கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: தில்லையாற்றங்கரை

Page 1


Page 2


Page 3
FHILLAIYARRANKARAl (Tamil Noval)
Rajeswari Balasubramaniam
C) Author First Edition; September, 1987
Published by: Chinthanaiyagam 15, Sadulla Street, T. Nagar, Madras-600 017.
Printed by :
Moovendhar Achagam, Madras-600 014.
Price Rs. 27-00

நான் பிறந்த கோளாவில்
ஊர் மக்களுக்கு அர்ப்பணம்

Page 4

என்னுரை
லண்டன் கன்ன்பரி வீதிக்கும் இலங்கையின் அக்கரைப் பச்சைச் சேர்ந்த சிறு கிராமமான கோளாவிலுக்கும் எத்தனையோ வித்தியாசம். −
ஒவ்வொரு நாளும் நான் கடந்து போகும் தேம்ஸ் நதிக்கும் ஒரு காலத்தில் சேறு புரள சிரித்து நீச்சலடித்த தில்லையாற்றுக்கும் ஒரு தொடர்பும் இல்லை. ஆனல் நீண்டோடும் தேம்ஸ் நதியைப் பார்க்கும் போது நினைவலைகள் தில்லையாற்று மணற்பரப்பில் தவழ்கிறது. நிலவுக்குத் தாலாடி நெஞ்சுக்குள் குளிர்தரும் தென்னேலை சர சரப்பை இருபத்தைந்து வருடங்களுக்குப் பின்னும் மறக்க முடியாது.
மல்லிகையுதிர்வது போல் பணிக்கட்டிகள் கொட்டும் போது பெரியக்கா வீட்டு கொடி மல்லிகையின் கொத்தான பூக்கொத்துகள் ஞாபகம் வருகின்றன.
**தில்லையாற்றங்கரை" 1957 ம் ஆண்டிலிருந்து 1962 ம் ஆண்டு வரையுள்ள ஐந்துவருடகாலத்தில் நடந்தது. குழந்தைப் பருவத்தைத் தாண்டி **குமரியாகிக்" கொண்டிருக்கும் மூன்று பெண்களைப் பற்றிய கதையிது. மூன்று பெண்கள், மூன்று தலைமுறைகளைகளின் சட்ட திட்டத்தை எதிர்த்துப் போராடியதைப் பற்றி, அல்லது போராடியதாக நினைத்ததைப் பற்றிய ஒரு நாவலிது.
பாத்திரங்கள், சம்பவங்கள் பெரும்பாலும் கற்பனைகள் தான். ஆனல் இந்த நாவல் எழுதக் காரணமாக அமைந்த அடிப்படைகள் கற்பனையில்லை,

Page 5
yi
சட்டங்களுக்கும் சம்பிரதாயங்களுக்கும் பின்னல் நடக் கும் கொடுமைகளை இந்த நாவல் ஒரு சில இடங்களில் வெளிப்படுத்துகிறது.
கால் நூற்ருண்டுகளுக்கு முன்னல் நடந்த சில சம்பவங்கள் இன்று நினைத்தாலும் நேற்று நடந்தது போலிருக்கிறது.
கதையில் வரும் பெண்கள் கெளரி, மரகதம், சாரதா எல்லோரும் இப்போது வயது போன "அம்மாக்கள்". அவர்கள் இந்தக் கதையில் என்ன வெல்லாத்தையும் அனுபவித்தார்களோ அவர்கள் குழந்தைகள் இப்போது அதையே அனுபவிப்பார்களோ எனக்குத் தெரியாது.
எனக்குத் தெரிந்த என் கிராமம் சிங்கள அரசாட்சி யால் சிதைந்துவிட்டதாகவும், இந்தக் கதையில் வரும் பலர் சிங்கள ராணுவத்தினரால் கொலை செய்யப்பட்ட தாகப் பத்திரிகை மூலம் கேள்விப்பட்டபோது உயிரே துடித்தது.
நாகரீகம் என்ற போர்வைக்குள் அநாகரீகமாகப் பழகத் தெரியாத மக்கள் இந்த நாவலில் வரும் பலர். இலங்கை சுதந்திர மடைந்து எட்டுவருடங்களின் பின் கதையாரம்பமாகிறது. அன்றிலிருந்து இன்று வரை தமிழர்களின் வாழ்க்கை எப்படியாகிப் போனது என்று, இந்தியா, இலங்கை வாழ் தமிழர்களுக்குத் தெரியும். அவர்களின் அரசியற் போராட்டத்தின் ஆரம்ப நிலை இந்த நாவலில் ஒரு துளி கலப்பும் இல்லாமல் வருகிறது.
இந்தக் கதை ஒரு இளம் பெண்ணின் கண்ணுேட்டம், தத்துவங்களும், சம்பிரதாயங்களும் அவள் கண்களுக்கு எப்படி ஒப்பமாகவும் குரூரமாகவும் தெரிந்தது என்பதை என்னுல் முடிந்த வரை விளக்க முயன்றிருக்கிறேன்.
தமிழ் இலக்கிய உலகம் எவ்வளவோ வேறுபட்டு விட்டது. இருபத்தைந்து வருடங்களுக்கு முன் நான் படித்த தமிழ் நாவல்களின் கதை ஞாபகமிருக்கிறது. ஆனல் தமிழ் நடையோ, இலக்கியப் பார்வையே ஒன்றும் ஞாபகமில்லை.

vii
இப்போது வரும் தமிழ் நாவல்களைப் படித்தால் அடுத்த நாள் ஒன்றுமே ஞாபகம் இருக்க மாட்டேன் என்கிறது.
இந்தக் கதையில் வரும் கெளரி போல் பெண்கள் தற்போதைய தமிழ் நாவல்களைப் பற்றி என்ன நினைப் பார்களோ தெரியாது.
எனது ஞாபகத்திலிருந்த எனது கிராமத்தையும் மனிதர்களையும் வைத்து நாவல் எழுதமுனைந்தேன். சிறு வயதில் தமிழ்ப் பேச்சுப் போட்டி கட்டுரைப் போட்டிகளில் பரிசு வாங்கியபடியாலோ என்னவோ எனது தமிழ் அறிவு பற்றி எனக்குப் பெரிய தலைக்கணம். அதே யோசனை யில் இந்த நாவலைத் தொடங்கியதும் தான் தெரிந்தது எனது முட்டாள்தனம் தமிழில் ‘இலக்கியம்' படைக்கு மளவுக்கு எனக்குத் தமிழ் மறந்து விட்டது. இந்த நாவல் 1982 ம் ஆண்டில் எழுதி முடிக்கப்பட்டது. கிட்டத்தட்ட 3 வருடம் எடுத்து எழுத. 83 ம் ஆண்டு ஜீலை மாதம் தமிழர் களுக்கு எதிராகத் தொடங்கிய சிங்கள பயங்கர வாதத் தினுல் இந்த நாவலைப் பிரசுரிக்க இன்று வரை முடியாமல் போய்விட்டது.
82 ம் ஆண்டு எழுதிய நாவலைத் திருப்பி ஒருதரம் எழுத 1985 ம் ஆண்டு நடுப்பகுதியில் முயற்சித்தேன். கடைசி மகன் சேரன் தத்தித் தத்தித் தவழ்ந்து வந்து எழுதிய பக்கங்கள் பலவற்றை நாசம் பண்ணியதால் என் முயற்சியைத் தொடரவில்லை. திருப்பி எழுதத் தொடங் கினல் என் தமிழ் இன்னும் படுமோசமாயிருக்கலாம்.
லண்டனிலிருந்து கொண்டு இலங்கையைப் பற்றி ஏன் எழுதித் தலையை உடைக்கவேண்டும் என்று கிண்டலடிக்க எத்தனையோ பேரிருக்கலாம். எதை மறந்தாலும் எனது பிறந்த மண்ணை மறக்க முடியாது. அருமையான தில்லை யாற்றங்கரை, அதன் கரையிலமைந்த என் கிராமம், கிராமத்துக்கே உரித்தான சில பழக்க வழக்கங்கள், பண் பாடுகளை என்னுல் மறக்க முடியாது. எனக்கு ஞாபக மானவற்றை என் கிராமத்தை நான் தெரிந்து கொண்ட விதத்தை எழுத்தில் படைக்கவேண்டும் என்ற ஆவலில்

Page 6
٢ کا
viii
இந்த நாவல் எழுதத் தொடங்கினேன். கெளரியோடு சேர்ந்து பழகிய மக்களை மற்றவர்களுக்கு அதிமுகப்படுத்த வேண்டும் என்ற ஆசைதான் எழுதப் பண்ணியது. மரகதத்தை அழப்பண்ணியவர்களை, அழியப் பண்ணிய வர்களை அவள் போன்ற தமிழ்ப் பெண்கள் ஆவேசத்துடன் எதிர்க்கவேண்டும் என்றுதான் இந்த நாவல் எழுதினேன்.
உலகத்தை அலட்சியம் பண்ண சாரதா போன்ற பெண்கள் பழகிக் கொள்ளவேண்டும் என்ற ஆசையிற்தான் இதை எழுதினேன்.
இனத்தையும், சாதியையும், மதத்தையும், மொழியை யும் தங்கள் சுய நலத்துக்கும் முன்னேற்றத்துக்கும் பாவிக் கும் ஒரு சிலர் இருபத்தைந்து வருடங்களுக்கு முன்னேயே தங்கள் கைவரிசைகளைக் காட்டத் தொடங்கிவிட்டார்கள் என்பதைத் தமிழ் இளம் தலைமுறைக்குச் சொல்லத்தான் இந்த நாவலை எழுதினேன்.
மட்டுப்படுத்தப் பட்ட தமிழ் அறிவு எழுத்துத் திறமையை அளவாக்கிவிட்டது. குறைகளை எழுதுங்கள். எங்கேயோ இருந்து கொண்டு என் இனிய தமிழ் இளம் சமுதாயத்துக்கு இதை எழுதுகிறேன். ஏற்றுக்கொள்ளவும். 1981 ல் இந்தக் கதையின் மூலப் பிரதியை வாசித்து உதவி செய்த டாக்டர் சிவசேகரம், நண்பர் நேமிநதன் பிரசுாரத்திற்கு உதவியாய் இருந்த டாக்டர் பூரீதரன். நண்பர் ரங்கன் பிரசுர வேலையை முழுவதும் தன் பொறுப்பில் எடுத்து இப்புத்தகத்தை இந்தியாவில் வெளியிட உதவிசெய்த நண்பர் இரா. பாண்டியன் அவர் களுக்கும் என் நன்றிகள்.
3. ჩon ry/ St . Loriddn hl A ராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம்
tember 1987
oð (ee/ •

தில்லையாற்றங்கரை
AMSAMAA ASASASASASASASASASASASASAS ASASASASASASASASAMAMSAMAASAMSAMAALASMSMSMSMASMASMS SAMSqSMMMSMMMSAS S S SqSMMSSMSMSLMS MSMMSMMSSSS
1.
பெரியம்மா வீட்டில் கேட்கும் கலகலப்பான பேச்சுக் குரல்களும் சிரிப்பொலியும் கெளரியின் கவனத்தை வீட்டு வேலைகளிலிருந்து திருப்புகின்றன. எப்போது ஓடிப்போய் அவர்களுடன் சேருவோம் என்றிருக்கிறது அவளுக்கு. சொந்தக்காரப் பெண்களின் சந்தோசமான குரல்கள் நடுவில் பெரியப்பா மயிலுப் போடியின் அதிகாரமான அதட்டல்கள் அதிர்ந்து கேட்காமலில்லை. பெரியப்பா சாதாரணமாகவே சத்தம்போட்டு அதிகாரத் தோரணையில் கதைப்பார்.
இன்று அவர்மகள் சாரதா பெரிய பிள்ளையான" சந்தோசத்தில் இன்னும் கூட அதிர்ந்து வெடித்துத் தன் சந்தோசத்தையும் அத்துடன் தான் தன் வீட்டுக்கு மட்டு மல்ல, வந்திருக்கும் (பெரும்பாலான) சனங்களுக்கும் பெரிய மனிதன் என்று காட்டிக் கொள்கிருர் என்று கெளரிக்குத் தெரியும். பெரியப்பா வீட்டில் இனிக் கொஞ்ச நாளைக்குத் கொண்டாட்டமே நடக்கும்.
சாரதாவின் மூத்த பெண் சாரதா. கிராமத்தில் பெண்கள் புத்தியறிந்தால்" அதை ஒரு குடும்ப விழாவாகவே கொண்டாடுவார்கள். தன் பெருமையையும் செல்வாக்கையும் காட்ட எப்போது சந்தர்ப்பம் வரும் எ ன்று பார்த்திருக்கும் பெரியப்பா சந்தர்ப்பத்தை விடுவாரா?

Page 7
2 தில்லையாற்றங்கரை
காலையில் பெரியம்மா வீட்டில் குரவை ஒலி போட்டு வீட்டில் பெண் புத்தியறிந்ததை அறிவித்தார்கள். குரவை ஒலிக்கு முதலே கெளரியின் அம்மாவும் அப்பாவும் வயல் பார்க்க போய்விட்டார்கள். ஆச்சி பெரியம்மா வீட்டில் வேலையாய்ப் போய்விட்டார். கெளரிதலையில் எல்லா வேலையும், வானம் இருண்டு முகில்கள் திரள்வதைப் பார்த்தால் இன்னுமொரு பெருமழை பிடிக்கும் போலிருக் கிறது. நேற்றுத்தான் மழை விட்டது. வானம் இருண்டு கொண்டு வருகிறது. போனக் கிழமை தொடங்கிய மழை விட முதலே வட்டி தொட்டிகள் நிரம்பி ஓடை, களப்பில் வெள்ளம் புரண்டு, தில்லையாறு பெருகி சின்ன முகத் துவாரம், பெரிய முகத்து வாரங்கள் உ  ைட ய ப் போகின்றன.
வீட்டில் நின்று பார்த்தாலே வெள்ளம் பரவிய களப்பு தெரிகிறது. காட்டு வெள்ளம் (அள்ளிக் கொண்டு வந்த மரங்களும், கட்டைகளும், பூக்களும், செடி கொடிகளும் அரவையைண்டிய வேலிகளில் அடைபட்டுக் கிடக்கின்றன,
இன்னுமொரு வெள்ளம் வந்தால் ஊருக்குள் வெள்ளம் வரலாம். ஆச்சி சொல்லிக் கொண்டிருப்பதுபோல் கேல்லோயா அணைத்திட்டம் உடைப்பெடுத்த மட்டக் ஆளப்பு எட்டுப் பகுதியுமே அள்ளுப் பட்டுப் போகலாம்!
ஆச்சிக்கு எப்போதும் அபாரக் கற்பனை
எதற்கெடுத்தாலும் கேள்வியும் மறு மொழிகளும் ஆச்சியின் வாயிலிருந்து விடாமல் வந்து கொண்டிருக்கும், ெேகளரி என்ன இன்னும் நெல்லுப் போடலியோ" ஆச்சி பெரியம்மா வீட்டிலிருந்து சத்தம் போட்டு இவளை விசாரிக்கிருள்.
கெளரி அவசர அவசரமாய் சாக்கு விரித்து, அதில் உரலை நட்டு, பெட்டி சுளகை உரலுக்குப் பக்கத்தில் வைத்து விட்டு உரலில் நெல்லைப் போடுகிருள்.

ராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம் 3
வெயிலில்லாத படியால் நெல் அவித்துக் காய வைக்க முடியவில்லை.
பச்சை நெல்லை உரலிலில் போட்ட படி யோசிக்கிருள் கவனமாய்க் குத்தா விட்டால் அரிசிக்குப் பதிலா குருணனும் மாவும்தான் மிஞ்சும், ஆச்சியிடம் நல்லபேச்சும் கிடைக்கும்" உரலில் நெல்லுப் போட்டு மு டி ய உலக்கையைத் தூக்கியவள் தெருவில் கேட்கும் சிரிப்பொலிகளில் தலையைத் திருப்பிப் பார்க்கிருள்.
பெரிய அண்ணுவும் அவனுடன் மைத்துனர் செல்வ ராசாவும் இன்னும் சில வாலிபர்களும் சிரித்துப் பேசிக் கொண்டு வருகிறார்கள். அண்ணு கையில் பாளை வெட்டும் கத்தி. பெரியாளான பெண் வீட்டுக் கூரை முடிவைக்க இவர்கள் கமுகம் பாளை தேடித் திரிகிருர்களாக்கும்! அவள் யோசித்த படி உலக்கையைப் போடுகிருள்.
பக்கத்தில் 6கிக்கி, கிக்கி", என்ற சிரிப்புக் கேட்டுத் திரும்பிப் பார்த்தாள்
பாலிப் போடிக் கிழவன் தன் அரைகுறைப் பொக்கை வாயைத் திறந்து சிரித்தபடி இவளை நோக்கி வந்து கொண் டிருந்தான். கிழவன் முகத்தில் குறும்பு நடையில் தள்ளாட்டம்.
கிழவன் என்னலும் பகிடி சொல்லப் போகுது கிழவனைக் கண்டும் காணுதபடி நெல்லுக் குத்துவதில் கவனத்தைச் செலுத்துகிருள்.
அண்ணு, கழன்று கிடந்த கம்பி வேலியால் ஏறிக் கொண்டு இவர்கள் வளவுக்கு வரவும்'அவனைத் தொடர்ந்து மற்ற வாலிபர்கள் பின் தொடர்ந்தார்கள்.
வருபவர்களில் ஒரு வாலிபன் கெளரியின் முறை மச்சான் செல்வராசாவைக் கண்டதும் பாலிப் போடிக் கிழவன் ஏதும் வம்புப் பாட்டுப் பாடலாம்.

Page 8
4. தில்லையாற்றங்கர்ை
என்னடா பொடியன்கள் பாளையா வெட்டப் போறியள்' கிழவனின் விசாரணைக்கு ஒருவரும் பதில் சொல்லவில்லை. கெளரியின் கிணற்றடியில் நிற்கும் கமுக மரங்களை நாடி அவர்கள் போய்க் கொண்டிருந்தார்கள்.
கடைசியாய்ப் போய் க் கொண்டிருந்த செல்வ ராசாவைக் கண்டதும் பாலிப் போடிக் கிழவன் கவி பாடினுன்
"கோயிலடிப் பக்கத்தில் குரவை வெடிச் சத்தம் போட்டு மதினி சமைந்ததென்று மச்சாள்மார் கூவுகினம்"
கிழவனின் கவியைக் கேட்டுச் செல்வராசா தர்ம சங்கடப் படுவதைப் பார்த்து வாலிபர்கள் இன்னும் கூடச் சிரித்தார்கள். கமுக மரம் ஈரம் பிடித்து வழுக்கிக் கொண் டிருந்தது. செல்வராசா சரத்தை மடித்துக் கட்டிக் கொண்டு ஏறத் தொடங்க முதலே வழுக்கி விழுவதைப் பார்த்து எல்லோரும் ஆரவாரமாய்ச் சிரித்தார்கள்.
கெளரி இவர்களைப் பார்த்தும் பாராததுமாய்த் தன் வேலையில் ஈடுபட்டாள். ஒன்று நெல் குற்றி முடிக்க வேண்டும். அடுத்தது கிழவனின் வம்புப் பகிடிகளிலிருந்து தப்ப வேண்டும்.
செல்வராசா கமுக மரத்தில் ஏறிய பாடாய்த் தெரிய வில்லை. பெரிய பிள்ளையாகும் பெண்ணின் முறை மைத்துனன் தான் கூரை முடிவைக்கப் பாளை எடுத்துக் கொடுப்பது அந்த ஊர் வழக்கம். செல்வராசா சாரதாவுக்கு மட்டுமல்ல கெளரிக்கும் தான் மைத்துனன். சாதாரவின் தகப்பன் மயிலுப் போடியும் கெளரியின் தகப்பன் புண்ணிய மூர்த்தியும் சகோதரர்கள்.
பாடசாலையில் யாரும் ஏதும் பகிடி சொல்லும் சந்தர்ப்பத்தில் சாரதா எப்போதும் செல்வராசாவைக் கெளரியுடன் சேர்த்துப் பகிடி பண்ணுவாள்.

vorgevuf, umsosüflrudenflub
கெளரி மனதுக்குள் சிரித்துக் கொண்டாள். உமக்குப் பாக்ள வெட்டிய மச்சான் ஆர் தெரியுமோ' என்று சாரதாவைப் பகிடி பண்ணிச் சிரிக்கலாம்.
போனமாதம் கெளரியின் மாமி மகள் மரகதம் பெரிய பிள்ளையானள். அவளுக்குப் பெரியண்ணுவைச் சொல்லிப் பகிடி பண்ணினுள் சாரதா. w
.கெளரி: சாரதாவையும் மரகதத்தையும் விட ஒரு வயதுதான் இளையவள். இனிக் கெளரியும் பெரிய பிள்ளை யாகலாம். அத்துடன் அவர்கள் மூவரும் பாடசாலைக்குப் போகாமல் விடலாம்.
பெரிய மாமியின் வசந்தா போல்தாங்களும் பட்டணம் போய்ப் படிக்க செளரிக்கும், சாரதா, மரகதத்துக்கும் ஆசைதான். ஆனல் இவர்கள் வீடுகளில் பெரியபிள்ளையான பெண்கள் தூர இடம் போய்ப் படிப்பதை யாரும் பொருட் படுத்திக் கனைக்கும் அறிகுறி ஒன்றுமில்லை.
ஆச்சிதான் பெரிய மோசம்" கெளரிக்கு யோசனை படர்கிறது. ஆச்சிக்குப் பெண்கள் பாடசாலைக்குப் போவதே பிடிக்காது.
பாடசாலை தொடங்க முதல் கெளரி பெரிய பிள்ளை யானுல் அம்மாவும் ஆச்சியும் என்ன சொல்வார்களோ தெரியாது. பாடசாலைக்குப் போகாமல் நிற்பதை நினைத்து நெஞ்சுக்குள் ஏதோ அடைப்பது போலிருக்கிறது.
படிக்க வேண்டும். ஒரு காலத்தில் தாங்களும் தங்கள் பழைய ஆசிரியை புனித மலர் மாதிரியில் படிப்பிக்கப் போக வேண்டும் என்று எத்தனை கற்பனை செய்தார்கள்.
இனிமேல் அதெல்லாம் நடக்காமல் விடலாம் என்ற
நினைவு வந்ததும் இந்த நேரம் பார்த்துப் பெரிய பிள்ளை யாகிப் போன சாரதாவில் கெளரிக்குக் கோபம் வருகிறது.

Page 9
தில்லையாற்றங்கரை
குத்துப் பட்ட நெல்லை உரலால் இறக்கியபடி யோசிக்கிருள் சாரதாவிலோ மரகதத்திலோ கோபித்து என்ன பிரயோசனம்? இயற்கையான மாற்றங்களை யாரால் தடுக்க முடியும்?"
கிணற்றடியில் இன்னும் ஆரவாரம். பாளை வெட்டுப் படவில்லை.
இந்தக் கூத்தாடிகள் எப்போது பாளைவெட்டிக் கொண்டு போய்க் கொடுக்கப் போகிருர்கள்? பெரியம்மா வீட்டில் வண்ணுர நாகன் கூரை முடிக்குச் சேலைமாராப்பை அவிழ்ப்பது தெரிகிறது.
கெதியாக நெல்லுக் குத்தி வைத்து விட்டு, கொஞ்சம் விறகு கொத்தி வைத்து விட்டுப் பெரியம்மா வீட்டுக்குப் போக வேண்டும்.
கெளரி அவசரம் அவசரமாக உலக்கையைப் போடு கிருள், பேச்சை நெல்; பார்த்துப் போடு" " குரல் கேட்டுக் கெளரி நிமிர ஆச்சி நிற்பது தெரிகிறது.
பாலிப் போடிக் கிழவன் தென்னம் குற்றியில் குந்தி இருந்து கொண்டு ஆச்சிக்குச் சொல்கிருன்" இனி என்ன, கெளரிப் பெட்டையும் பக்குவப்" பட்டால் உன்ற பேத்தி மூன்று பேரும் குமரப் பிள்ளைகளாய் வீட்டுக்குள்ள இருப்பினம்"
சொல்லிவிட்டுக் கிழவன் கிக்கி கிக்கி" என்று சிரிக்கிருன். கெளரிக்குக் கோபம் வருகிறது. வீட்டுக்குள் 860) spunthl f
"என்ன இளிப்பு அப்பச்சி?' கிழவனைக் கேட்கிருள். கிழவனுக்கு விடிந்தால் பொழுது பட்டால் ஏதோ வழியில் வெறி' போட்டுக் கொள்ளும்; சும்மா சிரிக்கும்; சும்மாபாடும்.

rrëgdosuf ureos, Sirdausfush
V éFm"prá5m Goufuu 6irðar uurTør சற்தோசத்தில் பெரியப்பா கிழவனைக் கவனித் திருக்கவேண்டும். கிழவன் அரைகுறைப் பொக்கை வாயைத் திறந்து கிேக்கி கிக்கி" என்கிறது.
ஏேனடி வீட்டுக்குள்ள இரிக்கிற எண்டு சொல்ல எரிஞ்சு விழருய்' ஆச்சியின் விசாரணை இது.
நோங்கள் பள்ளிக்குப் போவம்' கிழவியையோ கிழவனையோ நிமிர்ந்து பார்க்காமல் உலக்கையைப் போட்டபடி கெளரி சொல்கிருள்.
நல்ல ஆட்டக் கதை' கிழவியும் சேர்ந்து சிரிக்கிருள்.
கிழவியின் சிரிப்பில் கெளரிக்குக் கோபம் வருகிறது. கிழவிக்குப் பெண்களின் படிப்பில் ஒன்றும் அக்கறையில்லை. பேக்குவப்பட்ட" பெண்கள் வேலி கடக்காமல் இருக்க வேண்டுமாம் கல்யாணம் செய்யும்வரை, அதுதான் ஊர் வழக்கமாம்!
கெளரியின் மைத்துணி மரகதம் பக்குவப்பட்ட அன்று இதைத் தான் ஆச்சி திருப்பித் திருப்பிச் சொல்லிக் கொண் டிருந்தாள், ஒன்றன் பின் ஒன்ருக ஆச்சியின் பேத்திகள் புத்தியறிந்து' கொண்டு வருகிருர்களாம்! இனியவர் களுக்குப் புருஷன்கள் தேட வேண்டுமாம்! ஆச்சியின் புலம்பல்களில் ஒன்று.
அப்படியான ஆச்சியிடம் போய் நான் நாலுவேலிக்குள் இருக்கப் போவதில்லை. படிக்கப் போகிறேன். படித்து ஒரு காலத்தில் இந்தக் கிராமத்து ஆசிரியையாகப் போகி றேன் என்று சொன்னல் ஆச்சியிடம் கேலிச் சிரிப்பையும் கோபக் கனலையும்விட எதை எதிர்பார்ப்பதாம்!
ஆச்சியுடன் சேர்ந்து கிழவனும் அரைகுறை வெறியில் அலட்டத் தொடங்கி விட்டது.
வாலிபர்களின் கும்மாளம் கேட்கிறது.

Page 10
தில்லையாற்றங்கரை
மாணிக்கவாசகத்தின் முகத்தில் வழக்கத்துக்கு மாமுன பிரகாசம், காரணம் கெளரிக்குத் தெரியும்,
அதைப்பற்றியாரிடமும் மூச்சுவிடப் பயம்.
ஊரில் எந்த விஷயமும் அதிக நாட்கள் ரகசியமாக இருக்காது. அதிலும் மாணிக்கவாசகம் தன் ஒட்டைச் சைக்கிளில் இந்த ஒழுங்கையாற் பவனிபோவதின் காரணத் தைத் தெரிந்து கொள்ள அதிக நாளெடுக்காது.
என்ன இருந்தாலும் பெண்களை எப்படியும் முறை மச்சான்கள் கைகளிலோ அல்லது நல்ல வருமானமுள்ள-- வசதியுள்ள ஆண்கள் கைகளிலோ ஒப்படைப்பதுதான் வயது வந்த பெண்களை வைத்திருக்கும் தாய் தகப்பன்களின் பெரிய யோசனையாயிருக்கும்.
இந்த லட்சணத்தில் யார் படிப்பை பற்றி அக்கறை எடுத்துக் கதைக்கப் போகிருர்கள்.
என்ன கெளரி:விருந்துக்கு அரிசி தீட்டுறியளோ ?
கெளரி சாடையாகத் திரும்பிப் பார்த்தாள்.
ஓட்டை சைக்கிளுக்குரியவனன
தூரத்து உறவான மச் சான் மாணிக்கவாசகம் கேட்டான். அவனுடன் நேரடியாகக் கதைத்ததாக இது வரை ஞாபகமில்லை. இப்போது அவன் ஏதோ நெருங்கிய பழக்கம்போல் கேட்ட கேள்விக்கு என்ன பதில் சொல்வதென்று தெரியவில்லை. கூச்சமாகவும் தயக்கமாகவு மிருக்கிறது.
நீயும் மச்சான்தானே, வா, வா, நல்ல நேரத்தில வந்தாய். வா, வா' கிழவன், மாணிக்கவாசகத்தின் சேர்ட்டைப் பிய்த்தெடுக்காத குறையாக இழுக்கிருன்,
உயர்ந்து நிற்கும் கமுகு மரத்தை அண்ணந்து பார்த்து * ଓଡ଼tଙtଙt அப்புச்சி பார்க்கவே பயமாய்க் கிடக்கு"

ராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம் 9
மாணிக்கவாசகம் முணுமுணுக்கிருன். கிழவன் பொய்க் கோபத்துடன் சொல்கிருன்,
எேன்னடாப்பா மரமேறிப் பாளை வெட்டத் தெரியாத ஆண் பிள்ளைகள்? மச்சாள்மார பிறத்தியான்களின்ர குடுக்கப் போறியள்'"
கிணற்றடியில் நின்ற மற்ற வாலிபர்கள் ஒகோ ஓகோ என்று சத்தம் போட்டுச் செல்வராசாவையும் மாணிக்க வாசகத்தையும் பார்த்துச் சிரிக்கிருர்கள். அண்ணுவும் பகிடியில் சேர்ந்து கொள்கிருன். மாணிக்கவாசகம் வழுக்கியும், சறுக்கியும், தடுக்கியும் தடுமாறியும் கமுகு மரமேறிப் பாலை வெட்டிக் கொடுக்க ஆச்சி அத்துடன் பெரியம்மா வீட்டுக்குப் போகிருள்.
வானம் இருண்டுகொண்டு வருகிறது. எந்த நேரமும் மழை வரலாம். கெளரி அவசரப் படுகிருள். எல்லா வேலையையும் முடித்து விட்டுப் பெரியப்பா வீட்டுக்குப் போய்ச் சாரதாவைப் பார்க்கவேண்டும்.
இனிச் சாரதா வீட்டில்தான் அடைந்து கிடக்கப் போகிருள் என்பதை நினைக்க வேடிக்கையாகவும், ஒரு விதத்தில் நம்பமுடியாமலுமிருக்கிறது.
சாரதா, கெளரி, மரகதம் மூவரும் ஒன்ருக ஒடாத ஒழுங்கையில்லை. ஏழுத மலைகளில்லை. குளிக்காத குளம் குட்டைகள் அந்த ஊரிலில்லை. இனித் தட்டுவேலிக்குள் தான் சாரதாவின் "ஒவியமா? சாரதாதான் எதற்கும், எப்போதும், தலைவி. கெளரியும், மரகதமும் தோழிகள். மூவரிலும் சாரதா தான் வடிவு என்பது உண்மைக் காரணம். அந்தக் காலத்தில் கிராமத்தையண்டிய நகரத்தில் சில வேளைக் கூடாரமடித்துச் சினிமாப் படம் காட்டுவார்கள். புதுப் பாவாடை சட்டை போட்டுக் கொண்டு தாய் தகப்பன்களுடன் போவதுண்டு. இந்த மூன்று பெண்களும் பெரும்பாலும் அண்ணுவுடன்

Page 11
10 தில்லயாற்றங்கரை
போவார்கள்-அண்ணு சாரதாவுக்குத்தான் உடன் பிறந்த அண்ணு. ஆனல் கெளரி தன் அண்ணன் மாதிரி அவனில் பாசம் வைத்திருந்தாள். கெளரி கேட்டால் அண்ணு சில வேளை சினிமாப் படத்துக்குக் கூட்டிக் கொண்டு போவான்.
வேதாள உலகம், பாதாள பைரவி, ஞான செளந்தரி படங்கள் பார்த்தது கனவு போலிருக்கிறது.
படம் பார்த்தால் இரண்டு மூன்று நாளைக்கு நித்திரை வராது. பேய்களாகவும் பூதங்களாவும் கனவு வரும்.
சில வேளைகளில் பாவாடை கட்டிய எம். ஜி. ஆரும், வாள்ச் சண்டையும் அவருடன் ஒடிப் பிடிக்கும் கதாநாயகி களும் இவர்கள் கதைகளிலும் கனவுகளிலும் நீண்ட நாட்கள் நிலைத்து நிற்பார்கள். சில வேளை இவர்களைத் தாங்களே கதாநாயகிகளாக நினைத்துக் கற்பனை செய்து பார்ப்பதுண்டு. (கதாநாயகர்கள் இல்லை?) சாரதா தான் பெரும்பாலும் கதாநாயகியாக இருப்பாள் கெளரியும், மரகதமும் தோழிகள்தான்.
சாரதா பெரியம்மாவின் சேலையைக் கட்டிக் கொண்டு, சேந்தம் பொருந்திய நந்தவனம்தனில் ஓடி விளையாடு வோம்' என்று பாடிக்கொண்டு தட்டுவேலிக்கு மறைவி லுள்ள தோடமரத்தைச் சுற்றிச் சுற்றிப் பாட, கெளரியும், மரகதமும் சேர்ந்து ஆடிப்பாடிக் கதாநாயகி"யுடன் சேர்ந்து கண்களை வெட்டிக் கழுத்தைச் சுருக்கி நாடகம்" போட்டதுண்டு. ஆளுல், எதிர்பாராத சமயங்களில் எதிர் பாராத ரசிகைகளாக அம்மாக்களையும் ஆச்சியையும் சந்திக்க நேரும்போது, நடக்கும் வரவேற்பும் வாய்ப் பேச்சும்’ எந்தக் கதாநாயகிக்கும் கிடைக்காது.
இப்போதெல்லாம் தம்பிகள் சிவாஜியின் படங்களைப் பாாத்துவிட்டு அடுக்கு மொழியில் தேர்பார் நடத்து திருர்கள், ஆச்சிக்குக் கோபம் பற்றிக்கொண்டு வரும்,

groggsfo6uf ursosůîrtoarefuub
கேலிகாலம் முத்திப் போச்சு நடக்க முதல் நாடகம் போடப் பழகி போட்டுதுகள் இந்தக் குஞ்சான்கள்" என்று தம்பிகளுடன் ஆச்சி சண்டைக்குப் போகிருள்.
ஆச்சியின் எதிர்ப்பை மீறி எப்படிப் பள்ளிக்கூடம் போவது? ஆச்சியை எப்படிச் சரிகட்டுவது?
கெளரிக்குத் துக்கம் தொண்டையை யடைக்கிறது!
பெரியம்மா வீட்டில் சாரதாவைப் பாடசாலைக்குப் போகவிட்டார்கள் என்ருல் இந்த வீட்டில் ஆச்சி என்ன சொன்னலும் அம்மாவிடம் வாதாடலாம். அம்மா ஆச்சியளவு பட்டிக்காடில்லை. சாரதாவை இனிப் பெரியம்மா பள்ளிக்கூடம் போகவிடுவாளா? சாரதாவின் அழகில் பெரியம்மாவுக்குப் பெருமை. பெரியம்மா இந்தக் கிராமத்துப் பெண் இல்லை. 1.
திருக்கோவிலைச் சேர்ந்தவள். திருவிழா ஒன்றில் பெரியம்மாவைக் கண்ட பெரியப்பா அடுத்த கிழமையே தாய் தகப்பனுடன் பெண் பிள்ளை பார்க்கப் போய் விட்டாராம். அவ்வளவு அழகாம். இப்போது ஐந்து பிள்ளைகள் பெற்றும் பெரியம்மாவின் அழகு ஒன்றும் குறையவில்லை. அவ எப்படி இருந்திருப்பா என்று சாரதாவைப் பார்த்தால் தெரியும் என்று ஆச்சி சொல் வாள்.
கல்கி" பத்திரிகையில் அமரதாரா நாவலில் மணியன் வரையும் இந்துமதி என்ற கதாநாயகியின் கண்கள் மாதிரிச் சாரதாவின் கண்கள் மிக நீண்டவையும் அழகியது Epster 6) al.
அடர்த்தியான தலைமயிர் எப்போதும் இரட்டைப் பின்னல் போடுவாள். அள்ளி வைத்தாற்போல் கூரான மூக்கு, மெல்லிய சிவந்த உதடுகள், ஆணுல் அந்த உதட்டைத் தாண்டி வரும் மொழிகள்' மிதத் தடித்தவை.

Page 12
1. Adbokour bpikuasan?
சாரதாவுக்குத்தான் பெரிய அழகான பெட்டை" என்று எல்லோரும் சொல்கிருர்கள் என்று தெரியும். அதன்
மண்டைக் கனம்" பார்வையிலேயே இருக்கும்.
உடம்பெல்லாம் அழகையும் கவர்ச்சியையும் கொடுத்த, கடவுள் சா ரதா வின் மூளைக்குள் மட்டும் ஏன் வெறுமையைப் لات الم- வைத்திருக்கிருர் என்று கெளரிக்குத் துக்கம். சாரதா படிப்பில் படு மக்கு". படிப்பைப்பற்றி ஒரு அக்கரையுமில்லை. பாடசாலைக்கு ஒழுங்காய் வருவாள். பாடசாலை என்பது அழகான பாவாடைகள் கட்டிக்கொண்டு போய் அப்பாவி மாணவர் களே வாயால் வெருட்டிப் போட்டு வரும் இடம் என்பது சாரதாவின் அகராதி.
*சாரதா கெட்டிக்காரி என்ருல்.கொழும்புக் சனுப்பி டொக்டர் பெண்பிள்ளை ஆக்கியிருப்பேன்" என்று எத்தனையோ தரம் சொல்லியிருக்கிருர் பெரியப்பா.
அவளுக்கேன் படிப்பு. கிளிப்புள்ள போல வடிவு. ஆரும் ஆசைப்பட்டுத் தூக்கிக் கொண்டு போவான்கள்" பெரியம்மாவின் பெருமை இது. ஆச்சியும் சேர்ந்து ஒத்துப் பாட்டு கிளியைத் தூக்க ஒருவர் இந்த ஒழுங்கையால ஒட்டைச் சைக்கிளில் ஊர்வலம் போவதை ஆச்சியின் ஆந்தைக் கண்கள் கவனிக்காமல் இருந்திருக்குமோ? கெளரி யோசிக்கிருள்.
சாரதாவைப் பாடசாலைக்குப் போகச் சொல்லி அண்ணு சொல்ல மாட்டாணு?
எேப்ப பார்த்தாலும் கெட்டிக்காரியாகப் படி கெளரி" என்று என்னை மட்டும் சொல்கிருன், சாரதா பிடிவாதம் பிடித்தால் அண்ணுவும் பெரியப்பாவும் கடைசி வரைக்கும் ஒன்றும் சொல்லு மாட்டார்கள்,

ராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம் 3
ஆச்சி மட்டும் வோள் வாள்" என்று கத்தாமலிருந்தால் .கெளரியின் சிந்தனை எங்கேயோ போய் எங்கேயோ வளைய முதல் மழை பொட்டுப் பொட்டென்று தலையில் படுகிறது. விறகுகள், உரல் உலக்கை எல்லாவற்றையும் தாழ்வாரத் தில் ஒதுக்கிப் போடுகிருள்.
ஆச்சி தலையில் முந்தானைச் சேலையைப் போட்டபடி ஓடி வருகிருள். ஆச்சியும் உடம்பு மட்டுமல்ல, மனமும் திடமானதோ,
ஆச்சியுடன் தேவையில்லாமல் ஒரு கதையும் வைத்துக் கொள்ளக் கூடாது" கெளரி தனக்குள் நினைத்துக் கொள்கிருள்.
என்னடி முகத்தை நீட்டிக் கொண்டு சிரிக்கிருய்" ஆச்சி தானகத் தொடங்கி விட்டாள்.
இவள் விரும்பியோ விரும்பாமலோ ஆச்சியுடன் போர் புரிந்துதான் ஆக வேண்டிக் கிடக்கிறது.
என்ன மறுமொழி சொல்வது? அவள் தனக்குள் நினைத் தாலும் கெளரி மறுமொழி ஒன்றும் சொல்லவில்லை.
புத்தியறிய வயதில என்ன புதினமான கதைகள்? பள்ளியும் கொள்ளியும், நாங்க சாமர்த்தியப்" பட்ட காலத்தில தட்டு வேலியைத் தாண்டி என்ன இரிக்கிது என்று தெரியாம வளர்ந்தம். இப்ப இந்தப் பெட்டயள் என்னடா எண்டால் ரோட்டுல ஆட்டம் போட வேணுமாம்" ஆச்சி அடுப்பை எரிக்கப் பிரயத்தப் படுகிருள்.
நனைந்த விறகு புகைந்து தள்ளுகிறது, ஆச்சி இருமுகிருள் போதாது கிழவிக்கு, கெளரி தனக்குள் முணு முணுக்கிருள்.

Page 13
6 தில்லையாற்றங்கர்ை
ஆச்சியின் கதைகள் பல ரகம்,
பேய் பூதங்கள், காண்டாமிருகம், ஏழு கடல்களுக்கும் அப்பால் பறக்கும் குதிரையில் பிரயாணம் செய்து கரடிப் பால் கொண்டு வரும் ராஜகுமாரன் எல்லாவற்றையும் பற்றி எத்தனையோ கதைகள் சொல்லியிருக்கிருள்.
அது மட்டுமல்லாமல் அவர்கள் ஊரைப் பற்றி, ஊரில் வாழ்ந்த மூதாதையர்கள் பற்றி, ஊரிலுலவும் பேய்க் கதைகள் பற்றியெல்லாம் அவள் கதை சொல்ல பிள்ளைப் பட்டாளங்கள் வாய் திறந்து, கண் பிதுங்க, உடல் நடுங்கக் கேட்டுக் கொண்டிப்பார்கள்.
ஜப்பான்காரன் கடலில் போட்ட குண்டைப் பற்றிக் கூடச் சொல் வாள். இவர்களின் கிராமத்தை அடுத்து ஒன்றரை மைல் தூரத்தில் வங்காள விரிகுடாக் கடல்,
திருகோணமலைத் துறைமுகத்திலிருந்து கரையோரமாக வந்து கொண்டிருந்த பிரித்தானியப் போர்க் கப்பல் இவர்கள் ஊர்ப் பக்கமாய்ப் போய்க் கொண்டிருக்கும்போது ஜப்பான்காரனின் பறக்கும் கப்பல்" (ஆகாய விமானம்) குண்டு போட்டு அழித்ததைப் பத்தியும் ஆச்சி சொல்லி யிருக்கிருள்.
கப்பலில் உள்ள பெரும்பாலான வெள்ளையர் செத்துப் போனர்களாம். மிகுதிப் பேரை போதாளக் கப்பல்” (நீர் மூழ்கிக் கப்பல்) வந்து காப்பாற்றியதாம். கப்பலில் எரிபடாமல் கிடந்த சாமான்களை ஊர் மக்கள் தோணி களில் போய் அள்ளிக் கொண்டு வந்தார்களாம். அந்தக் கப்பலில் எடுத்த சாமான்கள் சில ஊரில் சிலரிடம் இன்று மிருப்பது ஆச்சியின் சரித்திரக் கதைகளுக்குச் சான்று.
உலக யுத்தம் எல்லாம் ஒரு படி முடிய இலங்கைக்குச் *சுதந்திரம்' கிடைத்ததும் அதன் பின்னர் தேர்தல் நடக்க -வாக்குக் கேட்க வந்த அபேட்சகரிடம் ஊர் மக்கள் தங்கள்

ராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம்
வருக்கு ஒரு பாடசாலை தேவை என்பதைச் சொல்லிக் கடைசியில் ஒரு சிறு பாடசாலை உருவானது.
அந்தப் பாடசாலை ஊரில் கட்டுப்பட முதல் வசதியுள்ள போடிகள், காசுக்காரர்களின் குழந்தைகள் மட்டும் தூரத்திலுள்ள நகரங்களுக்குப் போய்ப் படிப்பார்கள். படிப்பில் அக்கறையுள்ள ஒரு சிலர் அயலூரிலுள்ள பெரிய பாடசாலைகளுக்கும் போனர்கள்.
கிராமத்தில் பாடசாலை இல்லாததால் மிகவும் பாதிக்கப் பட்டவர்கள் படிக்க ஆசையிருந்தும் வெளியூருக்குப் போய்ப் படிக்க அனுமதி கிடைக்காத பெண்கள்தான்.
பரிமளம் மாமிக்கு எப்போதும் அது ஒரு குறைபாடு, பரிமளம் மாமிதான் கெளரி குடும்பத்திலுள்ள மிகவும்" படித்த பெண். பரிமளம் மாமியின் தகப்பன் மூதூர்க்காரர். திருகோண மலையில் படித்துக் கொண்டிருக்கும்போது தகப்பன் செத்துவிடத் தாயுடன் வந்துவிட்டா,
அத்தோடு உலக யுத்தமும் தொடங்கி திருகோண மலையிலும் குண்டு போடுவதாக வதந்தி வர பரிமளம் மாமியின் தாய் திரும்பப் போகவில்லை.
சொந்தக் கிராமத்துக்கு வந்ததால் பரிமளம் மாமி படிக்கவில்லை. கல்யாணம் ஆகி எத்தனையோ பிள்ளை களுக்குத் தாயாகியும் மாமிக்குத் தான் படிக்க முடிய வில்லையே என்ற துக்கம் எப்போதும் இருத்தது. மாமி கெளரியிடம் கூடச் சொல்லியிருக்கிருள்.
பரிமளம் மாமியின் கணவன் சின்ன மாமா. காசுபதி அவர் பெயர். ஊர்த் தொண்டு செய்வதில் ஊக்கமுள்ளவர், வெள்ளைக்காரனிடம் கேட்க முடியாத உரிமைகள் இனி நாங்கள் எங்கள் அரசாங்கத்திடம் கேட்டுப்(?) பெறலாம்
ன்று பெருமைப்பட்டுக் கொண்டாராம்,
தி •-2

Page 14
lé தில்லையாற்றங்கரிை
அதே நேரம் கெளரியின் தகப்பனும் இந்தியா எல்லாம் சுற்றி-காந்தியுடன் சேர்ந்து சுதந்திர இயக்கங்களில் சுற்றித் திரிந்து கதர் உடுப்பும், கைப்பெட்டி நிறைய சுபாஸ்சந்திர போஸ், காந்திஜி, நேருஜி படங்களுடன் வந்து சேர்ந் திருந்தாராம்.
மாமாவும் அப்பாவும் சேர்ந்து ஊரின் சீர்திருத்தத் துக்குப் பாடு பட்டு உழைத்தார்களாம். ஆனல் உண்மை யான ஊரின் சீர்திருத்தம் பெரும்பாலும் பெரியப்பா மயிலுப் போடியின் கையில்தான் தங்கியிருந்தது. அவர் ஊரில் பெரிய போடியார், நிறைய வயற்காணிகளும் மாட்டுப்பட்டிகளும் வண்டி மாடுகளுமுள்ளவர். அவர் வீட்டிலும் வயலிலும் வேலை செய்ய எத்தனையோ பேரிருந்தனர். அவரும் தன் தம்பியுடனும் மைத்துனருட னும் சேர்ந்து எம்.பி.யைக் கண்டாராம்.
ஏதோ ஒரு வழியாகப் பாடசாலை உருவானது.
கட்டிடத் திறப்பு விழாவிற்குத் தலைமைத் தாங்க கொழும்பிலிருந்து உதவி மந்திரி ஒருவர் வருவதாக ஏற்பாடு செய்யப்பட்டது. அவரையும் அவருடன் வரவிருக்கும் பிரமுகர்களையும் வரவேற்க இந்தப் பட்டிக் ாட்டிலுள்ள அத்தனை மக்களும் எவ்வளவு பாடு பட்டார்கள் என்றும் ஆச்சி சொல்லியிருக்கிருள்.
ஊர் எல்லாம்-ஒழுங்கை எல்லாம் துப்புரவாக்கப்
பட்டன. ரோட்டோரங்களில் வளர்ந்து கிடந்த பத்தைகள், கொடி, செடிகள் வெட்டப்பட்டு, பெருமரக் கிளைகள் தறிக்கப்பட்டு பளிச்சென்று தெரிந்தது.
ரோட்டை ஒட்டியிருந்த வீடுகள் மட்டுமல்ல ஒழுங்கை களிலுள்ள வீடுகளும் வெள்ளையடிக்கப்பட்டன.
பிரமுகர்களுக்கு விருந்து போடும் செலவுக்கு ஊரில் ஒவ்வொரு வீடாய்ச் சென்று காசு என்றும் பொருள் என்றும் அளவிட்டார்கள், இரண்டு மூன்று ஆட்டுக்

ராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம் 9
கடாக்களை ஆதம் காக்கா கொண்டு வந்து வெட்டிக் கொடுத்தார்.
பெரியப்பா வீட்டில் பெண்கள் கிடாரங்களில் சமையல் செய்தார்கள், வாழைக் குலைகள் கள்ளியன் தீவிலிருந்து வண்டியில் வந்திறங்கின.
திருக்கோயிலிலிருந்து பெயர் பெற்ற நாதஸ்வர வித்துவான் தன் கோஷ்டியுடன் வந்திருந்து ஊதித் தள்ளினர். பெரிய மாமியின் பெண்கள் இருவரும் (அவர்கள் இப்போது பிள்ளை குட்டிக்காரிகள்) இரவிரவாகக் கஷ்டப்பட்டு வரவேற்புப்" பாடல்கள் பாடமாக்கினர்.
ஊரே திருவிழாக் கோலம் கொண்டிருந்தது.
எல்லோர் முகத்திலும் சந்தோஷம். அப்போதெல்லாம் போட்டி பொருமை குறைவு.
அடியடி வாழையாக ஊரைப் பரிபாலித்து"(!) வந்த பெரியப்பாவின் குடும்பத்தினரை நேரடியாக எதிர்க்க அப்போது யாருமில்லையாம்.
பெரியப்பாதானம் வரவேற்புக் குழுவின் தலைவர். பெரியப்பா பரம்பரைப் போடியார். காசுக்காரன். கம்பீரமான தோற்றம், காதுகளில் பெரிய குண்டான கடுக்கன்கள் ஆடிக் கொண்டிருக்கும்,
தலைமுடியை வாரிக் கொண்டை போட்டுக் கட்டி u575 LIT rif. முறுக்கான கேட்டபொம்மன்" List (இப்போதும் எண்ணெய் போட்டு முறுக்கிக் கொள்வ துண்டு).
மார்பெல்லாம் கரடி போல நிறைய மயிர் அந்த
lo T i 6o L சேருகைச் சால்வை? பெரும்பாலும் அலங்கரிக்கும்.

Page 15
26 தில்லையாற்றங்கரை
எப்போது பார்த்தாலும் பளிச்சென்று வெள்ளை வேட்டி கட்டுவார். வண்ணுரநாகன் பெரியப்பாவின் குடிவண்ணுன். ஒவ்வொரு கிழமையும் வண்ணுர நாகனின் தரிசனம் பெரியப்பாவுக்குக் கிடைக்கா விட்டால் யாரை யும் விட்டு நாகனைக் கூப்பிட்டு வைத்துப் பேசுவார்.
சிலவேளை வண்ணுரநாகன் தாழ்வாரத்தில் ஒதுங்கி யிருக்கப் பெரியப்பா விருந்தையிலுள்ள சாய்மானக் கதிரை யில் சாய்ந்திருந்து கொண்டு சோராயம்" ஊற்றிக் கொடுத்து நாகனுடன் உலக நடப்புக்களையும் கதைப்பார். ஒரு சில வருடங்களுக்கு முன் சூயஸ் கால்வாய்த் தகராறில் நாசர் நடந்து கொண்ட விதத்தை அவர் வண்ணுர நாகனிடம் விளாசித் தள்ளிக் கொண்டிருந்தார். வெள்ளைக்காரனைப் பகைத்தது நாசரின் பிழையாம்.
பெரியப்பாவுக்கு வெள்ளைக்காரர் என்ருல் பெரிய பயபக்தி, அவன் வெள்ளைக்காரனை அடிக்க ஏலாது" என்று சில வேளை பேப்பர் விடயங்களைப் பற்றிப் பேசும்போது கதைப்பார்.
நல்ல வேலைகளைத் திறம் வேலை, திறமான செயல் என்று குறிப்பிடுவதற்குப் பதில் வெள்ளையன்ர வேலை" என்ற சொல்லால் பெரிது படுத்துவார்.
அப்பாவும் சின்ன மாமாவுக்கும் பெரியப்பா இப்படிச் சொல்வது பிடிக்காதாம். அப்பா இந்தியச் சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்டு வந்த பின் பெரியப்பாவின் இப்படியான கதைகளைத் தாங்க மாட்டாமல் அடிமைப் புத்தி" என்று தன் தமையனைப் பேசுவாராம், வெள்ளைக் காரர் ஆண்ட காலத்தில் பெரியப்பா தன்னல் முடிந்த ஒரு பெரிய கோ" கொண்டுபோய் அரசாங்க உத்தியோகத்தர் களைச் சந்திப்பாராம். (கோ' என்பது சன்மானங்களைக் காவிக் கொண்டு போதல், நெல், பழம், இறைச்சி, மரக்கறி, பால், வெண்ணெய் என்று பலதரப்படலாம்.)

rrgeiosuf urang-Isly Dawub
இப்போதெல்லாம் கோ' தூக்கி யாரையும் சரிபடுத்த" முடியாதென்பது பெரியப்பாவின் துக்கம், கையும் காதும் வைத்தாற்போல் காசு, கேட்கிருர்களாம் உத்தியோ கத்தர். பெருமையுடன் சகா' தூக்கிப் போவதுபோல் இல்லையாம் இப்படிக் கள்ளக் காசு கொடுப்பது! அப்படி யான பெரியப்பா பாடசாலைத் திறப்பு விழாவுக்கு முன்னின்று கஷ்டப்பட்டு(!) உழைத்தாராம்.
வீட்டில் கிட்டத்தட்ட எல்லோருக்கும்-பெண்களுக்கு விசேடமாகப் புதிதாக பட்டுப் பாவாடை, சேலை, சட்டை கள் வாங்கினர். பெரியப்பா எப்போதும் கண்டபடி செலவழிப்பார், கெளரிக்கும் மரகதத்துக்கும் கூட வாங்கிக் கொடுத்தார். தன் பட்டுப் பாவாடை பெங்களுர் பட்டு என்று சாரதா பெருமையடித்துக் கொண்டாள். தங்கள் பாவாடைப் பட்டுத்துண்டு என்ன பெயர் என்று கெளரியும் மரகதமும் பெரியப்பாவைக் கேட்டார்கள். அவருக்குப் பெயர் ஞாபகமில்லை என்று சொன்னர்.
பட்டின் பெயர் தெரியாவிட்டால் என்ன? பரிமளம் மாமி நன்முகச் சுருக்குப் பிடித்து இவர்களுக்கு பாவாடை சட்டை தைத்துக் கொடுத்தாள்.
பரிமளம் மாமியிடம் தையல் மெஷின் அப்போது இருக்கவில்லை.
(புனித மலர் ரீச்சர் ஊருக்கு வரும்வரை ஊரில் ஒருவரிடமும்தான் தையல் மெஷின் இருக்கவில்லை)
பரிமளம் மாமி தைத்துக் கொடுத்த பாவாடைகள் சரசரக்க இவர்கள் இரட்டைப் பின்னல்களும் போட்டுக் கொண்டு மேந்திரிமார் வருகைக்குக் காத்திருந்தது கனவு போலிருக்கிறது.
அக்கரைப் பந்திலிருந்து பிரமுகர்கள் இவர்களின் குட்டிக் கிராமத்துக்கு நடையில் வர ரோட்டை மறைக்க

Page 16
22. தில்லையாற்றங்கரை
வண்ணுர நாகனும் மற்ற வண்ணுர்களும் நடை பாவாடை விரிக்கப் பிரமுகர்கள் அந்த வெள்ளைச் சேலைகளில் கால் வைத்து நடந்தார்கள்.
இவர்களின் ஊர் எல்லையில் வாகை மரத்துக்துப் பக்கத்தில் பெரிய தோரணம் போட்டு, வாழை மரங்கள் வைத்து நிறைகுடம், விளக்குகள் வைத்து ஊர் ஒழுங்கை, தெருக்கள் ஒலைகளால் பின்னப்பட்ட அலங்காரங்கள் தொங்கவிடப் பட்டன.
நாதஸ்வர முழக்கத்தில் ஊர்வலமாக வந்த பிரமுகர் கள் தோரணத்தையண்டியபோது ஊர்ப் பெண்கள் குரவை' போட்டு வரவேற்ருர்கள்.
வாயில் கை வைத்து வகை வகையாய்ப் போடும் இந்தக் குரவைச் சத்தத்தைக் கொழும்பிலிருந்து வந்த பிரமுகர்களில் ஒரு சிலர் வியப்புடன் அவதானித்து எப்படி இந்தச் சத்தம் போடுகிறர்கள் என்று காசுபதி மாமாவைக் கேட்க (அவர் ஒருத்தருக்குத்தான் ஊரில் ஆங்கிலம் கொஞ்சம் தெரியும்) அவர் குரவையின் மகிமையைப் பெருமையுடன் சொன்னதை ஆச்சி இன்றும் பூரித்துப் போய்ச் சொல்லுவாள்.
ஆட்டுக்கறி, வெள்ளைப் போத்தல் சாராயம், விதவித மான பலகாரவகை அத்துடன் திறப்புவிழாச் சிறப் படைந்தது. இந்தப் பாடசாலை பல விதத்திலும் விருத்தி யடைந்து, அதனுல் இந்த ஊர் பிரயோசனமும், மாணவர் கள் கல்வியில் பெருமையும் அடைய வேண்டும் என்று பிரமுகர்மார் (சாராய வெறியில்!) . முழங்கித் தள்ளினர்கள். அதைக் கேட்க எத்தனையோ பேருக்கு மெய் சி லி ர் த் த த T ம், ஆச்சிக்கு நிச்சயமாய் மெய் சிலிர்த்திருக்காது; கோபத்தில் வியர்த்திருக்கும். இனிப் பெண்பிள்ளைகளும் ஊர்ப்பள்ளிக்கூடத்தில் படிக்கலாம் என்று பரிமளம் மாமி சொல்லியிருப்பாள்,

Ogdoaf ursos udvosfuh
என்ன நாடகமிது, பெட்டைகள் ஏன் படிக்க வேணும்" என்று ஆச்சி மாமியுடன் சண்டைக்குப் போனளாம். அப்படித் திறக்கப்பட்ட பாடசாலையில் எட்டாம் வகுப்புக்கு மேல் வைக்கப்படவில்லை.
எட்டாம் வகுப்புக்குமேல் படிக்க விரும்பியவர்கள் அடுத்த ஊர்களுக்குப் போக வேண்டும்.
அண்ணுவும் மைத்துனர்களும் எப்போதோ மட்டக் களப்புக்குப் போய்ப் படிக்கத் தொடங்கி விட்டார்கள்.
ஒன்றிரண்டு பெண்களும் மட்டக்களப்புக் கத்தோலிக்க பெண்கள் கல்லூரிகளுக்குப் போய் விட்டார்கள்.
ஒன்பதாம் வகுப்புக்கு வந்து விட்ட இந்த மூன்று பெண் களும் தான் என்ன செய்வது என்று தெரியவில்லை.
ஆச்சி என்னதான் இருந்தாலும் கத்தோலிக்கப் பெண்கள் கல்லூரிகளுக்கு இந்தப் பெண்கள் போவதை அனுமதிக்கப் போவதில்லை.
ஆச்சிக்கு வேதக்காரர்களைப் பிடிக்காது.
அயலூரில் ஒரு வேதக்காரத் தேவாலயமிருக்கிறது. அந்த தேவாலயத்தில் ஒரு வெள்ளைக்காரப் பாதிரி இருக்கிருர், பாதிரி தோமஸ் அவர் பெயர்.
அவர் அந்த ஊர் மக்களை வேதக்காரர்களாக்க கடந்த பல வருடங்களாக கஷ்டப்பட்டு வருகிறாராம்.
குடிமக்களைச் சமயம் மாற்ற முடியாமல் குறவர்கள் பறையர்களைச் சமயம் மாற்றிவிட்டாராம். சமயம் மாறிய ஒரு சில குடிமக்களும் இந்தக் குறவர், பறையர் மற்றும் பல சாதியினருடன் ஒரே மாதிரி நடத்தப் படுவது ஆச்சிக்கு ஆத்திரம்,

Page 17
戮4 தில்லையாற்றங்கள்
போவாடைச் சாமி, குல கோத்திரம் உடைக்க வந்தவன் இவன்ர பள்ளிகளுக்கும் பிள்ளையை விடுற தோ' என்று பாவாடைச் சாமிக்குப் பேச்சு.
பெண்கள் கல்லூரிகளுக்குப் போக முடியாவிட்டால் உள்ள ஒரே வழி அயலூர்ப் பாடசாலைகளுக்குப் போவது ஆச்சியும் அம்மாக்களும் விடுவார்களா? .
பக்கத்து ஊர்ப் பாடசாலை ஒன்றரை மைல் தூரத்தி லுள்ள உயர்தர பாடசாலை. காலன் பாடசாலை, ஆச்சிக்குப் பிடிக்காது. ஆயிரக் கணக்கான மாணவர்கள். அந்நியர்கள் பலர் என்று ஆச்சிக்குப்பயம். பல தரப்பட்ட பழக்க வழக்கம் நாகரிகம்.
இவர்கள் மழைக்காலத்தில் நனைந்து தோய்ந்தும் வெயிற்காலத்தில் கொடிய சூட்டைச் சகித்துக் கொண்டும் போய்ச் சேர வேண்டும்,
சிலவேளை குமரப் பெண்களைப் பார்த்து நையாண்டியும் வம்புப் பேசும் வாலிபர்களைச் சகித்துக் கொள்வது பெரிய துன்பமான காரியம்.
ஆச்சியும் அம்மாசிகளும் அடுத்த ஊர்ப் பாடசாலை களுக்கும் போய்ப் பழக்கப் படாவிட்டாலும் ஆண்களையும் அவர்களின் சேட்டைப் பேச்சுக்களையும் அறியாதவர்களல்ல. எல்லாவற்றையும் நினைக்கக் கெளரிக்குத் துக்கம் வருகிறது, ஏன் எங்கள் ஊரில் ஒன்பதாம் வகுப்புக்கு மேல் வைக்கக் கூடாது?
இன்னுரில் என்றில்லாமல் எல்லோரினும் கோபம் வருகிறது.
இந்த ஊர் ஆட் களு க்கு அக்கறையிருந்தால் எப்போதோ இந்தப் பாடசாலையின் தரத்தை உயர்த்தி யிருக்கலாம்' அவள் அலுத்துக் கொள்கிருள்,

faragdwaf uradanůSyudavefuub :
படிக்க வேண்டும் என்று எத்தனை விதமானேர்களுக்கு d அக்கறை? வயல் வேலை, உழவு, அறுவடை, குட்டடிப்பு மீன் பிடித்தல் என்பன போன்ற வேலைகளுக்குப் போய் மிகுதியிருக்கும் நேரத்தில் பாடசாலைப் பக்கம் எட்டிப் பார்க்கும் மாணவர்கள் தான் இந்தக் கிராமத்தில் ஏராளம். பெற்றேர் காடுதிருத்திச் சேனை செய்ய கொஞ்சம் வளர்ந்த தங்கள் பிள்ளைகளை எதிர்பார்த்திருப்பது சர்வ சாதாரணம். சேனை போட்டால், சோளம் பார்க்க, கிளி கலைக்க, என்று பிள்ளைகளின் உதவி தேவைப்படும். அப்படியான நாட்களில் பாடசாலைகள் வெறிச்சென்று தெரியும்,
ஆசிரியர்கள் சேர்ந்திருந்து வெற்றிலை போட்டுக் கொண்டு ஊர் வம்பு அளப்பார்கள்.அந்தக் காலத்தில் மூன்று ஆசிரியர் மட்டுமே. இன்ஸ்பெக்டர் வரும் அறிகுறி தென்பட்டால் பிள்ளைகள் பிடிக்க" ஊருக்குள் புறப்படு வார்கள், *
ஒரு தலைமை வாத்தியார். ஒரு பெண் (வயது போன) ஆசிரியை, இன்னெரு ஆசிரியர்; சின்னத்தம்பி வாத்தி என்று ஊர் மக்களின் திருவாயில்" அவர் பெயர் எப்போதும் திருவிளையாடல் புரியும். சின்னத் தம்பி வாத்தியார் பிரம்பைக் கையில் எடுக்க முதலே பிள்ளைகள், கண்ணன் வாய் திறந்து ஏழு உலகத்தையும் காட்டியது போல் தங்கள் ஒலமிடும் வாயைத் திறந்து ஓட்டைப் பற்களை காட்டுவார்கள்,
சின்னத்தம்பி வாத்தியார் என்ருல் சிம்ம சொப்பனம் எல்லாப் பிள்ளைகளுக்கும்.
அதிலும் அவர் பிள்ளை பிடிக்க பிரம்புடன் வெளிக்கிட்டு விட்டார் என்று தெரிந்து விட்டால் பாடசாலைக்கு வர விரும்பாத பிள்ளைப் பட்டாளம் ஊரில் எந்த மூலைகளில் ஒளிக்க" முடியுமோ அங்கெல்லாம் ஒளிந்து மறைந்து

Page 18
fláithour'pála ar .
விளையாடுவார்கள், ஆயர் குலக் கண்ணர்கள் தான் ஊரி முழுக்கப் பெரிய பெரிய மரங்கள்,
பல தரப்பட்ட மரங்கள் நூற்றுக்கணக்கான ஆண்டுகள் அந்த மரங்களின் வயதுகள். r
இலுப்பை மரங்கள், புளிய மரங்கள், நாவல் மரங்கள், மா மரங்கள், ஆலை மரங்கள் (விழுது விட்டுக் கொண்டு பயங்கரமாத் தெரியும்) களப்பர் கரையில் ஓங்கி வளர்ந் திருந்த முதிரை மரங்கள்; பூத்துக் கொட்டும் வம்மி மரங்கள் என்று எத்தனையோ பலவகைப் பட்ட மரங்கள்,
இலைகளில் பல பொந்துகள் உள்ளன. அணில்கள் உடும்புகள் இப்பொந்துகளில் ஊர்ந்து விளையாடுவதை எப்போதும் காணலாம்.
சில வேளைகளில் சின்னத் தம்பி வாத்தியார், மடித்துக் கட்டிய வெள்ளை வேட்டி, கையில் பெரிய மூங்கில் பிரம்பு, வாய் நிறைய நீர் வெற்றிலைக் குதம்பல், அதைத் தாண்டிய திட்டல்களுடன் இம்மரங்களில் ஏறியிருக்கும் மாணவர் களைப் (!!!) பிடிக்க ஏற, சறுக்கி வழுக்கி, தடக்கி விழுந் தெல்லாம் பிரயத்தனம் செய்ய அணில்களும், உடும்புகளும் பொந்துகளால் பார்த்துப் பரிதாபப்படுவதுமுண்டு.
சொறி நாய்க் கும்பல் வேறு. சில நாய்கள் இவரின் வெள்ளை வேட்டியைக் கவ்விப் பிய்த்துக் கொண்டு இவர் கெளரவத்தைக் கிழிக்கும் சிலவேளை, பின்னல் தொடர்ந்து வந்து ஊழையிட்டும், குலைத்தும், ஓடி வந்தும், பின்னடித்தும் விளையாட்டுக்காட்டும் நாய்களின் கொடுமை தாங்காமல் இவர் பட்டணத்திலுள்ள பொதுசன சுகாதார அதிகாரிகளுக்கு நாய்களைப்பற்றி அறிவிக்க அவர்கள் ஒரு நாள் வலை போட்ட லொறியில் வந்து நாய் பிடிக்க வெளிக் கிட்டு ஊரை ஒரு கலக்குக் கலக்கிவிட்டார்கள்.
நாய் பிடிக்க வந்த உத்தியோகஸ்தர்கள் சொறி நாய்கள் மட்டுமல்லாமல் வீடுகளில் ஆசையாக வளர்க்கப்

orgddus uradarůy Darfuuh ጰ7
பட்ட வீரன், வெள்ளை, சிவாஜி எனப் பெயர் வைத்த நாய்களையும் பிடித்து லொறியில் போட அந்த நாய்களின் சொந்தக்காரர் லொறிகாரர்களைச் சண்டைக்கிழுத்து ஒரு பெரிய கலாட்டாவே நடந்துவிட்டது. ஊரைச் சுற்றிக் களப்பும், ஒடையும் மாரிக்காலங்களில் வெள்ளம். அங்கே யும் சில மாணவர்கள் மறைந்து விடுவதுண்டு.
கோடை காலங்களில் நாணல் புற்கள் வளர்ந்து நீரின் மட்டத்தை மறைத்துவிடும். அந்த நாணல் நடுவில் ஒற்றைக் காலில் நின்று தவம் செய்யம் பலதரப்பட்ட கொக்குகளின் கூட்டமும், அதன் தோற்றங்களும் அந்தக் கிராமத்தின் இனிய காட்சிகளில் ஒன்று. அந்தக் கொக்கு களுடன் சேர்ந்து சில மாணவர்கள் பாடசாலைக்கு வரக் கள்ளம் பண்ணிவிட்டு நிற்கிருர்கள் என்று கேள்விப் பட்ட சின்னத்தம்பி வாத்தியார் களப்பில் கிடக்கும் அட்டைக் கடியையும் பொருட்படுத்தாமல், ஒடை நீரில் நீச்சலடித்து பிேள்ளை பிடிக்கப் போய் தொடை வரையும் ஏறிய அட்டைகளின் அவதி தாங்காமல் எள்ளும் கொள்ளும் வெடிக்கும் முகத்துடன் பாடசாலைக்கு வந்து சேருவார்.
சில வேளை இப்படிப் பிடிபட்ட மாணவர்களைப் பாடசாலைக்குள் கூட்டிக்கொண்டு வந்து அவர்களின் குண்டிகளில் பிரம்படிப் பூசை கொடுப்பதுமுண்டு. அப்படிப் பிரம்படிப் பூசை வாங்கிய ஒரு மாணவன் பார்வதி என்ற தாயின் புத்திர பாக்கியங்களில் ஒன்று. பாடசாலையை விட்டுத் தப்பிப் போய்த் தாயைக் கூட்டிக் கொண்டு வந்த கதை கெளரிக்கு மறக்க முடியாதது. சின்னத் தம்பி வாத்தியாருக்குப் பொல்லாத வாய், ஆனல் அவரே பார்வதியின் பத்திரகாளித் தோற்றத்துக்கும் பேச்சுக்கும் ஈடு கொடுக்க முடியாமல் திணறிப் போனர்.
பார்வதி பத்திரக்காளிக் கோலத்துடன் கையில் தன் புத்திர பாக்கியத்தை இழுத்துக்கொண்டு பாடசாலை வாசலுக்கு வந்து சிேன்னத்தம்பி வாத்தியோ என்ட புள்ளயில தொட்டவன்?" என்று GLumff தொடுக்கும்

Page 19
28 தில்லையற்றங்கை
பொது பார்வதியின் வாய் மட்டும் ஆடாது. தலையாட கையாட காலாட, அரைகுறையாய் இழுத்து மூடப்பட்ட மார்பகங்கள் குலுங்கியாட பார்க்க சிம்ம சொப்பனமா யிருக்கும்.
யாரையும் விட்டு வைக்காத சின்னத்தம்பி மாஸ்டர் கூட பார்வதியின் வாயின் கொடுமை தாங்காமல் மெளன öFrı6)urt 6, 696) olurtti.
அட்டைக் கடிகளும், நாய் துரத்தல்களும் அணியூர்தல் களையும் கூடப் பொறுத்த சின்னத்தம்பி மாஸ்டர் பார்வதி போன்ற பெற்ருேர்களின் மல்லுக்கட்டல்களைப் பொறுக்க முடியாமல் என்ன இளவுப் படிப்பு இந்தச் சனியன் களுக்கு" என்று முணுமுணுத்ததுண்டு. r
3
சின்னத் தம்பி வாத்தியார் மாறுதலாகியோ அல்லது ஒய்வு பெற்றுக்கொண்டோ (கெளரிக்கு ஞாபகமில்லை) போனபின்தான் பொன்னம்பலம் மாஸ்டரும் புனிதமலர் ரீச்சரும் புதிதாக வந்தார்கள்.
முதலிருந்த ரீச்சர் ஒரு கிழவி. அரைவாசி நாள் பாடசாலைக்கு வருவது கிடையாது. அந்தக் கிழவி ரீச்சர் பற்றி கெளரிக்கு ஞாபகமில்லை. அந்த ரீச்சர் போன பின் (என்ன நடந்திருக்கும்?) புனிதமலர் ரீச்சர் இவர்களின் பட்டிக்காட்டுப் பள்ளிக்கூடத்துக்கு வந்து சேர்ந்தாள். புனிதமலரை வைத்த கண் வாங்காமல் இந்த மூன்று பெண்களும் பார்த்தார்கள்.
புனிதமலர் ரீச்சருக்கு இவர்களின் அப்பாவிப் பார்வை களின் கருத்து விளங்கியிருக்க வேண்டும்.
முகம் சிவக்க, கன்னம் குழி விழ, இவர்களைப் பார்த் அழகாகச் சிரித்தாள் புனிதமலர் ரிச்சர்,

ராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம் 29
தங்கள் கூச்சம் தெளிய ரீச்சர் எந்த ஊர் என்று இவர்கள் கேட்டார்கள். மூவரும் ஒரேயடியாய்க் கேட்டார்கள்.
கல்லடி" என்று சொன்னுள்.
கல்லடி எங்கே’’ இவர்களுக்கு அக்கரைப் பற்றுக்கு அப்பால் வடக்கே தெரியாது. திருக்கோயிலுக்கு அப்பால் தெற்கும், கடலுக்கு அப்பால் கிழக்கும், வயல்வெளி தாண்டிய மலைத் தொடர்களுக்கு அப்பால் மேற்கும் இருக் கிறது என்பதைத் தவிர வேருென்றும் தெரியாது.
மட்டக் களப்பும் பெரிய பட்டணம், பாடும் மீன் வாவி, பிரசித்தி பெற்ற, கல்லடிப் பாலம், மணல் பரப்பிய கல்லடி ஊர், முந்திரி நிறைந்த ஆரயம்பதி, வெற்றிலைக் கொடி படர்ந்த களுவான்சிக் குடி, கைவண்ணச் சேலைகளுக்குப் பெயர்போன காத்தான்குடி, கல்லாற்றின் சின்னமுகத் துவாரம் பெரிய முகத்துவாரங்கள், துறை பூரீலாலணை, கல்முனை பீச் என்று புனிதமலர் ஒவ்வொன்றையும் சொல்லச் சொல்ல இவர்கள் மெய் மறக்கக் கேட்டுக் கொண்டிருப்பார்கள்.
மேட்டக் களப்புக்குப் போய்க் கோச்சி வண்டி பார்க்க வேண்டும்" என்ற தங்கள் ஏகமனதான ஆசையைத் தங்கள் ரீச்சரிடம் விண்ணப்பித்தார்கள் இந்த இளம் பெண்கள்.
புனிதமலர் fjórff இவர்களுக்குச் சொல்லிக் கொடுத்த நடனம் வட்டாரப் பாடசாலைப் போட்டியில் முதலாம் பரிசு எடுத்தால் மட்டக் களப்புக்குக் கூட்டிக் கொண்டு போவதாகச் சொன்னுள்.
நீேல மயில் நின்ருடுது' என்ற பாட்டுக்கு இவர்கள் மூவரும் இன்னும் சில மாணவிகளும் அபிநயம் பிடித்துஆட புனிதமலர் ரீச்சர் பின்னணி பாட்டுப் பாடி அமோக பாராட்டுப் பெற்றர்கள்.

Page 20
30 தில்லையாற்றங்கரை
சினிமாக் கதாநாயகிகளைக் கற்பனை செய்து கொண்டு தட்டுவேலிக்கு மறைவிலும் நாவல் மர நிழலிலும் நடனம் ஆடிப் பார்த்தவர்கள் இப்போது ஆசைதீர மேடைகளில் ஆடி மெய் மறந்தார்கள்.
பார்வையாளர்கள் கரகோஷம் செய்தார்கள். இந்த ஆட்டங்கள்' ஆச்சிக்கு அவ்வளவாய்ப் பிடிக்காவிட்டா லும் இவர்களுக்கு கண்ணுாறு' படாமல் பாலிப் போடிக் கிழவனிடம் சொல்லி திருநீறு ஒதிப் பூசினுள்.
கிழவன் அரை குறையில் வெறியில் ஏதோ சொல்லிச் சொல்லித் தன் பொக்கை வாயால் திருநீற்றை ஒதி ஒதி இவர்கள் முகத்தில் ஊதித் தள்ள திருநீறு கண்ணுக்குள் படிந்து இரண்டொரு நாளாய்ச் சரியான தலையிடில் கிழவனின் வெறியாட்டத்தைக் கண்ட அப்பா கிழவிக்கு நல்ல பேச்சுக் கொடுத்தார்.
இந்த இளம் பெண்களின் நடனம் மாவட்டப் போட்டிக்கு எடுபட்டால் இவர்களைக் கூட்டிக் கொண்டு போய் மட்டக் களப்புப் பட்டிணம் காட்டுவதாகச் சொன்னுள் புனிதமலர் ரீச்சர். இவர்களைப் பொறுத்த வரைபில் புனிதமலர் சொன்னது மந்திரம்; படிப்பித்தது முழுதும் வேதம்; புனிதமலர் ரீச்சருக்காக எதையும் செய்வார்கள்.
எப்போதும் புனிதமலர் ரீச்சருடன் வளைந்து வளைந்து சுற்றி வருவார்கள். புனிதமலர் ரீச்சரின் இனிய சுபாவம் இவர்களை எப்போதும் அந்த ரீச்சருடன் திரிய வைத்தது.
இளமையான தோற்றம். அழகான சேலை சட்டை, அவளுக்கென்றே உண்டானது போல் ff'gérifløör உடம்போடும் அழகோடும் பிணைந்து தெரியும், சிரிப்பில் ஒரு இனிமை, பேச்சில் ஒரு மென்மை, நடையில் ஒரு கவர்ச்சி,

ராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம் 31 ܫ
இவர்களைப் பொறுத்த வரையில் புனிதமலர் ரிச்சர் என்ருல் ஜெகதலப் பிரதாபன்" ப ட த் தி ல் P. U. கின்னப்பாவுடன் நடித்த சினிமா நடிகையை விட எத்தனையோ மடங்கு பேரழகி. (நடிகையின் பெயர் தெரியாது.)
சாரதா புனிதமலர் ரீச்சர் மாதிரி பேசிக் காட்டுவாள். நடந்து காட்டுவாள். சில வேளை இவர்கள் மூவரும் சேர்ந்து (வாழை மரங்களுக்கும் தென்னை மரங்களுக்கும்!) புனிதமலர் ரீச்சர் போலப் படிப்பித்துக் காட்டுவார்கள்.
வளர்ந்து பெரியவளாகிப் புனிதமலர் ரீச்சர் மாதிரி உடுக்கவேண்டும், நடக்க வேண்டும் என்று ஒருத்தருக் கொருத்தர் சொல்லிக்கொள்வர். சில வேளைகளில் புனித மலர் ரிச்சர் மாதிரிப் பின்னல் கொண்டை போட்டு சேலை கட்டி (பரிமளம் மாமியின்) ஒயிலாக நடந்தும் Linrri L'ILinrrfsøir.
புனித மலர் ரிச்சரின் கவரிச்சியான உடம்புக்கும் இவர்களின் ஒட்டிய தோற்றத்திற்கும் எத்தனையோ வித்தியாசம் என்று வேதனைப் பட்டுக் கொள்வார்கள். கவர்ச்சியாய்த்" தெரியத் தங்கள் மேற் சட்டைகளுக்குள் கொய்யாக்காய், குரும்பட்டி, மாம்பிஞ்சி (ஏதோ அகப் LuLL- உருண்டை வடிவங்கள்) என்பன வைத்து மோர்பை" நிமிர்த்திப் பிடித்து நடந்து பார்த்து ஒருத் தரை ஒருத்தர் பார்த்து வெட்கம் பட்டும் கேலியும் செய்தும் சிரிப்பார்கள். ஒரு நாள் மார்புச் சட்டை களுக்குள் வைத்த கனமான' நடையுடன் ஆச்சியிடம் கையும் களவுமாக அகப்பட்டு நல்ல அகப்பைக் காம்படியும் வாங்கித் தள்ளியது என்றும் மறக்க முடியாது.
அப்படி இவர்களைக் கவர்ந்து வைத்திருந்த புனித மலர் ரீச்சர் ஒரு பாடசாலை விடுமுறையின் பின் சொல்லாமற் கொள்ளாமல் பாட சாலைக்கு வராமல் நின்று விட்டாள்,

Page 21
32 தில்லையாற்றங்கரை
ஏன் என்று இவர்களுக்குத் தெரியாது. தலைமை வாத்தியார் சொல்லவில்லை.
வேறு யாரைக் கேட்பது?"
பாடசாலை வேம்பன்'" (3 வளிசல்" என்றுதான் உண்மையாகக் கூப்பிடுவார்கள்) என்று பெயர் பெற்ற சுந்தரமூர்த்தியைக் கேட்டார்கள்.
சுந்தரமூர்த்தி தன் சூத்தைப் பல்லால் இவர்களைப் பார்த்துச் சிரித்தபடி ரகசிய"த்தைச் சொன்னன்.
பாடசாலை இன்ஸ்பெக்டர் புனித மலர் ரிச்சரிடம் கூடாமல் நடக்க வெளிக்கிட்ட விஷயத்தால் ரீச்சர் எம். பி. யைப் பிடித்து (கைலஞ்சம் கொடுத்து) வே ஊருக்கு மற்றலாகிப் போய் விட்டாளாம்.
கூடாமல் நடப்பது என்ருல் என்ன?
சாரதாவைக் கெளரி கேட்க மரகதமும் சேர்ந்து கேட்டாள். மரகதத்துக்குத் தானக நினைத்து, யோசித்து ஒன்றும் கேட்கத் தெரியாது. மரகதம் கெளரியோடும் சாரதாவோடும் திரியும் நிழல்.
சாரதா தான் அவர்களின் தலைவி; சாரதா தான். பெரியம்மா, அம்மா, பரிமளம் மாமி, ஆச்சி என்போர் சேர்ந்திருந்து ஊர்க் கதைகள் கேட்கும் போது ஒட்டுக் கேட்பவள். பெரியம்மா வீட்டில் ஒரு பெரிய பலாமரம். அதன் நிழலின் குளர்ச்சியில் அவர்கள் சேர்ந்து சுவா ரசியமும் சூடானதுமான ஊர் வம்புகள் அளப்பது கிட்டத் தட்ட ஒன்றை விட்டொரு நாள் நடக்கும் சடங்கு" தனக்குத் தலையிழுத்து விடச் சொல்லியோ பேன் பார்க்கச் சொல்லியோ சாட்டு வைத்துக் கொண்டு Frrprogsmt பெரியம்மாவிடம் போவாள்.
அவர்களின் வம்பளப்பில் பொறுக்கி" எடுத்த தகவல் களுக்குக் கால் வைத்துக் கை வைத்து உருவமமைத்துப்

ராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம் 33
பொட்டும் வைத்துப் பூச்சுட்டிப் புழுகித்" தள்ளி விடுவாள் சாரதா.
சாரதாவை அப்படியான எத்தனையோ விஷயங்களுக் காகக் கெளரவப் படுத்திக் கிட்டத் தட்டத் தலைவியாகவே பாவிப்பார்கள் கெளரியும் மரகதமும், -
தாய்களைத் திட்ட வேண்டும், ஆச்சிக்குப் பேசி அர்ச்சனை செய்யவேண்டுமென்ருல் கூட சாரதாவின் குரல்தான் கூட உயர்ந்து கேட்கும்.
ரிச்சரைப் பாடசாலைக்கு வராமல் பண்ணிய இன்ஸ் பெக்டர் பள்ளிக்கு வந்தால் பொடியன்களைச் சொல்லி கல்லெரியப் பண்ணவேண்டும். என்று கேர்ச்சித்துக்" கொண்டார்கள். (சாரதா கர்ச்சிக்க மற்ற இருவரும் ஆமோதிப்பதுதான் நடை முறை) இதைப் பற்றி வெளிசல்" சுந்தரமூர்த்தியிடம் கதைக்க அவன் உடன் படத் தயாரில்லை.
யாருக்கும் தெரிந்தால் தனக்கு ஆபத்து என்று அவன் தன் சூத்தைப் பல்லைக் காட்டி "இளித்தது" இவர்களுக்குக் கோபம்.
பாடசாலையையண்டிப் பிள் ளை யார் கோயில். கோயிலைச் சுற்றித்திருக் கொன்றை மரங்கள். எப்போதும் அடர்த்தியாக வளர்ந்திருக்கும். அங்கே மறைந்திருந்து கல்லெறியலாம் என்று சாரதா யோசனை சொல்லிக் கொடுத்தாள், மரத்தடியில் பெறிய புற்று. அந்தப் புற்றில் பெரிய கோயில் நாகம் சீவிப்பதாக (ஆச்சியின் அகராதிப்படி ஏழுதலை நாகம்) ஊர் நம்பிக்கை.
அந்த நாகம் கள்ளர், கயலரை உயிரோடு விடாது என்பது ஊராரின் மாற்ற முடியாத நம்பிக்கை. நாகத் தைப் பற்றிய கதையும் சுவாரசியமானது) இப்படியான காரணங்களால் சுந்தரமூர்த்தி பாம்புப் புற்று நிறைந்த :ب 3 مسسه الروك

Page 22
34 தில்லையாற்றங்கரை கொன்றை மரத்தடியில் மறைந்துநின்று கள்ளமாய்க் கல் எறிய மறுத்து விட்டான்.
எளிய இன்ஸ்பெக்டர் நாய் தும்புக் கட்டையாள துரத்தியடிக்க வேனும்" மூன்று பெண்களும் இப்படிச் சொல்லித் திட்டிக் கொண்டாலும் இன்ஸ்பெக்டர் பாடசாலைக்கு வந்ததும் வழக்கம் போல், வாய் குளற நாக்குத் தடம் புரள கிழட்டு இன்ஸ்பெக்டர் கேட்ட "வாயப்பாட்டைச் சொல்லத் தெரியாமல் திணறி நல்ல பேச்சு வாங்கினர்கள்.
கூடாமல் நடப்பது என்றதன் முழு அர்த்தமும் கெளரிக்கு விளங்க அதிக நாள் எடுத்தது.
இவர்களின் பாடசாலைக்குச் சில வேளை பூச்சிக்கு மருந்து கொடுக்கும் டொக்டர்கள் வருவார்கள் குளக்கரை, திடல்கள், வயல், வரம்பு என்பனவற்றில் தான் இந்த ஊராரின் காலைக் கடன்"கள் நடப்பதால் வெறும் காலோடு சீவிக்கும் குெழந்தைகள் கொக்கிப் புழுத்தாக்குதல்களுக்கு ஆளாகி அவதிப்படுவது சர்வ சாதாரணம்.
கொக்கிப் புழுவின் படங்களைச் சுமந்து கொண்டு, காக்கிச் சட்டை போட்ட சுகாதார இன்ஸ்பெக்டர்களும் குேழல்" போட்ட (ஸ்டெதஸ்கோப்) டொக்டர்"களும் ஒரு வருடத்துக் கொருதரம் பாடசாலை விசயம் செய்வார்கள்.
காலையில் அன்ரிப்பார்" மருந்து கொடுத்து விட்டு பிள்ளைகளுக்கு வயிற்றால் போவது பற்றிக் குறிப் பெடுத்துக் கொண்டு பின்னேரம் வரை - பாடசாலை யிலிருப்பார்கள். -
வயிற்றால் போகாத குழந்தைகளின் வயிற்றைச் சோதித்துப் பார்ப்பார்கள். 'குழல்' வைத்தும் பார்ப்

ராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம் 35
பார்கள். (கேட்பார்கள்?) அந்த டொக்டர்களில் ஒருத்தர் வயிற்றைத் தடவிப் பார்ப்பதாகச் சொல்லிக்கொண்டு அந்தப்பன் மகள் ஜமுனாவின் மார்பைத் தடவியதாகவும் (ஜமூனாவுக்குப் பத்தே பத்து வயது!)
அந்தக் கூடாத செய்கையால் கொதித்தெழுந்த கந்தப்பன் வேளாண்மை வெட்டும் தாக்கத்தியுடன் மருந்து கொடுக்க வந்த உத்தியோகத்தனத் தாக்க வெளிக்கிட்ட தையும் "கண்ட பின்தான் கூடாமல்" நடப்பது என்றால் என்ன என்பதின் ஒரு மாதிரியாக கொஞ்ச விளக்கம் கெளரிக்குத் தெரிந்தது.
அதன் பின் இன்ஸ்பெக்டரைக் கண்டால் அவளுக்கு ஆரு வருப்பு வரும், அந்த இன்ஸ்பெக்டர் அது மட்டுமா செய்தான்? உயர் வகுப்பு வைக்க உதவியும் செய்ய வல்லவா மறுத்தான். புனித மலர் ரிச்சர் மாற்றலாகிப் போனதற்கு அந்த இன்ஸ்பெக்டர்தான் காரணம் என்று தெரிந்த ஊரார் சின்னமாமா தலைமையில் இன்ஸ் பெக்டருர்கெதிராகப் பெட்டிஷன்" போட்டார்கள்.
இன்ஸ்பெக்டருக்கு எங்கே மாற்றம் கிடைத்தது? அதன் பலன் இவர்கள் ஊரில் உயர்தர வகுப்பு வைக்க உத்தரவு மறுக்கப்பட்டது.
சண்டை பிடித்து வெல்ல முடியாத ஊரார், சிலர் தங்கள் பிள்ளைகளை வேறு இடங்களுக்கு அனுப்பிக் கொண்டிருக்கிறார்கள். இவர்களுக்குப் பாடசாலைக்குள் போகும் அனுமதி கிடைக்குமா? பாடசாலைக்குப் போக முடியாமல் பாதிக்கப் படுவதை நினைக்க நினைக்க கெளரிக்கு அழுகையும் ஆத்திரமும் வந்தது.
போதாக் குறைக்குச் சாரதா, மரகதம் இருவரும் பெரியபிள்ளைகளாகியும் விட்டார்கள் கோபம்தான் கொதிக்கிறது. V

Page 23
36 தில்லையாற்றங்கரை
சோறு அடுப்பில் கொதித்தது. அடுப்புச் சூட்டில் அமுதவல்லி நாய் சுருண்டு படுத்திருந்தது.
இந்தப் பெட்டை நாய்க்குச் சின்ன தம்பி வாத்தியார் தான். ஆயிரம் முலை தாங்கிய அமுத வல்லி நாய் என்று பெயர் வைத்தாராம் என்று அம்மா சொல்லியிருக்குறாள்.
அம்மா வரும் நேரமாகி விட்டது.
அடுத்த வீட்டில் பெரிய கலகலப்பு.
பெரியப்பாவும் பாலிப் போடிக்கிழவனும் நல்லாய்ப் போட்டிருக்கினம் கெளரி தனக்குள் சொல்லிக்கொள் கிறாள். கிழவனின் பாட்டும் சிரிப்பும் அடிக்கடி கேட்கிறது.
பாலிப் போடிக் கிழவன் ஆச்சியின் ஒன்று விட்டதம்பி. ஒரு காலத்தில் பெயரும் புகழுமாய் வாழ்ந்த போடியார் இப்போது ஓடையை ஒட்டியிருக்கும் மண் வீட்டையும் எலும்பும் தோலுமான மாடுகளிரண்டும் வண்டியையும் தவிர கிழவனிடம் அதிகம் ஒன்றுமில்லை. கிழவனின் மனைவி நோயாளியான தெய்விக் கிழவி. இருவருக்கும். ஒரு நாளும் சரிவராது. எப்போதும் கிழவனும் கிழவியும் ஒருத்தரை ஒருத்தர் பேசிக் கொண்டிருப்பார்கள். கிழவி யின் வாய்" பொறுக்காமல் கிழவன் 16 அக்கையிடம்" முறைப்பட கெளரி வீட்டுக்கு ஆச்சியிடம் வரும்.
இன்டையில இருந்து கிழவனுக்கு ஒன்டிரண்டு நாளைக்கு வேட்டைதான்' கெளரிநினைக்கிருள். கிழவனுக்கு நல்ல வெறி வானம் இருண்டு, மின்னல் பளிச்சிட, இடி இடி என்று இடிக்கிறது. போதாக் குறைக்குக் காற்று வேறு. குளிர் காற்று. உடம்பில் சில் என்று படுகிறது. அண்ணு கையில் துணியுடன் வந்தான். என்ன கெளரி வீட்டுக்கு போகலியோ" கிணற்றடிக்குப் போனபடி கேட்கிருன்.

ராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம் 3
போனு என்ன? ஆச்சியும் மற்றறையும் குமரிப் பெட்டயார் பற்றி பிரசங்கம் வைக்கிறதைக் கேட்கிறது தானே" அவள் எடுத்தெறிந்து சொல்ல அவன் asgods'' என்று சிரிக்கிருன். அண்ணு சிரிக்கும் போது அவனுடைய கண்களும் சிரிக்கும் அவளுக்கு பெரியம்மா குடும்பத்தில் உயிருக்குயிரான பிறவி அவன் தான். கெளரியின் உடன் பிறந்த தமையன் இல்லாவிட்டாலும் அதைவிட நெருக்க மான பாசமிருவருக்கும் பட்டணத்துக்குப் படிக்கப் போக முதல் கெளரி வீட்டில்தான் பெரும்பாலும் இருப்பான்,
அவனுக்கு சாரதாவின் பெரிய வாயாடித்தனம் பிடிக்காது. கெளரியைப் பிடிக்கும். தான் படித்து முடிய கல்கி, கலைமகள், குமுதம் கொண்டு வந்து தருவான்.
இப்போதெல்லாம் வேறு பெரிய கதைப் புத்தகங்களும் கொண்டு வருவான். தேவையில்லாமல் அதிகம் கதைப் பதோ, மற்ற வாலிபர்களுடன் சேர்ந்து ஊர் சுற்றித் திரிவதோ அவனுக்குப் பிடிக்காதவை.
மு. வரதராசனின் புத்தகங்கள் முழுதும் இந்த விடு முறைக்கு வரும்போது கொண்டு வந்தான். கெளரி ஒன்றிரண்டு வாசித்து விட்டாள்.
நெருஞ்சி முள்' நாவல் வாசித்து விட்டு அண்ணு வுடன் அது பற்றி நிறையக் கதைத் தாள். சாரதாவுக்குப் *பெரிய" புத்தகங்கள் வாசிக்கப் பொறுமையில்லை. ஆனலும் சினிமாப்புத்தகங்கள் என்ருல் பைத்தியம்.
*திரும்பிப்பார்" திரைக் கதை வசனப் புத்தகத்தைக் கிட்டத் தட்ட மனப்பாடம் செய்து வைத்திருக்கிருள். பண்டரிபாய் சிவாஜி கணேசனைக் கேட்கும் கேள்விகளைத் தத்ருபமாய்ப் பேசிக் காட்டினுள் சாரதா.
கெளரி நெருஞ்சி முள்'" வாசித்துக் கதை சொன்னள். இந்தப் பெரிய புத்தகம் வாசிக்க என்னல

Page 24
38 தில்லையாற்றங்கரை
ஏலாது" என்று சொல்லிவிட்டாள் சாரதா. படுசோம்பேறி.
கதை கேட்க மட்டும் ஆசை. இனிச் சாரதாவுச்கு நிறைய
நேரமிருக்கும். இன்றிலிருந்து வீட்டோடுதான் இருப்பாள்.
என்ன செய்வாள்?
ஆச்சி சொல்வது போல் புேருஷனைக் கல்யாணம் செய்து பிள்ளை குட்டி பெற்று."
அவள் மட்டு மென்ன மரகதம்; தான்; ஏன் இந்தக் கிராமத்துப் பெண்களில் ஒருத்தர் விடாமல் தொடர்ந்து ஆச்சி போலத்தானே இருப்பம்?
அண்ணு, சாரதாவைப் பள்ளிக்கு விடுவாளோ பெரியம்மா’’ தலையில் சவுக்காரம் போடும் தமயனைக் கேட்கிருள் கெளரி.
*அந்த மக்குப் பெட்டைக்கு என்ன அக்கறை படிப்பில'" அவன் அலுத்துச் சொன்னபடி வாளியைக் கிணற்றுள் விடுகிருன்.
வீட்டில இருந்து என்ன செய்யப் போருள்' கெளரி யின் கேள்வி இது.
உலகத்துச் சினிமாப் பாட்டெல்லாம் பாடமாக்கிக் கொண்டு ஊஞ்சலில இருந்து பாடித் தள்ளப் போருள்" அவன் விழுந்து விழுந்து சிரிப்பதைப் பார்க்க இவளுக்குக் கண்கலங்குகிறது. 66 சாரதாவைப் பள்ளிக்கூடத்துக்கு விடச் சொல்லி பெரியம்மாவுக்குச் சொல்லுங்கோ அண்ணு." அவள் குரல்பரிதாபமாக இருந்திருக்கவேண்டும். அவன் கனிவுடன் கெளரியைப் பார்த்தான். அம்மாட்டச் சொல்றன்" என்று அவன் சொன்னது அவளுக்குப் பெரிய ஆறுதலாக இருந்தது.
சோரதா வந்தால் பரிமளம் மாமி கட்டாயம் மரகத் தைப் பாடசாலைக்கு அனுப்புவா, பரிமளம் மாமியும்

ராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம் 39
காசுபதிமாமாவும் நல்ல ஆட்கள். ஆணு ஆச்சி தர வழி தான் ஏதும் அள்ளி வைச்சுக் கொண்டு திரிவினம்" அவள் தனக்குத் தானே சொல்லிக் கொள்கிருள்.
பெரியம்மா வீட்டில் குரவை கேட்கிறது. பெரிய பிள்ளையான பெண்ணுக்கு முதற் தண்ணிர் வார்க்கப் போகிருரிகள்,
வீட்டு வேலைகளை முடித்து விட்டுக் கெதியாகப் போக வேண்டும். சாரதா எப்படி இருக்கிருள் என்று பார்க்க வேண்டும். பெரியம்மா வீடு கல கலப்பாக இருந்தது. சாரதாவுக்கு இரண்டாம் தண்ணீர் வார்க்கும் வரை அவர்கள் வீடு கலகலப்பாக இருக்கும். பெரியம்மாவின் சொந்தக்காரர்களின் வரவின் அறிகுறியும் தெரிகிறது.
பெரியம்மாவுக்கு யாரும் பெரிய சகோதரர்கள் இல்லை. மூன்று தமயன்கள். எப்போதாவது இருந்து விட்டு வருவார்கள். அவர்களுக்குப் பெரியப்பாவை அதிகம் பிடிக்காது என்று பெரியம்மா சொல்லியிருக்கிருள். பெரியப்பாவுக்கு அவரைவிட யாரும் பிரபலமாகவோ பணக்காரர்களாகவோ இருக்கக் கூடாது என்று எரிச்சல் என்றும் பெரியம்மா சொல்லுவார்.
4.
சி-றைமுடி வைத்த வாசலில் குடங்களில் நீர் நிறைத்து வைக்கப்பட்டிருந்தன. மாமிகள், மைத்துணிகள், ஆச்சிகள் போன்ற பெரிய பெண்களின் கூட்டம் ஒரு பக்கம், பக்குவப் பட்டும், படாத இளம் பெண்களின் கூட்டம் இன்னுெரு பக்கம். மழைத் தூறலையும் பொருட்படுத்தாமல் ஓடி விளையாடும் பிள்ளைகள் கூட்டம் ஒருபக்கம், அண்ணுவும் அவரின் சினேகிதர்கள் மறுபக்கம், பெரியப்பா பாலிப்

Page 25
40 தில்லையாற்றங்கரை
போடிக் கிழவன் சின்ன மாமா, அப்பா எல்லோரும் கதைத்துச் சிரித்தபடி இன்னொரு பக்கம். இப்படியாகப் பெரியம்மாவின் வீடு சனங்களால் பொங்கி வழித்தது. குரவை ஒலி, மழைச் சத்தத்துடன் சேர்ந்தொலித்தது.
தலையில் சுழகொன்றைக் கவிழ்த்து மூடிக் கொண்டு ஒடிப் போய்ச் சேர்ந்தாள் கெளரி.
சேலையால் மறைவு கட்டி, நிற்பதற்குப் பலகை போட்டு, நிறை குடங்களைத் தூக்கி நீர் வார்க்கப்பட்டது. குரவை ஒலி பெலத்துக் கேட்டது.
பக்குவப்பட்ட பெண்ணையும் தோழிப் பெண்ணையும் சுற்றிச் சுற்றி ஆலாத்தி எடுக்கப்பட்டது.
சாரதாவுக்கு உடுப்பு மாற்றி பட்டுச் சேலை
கட்டினர்கள். சாரதாவைச் சேலையுடன் பார்க்க வித்தியாசமாக இருந்தது. Gourfu u மனுஷிபோல் தெரிந்தாள்.
நேற்று வரைக்கும் அவள் முகத்திலிருந்த குறும்புத் தனமும் குழந்தைத்தனத்தையும் மீறிக் கொண்டு வெட்கம் பரவிக் கிடந்தது. எப்போதும் துடியாட்டமாய், எதையும் துருவிப் பார்க்கும் பார்வை ஊர்ப்பட்ட சனங்களில் பட்டும் படாமலும் பாய்ந்து தாழ்ந்தது.
அறைக்குப் போனதும் பெரியம்மா தன் மகளைப் பெருமையாகப் பார்த்தபடி புதுச் சங்கிலியும் பதக்கமும் போட்டாள். நிறை குடத்தில் வைத்திருந்த தேங்காய், மற்றும் பலதரப்பட்ட பெட்டிகளை மறைத்துக் கொண்டு பெரியம்மாவின் தமயன்மார் திருக்கோயிலிலிருந்து கொண்டு வந்திருந்த பரிசுப் பொருட்கள் பார்ஸல்களாகத் தெரிந்தன. பிரித்துப் பார்க்கப்பட்ட பட்டுச் சேலைகளின் அழகு வெளிச்சத்தில் கண்களைப் பறித்தன.

ராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம் 4.
கெளரியைக் கண்டதும் சாரதாவின் முகம் இன்னும் அலர்ந்தது. இளம் மொட்டு மலராகிச் சிரிப்பதுபோல்
இருந்தது சாரதாவின் நாணம் ததும் பிய புன்முறுவல்.
மாணிக்கவாசகம் மட்டுமென்ன இவளைக் கண்ட யார் தான் மயங்க மாட்டார்கள் இவள் அழகில் என்று நினைத்துக் கொண்டாள் கெளரி. மரகதத்தின் தங்கச்சி பூரணிதான் தோழிப் பெண். மாரிகாலக் குளிரில் விறைக்காத மாதிரி வெடவெடத்துக் கொண்டிருந்தாள் பூரணி.
பரிமளம் மாமி மாதிரி பூரணி சூடிகையான பெண். மரகதம் ஏனே மக்குத்தனம்", சின்னமாமாவும் பரிமளம், மாமியும் மரகதத்தின் தாய் தகப்பணுே என்று சந்தேகம் கூட கெளரிக்குச் சிலவேளை வரும்.
பரிமளம் மாமி எத்தனையோ விதத்தில் கெட்டிக்காரி. மரகதத்திடம் இருந்த அடக்கம் அவள் கெட்டிக்காரியோ *மொக்குத்தனம் தானே முழுதும் என்று அளவிட்டு அறிய முடியாதபடி மறைத்து விட்டிருந்தது.
சாரதாவுடன் பூரணியைக் "கண்டதும் மரகதத்தின் ஞாபகம் கெளரியின் மனத்தில் வந்தது. மரகதம் இன்னும் ஷரவில்லை. தண்ணீர் வார்க்கும் ஆரவாரத்தில் பரிமளம் ஆமாமி இன்னும் ஈடுபட்டிருந்தாள். எல்லா வேலையும் முடிய அமரகதத்தைக் கூட்டிக் கொண்டு வரலாம்.
என்னடியப்பா இண்டைக்கெல்லாம் a. sirčiori காணல்ல" சாரதா கெளரியை விசாரித்தாள்.
ஓம்! வீட்டில வேலை, ஆச்சி உங்கட வீட்டிை இண்டைக்கெல்லாம் தம்பட்டம் அடிச்சுக் கொண்டு திண்டுது. அம்மா வயல் பாக்கப் போட்டா. என்ட தலையிலதான் எல்லா வேலையும்" கெளரி அலுத்துக் கொண்டாள்.

Page 26
2 தில்லையாற்றங்கரை,
ேேகெளரி உங்கட வீட்டிலயோ பாளை வெட்டினவை" சாரதா தன் காதில் கிடந்த தொங்கட்டான் ஆடஆடச் கழுத்தை வெட்டிக் கதைத்தது வேடிக்கையாக இருந்தது* கெளரி ஒன்றும் முட்டாள் இல்லை சாரதாவின் கேள்வியின் உள் அர்த்தம் தெரியாமலிருக்க,
ேேயாரடி பாளை வெட்டினவர்" என்பதை ஒளித்து மறைத்துக் கேட்கிருள். ܗܝ
நேரடியாகப் பதில் சொல்வதா இல்லையா?
கெளரி நேரடியாகச் சாரதாவின் முகபாவத்தைப் பார்க்காமல் நிறை குடத்தைப் பார்த்தபடி சொன்னுள்; *அண்ணுவும் வேற ஆட்களும் வந்திச்சினம்." கெளரி இப்போது சாரதாவை நேரே பார்த்தாள்.
சாரதா முகத்தில் ஆவல் "அப்பட்டமாய் ஒட்டிதி: தெரிந்தது. யார் பாளை வெட்டினதென்பதின் ஆலலின்" ரகசியம் கெளரிக்கு வேடிக்கையாக இருந்தது. சாரதா இழுத்தபடி சொன்னள். to e LumrøóGB untig. அப்புச்சி சொன்னுர்."" சாரதாவுக்குக் கூட வார்த்தைகள் அகப் படாமல் போகும் என்று கெளரிக்கு அப்போதுதான் தெரியும்,
மாணிக்கவாசகத்தின் பெயரைக் கூடச் சொல்ல வெட்கப்படுகிருளோ? கெளரி மிகக் கஷ்டப்பட்டுத் தன் முகபாவத்தைச் சாதாரணமாக வைத்துக் கொண்டாள்.
சாரதா தர்ம சங்கடத்துடன் அங்குமிங்கும் பார்த்தப் படி கெளரியின் தோளைப் பிடித்து உலுக்கியபடி கேட்டாள், இெேசால்லேண்டி, அவரோ பாளை வெட்டினுர்" கெளரி இதைக் கேட்டுத் தன்னையறியாமல் வாய்விட்டுச் சிரித்தாள்.
*அவ்ராம்" சாரதாவின் அவராம்!"
unri 5uqág. 6) aué5 es aprribo”

ராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம் 439
என்னடி இளிப்பு" சாரதா பொறுமையின்றி வெடித்தாள். கெளரியின் சிரிப்பால் சாரதா அழுதும் விடுவாளோ என்பது போலிருந்தது அவள் முகபாவம்.
பூரணிப் பெட்டை புதுப்பாவாடை கசங்க சம்மணம் போட்டிருந்து சாப்பிட்டுக் கொண்டிருந்தாள். பக்குவப் பட்ட பெண்ணுக்கு புத்தரிசிச் சோறும் கத்தரிக்காய்ப் பொரியலும்தான் பத்தியச் சாப்பாடு, தோழிப் பெண்ணும் சாப்பிட்டாக வேணும், சாமியார்ச் சீவியம்!
ஆச்சியின் குரல் வெளியில் கேட்டது. சோரதா செரியாகச் சாப்பிடு, மஞ்சள் பூச வேணும்,' அம்மியில் ஆச்சி மஞ்சள் அரைத்துக் கொண்ருடிந்தாள்.
64உன்னுேடயும் கதைச்சவராம் அப்புச்சி சொல்லிச்சு?* சாரதா கெளரியின் காதில் முணுமுணுத்தாள்.
பேட்டிக்காட்டு எங்களோட என்னடியப்பா பெரிய கதை இருக்கும்? சும்மா தெரிவில போகக்க ஒரு சொல்லுச் சொன்னல்போல பெரிய கதை கதைச்சதெண்டு? நினைக்காதடி" பாதிவுண்மையும் பாதி வேதனையுமாகச் சொன்னுள் கெளரி.
"நாங்கள் மட்டும்தானே பட்டிக்காடு? அவரும்தானே? பட்டணத்தில படிச்சாப்போல அவர் என்ன வித்தி” யாசமோ?" சாரதாவுக்கு யாரும் தங்களைப் பட்டிக் காட்டார் என்று சொல்வது பிடிக்காது. அதிலும் மாணிக்க வாசகம் அப்படி நிக்னக்கிருன் என்பதைத் தாங்க முடியாது" என்பது அவள் குரலில் தெரிந்தது.
அேவையப் போல படிச்சால எண்டாலும் பரவா யில்ல. நாங்க இனிப் பள்ளிக்கூடமும் போகமாட்டோம். மாணிக்கவாசகம் ஆக்கள் சும்மா எங்களை மதிப்பினமோ" கெளரி சாரதாவின் முகத்தை நேரடியாகப் பார்த்துக் கேட்டாள். படிப்பும் பாடசாலையும்தான் சாரதாவின் கடைசி யோசனை இந்த உலகத்தில் என்பது கெளரிக்குத்

Page 27
44 தில்லையாற்றங்கரை
தெரியும். மாணிக்கவாசகம் என்ற பெயர் சாரதா விஷயத்தில் படிப்பையும் பாடசாலையையும் எல்லா விஷயங் களுக்கும் முன்னதாகப் பிரதானப்படுத்தும் என்பதை இந்த அறைக்குள் வரும் வரை கெளரி யோசித்தே இருக்கவில்லை
என்னப்பா அலட்டுகிறாய்? அயலூருக்குப் படிக்கப் போக அம்மா விடுவாளோ?" சாரதா குழம்பிப் போய் விட்டாள் என்பது அவள் குரலில் தெரிந்தது.
4கநாங்க மூண்டு பேரும் பள்ளிக்குப் போகப் போறம் எண்டால் அவை கனக்க கத்த மாட்டினம்" கெளரி தைரியத்துடன், சொன்னாள். கடவுளே துணிவைத்தா மனதில் பிரார்த்தனையுடன் சாரதா பாவம், கெளரியைக் கூர்ந்து பார்த்தாள். முகத்தில் குழப்பம். கொஞ்ச நேரத்துக்கு முன் அவள் முகத்திலிருந்த இனிமையும் இப்போது வெளிப்படும் குழப்ப முகபாவமும் கெளரியால் மிகவும் ரசிக்கப்பட்டதை ஒரு சொட்டும் உணராமல் ஏதோ யோசித்துக்கொண்டிருந்தாள் சாரதா,
என்ன யோசிக்கிறாள்? கெளரி கேட்கவில்லை. அவளுக்குத் தெரியும். சாரதாவுக்குப் படிப்பில் உள்ள 6 அக்கறை பெரியம்மா வீட்டாருக்குத் தெரியாததல்ல. எப்போது இவளைப் பாடசாலைக்குப் போகாமற் பண்ணலாம் என்று பெரியம்மா நினைத்திருந்தாலும் ஆச்சரியமில்லை. இந்த லட்சணத்தில் சாரதா தான் பாடசாலைக்குக் கட்டாயம் போகத்தான் போகிறேன் என்று பிடிவாதம் பிடிப்பது அவர்களால் ps blu முடியாமலும் ஏற்றுக்கொள்ள முடியாத காரியமாகவும் தான் இருக்கும்.
ஆச்சி மஞ்சள் கிண்ணத்துடன் உள்ளே வந்தாள். அவளைத் தொடர்ந்து பரிமளம் மாமி மரகதம் எல்லோரும் உள்னே வந்தார்கள்.

ராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம் 45
இந்தா, மரகதம் உன்ற மச்சினிக்குப் பூசிவிடு" என்று: ஆச்சி மஞ்சள் கிண்ணத்தை மரகதத்தின் கையில் கொடுத்தாள்.
ஆறு கிழமையாகக் கெளரி மரகதத்தைக் காண வில்லை. பெரியாளான வீட்டில் கண்டபின் போக வில்லை. 9) ւմ G ւս ո Ֆ! பார்க்க வித்தியாசமாய்த் தெரிந்தாள்.
பாவாடை, தாவணி போட்டிருந்தாள். முகத்தில் எப்போதும்போல் அடக்கபாவம் என்ருலும் இப்போது இன்னும்கூட அடக்கமாய்த் தெரிந்தாள்.
மூன்று பெண்களையும் மாறி மாறிப் பார்த்த ஆச்சி கெளரியிடம் சொன்னுள்: நீயும் இண்டைக்கோ நாளைக்கோ ஊட்டுக்குள்ள இரிக்கப் போருய்" பரிமளம் மாமி உம் என்று தலையாட்டினுள்.
6இல்ல நான் இருக்கமாட்டேன்." கெளரியின் குரலில். பிடிவாதம். மத்தியானம் ஆச்சியால் உண்டான கோபம் தணியவில்லை. பரிமளம் மாமி குழப்பத்துடன் கெளரியைப் பார்த்தாள். மாமி சொல்லுங்கோ! பெரிய பிள்ளையான ஏன் பாடசாலைக்குப் போகக்கூடாது? நாங்க போவம். சாரதா, நான், மரகதம் மூண்டுபேரும் போவம்" கெளரி யின் குரலில் நம்பிக்கை.மரகதத்தின் முகத்தில் கலவரம். சாரதாவின் முகத்தில் அவநம்பிக்கை.
சோரதா சொல்லனப்பா நீயும் பள்ளிக்குப் போவன் எண்டு' சாரதாவைக் கெளரி ஏதும் செய்யச் சொல்லிக் கேட்டது இதுதான் வாழ்க்கையின் முதற் தடவை.
கெளரியின் குரலில் தெரிந்த துணிவோ அல்லது பள்ளிக்கூடம் போகா விட்டால் மாணிக்கவாசகம் பட்டிக்காட்டார் என்று ஒதுக்கிவிடுவான் என்ற பயமோ ஏதோ சாரதாவை உலுக்கியது, "ஓம் வசந்தா மச்சான்

Page 28
46 தில்லையாற்றங்கரை
போனதானே? நாங்களும் போவம்'. சாரதா சொல்ல மரகதம் இன்னும் குழம்பிப் போஞள்.
மரகதம் நீயும் சொல்லன். மூண்டுபேரும் பள்ளிக்குப் போவம் எண்டு" கெளரி தன் சந்தர்ப்பத்தை தழுவ விடாமல் சொன்னுள்.
தனியாக ஆச்சியுடன் சண்டை பிடிக்கத்தான் கெளரி யால் முடியாது. இப்போது சாரதாவுடன் சேர்ந்துபரிமளம் மாமியின் முன்னுல் மரகதத்தையும் வைத்துக் கொண்டு வழக்காடுவது மிக மிகத் துணிவைக் கொடுத்தது.
என்ன ஆட்டக்கதை கதைக்கினம்"ஆச்சி புருவத்தைச் சுருக்கித் தன் ஆந்தைக் கண்களை விரித்து விசாரித்தாள். ஆச்சிக்குப் பட்டப் பெயர் அண்டங் காக்காய். ஆச்சிக்கு சுடர் மூக்கும் பெரிய கண்ணும் அத்துடன் நிறமும் கறுப்பு. இப்போது ஆச்சியைப் பாக்க்க அவளின் பட்டப் பெயர் ஞாபகம் வந்தது. அண்டங் காகம் அகல விரிந்த கண்கள்
நீே என்ன பேசாமல் இரிக்கிருய்? இவளுகளுக்கு ஏசன்' ஆச்சி தன் மருமகளை நோக்கிச் சொன்னள்.
பரிமளம் மாமி ஒன்றும் சொல்லாமல் இவர்களைப் பார்த்துச் சிரித்துவிட்டு இருந்து பார்ப்பமே மாமி. ஏன் அதுகளோட இப்ப சண்டை" என்று சொல்லிவிட்டுப் போனள். ஆச்சி தன் காதுகளை நம்பாத விதத்தில் மூன்று பெண்களையும் எரித்துப் பார்த்தாள் இடர்பட கெளரிக்கு
விருப்பமில்ல. எேன்ன ஆச்சி சும்மா சண்டைக்கு 'வாறியள்' சாரதா தன்னுடைய வழக்கமான மேருட்டல்" சிரிப்பொன்றுடன் ஆச்சியைக் கேட்டாள். LDg&sash
இன்னும் ஒரு வார்த்தையும் பேசாமல் தனது இரண்டு
சிநேகிதிகளையும் பார்த்தாள்.
அன்றிரவு முழுதும் மழை. விடாத மழை. அம்மாவும்
அப்பாவும் பெரியப்பா வீட்டிலிருந்து வர நடுச்சாமமாகி

ராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம் 47
விட்டது. அப்பாவுக்குக் கொஞ்சம் வெறி. பாலிப்போடிக் கிழவனுக்குத் தலை கால் தெரியாத வெறி. மழை கொட்டுவதையும் பொருட்படுத்தாது தள்ளாடித் தள்ளாடிப் பாடிக்கொண்டு போய் பூவரச மரத்தில் விழுந்து அமுதவல்லி நாய் குலைத்து நடுச் சாமத்தில் பெரிய அமளி. கிழவனின் மனைவியின் திட்டல் வேறு. மழை விடாமல் பெய்து கொண்டிருந்தது மட்டுமல்ல. பேய்க் காற்று வேறு அடித்துக் கொண்டிருந்தது. மரங்கள், மட்டைகள் விழுவது அடிக்கடி கேட்டுக்கொண்டிருந்தது.
ஓயாத மழை, இடைவிடாத பேய்க் காற்று எவ்வளவு நேரம் என்று தெரியவில்லை. இருந்தாற் போல ஒரே இரைச்சல், அழுகை, ஆரவாரம், ஒலம், நாய்களின் குலைப்பு மனிதர்களின் நடமாட்டம்.
கெளரி அரைகுறை நித்திரையாய் இருந்தவள் திடுக்கிட்டு எழுந்தாள். அவனுக்கு முதல் அப்பா, அம்மா ஆச்சி, அமுதவல்லிநாய் எ ல், .ேல ஈ ரும் எழும்பி விட்டார்கள். சின்னத் தம்பி தங்கைகள் பயத்தில் அழத் தொடங்கிவிட்டார்கள்.
ஊருக்குள் வெள்ளம் வந்துவிட்டதாம்! களப்பு, ஒடைக் கரைகளில் சீவித்தவர்களின் வீடுகள், ஒலைக் குடிசைகள் வெள்ளத்தோடு அள்ளுப்பட்டுப் போய் விட்டனவாம். உடமையிழந்த மக்கள் உடுத்த உடுப்புட னும் கையில் பிடித்த குழந்தைக்ளுடனும் கதறியழுவதைக் கேட்கப் பரிதாபமாகவும், நிலைமை பயங்கரமாகவு மிருந்தது.
ஆச்சி இரண்டு கிழமையாகச் சொல்லிக் கொண் டிருந்தாள். ஊருக்குள் வெள்ளம் வரப் போகிறது என்று. அவள் நாக்கு என்ன கரிநாக்கோ? சொன்னது அப்படியே பலித்துவிட்டது.
பாலிப் போடிக் கிழவனின் வீடு விழுந்து விட்டதாம். கிழவனும் கிழவியும் தூக்காத குறையாகத் தங்கள்

Page 29
48 தில்லையாற்றங்கரை
ட்ரங்குப் பெட்டியுடன் இடர்பட்டு, விழுபட்டு இருட்டில் தடுமாறி வந்து சேர்ந்தார்கள்.
மழை, காற்று, கார் இருட்டு, மக்களின் ஒலம் எல்லாம். சேர்ந்த பயங்கரப் பொழுது கரைய அந்த ஊரில் விடிந்தது. வெள்ளத்தின் பயங்கரம் இப்போது நேரடியாகத் தெரிந் தது. ஊரின் நடுவில் மேட்டுப்பக்கங்களில் இருந்த வீடுகள் தவிர ஓடைக் கரை, தில்லையாற்றங்கரையை அடுத்திருந்த அத்தனை வீடுகளும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டிருந்தன.
களிமண் வீடுகள், ஒலைக்குடிசைகள் மட்டுமல்ல, கல் வீடுகள் கூட எத்தனையோ விழுந்துவிட்டன.
பெரியப்பா வீடு, கெளரி வீடு போன்ற மேட்டுப் பக்க வீடுகளில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்கள் ஒதுங்கி ஞர்கள். அடுத்த ஊரில் என்ன நடக்கிறது என்று அறியக் கூட முடியவில்லை. மற்ற ஊர்களுடன் ஒரு தொடர்பு மில்லாமல் இவர்களின் ஊர் நாலா பக்கத்தாலும் துண்டிக்கப்பட்டிருந்தது. ஒடும் வெள்ளத்துடன் இவர் களின் வீடுகளுக்குள்ளிருந்து அவர்களின் உடமைகள் என்று. சொல்லப்பட்ட கோழிகள், மாடுகள், நாய்கள், கட்டில்கள், குதிரைகள் என்பனகூட வெள்ளத்தில் அடிபட்டுப் போயின.
சிலரி தோணிகளில் ஏறிப் போய் ஒன்றிரண்டு பொருட்களைக் காப்பாற்றினர்.
கெளரி சனங்களோடு தானும் ஒருத்தியாய் ஒடிப்போய்” பாடசாலைக்கு என்ன நடந்தது என்று பார்த்தபோது உள்ளம் துடித்தது.
பாடசாலையை அண்டியிருந்த பிரமாண்டமான அரச மரங்களில் ஒன்று அப்படியே வேரோடு சாய்ந்து பாடசாலையை அழித்துவிட்டது. பாடசாலைக் கட்டிடத் தின் கூரை அப்படியே அழிந்துவிட சுவரின் பெரும்பகுதி அரசமரத்தின் அணைப்பில் கிடந்தது.

ராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம் 49
Cரவுதான் படிப்பைத் தொடர்வதுபற்றிக் கதைத் தார்கள். இந்தப் பாடசாலையில்தான் மேல்வகுப்பு வைக்க அனுமதி கிடைக்கும் என்று ஊர் மக்கள் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறர்கள். அந்தப் பாடசாலை கிட்டத்தட்டதி தரை மயமாகி விட்டது.
கெளரி நீர் வழியும் தன் கண்களைத் துடைத்துக் கொண்டாள். பாடசாலை, கோயில், எல்லாம் வெள்ளம் பாய்ந்துகொண்டிருந்தது. பிள்ளையார் கோயில் இருந்த இடம் எங்கே? பாவம்! பிள்ளையார் சிலைக்கு என்ன நடந் திருக்கும்? வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மக்கள் தங்கச் இடமில்லை; கடவுள் எங்கு தங்கினர் என்பது யார் பிரச்சினை?
'உன்னை யார் ஊர் உலாத்தச் சொன்னது" கெளரி யிடம் எரிந்து விழுந்தாள் ஆச்சி. அம்மாவுக்கும் கோபம், வயது வந்த பெண் பிள்ளைகள் ரோட்டுச் சுற்றுவது அம்மாவுக்குப் பிடிக்காது.
பள்ளிக் கூடம் அழிஞ்சு போச்சுது. அம்மா" அழாக்' குறையாக அம்மாவிடம் கெளரி சொன்னுள்,
என்ன பெட்டை கண்டறியாத கதை? ஆகிகளின்ர அவதியைவிட அந்த அளவு பிடிச்ச பள்ளிக் கூடமோ பெரிசு??? ஆச்சி கெளரியின்மேல் வள் என்று விழுந்தாள்.
*சரி, சரி தெய்வி ஆச்சிக்கு ஊறல் போடவேணும், பெரியம்மா வீட்டபோய் வெள்ளை வெங்காயம் ஒள்ளப்பய் லாங்கிக் கொண்டு வா" அம்மா கெளரியைத் தன் தாயிட மிருந்து பிரிக்கும் நோக்கத்தை மனதில் வைத்துக் கொண்டு சொன்னுள், பாலிப் போடியின் கிழட்டு மனைவி தெய்விக் கிழவிக்குத்தன் வீடு விழுந்து, ஆடு இரண்டும், கோழிகளும் குஞ்சுகளும் அள்ளுப் பட்டு வெள்ளத்துடன் போன
4 ســه ل5

Page 30
50. தில்லயாற்றங்கரை
காட்சியைக் கண்ட அதிர்ச்சியோ என்னவோ உப்பில் வேக வைக்க முடியாத அளவு நெருப்பெடுக்கும் காய்ச்சல்.
கிழவன் கிழவியின் முனு முணுப்பைப் பொருட்படுத் தாமல் பொருட்படுத்தும் அக்கறையில்லாமல் பெரியண்ணு மற்றும் பல இளைஞர்களுடன் சேர்ந்து ஊரில் உள்ள வெள்ளத்தால் பாதிக்கப் பட்டவர்களுக்கு உதவி செய்யப் போய் விட்டது.
ஊரில் எல்லாம் பதட்ட நிலையாய் இருந்தது. அடுத்த ஊர்களுக்கும் இவர்களுக்கும் எந்த விதமான தொடர்பும் இல்லாமல் போக்குவரத்து துண்டிக்கப்பட்டிருந்தது.
ஊரிலுள்ள கடைக்காரர்கள் கிராமத்தை அண்டி யுள்ள நகரத்துக்குப் போய் சாமான் வாங்கிக் கொண்டு விற்பவர்கள். வெள்ளத்தால் போக்குவரத்து தடைப்பட் டிருந்ததால் கடைக்காரர்களின் சாமான் பெட்டிகள் உடனடியாகக் காலியாகி விட்டன,
வெள்ளத்தின் கோரநிலை ஒருபக்கம், மக்கள் எதிர் நோக்க வேண்டிய பட்டினி ஒருபக்கம், வெள்ளம் ஒரு பக்கம், வெள்ளம் ஒருநாளில் போய்விட்டது. பட்டினி? வெள்ளத்தின் பாதிப்பு வெள்ளம் வடிய வடிய பூதாகார மாக வெளிப்பட்டது? எங்கள் ஊரா இப்படியிருக்கிறது!
நூற்ருண்டுக் கணக்காக அந்த ஊர்ச் சரித்திரத்தோடும் மக்களோடும் ஊடுருவி நின்று பல கதைகள் சொல்லும் பிரமாண்டமான ஆலைமரம், அரச மரங்கள், முசிரை மரங்கள் வேரோடு சாய்ந்து கிடற்தன.
தென்னை மரங்கள் எண்ணிக்கையற்ற விதத்தில் அழிந்து விட்டன. ஒரு தேங்காய் எட்டு பத்து சதத்துக்கு மேல் விலைப்படாத கிராமமது. இப்போது கறிக்குக் பாவிக்கக் கூடத் தேங்காய் கிடைக்குமோ என்பது சந்தேகத்துக்குரியவிடம்.

ராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம் 51
கெளரி இப்படி ஒரு வெள்ளத்தை அவளின் வாழ் நாளில் காணவில்லை.
மாரி காலம் வந்தால் மழை பிடிக்கும். மழை பெய் தால், ஓடைகள், களப்புகள், தில்லையாறு பெருக்கெடுக்கும். சின்ன, பெரிய முகத்துவாரங்கள் உடையும். அக்கரைப் பற்றுக்கும் திருக்கோயில் பொத்துவில் கிராமங்களுக்கும் போக்குவரத்து ஒன்று இரண்டு நாட்களுக்குத் தடைப்படும், பின்னர் வெள்ளம் வடிய விட்டு நிலைமை கொஞ்சம் கொஞ்சம் சரியாக வரும். ஊர் மக்கள் தோணிகளில் ஏறிப் போய் சின்ன முகத்துவாரத்தில் கடலும் தில்லையாறும் கலந்து சேர்ந்து, நுரை பொங்கிப் பிரவகிதிது, கடலே ஊருக்குள் வருவது போன்ற பிரமையையுண்டாக்கும் காட்சியைக் கண்டு மகிழ்வார்கள்.
ஆகவும் பெரிய வெள்ளம் என்பது, சில வேலை ஒடக் கரையிலுள்ள மக்களின் வீடுகளில் வெள்ளம் புகுவது என்பதுதான் கெளரியின் அனுபவம்.
இப்போது காணும் இயற்கையின் கோரம் பாரிக்கவே பயங்கரமாக இருந்தது. ஊரைச் சுற்றியுள்ள பச்சை பசேல் என்ற வெள்ளாண்மை வயல்கள் வெள்ளக்காடாயிருந்தது. வெள்ளம் முடிய விட்டுப் பார்க்க சில இடங்கள் வெறும் மணல் பாய்ந்த பரப்பாகத் தெரிந்தது.
பெரியப்பா தான் ஒரு பெரிய மனிதன் என்பதைக் காட்ட தன் நெல்லுக் கொட்டிலைத் திறந்து பட்டினியால் வாடும் ஏழை மக்களுக்கு உதவி செய்தார்.
உதவி என்று அப்போது அவர் செய்தது எக்கச் சக்க மான வட்டிக்குக் கொடுத்த கடன் என்பது பின்னர் ஒரு காலத்தில் கெளரிக்குத் தெரிய வந்தது.
ஊரில் வெள்ளத்தால் ஏற்பட்ட சேதத்தைப் பார்க்க அரசாங்க அதிகாரிகள் வந்தார்கள். பாராளுமன்றப் பிரதிநிதியை பெரியப்பா, மாமா, அப்பா எல்லாரும்

Page 31
52 தில்லையாற்றங்கரை
போய்ப் பார்த்தார்கள். வெள்ளத்தால் உண்டான சேதத்துக்கு நிவாரண உதவி உடனடியாகக் கிடைக்க வேண்டும் என்று ஊர் மக்கள் கேட்டார்கள், ஊர் மக்களின் சார்பில் பெரியப்பா, அப்பா, மாமா மூவரும் ஏதோ பத் தி ரங் களும் விண்ணப்பங்களுமாய் எழுதிக்
குவித்தார்கள்.
ஒவ்வொரு வீட்டுக்கும் போய் அழிஞ்ச சேதத்தை மதிப்பிட்டார்கள். இதே நேரம் ஊரில் பலவிதமான வதந்திகள் உலாவத் தொடங்கின. செல்வராஜாவின் தகப்பன் ராசநாயகம் எப்போதும் பெரியப்பாவுடன் போட்டியாம். (ஆச்சி அப்படித்தான் சொன்னுள்.)
ராசநாயகத்தார் பெரியப்பாவுக்கு எதிராக வீணுன வதந்திகளைக் கிளப்பி விடுவதாகக் கதை அடிபட்டது.
படிப்பறிவில்லாத கிராமமக்களை நிவாரண அழிவுப் பத்திரங்களில் கையெழுத்து வைக்கப் பண்ணி நிவாரண உதவிப் பணத்தைப் பெரியப்பா விளையாடுவதாக" கதை அடிபடுவதால் ஆச்சி சொன்னுள். ஆச்சிக்குத் தெரியாத ஊர் விஷயம் ஒன்றுமில்லை.
கனகலிங்கம் கடைக்குப் போய் வரும்போது சாமான் கள் வாங்கி வருகிருளோ அல்லது ஊர் வம்பத்தைத்தான் வாங்கி வருகிருளோ என்று இருக்கும்.
ராசநாயகத்தார் இப்படிக் கதைத்துத் திரிவதைப் பெரியப்பா கேள்விப்பட்டால் என்ன நடக்குமோ தெரியாது என்றும் ஆச்சி அடுப்படியிலிருந்து கதைக்கும்போது சொன்னுள்.
ஆச்சிக்குப் பெரியப்பாவை அதிகம் பிடிக்காது. ஏனென்றல் பெரிய கோரிய காரணம்" ஏதோ செய்யாத துரியோதன தந்திரமெல்லாம் செய்து ஊர் மக்களைக் கொள்ளையடிப்பதாக ஆச்சி சிலவேளை அம்மாவுக்கோ

grêtgelwch i ffurf Goatffurfiwyd safluth 冯3
பரிமளம் மாமிக்கோ சொல்லியிருப்பதைக் கெளரி கேட்டிருக்கிருள்.
பெரியப்பா சையில் கேனத்துடன்" இருப்பதால் ஆச்சி அப்படிக் கதைக்கிருளோ என்று கெளரி நினைத்ததும் உண்டு. இப்போது எரியும் வீட்டில் திருடி லாபம் எடுப்பது போல் வெள்ளத்தால் உண்மையாகவே பாதிக்கப்பட்ட மக்களின் காட்டில் திருகுதாளம் விடுகிருரோ என்று கூட யோசித்தாள் கெளரி. ஆச்சியின் இப்படியான கதைகள் பலவிதமான சிந்தனைகளைத் தூண்டி விடும்போது அந்த விஷயங்களைச் கேட்டு உண்மையறியத் துடிப்பாள் கெளரி.
சாரதாவிடம் எதையும் கதைக்க முடியாது. அண்ணு விடம் கேட்கலாம் ஆனுல் அவனும் மற்றும் ஊர் இளைஞர் களும் பாராளுமன்றப் பிரதிநிதி வெள்ளத்தால் ஏற்பட்ட சேதத்தைப் பார்க்க ஊருக்கு வரும்போது தங்கள் கிராமத்துக்கு ஒரு புதிய பாடசாலை உடனடியாகத் தேவை என்பதை வெளிப்படுத்தப் போகிருர்களாம்.
அண்ணு சொன்னன் ஒரு விதத்தில் பாடசாலை அழிந்தது நல்லது. இப்போது புதுப் பாடசால்ை மட்டுமல்ல. மேல்வகுப்பு வைக்கக்கூடிய அனுமதியையும் கேட்கலாம்."
புதுப் பாடசாலை வருமா?
வந்தால் அயலூருக்குப் படிக்கப் போகும் அலைச்சலு மில்லை; அதனல் ஆச்சியுடன் சண்டையுமில்லை.
ஆனல் பெரியப்பாவும் ராசநாயகத்தாரும் பொருமிக் கொண்டிருக்கும் விஷயம் வெளிப்பட்டு சண்டை வந்தால் ஊர் இரண்டு படும்.
ஊருக்குத் தேவையானது உடனடியான நிவாரண சேவை. ஊரை விழுங்க முயன்று முடிந்த மட்டும் சேதம் விளைவித்து விட்டு தில்லையாறு ஒதுங்கிப் போய் நின்று வரை ஏளனம் செய்வதுபோல் ஒடுங்கிப் போய் நின்றது

Page 32
4. தில்லயாற்றங்கரை
தில்ல்ையாறு உண்டாக்கிய சேதத்துக்கு நிவாரண உதவி கொடுக்க அரசாங்கம் பல விதத்திலும் உதவி செய்தது.
ஹெலிகொப்டரிகளில் சாப்பாடு மட்டுமல்லாமல் துணி மளிகளும் கொண்டு வந்து போட்டார்கள்.
அமெரிக்கர் உதவி என்று கோதுமை மாவு மூட்டைகள் கனகலிங்கம் மாமா கடைக்கு வந்து குவிந்தது. பெரியப்பா முன்னின்று அதிகாரம் செய்து தேவையான சனங்களுக்குப் பங்கிட்டுக் கொடுத்தார். புழுவும், வண்டும் கலந்த அந்த மாவை வாங்கி ரொட்டியோ புட்டோ செய்து சாப்பிட்ட 'ஏழை மக்கள் வெள்ளத்தால் ஏற்பட்ட கஷ்டம் போதா தென்று இப்போது தரம் குறைந்த மாவின் உணவு வகையில் நோய்ப்பட்டு அல்லலுற்ருர்கள்.
மாமா, அண்ணு, செல்வராஜா, மாணிக்கவாசகம் என்போர் விடாமல் ஊர் மக்களின் தேவைகளுக்குத் தங்கள் உடலுழைப்பால் ஊக்கம் ஊட்டினுர்கள்.
நிவாரணப் பணத்தை வாங்கிய ஏழைகள் கண்ட பாட்டுக்குச் செலவழித்து விட்டு பின்னர் குடிசை கட்ட வழியில்லாமல் கஷ்டப்படுவார்கள் என்பது தெரிந்த படியால் ஏழைகளின் கைகளில் காசு கரைய முதல் குடிசைகள் கட்டிக் கொடுக்க உதவி செய்தார்கள்.
பாராளுமன்றப் பிரதிநிதியை மாமா, அண்ணு ஆட்கள் போய்க் கண்டு கூட்டிக் கொண்டு வந்து பாடசாலை கட்டும் விஷயத்தைப் பற்றிக் கதைத்தது கெளரிக்குச் சந்தோஷ மாக இருந்தது. எப்படியும் ஒரு பெரிய பாடசாலை கட்டப் பட்டால் எட்டாம் வகுப்பிற்கு மேல் மேல் வகுப்பு வைப்பார்கள். அப்படியானல் தாங்கள் அயலூர்க்குப் போகத் தேவையில்லை. உள்ளூரிலேயேபடித்து எஸ். எஸ்.சி பாஸ் பண்ணி ஆசிரியைகள் ஆகலாம் என்று கெளரி சொல்ல சாரதாவும் சரி என்று சம்மதித்தாள். வெள்ளம்

ராஜேஸ்வரி பாலசுப்பிரமணியக் 8s
வந்த காட்டில் மாணிக்க வாசகம் அண்ணுவுடன் சேர்ந்து கொண்டு திரிவது சாரதாவுக்குப் பெரிய சந்தோசம். பள்ளிக்கூடம் போய்ப் படிக்காவிட்டால் தன்னைப் பட்டிக் காட்டுப் பெண் என்று, பார்க்காமல் விட்டுவிடுவான் என்று கெளரி சாடை மாடையாகச் சொன்னது சாரதாவுக்குச் சரியாக மனதில் ஊறியிருக்க வேண்டும்.
இப்போதெல்லாம் கெளரி பாடசாலை, படிப்பு என்று கதை தொடங்கும்போது ஊக்கமாகக் கேட்கிருள் அல்லது ஊக்கமாகக் கேட்கப் பாவனை என்ருலும் செய்கிருள்.
பாடசால்ை இருந்த இடத்தில் ஒரு பெரிய கொட்டில் போடப்பட்டு வெள்ளத்தில் அள்ளுப் படாமல் போயிருந்த மேசை கதிரைகளைப் போட்டு பாடசாலை ஆரம்பித்தாரி 536) Lountailurif.
வெள்ளம் வந்திருக்கா விட்டால் இந்தத் தை மாதம் சோளம் முறிக்கும் காலமாக இருந்திருக்கும். பாமங்கை வட்டை, கண்ணகி புரம், புட்டம்பை, அறிக்கம்பை, பட்டி மேடெல்லாம் வெள்ளத்தால் சேதமடைந்ததால் அந்தப் பகுதிகளில் பயிர் செய்யப்பட்டிருந்த சோளம், குரக்கன், மரவள்ளி என்பன அடியோடு நாசமாய்ப் போனதால் இவர்கள் ஊர்களில் உள்ள சிறுவர்கள் மட்டுமல்லாது வயல்கள், சேனைகளில் தாய் தகப்பனுடன் குடியேறிப் போய்ப் படிப்பைக் கவனிக்காத சிருர்களும் இப்போது வெள்ளத்தால் ஏற்பட்ட அழிவால் ஊரோடு நின்றர்கள்.
படிப்பில்" அக்கறையோ என்னவோ பள்ளிக் கூடத்தில் கிடைக்கும் இலவசப் பானுக்கும் பாலுக்கும் ஊர்க் குழந்தைகள் எல்லாம் கொட்டில் பள்ளிக் கூடத்தில் தஞ்சம் புகுந்தபோது இடம் கொள்ளவில்லை. இதுவரை காலமும் 5 ஆசிரியர்கள் மட்டுமாயிருந்த பாடசாலைக்குத் திடீரென்று இன்னும் இரண்டு புது ஆசிரியர்கள் வந்தார்கள். ராமநாதன் புது வாத்தியாரின் பெயர்,

Page 33
6 தில்லையாற்றங்கரை
இப்போதுதான் திருமணமானவராம். மனைவி பரமேஸ்வரி யும் இந்தக் கொட்டில்" பாடசாலைக்குப் படிப்பிக்க வந்திருக்கிருள்.
பெரியப்பா வீட்டுக்குப் பக்கத்தில் இருந்த கல்வீட்டுக்கு அவர் வள் குடிவந்தார்கள். புனித மலர் டீச்சரைப் புதின மாகப் பார்த்ததுபோல் இளம் சிருர்கள் பரமேஸ்வரி டீச்சரை உச்சிமுதல் உள்ளம் கால் வரை ஒரு அணுவும் விடாது அளந்து பார்த்தார்கள்.
ராமநாதன் வாத்தியார் மலைநாட்டில் படிப்பித்த வராம். திருமணத்தின் பின் மனைவிக்காக மாறுதல் எடுத்துக் கொண்டு இந்தப் பக்கம் வந்தாராம். ராமநாதன் வாத்தியார் கல்முனைக்காரர். பெண்சாதியாழ்ப்பாணமாம் பக்கத்து ஊரில் கடை வைத்திருக்கும் கடைக்காரர்களையும் அப்போததிகார்மாரையும் யாழ்ப்பாணத்தார் என்ற முறையில் கெளரிக்குத் தெரியும். ராமநாதன் வாத்தியார் ப்ரமேஸ்வரியின் தமயனுடன் யாழ்ப்பாணம் போய்வந்த போது ராதநாதன் வாத்தியாருக்கும் பரமேஸ்வரிக்கும் ெேதாடுப்பு" ஏற்பட்டு இப்போது இவ்விடம் வந்திருக் கிருர்களாம் தம்பதிகளாக. ராமநாதன் வாத்தியார் குடி வந்து ஒரு கிழமைக் கிடையில் யார் மூலமோ விஷயமறிந்து ஆச்சி மற்றவர்களுக்குக் சொல்லிக் கொண்டிருந்தாள்.
வாத்தியார் கல்முனைக்காரர் என்றபடியால் துறை நீலாவணைக்குச் சாராயம் வாங்கப்போகும் பாலில் போடிக் சிழவன் துப்பறிந்து கொண்டு வந்திருக்கலாம் என்று நினைத்தாள் கெளரி. உடைந்து கிடந்த பாடசாலையில் ஒரு பக்கம் வகுப்புக்கள் ஆரம்பித்தாலும் ஒன்பதாம் வகுப்புக்கு போகவேண்டிய மாணவர்களின் நிலை பற்றி யாரும் ஏதும் சொல்வதாயில்லை.
புதுக் கட்டிடம் திறக்கும் பொழுது கட்டாயம்
ஒன்பதாம் வகுப்பு வைக்க அனுமதி எடுத்துத் தருவதாக நாம், பி, சொன்னதைச் இன்னமாமா உறுதியாக நம்பினுர்,

ராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம் 57
ஒன்பதாம் வகுப்பு படிக்க வேண்டிய மாணவர்கள் அயலூருக்குப் போவதா அல்லது புதுக் கட்டிடம் வரும் வரைக்கும் காத்திருப்பதா என்று யோசித்துக் கொண் டிருந்தார்கள்.
விடுதல்ை முடிந்து மட்டக்களப்புக்குப் போய்ப்படிக்கும் மாணவ மாணவிகள் பெட்டி தலையணைகளுடன் புறப்படதி தொடங்கிவிட்டார்கள்.
தூரத்து மைத்துணியான வசந்தா மட்டக் களப்புக்குப் போவதைக் கேள்விப்பட்டதும், கெளரியும் தானும் பாட சாலைக்குப் போக வேண்டும் என்று சண்டை பிடித்தாள்.
வேலையில்லாத ஆட்கள் சும்மா ஆடித்திரியினம் எண்டால்போல நீங்களும் ட்ராமா போடவோ" ஆச்சி கிண்டலாகக் கேட்டாள். தங்களுடன் படித்த ஒன்பதாம் வகுப்பு மாணவர்கள் அயலூருக்குப் போகவெளிக்கிட்டால் தாங்களும் கட்டாயம் போக வேண்டும் என்று கெளரி சாரதாவிடம் சொல்லி வைத்திருந்தாள்.
சாரதாவுக்கு இன்னும் இரண்டாம் தண்ணீர் வார்க்க வில்லை. வெள்ளமும் அதுவும் இதுவும் என்று நாள் இழு பட்டுப் போய்க் கொண்டிருந்தது.
அத்துடன் சாரதாவின் சாமர்த்தியச் சடங்கை விமரி சையாக நடத்த பெரியப்பா வெள்ளத்தால் சேதப்பட்ட கூரை சுவர்களைத் திருத்தி வெள்ளையடித்து, வீட்டைச் சுற்றிப் புதுத் தட்டு வேலிகள் கட்டி தடல் புடல்கள் செய்து கொண்டிருந்தார்.
ஆச்சியும் பரிமளம் மாமியும் திருக்கோயிலிலிருந்து வந்த இன்னுமொரு மாமியும் சாமர்த்தியப் பட்டதன் பலன் கேட்க வேதநாயகம் குருக்களிடம் வெற்றிலை வைத்துக் கேட்கப் போயிருந்தார்கள். நல்ல பலனுயிருக்க வேணும் பட்டிமேட்டு மாதாவே" என்று பெரியம்மா வேண்டிக் கொண்டாள்.

Page 34
38 தில்லயாற்றங்கரை
சாரதா முதற்பெண், அவளின் பலன் நன்ருக இருந்து அதனுல் குடும்பத்துக்கும் நல்ல எதிர்காலம் பிறக்க வேண்டும் என்று எதிர்பார்த்தது பெரியம்மாவின் பிழை யில்லை. ஆச்சிதான் சாரதா பெரிய பிள்ளையான நாள் சரியில்லை என்று சொல்லிக் கொண்டிருக்கிருள்.
ஆச்சி எதற்கெடுத்தாலும் சாத்திர தோத்திரம் பார்க்காமல் விடமாட்டாள். சாரதா வெள்ளிக்கிழமை பெரிய பிள்ளையாகி விட்டாளாம். வேலி பாயப் போ கிருளாம்! அதுதான் வெள்ளிக்கிழமையின் பலனம் திங்கட்கிழமை புத்திறிந்தால் பதிவிரதையாம். செவ்வாய்க் கிழமை என்ருல் விதவையாம். புதன் கிழமை புத்திர வதியாம். வியாழக்கிழமை கள்ளக்குணம் கொண்டவளாம். வெள்ளிக்கிழமை வேலி பாய்வாளாம் (பெரியப்பாவின் ஏழு தட்டு வேலிகளையும் எப்படித் தாண்டிப் பாய்வதாம்?) சனிக்கிழமை தரித்திரவாதி. ஞாயிற்றுக்கிழமை "குடும்பப் பெண்ணும்? ஆச்சி, தெய்விக் கிழவிக்குச் சொல்லிக் கொண்டிருந்தாள்.
ஆச்சி எந்த நாளில் பெரிய பிள்ளையாகியிருப்பாள்? கெளரிக்குக் கேட்க விருப்பமாயிருந்தது. அதிகம் கதைத்து ஆச்சியுடன் வாக்கு வாதப்படத் தயாரில்லை.
ராமநாதன் வாத்தியாரின் மனைவி பரமேஸ்வரி சாரதா வீட்டுக்கு வந்திருந்தாள். இவர்கள் ஒன்பதாம் வகுப்பு படிக்க அயலூருக்குப் போக யோசிக்கிருர்களா என்று கேட்டாள்.
கிராமத்தில் பெண்களின் படிப்டை அதிகம் அங்கீகரிப்ப தில்லை என்பதை அவள் அறிந்து வைத்திருந்தாள். வெள்ளத்தில் பாடசாலை விழாமல் விட்டிருந்தால் சில வேளை தாங்களும் இந்த ஊருக்கு வந்திருக்கச் சந்தர்ப்பம் கிடைத்திருக்காது என்று பரமேஸ்வரி டீச்சர் சொன்னுள். தங்களின் கிராமம் இவளுக்குப் பிடிக்கவில்லையாக்கும்

ராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம் 59
என்று தங்களுக்குக் கதைத்துக் கொண்டார்கள் 4Fntptá5m, கெளரி, மரகதம், பெரியப்பா ராமநாதன் வாத்தியாரைக் கூப்பிட்டு வெற்றிலை" சாப்பிடச் சொன்னர்.
ஊருக்குப் புதிதானவர்களைக் கெளரவமாக மதிப்பதை அறிவிக்க ஊரார் இப்படி அழைப்பு விடுவார்கள். இவர்கள் கிராமத்துக்கு வரும் ஆசிரியர்கள் யாரும் இவர்கள் ஊரில் தங்கி நின்றதில்லை.
கல்முனை, கல்லாது, திருக்கோயில், காரைதீவு போன்ற இடங்களிலிருந்து பஸ்சில் வந்து போவார்கள். தனிப்பட்ட ஆட்களானபடியால் அவர்கள் பிரயாணம் செய்வதைப் பொருட்படுத்தவில்லை போலும். ராமநாதன் வாத்தியார் தான் முதன் முதல் இவர்கள் கிராமத்தில் சீவிக்க வந்த ஒரு அயலூரிப் பிறவி,
வந்த அடுத்த நாளே மாமா, அண்ணு ஆட்களுடன் சேர்ந்து வெள்ளத்தில் விழுந்த, பெரிய மரங்களைக் கிளைகளையும் தெருக்கள் ரோட்டுகளிலிருந்து அகற்றித் துப்புரவாக்க உதவி செய்ததாக தம்பிகள் வந்து சொன்னர்கள்.
எலக்ரிசிட்டி இல்லாத இருண்ட கிராமமது. இரவில் வீட்டுத் திண்ணைகள், கடை வாங்குகள், பெரிய வீட்டு முற்றங்களில் எரியும் விளக்குகளோ, பெட்ரோமாக்சு களோ தவிர எந்த மின்சார வசதியுமற்றவர்கள்.
அந்த இரவுகளுக்கும் இருட்டுக்கும், இரவுகளில் தவளை களின் விதவிதமான கத்தல்களுக்கும், தூரத்துப் பாலக் காட்டில் ஊழையிடும் நரிகளின் பயங்கர சத்தங்களுக்கும் பரமேஸ்வரி பழக்கப்பட்ட எத்தனை மாதங்கள் எடுக்குமோ தெரியாது என்று வீட்டில் பெண்கள் கதைத்தார்கள்.
பரமேஸ்வரி முதல்தரம் சாரதா வீட்டுக்கு வந்தபோது சாரதா மஞ்சள் பூசி சேல் உடுத்து பளிச்சென்றிருந்தாள்.

Page 35
60 doutròpiamas
அதே நேரம் வெற்றிலை வைத்துப் பார்க்கப் போன பெண்கள்.கூட்டமும் வந்திருந்தது. அவர்களின் முகத்தில் சற்தோஷம் பரவியிருந்தது. அவர்கள் நினைத்திருந்த மாதிரி குருக்கள் சொல்லியிருக்கலாம் என்று கெளரி தனக்குள் சொல்லிக் கொண்டாள்.
என்ன சொல்லியிருப்பார்கள்?
பதினறு பெற்றுப் பெருவாழ்வு வாழச் சொல்லி uGüLumenm?
சாரதாவின் முகத்தில் ஆவலும் அவதியும் பளிச் சென்று தெரிந்தது. மாணிக்கவாசகம் வந்து மாலையிடப் போகிருன் என்று சொல்லியிருப்பார்களா? கெளரி சாரதாவின் காதில் கிசுகிசுத்தாள்.
எேன்ன ஆச்சி சாரதா படித்துப் பட்டம் பெறுவாள் என்று குருக்கள் சொன்னுரோ" கெளரி ஆச்சியிடம் வேடிக்கையாய்க் கேட்டாள். எதைக் கேட்டால் ஆச்சிக்குப் பிடிக்காதோ அதைக் கேட்டு ஆச்சியின் முகத்தில் வழியும் புன்சிரிப்பை வழித்தெடுக்க வேணும் போல் ஒரு ஆவல் கெளரிக்கு,
ஆச்சிக்கு கோபம் குதித்துக் கொண்டு வந்திருக்க வேண்டும். நீங்கள் சொல்லுங்கோ வாத்தியாரம்மா, இந்தப் பெட்டைகளுக்கு என்ன படிப்பு" ஆச்சி பரமேஸ்வரியிடம் நியாயம் கேட்கப் போக பரமேஸ்வரிக்கு என்ன மறுமொழி சொல்வது என்று திணறலாக இருந் திருக்க வேண்டும், சாரதாவையும் கெளரியையும் மரகதத் தையும் ஏறிட்டுப் பார்த்தாள்,
அப்போது மாமா, அண்ணு, பெரியப்பா, ராமநாதன் வாத்தியார் எல்லோரும் இவர்கள் இருக்குமிடத்துக்கு வந்து கொண்டிருந்தார்கள். எப்படியும் பள்ளிக்கூடம் கட்டி முடிக்க வேணும்" ராமநாதன் வாத்தியாரின்

ராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம் 61
வார்த்தைகள் அவர்கள் என்ன பேசிக்கொண்டு வந்திருக் கிருர்கள் என்பதைக் காட்டியது.
பேள்ளிக்கூடம் கட்டுறவரைக்கும் நாங்க என்ன செய்ய?" கெளரி தைரியாமாகக் கேட்டாள். சாரதாவும், மரகதமும் வீட்டுக்குள் இருந்து உன்னிப்பாக இந்த உரை யாடலைக் கவனித்தார்கள். எேன்ன செய்யுறதோ? பொடியன்கள் எல்லாம் ரவுனுக்குப் போகப் போறம் என்று சொன்னன்கள். அவனுகளோட போறதுதானே' ராமநாதன் வாத்தியார் சிரித்தபடி சொன்னுர்,
ஊருக்கு வந்து ஒரு சொற்ப காலத்தில் ஊரோடு ஒரு மனிதனுராய் இவர்கள் விஷயத்தில் கலந்து முடிவு கட்டுவது, அவரது ஊக்கம் இந்த மர் விஷயத்தில் எவ்வளவு பதிந்திருக்கிறது என்று உடனே கவனித்தாள் கெளரி,
எேன்ன வாத்தியார் எங்கட ஊர் பழக்கம் தெரியாமக் கதைக்கிறியள். ஒண்டிரண்டுபேர் வேதப் பள்ளிகளுக்குத் தங்கட பெட்டைகளை அனுப்பினப் போல நாங்களும் வழி முறை மறந்து புத்தியறிந்த புள்ளையள ரோட்டில போக விடுறதோ' ஆச்சி தன் அதிகாரத் தொனியில் கேட்டாள்.
பேய்க் கதை கதையாதேயுங்கோ பெத்தா. நாங்க இப்படி தேவையில்லாத கதைகள் கதைச்சுத்தான் இன்னும் இப்படி இருக்கிறம். பெட்டைகள் படிச்சா என்ன குறைஞ்சு போச்சு? உங்களுக்கு ஊட்டில நெல்லுக் குத்த வும் கொச்சிக்காய் இடிக்கவும் ஆக்கள் இல்லாமல் போய் விடுவினம், அதுவா பிரச்சினை" வாத்தியார் ஆச்சியைப் Lun f5gä (845 litrf.
பெரியம்மா, பரிமளம் மாமி, அம்மா பரமேஸ்வரி ரிச்சர் அத்தினபேரும் ஒன்றும் சொல்லவில்லை.
நீங்கள் என்ன சொல்லுறியள் போடியார்?" வாத்தியார் பெரியப்பாவைப் பார்த்துக் கேட்டார்.

Page 36
62 தில்லையாற்றங்கரை
"ஊர்ப் பெரியாட்கள் முன்னுக்கு நிண்டு முன்மாதிரி காட்ட வேணும் போடியார். பெட்டைகள் அயலூருக்குப் படிச்சால் என்ன குறைஞ்சு போகும்? நாங்களும்தான் பஸ் ஏறிக் கார் ஏறிப் படிச்சம்' பரமேஸ்வரி ரிச்சர் முதற்தரம் வாய் திறந்தாள், பெண்களின் படிப்பிலும் முன்னேற்றத் திலும் அவளின் போக்கு வாத்தியாரை ஒத்திருந்தால் தாங்கள் அதிர்ஷ்டசாலிகள் என நினைத்தாள் கெளரி.
ஓம் ஓம் அவளுகளுக்கு விருப்பவெண்டால் போகட்டும், கொஞ்ச நாளைக்கு விட்டுப் பார்ப்பமே" பரிமளம் மாமி தைரியத்துடன் சொன்னுள்,
எனக்கென்னவோ இந்த ஆட்டம் ஒன்டும் புடிக் கல்ல' ஆச்சி தன் தோல்வியை மறைத்துக் கொள்ள கோழிகளைத் துரத்தும் சாட்டில் தூரப் போனள்,
கெளரி சாரதாவிடம் போனதும் சாரதா கேட்டாள் புது வாத்தியார் நல்ல மணிசன் போலத் தெரியலியா?"
மரகதம் வழக்கம்போல் தன் குழம்பிய பார்வையுடன் கெளரியைக் கேட்டாள்; அப்ப, நாங்க பள்ளிக்கூடம் போற நிச்சயம்தானே" ஓமடி விசரி. கட்டாயம் போகத் தான் போறம், சாரதா மட்டும் கல்யாணம், காதல் எண்டு கற்பனை செய்யாட்டாச் சரி." சாரதா பொய்க் கோபத் துடன் கெளரியைத் தள்ளினுள். வெற்றிலை வைத்துச் சாத்திரம் கேட்டதன் விபரத்தை எப்படி அறிவது என்று அவள் மனத்துக்குள் துடிப்பது கெளரிக்குத் தெரியும்,
வீட்டில் குழுமியிருக்கும் ஆட்கள் எல்லாம் போய் முடியத்தான் ஆச்சியும் அம்மாக்களும் ஒன்ருயிருந்து அது பற்றிக் கதைப்பார்கள் என்று தெரியும்.
அதுவரைக்கும் கெளரிக்கும்தான் தன் ஆவலை மறைக்க முடியவில்லை. ஆச்சியிடம் கேட்டால் நல்ல பேச்சுக் கிடைக்கும், மரகதத்தின் பெரிய பிள்ளையான குறிப்பின்படி

ராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம் 63
உற்றின் மாப்பிள்ளை என்று சொன்னர்களாம் எந்தத் திசையில் எப்படியான மாப்பிள்ளை என்று கூடச் சொன் ஞர்களாம். அதுபற்றி மாமியும் ஆச்சியும் அம்மாவுடன் குசு குசு என்று கதைத்தார்கள்.
சாத்திரத்தின் குறிப்பின்படி யாராயிருக்கும் மரகதத் தின் மாப்பிள்ளை என்றும் ஊடகமாகக் கதைத்தார்கள். வேதநாயகம் குருச்களின் குறிப்பின்படி சாரதாவுக்கு யாரைப் பற்றிச் சொல்லியிருக்கும்? மாணிக்கவாசகத்தைப் பற்றிச் சொல்லியிருக்காவிட்டால் சாரதா மண்டை வெடித்துச் செத்துப் போவாள்.
சாமரித்தியப்பட்ட பருவப் பெண்களுக்கும் சம்பிர தாயப்படி இரண்டாம் தண்ணீர் வார்ப்பது பெரிய சடங்கு. சாமர்த்தியக் கல்யாணம் என்றுப் பெயர்.
ஆளுல் சாரதாவின் சாமர்த்தியச் சடங்கு ஊரில் வந்த வெள்ள நிலையால் பாதிக்கப்பட்டு பின் போடப்பட்டது. பக்குவப்பட்டு 21ம். நாள் அன்று இரண்டாம் தண்ணீர் வார்க்க ஒழுங்குகள் செய்யப்பட்டன. அதற்கு முதல் ஊரின் வழக்கப்படி சொந்தக்காரர்கள் சாமர்த்தியக் கல்யாணங்கள் செய்தார்கள்.
பெரியம்மாவின் சொந்தக்காரர் திருக்கோயிலிலிருந்து வண்டிகளில் பலகாரப் பெட்டிகளும் பரிசுச் சாமான்களு மாகக் கொண்டு வந்து இறக்கினர்கள்.
பெரியப்பா தன் செல்வாக்கைக் காட்ட ஊரெல் லாம் சொல்வி எல்லோருக்கும் விருந்து போட்டார்.
பாலிப்போடிக் கிழவன் பெரியப்பாவின் தோராளத் தில்" நன்ருகத் தள்ளாடிக் கொண்டு திரிந்தது. கிழவனின் மனைவி தெய்விக் கிழவிக்கு வெள்ளத்துடன் வந்த வருத்தம் இன்னும் போகவில்லை. கெளரி வீட்டில்தான் கிழவிக்குத் தஞ்சம்,

Page 37
54 தில்லையாற்றங்கர்ை
ஆச்சியின் ஒன்றைவிட்ட தம்பி பாலிப்போடி, அதனல் கிழவியைப் பராமரிப்பது ஆச்சியின் தலையில் விழுந்
திருந்தது.
சாமர்த்திய வீட்டு விருந்து வேலைகள் போதாதென்று கிழவியின் வருத்தம் ஒரு பக்கம். ஆச்சிக்குப் பெரிய பொறுப்பு.
அம்மாவுக்கு 'இன்னென்று' வயிற்றில் போலும், விடிந்தால் முதல் வேலையாக விழுந்தடித்துக் கொண்டு வாழைமரத்தடியில் சத்தியும் ஒங்காளமும் எடுக்கிருள்.
குடல் வெளி வரும்போல் அம்மா ஒங்காளம் எடுக்கும் போது அமுதவல்லிப் பெட்டை நாய் தன் காதுகளை நிமிர்த்திக் கொண்டு அம்மாவை உற்றுப் பார்க்கிறது.
இப்போதுதான் இருபத்தொரு குஞ்சுகள் பொரித்த வெள்ளைப் பெட்டைக் கோழி அம்மாவின் ஓங்காளச் சத்தத்துக்குப் பயந்து தன் குஞ்சுகளை செட்டைக்குள் மறைத்துக் கொள்வதைப் பார்க்கக் கெளரிக்கு வேடிக்கை யாக இருக்கிறது.
அம்மாவுக்கு ஆருவது வயிற்றில் கெளரிக்கு தெரிந்த நாள் முதல் அம்மாவுக்குக் கையில் ஒரு வயிற்றில் ஒரு பிள்ளையோ என்று ஏதோ ஒரு சுமையா யிருக்கும்.
ஆச்சிக்குப் பெருமை. ஏழு பிள்ளை நல்லதங்காள் போல் தன் மகனுக்கு ஏழு குட்டிகள் பிறக்கவேண்டும் என்று கதிரைமலை" யானையும் கண்ணகியம்மனையும் வேண்டிக் கொள்வாள். ஆச்சிக்குச் சரியான வேலை. கெளரிக்கும்தான். ஆனலும் அடிக்கடி சாரதா வீட்டில் நடக்கும் ஆரவாரத்தில் போய்ச் சேர்ந்து கொள்ள வேண்டும் என்ற ஆவலை அடக்க முடியவில்லை.

ராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம் 65
சாரதா எப்படியோ தன் எதிர்காலப் பலனை அறிந்து வைத்திருந்தாள். வேத நாயகம் குருக்களின் பலன்படி உள்ளூர் மாப்பிள்ளை என்றும் சாரதாவின் எதிர்காலம் மிக மிகப் பிரகாசமாய் இருக்கும் என்றும் சொன்னதாகச் சொன்னுள்.
சாரதாவின் குறிப்பின்படி எல்லா அறிகுறிகளையும் மாணிக்கவாசகத்தைத்தான் குறிப்பிட்டது. மாணிக்க வாசகத்தின் பெயரைக் கூடச் சொல்லாமல் சாரதா வெட்கப்பட்டது வேடிக்கையாக இருந்தது. ஆளுல் அதைப்பற்றி ஏதும் கதைத்து சாரதாவிடம் தரீக்கம் பண்ணத் தயாரில்லை கெளரி.
மாணிக்கவாசகத்திலுள்ள மேயக்கம்" சாரதா வைப் பாடசாலைக்கு மட்டுமல்ல பாதாள உலகத்துக்கும் அழைத்துச் செல்லும் என்று கெளரிக்குத் தெரியும். சொந்தக்காரர்களின் பரிசுப் பொருட்களாகச் சாரதா வுக்குக் கிடைத்த சேலை சட்டைகள் ஏராளம். அவற்றில் பலவற்றை வெட்டிப் பாவாடை சட்டைகள் தைத்துக் கொள்ளப் போவதைச் சாரதா சொன்னுள். எப்படி அழகாய் இருப்பது: எப்படி மாணிக்கவாசகத்தை மயக்கு வது என்பது தவிர சாரதாவின் மனத்தில் வேறு பிரச்சினைகள் இல்லையா என்றுகூட யோசித்தாள் கெளரி.
வீட்டில் பரிமளம் மாமியும் மாமாவும் தெய்விக் கிழவி யைப் பார்க்க வந்திருந்தபோது பரிமளம் மாமி சாரதாவின் சாத்திரக் குறிப்பைப் பற்றிச் சொன்னுள்.
சொல்லுற குறிப்பப் பார்த்தா செல்வராசாப் பெடியன் தான் சாரதாவுக்கு வருவார்போல கிடக்கு" அம்மா தயிர் சாப்பிட்டபடி சொன்னுள். மழையோ குளிரோ அம்மாவுக்குப் பிள்ளை வயிற்றில் வந்தால் தயிர் தின்னுவதுதான் வேலை.
5 س- تی

Page 38
66 தில்லையாற்றங்கர்ை
ஆச்சி அம்மாவை முறைத்துப் பார்த்தபடி சொன்ஞள். சோரதாவுக்குத் திருக்கோவில் நிறைய முறை மாப்பிள்ளை சிரிக்கினம். செல்வராசா ஏன் முடிக்கவேணும்" பரிமளம் மாமிக்கு ஆச்சியின் கடுகடுப்பு விளங்கவில்லை. செல்வ ராசா முறை மாப்பிள்ளைதானே சாரதாவுக்கு" என்று வினவினுள்.
Osaid a print Frt கெளரிக்குத்தான் முறை மாப்பிள்ளை சார தாக்கில்ல" ஆச்சி படபடக்கப் பரிமளம் மாமி கெளரியைப் பார்த்துக் குறும்பாகச் சிரித்தாள்.
கெளரிக்குத் தர்ம சங்கடமாகவும் ஆச்சியில் கோப மாகவும் வந்தது. "கிழவி எல்லாம் திட்டம் போட்டுத் தான் வச்சரிக்கி" என்று மனத்துக்குள் திட்டிக் கொண்டாள்.
*மரகதத்தையும் பள்ளிக்கு உடப்போறயாம் உனக்கு வேல இல்லியா' ஆச்சி பரிமளம் மாமியை வினவினள்.
ஏன் மாமி இந்தச் சின்னப் பெட்டைகள் பள்ளிக் கூடம் போனுல்தான் என்ன" பரிமளம் மாமி ஆச்சியைக் கேட்டாள்.
பக்கத்து வீட்டில் லவுட்ஸ்பீக்கர் பூட்டி, நாதஸ்வரக் காரனைக் கூப்பிட்டுத் தடல்புடலாகச் சாமர்த்தியச் சடங்கு நடந்துகொணடிருந்தது. அன்று பின்னேரம்; பெரியப்பா வீடு திருவிழாபோல் இருந்தது.
ஊரில் முதியோர், இளைஞர், கிழ விகள், குமரிகள், சொந்தக்காரர் அயலார் என்றில்லாமல் பெரியம்மா வீடு நிறைய ஆட்கள் சூழ்ந்திருந்தனர்.
அண்ணு இன்னும் மட்டக்களப்புக்குப் போகவில்லை. பெரும்பாலும் பெரியப்பா போக விடமாட்டார் என்று பெரியம்மா சொன்னு. வயலில் அழிந்த வயல்களைத் திருத்த, வரம்பு வைக்க, வாய்க்கால் கட்ட ஆள் தேவை.

ராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம் 67
கூலிக்கு ஆட்கள் பிடித்தாலும் தானும் மகனும் போய் வயல்களில் வேலை செய்யவேண்டும் என்று சொல்லிக் கொண்டிருந்தார்.
அத்தோடு ஒரு கிளார்க் வேலை எடுத்துவிட்டு என்ன உழைத்துக் கொட்டப்போருன் என்றும் முணுமுணுத்தார்.
இந்தக் கொண்டாட்ட அமர்க்களம் எல்லாம் முடிய விட்டு அண்ணு போகலாம் என்று நினைத்தாள் கெளரி. அவன் மட்டக்களப்புக்குப் போக முதல் எப்படியும் தாங்கள் பாடசாலைக்குப் போகத் தொடங்கிவிட்டால் பின்னர் ஆச்சியோ அம்மாக்களோ தடுத்து நிறுத்த மாட்டார்கள் என்று நிச்சயமாகத் தெரியும்.
பெரியப்பா வீடு நிறைய ஆட்கள். திருக்கோவிலி லிருந்து நிறைய சொந்தக்காரர் வந்திருந்தார்கள். பெரியம் மாவின் தமயன் குடும்பம் வந்திருந்தது. பெரியம்மாவின் மருமகள் கமலா கெளரியைத் தேடி வந்தாள்.
கமலா மட்டக்களப்பில் படிக்கிருள். கலகலவென்று கதைப்பாள். சாரதா மாதிரியே வடிவான பெட்டை, ஆனல் சாரதா மாதிரி மண்டைக் கணமில்லை. கமலா இவர்களைவிட மூன்று வயது மூத்தவள். அண்ணுவுடன் சகசமாகப் பழகினள். இரண்டு பேரும் மட்டக்களப்பில் படிப்பது காரணமாயிருக்கும் என்று நிளைத்தாள் கெளரி.
அண்ணு இனிப் பெரும்பாலும் மட்டக்களப்புப் படிப் பைத் தொடரமாட்டான் என்று கமலாவிடம் ஏனே சொல்ல நிளைத்தாள் கெளரி. ஆனல் சந்தர்ப்பம் வரவில்லை,
ஆணுல் இந்த ஊருக்கென்ருே என்னவோ ஒரு சில பழக்க வழக்க சம்பிரதாயங்கள் அடியடிவாழையாக இருக் கிறது. ஆனல் ஒன்று இவர்களின் சாமர்த்தியச் சடங்கு முறை. இந்தச் சடங்கு நாட்களில் எந்த பேதமும் இன்றி ஒன்ருய்ச் சேர்ந்து சந்தோசம் கொண்டாடுவார்கள்.

Page 39
68 தில்லையாற்றங்கரை
அதன் பிரதிபலிப்பு அன்று தெரிந்தது. ராமநாதன் வாத்தியாரும் பரமேஸ்வரி ரீச்சரும் இந்த கிராமத்துக் கொண்டாட்டங்களை ஆச்சரியத்துடன் சாவதானித் தார்கள். பெரியப்பாவின் தடல் புடலான செலவில் அன்று அந்த வீடு அமளிப்பட்டது.
இளம் பெண்கள், வாலிபர்கள் கண்களாலோ சைகைக ளாலோ தங்கள் கருத்துக்களையோ காதலையோ காட்டிக் கொள்ள இப்படிச் சடங்குகளைத்தான் பாவிப்பார்கள். முறைப் பெண்கள் மைத்துனர்களுக்கு மஞ்சள் நீர் ஊற்றி யிறைப்பார்கள்.
கிழவிகள் தங்கள் வயதையும் மறந்து இளம் பெண்களை ஊக்குவித்துப் புதினம் பார்ப்பார்கள்.
ஒரு மூலையில் நாலைந்து அம்மிகள் வைத்து மஞ்சள் அரைத்து வெண்கலச் சட்டிகளில் நிறைத்து வைத்திருந் தார்கள். யார் முதலில் யாருக்கு மஞ்சள் நீர் ஊற்றுவது என்றுதான் போட்டி.
'அடி கெளரி அவருக்கு ஊத்தடி மஞ்சளை" சாரதா மாணிக்கவாசகத்தைக் காட்டிச் சொன்னுள்.
மண்டபம் நிறைய முதியவர்கள், வாசல் திண்ணை, முற்றத்தில் போடப்பட்டிருக்கும் பந்தல் நிறைய பெண்கள், ஆண்கள் குழந்தைகள் நிறைந்திருந்தார்கள்.
முற்றத்தில் ஒரு மூலையில் தோடம்மரத்தைச் சுற்றிப் போடப்பட்டிருந்த பாய்களில் நிறைய வாலிபர்கள் சேர்ந் திருந்து களதத்துச் சிரித்துப் ப ல கா ர ங் கள் சாப்பிட்டு முறுக்குகள் சாப்பிட்டு வெற்றிலையும் போட்டுக் கொண்டிருந்தார்கள்.
பாலிப்போடிக் கிழவனும் சேர்ந்திருந்து தானும் இளந்தாரி மாதிரிக் கூத்தடித்துக் கொண்டிருந்தது.

ராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம் 69
கூரை முடியடியில் ஆலாத்திகள் எடுக்கப்பட்டு குடங்கள் நிறைந்த நீர் வார்த்துச் சடங்கு தொடங்கியது.
நீர் வார்த்து முடிய ஆண்கள் விருந்தும் சாராயமும் பரிமாறிக் கொண்டார்கள். பெண்கள் விருந்து படைப் பதில் மும்முரம்.
இளம் பெண்கள் மஞ்சள் நீர் எறிவதில் கண். மத்தியானத்திலிருந்து சாரதா கெளரியை நச்சரித்துக் கொண்டிருந்தாள் மாணிக்கராசகத்துக்வத் தண்ணிர் எறியச் சொல்லி,
பூரணிப் பெட்டையைத் தூண்டிவிட்டுப் பாலிப் போடிக் கிழவனை மஞ்சளால் நனைத்தார்கள் இளம் பெண் கள். பெரியண்ணுவுக்கு மஞ்சள் எறிய கமலாவையும் " மரகதத்தையும் தூண்டினுள் சாரதா.
மரகதம் வெட்கத்துடன் முடியாது என்று சொல்லி விட்டு மீண்ட பத்துத் தூணுக்குப் பின்னல் மறைந்து கொண்டாள். அண்ணுவை மஞ்சளால் நனைக்கத்தான் எந்தப் பயமும் காட்டப் போவதில்லை என்பதுபோல் கமலம் நிறைய மஞ்சள் தண்ணிரை எடுத்துக் கொண்டு போனள். நீயும் பின்னல போடி கெளரி" என்று கெஞ்சினுள் சாரதா,
6ேஏன் நீதான் பெரிய வாயாடி கையாடி ; போய் ஊத்தன் உன்ர மாப்பிள்ளைக்கு கெளரி பிடிவாதம் பிடித் தாள். மாணிக்கவாசகத்தின் கதை தெரிந்தபின் கெளரி தன்னை வெறட்டிக் கொண்டிருப்பது விளங்கியது சாரதா வுக்கு, கெளரியைப் பசைத்துக் கொண்டால் மாணிக்க வாசகம் புராணம்பாட யாரும் கிடைக்கமாட்டார்கள் என்று தெரிந்தோ என்னவோ சாரதா கெளரியை முறைக் காமல் தான் ஒரு செம்பு நிறைய மஞ்சள் நீரி எடுத்தாள்.
எேடி கெளரி உன்ர மச்சானுக்கு ஒருக்கா மஞ்சள் குளிப்பு குடடி' பாலிப்போடிக் கிழவன் மஞ்சளில்

Page 40
70 தில்லையாற்றங்கரை
தோய்ந்த வேட்டி அரைகுறையாய்க் கழன்றபடி குமரிப் பெண்களை நோக்கி வந்து கொண்டிருந்தது. கிழவன் செல்வராசா வைக் காட்டியது.
மத்தியானம் ஆச்சி தன்னையும் செல்வராசாவையும் பற்றிச் சொன்னது ஞாபகம் வந்தது. உடனே வெட்கமும் தயக்கமும் வந்தது. மரகதம் போல் தானும் இருந்தால் சாரதாவின் வாயிலிருந்து தப்ப முடியாது. கெளரியும் தானும் ஒரு செம்பு நிறைய மஞ்சள் தண்ணிர் நிறைத்
5ft sir. h
அண்ணுவுக்கும் செல்வராசாவுக்கும் இவர்கள் வருவது தெரிந்திருக்க வேண்டும். ஆனல் மாணிக்கவாசகத்துக்கும் மாணிக்கவாசகத்துடனிருந்த ஊரி பெயர் தெரியாத இளைஞர்களுக்கும் இவர்கள் மஞ்சள் நீரை மறைத்துக் கொண்டு வருவது தெரியவில்லை. கமலம் சட்டென்று ஓங்கிய செம்பு நிறைந்த மஞ்சள் நீரிலிருந்து அண்ணு சாதுர்யமாகத் தப்ப, அதே நேரம் செல்வராசாவும் மின்ன லென மறைய கமலமும் கெளரியும் ஒரேயடியாக ஓங்கிய செம்பு நிறைந்த மஞ்சள் நீரில் மூழ்கி நனைந்து தோய்ந்து ஒன்றும் விளங்காமல் இவர்களை முறைத்துப் பார்த்தான் அந்தப் புது இளைஞன். யார் இவன்?
.
மாணிக்கவாசகம் அந்தப் புது இளைஞனைப் பார்க்க சாரதா தருணம் பார்த்து மாணிக்கவாசகதீதுக்கு நீர் ஊற்றிவிட்டு ஓடினன்.
இந்தக் காட்சியைக் கிழவர்கள் ரசித்து ஆஹா ஒஹோ என்று ஆர்ப்பரித்தார்கள் (அரை வெறி எல்லோருக்கும்) பாவம் மாணிக்கவாசகமும் மற்ற இளைஞர்களும் என்ன செய்வதென்று தெரியாமல் முழித்தார்கள். யார் அந்தப் புது இளைஞன்?
பரமேஸ்வரி ரீச்சருக்கு இவர்களின் பழக்க வழக்க கொண்டாட்ட நுட்பங்கள் பற்றிச் சொல்லிக் கொண்

ராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம் f
டிருந்தாள் பரிமளம் மாமி. போவம் பத்மநாபன், பரமேஸ்வரி ரீச்சர் அந்தப் புது இளைஞனைக் காட்டிச் சொன்னுள். ஆர் அந்தப் புதுப் பொடியன்" பரிமளம் மாமி கேட்க அது வாத்தியாரின்ர தம்பி பத்மநாபன்" என்று பரமேஸ்வரி சொன்னதைக் கமலமும் கெளரியும் தெளிவாகக் கேட்டார்கள்.
மாசி மாதத் தொடக்கத்தில் கெளரி, சாரதா, மரகதம் மூவரும் மற்ற மாணவர்களுடன் அடுத்த ஊருக்குப் போகத் தொடங்கினர்கள். இவர்கள் பாடசாலைக்குப் போகத் தொடங்க முதலே மாணிக்கவாசகமும் போய்விட்டான். அண்ணு இன்னும் போகவில்லை. பெரியப்பா எப்படிச் சொன்னலும் இன்னும் ஒன்றிரண்டு கிழமையில் போவ தாக இருக்கிருன்.
LaHLLT HTTT S TTTLLLL LL TTT TTLaLa aLLLLLLL TL LTTT தேசியக் கொடி ஏற்றி நமோ நமோ தாயே" பாட்டுப் பாடி சுதந்திர தினத்தைக் கொண்டாடும்போது ஊர்ப் பாடசாலையின் புதுக்கட்டிடம் தொடங்குவதன் அவசி யத்தை ராமநாதன் வாத்தியார் கதைத்ததாகத் தம்பிகள் வீட்டில் கதைக்கும்போது கெளரிக்குச் சொன்னர்கள்.
அண்ணு, மாமா, செல்வராசா என்போரும் மற்றவர் களும் இன்னுெரு தரம் எம்.பியைக் கண்டு கதைப்பது அவசியம் என்று சொன்னர்கள். அதே நேரம் எம்பியைப் பற்றிய கதை ஒன்று மறைமுகமாக அடிபட்டது.
அந்தத் தொகுதியைச் சேர்ந்த எம்.பி. தமிழரசுக் கட்சியைச் சேர்ந்தவர். 56-ம் ஆண்டு பண்டார நாயக்கா சிரிலங்கா சுதந்திரக் கட்சி மூலம் பதவிக்கு வந்து சிங்களம் மட்டும் சட்டத்தைக் கொண்டு வரும்போது வடக்கு கிழக்குகளில் தமிழர்களுக்காகப் போராட உண்டாக்கிய தமிழரசுக் கட்சி சார்பில் போட்டியிட்டு வெற்றியீட்டிய எம்.பி இப்போது அரசாங்க கட்சியில் சேரப்போவதாக

Page 41
2 தில்லையாற்றங்கரை
அடிபட்டது. இத்தக் கிராமத்து மக்களுக்கு அதிர்ச்சியை eiligus.
நூற்ருண்டு காலமாகச் சகோதரர்களாகப் புழங்கிய முஸ்லீம்-தமிழ் மக்கள் கடந்து போன எலக்ஷனின் போது தமிழரசுக் கட்சிச்காகத் தங்கள் ஊரில் பிறந்த உடன் பிறவாச் சகோதரர் போன்ற முஸ்லீப் அபேட்சகரை ஆதரிக்காமல் எங்கேயோ இருந்து வந்த முஸ்லீம் ஒருத்தர் தமிழரசுக் கட்சியைக் காட்டி வாக்குரிமை கேட்டபோது தங்கள் முழு ஆதரவையும் கொடுத்தார்கள்.
அதனுல் அவர்கள் வாழ்நாளில் எப்போதும் இல்லாத
ஒரு பிளவு இப்போது மறைமுகமாகத் தலைநீட்டியது; தமிழர்-முஸ்லீம் பிரிவு
காலம் காலமாக ஒற்றுமையாக இருந்து வந்த இரு இனமும் இப்போது மனத்தாங்கல் படக் காரணமாயிருந்த முஸ்லீம் எம்.பி. இப்போது அவரை ஆதரித்த மக்களை ஏமாற்றிவிட்டு பதவி ஆசைக்காக அரசாங்கக் கட்சியில் சேருவதை இவர்கள் வெறுத்தார்கள். கிராமத்திலும் சுற்றியுள்ள நகரங்களிலும் இந்த அடிப்படையில் சிறு சிறு வாக்கு வாதங்கள் நடந்தன.
சந்தையில் சில சச்சரவுகள் தலைகாட்டத் தொடங்கின. எம்.பி. கொழும்பிலேயே தங்கி விட்டதாகத் தகவல்கள் கிடைத்தன.
தமிழர்கள் மத்தியிலும் முஸ்லீம்கள் மத்தியிலும் அதிருப்தி தெரிந்தது. கோழி வாங்க வரும் ஆதம் காக்கா இதுபற்றிச் சொன்னதாகக் கெளரி கேட்டாள்.
W 66 கட்சி பேரச் சொல்லி ஏமாத்திப் போட்டான் பாத்தியளே உம்மா, இந்தக் கட்சி கிட்சி எண்டில்லாம வர் உலகத்தானுக்கு வோட்டுப் போட்டுந்தா இது நடந் திருக்குமா? இப்ப அவன் மந்திரியாகப் போருன் எங்களுக்

ராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம் 3
கென்ன கிடச்சிரிக்கி?" ஆச்சியும் ஆமாம் சாமி போட்டாள்.
ஆச்சிக்கு அந்நியர்களைப் பிடிக்காது. இரண்டு வருடங் களுக்கு முன் நடந்த பாராளுமன்றத் தேர்தலில் ஊர் முஸ்லீமை ஆதரித்திருந்தால் நல்லது என்று அப்பா மாமாவுடன் சண்டை போட்டாள். அப்பாவும் மாமாவும் தமிழரசுக் கொடி கட்டி, பாட்டுப்பாடி அபேட்சகரைக் கொண்டு திரிந்ததை கெளரி மறக்கவில்லை. இவர்கள் தொகுதியில் போட்டியிடும் தமிழரசுக் கட்சி அபேட்சகரை ஆதரித்துப் பேச யாழ்ப்பானத்திலிருந்து தமிழ்த் தலைவர் வருகை தந்தது பெரிய கொண்டாட்டமாக இந்த ஊர் மக்களால் கொண்டாடப்பட்டது என்றென்றும் கெளரி மனதில் பதிந்திருக்கும். அப்பா, மாமா மற்றும் பெரிய மனிதர்கள் (பெரியப்பா கடைசியாகத்தான் சேர்ந்தா ரென்று ஞாபகம்) எல்லாம் ஒன்று சேர்ந்து ஒரு இரவு கெளரி வீட்டுப் பலாமரத்துக்கீழ் பாய் போட்டுக் கொண் டிருந்து இந்த எலக்ஷன் விஷயம் பற்றிக் கதைத்தார்கள்.
யு. என். பி அரசாங்கத்தில் ஆங்கிலம் தேசிய மொழி யாக இருந்தது. ஆணுல் 1955ம் ஆண்டின் எஸ். டப்ளியு. ஆர் பண்டாரநாயக்கா இலங்கையின் பெரும்பான்மையினரான சிங்கள மக்கள் பேசும் சிங்களம்தான் அரசாங்க மொழியாக இருக்க வேண்டும் என்று பிரசாரம் செய்து வெற்றி பெற்ருர்,
அப்போது மாமா, அப்பா எல்லோரும் இனி எங்கள் தமிழுக்கு இலங்கையில் இடமில்லை என்று கோபத்துடன் கதைத்தார்கள். சிங்கள மொழிச் சட்டத்தை ஆட்சேபித்து காலிமுகக் கடற்கரையில் சத்தியாகிரகம் செய்த தமிழ்த் தலைவர்களைச் சிங்களச் சண்டியர்கள் தாறுமாருக வதைத்ததைப் பத்திரிகைகளில் படித்த போது அப்பாவின் தண்கள் கலங்கியதை கெளரி கண்டாள். அப்பா இந்தியச் சத்தியாக்கிரக அனுபவுள்ளவர், கசாப்புக்கடைச்

Page 42
4. தில்லயாற்றங்கரை
காரனிடம் காருண்யம் கேட்கலாமோ என்று மாமா சிங்களச் சண்டியர்களைப் பேசினர்.
இவர்கள் ஊருக்கு விஷயம் செய்த தமிழ்த் தலைவர் களை மேள தாளத்துடன் வரவேற்று மெய் மறக்கப் போற்றிப் பேசினர் மாமா. பெரியப்பாவுக்கு அப்படி ஒன்றும் கம்பீரமாகப் பேசத் தெரியா தென்றலும் வரவேற்புத் தலைவராக இருந்து மேடையேறித் தமிழ்த் தலைவர்களுடன் வேட்டியும் பட்டுச் சால்வையுடனு மிருந்தார்.
அப்பாவும் மாமாவும் இணைச் செயலாளர்கள். மாமா நன்ருகப் பேசுவார். வெளுத்து வாங்கி விட்டார்.
புலிக்கொடி தாங்கிய தமிழ் மன்னர்கள், புலவர் போற்றிய தமிழ் மொழி என்றெல்லாம் மாமா அதிர்ந்த போது கைதட்டல் பெரிதாகக் கேட்டது.
தமிழ்த் தலைவர் எழுந்து தடுமாறிய தமிழில் முணு முணுத்த போது ஆச்சிக்குக் கோபம் வந்தது. தாங்கள் தமிள் கதைக் காட்டி சிங்களவனிட்ட என்னண்டு. தமிளுக்கு உரிமை கேக்கப் போகினம்" என்று பரிமாளம் மாமியைக் கேட்டாள்.
இவங்கள் இங்கிலீசில படிச்சாக்கள் மாமி" என்று பரிமளம் மாமி ஆச்சிக்குச் சொன்னுள்.
பரிமளம் மாமிக்கு இங்கிலீசுப் படிப்பென்ருல் பெரிய மரியாதை. ஆச்சிக்குத் தெரிந்த மொழி தமிழ். அதைத் தான் ஆச்சி கேட்க விரும்பினுள். கெளரியும் சாரதாவும் மேடையில் ஏறி நின்று மைக்குக்கு முன்னுல் வாயைப் பொத்தி தூங்காதே தமிழா" 6raörgy Untgs தள்ளிஞர்கள்.
இப்படி எல்லாம் கஷ்டப்பட்டு பாராளுமன்றத்துக்கு அனுப்பிய எம். பி. இன்று பதவிக்காக கட்சி மாறுவது

rr&g6iw6.uf ur 6dsorůyudavofuuh ገ፱
அவருக்காக வாக்குரிமை கொடுத்த எல்லோர் முகத்தில் யும் கரி பூசிற மாதிரி என்று மாமா சொன்னர்.
சந்தையில் இது பற்றிய தகராறு ஒன்றிரண்டு நாளாய் நடந்தது. தமிழ்ப் பகுதியிலும் முஸ்லீம் பகுதியிலுமுள்ள பெரியவர்கள் தலையிட்டு ஏதும் பெரிய குழப்பம் வராமல் பார்த்துக் கொண்டார்கள்.
முஸ்லீம்களின் வயல்கள் இவர்களின் ஊரைத் தாண்டி யிருந்தது. அதிகாலை நாலு மணிக்கே வண்டிகளின் கட கடப்பும் சைக்கிள்களின் சத்தமும், கவிபாடிக் கொண்டு போகும் இனிமையும் ஊரோடு ஊரின் வாழ்க்கையோடு ஒன்றிப் போய்விட்ட சம்பவங்கள்.
நகரத்திலுள்ள சந்தையில் முஸ்லீம்களும் தமிழரும் நூற்ருண்டுக் கணக்கான ஒற்றுமையுடன் வியாபாரம் செய்து வந்திருக்கிருர்கள். இதுவரை எந்த விதமான கரைச்சலுமில்லை.
இப்போது இந்த எலக்ஷனல் வந்த பிளவால் இரு பகுதியிலும் அதிருப்தி நிலவியது. அந்த அதிருப்தியின் விளைவு ஒரு நாள் கலவரமாக வெடித்தது.
மாசி மாதப் பிற்பகுதி. மண்டை வெடிக்கும் குடு. வயல்களில் அறுவடை ஆரம்பமாயிருந்தது. சந்தையில் சில முஸ்லீம்-தமிழ் வாலிபர்களின் வாக்கு வாதம் முற்றி அடிதடியாய் மாறி அது ஒரு பெரிய கலவரமாகப் பரவியது. அன்று அண்ணு, மாமா, செல்வராசா எல்லோரும் எம். பி.யைப் பார்க்கப் போய் இருந்தார்கள். பாடசாலைக் கட்டிட விஷயமாக திரும்பி வந்து சந்தையி லிறங்கிய போது தமிழ் முஸ்லீம் சண்டை மும்முரமா யிருந்தது.
யாருக்கு என்ன நடக்கிறது, யாருக்கு அடி விழுகிறது என்று தெரியாத குழப்ப நிலையில் செல்வராசா தாக்கப் பட்டு தலையுடைந்த நிலையில் ஊர் வந்து சேர அதைக்

Page 43
ሃ8 தில்லையாற்றங்கரை
கண்ட சில வாலிபர்கள் உணர்ச்சி வசப்பட்டு ஒன்றுமறி யாத அப்பாவிகளான முஸ்லீம் விவசாயிகள் கூலிக்கு வயலில் வேலை செய்யும் முஸ்லீம் ஏழைகளைத் தாக்க முற்பட கலவரம் இன்னும் பெருத்தது. அடுத்த ஊருக்குப் பாடசாலைக்குள் போன மாணவ மாணவிகள் பயத்துடன் அலறிக் கொண்டு ஊருக்கு வந்து சேர்ந்தார்கள். ஊரில் அமைதியேயில்லை. அன்று பின்னேரம் நாலு மணிக்கு ஆவேசம் கொண்ட முஸ்லீம் இளைஞர் கோஷ்டி ஒன்று இவர்கள் ஊரை நோக்கி வந்தது.
அறுவடை காலமென்ற படியால் ஊரில் அதிகம் இளைஞர்கள் இல்லை. பாடசாலைக்குப் போகும் மாணவர் களும் வயது முதிந்தவர்களும் தவிர ஊரில் ஆண்களே இல்லை எனலாம்.
இந்த நேரத்தில் ஊர் எல்லையில் அமளி துமளிப்பட்டது கனகலிங்கம் கடைச்சோடாப் போத்தல்களும் ரோட்டுக் கரையில் குவிக்கப் பட்டிருந்த கல்லுக் குவியலிலுள்ள கற் களும் தான் ஆயுதம்.
சத்தமும் சண்டையும் கர்ண கடூரமாயிருந்தது. ஒரு மணித்தியாலத்துக்கு மேல் இந்தச் சண்டை நடந்தும் போலீஸார் வரும் அறிகுறியில்லை.
கடைசியாக போலீஸ் ஜீப் வரும் அறிகுறி தெரிந்த போது பாலிப் போடிக் கிழவன் வழக்கம்போல அரை வெறியில் போய் அவர்களிடம் "என்ன நடக்கிறது என்று சொல்ல ஆரம்பிக்க முதலே கிழவன் போலிஸாரின் அடி தடிக்கு ஆளாகிக் கீழே விழ அவர்கள் கிழவனையும் கிழவனுக்கு உதவியாய் வந்த ஒரு சில இளைஞர்களையும் இழுத்துப் போட்டுக் கொண்டு பேர்னர்கள்.
அத்துடன் அந்தக் கலவரம் நின்ற பாடாயில்லை" நகரத்தையும் கிராமத்தையும் சுற்றியுள்ள இடங்க ளெல்லாம் வயல்வெளிகள். அவற்றில் வேல் செய்யும்

ராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம் t
ஏழைத் தொழிலாளிகள் இந்தக் கலவரத்தால் பாதிக்கப் பட்டார்கள். வேலைக்கு வந்திருந்த வெளியூர்க்காரர்களான நாலைந்து மன்னர் முஸ்லீம்கள் பெரியப்பா வீட்டில் தங்கி யிருந்தார்கள்.
அவர்களே ரோட்டுக்கு அனுப்பினுல் கோபத்துடன் இருக்கும் தமிழ் இளைஞர்கள் ஏதும் செய்யலாம் என்ற பயத்தில் பெரியப்பா அவர்களை அன்றிரவு வைத்துக் காப்பாற்றிஞர்,
மாமாவும் அப்பாவும் அண்ணுவும் ஊரைக் கடந்து போகும் ஏழைப் பெண்களை யாரும் ஏதும் சொல்லாமல்கரைச்சல் கொடுக்காமல் கொண்டுபோய் ஊர் எல்லையில் விட்டு வந்தார்கள். அடிபட்டு வந்த செல்லராசாவை அயலூர் ஆஸ்பத்திரிக்குக் கொண்டு போய் ஆனல் தலையில் ஏற்பட்ட காயம் பெரி தென்ற படியால் மட்டக்களப்புக்கு அனுப்பினர்கள். 'ஐம்புலனில் ஏறிய ஆளும் (ஆம்புலன்ஸ்) உயிரோடு வரார்களே " " என்று ஆச்சி ஒப்பாரி வைத்தாள்.
இரவானதும் ஊரில் பயங்கர அமைதி நிலவியது. ஆட்டுப்பட்டி மாட்டுப் பட்டிகளைச் சாய்த்துக் கொண்டு முஸ்லீம் இளைஞர்கள் இவர்கள் ஊாைக் கடக்கவில்லை.
வழக்கமான மாட்டு வண்டிகளின் சத்தம் கட கட வென்று கேட்கவில்லை, சைக்கிள் சத்தமில்லை. ட்ரக்டர் களின் உறுமல்கள் இல்லை. கிட்டத் தட்ட சுடுகாட்டமைதி இருந்திருந்து விட்டுச் சில ஜீப்புகள் உறுமிக் கொண்டோட ஊர்ச் சொறி நாய்கள் ஊலையிட்டுப் பின்னுேடும் சத்தம் கேட்கும்.
உள்ளுராானுக்கு வோட்டுப் போட்டிருந்தால், இதெல்லாம் வந்திருக்குமோ" ஆச்சி தணிந்த குரவில் சொன்னுள். அம்மாவுக்குச் சரியான சத்தி எடுத்து சுருண்டு போய்ப் படுத்திருந்தாள். அப்பாவைக் காண

Page 44
îå தில்லையாற்றங்கரை
வில்லை. பேக்கத்து வீட்டில் பெரியப்பா இல்லை. அண்ணுவை கண்டே எவ்வளவோ நேரமாகி விட்டது.
தமிழ்-முஸ்லீம் கலவரம் ஒன்றில் சம்மாந்துறைக்குப் பக்கத்தில் உள்ள வீரமுனை என்ற தமிழ்க் கிராமம் முஸ்லீம் களால் எரிக்கப் பட்டதை ஆச்சி ரொன்னுள். கேட்கப் பயமாக இருந்தது கெளரிக்கு. ஆதம் காக்கா போன்ற அன்பான முஸ்லீம்கள் தங்கள் ஊரை எரிப்பாரிகள் என்பதை நினைத்தும் பார்க்க முடியாமல் இருந்தது. ராமநாதன் வாத்தியார் இருளில் தடவிக் கொண்டு வந்திருந்தார்.
**என்ன விசர்த்தனம் என்ன விசர்த்தனம்" என்று முணுமுணுத்தார். கெளரி என்னய்யா விசர்த்தனம்" என்று கேட்டாள்.
வெறும் பாதையைக் காட்டிச் சாதாரண சனங் களுக்கு மனதில் விஷம் ஊட்டும் அரசியல் விசர்த்தனம் விசர்த்தனம்" என்று அலுத்துக் கொண்டார்.
கெளரிக்கு விளங்கவில்லை. சிங்களம் மட்டும் சட்டத்தால் தமிழ் மொழிக்கு ஆபத்து வரப்போகிறது என்று தெரிந்து தமிழர்கள் தங்களுக்கு ஒரு கட்சி அமைத்ததும் வோட் போட்டதும் பிழையா என்று அவனுக்குத் தெரியாது. அப்பாவும் அம் மாவும் அதை மிகப் புண்ணிய காரியமாக நினைத்துப் பாடுபட இந்தவாத்தியார் விசர்த்தனம் என்று சொல்வது அவளுக்குக் குழப்பத்தைக் கொடுத்தது.
வாத்தியார் அப்பாவையும் மாமாவையும் விடக் கூடப்படித்த வரி அவர் விஷயம் தெரியாமல் கதைக்க மாட்டார் என்று தன்னைத்தானே சமாதானப் படுத்திக் கொண்டாள்.
இன்று இரவு முஸ்லீம்கள் வந்து ஊரை எரிக்கப் போகிறர்கள் என்று ஆச்சி புலம்பிக் கொண்டிருந்தாள்,

ராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம் 79
அப்போது மாமாவும் அப்பாவும் வந்து கொண் டிருந்தனர். ஆச்சி தன் புலம்பலைத் தொடங்கிஞள்.
ஊரில் யாரிடமும் ஒரு ஆயுதம் என்று ஒன்றில்லை. பக்கத்துப் பறையர் தெருவுக்குப் போய் உதவி கேட்டதாக வாத்தியாரிடம் சென்ருர்கள் வாத்தியார் சிரித்தார்.
தேனக்குதி தேவை என்டால் எல்லாரும் தமிழன் இல்லை என்டால் சக்கிலி பறையரோ" என்று வாத்தியார் கேட்டார். மாமாவுக்கு வாத்தியாரின் கிண்டல் புரிய வில்லை.
என்ன மாஸ்டர் சொல்லுறியள். நாங்கள் ஒன்றும் புதுச் சாதி சட்டம் உண்டாக்க இல்ல. அடியடி வாழையாக அனுசரித்து வாற பழக்கத்தைத் தான் நாங்களும் கடைப் பிடிக்கிருேம்" மாமா, வாத்தியாருக்கு மறு மொழி சொன்னர், பக்கத்துப் பிரிவில் வசிக்கும் பறையருடன் இந்தக் கிராமத்தார் ஒரு சண்டையும் தற்போது பிடிக்கவில்லை.
இந்தப் பறயன்களை எப்பண்டாலும் தமிழன்களா நடத்தின நீங்களோ" என்று வாத்தியார் கேட்டார்.
இவர்கள் ஒருத்தரும் பதில் சொல்ல வில்லை. ஆறேழு வருடங்களுக்கு முன் பறைப் பெண்மணி ஒருத்தி சட்டை போட்டுப் போன சம்பவத்தை எதிர்த்த குடியானவர்கள் பறையர்களுடன் சண்டைக்குப் போக அந்தப் பிரதிபலிப் பாக அவர்களிடம் அவர்கள் கூட வந்து விட்டன என்பது ஊரில் அடிப்பட்ட கதை.
அதன் அழுத்தமும் உண்மையும் இப்போது அப்பட்ட மாகத் தெரிந்தது கெளரிக்கு.
என்ன மாஸ்டர் சாதியும் சட்டமும் நாங்களா உண்டாக்கினது. பரம்பரைபரம்பரையாய் இருக்கு. நாங்க அதுக்குக் கட்டுப்பட்டுப் போவும்" DIT DIT சொன்னுர்,

Page 45
80 தில்லயாற்றங்கரை
"தேவைகள் வர பரம்பரையை உடைக்கிறதும் நாங்கதானே" என்ருர் வாத்தியார். ஊரே அமளிப்படும் நிலையில் வாத்தியார் இப்படி தர்க்கித்துக் கதைப்பது கெளரிக்குப் பிடிக்கவில்லை. அவளுக்கு விளங்கவுமில்லை.
பாலிப் போடிக் கிழவன் இன்னும் போலீஸ்
ஸ்டேசனில் என்ன நடந்திருக்குமோ தெரியாது. இந்த இரவில் போவது உசிதமில்லை அடுத்த நாள் போவதாக அப்பா முடிவு கட்டினுர். அன்று இரவு யாரும் சரியாகத் துரங்கவில்லை தெய்விக் கிழவி புருஷனை நினைத்து இரவிர வாக முணுமுணுப்பு. தற்செயலாக முஸ்லீம்கள் ஊருக்குள் வந்தாலும் என்று கெளரிக்குப் பயம். ஆச்சி தேவை யில்லாத கதைகள் சொல்லி அன்றெல்லாம் பயப்படுத்தி வைத்திருந்தாள்.
முன்னிருட்டுக் காலம். பின் நிலவு. ஆனலும் காலைப் பணி கொட்டியது. அதிகாலையில் எழுந்து முகம் கழுவப் போனவளின் கண்ணில் வாத்தியாரும் அண்ணுவும் வருவது தெரிந்தது.
அவர்கள் பெரியம்மா விட்டிலிருந்த முஸ்லீம்களைக் கொண்டு போய் ஊர் எல்லையில் விட்டு வந்ததாகத் தெரிந்தது. இப்போது போலிஸ் ஸ்ரேஷனுக்குப் போய் பாலிப் போடிக் கிழவனைப் பார்க்கவேனும், எந்த இன் ஸ்பெக்டருக்கு எவ்வளவு காசு கொடுத்து ஆளை விடு விக்க வேண்டுமோ தெரியாது என்பது அவர்கள் கதையில்
• اوقیا۔ الاھylک>
அப்பிடியே செல்வராசாவையும் பார்த்துட்டு வாங்கோ' ஆச்சி உத்தரவு போடாக் குறையாய்ச் சொன்னுள்,
ஆனல் அந்த விடிகாலை ஆச்சி நினைத்ததுபோல் சுக மாக விடியவில்லை என்பது ஒன்றுக்குப் பின் ஒன்ருக உறுமிக் கொண்டோடும் வேகத்திலிருந்து தெரிந்தது.

ராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம் 81.
வயல் வெளிப் பக்கத்தில் ஒரு சண்டை தொடங்கிப் பரவுவதாக ஆட்கள் கதைத்துக் கொண்டார்கள்.
ஊர் எல்லையிலும் ஒரு அடி பிடி சம்பவம் நடந்ததாகச் செய்தி வந்தது.
அதன் பலன் அன்று மத்தியானம் ஊர் முழுக்க பொலிஸாரின் வேட்டை தொடங்கியது.
அவர்களுக்கு அகப்பட்ட இளைஞர்களை எல்லாம் பிடித்து ஜிப்பில் ஏற்றிஞர்கள் தெருவில் வீட்டில்ரோட்டில் நின்ற மக்களுக்கும் நல்ல அடி.
அண்ணுவைக் காணவில்லை. பெரியம்மா மயங்கி விழாக்குறையாக அழத் தொடங்கி விட்டாள். பெரியப் பாவைப் போய்த் தேடச் சொன்னள். எங்கு தேடுவது? யாரைத் தேடுவது? பெரியப்பா கோபத்துடன் கேட்டார்.
கலவரத்தில் எந்த விதமான விதத்திலும் தொடர் பில்லாத பாடசாலை மாணவர்களையும் கைதுசெய்தார்கள். பாடசாலை ஆசிரியர்கள் எவ்வளவோ சொல்லியும் பொலிஸாரின் காதில் ஏறவில்லை.
இவர்களைப் பார்த்தால் கலகக் காரர் போலயா தெரியுது உங்களுக்கு? பொது மக்களைப் பாதுகாக்கிறதான் உங்கட கடமை எண்டு நினைச்சம், இப்ப என்னடா எண்டால் வேலியே பயிரமேயுது" ராமநாதன் வாத்தியார் பொலிஸாரிடம் வாக்கு வாதம் செய்ததாகக் கேள்வி.
"மாஸ்டர் மரியாதையாய் உங்கட வேலையைப் பாருங்கோ இல்லை எண்டா உங்களையும் பிடிச்சுக்கொண்டு போயிடவா ம்" காக்கிக் காற்சட்டை போட்டவர்கள் தங்கள் அதிகாரத்தைக் காட்டினர்களாம்.
அன்று பின்னேரம் ஊரே அல்லோல கல்லோலப் பட்டது. நியாயம்; நீதி சட்டம் என்றெல்லாம் கண்ணிய
6 سبته 5 ...

Page 46
2 தில்லையாற்றங்கரை
borrasantb கெளரவமாகவும் கருதப்பட்ட- வார்த்தைகள் காக்கி காற்சட்டையும் கருத்தச் சப்பாத்துக்களாகவும் தெருக்களிலும் வீடுகளிலும் ஒரு பாவமும் அறியாத அப்பாவி மாணவர்களின் முதுகிலும் மார்பிலும் உடம் பிலும் அநியாயமான அடிகள் உதைகள் என்ற y Lu Frau மூத்திரைகள் போட்டன. பாலிப் போடிக் கிழவனேப் பற்றி ஒரு தகவலும் தெரியவில்லை. தெய்வீக கிழவிக்கு ஒவ்வொரு தரம் ஜீப்பின் சத்தத்தைக் கேட்டபோதும் வயிற்ருல் போகத் தொடங்கி விட்டது. ஏற்கனவே கிழவி யின் பாடு இன்ருே நாளையோ என்றிருந்தது. இப்போது @历凸 அமர்க்களத்தில் எப்போது உயிரை விடப்போ திறதோ என்று எல்லோருக்கும் அச்சமாக இருந்தது.
சாதாரண விட்டுவேலைகளைக் கூடப் பெண்கள் வனிக்கவில்லை. எல்லோர் முகத்திலும் பீதி, குழந்தைகள் கூட வீடுகளுக்குள்ளும், திண்ணைகளிலும் பதுங்கி நின்று தெருக்களில் ஜீப்பின் உறுமல்களைப் பயத்துடன் Lumrriřáŝ தார்கள்.
தெருக்கள் வெறுச்சோடிக் கிடந்தன. வளவுகளுக்குள் திரியும் கோழிகளையும் குஞ்சுகளையும் தவிர எந்தவிதமான நடமாட்டமும் தெரியவில்லை. அமுதவல்லி நாய் கூடத் தன் ஆயிரம் குட்டிகாதுடன் அங்குமிங்கும் பவனி வராமல் பதுங்கிக் கிடந்தது. மாலையாகிக் கொண்டிருக்கும் போது பறை முரசு கேட்டது, இந்த ஊருக்கும் அடுத்த சில ஆகும் இரவு ஏழுமணியிலிருந்து கால்கத் paid வரை لا-ساسکاتبه ۶ ژنع اقساط போடப் பட்டிருப்பதாக
• له حسا تالا نه5 قاهانو
கிராமத்துச் சனங்களுக்கு ஒன்றுமே புரியவில்லை. நகரத்தில் பொலிஸாருடன் சில முஸ்லீம் வாலிபர்கள் சச்சரவுபட்டதாக ஊகமற்ற செய்திகள் பரவின.
அவசரகால நிலைச் சட்டத்தை இதுவரை கேள்விப் பட்டிராத கிராம மக்கள் பறை முரசு கேட்- அடுத்த

ராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம்
நிமிடமே தங்கள் வீடுகளில் புகுந்து கொண்டார்கள். பொலிஸாரால் தேடமுடியாத வாலிபர்களைப் பிடிக்க ராணுவத்தினர் வந்திருப்பதாகக் கதை அடிபட்டது. அன்று கருக்கல் நேரம் இபுராஹிம் போடியார் வந்திருந் தார். அப்பாவின் சினேகிதர் இருவரும் ஒரு காலத்தில் ஒன்ருகப் படித்தவர்கள். இப்போது நடந்து கொண் டிருக்கும் கலவரம் ஒன்றும் அவர்களின் சினேகிதத்தைப் பாதித்ததாகத் தெரியவில்லை.
என்ன பாருங்கோ இந்தப் போலிசுக்காரங்கள் எப்ப இப்பிடி ஒரு சான்சு வரும் எண்டு இரிந்திரிக்கிருன்ருள். சோனி தமிழன் என்று பாராம அடிக்கிருன், எங்களைத் தூண்டி விட்டு தாங்கள் துவக்குக் காட்னுன்கள்" இபுராஹிம் போடியார் கோபத்தில் வெடித்தார்.
சுய நலம் பிடித்த ஒன்றிரண்டு சாடையர்களால் உண்டான இந்தக் கலவரத்தால் இத்தனை காலமாகச் சகோதர பாவத்துடன் சீவித்த இரண்டு சாதிகளிடம் பிளவு வந்ததை அவரால் தாங்க முடியவில்லை. என்பதை அவர் உணர்ச்சி படிந்த சொற்கள் காட்டின.
கெளரி தேத்தண்ணி கொண்டு வந்து கொடுத்தாள். இபுராஹிம் போடியாரை அவளுக்கு நினைவு தெரிந்த நாளிலிருந்து தெரியும். அப்பாவுடன் அடிக்கடி வருபவர் முந்திரிப் பழக்காலத்தில காத்தான் குடியிலிருக்கும் அவரின் மைத்துனர் தென்முேலையால் செய்த நீண்ட கூடையில் போட்ட முந்திரிப் பழங்களைக் கொண்டு வந் தால் இபுராஹிம் போடியார் அப்பாவுக்கு இரண்டு கூடை அனுப்பத்தவர மாட்டார். தோன்புப் பெரு நாட்கள் ரம்ஜான் என்றெல்லாம் வரும் போது கெளரியும் மற்றவர் களும் முஸ்லீம்களின் சமயப் பெரு நாட்களைப் பற்றிக் கேட்டால் அல்லா பற்றியும் அராபிய நாடுகள் பற்றியம் கதைகள் சொல்வார். அவரின் வாப்பா மக்கர்வுக்குள் • புண்ணிய யாத்திரைபோனவராம் தானும்போகவேண்டும்

Page 47
4. தில்லையாற்றங்கரை
என்று சொல்வார். அப்பாவுடன்சேர்ந்திருந்து நீண்x. நேரம் உலக நடப்புகள் டே சுவார்கள். சில வருடங்களுக்கு முன் எகிப்திய பிரிட்டிஷ் சண்டை சூயஸ் கால்வாயைக் காரணமாக வைத்து நடந்த போது தினகரன் பேப்பருடன் வந்திருந்து அது பற்றிக் கதைப்பார்.
இப்ராஹீம் போடியார் எப்போதும் நாஸரைப் புகழ்ந்து கதைப்பார். தற்செயலாகப் பெரியப்பாவின் தலை இந்தப் பக்கம் தெரியும் போதுபெரியப்பா வெள்ளைக் காரரையும் அவர்களின் வீரத்தையும் அந்தனி ஈடனின் சாதுர்யத்தையும் புகழுவார். குயஸ்கால்லாயில் ஈடன் வெற்றியடையாத போது மெளனமாகிப் போன பெரியப் பாவை இபுராஹீம் போடியாரும் அப்பாவும் வேணு மென்று வம்புக்கிழுத்தது கெளரிக்கு இன்னும் ஞாபகயிருக் கிறது. இபுராஹீம் போடியாரை அப்பா எப்போதும் கவுரமாக நடத்துவார். இருவரும் சினேகிதர்கள். வேறு பட்ட சமயங்கள் அவர்களின் ஆழ்ந்த நட்புக்குத் தடை யாக என்று மிருந்ததில்லை. இபுராஹீம் போடியாரிடம் பெரிய துலக்கு உண்டு. சில வேளைகளில் ஒடக்கரையில் ஒற்றைக்காலில் தவம் செய்யும் கொக்குகளைச் சுடப் G3urr6 hurrri gis6ñr.
கெளரியும் தம்பியும்அவர்களுடன் போயிருக்கிருர்கள். கடுபட்ட கொக்குகளை நாணற்புற்கள் நடுவிலிருந்து தூக்கி வருவார்கள். கொக்குகளை அப்பா உரிக்கும் போது கொக்கின் உரிபட்ட கழுத்தைப் பார்க்கக் கெளரிக்குப் பயம். கொக்குக் கழுத்து பாம்பு போல் இருக்கும். ஆனல் அம்மாவின் கொக்கு இறைச்சிப் பொரியலைச் சாப்பிடும் போது அதெல்லாம் மறந்து விடும். இபுராஹீம் போடி யாருக்கு இந்த ஊராருக்கும் பெரிய மரியாதை, அவரின் ஒன்றை விட்ட மருமகன்தான் தமிழரசுக் கட்சி சார்பில் போட்டியிட்டு, இப்போது கட்சி மாறி அரசுக் கட்சியில் சேர்ந்திருக்கும் எம். பி. யுடன் போட்டியிட்டவர்.

ராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம் 85
எலக்ஷனின் போதும்-அப்பா தமிழரசுக் கட்சிக் காரரை ஆதரிக்கிருர் என்று தெரிந்தும் இபுராஹீம் போடியார் அது பற்றி அப்பாவிடம் அதிகம் தர்க்கிக்க வில்லை. ஊரோடு ஒத்துப் போகத்தானே வேணும் என்று சொல்லி விட்டார். அப்படி உயிர்ச் சிநேகிதங்களுக்கெல் லாம் மேலாக நினைத்துக் தமிழருக்காக வோட் போட்ட எம்.பி. இப்போது தங்களை அவசரகால நிலைமைக்குத் தள்ளியும் இனவெறி பிடித்த சிங்கள போலிஸாரின் உதைக்கும் அடிக்கும் தள்ளிய போது அப்பாவுக்குச் சரியான ஆத்திரம்.
இந்தக் காலத்தில் பரிவு பற்றும் ஆருக்குப் போடி, யார் இரிக்கி எல்லானும் தங்ரட சுயநலம் பாக்குறவன் தான், இப்ப பார் யார் அடிபடுவும்:எண்டு! ஏழைகளுக்குதி தான் பாடு அவன்களுக்கு என்ன? எம். பி ஆகுறதுதான் பெரிசு, எம். பியாக எதையும் கதைப்பான்கள்"" அப்பா சொன்னார். நகரம் கொந்தளித்துக் கொண் டிருந்தது. இப்படியே இருந்தால் என்ன முடிவு வருமோ தெரியாது. எப்படியும் நாளைக்கு அரசாங்க அதிபரைப் பார்க்க மட்டக் களப்புக்குப் போகவேண்டு மென்று இபுராஹீம் போடியார் சொன்னார். அடுத்த நாள் மட்டக்களப்புக்கும் போவதாக அப்பாவும் சொன்ருர்,
அடுத்த ஒரு சில மணித்தியாலங்களில் ஒன்றுக்குப்பின் ஒன்ருக நாலைந்து ஜீப்பின் சத்தம் கேட்டது. எங்கும் ஒரே முன்னிருட்டு. மயான அமைதி. இப்படி ஒரு நிச்சலனத்தைக் கெளரி தன் வாழ் நாளில் அநுபவித்த தில்லை. கொஞ்ச நாட்களாக ஆச்சியின் கட்டளைப்படி விடியற் காலை தாலுமணிக்கே எழுந்து விடுவதுண்டு (அல்லது படுத்த படுக்கையிற் பெரிய பிள்ளையாளுல் கை பிடிக்கப் போகிறவனுக்குக் கூடாதாம்) அப்போது சேவல் கவும். ரோட்டில் வண்டிகள் போகும். நடந்கு போவோரி நயமான கவிபாடிப் போவர். மாட்டு வண்டி மணி யோசை போடும்-இப்போது?

Page 48
86 தில்லையாற்றங்கரை
இரவு எத்தனை மணி? ஒன்பது மணிதான் அதற்குள் இப்படிப் பயங்கர அமைதி. மெல்லமாக ரேடியோ போட்டு செய்திகள் கேட்கலாமா? அது கூட முடியாது. அடுத்த வீட்டில் பெரியம்மா எப்படியிருப்பா: அண்ணுவை இன்று பூராக்காணவில்லை. போலிஸார் பிடித்திருப்பார்களா? கேள்விகளும் மறு மொழிகளும் கெளரியின் மனத்துக்குள் விவாதம் நடத்தின.
நடுச்சாமம் அமுதவல்லி நாய் குலைத்தது. கெளரியின் நாக்கு மேலண்ணத்துடன் ஒட்டிக் கொண்டது. ஜீப்யை எங்கேயோ நிறுத்திவிட்டுக் கால் நடையில் வருகிருர்களா? அமுதவல்லி சட்டென்று தன் குலைப்பை விட்டு விட்டுச் சினேகிதமாக முனங்கியது யாராயிருக்கும்?
ஆச்சியின் குரல் மெல்லமாகக் கேட்டது. இருட்டில் தட்டுத்தடுமாறி கதவைத் திறந்து வந்தாள் கெளரி. யாரோ குசுகுசுவென்று கதைப்பது கேட்டது. ஆமிக் காரர் இல்லை; என்று தெரிந்தது. கொஞ்சம் நிம்மதி.
எங்கும் கும்மிருட்டு. மல்லிகைப் பந்தல் பக்கத்தில் பல உருவங்கள் பெரியம்மாவின் விம்மல். பெரியப்பாவின் மெல்லிய அதட்டல் அப்பாவின் அமைதியான புத்திமதி. ஆச்சியின் நடுக்கக் குரல் கெளரி மெல்லமாக வந்தாள் • அண்ணுதான். வந்திருந்தான் கறுப்புச் சரமும் பெனியனும் போட்டிருந்தான். மத்தியானம் முழுதும் பாலக்காட்டில் மறைந்திருந்ததாகச் சொன்னுன். வெறும் பட்டினியாம் பாவம். வேறும் ஒன்றிரண்டுபேர் இருந்ததாகவும் எல் லோரும் ஆலையடி வேம்பு என்று ஊரைக் கடந்து அக்கரைப் பற்றில் மறைந்திருப்பதாகச் சொன்னுன் ,
**ஆமிகள்" நடமாட்டம் நாளைக்கு இல்லாவிட்டால் அடுத்த இரவு வருவதாகச் சொன்னுன் அம்மா. அவசரம் அவசரமாக வீட்டில் கிடந்த கிழங்கு, கத்தரிக்காய் மிாங்காய் பப்பாலிப்பழம் என்று கையிலகப்பட்டதை
யெல்லாம் சாக்குப்பையில் போட்டுக் கட்டிக் கொடுத்தாள்

ராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம் B7
காட்டில் நிற்கும்போது சாப்பிட பெரியம்மா அமுதபடி சோறு போட்டுக் கொடுத்தாள். அண்ணு சாப்பிடக் கை எடுத்த போது தூரத்தில் ஜீப் சத்தம் கேட்டது. க-ை படியில் கனகலிங்கம் மாமாவின் தாய் குரைத்துக்கேட்டது. அதைத் தொடர்ந்து பெரிய டுமீல் என்ற குண்டுச் சத்தம் கனகலிங்கம் மாமாவின் நாய் சிவாஜியின் ஜீவ மரணப் போராட்டத்தின் கடைசி அலறல் ஒரு சொற்ப வினடியில் வெறும் அமைதி, நோயைச் சுடும் நாய்ப் பிறவிகள்" ஆச்சி முணுமுணுப்பது கேட்டது. கெளரிக்கு அண்ணு எப்படி மறைந்தான் என்று தெரியாது.
அவர்களுக்கு போட்ட st trait untG அப்படியே இருந்தது. பெரியம்மா விம்மி விம்மியழுதாள்.
கொஞ்ச நேரத்தில் ஜீப் உறுமிக்கொண்டு வெளிக் கிருவது கேட்டது.
அண்ணுவுக்குச் மற்றவர்களுக்கும் என்ன நடந்திருக்கும் கெளரிபயத்துடன் யோசித்தாள்.
அண்ணுவுக்கோ எந்த விதமான சம்பந்தமுமில்லை இந்தச் சண்டையில் ஏன் அண்ணுவை இப்படி ஒடப் பண்ணுகிருர்கள்? அண்ணு, தமிழரசிக் கட்சுக்கு வோட் போடச் சொல்லி ஊரில் ஒவ்வொரு கிழடு கட்டைகளையும் கெஞ்சியது ஞாபகம் வந்தது. தமிழ்த் தலைவர்களே வரவேற்க இரவிரவாகப் பந்தல் போட்டு அலங்கரித்த அவனுடைய பூரித்த முகத்துக்கும் இப்போது அதன் பிரதிபலஞகக் கள்வனையோ கயவனையோ போல் இரவில் மறைந்தோடிப் போகும் கலவரப்பட்ட முகத்துக்கும்தான் எத்தனை வித்தியாசம்?
*எங்கட பாஷையை இந்த அரசாங்கம் அழிக்கப் பார்க்கும் கெளரி. நாங்க தரவழி உயிரோடு இருக்க அது தடக்காமப் Urfi lub ** அண்ணு அமைதியாகச் சொன் ஞனே அன்று. பாஷைக்கு மட்டுமா ஆபத்து சுவரில்

Page 49
88 தில்லையாற்றங்கரை
சாய்ந்திருந்து கெளரி அழுதாள். அமைதியும் அடக்கமும் நேர்மையும் நிதானமுமான அண்ணுவைக் கள்ளன் கயவன் போல் ஒளிந்து ஒடப் பன்னிய ராணுவத்தினரில் கோபம் வந்தது கெளரிக்கு.
நாளைக்கு என்ன நடக்கும்?
அவனுக்கு நித்திரை வரவில்லை. வெளியில் வந்தாள். தெய்விக் கிழவி விசும்பி அழுது கொண்டிருந்தது. ஆச்சி மெல்லிய குரலில் ஆறுதல் சொல்லிக் கொண்டிரும் தாள்.
நீ ஏன் வந்த நீ" ஆச்சி கெளரியை வெருட்டினுள்.
நிேத்திரை வரயில்ல ஆச்சி பயமாயிருக்கு" கெளரி ஆச்சியின் பாயில் வந்து உட்கார்ந்தாள். தூரத்தில் தென்னுேலைக் கண்ணுேடைகளுக்குள்ளால் புன்னிலவின் பாதி நிழல் பட்டுத் தெரிந்தது. தூரத்தில் நரி ஒன்று சத்தம் போட்டது.
ஆச்சி பெருமூச்சு விட்டாள். என்ன நினைத்துப் பெரு மூச்சு விடுகிருள். அவள் காலத்தில் இப்படி ஒரு நிலை வந்ததை இப்போதுதான் பார்க்கிருன் என்று நினைக் கிருளா?
*எேன்ன ஆச்சி அண்ணுவைப் பிடிச்சிருப்பினமா?" கெனரி தளுதளுத்த குரலில் கேட்டாள்." அதப்பத்திக் கதக்காத ஆச்சி குசுகுசுத்தாள் - -
வெள்ளக்காரன்கள் இப்பிடித்தான் குதிரையில் வந்தானுகளாம்" ஆச்சி திடீரென்று சொன்னுள்.
எந்த வெள்ளனைக்காரன்? ஆச்சி என்ன சொல்கிருள் கதையா?
எேன்ர பெத்தாச்சி அப்ப குமர்ப் பெட்டயாம்' ஆச்சி தொடர்ந்தாள். ஆசிசிக்கு இப்போது எதிதனைவயது?

ராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம் 89.
அறுபது? இருக்கலாம். ஆச்சியின் பெதிதா என்ருல். கெளரியின் குழம்பிய மனத்தால் கணக்குப் பார்க்க முடிவில்லை.
எேன்ர பெத்தா நூத்திப் பத்து வயது வரைக்கும் இரிந்தவ தெரியுமோ?? ஆச்சி கேள்வி கேட்குமாப் போல் சொன்னுள். கெளரி 6 உம்" என்ருள். ஆச்சி ஒரு நடமாடும் சரித்திரப் புத்தகம். ஊர்ச் சரித்திரத்தைச் சொன்னுள். ஆச்சி தன் நூற்றிப்பத்து வயதான ஆச்சி கதை சொல்வதானல் கதை கிட்டத்தட்ட நூற்றுஜம்பது வருடம் பழமையானதா? கெளரி யோசித்தபடி மெளனம் சாதித்தாள். வெள்ளக் காரர்கள் கோயில் கொள்ளை யடிக்க வந்தானுகளாம். எங்கட இந்த ஊரில அப்ப முப்பது நாற்பது குடிகள் தான் இருந்திச்சாம். பெத்தாவின் தாய் தகப்பன் ஆட்கள்தான் முதன் முதல் இந்த ஊருக்கு கருங் கொட்டித் தீவில இருந்து வந்தனயாம். (கருங்கொட்டிதி தீவு-அக்கறைப்பற்றின் ஒரு பகுதி) ஆணுல் கோயில் பழைய கோயில். பெத்தாவின்ர பெத்தாக்களுக்கு முன், இருந்த ஆட்கள் கட்டிய கோயிலாம். அந்த ஆட்கள் எல்லாம் கண்டிராசன் சண்டை ஒண்டோட வடக்கே ஓடிப் போன பிறகு எங்கட பெத்தாக்கள் வந்து காடு வளர்ந்த கோயில் பக்கத்தைத் திருத்தி கோயிலப் புதுப்பிச்சி பூசை எல்லாம் செய்து கொண்டு வந்தலையாம். வெள்ளக்காரன் திருக்கோயில் சித்திரவேலாயுத சாமி கோவிலக் கொள்ளை யடிச்ச புறகு இந்தப் பக்கம் வர பெத்தாரை அண்ணன் தூக்கில் தடுக்க வெள்ளக்காரன்கள் சுட்டுச் சாக்காட்டிப் போட்டு பெத்தாரை அக்கா ஒரு வடிவான குமர்ப் பெட்டையையும் கெடுத்துப் போட்டு கோயில் சாமான் களோட போட்டான்களாம். ரெண்டு மூண்டு நாளைக்குப் புறகு களபேராய் வந்து கோயில் இடிச்சும் போட்டுப் போருர்களாம் அதுதான் இன்னமும் புள்ளயார் கோயில் புதுக் கட்டிடம் இல்லாமக் கிடக்கு. ஆமிக்காரன்கள் வெள்ளக்காரன் எண்டான சிங்களவன் என்டால் 66என்ன

Page 50
90 தில்லையாற்றங்கரை
எவனும் தான் பாதுகாக்க வேண்டிய பிறவிகளை பாசை புண்ணியம் பாக்காமத்தான் நடத்துருன்கள்"" ஆச்சி பெரு மூச்சு விட்டாள்.
ஆச்சியின் பெத்தாச்சியின் தமக்கையைக் கெடுத்த ஆமிக்காரர்களை நினைக்க உடல் நடுங்கியது.
அப்போது குதிரையில் வந்தார்கள். இப்போது ஜிப்பில் வருகிருர்கள். அப்போது வந்தவர்கள் வெள்ளையர் இப்போது வருபவர்கள் சிங்களர்கள். அடிமைகளும் அடக்கப்பட்டவர்களும் எப்போதும் தமிழர்தானு? கெளரி ஆச்சியுடன் சேர்ந்து பெருமூச்சு விட்டாள்.
தூரத்தில் எங்கோ ஒரு சேவல் கூவ முருங்கை மரத்தில் ஏறியிருந்த சேவல் (ஒருத்தரும் கோழிகள் பிடித்தடைக்க வில்லை) நேற்று காக்கரக்கோ என்றது.
ஒடையின் விளிம்பில் செந்நாக்குகள் போல் உதய சூரியனின் செவ்வொளி தெரிந்தது.
வயற் பக்கத்திலிருந்து நகரப் பக்கத்துக்கு ஜீப்புகள் திரும்பிப் போவது கேட்டது.
**ஆச்சி எழும்பிப் போய் முகம் கழுவட்டா' கெளரி கேட்டாள். ஆச்சி கோழித் தூக்கம் போட்டுக் கொண் டிருந்தாள். முகம் கழுவப் போனவளின் கண்ணில் பட்டது அம்மா அண்ணுவுக்குக் கொடுத்த சாக்குப்பை
சாமான்கள் கிணற்றலில் எல்லாம் சிதறிக் கிடந்தது. பாவம் அண்ணு? என்ன நடந்திருக்கும்?
முகம் கழுவி, கடவுளுக்குப் பூவைத்துப் பிரார்த்தித்துத் திருநீறு வைக்கும் போது 8 கடவுளே அண்ணுவையும் அண்ணனைப் போல் ஆமிக்குப் பயந்துதிரியும் எல்லாரையும் நீ தான் காப்பாற்று. அவை ஒருத்தரும் கள்ளனுமில்ல காவாலிகளுமில்ல. நேர்மையான பிறப்புகள். யாருக்கும் மனதாலயம் தீங்கு நினைக்காத நீதியான ஜென்மங்கள்

ராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம் 91.
கடவுளே நீதிக்கும் நேர்மைக்கும் மதிப்புக் கொடுக்கிற ஆட்களுக்குக் கரைச்சல் கொடுக்காமக் காப்பாற்று" கெளரியழுதாள், கடவுள் கும்பிட்ட கையோடு பெரியம்மா வீட்டுக்குப் போனுள். அழுது அழுது பெரியம்மா முகம் வீங்கியிருந்தது.
பெரியப்பா அப்பாவுடனும் மாமாவுடனும் போய் அரசாங்க அதிபரிடம் இந்த ஆமிக்காரரின் அட்டூழியங் களைச் சொல்லப் போவதாக உறுமிக் கொண்டிருந்தார்.
சாரதாவும் அழுதிருக்க வேண்டும். முகம் சோர்ந்து போயிருந்தது. பெரியப்பா, அப்பா, மாமா எல்லோரும் வெளிரிட்டுப் போய் ஒரு கொஞ்ச நேரத்தில் ஜீப்புகள்” இரைந்து வருவது கேட்டது. ஆச்சி இரைக்க இரைக்க ஓடி வந்து சாரதாவையும் கெளரியையும் நெல்லுக் கொட் டுக்குள் குதிக்கச் சொன்னள் மறு வினடி அமுதவல்லி நாயின் பயங்கரக் குலைப்புக் கேட்டது.
அரை குறைத் தமிழில் அண்ணுவின் பெயர் சொல்லிக் கூப்பிடுவது கேட்டது. ஆமிக்காரர்களின் குரலைக் கேட்கக் கெளரிக்கு வயிற்றைக் கலக்கிக் கொண்டு வந்தது* நாடியடிப்பது நிற்கும் போல் இருந்தது.
ஆச்சி சொன்ன கதை ஞாபகம் வந்தது. பயம் இன்னும்” கூடியது.
கதிரவேல் எங்க" அவர்கள் உறுமியது கேட்டது அண்ணுவின் பெயர் கதிரவேலன். அவன் பெயரை யாரும் வீட்டில் சொல்வதில்லை. அம்மா, ஆச்சி, அப்பா பெரியம்மா, பெரியப்பா எல்லோருக்கும் பெரிய தம்பி. மற்றக் குழந்தைகள் எல்லாருக்கும் அண்ணு யாரும் பிறத்தி யால் தவிர குடும்பத்தார் அவன் பெயர் சொல்வதில்லை.
இரண்டு மூன்று நாட்களாக அண்ணுவைக் காண வில்லை என்று பெரியம்மா சொல்லும் போது பெரிதாக அழுதாள். ஆச்சியைக் கேட்க ஆச்சியும் அப்படித்தான்

Page 51
*92 தில்லையாற்றங்கரை
சொல்லியிருக்க வேணும். ஆணுல் ஆச்சி அழுது கேட்க வில்லை. அவர்களில் ஒருத்தன் எதையோ உதைப்பதும் கூடைப்பதும் கேட்டது. அமுதவல்லி கோபத்தில் குலேப்பதும் கேட்டது.
என்ன நடக்கிறது வெளியில்?
நெல்லு மூட்டைகளோடு இருப்பதால் எப்போது தும்மல் வருக்கிறதோ என்று பயமாயிருந்தது.
வெளியில் வெருட்டலும் ஆரவாரமும் ஒரு அரை மணி தியாலமாயிருந்து விட்டுக் குறைந்தது. கொஞ்ச நேரத்தில் ஜீப்புகள் வெளிக் கிடுவது கேட்டது.
இவர்கள் வியர்த்துக் கொட்ட வெளியில் வந்தார்கள். அபயத்தில் உடம்பெல்லாம் நடுங்கியது. இப்படி யெல்லாம் பயங்கர சித்திரவதைப்பட என்ன பாவம் செய்தம்”* சாரதா தேம்பியபடி கேட்டாள். வாயாடித்தனம் துடுக்கு குணம் மெல்லாம் குழி தோண்டிப் புதைபட்டு விட்டதா? முகத்தில் பயம் மூடிக்கிடந்தது.
என்ன பாவம் செய்தம்? தமிழ்ப் பெட்டைகளாக இருக்கிரவிட வேறு என்னவும் செய்தாகத் தெரியல்ல" கெளரி அலுத்துக் கொண்டாள்.
அண்ணுவை இவர்கள் தேடிவந்ததிலிருந்து தெரிந்தது அவன் இன்னும் இவர்கள் கையில் அகப்படவில்லை என்று. அந்த விதத்தில் நிம்மதியாக இருந்தது.
வெளியில் பெரியம்மாவின் மண் குடம் உடைந்து கிடந்தது. வாழைமரம் சரிந்து கிடந்தது. வளவின் ஒரு மூலையில் பூத்து நின்ற வெண்டி மரங்கள் துலம்சம் செய்யப்பட்டிருந்தது.
நாய்கள், நாய்களைச் சுட்டநாய்கள். மண் குடத்தையும் மரத்தையும் கொடியையும் வீரத்துடன் போருக் கழைக்கும் போக்கிலிகள் கெளரி தனக்குள் திட்டு திட்டென்று திட்டித்

ராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம் 93、
தீர்த்தாள். மாணிக்கவாசகத்தைப் பற்றிய கதையைச சாரதா தொடங்கினள். சில வேளை சனி ஞாயிற்று கிழமை லீவுக்கு வீட்டவந்தாலும் வருவார். கடவுளே இந்தக் கிழமை அவர் வராம இருக்க வேணுமே" சாரதக் தனக்குள் கொல்வதுபோல் கெளரி கேட்க முணு முணுத் தாள் கொரிக்கு ஒரு விதத்தில் சாதாவில் கோபமா யிருந்தது. ஊரே அமளிப் படும்போது இவலுக்கென்ன அவரும் அவரைக் காய்யும் என்று தனக்குள் சிடுசிடுதிதாள் கொரி. அன்று பகல் ஒவ்வொரு மணித்தியாலமும் ஒவ்வொரு பயங்கரத் தகவல்கள் வந்து கொண்டிருந்தன. வயற்காட்டை நோக்கியும் நகரத்தை நோக்கியும் எண்ணிக்கை அற்ற விதத்தில் ராணுவ லொறிகளும் ஜீப்புகளும் போய் வந்தபடி இருந்தது.
இரவு சரியான துரக்கமில்லாத படியால் கெளரிக்குத் தலயிடி வேறு. அம்மா வேறு பாவம் சரியான சுகமில்லை. மட்டக்களப்புக்குப் போன்றவர்கள் மாகாண அதிபர் கொழும்புக்குப் போய்விட்டார் என்ற தோல்வியான செய்தியைச் சுமந்து கொண்டு வந்தார்கள். வாத்தியார் வீட்டுக்கு வந்திருந்தார். பாடசாலை மாணவர்களைப்" பற்றிய துக்கம் அவரைப் பிடித்திருந்தது. மாகாண அதிபரின் மூலம் இந்த ராணுவ போலிஸாரின் அட்ட காசத்திற்கு ஒரு முடிவு காணலாம் என்ற நம்பிக்கையும் தகர்ந்து விட்டது.
சண்டைக்குக் காரணமானவர்களேத் தேடும் சாட்டில் ராணுவத்தினர் முஸ்லீம் தமிழ்ப் பகுதிகளைத் துவம்சம் செய்து கொண்டிருந்தார்கள்.
நகரமே ஆத்திரத்தில் கொந்தளித்தது.
பின்னேரம் அம்மா, ஆச்சி, பரிமளம் மாமி மூவரும் சேர்ந்து தெய்விக கிழவிக்குப் பக்கத்தில் இருந்து ஏதோ குசு குசு என்று கதைத்தார்கள். அவர்களின் முகபாவம் மிக மிகப் பயங்கரமாயிருந்தது.

Page 52
94 தில்லையாற்றங்கரை
என்ன நடந்திருக்கும்?
அண்ணுவைப் பிடித்திருப்பார்களா? செல்வராசா செத்துப் போய்விட்டாஞ? சாரதா கம்பி வேலியைத் தாண்டி ஓடிவந்தாள். பெரியப்பாவை தோமஸ்பாதிரியார் காண வந்திருப்பதாகவும் நகரத்தில் நிலைமை பயங்கரமாக இருப்பதாகக் கதைப்பதாகவும் சொன்னுள்.
தனக்குத் தெரிந்த சேதியின்படி கடைக்கார யோசப் பின் மகள் மரியாளை ஆமிக்காரர்கள் கற்பழித்து விட்ட தாகக் கதை என்று சாரதா சொன்னுள். அப்போதுதான் அம்மா, மாமி, ஆச்சி மூவரினும் பயங்கர முகபாவத்தின் காரணம் புரிந்தது. இது பற்றி கதைத்துக் கொண் டிருந்தார்கள்? போனமாதம் கெளரி, சாரதா, மரகதமும் அடுத்த ஊருக்குப் பாடசாலைக்குப் போகத் தொடங்கிய போதுதான் பாடசாலைக்குப் போகும் வழியிலுள்ள யோசப் பின் கடையைத் தெரியும். யோசப்பின் மகள் மரியமலர் அழான இளம் பெண். நகரத்தில் வாழும் நாகரீகமான கந்தோலிக்கர்கள் மாதிரி உடுத்திருப்பாள். மட்டக்களப்பு அவர்களின் சொந்த ஊர். தகப்பன் கடை வைத்திருக்கிற படியால் அக்கரைப்பற்றில் குடியிருக் கிருர்கள். மரிய மலர் மட்டக் களப்பில் கத்தோலிக்க கல்லூரி ஒன்றில் படித்தவள். விடுதலைக்கு வந்து நின்ற போது இந்த காமுகர்களின் கண்ணில் பட்டுக் கசக்கப்பட்டு விட்டாலாம்.
தோமஸ் பாதிரியார் தனது இனிமையான தமிழில் பெரியப்பாவுடன் உருக்கமசகக் கதைத்துக் கொண் டிருந்தார். அவர் குரல் தடுமாறியது. கடவுள் தொண்டு 56 pr வேஒென்றிலும் ஈடுபடாத மனிதர்: ஆச்சி சொல்வது போல் தனது நீண்ட பாவாடை மாதிரி உடுப் புடன் பெரியப்பாவின் வீட்டு முற்றத்தில் போட்டிருந்த கதிரையில் அமர்ந்து கதைத்துக் கொண்டிருந்தார். நகரத்தின் கொந்தளிக்கும் நிலையையும் நடக்கும்

yrig6ío6uf ursos úlgosofLuth 9粤
கோடுமைகளையும் மட்டக்களப்பு மேற்றிராணியாருக்குத் தெரிவிக்கவேண்டும். பிரதமருக்குத் தந்தியடிக்கவேண்டும் என்ரெல்லாம் சொல்லிக் கொண்டிருந்தார்,
இந்தப் பிரதமர் பதவிக்கு வந்தபடியாலதானே எங்களுக்கு இந்த நிலை" அப்பா முனு முணுத்தார். கனேந்தச் கிங்களப் பிரதமர் எண்டாலும் எங்கட நிலைமை இப்பிடித்தான். வெள்ளக்காரன் இருக்கை எவ்வளவு நிம்மதியாயிருந்தம்" பெரியப்பா வழக்கம் Gштєів வெள்ளைக்காரன்களைப் புகழ்ந்து தள்ளினுர்,
“ “u Tlesfrásno மாணவர்களைக் கைது செய்ததை ஆட்சேபிக்கும் பொருட்டு மாவட்டத்திலுள்ள எல்லாப் பாடசாலைகளும் பகிஷ்கரிக்கப் படவேண்டும்" என்ருர் வாத்தியார். ராணுவத்தினரில் எல்லோருக்கும் கோபம், **இந்த வேசை மக்களை வெளுத்துக் கட்டவேணும்" மாமா ஆவோசத்துடன் கத்தினர். அப்போது இப்ராஹீம் போடியாரின் கார் வந்து நின்றது. நகரத்தில் பொலி லாருக்கும் இளைஞர்களுக்கும் மிடையில் துப்பாக்கின் சூட்டுச் சம்பவம் நடந்ததாகவும் அதனல் இரு இளைஞர்கள். ஆபத்தான நி3லயில் இருப்பதாகவும் பதட்டத்துடன் சொன்னுரி.
வெள்ளம் தலைக்கு,மேல் போய்க் கொண்டிருக்கிறது. சாண்போனுல் என்ன முழம் போனல் என்ன? அவன்கள் எங்கட ஊரில் வந்து என்னவும் செய்ய முதல் நாங்களும் தயாராயிருக்க வேணும்" மாமா சொல்வதை எல்லோரும் அவதானமாய்க் கேட்டார்கள்.
நோங்கள் இனி இண்டைக்கு மட்டக்களப்புக்குப் போக ஏலாது நாளைக்குத்தான் போக வேணும் அதற் கிடையில் என்ன நடக்கும்மோ தெரியாது. எதுக்கும் தயாராயிருக்க வேணும் மாமா உறுதியாய்ச் சொன்னர். $துலக்கும் தூக்கிக் கொண்டு லொறிகளில் ஒடித்திரியிடி

Page 53
O6 தில்லையாற்றங்கரை
ஆமிக்காரனுேட என்னன்டு சண்டைக்குப் போன”* பெரியப்பா இடுப்பில் கைவைத்து திமிராகக் கேட்டார்.
6எத்தனை ஆயிரம் பேர் வருவான்கள்? ஒன்டிரண்டு லொறியில் ஒரு அம்பது பேர் வருவான்கள் ஊரெல்லாம் ஒண்டாய் நிண்டால் அவன் களின் துக்கு என்ன செய் யும்" மாமா யோசித்துத்தான் சொல்கிருரோ அல்லது ஆவேசத்தில் சொல்கிருரோ என்று கெளரிக்கு விளங்க. வில்லை. 16எங்கள் உயிரி இருச்கும் வரை எங்கட. பெண்கள் புள்ளயன்களில் அவன்கள் தொடாவிட மாட்டம்" அப்பாவும் சேர்ந்து மாமாவுடன் கதைத்தார். மரியமலர் மாதிரி தங்கள் பெண்கள் அழியவிட அவர்கள் தயாரில்லை. தோமஸ் பாதிரிக்கி இவர்கள் உணர்ச்சி வசப்பட்டுக் கதைப்பதாகப் பட்டிருக்கவேண்டும். கெளரி, சாரதா, மற்றும் சின்னப் பெட்டைகள் நின்ற பக்கம் திரும்பச் சொன்னர்" பொம்பளைப் பிள்ளைகள் கவனம்" இபுராஹீம் போடியார் காரிலும், uar Silurri 6)ardi. கிளிலும் ஏறிப் போனர்கள்.
இருள் தொடங்கிக் கொண்டிருந்தது. இவர்கள் ஊர் காகங்களுக்குப் பெயர் போன ஊர். எத்தனையோ மைல்/ களுக்கப்பால் இருந்தெல்லாம் காகங்கள் நூற்றுக் கணக்கில் பறந்து வந்து இந்த ஊரில் தங்கும். உயர்ந்த மரங்களும் அடர்ந்த தென்னம் தோட்டங்களும் காரணமாக இருக்க லாம். காகங்களின் கரையல் கேட்டது. கோழிகள் அடித்துப் பிடித்துக் கொண்டு மரங்களில் கட்டப்பட்டிருந்த கூடுகளுக்குப் போய்க் கொண்டிருந்தன.
வெள்ளத்தில் அல்லுப் பட்டுப் போன ஆடுகளில் மிஞ்சியிருந்த ஒன்றிரண்டுக்கு வேலிகளில் குழைகள் பிடுங்கித் தின்று கொண்டு திரிந்தன. தெருக்களுக்கு வந்து ஆடுகளை பிடித்துக் கட்ட ஆட்களுக்குப் பயம், ஆள் மரையும் இருளான போது அமுதவல்லியின் குலைப்பு கேட்டது. ஜீப்புகளின் சத்தம் ஒன்றுமில்லாவிட்டாலும், நாய் திடீரென்று குலைக்க உடம்பெல்லாம் நடுங்கியது.

ராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம் $ጎ
*உஸ் உஸ்" என்று நாயை அடக்கியபடி அண்ணு வந்து கொண்டிருந்தான். தெப்பமாக நனைத்திருந்தான்
அம்மா ஒடிப்போய் அப்பாவின் சரம் கொண்டு வந்தாள். கெளரி ஓடிப் போய் பெரியம்மாவுக்குச் சொன்னுள். பெரியப்பாவின் வீடு ரோட்டை அண்டிய வீடு அங்கு அண்ணு போவது அபாயம். கெளரியின் வீடு கொஞ்சம் உள்ளுக்குத் தள்ளி என்றபடியால் ஜீப் வரும் சத்தம் கேட்டால் அண்ணு ஒழுங்கையால் ஒடித் தப்பலாம்.
* இரவு எங்கே போனுய்" என்று அம்மா கேட்டாள்.
ஒரு இடமும் போகவில்லை. வீட்டில்தான் நின்றன்" அண்ணு தேவையில்லாமல் பகடி விடமாட்டான். ஆனல் இந்த இக்கட்டான நிலையில் அவன் கதைப்பது பகிடியோ இல்லையோ தெரியவில்லை.
எேன்னடா தம்பி கதைக்கிருய்' ஆச்சி பொய்க் கோபத்துடன் கேட்டாள்.
வளவின் மூலையிலிருந்த மாமரத்தைக் காட்டினன், மரத்தின் நடு உயரத்தில் தம்பிகள் விளையாட இரு கிளை களுக்கிடையில் ஒரு மரப் பலகையை அடித்து இருக்குமிடம் செய்து கொடுத்திருந்தார் அப்பா. தம்பிகள் அதில் ஏவி மரக்கள்ளன்" விளையாட்டு விளையாடுவதுண்டு, அதில இரவைக் கழித்தான் அண்ணு?
*அந்தப் பலகையில இரவெல்லாம் இருந்தன் விடியச் சாமம் போய் ஒடையில நாணல் புல்லுக்குள்ள இருந்தன். நாலேன்து பெடியன்கள் இருந்தம்"
கெளரிக்குத் தன் காதுகளையே நம்ப முடியவில்லை. அப்பாதான் இந்தியாவில் இருக்கும்போது விடுதலை வீரர்கள் போலிஸாருக்குத் தப்பி எங்கெல்லாம் எப்படி எல்லாம் இருந்தார்கள் என்று கதைகள் சொல்லியிருக்
தி.-7

Page 54
98 தில்லையாற்றங்கரை
கிருர். அண்ணுவின் கதை அவற்றை எல்லாம் மிஞ்சி விடும் போல் இருந்தது.
தில்லையாற்றின் வாலாக நீண்டு கிடக்கும் இந்த ஓடைக் கரையில் கொக்குகளும் நாரைகளும்தான் மறைந்து நின்று மாயம் காட்டும் என்ருல் அந்த ஓடக் கரையில் நீண்டு வளர்ந்திருக்கும் நாணற்புற்களா அண்ணு போன்ற ஆட்களுக்குத் தஞ்சம் கொடுத்தது?
அண்ணு தன் உடம்பில் ஒட்டிக் கிடந்த சேற்று நாற்றத்தை அகற்றக் குளிக்க வேண்டியிருந்தது. துலா உண்டாகும் சத்தமே இவர்களுக்குப் பயமாக இருந்தது.
அண்ணு குளித்துச் சாப்பிட்டுக் கொண்டிருக்கும் போது அப்பா அன்றைய நிகழ்ச்சிகளைச் சொன்னர். மாமா ஆமிக்காரருடன் சண்டை பிடிக்க நேர்ந்தால் என்ன செய்யலாம் என்று யோசிப்பதாகவும் சொன்னர். சொல்லிக் கொண்டிருக்கும் போது மாமா வந்தார், கைகளில் இரண்டு சாக்குப் பைகள், சாக்குப் பைகளைத் திறந்து காட்டினர்.
மண்ண்ெணெய் மூக்கிலடித்தது. பெண்கள் மட்டுமல்ல அப்பாவும் அண்ணுவும் கூடத் திடுக்கிட்டுப் பார்த்தார்கள். பழம் சாராயப் போத்தல் மற்றும் மண்ண்ெணெய் நிறைத்து ஒலை அடைத்து வைக்கப் பட்டிருந்தன. எல்லாத்தையும் கொண்டுபோய் கனகலிங்கம் கடைப்பக்கம் வெப்பம் அலன்ற மாட்டுக்கொட்டிலுக்குப் பின்னல் வைச்சா அந்த மணத்தில் இந்த மண்ணெண்ணெய் மணக்கிறது தெரியாது. கீப்புரள் எப்பயும் அலன்ற கடைக்கு முன்னுக்குத்தானே நிற்கிறது. தற்செயலாய் ஆமிக்காரன் ஏதும் செய்ய வெளிக் கிட்டால் நாம ஒண்ரும் செய்யாம உடப்போறல்ல. பாலத்தில நாலேஞ்சு பேர் ஒளிச்சிருக்கப் போயிருக்கனும் பாலத்தில பலகைகளைக் கழற்றிப் போடப் போறன்கள். அதுக்குப் புறகு பாலத்தைப் பாவிக்க ஏலாது ஆமிக்காரன்

ராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம் 99
கள் எங்கள அழிக்க முதல் நாங்கள் ஆயத்தமாயிருக்ா வேணும்'" மாமா சொல்லி முடித்தார்.
எல்லோரும் திக் பிரமை பிடித்துப்போய் இருந்தார்கள். சந்தோசமும் களிப்பும் நிறைந்த இந்த ஊரிலா இதெல்லாம் நடக்கிறது?
**எதுக்கும் குமரிப் பிள்ளைகளைத் திருக்கோவிலுக்கு அனுப்புவம்." மாமா திடீரென்று சொன்னுர். “இந்த இருட்டில எப்பிடிப் போறது' கெளரி பயத்துடன் கேட்டாள்.
இப்ப காலம்பிற தோணியில அனுப்புவம்' மாமா அண்ணுவைப் பார்த்துச் சொன்னர்.
அன்று இரவு பரிமளம் மாமி குழந்தை குட்டிகளுடன் பெரியம்மா வீட்டுக்கு வந் தாள். தனித்தனியாக ஒவ்வொரு வீட்டிலிருப்பதை விட ஒரேயடியாக இருப்பது பாதுகாப்பு என்று மாமா நினைத்திருக்கலாம்.
ஆச்சி குமரிப் பெண்கள் எல்லாரும் நெல்க் கொட்டி லுக்குள் ஏறிப்படுக்க வேண்டும் என்று சொன்னுள்.
வெள்ளம் வந்து ஆட்களுக்கெல்லாம் கடன் கொடுத்த தால் பெரியப்பாவின் நெல்லு கொட்டுகிட்டத்தட்ட வெறுமையாயிருந்தது. நாலைந்து சாக்கு நெல்லும் படங்குகள் சாக்குகள் தவிர மற்றப்படி ஒன்றுமில்லை.
பங்குனி மாதம் புழுக்கம் வேறு. ஏன் இரண்டு இரவாகத் தூக்கம் இல்லாமல் இருந்தும் இந்தப் புழுக்கத்தில் வியர்த்துக் கொட்டி நித்திரை ש,1_וbgbgl •
மரகதம் வழக்கம் போல் முழிசிக் கொண்டிருந்தாள். சாரதாவின் முகத்தில் ஈயாடவில்லை. கெளரிக்குத் தமிழரசுக் கட்சித் தலைவர்கள் வந்தது ஏனே ஞாபகம் வந்தது. இரவிரவாய் விழித்திருந்து ‘தூங்காதே தமிழா,

Page 55
100 தில்லையாற்றங்கன்ர்
சுதந்திர சூரியன் உதிக்கின்ற வேலையில் தூங்காதே தமிழா' என்ற ப்ாட்டைப் பாடமாக்கியது ஞாபகம் வந்தது. தமிழரசுக் கட்சிகாக சாரதா சேலையும் கட்டிக் கொண்டு கள்ள "வோட்' பண்ணிய களேபரம் ஞாபகம் வந்தது.
சாரதா வயதுக்கு மீறிய வளர்ச்சி. பெரியப்பா மாதிரி நல்ல உயரம். இரண்டு வருடங்களுக்குமுன் அவளுக்குப் பன்னிரண்டு வயதேதான் ஆணுல் பெரிய மனுஷி மாதிரி யிருந்தாள் சேலை கட்டிக் கொண்டு எப்போதோ பெத்து விட்ட கண்ணிம்மைக் கிழவியின் வாக்குச் சீட்டை எடுத்துக் கொண்டு போய் போட வாக்குச் சாவடியில் இருந்தவர் களால் காட்டிக் கொடுக்கப்பட்டுப் பெரிய அமர்க்களம்,
பெரியப்பா காசுக்காரப் பிரமுகர் என்றபடியால் அப்போது இன்ஸ்பெக்டராயிருந்தவருக்குக் காசு கொடுத்து காரியத்தை அழுத்திவிட்டார். துணிவாக இப்படிக் காரியம் செய்த சாரதாவை மரகதம் எப்போதும்போல் பயத்துடன் பார்க்க கெளரி வியப்படைந்தாள்.
*அப்பெடி எல்லாம் பாடுபட்டு இப்போது என்ன நடக் கிறது? நல்ல காலம் அவர் ஊரில் இல்ல' சாரதா முணு முணுத்தாள். மரகதம் தூங்கி வழிந்து கொண்டிருந்ததால் கெளரியிடம் சொன்னுள். கெளரிக்கு ஒரு விதத்தில் எரிச்ச லும் கோபமும் வந்தது. “அவரைத் தவிர வேருரு ஞாபகம் இல்லையா உனக்கு!! கெளரி கேட்டாள். சாரதா தர்ம சங் கடப்பட்டா ள், மாணிக்கவாசகத்தினல் கெளரிக்குத் தெரிந்தபின் கெளரியை வெருட்ட முடியாமல் போய் விட்டது என்று சாரதாவிற்குத் தெரியும்
'நீ மட்டும் உன்ர மச்சானை நினைக் கலியோ" சாரதா முகத்தை உம் என்று வைத்துக் கொண்டு கேட்டாள். இகளரிக்குத் தெரியும் செல்வராசாவைப் பத்தித்தான் கதைக்கிருள் என்று. என்ருலும் விளங்காத மாதிரி

origiouf ur 60stůợuo6ufuluh 101
*எந்த மச்சான்' என்ருள், சாரதாவுடன் வலியச்
சண்டைக்குப் போனுள்.
*எத்தினை மச்சானுக்கு மஞ்சள் தண்ணீர் ஊத்தப்
போன நீ அண்டைக்கு சாரதா" எடுத்தெரிந்து கேட்டாள்
சாரதாவின் சாமர்த்தியச் சடங்கன்று மைத்துனர் களுக்கு மஞ்சள் எறிய வெளிக்கிட்டு தங்களிடமிருந்து மஞ்சளை வாங்கிக் கட்டிக் கொண்ட பத்மநாதனின் நாபகம் திடீரென்று வந்தது கெளரிக்கு, தானும் கமலமும் ஒரேயடி யாகக் கவிழ்த்துவிட்ட மஞ்சளில் தோய்ந்தெடுத்த திகைப்புடன் பார்த்த அவன் முகத் தோற்றம் ஞாபகம் வந்ததும் வெட்கமும் பரிதாபமும் வந்தது. வாத்தியார் வீட்டுக்கு அன்றுதான் முதற்தரம் வந்தானும். இவர்கள் ஊர் சாமர்த்தியச் சடங்கு பார்க்க வந்த பலன் எவ்வளவு ஆச்சரியத்தையுண்டாக்கியிருக்கும்?
என்னப்பா தியானம் செய்யுருய் மச்சானின் பெயரைச் சொல்ல" சாரதா கெளரியை உலுக்கிருள்.
மச்சானின் பெயரைக் கேட்டா தியானம் செய்கிருள்? செல்வராசா மச்சான்தான். ஒரு காலத்தில் ஆச்சி சொல்வதுபோல் கல்யாணமும் செய்யலாம்தான். ஆனல் அவனைப்பற்றிப் பெரிதாக எதுவும் இதுவரை நினைத்ததாகக் கெளரிக்கு ஞாபகமில்லை.
கெளரியின் அண்டைக்கால யோசனை முழுதும் எப்படிப் படிப்பைத் தொடர்வது என்பதுதான். கடந்த மாதம் வரை பிரச்சினையாயிருந்த படிப்பு ராமநாதன் வாத்தியார் வந்த வுடன் ஒரேயடியாகத் தீர்ந்துவிட்டதுபோல் இருந்தது.
வாத்தியார் வந்து இவர்களுக்காக வாதாடாமல் விட்டால் இவர்கள் குடும்பத்தினர் இவர்களைப் பாட சாலைக்கு அனுப்பத் தயங்கியிருக்கலாம்.
இப்போது என்ன பொங்கிப் பூரித்துவிட்டது? ஒரு மாதப் படிப்புடன் அடுத்த ஊர்ப் படிப்பு நின்றுவிட்டது

Page 56
02 தில்லையாற்றங்கரை
ஊரில் நடக்கும் களேபரங்கள் எப்போது முடியப்போகிறது? முடிந்தாலும் வீட்டார் இன்னெரு தரம் அனுமதி தருவார் களா? 'நாங்கள் இனியும் படிக்கப் போகலாமா' கெளரி சாரதாவைக் கேட்டாள்.
சாரதாவுக்கு இப்போதுதான் கெளரி என்ன சொல் கிருள் என்று விளங்கியது.
**ஆச்சியும் அம்மாக்களும் கடைசி வரையும் இனி வாசல தாண்ட உடப் போறல்ல" சாரதா துக்கத்துடன் சொன்னுள். உண்மைதான், சாரதா சொல்வது உண்மை தான்,
'நடந்துகொண்டிருக்கிற விடயங்களைப் பார்த்தால் தாய்களையும் ஆச்சியையும் பிழை சொல்லவும் முடியாது. இந்த ராணுவக்காரன்கள் எப்போது போகப்போகிருர்கள்? மரிய மலருக்கு இராணுவத்தினரால் நடந்த விடயத்தைக் கேள்விப்பட்ட எந்த தாயும் தன் மகளை வெளியில் விட யோசிப்பாள்தானே! -
*எங்கட ஊரில புதுப் பள்ளிக்கூடம் கட்டினு ராம நாதன் வாத்தியார் எப்படியும் மேல் வகுப்பு வைக்க பெர்மிஷன் எடுப்பார்" கெளரி நம்பிக்கையுடன் சொன்னுள்.
சாரதா மாணிக்கவாசகத்துக்காகப் படிக்கத் துடிக் கிருளோ இல்லையோ, கெளரி என்ருே தனக்குத்தானே செய்த சபதம் படித்து முடித்து ஒரு ஆசிரியையாக வர வேண்டுமென்று.
இப்போது என்ன தலைவிதி? இப்படியா எங்கள் தலைவிதி?
இதெல்லாம் யாரால் நிர்ணயிக்கப்படுகிறது?

er&gssvolf ufsosúlyiðsflud Y3
வெள்ளத்தோடு அள்ளுப் பட்டுப்போன பழைய கோயில் பிள்ளையார்தான் ஊரில் எல்லாருடைய விதியை யும் நிர்ணயிப்பதாகக் கெளரி இந்த விஞடிவரை நம்பினுள். பிள்ளையாரில் மிகப் பயபக்தி அவளுக்கு. ஆச்சியின் அதிகாலைப் பிரார்த்தனை எப்போதும் "அப்பனே கணபதி' என்றுதான் தொடங்கும். ஆச்சியின் கோபம் என்றலும் ஆச்சி இதுவரை சொல்லிக் கொடுத்த நீதிக் கதைகளிலும் கடவுள் வழிபாட்டிலும் கெளரி பக்தி வைத்திருக்கிருள்.
ஆச்சி சொல்வதுபோல் அவன்" விளையாட்டா இதெல்லாம்? இயற்கையின் கோர தாண்டவமாய் வெள்ளம் புகுந்து ஊரைக் கொடிய கஷ்டத்துக்குள் ஆளாக்குமளவுக்கு இந்த ஊர் ஏழை மக்கள் என்ன செய் தார்கள் கணபதியே? V
இந்த ராணுவத்தினர் இப்படி மிருகத்தனமாக நடந்து எங்களைச் சித்திரவதை செய்ய நாங்கள் என்ன செய்தோம் கடவுளே? கெளரி அழுதாள்.
*ஏனப்பா அழுருய்" சாரதா மெல்லமாய் வந்து கெளரியின் முதுகில் கை வைத்தாள். கெளரியின் விசும்பலில் மரகதம் கண்விழித்து 88ஆமிக்காரன் வந்துவிட்டானே" என்று அலறிப் புடைத்தாள். அவளுக்கு இவர்கள் இருவரும் பதில் சொல்லவில்லை.
*தமிழரெல்லாம் இனி இப்படித்தான் அடி வாங்க வேணுமோ" கெளரி சாரதாவைக் கேட்டாள். சாரதா பதில் சொல்லவில்லை. V
சாரதாவுக்குப் பேப்பர் அதிகம் வாசித்துப் பழக்க மில்லை. வீட்டில் பெரிய மனிதர்கள் கதைப்பதில் பொறுக்கு வதுதான் அவளின் சரித்திரம்.
**செல்வநாயகத்தையும், வள்ளிய சிங்கத்தையும் எப்பவோ தூக்கிப் போட்டான்களே காலி முரக் கடற்கரை யிலவச்சு" சாரதாசொன்னுள். ஏதோ அதிர்ஷ்டவசமாய்த் தாங்கள் இரண்டு வருசமாய்த் தப்பியிருந்தது புண்ணியம்

Page 57
104 தில்லையாற்றங்கரை
என்பது போல் அவள் தொனியிருந்து, கெளரியின் அழுகை ஆத்திரமாய் மாறியது.
**என்னப்பா விசர் கதைக்கிருய்? என்ர பாஷையத் தான் நான் பேசப் போறேன் என்று சொன்னல் அடிக்கிற தென்ருல் என்ன நீதி?" சாரதாவுக்கு நடுச் சாமத்தில் தர்க்கம் பண்ண விருப்பமில்லை. நெல்லுச் சாக்கில் சறிந்து
படுத்துக் கண்ணே மூடினள்.
"நாளைக்கு இன்னேரம் திருக்கோவிலில் படுப்பம் மரகதம் சொன்னள். அவள் குரலில் அமைதியான-நிம்மதி யான தொனியிருந்தது. திருக்கோயிலில் இராணுவ நட மாட்டம் இல்லை என்பதைத்தான் அப்படிச் சொல்கிருள் என்று தெரியும், திருக்கோயிலில் பெரியம்மாவின் சொந்தக்காரர் நிறைய இருக்கிருர்கள். பெரியம்மாவின் தம்பி ஒருத்தர் சிங்கள நேர்ஸைச் செய்தவர். அவர்கள் பொத்துவிலில் இருக்கிருர்கள். அந்த சிங்களப் பெண் புஷ்பா மிக மிக அருமையான பெண். அவளின் தம்பி தமயன் யாரும் இராணுவக்காரர்களாக இருந்து இப்படி மிருகத்தனமாய்த் தமிழர்களையும் முஸ்லீம்களையும் அடிப் பார்களோ? போன வருடம் வெசாக்கின்போது அக்கரைப் பற்று விகாரைக்குப் போய் தாமரைப்பூ வைத்துப் புத்த ரைக் கும்பிட்டார்கள் கெளரியும் சாரதாவும் மரகதமும் புஸ்பிக்காவும் சாரதாவின் மாமனரும் தான் கூட்டிக் கொண்டு போனர்கள். புத்த கோயிலில் பார்த்த சிங்கள வர்கள் எல்லாம் எவ்வளவு சாதுக்களாய்த் தெரிந்தார்கள். அவர்களில் எத்தனை பேர் இந்த இராணுவத்தில் இருப் பார்கள். தன் சிந்தனையை நீட்டிக் கொள்ள கெளரிக்கு விருப்பமில்லை. யோசனைகள் எந்தக் கோணத்தில் போனுலும் ஏதோ ஒரு விதத்தில் பயமாகத்தான் முடிகிறது.
9
கோழி கூவிய அதி காலை நேரத்தில் ஆச்சி இவர்களை எழுப்பினுள் முகம் கழுவி உடுப்பு மாற்றிக் கொண்டு

ராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம் 165
ஒன்றிரண்டு உடுப்பைக் பெட்டிகளில் எடுத்து வைத்தார்கள். இன்னும் ஜிப்புகள் ஊரைத் தாண்டிப் போவதும் வருவதுமாயிருந்தது.
வயலுக்குப் போவோரின் எந்தச் சந்தடியும் இன்னு மில்லை. நிர்ச் சலனம் இயற்கையே வெற்றிருளாய்! வெறும் அமைதியால் ஊரைச் சுற்றிப் பிடித்திருப்பது போல் இருந்தது.
பொழுது புலரும் நேரம் அண்ணுவுடன் இவர்கள் நடந்தார்கள். காலைப் பனித்துளிகள் புல் நுனியில் தொய்ந்தாட அதில் விடி நிலவு பளிச்சிட்டது.
இவர்கள் கால்களில் செருப்பும் இல்லை ஒன்றுமில்லை. வெள்ளம் வடிந்திருந்தாலும் ஒடைக்கரை இன்னும் சதக் சதக் என்றிருந்தது. அண்ணு தோணிக்காரர்களுக்குச் சொல்லிவைத்திருக்க வேண்டும். அவர்கள் காத்திருந் தார்கள். தோணியடி வரைக்கும் பெரியம்மாவும் பரிமளம் மாமியும் வந்திருந்தார்கள். அப்பா இவர் களுடன் திருக்கோயில் வரைக்கும் வருவதாக ஏற்பாடு. *தம்பி கவனமாய் இரப்பா. இந்தப் பக்கம் எல்லாம் சரி எண்டு தெரிஞ்சாப்பதான் நீ இந்தப் பக்கம் வரவேனும்" பெரியம்மா அண்ணுவுக்குச் சொன்னுள்.
அப்பாவும் மரகதமும் ஒரு தோணியிலும் கெளரியும் சாரதாவும் தோணிக்காரனும் அண்ணுவும் மறுதோணி யிலும ஏறிக் கொண்டார்கள்.
தோணிக்காரர்கள் தோணியைச் செலுத்தத் தொடங்குகினர்கள். ஊரின் எல்லையிலிருந்து பார்த்தாலும் தோணிகள் தில்லையாற்றின் மையத்துக்குப் போகும் உரைக்கும் நாணற்புற்கள் மறைத்திருக்கும். இருந்தாலும் எப்போது ஜீப் சத்தம் கேட்குமோ என்ற பயம் எல்லோர் மனத்திலும் இருந்திருக்க வேண்டும்,

Page 58
40s தில்லையாற்றங்கரை
தோணி ஊரை விட்டுத் தூரம் போகப் போக கெளரிக்கு அழுகை பொத்துக் கொண்டு வந்தது.
அம்மா பாவம் சுகமில்லை. ஆச்சிக்குச் சரியான வேலை தெய்விக் கிழவியைப் பார்க்கவேணும், பாலிப்போடிக் கிழவனுக்கு என்ன நடந்திருக்கும்? ஏன் இதெல்லாம்?
"இந்தச் சிங்கள அரசாங்கத்தாலதான் இந்தக் கரைச்சல் எல்லாம்" கெளரி திடீரென்று வெடித்தாள். அம்மாவை விட்டுப் பிரிவதை அவளால் தாங்க முடியா திருந்தது.
**எங்களுக்குச் சுதந்திரம் வந்தெண்டு சொல்லுகினம். உண்மையோ தெரியல்ல" அண்ணு சொன்னன். சாரதா விலகிப் போய்க் கொண்டிருக்கும் ஊரை வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தாள். அடர்ந்து தெரிந்ததோட்டம் தவிர ஒரு ஜீவனையும் தெரியாது. விடிகாலை வரை ஊரடங்குச் சட்டம் என்றபடியால் ஒரு வெளிச்சமும் தெரியவில்லை.
விடி நிலவு 'தென்னம் தோட்டங்களுக்குப் பின்னல் மறைந்து கொண்டிருந்தது. அதே நேரம் வங்காள விரி குடாக் கடலின் அடிவயிற்றைப் பிளந்து கொண்டு ஆதவனின் செந்நாக்குகள் தெரிந்தன.
O
பெரியம்மாவின் தமயனும் அவரின் குடும்பத்தினரும் கலகலவென்ற மனிதர்கள். அந்நியர்கள் என்ற நினைவே உடனடியாகப் போய்விட்டது. கெளரிக்கு அவர்கள் அந் நியர்கள் இல்லைதான் ஆஞல் இதுவரைக்கும் சாரதாவைத் தவிர மரகதமோ கெளரியோ இவர்கள் வீட்டில் வந்து தங்கி நிற்கவில்லை. திருக்கோயில் தீர்த்தம் திருவிழாவின் போது வந்துபோவதும், கல்யாணம் செத்த வீடு என்ருல் வந்து போவதும் தவிர பெரிய கொண்டாட்டம் ஒன்று ழில்லை,

107
இப்போது வந்து கூடாரமடிக்க வேண்டியாகிவிட்டது. எத்தனை நாளைக்கு என்றே தெரியாது. அப்பா உடனடி யாகத் தோணிக் காரர்களுடன் 965b 9 6íl. - Tř• அண்ணுரும் சாரதாவும் தங்கள் வீடுகள் போல் ւցէքեi கினர்கள். அண்ணு இனிக் கொஞ்ச நாளைக்கென்ருலும் மாமரத்தில் படுத்தும் நாணற்புற்களில் மறையவும் தேவை யில்லை. கொஞ்ச நாளைக்கென்ருலும் நிம்மதியாகத் திரியலாம். அண்ணு இவரிடம் வந்துவிட்டான் என்று தெரிந்து இராணுவத்தினர் வேட்டைக்கு வந்தாத்தான் கரைச்சல், அதன் பின்தான் என்ன நடக்கிறதோ தெரியாது. ヘ .
இவ்வளவு தூரம் ஒளித்து-மறைத்து வாழ அண்ணு என்ன செய்தான் என்றுதான் தெரியவில்லை கெளரிக்கு.
அந்த வீட்டில் கமலமும் வீட்டோடு நின்றிருந்தாள்" அண்ணுவின் முகம் சந்தோசமாயிருந்ததற்கு அதுவும் ஒரு காரணமாய் இருந்திருக்கலாம் என்று மறைமுகமாக எண்ணினுள் கெளரி. அவர்களின் வீடு கடற்கரையை அண்டியிருந்தது. வீட்டு முற்றத்தில் இருந்து பார்த்தால் அலை வந்து கரையில் புரண்டோடுவது தெரியும். தங்க நிறமான மணற்பரப்பு. அதனையடுத்து தாளம் பூ பற்றைகள். w
கண்ணுக்கெட்டிய தூரம்வரை நீலக்கடல். எப்போ தாவது நீந்திப் போகும் கப்பல்கள் தூரத்தில் தெரியும்.
கடந்த ஒரு சில நாட்களாக இல்லாத நித்திரையும் நிம்மதியும் இங்கு கிடைக்கும் என்று-கெளரிக்குத் தெரியும். சாரதாவின் மாமி இவர்களைக் கண்டதும் ஒரு ஆள் விட்டுக் கடற்கரையில் வந்திறங்கிய தோணிக்காரரிடம் இருலும் நண்டும் வாங்கிக் கொண்டு வரச் சொன்னள்.
சாரதாவின் மாமா சைக்கிளில் போய் கள்ளியன்
தீவிலிருந்து கதலி, வாழைப் பழக்குலை ஒன்று வாங்கி

Page 59
08 தில்ல்பாற்றங்கரை
வந்தர்ர். ' 'பாவம் பிள்ளையன் நாலஞ்சு நாளாய் நல்ல சாப்பாடே இல்லை' என்று அடிக்கொருதரம் சொல்லிச் சொல்லி அது சாப்பிடு இது சாப்பிடு என்று சொன்னுள்.
சமையல் முடியும்போது மத்தியானப் பூசைமணி சித்திரவேலாயுத சுவாமிகள் கோயிலிருந்து கேட்டது. சாரதாவை வரச் சொல்லிக் கேட்டாள் கெளரி. சாரதா தனக்குத் சுகமில்லை என்று சொல்ல மரகதமும் கமலமும் கெளரியும் அண்ணுவுடன் கோயிலுக்குப் போனர்கள்.
ஒரு கிழமையாக வீட்டில் அடைந்து கிடந்ததற்கும் இப்போது சுகமான கடற்காற்று உடம்பில் பட்டுக் கிடைக்கும் சுகத்துக்கும் எவ்வளவு தூரம் என்று யோசித் தாள் கெளரி. அவள் நினைவு முழுக்க வீட்டிலேயே திரும்பி திரும்பிச் சுழன்றது.
தெய்விக் கிழவியின் நிலை என்னவாயிருக்கும்? பாலிப் போடிக் கிழவனை விட்டிருப்பார்களா? வாத்தியார் பாட சாலை மாணவர்களை விடுவிக்க என்ன நடவடிக்கை எடுத் திருப்பார்? இப்ராஹிம் போடியாரும் தோமஸ் பாதிரியும் மாகாண அதிபரைக் காணப் போயிருப்பார்களா?
கெளரி கேள்வி கேள்வியாகத் தன்னைக் கேட்டுக் கொண்டாள். என்ன நடந்திருக்கும்? மனம் நிம்மதியின்றி தவித்தது. பூசைச்கு வந்திருந்த பலர் அண்ணுவிடம் விஷயம் அறிய முற்பட்டனர். அண்ணு இந்த ஊருக்கு அடிக்கடி வருவதால் நிறைய வாலிபர்களை அவனுக்குத் தெரியும். திருக்கோயில் கல்விக்கும் சங்கீத மேதைகளுக்கும் அக்கரைப்பற்று வட்டாரத்தில் பெயர்பெற்ற தமிழ்ப் பகுதி திருக்கோயில் இளைஞர்கள் தமிழரசுக் கட்சியை இந்த மாவட்டத்தில் தொடங்குவதற்கும் தமிழரசுக் கட்சியின் கொள்கைகளைப் பரப்புவதற்கும் இடைவிடாது பாடுபட்ட வர்கள். "தமிழன் உரிமைக்காகத் தலை போவது என்ருலும் தயங்காதே தமிழா" என்று வீரமாகப் பேசினர்கள். மேடையில் அவர்கள். இப்போது சிங்கள இராணுவத்

ராஜேஸ்வரி பாலசுப்பிரம்ணியம் (109
தினரின் காட்டு மிராண்டித் தனத்தை நினைத்துக் கொதிப் படைந்தார்கள். இன்னும் ஒரு சில நாளில் எப்படி மாறு கிறதோ என்று கலவரத்துடன் பேசிக் கொண்டார்கள் அவர்களின் பேச்சைக் கேட்க கேட்கக் கெளரிக்குப் பயமாக இருந்தது. ஊரோடு இருந்திருந்தால் தாய் தகப்பனேடு சேர்ந்தென்றலும் கஷ்டப்படலாம். இப்போது தனியாக இருந்து எல்லாவற்றையும் நினைக்கத் தாங்க முடியாத வேதனையாக இருந்தது. பூசைமுடிந்து கற்பூரத் தட்டையும் திருநீறு குங்குமத்தையும் கண்ட போதுதான் பூசைக்கு வந்தும் ஒரு துளியும் பூசையில் மனம் செல்லாமல் வீட்டை நினைத்துக் கொண்டிருந்தது ஞாபகம் வந்தது.
மரகதத்தைத் திரும்பிப் பார்த்தாள். மரகதம் ஒரு பக்கமும் கமலம் ஒரு பக்கமும் அண்ணு கதிரவேலன் நடுவிலுமாக நிற்பதைப் பார்க்க முன்னுக்கு இருக்கும் முருகப் பெருமானும் வள்ளி தெய்வயானையும் கெளரிக்கு ஏதோ ஒரு ஒற்றுமையைக் காட்டியது. கமலத்தைப் போலத்தான் மரகதம் அண்ணுவின் மச்சான்.
இதுவரையும் இவர்களைப் பற்றியோ இவர்களின் உறவு முறை பற்றியோ கெளரி ஒன்றும் வித்தியாசமாக நினைக்க வில்லை. ஒவ்வொருவரும் ஒவ்வொரு இடத்தில் சீவிப்ப வர்கள். கல்லூரி விடுமுறை தவிர அண்ணு இதுவரை ஊரில் நின்றதில்லை. கமலம் எப்போதாவது இவர்கள் ஊருக்கு வந்திருக்கிருள். மரகதம் பக்கத்தில் இருப்பதே தெரியாத ஒரு ஊமை. ஆச்சி சொல்வதுபோல் 'பக்குப் பெட்டையோ" தெரியாது. பாடசாலையில் சாரதா மாதிரி படிப்பில் மக்குத்தனமாய் இருப்பதில்லை. ஓரளவு பரவா யில்லை. ஆனலும் வாய் திறந்து ஏதும் சொல்வதும் கேட்பதும் மிகமிகக் குறைவு. பரிமளம் மாமிக்கும் மாமாக்கும் எதிர்மாருண குணம். மரகதம் மிக மிக கஷ்டப் பட்டுப்பிறந்த பிள்ளையாம். ஆச்சி ஒரு நாள் ஏதோ கதையில் யாருக்கோ சொல்லிக் கொண்டிருந்தாள்,

Page 60
110 தில்லையாற்றங்கரை
பரிமளம் மாமி மூன்று நாட்களுக்கு மேலாகப் பிரசவ வேதனையிற் துடித்தாளாம். பிள்ளை போனல் போகட்டும் தாய் என்ருலும் பிழைத்தால் போதும் என்று எல்லோரும் பிரார்த்திக்குமளவுக்குப் பரிமளம் மாமி கஷ்டப் பட்டாலாம்.
கடைசியாக மரகதம் பிறந்தபோது குழந்தை மூச்சு எடுக்கவும் அழவும் எவ்வளவோ நேரம் எடுத்ததாம். செத்துத்தான் பிறந்ததோ என்று கூட நினைத்து விட்டார் களாம். அதற்குத்தாணுே என்னவோ மரகதம் எப்போதும் ஒரு மெளன சித்திரம். அண்ணுவைப்பார்த்து வெட்கப் படுவாள் சில வேளைகளில். ஆனல் இப்போது ஒன்றிரண்டு வார்த்தை பேசியிருப்பார்கள். அதைத் தவிர அவர்களைப் பிணைத்து ஒன்ரு ய் நினேக்கும்படி ஒன்றுமில்லை. ஆனல் இப்போது தற்செயலாய் அவர்களைத் திரும்பிப் பார்த்த போது கெளரியால் கட்டுப்படுத்த முடியாத ஏதேதோ சிந்தனைகள் ஓடின, உண்மையில் மரகதம் ஊமைத்தனமா? அல்லது தன் உணர்ச்சிகளை யாருக்கும் காட்டவிரும்பாதகாட்டத் தெரியாத பிடிவாதமோ, அப்பாவித்தனமோ உள்ளவளா?
தெரியாது. கெளரிக்குத் தெரியாது. தெரியத் தேவை யில்லை. சாரதா தன் மைத்துனன் மாணிக்க வாசகத்தைப் பற்றிப் புராணம் பாடுவதே போதும். பூசை முடிந்து வீட்டுக்கு வந்தபோது சாரதா நல்ல நித்திரை. மாமர நிழலில் பாய்போட்டு சாரதாவின் மாமியும் மற்ற அக்கம் பக்கம் பெண்களும் 'புளியங்கொட்டை' விளையாடிக் கொண்டிருந்தார்கள். மத்தியான வெயிலும் அதீத வெளிச்சத்தில் பளிச்சிடும் கடலும் தென்றலுக்குச் சாய்ந் தாடும் தென்னேலைகளும் திருக்கோயில் கிராமத்துக்கே உரிய சொத்தோ? எவ்வளவு இனிமையான ஒவியம்? மனமாற-மனதில் அலைபாயும் யோசனைகள் திசைமாற ஏதோ செய்ய வேண்டும் போல் இருந்தது.

ராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம்
மாமிகளின் விளையாட்டைப் பார்க்கப் பிடிக்கவில்லை. சாப்பிட்டு முடிய மரகதம் சாரதாவுடன் சேர்ந்து நித்திரை. கடந்த ஒரு சில இரவுகளாக இல்லாத நித்திரை கடற்காற்றுக்கும் இளம் வெயிலுக்கும் இவர்களை மயக்கி விட்டது போலும். அண்ணு அன்று வந்த பேப்பர்களைப் படித்துக் கொண்டிருந்தான். இவர்கள் ஊரைப் பற்றிய செய்தி ஒரு மூலையில் வெளியாகி இருந்தது. அதைவிட அரசாங்கம் சிங்களத்தை எல்லா அரசாங்க இலாகாக் களிலும் தீவிரமாக்க அமுலாக்க முனைவதைப்பற்றி இருந்தது.
亲
கண் மூடித் திறப்பதற்குள் மூன்று நாட்கள் போய் விட்டன. இவர்களின் கிராமத்தில் நிலைமை சீரடைவதாகத் தகவல்கள் வந்தன. தமிழ்முஸ்லீம் பகுதிகளிலுள்ள தலைவர்கள் மாகாண அதிபரைக் கண்டதாகவும் தோமஸ் பாதிரியும் கொழும்புக்குப் போய் உள்நாட்டு மந்திரியைப் பார்த்ததாகவும் கதைகள் அடிபட்டன.
இவர்களின் ஊரைத் துவம்சம் செய்த ராணுவத் தினரைத் திருப்பியனுப்பி விட்டு வேருேரு பிரிவு ராணுவத் தினர் வந்திருந்தனர். பாடசாலை மாணவர்களும் பாலிப் போடிக் கிழவனும் பொலிஸ் ஸ்ரேசனிலிருந்து அனுப்பப் பட்டதாகவும் சேதி வந்தது.
எப்போது ஊருக்குத் திரும்பலாம் என்றிருந்தது கெளரிக்கு. திருக்கோயில் பிடிக்காமலில்லை. ஆனால் பிள்ளைத் தாய்ச்சியான அம்மா, வருத்தத்துடன் தெய்விக்கிழவி இவர்களை எல்லாம் பார்க்கும் ஆச்சி, எல்லோரையும் உடனடியாகப் பார்க்கப் போக வேண்டும் என்றிருந்தது.
சாரதாவுக்கு ஒன்றும் அவசரம் இருப்பதாகத் தெரிய வில்லை. மாணிக்கவாசகம் ஊரில் நின்றிருந்தால் சாரதா வின் மனநிலை வேறு விதமாக இருக்குமென்று தெரியும்,

Page 61
112 தில்லையாற்றங்கரை
கடந்த மூன்று நாட்களும் கடற்கரையிற்தான் பெரும் பாலும் கழிந்தது. காலையில் எழுந்ததும் அன்ருடம் மாமி வீட்டுச் சின்னக் குழந்தைகளும் கடற் கரைக்கு மீன் வாங்க போவார்கள் அவர்களுடன் சேர்ந்து கெளரியும் போவாள். நீண்ட தூரம் நடப்பார்கள். குழந்தைகள் கரை தொட்டு விளையாடும் கடலலைகளுடன் ஒடிப்பிடித்து விளையாடு
வார்கள்.
கடல் அலையோடு அள்ளுப்பட்டு வந்த கணையான் ஒடு பொறுக்குவார்கள். விதவிதமான வடிவத்தில் பலவிதமான வர்ணங்களில் சிப்பிகளும் ஒடுகளும் பொறுக்குவார்கள். சில வேளை சிறு நண்டும் பிடிப்பார்கள்.
ஒரு பின்னேரம் சாரதா, கமலம், மரகதம், கெளரி சாரதா மாமி வீட்டுக் குழந்தைப் பட்டாளம் அண்ணு எல்லோரும் கடற்கரைக்கு நண்டு பிடிக்கப் போனர்கள்.
சிறு நண்டுகள் கடற்கரை மணலின் நிறத்திலேயே இருந்ததால் அவற்றை அடையாளம் கண்டு பிடிப்பது சில வேளை கஷ்டமாக இருந்தது.
நண்டுகளை தென்னம் ஒலைகளாலோ, மட்டைகளாலோ அடித்துச் சாக வைத்த பின்தான் கையால் தொடலாம். அல்லது கையை நறுக்கிவிடும். நண்டு பிடிக்க குழந்தை களுடன் போட்டி போட்டுக் கொண்டு ஓடுவது சந்தோஷ மாக இருந்தது.
ஒரு சில வருடங்களுக்கு முன்னுல் ஓடையில் மீன் பிடிக்கவும் வயல்களில் ஓடி விளையாடவும் முடிந்தாற்போல் இனியும் ஒரு சந்தர்ப்பம் வரப்போவது இல்லை. என்ருே என்னவோ கெளரியும் சாரதாவும் மனம் திறந்து விளையாடி ஞர்கள். மரகதமும் சிலவேளைகளில் சேர்ந்து கொண்டா லும் பெரும்பாலும் பிடிபட்ட நண்டுகளை ஒரு சுரைக் குடுகுக்குள் போட்டுச் சுமந்து கொண்டு திரிவதில் செலவழி தாள். அண்ணு கொஞ்ச நேரத்தில் தாழம் மரத்தடியில்

Grêg ஸ்வரி பாலசுப்பிரமணியம்
உட்கார்ந்து ஓடிப்பிடித்து விளையாடும் தன் தங்கைகளையும் சொந்தக்காரக் குழந்தைகளையும் ரசித்துக் கொண்டிருந் தான். இவர்களுடன் நண்டு பிடித்த கமலமும் கொஞ்ச நேரத்தில் அண்ணுவுடன் சேர்ந்துகொண்டு எதையோ சொல்லி கலகலவென்று சிரித்துக் கொண்டிருந்தாள்.
இருள் பரவிக் கொண்டிருந்தது. குழந்தைகள் ஒவ் வொருவராய்ப் போகத் தொடங்கியிருந்தார்கள். சாரதா, கெளரி, மரகதமும் அவர்களைத் தொடர கடைசியாகக் கமலமும் - கதிரவேலுவும் வந்து கொண்டிருந்தார்கள். அண்ணு வழக்கத்துக்கு மாரு கச்சந் தோசமாக இருப்பதாக பட்டது கெளரிக்கு. கமலமா காரணம்?
கமலத்தின் வீட்டுக்கு வரும்போது ஊரிலிருந்து மாமா வும் வேறு யாரோவும் வந்திருந்தார்கள்.
வேறு யாரோ என்று நினைத்தது பத்மநாதன் என்று வெளிச்சத்துக்கு வரும் வரையும் தெரியவில்லை.
நண்டுகள் நிரம்பிய கூடையுடன் வந்த இவர்களைக் கண்டதும் இன்னுெருக்காத் தண்ணி ஊத்திப் போடாதே யுங்கோ' என்று குறும்பாகச் சிரித்தான் பத்மநாதன், கமலமும் கெளரியும் ஒருத்தரை ஒருத்தர் பார்த்து தர்ம சங்கடத்துடன் சிரித்துக் கொண்டார்கள், சாரதா வீட்டில் மஞ்சள் தண்ணிரால் நனைந்ததைத்தான் ஞாபகப்படுத்து கிருன் என்று இவர்களுக்குத் தெரியும்.
ஊரில் நிலைமை கிட்டத்தட்ட சாதாரணமாய்ப் போய் விட்டதென்றும் தெய்விக்கிழவி மரணத் தறுவாயிலிருப்ப தாகவும் மாமா சொன்னுர். கெளரியும் மற்றவர்களும் ஊரைவிட்டு வெளிக்கிட்ட அதே நேரம் உணர்வற்றுப் போன கிழவி அதன் பின் வெறும் மூச்சைத் தவிர வேறென் மில்லாமல் இருப்பதாக மாமா சொன்னர். ராணுவத் தினரைக் கண்ட பயத்தில் மயக்கம் போட்ட கிழவியின்
தி.-8

Page 62
14 தில்லையாற்றங்கரை
மரணத்துக்குக் காரணமானவர்கள் ராணுவத்தினர் என்று நினைத்தபோது கிழடு கட்டைகளைக் கூட இம்சைப் படுத்தும் ராணுவத்தினரில் சொல்ல முடியாத கோபம் வந்தது கெளரிக்கு.
பத்மநாதன் தங்களின் காரைக் கொண்டு வந்திருந் தான். ராமநாதன் வாத்தியாரின் தங்கையின் காரது குமர்ப்பிள்ளைகளைக் கூட்டி வருவதற்காகத் தங்களிடம் வந்திருந்த பத்மநாதனைக் காருடன் அனுப்பியிருந்தார் என்பது மாமா மூலம் கெளரிக்குத் தெரிய வந்தது.
இரவில் பிரயாணத்தைத் தொடங்காமல் அதிகாலை யில் ஊருக்குப் போகலாம் என்று மாமா சொன்னர்.
அன்று இரவு முழுதும் மாமாவும் மற்றவர்களும் இலங்கை அரசியல் நிலையைக் கதைத்துக் கொண் டிருந்தார்கள்.
பத்மநாதன் மட்டும் அதிகம் கதைத்துக் கொள்ள வில்லை. இவர்கள் ஒரேடியாக எஸ். டப்ளியு. ஆர். பண்டார நாயக்கா பற்றி கதைத்துக் கொண்டே யிருந்தார்கள். கல்லோயாக் குடியேற்றம் , முழுக்க சிங்களவர்களால் நிரப்பப் படுவதாக கமலத்தின் தகப்பன் சொன்னர், கமலத்தின் தகப்பன் அம்பாரையில் கிளார்க்காக வேலை செய்பவர். அவர் சொல்வதை இவர்கள் கேட்டுக் கொண் டிருந்தார்கள்.
மட்டக் களப்புப் பக்கத்தில் அம்பாரையிலும் திருகோணமலைப் பக்கத்தில் கந்தளாய்ப் பக்கத்திலும் சிங்களக் குடியேற்றங்களைத் திட்டமிட்டுத்தான்அரசாங்கம் செய்கிறது என்றும் சொன்னர். பேச்சு அரசியலாகவே யிருந்தது. ‘எந்த அரசாங்கம் வந்தாலும் மொழிப் பிரச்சினையைத் தீர்க்கப் போவதில்லை' என்று மாமா சொன்னர். ஆறேழு ம |ா த ங் களு க்கு முன்தான் ஜெயவர்த்தணுவின் தலைமையில் சிங்கள பெளத்தர்கள்

tréಲ್ಲ ஸ்வரி பாலசுப்பிரமணியம் 15
'தமிழுக்கு நியாயமான உரிமை' என்ற பண்டாரநாயக்கா அரசாங்கத்தின் கொள்கையை எதிர்த்து பாதயாத்திரை செய்து பிரசாரம் செய்தார்கள். இலங்கையில் உள்ள தமிழ் பேசும் பகுதிகளில் வாழும் தமிழர்கள் தங்கள் பாஷையைப் பாதுகாக்கவும் பழக்கத்தில் வைத்துக் கொள்ளவும் ஏன் இந்த சிங்களத் தலைவர்கள் எதிர்க்கிருர் கள் என்பது அவளுக்குப் பூரணமாகத் தெரியாது.
அண்ணுவிடமோ அல்லது ராமநாதன் வாத்தியா ரிடமோ இதுபற்றிக் கேட்க வேண்டும் என்று அவள் மனம் பேசியது.
சிங்கள மக்களுக்குத் தங்கள் மொழியையும் சமயத்தை யும் பாவிக்கவும், பாதுகாக்கயும், வளர்த்துக்கொள்ளவும் உள்ள உரிமைகள் சிறுபான்மையினரான தமிழருக்கு ஏன் மறுக்கப்படுகிறது என்றும் தெரியாது. தமிழரசுக் கட்சிக் காரர்கள் 'வாழ்க நிரந்தரம் வாழ்க தமிழ்மொழி' என் றெல்லாம் பாடிக் கொண்டு திரிவதற்குப் பின்னல் கெளரிக்கு விளங்காத எத்தனையோ சிக்கலான பிரச்சனைகள் இருப்பதாக உணர்ந்தாள்.
*அண்ணுவைக் கேட்கலாம். அவன் நிறைய வாசிப்பவன். நிறையத் தெரிந்தவன்' இப்படி எல்லாம் நினைத்தபடியே பெரியவர்களின் பேச்சில் கவனத்தைத் திருப்பினுள் கெளரி. நேரம் நடுச்சாமமாகி இருந்தது.
கமலம் இன்னுெருதரம் தேத்தண்ணி போட்டு எல்லோருக்கும் கொடுத்தாள். கமலத்தைக் கெளரிக்குப் பிடித்திருந்தது. தன் இரு சினேகிதிகளான மரகதத்தையும் சாரதாவையும் விடக் கமலம் எத்தனையோ விடயங்களில் வித்தியாசமானவள். தங்களுக்குள் இடைப்பட்ட வயதும் கமலத்தின் பட்டணப் படிப்பும் காரணமாயிருக்கலாம்.
ஆச்சியின் அனுமதியிருந்தால் கெளரியும் பட்டணம் போய்ப் படிக்கலாம். இனி அடுத்த ஊருக்கே போய்ப்

Page 63
t தில்லையாற்றங்கர்ை
படிக்க முடியாத நிலை வரப் போகிறது இனிப் பட்டணப் படிப்பை நினைத்து என்ன பிரயோசனம் என்று நினைத்த போது கண் கலங்கிக் கொண்டு வந்தது. ஆச்சி இனி அடுத்த ஊர்ப் பாடசாலைக்கு விடமாட்டாள். இனிப் பாட் சாலைக்குப் போக முடியாது என்ற நினைவே அவளைத் தாங்க முடியாத வேதனைக்குள்ளாக்கியது.
ரீச்சர் வேலை தனக்குக் கிடைக்கும் போல இருப்ப தாகக் கமலம் சொல்லியிருந்தாள். அதைக் கேட்ட அடுத்த கணம் புனித மலர் ரீச்சரின் ஞாபகம் வந்தது.
கமலமும் இன்னும் கொஞ்ச நாளில் புனிதமலர் ரிச்சர் மாதிரியாகி விடுவாள் என்பதை நினைக்கத் தன்னைப் பற்றி தனக்கே பரிதாபம் உண்டாவது போல் இருந்தது.
ஆச்சி சொல்வதுபோல் எல்லாம் அவன்" வினையோ ?
*எவஞயிருந்தாலும் எந்தக் கடவுளாய் இருந்தாலும் கணப்தியோ கந்தனே, சிவனே, கண்ணனே எந்த ஆண்டவன் என்ருலும் ஏதோ உதவி செய்து எங்களைப் பாடசாலைக்குப் போகப் பண்ணு கடவுளே' கெளரி பிரார்த்தித்தபடி நித்திரையாகிப் போஞள்.
திருக்கோயில்.சித்திரவேல் கோயிலின் காலைப்பூசை மணி ஓசையில் கண் திறந்தாள் கெளரி. ** உனக்கு விஷயம் தெரியுமோ? " சாரதாவின் முகத்தில் பிரகாசமும் மலர்ச்சியு மாய்க் கேட்டாள் கெளரியை, 'என்ன விசயம்" கெளரி கண்ணைக் கசக்கிக் கொண்டு கேட்டாள். 'அவர் ஊரில நிற்கிருராம்" சாரதா மெல்லமாகச் சொன்னுள். கமலம் வீடு நிறைய ஆட்கள். அந்த அமளியில் சாரதாவுக்கு மாணிக்கவாசகத்தைப் பற்றிய கதை!
* யார் சொன்னது? மாமா சொன்னரோ " கெளரி கேட்டாள். மாமா நேற்றுப் பின்னேரம் வந்த நேரத்தி லிருந்து அரசியல் தான் கதைத்துக் கொண்டிருந்தார்கள்.

