கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: தேம்ஸ் நதிக்கரையில்

Page 1
-
s 吸
N ANTINA'||
A.
O ー8 Q Q
 

WO

Page 2


Page 3

தேம்ஸ் நதிக்க்ரையில்
(நாவல்)
ராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம்
விற்பனை உரிமை :
பாரி நிலையம் 184, பிராட்வே : சென்னை-108

Page 4
முதற்பதிப்பு: ஆகஸ்டு 1992
விலை ரூ. 25-00
PUBLISHERS: KUMARAN PUBLISHERS 13|2 Gajapathi Street, Madras-5
India
அச்சிட்டோர் : NA
ழி துர்க்கை பிரிண்டிங் பிரஸ், 21, மதுரைவிரன் கோயில் தெரு, தி. நகர், சென்னை-600 017.

முன்னுரை
இலங்கையிலிருந்து லண்டன் மாநகருக்கு தமிழர்கள் தொடர்ந்து வந்து கொண்டிருக்கிறார்கள். இந்நாவல் 1972-74 காலகட்டத்தில் தாமே உழைத்துக் கல்விகற்கும் நோக்குடன் வந்து வாழ்ந்த தமிழ் இளைஞர்களின் மன ஓட்டங்கள், வாழ்க்கையைப் பார்க்கும்விதம் என்பவற்றை அடிப்படையாக வைத்து எழுதப்பட்டது அக்கால கட்டத்தில் வந்த பெரும்பாலான வாலிபர்களின் "காதல் கள்" வெளிநாட்டுப் பெண்களின் உறவில் தங்கியிருந்தது. பெரும்பாலான இ  ைள ஞர் கள் கல்வி முடிந்ததும் இலங்கைக்குத் திரும்பி, திருமணச் சந்தையில் தம்மை விற்றுக் கொண்டார்கள்.
1983ன் பின்னர் அகதிகளாக வந்த தமிழ் இளைஞர் கள் 1970 களில் வந்தவர்களுக்கு முற்றும் வேறுபட்டவர் கள் இவர்கள் தமக்குள்ளேயே குழுக்களாக வாழ்கின்ற னர். இவர்களது அரசியல், காதல், கலை என்பன முற்றும் மாறுபட்டவை.
ஏறக்குறைய 20 வருடங்களின் முன்னர் யாழ்ப்பாணக் கிராமங்களிலிருந்து வந்த தமிழ் இளைஞர்கள் லண்டனில் எப்படி வாழ்ந்தார்கள் என்பதை இந்நாவல் மூலம் சுட்டிக்காட்ட முனைந்துள்ளேன்.
லண்டன் ராஜேஸ்வரி
2-6-92

Page 5
அறிமுகம்
நாவலின் பல்வேறு தன்மைகள், அமைப்புகள், டிணிகள் பற்றி விளக்கித் தமிழில் வரைவிலக்கணம் ஒன்று வகுத்துத் தந்த பெருமை மறைந்த பேராசிரியர் கலாநிதி கைலாசபதி அவர்களையே சாரும். நாவல்களை கற்பன்ா " வாதம், இயற்பண்புவாதம், யதார்த்தவாதம் என வகைப் படுத்தி வளர்ச்சிப் போக்கில் மதிப்பீடு செய்யும் முறை களையும் முன் வைத்தவர்அவரே. : - . ." ...
சமூக நாவல் எனக் கூறப்படுபவற்றை "சமகால வரலாற்று நாவல்’ எனக் கணிப்பிடவேண்டும் எனவும் கைலாசபதியே முதன் முதலில் அறிமுகப்படுத்தினார். .
"சமகால வரலாற்று நாவல்' என அணுகும்போது மூன்று முக்கிய அம்சங்களை முன்வைத்து விமர்சிக்கப்பட வேண்டும்: பொருளாதாரம், அரசியல், கருத்தியல்.
ராஜேஸ்வரியின் "தேம்ஸ் நதிக்கரையில்" என்ற இந்நாவலை மதிப்பிடும்போதும் இம்மூன்று அம்சங்களை யும் முன்வைத்து எளிதில் கணித்துப் பார்க்கலாம்.
1970களில் இலங்கையில் கல்விவாய்ப்பு, வேலை வாய்ப்பு குன்றிய வேளை யாழ். சார்ந்த வாலிபர்கள் கடன் சுமையுடன் லண்டன் சென்று பாதி வேளை உழைத்து உயர்கல்வி பெற முனைகின்றனர். அங்கு குறைந்த கூலியில் நிரந்தரமற்ற கடும் உழைப்பில் ஈடுபட நேரிடுகிறது. வாடகை வீட்டுப் பிரச்சனைகள், இடமாற் றங்கள், சமையல், உடை மட்டுமல்ல, காதலியை ஒரு வேளை சாதாரண ஒட்டலுக்கு அழைத்துச் செல்லவும் கையில் காசில்லாத நிலை யாவும் இந்நாவலில் விரிவாகக் கூறப்பட்டுள்ளன.

நாவலின் தலைமைப் பாத்திரமாண் செந்தில்வேல் அரசியலில் ஆர்வமற்ற, ஈடிாட்டமான பாத்திரடிாகப் படைக்கப்பட்ட போதும் மைரா, டானியல், யோக லிங்கம் ஆகியோர் அரசியலில் ஆர்வமுள்ளவராக, Ekip மான அரசியலைப் பிரதிபலிப்பவராக உருவாக்கப் பட்டுள்ளனர். அயர்லாந்தின் தேசிய இனப்பிரச்சனை இலங்கைத் தமிழரின் பிரச்சனையோடு மிக நுட்பமாக, மறைமுகமாக ஒப்பிடப்பட்டுள்ளது. சு வீ டி ஸ் பெண்ணான மைரா தன் முதல் காதலனான டானியலு டன் அயர்லாந்து தேசம் சென்றபோது அரசியல் காரண மாகச் சுடப்படுகிறான். காதலனை இழந்த துன்பத்தி லிருந்து ஆறுதல் அடைவதற்கு செந்திலின் நண்பனான யோகலிங்கத்தின் துணையை மைரா நாடுகிறாள்.
இலங்கை சென்று வந்து ஒன்றாக வாழ்வோம் என்று உறுதிகூறிச் சென்ற யோகலிங்கம் அரசியல் காரணத்தால் கொழும்பில் கைது செய்யப்படுகிறான்.
தமிழ்நாட்டு நாவல்களில் சமகால அரசியல் தவிர்க்கப் படுவதைக் காணலாம். இப்போக்கு நாவலின் தரா தரத்தைக் குறைக் க வே செய்கிறது தமிழில் ஆக்கப் படும் கலை, இலக்கியங்கள் யாவற்றிலுமே இக்குறை பாட்டைக் காணலாம். ஒரு கால கட்டத்தில் திராவிட கழகத்தின் அரசியல் தாக்கம் கலை, இலக்கியங்களைத் தழுவிச் சென்றது. இன்று அதுவும் மறைந்துவிட்டது. திரைப்படத்தில் கூட தெலுங்கு, மலையாளப் படங்கள் ஊடாகவே அரசியற் கருத்துகள், மொழி மாற்றம் செய்யப்பட்டு, தமிழில் வெளிவருகின்றன. கலை, இலக்கியங்களில் அரசியல் புகுத்துவது தவறானது என்ற பிற்போக்கான கருத்து தமிழ் நாட்டில் ஆதிக்கம் செலுத்துவது, முற்போக்கான விமர்சனம் இல்லாமை யையே எடுத்துக்காட்டுகிறது. இந்நிலை- பரிதாபத்துக் குரியதே.

Page 6
கருத்தியலில் யாழ். கிராமத்து நிலப்பிரபுத்துவ எண்ணங்கள், கருத்துகள், கலாச்சாரங்கள் லண்டன் மாநகர முதலாளித்துவ கலாச்சாரத்துடன் மோதுவதை இந்நாவல் பூராவும் சிறப்பாகச் சித்தரிக்கிறது.
பேக்கரியில் மாமூட்டை துர க் கி உழைத்து எஞ்சினியரிங் கற்கும் கதாநாயகன் செந்தில்வேலுக்கு ஜமேக்காவிலிருந்து நர்ஸிங் கற்க லண்டன் வந்த இந்திய இரத்த ஓட்டமுள்ள லோறாவுடன் தொடர்பு ஏற்படு கிறது. அப்பெண்ணைக் காதலித்து, நெருங்கிப் பழகும் போதும் அவனது சிந்தனையாவும் யாழ். கிராமத்திலுள்ள பெற்றோர் எவ்வாறு தன் செயல்களைக் கணிப்பர், கண்டிப்பர் என்பதிலேயே நிலைத்திருப்பதை நாவல் சித்தரிக்கிறது. செ ந் தி லி ன் ஆணாதிக்க சுபாவம், கோழைத்தனம், ஈடாட்டமான மனப்போக்கு அனைத் தும் நடுத்தர வர்க்கத்தின் பிரதிபலிப்பாக உள்ளதைக் காணலாம்
இந்நாவலின் தனிச்சிறப்பாகக் காணக் கூடிய மற்றோர் அம்சம் வ ச ன ந  ைடயி ன் தனித்துவம். நாவலாசிரியை ராஜேஸ்வரி நீண்ட காலமாக லண்டனில் வாழ்ந்தவராதலால் அவரை அறியாமலே ஆங்கில மொழி யின் வசன அமைப்பு நாவல் பூராவும் ஊடுருவி நிற்பதைக் காணலாம். பழமையான தமிழ் வசன அமைப்பு எழுவா யுடன் ஆரம்பித்து பயனிலையுடன் முடிவுறும். ஆங்கிலத் தில் எழுவாய் பயனிலையின் பின்னரும் முற்றுத்தொட ராக (CLAUSE), துணைவாசகமாக நீட்டிக்கொண்டு போகலாம்.
"அவன் குரலில் தெரிந்தது, எவ்வளவு தூரம் நடுங்கு கிறான் என்று" (ப. 95)
"மேசை நிறையக் கிடந்த புத்தகங்களிலிருந்து தெரிந் தது, யோகன் எப்படிப்பட்ட ஆள் என்று." (ப. 105)

"எரிச்சலுடன் க த் தி ன எ ல், யசோதரனைப் பார்த்து". (ப. 46)
நாவல் பூராவிலுமே இத்தகைய வசன அமைப்பு ஊடுருவியுள்ளது. இத்தகைய போக்கு தமிழ் நடைக்குப் புதியதல்ல. இலக்கண வழுவுள்ளதல்ல. தமிழ்க்கவிதை அமைப்பில் இப்போக்கைத் தாராளமாகக் காணலாம். முற்றுத்தொடர், துணை வாசக அமைப்பு வார்த்தைகள் அழுத்தம் தரும் பொருளுக்காக மட்டுமல்ல மோனை, எதுகை, பிற கவிதை இலக்கண வரம்புகளை சீர் செய்ய வும் அமைக்கப்பட்டிருப்பதை அவதானிக்கலாம்.
"கண்டனன் சீதையைக் கண்களால்" (சம்பன்) எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை செய்நன்றி கொன்ற மகற்கு. தீயினாற் சுட்டபுண் உள்ளாறும் ஆறாதே V நாவினாற் சுட்ட வடு " (குறள்), ஈசன் வந்து சிலுவையில் மாண்டான் . . . எழுந்து உயிர்த்தனன் நாள் ஒருமூன்றில். முத்துக் குளிப்பதொரு தென்கடலிலே, மொய்த்து வணிகர் பல நாட்டினர் வந்தே. (பாரதி) அறிஞர் அண்ணர்வும் இதே நட்ையையே தன் எழுத் திலும் பேச்சிலும் பயன்படுத்தி தமிழ் நாட்டில் இவ்விரு துறைகளிலும் தனிச்சிறப்புப் பெற்றார்.
"எழுஞாயிறு எனக் கிளம்பி மக்களாட்சி, ஆந்தைகள் அலறிஓட, வெளவால்கள் பறந்து ஒதுங்க.
" "இவன் புன்னகை காட்டினான், பொருள் பறிக்க, பயம் ஏற்படுகிறது, பொதுமக்களுக்கு.
"தான் களிப்படைந்தது, கழகத்திடம் தம்மை ஒப்புவித்துள்ள உத்தமர்களிடம் நிலவும் இந்த உணர்ச்சிப் பெருக்குத்தான்." . JýešřssorsuvTr

Page 7
இங்கு வேடிக்கை என்ன் வெனில் அறிஞர் அண்ணா போன்ற அரசியல், கலை. இலக்கிய ஆதிக்கம் மிக்க அறிஞர் இப்புதிய போக்கை வசன் நடையில் புகுத்தி வ்ெற்றி பெற்ற போதும் நடைமுறையில் இன்றும் பரவலாக் நிலைபெறவில்லை.
இந்நாவல் வசனநடையில் இவ்வாறு வேறு பட்டுள்ளதும் படிப்பவர்க்குப் புதுமையாகத் தோன்றும். அடுத்ததாக யாழ்ப்பாணக் கிராமிய பேச்சுத் தமிழையும் தாராளமாகப் பயன்படுத்தியுள்ளார். ஆயினும் தமிழ் நாட்டு வாசகர்களை கதையின் ஓட்டமும் கதையின் புதுமையும் ஈர்த்துச் செல்லும் என்பதில் ஐயமில்லை.
இலங்கையின் கிழக்குப் பகுதியில் பிறந்து, யாழ்ப் பாணத்தில் கல்விகற்று, லண்டனைத் தற்போது வாழ்விட மாகக் கொண்ட ராஜேஸ்வரி பல நாவல்களை எழுதி இலங்கையிலும் தமிழ் நாட்டிலும் இங்கிலாந்திலும் பிற தமிழர் வாழும் ஐரோப்பிய, கனடிய நாடுகளிலும் நன்கு அறிமுகமானவர். a
தமிழ் நாட்டவரின் அரசியல் தலைநகரான டில்லி வாழ்க்கையை எழுதியே இந்திரா பார்த்தசாரதி ஆரம்பத் தில் தமிழர்களது கவனத்தை ஈர்த்தார். உலகின் மிகப் பெரும் நகராகவும் எம் நாடுகளை ஆட்சி புரிந்த ஏகாதிபத்தியத் தலைநகராகவும் விளங்கிய லண்டன் மாநகர வாழ்க்கையை இந்நாவல் அறிமுகப்படுத்துகிறது. லண்டன்சார்ந்த தாவல் எதுவும் முன்னர் வெளிவந்ததாக நான் அறியவும் இல்லை, படித்ததும் இல்லை. ராஜேஸ்வரி இதுபோன்று மேலும் பல நாவல்கள் எழுதுவார் என எதிர்பார்க்கிறேன். y - - . . . . . . .
செ. கணேசலிங்கன் “ ( 0 > : مہ ، ~ சென்னை
,90 سے 57

தேம்ஸ் நதிக்கரையில்
அவனுக்குத் தெரியும் அவள் தன் முகத்தில் சிரிப்பை வரவழைக்க முயல்கிறாள் என்று. அவன் இன்னும் எதை யும் வினாவி அவளை தர்மசங்கடத்தில் ஆழ்த்த விரும்ப வில்லை. அவள் தன் தலையைத் தாழ்த்திப் பாலத்துக்குக் கீழ் தவழும் படகுகளில் பார்வையைப் பதித்திருந்தாள்.
அவன் அவளிடமிருந்து தன் பார்வையை வேறு பக்கம் திருப்பினான். தூரத்தில் ‘பற்றR பவர் ஸ்ரேசனின்' வானளாவிய புகைபோக்கிகள் ஆகாய மெங்கும் கரும்புகையைக் கக்கிக் கொண்டிருந்தன.
லண்டனிலும், வசந்தகாலத்தை நாம் மட்டும் அனு பவிக்காமல் விடுவோமா என்று சொல்லுவதுபோல் கூட்டம் கூட்டமாகப் பறவைகள் பாலத்துக்குமேலால் பறந்து கொண்டிருந்தன.
பாலத்துக்குக் கீழே படகுகளும் இரு கப்பல்களும் போய்க்கொண்டிருந்தன.
அவனையும் அவளையும் சுற்றி மறையப்போகும் மாலை நேரத்தின் அவசரம் தெரிந்தது. அவள் வீட்டுக்கு எத்தனை மணிக்குப் போவாள்? அல்லது இவ்விடம் யாரையும் எதிர்பார்த்து நிற்கிறாளா?

Page 8
6 A ராஜேஸ்வரி
அவன் மனதில் திரும்பவும், அவள் சொற்ப நிமிடங் களுக்கு முன் சுற்றும் முற்றும் பரபரவெனப் பார்த்தபடி பாலத்தில் கையையூன்றிக் காலையுயர்த்தியபடி நின்ற
தோற்றம் ஞாபகம் வந்தது.
அவன் லண்டனுக்கு வந்து ஆறுமாதந்தான்; ஆனால் இவளைப் போல் ஒருசி" பெண் இந்த நேரத்தில் தனியாக இப்படி நின்றது, தற்கொலை செய்யப் போகி றாளோ என்ற ந்தேகத்தைத் தரும்படியும் அவள் நடந்து கொள்ளவில்லை. மையில் அப்படித்தானா? அல்லது அவன் நினைத்தது தவறா? அவன் கேட்டிருக்கக் கூடாதா அந்தக் கேள்வியை? முன் பின் யோசிக்காமல் தான் EL கேள்வியைப் பற்றி அவள் என்ன நினைத்
திருப்பாள்?
அவனுக்கு அக்கறையில்லை, அவள் என்ன நினைத் தாலும் .அவர்கள் இருவரும் ஒருத்தருக்கு ஒருத்தர் முன் பின் தெரியாதவர். இனிமேல் சந்தித்துக் கொள்வார்கள் என்றும் இல்லை. அப்படி இருக்க நான் ஏன் அவள் என்ன நினைப்பாள் என்று துக்கப்பட வேண்டும்?
அவன் அவளைப் பார்த்தான். பாலத்தின் கீழே யிருந்த t_srfrø0)G).16ðL) அவள் கலைத்துவிட்டு அவனைப் பார்த்தாள். முகத்தில் இயற்கையாகச் ஒரிப்பு ஒட்டிக் கிடந்தது.
என்னைப் பார்த்து இளிக்க வேண்டும் என்று நான் எதிர்பார்க்கிறேனா?
ஆனாலும் அவளை நீண்டும் ஏதும் கேள்வி கேட்டுத்
கூடாது என்ற தவிப்புடன் மன்னிக்கவும்,
தொலைக்கக்
தி விட்டேன்"
உங்களைத் தர் மசங்கடத்தில் ஆழ்த் என்றான்.

தேம்ஸ் நதிக்கரையில் A 7
"நீங்கள் ஒன்றும் தர்மசங்கடத்தில் ஆழ்த்தவில்லை அதற்காக மன்னிப்பும் கேட்கத் தேவையும் இல்லை" அவள் சொன்னாள்.
அவளுடைய புன்முறுவல் அழகாயிருந்தது. கண் மூடித் திறக்கும் நேரத்தில் புன்னகை சட்டென்று அவள் உதட்டில் நெளிந்துவிட்டு ஓடிவிட்டது.
சிறிது நேரத்துக்குமுன் அவளின் கையைப் பிடித்து "ஹலோ" என்று கூப்பிட்டபோது அவள் முகத்தில் தெரிந்த முகபாவமும் இப்போது அவள் முகத்தில் தெரிந்த நிதானமும், இனிய புன்னகையும் எத்தனை வித்தியாச LD 76760b6J?
அவள் முகம் மட்டுமல்ல அவள் உருவமே ஒரு சித்திரம் போன்றது. "பீரவல்கர் ஸ்குயானார்குமுன் ஆர்ட் கலரியில்" பார்த்த ஏதோ ஒரு அரும்பெரும் சித்திரம் போல் தெரிந்தது, அவனுக்கு அவள் உருவம் ஒரு கணம்.
அவள் ஆங்கிலேயப் பெண்ணா?
கரும் கூந்தல், நீல விழிகள், பளிங்குபோன்ற உடம்பு, அழகாகக் கதைக்கும் ஆங்கிலம்!
ஆங்கிலேயப் பெண்ணாக முழுக்க முழுக்க இல்லா விட்டாலும் ஏதோ கலப்பில்லாமல் இல்லை என்பது அவனுக்குத் தெரிந்தது.
என்னவாக இருந்தாலும் அவனுக்கென்ன? ஏன் சும்மா விசரன் போல் நிற்க வேண்டும்?
அவன் போக எண்ணினான். 'குட்பை" என்றான். அவள் இன்னும் நின்று கொண்டிருந்தாள்.
இரண்டடி நடந்தவன் திரும்பிப் பார்த்தான். அவள் அசையாமல் நின்று கொண்டிருந்தாள்.

Page 9
A ராஜேஸ்வரி
அவன் நினைத்தது போல் அவள் தற்கொலை செய்யத் தான் முயற்சித்தாள் என்றால், அவளைத் தனியாக 659l —
oavser Ld6ðrio ஒப்பவில்லை.
இன்னொருதரம் முயற்சிக்க மாட்டாள் என்று என்ன நிச்சயம்? கீழே தேம்ஸ் நதி அமைதியுடன் தவழ்ந்து ண்ெடிருக்கிறது. அதில் விழுந்து அவள் இறக்கப் போவதில்லை. ஆயிரம் படகுகள் நதியில், அதிலும் மற்றைய மனிதர் அருகில், யாராவது காப்பாற்றக்கூடும்.
என்ன பைத்தியமாக இருக்கிறாள்?
gro; gooFumo இருந்தால் கதவைப் பூட்டிப்போட்டு நஞ்சையோ நாரசத்தையோ குடித்துச் செத்துத் தொலைப்பதுதானே p
நடு லண்டனில் வந்து கொண்டு சாக நினைக் கிறாளாம்.
ஏனோ அவளைவிட்டுப் போக அவன் விரும்பவில்லை யாரையும் எதிர்பார்த்துக் கொண்டு நிற்கிறீர்களா" என்றான்.
அப்படியில்லை, சம்மா ஒரு "வாக்கிங்' வந்தேன். னி வீட்டுக்குப் போகவேண்டும்" என்றாள் கைப் பயைச் சுழற்றியபபி"
'எந்தப் க்கம் போக வேண்டும்? நான் போகும் பக்கமாய் இருந்தால், ஆட்சேபம் இல்லை என்றால் நானும் வரலாம்" என்றான்
நான் பிம்லிக்ரோக்ஷக்குப் போகிறேன்" என்றாள். ஓ ! எனக்கு எதிர்ப்பக்கம் : நீங்கள் நடந்துபோவ தாய் இருந்தால் பரவாய் இல்லை. அப்படியே வத்து *ஸ்லோன் ஸ்குயாரில்" பஸ் எடுக்கலாம்" என்றான்.

தேம்ஸ் நதிக்கரையில் A 9
"ஏன் வீண் சிரமம்” என்றாள், அரைகுறை அனுதாபத்துடன்.
"அப்படி ஒன்றும் இல்லை. எனக்கு நடக்க விருப்பம்" என்றான் அவன்.
அது பொய் என்பது அவனுக்குத் தெரியும். பஸ்சுக்குச் செலவழிக்கக் காசில்லை என்பதுதான் உண்மை" இருவரும் நடக்க ஆரம்பித்தனர்.
அவள் நடையும் உடையும் அவனுக்குப் பிடித் திருந்தன. கிங்ஸ் ரோட் சனிக்கிழமை ஆரவாரத்தில் மூழ்கிக் கிடந்தது. லண்டன் தெருக்களில் இளம் தலை முறையினருக்குப் பிடித்த இடம். எல்லாம் வாங்கலாம். எதையும் அனுபவிக்கலாம்.
பயங்கரக் காட்சிகள் கொண்ட சினிமா தியேட்டரைத் தாண்டிப் போய்க்கொண்டிருந்தார்கள்.
"இந்தத் தியேட்டருக்கு எப்போதாவது வந்த துண்டோ" அவள் கேட்டாள்.
"சாப்பாட்டுக்கு வழியில்லை. தியேட்டராவது" என்று சொல்ல நினைத்தான்.
'இல்லை, படிக்கவே நேரம் போதாது" என்றான் பொய் மரியாதையுடன்.
'ஓ ஸ்ருடன்டர் ? என்ன படிக்கிறீர்கள்" என்றாள் அவள். 'என்ஜினியரிங்" என்றான் அவன்.
தியேட்டரில் இருந்து பயங்கர இசை சாடையாகக் கேட்டது.
'உங்களுக்கு "ஹொற பிலிம்" பிடிக்குமா" என்று கேட்டாள். "இல்லை" என்றான். ஏழாலையில் ஆடு வெட்டிப் பலி கொடுப்பது ஞாபகம் வந்தது அவனுக்கு.

Page 10
10 A ராஜேஸ்வரி
அலறும் ஆடும் அதைத் துரத்திப் பிடிக்கும் மனிதர் களும் "அந்தக் காலத்தில் தூக்குப் போடுவது, பயங்கரத் தண்டனை கொடுப்பது என்பன பகிரங்கத்தில் நடக்கு மாம். அதைப் பார்க்க சனங்கள் திரண்டு வருவார்களாம்" என்றாள் அவள்.
'தங்களால் செய்ய முடியாததை மற்றவர்கள் மூலம் பார்த்துத் திருப்திப் படுகிறார்கள். படம் பார்க்கும் போதுதான் கதாநாயகன் என்ற கற்பனை சில வேளை வரலாம்" அவன் மறுமொழிக்கு அவள் சிரித்தாள்,
"எவ்வளவு காலமாகப் படிக்கிறீர்கள்" அவள் நீண்ட கூந்தல் முகத்தில் மறைத்து விளையாடிக்கொண்டிருந்தது காற்றுக்கு. அவளது மெல்லிய இடையும் அழகிய நடை யும் 1 'எவ்வளவு காலமாகப் படிக்கிறீர்கள்" என்றாள் மீண்டும். அவளுக்குத் தெரியும் அவன் த ன்  ைன ரசிக்கிறான் என்று.
'இப்போது தான் ஆரம்பித்தேன் ஆறுமாதம் முடி கிறது" என்றான் அவன். அவள் சிறிது நேரம் பேசவில்லை.
"எனக்கும் தான் நேர்ஸிங் படிக்க ஆசை" அவள் குரல் மென்மையாக ஒலித்தது.
"படிப்பதற்கென்ன. லண்டனில் தான் இடறுப்பட்ட இடங்கள் எல்லாம் ஆஸ்பத்திரிகள் இருக்கிறதே"
அவள் அவன் முகத்தைப் பார்த்தாள்.
"ஆஸ்பத்திரிகள் இருந்தென்ன? பதினேழு வயதில் படிக்க அனுமதி வேணுமே" அவள் குரல் குத்தலா? ழவனுக்கு விளங்கவில்லை. ஆனால் தன்னையறியாமல் அவன் ஆச்சரியத்தில் வாய் பிளந்து அவளை மேலும் கீழும் பார்த்தான்.

தேம்ஸ் நதிக்கரையில் A 11
கிட்டத்தட்ட அவளின் உயரம். ஐந்தடி ஆறங்குல மாவது இருக்கலாம். வளர்ந்த தோற்றம் செழித்த உடம்பு!
போயும் போயும் பதினேழு வயதுதானா?
"ஏன் அப்படிப் பார்க்கிறீர்கள்? பார்க்க எண்பது வயது கிழவி போல் இருக்கிறேனா?"
அவள் சிரித்துக்கொண்டே கேட்டாள். இருவரும் ஸ்லோன் சதுக்கத்தைத் தாண்டி பிம்லிக்கோ ரோட்டால் நடந்து கொண்டிருந்தனர்.
எவ்வளவு தூரம் நடந்துவிட்டோம் என நினைக்க அவனுக்கு ஆச்சரியம் ஏற்பட்டது.
கிங்ஸ் ரோட்டில் இருந்து ஸ்லோன் சதுக்கம் தாண்டிப் பிம்லிக்ரோ வரையும்.
இரண்டு மைல் இருக்குமா? அவள் தயங்கி நின்றாள். 'ஏன் வீடுவந்து விட்டதா" என்றான்.
'இல்லை வீடு வரவில்லை, ஆனால் இன்னும் கொஞ்சத் தூரம்தான். நான் வருகிறேன்" என்றாள்.
அவளது வண்டு விழிகள் அவன் முகத்தில் பதிந்து கிடந்தன. அவன் பதில் சொல்லாமல் அவளைப் பார்த்தான்.
இந்தப் பக்கம் இருப்பவர்கள் வசதியானவர்கள். அவனைப் பார்த்த முக த் ைத த் திருப்பிக்கொள் S)ffrff 56r. w s
அவன் கறுப்பன். அவனுடைய நிறம் பிடிக்காத ஆங்கிலேயர்கள் அப்பக்கத்தில்.

Page 11
12 A ராஜேஸ்வரி
திடீரென்று தன்னில் தனக்கே அவன் பரிதாபப் பட்டான். விசரன்போல் அவள் பின்னால் அவன் வந்த தற்காக வேதனைப்பட்டான்.
அவளே “வெறும் பேச்சுத் துணைக்கு மட்டும்தான் தன்னுடன் வந்திருக்கலாம். அதற்குமேல் அவன் என்ன எதிர்பார்க்க முடியும் !
வயது பதினேழுதான் என்றாள். ஆனால் லண்டனில் எட்டுவயதிலேயே எப்படிப் பழகுவதென்று இந்தப் பெண்களுக்கு தெரியும்.
*சும்மா போன உங்களை இழுத்துக்கொண்டு வந்து விட்டேன்' என்றாள்.
அவன் மறுமொழி சொல்லாமல் அவளைப் பார்த் தான். இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்ட னர். அவன் லண்டனுக்கு வந்து இவ்வளவு நாளும் இவ்வளவு தூரம் ஒரு பெண்ணுடன் பழகவில்லை. கதைக்கவில்லை. நடக்கவில்லை.
"என் பெயர் செந்தில்வேல்" என்றான். இதுவரை ஒருவர் மற்றவர் பெயர் கூடக் கேட்கவில்லை.
'நான் லோறா சிம்சன்" என்றாள் அவள். அவன் பேசவில்லை. புன்னகைத்தான்.
"தாங்ஸ் என்னோடு வந்ததற்கு" என்றாள் லோஹா"தாங்ஸ் என்னோடு கதைத்ததற்கு" என்றான் செந்தில். இருவரும் சிரித்தனர்.
"குட்பை" என்றான் அவன். "சீ யூ சம் ரைம்" அவள் குரல் மிகவும் மென்மையாக இருந்தது.
அவன் அவளைப் பார்த்தான்.

தேம்ஸ் நதிக்கரையில் A 13 இனியும் அவளைச் சந்திப்பானா ? அவள் பக்கிங்காம்பலஸ் ரோட்டு மூலையில் தாண்டிப் போய்க்கொண்டிருந்தாள்.
சிறிது நேரத்தில் அவன் ஸ்லோன் சதுக்கத்தில் பஸ்சுக்குக்காத்து நின்றான். உலகமெல்லாம் சனிக்கிழமை மாலை நேரத்தின் மயக்கத்தில் ஆடிக்கொண்டிருந்தது.
தனிமையான பிரமை அவனுக்கு ஏற்பட்டது. பசி வயிற்றைக் கிண்டியது. உடம்புகளைப்பால் துவண்டது. பஸ் அவனும் அவளும் வந்த வழியால் போய்க்கொண் டிருந்தது. அவள் நின்றுகொண்டிருந்த பாலம் வந்த போது அவளின் அழகிய சிரிப்பு நினைவில் வந்தது.
உண்மையாகத் தற்கொலை செய்யத்தான் நினைத் தாளா ? இந்த வயதில் தற்கொலை செய்துகொள்ளு மளவுக்கு இவளுக்கு என்ன வந்தது? அவனால் யோசித்து மூடிவுகட்டத் தெரியவில்லை.
வீட்டுக்குப்போய்ச் சேர்ந்ததும் அப்படியே களைத்துப் போய் உட்கார்ந்து விட்டான்.
'என்னடா பிள்ளையார் கல்லுப்போல கிடக்கிறாய்"
யசோதரன் செந்திலின் அறையை எட்டிப்பார்த்துக் கேட்டான்.
“மா மூட்டை தூக்கிக் களைத்துப் போனேன்" என்றான், செந்தில்வேல். சனி ஞாயிற்றுக் கிழமைகளில் பேக்கரியில் வேலை செய்கிறான். இன்று நாலு மணிக்கு வெளிக்கிட்டு ஒரு நல்ல ஜக்கட் வாங்கும் நோக் கத்துடன் கிங்ஸ் ரோட்டுக்குப் போகும் வழியில்தான் லோறாவைக் கண்டான்.
"இன்றைக்கு வெள்ளன வாறன் என்று சொல்லிப் போனாய் ஏன் லேட்" யசோதரன் சப்பாத்துக்களுக்கு, லேஸ் போட்டபடி கேட்டான்.

Page 12
14 A ராஜேஸ்வரி
"கிங்ஸ் ரோட்டில் ஜக்கட் வாங்கப் போய் அலைந்து திரிந்து வாறன்’ என்றான் செந்தில்.
"என்ன ஜக்கட்டும் மண்ணாங் கட்டியும் ? நாங்கள் என்ன பார்ட்டிக்கும் கூட்டத்துக்குமா போகிறோம்? சும்மா ஒரு நல்ல கார்டிக்கனை வாங்கினால் போதும்" என்றான் யசோ.
செந்தில் பதில் பேசவில்லை. அவனுக்குக் கதைக்க
எரிச்சலாக இருந்தது. தற்செயலாக லோறாவைப் பற்றி
ஏதும் சொல்ல அவன் நக்கலாகச் சிரித்துக் கொண்டு 'எந்த ஆட்டக்காரியோ" என்பான் யசோதரன்,
செந்தில்வேல் ஏன் மெளனமாக இருக்கிறான் என்று * கேட்க நேரமில்லை யசோதரனுக்கு
அவனுக்கு வேலைக்குப் போக நேரமாகிக் கொண் டிருந்தது. அவசர அவசரமாகச் சமைத்தான். ஆட்டுக்கறி மூக்கில் மணத்ததும் செந்தில்வேலின் பசி கூடியது.
எழுந்து அடுப்படிக்குப் போனான். "எங்கே யோகலிங்கம். வெள்ளென வேலைக்குப் போட்டானே" என்றான் செந்தில்வேல்.
“ஏதோ கூட்டம் விம்பிள்டனில் என்று போட்டான்' யசோ வதங்கும் இறைச்சியைப் புரட்டிக்கொண்டு சொன் னான்
'போனமுறையும் அரும்பாடுபட்டுப் பாஸ்பண்ணி னான். இந்த வருஷமும் சரியாகப் படிக்கேல்லை என்ன செய்யப் போறானோ தெரியாது" என்றான் யசோ தொடர்ந்து.
செந்தில் பாதி கேட்டும் பாதி க்ேட்காமலும் இருந் தான். வழக்கமாக யசோதரனும் யோகலிங்கமும் சேர்ந்து கூட்டத்துக்குப் போவார்கள், செந்தில்வேலின் வேலை

தேம்ஸ் நதிக்கரையில் A 315
தாட்களில். இல்லையென்றால் மூன்று பேரும் போவார்கள்,
இன்று யசோதரன் போகாதது ஆச்சரியத்தைக் கொடுத்தாலும் ஏன் என்று கேட்க விரும்பவில்லை
‘என்ன கண்டறியாத கூட்டமும் மண்ணாங் கட்டியும். ஆரிட்டேயன் பல்லைக் காட்டி ஸ்பொன்ஸர் லெட்டர் வாங்கிப் போட்டு லண்டனுக்கு வந்தால் கண்ட றியாத ஆட்டமோ" என யசோதரனின் தமக்கை போன தடவை போய் இருந்த போது கத்தியது செந்திலுக்குத் தெரியும். யசோதரன் போனபின் படிக்கவென்று புத்த கத்தை எடுத்தான்.
பின்னேரம் லோறாவைக் கண்டது ஞாபகம் வந்தது. பரீட்சைக்கு இன்னும் இரண்டொரு கிழமைகளே இருந்தன. அதற்குள் கண்டபடி யோசித்து படிப்பை வீணாக்கக் கூடாது என்று நினைத்துக் கொண்டு படிக்க நினைத்தான்.
தோல்வியில் முடிந்தது அவன் முயற்சிகள் எல்லாம். மனம் திரும்பித் திரும்பி லோறாவில் நின்றது. வாயைக் கட்டி வயிற்றைக் கட்டி படிப்பும் வேலையுமாக மனதை யும் உடலையும் வருத்தி வேலை செய்து மேல்படிப்புப் படிக்கும் இலங்கை மாணவர்களில் அவனும் ஒருவன்.
கிழமை நாட்களில் படிப்பு. இரவிலும் வார நாட்களி லும் வேலை இன்று சரியா ஆறுமணிக்கு பேக்கரிக்குப் போய் மா மூட்டை சுமந்து களைத்து நாலு மணிக்கு கிங்ஸ் ரோட்டுககுப் போனான் ஒரு நல்ல ஜக்கட் வாங்கும் நோக்கத்துடன். V−
பாலத்தைக் கடந்து போகும்போது லோறாவைக் கண்டதும் அவள் நடந்து கொண்ட விதமும் பழகிய முறையும் அவனால் நம்ப முடியாமல் இருந்தது. ஆயிரம் பேர்கள் அக்கம் பக்கத்தில் போய்க் கொண்டிருந்தார்கள்.

Page 13
6 A ராஜேஸ்வரி
ஆனாலும் அவள் நின்றிருந்த விதம் அவனைத் திடுக்கிடப்
பண்ணியது, ஏதோ ஆற்றில் குதித்துவிடுவாள் போல் இருந்தது. இன்னும் கொஞ்ச நேரம் தாமதித்தால். அவன் சட்டென்று அவள் கையைப் பிடித்து "ஹலோ" என்றான் முதலில். பின்னர் சிறிது நேரம் செல்ல "தற்கொலை செய்யப் போகிறீர்கள் என நினைத்துக் கொண்டேன்" என்றான்.
அவன் அப்படிக் கேட்டதற்கு அவள் நேரடியாக மறு மொழி சொல்லவில்லை.
'உமக்கென்ன வழியைப் பார்த்துக் கொண்டு போவதுதானே' என்று இரையவில்லை.
"உதவிக்குப் பெரிய நன்றி" என்று வெட்டொன்று! துண்டிரண்டாகக் கதைக்கவில்லை.
அதற்கு மாறாக.
அழகாகச் சிரித்தாள். கதைத்தாள். அவன் துணையில் நடந்தாள்.
அர்த்தமென்ன?
அவன் தன்னைக் காப்பாற்றுகிறான் என்ற நன்றி உணர்வா?
அல்லது மற்றவர்களைப் பற்றிக் கவலைப்படாத உலகத்தில் என்னைக் கவனித்த ஒரே ஒரு ஜீவன் நீங்கள் தான் என்ற இதமான நினைவா?
என்ன விந்தையான பெண்!
என் தங்கச்சி மல்லாகம் சந்தியில் பஸ்சுக்குத் தனியாக நிற்க எவ்வளவு பயப்படுவாள்?
தான் பிறந்த ஏழாலைக் கிராமத்துக்குள் தனியாகத் தான் திரிவாளா?

தேம்ஸ் நதிக்கரையில் A 17 திரியத்தான் விடுமா அந்தச் சமுதாயம் ?
கதவு திறக்கும் சத்தம் கேட்டது. இரவு எட்டு மணிக்குமேல்.
யோகலிங்கம் விழுந்தடித்துக் கொண்டு அறையைத் திறந்தான்.
"என்ன வேலைக்குப் போகவில்லையா" என்றான் செந்தில்வேல்.
"தமிழ்க் கூட்டம் ஒன்றுக்குப் போய் இருந்தேன். சும்மா வள வள என்று அலட்டிக் கொண்டிருந்தார்கள். ஆறுமணிக் கூட்டம், ஏழரைக்குத் தொடங்கியது. அதற்குப் பின் 'தலைவர்'கள் அலட்டல் தொடங்கியது". யோகலிங்கம் மூச்சுவாங்கிக் கொண்டிருந்தான்.
"விம்பி பாரில்" .ஏழுமணியில் இருந்து இரவு
பதினொருமணிவரை கோப்பை கழுவும் வேலை. இப் போதே எட்டரைக்குமேல் !
"இத்தாலியன் கத்தப் போகிறான் லேட் என்று? என்றான் செந்தில்,
அவனுக்குப் போன் பண்ணிச் சொன்னான் கொஞ்சம் பிந்தி வருகிறேன் என.
யோகலிங்கம் அவசர அவசரமாகச் சோற்றை வாயில் போட்டுக் கொண்டிருந்தான். "நாங்க இரண்டுபேரும் வெளியில ஆடப்போறமாம் ; தான் ஒவ்வொரு நாளும் சமைக்கிறதென்று முணு முணுத்தான் யசோ? என்றான் செந்தில்.
"ஏன் நீர் சமைக்கிறதுக்கு என்ன" யோகலிங்கம் கேட்டான்.
"பிந்தித்தான் வந்தேன்" செந்தில் மெல்லச் சொன் னான்.

Page 14
18. A grrogion f
ரன் உமக்கு அஞ்சு மணிக்கு வேலை முடியுமே”
குசினியில் கோப்பையைக் கழுவியபடி இரைந்து கேட் டான் யோகன்,
செந்தில் கட்டிலில் சாய்ந்தபடி நண்பனைப் பார்த் தான். பக்கத்துக் கட்டில் யோகனுடையது. இருவரும் ஒரு அறையில் சீவிக்கிறார்கள்.
யோகன் கட்டிலில் உட்கார்ந்தபடி சேர்ட் மாற்றிக் கொண்டிருந்தான்.
"ஒரு விசர்ப் பெட்டையைச் சந்திச்சன் செந்தில் சட்டென்று சொன்னான்.
என்ன? சட்டைப் பொத்தான்களைப் է եւ -ւգաւյգகேட்டான் யோகன். நடந்தவற்றைச் சுருக்கமாகச் சொன்னான் செந்தில் இடையில் கதைக்காமல் எல்லாம் சொல்லிமுடிய "ஐ சீ, பெட்டைக்கு ஏதோ பிரச்சினை" யோகனின் குரல் கேட்டது.
2
அன்று லோறாவுக்கு மூன்று மணியில் இருந்து ஏழு மணிவரைதான் ஒய்வு. லோஹா செந்திலைச் சந்தித்து பின் பிம்லிக்கோவரையும் நடந்து வர ஏழு மணிக்கு மேல் ஆகிவிட்டது. பீனலப்பி தொம்ஸனின் முகத்தில் எள்ளும் கொள்ளும் வெடித்தது. லோறா அந்த வீட்டில் பிள்ளை பார்க்கும் 'ஆயா'.
குழந்தையைக் குளிப்பாட்டி ஏழரைமணிக்குப் படுக்கையில் போட்டிருக்க வேண்டும்.
இப்போதோ நேரம் ஏழரைக்கு மேல். பீனலப்பி எரிந்து விழுவதைக் கவனிக்காமல் குழந்தையை எடுத்துக் கொண்டு போனாள் குளிப்பாட்ட

தேம்ஸ் நதிக்கரையில் A டி.
"நான், ஏன் லேட் என்று கேட்கிறேன். பதில் சொல்லாமல்போகிறாய்! இனி என்ன? நான் நாலுகிழமை தானே இருக்கப் போகிறேன் என்ற மண்டைக்கனமா? நான் விரும்பியிருந்தால் ஒரு கிழமை நோட்டீசில் உம்மைக் கலைத்திருக்கலாம். பாவம் சின்னப் பெட்டையாய்க் கிடக்கே என்று பார்த்து ஒரு மாதம் தந்தால் நீ நினைத்த படி நடக்கிறாய். நினைத்தபடி செய்கிறாய்" பீனலப்பி இரைந்தாள். t
ஒருமாத நோட்டீஸ் ஏதோ தன்னில் பரிதாபப்பட்டுத் தரவில்லை என்று தெரியும் அவளுக்கு. அவள் கணவன் டேவிட் தொம்சன் கொம்பனி விசயமாக உலகப் பிரயாணம் ஒன்றை நடத்துகிறான். அவன் வரக் கிட்டத் தட்ட ஒருமாதம் ஆகும்.
அதற்கிடையில் பீனலப்பிக்கு யாரையும் வேலைக்கு எடுக்க விருப்பமில்லை. டேவிட்டுக்குப் பிடிக்காத யாரை யும் எடுத்துவிட்டால் அவன் பீனலப்பியைப் பேசுவான், அதற்காகத்தான் லோறாவைக் கலைக்காமல் வைத்திருக் கிறாள் என்று லோறாவுக்குத் தெரியும். ஆனால் அவள் ஒன்றும் பதில் பேசாமல் குழந்தையைப் படுக்கைக்குக் கொண்டு போனாள். குழந்தையைப் படு க் கை யில் றித்திரையாக்கி விட்டு வெளியில் வரும்போது பீனலப்பி சிற்றிங் ரூமில் இருந்தாள்.
"ஏன் லேட்? எங்கே போய் இருந்தாய்? மைராவும் லண்டனில் இல்லையே. யாருடன் திரிந்தாய்" பீனலப்பி கேட்டாள். லோறாவுக்கு எரிச்சல் வந்தது.
"உங்களைப் போன்றவர்களின் முகத்தில் விழிக்காத ஒரு இடத்துக்குப் போக யோசித்தேன். ஆனால் இரக்க மனமுள்ள ஒருவர் ஏமாற்றிவிட்டார்" என்று சொல்ல நினைத்தாள்.
ஆனால் தன் ஆத்திரத்தை அடக்கிக்கொண்டு "ஏதும் அறை கிடைக்குமா என்று பார்க்கப் போனேன். கிங்ஸ்

Page 15
-20 A ராஜேஸ்வரி
ரோட்டுக்கு வரும்போது பஸ் கிடைக்கவில்லை. நடந்து வந்தேன்"
பீனலப்பி லோறாவை நம்பினாள்.
பீனலப்பிக்குத் தெரியும் லோறா மைராவைபோல் வாயாடியல்ல. அத்துடன் ஒரு பொடியன் சினேகிதமும் இல்லை என்றும் தெரியும்.
"ஐயாம் சொரி போர் த லேட்" என்றாள் லோறா. பினலப்பியின் மறு பேச்சுக்குக் காத்திராமல் குசினிக்குப் போனாள்.
குசினியில் வேலைகளில் உதவி செய்வதும் அவளின் பணிகளில் ஒன்று. வீட்டில் டேவிட் தொம்சன் இல்லாத படியால் பெரிய ஆரவார சமையல் ஒன்றுமில்லை. லோறா சாப்பிட்டு முடிய பீட்டர்க் கிழவன் எல்லாம் கழுவி முடித்து விட்டான்.
லோறா வேலை செய்யும் மனநிலையிலும் இல்லை. தன்னை வேலை செய்ய விடாமல் தானே எல்லாம் செய்து முடித்துவிட்ட பீட்டர்க் கிழவனைப் பார்க்க நன்றி பெருகியது. "தாங்ஸ்" என்றாள்.
கிழவன் பாசத்துடன் தலையைத் தடவிவிட்டான். இந்தப்பாசம் இல்லாதிருந்தால் எப்போதோ அந்த வீட்டை விட்டு ஓடியிருப்பாள்.
அவளுக்கு என்று யார் இருக்கிறார்கள் லண்டனில்? மைராவும் பெல்வாஸ்ட் போய்விட்டாள் போன கிழமை, இனி அவள் தனி மனுசியில்லை. லோறாவுடன் திரிய, லோறாவுக்கு உதவி செய்ய.
மைரா லோறா வர முதல் பீனலப்பி வீட்டில் வேலை செய்த சுவிடிஸ் பெண். லோறா வந்து கொஞ்ச நாளில் வேறு வேலை பார்த்துக்கொண்டு போய்விட்டாள். போன இடத்தில் ஐலண்டைச் சேர்ந்த டானியலைச் சந்தித்தாள்.

தேம்ஸ் நதிக்கரையில் A 21
மைராவும் டானியலும் கல்யாணம் செய்வதற்காக பெல்வாஸ்ட் போய்விட்டார்கள். மைரா சில வேளை லண்டனில் இருந்திருந்தால் இன்று இப்படி முடிவுகட்டி இருப்பாளா? மைராவை விட்டால் யாரிடம் போவது? தேனை நாடிவரும் ஈக்கள் போல ஆயிரக்கணக்கான பெண்கள் லண்டனுக்கு வந்து வாழ வழியில்லாமல் லண்டன் தெருக்களில் விலைமாதர்களாகத் திரிகிfrontiftsar என்பது லோறாவுக்குத் தெரியாததல்ல.
பதினேழு வயதுவரை அவள் பட்டபாடு போதும் போதும் என்று வந்து விட்டது லோறாவுக்கு.
நேற்று பீனலப்பி வீட்டில் இருக்கவில்லை. கணவன் வீட்டில் இல்லாத நேரத்தில் பீனலப்பி வீட்டில் இருப்பதே குறைவு. நேற்று வர வேண்டியவன் ஜெர்மனியிலிருந்து போன் பண்ணிச் சொன்னான். தான் வரவில்லை என்று.
எனவே குழந்தை ஜெரமியை லோஹாவின் பொறுப் பில் விட்டு விட்டு பீனலப்பி ரீஜண்ட் ஸ்ரீட்டுக்குப் போய்விட்டாள், சாமான்கள் வாங்க.
சமையற்காரக் கிழவன் பீட்டர் பீனலப்பியைக் கேட்டுக்கொண்டு பின்னேரம் ஒய்வு எடுத்துக்கொண்டு வெளியே போய்விட்டான்.
லோறாவும் குழந்தையும் தோட்டத்தில் விளையாடிக் கொண்டிருந்தார்கள்.
வெளியில் கார்ச்சத்தம் கேட்டது. டேவிட் தொம்ஸன் வந்து கொண்டிருந்தான். அவனைத் தனிமை யில் சந்திக்க லோறாவுக்குப் பயம். முன் இரண்டொரு தடவை அவன் அவளிடம் நடந்து கொண்டவிதம் பயப்படப் பண்ணியிருந்தது எதிர்பாராத விதமாக அவன் வந்ததால் தனக்கு வந்த வியப்பைக் காட்டிக் கொள்ளா
தே-2

Page 16
22 A ராஜேஸ்வரி மல் குழந்தையுடன் விளையாடிக் கொண்டிருந்தாள் லோறா.
ஜெரமி தகப்பனைக் கண்டதும் பாய்ந்து கொண்டு அவனிடம் போய்விட்டாள
"எங்கே பீனலப்பி’ என்று கேட்டான் டேவிட் ஒற்றிங் ரூமில் நுழைந்தபடி,
கடைக்குப் போய்விட்டார்கள்' என்றாள் லோறா. "அவளுக்குத் தெரியாது நான் இன்றைக்கு வருவேன் என்று: பிஸினஸ் மீட்டிங் கான்சல் பண்ணிய படியால் வந்து விட்டேன்' என்றான்.
டிடர் எங்கே" என்றான் குசினிப் பக்கத்தில் பார் நேர ஓய்வு. வெளியில் کتاب’’ • الالLا۔{کانامہ zoon GootL |
போய்விட்டார்' என்றாள் லோறா.
தான் தனிமையில் அவனுடன் இருக்கிறேன் என்ற உணர்ச்சியே அவளை என்னவோ செய்தது.
““@ !虚 மட்டும்தான் வீட்டி அவன் சிரிப்பு அவளுக்கு எரிச்சல் ஊட்டியது. 'லோறா கொஞ்சம் டீ போட முடியுமா” என்றான். வெளியில் வெயில் கொளுத்திக்கொண்டிருந்தது. அவன் சேர்ட்டே வியர்வையில் நனைந்து உடம்போடு ஒட்டிக்கிடந்தது.
இந்த அவியலில் என்ன தேனீர் ? அவள் மறுமொழி சொல்லாமல் குசினிக்குள் போய்த் தேனீர் போட்டுக் கொண்டு வரும்போது அவன் தன் அறையில் விசிலடிப்பது கேட்-து. ヘー
லேறா மேலே கொண்டு வா" என்றான் டேவிட். எரிச்சலுடனும் ஆத்திரத்துடனும் ஒவ்வொரு படியாக மேலே ஏறினாள்.

தேம்ஸ் நதிக்கரையில் A 23
அவன் கதவு ஆவென்று திறந்து கிடந்தது. பீனலப்பி யினதும் டேவிட்டினதும் படுக்கையறையது. லோறா ஒரு நாளும் மேலே அந்த அறைக்கு போகவில்லை.
அறையில் உள்ளிட்டதும் மூக்கில் அடித்தது சுகந்த மணம். விலையுயர்ந்த தளபாடங்கள், அலங்கார மேசை, வண்ண வண்ணமான வாசனைத் திரவியங்கள், மேக்அப் சாதனங்கள் மேசையில் பரவிக் கிடந்தன.
டேவிட் கட்டிலில் சேர்ட் இல்லாமல் உட்கார்ந்து தன் பெட்டியில் ஏதோ தேடிக்கொண்டிருந்தான். அலங்கார மேசையில் ஒரு மூலையில் தேனீர்க் கோப் பையை வைத்துவிட்டுத் திரும்பியவளுக்குக் கதவையடைத் துக் கொண்டு நிற்கும் டேவிட்டைக் கண்டதும் ஒ வென்று அலற வேண்டும் போல் இருந்தது.
அவன் கையில் பிரான்ஸ் நாட்டு லேபல் போட்ட வாசனைப் பெட்டி இருந்தது. கண்களில் வெறி இருந்தது. உடம்பில் சேர்ட் இல்லை. அவளைப் பார்த்து மெல்லச் சிரித்தான்.
என்ன செய்வது இப்போது ?
எப்போது வருவாள் பீனலப்பி ? பீனலப்பி வந்தாலும் டேவிட் பயப்படப் போவதில்லை என்பது லோறாவுக்குத் தெரியாது.
அவள் தன் நடுங்கும் குரலை அவனுக்குக் காட்டாமல் "விடுங்கள் வழியை" என்றாள்
'உமக்காக ஒரு பிரன்ஞ் பேர்வியூம் வாங்கிவந்திருக் கிறேன் லோறா'
அவன் குரல் குழைந்தது.
"எனக்குத் தேவையில்லை எதுவும்" அவள் குரல் வெடித்தது. அவனின் கரங்கள் அவள் தோளில் பதிந்தது.

Page 17
* A ராஜேஸ்வரி
*லோறா உமக்கு வாழ்க்கையை அனுபவிக்கத் தெரி யாது. நீர் மட்டும்தான் இந்த வீட்டில் வேலைக்கு வந்தாய் என்று நினைக்காதே" அவன் சொன்னான்.
"அதுதான் ஆறுமாதத்துக்குமேல் தங்காமல் ஒடு கிறார்கள், உங்கள் அன்புக்குப் பயந்து" அவள் எரிந்து விழுந்தாள்.
"நானாக அனுப்பவில்லை. அவர்களாகப் போகவும்
இல்லை. பீனலப்பிக்கு எல்லோரிலும் சந்தேகம். ஒரு தரம் அவளுக்குப் பைத்தியமே பிடித்துவிட்டது"
"உம்மைப்போல் புருஷனோடு இருந்தால் பைத்தியம் பிடிக்காமல் என்ன செய்யும்."
அவள் பார்வை ஜன்னலுக்கு வெளியே பாய்ந்தது. ஜன்னல் கதவு திறந்திருந்தது.
பக்கத்து வீட்டுக்காரர் புகழ்பெற்ற அரசியல்வாதி.
அவர் மனைவி குழந்தைகளுடன் தோட்டத்தில் விளை யாடிக்கொண்டிருந்தாள்.
சத்தம் போட்டு உதவி கேட்டால் என்ன என லோறா ஒரு கணம் நினைத்தாள்.
டேவிட் நெருங்கி வந்தான். சேர்ட் போடாத பரந்த மார்பில் இருந்துவரும் வியர்வை மணம்கூட லோறாவின் மூக்கில் பட்டது.
"பயப்படாதே பேபி" டேவிட் மெல்லக் குனிந்து அவள் கன்னங்களை முத்தமிட்டான்.
'sa. அவள் சட்டென்று விலகிநின்றாள். கன்னம் எரிவது
போல் இருந்தது.
"லோறா நான் விரும்பினால் உலகத்தில் உள்ள
அத்தனை சாதிப் பெண்களிலும் விரும்பியவர்களை

தேம்ஸ் நதிக்கரையில் Δ 25
அனுபவிக்கலாம். எத்தனையோ சாதி, எத்தனையோ கலர், மொழி’
"பின் ஏன் என்பின்னால் வருகிறீர்" அவள் கண்ணிர் கன்னங்களில் ஓடியது.
' ' ' , s: "புதுச்சட்டை வாங்கத்தான் பெண்கள் விரும்புவார் கள். புதுப் பெண்ணை அனுபவிக்கத்தான் ஆண்கள் விரும்புவார்கள்."
உணர்ச்சி வெறியில் அவன் கண்களில் உண்டாகும் வேட்கையை அவளால் உணரமுடிந்தது.
அவன் கைகள் அவள் மார்புச் சட்டையில் பதிந்தது. அடுத்த கணம்.
கொதி தேத்தண்ணீர் மார்பில் பட்ட கொடுமையுடன் அவன் அலறினான்.
அவனிடம் அகப்பட்ட தன் மேற்சட்டையைப் பிய்துக்கொண்டு அரைகுறை உடுப்புடன் எப்படிப் படியிறங்கினாள் என்பது அவளுக்குத் தெரியாது.
"யூ பிளடி பிச்" அவனின் அலறல் கேட்டது, எப்படி அவனிடமிருந்து தப்பினாள் என்று எண்ண முடியவில்லை. V
தன் கதவை இறுக்கிப் பூட்டிக்கொண்ட்ாள். குழந்தை முன் ஹாலில் விளையாடிக் கொண்டிருந்தது. ஜன்னல் கதவைத் திறந்து வைத்தாள். தற்செயலாக அவன் வந்து கதவைத் திறந்தால் வெளிக்கிட்டு ஒட. கிழிந்த தன் உடை. அவன் நகம்பட்ட மார்பு. அவள் அழுதாள். தேற்ற யாரும் இல்லை. எவர் வந்தும் கதவைத் தட்டவில்லை.
பின்னேரம் பீனலப்பி வரும் சத்தம் கேட்டது. குழந்தையைத் தனியாகக் கண்டதும் லோறாவின் பெயரைச் சொல்லி இரைந்தாள்.

Page 18
26 A ராஜேஸ்வரி
டேவிட் மேலிருந்து குரல் கொடுத்தான். கீழே என்ன சண்டை என்று கேட்கவில்லை.
இருவரும் கத்திக் கொண்டார்கள். அவளை வேலைக்கு அனுப்பிய ஏஜென்சிக்குப் போன் பண்ணினார்கள்
'நீங்கள் அனுப்பிய பெட்டைக்கு மூளை சரியில்லை. அவளை இனி வேலைக்கு வைத்துக்கொள்ளப் போவ தில்லை. நல்ல இடத்தில் வேலைக்குச் சிபாரிசு செய்யப் போவதில்லை. லோறாவுக்கு மூளை சரியில்லை "
லோறா வழியும் கண்ணீருடன் கேட்டுக் கொண் டிருந்தாள்.
தூங்க முதல் கதவைத் தட்டி *கெதியில் வீட்டை விட்டு வெளிக்கிடலாம்" என்றாள் பீனலப்பி
அடுத்தநாள் காலை தன் “l a6ai div” oilor LJLDT* கிட்டத்தட்ட நாலு கிழமைகள் வெளிநாட்டில் இருக்க வேண்டி நேரிடுமெனப் பினலப்பியிடம் டேவிட் சொன்னான். அவன் போனபின் பினலப்பி சொன்னாள்: "நீ சின்னப் பெட்டையாக இருக்கிறாய். லண்டனில் என்ன வேலை கிடைக்கப் போகுது? ஏதோ பாவத்துக் குப் பயந்து ஒருமாதம் இருக்கவிடுகிறேன்."
பாவத்துக்குப் பயந்து? யார் பாவத்துக்குப் பயந்து?
ஒரு மாதம் முடிய எங்கு போவது?
வீட்டுக்குத் திரும்பிப் போவதா ? தன் சிறிய தகப்பன் ஸிம்சன் எப்படி நடத்துவான்.
லோறா ஸிம்சன் !
அவள் பெயரே அவளுக்குச் சிரிப்பாக இருந்தது. நான் ஏன் லோறா நியூட்டனாக இல்லை? அவளின் தாய்

தேம்ஸ் நதிக்கரையில் A 27
மேரி லோறாவின் தகப்பன் பெயர் நியூட்டன் என்று தான் சொன்னாள்.
என்ன ஒற்றுமை!
அவளைப் போலத்தான் அவள்தாய் மேரியும் பதினெட்டு வரூடங்களுக்கு முன் மே ற் கி ந் தி ய தீவொன்றில் இருந்து லண்டனுக்கு வந்தாள். நேர்ஸிங் படிக்க பிரிட்டீஸ் ஏகாதிபத்தியம் மலிவுக் கூலிகளாக உலகமெங்கும் கொண்டுபோன இந்தியரில் தென் அமெரிக்க பிரிட்டீஷ் கயானாவில் நிலைபெற்றவர்கள் மேரியின் பெற்றோர்.
சாப்பாட்டுக்காகச் சமயம் மாறிப் பெரிய மனிதரான இந்துக்களில் ஒரு குடும்பம், மேரியின் தகப்பன் கடை வைத்திருந்தான். மகள் லண்டனுக்கு படிக்கப் போவதைத் தடுக்கவில்லை. பெருமை என்றே நினைத் தார். எங்கள் இலங்கையர்கள் நினைத்துத் தங்கள் பிள்ளைகளை அனுப்பியது போல, லண்டனில் ஒரு ஆஸ்பத்திரியில் படிப்பதற்கு இடம் கி  ைட த்த து. படிப்புத் தொடங்க ஆறுமாதம் முந்தியே மேரி லண்டனுக்கு வந்து விட்டாள். அப்போதெல்லாம் அங்கு வருவது கஷ்டமாக இருக்கவில்லை.
வந்திருந்த ஹொஸ்டலில் அமெரிக்க மாணவனான நியூட்டனைக் கண்டாள். லண்டன் ஒரு கந்தர்வ உலகம். கருத்தையும் கண்ணையும் மயக்கும் ஒரு மாய நகரம். பிழைப்புக்கு வந்து தங்கள் வாழ்க்கையை அநியாயமாக்கிக் கொண்ட ஆயிரக்கணக்கான வெளி நாட்டு இளைஞர்களின் கதையை எத்தனையோ லண்டன் தெருக்கள் சொல்லும்.
அழகும் இளமையும் மேரியின் எதிரிகள் என்பதை அவள் உணர வெகு காலம் எடுத்தது, ‘ ஆ, ட' மாணவனான நியூட்டன் மேரியின் அழகில் மயங்கியது ஆச்சரியம் இல்லை.

