ஒப்பிட்டு ஆதிக்கம் செலுத்தியதாக வரலாறு கூறுகிறது. சூரியனின் பரம ஒளியாகத் தன்னை இரண்டாம் சந்திரகுப்தன் ஒப்பிட்டதாகவும் வரலாறு எடுத்துரைக்கிறது. இவரது காலத்தில்தான் இந்தியாவின் அரும்
பெரும் கலைகள் படைக்கப்பட்டன; காளிதாசரின் 'சாகுந்தலம்

Page 27
O. கடவுள் முருகன்:வரலாறும் தத்துவமும்) (48)
இயற்றப்பட்டது; காம சூத்திரம் எழுதப்பட்டது; சீனத்திலிருந்து புத்த குருமார்கள் இந்தியாவைத் தரிசித்தனர்.
இரண்டாம் சந்திரகுப்தனின் மகன் குமார குப்தன்' என்று அழைக்கப்படுகிறான். அலெக்சாண்டரின் வீரமும் இதில் தொடர்பு கொள்கிறது. இரண்டாம் ஃபிலிப் மன்னனின் 'குமாரன் அலெக்சாண்டர் தன்னைச் சூரியனின் மகனாக - அவதாரமாகப் பிரகடனப்படுத்திக் கொண்டவன். தன்னைச் சூரியனுடன் ஒப்பிட்ட இரண்டாம் சந்திரகுப்தனின் மகன் குமார குப்தன்' எனப் பெயர் பெறுகிறான். இக் குமார குப்தனே' "ஸ்கந்த குப்தன்' என்றும் அழைக்கப்படுகிறான்.
மேற் குறித்துள்ள குறிப்புகள் அனைத்தும் 'ஸ்கந்த புராணத்துடன் ஆரியர்க்கிருந்த தொடர்புகளை ஆராய உதவும்.

(இராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம்) 4. தொல் தமிழரும் முருக வழிபாடும்
கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே முன் தோன்றிய - -
மூத்த இனம் என்று தன்னைத் தானே உயர்த்திக் கொள்ளும் தமிழர் மனநிலைக்கும் குன்றுக் கடவுள் குமரனுக்கும் என்ன தொடர்பு உள்ளது என்பதை இனி ஆராய்வோம். தமிழர்கள் - திராவிடர்கள் எங்கிருந்து வந்தனர்? அல்லது அவர்களின் தோற்றம் இந்தியாவிற்குள்ளேயேதான் இருந்திருக்கிறதா? என்று ஆராய்வதன் வாயிலாக முருக வழிபாட்டிற்கும் தமிழர்க்கும் இடையேயுள்ள தொடர்பை அறுதியிடலாம்.
திராவிடர் இந்தியா முழுதும் பரவியிருந்தனர். ஆரியர் வருகையால் வடக்கிலிருந்த திராவிடர் தெற்கு நோக்கி நகர்ந்தனரா? அல்லது குமரிக் கண்டமாக இந்தியா இருந்த காலத்தில் இன்று கடல்கொண்ட பகுதியாயிருக்கும் இடமெல்லாம் தமிழர் பரந்து வாழ்ந்திருந்தனரா? என்று பல வகைகளில் ஆராயலாம்.
முருக வழிபாடு தமிழர் பண்பாட்டோடு, மொழியோடு, தத்துவத்தோடு, பழக்க வழக்கங்களோடு ஒன்றுபட்டிருக்கிறது. இவ் ஒற்றுமை ஓராயிரம், இரண்டாயிரம் ஆண்டு கால கட்டத்தில் உருவாகியிருக்க இயலாது.
"அஞ்சு முகந் தோன்றின் ஆறுமுகம் தோன்றும் வெஞ் சமரில் அஞ்சலென வேல் தோன்றும் - நெஞ்சில் ஒருகால் நினைக்கின் இருகாலும் தோன்றும் முருகா வென்றோதுவார் முன்" என்று திருமுருகாற்றுப்படைப் பாடல் கூறுகிறது.

Page 28
(தமிழ்க்கவும் முருகன்வனம் தத்துவமும்)ை
"சீர்கெழு செந்திலும் செங்கோடும் வெண்குன்றும் ஏரகமும் நீங்கா இறைவன்கை வேலன்றே
ரிரும் பெளவத்தின் உள்புக்குப் பண்டொரு நாள் சூர்மா தடிந்த சுடரிலைய வெள்வேலே" என்று செந்தில்வேலன் போற்றப்படுகிறான்.
திருமுருகாற்றுப்படை கி.மு. 2-ஆம் நூற்றாண்டில் எழுதப்பட்டதென்றால் முருக வணக்கமும் வழிபாடும் அதற்கு முன் எத்தனையோ ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் மக்களின் வாழ்க்கையோடு தொடர்புடையதாயிருந்திருக்க வேண்டும்.
ஆதிகால மனிதர் குன்று சார்ந்த குறிஞ்சிப் பகுதிகளில் வாழ்ந்த காலத்தில் முருகன் கடவுளாகப் படைக்கப் பட்டிருக்க வேண்டும். சமூக ஆய்வாளரின் கருத்துப்படி, முருகன் ஒரு இனத்தின் தலைவனாக இருந்து, பெரும் வெற்றிகளையீட்டித் தெய்வீகத் தன்மைக்கு உயர்த்தப்பட்டு, நாளடைவில் ஒரு தெய்வமாக வணங்கப்பட்டிருக்கலாம். சமூக அடிப்படையில் மலையைத் தெய்வமாகவும் முருகனை மலை வாழும் இறையாகவும் வழிபட்டிருக்கலாம்.
முருக வழிபாட்டின் வளர்ச்சி பற்றி ஆராயும் அறிஞர்கள் முருக வழிபாட்டில் ஒரு நீண்ட இடைவெளியிருப்பதாகக் கூறுகின்றனர். சாதாரணக் கடவுள் எவ்வாறு கடவுளர்களின் ‘கடவுளாக மாறினான்? இதற்கும் தமிழ்மன்னன் சாதாரண uorsurauiTres மட்டுமன்றி சக்கரவர்த்தியானதற்கும் தொடர்புண்டா? பல்லவர் காலத் தொடக்கத்திலிருந்து கந்தபுராணம் எழுந்த காலமாகக் கணக்கிடப்படும் சோழப் பெருமன்னர் இறுதிக் காலம் வரை முருகனைப் பற்றிய கருத்தாக்கங்கள் தமிழ்நாட்டில் இருந்ததாகக் கூறப்படுகிறது.

(இராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம்)
தமிழ்க் கடவுளென முருகனைத் தமிழர் கொண்டாடக் காரணங்கள் எவையாக இருக்கும் என்பதை வெறும் உணர்வுபூர்வமான கேள்வியாக அல்லாமல் தமிழரின் பண்பாடு, இலக்கியம், மன உணர்வுகளின் அடிப்படையில் வைத்து நோக்குதல் இன்றியமையாததாகும். கி.பி.10-ஆம் நூற்றாண்டிற்குப் பின் முருக பக்தி தமிழ்நாட்டில் வளர்ந்திருக்கிறது. அதே நேரம், தமிழரின் புலிக் கொடி இந்தியாவையும் தாண்டிப் பறந்திருக்கிறது. கந்தனைத் தங்கள் கலி யுகக் கடவுள் என்று வணங்குகின்றனர் தமிழர்கள். கலி யுகத்தில் தமிழரது பெருமையை உலகுக்கு எடுத்துக் காட்ட முருகனை முன் வைக்கின்றனர் தமிழர்.
பிரபஞ்சம் இடைவிடாமல் சுழன்று கொண்டிருப்பதாகவும் கால மாற்றங்கள் யுகங்களாகப் பிரிக்கப்பட்டிருப்பதாகவும் மக்கள் நம்புகின்றனர். இறைவன் துயில் எழும்போது மூவுலகங்களும் படைக்கப்படுகின்றனவாம்; அவன் நித்திரைக்குச் செல்லும்போது உலகத்தில் பல பிரளயங்கள் உண்டாகின்றனவாம். ஒவ்வொரு யுகமும் மகா பிரளயத்தில் அழிந்து முடிய, இன்னொரு யுகம் பிறக்கிறதாம். ஒவ்வொரு யுகத்திற்குள்ளும் எத்தனையோ சிறு பிரிவுகள் உள்ளன. சான்றாகக் கடவுளர் அகராதியில் ஒரு நாள் என்பது 43, 200 கோடி ஆண்டுகளைக் குறிப்பதைச் சுட்டலாம்.
ஒரு கல்பம், ஆயிரம் யுகங்களாகப் பிரிக்கப்பட்டிருக்கிறது. அதாவது, இம் மகா யுகங்கள் மேலும் பிரிக்கப்பட்டுக் கிரேதா யுகம், திரேதா யுகம், துவாபரா யுகம், மற்றும் கலி யுகம் என நான்கு யுகங்களாக அறியப்படுகின்றன.
தர்மம் நான்கு கால்களில் நிற்கும் கிரேதா யுகம் 172800 ஆண்டுகளைக் கொண்டது. இவ் யுகத்தில் தர்மம் ஆட்சி

Page 29
(தமிழ்க் கடவுள் முருகன்:வரலாறும் தத்துவமும்) (52)
செய்யும்; மனிதர்கள் நீதியையும் நியாயத்தையும் மதித்து நடப்பார்கள்; ஒரு கடவுளையே வணங்குவார்கள்; அக் கடவுள் வெண்மை நிறத்தில் இருப்பார்.
தர்மம் மூன்று கால்களில் நிற்கும் திரேதா யுகத்தில் 1296,000 ஆண்டுகள் உண்டு; இவ் யுகத்தில் அதர்மம் மிகும்; மனிதர்கள் ஏனோ தானோ என்று நடந்து கொள்வார்கள். இவ் யுகத்தின் கடவுள் சிவப்பாக இருப்பார்.
துவாபரா யுகத்தில் நேர்மை அரை அளவிற்குத்தான் தெரியும், தர்மம் இரு கால்களில் நிற்கும். இவ் யுகம் 864000 ஆண்டுகளைக் கொண்டது. இவ் யுகக் கடவுள் மஞ்சள் நிறத்தில் இருப்பார். இவ் யுகத்தில் சத்திரியரும் வைசியரும் தங்கள் கடமையை இயன்ற அளவிற்குச் செய்வர்.
கலி யுகம் என்பது அழிவை நோக்கிய காலமாகும். இக் கலி யுகம் 4,32,000 ஆண்டுகளைக் கொண்டது. நாம் தற்போது கலி யுகத்தின் 6,000 ஆண்டுகளைத் தாண்டிக் கொண்டிருக்கிறோம். இக் கலி யுகக் கால கட்டத்தில் தர்மம் ஒற்றைக் காலில் நிற்கும்; நேர்மை அழியும்; கடவுள் கறுப்பு நிறத்திலிருப்பார்; உலகத்தில் பெரும்பாலோர் சூத்திரர்களாக அல்லது அடிமைகளாக இருப்பர்; ஒருவருக்கொருவர் போட்டி, பொறாமையுடன் வாழ்க்கை நடத்துவர்; பெரிய நகரங்களை நோக்கிப் படையெடுப்பர், களவும் கொள்ளையும் மிகும்; பெண்டிர் ஆடவரை அடக்கி ஆள்வர்; இப் பெண்டிர் அடக்க மற்றவர்களாகவும் நிறையக் குழந்தைகளைப் பெறுபவர்களாகவும் இருப்பர்.
இக் கலி யுகம் இயற்கையின் கோர சக்தியால் பல

(53) (இராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம்)
நட்டங்களை எதிர்கொள்ளும்; பட்டினியால் நிறையப் பேர் மடிவர்; கல்கியின் அவதாரத்தால் கலி யுகக் கொடுமைகளுக்கு ஒரு முடிவு உண்டாகும். கலி யுகத் துன்பங்களால் மனிதரால் பொறுக்கவியலாத 5T) மாறுதல்கள் ஏற்படும். நூற்றுக்கணக்கான ஆண்டுகளுக்குச் சில இடங்கள் மழைகாணவியலாது அல்லல்படும். வானத்தில் ஒரு சூரியனுக்குப் பதிலாக ஏழு சூரியன்கள் தென்பட்டு உலகத்து நீரையெல்லாம் உறிஞ்சித் தள்ளுவார்கள். அக்கினியின் கோரத்தால் காடு, நாடு, வீடு, மனைகள் எரிந்தழியும். பூமி பிளக்கும். போரின் உக்கிரத்தாலும் இயற்கையின் கோரத்தாலும் மனிதர்கள் நூற்றுக்கணக்கில் அழிந்தொழிவர். இடைவிடாத மழையினால் பயிர்கள் அழியும். மக்கள் அழிவர்; குடி பெயர்வர். இக் கால கட்டத்தில், இறைவன் தாமரையில் வாழ்ந்து நீரில் துயில் கொண்டிருப்பார். இப்படிப்பட்ட காலத்தில் மனிதனும் கடவுளும் பிரபஞ்சத்தில் மறைந்து விட்டது போலும் தோன்றும்
உலகத்தின் நடு மையமாக இருப்பது மேரு மலை. இம் மலையைச் சுற்றிக் கந்தர்வர்களும் தேவர்களும் வாழும் இந்திரனின் நகரம் உள்ளது. இதன் பள்ளத்தாக்கில் அரக்கர்களும் அசுரர்களும் வாழ்கின்றனர். இவ் உலகம் ஆதிசேடனின் தலையில் தங்கியிருக்கிறது; நான்கு பெரிய யானைகள் இவ் உலகத்தைத் தாங்கியிருக்கின்றன. இவ் யானைகள் தங்கள் கால்களை உயர்த்தும்போது புவி அதிர்ச்சி ஏற்படுகிறது.
இக் கலி யுகத்தில் வாழ்ந்து கொண்டிருக்கும் கலி யுகக் கடவுளாக முருகனைத் தமிழர்கள் தெரிவு செய்ததற்கான பூர்வீக வரலாறு என்ன? எனும் கேள்வி எழுகிறது. முருக வழிபாடு வரலாற்றுக்கு முந்தைய காலம் முதல் தமிழரிடையே

Page 30
(தமிழ்க் கடவுள் முருகன்: வரலாறும் தத்துவமும்) 69
இருந்திருக்க வேண்டும் எனப் பல அறிஞர்கள் கருதுகின்றனர். எடுத்துக் காட்டாகத் திருப்பரங்குன்றம் வரலாற்றுக்கு முற்பட்ட கால வழிபாட்டு முறைகளைக் கொண்டிருப்பதாக அறிஞர்களால் (5 S 始 G e al d
முருக வழிபாட்டில் பல ஆதிக்குடிகளின் வழிபாட்டு முறையின் மிச்ச சொச்சங்கள் தங்கியிருக்கின்றன. இதற்கு, முருக வழிபாட்டின் ஒரு கூறாய் இலங்கும் வெறியாடல் சீரிய சான்றாக அமையக் காணலாம். இவ் வழிபாட்டு முறை மத்தியத் தரைக்கடல் பகுதி மக்களின் வழிபாட்டு முறையுடன் ஒத்திருக்கிறது. குளோத்தி (FW Clothy, 1978) என்பவரது கூற்றுப்படி, சில புதைபொருள்களின் தடயங்கள் மத்தியத் தரைக்கடல் பகுதிக்கும் தமிழருக்கும் இடையே நிலவிய தொன்மைத் தொடர்பை வலியுறுத்துகின்றன.
Guq3riasibarra) ஈமப் புதைகுழிகள் சிரியா நாட்டில் இருப்பதுபோல் காணப்படுகின்றன. நீலகிரி மலைச்சாரலில் கிடைக்கப்பெற்ற வெண்கலக் கிண்ணங்கள் போன்று சிரியாவிலும் கிடைத்துள்ளன. திருநெல்வேலி (ஆதித்தநல்லூர்) பகுதியில் கண்டெடுக்கப்பட்ட இரும்பாலான பொருள்கள் பாலஸ்தீனத்தில் கண்டெடுக்கப்பட்டவற்றிற்கு ஈடானவையாகும்.
"சிலப்பதிகாரம் (1 : 20-21), கலித்தொகை (104), புறநானூறு (9), குறுந்தொகை (52), இளம்பூரணர் உரை, இறையனார் களவியல் உரை, அடியார்க்கு நல்லாரின் சிலப்பதிகார உரை ஆகியவற்றில் குமரிக் கண்டம் பற்றியும் அது இன்றைய தென்னிந்தியாவின் தெற்கேயிருந்து அழிந்தது பற்றியும் கூறப்படும் குறிப்புகளைக் கொண்டு, தமிழர் குமரிக் கண்டத்தில் தோன்றினர் என்று தமிழ் அறிஞர்கள் பலர் உய்த்துரைக்கின்றனர்" (க.ப. அறவாணன், 1984:23).

(இராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம்)
ஆரியர் வருகையால் சிந்துவெளிப் பகுதி தாக்கப்பட்டு அழிக்கப்பட்டபோது தமிழர் தெற்கு நோக்கி வந்திருக்கலாம் என்பதும் சிலர் வாதம். நடு ஆசியப் பகுதி மக்களுக்கும். தமிழர்களுக்கும் எத்தனையோ ஒற்றுமைகள் உருவ அமைப்பில், பண்பாட்டு முறைகளில், மொழி வழக்கில் உள்ளன என்பது இன்னொரு பகுதியினர் வாதம்.
இன்றைய ஈராக், ஈரான், சிரியா, பாலஸ்தீனம், இஸ்ரேல் உள்ளிட்ட மேற்கு ஆசிய நாடுகள் ஆதிக் குடிகளின் பண்பாட்டு மூல இடங்களாக அமைந்திருந்தன. மிகப் புகழ்பெற்ற சுமேரிய, பாபிலோனிய, மெசபடோமிய நாகரிகங்களுக்கும் திராவிட நாகரிகங்களுக்கும் இடையே மிகுந்த ஒற்றுமைகள் இருக்கின்றன.
தமிழர்கள் கிரேக்க நாட்டிலிருந்து பெயர்ந்த ஒர் இனக்குழு மக்களாக இருக்கலாம் என்றும் பல அறிஞர்கள் கருதுகின்றனர். கிறித் (Crete) என்ற இடத்திலிருந்து வந்த வழிமுறையினர் என்று எடரால் என்பவர் குறிப்பிடுகிறார். (அறவாணன், 1978). இக் கிறித்தில் வாழ்ந்த ஆதிக்குடிகள் 'தர்மிலை (armio) என்று கிரேக்கர்களால் அழைக்கப்பட்டதாகக் கூறுகிறார் அறவாணன். மேலும், இம் மக்களுக்கும் தமிழர்க்கும் மொழி ஒற்றுமையுடன் வழிபாட்டு ஒற்றுமைகளும் இருந்ததாகக் கூறுகிறார் இவர்.
தாய்வழி மரபு, நாக வழிபாடு, தாய்த் தெய்வ வழிபாடு, கோவில் அமைப்புகள், வழிபாட்டு முறைகள் என்பன சுமேரிய மக்களின் பண்பாட்டோடு ஒன்றிப் போவதாகவும் கருதப்படுகிறது. இதையும்விட ஆப்பிரிக்காவிலுள்ள எகிப்தியப் பண்பாட்டிற்கும் சிந்துவெளி நாகரிகத்திற்கும் தொடர்பிருப்பதாகவும் சிலர்

Page 31
(தமிழ்க்கடவுள் முருகன்வனறும் தத்துவமும்)6)
கருதுகின்றனர். ரோமிலா தாப்பர் என்ற அறிஞரின் கூற்றை இங்கு நினைவு கூறுதல் வேண்டும். அதாவது, ஆரியர் இந்தியாவை ஊடுருவிய காலத்தில் பல சாதிகள் இருந்தன. அவற்றுள், நீக்ரோ இனக்குழுவினரும் அடங்குவர்; மற்றோர் இனக்குழுவினரான 'திராவிடர்' எனப்படுவோர் மத்திய தரைக்கடல் நாடுகளைச் சேர்ந்தவர்களாக இருக்கலாம் என்று
இவரின் கூற்றுடன், கிரேக்கப் பழமரபுக் கதையான டையோனியஸ் கதையையும் முருகக் கடவுள் குறித்த கதையையும் ஒப்பிட வேண்டும். டையோனியஸ் ஆறாயிரம் ஆண்டுகளுக்கு முன் இந்தியாவை அடைந்ததாகப் பழமரபுக் கதைகள் குறிப்பிடுகின்றன. இந்த டையோனியஸ் வனக் கடவுள்; குன்றுகளின் தலைவன்; மரங்களின் தலைவன்; அவன் தொடர்பான விழாக்களின்போது பெண்டிர் தம்மை மறந்து ஆடுவர் என்பன போன்ற தகவல்களிலிருந்து இந்தக் கிரேக்க டையோனியஸ்தான் மத்திய ஆசியாவழியாக இந்தியாவை வந்தடைந்த திராவிடரின் முருகக் கடவுளா? என்ற கேள்வி எழுகிறது. நீக்ராயிடு இனக்குழுவினர் இன்றைய இந்தியாவின் தென்னிந்தியப் பகுதிகளில் வாழ்ந்திருக்கின்றனர். குஜராத்தில் கண்டெடுக்கப்பட்ட எலும்புக் கூடுகள் பழைய காலத்து நீக்ராயிடு மக்கள் இந்தியாவில் வாழ்ந்தனர் என்பதை வலியுறுத்துகிறது.
இலங்கையின் ஆதிக் குடிகளான வேடர்கள் முருகனைத் தங்கள் மைத்துனராக வழிபடுகின்றனர். இன்றைக்கு 2500 ஆண்டுகளுக்கு முன் வட இந்தியாவிலிருந்து விஜயன் என்ற இளவரசன் இலங்கை ஆதிக் குடிப் பெண்ணான குவேனியைத் திருமணம் செய்து, அவளைக் கொலை செய்ய, அவளின் குழந்தைகள் காட்டுக்குள் ஓடி விடுகின்றனர். அவர்களின்

(இராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம்)
சந்ததிதான் இந்த வேடர்கள் என்பது வரலாற்றறிஞர் கூற்றாகும். அப்படியானால், இன்றைக்கு 2500 ஆண்டுகளுக்கு முன்னரே முருக வழிபாடு இலங்கையில் இருந்திருக்க வேண்டும். இந்த வேடர்கள் இந்தியாவில் காணப்படும் ஆதிக் குடிகள் போன்றோர். இன்றும் தென்னிந்தியாவில் காணப்படும் காடர், இருளர், பணியர், ஊராளி, முல்லைக் குறும்பர், வெட்டுக் குறும்பர் ஆகியோரும் அந்தமான் தீவுகளில் வாழும் ஓங்கி, சென்டினல், ஜாரவா ஆகியோரும் நீக்ராயிடு இனத்தவர் என்று தன் ஆராய்ச்சியின் வாயிலாகக் கூறுகிறார் அறவாணன் (மேலது).
இருக்கு வேதத்தில் வர்ணிக்கப்படும் 'தாச வர்ண மக்கள் 'கறுப்பு வர்ண மக்களே' என்பது இங்கு நினைவு கொள்ளத்தக்கது. அதே போல, இருக்கு வேதத்தில் 'அநாச' என்றும் 'கிருஷ்ண' என்றும் காணப்படும் இக் குறிப்புகள் சப்பை மூக்கான கறுப்பு நிற மக்களையே குறிக்கிறது. தொல் குடியினரான இம் மக்கள் வில்லையும் அம்பையும் அரச மர வழிபாட்டையும் மீன், விலங்குகள், கொடிகள் போன்றவற்றைக் குலக் குறியீடாகக் கொள்வதையும் முன்னோர் வழிபாட்டையும் இந்தியாவில் அறிமுகப்படுத்தினர்.
ஆரிய வேதத்தில் குறிப்பிடப்படும் 'கிருஷ்ண' என்ற மக்கள்தான் வட இந்தியாவில் துவாரகைப் பகுதியில் வாழ்ந்த கிருஷ்ணனைத் தெய்வமாகக் கொண்ட நாடோடி மக்கள். இப்படி ஒவ்வோர் இனக்குழு மக்களின் வரலாற்றையும் ஆராய்ந்து கொண்டு சென்றால் ஒவ்வொருவருக்கும் தனிப்பட்ட வழிபாட்டு முறைகள் இருந்திருக்கின்றன என்பது தெரிகிறது. இவற்றுள், 'முருக வழிபாடு' தமிழரின் வழிபாடு என்பது தெள்ளத் தெளிவாக விளங்குகிறது.