ዛ 1ሃ
**பத்மநாதன் சொல்லிச்சு. பத்மநாதன் காரிலத்தான் நேத்து வந்தவராம். கிளார்க் வேலை கிடைச்சிரிக்காம். அவர் கொழும்புக்குப் போகப் போருராம்" சாரதா மூச்சு விடாமற் சொன்னுள்.
மாணிக்கவாசகம் மட்டக்களப்பிலிருந்து ஒவ்வொரு மாதத்துக்கொருதரம் வருவதே அருமை. கொழும்புக்குப் போகப் போகிருனம். அன்று மாத்த்துக்கு ஒருதரம் வரலாம். இவள் சாரதா மாணிக்கவாசக மத்திமம் சொல்லிக் கொண்டிருக்கப் போகிருள்.
மாணிக்கவாசகம் ஊரில் நிற்கிருன் என்று கேள்விப் பட்ட வினடிக்குப்பின் சாரதா தான் திருக்கோயிலில் இருப்பதையே மறந்துவிட்டாள். பங்குனி மாதம் குளிரை யும் பொருட்படுத்தாது அதிகாலையில் எழுந்து முழுகிக் கொண்டு தலையை விரித்தபடி பளிச்சென்ற பாவாடையும் கட்டிக்கொண்டு ஊருக்குப் போகத் தயாராயிருந்தாள்.
சார்தா எங்கேயும் வெளிக்கிடத் தொடங்கினல் இரண்டு மணித் தியாலங்கலுக்கு மேலாகும் அலங்கரித்து முடிய. இப்போது அரைமணித்தியாலத்தில் வெளிக் கிட்டது அண்ணுவுக்கு ஆச்சரியமாக இருந்திருக்க வேண்டும். கெளரியைப் பார்த்து சாரதாவைக் காட்டிக் குறும்பாகச் சிரித்தான். வீட்டுக்குக் கொண்டு போக் நண்டு வாங்கக் கடற்கரைக்குப் போனன் அண்ணு.
**தெய்விக் கிழவி சாகப்போகுது ஆர் இப்ப நண்டுக் கறியில் விருந்து வைக்கப் போகினம்" சாரதா பொறுமை யின்றி வெடித்தாள். அவள் அவசரம் யாரறிவார்?
கமலம் விழுந்து விழுந்து இடியப்பம் அவித்துக் கொண் டிருந்தாள். தான் இதற்கு முன் திருக்கோயிலுக்கு வரவில்லை என்று பத்மநாதன் கமலத்தின் தகப்பனுக்குச் சொல்லிக் கொண்டிருந்தான். ' ' ...,

Page 64
| I ë தில்லையாற்றங்கர்ை
திருக்கோயில் திருவிழாவின் மகிமையும் அதற்குப் பத்மநாதன் வரவேண்டும் என்றும் கமலத்தின் தகப்பன் சொல்லிக் கொண்டிருந்தார். பத்மநாபன் அவனின் தமயன் ராமநாதன் வாத்தியார் போல கல கலவென்று எல்லோரிட மும் பழகினன். கமலமும் பட்டணத்தில் படிப்பதால் எல்லோருடனும் கதைத்துப் ப்ழக்கம் போலும் கெளரி போன்ற கிராமத்துப் பெண்களுக்கு அயலாருடன் கதைத்துப் பழக்கமில்லை.
அவர்களுக்குத் தெரிந்த அந்நியர்கள் பாடசாலைக்கு வரும் ஆசிரியர்கள். ஆஸ்பத்திரியிலிருக்கும் அப்போதிக் கரிமார். இருந்திருந்து வரும் சைக்கிள் வியாபாரிகள்தான். சைக்கிள் வியாபாரிகள் புடவை சட்டைத் துணியிலிருந்து சட்டி பானை, காப்புகள் மாலைகள் என்று பல தரப்பட்ட வியாபாரிகளாக இருப்பார்கள். ஊர்ப்பெண்கள் அடுத்த நகரக் கடைக்குப் போய்த் துணிமணி வாங்குவது பழக்க மில்லை. சைக்கிள் வியாபாரிகளிடம்தான் பெரும்பாலும் துணிவாங்குவார்கள். பழக்கப்பட்ட Góilure I fir filg6ir fr யிருந்தால் தவணைமுறையில் வாங்கி கடன் செலுத்து வார்கள். அப்படிப்பட்ட வியாபாரிகள் கோழி வாங்கவரும் ஆ த ம் கா க்க ஈ, நெல்லு வாங்க வரும் நிந்தவூர் முஸ்லீம்கள் போன்ற அந்நியர்களுடன் தேவைக்குக் கதைத்துப் பழகிய குணம், பத்மநாதன் நேரடியாகக் கதைத்த போது அவனுடன் கதைக்கக் கூச்சமாக இருந்தது. ஆமிக்காரர்களுக்கும் பொலிஸ்காரர்களுக்கும் பயந்து இவர்களை ஆச்சி நெல்லுக் கொட்டுக்குள் மறைத்து வைத் திருந்த கதையைக் கேட்டான். шптгі Со) зғпт6і) 65) யிருப்பார்கள்? அவனின் மைத்துனி பரமேஸ்வரி ரீச்சர் சொல்லியிருக்கலாம்.
*ஒரு தடவையில் எத்தனை பொலிஸ்காரன்கள் வந்தான்கள்? நாலைஞ்சு பொலிஸ்காரன்களுக்குப் பயந்து நெல்லு மூட்டைக்குள் ஒளிவதோ? எல்லோரும் சேர்ந்து எங்களுக்கு மஞ்சள் தண்ணி ஊத்தியதைப் போல

ராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம் 19
உங்களின்ற வாற பொலிஸ்காரன்களுக்குச் சுடுதண்ணி ஊத்த ஏலாமப் போட்டு தோ" பத்மநாதன் இப்படிக் கேட்ட போது அவன் பகிடி விடுகிருஞ அல்லது துணிவு தரத்தான் கதைக்கிருரு கெளரிக்கு விளங்குவதில்லை.
ஆச்சி எப்போதும் கெளரியைப் பெரிய வாயாடி என்று சொல் வாள். ஏனென்ருல் ஆச்சியுடன் கெளரி எப்போதும் தர்க்கம் போட்டபடியே இருப்பாள். ஆனல் பத்மநாபன் இவளை இப்படிக் கேட்டபோது திருப்பிக் கதைக்க வாய் வரவில்லை.
ராமநாதன் வாத்தியார் போல் அவர் தம்பியும் இந்தக் கிராமத்தாரின் நாளர்ந்த வாழ்க்கை முறையையும் பேச்சு வழக்கைப்போல் இல்லாமல் வித்தியாசமாய்ப் பழகினன். பேசினன். வாத்தியாரும் இவனும் விசயங்களைப் பார்க்கும் விதமும் அதைப்பற்றி பேசும் விதமும் சிலவேளை கெளரிக்கு விளங்கவேயில்லை.
பொலிஸ்காரன்களுக்குச் சுடு தண்ணீர் ஊத்தச் சொல்லும் பத்மநாதனப் பயத்துடன் பார்த்தாள்.
** என்ன பகிடியாவோ சொல்றியா" என்றுகேட்டாள். இவள் கண்களில் தெரிந்த குழப்பமும் கபடமற்ற கேள்வி யும் அவனைச் சிரிக்கப் பண்ணியிருக்க வேண்டும். கடிக்க வாற பாம்பைக் கண்டால் அடித்துச் சாக்காட்டாமல் விருவியளோ கெளரி" என்று கேட்டான்.
கடிக்க வரும் பாம்புகள்! மரியமலர் போன்ற பெண் களைக் கெடுத்துவிட்ட கொடியவர்கள்! பத்மநாதன் சொல்வது எவ்வளவு சரி. ஆனல் துணிவு எங்கேயிருக் கிறது? சலீம் காக்காவிடம் சைக்கிளில் கொண்டுவரும் துணியைக் காசு கொடுத்து வாங்கலாம், துணிவை எங்கே வாங்குவதாம்?
அவனுக்கு விளங்கவில்லை. விளங்கிக் கொள்ள பயமாக வும் குழப்பமாகவுமிருந்தது.

Page 65
ZO திஸ்லேயாற்றங்கரை
கமலம் இடியப்பம், இருல் ஆணழும் (சொதியும்) வைத்திருந்தாள். அதிகாலையில் கறியின்மணம் கம் என்று மூக்கில் பட்டது. 'இப்பிடி ருசியான சாப்பாடு கிடைக்கு மென்ருல் அடிக்கடி இந்தப் பக்கம் வரலாம்போல கிடக்கு' பத்மநாபன் கமலத்தைப் பார்த்துச் சொல்ல அவள் வெட்கத்தில் முகத்தைத் திருப்பிக்கொண்டாள்.
*அதுதான் நான் சித்திரவேலாயுதச் சாமியைச் சாட்டிக்கொண்டு திருக்கோயிலுக்கு அடிக்கடி வாறன்' அண்ணுவும் சேர்ந்து கமலத்தை வெட்கப்படச் செய்தது கெளரிக்குப் புதுமையாயிருந்தது.
*கமலம் அண்ணுவுடன் வெட்கப்பட்டுப் பழகியதாக கெளரிக்கு ஒரு ஞாபகமுமில்லை. இப்போது கமலம் மச்சான வெட்கப்பட வைத்தது அண்ணுவா, பத்மநாதனு?
அதெல்லாவற்றையும் யோசித்துக் கொண்டிருக்காமல் ஊருக்கு வெளிக்கிட வேணும். அம்மா அப்பா தம்பி தங்கைகள் தெய்விக் கிழவி, ஆச்சி எல்லோரையும் போய்ப் பார்க்கவேண்டும்,
**இரவிரவாகக் கதைத்ததுபோல் இப்போது மாமா விடாமல் மொழிப் பிரச்சினைப்பற்றிக் கதைத்துக் கொண்டு வந்தார்.
வாகனங்களிலுள்ள ஆங்கில எழுத்துக்குப் பதில் சிங்கள பூரீயைப் போடவேண்டும் என்ற அரசாங்க தீர்மானத்தைக் கதைத்துக் கொண்டு வந்தார். அதற்குத் தமிழரசும் கட்சி எதிர்ப்புக் காட்டுவதையும் அவர்களை நாங்கள் எல்லாம் ஆதரிக்க வேண்டும் என்று மாமா சொல்லிக்கொண்டு வந்தார்.
ஏன் ஆங்கில எழுத்துக்கள் இருக்கும்போது அதை எதிர்க்க இல்ல உங்கட தலைவர்கள்' பத்மநாதன் மாமா வைப் பார்த்துக் கேட்டான். அவன் குரலில் கிண்டல்,

grogຕໍ່ຄົນດີ ure) ບໍ່ຫຼືຜubຫມທີ່ນທີ່ 12
*என்ன தம்பி நீங்கள் என்ன மக்கள் ஐக்கிய முன்னணிக்காரரா' மாமா திடுக்கிட்டது மூகத்தில் தெரிந்தது.
*தமிழரசுக் கட்சியை ஆதரிக்காதவர்கள் எல்லாம் ஏன் எதிர்க்கட்சிக்காரர் என்டுநினைக்கிறியள்" பத்மநாதன் திருப்பிக் கேட்டான்.
*உங்கட தமயனும் எந்த நேரம் பார்த்தாலும் மொழிப் பிரச்சினையைப் பற்றிப் பேசுருர். தமிழுக்குச் சசி அந்தஸ்து கேட்கிற யாழ்பாணத்துத் தலைவர்கள் தங்கட ஊரில தாழ்த்தப்பட்ட சனங்களுக்குச் சரியான அந்தஸ்து குடுக்கினமோ எண்டு கேட்கிருர்! தமிழனுக்கு மொழியுரிமை கேட்கிற தமிழரசுக்காரர். தமிழ்க் காங்கிரஸில் இருக்கேக் கதானே இந்திய வம்சா வழித் தொழிலாளரின் வாக்குரிமை பறிக்கப் பட்டது. அப்ப மட்டும் இந்தியக்காரன் தமிழன் எண்டு நினைக்காதலை, இப்பவும் யாழ்பாணத்தில் தாழ்த்தப்பட்ட சாதியினர் தமிழர் எண்டு நினைக்காதவை; ஏன் தாங்களே தமிழ் கதைக்கத் தெரியாதவை தமிழுக்குச் சரியான அந்தஸ்து கேட்கிறது சிரிப்பாய்க் கிடக்கு எண்டு உங்கட தமயன் சொல்லுரு?ர். ஏன் தம்பி பத்மநாதன் நீங்க தமிளர் இல்லையோ உங்கட தகப்பன் சிங்களவனே" மாமாவின் குரலில் ஆத்திரமும் ஆவேசமும். பத்மநாபனும் ஏதும் சூடாய்த் தொடங்கிக் காருக்குள் சண்டை வரக் கூடாது என்று கடவுளை வேண்டிக்கொண்டாள் கெளரி. அவளுக்கு ஊருக்குப் போகும் அவசரம். பத்மநாதன், மாமாவைப் பார்த்துச் சொன்னன் 'ஏன் கோபப்படுறியள்? அண்ணு சொல்லுறது சரியாய் இல்லையா? இங்கிலிசில வேலை செய்யுற பெரிய யாழ்பாணத்தாரின்ர உத்தியோகம் பறிபோகப் போகுது எண்டுதானே இந்த மொழிச் சண்டை தொடங்குது? இது வெறும் பாஷைச் சண்டையில்ல. இலங்கையில் இருக்கிற-அல்லது இருக்கப்போகிற சண்டை களை திசை திருப்பத்தான் பண்டார நாயக்கா டிாஷைப்

Page 66
22 தில்லயாற்றங்கரை
பிரச்சினையைப் பெரிய பிரச்சி%னயாக்குருர், 'பத்மநாதன் தமிழரசுக் கட்சிக்காரரையும் திட்டுகிறன். பண்டார நாயக்கா அரசாங்கத்தையும் திட்டுகிருன். யார் இவன்? கெளரி தனக்குள் குழப்பிக்கொண்டாள்.
*தம்பி எடுத்ததெல்லாம் பிழை எண்டுதான் நீங்க சொல்றியள். உங்களச் சொல்லி என்ன பிரயோசனம்? உங்களின்ர அண்ணன்தான் இப்பிடித் தேவையில்லாம கதைக்கச் சொல்லிக் கொடுத்திருப்பார். கொண்ணர் என்ன அரசாங்கத்தின் கையாளோ" மாமாவுடன் வாத்தியார் பெரிய தர்க்கம் பண்ணியிருக்கிருர் என்று அவர் கோபத்தில் தெரிந்தது.
*அண்ணர் யாரின்ர கையாளுமில்ல அவர் ஒரு கம்யூனிஸ்ட்." பத்மநாதன் பெரிய முகத்துவாரத்தைக் கடந்து கார் ஒட்டிக்கொண்டிருந்தான்.
ஆஸ்பத்திரியைத் தாண்டிய கார் இவர்களின் கிராமத் துக்குத் திரும்பியதும் சாரதா காரின் ஜன்னலில் தலையைப் பதித்து வெளியில் பார்த்துக்கொண்டு வந்தாள். 'உன்ர கண்ணில் கிரவல் தூள் படப்போகுது' மரகதம் பொறுமையின்றிச் சாரதாவுக்குச் சொன்னுள். கிரவல் ரோட் பங்குனி மாதச் சூட்டில் காய்ந்து கூட கடத்தப் போய்க்கிடந்து கார் ஒடும்போது கிரவல் துளையும் தூசியையும் கிளப்பியது. சாரதா ஒன்ரையும் பொருட் படுத்தாமல் ஜன்னலுக்குள்ளால் தலையைப் போட்டு ரோட்டில் புதுமை பார்த்துக்கொண்டிருந்தாள் மாணிக்கம் தென்படாதா?
இவர்களின் கார் ஊர் எல்லையைத் தாண்டி வீட்டை அடைந்து கொண்டிருந்தபோது அழுகை ஒலி கேட்டது * கிழவி செத்துப் போய்விட்டது" மாமா சொன்னர்.
காரால் இறங்கி வீட்டுக்குப் போகும்போது பாலிப் போடிக் கிழவனின் சோகமான தோற்றம் தெரிந்தது.

ராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம் 23
போலிஸாரின் கைவண்ணம் கிழவனின் பல் இல்லாத தோற்றத்தில் தெரிந்தது. கிழவனுக்கு இருந்ததே ஒன்றிரண்டு பற்கள். இப்போது ஒன்றுமற்ற பொக்கை வாய். அத்துடன் கிழவனின் கண்மண்டை வீங்கியிருந்தது. படுபாவிகள் தோல் சுருங்கிப் பல் விழுந்து தள்ளாடி நடை போடும் இந்தக் கிழவனையுமா அடித்திருக்கிருர்கள்?
கிழவன் வரும்வரைக்கும் கிழவியின் உயிர் காத் திருந்ததா? கெளரியின் மனம் வழக்கம்போல் தனக் குள்ளேயே பேசிக்கொண்டது.
பெண்கள் கட்டிப்பிடித்து ஒப்பாரி வைத்துக் கொண் டிருந்தார்கள். ஆண்கள் பாடை கட்டிக் கொண் டிருந்தார்கள்.
ஊர்ப் பெரிய மனிதர்கள் வளவின் ஒரு மூலையில் நின்று பாடை கட்டும் வாவியர்களைக் கவனித்தபடி ஏதோ காரசாரமாய்க் கதைத்துக்கொண்டிருந்தார்கள்.
திருக்கோயிலிருந்து வந்ததும் வராததுமாய்ச் செத்த வீட்டுக்கு வந்திருந்த அவர்களுக்குத் தேத்தண்ணி போட்டு கொடுக்கும் வேலை குமரிப் பெண்களின் தலையில் விழுந்தது? பெரியம்மா வீட்டில் தேயிலைக் கடைமாதிரி வேலை, செத்த வீட்டில் செத்தவர்களைப் பற்றி மட்டும் கதைப்பதில்லை. சாகாத மனிதர்களைப்பற்றிய வம்பு தும்புகளையும் வாய் கூசாமல், மனம் அலுக்காமல் அள்ளிப் பரப்புவார்கள். என்று அதுவரைக்கும் கெளரிக்குத் தெரியாது. மரகதமும் சாரதாவும் விடாமல் தேத்தண்ணி போட கெளரிக்கும் மற்ற சின்னப் பெண்களுக்கும் தேத்தண்ணியை வந்திருப் பவர்களுக்குக் கொண்டு கொடுக்கும் வேலையாயிருந்தது.
அண்ணுவுடன் நின்றிருந்த மாணிக்கவாசகம் கெளரி
யைக் கண்டதும் 'என்ன துரியோதனுதியாருக்குப் பயந்து அஞ்ஞாதவாசம் போன பாண்டவர்கள் மாதிரி ஆமிக்கார

Page 67
24 தில்லையாற்றங்கரை
ருக்குப் பயந்து திருக்கோயிலுக்குப் போனியளோ" என்று பகிடிக்குக் கேட்டான்,
இளைஞர்களுடன் செல்லராசாவும் தலையில் போட்டி கட்டுடனிருப்பதைக் கவனித்தாள் கெளரி. செல்லராசா ஆஸ்பத்திரியிலிருந்து வந்ததை மாமா சொல்லவில்லை.
பாலிப்போடியின் ஒரே ஒரு மகளான தங்கம்மா காரைத் தீவில் கல்யாணம் முடித்து இப்போது கல்லோயாவை அண்டிய குடியேற்றக் கொலனி ஒன்றியிருந் தாள். கிழவி சுகமில்லாமல் போய் மாதக் கணக்காகி விட்டது. தங்கம்மா தன் குழந்தைகளுடன் ஒரு தரம் வந்து பார்த்துவிட்டுப் போயிருந்தாள். இப்போது கிழவி யின் மரணத்தைச் சொல்லி தங்கம்மாவைக் கூட்டிக் கொண்டுவர யாரோ போயிருப்பதாகக் கதையடிபட்டது. தங்கம்மச வரும் வரைக்கும் சவம் எடுபடாது.
பெண்களுடன் கட்டிப்பிடித்து அழுது கொண்டிருந்த ஆச்சி அடுப்படிப் பக்கம் வந்தாள். அவள் முகத்தில் கலவரம்
**செத்த ஊட்டில் குளப்பம் வரும் போல கிடக்கு" அம்மாவிடம் சொன்னுள். மயிலர் தேவையில்லாம ராசநாயகத்தாரோடு வீண் கதைக்குப் போயிருக்கக் கூடாது' பரிமளம் மாமி ஆச்சியிடம் சொன்னள்,
என்ன நடந்திருக்கும்?
$என்ன எல்லாரும் என்னல்லாமோ சொல்றியள்' சாரதா ஆச்சியைக் கேட்டாள். கடந்த இரண்டு நாளாக மயிலரும் ராசநாயகத்தாரும் ஒருத்தரைப் பற்றி ஒருத்தர் ஊர் தெருக்களில் தேவையில்லாக் கதை கதைத்துக் கொண்டு திரிவதாக அம்மா சொன்னுள். பெரியப்பாதான் ஊரில் விதானையார் வெள்ள அழிவுக்கு நிவாரண உதவி கேட்டு விண்ணப்பங்கள் நிரப்பியபோது ஏழைகளின்

ராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம் t25
காசை மோசடி செய்தாக எப்போதோ அதை பரவி யிருந்தது. இப்போது ராசநாயகத்தாரைப் பற்றிய கதை பரவிக் கொண்டிருந்தது.
ராசநாயகத்தார் வயல்களைப் பார்க்கும் வட்டை விதானையார் அவரும் நகரத்தில் லஞ்சம் வாங்குவதில் பெயர் பெற்ற டி. ஆர். ஒவும் சேர்ந்து வயல் அழிவு கேட்டு மக்கள் நிரம்பிய விண்ணப்பங்களில் மோசடி செய்து பெரும் தொகையான பணத்தை விளையாடி விட்டதாகவும் அது பற்றி பெரியப்பா அரசாங்க அதிபருக்கும் பெட்டிஷன் போட்டதாகவும் அது எப்படியோ ராசநாயகத்தருக்கு தெரிய வந்து இருவரும் மறைமுகமாக ஒருவரை ஒருவர் பற்றிக் கூடாமல் கதைத்துக் கொண்டு திரிவதாக பரிமளம் மாமி சொன்னுள்.
ராணுவக்காரனின் கொடுமை பற்றி முறைப்பட அரசாங்க அதிபரிடம் போனபோது இந்த கதை எல்லாம் தெரிய வந்ததாம்.
மறைமுகமாக ஒருத்தரை ஒருத்தர் திட்டிக் கொண் டிருந்தவர்கள் இப்போது செத்த வீட்டில் ஏதும் தகராறு படலாம் என்று அம்மா பயந்து கொண்டிருந்தாள். அம்மா வுக்கு அடி பிடி சண்டை பிடிக்காது. அப்பா தேவை யில்லாமல் யாருடனும் எந்தக் கதையும் வைத்துக் கொள்ளாதவர். ஆணுலும் தமயன் மயிலருடன் யாரும் சண்டைக்குப் போனல் பார்த்துக் கொண்டிருக்கப் போவ தில்லை. அண்ணு வேறு ஊரில் நிற்கிருன். வெறும் வாய்த் தர்க்கமாய் முடிந்தால் பரவ யில்லை.
வாயடி கையடியாய் மாறி அதில் இளைஞர்களும் அகப்பட்டுக் கொள்வதை ஆச்சி வெறுத்தாள். ராசநாயகம் குடும்பத்தில் ஆச்சிக்கு அலாதியான பற்று. செல்வராசா பேரனைத் தன் பேத்தி கெளரிக்குப் பேச வேண்டும் என்று அவள் நேரடியாகவும் மறைமுகமாகவும் ஆட்களிடம் சொல்லியிருப்பதை எல்லோரும் அறிவார்கள்.

Page 68
426 தில்லையாற்றங்கர்ை
மயிலரின் சண்டை இரு குடும்பங்களுக்குள்ளும் பகையை உண்டாக்கி ஆச்சியின் ஆசைக் கனவை நனவாக்கி விடுமோ என்று அவள் முகத்தில் தெரிந்த கலவரத்திலிருந்து அறியக் கூடியதாக இருந்தது.
வெயில் இறங்கிப் பொழுதுபடும் நேரம்தான் சவ அடக்கத்துக்குப் போனவர்கள் திரும்பி வந்தார்கள். தங்கம்மா குடும்பம் வேளையோடு வந் தி ரு ந் தா ல் பின்னேரமே எல்லாச் சடங்கும் முடிந்திருக்கும். சவ அடக்கம் முடிந்து திரும்பி வரும் வழியில் பெரியப்பா யாரையோ பேசுவது போல் ராசநாயகத்தாரைப் பேசியதாக மாமா சொன்ஞர்.
பெரியப்பா பரம்பரைப் போடியார். பெரியப்பா குடும்பம் நூற்றுக் காணக்கான வருடங்களாய் ஊராரின் மதிப்புக்குப் பாத்திரமான குடும்பம். பெரியப்பரிடம் எவ்வளவோ வயல்கள் உண்டு. அதில் வேலை செய்ய எத்தனையோ ஆட்களுண்டு. பெரியப்பரின் செல்வம் செல்வாக்கும் சுற்று வட்டாரத்தில் எல்லோரும் தெரிந்த விஷயம்.
ராசநாயகத்தார் குடும்பம் ஒருகாலத்தில் பெரியப்பா குடும்பத்துக்கு வேலை செய்தவர்களாம். இரண்டாம் உலக யுத்தக் காலத்தில் ராசநாயகத்தார் ஊரை விட்டுப் போயிருந்தாராம். உழைப்புத் தேடி திரும்பி வந்தபோது பணக்காரணுகத் திரும்பி வந்தாராம். எப்படிப் பணம் உழைத்தார் என்பதை ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதத் தில் சொல்வார்கள். ஆச்சிக்குச் செல்லநாயகத்தின் மனைவி ஏதோ ஒரு தூரத்துச் சொந்தத்தில் மருமகள், அவளுக்குத் தாயில்லாத படியால் ராசநாயகம் மனைவியின் பெரு பேறுகள் போது ஆச்சிதான் தாய் மாதிரி எல்லாம் போய்ப் பார்ப்பாள். அவர்களின் வசதியான சீவியமும் வாழ்க்கை முறையும், ஆச்சிக்கு அவர்களில் ஒரு மயக்கத்தையும் மதிப்பையும் ஏற்படுத்தியிருந்தது. ஊர் ஆக்கள் பகிடிக்கு

ராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம் 12
என்ன ஆச்சி பேத்திக்கு இப்பயே மாப்பிள்ள பாக்கிறியளோ' என்று சொன்னதை நாளடைவில் ஆச்சி தன் மனத்தில் உறுதியாக்கிக் கொண்டாள்.
அவர்கள் குடும்பத்தில் கெளரியை மருமகளாக்கி விட வேண்டும் என்பதை மறைமுகமாக எத்தனையோ தரம் சொல்லிக் காட்டி விட்டாள்.
**கெளரியின் தகப்பன் இளந்தாரியாய் இருக்கும்போது இந்தியா பார்க்க ஆசைப் பட்டாராம். கெளரியின் தகப்பனும் அவரின் மைத்துனர் ஒருத்தர் ராமலிங்கம என்பவரும் இந்தியா போனர்களாம். கெளரியின் தகப்பன் தன் தமயன் மயிலுப் போடியாருடன் சண்டை பிடிக்க வேண்டியிருந்தது. மயிலருக்குத் தம்பி ஊதாரித்தனமாக ஊர் சுற்றிப் பார்க்கப் போவது விருப்பமில்லை. அதனல் உண்டான சண்டையில் வயல்களைப் பிரித்துக்கொடுத்ததும் அதெல்லாவற்றையும் விற்று எடுத்துக் கொண்டு கெளரியின் தகப்பன் இந்தியா போனதும் பழைய கதை. அவர் இந்தியாவில் சுதந்திரப் போராட்டக்காரர்களுடன் சிரிந்து காந்தியுடன் சத்தியாக்கிரங்களில் பங்கெடுத்துக் கடைசி யாகக் கதர் உடுப்புடன் கையில் ஒரு சதக்காசுக்கும் வழியில் லாமல் ஊர் வந்து சேர்ந்தான்.
ராமலிங்கத்தார் எத்தனையோ ஆண்டுகளின் பின் தாடியும் மீசையும் சாமியர் தனத்துடனும் உருத்திராட்ச மாலையுடனும் வந்து சேர்ந்தார். அதன் பிறகு அவர் ஊருக்கு ராமலிங்க சாமியார் ஆகிவிட்டார். கதிர் காமத்தில் சீவியம். எப்போதாவது இருந்து விட்டு ஊருக்கு வருவார். இரண்டாம் உலக யுத்தம் ஊரில் உண்டாக்கிய மாற்றங்கள் இது. ராசநாயகத்தார் தான் கொண்டு வந்த
மர்ம பணத்தில் ஏக்கர்க் கணக்காக நிலம் வாங்கினர்.
அடியடி வாழையாகத் தங்கள் போடிகளாக இருந்தும் இவர் இடையில் வந்து இப்படித் திடீர்ப் பணக்காரன்

Page 69
*2的 தில்லையாற்றங்கர்ை
ஆகியது மயிலரின் வயிற்றெரிச்சலைக் கூட்டிக் கொண்டது. இதெல்லாம் ஆட்சி சொன்ன கதைகள்.
ஊர் விஷயங்களில் யார் பெரியமனிதன் என்று போட்டி யிருந்தாலும் இதுவரை பெரிப்பாதான் எல்லோர் &ଉist களுக்கும் பெரிய மனிதன். ராசநாயகத்தார் குறுக்கு வழியில் கிராம மக்களைச் துறையாடுவதாகப் பெரியப்பா குற்றம் சுமத்தினர். இப்போது நேரடியாக வெடிக்கலாம்.
சவ அடக்கம் முடித்து வந்தவர்களுக்கு வண்ணன் வந்து மாத்து" வைத்து உடுப்புக் கொடுத்து கொண்டி ருந்தான். ஊர்ப் பெரிய மனிதருக்குத்தான் முதல் *மாத்துக் கொடுப்பது வழக்கம்.
வண்ணுர நாகன் பெரியப்பாவிடம்தான் மாத்துக் கொடுப்பான். இப்போது இருள் பரவிக் கொண்டிருத் தாலும் வண்ணுர நாகனுக்கு மாலைக்கண் என்ற படியாலும் பக்கத்தில் நின்ற ராசநாயத்தாரிடம் மாத்துடிப்பை நீட்டினன்.
ஏய் நாகன்; உனகென்ன அடிதலே தெரியாதா? ஆர் பெரியாள் எண்டு மாத்துக் குடுக்கிருய்' பெரியப்பா தன் காதுக் கடுக்கன்கள் கோபத்தில் ஆட வண்ணுர நாகனிட மிருந்து மாத்து' வேட்டியைப் பிடுங்கினர்.
பெரிய மனிசன் எண்டு ஆக்கள் மதிச்ச காலம் போய்ச் சில ஆக்கள் இப்ப பெரிய மனிசத் தனத்தைத் தட்டிக் கேட்க GBuurgF)& Gaot b'' ராசநாயகத்தார் கிண்டலாகச் சொன்னர்.
ஆச்சிக்கு விஷயம் விளங்கி விட்டது; இவர்கள் சண்டைக்குத் தயாராகிருர்கள். அவசரத்துடன் ஆண் களுக்கு வேட்டி மாற்றுமிடத்துக்குப் போனள். இது ஊடு, செத்த சீவனுக்கு மதிப்புத் தேவை ஏதும் பொதுப் சண்  ைட யி ரு ந் தா பொது இடத்தில் கதைச்சுக்

ராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம் 129
கொள்ளுங்கோ. 'நாகன் கெதியாய் மாத்த வைச்சுப் போட்டு நீ .ஊட்ட போ' ஆச்சி வண்ணுரநாகனை வெருட்டினுள்.
பெரியப்பா ஆச்சியைப் பொருட்படுத்தியதாகத் தெரிய வில்லை. வழக்கம்போல் குரலையுயர்த்திக் கைகளையாட்டி ராசநாயகத்தாரை நேரில் பார்த்துக் கத்தினர். “யாரையும் ஏமாத்திப் பிடுங்கின காசு கையில இருந்தா எந்தக் கழுதைக் கும் பெரிய எண்ணம் வந்திடுமோ"
பெரியப்பாவின் குரல் அதிர்ந்தது. கெளரி, சாரதா, மரகதம் மூன்று குமரிப் பெண்களும் ஒருத்தரை ஒருத்தர் அச்சத்துடன் பார்த்துக் கொண்டனர்.
**செத்த வீட்டில இந்தக் கதை வேணும்" மாமா எல்லாரையும் பார்த்துச் சொன்னுர், பெரியம்மா தோளில் போட்ட குழந்தையுடன் வந்து பெரியப்பாவுக்கும் ராச நாயகத்தாருக்கும் நடுவில் நின்று கொண்டு சொன்னுள் *ஒரு கிழமைக்கு முதல் இந்த ஊரில என்ன நடந்தது எண்டு தெரியாத மாதிரி இன்னுமொரு நாடகம் தொடங்குறி யளோ? எங்கட இளம்தாரிப் பிள்ளையன எப்ப புடிச்சு கையைக் கால உடைக்கலாம் எண்டு அவர்கள் திரிய றான்கள்"" பெரியம்மாவிற்குக் கண் கலங்கியது சொல்லும் போது.
தூரத்தில் செல்வராசா தன்தலைக் கட்டுடன் தகப்பனின் வாக்குவாதத்தைக் கேட்டுக் கொண்டிருந்தான். அவனைச் சுத்தி நிறைய இளைஞர்கள். தமிழரசுக் க்ட்சிக்காக உயிரை பும் கொடுக்கத் தயங்காத இளைஞர்கள் எலக்ஷன் காலத்தில் ஒழுங்கை தெருக்களில் எல்லாம் தமிழரசுக் கட்சிக்கு ஜே" போட்டுக் கொண்டு திரிந்தவர்கள். இப்போது தமிழரசு எம். பி. யின் அடிப்படையிலுண்டான சண்டையில் தாக்கப் பட்டு பாரதூரமான நிலையில் ஆஸ்பத்திரியிலிருந்து வந்த அடன், இளைஞர்கள் செல்வராசாவை இலட்சிய வீரனுக்கிப்
தி.-9 ላ

Page 70
30 தில்லையாற்றங்கரை
பின்னல் திரிவது அப்படியே தெரிந்தது. தகப்பனுடன் செல்வராசாவும் சேர்ந்து பெரியப்பாவைப் பற்றிய கதை களை ஊரில் பரப்பத் துணிந்தால் அவனுக்குப் பின்னலிருக் கும் அத்தனை இளைஞர்களும் பெரியப்பாவுக்கு எதிராகத் திரும்ப ஒரு வினடியும் எடுக்காது.
**ஊரின் வழக்கமான நடைமுறை தெரிந்தவள் கெளரி. கிராமத்தார் கெதியில் உணர்ச்சி வசப்படுபவர்கள். பேப்பரும் ரேடியோவும் செய்திகள் சொல்லத் தேவையில்லை. ஒரு வீட்டு வேலியால், ஒரு வீட்டு அடுப்படியிலிருந்து இன்றென்றுக்கு இவர்களின் கதை இலேசில் பரவும். மூடி மறைத்துவிட்டு நாகரீகமாக உதட்டளவில் கதைக்கத் தெரியாதவர்கள்.""
**பெரியப்பாவும் ராசநாயகத்தாரும் அன்று செத்த வீட்டில் தொடக்கிய சண்டை எத்தனயோ பேர் வாழ்வில் எத்தனை மாறுதலைக் கொண்டு வரப் போகிறது என்று எந்த ஜீவனும் அந்த இருண்ட மாலை நேரத்தில் எதிர்பார்க்க வில்லை.
நேரம் இருண்டதாலும் பெரிய மனிதர்கள் சண்டை யில் பெண்கள் தலையிட்டதாலும் பெரியப்பாவின் குரல் கொஞ்சம் தாழ்ந்தது
**ஆச்சியின் முகம் மிகவும் இருண்டிருந்தது. பெரியப்பா வைப்பற்றியும் ராசநாயகத்தரையும் அவர்களின் சிக்கலான மன உணர்வுகளைப் பற்றியும் ஓரளவு தெரிந்தவள் ஆச்சி.
செத்த வீட்டுக்குத் தேவாரம் படிக்க அண்ணுவுடன் பத்மநாதனும் வந்திருந்தான். பின்னேரம் நடந்த சண்டை யின் பின்னணி சரித்திரத்தைக் கேட்டிருக்க வேண்டும். அண்ணு வெள்ளத்தால் தாக்கப் பட்ட வீடுகள், வயல்கள் அதற்கான நிவாரணப் பணம் அதன் அடிப்படையில் நடந்த தாகக் கூறும் பணமோசடிகள் என்பன பற்றிச் சொல்லிக் கொண்டிருந்தான் பத்மநாதனுக்கு.

ராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம் 13.
கதையில் கதையோடு ராசநாயகத்தாருக்கும் மயிலுப் போடிற்குமுள்ளநீண்டநாள் பொருமலையும் சாடைமாடை யாகச் சொல்லிக் கொண்டிருந்தான்.
பொதுத் தேர்தல்காலத்தில் ராசநாயகம் ஒருபக்கமும் மயிலர் ஒருபக்கமும் நின்று கொண்டு ஊர் மக்களின் வாக்கு களை எடுத்துத் தாங்கள் விரும்பிய அபேட்சருக்குப் போடு வதற்குச் சண்டை பிடிப்பதையும் சொன்னன். 1956-ம் ஆண்டு; பொதுத் தேர்தலின் போது மயிலர் உள்ளுர் அபேட்சகரை ஆதரித்ததாகவும் அவருக்குப் போட்டி போடும் ஒரே ஒரு காரணத்துக்காக ராசநாயகத்தார் தமிழரசுக் கட்சி அபேட்சகரை ஆதரித்ததாகவும் சொன் ஞன். 56-ம் ஆண்டியிலிருந்து தானும் அந்த ஊர் இளைஞர் களும் எவ்வளவு தூரம் கடுமையாக வேலைசெய்து தமிழரசுக் கட்சிக்காக ஆதரவு திரட்டினுர்கள் என்பதைச் சொன்ன தைக் கேட்டபோது கெளரிக்குப் பெருமூச்சு வராமலில்லை. அண்ணு போன்ற நேர்மையான இளைஞர்கள் பாடுபட்டு உருவாக்கிய இயக்கத்தால் பெயரும் செல்வாக்கும் அடையப் போவது சந்தர்ப்ப வாதிகளான ராசநாயகர் போன்ற பெரிய மனிதர்கள் என்ற உண்மையை அவளால் சகித்துக் கொள்ள முடியாதிருந்தது.
அடுத்த நாள் விடிந்தபோது ஒழுங்கையால் போகும் பாடசாலைப் பிள்ளையைப் பார்க்க ஏக்கம் வந்தது. ஊரில் கடந்த மாதம் ஏற்பட்ட கலவரத்தில் பாடசாலை மூடப்பட் டிருந்து இப்போதுதான் வகுப்புக்கள் ஆரம்பித்திருக் கிருர்கள். பொலிஸாரால் பிடிபட்டுப் போயிருந்த மாணவர்கள்(வளிசல் சுந்தரமூர்த்தி உட்பட இன்னும் சிலர்) பாடசாலைக்கு வந்திருந்ததாகத் தம்பிகள் சொன்னர்கள்.
ஒன்பதாம் வகுப்புக்காக அடுத்த ஊருக்குந் போகத் தொடங்கிய மாணவர்கள் இப்போது போவதை நிறுத்தி விட்டிருந்தார்கள்.

Page 71
f32 தில்லையாற்றங்கரை
தாங்கள் தெரிவு செய்த எம். பி. அரசாங்கத்தில் சேர்ந்ததைப் பாவித்து தங்களுக்கு உடனடியர்க பாடசாலையும் உயர்தர வகுப்பு வைக்க அனுமதியும் தேவை என்று கட்டாயப்படுத்தப் போவதாக மாமா அப்பாவிடம் சொன்னுர்,
ஊர் பெரிய மனிதர்கள் எல்லாரும் போய் எம்.பி யைப் பார்ப்பது என்று முடிவு செய்யப்பட்டது.
ராசநாயகம் வருவதானல் தான் வரமாட்டேன் என்று பெரியப்பா சொன்ன போது கெளரிக்குப் பெரியப்பாவிடம் கோபம் வந்தது.
சுய நலத்துக்கும் பெரிய மனிதத் தனத்துக்கும் அப்பாவிக் கிராம மக்களையும் மாணவர்களையும் பகடைக். காய் ஆக்குவதை வெறுத்தாள்.
எப்படியும் பெரியப்பாவை ராசநாயகத்தாருடன் சமாதானப் படுத்தப் பார்க்கச் சொல்லி மாமாவைக், கேட்டாள்.
DITLDT நேர்மையானவர். பெரியப்பா செய்த ஒன்றிரண்டு ஊழல்களை ஒளிவு மறைவின்றித் திட்டித் தீர்த்தார். அந்நியர்களின் நிவாரணப் பணத்தில் கை வைத்ததோ இல்லையோ என்று சண்டை பிடிக்கத் தேவை யில்ஜல. ஒரு வீட்டில் சாப்பிட்டுத் தஞ்சம் என்று கிடக்கிற பாலிப்போடிக் கிழவனின் நிவாரணப் பணத்தில் தில்லு முல்லும் செய்யப் பட்டிருப்பதைத் தான் பாலிப் போடிக் விழவன் மூலம் தெரிந்ததாகச் சொன்னபோது பெரியப் பாவை நினைத்துத் தாங்க முடியாத கோபம் வந்தது" கெளரிக்கு.
பாவம் பாலிப் போடிக் கிழவன் இரவோ பகலோ தெரியாமல் எப்போதும் அரைவெறியில், அரைகுறை உடுப் போடு தள்ளாடிக் கொண்டு கம்பி வேலிகளில் விழுந்து

ராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம் 183
கொண்டு திரியும் பெரியப்பாவை நம்பி கிழவன் தன் விண்ணப்ப பத்திரத்தைக் கொடுத்திருக்கலாம். பெரியப்பா இவ்வளவு கீழ்த்தரமானவரா?
பணத்துக்காக மனிதர்கள் தங்கள் மனச் சாட்சியை யும் கொலை செய்வார்களா? கெளரிக்குக் தன்னைச் சுற்றிய உலகமும் அதன் வேறுபாடுகளும் எதிர்காலத்தைப் பற்றிய பயத்தை இப்போதே கொடுத்தது.
புது வருடம் நெருங்கிக் கொண்டிருந்தது. வெள்ள அழிவால் அறுவடை இல்லாவிட்டாலும் நிவாரணத்தில் வந்த பணம் கிராமத்தார் கையில் புழங்கிக்கொண்டிருந்தது. புது வருடத்துக்கு வாங்க வேண்டிய உடுப்புகள்,சாமான்கள் வாங்க கிராமத்தார் மட்டக்களப்புக்கும் கல்முனைக்கும் போய் வந்து கொண்டிருந்தனர்.
கெளரி வீட்டில் அப்பா அம்மா அதிகம் அக்கறை காட்ட வில்லை. தெய்வக் கிழவியின் செத்த வீடு முடியும் வரையும் இவர்கள் ஒரு கொண்டாட்டமும் வைக்க முடியாதது ஒரு காரணம். அத்துடன் அம்மா கொஞ்ச காலமாய் ஒரே சுகமில்லாமல் இருந்தாள். வயிற்றில் ஐந்துமாதம் அத்துடன் அடிக்கடி தொய்வு வந்து கொண்டிருந்தது.
செத்த வீடு முடியும் வரை கெளரி பாடசாலைக்குப் போக முடியாது. பாடசாலைக்குப் போவதானுல் அடுத்த ஊருக்குத்தான் போக வேண்டும். வீட்டில் அனுமதி கிடைக் குமோ தெரியாது.
மாணிக்கவாசகம் கொழும்புக்குப் போய் விட்டதாகப் பெருமையுடன் சொன்னுள் சாரதா, அடிக்கடி ஊருக்கு வர, மாட்டார் என்றும் ஆனல் அவனின் சினேகிதன் சுந்தர மூர்த்திக்கு எழுதித் தரம் விசாரிப்பதாகவும் சொன்னதாகச் சொன்னுள் சாரதா.
சாரதாவுக்குத் தன் காதலைத் தவிர உலகத்தில் ஒரு பிரச்சினையுமில்லையா? சாரதாவின் தகப்பன் ராசநாயகத்

Page 72
34 தில்லையாற்றங்கரை
தாருடன் போட்டிக்குப் போய் அதனல் ஊரேமறைமுகமாக இரண்டு படுவது இவளுக்குத் தெரியாதா?
சித்திரை வருடப் பிறப்பிற்கு விடுதலை விட்டார்கள். பெரிய மரங்களில் ஊஞ்சல் போட்டும், விதவிதமான பலகாரங்கள் செய்தும் புது வருஷத்தை வரவேற்க ஊர் தயாரானது. ஆனல் தாயின் சுகவீனம் காரணம்ாக வீட்டில் பெரிதாக ஒரு ஆரவாரம் ஒன்றுமில்லை. போதாக். குறைக்கு வருஷப் பிறப்பிற்கு மூன்று நாட்களுக்கு முந்தி கெளரி பெரிய பிள்ளையானள். −
புழுங்கும் வெயிலில் வீட்டுக்குள்ளேயே அடைபட வேண்டிக் கிடந்தது. சாரதாவுக்கு நடந்த அமர்க்களமான கொண்டாட்டம் ஒன்றும் கெளரிக்கு நடக்கவில்லை. அம்மா வுக்கு அதிகம் சுகமில்லை. ஊருக்குச் சொல்லி முதற் தண்ணி வார்க்கப்பட்டது.
யார் பாளை வெட்டினர்கள் என்றுகூட அறிய கெளரி அக்கறைப்படவில்லை. ஆனல் ஆச்சி மட்டும் தாயிடம் ஏதோ ராசநாயகத்தார் குடும்பத்தைப் பற்றி முணுமுணுப் பதைக் கெளரி கேட்டாள்.
வருஷப் பிறப்பின் பின் கெளரியின் சாமர்த்திய பலன் கேட்க ஆச்சி வேதநாயகம் குருக்களிடம் போய் முகத்தில் எள்ளும் கொள்ளும் வெடிக்க வந்து சேர்ந்தாள். பலன் எல்லாம் பரவாயில்லையாம். சித்திரை மாதத்தில் பெண்கள் பிறப்பதும் புத்தியறிவதும் நல்ல பலனும். ஆனல் ஆச்சியின் கோபம் என்னவென்ருல் கெளரிக்கு அயலூர் மாப்பிள்ளை தான் வரும் என்று வேதநாயகம் குருக்கள் சொல்லி விட்டாராம்.
ஆச்சியின் வாழ்க்கையில் எதுவும் சாத்திர தோத்திரம் பார்க்காமல், சகுன தோஷம் பார்க்காமல், முழுவிசரம் பார்க்காமல் இதுவரை நடந்ததில்லை. ஆச்சியின் மனதைக் குடையும். எந்தக் காரியமும் வேதநாயகம் குருக்களிடம்

vir@gsioaufi பாலசுப்பிரமணியம் 135
வெற்றிலை வைத்துப் பலன் கேட்டதுடன் குறையும். வேத நாயகம் குருக்களின் வார்த்தை வேதவாக்கு. ஆனல் இப்போது ஆச்சியின் முகத்தில் வெடிக்கும் கோபத்தைப் பார்க்கக் கெளரிக்கே சிரிப்பு வந்தது.
செல்வராசாவைக் கேட்டுப் பார்க்க வேண்டும் என் றெல்லாம் கெளரிக்கு முன்னுல் கூடக் கதைத்திருக்கிருள். இப்போது குருக்கள் செல்வராசாவைப் பற்றி ஒரு பலனும் சொல்லாமல் அயலூர் மாப்பிள்ளை என்று சொன்ன போது ஆச்சியால் தாங்க முடியவில்லைபோலும்.
சாரதா கேள்விப்பட்டிருக்க வேண்டும். 'நீ சொல்றபடி வாத்தியாரம்மா ஆஞல் வெளியிலதானே கல்யாணம் வரும், பரமேஸ்வரி ரீச்சரைப்பார். அவ யாழ்பாணம், வாத்தியார் கல்முனை. வேலை செய்யப் போற பொம்புளைகள் பெரும் பாலும் வெளியிலதான் முடிக்கிறவ" சாரதாமீது கெளரிக்கு எரிச்சல் வந்தது. ‘என்ன விசர்க்கதை கொம்மா என்ன வேலை செய்யப் போகேக்கயா பெரியப்பாவைக் கண்டா? மாமாவும் பரிமளம் மாமியும் என்ன வேலையிலயா கண்டவ? கல்யாணம் முடிச்சவ' கெளரியின் கேள்விகளுக்குச் சாரதாவால் பதில் சொல்ல முடியவில்லை. நல்லகாலம் சாரதாவுக்குப் பத்மநாதன் ஞாபகம் வரவில்லை. **இந்த ஊரில சும்மா சண்டையும் சச்சரவும் எங்கயும் தொலஞ்சு போன நல்லது" கெளரி சொன்னுள். எல்லாப் பெரிய மனிதர்களும் ஒன்றுபட்டு தங்களுக்கு ஒரு பாடசாலை கட்ட முயற்சிக்காதது அவளுக்கு ஆத்திரமாக இருந்தது. பள்ளிக் கூடம் இருந்தாலும் என்ன? இன்னும் மூன்று மாதங்களுக்கு பாடசாலைக்குப் போக ஆச்சி விடமாட்டாள். அதன் பிறகு அம்மாவுக்குக் குழந்தை பிறக்கலாம். ஆச்சி அதுதான் சாட்டு என்று ஒரேயடியாக நிற்பாட்டி வைக்கலாம்.
எதிர்காலத்தை நினைக்க அழுகையாய்வந்தது கெளரிக்கு, ஏன் குழந்தைகளாய் இருக்கக் கூடாது? எதிர்காலத்தைப்

Page 73
136 தில்லையாற்றங்கரை
பற்றி இனிய கனவுகள் நல்லதுதான். ஆனல் எதிர்ப்படும் அனுபவங்கள்தான் சகிக்க முடியாதவையாயிருக்கின்றன.
மரகதமும் சாரதாவும் கெளரியும் இனிக் குழந்தைகள் இல்லை. மாமியின் சேலையை உடுத்துக் கொண்டு தட்டு வேலிக்குப் பின்னல் நின்று நடனம் செய்து ரசிக்க முடியாது. மார்பு பெரிதாக இருக்க மேற் சட்டைக்குள் மாங்காயோ கொய்யாக்காயோ வைத்துப் பார்த்துச் சிரிக்கத் தேவை யில்லை.
நேத்துச் சிரித்துப் பழகியவர்களிடம் இனிச் சிரித்துப் பழகமுடியாது. நேத்துச் சிரித்த விடயங்களுக்கு இனிச் சிரிக்கவும் முடியாது. ஏன் குழந்தைகளாகவே இருக்க
முடியாது? . .
கெளரியைப் பார்க்க மரகதம் வந்திருந்தாள். மரகதத் தின் வீடு ராசநாயகம் வீட்டுக்குப் பக்கத்தில். ராசநாயகம் மனைவி மரகதத்தில் நல்ல விருப்பம். மரகதம் வாய் திறந்து கதைக்கும் உறவுகளில் செல்வராசியின் தாயும் ஒருத்தி என்று கெளரிக்குத் தெரியும்.
*உனக்குச் சாமர்த்தியக் கல்யாணம் செய்யப் போகினமாம் செல்வராசா வீட்டார்' மரகதம் வழக்கத் துக்கு மாருக கிளுகிளுப்புடன் சொன்னுள். மரகதத்துக்குச் சில விடயங்களுக்குச் சந்தோசப்படத் தெரியும் என்பதே மறந்து போயிருந்தது கெளரிக்கு, செல்வராசா பற்றி பரிமளம் மாமியும் மாமாவும் ஏதோ கதைத்திருக்கிருர்கள் வீட்டில் அதுதான் மரகதத்தின் முக த் தி ல் ஒரு கிளுகிளுப்பொ?
W *சொந்தக்காரர் யாராயிருந்தாலும் சாமர்த்தியச் சடங்கு செய்வினம்தானே அதுக்கு ஏன் இளிக்கிருய்" கெளரி வெடுக்கென்று கேட்டது மரகதத்தை முகம் வாடச் செய்திருக்க வேண்டும். தலைசாயத் தாழ்த்திக் கொண்டாள். மரகதத்தைப் பார்க்கப் பரிதாபமாக இருந்தது. தன்னையே கடிந்து கொண்டாள் கெளரி. மரகதம் பாவம்.

ராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம் 37
**பகிடிக்குச் சொன்னேனப்பா மரகதம், கோபிக்காத. பெரியப்பாவும் ராசநாயகமும் போட்டி போட்டு எங்களுக் குப் பள்ளிக் கூடம் வராது போல கிடக்கு" "கெளரி அலுத்துக் கொண்டாள். **வசந்தா இனிப் பள்ளிக்குப் போக மாட்டா 4ளாம்" மரகதம் திடீரென்று ஞாபகம் வந்ததுபோல் சொன்னள். மரகத்தின் வீட்டுக்குப் பக்கத்திலிருக்கும் இன்னெரு சொந்தக்காரரின் மகள் வசந்தா பட்டணத்தில் படிப்பவள். இனிப் போக மாட்டாளாம். ஏஞம்?
கெளரி கேள்விக் குறியுடன் மரகத்தைப் பார்த்தாள். **வசந்தாவுக்குக் கல்யாணம் பேசிவினமோ" தயக்கத்துடன் கேட்டாள் கெளரி. சாரதாவிடம் எதையும் சட்டுப் புட்டென்று கதைக்கலாம். இப்போதெல்லாம் சண்டையும் பிடிக்கலாம்.
ஆனல் மரகதத்துடன் கவனமாகக் கதைக்க வேண்டும். ஏனென்ருல் தாங்கள் யோசிப்பது போலத்தான் மரகதமும் மற்றவர்களைப் பற்றியும் மற்ற விடயங்களைப் பற்றியும் யோசிக்கிருளோ என்பது எப்போதும் கெளரிக்குச் சந்தேகம்,
மரகதம் வழக்கம் போல் தயக்கத்துடன் அக்கம் பக்கம் பார்த்தாள். ஏதோ சொல்ல முயற்சிப்பது முகத்தில் தெரிந்தது.
ஏதும் ரகசியமோ?
**வசந்தா ஆரோ பொடியனுக்குக் காதல் கடிதம் எழுதினவவாம்' மரகதத்தின் முகம் இதைச் சொன்ன போது மிகமிகக் கவனமாய்க் கிடந்தது. பயந்தமாதிரியான
பாவம்.
ஏதோ யாரையோ யாரோ கொலை செய்ததை ரகசிய மாய்ச் சொல்வது போன்ற முகபாவம். ஆனலும் அவர்களைப் பொறுத்த வரையில் காதல் கடிதம் எழுதுவதே மனதாலும் நினைக்க முடியாது.

Page 74
138 தில்லையாற்றங்கரை
இவர்கள் மூவரும் ஒரு சில வருடங்களுக்கு முன் பேணு நண்பர் ஒருத்தருக்குக் கடிதம் எழுதிப் பட்ட அனுபவம்: கெளரியால் எப்போதும் மறக்க முடியாதது.
அதற்கும் சாரதா தான் மூலகாரணம்.
தினகரன் பத்திரிகையில் பேணு நண்பர் பகுதியிலிருந்த ஒரு கொழும்பு விலாசத்திற்கு இவர்கள் கடிதம் எழுதி ஞர்கள். **வெஸ்லி" என்ற பெயர் ஆண் பெயரோ பெண் பெயரோ என்று கூடத் தெரிந்து கொள்ளாத முட்டாள்கள். *அன்புள்ள வெஸ்லிக்கு" என்று தொடங்கி இவர்கள் மூவரும் தங்கள் ஊரைப்பற்றியும் ஊரைச் சுற்றியுள்ள பெரிய ஆறு, வயல்வெளிகள் பற்றியும் மேற்கில் தெரியும் மலைத் தொடர்கள் பற்றியும் எழுதுவார்கள். w
**வெஸ்லி"யின் கடிதம் கொழும்பு பற்றி இருக்கும். இவர்கள் அந்தக் கடிதத்தைக் காட்டிச் காட்டி பள்ளிக் கூடம் முழுதும் பெருமையடித்துக் கொள்வார்கள். கொழும்பில் தங்களுக்குப் பேணு நண்பி இருப்பதாகப் புழுகிக் கொள்வார்கள். ஆனல் அந்தப் பெருமையும் புழுக்கமும் ஆறு மாதம் கூட நீடிக்கவில்லை.
அன்று சனிக்கிழமை என்று கெளரிக்கு ஞாபகம். ஏனென்ருல் ஊரில் யாரோ மான் இறைச்சி விற்க அப்பா வாங்கிக் கொண்டு வந்ததாக நினைவு.
அம்மா இறைச்சிக் கறிக்குப் போட கறிவேப்பிலை வாங்கிக் கொண்டு வரச் சொல்லி கெளரியிடம் சொன்னுள். பெரியப்பா வீடு தாண்டித்தான் கடை. இவள் பெரியப்பா" வீட்டுப்பக்கம் போகும் போது பெரியப்பா தலையில் அரப்பு' வைத்துப் புரட்டிக் கொண்டு இடுப்பில் கோவணத்துடன்” மாமரத்துக்குக் கீழ் நின்று உடம்பில் நல்லெண்ணெய் புரட்டிக் கொண்டிருந்தார். பெரியப்பாவுக்கு அப்போது கொண்டையிருந்தது. பெண்கள் மாதிரி நீண்ட தலைமயிர். தலைமயிரை விரித்து விட்டு அரப்பு பூசி, காதில் பெரிய

ராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம் 139
கடுகன்கள் ஆடியபடி அரை குறை உடுப்பான கோவணத்துட னும் உடம்பில் வெளிச்சத்துக்குப் பளபளக்கும் நல்லெண்ணெய் பூச்சுடன் பெரியப்பா முழுக்குப் போட ஆயத்தம் செய்யும் போது விசித்திரமான சத்தத்துடன் ஒரு காரின் ஒலி ரோட்டில் கேட்டது. அதைத் தொடந்து ஊர்ப் பிள்ளைகளின் ஆரவாரமான ஒலிகள்வேறு. ஏதோ ஊர்வலம் வருமாற் போன்ற பிரமிப்பு. கெளரி பெரியப்பா “வீட்டு *கேட்டைத் தாண்ட ரோட்டில் வந்த காரும் நிற்க காரிலி ருந்து எடுப்பான தோற்றத்துடன் இரண்டு இளைஞர்கள் இறங்கி வந்தார்கள். காருக்குப் பக்கத்தில் நின்ற பையன்க. ளிடம் **சாரதா மயிலும் போடி, மரகதம் காசுபதி, கெளரி புண்ணிய மூர்த்தி' என்ற பெயர்களைச் சொல்வது கேட்டது. கெளரிக்கு ஒரு இளவும் விளங்கவில்லை என்றலும் தன் பெயர் கேட்ட மாத்திரத்தில் “கேட்டுக்' குப்பின்னல் தட்டுவேலிக்குள்ளாக மறைந்து விட்டாள்.
இறங்கி வந்தவர்கள் பெரியப்பாவின் தோற்றத்தைக் கண்டு பிரமித்தது வேலி இடுக்கால் அவர்களைப் பார்த் திருந்த கெளரிக்குத் தெரிந்தது.
**என்ன வேணும்? நீங்கள் ஆர் ஐயாமார்களே' என்று பெரியப்பா கேட்டார். பெரியப்பா பெரிய போடியார்தான். ஆனலும் யாரும் காற்சட்டை போட்டவர்களைக் கண்டால் மரியாதையாக 'ஐயா" போடுவார். வந்த இளைஞர்கள் தாங்கள் கொழும்பைச் சேர்ந்தவர்கள் என்றும் இந்தஊர் தாண்டி பொத்துவிலுக்குப் போய்க் கொண்டிருப்பதாகவும் இந்த ஊரில் தங்களின் பேணு நண்பிகளைச் சந்தித்துவிட்டுப் போக வந்ததாகவும் சொன்னர்கள்.
பெரியப்பாவின் முகத்தில் ஒன்றும் விளங்காத குழப்பம். வேலி இடுக்கால் பார்த்துக் கொண்டிருந்த கெளரிக்குப் பயத்தில் வயிற்றைக் கலக்கிக் கொண்டு வந்தது.
உலகத்துத் தெய்வத்தை எல்லாம் உடனடிப் பாதுகாப் புக்காக வேண்டிக் கொண்டாள். அவள் பேன

Page 75
"40 தில்லையாற்றங்கரை
*நண்பர்களை" எதிர்பார்க்கவேயில்லை. இப்படியான இக்கட்டுக்குக் காரணமான சாரதாவை கொலை செய்ய வேண்டும் என்று கோபம் வந்தது.
வந்திருந்தவர்கள் பெரியப்பரின் திருக்கோல தரிசனத் தில் திடுக்கிட்டுப்போய் மெய்மறந்து நிற்பது அவர்களின் முகங்களில் தெரிந்தது.
நல்ல காலம் அண்ணு ஊரில் நின்றது. இவர்களின் *சம்பாஷணை கேட்டு வெளியே வந்து என்ன விசயம் என்று கேட்டான். அதே நேரம் சாரதாவும் தன் இரண்டு பின்னல்களை ஆட்டியபடி எட்டிப் பார்த்தாள். சின்னப் பெட்டை என்ருலும் சாரதாவின் எடுப்பான தோற்றம் இவர்களை இன்னுெருதரம் திரும்பிப் பார்க்கப் பண்ணிய தைக் கெளரி இன்னும் தட்டு வேலி ஒட்டைக்குள்ளால் பார்த்துக் கொண்டு நின்ருள்.
வந்தவர்கள் விசயத்தைச் சொல்ல அண்ணு சிரித்தபடி சொன்னன் 'சின்னப் பெட்டைகளின் விளையாட்டுத்தனம்" என்று. வந்தவர்கள் பெரியப்பா கோவணத்துடன் வெட்டிக் கொடுத்த இளநீரைக் குடித்து விட்டுப் போனர்கள்.
இந்த மூன்று பெண்களும் ஆச்சியிடம் தும்புத்தடியடி வாங்கித் தொலைத்தது இன்னும் உடம்பில் நோகிறது. அதன்பின் கொழும்பு பேணு நண்பர் இவர்களுக்கு ஒரு
வரியும் எழுதவில்லை.
யாருக்கும் எழுதுவது என்பது சிம்ம சொப்பனமான விடயமாகிவிட்டது. தினகரன், வீரகேசரி பத்திரிகையிலோ இலங்கை வானெலியிலோ பேணு நண்பர்கள் என்ற சொல் லைப் பார்த்தாலும் கேட்டாலும் ஆச்சியின் தும்புத்தடிதான் ஞாபகம் வரும்.
பேணு நண்பர்களாக இருப்பதற்கென்றே ஆச்சிகள் இல்லாத பிறப்புகள் உலகத்தில் எங்கேயோ ஒரு மூலையில்

yr Ggsionif urosusyubsoflub 141
இருப்பதாகக் கற்பனை செய்வாள் கெளரி. இப்போது மரகதமும் தங்கள் ஊரைச் சேர்ந்த பெண் ஒருத்தி பட்டினத் தில் யாரோ ஒருத்தனுக்குக் கடிதம் எழுதிக் கலாட்டாவுக் குள் ஆளாகியதைக் கேட்கத் திகைப்பாக இருந்தது.
வசந்தா படிப்பில் பெரிய கெட்டிக்காரி இல்லை என்று: கேள்வி. கல்யாணம் ஏதும் சரிவரும் வரை "போர்டிங்கில்' இருந்து படிக்கட்டும் என்று விட்டதாகத்தான் ஊரில் கதை. இப்போது வசந்தாவின் கதை மரகதத்துக்கும் தெரியு மளவுக்கு அம்பலமானது கெளரிக்கு ஆச்சரியமே.
ராசநாயகத்தார் குடும்பம் ஏழு பெட்டிப் பலகார வகையும் இன்னும் எத்தனையோ சாமான்களும் புடவை, சட்டை பரிசுப் பொருட்களுமாகக் கொண்டு வந்ததைக் கண்டு ஆச்சி பூரித்துப் போனள். சாமர்த்தியக் கல்யாணத் தின் போது ராசநாயகத்தார் வீட்டுப் பெண்களில் ஒரு கிழவி ஆண் மாதிரி உடுத்துக் கொண்டு வந்திருந்து பெண் கேட்பது போல பாவனை செய்ய கெளரி வீட்டுப் பக்கத்துக் காக ஆச்சி முறைப் பெண்போல நடித்து மாப்பிள்ளை"க் கிழவியை எத்தனையோ கேள்விகள் கேட்டதாக சாமர்த்தியக் கல்யாணத்தைப் பார்த்த சாரதா சொன்னுள். இருபக்க. பெண்களும் சங்கூதி, குரவையிட்டு, மஞ்சள் எறிந்து, பலகாரப் பெட்டி பறித்து விளையாடி சாமர்த்தியக் கல்யாணம் செய்த வழிமுறைச் சடங்கை விருந்தையில் நின்றபடி கெளரியாலும் ரசிக்க முடிந்தது. இனி ஊரெல் லாம் கதைக்கப் போகிருர்கள். செல்வராசா வீட்டார் மறை முகமாக சாமர்த்தியக் கல்யாணத்தின் மூலம் பெண் கேட்டு வந்த கதை ஆச்சிக்குத்தான் மனதுக்குள் வேதநாயகம் குருக்களின் சாத்திரப் பலனை நினைத்துத் துக்கமாக இருக்கப் போகிறது,
அன்று பெரியம்மாவோ பெரியப்பாவோ கெளரி வீட்டுப் பக்கம் எட்டிப் பார்க்கவில்லை. அண்ணுவும் சாரதா வும் வந்திருந்தார்கள். *என்னைப் பத்தி ஊரெல்லாம்:

Page 76
142 தில்லையாற்றங்கரை
கேவலமாகச் சொல்லுற ஆக்களோட என்ர தம்பி குடும்பம் கொண்டாட்டம் வைக்கிறதோ"" என்று பெரியப்பா துள்ளிக் கொண்டிருப்பதாக சாரதா சொன்னுள்.
இவரோட கோபமான ஆக்கள் எல்லாரோடயும் நாங் களும் கோவிக்க வேணுமோ ஆச்சி பதிலுக்குத் துள்ளிக் கொண்டிருந்தாள்.
மாப்பிள்ளை தர ப் போ யி ன மோ இல்லையோ ராசநாயகம் ஆக்களும் சும்மா தங்களுக்குத்தான் சாமர்த்தியக் கல்யாணம் இப்படி அமர்க்களமாய்ச் செய்தவ' பரிமளம் மாமி இப்படிச் சொன்னதைத்தான் கெளரி நம்பினுள்.
பெரியப்பாவின் எதிரியான ராசநாயகம் குடும்பத்துக் கும் தங்கள் குடும்பத்துக்கும் எந்த உறவு வந்தாலும் பெரியப்பா பொறுத்துக் கொண்டிருக்கப் போவதில்லை. தங்களுடன் கதைக்காமலேயே விடலாம். அண்ணுவும் சாரதாவும் கதைக்காமல் விடுவார்களா?
கெளரியின் இரண்டாம் தண்ணிர் வார்த்தபோது ராமநாதன் வாத்தியாரும் மனைவியும் வந்திருந்தார்கள். பரமேஸ்வரி ரீச்சரின் தகப்பனுக்குச் சுகமில்லை என்று கடந்த இரண்டொரு கிழமைகளாக யாழ்ப்பாணம் போயிருந் தார்கள். -
யாழ்ப்பாணத்திலிருந்து புழுக்கொடியலும் பனங்கட்டி பும் கொண்டு வந்திருந்தார்கள்.
வாத்தியார் குடும்பத்துடன் பத்மநாதனும் வந்திருந் தான். “பெரிய பிள்ளையாகி" ச் சேலையும் சட்டையும் போட்டு மஞ்சள் பூசிய முகத்துடன் இருந்த இவளின் புதுத் தோற்றம் முசுப்பாத்தியாக இருந்திருக்க வேண்டும். பத்மநாதன் ஏற இறங்கப் பார்த்தான். கெளரிக்கு வெட்க மாக இருந்தது. சாரதாவின் வீட்டில் மஞ்சள் எறிந்தது

ராஜேஸ்வரி பாலசுபிப்ரமணியம் 143
ஞாபகம் வந்தது. அப்போது யாரோ முன்பின் தெரியாத அந்நியன் இப்போது இவர்கள் வீட்டுக்கு அண்ணுவுடன் சேர்ந்து அடிக்கடி வருகிருன்.
வாத்தியார் மாமாவுடன் சிங்கள **சிறி" விசயம் பற்றிக் கதைத்துக் கொண்டிருந்தார்.
கொழும்பில் தங்கள் கார்களில் சிங்கள பூரீ போட்ட தமிழ்த் தலைவர்கள் யாழ்ப்பாணத்தில் ஆங்கிலத்தில் இன்னும் தங்கள் கார் நம்பர் எழுத்துக்களைப் போட்டுக் கொண்டு தாங்கள் அரசாங்கத்தை எதிர்ப்பது போல் தமிழ் மக்களைப் பேய்க்காட்டுவதாக வாத்தியார் சொன்னர். ஏன் இவர்கள் கொழும்பில் ஒரு மாதிரியும் தமிழ்ப் பகுதிகளில் ஒரு மாதிரியும் நடிக்கிருர்கள் என்று கேட்டார் வாத்தியார்.
**என்ன மாஸ்டர் 56ம் ஆண்டு ஆனி மாதம் ஐந்தாம் திகதி செல்வநாயக மாக்கள் காலிமுகக் கடற்கரையில் தாங்கள் அரசாங்கத்தின் சிங்களம் மட்டும் சட்டத்தை, எதிர்த்து சத்தியாக்கிரகம் செய்யவில்லையா? அதனல் அவர்கள சிங்களக் காடையர்களால் என்ன மாதிரி அடிச்சான்கள் எண்டு தெரியும்தானே' என்று மாமா கேட்டார். "அரசாங்கத்தோட எல்லாச் சிங்கள ஆட் களுமோ எல்லாச் சிங்கள கட்சிகளுமோ சேர்ந்திருக்கிறது எண்டு நினையாதேயுங்கோ. அரசாங்கத்தை எதிர்க்கிற ஆட்களோட நாங்களும் சேருவம் எண்ட யோசனை தமிழ்த் தலைவர்களுக்கு ஒரு நாளும் இல்ல. தாங்கள் எப்பவும் மற்றவய விடப் பெரிசு எண்ட நினைவு மட்டுமில்ல. இந்தத் தமிழ்த் தலைவர்கள் எல்லாம் சாதாரண ஆக்கள மாதிரி யோசிச்சுப் பழகத் தெரியாம தாங்கள் பிறந்து வளர்ந்த சூழ்நிலையோட யோசிச்சுப் பழகினவ. ஏழை எளிய சனங் களைப்பத்திய பிரச்சினைகளில் அக்கறையுள்ள ஆக்கள் எண்டா 49ம் ஆண்டு இந்திய வம்சாவழி தோட்டத் தொழி லாளர்கள் வாக்குரிமை பறிபோக காரணமாக இருந்திருக்க

Page 77
144 தில்லையாற்றங்கரை
மாட்டினம்" வாத்தியார் வழக்கம்போல தன் ஆணித்தர மான குரலில் கூறிஞர்.
மோஸ்டர் தமிழரசுக் கட்சி உண்டாகினதே அந்த மாதிரிப் பிரச்சினைகளில் இருந்துதானே. அதப்பத்தி என்ன கதை ஏழாம் வகுப்புப் படிச்ச டி. எஸ். சேனநாயக்கா எங்கட தமிழ் ஆக்களின் பொன் மூளைகளில மண்ணை அள்ளிப் போடுர திட்டம் எல்லாம் போட்டுத்தானே இந்த குடியேற்றத் திட்டம் எல்லாம் உண்டாக்கினவன்?" மாமா வாத்தியாருக்கு விட்டுக் கொடுக்காமல் சொன்னர். வாத்தியார் கம்யூனிஸ்ட்காரர் என்று பத்மநாதன் சொன்னது கெளரிக்கு ஞாபகம் வந்ததது.
கல்கிப் பத்திரிகையில் கம்யூனிஸ்ட்காரர்களைப்பற்றிப் பயங்கரமான செய்திகள் நிறையப் படித்திருக்கிருள். சீனக் காரர்களும்; ருஷ்யாக்காரர்களும் கம்யூனிஸ்ட்காரர்கள் என்றும் அவர்கள் சமயத்துக்கும் பழைய கொள்கை கட்டுப் பாடுகள் என்பனவற்றுக்கும் எதிர்மாருனவர்கள் என்பது மான ஒன்றிரண்டு கட்டுரைகளையும் வாசித்திருக்கிருள். ஆனல் மாஸ்டர் கம்யூனிஸ்டுகாரர் என்ருல் அவர் ஒன்றும் கெளரிக்குப் பயங்கரமான மனிதனுகத் தெரியவில்லை. ஆணுல் மாமாவுடனும் அப்பாவுடனும் மொழிப்பிரச்சினை யில் சண்டை பிடிப்பதுதான் அவளுக்கு விளங்கவில்லை.
ஒரு நாளைக்கு அதுபற்றி வாத்தியாரிடமே கேட்க வேண்டுமென்று முடிவு கட்டினுள். மாஸ்டருடன் கதைக்க அவளுக்கு விருப்பமாயிருந்தது. ஆச்சி பேய்க்கதையும் ஊர்க்கதையும் சுவாரசியமாக சொல்வதுபோல் வாத்தியார் அரசியல் கதைகளையும் சுவாரசியமாக சொல்வது அவளுக் குப் பிடித்திருக்கிறது. கெளரிக்குக் கதைகள் என்றல் நிறையப் பிடிக்கும். யாரும் கதை சொல்வதென்ருல் சின்ன வயது முதல் பெரிய விருப்பம். ஆச்சியுடன் இப்போது பள்ளிக்கூடம் போகும் விடயமாகச் சண்டை பிடித்தாலும் சின்ன வயதில் ஆச்சியிடம் கதை கேட்காமல் நித்திரை

ராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம் 145
யானது அருமை. இப்போதெல்லாம் யாருக்கும் யாரும் கதை சொல்ல இந்த வீட்டில் நேரமிருப்பதாகத் தெரிய வில்லை. ரேடியோவில் வர்த்தக சேவையில்தான் இசையும் கதையும் என்ற பெயரில் காதல் கதை எல்லாம் சொல் கிருர்கள்.
ஆனல் அப்பா கல்கியும் குமுதமும் கலைமகளும் ஆனந்தவிகடனும் வாங்கிக் கொண்டு வருவார்.
தொடர்கதைகள் கெளரிக்குப் பிடிக்கும். ஆனல் அப்பா எப்போதும் ராஜாஜி எழுதிய விட்யங்களைக் கல்கியில் வாசிக்கச் சொல்வார். ராஜாஜி எழுதும் விதமும் சில வேளை விசயங்களும் கெளரிக்குச் சரியாக விளங்காது. அண்ணுவைக் கேட்பாள் அவன் ஊரிலிருந்தால்,
அண்ணு கெளரிக்கு அலை ஒசைப் புத்தகம் வாங்கிக் கொடுத்தான். பெரிய தடித்த புத்தகம் பெரிய பிள்ளையாகி மூன்று மாதம் பெரும்பாலும் வெளியே போக முடியாது. புத்தகம் வாசிப்பது மிகப் பிடித்த காரியம். சாரதா நிறைய் திரைக்கதை வசனப் புத்தகம் வாங்கி வைத்திருக்கிருள். பெரியப்பா வீட்டில் ரேடியோவும் கிராமபோன் பெட்டியு மிருக்கின்றன.
ஒரு காலத்தில் கிராமபோனில் ரெக்கோட் போட்டுக் கேட்டது பெரிய சந்தோஷம். இப்போதெல்லாம் ரேடியோ வர்த்தக ஒலிபரப்பில் பின்னேரம் மூன்று மணியிலிருந்து சினிமாப் பாட்டுக் கேட்கலாம். சாரதா திரைக் கத்ை வசனப் புத்தகங்களை வாசித்து ரேடியோவில் பாடல்களைப் பாடமாக்கி சினிமா நடித்துக் காட்டுவாள். மரகதம் வீட்டில் எப்போதும் வேலையாயிருக்கிருள். பரிமளம் மாமி பின் வீட்டுக்கு முன்னுல் இருந்த பாழ்வளவை வாங்கி மாமிசி மரக்கறித் தோட்டம் போட்டிருக்கிருள். மரகதம் விடிந்தால் பொழுதுபட்டால் கொச்சிக் கன்றுகளுக்கும் கித்தரிக் கன்று: களுக்கும் தண்ணீர் ஊற்றுவதுதான் வேலை.
10 سه زیر

Page 78
2
சித்திரை மாதம் முடியும் தறுவாயில் பாடசாலை தொடங்கியது. அப்பா, மாமா, அண்ணு, செல்வராசா மற்றும் வேறு இளைஞர்களும் எம்.பியைப் பார்க்கப் போயிருந் தார்கள் புதுக் கட்டிட விடயமாக.
பெரியப்பாவுக்கு அது சரியான கோபம். தன்னை மதிக்காமல் தன் எதிரிகளுடன் சேர்ந்து கொண்டு எம்.பி 'யைப் பார்க்கபோனதாக அண்ணுவுக்கும் பேச்சு.
எம். பி. தமிழரசுக் கட்சியை விட்டு அரசாங்கத்தில் சேர்ந்தது தங்களுக்குக் கோபம் என்ருலும் ஊருக்கொரு பாடசாலை தேவை என்பதற்காக எம்.பி.யைக் காணப் போனதாக அண்ணு சொன்னன்.
பெரியப்பா கெளரி வீட்டுக்கு வந்து அப்பாவிடமும் ஒரு வாட்டம் துள்ளி விட்டுப் போனர். மாமாவிடம் நேரில் கதைத்தால் மாமா கட்டாயம் சூடாக ஏதும் கொடுத்திருப் பார். ஆனலும் மாமா பெரியப்பாவின் கண்களில் தட்ட வில்லையோ என்னவோ மாமா தப்பிக் கொண்டார்.
பாலிப் போடிக் கிழவனிடம் என்னவெல்லாம் சொல்லித் திட்டினரோ தெரியாது. ஒரு நாள் பின்னேரம் ரோட்டில் ராசநாயகத்தாரின் குரல் கேட்டது. பாலிப் போடி ராசநாயகத்தாருக்கு கோள் மூட்டியோ என்னவோ *பெரிய மனிஷன் வேஷத்தில் ஊரைக் கொள்ளையடிக்கும் மோசப் பேர்வழிகள்" என்ற ரீதியில் ஊர் பெயர் சொல் லாமல் ராசநாயகத்தார் பேசிக் கொண்டிருந்தார்.
ஊர் விஷயங்கள் எல்லாம் அம்பலத்துக்கு வருமிடம் கனகலிங்கம் மாமா கடையடிதான். உலக விசயங்களே ஊர் மக்களால் அலசப்படும் இடமும் அதுதான்.
கனகலிங்கம் மாமா கடையில் கிட்டத்தட்ட எல்லா விதமான வீட்டுப் பொருட்களும் கிடைக்கும். சாம்பிராணிக்

ராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம் 147
குச்சியிலிருந்து சாராயப் போத்தலும் (கள்ளமாகத்தான்) விற்பதாக ஊரில் கதை.
கடைக்கு முன்னுல் இரண்டு வாங்குகள். கடைக்கும் ரோட்டையும் தாண்டிப் பல தென்னம் குற்றிகள்.
ஊரில் காலநிலையை ஒட்டி இந்த வாங்குகள் நிறைந் திருக்கும் காலையில் பெரும்பாலும் கிழடு கட்டைகள் சேர்ந் திருந்து ஊர், உலக வம்புகள் கதைப்பதும் பேப்பர் பார்த்து விமர்சிப்பதும் விவரிப்பதுமாக இருப்பார்கள். மத்தியான வேளைகளில் பெரும்பாலும் பாடசாலை மாணவர்கள் பாட சாலை விட்டுப் போகும் வழியில் சேர்ந்து நின்று தங்கள் பிரச்சினைகளை பாடசாலை விடயங்களை ஆசிரியர் பற்றிய அலசல்களை நடத்துவார்கள்.
பின்னேரமோ அல்லது இரவிலோ பெரும்பாலும் வாலிபர்கள் கூட்டமிருக்கும். அடுத்த நகரத்தில் இருக்கும் படத்துக்குப் போவதற்காக வருபவர்கள் கனகலிங்கம் மாமா கடையில் ஒன்ருய்ச் சேர்ந்து ஒரு “டீ" குடித்துவிட்டுச் சைக்கிள்களில் போவார்கள்.
ஆனல் எப்போதும் இந்த நியதியில்தான் கடையடியில் கூடுவோர் கணிப்பு இருக்கும் என்றில்லை. சிலவேளை யாருமே கடைவாங்கில் குந்தியிருக்காத நேரமுண்டு. ஆனல் இப்போது வெள்ளை வேட்டியை மடித்துக் கட்டிக் கொண்டு சால்வையைத் தோளில் போட்டுக் கொண்டு ராசநாயகத் தார் பிரசங்கம் செய்வதைக் கடைக்கு வருவோர் போவோர் மட்டுமல்லாது சைக்கிளில், வண்டிகளில் வயல்களுக்குப் போகும் அயலூராரும் கேட்டு ரசித்துக் கொண்டு போய்க் கொண்டிருந்தார்கள்.
ஊரில் சண்டைகள் வெறும் பெண்களின் சண்டைகள் தான். கோழியிலோ, நாயிலோ, பொல்லாத பிள்ளைக்ள் என்ற வாரைங்களிலோ ஆரம்பித்து வீட்டுப் பெண்களால்

Page 79
148 − தில்லையாற்றங்கரை
வேலிக்கு மேலால் ராகமிழுத்துக் கிழவிகளால் வசை பாடப் பட்டு முடியும்.
கிழவிகள்தான் ஊரின் நடமாடும்சரித்திரப்புத்தகங்கள். சண்டைகள்தான் சரித்திரப் புத்தகம் புரட்டப்படும் பொது நேரம். யார் யார் குடும்பத்தில், என்னென்ன, எப்போது, யார் தலைமுறையில நடந்தது என்பது எல்லாம் இந்தக் கிழவிகள் சண்டைகள் போது ராக, தாள, பல்லவியுட்ன் சேர்ந்த கச்சேரிக்குச் சமமாய்ச் சபையேறி முடியும்.
பெரும்பாலான சண்டைகள் ஆண்கள் வீட்டில் இல்லாத நேரத்தில் நடப்பதால் ஆண்கள் தலையிடுவது மிகமிக அருமை. தற்செயலாக ஆண்களை ஆத்திரம் கொள்ளக் கூடிய ஏதும் இந்தச் சண்டைகளில் இழுக்கப் பட்டிருந்தால் ஆண்களின் வாய்த் தர்க்கம் பெரும்பாலும் கனகலிங்கம் மாமா கடையடிக்குத்தான் வரும்.
கடையடியைச் சுற்றியுள்ள வேலிகளில் பூவரசு, ஆமணக்கு, தண்ணிர்க் கம்பு போன்ற மரவகை அடர்ந்து வளர்ந்திருக்கும். வாய்த்தர்க்கம் எல்லை மீறிப் போய்ச் சிலர் கனகலிங்கம் கடை சோடாப் போத்தல்களைப் ஆயுத, மாகப் பாவிக்க வெளிக்கிடும் சந்தர்ப்பம் வந்தால் அடுத்த வினடி கனகலிங்கம் மாமா கிட்டத்தட்ட கடையைப் பூட்டி விடுவார். ஒரு பலகையைத் திறந்து வைத்து அந்த ஓட்டைக் குள்ளால் வியாபாரம் செய்வார். சண்டை அடிதடியாய் மாறி யாரும் இதுவரை எந்தவிதமான வெட்டுக் காயமோ குத்துக் காயமோ ஏற்பட்டு ஆஸ்பத்திரிக்குப் போகாத கிராமமது.
ஆக மிஞ்சி மிஞ்சிப் போஞல் வேலிகளிலுள்ள் மரக் கிளைகள் முறியும். **அடிப்பேனடா உதைப்பேனடா" " என்று இவர்கள் ஆரவாரிக்க முதலே வீட்டுக்காரப் பெண் களோ அல்லது வயதுபோன சொந்தக்காரர்களோ வந்து கூட்டிக்கொண்டு போய் விடுவார்கள்.

ராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம் 49
சண்டைகள் சாதாரண கிராமத்தார் மத்தியிற்தான் ஏற்படும். வசதியான போடிகளோ, காசுக்காரரோ இப்படி வாய்த்தர்க்கம் பண்ணுவதில்லை.
ஆச்சியின் கருத்துப்படி எவன் வாய் திறந்து சண்டை பிடிக்க மாட்டானே அவனை நம்பக் கூடாது. அவன்கள் தான் சூனியம் செய்வினை செய்து எதிரியைப் பழி வாங்கு யவன். ஊரில் எப்போதும் ஒரு செய்வினை சூனியக் கதை அடிபட்டுக் கொண்டேயிருக்கும். கிராமமே பேய் பிசாசு களுக்கும் செய்வினை சூனியத்துக்கும் பெயர் பெற்ற ஊர்.
ஏன் தங்கள் கிராமம் இந்த மூடநம்பிக்கைகளுக்குப் பெயர் போனது என்று கெளரிக்குத் தெரியாது. ஊரைச் சுற்றிப் பல காடுகளும் பற்றைகளும் இருப்பது காரணமா யிருக்கலாம் என்றுதான் நினைத்தாள்.
பெரியப்பாவின் குரலும் அவர் வீட்டிலிருந்து கேட்டது. ஒருகாலத்தில் காற்காசுக்கு மதிப்பில்லாத நாய்கள் எல்லாம் இப்ப கண்ட பாட்டுக்குக் கதைக்கிற அளவுக்கு வந்த எடுப்புத்தனத்தைப் பற்றிப் பாலிப்போடிக்குச் சொல்வது போல் சொல்லிக் கொண்டிருந்தார்.
ஆச்சி அம்மியடியிலிருந்து தேங்காய் அரைத்துக் கொண் டிருந்தாள். அம்மா மீன் வெட்டிக் கொண்டிருந்தாள். அண்ணு அப்போதுதான் குளிக்கத் தொடங்கியிருந்தான் இரண்டு திசைகளில் கேட்டுக் கொண்டிருந்த சத்தம் இப்போது ஒரேடியாக இரைந்து கேட்டது. பெரியப்பாவும் ரோட்டுக்குப் போயிருக்க வேண்டும்.
**இந்த இளவு பிடிச்ச மணிசருக்கு வேற வேல இல்லயோ' ஆச்சி அரைத்த தேங்காயை வைத்துவிட்டு ரோட்டுப் பக்கம் போனள். கெளரியும் தட்டுவேலிப் பக்கம் உரலை நிமிர்த்தி வைத்து ஏறி நின்று பார்த்தாள்.
ரோட்டில் ஒரே அமர்க்களம். கிட்டத்தட்ட ஊரிலுள்ள பெரியாட்கள் எல்லாம் ரோட்டில் நிறைந்து நின்றர்கள்.

Page 80
150 தில்லையாற்றங்கரை
கனகலிங்கம் மாமா கடைப் பலகைகளின் சத்தம் கட கட என்று கேட்டதிலிருந்து தெரிந்தது அவர் கடையைப் பூட்டு கிருர் என்று. V
என்ன நடந்தது என்று யாருக்கும் தெரியாது பெரியப்பாவைப் பாலிப்போடிக் கிழவன் இழுத்து வராத குறையாக தள்ளிக்கொண்டு வந்தது. ராசநாயகத்தாரின் குரல் உச்சஸ்தாயில் உரத்துக் கேட்டது. **ஊரைக்கொள்ளை யடிக்கிற காவாலிகள்" என்று அவர் கத்திக் கொண் டிருந்தார்.
ஆச்சி பெரியப்பாவைத் தொடர்ந்து போகாமல் ராசநாயகத்தாரை வீட்டுக்குப் போகச் சொல்லிக் கேட்டுக் கொண்டிருந்தாள். பூரணிப்பெட்டை ஓட்டமும் நடையு) மாக உடல் நடுங்க வந்தாள். பெரியப்பா ராசநாயகத் தாரைச் செருப்பால் அடித்து விட்டாராம்!
*உன்ன மட்டுமில்ல உன்ற குடும்பத்தையும் வேரோடு சாய்க்காமல் விட்டால் என்ற பேர் ராசநாயகமில்ல' ராசநாயகத்தார் வெறிபிடித்துக் கத்திக் கொண்டிருந்தார்
தகப்பன் அடிப்பட்டசேதி கேட்டு செல்வராசா வந்திருந் தான். அவனுக்குப் பின்னல் ஒரு பெரிய கூட்டம்.
**ஏன் அடிச்சுப் போட்டு ஒளிக்க வேணும். நேரடியாய் வந்து அடிபடலாமே" செல்வராசா தேவையில்லாமல் சண்டித்தனத்துடன் கூப்பிடுவதாகக் கெளரி ஆச்சிக்குச் சொன்னுள். ஆச்சி ராசநாயகத்தாரை வீட்டுக்கு அனுப்ப முடியாததால் சண்டை பெலக்கப் போகிறது என்ற பயத் தில் முகம் வெளிர வந்திருந்தாள். அண்ணு அவசரம் அவசர மாகத் தலையைத் துடைத்தபடி வேட்டி மாத்திக் கொண் டிருந்தான்.
*தம்பி நீ போகாதே மகனே" அம்மா அண்ணுவைக் கெஞ்சினுள். அண்ணு போனுல் அப்பா, மாமா எல்லோரும்

ராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம் 151.
ரோட்டுக்குப் போவார்கள். **செல்வராசா தன்னைப் போல இளந்தாரிகளோட சண்டைக்குப் போகாமல் ஏன் என்ர அப்பாவக் கூப்பிடவேணும்" அண்ணு முகத்தில் ஆத்திரம்,
*தம்பி இந்தக் கிழடுகளின் கிழட்டுச் சண்டையில இளந்தாரிகள் தலையிடக் கூடாது. நீங்கள் படிச்ச பிள்ளயஸ்' " அம்மா கெஞ்சினள். பெரியம்மா கம்பிவேலி யில் சேலை அகப்பட்டுக் கிழிவதையும் பொருட்படுத்தாமல் ககனிடம் ஓடிவந்தாள்.
" "மகனே கொப்பர் ராசநாயகத்துக்குச் செருப்பால அடிச்சது பிழை அந்தக் கோலத்தில செல்வராசா சண்டைக்குக் கூப்பிடுருன். அடிபட்ட நாய்கள் குலைக்கும் தானே. நீ ரோட்டுக்கு போகாத மகனே" தன்னைச் சுற்றி நிற்கும் தாய் சின்னம்மா, ஆச்சி, தங்கச்சி சாரதா ஒன்றுவிட்ட தங்கச்சி கெளரி எல்லோரையும் ஒரு தரம் திரும்பிப் பார்த்தான். எல்லோர் . கண்களிலும் பயம், கலக்கம் இவனைப் பார்த்துக் கெஞ்சல்.
*ஒம் அண்ண பெரியப்பாவிலதான் பிழை. தேவை யில்லாம கண்ட ஆக்களிட்ட எல்லாம் அவயப்பத்திச் சொல்லிக் கொண்டிருந்தவர்" கெளரி இப்படித் துணிவுடன் சொன்னது ஆச்சிக்கு ஒரு துளியும் பிடிக்கவில்லை என்று: அவள் முகம் போன போக்கிலிருந்து தெரிய வந்தது.
*என்ன எல்லாரும் சொந்தம் எண்டு ஒண்டாய் சேரப் போறியள் போல கிடக்கு நானும் என்ட பிள்ளையஞம்: தானே அயலூரார்' பெரியம்மாவின் குரல் அடைத்தது.
**பெரியம்மா ஏன் சும்மா தேவையில்லாமத் துக்கப் படுறியள். பெரியப்பா எத்தினை மாதமாய்க் கத்திக் கொண்டு திரியிருர், மற்றவர்க்கும் ஒரு அளவுக்குத்தானே பொறுமையிரிக்கும்" கெளரி பெரியம்மாவுடன் இப்படித் தர்க்கித்தது அம்மாவுக்குத் தர்ம சங்கடமாய் இருக்க வேண்டும்.

Page 81
152 தில்லையாற்றங்கரை
அவள் சைகை காட்டிக் கெளரியை வாயைப் பொத்தச் சொன்னுள்.
வாத்தியார் வந்து கொண்டிருந்தார். ராசநாயகத் தாருக்குச் செருப்படி விழுந்தது காட்டுத்தீ போல் பரவி எல்லாரையும் ரோட்டுக்கு வரப்பண்ணியிருந்தது.
*என்ன இஞ்ச போர் நடக்குதா' என்று கிண்டலாகக் கேட்டார். தெருக்கள் எல்லாம் சன நடமாட்டமாய் இருந்தது.
'தம்பி கதிரவேல் ஊர் இரண்டுபட்டால் கூத்தாடிக்குக் கொண்டாட்டம். நடந்த சண்டை போதும். கொஞ்சம் பொறுமையாய் இருப்பது நல்லது' என்றர்.
ராசநாயகமும் மற்றவர்களும் இன்னும் ரோட்டில் நின்று இரைந்து பேசிக்கொண்டிருந்தார்கள்.
பாலிப் போடிக் கிழவன் பெரியப்பரை இன்னெருதரம் சண்டைக்குப் போகாமல் பார்த்துக் கொண்டிருந்தது.
அன்று முழுக்க அந்த ஊர் கேட்ட பேச்சும் வசைமாரியும் முதல் எப்போதாவது கேட்டிருக்குமோ தெரியாது. அப்பா அன்றிரவு வந்தபோது அம்மா பகல் நடந்த நாடகத்தைச் சொன்னுள். கதை கேள்விப்பட்டு மாமாவும் வந்தார். நல்ல நிலவுக்காலம். மாமா, அப்பா, வாத்தியார் மூன்று பேரும் வாசலில் பாய்போட்டு கதைத்துக் கொண்டிருந்தார் கள். **சண்டை இன்று பகலுடன் முடிந்து விட்டதாகத் தெரியவில்லை. இப்போதுதான் தொடங்கியிருக்கிறது" என்ருர் வாத்தியார்.
வாத்தியாருக்கு இப்போது ஊரைப்பற்றியும் ஊரிலுள்ள லுர்கள் பற்றியும் எல்லாம் தெரிய வந்திருந்தது போலும். * சந்தர்ப்பங்கள் சில வேளை தவிர்க்க முடியாத விதத்தில் லைவர்களை உருவாக்கிப் போடும் பாருங்கோ"" என்ருர், செல்வராசாவைப் பற்றித்தான் அவர் சொல்கிருர் என்பதை யாராலும் மறுக்க முடியவில்லை. கொஞ்ச நேரத்துக்குமுன்

cyfr Giggsioeau ffl பாலசுப்பிரமணியம் 153
செல்வராசாவையும் அவனுக்குப் பின்னல் தெரியும் இளைஞர் கூட்டத்தையும் பற்றித்தான் கதை நடந்து கொண்டிருந்தது. *நான்பொடியணுக மட்டக்களப்பிலே படிக்கேக்க கல்லடிப் பாலத்தில பெட்டைகளுக்குப் பகிடி சொல்லிக் கொண்டு திரிந்த காவாலிகள் எல்லாம்.இப்ப பெரிய அரசியல் தலைவன் பாருங்கோ. அரசியலிலேயோ அல்லது பொது விசயத்தி லேயோ ஈடுபடுற ஒவ்வொருத்தருக்கும் செய்யுற காரியத்தில ஒரு தூய்மையான ஈடுபாடு இரிக்க வேணும், சும்மா சுய நலத்துக்கும் பேராசைக்கும் இலட்சியம் என்று ஆக்கள பேய்க்காட்ட வெளிக்காட்ற ஆக்களின்ற வேஷம் கலைய நாள் எடுக்காது பாருங்கோ" வாத்தியார் ஊடகமாகக் கதைத்தார் என்ருலும் அவர் குறிப்பிடும் பேர் வழிகளைக் கெளரிக்குத் தெரியாமல் இல்லை.
ஊரில் பிளவு வந்து விட்டது. யார் தலைவன் அல்லது எத்தனை த லை வர் கள் உண்டாகப் போகிருர்களோ தெரியாது. என்னதான் மாற்றம் ஊரில் நடந்தாலும் பெரியப்பாவைப்பற்றி ஊர் மக்கள் வைத்திருக்கும் அபிப்பிராயம் கட்டா யம் மாறுபட்டிருக்கும் என்று அவளுக்குப் புரிந்தது.
13
2ராரின் கவனத்தைக் கண்ணகியம்மன் பூசைதிருப்பும் காலம் வந்தது. ஊருக்கு ஏழெட்டு மைல்களுக்கு அப்பாலுள்ள பட்டிமேடு என்ற வயற்கரையில் பத்தினி யம்மன் கண்ணகி கோயிலுண்டு. காடுகளால் சூழப்பட்ட பழங்காலக் கோயில், அந்தக் கோயில் ஒரு காலத்தில் இவர்கள் ஊரில் இருந்ததாம். மிக மிக அற்புதம் வாய்ந்த கோயிலாம் அது. பத்தினியம்மன் பூசை வைகாசி மாதத்தில் மிகக் கோலாகலமாய் நடந்து கொண்டிருந்ததாம்.
கோயிலைச் சுற்றித் திருக்கொன்றை மரங்கள். அடர்த்தி கயான அலறிப்பூ பற்றைகள். கோயிலின் மூலையில் மிக மிக

Page 82
154 தில்லையாற்றங்கரை
உயர்ந்து நின்ற பாம்புப் புற்று. ஏழுதலை நாகம் அந்தப் புற்றில் குடியிருந்ததாகவும் பத்தினியம்மனின் நகைகளைக் காப்பாற்றக் கோயில் கற்பக கிரகத்தில் இரவில் படுத்திருப்பு தாகவும் கர்ண பரம்பரைக் கதையாம்.
ஒரு நாள் கோயிலின் பின்னல் திருக்கொன்றை மரத் தடியில் ஒரு ஆணும் பெண்ணும் இறந்து கிடக்கக் காணப் பட்டார்களாம். பாம்பு கடித்து இறந்திருந்தார்களாம்.
கள்ளக் காதலர்கள் கோயிலின் புனிதத்தன்மை கெட நடந்ததால் ஏழுதலை நள்கம் பழிவாங்கி விட்டதாகக் கதைத்துக் கொண்டார்கள்.
அதன் பின் கோயில் திறக்கப்பட்டபோது பூசாரியையும் உள்ளே விடாமல் நாகபாம்பு வாசலில் படுத்திருந்ததாம். எப்படிக் கஷ்டப்பட்டுப் பிரயத்தனம் செய்தும் பாம்பு அகலவில்லையாம்.
**தாயே நாங்கள் மனதறிந்து ஒருபழியும் செய்யவில்லை. இளம் மனங்கள் பருவக் கோளாறில் செய்த பிழையை மன்னித்து பூசையை ஏற்றுக் கொள்' என்று ஐயர் கெஞ்சி" யும் பாம்பு போகவில்லை. கோயிலும் திறக்க முடிய 696)ča umrlb.
ஒரு நாள் ஊரார்கள் திடுக்கிடும் படியான அற்புத நிகழ்ச்சியைக் கண்டார்களாம். பத்தினியம்மன் சிலையைச் சுற்றிப் பாம்பு படுத்திருந்ததை ஐயர் கண்டாராம். அவர்கள் ஊரில் இல்லை. பட்டிமேட்டுக் காட்டில், வனந்தரத்தின் நடுவில் பத்தினித் தெய்வம் குடிகொண்டு விட்டதாம்.
தன் புனித கோயிலை தூய்மைக் கெடச் செய்து ஊரிலிருந்து தான் போய்விட்டதாக ஐயர் கனவில் அம்மாள் வந்து சொன்னதாக ஊரில் கதை. அதன்பின் பட்டிமேட்டில் பத்தினியம்மனுக்குக் கோயில் கட்டி ஒவ்வொரு வைகாசி

ராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம் 155
திங்களிலும் பூசை தொடங்கும். இப்போது அந்தப் பூசைக்கு
ஊர் ஆய்த்தம் செய்து கொண்டிருந்தது.
ஊர் மக்கள் மச்ச மாமிசம் சாப்பிடுவதை விட்டு
விடுவார்கள். மடைப்பெட்டி தயாராக்கப் புது ஒலையில்
பெட்டி இழைத்து புத்தரிசி குத்தி, பாழை வெட்டி வாழக்குல வெட்டி தயார் செய்துகொண்டிருந்தார்கள்.
பத்தினியம்மன் கோயில் திறப்பும் பூசையும் புனிதமான உணர்வைத் தருபவை. யத்தினியம்மன் குளித்தில் பாட்டு மெய்யுணர்வைத் தொட்டுப் புல்லரிக்கச் செய்பவை.
பட்டிமேட்டைச் சுற்றியுள்ள நாலாபக்கங்களிலுமிருந்து ஊர் மக்கள் மடைப் பெட்டிகளுடன் கால் நடையாகவோ, மாட்டு வண்டிகளிலோ போவார்கள், கடைசிப் பூசை
இரவிரவாக நடந்து அடுத்த நாள் குளித்தில் பாடப்படும்.
கண்ணகியம்மன் குளித்திலுக்கு இரண்டு கிழமைக்கு முன்னரே ஆச்சி மச்சம் சாப்பிடுவதை நிறுத்திவிடுவாள். விசேட பூசை புனர்காரங்களோடு அம்மனின் கதவு திறத்தல். நடக்கும். ஒவ்வொரு நாளும் மதியம் இரவு இரு நேர சடங்கு நடக்கும். உடுக்கு வாத்தியங்களோடு உடுக்குச் சிந்து பாடு வோர் கோயிலில் எப்போதும் பாடிக் கொண்டிருப்பார்கள் ஐந்தாம் நாள் கல்யாணக் கால் வெட்டுதல் என்ற சிறப்புச் சடங்கு நடக்கும். கோயில் மண்டபத்தில் ஒரு கால் நட்டு பெண்ணுய் அலங்கரித்து கண்ணகியம்மையாய்ப் பாவித்து சடங்கு செய்வார்கள். அன்றைக்கு முழுக்க கூத்தும் கொண்டாட்டமும் நிறைந்த பூசையாய் இருக்கும்.
கண்ணகியம்மன் சடங்கு இறுதி நாளன்று குளித்தில் பாடுவார்கள். குளித்திலுக்கு முன் இரவு **கோயில் காத்தல்" என்ற பரம்பரை வழக்கப்படி பெரும்பாலோர் கோயில் தங்கி இரவிரவாகப் பூசை கண்டு நடுச்சாமத்தில் விநாயர்பான வைத்துப் பொங்கல் செய்வார்கள்.