Page 19
28 A ராஜேஸ்வரி
லண்டனில் வசந்த காலம், தேவலோகம் இப்படித் தானோ என்பது போல் அழகாக இருக்கும். பல நிற உடையில, நடையில் வெளிநாட்டாரின் குவியல் லண்டன் தெருக்களில் பெருக்கெடுக்கும்.
வசந்தம் முடிந்தது. பாதாள ரெ யில் களும். பண்பான பூங்காக்களும் வசந்தகாலக் காதலர்களின் கதையை மறந்து இயங்கின.
படிப்புத் தொடங்க ஒன்றிரண்டு மாதங்களே இருந் தன. தலைச்சுற்றும், சத்தியும் ஏன் என்பது மேரிக்கு விளங்கியதும் ஆசைக் காதலன் நியூட்டனுக்குச் சொன் னாள். எத்தனையோ வினோதமான லண்டன் நகரம் நியூட்டன் இல்லாமல் வெறுமையாய்த் தெரிந்தது மேரிக்கு. அமெரிக்கனின் "பேபி” விளையாட்டு முடிந்து விட்டது. நியூட்டனைக் கண்டு இரண்டு மாதங்களாகி விட்டன. இந்தப் பெரிய லண்டன் நகரில் எங்கே தேடுவாள் அவனை? எங்கே போய்விட்டான்?
தலைசுற்றில் கால்தடுமாறி விழப்போனவளைக் காப்பாற்றுகிறான் ஸிம்சன்.
நகரும் படிகள் கீழே போய்க்கொண்டிருந்தன.
மேரியின் தலை சுற்றிக்கொண்டு வந்தது ஸிம்சன் அழகு
பிம்பமான மேரியைத் தாங்கிப் பிடித்துக் கொண்டிருந் தான். அன்று மட்டுமல்ல! வாழ்க்கை எல்லாம்.
தன் காதலன் விபத்தில் இறந்துவிட்டான் என்று ஸிம்சனுக்குச் சொன்னாள் மேரி ஸிம்சனின் பார்வை அவளின் உப்பிய வயிற்றில் பதிந்திருந்தது. அவளிடம் பரிதாபமோ காதலோ என்னவோ ஸிம்சனுக்கு இரண்டு பேரும் கல்யாணப் பதிவு செய்தார்கள்.
Y படிகக வந்து பிள்ளை வயிற்றுடன் கல்யாணம் பதிவு செய்யும்போது லோறா மேரியின் வயிற்றில் உதைத்துக் கொண்டிருந்தாள்.

தேம்ஸ் நதிக்கரையில் А 29"
ஸிம்சன் மேரியில் அன்பில்லாமல் இல்லை. ஆனால் பொன் உடம்பும் நீல விழிகளும் கார்குழலுமாக லோறா நாளொரு வண்ணமும் பொழுதொரு விதமாக வளர, முன் பின் தெரியாத அமெரிக்கனுக்குப் பொறாமை வந்தது.
அந்தப் பொறாமை லோறாவின் இளமையைக் கண்டதும் வேறு விதத்தில் உருவெடுத்தது லோறா வுக்குத் தாய் சொல்லியிருந்தாள் ஸிம்சன் லோறாவின் தகப்பன் இல்லை; அதனாலே தான் மற்ற தம்பி தங்கை கள் கறுப்பாகவும் சுருண்ட தலையுடனும் இருக்கிறாம்கள். லோறா வேறு விதமாக இருக்கிறாள்.
லோறாவின் தகப்பன் விபத்தில் இறந்துவிட்டான் என்று மேரி லோறாவுக்குச் சொல்லும்போது லோறாவின் பிஞ்சு மனம் கலங்கியது.
லோறா வளர வளர Rம்சனின் பார்வையின் போக்கும் மாறியது, எலும்பைப் பார்த்து வாயூறும் ஒரு பட்டினி கிடக்கும் நாயின் பார்வை. லோறா இன்னும் சின்னப்பிள்ளை இல்லை.
சாக்குப் போக்காக ஸிம்சன் லோறாவை அணைப் பதும் இழுப்பதிலும் என்ன அர்த்தம் என்று லோறா வுக்குத் தெரியாமல் இல்லை.
வீடு நரகமாக மாறியது. லோறாவின் படிப்பு முடிந்தது. கயானாவில் மேற்படிப்புப் படிக்க லோறா முடியாது என்றாள்.
நன்கு தெரிந்த ஆங்கிலக் குடும்பம் லண்டனுக்கு வர ஆயத்தம் செய்து கொண்டிருந்தார்கள். லோறா தாயிடம் அழுது கூத்தாடித் தன்னை லண்டனுக்கு அனுப்பச் சொன்னாள். மேரிக்குத் தர்ம சங்கடமாக இருந்தது. தான் பட்ட பாட்டை லண்டனில் அவள் மறக்கவில்லை. ஆனால் லோறா வீட்டில் இருந்து நடக்கப் போவது என்ன? M

Page 20
30 A ராஜேஸ்வரி
ஸிம்சன் எத்தனையோ காரணம் காட்டித் தடுக்கப் பார்த்தான். கடைசியில் மேரி எத்தனையோ புத்தி சொல்லி மகளை லண்டனுக்கு அனுப்பினாள்.
அழைத்துவந்த குடும்பம் லண்டனில் தங்கவில்லை. மான்செஸ்டர்காரர்கள் அவர்கள். லண்டனில் ஒரு ஏஜென்சி மூலம் லோறாவுக்கு டேவிட் தொம்ஸன் வீட்டில் வேலை எடுத்துக் கொடுத்தனர். ஆங்கிலேயர் களுடன் சீவிப்பது பலவிதத்தில் நல்லது. ஆங்கிலம் பழக லாம்; அத்துடன் லோறாவுக்கு இப்போதுதான் பதினேழு வயது. நேர்ஸிங் செய்யமுடியாது. அதுவரைக்கும் ஒரு வசதியான வீட்டில் சீவிப்பதே பெரிய காரியம் என்று பட்டது லோறாவுக்கு. லோறா பீனலப்பி வீட்டுக்கு வந்த காலத்தில் மைரா வேலையை விட்டுப் போகும்
நிலையில் இருந்தாள்.
அவள் போகும்வரை லோறாவுடன் அன்பாகப் பழகி னாள். சுவீடன் நாட்டைச் சேர்ந்த மைரா லண்டனில் மூன்று நாலு வருடங்களாக இருக்கிறாள். இப்போது ஐயர்லாந்து நாட்டைச் சேர்ந்த டானியலைக் கல்யாணம் செய்யும் நோ க்க த் துட ன் வேறுவேலை தேடிக் கொண்டிருந்தாள்.
லோ றா, டேவிட் கண்டபடி நடக்கவெளிக்கிட்ட ஆத்திரத்தில் நடந்துகொண்ட விதம் இனி ஒரு மாதத்தில் எங்கே வேலை தேடுவது? என்ன வேலை தேடுவது? எப்படி இந்த உலகத்தில் சமாளிப்பது? என்ற பிரச்சினைகளை யோசித்து யோசித்துக் கால்போன போக்கில் நடந்தாள்
அன்று.
மைரா பெல்வாஸ்ட்டுக்குப் போய் இரண்டு மாதத்
துக்கு மேலாகிறது. என்ன நடந்தது, எப்போது லண்டனுக்கு வருவாள் என்று தெரியாது.

தேம்ஸ் நதிக்கரையில் Δ 31
யாருமில்லை என்னவென்று கேட்க வேதனையுடன் நடந்த லோறா ஏன் இருக்க வேண்டும் என்ற விரக்தி யுடன் பாலத்தில் நடக்கும் போது, அமைதியாகத் தவழும் ஆற்றைப் பார்த்துவிட்டு அதில் விழுந்து செத்துத் தொலைந்தால் என்ன எள்நு நினைத்தாள். செந்திலைக் காணாவிட்டால் என்ன நடந்திருக்குமோ!
3
அடுத்த நாள் ஞாயிற்றுக்கிழமை. செந்தில்வேல் எழுப்பும்போது யோகலிங்கம் பேப்பர் படித்துக் கொண் டிருந்தான், யசோதரனின் குறட்டை அடுத்த அறையில் கேட்டது.
இரவிரவாக லோறாவைப் பற்றி நின்னத் து நினைத்து மனம் துடித்தது.
"பாவம்; கொஞ்ச வயதும் ஆளும். இந்த மாதிரிச் சின்னப் பெட்டைகளை என்னென்றுதான் மனம் துணிந்து அனுப்புதுகளோ அயல் நாட்டுக்கு" என்றான் செந்தில் வேல் சோம்பல் முறித்தபடி,
“இரவிரவாக பெட்டையைப் பற்றிக் கனவு கண்டாய் போல கிடக்கு" என்றான் யோகலிங்கம். செந்தில்வேல் பதில் சொல்லவில்லை. யோகன் சொல்வது உண்மை தான். கனவு காணவில்லையோ என்னவோ அவள் பேச்சும் நடையும் சிரிப்பும் இரவிரவாக செந்தில்வேலின் மனத்திரையில் ஓடிக்கொண்டிருந்தன. v
'கனவு ஒன்றும் காணவில்லை. சும்மா யோசித்துப் பார்த்தேன்" என்றான் செந்தில்.
"எங்களுக்கு இல்லாத ஒண்டைத்தான் யோசிக் கிறோம். இலங்கையில் ஒரு பெட்டையோட கதைக்க

Page 21
32 A ராஜேஸ்வரி
ஏலாது. யாரோடையும் கதைச்சா பெண்பிள்ளை வயித்தில் பிள்ளையையும் வைச்சு அதற்குப் பேரும் வைச்சுப்போடுவினம். ஆனா இஞ்ச வந்த தமிழ்ப் பெடியள் ஒரு பெட்டை தன்னோட வலியக் கதைச்சால் அவள் ஒரு சரக்கு, தன்னை வளைக்கப் பார்த்தாள் என்று ஏதோ பகிடியாய்க் கதைக்கிறார்கள். அவர்கள் பழகும் விதமே அது. அது எங்களுக்குப் புதினமாக இருப்பதால் ஏதோ கண்டறியாதது நடந்த மாதிரி கனவு காணு கிறோம். நீர் நினைக்காதேயும் அவளும் உம்மைப்போல் இரவிரவாக உம்மைப் பற்றி யோசித்துக் கொண்டிருந் தாள் என்று" என்றான் யோகன். செந்தில் வேலைக்குப் போகும் அ வ ச ரத் தி ல் அதிகம் கதைக்கவில்லை. யோகனைத் தெல்லிப்பளைக் கல்லூரியில் ஒன்றாகப் படிக்கும்போது தெரியும். யோகன் ஒரு அப்போதிக்கரியின் மகன். சிங்கள நாட்டில் பெரும்பாலும் வாழ்ந்தவன்.
வகுப்புக் கலவரத்தின்போது யாழ்ப்பாணம் வந்து செந்தில்வேலுடன் படித்தான். பின்னர் கொழும்பு யூனிவர்சிட்டிக்குப் படிக்கப்போய் சும்மா கூட்டம், ஊர் வலம் என்று திரிய முதலாவது வருடத்துடன் தகப்பன் அவனைப் பிடித்து லண்டனுக்கு அனுப்பியிருந்தார். யோகன் செந்தில்வேலுக்கு ஒருவருடம் முந்தி வந்தவன். செந்தில்வேல் அங்கு வரச் சில உதவிகளும் செய்தவன். செந்தில்வேலும் யோகனும் தனியாக இடம்பார்த்துக் கொண்டிருக்கும்போது தமக்கையுடன் விம்பிள்டனில் வாழ்ந்து கொண்டிருந்த யசோதரன், மைத்துனரைப் பிடிக்காமல் எப்படி அந்த வீட்டில் இருந்து வெளியேறு வது என வழிபார்த்துக்கொண்டிருந்தான்.
ஒரு கறுப்பரின் வீட்டில் மேற்தட்டில் இரண்டு அறை தளும் குசினியும் வாடகைச்குச் செந்திலும் யோகனும் எடுத்தபோது யசோதரன் தமக்கையிடம் சொல்லி அவர் களுடன் வந்து சேர்ந்துவிட்டான் ; படிப்பைக் காரணம்

தேம்ஸ் நதிக்கரயில் A 33
காட்டி மூவரும் கிளப்பம்கொமனில் இருக்கிறார்கள். விம்பிள்டனுக்குப் பக்கத்தில் கொலிஜ், யசோதரனுக்கு ஐந்து வருடப்படிப்பில் ஒருவருடம் முடிந்துவிட்டது.
பகலில் படிக்கிறான். இரவில் "செக்கியூரிட்டிக்" கார்டாக வேலை செய்கிறான் யசோதரன். யோகன் இலங்கையில் அட்வான்ஸ் லெவல் செய்ததால் நாலு வருடப் படிப்பு. ஒருவருடம் முடிந்துவிட்டது. பின்னே ரங்களில் "விம்பி பாரில் கழுவித் துடைக்கும் வேலை செய் கிறான்.
செந்தில் இந்த வருடம்தான் வந்துசேர்ந்தான். இலங் கையில் அட்வான்ஸ் லெவல் செய்தபடியால் நாலு வருடப் படிப்பு. இப்போதுதான் முதல்வருடம். பேக்கரியில் வேலை.
செந்தில் வேலையால் திரும்பும்போது பஸ் கிங்ஸ் ரோட்டால் திரும்பி பாலத்தைக் கடக்கும்போது நேற்று அவள் நின்ற இடம் ஞாபகம் வந்தது.
இப்போது என்ன செய்வாள் ? இனி சந்திப்பாளா ? ஒரே விசர்த்தனமாக நினைத்துக்கொண்டான். வீட் டுக்குப் போக இரவு ஏழு மணியாகிவிட்டது. ஞாயிற்றுக் கிழமை வேலை செய்தால் கூடக்காசு என்ற படியால் வேலை செய்தான். உடம்பெல்லாம் விண் விண் என்று நொந்தது. ஒரு வெந்நீர்க் குளிப்பு எடுத்துவிட்டு ஒரு பைந் பியர் குடித்தால் நல்லது என யோசித்துக் கொண் டான் பஸ்ஸால் இறங்கும்போது.
வீட்டில் படிகளை ஏறுப்போது மேலே யசோதரனின் தமக்கையின் குரல் கேட்டது. ராசரத்தினத்தார் ஏதோ உரத்த குரலில் பேசிக்கொண்டிருந்தார்.
செந்தில் குசினியில் எட்டிப் பார்த்தான். யசோதரன் ரீ போட்டுக் கொண்டிருந்தான்.

Page 22
34 A ராஜேஸ்வரி ; :
"உவங்களுக்கெல்லாம் என்ன தெரியும்? தாங்கள் ஏதோ பெரிய படிச்ச மணிசர் என்று பெரிய தமிழ் இயக் கம் உண்டாக்கினம்? யாழ்ப்பாணத்தில் சத்தியாக்கிரகம் நடத்தேக்கை கொழும்பில பண்டாரநாயகா அரசாங்கத் துக்கு வால் பிடிச்ச மனிதர்கள்" ராசரத்தினத்தார் யாரோடு கதைக்கின்றார் என்று இப்போது விளங்கியது.
யோகலிங்கம் முகத்தில் விழும் தன் முன் தலை மயிரைப் பின் தள்ளிக்கொண்டு அவரைப்பார்த்துச் சிரித்தான்
"யார் பெரிய ஆள், ஆர் சிறிய ஆள், ஆர் நல்ல சாதி, ஆர் கெட்ட சாதி என்று நாங்கள் இவ்வளவு நாளும் சண்டை பிடிச்சது போதாதா? எங்கட பிள்ளைகளின் பிள்ளைகள் பெயர் இன்னும் ஐம்பது வருஷத்தில் "சிங்க" வும் ‘கொடி"களும் ஆகப் போகுது. அதைப் பற்றி யோசி யுங்கோ. தமிழர் என்று நாங்கள் யோசிக்காமல், நான் டாக்டர், நான் எஞ்சினியர், அவன் பள்ளன், இவன் பறையன் என்று யோசிப்பதாற்றான் சிங்களவத் தலைமை எங்களை இப்படி வைச்சிருக்கிறான்" என்றான் Gunts, 67.
"ஒரு தகுதியான தலைமை எங்களுக்குத் தேவை." என்றார் ராசரத்தினம்.
‘'எது தகுதியான தலைமை ? நளவன் பள்ளன் வோட் எனக்கு வேண்டாம் என்று சொல்லி நல்ல சாதி வோட் கேட்ட சட்டத்தரணிகளா தலைவர்கள் ? தமிழ் மொழி பேசினாலும் அவன் இந்தியன் என்று மலை நாட்டுத் தமிழர்களை அடிமைகளாய்க் கூலியாய் மதித்த தமிழ்த் தலைவர்களா தகுதியான தலைவர்கள்?" ஆவேசம் பொங்கக் கேட்டான் யோகன்'
"உம்மைப் போல ஆட்கள் படிச்ச தமிழர்களைக் கேட்காமல் பீட்டர் கெனமனையும் பெரேராக்களையும்

தேம்ஸ் நதிக்கரையில் A 33
நம்பினபடியாத்தான் எங்கட சமுதாயம் இப்பிடி இருக்கு" ராசரத்தினத்தாரின் உரத்த குரல் கேட்டு வீட்டுக்காரன் எட்டிப் பார்த்தான். "எனக்கு வேலைக்குப் போக நேரம் போச்சு" என விழுந் தடித்துக்கொண்டு ஓடினான் யோகன்.
யசோ தேனீர் கோப்பைகளைக் கொண்டுவந்து மேசையில் வைத்தான்.
"உந்தப் பெடி ஏன் இப்பிடி விசர்த்தனமாகக் கத்துது" என்றார் ராசரத்தினம் செந்திலைப் பார்த்து
"இஞ்ச லண்டனில் இருக்கிற தமிழர் எல்லாம் ஆளுக் கொரு கட்சி வைத்து சும்மா பொருள் இல்லாமல் சண்டை பிடிப்பதைவிட ஏதோ எல்லோரும் சேர்ந்து, உருப்படியாகச் சண்டை பிடிப்போம் என்கிறான்" என்றான் செந்தில்,
ஒண்டாய் என்ன இருக்கிறது? இவன் எல்லாம் என்ன நினைக்கினம் தங்களைப் பற்றி. யார் இவர்கள்? என்ன செய்யவேணும் எண்டு எங்களுக்குச் சொல்ல’’ ராசரத்தினத்தாரின் குரல் தன் பாட்டியின் பேச்சை ஞாபகப் படுத்தியது செந்திலுக்கு. ராசரத்தினத்தின் பெண்சாதி பரமேஸ் தம்பியாருடன் குசினியில் ஏதோ கதைத்துக்கொண்டிருந்தாள்.
"என்ன ரகசியம்" ராசரத்தினம் பரமேஸ்வரியை அதட்டினார். பரமேஸ் பேசாமல் வந்து உட்கார்ந்தாள். "சும்மா சண்டை பிடிக்கிறதை விட்டுப்போட்டு இங்கே. இருக்கிற தமிழரும் ஒண்டாய் இருக்கிறது நல்லது தானே" என்றாள் பரமேஸ்.
*நீர் வாயை மூடிக் கொண்டிரும். தமிழ் கதைக் கிறான், லண்டனில் இருக்கிறான் எண்டாப்போல பள்ளன் பறையன் வீடெல்லாம் சாப்பிடப் போவாய்" போல கிடக்கு" ராசரத்தினத்தார் எரிந்துவிழுந்தார்.

Page 23
-36 A ராஜேஸ்வரி
"மச்சான் சொல்கிறது சரிதானே அக்கா. அங்கே வாய் காட்டாத ‘தம்பி"கள் 6T66)T to லண்டனுக்கு வந்த பிறகு தாங்கள் எங்களுக்குச் சரிசமன் எண்டு நிற்கினம் என்றான் யசோ,
செந்தில் வேல் மறுமொழி சொல்லவில்லை. ‘தமிழர்களுக்குள் சாதிப்பிரச்சினை தீராத வரையில் தமிழன் என்பவன் யார் என்பது சிங்களவர்க்குத் தெரியப் போவதில்லை எங்கள் பிரச்சினை திரப்போவது மில்லை" என்று யோகன் ஒரு நாள் சொல்லியதற்கு 'நீர் என்ன காணும் நளம் பள்ளுகளைத் தலையில வைக் கிறீர். நீரும் அவையில் ஒண்டோ?’ என்று யசோ கேட்டான். அதற்கு யோகன் "நான் நளவனாய் இருந்
கழுத்தில் கைவைத்தது ஞாபகம் வந்தது செந்திலுக்கு. "நாங்கள் ஒரு புதுக்கழகம் தொடங்கப் போறோம் நீர் என்ன தம்பி சொல்லுறீர்" ராசரத்தினம் செந்திலைப் பார்த்துக் கேட்டார்.
செந்தில் தர்மசங்கடப்பட்டான். யோகனையும் யசோதரனையும் போல் அவன் அரசியல் சண்டை பிடிப்ப தில்லை. அவனுக்குச் சில வேளை யோகன்தான் சரி என்று படும்.
"நான் என்ன சொல்கிறது? நீங்கள் படிச்ச ஆட்கள், சரியானதைச் செய்யுங்கோ’ என்றான். அவனுக்கு அவர்கள் எப்போது போவார்கள் என்று இருந்தது.
யசோ வேலைக்கு ஆயத்தமானதும் அவர்கள் போய் விட்டனர். சாப்பிடவும் இல்லை. குளிக்கவும் இல்லை. அப்படியே தூங்கிப் போனான் செந்தில். திங்கட்கிழமை காலை. மூவரும் விழுந்தடித்துக் கொண்டு கொலிஜ்ஜுக்கு வெளிக்கிட்டார்கள்.
செந்தில் வேலுக்கு தாயிடமிருந்து கடிதம் வந்திருந் அது வழக்கமான ஒப்பாரிகள்

தேம்ஸ் நதிக்கரையில் A 37
'உன்னைப் படாதபாடு பட்டுக் கஷ்டப்பட்டு லண்டனுக்கு அனுப்பினேன். தந்த கடனைக் கேட்டுத் துளைத்தெடுக்கிற மாமி. கொப்பரின் ர வியாபாரம் படுத்துப் போச்சு. உன்ர தங்கச்சி அட்வான்ஸ் லெவலில நாலு பாடம் பாஸ். யூனிவசிட்டிக்குப் போக வேணும் என்று நிற்கிறாள். நீ அங்கே என்ன செய்யுறாய்? உன்னோடு போன பெடிகள் உழைத்து உழைத்துக் காசு அனுப்புகினம்"
செந்தில் பெருமூச்சு விட்டான். பதினையாயிரம் ரூபா கடன் மாமியிடம். கள்ளமாகக் காசு அனுப்பவுப. ஐந்நூறு பவுன் வேணும்!
கிழமையில இரண்டு நாள் மாமூட்டை சுமந்து உழைக்கும் காசு சீவிக்கவே போதாது.
‘என்னோடு வந்தவர்கள் எவ்வளவோ காசு அனுப்பு றான்களாம்!"
எப்படிப் படிக்கிறான்கள்? எப்படிக் காசு அனுப்பு றான்கள் என்று இலங்கையில் இருக்கிறவர்க்கு என்ன தெரியும்
"என்னடா மூஞ்சியை நீட்டிக்கொண்டிருக்கிறாய்” என்றான் யசோதரன்.
செந்தில்வேல் கடிதத்தைக் கொடுத்தான். படித்து விட்டு "எழிய சிங்களவன்களால அங்கே ஒரு வேலைக்கும் வழி யில்லாம இஞ்ச வந்து இப்படிக் கஷ்டப் படுறம். அங்கே இருக்கிறவைக்கு என்ன தெரியும்? இஞ்ச ஏதோ காசு கொட்டி வழியுது என்டு ஓடிவந்தோம். இப்ப என்ன செய்யிறம்" என்றான் யசோ. பஸ்ஸுக்கு நடந்து கொண்டிருந்தார்கள்.
'எழிய சிங்கள அரசாங்கத்தால் எங்களுக்கு மட்டும் வேலைகிடைக்காமல் போகவில்லை. எத்தனையோ
●リー3

Page 24
38 A punt Gegonouri
ஆயிரம் சிங்களப் பெடிகளுக்கும்தான் வேலை இல்லை. தனிப்பட்ட தமிழ்ப் பிரச்சினை மட்டுமில்லை. நாட்டுப் பிரச்சினை' என்றான் யோகன்.
லண்டன் நகர் விழித்து காலை ஆரவாரத்தில் தத்தளித்துக்கொண்டிருந்தது.
'தமிழ்ப் பகுதியில் சிங்களக் குடியேற்றம் நடத்துற துக்கு உதவி செய்கிற தமிழ்ப் பெரிய மனிதர்களைச் முதலில் சுட்டுத்தள்ள வேணும். தங்கள் சொந்த வாழ்க்கைக்காகத் தன் சமுதாயத்தையே காட்டிக்கொடுக் கும் எட்டப்பன்கள் எங்களிடையில் இருக்கும்வரை எப்படியடா தமிழன் உய்வான்" யோகன் வந்த பஸ்சுக்குக் கை காட்டியபடி யசோவைப் பார்த்துக் கேட்டான்.
‘மெல்லக் கதை சுடுகிறது கொல்லுகிறது என்டு கதைக் காதை இங்கிலிசில பொலிசு பிடிச்சுப் போடுவான்" என்றான் செந்தில்.
'உம்மைப்போல கதைக்கவே பயப்பட்டால் எங்கட தமிழினம் எப்படியடா முன்னேறும்? சீவிக்கிறதென்டால் தமிழன் என்டு சொல்லிச் சீவி. உம்மைப்போல சந்தர்ப்ப வாதிகளும் புல்லுரிவிகளும் எங்கட பெடிகளிடையில் இருப்பதாற்றான் நாங்க இப்பிடிக் கஷ்டப்படுறம்'.
செந்திலுக்கு மூக்கில் கோபம் வந்தது. 'யசோ வுடன் இவன் சண்டை பிடிக்கிறது பத்தாது. இப்ப என்னோடும் வாறான்" என மனதுக்குள் திட்டிக் கொண்டான்.
'நான் என்ன சொன்னன் இப்ப? சும்மா கத்தாமல் பஸ்சில இரும். வீட்டைபோய்க் கதைப்பம்" என்றான் செந்தில்.
*ராத்திரி ராசரத்தினத்தார் சொன்னார் தான் ஒரு கட்சியோ கழகமோ ஆரம்பிக்கப் போறன் என்டு?

தேம்ஸ் நதிக்கரையில் A 39
ஆயிரம் நட்சத்திரங்களும் ஒரு சந்திரன் ஆவதில்லை. தமிழரின் விடுதலை உதய சூரியனைப்போல் வருகிறது. இந்தச் சின்ன முகில்கள் என்ன செய்யப்போகினம், ஆயிரம் பேதம் காட்டி" என்றான் யோகலிங்கம்
அந்தக் கிழமை எப்படிக் கழிந்தது என தெரியாது செந்திலுக்கு. இந்தச் சனிக்கிழமை வேலைக்கு அதிகம் ஆட்களில்லை என்றும் பேக்கரிக்காரன் சொன்னான். ஆயிரக் கணக்கானவர்கள் வேலையின்றிக் கஷ்டப்படும் போது தானே வந்த வேலையை விட்டு விடவும் விருப்பமில்லை.
அத்துடன் "அவள் வருவாள்என்றும்என்ன நிச்சயம்? சனிக்கிழமையும் ஞாயிற்றுக்கிழமையும் அவனுக்கு ஏதோ மாதிரி இருந்தது.
அடுத்த கிழமை வருடப் பரீட்சை தொடங்குகிறது. வேலை முடியப் படிப்பு. ஆனாலும் இரண்டாம சனிக் கிழமை பாலத்துக்குப் போக வேண்டும் என்று மனம்
தூண்டியது.
பேக்கரியால் வரும்போது கிங்ஸ் ரோட்டில் இறங்கி பாலத்தை நோ க் கி நடந்து கொண்டிருந்தான். பதினைந்து நாட்களுக்கு முன் "அவளுடன் திரிந்த ஞாபகம் வந்தது. பாலத்தை அண்டியதும் õ676 ஆச்சரியம்?
அவள் நின்று கொண்டிருந்தாள்.
அவனைக் கண்டதும் "ஹலோ" என்றாள் முகம் பளிச்சென்று சிரித்தது.
*"ஹலோ லோறா' என்றான்.
*என்ன அதிசயம்? இரண்டாம் தரம் பாலத்தில் உங்களைக் காணுகிறேன்' என்றான், ஏதும் கதைக்க வேண்டுமே என்பதற்காக.

Page 25
40 A ராஜேஸ்வரி
'ஒன்றும் தற்கொலை முயற்சி இல்லை" என்றாள் குறும்பாகச் சிரித்துக் கொண்டு.
வேறு என்ன கதைப்பது? இரண்டு கிழமையாக அவளை நினைத்துக் கொண்டிருக்கிறான் என்பதை எப்படிச் சொல்வது என்று யோசித்தான்.
போன கிழமையும் இந்தப் பாலத்துக்கு வந்தேன் என்று எப்படி அவனுக்குச் சொல்வது என்று யோசித்தாள் அவள்.
இனிய மாலைக் காற்று. அவள் லண்டனில் பெண்கள் 'சம்மர்" காலத்தில் போடும் மெல்லிய பருத்தி யாலான கைமூட்டில்லாத சட்டை போட்டிருந்தாள். கவர்ச்சியாக இருந்தது.
'இந்தப் பக்கம் எங்கேயோதான் இருப்பதாகச் சொன்னீர்கள். செல்சியிலா இருக்கிறீர்கள்" என்றாள்.
அவன் சிரித்தான் “செல்சியிலும் கென்சிங்டனிலும் இருக்க என் போன்ற ஏழை மாணவர்களுக்குக் கட்டுப்படி யாகும் என்றா நினைக்கிறீர்கள்" என்றான்.
* என் சிநேகிதி, கென்ஸிங்டனில் இருக்கிறாள். அப்படிப் பெரிதாக ஒன்றும் வாடகை கொடுக்கவில்லை" என்றாள் லோறா,
"நாங்கள் கிளப்பம் கொமனில் ஒரு 'பிளாட்"டில் இரு அறைகள் எடுத்திருக்கிறோம். மூன்றுபேர் சேர்ந்து இருக்கிறோம். நல்ல மலிவு" என்றான்.
அவளோடு கதைப்பது மிகவும் சந்தோசமாக இருந்தது அவனுக்கு.
எனக்கு ஒரு அறை எடுத்துத் தாங்களேன்" என்றாள் சட்டென்று.

தேம்ஸ் நதிக்கரையில் A 4.
அவன் திடுக்கிட்டுப் பார்த்தான். முன்பின் சரியாகத் தெரியாது. இரண்டாம் முறைதான் கண்டிருக்கிறான். தனக்கு இடம் பார்த்துத் தரச்சொல்கிறாள்!
'ஏலாதென்றால் விடுங்கோ; என் சிநேகிதி இருந்தால் நான் உங்களைக் கேட்கமாட்டேன். அவள் எப்போ வருவாள் என்று தெரியாது" அவள் குரலில் ஏமாற்றம் தொனித்தது.
'ஏலாதென்று இல்லை. ஆனால்." அவன் இழுத்தான். "ஆனால் என்ன” என்று கேட்ட வள் கைக் கடிகாரத்தில் நேரம் பார்த்தாள்.
'போகும் நேரமாகிவிட்டதா?" எ ன் றா ன் . சட்டென்று அவளைப் பிரிய மனம் இல்லை.
"கொஞ்ச நேரம் இருக்கு வீட்டுக்குப் போக. ஏன் இங்கே நின்று கதைக்கிறோம். எங்காவது "பப்புக்குப் G3Lur G3anu TLDT ””
அவனுக்குப் பகீர் என்றது.
மாமூட்டை தூக்கிச் சேர்த்த காசில் வாடகை, சாப்பாடு, பஸ் செலவு போக மீதம் ஒரு ஜக்கட் வாங்கப் போதுமா என்றிருக்கிறான். இவள் என்னவென்றால். அவன் பதிலைக் கேட்காமல் அவள் நடந்தாள் கிங்ஸ் ரோட்டில் ஒரு மூலையில் இருந்த பப்பில் போய் உட்கார்ந் தார்கள்- அவளாகப் போய் "பார் பக்கத்தில் ஒர்டர் கொடுத்தாள். "எனக்குத்  ெத ரி யு ம் பெடிகள் எங்களைப் போல் மார்ட்டினி குடிக்கமாட்டார்கள் என்று டானியல் பியர்தான் குடிப்பார். உங்களுக்கு என்ன பியர்" அவள் சிரித்தபடி கேட்டாள் எவ்வளவு வந்திருக்கும்? அவன் யோசித்துப் பர்ஸை எடுக்க முதல் அவள் காசு கொடுத்தாள். 'எனக்குத் தெரியும் லண்டனில் ஸ்ருடன்ஸ் எவ்வளவு கஷ்டப் படுகிறார்கள் என்று" என்றாள் மேசையில் கிளாசை வைத்தபடி.

Page 26
42 A printeggiuoli.
"டானியல் ஒரு ஸ்ருடன்ந். பார்ட் ரைம் வேலை செய்து உழைத்தான் ஆனாலும் மைராவும் தான் உதவி செய்தாள்" என்றாள் லோறா.
* யார் மைரா, யார் டானியல்" என்றான் செந்தில் பியரைக் குடித்தபடி.
"ஓ! உங்களுக்குத் தெரியாதவர்களைப் பற்றிச் சொல்லிக் கொண்டிருக்கிறேன். என் சினேகிதி மைரா அவள் காதலன் டானியல். கல்யாணம் முடிக்க பெல் வாஸ்டுக்குப் போனார்கள். என்ன நடந்ததோ தெரியாது. இரண்டு மாதமாக மைராவிடமிருந்து ஒரு தகவலும் இல்லை" என்றாள் லோறா துக்கத்துடன்,
‘தேன்நிலவுக்குப் போயிருப்பார்கள்" என்றான் செந்தில்.
'மைரா சொல்லாமல் கொள்ளாமல் நிற்பவள் இல்லை" என்றாள் லோறா.
சிறிது நேரம் இருவரும் பேசவில்லை. "ஏதும் நல்ல அறை அகப்பட்டால் உங்களுக்குப் போன் பண்ணு கிறேன்" என்றான் செந்தில்.
‘ஓ! நோ. போன் பண்ண வேண்டாம். நான் அந்தப் பாலத்தில் வந்து சந்திக்கிறேன்" என்றாள் சட்டென்று.
அவன் வியப்புடன் பார்த்தான். 'நான் ஒரு வெள்ளைக்கார வீட்டில் குழந்தை பார்க்கிறன். அவர் களுக்கு நான் யாரையும் கூட்டிக்கொண்டு போவது பிடிக்காது" என்றாள் லோறா.
தான் அந்நியன் என்று ஒரு உணர்வுமில்லாமல் தன்னிடம் எல்லாம் சொல்லும் அவளை அவனுக்குப் பிடித்திருந்தது
இருவரும் வெளியே வரும்போது மெல்ல இருள் பரவத் தொடங்கி இருந்தது.

தேம்ஸ் நதிக்கரையில் A *
வானம் நிர்மலமாக இருந்தது. ஒன்பது மணியாகி யும் இன்னும் இருளவில்லை. பூரண நிலா வெளிச்சம் இன்றி இருந்தது. அவர்கள் இருவரும் கிங்ஸ் ரோட்டில் சந்தோசமாக நடந்து கொண்டிருந்தார்கள். செந்தில் வேலின் மனதில் வாழைமரங்கள் நிறைந்த ஏழாலை ஞாபகம் வந்தது.
4
செந்தில் வீட்டுக்குப் போனபோது அறை வெறுமை யாகக் கிடந்தது லோறாவைப் பற்றயும் அவளுடன் க ைத த்தது, "பப்"புக்குப் போனது பற்றியும் யாருடனாவது "புழுக வேண்டும் போல் இருந்தது.
சோதனைக்குப் படித்த புத்தகங்கள் தாறுமாறாகக் கிடந்தன. குசினியில் சாமான்கள் ஒழுங்கில்லாமல் கிடந்தன. மனம் மிகவும் உற்சாகமாக இருந்தது. ஏதோ வாயில் வந்த பாட்டெல்லாவற்றையும் முணு முணுத்துக்கொண்டு வீட்டை ஒழுங்கு செய்தான் செந்தில்வேல்.
லோறா புதன் கிழமை சந்திப்பதாகச் சொல்லியிருந் தாள். அதற்கிடையில் பேப்பரைப் பார்த்து ஏதாவது அவளுக்கு அறை தேடவேண்டும். விம்பிள்டன் பக்கம் வீடு பார்க்கச் சொல்லியிருந்தாள்.
ஒரு விதத்தில் விம்பிள்டனில் அவளுடன் திரிவது அவனுக்குப் பிடிக்கவில்லை. லண்டனில் ஒரு வெள்ள வத்தை என்றால் அது விம்பிள்டன்தான். யசோதரன் தமக்கை வீட்டுக்கு ஒரு தடவை போய்விட்டு வந்தால் எத்தனையோ கதை கேட்கலாம். அவன் கிழட்டுப் பாணி யில் ராகம் இழுத்துத் கதை சொல்லிக்கொண்டிருப்பான். யார் யாரைப் பார்க்கிறார்கள், யாரின் கல்யாணம்

Page 27
f4 A BritGagaivaji
குழம்பிப் போச்சு, என்றெல்லாம் ப ட் டி ய ல் சொல்லுவான்.
அவர்கள் லோறாவுடன் செந்திலைக் கண்டால். என்ன? கண்டால் என்ன சொன்னால் என்ன? என்று ஒரு கணம் நினைத்தான்.
அடுத்த கணம், அட கடவுளே யாரும் ஏழாலைக்கு எழுதாமல் இருக்க வேண்டுமே என எண் ணிக் கொண்டான்.
இரவு பதினொரு:மணிக்குமேல் யோக லிங் கம் களைத்துப் போய் வீடு வந்தான்.
‘எப்படா எங்க நாட்டில விடிவு காலம் வரும்? இங்கே இளவு பிடிச்ச இத்தாலியன் வேலை மட்டுமல்ல ஏதோ நாய் பேய் மாதிரி வெருட்டுறா ை" எனச் சொல்லிக்கொண்டு வந்தான் அவனுடைய அலுப்பையும் மனச்சலிப்பையும் கண்டவுடன் லோறாவைப் பற்றிச் சொல்ல வேண்டும் என்று நினைத்தவை வாயில் வரவில்லை.
"என்ன பேசாமல் இருக்கிறீர்' எ ன் ற ர ன் யோகலிங்கம்.
செந்திலின் வாய் முந்தியது. "இன்று லோறாவைக் கண்டன்'
சரிந்து படுத்திருந்த யோகலிங்கம் அவனை ஒருக்களித் துப் பார்த்தான்.
"அந்தப் பெட்டையின் பேரோ லோறா. நல்ல வடிவான பெயர். சரோ என்கிறது போல கிடக்கு. நீர் என்ன எம். ஜி.ஆரோ இப்ப" நக்கலாகக் கேட்டான் யோகன். செந்தில் பதில் பேசவில்லை.
"சும்மா பகிடிக்குக் கேட்டன், எங்க கண்டனீர் பெட்டையை? ஏதோ பிளான்பண்ணிப் பெட்டை பிடிக் கிறீர் போல கிடக்கு" என்றான் யோகலிங்கம்.

தேம்ஸ் நதிக்கரையில் A 45
"அப்படி இல்ல. லோறா இந்தப் பக்கம் ஏதும் அறை" தேட ஏலுமோ என்று கேட்டாள்" .
"ஏதும் லோக்கல் பேப்பரைப் பாருமன் சும்மா சோதனைக்குப் படிக்கிறதைப் பார்க்காமல் திரியாதை" என்றான் யோகன். м
'ஏதோ நான் உதவி செய்வேன் என்டு தெரிஞ்சு தானே கேட்டிருக்கிறாள்' என்றான் செந்தில்.
"ஒம், ஆனா கன நேரம் பெட்டைக்குப் பின்னால திரியாதை. பெண்கள் மது என்று சொல்வார்கள் பெரி யார்கள்" என்றான் குறும்பாக யோகன்.
"நான் என்ன திரியிறன். எங்கள் தரவளிக்குச் சாப் பிடக் காசில்லை. இவளவைக்குச் செலவழிக்க எங்கே காசு கொட்டிக் கிடக்கு? இண்டைக்குப் பெட்டைதான் *ப்ப்"புக்குக் கூட்டிக் கொண்டு போச்சு" என்றான் செந்தில் மகிழ்ச்சியுடன்.
படுத்திருந்த யோகன் சட்டென்று எழும்பியிருந்தான்* நண்பனை ஏற இறங்கப் பார்த்தான்.
"ஒய் என்ன காணும் மன்மத லீலைப் படக்கதை சொல்கிறீர்" என்றான் செந்திலை நம்பாமல்,
** என்னடா வாயைப் பிளக்கிறாய்?" என்றான் செந்தில், யோகன் சிரித்தான். "குட் லக் உம்முடைய படிப்புக்கு" என்று கூறி விட்டுத் திரும்பிப் படுத்தான்.
காலையில் வந்ததும் வராததுமாக யசோவின் காதில் ஏதோ ரகசியம் போல் குறும்பாகச் சொன்னான் யோகன்:
"செந்தில் ஒரு பெட்டை பிடிச்சிருக்கானடா' யசோ நம்பாமல் வாயைப் பிளந்தான்.
‘என்னடா நாங்க இரண்டு பேரும் வந்து ஒண்டரை வருஷம். ஒரு பெட்டை என்னெண்டு பார்க்குதில்லை.

Page 28
-40 A ராஜேஸ்வரி
இவர் ராஜா, றோட்டில திரிஞ்சு என்னெண்டு பெட்டை பிடிச்சவர்?" யோகலிங்கம் யசோவைப் பார்த்து விழுந்து விழுந்து சிரித்தான்.
யசோவின் வாயெல்லாம் பல்லாக இருந்தது.
"பப்புக்குப் போனவையாம்" முகத்தைத் தோளில்
இடித்துப் பெண்கள் போல் நெளித்துக் காட்டிவிட்டு
ஓகோ என்ற சிரிப்புடன் பாத்ரூமுக்குள் நுழைந்தான் யோகன்.
"சும்மா, உண்மையாய்ப் போனணியடா அவளோட"
யசோ ஏதோ அதிசயம் கேட்பதுபோல் கேட்டான்.
ஆஸ்பத்திரியில் வேலை செய்யும் யசோதரனின் சினேகிதனுடன் எத்தனையோ தரம் டான்ஸ் என்று சாட்டிக் கொண்டுபோய் ‘ஒன்று (ஒரு பெண்) பிடிக்கக் கஷ்டப்பட்ட வேதனையை அவன் முகத்தில் கண்டான் செந்தில்.
‘அட கடவுளே என்ன கொடுமை இது? ஒரு ஆண் பிள்ளை பெண்பிள்ளையோட கதைத்தால் அதற்கு ஏனடா இப்படி வாயைப் பிளக்கிறாய்" செந்தில் எரிச் சலுடன் கத்தினான் யசோதரனைப் பார்த்து.
"எந்த ஆட்டக்காரியோ" என்றான் சலிப்புடன் யசோதரன்,
"எங்களைப் போல ஆட்களோட கதைக்கிறவளவை எல்லாம் ஏன் ஆட்டக்காரிகள் என்று முடிவு கட்டுகிறீர் காணும்?" என்றான் யோகலிங்கம், கோப்பிக்கு தண்ணீர் வைததபடி,
"பின்னே என்னடா எந்த உருப்படியானவள் எங்களைப் போல ஒட்டாண்டிகளுக்குப் பின்னால் திரிவள்" யசோ சாரத்தை மாற்றியபடி கேட்டான். அவன் குரலில் நேற்றுத்தான் லண்டனுக்கு வந்த செந்தில்

தேம்ஸ் நதிக்கரையில் A 47
வேல் எப்படி ஒரு பெண் பார்த்தான் என்ற ஆச்சரியம்
இருந்தது.
"ஆட்டக்காரியாக இருக்கத் தேவையில்லை உண்மை யான அன்போட பழகிற பெண்ணாக இருக்கலாம். வெறும் போலி ஆடம்பரத்தில் மயங்காத பெண்ணாக இருக்கலாம். வெறும் சூட்டுக்கும் கோட்டுக்கும் பின்னால் திரிந்து ஒருறெஸ்ட்ரோரண்ட் சாப்பாட்டுடன்கட்டிலுக்கு வராத பெண்ணாக இருக்கலாம்" என்றான் யோகன்.
"என்ன கோதாரியோ, தம்பியினர் படிப்பு இதோட சரி” என்றான் யசோ.
"அதுதான் எங்களின்ர பெடிகளின்ர தப்பு. லண்ட னிலை ஒரு பெண்பிள்ளை கிடைத்தால் பெட் ையோட திரிந்து படிப்பை மறந்து விடுகிறார்கள். செக்ஸ் இஸ் பார்ட் ஒவ் த லைவ், பட் தற் இஸ் நொட் எ லைவ்' என்றான் யோகன்.
'ஏதோ நீர் வெட்டிப் புடு ங் கிற அரசியல் கதைக்கிறீர். அவர் ஒருவர் ஆறுமாதத்தில் ஒருத்தியிலை சுருண்டுபோனார். உங்களப் போல ஆட்கள் எங்கட தம ழருக்கு என்னடா செய்யப் போகினம்" எனறான் யசோ,
புதன்கிழமை தனக்கு அரை நேரப் பள்ளிக்கூடம் என்று சொல்வி இருந்தான் செந்தில்வேல் ஆனால் எத்தனை மணிக்கு வருவான் என்று சொல்லவில்லை.
வீடுபார்க்கப் போவதாக அன்று முழுநாளும் லீவு எடுத் திருந்தாள் லோறா.
தான் வீட்டை விட்டு வெளியேறச் சொன்னவுடன் ஏதோ உலகம் தலை கீழாகக் கவிழ்ந்ததுபோல் இருந்த வள் சட்டென்று பூரிப்புடன வெளிக்கிடுவது பீனலப்பிக்கு விந்தையாக இருந்தது. "யாரேன் பெடிகளைப் பார்த் திட்டாளோ" என்று பீட்டர்க் கிழவனைக் கேட்டாள்

Page 29
48 A ராஜேஸ்வரி
பீனலப்பி. பீட்டர்க் கிழவன் தனக்கு ஒன்றும் தெரியாது என்று சொல்லிவிட்டான்.
பகல் இரண்டு மணி. லண்டன் நகரம் யாழ்பாணத் தைவிட மோசமான வெயிலில் கருகிக் கொண்டிருந்தது. செந்தில் கொலிஜ் முடிந்ததும் முடியாததுமாக விழுந் தடித்துப்போய் ஒரு ஜக்கட் வாங்கினான். சும்மா வெறும் சேர்ட்டுடன் அவளுடன் திரிய அவன் விரும்ப வில்லை. அவன் ஜக்கட்டைப் போட்ட உடம்பு அவிந்து போய் வியர்க்க, விறுவிறுக்க வந்துகொண்டிருந்தான்.
தனக்காக இப்படி விழுந்தடித்து வரும் அவனைப் பார்த்ததும் லோறாவுக்கு அவனில் பரிதாபம் வந்தது.
"ஐயாம் சாரி செந்தில்" என்றாள் லோறா அவனைக் கண்டதும்.
அவள் குரலின் இனிமை அவனைக் கவர்ந்தது. "நான் என்ன அப்படிப் பெரிதாகச் செய்துவிட்டேன்" என்றான் செந்தில்,
கையில் வீட்டு விளம்பரம் கொண்ட பேப்பர் இருந் தது. பஸ்சில் வரும்போது விம்பிள்டன் பக்கம் இரண் டொரு வீடு பார்த்து அடையாளம் போட்டு வைத்திருந்: தான் செந்தில்
‘மைரா நேற்றுத்தான் வந்தாள். இல்லை யென்றால் அவளும் வந்திருப்பாள்" லோறாவின் குரல் துக்கத்துடன் ஒலித்தது.
“என்ன இல்லை என்றாள்" என்றான் செந்தில், "அவளுக்கு எத்தனை துன்பம்" லோறாவின் கண் களில் நீர் தழும்பியது.
"என்ன நடந்தது' *மைராவும் டானியலும் பெல்லாஸ்டுக்குப் போய் இறங்கியவுடன் டானியல் துப்பாக்கிக்குப் பலியாகி விட்டான்"

தேம்ஸ் நதிக்கரையில் A : 49
செந்தில் ஒரு கணம் பேசாமல் இருந்தான். அதிர்ச்சி யில் அவன் தொண்டை கட்டியது.
‘டானியலின் தம்பி பற்றிக் என்பவன் ஏதோ கூட்டத் துடன் தொடர்பாம் - கலகக் கூட்டத்தில் பற்றீக் தலை மறைவாகி எத்தனையோ மாதமாம், டானியலும் பற்றிக்கும் கிட்டத்தட்ட ஒரு மாதிரி, டானியல் ரெயி லால் இறங்கி வீட்டுக்குப் போகும் வழியில் மைராவின் கண்எதிரே சுட்டார்களாம். அந்த அதிர்ச்சியில் மைரா இவ்வளவு தா ளு ம் பெல்வாஸ்ட் ஆஸ்பத்திரியில் இருந்தாளாம்"
பெல்வாஸ்ட் கொலைகளைப் பற்றி டெலிவிஷனில் அடிக்கடி பார்த்திருக்கிறான், ஆனால் தனக்குத் தெரிந்த ஒருத்திக்குத் துன்பம் நடந்திருக்கிறது என்று தெரியாது.
இருவரும் விம்பிள்டனில் இறங்கும் வரைக்கும் அதிகம் பேசிக் கொள்ளவில்லை. பார்க்கப்போன வீடும் லோறா வுக்குப் பிடிக்கவில்லை.
ஆனால் செந்திலைப் பொறுத்தவரையில் பிடித்திருத் தது. தாங்கள் இருக்கும் குப்பை வீட்டைப் பார்த்தால் என்ன சொல்வாளோ என்று இருந்தது அவனுக்கு இன்னும் நாலைந்து வீட்டைப் பார்ப்பின் வாடகை வீடென்றால் என்னவென்று தெரியவரும் என்று யோசித் தான் செந்தில்.
அவன் நினைத்தது சரி. இரண்டாம் வீட்டைப் பார்த்ததுமே "இங்கே எல்லாம் சின்ன அறைகளாகவா இருக்கும்" என்றாள். “உம்முடைய சினேகிதி இருக்கும் அறை எப்படி" என்று கேட்டான் செந்தில், எரிச்சலைக் காட்டாமல்.
*நான் ஒரு நாளும் அவள் அறைக்குப் போகவில்லை" என்றாள் லோறா.

Page 30
50 A ராஜேஸ்வரி
'நீர் பெரிய வீட்டில் பிம்லிக்கோவில் இருந்ததுபோல் வீடு கிடைக்கும் என்று நினையாதேயும் - நீர் கிழமைக்கு. இருபது பவுனில் வேலை செய்யும்போது ஐந்து பவுண் கொடுத்து எடுக்கும் அறை எப்படி இருக்க வேண்டும் என எதிர்பார்ககிறீர்” என்றான் செந்தில்.
இயற்கையன்னை தன் பச்சை வெல்வெட்டுப் பட்டா டையை விரித்தாற் போல் விரிந்து கிடந்தது விம்பிள்டன் கொமன். குழந்தைகள் விளையாடிக் கொண்டிருந்தார் கள். பெரியவர்கள் இனிய காற்றின் அணைப்பில் மயங்கிப் படுத்திருந்தார்கள்.
யாழ்ப்பாணத்துக் கொடிய வெயில் காலத்தில் ஏழாலைத் தோட்டத்தில் வாழை மர நிழலில் இருந்து புத்தகம் படிப்பது ஞாபகம் வந்தது செந்திலுக்கு.
இப்போது என்ன செய்வார்கள் வீட்டில்? மரத்தில் இருந்து இளநீர் பறித்துக் குடிப்பார்களா?
என்ன யோசிக்கிறீர்கள்? உங்கள் கேர்ள் பிரண்ட் தற்செயலாய் எங்களை ஒன்றாய்ப் பார்த்தால் ஏதும் சொல்வாள் என்றா"
செந்தில் அவளைக் கூர்மையாகப் பார்த்தான். உண்மையாகக் கேலி செய்கிறாளா அல்லது ஆழம் பார்க்கிறாளா? அவன் பதில் பேசாமல் சிறிது நேரம் இருந்துவிட்டு அவளைப் பார்த்துச் சொன்னான்.
"எங்களைப் போல ஸ்ரூடன்ஸ் எப்படி கேர்ள் பிரண்ட் வைத்திருக்கிறது? 'பார்ட் ரைம்' வேலையில் இடைக்கிற காசு சாப்பாட்டுக்கும் வாடகைக்கும் போதாமல் இருக்கு' - அவன் பார்வை அவளில படாமல் வெறும் வெளியில் பதிந் திருந்தது . மேலும் தொடர்ந்தான் :
ஆனால் தற்செயலாக உங்கள் பாய் பிரண்ட் வந்து என் கழுத்தைப் பிடிக்காமல் இருக்க வேண்டுமே என்று

தேம்ஸ் நதிக்கரையில் A 51.
தான் யோசிக்கிறேன்" என்றான் பார்வையை அவள்
முகத்தில் பதித்துக்கொண்டு.
உடனே லோறாவின் முகம் சிவந்தது. "அப்படி ஒன்றும் இல்லை" என்றாள். லண்டனிலும பெண்கள் வெட்கப்படுவார்களா
என்று ஒருகணம் யோசித்தான் செந்தில்.
"அப்படி யாரும் இருந்தால் ஏன் உங்களுக்குக் காத்திருந்தேன் மணிக்கணக்காக" அவள் குரல் மென்மை யாக இருந்தது.
அவன் தயக்கமின்றி அவளைப் பார்த்தான்; அன்பு பொங்கி வழித்தது, இருவர் கண்களிலும். இதுதான் காதலா?
"வேறு ஏதாவது விலாசம் இருக்கிறதா? போய்ப் பார்ப்போம்" என்றாள் லோறா.
அன்றைய பேப்பரை வாங்கிப் பார்க்கும் நோக்கத், துடன் செந்தில்வேல் எழுந்து 'சென்றான். அவன் போவதைப் பார்த்துக் கொண்டிருந்தாள் லோறா.
இரண்டொரு கிழமைக்கு முன் ஒருவரை ஒருவர் முன் பின் தெரியாது. இப்போது? லோறாவின் வாழ்க்கையில் முதல் சந்தித்த அபூர்வப் பிறவி அவன், அவனளப் பொறுத்தவரையில். தன் இளமை வளர்ச்சியை குரூர மான கண்களால் வடித்தெடுத்த சிறிய தகப்பன் ஸிமசன் போலில்லை செந்தில் பருவத்தைப் பாகெனக் குடிக்கும் டேவிட் இல்லை; செந்தில் வித்தியாசமானவன்.
செந்தில் திரும்பி வந்தான் வெறும் கையுடன். "விம்பிள்டன் கொமனில் எவன் பேப்பர் வைத்திருப்பான் என நினைத்துப் போனாய்’ என்று கேட்க லோறா நினைத்தாள். தனக்காகத் திரியும் செந்திலைத் துக்கப் படுத்தும் பகிடிகள் ஏதும் விட அவள் தயாராயில்லை.

Page 31
52 A ராஜேஸ்வரி
இருவரும் விம்பிள்டன் தெருக்களில் நடந்து திரிந்தனர்.
"அலைந்தது போதும் வீக் எண்டில் ஒய்வு இருந் தால் மீண்டும் போய்ப் பார்ப்போம் என்றாள் லோறா.
பகலில் சாப்பிடவில்லை.
கொஞ்ச நாட்களாகப் பகல் உணவுக் காசை மிச்சம் பிடித்து வைத்திருந்தான், லோறாவை எங்காவது சாப்பிடக் கூட்டிக்கொண்டுபோவதற்காக.
பின்நேரம் ஐந்து மணிக்குமேல் இருக்கும். செந்திலுக்கு பசி வயிற்றைக் கிண்டியது.
ஐஸ்கிறீம் காரனைக் கண்டதும் லோறா இரண்டு பெரிய 'ஐஸ் கோர்ன்ஸ்’களை வாங்கிக்கொண்டு வந்து சேர்த்தாள்.
"ஏன் பசியா" என்றான் செந்தில். 吸 'இல்லை நடந்த களைப்பு, தண்ணிர்தான் கிடை யாதே லண்டனில்" என்றாள் வழியும் ஐஸ்கிறீமைத் துடைத்தபடி.
"ஏதாவது சாப்பிடப் போவோமோ" என்றான் செந்தில்,
"இந்த நேரத்திலா" லோறா மணிக்கட்டைப் பார்த்தாள்.
'என்னோடு இவ்வளவு தூரம் நடந்ததே போதும். நேரத்தோடு போனால் படி க்க லா ம், பரீட்சை வருகிறது என்று சொன்னீர்கள்" லோறா, அன்புடன் சொன்னாள்.
செந்திலுக்குச் சட்டென்று அவளில் எரிச்சல் வந்தது. ஏதோ சேவகன் போல் என்னை எல்லா இடமும் கூட்டிப் போனாள். தண்ணீர் விடாய்க்கு ஏதோ ஐஸ் கிறீம் வாங்கித் தந்தாள். இப்போது சாப்பிடக் கூப்பிட ஏதோ

தேம்ஸ் நதிக்கரையில் A 33
சாட்டுச் சொல்கிறாள் என மனதுக்குள் திட்டிக் கொண்டான்.
அவளைப் பேசவிட்டாலும் அவன் மனதில் ஏதோ நினைக்கிறான் என்பது அவனது சோகமான கண்களில் இருந்து தெரிந்தது லோறாவுக்கு.
'மன்னித்து விடுங்கள், ஏதும் தப்பாகச் சொல்லியிருந் தால், உங்களின் நேரத்தையும் காசையும் நான் கரியாக்கு கிறேன் லண்டனில் மாணவர்கள் எவ்வளவு கஷ்டப் படுகிறார்கள் என்று தெரியும் இன்று என்னுடன் வருவ தற்காகச் சிலவேளை நீங்கள் உங்கள் அரைநேர வேலையைச் செய்யாமல் விட்டிருக்கலாம்" அவன் கோபம் வந்த இடம் தெரியாமல் போய்விட்டது, அவளின் பேச்சைக் கேட்டதும்.
அவள் சொல்வது உண்மை இன்று பின் நேரம் அவளோடு திரிவதால் வேலைக்குப் போகமாட்டான். ஐந்து பவுனுக்கு நட்டம்.
ஒரு அழகான பெண்ணுடன் வசந்த காலந்தில் திரிவதைவிட ஒருவன் வேலைக்குப் போவது பெரிது என்று நினைக்கமாட்டான் என செ ந் தி ல் வேல் நினைத்தான். V . யாரோ இலங்கையர்போல் தெரிந்த ஒருவர் அவனை யும் அவளையும் ஏற இறங்கப் பார்த்து விட்டுப் போனார்.
"யார் அந்த ஆள், தெரிந்த ஆளா? ஒரு மாதிரிப் பார்த்துவிட்டுப் போகிறார்" என்றாள் சிறகடிக்கும் தன் விழிகளையுயர்த்தி,
"தமிழர்கள் ஒருவருக்கு ஒருவர் தெரிந்திருக்கத் தேவையில்லை. தெரியப்பண்ணிக் கொள்வார்கள், விசித்திரமான பார்வைகளால். எனக்குத் தெரியாது
Cs-4

Page 32
54 A ராஜேஸ்வரி
ஆளை, ஆனால் அவருக்குத் தெரிந்திருக்கலாம் என்னை' என்றான் செந்தில்வேல்.
அவன் எவ்வளவோ சொல்லியும் அவள் "விம்பி பாரைத் தவிர வேறொரு இடமும் வரமாட்டேன் *ன்றாள். மலிவாகச் சாப்பிடக்கூடிய இடம் "விம்பி பார்" தான், கிங்ஸ் ரோட்டில்?
‘நான் சாப்பிட வரவில்லை என்றபோது உங்கள் முகம் கறுத்ததே ஏன்' என்றாள் லோறா, மாட்டிறைச்சிப் பொரியலைக் கடித்தபடி,
அவன் மறுமொழி சொல்லாமல் அவளைப் பார்த் தான். இருவர் பார்வையும் தழுவிக் கொண்டன. அவள் கொஞ்சநேரம் அவனை உற்றுப் பார்த்து விட்டுச் சொன்னாள்.
“உங்களைக் கண்டிருக்காவிட்டால் அந்தப் பாலத் தில் எனக்கு என்ன நடந்திருக்கும்?"
வாயில் போன சாப்பாடு அவன் தொண்டையில் அடைத்தது.
அப்படியானால் உண்மையில் அன்று தற்கொலை செய்யத்தான் நின்று கொண்டிருந்தாளா?
அவன் முகம பயத்துடன் அவளை எடைபோட்டது. வயது பதினேழு என்றாள் அதற்கிடையில் என்ன துக்கம் தற்கொலை செய்யுமளவுக்கு?
அவள் அவனைப் பார்க்காமல் சொன்னாள்.
'உங்களைப்போல் ஒரு அன்புள்ள ஜீவனை நான் முன்பு சந்திக்கவில்லை. என்னால் தாங்கமுடியாத சில துக்கங்களும் சங்கடங்களும் ஏற்பட்டன. என்ன செய் வது என்று தெரியவில்லை ஏன் வாழ வேண்டும் என்று வந்தது. அதுதான் அன்று பைத்தியக்காரிபோல் பாலத் தில் நின்றேன். சிலவேளை மைரா லண்டனில் இருந்திருந்

தேம்ஸ் நதிக்கரையில் A 55
தாலாவது கொஞ்சம் நிம்மதியாய் இருந்திருப்பேன். தெய்வம் மனித உருவில் சிலவேளை வருவதாகச் சொல் வார்கள். அன்றைக்கு அப்படித்தான் நினைத்தேன், உங்களைப் பார்த்ததும் '
செந்தில் தன்னை அறியாமல் அவள் கைகளைப் பற்றி னான். அவள் விடுவித்துக் கொள்ள முயலவில்லை மாறாக அன்புடனும் கனிவுடனும் அவனைப் பார்த்தாள். ‘என்ன நடந்தது என்று கேட்காதீர்கள்" என்றாள் லோறா.
* கேட்கவில்லை. இனி என்னிடம்தான் சொல்ல வேண்டும் என்றுமில்லை மைரா தான் வந்துவிட்டாளே’ செந்தில் சொன்னான், அவள் கையை விடாமல்
ஐலண்டுக்குப் போன மைரா திரும்பி வரவில்லை. சுரண்டும் சில வர்க்கத்தின் கொடுமைக்கு எதிராகத் திருப்பப்பட்ட மைரா திரும்பி வந்திருக்கிறாள். தனிப் பட்ட மக்களின் சுயநலத்தைவிட ஒரு இனத்தால் மற்றொரு இனமக்கள் சுரண்டப்படுகிறார்கள் என்பது தான் இன்றைய பிரச்சினை என்கிறாள்' என்றாள் லோ றா, அன்று வெகு நேரம் வரை அயர்லாந்தில் நடக்கும் பிரச்சினை பற்றிப் பேசிக் கொண்டிருந்தார்கள்.
5
ஒரு கிழமை அலைந்து திரிந்தபின் லோஹாவுக்கு ஒரு உகண்டா இந்தியனின் வீட்டில் இடம் கிடைத்தது முதல் தடவை லோறாவையும் செந்திலையும் கண்டவுடன் புருஷன் பெண்சாதி என நினைத்துக் கொண்டார்கள். அவன் போனபின்லோறாவிடம் வீட்டுக்கார சர்மிளா ஏன் மோதிரம் போடவில்லை என்று கேட்டாள்.