Page 32
(தமிழ்க் கடவுள்முருகள்:வரலாறும் தத்துவமும்) (58)
திராவிடரது முருக வழிபாட்டின் பல கூறுகள் - அதாவது, பூஜை முறைகள், நம்பிக்கைகள், வள்ளி, முருகன் பற்றிய காதல் கதை, முருகனின் வீரம், அழகை விவரிக்கும் முறை என இவை அனைத்தும் - முருகனை வழிபட்ட சமுதாயத்தின் மன நிலையை விளக்கப்படுத்துகிறது. மேலும், சாதியமைப்பற்ற நிலையையும் - பெண்டிரையும் காதலையும் தமிழர் மதித்துக் கெளரவித்ததையும் காட்டுகிறது. இதற்கு மாறாக, ஆரிய வழிபாட்டு முறை அவர்களது சமுதாயத்தின் வாழ்க்கை முறையைப்
பிரதிபலிக்கிறது.
அரைகுறை நாடோடித்தனமான ஆரியர்கள் இந்தியாவை ஊடுருவும்போது, மூன்று நிலையான சமுதாயக் குழுக்களாக இருந்தனர். இது, சாதியமைப்பு எப்படி வந்தது என்பதைக் காட்டுகிறது.
1. போராளிகள் : இவர்கள் நாடோடிச் சமுதாயத்தில் இன்றியமை யாதவர்களாகக் கருதப்பட்டனர். தமது பெரும் சொத்தான மாடுகளை எதிரிகள் களவாடிக் கொண்டு போகாமல் காப்பது இவர்களது முகாமையான பணியாக இருந்தது. இவர்கள் 'இந்திரர்' என்று அழைக்கப்பட்டனர். இவ் 'இந்திரரது வலிமை தெய்விகமாக்கப்பட்டது. வலிமை படைத்த போராளிகள் ஒரு கூட்டத்தின் தலைவனாக இல்லாமல், தலைவனாக இருந்தவரின் மகன் தலைமைப் பதவிக்கு நியமிக்கப்பட்டான். போரிடும் குழுவினர் நாளடைவில் சத்திரியர்கள் ஆயினர்.
2. சமயச் சடங்கு செய்வோர் : பலிகொடுத்து யாகம் செய்வதன் வாயிலாகத் 'தேவர்களிடம் தங்களுக்குத் தேவையானது கிடைப்பதாக இவர்கள் நினைப்பர். தங்களைவிட மேன்மையான சக்திக்குப் பலி கொடுப்பதன் வாயிலாகவும்

(இராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம்)
வேள்விகள் செய்வதன் வாயிலாகவும் அதைத் திருப்திப் படுத்தலாம் என்பது இவர்களது நம்பிக்கை. பிராமணர்களின் தோற்றம் இவ்வாறே உருவானது. இவர்கள் இந்தியாவிலேயே தங்களை உயர்ந்த சாதியாக உயர்த்திக் கொண்டனர். சத்திரியர்களுக்கு இவர்களின் தேவையும் இருந்தது இதற்கு ஒரு
காரணமாகும்.
3. பொது மக்கள் : எல்லா சமுதாயத்திலுமுள்ளது போல
ஆரிய சமுதாயத்திலும் பொது மக்கள் அனைத்துப் பொது வேலைகளையும் அதாவது, மர வேலை செய்வதிலிருந்து ஒரு சமுதாயத்திற்குத் தேவையான எல்லாத் தொழில்களையும் - செய்தனர். நாளடைவில் பல தொழில்களிலும் முன்னேறிய இவர்கள் வைசியர்கள்' ஆனார்கள். இந்தியாவிற்கு இவர்கள் வரும்போது எழுத்தறிவு இருந்ததற்கான எந்த ஆதாரமும் இல்லை. இவர்களின் இருக்கு வேதம் எத்தனையோ நூற்றாண்டுகளாக 'வாய்மொழி மந்திரமாகவே இருந்தது. அதே நேரத்தில், சிந்துவெளி நாகரிகச் சின்னங்கள்வாயிலாக மிகவும் நாகரிகமடைந்த ஒரு சமுதாய மரபு இருந்திருக்கிறது என்பது தெரிகிறது.
இவ்வாறாக, ஆரியர் சமுதாயத்தில் மூன்றுவிதமான 'குழுக்கள் இருந்தாலும் ஒருவரை ஒருவர் அடக்கியாளும் சமுதாயக் கொடுமை நிலவவில்லை. போராளிகள், பூசை செய்வோர், பொது மக்கள் உள்ளிட்ட எல்லோரும் சமமாக நடத்தப்பட்டனர். இவ் ஆரிய சமுதாயத்திற்கு இந்தியாவின் தொல்குடிகளுடன் தொடர்பேற்பட்ட பின்னரே சாதியமைப்பு உண்டானது என்கிறார் ரோமிலா தாப்பர் (Romila Thaper, 1978) அவரது கருத்துப்படி, இருக்கு வேதத்தில் அந்தக் கால இந்தியாவிலிருந்த பல இனக்குழுவினரின் பெயர்கள்

Page 33
(தமிழ்க் கடவுள்முருகன் :வரலாறும் தத்துவமும்) 60ர
நீடந்த சண்டை ஓரிட்த்தில் குறிப்பிடப்படுகிறது. சூதர் (Sudas) எனப்படும் அரச குடும்பம் பாத்' என்ற இனக்குழுவினர் என்று குறிப்பிடப்படுகிறது. இவர்கள் வட பஞ்சாபில் இருந்திருக்கின்றனர். இவர்களின் அரச குரு விசுவாமித்திரர் என்று கூறப்படுகிறார். ஆரியர்கள் தங்கள் எதிரிகளை பர்னியர் (Poms) என்றும் தாசர் (Dosos) என்றும் குறிப்பிட்டிருக்கின்றனர்.
பர்னியர் என்று குறிப்பிடப்படும் இனம் ஆரியர்களுக்குத் தொந்தரவு கொடுப்பவர்களாக இருந்திருக்கின்றனர். இவர்கள் ஆரியர்களின் மாடுகளைக் களவாடி, ஒட்டிக்கொண்டு போனவர்கள் என்று குறிப்பிடப்படுகிறது. அது மட்டுமல்லாது, இந்தப் பர்னியர் என்போர் ஆரியர்களுக்கு வியப்பைத் தரும் 'கடவுளரை வணங்கியதாகவும் குறிப்பிடப்படுகிறது.
w : ༈ ལོ་ཚོ་ ஆரியர்களின் மிக முகாமையான எதிரிகளாகத் தாசர் இருந்திருக்கின்றனர். மேலும், இவர்கள் நிலச் சொந்தக்காரராகவும் நாகரிகமுள்ளவர்களாகவும் இருந்திருக்கின்றனர். நீண்டகாலச் சண்டைக்குப் பின் தாசர் இனக்குழுவினர் ஆரியரால் வெற்றி Qstrársnúnu Lari.
******* இந்தத் தாசர் இனக்குழு ஆரியர்களால் தாழ்ந்த இனமாகக் கருதப்பட்டதற்குக் காரணம் அவர்கள் கறுப்பு நிறத்தவர்களாக இருந்தது என்கிறார் தாப்பர். இருப்பினும், இவ் இனக்குழு ஆரியர்களால் அடிமை கொள்ளப்பட்டதற்குக் காரணம் அவர்கள் கறுப்பாக இருந்தது மட்டுமல்ல; இவர்கள் வலிமை படைத்தவர்களாக இருந்ததும் ஆரியர்களுக்குப் புயுத்தை: உண்டாக்கியது. எனவே, இவர்கள் மீதான நெடிய பேரரும், இவர்கள்ை அடிமை கொள்வதும் ஆரியர்களுக்குக்

(இராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம்)
கட்டாயமாயிருந்தது. இதற்குக் காரணம் தாசர் தம்முடன் கலந்து தமது ஆரிய இனக்குழுவையே அழித்துவிடுவார்கள் என்ற பயம் ஆரியர்களுக்கு இருந்தது என்கிறார் தாப்பர்.
தாசர் அடிமையாக்கப்பட்ட கால கட்டத்தில் சாதியமைப்பின் முதல் படிநிலைக்கு அடித்தளமிடப்பட்டது; இந்தியாவில் பிறந்த இந்தியர், நாட்டுக்குள் புகுந்த ஆரியரால் தாழ்த்தப்பட்ட மக்களானார்கள். இவ் ஆதி இந்தியக் குடிமக்களைத் தாழ்த்தப்பட்டவர்களாக நடத்த அவர்கள் வணங்கிய தெய்வங்களும் ஒரு காரணம் என்கிறார் தாப்பர்.
ஆரியர்களுக்கு அவர்களின் 'மாடுகள் தான் மூலதனம். மாடுகள் உள்ள அளவிற்குச் சமுதாயக் கெளரவம் கிடைத்தது. அடுத்தது, அவர்களின் குதிரைகள். குதிரைகளின் வேகம் போராளிகளின் வெற்றிக்கு இன்றியமையாததாக இருந்தது. பெரிய வேள்விகளுக்குக் குதிரைகள் பலியாயின. மாடுகள் கவனமாக வளர்க்கப்பட்டன. ஒரு குறிப்பிட்ட விசேட நாளில் மாட்டிறைச்சி சாப்பிட்டுச் சோம பானம் அருந்தினர். ஆரியரின் வாழ்க்கைக்கு மாடுகள் இன்றியமையாததால் அவை முக்கியமானதாக அமைந்தன. நாளடைவில் அவை புனித விலங்குகளாயின. மாட்டைக் கொல்வது பிராமணரது பொருளியல் வாழ்க்கையை நாசமாக்கியது. அதனால், இவர்கள் særsås மாட்டிறைச்சி அகற்றப்பட்டது.
இந்தியாவில் திரிந்த மற்ற விலங்குகள் அவர்களுக்கு வியப்பைத் தந்தன. யானையைக் 'கை படைத்த, அச்சமூட்டும் விலங்கு' என்று கருதினர். பாம்புகள் கூடாத சக்திகளுடன் ஒப்பிடப்பட்டன. இக் கருத்து நாகத்தை வணங்கும் நாக சாதியினரின் தொடர்பு கிடைத்ததும் மாறியிருக்கலாம் என்கிறார்

Page 34
(தமிழ்க் கடவுள் முருகன் :வரலாறும் தத்துவமும்)
தாப்பர். மேலும், ஆரியரின் தெய்வங்கள் கிரேக்கக் கடவுளர்களை நினைவுபடுத்துவதாக இருந்தன என்கிறார் இவ் வரலாற்றறிஞர். ஆரியர்களிடையே சூரியன், வருணன், வாயு, சோமன் என்பன முக்கியமானதாக இருந்தன. 'சாவித்திரி' (Sovir) என்ற தெய்வத்தின் பெயர் சொல்லித்தான் ஆரியரின் அதிமுக்கிய மந்திரமான காயத்திரி மந்திரம் உச்சாடனம் செய்யப்பட்டது என்றும் இவர் எழுதுகிறார்.
சாவித்திரி என்ற தெய்வம் சூரியரின் பெண் அம்சமாகும். இந்தக் காயத்திரி தேவதையை வணங்கினால் கல்வியறிவும் வாழ்க்கையில் உயர்வும் கிடைப்பதாகக் கருதப்படுகிறது. இம் மந்திரத்தைப் பிராமணர்களுள் ஆண்கள் மட்டுமே உச்சாடனம் செய்யவியலும்; பெண்களோ தாழ்த்தப்பட்ட சாதியினரோ இம் மந்திரத்தை உச்சாடனம் செய்வது அதர்மமாகக் கருதப்பட்டது. அதாவது, கல்வியறிவும் வாழ்க்கையின் முன்னேற்றமும் பிராமணர் சாதியில் இருப்பதற்காகச் சமஸ்கிருத மொழி பயன்படுத்தப்பட்டது. இது தெய்விக மொழி என்ற போர்வையில் சாதாரண மக்களுக்கு எட்டாத மொழியாய்ப் பாதுகாக்கப்பட்டது. சங்கத் தமிழ் வளர்ந்ததெனக் கூறப்படும் தமிழ்நாட்டில் தமிழ் மொழி சமய மொழி'யாக இல்லாமல் இலக்கிய மொழியாக உருவெடுத்தது. தமிழ் மொழியைத் தொல்காப்பியர் இலக்கணப்படுத்தினார் என்ற வரலாற்றை மிகவும் கவனமாக ஆராயத் தமிழ் அறிஞர்கள் முன் வர வேண்டும்.
அசோகர் கல்வெட்டுகளில் பாண்டிய மன்னரைப் பற்றி உள்ளதாகவும் அதாவது, கிறிஸ்துவிற்கு முன் 3-ஆம் நூற்றாண்டு தமிழ்நாட்டில் மிகவும் நாகரிகம் அடைந்த சமுதாயம் இருந்ததாகவும் ஆதாரங்கள் உள்ளன. அவ்வாறாயின், தொல்காப்பியர் இலக்கணம் வகுக்கும்வரை தமிழ் எவ் உருவில் இருந்தது? எனும் கேள்வி நம் முன் எழுகிறது.

(இராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம்)
முதற் சங்கம், இடைச் சங்கம் என்பன வெறும் கற்பனையா என்று சிந்தித்தல் இன்றியமையாததாகும். மகாபாரதப் போரில் இம் மன்னர்கள் தொடர்புள்ளவர்களாக இருந்தனர் என்று கூறுகிறார் ரோமிலா தாப்பர். மகாபாரதத்தில் பாண்டியர் தலைநகரம் கபாடபுரம் எனச் சித்தரிக்கப்படுகிறது. கிமு 2-ஆம் நூற்றாண்டுக் காலத்தில் தமிழ் மன்னர்கள் இலங்கையை அடிமை கொண்டிருந்தனர். இவ்வளவு நாகரிகம் படைத்த சமுதாயத்தினுடைய தமிழ்த் தடயம் எங்கே? என்ற கேள்வி நம் முன்னே எழுகிறது.
சோழ மன்னன் கரிகாலனின் காலம் கி.மு. 4-ஆம் நூற்றாண்டு என்கிறார் தாப்பர். சேர மன்னன் ரோமரது கடற்படையைத் தகர்த்ததாகவும் கூறப்படுகிறது. கி.மு. 3-ஆம் நூற்றாண்டில் தமிழ்நாட்டு மன்னர்கள் கிரேக்க நாட்டுடன் வாணிபத் தொடர்பு கொண்டிருந்தமை வரலாற்றுச் செய்தி
முருக வழிபாடு குறித்துத் தாப்பர் (Romila Thoper, 1978) கூறும்போது, தமிழர்கள் முருகனைத் தங்கள் போர்க் கடவுளாக வணங்கினர் என்று குறிப்பிடுகிறார். இதன் காலம் சரியாகச் சொல்லப்படாவிட்டாலும் முருக வழிபாடு மிகவும் தொன்மையானது என்பதை இவ் அறிஞர் குறிப்புக்களிலிருந்து காண இயல்கிறது.
போர்க் கடவுளாக முதன்மைப்படுத்தி வணங்கப்பட்டது மட்டுமல்லாமல் மனித இனத்தின் வளர்ச்சிக்கும் முருகன் இன்றியமையாதவனாகக் கருதப்பட்டான். அக் கடவுளை அரிசி போன்ற தானியங்களால் தமிழர் வணங்கியது மட்டுமல்லாமல் நடனத்தையும் இன்றியமையாததாகக் கொண்டிருந்தனர். இச் சடங்குகளைத் தலைமைப் பூசாரி செய்தார்.

Page 35
(தமிழ்க் கடவுள் முருகள்:வரலாறும் தத்துவமும்)64)
முருக வழிபாடு தமிழ்ச் சமுதாயத்தின் வளர்ச்சியுடன் தொடர்புடையது. சிறு இனமாக இருந்த அல்லது தனிப்பட்ட சிறு குழுக்களாக இருந்த திராவிடத் - தமிழ் இனம், பெரிய அரசர்களாக மாறி, அந்நியரை வெல்லும் அளவிற்கு வளர்ச்சியடைந்தபோது, முருக வழிபாட்டு முறைகளும் மாறியிருக்கின்றன. அதாவது, போர்த் தலைவனாக மட்டுமல்லாது ஒரு சமுதாயத்தின் பாதுகாப்புக் கடவுளாகவும் முருகன் மாற்றமெடுக்கிறான். சமஸ்கிருதத்தில் ஸ்கந்த புராணம் எழுதப்பட்டது முதலே இவ் வழிபாடு தமிழ்நாட்டில் வேர் ஊன்றியிருந்திருக்கிறது; கோயிலைச் சுற்றி ஊர்கள் பரவுகின்றன; அரசர்கள் மக்களைப் பாதுகாக்கும் படை பலமுள்ளவர்களாக மாறுகின்றனர்; அவர்களின் கடவுளாக முருகன் அமைகிறான்.
வடக்கிலிருந்து வந்த ஆரியப் பண்பாட்டின் தாக்கத்தால் தமிழரது அரசியல், பொருளியல், சமுதாய வளர்ச்சிகளில் பெரிய மாற்றங்கள் ஏற்பட்டன. வடக்கிற்கும் தெற்கிற்கும் மழைக் காலமற்ற காலங்களின்போது பயணத் தொடர்பு மிகவும் கூடுதலாக இருந்தது. கிரேக்க நாடு மட்டுமல்லாமல் பல மத்திய தரைக்கடல் நாடுகளுடனும் தமிழர்களின் கடல் வாணிபம் நடைபெற்றிருந்திருக்கிறது. பல நாடுகளிலும் பலதரப்பட்ட கடவுளர் கதைகள் காணப்படுகின்றன. எனவே, பல பண்பாடுகளுடன் இணைந்து காணப்படும் 'முருகன் வழிபாடு' எங்கு, எப்போது தொடங்கியிருக்கலாம் என்று பல கேள்விகள் நம் முன் எழலாம்.
ஆனால், தத்துவ அடிப்படையிலோ, சமய அடிப்படையிலோ, மொழி அடிப்படையிலோ எப்படிப் பார்த்தாலும் தமிழர்க்கும் முருகனுக்கும் உள்ள இறுக்கமான தொடர்பு ஏனைய

(இராஜேஸ்வரி urബിന്ഥങ്ങിt )
பண்பாடுகளில் தென்படவில்லை. முன்னர்க் குறிப்பிட்டதுபோல் કી6o கடவுளர்கள் காலத்திற்குக் காலம் மேன்மைப்படுத்தப்படுகின்றனர் அல்லது அவர்கள் முதன்மையை வேறு சில கடவுளர்கள் எடுத்துக் கொள்கின்றனர். ஆனால், முருகன் மட்டும் தமிழர் மொழியுடன், பண்பாட்டுடன், தத்துவத்துடன் வளர்ந்து கொண்டே வருகிறார்.
முருக வழிபாடு எப்போது வளரத் தொடங்கியது என்பது ஆராயப்பட வேண்டிய ஒன்றாகும். அதே நேரம், தென்னகத்தில் சமய அடிப்படையிலும் அரசியல் அடிப்படையிலும் நடந்த மாற்றங்களையும் ஆராய வேண்டும். வடக்கில் சமணமும் பெளத்தமும் வளர்ந்து கொண்டே வந்தபோது தென்னகத்தில் தமிழ் மன்னர்கள் ஆட்சி உச்சத்திலிருந்தது; ஒருவருக்கொருவர் போர் தொடுப்பதும் நாட்டைப் பிடிப்பதும் நடைமுறையான விடயங்களாக இருந்தன.
பல்லவர் காலத்தில் வடக்கிலிருந்து ஆரியர்களின் வருகை அதிகரித்ததாக வரலாறு கூறுகிறது. பல்லவர்கள் காஞ்சிபுரத்தைத் தலைநகராய்க் கொண்டும் பாண்டியர்கள் மதுரையைத் தலைநகராகக் கொண்டும் ஆட்சி நடத்துகின்றனர். மகேந்திரவர்ம பல்லவன் காலத்தில் (கி.பி. 600 முதல் கி.பி. 630 வரை) மகாபலிபுரக் கோவில் குடையப்பட்டிருக்கிறது. இம் மன்னன் சமண சமயத்தைச் சார்ந்திருந்தவன்; இவன் அப்பரின் முயற்சியால் 'சைவம் தழுவினான்.
சமணர்கள் காலத்தில் பல சமய விரிவுப் பணிகள் நடந்தன. தமிழில் முதலில் வெளிவந்த பல நூல்கள் சமணர்களால் எழுதப்பட்டனவாகும். பல்லவர் காலத்தில் சமண, பெளத்த சமயக் கல்விகள் விரிவடைந்திருந்தன; காலப் போக்கில்,

Page 36
(தமிழ்க் கடவுள் முருகன்: வரலாறும் தத்துவமும்)
ஆரியர்கள் அவ் இடங்களைக் கைப்பற்றிக் கொண்டனர். பல்லவர் காலத்தில், தமிழகத்தில் ஆரியர்களுக்குப் பல கிராமங்கள் தானமாக வழங்கப்பட்டன; அவற்றிற்கு வரி கட்டுவது என்னும் வழக்கம் ஆரியர்களிடையே காணப்படவில்லை.
சமணர்கள் ஆரியர்கள் போலல்லாது மக்களுக்கு விளங்கிய மொழிகளில் சமயக் கல்வியைக் கற்பித்தனர். அக் காலத்தில் அதிவேகமாகப் பரவிய 'பக்தி இயக்கம்' 'தமிழ் மொழியை அடிப்படையாகக் கொண்டது. சமண சமயக் கொள்கைகளுக்கு எதிராகச் சைவ சித்தாந்த சிந்தனைகள் வளர்ந்தன. பக்தி மார்க்கம் கிபி 6, 7 -ஆம் நூற்றாண்டுகளில் தொடங்கினாலும் அதனுடன் 'முருக இணைப்பு என்பது கி.பி. 10-ஆம் நூற்றாண்டுக்குப் பின்னரே பரந்திருக்கிறது.
இக் கால கட்டத்தில் தமிழில் எழுந்த எழுச்சி, பக்தியின் அடிப்படையில் எழுந்த ஒரு மொழி விழிப்புணர்வை உண்டாக்கியது. இதுவரை கடவுள் மொழியாக இருந்த சமஸ்கிருதம் பின்தள்ளப்பட்டது. பக்திப் பாடல்கள் கோயில் பூசைகளுள் ஒன்றாக இருந்தன. தமிழ்க் கடவுளாக 'முருகன்' உயர்த்தப்பட்டான். இதற்குக் காரணம், "ஸ்கந்தன்' என்ற பெயரில் ஆரியர் உருவாக்கிய கடவுளை மிஞ்சிய ஒரு கடவுள் தமிழர்களுக்குத் தேவையாயிருந்ததா என்பது அந்தக் காலகட்டத்தில் நடந்த நிகழ்ச்சிகளுடன் வைத்து விவாதிக்கப்பட வேண்டிய விடயமாகும்.
முருகன், தமிழரின் இயற்கைக் கடவுள். நிலங்களை ஐம்பெரும் பிரிவுகளாகப் பிரித்து, ஒரு தெய்வத்தை உண்டாக்கித் தொழுதவன் தமிழன். குறிஞ்சித் தெய்வம் 'முருகனின் மூலம் தமிழரின் ஆதியுடன் இணைந்தது.

(இராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம்)
தொல்குடிகள் எந்த நாட்டில் இருந்தாலும் 'உயர்ந்த இடங்களைத் தெய்வம் வாழும் இடங்களாக நினைத்து வழிபட்டனர். சான்றாகத், தொல்குடி மக்களான தென்னாப்பிரிக்காவின் இங்கா இனக்குழுவினர் தங்கள் வழிபாட்டு இடங்களாக உயர்ந்த இடங்களைத்தான் தேர்ந்தெடுத்திருந்தனர் என்பதைச் சுட்டலாம்.
மலை சார்ந்த வாழ்வை அடிப்படையாகக் கொண்டிருந்த தொல்குடி மக்களின் கடவுளாக முருகன் இருந்திருக்கலாம். சாதாரண மக்களின் கடவுளாக விளங்கிய முருகனுக்கும் அம் மக்களுக்கும் இடையே நிலவிய உறவு அவனை வழிபட்ட முறைகளிலிருந்து தெரிய வருகிறது. அதாவது, ஆரியக் கடவுளர் போல், 'வேள்விகளுக்காகக் காத்திருக்காத இந்தக் கலி காலக் கந்தனைத் தமிழர்கள் ஆடல், பாடல் வாயிலாக வணங்கித் தொழுதனர்; அரிசியும் பூவும் கொட்டிப் பூசித்தனர்.
முருக வழிபாட்டு வளர்ச்சி 'தமிழ்' என்ற மொழியின் வளர்ச்சியாகும். அம் மொழிக்கும் பண்பாட்டிற்கும் தமிழர் கொடுத்த மிக, மிக உயர்ந்த இடம்தான் முருக வழிபாடாகும்.
பல்லவர் காலத்தில் ஆரியர்கள் காஞ்சிபுரத்தில் சமஸ்கிருதக் கல்லூரிகளைத் தொடங்க மன்னர்களின் உதவி கிடைத்தது. வடக்கிலிருந்த நாளந்தா பெளத்தக் கல்வி நிலையத்திற்குப் போட்டியாக ஆரியர்கள் தெற்கில் இக் கல்வி நிலையத்தை அமைத்தனர். இங்கு 340 மாணவர்கள் சமஸ்கிருதத்தில் உயர் கல்வியைக் கற்றனர்.
இதே கால கட்டத்தில் நாயன்மார்கள் மக்களிடையே கலந்து வளர்த்த பக்தி மார்க்கம், ஆரிய வேதங்களுக்கு எதிராக

Page 37
(தமிழ்க் கடவுள் முருகன் :வரலாறும் தத்துவமும்)
நடந்த ஒரு சமயப் புரட்சி என்று கூடச் சொல்லலாம். அதிலும், அப்பர் முழு மும்முரமாகச் சமயப் பணியில் ஈடுட்டார்; இவர் ஒர் உழவர்; ஆரியர்கள் தமிழரது நிலங்களை மன்னர் உதவியுடன் கவர்ந்து, தமிழ் மக்களைத் தங்கள் கூலிகளாக ஆக்கியதன்
எதிரொலியா இவரது சைவ சமயத் தொண்டு என்று கூடக் கேள்வி எழுப்பலாம்.
ஆரியக் கடவுள்களை வென்ற முழுமுதற் கடவுளாக 'முருகன்' தமிழ் மக்களால் போற்றப்படுவதன் உள்ளார்ந்த நோக்கம் என்ன? என்ற கேள்வி இங்கு நம் மனதில் எழுகிறது. சைவத்தின் பெரும்பொருளான சிவனின் மகன்; போர் நிலத் தெய்வமான கொற்றவையின் மகன் என்றெல்லாம் முருகன் போற்றப்படுகிறான். ஆரிய ஸ்கந்த புராணத்தில் முன்னுக்குப் பின் முரணாகச் சொல்லப்பட்ட ஸ்கந்தனின் பிறப்பு பற்றிய எந்தக் கதைகளும் தமிழ் முருகனின் வரலாற்றில் இல்லை; அவனுக்குத் தாயும் தகப்பனும் உண்டு.
தமிழில் பக்தி மார்க்கம் வளர, வள முருகனும் வளர்கிறான். இந்தப் பக்தி மார்க்கம் சைவத்தில் மட்டுமல்லாது வைணவத்திலும் பரவுகிறது. பக்தி மார்க்கத்தைப் பரப்பியவர்கள் தாழ்த்தப்பட்ட சாதியைச் சார்ந்தவர்களாக இருந்திருக்கின்றனர். ஆண்டாள் என்ற தாழ்த்தப்பட்ட மகள் கண்ணன்மீது தான் கொண்ட காதலைப் பக்தியால் கொட்டுகிறாள். மீரா அரச யோகத்தை விட்டுத் துறந்து கண்ணன் பாடலில் களிப்படைகிறாள்.
தமிழில் உண்டாக்கிய பக்தி மார்க்கம் வட இந்தியாவில் கி.மு. 6-ஆம் நூற்றாண்டில் தோன்றிய சமண, பெளத்த சமயங்கள் செய்யாத வகையில் ஆரிய வேதத்தின் போலியை மக்களுக்கு எடுத்துக் காட்டியது. ஆரியர்களுக்கும்

(இராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம்)
மன்னர்களுக்கும் செல்வர்களுக்கும் மட்டும் எட்டக்கூடிய 'இறைவன்', ஆண்டாள் என்ற பெண்ணுக்கும் அப்பர் என்ற தமிழனுக்கும் பக்தி நிலையில் ஒன்றிணைகின்றான்.
சமணமும் பெளத்தமும் ஆரிய தத்துவத்தின் மூலாதாரக் கொடுமைகளான சாதிக் கொடுமைகளையும் வேள்விகளையும் எதிர்த்ததாகக் கூறப்படுகிறது. ஆரியர் வருகைக்கு முன்பே ஆதிகாலம் தொட்டு நிலவிய சைவ சித்தாந்தத்தின் ஒரு வெளிப்பாடே பக்தி வழிபாடு. சைவனான இராவணன் இசையின் மகிமையை உணர்ந்தவன், வீணையைக் கொடியாகக் கொண்டவன்; சிவ தாசனாக வாழ்ந்தவன்.
இறைவனையும் பக்தனையும் ஒன்றுபடுத்தும் மார்க்கம் பக்தி மார்க்கம். இத் தூய நெறி வேள்விகளால் எட்ட முடியாதது. மனிதத்தின் ஆத்மாவைப் பரிபூரணமாக இயற்கைச் சக்தியுடன் (இறைவனுடன்) ஒன்றுபடுத்துவது இந்தப் பக்தி என்ற மன நிலை. இந்தத் தூய்மையான வழிபாட்டு முறைக்கு 'அந்தணர்' என்ற தரகர் மனிதத்திற்கும் இறைமைக்கும் இடையிலிருப்பது அவசியமில்லை என்று காட்டியது பக்தி மார்க்கம்.
கி.பி. 6-ஆம், 7-ஆம் நூற்றாண்டுகளில் இந்தப் பக்தி மார்க்கம் ஆரியப் போலிகளைச் சிதறடித்து இந்தியா முழுதும் பரவியதாக வரலாறு கூறுகிறது. அப்பரும் சுந்தரரும் சம்பந்தரும் மாணிக்கவாசகரும் பக்திவாயிலாகத் தமிழை உயர்த்தினர். இவர்களது தமிழ்ப் பற்று 'பக்தி'யாக ஊற்றெடுத்தது. 'முருகன்' என்றும் ‘கந்தன்' என்றும் 'கதிர்காமக் கடவுள்' என்றும் 'குகன்' என்றும் 'குழந்தை வேலன்' என்றும் கொஞ்சி மகிழ்வதற்கு முருகனுக்கும் தமிழர்க்கும் இடையே ஒரு அபரிமிதமான இறுக்கம் வர அக் கால கட்டத்தில் நடந்த அரசியல் காரணங்கள் அடிப்படையாக இருந்திருக்கலாம்.

Page 38
தமிழ்க் கடவுள் முருகன் வரலாறும் தத்துவமும் )
ஆரியர் உடமையாக இல்லாமல் கடவுள் சாதாரண மக்கள் சொத்தானதற்கு முருக வழிபாடு சரியான சான்றாகும். கந்த புராணம் தமிழில் எழுதப்பட (கி.பி. 1214 ஆம் நூற்றாண்டுகளில்) அறுபத்து மூன்று நாயன்மார்களும் தமிழுலகத்திற்கு வருகின்றனர். இவர்கள் ஆரிய பரம்பரையோடு மட்டும் அடையாளம் காணப்படவில்லை. தமிழின் சமத்துவம் அறுபத்து மூன்று நாயன்மாரையும் பார்த்தால் தெரியும். இவர்களுள் 12 பேர் மட்டுமே பிராமணர்கள்; நால்வர் ஆதி சைவர்கள்; 12 நாயன்மார்கள் மன்னர் பரம்பரையினர் அல்லது செல்வர் பரம்பரையினர்; 12 நாயன்மார் வேளாளர்; மற்றையோர் மீன் பிடிப்போர், கள் இறக்குவோர், வண்ணார், எண்ணெய் எடுப்போர், மாடு மேய்ப்போர் என்று பல்வேறு சமுதாயங்களைச் சேர்ந்தவர்கள்; கடைசி இருவரும் தாழ்த்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்தோர். அதில் முகாமையானவர் நந்தனார். தமிழ்நாட்டில் பரவிய இந்தப் பக்தி மார்க்கம் தமிழ்நாட்டிலிருந்து சமணத்தையும் பெளத்தத்தையும் துரத்திவிட்டது.
பக்தி மார்க்கம் என்ற இயக்கம் அல்லது சமயப் புரட்சி அந்தக் காலத்தில் ஆரிய ஆதிக்கத்திற்கு எதிராக நடந்த ஒரு சமூகப் புரட்சி என்று சொன்னால் மிகையாகாது. ஆனால், அக் கால கட்டத்தில் இந்தப் பக்தி இயக்கத்தைக் கணக்கில் எடுத்துக் கொள்ளவில்லை என்கிறார் 'இந்திய வரலாறு' எனும் நூலை எழுதிய ரோமிலா தாப்பர் (1978). ஆனாலும் தமிழ்நாட்டில் சமணமும் பெளத்தமும் ஆரியமும் வருவதற்கு முன்பே இது போன்ற பக்தி வணக்க, வழிபாட்டு முறைகள் மீண்டும் தலையெடுத்தன. கோயில்களில் பக்திப் பாடல்கள் மட்டுமல்லாது நடனமும் இணைந்து பல்லவர் காலத்தில் கோயில் நாட்டியம் பிரசித்தமானது. இன்றைய கால கட்டத்தில் அது சாஸ்திரிய நடனம் (எனும் பரத நாட்டியம்) என்றாயிற்று.

(இராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம்)
பெளத்தமும் சமணமும் சாதி அடிப்படையில் மனிதத்தைப் பிரிப்பதை வெறுத்ததுபோல் பக்தி மார்க்கமும் ஆரியரின் சாதிப் பிரிவினையை எதிர்த்தது. ஆரியர்கள் தங்கள் அறிவைத் தங்களுக்குள் மட்டும் வைத்துக் கொண்டனர். சமணமும் பெளத்தமும் (தமிழில் பரவிய) பக்தி மார்க்கமும் மக்கள் மொழியில் சமயத்தை எல்லா இடங்களிலும் பரப்பினர். சைவத்தின் சிவனும் வைணவத்தின் திருமாலும் தமிழ்ச் சமுதாயக் கடவுளர்களாக வணங்கப்பட்டபோது முருகனின் வழிபாடு உயர என்ன வரலாற்றுத் தொடர்புள்ளது என்பதைப் பல வழிகளில் ஆராயலாம். முருகனுக்குத் திருமால் (வைணவம்) மாமன் ஆக்கப்படுகிறார்; முருகன் இந்திரனின் (பிராமணியம்) மனைவியை மீட்டுக் கொடுக்கிறான். திருமாலை முருகனுக்கு மாமனாக்கக் கந்த புராணம் உதவியிருக்கிறது.
பல்லவர் காலத்திற்குப் பின் சோழர்கள் மிகப் பெருமையுடன் ஆண்ட காலத்தில் தமிழ்ப் பகுதியில் பெரும்பாலான கோயில்கள் கட்டப்பட்டன. கோயில் கலைகளின் வளர்ச்சி புத்தர் காலத்திலேயே தொடங்கியிருக்கலாம்.
கந்த புராணம் சோழர் காலத்தில் எழுதப்பட்டாலும் முருகனைப் பற்றிய கருத்தாக்கங்கள் தமிழ்நாட்டில் மிகவும் அருகிலே காணப்பட்டதாகக் குறிப்பிடுகின்றனர் அறிஞர் பெருமக்கள். அதாவது, அக் கால கட்டத்தில் திருமாலையும் சிவனையும் பற்றிய குறிப்புகளைப் பார்க்கும்போது முருகனைப் பற்றிய குறிப்புகள் மிக அரிதாகவே இருக்கின்றன.
கி.பி. 7-ஆம் நூற்றாண்டிலிருந்து கி.பி. 12-ஆம் நூற்றாண்டுக்கு இடைப்பட்ட மத்தியில் கி.பி. 9-ஆம்

Page 39
(தமிழ்க் கடவுள் முருகன் :வரலாறும் தத்துவமும்)
நூற்றாண்டில் முருக வழிபாடு செல்வாக்குப் பெற்றிருக்கலாம் என்கிறார் ஆ. வேலுப்பிள்ளை. மேலும் இவர், தமிழ்நாடு என்று சொல்லப்படும் பாண்டிய நாட்டிற்கும் முருக வழிபாட்டிற்கும் நிறையத் தொடர்பு இருக்கிறது என்கிறார். சான்றாக, வரகுண பாண்டியன் என்ற மன்னன் காலத்தில் அறுபடை வீடுகளுள் ஒன்றான திருச்செந்தூர் கட்டப்பட்டிருக்கலாம் என்று இவரால் கருதப்படுகிறது. மலையைக் குடைந்து கோயில் கட்டிய பல்லவர் காலத்தைப் பின் பற்றி இக் கோயில் கட்டப்பட்டிருக்கலாம் என்று ஒரு வரலாற்றுக் குறிப்பு கூறுகிறது. அதாவது, திருச்செந்தூர் குகைக் கோயில்கள் கி.பி. 7-ஆம் நூற்றாண்டிற்கும், கி.பி. 9-ஆம் நூற்றாண்டிற்கும் இடையில் கட்டப்பட்டிருக்கலாம் என்று சொல்லப்படுகிறது.
பல்லவர், பாண்டியர் காலங்களுக்கும் அப்பால் சென்று, தொன்மைக் காலத்தில் முருகன் வழிபாடு ஏன் குன்றுகள் சார்ந்து இருக்கிறது என்பதை மானுடவியல் அடிப்படையில் ஆராய்ந்தால், உலகத்து ஆதி மக்களில் பலரும் மலையையும் மலையை அண்டிய பகுதிகளையும் குடியிருப்பிடங்களாகக் கொண்டிருத்தல் புரியும்.
கல்லாலான கோயில்கள், குகைகள், தூண்கள் என்பன பல பண்பாடுகளோடு தொடர்புடையனவாக இருந்திருக்கின்றன. பல பண்பாடுகளில் நதிகள், மலைகள், மரங்கள், விலங்குகள் புனிதமாகக் கருதப்படுகின்றன.
தமிழர் வரலாற்றில் முருக வழிபாடு வரலாற்றுக் காலத்திற்கு முற்பட்டதாக இருந்திருக்க வேண்டும் என்பது பல அறிஞர்களின் கருத்தாகும். தாமிரபரணி ஆற்றங்கரையில் கிடைத்த

(73) (இராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம்)
இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட காலத்திய சிலை, முருகனின் அடையாளங்களுடன் ஒத்திருக்கிறது.
ஆதிகால மக்களின் 'கடவுள்' வழிபாடு என்பது அவர்களின் ஒரு குறிப்பிட்ட அறிவின் எல்லைக்குள் அமைந்தது. ஆதிகால மனிதர் தமக்கு விளங்காத சக்திகளைப் பார்த்து அஞ்சினர். இயற்கைச் சக்திகளின் மாற்றங்களைப் புரிந்து கொள்ளும் அளவிற்கு அவரது அறிவு அப்போது வளர்ந்திருக்கவில்லை. மழையும் காற்றும் வெயிலும் பனியும் காலையும் மாலையும் யாரோ அல்லது ஏதோ ஏவலில் நடப்பதாக நம்பினர். அந்த 'ஏதோ என்ற உணர்வு கடவுளானது - இறையானது. அதே நேரம், தங்களை விட அதிக சக்தி படைத்தவர்களைப் பார்த்துக் கெளரவித்தனர்; நாளடைவில் அந்தக் கெளரவம், அச்சம், பக்தியானது.
சடங்குகள் என்பன ஒரு தலைவனுக்கு மக்கள் செலுத்திய மரியாதையின் மறு உருவகங்கள் என்கின்றனர் மானுடவியல் ஆராய்ச்சியாளர்கள். உலகத்தில் மானுடவியலை மன உணர்வுடன் தொடர்புபடுத்தி விளக்கம் கொடுத்தவர் சிக்மண்ட் ஃப்ராய்ட் என்ற ஆஸ்திரிய அறிஞர். அவரது கூற்றுப்படி, தெய்வ வழிபாடு என்பது தனி மனிதனின் உள் மனப் போராட்டத்தின் எதிரொலியாகும்.
ஃப்ராய்டின் விளக்கம்வாயிலாக, ஆதி காலத்தில் - அதாவது, மனிதர்கள் கூட்டுக் குடும்பமாக வாழ்ந்த காலத்தில் - தகப்பன் என்பவன் ஒரு குடும்பத்தின் தலைவனாவான். அத்தகைய தலைவன் நிறைய சக்திகளுடையவனாக இருக்க வேண்டும் எனவும் எதிர்பார்க்கப்பட்டான்.

Page 40
(தமிழ்க் கடவுள் முருகன் :வரலாறும் தத்துவமும்
ஒரு குடும்பத்தைக் கவனித்துக் கொள்வதற்கென உழைப்பது, எதிரியிடமிருந்து பாதுகாப்பது, தன்னோடு இணைந்த குடும்பத்தின் நலன்களைக் கண்காணிப்பது என்பதெல்லாம் அத் தலைவனின் கடமைகளாக இருந்தன. ஒரு கால கட்டத்தில் அந்தத் தலைவன் தனது மகன்களால் (அல்லது மகனால்) வெற்றி கொள்ளப்படும் நிலைக்கு உள்ளாகிறான். அத் தலைவனின் இறப்பு, அவனுடைய வாழ்ந்த காலத்தைக் கெளரவிக்கும் சடங்கு, அத்துடன் ஆவிகளைச் சமாதானப்படுத்தும் கட்டாயம் என்பனதான் சமயச் சடங்குகளாயின என்கிறார் ஃப்ராய்ட், சமய வழிபாடுகளில் காணலாகும் ஆடல், பாடல், பலியிடுதல் உள்ளிட்ட சடங்குகள் என்பன பழங்கால மனிதரின் அச்சத்தில் உருவாகிய வெளிப்பாடுகள் என்கிறார் இவர்.
ஒரு தலைவனுக்குரிய கம்பீரம், அழகு, வலிமை, கடமையுணர்வு, ஒரு கூட்டத்தை வழிநடத்தும் ஒழுங்குமுறை என்பன 'முருகன்' என்ற பாத்திரத்திற்கு இருந்திருக்கலாம். இதன்படி பார்த்தால், முருகன் குறிஞ்சி மக்களின் தலைவனாக இருந்திருக்கலாம்.
அலெக்சாண்டரின் மாவீரம் எவ்வாறு 'ஸ்கந்தன்' கதையாக உருவெடுத்தது என்பதை வரலாற்று ஆதாரங்களுடன் முன்னர்க் கண்டோம். அதே போல, சில உண்மைச் சம்பவங்கள் இன்று இதிகாசம் என்ற நிலைக்கு உயர்த்தப்பட்டிருக்கின்றன. துருவதேவியின் உண்மை வரலாற்றின் வெளிப்பாடு எவ்வாறு மகாபாரதத்தில் வடிவம் பெறுகிறது என்பதை உணரலாம். அதே போன்று, கடவுளர்களது வரலாறுகளையும் ஒவ்வொரு கால கட்டத்தின் வரலாற்று நிகழ்வுகளோடு அல்லது தொன்மக்

(இராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம்)
கதைகளுடன் இணைத்துப் பார்த்தல் நல்லது. இராமர் இராவணனை வெல்ல வந்த போது இலங்காபுரியின் நாகரிகம் அவனை வியக்கப் பண்ணுவதை அனுமார் வாயிலாக அறிகிறோம். இராட்சதன் என்ற பட்டம் ஆரியரால் கொடுக்கப்பட்ட இராவணன் 'திராவிடன்' என்பது வரலாற்றில் உள்ளிப் பார்த்தால் தெரியும். இலங்கையில் செழித்துப் பரவியிருந்த நாகரிகத்தின் அடையாளங்கள் இன்றில்லை. இந்த இலங்காபுரி மக்கள்தான் ஆதித்தமிழரா? இது ஆராயப்பட வேண்டிய விடயம்.
திராவிடரின் கடவுள் முருகன் என்பதை நிறுவுதற்கு எத்தனையோ அறிஞர்கள் முன் வந்திருக்கின்றனர். திராவிடரின் பூர்வீகம் 'இந்தியாவா? மத்திய ஆசியாவா? மத்தியத் தரைக்கடல் பகுதிகளா? எனும் கேள்விகள் எழுகின்றன. மத்திய தரைக்கடல் பகுதி மக்களின் வாழ்க்கைக்கும் எகிப்தியத் தொன்மைப் பண்பாட்டிற்கும் தொடர்பு இருக்கிறது. கிரேக்க நாகரிகம், ரோம நாகரிகம் என்பன எகிப்திய நாகரிகத்தின் அடிப்படையில் வளர்ந்தவை; கிரேக்கக் கடவுளர்கள், ரோமக் கடவுளர்களை ஒத்திருக்கின்றனர்.
கி.பி 3-ஆம் நூற்றாண்டில் கொன்ஸ்ரன்ரைன் என்ற கிரேக்க மன்னன் கிறிஸ்துவத்தைத் தழுவியதும் கிரேக்க சமுதாயத்திலிருந்த பல கடவுளரும் மறைந்து விட்டனர். கி.பி. 7-ஆம் நூற்றாண்டில் முகமது நபி தோற்றம் பெறுவது வரை அரேபிய நாடுகளில் வாழ்ந்த மக்களும் எத்தனையோ கடவுளர்களை நம்பினர். இவ் அனைத்துக் கடவுளர்களுக்கும் மனைவி, குழந்தை, எதிரிகள் என்று நிறைய பேர் இருந்தனர்.

Page 41
(தமிழ்க் கடவுள்முருகன் :வரலாறும் தத்துவமும்)
இம் மக்களுக்கும் அதே மத்திய தரைக்கடல் பகுதியிலிருந்து வந்தவர்கள் என்று கருதப்படும் திராவிடர்களுக்கும் ஆதி கால வழிபாட்டு முறைகளில் ஒற்றுமை இருந்ததில் வியப்பதற்கு ஒன்றுமில்லை.
முருக வழிபாட்டு முறைகள் ஆரிய வழிபாட்டு முறையை விட வேறுபாடாக நடைபெறுகின்றன. சான்றாக, ஆரியர்கள் தங்கள் மாட்டிலிருந்து கிடைத்த நெய்யையும் பாலையும் பூசைக்குப் பயன்படுத்தினர்; மாறாக, திராவிடர்களோ இயற்கையின் கொடையான பூவையும் நீரையும் பயன்படுத்தினர்.
அறிஞர் நினாட் ஜோக் (1999) என்பவரது கூற்றுப்படி,
* இந்தியாவின் வடக்கு எல்லைக்கு அப்பாலிருந்து
இந்தியாவிற்குள் ஊடுருவியவர்கள் ஆரியர்கள். * ஒரே கால கட்டத்தில் இந்தியாவிற்கு வராமல் ஆரியர்கள்
காலப் போக்கில் படிப் படியாக வந்து சேர்ந்தனர். * ஆரியர்கள் திராவிடர்களை வடக்கிலிருந்து துரத்தி விடவில்லை. திராவிடர்கள் இந்தியாவின் பல பகுதிகளிலும் பரந்து வாழ்ந்தனர். இந்தியாவிலிருந்து பிரிந்து போன பங்களாதேஷ், பாகிஸ்தான் உள்ளிட்ட இடங்களெல்லாம் திராவிடர் வாழிடங்களாகவே இருந்தன. * ஆரியர்கள் இந்தியாவின் தென் பகுதியிலிருந்து கீழ் நோக்கி வந்தபோது பல குழுக்களாகப் பிரிந்தனர்; இவற்றுள் ஒரு சில குழுக்கள் ஐரோப்பாவின் கிழக்குப் பகுதிக்கும் வேறு சில குழுக்கள் வட மேற்குப் பகுதிக்கும் பரவினர். ஆரிய மொழியின் எச்சங்களை மேற்குறிப்பிட்ட நாடுகளின் பூர்விக மொழிகளுடன் ஒப்பிட்டுப் பார்க்கும்போது பல ஆதாரங்கள் கிடைக்கின்றன.