Page 83
56 தில்லையாற்றங்கரை
*தட்டான் பொடியாகத்தார் வேந்தன் ருேகச்
சுட்டெரித்துப் போட்டதொரு தோகாய் குளுக்தருள்வாங் எல்ல் படும்பழிக்கு எண்ணவொண்ணுப் பழிவாங்கிச் சொல்லரிய மாமதுரை சுட்டாய் குளுந்தருள்வாய் மதுரா புரித்தெய்வம் வாய்மாற்றந்தான் கேட்டுச் சதுராக வேகம் தணிந்தாய் குளுக்தருள்வாய்"
என்று அம்மனைக் குளிருமாறு வேண்டிக் கொள்வார்கள்.
இப்படிப் புனிதமான சடங்கு தொடங்கிக் கொண் டிருக்கும் போது இலங்கைத் தமிழ்ப் பகுதிகளில் சிங்கள பூஜீ எதிர்ப்புப் போராட்டங்கள் நடந்ததாகச் செய்திகள் பத்திரிகையில் வந்து கொண்டிருந்தன. ஊர் மக்கள் பத்தினித் தெய்வத்தின் சடங்குக்கு ஆயத்தம் செய்வதில் மும்முரமாக ஈடுபட்டிருந்தார்கள்"
திருக்கோயிலிலிருந்து கமலத்தின் தகப்பன் வந்திருந் தார். அம்பாறையில் தமிழர்களுக்கு அடி விழுவதாகவும் அம்பாரைப் பிள்ளையார் கோயிலை அழித்து விட்டார்கள் என்றும் சொன்னுர்,
கல்லோயாக் குடியேற்றத்தில் ஒன்றிரண்டு தமிழர் குடும்பங்கள் தான் இருந்தார்கள். அவற்றின் நிலைமைதான் பயங்கரம் என்றும் சொன்னுர்,
பாலிப் போடிக் கிழவனின் மகள் தங்கம்மா, பிள்ளை குட்டியுடன் என்னவானுளோ என்று சொந்தக்காரர்கள் கவலைப் பட்டார்கள். நாடெங்கும் நடக்கும் ஒரு சில சம்பவங்களுக்காக அரசாங்கம் ஊரடங்குச் சட்டம் போட் டிருப்பதாக வானெலியில் அறிவித்தபோது சண்டை தொடங்கியாகி விட்டது என்று கமலத்தின் தந்தை சொல்லி எத்தனையோ நாட்களாகி விட்டன.
ஒரு சில மாதங்களுக்கு முன்தான் இவர்களின் ஊர் இராணுவத்தினரின் அநியாயங்களுக்கு ஆளாகி யது.

ராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம் 157
இன்னெரு தரம் தோணி ஏறி த் திருக்கோயிலுக்குப் போவதோ என்பது வீட்டில் கதையாகியிருந்தது.
இவர்களின் ஊரைச் சார்ந்துள்ள கிராமங்களில் உள்ள சிங்கள மக்களைத் தமிழர்களும் முஸ்லிம்களும் ஒரு இடறும் வராமல் காப்பாற்றுவதாகக் கதை அடிபட்டது.
வானெலியிலும் பத்திரிகைகளிலும் வரும் செய்திகள் தணிக்கை செய்யப்பட்டிருக்க வேண்டும் என்று வாத்தியார் சொன்னர். ஏனென்ருல் ஊரில் நிலவும் வதந்திகளைப் பார்த்தால் சிங்களப் பகுதிகளிலுள்ள தமிழர்கள் எல்லாம் கொலை செய்யப்பட்டு விட்டதாகத் தெரிந்தது.
ஒரு சில தமிழ்ப் பத்திரிகைகள் மட்டும் இலங்கைத்தீவில் ஆங்காங்கே நடக்கும் இனக்கலவரத்தின் சுருக்கத்தைப் பிரசுரித்திருந்தது.
பாலிப் போடிக் கிழவன் பதறிப் போய் துடித்தது. கிழவன் பாவம் ஒரே ஒரு மகள்தான் உறவு என்று சொல்லக் கூடியதாக இருந்தாள். அவளின் குடும்பம் என்னவாகி யதோ தெரியாது. ஊரடங்குச் சட்டம் அமுலில் இருந்த தால் யாரும் போய்ப் பார்க்கவும் முடியாது போல் இருந்தது.
சம்மாந்துறைப் பக்கமிருந்த மக்கள் அக்கரைப்பற்றுக்கு வந்தபோது சொன்ன செய்திகளேக் கேட்கவே பயமாக இருந்தது. அம்பாரையை அடுத்திருந்த குடியேற்றப் பகுதி களில் உள்ள தமிழர்கள் வீடு தாக்கப்பட்டு எரிக்கப்பட்டு, பெண்கள் கற்பழிக்கப்பட்டு, ஆண்கள் கண்டதுண்டமாக வெட்டப்பட்டுக் கொலை செய்யப்பட்டதாகச்சொன்னர்கள்.
பாலிப் போடிக் கிழவன் சோறு தண்ணிர் தொடாமல் அழுதபடி இருந்தது. தங்கம்மாவுக்கு அழகான இரண்டு. பெண் குழந்தைகள் பத்தும் எட்டும் வயது. தங்கம்மாவின் புருஷன் காரைதீவைச் செய்த ஆள். குடியேற்றத்தில் வீடும்.

Page 84
158 தில்லையற்றங்கரை
காணியும் கிடைத்த சந்தோஷத்தில் குடும்பத்தோடு குடி யேறியவர்களில் ஒருத்தன்.
இப்போது என்ன நடந்திருக்கும்? யாரிடம் கேட்பது? தமிழ்த் தலைவர்களைக் கைது செய்து விசேட இடங்களில் வைத்திருப்பதாக வதந்தி அடிபட்டது.
பாணந்துரையில் முருகன் கோயில் ஐயரை உயிரோடு தூக்கி எரியும் தாருக்குள் போட்டு வதைத்தார்கள் சிங்கள வர் என்பதைப் பத்திரிகையில் படித்தபோது ஆச்சி கதிர் காமப் பக்கம் திரும்பி ‘கந்தா முருகா கதிர்காமத்தையனே. உனக்குக் கண்கள்தான் இல்லயோ' என்று கதறியழுதாள்.
கர்பவதியான ஒரு தமிழ்ப் பெண்ணின் வயிற்றைக் கீறிக் குழந்தையை எடுத்து ரோட்டில போட்டு மிதித்ததாகப் பத்திரிகைச் செய்தி இருந்ததாக யாரோ சொன்ன போது வாயும் வயிறுமாயிருந்த அம்மாவின் காதில் அந்தச் செய்தி கள் படாமல் பார்த்துக் கொண்டாள் ஆச்சி. தங்களைக் கெடுக்க வந்த கொடிய சிங்களவரிடமிருந்து காப்பாற்ற ஒரு தமிழ்த்தாய் தான் பெற்ற குழந்தைகளையும் தன்னையும் கிணற்றில் போட்டு அழித்த கதையைக் கேட்ட போது ஆச்சி விம்மி விம்மி அழுதபடி சொன்னுள். 'எடி கெளரி, சாரதா என்ற உடம்பில் உயிர் உள்ளவரை ஒரு சிங்களவன் உங்களைத் தொடவிடமாட்டனடி . என்னைச் சாக்காட்டிப் போட்டு உங்களின்ர வந்தால் கிணத்தில் குதியுங்கோ. உயிரோடு அவனுகளின்ர கையில அகப்படாதேயுங்கோ' கெளரிக்குத் தலையைச் சுற்றிக் கொண்டு வந்தது.
கிணற்றில் தண்ணி எடுக்கப் பேர்னபோது குழந்தை களுடன் விழுந்துதன்னை மாய்த்துக்கொண்ட தமிழ்த்தாயின் ஞாபகம் வந்தது. தமிழ்ப் பெண்களின் நிலை இப்படி மாற என்ன பழி செய்தோம்?
அன்று இரவு நித்திரையே வரவில்லை, விடிந்ததும் விடியாததுமாக ஊரெல்லாம் பரபரப்பு.

ராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம் 159
பாலக்காட்டுப் பக்கம் தமிழ்ப் பெண்கள் அரைகுறை உயிரோடு கிடப்பதாகவும் உடுப்பேயில்லாமல் உடம்பெல் லாம் காயத்தோடு கிடப்பதாகவும் செய்தி பரவியது.
**ஊரடங்குச் சட்டமோ இல்லையோ பொம்புளைகளை இந்த நிலையில் உடக்கூடாது' பரிமளம் மாமியும் வேறு சில பெண்களும் வயல் வெளிகளுக்குள்ளால் பாலக்காட்டுப் பக்கம் ஓடினர்கள்.
அம்பாரையில் உத்தியோகத்தர்களாயிருந்த தமிழர் களின் குமரப் பிள்ளைகள் மூவர் பிறந்த மேனியுடன் உடம் பெங்கும் காயத்துடன் காட்டில் பதுங்கியிருந்தனர்.
பரிமளம் மாமியாட்கள் தமிழில் கதைத்துத் தாங்கள் கொண்டுபோன சேலைகளை நீட்டியபின் வந்தார்களாம் மூத்த பெண் இருபது வயசிருக்கலாம். மார்பகங்கள் அரை குறையாக அறுக்கப்பட்டு சிங்கள பூரீ என்ற எழுத்து கத்தி யால் வெட்டப்பட்டிருந்தது. அவளுக்குக் கிட்டத் தட்ட 'உணர்வேயில்லை.
உடம்பில் தொடமுடியாத காய்ச்சல். தலைமயிர் எரிக்கப்பட்டிருந்தது. காய்ச்சலில் பிதற்றிக் கொண் டிருந்தாள்.
இரண்டாம் பெண் பதினெட்டு வயதிருக்கலாம். உடம்பெல்லாம் காயம் வீங்கியிருந்தது. ஒரு கை துரக்க முடியவில்லை உடைந்திருக்கலாம்.
மூன்ரும் பெண் பத்தே பத்து வயதிருக்கலாம். பார்க்கவே முடியாத கோரம். அந்தப் பச்சிளம் பாலகியை யும் கெடுத்திருந்தார்கள்.
மாமி அந்த மூன்று பெண்களையும் கடடிப படித்தழு தாள். என்ன நடந்தது என்று கேட்கத் தேவையில்லை.
தாய் தகப்பனுக்கு என்ன நடந்தது என்ன நடந்தது என்று கேட்டாள் மாமி. தகப்பன் அம்பாரையை அடுத்

Page 85
160 தில்லையாற்றங்கரை
துள்ள சீனித் தொழிற்சாலையில் எஞ்சினியர் என்றும் குழப்பம் தொடங்கியவுடன் மூட்டை முடிச்சுடன் வெளிக் கிடும்போது ஒரு கும்பல் சிங்களவர்கள் எதிர்ப்பட்டுத் தகப்பன ஒரே வெட்டில் கொலை செய்ததாகவும் தாயையும் தங்களையும் செய்யாத கேவலம் செய்துவிட்டு "சிங்கள சிங்கங்களை உங்களுக்குத் தந்திருக்கிருேம். போய்த் தமிழ்ப் பகுதியில் பெற்றுக் கொள்ளுங்கள்" என்று துரத்தித் துரத்தியடித்ததாகவும் வரும் வழியில் தாய் மரணமடைந்த தாகவும் சொன்ன கதை ஒரு மணித் தியாலத்தில் ஊர் முழுக்கப் பரவி விட்டது.
'மிருகத்துக்குப் பிறந்த மிருகங்கள். இந்தக் கேவலம் செய்து அனுப்பியிருக்கிறன்கள்' என்று இளைஞர் கூட்டம் கோபத்தில் கொதித்தது.
விகாரையை உடைக்கவேண்டும் என்ருர்கள். பாண் பேக்கரிகளை எரிக்க வேண்டும் என்ருர்கள். அவர்கள் உணர்ச்சி வசப்பட்டு பலதும் கத்தினர்கள். கனகலிங்கம் மாமா கடை இளைஞர்களால் நிரம்பியிருந்தது.
மாமா தோமஸ் பாதிரியைக் கூட்டிக் கொண்டு வரப் போயிருந்தார். அடிபட்டு வந்த பெண்களுக்கு உடனடி யாகச் சிகிச்சை தேவை. ஊர் மக்கள் காரில் இவர்களைக் கொண்டு போகும்போது ராணுவத்தினர் எதிர்ப்பட்டு ஏதும் தகராறு செய்யலாம் என்று பாதிரிதோமஸின் உதவியை நாடினர்கள்.
பாதிரி தோமஸ்தன் ஒட்டைக்காரில் வந்து இந்தப்பெண் களின் நிலையைக் கண்டதும்" கதையைக் கேட்டதும் கண் கலங்கினர். வானத்தைப் பார்த்து பரமண்டலத்திலிருக்கும். பரம பிதாவிடம் ஏதோ முறைப்பட்டுக் கொண்டார். உண்மையாக கடவுள் இருக்கிருரா?
கெளரி பாதிரி தோமஸைப் பார்த்துக் கேட்க யோசித் திாள். இந்தப் பச்சிளம் பாலகிக்கு இந்தக் கொடுமை செய்:

ராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம் 16官
,፦
திருக்கிருர்களே இதற்காகவா-இதைச் செய்பவர்கள் சார்பிலா மக்களை காக்க வேண்டிய அரசாங்கம் இருக்கிறது? வாத்தியார் சொல்வதுபோல் சரித்திரத்தைப் பார்த்தால் சில தவருண தலைவர்கள் தோன்றி மிருகத்தனமாய் நடந்து மறைந்திருக்கிருர்கள் என்பது உண்மையா? போன வருடம் விகாரைக்குப் போய்ப் போதி சத்துவனே புத்த பிரானே என்று கும்பிடும் ஆயிரக்கணக்கான சிங்களமக்களைக் கண்டாள். அவர்களில் எத்தனைபேர் இப்படி மிருகத்தன மாய் நடந்து விட்டு தாமரைப் பூவுடன் வந்து புத்தர் தாள் பணிகிருர்கள்.
கடவுளே நீ ஒருத்தன் இருப்பது உண்மையானல் ஏன் இதெல்லாம் நடக்கிறது? பின்னேரம் முகம் கழுவிச் சாமிப் படங்களுக்கு விளக்கேற்றிக் கும்பிடும்போது இப்படித்தான் கேட்டாள்.
உணர்ச்சிவசப்பட்டிருந்த ஊர் இளைஞர்களின் ஆத்திரம் ஊர் எல்லையில் பாண்கடை வைத்திருந்த அப்பாவி அப்புசாமியில் திரும்பியது. ஒரு சிறு கூட்டம் போய் அப்புசாமிக்கு நல்ல அடி. பாவம் அப்புசாமிக் கிழவன். இந்த ஊரில் இருபது வருஷமாய் இருக்கிருன். ஒரு கிழட்டு மனேவி. ஊமை மகன் நந்தசேன. பாண் கடை தவிர நிறைய ஆடுகளும் கோழிகளும் உள்ளன. கோபத்தில் போன இளைஞர்கள் கோழிகளைப் பிடித்தும் ஆடுகளை அடித்தும் கலவரம் பண்ணுதலைக் கேள்விப்பட்டு ஆப்பா போய் இளைஞர்களைப் பேசினர். வாய் பேசாத ஆடுமாடுகள் உங்களுக்கு என்ன செய்தது? அப்பாவியான அப்புசாமிக் கிழவன்தான் என்ன செய்தான்? எய்தவன் இருக்க அம்பை நோகலாமா? என்றெல்லாம் இளைஞர்களைப் பேசிவிட்டு: அப்புசாமிக் கிழவனை வீட்டுக்குக் கூட்டிக்கொண்டு வந்தார்.
கிழவி தன் கோழிகளை நினைத்து ஒப்பாரி, எத்தனையோ தமிழ்த் தாய்கள் இழந்து போன தன் செல்வங்களை நினைத்து எப்படி அழுகிருர்களோ என்று நினைத்தான் கெளரி.
紛.ー11

Page 86
62 தில்லையாற்றங்கரை
"ஏன் இத்தனை நாள் எடுத்தது ஊரடங்குச் சட்டம் போட" வானெலி கேட்க வந்த வாத்தியார் கேட்டார் அப்பாவிடம்,
கலவரம் இவ்வளவு தூரத்திற்குப் போயிருக்காது. உடனடியாக ஊரடங்குச் சட்டம் போட்டிருந்தால் இவன்கள் திட்டம் போட்டுத்தான் தமிழனத் தொலைக்கப் பார்க்கிருன்கள்" மாமா கோபத்தில் வெடித்தார். "ஆள் மாறி ஆள் எப்படித் தமிழன நசுக்கிறது என்றுதானே amrnt Gör போடுகிருன்" மாமா வாத்தியாருக்குச் சொன்னர்.
**யு. என். பி. தமிழனுக்கு எல்லாத்தையும் தூக்கிக் குடுக்குது. நான் வந்தால் எல்லாத்தையும் தமிழனிட்ட விசம் மாதிரிக் கதைச்சு போட்டான். பண்டாரநாயக்கா இருந்த பறிச்சுத் தருவன் எண்டு பண்டார நாயக்கா தமிழுக்கு நியாயமான உரிமை எண்டு சொன்ன உடனேயே ஜே. ஆர். ஜெயவர்த்தணு புனித புத்த சமயம் தமிழனுல் அழிஞ்சு சிங்கள வம்சமே அழியப் போகுது எண்டு கண்டிக்குப் புனித யாத்திரை போய்ச் சிங்களவன்களை எல்லாம் கிளப்பித்தான் இந்தக் கலவரம் வாத்தியார் எந்தச் சிங்களவன் தலைவராய் வந்தாலும் தமிழனுக்கு விமோசனம் வரும் எண்டு தெரியல்ல. எவன் தமிழனக் கூட நசிக்கிருணுே அவன்தான் பெரிய தலைவன் எண்டு பேரெடுக்கலாம் சிங்கள ஆட்களுக்குள்ள. ஆனபடியால் எவன் வந்தாலும் எங்களுக்கு விமோசனம் இல்ல" அப்பா தெளிவாகச் சொன்னர்,
அம்பாரையிலிருந்து வந்த பெண்களைக் கண்ட நேரத்தி லிருந்து மிகமிக மனமுடைந்து கதைத்தார். சத்தியம், தர்மம், எல்லாம் பொய்யா? "வாத்தியார், நாங்கள் எதுவும் பெரிதாகக் கேட்கல்ல. எங்கட உரிமையைத்தான் கேட்கி ருேம். தமிழன் கேட்கிறது சரியான உரிமைதான் எண்டு சொல்ல ஒரு சிங்களத் தலைவனும் இல்லயே' மாமா வாத்தியாரைக் கேட்டார்.

ராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம் 163
வாத்தியார் எடுத்ததெற்கெல்லாம் பீட்டர் கெனமனை பும்எ,ன். எம். பெரேராவையும் புழுகிப் கொண்டிருப்பவர்.
"இல்லாமல் என்ன? 1944-ம் ஆண்டு கம்யூனிஸ்ட் கூட்டத்டத்தில் தமிழருக்குச் சுய நிர்ணய உரிமை இருக்கு ன்ண்டுகதைச்சவதானே" வாத்தியார் தன் கட்சியைவிட்டுக் கொடுக்காமல் சொன்னுர்,
ரோட்டில் ஜீப்புகளின் சத்தம் கேட்க கெளரி ஒடிப் போய் ரேடியோவை ஒப் பண்ணி விட்டாள். கதைத்துக் கொண்டிருந்தவர்கள் மெளனமானர்கள். ஜீப்பின் சத்தம் ஊர் எல்லையில் கேட்டது.
**இப்ப மட்டும் ஏன் இந்தக் கொடுமைகளை ஏன் எண்டும் யாராமல் இருக்கினம்" " மாமா வழக்கம்போல் உறுத்துக் கேட்டார்.
வாத்தியார்; மாமாவின் கோபத்தில் நியாயம் இருக்கிறதை உணர்ந்தோ என்னவோ மெல்லமாகச் சொன்னர் 'ஏன் சொல்ல இல்லை. வகுப்பு வாதத்தையும் இனக் கலவரத்தையும் எத்தனையோ தரம் கண்டித்துச் சொல்லித்தான் இருக்கினம். ஆணு உங்களுக்கு ஒண்டு தெரியவேனும் பாருங்கோ. பண்டார நாயக்கர வந்து பெரும்பான்மை மக்களின் நன்மைக்குத்தான் எல்லாம் செய்யுறன் என்பதை இந்தச் சிங்களச் சனம் நம்பிப் போட்டுதுகள். பண்டார நாயக்கா வந்ததோடத் தமிழ னிட்ட இருந்து' எல்லா உத்தியோகத்தையும் பறிச்செடுக்க லாம் எண்டு நினைச்ச சிங்களச் சனம் நல்லா ஏமாந்து போச்சுதுகள். தமிழன்தான் எல்லா உத்தியோகத்திலும் இருக்கிறன், தமிழனுலதான் தங்களுக்கு இந்தக் கஷ்டங்கள் எண்டு நினைச்சு நினைச்சுத்தான் இந்த வெறுப்பு வெடிச்சு இப்படிச் சண்டையாய் மாறிச்சுது."
வாத்தியாரின் வாதத்தைக் கேட்டுக் கொண்டிருந்தாள் கெளரி. மக்களால் மக்களுக்காக மக்களே தெரிவு செய்த அரசாங்கம் பெரும்பான்மை மக்களின் உணர்ச்சியைத்

Page 87
164 தில்லையாற்றங்கரை
தூண்டி விட்டுச் சிறுபான்மை மக்களின் உரிமையையும், வாழும் உரிமையையுமே பிடுங்கி எறியலாமா?
முன்னிலவுக் காலமாதலால் தூரத்தில் வேலியடியில் சாரதா வருவது தெரிந்தது. கடந்த மூன்று நாட்களாக சாரதா அழுதபடியே இருக்கிருள். மாணிக்கவாசகத்துக்கு கொழும்பில் வேலை. அவனுக்கு என்ன நடந்ததோ தெரியாது.
மாணிக்கவாசகத்தின் தகப்பன் அக்கரைப்பற்றிலிருந்து சாமான்களுடன் கொழும்புக்குப் போயிருந்த முஸ்லீம் வியாபாரிகளிடம் மகனை உடனே ஊருக்கு வரச்சொல்லி சண்டை தொடங்கியு போன வாரமே சொல்லியனுப்பி யிருந்தாராம்.
வியாபாரிகள் கொழும்புக்குப் போன விடயுமோ மகனைப் பற்றிய தகவல்களோ ஒன்றும் தெரியவில்லை.
சுந்தரமூர்த்தி அடிக்கடி வந்து மாணிக்கவாசகம் வீட்டார் கதைப்பதை உளவறிந்து சாரதாவுக்குச் சொல்லிக் கொண்டிருக்கிருன். வீட்டில் பாலிப்போடியின் துயர் ஒரு பக்கம். அது எல்லோருக்கும் தெரியும். ஆனல் சாரதாவின் துன்பம் கெளரியைத் தவிர யாருக்கும் தெரியாது. ஊரில் உள்ள எல்லாருமே எப்போது சிங்களவர் வந்து தாக்கு வார்களோ என்று பயந்தபடி இருந்தார்கள்.
மேற்கு மலைத்தொடருக்கப்பால் இருப்பது சிங்கள நாடு. இருபது முப்பது மைல்கள்தான். காடுகளையும் வயல்களையும் தாண்டி வந்தால் இந்தச் சிறிய ஊராரிடம் தங்களைப் பாதுகாத்துக் கொள்ள எதுவுமே இல்லை.
மாமாவும் அண்ணு போன்ற இளைஞர்களும் தற்காப்புக் காக என்ருலும் துவக்குகள் தேடி வைத்திருக்கும் அவசியத் தைப் பற்றிக் கதைக்கிருர்கள்.

ராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம் 65
சாரதா இவர்கள் சொல்வதைக் கேட்டபடி வருகிருள். கெளரி ஒன்றுமே கேட்கத் தேவையில்லை. சாரதாவிற்கு ஏதும் விஷயம் தெரிந்தால் தானுகச் சொல்லுவாள்.
சாரதா படும் துன்பத்தைப் பார்க்க பாவமாயிருந்தது. மாணிக்கவாசகத்துக்கு என்ன் நடந்திருக்கும் என்றே தெரியாது. ஊரில் அடிபடும் செய்தியின்படி கொழும்பில் வாழும் தமிழ் மக்கள் பாதுகாப்புத் தேடி சரஸ்வதி மண்டபம், இந்துக் கல்லூரி போன்ற இடங்களில் தஞ்சம் புகுவதாக அறிந்தார்கள்.
பரம்பரை பரம்பரையாய் கொழும்பில் வாழும் தமிழர் அகதிகள் போல் அல்லற்படுவதைக் கேட்க வகுப்புக் கலவரத்தின் விக்ர்ர நிலை எப்படி இருக்கும் என்று உணர முடிந்தது.
இலங்கையில் என்ன நடக்கிறது? 'தமிழருக்கு இந்தியர் உதவி செய்யாதேர்' * சார்தா ஆற்றமையுடன் கேட்டாள். கெளரிக்கு மறுமொழி தெரியாது.
இந்தியாவில் தமிழர்கள் இருக்கிருர்கள் தான். ஆனல் அவர்கள் இந்திய சாம்ராஜ்யத்தில் ஒரு சிறு பகுதியினர் இந்தியத் தமிழர்களுக்கென்று தனிப்பட்ட பெரியபடை ஒன்றும் இருப்பதாகத் தெரியாது கெளரிக்கு.
இந்தப் பெண்களுக்கு இந்தியர்வைப் பற்றி தெரிந்த விஷ்யமெல்லாம் கல்கி, கலைமகள் மூலம் கிடைக்கும் தகவல்கள் தான். தெரிந்த தகவல்களின் படி நேருஜியும் ராஜாஜியும் காமராஜரும் காங்கிரசும் தர்ன் மன்தில் முதலில் வரும். அதையடுத்து அண்ணுவும், கருணநிதியும், ஈ. வெ. ராவும் அவர்கள் அடுக்கு மொழியில் பேசும் திமிழ் மொழியும் தெரியும். இப்படி எல்லாம் தவிர்த்து பார்க்க பேர்னல் எஞ்சியிருக்கும் இந்திய நினைவு. எம. ஜி. ஆரும் சிவாஜியும் பத்மினியும் , சாவித்திரி சரோஜா தேவியும்

Page 88
166 தில்லையாற்றங்கரை
தான். இவர்களில் யார் இலங்கைத் தமிழர்களுக்கு உதவி
செய்வார்கள் என்று சாரதா கேட்கிருள் என்று தெரியாது. சாரதா எதையும் ஆறுதலாக யோசிக்கும் மனநிலையில்
இல்லை என்று கெளரிக்குத் தெரியும்.
**இந்த அநியாயம் செய்யுற அரசாங்கம் நிலைக்குமேர' சாரதா விம்மியபடி சொன்னுள். கெளரியும் சாரதாவும் பலாமரத்தில் போட்டிருந்த ஊஞ்சலில் இருந்தார்கள் . சித்திரை வருஷப் பிறப்புக் கொண்டாட்டத்தின் போது தம்பிகளுக்குப் போட்டுக் கொடுத்த ஊஞ்சல் இன்னும் கழட்டப்படவில்லை?
'தங்கம்மாவும் புள்ளயலும் என்ன வாகினமோ" கெளரி சொன்னுள். பெரியவர்கள் இன்னும் வாசலில் உட்கார்ந்து கதைத்துக் கொண்டிருந்தார்கள். ஆச்சி அடிக்கொருதரம் பெருமூச்சு விட்டபடி இருந்தாள். அம்ம்ர் தன் பெரிய வயிற்றைத் தள்ளியபடி ஊஞ்சல் பக்கம் வந்து *குமரிப் பெட்டைகள் ஊட்டுக்குள்ள இருங்கோடி" என்று கடுமையாகச் சொன்னுள். *
ஜீப்பபைத் தூரத்தில் நிறுத்திவிட்டு ஆமிக்காரர் வந்து இளம் பெண்களைத் தாக்குவார்கள் " என்ற பயம் அம்மாவுக்கு. -
அடுத்த நாள் பத்மநாதன் கல்முனையிலிருந்து வந்திருந் தான். வகுப்புக் கலவரம் இன்னும் தொடர்ந்து நடப்ப தாகக் கேள்விப் பட்டதைச் சொன்னன். தமிழ்ப் பகுதிகளில் உள்ள சிங்களவர்கள் எந்தவிதமான பெரிய சேதத்துக்கும் ஆளாகாமல் பாதுகாக்கத் தமிழர்கள் முயற்சி எடுப்பதையும் சொன்னுள்.
அப்புசாமிக் கிழவனும் நந்த சேனவும் கிழவியுடன் அக்கரைப்பற்றிலிருந்த சொந்தக்காரர் வீட்டுப் போய் விட்டார்கள். அவர்களின் கோழியையும் ஆடுகளையும்

ராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம் 167
சேதப்படுத்திய இளைஞற்களை அப்பா வெகுவாக கண்டித்
தார்.
ஒன்றிரண்டு நாட்களின் பின் நிலைமை கொஞ்சம்
கொஞ்சம் சீரடைவதாக வதந்திகள் வந்தது.
தங்கம்மா குடும்பத்தைத் தேடிப் போக அண்ணுவும் பத்மநாதனும் முன் வந்தார்கள். பெரியம்மாவுக்கு இன்னும் பயம் விட்டபாடில்லை. சிங்களவர் என்ன செய்வார்களோ தெரியாது என்று பயம் அவளுக்கு. காரைதீவிலிருந்து தங்கம்மாவின் சுணவனின் சொந்தக்காரர்களுடன் சேர்ந்து போவதாகச் சொல்லி விட்டுப் போஞர்கள். பெரியம்மா உலகத்துக் கடவுளை எல்லாம் கும்பிட்டபடி இருந்தாள்.
மத்தியானம் சாரதா விழுந்தடித்துக் கொண்டு வந்தாள். மாணிக்க வாசகம் முஸ்லீம் வியாபாரிகளின் லொறியில் வந்து சேர்ந்து விட்டதாகச் சுந்தர் முர்த்தி சொன்னதைச் சொன்னள். வகுப்புக் கலவரத்தில் தப்பிய வர்கள் தமிழ் மூஸ்லீம்களே. அவர்களைத் தாக்கவில்லை சிங்கள வகுப்பு வாதிகள், மாணிக்க வாசகத்தின் தகப்பனின் கட்டளையைக் கேட்டவுடனேயே மாணிக்க வாசகம் கொழும்பை விட்டுப் புறப்பட்டதாகவும் ஆணுல் ரெயிலில் வரப்பயப்பட்டதால் லொறியில் கண்டி வழியாக மட்டக் களப்பை அடைந்து ஊர் வந்ததாகவும் கேள்விப்பட்டார்கள்.
ஊர் இளைஞர்கள் எல்லாம் மாணிக்கவாசகத்தைச் சுற்றிக் கொழும்பில் என்ன நடந்தது என்று கேட்டார்கள். தமிழ்ப் பகுதிகளில் சிங்கள மக்களுக்கு ஒன்றும் நடக்கா விட்டாலும் சிங்களப் பகுதிகளில் வாழ்ந்த தமிழ் மக்களுக்கு நடந்த கொடுமைகளைத் தாங்கள் வரும் வழிகளில் கேள்விப் பட்டதாகவும் கடைகள் எரிபடுவதையும் தமிழர்களை ரோட்டில் வைத்து அடிப்பதையும் நேரில் கண்டதாகவும் சொன்னன் . சகோதரர்கள் போல் தன் உயிரைக் காப்பாற்றிய முஸ்லீம்களை வெகுவாகப் பாராட்டினன்
என்று கேள்விப்பட்டதாகச் சாரதா சொன்னள்.

Page 89
168 தில்லையாற்றங்கரை
கண்டறியாத கிளார்க் வேலையும் வேண்டாம். கொழும்பும் வேண்டாம் என்று மாணிக்க வாசகத்தின் தாய் பேசியதைச் சொன்ன போது சாரதாவின் குரலில் குதுகலம். இனி மாணிக்கவாசகம் கொழும்பிற்குப் போக மாட்டான் என்ற நினைவில் சந்தோஷமாயிருந்தாள்.
அன்று பின்னேரம் ஊரில் யாரும் எதிர்பார்க்காத பேர் வழியாய்க் கதிர்காமத்திலிருந்து வந்து சேர்ந்தார் ராமலிங்க éFrt furtrf.
ஒரு காலத்தில்-கெளரியின் தகப்பன் இந்தியாவிற்குப் போன காலத்தில் ராமலிங்க சாமியாரும் இந்தியா போனவர்.
கெளரியின் தகப்பன் கதருடுப்பும் காந்தியக் கொள்கை க்ளுடனும் வந்தது போல் சாமியார் காவியுடையும் கடவுள் தrமத்துடனும் வந்து சேர்ந்தார்.
அதன்பின் சாமியார் நீண்ட நாட்கள் தினரில் நிற்க வில்லை. ஊரும் வேண்டாம் உலகும் வேண்டாம். கந்தனே என் சொந்தம் கதிர்காமமே எனது மடம் எனச் சொல்லி அங்கேயே தங்கிவிட்டார். எப்போதாவது இருந்து ஆண்டுக் கொருதரம் ஊருக்கு வருவதுண்டு. அப்பா பெரிய பக்தி மான். ஒரு அறை முழுவதும் புத்தகங்களால் நிறைத்து வைத்திருக்கிருர், சாமியார் ஊருக்கு வந்து நிற்கும் நாட்களில் பெரும்பாலான பின்னேரங்களில் சமய சர்ச்சை நடக்கும்.
பாடசாலையில் சமய பாடம் படித்து அறிந்ததை விட இவர்கள் செய்யும் சர்ச்சைகளிலும் பேசிக் கொள்ளும் 'விஷயங்களிலிருந்தும் கெளரி இந்து சமயத்தைப் பற்றி ஒரு :படி கூட அறிந்திருக்கிருள்.
சாமியார் மச்சம் ஒன்றும் தொடார். வீட்டில் ஒரே மரக்கறிதான் அதனல் சாமியார் வருவது தம்பிகளுக்குப்

ym Giggdŵs, if siregò&fri:Siâ Gwerfluth 89
*பிடிக்க்ாது. அவர்கள் மீன் இல்லாமல் சாப்பிட
- nhf fyrrfassif.
சாமியார் வந்தால் கஞ்சா மண்ம் மூக்கைத் துளைக்கும் கஞ்சாத் துளைக் குழலில் போட்டு புகைப்பதை விடக் கஞ்சாவைக் கோப்பியுடன் சேர்த்துக் குடிப்பார்கள்.
கெளரி சின்ன பெண்ணுக இருக்கும் போது என்ன வித -மான கோப்பி என்று தெரியாமல் சுகமில்லாமல் படுத் திருந்த ஆச்சிக்குக் கஞ்சா கோப்பி போட்டுக் கொடுத்ததும் கிழ்வி மயங்கி விழாத குறையாகத் தலைசுற்றிக் கஷ்டப்பட்டு தென்னேமரம் எல்லாம் தலே கீழாக நிற்பதாகவும் அமுத வல்லி நாய் தன்னைப் பார்த்து சிரிப்பதாகவும் புலம்பி எல்லோரையும் பயப்படுத்தியதை வீட்டில் யாரும் இன்னும் மறக்கவில்லை.
இப்போது FTLAS)umri காவியுடை கந்தலாகி -உருத்திராட்ச மணிகள் தொங்கிய கழுத்து வெறுமையாகிஆனல் பல காயங்கள் நிறைந்து, சாமியாரின் நரைத்து வளர்ந்த ஞானத்தாடி அறையும் குறையுமான ஒழுங்கற்ற நிலையில் நாடியில் தொங்க-சிங்களக் காடையர்களிடம் அடிபட்டு உதைபட்டு அரை உயிராய் ஊருக்கு வந்திருந்தார்.
எப்போதும் திருவாசகமும் திருப்புகழுமாய் இருக்கும் அவர் குரல் அடைத்திருந்தது. எந்தவித வித்தியாசமும் காட்டாது எல்லோரையும் கனிவுடன் பார்க்கும் அவர் பரிர்வை பஞ்சடைந்திருந்தது. சிரித்த அவர் முகம் சிவந்து, இரத்தக் கறை படிந்து விகாரமாயிருந்தது. சாமியாரைக் கண்டதும் என்ன சொல்வது என்ன கேட்பது என்றே தடுமாறி விட்டார் அப்பா.
கடவுளே துணை என்று தன் வாழ்நாளை மடத்தில் கழித்த இந்த சாதுக்கள் என்ன செய்தார்கள் சிங்கள வகுப்பு வாதிகளுக்கு? பெரிய குடங்கள் இரண்டில் சுடுநீர் வைத்துச் சாமியாரைக் குளிக்கப் பண்ணினுர் அப்பா.

Page 90
170 தில்லையாற்றங்கரை
ஆச்சி அவசரம் அவசரமாய் மரக்கறிகள் தேடிச் சமைத் தாள். சாமியாரின் கோலம் அம்மாவைத் தாங்க முடியாத வேதனைக்கு ஆளாக்கியிருக்க வேண்டும்.
“என்ன சோதனை கடவுளே? இந்த சாதுக்களின் பாவம் இந்த நாய்களைச் சும்மா விடாது" என்று முணுமுணுத்துக் கொண்டிருந்தாள். சாமியாரைப் பார்க்க ஊரே திரண்டு வந்தது.
காசு பணம் படைத்த உத்தியோகம் பார்க்கும் தமிழர் களை தான் அடிக்கிருர்கள் பொருள் பண்டம் எடுப்பதற்கு என்று பார்த்தால் ஒன்றுமில்லாத இந்த ஆண்டிகளிடம் என்ன எதிர்பார்த்து இப்படிச் சித்ரவதை செய்திருக் கிழுர்கள்? . .
**இனித் தமிழர் பயமில்லாமல் கதிர்காமத்தில் சீவிக். கலாம் என்டு நினைக்கல்ல' மாமா வாயைத் திறந்தார், அவர் குரல் வழக்கம்போல் கோபத்துடன் ஒலித்தது.
ராமகிருஷ்ணமடம் தாக்கப்பட்டு அதிலிருந்தவர்கள் அடித்துக் கலைக்கப்பட்டதென்று கேள்விப்பட்டதைச் சொன்னர் சாமியார். 'எல்லாம் அவன் செயலே. தினை விதைத்தவர்கள் தினையறுப்பார்கள். பொறுமையாயிருக்க. வேண்டும்" புன்னகையுடன் சொன்னர் சாமியார், இவருக்கு கோபமே வராதா?
**இனிக் கதிர்காமக் கோவிலுக்குப் போக மாட்டியளோ சாமி" கெளரி கேட்டாள் சாமியாரை.
சாமியார் ஆச்சியின் வெற்றிலை வட்டாவிலிருந்து நீர் வெற்றிலை எடுத்து சமமாக மடித்து சுண்ணும்பு பூசிக் கொண்டு கெளரியை ஏறிட்டுப் பார்த்தார்.
*அவன் அருள் இருந்தால் போகலாம் மகளே’ வழக்கம்போல் தன் கனிவான குரலில்சொன்னர் சாமியார் .

ராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம் 17宦
ள்த்தனையோ இடையூறுகள் பட்டும் அவர் குரல் கணி ரென்று தெளிவாக இருந்தது.
“எங்கட ஊர்க் கோவிலும் பள்ளிக்கூடமும் வெள்ளத் தில அழிஞ்ச போட்டுது சாமி" கெளரியின் குரல் அடைத் தது. சாமியாருக்குக் கோயிலப் பற்றி மட்டும்தான் சொல்ல நினைத்தாள். ஆனல் கோயிலைப் பற்றிச் சொல்லும்போது கோயிலுக்குப் பக்கத்திலுள்ள பாடசாலையைப் பற்றிச் சொல்லாமலிருக்க முடியவில்லை. メ
*கோயிலில்லாத ஊரில் குடியிருப்பது பாழ்' சாமியாரின் குரலில் குறும்பு முகத்தில் நளினம். . . . . **பிள்ளையாரைத் தூக்கி வைத்து ஒலைக் கோயில் வைச்சிருர்கினம்" கெளரி விடாமற் சொன்னுள்.
*கோயிலாவதேதடா குளங்களாவதேதடா கோயிலும் மனத்துள்ளே குளங்களும் மனத்துள்ளே" சாமியார் இப்படிச் சொல்லிக்கொண்டே கெளரியின் தலையைத் தடவிஞர். 'பள்ளிக்கூடம் போருயோ மகளே' கெளரிக்குத் திடீரென்று அழுகை வருமாப் போல இருந்தது. வெள்ளம் வந்த நாளிலிருந்து இதுவரை ஒன்று மாறி ஒன்ருய்ப் பல பிரச்சினைகள் வந்து பள்ளிக்கூடமே போக முடியாத நிலை யைச் சொன்னுள். w
"தீமையிலும் சிலவேளை, நன்மை பிறக்கும் மகளே, எதையும் செய்து முடிச்க வேண்டும் என்று மனதார நம்பினல் கட்டாயம் செய்யலாம். உண்மையான பிரார்த் தனைகள் ஒரு நாளும் வீண் போகாது" அவர் குரலில் ஏதே" தீர்க்க தரிசனமான உண்மை ஊடுவியிருப்பதுபோல் உணர்ந் தாள் கெளரி. நல்லவர்களின் வாக்கு பலிக்கவேண்டும். பாடசாலை கட்டுப்படவேண்டும் நாங்கள் படிக்க வேண்டும். நடக்குமா? ஊர் மக்களின் ஒத்துழைப்புத் தேவை, ஒத்துப்புக்கு ஒற்றுமை தேவை. பெரியப்பாவும் ராசநாயகத் தாரும் செருப்படிபட்ட க  ைத  ைய ச் சாமிக்குச் சொல்லலாமா?

Page 91
ξ Υ2 foldstriuiríbpiasair
சாமியார் இவர்களை சமாதானப்படுத்தி வைப்பாரா? இயந்திர வேகத்தில் அவள் மனத்தில் ஆயிரக்கணக்கான கேள்விகள் அலைமோதின.
பணப்பைத்தியம் பிடித்து உறவுகளை மறந்து ஒருத்தரை ஒருத்தர் பழிவாங்க முடிவு கட்டியிருக்கும் பெரியப்பாவி லும் ராசநாயகத்திலும் கோபம் வந்தது கெளரிக்கு. இவர்கள் சண்டையால் ஊர் இரண்டுபட்டு போகிருர்கள் என்பதை நினைத்தபோது இன்னும் கெளரிக்கு ஆற்ருமை யாக இருந்தது. என்ன நடக்கப் போகிறது? என்று அவள் மன்ம் அல்லற்பட்டுக் கொண்டிருந்தபோது தங்கம்மாவைத் தேடிப்போன அண்ணுவும் பத்மநாதனும் வந்து சேர்ந் தர்ர்கள். சோர்ந்த முகத்துடன் அவர்கள் வந்து சேர்ந்த போதே என்ன நடந்திருக்கும் என்று ஊகிக்கக் கூடியதா யிருந்தது. ممبر
சொன்ன விடயமறிந்து பர்லிப் போடி "ஒ" "வென்று கதறியழத் தொடங்கச் சாமியார் போய் ஆறுத்ல் சொன்ஞர்.
வெள்ளம் வந்து வீடு வாசல் அழிந்த, இனக்கலவரம் வந்து அந்த ஏக்கத்துடன் கிழவி செத்துப்போய் இப்போது வகுப்புக் கலவரத்தில் தன் ஒரே மகளையும் அவள் குடும்பத் தையும் பறிகொடுத்த கிழவனின் கதறல் பரிதாபமாக இருந்தது எப்போதும் அறைகுறை வெறியில் ஆடலும் பாடலுமாய் *கிக்கி" என்று யாரைப் பார்த்தும் சிரித்துக் கொண்டு திரியும் கிழவன் குழந்தையைப்போல் தேம்பித் தேம்பி அழுதார். ஆச்சி அம்மா மாமி மற்றும் சிலர் சேர்ந்து தங்கம்மாவையும் அவள் குடும்பத்தினரையும் நினைத்து அழுதனர். நாலா பக்கமும் சிங்களக் குடியேற்றங்களால் சூழப்பட்டிருந்த ஒன்றிரண்டு தமிழ்க் குடியேற்றங்கள் பலத்த சேதத்துக்குள்ளாகின. வீடு எரிந்து தரை மட்டமாகிக் கிடந்ததாம். வீட்டுக்குரிய எந்தப் பொருளும் கையில் எடுத்துக் கொண்டு வரமுடியாத அளவு எரிந்து தீய்ந்து கிடந்ததாம். குடும்பத்தையே கோரமாக அடித்து, வெட்டிக்

ராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம் 科73>
கொலை செய்துவிட்டு வீட்டோடு எரித்தார்களாம். தப்பிப் பிழைத்தோடிய ஒள்நிரண்டு குடியேற்றக்காரர் சொன்ன கொடுமைகளே நினைக்கக் கெளரிக்குக் குடல் நடுங்கியது.
எரிபடாமல் இருந்த வீடுகளில் சிங்களச் சனங்களைக் கொண்டு வந்து வைத்தார்களாம். தெருக்களில் சந்திகளில் ஏதும் அரசமரமிருந்தால் புத்தர் சிலை கொண்டு வைக்கிருர் களாம். மாமா இந்த கதையை கேட்டவுடன் ஊரில் உள்ள அரசமரங்களை எல்லாம் வெட்டித் தள்ள வேண்டுமென்ருர், **அவ்வளவு துணிவாக எங்கட ஊருக்குள் சிங்களவன் வரவோ" என்று வீருப்புக் காட்டினர் பெரியப்பா,
அவரின் விசர்க்கதை கெளரிக்கு சிரிப்பைத்தான் தந்தது. ஒன்றிரண்டு சிங்கள ஆமிக்குப் பயந்து தோணி ஏறி தில்லை ஆறு தாண்டி திருக்கோயிலுக்கு அனுப்பியதை மறந்து? விட்டாரா?
பெரியப்பாவின் பெரிய மனிதக் கதையைப் பொருட் படுத்தாமல் ரோட்டுக் கரையிலிருந்த பெரிய அரச மரம் அன்று பின்னேரம் வெட்டப்பட்டது. மரமிழந்த சுற்ருடல் வெறிச்சென்றிருந்தது. சந்தியிலுள்ள அரசமரமும் வெட்டப் பட்டது. என்ன அநியாயம் அரசாங்கக் கொடுமைகளுக்கு இந்த அரசமரங்களும் பழியா? பாடசாலையிலுள்ள மரம் வெட்டுப்பட ராமநாதன் வாத்தியார் விடவில்லை. சிங்கள வரின் அடியுதைக்குப் பயந்து வயல்வெளியில் தனியாக இருந்த குடும்பங்கள் ஊரோடு வரத் தொடங்கியிருந்தன. அத்துடன் பட்டணங்களில் படித்துக்கொண்டிருந்த ஒன் றிரண்டு மாணவர்களும் ஊரோடு தங்கிவிட்டார்கள் பெற்றேரின் வேண்டுகோளுக்காக.
வெள்ளம் வந்தபோது கிராமப்பாடசாலை நிறைந்து வுழிந்ததைவிட இப்போது எத்தனையோ மடங்கு நிறைந்து வழிந்தது. அரசமரத்துக்கீழும் வகுப்புகள் வைக்கப் பட்டன. அதன் காரணத்தால் அரசமரம் வெட்டப்படக் கூடாது என்று பிடிவாதம் பிடித்தார் ராமநாதன்"

Page 92
74 தில்லையாற்றங்கரை
வாத்தியார். புதுப் பாடசாலைக் கட்டிடம் உடனடியாகத் தேவை என்பதை வலியுறுத்திச் சொல்ல இன்னுெருதரம் பாராளுமன்றப் பிரதிநிதியைப் பார்க்கப் போனது மட்டு மல்லாமல் பிரதிநிதியையும் அரசாங்க அதிபரையையும் வரச்சொல்லி விண்ணப்பித்தார்கள் வாலிபர்கள்.
மாணிக்கவாசகம் ஊரோடு நின்றிருந்தான் செல்வ ராசா, கதிர்வேல் போன்ற இளைஞர்களுடன் சேர்ந்து பாட சாலை விஷயத்தில் மிக மிக ஊக்கமெடுத்தது சாரதாவுக்குச் சந்தோஷம். அந்தச் சாட்டில் மாணிக்கவாசகம் அண்ணு வுடன் சேர்ந்து பெரியப்பா வீட்டுக்கு வந்தபோது சாரதா பூரிப்பில் மலர்ந்து போனுள்.
**அவர் ஊரோடு நின்டால் எவ்வளவு நிம்மதி" என்று பெருமூச்சு விட்டாள் சாரதா.
“எனக்கல்லோ த லை யி டி நான்தானே உன்ற புராணத்தைக் கேக்க வேணும்" கெளரி அலுத்துக் கொண் டாள்.
ஊராரின் வேண்டுகோளின்படி பாராளுமன்ற பிரதி நிதியும் அரசாங்க அதிபரும் இவர்களின் பாடசாலையைப் பார்வையிட வருவதாக அறிவிக்கப்பட்டது.
நீங்க எப்ப பள்ளிக்கூடம் போகப் போறியள் கெளரி" அண்ணுவிடம் வந்த பத்மநாதன் கேட்டான். 'புதுக் கட்டிடம் வந்து ஒன்பதாம் வகுப்பு வைக்கலாம் என்டு அனுமதி வந்தாத்தான் போகலாம்" கெளரி ஏக்கத்துடன் சொன்னுள். ‘என்ன அரசாங்கத்தின் அனுமதிக்குக் காத்தி ருக்கிறது? எல்லாரும் போய் இருந்து கொண்டு எங்களுக்கு அயலூருக்குப் போய் படிக்க வசதியான பாதுகாப்பில்ல, இஞ்சதான் படிக்கப் போறம் எண்டு சொன்ன எம். பி. என்ன பேசாமலா இருக்கப் போருர்' பத்மநாதன் கெளரியைக் கேட்டான். பத்மநாதன் சொல்வது பகிடியோ உண்மைய்ோ என்று அண்ணுவைக் கேட்டாள் கெளரி.

ராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம் 175
*அவன் சொல்லறது. சரிதானே அப்படித்தான் ராமநாதன் வாத்தியாரும் சொல்லுகிருர்' " அண்ணுவும் ஒத்துப் பாடினன். அடுத்த வினடி வேலிக் கம்பியைத் தாண்டிப் போய்ச் சாரதாவிடம் விஷயத்தைச் சொன்னுள் கெளரி. சும்மா சாட்டுக்குப் போகவோ" சந்தேகத்துடன் கேட்டாள் சாரதா, 'எடி மாடு; சாட்டுக்கில்லயடி நாங்க எல்லாரும் இப்படிச் சொன்னத்தாளும் எஸ்.எஸ்.சி வைக்க அனுமதி கிடைக்குமாம்.' கெளரி கத்தாத குறையாகச் சொன்னுள் சாரதாவிடம். **வாத்தியாருக்கும் அவரின் தம்பி பத்மநாதனுக்கும் நாங்க சும்மா போய்ப்பள்ளிக்கூடத் தில் இருக்க அம்மாக்கள் விடுவினமோ" சாரதாவுக்கு இன்னும் சந்தேகம்.
**கொஞ்ச நாள் போய்ப் பாப்பமே சாரதா' கெளரி கெஞ்சாத குறையாகக் கேட்டாள். வாத்தியாரும் பத்மநாதனும் அன்று சொன்ன விஷயத்தைக் கேட்காமல் விட்டிருந்தால் என்ன நடந்திருக்கும்?
4.
ஒன்னுவிட்டு ஒன்ன அடிக்கடி ஏதோ மாற்றங்கள் அந்த ஊரில் நடந்து கொண்டிருந்ததாலோ என்னவோ இந்தப் பெண்கள் மூவரும் பாடசாலை போக முடிவு செய்ததை ஆச்சியோ அம்மாக்களோ பெரிதாக எடுத்துச் சத்தம்
போடவில்லை.
ஏதோ விசர்த்தனத்தில் போகுதுகள் போகட்டும் என்று நினைத்திருக்கலாம் அவர்கள். மாணிக்கவாசகத்தின் காதலுக் குச் சாரதாவின் படிப்பு எவ்வளவு முக்கியம் என்று கெளரி மறைமுகமாக ஞாபகப்படுத்த வேண்டியிருந்தது. மூன்று பேருமாகச் சேர்ந்து இவ்வளவு காலமும் ஒன்ருய்ப் படித்து இப்போது மட்டும் மரகதம் தனியாக வீட்டோடு நின்று கத்திரிக்காய்க் கன்றுகளுக்கு தண்ணிர் வார்ப்பதோ என்று ப்ரிதாபக் குரலில் கேட்டாள் கெளரி. பரிமளம் மாமி மரகதம்

Page 93
176 தில்லையாற்றங்கரை
பாடசாலைக்குப் போவதைப் பற்றி ஒன்றுமே சொல்லவில்லை. ஒருத்தரின் தூண்டுத்தலுமில்லாமல் ஊர்ப் பள்ளிக் கூடத் துக்கு வந்து சேர்ந்தவள் வசந்தா, அயலூருக்கு அனுப்ப
வீட்டார் விரும்பவில்லையாம். *வளிசல்" சுந்தரமூர்த்தி
வசந்தா பாடசாலைக்கு வரத் தொடங்கிய பின் “கெளரவ
மாக" ஏன் நடந்து கொண்டான் என்பது பிடிபுட் ஒன்றிரண்டு மாதம் எடுத்தது கெளரிக்கு.
பாராளுமன்றப் பிரதிநிதியும் அரசாங்க அதிபரும் வேறு சில உத்தியோகத்தர்களும் இந்தப் பள்ளிக் கூடத்துக்கு வந்தபோது பொங்கி வழியும் மாணவர்கள் தொகையும் இடமின்மையையும் நேரடியாகக் கண்டார்கள்.
இராணுவத்தினர் மரிய மலரை கெடுத்த கதை. சொல்லிய மாமா அந்தக் காரணத்தால், இனியும் ஏதும் தற்செயலாக நடந்தாலும் ஏன்ற பயத்தால் இந்த இளம் பெண்கள் அயலூர் பாடசாலைக்குப் போகப் பயப்படுகிருர் கள் என்றும் அவர்களின் பயத்துக்குக் நியாயமான காரண மிருக்கிறது என்றும் இல்லாவிட்டால் ஒன்பதாம் வகுப்பு படிக்க வேண்டிய பெண்கள் ஒரு வகுப்பும் இல்லாமல் இந்தக் கிராமப் பாடசாலையில் தங்கமாட்டார்கள் என்று உருக்கமாகச் சொன்னர். இவர்கள் ஊருக்கு வெள்ளம் வந்த நாட்களிலேயே புதுப் பாடசாலை கட்ட அனுமதி கிடைத்திருந்தது. ஆனல் அரசாங்க உத்தியோகத்தவர் களின் தாமதத்தால் வகுப்பு கலவரத்தால் அந்தத் திட்டம் பின் போடப்பட்டுக் கொண்டே வந்தது. எம். பி வந்து பாடசாலையைப் பார்வையிட்ட பின் அடுத்த ஒரு சில கிழமைகளில் பாடசாலைக் கட்டடம் கட்ட ஆரம்பிக்கப்
• التي سايناLf
*சோழியன் குடுமி சும்மா ஆடுமோ? தான் எங்கரை ஏமாத்தி அரசாங்கத்தில் சேர்ந்தது கரி எண்டு நியாயூ" படுத்தத்தான் இந்த உதவி" என்றும் கதைத்தார்கள் மளமளவென்று கட்டுப்பட்டுக் கொண்டிருக்கும் பாடசாலுைக்

ராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம் 17
கட்டிடத்தைக் கண்டதும். புது ஆசிரியர்கள் சிலர் வந்தார்கள். ஆரம்ப பாடசாலையாகவே நின்று விடுமோ என்று பயந்திருந்தது போய் இப்போது அந்தப் பாடசாலை யில் மாணவர்களின் வரவும் கூடி ஆசிரியர்களின் வருகையையும் கூடி உயர்தர வகுப்பு வைக்க அனுமதியும் கிடைத்து விட்டது. புதுக்கட்டிடம் முடிந்தபின் எஸ்.எஸ்.சி. 'வகுப்புகள் வைக்க அனுமதி கிடைத்திருந்தது. ஆணுல் அதன் முன் பாடசாலை மாணவர்கள் வழக்கம்போல் நெல் விதைப்புக் காலத்தில் வயல்களுக்கு ஓடிப் போகாமல் இருக்க வேண்டுமே என்ற பயம் பாடசாலையின் தரத்தை உயர்த்த உழைத்த எல்லோர் மனத்திலும் பதிந்திருந்தது.
போன வருடம் வெள்ளம் வந்து பட்ட நட்டத்தை ஈடு படுத்தும் விதத்தில் கிராமத்தார் வைகாசி மாதம் முடியவும் சேனை வேலைகள் தொடங்கினர்.
வழக்கமாக ஆடிமாதக் கடைசியில்தான் காடு திருத்தப் போவார்கள், ஆடிமாதம் கதிர்காமத் தீர்த்தம் திருவிழா முடியத் தங்கள் வயல் வேலைகளை முருகன் ஆசீர்வாதத்துடன் தொடங்குவதான நம்பிக்கைக் கொண்டவர்கள் அந்தக் கிராமத்தினர். ኣ
வகுப்புக் கலவரம் வைகாசி மாதம் தொடங்கியதால்: வழக்கமாக நடக்கும் கண்ணகியம்மன் சடங்கும் தடைப் பட்டு விட்டது. கதிர்காமம் போவது பற்றிய பயம் எல்லோர் பேச்சிலும் தெரிந்தது. ஊரிலிருந்து ஒருத்தரும்: கதிர்காமம் போகவில்லை.
சின்ன கதிர்காமம் என்றழைக்கப்படும் திருக்கோயில்: சித்திர வேலாயுத சுவாமிகள் திருவிழாவுக்கு ஆணி மாதத் திலேயே பக்தர்கள் குவியத் தொடங்கினர்.
யாழ்ப்பாணத்துச் சுவாமிகள் என்று ஊராரால்
சொல்லப்படும் நடைப்பாதைப் பக்தர்களின் வருகை
வகுப்புக் கலவரத்தால் இந்த முறை மிகக் குறைவாக இருந்
12-سن

Page 94
Ꮔ 78 தில்லையாற்றங்கரை
தது. இல்லை என்ருல் வழக்கம்போல் கூட்டங்கூட்டமாக யாழ்ப்பாணத்துச் சுவாமிகள் வந்து "வழிப்பிச்சை" எடுத்துக்கொண்டு கதிர்காமம் செல்வார்கள். வருபவர்கள் யாழ்ப்பாணத்தார் மட்டுமல்ல. நடைபாதை மூலம் நடந்து கதிர்காமத்தையடைந்து தங்கள் நேர்த்திக் கடனைக் கழிக்கும் பக்தர்கள், இந்தியா, யாழ்ப்பாணம், திருகோணமலை போன்ற இடங்களிலிருந்து வந்து மட்டக்களப்புக் கிராமங் களுக் கூடாக திருக்கோயில் சித்திர வேலாயுத சுவாமிகள் கோயில் கண்டு உகந்தை முருகனைத் தரிசித்து கதிர்மலைக்குப் போகிறவர்கள் வைகாசிமாதக் கடைசி தொடக்கம் ஆணி மாதக் கடைசிவரை இந்த பக்தர்களின் படையெடுப்பு ஊரெல்லாம் பரந்திருக்கும். நீண்ட பிரயாணத்தினுல் சடைபிடித்த முடிகளும், தூசிபடிந்து நிறம்மாறி காவியான (அல்லதுகாவி பூசப்பட்ட்) உடுப்புடன் வரும் பக்தர் கூட்டத் தைச் 'சாமிக் கூட்டம்" என்றழைக்கப் பண்ணியிருந்தது.
கெளரியின் அப்பா பெரிய பக்தர் என்றபடியால் இப்படிச் சாமிக் கூட்டங்கள் ஒவ்வொரு வருடமும் அவர்கள் வீட்டில் கூடாரமடிப்பது சர்வ சாதாரணம். பெரிய அண்டாக்களில் சமையல் நடக்கும். எங்கிருந்துதான் வருமோ தெரியாது. இந்த கஞ்சாக் கட்டுகள் பலதரப்பட்ட அளவிலும் “சுவாமிகளுக்கு" கொண்டுவந்து கொடுக்கபடும்.
பாலிப் போடிக் கிழவனும் தன் கள்ளச் சாராய வெறி மறந்து கஞ்சா போட்டுக்கொண்டு சாமியாராகிவிடும். ஆனல் கள் வெறியோ கஞ்சா வெறியோ எல்லாம் நிதான மிழந்த வெறிதானே? கிழவன் கஞ்சா வெறியில் வேட்டி உரிய உரிய தடுமாறித் திரியும். கடவுளைப்பற்றியும் லிங்கத்தைப்" பற்றியும் கதையளக்கும். பாலிப் போடிக் கிழவனுக்குப் பாட்டும் கவியும் பலதரப்பட்ட பழமொழி களும் தண்ணீர்பட்ட பாடாய் வரும். பாடசாலை விட்டு வரும்போது கிழவன் அரைகுறையுடுப்போடு சிவலிங்கப் புராணம் வாசிக்கும்போது குமரிப் பெண்களுக்குக் கிழவனைக் கடந்து செல்வதே தர்ம சங்கடமாக இருக்கும். 'சிவலிங்கம்

ராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம் 179
கிடக்கட்டும் முதலில் உன்ர லிங்கத்தைத் காப்பாற்று போடியாரே' என்று வாலிபர்கள் கிண்டல் செய்வார்கள். கிழவன் சித்தர் பாடலில் தொடங்கிவிட்டது.
*" கட்ட கல்லைத் தெய்வம் என்று நாலு புஷ்பம் சாத்தியே சுற்றிவந்து மொன மொணன்னு சொல்லும் மந்திரம் ஏதடா? கட்டகல்லும் பேசுமோ நாதன் உள் இருக்கையில் சுட்ட சட்டி சட்டுவம் கறிச்சுவை அறியுமோ?"
என்று புலம்பியது.
வீட்டுக்கு வரும்போது அப்பாவும் மற்ற சாமிகளும் பலா மரத்தின் கீழமர்ந்து பகவத் கீதையைப் பற்றிக் கதைத் துக் கொண்டிருந்தார்கள். *கெளரவர் தொகை எத்தனை லட்சமாயிருந்தாலும் என்ன உண்மையும் கண்ணியமுமுள்ள பாண்டவர்களின் வெற்றிதானே தர்மத்தின் தீர்ப்பு என்று கண்ணன் சொன்னன்." ராமலிங்க சாமியார் கஞ்சா வெறி யில் கதைத்துக் கொண்டிருந்தார். இந்த நேரம் கதிர்காமத் தில் இருக்க வேண்டியவர். இப்போது கோயிலுமில்ஜல பூசையுமில்லை. வழிப்போக்குச் சாமிகளுடன் பகவத் கீதை யைப் பற்றி பிரசங்கமா? வந்திருந்த சாமிகள் தங்கள் கதிர்காமம் போக முடியாமைக்கு காரணமாக マ到próFIT広r கத்தை வைது கொண்டிருந்தார்கள்.
, பெரும்பான்மைச் சிங்கள அரசாங்கத்தைத் துரியோ தனர் கூட்டம் என்றும் கஷ்டப்படும் தமிழரைப் பாண்டவர் என்றுமா ஒப்பிட்டுப் பேசுகிறர் *rrլճlայրrՒջ
**அன்று அட்டூழியக்காரர் அவையில் திரெளபதி: இன்று அதர்மம் பிடிச்ச சிங்களவனிட்ட எங்கட பொண்கள்" சாமியாரா இப்படிக் d560 553)g?rff? Gesorth) ஆச்சரியத்துடர் சாமிகளின் கதையை அவதானித்தாள். நேரில் அனுபவித்த இடர்கள் அவரை இப்படி விரத்தியாகப் பேச வைத்திருக் கிறது? **ஆனல்கொடுமைகளும் கொடுமைக்காரரும் நிலைப்ப தில்லை. முடிவில்லாத பாதையில்லை பாருங்கோ. இந்த

Page 95
180 தில்லையாற்றங்கரை
நாட்டில் அதர்மம் அழிஞ்சு நீதி பிறக்கிற காலம் கிட்ட வருகுது. பொங்கிற பால் வழியத்தான் செய்யும்" சாமியாரின் உணர்ச்சிகரமான பேச்சு கெளரியின் மனத்தை உருக்கியது.
கலவரத்தில் அவர் பட்ட துன்பங்கள், தங்கம்மா குடும்பம், தாய் தகப்பனை இழந்து,தங்கள் பெண்மையிழந்து, அங்கங்கள் கிழிக்கப்பட்டு சிங்கள பூரீ குத்தப்பட்ட அம்பாரைப்பெண்கள் ஞாபகம் வந்தன. எத்தனைகொடுமை; எத்தனை கொடுமை. வகுப்பு கலவரம் முடிந்து இலங்கையின் நிலைமை சீரடைந்து வருவதாகச் செய்திகள் வருகின்றன a 676 Lotun?
பண்டார நாயக்கா அரசாங்கம் வந்தபோது யு.என்.பிக் காரர் சிங்களவரைத் தமிழர்களுக்கெதிராகத் தூண்டி விட்டது போல் யு. என். பி வந்து அதே காரியத்தைச் செய்யாதோ? வழி எல்லாம் விஷவாயு பரப்பிய நாகம், போல் கண்டிக்குப் பாதை யாத்திரை போன ஜே.ஆர். ஜெயவர்த்தணுவைத் திட்டினுள் கெளரி.
வீட்டார் மாணிக்கவாசகத்தைக் கொழும்பில் வேலே செய்ய வேண்டாம் என்று சொல்லி விட்டார்கள். ஆனலும் மாணிக்கவாசகம் எம்.பிக்கு காசு கொடுத்தோ என்னவோ மட்டக்களப்பில் கச்சேரியில் கிளார்க்காகச் சேர்ந்து போய்விட்டான்.
அவன் ஊரில் நிற்கும் வரையும் பூரிப்புடன் இருந்த சாரதாவின் முகம் இப்போது வாடிக் கிடந்தது.
பாடசாலைக்கு வருவது என்னவோ உண்மைதான். ஆனல் அவள் நினைவெல்லாம் மட்டக்களப்பில்தான்.

ராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம் 181
கெளரி, மரகதம், சாரதா, வசந்தா, கமலா எல்லோரும் கூட்டமாகவும் அண்ணு, மாணிக்கவாசகம், பத்மநாதன், சுந்தரம் என்போர் கூட்டமாகவும் திரிந்தனர்.
கமலம் பியுபிள் ரீச்சர் கிடைக்கவில்லை என்றும் தான் யாழ்ப்பாணத்துக்கு ‘நேர்ஸ்' வேலைக்கு படிக்க போவ தாகவும் சொன்னுள்.
'அண்ணுவைப் போல யாழ்ப்பாணத்தில மாட்டுப் படாதேயுங்கோ' என்று கமலத்துக்குச் சொன்னன் பத்மநாபன்.
**இழுத்துப் பிடிக்கிற காந்தம் எங்க இருக்கெண்டு -உனக்கென்னடா தெரியும்" அண்ணு பகிடி விட்டான். கமலத்துக்கு வெட்கம் வந்துவிட்டது. இவர்கள் கூட்டத்தில் சேராமல் தனியாகத்தான் ஒரு தலைவன் மாதிரி இன்னெரு கூட்டமாகத் திரிந்தான் செல்வராசா. செல்வராசா இப்போது தகப்பனேடு கடையைப் பார்த்துக் கொண்டிருக் கிழுன். நிறைய வட்டிக்குக் காசு கொடுக்கிருர்கள் என்று ஊரெல்லாம் கதை.
செல்வராசா குடும்பத்தில் எல்லோரும் ஆண்கள். ஐந்து பொடியன்கள். 'இப்படிக் கண்கெட்ட விதத்தில் கொள்ளையடிச்சு என்ன செய்யப் போயினம்" என்று வட்டிக்குக் காசு வாங்கும் , ஏழைகள் திட்டும்போது கெளரிக்கு மனத்தை என்னவோ செய்கிறது. ஆச்சி செல்வ ராசாவை மாப்பிள்ளையாக்க ராசநாயகம் வீட்டுக்கு காவடி எடுப்பது ஒரு காரணமாக இருக்கலாம். ஆணுலும் ஒருவரும் கெளரியிடம் நேரடியாக கதைக்கவில்லை.
திருக்கோயில் திருவிழா நடந்து கொண்டிருந்தது. கோயிலுக்கு முன்னுக்கு வங்காள விரிகுடாக் கடல் இருளில் பரந்து கிடந்தது. கடற்கரை மணலில் கமலமும் கெளரியும் உட்கார்ந்திருந்தார்கள். மரகதமும் சாரதாவும் தூரத்தில்

Page 96
182 தில்லையாற்றங்கரை
*மறைவுக்குப்" போயிருந்தார்கள். *உங்கட அண்ணுவுக்கு உங்க மேல நல்ல விருப்பம் இல்லயா கெளரி" கமலா கேட்டாள்.
'ஓம்' என்ருள் கெளரி. அண்ணுவில் அவளுக்கு உயிர் என்று சொல்ல ஆசை. ஆனலும் அடக்கிக் கொண்டாள். கமலம் ஏதோ சொல்ல நினைக்கிருள் என்று கெளரிக்குத் தெரியும். ஆணுலும் கேட்க விருப்பமில்லை.
கமலத்தின் கைகள் கடல் மண்ணைக் கிண்டிக் கொண் டிருந்தது. பார்வை தூரத்தில் வெறிச்சென்றிருந்தது. இருண்ட இரவு. உறுமும் கடலோசை. கோயிலிலிருந்து வரும் நாதஸ்வர ஓசை. எல்லாம் கமலத்தைப் பொருத்தள வில் மெளன ஒலிகள் மாதிரி இருந்திருக்க வேண்டும், ஏனென்ருல் அவள் நீண்ட நேரம் பேசவில்லை. கமலத்தை இனி நாலு வருஷத்துக்குக் காண முடியாதா? “எனக்கு கடிதம் போடுவியளோ? கமலம்' கெளரி கேட்டாள். பாழ்ப்பாணம் என்பது கெளரியைப் பொருத்தவரையில் ஆச்சியின் கதையில் வரும் ஏழு கடல்களுக்கும் அப்பாலுள்ள் இடம்.
'ஓம்' கட்டாயம் போடுவேன். கெளரி நீங்க்ளும் போடவேணும். நல்லாப் படிக்க வேண்டும். கெட்டிக்காரி எண்டு உங்கட அண்ணு சொன்னர். **கமலம் மனதாரச் சொல்கிருள் என்று தெரியும். தான் கெட்டிக்காரி என்று அண்ணு நினைப்பது மட்டுமல்ல மற்றவர்களுக்கும் சொல்லது கெளரிக்குப் பெருமையாயிருந்தது." “கெளரி அண்ணுவுக்கு சொல்லுங்கோ எங்களை எல்லாம் மறக்க வேணும் எண்டு”* கமலம் இப்படிச் சொல்லும் போது குரல் அடைத்தது. அழப் போகிருள் போலும் **கட்டாயம் சொல்லுவேன்" "கெளரி இப்படிச் சொல்லிக் கொண்டிருக்கும் போது சாரதாவும் மரகதமும் வந்து கொண்டிருந்தார்கள்.
*கமலம் திருக்கோயில் பகுதி தான் இராவணன் கோட்டை இருந்த இடம் எண்டு சொல்றவையாம்

ராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம் * 183
உண்மையோ" என்று கேட்டாள் சாரதா, 'ஓம் அம்மா சொன்னவை திருக்கோயில் பக்கத்தில இருந்து திருகோண மலே வரைக்கும்இராவணன் ஆட்சி இருந்ததாம். திருகோண மலைக் கோணேசர் கோயிலில இருக்கிற இராவணன் வெட்டு இதுக்குச் சாட்சியாம்' மரகதம் சாரதாவுடன் தர்க்கம் 86šrgyagy இதுதான் மூதற்தடவை.
கமலம் சொன்னுள் *திருக்கோயிலுக்கு ஆறேழு மைல் தூரத்தில் கடல் நடுவில் சிலஅழிந்த கட்டிடங்கள் கிடக்காம், கடலோடி ஆராயிர ஆக்கள் எல்லாம் வந்து ஆராய்ச்சி செய்தவை. சில வேளை இராவணன் கோட்டை இருந்ததுக்கு ஆதாரம் இருக்கலாம். இதெல்லாம் கதை தீானே' என்று சொன்னுள். திருவிழா தொடங்கும் வரை கடற்கரையி லிருந்து ஏதேதோ பேசிக் கொண்டிருந்தார்கள்.
கமலம் யாழ்ப்பாணம் போவதைப் பற்றிக் கதை வந்தது. தேர்சுகள் எல்லாம் ட |ா க் டர் கண் த் தா ன் கல்யாணம் முடிக்கிறவை" மரகதம் சொன்னுள். ஒரு சில மாதங்களுக்கு முன்தான் கைராசிப் படத்தில் சரோஜா தேவியை நேர்வாகப் பார்த்துப் பரவசப்பட்டார்கள்.
**இந்த நேர்ஸ் பத்திரமாக இந்தப் பக்கம் வந்து சேருவா" கமலம் சிரித்தபடி சொன்னள்.
*ரீச்சர் ரெயினிங் இரண்டு வருஷம். ஏன் நேர்சுகள் மட்டும் கணவருசம் படிக்க வேணும்' என்று கேட்டாள் மரகதம். கமலம் விளக்கம் சொல்லத் தொடங்கத் தூரத்தில் அண்ணுவும் பத்மநாதனும் இவர்களேத்தேடிக்கொண்டு வந்தார்கள். எல்லோரும் எழும்பி கோயிற் பக்கம் நடக்கத் தொடங்கினர்கள். கமலம் மட்டும் கடைசி வரைக்கும் இருந்தாள்.இவர்கள் எல்லாம்போய் கொண்டிருக்கும்போது கெளரி திரும்பி பார்த்தாள். அண்ணுவும் கமலமும் இருளில் வெறும் உருவங்களாக வந்து கொண்டிருந்தார்கள், என்ன கதைப் பார்கள்?

Page 97
刁84 தில்லையாற்றங்கரை
தனக்கு சொன்னதுபோல் அண்ணுவுக்கும் சொல்வானா அடிக்கடி கடிதம் போடச் சொல்லி?
அப்படி நேரடியாகச் சொல்லும் துணிவிருந்தால் ஏன் தன்னிடம் சொல்கிருள்?
கமலம் மச்சானுக்கும் அண்ணுவுக்கும் சாரதாவுக்கும் மாணிக்கவாசகத்துக்கும். கெளரி நினைவை தொடர விரும்பவில்லை. அண்ணுவும் கமலமும் வடிவான ஆக்கள் எவ்வளவு சந்தோசமாக இருப்பார்கள்! கெளரியின் மனம் சந்தோசக்தில் குதித்தது.
வயல் வேலைகள் தொடங்கி கிராமத்தார் வயல்களுக் கும் போகத் தொடங்கினர்கள். அதற்கு முதல் கோயில் கட்டும் விஷயமாகப் பொதுக் கூட்டம் நடந்தது. சாமியார் எப்படியும் ஒரு புதுக் கோயில் கட்டி முடிக்க வேண்டும் என்பதில் ஆவலாயிருந்தார். .
**ஏன் கடவுளைத் தேடி கதிர்காமம் போய் சிங்களவ னிட்ட அடிவாங்க வேணும். எங்களுக்கு ஒரு கோயில் வேணும்' சாமியார் விடாமல் தன் பிரசங்கத்தைத் தொடங்கியிருந்தார். அவரின் பிரசங்கமும் ஊர் மக்களின் கருத்தில் பதிந்தது. வெள்ளத்தில் கூரையிழந்த ஒலைக் கோயிலில் பிள்ளையார் குடி கொண்டிருந்தார்.
ஊர் மக்கள் பூசைகள் பொங்கல்கள் வழக்கம்போல் செய்கிருர்கள். சாமியார் வெள்ளிக்கிழமை தோறும் கூட்டுப் பிரார்த்தனை தொடங்கி விட்டார். கெளரிக்கு அதைவிட சந்தோசம் வேருென்றுமில்லை. சாமியாருடன் கோயிலுக்குப் போய்க் கூட்டுப் பிரார்த்தனைகளில் உதவி செய்வதும் படிப்பும் வீட்டு வேலையும் கெளரியின் நேரத்தை விழுங்கிவிட்டது. -

ராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம் 185
அம்மாவுக்கு நிறைமாதம். ஆச்சிக்கு சரியான வேலை. அப்பா வயற்காரர்களை மட்டும் நம்பியிராமல் வெள்ளத்தில் உடைந்த வரம்புக் கட்டுகள் திருத்த வயலுக்குப் போய்க் கொண்டிருந்தார்.
அண்ணுவைப் பெரியப்பா படிப்பைத் தொடராமற் பண்ணி விட்டார். ஊரையடுத்துள்ள குளம் ஒன்றை கிராமத்தார் வேளாண்மை செய்யும் யோசனையில் வரம்பு கள் போட்டார்கள். அந்தக் குளத்தில் நல்ல பிரதேசம் பார்த்துப் பெரியப்பா பெருவாரியான நிலத்தைத் தன் பெயருக்கும் தன் மகன் பெயருக்குமாக எழுதிக் கொண்ட தாக ஊரில் கலகலப்பு ஏற்பட்டது. இதனுல் ஏற்பட்ட வாய்த் தர்க்கத்தில் கோயில் கட்டத் தொடங்கிய பேச்சு தடைப்பட்டது.
மயிலுப் போடியாரும் ராசநாயகத்தாரும் ஊரில் நடக்கும் எந்த விசயத்தையும் பெரிது படுத்தி இப்படித் தங்கள் சுய பிரபல்யத்துக்குப் பாவிப்பதைக் கண்டு மனம் நொந்து போனர் சாமியார். “பொதுத் தொண்டை சுய நலத்துக்குப் பாவிப்பது அநியாயம். இப்படிப் பேராசிை பிடித்தலைந்து என்ன காணப் போகிருர்களோ" என்று அலுத்துக் கொண்டார்.
**வயது போனவர்கள்தான் இப்படி புத்தி கெட்டலை கிருர்கள், வாலிபர்கள் நீங்கள் பொறுப்புணர்ச்சியுடன் நடக்க வேணும். இந்தக் காலத்தில் காசு தவிர ஒன்றும் பெரிசில்லாமல் போய் விட்டது. கடவுளைக் கூடத் தன் தேவைகளுக்குப் பாவிக்கத் தொடங்கி விட்டான்கள்'" உடைந்த மனத்துடன் ராமலிங்கசுவாமியார் அண்ணுவுக்குச் சொல்லிக் கொண்டிருந்தார்.
அரசாங்க காணியைப் பிரித்தெடுத்த விதத்தில் தான் தகப்பனுடன் சேர்ந்து ஊராரை ஏமாற்றி விட்டதாக மற்றவர்கள் நினைக்கிறர்கள் என்பது அண்ணுவுக்குக்

Page 98
186 தில்லையாற்றங்கரை
கோபத்தையுண்டாக்கியிருந்தது. “ஏன் சாமி இப்படிக் கெட்ட கதைகள் தேடி வருகுது' என்று மனவருத்தப் பட்டான்.
“தம்பி நீ சின்னப்பிள்ளை, இப்படி எத்தனையோ கீதைகள் வரும் தாங்கிக் கொள்ள பழக வேணும். நெஞ்சில் உரமும் நேர்மைத் திறமும் இருந்தால் ஏன் மகனே ஊராரின் *தைகளுக்குப் பயப்பட வேணும். ஊருக்கொரு கோவில் தேவை. அந்தத் தேவையை இப்படி சொந்த் விஷயங்களுக் காகக் குழப்புவது கடவுளுக்கே கூடாது. கதிர்காமத்தி லிருந்து விட்டு வந்தபின் ஊராரின் போட்டி பொருமை ஆவருக்கு அந்த ஊரையே வெறுக்கப் பண்ணிக் கொண் டிருந்தது. `
'தம்பி உண்மையான தொண்டுகளுக்குப் புண்ணியம் கிடைக்கும். போட்டி பொருமை பேராசையில் எல்லாம் சேருவது போல் சேர்ந்து விட்டு கண் மூடித் திறப்பதற்குள் அழியாத எந்தப் பொருளுமில்ல. இளம்பிள்ளைகள் ஒற்றுமை யாகி கோயில் கட்ட வேணும் என்ட ஊக்கம் எடுத்தால் கட்டாயம் கட்டுப்படும்.""
*ஒற்றுமை எங்க சாமி இந்த ஊரில யார் பெரியாளா கிறது. யார் எப்பிடிக் சகாடிக்கிறது என்றுதான் பெரிய போராட்டம்' அண்ணு பெருமூச்சுடன் சொன்னன். அவன் மனத்தாங்கலுக்கும் காரணமுண்டு. இன்னும் இரண்டு வருஷத்தில் வரப்போகும் பாராளுமன்றத் தேர்தலுக்குத் தமிழரசுக் கட்சி அபேட்சகரைத் தெரிவதற்கு இப்போதே ஆயத்தம் நடக்கிறதாம். இவர்களின் ஊரில் தமிழரகக் கட்சிக் கிளை ஒன்றைத் திறக்க இளைஞர்கள் முன் வந்திருக் கிருர்கள். அண்ணுவுக்கு என்ன பிரச்சினை என்ருல் பெரியப்பா ராசநாயகத்தாருடன் சண்டை பிடித்தபின்
செல்வராசா அண்ணுவுடன் கதைப்பதில்லை.

ராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம் 187
அதனல் ஊர் இளைஞர்கள்செல்வராசாவின் தலைமையில் ஏற்பாடு செய்யும் தமிழரசுக் கிளைத் திறப்பு விழாவுக்கு அண்ணுவால் அதிகம் கலந்து கொள்ள முடியாமல் இருக் கிறது ஒரு காரணம். செல்வராசாவுடன் இணைத்திருக்கும் பெரும்பாலான இளைஞர்களுக்கு பெரியப்பா அரசாங்கக் காணியை அநியாயமாய் அபகரித்தது பிடிக்கவில்லை. அரசாங்க டி. ஆர். ஒ வும் பெரியப்பாவுடன் சேர்ந்து தான் இந்த ஊழல் செய்தபடியால் யாரை யார் கள்ளன் என்று நிருபிக்க முடியாத மோசடியாகி விட்டது.
சில வேளை இந்த விஷயங்களை அண்ணு அப்பாவுடன் கதைப்பான். அப்பாவும் மாமாவும் சாமியாரின் கோயில் வேலைக்கு முழுக்க முழுக்க உதவி செய்ய சம்மதம். சாமியார் ஊரில் நிற்பதால் கோயில் கட்ட வேண்டிய நிர்ப் பந்தத்தைக் கிராமமக்களிடம் சொல்லிக்கொண்டிருக்கிருர்.
கோயில் கட்டி கும்பாபிஷேகம் வைத்துப் பார்க்கும் திரு. நாளைப்பற்றி இப்போதே பேசத் தொடங்கி விட்டார் சாமியார், கோயில் வளவில் எத்தனையோ தரம் கூட்டம் கூடித் தர்க்கித்துக் கடைசியில் கோயில் கட்டும் விடயத்தை கவனிக்க ஒரு குழு அமைக்கப்பட்டது.
குழுவின் தலைவர் பதவிக்குப் போட்டி நடந்தது என்று சொல்லத் தேவையில்லை. ஊரில் உள்ள நாலு குடிகளின் வண்ணக்கர்களும் தங்கள் குடி முறைப்படி தாங்கள்தான் தலைவனுக வரத் தகுதி என்று பேசத் தொடங்கி விட்டார்கள்.
பாடசாலை வகுப்புகளில் ஊரில் நடக்கும் சண்டைகளின் எதிரொலி கேட்பது மிகமிக அருமை.
தமிழரசுக் கட்சியைப் பற்றி ராமநாதன் வாத்தியார் எப்போதாவது இருந்து விட்டு ஏதும் சொல்லார். *வழக் கறிஞர்களின் கட்சி ஆனல் சிங்கள வகுப்பு வெறி அரசாங்கத் துடன்தான் வாதம் செய்யத் தெரியாது" என்று கிண்டல்: செய்வார்.

Page 99
188 தில்லையற்றங்கரை
இந்த கம்யூனிஸ்ட் வாத்தியாருடன் என்ன கதை என்பது போல அவர் அரசியல் வாதங்களைக் கேட்பார்கள்.
பாடசாலைக்கு அடுத்த வளவு கோயில் வளவு. கோயில் வளவில் கோயில் கட்டப்படுவதற்காக உண்டாகும் பிரச்சினை சில மாணவர்களுக்கிடையிலும் தர்க்கத்தைக் கொண்டு வரும்.
ஊரில் பணிக்கனர் குடி, கலிங்கராஜன் குடி, படை யாண்ட குடி, வேளாள குடி என்று நாலு வகைக் குடிகள். மட்டக்களப்பு கண்டியரசன் ஆட்சியமைப்பின் கீழ் இருந்த தால் இவர்களின் குடி முறையும் இலங்கையின் மற்றப் பகுதித் தமிழ் மக்களின் சாதியமைப்பைச் சாராதிருந்தது போலும்.
பணிக்கஞர் குடி, அரசனுக்குப் பணிவிடை செய்த நெருங்கிய மனிதர்களைக் கொண்டதென்றும் படையை யாண்டகுடி, அரசனுக்குப்படை வீரர்களாய் இருந்தவர்கள் என்றும் கலிங்கராசன் குடி, கண்டியரசன் காலத்தில் கண்டியரசனுல் மலையாளப் பகுதியிலிருந்து கொண்டு வரப் பட்டவர்களென்றும் வேளாளர் குடி, அரசனின் உழவர்க் குடி என்பதும் ஊரின் வரலாறு: (கலிங்கநாட்டு மக்களின் தொடர்புடையார் கலிங்களுர் குடி கோயில் திருவிழாக் காலத்தில் குடிச்சண்டை கிட்டத்தட்ட எல்லா வீட்டிலும் நடக்கும். இந்தக் கிராமத்தார் மலையாளத்தார் போல் தாய் வழிமுறை பார்ப்பவர்கள். தாய்களும் குழந்தைகளும் ஒரு குடி. தகப்பன் குடி வேறு.
தகப்பன்தான் தனித்துப் போவது. கோயில் திருவிழா காலத்தில் மட்டுமல்லாது கல்யாணங்கள் பேசும் போதும் குடிமுறை பார்ப்பது பரம்பரைப் பழக்கம். படையாண்ட குடி ஆண்கள் பெரும்பாலும் கலிங்கராசன் குடிப் பெண்களை யும் பணிக்கனர் குடிப்பெண்கள் வேளாளர் குடியைச் சேர்த்த ஆண்களையும் தான் திருமணம் செய்வார்கள்.

ராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம் 89
எத்தனை தூரத்துச் சொந்தமென்ருலும் தாய் வழியில் கடைசிவரையும் பெண் எடுக்க மாட்டார்கள். இந்தக் குடி வழிமுறை ஒவ்வொருவர் வாழ்க்கையோடும் பிணைந்து போய்க் கிடந்தது. கோயில் கட்டத் தொட்ங்க முதலே குழுவுக்குத் தலைவன இருப்பது யார் என்ற சண்டை தொடங்க குடிவழித் தர்க்கம் பெரிதாகியது. அதன் எதிரொலி பாடசாலையிலும் கேட்டது. 3 *சமயம் அபின் மாதிரி என்டு தெரியாதோ? சும்மா இந்தக் கிழட்டுச் சண்டைக்குள்ள போய் மண்டையை உடைச்சுக் கொண்டு திரிய வேண்டாம்' என்று மாணவர் களுக்குப் புத்தி சொன்னர் வாத்தியார். கடவுளே இல்லை என்னும் கம்யூனிஸ்ட்காரருடன் என்ன கதை என்று மாணவர்கள் தங்களுக்குள் பேசிக் கொண்டார்கள். ராமநாதன் சொல் வ தெ ல் லா ம் இந்த ஊராரின் நம்பிக்கையை எதிர்ப்பவை.
புதுப்பாடசாலைக் கட்டிடம் மார்கழி மாதத்துக்கு முன் முற்ருகிவிட்டது. திறப்பு விழா வைக்க வேண்டும் என்று பெற்றேர் ஆசிரிய சங்கத்தில் முடிவு செய்யப்பட்டது.
பெரியப்பா அந்த வரவேற்புக் குழுவுக்கென்ருலும் தலைவராக வரவேண்டும் என்ருே என்னவோ வரவேற்புக் குத் தேவையான செலவில் பெரும்பங்கைத் தருவதாகச் சொன்னர். அதைக் கேள்விப்பட்டு பெரியம்மா பெரியப்பா வுடன் சண்டை. **என்ன உங்களுக்கு எல்லாத்திலயும் தலையப்போட்டுத் திரிய வேணுமெண்ட பைத்தியம் பிடிச் சிருக்கு" பெரியப்பா ஒன்றும் பெரியம்மாவின் புலம்பல்ப் பொருட்படுத்தவில்லை. பெரியம்மாவுக்கு என்ன செய்வது என்று தெரியவில்லை. அம்மாவிடம் வந்து முறைபட்டாள், அப்பாவிடம் சொல்லிப் பெரியப்பாவுக்குப் புத்தி சொல்லச் சொல்லி.
இதைக் கேட்க கெளரிக்குச் சிரிப்பாயிருந்தது. பெரியப்பாவுக்கு யாரும் புத்தி சொல்வதோ? பூனைக்கு மணி’

Page 100
190 தில்லையாற்றங்கரை
கட்ட எலி தேடுகிருள் பெரியம்மா! அப்பாதான் இந்தப் *போதகர்' வேலைக்குத் தகுதியில்லை என்ருர், பெரியம்மா
சாமியாரைக் கேட்டாள்.
சாமியார் முழுக் கவனத்தையும் கோயில் கட்டுவதில் வைத்திருந்ததால் பெரியப்பருட்ன் புத்தி சொல்லப் போய் ஏதும் வாக்கு வாதப்படத் தயாரில்லை.
போன வருடம் விளைச்சல் இல்லாதபடியாலும் இந்த வருட அறுவடைகள் இன்னும் தொடங்கவில்லை என்பதா லும் பெரியப்பா தன் செலவுகளுக்குப் பெரியம்மாவின் காப்புகளை ஈட்டுக் கடைக்குக் கொண்டு போனதன் காரண மாய்ப் பெரியம்மா இரண்டு நாளாய்ச் சாப்பிடாமல் முணு முணுத்துக் கொண்டிருந்தாள். காப்பு அடகு வைத்த காசைப் பெரியப்பா செலவளித்தார்.
வரவேற்புக் குழுவுக்குப் பெரியப்பா தலைவராக இருந்து திறப்பு விழாச் சிறப்பாக நடந்தது. பெரிய பிரமுகர்கள் வந்திருந்தார்கள். என்னவெல்லாமோ பேசி முழங்கினர். கெளரிக்கு எப்போதோ நடந்து முடிந்த திறப்பு விழா இப்போதும் ஞாபகம் வந்தது.
திறப்பு விழாவுக்கு மாணிக்கவாசகம் வந்திருந்தான். பத்மநாதனும் வந்திருந்தான். வரவேற்புப் பாடல் இப்போது பூரணியாலும் வேறு யாரோ சின்னப் பெண்ணுலும் பாடப் பட்டது. திறப்பு விழாவில் சாமியார் கல்வியின் அவசியம் போல் கடவுளின் தொண்டும் பெரிது என்று உருக்கமாகப் பேசினர். எப்படிச் கல்விக் கற்றலும் கடவுள் அருள் கிடைக்காவிட்டால் படித்த கல்வி ஒன்றுக்கும் பயன்படாது என்றெல்லாம் சொன்னபோது கெளரிக்கு பெரிய யோசனை பெரியாட்கள் எல்லாம் சேர்ந்து கெதியாக கோயில் கட்டி விட்டால் கடவுள் அணுக்கிரகம் கிடைக்கும் என நம்பினள். ஊரில் சண்டையில்லாதிருந்தால் எவ்வளவு நல்லது!

ராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம் 19
*"இனி என்ன கெளரி புதுக்கட்டிடத்தில் புது வகுப்புகள் ஆரம்பிக்கப் போகுது சந்தோஷம்தானே" வரவேற்பு முடிந்து வீட்டுக்கு வரும் வழியில் பத்மநாதன் கேட்டான்.
**சந்தோசம் தனியா வருமா? புதுப் பாடசாலையில புது வகுப்பில சேர்ரது பெரிசா? படிச்சு உருப்படியாப் பாஸ் பண்ண வேணும். அதுதான் பிரச்சினை."
**கெளரி எப்போதும் ஏன் எதிர்காலத்தைப் பற்றிப் பயப்படுகிருய்."
"நான் எப்ப எதிர்காலத்தைப் பற்றி உங்களோட கதைச்சன்?"
"நான் சண்டைக்கு வரல்ல தாயே அம்மா பகிடிக்குச் சொன்னன்' பத்மநாதன் குரலும் சிரிப்பும் கவர்ச்சி யானவை. எங்கட ஊர் ஆக்களின் குரல் போல இல்ல. பேசற விதமும் வித்தியாசம். கெளரி தனக்குள் சொல்லிக் கொண்டாள். சரியான முழு நிலவு. ஊரே தண்ணிலவில் குளித்துக் கொண்டிருந்தது. பாடசாலை வரவேற்புக்கு வந்து கொண்டிருந்தவர்கள் கூட்டம் கூட்டமாய்ப் போய் கொண்டிருந்தார்கள்,
சாரதா இன்னும் பாடசாலையிலேயே நிற்கிருள். மாணிக்கவாசகம் நிற்கும் வரை எங்கேயும் நிற்பாள். பெரியப்பாவுடன் வீட்டுக்கு வருவதாகச் சொன்னுள் கெளரிக்கு.
அம்மாவுக்கு நல்ல சுகமில்லை. அதனல் உடனடியாக வீட்டுக்குவர விரும்பிய கெளரி ஒழுங்கையால் வரும்போது பத்மநாதன் பின்னல் வருவதை அவதானித்தாள். வெளிக்கிட முதல் கண்டிருந்தால் வந்திருக்க மாட்டாள். தனியாக அவனுடன் செல்வதை யாரும் பார்ப்பதை அவள் விரும்பவில்லை. முன்னுக்குப் போகும் பூரணி, மரகதம் கூட்டத்துடன் சேர்ந்து செல்ல வேகமாக நடந்தாள் கெளரி.

Page 101
தில்லையாற்றங்கரை
*ஏன் கெளரி ஒடறியள், நான் என்ன ஆமிக்காரன: பயந்தோட' பத்மநாதன் தன் வேடிக்கைத் தொனியில் கேட்டான். கெளரி பதில் சொல்லவில்லை. பத்மநாதனுக்கு எப்போதும் கேலியும் கிண்டலும். ஒழுங்கைச் சந்தியில் யாரோ நின்று கொண்டிருந்தார்கள். அதனல் கெளரி மெளனமாய்ப் போய்க் கொண்டிருந்தாள் **எங்கட ஊர்ப் பொம்பளைக்களுக்குத் துணையாக இறக்குமதி ஆம்புளைகள்" தேவை எண்டு எங்களுக்குத் தெரியாமல் போச்சு" நக்கலான கு ர லு டன் சைக்கிளில் சாய்ந்திருந்த செல்வராசாவைக் கண்டு கெளரிக்கு என்ன சொல்வது என்று தெரியவில்லை. தன்னுடன் பத்மநாதனைக் கண்டுதான் அப்படிச் சொல்கிருன் என்று தெரியும்.
அவளுக்கு சரியான கோபம் வந்தது. தனக்குப் பின்னல் வந்த பத்மநாதனிலும் கோபம். தன்னை வழிமறித்துக் கிண்டல் செய்யும் செல்வராசாவிலும் கோபம். .
இறக்குமதித் துணை ஒண்டும் எங்களுக்குத் தேவல்ல. பொது ஒழுங்கையில கண்டவ எல்லாம் போவினம். தேவ யில்லாத கதை சரியில்ல எண்டு நினைக்கிறேன்" கெளரிக்குப் பயத்திலும் கோவத்திலும் வார்த்தைகள் வெடித்து வந்தா" லும் செல்வராசாவின் முகத்தில் அடித்தது போற் சொல்லாமல் சாதாரணமாகச் சொல்ல மிகமிகச் சிரமப் LI L-int Gir.
செல்வராசா ஏதும் சொல்ல நினைத்திருக்கலாம். அவள் நின்று கேட்க தயாரில்லை. விடுவிடு என்று நடந்தாள் கெளரி பின்னல் வரும் ஊராருக்கு நாளைக்கு வம்பளக்க விஷயம் கொடுக்கும் யோசனையில்லை அவலுக்கு.
கோபம் அழுகையாய் வந்தது. விறுவிறு என்று நடந்து போனள். பின்னல் சருகு சத்தம் கேட்பதிலிருந்து தெரிந்தது பத்மநாதன் இன்னும் தொடர்ந்து வருகிருன் என்று. ஒரு விதத்தில் சந்தோசம் செல்வராசாவுடன் சண்டை

ராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம் 193
பிடிக்காமல் வருகிருன் என்று. இன்னுெரு விதத்தில் கோபம் தனக்குப் பின்னுல் வந்து செல்வராசாவுடன் பேச்சுப்பட வைத்ததென்று.
தங்கள் வீட்டுக்குத் திரும்பியவள் பின்னல் பார்த்தாள். முழுநிலவு வெளிச்சத்தில் பத்மநாதன் முகம் கெளரியை ஆராய்ந்தது. தாழ்ந்த குரலில் அவன் கேட்டான்.
* ஒழுங்கையால வந்த கண்டவணு நான்' பத்மநாதன் என்ன கேட்கிருன் என்பதே எரிச்சலாய் வந்தது கெளரிக்கு. *அண்ணுவின்ற சினேகிதன் எண்டால் இருந்திட்டுப் போங்கோ. எங்கட ஊரைப்பத்தி தெரியாம. ** Guബം சொல்ல முடியாமல் அழுகை வந்தது. அவனுக்கு விளங்காதா இந்த ஊரைப்பற்றி. இவளின் சத்தம் கேட்டு அமுதவல்லி, சினேகிதமாய்க் குலைத்துக் கொண்டு ஓடி வந்தது. ஆச்சி எழும்பி வரலாம். அவள் மேலே ஒன்றும் சொல்லாமல் உள்ளே ஓடினள். அவன் மரத்தால் செய்யப் பட்ட கேற்றைப் பிடித்துக் கொண்டு நிலவில் நின்றிருந் தான். அவன் அப்படி நிற்பதே இவளுக்குப் பொறுக்கவில்லை. *தயவு செய்து போங்கோ'" அவளுக்குக் கத்த வேண்டும் போல் இருந்தது.
5.
பெரியப்பா ஒலிப்பெருக்கியில் ஊரைப்பற்றியும் ஊர் முன்னேற்றத்தைப் பற்றியும் நடுச்சாமம் வரை உளறிக் கொண்டிருந்தார். *எளிய மனிசன்: கண்டதுக்கெல்லாம். சண்டை பிடிக்கிற மனிசன் ஊர் ஒற்றுமை, முன்னேற்றம் எண்டு பொய் எல்லாம் புலம்புது" கெளரி தன் பாட்டுக்குச் சொல்லிக் கொண்டாள்.
சந்தியில் கண்ட செல்வராசாவின் முகத்தை நினைக்க தினக்க மனம் என்னவோ செய்தது. உறவென்ருல்
13--ه 63

Page 102
重94 தில்லையாற்றங்கர்ை
இப்படியா உரிமை கொண்டாடுவது? தற்செயலாகவா நின்றிருப்பான்? திட்டம் போட்டுக் காத்திருந்தது. போலல்வா நின்றிருந்தான். தனக்குப் பின்ஞல் பத்மநாதன் வந்தது கெளரிக்குத் தெரியவே தெரியாது. என்னென்று செல்வராசா கண்டிருப்பான்?
தான் இவ்வளவு காலமும் செல்வராசாவைப் பற்றி எதுவும் பெரிதாக நினைத்ததில்லை. அவன் என்னவென்றல் தன்னையே கவனித்துக் கொண்டிருக்கிருன் என்பது இப்போது தெளிவாகத் தெரிகிறது. பத்மநாதனையும் தன்னை யும் பற்றி ஏதோ நினைத்திருக்கிருன் போலும், இல்லை. என்ருல் ஏன் பின் தொடர்ந்து வந்திருப்பான்? கடவுளே என்ன சோதனை இது?
இன்னும் இரண்டு வருஷம் தான். அதன் பின் எஸ். எஸ். சி படித்துப் பாஸ்பண்ணி புனிதமலர் ரீச்சர் மாதிரியாக வேண்டும் என்று எவ்வளவு ஆசையாயிருந் தாள்?
பாடசாலைத் திறப்பு விழாவிலேயே அபசகுணம் மாதிரி இந்த நிகழ்ச்சி நடந்து விட்டதே? பத்மநாதன், செல்வராசா இருவரிலும் கோபம் என்ன எளிய ஆம்புளை கள்?ஆண்கள் என்ருல் எப்படியும் நடக்கலாமோ? அவளுக்கு அழுகை வந்தது. அழுதாள். விசும்பலில் அழுகை மறைந்தது. ஆச்சி விருந்தையில் படுத்து நித்திரை. வரவேற்பில் இருந்து அப்பா இன்னும் வரவில்லை. சாரதா சேர்ந்து வந்திருந்தால் செல்வராசாவிடம் இப்படி அகப்பட்டிருக்கத் தேவையில்லை.
சாரதாவிடம் இந்த விஷயத்தைச் சொல்வதா. இல்லையா? கெளரியின் மனத்தில் நிம்மதியும் போய்விட்டது. செல்வராசாவைக் கல்யாணம் செய்து வைக்கவேண்டும் என்ற ஆச்சியினதும் அம்மாவினதும் ஆசை தெரியாமல் இல்லை. அது பற்றிக் கெளரி பயப்படும் படியாக ஒன்றும் யோசித்தில்லை. ஆனல் கடந்த கொஞ்ச் காலமாகச்.

ராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம் 195
செல்வராசா மற்ற இளைஞர்களுடன் சேர்ந்து தலைவன் மாதிரி நடப்பதும் பெரியப்பாருக்குச் சண்டித்தனம் காட்டி யதும் அவளுக்குப் பிடிக்கவேயில்லை. ஊரை வெருட்டிப் பெரிய மனிஷத்தனம் போடட்டும். எண்ணிட்ட ஒரு சேட்டையும் வேணும் எண்டு சொல்லலாமா? கெளரி யோசித்தாள். செல்வராசாவுடன் வாய் காட்டத் துணிவு தேவை. செல்வராசாவுடன் தேவையில்லாமல் எக்காரண மும் கொண்டும் ஒரு கதையும் வைத்திருக்கக் கூடாது என்று முடிவு கட்டிக் கொண்டாள். பத்மநாதனை என்ன செய்வது? கண்டால் கதைப்பவனை ஏன் பேசவேண்டும்? செல்வராசா என்ருலும் எப்போதோ இருந்துவிட்டுக் காணுபவன். பத்மநாதன் அண்ணுவுடன் எந்த நேரமும் வந்து சேர்கிருன். ஆச்சி எத்தனையோ த ர ம் சொல்லியிருக்கிருள். *அந்நியனுேட ஒரு கதையும் வைக்காத கெளரி" என்று அண்ணுவின் சினேகிதம் என்ருலும் அந்நியன்தானே. எங்கட ஊருக்கு வந்து எங்களோட கதைக்கிறபோல எத்தனை ஊரில எத்தனை சினேகிதமோ?
ஆச்சி சொல்றபோல் ஆண்களுக்கு என்ன சேறு கண்ட இடத்தில மிதித்து தண்ணிர் கண்ட இடத்தில கழுவுற ஆண் களா? ஏன் தேவையில்லாமல் போய்ச் சேற்றில மிதிக்க வேண்டும் என்று அவளுக்குத் தெரியவில்லை. ஆண்கள் ஏதும் செய்யலாம்! அப்படி பிறந்தவர்கள்!
அடுத்த நாள் விடிய நித்திரையின்றிக் கண்கள் எரிந்தது போல் நியமதியற்ற யோசனைகளில் மனம் எரிந்து கொண்டி ருந்தது. சாமியார் அதிகாலையில் எழுந்து குளித்துத் திருநீறு வைத்துவிட்டுத் தாயுமானவர் புத்தகம் வாசித்துக் கொண் டிருந்தார்.
'என்ன மகளே சுகமில்லையா முகம் வாடிக் கிடக்கு"
வழக்கம் போல் ஆறுதலாகக் கேட்டார்.
முகமில்ல வாடினது சாமியாரே மனம்தான் வாடிக் கிடக்கு என்று சொல்ல முடியுமா?

Page 103
196 தில்லையாற்றங்கரை
தலையிடி asaj ta''' தப்பித்துக் கொள்ளப் பொய் சொன்னுள்.
**இரவு என்ன நடந்தது தெரியுமா. சாமியார் சந்தோசத்துடன் கேட்டார்.
கெளரிக்கு **திக்" என்றது.
இரவும் சந்தியும் செல்வராசவும் தான் ஞாபகம் வந்தார்கள். அவள் மறுமொழி சொல்லவில்லை.
'என்ன நடந்தது சாமி' என்று கேட்டாள்.
தனியா ஒருகுழு வைத்துக் கோயில் வேலை செய்யாமல் ஒவ்வொரு குடி வண்ணக்கர்களும் தங்கள் தங்கள் குடி மக்களிடம் நிதி சேர்ப்பதையும் ஒவ்வொரு விதத்தில் கட்டிட வேலையில் பங்கெடுப்பதையும் ஒப்புக் கொண்டிருக் இழுர்கள். பாத்தியாம்மா கணபதியின்ற கிருபையை" சாமியாரின் சந்தோஷம் கெளரியின் சந்தோஷமுமே ஆரியக் கூத்தாடினலும் சாமியாருக்குக் கோயில்தான் யோசனை. சண்டை சச்சரவில்லாமல் வேறு யோசனைகள் அவள் மனத்தைக்குடைந்து கொண்டிருந்தது.
அன்று மத்தியானம் கமலத்திடமிருந்து கடிதம் வந்தது. தனது படிப்பு தனது சினேகிதிகள் தான் கீரிமலைக்குப் போனது பற்றி எல்லாம் எழுதியிருந்தாள். கடைசியில் வழக்கம்போல் அண்ணுவுக்குச் சுகம் சொல்லச் சொல்லி எழுதியிருந்தாள். வழக்கத்துக்கு மாருக அண்ணுவின் சினேகிதர் பத்மநாதன் எப்படி என்றும் கேட்டிருந்தாள். பத்மநாதன் எப்படியாம்? கெளரிக்கு என்ன சொல்வ தென்றே தெரியவில்லை. இருந்தாற்போல் எல்லோரும் பத்மநாதனைப்பற்றி ஏன் கெளரியிடம் கேட்க வேண்டும்?
கமலத்தின் கடிதத்தை வாசித்து விட்டு யோசித்துக் கொண்டிருக்கும் போது சாரதா கிளு கிளு என்று சிசித்த

ராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம் 197
படி வந்து சேர்ந்தாள். *என்ன இளிப்பு" கெளரி கேட்
டாள்.
சாரதாவின் முகத்தில் கள்ளப் பார்வை. அங்குமிங்கும் பார்த்தாள். ஆச்சி மத்தியான வெயிலுக்கு ஒதுங்கிப்போய் தாழ்வாரத்தில் இருந்தபடி காய்ந்த பயத்தங்காய் உடைத்து பருப்பெடுத்துக் கொண்டிருந்தாள். அம்மாவும் சின்னத் தம்பியும் மண்டபத்துக்குள் நித்திரை. வளவு மூலையில் தம்பிகள் கோழிக் குஞ்சுகளைப் பிடித்துத் தண்ணிர் கலர் பூசிக் கொண்டிருந்தார்கள்.
வெள்ளைக் கோழிக் குஞ்சுகள் எல்லாம் பச்சை, நீலம், நாவல் நிறங்களாய் மாறித் தங்களைத் தாங்களே அடையாளம் தெரியாமல் பயந்து சிறகடித்து கிணற் றடியைச் சுற்றி ஒட தாய்க்கோழிக்கு ஒன்றும் விளங்காமல் பெரிய சத்தம் போட்டுக் கூக்குரல் போட அமுதவல்லி குலைத்து வெருட்டி அல்லோல கல்லோமாயிருந்தது.
*அவர் போயிட்டாரடி" சாரதா முகத்தை நெளித்துச் சுளித்துச் சொன்னுள். 'இப்ப என்ன புராணம் பாடப் ப்ோறியா' கெளரி கேட்டாள். கெளரி கோயிக்காம ஒரு உதவி செய்வியா" சாரதாவின் குரலில் கெஞ்சல்.
** என்ன தூது போகச் சொல்லப் போறியா?? வெடுக் கென்று கேட்டாள் கெளரி.
*என்னப்பா பெரிய எடுப்பு விடுருப்" சாரதாவின் முகம் கருத்தது. கெளரிக்குத் தர்ம சங்கடமாய் இருந்தது. சாரதாவைப் பார்க்க பரிதாபமாகவுமிருந்தது. அவளின் கிளுகிளுப்பைப் பார்க்க குழந்தைத்தனம் போலவுமிருந்தது.
என்ன சாரதா வேணும்" கெளரி முடியுமான வரைக்கும் குரலைச் சாதரணமாய் வைத்திருந்தாள்.
"இதை வாசிச்சுப் பார்" கெளரி கண்மூடித் திறக்க முதல் கையில் ஒரு கசங்கிய கடிதத்தை திணித்தாள்

Page 104
98 தில்லையாற்றங்கரை
கெளரிக்குப் பகீரென்றது.
“என்ன கடிதமடி' எவ்வளவோ முயன்றும் கெளரியின் குரல் சாடையாக உயர்ந்தாலும் ஆச்சிக்கு இவள் சொன்னது கேட்டிருக்காது. கிணற்றடியில் கோழியும் நாயும் ஒரே இரைச்சல்,
*ஏன் பதறுகிருய் கெளரி" சாரதா பொறுமை யின்றிக் கேட்டாள் என்ன பதறலாம்?
பேணு நண்பி *வெஸ்லிக்குக் கடிதம் போட்டதைக் கெளரி எப்படி மறப்பாள்.
**அவரின்ர கடிதமடி'சாரதா குழைந்தாள் செல்லமாய்,
*உனக்கா அல்லது எனக்கா' கெளரி எரிச்சலுடன் கேட்டாள். சாரதாவில் கோபம் வந்தது. தன் காதல் கடிதத்தைக்கூட ரகசியமாய் வைக்கத் தெரியாதர் இவளுக்கு?
“எனக்குத்தான்' சாரதா தாழ்ந்த குரலின் சொன்னுள்.
பின்ன எனக்கேன் காட்டுகிறாய்?"
*பதில் எழுத உதவி செய்யடி' சாரதா கெஞ்சினள். கெளரி ஆடிக்கொண்டிருந்த ஊஞ்சலிலிருந்து எழும்ப ஊஞ்சல் பலகை கோணலாகத் திரும்பி சாரதாவின் முழங் காலில் இடித்தது.
"என்ன விசர்க்கதை கதைக்கிருய்" கெளரி அலழுத குரலில் கேட்டாள்.
*நீ தான் வடிவாகக் கட்டுரை எழுதற கெளரி" சாரதா பாவம். தன் மக்குத்தனத்தை வெட்கமின்றிப் பறை சரற்றினுள்.

yer63gdoQırf usersosülrubaumufulub 199
நான் வடிவாகக் கட்டுரை எழுதன எண்டால் காதல்
கடிதத்துக்குப் பதில் எழுதவோ" கெளரி தன் ஆச்சரியத்தை அடக்காமல் கேட்டாள். न्, .
*பெரிய நட்புக் காட்டாத கெளரி" சாரதாவின் கண்கள் நீர் கூடின.
கெளரிக்கு என்ன சொல்வதே என்று தெரியவில்லை. சாரதா உண்மையில் மக்குத்தான். கடிதம் எழுதத் தெரியாமல் என்னென்று காதலிக்கத் துணிந்தாளாம்?
என்ன கேலிக் கூத்து? சாரதா எதுனமே உனக்கு விளையாட்டா? 'ஏலாண்டு சொல்லப் போறியா" சாரதா Gésul-L—rroir.
என்ன பதில் சொல்வது?
அன்பான இருவர் எழுதிக் கொள்வது அவர்கள் இருவருக்கு மட்டும் தெரியக்கூடிய, இருக்க வேண்டிய ரகசிய மல்லவர்? ?கடிதத்தைத் தந்துட்டுப் போ. வாசிச்சுப் பார்த்துச் சொல்றேன்" கெளரி ஆச்சியைப் பார்த்துக் கொண்டு கையை நீட்டினுள். ஆச்சி தம்பிகளைத் திட்டித். தீர்த்தபடி கோழிக்குஞ்சுகளைக் கழுவிக் கொண்டிருந்தாள். தம்பிகள் புதினம் பார்த்துக் கொண்டிருந்தார்கள். தாய்: கோழி ஏதோ சொல்லி அலறிக் கொண்டிருந்தது.
**கவனமாய் வையப்பா கடிதத்தை "' சாரதாவின் முகத்தில் மிகமிகக் கவனமான" பாவம்,
"கள்ளக் காதல் கடிதத்தை கவனமாய் வைக்காமல் கனகலிங்கம் மாமா கடைக்குக் குடுக்கட்டா. எல்லோரும் வாங்கில இருந்து வாசிக்க' கெளரி தன் கோபத்தை அடக்கிக் கொண்டு கேட்டாள். சாரதா ஒன்றும் சொல்: லாமல் போஞள்.

Page 105
●00 தில்லையாற்றங்கரை
கெளரிக்கு இன்னும் அதிர்ச்சி தெளியவில்ல. தன் காதல் கடிதத்துக்கு மறுமொழி எழுதத் தெரியாத மக்கு சாரதா என்று மனத்துக்குள் திட்டிக் கொண்டாள்.
எப்போது எப்படி இந்தக் கடிதத்தை வாசிப்பது? ஆச்சி பின்னரே சமையலுக்கு ஆயத்தம் செய்துகொண் Aடிருந்தாள். சாமியாருக்கு மரக்கறிச் சாப்பாடு என்றபடி "யால் வேறு அடுப்பில் தனியாகச் சமையல். அம்மாவுக்கு மிளகு தண்ணீர்ச் சாப்பாடு ஆச்சி செய்து கொண் டிருந்தாள். . . .
கெளரி பாடசாலைக்குப் போகத் தொடங்கியபின் ஆச்சியுடன் வாக்குவாதப் படுவதை நிறுத்திவிட்டாள். போகும் வரைக்கும்தான் சண்டைபிடிக்க வேண்டியிருந்தது. இனி எதற்கு வம்பு? ஆனலும் ஆச்சி எப்போதாவது இருந்து விட்டுக் குமரிப்பிள்ளைகள் இருக்க வேண்டிய லெட்சணத் தைப் பற்றிச் சொல்லாமல் விடுவதில்லை. அம்மா எப்போதும் போல் மதியஸ்தம் பிடிப்பாள். “குமரிப்பிள்கிர யோட தேவையில்லாத கதை வேணும்" என்று ஆச்சிக்குச் சொல்வாள்.
வயது போன ஆச்சியுடன் என்ன கதை என்று கெளரிக்குப் பேசுவாள். ஆளுல் இப்போதெல்லாம் கெளரிக்கு நேரமேயிருப்பதில்லை. பாடசாலை முடியச் சில வேளை பரமேஸ்வரி ரீச்சரிடம் தையல் பழகப் போவாள். வெள்ளிக்கிழமை பின்னேரம் கூட்டுப்பிரார்த்தனையாகி விடும். மற்ற நேரங்களில் வீட்டு வேலை. வீரகேசரி, தினகரன், கல்கி, குமுதம், ஆனந்தவிகடன் வாசிக்க வேண்டும். கெளரியின் நினைவு இடி முழக்கத்தினுல் தடைப் பட்டது. இந்த மார்கழி மாதம் அவ்வளவு மழையில்லை.
உள்ள மழை எல்லாம் தான் போன வருஷம் கொட்டி முடிந்ததோ? விவசாயத்துக்கு ஏற்ற மழையாக இருந்ததால் எல்லோருக்கும் பெரிய சந்தோஷம்.

ராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம் (2O
ஆச்சியும் பேத்தியும் சமைத்து முடியவும் சொல்லாமல் கொள்ளாமல் மழை பிடிக்கவும் சரியாக இருந்தது. மாரிக் காலம் என்றும் பாராமல் இந்த வெயில் அடிச்சது ஆச்சரியம் தான். இப்போது மழை பெய்தது ஆறுதலாக இருந்தது.
வாசலில் கிடந்த பெட்டிகள், உரல்கள், உலக்கைகள்
எல்லாம் கொண்டு வந்து வைத்துவிட்டு குசிளிக்குப் போனுள்
ஆச்சி. கெளரி இவ்வளவு நேரமும் கஷ்டப்பட்டு மறைத்து வைத்திருந்த கடிதத்துடன் அறைக்குள் போனுள்.
வெளியில் சாமியார், அப்பா, மாமாவின் குரல்கள் கேட்டன. இனி ஆச்சியோ அம்மாவோ இந்தப் பக்கம் வர மாட்டார்கள். கெளரி பாடசாலைப் புத்தகம் ஒன்றுக்குள் கடிதத்தை விரித்து வைத்து வாசிக்கத் தொடங்கினுள். தெளிவாகத் தெரியவில்லை எழுத்துக்கள். மழையிருட்டாக இருந்தது. கடிதமும் கசங்கியிருந்தது. சாரதாவால் எத்தனையே தரம் வாசிக்கப்பட்டு எத்தனையோ தரம் மடிக்கப் பட்டுக் கசங்கியிருந்தது. சாரதா ஒவ்வொரு எழுத்தையும் மனப்பாடம் செய்திருப்பாள்.
அலைகடல் வற்றினுலும் அன்புக்கடல் வற்ருத
காதலிக்கு. என்று கடிதம் தொடங்கியிருந்தது. முதல் வரியே கெளரிக்குத் தர்ம சங்கடமாக இருந்தது.
கம்பனுக்கும் கண்ணதாசனுக்கும் சினிமாப்படக் கதாநாயகர்கள் கணேசன்களுக்குத்தான் உரியதென்று நினைத்த காதல் என்ற சொல் இப்போது தனக்குத் தெரிந்த மாணிக்கவாசகத்தால் எழுதப்பட்டு சாரதாவின் மார்புச் சட்டைக்குள் மறைந்து கிடந்து கசங்கி உருக்குலைந்த நிலையில் கெளரியின் கண்கள்முன் பரிதாபமாய்த் தோற்ற மளித்தாலும் வெறும் கையெழுத்தில் பார்க்கத் தர் சங்கடமாயிருந்தது. −
‘காதலியாம்; கத்தரிக்காய் சாரதா ஒரு கடிதம்
எழுதத் தெரியாது அதற்குள் ஒரு காதல்" மனம் கொள்ளும் மட்டும் திட்டித் தீர்த்தாள் கெளரி.

Page 106
202 தில்லையாற்றங்கரை
ஆரம்ப ஒருவரி தவிர வேருென்றும் ‘காதல்; இல்லை. கச்சேரியில் தான் செய்யும் வேலை பற்றி, தன்னுடன் வேலை செய்யும் சினேகிதர்கள் பற்றி ஒரு புராணம், அடிக்கடி சாரதாவைக் காணுமல் துடிப்பதாகக் கடைசியில் எழுதி யிருந்தது தாபமாயிருக்கலாம். இதற்கு என்ன மறுமொழி எழுதித் தரச் சொல்கிருள்?
கெளரிக்குத் தலையிடித்தது. சாரதாவை என்ன செய்வது? உங்கள் காதல் நாடகத்தால் கஷ்டப்படுவது நான்தான் என்று எழுதி மாணிக்கனுக்கு அனுப்பினுல் என்ன என்று கூட நினைத்தாள் கெளரி. என்ன நாடக்மிது?
அடுத்த நாள் சாரதா விழுந்தடித்துக் கொண்டு வந்தாள். என்ன மறுமொழி எழுதி வைத்திருக்கிருய் என்று கேட்டாள் கெளரியை. "நான் என்ன எழுதுகிறது? நான் சொல்லச் சொல்ல நீ எழுது" கெளரி பிடிவாதமாய்ச் சொன்னுள். இரண்டு பேரும் சேர்ந்திருந்து எழுதினல் ஆச்சிக்குச் சந்தேகம் வராதோ என்று கேட்டாள் சாரதா.
**இந்தப் புத்தி எல்லாம் காதல் வரமுதல் வந்திருக்க வேணும்."
கெளரி கடிந்து கொண்டாள் சாரதாவை, இருவரும் பெரும்பாலும் ஒன்ருயிருந்துதான் ஞாயிறுப் பேப்பர்கள் படிப்பது புழக்கம். அந்தச் சாட்டில் பாய் விரித்து பலா மரத்தின் கீழ் இருந்து எழுதத் தொடங்கினர்கள்.
என்னடி ரகசியமாய் எழுதிறியள்" ஆச்சியின் விசாரணை. ஆச்சிக்கும் **வெஸ்லி" ஞாபகமோ?
**பேப்பரில இரிக்கிற குறுக்கொழுத்துப் போட்டி நிரப்புரம் ஆச்சி."" கெளரி தன் சிரிப்பை அடக்கி கொண்டு சொன்னள். ஆச்சி கனவிலும் நினைத்திருப்பாளா இவர் களின் கூட்டணிக் காதல் கடிதம் பற்றி?

1. ES
அறுவடை தொடங்கியதும் கோயில் கட்டும் வேலைக்கு நிதி சேர்ப்பதும் தீவிரமாகத் தொடங்கியது.
ஒவ்வொரு குடியினரும் போட்டி போட்டுக் கொண்டு நிதி சேர்த்தார்கள். ஒற்றுமையாயிருந்தால் எத்தனை பெரிய காரியத்தையும் செய்து முடிக்கலாம் என்பதை நேரிடை யாகச் செய்து காட்டுவதுபோல் இருந்தது அவர்களின் ஊக்கம்.
அந்த ஒற்றுமை அதிக நாட்கள் நிலைக்கவில்லை. இவர்
கிராமத்துக்கு கூட்டுறவு நெல்லுச் சங்கம் ஒன்றுமில்லை. இத்தனே ஆண்டுகளாய் அயலூர் சங்கங்களுக்குத்தான் விற்றுக் கொண்டு வந்தார்கள். போன வருஷம் வந்த சண்டைக்குப் பின் தங்கள் ஊருக்கு ஒரு கூட்டுறவு நெல்லுச் சங்கம் உண்டாக்க வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றி வைத்திருந்தார்கள்.
இப்போது அறுவடை முடிய கூட்டுறவு நெல்லுச் சங்கத்தின் அவசியம் வலியுறுத்தப்பட்டது" N
சங்கத்து உத்தியோகத்தார் தெரிவில் சண்டைகள் உண்டாகக் கூடாது என்று சாமியார் கெஞ்கிக் கேட்டிருந்தார்.
மாமா தலைவர். பெரியப்பா மறுக்கவில்லை. ராசநாயகத் தார் தலைவன் இல்லாமல் இருந்தால் சரி அவருக்கு. பெரியப் பாவும் செல்வராசாவும் இணைக்காரியதரிசிகள். அண்ணு சங்கத்தின் மனேஜர், இதைப்போல சிறந்த உத்தியோகத்தர் தெரிவு ஊரில் இதுவரை இவ்வளவு ஒற்றுமையாக நடக்க வில்லை என்று சமாதானம்விரும்பும் கிராம வாசிகளில் பெரும்பாலோர் ஒத்துக் கொண்டனர்.
அறுவடை முடிந்து மக்கள் தங்கள் நெல்லை விற்பனைக்குச் சங்கத்துக்கு கொண்டு வந்திருந்தனர்.

Page 107
204 தில்லையாற்றங்கரை
போன வருஷம் வெள்ளத்தால் ஏற்பட்ட அழிவோ என்னவோ இந்த வருஷம் ஏகப்பட்ட விளைவு. ஊர் மக்களின் சந்தோசத்துக்கு எல்லையேயில்லை. கோயில் கட்டத் தொடங்கியதன் புண்ணியம் தான் இதெல்லாம் என்று சாமியார் சொன்னதைக் கூட அவர்கள் நம்பினர்கள்" இந்த சந்தோசம் எல்லாம் கொஞ்ச நாளைக்குத்தான்.
ராசநாயகத்தார் தான் . . வயல்வெளிகளுக்குப் பொறுப்பாயிருக்கும் வட்டை விதானை. விவசாயிகள் ஒரு குறிப்பிட்ட அளவு விளைச்சலைக் கூட்டுறவுச் சங்கங்களில் விற்க **கேட்டா" கொடுப்பது அவர் கடமை. ஆனல் அவர் கள்ள வியாபாரிகளுக்கும் கேட்டா கொடுத்து கூட்டுறவுச் சங்கத்தில் விற்பனை மோசடி செய்ததாக கதை பரவிக் கொண்டிருந்தது. ஊர்க் காணியைப் பெரியப்பாவின் பெயருக்கு எழுதிக்கொள்ளும் போது கை லஞ்சம் வாங்கிக் கொண்டு தெரிந்தும் தெரியாததுமாயிருந்த அரசாங்க அதிகாரி ஒருவர் இப்போது ராசநாயகத்தாரோடும் சேர்ந் காசப்படிப்பது கதையாயிருந்தது.
அரசாங்க அதிகாரிகள் யாரும் காசு வாங்காமல் வேலை செய்வதை அவள் அறிந்தில்லை. ஆஸ்பத்திரியில் கிராம மக்களிடம் ஐந்து ரூபா ப் வாங்கிக் கொண்டு பெனிசிலின் ஊசி போடுவதை எத்தனையோ தரம் கேள்விப் பட்டிருக்கிருள்.
கிராமங்களுக்கு வீட்டமைப்பு உதவி என்று சொல்லிக் கொண்டு விண்ணப்பம் போட்டவர்கள் தங்களுக்குக் கிடைத்த உதவிப் பணத்தில் எவ்வளவு வீதத்தை உதவி செய்த அதிகாரிகளுக்குக் கொடுத்தார்கள் என்பதை எந்த வித ரகசியமுமில்லாமல் கதைத்துக் கொண்டு திரிவதைக் கேள்விப்படாமலுமில்லை.
இப்போது ராசநாயகத்தாரின் மோசடி பற்றிய கதை.
தகப்பனும் மகனும் சேர்ந்து கூட்டுறவுப் பணத்தைச் சூறை யாடுவதாய்க் கதை ஊரெங்கும் அடிபட்டது.

ராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம் 205
கூட்டுறவு சங்கத்தலைவர் மாமாவைத்தான் எல்லோரும் கேட்டார்கள். மாமாவுக்குப் பொய் புரட்டுகள் பற்றி அதிகம் அநுபவம் இல்லை. கூட்டுறவு சங்கப் புத்தகத்தில் கணக்குகள் சரியாக இருக்கிறதாகத் தனக்குத் தெரிவதாகச் சொன்னர். ஆனல் பெரியப்பா விடாமல் ஒவ்வொரு நாள் கணக்கு வழக்கையும் அலசிப் பார்த்துக்கொண்டிருந்தார் என்றும் அதனல் சங்கத்தின் இணைக் காரியதரிசியான செல்வராசா தாக்கப்பட்டதாகவும் அப்பாவுக்குப் பாலிப் போடி சொல்லிக் கொண்டிருப்பதைக் கேட்டாள்.
ராசநாயகத்தாரும் மகனும் பெரியப்பாவிலும் அண்ணு விலும் உள்ளூரப் பகை வைத்துக்கொண்டு எப்படி வேலை செய்கிழுர்கள் என்று கெளரி எப்போதோ சந்தேகப்
ill-f6.
தனக்கு இந்த சங்கத்தில் சேர்ந்திருந்து இந்த சண்டை களுக்குள் அகப்பட்டுக் கொள்ளத் தயாராயில்லை என்று அண்ணு சொல்லிவிட்டான். *தான் எல்லாத்துக்கும் எல்லோரோடும் மல்லுக்கு நிற்பது போதாது என்னையும் இழுத்தடிக்கிருர்" அண்ணு பெரியம்மாவிடம் முறை. யிட்டான்.
வெள்ளத்தில் அழிந்த வயல்களைத் திருத்தும் காட்டில் அண்ணுவைப் படிப்பைத் தொடர விடாமற் பண்ணியதின் திட்டம் இதுவோ? கெளரி அண்ணுவுக்காகப் பரிதாபப்
f'6'
அண்ணு மேற்படிப்புப் படித்திருக்கலாம். அல்லது மாணிக்கவாசகம் போல் கிளார்க் வேலைக்குப் போயிருக்க. லாம். பத்மநாபனும் ஆசிரியப்பயிற்சிக் கல்லூரிக்கு எடுபட் டிருப்பதாகப் பரமேஸ்வரி ரீச்சர் சொன்னுள். (அதுதான் கன நாளாய் பத்மநாபனக் காணவில்லை போலும்.)
அண்ணு ஏன் பெரியப்பா சொல்லைக் கேட்டு இந்த ஊர் ஆக்காளின்ற சண்டைக்குள்ள அகப்பட வேணும்? அண்ணு,

Page 108
206 தில்லையாற்றங்கரை
என்ன எடுத்தார் கைப்பிள்ளையா? அவள் எதிர்பார்த்தது போல் அண்ணு மானேசர் வேலையை ராஜினாமா செய்து விட்டான்.
விவசாயப் பயிற்சிப் பாடசாலைக்கு அப்ளிக்கேஷன் போட்டிருப்பதாகவும் எடுபட்டால் தான் போய் விடுவேன் என்றும் அம்மாவுக்குச் சொன்னன்.
கெளரிக்குப் பெரிய சந்தோசம், பெரியப்பா பிடியி
லிருந்து அண்ணு தப்புவதையே விரும்பினள். அண்ணுவும் செல்வராசாவும் சண்டை பிடிப்பார்களோ என்ற பயம் அவள் அடி மனத்திலிருந்து மறையலாம்.
அண்ணு மனேஜர் வேலையை ராஜினுமா பண்ணியது பெரியப்பாவுக்கு அடியோடு பிடிக்கவில்லை. தன்னேடு ஒத்துழைக்கவில்லை என்ற கோபம். “தலைக்கு மேல் வளர்ந் தால் தம்பியும் சன்டை பிரசண்டனுே" என்று சொல்லி முழங்கிக் கொண்டிருந்தார்.
பாலிப் போடிக் கிழவனும் எப்போதும் போல்
பெரியப்பாவின் சாராயத்தைக் குடித்துப் போட்டு பெரியப்பா பக்கம்தான் சார்ந்து பேசிக்கொணடிருந்தது.
இந்தக் கொள்ளைக்காரர்கள் ஊரைக் கொள்ளையடிப்ப தைப் பார்த்துக் கொண்டிருப்பதோ? அல்லது பயந்து ஒடுவதுதான்' சரியோ என்று பெரியப்பா அண்ணுவுக்குக் கேட்கத் தக்கதாகக் கத்திக்கொண்டிருந்தார்.
அண்ணு எப்போதும் போல் மெளனமாயிருந்தான். அவ்ன் பெரிதாகச் சண்டை போட்டு கெளரி கண்டில்லை. ஊர் விஷயங்களில் எல்லாம் தான் தலையிட்டு மாரடிப்பது போதாதென்ருல் ஏன் அண்ணுவையும் பெரியப்பா எல்லா பிரச்சினைகளுக்குள்ளும் இழுத்தடிக்க வேண்டும்? கெளரியின் மனம் எப்போதும் அண்ணு பக்கம். அவன் நியாயத்தின் பக்கம். தனக்குப்பின் வாரிசாக அண்ணு ஊரின் தலைமகனுக இருக்க வேண்டும் என்ற ஆவலா பெரியப்பாவுக்கு?

ராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம் 2O7
அண்ணுவுக்கு அப்படி ஒரு யோசனையிருப்சதாக அவன் நடவடிக்கைகள் காட்டவில்லை. நிதானமும், கண்ணியமு மானவன். ஊரில் வெள்ளம் வந்தபோது இரவிரவாக அவன் ஏழைகளுக்கு உதவப் பட்ட்பாடு எல்லோருக்கும் தெரியும். தமிழ்-முஸ்லீம் தகராறு வந்த காலத்தில் தகராறு முற்றிப் போகாமலிருக்க அப்பாவும் மாமாவும் முயன்றபோது அவர் களுடன் தானும் சேர்ந்து அவன் பட்ட பாடுகள் அவளுக்குத் தெரியும். இயலுமென்ருல் மற்றவர்களுக்கு உதவுவது இல்லை என்ருல் தன்பாட்டுக்கு இருப்பது என்பது தான் அவன் கொள்கை என்று அவன் வாய்விட்டுச் சொல்லத் தேவையில்ல்ை. அவன் நடந்துகொள்ளும் விதத்திலிருந்து எல்லோருக்கும் தெரியும்.
இப்போது பெரியப்பா ராசநாயகத்தாரையும் மகனையும் எப்படியும் கூட்டுறவு சங்கக் கடை அமைப்பிலிருந்து வெளி யேற்றிவிட்டுத் தானும் தன் மகனும் தன் மைத்துனரான டிாமாவையும் மட்டும் வைத்திருக்கப் luntrifö6Rogtmr?
ஊர் மக்கள் பெரியப்பாவின் தான்தோன்றித் தனத்துக்கு விட்டுக் கொடுக்க போவதில்லை. நூற்றுண்டுக் கணக்காக அவரும் அவரின் தலைமுறையினரும் Jö35 g)Gari’y பெரிய மனிதர்களாக இருந்திருக்கலாம். ஆனல் இப்போ தெல்லாம் எத்தனையோ தலைவர்கள்" உருவாகிக் கொண் டிருக்கிறர்கள்,
ஒரு சில வருடங்களுக்கு முன் அண்ணுதான் முன் நின்று எல்லாம் தொடங்கி வைத்தான். பெரியப் செய்யும்

Page 109
208 தில்லையாற்றங்கரை
கலாட்டாவால் அவனுடைய தன்னலமற்ற சேவைகள் இந்த அப்பாவி ஊர் மக்களின் மனத்தில் படவில்லை.
காலம் காலமாகப் பெரியப்பாவிலும் அவர் பரம்பரையி லும் அவர்களின் சுரண்டல்களிலும் அகப்பட்டிருந்த ஏழை மக்கள் பெரியப்பா போன்ற பெரிய மனிதர்களிடமிருந்து விடுதலை பெற ராசநாயகத்தார் போன்றேரின் தலைமையை நாடுவதைக் கெளரியின் இளம் மனம் முற்றும் உணரவில்லை தலைவர்கள் மாறுகிருர்கள் அவர்களோடு சேர்ந்திருக்கும் சுரண்டல் தனமும் தலைவர்களாகிவிட வேண்டுமென்ற வெறியும் ஆளுக்கு ஆள் எந்த விதத்திலும் குறைந்திருக்க, வில்லை என்பதை அவள் உணர எத்தனையோ வருஷங்கள் எடுத்தன.
ஊரில் l-gil வருஷக் கொண்டாட்டங்களுக்கான ஆயத்தங்கள் நடக்கத் தொடங்கியது. அந்த ஊர் மக்களின் வாழ்க்கைமுறை சிக்கலற்ற வாழ்க்கை முறை. சித்திரை மாதம் அவர்களின் சந்தோசங்களைக் கொண்டாடி மகிழப் பாவிக்கும் ஒரு மாதம். அறுவடை முடிந்து ஊரில் எல்லோ ரிடமும் காசு பணம் புழங்கும் சித்திரைக் கொண்டாட்டம் விமரிசையாக நடக்கும்.
சாத்திர முறைப்படி அரப்பு முழுக்கோடு தொடங்கிப் புத்தாடை, பொங்கல், புதுநகை என்றெல்லாம் அகமகிழ்ந்து கொண்டாடுவார்கள்.
பகை மறந்து உறவு கொண்டாடுவார்கள். ஊர் எல்லாம் உல்லாசமாயிருக்கும். பெரிய மரங்களில் ஊஞ்சல் போட்டு, மத்தளம் தட்டி நாட்டுப் பாடல், பாடி மகிழ்வார்கள். பகலில் வாலிபர்கள் பெரிய ஊஞ்சல்களில் ஏறி வானம் முட்டப் பறக்கச் செய்தும் பெரும் குரலில் பாடியும் குதுகலிப்பதைப் பார்க்க இளம் சிறர்கள் குழுமி நிற்பார்கள்.
இரவில் நிலவு காலமென்ருல் பெண்கள் பெருமூஞ்சல் ஆடி மகிழ்வார்கள்.

ராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம் 2O3:
கூட்டுறவுச் சங்கக் கடைச் சண்டை சம்பந்தப்பட்டவர் களின் மனதில் புகைந்து கொண்டிருந்த போது பாலிப் போடிக் கிழவன் ஆச்சியிடம் சொல்லிக் கொண்டிருந்த விஷயம் கெளரியைத் திடுக்கிடப் பண்ணிவிட்டது.
ஆச்சியை ஊஞ்சலின் நடுவில் வைத்துச் சாரதாவும்
கெளரியும் ஆடிக் கொண்டிருந்தார்கள். கிழவி தன் வயதை யும் மறந்து இந்த இளம் பெண்களுடன் கிளு கிளுத்துக்
கொண்டிருந்தது. ஆச்சி ஒரு ருசிகரமான பேர்வழி.
கொண்டாட்டங்களில் இளம் பெண்களோடு தானும் ஒருத்தியாய் மாறி விடுவாள். தான் இளம் பெட்டையா யிருந்த காலத்தில் நடந்த சம்பவங்களைச் சொல்வாள்.
வண்டியில் ஏறிப்போய் ஊமைப்படம் பார்த்த கதை சொல்வாள். வருஷப் பிறப்பில் அரங்கேறும் ஊர்க் கூத்தைப் பற்றிச் சொல்வாள். இப்போதெல்லாம் இந்த *கோதாரி' பிடிச்ச சினிமா வந்ததால ஊரில் கூத்துயில்ல ஒண்டுமில்லாமல் போச்சு என்று அலுத்துக் கொள்வாள்.
ஆச்சியின் அலசலைக் கேட்டுக் கொண்டு கெளரியும். சாரதாவும் ஊஞ்சல் ஆடிக்கொண்டிருக்கும் போது பாலிப் போடிக் கிழவன் வந்து கொண்டிருந்தது.
சித்திரை வருவும் என்ருல் கேட்க வேண்டுமா? கிழவன் நன்முகப் போட்டிருக்க வேண்டும். வழக்கம் போல் தள்ளாடியபடி வந்து பலா மரத்தில் சாய்ந்து கொண்டு கிக்கி இக்கி என்று தன் பொக்கை வாயைத் திறந்த சிரித்தது.
எேன்ன அக்கை சின்னப் பொம்புளையோ' கிழவனின் கதையைக் கேட்காமல் கிழவி ஊஞ்சல் பாட்டுப் பாடிக் கொண்டிருந்தது.
உன்னுங்கடி தோழியரே-நல்ல பொன்னூஞ்சல் ஆடிடுவோம்
*அக்கை-அக்கா"
தி.-14

Page 110
210 தில்லையாற்றங்கரை
தெந்தன தெகுதென தெகிதென தெருகு தெனகு தெனு தெக்தன தெந்தணுணு "குரும்பைக்குலை குரும்பைக்குலை குலுக்கி முடியாதோ
பொழுதேறப் பொழுதேறப் பூசை முடியதோ" கிழவியின் குரல் தாள லயத்துடன் உஞ்சல் பாட்டுப் பாடியது. கிழவிதான் இளம் பெண்ணுய் இருந்த காலத்தை மனதில் பதித்துக் கொண்டு பாடுவது கிழவியின் முகபாவத் தில் தெரிந்தது.
எத்தனையோ ஆண்டுகளுக்கு முன் ஆச்சியும் இப்படித் தான் தன் தோழிகளுடன் ஊஞ்சல் "உன்னி ஆடியிருப்பாள். கிழவன் ஊஞ்சல் ஆட்டத்துடன் பார்வையும் ஆடலிட்டுக் கொண்டு ஆச்சியின் வருகையைப் பார்த்துக் கொண்டிருந்திருக்க வேண்டும். ஆச்சி ஊஞ்சலில் இறங்கியதும் கேட்டது கிழவன் “என்ன அக்கை எப்ப உண்ர மகன் கேட்டுப் பார்த்து வரப்போகினமாம்" கிழவன் யாருக்குக் கல்யாணம் பேசுகிறது? ஆச்சியின் முகத்தில் ஒரு கணம் திகைப்பும் அதிர்ச்சியும் ஆனலும் உடனடியாகத் தன் முகபாவத்தை மாற்றிக் கொண்டு *எதுக்கும் சித்திரைக் கொண்டாட்டம் முடியட்டும்" ஆச்சியின் குரலில் குமிழிடும் குதுகலத்தைக் கெளரியோ சாரதாவோ கவனிக்காமல் இல்லை.
இரு இளம் பெண்களும் ஒருத்தரை ஒருத்தர் கருத்துடன் பார்த்துக்கொண்டார்கள். இனமறியாத கலக்கம் ஒன்று கெளரியை உடனடியாகக் கவ்விக் கொண் டது. மரகதத்துக்குக் கல்யாணமா? என்ன பேசிக் கொள்கிருர்கள் இவர்கள்?
சாரதா மாணிக்கவாசகத்துக்குக் கடிதம் எழுதத் தொடங்கிய நாளிலிருப்து கெளரியின் மனதில் எப்போதும்
உன்னி-உந்தி" கேட்டுப் பார்த்து-மாப்பிள்ளை கேட்டு

ராஜேஸ்வரி பாலசுப்பிரழணியம் 2
ஒரு பயம். என்றைக்குச் சாரதாவின் காதல் வெளிபடு கிறதோ அத்துடன் சாரதாவின் படிப்புக்கும் முற்றுப்புள்ளி வைக்கப்படும் என்று கெளரிக்குற் தெரியும். சாரதாவுக்குக் கடிதம் எழுதிக் கொடுப்பதில் கெளரி உதவி செய்யா விட்டால் கூடச் சாரதா தன் கடிதத் தூது அனுப்புதலை விட்டிருக்க மாட்டாள்.
அவளால் உருப்படியாக யோசித்து நல்ல வசனங்களாக எழுதத் தெரித்திருக்கா விட்டாலும் சினிமாப் புத்தகங்களைப் பார்த்து உணர்ச்சி வசமான வசனங்களாகப் பொறுக்கித் தன் கைச்சரக்காக எழுதித் தள்ளியிருப்பாள்.
சாரதாவின் விஷயம் எப்போது பெரியம்மா வீட்டில் தெரிய வரப் போகிறதோ என்று மனத்துக்குள் பயப்பட்டுக் கொண்டிருந்தவளுக்கு இப்போது பாலிப் போடிக் கிழவன் ஆச்சியிடம் கேட்டது ஆச்சரியமாக இருந்தது.
ஆச்சியின் மகன்-உண்மையில் ஒன்றைவிட்ட மகன் தான் மாமா. மாமாவின் தாய், மாமா பிறந்த அடுத்த மாதமே இறந்து விட ஆச்சிதான் மாமாவின் தாயாய் இருந்தவள். மாமாவின் தகப்பனைக் கல்யாணம் செய்து மாமாவை மகளுக வளர்த்தவள்.
ஆச்சியின் மகன் வீட்டார்-மாமா வீட்டார் மாப்பிள்ளை கேட்டுப் பார்த்துப் போகல்லியோ என்று கிழவன் கேட்பத " சூறல் மரகதத்துக்கு மாப்பிள்ளை கேட்கப் போகிருர்களா?
பரிமளம் மாமி மரகதத்தை இவ்வளவு சின்ன வயதில் கல்யாணம் செய்து கொடுப்பாளா? இன்னும் கொஞ்ச காலத்தில் எஸ். எஸ். சி பரீட்சை வரப் போகிறது அது வரைக்கும் என்ருலும் பரிமளம் மாமி மரகதத்தின் கல்யாணப் பேச்சை ஒத்திப் போட மாட்டாளா? ஆச்சியும் பாலிப் போடி அப்புச்சியும் கதைத்தபடி விருந்தைக்குப் போய்க் கொண்டிருந்தார்கள்,

Page 111
212 தில்லையற்றங்கரை
கெளரி சாரதாவைக் கேட்டாள். "மரகதத்துக்குக் கல்யாணம் பேசிகினமோ" கெளரியின் குரலில் அளவிட முடியாத கலக்கம்.
"அப்படித்தான் ஏதோ "காதில விழுந்துது' சாரதா ஏனுேதானே என்று சொன்னுள்.
*சாரதா உனக்கு உண்ர விஷயத்தைத் தவிர யாரின்ற பும் விசேடமாகத் தெரியிர இல்லயா' கெளரி எரிந்து விழாத குறையாகக் கேட்டாள் சாரதாவை.
சொந்த மச்சான் மரகதத்திற்குக் கல்யாணம் பேசுகிருர் கள். அதுகூடப் பெரிய விஷயமில்லையா சாரதாவுக்கு?
*ஆறாம் மாப்புளை" கெளரியின் கேள்விக்குச் சாரதா ஆச்சரியத்துடன் தன் புருவத்தைச் சுருக்கிக் கேட்டாள்.
*உண்மையாக கெளரி உனக்கு ஒரு இளவும் தெரியாது. எத்தனை நாளா அப்பாவும் பாலிப்போடியும் அண்ணுவை மரகதத்துக்குப் பேச வேணும் எண்டு கதைக்கினம் எண்டு தெரியாதோ."
சாரதா சாதாரணமாகச் சொல்லிவிட்டு பூமியில் கால் உதைத்து ஊஞ்சலை ஆட்டிக் கொண்டிருந்தாள்.
அண்ணுவுக்கு மரகதமா பெண்ணுகப் போகிருள்?
திருக்கோயில் சித்திரவேலாயுத சுவாமிகள் கோயிலில் அண்ணுவையும் மரகதத்தையும் கமலத்தையும் ஒரேயடி யாகக் கண்ட காட்சி ஒரு நிமிடமும், அண்ணுவும் கமலமும் கடற்கரையில் தனிமையாகச் சிரித்துப் பேசிக்கொண்டிருந்த காட்சியும், கமலம் யாழ்ப்பாணம் போக முதல் உங்கட அண்ணுட்டச் சொல்லுங்கோ எங்களையும் ஞாபகம் வைக்கச் சொல்லி" என்று குரல் தழைப்ப உருக்கமாகச் சொன்னதும் ஞாபகம் வந்தன. கெளரி ஒன்றுமே கதைக்கவில்லை. அவளால் கதைக்க முடியவில்லை. *அண்ணுவுக்குத்

ராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம் 213
தெரியுமோ' கெளரி மெல்லக் கேட்டாள். **எனக்குத் தெரியாது" எடுத்தெறிந்த பதில் சாரதாவினுடையது. *உனக்கு விருப்பமான மாணிக்கவாசகத்தைத் தவிர யாரை யும் பேசினல் செய்வியோ' கெளரி சாரதாவைக் கேட்டாள்.
*அந்தச் சேட்டை எல்லாம் என்னிட்ட நடக்காது. கட்டாயம் படுத்தினக் கினம் எண்டால் கிணத்தில விழுந்து சாவண்' சாரதாவின் சபதமிது. தெய்வீகக் காதல்! காதல் இல்லையேல் சாதலாம்! சாரதா கிணற்றில் உண்மையாக விழுந்து தொலைப்பாளோ இல்லையோ, கிணற்று வாளியில் ஏறியிருந்து கொண்டாவது உயிரை விடப் போகிறேன் • என்று ஊரைப் பயமுறுத்துவாள்.
*அண்ணுக்கு விருப்பமில்லை எண்டா என்ன செய்வினம்" கெளரிக்கு வாய்விட்டுச் சொல்ல விருப்பம். மரகதத்தில் இருக்கும் விருப்பத்தை விடக் கமலத்தில் அண்ணு கூட விருப்பமாயிருப்பான் என்று. மரகதத்தில் கெளரிக்கு வெறுப்பில்லை. அண்ணுவைப் பற்றி அவளுக்குத் தெரியும். ஆனல் சாரதாவிடம் இதெல்லாம் சொல்லி ஒரு பிரயோசனமுமில்லை. சாரதாவுக்கு இப்போதெல்லாம் மற்றவர் மனநிலைகள் விளங்காது. ஏன் திடீரென்று இந்தக் கல்யாண ஏற்பாடு?
இந்த ஊரில் எத்தனையோ விஷயங்கள் மிக விரைவாக நடக்கின்றன. ஊரின் மாற்றங்கள் கண்மூடித் திறப்பதற்குள் நடப்து விட்டனபோல் இருக்கின்றன.
வெள்ளம் வந்து ஊர் அழிந்தது. ஒரு விதத்தில் நன்மையோ என்னவோ, இப்போது ஊரைப் பார்த்தால் தம்ப முடியாதளவு வித்தியாசம்.
அழிந்த வீடுகளுக்குப் பதிலாக உண்டாகும் புது வீடுகளிற் பெரும்பாலும் கல் வீடுகள். அரசாங்க உதவிப்

Page 112
214 gabAu8 iturgibprimas Bog o
பணத்துடன் இந்த வருட உழைப்பையும் முதலாகப் போட்டு உண்டாகும் நல்ல வீடுகள் ஒரு பக்கம்.
சித்தின்ரப் பிறப்புடன் அத்திவாரம் போட்ட கோயிலில் ஒரு பக்கம் மளமளவென்று கட்டப்படுகிறது.
புதுப் பாடசாலைக் கட்டிடங்கள். கூட்டுறவு சங்கம். ரோட்டில் கனகலிங்கம் மாமா கடையை விட இன்னும் ஒன்றிரண்டு கடைகள். எல்லாம் திடீர் மாற்றங்கள் தான். போன கிழமை ரசாநாயகத்தார் புது ட்ரக்டர் வாங்கினர். உழவு மெஷின் இவ்வளவு காலமும் அடுத்த ஊர்க்காரர் களிடமிருந்தது. அதை வாடகைக்கு எடுக்க வசதியற்றேர் இன்னும் மாடுகளில்தான் உழவு செய்து கொண்டிருக்
கிருர்கள்.
இப்போது ராசநாயத்தார் மெஷின் வாங்கியவுடன் ஊரில் பெரிய மகிழ்ச்சி. அத்துடன் குறைந்த கட்டணத் துக்குத்தான் உழவு செய்ய வசதி செய்து தருவதாகச் சொல்லியிருக்கிருர், "வளிசல் சுந்தரலிங்கம்" பாட சாலையை விட்டுவிட்டு ட்ரக்டர் ட்ரைவராகி உழைக்கிருன்.
அவன் பாடசாலைக்கு வராததால் அவனுடன் இளித்து இளித்துக் கதைக்கும் வசந்தாவிடம் எந்த வித்தியாசமும் இருப்பதாகத் தெரியவில்லை. அவள் எல்லோரிடமும்தான் சிரித்துப் பழகுவாள். மரகதம் இனிப் பாடசாலைக்கு வர் Lont Lill-TomTT?
சித்திரை மாத விடுமுறைக்குப்பின் பாடசால்ை தொடங் கும்போது மரகதம் வருவாளா?
அதற்கு முன் கல்யாணம் நிச்சயமாகி விடுமா? ஏன் இந்த அவசரம்? யார் இந்தக் கல்யாணத்தை அவசர்மாக திடத்தவேண்டுமென்று ஒற்றைக்காவில் நிற்பதாம்?

yn Gogdio aurf unrsook-tō (SilyL86wfuluth 15
கெளரிக்கு மறுமொழி சொல்ல யாருக்கும் பொறுமை யில்லை. அத்துடன் பெரியவர்களின் முக்கிய சமாச்சாரங் கிளை இந்தச் சின்னப் பெட்டைக்கு யாரும் ஏன் சொல்ல வேண்டுமாம்? மாமா ஒரு நெல்லுக் குத்தும் மெஷின் வாங்கி யிருந்தார். இந்த வருஷம் நல்ல விளைச்சல் அவர் நிலத்தில்.
*கையில் காசிருந்தாச் செலவழிஞ்சு போகும். ஏதோ ஒண்டு வாங்கிப் போடுங்கோ" பரிமளம் மாமி கெட்டிக்காரிமூன்று பெண்கள் முதற் பெண்களாகவும் மூன்று ஆண்கள் அவர்களைத் தொடர்ந்தும் பிறந்திருந்தார்கள். இந்த ஆண் களை நம்பி வளர்ந்த குமரிப்பெண்களின் கல்யாண செலவு களை நம்பியிருப்பதோ? மாமி சிலவேளை அம்மாவிடம் இப்படிச் சொல்வாள். ராசநாயகம் மனைவியுடன் சீட்டுக்
கட்டிக் காசு சேர்ப்பாள் பரிமளம் மாமி.
போன வருஷம் இரண்டு வளவு வாங்கி விட்டாள். அதற்கு முதல் வருஷம் தையல் மெஷின் வாங்கியிருந்தாள்.
மாமா, பரிமளம்:மாமியின் திறமையான நிர்வாகத்தில் வீட்டுப் பொருளாதார நிலையுயரப் பாடுபட்டுக் கொண் டிருந்தார். மரகதத்தைத் தொடர்ந்து பூரணிப் பெட்டை யும் குமராகப் போகிறது. பூரணிப் பெட்டை பரிமளம் மாமி மாதிரி அள்ளி வைத்த அழகுக் கொட்டு. பூரணியைப் பார்த்து இப்போதே அவள் அழகை ஊரார் வாய்விட்டுச் சொல்லியிருக்கிருர்கள். இப்படியும் ஒரு அழகோ என்ருே . மரகதம் மட்டுமென்ன? அழகில் ஒன்றும் குறைச்சல் இல்லை. சாரதா மாதிரி 'பளிச்சென்ற" முகத்தோற்றமும் நடை புடையுமில்லை.
பக்குவமான-அளந்து வைத்த ஏதோ ஒரு சிலை மாதிரித் தான் மரகதத்தைப் பற்றி நினைப்பாள் கெளரி.
யார் நினைவுக்கும் எட்டாத ரகசியம் மாதிரி மரகதத் தின் முகபாவம். பாடசாலையில் எல்லோரும் மனம்விட்டு

Page 113
21 6 தில்லையாற்றங்கரை
வாய்விட்டுச் சிரிக்கும் விடயங்களுக்குக் கூட மரகதத்தின் குரல் கேட்காத சிரிப்பு அவள் முகத்தில் மின்னி மறையும்.
ஆச்சி சொல்வது போல் அடைக்கலச் செல்வியோ? என்ன ரகசியமோ என்னவோ இப்போது அவளுக்குக் கல்யாணம் பேசுகிருர்கள்.
அண்ணு என்ன நினைக்கிருன்? யாரைக் கேட்பதாம்? கெளரி அலுத்துக் கொள்கிருள்.
புது வருடக் கொண்டாட்டத்தின் போது ஊரே சந்தோசமாயிருந்தது. இந்தக் காலத்தில் தான் ஊரில் கல்யாணப் பேச்சுகள் நடக்கும். கல்யாணங்கள் ஆனி, ஆடி
மாதங்களில் நடக்கும்.
வீட்டில் அம்மாவும் ஆச்சியும் கூடிகூடி ஏதோ கதைத்துக் கொண்டார்கள். அவர்கள் முகத்தில் பரபரப்புக் கலந்த சந்தோஷம். பெரியம்மாவும் சிலவேளை கலந்து கொள் வாள். சித்திரைமாதச் சூட்டில் நிழல் தேடி மாமரத்தின் கீழிருந்து பின்னேரங்களில் “சோழி' விளையாடுவார்கள்.
மணலில் சோழிகளை உருட்டும்போது ஊர்க் கதைகள் அவர்களின் வாய்களில் உருட்டப்படும்.
பெரியப்பாவின் மந்திராலோசனையின் பேரில்தான் மரகதத்தைப் பெண் எடுக்க யோசித்தார்கள் என்பதும், மைத்துனரான மாமாவின் உற்வைப் பலப்படுத்தித் தன்னுடன் சேர்த்துக் கொண்டு ராசநாயகத்தாரின் செல்வாக்கை மழுங்கடிக்கத்தான் இந்தத் திட்டமெல்லாம் என்று கெளரிக்குத் தெரிந்தபோது மரகதம்-அண்ணு கல்யாணம் மட்டுமென்ன அவர்களின் வாழ்க்கையின் ஒரு அத்தியாயமே முடிந்து விட்டது.
அடைக்கலச் செல்வி - மெளனமான ஆணுல் நம்ம
முடியாத பெண்.

ராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம் 27
பரிமளம் மாமிக்கோ மாமாவுக்கோ முதலில் இப்படி அவசரப்பட்டுக் கல்யாணம் பேச விருப்பமில்லை.
**மரகதம் சோதனை எடுத்து முடியட்டும்" என்று மாமி சொன்னதாகவும் அதற்கு ஆச்சி மறுப்புத் தெரிவித்துச் (ஆச்சி மறுப்புத் தெரிவிக்காமல் வேறு யார் தெரிவித்திருப் பார்கள்?) சண்டை பிடித்ததும் கெளரிக்குத் தெரியும்.
**என்ன இந்த "நொன்னுரியக் கத புள்ள? புத்தியறிஞ்ச புள்ள புள்ளப் பெற மாட்டாதோ? கதிரவேலன் அழகு வடிவான ஆம்புள. முறை மாப்பிள்ளய விட்டுப் போட்டு வந்தான். வரத்தானயா பார்க்கப் போனப்" ஆச்சி மாமிய்ை விடாமல் நச்சரித்தது. மாமா மாமிக்கு அண்ணு வில் மிக விருப்பம் என்று யாரும் சொல்லத் தேவையில்லை.
அண்ணுவை மாப்பிள்ளையாய்ப் பெற ஊரில் எந்தப் பெற்றேர்தான் மறுப்பார்கள். அண்ணு பெரியப்பா மாதிரி உயர்ந்து வளர்ந்திருந்தாலும் பெரியம்மா குடும்பத்தின் முகலாவண்யமிருந்தது. பெரியம்மா, குடும்பத்தினர் சிங்களக் குடியைச் சேர்ந்தவர்களாம் கண்டிப் பக்கத்தி லிருந்து வந்து தென் இலங்கைத் தமிழர்களுடன் சேர்ந்து தமிழராகி விட்டவர்களாம்.
கண்டியப் பெண்களின் குளிர்மையான முகத் தோற்றம் பெரியம்மாவிலும், ஏன் கமலத்திலும்தான் ஒட்டி வைத்திருக்கிறது. அண்ணுவின் முகபாவமும் அப்படி. சாந்தமான, ஆனல் கவர்ச்சியான முகத்தோற்றம் மீசை வைத்துக் கொள்ள மாட்டான். மீசை முளைக்கத் தொடகிய காலத்தில் அவன் முகத்தோற்றம் பெரியப்பாவை :ஞாபகப்படுத்தியது.
நொன்னுரியக் கத-விதண்டாவாதக் கதை.

Page 114
R 1 . தில்லையாற்றங்கரை
பெரியப்பாவின் அகங்காரமான முகபாவத்தை அண்ணு; வின் மீசை வைத்த முகம் பிரிதிபலிக்கப் போகிறதோ என்று பயந்தோ என்னவோ கெளரியும் சாரதாவும் விடாப் பிடியாக வற்புறுத்தி அண்ணுவின் மீசையை எடுக்கப் பண்ணி விட்டார்கள்.
ஆச்சிக்கு இந்தப் பெண்களின் சொல்லைக் கேட்டு அண்ணு மீசையை எடுத்தது சொல்ல முடியாத கோபம். ஊரில் எவன் மீசையில்லாமல் வழுவழுவென்று முகத்தைச் சவரம் பண்ணுகிருன்" என்று கேட்டு அண்ணுவுடன் பெரிய சண்டை. அவன் வழக்கம் போல் சிரித்து மழுப்பி விட்டான். எதிர்த்து வாயாட மாட்டான். வேட்டியும் சேர்ட்டும் போட்டுக் கொண்டு திரிவது தான் பழக்கம். பட்டணத்தில் படித்தமற்ற வாலிபர்கள மாதிரி காற்சட்டை போடுவது மிக மிக அபூர்வம்.
ஊரில் கெளரவமான மாப்பிள்ளையவன் என்பது வாய் விட்டுச் சொல்லாத-ஆளுனல் எல்லோருக்கும் தெரிந்த உண்மையது. இப்போதெல்லாம்-சங்கக் கடைவேலையை விட்டபின் கோயில் வேலையாகச் சாமியாருடன் திரிவதில் அவன் பொழுது போகிறது. பின்னேரங்களில் சில வேள்ை படம் பார்க்கப் போகிருன். இல்லாவிட்டால் ராமநாதன் வாத்தியார் வீட்டில் கழிக்கிருன். ராமநாதன் வீட்டார் இந்த வருஷம் கல்முனைக்குப் போகவில்லை.
ராமநாதன் வாத்தியார் ஊரையடுத்து ஒரு சில ஏக்கர் நிலம் வாங்கிப் பயிர் செய்திருக்கிருர், நல்ல விளைச்சல். அத்தோடு பரமேஸ்வரி ரீச்சர் கொஞ்ச நாளைக்கு முன்தான் யாழ்ப்பாணம் போயிருந்தபடியால் ஊரோடு நிற்கிருர்கள். ஆணுல் ஆச்சியைப் பொறுத்தவரையில் ரீச்சர் ஊரில் நிற்பது ஏனென்ருல் ஊரில் தையல் தைத்து உழைப்பதற் காகத் தான் என்று சொல்லிக் கொள்கிருள்.
ஊரில் தையல் மெஷின்களோ அல்லது நாகரீகமாக உடுப்புத் தைக்கக் கூடியவர்களோ அதிகமில்லை.

ymrCaggioshurf Lu rT6oes'uiGgruD6avufaunutib a 9
பரமேஸ்வரி ரீச்சரிடம் பழகி மரகதம் இப்போது சட்டை தைத்துக் கொடுக்கிருள். சித்திரை வருஷப் பிறப்பில் ஒரு பிள்ளைக்குக் குறைந்தது மூன்று விதமான உடுப்பென்ருலும் தைக்காவிட்டால் அந்தக் கிராமத் தாருக்குச் சந்தோசமில்லை.
கிராமத்தாரின் தேவையைப் பூர்த்தி செய்யப் பரிமளம் மாமி மரகதம் போன்ற ஒரு சில தையற்காரர்களால் முடியாது. பரமேஸ்வரி ரீச்சர் விடிந்தால் பொழுதுபட்டால் மெஷினேடு கஷ்டப்பட்டு ஏன் உழைக்க வேண்டுமென்று கெளரிக்கு விளங்கவில்லை.
*யாழ்ப்பாணத்தார் கஷ்டமான உழைப்பாளிகள். மட்டக்களப்பார் போல் உல்லாசிகளில்லை. தண்ணிர் கிடைக்காத தரை நாடு அவர்களுக்கு எங்களைப் போல் இரண்டு போகம் பயிர் செய்ய வசதியற்றவர்கள். வாழ்க்கையே கடினமானது. அதுதான் கஷ்டப்பட்டு உழைக்கப் பழகியிருக்கிருர்கள்" அப்பா கெளரிக்குச் சொன்னர்.
அப்பா சொல்வது உண்மைதான். எங்கள் ஊரார் கையில் இருக்கும்போது நன்ருகச் செலவழித்துக் குடித்து மகிழ்ந்து விட்டு உழுதும் காலம் வந்தவுடன் வயல் விதைப் புக்கு ராசநாயகம் போன்ற ஆட்களிடம் அளவுக்கு மீறிய வட்டிக்குக் காசு கடன் வாங்குவார்கள்.
ராசநாயகம் போல 'புத்திசாலிகள்' ' ஏழைகளின் அறியாமையையும் பெலவீனத்தையும், காலாதிகாலமான வழக்க வழக்கங்களுக்கு அடிமையாகிப் போன ஏழைகளின் மனப்போக்கையும் முதலாக்கி வட்டிக்குக் குட்டி சேர்த்து ஊரில் பெரிய மனிதராகுகிருர்கள்.
பரிமளம் மாமியும் ஒரு காலத்தில் இப்படிப் பண்க்காரி யாக இருப்பாளா?
வருடத்தில் இரு தரம்!

Page 115
、220 தில்லையாற்றங்கரை
கெளரி தனக்குள் தானே கதைக்கும் விஷயங்களில் இதுவும் ஒன்று. அண்ணுவின் கல்யாணக் கதை இப்போ தெல்லாம் பகிங்கரமாகக் கதைக்கப்படுகிறது.
தங்களுக்குள் எல்லாம் பேசி முடித்து விட்டு சம்பிரதா யத்துக்காகப் பெண் பிள்ளை வீட்டார் மாப்பிள்ளை கேட்டுப் *போகும் நாள்வரைக்கும் அண்ணுவின் பேச்சு ஒன்றுமிருக்க
வில்லை.
இருந்தாற்போல் ஒருநாள் கெளரி வீட்டுக்குக் கோபத் துடன் வந்து சேர்ந்தாள்.
*கேட்டியளோ குஞ்சம்மா? எனக்குக் கல்யாணம் பேசுகினமாம் என்னை ஒரு சொல்லும் கேக்காமல்."
அண்ணு சொல்வது உண்மையா? கடந்த இரண்டு கிழமைகளாக இந்தக் கதை தவிர இந்த மூன்று வீட்டிலும் வேறு எந்தக் கதையாவது முக்கியமாக நடந்திருக்குமென்று தெரியாது. அண்ணு உண்மையாகத்தான் சொல்கிருன தன்னைக் கலந்து ஆலோசிக்கவில்லை என்று?
*என்ன தம்பி சாட்டும் போக்கும்? உனக்குத் தெரியும் தானே மரகதத்துக்கும் உனக்கும் பேசுவினம் உண்டு. இதில என்ன சண்டை கிடக்கு" அம்மாவின் குரலில் சாதாரண சமாதானத் தொனி. அண்ணுவின் முகத்தில் கோபக் கனல்,
சொந்தங்கள் என்றபடியால்; கல்யாணம் முடிக்கப் போகிறவர்களை ஒரு சொல் கேட்காமல் பெற்ருேர்கள் தங்கள் பாட்டுக்குப் பேசித் தீர்ப்பது நியாயமா?
கெளரி அம்மாவிடம் கேட்கலாம். அம்மாவிடமிருந்து கடைசி வரைக்கும் சரியான மறுமொழி கிடைக்குமா?
குஞ்சம்மா.சின்னம்மா சித்தி.

ராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம் 臧22审
ஒன்ருய் வளர்ந்த மச்சான் மைத்துணியாம் அண்ணுவும்:
மரகதமும். இவர்கள் என்ன முன்பின் தெரியாதவர்களா போய்ப் பார்த்து முடிவு கட்ட?
இதெல்லாம் ஆச்சியினதும் அம்மாவினதும் வாதம். இவர்கள் இருவரும் பெரியம்மா. பெரியப்பாவுக்கு வக்கா லத்து வாங்கிக் கொண்டார்களா?
தான் இந்தக் கல்யாணத்துக்குச் சம்மதிக்கப் போவ
தில்லை என்று அண்ணு சத்தம் போட்டான். அண்ணு குரல்
உயர்த்திக் கதைப்பதே அருமை
தன் தாய் தகப்பனுடன் சண்டை பிடிக்கத் தைரிய மில்லாமலோ என்னவோ கெளரி வீட்டில் ஆச்சிக்கும் அம்மாவுக்கும் வந்து முறையிடுகிறன்.
"இதென்ன தம்பி நாடகம்? மரகதம் எவ்வளவு வடிவான பெட்டை. உனக்கென்ன பைத்தியமா வேணு மெண்டு சொல்ல" அம்மா அண்ணுவை எரிச்சலுடன் விசாரித்தாள்.
*மரகதத்தை யார் என்ன சொன்னர்கள் குஞ்சம்மா? எனக்கு இப்ப கல்யாணம் வேண்டாம்" அண்ணு பிடிவாத மாகச் சொன்னன்.
1. கெளரிக்கு அண்ணனில் கோபம் வந்தது. கல்யாணம் இப்போதைக்கு வேண்டாம் என்று சாட்டுச் சொல்வதை விட மரகதம் வேண்டாம் கமலம் தான் வேணும் என்று சொல்வதுதானே? கமலம் நேர்ஸிங் முடித்து விட்டு வரும் வரைக்கும் காத்திருக்கப் போகிறேன் என்று சொல்வது தானே என்று அண்ணுவிடம் சொல்லலாமா? ஏன் இவ்வளவு கோழையாக இருக்கிருன்? பெரியப்பாவுக்குப் பயமா? பெரியப்பா சொல்லித் தானே படிப்பையும் குழப்பினன்? இப்ப்ோது பெரிய்ப்பாவின் சொல்லைத் தட்ட முடியாமல் மரகதத்தைச் செய்யப் போகிருஞ?

Page 116
222 தில்லைாற்றங்கரை
இகளரி மெளனமாகத் தன்னைச் சுற்றி நடக்கும் விடங் க3ள அவதானித்தாள்.
பெரியவர்கள், பெற்ருேர்கள், சொந்தக்காரர்கள், தங்கள் குழந்தைகளின் நன்மையையும் சந்தோசத்தையும் உத்தேசித்துத் தான் எல்லாம் நிர்ணயிக்கிருர்களா?
பெரியப்பா அப்படி ஒன்னும் பெருநல வாதியாய்த் தெரியவில்லை. அண்ணு கெளரி வீட்டில் போட்ட சத்தமும் மறுப்புப்பதும் ஆச்சி மூலம் பெரியப்பர காதில் எட்டியிருக்க வேண்டும். அவர் வானத்துக்கும் பூமிக்குமாகத் துள்ளிக் கொண்டிருந்தார்.
நான் பேசுற பொம்புளை வேண்டாமெண்டால் இவன் என்னதன்ற மாமன் மாதிரி சிங்களத்தியைக் கொண்டுவரப் போருனே' என்று பெரியம்மாவின் தம்பி சிங்களப் பெண்ணைச் செய்ததைச் சொல்லித் திட்டினுர்,
ஏன் பெரியப்பாவுக்கு கமலம் என்ருெரு மருமகள் இருக்கிருள் என்று தெரியாமல் போய் விட்டது?
அேண்ணு கல்யாணம் வேண்டாமென்கிருன். ஏன் பெரியப்பா வற்புறுத்தி வேணும்" சாராதவைக் கேட்டாள் கெளரி. w
ஏன் மரகதத்துக்கு என்ன குறைச்சல்' சாரதாவும் பெரியம்மா போல் கேட்டாள்.
தான் இவ்வளவு காலமும் ரகசியமாய் மனதில் நினைத் திருந்ததை சாரதாவிடம் கேட்டாள் கெளரி.
*அண்ணுவுக்கு கமலத்தில விருப்பமோ" கெளரி
தயங்கியபடி கேட்டாள்.
சாரதா வழக்கத்துக்கு மாருகக் கெளரியை ஏற இறங்கப் பார்த்தாள்.

ராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம் ,223
**கடைசிவரைக்கும் அப்பா கமலத்தைச் செய்ய உடமாட்டார்" சாரதாவின் குரலில் இருந்த உறுதிக்குப் பின்னுல் ஏதோ ரகசியம் இருப்பது கெளரிக்கு நிச்சயமாய்த் தெரிந்தது.
**ஏன் கமலம் வடிவானது. நல்லாப் பழகும். நேர்ஸிங் செய்த பிறகு அண்ணுவைச் செய்யச் சம்மதிக்கும்" கெளரி அடுக்கிக் கொண்டே போனள்.
சாரதா கொஞ்ச நேரம் ஒன்றும் பேசவில்லை. கெளரிக்கு மனதில் ஆவல் கூடிக்கொண்டு வந்தது. என்ன குடும்ப ரகசியத்தை மறைக்கிருள்.
"என்ன சாரதா ஏதோ மறைக்கிருய்' கெளரி நேரடி யாகக் கேட்டாள்.
*கெளரி எனக்குத் தெரிஞ்ச எல்லாம் உனக்குச் சொல்லுவன் எண்டு தெரியும் தானே. கமலத்தை அப்பா கடைசி வரைக்கும் அண்ணு கல்யாணம் முடிக்கவிட மாட்டார்" சாரதாவுக்கும் தெரியும் பெரியப்பா இப்படிச் செய்வதற்கு பின் ஏதோ காரணம் இருப்பதாக; என்ன என்றுதான் தெரியாது. V,
என்னவாக இருக்கும்? கெளரியின் மனத்தை அரித்துக் கொண்டேயிருந்தது.
**உனக்குத் தெரியும் தானே அப்பாவுக்கு அம்மாவின்ற ஆக்களப் பிடிக்காதெண்டு அப்பா சும்மா எல்லோரோ டையும் கொழுவுறவர். பெரிய மாமாவோட கதைக்காம விட்டே எத்தனையோ வருஷம். ஏன்எண்டெல்லாம் எனக்குத் தெரியுமா? நாங்க திருக்கோயிலுக்குப் போறதே அப்பா வுக்குப் பிடிக்காது' சாரதா சொல்வது உண்மை. பெரியப்பாவுக்கு யாரையும் பிடிக்காதென்று அவர் முடிவு கட்டினர். ஏன் பிடிக்காது என்று காரணம் கேட்க யாரும் கிடையாது.

Page 117
224 தில்லையாற்றங்கரை
அண்ணு இந்தக் கல்யாணத்துக்குச் சம்மதிக்காவிட்டால் தன் வீட்டில் அவன் இருக்கக் கூடாதென்று பெரியப்பா சொன்னர். தன் நில புலனில் ஒரு மண்ணும் அண்ணு வுக்கு எழுதித்தர மாட்டேன் என்று பெரியப்பாகத்துவதைக் கேட்கக் கெளரிக்கு ஆத்திரம் வந்தது. t
படிப்பில் கெட்டிக்காரனன அண்ணு படித்து முன்னேறி யிருக்கலாம். ஒரு உத்தியோகம் எடுத்திருக்கலாம். எல்லாம் பெரியப்பாவால் அ நி யா ய மா ன து. ஒரு கிளார்க் வேலையிலயோ வாத்தி வேலையிலயோ உழைச்சுப்போடுவாய் என்று அண்ணுவைச் சொல்லி சொல்லிப் படிப்பைத் தொடராமற் பண்ணிவிட்டு இப்போது தான் பேசும் கல்யாணத்தைச் செய்யாவிட்டால் அண்ணு தன் மகன் என்றும் நினைக்கப் போவதில்லை என்று சொல்லும் பெரியப் பாவின் சுய நலத்தைப் பார்த்து அண்ணு எரிமலையாக வெடிப்பதைக் கெளரியால் சகித்துக் கொள்ள முடியாம
லிருந்தது. w
பெற்றேர்கள் எல்லோரும் தங்கள் பிள்ளைகளில் அக்கரையாய் இருக்கின்றனரா?
வருடப் பிறப்பு முடிய பாடசாலை தொடங்கியது. மரகதம் பாடசாலைக்கு வரவில்லை.
வகுப்பு மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் விஷயம் தெரிந்திருக்க வேண்டும். சாரதாவைக் கேட்டார்கள். அவளின் தமயனின் திருமணம் எப்போதென்று நாள் குறிக்க. வில்லை என்ருள்.
ராமநாதன் மாஸ்டர் ஒன்றும் கேட்கவில்லை. அவர்
வீட்டுக்கு அண்ணு அடிக்கடி போய் வருவதால் தன் மன நிலையைச் சொல்லியிருக்க வேண்டும் என்று நினைத்தாள்"
கெளரி.

ராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம் 225ぶ
**எஸ்.எஸ்.சி. சோதனைக்கு முதல்எத்தனை பெட்டைகள் கல்யாணம் முடிக்க போகினமோ" என்று சாடையாகக் குறும்பாகக் கேட்ட சின்னத் தம்பி என்ற மாணவனுக்கு, **திருமணங்கள் தேவலோகத்தில் நிச்சயிக்கப்படுகிறதோ இல்லையோ எங்களப் பொறுத்த விதத்தில எங்கட ஆட்கள் சில தேவைகளுக்குப் பிரயோசனப் படுத்துகினம்" என்ருர் மாஸ்டர். t
அண்ணு கல்யாணத்துக்கு விருப்பமில்லாமலிருப்ப யும் பெரியப்பா தன் சுய தேவைகளைப் பூர்த்தி செய்ய அவனைப் பாவிப்பதையும் மாஸ்டர் மறைவாகச் சொல்வதை கெளரி அவதானிக்காமலில்லை. **வலிமையற்றவர்களுக்கும். பெண்களுக்கும் எந்த சமுதாயத்திலும் ஒரு உரிமையுமில்லை. தலைவர்களும் வசதியுள்ளவர்களும் அவர்களின் இல்லாமை யைத் தங்கள் மூலதனமாகப் பாவிக்கிருர்கள்"" ராமநாதன் வாத்தியார் இருந்திருந்து சொல்லும் குட்டிப் பிரசங்கத்தில் இப்படியுமொன்று சொன்னர். -
அடுத்த மாதம் மாவட்ட கட்டுரைப் போட்டியிருந்தது. அதுபற்றி மேல் வகுப்பு மாணவர்களுடன் கலந்தாலோசிக்க பின்னேரம் பாடசாலைக்கு வரச் சொல்லியிருந்தார்.
வசந்தாவும் கெளரியும் சேர்ந்து போனர்கள். மற்றவர்கள் இன்னும் வந்து சேரவில்லை. சாரதா கட்டுரைப் போட்டிக்கு ஈடுபடவில்லை. யார் யார்கட்டுரைப் போட்டிக்கு போகத் தகுதியானவர்கள் என்ற பேச்சு வந்த போது மரகதத்தின் பெயர் அடிப்பட்டது. மரகதம் மெளன சிலை என்ருலும் படிப்பில் பரவாயில்லை. பாடசாலைக்கு வந்திருந் தால் கட்டுரைப் போட்டிக்குப் போகும் பெண்களில் மரகத மும் ஒருத்தியாய் இருப்பாள் என்று வசந்தா சொல்ல ராமநாதன் வாத்தியார் இரு பெண்களையும் மாறி மாறிப்ர பார்த்தார்.
எங்கட சமுதாயம் பெண்புள்ளயலாம் பிள்ளைகள், பெறவும் சட்டி பானை தேய்க்கவும்தான் எதிர்பார்க்குது.
தி,-15

Page 118
226 தில்லையாற்றங்கரை
கட்டுரைப் போட்டிக்குப் பெண்கள் தகுதியானவர்கள் என்பதை நிரூபிக்க மரகதம் போல பெட்டயளால ஆவாது. எங்களால சோறு கறி சமைக்க மட்டுமில்ல, கட்டுரைகளும் எழுதி பரிசு பெற ஏலும் எண்டுசொல்ல நீங்கள் தரவளி முன்னுக்கு வர வேணும்" வாத்தியாரின் பேச்சு வசந்தா வுக்குச் சிரிப்பையுண்டாக்கி விட்டது.
*கட்டுரைப் போட்டியில பரிசு எடுத்து என்ன ಆro--D : போறம்" அவள் சிரித்துக் கொண்டுதான் சொன்னலும் அவள் குரல் சாடையான விரக்தியைக் காட்டியது.
**போட்டிக்குக் கட்டுரை எழுதுறது மட்டும்முக்கியமல்ல. எழுதுற விஷயம் என்ன என்பதுதான். என்ன காணப் போறியள் என்பதை விளக்க வேணும்" என்ருர்.
கட்டுரைப் போட்டிக்குத் தரப்பட்டிருக்கும் தலையங்கம் *பாரதி கண்ட பெண்கள்" பாரதி ஒருத்தனுக்குத்தான் பெண்கள் நிலை தெரிந்ததோ? கெளரி வீட்டுக்கு வந்து வெகு நேரம் வரையும் வாத்தியாரின் பேச்சு மனதில் நிழலாடியது.
மரகதத்தைப் பற்றிக் கூட்டத்தில் காணுதது ஆச்சரிய மளிக்கவில்லை என்ருலும் மரகதத்தின் பாடசாலை வாழ்க்கை யின்முற்றுப் புள்ளி அண்ணுவின் திருமண வாழ்க்கையின் ஆரம்பமென்பதை நினைக்கும் போது சொல்ல முடியாதஇனம் தெரியாத வேதனையான உணர்வைத் தந்தது.
அண்ணு என்ன சொல்லியும் இந்தத் திருமணம் நடந்து தான் முடியப் போகிறது என்று அவளுக்குத் தெரியும்.
மரகதம் இப்போது எப்படியிருப்பாள்?
அண்ணு இந்தக் கல்யாணத்தை வெறுப்பது தெரிந் திருக்குமா? மரகதத்துக்கு ஓரளவு தெரியும் அண்ணுகமலம் விஷயம்.

ராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம் 227
என்னவென்று இப்போது கல்யாண்த்துக்குச் சம்மதித் திருப்பாள்? உடனடியாக மரகதத்தைப் பார்க்க வேண்டும் போல் இருந்தது. ஒரே ஒரு தயக்கம்தான் கெளரிக்கு,
மரகதத்தின் வீடு செல்வராசாவின் வீட்டைத் தாண்டி யிருக்கிறது. எதிரும் புதிருமாகச் செல்வராசாவை ஒழுங்கையிலோ தெருவிலோ சந்திக்கக் கெளரி விரும்ப வில்லை.
பத்மநாதனுடன் தன்னைக் கண்டு செல்வராசா கிண்டல் செய்த இரவைக் கெளரியால் மறக்க முடியாது.
அவளைத் தவிர யாருக்கும் தெரியாத கதையாகிப் போனுலும் செல்வராசாவை நேரிலே சந்தித்து ஏதும் வீண் கதைகள் வருவதையோ வளர்வதையோ கெளரி விரும்ப வில்லை.
மரகதத்துக்கும் கல்யாணம் முடியப் போகிறது. சாரதா மாணிக்கவாசகம் விஷயம் தெரிந்தவுடன் சாரதாவின் பாட சாலைப் படிப்புக்கும் முற்றுப் புள்ளி வைக்கப்படும். அப்படி ஏதும் நடந்தால் ஆச்சி தன்னையும் ஏதும் சாட்டுச் சொல்லி பர்ட்சாலைக்குப் போகாமற் பண்ண அம்மாவைத்தூண்டிக் கொண்டிருக்கும்.
எதற்கும் கவனமாய் இருக்க வேண்டும். ஆனல் மரகதத்தைப் பார்க்க வேண்டும் எள்ற ஆவலையடக்க முடிய வில்லை. •
அந்த நேரம் பூரணி, கெளரி வீட்டுக்கு அரிதட்டு இரவல் வாங்க வந்திருந்தது. நல்ல சாட்டாகப் போய் விட்டது. பூரணியுடன் சேர்ந்து கொண்டு மரகதத்திடம் போகும் போது சொல்லி வைத்தாற் போல செல்வராசாவும் தங்கள் வீட்டு ‘கேற்ருல் வெளிக்கிட்டும் கொண்டிருந்தான்.
' எதை நடக்கக் கூடாது என்று நினைத்தாலோ அதே கண்ணுக்கு முன்னல் நடப்பதை நம்பா விட்டாலும் செல்வ ராசாவைக் காணுத மாதிரி அவனைக் கடந்து சென்ருள்.

Page 119
228 தில்லையாற்றங்கரை
அவன் இவர்களைக் கண்டு தன் சைக்கிளை ஒழுங்கை வேலிப்பக்கம் சாத்திவிட்டு நின்றன்.
**என்ன கெளரி உங்களக் காணுறது நாலாம் பிறை நிலவக் காணுற போல அதிசயமாயிருக்கு' அவன் குரலில் சாதாரண தொனி என்ருலும் இவளை எதிர்பாராமல் கண்ட ஒரு கிளர்ச்சி அப்பட்டமாகத் தெரிந்தது.
* ‘நாலாம் பிறை கண்டால் நல்ல பலன் கிடைக்காதாம்" கெளரியின் வாய் கெளரியின் நினைவை முந்திக் கொண்டது. எவனேக் காணக் கூடாது எவனுடன் கதைக்கக் கூடாது என்று நினைத்து வந்தாளோ எதிர்பாராது நடக்கிறது.
பூரணி இவர்களின் உரையாடலைக் கேட்டுக் கலகல வென்று சிரித்தாள். “எப்பவும் ஒரு துணையோடதான் போவியள் போல கிடக்கு" செல்வராசா எதை ஞாபகப் படுத்துகிருன் என்று தெரியும். கெளரிக்கு சுரீர் என்ற ஆத்திரம்.
**என்ன செய்யுறது எப்ப பார்த்தாலும் வழிமறிக்க. ஆக்கள் இருப்பினம் என்கிற பயம் தான்" கெளரி தன் கோபத்தையடக்கிக் கொண்டு சொன்னுள்.
**வழிமறிக்கிறதுக்கும் வழித்துணைக்கும் ஏற்ற ஆக்களு, மல்லவோ இருக்க வேணும்" அவன் விடாப்பிடியாகக் கெளரியுடன் மறைமுகமாக எதையோ சொல்ல முயற்சிக் கிருன் என்று தெரியும். அவள் ஒன்றும் பேசாமல் நடந்தாள். மனதில் கோபம்.
மரகதத்தின் வீடு வ்ரைக்கும் பூரணியுடனும் ஒரு கதை. யில்லை. அண்ணுவுக்கும் மரகதத்துக்கும் அவர்களின் கலந்தாலோசனையில்லாமல் கல்யாணம் நடக்க முயற்சிகள் நடப்பதுபோல் தனக்கும் செல்வராசாவுக்கும் நடக்கலாம் என்ற நினைவு வந்ததும் ஏதோ பாருங்கல் நினைவில் அழுத்துவது போல் பயங்கரமாயிருந்தது.

ராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம் 229
மரகதம் மரக்கறித் தோட்டத்தில் கத்திரிக்காய்க் கன்றுகளுக்குத் தண்ணிர் ஊற்றிக் கொண்டிருந்தாள்.
பின்னேரக் குளிர்காற்றில் இளம் பயிர் பச்சைகள் தலை அபசைத்துச் சரசமாடிக் கொண்டிருந்தது.
மரகதம் வீட்டில் கிணறு இல்லை. அதனல் தோட்டத்தில் ஒரு மூலையில் பூவல் (நீர் எடுக்குமிடம்) வெட்டியிருந்தார்கள்
மரகதம் கெளரியைக் கண்டதும் பூவலடியில் குடத்தை வைத்துக் கொண்டு நின்ருள்.
முகத்தில் வெட்கம் கலந்த மெல்லிய புன்னகை. தூரத்தில் சொந்தக் காரப் பெண்கள் பல உரல்கள் வைத்து மாவிடித்தும் கொண்டிருந்தார்கள். ஒரு சிலர் தேங்காய் துருவிக் கொண்டிருந்தார்கள். கேட்டுப் பார்த்துப் போகப் பலகார வகை செய்யும் அமர்க்களம் அப்படியே கேட்டது. குரல்களில் சந்தோஷம்.
**என்னப்பா கலியாணப் பொம்புள இன்னும் குடத் தோட நிற்கிருய்? குடம் தூக்கி இடுப்பெலும்பு உடைஞ்சால் என்ர அண்ணு புதுப் பெண்சாதியை என்ன செய்வான்" கெளரி பகிடி விட்டாள்.
மரகதத்தின் முகம் அஸ்தமித்துக் கொண்டிருக்கும் சூரியனின் செங்கிரணம் பட்ட மாதிரிச் சிவந்தது.
"வழுதிலங் கண்டு (கத்தரிக்கண்டு) பூத்திருக்கு பாத்தியோ" மரகதம் கதையை மாற்றினுள். நினைத்தபடி மரகதம் ஒன்றும் அப்பாவியில்லை. விஷயங்களை மறைத்துக் கதைக்கவும் தெரிந்து வைத்திருக்கிருள்.
*எப்ப கல்யாணமாம்" கெளரி கேட்டாள்.
**எனக்கென்னடப்பா தெரியும்" மரகதத்தின் செல்ல அமான குரலில் அவள் மகிழ்ச்சி தெரிந்தது.

Page 120
230 தில்லையாற்றங்கரை
அவள் மIமிழ்ச்சியையும் முகத்தின் கவர்ச்சியையும் பார்க்க கெளரிக்கு அவளில் அனுதாபம் வந்தது.
*அண்ணு விரும்பியோ விரும்பாமலோ மரகதத்தைச் செய்யப் போறியள். அவளைச் சந்தோசமாக வைச்சிருங்கோ. மரகதம் கள்ளம் இல்லாத அப்பாவிப் பெண்" என்று அண்ணுவிடம் சொல்லத் துடித்தாள்.
8
வேத நாயகக் குருக்கள் தான் புரோகிதர். ஓமம் வளர்த்து மந்திரம் சொல்லிக் கல்யாணச் சடங்குகள் தொடங்கி வைத்தார். அண்ணு பட்டுவேட்டி, சால்வை, “தலைப்பாகையுடன் மிக மிகக் கவர்ச்சியாய்த் தெரிந்த
கண்.
மரகதத்துக்குப் பட்டுச் சேலையும் உடம்பு நிறைய நகைகளும் தெய்வவிக்கிரக மாக்கிவைத்திருந்தது.
என்ன அழகான சோடி வாய்விட்டுச் சொல்லாதவர் ஒன்றிரண்டு பேர்தான்.
பெரியப்பாவின் வீட்டிலிருந்து மாப்பிள்ளை அழைத்து வரும்போது வழியில் ராசநாயகத்தார் வீட்டில் செல்வ ராசாவைக் கெளரி காணத் தவறவில்லை. இப்போது இவ்வளவு ஆடம்பரமாக நடக்கும் திருமணத்தைக் கண்டதும் சாரதாவின் முகத்தில் தெரியும் கனவும் அவளின் மனதில் ஓடும் நினைவுகளும் என்னவாக இருக்கும் என்று கெளரிக்குத் தெரியும். அண்ணுவும் மரகதமும் தாலிகட்டி அம்மி மிதித்து அருந்ததி பார்த்து சேவரக்காலில் வைத்த வட்டிலில் ஏழு மரக்கறியுடனும் சாப்பாடு போட்டுக் கல்யாணம் செய்து கொண்டார்கள்.

ராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம் 23雷
பெரியப்பாவின் முகத்தில் எல்லையற்ற மகிழ்ச்சி. மாமா மாமியும் தான். ஆச்சியும் தான். பாலிப் போடுக் கிழவனைக் கேட்க வேண்டுமா?
திருக்கோயிலிருந்து சொந்தக்காரக் பட்டாளம் வந்திருந்தது.
கமலத்துக்குக் கெளரி அண்ணுவின் திருமண விஷயம் பற்றி எழுதியிருந்தாள். கடிதம் இன்று கிடைத்திருக்கலாம். கமலத்தின் முகம் எப்படியிருக்கும் என்று கெளரி சிந்தித்த போது மனதில் வேதனை படர்ந்தது.
கல்யாண வீட்டுக்கு ராசநாயகம் வரவில்லை. செல்வ ராசாவும் தாயும் பந்தியோடு பந்தியாய் வந்திருந்து சாப்பிட்டுவிட்டுப் போஞர்கள்.
என்னதான் பகை என்ருலும் செத்த வீட்டுக்கும் கல்யாண வீட்டுக்கும் போகாமலிருந்தால் அது ஜென்மப் பகையாம்!
பெரியப்பா செருப்பாலடித்ததற்குப் பழி வாங்கத்தான் ராசநாயகத்தார் கல்யாண வீட்டுக்கு வரவில்லை என்று ஊரில் கதைத்தார்கள். கல்யாண வீடு முடிந்து, சில நாட்க. ளான பின், தம்பதிகள் சொந்தக்காரர் வீடுகளுக்குக் 'கால் மாறி” "ப் போவது வழக்காம்.
ராசநாயகத்தார் வீட்டுக்குப் போக வேண்டாம் என்று அண்ணுவைப் பெரியப்பா சொன்னுர், அது மாமாவுக்குப் பிடிக்கவில்லை. பெரியப்பாவின் கோபம் தன் குடும்பத்துக் குள் வைத்துப் பாராட்டக் கூடாது என்ருர் மாமா.
எப்படித்தான் இருந்தாலும் மாமா குடும்பமும் ராசநாயகத்தார் குடும்பமும் ஒரு வேலி இரு குடும்பமாய் இதுவரைக்கும் புழங்கி வந்தவர்கள் என்ருர் மாமா.
எப்படித்தான் இதுவரைக்கும் பெரியப்பா ராசநாயகத் தாருடன் பகை பாராட்டினுலும் தான் இதற்குள் தலையிடத்

Page 121
232 தில்லையாற்றங்கரை
தயாராயில்லை என்று மாமா ஆணித்தரமாகச் சொல்லி விட்டார். VA
எந்தக் கல்யாணம் நடந்தால் தன் வலிமை கூடுமோ, யாருடைய உதவி கிடைக்கும் என்று பெரியப்பா எதிர் பார்த்தாரோ அதே கல்யாணம் அவர் கனவை உடைத்துக் கொண்டிருந்தது. கல்யாணமாகி அடுத்த கிழமையே மாமாவும் பெரியப்பாவும் பெரிதாக வாய்த்தர்க்கம் பட்டுக் கொண்டார்கள்.
கூட்டுறவு சங்கத்திலிருந்து தானும் விலகப் போவதாக மாமா சொன்னர். பெரியப்பா வலி வந்த மாதிரி கத்தத் தொடங்கிவிட்டார்.
'மாப்பிள்ளை தந்த என்னை மதிக்கத் தெரியாதவன்" என்று மாமாவைத் திட்டினர். மாப்பிள்ளை எடுத்ததற்காக மாமா பெரியப்பா சொல் கேட்பதா, சாமியாரும் அப்பாவும் போய் மாமாவையும் பெரியப்பாவையும் சமாதானம் பண்ண வேண்டி கிடந்தது.
ஊர் வழக்கப்படி அண்ணு பெண் வீட்டில்தான் சீவியம். ஆனல் மாமா வீட்டில் கிணறு இல்லை என்றபடியால் குளிக்க கெளரி வீட்டுக்குத்தான் வருவான். அந்த நேரம் பார்த்துப் பெரியப்பா 'திருப்புகழ்" பாடுகிற மாதிரி ராசநாயகத் தாரையும் மா மா  ைவ யும் திட்டித் தீர்ப்பார். ராசநாயகத்தார் வீட்டுக் கிணற்றில் தான் மாமா வீட்டார் தண்ணீர் எடுப்பார்கள்.
இப்போது பெரியப்பாவின் சட்டப்படி ராசநாயகத்தார் வீட்டுக்கு அண்ணு போக முடியவில்லை. மாமா வளவில் கிணறு வெட்ட முடியாதாம். ஒரு காலத்தில் கிணறு வெட்டப் பிரயத்தனப்பட்டபோது நிலத்துக்குக் கீழ் பாருங்கல் இருந்தபடியால் கிணறு வெட்ட முடியாமல் போய்விட்டதாம். • ,

ராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம் 233
புதிதாய் வாங்கிச் சேர்த்திருக்கும் வளவில் கிணறு போடச் சொல்லி மாமாவைப் பெரியப்பா நச்சரித்தார்.
பெரியப்பாவின் நச்சரிப்பு பரிமளம் மாமிக்கும் கோபத்தையுண்டாக்கியது. மாமா மாமியின் அந்த வருட உழைப்பு முழுதும் மரகதத்தின் கல்யாண செலவுடன் முடிந்து விட்டது.
இன்னும் கொஞ்ச மாதத்தில் வயல்களில் வேலை தொடங்க வேண்டும். அதற்கு முதல் கட்டாயம் கிணறு போட்டுத் தொலைக்க வேண்டும் என்று கட்டளை போட இவர் ஆர் எங்கட கடவுளோ என்று பரிமளம் மாமி அம்மா விடம் கேட்டுக் கொண்டிருந்தாள். ஒவ்வொரு நாளும் ஏதோ ஒரு காரணத்தைக் காட்டிப் பெரியப்பா ராசநாயகம் வீட்டுக் கிணற்றைப் பாவிக்கக் கூடாது என்று தீர்மான மாகச் சொல்வார்.
ராசநாயகத்தார் வீட்டில் எல்லாரும் பையன்கள். மாமி விட்டில் இரண்டு வயது வந்த பெண்கள். இந்த அடிப்படை யில் கூட பெரியப்பா கதை தொடங்கியபோது கெளரிக்கே பெரியப்பாவின் குறுகிய எண்ணங்களில் அருவருப்பு வந்தது. எப்பாடு பட்டாலும் மாமாவுக்கும் ராசநாயகத்தார் வீட்டுக்குமுள்ள தொடர்பை முறிப்பதுதான் பெரியப்பா வின் முழு நோக்கமும் என்று எல்லோருக்கும் தெள்ளத் தெளிவாக விளங்கியது.
வீட்டில் அப்பாவும் சாமியாரும் கோயில் வேலையில் மும்முரமாக இருந்தார்கள். ஊரில் அறவான பணம் தவிர அயலூர்ப் பிரமுகர்களும் பணக்காரர்களும், கடைக்காரர் களும் மிகத் தாராளமாக நன்கொடை கொடுத் திருந்தார்கள்.
கோயில் கட்ட என்று எத்தனையோ வருடங்களாகப் போட்ட திட்டமும் அதனல் ஒரு சில வேளைகளில் அறவிடப் பட்டுச் சேர்க்கப்பட்டிருந்த பணமும் கோயில் வேலையைத் துரிதப்படுத்தியிருந்தது.