Page 33
56 A ராஜேஸ்வரி
லோறா வெட்கத்துடன் சிரித்தாள். “அவர் என் புருஷன் இல்லை. சினேகிதன்" என்றாள் லோறா.
சர்மிளாவுக்குப் புரியவில்லை அவள் தன் பதினாறு வயது மகளை வெளியில் லிடுவதில்லை. தானும் புருஷனும் இல்லாத நேரம் மகளையும் மற்றச் சின்னக் குழந்தை களையும் விட்டு கதவைப் பூட்டிக் கொண்டு செல்வாள்.
எப்படித் தாய் தகப்பன் இப்படி ஒரு அழகான பெண்ணை வெளியில் விட்டார்கள் என்று சர்மிளா யோசிப்பது அவள் முகத்தில் தெரிந்தது
தன் ‘புது அறையின் கட்டிலில் இருந்தபடி முன்னும் பின்னும் பார்த்தாள் லோறா.
ஒட்டை மேசை, பெயின்ட்கழன்ற நாற்காலி, கரும் புள்ளி படாந்த கண்ணாடி; இருந்தால் கீழே போகும் கட்டில் லோறா தனக்குள் சிரித்துக்கொண்டாள்.
பிம்விக்கோவில் தான் ஆயாவாகத்தான் இருந்தாள், வசதியான அறையில்.
விம்பிள்டனில் சுதந்திரப் பிறவியாக இருக்கிறாள். அறை எப்படி இருந்தால் தான் என்ன?
அது அவளுடைய அறை, எப்படியும் ஒருவேலை எடுத்துவிடவேண்டும்.
அதன் பின் அவள் தன் காலிலேயே ஊன்றி நிற்கப் போகும் சுதந்திரப் பெண்.
பிம்விக்கோவில் முன்னுாறு பவுண் வரை மிச்சம் பிடித்து வைத்திருந்தாள். அதில் கை வைக்கத் தொடங்க வில்லை. ஒரு வேலை தேடிவிட வேண்டும் என்று நினைத்துக் கொண்டாள்.
செந்திலுக்கு முதல் வருடப் படிப்பு முடிந்துவிட்டது. சுமாராகச் செய்திருப்பதாகச் சொன்னான். பேக்கரியில் வேலை முடிய அன்று பின்நேரம் லோறாவிடம் வந்தான்.

தேம்ஸ் நதிக்கரையில் A 57
லோறா அன்று பகல் வேலைதேடித் திரிந்ததால் கொண்டுவந்த சாமான்களை அரைகுறையாக அடுக்கிப் போட்டிருந்தாள்.
சர்மிளா கதவைத் தட்டும் சத்தம் கேட்டுத் திறந்தாள். சேந்தில் சிரித்த முகத்துடன் நின்றுகொண்டிருந்தான். அவள் மேலே கைகாட்டி விட்டாள்.
செந்தில் உள்ளே போனபோது லோறா அறையில் இல்லை. சும்மா இருக்க எரிச்சலாக இருந்தது.
அரைகுறையாகக் கிடந்த சாமான்களை அடுக்கத் தொடங்கினான்.
எத்தனை அழகான உடுப்புக்கள்; தன்னிடம் எத்தனை சேர்ட் இருக்கிறது? ஒவ்வொரு உடுப்பையும் அடுக்கும் போது அவளைத் தொடுவதுபோல் இருந்தது. அழகும் இனிய உணர்ச்சியும் தரும் மென்மையான "சம்மர்" உடுப்புக்கள் குவிந்து கிடந்தன.
அறைக்கு வந்த லோறா செந்தில் செய்யும் வேலையைக் கண்டு திகைத்தாள். எத்தனை உரிமையுடன் அவள் சான் உடைமைகளை அடுக்குகிறான். ஏனோ அவள் அவனைக் கோபிக்கவில்லை மெல்லிய புன்னகையுடன் அ x ன் அருகில் உட்கார்ந்தாள். "நான் குடும்பத்தில் மூத்த பெண்தான். ஆனால் ஒன்றும் செல்லப் பெண் இல்லை. நானே என் வேலைகளைச் செய்யப் பழகி இருக்கிறேன்." என்றாள் லோறா.
'நான் ஒன்றும் வேலை செய்ய வரவில்லை தனியாகச் சும்மா இருக்க ஒரு மாதிரி இருந்தது ஏன் நேரத்தை வீணாக்க வேண்டும் என்று பார்த்தேன்' என்றான். லோறா சா ப்ப ா டு வாங்கிக்கொண்டு வந்திருந்தாள் இருவருக்கும். 'நான் வருவேன் என்று எப்படித் தெரியும்" என்று கேட்டான், செந்தில்வேல்.

Page 34
58 A ர்ாஜேஸ்வரி
லோறா பதில் சொல்லாமல் குறும்பாக அவனைப் பார்த்து சிரித்தாள். என்னசிரிப்பு இவளுக்கு? எலும்புக்குப் பின் நாய் வருவதுபோல் என்னைப்பற்றி நினைக்கிறாளா என்று ஒருகணம் நினைத்தான்
செந்தில்வேல் அன்றைய "ஈவினிங் நியூஸ்" வாங்கிக்
கொண்டு வந்திருந்தான். வெஸ்ட் எண்ட்" கடைகளில்
வேலைக்குச் சில விளம்பரங்கள் இருந்தன அவைகளுக்கு அடையாளம் இட்டுக் கொண்டு வந்திருந்தான்.
லோறா மகிழ்ச்சியுடன் அந்த விளம்பரங்களைப் பார்த்தாள். அடுத்த நாளே போன் பண்ணிப் பார்ப்ப தாகச் சொன்னாள். மைராவும் ஒக்ஸ்வோர்ட் ஸ்ரீட்டில் தான் ஒரு வாசனைத்திரவியக் கடையில் வேலை செய் கிறாள்.
போன் பண்ணிப் பார்த்துச் சரிவந்தால் தனக்குத் தெரிவிக்கச் சொல்லி விட்டுப் போன, ன் செந்தில். அன்றிரவு வீட்டுக்குப் போன போது யோகலிங்கமும் யசோதரனும் அங்கு இல்லை. ፳ኳ
எங்கே போயிருப்பார்கள் என்று எண்ணிக் கொண் டிருக்கும்போது இரு வரும் வந்து சேர்ந்தார்கள். ஒவ்வொருவர் கையிலும் இவ்விரண்டு பியர்க் கான்கள் இருந்தன. w
‘என்ன மாப்பிள்ளை வெள்ளென வந்திட்டீர்? ஏன் பெட்டை வெளியாலை போ என் ") சொல்லிப் போட்டுதோ' என்றான் யசோ, செந்தல பதில் பேசா
மல் அவர்கள் இருவரையும் பார்த்தான்.
கையில் இருப்பதோடு மட்டுமல்லாது கொஞ்சம் குடித்தும்விட்டுத்தான் வந்திருந்தார்கள்.
யோகலிங்கமும் சேர்ந்து கொண்டானா?

தேம்ஸ் நதிக்கரையில் A , 59
அவர்கள் இருவரும் வேலைக்குப் போன நாட்களில் தனிமை தன்னை வாட்ட இரவில் "பப்"புக்குப் போன நாட்கள் நினைவு வந்தன செந்திலுக்கு.
அவர்கள் இப்படிக் கஷ்டப்பட்டு உழைப்பது குடித்துக் கெடவா? V
"என்னடா அப்படி முளிச்சுப் பார்க்கிறாய்? ஏதோ வெறிகாரனைப் பார்க்கிறதுபோல பார்க்கிறாய்" என்றான் யோகன்.
"நாங்கள் இங்க இப்பிடிக் கஷ்டப்படுறம் அங்க இலங்கையில இருக்கிறவை ஏதோ தம்பி எஞ்சினியர் படிக்குது, உடம்பு நோகாம எண்டு யோசிக்கினம்’ என்றான் யசோ, பியர் ரின்னையுடைத்துக் கொண்டு.
"நீயும் யோக லிங்க மும் மட்டுமா, இங்கே எத்தனையோ ஆயிரம் மாணவர்களும்தான் கஷ்டப்பட்டுப் படிக்கிறார்கள். அந்த கஷ்டத்தை மறக்க."
*.நாங்க ஒரு ரின் பியர் குடிக்கிறோம். நீர் அங்க எவளோடை போய் ஆடிப்போட்டு வாரீர்” என்று முடித்தான் யசோ.
*நீர் ஏதோ புரட்சிவாதி; நேரமுள்ள நேரமெல்லாம் என் இனத்தின் விடுதலைக்குப் பாடுபடுவேன் என்றெல் லாம் அலட்டுவீர். அதெல்லாம் எங்கே போய்விட்டுதோ" என்றான் செந்தில்வேல் யோகனைப் பார்த்து.
யோகன் பியரை வாயில் ஊத்தியபடி சிரித்தான், 'என் உணர்ச்சிகளுக்கும், விடுதலை வேட்கைக்கும் ஒரு ரின் பியருக்கும் எந்தவித தொடர்பும் இல்லை. எனக்கு உம்மைப்போல் காதலியில்லை கவலையை மறந்துபோய் இருக்க யசோதரனைப்போல் அக்காக்கள் இல்லை அன்பாகச் சோறுபோட. ஆனால் அதற்காக நான் குடிகாரனாகவில்லை. என் கொள்கைகளை மறந்து விட வில்லை. பாரதியையும் ஒரு காலம் கஞ்சாக் கவிஞன்

Page 35
60 A ராஜேஸ்வரி
எண்டுதான் சொன்னார்களாம் சோக்கிரட்டீக்ம் விசரன் தான் பிற்போக்கு வாதிகள் கண்ணுக்கு"
செந்தில்வேல் ஒன்றும் பதில் பேசவில்லை.
யசோ ஒரு தமிழ்ப் பாட்டைச் சத்தம் போட்டுப் பாடிக்கொண்டிருந்தான்.
'நீர் ஏன் காணும் உம்முடைய அருமை மைத்துனர் தரிசனத்துக்குப் போகவில்லை" என்றான் செந்தில்,
"மனிசனுக்குக் கொஞ்சக் காசு குடுக்க வேணும். அதுகளைக் குடுத்துப் போட்டுப் போவம்" என்றான் யசோ.
'எப்படி லோ றா? எப்படி வீட்டுக்காரர்கள்" என்று கேட்டான் யோகன்.
வீட்டுக்கார சர்மிளா தன் மகளை வீட்டுக்குள் பூட்டி வைப்பதைப் பற்றிச் சொன்னான் செந்தில், யோகன் சிரித்தான்.
“எத்தனை நாட்களுக்குப் பூட்டி வைப்பார்கள்? லண்டன் பிடிபடப் பெட்டை எந்த வெள்ளைக்கார னுடன் ஆடப்போகுதோ? எங்கள் பெண்கள் லண்டனுக்கு வருகிறார்கள், ஏதோஎல்லாம் படிக்கிறார்கள் ஆனால் அவர்களை அவர்களின் பெற்றோர்களும் புருஷன்களும் உணர்ச்சியற்று ந ட த் துவ  ைதக் கண்மூடித்தனமாகப் பொறுத்துக் கொண்டு இருக்கிறார்கள் தன்னைப் பற்றி தன் சுதத்திரத்தைப் பற்றி ஒரு பெண் உணராதவரை அவள் எவ்வளவு படித்திருந்தாலும் ஒரு கத்தரிக்காய் டிப்ளோமாதான் " என்றான் யோகன்.
அடுத்த நாள் செந்தில்வேல் லோறாவின் கதவைத் L- முதலே லோறா விழுந்தடித்துக் கதவைத்-اقي திறந்தாள். முகத்தில் பெரிய சந்தோசம். -

தேம்ஸ் நதிக்கரையில் A 61
"என்ன ஏதோ இளவரசனைக் கல்யாணம் முடிக்கப் “போகிற "சின்ட்ரல்லா" போல் பறக்கிறீர்’ என்றான் "G)F flögóão.
"அந்த விளம்பரத்தைப் பார்த்துவிட்டுப் போன் பண்ணினேன். நாளைக்குத்தான் அப்பிளிக்கேஷன் போர்ம் அனுப்புவதாகவும் நிரப்பிக்கொண்டு வெள்ளிக் கிழமை இண்டர்வியூவுக்கு, வரும்படியும் சொன்னார்கள்" என்றாள் லோறா.
ஏதோ வேலை கிடைத்த சந்தோசம் முகத்தில் தெரிந் தது "வெள்ளிக்கிழமை உங்களுக்கு லீவா" என்று கேட்டாள் லோ றா, சனியும் ஞாயிறும் வேலை என்று சொன்னான்.
'உம்முடைய அதிர்ஷ்டம்தான் கொடிகட்டிப் பறக் கிறதே! எனக்கு வேலையில்லை. உம்முடைய அல்லேஸன் ஆக வரலாம் பின்னால்" என்றான் செந்தில் குறும்பாக. அவன் பகிடிக்குத்தான் சொன்னாலும் அவன் தன்னை அவளுக்குப் பின்னால் திரியும் அல்ஸேஷன் என்று குறிப் பிட்டது அவள் முகத்தில் வேதனையைத் தந்தது.
**லோறா விளையாட்டுக்குச் சொன்னேன்" என்றான் அவள் முதுகைத் தடவி விட்டபடி
அவள் உடம்பு மென்மையானது. ஏழாலையில் அவன் அடிப்பதற்குத் தங்கைகளைத் தொட்டது தவிர வேறு பெண்கள் யாரையும் தொட்டதில்லை.
அவளின் ஸ்பரிசம் இனிமையாக இருந்தது. அவளை அப்படியே அணைத்துக் கொள்ள வேண்டும் போல் இருந் தது அவனுக்கு ஆனால் அவனுக்குத் தயக்கமாக இருந் தது இருவரும் பழகத் தொடங்கி கிட்டத்தட்ட இரண்டு மாதங்களாகி விட்டன. ஆனால் இதுவரை ஏனோ அவள் "தெருங்கிப் பழகம் தைரியத்தைக் கொடுக்க வில்லை. அவன் கண்களிலாடும் உணர்ச்சியைப் புரிந்து

Page 36
62 A ராஜேஸ்வரி
கொண்டாள் லோறா. ஆனாலும் காட்டிக் கொள்ள வில்லை.
ஆடிமாதக் காற்று அழகிய மனத்துடன் வீசிக் கொண்டிருந்தது. இரவு ஒன்பது மணியாகிவிட்டது. இன்னும் இருள் வரவில்லை.
‘எங்காவது போவோமா சாப்பிட” என்று கேட்டான் செந்தில். அவன் மனம் அலைபாய்ந்து கொண்டிருந்தது எத்தனையோ தரம் இதேயறையில் அவளுடன் கொஞ்ச நேரமாவது தனியாக இருந்திருக் கிறான். ஆனால் இன்று அவளைப் பார்க்க அவன் இளம் உடம்பு தகித்தது.
‘அதற்கென்ன? இன்றைக்குச் சரியான வெயில், எப்போது வருவீர்கள் என்றிருந்தேன்" என்றாள் லோறா.
இருவரும் சிரித்துக் கதைத்தபடி வெளியில் போவதை ஒரு மாதிரிப் பார்த்துக் கொண்டு நின்றாள் சர்மிளா ஜன்னலால். அவள் தன் மகள் உஷாவை எட்டரைக்கே படுக்கை அறைக்குப் போகச் சொல்லிவிடுவாள்.
வெள்ளிக் கிழமை பகல் இரண்டு மணிக்கு இண்டர்வியூ காலை பதினொரு மணிக்கே லோறா ஆயத்தம் செய்யத் தொடங்கி விட்டாள். எப்படி உடுப்பது? என்ன மாதிரி அலங்காரம் செய்வது?
தன் பதினேழு வயது "பேபி" முகத்தைக் காட்ட விரும்பவில்லை. தலையை வாரி ' பிரன்ஸ்கொட்" என்ற கொண்டை போட்டாள். அவளுடைய நீண்ட கண்களுக் கும், கூரிய மூக்குக்கும் அந்தக் கொண்டை எடுப்பாக இருந்தது நீல 'சம்மர்க் கவுன்" போட்டு நீல 'ஸ்காவ்' போட்டு கழுத்தைச் சுற்றியிருந்தாள் குதியுயர்ந்த சப்பாத்தும் போட்ட பின் கண்ணாடியில் தன்னைப் பார்த்துத் தானே ஆச்சரியப்பட்டாள் இருவரும் ஒன்றாய் இருந்த காலத்தில் மைரா ஆயிரம் தடவை சொல்லியிருப்பான 'நீ அழகியடி லோறா' என்று,

தேம்ஸ் நதிக்கரையில் A 63
லோறாவுக்குத் தன்னைக் கண்ணாடியில் பார்க்கும் போது தன் தகப்பன் நியூட்டன் எப்படி இருப்பான் என்ற யோசனை வந்தது பூனைக் கண்கள், பொன் நிற உடல், கூரிய மூக்கு இதொன்றும் மேரியிடமிருந்து வந்ததில்லை. தன் தகப்பனைப் பார்க்க வேண்டும்போல் இருந்தது உடனே அவளுக்கு. வெளியில் மணிச்சத்தம் கேட்டது. சர்மிளா கதவு திறக்கும் சத்தமும் கேட்டது.
செந்திலின் காலடிகள் கேட்டன போன வருஷம் பீனலப்பி வீட்டில் கிடைத்த 'சென்ரை" கழுத்தில் பூசிய படி கதவைத் திறந்தாள் லோறா. ' ' ' ' .
அவளை வைத்தகண் வாங்காமல் பார்த்தான் செந்தில் ஒருகணம். அவளுடன் போவதற்காகவே ஒரு புது சேர்ட் வாங்கிப் போட்டுக்கொண்டு வந்திருந்தான் செந்தில்.
‘என்ன அப்படி இமை கொட்டாமல் பார்க்கிறீர் கள்?" என்றாள் லோறா.
'சரி வெளிக்கிடும் நேரமாகிவிட்டது போக” என்றான் செந்தில், அவள் தர்மசங்கடத்தைப் பார்த்து. "அழகாக இருக்கிறீர் லோறா' என்றான் பஸ்ஸில் அவள் அருகில் உட்கார்ந்ததும்.
'என்ன அழகு? இந்தச் சட்டை ஏழு பவுண்தானே" என்றாள்
"சிலர் இருநூறு பவுணில் உடுப்புப் போட்டாலும் எடுப்பாகத் தெரிவதில்லை ஆனால் உம்மைப் போல் அழகிகள்." அவன் அவள் முகம் சிவப்பதைக் கண்டு பேச்சை நடுவில் நிறுத்தினான்.
யாழ்ப்பாணத்துத் திருவிழாக்களில் பெண்களிடை இடிபட்டுக் கிடைத்த ஸ்பரிசத்துக்கும் லோறாவின் மெல்லிய ஸ்பரிசத்தும் எவ்வளவு வித்தியாசம்! அவள் பூசியிருந்த இனிய வாசனைத் திரவியம் அவன் உணர்ச்சி

Page 37
44 A ராஜேஸ்வரி
களை மயக்கியது. லோறா நகங்களைச் சீர்படுத்திக் கொண்டிருந்தாள்.
"இப்படி என்னை ஒரு பெண்ணுடன் அம்மா கண்டால் என்ன நினைப்பாள்" என நினைத்தான்
செந்தில்
பாவம் அம்மா. "யாரோ ஒரு வெள்ளைக்காரத் “தேவடியாளோடை திரியிறானாம்' என மூக்கைச் சீறித் சேலைத் தலைப்பில் துடைக்குமா? "உந்த அறவானுக்குக் கெஞ்சாத இடமெல்லாம் கெஞ்சிக் கடன் வாங்கி லண்டனுக்கு அனுப்பினேன். உவன் இப்படியோ எனக் *குச் செய்வது " என்று ஊரெல்லாம் பேசிக்கொண்டு
திரிவாளா?
"எப்போது படிப்பு முடிகிறது?" என்றாள் லோறா சட்டென்று.
'நாலு வருஷத்தில்" என்றான் செந்தில் ஆனால் அவன் மனதுக்குள் "இப்படி பேக்கரியில் முதுகுடைய மூட்டை தூக்கினால் நாற்பது வருஷத்திலும் முடியாது படிப்பு' என யோசித்தான்.
'படிப்பு முடிய என்ன செய்யப் போகிறீர்கள்' என்றாள் லோறா, ஒயிலாக அவனைப் பார்த்துக் கொண்டு.
'நல்ல வேலையும் கிடைத்த இங்கிலிஸ்க் காரன் இருக்கவும் விட்டால் லண்டனில் இருப்பது. இல்லை என்றால் வேறு எங்காவது - தென் அமெரிக்கா - அல்லது அரபு நாடுகள் அல்லது ஆப்பிரிக்காவுக்குப் போவது" என்றான் செந்தில்
"ஏன் இலங்கைக்குத் திரும்பிப் போவதெற்கென்ன. படித்த நீங்கள் எல்லாம் அயல் நாட்டுக்குப் போனால் உங்கள் தாய் நாட்டின் கெதி என்ன" என்றாள் லோறா.

தேம்ஸ் நதிக்கரையில் A 65
"எங்களுக்கு என்று ஒரு நாடு இருக்கிறதோ என்பதே ஆச்சரியக் குறியாக இருக்கிறது. எங்கள் நாட்டின் அரசியல் நிலைமை உமக்குத் தெரியாது. நாங்கள் இலங்கையில் சிறுபான்மையான ஆட்கள் பெ ரும் பான்மையாட்சியல் எங்களுக்குக் கிட்டத்தட்ட ஒரு உரிமையுமில்லை. இன்னும் நூறு வருடங்கள் போனால் எங்கள் பேரக் குழந்தைகளி ைபெயர்கள் கூட எங்கள் இனப் பெயராக இருக்காது ". அவன் குரலில் விரக்தி இருந்தது.
லோறா அவனை ஏற இறங்கப் பார்த்தாள். 'பெல்வாஸ்ட்டில நடக்கிறது போல இருக்கு’ என்றாள்.
"பெல்வாஸ்ட்டில மட்டுமென்ன உலகமெல்லாம் தான்
உரிமையிழக்கும் சிறுபான்மையினர் ஒப்பாரி வைக்கிறார் கள்" என்றான் செந்தில்
“உரிமைகளைக் கேட்டுத் தராதவர்களிடம் சண்டை பிடித்தல்லோ எடுக்க வேண்டும். அஹிம்சை எல்லாம்
வெறும் புத்தகத்தில். அநியாயம் வரும்போது எதிர்த்துச்
சண்டை பி டி ப் பதில் தவறில்  ைல' லோறா சொன்னாள்.
செந்தில்வேல் அவளை ஆச்சரியத்துடன் பார்த். தான்.
'ஏன் என்னை அப்படிப் பார்க்கிறீர்கள்" என்றாள் லோறா.
‘என் நண்பன் யோகன் போல் கதைக்கிறீரே என்று பார்த்தேன்" என்றான். 'இரத்தம் சிந்தாமல் எந்த உரிமைப் போரும் வென்றதில்லை என்று சொல்வான் யோகன் அடிக்கடி' என்று தொடர்ந்து சொன்னான் செந்தில்வேல்.
"வாழ்வதற்கு ஒன்றும் இனி வழியில்லை, இழப்ப" தற்கு ஒன்றும் கையில் இல்லை என்று வந்தவுடன் எந்தக்.

Page 38
κβ6 Δ', ராஜேஸ்வரி
கோழையும் கூடப் போராடுவான். ஆனால் நீங்கள் எல்லாம் பணம் தேடி இங்கிலாந்தும் மற்ற நாடுகளுக்கும் ஓடினால் எப்படிப் போராட்டம் நடக்கும் உங்கள் ஊரில்" என்றாள் லோறா.
'நீர் இப்படிக் கதைப்பீர் என்று தெரியாது" என்றான் செந்தில்,
'இப்போதெல்லாம் மைரா வந்தால் இப்படித்தான் கதைக்கிறாள். அவள் சொல்பவை பிழையாகத் தெரிய வில்லை. எத்தனையோ உண்மைகள் இருக்கின்றன’
"வெளி நாட்டுக்கு ஓடாமல் இலங்கையில் இருந்து என்ன செய்யலாம் என்கிறாய்?"
செந்தில்வேல் எரிச்சலுடன் கேட்டான் படித்து விட்டு வேலையில்லாமல் அரைகுறைப் பட்டினியுடன் கிடந்த காலம் ஞாபகம் வந்தது.
'நீங்கள் பட்டினிக்குப் பயந்து, ஒரு வசதியான வாழ்க்கை தேடி வந்திருக்கலாம். ஆனால் உங்கள் இனத்தில் எத்தனை விதமானவர்கள் இங்கிலாந்துக்கும் அமெரிக்காவுக்கும் ஓடமுடியும்? மிச்சம் இருப்பவர்கள் உரிமைக்குப் போராடி வெல்லும் ஒரு காலத்தில் நீங்கள் இங்கிருந்து 'ஈனோபவலால்" கலைபட்டு ஒடப் போகிறீர் கள் அங்கு சொகுசாக இருக்க' என்றாள் லோறா சுடச் சுட,
‘மைரா நல்லாக் கதைக்கப் பண்ணித்தான் இருக்கி றாள். மைரா எப்படி இருப்பாள்? பொல்லாத வாயாடியா' என்றான் செந்தில்.
‘பின் நேரம் இன்டர்வியு முடியச்சந்திப்பதாகச் சொல்லியிருக்கிறேன். அவளும் உங்களைப் பார்க்க வேண்டுமென்று சொன்னாள்" என்றாள் லோறா.

தேம்ஸ் நதிக்கரையில் & ர்ே:
அவள் போட்டிருந்த சென்ட் அவன் உணர்ச்சிகளைக் கொதிக்கப்பண்ணிக் கொண்டிருந்தது. "என்ன சென்ட் பாவிக்கிறீர் லோறா' என்றான் செந்தில்,
“எனக்குத் தெரியாது. ஏதோ பிரசன் டாகக் கிடைத் தது " என்றாள். ச ட் டெ ன் று டேவிட்டின் ஞாபகம் வந்தது.
போன கிறிஸ்மஸ் பண்டிகையின் போது மைரா வுக்கும் லோறாவுக்கும் இரு சிறிய பார்சல் கொடுத்தான் பீனலப்பிக்குத் தெரியாது என்ன கொடுக்கிறான் என்று தெரிந்தாலும் சண்டைபிடிக்கும் நிலையில் இல்லை. பீனலப்பி கிறிஸ்மஸ் பண்டிகையையிட்டுக் குடித்த "சாம்பேயின் வெறியில் சிரித்துக் கொண்டு திரிந்தாள் பீனலப்பி லோறாவும் மைராவும் தங்கள் சிறிய பார்சலை உடைத்தபோது திடுக்கிட்டார்கள். அவர்கள் வெறும் ஆயாக்கள் அந்த வீட்டில். கிடைத்ததோ விலை யுயர்ந்த "சனால் நம்பர் 5 செலட் "
“டேவிட் ஒரு நாளும் தேவையில்லாமல் பிரசன்ட் கொடுப்பதில்லை’ என்றாள் மைரா, லோறாவுக்கு விளங்கியது அவள் என்ன சொ ல்கிறாள் என்று லோறா வந்து இரண்டு மூன்று மாதந்தான் ஆகியிருந்தது. ஆனால் அதற்கிடையில் டேவிட்டின் பார்வையும் பேச்சும் லோற:வுக்குப் புரியாமல் இல்லை
உடனே அந்த ‘சென்ட்டை அவன் முகத்தில் ஊற்ற வேண்டும் போல் இருந்தது லண்டனுக்கு வந்து கொஞ்ச நாள். அதற்குள் முரண்டு பிடிக்கத் தயாராய் இல்லை. அடுத்த நாள் டேவிட் கேட்டான் ‘எப்படி என் பிரசன்ட்" என்று. கன்னப்பக்கம் தலைமயிர் நரைக்கத் தொடங்கி இருந்தாலும் அவன் இன்னும் கவர்ச்சியான ஆண்மகன்தான். அவளுக்குத் தெரியும் அவன் பார்வை அவள் உடம்பில் எங்கெல்லாம் போகும் என்று.

Page 39
6 A ராஜேஸ்வரி
“பரிசுக்கு நன்றி. ஆனால்அதிகம் பாவிப்பதில்லை" என்றாள், பட்டும் படாமலும் தன் எரிச்சலைக் காட்டாமல்.
“ஓ! அடுத்த தடவை என்ன தேவை என்று இப்பவே சொல்லும்" என்றான் நளினச் சிரிப்புடள்.
"ஓம் யோசித்துச் சொல்கிறன்" என்றான்.
பீனலப்பி வெளியில்போய் இருந்தாள். பீட்டர் கிழவன் தன் கிழட்டுச் சினேகிதர்களுடன் குடிக்கப் போய் விட்டான். மைரா டானியலுடன் அவனின் இருப்பிடத் துக்குப் போய் விட்டாள்.
அவள் அன்று பட்ட பாடு
"என்ன யோசிக்கிறீர்" என்றான் செந்தில்,
"ஒன்றுமில்லை, வேலை கிடைக்குமோ இல்லையோ'
என்று யோசிக்கிறேன்" என்றாள் லோறா.
"பொய் லோறா. எனக்குத் தெரியும் என்ன யோசித். தாய் என்று" என்றான் செந்தில்,
“என்ன யோசித்தேன்"
"சென்ட் வாங்கித் தந்த சினேகிதனைப் பற்றி" செந்தில்வேல் அவளைப் பார்த்துக்கொண்டு சொன்னான். அவள் கலகலவென்று சிரித்தாள்.
"என்ன சிரிக்கக் கிடக்கு? லண்டனில் ஒரு நாளைக்கு ஒருத்தனோடு திரிகிறது சர்வ சாதாரணம் என்றல்லோ கேள்விப்பட்டேன்" என்றான் செந்தில். W "உங்களுக்கு எத்தனை பெட்டைகள் இருந்தார்கள்
இதுவரைக்கும்" லோறாவின் கேள்வி ஈட்டியாய் குத்தி
யது அவன் மனதில்.

பெரும்பாலான தமிழ்ப் பெண்கள் போல் ஆமைக ளாகவும் ஊமைகளாகவும் உலகத்தில் உள்ள எல்லாப் பெண்களும் இருப்பார்கள் என எதிர்பார்ப்பது முட்டாள் தனம் என்பது செந்தில்வேலுக்கு தெரியும். ஆனாலும் லோறா இவ்வளவு காலமும் லண்டனில் இருக்கிறாள்.
தான் தான் அவளுடன் திரியும் முதல் இளைஞனோ என்பது அவனால் நம்ப முடியவில்லை.
அவனுடன் "பப்பு"க்குப் போய் வந்த அடுத்த நாள் யசோதரன் சொன்னான்.
"இந்தக் கிழமை உன்னோடு போனவள் அடுத்த கிழமை யாரோடு போவாளோ" என்று.
அப்போது யோகன் சொன்னான்.
"தாங்கள் சீர்த்திருத்தவாதிகள், பழமைகளையும் மூடக் கொள்கைகளையும் நம்பாதவர்கள் என்று சொல்லிக்கொள்ளும் படித்த, பெரிய மனிதர்கள் எத்தனை பெண்களுடனும் பழகலாம் என்றால் செந்தில் ஒரு பெண்ணுடன் பழகுவதில் என்ன தவறு இருக்கிறது;" யசோதரனைப் போல் பெண்கள் எல்லாம் ஆண்களின் தனிச்சொத்து என்று செந்தில் நினைக்கத் தயாராக இல்லை; அதேவேளை யோகனைப் போல் பெண்களின் சுதந்திரம் பற்றிக் கதைத்துக் கொண்டு அவிழ்த்துவிட்ட மாடுகளாகத் திரிவதையும் விரும்பவில்லை.
லோறா உண்மையான விருப்பத்துடன் செந்தில் வேலுடன் திரிகிறாள் என்றால் அது செந்தில்வேலின் அதிர்ஷ்டம். ஆனாலும் அவன் வெறும் "வழித்துணை யாக" அவளுடன் திரிவதை அவர்கள் விரும்பவில்லை
5-س-gyق)

Page 40
70 A ராஜேஸ்வரி
"இவள் எத்தனைபேருடன் திரிந்தாளோ" என்ற பட்டிக்காட்டுக் கேள்வி படருகிறது அவன் மனதில். அவளுக்கு வேறு யாரும் இருக்கிறார்களா? இருந்தார்களா என்று அறிய செந்தில் முற்பட்டான். ஒவ்வொரு தடவை யும் லோறாவின் குத்தலான மறுமொழி அவனை மேலே பேசவிடாமல் தடுத்து விடுகிறது.
அதன் அர்த்தம் என்ன?
அவளுக்கு யாரும் இருந்தார்களா? இருக்கிறார்களா? ஏன் அதைப்பற்றி எனக்குக் கவலை? யார் நான்?
"என்ன யோசிக்கிறீர்கள்? அவள் குரல் இனிமையாக இருந்தது.
என்ன பதில் சொல்வது? "ஏன் உன்னைப் பற்றி அதிகம் சொல்கிறாய் இல்லை" என்று கேட்பதா?
அவன் மறுமொழி சொல்லாமல் அவள் முகத்தைப் பார்த்தான். இருவரும் மிக நெருக்கமாக உட்கார்ந்திருந் தார்கள். அவர்களுக்கு முன்னால் ஒரு ஆணும் பெண் ணும் இறு க் கி ய  ைண த் து முத்த மி ட் டு க் கொண்டிருந்தார்கள்.
"ஏன் நான் விளையாட்டாக ஏதும் கேள்வி கேட்டால் சட்டென்று கோபிக்கிறாய்" என்றான்.
"கேள்விகள் மட்டும் சில ஆண்களுக்கு விளையாட் டில்லை; அவர்கள் பெண்களுடன் பழகும் விதமும் நினைக் கும் விதமும் விளையாட்டு என்றுதான் நினைக்கிறார்கள்”*
அவர்கள்" என்றால் யார்? அவள் மறைமுகமாகத் தன்னைத் தாக்குகிறாளோ என அவன் ஒருகணம் யோசித்தான்.

தேம்ஸ் நதிக்கரையில் A 7 í
அவன் அதைப்பற்றிப்பேச வாய் எடுக்கமுதல் பஸ் நின்றது.
'இதுதான் ஸ்ரொப்" என்றபடி இறங்கினாள். பஸ்ஸால் இறங்கிக் கடைக்குப் போகும்வரைக்கும் இரு வரும் அதிகம் கதைக்கவில்லை.
கடைவாசலில் அவனைப் பார்த்துச் சொன்னாள். "எவ்வளவு நேரம் எடுக்கிறதோ தெரியாது. நீங்களும் உள்ளே வரப்போகிறீர்களா' என்றாள்.
'இல்லை’ என்று சொல்லிவிட்டு வெளியில் நின்றான் செந்தில்வேல்.
ஒக்ஸ்போர்ட் ஸ்ரீட் சனக் கூட்டத்தில் நிரம்பி வழிந்தது உள்நாட்டு, வெளிநாட்டு மனிதர்களுக்குக் குறை வில்லாத இடம். காசுள்ளவர்களின் கைலாய பூமி. வர்ண உடுப்புகளும், வானைமுட்டும் கடைகளும். செந்தில் கொஞ்சத் தூரம் நடந்துகொண்டு திரிந்தான்.
மனிதர்கள் அவசரமாக ஒடிக்கொண்டிருக்கும் அந்த வீதியில் விசரன் போல் நிற்க ஏதோபோல் இருந்தது.
ஏதும் வாங்கவும் கையில் போதிய காசில்லை. கண்ணாடிக் கதவுகளுக்குள்ளால் பெண்களின் அலங் காரச் சாமான்கள் கருத்தைக் கவர்ந்தன.
ஏதும் வாங்கிக் கொடுத்தால் என்ன லோறாவுக்கு? அவளோடு திரியும் நாட்கள் பெரும்பாலும் அவள்தான் செலவழிக்கிறாள்.
என்ன வாங்குவது? கையில் இருக்கும் காசு வீட்டு வாடகைக்கும் சாப்பாட்டுக்கும் சரி. போன கிழமைக் கடிதத்தில் அவன்
தங்கை பொன்மலர் எழுதியிருந்தாள் "சேலை துணி எல்லாம் யானை விலை குதிரை விலை. ஏதும் “சேலில்"

Page 41
72 A ராஜேஸ்வரி
மலிவாக வாங்க ஏலுமெண்டால் வாங்கி அனுப்புங்கோ" என்று.
ஒவ்வொரு வர்ணத்திலும் அடுக்கி வைத்திருந்த வித வித மான அலங்காரப் பொருள்களிலும் அவன் பார்வை ஓடி யது. லோறாவின் அறையில் அவன் பொருட்களை அடுக்கும்போது பார்த்த அழகிய உடுப்புகள் தெரிந்தன.
இளம் குருத்துப் பச்சையில் அவள் வைத்திருந்த ஒரு அழகிய நீளச் சட்டை ஞாபகம் வந்தது. அதற்கு ஏதும் பொருத்தமாக வாங்கிக் கொடுத்தால்!
குருத்துப் பச்சைநிறத்தில் ஒரு ஸ்காவ் எண்பத்தைந்து பென்ஸ் கொடுத்து வாங்கிக்கொண்டு வெளியேறவும் லோறா மகிழ்ச்சி பொங்கும் முகத்துடன் அவனிடம் ஓடிவரவும் சரியாக இருந்தது.
அவள் வார்த்தைகளால் சொல்லத் தேவையில்லை, அவள் முகமே சொல்லியது அவளுக்கு வேலை கிடைத்தது என்று. அவன் வாங்கிய சிறிய பார்சலை அவளிடம் கொடுத்தபடி "வாழ்த்துக்கள்" என்றான்.
அவள், உலகத்தில் அவனையும் அவளையும் தவிர யாரும் இல்லை என்ற யோசனையில் சத்தம் போட்டாள் சத்தோசத்தில்.
"ஓ! செந்தில், எனக்கு எவ்வளவு சந்தோசம் தெரியுமா? எவ்வளவு கெதியாக முடியுமோ அவ்வளவு கெதியாய் வேலைக்கு வரச்சொன்னார்கள்." அவள் மகிழ்ச்சியுடன் கூறினாள்.
சிறிய பார்சலைத் திறந்தவள் அவனை ஏறிட்டுப் பார்த்தாள். 'செந்தில் ஏன் இப்படிச் செலவழிக்கிறீர் கள்" என்றாள் செல்லக் கோபத்துடன்.
"ஏன் பிடிக்கவில்லையா" என்றான் தன்னையறியா மல் அவன் குரல் ஒரு மாதிரி இருந்தது.

தேம்ஸ் நதிக்கரையில் A 73
**வாங்கித் தந்ததற்கு தாங்ஸ் செந்தில்வேல். கோஞ்சக் காசு உழைக்கிறீர்கள். எப்படிச் சமாளிக்கிறீர் கள்" அவள் குரலில் அன்பு மட்டுமல்ல கவனமும் இருந்தது
"பெரிய காசு இல்லை" என்றான். ஆனால் அவன்
மனம் சொல்லியது கிட்டத்தட்ட ஒரு கிழமைக் காசு என்று.
"கொஞ்சம் நில்லுங்கள்" என்றவள் கண்மூடித் திறப்பதற்குள் கையில் ஒரு நீலநிற "டையுடன் வந்து சேர்ந்தாள்.
இலவசமாக என்னிடம் வாங்கக் கூடாது என நினைக் கிறாளா? அவன் முகம் ஒரு மாதிரி மாறிப் போவதில் இருந்து தெரிந்தது, அவள் என்ன நினைக்கிறாள் என்று
*மத்தியானம் நீங்கள் அந்த சேர்ட்டுடன் வந்தவுட னேயே நினைத்தேன் ஒரு டை வாங்கித் தரவேண்டும் என்று" அவன் மறுமொழி சொல்லமுதல் அவன் கழுத்தில் டையைச் சுற்றிப்போட்டாள். அவன் ச ரி செய்து கோண்டான்.
'எனக்குப் பிடித்த நிறம் நீலம். உங்களுக்கு உங்கள் சேர்ட்டுக்கும் பொருத்தமாக இருக்கிறது" என்றாள் லோறா.
"ஏன் பச்சை பிடிக்காதேன்" என்றான் செந்தில்.
'எனக்கொரு மூட நம்பிக்கையும் இல்லை. ஆனால் என் தாய்க்குப் பச்சை பிடிக்காது. வீட்டில் எந்த வித மான பச்சைத் தாவரங்களையும் வைத்திருக்கமாட்டாள். துரதிர்ஷ்டம் என்று சொல்வாள். பழைய காலத்தவர் கள் தங்களுக்குப் பிடிக்காத எதுவும் நடந்தால் என்னத்தி
லாவது பழி போடுவார்கள்"
இருவரும் ஒக்ஸ்போர்ட் சந்தியில் நின்றார்கள்.

Page 42
74 A ராஜேஸ்வரி
"இன்னும் கொஞ்ச நேரத்தில் மைராவுக்கு வேலை முடிந்துவிடும். அதன்பின் என்னைச் சந்திப்பதாகச் சொன்னாள். போன் பண்ணட்டுமா? இவ்விடத்தில் நிற்கிறோம் என்று’ என்றாள் லோறா.
"இப்போதே நேரம் கிட்டத்தட்ட ஐந்துமணியா கிறது" என்றான் செந்தில்.
"ஏன் ஏதும் அவசரமா' என்றாள் லோறா. VM "இல்லை, இல்லை நாம் அதிக நேரம் காத்துக் கொண்டிருக்கத் தேவையில்லை என்றேன்."
லோறா போன் பண்ணினாள். சிறிது நேரத்தில் தூரத்தில் மைரா வருவது தெரிந்தது.
எத்தனையோ தரம் லோறா மைராவைப் பற்றிச் சொல்லியிருக்கிறாள். அவள் சொன்னதில் இருந்து தெரிந்தது மைரா அழகும் வாயாடித்தனமும், மூற் போக்குக் கொள்கையுமுடைய புதுமைப் பெண் என்று.
அவள் அழகி என்று தூரத்தில் வரும்போதே தெரிந் தது. மாலை நிற வெயிலில் அவள் தங்க நிறக்கூந்தல் தகதகத்துக்கொண்டிருந்தது.
'பாவம் மைரா டானியல் இறந்த துக்கத்தில் சரியாக மெலிந்துவிட்டாள்" என்றாள் லோறா.
அருகில் வந்ததும் "ஹலோ லோறா, ஹலோ செந்தில் நான் மைரா" என்றாள் சாதாரணமாக,
முன்பின் தெரியாத மனிதர்களுடன் தான் பழகப்படும் தர்மசங்கடங்கள் நினைவுக்கு வந்தன செந்தில்வேலுக்கு. எவ்வளவு பரந்த மனப்பான்மையுடன் பழகுகிறாள் 6) by IT
சுவிடிஸ் நாட்டுப் பெண்களில் உலகத்து ஆண்கள் எல்லாம் கவரப்படுவதற்கு இதுதான் காரணமா?

தேம்ஸ் நதிக்கரையில் Δ 75
"உங்களைப் பற்றி லோறா எவ்வளவோ சொல்லியிருக், கிறாள்" என்றாள் மைரா , லோறாவைச் சுட்டிக், காட்டியபடி
அவன் புன்முறுவல் பூத்தான்.
‘என்ன லோறா உம்முடைய போய்பிரண்ட் வெட்கப்படுகிறார் போல இருக்கு" என்றாள் மைரா.
தன்னை லோறாவின் "போய் பிரண்ட்" என்று சொல்லுமளவுக்கு லோறா என்ன சொல்லி இருப்பாள் என நினைத்தான் செந்தில்.
"நான் ஒன்றும் அப்படி வெட்கப்படுகிற ஆளில்லை, தானாகவேதான் லோறாவுடன் முதல் நாள் கதைத்தேன்" என்றான் செந்தில்,
"நீங்கள் அப்படிக் கதைக்காமல் இருந்தால் இப்போது இவளின் 'ஸ்கெலிட்டன் தான் எங்களுக்குக் கிடைத்திருக் கும்” என்றாள் மைரா, லோறாவின் நீளத்தலை மயிரை, உலுக்கியபடி,
"அது சரி என்ன நடந்தது வேலையில்? சின்னப் பெட்டை போல் அழகாகக் கதைத்து மருட்டியிருப்பாயே’ என்றாள் மைரா, லோறாவின் தலைமயிரைச் சுண்டிய t 1 цр
**வேலை கிடைத்தது என்று தெரியவில்லையா என்னைப் பார்த்ததும்" என்றாள் லோறா விடுவித்துக் கொண்டு.
"சும்மா தட்டிக் கழித்துப்போட்டு ஓடாதேயும், எனக்கு வேலை கிடைத்ததும் நீரும் பீட்டரும் சேர்ந்து பத்துப் பவுணுக்கு மேல் நட்டம் பண்ணியதை நான் மறக்கவில்லை. எப்போ பார்ட்டி வைக்கிறீர்' என்றாள் GDLDU st
'பார்ட்டியா? உமக்குப் பெரிய வயிறு என்றால் ஏதேன் கடைக்குக் கூட்டிக்கொண்டு போய் நிரப்பிவிடு கிறேன்" என்றாள் லோறா.

Page 43
76 A ராஜேஸ்வரி
"ஓ! நோ. வெறும் சாப்பாட்டுக் கில்லை. நீர் பெரிய விருந்து போடத்தான் போகிறீர். நீங்கள் என்ன சொல் கிறீர்கள் செத்தில்" என்றாள் மைரா.
செந்திலுக்கு தர்மசங்கடமாக இருந்தது. கையில் இருக்கும் காசின் கணக்கு அனுைக்குத் தெரியாததல்ல. இரண்டு பெண்களுடனும் சும்மா நடந்து கொண்டிருக்க ஏதோபோல் இருந்தது அவனுக்கு. "மைரா நான் இருப் பது பிம்விக்கோவில் இல்லை, விம்பிள்டனில். அதுவும் இந்தியர் வீட்டில். பார்ட்டி கூத்து என்று வைப்பது அவர்களுக்குப் பிடிக்காது உமக்கு வேணுமானால் ஏதேன் ரெஸ்ட்ரோரண்டுக்குக் கூட்டிக்கொண்டு போகிறேன்" என்றாள் லோறா.
"தான் சும்மா பகிடிக்குக் கேட்பதை எல்லாம் சீரியஸ் என்று நினைக்கிறாயே லோறா. டானியல் இல்லாமல் போனபின் தனியாக இருப்பது என்றாலே ன்ைனவோபோல் இருக்கிறது. வீட்டுக்குப் போவோம். ஏதாவது சாப்பிடுவோம்" என்றாள் மைரா.
டானியலின் பெயர் சொன்னவுடனேயே அவள் குரல் கரகரத்தது. செந்திலுக்கு பரிதாபத்தை உண்டாக்கியது. மூவரும் பிக்கடெலியை நெருங்கிக் கொண்டிருந்தார்கள்.
**வேண்டாம் மைரா வீண் தொல்லை" என்றாள் லோறா.
'இன்று வெள்ளிக்கிழமை தானே கொஞ்சம் நல்லாகச் சாப்பிடுவோம்’ என்றாள் மைரா.
மைராவை முன்பின் நன்கு தெரியாது செந்திலுக்கு. அவளுடனும் சாப்பிடப்போக ஒரு மாதிரியிருந்தது. ரோட்டில் கண்ட லோறாவுடன் ஏற்பட்ட உறவு எப்படி விரிந்துகொண்டு போகிறது என்று யோசித்தான் செந்தில்.
"என்ன யோசிக்கிறீர்கள் செந்தில்" என்றாள் &9lagJst.

தேம்ஸ் நதிக்கரையில் A 77
"ஒன்றும் இல்லை. லோறா ஒம் என்றால் எனக்கு ஆட்சேபனை ஒன்றும் இல்லை எனக்கு இரவைக்கு வேலை இல்லை" என்றான் செந்தில்
"பாவம் நீங்கள் உங்கள் படிப்பு ஒரு பக்கம், இந்தக் குழந்தைப் பெண் ஒருபக்கம்" எனக் குறும்பாகச் சொன்னாள் லோறாவைப் பார்த்து.
மூவரும் அண்டர் கிர வுண் டி ல் இறங் கி க் கொண்டிருந்தனர்.
மைரா ஒயாமல் பேசிக்கொண்டிருந்ததால் செந்திலும் லோ நாவும் கதைக்கவில்லை
"ஏன் பேசாமல் இருக்கிறாய்" என்றாள் மைரா, லோறாவின் தோள்களில் கையைப் போட்டபடி
"ஒன்றுமில்லை என்ன நினைக்கிறாய் செந்திலைப் பற்றி” என்றாள் லோறா நகரும் படிகளில் செந்தில் கீழே கொஞ்சத் தூரம் போனதும்.
"என்ன நினைக்க வேண்டும் என்று நீநினைக்கிறாய்" என்றாள் மைரா
"எப்படி ஆள் என்று நினைக்கிறாய் என்றேன்" என்றால் சட்டென்று.
"ஒரு கொஞ்ச நேரத்தில் கதைத்துவிட்டு எப்படி ஆள் என்று முடிவுகட்ட நான் என்ன தவஞானி என்று நினைத்துவிட்டாயா? வெறும் முகத்திலும் பேச்சிலும் ஒரு மனிதனை அளவிடமுடியாது. பழகித்தான் பார்க்க வேணும். எவ்வளவு தூரம் பழகிவிட்டாய்" என்றாள் 68) DD IT
“எவ்வளவு தூரம் என நினைக்கிறாய் மைரா. நீயும் நானும் ஒரே நிறமாய் இருந்தாலும் ஒரு இனம் இல்லை. எதையும் அலட்சியம் செய்யும் அமெரிக்கத் தகப்பனின் இரத்தம் என் உடம்பில் ஓடினாலும், என்ன செய்தாலும்

Page 44
78 A ராஜேஸ்வரி
யோசித்துச் செய் என்று போதித்த என் தாயின் இரத்த மும் உடம்பில் ஒடுகிறது. செந்தில் இலங்கையைச் சேர்ந்த வன். என்னைப்போல் யோ சிக் கா வி ட் டா லும் தன்னோடு பழகும் ஒரு பெண் எப்படி இருக்க வேண்டும் என செந்தில் யோசிக்கிறான் என்பது எனக்குத் தெரியா மல் இல்லை." என்றாள் லோறா.
"லோறா, வாழ்க்கை என்பது சூதாட்டம், எப்போது வெல்வாய் எப்போது தோற்பாய் என்று தெரியாது. சந்தர்ப்பத்துக்கு ஏற்றால்போல் வாழ்க்கையைச் சரியான பாதையில் திருப்பிவிடத் தெரியாதவர்கள் தோல்வியடை கிறார்கள். நீர் செந்திலைக் காணாமல் இருந்தால் உன் வாழ்க்கை எப்படிப் போயிருக்கும்"
"மைரா, நான் மனதார செந்திலை விரும்புகிறேன்" என்றாள் லோறா.
"காதலும் நன்றியும் இருவிதமானவை. இரண்டை யும் ஒன்றென நினைத்து ஏமாறுகிறாயோ தெரியவில்லை. உனக்கு செந்திலை முன்பின் தெரியாது. உன்னை ஒரு இக்கட்டில் இருந்து காப்பாற்றியபடியால் அவனில் உணக்கு நன்றி வருவது இயற்கை. ஆனால்."
"மைரா எனக்குத் தெரியும் நான் என்ன செய்கிறேன் என்று. யாரோ மலிவான பெண் கொஞ்சம் கதைத்த பின் கட்டிலுக்கு வரக்கூடியவள் என்ற விதத்தில் செந்தில் பழகவில்லை என்பது தெரியும். இதுவரையும் எங்கள் சினேகிதம் கண்ணியமாகத்தான் இருந்தது" என்றாள் லோறா.
மைரா பதில் பேசாமல் சிரித்தாள். லோஹா *கண்ணிய"மாகப் பழகுவது என்பதின் கருத்தென்ன?
"லோறா இந்தியர்களும் இலங்கையர்களும் தங்கள் காரியம் முடியும் வரை "கண்ணியமாகத்தான் இருப்பார் கள். செந்தில் அப்படிப்பட்டவன் என்று நினைக்கவில்லை.

தேம்ஸ் நதிக்கரையில் A 79
வெறும் உடம்புத் தேவைக்கு உமக்குப் பின்னால் திரிபவ னாக எனக்குத் தெரியவில்லை. தன படிப்பு தன் வேலை என்பனவற்றை விட்டு விட்டு உமக்குப் பின்னால் திரிவது வெறும் வழித்துணைக்காக மட்டும் இல்லை. உம்மில் அவனுக்கு அன்பு இருக்கிறது என்பது அவன் பார்வையில் இருந்து தெரிகிறது. அவனை விட உமக்கு வெளியுலக அனுபவம் இருக்கிறது. சில விதத்தில் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்று நான் சொல்வதற்கில்லை" செந்தில் திரும்பிப் பார்த்தான்.
என்ன அப்படி முணுமுணுக்கிறார்கள் என்பது அவன் பார்வையில் இருந்தது.
“என்ன கதைத்துக்கொண்டு வந்தோம் என்று மண்டையைப் போட்டு குளப்புகிறீர்கள், இல்லையா?* என்றாள் ரெயிலில் ஏறியதும் மைரா.
லோறா தர்மசங்கடத்துடன் இருண்ட ஜன்னல்களைப் பார்த்தாள்.
**பெண்களுக்கிடையில் எத்தனையோ கதைகள் இருக்கும் என்றான் செந்தில் ரெயிலில் நெருக்கடி முட்டி மோதிக்கொண்டு நின்றிருந்தரர்கள். லோறா செந்தில் வேலின் அருகில் நின்றருந்தாள். ஒரு தரம் ரெயிலின் குலுக்கலில் விழப்போனவளை இடுப்பில் கைபோட்டு அணைத்துக் கொண்டான் செந்தில், அவனுடைய அன்பான கவனம் எந்த நேரமும் லோறாவில் இருக்கிறது என்பதை மைரா உணர்ந்து கொள்ள வெகுநேரம் எடுக்கவில்லை.
"அவள் என்ன சின்னப்பெட்டையா விழுந்தவுடன் அழுவதற்கு? விழவிடுங்கள்" எ ன் றா ள் மைரா பகிடியாக,
செந்தில் இவள் என்ன சொன்னாலும் எனக்கென்ன. லோறாவைத் திரும்பிப் பார்த்தான். சன நெருக்கடியில் லோறாவுக்குத் தலைசுற்றிக்கொண்டு வந்தது.

Page 45
80 A ராஜேஸ்வரி
மூவரும் சவுத் கென்சிஸ்டனில் இறங்கும்போது பின் நேரம் ஏழு மணியிருக்கும் அழகிய வசந்த காலக்காற்று இதமாக வீசிக்கொண்டிருந்தது. அண்டர் கிரவுண்ட் ஸ்ரேசனுக்கு முன்னால் இருந்த கடையில் வைன் வாங்கப் போவதாகச் சொல்லி விட்டு லோறா போனபின் செந்தில் கேட்டான்; ‘என்ன உம்முடைய சினேகிதி ரெயிலுக்கு வரும்போது என்னைப் பார்த்துப் பார்த்து உம்முடைய காதைக் கடித்தாள்" என்றான் பகிடியாக.
செந்தில் ஒன்றும் விபரீதமாகக் கேட்கவில்லை என் றாலும் தனக்கும் தன் சிநேகிதனுக்கும் இடையில் நடந்த சமபாஷணையை ஏன் பெட்டைத்தனமாகக் கேட்க வேணும? என நினைத்துக் கொண்டாள் லோறா.
"உங்களுக்கு ஏன் வீண் சிரமம் கொடுக்கிறேன் என்று கேட்டாள் மைரா" என்றாள் லோ றா, செந்திலின் முகத் தைப் பார்க்காமல்.
'அதற்கு என்ன மறுமொழி சொன்னீர்" செந்தில் கேட்டான்.
"என்ன சொல்லியிருக்க வேண்டும்" லோறாவுக்கு விளங்கவில்லை அவன் என்ன கருத்தில் கேட்கிறான் 6T6 al.
"அவர் என் பாய் பிரண்ட்தானே எனக்கு பின்னால் வருவதற்கு என்ன கஷ்டம் என்று சொல்லியிருக்க வேண் டும்" என்றான் செந்தில்,
லோறா ஒருகணம் தன் காதுகளை நம்பாமல் அவன் முகத்தை ஏறிட்டுப் பார்த்தாள். அவன் அப்படிச் சொன் னது அவளுக்குப் பிடித்திருந்தது தனிப்பட்ட இடமாக இருந்திருந்தால் அவனை இறுகக் கட்டிக் கொண்டு கூத்தடித்திருப்பாள் போல் இருந்தது அவள் உணர்ச்சி.
அவள் நினைத்திருந்தது சரி. வெறும் பொழுது போக்குக்காகவும் வழித்துணைக்காகவும் அவள் பின்னால்

தேம்ஸ் நதிக்கரையில் A 8
அவன் திரியவில்லை. அவளில் உள்ள அன்பின் காரண Ds பரிவின் காரணமாக, காதலின் காரணமாகத் திரிகிறான்.
வேலை கிடைத்ததைவிட அவன் தன்னிடம் எவ்வளவு அன்பு வைத்திருக்கிறான் என்ற உணர்ச்சி அவளை மகிழ்ச்சி வெள்ளத்தில் ஆழ்த்தியது. எப்போது அவனை அந்தப் பாலத்தில் வைத்துக் கண்டாளோ அன்றிலிருந்தே அவள் மனதில் குடிகொண்டிருந்த துக்கங்கள் கொஞ்சம் கொஞ்சமாகக் கரைந்துவிட்டது.
அவளுக்கென்றொரு இடம், ஒரு வேலை, ஒரு அன் புள்ள உள்ளம்! இதைவிட என்ன வேண்டும் லோறா வுக்கு? தாயிடம் ஜமேய்க்காவுக்குப் போய்ச் சேர்ந்தால் சிம்சன் எப்படி நடந்துவான் என்ற சிந்தனை இனி அவளைப் பயப்படுத்தப் போவதில்லை.
அவளுக்கென்று ஒருவன்!
ஆங்கிலேயரைப் போல் "ஐ லவ் யூ" என்று அவன் வாய்விட்டுச் சொல்லாதிருக்கலாம். ஆனால் அவன் மனம் விட்டு அவளுடன் பழகும் விதமே போதும், அவனுக்கு அவளில் எவ்வளவு அன்பு என்பதை அளவிட
"என்ன கனவு காண்கிறாய்" என்றபடி வந்தாள் GROTT.
லோறா பதில் சொல்லவில்லை. மைரா எத்தனை குத்தலாகக் கதைத்தால் கூட அவள் லட்சியம் செய்யும் நிலையில் இல்லை.
லண்டனில் வசந்த கால மாலை நேரம் போல் அவள் மனம் மகிழ்ச்சியால் அலைபாய்ந்தது.
சென்ற வருடம் இதே காலம் லண்டனுக்கு வந்ததை நினைத்துப் பார்த்தாள். வெறுமையான தாட்கள் அவை. விம்சனிடமிருந்து விடுபட்டு எங்கு போனாலும் போதும்'

Page 46
82 A ராஜேஸ்வரி
என்ற வெறுப்பில் ஏற்பட்ட பிரயாணம். இப்போது அப்படியல்ல, அன்புள்ள சினேகிதி. அருமைக் காதலன். அவளுக்கொரு வேலை.
மூவரும் மைராவின் இடத்துக்குப் போனதும் முதலில் தென்பட்டது சில புரட்சி வசனங்கள்தான். செந்திலுக்கு சட்டென்று யோகலிங்கத்தின் \பேச்சுக்கள் ஞாபகம் வந்தது. அவன் வாயில் இருந்து வருபவை மைராவின் சுவர்களில் ஒட்டிக் கிடந்தது. அவன் பார்வை போகு மிடத்தைக் கவனித்த மைரா 'அதெல்லாம் என் நண்பர் டானியல் உடையது. மனிதர்கள் இறக்கலாம், அவர் களின் சிந்தனைகளின் எழுச்சி இறப்பதில்லை" என்றாள் மைரா கலங்கும் கண்களுடன்.
7
சுவரில் ஒரு பக்கத்தில் திரண்டுவரும் மக்களை ராணு வத்தினர் அடக்குவதாகப் படம் போட்டிருந்தது. பக்கத் தில் 'சிறு முகிற் கூட்டங்கள் செங்கதிரோனை மறைப்ப தில்லை" என எழுதப்பட்டிருந்தது.
யாழ்பாணத்தில் நடந்த ஒரு பொதுக்கூட்டத்தை சில பொது அதிகாரிகள் எப்படி அடக்க முயன்றனர் என்பது செந்திலுக்கு ஞாபகம் வந்தது. "கொதித்தெழும் சுதந்திர உணர்ச்சியைக் கூலிக்கு மாரடிக்கும் சில போலீஸ் அதிகாரிகளும் காட்டிக்கொடுக்கும் எட்டப்பர்களும் எள்ளளவும மறைக்க முடியாது" என்று லண்டனுக்கு வரமுதல் யோகலிங்கம் மாணவர் கூட்டமொன்றில் இலங்கையில் பேசியதும் நினைவில் வந்தது.
‘என்ன, வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண் டிருக்கிறீர்கள்? என்னுடைய அறை லோறாவின் அறை

தேம்ஸ் நதிக்கரையில் A 83
போல் இல்லை என்றா? அவள் அறையில் விதவிதமான உடுப்புக்களும் அழகு சாதனங்களும் இரு க் கு ம் இல்லையா' என்றாள் மைரா, உணவின் மணம் மூக்கில் அடித்து நாவில் ஈரம் வரப்பண்ணியது.
*நான் இன்னும் அறையையே சரியாக அடுக்க வில்லை" என்றாள் லோறா.
*உன்போன்ற பெண்களுக்கு என்ன உலகம்? ஆடை ஆபரணம், அழகு சாதனங்கள்தானே வாழ்க்கை" அடுப்பில் வதங்கும் சாப்பாட்டைப் புரட்டியபடி சொன் னாள் மைரா.
'பின்னர் என்ன உம்மைப்போல் ட்ரவல்கர் சந்தி யெல்லாம் கொடிபிடித்துக் கொண்டு. திரியவா சொல்லு கிறாய்" லோறா கிளாஸ்களில் வைனை ஊற்றியபடி சொன்னாள்.
'அடுப்படியே தஞ்சம் எனக்கிடக்கும் ஆயிரம் பெண் களில் நீயும் ஒருத்தி. உன்னைச் சொல்லி பிழையில்லை. பெண்களை அப்படி ஆக்கிவைத்திருக்கும் சமுதாயத்தைத் தான் சொல்லவேண்டும்"
மைரா கதிரையில் வந்து உட்கார்ந்துகொண்டு வைனை உறிஞ்சிக்கொண்டிருந்தாள்.
“உங்களைப் போலவே எனக்கொரு நண்பன் இருக் கிறான். அரசியல் தவிர வேறொன்றிலும் அக்கறையில் லாதவன்" என்றான் செந்தில், இரண்டாம் கிளாஸ் வைனைக் குடித்தபடி,
"அப்படியா? டானியல் ஒருதரம் சொன்னார் லண்டனில் இருக்கும் இலங்கையர்களுக்கும் இந்தியர் களுக்கும் அரசியலில் அவ்வளவு அக்கறையில்லை என்று. பணம் சேர்ப்பதும் வீடு வாங்குவதும் தான் அவர்களின் முக்கிய நோக்கம். யார் பதவிக்கு வந்தால் என்ன யார் வராவிட்டால் என்ன என்று ஒரு அக்கறையுமில்லாதவர் களாம்" மைரா அவன் முகத்தைப் பார்த்தபடி சொன்

Page 47
84 A ராஜேஸ்வரி
னாள். செந்திலுக்கு என்ன பதில் சொல்வது என்று தெரியவில்லை.
மூன்றாவது வைன் கிளாஸ் வயிற்றில் போய்முடிய அவனுக்குத் தலை சுற்றிக் கொண்டு வந்தது. வெறும் வயிற்றில் குடித்தால் வெறிக்கும் என்பார்கள். மத்தியா னம் சரியாகச் சாப்பிடவில்லை. வயிற்றை எரித்துக் கொண்டு வந்தது.
எழுந்து திற்கத் தலை சுற்றிக்கொண்டு வந்தது. தெல்லிப்பளையில் எட்டாம்கட்டையடியில் கள்ளு வெறி யில தள்ளாடி நடக்கும் தன் சித்தப்பர் ஒருவரின் நினைவு வந்தது செந்திலுக்கு. a
இப்போது யசோதரனும் யோகனும் தன்னைக்கண் டால் என்ன சொல்வார்கள்.
அவன் ஒரு நாளும் குடிக்காமல் இருந்ததென்றில்லை. இரண்டு பெண்களுடன் இருந்து இப்படிக் குடிக்கவில்லை. லோறா வைத்த கண் வாங்காமல் அவனைப் பார்த் தாள். அவளுக்குத் தெரியும் இரண்டாவது போத்தலில் அரைவாசிக்கு மேல் முடிந்துவிட்டது என்று.
"நல்ல சாப்பாடு" என்றான் செந்தில், சாப்பிட்டுக் கொண்டிருக்கும் போது.
"ஓ! இதுதான் சாட்டென்று ஒவ்வொரு நாளும் வந்து விடாதீர்கள் சாப்பாட்டுக்கு’ என்றாள் மைரா. எல்லோ ரும் விழுந்து விழுந்து சிரித்தார்கள்.
"ஏன் உம்மிடம் வரவேண்டும். எத்தனையோ கடை கிடக்கு" என்றாள் லோறா.
செந்தில் லோறாவைத் திரும்பிப் பார்த்தான். அவள் அழகாகச் சிரித்தாள். சாதாரணமாக அவள் முகத்தில் தேரியும ஒருவித தெளிவின்மை இன்றில்லை.