团 (இராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம்)
* ஆரியர்கள் இந்தியாவைத் தாய் நாடாகக் கொண்டவர்கள்; இவர்கள் காலப் போக்கில் மற்ற இடங்களுக்குப் போனார்கள் என்ற கருத்து ஒரு கட்டுக் கதை. ஒரே ஒர் ஆரியக் கூட்டம் ஒரு கால கட்டத்தில் வட இந்தியாவிலிருந்து மேற்கு நோக்கி நாடோடிகளானார்கள். இவர்கள்தாம் இன்று ஐரோப்பாவின் பல பகுதிகளிலும் பலராலும் துன்புறுத்தப்படும் இராமானிய நாடோடிகள் (Romanic Gypsies). goi gryn Lost soflu BITGLT56ir என்போர் 'இராமனை வணங்கியக் கூட்டம்' என்பதன் பொருளாகும்.
திராவிடர் பண்பாடு ஆரியப் பண்பாட்டின் ஊடுருவலுக்கு எத்தனையோ ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் வளர்ந்தது என்பதற்குத் திராவிடக் கடவுளர்களின் வழிபாடான சிவன், திருமால் வழிபாடுகள் ஆதாரங்கள் ஆகும். இது போன்றே, நாக வழிபாடும் பிள்ளையார் வழிபாடும் ஆரியர் வருகைக்கு முன்னரே இந்தியாவில் இருந்திருக்கின்றன. பிள்ளையார் வழிபாடு கி.பி. 9-ம் நூற்றாண்டுக்கு முன் தென்னகத்தில் இருந்ததற்கான தடயமில்லை.
சிவனின் மகனாகத் தமிழரால் வணங்கப்படும் முருகன் சிவனுக்குப் பாடம் கற்பிக்கும் தகப்பன்சாமி'யாகத் தமிழரால் தூக்கி வைக்கப்படுவதேன்? திராவிடத்தின் ஆதி முதல் தெய்வத்தை 'ருத்திரா என்ற பெயரில் உருத்தெரியாமல் குழப்பியதன் விளைவா? அல்லது முருகன் என்ற குல தெய்வ வழிபாடு ஒரு காலத்தில் ஒரு குறிப்பிட்ட மக்களிடையே (குறிஞ்சி நில மக்கள்) மட்டும் பரவியிருந்து பின்னர் 'தமிழ்' என்ற உணர்வின் வெளிப்பாடானதுதான் காரணமா?

Page 42
(தமிழ்க் கடவுள் முருகன்: வரலாறும் தத்துவமும்)
ஆதித் தமிழர் வேட்டையாடிய கால கட்டத்தில் அவர்கள் எல்லா ஆதிக் குடிகள் போலும் ஏதோ ஒரு சக்தியைத் தொழுதிருக்க வேண்டும். முருகன் அந்த சக்தியாக இருந்தான் என்பது இங்கு மறுக்க இயலாதது. இதிலிருந்து, 20-ஆம் நூற்றாண்டில் தமிழ்த் தேசிய கடவுள் முருகனின் தொடக்கம் 150,000 ஆண்டுகளுக்கு முற்பட்டது என்று தெரிகிறது.
ஆரியரால் எழுதப்பட்ட "ஸ்கந்த புராணம் தமிழரின் தெய்வத்தை மருவி எழுதிய கற்பனையே. ஐம்பதினாயிரம் ஆண்டுகளாக இந்தத் திராவிடக் கூட்டத்தினர் ஆசிய, ஆப்பிரிக்க (சகாரா நிலப் பரப்பு, எகிப்திய நிலப் பரப்பு), ஐரோப்பிய (கிரேக்க), மத்திய ஆசியப் பகுதிகளில் (சுமேரியா, தற்போதைய ஈராக்) வாழ்ந்திருக்கின்றனர். மேற்கண்ட நிலப் பரப்புகளில் வாழ்ந்த மக்களின் பண்பாட்டு ஒற்றுமையைத் தமிழ்ப் பண்பாட்டு ஒற்றுமையுடன் ஒப்பிட்டு ஆராய்தல் வேண்டும்.
கிரேக்கக் கடவுளான டையோனியஸ் என்ற வனக் கடவுளுக்கும் தமிழ்க் கடவுளான முருகனுக்கும் தொடர்பு உண்டு என்றால் அதன் மூலம் எங்கேயோ இருக்கிறது. அதாவது, 'டையோனியஸ் - ஸ்கந்தன் தொடர்பும் 'டையோனியஸ் - முருகன் தொடர்பும் காலப்போக்கில் மருவி, மாறி ஒன்றுபட்டிருக்கலாம்.
கிரேக்க நாகரிகத்தின் தொடக்கம் கிட்டத்தட்ட எட்டாயிரம் ஆண்டுகளை ஒட்டியதாக இருக்கிறது. ஆனால், வளர்ச்சியடைந்த திராவிடர் நாகரிகம் அப்படியல்ல; ஒன்பதினாயிரம் ஆண்டுகளுக்கு முன் இந்தியாவில் வாழ்ந்த திராவிடன் நாகரிக வளர்ச்சியில் வேளாண்மை செய்த சமுதாயத்தைச் சார்ந்தவன். ஒரு சமுதாயம் கற்கால, நாடோடி வாழ்க்கை முறைகளையெல்லாம் தாண்டி, வேளாண்மையைப்

இராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம்)
பெருக்கியபோது அச் சமுதாயம் மொழி, பண்பாட்டில் முன்னேறியதாகவிருக்கும் என்பதை மானுடவியல் படித்த எவரும் உணரலாம்.
உலகத்திலேயே இன்றைய பெரிய சமுதாயத்தில் ஒன்று திராவிடச் சமுதாயம். அதன் வளர்ச்சி ஒரு சில ஆயிரம் ஆண்டுகள் வளர்ச்சியாக இருந்திருக்கவியலாது; திராவிடத் தொன்மையில் மற்றப் பழங்குடிகளிடமுள்ள முன்னோர் வழிபாடு வரைக்கும் இருந்திருக்கிறது. இறந்தோரை வணங்கினால் அவர்கள் இப்போது வாழ்வோர்க்கு நன்மை செய்வர் என்ற நம்பிக்கைதான் 'மறு பிறப்பு' - அல்லது 'பல பிறப்புகள்' என்ற நம்பிக்கையின் அத்தியாயம் என்று நம்புகின்றனர் அறிஞர்.
இன்றைய 'இந்துத் தத்துவங்களாக ஆரியர்களால் பிரகடனப்படுத்தப்படும் பல தத்துவங்கள் திராவிடத் தொன்மையின் வெளிப்பாடுகளே. கிட்டத்தட்ட மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன் நாடோடிகளாக வந்த ஆரியர்கள் உலகத்தில் காணப்பட்ட எல்லா ஆக்கிரமிப்பாளர்கள் போலும் ஒரு நாட்டின் சுயமையைத் திரித்து, மாற்றித் தங்களுடையதாக ஆக்கிவிட்டனர்.
இன்று பாடசாலைகளில் தமிழ் மொழியைப் படிப்பிக்கத் தயங்குவதும் அத்துடன் தமிழ்நாட்டுக் கோயில்களில் 'தமிழ்' இல்லாததும் திராவிடப் பண்பாட்டிற்கு அவமானம். கடவுளை அணுகவியலா மொழி தமிழ்' என்று ஆரியர் சொல்வதைத் தமிழன் ஆமோதிப்பது எவ்வளவு கேவலம். இத் தமிழ் உணர்வின் எழுச்சிதான் முருக வழிபாட்டின் வளர்ச்சிக்குக் காரணம் என்பது பரவலான ஒரு கருத்தாகும். அறிஞர்களின் கூற்றுப்படி, மிகப் பெரிய தொகையாகி வந்த ஆரியர் கூட்டம்

Page 43
(தமிழ்க் கடவுள் முருகன் வரலாறும் தத்துவமும்) (30)
வடக்கில் சிறிய குழுக்களாக இருந்த திராவிடச் சமுதாயத்தைக் கொஞ்சம் கொஞ்சமாக வென்றெடுத்திருக்க வேண்டும்; அதன் எதிரொலியாகத் திராவிட மொழிகள் அழிக்கப்பட்டுச் சமஸ்கிருதம் மேன்மைப்படுத்தப்பட்டிருக்க வேண்டும். ஆங்கிலேயர் உலகத்தில் பல பகுதிகளைக் கைப்பற்றியபோது சிறு கூட்டங்களாக இருந்த மக்கள் ஒரேயடியாக அழிக்கப்பட்டதும் அவர்கள் பண்பாடு சிதைக்கப்பட்டு, ஆங்கில மொழியும் ஆங்கிலப் பண்பாடும் மேன்மைப்படுத்தப்பட்டதையும் இதற்கு ஒரு சான்றாகக் கூறலாம்.
யூதப் பண்பாட்டை ரோமானியர் அழித்தனர்; அதே போல, அய்ரோப்பியர் இங்கிலாந்தைக் கைப்பற்றியபோது ட்ருயிட்ஸ் பண்பாட்டை (ஆங்கிலேயரின் ஆதிகாலப் பண்பாட்டை) அழித்தனர்; ஆப்பிரிக்கா சென்றபோது ஆப்பிரிக்கப் பண்பாட்டை அழித்தனர்; ஆங்கிலேயர்களும் தாங்கள் போன நாடுகளில் அங்கிருந்த பண்பாட்டை நாசப்படுத்தினர்; ஸ்பானியர்கள் தென் அமெரிக்க 'மாயன்'களின் பண்பாட்டை அழித்தனர்; ஆரியர்கள் தங்கள் மொழியை உயர்ந்த, தெய்விக மொழியாக்கி, இந்திய மொழிகளை அழித்தனர்; இந்தியக் கடவுளர்களைத் தங்களுடையதாக்கிவிட்டனர்; திராவிடக் கலைகளான யோகாசனம், சித்த வைத்தியம் போன்றவற்றையும் திரிபுபடுத்திவிட்டனர்.
ஆரியர்கள் தென் இந்தியாவிற்கு கி.பி. 2-ஆம், 3-ஆம் நூற்றாண்டுகளிலேயே வரத் தொடங்கியிருந்தாலும் பல்லவர் காலத்தில்தான் அவர்களின் சமய, மொழி, தத்துவ ஆதிக்கங்கள் தமிழர்களைப் பாதித்தன; அதன் எதிரொலிதான் 'பக்தி இயக்கம்' என்கின்றனர் ஆராய்ச்சியாளர்கள். பக்தி இயக்கம் தமிழர்களுக்கிடையே மட்டும் வளரவில்லை; 6666 சமயத்தினரிடையேயும் பரவியிருக்கிறது.

(இராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம்)
'பக்தி' என்பது ஒரு தனி மனித உணர்வை இறைவனுடன் (மேலான சக்தியுடன்) இணைப்பதாகும்; அந்தச் சக்தி 'முருகனாக இருக்கலாம்; கிருஷ்ணனாக இருக்கலாம் நபிகள் நாயகமாக இருக்கலாம். இருப்பினும், உணர்வு ஒன்றே; உள்ளத் தூய்மை ஒன்றே; அங்கே எந்தப் பாகுபாடும் கிடையாது. முருகன் தமிழரின் கடவுள் - திராவிடரது தொன்மையின் வெளிப்பாடு - தமிழ்ச் சுயமையின் (தமிழ் மொழியின்) வெளிப்பாடு என்பதற்கு 'முருக வழிபாடு முகாமையானதாகும். பன்னிரு தோள்களும் பன்னிரு உயிர்கள்; பதினெட்டுக் கண்களும் பதினெட்டு மெய்கள், ஆறு முகங்களும் ஆறு இன எழுத்துகள்; அவனது வேலே ஃ என்ற ஆயுதம், 'முருகு' என்ற சொல்லில் 'மு' மெல்லினம், 'ரு' இடையினம், 'கு' வல்லினம் என்று சொல்கின்றனர் தமிழறிஞர்கள். முருக வழிபாட்டின் பல முறைகளையும் இதுவரை தெளிவாக ஆராய்ந்தனரோ இல்லையோ தெரியாது; அறிந்த வரைக்கும் பல கோயில்களில் பல விதமான சம்பிரதாயங்கள் நிலவுகின்றன என்று தெரிகிறது. சான்றாகத், திருச்செந்தூரில் பிராமணரல்லாத - சைவ வேளாளரும் பூசைகளைச் செய்கின்றனர் என்று கூறப்படுவதைக் குறிப்பிடலாம். இலங்கையைப் பொறுத்தவரையில் பிராமணிய ஊடுருவல் மிகச் சொற்பமாகத்தான் காணப்படுகிறது. இதற்குக் காரணம், முருகன் கோவில்கள் சைவ வேளாளர்களின் ஆதிக்கத்தில் இருப்பது ஒரு காரணமாக இருக்கலாம் அல்லது இலங்கைத் தமிழருக்குத் தென் இந்தியத் தமிழருக்கு ஏற்பட்டது போல் பெரிய அளவில் பிராமணர்கள் வந்து சமயத்தைத் தங்கள் உடமையாக்கிக் கொள்ளாதது காரணமாக இருக்கலாம் அல்லது இலங்கைத் தமிழர் தம் 'சுயமை'யை விடாததாக இருக்கலாம்.
தமிழ் மொழியின் சுயமையும் தூய்மையும் இன்னும் இலங்கைத் தமிழரால் மிகவும் கவனமாகப் பாதுகாக்கப்படுகிறது என்பதை மொழியார்வம் உள்ளவர்கள் உணர்வர். காலப்

Page 44
(தமிழ்க் கடவுள் முருகன் :வரலாறும் தத்துவமும்)
போக்கில் கலப்படம் ஆகிக் கொண்டிருக்கும் இந்தியத் தமிழையும் எத்தனைதான் ஆங்கிலப் பட்டம் பெற்றாலும் இன்னும் ஓரளவிற்கேனும் சரியான தமிழில் எழுதப் படிக்க முனையும் இலங்கைத் தமிழையும் ஒப்பிட்டுப் பார்ப்போர் இதை உணர்வர். மட்டக்களப்பில் இன்னும் சங்கத் தமிழின் சாயல் இருப்பதை இதற்குச் சான்றாகச் சுட்டலாம். எடுத்துக்காட்டாக, அவ்வையார் பாடிய வழுதுணங்காய் (கத்தரிக்காய்) மட்டக்களப்பாரின் அன்றாடப் பேச்சு வழக்காக நிலவுதலைக் குறிப்பிடலாம்.
திராவிடத்தினுடைய 'சுயமை'யின் வெளிப்பாடு முருக வழிபாட்டில் வெளிப்படுகிறது என்பதற்குப் பக்தி இயக்கம் ஓர் எடுத்துக் காட்டு; அத்தோடு, முருக வழிபாட்டு முறைகள், காவடியாட்டம் போன்றவையும் எடுத்துக் காட்டுகளாகும்.
"காவடி' என்ற சொல் 'கா' என்ற சொல்லின் திரிபு என்கின்றனர். இந்தக் 'கா' என்ற சொல் இன்னும் இலங்கையின் கிழக்குப் பகுதியான மட்டக்களப்பில் உயிருடன் ஒவ்வொரு நாளும் பயன்படுத்தப்படுகிறது. 'கா' என்பது பாரம் கட்டிக்கொண்டு 'காவிச் செல்வதைக் குறிக்கும். 'கா கொண்டு போதல்' என்பது தங்களுக்குப் பிடித்தோருக்குப் பல பொருள்களைக் கட்டிக்கொண்டு காவிச் செல்லல் என்பதாகும். இந்தக் 'கா'வில் அரிசி, பழம், பலகாரங்கள், நெய், தேன் என்பனவெல்லாம் அடங்கும். மட்டக்களப்பில் விவசாயிகள் அறுவடை முடியத் தங்கள் நிலச் சொந்தக்காரர்களுக்கு (போடிமாருக்கு) நிலத்தில் விளைந்த தானியங்களைச் சுமந்து கொண்டு 'கா' கொண்டு போவர். இதன் வெளிப்பாடே பால் காவடி, பன்னீர்க் காவடி என்பன போன்ற காவடிகளின் கூறுகளாகும். அத்துடன், 'முருக வழிபாடு சில இடங்களில், குறிப்பாக மட்டக்களப்புப் பகுதியில் (அண்மைக் காலம் வரை)

(இராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம்)
இந்தியாவில் நடைபெறும் ஐயப்பன் வழிபாடு' போல் நடக்கும்; பக்தர்கள் சாதி, சமய வேறுபாடின்றிப் புனிதப் பணங்களை மேற்கொள்வர்.
இலங்கை முருக யாத்திரை கதிர்காமத்தை நோக்கி நடக்கும். இந்த யாத்திரையின் தொடக்கங்கள் - ஏற்பாடுகள் ஆடித் திருவிழாவிற்கு மூன்று மாதங்களுக்கு முன்னமேயே தொடங்கும். விவசாயிகளான தமிழர் தங்கள் அறுவடை பங்குனியில் முடிய சித்திரையில் விழா கொண்டாடிவிட்டு (சித்திரை விழாக்களை மட்டக்களப்பில் காண்பது ஓர் இனிமையான அனுபவம்; இதற்கும் சங்க கால வசந்த விழாவிற்கும் எத்தனையோ தொடர்புண்டு), வைகாசியில் ‘விரதம் கைக்கொள்வர்; மது, மாமிசம், மங்கை தொடர்பு என்பன அகற்றப்படும்; பக்தர்கள் தங்கள் பெயரிழந்து வெறும் ‘சாமி'களாக அழைக்கப்படுவர்; ஆண் சாமி, பெண் சாமி, குழந்தைச் சாமி என்று பிரிக்கப்பட்டு ஒவ்வொரு சாமிக் கூட்டமும் மிகுந்த பாதுகாப்புடன் (காடு, மலை, கடந்து கால்நடையாகக் கதிர்காமம் செல்ல சில வாரங்கள் ஆகலாம்) புறப்படுவர்; திராவிடத்தின் சமத்துவம் இதில் தெரியும்; இங்கே பக்தி தமிழில் ஒலிக்கும் பக்தர்கள் ஆண், பெண், குழந்தைகள் என்று வேறுபாடின்றியும் சாதி, சமய வேறுபாடின்றியும் ஒன்றுபடுவர்; பணக்காரர், ஏழை என்று ஒன்றும் இங்குக் கிடையாது; எல்லோரும் 'சாமிகள்'.
இந்தப் புனிதப் பயணத்திற்கும் சாதியின் அடிப்படையில் நடக்கும் ஆரிய சமயச் சடங்குகளுக்கும் எத்தனையோ வேறுபாடுகள். "சீர்கெழு செந்திலும் செங்கோடும் வெண்குன்றும் ஏரகமும் நீங்கா இறைவன்" (சிலப்பதிகாரம்) என்பவனைத் தேடிப் பக்தர் கூட்டம் சாரி, சாரியாகச் செல்வது கண்கொள்ளாக் காட்சி. திராவிடத்தின் சமத்துவம் முருக வழிபாட்டின் ஒவ்வொரு அங்கத்திலும் தெரியும். காவடி

Page 45
(தமிழ்க் கடவுள் முருகன் வரலாறும் தத்துவமும்)
எடுப்போர் ஆண்கள் மட்டுமல்ல; பெண்களும்தான். பால் காவடி, பன்னீர்க் காவடிகளை விட முள் காவடி, அலகுக் காவடி என்று பக்தர்கள் தங்களை முருகனின் பக்தியில் சங்கமப்படுத்துவது தான் தமிழன் உளவியலின் ஒரு கூறு.
கதிர்காமத்தில் பூசை பிராமணர் அல்லாதோரால் நடத்தப்படாமல் 'கப்புருளை' என்ற பூசகரால் நடத்தப்படும். இதற்கும் ஆரியச் சடங்குகளுக்கும் ஒரு தொடர்புமில்லை. உலகம் அறிவியலின் உச்சியில் இருக்கும்போது இவை போன்ற சடங்குகள் முட்டாள்தனமாகச் சிலரால் விமர்சிக்கப்படுகிறது.
சமயத்தையொட்டிய இச் சடங்குகள் தமிழர்களிடம் மட்டுமல்லாமல் உலகத்தில் பெரும்பாலான மக்களிடையேயும் நடக்கின்றன. பக்தியின் பல நிலைகளில் ஒரு நிலைதான் காவடி எடுப்பது, விரதம் இருப்பது, மெளனம் கடைபிடிப்பது, பாடல் பாடுவது. பக்தியை வெளிப்படுத்துவது ஒரு தனி மனிதனின் அறிவு நிலையைப் பொருத்தது. இந்தப் பரிபூரணச் சுதந்திரம் திராவிடப் பண்பாட்டில் தெளிவாக இருக்கிறது. அன்பையும் ஆண்டவனையும் ஒன்றாக்குவது பக்தியாகும். இதற்கு வேள்வி தேவையில்லை.
முருகனின் அற்புதங்கள் என்று கூறப்படுபவை பக்தர்களின் கற்பனை என்று எடுத்துக் கொண்டாலும் அந்த அற்புதங்களின் ஆரம்பம் யாரோ ஒரு தலைவனின் (குறிஞ்சி) வாழ்க்கையுடன் ஏன் தொடர்புபட்டிருக்கக் கூடாது? பெளத்தமும் சமணமும் வளர்ந்த காலத்தில் வட இந்தியாவில் பல 'புராணக் கதைகள்' பிறந்தன. சாதிக் கொடுமை, ஆரிய சமஸ்கிருத ஆதிக்கம் உள்ளிட்டவற்றைத் தாங்காத சாதாரண மக்கள் பெளத்தத்தையும் சமணத்தையும் நாடியபோது இப் புராணங்கள் பாமர மக்களைக் கவர (பயப்படுத்த) எழுதப்பட்டவை என்கின்றனர்.

(இராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம்)
இஸ்லாம் பரவிய போது 'சீக்கியம் பிறந்தது. அதே போல, கி.பி. 9-ஆம், 10-ஆம் நூற்றாண்டுகளுக்குப் பின் மிக அதிகமாக வளர்ந்த முருக வழிபாடும் வட இந்தியாவில் பரவிக் கொண்டிருந்த இசுலாமிய சமயத்திற்கு எதிராக வந்ததா? என ஆராயலாம்.
திருமுருகாற்றுப்படை கி.பி. 2-ஆம் நூற்றாண்டில் நக்கீரரால் எழுதப்பட்டிருக்கிறது. இத் திருமுருகாற்றுப்படையில் முருகன் குறிஞ்சித் தலைவனாகக், கடவுளாகப் பரிணாமம் எடுக்கிறான். பரிபாடலில் வரும் 'செவ்வேள் திருப்பரங்குன்றத்தை உறைவிடமாகக் கொண்டவன். முருகத் தலங்களுள் திருச்செந்தூர் தவிர மற்றவையெல்லாம் 'மலைநாடுகளை அடிப்படையாகக் கொண்டவை. தமிழ்நாட்டிலும் தமிழ் வளர்த்த பாண்டிய மன்னர் நிலத்தில்தான் அறுபடை வீடுகளில் பெரும்பாலானவை உள்ளன.
முருக வழிபாட்டின் தொடக்கத்திற்கும் இந்தியாமீது படையெடுத்த சந்ததிகளுக்கும் கி.பி. 10-ஆம் நூற்றாண்டு வரை ஒரு பிரச்சினையும் இருக்கவில்லை. அதற்கு மாறாகத் தமிழரின் பொற்காலம் என்று போற்றப்படும் சோழ மன்னர் காலத்தில் பல கோயில்கள் கட்டப்பட்டன. அக் காலத்தில்தான் தென் கிழக்காசிய நாடுகளான சிங்கப்பூர், மலேசியா போன்ற நாடுகளுக்கும் இலங்கைக்கும் சோழர் தங்கள் பண்பாட்டுடன் சென்று பரவினர். முருக வழிபாடு அந் நாடுகளில் எப்படிப் பரவியது என்பது விளக்கமாக ஆராயப்பட வேண்டியது. தமிழன் 'சக்கரவர்த்தியான நேரத்தில் தமிழர் உள்ளங்களில் முழுவதும் 'கடவுளுக்குக் கடவுளாக முருகன் உயர்த்தி வைக்கப்பட்டிருக்கிறான்.

Page 46
(தமிழ்க் கடவுள் முருகன் :வரலாறும் தத்துவமும்)
இலங்கையைப் பொறுத்தவரையில் திராவிட நாகரிகம் மிகத் தொன்மையானது. இராமாயணத்தில் காணப்படும் இலங்கை அரசன் இராவணன் ஒரு 'சிவ பக்தன், எனவே, முருகன் - சிவனின் மகன் - ஆதிகாலத்திலேயே இலங்கையுடன் தொடர்புபட்டிருக்கிறான்.
இன்று சிங்கள மக்கள் முருகனைத் தங்கள் தெய்வம் ('தெய்யோ) என்று கொண்டாடுகின்றனர். சைவத்துடன் தொடர்பான முருகனைத் தங்கள் ஆரிய உணர்வுடன் தொடர்புபடுத்திச் சமத்துவத்தின் வெளிப்பாடாக விளங்கும் முருகனை ஒரு இனவழிக் கோட்பாட்டுக்குள் அடக்கிக் கொள்கின்றனர்; பல மெளத்த விகார்களுக்குப் பக்கத்தில் முருகனையும் வைத்து வழிபடுகின்றனர். பக்தியையும் சமயத்தையும் அரசியலாக்கினால் என்ன அநியாயம் நடக்கும் என்பதற்கு வரலாறு கூறும் எத்தனையோ சான்றுகளுடன் இன்று இலங்கையில் நடக்கும் கொடுமைகளும் எடுத்துக் காட்டுகளாகும். அன்று இந்தியாவில் திராவிடரின் கடவுளர்களைத் தங்கள் கடவுளர்களாக உருமாற்றியது போல, இன்று இலங்கையில் சிங்களவர் முருகனையும் சொந்தம் கொண்டாடுகின்றனர். இலங்கை மன்னர்கள் தென் இந்திய அரச குடும்பத்துடன் திருமண உறவை வைத்துக் கொண்டவர்கள். கடந்த நூற்றாண்டு வரை இலங்கை அரச குடும்பங்களின் மொழி தமிழாகத்தான் இருந்திருக்கிறது; அதெல்லாம் அரசியல் காரணங்களால் மாற்றப்பட்டது விந்தையே, இலங்கைக்கும் இந்தியாவிற்குமுள்ள பண்பாட்டுச் சமயச் தொடர்புகள் ஆயிரமாயிரம் ஆண்டுகளான உறவு; அவ் உறவின் பரிமாணங்களுள் முருக வழிபாடும் ஒன்று.

(இராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம்)
முருகன் தமிழ் மொழியின் இனிமையுடன் கலந்த அழகானவன்; சிவந்த நிறத்தை உடையோன்; அவனது அழகு சிலப்பதிகாரத்தில் கோவலனுடன் ஒப்பிடப்படுகிறது. முருகனின் வீரம்' பண்டைத் தமிழரின் போர்க் குணத்தை வெளிப்படுத்துகிறது. போர்க்களத் தெய்வம் கொற்றவையின் புதல்வன் அவன்; தீய சக்திகளை அழிப்பவன்; அவன் தமிழரின் 'காதலன்'; தமிழர்களுக்கும் இந்த இறைமைக்கும் உள்ள காதல் அளப்பரியது; மனிதன் காதல் வயப்பட்டால் எல்லாம் அசாதாரணமாகத் தெரியும்.
முருகனின் ஆறு முகங்களைத் தமிழர்கள் வருணிக்கும்போது எத்தனையோ விளக்கங்களைத தருகிறார்கள். ச.வே. சுப்ரபிரமணியம், ஜி. இராஜேந்திரன் (1985) என்ற இரு அறிஞர்களின் கூற்றுப்படிசங்க காலத்தில் தமிழர்கள் வானியல் ஆராய்ச்சிகளில் மேம்பட்டிருந்தனர். சங்க காலத் தமிழர் முருகனைச் "சேயோன்' என்று அழைத்தனர்; சேயோனின் மறு பெயர் செவ்வாய். செவ்வாய்க்கிழமை முருகனின் நாளாகத் தமிழரால் வணங்கப்படுகிறது. முருகனின் பன்னிரண்டு கைகளும் ஓர் ஆண்டின் பன்னிரண்டு மாதங்களைக் குறிப்பதாகவும் ஆறு முகங்களும் ஆறு காலங்களைக் குறிப்பதாகவும் கூறப்படுகிறது. முருகனின் இரு கண்களும் சந்திர, சூரியர் என்று நம்புகின்றனர் தமிழர்கள்.
தனக்குத் தீங்கு செய்தவனையும் மன்னிக்கும் தமிழர் மனப்பான்மையை முருகன் சூரபதுமனை அழிக்காமல் மயிலாகவும் சேவலாகவும் கொண்டு தன்னுடன் இணைத்ததன் வாயிலாகச் சூரபதுமனையும் அவன் இரு தம்பியரையும் அழித்தது கன்மம், மாயை, ஆணவம் என்ற மனித தீய உணர்வுகளை அழித்ததற்கு உவமை. முருகனின் لگے .

Page 47
(தமிழ்க் கடவுள் முருகன்:வரலாறும் தத்துவமும்)(8)
முகங்களும் மனிதனின் ஆறு புலன்கள், ஆறு உறுப்புகள். அத்துடன் ஆறு முகங்களும் அன்பு, உண்மை, அறிவு, இன்பம், சக்தி, சித்தி என்ற ஆறு பரிமாணங்களை விளக்குகின்றன என்பார் அறிஞர் கமில் சுவலபில் (1975). மேலும் இவர், தமிழ்ப் பண்பாடு மிகவும் இறுக்கமானது; மற்றப் பண்பாடுகளுடன் தொடர்புற்றும் மாறாதது என்கிறார்.
சமஸ்கிருத காலத்திற்கு எத்தனையோ ஆயிரமாண்டுகளுக்கு முற்பட்டது தமிழ் வாழ்வும் வழிபாட்டு முறைகளும். மனித உருவில் முருகனைக் காணத் தமிழர் மிகவும் விரிவான தத்துவத்தை உள்ளடக்கியிருந்திருக்க வேண்டும். இந்தத் தத்துவம் ஒரு "சமத்துவ அடிப்படையில் வளர்ந்திருக்கிறது என்பது அது தமிழர் வாழ்க்கையுடன் எவ்வளவு தொலைவு இணைந்திருக்கிறது என்பதைக் காட்டுகிறது.
'அமரர் இடர்தீர்த்தே அவர்க்கருளும் வென்றிக்
குமரனடி சிந்திப்பாய் கூர்ந்து' என்கிறது சைவ சமய நெறி.
‘என்னிருளை நீக்கும் இமையோர்க் கிடர்கடியும்
பன்னிருதோட் பாலன் பாதம்' என்கிறது சங்கற்ப நிராகரணம்.
எந்தக் கோணத்திலிருந்து பார்த்தாலும் - அதாவது, சமய அடிப்படையில் அல்லது சமுதாய அடிப்படையில் அல்லது தத்துவ அடிப்படையில் பார்த்தாலும் - முருகன் தமிழரின் வாழ்வோடு இன்றியமையாதவனாக இணைந்திருக்கிறான்.

(இராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம்)
5. வள்ளியும் முருகனும்
முருக வழிபாட்டு வரலாற்றில் மிக முகாமையான கூறு, வள்ளி-முருகன் காதல் திருமணமாகும் 'ஒருவனுக்கு ஒருத்தி' என்று பல்லவி பாடும் பண்பாட்டில் முருகக் கடவுள் இரு பெண்டிரின் கணவனாகப் பரிணாமம் எடுத்ததும் பாராட்டு பெறுவதும் ஒரு புதுமையே.
இவ் வரலாற்றுக்கு எத்தனையோ முனைகளிலிருந்து விளக்கங்கள் வருகின்றன. முருகன் என்ற அரும் பெரும் சக்தியின் பக்க பலமாக வள்ளி, தேவயானை உருவகம் செய்யப்பட்டதற்குரிய தத்துவக் கருத்துகள் ஏராளம்
முருகனை ஒரு குறிஞ்சித் தலைவனின் வழித்தோன்றலாக எடுத்துக் கொண்டால் அந்தத் தலைவனுக்கு இன்றைய அரசியல்வாதிகளுக்கு உள்ளது போன்று பெரிய வீடும் 'சின்ன விடும் இருந்திருந்தால் வியப்பதற்கில்லை.
தமிழர்கள் அகமும் புறமும் சமமாக ஒரு மனிதனின் வாழ்வில் பங்கெடுக்கின்றன என்பதை வலியுறுத்த அகநானூறு, புறநானூறு படைத்திருக்கின்றனர். அகநானூறும் புறநானூறும் தமிழர்களின் வாழ்க்கையை உள் நோக்கியும் வெளி நோக்கியும் எழுதப்பட்ட இலக்கியங்களாகும். தேவயானை புறத்தையும் வள்ளி என்ற குறமகள் அகத்தையும் வெளிப்படுத்துகின்றனர் என்று வாதிப்போரும் உள்ளனர்.
அலெக்சாண்டருடன் தொடர்புடைய இரு பெண்டிருள் பார்சைன் என்ற பெண் வள்ளி போல் ஒரு பெண். ‘எருக்சனா என்ற பெரிய இடத்துப் பெண் (இந்திரனின் மகள்) ‘'தேவயானை' போல் செல்வம் படைத்தவள். இதன் வெளிப்பாடு

Page 48
(தமிழ்க் கடவுள் முருகன் :வரலாறும் தத்துவமும்)
ஆரிய ஸ்கந்த புராணத்தில் எவ்வளவு தொலைவு தெளிவாக இருக்கிறது என்பதை 'அலெக்சாண்டர் வரலாற்றையும் 'ஸ்கந்த புராணத்தையும் இணைத்துப் பார்த்தால் எளிதில் விளங்கும்.
திராவிடத் தமிழரிடையே நடந்த சமுதாய மாற்றங்கள் அவர்களின் கடவுள் வழிபாட்டிலும் வெளிப்படுகிறது. தொன்மைக் காலத்திலிருந்தே காதலுக்குக் கெளரவம் கொடுத்தவர்கள் திராவிடத் தமிழர். சங்க இலக்கியங்களில் இதன் வெளிப்பாடு தெளிவாகத் தெரிகிறது. சங்கத் தமிழ் இலக்கியங்கள் 'அரசனை'யோ "தலைவனை'யோ புகழ்ந்து பாடியிருப்பதால் ஒரு தனி மனிதனின் சாதாரண உணர்ச்சியை வெளிப்படுத்துவதாக உள்ளது என்று சிலர் வாதாடலாம். தனி மனிதச் சிந்தனைகள் என்பது ஒரு சமுதாயத்தின் ஒட்டுமொத்தமான சிந்தனைக்கு முழுக்க, முழுக்க 'அப்பால் போய் அன்னியமாயிருக்க இயலாது.
காதலைப் பற்றித் தமிழகத்தில் சித்தரித்தது போல் அழகாகவும் தத்துவ அடிப்படையிலும் சித்தரிக்க வேறு எந்த மொழியாலும் இயலாது என்பதற்குத் திருவள்ளுவரின் 'காமத்துப் பால் சீரிய எடுத்துக் காட்டாக உள்ளது.
ஒருத்திக்கு ஒருவன் என்ற ஒழுக்க வரம்பை வள்ளி - முருகன் காதல் மீறுவதாயிருந்தால் அந்த 'ஒழுக்க' மரபு தமிழகத்தில் மீறித்தான் இருந்திருக்க வேண்டும். வள்ளி - முருகன் உறவைத் தத்துவ அடிப்படையிலும் சமய அடிப்படையிலும் மொழி அடிப்படையிலும் இயற்கை அடிப்படையிலும் அலசுகின்றனர் அறிஞர்கள். வள்ளிக்கும் தேவயானைக்கும் முருகனுக்குமுள்ள தொடர்பைத் தமிழுக்கும் சமஸ்கிருதத்திற்கும் இறைமைக்குமுள்ள தொடர்பாகவும் சித்தரிக்கலாம் என்கிறார் கமில் சுவலபில்.

(இராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம்)
சமய மரபில் பார்க்கும்போது திராவிடப் பெண்ணான, தாழ்த்தப்பட்ட இனத்தைச் சார்ந்த பெண்ணான வள்ளியை மேற்சாதிப் பிராமணன் (முருகன்) தேடியலைவதை எழுதியவர் யார்? இந்தக் காதல் சங்கதி சாதி வெறி கொண்ட ஆரிய தத்துவத்தில் பிறந்திருக்கவியலாதவொன்று நிற அடிப்படையில் மனிதனைப் பிரித்துத் தொடவியலாத தொலைவில் மனிதத்தை வைத்த பிராமணியம் கறுத்த பெண்ணின் காதலைத் தெய்விகமாக்கியிருக்க இயலாது. இதிகாசங்களில் பிராமணியப் பெண்டிர் அல்லாதோர்க்கு (சூர்ப்பனகை, தாடகை) நடந்த கதிதான் வள்ளிக்கும் நடந்து அவள் முலைகளையோ மூக்கையோ இழந்திருப்பாள். இவ் உண்மையை மறைக்க இன்றைக்கும் சமய ஏடுகள் என்று சொல்லிக் கொண்டு சாதியமைப்பிற்கும் பெண் அடிமைத்தனத்திற்கும் தத்துவ அடிப்படையில் நியாயம் கூறும் சில வெறிபிடித்த ஏடுகள் வள்ளி - முருகன் உறவை'த் 'தத்துவம்' அல்லது ‘சமய உண்மை என்ற பம்மாத்து வார்த்தைகளால் மூடி மறைக்கின்றனர்.
'வள்ளியின் உறவு' முருக (வழிபாட்டு) வரலாற்றில் முகாமையானவொன்று. இச்சா சக்தி, ஞானா சக்தியின் இடையில் மனிதன் வாழ்கிறான் என்பதை இது காட்டுகிறது என்பாரும் உண்டு. இயற்கையோடு தொடர்புபடுத்துவோர் கடம்பத்தில் (முருகன்) படர்ந்த கொடி (வள்ளி) என்று இவர்கள் உறவைக் காண்கின்றனர். இவ் உறவைப் பொருளியல் அடிப்படையில் ஆராய்வோர் பணக்காரப் பெண்ணை (தேவயானை) மற்றவர் கட்டாயத்திற்கு மணம் செய்து கொண்ட மாப்பிள்ளை (முருகன்) ஆசை தீர்க்கத் தன் காதலியை (வள்ளியை)த் தேடிப் போவதாகப் புனைகதை மொழிகின்றனர்.
குறப் பெண்ணுடன் உண்டான குறிஞ்சித் தலைவனின் உறவு இயற்கையானது என்றும் தேவயானையுடனான அவனது உறவு செயற்கையானது என்றும் வாதாடுவோரும் உண்டு. இக்

Page 49
(தமிழ்க் கடவுள் முருகன்: வரலாறும் தத்துவமும்) (92)
குறப் பெண்ணின் காதல் கதை இலங்கையில் வாழும் ஆதிக்குடிகளான வேடுவர்களுடன் தொடர்புடையது. இதற்குச் சான்றாக, இலங்கைவாழ் வேடுவர் முருகனைத் தங்கள் மைத்துனன் என்று கூறும் மரபைக் குறிப்பிடலாம். வேதம் அறிந்த பிராமணர் தொடங்கி வேடுவர் வரை இக் காதல் கதை வேரூன்றியிருப்பதற்கு ஏதோவொரு தொன்மை ஆதாரம் (உண்மையாக நடந்த கதை) இருந்திருக்க வேண்டும்.
கி.பி. 4-ஆம் நூற்றாண்டுக் காலத்தில் ஆரியர்கள் சமய அடிப்படையில் (சமயக் குரவர்களாக) தமிழ் மண்ணில் காலடி எடுத்து வைத்த காலத்திற்குப் பின்னர்தான் முருகன் - ஸ்கந்தன் அல்லது கார்த்திகேயன் அல்லது சுப்பிரமணியம் என்று ஆகியிருக்கலாம்; அந்தக் காலத்திலேயே வள்ளி'யின் கதையும் முருகனுடன் தொடர்ந்திருக்கலாம். இதன் வெளிப்பாடே வடக்கில் வாழும் கார்த்திகேயனுக்கு மனைவியில்லை என்பதாகும்; அங்கு, அவன் பிரமச்சாரியாகவே (?) வணங்கப்படுகிறான்.
வட இந்தியக் கோயில்களில் குடிகொண்டிருக்கும் கடவுளான கார்த்திகேயனைப் பெண்கள் வணங்க இயலாது. அக் காலத்தில் முருகனுக்கு ஏற்பட்ட மாற்றத்திற்கும் இன்று இலங்கையில் தமிழ்க் கடவுள் முருகன் சிங்களக் காவல் தெய்வம் ஆக்கப்பட்டுத் தமிழர்களிடமிருந்து பிரிக்கப்படுவதற்கும் 'ஆரிய' உணர்வுதான் காரணம். (சிங்களவர் தங்களை ஆரியர்கள் என்று சொல்லிக் கொள்கின்றனர் வரலாற்று ஆதாரம் காட்டவியலாத தகவல் இது).
வள்ளி என்ற கறுப்புப் பெண்ணைப் பிராமணிய (முருகன்) கந்தன் தேடி ஒடுவது பாமர மக்களின் வெறும் கற்பனைக் காவியமாக மட்டும் இருந்திருக்கவியலாது. 'புறம்' என்ற சொல் பல கருத்துகளைக் கொண்டது. இதனைப் போர், வெற்றி,

(இராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம்)
பரிசளிப்பு, சட்டம், அரசியல், தர்பார், சடங்கு, ஆடம்பரம் என்று எத்தனையோ விதங்களில் கூறலாம். 'அகம்' என்ற சொல்லும் அவ்வாறே பல கருத்துகளைக் கொண்டிருக்கிறது; அதாவது, அகம் என்பது ஒரு மனிதனின் உள் மனத்தை, ஆசையை, அந்தரங்கத்தை, காதலை, தூய்மையை, சுயமையை, நேர்மையை உணர்த்துகிறது.
வள்ளி திருமணம் காதல் திருமணம்; தேவயானை திருமணம் சமயச் சடங்கு; வள்ளி திருமணம், தேவயானை திருமணம் என்பன தமிழ்நாட்டில் அக் காலத்தில் நிலவிய களவு, கற்புத் திருமணங்களை வெளிப்படுத்துகின்றன.
இன்னொரு வகையில் வள்ளி - முருகன் உறவைத் தமிழரின் மன உணர்வோடு வைத்து நோக்கினால் பிராமணியக் கோட்பாடுகளை எதிர்ப்பதன் ஒரு வெளிப்பாடே இந்த வள்ளி உருவகம் என்றும் கருத்துருவாக்கலாம். எடுத்துக் காட்டாக, ஆரியர் படைத்த இதிகாசங்களில் திராவிடப் பெண்கள் (அசுரப் பெண்களும் அரக்கப் பெண்களும்) ரிஷிகளையும் முனிவர்களையும் இராஜ குமாரர்களையும் மயக்கிப் பிடிப்பவர்களாகச் சித்தரிக்கப்பட்டிருக்கின்றனர்.
கந்த புராணத்தைக் கச்சியப்பர் கி.பி. 1400-ஆம் ஆண்டுகளில் இயற்றியிருக்கிறார்; அப்போது வாத்சாயனாரின் காம சூத்திரம் எழுதப்பட்டு ஆயிரம் ஆண்டுகளைத் தாண்டிவிட்டது; மேலும், அப்போது வட இந்தியாவில் கஜுராகோ கோயிலில் காம லீலைகளை சித்திரிக்கும் சிற்பங்கள் வந்து ஐநூறு ஆண்டுகளாகிவிட்டன; திருவள்ளுவர் காமத்துப் பால் இயற்றி ஆயிரம் ஆண்டுகள் கடந்துவிட்டன. எனவே, அக் காலத்தில் ‘காதல்' பற்றி வெளிப்படையாகச் சொல்லத் தடையேதும் இருந்திருக்காது.

Page 50
(தமிழ்க் கடவுள் முருகன்:வரலாறும் தத்துவமும்) (94)
இன்னொரு அறிஞரின் கூற்றுப்படி, பல்லவர் காலத்தில் சமணரும் பெளத்தரும் கொலை, களவு, காமம், பொய், மது எனும் பஞ்சமா பாதகங்களுக்கெதிராக மிகவும் உக்கிரமாகப் பிரச்சாரம் செய்தனர். சமண சமயம் அழியத் தொடங்கிய நாளில் மக்களும் புலவர்களும் பழையபடி மனித உணர்வுகளான ஆசை, போர் பற்றிப் பாடவும் எழுதவும் தொடங்கினர். அதன் எதிரொலிப்புதான் (தமிழ்) கந்த புராணமும் என்கிறார் இவ் அறிஞர்.
பெண்களை - அதிலும் குறிப்பாகத் திராவிடப் பெண்களைத் - தூய்மையற்றவர்களாகப் படைத்ததற்கு எதிரடிதான் குறப் பெண் வள்ளி 'தெய்வமாக்கப்பட்டதும்' என்று வாதாடுவோரும் உண்டு.
இதையும் விட, இசுலாமியப் பண்பாட்டில் ஒன்றுக்கு மேல் பல மனைவியரை வைத்திருப்பது சாதாரணம். இதன் வெளிப்பாடு தமிழ்ப் பண்பாட்டில் எந்த அளவிற்குப் பாதிக்கப்பட்டிருக்கிறது என்று தெரியாது. கந்த புராணத்தில் வரும் தெய்விகப் பெண்ணான வள்ளி என்ற திராவிடப் பெண்ணுக்கும் இதிகாசங்களிலும் மற்றப் புராணங்களிலும் வரும் திராவிடப் பெண்களுக்கும் எத்தனையோ வேறுபாடுகள் உண்டு.
எடுத்துக் காட்டாக, கந்த புராணத்தில் வரும் சூரபதுமனின் தாய் மாயா என்பவள் படைக்கும் கடவுளான பிரம்மாவின் மகனான காசிய முனிவரை மயக்கி நான்கு அசுரர்களைப் (சூரபதுமன், சிங்கமுகன், தாரகன், அசமுகி என்ற பெண்) பெற்றாளாம். அகில உலகையும் படைக்கும் பிரம்மாவின் மகனை ஓர் அசுரப் பெண் எவ்வாறு நான்கு தடவைகள் மயக்கவியலும் என்பது நம்பவியலாத விடயம். ஆரிய இதிகாசங்களில் ஆரியரல்லாத ஆண்களும் பெண்களும் காமவெறி

(இராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம்)
பிடித்தவர்களாகப் படைக்கப்பட்டிருக்கின்றனர். ஆரியரல்லாத மன்னர்களான இராவணனும் சூரபதுமனும் அப்படித்தான் படைக்கப்பட்டிருக்கின்றனர்.
இராவணனின் தாயான கைகாசி என்பவளும் சூரபதுமனின் தாய்போல ஒரு ரிஷியை (வைஸ்ரவ முனி என்பவர்; இவர் புலஸ்திய முனிவன் மகன்) மயக்கினாளாம். அதன் விளைவாக, முதல் மூன்று குழந்தைகளும் இராட்சதர்களாகவும் (இராவணன், கும்பகர்ணன்,சூர்ப்பனகை) ரிஷியின் "ஞானம்' இந்த இராட்சசியின் செய்கையை உணர்ந்தபோது பிறந்த குழந்தை (விபீடணன்) மனித உணர்வுகளுடனும் பிறந்தனவாம்.
ஆரிய இதிகாசங்களைப் பார்த்தால் ஆரியரல்லாதவர் ஒழுக்கக் குறைவானவர்களாய்ப் படைக்கப்பட்டிருப்பதைப் பார்க்கலாம். இந்தியாவிற்கு ஆரியர் வந்த காலத்தில் ஆரியரல்லாத ஆண்கள் வெள்ளை நிறம் படைத்த ஆரியப் பெண்களைக் கவர்ந்து கொண்டு போனதாகவும் ஆரியப் பெண்கள் பாலியல் வன்முறைகளுக்கு ஆட்படுத்தப்பட்டதாகவும் வரலாறு கூறுகிறது. இதன் எதிரொலிதான் இராவணன் கடத்திக்கொண்டு போன சீதையின் கதை என்றும் GантiоačuОápg. (Raj Pruthi & Bella Rani Sharma, 1995)
அலெக்சாண்டர் போன்றோ ஜெங்கிஸ்கான் போன்றோ பெரிய படையுடன் போர் புரிய ஆரியர் வரவில்லை; பல ஆண்டுகளாகச் சிறு சிறு கூட்டங்களாக வந்து சிறு சிறு இடங்களைக் கைப்பற்றியுள்ளனர்; அப்போது இதுபோன்ற வன்முறைகள் நடந்திருக்கலாம். எவ்வாறு இருந்தாலும் இந்தியாவிற்குள் நுழைந்த ஆரியக் கூட்டத்தினருக்கு இந்திய மக்களின் வாழ்க்கை முறை வியப்பை அளித்தது ஒன்றும் பெரிய

Page 51
(தமிழ்க் கடவுள் முருகன் வரலாறும் தத்துவமும்)
ஆரியக் குடும்ப அமைப்பில் காதல் திருமணங்களுக்கு இடமில்லை; பெண்கள் திருமண வயதை அடைந்ததும் மணமுடித்து வைக்கப்படுகின்றனர். நாடோடி வாழ்க்கையில் (வலிமை மிக்க) ஆண் குழந்தைகள் அவசியம் என்பதால் ஆண் குழந்தை பெற்றுக் கொடுக்காத ஆரியப் பெண் வேண்டாதவளாக நடத்தப்பட்டாள்; அம் மரபுதான் இன்றும் தொடரும் 'பெண் சிசுக் கொலை' க்கு வழியமைத்துக் கொடுத்தது. மாறாகத், திராவிடத் தொன்மையில் 'சக்தி வழிபாடு இருந்தது; பெண்டிரைக் கெளரவப்படுத்தும் பண்பு இருந்தது; அதன் எதிரொலியே வள்ளி 'தெய்விகமாக்கப்பட்டதும்.
வட இந்தியாவைப் போல் தென் இந்தியா அடிக்கடி எதிரிகளின் கைகளில் அகப்படவில்லை. அதனால், பெரும்பாலான திராவிடத் தொன்மைப் பண்பாட்டுக் கூறுகள் தமிழரின் வாழ்வுடன் ஒன்றிக் கிடக்கின்றன. தெற்கு நோக்கி வந்த பிராமணரும் தென்னிந்தியப் பண்பாட்டின் நிறையக் கூறுகளை உள் வாங்கியிருக்கின்றனர். எடுத்துக் காட்டாக, திருமணச் சடங்கில் தாலி கட்டுவது தமிழர் சடங்காகத்தான் இருந்தது என்கின்றனர் அறிஞர்கள். வீரத்துடன் புலி கொன்று அதன் பல்லைத் தன் காதலியின் கழுத்தில் கட்டியதன் மூலம்தான் 'தாலியின் வரலாறு.
தொல்காப்பியத்திலேயே களவு, கற்புத் திருமணங்கள் குறிக்கப்படுவதால் இந்தத் திராவிடத் தொன்மை மிகப் பழமையானது எனக் கொள்ளலாம். அந்தக் காலத்தில் தமிழகத்தில் இருந்தது தாய்வழிச் சமூகம் என்றும் திருமண விடயங்களில் பெண்களின் இசைவு முகாமையானது என்றும் குறிப்பிடுகின்றனர் புருத்தியும் சர்மாவும் (1975).

(இராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம்)
6. முருக வழிபாட்டில் ஆரிய மரபும் திராவிட மரபும் - ஓர் ஒப்பீடு
வள்ளியின் இசைவு பெறப்படும் வரை முருகன் பட்ட பாடும் பின்னர் வள்ளிக்கு முருகன்மீது காதல் வந்ததும் தன் விருப்பத்திற்கு வரவழைத்ததும் திராவிட மரபாகும். பெண்களுக்குத் தங்கள் வாழ்க்கையை முடிவு செய்துகொள்ளும் திராவிட மரபைக் காட்டுகிறது இச் சம்பவம். மாறாக, ஆரிய மரபில் ஆணின் சொத்தாகப் பெண் மதிக்கப்படுகிறாள். தேவயானையை அவள் தகப்பன் இந்திரன் வெற்றியின் பரிசாக முருகனுக்குக் கொடுக்கிறான்; இதுதான் ஆரிய மரபு. அதாவது, ஆரிய மரபில் ஒர் ஆணின் சொத்து இன்னோர் ஆணின் சொத்தாக மாற்றப்படுகிறது. இங்கு, 'பெண்ணின் இசைவு' என்ற பேச்சுக்கே இடமில்லை; இதனால், 'காதல்' என்ற பேச்சுக்கு அதிக இடமுமில்லை. ஆரிய மரபில் பெண் ஒரு 'சந்ததி' படைக்கும் கருவியாகத்தான் கருதப்பட்டாள் என்கின்றனர் புருத்தியும் சர்மாவும் (மேலது).
ஆரியர் அகராதியில் பெண்கள் போதைப் பொருள்களும் பிள்ளை பெறும் இயந்திரங்களுமாகவே கருதப்பட்டனர். இதற்கு நேர் மாறாகத் தமிழ் மரபில் 'காதல் புனிதமாக, தெய்விகமாகக் காக்கப்படுகிறது; இதன் வெளிப்பாடு வள்ளி. ஆரியரின் மரபில் பெண்களின் உடம்பு எதிர்காலத்தை உருவாக்கும் விளைநிலமாகக் கருதப்பட்டது என்கின்றனர் அறிஞர்கள். நாடோடிகளாக இருந்ததால் ஆண்களின் இறப்பு (கடினமான காட்டு எதிரிகளுடன் போராட்டம்) அதிகமாக இருந்தன. அதனால், இளம் விதவைகள் மறுமணம் செய்யப்பட்டுச் சமூக

Page 52
தமிழ்க் கடவுள் முருகன் வரலாறும் தத்துவமும் )
விருத்திக்கு (பெரும்பாலும் ஆண் உற்பத்திக்கு) உதவினார்களாம்.
இருக்கு வேதத்தின்படி கணவன் ஒரு குடும்பத்தின் தலைவனாக மட்டுமல்ல ஒரு 'கடவுள் நிலையில் வைக்கப்படுகிறான். திராவிட முறைப்படியல்லாமல் ஆரிய மரபில் எட்டு வகையான திருமண முறைகள் இருந்தன. அவை பின்
6ն(ԵԼՈTԱյl :
1. Slythuosir Sq5LosoTuh (Brahma Mariage): LooTLD6606T5
தகப்பன் தாரை வார்த்துக் கொடுப்பது;
2. தெய்வத் திருமணம் (Dolvo Morridge) : பெண்ணைத் தாரை வார்த்துக் கொடுப்பவர் தகப்பனாக இருக்கத் தேவையில்லை;
3. Sygnusus $105Ln600Tih (Prajapatya Marriage):
பெண்ணின் பாதுகாவலர் தாரை வார்த்துக் கொடுப்பது;
4. அர்ஷத் திருமணம் (Arsha Morridge) : பெண்ணின் தகப்பனுக்கு மாப்பிள்ளை வழியினர் இரு மாடுகளைத் தானமாக வழங்கிய பின் நடக்கும் திருமணம்;
5. கந்தர்வத் திருமணம் (Gandharva Marriage): 85mgi) திருமணமாகும் இது; இத்தகைய திருமணங்கள் மிகக் குறைந்த அளவிலேயே நடந்தன;
6. gasiTj é65LO6UOTüh (Ashuroa Morriage) : Gué (plg. 6
கட்டிய தொகையைக் கொடுத்துவிட்டுப் பெண் எடுத்தல்;

(இராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம்) ତ୍ରth முறையால் பணக்காரக் கிழவர்கள் இளம் பெண்களை விலை கொடுத்து மணக்கலாம்;
7. Sous T55 #c5LD600Th (Paisacha Morridge)
பெண்ணுக்குப் போதை மருந்து கொடுத்துப் பாலியல் கொடுமைப்படுத்தித் திருமணம் செய்தல். (இது குறித்துக் காம சூத்திராவில் விளக்கமிருக்கிறது);
8. 8ıyıttlefiğ filoşın6OTü (Rakshasa Marriage) : GuTifli வென்றபின் தோற்றவரின் மகளை அல்லது வேறு பெண்களை மணத்தல்.
இந்த எட்டு வகைத் திருமணங்களுள் முதல் நான்கும்தான் பெரும்பாலும் வழக்கத்திலிருந்தன. இந் நான்கு வகைத் திருமணங்கள் பெரும்பாலும் பெற்றோரால் ஒழுங்கு செய்யப்படுவனவாகும். இத் திருமணங்களில் மாப்பிள்ளை பெண்ணைப் பார்ப்பது மிக அரிது; திருமண நாளிலேயே பெரும்பாலான சந்திப்பு நடைபெறும். இத்தகைய திருமண முறைகளுடன் ஒப்பிட்டுப் பார்க்கும்போது ‘வள்ளி - முருகன்' திருமணம் முழுக்க, முழுக்கத் திராவிட மரபுத் திருமணமாகும்.
திராவிட மரபில் மனிதனின் இன்றியமையாத சக்தியாகப் பெண் அமைகிறாள். இதற்குச் சான்றாக, தொன்மையுடன் இணைந்திருக்கும் சக்தி வழிபாட்டைக் குறிப்பிடலாம். வள்ளியை முருகனின் ஆறு சக்திகளுள் ஒன்றாகக் காண்கிறார் அருணகிரிநாதர்.

Page 53
(தமிழ்க் கடவுள் முருகன்: வரலாறும் தத்துவமும்)
"ஏறு மயில் ஏறி விளையாடும் முகமொன்றே ஈசனுடன் ஞானமொழி பேசு முகமொன்றே கூறுமடியார்கள் வினை தீர்த்த முகம் ஒன்றே குன்றுருக வேல் வாங்கி நின்றமுகம் ஒன்றே மாறு படு சூரரை வதைத்த முகம் ஒன்றே வள்ளியை மணம் புணர வந்த முகம் ஒன்றே ஆறுமுகமான பொருள் நீ யருளல்வேண்டும் ஆதி அருணாசலம் அமர்ந்த பெருமாளே "
என்று சொல்லும் அருணகிரிநாதர் அபரிமிதமான சக்தி வாய்ந்த முகமாகப் பெண் முகத்தையும் பார்க்கிறார்; இவ் வரிகள் மனித உணர்வின் வெளிப்பாடுகள். V−
சோழ மன்னரின் ஆட்சிக் காலத்தில் கோயில்கள் உயர்ந்தன; தமிழ் வளர்ந்தது; சமய வழிபாடும் வளர்ந்தது. சமணர் காலத்தில் போரும் காதலும் வெறுக்கப்பட்டன. ஆனால், அதன் பின் பக்திப் பாடல்களிலும் காதல் கனிந்தது; தமிழில் பக்தி இலக்கியத் தமிழ் வளர்ந்தது; தமிழ் நாயன்மார்களின் பக்தி இலக்கியங்களில் ஆரியத் தெய்வ வழிபாட்டின் எச்சங்கள் எதிரொலிக்கின்றன. சூரியனை முழு முதல் கடவுளாக வழிபட்டதன் தொடர்பு சிவனைச் சிவ சூரியனாகத் திருநாவுக்கரசர் பாடியதில் தெரிகிறது. திருமுருகாற்றுப் படையிலும் முருகன் சூரியனாக உருவகிக்கப்படுகிறான்.
கி.பி. 7-ஆம் நூற்றாண்டில் அப்பர் சிவனைச் சூரியனாகக் காண்பதைப் பார்க்கும்போது பிராமணியத் தத்துவச் சிந்தனையானது தமிழ்ப் பக்தியோடு இணைந்திருந்தது

101 (இராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம்)
தெரிகிறது. ஆனாலும் நாளடைவில் பக்தி இலக்கியம் வேறுபடத் தொடங்கியது. குப்தர் காலம் ஒரு காலத்தில் இந்துப் பண்பாட்டின் பொற்காலமாக இருந்ததுபோல சோழர் காலமும் சைவத்தின் பொற்காலம் என்று போற்றப்படுகிறது. இக் கால கட்டத்தில்தான் பெரிய புராணம் எழுதப்பட்டது; புலியூர் நம்பியால் திருவிளையாடல் புராணம் இயற்றப்பட்டது. கச்சியப்பரின் கந்த புராணமும் புராண வரிசையில் அடங்கும் என்கிறார் ஆ. வேலுப்பிள்ளை (1985).
முருக வழிபாட்டிற்குப் பக்திப் பாடல்கள் வாயிலாகப் பெரும் பங்களிப்புச் செய்த அருணகிரிநாதரின் தொண்டு அளப்பரியது. முருகனுக்குக் குமரகுருபரர், இராமலிங்க சுவாமிகள், பாம்பன் சுவாமிகள், அண்ணாமலை இரெட்டியார், வண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகள் ஆகியோர் அரிய பெரிய இலக்கிய மாலைகளை அணிவித்திருக்கின்றனர்.

Page 54
(தமிழ்க் கடவுள் முருகன் :வரலாறும் தத்துவமும்)
7. முடிவுரை
வடவர் சமய மரபோடு இணைந்து காணப்படுவது போல் தெரிந்தாலும் கலிகாலக் கடவுள் முருகன் தமிழரின் கடவுள். அறிஞர் ஃபிரட் குளோத்தி (Fred Clothy, 1998) குறிப்பிடுவது போல் முருகன் தமிழ்ப் பண்பாட்டோடு ஒன்றிணைந்தவன். முருக வழிபாடும் முருகனைப் பற்றிய நம்பிக்கைகளும் பல வழிகளாலும் சோதிக்கப்படும் தமிழ்க் குடிமக்களுக்கு வழிகாட்டுபவை. ஃபிரெட் குளோத்தியின் கூற்றுப் போல் முருகனைப் பற்றிய தெய்விகக் கதைகள் சில வேளை நம்பவியலாதது போல் இருந்தாலும் முருக வரலாறு ஏதோ ஒரு வடிவில் சாதாரணத் தமிழனைப் பாதிக்கிறது; அவனது வாழ்க்கையில் பங்களிப்புச் செய்கிறது. உலகம் உள்ளவும் தமிழும் தமிழரும் முருகனும் வாழ்வார்கள். தமிழர்கள் தமிழகத்தில் மட்டுமல்லாமல் உலகெல்லாம் பரந்து கிடந்தாலும் மொழியும் சமயமும் அவர்களை ஒருங்கிணைத்திருக்கின்றன.
சமய வழிபாட்டிலும் 'தென்னாடுடைய சிவனே போற்றி; எந் நாட்டவர்க்கும் இறைவா போற்றி!' என்று சிவனைத் தொழுதாலும் முருகனை அவர்கள் தங்கள் நெருக்கமான கடவுளாகக் காண்கின்றனர். ஓம் என்ற பிரணவ மந்திரமான அகர, உகர, விந்து, நாத, சக்தி, காந்தத்தைத் தகப்பனுக்கு உணர்த்திய தகப்பன் சாமியைத் தங்கள் கடவுளாக உயர்த்துகின்றனர்.
இவ்வாறு முருகனை 'உரிமை கொண்டாட வேண்டிய அவசியம் ஏன் ஏற்பட்டிருக்க வேண்டும் என்று வரலாற்று அடிப்படையில் பார்த்தால் ஒரு கால கட்டத்தில் வடவர் ஸ்கந்தனைப் படைத்து அவனுக்குத் தங்கள் குல தெய்வமான

103 (இராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம்)
சூரியனைத் தொடர்புபடுத்திப் பல குழப்பக் கதைகள் செய்தது ஒரு காரணமாக இருக்கலாம்; அல்லது பல வரலாற்றாசிரியர்கள் கூறுவது போல் 'ஸ்கந்த வழிபாடு அலெக்சாண்டர் இந்தியாவிற்குப் படையெடுத்த பின்னர் பிறந்த கதையாக இருக்கலாம். எவ்வாறாயினும், வட மரபு ஸ்கந்தனுக்கும் தென் மரபு முருகனுக்கும் உள்ள பண்பாட்டு வேறுபாடுகளை உணர வேண்டும்.
சந்திரகுப்த மெளரியனுக்கு அரசியல் ஆலோசகனாக இருந்த சாண்டில்யன் துரியோதனனையும் சீதையையும் பற்றிக் குறிப்பிடுகிறான். மகாபாரதத்திலும் இராமாயணத்திலும் ஸ்கந்த வரலாறு குறிப்பிடப்படுகிறது. அதாவது, அலெக்சாண்டர் இந்தியாவிற்கு வந்தபோது ஏற்கனவே மகாபாரதமும் இராமாயணமும் இந்தியப் பண்பாட்டில் இருந்திருக்கின்றன. இதிலிருந்து 'ஸ்கந்த வழிபாடு' தெற்கிலிருந்து வடக்கிற்குச் சென்ற பழமரபுக் கதைகளின் திரிபு என்று தெரிகிறது.
புராணங்கள் ஒருவரால் எழுதப்படாமல் பலரால் எழுதப்பட்டதால் ஸ்கந்த புராணமும் அவ்வாறு எழுதப்பட்டு ஸ்கந்தனின் மூல வரலாறு குளறுபடி செய்யப்பட்டிருக்கலாம். அடுத்த இன்னொரு முகாமையான தகவல் கந்த புராணத்திலிருக்கிறது. அதாவது ஒம் என்ற பிரணவ மந்திரத்திற்கு விளக்கம் தெரியாத பிரமனை முருகன் சிறையில் அடைத்ததாகக் கூறப்படுகிறது. ཙ་ར་
பிரம்மனின் உருவகம் பிராமணர்களின் உருவகம். படைத்தல், காத்தல், அழித்தல் எனும் முத் தொழில்களுள் 'படைத்தல்' என்ற அரும் பெரும் இடத்தைத் தங்களுக்கு ஒதுக்கிக் கொண்டு, 'காத்தலை விஷ்ணுவுக்குக் கொடுத்தனர்;

Page 55
(தமிழ்க் கடவுள் முருகன்: வரலாறும் தத்துவமும்)
அதாவது, ஆரியர்கள் வரும்போது துவாரகைப் பகுதி நாடோடி மக்களின் காத்தல் கடவுளாக விளங்கிய கிருஷ்ணனுக்குக் கொடுத்தனர்; திராவிடரின் மேன்மையான சிவனை 'அழித்தலில் ஈடுபட அனுமதி கொடுத்தனர்; அதாவது, இருக்கு வேதத்தில் சிவன் என்றேயில்லை; மாறாக, உருத்திரன் என்ற மிகவும் பயங்கரமான கடவுள் உருவகிக்கப்படுகிறார். பின்னைய கால கட்டத்தில் அவரின் மகன் என ஸ்கந்தன் குறிப்பிடப்படுகின்றான்; அதாவது, தெற்கின் முருகவேளை ஒரு வகையில் தங்களுக்குப் பிடிக்காத உருத்திரனின் மகனாக உருவகம் செய்திருக்கலாம்.
பிரம்மனைச் சிறையில் அடைத்த கதையைப் பிராமணர் ஒரு நாளும் படைத்திருக்க இயலாது. பிரம்மனின் தலையில் முருகன் குட்டினான் என்று தமிழகத்தில் பரவிய கதையைப் பிராமணனைத் தமிழன் தலையில் குட்டினான் என்றும் எடுத்துக் கொள்ளலாம். அடுத்து, வள்ளியின் படைப்புதான் முருகன் ஒரு தமிழ்க் கடவுள் என்பதைத் திட்டவட்டமாகக் கூறுகிறது; ஏனென்றால், பிராமணியப் படைப்பில் ஆரியரல்லாத பெண்கள் அனைவரும் காமப் பசியோடு ஒடித் திரியும் பெண்டிராகவே படைக்கப்பட்டிருக்கின்றனர். மாறாக, வள்ளியின் படைப்பிலோ அதி உன்னதக் கடவுளின் மகன் (பிராமணன்!) முருகன் தாழ்த்தப்பட்ட பெண் - கறுத்த பெண் - வனத்தில் வாழும் பெண் - சுதந்திரமாகத் திரியும் பெண்ணான வள்ளியிடம் மயங்கி, எத்தனையோ முயற்சிகள் எடுத்து அவள் கை பிடிக்கிறான்.
காதலைப் பற்றித் தெரிந்தவன் திராவிடன்; காதலுக்காகப் போர் தொடுத்தவன் திராவிடன்; காதலையும் வீரத்தையும் இரு கண்களாகப் பார்த்தவன் திராவிடன்; அம் மரபின் உணர்வில்தான் வள்ளியின் காதல் மறைந்திருக்கவியலும்

(05) (Qurgosufi urnasufiua)
அடுத்ததாக, இன்னொரு விவாதத்தையும் இங்கு நாம் கருத்தில் கொள்ள வேண்டும். அதாவது, முருகனின் 'வேல்' என்பது அலெக்சாண்டர் வைத்திருந்த ஆயுதம் எனவும் வள்ளி - தேவயானை என்பவர்கள் அலெக்சாண்டரின் பார்சைன், எருக்சனா என்ற இரு காதலியர் எனவும் கருதும் அணுகுமுறையாகும். இருப்பினும், இவ் ஒப்பீட்டில் காணலாகும் வேறுபாடுகளையும் கருத்தில் கொள்ள வேண்டும். அதாவது, அலெக்சாண்டர் வரலாற்றில் பார்சைனை அலெக்சாண்டர் திருமணம் செய்து சமூக அந்தஸ்து கொடுக்கவில்லை. அலெக்சாண்டருக்கு ஹெரக்கிலியஸ் என்று ஒரு மகன் உண்டு; மாறாக, முருகன் தொடர்பான கதைகளில் அவன் வள்ளியை மணமுடித்ததாகக் காட்டப்படுவதையும் அவனுக்குக் குழந்தை ஏதுமில்லை என்று குறிப்பிடப்படுவதையும் வேறுபாடுகளாய் உணரலாம்.
இனி 'வேல்' எனும் ஆயுதம் பற்றி ஆராயலாம். இவ் ஆயுதம் கோடிக்கணக்கான ஆண்டுகளாக வேட்டையாடிப் பிழைக்கும் மக்களின் ஆயுதமாக இருந்தமை புலப்படக் காணலாம். இவ் வேலின் அறிமுகம் அலெக்சாண்டரால் வந்திருக்கத் தேவையில்லை. ஏனெனில், வேட்டையாடும் சமுதாயத்தின் ஆயுதம் இது. மனிதன் கற்காலத்திலிருந்தபோது கண்டுபிடித்த முதல் விடயம் ஒரு கல்லைப் பதப்படுத்தி, கூர்மைப்படுத்தி எவ்வாறு ஆயுதமாகப் பயன்படுத்துவது என்பதுதான். அத் திறமையைக் குறிஞ்சிக் கடவுள் முருகனுக்கு யாரும் சொல்லிக் கொடுக்கத் தேவையில்லை. பல்வேறு ஆராய்ச்சிகளின் வாயிலாக, ஃபிரெட் குளோத்தி முருகன் தமிழரது கடவுள் என்று முடிவு கட்டுகிறார்; கமில் சுவலபில், தமிழர் நாகரிகம் மிகவும் சுதந்திரமானது - அது எப் பண்பாட்டோடும் இணைந்தில்லாத ஒரு 'சுயமை'யை உடையது

Page 56
தமிழ்க் கடவுள் முருகன் : வரலாறும் தத்துவமும் )
என்கிறார். ரோமிலா தாப்பர் என்ற அறிஞரோ முருகனைப் பற்றிக் குறிப்பிடும்போது 'தமிழரின் போர்க் கடவுள்' என்றே குறிக்கிறார்; 'இந்திய வரலாறு' எனும் நூலை எழுதிய இவ் அறிஞர் முருகனைத் தமிழர் வாழ்க்கையோடு தொடர்புபடுத்திக் காட்டுகிறார்.
அலெக்சாண்டரது வருகை வடக்கத்திய ஆரியர்களுக்கு ஒரு வகையான மகிழ்ச்சியைக் கொடுத்திருக்கலாம். இந்தியாவில் சமண சமயம் பரவிக் கொண்டிருந்த காலத்தில் பல புராணங்கள் சொல்ல வேண்டி வந்தபோது சூரிய வம்சத்தின் பிரதிநிதி என்பதாகத் தன்னைப் பிரகடனப்படுத்திக் கொண்டு வந்த அலெக்சாண்டர் சூரியனைக் குல தெய்வமாகக் கொண்டாடும் ஆரியரின் கற்பனைக்கு வித்திட்டிருக்கலாம்.
வள்ளியைத் தெய்வப் பெண்ணாக வடக்கத்திய மரபு ஏற்றுக் கொண்டிருக்கவியலாது. ஏனெனில், ஆரியர்கள் ஆரியரல்லாத பெண்டிரின் உடலுறுப்புகளை வெட்டிக் குவித்துத் தமது வெறியைத் தீர்த்துக் கொண்டவர்கள்; வாதத்தில் தோற்ற ஆயிரக்கணக்கான சமணர்களைக் கழுவில் ஏற்றியவர்கள்; நந்தனை உயிரோடு எரித்தவர்கள்; மகாத்மா காந்தியைக் கொலை செய்தவர்கள்; இவற்றிலிருந்து இத்தகைய ஆரியர்களால் ஒரு குறப் பெண்ணைத் தெய்வமாக்கியிருக்க வியலாது என்று ஊகித்துணரலாம்.
மாறாகச், சமத்துவத்தில் மலர்ந்த ஒரு நாகரிகமான சமுதாயத்தால்தான் அவ்வாறு செய்திருக்க இயலும். வள்ளியையும் தேவயானையையும் பற்றிக் கூறும்போது சுவலபில், முருக வழிபாட்டுத் தத்துவத்தில் வள்ளியின் உருவகம் இந்துக் கடவுளான கந்தனுடன் தமிழையும் சமஸ்கிருதத்தையும் இணைப்பது என்பதாகக் கருத்தில் கொள்ளலாம் என்கிறார்.