தேம்ஸ் நதிக்கரையில் A 85
மலர்ந்த பூப்போல் அவள் சிரிப்பு வசீகரமாக இருந் தது வைன் குடித்த வெறியில் தான் கல கலவென்று கதைப்பது போல் அவளும் "பயமில்லாமல்" பழகுகிறாள் போலும் என நினைத்தான் செந்தில்.
*நான் உங்களைப் பற்றி ஒன்றும் கேட்கவில்லை. நீங்கள் என்ன செய்கிறீர்கள்?" என்று கேட்டாள் மைரா.
அவன் தன்னைப்பற்றிச் சுருக்கமாகச் சொன்னான். நாலு வருடப் படிப்பில் ஒரு வருடம் மூடிந்து விட்டதாக வும், இப்போது விடுமுறையில் வேலை செய்து கொண் டிருப்பதாகவும் சொன்னான்.
'படிப்பு முடிய இலங்கைக்குப்போகும் யோசனையை விட வேறு எங்காவது போய்க் கொஞ்சக் காலம் உழைப் பதுதான் யோசனை" என்றான் செந்தில்.
"படித்த மூளையுள்ள இளைஞர்கள் எல்லாம் சுய நலத்துக்காக நாட்டை விட்டோடினால் உங்கள் பிரச்சினைகளுக்குப் போராட யார் இருக்கப் போகிறார் கள் உங்கள் நாட்டில்" என்றாள் லோறா
"இவர் பேர்வளிகள் ஏன் சண்டையில் முதுகுடைபட வேண்டும்? மூ  ைள யு ள் ள வர் க ள் ஒடித்தப்பியபின் உரிமைக்கு உழைத்த மக்களின் உதிரமெல்லாம் காய்ந்த பின் போய் ஏதாவது வேதாந்தம் பேசுவார்கள்" என்றாள் Soldig st.
"உங்கள் அரசியலுக்கும் எனக்கும் சரிவராது. அடுத்த தரம் வரும்போது என் நண்பனைக் கூட்டிக்கொண்டு வருகிறேன். நல்லாய் பொழுது போகும் உங்களுக்கு" என்றான் செந்தில்.
மைராவின் முகம் சட்டென்று கறுத்தது. "அரசியல் வெறும் பொழுது போக்கு என்றா நினைக்கிறீர்கள்" என்றாள்.
தே-6

Page 48
86 A ராஜேஸ்வரி
**மைரா, செந்தில் குடித்த வைன் என்னவெல்லாமோ பேசவைக்கிறது. ஏதோ பெரிதாக எடுக்கிறாயே" என்று சமாளித்தாள் லோறா.
செந்திலும் லோறாவும் சாப்பிட்டுவிட்டு வெளியேற
ஒன்பது மணிக்கு மேலாகிவிட்டது விம்பிள்டனுக்கு
போனபோது சர்மிளா ராதாகிருஷ்ணன் படத்துக்குப் பூஜை செய்து கொண்டிருந்தாள்.
செந்திலையும் லோறாவையும் கண்டதும், லோறா தானாகச் சொன்னாள். தனக்கு வேலை கிடைத்து விட்டது என்று. "எல்லாம் அத்தக் கண்ணனின் கருணை" என்றாள் சர்மிளா.
கோப்பி போட லோறா கீழே போனதும் அப்படியே களைப்பில் கண்ணயர்ந்து விட்டான், செந்தில்,
கோப்பியுடன் வந்த லோறா தூங்கி வழியும் செந்திலைப் பார்த்தாள். கம்பீரமாக இருக்கும் அவன் முகம் குழந்தைத்தனத்துடன் இருந்தது நித்திரையில். கொஞ்ச நேரம் பார்த்துக் கொண்டிருந்தாள் லோறா.
என்னுடையவன்! தன்பாட்டில் முணுமுணுத்தாள். மெல்லக் குனிந்து அவன் நெற்றியில் முத்தமிட்டாள் லோறா. குளிரான அவள் இதழ் தந்த முத்தத்தில் திடுக் கிட்டு எழுந்தான்செந்தில் அவள் முகம் அவன் முகத்துக்கு, நேர் எதிரே நெருங்கிஇருந்தது. இருகைகளாலும் தாங்கிக் கொண்டான். உடம்பில் 'குப்"பென்று பெட்ரோல் எரிவது போல் இருந்தது அவனுக்கு.
'லோறா' மெல்ல அவன் அவள் பெயரை முணு முணுத்தான். அவன் அணைப்பு இறுகியது. மலர்கொடி போல் அவன் உடம்போடு துவஞம் அவள் உடம்பு அவன் மனதில் காதல் நெருப்பைச் சுவாலை விட்டெரியப் பண்ணியது. அவனுக்கு இருபத்து நாலு வயது. ஒரு பெண்ணுடன் நெருக்கமாய்ப் பழகியதில்லை. ஏழாலை

தேம்ஸ் நதிக்கரையில் A 87
யில் யாரும் பெட்டையைப் பார்த்தால் தாய்மார் தும்புக் கட்டையுடன் துரத்துவார்கள். இது லண்டன். கந்தர்வ உலகம்
தன் அணைப்பில் மயங்கித் துவண்டு தன்னோடு இணைந்து கிடக்கும் லோறாவின் இதழ்களை முத்த மிட்டான் செந்தில், மெதுமெதுவென்ற அக்கினி, அவள் பூசியிருந்த வாசனைத்திரவியம் ஆசைக் கனலைத் தூண்டும் மாருதம்.
இதுதான் காதலா? கீழே சர்மிளா ராதாகிருஷ்ணனுக்குப் பூசை செய்யும் மணிஓசை கேட்டது
"ஐ லவ் யூ செந்தில்" அவள் மெல்ல முணுமுணுத் தாள் அவன் என்ன பதில் சொல்வது?
டெலிவிஷனில் ஆயிரக் கணக்கானதரம் பார்த்திருக் கிறான் காதலர்கள் அணைப்பதை; கதைப்பதை, ஆனால் அவனுக்கு ஒன்றும் வாயில் வரவில்லை.
காலம் காலமாக யுகம் யுகமாக அநத அணைப்பில் இருக்கவேண்டும் போல் இருந்தது.
"நேரமாகிறது" என்றாள் லோறா. 'உம்' மெல்லப் பெருமூச்சு விட்டான் செந்தில், எப்படி அவளை விட்டுப் போவது?
"கடைசி பஸ் போகப் போகிறது" லோறா கோப்பியை ஊற்றிக் கொடுத்தாள்.
கொதிக்கும் அவன் மனதுக்கும் உடம்புக்கும் ஆறிக் கிடந்த கோப்பி அமிர்தமாக இருந்தது.
கிளப்பம்கொமனில் இறங்கியபோது கிட்டத்தட்ட
ஆள் நடமாட்டம் குறைந்துவிட்டது. நடு இரவுக்கு மேலாகிவிட்டது. இதுவரை நடந்ததெல்லாம் கனவுபோல்

Page 49
88 A DTGagauaif
இருந்தது. அவளின் இனிய வாசனைத் திரவியம் அவன் சேர்ட்டில் மணத்தது. அவள் வாங்கிக் கொடுத்த டை அவன் கழுத்தைச் சுற்றிக் கிடந்தது, அவள் அணைச்ச அணைப்பைப் போல். மெல்லமாக அந்த 'டையைத் தடவிவிட்டான் செந்தில்.
கதவைத் தி ற ந் த தும் படித்துக்கொண்டிருந்த புத்தகத்தை மூடிவிட்டு நண்பனைப் பார்த்தான் யோகலிங்கம். பார்த்ததும் தெரிந்தது அவன் முகபாவம் எவ்வளவு சந்தோசமாக இருக்கிறது என்று.
என்ன, லோறாவுக்கு வேலை கிடைத்து விட்டதா" என்றான் யோகன்.
'உம்' என்றான் செந்தில்.
என்ன 'உம்' கொட்டுகிறீர். என்ன நடந்தது" என்றான் யோகன்.
'லோறாவுக்கு வே  ைல கிடைத்துவிட்டது" கேள்விக்கு மறுமொழி சொல்வதே எரிச்சலாக இருந்தது செந்திலுக்கு.
கண்களை இறுகமூடிக்கொண்டு அவளை நினைத்துக் கொண்டு அவள் அணைப்பை நினைத்துக் கொண்டு அவளின் இனிய முத்தங்களை நினைத்துக்கொண்டு உலகை மறத்து கிடக்க வேண்டும் போல் இருந்தது செந்திலுக்கு.
அவன் தனியறையில் இருக்க வசதியில்லாதவன். வேலைக்குப் போகாமல் அவள் இனிய நினைவில் ஒரு மணிநேரம் கற்பனையில் நித்திரை செய்ய இயலாது. அவன் மனதில் வேதனை தழும்பியது.
உண்மையாக லோறா என்னைக் காதலிக்கிறாளா? ஆடம்பரமும் செயற்கையுமான இந்த லண்டன் மாநகரில் என்னிடம் என்ன கண்டாள்?

தேம்ஸ் நதிக்கரையில் A இ9
எவ்வளவு காலம் என்னுடன் பழகப் போகிறாள்? எவ்வளவு காலம் ஒன்றாய்த் திரியப் போகிறாள்.
எப்போது சொல்லப் போகிறாள், இனித் தன்னைப் பார்க்க வரவேண்டாம் என்று!
அவன் நெஞ்சில் நெருஞ்சி முள் குத்துவதுபோல் இருந்தது. அவன் முன்பின் காதலித்ததில்லை. இப்போது தெரிந்தது காதல் என்றால் என்ன என்று.
அவள் இல்லாமல் ஒருநாள், அவளைக் காணாமல் ஒருநாள் இருக்க முடியுமா?
வேதனையுடன் பெருமூச்சுவிட்டான் செந்தில்,
"என்ன காணும் பெருமூச்சு விடுகிறீர்" என்றான் யோகன் - திரும்பித் தன் நண்பனைப் பார்த்தபடி.
**லோறாவுடன் திரிவதை வீட்டில் கேள்விப்பட்டால் என்ன சொல்வார்கள் என்று நினைத்தேன்" என்றான் செந்தில். சட்டென்று தனக்கு அப்படிப் பொய் சொல்ல எப்படி வந்தது என அவனுக்கு ஆச்சரியமாக இருந்தது
'இதுவரைக்கும் அவர்களுக்கு தெரியாமல் இருக் கிறதே என்பதே ஆச்சரியம். ஒரு நல்ல காரியத்தைத் தவிர மற்ற ஏதாகிலும் எப்போது நடக்கும், எவனுடன் எவள் கதைக்கிறாள், யாருக்கு யாரைப் பேசுகிறார்கள் என்பதுதானே இங்கு இருப்பவர்கள் இலங்கைக்கு எழுதும் விஷயங்கள்" என்றான் யோகலிங்கம். லோறாவுக்காகத் தான் வேதனைப்படுவதை மறைத்து ஏதோ சொல்ல அதற்கு யோகன் சொன்ன பதில் செந்திலைத் திடுக்கிடப் பண்ணியது.
உண்மையில் வீட்டுக்குத் தெரியுமா?
அம்மா எவ்வளவு துக்கப்படுவாள்? தான் படிப்பு முடிய வந்து தங்கைகளையும் பார்ப்பதாகச் சொன்னவு டன் எத்தனை சந்தோசப்பட்டாள் அவன் தாய்.

Page 50
90 A ராஜேஸ்வரி
'ஏதோ செந்தில் லண்டன் என்று பறந்தவன் எல்லாம் கண்டறியாத உலகத்தைக் கண்ட மாதிரி திரும்பி வாறான் இல்லை. உனக்கு எத்தினை குமர்களின் பொறுப்பு இருக்கெண்டு பார்? கொப்பர் இனி என்னவும் செய்வார் எண்டு இல்ல புகையிலை யாபாரமும் படுத்துப் போச்சு"
கலங்கிய அவன் தாயின் முகம் அருகில் தெரிவதுபோல் பட்டது ஒரு கணம்.
மற்ற வினாடி ஆசையுடன் அணைத்த லோறாவின் உடம்பின் ஸ்பரிசம் நினைவில் வந்தது.
"தெரிந்தா ஏன் பேசாமல் இருக்கினம், ஐயா ஒன்றும் பயப்பிடுபவர் இல்லை. தாறுமாறாகவல்லே எழுதியிருப் பார்" என்றான் செந்தில்
"சும்மா இதெல்லாம் விளையாட்டு என்று பேசாமல் விடுவம். ஒருக்கா லீவில வரேக்கை நல்ல சீதனத்தோட ஒரு கலியாணத்தைக் கட்டிவைப்பம் என்றல்லோ யோசிச்சருப்பினம்" என்றான் யோகன்.
போட்ட உடுப்பும் கழட்டவில்லை. சிலைபோல் ஒருகணம் படுத்திருந்தான் செந்தில.
"அந்தச் சேஷ்டை எல்லாம் என்னட்ட நடவாது" என்றான் செந்தில், அவன் குரலில் தெரிந்த உறுதி யோகலிங்கத்தை எழுந்து இருக்கப் பண்ணியது.
"என்ன சொல்கிறீர்" என்றான் யோகலிங்கம். "உமக்குக் கேட்டிருக்கும் என்ன சொன்னன் என்று" முகத்தைத் திருப்பிக் கொண்டு மறுமொழி சொன்னான் செந்தில்,
"செந்தில் நீர் லோறாவில." யோகலிங்கம் நிதானமாகக் கேட்ட கேள்வியைத் தன் பார்வையால் வெட்டினான செந்தில்வேல்.

தேம்ஸ் நதிக்கரையில் A 97
"யோகலிங்கம், உமக்கு C பெட்டையும் இருக்கேல்லயோ இலங்கையில்"
செந்தில்வேலின் கேள்வி யோகலிங்கத்தைச் சிரிக்கப் பண்ணியது.
"பெட்டை என்றால்." யோகன் சிரிப்பை அடக்கா மல் கேட்டான்.
"என்ன காணும் விளையாடுநீர் உமக்கு ஒரு "லவ்வும்’ இல்லேயோ இலங்கையிலே"
"காதல்கள் பலவிதம். தாயில் பிள்ளை வைச்சிருக் கிறதும் காதல்தான். ஒரு கெட்டிக்கார மாணவியில் ஒரு ஆசிரியர் வைத்திருக்கும் விருப்பமும் ஒரு காதல் தான். ஒரு எழுத்தாளரில் ரசிகன் வைத்திருப்பதும் காதல்தான்"
செந்தில் பொறுமை யிழந்து நண்பனைப் பார்த்தான்.
*நீர் என்ன கேட்கிறீர் என்று தெரியும். நீர் இப்போது லோறாவோடு திரிவதுபோல் நான் யாரையும் மேய்த்துக்கொண்டு திரிவதில்லை. நேரமுமிருக்கவில்லை. ஒரு மச்சாள் இருந்தாள். ஒன்றாய் வளர்ந்தோம் கிட்டத் தட்ட நான் யூனிவசிட்டிக்கு எடுபட்டபோது நான் ஏதோ பெரிசா வந்து பணம் குவிக்கப்போறன் என்று மாமியும் மாமாவும் விழுந்து விழுந்து உபசரிச்சினம். முற்போக்குக் கூட்டங்கள் வைத்து கல்லெறி எனக்குக் கிடைத்ததும் மாமி மூஞ்சியை நீட்டினா., மச்சாள் படலைக்குமேலால் எட்டிப் பார்த்துச் சிரிப்பதைக் குறைச்சுது, யூனிவசிட்டிப் படிப்புப் போக மச்சானும் காதலும் போச்சுது ஏன் இப்படி வெறும் அந்தஸ்துக் காகப் பெண்கள் தங்கள் காதலைப் பலிபோடுகினம் என்று நினைச்சன் மச்சாளுக்கு நல்ல இடத்தில் கல்யாணம் முடிஞ்சுது. என்னை கண்ணெடுத்தும் பார்க்கல்லை. எனக்கு வேதனையாக இரு ந் த து. உனக்கும் லோறாவுக்கும் வந்ததுபோல் சட்டென்று

Page 51
92 A ராஜேஸ்வரி
வந்ததில்லை என் அன்பு. சின்ன வயதிலிருந்து என்னுடைவள் வனசா என்ற பிரமை அழிந்தபோது நானே என்னுள் அழிவதுபோல் இருந்தது. அதெல்லாம் பழைய கதை. அவள் என்னைக் கல்யாணம் செய்யாதது நல்லது என்று இப்ப தெரியுது. ஏனென்டால் வெறும் உறவுக் காகவும் வெறும் அந்தஸ்துக்காகவும் கல்யாணம் செய் திருந்தால் என் வாழ்க்கை சின்னாபின்னப்பட்டிருக்கும். இப்போது காதலைப் பற்றி யோசிக்க எனக்கு தேர மில்லை. என்னையுணர்ந்த, என் இலட்சியங்களை உணர்ந்த ஒரு பெண் எனக்குக் கிடைத்தால் கல்யாணம் செய்வேன் அல்லது ஒன்றாக இருப்பேன்." யோகலிங்கம் பேசி முடிந்ததும் செந் தி ல் வேல் மெளனமாக இருந்தான்.
"வீட்டுக்குத் தெரிந்து அவர்கள் எப்படித் துள்ளினா லும் நான் ஒன்றும் பயப்படப் போறதில்லை" - செந்தில் முரட்டுத்தனத்துடன் சொன்னான்.
‘செந்தில், செ ய் வ  ைத யோசித்துச் செய். எத்தனையோ கஷ்டப்பட்டுப் படிக்க வந்தாய். அதை யெல்லாத்தையும் உணர்ந்துபார். நீர் ஏதும் செய்து விட்டால், கொப்பர் மண்டையைப் போட்டுவிட்டால், உம்முடைய தங்கச்சிகளைப் பார்ப்பது யார்? நீர் லோறாவை விரும்புவது உண்மையானால் ஒருத்தருக்கு ஒருத்தர் காத்திருக்க முடியாது என்பதில்லையே. அவள் நேர்ஸிங் படிக்க வந்ததாகச் சொன்னாய். உனக்கு மூன்று வருடம் இருக்கிறது. அவள் அந்தக் காலத்தில் படிக்கலாம். இருவரும் படித்து ஒரு எதிர்காலத்தை நிர்ணயித்துக் கொண்டால் உம்முடைய வீட்டைப் பார்ப்பது சுகம். யாழ்பாணத்தைப் பொறுத்த வரையில் ஆண்மக்களைப் பெறுவது ‘இன்சூரன்ஸ்பொலிஸி" எடுப்பது போல் தங்கள் கடைசிக்கால சேமிப்பு. அதை மறக்காதே" என்றான் யோகலிங்கம்,

தேம்ஸ் நதிக்கரையில் A 93
"ஐயாவுக்கு பிளட் பிரஷர், யாரேன் அறுவார் எழுதித் தொலைத்துவிட்டால் என்ன நடக்குமோ தெரி யாது" என்றான் செந்தில்.
"ஏன் சும்மா கற்பனை பண்ணுகிறீர். ஏதும் பிரச்சினை வந்தால் பின்னர் பார்த்துக் கொள்ளலாம். சும்மா யோசியாமல் நித்திரை கொள்ளும்" என்றான் (Suurtasair.
'லோறாவின் சினேகிதி சரியாக உன் மாதிரியே. எந்த நேரமும் அரசியல் கதைச்சுக் கொண்டிருக்கு" என்றான் செந்தில், மைராவும் லோறாவும் இலங்கையர் களைப் பற்றிக் கதைத்தது ஞாபகம் வந்தது
"வேடிக்கையாக இருக்கிறது . பெரும்பாலான பெண்கள் லண்டனில் பாஷன் பற்றியும் லிப்ஸ்டிக்கைப் பற்றியும் கதைப்பதாக அல்லவோ சொல்வார்கள்" என்றான் யோகன், *
“ஓம் மைராவும் கிட்டத்தட்ட அப்படித்தான் இருந் தாள் லண்டனுக்கு வரும்வரை. இங்கே வந்து ஐரிஷ்காரன் ஒருவனைக் க ல் யாண ம் முடிக்க பெல்வாஸ்டுக்குப் போற வழியில ஆடமிக்காரன் சுட்டுப் போட்டானாம் மைராவின் காதலனை. அதோட அவள் மாறிவிட்டாள்" என்றான் செந்தில்.
“பிரச்சினை வரும்போது மக்கள் தாமே மாறுவார் கள்" என்றான் யோகலிங்கம்.
மைரா வீட்டுக்குப் போனதையும் சாப்பிட்ட கதை, யையும் சொன்னான் செந்தில்,
பொழுது விடியும்வரை லோறாவை நினைவுபடுத்தும் எதையாவது பேசிக் கொண்டிருக்க வேண்டும்போல் இருந்தது செந்திலுக்கு.
லோறா வீட்டுக்குப் போனதையும் லோறா நடந்து கொண்ட விதத்தையும் சொன்னான் செந்தில்,

Page 52
94 A ராஜேஸ்வரி
"இருபத்தைந்து வயதுவரை ஆண்-பெண் உணர்ச்சி கள் என்றாலே என்னென்று தெரியாமல் இருக்கிற எங்களுக்கு ஒரு முத்தம் ஏதோ சொர்க்கம் போலத்தான் இருக்கும். பழகச் சரியாக இருக்கும். இவ்வளவு பைத்திய மாக இருக்க மாட்டீர் லோறாவிலே. இப்ப ஏதோ கண்டறியாத மாதிரிக் கதைக்கிறீர்” எ ன் ற ர ன் யோகலிங்கம்.
'உமக்கென்ன தெரியும் என் உணர்ச்சிகளைப் பறறி? சும்மா புரட்சி, பூசணிக்காய் என்று கதைக்கந்தான் தெரியும்" என்றான் சலிப்புடன் செந்தில்,
"காதல் அனுபவம் இல்லாதவன் நானாக இருக்க லாம். ஆனால் உன் உணர்ச்சிகளைப் புரிந்துகொள்ளாத அளவு முட்டாள் இல்லை. அவள் என்னுடையது என்ற முரட்டு நினைவு உமக்கு இப்போதே வந்துவிட்டது. அது தான் இப்படி இருக்கிறீர். பெண்கள் வெறும் "செக்ஸ் ஒப்ஜெக்ட்ஸ் இல்லை. தனிப் பிறவிகள். சுதந்திரமாக இருக்கவிடு தாலி கட்டிவிட்டேன். அவள் என் சொத்து அடுப்படியும் வீடும்தான் அவள் உலகம் என்று அடைத்து வைக்கும் முட்டாளாக இராதே. பெண் உன் காதலி மட்டுமல்ல. மனைவி மட்டுமட்டுமல்ல. சினேகிதி, தோழி, ஆலோசகி என்ற அந்தஸ்தைக் கொடு" யோகன் என்ன பிரசங்கம் செய்கிறான் என்ற யோசனையுடன் செந்தில் திரும்பிப் பார்த்தான். அதே நேரம் கதவைத் திறந்து கொண்டு வந்தான் யசோ.
அவன் முகம் பேயடித்தது போல் இருந்தது. நண்பர் கள் இருவரும் பேசுவதை விட்டுவிட்டு யசோவைப் பார்த்தனர்.

8
இரண்டு கிழமைக்கு முன் ஒரு நாள் அவர்கள் மூவரும் 'பாருக்குப்" போய்விட்டு வரும்போது இருட்டுச் சந்தி ஒன்றில் முரட்டு வெள்ளைக்கார வாலிபர் நின்று கெட்ட வார்த்தைகளால் பேசிக்கொண்டிருந்தார்கள். எத்தனை பேர் என்று தெரியாது "எளிய நாய்கள் ஏன் சும்மா போற எங்களோட கொழுவுறான்கள்" என்று முணுமுணுத்தான் யசோ. அவன் குரலில் தெரிந்தது, எவ்வளவு தூரம் நடுங்குகிறான் என்று.
"எல்லாம் அந்த ஈனேக்பவல் அறுவானாலும் நாஷனல் ப்ரண்ட் நாசமாய்ப் போவான்களாலும் வந்த வினை" என்றான் யோகன்.
"ஏன் கள்ளத்தோணி பாகிஸ்தானியர் மட்டும் நல்ல வர்களா" என்றான் யோகலிங்கம்.
கூக்குரல் இட்டுக் கொண்டிருந்த வெள்ளைக்காரர் ஆவேசத்துடன் நெருங்கி வந்து 'பிளாக் பாஸ்ரட், உங்கள் நாட்டுக்குத் திருப்பிப் போங்கள்" என்றார்கள்.
நண்பர்கள் மூவரும் புரியாத மாதிரி நடந்து கொண் டிருந்தார்கள். தூரத்தில் ஒரு கார் வருவது தெரிந்ததும் கத்திக் கொண்டிருந்த வெள்ளைக்கார முரடர்கள் கொஞ்சம் பின்வாங்கினார்கள்.
இதுதான் தருணமென்று ஓட்டமும் நடையுமாக வீடு வந்து சேர்ந்தார்கள் மூவரும். 'எனன இழவுச் சீவியமடா பெட்டைகள் போல ரோட்டால ஓடிவந்து வீட்டிலை ஒளிஞ்சு கொண்டு இருக்கிறம்" என்றான் யசோதரன்
"ஏன் ஒளிஞ்சு கொண்டு இருக்கிறீர்? ஒரு தடியை எடுத்துக்கொண்டு போ மே ன் சண்டைக்கு. எதிரி

Page 53
96 A ராஜேஸ்வரி
எத்தனை பேர் என்று எண்ணிப் பார்த்துப் போட்டும் போ" என்றான் யோகன்.
"நீர் பெரிய வாயாடி. அவன்கள் அப்படி கேவல
மாக பேசுகிறான்கள் - ஊமைபோல வந்தீர் வாய் திறக்
காமல்" என்று வாயை  ெந O த் து க் கேட்டான் யசோதரன்.
"ஏன் வாய் திறக்கவில்லை என்றால் - நான் உம்மைப் போல் முட்டாள் இல்லை. வெறிகாரனுக்கும் விசரன் களுக்கும் வீரம் காட்ட எனக்கு நேரமில்லை. அவர்கள் ஒரு விசர்க் கும்பல். அடிப்பட்டுச் சாக நான் தயாரா யில்லை. ஒன்றிரண்டு பேர் என்றால் அடித்த கன்னத் துக்கு அடுத்த கன்னம் கொடுக்கமாட்டேனா, இரண்டாம் அடிக்கு . எனக்குத் தெரியும் எந்த இடத்தில் யாருடன் சண்டை பிடிப்பது என்று" - யோகன் முன்னர் அவ்வாறு சொன்னான்.
இன்று என்ன நடந்தது யசோதரனுக்கு? ஏன் பேயடித்த மாதிரி நிற்கிறான்?
“என்னடா யசோதரன் நடந்தது. பேயடிச்ச மாதிரி நிற்கிறீர்? என்ன நடந்தது" செந்தில் பதட்டத்துடன் கேட்டான்.
‘'வேலையை விட்டுப் போகச் சொல்லிப் போட்டான்
கள் பேயன்கள்" பெருமூச்சுடன் உட்கார்ந்தான் யசோதரன்.
"என்னடா உண்மையாக நடந்தது" செந்தில்
இயற்கையான தன் படபடப்புடன் கேட்டான்.
"நான் இருக்கிறேனோ இல்லையோ எண்டு செக் பண்ண வந்திருக்கினம். அப்ப நான் இல்லை. அடுத்த தடவை வரேக்கை சொல்லிப் போட்டான் சரியாக வேலை செய்யச் சம்மதம் இல்லை என்றால் போகச் சொல்லி!"

தேம்ஸ் நதிக்கரையில் Δ 97
"நீர் எங்க காணும் உலாப் போயிருந்தீர்" செந்தில் எரிச்சலுடன் "வள்" என்று விழுந்தான்.
"பப்"புக்கு போய் இருப்பான். அது மட்டுமா இவர் ராசா. வேறு கன விளையாட்டும் விட்டவர். அவன்கள் என்ன பேயன்களே? சும்மா கண்ணை மூடிக் கொண்டு கிடக்கர்" யோகலிங்கம் சொன்னான்.
"என்ன காரியங்கள்" எனக் கேட்டான் செந்தில்.
"இவர் மகான் ஏதோ மச்சான் ஒருத்தர் Փ607ւ-f7696) இருக்கிறதென்டு போன் பண்ணுவார் கொம்பனி ரெவி போனில். எவ்வளவு பணம் போய் இருக்கும் மணிக்கனக் காக கதைக்க? கண்ட நேரமெல்லாம் நித்திரையடிக்கிற வர். பப்புக்குப் போகிறவர்" என்றான் யோகன் ஆத்திரத்துடன்.
'நீர் உம்முடைய வேலையைப் பார்த்துக் கொண்டு வாயை மூடிக்கொண்டிரும். இரவிரவாய் கட்டிடத்தைப் பார்த்துக் கொண்டு பேய்போல திரியிறது? பேச்சுத் துணைக்கு ஒரு சீவன் இல்லை. ஏசிேநாளும் வேலை ெ யிறன் என்ன சீவியம்? ஏன் '*** 6uigib? alu தோட்டத்தைக் கிண்டிப் போட்டு அரைப் 691-وكالا( கால்ப் பட்டினி கிடந்திருக்கலாம்" - யசோவின் குரல் தழு தழுத்தது.
"ஒம் பெரிய தோட்டம் கிண்டிக் கிளிக்கிறவர் இப்ப நீர் யாழ்ப்பாணம் போனாலும் செம்மண்ணைத் தொட மாட்டீர். நீங்கள் எல்லாம் வெள்ளை சேர்ட் வெள்ளா ளன்கள். பெரிய நினைப்பு மட்டும் யோகலிங்கத்தின் குரலில் கோசம் இல்லை, அமைதி இருந்தது.
"பொறும் பொறும் உங்களுக்கெண்டு ஒரு தனி நாடு கிடைக்கத்தானே போகுது அப்ப என்றாலும் எங்க ளுக்கு விடிவு வரும்தானே? இப்படிக் கப்பல் ஏறி வந்து இந்த நாட்டில ஏன் மாரடிக்க வேணும்?"

Page 54
98 A ராஜேஸ்வரி
**வெள்ளைக்காரன் உம்மைப் வெற்றிலை பாக்கு வைத்து அழைக்கவில்லை. ஏதோ இங்கிலாந்து சொர்க்க பூமி எண்டல்லோ ஒடி வந்தியள். இலங்கைக்குப் போனபிறகு நீர் எப்படி லண்டனில் சீவித்தீர், சீவிப்பீர் என்பதைச் சொல்லப் போவதில்லை ஏதோ மாயா உலகத்து மகானாக நடப்பீர்” யோகலிங்கம் நேரத்தைப் பார்த்தான்.
இரவு ஒரு மணி
"இவர் என்ன நினைச்சுண்டு ஓடி வந்தவர். எல்லாரும் தான் பிழைக்க வந்தம்" யசோதரன் முணுமுணுத்தான்.
யசோதரனின் பார்வை செந்தில்வேலின் சேர்ட்டி லும் “டை" யிலும் பதிந்தது.
"என்ன செய்யப் போகிறீர் வேலைக்கு" என்றான் செந்தில், சட்டைப் பொத்தான்களை கழற்றியபடி.
"சிவபாலன் ஆஸ்பத்திரியில் வேலை எடுத்துத் தாரன் எண்டான். கிடைக்கும் என்றுதான் நினைக்கிறன்." யசோ இன்னும் செத்திலை உற்றுப் பார்த்து கொண் டிருத்தான் கதைத்தபடி,
"ஆஸ்பத்திரி வேலையில் என்னன்டா கனடா வுக்குப் போன் பண்ணுவாய்? பப்புக்குப் போவாய்?"
யோகலிங்கத்தின் கேள்விக்கு செந்தில் சொன்னான். :ஆஸ்பத்திரியில் நிறையப் பெட்டைகளைப் பார்க்கலாம்"
யோகலிங்கத்தின் நக்கலுக்கு யசோதரன் சொன்னான். உவளவை இலங்கையில் இருந்து ஏதோ புதினமான உத்தியோகம் பார்க்கப் போறோம் என்று பேப்பர் எல்லாம் படம் போட்டு வந்தாள வை. கிடைக்கிற காசில் அவையின் "ஸ்ரைல்லும் பாஷனும் நிக்கிறதில்லை."
'தமிழ்ப் பெண் தமிழ் பெண் தான் என்பதை எங்கே போனாலும் மறக்கக்கூடாது" யசோ கூறிமுடிக்கவில்லை.

தேம்ஸ் நதிக்கரையில் A gழ
"என்ன காணும் அலட்டுறீர்? தமிழ்ப் பெண்பிள்ளை கள் என்று வீட்டில் வைத்து மாப்பிள்ளை எடுக்காதபடி யால்தானே அவர்கள் எல்லாம் லண்டனுக்கு வந்தார்கள் படிக்க, வசதியாக வாழ, பாஷன் காட்ட, தமிழ்ப்பெண் என ஒப்பாரி போடுகிற நீர் ஏன் உம்முடைய சகோதரி களை வவனியாவுக்கு அப்பால் போக விடுகிறீர்" யோக லிங்கம் கேட்டான்
'உம்முடன் என்ன கதை? கூட்டம் போட்டுக் கல்லெறி வாங்கி உமது மூளை கெட்டுப் போட்டது. அது சரி இவர் என்ன செந்தில் வேலனார் ஏதோ மாப்பிள்ளைக் கோலத்தில் நிற்கிறார்" யசோ செந்திலைப் பார்த்துக் கேட்டான். செந்தில் மறுமொழி பேசாமல் சேர்ட்டைக் கழற்றிக் கதிரையில் போட்டான்.
"எப்பிடிச் செந்திலின் “டை லோறா வாங்கிக் கொடுத்தாளாம்" யோகன் வேணுமென்று குறும்புத் தனமாக யசோவுக்கு மூட்டி வைத்தான்.
வேலை போன துக்கம் போய்விட்டது, யசோதரன் முகத்தில் இருந்து. W
‘ஓகோ; பெட்டை பரவாயில்லை. கூலி கொடுத்துத் தான் வேலை வாங்குது'. யசோவின் குரலில் இருந்த இழிவுத் தொனி செந்திலுக்கு ஆத்திரத்தை உண்டாக்கியது.
"உம்மைப்போல ஆட்களுக்கு எப்படித் தெரியும்? எல்லா உறவும் காசுக்கு என்று நினைக்கிற உம்முடைய மச்சானுக்கும் உமக்கும் என்ன வித்தியாசம்! gCD5 பெண்ணுக்கும் ஆணுக்கும் உண்மையான அன்பு இருக்கக் கூடாது என்பதுதான் எங்களைப் போன்றவர்களின் கருத்து". செந்தில் எரிந்து விழுந்தான்.
“டேய் என்னடா எரிகிறாய். உந்தப் பெரிய லண்டனில் ஆளில்லாமல் எங்களுக்குப் பின்னால்

Page 55
100 A ராஜேஸ்வரி
வருவது என்றால் ஒண்டில் கண்டவன்களுக்குப் பின்னால் திரியிற கழுதையாக இருக்க வேணும். இல்லை எண்டால் தற்காலிக காதலன் என்று உன்னோட பழகி வேலை வாங்கிறவளாக இருக்க வேணும். எலும்புத் துண்டை எடுத்து நாய்க்குப் போட்டது போல் ஏதோ ஒரு "டை" கொடுத்துவிட்டாள் என்றால் ஏதோ உன்னில் பெரிய காதல் என்று நினைக்கிறாயோ" யசோவின் குரலில் கிண்டல் இன்னுக் போகவில்லை.
"சில மனிதர்கள் என்னதான் படித்தாலும் அறிவாளி கள் ஆவதில்லை எவ்வளவு காலம் போனாலும் சிறிய மனம் படைத்தவர்கள் வளர்வதில்லை" ஆத்திரத்துடன் சொல்லிவிட்டு யோகன் திரும்பிப் படுத்தான்,
'உமக்கென்ன பெரிய "லவ்” வோடா செந்தில்?"
யசோ சொன்னான்.
'உம்முடைய வேலையைப் பாரும்". செந்தில் லைட்டை அனைத்தான்.
இருளில் கதவை அடித்துச் சாத்திவிட்டுத் தன் அறைக் குள் போனான் யசோதரன்.
செந்திலின் மனதில் காதலைப்பற்றி யோகனும் யசோதரனும் வைத்திருக்கும் தத்துவங்கள் படம் போட் L60. லோறாவின் இனிய நி  ைன வி ல் அவன் கண்ணயர்ந்தான்.
அடுத்த நாள் விடிய செந்தில் யசோதரனுடன் அதிகம் கதைக்கவில்லை. வேலைக்குப் போகத் தயாராகிக் கொண்டிருந்தான்.
யசோவின் மனதில் தனக்கு வேலை போன துக்கத்தை விட செந்தில் சந்தோசமாய் இருப்பதைப் பார்த்துப் பொறாமை வந்தது. லண்டனுக்கு வந்து ஒருவருடம் கூட இல்லை. அதற்குள் இவருக்குப் பெரிய ஆட்டம் எனத்

தேம்ஸ் நதிக்கரையில் A 101
தானே நினைத்து எரிந்து கொண்டிருந்தான். யசோ வெளியில் போவதே குறைவு. நேரம் கிடைக்கும் போதெல்லாம் வேலை.
எத்தனையோ வேலை மாறியாகிவிட்டது இன்னும் தமக்கையிடம் வாங்கிய கடன் கொடுத்து முடியவில்லை.
இந்த லட்சணத்தில் நல்ல உடுப்பு வாங்குவதாவது? நாலு இடம் போவதாவது? யாரேன் பெட்டைகளுக்குச் செலவழிக்க இரண்டு பவுன் இருந்தால் அதைச் சேர்த்து இலங்கைக்கு அனுப்புவதுதான் யசோவின் நோக்கமாக இருக்கும்.
நண்பன் சிவபால்னுடன் இரண்டொருதரம் ஹொஸ் பிட்டல் டான்சுகளுக்குப் போய்ப் பார்த்தான் எண்ணெய் வழிந்த அவன் முகத்தையும் "அயன்" பண்ணாத அவன் சேர்ட்டையும் ஏன் பார்க்கிறார்கள், நாகரீக மங்கைகள்?
யசோ லோறாவைக் கண்டதில்லை. ஆனால் காண முதலே அவளில் ஒரு வெறுப்பு ஏற்பட்டது. அடுத்த நாட் களில் அதைப்பற்றி நினனக்க நேரமில்லாமல் வேலை தேடும் விசயத்தில் பொழுது போய்க் கொண்டிருந்தது
லோறா திங்கட்கிழமை வேலையைத் தொடங்கினாள், கொஞ்ச நாளாக செந்திலுக்கு 'ஓவர்ரைம்' கிடைத்தது. வந்த சந்தர்ப்பத்தை விட விருப்பமில்லாமல் வேலை செய்தான்.
இந்த விடுமுறையில் உழைக்கும் காசில் மிச்சம் பிடித்துத்தான் அடுத்த வருட கல்லூரிக் காசு கட்ட வேண்டும். தாய் கடன் வாங்கிக் கொடுத்த காசைக் கொடுக்க வேண்டும் ஏதோ ஒருவிதமாக பனிக்காலம் போய்விட்டது. ஸ்னோ அதிகம் பெய்யாதபோதும் மாதி பங்குனிக் குளிரில் தவித்துவிட்டான் செந்தில். புதுப்
GA5ー7

Page 56
102 A. ராஜேஸ்வரி
பழக்கம் மட்டுமில்லை. நல்ல உடுப்பும் இருக்கவில்லை. உழைக்கும் காசில் எப்படியாவது மிச்சம்பிடித்து ஒன்றி ரண்டு நல்ல உடுப்புகள் வாங்க வேண்டும் என் நினைத்தான்
லோறாவுடன் அதிக நேரம் திரிய முடியவில்ல்ை என்பது வேதனைதான் என்றாலும் ஒவ்வொரு நாளும் கொஞ்ச நேரமாவது அவளை எட்டிப்பார்க்காமல் இல்லை.
வீட்டுக்குத் தெரிந்தால் என்ன நடக்கும் என்ற பயம் மனதில் இருந்தாலும் காசு வீட்டுக்கு அனுப்பியதும் அவர்கள் சந்தோசமாகக் கடிதம் எழுதியிருந்தது நிம்மதி யாக இருத்தது. . . . . இளம் கன்று துள்ளும் தானே' என்று தன் தொடர்பை வெறும் வயதுக் கோளாறினால் ஏற்படும் சிறு சலனம் என ஒதுக்கித் தள்ளிவிட்டார்களா என்று அடிக்கடி யோசித்தான்.
எத்தனையோ தெரிந்தவர்கள் லோறாவையும் செந்திலையும் அநேக இடங்களில் கண்டார்கள். முகத்தில் நேரே ஒன்றும் சொல்லா விட்டாலும் சனி ஞாயிற்றுக் கிழமைகளில் கூடிக்கதைக்கும் போது தன்னைப்பற்றி வம்பளப்பு நடக்கும் என எண்ணிக்கொண்டான்.
இரண்டொரு கிழமைக்குப்பின் உடம்பு நோவுடன் லோறாவின் அறைக்கு வந்து சேர்ந்தான் செந்தில். அவன் இப்படிக் கஷ்டப்பட்டு உழைப்பதைப் பார்த்து அவனில் பரிதாபம் வந்தது அவளுக்கு.
*நான் ஒரு கோடீஸ்வரனின் பெண்ணாய் இருத்தால் உங்களை இப்படி வேலை செய்ய விட மாட்டேன்’ என்றாள், அவனை அன்புடன் அணைத்துக்கொண்டு.
*கோடீஸ்வரனின் பெண்ணாய் இருந்தால் என்னைப் பார்க்க மாட்டாய் லோறா' என்றான் செந்தில்,

தேம்ஸ் நதிக்கரையில் A 103
அவளின் இதமான அணைப்பில் தன் நோவை மறந்து கோண்டு .
அவள் சிரித்தாள். “எங்காவது வெளியில் சாப்பிடப் போவோமா" என்றாள் லோறா.
யசோதரன் கொஞ்ச நாட்களாக முணுமுணுத்துக் கொண்டிருந்தான், தான் தான் சமைப்பது என்று. இன்று கட்டாயம் தான் வந்து சமைப்பதாகச் சொல்லி யிருந்தான் செந்தில், அவன் ஏதும் இறைச்சி வாங்கி வைத்திருப்பான் போய்ச் சமைக்காவிட்டால் யசோ தரன் தாறுமாறாகப் பேசுவான்.
இன்னொரு விதத்தில் யசோதரன் பாவம், ஆஸ்பத்திரியில் இரவு வேலை கிடைத்திருந்தது. சுகமான வேலையில்லை. அவனைச் சமைக்க எதிர்பார்ப்பதும் சரியில்லை.
"வேண்டாம் லோறோ. எனக்கு உடம்பு சரியில்லை. வீட்டை போய் நிம்மதியாக ஒரு குளிப்பு அடித்துவிட்டு ஏதேனும் சமைத்துச் சாப்பிட்டு விட்டுப் படுக்க வேண்டும் போல் இருக்கு" என்றான் செந்தில்.
"அப்படி என்றால் ஒன்று செய்யுங்கள்; என்னையும் கூட்டிக்கொண்டு போங்கள். நான் சமைக்கிறன், எல்லோருக்கும் சேர்த்து"
செந்தில்வேல் ஒருகணம் திடுக்கிட்டான். என்ன மறுமொழி சொல்வது?
யோகலிங்கம் பரவாயில்லை. சட்டென்று பழகக் கூடியவன். யசோதரன் பேயன் - ஏதும் அலட்டி விட்டால்..?
அத்தோடு வீட்டுக்காரன் என்ன நினைப்பான்? என்ன நினைப்பது? நான் வாடகை கொடுக்கிறேன். பலவாறாக நினைத்தான் செந்தில். -

Page 57
104 A ராஜேஸ்வரி
"என்ன நினைக்கிறீர்கள்? உங்கள் அறை எல்லாம் குப்பையாக இருக்கும் என்றா? அது பரவாயிலலை. "பச்சிலர் ரூம் ஒரு குப்பைத் தொட்டி என்று மைரா சொன்னாள், டானியலின் அறைக்குப் போய்விட்டுவந்து. எனக்கும் பார்க்க ஆசையாக இருக்கு நீங்கள் எப்படி இருக்கிறீர்கள் என்று"
செந்திலுக்குத் தெரியும் லோறாவின் குணம். அவன் மாட்டேன் என்று சொன்னால் என்ன காரணம் எனப்
பிடுங்கி எடுத்துவிடுவாள்.
என்ன செய்வது? என்றோ ஒரு நாள் தானாக என்’ றாலும் என் கதவைத் தட்டாமலா விடப்போகிறாள். செந்தில்வேல் சரியென அழைத்துக்கொண்டு போனான். கதவைத் திறந்த யசோ த ர ன் ஒரு தரம் திறந்த வாய்மூடாமல் லே ரா றா வைப் u T fi ġ ġ IT eiw ஆச்சரியத்துடன். செந் தி ல் வேலு க் குப் பின்னால் திரிபவள் இவ்வளவு அழகாகவும் நாகரீகமாகவும் இருப் பாள் என அவன் எதிர் பார்க்கவில்லை. அவளுடைய அழகு, தோற்றம், சிரிப்பு, கவர்ச்சியான நடை ஒவ்வொன் றையும் ஆச்சரியத்துடன் ரசித்தான் யசோதரன். **போனால் போகட்டும் போடா" என்று பாடிக்கொண்டு கோழிக்கறி சமைத்தவனின் சத்தம் ஏன் திடீரென்று நின்றது என்ற யோசனையில் எட்டிப்பார்த்த யோகன் முட்டிக்கொள்ளாத குறையில் லோறாவைக் கண்டான் கதவடியில்.
'நீங்கள் தானே யோகன். செந்திலுடன் ஒ ரே' அறையில் இருப்பவர்" என்றாள் லோறா.
சட்டென்று யாருடனும் பழகும் யோகலிங்கமும் லோறாவின் திடீர் வருகையால் திடுக்கிட்டுப் போனான்.
"எப்படி நான் தான் என்று கண்டுபிடித்தீர்கள்" என்றான் யோகன்.

தேம்ஸ் நதிக்கரையில் A 105
சும்மா ஒரு ஊகம்"
கட்டில் எங்கும் நிறைந்து கிடந்த உடுப்புக்களையும் புத்தகங்களையும் ஒதுக்கிவிட்டு உட்கார்ந்தாள் லோறா. மைராவின் அறைபோல் புரட்சிக் கோஷங்கள் சுவர் திறைய எழுதியிருக்காவிட்டாலும்மேசை நிறையக்கிடந்த புத்தகங்களில் இருந்து தெரிந்தது, யோகன் எப்படிப்பட்ட ஆள் என்று
அவள் பார்வை எங்கெல்லாம் போகிறது என்று பார்த்தான் யோகலிங்கம் தன்னைப் பற்றி செந்தில் என்ன சொல்லியிருப்பான் என்று அவனுக்கு விளங்கியது. புரட்சிக்காரன் என்று சொல்லியிருப்பானா? விசரன் என்று சொல்லியிருப்பானா?
"என்ன அப்படி ஆராய்கிறீர்கள்' என்றான் யோகன். என் சிநேகிதியின் அறைச் சுவர் எல்லாம் சுலோகங்களாக இருந்தது. அவளின் சினேகிதன் ஒரு முற்போக்குவாதி இங்கு புத்தகங்களாக இருக்கிறது என்று பார்த்தேன்" என்றாள் லோறா.
செந்தில்வேல் யசோவுக்கு உதவி செய்ய குசினிக்குள் சென்றான்.
லோறா தான் சமைக்கிறேன் என்று எவ்வளவோ சொல்லியும் செந்தில் விடவில்லை. "கிட்டத்தட்ட சமையல் முடிந்துவிட்டது. உங்களுக்கேன் சிரமம்" என்றான் யசோதரன், வாயெல்லாம் பல்லாக காரணம் குசினி அடுக்குப் படாமல் குப்பையும் கூளமுமாக இருந்ததுதான் அவர்களுக்கு லோறாவை உள்ளுக்கு விட விருப்பமில்லை.
'ஏனடா சொல்லாமல் கொள்ளாமல் கூட்டிக் கொண்டு வந்தாய்" என ரகசியமாகக் கத்தினான் செந்திலிடம் யசோதரன்.
"எனக்குத் தெரியாது அவள் வரப்போகிறாள் என்று"
என்றான் செந்தில்.

Page 58
106 A ராஜேஸ்வரி
"கையெழுத்து வைக்க முதலே அவளுக்கு ஆமாம் சாமி போடுறீர். பாரும் கொஞ்ச காலத்தில் உம்மை ஆட்டிவைக்கப் போறாள்" என்றான் யசோ.
யாழ்ப்பாணத்தில் இருந்து வந்த மிளகாய்த்தூள் சரியான காரமாக இருந்தது. லோறாவின் கண்களில் நீர் ததும்பிவிட்டது உறைப்பில்,
**மைரா வீட்டுக்குச் சாப்பிட வரும்போது இப்படி உறைப்பை எதிர் பார்த்துக்கொண்டு வராதீர்கள்" என்றாள் லோறா.
‘'வேணுமென்றால் நா ங் க ள் சமைக்கிறோம் உங்களுக்கு உறைப்புப் போட்டுச் சமைக்கத் தெரியா விட்டால்" என்று உற்சாகமாகச் சொன்னான் யசோ.
"நானும் , மைராவும் பட்டினியல்லோ இருக்க வேண்டும், நீங்கள் சமைக்க வெளிக்கிட்டால்" லோற7 சிரித்துக்கொண்டு சொன்னாள்.
'பாவம் செந்தில். வாழ்க்கை எல்லாம் உறைப்பில்லா மல் சாப்பிட போகிறான்" என்றான் யசோ.
அவன் என்ன சொல்கிறான் என்றதன் கருத்தை விளங்கிக் கொண்டு சிரித்தாள், செந்திலைப் பார்த்து அழகாக. அந்தச் சிரிப்பின் கருத்து எல்லோருக்கும் புரிந்தது, சாப்பாடு முடிய லோறாவைக் கூட்டிக் கொண்டு செந்தில் போனதும் யோகலிங்கம் கேட்டான். "எப்படி லோறா"
"எப்படி என்றால் என்ன? இப்பிடி ஒரு வடிவான பெட்டை எத்தனை நாளைக்கு செந்திலோட திரியுது என்று பார்ப்பம்" என்றான் யசோ. அவன் குரலில் பொறாமை தொனித்தது
ஏன் இப்படிக் கதைக்கிறீர்? அழகான பெட்டைகள் ஆட்டக்காரிகள் என்பதுதான் உம்முடைய முட்டாள்

தேம்ஸ் நதிக்கரையில் A 107
தனமான கருத்தா" என்றான் யோகன். அவனுக்குத் தெரியும் யசோதரன் பொறாமையில்தான் சொல்கிறான் என்று. என்ன செய்வது சில மனிதர்களுக்கு பொறாமை என்பது ஒரு பிறப்பு நோய்.
9
லண்டனில் வெயில் கொளுத்திக் கொண்டிருந்தது. ஆவணி மாதம் தொடங்கியும் வெயிலின் அகோரம் குறையவில்லை. லோறா செந்திலையும் யோகலிங்கம், யசோதரனையும் மைரா வீட்டிற்குச் சாப்பிடக் கூப்பிட்டிருந்தாள்.
டானியலின் பிரிவால் தளர்ந்து போயிருந்த மைரா வின் வாழ்க்கையில் லோறாவும் செந்திலும் தான் ஒரளவென்றாலும் மனம் விட்டுப் பழகக் கூடியவர்களாக இருந்தார்கள். செந்தில் கல கல என்று பழகாவிட்டா லும் மைராவுடன் லோறாவின் காதலன் எனவே மைராவைப் பழக வைத்தது.
ஆங்கிலேயரைப் போலவும் மற்றும் தான் பழகிய ஐரோப்பியர்கள் போலவும் இல்லாமல் செந்தில் மாறு பட்ட விதத்தில் பழகினான். “கெளரவமாகப்' பழகி னான் மைராவுடன் என்றுதான் சொல்லவேண்டும்.
ஆனால் மைரா ஒன்றைக் கவனிக்கத் தவற வில்லை. முன்பெல்லாம் நினைத்த இடம் போகலாம் லோறாவுடன். இப்பொதெல்லாம் ‘செந்திலைக் கேட்க வேண்டும்" என்பாள் லோறா எதற்கும்.
டானியலுடன் வருடக்கணக்காகப் பழகிய பின்னும் மைரா, தான் ஒன்று செய்ய வேண்டுமென்றால் டானிய வின் அனுமதிக்கு ஒரு நாளும் காத்திருக்கவில்லை. ஒரு

Page 59
188 A ராஜேஸ்வரி
ஆணும் பெண்ணும் ஒருத்தருக்கொருத்தர் அன்பாக இருக்க வேண்டுமே தவிர அடிமையாக இருக்கக் கூடா தென்பது டானியலின் கொள்கை சிலவேளை மைரா வுக்கு "ஹைட்பார்க் ஸ்பீக்கர்" மூலையில் போய் நின்று பல தரப்பட்ட அரசியல் பேச்சுகளைக் கேட்கவேண்டும் போலிருக்கும். லோ றா முன் பெல்லாம் ஒய்விருக்கும் போது மைரா எங்கே கூப்பிடுவாள் என்றிருந்தாள். இப்போதெல்லாம் எதற்கும் செந்தில்வேலின் அனுமதிக்குக் காத்திருந்தாள்.
"ஏன் லோறா உன் சுதந்திரங்களை இப்படிப் பறி கொடுக்கிறாய்?" என்றாள் மைரா. th.
*நான் எதையும் பறி கொடுக்கவில்லை. அவர் அன்பில் வாழ்கிறேன். அவர் சொல் கேட்பதில் பிழை என்ன?" எனறு கேட்டாள்.
"உனக்கு இப்போது தானே பதினேழு வயது முடியப் போகிறது. என்னைப் போல் இருபத்து மூன்று வயதில் தான் என்ன கதைக்கிறேன் என்று தெரியும்’ என்றாள் மைரா.
செந்திலின் அன்பு தன்னை அடிமைப் படுத்தி வைத் திருக்கிறது என்பதை லோறா உணராமலில்லை சில வேளை யாரும் வெள்ளைக்கார ‘போய் பிரண்ட்” அவளுக்கு இருந்திருந்தால் செந்தில் எப்படித் தன்னுடன் பழகினான் என்று தெரிந்திருக்கும்.
அவனைப் பொறுத்தவரையில் லோறா அவனின் தனிச்சொத்து. அவளுக்கு வேறு யாரையும் தெரியாது அவனைத் தவிர
அவள் தனனைக் காதலிப்பாளோ என்று சந்தேகித்த காலம் போய் விட்டது. இப்போது லோறாவுக்கு அவன் இல்லாமல் வாழ்வே சூனியமாகிவிடும் என்று தெரியும். லோறா செந்தலையும் நண்பர்களையும் பைராவின் வீட்டுக்கு சாபபிடக் கூப்பிட்ட அன்றுதான் யசோவும்

தேம்ஸ் நதிக்கரையில் A 109
யோகனும் மைராவை முதல் தரம் கண்டார்கள். ய்சோ பட்டிக்காட்டான் மிட்டாய்க் கடையைப் பார்ப்பது போல் இரு பெண்களையும் பார்த்துக்கொண்டிருந்தான்" மைராவுக்கு யோகலிங்கத்தைப் பிடித்து விட்டது. எவ்வாறு யோகலிங்கமும் செந்தில்வேலும் சினேகிதர் களாக இருக்கமுடியும் என்றுதான் முதலில் யோசித்தாள். வாழ்க்கையைப் பற்றிய கருத்து இரு நண்பர்களுக்குமிடை யில் இரண்டு விதமாக இருந்தது.
இந்த இரண்டு விதத்தில் யசோதரன் என்ன ரகம்? அன்றைய சாப்பாட்டின் போது மைரா மிகவும் உற்சாகத்துடன் காணப்பட்டாள்.
புதுவிதமான மனிதர்களுடன் பழகும்போது ஏற்படும் இனமறியாத உற்சாகமாக இருக்கலாம்
அடுத்த சில நாட்களில் ஒன்றிரண்டு தரம் மைரா லோறாவுடன் செந்தில் வீட்டுக்கு வந்திருந்தாள். பின்னர் யோகலிங்கமும் மைராவும் நல்ல சினேகிதமாகி விட்டார்கள்.
'எனக்கு எப்பவோ தெரியும் யோகலிங்கம் இப்படி யொரு பெண்ணைத்தான் பார்ப்பானென்று" என்று சொன்னான் செந்தில், ஒருநாள் இரவு யசோதரனிடம். "என்னடா அவள் முதல் யாரோடு திரிந்து அவன் ஐலண்டில் செத்துப்போனதென்றாய். அவன் செத்து ஆறு மாதம் ஆகயில்லை. அதற்கிடையில் இவனோட திரியிறாள்" என்றான் யசோதரன்.
'திரிந்தாலென்ன? லண்டனில் உள்ள தமிழ் ஆட்களில் எத்தனை பேர் பெண் சாதி இருக்கேக்கை வேற யாரும் வெள்ளைக்காரியைப் பார்க்கினம்? என்று உம்மிட மச்சானைக் கேளும் சொல்லுவார். அதைவிட ஒரு பெண்ணுக்குத் துரோகம் செய்யிறதைவிட அவன் தன் விருப்பப்படி நடக்கிறான். உமக்கென்ன வயிறு எரியுது. சும்மா பொறாமைப்படாதேயும்" என்றான் செந்தில்.

Page 60
110 A ராஜேஸ்வரி
“உங்களுக்கடா லண்டனுக்கு வந்தவுடன் கண்மிண் தெரியாமல் போச்சு. உங்கள் தரவளி இப்படி ஆடுற படியால்தான் யாழ்ப்பாணம் எல்லாம் கிழட்டுக் குமரர்கள் திறைஞ்சு கிடக்கு"
யசோதரன் சொன்னான் வியர்வையைத் துடைத்துக் கொண்டு. −
**நீர் தரவளி நல்ல பிள்ளையாய் இரும், கிழட்டுக் குமர்கள் ஆகாமல் "ரூரிஸ்ட் விசாவில்' வந்து மாப்பிள்ளை வாங்குபவர்களுக்கு விலைப்பட" செந்தில் நக்கலாக சொன்னான்.
‘அங்கே காணி வித்து நகை வித்து அனுப்பினா இவைக்கு ஒரு கண்டறியாத காதல்"
யசோதரன் எரிச்சலுடன் பொருமினான்.
*உனக்கென்னடா தெரியும் காதலைப் பற்றி" யோகனின் குரல் கேட்டது.
'ஓம் நீர் பெரிய இலட்சியவாதி, அவளோட மேஞ்சு திரிஞ்சு போட்டு வாறிர், ஏதோ இஞ்ச இருக்கிறவர்கள் எல்லாம் இலங்கைக்குப் போய் தமிழர் விடுதலைக்குப் போராட வேணுமென்றீர். இப்ப என்னடா எண்டால் எவளோ சுவீடிஸ் பறச்சியோட ஆட்டம் போடுறீர். அங்கே இருக்கிற சில ஆட்களுக்கும் உம்மைப் போல ஆட்களுக்கும் என்ன வித்தியாசம்? அவன்கள் அங்க பித்தலாட்டம் ஆடுறான்கள். நீ ங் க ள் இ ங் கே காதலாட்டம் ஆடுறியள்” யசோ யோகனில் எரிந்து விழுந்தான்.
"காதலுக்கும் என் கருத்துகளுக்கும் ஒரு வித்தியாசமு மில்லை. மைராவுடன் திரிவதால் நான் என் கருத்துக் களை மாற்றவில்லை" யோகன் சொன்னான்
"உருப்படியாப் படிச்சுப் போட்டு ஊ ரோடு போய்ச் சேர்ந்து நல்ல சீதனத்தில் ஒரு." யசோ அபிநயம்

தேம்ஸ் நதிக்கரையில் A 111
பிடித்துக் கதைப்பதை விட்டுவிட்டான், யோகனின் சூடான பார்வையைக் கண்டதும்.
"ஊரில இப்படி உன்னைப் போய் விற்கிற்த்தை விட இங்கேயே விற்கலாமே. ஐந்து பவுனுக்கு ஒருவனுக்கு உடம்பைக் கொடுப்பவள் ஒவ்வொரு தரமும் ஒவ்வொரு வனுக்குச் சோரம் போகிறாள். ஐம்பதினாயிரத்துத் தன் னை ஒருத்திக்கு விற்பவன் வாழ்க்கை எல்லாம் ஒருத்திக்கு சோரம் போகிறான் என்பதுதான் என் அபிப்பிராயம். அடிப்படையில் இரண்டும் ஒன்று: விபச்சாரம்; பண்ட மாற்று; உடலும் பணமும்; விபச்சாரிக்குத் தேவையானது நல்ல உடம்பு. தன்னை விற்பவனுக்குத் தேவை தன் பெயருக்குப் பின் இரண்டு மூன்று இங்கிலீஸ் எழுத்து. விபச்சாரி பசி வந்தால்தான் தேவைக்குத் தன்னை விற்கிறாள். விலை ப் படுகிற வன் தன் தேவைகளைக் கூட்டிக்கொள்ள விற்றுக் கொள்கிறான்" யசோதரன் ஆக்திரத்துடன் கதவை அடித்துவிட்டு வெளியேறினான், யேர்க்லிங்கம் இப்படிப் ப்ேசுவதைப் பார்த்ததும்.
“அன்பை, நட்பை, ஆண்பெண் உறவை எடை போடத் தெரியாத பிற்போக்குவாதிகள்". யோகலிங்கம் யசோதரனைப் பார்த்துச் சொன்னான்.
செந்தில்வேல் மெளனமாக இருந்தான். என்றோ ஒரு நாள் யசோதரனும் யோகலிங்கமும் ஆளுக்கு ஆள் பல் உடைத்துக் கொள் ள ப் போகிறார்கள் என்பது தெளிவாகத் தெரிந்தது செந்திலுக்கு.
நாட்கள் மெல்ல நகர்ந்து கொண்டு போயின. யசோ தரனுக்குசில வேளை வீட்டிலிருக்க எரிச்சல் வந்தது' மைராவுடன் யோகலிங்கமும் லோறாவுடன் செந்திலும் வெளியே போனபின் யசோதரன் சிலவேளை தமக்கை வீட்டுக்குப் போவான்.
அங்குபோனால் என்ன? ராசரத்தினத்தார் புதுக்கழகம் அமைப்பதில் மும்மரமாக ஈடுபட்டுக்கொண்டிருந்தார்

Page 61
112 A ராஜேஸ்வரி
“லண்டனில் இருக்கிறதே நாலைந்து ஆயிரம் தமிழரும் இல்லை. அ த ற் குள் ஏன் நாற்பத்தேழு கட்சியோ" என்றான் யசோ.
"சும்மா இரும் உமக்கென்ன தெரியும் உதுகளைப் பேற்றி, தாங்கள் ஏதோ பெரிய ஆட்கள் என்று கொஞசப் பேர் தமிழ் வளர்க்க வெளிக்கிட்டிருக்கினம். அவை என்ன பெரிய ஆட்களோ? தமக்கை சொல்வதை யசோ எதிர்த்துக் கதைக்க முடியவில்லை!
"எப்படி உம்முடைய சினேகிதர்கள்?" என்றாள் இஞ்சிச் சம்பலை புரட்டியபடி
சினேகிதர்கள் என்றதும் யசோவுக்கு எரிச்சல் வந்தது. மூன்று நாள் நைட் டியூட்டியில் பகலில் நித்திரை. யசோதரன் இரவில் வேலை. சினேகிதர்களைக் கண்டே சரியாக மூன்று நாலு நாட்கள் இருக்கும்.
* அவங்களுக்கென்ன. சும்மா பெட்டைகளோட சுற்றிக்கொண்டு திரியிறான்கள். என்னெண்டு அடுத்த வருஷம் பாஸ் பண்ணப் போகினம் என்று பார்ப்போம்" யசோதரன் சாபம் போட்டான்.
லோறாவுடன் செந்திலை ரூட்டிங் புறோட்வேய் மார்க்கட்டில் ராசரத்தினத்தார் கண்டதாகச் சொன்னார். "ஒம் பெரிய பப்ளிக்காகத் திரியினமாம்" பரமேஸ் இடியப்ப உரலில் மாவை அடைந்தபடி சொன்னாள்.
'ஊரிலை த ரா ய் தகப்பனுக்குத் தெரியாமலோ இருக்கும்"
தமக்கையிடம் கேட்டான் யசோதரன்.
‘உதெல்லாம் பெரிசு படுத்தி ஏன் பெடிகளின் படிப்பைக் கெடுப்பான் எண்டு பேசாமல் இருப்பினம். இவர் சொன்னார் செந்திலின் மச்சாள் ஒருத்தி மெடிகல் கொலிஜ் யிலையாம். ஏழாலையிலை கதையாம் செந்தில படிச்சு முடிஞ்சுபோகக் கல்யாணம் நடக்குமென்று."

தேம்ஸ் நதிக்கரையில் A 1*
பரமேஸ் சொன்னவற்றைக் கேட்ட uGgerr சொன்னான்.
"நான் நினைக்கயில்லை அக்கா, உவன் செந்தில்வேல் ஊரில போய்க் கட்டுவான் என்று. இஞ்ச இவளில பெரிய பைத்தியமாக அல்லவோ திரியிறான்"
'தம்பி புதிசில எல்லாம் புதினம்தான். படிச்சுப் பாஸ் பண்ணி எஞ்சினியர் என ஊருக்குப் போய் காலடியில் ஒரு லேடி டொ க்ர  ைர ப் பார்க்க அவன் எப்படி மாறுவான் என்று இருந்துபார்' என்றாள் பரமேஸ். யசோதரன் நம்பவில்லை, லோறாவை செந்தில் விடுவானென்று.
மார்கழி மாதம் மரமெல்லாம் மொட்டையாக நின்றன, இலையுதிர்ந்து போய். வெயிலில் அனுபவித்த சந்தோசமெல்லாம் போய் மனிதர்கள் தங்களை ஒவர் கோட்டுக்குள் மறைத்துக்கொண்டிருந்தார்கள், குளிருக் குப் பயந்து,
லோறாவின் பதினெட்டாவது பிறந்த தினம், மைரா உட்படசெந்தில்வேலையும் நண்பர்களையும் சாப்பிடக் கூப்பிட்டாள், சர்மிளா வீட்டுக்கு.
எப்போது தனக்குப் பதினெட்டு வயதாகும் என்று ஏங்கிக்கொண்டிருந்தாள் லோறா. தன் இலட்சியம் இனி நிறைவேறும் தான் ஒரு நேர்ஸ் ஆகலாம் என்ற ஆசை துளிர்விட்டது. செந்தில் அவளுக்குப் பின்னேர வகுப் புக்கள் ஒழுங்குசெய்து கொடுத்தான். லோறாவிடம் ஆங்கிலத் திறமை இருந்தது.
பிறந்த தினச் சாப்பாடு சோறும் கறியும் தானே தயாரித்தாள் லோறா. தாய் எப்படிச் சந்தோசப்படு வாள் தான் நேர்சிங் சேரப்போவதைப் பற்றி என்று எண்ணி மகிழ்ந்தாள். மேரி தன் மகள் படிப்பில் அக்கறை செலுத்துவதையிட்டு மிகவும் சந்தோசப்பட்டு எழுதியிருந் தாள். “லண்டன் தெருக்களில் திரியும் ஆயிரக்கணக்

Page 62
114 A ராஜேஸ்வரி
கான அவலமான பெட்டைகளில் உன் மகளும் ஒருத்தி யாய்ப் போகிறாள்' என்று ஓயாமல் சொல்லிக் கொண்டிருந்த ஸிம்சன் லோறா 'உருப்படி’யாக லண்டனில் சீவிப்பதையிட்டுப் பொறாமைப்பட்டான்.
வாழத் தெரியாமல் எங்கேயோ திரிந்துவிட்டுத் தங்களிடம் திரும்பி வருவாள் என்றிருந்த நினைவு பொய்த்து விட்டதில் ஆத்திரம் அவனுக்கு.
ஆனாலும் இப்போதுதானே பதினெட்டு வயது. இனித்தான் தெரியப்போகிறது வாழ்க்கையைப் பற்றி என ஸ்பிம்சன் எண்ணாமல் இல்லை. . . . . . செந்திலும் லோறாவும் பழகும் விதத்தைப் பார்த்த தும் யசோதரனுக்குத் தமக்கை சொன்ன லேடி டொக்டர் க்தை ஞாபகம் வந்தது,
உயிரும் உடலுமாகப் பழகும் லோறாவை விட்டு விட்டு வெறும் காசுக்கும் அந்தஸ்துக்கும் இன்னொரு பெண்ணை செந்தில் செய்வானா என்று அன்று
முழுவதும் யோசித்தான் யசோதரன்.
'நீங்கள் நினைக்கிறீர்களா உங்கள் நண்பன் செந்தில் லோறாவைக் கல்யாணம் செய்வார் என்று" எனக் கேட்டாள் மைரா, செந்திலும் லோறாவும் தனியாக இருந்து செல்லம் பண்ணுவதைப் பார்த்து.
'எனக்கு வெறும் சடங்குகளில் நம்பிக்கையில்லை. ஆனால் செந்தில் வேறு விதமானவன். லோறாவில் பைத்தியமாக இருக்கிறான். இவர் சொல்லுறதைப் போல் லோறாவை விட்டுவிட்டு இலங்கைக்குப் போய் யாரையும் கட்டுவான் என்று" என்றான் யோகன்.
"அப்படி செந்தில் செய்தால் நான் நினைக்கேல்லை, லோறா ஒரு நிமிஷம் என்றாலும் உயிர் வாழ்வாள். என்று" என்றாள் மைரா.

தேம்ஸ் நதிக்கரையில் A :5
"என்ன விசர்? தான் நினைப்பதுபோல் மற்றவன் நினைக்க வேண்டும் என்று:நினைப்பது? செந்தில் இல்லா விட்டால் வேறு ஆட்கள் இல்லையா உலகத்தில்?" யோகன் சொன்னான்.
"நீங்கள் நினைப்பது போல் இல்லை லோறா. அவள் இந்தியத் தாயின் மகள். கல்யாணம் காதல் என்ப வற்றைப் புனிதம் என நினைக்கிறாள். செந்தில் ஏமாற்றி விட்டுப் போவதை விட அவள் இறப்பது பெரிதென நினைக்கக் கூ டி ய வ ள் " - மைரா உறுதியாகச் சொன்னாள்.
எஞ்சினியராக வந்தவுடன் செந்தில் என்ன செய்வான் என்று தெரியாது யோகனுக்கு.
ஆனால் தற்போது அது ஒரு பிரச்சினை இல்லை. பார்ட்டி முடிய எல்லோரும் போய்விட்டார்கள். செந்தில் இரவு வேலையில்லை. அடுத்த நாள் லீவு எடுத்திருந்தான். பிந்தி வருவதாக யோகனிடம் சொன்னான். y,
கீழே சர்மிளா குடும்பத்தினர் கல்யாண வீடொன் றுக்குப் போய்விட்டனர். மழை கொட்டத் தொடங்கி விட்டது வெளியில்.
மழை விட்டபின் வெளிக்கிடுங்கள் என்றாள் லோறா. அன்று ஏதோ இரவு பன்னிரண்டு மணியாகியும் மழைவிட வில்லை. பார்ட்டிக்கு வாங்கிய வைன் போத்தல்களில் மிச்சம் இருந்ததெல்லாம் செந்திலின் வயிற்றுக்குள் போய் விட்டது. கண் சிவந்து அவன் கதை தடுமாறியதைக் கண்டதும் லோறா பயந்து விட்டாள்.
“இப்படிக் கண்மிண் தெரியாமல் குடித்திருக்கக் கூடாது" என்றாள் லோறா.
"டாக்சி கூப்பிடட்டுமா" என்றாள் நடக்க முடியாமல் தள்ளாடுவதைப் பார்த்ததும்.

Page 63
116 A ராஜேஸ்வரி
"ஏன் வீண் காசு. நான் போய் விடுவேன் பயப் படாதே" என்றான் செந்தில்,
"வெறும் கோப்பி போட்டுத் தருகிறேன் வெறிக்கு. நல்லது" என்றாள் லோறா. -
அவள் அன்று அவன் கண்களுக்கு மிக அழகாக இருந்தாள். நீல நிற "ஈவினிங் ட் ரெ ஸ்" போட்டிருந்தாள்.
அலை கூந்தல் தொள தொள என்று அவள் முதுகில் கிடந்தது.
'லோறா இன்று இருக்கவிடேன் உம்முடன்” என்றான் செந்தில். வெறியில் தடையின்றி வந்தது மன ஒட்டம்.
லோறா செந்திலை ஏறிட்டுப் பார்த்தாள். அவளுக்குத் தெரியும் என்றோ ஒரு நாள் இப்படிக், கேட்கப் போகிறான் என்று. எனன பதில் சொல்வது?
"என்னில் பயமா?" அவன் குரல் இனம் தெரியாமல் இருந்தது அவளுக்கு. மென்மையும் காதலும் பிரவகித்தது. அவன் குரலில்,
அவள் உணர்ச்சிகள் உருகின. அவனுக்குத் தெரியும் என்ன நடக்கப் போகிறது என்று. அவளைப் பொறுத்த வரையில் அவன் அந்நியன் இல்லை அவன் தொடாத உடம்பல்ல அவளுடையது. ஆனாலும் எது நடக்க வேண்டுமோ அது நடக்கக்கூடாது என நினைத்திருந் தாள் தன் திருமண இரவுவரை. அவளில் இந்திய இரத்தம் ஒடுகிறது.
பெண்மையின் பொறுமை ஆண்மையின் அவசரத்தில் அழிவது அவனுக்குத் தேரிந்தது, அவளுடைய சட்டையின் "ஷிப்”பை அவன் கழட்டும் போது
"வேண்டாம் செந்தில்" அவள் கெஞ்சினாள்.

தேம்ஸ் நதிக்கரையில் A 117
அவன் பிடி இறுகியது. "லோறா எங்களுக்குள் என்ன பெரிய பிணக்கு." அவன் என்ன சொல்லியும் கேட்கப் போவதில்லை என அவளுக்குத் தெரியும். இதுதான் காதலா?
காலையில் எழும்பியவுடன் தன்னையணைத்துக் கொண்டு படுத்திருக்கும் லோறாவையும் அவளின் இரத்தம் படிந்த இரவுச் சட்டையையும் பார்க்க ஏதோ செய்தது செந்திலுக்கு.
அவன் வெறியில் தான் இருந்தாலும் அவள் "வேண்டாம் செந்தில்’ என்று கெஞ்சியது ஞாபகத்தில் இல்லாமல் இல்லை. நடந்தவை ஞாபகம் வந்தது அவனுக்கு. Y
அவசரப்பட்டுவிட்டேனா? இவளை வேதனைப் படுத்திவிட்டேனா? ஒரு கணம் அவன் நினைவு அவனைக் குத்தியது. மனிதர்கள் மிருகங்களை விட ஒரு சில விஷயத்தி லேயே வித்தியாசம். நாகரீகமாக உடுக்கிறார்கள், உண்கிறார்கள் சிலவேளை உணர்ச்சி ? வசப்பட்டால் அவர்கள் நடத்தை மிருகத்தைவிட மோசமானதா?
அவளை எழுப்பி ஏதோ எல்லாம் கதைத்து மன்னிப்புக் கேட்கவேண்டும் போல் இருந்தது.
அவன் நினைத்ததுபோல் இருக்கவில்லை அவள் நடத்தை எழும்பியவுடன் நாணத்துடன் - ஒருவித நெருக்கத்துடன் அவனைப் பார்த்துச் சிரித்தாள்.
காலம் காலமாக ஒன்றாகக் குடும்பம் நடத்திய நெருக்கத்தின் உணர்ச்சி, “லோறா." அவன் தயக்கத் துடன் இருந்ததைப் பார்த்ததும் அவள் எழும்பி ரெஸிங் கவுண் போட்டுக் கொண்டிருந்தாள்.
தே-8

Page 64
1 18 Δ ராஜேஸ்வரி
மார்கழி மாதந்குளிர் அறையில் பரவியிருந்தது. 'நடந்ததைப் பற்றி ஒன்றும் கதைக்கத் தேவை யில்லை" என்றாள், காஸ் அடுப்பை எரித்தபடி.
கொஞ்ச நேரத்தில் அறையில் சூடு பரவியது. காலைக் கோப்பியின் மணம் காரமற்று கிடந்தது அவனுக்கு.
லோறா கிட்டத்தட்ட சாதாரணமாக நடந்து கொண்டாள், அவன் வீட்டை விட்டுப் போகும் வரைக்கும்.
இரவிரவாய் பெய்த மழையால் நிலம் சதக் சதக் என்றிருந்தது. விம்பிள்டன் வீதியெல்லாம் வெறிச்சென்று கிடந்தது, இலையுதிர்ந்த மரங்களால், வெயில் முகில்களுக் கிடையல் இ  ைட க் கி  ைட எட்டிப் பார்த்துக் கொண்டிருந்தது.
திரும்பவும் லோறாவிடம் போகவேண்டும் போல் மனம் அடித்தது. எதிரே யாரோ தெரிந்த மனிதர் வருவதுபோல் இருந்தது. அவன் நினைத்தது பிழை யில்லை. வந்தவர் தெல்லிப்பளையைச் சேர்ந்தவர். சுற்றி வளைத்து செந்திலின் தகப்பனுக்குச் சொந்தம் என்று கேள்வி. இலங்கையில் இருக்கும் வரை இவர் களைப் பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறானே தவிர ஒரு உறவும் கொண்டாடவில்லை.
விம்பிள்டனில் ஒரு தரம் யசோவுடன் கோயிலில் பூசைக்குப் போய் இருக்கும் போது கண்டான். இலங்கை யில் முன்பின் தெரியாமல் நடந்துகொண்டாலும் லண்டனுக்குப் படிக்க வந்தபின் கொஞ்சம் மரியாதை கொடுத்துப் பழகும் சில மனிதர்களில் அவரும் ஒருவர்.
காற்று அடித்துக் குளிரை காதுக்குள் செருகிக் கொண் டிருந்தது. "யார் அது தம்பி செந்திலே. " மயில் வாகனத்தார் கண்ணாடியைக் கழட்டித் துடைத்துக் கொண்டு கேட்டார்.

தேம்ஸ் நதிக்கரையில் A 19
அவனுக்கு மறுமொழி சொல்ல எரிச்சலாக இருந்தது. 'உம்' என்றான் தன் வேண்டா வெறுப்பைக் காட்டிக் கொள்ளாமல்.
"என்ன லீவிலையா? உழைப்பைப்பாராமல் இப்படித் திரியிறியள்' மயில்வாகனத்தார் நெறறியைச் சுருக்கிக் கொண்டு கேட்டார்.
"இண்டைக்கு ஒவ்", செந்திலுக்குப் பொறுமை யிழந்துகொண்டு வந்தது.
"எப்படி வீட்டில் இருந்து கடிதம் ஏதும் வந்திச்சோ" மயில்வாகனத்தார் விடும்படியாய் இல்லை.
"ஓம்". அதைவிட என்ன மறுமொழி வேண்டிக் கிடக்கு.
"வைத்தி ஒருக்கா உன்னைப் பற்றி எழுதிக் கேட்டார். அவரின்ரை இளைய பெட்டை மெடிக்கல் கொலிஜ்ஜில
T
மயில்வாகனத்தார் செந்திலை உற்றுப் பார் த்தார். வைத்திலிங்கம் செந்திலின் தாயின் ஒன்றுவிட்ட தமயன். வசதிக்காரன். செந்திலின் தகப்பன் வியாபாரத் தில் நட்டப்பட்டு நலியும்போது நக்கலாய்ச் சிரித்தவர்கள். அவர்களின் “பெட்டை" லேடி டொக்டர் என்றால் எனக்கென்ன?
"உங்கட வீட்டார் எழுதியிருப்பினம் என்று நினைக் கிறேன் எல்லாத்தையும்' ஒரு நமட்டுச் சிரிப்பு மயில் வாகனத்தின் முகத்தில் நெளிந்தது.
செந்திலுக்கு இப்போது விளங்கியது மயில்வாகனத் தார் என்ன கதைக்கிறார் என்று.
உடம்பு கோபத்தில் சூடாகியது, வீட்டுக்கு என்னைப் பற்றி எழுத எத்தனைபேர் இருக்கிறார்கள் இங்கு

Page 65
120 A ராஜேஸ்வரி
லோறாவுடன் திரிவதை விம்பிள்டன், ரூட்டிங்கு றொய்டன்னில் இருக்கும் எத்தனையோ தெரிந்த யாழ்ப் பாணத்தார் கண்டிருக்கிறார்கள் யார் யார் வேலை மினைக்கெட்டு வீட்டுக்கு எழுதிக்கொண்டிருக்கப் போகி றார்கள் என்ற பட்டியல் போட்டுப் பார்க்க அவன் தயாராய் இல்லை.
"ஒம் எழுதியிருந்தனம்" என்றான், செந்தில் விட்டுக் கொடுக்காமல்.
'தம்பி ஒரு குடும்பத்தில ஒருவன் படிச்சு வந்தால் குடும்பமே விடிஞ்ச மாதிரி. உனக்கு எத்தனை பொறுப்பு என்று யோசித்துப்பார். கொப்பர் நான் நினைக்க இல்லை இனி தன் காலிலை நிற்பார் எண்டு." .
மயில்வாகனத்தாரை விட்டு நழுவுவது சிறிய காரியப் மல்ல. அவன் நினைத்தது போல் வீட்டார் எல்லாம் தெரிந்து கொண்டு நடிக்கிறார்கள்.
அவன் தலை விண் விண் என்று இடித்தது.
கதவைத் திறந்ததும் யசோதரன் வள் ள்ன்று விழுந் தான். 'ஏன் இந்த வீட்டிலே இருக்கிறியள் இரண்டு பேரும் அவர் அங்க சுவிடிஸ்காரியோட மேயப் போட் டார். நீர் இங்கே ஒருத்தியோட'. என்ன கூத்து? ஏன் வாடகை குடுத்து இருக்கிறியள்".
செந்தில் மறுமொழி சொல்லவில்லை.
இரவு நடந்தவை, மயில் வாகனத்தார் சொல்லியவை மனதில் மாறி மாறி வந்து கொண்டிருந்தன.
"எனக்கு ஒன்றும் வேண்டாம் இந்த உலகத்தில் லோறா மட்டும் போதும்" செந்தில் கத்தினான்.
யசோதரன் தன் அசட்டுக் கண்களால் செந்திலை உற்றுப் பார்த்தான்.

தேம்ஸ் நதிக்கரையில் A 121
"என்னடா அலட்டுகிறாய்? உமக்குத் தெரியுமோ விம்பிள்டன் எல்லாம் கதை, ஏழாலையில் உனக்குக் கல்யாணம் பேசுகினமாம், ஒரு நாளைக்கு உன் தகப்பன் ‘நான் சாகப்போறன் என் ஆசையை நிறைவேற்று. வைத்தியின் மகளைச் செய்" என்று வாயைப் பிளந்தால் என்ன செய்வாய்'. யசோவின் கேள்வி செந்திலை நிலை குலையப் பண்ணியது. அழுத கண்ணிருடன் தாயின் முகம் அவன் மனசில் தெரிந்தது.
10
மார்கழி மாதத்தின் கோலாகலம் தெருத்தெருவாய் வீதி வீதியாய்ப் பளிச்சிட்டது நத்தார் பண்டிகை கோலாகலமாகக் கொண்டாடினார்கள். கிறிஸ்மஸ் விடுமுறைதான் இலங்கை மாணவர்கள் கூட உழைக்கும் விடுமுறை. வெள்ளைக்காரர்கள் கிறிஸ்மஸ் கொண்டாட வெளியில் திரிவார்கள்.
செந்தில் நன்றாக உழைத்தான். வீட்டில் இருந்து காரசாரமாகக் கடிதம் வந்தது. கண்டபாட்டுக்குச் செல வழிக்காமல் பட்ட கடனையடைக்கக் காசு அனுப்பு என அம்மா எழுதியிருந்தாள்.
அவனுக்குத் தெரியும் கண்டபாட்டுக்கு செலவழிப்பு என்றால் என்ன அர்த்தம் என்று.
முட்டாள்கள் லோறாதான் எனக்குச் செலவழிக் கிறாள் என்பது எப்படி இவர்களுக்குத் தெரியும்?
கிறிஸ்மஸ்ஸுக்கு லோறா புது உடுப்புகள் வாங்கிக் கொடுத்திருந்தாள். அவனுக்கு அப்படிச் செலவழிக்கக் கட்டாது. வேதனை மனதை அரித்தெடுத்தது. "எங்களுக் குள் என்ன வேறுபாடு" என்றாள் லோறா.

Page 66
122 A ராஜேஸ்வரி
லோறா பீனலபபி வீட்டில் உழைத்த காசில் அதிகம் செலவழிக்கவில்லை நானுாறு பவுண் அளவில் பாங்கில் வைத்திருந்தாள். இப்போது உழைக்கும் காசு பெரும் பாலும் செந்திலுடன் வெளியில் திரிவதிலேயே செலவழி கிறது, அதைப் பற்றி அவளுக்குக் கவலையில்லை அவள் சந்தோஷமாக இருந்தாள்
நத்தார் அன்று மைரா வீட்டில் 'பார்டி வைத்தார் கள். அடுத்த நாள் மை ரா வும் யோகலிங்கமும் "பெல்வா ஸ்டுக்குப்" போ வ த ரா க (Մ) ԼԳ- Թվ கட்டியிருந்தார்கள்
"மனிதன் கஷ்டப்பட்டுக் காசு சேர்க்கிறான். உங்கள் தரவளி கண்ட பாட்டுக்குத் திரியிறியள்" என்று யசோ முணுமுணுத்தது ஞாபகம் வந்தது. ஒரு கிழமை வீவு, பைராவின் செலவு கிட் டத் த ட் ட மைரா வீட்டிலேயே குடியிருந்தான்.
செந்தில் போல் "லோறா என் காதலி" என்று புலம்பிக்கொண்டு திரியவில்லை. "ஒன்றாய் இருக்கி றோம் எனக்கொன்றும் காதலிலும் சடங்குகளிலும் நம்பிக்கையில்லை" என்றான் யோகலிங்கம் செந்திலுக்கு மைராவுடன தானும் போக யோசிப்பதாகவும் செந்திலும வந்தால் என்ன, ஒரு கிழமை தானே என்றாள் லோறா ஒரு கிழமை. ஏழு நாட்கள். கிட்டத்தட்ட நூறுபவுண் உழைப்பான்.
கொலிஜ் பீஸ் இன்னும் சேர்க்கவில்லை. வீடடுக் கடனில் அரைவாசிகூடக் கட்டவில்லை. அதவகிடையில் ஒரு கிழமை கொண்டாட்டமா?
"நான் சிசலவழிக்கிறேன்" என்று கெஞ்சினாள் லோறா . .
அவன் மறுத்துவிட்டான்

தேம்ஸ் நதிக்கரையில் A 123
லோறா தேசிங் ட்ரெனிங் பாடசாலைகளுக்கு அப்பிளிக் கேசன் போட்டிருந்தாள் "நான் நேர் சிங் தொடங்கினால் லீவு எடுப்பது சுலபமாக இருக்காது" என்றாள் லோறா.
அவன் பிடிவாதமாக மறுத்துவிட்டான்.
"என்னில் அவ்வளவு அக்கறை என்றால் ஏன் போக வேண்டும்" என்று பகிடிபோல் கேட்டான்.
யோகலிங்கத்துக்குத் தெரியும், செந்தில் சுயநலத் தினால் தான் அப்படிச் சொல்கிறான் என்று.
"பெண்கள் எங்கள் 'பாட்னராக" இருக்கவேண்டுமே தவிர அடிமைகளாக நடத்தக்கூடாது" என்றான் செந்திலுக்கு.
"நீர் வேண்டுமானால் அவள் உழைப்பில் போ. நான் யாருடைய தயவிலும் உல்லாசப் பிரயாணம் போகத் தயாராய் இல்லை" என மறுத்துவிட்டான் செந்தில்,
லோறாவுக்கு என்ன செய்வது என்று தெரியவில்லை லண்டனுக்கு வந்து ஒன்றரை வருடங்கள் ஆகின்றன. இன்னும் லண்டனை விட்டு வெளியில் போயறியாள்.
இப்போது கிடைக்கும் சந்தர்ப்பத்தை விட்டால் இனி நேர்ஸிங் சேர்ந்த பின் போகச் சந்தர்ப்பம் கிடைக்குமோ தெரியாது. ஆனாலும் செந்திலை வற்புறுத்தத் தயாராய் இல்லை.
"லோறா நீ இவ்வளவு தூரம் இப்போதே விட்டுக் கொடுத்து நடந்தால் உன் எதிர்காலம் என்னவாகும். பெண்கள் ஆண்களின் தனிப்பட்ட சொத்தல்ல, அவர்கள் நினைத்தபடி எல்லாம் நடக்க, நீர் ஒரு பிழையும் செய்ய வில்லை செந்திலுக்கு; ஏன் ஒருதரம் தனியாக எங்கேயா வது போகக் கூடாது" என்றாள் மைரா.
லோறாவும் மைராவும் யோகலிங்கமும் ஐலண்டுக்குப் போனதை ஆத்திரத்துடன் சகித்துக் கொண்டான்

Page 67
124. A ராஜேஸ்வரி
செந்தில் எப்படித்தான் இருந்தாலும் லோறா இலங்கைப் பெண் அல்ல! இலங்கைப் பெண் என்றால் இப்படி நடந்து கொள்வாளா என ஆயிரம் தரம் நினைத்துக் கொண்டான் செந்தில்.
அந்த வேதனையை மறக்க இரண்டு மூன்று நாள் ஓய்வில்லாமல் வேலை செய்தான். யோகலிங்கத்தில் பொறாமை வந்தது.
"அவனுக்கென்ன? என்னைப் போல் சகோதரிகள் இல்லை, சீதனம் உழைத்துக் கொடுக்க' என பொறாமைப் பட்டான், தன் நிலையை நினைத்து.
லோறா தன்னை விட்டுப்போன ஆத்திரமும், மைரா வும் யோகனும் பெண்கள் உரிமையைப் பற்றிக் கதைத்த தும் அவனுக்கு எரிச்சல் எரிச்சலாக வந்தது.
மூன்றாம் நாள் வீட்டுக்கு வந்தபோது காய்ச்சலும் தலையிடியும் செந்திலுக்கு.
யசோதரன் தமக்கை வீட்டில் நின்றுவிட்டான், இரண்டு ந |ா ள ஈ க. இப்போதுதான் தெரிந்தது, செந்திலுக்குத் தனிமை என்றால் என்ன என்று.
re
உடம்பு நொந்தது. அடுத்த நாள் யசோ கதவைத் திறந்த போது முனகும் செந்திலைப் பார்த்துப் பயந்து விட்டான். யாரும் அடித்து விட் டு ப் போ ய் விட்டார்களோ?
ஒரு கிழமை கிறிஸ்மஸ் லீவில் நூறு பவுண் உழைக்க வெளிக்கிட்ட செந்தில் எழும்ப முடியாமல் படுத்திருந் தான்.
"உன்னில் அன்பிருந்தால் இப்படி விட்டிட்டுப் போயிருப்பாளோ" என்று லோறாவைத் திட்டிக்கொண் டிருந்தான் யசோதரன்
செந்தில் பதில் சொல்லும் நிலையில் இல்லை. லோறா ஒரு கிழமை முடிய வந்தபோது செந்திலைப்

தேம்ஸ் நதிக்கரையில் A 125
பார்த்துத் திடுக்கிட்டாள். "நான் உங்களை விட்டுப் போய் இருக்கக்கூடாது" என அழுதாள்.
அவள் அப்படி அழுததும் அவன் கோபமெல்லாம் இருந்த இடம் தெரியாமல் போய்விட்டது.
"உங்களை விட்டுவிட்டுப் போய் ஏதோ சந்தோஷ மாய் இருந்தேன் என்று நினைக்காதீர்கள். மைராவும் யோகனும் கூட்டங்கள், ஊர்வலங்கள் என்று போய் விட்டார்கள். நான் ஊர் சுற்றிப் பார்த்தேன். நீங்களும் இருந்திருந்தால் எப்படி இருக்கும் என யோசித்தேன். உடனே லண்டனுக்கு வரவேண்டும் போல் இருந்தது" என்றாள் லோறா.
அவளைப் பிரிந்திருந்த ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு வருடமாக இருந்தது அவனுக்கு.
**லோறா நான் உன்னில் அன்பாக இருக்கிறேனோ இல்லையோ பைத்தியமாக இருக்கிறேன். மருந்துக்கு அடிமையான நோய்போல் இருக்கிறது என் நிலைமை' உண்மையாகத்தான் அவன் சொன்னான்
"அப்படி இருப்பது அபாயம். தற்செயலாக எங்களில்
ஒருவருக்கு ஏதாவது நடந்துவிட்டால் தனியாக வாழ
முயற்சிக்கவேண்டும். அது இப்போதைக்கு என்னால் முடியாத காரியம் லோறா' என்றான்.
"செந்தில் எனக்காக இந்த உலகத்தில் உள்ள ஒரே ஒரு ஜீவன் நீங்கள்தான். என்ன நடந்தாலும் ஒருவரை ஒருவர் பிரியமாட்டோம் இருக்கும்வரை" லோறா அன்புடன் சொன்னாள்.
அவள் போட்ட அப்பிளிக்கேஷனுக்குப் பதிலை எதிர் பார்த்துக்கொண்டிருந்தாள். ஏப்ரல் மாதம் படிக்கத் தொடங்கினால் செந்திலின் மூன்று வருடப் படிப்பு முடிந்துவிடும் எனக் கணக்குப் போட்டுவைத்திருந்தாள்.

Page 68
126 A ராஜேஸ்வரி
தை மாதக் குளிர் தொடர மாசி மாதம் தொடங்கி இரண்டு கிழமை ஒரே அ டி யா க செந்திலுக்கு உழைப்பில்லை. ,
பாடசாலைக்குக் கட்டக் காசில்லை.
கடன் கேட்பது யாரிடம்?
யசோதரனிடம் கேட்பதாக யோசித்திருந்தான்.
தமக்கையின் கடன் முடிய தன் செலவுக்கே போது 4மானதாகத்தான் தன்னிடம் காசிருக்கிறது என ஒப்பாரி வைக்காத குறையாகச் சொன்னான் யசோ.
லோறாலைக் கேட்பதா?
அவள் தயவில் படிப்பதா?
அவனுடன் படிக்கும் ஒருவன் லண்டனுக்கு வருவதற் காக என்றே சீதனம் கேட்டு பதிவு கல்யாணம் எழுதி விட்டு வந்திருக்கிறான். அவனுக்கும் எனக்கும் என்ன வித்தியாசம்? நான் லோறாவிடம் காசு வாங்கினால்?
ஒரே ஒரு வசதிதான் உண்டு, இந்த வருடம் படிப்புக்குக் "குட்பை" சொல்லி விட்டு உழைப்பது.
அதைவிட வேறு யோசனை நல்லதாகப் படவில்லை.
கல்லூரி தொடங்கிவிட்டது. செந்தில்வேல் போக வில்லை. வேலையால் வந்த லோறா தன் அறையில் செந்தில் இருப்பதைக் கண்டு ஆச்சரியப்பட்டாள்.
"ஏன் கொலிஜ்ஜுக்குப் போகவில்லை" என்றாள் பதறிப் போய், ஏதும் சுகமில்லையோ என நினைத்து.
"அடுத்த வருடம் தொடங்குவதாக இருக்கிறேன்"
என்றான், தன் வேதனையை மறைத்துக்கொண்டு.
"ஏன்? காசில்லை அப்படித்தானே?"
அவன் மறுமொழி சொல்லவில்லை,

தேம்ஸ் நதிக்கரையில் A 127
"எனக்குத் தெரியும் உழைத்த காசெல்லாம் வீட்டுக்கு அனுப்பிவிட்டீர்கள்" என்று.
"என்ன செய்வது பட்ட கடன் கொடுக்கத்தானே வேண்டும்?"
செந்தில் பெருமூச்சுடன் சொன்னான்.
t
"செந்தில் என்னிடம் காசிருக்கிறது. எடுத்து
அவள் உரிமையுடன் சொன்னாள். "வேண்டாம் லோறா பெண்களின் தயவில் படிப்பதை நான் விரும்பவில்லை"
அவன் பிடிவாதமாகச் சொன்னான். "என்ன கதை? நான் யாரோவா உங்களுக்கு?" கண்களில் நீர் முட்டியது லோறாவுக்கு. "லோறா நீர் கஷ்டப்பட்டு உழைத்த காசு. எனக்கேன் செலவழிக்க வேண்டும்?"
"நான், நீங்கள் என்று என்ன வேறுபாடு. ஒருவிதத் தில் என்னில் உள்ள ஆத்திரத்தில் தானே கிறிஸ்மஸ் நேரத்தில் கடுமையாக வேலை செய்து வருத்தம் வந்தது. இல்லை என்றால் நூறு பவுண் என்றாலும் உழைத்திருப் பீர்கள்" என்றாள் அன்புடன் லோறா.
"அதெல்லாம் பழைய கதை. ஒரு ஆறுமாதம் படிப்பு பின் போடுவதால் என்ன குறைஞ்சு போகும்?" செந்தில் குதர்க்கம் பேசினான்.
"செந்தில் அடுத்த முறை "எலக்ஷனில் லேபர் கவர்ன்ட்மென்ட்' வந்தால் வெளிநாட்டு மாணவர்களின் கொலிஜ் பீஸ் இன்னும் கூடும். அதோட படிக்க என்று வந்துவிட்டு சும்மா உழைத்துக்கொண்டு திரிந்தால் பிடித்து திருப்பி அனுப்பிவிடுவார்கள்". அவள் உண்மை யில் அழுதாள்.

Page 69
128 A ராஜேஸ்வரி
"நீங்கள் போனால் என் கதி என்ன?" அவன் துடித்துவிட்டான், அவள் அழுவதைப் பார்த்துவிட்டு. ,ལ་
"லோ றா, உம்மைத் துக்கப்படுத்த நான் சொல்ல வில்லை. வேண்டுமானால் உம்மிடம் கடன் வாங்கு கிறேன்" என்றான் செந்தில்,
“என் தாய் என் தகப்பனுக்குக் கடன் கொடுப்ப தில்லை" என்றாள் குறும்பாக.
இருவரும் சிரித்தார்கள், அவள் என்ன சொல்கிறாள் என்று விளங்கிக்கொண்டு.
செந்தில் லோறா கொடுத்த "செக்"கை எடுத்துக் கொண்டு வீட்டுக்கு வரும்போது யசோதரன் கொலிஜால் வந்திருந்தான்.
செந்தில் "செக்கை" மே  ைச யி ல் வைத்ததைக் கண்டதும் "டேய் செந்தில் என்ன பெட்டையிட்டை சீதனம் வாங்கத்தொடங்கி வி ட் ட (ா யா ? எப்ப கல்யாணம்?" வழக்கமான நக்கலுடன் கேட்டான்.
"லண்டனில் ஆண்களும் ஆண்களும், பெண்களும் பெண்களும் கல்யாணம் முடிக்கப்போகிறார்களாம். நானும் அவளும் கல்யாணம் முடித்தால் என்ன, சட்ட விரோதமாகவா போகப்போகிறது?" என்றான் செந்தில்.
"நீரும் உம்முடைய கண்டறியாத பகிடியும்? சும்மா ஊர் பேர் தெரியாத பெட்டையைச் செய்துபோட்டு என்னன்டடா எங்கட ஆட்களோட சேரப்போகிறாய்" கால்மேசுகளைக் கழட்டி அவை நாறுகி ற தோ இல்லையோ என்று முகர்ந்து பார்த்துக்கொண்டு கதைத் தான் யசோ.
*னங்கட ஆட்கள் எப்படிச் சேர்ந்து வாழுகினம் லண்டனிலை? ஒரு கார் இருந்தா பெட்ரோல் ஒரு கலன்

தேம்ஸ் நதிக்கரையில் A 129
அடிச்சுப்போட்டு அடிச்ச பெட்ரோல் காசு நட்டம் வராமல் இருக்க இரண்டு வீட்டுக்குப்போய் வேறு யாருடனாவது வம்பு கதைத்துவிட்டுச் சாப்பிட்டுவிட்டு வருகிறார்கள். அடுத்த கிழமை மற்றவர்களைக் கூப்பிடு கிறார்கள் சாப்பிட, கோழிக்கறியுடன் சாப்பிட்டுக் கொண்டு, சைவத்தைப்பற்றியும், இங்கிலிசில் கதைத்த படி தமிழரைப்பற்றியும் புழுகுவார்கள். பொதுவாக எங்கள் ஆட்களுக்கிடையில சேர்ந்து பழக என்ன இருக்கிறது? பொறாமை, வஞ்சகம், அடுத்துக் கெடுக்கும் மனப்பான்மை தவிர,
ஒருவன் வாஷிங் மெஷின் வாங்கினால் அடுத்தவின்' எப்படியும் கடன்பட்டுத்தானும் ஒரு "மெஷின் வாங்க் வேண்டும் என்பான். கோப்பை கழுவ "டிஷ்வாஷர்" வாங்குபவர்கள் அதற்கு உழைக்கும் நேரத்தில் ஒரு கொஞ்ச நேரத்தில் பிள்ளைகளை நல்லாக வளர்க்கட்டும். எங்கட் ஆட்கள் பற்றிக் கதைக்கிறீர்? "உம்முடைய மச்சானும் நீரும் எப்படிச் சேர்ந்து வாழுகிறீர்கள்? செந்தில் வேல் மூச்சுவிடாமல் பேசினான்.
'உமக்கு யோகனின் பிரசங்கம் தொட்டுவிட்டது. இப்ப காசு தந்து படிப்பிக்கிறாள். நீர் கலியாணம் முடிக்கப் போகிறீர். நாளைக்கு அவள் நேர்சிங் படிக்கப் போகிறாள். அங்கே எப்படித் திரிஞ்சு போட்டு வரப் போறாளோ” பெண்பிள்ளை போல் கதைக்கும் யசோ தரன் ஆண்பிள்ளை தானா என செந்தில் வேலுக்குச் சந்தேகம் வருவதுண்டு.
"நீர் கல்யாணம் முடிக்கேக்கை, ஒரு ஆண்பிள்ளை யோடும் கதைக்காத, வீட்டுக்குள் வைத்து வெளிச்சம் படாமல் வளர்த்த, அன்னியன் முகத்தை நிமிர்ந்து பார்க்காத ஒரு பெண்ணைக் கட்டும். மற்றவை என்ன செய்யினம் என்று துக்கப்படாதை. வயிற்றில் 'அல்ஸர்" வந்திடும் கணக்க யோசிச்சால்" -

Page 70
330 A ராஜேஸ்வரி
செந்திலின் நக்கல் கதை யசோதரனின் ஆத்திரத்தைக்
கூட்டியது “உம்மைப்போல ஆட்களுக்கு ஒழுக்கம் இல்லை; சாதியில்லை, மனக்கட்டுப்பாடு இல்ல; மனித, உணர்ச்சியே இ ல்  ைல' யசோ ஆத்திரத்துடன் கத்தினான்.
'உம்மைப் போல ஆட்களுக்குச் சாதி இருக்கிறது, மற்றவர்களின் உழைப்பைச் சுரண்ட, மதம் இருக்கிறது திருவிழா செய்து பெரிய மனிதன் என்ற பட்டம் எடுக்க, ஒழுக்கம் இருக்கிறது ஒவ்வொரு பெண்ணையும் முன்னால் இருத்தி நிறம்பார்த்துக் குணம் பார்த்துக் கடைசியில் வயசு சரிவரவில்லை கல்யாணத்திற்கு என்று வியாபாரம் Gus””
செந்தில் நிதானமாகச் சொன் னா ன். ஏன் யசோதரன் இன்னும் பட்டிக்காடாக இருக்கிறான் என்று விளங்கவில்லை செந்திலுக்கு.
"இருந்துபாரும் உம்முடைய லோறா நேர்ஸிங் போன உடனே எப்படி இருக்கப் போறாள் என்று. நான் ஆஸ்பத்திரியில வேலை செய்யிறன் எனக்குத் தெரியும் எப்பிடி நேர்சுகள் கூத்தடிப்பினம் என்று'. ய சோ உயரக் கத்தினான். செந்தில் பதில் பேசவில்லை,
இயற்கையிலேயே மிகவும் சந்தேகப் பிராணி செந்தில். தனக்குப் பின்னால் வந்தவள் யாருடன் போகாமல் இருந்: திருப்பாள் என்று ஆரம்பத்தில் நினைக்காமல் இல்லை. ஆனால் அந்தக் கொடிய நினைவு கடந்த ஆறுமாதத்துக்கு மேலாக அவளுடன் பழகியதும் மாறிவிட்டது.
அவனில் அவள் வைத்திருக்கும் பரிவும் காதலும் உண்மையானது என்று அவனுக்குத் தெரியும். 'x கிழமை . நாட்களில் படிப்பு. வெள்ளிக்கிழமை தொடக்கம் ஞாயிற்றுக்கிழமை வரை மாறி மாறி வேலை"

தேம்ஸ் நதிக்கரையில் A 131
ாப்படியும் லோ றா வின் காசில் கொஞ்சமாவது கொடுத்து முடிக்கவேண்டும்.
நாட்கள் நகர்ந்துகொண்டிருந்தன. G3 6a) mr Jp mt பின்னரே வகுப்புக்களுக்கு ஒழுங்காகப் போய்க்கொண் டிருந்தாள். அவள் எதிர்பார்த்ததுபோல் ஏப்ரல் மாத ட்ரெயினிங்குக்கு அவள் எடுபடவில்லை.
செப்டம்பர் மாதம் அவள் ட்ரெயினிங் தொடங்குவ தாக முடிவு செய்யப்பட்டது. குளிரும் பனியும் முடிந்து துளிர்க்கத் தொடங்கிவிட்டது ஏப்பிரல் மாதம். தான் நேர்ஸிங் எடுபட்டதைத் தாய்க்கு எழுதினாள். தன் மகிழ்ச்சியையும் அன்பையும் எழுதியிருந்தாள் மேரி. தான் செய்துமுடிக்காத காரியத்தை தன் மகள் செய்யப் போகிறாள் என்ற மகிழ்ச்சியின் தொனி மேரியின் கடிதத்தில் தெரிந்தது,
யசோதரன் வேலை செய்யுமிடங்களில் மட்டுமல்ல
இருக்கும் இடத்திலேயே ஒருதரம் கலவரத்தை உண்டாக்கி விட்டான்.
வீட்டுக்காரன் ஆப்ரிக்கர். தன் வீட்டில் படிக்கும் மாணவர்கள் இருக்கிறார்கள் என்று அவர்களை அன்பாக நடத்தியவன். அடிக்கடி அவர்கள் ஏதாவது விஷயத்தில் வாக்குவாதப்படும்போது "வாலிபர்கள் இப்படித்தான். சீவிப்பார்கள்" எனத் தன் மனைவிக்குச் சொல்வான்.
யோகலிங்கம்தான் முதலில் அறைதேடி வந்தவன். பின்னர் யசோதரன் தமக்கையுடன் இருக்கப் பிடிக்காமல் வந்தவன். கடைசியாக வந்தவன் செந்தில்வேல் யசோதரனின் துடுக்குத்தனமும் பட்டுக்காட்டுச் செய்கை, களும் வீட்டுக்காரனுக்குப் பிடிக்காவிட்டாலும் மற்றவர் களுக்காகப் பொறுத்துக் கொண்டிருந்தான்.
ஒரு நாள் யசோதரன் குளிக்கும் அறையில் தொட்டி யில் நீர் திறந்து விட்டு அறையில் டெலிவிஷன் பார்த்துக்

Page 71
132 A ராஜேஸ்வரி
கொண்டிருந்தான். கொஞ்ச நேரத்தில் தண்ணீர் திறந்து விட்டதை மறந்துவிட்டான.
மரங்களையே அடித்தளமாகப் போட்டு அமைத்த பழங்கால வீடு அது. நீர் தொட்டியால் நிறைந்து மர இடுக்குகளால் கீழே வடிந்து வீட்டுக்காரரின் சாப்பாட்டு மேசையில் ஊற்றிக்கொண்டிருந்தது.
வீட்டுக்காரப் பெண் குய்யோ முறையோ என்று கத்திக் கொண்டு புருஷனுக்குச் சொல்ல, வீட்டுக்காரன் மேலே வந்து என்ன நடந்தது என்று கேட்டான்.
யசோதரன் வழக்கம்போல் கதைத்தான். நடந்த த்ற்கு மன்னிப்புக் கூடக் கேட்கவில்லை. ஒட்டை வீட்டில் எங்களை வைத்துக்கொண்டு வாடகை பிடுங்குவதுமில்லா ம்ல் உமக்குப் பெரிய வாய் எனத் தாறுமாறாகப் பேசி விட்டான். v Y } வீட்டுக்காரன் மூக்கைப் பொத்திக் குத்தும் கொடுத் திருப்பான்; ஆனால் ஏன் வீண் கலாட்டா என்று விட்டு விட்டான். யோகனும் செந்திலும் வந்த போது வீட்டுக் காரன் நடந்ததைச் சொல்லி வீட்டை விரைவில் காலி யாக்கச் சொன்னான்.
'நீர் போற இடமெல்லாம் சண்டையோட வாlர். இருக்கிகிறஇடம் எல்லாம் எங்களோட சண்டை பிடிக் கிறீர், உம் அக்கா வீட்டில் போனால் உம் மைத்துனரோட கொழுவுகிறீர். இப்போது என்னடா என்றால் வீட்டுக் காரரோடும் கொழுவி எங்களுக்கு இருக்க இடம் இல்லா மல் பண்ணிவிட்டீர் ' என்றான் செந்தில்.
"இவர் என்ன பெரிய கதை போடுறார்" இழுத்து நெளித்துக் கதைத்தான் யசோ, யோகன் ஆத்திரத்துடன் அவனைப் பார்த்தான். "யாழ்ப்பாணத்தில் நீங்கள் வெள்ளாளர். கொழும்பிலை சிங்களவனுக்கு எல்லாரும் பறத் தமிழன்தான். உன்னைப் பொறுத்தவரையில் நீர் ஆபிரிக்கனைவிட பெரிசு என நினைக்கிறீர்; இஞ்ச வந்து

தேம்ஸ் நதிக்கரையில் A 133
வெள்ளைக்காரனைப் பொறுத்தவரையில் எல்லோரும் கறுப்புத்தான்.
யசோ எரிச்சலுடன் பார்த்தான் யோகனை. "நீர் பெரிய பிரசங்கி வேணுமானால் இரும், அவன் காலைப் பிடிச்சுக் கொண்டு" என்றான்.
"இப்பிடி வசதியான இடம் எங்கேயடா மலிவாகக் கிடைக்கும்" என அழாக்குறையாகக் கேட்டான் செந்தில். "மலிவான இடமோ இல்லையோ யசோதரனுடன் இருக்கும் வரை எங்களுக்கு ஆபத்துத்தான்' என்றான் யோகன்.
உமக்குத்தானே இடம் இருக்கு ஏன் எங்களோட இருக்கவேணும்" என்றான் யசோ.
'நீர் சொல்லத் தேவையில்லை என்ன செய்ய வேணும் என்று" யோகன் பெட்டி படுக்கையுடன் நடந்தான்.
ஒரு கிழமை தேடாத இடம் எல்லாம் தேடி அலுத்த பின் ஒரு வீடும் கிடைக்கவில்லை. திரும்பவும் வீட்டுக் காரனைக்கெஞ்சி அதே வீட்டில் இருந்தார்கள், செந்திலும் யசோவும்.
'உம்முடைய வாயால் தானே இவ்வளவு கரைச்ச லும்? நல்லா இருந்த வீட்டுக்காரன் இனி எப்படி இருக்கப் போறானோ? அவன் யோகன் கல கல எண்டு இருந்தவன் அவனையும் கலைச்சுப் போட்டீர் இனியும் ஏதும் அலட் டாமல் வாயை வைத்துக் கொண்டிரும்" என்றான்
செந்தில், வீடு தேடிக் களைத்த எரிச்சலில்,
தே-9

Page 72
134 A ராஜேஸ்வரி
‘இவர் என்ன நீக்ரோப் பிள்ளை எங்களைக் கலைக் கிறது? நீர்தான் ஏதோ பயந்து குளறிக்கொண்டு வீடு தேடினீர், சட்டப்படி இவர் எங்களை வைத்திருக்கக் கூடாது. இவர் எங்களோடு முண்டினால் இவருக்குத் தான் நஷ்டம்" என்றான் யசோ.
'இதுதான் அன்னம் இட்ட வீட்டில் கன்னக்கோல் வைக்கிற கதை. இவ்வளவு மலிவாக எங்களுக்கு இடம் கொடுத்திருக்கிறது என்றில்லாமல் அப்பிடி வீடுதந்த வனை இப்படிக் கண்டிக்கிறீரே" என்றான் செந்தில்.
யசோதரன் போன்ற மனிதர்களுக்கு உலகத்தில் ஒருவரும் நல்லவராக தோன்றுவதில்லை என யோசித் தான் செந்தில்.
லண்டனில் வசந்தகாலம் தொடங்கிவிட்டது. மனிதர்கள் தடித்த ஓவர்க் கோட்டைத் தூசிபோகத் துடைத்து மடித்து வைத்துவிட்டு 'சம்மர்" உடுப்புப் போடத் தொடங்கிவிட்டார்கள்.
இளம் பெண்கள் விதவிதமான உடையில் லண்டனை வலம் வருவது போல் மரங்கள் கொத்தான மலர்ச்செண்டு களுடன் செழித்துக் கிடந்தன.
போன வருடம் எப்படி ஓடிவிட்டது? எத்தனை மாறு தல்கள் அவன் வாழ்வில் நடந்துவிட்டன. போன வருடம் முன்பின் தெரியாத ஒரு முகமாக இந்தப் பாலத்தில் சந்தித்தவள் இப்போது அவன் வாழ்வில் பாதியாகி விட்டாள். அவன் படிப்புக்கூட அவள் தயவில் நடக்கக் கூடிய அளவில் அவர்கள் நெருங்கி விட்டார்கள். இலங்கையிலிருந்து புறப்படும் போது இப்படி எல்லாம் நடக்கும் என அவன் எதிர்பார்க்கவில்லை.
வைகாசி மாதம் முடிந்து ஆனிமாதம் கொதிக்கும் வெயிலுடன் தொடர்ந்தது. அடுத்த மாதம் பரீட்சை, இல் னும் இரண்டொரு மாதங்களில் அவள் நேர்ஸிங்

தேம்ஸ் நதிக்கரையில் A 35
ரெய்ன்ரிங்குக்குப் போய்விடுவாள். கிழமை நாட்களில் படிப்பு வார விடுமுறையில வேலை. நேரம் கிடைப்பதே அரிதாக இருந்தது லோறாவைப் பார்க்க. இன்னும் கொஞ்ச நாட்களில் தன்னைப் பிரிந்து போய்விடுவாள். அவனை வருத்தியது
"நேர் ஸிங் போய் அவள் எப்படி மாறப் போகிறாள்" என்று யசோதரன் சொன்னவை ஞாபகம் வந்தது.
ஏன் நேர்ஸிங் செய்ய வேண்டும்?
*லோறா ஏன் நேர்ஸிங் செய்ய வேணுமென்று பிடி வாதமாக இருக்கிறாய்? செய்யிற வேலையிலேயே நல்ல சம்பளம் கிடைக்குதுதானே? இன்னும் மூன்று வருடப் படிப்புத்தானே என்படிப்பு. பின்னர் நீர் வேலை செய்ய வேண்டியதேயில்லையே" என்றான் செந்தில்.
**செய்யிற வேலையில் ஒரு முன்னேற்றமும் கிடைக்கப் போவதில்லை. உங்கள் படிப்பு முடிய மூன்று வருஷம் இருக்கு அதற்கிடையில் நான் படிப்பு முடித்துவிடுவேன். அதன்பிறகு நாள் வேலைசெய்வது பிடிக்காவிட்டால் விடுகிறேன். எதற்கும் கையில் ஒரு சேர்ட்டிபிக்கற் இருந்தால் என்ன நட்டம்'
லோறாவுக்குத் தெரியாது அவன் ஏன் தன்னைத் தடுக்கிறான் என்று.
"லோறா என்னை மறக்க மாட்டாயே" அவன் குரல் ஒரு மாதிரி இருந்தது. அவளுக்கு ஆச்சரியமாக இருந்தது, அவன் அப்படிக் கேட்டது.
'ஏன் அப்படிக் கேட்டீர்கள்?" 'லோறா, நேர் ஸிங் படிக்கப் போனால் எத்தனையோ பேரைச் சந்திக்க வேண்டிவரும். அதிலும் உம் மப் -போல ஒரு அழகான பெட்டை கிடைச்சால் இந்த டொக்டர்கள் சும்மா சுளண்டுகொண்டு திரிவான்கள்.

Page 73
136 A ராஜேஸ்வரி
வெளிநாட்டிலே இருந்து நேர்ஸிங் செய்யவந்த பெண் களுக்கு அவ்வளவு நல்லபேர் இல்லை" என்றான் செந்தில். அவனது பயமும் ஒருவிதத்தில் உண்மையானது; அந்தக் காலத்தில் நர்ஸிங் சம்பளம் வெகு சொற்பம் நேர்ஸிங் செய்ய என்று வந்தவர்கள் அது பிடிக்காமல் வேறு வேலை தேடி அலைந்த காலம் அது.
"என் அழகுக்குப் பின்னால்தான் வருகிறீர்களா?" அவள் ஆத்திரத்துடன் கேட்டாள்.
'லோறா தவறாக நினைக்காதே. சந்தர்ப்பத்துக்கு ஏற்றபடி மாறாத மனிதர்கள் தேவர்கள்" அவன் குரல் பரிதாபமாக இருந்தது.
'சந்தர்ப்பத்துக்கு ஏற்றபடி மாறிநடப்பதானால் பீனலப்பி வீட்டுப் பார்ட்டிகளில் எத்தனையோ "பெரிய" மனிதர்களுடன் பழகியிருக்கலாம். டேவிட்டின் மிஸ்ரஸாக இருந்திருக்கலாம், நான் வெறும் காசுக்கும அந்தஸ்துக்கும் ஆசைப்படுபவள் ஆக இருந்திருந்தால்". அவள் முகம் கோபத்தால் சிவந்தது.
"தப்பாக நினைக்காதே லோறா, எல்லா ஆண்களும் தங்கள் காதலிகளிடம் இப்படித்தான் நடப்பார்கள் என்று தான் நினைக்கிறேன்"
"யோகன் ஒருநாளும் இப்படிக் கேள்விகள் மை வைக் கேட்கவில்லை. அப்படி யோகன் நினைப்பான் என்றும் இல்லை"
அது உண்மையே. யோகனும் செந்திலும் உலகத்தைப் பார்க்கும் விதங்கள் வேறு.
*சும்மா கண்டபடி யோசிக்காமல் படிப்பைக் கவனி யுங்கள்' என்றாள் லோறா.
அவன் படிப்பை கவனித்துப் படித்துக் கொண்டிருந் தான், பரீட்சை நெருங்கிக் கொண்டிருந்தது.