107 இராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம்)
அதே நேரத்தில், திருச்செந்தூர் புராணத்தில் வள்ளியை முருகனின் முதல் மனைவி என்றும் தெய்வயானையைப் பரதவ குலத்துப் பெண் என்றும் மாறுபாடாகப் படைக்கப்பட்டிருத்தல் இங்கு கருத்தில் கொள்ள வேண்டிய மற்றொரு விடயம்.
தெற்கை உறைவிடமாகக் கொண்ட முருகனின் வரலாறு தொன்மைத் திராவிடத்தினுடைய சுயமையின் பிறப்பிடமாக இருக்கிறது. அன்பு, காதல், சமத்துவம், ஆடல், பாடல், பக்தி என்ற ஆறு முகாமையான கூறுகளின் வெளிப்பாடுதான் முருகன்; அவனைத் "துதிப்போர்க்கு வல்வினை போம்; துன்பம் போம்; நெஞ்சில் பதிப்போர்க்குச் செல்வம் பலித்துக் கதித்தோங்கும்; நிட்டையும் கைகூடும்; நிமலரருள் கந்தர் சட்டி கவசந்தனை."
"அமரர் இடர்தீர அமரம் புரிந்த குமரனடி நெஞ்சே குறி"
என்று கூறி இந் நூலை நிறைவு செய்கிறேன்.
"தமிழினால் உன்னைப் பழித்தாலும் பாசமுடன் அருளும் இமிழ்கடல் ஒரம் இணைந்த கரும்பே சரவணனே"

Page 57
(தமிழ்க் கடவுள் முருகன்:வரலாறும் தத்துவமும்)டு08
நெறித்துணை ஏடுகள் (தமிழ்) அறவாணன், க.ப. 1984. தமிழரின் தாயகம் சென்னை:
உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம்.
சாங்கிருத்தியாயன், வால்காவிலிருந்து கங்கை இராகுல. 1949. வரை. சென்னை:
தமிழ்ப் புத்தாகாலயம்.
வேலுப்பிள்ளை, ஆ. 1985. தமிழ்ச் சமய வரலாறு.
சென்னை: பாரி புத்தக நிலையம். கணையாழி. சென்னை, சூலை 1993
(ஆங்கிலம்)
Clothy, Fred W. 1978. The Many Faces of
Murugan - The History & Meaning of a South indian God. New York :
Mouton, The Hague.
Dawson, John. 1992. Classical Dictionary of
Hindu Mythology and Religion, Geography, History and Liberation. Calcutta : Rupa & Co.,

109 (േ രജിത്തി
Errington, Shelly. 1979.
FoΧ, Robin Lane.
lonS, Veronica.
Mitchell A. G.
O'Flaherty, Wendy Doniger
Pruthi, Raj. 8. Bella Rani Sharma 1995.
1973.
1967.
1998.
1975.
"Some Comments On style in the meaning of the past". Journal of Asian Studies.
VO. XXXVI.
Alexander, the Great.
London: Penguin books.
Hindu Mythology London : The Hamilton Publishing Group Ltd.
Hindu Gods and Goddesses London . UBS Publishers & Distributors.
Hindu Myths (A source book translated from Sanskrit). London : Penguin books.
Aryans and Hindu Women. Delhi: Anmol Publications.

Page 58
(தமிழ்க் கடவுள் முருகன்: வரலாறும் தத்துவமும்)
Sen, K.M. 1987.
Subramaniam, S.V. &
G. Rajendran 1985.
Thaper, Romila. 1968.
Zachner, R.C. 1987.
Zvelebil, Kami V. 1973.
Hinduism. London : Penguin books.
Heritage of the Tamilian Temple Arts, Chennai: International Institute of Tamil Studies.
History of India. Vol. 1. London : Penguin books.
Hinduism. London : Oxford University Press.
The smile of Murugan. Netherland.

111 (இராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம்)
நூலாசிரியரோடு நேர்காணல்
ஞானி : முருகனைப் பற்றிச் சென்னை ஆசியவியல் நிறுவனத்தில் நடைபெற்ற கருத்தரங்கிற்காக நீங்கள் தமிழகத்திற்கு வந்திருக்கிறீர்கள். நீங்கள் மானுடவியல் படித்திருக்கிறீர்கள். சுயமான ஆய்வுகள் சிலவற்றையும் நீங்கள் செய்திருக்கிறீர்கள். இம் முறையில் முருகனைப் பற்றிய ஆய்வில் புதியதாக நீங்கள் என்ன கண்டுபிடித்திருக்கிறீர்கள்?
ராஜேஸ்வரி : முருகனைப் பற்றிய என் ஆய்வில், முருகனைத் தமிழ்க் கடவுள் என்று சொல்வதற்கு மேலாக, தமிழ்ப் பண்பாட்டின் சின்னமாகத், தமிழர் வழிபாட்டின் தொன்மையை கண்டறிவதாகத் தமிழ்ப் பண்பாட்டின் வேராக என் ஆய்வின் மூலம் காண முடிந்தது. அதைவிட, முருகனுக்கும் தமிழ்ப் பண்பாட்டிற்கும், முருகனுக்கும் பிற பண்பாட்டிற்கும் உள்ள தொடர்பு குறித்துக் காண்பதாக என் ஆய்வு அமைந்தது. முருக வழிபாடு வரலாற்றுக் காலத்திற்கு முற்பட்டது. முருக வழிபாடு மனிதனைக் குறித்த அல்லது தெய்வத்தைக் குறித்த வழிபாடாக இல்லாமல் தொன்மையில் இயற்கை வழிபாடாக இருந்தது. இதற்கான சான்றுகளைத் தேடி நான் தொகுத்திருக்கிறேன்.
ஞானி : என்ன சான்றுகளைத் தொகுத்திருக்கிறீர்கள்?
ராஜேஸ்வரி : முருகன் என்பதன் பல அம்சங்கள் - குறிப்பாகப் பன்னிரண்டு கைகள், ஆறு முகங்கள், இரு மனைவியர், குன்றில் வாழ்வது, முருகன் குறிஞ்சியின் தலைவன். இவையெல்லாம் ஆதிகால மனிதர்களின் வாழ்க்கையை வெளிப்படுத்துகின்றன.

Page 59
(தமிழ்க் கடவுள் முருகன் வரலாறும் தத்துவமும்)
ஆதிகால மனிதன் மலைகளில் வாழ்ந்தான். மலையைப் புனித இடமாகக் கருதினான். எல்லா சமூகங்களின் வரலாற்றையும் ஆராய்ந்து பார்க்கும்பொழுது இந்த உண்மை தெரிய வருகிறது. பிரமிடுகள் உயரமானவை. தென் அமெரிக்காவில் மாயன் கலாச்சாரத்தில் புனிதமான இடங்கள் மலையின் மீது அமைந்திருக்கின்றன. வானவியல் ஆய்விலும் இது தெரிய வருகிறது. நட்சத்திரங்களும் இயற்கையும் ஆதிகால மனிதர்களின் வழிபாட்டிற்குரியவை.
முருகனின் பனிரெண்டு கைகள் என்பவை பனிரெண்டு மாதங்களைக் குறிக்கின்றன. கிரேக்கச் சோதிடத்தில் இதைக் காணலாம். தமிழ் மாதங்களும் பன்னிரண்டு. கிரேக்கச் சோதிடத்தில் இருந்து பன்னிரண்டு மாதங்கள் என்ற அமைப்பு வந்ததா? இதை முன்பே கண்டவர்கள் தமிழர்களா? என்று விவாதிக்கலாம். சங்க காலத்திற்கு முன்பே தமிழர்கள் வானவியல் ஆய்வில் ஈடுபட்டிருந்திருக்கிறார்கள். மொகஞ்சதாரோ, ஹரப்பா நாகரிகத்தின் காலத்தை மிகக் குறைந்த அளவுக்குச் சொன்னாலும் கி.மு. 2500 ஆண்டுகளுக்கு முற்பட்டவை. புத்த மதத்தின் தோற்றத்திற்கும் முற்பட்டது இந்த நாகரிகம். புத்த மதத்திற்கு முன்பு ஆரியர்கள் வந்தனர். அவர்களின் வருகைக்கு முன்பே தொன்மையான நாகரிகத்தோடு வாழ்ந்தவர்கள் தமிழர்கள். ஆகவே, பனிரெண்டு மாதங்கள் என்ற கருத்து கிரேக்கர்களிடமிருந்து தமிழர் பெற்றனர் என்று சொல்வதற்கில்லை. இது தமிழ் மக்களின் கருத்து.
ஞானி தமிழர் நாகரிகத்தை குமரிக் கண்டத்தோடு நீங்கள் தொடர்புபடுத்துவீர்களா?
ராஜேஸ்வரி : குமரிக் கண்டத்தோடு முருகன் வழிபாட்டை நான் தொடர்புபடுத்துகிறேன். குமரிக் கண்டம் ஆப்ரிக்காவோடு

13) (இராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம்)
சேர்ந்திருந்தது. ஆஸ்திரேலியாவோடு சேர்ந்திருந்தது. கண்டங்கள் விலகிச் சென்ற போதிலும் இன்னும் இலங்கைத் தீவில் தொன்மையான வழிபாடாக முருக வழிபாடு இருக்கிறது. இந்தியாவில் பிராமணியத்தோடு முருக வழிபாட்டை இணைத்திருக்கிறார்கள். இலங்கையில் இதுவரை இப்படி நடைபெறவில்லை. ஆரியப் படையெடுப்பு இலங்கையில் இல்லை. சிங்களவர்களின் வழிபாட்டு முறைகள் (கப்புருளை) முருக வழிபாட்டிற்குள் வரவில்லை. இந்தியாவில் முருக வழிபாட்டில் பிராமணியம் நுழைந்திருக்கிறது. கதிர்காமத்தில் நடைபெறுவது தொன்மையான தமிழ் வழிபாடு. கதிர்காமத்தில் சமஸ்கிருத மந்திரங்கள் இல்லை. முருக வழிபாடு என்பது முதலில் இலங்கையில்தான் தோன்றியிருக்க வேண்டும் என்பது என் கருத்து. சூரபதுமன் இலங்கைக்கு அப்பால் இருந்தவன். சூரபதுமனை கடலுக்குள் சென்றுதான் முருகன் அழித்தான் என்பது புராணம். இந்தியாவில் முருக வழிபாட்டை ஆரியருக்கு விட்டுக் கொடுத்த அளவிற்கு இலங்கையில் விட்டுக் கொடுக்கவில்லை. வரகுண பாண்டியனோடு முருக வழிபாட்டைத் தொடர்புபடுத்திக் கூறினாலும் அதற்கு முன்பே இலங்கையில் முருக வழிபாடு இருந்திருக்கிறது. ஆகவே, முருகனின் பூர்விகம் எங்கே என்று தேடியபோது, இலங்கையில் கிடைத்தது ஒரு முடிச்சு.
கிரேக்க கடவுளுக்கும், முருகனுக்கும் நிறைய ஒற்றுமையிருக்கிறது. கிரேக்கர்களின் மலைக்கடவுள் டையோனியஸ் செய்த வீர தீரச் செயல்களுக்கும் முருகனுக்கும் ஒற்றுமையுண்டு. வள்ளி குறிஞ்சி நிலம் சார்ந்தவள்; திணைப் புனம் காத்தவள். ரோமக் கலாச்சாரத்தில் டயானா என்ற தெய்வத்திற்கும் இது போல உறவு உண்டு. கிரேக்கக் கலாச்சாரத்திலும் காட்டுத் தேவதைகள் சொல்லப்படுகின்றன. காடுகளுக்குக் காவலான தேவதைகள் இவர்கள்.

Page 60
(தமிழ்க் கடவுள் முருகன்:வரலாறும் தத்துவமும்)டு19
இந்த ஒற்றுமைகளைப் பார்க்கும்பொழுது நமக்குள் ஒரு கேள்வி எழும். இந்த நாகரிகத்தின் கூறுகள் அங்கிருந்து இங்கு வந்தனவா? அல்லது இங்கிருந்து அங்கு சென்றனவா?
ஆரியர்கள் இந்தியாவுக்கு வருவதற்கு எத்தனையோ நூற்றாண்டுகளுக்கு முன்பு கிரேக்கர்களோடு தமிழர்கள் வாணிகத் தொடர்பு கொண்டு இருந்திருக்கின்றனர். எகிப்திய வழிபாடு கிரேக்க நாகரிகத்தில் தாக்கம் செலுத்தியிருக்கிறது. எகிப்தோடு சேர்ந்த ஆப்ரிக்க கண்டத்தில் குமரிக் கண்டம் இணைந்திருந்தது. எகிப்தியர்கள் சூரியனை வழிபட்டவர்கள். நம் முருகனாகிய ஸ்கந்தன் அக்கினியின் மகன். அதே சமயம் அலெக்சாண்டருக்கும் ஸ்கந்தனுக்கும் தொடர்புபடுத்தி கோபால பிள்ளை போன்றவர்கள் சொல்லியிருக்கிறார்கள். அலெக்சாண்டர் தன்னைச் சூரியனின் மகனாக எகிப்தியர்களிடையே பிரகடனப்படுத்திக் கொண்டான். எகிப்தியர்களுடைய அரசன் சூரியன் வழி வந்தவன். அலெக்சாண்டரும் தன்னைச் சூரியனோடு தொடர்புபடுத்திச் சொன்னான். அரேபியர்களிடையில் அலெக்சாண்டர் ஸ்கந்தன் என்று குறிப்பிடப்பட்டான். அலெக்சாண்டர் சந்திரகுப்த மெளரியன் காலத்தில் சிந்துப் பகுதிக்கு வந்திருக்கிறான். அபரிமிதமான சக்தி உடையவர் கடவுள் என்பது நம் மக்களின் நம்பிக்கை. அலெக்சாண்டரின் வருகையைத் தொடர்ந்து ஸ்கந்தா என்பதன் தோற்றம் அமைந்திருக்கலாம். இப்படிச் சொல்பவர் கோபால பிள்ளை.
ஞானி : முருகனைப் பற்றிய கதையில் தேவயானைக்கு என்ன இடம்?
ராஜேஸ்வரி : ஸ்கந்த புராணத்தில் தேவயானைக்கு முக்கியமான இடம் தரப்பட்டிருக்கிறது. நம்முடைய

115 (இராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம்)
கந்தபுராணத்தில் வள்ளிக்கு முக்கியமான இடம் தரப்படுகிறது. 'கந்த' என்ற சொல் 'கந்து' என்ற சொல்லோடு தொடர்புடையது.
கந்து என்றால் கிளை - மரத்தின் கிளை. கந்து என்பது வளர்ச்சி என்பதனோடு தொடர்புடையது. மரம், கிளை என்பனவற்றை இயற்கையோடு தொடர்புபடுத்தலாம். கந்தா, கடம்பா என்று கூறுகிறோம். கடம்பு என்பது ஒரு மரம். கந்தன் கடம்பாகவும், மரமாகவும் விளங்குகிறான். கடம்ப மரத்தைத் தழுவிய கொடியாக வள்ளி இருக்கிறாள். ஆகவே, முருகனும் வள்ளியும் தமிழர்களின் இயற்கை வழிபாட்டை வெளிப்படுத்துகிறார்கள்.
தேவயானை எங்கே புகுத்தப்பட்டிருக்கிறாள்? கடம்ப மரம் வெள்ளை நிறம், வள்ளி கறுப்பு நிறம். தேவயானை வெண்மை நிறம். சேயோன் முருகன் செந் நிறம். செந் நிறமுடைய தேவயானையை முருகன் திருமணம் செய்கிறான். இப்படித் தேவயானை வந்திருக்கலாம். முருகன் புகழ் பெற்ற வீரனாக இருந்திருக்கலாம். வள்ளி குறிஞ்சி நிலப்பெண். தேவயானை வெளியிலிருந்து வந்தவள்; வேற்று நாகரிகத்திலிருந்து வந்தவள். வள்ளி கிராமத்துப் பெண் என்றால் தேவயானை நகரத்துப் பெண். இங்கு நாகரிகக் கலப்பைப் பார்க்கிறோம். ஓர் ஆண் இரு பெண்டிரைத் திருமணம் செய்யலாம். சமூகவியல் நோக்கில் பார்த்தால் ஒரு பணக்காரன் இரு பெண்டிரைத் திருமணம் செய்து கொள்கிற கதையாக இதை நாம் பார்க்கலாம்.
ஞானி கந்தனுக்கும் ஸ்கந்தனுக்கும் என்ன உறவு?
ராஜேஸ்வரி கந்தன் என்பதைத் தமிழ்ச் சொல்லாகவே கருதலாம். 'ஸ்கந்தா' என்பது வட சொல். கந்தன் என்ற சொல்

Page 61
(தமிழ்க் கடவுள் முருகன் வரலாறும் தத்துவமும்)
ஸ்கந்தன் என்று ஆனது. அலெக்ஸாண்டரின் வருகைக்குப் பிறகுதான் சங்க இலக்கியங்களில் முருகன் என்று இருக்கிறது; கந்தன் என்று இருக்கிறது. முருகு என்றால் அழகு. முருகன் அழகியவன். இயற்கையின் அழகுதான் இங்கு முருகு. இயற்கையின் மாதங்கள் பன்னிரண்டு, பருவங்கள் ஆறு, மாறி வருபவை இரவும் பகலும். இருளின் நிறம் கறுப்பு, பகலின் நிறம் வெண்மை. இங்கு எல்லாவற்றையும் இணைத்துப் பார்க்கலாம். முருக வழிபாடு என்பது இயற்கையின் வழிபாடு.
ஞானி : முருகன் என்பது தனி நிலைக் கடவுள் என்பது சரிதானா? சிவனோடு முருகனுக்கு என்ன தொடர்பு?
ராஜேஸ்வரி : முருகனைச் சிவபெருமானின் மகனென்று சொல்வது ஸ்கந்த புராணம். திராவிட வழிபாட்டைக் குலைத்தவர்கள் ஆரியர்கள். பெண் தெய்வ வழிபாட்டிற்கு முக்கியத்துவம் கொடுத்தவர்கள் திராவிடர்கள். தாய்த் தெய்வத்தை வழிபட்டவர்கள் திராவிடர்கள். பூமியைத் தாயாகவும், ஆண், பெண் பாலியல் உறவையும் வணங்கியவர்கள் திராவிடர்கள். ஆண், பெண் உறுப்புக்கள் தெய்விகமானவை; படைப்புக்கு ஆதாரமானவை; வளர்ச்சிக்கு ஆதாரமானவை; இதைத் திராவிடர் வணங்கினர். திராவிட மனத்தின் தூய்மையான வணக்க முறை இது. இதற்கு அவர்கள் வடிவம் தரவில்லை. லிங்க வடிவத்தைக் கற்பித்தவர்கள் ஆரியர்கள்; லிங்கத்தைச் சிவமாக்கியவர்கள் ஆரியர்கள். சிவன் திராவிடக் கடவுள். இராவணன் சிவனை வழிபட்டான் என்பது புராணம். அவன் வீணை தேர்ந்த கலைஞன். சிவன் திராவிடக் கடவுள் என்பதற்கு மொகஞ்சதாரோ சின்னங்கள் ஆதாரம். சிவனை ருத்திரனாக்கியது ஆரியம். கிரேக்கக் கடவுளர்களில் ருத்திரனைப் போல ஒரு கடவுள் உண்டு. சிவனை ருத்திரன் ஆக்கியதில் கிரேக்கத்தின் பாதிப்புக்கு இடமுண்டு.

•(117 (இராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம்)
சொர்க்கத்தின் தலைவனாகிய இந்திரனைப் போலவும் ஒரு கடவுள் கிரேக்கர்களுக்கு உண்டு. இந்தக் கிரேக்கக் கடவுள் சிவனுக்கும் அதைப் போலவே இந்திரனுக்கும் சமமான கடவுள். ஆரியர்களுக்கு ஆண் தெய்வ வழிபாடு உண்டு. திராவிடர்களைப் பொறுத்தவரை பெண் தெய்வ வழிபாடு உடையவர்கள். சிவனின் விந்துவிலிருந்து வந்தவன் ஸ்கந்தன். இவனுக்குத் தாய் இல்லை. முருகனைப் பொறுத்தவரை தாய் உண்டு. கொற்றவை இவனுக்குத் தாய். கொற்றவை போர்க்குரிய தெய்வம், இவள் தான் சக்தி. இதன் காரணமாக முருகனும் போர்த் தெய்வம் ஆனான்.
திராவிடப் பண்பாட்டில் மிக முக்கியமான விடயம் காதலும் வீரமும் இப் பண்புகளின் வெளிப்பாடு முருகன்; காதல் கடவுள் முருகன். காதலுக்கு உரியது கவிதை. கவிதைக்கு மொழி தேவை. முருக வழிபாடு தமிழ்க் கவிதைக்கு பெரும் வளம் சேர்த்திருக்கிறது. சங்க இலக்கியத்தில் இடம் பெற்றவன் முருகன். காலத்திற்குக் காலம் முருகனின் செல்வாக்கு அதிகரித்து வந்திருக்கிறது. பக்தி இலக்கியத்தில் முருகனுக்கு கிடைத்துள்ள இடம் பெரியது. முருகன் அரசர்களுக்குத் தெய்வம். இதன் காரணமாக முருகனுக்குரிய கோயில்கள் பல எழுந்தன. சோழர் காலத்தில்தான் இலங்கையில் நல்லூர்க் கோவில் கட்டப்பட்டது. பன்னிரண்டாம் நூற்றாண்டுக்குப் பிறகு அருணகிரியாரைத் தொடர்ந்து முருகன் சாதாரண மக்களுக்குரிய கடவுள் ஆனான்.
அருணகிரிநாதர் தனக்குள் அனுபவித்த காதல் உணர்வை முருகன் இடத்திலும், வள்ளி இடத்திலும் கண்டிருக்கிறார். வள்ளியினிடத்தில் முருகன் கொண்ட காதல் கனிவுமிக்கது; உருக்கமும் நிறைந்தது. தேவயானையின் இடத்திலும்

Page 62
(தமிழ்க் கடவுள் முருகன் :வரலாறும் தத்துவமும்)
இத்தகைய உருக்கம் இல்லை. முருகனை வழிபட்டாள் வள்ளி. வள்ளியை முருகனும் வழிபட்டான். காதலில் ஒரு சமயம் ஆணுக்குப் பெண் அடிமை இன்னொரு சமயம் பெண்ணுக்கு ஆண் அடிமை. இதை அழகாக அருணகிரிநாதர் வெளிப்படுத்தியிருக்கிறார். காதலுக்காக, வள்ளிக்காக வந்த முகம் ஆறுமுகம். முருகனின் ஆறுமுகங்களை வர்ணிக்கிறார் அருணகிரிநாதர். கொடுமைகளை அழித்த முகம் ஒன்று. இப்படிப் பல முகங்கள். வள்ளியை மணம் புணர வந்த முகமும் ஒன்று, இது காதலின் முகம் தமிழுக்காக வந்த முகம்.
தமிழ் இதுவரை பண்டிதர்களுக்காக இருந்தது. அருணகிரிநாதர் தமிழை பாமரர்க்குரிய தமிழாகப் படைத்தார். வள்ளியையும் முருகனையும் நாட்டுப்புற மக்கள் பாடியதைப் போல வேறு எந்த தெய்வத்தையும் பாடவில்லை. வள்ளிக்கும் தேவயானைக்கும் இடையில் மயிர் பிடிச் சண்டைகளை எல்லாம்
பாடல்களாக வடித்துள்ளவர் நாட்டுப்புற மக்கள். தாலாட்டுப்
பாடல்களும் உண்டு; குறவஞ்சி நாடகம் எழுதப்பட்டிருக்கிறது. இப்படிப் பாடல்களாகக், கவிதைகளாக, நாடகங்களாக முருகனுக்குப் படைத்தது போல வேறு எந்த தெய்வத்திற்கும் மக்கள் படைக்கவில்லை. இயல், இசை, நாடகம் என்ற முத்தமிழும் முருகனுக்கு உண்டு.
ஞானி கந்த புராணத்தில் முருகன் முழு முதற் கடவுளாக சித்தரிக்கப்பட்டுள்ளான். இதற்கு முன்பு இத்தகைய சித்தரிப்பு , a_sixTLIT?
ராஜேஸ்வரி : சங்க இலக்கியத்தில் அந்தணர்களின் கடவுள் என்று சிவன் சித்தரிக்கப்படுகிறான். பிரம்மனுக்கு ஒம் என்ற பிரணவத்தை முருகன் கற்பித்தான் என்று புராணங்கள்