தேம்ஸ் நதிக்கரையில் A 137
ஆடிமாதம் முற்பகுதி. இரண்டாம் வருடப் பரீட்சை நடந்து கொண்டிருத்தது செந்திலுக்கு.
நாலு மணிக்கே விடிந்துவிட்டது. ஏழுமனிக்கு வியர்த்துக்கொண்டு எழும்பிய லோறா வேலைக்குப் போக வயிற்றுக் குமட்டலுக்கும் வாந்திக்கும் என்ன காரணம் என்று இரண்டாம் தரம் யோசித்து அறிந்து கொண்டாள்.
செந்திலுக்குச் சொல்ல விரும்பவில்லை.
பதட்டக்காரனான அவனுக்கு அவ்வளவு போதும் பரீட்சை பாஸ் பண்ணிய மாதிரிதான். எப்படிச் சொல்வது?
மைரா எத்தனையோ தரம் டொக்டரிடம் போய் மாத்திரை எடுக்கச் சொல்லி சொல்லியிருக்கிறாள்.
இன்று போவோம் நாளை போவோம் என நாள் பிந்திப்போய் இப்படியாகிவிட்டது.
மைராவுக்குச் சொல்வதா?
போன் பண்ணியவுடன் மைரா தாறு மாறாகப் பேசினாள். லண்டனில் பதினாறு வயது பெட்டைக்குத் தெரிகிறது. இவளுக்குத் தெரியவில்லையே, "நீர் என்ன பதினெட்டு வயதில் கூத்தடித்துப் போட்டு இருக்கிறீர். ரெயினிங் தொடங்க இன்னும் இரண்டு மாதம்தான் இருக் கிறது. அதற்கிடையில் இப்படி ஆகிக் கொண்டிருக் கிறாய்" எனச்சொன்னாள்.
"செந்திலுக்குச் சொன்னாயா" என்றும் மைரா கேட்டாள்.
"சோதனை முடியட்டும் என்றிருக்கிறேன். சும்மா மனதைக் குழப்பிக்கொண்டு திரிவார்" என்றாள் லோறா
அழுகையை மறைத்துக் கொண்டு. " .

Page 74
"செந்திலுக்குச் சொல்லாவிட்டாலும் செந்தில்சும்மா சந்தேகப்படுவான். நீர் ஏதோ மறைக்கிறீர் கன்று. கெதியில் சொல்லும்" என்றாள் மைரா.
"அதோட டொக்டரிட்னடச் சொல்லி அபோஷனுக்கு ஆகவேண்டியதைப் பார்"
"எப்படி டொக்டரைக் கேட்பது"
"சொல்லும் உம்முடைய போய் பிரண்ட் ஒரு மாணவன் என்றும், இப்போது பிள்ளை என்றால் நல்ல வேலையில்லாமல் சமாளித்துப் பிள்ளை பார்க்க ஏலாது, படிக்க ஏலாது என்றும் சொல்லும்" என்று கூறினாள் 600u DUTr
அவள் ஏதும் அனுபவப்பட்டவளோ?
ஆசையான முத்தங்களும் அன்பான அணைப்புக் களும் காதல் கனிந்த செந்திலின் முகமும் ஞாபகம் வந்தது.
என்ன சொல்வான். செந்தில்?
வயிற்றில் ஏதோ பாம்பு ஊர்வது போல் பயமாயிருந் தது லோறாவுக்கு.
இரண்டு மூன்று நாட்களாக செந்தில் வரவில்லை. 'அவன் வரவில்லையே" என ஏங்கிக் கொண்டிருந்தவள் இன்று அவன் வரக்கூடாது நாளைக்கு வரக்கூடாது என யோசித்துக் கொண்டிருந்தாள்.
டொக்டரிடம் போய் தான் பிள்ளைத்தாச்சி என்று சந்தேகப்படுவதாகச் சொன்னபோது டொக்டர் பார்கர் மூக்குக் கண்ணாடிக்குள்ளால் அவளைப் பார்த்தார் கூர்மையாக,
மனிதன் பார்த்த விதமே அவளுக்கு வயிற்றைக் கலக்கியது. என்ன கேள்வி எ ல் லாம் கேட்கப் போகிறாரோ. அவளுக்குக் கண் கலங்கியது.

தேம்ஸ் நதிக்கரையில் A 139
"ஏன் இப்போது அழுகிறீர்? என்ன நடந்துவிட்டது? முதலில் பிரக்னென்சி ரெஸ்ட் செய்வம். பின்னர் என்ன செய்யலாம் என்று பார்ப்பம்" என்றார் டோக்டர்.
அடுத்த நாள் சிறுநீர் கொண்டு வந்து கொடுத்தாள். பின்னேரம் செந்தில் வந்திருந்தான், மைரா சொல்லி. விஷயம் அவனுக்குத் தெரிந்திருக்குமோ என்று அவன் முகத்தை ஆராய்ந்தாள் லோறா
அவள் கண் கலங்கியது. கொஞ்ச நேரத்தில் அழத் தொடங்கிவிட்டாள்.
"ஏன் அழுகிறீர் லோறா" அவன் துடித்துப்போய்க் கேட்டான். அவள் இப்படிக் குலுங்கிக் குலுங்கி அழுததை அவன் கண்ட தில்லை.
"செந்தில். செந்தில்." அவள் ஒன்றும் சொல்லாமல் அழுதாள்.
"என்ன லோறா நடந்தது" ' "நான் நினைக்கிறன் நான். பிள்ளைத்தாச்சி என்று" ஏதோ ஐஸ் வைப்பதுபோல் அவன் உணர்ச்சிகள் உறைந்துவிட்டன.
* Աl, பிளடி லட்" s r . அவளுக்குத் தெரியும் அவன் கத்துவான் என்று. அழுகை இன்னும் கூடியது. "ஓ! கடவுளே; என்ன லோறா விசர்த்தனமாகக் கதைக்கிறீர்? வை டின்ட் யூ ரேக் த பிளடி பில்ஸ்"
அவன் இப்பிடித் தாறுமாறாகப் பேசுவான் என்று அவள் எதிர் பார்க்கவில்லை.
'உம்மோடை. திரியிறத்துக்கே ஊரெல்லாம் கதை. இப்ப உன் வயித்திலை பிள்ளை என்றால் அதறகு

Page 75
140 A ராஜேஸ்வரி
என்ன நடக்குமோ தெரியாது. என்ர தாய் ஆற்றில குளத்திலதான் விழுந்து சாவாள் உமக்கென்ன தெரியும் என் தங்கச்சிகளின் கெதி என்னாகும் என்று" அவனால் மேலே பேசமுடியவில்லை.
அழும் லோறாவைப் பார்க்க ஆத்திரம் ஆத்திரமாக வந்தது. "பிளடி பிச்" என மனதுக்குள் திட்டு திட்டு என்று திட்டினாள். V−
விக்கலும் விம்மலுக்குமிடையில் டொக்டரிடம்
போன கதையைச் சொன்னாள். அவனுக்கு அரைகுறை யாக அது கேட்டது.
"கொஞ்ச காசைத் தந்து உதவி செய்துபோட்டு உம்மைக் கல்யாணம் செய்வன் என்று நினைக்கிறீரோ" எனக் கேட்க நினைத்தான். அவ்வளவு குரூரமாகக் கேட்க விரும்பவில்லை.
"ஏன் எனக்கு உடனே சொல்லவில்லை" என்று கேட்டான்.
"உங்கள் படிப்புக் குழம்பிவிடும் என்று சொல்ல வில்லை" என்றாள் லோறா.
"லோ றா, எத்தனையோ @ t - mr ቇ t -ፃሱ ò Gir அபோஷனுக்கு எதிர். அத்துடன் பிள்ளை பிறந்தால் சோசியல் செக்யூரிட்டியில் காசு கிடைக்கும்தானே என்று சாட்டுப்போக்கு சொல்லி நாஷனல் ஹெல்த்தில் அபோஷன் செய்ய மாட்டார்கள். பிரைவேட்டாகப் போனால் எனக்குத் தெரியாது எவ்வளவு காசு கேட்பார் கள் என்று. இவ்வளவும் நடக்க எத்தனை மாதம் எடுக்கும்? ஒருகுறிப்பிட்ட தவணைக்கிடையில் அபோஷன் செய்யாவிட்டால் தாய்க்குக் கூடாது என்று செய்ய மாட்டார்கள்."

தேம்ஸ் நதிக்கரையில் A 147
அவளுக்குத் தெரியும் அவன் இருக்கும் நிலையில் ஆறுதல் கிடைக்கப்போவதில்லை என்று. அவள் என்ன செய்யமுடியும்?
ஏன் ஆண்கள் பெண்களில் மட்டும் பழியைப் போடு கிறார்கள்?
இருவரும் சேர்ந்து சந்தோசம் அனுபவிப்பது. ஏதும் பிழையாக நடந்தர்ல் பெண்ணை மட்டும் குறைசொல்லும் சமுதாயம் எவ்வளவு குருட்டுத்தனமான சமுதாயம்?
செந்தில் கத்திக் குளறிவிட்டுப் போனவன் ஒரு. கிழமைக்கு மேல் வரவில்லை.
லோறா டொக்டரிடம் போனாள்,
அவர் என்ன சொல்வது. அவளுக்குத் தெரியும் தானே அவளில் ஏற்படும் மாறுதல்கள்?
காலையில் எழும்பியவுடன் சத்தி தலைச்சுற்று. சாப்பிட முடியாது. இதெல்லாம் கர்ப்பவதியில்லா விட்டால் ஏன் வருகிறது?
இரண்டு கிழமையாக சரியாக வேலைக்கு போக வில்லை.
சோர்ந்த முகத்துடன் லோறா திரிவதை சர்மிளா கவனிக்காமல் இல்லை.
செந்தில் தலைகெட்ட வெறியில் தடுமாறி வருவதை யசோதரன் ஆச்சரியத்துடன் பார்த்தான். இரண்டு மூன்று நாட்களாக ஏன் மூஞ்சியை நீட்டிக் கொண்டிருக். கிறான் என்று கேட்கவில்லை.
கொலிஜ் விடுமுறை விட்டுவிட்டது. எல்லோரும் வேலை தேடும் படலத்தில் இறங்கியிருந்தார்கள்.
"என்னடா பார்க்கிறாய், ஏன் இப்படிக் குடிச்சுப் போட்டு வருகிறான் என்று யோசிக்கிறியா? நான் அப்ப னாகப் போகிறனடா. என்ன பிள்ளை பிறக்கும் எண்டு

Page 76
142 A ராஜேஸ்வரி
நினைக்கிறாய்? பெடியன் பிறந்தால் இப்படிக் குடிச்சுப் போட்டுத் திரியப் போகுது. பெட்டைப் பிறந்தால் தாயைப்போல் விசர்த்தனமாக பிள்ளை வாங்கிக் கொண்டு திரியப்போகுது. என்ன பெயர் வைக்கலாம்" செந்நிலுக்கு வார்த்தை தடுமாறியது. யசோதரன் திறந்தவாய் மூடாமல் பார்த்தான்.
'நீர் என்ன சொல்லப் போகிறீர் என்று தெரியும் யசோதரன். அதுகள் யாழ்ப்பாணத்தில காதானைக் கழுத் தானை வித்துக்கித்து அனுப்ப, பிள்ளை பெத்துக்கொண்டு திரியிறீர் என்று என்னைப் பேசப் போகிறீர். அப்படித் தானே? அவளுக்கென்னடா நீ போனா இன்னொருவன். உனக்கு உன் படிப்புப் போனா என்னடா செய்வாய் இலங்கைக்குப் போய்? எந்த மந்திரியையடா பிடிப்பாய் வே  ைலக் கு? இப்படித்தானே கேட்கப்போகிறீர்?". -செந்தில் யசோதரனை உலுக்கியபடி கேட்டான்.
யசோதரனுக்கு அவன் என்ன பேசுகிறான் என்று விளங்கியது. செந்திலைப் பார்க்க பாவமாக இருந்தது. எப்படிப் போகப் போகிறது அவன் எதிர்காலம்?
'யசோதரன் உன் அம்மா உன்னிடம் என்ன சத்தியம் கேட்டு வாங்கிப் போட்டு அனுப்பினாளோ தெரிய வில்லை. மது, மாமிசம், மங்கை மூன்றையும் தொடாதை என்று நீ நல்ல பிள்ளையாய் இரு ஆனால் நான் விசரன் என்று நினைக்காதேயும். நீ பெரிய ஒழுக்கவாதி. எல்லாவற்றிலிருந்தும் ஒதுங்கி வாழ்கிறீர். யோகன் பெரிய கெட்டிக்காரன் ஒன்றிலும் அகப்படாமல் வாழ்கி றான். நான் இரண்டு விதமுமில்லாத பேயன் என்றுதானே நினைக்கிறீர்? இப்போதே முடிவுகட்டி விட்டேன் என் படிப்பைப் பற்றிக் கவலைப்படாதவளிடம் நான் எந்த அக்கறையும் எடுக்கப் போவதில்லை என்று. அவளுக்கும் எனக்கும் எந்தத் தொடர்பும் இனி இல்லை. அபோர்ஷன் செய்யட்டும் அல்லது பிள்  ைள  ைய் ப் பெத்து வளர்க்கட்டும்"

தேம்ஸ் நதிக்கரையில் A 143
செந்தில் கத்திவிட்டு அப்படியே தூங்கிவிட்டான். யசோதரனுக்கு லோறாவில் ஆத்திரம் ஆத்திரமாக வந்தது.
செந்தில் வராததால் இரண்டொரு தரம் தேடி வந்தாள் லோறா. அவன் பகல் இரவாக செக்கியூரிட்டி யில வேலை செய்கிறான் என்றான் யசோ.
அடுத்த தரம் வரும்போது இருவரும் இல்லை. இனி, தான் செந்திலைத் தேடி வருவதில்லை எனழுடிவு கட்டிக் கொண்டாள்.
"ஆஸ்பத்திரியில் டொக்டரைப் பார்க்கக் கடிதம் தருகிறேன். உம்முடைய போய் பிரண்டையும் கூட்டிக் கொண்டு போய் அவருக்கு விளங்கப் படுத்தும் உன் நிலைமையை" என்றார் டொக்டர்.
செந்தில் தன்னைச் சந்திக்க வராதிருப்பதையும் தேடிப்போய்க் காண முடியாமல் இருப்பதையும் விளக்கி னாள் லோறா.
“உம்மைப்போல விசர் ப் பெட்டைகளால்தான் உலகம் இப்படிக் கெட்டுப் போயிற்று" என்றார் டொக்டர். அவர் சரியான கிழவன். ரி ட் ட ய ர் பண்ணுகிற வயது - அவரைப் பொறுத்தவரையில் லோறாவைப் போன்றவர்கள் ஒழுக்கம் கெட்டவர்கள். அவர் பதினெட்டு வயதாக இருக்கும் போது உலகம் மிகவும் குறுகியதாக இருந்தது.
லோறாவுக்கு ஆத்திரம் ஆத்திரமாக வந்தது. பெண்களுக்கு மட்டும்தாம் ஒழுக்கம், கற்பு, எல்லாம் இருக்கவேண்டும். செந்தில்வேல் தலைமறைவாக திரிகிறான். அதைப் பற்றி ஒருவர் கேட்பாரில்லை. அவளில் பரிதாபம் கூட க் காட்டுவார் இல்லை.
மைராவுக்குப் போன் பண்ணியபோது யோகலிங்கம் தனக்குத் தெரிந்த ஒரு இலங்கை டொக்டர் மூலம் ஏதும் செய்யமுடியுமா என்று கேட்பதாகச் சொன்னான்.

Page 77
144 A ராஜேஸ்வரி
முன்பின் தெரியாத யோகலிங்கத்துக்கு இருக்கிற அக்கறை ஏன் செந்திலுக்கு இல்லாமல் போய்விட்டது?
இனி அவளிடம் வரவேமாட்டானா? இவ்வளவுதானா அவளில் அவனுக்குள்ள அன்பு? அவளுக்கு இதயம் நின்றுவிடும்போல் இருந்தது. கடந்த இரண்டு வருடங்களாக அவள் நடந்தவை அவளை நிலைகுலைய வைத்தது. மற்ற ஆண்களுக்கும் செந்திலுக்கும் என்ன வித்தியாசம்?
வீட்டில் இருந்து கடிதம் வந்தது. தன்னிடம் பெரிய வாய் காட்டிவிட்டு லண்டனுக்குப் படிக்க என்று போன லோறா தான் கற்பவதி என்பதைத் தாய்க்கு எழுதியிருந் தாள். செந்திலுக்கும் தனக்கும் உறவு பாதிக்கப்பட் டிருப்பதைப் பற்றியும் எழுதியிருந்தாள்.
மேரியிடம் இருந்து கடிதம் வரவில்லை. ஸிம்சனிட மிருந்து கடிதம் வந்திருந்தது.
"தாயைப் போலத்தான் பிள்ளையும் இருப்பாள் என்பதற்கு நீதான் சரியான ஆள். உன் தாயும் இப்படித் தான்ஒருகாலத்தில் லண்டன்பைத்தியத்தில் போனாள். நீர் நினைப்பது போல் உமது தகப்பன் நியூட்டன் எந்த விபத்திலும் இறந்துபோகவில்லை.
உன் தாயுடன் இ ன் டர் நேஷ ன ல் சென்ரர் ஒன்றில் இருந்தவன். உன் தாய் நேர் ஸிங் படிப்புக்குக் காத்திருக்கும் போது நியூட்டனால் கற்பவதியானாள். நியூட்டன் விஷயம் கேள்விப்பட்டதும் தலைமறைவாகி விட்டான். அவனைத் தேடிக் களைத்துச் தலைசுற்றி அண்டர் கிரவுண்டில் விழப்போன போதுதான் என்னைச் சந்தித்தாள்.
கொஞ்சக்காலம் அவளுக்கு உதவியாகக் கதைத்துப் பேசித் திரிந்தேன். காலகட்டத்தில் கல்யாணம் செய்தேன். என் பெயர் உனக்கு வந்தது.

தேம்ஸ் நதிக்கரையில் A 145
நீயும் அப்படித்தான். உன் தாய்க்கு இருந்ததுபோல் உனக்கும் மண்டைக் கனம் பெரிய அழகென்று. அன்பான ஒருவனைக் கல்யாணம் செய்து கொண்டு ஊரோடு இருப்பதற்குப் பதிலாக ஏதோ உல்லாச வாழ்வு தேடிப்போனாய். உன்னைக் கல்யாணம் செய்யும் யோசனையுள்ளவனாய் இருந்தால் உன்னை இப்படியான நிலையில் விட்டிருக்கமாட்டான்.
நீ யும் பாஸ்ரட், உனக்குப் பிறக்கப்போவதும் பாஸ்ரட் ஆகத்தான் பிறக்கப்போகிறது"
ஸிம்சனின் கொரூரமான கடிதத்தைப் படித்தவள் அப்படியே சிலைபோல் படுத்திருந்தாள். தாரை தாரை யாக அவள் கண்களில் நீர் வழிந்துகொண்டிருந்தது.
வாழ்க்கையில் முதல்முதலாகத் தன்னைப்பற்றித் தெரிந்து கொண்ட ரகசியத்தை அவளால் தாங்க முடியா திருந்தது. தான் லண் ட னு க்கு வரமுயன்றபோது ஸிம்சன் ஏன் ஒரு மாதிரி நடத்தினான் என்று தெரிந்தது. செந்திலுக்குப் போன் பண்ணுவதையோ அவனுடன் கதைப்பதையோ அவள் நினைத்துப் பார்க்கவில்லை.
நியூட்டன், டேவிட், ஸிம்சன், செந்தில் இவர்களில் ஒருத்தரிலும் நியாயம் நேர்மை என்பதில்லையா?
அவள் மேரிபோல் ஒரு ஸிம்சனுக்குப் போகத் தயாரில்லை. ஆஸ்பத்திரியில் டொக்டரைப் பார்க்கப் போக இன்னும் இரண்டு கிழமை இருந்தது.
டொக்டர்களுக்கு என்ன தேரியும், நோயாளியின் வேதனையைப் பற்றி?
இப்போதே இரண்டு மாதம் முடிந்து மூன்றுமாத மாகிறது. ஆஸ்பத்திரியில் போய் சிகிச்சை செய்துமுடிக்க எவ்வளவு காலம் எடுக்கும்?
அபோர்ஷன் நடக்காவிட்டால் அவள் கெதி என்ன?

Page 78
146 A ராஜேஸ்வரி
மைராவுக்குப் போன் பண்ணினாள். பதில் இல்லை, வீட்டில் இருக்கப் பைத்தியம் பிடிக்கும் போல் இருந்தது. கால் போனபோக்கில் நடந்தாள்.
சம்மர்க் கால அலங்காரத்தில் விம்பிள்டன் டென்னிஸ் விளையாட்டுக்கு ஆயத்தம் நடைபெற்றுக் கொண்டிருத் தது உலகம் இப்படிச் சந்தோசத்தில் தவிக்கிறது. எனக்கு மட்டும் ஏன் இந்தக் கெதி?
வீட்டுக்கு வரும்போது இரவு பத்துமணியிருக்கும். யாரும் இல்லை. நித்திரையாய் இருப்பார்கள்? அல்லது வெளியில் போயிருப்பார்கள்.
அவளுக்கென்று யார் இருக்கிறார்கள்? உலகத்தில் பெரிய இல்லாமை உனக்கென்று ஒரு ஜீவன் உண்மையான அன்புடன் இல்லாமை தான் என்று தனக்குத்தானே சொல்லிக்கொண்டாள். வயிற்றைப் புரட்டிக் கொண்டு வந்தது. அன்றெல்லாம் அவள் சரியாக சாப்பிடவில்லை
சத்தியைக் குறைக்க டொக்டர் கொடுத்த குளிைைகய எடுத்தாள். r
சட்டென்று ஏதோ முடிவு கட்டியவள் போல் ஒரு முழுப்போத்தல் குளிகையையும் வாயில் போட்டாள். *அழுது கொண்டிருக்கிறாய் மனத்தைரியமாக இரு” என்று டொக்டர் கொடுத்த வலியம் குளிகை ஒரு போத், தலையும் வாயில் போட்டாள்.
அடுத்த நாள் பகல் பத்துமணியாகியும் லோறாவின் கதவு திறக்காதலால் எட்டிப்பார்த்த சர்மிளா 'ஆ வென்று அலறினாள்,

எத்தனை நாட்கள் உணர்வின்றிப் படுத்திருந்தாள் லோறா? எத்தனை மணித்தியாலங்கள் போராடினார்கள் டொக்டர்கள் அவள் உயிருக்கு?
அவள் குழந்தை அழிந்து உதிரமாக அவள் கட்டிலை நனைத்துக் கொண்டிருந்தது.
GasT q. LU மலர்த்தண்டுபோல் லோறாவின் உடம்பு" சோர்ந்து போய்விட்டது.
பாஸ்ரட் செந்தில்" என திட்டிக் கொண்டிருந்தாள் மைரா, லோறாவைப் பார்க்கும் ஒவ்வொரு நிமிடமும், யோகலிங்கம் நிம்மதியின்றி டொக்டர்களின் வாயை உற்றுப்பார்த்துக் கொண்டிருந்தான்.
ஒரு சத் தத்தையும் காணவில்லை எனச் சந்தேகப்பட்டு சர்மிளா போய்ப்பார்க்காமல் விட்டிருந்தால் லோறாவின் கெதி என்ன நடந்திருக்கும்?
- எனக்கு அப்பவே தெரியும் இந்தப் பெடியன் கண்ட நேரம் எல்லாம் வந்தபோது” என திட்டிக் கொண்டிருந் தாள் சர்மிளா.
யசோதரன் விஷயம் கேள்விப்பட்டுப் பயந்து போனான். உந்த விசரி செத்துகித்துப் போனால் போலிசு கிலிசு என்று வந்து தொலைக்கப் போகுது எனப் பயந் தான். தான் செந்திலுக்கு லோறாவைப் பற்றித் தேவை யில்லாத கதைகள் பேசாமல் இருந்தால் இப்படி எல்லாம் நடந்திருக்குமா என தன் னைத் தா னே கேட்டுக் கொண்டான் யசோ.
'அந்தப் பெடியன்களுடன் இருந்து கிடைச்ச புத்தி போதும், வெளிக்கிடும் அந்த வீட்டை விட்டு" என்று பரமேஸ் தம்பிக்கும் புத்தி சொன்னாள் .

Page 79
148 A ராஜேஸ்வரி
செந்தில்வேலுக்குப் பைத்தியம் பிடித்துவிட்டது போல் இருந்தது. இவ்வளவு காலமும் குடி குடி எனக் குடித்து இப்போது இந்தப் பேரிடியும் சேர்ந்து அவனை நிலைகுலையச் செய்தது.
'gl: பிளடி பூல் உன்னாலை என்ன நடந்திருக்கு என்று பார்த்தாயா" என்று கேட்டான் யோகலிங்கம்.
செந்தில் மறுமொழி சொல்லவில்லை. மறுமொழி சொல்லத் தெரியவில்லை - என்ன சொல்வது?
'இனிச் செந்திலுடன் ஒரு தொடர்பும் வைத்துக் கொள்ளாதே என்பதுதான் என் போதனையாக இருக்கப் போகிறது லோறாவுக்கு" என்றாள் மைரா.
**மைரா ஒவ்வொருவருக்கும் தாங்கள் என்ன செய்வது என்று தெரியும். லோறாவுக்கு அனுபவம் கிடைத்திருக்கிறது. இனியும் அவள் அவனிடம் தரும்பிப் போகிறாள் என்றால் அது அவளின் சொந்த விஷயம். நாங்கள் சினேகிதர்கள். சர்வாதிகாரிகள் இல்லை" யோக னின் கருத்து மைராவுக்குச் சரியெனத்தானபட்டது.
"மைரா, செந்தில் போன்றவர்களுக்குப் பெண்கள் தேவைக்குப் பாவிக்கும் இயந்திரங்கள். குளிருக்கு அணைத்துக் கொள்ளவும், ஆசைவெறியைத் தணித்துக் கொள்ளவும் வெறும் செக்ஸ் ஒப்ஜெக்குகளாகப் பாவிக்கி றார்கள். அவர்களுக்குப் பெண்களின் உணர்ச்சியைப் பற்றிக் கவலையில்லை. அப்படி உணர்ச்சியிருந்தவன் என்றால் லோறா இப்படித் தற்கொலை செய்யத் துணிந் திருக்க மாட்டாள்".
"எனக்குத் தெரியாது அவர்களின் வாழ்க்கை எப்படிப் போகப் போகிறது என்று' எனப் பெருமூச்சு விட்டாள் ம்ைரா.
செந்திலுடன் யோகலிங்கம் கதைக்கவில்லை.

தேம்ஸ் நதிக்கரையில் A 149
செந்திலும் யசோதரனும் ஆஸ்பத்திரி விறாந்தையில் உட்கார்ந்திருந்தார்கள்.
"ஒழுங்கா படித்துப் போட்டுப் போறதுக்குப் பதிலாக இப்படி ஆஸ்பத்திரிகளைச் சுத்த வேணுமெனறு மான்ன தலைவிதி' யசோதரன் முணுமுணுத்தான்
லோறா தற்செயலாக இறந்துவிட்டால் செந்தில்வேல் என்ன செய்வான் என்று தெரியாது. கடந்த இரண்டு மூன்று கிழமைகளாகக் குடித்துக் கொண்டிருந்தான். பதட்டக் குணக்காரனான செந்தில் ஏதும செய்து விடக் கூடாது என்பதற்காக யசோதரன் கூட வந்திருந்தான்.
செந்தில் டொக்டரைக் கேட்டதில் லோறாவின் உயிருக்கு ஆபத்தில்லை என்று சொன்னார்கள். வார்ட் டுக்குள் போனபோது லோறா சோர்ந்த முகத்துடன் படுத்திருந்தாள். விசிட்டிங் நேரமாதலால் வார்ட் நிறைய ஆட்கள் இருந்தார்கள். எத்தனையோ சொல்ல வேண்டும், அவளிடம் மன்னிப்புக் கேட்கவேண்டும் என நினைத்து வந்திருந்தான். ஆனால் அவள்பேசும் நிலையில் இருப்பதாக அவனுக்குத் தெரியவில்லை.
அவனைக் கண்டதும் அவள் கண்களில் இருந்து நீர் பெருகியது.
“என்னை மன்னித்து விடு. உம்மை இந்த நிலைக்கு ஆக்கியதற்கு, எனக்கு என்ன செய்வது என்று தெரிய வில்லை. அதுதான் இரவு பகலாக வேலை செய்தேன். உம்மிடம் வந்தால் நீர் அழுது என்னைச் சித்திரவதைப் படுத்திக் கொண்டிருந்திருப்பீர். அதுதான் குடித்துக் கொண்டு திரிந்தேன்". அவள் விம்மி விம்மி அழுதாள்.
'லோறா அழாதே. உன்னைப்பார்க்காமல் இருக்கும் ஒவ்வொரு நிமிடமும் சூனியமாக இருந்தது. அதை மறக்கத்தான் குடித்தேன். ஏதோ உன்னை விட்டுவிட்டுத்
G5ー10

Page 80
150 A ராஜேஸ்வரி
தனியாக குடித்துக் கும்மாளம் அடிக்கும் யோசனையில் இல்லை" செந்திலின் குரல் தழுதழுத்தது
ஆதரவு என்று போன ஒரு இடமும் இப்படியா? முழு அன்புடன் அவளை ஏற்றுக்கொள்ள ஒரு ஜீவனும இல்லையா.
'லோறா உன்னை நான் இனிப்பார்க்கக் கூடாது என்று நீ நினைத்தால் நான் உன்னைப் பிழை சொல்ல மாட்டேன். நான் மிருகமாக நடந்துகொண்டேன். நான் செய்த பிழைக்கு நான் தண்டனையனுபவிக்கத் தயாராக இருக்கிறேன். உமக்குத் தெரியும் நீ இல்லாமல் என் வாழ்வு எப்படி இருக்கும் என்று"
லோறா எப்படிச் சொல்வாள்? அவனில் மட்டுமல்ல அவளுக்கு ஆத்திரம். தன் தாயை ஏமாற்றிய நியூட்ட னில் தொடக்கம், தன்னை ஒரு மாதிரி நடத்த வெளிக் கிட்ட சித்தப்பன் ஸிம்சன், வேலைக்கு வரும் பெண்களிட மெல்லாம் தன் விஷமத்தைக் காட்டும் டேவிட், குழந்தை வயிற்றில் வந்தவுடன் தன்னைத் திட்டிய செந்தில் வரை எல்லோரிலும் ஆத்திரம்.
நியாயமற்ற ஆண் சமுதாயத்தின் அரக்க குணத்தால் தான் அவள் இப்படியான நிலைக்கு வரவேண்டி வந்தது என்று எப்படிச் சொல்வாள்?
அவள் அழுதாள், இனி யாரிடம் போவது?
உலகமெல்லாம் இப்படியான ஆண்கள்தான் இருக்கிறார்கள்?
'நடந்ததை மறந்துவிடு லோறா, நாங்கள் இனி
உலகத்தைப்பற்றிக் கவலைப்படத் தேவையில்லை.
பல்லைக் கடித்துக்கொண்டு படிப்பு முடியும் வரை இருப் போம். பின்னர் ஆசைதீர ஆறேழு பிள்ளைகள் பெறு Ganunro”
லோறா அவனைப் பார்த்தாள்.

தேம்ஸ் நதிக்கரையில் A 151
அவனை மன்னித்து விட்டாளா? அவளை விட்டால் வேறு எங்கே போவாள்?
இனி சர்மிளா அவளை வீட்டில் வைத்துக் கொள் வாள் என்று எதிர்பார்க்க ஏலாது. தான் பட்ட கஷ்டம் போதும் என இப்பவே சர்மிளா ஒப்பாரி வைத்துக் கொண்டிருப்பாள்.
லோ றாவின் அறைக்குப் போனபோது லோறாவின் வீட்டுக்காரர் சொன்னார்கள் இனி லோறா தங்கள் வீட்டில் இருக்க முடியாது, தாங்கள் பட்ட கஷ்டம் போதும் என்று. செந்தில் லோறாவின் சாமான் எல்லா வற்றையும் தன் அறைக்குக் கொண்டுபோய்ச் சேர்த்தான். யசோதரன் தலையில் கைவைக்காத குறையாக "என்னடா அடுத்ததரம் அவள் குளிசை எடுக்கும்போது நீயும் சேர்ந்து எடுக்கப் போறிரோ? அறைக்கே கொண்டு வரப் போகிறீரே அவளை" என ஒலமிட்டான்.
"நீர் உம்முடைய வேலையைப் பாரும். நான் வீட்டுக் காரனிடம் கேட்டுவிட்டேன். செப்டம்பரில் அவளுக்குப் பள்ளிக்கூடம் தொடங்குகிறது. இரண்டுமாதம் கூட இல்லை சரியாக, என்னோடு இருக்கட்டும்' என்றான் செந்தில்.
"எப்போது தாலி கட்டப் போகிறீர்? உன் தாய் தாலி செய்து அனுப்புவா என்று யோசிக்கிறீரா" என்றான் நக்கலுடன்.
செந்தில் அவனுடன் சண்டைபிடித்துக் கொண் டிருக்க விரும்பவில்லை. லோறா இன்னும் இரண்டொரு நாட்களில் வீட்டுக்கு வந்துவிடுவாள் என்று சொல்லி யிருந்தார்கள். அவன் யோகலிங்கம் படுத்த கட்டிலைத் தன் கட்டிலுடன் இழுத்துப் போட்டுவிட்டு அறையைக் கூட்டிக்கொண்டிருந்தான்.
"யசோதரன் லோறாவுடன் எந்தக் கதையும் நீர் வைத்துக்கொள்வதை நான் விரும்பவில்லை. நாங்கள்

Page 81
152 A ராஜேஸ்வரி
என்னவும் கதைத்துச் சிரிக்கலாம் அவள் இரண்டு மாதம் தான் இருக்கப்போகிறாள். உமக்கு நான் அவளை இங்கே கூட்டிக்கொண்டு வருவது பிடிக்காவிட்டால் வேற இடம் பார்த்துக்கொண்டு போ தனியாக இருந்தாற் றான் மற்றவர்களுடன் எப்படிப் பழகுவது? மறறவர் களை எப்படி மதிப்பது என்று உமக்குத் தெரியவரும்” என்றான் செந்தில்,
யசோ மறுமொழி பேசவில்லை. தமக்கை வீட்டுக்குப் போய் இருப்பதை விரும்பவில்லை. எந்த நேரத்திலும் இரண்டு கருத்துப்பட ராசரத்தினம் எதையாவது சொல்லிக்கொண்டிருப்பார்.
தமக்கை வீட்டில் எந்தவிதமான பேச்சுச் சுதந்திரமு. மில்லை. "இருந்து பார்க்கிறன்-சரியில்லை எண்டா வெளிக்கிட்டுப்போறன்" என்றான் யசோ, விட்டுக் கொடுக்காமல்.
பரமேஸ் தங்களுடன் வந்து இருக்கச் சொல்லிக் பார்த்தாள்.
"கொஞ்ச நாள் இருந்து பார்க்கிறன். சரிவரா விட்டால் வருகிறேன்" என்றான் தமக்கைக்கு யசோ.
'உவங்கள் எல்லாம் பெரிய காதல் என்று திரியிறான் கள். எத்தனைபேர் லண்டனில் எப்படி எல்லாம் திரிஞ்சு போட்டு யாழ்ப்பாணத்தில்போய் இரண்டு லட்சம் மூன்று லட்சத்தைக் கண்ட உடனே காதலை உதறித் தள்ளினவை என்று உனக்குத் தெரியும்" என்றார் ராசரத்தினம், செந்திலைப் பற்றி பரமேசிடம் கதைக்கும் போது.
*சும்மா அவளோட திரிஞ்சாய் என்றது மட்டுமல்ல
இப்ப வீட்டோட கொண்டுவந்து வைச்சிருக்கிறான்.
யாழ்பாணத்தில் இவருக்குப் பெரிய கல்யா ண ம் பேசுகினமாம்" என்றான் யசோ.

தேம்ஸ் நதிக்கரையில் A 153
'வீட்டுக்குத் தெரிந்தால் என்ன? அவர்கள் திட்டி னால் என்ன ? நான முடிவுகட்டிவிட்டேன் என் சீவியத்தை' என்று சொன்னான் செந்தில்,
லோறா ஆஸ்பத்திரியால் வீட்டுக்குப் போக முதல் சைக்கியாட்ரிஸ்ற்ரைப் பார் க்க வேண்டுமென்றார் டொக்டர்.
"சைக்கியாட்ரிஸ்டைப் பார்க்கவா" லோறா ஆச்சரி யத்துடன் கேட்டாள். அவளுக்குப் பைத்தியமா? '.
'ஒம், மருந்து குடித்தோ அல்லது வேறு வழிகளாலோ
தற்கொலைக்கு முயற்சி செய்கிறவர்களை எல்லாம் மணவைத்திய ஸ்பெசலிஸ்ட் பார்க்காமல், விடமாட்டார். அவர்கள் பிரச்சினை என்ன? ஏன் தற்கொலை முயற்சிக்கு ஆளாகிறார்கள் என்பதை எல்லாம் அறியாமல் வீட்டுக்கு அனுப்புவதில்லை. வீட்டில் இருந்து மருந்து எடுக்கத் தகுதியில்லாதவர்களை சில வேளை சைக்கியாட் ரிஸ்ட்" ஆஸ்பத்திரியில் அனுமதிப்பார்கள்.
டொக்டர் ஒரு உணர்ச்சியுமின்றி சொல்லிக்கொண்டு போனார். ஆயிரம் பேரைப் பார்த்து, ஆயிரக்கணக்கான நோய்களைப் பார்த்து மரத்துப்போன உணர்ச்சி அவர்களுக்கு. -
லோறாவுக்கு இரத்தம் உறைவதுபோல் இருந்தது. அவளுக்குப் பைத்தியமென்று முடிவு கட்டிவிட்டார்களா? அவளின் எதிர்காலம் என்ன? இன்னும் இரண்டு மாத மும் இல்லை நேர்ஸிங் ரெயினிங்குக்குப் போக. அதற் கிடையில்...? ..
அவளுக்கு உலகம் இருண்டுகொண்டு வந்தது. சம்மர் கால வெயில் இன்னும் குறையவில்லை. அதை விட அவள் உடம்பு பயத்தால் வேர்த்தது; "கிளினிக்" அறையில் நுழைந்ததும். - - - -

Page 82
154 A ராஜேஸ்வரி
"ஹலோ மிஸ் ஸிம்சன். நான் டொக்டர் ஹார்ட்லி: சைக்கியாட்ரிஸ்ற்."
அவ்வளவு வயதில்லை. இளம் டொக்டர். அவள் வலிந்த புன்னகையுடன் அவரைப் பார்த்தாள்.
இந்த அழகிய பெண்களுக்கு என்ன அப்படி உலகத்தை வெறுத்துத் தற்கொலை செய்ய வேண்டிய துன்பம் வந்தது? என்ற கேள்வி அவர் மனதில் ஒடிய போதும் வெளியே காட்டிக்கொள்ளவில்லை.
*நல்ல வெயில்" என்றார் அவளை உற்றுப்பார்த்துக் கொண்டு.
'உம்" என்றாள் சாட்டுக்கு. அவளுக்குத் தெரியும் அவரின் பார்வை அவளை ஆராய்கிறது என்று. என்ன ரகமான "விசர்" என்று யோசிக்கிறாராக்கும்!
அவளுடைய ஆஸ்பத்திரிநோட்டை திறந்து வைத்துக் கொண்டு "ஆகக்கூடிப் பதினெட்டு வயதுதானா?" என்றார் ஆச்சரியத்துடன்.
"ஏன் நாற்பத்தெட்டு வயதுபோல் தெரிகிறதா" என்றாள் லோறா. h
"எனக்குப் பதினெட்டு வயதாக இருக்கும்போது சாவதைப் பற்றிக் கனவு கூடக் கண்டிருக்க மாட்டேன்" என்றார் டொக்டர் ஹார்ட்லி.
"வாழ்க்கை சந்தோசமாய் இருந்தால் நூறு வயதிலும் நான் சாவதைப் பற்றி யோசித்திருக்க மாட்டேன்" என்றாள் லோறா. வேண்டாக் குழந்தை யாகத் தான் மேரியின் வயிற்றில் கிடந்திருந்தது அவள் கற்பனையில் வந்தது.
எப்படித் துடித்திருப்பாள் மேரி, தன் அன்புக்குரியவன் என்று நினைத்த நியூட்டன் கைவிட்டபோது அவள் கண்கள் பனித்தன.

தேம்ஸ் நதிக்கரையில் д 155
"அழுவது கோழைகளின் செயல் என்பது என் அபிப் பிராயம்' என்றார் டொக்டர்.
அவள் அழுகை கூடியது டொக்டர் ஹார்ட்லி கடுமையாய்ச் சொல்லியிருந்தால் ‘என்ன ஒப்பாரி வைக்கி நீர்" என்று, சிலவேளை அவள் அழுவதை விட்டிருக்கலாம்
டொக்டர் அவள் அழுவதைத் தடைப்படுத்தாமல் அங்கும் இங்கும் திரிந்தார் கொஞ்ச நேரம், 'உங்கள் தாய் தகப்பன் ஜமேய்க்காவிலா இருக்கிறார்கள் மிஸ் ஸிம்சன்" அவர் இனிமையாகக் கேட்டார்.
தாய் தகப்பன்? "எனக்குத் தகப்பன் இல்லை. நான் பாஸ்ரட்" அவள் தலை குனிந்துகொண்டு சொன்னாள். தன்னை அறியா மல் தன் பிறப்பைப் பற்றிச் சொன்னாள். தான் கற்பவதி யானது, செந்தில் மனம் வேறுபட்டுத் திரிந்தது அதே நேரம் பிறப்பைப் பற்றிய ரகசியத்தை அறந்து கொண்டது என்பனவற்றைச் சொன்னாள் கதைவிட்டுக் கதை கிண்டுவதுதானே மனவைத்திய நிபுணர்களின் வேலை. அவராகக் குறுக்கு விசாரணை செய்ய அவள் ஒன்றும் மிச்சம் வைக்கவில்லை. தன் வாழ்க்கையில் யாருக்கும் சொல்லாத ரகசியம் எல்லாவற்றையும் சொன்னாள் சொல்லிமுடிய மனம் தெளிவாக இருநதது.
தனக்குத்தானே நி  ைன த் து வேதனைப்பட்ட எத்தனையோ விடயங்களை டொக்டருடன் கதைத்து முடிய மனம் லேசாக இருந்தது.
அவளுக்கு அவளில் நம்பிக்கையில்லை. உலகத்தில் நம்பிக்கையில்லை அவள் அனுபவங்கள் அப்படி அவளை ஆக்கிவிட்டது. அவள் ஏன் தற்கொலை செய்ய முயன் றாள் என்று இப்போது டொக்டருக்குத் தெளிவாக விளங் கியது. எல்லா ஆண் களும் நியூட்டனைப்போல், ஸிம்சனைப்போல், செந்திலைப்போல் என்று பயப் படுகிறாள்.

Page 83
1ð6 A pn Gggivøufl
பெண்கள் பயப்பட்டுப் பதுங்கும் வரையும்தான் ஆண்கள் வல்லமை படைத்தவர்கள், என்பது ஏன் இவளுக்கு விளங்கவில்லை என நினைத்தார் டொக்டர் ஹார்ட்லி.
::5ir உம்முடைய வாழ்க்கையை யாருடனோ ஒப்படைக்கப் பார்ப்பதாற்றான் இப்படிப் பயப்படுகிறீர், தன்னம்பிக்கை இல்லாமல், ஆண்கள் தயவு இல்லாமல் பெண்கள் வாழமுடியாது என்ற காலம் போய்விட்டது. தகப்பன் இல்லாமல் பிள்ளை பெறுவது ஒழுக்கக் குறைவு என்பவர்கள் குறைந்துகொண்டு வருகி றார் க ள். பதினெட்டு வருடத்துக்கு முன் உன் தாய் சமுதாய வசைச் செயலுக்குப் பயந்து ஸிம்சனைக் கல்யாணம் செய்திருக்க லாம். நீர் அப்படிச் செய்யவேண்டும் என்றில்லை லண்டனில் எத்தனையோ தாபனங்கள் இருக்கின்றன. கல்யாணம் ஆகாமல் தர்யாகும் பெண்களுக்கு உதவி செய்ய அதை விட்டு விட்டுச் சிறுகுழந்தை போல் யோசிப்பது முட்டாள்தனம்.
தன்னம்பிக்கை உள்ளவனுக்கு எந்தக் கஷ்டமும் தூசிக்குச் சமம். உலகத்தைப் பற்றி நீர் கவலைப்படும் வரை உலகம் உன்னை ஓட ஓட வெருட்டும். உலகத்தில் ஒரு ஜீவனும் உத்தமன் இல்லை. ஏதோ ஒருவழியில் கெட்டவர்கள். உலகத்தின் கண்களுக்குத் தேவர்களாக இருந்தாலும் அவர்களுக்குத் தெரியும் தங்களைப்பற்றி"
லோறா டொக்டரைப்பார்த்தாள் அவள் நினைத் ததுபோல் அவளை ‘விசர்" என்று முடிவுகட்டவில்லை. பெலவீனமான மனப்போக்கு உடையவள் என்று மட்டும் தான் நினைக்கிறார் எனத் தெரிந்துகொண்டாள்.
'சந்தர்ப்பங்களை சரியான கண்ணோட்டத்தில் பார்க்காதவர்கள் ஒரு நாளும் உருப்படுவதில்லை கறுப்புக் கண்ணாடிக்குள்ளால் உலகம் கறுப்பாகத்தான் தெரியும். இன்னும் எவ்வளவோ இருக்கு அனுபவிக்க; அனுபவப்

தேம்ஸ் நதிக்கரையில் A 157
பட, தேவையானது ம ன த் ைத ரியம். எ ன க் கு மருந்தெடுத்து மனப்பலம் கொடுப்பதில் நம்பிக்கை
ல்லை" என்றார் டொக்டர்.
அவர் எந்த மருந்தும் கொடுக்கவில்லை ஏதும் பிரச்சினை, வந்து தன்னைப் பார்க்க வேண்டும்போல் இருந்தால் தன்காரியதரிசிக்குப் போன்பண்ணித் தன்னைப் பார்க்க விரும்புவதாகச் சொல்லச் சொன்னார்.
டொக்டர் ஹார்ட்லியைப் பார்த்தபின் மனம் தெளி வாக இருந்தது. , , , சர்மிளா வீட்டில் இருந்து தான் சாமான்களைத் தன் அறைக்குக் கொண்டு போய்விட்டேன் என்று சொன்ன போது அவள் அதிகம் முரண்டு பிடிக்கவில்லை செந்தில் ஆச்சரியப்பட்டான். தன்னை மன்னித்திருந்தாலும் தன்னுடன் இனியும் ஒன்றாய் இருக்க வருவாளோ என்ற யோசனை இல்லாமல் இல்லை ஆனால் லோறா மறு மொழி சொல்லாமல் வந்தது அவனுக்கு ஆச்சரியமாக இருந்தது.
மைரா தன் . கோபத்தைக் காட்டவில்லை. ஏன் நாங்கள் வீணாகத் தலையிடவேண்டும் என இருந்து
லோறாவை வீட்டோடு கொண்டுவந்த பின் தெரிந்த இலங்கையர்கள், தெரிந்தும் தெரியாத மாதிரி நடந்தார் கள் செந்திலுடன்.
சும்மா அசைந்த வாய்க்கு அவல் கிடைத்தது போல் இருந்தது. வெறும் வம்பளப்பவர்களுக்கு ஒரு விஷயம் கிடைத்தது. ج
"எப்படியடா பொம்பிளை மாப்பிளை' என்று கேட்டார்கள் தமிழ் மாணவர்கள் யசோதரனிடம். .
இன்னும் இரண்டு மாதம்தானே இருக்கப் போகிறாள் என்று பல்லைக்கடித்துக் கொண்டிருத்தான் யசோ.

Page 84
158 A ராஜேஸ்வரி
ஆனால் நாளடைவில் அவள் மன நிலை மாறிக் கொண்டிருந்தது.
லோறா பகலில் வேலை. செந்தில் இரவில் செக்கி யூரிட்டி வேலை. யசோ ஆஸ்பத்திரியில் மூன்று இரவுகள் மட்டும் வேலை செய்ததால் மிச்ச நேரம் எல்லாம் ஒரே வீட்டில் லோறாவுடன் இருந்தான்.
சாடைசாடையாக யசோ ஒருமாதிரி’ பழக வெளிக்
கிடுவது லோறாவுக்குத் தெரியாமல் இ ல்  ைல"
செந்திலுக்குச் சொல்லி ஏன் சண்டையை உண்டாக்கவேண்டும் என யோசித்தாள்.
ஓர் இரவு பன்னிரண்டு மணிக்குமேல் யசோ கதவைத் தட்டினான் கதவைத் திறந்த லோறா குப்பென்று அடித்த பியர்மணத்தில் கண்டுபிடித்தாள், யசோ குடித் திருக்கிறான் என்று.
"என்ன வேணும்" என்றாள், தன் ஆத்திரத்தைக் காட்டாமல்.
"சும்மா. சும்மா. சும்மா கதைக்க வேணும்" கண் தன் பாட்டுக்குச் சுழன்று கொண்டிருந்தது யசோவுக்கு.
"சும்மா கதைக்க இது நேரமில்லை. செந்தில் இருக்கிற நேரம் பார்த்து வாருங்கள்" என்றாள் கதவைச் சாத்த முனைந்துகொண்டு.
‘யோகனோடும் செந்திலோடும் தான் கதைப்பீரோ" யசோ மெல்ல லோறாவின் கன்னத்தை வருடினான்.
pr
அடுத்த கணம் படீரென்ற அறை அவனது வெறியில் அரைவாசியைப் போகப் பண்ணியது, பூட்டிய கதவைத் திட்டிக்கொண்டு தன் அறைக்குப் போனான்.
செந்திலுக்கு இவள் சொல்லிவிட்டால். விடிந்ததும் விடியாததுமாக அவன் பயத்துடன் சிந்தித்தான்.

தேம்ஸ் நதிக்கரையில் A 159
'செந்தில் வந்ததும் சொன் னான் , உன் பெட்டைக்குச் சொ ல் லு சும்மா நடுச்சாமத்தில என்னோட வந்து கதைக்க வேணாம் எண்டு. வீட்டுக் காரன் கண்டால் எல்லாரையும் கலைச்சுப் போடுவான்" செந்தில் திடுக்கிட்டான், அவன் சொன்ன விதத்தைப் பார்த்து.
லோறா களங்கமில்லாதவள். யசோவுடன் கதைத் திருக்க மாட்டாள் என யோசித்தான் செந்தில். லோறா வரும்போது பூட்டும் திறப்பும் வாங்கிக்கொண்டு வந்தாள் அறைக்கு.
செந்திலுக்கு என்ன நடந்திருக்கும் என விளங்கியது. யசோலைக் கொலை செய்ய வேண்டும் போல் ஆத்திரம் வந்தது. O
"கோபப் படாதீர்கள், சில மனிதர்கள் ஒருநாளும் வளர்வதில்லை அறிவில்" என்றாள்.
வெயிலும் குடும் குறைந்துகொண்டு வந்தது.
நேர் ஸிங் ரெயினிங்குக்குப் போக இரண்டு கிழமைக்கு முன் வேலையை விட்டு விட்டாள் லோறா
நோர்த் லண்டனில் ஆஸ்பத்திரி. விம்பிள்டனில் இருந்து ஒவ்வொரு நாளும் போகமுடியாது. ஆஸ்பத்திரி நேர்ஸஸ் ஹோமில் இடம் கிடைத்திருந்தது வேணு மானால் சென்ரல் லண்டனில் ஒரு இடத்தில் வீடுபார்த்துக் கொண்டு இருக்கலாம் என்றாள் லோறா. விம்பிள்டனுக்கு அண்டர் கிரவுண்ட் ரெயிலில் செந்தில் போகலாம். லோறாவும் ஆஸ்பத்திரிக்குச் சுகமாய்ப் போகலாம்.

Page 85
–160 A grrGgsivsuffi
ஆனால் வேலை எடுப்பது கஷ்டமாகிக்கொண்
டிருக்கும் இந்தக் காலத்தில் வேலையை விட்டுவிட்டு இன்னொருமுறை வேலை; தேடத்தன்னால் முடியாது என்று சொல்லிவிட்டான் செந்தில். லண்டனைவிட்டு வெளியில் போகவில்லை தானே ஒவ்வொரு கிழமையும் ஓய்வு கிடைத்தால் வந்து பார்க்கலாம் தானே என்று சொன்னான் செந்தில்.
ஒரு நாள் தாயின் கடிதத்தை வாசித்துக்கொண்டிருந் தான் செந்தில். அவன் எதிர்பார்த்ததுதான். இதுவரை லோறாவையும் அவனையும் பற்றி நேரடியாக அவர்கள் எழுதவில்லை. ஏதோ "சேறு கண்ட இடத்தில் மிதித்து தண்ணிகண்ட இடத்தில் கழுவி விட்டுப் போகிற வயது" என்றுதான் தனக்குத்தானே சமாதானம் சொல்லிக் கொண்டிருந்தாள் செந்திலின் தாய்.
மகன் ஒருத்தியைக் கூட்டிக்கொண்டு வந்து வீட்டில் வைத்திருப்பது, அவள் காசில் படிப்பது, 'பிள்ளை வந்து அழித்தது எல்லாவற்றையும் விளக்கமாக ஒரு "அனாமதேய கடிதத்தின் மூலம் அறிந்துகொண்ட செந்திலின் தாய் வழக்கமான தாய்மார் போல நீர் இறைக்கத் தொடங்கிவிட்டாள் கடிதத்தில்,
"இப்படிச் செய்வாய் என்று தெரிந்திருந்தால்
லண்டனுக்கு அனுப்பியிருக்க மாட்டேன். அவளை விடா விட்டால் ஆற்றில் குளத்தில் விழுந்து இறந்துவிடுவேன். உன் தங்கச்சிகளின் கெதி என்ன; ஊரெல்லாம் சிரிக்குது எங்களைப் பார்த்து" என அழுது எழுதியிருந்தாள். அவள் கண்ணிர்பட்டு கடிதத்தில சில இடங்கள்
அழிந்திருந்தன. d
"என்ன துக்கத்துடன் முகத்தை இப்படி வைத்துக் கொண்டிருக்கிறீர்கள்" என்றாள் லோறா.
'யாரோ என் வீட்டில் நீர் இருப்பதைப்பற்றி எழுதி யிருக்கினம் வீட்டுக்கு' என்றான் செந்தில்.

தேம்ஸ் நதிக்கரையில் A 161
**உங்களுக்கு என்னால் எவ்வளவு கஷ்டம்? தாய் தகப்பனைக் கூட எ ன க் காக எதிர்க்கிறீர்களே" ஆதரவுடன் அவனை அணைத்துக்கொண்டு கதைத்தாள் லோறா.
தங்கச்சிகளின் கல்யாணப் பொறுப்பை நிறைவேறறி விட்டால் ஒரு கரைச்சலும் இல்லை எப்போ படிப்பு முடியப்போகிறது. எப்படிக் குடும்பப் பொறுப்பை நிறைவேற்றப் போகிறேன்" எனப் பெருமூச்சுவிட்டான் செந்தில்,
*நான் உழைக்கத் தொடங்கினால் கொஞ்சம் கொஞ்சம் மிச்சம் பிடித்து வீட்டுக்கு அனுப்புங்கள்' என்றாள் லோறா.
அவன் விழுந்து விழுந்து சிரித்தான். "நேர்சுகளுக்குக் கிடைக்கும் சம்பளத்தில் ஒரு நல்ல சாப்பாடு சாப்பிட ஏ லா தெ ன் டு ஒருவேளைச் சாப்பாட்டுக்கு ஆசைப்பட்டு டொக்டர்களுக்குப் பின் னால் போகிறார்களாம் நேர்சுகள் என்று பேப்பரில் போட்டிருக்குத் தெரியாதோ' என்றான் செந்தில். லோறாவுக்குக் கோபம் வந்தது
"சும்மா கட்டுக்கதை. பேப்பர்காரன் பேப்பர் விற்க எதையும் போடுவான். நீங்கள் நம்புகிறீர்கள்" என முகத்தைச் சுளித்தாள் லோறா.
'இப்போது இல்லாவிட்டாலும் எப்போதாவது எங்களுக்குச் சம்பள உயர்வு வராமலா போகப்போகுது' என உறுதியுடன் சொன்னாள் லோறா.
“ஓம் எங்களுக்கு நாலைந்து பிள்ளைகள் பிறந்து கல்யாணம் முடிக்கிற வயதில் வரும்" எனச் சொன்னான் செந்தில்.
யோகன் சொல்லுகிறதுபோல காசுகளுக்காகத்தான் உறவுகள் என்ற நிலைமை மாறி அன்புக்காக உறவுகள்

Page 86
162 A ராஜேஸ்வரி
என்ற நிலைமை எப்போது வரும்" எனப் பெருமூச்சு விட்டாள் லோறா.
யோகனின் பெயர் வந்ததும் செந்திலின் முகம் udt floug).
"ஏன் ஒரு மாதிரி இருக்கிறீர்கள் யோகனின் பெயரைக் கேட்டதும்? நான் ஆஸ்பத்திரியில் இருக்கும் போது உங்களைச் சரியாக பேசினார் என்ற கோபமா?" என்றாள் லோறா.
அவர்கள் யோகனைக் கண்டு வெகு நாட்களாகி விட்டது. இலங்கையில் இருந்து வந்த கிரிக்கெட் குழு வுக்கு எதிர்ப்புக் காட்டிய தமிழ் மாணவர்களில் யோக னும் சேர்ந்திருந்தான். அதன்பின் சிங்கள மாணவர் களுக்கும் தமிழ்மாணவர்களுக்கும் ஏற்பட்ட கைகலப்பில் அடிபட்டதாகவும் பின்னர் பொலிசார் கைது செய்த தாகவும் யசோ சொன்னான்.
"ஒரு நண்பனுக்கு இவ்வளவு நடந்தும் போய்ப் பார்க்காமல் இருக்கிறீர்களே' எனத் திட்டினாள் லோறா.
'ஆஸ்பத்திரியில் அவன் என்னைப் பேசிய விதம் பிடிக்கவில்லை" என்றான் செந்தில்,
"மைரா என் சினேகிதி. யோகனுக்கு இவ்வளவு நடந்தும் நாங்கள் ஏனென்று கேட்காமல் இருக்கிறோமே, அவள் என்ன நினைப்பாள்" எனச் சிணுங்கினாள் லோறா.
அடுத்த நாள் லோறாவும் செந்திலும் போனபோது யோகன் வீட்டிலேயே இருந்தான். செந்தில் தன்னைத் தேடி வருவான் என யோகன் எதிர்பார்க்கவில்லை.
"ஏன் உனக்கிந்த வேலை. நீங்கள் தரவளி கத்துறபடியால் லண்டனிலிருந்து இலங்கையில் தமிழர்

தேம்ஸ் நதிக்கரையில் A 163
பிரச்சினை தீர்ந்து விடும் என நினைக்கிறீரா" என்றான் செந்தில்.
"இலங்கையை விட்டுக் கப்பல் ஏறியதும் தாங்கள் தமிழர்கள் இல்லை என நினைக்கிற சிலபேரில் நீரும் ஒராள். தமிழன் எங்கிருந்தாலும் இலங்கையில் எங்கள் .பிரச்சனைக்குப் போராடத் தயங்கக்கூடாது. கலகம் இல்லாமல் நியாயம் பிறப்பதில்லை. பாலஸ்தீன விடுதலைப் போராட்டம் உலகமெல்லாம் சிதறிக்கிடக்கிற பாலஸ்தீன மககளின் செயல்களால்தான் உலகத்துக்குத் தெரிந்தது. எங்கள பிரச்சினையை உலகம் அறிய வேண்டும். சும்மாவீட்டுக்கு வீடு சேர்ந்திருந்தது "விஸ்கி" வெறியில் கதைப்பது போதாது நாங்கள் கதைத்தது போதும். செய்கையில் ஏ தா வது காட்டவேண்டும் " என்றான் யோகன்.
"நாலுதரம் பொலிஸ்காரன் பிடிச்சு நல்ல அடி கொடுத்தால்தான் தெரியும், உம்முடைய வீர உணர்ச்சி எங்கே பறக்கிறதென்று'
"சில குண்டுகளுக்கும் பல காட்டிக்கொடுப்புக் களுக்கும் தமிழர்கள் தங்கள் போராட்டத்தை விட்டுக் கொடுப்பார்கள் என்று நான் நினைக்கவில்லை"
'ஏதோ படிப்பை முடிச்சுப் போட்டு மிச்சத்தைப்
_f7off
'மிச்சம் என்றால் என்ன? வசதியான வாழ்க்கையா? நல்ல சம்பளத்தில் வேலை. நாலுபேர் மதிக்கும் சீவியமா?" யோகன் எள்ளளவும் மாறவில்லை, தன் கொள்கைகளில் இருந்து என்று தெரிந்தது.
மைரா, லோறா நேர்ஸிங் போவதையிட்டு சந்தோசப் பட்டாள்.
லோறாவும் செந்திலும் யோகலிங்கம் வீட்டில் இருந்து புறப்பட்ட போது நல்ல பூரண நிலவு. கென்

Page 87
164 A ராஜேஸ்வரி சிங்டன் தெருக்களில் நடந்துவந்து கிங்ஸ் ரோட்டில் ஏறியதும் முதல் தரம் செந்திலுடன் நடந்துபோனது தினைவில் வந்தது லோறாவுக்கு.
இனி என்ன நடக்கப்போகிறது இவள் வாழ்க்கையில்?
"படிப்பு முடிய யோகலிங்கம் இலங்கைக்குப் போவார் என நினைக்கிறீர்களா?" என்றாள் லோறா.
'போனால் என்ன? அங்கே போய் வாய் திறந்தால் முதல் வேலையாக ஆளைபிடித்து ஜெயிலில் போடு வார்கள்"
எத்தனை யோகன்கள் இலங்கை எல்லாம் இருக் கிறார்கள்? எத்தனை சிறைச்சாலை வேணும் நிறைக்க என லோறா கேட்கவில்லை.
செந்திலுக்கு அரசியல் கதைப்பது பிடிக்காது. அவள் என்னைப் பிரிந்துவிட்டாளா என்று துடிக்கும் மனதுடன் இருந்தான் செந்தில், லோறா ஆஸ்பத்திரி வாழ்க்கையைத் தொடங்கியவுடன்.
காலம் எவ்வளவு வேகமாக ஓடுகிறது? அவள் படுத்த கட்டில் அவன் அருகில் காலியாகக் கிடந்தது எங்கேயோ போகவில்லை லண்டனில் வடக்கு பகுதியில்தான் இருக் கிறாள். ஆனால் அவனால் ஒவ்வொரு நாளும் அவளைக் காணமுடியாது
இரண்டொரு மாதம்தான் அவனுடன் இருந்தாள் ஆனால் ஏதோ யுக யுகமாய் ஒன்றாய் இருந்து பிரிந்தது போல் இருந்தது அவனுக்கு.
முதல் ஒன்றிரண்டு கிழமை ஒவ்வொரு இரவும் போன் பண்ணினான் பின்னர் அவள் ஒவ்வொரு கிழமையும் ஒய்வு கிடைக்கும்போது அவனிடம் வந்தாள். ஆனால் அவள் ஒய்வில் வருகிற நாட்களில் அவன் சில வேளை களில் வேலையாக இருந்தான். யசோதரனுடன் அந்த

தேம்ஸ் நதிக்கரையில் A 165
வீட்டில் இருக்கப் பிடிக்காமல் மைராவுடன் போய் நின்றாள் லோ றா, தனியாக செந்திலின் அறையில் நிற்க வேண்டிய நாட்களில்.
"என்னடT அதிர்ஷ்டம் அவனுக்கு. ஒன்றோடு திரிந் தவன் இப்போ இரண்டு பெட்டையை மேய்த்துக்கொண்டு திரிகிறான்' எனத் தன் அருவருப்பான அபிப்பிராயத்தைச் சொன்னான் யசோதரன். செந்திலுக்குத் தெரியும் யசோ பொறாமையில் சொல்கிறான் என்று,
ஆனாலும் லோறா தான் இல்லாமல் இன்னொருவ னோடு திரிவதை அடியோடு வெறுத்தான்.
"ஏன் இப்படிக் குறுகிய மனப்பான்மையோடு இருக் கிறீர்கள்" என எரிந்து விழுந்தாள் லோறா. தன்னை அவன். அவனின் வெறும் சொத்தாகச் சிலவேளை நடத்து வதை அடியோடு வெறுத்தாள்.
'லோறா ஐ லவ் யூ"
"இப்படி நீங்கள் சும்மா எந்த நேரமும் சந்தேகப் பட்டால் நான் எப்படிப் படிப்பது" என்றாள் லோறா.
செந்திலை ஏன் சந்தித்தேன்'என்றிருக்கும் சிலவேளை களில் அவளுக்கு. ஆனால் அவன் தன்னில் வைத்திருக்கும் அன்பின் காரணமாகத்தானே அப்படிக் கேட்கிறான் எனத் தன்னைத் தானே தேற்றிக் கொள்வாள். செந்தில் நடந்து கொள்ளும் விதத்தைச் சிலவேளை மைராவிடம் சொல்லி மைரா செந்திலை கண்டித்து பேசவேண்டி வந்து விட்டது.
"எனக்கும் உனக்கும் உள்ள தனிப்பட்ட விஷயங் களை ஏன் மைராவிடம் சொல்ல வேண்டும்" என எரிந்து விழுந்தான் செந்தில்.
அதன்பின் எதையும் மைராவிடம் சொல்வதை விட்டு விட்டாள்.
தே-11

Page 88
166 A ராஜேஸ்வரி
கிறிஸ்மஸ் நெருங்கிக் கொண்டு வந்தது. லோறா வுக்கு வேலை அதன்பின் இரவில் நடக்கும் ஹொஸ் பிட் -ல் டான்சுக்கு வரச் சொன்னாள் செந்திலை. விடுதலையின் ஆரம்ப நாட்களில் லோறா ஆஸ்பத்திரியில் இருந்தபோது உழைத்த காசெல்லாம் குடித்து முடித்து விடடான் செந்தில்,
போன வருடம் லோறாவிடம் வாங்கிய காசே இன்னும் கொடுக்கவில்லை. இந்த லட்சணத்தில் டான்சும் கூத்தும் என்று வெளிக்கிடத் தயாராய் இல்லை. எப்படி யும் லோறாவின் காசைத் திருப்பிக் கொடுக்கவேணும் என நினைத்தான்.
லோறாவிடம் போகமுடியவில்லை. "எந்த டொக்ட ருடன் நாட்டியம் போடுறாளோ" என்றான் யசோ. செநதிலுக்கு ஆத்திரம் ஆத்திரமாக வந்தது ஏன் நான் பணக்காரன் ஆக இருக்கவில்லை? இருந்தால் அவளை வேலைக்கு விட்டிருக்கமாட்டேனே எ ன த் தன் இல்லாமையை நினைத்துத் துக்கப்பட்டான்,
தான் இல்லாமல் செந்தில் ஒரு இடமும் போகாமல் சுருண்டு படுத்திருப்பான். போய்ப் பார்க்கச் சொல்லி போன் பண்ணினாள் மைராவுக்கு லோறா.
மைரா வேண்டா வெறுப்பாக யோகலிங்கத்தையும். கூட்டிக்கொண்டு கிளப்பம் கொமனுக்குப் போனாள். வேலையால் வந்த களைப்பில் அப்படியே படுத்திருந்தான் செந்தில்.
போன வருடம் மைராவுடனும் யோகனுடனும் லோறாஐலண்டுக்குப் போனது ஞாபகம் வந்தது. போன வருடம் ஐலண்ட் இந்த வருஷம் ஆஸ்பத்திரி. அடுத்த வருடம் எங்கே இருக்க ப் போகிறாளோ என முணுமுணுத்தான் யோகலிங்கத்திடம்.
"நீர் கூ டி ய வேகத்தில் கிழவனாகிக்கொண்டு வருகிறீர். சும்மா சந்தேகமும் மனக் கலக்கமும், உமக்கு

தேம்ஸ் நதிக்கரையில் A 167
லோறா நடந்துக்கொள்கிற விதம் பிடிக்காட்டால் அவளைப் பேசாமல் விடுவதுதானே. ஏன் கூழுக்கும் ஆசை மீசைக்கும் ஆசையாய் இரண்டு கால் தோணியில் நிற்கிறீர்” எனப் பேசினான் யோகலிங்கம்
'அவளிடத்தில் உனக்கு உள்ளது அன்பில்லை. ஒரு வித வெறி, தன் பொம்மையை யாரோ தொடப் பார்க்கி றார்கள் என்று ஒரே பயத்துடன் பொம்மையைக் கட்டிப் பிடித்துக் கொண்டிருக்கும் குழந்தைக்கும் உனக்கும் என்ன வித்தியாசம்? லோறா பொம்மையில்லை. பெண். அவளுக்கென்று ஒரு உணர்ச்சி இருக்கிறது. உள்ளம் இருக்கிறது" மைரா பொறுமையிழந்து சொன்னாள்
யோகனுக்குத் தெரியும் யார் என்ன சொல்லியும் செந்தில் திருந்தப் போவதில்லை என்று. படுபிற் போக்குவாத சிந்தனைகள் ஒருதலைப்பட்சமாகத்தான் இருக்கும். கண்ணாடியில் மற்றப் பக்கத்தில் என்ன இருக் கிறது என்பதில் அக்கறைப்படாத சிலரில் ஒருவன் செந்தில்,
கொலிஜ் தொடங்கியதும் லோறாவைக் காண்பது குறைந்தது.
தன்னைப் பற்றிக் கவலைப்படாமல் படிப்பில் கவனம் எடுக்கச் சொல்லி லோறா கண்டிப்பாகச் சொல்லி விட்டாள்.
வீட்டில் இருந்து செந்திலைப் பற்றி கடிதம் திட்டி வரவில்லை. அனாமதேயக் கடிதம் எழுதும் விம்பிள்டன் எழுத்தாளர்கள் வேறு விசயங்களில் அக்கறையாகத் திரிந்தார்கள் போலும்.
கண்மூடித் திறப்பதற்கள் அடுத்த 'சம்மர் வந்தது. காசு இருந்தால் அடுத்த 'சம்மருக்கு" பாரிசுக்குப் போக வேண்டும் எனச் சொல்லியிருந்தாள்.
அதற்காக இரண்டு கிழமை விடுதலையும் எடுத்திருந் தாள் லோறா. செந் தி ல் லோறாவுக்குக் கொடுக்க

Page 89
168 A ராஜேஸ்வரி
வேண்டிய காசில் பெரும் பகுதியைக் கொடுத்து விட்டான். அந்தக் காசு "பாங்கில் இருந்தது.
அதைச் செலவழித்துக்கொண்டு போகலாம் என்றாள் லோறா. யோசித்துச் சொல்கிறேன் எனச் சொல்லியிருந் தான் செந்தில். அவளின் காசில் போவதை அவன் வெறுத் தான். அவன் அப்படி உன் காசு, என் காசு என்று கதைப்பது அவளுக்குத் தாங்கமுடியாத அழுகையையும் ஆத்திரத்தையும் உண்டாக்கியது.
*நான் உங்களில் பாதி என்று ஆயிரம்தரம் சொல்லு வீர்களே காசு விசயத்தில் மட்டும் ஏன் அப்படி எங்கள் காசு என்று யோசிக்காமல் இருக்கிறீர்கள்" எனக் குறைப் பட்டாள் லோறா
'லோறா எனக்குத் தெரியும் நீர் எவ்வளவு கஷ்டப் பட்டு வேலை செய்கிறீர் என்று. உன் காசை வைத்துக் கொண்டு நான் உல்லாசப் பிரயாணம் வரத் தயாரில்லை. வேணுமென்றால் நீ போய்வா" என்றான்.
**நான் ஐலண்ட்டுக்குப் போய் வந்தபோது நீங்கள் இல்லாமல் தனியாகப் போனதாக முகத்தை நீட்டிக் கொண்டிருந்தீர்கள். அதேபோல் இன்னொருதரம் இருக்க மாட்டீர்கள் என்று என்ன நிச்சயம்'
லோறாவுக்கு ஞாபகம் இல்லாமல் இல்லை. ஒன்றரை வருடங்களுக்கு முன்னால் அவன் நடந்துகொண்ட விதம்.
ஒருவிதமாக அவள் அவனைச் சமாதானப்படுத்தி விட்டுச் சினேகிதிகளுடன் இத்தாலிக்கும் பாரிசுக்கும் இரண்டு கிழமை விடுமுறையில் போய் இருந்தாள்.
"லண்டனில் இருந்து கொண்டினென்ரல் போகும் பெட்டைகளைப்பற்றி டெலிவிஷனில் காட்டினார்கள் பார்த்தியோடா' என்றான் யசோ, லோறா பாரிசுக்குப் போயிருந்த சமயம்.

தேம்ஸ் நதிக்கரையில் A 169
"சும்மா கண்டதெல்லாத்தையும் சொல்லுவான்கள். அதில் என்ன கிடக்கு?" என்றான் செந்தில்,
செந்திலுக்குத் தெரியும் இங்கிலிஸ் பெண்கள் பிரான்சி லும் இத்தாலியிலும் நடந்துகொள்வதையிட்டு சில தாறு மாறான செய்திகள் வந்திருக்கிறதென்று.
"இங்கிலீஸ் கால்வாயைக் கடந்தால் எல்லாம் இன்பம் என்றுதா ந்தப் பெட்டைகள் திரியினமாம்" யசோ աուֆւնւմ திலிருந்து பார்சலில் வந்த புளுக்கொடி யலைத் தினறபடி சொன்னான்.
"சும்மா தேவையில்லாமல் கதையாதே. ஒன்றிரண்டு பெட்டைகள் நடந்தால் போல எல்லாரும் அப்படியே’ செந்திலுக்குப் பற்றிக்கொண்டு வந்த து, லோறா இன்னொருவனுடன் திரிகிறாள் என்ற உணர்ச்சி.
'இத்தாலியில்லயும் பாரிசிலேயும் போய் என்ன செய் யினம் என்று கண்டனியே. ஏன் கணக்கக் கதைக்கிறாய். இங்கேவாற நோர்வே, சுவிடிஸ் பெட்டைகள் எப்படி இருக்கினம் பிக் க டெ வி யி  ைல இரண்டு பவுனுக்கு ஒண்டல்லோ" யசோ சுவாரசியமாகச் சொன்னான்.
"சட் அப், யூ பிளடி பில்தி பூல்". செந்தில் கத்தினான்.
எப்போது வருவாள் லோறா என்றிருந்தது. யசோ தரன் ஏன் இப்படி உலகத்துப் பெண்கள் எல்லாம், வெளி யால் திரியும் ஒவவொரு பெண்ணும் ஒழுக்கம் கெட்ட வர்கள் என நினைக்கிறான்.
இரண்டு கிழமை உல்லாசப் பிரயாணம் செய்த பூரிப்பில் ஓடிவந்தாள் லோறா.
பாரிஸின் அழகு, இத்தாலியின் எழில் இன்னும் என்ன வெல்லாமோ அவள் வள வள என்று கதைத்தாள். செந்திலுக்கு ஒரே எரிச்சல் எரிச்சலாக வந்தது. எத்தனை பேரோடு திரிந்துபோட்டு வந்திருக்கிறாள்.

Page 90
170 A ராஜேஸ்வரி
"லோறா தயவுசெய்து ஹொலிடேயைப் பற்றிக் கதைக்காதேயும்" அவன் குரலில் தெரிந்தது அவனின் உணர்ச்சிகள்.
"ஏன் இப்படிக் கோபிக்கிறீர்கள். இப்போது என்ன நடந்தது?" ஆறுதலாகக் கேட்டாள் லோ றா,
"என்ன நடந்தாலும் எனக்குச் சொல்லவா போlர்"
செந்தில் அப்படிக் கே ட் பா ன் என்றே நினைத் திருக்கவில்லை.
அவள் உற்றுப் பார்த்தாள் அவனை.
"கல்யாணம் முடிக்க முதலே இப்படிச் சந்தேகப் படுகிறீர்கள். கல்யாணம் ஆனால் எப்படி என்னை நடத்தப் போகிறீர்கள்" அவள் ஆத்திரத்துடன் கேட்டாள்.
“அதுதான் கல்யாணம் ஆக முதல் ஆடி முடிக்கிறது என்று வெளிக்கிட்டீரோ"
அவனுடைய குரூரமான கேள்விக்கு மறுமொழி சொல்ல லோறா அங்கில்லை.
நடக்கவே அவளால் பொறுமையில்லாமல் இருந்தது. ஒட்டமும் நடையுமாக ரெயில்வே ஸ்ரேசனை அடைந் தாள் இரவு பத்து மணிக்குமேல் இருக்கும். கறுப்பு வாலிபர்கள் வெள்ளைக்காரி என அவளை நினைத்துக் கொண்டு வம்புச் சொற்கள் சொன்னார்கள் வழியில்.
அவளுக்கு எதைப்பற்றியும் கவலையில்லை.
செந்திலின் நிழல் தெரியாத இடத்திற்கு ஓடவேண் டும்போல் இருந்தது.
அன்புக்கும் சந்தேகத்துக்கும் ஒரு அளவு இருக்க வேண்டும்.

தேம்ஸ் ததிக்கரையில் A 171
ரெயிலில் ஏறி இறங்கியவுடன் நகரும் பெட்டிக்குள் இரு ந் து கொண் டு நழுவும் கிளப்பம் நகரைப் பார்த்தாள்.
எத்தனையோ தரம் ஆசையோடும் ஆவலோடும் அவனிடம் போன இடங்கள், தெருக்கள்.
எவன் பெயரின் இனிமை மனதில் தவழ ஒட்டமும் நடையுமாகத் திரிந்தாளோ அதே தெருக்களை ஆத்திரத் துடன் பார்த்தாள். அவன் வேண்டாம் இனி.
ஒவ்வொரு இருள் கோணத்திலும் செந்திலின் முகம் தன்னில் அபாண்டப் பழியுடன் பார்த்துக் கொண்டிருப் பதுபோல் பட்டது.
கண்ணை மூடிக்கொண்டான். நீர் தாரை தாரை யாகக் கன்னத்தில் வழிந்துகொண்டிருந்தது.
14
எத்தனைதரம் சண்டை. பிடித்திருக்கிறார்கள்? ஆனால் இப்படி அவள் ஒருநாளும் அவனிடமிருந்து ஒடிப்போகவில்லை. லோறா போய்விட்டாள் என்பது அவனால் நம்ப முடியாமல் இருந்தது.
ஒரு நாளா? இரண்டு நாளா? இரண்டு கிழமைகள் ஆகிவிட்டன இன்று வருவாள் நாளை வருவாள் என இலவுகாத்த கிளிபோல் செந்தில் காத்திருந்ததுதான் மிச்சம்.
இரண்டு மாதங்கள் ஓடிவிட்டன.
லண்டன் தெருக்கள் இலைகளால் நிறைந்து கிடக் கிறது. இலையுதிர் காலம் வந்துவிட்டது. கொடிய குளிர் காற்று ஊசி முனைகளாக உடம்பைத் தாக்குகிறது.

Page 91
172 Δ ராஜேஸ்வரி
அவள் எங்கே போய்விட்டாள்? குளிருக்கும் பணிக்கும் இதமான அணைப்பைத் தந்த வள் எங்கே போய் விட்டாள்? .'י : "
எத்தனை தரம் போன் பண்ணியிருக்கிறான் கடந்த இரண்டு மாதமும்?
‘என்ன வேணும்" என்று கேட்டுவிட்டு வைத்து விடுகிறாளே.
"போய்த்தான் பார்ப்போமே என்று சென்று அவள் அறைக்கதவைத் தட்டினான்.
திறந்தவள் வெறுமையாக அவனைப் பார்த்தாள், யாரோ அந்நியனைப் பார்ப்பதுபோல். ,
என்னை ஞாபகம் இருக்கிறதா என்று கேட்க வேண்டும்போல் இருந்தது அவனுக்கு.
ஆனால் அவளுடைய கூர்மையான பார்வை அவனை வாய்பேசாமல் பண்ணியது . போரில் தோற்ற இராவணன் போல் திரும்பி
வந்தான் செந்தில்.
'அவளை ஏன் இன்னும் நினைத்துக் கொண்டிருக் கிறாய்? அவள் இப்ப யாரைப் பார்த்தாளோ" என்றான் யசோதரன்,
'உருப்படியாய்ப் படிச்சுப் போட்டு உலகத்தோட போய்ச் சேர். உன் மாமன் பெட்டை மெடிகல் கொலிஜ்ஜிலாமே" யசோ கேட்டான்.
செந்திலின் பார்வை எங்கேயோ வெறுமையாக இருந்தது. யசோ என்ன கதைக்கிறான் என்றே
தெரியாது. உழைத்த காசெல்லாம் குடித்து முடித்தாகி விட்டது. வேலைக்குச் சரியாகப் போகவில்லை.
வேலையும் போய் விட்டது.

தேம்ஸ் நதிக்கரையில் A 178
வாடகை சரியாகக் கொடுக்கவில்லை என யசோதரன் முணுமுணுத்துக் கொண்டிருந்தான். .
கொலிஜ் தொடங்க. இன்னும் ஒரும்ாதம் இருக்கிறது படிப்புக்குக் கட்டக் காசு! :
சீவிக்கக் காசு *"எல்லாம் அந்த விசரியால் வந்தது. சும்மா பாலத் தில் விழுந்து தொலை என்று விட்டிருந்தால் உனக்கேன இந்தக் கஷ்டம் எல்லாம் வரும். ஏதோ தெருவில் போன கஷ்டத்தை மடியில் தூக்கி வைச்சுப் போட்டு இப்ப தேவதாஸ் விளையாட்டு விளையாடுரீர்" என்றான் யசோ,
கையில் ஒரு பெனிக்கும் வழியில்லை. யாரைக் கேட்பது? . . . . . . . . . .
யசோதரனின் தயவில் எப்படிச் சீவிப்பது இன்னும்? யோகலிங்கனுக்குப் போன் பண்ணினான். தான் வேலை செய்த இடத்தில் வேலை எடுத்துத் தருவதாகச் சொன் னான், யோகலிங்கம். அடுத்த நாள் வேலையால் திரும்பி வந்தான் , கிறிஸ்மஸ் நெருங்கிக் கொண்டிருந்தது தெருக்கள் எல்லாம் அலங்காரம்,
தன் வீட்டின் இருண்ட படிகளில் விழாமல் ஏறிப் போய் அறையில் லைட்டைப் போட்டான்.
அவள் இருந்தாள் கட்டிலில், 'லோறா." அவன் சிலைபோல் நின்றான். அவன் கனவுகூடக் காணவில்லை அவள் வருவாள் என்று: மைரா போன் பண்ணிச் சொல்லியிருக்க வேண்டும். காதலின் சங்கமத்தில் மொழிக்கு இடமில்லை. இருவரும் அழுதார்கள்.
‘எப்படி என்னை விட்டு உங்களால் இருக்க முடிந்தது’’ இருவரும் திருப்பித் திருப்பி அதே கேள்வியைக் கேட்டார்கள்.

Page 92
74. A print Ogoualif
பிரிவில்தான் தெரிகிறது அன்பின் மகத்துவம். பிரிந்த வர் கூடினால் பேசவும் வேண்டுமா?
"நான் உங்களுட ன் இல்லாதபடியால்தானே இவ்வளவு கரைச்சலும் சந்தேகமும. பேசாமல் சென்ரல் லண்டனில் அறை எடுத்துக் கொண்டு இருப்போம். சந்தேகங்களும் இல்லை சண்டையுமில்லாமல் இருக்கும்’ அவள் சொன்னாள்.
'லோறா நீ ஏன் எனக்காகக் கஷ்டப்பட வேண்டும்" என்றான் செந்தில், "ஒருவருக்காக ஒருவர் வாழ்வது கஷ்டம் என்று சொல்லுகிறீர்கள் அதுதான் குடும்பம். அதுதான் அன்பு"
எப்படி அவள் மனதை அவன் மாற்றமுடியும்.
'லோறா என்னில் அவ்வளவு அன்பென்றால் ஒன்று செய்யேன்" செந்திலின் குரல் கெஞ்சியது.
"என்ன" அவள் பயத்துடன் பார்த்தாள் அவனை. அவள் நினைத்தது சரி 'நேர்ஸிங் செய்யாமல்விட்டால் என்ன? வேறு ஏதாவது வேலை செய்யலாம், நான் படிப்பை முடிக்கும் வரைக்கும்" அவன் கெஞ்சினான்.
"ஏன் தேர்ஸிங் செய்தால் என்ன? எல்லா வேலை களிலேயும்தானே ஆண்பிள்ளைகளோடு பழகவேண்டும்?" அவள் குரலில் ஆத்திரம் தொனித்தது.
அவளை இன்னொருதரம் இழக்கத் தயாரில்லை அவன். அவனுக்கும் தெரியும் அவள் இன்னும் பழைய குழந்தைப் பிள்ளை லோறா இல்லை என்று. மூன்று மாதம் அவன் இல்லாமல் இருந்தவள் வாழ்க்கை எல்லாம் அவன் இல்லாமல் இருக்கமாட்டாள் என்று என்ன நிச்சயம்?
ஏன் அவனிடம் திரும்பி வந்தாள்? பரிதாபத்திலா? தன் அன்புக்குரியவன் குடித்தழிகிறானே என்ற பரிவிலா?

தேம்ஸ் நதிக்கரையில் A 175
படிப்புக்குக் காசு கட்ட வழியில்லாமல் இருக்கிறான் என்ற இரக்கத்திலா?
அவன் அவள் தயவில் வாழ்வதைத் தவிர வேறு வழியே இலலை.
"படிங்ரனில் அறை பார்த்திருக்கிறேன். உடன் வெளிக்கிடுங்கள். சும்மா என்றாலும் சில்லறை வேலை எடுப்பது சுகம் அந்தப் பக்கம்" என்றாள் லோறா.
தன்னிடம் அறை எடுத்துத்தா என்று உதவி கேட்டு வந்த லோறாவா இது?
அவன் நம்பமுடியாமல் தவித்தான். யசோதரனும்தான் நம் ப வில்  ைல, அடுத்த நாள் வீட்டுக்கு வந்தபோது, வாடகைக் காசு இருந்தது. செந்தில் இல்லை.
'லோறா இ னிச் சண்டையில்லாமல் இருக்க வேண்டும் என்றுதான் நானும் விரும்புகிறேன், ஒன்று சொல்வாயா?" என்று கேட்டான் செந்தில்.
"படிப்பு முடியவிட்டு வேலை செய்வதில்லை என்று சத்தியம் செய்" என்றான்.
‘ஏன் அப்படிக் கேட்கிறீர்கள்"
*லோறா நீ நைட் டியூட்டிக்குப் போன உடன் நான் இங்கு தனியாக இருக்கிறேன். நீ அங்கே எந்த டொக்ட ருடன் கதைக்கிறாயோ என்ற எண்ணம் வந்ததுமே எனக்குப் பொறாமை வருகிறது உன்னைத் தேடிவந்து இழுத்துக் கொண்டுவர வேணும்போல் இருக்கிறது’ என்றான் செந்தில்.
"ஆணுக்கும் பெண்ணுக்கும் ஒரே ஒரு உறவுதான் இருக்கவேண்டும் என நினைக்கிறீர்களே? என்ன குள்ள மான குணம் உங்களுக்கு? உங்கள் படிப்பு முடிய நான் வேலை விடுகிறேன். ஆனால் ஒன்று மட்டும் சொல்

Page 93
176 A ராஜேஸ்வரி
கிறேன். எல்லா டொக்டரும் நேர்சோடு ஆடத்தான் வருவதில்லை. 'எல்லா நேர்சும் டொக்டரைத்தான் பார்த்துக்கொண்டு இருப்பதும் இல்லை" லோறா கோபத்துடன் சொன்னாள்.
‘என் பெயர் டொக்டர் மால்க்கம் ஸ்ரோன். நீர் விரும்பினால்மால்க்கம் என்று கூப்பிடலாம் மிஸ் ஸிம்சன்" இப்படித்தான அந்த இளம் டொக்டர் தன்னை அறிமுகப் படுத்தினான் லோறாவுக்கு ஒரு இரவு படிப்பு முடிய இன்னும் மூன்று மாதந்தான் இருக்கிறது, லோறாவுக்கு. நைட் டியூட்டி செய்து கொண்டிருந்தாள். எத்தனையோ இளம் டொக்டர்களைக் கண்டிருக்கிறாள், மூன்று வருட அனுபவத்தில். 'i
வார்ட்டில் கிட்டத்த்ட்ட எல்லா நோயாளரும் நித்திரை. இரவு ஒரு மணி மற்ற நேர்ஸ் சாப்பாட்டுக்குப் போய்விட்டாள். தனியாக இருந்து புத்தகம் படித்துக் கொண்டிருந்தாள் லோறா, மால்க்கம் வந்தபோது.
"என்ன புது முகமாக இருக்கிறது" என்று சிரித்துக் கொண்டு கேட்டாள் லோறா. 'நான் புதுமுகம் இல்லை. வந்து இரண்டு கிழமையாகிவிட்டது. நீர்தான் புதிதாக இருக்கிறீர்" என்றான் மால்க்கம். லோறா கடந்த இரண்டு கிழமை ஹொலிடேஸ் சென்று இன்றிரவுதான் வந்திருந்தாள் வேலைக்கு. அதனால்தான் மால்க்கத்தைச் சந்திக்கும் சந்தர்ப்பம் வரவில்லை.
'ஏன் இப்படி அழகான முகத்தையெல்லாம் நைட் டியூட்டி செய்து இருட்டுக்குள் மறைக்கிறீர்கள்" என்றான் மேசைக்குமேல் ஏறி உட்கார்ந்துகொண்டு.
'ஏனென்றால் உங்களைப் போல ஆட்கள் இப்படி விசர்க்கேள விகள் கேட்பார்கள் என்றபடியால்தான்" அedளும் குறும்பாகச் சொன்னாள்.
அவன் முகத்தை ஒருமாதிரிக் குறும்புத்தனமாக வைத்துக்கொண்டு அவளை அளவிட்டான்.

தேம்ஸ் நதிக்கரையில் A 177 "என்ன பார்க்கிறீர்கள்" லோறா தர்மசங்கடத்துடன் கேட்டாள்.
"என்னடா வம்பனாக இருக்கிறானே' என்று யோசித் தாள் லோறா.
'எவ்வளவுகாலம் நைட் டியூட்டி செய்வீர் ?" மால்க்கம் கேட்டான்.
'ஏன் உங்களுக்கந்தக் கேள்வி" அவள் பொறுமை யிழந்துகொண்டு வந்தாள். 'நான் உங்களைக் கூப்பிட வில்லை. நீங்கள். நடுச்சாமத்தில் வந்து பார்க்கத் தக்கதாக எந்த நோயாளரும் சுகவீனமாகவும் இல்லை சும்மா அலட்டிக்கொண்டிருந்தால் நேர் ஸிங் ஒவ்விசர் என்னைப் பேசுவாள்' என்று முணுமுணுத்தாள் லோறா. 'என்ன இந்த மனிசனுக்கு வெறியோ சும்மா அலட்ட' என ஒரு கணம் யோசித்தாள்.
'இந்த நேர்ஸிங் ஒவ்விசர் எல்லாரும் முட்டாள்கள். இப்படி அழகுகளை எல்லாம் இருட்டில் போடுகிறார்கள்" என்றான் திரும்பவும். அடுத்த நேர்ஸ் வந்ததும் லோறா அவனை விட்டுப் போனாள். தப்பியதே பெரிய புண்ணியம் என்றிருந்தது அவளுக்கு
டைனிங் ரூமில் தன் சினேகிதியிடம் சொன்னாள்: "டொக்டர் விசர் மால்க்கம் ஸ்ரோனைத் தெரியுமா" லோறாவின் சினேகிதி காதோடு காதாகக் சொன்னாள் "சும்மா இடம் கொடுக்காதே அலட்ட. இங்க இருக்கிற ஒவ்வொரு வடிவான பெட்டைக்கும் பின்னாலே திரியிறது தான் மால்க்கத்தின் வேலை. வந்து இரண்டு கிழமை ஆக வில்லை அதற்குள் எத்தனைபேரை சாப்பிட, டான்சுக்கு என்று கூட்டிக்கொண்டு போனானோ தெரியவில்லை" என்றாள் சின்னப்பு, லோறாவின் சினேகிதி.
சில டொக்டர்களுக்கு எத்தனை நேர்சுகளுடன் போனேன் என்பதில் பெருமை. சில நேர்சுகளுக்கு ஒரு

Page 94
178 A grGg6voj f
டொக்டருடன் ஒருதரமாவது வெளியால் போவது பெருமை" என்றாள் லோறா.
'யார் எப்படியிருந்தால் எங்களுக்கென்ன ? எங்கட பாட்டை நாங்கள் பார்த்துக் கொண்டிருந்தால் சரி" மிஸ் சின்னப்பு சொன்னாள். அவள் இலங்கையைச் சேர்ந்தவள் 'உந்த வெள்ளைக்கார டொக்டர் எல்லாம். விசரன்கள். ஒரு அழகான உடம்பு கிடைச்சால் சரி. ஏதோ பெரிய லவ் வந்திடும் அவர்களுக்கு" எனச் சொன்னாள் சின்னப்பு.
லோறா தன்பாட்டைப் பார்த்துக் கொண்டு தன் பாட்டில் இருக்கத்தான் விரும்பினாள்.
ஆனால் மால்க்கம் அப்படி தன்பாட்டைப் பார்த்துக் கொண்டு திரியவில்லை. தான் டியூட்டி இல்லாத நாட் களிலும் சும்மா ஒருதரம் வந்து லோறாவை எட்டிப் பார்க்காமல் போகமாட்டான்.
முதலில் அவளுக்கு எரிச்சல் வந்தது அவன் நடத்தை யைப் பார்த்து நாளாவட்டத்தில் தெரிந்தது, அவன் கம்மா வளவள வென்று கதைக்கிறானே தவிர சின்னப்பு சொன்னதுபோல் ஒன்றும் பெரிய "காவாலி இல்லை என்று. அத்துடன் அவள் வேலை நேரத்தில் மால்க்கத்தைக் கண்டாலும் கதைத்தாலும் தான் gCl நேர்ஸ் அவன் ஒரு டொக்டர் என்பதைத் தவிர வேறொன்றும் மனதில் இல்லை. செந்தில் கடைசி வருடப் பரீட்சைக்கு ஆயத்தப்படுத்திக் கொண்டிருந்தான். அவனுக்குத் தற்செயலாகச் சிறு சந்தேகம் வந்தாலும் போதும். அவ்வளவுதான். அவன் படிப்புப் போய்விடும்.
எனவே, லோறா மிகக் கவனமாக இருந்தாள். மறந்தும் மால்க்கத்தின் பெயரைச் சொல்லவிலலை. கிட்டத்தட்ட அவள் எந்த டொக்டரின் பெயரையும். சொல்லவில்லை கடந்த மூன்று வருடமாக. செந்தில் சும்மாவே கற்பனையில் சந்தேகப் படுகிறவன். அவள்

தேம்ஸ் நதிக்கரையில் A 179
யாரேன் "டொக்டர்" என்று ஆரம்பித்தாலே போதும் அவனுக்கு "வலி வந்துவிடும்.
ஆவணி மாதம் செந்திலின் படிப்பு முடிகிறது. புரட் டாசியில் லோறாவின் படிப்பு முடிகிறது. அதன்பின் லோறா வேலையை விடுவதாகவும் கல்யாணம் முடிப்ப தாகவும் முடிவுகட்டியிருந்தார்கள். கடந்த இரணடு மூன்று மாதகாலமாக ஒரு பார்ட் ரைம் வேலையும் செய் யாமல் இரவு பகலாக விழுந்துவிழுந்து படித்தான் செந்தில்,
எப்படியும் தன் படிப்பு முடிவதற்கிடையில் அவன் பாஸ்பண்ணிவிட வேண்டும் என அவன் படிப்பில் கண்ணும கருத்துமாக இருந்தாள் லோறா. அவளுக்குத் தெரியும் அவன் சோதனையில் பாஸ் பண்ணுகிறாளோ இல்லையோ, செந்தில் முதல் வேலையாக லோறாவின் வேலைக்கு முழுக்குப் போடச் சொல்லப் போகிறான். அல்லது வேறுவேலை பார்க்கச் சொல்லப் போகிறான், தனக்கு வேலை கிடைத்ததும்.
லோறாவின் முயற்சி வீண் போகவில்லை செந்தில் பரீட்சையில் பாஸ்பண்ணிவிட்டான். லண்டனுக்கு வந்த லட்சியம் நிறைவேறிவிட்டது ! இனிச் சிறுதுகாலம் உழைத்து அவன் தன் தங்கச்சி களைப் பார்த்து விட்டால் அவன் லண்டனில் என்ன செய்தாலும் யாரும் கேட்கப்போவதில்லை. அப்படித் தான் செந்தில் நினைத்தான்.
வேலை கிடைப்பது சுகமாக இல்லை. லண்டனில் ஏதும் வேலை கிடைக்கும் என்று அலைந்ததுதான் மிச்சம். கடைசியில் ஸ்கொட்லாந்தில் வேலை கிடைத்தது. அவனுக்கு லோறாவை விட்டுப் பிரியமனமில்லைத்தான் ஆனால் வேறுவழியில்வாமல் போய்ச்சேர்ந்தான்.

Page 95
80 A ராஜேஸ்வரி
லோறாவின் பரீட்சை நெருங்கிக்கொண்டிருந்தது கோடை முடிந்து இலையுதிர் காலம் தொடங்கியது. அவளுக்கு வெளியில் என்ன நடக்கிறது என்று பார்க்க நேரம் இல்லை. விழுந்து விழுந்து படித்தாள்.
அவளின் படிப்பும் முடிந்துவிட்டது. சோதனை முடிய பாஸ் பண்ணும் நம்பிக்கை வந்துவிட்டது லோறாவுக்கு. ஒருமாத காலமாக பகல் வேலை செய்த படியால் மால்க்கத்துடன் கதைக்கும் சந்தர்ப்பம அதிகம் வரவில்லை. இரவில் கதைக்கக் கிடைக்கும் சந்தர்ப்பம் போல் பகலில் கிடையாது. பெரும்பாலும் மால்க்கம் ஒப்பரேஷன் தியேட்டர், கிளினிக் எனறு திரிவான். லோறாவுக்கும் அவனைப் பார்க்க வேண்டும் கதைக்க வேண்டும் என்ற எந்தவிதமான நிர்ப்பந்தமும் இல்லை.
பரீட்சை முடிய திரும்பவும் அவளை நைட் டியூட்டிக்குப் போட்டார்கள். ஒருவிதத்தில் செந்தில் இல்லாமல் தனியாக இருக்கப் பிடிக்கவில்லை இரவில்.
பரீட்சை முடிவு வர இன்னும் ஆறு கிழமை இருந்தது மால்க்கம் அவள் நைட் டியூட்டிக்கு வந்ததும் பழையபடி கதைததான,
ஒருநாள் லோறாவின் வார்ட்டில் ஒரு நோயாளி நெஞ்சு நோகிறது என்று சொன்னான். மால்க்கம் அன்றைக்கு டியூட்டி, யாரோ ஒரு டொக்டர் மாறிப் போவதால் டொக்டர் குவாட்டர்சில் பெரிய பார்ட்டி நடந்தது. போன்பண்ணி ஒரு மணித்தியாலமாகியும் மால்க்கம் வரவில்லை.
"எந்த நேர்சுடன் என்ன இருள் மூலையில் நின்று கொஞ்சிக் கொண்டிருக்கிறாரோ' எனச் சொன்னாள் மற்ற நேர்ஸ்.
இரண்டாம் தரம் போன்பண்ணி அரைமணித்தியாலம் செல்ல மால்க்கம் வந்தான். நோயாளி மாரடைப்பில் இறந்துகொண்டிருந்தான், மால்க்கம் வந்தபோது.

தேம்ஸ் நதிக்கரையில் A: 181
ஒரு இறப்பை நேரே நின்று பார்ப்பதைவிடக் கொடுமை என்ன உள்ளது. அதுவும் அநாவசியமாகச் 1ாகும் ஒரு ஜீவன் அணுஅணுவாகச் சாவதைப் பார்த்துக் கொண்டிருக்க மனித உணர்ச்சி யுள்ளவர்களாகளால் At 9-turgil.
லோறா பார்த்துக் கொண்டிருந்தாள்.
நோயாளி இறந்து விட்டான்.
மால்க்கத்தின் முகம் வெளிறியது,
"உங்களுக்கென்ன? மாரடைப்பால் மரணம் என்று மரண சேர்ட்டிபிக்கற் கொடுப்பீர்கள். ரோட்டில் ஒருவன் அடித்துச் சாக்காட்டினால் அது கொலை, டொக்டர் ஒருவன் கவலையீனத்தால் சாக்காட்டினால் அது வைத்தியம் கோர்ட்டுக்குப் போகாத குற்றவாளிகள் சில டொக்டர்கள்" அவள் மெல்ல முணுமுணுத்தாள். இரண்டுதரம் போன் பண்ணியும் அவன் வராதது அவளுக்கு ஆத்திரம்
'உமக்கு இருபது நோயாளரைப் பார்க்கும் வேலை. ஒரு டொக்டர் டியூட்டியாய் இருக்கும் போது நூறு நோயாளருக்குமேல் பார்க்க வேண்டும்’ மால்க்கம் படபடத்தான்.
"ஒம், இண்டைக்கு இரண்டு தரம் போன்பண்ணியும் நூறு நோயாளரைத்தான் பார்த்துக்கொண்டிருந்தீர்கள்ா அல்லது பார்ட்டியில் குடித்துவிட்டு ஏதாவது இருள் மூலையில் எந்த நேர்ஸோடாவது கொஞ்சிக்கொண்டிருந் 8ffé56 fr?'' ܀
அவள் என்ன கதைக்கிறாள் என்று தெரிந்தது அவனுக்கு. மால்க்கத்துக்கு ஆத்திரம் ஆத்திரமாக வந்தது. -
12 صديق)

Page 96
182 A ராஜேஸ்வரி
'நீர் நினைக்கிறதுபோல நான் பார்ட்டியில் குடித்துப் போட்டுக் கூத்தாடவில்லை. காலை எட்டு மணிக்கு அறையை விட்டு வெளிக்கிட்ட நான் இன்னும் அறைக்கே போகவில்லை. இப்போதுதான் ஒப்பிரேஷன் தியேட்ட ரால் வந்தேன். நீர் போன் பண்ணும்போதுதான் அக்சி டென்ட் டிப்பார்ட் மெண்டில் ஒரு நோயாளியைப் பார்த்துக் கொண்டிருந்தேன்". அவன் பட படத்தான்.
அவனுடைய கலைந்த தலை, சோர்ந்த முகம் சொல்லியது, உண்மை சொல்கிறான் என்று. 'ஐயம் சொறி' என்றாள் லோறா. "என்னென்றாலும் என் டியூட்டியில் பிழை பிடிக்க நீர் யார்' லோறா திடுக்கிட்டாள், அவள் கேள்வயைக் கேட்டதும்.
எப்படித்தான் இளித்து இளித்துக் கதைத்தாலும் சாதாரண நேர்ஸ்; அவன் டொக்டர் அவனுக்கு ஒரு மாதிரி இருந்தது அவள் அப்படிப் பேசியது. ஒரு விதத் தில் நல்லது அவன் அப்படி பேசியது என்று நினைத் தாள், இனித் தெரியும எப்படி அவனுடன் பழகுவது என்று.
ஸ்கொட்லாந்தில், எடின்பரோ நகரில் இருந்து ஒவ்வொரு நாளும் போன் பண்ண செந்திலின் சம்பளம் கட்டுபடியாகாது. ஆனால் ஒன்று விட்டொரு நாள் கடிதம் போட்டாள். புரட்டாசி முற்பகுதியில் செந்தில் எடின்பரோவுக்குப் போனபோது மாதப் பிற்பகுதியில் நடக்கும் தன் இறுதி வருடப் பரீட்சைக்கு விழுந்து விழுந்து படித்துக் கொண்டிருந்தாள் லோறா. ஒய்வுள்ள நேரங் களில் செந்திலின் பிரிவு வாட்டியது.
ஒன்றரை வருடங்களுக்கு முன் கிளப்பம்கொமனுக்குப் போய் அவனைக் கூட்டிக்கொண்டு வந்தாளோ அன்றி லிருந்து ஒன்றாய் வாழ்ந்தவர்கள்.

தேம்ஸ் நதிக்சரையில் A 183
சந்தேகமில்லை. சண்டை இல்லை. உன் காசு, என் காசு என்ற பேதம் இல்லை. பேப்பரில் கையெழுத்து வைக்காத தம்பதிகள், படிப்பு முடிய முதல் குழந்தை வரக்கூடாதே என்று மிகவும் கவனமாக இருந்தாள் லோறா.
கர்ப்பத்தடைக் குளிசைகள் எல்லாப் பெண்களுக்கும் சரிவருமோ என்னவோ லோறாவுக்குச் சரிவரவில்லை.
ஓயாத தலையிடி. சோதனை நேரத்தில் தலையிடி யுடன் படிக்க முடியாததால் குளிசை எடுப்பதை நிறுத்தி யிருந்தாள். உடனே கையில் பலன்.
செந்தில் எடின்பரோவில் லோறாவுக்குப் பரீட்சை முடிந்துவிட்டது. ஆனால்? அப்பாடா சோதனை முடிந்துவிட்டது என்று சந்தோஷத்துடன் இருந்தவள் மனதில் இரண்டு மூன்று கிழமை தன் மாதவிடாய் பிந்தியதை உணர்ந்தாள்.
மூன்றரை வருடங்களுக்கு முன் நடந்தவை ஞாபகம் வந்தன. கர்ப்பம், தற்கொலை முயற்சி, சைக்கியாட்ரிஸ்ற், லோறா கண்ணைமூடிக் கொண்டு சிந்தனை செய்தாள். *)
கிட்டத்தட்ட இரண்டு வருடங்கள் ஒன்றாய் இருக் கிறார்கள் செந்திலும் லோறாவும். குழந்தை பெறுவ தால் என்ன வேறுபாடு வரப்போகிறது.
இலங்கையில் எல்லோருக்கும் தெரியும் ஒன்றாய் இருக் கிறார்கள் என்று. லண்டனில் எல்லோருக்கும் தெரியும். இனி ஏன் பயப்பட வேண்டியிருக்கிறது? இருவருக்கும் படிப்பு முடிந்துவிட்டது. உத்தியோகம் இருக்கிறது.
இதுவரை செந்திலின் படிப்புக்காக லோறா உழைத் தாள். இனி அவன் சொல்வது போல் வீட்டில் இருப்பது தானே.

Page 97
84 A ராஜேஸ்வரி
அவனுக்கு எழுதுவதா இல்லையா? என்ன சொல்வான்?
செந்திலுக்குத் தெரியாது லோறா பரீட்சைக்காக, தலையிடிக்குப் பயந்து குளிசை எடுக்காமல் இருக்கிறாள் என்று. தெரிந்திருந்தால் சிலவேளை கவனமாக இருந் திருப்பாள்.
செந்தில் எடின்பரோ பிடிக்கவில்லை என்று எழுதி யிருந்தான். ஒக்டோபர் மாதமே ஸ்கொட்லண்ட் சினோவால் நிறைந்துவிட்டது. லண்டனில் அதிகம் பணியைக் கடந்த ஐந்து வருடங்களாகக் காணாத செந்தில் குளிரில் நடுங்கினான். செய்வதும் ஒவ்விஸ் வேலை இல்லை.
பெரிய பில்டிங்சைட் ஒன்றில் வேலை. சம்பளம் நல்லதுதான். ஆனால் வேலை?
தனக்கு வேலை பிடிக்கவில்லை என்றும் லண்டனுக்கு அருகில் எங்காவது வேலை தேடுவதாகவும் இன்னும் கொஞ்ச நாட்களில் வருவதாகவும் எழுதியிருந்தான் செந்தில்,
வந்தவுடன் சொல்வதா? அல்லது எழுதுவதா தான் பிள்ளைத்தாச்சி என்று என யோசித்துக் கொண்டிருந் தாள். "ஏன் எனக்குச் சொல்லவில்லை உடனே" என்று கத்துவான் என்ற பயத்தில் எழுதினாள்.
கடிதம் கண்டதும் அவன் முகம் எப்படி இருக்கும்? சந்தேகப்படுவானா?
போன தடவை அவள் உயிருக்குப் போராடியபோது 'லோறா என்னதான் நடந்தாலும் உன்னை இன்னொரு தரம் இப்படித் தவிக்க விடமாட்டேன்" என்று அழுதான். இலங்கைக்குப் போகவேண்டும் நான்ஒருதரம், தங்கை களைப் பார்க்க வேண்டும். இப்போது என்ன அவசரம்

தேம்ஸ் நதிக்கரையில் A 185
பிள்ளைக்கு என்று சொல்லப்போகிறானா? அல்லது, இவ்வளவு காலம் ஒன்றாய் இருந்துவிட்டோம் இனி என்ன சொல்லப் போகிறார்கள் பெற்றோர்; கல்யாணம் முடிப்போம் என்று சொல்வானா? லோறா எதற்கும் யோகலிங்கத்துக்கும் மைராவுக்கும் சொல்லி அவர்கள் என்ன சொல்கிறார்கள் என்று பார்க்க நினைத்தாள்.
சோதனைகள் தனியாக வரவில்லை.
மைராவின் கடிதம் வந்தது. கென்சிங்டனில் இருந் தில்லை. சுவீடனிலிருந்து, யோகலிங்கம் இலங்கைக்குப் போக முதல் தன் தாயிடம் அழைத்துப் போவதாக எமுதி யிருந்தாள் மைரா. லண்டனில் யார் இருக்கிறார்கள் லோறாவுக்கு, இனி செந்திலைத் தவிர.
"ஏன் யாரும் இல்லை; நான் இல்லையா லோறா" என்றான் மால்க்கம்.
நடுநிசி; லோறா சாப்பாட்டு அறைக்குப் போய்க் கொண்டிருந்தாள். மால்க்கம் பின்னால் வந்து கொண் டிருந்தான். லண்டனில் தனக்கு என்று சொந்தம் யாரும் இல்லை என்று ஏதோ கதையில் சொல்ல சொந்தக்காரரை விட சினேகிதர்கள்தான் உற் ற துணை என்றான் மால்க்கம்.
லோறா அன்றொரு நாள் நடந்த சண்டைக்குப் பின் மால்க்கத்துடன் அதிகம் பழகத் தயாராயில்லை. இன்னும் கொஞ்ச நாளில் சோதனை முடிவு வந்தவுடன் வேலையை விடச்சொல்லி விடுவான் செந்தில், அதற்கிடையில்
யாருடனும் தேவையில்லாத உறவு ஏன் எனத் தூரப் பழகினாள் லோறா.

Page 98
106 A ராஜேஸ்வரி
அன்பு தூரத்தில் இருக்கும்போதுதான் கூடுகிறது. அவள் எவ்வளவு விலகி விலகிப் போனாளோ மால்க்கம் அவ்வளவு தூரம் நெருங்கி வரத் துடித்தான். *
கருநிறத் தலை, காதல் சொட்டும் கண்கள், திடகாத் திரமான ஆண்மைப் பொலிவும் உடல்கட்டும். மால்க்கம் போன்ற டொக்டர்களின் சுண்டுவிரல் அசைவில் சுருண்டு விழ எத்தனையோ பெண்கள் தயார் «
எலும்புக்குப் பில் நாயாய், வெறும் தேவைக்காகத் தன்னிடம் வரும், சொற்ப நேர உறவைத் தேடும் பெண் களில் ஒருத்தியாக லோ றா இல்லை.
எக்காரணம் கொண்டும் அவள் தான் ஒரு நேர்ஸ் என்ற எல்லைய்ைத் தாண்ட விரும்பவில்லை. 183 إلى
கண்டதும் காதல் கற்பனையில் தான் வரும் என் றில்லை. முதல் தடவை நடுநிசியில் தனியே அமர்ந் திருந்த சிற்பம்போல் அவளைக் கண்டானோ அன்றே அவளில் ஒரு ஆர்வம் பிறந்துவிட்டது.
என் பார்வைக்கு அடிமையாகாத பெண்களா என்ற அவன்வரட்டு உணர்ச்சி பொய்த்துவிட்டது, லோறாவைப் பொறுத்தவரையில். 净
அழகான நேர்ஸ் மட்டுமல்ல, அவ்ஸ் ஒரு அன்பான நேர் சும்தான் வெறும் காசுக்காக அவள் வேலை செய்ய வில்லை. நோயாளருடன் பரிவுடன் நடநதாள்; இல்லை யென்றால் அன்று அநத நோயாளிக்காக அவனுடன் சண்டை பிடித்திருக்க மாட்டாள்.
அவனைத் தெரியத் தொடங்கி கிட்டத்தட்ட மூன்று மாதமாகிவிட்டது அவன் எ வ் வள வோ தடவை சந்தர்ப்பங்களை ஏற்படுத்தியும் அவள் அவனுடன் கதைக்கத் தயாராயில்லை
ஏன்?

தேம்ஸ் நதிக்கரையில் A is 7
அவளுக்கென்று ஒரு அன்புக்குரியவன் இருக்கிறானா? சிலவேளை தெருக்களில் அவளைக் கண்டிருக்கிறான் ஓய்வான நேரங்களில், ஒரு நாளும் ஒரு ஆணுடன் கண்ட தில்லை அப்படி என்ன விசித்திரமான பெண்? ஆண் களை வெறுக்கும் பெண்.
அப்படியாகத் தெரியவும் இல்லை. அவளுக்கென்று ஒரு நெருங்கிய சினேகிதிகளும் இருப்பதாகத் தெரிய வில்லை.
"ஏன் எந்த நேரமும் தனியாகத் திரிகிறீர்' என்று மால்க்கம் கேட்ட கேள்விக்குத்தான் 'எனக்கென்று லண்டனில் எந்த உறவும் இல்லை" என்றாள் லோறா. 'நான் இல்லையா' என்று கேட்டான் மால்க்கம், அவள் கும்மிருட்டில் நடந்து கொண்டிருந்தாள். போட்டிருந்த கம்பளிச் சட்டைக்குமேலால் குளிர் நடுங்கியது.
அவன் குரலில் தெரிந்தது, அவன் என்ன கருத்தில் சொல்கிறான் என்பது.
அவளுக்கு ஆண்களின் தொனியில் இருந்து அவர்கள் எப்படிப்பட்டவர்கள் என்று தெரியும். எத்தனை பேரை அவள் கண்டுவிட்டாள்? ஸிம்சன், டேவிட், யசோதரன். செந்தில் செந்திலின் நினைவு வந்ததும் தற்செயலாக அவன் எங்காவது ஒளித்து நின்று தன்னைப் பார்த்துக் கொண்டாலும் போதும் இந்த நடுநிசியில் என்னடி வேலை ஒரு ஆண்பிள்ளையுடன் என்று சொல்லிக் கொலையே செய்து விடுவான்.
ஏன் இந்த டொக்டர் தனக்குப் பின்னால் திரிய வேண்டும்? அவளுக்கு எரிச்சல் வந்தது. ,ه
எத்தனையோ அழகான இளம் நேர்சுகள் இருக்கும் போது ஏன் இந்த மனிதன் என்னோடு வருகிறான்.
4 . t o سر سیسر گا "ஏன் மால்க்கம், சும்மா என்னோடு கதைத்து
நேரத்தை வீணாக்குகிறீர்கள்’ என்றாள் லோறா.

Page 99
188 A ராஜேஸ்வரி
மேலே பூரண நிலா இருண்ட ஒரு முகிற்கூட்டங் களுக்குள்ளால் எட்டிப் பா ர் த் து ச் சிரித்துக் கொண்டிருந்தான்.
"ஏன் கதைக்கக்கூடாது". மால்க்கம் அவளுடன் ஒட்டியபடி நடந்துகொண்டு வந்தான்.
"நேரத்தை வீணாக்குகிறீர்கள் தவிர பிரயோசனம் ஒன்றுமில்லை". அவள் அலட்சியமாகச் சொன்னாள்.
"லோறா??
அவன் இரும்புப்பிடி, அவனின் அணைப்பு மங்கிய. நிலவொளியில் அவன் கண்கள் அவளை மொய்த்தன. அவள் திமிறினாள்.
யாரும் வந்தால் அவள் கெதி என்ன?
"என்ன நாடகம், என்னை விடுங்கள்" அவள் ஆத்திரத்துடன் திமிறினாள்
அவன் பிடி தளர்ந்தது. ஆனால் மால்க்கம் அவளை விடவில்லை.
லோறா, ஐ லவ் யூ" மெல்ல அவன் கிசுகிசுத்தான். அவள் சிலைபோல் நின்றிருந்தாள். அவன் மெல்லக் குனிந்து அவளை முத்தமிட்டான் குளிர்ந்த அவள் முகத்தில் சூடான அவன் மூச்சுக்காற்று; இதமான அவன் முத்தம்!
திடீரென்று அவள் உணர்ச்சியிழந்து நின்றாள். முன் பின் ஒரு பெண்ணைத் தொட்டுப் பழக்கமில்லாத செந்தில் வெறியில் ஒரு இரவு நடுங்கும் உதடுகளால் அவளை முத்த மிட்டது ஞாபகம் வந்தது. செந்திலின் முதல் முத்தம். 'மற்றப் பெண்கள் போல் நான் உன்னை நினைக்க வில்லை, நீ மற்றவர்களை விட வித்தியாசம்" அவன் அணைப்பு இறுகியது

தேம்ஸ் நதிக்கரையில் A 189
அவள் அடிவயிறு நொந்தது. செந்திலின் குழந்தை அவள் வயிற்றில் எப்படி மால்க் கத்தை விட்டு ஓடினாள் என்றே அவளுக்குத் தெரியாது.
வெளியில் சரியான குளிர் காற்று. அவள் ஏனோ வியர்த்தாள் அன்று இரவு அவன் வார்ட்டுக்கு வர வில்லை விடியும்வரை அவள் மனம் படபடத்தது. அவன் வந்து தொலைந்தாலும் என்று. மால்க்கத்திட மிருந்து தப்ப வேறு வழியென்ன?
அவன் மிருகத்தனமாக நடக்கவில்லை. நாகரீகமற்ற சொற்கள் பேசவில்லை. ஆனாலும், ஆனாலும். அவள் செந்திலின் சொத்து. சரியான முடிவோ இல்லையோ அவள் வாழ்க்கையில் செந்தில் ஒரு பகுதி என எப்போதோ முடிவுகட்டிவிட்டாள். அ வ ன் குழந்தை அவளின் வயிற்றில் வளர்கிறது.
நைட் டியூட்டியால் வீட்டுக்கு வந்ததும் அழுதாள். "ஏன் நான் மால்க்கம் அ ப்ப டி நடக்கும்படியாகப் பழகினேன்"
தன்னைத் தானே நொந்துகொண்டு அழுதாள்" அன்றிரவு வேலைக்குப் போகவில்லை.
சுகமில்லை என்று சொல்லிவிட்டு நின்றாள். அடுத்த நாள் அப்படிச் சொல்லிக் கொண்டு நிற்க விரும்பவில்லை. நிலவுக்குப் பயந்து பரதேசம் போகமுடியுமா?
அன்று வேலைக்குப் போனாள். மால்க்கம் அன்றிரவு டியூட்டி இல்லை. நிம்மதியாக அன்றிரவு போனது. இன்றில்லா விட்டாலும் நாளையிரவோ அதற்கு அடுத்த, இரவோ சந்திக்காமல் இருக்கப் போவதும் இல்லை.
எப்படி நடந்து கொள்ளப் போகிறாள்?

Page 100
190 A ராஜேஸ்வரி
அடுத்த நாள் செந்திலின் கடிதம் வந்தது. இரண்டு நாளில் லண்டனுக்கு வருவதாகவும் முடியுமென்றால் வீவு எடுக்கச் சொல்லியும்.
ஏன் அப்படி அவசரம்? எடின்பரோவில் இருந்து லண்டன் வர எவ்வளவு காசு?
லோறா எவ்வளவோ முயற்சிசெய்தும் செந்தில் லண்டன் வரும் அன்று ஒய்வு கிடைக்கவில்லை. அடுத்த நாளில் இருந்து நாலு நாள் லீவு.
நாளைக்கு செந்தில் வரப் போகிறான் என்ற சந்தோ சத்தில் அன்றிரவு வேலையே ஒடவில்லை அவளுக்கு. அந்த சந்தோசம் நீடிக்கவில்லை. இரவு ஒரு மணிக்குமேல் சாப்பாட்டுக்குப் போக ஆயத்தம் செய்துகொண்டிருந் தாள். மால்க்கம் வந்தான். லோறாவுக்குப் ‘பகீர்" என்றது. மற்ற நேர்சுக்கு முன்னால் ஏதும் அலட்டப் போகிறானே என்று பயந்தாள். தன் பதட்டத்தைக் காட்டிக்கொள்ளாமல் “ஹலோ மால்க்கம்’ என்றாள் . அவனைப் பார்க்காமல், ,
'என்ன டைனிங் ரூமுக்கா போlர் ? நானும் அங்கு தான் போகிறேன்" என்றான் மால்க்கம்
எடுத்த கால் நகரவில்லை லோறாவுக்கு. அவளுக்கு விளங்கியது என்ன சொல்கிறான் என்று அவளோடு வரட்போகிறான் அன்றிரவு நடந்ததை அவள் மறக்க வில்லை. "ஓம் லோறா தனியாகப் போகாதே. நேற்றிரவு ஒரு பைத்திய வார்ட் நோயாளி திடீரென்று விறாந்தை யில் பாய்ந்தான். எங்களுக்கு உயிரே போய்விட்டது" என்றாள் மற்ற நேர்ஸ்.
"பைத்தியம் இல்லாத சாதாரண ஆட்களைவிட பைத்தியம்' என்று பட்டம் பெற்றவர்கள் பரவாயில்லை. பேசி வெருட்டிவிடலாம். பைத்தியம் இல்லாத நாகரீக மாணவர்களுக்குத்தான் ன்னக்குப் பயம். அவர்கள்

தேம்ஸ் நதிக்கரையில் A 191
எப்போது என்ன மாதிரி நடந்துகொள்வார்கள் என்று தெரியாது" லோறாவின் உஷ்ணமான வார்த்தைகள் மால்க்கத்தைச் சுட்டது.
அவள் பேசாமல் நடந்துகொண்டிருந்தாள். "ஐயாம் சொறி லோறா' மால்க்கத்தின் குரல் பரிதாபமாக ஒலித்தது இருளில்.
**எதையும் செய்துவிட்டு, இருதயத்தைப் பகுதி பகுதி யாகப் பிரித்துவிட்டு, கொத்திக் குதறிவிட்டு எல்லாம் முடிந்த பின் "ஐயாம் சொறி" என்று சொல்லிவிட்டால் எல்லாம் சரியாகப் போகும் என நினைக்கிறவர்களில் 'நீங்களும் ஒராள்" லோறா வெடவெடத்தாள்.
** எக்காரணம்கொண்டும் அப்படி முரட்டுத்தனமாக இனி நடக்கமாட்டேன் லோறா'
"தாங்ஸ்" அலட்சியமாகச் ச்ொன்னாள் יא
**ஆனால் ஒன்று மட்டும் சொல்கிறேன், உன்னில் சும்மா பொழுதுபோக்குக்காக நான் திரியவில்லை. எவ்வளவுதூரம் உம்மை விரும்புகிறேன் என்று உமக்குத் தெரியாது, நான் உம்மைப்போல் பெண்களுடன் பழகியது குறைவு அன்பும் கனிவும் உமக்கிருப்பதுபோல் அதிகம்பேருக்கு இல்லை ஒரு நோயாளியுடன் எப்படி இனிமையாக நடந்துகொள்வீர் என்ற நினைவே என்னை உமக்குப் பின்னால் திரியப்பண்ணுகிறது. அன்புகொண்ட மனிதனுக்காக எதையும் செடியத் தயங்க மாட்டீர் என்று தெரியும் . அந்தப் பாக்கியம் எனக்குக் கிடைத்தால் எவ்வளவு அதிர்ஷ்டம் தெரியுமா எனக்கு'
லோறா பதில் சொல்லவில்லை.
மூன்று மாதம்தான் அவளைத் தெரியும். ஆனால் லோறாவே தன்னைப்பற்றி எண்ணாத சிலவற்றை அவன் சொன்னான். அன்புள்ள செந்திலுக்காக அவள் என்ன செய்யவும் தயங்கவில்லை

Page 101
192 A ராஜேஸ்வரி
செந்திலின் ஞாபகம் வந்ததும் அவள் நடை துரித மாகியது. இவ்வளவு நாளும் யோசியாத கேள்வி அவள் மனதில் எழுந்தது. செந்திலில் அவளுக்கு அன்பா அல்லது பயமா? எதுவாக இருந்தாலும் என்ன? இவ்வளவு கால மும் ஒன்றாக இருந்துவிட்டார்கள். இனியும் ஒன்றாக இருக்கப் போகிறார்கள் - குழந்தைக்காக என்றாலும்!
நைட் டியூட்டி முடிய விழுந்தடித்துக் கொண்டு வந்தாள். இரவு ரெயினில் வந்த களைப்பு. சோர்ந்து போய்ப் படுத்திருந்தான் செந்தில். பார்க்கப் பரிதாப மாக இருந்தது. அவனை எழுப்பாமல் அருகில் படுத்தவள் அப்படியே தூங்கிப்போய்விட்டாள் கார்த்திகைமாதம் தொடங்கிவிட்டது. குளிர் உடம்பைச் சுருட்டியது. வானம் மப்பும் மந்தாரமுமாக இருண்டு கிடந்தது.
நைட் டியூட்டி செய்த களைப்பில் அருண்டு படுத் திருக்கும் லோறாவைப் பார்த்தான்
கற்பவதியாம்? அடிவயிறு பெரிதாகஇல்லை இன்னும். ஆனாலும் மெல்லிய படுக்கையறைக் கவுணுக்குள்ளால் அவளுடைய மார்பு உருண்டு திரண்டு தெரிந்தது. கர்ப்பத் தின் அறிகுறி பால் சுரக்கும் மார்பகங்கள் என்று எப்போதோ எதிலோ படித்த ஞாபகம் வந்தது. அவன் திரும்பிப் புரண்ட சத்தத்தில் அவள் எழும்பினாள்.
அரைகுறைத் தூக்கத்தில் அவள் முகம் அழகாக இருந் தது. எழும்பியும் எழும்பாமலும் அவனையிறுக்கிக் கட்டிக்கொண்டாள் லோறா "ஓ! செந்தில் எப்படி இந்த இரண்டு மாதமும் போனதென்றே தெரியாது. எப்படி நீங்கள் இல்லாமல் இருப்பேன்" லோறா குழந்தை போல் சொன்னாள்.
** என்னோடு பிரிந்திருக்கக் கூடாதென்பதற்காகத். தான் எனக்குத் தெரியாமல் பிள்ளை வாங்கினாயா" பாதி வேடிக்கையும் பாதி உண்மையுமாகக் கேட்டான்.