119 (இராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம்)
கூறுகின்றன. இங்கு மீண்டும் கிரேக்கப் புராணக் கதைகளுக்குச் செல்ல வேண்டியிருக்கிறது. கிரேக்கப் புராணத்தில் முருகனைப் போன்ற கடவுள் உண்டு. மும்மூர்த்திகள் என்பது ஆரியர்களின் கருத்து. திராவிடர்களுக்கு இடையில் இவ் வகைக் கருத்து இல்லை. சிவனுடைய மகன், விநாயகருக்குத் தம்பி என்றெல்லாம் சொல்லி ஆரியர்கள் முருகனைத் தம் வயப்படுத்திக் கொண்டனர். முருகனுக்குப் பல அம்சங்கள் உண்டு. முருகனைக் குழந்தையாகக், காதலனாகக், கணவனாகப் பார்த்ததைப் போலவே பிரம்மச்சாரியாகவும் பார்த்திருக்கிறார்கள். பழனி ஆண்டவர் முருகனின் ஆண்டி வடிவம். அதைப் போலவே, பாலமுருகன், சுவாமிநாதன் என்பதும் முருகனின் அம்சம். இவையெல்லாம் முருகனின் பரிணாமம், வளர்ச்சி. 'குழந்தை' என்றும் 'பாலன்' என்றும் ‘காதலன்' என்றும் 'அறிஞன் என்றும் முருகனைக் கண்டவர்கள் இறுதியில் அவனுக்குள் ஆண்டியைக் கண்டனர். இறுதியில்தான் இந்த ஆண்டி வடிவம். இதுதான் நிர்வாண நிலை. முதலில் இல்லறம்; இறுதியில் துறவு நிலை; இது தமிழ்க் கருத்து.
திருச்செந்தூரிலும் பழனியிலும் முருக வழிபாடு என்பது கோயிலின் உள் கருவறையில் பிராமணிய வழிபாடாக இருந்தாலும், வெளியில் மக்கள் வழிபாடாகத்தான் இருக்கிறது. உள்ளே பிராமணிய ஆதிக்கத்தில் இருக்கிற கடவுள் வெளியில் மக்கள் மத்தியில் திராவிடக் கடவுளாகத்தான் இருக்கிறான். வெளியில் ஒம் முருகா, கந்தா, வடிவேலா என்ற முறையில் வழிபாடு; உள்ளே சமஸ்கிருத மந்திரங்கள்.
கந்த புராணத்தில் வரும் வள்ளி - தேவயானைக்கும் இதிகாசங்களில் வரும் பெண்களுக்கும் உள்ள உறவு குறித்து நாம் பார்க்க வேண்டும். இதிகாசங்களில் வரும் ஆரியரல்லாத

Page 63
(தமிழ்க் கடவுள் முருகன் வரலாறும் தத்துவமும்)
பெண்கள் பிராமணர்களை மயக்கியதாக எழுதி வைத்துள்ளனர். இராவணனுடைய தாய் பிரம்மாவின் பேரனை மயக்கி மூன்று பிள்ளைகள் பெற்றுக் கொண்டதாகக் கதை எழுதி உள்ளனர். இராவணன், கும்பகர்ணன், சூர்ப்பனகை என்பவர்கள் இந்த மூன்று குழந்தைகள். பிராமணனின் தவத்தை குலைத்த காரணத்தால் இவர்கள் அசுரர்களாக பிறந்தார்களாம்; பிறகுதான் வீடணன் பிறந்தான். சூரபத்மனின் தாய் மாயா. அவளும் ஒரு முனிவனை மயக்கினாள். சூரபத்மனின் தம்பி தங்கைகளும் இப்படிப் பிறந்தவர்கள். ஆனால், முருகனின் கதையில் பிராமணனாகச் சொல்லப்பட்ட வெள்ளை நிறமுடைய முருகன் கரிய நிறத்தோடு கூடிய வள்ளியை மிகச் சிரமப்பட்டு மயக்க வேண்டியிருந்தது. பிராமணர்களுக்கு இப்படி எதிர்வினை தந்த திராவிடக் கருத்து இது. இதிகாசங்களுக்கு இதைப் பதிலடி என்று நாம் பார்க்கலாம்.
மீண்டும் இதைக் கிரேக்கப் புராணத்தோடு ஒப்பிட்டுப் பார்க்கலாம். கிரேக்கப் புராணங்களில் கடவுளர்களுக்குக் குழந்தைகள் எண்ணிக்கை மிகவும் குறைவு. நம் புராணங்களில் கடவுளர்களுக்கு மக்களும் பேரக் குழந்தைகளும் கூடுதலாக இருக்கின்றனர். முருகனுக்கு இரு மனைவியர்; எனினும், குழந்தைகள் இல்லை. கிரேக்கப் புராணத்தில் பாலியல் உறவு என்பது குழந்தைப் பேற்றுக்காக. ஆரியரது புராணங்களிலும் குழந்தைப் பேறு என்பது முக்கியம். ஒரு வகையில் இது வணிக முறை. இங்கெல்லாம் இன்பத்திற்கு முதன்மை இல்லை. இப் போக்கு இன்று பிராமணர்களிடம் உண்டு என்று அறிஞர் எடுத்துக்காட்டுகின்றனர்.
திராவிடரிடையே காதல் மிக முக்கியம். பிராமணியத்தில் பிதிர்க் கடன் செய்வதற்காகக் குழந்தைப் பேறு.

121 (இராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம்)
இலக்கியத்தின் வளர்ச்சியோடு வைத்து முருகனைப் பார்க்க வேண்டும். முருகனைப் பற்றிய கதைகளில் என்னென்ன மாற்றங்கள், எப்பொழுது நேர்ந்தன என்ற முறையில் நாம் ஆராய வேண்டும். கச்சியப்ப முனிவர் கந்த புராணத்தை எந்த அரசியல் சூழலில், எந்த நோக்கத்தோடு எழுதினார் என்று பார்க்க வேண்டும். நமக்குச் சரியான வரலாறு இல்லை. ஆகவே, மொழியின் வரலாற்றை நாம் ஆராய்ந்து பார்க்க வேண்டும். தமிழ் மொழியின் வரலாற்றை ஆராயும்போதுதான் ஆரியக் கலப்பில்லாத முருகனை நாம் காணமுடியும். இப்படி ஆராயும்பொழுதுதான் முருகன் என்பவன் 'தமிழ்க் கடவுள்', இயற்கையின் கடவுள்', 'காதலின் கடவுள்', 'போர்க் கடவுள்', 'திராவிடக் கடவுள்' என்றெல்லாம் நாம் காணமுடியும். முருகன் எப்படி இங்குத் தெய்வமானான்? களவுக்குப் பிறகு கற்பு, திருமண முறை, ஆரியக் கலப்பு என்பனவற்றை எல்லாம் காண முடியும். திராவிடக் கலாச்சாரத்தில் ஆணுக்குப் பெண் சமம் என்ற சமத்துவம் உண்டு. திராவிடக் கடவுளாகிய முருகன் இரு பெண்டிரையும் மணந்து கொண்டான். ஆரியக் கலாச்சாரத்தில் ஒருத்தி மனைவி; இன்னொருத்தி வைப்பாட்டி. திராவிட முருகனுக்கு இரு மனைவியரும் தெய்வங்கள். திராவிட மனப்பாங்கென்பது சமத்துவத்துக்கு இடம் தருவது. இங்குப் பெண்கள் சுதந்திரத்தோடு இருந்திருக்கின்றனர். ஆரியன் வரும்பொழுது அவனுக்கு மொழி இல்லை; சமயம் இல்லை; திருமண முறை இல்லை. ஆனால், அசுரர்களுக்கு மிகப் பெரிய நாகரிகம், மாடி வீடுகள், கோபுரங்கள், அணிகலன் அணிந்த, இசையும் கூத்தும் தெரிந்த பெண்கள் இருந்திருக்கின்றனர்.
ஆரியர்களுக்கு முற்பட்ட இந்தத் தொன்மையை நாம் இன்னும் கூடுதலாக ஆராயவேண்டும். இந்த ஆய்வை அரசியல்வாதிகளிடம் விட்டு விடக்கூடாது. முருக பக்தர்களோடு இணைந்து நாம்தான் இந்த ஆய்வைச் செய்யவேண்டும்.

Page 64
(தமிழ்க் கடவுள் முருகன் :வரலாறும் தத்துவமும்)
ஆரியர் வருவதற்கு முன் திராவிடப் பண்பாடு எல்லாம் சிறந்திருந்தது என்பதை அறிவதற்கு முருகனைப் பற்றிய இந்த ஒரே ஒரு ஆய்வு நமக்குப் பயன்படும் என்பது என் தனிப்பட்ட கருத்து.
ஞானி : முருகனைப் பற்றிய இந்த ஆய்வுக்குப் பிறகுதான் நீங்கள் ஆரியன், திராவிடன் என்றெல்லாம் பேசத் தொடங்கினிர்களா?
ராஜேஸ்வரி : திராவிட இயக்கங்களைப் பொறுத்தவரை எனக்கு ஒரு பயம் இருந்தது; ஒரு வெறித்தனமான போக்கை அது ஊக்குவித்துவிடுமோ என்று நான் அஞ்சினேன். ஆனால், முருகனைப் பற்றிய ஆய்வுக்குப் பிறகுதான் பெரியார் ஏன் திராவிடக் கட்சியைத் தொடங்கினார் என்பது எனக்குப் புரிந்தது. காரணம், திராவிடக் கலாச்சாரம் மிக, மிக, மிக, மிகத் தொன்மையானது என்பதைப் புரிந்து கொண்டேன். திராவிட இயக்கத்தவர் கடவுளை நம்பாதவர்கள். ஆனால், முருக வழிபாடு அரசியலுக்கு அப்பாற்பட்டது. இது மனிதத்தோடு தொடர்புடையது; கலாச்சாரத்தோடு தொடர்புடையது; ஆன்மீகத்தோடு இரண்டறக் கலந்தது; இயற்கையைத் தமிழன் எப்படிப் பார்த்தான், வணங்கினான் என்பதோடு தொடர்புடையது. முருகனைப் பற்றிய ஆய்வின் மூலம் தமிழனின் தொன்மையைக் காண்கிறோம். உலகத்திற்கு வழிகாட்டியாய் தமிழன் திகழ்ந்திருக்கிறான். வானவியலில் தமிழன் மகத்தான அறிவோடு இருந்திருக்கிறான்.
மேலும் ஒன்று. தந்திரம், மந்திரம் என்பதெல்லாம் தமிழர்களின் கலை. இவற்றை எல்லாம் ஆரியர் எவ்வாறு கைப்பற்றினர் என்று நாம் ஆராய வேண்டும். ஆகவே, முருகனைப் பற்றிய ஆய்வைப் பக்தியாக எடுத்துக்

123 (இராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம்)
கொள்ளாமல், திராவிட வரலாறாகக் காண வேண்டும்.
திராவிட இயக்கம் கடவுளர்களை எல்லாம் வெளியே தள்ளிவிட்டதால் பிராமணிய ஆதிக்கத்திற்கு அது இடம் கொடுத்தது. பிராமணிய ஆதிக்கம் இல்லாத முருக வழிபாட்டின் வலிமை திராவிட இயக்கத்திற்குத் தெரியவில்லை. திருச்செந்தூருக்கும் பழனிக்கும் செல்லும்போதுதான் இந்த வலிமை நமக்குத் தெரிகிறது. இலட்சக்கணக்கான மக்கள் கூடுகிறார்கள். காவடிகளோடும், ஹர, ஹரவோடும் மக்கள் ஆடுகிறார்கள், பாடுகிறார்கள். இவர்களுக்குள் ஆதித் தமிழர்களின் வரலாற்றை நாம் காணமுடியும். திராவிடக் கடவுளாகிய முருகனைக் கடவுள் என்று மட்டுமே திராவிட இயக்கம் பார்த்ததன் காரணமாகப் பிராமணியத்திற்கு அது வழி விட்டது. திராவிட இயக்கம் தமிழர்களுக்குச் சாதி இல்லை, மதம் இல்லை என்று பேசியது; முருகனும் சாதி பார்க்கவில்லை. அசுரர்களுக்கு இடையில் சமத்துவம் இருந்தது. அசுரர்களுக்குச் சாதி இல்லை என்று ஆரியன் குறை கண்டான். ஆரியன் வர்ணம் என்ற வடிவில் மக்களைப் பிரித்தான். திராவிடனுக்குச் சாதி இல்லை. ஆரியன்தான் சாதியைப் படைத்தவன். கறுப்பு நிறத்தவனை தாழ்ந்தவன் ஆக்கியவன் ஆரியன். திராவிடர்களுக்குக் காதல் திருமணம் இருந்தது. ஆரியத்தில் பத்து வகைத் திருமணங்கள் இருந்தன.
கிரேக்கம் தமிழ் நாகரிகத்தைப் பாதித்தது என்று சொல்வதைக் காட்டிலும் தமிழ் நாகரிகம் கிரேக்கத்தைப் பாதித்ததைப் பற்றி நாம் ஆராயலாம். அசோகனது கல்வெட்டுகளில் சேர, சோழ, பாண்டியர் குறிப்பிடப்பட்டனர். அந்தக் காலத் தமிழன் கிழக்கில்

Page 65
(தமிழ்க் கடவுள் முருகன் வரலாறும் தத்துவமும்)
சீனாவோடும் மேற்கில் கிரேக்கத்தோடும் வணிகத் தொடர்பு கொண்டிருந்தான். நம்முடைய முருகக் கடவுளை டயோனிசியஸ் என்ற கடவுளாக ஆக்கி இருக்கலாம். கிரேக்கப் புராணத்தின் காலம் தெளிவாக ஆராயப்பட்டிருக்கிறது. நமக்கு இத்தகைய ஆய்வு இல்லை; இதுதான் நம்முடைய பிரச்சினை. கிரேக்கத்திற்கு முந்தையது எகிப்திய நாகரிகம். எகிப்திய நாகரிகத்தின் மீது செல்வாக்கு செலுத்தியது ஆசிய மைனரில் இருந்த நாகரிகம்; அந்த நாகரிகம் மொகஞ்சதாரோ, ஹரப்போவோடு தொடர்பு கொண்டிருந்தது. மொகஞ்சதாரோவின் தொடர்பைக் குஜராத்தில் காணலாம். குஜராத் மக்களோடு பாண்டியர் உறவு கொண்டிருந்தனர். இப்படி ஒரு நாகரிகத்தில் ஒரு வகையான சங்கிலித் தொடர்பை நாம் காணலாம். தமிழ்க் கலாச்சாரத்தின் சின்னங்களை மத்திய ஆசியாவிலும் காண முடியும். இப்படித் திராவிடக் கலாச்சாரத்தின் தொடர்ச்சியோடு தொன்மையையும் நாம் காண முடியும். ஜப்பானிய மொழி எங்கிருந்து தோன்றியது என்ற ஆய்விலும் இறுதியாக அவர்கள் கண்டு சொல்லும் உண்மை என்னவென்றால், ஜப்பானிய மொழிக்கு மூலம் தமிழ் என்பதுதான். ஆரியர் வருவதற்கு முன்பே நம்மிடம் தந்திரங்கள் இருந்தன, மந்திரங்கள் இருந்தன. இவற்றை ஆரியர் தமதாக்கிக் கொண்டனர். புராணங்கள், தியானம், யோகம் முதலியனவும் திராவிடருடையவை. திராவிட மக்கள் மத்தியில் இருந்த சமத்துவத்தைத் கெடுத்தவன் ஆரியன். ஆண்கள், பெண்களுக்கு இடையில் சமத்துவத்தைக் குலைத்தவன் ஆரியன். திராவிட நாகரிகத்தை அழித்தவன் ஆரியன்.
ஞானி : இப்பொழுது நீங்கள் அசலான தமிழ்ப் பெண்ணாகத், திராவிடப் பெண்ணாக மாறி இருக்கிறீர்கள். நன்றி

125 (இராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம்)
படைப்பாளர் வாழ்வியல் விவரங்கள்
இராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம் (ராஜேஸ் பாலா) எம்.ஏ, (மருத்துவ மாந்தரியல்), பி.ஏ. (ஆனர்ஸ்) (திரைப்படம் & வீடியோ) ஆர்ஜிஎன், ஆர்.எஸ்.சி.என். & நலக் கல்விச் சான்றிதழ்
இராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம் (ராஜேஸ் பாலா) எழுத்தாளர், இதழியலாளர், மனித உரிமைப் போராளி, தனி நிலைத் திரைப்படப் படைப்பாளி, சமூக நல ஊழியர், மூன்று ஆண் மக்களின் தாயார். இவர் கிழக்கு சிறீலங்கா (மட்டக்களப்பு மாவட்டம்) -விலுள்ள கொலவில் எனும் சிற்றுாரில் குழந்தைவேலு, மாரிமுத்து தம்பதியருக்கு மகளாகப் பிறந்தார். தம் கணவருடன் 1970-இல் இங்கிலாந்து வந்து சேர்ந்த இவர் தற்போது வடக்கு இலண்டனில் வசித்து வருகிறார்.
கல்வி :
1996-இல் இலண்டன் பல்கலைக் கழகத்தைச் சார்ந்த கீழ்த்திசை மற்றும் ஆப்பிரிக்க ஆய்வு நிறுவனத்தில் எம்.ஏ., மருத்துவ மாந்தரியல் பட்டம் பெற்ற இவர் 1988 கால கட்டத்திலேயே திரைப்படம் மற்றும் வீடியோ படிப்பில் பி.ஏ., (ஆனர்ஸ்) பட்டம் பெற்றுள்ளார். இவர் நோயுற்ற சிறார்களுக்கான ஆர்மண்ட் தெரு மருத்துவமனையில் 1993 கால கட்டத்தில் ஆர்.எஸ்.சி.என். பட்டமும் 1994 -இல் வெஸ்ட் மினிஸ்டர் கல்லூரியில் நலக் கல்விச் சான்றிதழும் பெற்றுள்ளார். மேலும், இவர் சிறீலங்காவில் 1964, 1967 கால கட்டங்களில் பல்துறைத் தகுதிகளோடு செவிலியராகத் தேர்ச்சி பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

Page 66
(தமிழ்க் கடவுள் முருகன் :வரலாறும் தத்துவமும்)
சமுதாயப்பணி :
சமூக நலத்தில் பல வகைப்பட்ட திட்டப் பணிகளில் இவர் ஆற்றியுள்ள பங்கு பணி போற்றற்குரியது. தமிழ் அகதியர் குடியமர்வுச் சங்கத்தின் நிறுவன உறுப்பினர்களுள் ஒருவரான இவர் 1985-87 கால கட்டத்தில் இவ் அமைப்பின் தலைமைப் பதவியிலும் அமர்ந்து அணி செய்துள்ளார். இது போன்று, 1983 - 87 கால கட்டத்தில் இவர் தமிழ் அகதியர் செயலாற்றுக் குழுவின் நிறுவன உறுப்பினர் மற்றும் தலைவராகவும் 1982 - இலிருந்து தொடர்ந்து தமிழ் மகளிர் கூட்டமைப்பின் நிறுவன உறுப்பினர் மற்றும் தலைவராகவும் தொண்டாற்றி வருகிறார்.
தொழில் :
நல மேம்பாட்டு ஆலோசகர்.
எழுத்துப் பணி :
இதுவரை ஏழு நாவல்கள் மற்றும் மூன்று சிறுகதைத் தொகுப்புகளைப் படைத்துள்ளார். இந்தியா, சிறிலங்கா, கனடா, பிரான்சு, ஆஸ்திரேலியா, ஜெர்மனி, நார்வே, நெதர்லாந்து மற்றும் இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகளிலிருந்து வெளிவரும் பல்வேறுபட்ட இலக்கியப் பருவ இதழ்களில் இவரது படைப்புகள் வெளியிடப்பட்டுள்ளன.
தமிழில் வெளிவந்துள்ள நாவல்களும் சிறுகதைத் தொகுப்புகளும் :-
ஒரு கோடை விடுமுறை (1982), அலை பிரசுரம், சிறீலங்கா. தில்லையாற்றங் கரையினில் (1987). பாரி புத்தக நிலையம் சென்னை.

127
(இராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம்)
தேம்ஸ் நதிக்கரையில்
உலகமெல்லாம் வியாபாரிகள் (1991).
பனி பெய்யும் இரவுகள் (1994). அம்மா என்றொரு பெண் (1996).
நாளைக்கு இன்னொருத்தன் (1996).
ஏக்கம் (1998).
வசந்தம் வந்து போய் விட்டது (1998).
அரை குறை அடிமைகள் (1998)
பரிசுகளும் விருதுகளும் :
- முதலில் தொடர் கதையாக இலண்டன் முரசில் வெளியாகி, 1993 மற்றும் 1998 -களில் இந்தியாவில் மணிமேகலைப் பிரசும், சென்னை வாயிலாக நாவல் வடிவில் வெளியிடப்பட்டது
இந்தியா.
பாரி புத்தக நிலையம் சென்னை. - மூன்று குறுநாவல்கள் மற்றும் மூன்று சிறுகதைகளின் தொகுப்பாக வெளியிடப்பட்டது.
- பாரி புத்தக நிலையம். சென்னை.
- சிறுகதைத் தொகுப்பு - பாரி புத்தக நிலையம் சென்னை.
- சிறுகதைத் தொகுப்பு - மணிமேகலைப் பிரசுரம். சென்னை.
பாரி புத்தக நிலையம் சென்னை.
மணிமேகலைப் பிரசுரம் சென்னை.
சிறீலங்கா சுதந்திர எழுத்தாளர் பரிசு - தேம்ஸ்
நதிக்கரையில்
(நாவல்) - 1993,

Page 67
(தமிழ்க் கடவுள் முருகன் :வரலாறும் தத்துவமும்)
சுபமங்களா பரிசு - யாத்திரை (சிறுகதை) - 1994. 3. கலைவாணி விருது - அக்கரைப்பட்டு (மட்டக்களப்பு மாவட்டம்) இந்து, முஸ்லீம் எழுத்தாளர்களால் வழங்கப்பட்டது - 1995 4. லில்லி தேவசிகாமணி இலக்கியப் பரிசு - இன்னும் சில
அரங்கேற்றம் (சிறுகதை) - 1998. 5. லில்லி தேவசிகாமணி இலக்கியப் பரிசு - அரை குறை
அடிமைகள் (சிறுகதைத் தொகுப்பு) - 1999,
திரைப்படம் & வீடியோ தயாரிப்பு : Escape from Genocide - - (éparis.T 5L6) அகதியரை
வீடியோ அடிப்படையாகக் கொண்டது) -
ஜி.எல்.சி. நல்கை உதவியுடன். 1986
Private Place - (திருமண வாழ்வில் பாலியல் 16 எம்.எம். திரைப்படம் வன்முறை தொடர்பானது) -
எல்.சி.பி. 1988.
மாநாடுகள் & கருத்தரங்குகள் :
1. பன்னாட்டு மாநாடுகளில் பங்கேற்றுச் சிறீலங்காவில் மனித உரிமைகள், மகளிரும் நலவாழ்வும், மகளிரும் எழுத்துப் பணியும் உள்ளிட்ட பல்வேறு சிக்கல்கள் குறித்துப் பல ஆய்வுக் கட்டுரைகள் அளித்துள்ளார். 2. இலண்டனிலுள்ள தமிழ்ச் சமூகத்தினர்க்கான பல்வேறு நலவாழ்வுக் கருத்தரங்குகளை உருவாக்கிப் பங்கேற்றுள்ளார். 3. பல தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்றுப் புலம் பெயர்வு இலண்டனிலுள்ள தமிழ் அகதியர், குழந்தைகளுடன் கலவி செய்வோர், மூன்றாம் உலக நாடுகள் உள்ளிட்ட பல்வேறு சிக்கல்கள் குறித்துக் கருத்துரைகள் நல்கியுள்ளார்.


Page 68


Page 69
தமிழ்க் கடவுளாகிய முருகை தேவைக்கான ஆய்வில் ஈடுப பாலசுப்ரமணியம் அவர்கள். மானுட6 இவர், முருகனின் தொன்மையான உண்மைகளைக் கண்டறிந்ததோடு, திராவிட இனத்தின் வாழ்வியல் ( கண்டறிந்து தமக்குள் பெரும் வி வெளிப்படுத்துவதே இந்தச் சிறுநூல்
தமிழ் நாவல் மற்றும் சிறு கே பதித்தவர் திருமதி. இராஜேஸ்வரி முன்பு இலண்டனில் குடியேறி வாழ வாழ்வியல் சிக் கல் களில் தெ கொண்டிருக்கிறார். அழுத்தமா படைக்கிறார். தமிழ்க் கடவுள் மு பாராட்டி அணிந்துரை வழங்கி அருங்காட்சியகத்தில் காப்பாச்சி மகேஸ்வரன் அவர்கள். தமிழர் வரல காணிக்கையாகத் திகழும் என்பதில் ஐ
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

னக் குறித்து ஒரு கருத்தரங்கின் ட்டார் திருமதி இராஜேஸ்வரி 1 வியல் கல்வியில் உயர் தகுதி பெற்ற வரலாறு குறித்து சில புதிய ஆரியத்திற்கு எதிரான தமிழ் / மேன்மையையும், மெய்யியலையும் ரியப் புற்றார். இவரது ஆய்வை
தைத்துறையில் ஆழமான முத்திரை அவர்கள். இருபதாண்டுகளுக்கு ழ்ந்து வரும் இவர், தமிழ்மக்களின் 5ாடர்ந்து ஆழ்ந்த அக் கறை ன பெண்ணியப் பார்வையோடு ருகன் குறித்த இவரது ஆய்வைப் இருக்கிறார், கோவையில் உள்ள யராகப் பணிபுரியம் முனைவர் ாற்றுக்கு இந்த நூல் மேலும் ஒரு
யமில்லை.
- ஞானி