தேம்ஸ் நதிக்கரையில் A 193
செந்தில். இரட்டைக் கருத்தில் அவன் கேட்டது அவளுக்கு விளங்கவில்லை.
அவள் பூரிப்புடன் சொன்னாள் "இவ்வளவு காலம் ஒன்றாய் இருந்து விட்டோம். இன்னுமென்ன பெரிய வித்தியாசம் வரப்போகிறது பிள்ளை வருவதால். சும்மா ஒரு பேப்பரில் கையெழுத்துப் போடப் போகிறோம். அதைவிட வேறென்ன". செந்தில் பதில் பேசவில்லை.
ஏனோ அவன் மனதில் அவள் நினைப்பது போல் எந்தச் சிந்தனையும் வரவில்லை. சிலவேளை பிரயாணக் களைப்போ? தான் தற்செயலாக படிப்பு முடிந்தவுடன் தன்னை விட்டுவிட்டு இலங்கைக்குப் போய்விடுவேன் என்று நினைத்துத் தன்னைப் போகப் பண்ணாமல் இருக்கத்தான் தனக்குத் தெரியாமல் குளிசை எடுப்பதை நிறுத்தினாளா என்றுதான் கடிதம் கண்டவுடன் நினைத் தான். அந்த ஆத்திரத்துடன் சண்டை பிடிக்க வந்திருந்தான். ஆனால் அவளைப் பார்க்க ஏனோ சண்டை பிடிக்க மனம் வரவில்லை.
"எனக்குச் சொல்லிப் போட்டுக் குளிசை எடுக்பதை நிறுத்தியிருக்கலாம்" என்றான் செந்தில்,
"சோதனைக்குப் படிப்பதை விட வேறெந்த யோசனையும் இருக்கவில்லை செந்தில் அப்போது. என்னால் தலையிடி தாங்க முடியாது இருந்தது. அத்தோடு இனி என்ன இரண்டு மூன்று நாளில் ஸ்கொட் லண்டுக்குப் போகிறீர்கள் தானே என்று குளிசையை நிறுத்திவிட்டேன்’ என்றாள் லோறா.
அதன் பிறகு அவன் குழந்தையைப் பற்றி அதிகம் கதைக்க நேரம் இருக்கவில்லை. லோறா வேலைக்குப் போய் விட்டாள்.
அன்றிரவெல்லாம் யோசித்தான், مه L68 3) -سr கல்யாணம் முடிப்பதா?

Page 102
194 A ராஜேஸ்வரி
அன்றிரவு யோகலிங்கத்துக்குப் போன் பண்ணினான். பதில் இல்லை. யோகனும் மைராவும் சுவீடனுக்குப் போனதைச் சொல்ல மறந்து விட்டாள் லோறா.
யசோதரனைக் கண்டு மாதக்கணக்காகி விட்டது. படிப்பு முடிந்ததும் நல்ல வேலை கிடைக்கவில்லை. ஏதோ சில்லறைவேலை கிடைத்தது லண்டனில் என்று கேள்வி. எங்கு இருக்கிறான் என்றும் தெரியாது. தமக்கை வீட்டுக்குப் போன்பண்ணிப் பார்த்தான். நினைத்தது வீண்போகவில்லை; அங்கேயே இருந்தான்.
"எப்படிச் சீவியம்" என்றான் யசோ
தன்னையறியாமல் செந்திலுக்கு வாயில் வந்தது லோறா பிள்ளைத்தாச்சி என்று சொல்ல. அவன் ஏதும். விசர்க் கதை கதைத்தாலும் என்று சொல்லவில்லை.
ஸ்கொட்லண்ட் பிடிக்கவில்லை. இங்கே எங்காவது நல்ல் வேலை கிடைக்குமோ என்று பார்க்கிறேன்" என்றான் செந்தில்.
"நான் கொஞ்ச நாளில் யாழ்ப்பாணம் போறன்"
என்றான் யசோ. 'ஏன், கல்யாணம் ஏதுமோ" செந்தில் பகிடியாகக் கேட்டான். 'ஓம்' யசோவின் குரலில்
பெரிய கிளுகிளுப்பு. "ஏன் ரூரிஸ்ட் விசாவில இங்கேவந்து" பெடியன் பிடிக்கிற பெட்டை ஒன்றும் அகப்பட வில்லையோ' செந்தில் கேலியாகக் கேட்டான். "லண்டனிலே இருக்கிற வெள்ளைக்காரப் பெட்டையளும் சரிதான் இலங்கைப் பெட்டையஞம் சரிதான். சும்மா டெலிவிஷன் அது இது என்று பார்த்துக் கெட்டுப்போன கழுதைகள்" என்றான் யசோ.
"யாழ்ப்பாணம் போய் வெயில் படாத ஒரு வெங்காயத்தைக் கட்டிக்கொண்டு வாரும்" என்றான் செத்தில்,

தேம்ஸ் நதிக்கரையில் A 195
"ஒம், உங்கள் வெள்ளைக்காரச் சீவியத்துக்கு. நாங்கள் எப்பிடித் தெரிவோம்? வெங்காயம் போலத் தானே தெரியும்’
"அதுசரி உன் மச்சாள் மெடிக்கல் கொலிஜ்ஜால வெளிக்கிட்டுதாம். எப்ப போநீர் கல்யாணம் முடிக்க? கொப்பரும் சாகக் கிடக்கிறார் என்று மயில்வாகனத்தார் கதைச்சார்' என்றான் யசோ,
தாய் தகப்பனுடன் கொஞ்ச நாட்களாக ஒரு தொடர் பும் இல்லை. தகப்பன் மரணப் படுக்கையில். செந்தில் எப்படி இருந்தாலும் தகப்பனின் சுகமில்லாத செய்தியைக் கேள்விப்பட்டதும் ஒருநேரம் திடுக்கிட்டான்.
தகப்பன் மரணப் படுக்கையில். அவன் முதல் மகன். செத்தவீட்டுக் கடன் யார் செய்வார்கள்?
ஒருதரம் இலங்கைக்குப் போய்விட்டு வந்தால் என்ன? "இவள் விசரி சொல்லாமல் கொள்ளாமல் பிள்ளை வாங்கிப்போட்டு இருக்கிறாளே’! லோறாவில் ஆத்திரம் வந்தது.
அன்றிரவு அவன் சரியா கத் தூங்கவில்லை. எப்போது விடியும் எனக் காத்திருந்தாள் லோறா. இரவு வேலைக்கு வராமல் சுகமில்லை என்று சொல்லி விட்டு நின்றிருக்கலாம் செந்திலுடன், என இரவிரவாக நினைத் தாள் லோறா. விடிந்ததும் விடியாததுமாக நல்ல மழை. பஸ்ரொப்பில் ஒரு மணித்தியாலத்துக்கு மேல் நின்று குளிரில் விறைத்துப் போனாள் லோறா. சம்மர் முழுதும் கொடிய வெயில். வின்ரர் முழுக்க விடாத மழை.
ஆத்திரத்துடன் முணுமுணுத்துக்கொண்டு நின்றவள் முன்னால் ஒரு கார் படாரென்று தண்ணிர் அடித்துக் கொண்டுநின்றது.
டொக்டர் மால்க்கம்! அவள் திடுக்கிட்டுப் பார்த்தாள். "நான் டொக்டர் மால்க்கம் ஸ்ரோன், மாடம் விரும்பி

Page 103
196 A ராஜேஸ்வரி
னால் என் காரில் ஏறலாம்" என்றான் குறும்பாக மால்க்கம். லோறாவுக்குத் தர்மசங்கடமாக இருந்தது. ஞாயிற்றுக்கிழமை காலையில் லண்டன் ரோட்டுக்களில் டாக்சியைக் கூடக் காணவில்லை." என்ன லோறா யோசிக்கிறாய் பேசாமல் ஏறு. நான் ஸ்ரேசனுக்குப் போகிறேன், தங்கச்சி வருகிறாள் மான்ஸெஸ்டரில் இருந்து. பேசாமல் ஏறு மழையில் நனைந்து சாகாமல், ஆஸ்பத்திரியில் ஒரு நல்ல நேர்ஸை நாங்கள் இழக்கத் தயாரில்லை" வேறு வழியில்லாமல் அவள் பின் கதவைத் திறந்து கொண்டு ஏற முயன்றாள்.
அவன் முன் கத ைவத் திறந்துவிட்டான். தற்செய லாக செந்தில் ஜன்னல் வழியாகப் பார்த்தாலும் வீணாக சந்தேகப்படுவான். யாருடன் திரிகிறாய் காரில் என்று கேட்பான். எனவே தன் வீட்டுச் சந்தியில் திரும்பியதும் தன்னை இறக்கி விடச்சொன்னாள் லே ர ற |ா. 'உமக்கென்ன விசரா? குடையும் இல்லாமல் இருக்கிறாய். மழையைப் பார் வானம் பொத்துக்கொண்டு கொட்டு கிறது’ என்றபடி காரைச் செலுத்தினான் மால்க்கம். லோற7 பொறுமையிழந்தாள்.
'காரை நிற்பாட்டாவிட்டால் ஒடும் காரில் இருந்து கதவைத் திறந்து கொண்டு குதிப்பேன்" என்றாள் லோறா. அவன் திரும்பிப் பார்ப்பதற்கிடையில் அவள் கை காரின் கதவில் இருந்தது. சொன்னதை அவள் செய்து விட்டாலும் என்ற பயத்தில் அவசரமாகக் காரை பெரிய "கிறிச் சத்தத்துடன் நிறுத்தினான் மால்க்கம்.
இரவிரவாக நித்திரையின்றிப் புரண்டுகொண்டு படுத்த செந்தில் ரோட்டில் ஏதும் அக்ஸிடென்டோ என்று எட்டிப்பார்த்தான். அவன் இரத்தம் கொதித்தது. லோறா, மா ல் க் க த் துட ன் குடைக்குள் வந்து கொண்டிருந்தாள்!
தற்செயலாக செந்தில் பார்த்துக் கொண்டிருந்தா லும் என்ற பயத்தில் தன் வீட்டு ஜன்னலை நிமிர்ந்து

தேம்ஸ் நதிக்கரையில் A 197
பார்க்காமல் வந்தாள் லோறா. தான் மால்க்கத்தின் காரில் ஏறியது எவ்வளவு பிழை என்று தோன்றயது அவன் குடையுடன் இறங்கியபோது.
அறைக்கு போனபோது செந்தில் கட்டிலில் படுத்திருந் தான். நித்திரையாக்கும் என நினைத்தாள் லோறா. சிரித்தபடி லோறாவுடன் ஒட்டியபடி வந்த மால்க்கத்தின் கம்பீரமான குரல் செந்திலின் மனதில் திரையாகிறது என்று எப்படித் தெரியும் அவளுக்கு?
வெள்ளை நிறத்தில் லோறா பிள்ளைப் பெற்று விட்டு என் பிள்ளை என்று சொன்னால் நான் என்ன? செய்ய முடியும்? செந்தில் தன்பாட்டுக்கு யோசித்தான். என்னதான் முயன்றும் லோறாவும் மால்க்கமும் ஒன்றாக வந்த காட்சியை அவனால் மறக்க முடியாதிருந்தது.
சிறகிருந்தால் பறந்து எங்காவது போகவேண்டும் போல் இருந்தது அவனுக்கு வந்த களைப்பில் அவள் அப்படியே தூங்கிப் போய் விட்டாள்; மழையில் நனைந்த குளிரினால் துவண்டு படுத்திருந்தாள். இரவிரவாக "அவனோடு" பெரிய விளையாட்டோ எனத்திட்டினான் செந்தில்.
லோறா எழுந்தபோது செந்தில் இல்லை. வெளியில் போவதாக அவன் சொல்லவும் இல்லை. அவள் வேலை யால் வந்தபோது அவன் நித்திரைபோல் பாசாங்கு செய்து படுத்திருந்தான். a
எங்கு போய் இருப்பர்ன் என நினைத்துத் துக்கப் பட்டுக்கொண்டிருக்கும் போது வெறியுடன் வந்துசேர்ந் தான் செந்தில், "லோறா நான் கூடிய சீக்கிரம் இலங்கைக்குப் போகவேண்டும்" என்றான் செந்தில்,
"ஏன்' லோறா திடுக்கிட்டுப்போய்க் கேட்டாள். 13-وG |

Page 104
ig8 A ராஜேஸ்வரி
**மயில்வாகனத்தார் இரவு போன் பண்ணிச் சொன்னார், என் தகப்பனார் சாகக் கிடக்கிறாராம்" செந்தில் யசோவின் பெயரைச் சொல்ல விரும்பவில்லை. லோறாவுக்குத் தெரியும் யசோ என்ன பொய் சொல்லியும் செந்திலை இலங்கைக்குப் போகப் பண்ணுவான் என்று.
"எப்போது திரும்பி வருவீர்கள்" அவள் மனதில் அவளை யறியாமல் சந்தேகம் ஏனோ வந்தது.
'தகப்பனின் நிலையைப் பொறுத்தது. ஒருமாத லீவில் தான் போறன், லண்டனில் போட்ட அப்ளிக்கேஷ னுக்கு அந்த வேலை சரிவரவே ஒருமாதம் எடுக்கும். நான் இன்னொருதரம் எடின்பரோ போகும் நோக்கம் இல்லை. சும்மா வேலைக்குக் காத்திருக்கும்போது போய் வருகிறேன்"
"றெ ஜிஸ் டர் பண்ணிப்போட்டுப் போங்கோ", அவளின் குரல் தழுதழுத்தது. W "ஏன் என்னைப் புடிச்சுக் கல்யாணம் பண்னச் சொல்லிப் போடுவினம் என்று நினைக்கிறியா? இவ்வளவு காலம் இருந்துவிட்டோம்; இனியும் என தாய் தகப்பன் என்னை யாருக்கும் கட்டிவைக்க யோசிக்க நினைப்பினம் என்று நினைக்கிறீரே! என்ன சுயநலவாதி நீர், என் தகப்பன் சாகும்நிலையில் இருக்கேக்கை எங்களுக்குக் கல்யாண்க் கதைகதைக்க!" அவன் எரிச்சலுடன் கேட்டான்.
"எங்களுக்காக இல்லை. குழந்தைக்காக" அவள் அழுதாள்.
"இரண்டு மாதம் ஒழுங்கா இருந்த பிள்ளை இப்போது அழப்போவதில்லை, அம்மா கல்யாணம் முடிக்காமல் இருக்கிறியோ என்று. கொஞ்சம் பொறு ஒன்றிரண்டு மாதம்’ என்றான் செந்தில். லோறா பதில் பேசவில்லை.

தேம்ஸ் நதிக்கரையில் A 199
மழையில் நனைந்த குளிர், அத்துடன் நினையாப் பிரகாரமாய்ச் செந்தில் இலங்கைக்குப் போகப் போகி றானே என்ற வேதனை இரண்டும் லோறாவுக்குக் காய்ச்சலை கொடுத்து விட்டது. இரண்டு மூன்று நாளாக வேலைக்குப் போகவில்லை. ஒரு பின்னேரம் டொக்டரைப் பார்க்கப் போயிருந்தாள்.
சில நாட்களாக லோறாவைக் காணாததால் மால்க்கம் மிஸ் சின்னப்புவைக் கேட்டு லோறாவின் டெலி போன் நம்பரை எடுத்தான். “ஹலோ லோறா இருக்கி றாளா' என்றான் மா ல் க் கம். செந்தில் 'யார் கதைப்பது' என்று கேட்டான்." நான் மால்க்கம். டொக்டர் மால்க்கம் ஸ்ரோன் நீங்கள் யார்' என்றான் மால்க்கம். "நான் லோறாவின் வீட்டுச் சொந்தக்காரன். லோறா வீட்டில் இல்லை. வந்தவுடன் சொல்கிறேன்" என்று சொல்லிவிட்டுப் போனை வைத்தான்.
அவன் உடம்பு கிடு கிடு என நடுங்கியது ஆத்திரத்தில். "என் வீட்டுக்குப் போன் பண்ணி நான் யார் என்று கேட் கிறான் தடியன்; இவள் சொல்லியிருக்க மாட்டாள் நான் யார் என்று:என்ன சொன்னாள் மனம் திறந்து?சிற்றப்பன் ஸிம்சன் தன்னோடு சேட்டைக்கு வந்துதான் லண்டனுக்கு ஓடிவநதேன் என்பதைச் சொல்ல எவ்வளவு காலம் எடுத்தது அவளுக்கு டேவிட் கூடாமல் நடந்ததால்தான் தறகொலை செய்ய வெளிக்கிட்டாள் என்று என்னிடம் சொல்ல வருஷக் கணக்காக எடுத்தது. இப்போது தாலி கட்டாவிட்டாலும் நான் ஒருத்தன் அவளுடன் இருக் கிறேன் என்று அந்த. அந்த. அவளின் கள்ளப் புருஷனுக்குச் சொல்ல எவ்வளவு வருஷம் எடுக்கப் போகிறதோ'
செந்தில் நற நற என்று ஆத்திரத்துடன் பல்லைக் கடித்தான்.
யசோதரன் சொல்வது சரிதான், லண்டனில் எந்தப் பெண்களையும் நம்பக் கூடாது!

Page 105
200 A ராஜேஸ்வரி
லோறாவுக்குச் சுகமில்லை. சரியான காய்ச்சலும் தலையிடியும். விமான நிலையத்துக்குத் தன் ன n ல் வரமுடியாது என்று செல்லிவிட்டாள்.
செந்தில் நடந்துகொண்டிருந்தான். மார்கழி மாதம். பணி வீதியெல்லாம் (வெள்ளையாகக் கிடந்தது. காலை ஏழுமணி. இன்னும் இருட்டாக இருந்தது.
இலையுதிர்ந்த மரங்களில் இருந்து பனித்துளிகள் கொட்டிக்கொண்டிருந்தன. பனியில் நனைந்த இலைக் குவியல்கள் அவன் சப்பாத்துச் சத்தத்தில் சளக், சளக் என்று பரிதாபமாகச் சத்தம் போட்டன.
தெரு மூலையில் திரும்பும் போது கடந்த இரண்டு வருடங்களாகக் குடியிருந்த வீட்டைத் திரும்பிப் பார்த். தான். பனிபடர்ந்த ஜன்னலுக்குள்ளால் ம ங் கி ய வெளிச்சம் தெரிந்தது.
இருமிக்கொண்டு லோறா படுத்திருப்பாளா? பார மான இரண்டு சூட்கேசுகளுடன் ஒருகணம் நின்று அந்த வீட்டைத் திரும்பிப் பார்த்தான். இதயம் ஏனோ தவித்தது.
அவன் மீண்டும் திரும்பிப் பார்க்கவில்லை. இருண்ட தெருமூலையில் அவன் உருவம் மறைந்தது.
நத்தார் பண்டிகையும் முடிந்துவிட்டது. செந்தில் சென்று ஒரு மாதம் ஆகிவிட்டது. ஒரே ஒரு கடிதம்தான் எழுதியிருத்தான் லோறாவுக்கு. அதுவும் தகப்பனின் உடல்நிலையைப் பற்றி. அவளை அடிக்கடி எழுத வேண் டாம் என தெரிவித்திருந்தான். ஓயாத சத்தி, ஒருவரும் துணையில்லாத வேதனை. லோறா மெலிந்துபோய் இருந்தாள். சோதனையில் பாஸ் பண்ணிய பின்னும்

தேம்ஸ் நதிக்கரையில் A 201
இரவு வேலை செய்து கொண்டிருந்தாள். இலங்கைக்குச் செந்தில் போகமுன் சோதனை முடிவு வந்திருந்தது. ஆனால் வேலையை விட்டு விடுவதைப் பற்றி அவன் எதுவும் சொல்லவில்லை. ’à பகலில் சத்தி. பின் ஒரே படுக்கை இரவில் வேலை. புதுவருடம் முடிய வருவதாக யோகனும் மைராவும் சுவீடனிலிருந்து எழுதியிருந்தார்கள் ஒரு இரவு தலை சுற்றி லோறா விழுந்து விட்டாள். இனி வேலை செய்ய முடியாது போல் இருந்தது
மேட்ரனிடம் சொல்லி விட்டுப் போகச் சொன்னான் மால்க்கம் அவள் சொல்லிவிட்டு புறப்படும் போது "தான் கொண்டுபோய் விடுகிறேன்" என்று சொன்னான், மால்க்கம் நடு இரவில் டாக்சிக்கு நிற்கப் பொறுை 4யில்லாத லோறா அவனுடன் வந்தாள்.
அவனுடன் எதுவும் பேசவில்லை. பனி கொட்டிக் கொண்டிருந்தது, பனிப்புகாரில் கார் போவதே கஷ்ட மாக இருந்தது. வீடு வந்ததும் லோறா காரை நிறுத்து என்று அன்று கத்தியது போல் கத்தவில்லை. பேசாமல் இருந்தாள்.
லோறாவுக்குப் பிடிக்காத எதையும் கதைப்பதில்லை என முடிவு கட்டியிருந்தான் மால்க்கம். u அவள் இறங்கக் கதவைத் திறந்தவன் அவள் பெலவீனத்தில் தடுமாறுவதைப் பார்த்ததும் மெல்லமாக அணைத்துக் கொண்டான். அவன் தாங்கிப் பிடித்தது பெரிய உதவியாக இருந்தது அவளுக்கு.
அவள் தன் அறைக்குப் போய் லைட் போடும் வரைக் கும் தன் காரில் உட்கார்ந்திருந்தான் மால்க்கம். வேதனை புடன் தடுமாறிய அவள் தோற்றம் அவனுக்குப் பரிதாப மாக இருந்தது. "எனக்கு உறவு என்று சொல்ல யாரும் இல்லை லண்டனில்" அவள் ஒரு தடவை இருட்டில் நடக்கும்போது சொன்னது நினைவில் வந்தது.

Page 106
202 A ürnt Ggaiv6auff? .
அவளிடம் போக அவன் மனம் துடித்தது. ஆனால் லோறா ஏதும் தப்பாக நினைத்தாலும், அவள் இருக்கும் வீட்டுக்காரர் ஏதும் தவறாக நினைத்தாலும் என்ற நினை வுடன் காரைத்திருப்பிக் கொண்டு போனான்.
அடிக்கடி போ ன் பண்ணினான். பலதடவை அவளைச் சாப்பாட்டுக்குக் கூப்பிட்டிருக்கிறான். அவள மறுத்துவிட்டாள். ஆனால் புதுவருடத்துக்கு அடுத்த நாள் ஒருதரம் கூபபிட்டான். "ஓம்" என்றாள். அவனுக்கு ஆச்சரியமாக இருந்தது. தனிமையின் வேதனை யில் தவித்துத் தான் அவள் அப்படிச் சொல்கறாள் என்று நினைத்தான் 3
காரில் ஏறியும் அதிகம் கதைக்கவில்லை லோறா. மால்க்கம் மிகவும் சந்தோசத்துடன் ரெஸ்ட்ரோரண்டில்
காரை நிறுத்தி விட்டு அவளை அழைத்துச் சென்றான்.
சாதாரண இடங்கள் தவிர இப்படிப் பகட்டான இடங்களுக்கு அவள் போகவே இல்லை செந்திலுடன்.
"இப்படியான இடத்துக்கு ஏற்றபடி உடுத்திருக்கி றேனோ தெரியாது" என் றா ள் லோறா தர்ம சங்கடத்துடன்.
"வின்ரரில் ஆடம்பரமாக ஒருவரும் உடுப்பதில்லை. குளிருக்கு உடம்பை மறைத்தால் போதும் உடுப்பில் என்ன இருக்கிறது? இந்தப் பெரிய ஆடம்பரமான இடத் தில் உன்னைத் தவிர யார் அழகு எனச்சொல்" என்றான் மால்க்கம். அவள் நாண த் துட ன் தலைகுனிந்து கொண்டாள். எதுவும் சந்தோசமாகக் கதைக்கும் மன நிலையில் அவள் இல்லை செந்தில் ஆதரவாகக் கடிதம் எழுதாததே தாங்க முடியாத வேதனையாக இருந்தது. சாதாரண நாள் என்றாலும் பரவாயில்லை. வயிற்றில் பிள்ளை வேறு. மைரா யோகன் கூட லண்டனில் இல்லை. *

தேம்ஸ் நதிக்கரையில் A 203
சென்ற முறை அவள் இப்படி இருக்கவில்லை. குழந்தை வந்தபோது இரண்டரை மாதத்திலேயே போய்விட்டது. இப்போது, மூன்றுமாதம் முடிந்துவிட்டது. வயிறு மற்ற வர்களுக்கு இன்னும் தெரியவில்லை.
லோறா சிந்தனையில் ஆழ்ந்திருப்பதை பார்த்ததும் மால்க்கம் ** என்ன யோசனை லோறா' என்றான். நல்ல இனிமையான ராகமொன்றை வாசித்துக் கொண்டிருந் தான் அந்த திடகாத்திரமான கறுப்பன். w
*நல்ல ராகம் கேட்டுக் கொண்டிருக்கிறேன்" என்றாள் லோறா, அவனைப் பார்க்காமல். 'லோறா" என்று மெல்லக் கூப்பிட்டான் அவளது கிளாசில் சாம்பே யினை ஊத்தியபடி அவள் அவனைப் பார்த்தாள். அவனுக்குத் தெரியும் ஏதோ சொல்லப் போகிறாள் என்று. *ஏதும் தேவையில்லாமல் கதைக்கவேண்டாம்" அவள் மெதுவாகச் சொன்னாள்.
“தேவையில்லாத க  ைத யில்  ைல லோறா. என் வாழ்க்கையில் மிக முக்கியமான ஒரு விடயம்" அவன் விடாப்பிடியாகச் சொன்னான்.
"அப்படி என்ன முக்கியமான விஷயம்" என்பதுபோல் அவனைப் பார்த்தாள். சாம்பேயின் கிளாசை முகத்துக்கு நேரே பிடித்தபடி, ; "உனக்குத் தெரியும். உன்னில் எவ்வளவு அன்பாக இருக்கிறேன் என்று" அவன் மெதுவாகச் சொன்னான்.
ஜாஸ்-இசைக்காரன் பெரிய தொனியில் ராகம் இழுத்துக் கொண்டிருந்தான். கிட்டத்தட்ட எல்லா மேசைகளிலும் ஆட்கள் நிறைந்து விட்டார்கள். புது வருடக் கொண்டாட்டத்தின் அலங்காரங்கள் வர்ண விளக்குகளில் பளபளத்துக் கொண்டிருந்தது. அவள் பதில் பேசாமல் மடமட என்று சாம்பேயினைக் குடித் தாள். இந்த வார்த்தைகளை ஒருவன் அவளுக்குச் சொல் வது முதல்தரமல்ல. "ஒரு நேரச் சாப்பாட்டுக்குக் கூட்டி.

Page 107
204 A ராஜேஸ்வரி வந்துவிட்டு எத்தனை பெண்களுக்குச் சொன்னீர்கள் இந்த வார்த்தைகளை" அலட்சியமாகச் சொன்னாள் லோறா.
அவளின் அலட்சியமான பேச்சு அவனை வேதனைப் படுத்தியது. அவளைச் சொல்லிக் குற்றமில்லை.
உலகத்தில் அவள் சொல்வதுபோல் ஆண்கள் இல்லா மலில்லை. ஒரு நேரச் சாப்பாட்டுக்குக் கூட்டிப் போய் விட்டுக் கட்டிலுக்கு வரச்சொன்ன டொக்டர்களை அவளுக்குத் தெரியாமலும் இல்லை.
"நான் பெரிய தூய்மையானவன் என்று சொல்ல வில்லை. ஐ லவ் யூ லோறா, ஐ லைக் ரு மரி யூ." மால்க்கம் ஆறுதலாகச் சொன்னான்.
அவள் பதில் பேசாமல் இருந்தாள்.
"ஏன் லோறா என்னை நம்புகிறீர் இல்லை. உம்மைச் சிலவேளை நம்ப முடியாமல் இருக்கிறது. என்னில் விருப்பமில்லாமல் இருந்தால் இப்படி எல்லாம் என்னுடன் வரமாட்டீர். நடு நிசியில் என் உதவியுடன் வீட்டுக்குப் போகமாட்டீர். ஆனால் என்னைத் திருமணம் செய்யச் சொல்லிக் கேட்டால் பேசாமல் இருக்கிறாய்" அவள் கண் களில் நீர் வழிந்தது. அ வ ைன ப் பார்க்காமல் குனிந்தாள்.
"ஒரு பெண் ஒரு ஆணுடன் பழகுவது ஒரே ஒரு
காரணத்துக்காகவா" அவள் விம்மி விம்மி அழுதாள்.
*லோறா ஆழவேண்டாம். உம்மை அழப்பண்ண எந்த உரிமையும் எனக்கு இல்லை. நாங்கள் குழந்தைகள் அல்ல. வயதுவந்தவர்கள், படித்தவர்கள், விஷயங்களை ஆராயப் பொறுமையுள்ளவர்கள். உமக்கு இப்போது இதைப் பறறி யோசித்து முடிவுசொல்ல முடியாவிட்டால் உன் பதிலுக்கு எத்தனை வருடம் என்றாலும் காத்திருக்கத்

தேம்ஸ் நதிக்கரையில் A 205
தயாராய் இருக்கிறேன்" அவன் பொறுமையிழந்து தவித்தான்.
அவள் அழுவதை அவனால் தாங்க முடியாதிருந்தது. 'எனக்கு யோசித்துப் பதில் சொல்ல ஒன்றுமில்லை" அவள் சொன்னாள். .
"அதுதான் உன் முடிவென்றால் நான் யார் கட்டாயப்படுத்த" அவன் குரல் வேதனையுடன் ஒலித்தது.
அவனின் வேதனை அவளுக்குப் புரிந்தது. 'மால்க்கம், நான் கற்பவதி. கிட்டத்தட்ட நாலு மாதம்" அவள் அடக்கமாகச் சொன்னாள். அவன் திடுக் கிட்டுப் பார்த்தான்.
'சத்தியும் தலைச்சுற்றும், நான் மழையில் நனைந்து வந்ததில்லை" அவள் இரண்டாம் கிளாஸ் சாம்பேயினை வாயில் ஊற்றிக்கொண்டு சொன்னாள்.
**லோறா. லோறா. நீர்." வார்த்தைகள் வராமல் திண்டாடினான்.
"மிஸ் லோறா ஸிம்ஸன் நான், அதற்கென்ன" வரட்டுக்தனமாகக் கேட்டாள் அவள்.
*லோறா.." மால்க்கத்தின் குரல் குழம்பிப்போய் இருந்தது. w
“மால்க்கம் தயவுசெய்து எதையும் கே ட் க வேண்டாம். சிலவேளை நான் சொல்லுகிறேன் நேரம் கிடைத்தால்" அவள் வெறும் கிளாசை மேசையில் வைத்தாள் விரக்தியுடன்,
இருவரும் வீடு திரும்பும் போது அதிகம் பேசவில்லை மெளனமாகப் போகும் அவளைக் கொட்டும் பணி நடுவில் பார்த்துக் கொண்டிருந்தான் மால்க்கம். அவன் கண்கள் கலங்கின, காதலின் தோல்வியால் அல்ல.

Page 108
Y06 ža ராஜேஸ்வரி
வயிற்றில் பிள்ளையுடன் யாராலோ ஏமாற்றப் பட்டுக் கொண்டிருக்கிறாள் என்ற பரிதாபத்தில் வேதனையுடன் சென்றான் மால்க்கம்.
குளிர் முடிந்து மரங்கள் துளிர்க்கத் தொடங்கியிருந் தன. இப்போதுதான் யோகனும் மைராவும் சுவீடனில் இருந்து வந்திருக்கிறார்கள். கிறிஸ்மஸ் முடிய வருவதாக இருந்தவர்கள் இட்போதுதான் வந்து சேர்ந்திருக் கிறார்கள்.
இன்னும் ஒரு மாதத்தில் லோறா வேலையை விடுவ தாக இருக்கிறாள். சத்தியும் எரிச்சல் குணமும் போய் விட்டது. எப்போது வருவேன் எனத் தெரியாது என்று கடைசியாக எழுதிய கடிதத்தில் எழுதியிருந்தான் செந்தில்.
மால்க்கம் வழக்கம் போல் உதவி செய்து கொண்டி ருந்தான். யார் பிள்ளையின் தகப்பன், என்ன நடந்தது உன் வாழ்க்கையில் என்று ஒரு கேள்வியும் அவன் கேட்க வில்லை. na
மைரா வந்தவுடன் போன் பண்ணினாள், சுவீடன் போய் இருக்கும் போது தாயின் வற்புறுத்தலுக்காகக் கல்யாணம் செய்ததாகவும் லண்டனில் சில நண்பர்களுக்கு விருந்து கொடுப்பதாகவும் சந்தோசத்துடன் சொன்னாள் மைரா. விரைவில் யோகன் இலங்கை க் குப் போகிறானாம். W
சொல்வதற்கு யாரும் இல்லாது அடக்கி வைத்திருந்த துக்கம் எல்லாம் மைராவின் அன்பான குரலைக் கேட்ட தும் பொங்கிக்கொண்டு வந்தது. பதில் சொல்லாமல் அழுதாள். கல்யாணத்தில் நம்பிக்கையில்லாதவர்கள்
கல்யாணம் செய்திருக்கிறார்கள்.
சடங்குகளில், அன்பில் நம்பிக்கையுள்ள லோறா ஏமாற்றப்பட்டதுமில்லாமல் ஏமாற்றத்தன் சுமையை வயிற்றிலும் வைத்திருக்கிறாள்.

தேம்ஸ் நதிக்கரையில் 'A 207
மைரா பதறிப்போனாள்.'ஏன் லோறா அழுகிறாய்? சோதனையில் பெயிலா" என்றாள்.
சோதனையில் பெயில்; வாழ்க்கை என்ற மண்டபம், காதல் என்ற பரீட்சை, அதில் தோல்வி.
“ஒன்றுமில்லை. உனக்குக் கல்யாணம் என்ற் சந்தோசத்தில் அழுகிறேன்" என்றாள் லோறா.
"என்ன விசர்க்கதை கதைக்கிறீர்? எங்களுக்குள் என்ன ஒளிவுமறைவு’ மைரா சினத்தாள்.
லோறா குலுங்கிக் குலுங்கி அழுதாள்.
தான் கற்பவதி என்றும், கற்பவதி என்று சொன்ன ஷடன் தகப்பனுக்குச் சுகமில்லை என்று சொல்லிவிட்டு செந்தில் இலங்கைக்குப் போய்விட்டதையும், எப்போது திரும்பி வருகிறான் என்று கூடச் சரியாக எழுதவில்லை
என்றும் சொல்லி அழுதாள் லோறா.
இரண்டு மணி நேரத்தில் யோகனும் மைராவும் லோறாவின் அறைக்கு வந்துசேர்ந்தார்கள். யோக லிங்கத்துக்கு விளங்கியது இலங்கையில் செந்தில் என்ன செய்து கொண்டிருப்பான் என்று. . . . . . "
இவ்வளவு மாதத்திற்கிடையில் இன்னொரு பெண் ணைக் கல்யாணம் முடித்து பெண்சாதி வயிற்றில் பிள்ளையும் என யாரும் நாளைக்கு செந்திலைப் பற்றிச் சொன்னாலும் ஆச்சரியமில்லை என எண்ணினான் யோகன். ஆனால் தான் நினைப்பதை லோறாவுக்குச் சொல்லி அவளைத் துன்புறுத்த அவன் விரும்பவில்லை
'அதற்கென்ன? இலங்கையில் செத்த வீட்டுக்கு மூத்த மகன் இல்லாவிட்டால் சரியில்லை என நினைப்பார்கள். தகப்பன் சுகமானவுடன் திரும்பி வருவான்" என்றான் யோகன். மனம் விட்டுப் பொய் சொல்வதைப் போல் கஷ்டமான காரியம் ஒன்றுமில்லை.

Page 109
208 A ராஜேஸ்வரி
м லோறா நம்பினாளோ இல்லையோ மைராவும் யோகனும் அருகில் இருப்பதே சந்தோசமாக இருந்தது.
**வாழ்க்கை என்ற நிலவை துன்பம் என்ற சிறுமுகிற் கூட்டங்கள் ஒருகணம் மறைத்துவிட்டால் ஒரேயடியாக நிலவு மறையாது. அதேபோல் வாழ்க்கையும் ஒரேயடி யோகத் துன்ப மயமானதாகவும் இருப்பதில்லை. துன்பங் களையும் சோதனைகளையும் தூசி என மதிக்கப் பழகுவது தான் அறிவு என்பதின் அர்த்தம்" என்றான் யோகன்.
யோகன் இலங்கைக்குப் போக எல்லா ஆயத்தமும் செய்தாயிற்று. ஒரு மாத லீவுதான். ஆனாலும் மைரா துக்கப்பட்டாள் தானும் போக முடியவில்லை என்று. யோகனின் தகப்பன் தன் முகத்தில் முழிக்காதே என்று எழுதியிருந்தார். யோகனின் தாய் அவன் தம்பி போராட்டத்தில் ஈடுபட்டதாக போலிசாரால் கைது செய்து மாதக்கணக்கில் விசாரணையின்றி சிறையில் வைத்திருப்பதைப் பற்றி எழுதியிருந்தாள்.
"மைராவை திருமணம் செய்த கோபம் அப்பாவுக்கு. நெரே காணக் குறைந்துவிடும். அம்மா பாவம். நானும் தம்பியும் தான் பீட்டில் அவனும் ஜெயிலில். நான் ஒரு தரம் அம்மாவைப் பார்க்கப் போகவேண்டும்" என்றான் யோகன்.
தான் முன் ஒரு காலத்தில் பட்ட கொடுமையான அனுபவம் போதாதென்று இன்னுமொருதடவை இப்படி ஏமாந்து போயிருப்பதைப் பற்றி மைராவும் யோகலிங்க மும் தன்னைப்பற்றி என்ன நினைப்பார்கள் என்று லோறா எண்ணினாள்.
ஆனால் அதைப்பற்றி யோசித்து அழவோ அதனால் தன் அருமையான சினேகிதியையும் யோகலிங்கத்தையும் தர்மசங்கடத்தில் மாட்டவோ அவள் தயாரில்லை. தன வாழ்க்கையைப் பற்றி யோசிக்கவே பொறுமையும் துணிவும் இல்லாமல் இருந்தது.

தேம்ஸ் நதிக்கரையில் A 209
மூச்சுவாங்க நெடும்தூரம் நடப்பாள் மாலை நேரங்களில், 4<.
செந்திலுடன் திரிந்த நாட்கள் நினைவில் நெருஞ்சி முட்களாய்க் குத்தின. பார்க்கில் சில வேலைகளில் கற்ப வதிப் பெண்களும் அவர்களை அணைத்தபடி போகும். கணவர்களையும் கண்டு தன்னை மறந்து கண்ணிர் ου(5ι Ο
குழந்தை வயிற்றில் இருப்பதையே முழுதாகக் காட்டிக்கொள்ளப் பொறுமையற்றுப் போய்விட்டான் செந்தில் அவன் இருந்தால் இனிமையாக நடந்து கொள்வானா என்று யோசித்துப் பார்த்தாள்.
அவளின் நினைவின் ஒட்டம் புரிந்தோ என்னவோ யோகன் அன்பாக நடந்து கொண்டான்.
மற்றவர்களின் பரிவு இன்றி வாழ வேண்டும் என t C6ÖT LÖ சொன்னாலும் யோகனின் அன்பு அவளை நெகிழப் பண்ணியது.
யோகனிடம் சொல்லி அலறி அழவேண்டும் போல் இருந்தது. ஆனால் மிகக் கஷ்டப்பட்டு அடக்கிக் கொண்டாள். குழந்தையை வயிற்றில்  ைவத்துக் கொண்டு இன்னொரு குழந்தைபோல், இன்னொருத்தரின் அன்புக்கு ஏங்குவதை வெறுத்தாள். வேலையையும் விட்டு விடும் நாள் நெருங்கிக்கொண்டு வந்தது.
மால்க்கம் முடிந்தமட்டும் லோறாவுடன் கதைக்கவும் பழகவும் துடித்தான். அவன் நடத்தை அவளுக்கு ஆச்சரியத்தையும் ஆத்திரத்தையும் கொடுத்தது, லண்டன் முழுக்க எத்தனையோ நேர்சுகள் இவனுக்குப் பின்னால் எதையும் இழந்துபோகத் தயாராய் இருக்கும் போது வாயும் வயிறுமாக இருக்கும் தன்னில் என்ன கண்டு விட்டான் என்று சிலவேளை யோசிப்பாள்ள Y -

Page 110
210 A ராஜேஸ்வரி
வருடக்கணக்காக ஒன்றாக வாழ்ந்து, வளர்ந்து, சிரித்து மகிழ்ந்து, ஒன்றாகக் குடித்தனம் நடத்தி, இவள் உழைப்பையும் பயன்படுத்திப் படித்துவிட்டு, இ வ ள் தயவில் வாழ்ந்துவிட்டுத் தவிக்கவிட்டு ஓடிய செந்தில் போல ஆட்கள் இருக்கும் போது தன் அன்புக்காகப் பின்னால் வரும் மால்க்கத்தை அவளால் விளங்க முடிய வில்லை.
இத்தனை காலமும் செந்திலை விளங்கிக் கொள்ளா மல் இப்படி மாட்டுப்பட்டுக் கொண்டிருக்கிறாள் என்றும் புரியாமல் இருந்தது.
யோகன் புறப்பட ஆயுத்தம் செய்யும் போது மைரா வும் லோறாவும் சேர்ந்து இருக்கலாம்தானே என்று சொன்னான் சினேகிதிகளுக்கும் அது சரி என்று பட்டது. யோகன் இலங்கையிலிருந்து திரும்பி வரச் சில மாதங்கள் ஆகும் என்று சொன்னான்.
தனிமையில் கிடந்து தவிக்காமல் கதைக்க என்றாலும் துணை கிடைப்பது இருவருக்கும் சந்தோசமாக இருந்தது. எ வரும் வாய்விட்டுக் கதைக்காவிட்டாலும் எல்லோர் மனதிலும் இனி செந்தில் லண்டனுக்குத் திரும்பி வர மாட்டான் என்று பட்டது.
செந்தில் கனடா போக ஆயத்தம் செய்வதாக யோகன் அறிந்தான். ஆனால் வெறும் வதந்தியை லோறாவுக்குச் சொல்லவில்லை. நாட்கள் ஊர்வன போல் இருந்தன, லோறாவுக்கு. வயிற்றில் மட்டுமல்ல மனத்தின் பாரமும் கூடிக்கொண்டு வந்தது.
எனக்குப் பின்னால் ஏன் திரிகிறீர்கள் என்று மால்க் கத்துக்கு மேல் சீறி விழுபவள் இப்போது ஏனோ தானோ என்று பேசாமல் விட்டுவிட்டாள். எத்தனை நாளைக்கு இந்தப் பெரிய 'வயிறு" கரைச்சல் கொடுக்காமல் இருக்கும் என்ற விரக்தியுடன் சிரித்துக் கொண்டாள்.

தேம்ஸ் நதிக்கரையில் A 211
அவனும் தூண்டித் துருவி எதுவும் கேட்பதில்லை. குளிரான மாலை நேரங்களில் இடையிடை இவளின் அறைக்கு வருவான். சூட்டடுப்பின் அருகில் மெல்லிய இசை கேட்டுக்கொண்டு சாய்ந்திருப்பான். சிலவேளை இருவருக்கும் சம்பந்தமில்லாத விடயங்கள் பற்றிக் கதைப் பார்கள். டெலிவிஷன் புரோக்கிராம்ஸ், ரேடியோ இசை நிகழ்ச்சி, லேபர் பார்ட்டி என்று எத்தனையோ விடயங் கள். பொழுது போய்க் கொண்டிருக்கும்.
இவள் சிலவேளை இடுப்பைப் பிடித்துக் கொண்டு சாய்ந்திருக்க அவன் தேநீர் போடுவான் ஏன் என்னுடன் வீணாக உங்கள் காலத்தை நாசமாக்குகிறீர்கள் என்று சிலவேளை கேட்பாள். அதன் கருத்து விளங்காதவன் போல் ஏறிட்டுப் பார்த்துவிட்டு ஜோன் வில்லியம்ஸ் இசை யில் தன்னை ம ற ந் து போ ய் கண்களை மூடிக் கொண்டிருப்பான்.
சில மாதங்களுக்கு முன்னர் எந்தப் பெட்டை கிடைப்பாள் கட்டிலுக்கு என்று ஸ்ரெதஸ்கோப்பைச் சுழட்டிக்கொண்டு திரிந்தவன் இப்போது யாரோ ஒரு பெண்ணின்வெறும் உறவின் அமைதியில் நீண்ட குளிர் இரவுகளைக் கழிப்பது நம்ப முடியாததாக இருந்தது. அவன் தன்னில் பரிதாபப்படுவது அவளுக்குப் பிடிக்க வில்லை என்று பலதடவை சொன்னாள்.
அவன் சூட்டடுப்பில் ஆடும் நெருப்பு நாக்குகளில் பார்வை பதித்தபடி சொல்வான்: "ஒரு காலத்தில் என்னை நம்பி என்னிடம் வருவாய் என்பதைத் தெரிந்து கொள் ளும் வரையும் பிரிவதாக யோசனையில்லை’
அவ னின் பதில் முட்டாள்தனமாகத் தெரியும் அவளுக்கு.
"இன்னொரு ஆஸ்பத்திரிக்குப் போய் இன்னொரு லோறாவைக் கண்டால் என் நினைவு போக பல நாள் எடுக்காது", அவள் எடுத்தெறிந்து சொன்னாள்.

Page 111
312 A ராஜேஸவரி
"வாழ்க்கையில் உமக்கு ஏற்பட்ட விரக்தி இப்படி எல்லோரிலும் ஆத்திரத்தை உண்டாக்குகிறது" என்று அவன் பெருமூச்சுடன் சொல்வான்.
‘என்னில் உ ங் க ரூ க் கு இருக்கும் காதலோ கவர்ச்சியோ எத்தனை நாளைக்கு இருக்கும்; என் வயிற்றில் வளரும் குழந்தை பிறந்து வளர வளர அது யாரோ ஒருத்தனது குழந்தை என்பதே கங்களைத் தர்ம சங்கடத்தில் சிலவேளைகளில் மாட்டி விடலாம். என்னில் நீங்கள் வைத்திருக்கும் அன்புக்காக உங்களை அப்படித் தர்மசங்கடமான நிலைக்கு நா ன் மாட்டிவிடத் தயாரில்லை. எனக்கு இதுவரை ஒரு ஜீவனும் இல்லை அன்புதர. ஆனால் என் வயிற்றில் இருக்கும் குழந்தை பிறந்து தன் வழி பார்த்துப் போகும் வயதுவரை அது என் துணையாய் இருக்கும்"
இல்லாமையிலும் பெரிய கொடுமை ஒருத்தரும் துணையில்லை என்பதுதானோ! அவள் அழுதாள்.
அவள் அழ அவன் கலங்கும் கண்களுடன் பார்த்துக் கொண்டிருந்தான்.
வாழ்க்கையில் ஏற்பட்ட கொடிய அனுபவங்களின் தாக்கம் அவளை இப்படி விரக்தியும் வேதனையும் ப வைத்துவிட்டதென்று அவனுக்குத் ரிெதயும்.
கானல் நீரை நம்பித் தாகம் தீர்க்கலாமா? மைரா வீட்டுக்கு லோறா போகும் அ ன் று மால்ககம் வந்திருந்தான்,
இருவரும் அ தி க ம் கதைத்துக்கொள்ளவில்லை. அவளின் பொருட்களை காரில் ஏற்றிக்கொண்டு மைரா வீட்டுக்குக் கூட்டிக் கொண்டு போனான். *
லோறா யாருக்கும் சொல்வதுபோல் "தாங்ஸ்’ என்றாள். அவன் ஒரு தடவை அவளை உற்றுப் பார்த் தான். நீண்ட இரவுகளும் அவள் அறையின் நெருப்

தேம்ஸ் நதிக்கரையில் A 23
படுப்பும் லோறாவின் பெருமூச்சுக்களும் அவன் மனத்தில் இன்னும் சில காலம் நிலைத்து நிற்கலாம்.
இப்போதெல்லாம் ஏதோ ஒரு வெறி லோறாவுக்கு, வயிற்றில் குழந்தை உதைக்கும் ஒவ்வொரு தரமும் அதன் தகப்பனில் உள்ள ஆத்திர த் தி ல் கடிதம் கடிதமாக எழுதிக் குவித்தாள்.
பதில் கிடைக்கப் போவதில்லை என்று தெரியும். ஆனாலும் எழுதினாள்.
ஏனோ - எதிலோ ஒரு வெறி. செந்திலிடமிருந்து கிட்டத்தட்ட ஒரு தகவலும் இல்லை
விம்பிள்டனில் - ரூட்டிங் மார்க்கெட்டில், யாரும் தெரிந்த இலங்கைத் தமிழர்களைக் கண்டால் இவளை ஒரு மாதிரிப் பார்த்துவிட்டுப் போகிறார்கள். அவர்கள் கற்பையும் கடவுளையும் நம்புபவர்கள். இப்படியான பெண்களைக் காண்பதே அசிங்கமென நினைப்பவர்கள் என்று முகத்தில் ஒட்டியிருந்தது.
தன் ஆத்திரத்தை லோறா காட்டிக்கொள்ளவில்லை. ஆனால் மைரா யாரும் ஏதும் கேட்டால் பேசிவிடுகிறாள்.
மைராவுக்கு ஒருவிதத்தில் மகிழ்ச்சியாக இருக்கிறது. செந்தில் இந்த அளவில் என்றாலும் தன் நரிக்குணத்தைக காட்டியது. இல்லாவிட்டால் லோறா வாழ்க் கை எல்லாம் நரகவேதனைப்பட்டிருப்பாள். ஆனால் அதைப் பற்றிச்சினேகிதிக்கு எதுவும் சொல்லவில்லை.
வின்ரர் முடிந்து மெல்ல மெல்ல உலகம் வெளிறத் தொடங்கியது.
லண்டன் முழுக்க "டவோர்டில்' பூக்கள். தெருக்கள் தோறும் 'ஸெரிபுலோசம்". மக்களும் ஓவர்க் கோட்டுக் குள்ளால் வெளி ப் பட் டு மூகத்தைக் காட்டிக் கொண்டார்கள்.
G-14

Page 112
2. A prOgiva
செந்தில் வருவான் என்ற நம்பிக்கை யில்லாமல் போனபின் அதைப்பற்றி மனம் விட்டுக் கதைப்பாள்.
மனத்துள் அசைபோட்ட துயர் என்ற படியால் வாய் விட்டுச் சொல்லும் போது ஒன்றும் பெரிய துக்கமாக இருக்கவில்லை. ஒத்திகை எத்தனையோ தரம் பார்த்தா கிறது. இடுப்பு நோவும், வயிறு நோவும் என்று எத்தனையோ தடவை இரவில் எழும்புவாள்.
சிலவேளை ஏதோ நினைவில் பக்கத்தில் செந்திலைத் தேடுவாள்.
நினைவு கசக்கும். யோகனிடமிருந்து கடிதம் வந்தது. மைரா வாய்விட்டு அழாதவள் அன்று குலுங்கிக் குலுங்கி அழுதாள். "டானியலை பெல்வாஸ்ட் தெருவில் நாயைச் சுடுவதுபோல் சுட்டுப் போட்டார்கள், ஏகாதி பத்திய வெறியர்கள். அன்றும் தனியாக இருந்தேன். இன்று என் கணவரை கொழும்பில் கைது செய்திருக் கிறார்களாம், ஏதோ சாட்டுச் சொல்லி. என்ன செய் வேன்" எனக் கதறினாள்.
யோகன் அப்படியாகத் துன்பச் செய்தியை எழுதி யிருக்கும் போது செந்திலைப் பற்றிக் கேட்பது அநாகரீக மாகப் பட்டது. ஆயினும் யோகனின் கடிதத்தை வாசித் தாள் மைரா. யோகன் இலங்கையில் தமிழர் பிரச்ச னையைப் பற்றி  ைம ரா வுக் கு விளக்கமாக எழுதியிருந்தான் . . . .
"இங்கு தமிழர் படும்பாடு சொல்லத் தரமன்று. அடிப்பட்ை மனித உரிமைகள்கூட இல்லாமல் நசுக்கப் படுகிறார்கள். அரசர்ங்கத்தை எதிர்ப்போர் கேள்வி எதுவும் இலலாமல் உள்ளே தள்ளப்படுகிறார்கள். பொது வுடமைவாதிகள்; முற்போக்கு வாதிகள் என்று சொல்ப வர்கள் தமிழர் பிரச்சினைகளைக் கைவிட்டுவிட்டார்கள். .ே துசாரிகள் தெற்கில் ஒன்றும் வடக்கில் ஒன்றும் கன்தக்

தேம்ஸ் நதிக்கரையில் A 215
கிறார்கள். அதன் அடிவருடிகளான தமிழ் இடதுசாரி களில் சிலர் எங்கள் நாட்டுக்குப் பொருந்தாத தத்துவம் கதைத்து மக்களைக் குழப்புகிறார்கள். அவர்களுக்குத் தெரியவில்லை சாதாரண அடிப்படை மனித உரிமை மறுக்கப்படுவது தமிழன் என்ற குற்றத்தால் என்பது.
ஒடுக்கப்பட்ட - அடக்கப்பட்ட மக்களுக்காகவும் பிரச்சினைகளுக்காகவும் போராட வேண்டிய இடதுசாரி கள் அந்தப் பிரச்சினைகளையே தங்கள் சுயநலத்தின் வளர்ச்சிக்கு முதலீடாக பயன்படுத்துகிறார்கள்,
இந்தக் கொடுமைகளை எதிர்க்க ஒரு இளைஞர் கூட்டம் கொதித்தெழுந்திருக்கிறது. அவர்களுக்கு யாரை நம்புவது என்று தெரியவில்லை. இதுவரை இருந்த தலைமை வெறும் வரட்டு முதலாளித்துவ சட்டத்தரணி கள். சத்தியாக்கிரகத்தால் தேசியப் பிரச்சினையைத் தீர்க்கப் புறப்பட்ட நவீன காந்திகள்.
இவர்களால் எந்த இனப் பிரச்சினையோ வர்க்கப் பிரச்சனையோ தீரப் போவதில்லை. இவர்கள் போராட்டம் வெறும் புத்தகத்தில். அதை எதிர்க்கும் கூட்டம் ஒன்று உருவாகிறது. இந்தத் தலைமைகள் தூக்கி எறியப்படும். என் நிலைப்பாட்டை இவ்விடம் சொல்ல முடியாது. லண்டனுக்குத் திரும்பி வந்தால் சந்திக்கிறேன்." * . . . .
கடிதத்தின் கடைசிப் பக்கத்தை மைரா மறைத்து
வைத்ததை லோறா காணவில்லை. அது செந்திலின் கலியாண அழைப்பிதழ். v ܝ
அடுத்த நாள் படுக்கையால் எழும்பும்போது வயிறு நொந்துகொண்டிருந்தது.
வெளியில் நல்ல வெய்யில், மைரா துவண்டுபோய்ப் படுத்திருந்தாள். இரவிரவாக ஆழுதிருப்பாள். கண்கள் வீங்கியிருந்தன. ** ', '

Page 113
210 () ராஜேஸ்வரி
"எனக்குத் துணையாய் இருப்பாய் என்று நான் நினைத்தால் உனக்கு நான் துணையாய்இருக்க வேண்டி யுள்ளது என லோறாஅன்புடன் தன் சினேகிதிக்குச் சொல்லிக் கொண்டிருக்கும்போது கதவு மணி அடிப்பது கேட்டது. லோறா எழுந்துபோய் கதவைத் திறந்தாள்.
யசோதரன் நின்று கொண்டிருந்தான். இவளையும் இவள் தோற்றத்தையும் கண்டு யசோ ஒருகணம் திடுக் கிட்டான். முகம் பேயடித்தது போல் இருந்தது. செந்தில் இந்தக் கோலத்தில் லோறாவை விட்டு விட்டுப் போவான் என்று படு பிற்போக்குவாதியான யசோகூட மனம் புண்பட்டான்.
"இதைச் செந்தில் கொடுக்கச் சொன்னான்" யசோ ஒரு கடிதத்தைக் கொடுத்தான்.
"தாய் தகப்பனைத் துக்கப்படுத்த நான் விரும்ப வில்லை. தயவுசெய்து. என்னை மறந்துவிடு. நீர் செலவழித்த காசுக்குரிய செக்கை இத்துடன் அனுப்பி வைக்கிறேன்."
"செந்தில்"
யசோ நிற்பதைக்கூட மறத்து அலறினாள். சினேகிதி
வந்து அணைத்துக் கொண்டாள்.
வைகாசி மாதக் காலையில் ஒரு நாள் தோரணம் கட்டி, மாலை தொங்கவிட்டு, புரோகிதர் நாள் பார்த்து நட்சத்திரம் பார்த்த சுபமுகூர்த்தத்தில் அம்மி மிதித்து அருந்ததி பார்த்து செந்தில் யாரோ ஒருத்திக்குத் தாலி கட்டிக் கொண்டிருந்த அதேவேளை, லண்டனில் தோமஸ் ஹொஸ்பிட்டலில் தன் வயிற்றில் இருந்து ஒரு உயிர் ஆவென்று அலறிக்கொண்டு பிறந்ததை நீர் வழியும் கண்
களுடன் தாய் பார்த்துக்கொண்டிருந்தாள்.
顿,骨 鲁


Page 114


Page 115
யவர். மூன்று குழந்தைகளுக்குத்
ஒரு கோடைவிடுமுறை,
- லகமெல்லாம் வியாபாரிகள்
.ܡܸܪ
கனவே வெளிவந்து வ்ெற்றவர். இலங்கை, லண்ட சீனத்ாவிலிருந்து வெளிவரும் ஏராளமான சிறுகதைகள், எழு
தேம்ஸ் நதிக்கரையில் எ இலங்கையிலிருந்து சென்று : முயலும் தமிழ் இளைஞர் வாழ்க்கையைச் சித்தரிக்கும் ச இவ்வாலிபர்களது பொருள வாழ்வில் ஏற்படும் முரண் இந்நர்வல் படம் பிடிக்கிறது நிலப்பிரபுத்துவ கருத்தியல்க முதலாளித்துவ சமூகத்தில் ஏற்படும் ஈடாட்டமான மனப் முறைகளையும் செந்தில் வேல் நாவலாசிரியர் சிறப்பாகக் சித்த
 

திருமதி ராஜேஸ்வரி U T Sò e ù i U Lo souf u tb இலங்கையின் கி ழ க்கு மாகாணத்தைப் பிற ப் பிடமாகக் கொண்டவர். யாழ்ப்பாணத்தில் கல்வி முடித்து ல ண் ட ன் மாநகரை வசிப்பிடமாகக் கொண்டு வாழ்பவர். அங்கு திரைப்படத் துறை யில் கற்றுப் பட்ட ம் பெற்றவர்.  ெப ண் விடுதலை இ ய க் க ங் களில் மிக்க ஈடுபாடுடை
தாயாவார்.
தில்லையாற்றங்கரையில், என்ற இவரது நாவல்கள் எழுத்துலகில் பாராட்டுப் ன், ஐரோப்பிய நாடுகள்,
சஞ்சிகைகளில் இவரது த்துக்கள் வெளிவந்துள்ளன." ன்ற இந்நாவல் 1970 களில் உழைத்து உய்ர்கல்வி கற்க களது லண்டன் மாநகர சமகால வரலாற்று நாவல். ாதார, அரசியல், சமூக பாடுகளை யதார்த்தமாக
யாழ் கிராமத்திலிருந்து ஒருடன் லண்டன் மாநகர நுழைந்து வாழும் வேளை போராட்டங்களையும் |- என்ற கதாபாத்திரம் மூலம்
4
ரித்துள்ளார். இச்