Page 122
234 தில்லையாற்றங்கரை
கோயில் கட்டடம் நாளொரு உயரமும் பொழுதொரு தோற்றமுமாக உயர்ந்து ஓங்கிக் கொண்டிருந்தது.
யாழ்ப்பாணத்திலிருந்து சிற்பிகள் வந்து அழகிய மூலஸ்தான வேலை செய்யத் தொடங்கியபோது இன்னும் சில மாதங்களில் கோயில் வேலை பூர்த்தியடையும் என்ற நம்பிக்கை எல்லோர் மனத்திலும் சந்தோஷத்தையுண்டாக் கியது.
ஒவ்வொரு குடியாட்களும் கொடுத்த நிதியை விட ராசநாயகத்தார் பெருவாரியான பணத்தை நன்கொடை யாகக் கோயிலுக்குக் கொடுத்த போது பெரியப்பா பொருமையில் வெந்துபோனது வெட்ட வெளிச்சமாய்த் தெரிந்தது. w
**வட்டிக்கும் குட்டிக்கும் காசு கொடுத்து ஏழை எளிய மக்களிடம் இருந்து எடுத்து காசைக் கடவுளுக்கு லஞ்சம் கொடுக்கிருன்" என்று சாமியாரிடம் புலம்பினர்.
**யார் கொடுத்தால் என்ன எல்லாம் அவனுக்கே. அர்ப்பணம்" என்று சாமியார் சொன்னர்.
யார் பேச்சையும் கேட்டுக் கோயில் வேலையைத் தடைப் படுத்தக் கூடாது என்பது அவரது நோக்கம்.
ஆனி மாதம் தொடங்கி விட்டது. போன வருஷம் கதிர்காமம் போகப் பயந்தவர்களில் ஒரு சில துணிந்தவர்கள் இந்த வருடம் கதிர்காமம் போக. முடிவு கட்டினர்.
சாமியார்தான் இனிக் கதிரமலைக்குப் போவதில்லை என்று சொல்லிவிட்டு ஊர்க் கோயிலின் வேலையே மூச்சாக இருந்தார். அவரின் விடாமுயற்சிக்கு அப்பாவும் அண்ணுவும்: மாமாவும் இடைவிடாது உதவி செய்தார்கள்.
ஊரின் வழக்கப்படி அண்ணு மரகதம் வீட்டில்தான் சீவிக்கிருன். ஆறு மாதங்களுக்குப் பெண் வீட்டார்

ராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம் 235
மாப்பிள்ளைச் சாப்பாடு கொடுக்க வேண்டும் என்பது சம்பிரதாயம். அண்ணுவுக்கு மரகதத்தின் வீட்டில் இருப்பது கொஞ்சமும் பிடிக்கவில்லை. ஆனலும் ஊர் சம்பிரதாயத் துக்கு அடி பணிந்து அவன் பொறுமையாக இருந்தான். ஆனல் பெரியப்பா எப்போதும் மாமாவில் பிழை பிடிக்க வேண்டும் என்றிருப்பதால் மாமா கிணறு கட்டிக் கொடுக்கா மல் தன் மகனை அயலான் வீட்டுக்குப் போகப் பண்ணுவதாக இடைவிடாமல் சொல்லிக் காட்டிக்கொண்டிருந்தார்.
இந்தச் சிறு பிரச்னை எவ்வளவு தூரம் பெரிதாகும் என்று இரண்டு வீட்டிலிருந்த யாரும் கற்பனை செய்யவில்லை. ஒரு நாள் பின்னேரம் அண்ணுவைப் பார்க்கப் பத்மநாபன் வந்திருந்தான். இப்போதெல்லாம் பத்மநாதன் ஊர்ப்பக்கம் வருவதே அருமை. மட்டக்களப்பு ஆசிரியப்பயிற்சிக் கலாசாலையில் படிக்கிருன், மிகுதியான நேரங்களில் கல்முனையே தஞ்சம் என்று திரிகிருனே அல்லது கல்முனைக்கு வராமல் மட்டக்களப்பே தஞ்சம் என்றிருக்கிருனே என்னவோ இப்போதெல்லாம் அவனுடைய தமையன் ராமநாதனைப் பார்க்க வருவதே அருமை.
அப்படியான பத்மநாதன் அண்ணுவைப் பார்க்க வந்த போது ஒழுங்கையில் கிடந்த சாணத்தில் மிதித்த காலைக் கழுவச் செல்வராசா வீட்டுக்குப் (ராசநாயகத்தார் வீட்டுக்கு) பூரணி கூட்டிக்கொண்டு போனுள்.
எப்போதோ ஒரு காலத்தில் கெளரியுடன் பத்மநாதனைக் கண்டு செல்வராசாக் கிண்டல் செய்ததைப் பத்மநாதன் கிட்டத்தட்ட மறந்தே போனன். இப்போது அவன் வீட்டில் கால் கழுவப் போய் செல்வராசாவை எதிரும் புதிருமாகச் சந்திக்க வேண்டியிருந்தது.
பூரணியுடன் சேர்ந்து தங்கள் கிணற்றடிக்கு வந்த பத்மநாதனைக் கண்ட செல்வராசா என்ன பூரணி நீங்கள் தான் பக்கத்து வீட்டுக்காரர் கிணற்றடியைப் பாவிக் கிறியள் எண்டால் கண்டவன் எல்லாம் கால் கழுவிற

Page 123
236 . தில்லையாற்றங்கரை
இடமாக்கப் பார்க்கிறியள் என்று" நிர்த்தாட்சண்யமாகச் சொன்னணும்.
பத்மநாதன் தன் கோபத்தை அடக்கிக் கொண்டு வந்த தாகவும் 'ஏன் இப்படி மரியாதையில்லாமல் பத்மநாதனைப் பேசினுய்" என்று அண்ணு செல்வராசாவைக் கேட்க அவன் தன் வழக்கமான குரூரமான கிண்டலுடன் ஏன் பெரிசாய்க் கோவிக்கிறியள். அவர் என்ன உங்கட தங்கச்சி களில் ஒருத்திக்கோ அல்லது மச்சாளில ஆளுக்கும் மாப்பிள்ளையாய் வரப் போருரா" என்று கேட்டானும்,
அண்ணு பெரியப்பா மாதிரிச் சண்டைக்குப் போய் தொண்டைகிழியக் கத்தாதவன்.
*தான் பட்டால் என்ன தன் சினேகிதன் பட்டால் என்ன பட்ட அவமானம் அவமானமே. எங்களுக்கு கட்டயாம் உடனடியாகக் கிணறு கட்ட வேணும்" என்று மாமாவிடம் அண்ணு கேட்டாணும்.
மாமாவுக்குப் பெரியப்பாவில் உள்ள கோபத்தில் பெரியப்பாதான் அண்ணுவை இப்படி , எல்லாம் கதைக்கப் பண்ணுவதாகச் சத்தம் போட்டார்.
மாமா நேர்மையான நல்ல மனுஷன். ஒரே ஒரு கெட்ட பழக்கம். சரியான முன் கோபி. சுடுகடு என்று கதைத்து விடுவார். எதையும் மனதில் வைத்திருக்க மாட்டார்.
**என்ர மரியாதையைப் பற்றிக் கவலப்படாத உங்கட லீட்டில நான் இருக்க போறயில்ல. நான் எங்கட வீட்டுக்கு என்ர பெண்சாதியைக் கூட்டிக் கொண்டு போறன்" அண்ணு மரகதத்தைத் தன்னுடன் வரச்சொல்லிக் கேட்
டான்.
ெேபண் பிள்ளை வீடுதான் மாப்பிள்ள இறிக்கிற வீடு. நீங்க சொன்ன நாங்க வெளிக்கிட்டுப் போறம் தம்பி. இந்த ஊடும் வளவும் மகரதத்துக்குச் சீதனம் குடுத்தது,

ராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம் 237
மரகதத்துக்கு என்று கட்டினது. மகரதம் இந்த ஊட்ட உட்டுட்டுப் போய் ஆர்வீட்டலயும் இறிக்கத் தேவல்ல’’’ மாமா வெடித்தார்.
** என்ர வீடு தான் என்ர பெண்சாதியின்ர வீடு' அண்ணு பிடிவாதமாகச் சொன்னன். தன்னுடன் மரகதத்தை வரச்சொல்லிக் கேட்டான். கணவன் இருக்கும் வீடு மனைவியின் வீடில்லையா!
பாவம் மரகதம் எதிர்பாராத கேள்விகளுக்கு மறுமொழி சொல்லத் தெரியாதவள். வாழ்க்கையில் இது வரைக்கும் தனக்காக அவள் ஏதும் யோசித்திருப்பாள் என்று நம்ப (Մ)ւգ-մաո Ց] •
சொந்த மைத்துனன் தான் என்ருலும் அவன் கை : பிடித்ததும் கணவன் மனைவியாக இருந்ததும் இரண்டே இரண்டு மாதம் தான்; அந்தக் கணவனின் கட்டளையைப் பின்பற்றுவதா, இத்தனை வருஷமாக சீராட்டிப் பாராட்டி அம்மா அப்பாவின் சொல்லைக் கேட்பதா? a
மரகதம் கணவனையும் தாய் தகப்பனையும் பார்த்தாள். மாமா முன்கோபி. **மரகதம், ஒண்டுக்கும் வழியில்லாத பெண்பிள்ளை போல நீ யாரின்ர வீட்டுக்கும் போறத்த நான் பார்த்துக் கொண்டிருக்கப் போறயில்ல'
மாமாவின் கோபம் அடங்கவில்லை.
விதிதான். மாமாவின் கோபமாக உருவெடுத்ததோ?
மாலை மயங்கும் நேரம். ஓடக்கரையில் மேய்த்துக் கொண்டிருந்த மாட்டுப் பட்டியை மேய்த்துக் கொண்டு போகும் கிராமத்துப் பையன்களிள் சத்தம் ஒழுங்கையில், புழுதி வேறு. மாலை வெயில் தங்கத் தூசுகளாகப் படிந்தது. அண்ணு கையில் ஒன்றும் எடுக்கக்கூட இல்லை. இறங்கி முற்றத்தில் நின்றன்.

Page 124
238 தில்லையாற்றங்கரை
இந்தக் கல்யாணத்துக்கு ஒரு துளியும் விருப்பாமல் தாய் தகப்பனின் வேண்டுகோளுக்காகச் செய்தான். அதெல்லாம் பழைய கதை. இப்போது தன் மனைவியைப் பார்த்தான். வரச் சொல்லிக் கேட்கிருன்.
அவள் தன் தாய் தகப்பன் சொல்லைத் தட்டிவிட்டுக் கட்டிய கணவனுடன் வராமல் நிற்கிருள்.
**மரகதம் நான் இந்த வீட்டுப் படிய இனி மிதிக்கப் போறயில்ல. உனக்கு நான் தேவை எண்டால் என்னேட வா" அண்ணுவின் குரலில் பிடிவாதம், உறுதி, ஆத்திரம், மாமனரிடம் பட்ட அவமானம் எல்லாம் கலந்திருந்தது.
*மரகதம் இதுதான் உன்ர வீடு. இதை விட்டு ஒரு நாளும் போகப் போயில்ல எண்டு சொல்" மாமாவின் வழக்கமான திமிர் மரகதம் ஒவென்று அழுது கொண்டு அறைக்குள் ஓடி விட்டாள். அண்ணு அதற்குபின் அவளைப் பார்க்கவேயில்லை.
ஒரு கணம் தயங்கி நின்ருன். மாமா, மாமி, பூரணி, அடுத்த குழந்தைகள் எல்லோரையும் ஒருதரம் ஏறிட்டுப் பார்த்த பின் குனிந்த தலையுடன் ஒழுங்கையில் நடந்தான்.
மாடுகளின் சாணம் ஒழுங்கை நிறைய ஆங்காங்கே கிடந்தது. இந்தச் சாணங்களாற் தானே பத்மநாதன் செல்வராசா வீட்டுக்குப் போக வேண்டி வந்தது.
சாமிப் படங்களுக்கு விளக்கு வைத்து விட்டு நெற்றியில் திருநீறும் வாயில் தேவார முணு முணுப்புமாகக் கெளரி முற்றத்துக்கு வந்தபோது தலை குனிந்து கொண்டு வரும் தமயனைக் கண்டாள்.
அவன் தோற்றம் ஏதோ நடந்து விட்டது என்பதை அவளுக்கு உணர்த்தியது.
பெரியப்பாவும் மாமாவும் சண்டையா?

ராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம் 239
அவள் சோர்ந்த முகத்துடன் வாசலில் கிடந்த ‘தென்னம் குற்றியில் சாய்ந்தான். அவன் பார்வை வெறித்
திருந்தது.
*என்ன அண்ணு சண்டையா" கெளரி தயங்கிக் கொண்டுகேட்டாள். அவனின் சோர்ந்த முகபாவம்அவளால் சகிக்க முடியாது. ஏதும் யோசனையாய் இருக்கும்போது யாரும் இடை மறித்தால் அவன் இப்படித்தான் வெறித்துப் பார்ப்பான். வெறித்துப் பார்த்தான்.
அவள் கேட்ட கேள்வியைத் திருப்பிக் கேட்டாள். அவன் 'ஓம்' என்று தலையாட்டினன்.
**ஆரோட சண்டை" பயத்துடன் கேட்டாள். இனமறி யாத பீதி அவள் குரலில், செல்வராசாவுடன் சண்டையா?
**விதியோட சண்டை கெளரி என்ர விதியோட சண்டை' அவன் குரலில் விரக்தி. குரல் வேதனையில் கரகரத்தது.
“என்ன நடந்தது" அவள் தயக்கத்துடன் கேட்டுக் கொண்டிருக்கும்போது ஆச்சி வந்தாள்.
**என்னடாப்பா யார் செத்த சோகம்" கிழவிக்கு ஒன்றும் விளங்காமல் வழக்கம் போல் குறும்பாகக் கேட்டாள் தன் பேரனை.
*என்ர வாழ்க்கை செத்துப் போய்ச்சு எண்ட சேர்கம்" அண்ணு என்ன பகடி சொல்கிருனே என்பது போல் ஆச்சி பார்த்தாள். அண்ண தேவையில்லாமல் ஒரு கதையும் வைத்துக் கொள்வதில்லை. ஆச்சிக்கு அது தெரியும்,
என்ன ராசா நடந்தது' கிழவி பதறிப் போய்க் கேட்டாள். உங்கட மகனையும் பேத்தியையும் போய்க் கேளுங்கோ அவன் அலுப்புடன் சொன்னன்.

Page 125
240 தில்லையாற்றங்கரை
ஆச்சி விழுந்தடித்துக் கொண்டு மகன் வீட்டுக்குப்போக வெளிக்கிட்டாள். அவள் முகம் கவலைப்பட்டுத் தெரிந்தது.
ஆச்சிக்கு மாலைக்கண். இரவில் இருட்டில் ஒழுங்கை வேலிகளில் விழுந்து இடறுப் படாமலிருக்க வெளிச்சத் துக்குப் பந்தம் கொளுத்திக் கொண்டு வெளிக்கிட்டாள்.
அம்மா, பெரியம்மா வீட்டில் ஏதோ சுவாரசியமான கதை முடியவிட்டு வந்தாள்.
கெளரி அம்மாவிடம் ரகசியமாய் விஷயத்தைச் சொன்னுள். ஆச்சியைப்போல் அம்மா பதறியடிக்கவில்லை.
மெல்லமாகச் சிரித்தாள்.
புதுப் பொஞ்சாதியை விட்டிட்டு இருக்கப் போறியோ தம்பி?" என்று கிண்டலாகச் சிரித்தாள்.
'கல்யாணம் முடிச்ச புதிசில இப்படித்தான் சின்னச் சின்ன சண்டைகள் வரும். சும்மா ஒரு சோக்குக் காட்டுறது தான்" அம்மாவுக்கு உண்மையான சண்டையின் விளக்கமே தெரியாமல் கேலி செய்து கொண்டிருந்தாள்.
ஆச்சி வந்தபின் எல்லாம் விளக்கமாகச் சொல்லப் பட்டது. எப்போ பார்த்தாலும் ராசநாயகத்தாரையும் அவரின் புத்திரச் செல்வங்களையும் புழுகிக் கொண்டு திரியும் ஆச்சிக்கும் செல்வராசா பத்மநாதனிடம் நடந்துகொண்ட விதம் மனக் கொதிப்பையுண்டாக்கியிருக்க வேண்டும்.
* எது தேடி வந்தவனையும் இல்லடா எண்டு திருப்பி யனுப்பலாம். தண்ணிதேடி வந்தவனத் தகாத மாதிரி நடத்திரத்த கடவுள் மன்னிக்க மாட்டார்" என்று புலம்பினுள்.
விஷயம் கேட்டுப் பெரியப்பா ஓடிவராத குறையாக வந்தார். தன் வீட்டுக்குக் கூட வராமல் தளர்ந்து போயிருக்,

ராஜேஸ்வரி பாலசுப்பிரமணிம் 24雷
ܕ . . ܕܬܹܐ
கும் மகனைக் கண்டதும் எப்போதுமே மாமாவையும் ராசநாயகம் குடும்பத்தையும் பேசுபவர் இப்போது ஏன் cứu *. L_(rrỉ”? . .
*கண்மண் தெரியாத காசின்ர மகிமைதான் இப்பிடி எல்லாம் கதைக்கப் பண்ணுது" பெரியப்பா தொடங்கி விட்டார் புராணத்தை. சும்மா மெல்லுகிற வாய்க்கு அவல் கிடைத்துவிட்டது.
Lurr68) put பேசு 园 (ty ř ராசநாயகத்தாரையா? op 661 T?
அண்ணு இனி மாமா வீட்டை மிதிக்கக் கூடாது என்று வீர முழக்கம் செய்தார். J
புருஷனில் மதிப்பிருந்தால் மரகதம் தேடி வருவாள் என்றும் சொன்னர். பெண்மைபற்றிப் பேசும் சீர்திருத்த வாதி!
தன் மனைவி தன்னைத் தேடி வந்து சேர்ந்ததைச் சொன்னபோது கெளரிக்கு அது புதுக் கதையாக இருந்தது. அன்றிரவு படுக்கும்போது ஏதோ எல்லாம் யோசித்துக் கொண்டிருந்தபோது பெரியப்பா சொன்னதும் ஞாபகம். வந்தது. அதுபற்றி ஆச்சியைக் கேட்டாள். பெரியம்மா பெரியப்பாவைத் தேடி வந்தாளா? ஆச்சிக்குத்தான் எல்லோர் கதையும் தெரியுமே
ஆஞல் அவள் சொன்ன கதை! பெரியம்மாவின் தமையன்களைப் பெரியப்பாவுக்குப் பிடிக்காது.
அது எல்லோருக்கும் தெரிந்த கதை. ஏன் பிடிக்காது? அது எல்லோருக்கும் தெரியாத கதை. பெரியப்பா பெரியம்மாவைக் கல்யாணம் செய்து ஈத்தோஷமாயிருக்கும் காலத்தில் பெரியம்மாவின் தமையன்
16-سه روی

Page 126
242 தில்லையாற்றங்கரை
ஒருத்தர் பொத்துவிலிருந்து ஒரு பெண்ணைக் கூட்டி வந்து இவளைத்தான் கல்யாணம் செய்யப் போகிறேன் என்று பெரியம்மாவின் தாய் தகப்பனிடம் சொன்னர்களாம். அவனுக்கு விருப்பமானல் யாரையும் செய்யலாம் தானே! ஆணுல் அந்த **யாரும்" என்று சொல்லப்பட்ட பெண் கமலத்தின் தாய்.
யாரோ ஒருத்தனை நம்பி ஏமாந்து வயிற்றில் நாலுமாதக் குழந்தையுடன் இருந்த பெண்ணில் பரிதாபப்பட்டுத் திருமணம் செய்தாராம் பெரியம்மாவின் தமையன்.
அந்த “ஒழுக்கக் கேடான" பெண்ணைச் செய்தற்குச் சண்டை பிடித்துக்கொண்டு பெரியப்பா வந்துவிட்டாராம். பெரியம்மா கொஞ்ச நாளில் வந்து சேர்ந்தாளாம்.
அதுதான் இன்னும் பெரியப்பா கமலம் வீட்டாருடன் ஒன்றும் பெரிய கொண்டாட்டம் வைத்துக் கொள்வ
தில்லையாம்.
வயிற்றிலிருந்த அந்தப் பிள்ளை என்னவாயிற்று?" கெளரி நித்திரைக் கலக்கத்தில் கேட்டாள்.
*அந்தப் பிள்ளதான் கமலம்' ஆச்சி கொட்டாவி விட்டுக்கொண்டு சொன்னுள். நேரம் நடுச்சாமம். எங்கோ சேவல் கூவியது. கெளரியின் நித்திரை எல்லாம் பறந்து விட்டது. w
பாயிலிருந்து எழும்பினுள். கமலம் திருக்கோயில் மாமா வின் மகளில்லையா? ஆச்சி சோர்வுடன் புரண்டு அடுத்த பக்கம் படுத்தாள். பதில் சொல்லவில்லை. கெளரிக்கு நெஞ்சில் ஏதோ அடைப்பது போலிருந்தது.
கமலத்தின் பிறப்பு காரணமாகவா பெரியப்பா கடைசி வரைக்கும் அண்ணு கமலத்தைச் செய்வதை விடமாட்டார் என்று சாரதா சொன்னுள்? புதிர்கள் புரிவது போலிருந்தது
கெளரிக்கு.

ராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம் 243 எங்கள் குடும்பத்தில் எத்தனை ரகசியம்? இன்னும் எத்தனையிருக்கிறதோ?
கெளரி நீண்டநேரமாக யோசித்துக் கொண்டிருந்தாள்? பெரியம்மா மாதிரி மரகதமும் அண்ணுவிடம் வருவாளா. எத்தனை குழப்பங்கள்?
ஏன் வளர்ந்து விட்டோம்? குழந்தைகளாயிருக்கும் போது எவ்வளவு சந்தோஷம்?
மரகதத்துக்கு இரண்டே இரண்டு மாதத் திருமணம். என்ன நடக்கப்போகிறது அண்ணுவின் வாழ்க்கையில்?
அண்ணுவின் வாழ்க்கையில் அதற்குப் பின் அதிகம் ஒன்றும் நடக்கவில்லை. தனது தம்பி பத்மநாதனுல்தான் சண்டை வந்தது என்பது ராமநாதன் வாத்தியாருக்கு மிக மன வருத்தமாய் இருந்திருக்க வேண்டும்.
மாமாவிடம் எவ்வளவோ சொல்லிப் பார்த்தார் மரகத்தை அண்ணு வீட்டுக்கு அனுப்பச் சொல்லி,
மாமாவா மசிவார்? மகா பிடிவாதக்காரணுயிற்றே வாத்தியார் அண்ணுவைக் கெஞ்சினர் இந்தச் சின்னச் சண்டைகளெல்லாவற்றையும் மறந்துவிட்டு மரகதத்திடம் போகச் சொல்லி.
"நான் மரகதத்திடம் போகமாட்டேன். மரகதம் எங்கள் வீட்டுக்கும் வரவேண்டாம். இரண்டு பேரும் தனியாக இருக்கப் போறம். மாமாட்டச் சொல்லுங்கோ மரகதத்தை அனுப்பச் சொல்லி" அண்ணு வாத்தியாரிடம் சொல்லியனுப்பினன்.
*மரகதம் தன்ர வீட்டை விட்டு ஒரு இடமும் போக மாட்டாள்.'" மாமா சொல்லியனுப்பியிருந்தார்.

Page 127
244 தில்லையாற்றங்கரை
இந்தக் குடும்பச் சண்டை ஒன்றிரண்டு நாளில் தீர்த்து போகும் என்று பெரியம்மா நினைத்திருக்க வேண்டும்.
பெரிதாக ஒன்றும் அலட்டிக் கொள்ளவில்லை.
இரண்டு கிழமைகள் ஓடிவிட்டன. பரிமளம் மாமி ஆச்சியிடம் வந்து மரகதத்துக்கு இந்த மாதம் தீட்டு வர வில்லை.மரகதம் பிள்ளைத்தாச்சியாய் இருக்கலாம் என்று சொல்லிக்கொண்டிருந்தாள்.
அதற்குப் பின் பெரியம்மாவால் சும்மா இருக்க முடிய வில்லை. **தம்பி என்னதான் சண்டை போட்டாலும் புள்ளத்தாச்சிப் பெட்டையை மனவருத்தப்படவிடக் கூடாது' என்று மகனிடம் கெஞ்சினள். பாட்டியாகும் பெருமையைவிட மரகதத்தில் பரிதாபம்.
*நான் மரகதத்தில் கோபமில்ல. அவள் என்னிட்ட எப்பவும் வரலாம்" அண்ணுதான் தன் உயிர் போனலும் மாமா வீட்டுக்குப் போகமாட்டான் என்று சொல்லி விட்டான்.
புதிய பூகம்பம் ஒன்று ஊரில் மறைமுகமாக உருவா கிறது என்று கெளரியுணர்ந்தாள். அதுவரையும் ஊரில் சண்டை யெரியப்பாவுக்கும் ராசநாயகத்தாருக்கும். இனி வரப்போகும் சண்டை அண்ணுவுக்கும் செல்வராசாவுக்குமா? இந்தச் சண்டைக்குக் காரணமே செல்வராசா தானே?
செல்வராசா தற்செயலாகத்தான் பத்மநாதனுடன் கொழுவினன் என்பதைக் கெளரியால் நம்ப முடியாது. ஆனல் அதுபற்றி அவள் யாரிடமும் சொல்லவில்லை. சொல்லக் கூடிய ஒரே ஒரு பிறவி சாரதா. சாரதாவிடம் ஏதும் ரகசியம்" சொல்வதைவிட மாமா கடையில் எழுதி ஒட்டிவிடலம். எல்லாருக்கும் தெரியவரும். அண்ணு at - GFntaijayan LDIT?
அண்ணு என்ன நினைப்பான்? அவனுக்கு விளங்காது. ஆனல் அண்ணுவின் வாழ்க்கை குழம்ப தானும் ஒரு காரண

ராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம் 245
மாக இருக்க அவள் ஒரு எள்ளளவும் இடம் கொடுக்க மாட்டாள்.
பாடசாலையில் மரகதம் விடயம் பற்றிச் சிலவேளை கதை வரும். பெரும்பாலான மாணவர்கள் அண்ணுவைக் குற்றம் சொன்னர்கள். அண்ணுவும் பெரியப்பா மாதிரித் தான் தோன்றித் தனமாக நடப்பதாகக் குற்றம் சாட்டினுர்கள்.
ஊர் வழக்கம் மாப்பிள்ளை எப்போது பெண் வீட் டோடு சேர்வது.
பெரியப்பா கர்வம் பிடித்துப் பெரியம்மாவைக் கூப் பிட்டது போல் அண்ணுவும் செய்ய நினைப்பதாகக் கதைத் தார்கள். இதற்கெல்லாம் மூலக்காரணம் செல்வராசா என்பது யார் வாயிலும் வராத விஷயமாய் மறைந்து விட்டது.
அதற்கு காரணமில்லாமலுமில்லை. அடுத்த வருட முற்பகுதியில் பாராளுமன்ற பொதுத் தேர்தல் வரலாம் என்ற கதை அடிபட்டுக் கொண் டிருந்தது. தமிழரசுக்கட்சி அபேட்சகர் ஒருவரை இந்தத் தொகுதியில் நிறுத்துவதற்கான ஏற்பாடுகள் நடந்துக் கொண்டிருந்தன.
செல்வராசா இந்த ஊர்க்கிளை கூட்டங்கள் கூடுவதிலும் சொற் பொழிவுகள் செய்வதிலும் கோஷங்கள் போடு வதிலும் மும்முரமாய் இருந்தான்.
வழக்கம் போல் பெரும்பாலான கிராம வாலிபர்கள் செல்வராசா தலைமையில் ஒடியாடிக் கொண்டிருந்தார்கள். அந்த மாதிரி தமிழ் மொழிக்குப் பாடுபடும் வாலிபர்களில் பாடசாலையிலும் நிறைய மாணவர்கள் இருந்தார்கள்.
அவர்களில் பெரும்பாலனவர்கள் செல்வராசாவைப் புகழ்ந்து பேசிக் கொண்டிருப்பதைக் கேட்கக் கெளரிக்குக் கோபம் வந்தது.

Page 128
246 தில்லையாற்றங்கரை
ஒரு பின்னேரம் கோயில் வளவில் மேடை போட்டு அரசியல் கூட்டம் நடந்தது. வழக்கம் போல் தலைவர்களும் தொண்டர்களும் தமிழுக்கு உரிமை கிடைக்கும் வரை தளராமற் போராடுவது; தொண்டை கிழியக் கத்தினர்கள்.
கெளரியும் சாரதாவும் பரமேஸ்வரி ரீச்சரிடம் தையல் பழகிக் கொண்டிருந்தார்கள். ஒலி பெருக்கியின் தமிழ் முழக்கம் ஊரை ஏப்பம் விட்டுக் கொண்டிருந்தது. தமிழின் உயர்வுக்காகத் தலை போவதென்றலும் தயங்காதே தமிழா! என்று கர்ச்சித்தார்கள். அண்ணு கூட்டத்துக்குப் போகவில்லை. கல்யாணம் முறிவு ஏற்பட்டபின் யாருடனும் கதைக்கவே மாட்டேன் என்றிருக்கிருன்.
சாமியாருடன் கோயில் வேலைகளில் இரவு பகலாக ஈடு பட்டிருக்கிருன். தன் மனவேதனையை மறக்கக் கோயில் வேலைகளில் கடுமையாக உழைப்பது கெளரிக்குத் தெரியும்,
ஊர் வாலிபர்களுடன் அதிகமாகச் சேர்வதையும் விட்டு விட்டான். பத்மநாதன் இப்போதெல்லாம் அடிக்கடி வந்து அண்ணுவுக்கு ஆறுதலாக இருக்கிருன். தமிழரசுக் கட்சிக் கூட்டம் நடந்து கொண்டிருக்கும் போது அண்ணுவும் பத்மநாதனும் வாத்தியார் வீட்டிலிருந்தார்கள்.
ஒலி பெருக்கியிலிருந்து வரும் உணர்ச்சிகரமான பேச்சுக்களை அவர்களும் கேட்டுக் கொண்டிருந்தார்கள்.
“எத்தனை வருஷகாலம் இப்படி உணர்ச்சிகரமான ஒலி பெருக்கில் பேச்சுக்கள் பேசினல் எங்களுக்கு மொழியுரிமை கடைக்கும்? மனதில் யோசித்துக் கொண்டிருந்த கேள்வி கெளரியின் வாயால் வெளி வந்தபோது வாத்தியார் தன் மாணவியின் அறியாமையைப் பரிதாபமாகப் பார்த்தார்.
**கெளரி எங்களின்ர மொழியுரிமையை மட்டுமல்ல தமிழர்களின்ர தமிழ்ப் பிரதேசங்களையும் கொஞ்சம் கொஞ்சமாக இழந்து கொண்டிருக்கிரும். எங்களுக்குச் சரியான தலைமையில்லை. இங்கிலீஸ்தான் வீட்டுபாஷையான

ராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம் 247
எங்கட தலைவர்களுக்குத் தமிழ் மொழிப் பிரச்சினை பெரிய பிரச்சினையில்ல. இலங்கையில் எத்தனையோ இடங்களில் தேயிலை, ரப்பர், தென்னம் தோட்டங்கள் வைத்திருக்கும் எங்கட தலைவர்களுக்கு எங்கட பிதேசங்கள் பறிபோகுற தென்பது பெரிய பிரச்சினையில்ல. அவர்களின்ற பிரச்சனை பாராளு மன்றத்தில் அங்கத்தவர்களாயிருப்பது தான். ஐந்து வருஷத்துக்கொருதரம் வந்து எங்கள் மொழியையும் உரிமையையும் பற்றிப் பேசி கினம். உருப்படியாய் என்ன செய்யுனம்? எங்கட கலாச்சாரம் உணர்ச்சி வசமான கலாச்சாரம். இந்த உதவாக்கரைத் தலைவர்களின் முதலைக் கண்ணிரைப் பார்த்து நம்பிப் பழகிப்போட்டம். இலங்கையி லுள்ள பிரச்சினைகளின்ர திசையைத் திசை திருப்பப் பார்க் கும் சிங்கள வகுப்புவாதத் தலைவர்களுக்கு இப்பிடித் தமிழ்த் தலைவர்கள் இருக்கிறது எவ்வளவோ வசதி. தமிழ்த். தலைவர்கள் தமிழ் உரிமை எண்டால் சிங்களத் தலைவர்கள் சிங்கள மக்களுக்குச் சிங்களம் மட்டும் என்று சொல்லி வெறி யூட்டுகிருர்கள்! பத்மநாதன் சொல்பவை ஒலி பெருக்கியி விருந்து உதிர்ந்து சிதறிப் பரவும் போராட்டப் பேச்சுக்களை விட வித்தியாசமானவை. மாஸ்டரின் கருத்துக்களை விடவும் வித்தியாசமாவை. “ஏன் ஐயா, எங்கட பிரதேசத் தில் எங்கட பாஷையைப் பாவிக்கிறது அதற்குரிய உரிமைகளைக் கேட்பது என்னென்று பிழையாகும்" கெளரி இந்தக் கேள்வியை முன்பும் இரண்டொருதரம் மாஸ்டரிடம் கேட்டிருக்கிருள்.
*உரிமையைக் கேட்கிறதுல பிழையில்லை. கேட்கிற ஆட் களும் கேட்கிற விதமும் தான் பிழை" வாத்தியாரின் குரலில் வெறுப்பு.
தமிழரசுத் தலைவர்களைத் திட்டப் போகிருரோ என்று யோசித்தாள் கெளரி. இத்தனைக்கும் அண்ணு ஒரு தமிழரசுப் பக்திமான். ஏன் மாஸ்டருடன் வாதாட முடியாமலிக்

Page 129
248 தில்லையாற்றங்கரை
கிமுன்? வாத்தியார் மாதிரி வாத்தியாரின் தம்பி பத்ம நாதனும் ஏதும் சொல்லியிருக்கலாம்!
*அது தான் உங்களப் போல இடது சாரிகள் தமிழர் பிரச்சினையைத் தட்டிக் கழிக்கப் பார்க்கினமோ' அண்ணு பொறுமையாகக் கேட்டான்.
"இடது சாரிகள் தமிழ் மொழிப் பிரச்சினையைத் தட்டிக் கழிக்கல்ல. இலங்கையில் இடதுசாரிகள் தலைமை யில் இந்தப் போராட்டம் தொடங்கியிருந்தால் அதன் சக்தி யும் வலிமையும் சொல்ல முடியாதளவு பரந்திருக்கும்."" வாத்தியார் வழமை போல பிரசங்கம் செய்தார்.
அண்ணுவின் வழக்கமான பொறுமை குறைந்திருக்க வேண்டும். 'என்ன மாஸ்டர் சொல்லிறியள் 56ம் ஆண்டு காலிமுகக் கடற்கரையில் தமிழ்த் தலைவர்கள் நடத்திய சத்தியாக்கிரகத்தைக் குலைத்து தமிழ்த் தலைவர்களை அடித்த சிங்களச் சண்டியர்களில் பெயர் போன இடது சாரித் துறை முகத் தொழிலாளர்களும் இருந்தார்கள் என்ற கதை பொய்யா? 58 ம் ஆண்டில் யூ. என் பியின் ஆதரவில் கட்டவிழ்த்த வகுப்புக் கலவரத்தில் தனக்கு மேல் வேலை செய்த தமிழ் உத்தியோகத்தர்களை அடித்துச் சாக்காட்டிய தில் எத்தனை வீதமான இடதுசாரித் தொழிலாளர்கள் சடு பட்டார்கள் என்பதும் பொய்யா"
**இடதுசாரித் தொழிலாளர்களும்கிங்களவர்கள்தான். சிறு வயதிலிருந்தே சிங்கள மக்களின் கல்வி முறை தமிழனை அழிக்கவேண்டும் என்ற விதத்தில்தான் சொல்லிக் கொடுக்கப்படுகிறது. திட்டமிட்ட வகுப்புவாதக் கல்வி முறையிது. இதன் தாக்கத்திலிருந்து சாதாரண சனங்கள் விடுபட்டு தங்களைப் பிணைத்திருக்கும் வகுப்புவாதச் சங்கிலியை அறுத்தெறிய தொழிலாளர் இயக்கங்கள் பாடு படவேண்டும். மாஸ்டர் கனவா காண்கிருர்? கெளரி அலுத்துக் கொண்டாள். அவளுக் கென்னவோ அண்ணு தான் சரியென்று பட்டது.

ராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம் 249
தமிழ் மொழிப் பிரச்சினை தீர தற்போதைய தலைவர்கள் செய்வது போதாமலிருக்கலாம். அதற்காக இவர்களை வேண்டாம் என்கிற ஒரு தலைமையும் உண்மையாகத் தமிழர் களுக்காகப்போராடுகின்ற ஒரு இயக்கமும் வராமலிருக்குமா? பத்மநாதன் சொன்னனே வேருெரு தலைமை என்று வாத்தியார் சொல்வது போல் இலங்கையில் தமிழர் பிரச்சினை மட்டும் பிரச்சினையில்லாமல் மேலும் பயங்கர மான பொருளதாராத் திண்டாட்டம் வேலையில்லாத் திண்டாட்டங்கள் இருந்தாலும் இல்லை என்று யார் சொன்னர்கள்.
அதற்காக நாங்கள் தமிழர் என்கிற உரிமையை ஏன் விட்டுக் கொடுக்கவேண்டுமாம்? எனது பாஷையை நான் பாவிக்கிற உரிமையை ஏன் விட்டுக் கொடுக்கவேண்டுமாம்? தமிழரென்ற இனமழிய வேண்டுமா? நாங்கள் தமிழர்கள்.
ஆச்சியும் பாலிப் போடியும் சிங்களவர்களாக மாறிச் சிங்களத்தில் கவி பாடுவதைக் கெளரியால் கற்பனை செய்ய முடியாதிருந்தது.
என்ன கெளரி பெரிய யோசனை" வாத்தியார் கேட்டார்.
“அவள் பெரிய தமிழ் பக்தை. போதாக் குறைக்கு அவளின்ர மச்சானும் பிரசங்கம் செய்யுறர். அவள் உணர்ச்சி வசப்பட்டுப் போனள் போல கிடக்கு' சாரதா வுக்குப் பெரிய சிண்டல்தான். கெளரி சாரதாவை மூறைத்துப் பார்த்தாள். பத்மநாதனின் பார்வையில் கேள்வி தொக்கி நின்றது. அண்ணு குறும்பாகக் கெளரி யைப் பார்த்தான். என்ன தான் அவனும் செல்வராசாவும் பகைவர்கள் ' என்ருலும் செல்வராசா கெளரியின் முறை மாப்பிள்ளை என்பதை அவன்மறக்க முடியாது. பத்மநாதன் இவர்களின் தமிழ் மொழிப் பிரச்சினையில் இதுவரை சம்பந்தப் படாமல் ஏதோ வாசித்துக் கொண்டிருந்தான்.

Page 130
250 தில்லையாற்றங்கரை
சம்பாஷணையில் புத்தகத்தை மூடி வைத்து விட்டு? இவர்களைப் பார்த்துச் சொன்னன்.
*எல்லாரும் தலைவர்களாக வரத்தான் துடிக்கினம். நல்ல தாரங்களும் கிடைச்சா அதிர்ஷடம் தானே?" பத்மநாதனின் கிண்டல் கெளரியைத் தாங்கேலாக் கோபத். தில் தள்ளியது. ஒன்றும் சொல்லாமல் மெளனமாகத் தன் தையல் வேலையில் ஈடுபட்டிருந்தாள். ஒருத்தரும் இல்லா திருந்தால் பத்மநாதன் தலையில் ஏதோ தூக்கியடித். திருப்பாள் அவ்வள்வு கோபம்.
19
கோயில் வேலைகள் கிட்டத்தட்ட முடியும் போலி லிருந்தது. கிராமத்தில் நீண்ட காலமாக எந்த விதமான நாட்டுக் கூத்தும் மேடையேரவோ அர்ங்கேற்றப்படவோ இல்லையாம். அப்பாவுக்கு நீண்ட நாளாக ஊரில் ஒரூ. கூத்தை அரங்கேற்ற வேண்டுமென்ற ஆசை.
கோயில் கோபுர வேலை முடிவடையும் தறுவாயில் நடந்து கொண்டிருக்கிறது. கோயில் கும்பாபிஷேகத்துக்கு ஒரு கூத்து அரங்கேற்ற வேண்டுமாம்.
அப்பா தான் ஊரின் நாட்டுக் கூத்து அண்ணுவியார் கூத்துப்பாட்டுப் புத்தகங்களுடனும் பழைய ஏட்டுச் சுவடி களுடனும் மாரடிப்பவர். ஏட்டில் இருந்த எத்தனையோ பழைய பாடல்களைக் கொப்பிகளில் எழுதிக் கொண்டிருந் தார். குத்து வைக்கப்படாத தமிழ் எழுத்துக்களை வாசிக்கக் கெளரி மிகச் சிரமப்பட்டாள். ஆனலும் அண்ணுவும்: கெளரியும் அப்பாவுக்கு உதவியாயிருந்து புதுக் கொப்பி தயாரிக்க உதவி செய்தார்கள்.
பெரியப்பா எடுத்ததெற்கெல்லாம் எல்ாலாருடனும்.
சண்டை போட்டுக் கொள்வது போல் அப்பா சண்டை

ராஜேஸ்வரிபாலசுப்பிரமணியம் 25 t'
போட்டுக் கொள்வதில்லை. தான் உண்டு தன் பாடுண்டு என்றிருப்பார். வாத்தியாருடன் சேர்ந்து உலக நடப்புக்கள் கதைப்பது, சாமியாருடன் சேர்ந்து சமய தர்க்கம் செய்வது மாமாவுடன் சேர்ந்து ஊர் விஷயமாய் ஏதும் செய்வது எல்லாம் அமைதியாகச் செய்வார், தான் தோன்றிக் குண மான பெரியப்பாவின் தம்பிதான் அப்பா என்பது கெளரிக்குச் சில வேளை ஆச்சரியம். ஏன் அமைதியும் நிதானமும் உருவான அண்ணுவே சிலவேளை பெரியப்பாவின் மகனே என்ற ஆச்சரியத்தையுண்டாக்கும். அப்பாவின் தாய் மிகவும் அமைதியான அடக்கமான பெண்ணும் அப்பா தன் தாயைப்போலவாம். பெரியப்பா அவரின் தகப்பனை போலவாம். பெரிய மண்டைக் கனமும் “போடி' என்ற எடுப்புமாக வளர்ந்தவராம்.
தகப்பனின் தாயின் நிதான குணம் அண்ணுவுக்கும் கெளரிக்கும் இருப்பதாக அப்பா சொன்னர். ஆணுல் அம்மா கெளரியைப்பற்றி எப்போதும் வேறு விதமாகச் சொல்வாள். கெளரியின் மாமா போல் பிடிவாதம் பிடித்தவள் என்பது எல்லாராலும் சொல்லப்பட்ட குற்றச் &Fmr LGB).
கெளரி அம்மாவின் குற்றச் சாட்டைவிட அப்பாவின் கருத்தைத்தான் நம்பினள். தான் தன் தகப்பனின் தாய் போல நிதானமாக- (கட்டாயம் பிடிவாதமாகவும்) இருக்கத்தான் விரும்பினுள். இல்லை என்ருல் ஆச்சி சொல்வ தற்கு விட்டுக் கொடுத்து எப்போதோ பாடசாலைக்குப் போவதை விட்டிருக்கவேண்டும்.
சாரதா இப்போதெல்லாம் 'கம்பராமாயணம் கும்ப கர்ணன் வதை' படலப்புத்தகத்துக்குள் காதல் கடிதம் வைத்து வாசிக்கிருள் எப்போது எஸ். எஸ். சி பரிட்சை வரும் என்று ஆவலுடன் காத்திருக்கிருள் சாரதா. பரிட்சை முடியக் கல்யாணம் பேசுப்படலாம் என்ற எதிர்பார்ப்பு.

Page 131
*252 தில்லையாற்றங்கரை
அவர்கள் குடும்பத்திலுள்ள இந்த மூன்று பருவப் பெண்களில் மரகதம் தான் முதல் பெரியாளானுள் -கல்யாணமும் நடந்து விட்டது.
அடுத்ததாகக் கல்யாணம் பேசப் போவது சாரதா வுக்குத் தான் என்பது எல்லோருக்கும் தெரியும். அதுவும் பாடசாலையில் ஏறத்தாழ எல்லோருக்கும் சாரதா மாணிக்க வாசகம் விஷயம் தெரியும்.
ஊரிலும் பல பேருக்குத் தெரிந்திருக்கலாம்.
வெள்ளிக் கிழமை பின்னேரம் எப்போது வரும் என்று சாரதா உடுத்து அலங்கரித்துக் கொண்டு வெளிக்கிட்டுக் கொண்டிருப்பதும் சனி ஞாயிறு நாட்களில் மாணிக்க வாசகத்தின் சைக்கிள் (இப்போது புது “றலி" சைக்கிள் வைத்திருக்கிருன்) இவர்கள் வீட்டுப் பக்க ஒழுங்கையால் போவதும் ஒன்றும் தற்செயலான சம்பவங்களல்ல.
பாலிப் போடிக் கிழவன் கூட ஒரு நாள் மாணிக்க வாசகத்தின் சைக்கிளை ஒழுங்கையில் கண்டு விட்டுத் தன் பொக்கைவாயால் "கிக்கிகிக்கி" என்று சிரித்து விட்டு *ஓடி வருவார் ஒழுங்கையில் தங்கி நிற்பார், என்னை நினைப்பார் என்ர வீட்ட வர நாட்டமில்லை" என்று நாட்டுப் பாடல் பாடியது. கிழவனின் பாட்டுப் பெரியம்மாவுக்குக் கேட் காமல் இல்லை. கிழவன் வெறியில் பாடுகிறது என்ற பாவனையில் தட்டிக் கழித்து விட்டுப் போய் விட்டாள்.
அண்ணுவின் கல்யாண வாழ்க்கையின் குழப்பங்கள் பெரியம்மாவை சொல்ல வொண்ணுத துன்பங்களுக்கு ஆளாக்கியிருந்ததை அவளது சோர்ந்த முகத்தோற்றத்தி லிருந்து தெரிந்தது. அண்ணு அவளது மூத்த மகன். ஊரில் உள்ள பெருபாலான வாலிபர்கள் போல் எந்த விதமான வம்பு தும்புக்கும் போகாதவன். அடுத்த மகன் சங்கரன் அண்ணு மாதிரியில்லை. பெரியாப்பாவின் தற்பெருமைக் குணம் அப்படியே இருக்கிறது. இப்போது தான் பதினன்கு வயது. அதற்குள்ளேயே அடுத்த வீடு அயல் வீடு என்று

ராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம் 25.3%
ஏதோ ஒரு வீட்டிலிருந்து சங்கரன் செய்த “அட்டா துட்டிகளைச்" சொல்லிக்கொண்டு எப்போதாவது யாரும், வராமலிருப்பது ஆச்சரியமே. V
சங்கரன் பாடசாலையிலிருந்து வரமுதல் அவனிட மிருந்து அடிவாங்கியோ உதை வாங்கியோ ஒப்பாரி வைக்கும் பையன்கள் தாய்மாருடன் பெரியம்மா வீட்டைப் படை எடுப்பது சர்வசாதாரணக் காட்சி.
சங்கரன் எட்டாம் வகுப்பு படிக்கிருன். ஒன்பதாம் வகுப்புக்கு எங்காவது 'பொல்லாத பாதிரி"யுள்ள இட மான பாடசாலைக்கு அனுப்புவதாகப் பெரியப்பா உறுமிக் கொண்டிருக்கிருர்,
பாலிப்போடிக்கிழவன் மாணிக்கவாசகத்தின் சைக்கிளைத் தெருவில் கண்டு பாட்டுப் பாடியதின் மறைமுகக் கருத்தைப் பெரியம்மா பெரியப்பாவுக்குச் சொல்லியிருக்க வேண்டும். பெரியப்பா ஒருநாள் பின்னேரம் தன் வீட்டு வாசல் சாய்மானக் குதிரையில் படுத்தபடி **இந்த எழிய ஊரிலிருந்து எவன் இனி மாப்பிள்ளை எடுப்பான்' என்று வண்ணுர நாகனுக்கும் பாலிப்போடிக்கும் முழங்கிக் கொண் டிருந்தார். மாமாவில் அவ்வளவு கோபம். வண்ணுர நாகனும் பாலிப்போடியும் ஊரின் செய்திப் போக்கு வரத்தைச் செம்மையாய்ச் செய்பவர்கள். அவர்களுக்கு அரைப் போத்தல் கள்ளும் கொடுத்து காதில் இரண்டு விஷயத்தையும் போட்டு விட்டால் ஊருக்கு ஒரு ரேடியோ தேவையில்லை. அடுத்த நாள் எல்லோருக்கும் தெரிந்து விடும். பெரியப்பா ராசநாயகத்தாரைப் பற்றிச் சொல்லும் குறைபாடுகள் மாமாவைப் பற்றிச் சொல்லும் வேணக்கங் கள்" (கிண்டல்கள்) எல்லாம் இந்த அரை குறை வெறியர் மூலம் எத்தனையோ விதத்தில் பெரிதாக்கப்பட்டோ பெயர் வைக்கப்பட்டோ குறிப்பிட்டவர்களுக்குப் போய்ச் சேரும்.
பெரியப்பா ஊரில் சம்பந்தம் வைத்துக் கொள்வதில்லை. என்று சங்கற்பம் செய்து கொண்டதைக் கேள்விப்பட்ட
あ等 。い י,

Page 132
254 தில்லையாற்றங்கரை
மாணிக்கவாசகம் சாரதாவுக்கு ஒரு நீண்ட கடிதம் எழுதி
யிருந்தான்.
சாரதாவின் தகப்பன் இப்படி தற்பெருமையடித்துக் கொண்டால் தங்கள் வீட்டிலும் பெருமை காட்டத் தயங்க Dnt L.LTffé56ît என்றும் கண்டிப்பாக எழுதியிருந்தான். ஏட்டிக்குப் போட்டி!
பெரியப்பாவின் உளறல்களுக்குச் சாரதா என்ன செய்ய முடியும்?
மாணிக்கவாசகத்தின் கடிதத்தை வைத்துக் கொண்டு கண்ணிர் வடிக்கத் தொடங்கி விட்டாள். பெரியப்பா உண்மையாகத்தான் உள்ளூர் கல்யாணங்களை வெறுக்கிருர் என்ருல் சாரதா சொல்லி கொண்டிருப்பது போலேவே தற்கொலை செய்து கொண்டு விடுவாளோ?
னிக்கவாசகத்தை விரும்பி சாரதா கடிதம் எழுதத் தொடங்கினலும் தானும் சாரதாவுக்கு உதவி செய்ததை கெளரி மறக்கவில்லை. கெளரிக்கு மனதில் பயம் கவ்வியது. காதல் சரிதான். சாதல் கெளரிக்குப் பிடிக்காது. அண்ணு மரகதம் மச்சாளுடன் உறவாய்ப் போனல் ஒரு கஷ்டமும் வராது பெரியப்பாவும் சமாதானமாகி விடுவார் என்று நினைத்தாள் கெளரி.
ஆனல் அண்ணுதான் மரகதத்துடன் சமாதானமாகும் வழியாயில்லை. மரகதம் பிள்ளை வயிற்றுடன் பெருமூச்சு விட்டுக் கொண்டிருந்தாள். பெரியம்மா மரகதத்துக்குச்
ாப்பாடு செய்து கொண்டு போய்க் கொடுத்தாள்.
பிள்ளைத்தாச்சியான பெண்களுக்கு அவர்கள் விருப்பத் தைப் பூர்த்தி செய்யும் விதத்தில் விதவிதமான சாப்பாடு செய்து கொடுப்பது திராமத்து வழக்கம்
அதுவும் தன் மகனின் மனைவி கர்பவதியாயிருக்க பெரியம்மா சும்மாவிருப்பாளா? பால் பொங்கலும் பலகார

ராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம் 255
வகைகளும் செய்து கொண்டு போனள். பெரியப்பாவுக்குப் பெரியம்மாவின் போக்குவரத்துப் பிடிக்கா விட்டாலும் அதிகம் சத்தம் போடாமலிருந்தார்.
மரகதத்தைப் பார்த்து அதிக நாள் என்றபடியால் கெளரியும் சாரதாவும் பெரியம்மாவுடன் சேர்ந்து போனர்கள். இவர்கள் போனது மாமி வீட்டாருக்கு எதிர் பாராத விஷயமாயிருந்தது. பரிமளம் மாமிக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை. மாமிக்கு மாமாவில் பயம். அவர் அனுமதியில்லாமல் எதுவும் செய்யமாட்டாள். பெரியம்மாவை வரவேற்பதோ இல்லையோ என்று அவள் தயங்குவது முகத்தில் தெரிந்தது.
**என்ன மாமி எங்கரிலயும் கோபமா"" சாரதாவும் கெளரியும் கேட்டார்கள். மாமி பலவந்தப்பட்டு முகத்தில் சிரிப்பை வரவழைத்து விட்டு **வாங்கோ; இருங்கோ' என்று இருவார்த்தைகள் சொல்லிவிட்டுப் பாயெடுத்துப் போட்டாள்.
மரகதம் உடுத்தாடை கட்டிக்கொண்டு குளிக்க ஆயுத்தம் போலும். இவர்களைக் கண்டு விருந்தைப் பக்கம்
வந்தாள்.
மரகதம் எவ்வளவோ வித்தியாசமாக இருந்தாள். வயிறு மட்டும்தான் ஊதிப்போயிருக்கும் என்று எதிர் பார்த்த கெளரிக்கு மரகதத்தின் வித்தியாசம் திகைப்பா யிருந்தது.
முகமெல்லாம் வீங்கி, மார்பகங்கள் பெருத்து பச்சை நரம்புகள், கட்டியிருந்த குறுக்குப் பாவாடைக்கு மேலால் புடைத்துத் தெரிந்தது. மூச்சு வாங்கிக் கொண்டிருந்தாள். **பிள்ளைக்கு இப்பவே விக்கம் எண்டு டாகுத்தர் சொல்லிப் போட்டார்" பரிமளம் மாமியின குரல் சோகமா யிருந்தது.

Page 133
256 தில்லையாற்றங்கரை
உப்பில்லாச் சபப்பாடு கொடுக்கச் சொன்னுர்" மாமி தான் தொடர்ந்தாள். மாமி வைத்த கண் வாங்காமல் தன் ம்களைப் பார்த்தாள். -
கெளரிக்கு அதிகமாக ஒன்றும் விளங்கவில்லை. போகும் போது பெரியம்மாவைக் கேட்கலாமென்றிருந்தாள்.
** என்ன மருமகன் வரமாட்டாராமோ" பரிமளம்: மாமி தயக்கத்துடன் கேட்ட அதே சமயம் மரகதத்தின் கண்கள் குளமானதை கெளரி கவனிக்காமலில்லை.
கசியும் அவள் மனத்துயரம் கண்களால் பழிபடப் போவதுபோல் மரகதத்தின் முகம் துயரத்தில் கவிந்து போயிருந்தது. கெளரிக்கு அந்தக் கண்களின் சோகத்தைத் தாங்க முடியாமலிருந்தது. ጾ* ネ
ஒடிப்போய்க் கையைப் பிடித்து அண்ணுவை இழுத்துக் கொணர்ந்து மரகதத்திடம் கொடுக்க வுேண்டும் போலிருந்தது.
நீங்கள் கிணறு கட்டிக் கொடுக்கு மட்டும் அவன் வர மாட்டான் தானே" பெரியம்மா யாரையும் பிழை சொல் லாமல் சொன்னள். பெரியம்மாவின் பார்வை பரிதாபமான கோலத்திலிருக்கும் மருமகளில் படிந்திருந்தது. ‘என்னட்டு மச்சாள் கிணறு வெட்டுற? இனி மழை பிடிக்கிற காலம். ஒணறு வெட்டத் தொடங்க முதலே தண்ணி சீறிப் பாயும்" ரிமளம் மாமி சொல்வதிலிருந்து தெரிந்தது. மாமா தன் பிடிவாதத்தை விட்டுக் கொடுத்துவிட்டுப் பெரியப்பா சொல்வதுபோல் கிணறு வெட்டப் போகிருர் என்று.
அண்ணுவின் பிடிவாதம் எவ்வவவு தூரம் போகும்? வீட்டுக்கு வந்து வெகு நேரம் வரையும் கெளரி அதைப் பற்றி யோசித்துக் கொண்டிருந்தாள். , gጳ 3
கோயில் வளவில் மேடை கட்டி கூத்தாடத் தொடங்கி
பிருந்தார்கள். இவர்களின் ஊர் பேய்களுக்கும் பில்லி

ராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம் 25?
சூனியத்துக்கும் பெயர் போனதுபோல் நாட்டுப் பாடல் களுக்கும் நாட்டுக் கூத்துக்கும் பெயர் போனது. அதிலும் தென்மோடி அமைப்பில் இவர்கள் அலங்காரம் செய்து கூத்து அரங்கேற்றம் செய்வதைப் பார்க்க மட்டக்களப்பில் எட்டுப் பகுதியிலிருந்தும் சனங்கள் வருவதாக ஆச்சி புழுகி யிருக்கிருள். கெளரி வளர்ந்து பெரிய பிள்ளையாகிய பின் ஊரில் அரங்கேறப் போகும் இந்த நாட்டுக் கூத்தைப் பார்க்க மிகவும் ஆவலாயிருந்தார்கள். பாடசாலையிலிருந்து பார்க்கும்போது கோயில் வளவில் ஒரு மூலையில் பெரிய மேடை போடப்படுவது தெரிந்தது. அந்த மூலையில் அவள் நினைவு தெரிந்த நாள் முதல் ஏதோ ஒரு மேடை இருந்து கொண்டேயிருக்கும். கெளரமான சமயப் பிரமுகர்கள் எப்போதாவது வந்து கதாப் பிரசங்கம் செய்வதுண்டு.
அரசியல் பேச்சுக்கள் அந்த மேடையில்தான் அடிக்கடி அதிர்ந்து முழங்கும். இப்போது சரிந்து குழம்பிப் போயிருந்த மேடையை நாட்டுக் கூத்து ஆடுவதற்காகத் தயார் செய்து கொண்டிருந்தார்கள். 1
ஊர் வழக்கப்படி வயது வந்தவர்கள்தான் நாட்டுத் கூத்தில் பங்கு பெற்றவர்களாம். ஆணுல் இப்போது பாட சாலையில் படிக்கும் உயர் வகுப்பு மாணவர்கள் முதல் நல்ல குரலும் கம்பீரமான உடற்தோற்றமுள்ள கிராமத்து வாலிபர்களும் பங்கு கொண்டார்கள். எல்லாம் சாமியாரின் முயற்சியே.
சாமியாருக்கு இந்த ஊர் இளைஞர்கள் கூட்டம் கூட்ட மாய்ப் படத்துக்குப் போவதும் படம் பார்த்தால் படத்தின் பாட்டையும் வசனத்தையும் பாடமாக்கிச் சொல்லிச் சிரிப்பதையும் கேட்கக் காதைப் பொத்திக் கொள்ள வேண்டும்போல் இருக்கிறதாம். கெளரியிடம் சொல்லி முறையிட்டார். 弹
கெளரி சாமியாருக்குக் கோப்பி போடும்போது காலைக் குளிரில் நடுங்கிக் கொண்டு அடுப்படிக்கு வந்த சாமி
. ۰ - 17

Page 134
25.8 தில்லையாற்றங்கரை
இந்த முறைப்பாட்டைச் சொல்ல கெளரி சொன்னுள், சில படங்கள் நீதி நேர்மை பற்றிச் சொல்கிற படங்களாகவும் இருக்கிறதை ஒப்புக் கொள்ளாமல் இருக்கலாமோ?
சாமியாருக்கு மூக்கு நுனியில் கோபம் வந்திருக்க வேண்டும்: (முகமெல்லாம் தாடியால் மறைந்திருக்கும்) கெளரியை நிமிர்ந்து பார்த்துச் சொன்னர்: 'கலைகளையும் காவியங்களையும் காசு உழைக்க பாவிக்கப் போனன்கள். அதனுல இப்ப நேர்மையான கலைப்படைப்புக்களை எங்கே காண முடிகிறது" கெளரிக்கு வழக்கம்போல் குழப்பம்.
கம்பன் கூட அரசனைப் புகழ்ந்து காசுக்குப் பாடினனமே கம்பன் பாடல்களில்தான் எவ்வளவு சுவையும் கலையும் இருக்கிறது.
'உலகத்தில் பெரும்பாலான கவிஞர்கள் காசுக்குத் தானே பாடினர்கள்' அவள் தயங்கிக் கொண்டு சொன்னுள்.
*"மகளே காசில்லாமல்-காசுக்கு மதிப்புக் கொடுக் காமல் உலகத்தில் இதுவரைக்கும் ஒன்றும் நடக்கல்ல. ஆனலும் காலப்போக்கில் கலையின் கண்ணுேட்டமும் ரசனை யும் காசுக்கு மட்டும்தான் பாவிக்கப்படுறதுதான் சகிக்க முடியாமலிருக்கிறது. எவன் எவனே என்னவெல்லாமோ பாடுருன், என்னவெல்லாமோ எழுதுருன். எது சமுதாயத் துக்குத்தேவை என்பதைப் பற்றி அக்கறையில்லை. இவன் எல்லாம் கலைஞஞகவோ, கடவுளாகவோ ஏன் அவதார மாகவோ ஆக்கப்பட்டு விடுகிருர்கள். அதுதான் சகிக்க முடியாத கொடுமை."
சாமியார் அலுத்துக் கொண்டார். சிலையும் வைத்துக் கும்பிடுவார்கள் என்று சொல்ல நினைத்தாள். அவர் தமிழ் மக்களின் வாழ்க்கையோடு இணைந்துவிட்ட தமிழ்க் கலைகள் புத்துயிர் எடுக்க வேண்டுமென்று சொன்னபோது கெளரி வாசித்துக் கொண்டிருந்த குமுதம் பத்திரிகையை மறைத்து

ராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம் 259
விட்டாள். அட்டைப் படங்களிலெல்லாம் ஆடை நழுவி நிற்கும் அலங்காரச் சித்திரங்கன் சாமியாருக்கு அருவருப்பை கொடுப்பது கெளரிக்குத் தெரியாததல்ல.
அவரின் போதனையால் பல இளைஞர்கள் தங்கள் சினிமாப் படப் பைத்தியத்தை மூட்டை கட்டிவிட்டு நாட்டுக் கூத்தில் மும்முரமாய் ஈடுபட்ட்ார்கள். பாலிப் போடிக் கிழவன்தான் ஒரு வயது போன மனிதன் கிழவனும் கூத்தில் கட்டியகாரணுகத் (கோமாளி) தான் வந்து விருத்தம் இழுத்தான்.
கூத்தின் பெயர் 'குருச்சேத்திரப் போர்' 1958.ம் ஆண்டு வைகாசியில் வகுப்புக் கலவரத்தின் போது சிங்கள வர்களால் அடிபட்டுத் தாடியிழந்து அரைகுறை உடுப்புடன் அரைகுறையுயிருடன் ஊருக்கு வந்து சேர்ந்த நாளிலிருந்து சிங்களவர்களைத் துரியோதனற்குறியராகவும் தமிழரைப் பஞ்ச பாண்டவர்களாகவும் உருவகப் படுத்திக் கதைத்து கண்ணிர் விடுவார் சாமியார்.
குருஷேத்திரப் போர் நாட்டுக் கூத்தில் கண்ணணுய் ஆடப்போவது செல்வராசா என்றதும் அண்ணு சொன்னன் **இந்தத் திடீர்த் தலைவர்கள், போலியாக உரிமைப்போர் கதைச்சுப் போட்டு ஊரில் உள்ள குடும்பங்களைக் குலைக்கிற பெரிய மனிசங்கள், பகவத் கீதை பிறக்கக் காரணமாயிருந்த கண்ணனுக நடிக்கிருர்கள்""அண்ணுவுக்குச் செல்வராசாவில் சரியான ஆத்திரம் கெளரி ஒன்றும் சொல்ல்வில்லை. அண்ணு வுக்குச் செல்வராசாவிலுள்ள வெறுப்புத்தெரிந்தது. அண்ணு கூத்தில் நடிகனகப் பங்கெடுக்கவில்லை. இயற்கையாகவே ஒரு வெட்கப் பிராணி. ஆனல் எல்லோருக்கும் ஆச்சரியம் தரும் வகையில் சாரதாவின் தம்பி சங்கரன் பாஞ்சாலியாக ஆட எடுபட்டிருந்தான்.
சங்கரனுக்கு நல்ல முகவெட்டு. அதோடு நல்ல குரலும் பாஞ்சாலியாக மேடையேறிக் கதறியழுது கண்ணீர் 6ճւ:G

Page 135
260 தில்லையாற்றங்கரை
கெளரவர்களைச் சாபம் போட்ட போது கூத்துப் பார்க்க வந்திருந்தோர் மெய் மறந்து விட்டனர்.
ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு பாகமாக ஆடிப் பழகு வார்கள். அப்பா அண்ணுவியள் என்ற படியால் சதங்கை, சல்லாரி, மத்தளம் என்பனவற்றிலிருந்து ஒவ்வொரு விஷயமும் அவர் தலையில் ஏறியிருந்தது. அண்ணு தான் அப்பாவின் உதவி.
அண்ணுவின் முழுநேரமும் அப்பாவுடனே சாமியாரு டனே தான் கழிந்தது. கோயில்.திருவிழாவின் கடைசி நாள் நாட்டுக் கூத்து அரங்கேற்றமாவது என்ற ஏற்பாடு.
நாட்டுக் கூத்துப் பார்க்கக் கிராமத்தார் ஒவ்வொரு இரவும் கோயில் வளவுக்குள் போவார்கள். லாந்தர் விளக்குகளும்தூக்கிக்கொண்டு பாய்களும் சுருட்டி எடுத்துக் கொண்டு பாக்கு வெற்றிலைப் பொட்டணங்களுடன் கூத்துப் பார்க்கப் போய் நடுச்சாமத்தின் பின் வருவார்கள். **சாக முதல் இந்தக் கூத்தை எண்டாலும் கண்ணுரப் பார்ப்பாம் இனி எங்க கூத்து வரும்' ஆச்சி கிட்டத்தட்ட ஒவ்வொரு இரவும் கூத்துப் பார்க்க போவாள். ஆச்சிக்கு மாலைக்கண் என்ற படியால் அவள் யாரையாவது துணைக்குக் கூப்பிடுவது வழக்கம், தம்பிகள் தான் அதிகம் போவார்கள்.
ஒரு நாள் கெளரியும் சாரதாவும் ஆச்சியுடன் போனுர் கள். போகும் , வழியில் மாணிக்கவாசகத்தைக் காண நேர்ந்தது. சாரதா தர்மசங்கடத்துடன் நெளிந்தாள். ஆச்சிக்கு தூரப் பார்வையேயில்லை. நேரமோ கருக்கல் (மாலையிருளும் நேரம்) X
மாணிக்கவாசகம் நிற்பது சாரதாவுடன் கதைப்பதற் குத்தான் என்பது கெளரிக்கு விளங்கியது.
யார் முன்னிலையும் இல்லாவிட்டாலும் ஆச்சி முன்னிலை யிலா கதைக்கப் போகிருன்?

rirgelvarf ursosúdruðofluúb 28
சாரதாவும் கெளரியும் ஒருத்தரை ஒருத்தர் பார்த்துக் கொண்டார்கள். என்ன செய்வது என்றே தெரியவில்லை.
**என்ன ஆச்சி பேத்திகளோட கூத்துப் பார்க்கப்போறி யளோ" மாணிக்கம் போட்டான்.
**ஆரடா அது செல்வராசாவா" " கிழவிக்கு ஆள் அடையாளம் தான் தெரியாது. குரல் அடையாளமும் தெரியாதா? ஆச்சி கேட்டது மாணிக்கத்துக்கு விளங்க முதலே ஆச்சி கதைக்கத் தொடங்கி விட்டாள்.
**ஏன்ராப்பா செல்வராசா நீ தான் அயல் ஊட்டுக் காரன், காசுபதிக்கு ஒருக்காப் புத்தி சொல்லி மரகதத்தை யும் கதிர் வேலனையும் உறவாக்கி விடன்' ஆச்சி சொல்லி முடித்த பின் தான் மாணிக்க வாசகத்துக்கு விஷயம் விளங்கியது. தன்னைச் செல்வராசா என்று நினைத்துக் கொண்டு கதைக்கிருள் என்று.
*ஏன் ஆச்சிநாங்கள் அயலூரில வேலை எண்டாப் போல ஆக்களையும் மறந்து போனியளோ"மாணிக்கம் கேட்டான்.
ஆச்சிக்கு தன் தவறு தெரிந்து “எட, மாணிக்கனேடா இது? எப்ப கல்யாணம்" என்று கேட்டாள்.
கேலிக்குக் கேட்கிருளா அல்லது சும்மா ஒரு கதைக்குக் கேட்கிருளா என்று தெரியவில்லை. ஆணுலும் சாரதாவைப் பார்த்தபடி சொன்னன்.
*பெண்பிள்ளை தாரதாயிருந்தால் எப்பவும் சம்மதம் தான் ஆச்சி' கிழவி கிக்கி கிக்கி என்று சிரித்தது.
*தம்பி, இவளுகள் ஏதோ படிச்சுக் கிழிக்கப் போறன் எண்டு சொல்லுருளுகள். ஒரு வருசம் பொறுத்திரு' கிழவி சொல்ல கெளரிக்கு நிம்மதியாயிருந்தது. மரகதத்தின் கல்யாணத்தின் பின் தங்களையும் கல்யாணம் செய்ய
நச்சரிக்கப் போகிருளோ என்று பயந்திருந்தவர்களுக்கு

Page 136
28 Adbakoumbpdraagt
ஆச்சி ஒரு வருஷத் தவணை வைத்திருப்பது சந்தோசமா யிருந்தது.
"ஒம், ஆச்சி ஒரு வருஷமில்ல ஒன்பது வருசமும் காத்தி ருப்பம். ஆனல் உங்கட பெட்டைகள அயலூரான் கொண்டு போகமற் பார்த்துக் கொள்ளுங்கோ"
பெரியப்பா சொல்லிக் கொண்டிருப்பதைக் கேள்விப் பட்டிருப்பான் தானே. பெரியப்பா உள்ளூரில் மாப்பிள்ளை எடுப்பதில்லை என்று உறுமிக் கொண்டு திரிவது ஊரறிந்த விசயம்,
*போடா தம்பி ராசகுமாரன் மாதிரி நீங்கள் எல்லாம் இரிகக்கக்க ஏன் இவளுகள் அயலூரானப் பார்க்கிரு ளுகள்?' கிழவி புழுகி வைத்தாள். கெளரிக்குத் தெரியும் தனக்கு மறைமுக எச்சரிக்கை தருகிருள் கிழவி!
மாணிக்கவாசகம் பின்னடிப்பதைப் பார்த்தச் சாரதா வும் பின்னடித்து நடந்து வந்தாள். கெளரி ஆச்சியுடன் முன்னேறிப்போனள். சாரதா ஒப்பாரி வைப்பாளா மாணிக்கவாசகத்திடம்?
கோயிலை நெருங்கும் போது அண்ணுவுடன் பத்மநாதன் நின்று கொண்டிருந்தான். கெளரியைக் கண்டதும் ‘என்ன? மச்சான் கண்ணணுக வேஷம் போடுருன் மச்சாள் ராதையாய் மாறி ரசிக்க வந்திருக்கிருவோ"" என்ன பகிடி பத்மநாத னுக்கு. கெளரி ஒன்றும் சொல்லவில்லை. அண்ணுவுடன் இருப்பதால் பத்மநாதன் தப்பினன். இல்லையென்ருல் கெளரி தன் வார்த்தைகளால் குதறித் தள்ளியிருப்பாள்.
செல்வராசாவைக் கண்டால் அவன் பத்மநாதனை நினைத்துக் கொண்டு இவளைக் கிண்டல் செய்கிருன். பத்ம நாதனைக் கண்டால் அவன் செல்வராசாவை இவளுக்குக் கிண்டல் செய்கிருன். இவர்களுக்கென்ன பெண்கள் எந்த நேரமும் யாரோ ஒரு ஆண நினைத்துக் கற்பனையில் வாடிக் கொண்டிருக்கிறர்கள் என்ற நி%னவோ?

rregelbaufl umsosüMuosefluh 263
கெளரிக்கு ஆத்திரம் ஆத்திரமாக வந்து கொண்டிருந் தது. கூத்தில் அதிகம் மனம் செல்லவில்லை. போதாக் குறைக்குச் சாரதாவின் முணுமுணுப்பு வேறு. சாரதா பெரியம்மாவுக்குச் சொல்லிதங்கள் வீட்டாரிடம் மாப்பிள்ளை கேட்டு வரச் சொன்னஞம் மாணிக்கம்.
"வீட்டில் என்னெண்டு சொல்லுற? அண்ணுன்ற கல்யாணமே இப்படியாய்ப் போச்சு. எல்லாவற்றையும் யோசிக்கத் தற்கொலை செய்யத்தான் மனம் வருகுது' சாரதா சலித்துக் கொள்வதைப் பார்க்க கெளரிக்குப் பயம் வந்தது. சோதனை முடியும் வரை சாரதா கல்யாணம் முடிக்காமல் இருந்தால் தான் நல்லது என்று கெளரி விரும் பினள். இல்லை என்ருல் கெளரியையும் ஆச்சி நச்சரிக்கத் தொடங்குவாள்.
கல்யாணம் ஆகாவிட்டால் சாரதா ?? தற்கொலை' செய்வதென்றல் அதையும் கெளரியால் தாங்கள் முடியாது. சாரதாவுக்கு ஏதோ ஒன்று செய்யாமல் இருக்க முடியாதா? ஊரில் இதுவரை நடக்காத காரியமெல்லாம் இவர்கள் குடும்பத்தில் நடக்கிறதா?
இதுவரைக்கும் ஊரில் எந்தப் பெண்ணும் சொந்த மச்சானுக்குக் காதல் கடிதம் எழுதியதாய் கெளரி அறிந்த தில்லை. அண்ணுவைப் போல் யாரும் கல்யாணமாகி இரண்டாம் மாதம் மனைவியை விட்டுவிட்டு வந்ததையும் கேள்விப் பட்டில்லை.
பாலிப் போடிக் கிழவனும் தெய்விக் கிழவியும் ஐம்பது வருஷம் குடித்தனம் நடத்தினர்களாம்! !! எப்படிக் குடித்தனம் என்று பிரச்சினையில்லை. குடித்தனம்தான் கதை. அண்ணுவுக்கும் மரகதத்துக்கும் இரண்டுமாதம் ஒன்ருயிருக்க முடியவில்லையே! ஏன்?
தெய்விக் கிழவியிலுள்ள கோபத்தில் பாலிப் போடிக் கிழவன்"தற்கொலை செய்ய ஓடையில் இறங்கி காட்டெருமை.

Page 137
24 தில்லயாற்றங்கரை
துரத்திவர சேற்றில் கால் புதைய உடுத்திருந்த வேட்டி அவிழ்ந்து விழ (எப்போதுதான் இடுப்பில் உருப்படியாய்க் கிழவனின் வேட்டியிருந்தது?) கிழவன் நிர்வாணமாய்க் கிழவியிடம் வந்து தாறுமாருகப் பேச்சு வாங்கிய கதை ஊரில எல்லோருக்கும் தெரியும்.
அதைவிட ஊரில் யாரும் தற்கொலை செய்து கொண் டில்லை. கடவுளே சாரதாவுக்கு உறுதியான மனத்தைக் கொடு. காதலில் வெற்றியைக் கொடு. கல்யாணம் பண்ண உதவி செய். ஆனல் தற்கொலை செய்யும் வழியை மட்டும் கொடுத்து விடாதே என்று கெளரி நாட்கணக்காகப் பிரார்த்தனை செய்ய வேண்டியிருந்தது. w
g o
கோயில் கும்பாபிஷேகத்துக்கான ஏற்பாடுகள் நடந்து கொண்டிருந்தன. சொல்லியடங்காதஏற்பாடுகள். சாமியார் கடந்த ஒரு மாதத்தில் எவ்வளவோ இளைத்துவிட்டார். அவ்வளவு வேலை.
அப்பா, அண்ணு, மாமா, பெரியப்பா எல்லோரும் தான் ஒடியாடி வேலை செய்தார்கள். யபழ்ப்பாணத்திலிருந்து ஐயர்களும் கும்பாபிஷேகத்துக்குரிய தேவையான சாமான் தளும் புகழ் பெற்ற நாதஸ்வர கோஷ்டியும் வந்து இறங்கியது.
கோயில் கும்பாபிஷேகத்தைத் தொடர்ந்து நடக்கப் போகும் திருவிழாக்களை முடிவு கட்டிய போது குடிச்சண்டை தொடங்கியது.
ஊரில் உள்ள நான்கு குடிகளும் பழம்காலம் தொட்டு நடைபெற்றுவரும் பழக்கத்துடன் திருவிழா பூசை செய்ய ஏற்பாடுகள் செய்ய வேண்டுமென்று கோயில் வண்ணக்
கர்கள் (கோயில் பொறுப்பாளர்) கூட்டத்தில் கதைத்த

frðadeufl undsddruðafluh 28S
போது மூன்று குடிகளும் சம்மதிக்க ஒரு பகுதியினர் மட்டும் பழக்கத்தை எதிர்த்தார்கள்.
பணிக்கனர் குடி, கலிங்கராசன் குடி, படையாண்டான் குடி என்ற மூன்று பகுதியினரும் தாங்கள் ராசகுடி என்றும் வேளாளர் கடைசிக்குடி என்றும் வாதாடினர்கள்.
ராசகுடிக் கதை எல்லாம் பழங்கதை இப்போது தமிழரிடையே நிலவும் பழக்கவழக்கப்படி வேளாளர் குடி தான் முதற் திருவிழா செய்யத் தகுதி வாய்ந்தது என்பது வேளாளரின் பொதட்டம், منبر
ஊரில் பல இடங்களிலும் பல குடும்பத்திலும் இதனல் பெரிய தர்க்கங்கள் நடந்து கொண்டிருந்தன.
கல்வெட்டுக்கள் மூலம் தாங்கள் தான் பெரிய குடியார் என்பதை நிரூபிக்க முடியும் என்று ஒவ்வொருத்தரும் வாதாடினர்.
கல்வெட்டோ மண்வெட்டோ ஏன் தமிழர்களுக்கு உருப்படியான சரித்திரம் இல்லாமல் இருக்கிறது? எடுத்த தெற்கெல்லாம் இப்படிக் கல்வெட்டுக்களையும் காவியங்களை யும் நம்ப வேண்டியிருக்கிறது! கெளரிக்கு இந்தச் சண்டைகள் பிடிக்கவில்லை. வாதங்களும் நம்பத்தக்கதாயில்லை.
பாடசாலையில் வகுப்பிலும் மாணவர்கள் தங்கள் குடிகள்தான் பெரிதென்று தர்க்கித்துக் கொள்கிருர்கள். சரித்திரம் இல்லாத தமிழர்களா நாங்கள்? "என்ன சண்டை? யார் பெரிசு யார் சிறிசு எண்டோ சண்டை?" வாத்தியார் ஒரு தரம் தலையிட்டார். குடியியலும் அரசிய லும் என்ற வகுப்புக்கு வந்திருந்தார்.
*ஹிட்லருக்கு யூதர்கள் குறைந்தவர்கள், வெள்ளையர் களுக்குக் கறுப்பர்கள்கள் அடிமைகள். ஆரியருக்குத் திராவிடர் குறந்ைதவர்.' அவர் சொல்லி முடிக்கவில்லை.

Page 138
288 தில்லையாற்றங்கரை
'சிங்களவனைப் பொறுத்த வரையில் தமிழன் அடிமை' என்று இடைமறித்துச் சொன்னன் சின்னத்தம்பி என்ற மாணவன். அவன் ஒரு திராவிட பக்தன் மட்டுமல்ல தமிழரசுப் பக்தனும்.
பாடசாலைப் புத்தகங்களுடன் அறிஞர் அண்ணுவையும் கலைஞர் கருணுநிதியையும் கலந்து வைத்திருந்து வாசிப்பான் இப்போதெல்லாம் தமிழரசுக் கூட்டங்களுக்கு நோட்டிஸ் எழுதுகிறன். சிங்கள பூரீ எழுத்துப் போராட்டத்தின் போது **நண்டெழுத்து நமக்கு வேண்டாம்" என்று எழுதிக் கோயில் மரங்களில் ஒட்டியிருந்தான்.
சின்னத் தம்பிக்கு வாத்தியாரைப் பிடிக்காது. கம்யூனிஸ்ட் வாத்தியார் என்று திட்டுவான்.
தமிழ் மொழிக்கு உரிமை கேட்டுப் போராடுவதோடு
இலங்கையிலுள்ள தொழிலாளர்களிலும் தோட்டத் தொழிலாளர்களின் உரிமைக்குப் போராவதும் புத்திசாலித் தனம் என்று வாத்தியார் சொல்ல சின்னத் தம்பிக்குக் கோபம் வந்து விட்டது.
*எங்களைச் சிங்களம் படிச்சு சிங்களவன் ஆக்கப் பார்க்கிற அரசாங்கத்தை எதிர்க்கிறது தான் முதல் வேலை" என்று எழும்பி நின்று கையைக் காட்டிப் பேசினன்.
எதிர் காலத்தில் அவனும் பெரிய **பேச்சாளர்" ஆக வரலாம். ஏன் பெயர் பெற்ற தலைவராகவும் வரலாம்.
**எதிரியைத் தாக்கப் போகும்போது எதிரியுடன் சேர்ந்து தாக்குவது நல்லதில்லையா? முதலாளித்துவ அரசாங் கத்தை எதிர்க்கும் தொழிலாளர்களின் பிரச்சினையோடு தமிழரின் பிரச்சினையையும் சேர்த்துக் கொண்டு போராடி ஞல் வெற்றி கிடைப்பது சாத்தியமல்லவா" வாத்தியார் மாணவர்களுடன் அரசியல் சண்டை.
சின்னத்தம்பி அடுக்கு மொழியில் நன்முகப் பேசுவான். ள்முதுவான். கல் தோன்றி மண் தோன்றக் காலத்தே முன்

፯67
தோன்றி மூத்த தமிழினமே என்றெல்லாம் கட்டுரை எழுதி வாத்தியாரிடம் பேச்சு வாங்குவான்.
**டேய் மடையா கல் தோன்றி மண் தோன்ருக் காலத்தில் எந்த மண்டூகமடா உலத்தில் இருந்தது? விஞ்ஞான ரீதியால் யோசிக்கப் பழகு" என்று மட்டும் தட்டுவார் வாத்தியார். இப்போது ஊரின் குடிச் சண்டை யில் தொடங்கிய கதை இலங்கை அரசியலில் போய் நின்றது.
தாங்கள் பெரியாட்களா மாறச் சிலர் இந்த ஊரில் நிறைய பிரச்சினைகளை யுண்டாக்குகினம், புத்தியைப் பாவித்து இந்த சண்டைகளில நேரத்தை வீணுக்காமல் பாருங்கோ' வாத்தியார் புத்திமதி சொன்னர். சின்னத் தம்பிக்கு அவரில் கோபம். வாத்தியாருக்குப் பெட்டிஷன் போட்டு மாறுதல் கொடுக்கப் பண்ண வேண்டும் என்று வரும் வழியில் சொன்னன்.
கோயில் கும்பாபிஷேகம் தொடங்கியதும் ஊரே திரு விழாக் கோலம் கொண்டிருந்தது. பூசை புனஸ்காரத் துடனும் பஞ்சாமரம் வீச பக்க வாத்தியங்கள் இசை முழங்க பிள்ளையார் பவனி வந்த காட்சி மெய்யுருக்கியது? காலடியாட்டங்கள், கரக ஆட்டங்கள், கற்பூரச் சட்டிகள், அங்கப்பிரதட்சணம் செய்வோர் என்று திரும்பிய இடமெல் லாம் பக்தி மனம் பிரவகித்தது.
கெளரிக்குக் கண்களில் சுகமில்லாமல் வந்தபோது அம்மா நேர்த்தி வைத்தாளாம். கெளரி கற்பூரச் சட்டி தலையில் ஏற்றிச் கோயிலை மூன்று தரம் வலம் வந்து நடுச் சாமக் குளிரில் தடிமலும் பிடித்தது.
ஆனலும் ஒவ்வொரு நாளும் கோயிலுக்குப் போனள்.
இவ்வளவு நாளும் சாமியாருடன் கொட்டில் பிள்ளை யாருக்குப் பிரார்த்தனை பாடியவள் இனி இந்தப்

Page 139
R தில்லையாற்றங்கரை
பிரம்மாண்டமான மண்டபத்திலிருந்து பிரார்த்தனை பாட லாம்,
ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் கூட்டுப் பிரார்த் தனக்கு வரலாம். எங்கள் ஊருக்கு ஒரு கோயில். அவள் மனம் பக்தியால் மலர்ந்தது. *என்னடி கேட்டுப் பிரார்த்திக் கிருய்" சாராத கேட்டாள்.
**நல்லா படிச்சுப் பாஸ் பண்ணி புனிதமலர் ரீச்சர் மாதிரி வரவேணும் எண்டு பிரார்த்திக்கிறன்" கெளரி கோயில் கோபுரத்தைப் பார்த்தபடி சொன்னுள்,
சாரதாவிடம் கேட்கத் தேவையில்லை என்ன கேட்டுப் பிரார்த்தி கிருள் என்று. சாரதா கெளரியை ஏறிட்டுப் பார்த் தாள்.
“என்ன பார்க்கிருய் சாரதா" நடுச்சாமக் குளிர்காற்று முகத்தில் விளையாடி விட்டுப் போனது சில் என்ற குளிர்.
*புனிதமலர் ரீச்சரைப் பேய்க்காட்டுன யாழ்ப்பணத்து இன்ஸ்பெக்டர் மாதிரி ஒருத்தனிட்ட அகப்படப் போருய்" சாரதா கேலிக்குச் சொன்னள்.
சாரதாவை முறைத்துப் பார்த்தாள் கெளரி. அப்பிடி ஒரு எளிய நாய் வாலாட்டினல் கொலை செய்து போடு வனடி' கெளரி உண்மையாய்க் கோபத்துடன் சொன்னுள்,
**ஒமடி கொலைகாரி ஆச்சியிட்ட ஒரு அரிவாளையும் வாங்கி கொண்டு போ' சாரதா கிண்டலாகக் சொன்னுள். இவர்களின் கேலியிலும் கிண்டலிலும் சேர்ந்து களிக்கி மரகதம் தங்களுடன் இல்லையே என்ற துக்கம் கெளரியின் மனத்தை வாட்டியது. கமலம் கூட இப்போதெல்லாம் கடிதம் போடுவதில்லை. அண்ணுவின் கல்யாணத்தைப் பற்றி எழுதி இரண்டொரு மாதமாகியும் கமலத்திடமிருந்து ஒரு கடிதமும் வரவில்லை. இருந்தாற் போலிருந்து ஏனுேதானே என்று ஒரு கடிதம் வந்தது தான்இரண்டாம் வருடம்

ராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம் 269
பரீட்சைக்குப் படித்துக் கொண்டிருப்பதாக எழுதியிருந் தாள். உண்மையாக இருக்கலாம்.
அண்ணு மரகத்தைப் பிரிந்திருப்பதைப் பற்றிக் கேள்விப் பட்டோ என்னவோ திடமான மனப்போக்கற்றவர்களின் திட்டம் இப்படித்தான் ஏனேதானே என்று போகும்' என்று மேற்கோள் காட்டி எழுதியிருந்த விடயம் அண்ணு வின் கல்யாண விசயமாகத்தானே என்று நினைத்தாள் கெளரி.
இந்தக் கோயில் கும்பாபிஷேகத்துக்கு.கமலம் வந்திருக் கலாம் என்று மனம் சொன்னது.
கமலம் நிறைய விஷயங்களைப் பற்றிக் கதைப்பாள். கெளரியைப்போல் நிறையப் புத்தகங்கள் வாசிப்பாள். சாரதா மாதிரி எப்போதும் மாணிக்க வாசகத்தைப்பற்றிக் கதைக்கத் தேவையில்லை.
மரகதத்துடன் பேசிக் கதைக்க விருப்பமென்ருலும் ஒழுங்கையில் அல்லது ரோட்டில் செல்வராசாவைக் காண வேண்டும் என்பதால் போக முடியவில்லை. இப்போது மட்டு மென்ன? கோயிலில் ஒவ்வொரு தரமும் காணவேண்டிக் கிடக்கிறது. நேருக்கு நேர் பார்க்க அஞ்சி அவன் வரும் நேரம் பார்த்து ஏதோ மறைவில் நின்று கொள்கிருள்
படிப்பு முடிந்து ஆச்சி சொல்வது போல் இவனைக் கல்யாணம் செய்தால் எங்கே மறையப் மோகிருளாம்? அது பற்றிக் கெளரி இப்போதைக்கு யோசிக்கத் தயாரில்லை.
கோயில் திருவிழாக்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு குடியையும் போட்டி போட்டுக் கொண்டு நடந்தன. பெரியப்பாவின் குடியினர் யானையில் சாமி வைத்துத் திரு விழா நடத்தினர்.
ஆச்சி சொன்னது போல் மட்டக்களப்பின் எட்டுப்பகுதி யினரும் வந்து திருவிழாவைக் கண்டு களித்தனர். கூத்தும்

Page 140
270 தில்லையாற்றங்கல்ர்
அரங்கேற்றப்பட்டது. கடைசித் திருவிழா அன்று அந்தக் களிப்பு இல்லை.
அடுத்த வருஷம் தொடங்கப் போகும் திருவிழாவில் தங்களுக்கு முதல் திருவிழா தரவேண்டுமென்று வேளாள குடியினர் கேட்டனர்.
மற்ற எந்தக் குடியினரும் விட்டுக் கொடுக்கத் தாயார யில்லை. இவர்களின் சண்டை கெளரிக்கு வேதனையை யுண்டாக்கியது. தேரோ திருவிழாவோ எல்லாம் கடவு ளுக்குத் தானே என்று ஆச்சியிடம் சொன்னுள்.
போடி கெளரி, எங்கட வம்சப் பெருமையைவிட்டுக்
கொடுக்கவோ? எடி பெட்டை எங்க " போனலும் நீ ஒரு கலிங்கராசான் குடிப் பெண் என்கிறதை மறக்கதே."
ஆச்சி இப்படிச் சொன்னதும் கெளரிக்கு இன்னும் கோபம் வந்தது. ஆச்சி பழம் பெருமை பேசிப் பறைதட்டச் சொல்கிருளா?
**ஆச்சி கடவுளும் கோயிலும் பெரிசா? இல்ல இந்த இளவுபிடிச்ச குடி வழியும் சாதி வழியும் பெரிசா" என்று குமுறிஞள்.
* உனக்கு என்ன? சின்னப் பெட்டை இதெல்லாம் தெரியாது. இப்படி ஒவ்வொன்றையும் விட்டால் உலகத்தில ஒண்டிலயும் நம்பிக்கையில்லாமல் போகும்' ஆச்சியின் பயமுறுத்தலது.
என்ன நம்பிக்கையோ நாராசமோ? அன்றிரவு திருவிழா முடிய அடுத்த வருஷத் திருவிழா பற்றிக் கதைக்க எல்லாக் குடி வண்ணக்கர்களும் கூடினர்கள்.
அடுத்த நாள் மத்தியானம் சாமி கொண்டு போய்க் கடலில் தீர்த்தமாடுவதாக ஏற்பாடு.

ராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம் 271
நடுச்சாமத்துக்கு மேலாகி விட்டது நேரம். கூட்டத்தில் வழக்கம் போல் தர்க்கங்கள் வாக்கு வாதங்கள். வாய்ப் பேச்சுக்கள். பெரியப்பா ஒரு கட்சி. சொல்லி வைத்தாற் போல் ராசநாயகத்தார் அடுத்த கட்சி.
இங்கும் பாடி அங்கும் பாடும் இடையாடிகள்" ஏராளம். தர்க்கமும் சண்டையும் நீடித்துக் கொண்டேயிருந்தது. இரவு நீண்டு, குளிர் கூடி, நித்திரைக் கலக்கமும் கூடியும் வாக்கு வாதம் ஓயவில்லை.
கோயில் வீதியெல்லாம் அங்கும் இங்குமாய்ச் சில அயலூர்ப் பக்தர்கள் படுத்திருந்தனர்.
வேலிக் கரை மரநிழல்களில் அமுது சமைக்க அமைக்கப் பட்ட பெரிய பெரிய அடுப்புகளின் சாம்பலில் சில சொறி நாய்கள் படுத்திருந்தன. الصبر
கோயிலுக்குள் இன்னும் தர்க்கம், கூட்டம் முடிவதா யில்லை. வெளியில் சில வாலிபர்கள் கூட்டத்தின் முடிவை எதிர்பார்த்துக் காத்திருந்தார்கள். பாலிப் போடி அப்போதும்-அந்த நடுச்சாமத்திலும் எங்கேயோ போய்க் குடித்து விட்டுத் தள்ளாடியபடி படியேறிக் கோயிலுக்குள் போய்க் கொண்டிருந்தது.
வாலிபர்கள் சிரித்துப் பேசிக் கொண்டு இருந்ததால் கிழவன் உள்ளே போனதைக் காணவில்லை. அல்லது வெறிக் காரனை விட்டிருக்க மாட்டார்கள். கிழவன் தானும் அந்தத் தர்க்கத்தில் ஈடுபட்டு சண்டை பிடிக்கத் தொடங்கியது.
பேச்சு சூடுபிடித்து அடிபிடி சண்டை வரும் போல் இருந்தது. வாயில் கிழவன் வெறியில் “இந்தக் கண்டறியாத கோயிலும் கடவுளும்' என்று ஏதோ சொல்லி கொண்டு எழும்ப கிழவனின் வேட்டி வழக்கம் போல்அவிழ்ந்து விழ அதைப்பாத்த சிலர் கிழவன், கடவுளை அவமானம் செய்த தாகக் கொதித்தெழுந்தனர்.

Page 141
272 தில்லேயாற்றங்கர்ை
வேளாளர் குடியினர் வேண்டுமென்று யாரோ கிழவனை. அனுப்பியதாகக் குற்றம் சாட்டிச் சண்டை பிடித்தனர்.
வேண்டாப் புருஷனுக்கு மனைவியின் கைபட்டாலும் குற்றம் கால்பட்டாலும் குற்றமாம். அதுபோலத்தான் அன்றைய சண்டையும் யாரில் எப்போது என்ன பழி போட லாம் என்றிருந்த **பெரியாட்கள்' கிழவனைக் காரணம் காட்டி கலகலக்கத் தொடங்கி விட்டனர்.
கைகளிலிருந்த உபயத் தட்டுக்களை ஆயுதமாகப் பாவித்து ஒருத்தரை ஒருத்தர் தாக்கிக் கொண்டனர். உபயத் தட்டுக்களிலிருந்த பழங்களும், மோதகம், கடலை பொங்கல் என்பன தரையில் சிதறி அதில் வழுக்கி விழுந்து பல்லை உடைத்துக் கொண்டவர்களும் கை கால்களில் காயப் பட்டவர்களும் அநேகம்.
காயப்பட்ட கோபத்தில் இன்னும் கூடக் கத்திப் பேசி ஞர்கள். வெளியில் இதுவரை சிரித்துப் பேசிக் கொண் டிருந்த இளைஞர்கள் முதல் விஷயம் தெரியாமல் தவித்தாலும் விஷயம் தெரிந்து கொண்டதும் வாக்குவாதப் பட்டனர்.
இவர்களின் கூக்குரலில் நித்திரை கலைந்த சொறி நாய்கள் கோலாகலமாய் ஊளையிட்டுக் குலைத்து ஊரையே எழுப்பி விட்டன. கோயிலில் தொடங்கிய சண்டை ஒழுங்கைகளில் பரவி விடியற்காலையில் கனகலிங்கம் மாமா கடையைப் போர்க்ளமாக்கியிருந்தது. கனகலிங்கம் மாமா கடைதிறக்கவில்லை.
வேலியில் கிளைவிட்டிருந்த பூவரசமரக் கிளைகள் முறி பட்டன. ரோட்டில் காலையில் போகும் மாட்டு வண்டிகள், ட்ரக்டர்கள், சைக்கிள்கள் எல்லாம் கொஞ்ச நேரம் நின்று சண்டையை ரசித்து விட்டுச் சென்றனர்.
தீர்த்தமாடப் போகும் சாமிக்கு வீட்டு வாசல்களில் வைத்திருந்த நிறை குடம் குத்து விளக்கைத் தூக்கிச் சண்டை

ராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம் 273
பிடிக்காமலிருக்கப் பெண்கள் நிறை குடம் குத்து விளக்குகளை வீட்டினுள் கொண்டு போயினர். இவர்களின் சண்டையால் கடவுள் தீர்த்தமாடப் போகிருரோ என்பது சந்தேகமா யிருந்தது.
இவர்களின் சண்டையில் அகப்பட்டுக் கொள்ளாமல் யாழ்ப்பாணத்து நாதஸ்வரக் கோஷ்டி ஊரைக் கடந்து போவதாக ஊமைக் குழல் வாசிப்பவர் (அவர் திருக்கோயி லாள்) சாமியாருக்குச் சொல்லச் சாமியார் பதறியடித்துக் கொண்டு போய் நாதஸ்வரக் கோஷ்டியைக் கூட்டிக் கொண்டு வந்தார்.
இவ்வளவு காலமும் கோயிலுக்கு அவர் பட்ட பாடும் அந்தக் கோயிலாலும் கடவுளாலும் ஊர் படும் பாடும் கெளரி யால் நம்ப முடியாதிருந்தது. உண்மையாகத்தான் கடவுள் இருக்கிருரா?
இப்படி ஏதும் கெளரி கேட்டால் அம்மா இன்னுெருதரம் கற்பூரச்சட்டி தூக்கச் சொல்லி விடுவாள்.
மதியத்தின் முன் சாமி தீர்த்தமாட வேண்டுமாம் சாமியார் அவதிப்பட்டு அதற்காவன செய்தார்.
அலங்காரம் செய்யப்பட்ட ட்ரக்டரில் பார்த்தோர் கண்ணைப் பறிக்கும் விதத்தில் பல வித அலங்காரமும் செய்யப்பட்டுக் கடவுள் தெருவில் இறங்கி வந்தார்.
நாதஸ்வரக் காரர்கள் ஊராரிலுள்ள கோபத்தை எல்லாம் நாதஸ்வரத்தில் காட்டி ஊதித் தள்ளிஞர்கள். மேளகாரன் தட்டித் தள்ளிஞன் என்ன ராகம் என்னமேளம் என்று கேட்க யார் இருக்கிறர்கள்.
கோயிலை வலம் வந்து கொண்டிருந்த கெளரியும் வசந்தாவும் சாரதாவும் நாகதம்பிரான் கோயிலை நெருங்கும் போது புஸ் புஸ் என்று சத்தம் கேட்பதைக் கவனித்துக் கோயிலின் பின் பக்கம் சென்ருர்கள்.
8.-18

Page 142
274 தில்லையாற்றங்கரை V
ஆச்சி எப்போதும் ஏழுதலை நாகத்தின் கதை சொல்லிக் கெளரிக்கு பயம், மற்றவர்கள் பக்கத்தில் நிற்பதால் மூவரும் எட்டிப் பார்த்தார்கள். வேறு யார் பாலிப் போடிக் கிழவன் தான். வேட்டி மட்டும் இல்லை கிழவனின் நீளத் தலையும் குலைந்து கோயிலில் வைத்த குங்குமப் பொட்டும் கலைந்து வாயால் நுரை தள்ள புஸ் புஸ் என்று மூச்செடுத்துக் கொண்டு படுத்திருந்தது. இந்தக் கிழவனின் திருவிளையாட லால் ஊர் இரண்டு பட்டுக் கலாட்டா நடப்பது இந்தக் இழவனுக்கு எப்போது தெரியப் போகிறது? சண்டை பிடிப்ட 'வர்கள் கடலுக்குத் தீர்த்த மாடப் போகும் சாமியைத் தூக்கிக் கடலில் எறிந்தாலும் என்ற பயத்தில் ஆச்சிகளும் மற்றக் கிழவிகளும் கடவுளைக் காப்பாற்ற" கடற்கரைக்குப் போனர்கள்.
என்ன நடக்கப் பேர்கிறதோ தெரியாது என்ற Luulub எல்லோர் மனத்திலும் சூழ்ந்தது. அப்போது தான் ரேடியோவில் அந்தச் செய்தியைச் சொன்னர்கள்.
2O
"இலங்கைப் பிரதமர் மதிப்புக்குரிய சொலமன்டயஸ் பண்டார நாயக்கா புத்த பிக்கு ஒருவரால் சுடப்பட்டு மரண மடைந்தார்.' செய்தியைக் கேட்ட கிராமம் அப்படியே ஸ்தம்பித்து விட்டது. தீர்த்த மாடப் போனவர்கள் ஊருக்கு வரும் வழியில் இந்த விஷயத்தைக் கேள்விப் பட்டிருக்க வேண்டும்.
அவசர அவசரமாகச் கடவுளைக் கொண்டு போய்க் கோயிலில் சேர்த்தார்கள். நாதஸ்வரக் காரர் எபிவோ மெளனமாகி விட்டார்கள்.
கனகலிங்கம் மாமா கடை வெறிச் சென்றிருந்தது. புத்த பிக்குவின் உடையில் மர்மமான வேறு யாரும் போய்ச் சுட்டுத் தள்ளியிருப்பார்களோ?

ராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம் 275
போன வருடம் (1958) வகுப்புக் கலவரத்தின் போது நூற்றுக்கணக்கான தமிழர்கள் இருந்தார்கள். அதற்குப் பழிவாங்க இப்போது (செப் 1959) யாரும் தமிழர்கள் புத்த பிக்குவின் உடையில் போய்க் கொலை செய்தார்களோ?
ஊரெல்லாம் பயமும் பீதியுமாயிருந்தது. சிங்களவர் இன்னெருதரம் தமிழரைக் கொலை செய்யப் போகிருர்கள் என்று ஆச்சி சோதிடம் சொல்லத் தொடங்கி விட்டாள். அன்றிரவு யாரும் நித்திரை கொள்ளவில்லை. இரவிரவாகக் கதைத்துக் கொண்டார்கள்.
அடுத்த நாள் தினப்பத்திரிகைகள் புத்தரகித்த தேரோ என்ற புத்த பிக்கு தன் அங்கியில் மறைத்து வைத்திருந்த கைத்துப்பாக்கியால் பிரதமரை மூன்று தரம் சுட்டதாக எழுதியிருந்தார்கள்.
பண்டார நாயக்கா பதவிக்கு வந்ததே சிங்கள பெளத்த வெறியர்களால் தான். பண்டாரநாயக்காசிங்கள பெளத்தர் களுக்குச் செய்வது போதாது என்று இந்த புத்த பிக்கு சுட்டாராம். இவனைச் சுடச் சொன்னது மகாநாம தேரோவாம் (தமிழரின் பாவம் சும்மா விடுமா?) தினமும் பத்திரிகைகள் சுடச் சுடச் செய்திகள் பிரசுரித்துக் கொண்
டிருந்தன.
தமிழர்களைப் பொறுத்த வரையில் தங்களுக்கு என்ன நடக்குமோ என்ற பயமிருந்தது. இலங்கை அரசியல் வானம் இருண்டு போயிருந்தது. ஊரில் வயல் வேலை தொடங்கியது.
அண்ணு இன்னும் மரகதம் வீட்டுக்குப் போகவில்லை, யாரோ மரகதத்துக்கும் அண்ணுவுக்கும் பிரிவினைக்குச் செய்திருப்பதாக ஆச்சி ஓயாமல் சொல்லிக் கொண்டிருந் தாள். சூனியத்தில் ஆச்சிக்கு நம்பிக்கை. யாரையும் பிடித்து ஒரு 'கழிப்பு" செய்ய வேண்டும் என்று ஆச்சி சொன்னுள்,

Page 143
$76 தில்லையாற்றங்கர்ை
சூனியம் செய்திருப்பதாகச் சந்தேகப்பட்டால் சூனியம் எந்தப் பேயின்" (!!) பெயரால் செய்யப்பட்டதோ அந்தப் பேய்க்குப் பூசை செய்து **கழிப்பு'க் கொடுப்பது கிராம் வழக்கம்.
கடற்கரை நாச்சியாருக்கு மடை வைத்துக் கழிப்புக் கொடுக்க வேண்டும். ஆச்சி எல்லோருக்கும் சொல்லிக் கொண்டிருந்தாள். ஆச்சியின் பேய் பிசாசு சூனியக் கதை களை வீட்டில் அண்ணுவோ பெரியப்பாவோ கேட்பதாக இல்லை.
மழை காலம் தொடங்கிவிட்டது.
தில்லையாறு பொங்கி ஓடைகள் நிறைந்து ஊரைத் தொட்டு விளையாடியது. சின்ன முகத்துவாரம் பெரிய முகத்துவாரம் பெருக்கெடுத்து கடலோடு கலந்து காதல் பேசின.
சாரதாவின் காதல்தான் ஏனேதானே என்று இழுபட்டுக் கொண்டிருந்தது. மாணிக்கவாசகத்தைக் கேட்டுப் பார்த்து ஆலையடி வேம்பு என்ற ஊரிலிருந்து ங்ாரோ வந்ததாகக் கேள்விப்பட்டுச் சாரதா மிகமிகத் துக்கப்பட்டாள்.
சாரதா ஏன் பாடசாலைக்கு வருகிருள் என்றிருக்கும் கெளரிக்கு திருவிளையாடற் புராணம் என்ற பாடப்புத்தகத் தின் உரைக்குள் மாணிக்கவாசகத்திள் படத்தை வைத் திருப்பாள். (டை கட்டி சூட்டும் கோட்டும் போட்ட படம்) அடிக்கடி எடுத்துப் பார்த்து கலங்குவாள். அண்ணு மரகதத் துடன் சமாதானப்பட்டால் ஒரு கரைச்சலும் இல்லாமல் போகும் என்று பெருமூச்சு விடுவாள். ஊர் இவளின் கவலையைக் கவனியாது. தேர்தல் திரு விழா வில் பங்கெடுத்தது.
பங்குனி மாதம் பொதுத் தேர்தல் நடப்பதாக இருந்தது. ஐக்கிய தேசியக் கட்சியும் (யு.என். l, United National

mögevauf unwaüywenflub 277
Party) இறந்து விட்ட பிரதமரின் மனைவியைத் தலைமையாகக் கொண்ட சிறிலங்கா சுதந்திரக் கட்சியும் தமிழ்ப் பகுதியில் தமிழரசுக் கட்சியும் போட்டியிட்டன. திருமதி பூரீமாவோ பண்டார நாயக்கா மேடைகளில் தன் கணவரின் சேவையைச் சொல்லிக் கண்ணிர் வடிப்பதாகப் பத்திரிகை கள் பிரசுரித்தன. வாக்குக் கேட்க முதலைக் கண்ணிர் வடிப்பது தேர்தல் தந்திரம்தானே. பூணூரீலங்கா சுதந்திரக் கட்சி ஆட்சிக்கு வந்தபடியால்தான் இலங்கையில் தமிழர், சிங்களர் பிரிவினையும் கலவரமும் ஏற்பட்டது. தாங்கள் பதவிக்கு வந்தால் இலங்கையில் தேசிய ஒற்றுமையும் தமிழரின் மொழிப் பிரச்னையும் தீரும் என்று யு. என். பி. கட்சி தமிழ்ப் பகுதிகளில் பிரச்சாரம் செய்த அதே சமயம் சிங்களப் பகுதிகளில் வேறு விதமாகப் பிரச்சாரம் செய்தது. சிறிமாவோ பதவிக்கு வந்தால் இடது சாரிகளுடன் சேர்ந்து பெளத்த சமயத்தை அழித்துவிடுவார் என்றும் தமிழ் மொழிக்குச் சம அந்தஸ்துக் கொடுத்துச் சிங்கள மொழியைத் தொலைத்துவிடுவார் என்றும் பிரச்சாரம் செய்தார்கள்.
தமிழரசுக் கட்சி தமிழ்ப் பகுதிகளில் சமஸ்டி எடுத்துத் தருவதாகப் பிரச்சாரம் செய்தது. தமிழரசுக் கட்சி நாட்டைக் கூறு போடப்போவதாக இடது சாரிக் கட்சிகள் கூக்குரலிட்டன. பங்குனித் தேர்தலின்போது யு. என். பி. க்கோ பூரீ மாவுக்கோ ந்ட்டையாளக் கூடிய அதிகப்படியான இடங்கள் கிடைக்கவில்லை. தமிழரசுக் கட்சியார் கேட்கும் நிபந்தனைக்கு உடன்பட்டால் தமிழரசுக் கட்சி யு.என்.பி.யுடன் சேரத் தயார் என்பதாக வதந்தி யடிபட்டது. ~്. V−
தனது கட்சிக்கு தமிழர் ஆதரவளித்திருந்தால் தமிழர் பிரச்னை எப்போதோ தீர்ந்திருக்கும் என்று அதன் தலைவர் ஜி. ஜி. பொன்னம்பலம் (இந்திய வம்சா வழியினரின் வாக்குரிமை பறிபோகக் காரணமாயிருந்தவர்) பேசுவதாக வும் பத்திரிகைகள் செய்திகளைப் பரப்பின. ஊரில் கனகலிங்கம் மாமா கடையில் உள்ள தென்னம் குந்திகளில்

Page 144
தில்லையாற்றங்கரை
குந்தியிருந்து பத்திரிகை வாசித்து விமர்சித்தார்கள் ஊரி மக்கள்
மரகதம் பிரசவ வேதனையால் துடித்துக் கொண்டிருந் தாள். ஒரு கிழமையாய் நோவுடன் கஷ்டப்பட்டாள். பாலிப் போடிக் கிழவன் தண்ணீர் ஒதிக் கொடுத்தது.
ஆச்சி ஊரெல்லாம் திரிந்து ஏதோ இலையும் குழையும் சேர்த்து அவித்து ஊரல்" போட்டுக் கொடுத்தாள். பெரியம்மா ஊரில் உள்ள கடவுள்கள் எல்லோருக்கும் விளக்கேர்த்தி வைத்தாள்.
*முதல் பிள்ளைக்காரி, பெற்ருலும் பெற்ருள் செத்தா, லும் செத்தாள் போய்ப் பாரடா தம்பி" அம்மா அண்ணு வைக் கெஞ்சிருள். அண்ணு ஒன்றும் பேசவில்லை.
அறுவடை பார்க்கப் போகும் சாட்டில் வயலில் தங்கி விட்டான். மரகதத்தைப் பார்க்க பேரியாரிகள்" பலர் (நாட்டு வைத்தியர்கள்) அடிக்கடி வந்தனர்.
கடைசியாக இங்கிலிஸ் வைத்தியர் கூட்டிக்கொண்டு வந்தார்கள். ஏனே இருந்தாற்போல் மழையும் பிடித்துக் கொண்டது. மரகதத்தின் பிரசவத்தைப் பார்க்க சொந்தக் காரக் கிழவிகள் சூழ்ந்து நின்ருர்கள். பெரியம்மாவும் கெளரியின் அம்மாவும் கெளரியும் சாரதாவும் அடிக்கடி ‘போய் வந்தனர். ஆச்சிக்கு அங்குதான் சீவியம்.
மூன்று நாள் பிரசவ வேதனையின் பின் மரகதத்துக்குக் குழந்தை பிறந்தது. ஒரு ஆண் குழந்தை இறந்து பிறந்திருந்தது.
இங்கிலிஸ் வைத்தியர் மரகதம் ஆஸ்பத்திரியில் சேர்க்கப் பட்டிருக்க வேண்டும் என்று மாமியைப் பேசிவிட்டுப் போனராம்.
குழந்தையைச் சுடுகாட்டுக்குக் கொண்டு போக ஆயத்த மாஞர்கள். தகப்பன் இல்லாமல் குழந்தையின் பிணத்தைப் புதைக்கக் கூடாது என்று ஊரார் சொன்னர்கள்.

rr6gehsauflur6bsû9vus conflub . 279
வயலிலிருந்து அப்போதுதான் அண்ணு வந்திருந்தான். மரகதம் வீட்டில் செத்த அழுகை ஒலி கேட்டு விஷயம் விளங்கியிருக்க வேண்டுமோ என்னவோ வாசலுக்கு வந்தனின் முகம் கலக்கமாயிருந்தது.
el 6rar செத்துப் பிறந்தது அண்ணு' என்று சொன்ள்ை கெளரி. அண்ணுவின் கண்கள் கலங்கின. அவன் அப்படிக் கண்கலங்கி கெளரி கண்டில்லை. அவள் அவனின் வேதனையை உணர்ந்தாள். அண்ணுவின் வேதனையைப் பகிர்ந்து கொள்ளத் துடித்தாள். 'எல்லாம் விதி அண்ணு" கிழவி மாதிரி எதோ முணுமுணுத்தாள். அவன் வெட்கம் விட்டுக் கேவிக் கேவியழுதான்.
ஏன் விதியில் பழி போட வேண்டும்?
இவனின் விருப்பத்துக்கு மாருகக் கல்யாணம் செய்து வைத்த பெரியப்பா, இவர்கள் வாழ்வில் விளையாடும் செல்வராசா, இந்தச் சூழ்நிலைகளுக்கெல்லாம் துணிந்து போராடத் தெரியாத அண்ணு எல்லாரிலும் தான் பழி போட வேண்டும்.
பிடிவாதம் பிடித்த மாமா, பெற்றேர்க்குப் பயந்த மரகதம் எல்லோரும்தான் இந்த நிலைக்குக் காரணம்.
*என்ன மனமடா உனக்கு. பெத்த பிள்ளையைக் கடப் பார்க்க முடியாதோ' ஊருக்கெல்லாம் வக்காளத்து வாங்கிக் கொண்டு பாலிப் போடிக் கிழவன் அண்ணுவைப் பேசியது. - •
அண்ணு மெளனமாகப் போய் பாயில் சுத்தியிருந்த குழந்தையின் பிணத்தை மார்போடணைத்துக் கொண்டு போகப் பின்னல் மாமா பெரியப்பா மற்றும் எல்லோரும் போஞர்கள்.
செத்த வீட்டில் **மாத்துப்" போட அண்ணு நிற்க
வில்லை. அன்று வந்திருந்த பத்மநாதனுடன் கல்முனைக்குப் போய் விட்டான்,

Page 145
280 தில்லையாற்றங்கரை
மாமா சோர்ந்து போய் உட்கார்ந்திருந்தார். பரிமளம் மாமி மரகதத்தைப் பார்ப்பதில் ஈடுபட்டாள்.
செத்த வீட்டு வேலை மதினிமார்களான கெளரியினதும் சாரதாவினதும் தலையில் விழுந்தது. செத்த வீட்டில் எட்டு நாளைக்கு அடுப்படி எரியக்கூடாது. சொந்தக்காரர் சாப்பாடு கொண்டு வந்தார்கள். செத்த வீட்டில் கழுவித் துடைத்து விளக்கு வைப்பதெல்லாம் மதினிமார் செய்தார்கள். கெளரிக்கு அதெல்லாம் பரவாயில்லை. ஆனல் செல்வராசா ஏதோ வீட்டுச் சொந்தக்காரன்போல் அந்த வீட்டில் வளைய வளைய வந்ததுதான் பிடிக்கவில்லை.
சாரதாவுக்குக் கெளரியைப் பகிடி பண்ணிக் கதைக்கும் மனநிலையில் இல்லை. மரகதத்துக்குக் குழந்தை பிறந்து வருஷப் பிறப்பும் வரும்போது அண்ணுவை எப்படியும் உறவாக்கி விடுவார்கள் என்று பார்த்திருந்திருக்கிருள் போலும். w
குழந்தை இறந்து பிறந்ததால் அப்படி ஒரு சந்தர்ப்பம் வருமென்று தெரியவில்லை. மரகதம் பேயடித்த மாதிரி யிருந்தாள்.
ஒருத்தருடனும் ஒரு கதையும் வைத்துக் கொள்ள வில்லை. பார்வை வெறித்திருந்தது. கெளரி மரகதத்தின் நிலைபற்றிப் பரமேஸ்வரி ரீச்சரிடம் சொன்னுள். பிள்ளை பெறும் நோவும் அதிர்ச்சியும் சில பெண்களின் மனநிலையைப் பேதலிக்கப் பண்ணும் என்ருள் பரமேஸ்வரி ரீச்சர்.
ஆச்சியோ என்ருல் "மரகதத்துக்கு யாரோ மருந்து செய்து விட்டார்கள்" என்று இடைவிடாது சொல்லிக் கொண்டிருந்தாள். ஆச்சிக்கு சாத்திரமும் குத்திரமும் பேயும் பிசாசுகளும் தண்ணீர் பட்ட பாடு.
எத்தனையோ பேய்க்கதை சொல்லியிருக்கிருள். ஆச்சி பின் கதைகளில் கொள்ளிவாய்ப் பேயின் கதை மிகவும்

Troglosuf ureosůlrosoflub 28
பயங்கரமானது. தான் சின்னப் பெண்ணுக இருக்கும்போது தனது தம்பியார் பாலிப்போடிக் கிழவனுடன் (அப்போது வாலிபன்) வயலுக்குப் போய்விட்டு வரும்போது தில்லை யாற்றங்கரையால் வரவேண்டும். தில்லையாற்றங்கரை சரியான சதுப்பு நிலம். கால் வைத்தால் புதையும். அந்த இடத்தைக் கடந்து வரும்போது இருட்டிக் கொண்டு வந்ததாம். ஏதோ "பொசுக் பொசுக்" என்று சத்தம் கேட்கத் திரும்பிப் பார்த்தால் தங்களைத் துரத்திக் கொண்டு கொள்ளிவாய்ப் பேய் வந்து கொண்டிருந்ததாம். கொள்ளி வாய்ப் பேய் பெரும்பாலும் ஆண்களைத் தேடித்தான் வருமாம். எனவே ஆச்சி தம்பியாரிடம் சொன்னளாம், **தம்பி! பாலி, கொள்ளிவ்ாய்ப் பேய் உனக்குத்தான் வருகுது. பிறந்த மேனியோட வந்தாத் துரத்ததாம். நான் உன்ர அக்தை (அக்கா) என்றும் பாராம வேட்டியைக் கழட்டித் தலையில கட்டுடா" என்று சொல்ல கிழவன் வேட்யைக் கழட்டித் தலையில் சுற்றிக் கொண்டு வீடு வந்து சேர்ந்ததாம். (அந்தப் பழக்கம்தான் இன்னும் கிழவனுக்கு இருக்கிறதோ).
இந்த கதையை ஏதோ கதையில் கெளரி பரமேஸ்வரி ரீச்சருக்குச் சொல்ல அவள் வாத்தியாருக்குச் சொல்லி யிருக்க வேண்டும். அவர் அது பற்றி வகுப்பில் வைத்துக் கேட்டார். கெளரி மட்டுமல்லாமல் மற்றவர்களும் தங்க ளுக்குத் தெரிந்த பேய்க் கதைகளைச் சொன்னர்கள். வாத்தியார் இவர்களுக்குப் பல விதத்திலும் பேய்க் கதைகள் பற்றி விளக்கினர். கொள்ளிவாய்ப் பேய் என்பது சதுப்பு நிலங்களில் உண்டாகும் மீதேன் என்ற வாயு என்று விளக்கப்படுத்திச் சொன்னர்.
அழிந்த கழிவுப் பொருட்களால் உண்டாக்கப்படும் மீதேன் என்ற வாயு ஆட்கள் நடந்த இடங்களிலிருந்து வெளிப்பட்டு எரியுமாம். ஆற்றங்கரைப் பக்கம் ஆண்கள் தான் அதிகம் போவதால் அதுதான் கொள்ளிவாய்ப் பேய்
ஆண்களைத் துரத்துகிறது என்ற மூட நம்பிக்கை வந்ததாம்,

Page 146
22 தில்ல்யாற்றங்கரை
இதை கெளரி ஆச்சிக்குச் சொல்ல ஆச்சிக்குச் சரியான கோபம். எரியுற காற்ருவது என்று கிண்டல் செய்தாள்.
ஆச்சியின் நச்சரிப்பு தாங்காமல் பரிமளம் மாமி மரகதத்துக்குக் 'கழிப்பு" செய்யச் சம்மதித்தாள்.
LD TLD IT துள்ளி விழுந்து சண்டை பிடித்தும் பெண்களின் பிடிவாதத்துக்கு விட்டுக் கொடுக்க வேண்டி வந்தது.
கடல் நாச்சியம்மாளுக்கு மடை வைத்துப் பெண்களைக் கொண்டு சாமியாட வைத்தார்கள். வண்டிகளில் மடைச் சாமான்களுடன் கடற்கரைக்குப் போஞர்கள். உடுக்கை ஒலியும் மந்திர உச்சாடனமும் ஒலிக்க மரகதத்தை வைத்துப் பூசை செய்தார்கள். மரகதம் ஒன்றும் செய்யாமல் ஒன்றும் சொல்லாமல் மெளனமாய்த் தலை குனிந்தபடி யிருந்தாள்.
ராசநாயகத்தார் ஒரு காலத்தில் பெரியப்பாவுக்குச் சொன்ன சபதத்தை ஊரில் ஒரு சிலர் ஞாபகப்படுத்தினர். **உன்னையும் உன்ர குடும்பத்தையும் என்ன செய்யுறன் பார்" என்று செருப்படி வாங்கிய ராசநாயகத்தார் செய்த சபதத்தைக் கெளரியும் மறக்கவில்லை. சூனியம் செய் தாரோ? என்ன பூசை செய்தும் மரகதத்தின் நிலையில் மாற்றமில்லை. ஒரு வருஷத்துக்கு முன் தங்களுடன் ஒடியாடி விளையாடியவள் இப்போது நடைப்பிணமாகி விட்ட கொடுமை பரிதாபமாகயிருந்தது.
அண்ணு ஒன்றும் வித்தியாசமாகி விடவில்லை. பங்குனி மாதம் நடந்த பாராளுமன்றத் தேர்தலில் செல்வராசா கோஷ்டி முழு மூச்சாக ஈடுபட்டார்கள். குடும்பத் தகராறு காரணமாக அண்ணு ஊர் வாலிபர்களுடன் அதிகம் சேர வில்லை. ஆனல் அண்ணுவைப் பற்றி அவர்கள் கிண்டலாகக் கதைப்பதாக அவர்களுடன் கூடித் திரிந்து சுவரொட்டி வேலை செய்யும் சங்கரன் வந்து சொல்வான். கேட்க ஆத்திரமாக வரும்,

ຜndgdbeນຕົ umbະບໍ່ຖືກDCທກຶມບໍ່ 283
அந்தப் பாராளுமன்றத் தேர்தலில் எந்தக் கட்சிக்கும் தேவையான அளவு பாராளுமன்ற ஆசனங்கள் கிடைக்காத படியால் இன்னெரு பாராளுமன்றத் தேர்தல் வரும் ஏதுக்கள் தோன்றின.
இன்னும் ஆறு மாதத்தில் எஸ். எஸ். சி. பரீட்சை வரப் போகிறது. யார் என்ன பாடும் படட்டும் என்ற மன நிலையில் கெளரி விழுந்து விழுந்து படித்தாள்.
ஆடி மாதம் நடந்த பொதுத் தேர்தலில் ஊர் மக்கள் ஆதரித்த தமிழரசுக் கட்சி வெற்றி பெறவில்லை. சுயேட்சை யாக யாரோ கேட்டு வெற்றி பெற்று அடுத்த மாதம் அரசாங்கக் கட்சியில் சேர்ந்து விட்டார். பெரியப்பா தான் சுயேட்சையை ஆதரித்தவர். அவருக்குச் செல்வராசா பேசினன். அந்த வாக்குவாதத்தில் அண்ணுவும் தலையிட்டு ஒரு நாள் பெரிய சண்டை. ரோட்டில் ஏற்பட்ட வாய்த்
தர்க்கத்தில் செல்வராசா அண்ணுவைக் கண்டபடி பேசினனம். *கட்டியவளுக்குப் புருஷனுக இருக்கத் தகுதி யில்ல, அதுக்குள்ள என்ன ஆம்பிளத்தனம்" என்று
கேட்டாணும். அண்ணுவும் செல்வராசாவும் அடிபிடிப் பட்டு அண்ணுவுக்குத் தலையில் காயம்.
பெரியம்மா குய்யோ முறையோ என்று அலறிக் கொண்டு போனள். அண்ணுவைக் காரில் ஏற்றிக் கல்முனை ஆஸ்பத்திரிக்குக்குக் கொண்டு போனர்கள்.
'ஏதோ ஏழரைச் சனியன் பிடிச்சிருக்கு" என்று ஆச்சி சனியனில் பழி போட்டுப் பேசினள். புரட்டாசி சனி விரத மிருக்க வேண்டுமென்று மரகதத்திற்குச் சொல்லிவிட்டு வந்தாள்.
கெளரியும் சாரதாவும் பெரியம்மாவும் கல்முனை ஆஸ்பத்திரிக்குப் போனபோது பத்மநாதனைக் கண்டார்கள். அண்ணு அருகில் நின்றிருந்தான். தலையில் கட்டுடன் படுத் திருந்த அண்ணுவைக் கண்டதும் பெரியம்மா ஆஸ்பத்திரி என்றும் பாராமல் வாய்விட்டு அழத் தொடங்கி விட்டாள்.

Page 147
284 fléidirDuriptíl siar
*என்ர பிள்ளையில உடம்பில தொட்டவரை கையில் நாகபாம்பு கொத்தட்டும்' என்று சாபம் போட்டாள்.
**ஏன் அம்மா சாபம் போடுறியள். நல்லதொரு பெட்டைக்குத் தாலி கட்டுற கை அவன்ர கை' அண்ணு கெளரியைக் குறும்பாகப் பார்த்துக் கொண்டு சொன்னன்
தனக்குக் கேட்காதது போல் பாவனை செய்து கொண்டு தலையைத் திருப்பியபோது பத்மநாதன் தன்னை உற்றுப் பார்ப்பதைப் பார்த்துத் தர்ம சங்கடப்பட்டாள் கெளரி. பஸ்சுக்கு வரும்போது பத்மநாதனும் கூட வந்தான். அம்மா விசும்பி விசும்பி அழுதபடி வந்தாள். *ஏன் தம்பி என்ர மகனுக்கு இந்த வினை எல்லாம்" பெரியம்மா பத்மநாதனைக் கேட்டாள். அவன் மறுமொழி சொல்லாமல் வந்தான்,
ஏன் சிலருக்கு வாழ்க்கையே துன்பமாகவும் ஏன் சிலருக்கு எல்லாம் தரும் இன்பப் பாசரையாகவுமிருக்கிறது? ஏன் சிலர் அண்ணு போலும் சிலர் செல்வராசா போலும் இருக்கிருர்கள்? அண்ணு செய்வது எல்லாம் பிழை யாகவும் செல்வராசா செய்யும் எல்லா அநியாயங்களும் சரியாகவும் ஏன் தெரிகிறது?
வழக்கம் போல் கெளரியின் மனத்தில் கேள்வியும் மறுமொழிகளும். வீடு வரும் வரை சாரதாவுடன் கதைக்க வில்லை. மனம் குழம்பிப் போயிருந்தது.
21
ஆடி மாதம் பொதுத் தேர்தலின் பின் பூரீ மாதோ இலங்கையின் முதலாவது பெண் பிரதமராக பதவி எற்றர். இடதுசாரிகளுடன் கூட்டணியமைத்தார்.
தமிழர்களின் மொழிப் பிரச்சினை தீரவில்லை. தமிழரசுக் கட்சிக்காரர் சமஷ்டி அரசியல் உரிமை கேட்டு அலுத்து

ராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம் 28s
விட்டார்கள். அரசாங்கம் எந்தவிதமான நடவடிக்கையும் எடுப்பதாயில்லை. மாருக சிங்களம் மட்டும் சட்டத்தை அமுல் நடத்த தீவிரமாகப் பாடுபட்டார்கள்.
பாராளுமன்றத்தில் கிடைக்காத உரிமையைச்சத்தியாக் கிரகம் செய்து பெற நினைத்த தமிழ்த் தலைவர்கள் தமிழ்ப் பகுதிகளில் கச்சேரிகளுக்கு முன் அமைதியான முறையில் சத்தியாக்கிரகமும் தொடங்கப் போவதாக அறிவித் தார்கள்.
கெளரியும் மற்றவர்களும் எஸ். எஸ். சி. சோதனை எடுத்து முடித்துவிட்டு பாடசாலைக்குப் போய்க் கொண் டிருந்தார்கள்.
1961 பங்குனி மாதம் நாலாம் தேதி தமிழ்ப் பகுதிகளி லுள்ள கச்சேரிகளில் அமைதியான முறையில் மறியல் தொடங்கியது. அப்பா பெரும் காந்தி பக்தர். கதர் வேட்டியை உடுத்துக்கொண்டு மட்டக்களப்புக்கும் போகத் தொடங்கி விட்டார். சத்தியம், தர்மம், நீதி என்பன அவர் தாரக மந்திரம். செல்வராசா தலைமையில் வாலிபர்கள் போகத் தொடங்கியிருந்தார்கள். பாடசாலை மாணவர் களும் போகத் தொடங்கியது மட்டுமல்லாது பாடசாலை களைப் பகிஷ்கரிக்கச் சொல்லி பாடசாலை சுவர்களில் எழுதி வைத்திருந்தார்கள்.
சின்னத் தம்பிக்கு இதைவிடச் சரியான சந்தர்ப்பம் எப்போது கிடைக்கும்? போதாக் குறைக்கு இப்போது கோயில் சுவர்களும் கிடைத்திருக்கிறது. சுவரொட்டிகள் எங்கும் பரந்து தெரிந்தது. Ał
ஊரில் கிழக்குக் கரையில் தில்லையாற்றங்கரை ஓடையை ஒட்டினற் போல் மூன்று பிரமாண்டம்மான மரங்களுண்டு.
இவர்களின் ஊரைச் சேர்ந்த முதுபெரும் கவிஞர் மொட்டை வேலாப் போடியார் கவிதை பாடிய பழைய மரங்களவை.

Page 148
286 தில்லையாற்றங்கர்ை
*முத்தர், பாண்டியர், மூவர் இருக்கின்ற மத்தியான மருத நிழல் தன்னைக் கத்தி கொண்டதன் கந்தற வெட்டி ஞன் சத்தி வேலவன் தலையற வெட்டுவாய்' என்ற பாடல் பிறந்த மரங்களின் நிழலில் ஊர்ப் பெரியவர்கள் வெயிற் காலத்தில் போயிருந்து கதைக்கவோ, கவிபாடவோ, காட் விளையாடவோ (இப்போதெல்லாம் கள்ளும் குடிக்கவோ) செய்வார்கள். அந்தப் பிரம்மாண்டமான மரங்கள் முழுதும் பெரிய பெரிய சுவரொட்டிகள் ஒட்டப்பட்டிருந்தன.
அறப்போர் தொடுப்போம்"
*சாகும் வரை சத்திய யுத்தம்'
**இந்த நாடு எங்கள் நாடு"
**வாழ்வும் இந்தநாட்டிலே மானத்தோடு வாழ்வோம்" என்றெல்லாம் பெரிய பெரிய கொட்டை எழுத்துக்களில் சுவரொட்டிகள் தெரிந்தன. பெரியவர்களுக்கு மரமெல்லாம் எழுத்தானது பிடிக்கவில்லை. அத்துடன் சின்னத்தம்பி அடுக்கு மொழியில் எழுதுவது, பேசுவது, சுவரொட்டிகள் எழுதுவது மட்டுமல்லாமல் உணர்ச்சியாகப் JחL-6ןLb பாட்டெழுதவும் செய்வான்.
கோயில் வளவில் உள்ள மேடையில் பெரிய கூட்டம் நடந்தது. ஊரில் உள்ள ஆண்கள் பெண்கள் குழந்தை குட்டிகள் உட்பட எல்லோரும் இந்த சத்திய யுத்தத்தில் குதிக்க வேண்டியதன் அவசியத்தைச் செல்வராசா கம்பீர மான குரலில் விளங்கப்படுத்தினன். பால் மறந்த மழலைகள் தொடங்கி முதியோர் வரை பங்கு பெற வேண்டுமாம்.
'கிழவர்களுக்குப் பாடையும் கட்டி, குழந்தைகளுக்குப் பால் குடுக்க மாட்டையும் கூட்டிக் கொண்டு போங்கோ' என்று நையாண்டியாகச் சொல்லிக் கொண்டிருந்தார் வாத்தியார் .

ராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம் 287
கெளரிக்கு வாத்தியாரில் கோபம்வந்தது. தமிழுணர்ச்சி இல்லாத வாத்தியார்! இந்த மனிசன் தமிழன் இல்லையோ தமிழ் உணர்ச்சி இல்லையோ என்று மனதில் நினைத்துக் கொண்டாள்.
சத்தியாக்கிரகத்தை ஆதரிக்க மாணவர் குழு ஒன்று உண்டானது. சின்னத்தம்பிதான் தலைவன் என்று சொல்லத் தேவையில்லை. *எந்த விடுதலைப் போரும் பெண்களின் பங்கின்றி வெற்றி பெருது' என்ற கோஷத்துடன் சின்னத் தம்பி; கெளரி, சாரதா, வசந்தாவை வரச் சொல்லிக் கேட்டான். 'ஓம்' அவை கச்சேரிக்கு முன்னுல கார்னிவல் வைக்கப் போகினம். நீங்க பெட்டைகள் கத்தரிக்காய்க் குழம்பும் கட்டுச் சோறும் கொண்டு போங்கோ" வாத்தி யாரின் வாய் சும்மா இருக்குமா? கிண்டல்தான். வசந்தா வின் தலைமையில் மாணவிகள் அணி அமைப்பது பற்றிக் கதைத்தார்கள். சாரதா விடுதலைப்போரின் வீராங்கனையாய் வசந்தாவுடன் சேர்ந்து கொண்டாள். ஏனென்று எல்லோ ருக்கும் தெரியும். மாணிக்கவாசகம் மட்டக்களப்புக் கச்சேரியில் தான் வேலை.
தமிழ் இனத்துடன் சேர்ந்து வீரத்துடன் போரடாத புல்லுருவிகளை அழிப்போம் என்றெல்லாம் செல்வராசா மேடையில் கர்ச்சிப்பது தமிழரசுக் கட்சிக்காரனை ஆதரிக் காது சுயேட்சைக்கு ஆதரவு செய்த பெரியப்பாவுக்குத்தான் என்பதும் எல்லோருக்கும் தெரியும்.
புல்லுருவியின் (பெரியப்பா) மகள் சத்தியாக் கிரகத்தில் குதித்ததைப் பலத்த ஆரவாரத்துடன் வரவேற்ருரர்கள் மாணவர்கள்.
இவர்களின் மாணவர் அணி தொடங்க முதலே அப்பா வுடன் சேர்ந்து போவதாகத்தான் கெளரி முடிவு கட்டி யிருந்தாள்.
ஆச்சிக்கு இந்த **அறப்போரைப்" பற்றி ஒரு மண்ணும் விளங்கவில்லை. சிங்களவன் அடிக்க வராமல் யார் என்ன

Page 149
288 தில்லையாற்றங்கள்ர்
பாட்டு பாடினலும் அவனுக்குச் சரி. அத்துடன் தன் பேத்திக்குப் படிப்பு முடிந்து விட்டது. இனி மாப்பிள்ளை தேட வேண்டிய அவசியமிருக்கிறது. "பேத்தியே (கெளரி) செல்வராசாவின் அணியில் சேர்வதானுல் ஆச்சியேன் மறுக்க வேண்டும். கரும்பு தின்னக் கூலியா?
தமிழ் மொழிக்குச் சம அந்தஸ்தும் தமிழருக்குச் சமஸ்டி ஆட்சியும் கிடைக்கிறதோ என்னவோ தன் பேத்தி கெளரிக்குச் செல்வராசா மாப்பிள்ளையாகக் கிடைத்தால் அதுவே ஆச்சியின் வெற்றி.
ஆச்சியை அறியாதவளில்லை கெளரி. தானும் சத்தியாக் கிரகத்திற்குப் போவேன் என்று கெளரி சொன்னபோது வேண்டா வெறுப்பாய் பிகு செய்து கொண்டாலும் கடைசியில் ஆச்சியும் சம்மதித்தாள். அத்தோடு சின்னத் தம்பியின் விடுதலை கோஷங்கள் ஆச்சியை வீறுகொண்டிடப் பண்ணியிருந்தன. குமரிப் பெட்டைகள் தனியாகப் போகக் கூடாது தானும் வருவேன் என்று ஆச்சி சொன்னபோது கெளரி தன் காதுகளையே நம்ப முடியாமல் திடுக்கிட்டாள். ஊரே இந்த விடுதலை வேட்கையில் சிலிர்த்து நின்றது. செல்வராசாவின் தகப்பன் வாடகைக்கு ஒரு பஸ் அமர்த்தி சத்தியாக்கிரகிகளை மட்டக்களப்புக்குப் போக உதவி செய்வ தாகச் சொன்னர். பெரியப்பா விட்டாரா சந்தர்ப்பத்தை. பெரியப்பாவின் சார்பில் இன்னெரு பஸ் அமர்த்தப் பட்டது. மாணவ-மாணவிகள் ஒரு பஸ்சிலும் (ஆச்சி தன் எதிர்ப்பைக் காட்டியும் பிரயோசனமில்லை) பெரியவர்களும் பிள்ளைகளும் ஒரு பஸ்சிலும் போக ஆயுத்தம் செய்தார்கள்.
அறுவடை நடந்து கொண்டிருந்தால் ஊரில் நல்ல காசு புழங்கிக் கொண்டிருந்தது. அத்துடன் அடுத்த மாதம் சித்திரை வருஷப் பிறப்புக்கு வாங்கவேண்டிய புது உடுப்புக் களை இப்போதே வாங்கத் தொடங்கியிருந்தார்கள்.

ராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம் 289
இப்போதெல்லாம் யாரும் சைக்கிளில் துணி கொண்டு வந்து ஊரில் விற்பதில்லை. அடுத்த நகரத்தில் எத்தனையோ ، 6gentifi) எப்போரியங்கள்?" திறக்கப்பட்டு விட்டன. *சத்தியாக் கிரகிகள்" போய் நல்ல துணிமணி வாங்கினர்.
பரிமளம் மாமி, மரகதம் எல்லோருக்கும் உடுப்புத் தைத்துக் கொடுத்தார்கள். மரகதம் இப்போது கிட்டத் தட்ட ஊமையாகி விட்டாள். யாருடனும் எந்த விதமான கதையுமில்லை. மாமா அண்ணுவில் சீவனும்ச வழக்குப் போடப் போவதாகச் சொல்லிக் கொண்டிருக்கிருர்.
ஊரில் அப்படி யாரும் எந்தப் புருஷனும் பெண்சாதியும் கோர்ட்டுக்குப் போயில்லை. விவாகரத்து என்ற சொல் கேள்விப்பட்டுமில்லை. இப்போது மாமா அண்ணுவைக் கோர்ட்டுக்கு இழுப்பதாகச் சொன்னபோது பெரியம்மா அவமானம் தாங்காமல் இரண்டொருநாள் சாப்பிடாம லிருந்தாள். பெரியப்பா வழக்கம்போல் சத்தம் போட்டார். *யாழ்ப்பாணத்திலிருந்து அப்புக்காத்து' கொண்டு வந்து மாமாவின் றங்கியை அடக்குவதாகக் கத்திக் கொண் டிருந்தார்.
மடடக் களப்பு **அப்புக்காத்துகளுக்கு" என்ன குறைச்சல் என்று கெளரிக்கு விளங்கவில்லை.
அந்தக் களேபரத்தால் அண்ணு மேலும் மேலும் எல்லோரிடத்திலிருந்தும் ஒதுங்கிப் போய்க் கொண்டிருந் தான். பத்மநாதன் வந்தால் ஒன்ருய்த் திரிவார்கள். இல்லை என்ருல் சாமியாருடன் கோயிலே தஞ்சமென்றிருக்
சத்தியாக்கிரகத்தை ஆதரிக்கிருன் என்ருலும் ஊர் இளைஞர்களுடன் தொடர்பில்லாதபடியால் பத்மநாத னுடன் சேர்ந்து திரிகிருன்.
அப்புக் காத்து-அட்வகேட்
19-سي- .$

Page 150
290 தில்லையாற்றங்கர்ை
ஆச்சி ஏதோ புதுப்பெண்போல் உடுத்துக்கொண்டாள். காதில் காதோலை போட்டுக் கழுத்தில் அட்டியல் மாட்டி, காலில் கெண்டைச் சங்கிலி போட்டுக் கலீர் கலீர் என்று கிழவி நடந்து வந்தது.
பாலிப் போடிக் கிழவன் பட்டுச் சால்வையும் போட்டுக் கொண்டு சத்தியாக்கிரகம் செய்ய பஸ்சில் ஏறியது. எல்லோரும் அதிகாலை மூன்று மணிக்கே எழுந்து குளித்து முழுகி வெளிக்கிட்டிருந்தார்கள். நிறையச் சமயல் செய்து பார்ஸல்கள் கட்டிக் கொண்டார்கள். மட்டக்களப்பு நாற்பது மைல் தூரம். கரடு முரடான ரோட்டாம்.
3-4 மணி நேரம் எடுக்கும் என்று பஸ் டிரைவர் காசிம் காக்கா சொன்னர். தமிழ் முஸ்லீம்கள் சத்தியாக்கிரகத்தில் கலந்து கொண்டார்களா? கெளரிக்குத் தெரியாது. அதிகாலை ஐந்து மணிக்கு இவர்களின் கிராமத்தின் மைய மான கனகலிங்கம் மாமா கடையடியிலிருந்து இரண்டு பஸ்கள் வெளிக்கிட்டன.
சின்னத்தம்பியின் கோஷத்துடன் வண்டி கிளம்பியது. மாணவர்களின் பஸ்சில் ஒரே பாட்டும் கும்மாளமும், *திராவிடப் பொன்னுடே கலைவாழும் தென்னுடே' என்று பாடத் தொடங்கி இன்னும் எத்தனையோ பாடல்கள் பாடினர்கள்.
**வாழ்க எங்கள் தமிழினம் வாழ்க எங்கள் தமிழ்மொழி வாழ்வோம் இந்த நாட்டிலே மானத்தோடு வாழுவோம். இலங்கை எங்கள் தாயகம் எவர்க்கும் சொந்தம் இந்நிலம், எதற்கும் நாங்கள் தாழ்ந்திடோம். இன்னல் கண்டு சாய்ந் திடோம்" என்று முழங்கினர்கள்.
சின்னத்தம்பி **இந்தநாடு' என்ருல் மாணவர் கூட்டம் **எங்கள் நாடு' என்று கோஷம் போட்டது.
காதோலை-பழம் காதணி

ராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம் 28i
**சாகும்வரை - சத்திய யுத்தம்" என்றெல்லாம் உணர்ச்சி வசப்பட்டுக் கத்தினர்கள். இருந்த இளம் சிருர் களுக்கு வசனங்கள் பிடபடவில்லை. சாகும்வரை சத்திய யுத்தம் என்ற வசனத்தைச் சாகும்வரை சத்தி எடுப்போம் என்று சொல்லிக் கோஷம் போட்டார்கள். அதுமட்டுமல்ல கல்முனையை அடைந்ததுடன் பஸ்சின் குலுக்கலில் சத்தியும் வாந்தியும் எடுக்கத் தொடங்கிவிட்டார்கள். கல்முனை நகரில் பஸ் நின்று ஒரு கடையில் தேனீர் குடித்தார்கள். கெளரி, சாரதா, வசந்தாவுக்குச் சத்தி எடுத்த இடத்தைத் துப்புரவாக்கும் வேலை! விடுதலைப் போரில் எல்லா வேலையும் செய்யத்தானே வேண்டும்! பஸ் புறப்பட்டு துறை நீலாவணை வந்ததும் பாலிப் போடிக் கிழவனின் பார்வை சாராயத் தவறணயில் படிவதைக் கண்டு எல்லோரும் சிரித்தார்கள். கிராமத்தில் பெரும்பாலானவர் மட்டக் களப்புக்கே போயில்லை. அதனுல் இப்போது பஸ் ஜன்னலால் கழுத்தை நீட்டி ஆவலுடன் ஒவ்வொரு ஊராய் ரசித்தனர். ரோட்டுக் கரைகளில் தேங்கி நிற்கும் குளங்கள் அதில் மலர்ந்து கிடக்கும் அல்லியும் ஆம்பலும் அழகா யிருந்தன. கல்லாறு, கழுவான்இக்குடி, ஆரப்பற்றை, காத்தான்குடி தாண்டி பஸ் போய்க்கொண்டிருந்தது. கெளரியின் மனதில் புனித மலர் ரீச்சரும் கல்லடி என்ற ஊரும் நிழலிட்டது. புனித மலர் ரீச்சர் எங்கேயிருப்பாள்? எப்படியிருப்பாள்? கல்யாணமாகி இருக்குமா? எங்களை எல்லாம் அடையாளம் காணுவாளா?
கல்யாணம்! எல்லோரும் எப்போதோ யாரையோ கல்யாணம் செய்துதான் தீரவேண்டுமா? மரகதத்தின் நினைவு வந்தது. இந்த பஸ்சில் அண்ணுவும் மரகதமும் இருந்திருந்தால் எவ்வளவு நல்லது. மரகதத்தின் வாழ்க்கை எப்படியாகிவிட்டது? கெளரிக்கு பஸ்சில் ஒலிக்கும் விடுதலை ஒலிகள் மறைந்து மரகதத்தின் மெளனமான விசும்பல் ஒலி கேட்பது போன்ற உணர்ச்சி.
என்ன பரிதாபம்! என்ன பரிதாபம்

Page 151
292 தில்லையாற்றங்கரை
இதற்கெல்லாம் ஒரு விதத்தில் காரணமான செல்வ ராசா பெரும் இலட்சியவிரன் மாதிரி எல்லார் மதிப்புக்குரிய வணுக இருப்பதைப் பார்க்க கெளரிக்கு அழுகையும் ஆத்திரமும்வந்தது.
ஆச்சியும் செல்வராசாவையே கவனித்துக் கொண்டிருக் கிருள் என்று கெளரிக்குத் தெரியும். செல்வராசா வேண்டு மென்ருே என்னவோ வசந்தாவுடன் சிரித்துச் சிரித்துப் பேசிக் கொண்டிருந்தான். கெளரி தன்னை அலட்சியம் செய்கிருள் என்பதைத் தெரியப்படுத்திப் பழிவாங்கவா இந்த நாடகம்? ஏன் இவருடன் சிரிக்க வேண்டும்? வசந்தா வுக்கு இப்போது “வளிசல்" சுந்தரனுடன் எந்தவிதப் பேச்சும் இல்லை என்று கெளரிக்குத் தெரியும். காரணம்??? தெரியாமலிருக்கட்டும் கெளரிக்கு ஏன் அந்தக் கவலை எல்லாம்!
சாரதா மட்டக்களப்பு எப்போது வரும் என்று துடித்துக் கொண்டிருந்தாள். கல்லடிப் பாலம் வந்தது. தூரத்தில் கச்சேரி தெரிந்தது. சாரதாவின் முகத்தில் வெட்கம் கலந்த மலர்ச்சி.
புளியந்தீவுச் சந்தியில் பஸ்களை நிறுத்தி விட்டு நடக்கத் தொடங்கினர்கள். இவர்களைப்போல் மட்டக்களப்பின் பல பாகங்களிலுமிருந்து ஆயிரமாயிரம் மக்கள் சாரி சாரியாகச் சத்தியாக்கிரகம் நடக்கும் இடத்தை நோக்கிப் போய்க் கொண்டிருந்தார்கள்.
பொலிஸ் விடுதிகள் இருந்த இடத்தையடைந்ததும் கிண்டலான விசில் சத்தங்களும் சிங்களக் கோஷங்களும் கேட்கத் தொடங்கின. மாணவர்கள் பல விதமான கோஷங் களும் போட்டபடி போய்க் கொண்டிருந்தனர்.
**வாழ்வோம் இந்த நாட்டிலே மானத்தோடு வாழ்வோம்' என்று மாணவிகள் பாடிய போது நான்கோ

Trogloauf ursosmůyuo sulfuh 29
ஐந்தோ சிங்களப் பொலிசார் (யூனிபோம் இல்லை) தங்கள் விடுதிகளின் விருந்தைகளில் கூட்டமாய் நின்று மாணவிகளைப் பார்த்து ஏதோ சிங்களத்தல் கத்திவிட்டுத் தங்கள் சரங்களை யுயர்த்திக் (லுங்கி) காட்டினர்கள்.
உரிமைப் போர் தொடுக்கும் உணர்ச்சியில் பாடிக் கொண்டு போன மாணவிகள் இந்த அவமானக் காட்சியை எதிர்பார்க்கவில்லை. ஆச்சி அலருத குறையாக **அங்கால பார்க்காதயுங்கோ பிள்ளயஸ்" என்று கத்தினுள்.
எங்கேயோ பின்னல் வந்து கொண்டிருந்த மாமா கோபத்தில் கத்திக்கொண்டு வந்தார். ஊர்வலம் ஒரு பத்து நிமிஷம் ஸ்தம்பித்தது. பொலிஸார் விடுதியின் விருந்தை களில் இப்போது உடுப்போடும் சில உத்தியோகத்தர்கள். சிங்களத்தில் கோஷம். எல்லார் முகத்திலும் ஊர்வலத்தைப் பார்த்து நையாண்டி என்ன நடக்கப் போகிறது?
செல்வராசா வந்தான். நாங்கள் அறப்போரில் நம்பிக்கையுள்ளவர்கள். இப்படியான சந்தர்ப்பங்களில் உணர்ச்சிவசப்படக்கூடாது என்று சொன்னன்.
ஆனல் அவனுடனிருந்த சங்கரன் போன்ற வாலிபர்கள் மிகவும் கோபமாக இருந்தார்கள். தங்கள் பெண்களை இந்தச் சிங்களவன்கள் அவமானம் செய்வதைச் சகிப்பதோ என்று கேட்டார்கள். எல்லோரும் சேர்ந்து பொலிஸ் விடுதிக்குக் கல் எறிந்து தாக்கி தங்கள் ஆட்சேபத்தைக் காட்ட வேண்டும் என்ருன் சங்கரன். மாமாவும் சரி என்ருர்,
செல்வராசாவுக்குக் கோபம் வந்தது.
நாங்கள் சமாதான வழியில் உரிமை கேட்கப் போராடு கிருேம் என்றன்.
"ஒம்; சிங்களவன் எங்கட பொம்புளய ரோட்டில போட்டுப் படுக்கக்க பகவத் கீதை படிக்கப் போறியளோ"

Page 152
94. Aldbbouurbpdaar
ஒரு கிராமத்தான் கோபத்தில் கேட்டான். சங்கரனும் சேர்ந்து சத்தம் போட்டான். சங்கரனுக்குப் பெரிய வாய்" பிஞ்சில பழுத்த முந்திரியம் கொட்டை என்று ஊரில் பெயர். செல்வராசாவுக்கும் சங்கரனுக்கும் வாய்த்தர்க்கம் கைத் தர்க்கம் என்று வளருவதை யாரும் விரும்பவில்லை.
ஊர்வலம் கச்சேரிக்கு முன்னுல் அமர்ந்திருந்த சத்தியாக்கிரகிகளுடன் போய்க் கலந்துகொண்டது.
இத்தனை ஆயிரம் ஆயிரமான மக்கள் கூட்டத்தைத் தன் வாழ்நாளிலே கண்டில்லை. அப்பா இந்தியாவில் இருந்த போது தான் கண்ட காந்தியின் உப்புச் சத்தியக்கிரகத்தைப் பற்றி சொல்லியிருக்கிருர்,
லட்சாதி லட்சம் இந்திய மக்களை விடுதலைப் போருக்குத் தயாராக்கிய அந்தச் சரித்திரப் பிரசித்தி பெற்ற சம்பவத் துடன் இந்தச் சத்தியாக்கிரகத்தை ஒப்பிட்டுக் கற்பனை செய்தார்.
கடலென திரண்டு வந்திருக்கும் மக்கள் கூட்டத்தில் தமிழ் மொழிப்பற்றும் விடுதலை வேட்கையும் மெய்சிலிர்க்க வைத்தது.
கொதிக்கும் வெயிலையும் பொருட்படுத்தாது மக்கள் குவிந்தபடி இரு ந் தார் கள். விடுதலைப் பாடல்கள் பாடினுர்கள்.
விடுதல்ை கோஷங்கள் போட்டார்கள். தலைவர்கள் இரண்டொரு தரம் தங்களின் படகு போன்ற பெரிய கார் களில் கறுப்புக் கண்ணுடி போட்டுக் கொண்டு வந்து கொதிக் கும் வெயிலிலிருந்து கோஷம் போடும் சத்தியாக்கிரகிகளைப் பாராட்டி விட்டுச் சென்ருர்கள்.
சில அன்பர்கள் இளநீர் கொண்டு வந்து அன்பளிப்புச் செய்தார்கள், ܗܝ ܫ

r6 glosuf ureosůruosofluth 29
கட்சித் தொண்டர்கள் துண்டுப் பிரசுரங்கள் நிறையத் தந்தார்கள். வாசித்து விட்டுத் தலையில் வெயிலுக்குப் போட்டுக் கொண்டார்கள். "எத்தனை காலம் இப்படிச் சத்தியாக்கிரகம் செய்தால் எங்கள் மொழிப்பிரச்சினை தீரும்' பூரணி ஏக்கத்துடன் கெளரியைக் கேட்டாள்.
நாற்பது கோடி இந்தியர் நாற்பதினுயிரம் ஆங்கிலேய ஆட் சி யா ள ர் களை எதிர்த்து எத்தனை வருஷம் போராடினர்கள்?
எண்பது லெட்சம் சிங்களவரிடம் மொழியுரிமை கேட்டு இருபது லெட்சம் தமிழர்கள் நடத்தும் போராட்டம் வெற்றி பெற எவ்வளவு நாள் எடுக்கும்? கெளரிக்குத் தெரியாது.
மத்தியான சாப்பாடு நடந்து கொண்டிருக்கும் போது பத்மநாதனும் மாணிக்கவாசகமும் வந்தார்கள். பத்ம நாதன் மட்டக்களப்பில் தர்ன் படிக்கிருன். சாரதா சாப்பிடுவதையும் மறந்து விட்டாள். எப்பிடிக் கார்னிவல்" என்று பத்மநாதன் கேட்டான். செல்வராசா வுக்குக் கேட்டிருக்க வேண்டும். பத்மநாதனை முறைத்துப் பார்த்தாள்.
சங்கரன் பத்மநாதனிடம் பொலிஸார் நடந்தவிதத் தைச் சொல்லிக் கொண்டிருந்தான். வார்த்தைகள் வெடித்துச் சிதறின.
தாய் தங்கச்சிகளோட பிறக்காத வேச மக்கள்'" என்று பொலிஸாரை வாய்க்கு வந்தபூர் திட்டினள்.
இவனின் பொல்லாத வசனங்கள் பட்டணத்துப் பெண் களுக்குப் பிடிக்கவில்லை. கிராமத்தார் அத்தனை பேரை, யும் முறைத்துப் பார்த்தார்கள். அவமானத்தால் குன்றிப் போஞர்கள் ஆச்சியும் மற்றவர்களும் காலையில் பொலிஸார் நடந்து கொண்ட விதத்தைப் பொலிஸ் மேலதிகாரியிடம் சொல்லி முறையிட்டிருப்பதாகச் செல்வராசா சொன்னுன்

Page 153
298 • geldbbouurgöpcias Nat
**அவங்களை நியாயம் வழங்கித்தான் போடுவான்கள் இருந்து பார்ப்போம்" சங்கரன் இன்னும் கோபமாறவில்லை.
கெளரிக்குச் சின்ன வயசிலிருந்தே அடிக்கடி தலையிடி வரும். இப்போது சத்தியாக்கிரக வொயில் மண்டையைப் பிளந்து கொண்டிருந்தது. எப்போது வீட்டுக்கு போவம் என்றிருந்தது.
ஆனல் கிராமத்தார் பலர் கோச்சு (ட்ரெயின்) வண்டி பார்க்கப் போவதாக முடிவு கட்டியிருந்தனர்.
மாணிக்கவாசகம் எல்லோர் முன்னிலையிலும் சாரதா வுடன் கதைத்துக் கொண்டதைப் பெரியப்பாவும் கண்டி ருக்க வேண்டும். சாரதாவைப் பார்த்து முறைத்தார். பத்மநாதன் ஊருக்கு அடிக்கடி வந்து சாரதா கெளரியுடன் கதைத்துப் பழகியதால் ஊரார் ஒன்றும் முறைத்துப் பாக்க வில்லை.
ஆணுல் செல்வராசாவின் முகத்தில் எள்ளும் கொள்ளும் வெடித்தது. எண்ணெய் போடாமல் பொரிக்கலாம்!
பின்னேரம் எல்லோரும் ரெயில்வே ஸ்டேசனுக்கு ஊர்வலமாகப் போனுர்கள்.
ட்ரெயின் எஞ்சின்கள் முன்னும் பின்னும் **சண்டிங்" செய்வதை ஆச்சி மூக்கின் மேல் விரல் வைத்து (மூக்குத்தி மேல் விரல் வைத்து) அதிசயத்துடன் பார்த்தாள். உலகத் தில் இப்படியும் நடக்குமா என்ற ஆச்சரியம் ஆச்சிக்கு.
*நாளைக்கும் வளூவியளோ கெளரி' குரல் கேட்டுத் திரும்பினுள். பத்மநாதன் நின்று கொண்டிருந்தான் தூரத்தில் நின்று செல்வராசா கவனித்துக் கொண்டிருந் தான்.
* சரியான தக்லயிடி அத்தோட வீட்ட போய்ச் சேர நடுச்சாமமாகும். நான் நினைக்கல்ல வருவம் எண்டு!" கெளரிகளைத்த குரலில் சொன்னுள்.

roghaf uraasülgosahub 297
**மச்சானுக்குத் தோழிகள் கூட்டம் குறைஞ்சு போகும்" பத்மநாதனின் குரலில் கிண்டல், வசந்தாவையும் செல்வ ராசாவையும் சேர்த்துத்தான் இப்படிச் சொல்கிருன் என்று தெரியும். எல்லோரும்தான் கதைக்கிறர்கள்.
*படிச்சாக்கள் போலக் கதைக்க பழகுங்கோ. சும்மா சினேகிதமாய்க் கதைச்சால்போலக் கதைகட்டக் கிடக்கோ' கெளரி பொறுமையின்றிச் சொன்னுள். பத்மநாதனுக்குப் பொல்லாதவாய், வாயில்லை என்ருல் நாய் கொண்டு போய் விடும். ‘சிவ பக்தனுக்குத் தேவதாசிகள்; சீர்திருத்தவாதி களுக்குச் சினேகிதிகள். பத்மநாதனின் குரலில் தான் எவ்வளவு நையாண்டி, கெளரிவாய் மூடி மெளனியாகிப் போனள். “ஏன் வார்த்தையாடிச் சண்டை பிடிக்க வேணும்?
பஸ் ஊருக்கு வரும் போது மாணிக்கவாசகமும் பத்மநாதனும் சேர்ந்து வந்தார்கள். கெளரி ஆச்சியுடன் போய் இருந்து விட்டாள். செல்வராசாவின் முகத்தில் நெருப்பு அதைத் தொட்டு விளையாடக் கெளரி தயாரா யில்லை. அப்பா மற்ற பஸ்ஸில் இருந்தார்.
கல்முனை வந்ததும் பத்மநாதன் இறங்கிக்கொண்டதும் கெளரிக்கு நிம்மதியாயிருந்தது. காலையில் மட்ட களப்புக்குப் போகும் போதிருந்த கோஷங்களும் பாட்டு களுமில்லை. எல்லாருக்கும் சரியான அசதி, குழந்தைகள் பெரும்பாலும் நித்திரை.
நித்திரையில்லாமல் சிரித்துப் பேசிக் கொண்டு வந்தார்கள் வசந்தாவும் சின்னத் தம்பியும் செல்வராசா வும் தான். விடுதலை வீரர் படை, களைக்கக் கூடாது.
அமுதவல்லி சினேகிதத்துடன் வந்து வாலையாட்டி வரவேற்றது.
**உங்கட விடுதலை ஆட்சியில் எங்களுக்கு ஏதும் வேலை கிடைக்குமா' அண்ணுவின் பகிடியிது. சங்கரன் நேரம் நடுச்சாமம் என்றும் பாராமல் பொலிஸ்காரனைப் பற்றி முழங்கிக் கொண்டிருந்தான்,

Page 154
98 Aldaður bplaner
அடுத்த நாள் போகும் போது கொச்சிக்காய்த் தூள் (மிளகாய்த் தூள்) கொண்டு போய் சேட்டை விடு பொலிஸ் காரருக்கு எறிவதாகச் சொல்லிக் கொண்டிருந்தான். சங்கரன் தீவிரவாதியாகப் போகிருன் என்று அண்ணு கிண்டல் செய்தான். V
அடுத்த நாள் கெளரியோ சாரதாவோ மட்டக் களப்புக்குப் போகவில்லை. சாரதாவைப் பெரியப்பா போக வேண்டாமென்று சொல்லி விட்டார். நேற்று மாணிக்கவாசகத்துடன் சாரதா கதைத்துப் பேசித் தன் மரியாதையை வாங்கி விட்டதாகச் சொல்லிப் பேசிக் கொண்டிருந்தார்.
அந்த நேரம் சத்தியாக்கிரகம் போன சங்கரன் திரும்பி வந்தான். சங்கரன் மிளகாய்த் தூள் வைத்திருந்தபடியால் இந்தத் தீவிரவாதம் சரியில்லை என்று செல்வராசா சங்கரனைக் காரை தீவில் இறக்கி விட்டானம். காந்திகளும் சந்திர போஸ்களும் போல் ஒரு நாடகம்.
சங்கரன் வீட்டுக்கு வரும் போது அம்மா சாரதாவை விசாரித்துக் கொண்டிருந்தாள். சங்கரனுக்குச் சிரிப்பாய்ப் போய் விட்டது. 'இவள் வருஷக் கணக்காகக் காதல் மடல் தீட்டினது தெரியாத அம்மா' என்று கேட்டாணும்.
அவனுக்குத் தெரியாத கதையா? வந்ததே வினை!
பெரியம்மா தலையிலும் முகத்திலும் (தன்னுடைய) அடித்துக் கொண்டு அழத்தொடங்கிப் பின்னர் சாரதாவின் தலையிலும் முகத்திலும் அடித்து அலறிக் கொண்டிருந்தாள். சேரியாகப் பெண்பிள்ளை பிள்ளை வளர்க்கவில்லை என்று பெரியப்பா பெரியம்மாவைப் பேச நீங்கள் வீட்டு விஷயம் பார்க்காமல் ஊர் மேய்வதாற்தான் இந்தக் குடும்பமே இப்படிப் போய் விட்டது என்று பெரியம்மா திட்ட
பெரிய கலாட்டாவே நடந்து கொண்டிருந்தது.

rraddAuf uradarůîrldsrufub 99
சாரதா கடிதம் எழுதிய விஷயம் வெளி வந்ததும் கெளரிக்குப் பயத்தில் வயிற்றைப் பிசைந்தது. தானும் தான் உதவிசெய்து சாரதா காதல் கடிதம் எழுதினுள் என்று தெரிந்தால் ஆச்சி என்ன செய்வாள்? அம்மியில் வைத்து அரைத்து முடித்து விடுவாள்.
*உருப்படியாக ஒரு கட்டுரை எழுதத் தெரியாதவள் என்னென்று காதல் கடிதம் எழுதினுள்" என்று அண்ணு வின் கேள்வி. உண்மையைச் சொல்லிப் பாவமன்னிப்புக் கேட்கக் கெளரியின் மனம் துடித்தது. ஆனல் தைரியமில்லை.
'பாத்தியளா? பாத்தியளா? நான் சொன்னனே படிக்க அனுப்ப வேணுமெண்டு, கேட்டியளா என்ட கதையைக் கேட்டியளா' ஆச்சியின் பல்லவி வேறு எதுகை மோனை
யுடன் !
**ஆருக்கு எழுதினுள். பறையனுக்கோ பள்ளனுக்கோ எழுதினுள். மச்சானுக்குத்தானே எழுதினுள்" அம்மாவின் தத்துவ பேச்சு.
d
சாரதாவைப் பார்க்க போகக் கெளரிக்குத் தைரிய மில்லை. தலையிடியைச் சாட்டுச் சொல்லிக் கொண்டுபடுத்து விட்டாள்.
அடுத்த நாள் பெரியம்மா முகம் கழுவா முகத்துடன் ஓடி வந்தாள். அண்ணுவை எழுப்பினள். அமுதவல்லி குலைத்து எல்லோரையும் எழுப்பியது. சாரதாவைக் காண வில்லையாம்! கெளரியின் தலையிடி பறந்தது! ஒரு சில மணித் தியாலத்தில் ஊருக்கே விஷயம் தெரிய வந்து விட்டது. மாணிக்கமும் சாரதாவும் ogolp- e "LrTria:Grrrbo " ஒவ்வொருத்தரும் ஒவ்வொரு கதை சொன்னர்கள். சத்தியாக்கிரகத்தில் போய்ச் சேர்ந்திருப்பார்கள் என்ருெரு கதை.
பெரியப்பா பெரியம்மாவைக் குற்றம் சாட்டி இன்னெரு பழி. எப்போது இப்படி ஒரு சந்தர்ப்பம் வரும் ஒரு இழி

Page 155
80ዕ தில்லயாற்றங்கரை
சொல் சொல்ல என்று காத்திருந்த சிலரின் வக்கணக் (கிண்டல்) கதைகள் வேறு.
மாணிக்கவாசகத்தின் தாய் வந்து தெருவில் நின்று இப்பிடியும் பெண்பிள்ளை வளர்ப்பதா என்று வசையும் வம்பும் சொல்லிச் சண்டை வேறு.
கெளரிக்குப் பயத்தில் வயிற்ருல் போகத் தொடங்கி விட்டது. என்ன நடந்திருக்கும்? எங்காவது போயிருப்பார் களா? அல்லது கதைகளில் வரும் தெய்வீகக் காதலர்கள் மாதிரித் தற்கொலை செய்து கொண்டார்களா? படுபாவி வாழ்க்கையில் காதல் என்பதைத் தவிர வேறென்றையும் தெரியாதா? காதல் கைகூடா விட்டால் உயிரை விடப் போவதாகச் சொன்ன சாரதாவை நினைக்க நெஞ்சில் ஏதோ ஊர்வது போல் இருந்தது. பெரியப்பா சாரதாவைக் கொலை செய்வதாகச் சொல்கிருர் எவ்வளவு சுலபமாகச் சொல் கிருர்? தெய்வீகக் காதலர்களின் பெயர்கள் சங்கிலித் கோவையாய்க் கெளரியின் மனதில் நீண்டது. அம்பிகாபதி -அமராவதி, அணுர்க்கலி-சலீம், லைலா-மஜ்னு: ரோமியோ-ஜூலியட், ஏன் படத்தில வந்த தேவதாஸ்பார்வதியும் தான் செத்துத் தொலைத்தார்கள். என்ன வென்று செத்திருப்பார்கள் சாரதாவும் ழாணிக்கமும்?
தூரத்தில் தில்லையாறு வற்றிப் போய் வெறும் ஒடை யாய் நீண்டு தெரிந்தது. ஆறு வற்றி விட்டது. சேற்றில் புதைந்து சாக யாருக்குத் தைரியம் வரும்?
தில்லையாற்றில் எந்தத் தெய்வீகக் காதலர்களும் உயிரை மாய்த்துக் கொண்டதாகக் கெளரிக்குத் தெரியாது"
அன்று பின்னேரம் வரைக்கும் ஒரு தவகல்களுமில்லை. பாலிப் போடி பொத்துவில் பக்கம் அனுப்பட்டார். அங்குதான் சிங்கள நேர்ஸைச் செய்தச் சாரதாவின் மாமா ஒருத்தர் இருக்கிருர்,

ராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம் åó
அம்பாரைக்குச் சங்கரன் போனன். கமலத்தின் தகப்பன் -சாரதாவின் இன்னெரு மாமா இருக்கிருர்,
மட்டக்களப்புக்குக் அண்ணு போனன். அன்றிரவு பெரியப்பா வீட்டிலோ கெளரி வீட்டிலோ யாரும் நித்திரை கொள்ளவில்லை.
*எடி கவுரி நீ இப்பிடி ஒருத்தரோடயும் ஒடிப்போகாத, விருப்பமானவனைச் சொல் செய்து வைக்கிறம்' ஆச்சியின் குரலில்தான் என்ன தாராளம் ஆனல் யாருடன் *ஓடுவது?" 源
பாலிப் போடிக் கிழவன் பொத்துவில் மாம்பழங்கள் பலாப்பழங்கள், எடுத்துக் கொண்டு வந்து சேர்ந்தது. சாரதா பற்றி ஒரு தகவலும் இல்லை.
மாணிக்கவாசகத்துக்குத் தெரிந்த நண்பர்களுக்கு ஒரு தகவலும் தெரியாது என்ற விஷயத்தைச் சுமந்து கொண்டு அண்ணுவும் பத்மநாதனும் வந்து சேர்ந்தார்கள்.
சங்கரன் மூன்று நாட்களாக வரவில்லை. சிங்களவர் களிடமிருந்து அடி வாங்குகிருனே என்ற பயமும் வீட்டில் வந்தது. சங்கரனைத் தேடிப்போகப் பெரியப்பா ஆயத்தமான போது சாரதாவும் மாணிக்கவாகமும் ஊருக்கு வந்து கொண்டிருப்பதாகத் தெரிந்தது.
22
பெரியப்பாவின் கேற்றடியில் கார் ஒன்று வந்து நின்றது. கெளரியின் இதயம் படபடவென்று அடித்துக் கொண்டது பயத்தில். சாமியாருடன் சேர்ந்து போய் பெரியம்மா அருகில் நின்ருள்.
வாசலிலுள்ள தோடை மரத்தடியில் தேங்காய் உரிக்க நடப்பட்டிருந்த அலவாங்கு தன் கூர் முனையைக் காட்டிக்

Page 156
302 தில்லையாற்றங்கரை
கொண்டு ஐயனரின் சூலம் போல் பயங்கரமாய்த் தெரிந்தது.
பெரியப்பா பப்பாளி மரத்திற்குக் கீழ்ப் போட்டிருந்த சாய்மானக் கதிரையில் உட்கார்ந்திருந்தார். எப்படிக் கொலை செய்யப் போகிருர்,
மனத்தின் போராட்டம் கைகளைப் பிசைவதிலும் பரபர வென்று நாலாபக்கத்திலும் தெரிந்தது.
எப்படிக் கொலை செய்யலாம் என்று பார்க்கிருரா? கெளரி பயத்துடன் பெரியப்பாவில் பார்வையைப் பதித் திருந்தாள்.
பெரியப்பா செய்யப் போகும் கொலையில் தனக்கும் பங்குண்டு என்று அவள் மனம் இடித்துரைத்தது.
கார்க் கதவு திறந்த சத்தத்தில் கெளரியுடன் சேர்ந்து வந்த அமுதவல்லி குலைத்தோடியது. அடுத்த நிமிடம் நாயின் சினேகிதமான அனுங்களைத் தொடர்ந்து சாரதா வந்து கொண்டிருந்தாள். படுபாவியின் முகத்தில்தான் எவ்வளவு வசீகரம் மாணிக்கம் அவள் பின்னல் வந்தான்.
இருவரைக் கண்டதும் பெரியம்மா *ஓ" வென்று ஒப்பாரி வைத்தாள். ஏன் பெரியம்மா ஒப்பாரி வைக்க வேண்டும்? ஒன்றும் விளங்காத அமுதவல்லி நாய் ஒரு தரம் குலைத்து முடித்தது. சாமியார் மெளனமாய்த் தாடியைத் தடவிக் கொண்டார். பெரியப்பா தலைநிமிர்ந்து மகளையும் மருமகளையும் பார்த்தார். கெளரி பெரியப்பாவையும் தூரத்தில் நட்டிருக்கும் அலவாங்கையும் பார்த்தாள். பயத்தில் நாக்கு ஒட்டிக் கொண்டது. சாரதா விறு விறு என்று நடந்து வந்து பெரியப்பாவின் காலில் விழுந்து **அப்பா உங்களுக்குச் சொல்லாமல் கல்யாணம் முடிச்சதை மன்னியுங்கோ" என்ருள். குரலில் அப்படி ஒரு மன்னிப்பும் இல்லை. பெரியம்மாவுக்குக் கேட்கவில்லை போலும். தலை நிமிர்ந்து பார்த்தாள், மாணிக்க வாசகம் பெரியப்பாவுக்கும்

ராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம் 303
பெரியம்மாவுக்கும் கேட்கும் விதத்தில் “தயவுசெய்து குறை சொல்லாதேயுங்கோ. நானும் சாரதாவும் அம்பாரையில் பதிவுக் கல்யாணம் செய்து போட்டம்." பெரியம்மா ஓவென்று அழுதுகொண்டு கிணற்றுப் பக்கம் ஒடிஞள்.
“இவ்வளவு தூரம் மானம் கெடுத்தவள் முகத்தில நான் முழிக்கப்போற இல்ல. நான் செத்துப் போனல் கரைச்ச லில்ல' பெரியம்மா கிணற்றுப் படியில் கால் வைக்க முதல் அண்ணு போய்ப் பிடித்து ‘என்ன விசர்க்கதையள் கதைக் கிறியள் அம்மா, நடந்தது நடந்து போச்சு' என்ருன்.
கெளரிக்குப் பெரியம்மாவின் தற்கொலை முயற்சி நாடகம் ஒரு இழவும் விளங்கவில்லை. மாணிக்கத்தோடு சாரதா ஒடிப்போனது ஊரறிந்த விஷயம். அத்தோடு அவள் சட்டப்படி கல்யாணமும் பண்ணிக் கொண்டு வந்திருக்கிருள். அதுவும் ஊரறி விஷயம். (ஊர் முழுக்க ஒழுங்கை வேலி ஒட்டையில் கண்களைப் பதித்துப் புதினம் பார்க்கிறது!)
இப்போதென்ன மானம் போன கதை?
**மகளே யார் தலையில் என்ன எழுதியிருக்கிறதோ அப்படித்தான் முடியும்' சாமியாரின் ஆறுதல் வார்த்தை வேறு. யாரும் செத்தா தொலைத்து விட்டார்கள்?
* உனக்கேன் இந்தத் தலைவிதி? முதற் பெண் பிள்ளைக்கு ஊர் உலகமும் புகழக் கல்யாணம் பண்ணி வைக்க எத்தினை யோசனைகள் வைத்திருந்தன். இப்பிடிச் செய்து போட்டியே' பெரியப்பா விம்மினர். பார்க்கப் பரிதாப மாக விருந்தது.
இப்போது பெரியப்பா வீட்டில் நிறைய ஆட்கள் குழுமி விட்டனர். அப்பா, பாலிப் போடி, ஆச்சி, அம்மா என் போரைவிட இன்னும் சில ஊர்ப் பெரிய மனிதர்கள். மாணிக்கம் தன் வீட்டுக்குப் போனுன்

Page 157
304 தில்லையாற்றங்கர்ை
அடுத்த ஒன்றிரண்டு நாட்களில் மிக மிக ஆடம்பர மாகக் கல்யாணச் சடங்கு நடந்தது,
கல்யாணமாகி என்னென்ன நடக்க வேண்டுமோ என்ற சம்பிரதாய நியதியை உதறிவிட்டு ஒடிப்போய்த் திரும்பி வந்த சாரதா அக்கினிக்கு முன்னல் அமர்ந்திருக்க ஒமம் வளர்த்து ஊரெல்லாம் சாட்சி நிற்க. குருக்கள் வேதமோதி சகல சடங்குகளும் செய்து தாலி கட்டப் பட்டது. பெரியப்பா மணப்பெண்ணைத் தாரை வார்த்தும் கொடுத்தார்.
சாஸ்திரங்களும் சம்பிரதாயங்களும் கருத்தற்றவையா? வெறும் சாட்டுக்கும் போக்குக்கும் நடை பெறும் போலிச் சடங்கா? சாரதாவும் மாணிக்கமும் தான் எப்போதோ தம்பதிகளாகி விட்டார்களோ? கெளரி மணவறையில் உட்கார்ந்திருக்கும் சாரதாவைப் பார்த்து யோசித்தாள். சாரதாவின் கல்யாணத்துக்கு மாமா, மாமியோ ராச நாயகம் குடும்பத்தாரோ யாரும் வரவில்லை.
ஊரில் சத்தியாக்கிரக உற்சாகம் பரவிக் கிடந்தது. வெளி நாட்டுக்குப் போயிருந்த பூரீமாவோ பண்டார நாயக்கா உள்நாட்டில் நடக்கும் அரசியல் நிலைமையை உத்தேசித்து போன விடயங்களை எல்லாம் ரத்து செய்து விட்டுத் திரும்பியிருப்பதாகப் பத்திரிகைகள் பிரசுரித் திருந்தன. தமிழரசுக் கட்சிக்காரர் அரசாங்க முத்திரைக்குப் பதில் தங்கள் முத்திரையைவிற்கத் தொடங்கியிருந்தார்கள்.
தெருவில் ஒலி பெருக்கி கட்டிய காரில் சின்னத்தம்பி. சீறிமா வந்தாள் சீறிமா வந்தாள் சிறகு வண்டியிலே
சிணுங்குகின்றர் சிணுங்குகின்றர் சிங்களக் கண்டியிலே சிங்களம் மட்டும் அம்மா வந்தாள் சிறகு வண்டியிலே
சிறைக்குக் செல்லத் தமிழர் வந்தார் சிரித்த வண்டியிலே"
என்று பாடிக் கொண்டிருந்தான்.

ராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம் ་305
வசந்தா வந்து கெளரியை வரச் சொல்லிக் கேட்டாள். கெளரியும் பூரணியும் வசந்தாவுடன் போவதாக முடிவு கட்டினர்.
வசந்தாவைக் கண்டதும் ஆச்சிக்குக் கோபம் வந்தது. செல்வராசாவுடன் சிரித்துச் சிரித்து மயக்கிக் கதைப்பதாக வசத்தாவைக் குற்றம் சாட்டினுள்.
வசந்தாவின் காதில் கேட்டால் என்ன நடக்குமோ தெரியாது என்ற பயம் கெளரிக்கு ஆணுலும் ஆச்சியின் எதிர்ப்பையும் மீறி அப்பாவிடம் அனுமதி கேட்டாள்.
அப்பா மறுக்கவில்லை. சத்தியாக்கிரகம் அவளுக்கு ஒரு சத்தியாக்கிரகம்தான். வசந்தா பற்றியோ செல்வராசா பற்றியோ பெரிதாக எடுக்கவில்லை.
தமிழரின் அறப்போர் வெற்றி பெற அனைவரும் பாடு படவேண்டும் என்று சொன்னர்.
வாத்தியார் வந்திருந்தார் “முத்திரை விற்று மொழிப் பிரச்சினை தீர்ந்து போகுமோ' என்று குத்தலாகக் கேட்டார் வாத்தியார். 'அரசாங்கம் எங்கெளுக்கெதிராக நடப்பதை நாங்கள் ஏற்றுக் கொள்ளவில்லை என்கிரத்த னப்படிக் காட்டுகிற மாஸ்டர்' அப்பா கேட்டார். *வெறும் உணர்ச்சி வசப்பட்ட பேச்சுக்களாலும் ஒலிப் பரப்பிகளில் பாடுவதாலும் மொழிப் பிரச்சினையோ தமிழர்ப்பிரச்சினையோ தீராது. ” வாத்தியார் சொன்ஞர்.
அண்ணுவுக்குக் கோபம் வந்திருக்கவேண்டும். 'உங்க. னின்ர தங்க மூளைத் தலைவர்கள் (...) அம்மாவின்ர முந்தானையைப் பிடிக்கப் போயிட்டினம் இனி யார் தலமையில போராடப் போறியள்."
அண்ணு அதிகம் கதைப்பவனில்லை, சில சந்தர்ப்பங் களில் சுடச்சுட ஏதாவது கொடுப்பான்.
தி.-20

Page 158
306 தில்லையாற்றங்கரை
பாலிப் போடிக் கிழவன் குழந்தைகளுக்கு மகாபாரதக் கதை சொல்லிக் கொண்டிருந்தது. 'துரியோதனன் நாட்டில் பாதி கேட்ட பாண்டவர்களுக்குச் சொல்லியனுப்புகிருன் என்னவென்ருல், **கண்ணனே நீ வெறுத்திலன் இருந்த மன்னவர் திகைத்திலன் பல நினைத்திலன் ஈ இருக்குமிடம் எனினும் இப்புவியில் யான் அவர்க்கரசினிக் கொடேன்" குழந்தைகள் கிழவனின் கதையைச் சுவாரஸ்யமாகக் கேட்டுக் கொண்டிருந்தார்கள்.
ஆச்சி மாமரத்துக்குக் கீழிருந்து கிடுகு இழைத்துக் கொண்டிருந்தாள். அம்மா வழக்கம் போல் தம்பிகளுடன் வேலை.
கெளரிக்கு வாத்தியாரின் அரசியல் பேச்சு சுவாரசியமா யிருந்தது. அண்ணுவும் அப்பாவும் வாத்தியாரும் தமிழரசுக் கட்சியின் சத்தியாக்கிரகம் பற்றி விவாதித்துக் கொண் டிருந்தார்கள்.
*முத்திரை விற்பது சட்ட விரோதம். அதைத் தடுத்து அரசாங்கம் இவர்களைக் கைது செய்யப் போகுது; அதன்பின் என்ன செய்வீர்கள். சிறைக்குப் போவது. ஆயிரக் கணக்கான தமிழர்கள் சிறைக்குப் பேர்னல் உலகத்துக்குத் தெரியும் இலங்கையில் தமிழர்களின் பிரச்சினை எவ்வளவு பெரிசென்று" அப்பாவின் வாதம்.
அரசாங்கம் அவ்வளவு அப்பாவிகள் என்கிற நினைவோ உங்களுக்கு? இருந்து பாருங்கள் என்ன நடக்கப் போகிற :தென்று' வாத்தியார் சொன்னர்.
வாத்தியார் வெறும் சண்டை பிடித்துத் தர்க்கம் பண்ண இப்படிச் சொல்லவில்லை; உண்மையாகத்தான் இப்படிச் சொன்னர்.
:தமிழுக்குச் சம அந்தஸ்து எடுத்துத் தருகிருேம் என்று மக்களிடம் வாக்குப் பெற்ற தமிழ்த் தலைவர்கள் பாராளு

ராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம் 307
மன்றத்தில் தாங்கள் ஒன்றும் கேட்டுப் பெற முடியாது என்ற தோல்வியை மறைக்கத்தான் இப்படி ஒரு கார்னிவல் நடத்துகினம். மக்கள் எதிர்பார்க்கிறபடி நடக்கிற தலைவர்கள் இலங்கையில் இல்ல. தாங்கள் நினைக்கிறபடி மக்களை நடத்துற தலைவர்கள் தான் நிறைய. இந்த நிலைமை மாறி விடுதலை இயக்கம் மக்கள் இயக்கமாக மாறும் வரை தமிழ் மொழிக்கு மட்டுமல்ல தமிழருக்கே எந்த உரிமையும் கிடைக்காது.”*
வாத்தியாரும் தமிழன். தமிழர் பிரச்சினையில் அக்கறை யில்லாதவரில்லை என்பது அவரின் பேச்சுக்களிலிருந்து கெளரிக்குத் தெரியும்.
அடுத்தடுத்து இரண்டு மூன்று தரம் சத்தியாக்கிரகத் துக்குப் போனர்கள். அத்தோடு மாணவர் இயக்கம் ஊரெல்லாம் நிதி திரட்டினர்கள். நிறையச் சேர்ந்தது, நிதிக்கு என்ன நடந்தது என்று யாருக்கும் தெரியாது. இதே நேரம் வீட்டில் மாமாவும் அண்ணுவும் வேறு வித போராட்டம்.
மரகதத்துக்கு ஜீவனம்சம் கேட்டுத் தாக்கல் செய் திருந்த வழக்கின் நாள் அறிவிக்கப்பட்டது.
பெரியம்மா இடிவிழுந்தது போல் சோர்ந்து விட்டாள். மாமா சும்மா கதைத்துக் கொண்டு திரிவதாக நினைத் திருந்தாள் போலும்.
அண்ணு மரகதத்தைப் பிரிந்து ஒருவருடமும் ஒன்பது மாதங்களுமாகி விட்டன.
இனி அந்தக் கல்யாணம் சரிவரும் என்ற நம்பிக்கை யாருக்குமில்லை என்பது இப்போது கொஞ்சம் கொஞ்சம் தெரியத் தொடங்கியது. ஊரெல்லாம் இதே கதையாக இருந்தது. M
அண்ணுவின் முகத்தில் ஒரு உணர்ச்சியுமில்லை. ஒருத் தருடனும் ஒரு கதையுமில்லை. பாலிப்போடிக் கிழவன்

Page 159
308 தில்லையாற்றங்கரை
அண்ணுவைக் கண்டதும் பாதி பகிடியும் பாதியுண்மையுர முடன், “இட்டமுடன் என் தலையில் இன்னபடி என்றெழுதி விட்ட சிவனும் செத்து விட்டானே...' என்று தொடங் கியது. அண்ணுவுக்கு அந்த வரிகள் நெஞ்சில் தைத்திருக்க வேண்டும். முகத்தைத் தூக்கிக் கிழவனைப் பார்த்தான்.
கிழவன் சும்மா அலட்டுது அண்ணு" கெளரி பாலிப் போடிக்குப் பரிந்து சொன்னள்,
என்ன செய்ய. எல்லாருக்கும் தான் என்ர கதை, புராணமாய்ப் போச்சு. அரசியல் வாதிகளுக்குச் சோச லிஸம். ஆடிக்களைத்தவனுக்கு பகவத் கீதை பாலிப்போடிக் இழவனும் தான் பாவலனுகி விட்டான்' என்று வரண்ட குரலில் சொன்னன். அவனைப் பார்க்கப் பரிதாபமாக இருந்தது. கெளரியைப் பார்த்து அண்ணு சொன்னன்.
* உனக்கு விருப்பமில்லாமல் கல்யாணம் செய்து போடத" அண்ணு ஒரு நாளும் இப்படிக் கதைதத்தில்லை என்பதால் கெளரி ஒரு கணம் தர்ம சங்கடப்பட்டாள்.
நான் செய்ய மாட்டன்" கெளரிக்கு நம்பமுடியாம லிருந்தது அவளின் குரலிலிருந்த உறுதி.
செல்வராசாவுக்கு உன்னில விருப்பமாம்" அண்ணுர கொஞ்சம் குறும்புத்தனமாகச் சொன்னது G3Lumir Gäv உணர்ந்தாள் கெளரி, ஆனலும் அவனின் முகத்தைபார்ர்கத், தைரியமில்லை.
நல்ல நிலவான பொழுது. அண்ணு வாசலில் பாயில் உட்கார்ந்திருக்க அவள் கைக் குழந்தையான தம்பிக்குச் சோறு கொடுத்துக் கொண்டிருந்தாள்.
குழந்தைகள் இரைச்சலுடன் ரேடியோவில் கிராம சேவை நிகழ்ச்சியின் இரைச்சல் வேறு.
அண்ணு செல்வராசாவைப் பற்றிச் சொன்ன விஷயம் சங்கரன் மூலம் அடிப்பட்டிருக்கவேண்டும். சங்கரனுக்குத்

ராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம் 309
தான் யார் என்ன கதைக்கிருர்கள்; என்ன நினைக்கிருர்கள் என்று தெரியுமே!
**யாரும் யாரிலயும் விருப்பமாயிருந்தால் எனக் கென்ன? கெளரி எடுத்தெறிந்து பேசினள்.
அண்ணுவுடன் இப்படி எல்லாம் இது வரை பேசிப் பழக்கமில்லை என்ற சுவடே இல்லாமல் மனம் திறந்து சொன்னுள்
*ஊரோட சீவிக்கிறதாயிருந்தால் பேசிறவனக் கட்டிக் கொண்டு நாலோ ஐந்தோ பெத்துப் போட்டு நல்ல பெண்பிள்ளையாய் இரு. உத்தியோகம் பார்க்கப் போனல் கமலம் மாதிரி யாரோ அந்நியனைப் பார்' கமலத்தின் நினைவு இன்னும் விடவில்லையா?
அண்ணுவின் குரலில் கரகரப்பு. கமலத்தைக் கண்டே வருஷக் கணக்காகி விட்டன. யாழ்ப்பாணத்திலிருந்து திருக் கோயிலுக்கு வந்தாலும் இவர்கள் ஊருக்குக் கமலம் வருவதேயில்லை. இவர்கள் திருக்கோயில் திருவிழாவுக்குப் போய் இரண்டு வருஷமிருக்கும். கெளரி கமலத்துக்குக் கடிதம் எழுதாமல் விட்டும் எத்தனையோ காலமாகிவிட்டது. கமலம் யாரையோ பார்க்கிருளாம்! கமலம் பழைய கதைகளை நினைத்துக் கொண்டிருக்க வேண்டுமா? ஆனல் அண்ணு மட்டும் கமலத்தைப் பற்றி யோசித்துக் கொண் டிருக்கிருன்! கமலம் அண்ணுபோல் இருக்க வேண்டும் என்று என்ன நியதி? “ஏன் தம்பி ஊர் சிரிக்க உலகம் சிரிக்க இந்த நாடகம். கட்டின பெஞ்சாதியை இப்பிடி நடத்துறதோ' ஆச்சியும் வந்து பாயில் இருந்தாள். **ஆச்சி மரகதத்த நான் வெறுக்கல்ல. இண்டைக் கெண்டாலும் மரகதம் என்னிட்ட வந்தால் நான் சமாதானமாகத் தயார்' அண்ணு சொன் ஞன். மரகதம் கடைசி வரைக்கும் வர மாட்டாள், கெளரிக்கு அது தெரியும்.
அடுத்த நாள் அதிகாலையில் சத்தியாக்கிரகத்துக்குப் போக ஆயுத்தம் செய்து கொண்டிருக்கும்போது வானுெலி

Page 160
310 தில்லையாற்றங்கரை
செய்தியில் சத்தியாக்கிரகம் சட்ட விரோதமாக்கப்பட்டு விட்டதாகவும் தலைவர்கள் கைது செய்யப்பட்டிருப்பதாக வும் சொல்லப்பட்டது.
இனி என்ன நடக்கும்? சத்தியாக்கிரகம் நடத்தியதன் பலன் என்ன? யார் யாரைக் கேட்டது?
சத்தியாக்கிரகிகளைப் பொலிஸாரும் ராணுவத்தினரும் மிருகத்தனமாகத் தாக்கியதாக வதந்திகள் அடிப்பட்டன* 'அடிவாங்கிய தமிழர் திருப்பி அடிச்சினமோ?" சங்கரன் சத்தியாக்கிரகத்திலிருந்து வந்த ஒருத்தரை-அதிகம் அடிபடாமல் தப்பிப் பிழைத்தவனனும் கேட்டான்.
**என்னென்று ஆமிக்காரனேட நிண்டு சண்டை பிடிக்கிற" கிழவன் அலுத்துக் கொண்டது.
*அடிக்கிறவனைத் திருப்பியடிக்காமல் அடுத்த கன்னத் தையும் திருப்பிக் கொடுக்க நீங்கள் எல்லாம் என்ன யேசுநாதனுக்குத் தம்பியாய் பிறந்து தொலைந்தீர்களோ" சங்கரன் கோபத்தில் சீறினன். சின்னத்தம்பி நல்ல காயத்துடன் வந்து சேர்ந்திருந்தான்.
உணர்ச்சிக் கவிஞனின் உதடுகள் வெடித்துப் பயங்கர மாய் வீங்கியிருந்தது. செல்வராசா அன்றிரவு ஊரில் நின்றதால் அடி வாங்காமல் தப்பினன்.
சத்தியாக்கிரகத்தின் பலன் என்ன?
இதே கேள்வியைக் கெளரியிடம் கேட்டார் வாத்தியார். *தமிழ் மக்களின்ற உரிமைக்குப் போராட நாங்க தயார் எண்டு காட்டியிருக்கிறம்" " கெளரி தயக்கத்துடன் சொன்னுள்.
*தமிழ் மக்கள் தங்கள் ஆதரவை வாக்குமூலம் காட்டினது போதாதா?" வாத்தியார் கேட்டார். பரமேஸ்வரி ரீச்சருக்குப் பெறுமாதம். பெரிய வயிற்றைத்

ராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம் 31
தள்ளிக் கொண்டு நின்ருள். றெஸிங்கவுனைத் தாண்டி வயிறு வெளிக்கிட்டுத் தெரிந்தது. ، م، "هب
**இவையின்ர அறப்போர் என்னவாய்ப் போச்சாம்" பரமேஸ்வரி ரீச்சர் கேட்டாள். **போருக்குத் தூக்கிய துவக்கு புஸ்வாணமாய்ப் போன கதைதான்" வாத்தியா ருக்கு என்னதான் கிண்டலில்லை.
*கறுப்புக் கண்ணுடி போட்டுக் கொண்டு காரில திரிஞ்சு மேற்பார்வை செய்தும் முத்திரை வித்தும் மொழியுரிமை கேட்டால் என்ன நடக்கும் என்று தெரியும் தானே" வாத்தியாருடன் கெளரி வாக்குவாதப் படத் தெரியாது. அவரின் பேச்சை மெளனமாகக் கேட்டுக் கொண்டிருந்தாள்.
சத்தியாக்கிரகம் காரணமாக அந்த வருட எஸ். எஸ். சி. பரீட்சை முடிவுகள் வரத் தாமதமாயின. . . . . . ، - ،
புது வருஷமும் வந்து போய் விட்டது. சத்தியாக் கிரகமும் அமர்க்களப்பட்டு ஓய்ந்து விட்டது. சாரதா கல்யாணமாகிப் புதுப்பெண்ணுய்ப் பூரித்துப் போய் இருக் கிருள். *ஓடிப்போய்க் கல்யாணம் செய்ததில் அவளுக் கொரு பெருமைக்கூட. அவளைக் காணும் போதெல்லாம் அம்மாவிடம், ஆச்சி கல்யாணம் பேசும் கதை கதைக்கிருள்.
சத்தியாக்கிரக நாட்களில் செல்வராசா வசந்தாவுடன் பழகிய விதம் ஆச்சியின் மனதில் வேதனையையுண்டாக்கி யிருக்க வேண்டும். எதுக்கும் கெளரியின்ர சோதனை முடிவு வரட்டுமே என்று அப்பா தட்டிக் கழித்தார். அப்பாவுக்கும் செல்வராசாவைப் பிடிக்காது என்று கெளரியின் உள்" உணர்வு சொல்லிற்று.
ஊரில் கிராமச் சங்கத் தேர்தலைப் பற்றிக் கதை நடந்தது. ராசநாயத்தார் தேர்தலில் நிற்கப் போவதாகக் கதையடிப்பட்டபோது யாரும் ஏதும் ஆச்சரியப்படவில்லை.
ஆளுல் பெரியப்பாவும் தேர்தலில் குதிக்க வெளிக்கிட்ட போது வீட்டார் எல்லோரும் ஆச்சரியப்பட்டார்கள்.

Page 161
512 தில்லையாற்றங்கரை
*எல்லோரும் ஏறி விழுந்த படகில சக்கடத்தாளும் ஏறிச் சறுக்கி விழப் போருர்' ஆச்சிக்கு ஒரு கிண்டல்.
**இந்த மனிசனுக்குப் புத்தி பேதலிச்சுப் போச்சு" பெரியம்மாவுக்கு இதைவிட வேறென்றும் சொல்லத் தெரிய வில்லை.
மரகதம்-அண்ணுவின் விவாகரத்து வழக்குக் கோர்ட் டுக்குப் போகும் நாள் நெருங்கி கொண்டு வந்தது. ஊரில் உள்ள ஒரு சில நல்ல மனிதர்கள் உறவுண்டாக்கி வைக்க முயற்சித்தும் ஒரு பயனுமில்லை. மாமா பிடிவாத மாக இருந்தார். தன் மகளின் வாழ்க்கையை மண்ணுக்கிய பெரியப்பா குடும்பத்தைக் கோர்ட்டுக்கிழுத்து அவமானப் படுத்தாமல் விடப்போவதில்லை என்று கருவிக் கெர்ண்டிருந் தார். ராசநாயகமும் அவர் மகன் செல்வராசாவும்தான் மாமாவைத் தூண்டிவிட்டு வேடிக்கை பார்க்கிருர்கள் என்று பெரியப்பா சொல்லிக் கொண்டிருப்பது பிழையில்லை என்று கெளரிக்குத் தெரியும்.
பெரியப்பாவை ராசநாயகத்தாருக்குப் பிடிக்காது. செல்வராசாவுக்கு அண்ணுவைப் பிடிக்காது. அண்ணுவைப் பிடிக்காததற்கு ஒரு காரணமோ அல்லது முழுக் காரணமோ பத்மநாதனின் சினேகமா? பத்மநாதனில் உள்ள கோபம் என்ன? தன்னுடைய முறைப்பெண்ணுக்கும் தனக்கு மிடையில் தலையிடுகிருன் என்ற சந்தேகமா? கெளரி இந்தக் கேள்வியை யாரிடம் கேட்க முடியும்? மெளனமான இரவு வேளைகளில் தனியேயிருந்து சிந்திப்பாள் கெளரி. அரை குறையுமாய் ஒன்றுக்குள் ஒன்று பின்னப்பட்டுக் கிடக்கும் பிரச்சினைக்கு என்ன முடிவு வரப் போகிறது என்று தெரியாது.
குழந்தைகளாய் விளையாடிக் குமரிகளாய்க் குதூகலித்து இப்போது வாழ்க்கையின் ஒவ்வொரு கோணத்திலும் மாட்டப்பட்டிருக்கும் மரகதம், சாரதா, கமலம், வசந்தா

ராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம் 3 13
என்று ஒவ்வொருவரையும் யோசித்தாள். மரகதம் பாவம், விவாகரத்தின் பின் என்ன நடக்கும்? அவளுக்கு இப்போது தான் பதினேழு வயது. படிக்கும் வயது. வாழ்விழந்து, குழந்தையிழந்து சோக சித்திரமாய் மாறிப் போயிருக்கும் மரகதத்தின் வாழ்வு சிதையத் தானும் ஒரு விதத்தில் பொறுப்பா?
எத்தனையோ வருடங்களுக்கு முன் பத்மநாதனுடன் தன்னைக் கண்ட செல்வராசா அதன்பின் கொஞ்சம் கொஞ்சமாகச் சச்சரவுகள் உண்டாகக் காரணமாயிருந்த தெல்லாம் தற்செயலான காரியங்களா? பத்மநாதன் செல்வராசா வீட்டுக் கிணற்றடிக்குப் போனதற் தானே இந்தச் சண்டை எல்லாம்?
பத்மநாதன் இந்த ஊருக்கு வருவதற்கு அவன் தமயன் அவாத்தியாரும் சினேகிதன் அண்ணுவும் மட்டும் காரணமா?
யோசித்துப் பார்த்தால் அவைகளுக்கு அப்பாற்பட்டக் காரணம் ஏதோ இருப்பது தெரியாமலில்லை. அதைத் தனக்குத் தானே மறைத்துப் பெருமைப்பட ஒன்றுமில்லை! தானும் ஒரு காரணம் என்று அவளுக்குத் தெரியும்.
பெரியப்பா பாலிப்போடியிடம் சில கதைகள் சொல்லி அம்மாவுக்குச் சொல்லச் சொல்லியிருக்க வேண்டும். கிழவன் கெளரியைப் பார்த்து கிக்கி கிக்கி என்று சிரித்தபடி வந்தது* *என்னடி குமரி எல்லாரும் கல்யாணம் முடிக்கினம். உனக்கெப்ப கலியாணம்' கிழவனுக்கு கெளரி மறுமொழி சொல்லவில்லை.
அரிவாள்மனையில் குனிந்திருந்து இருல் உடைத்துக் “கொண்டிருந்தாள்.
**காலா காலத்தில் கல்யாணம் முடிக்க வேணும்.
இல்லை எண்டால் வசந்தாப் பெட்டை போல சும்மா கெட்ட பெயர்தான் கிடைக்கும்."

Page 162
314 தில்லையாற்றங்கரை
கிழவன் சர்வ சாதரணமாய்ச் சொன்னது கெளரியின் மனதில் சுருக்கென்று தைத்தது. 'வசந்தாவை ஏன் சொல் கிருர்கள். நாங்களாகப் போய் அவளோட கதைக்கிறவைக்கு ஒரு பெயரும் வராதா" செல்வராசா எப்படித்தான் இளித்துக் கதைத்தான்?
**கெளரிப் பெண்ணே கவனமாய் இருக்க வேண்டியவ பெண்கள்' கிழவனுக்கும் பெண்மையைப் பற்றிக் கதைக்கத் தெரியுமாம்!
செல்வராசா வீட்டுக்குக் கல்யாணம் கேட்டுப் போகச் சொல்லிப் பாலிப்போடிக் கிழவன் நச்சரித்தது எல்லாம் பெரியப்பாவின் வேலை தான்.
பெரியப்பா பொதுத் தேர்தலில் நின்று வெற்றி பெறுவதற்குச் செய்யும் தந்திரம். கெளரி செல்வராசா வைக் கல்யாணம் செய்தால் ராசநாயகத்தார் மிக நெருங்கிய சொந்தக்காரராக மாறி விடுவார். ஊர் மக்கள் சொந்த மச்சான் மைத்துனர் போட்டியிடுவதை விரும்ப மாட்டார்கள்.
எப்படியும் சொல்லி ரசாநாயகத்தாரைத் தேர்தலில் நிற்காமல் பண்ணத்தான் இந்தக் கல்யாணப் பேச்சா?
விளக்கமும் விரிவுரையுமில்லாமல் விவாதிக்கப்பட்டா லும் என்ன கதைக்கிறர்கள் என்று தெரியாமலில்லை கெளரிக்கு.
கூட்டுறவு நெல்லுச் சங்கத்திலிருந்து ரசாநாயகத்தாரை வெளியேற்றித் தான் பதவி எடுக்கப் பெரியப்பா எவ்வளவு குரூரமாகக் கஷ்டப்பட்டு அண்ணுவுக்கும் மரகதத்துக்கும் கல்யாணம் செய்து வைத்தார்.
அது தெரியாதா கெளரிக்கு? இப்போது என்ன நடந்தது? மரகதத்தின் கல்யாணம் என்ன நடந்தது. கூட்டுறவு சங்கத்திலிருந்து பெரியப்பா"
தான் வெளியேற்றப் பட்டார்.

ராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம் 315
சூடு கண்ட பூனை அடுப்பங்கரையை நாடாதாம். பெரியப்பாவுக்குச் சுரனையேயில்லையோ! சில மனிதர்களுக்கு அப்படி ஒன்றுமில்லையா?
பெரியப்பாவின் சூழ்ச்சிக்குத் தான் பலியாடாவதா?
பெரியப்பாவின் சூழ்ச்சியோ இல்லையோ அம்மாவும் ஆச்சியும் செல்வராசாவில் விருப்பம். இன்றைக் இல்லா விட்டாலும் எப்போதோ கல்யாணம் பேசத்தான் போகி றர்கள். பேசாமல் தலை குனிந்திருந்து தாலியைக் கட்டிக் கொள்வதா? என்ன சொல்வது? சொல்லுவதற்கு இவளுக்கு ஏதும் இருக்கிறதா.
குடும்பத்தைச் சந்தோசப்படுத்தச் செல்வராசாவைச் செய்து விட்டு அண்ணு சொல்வது போல் நாளோ ஐந்து பெற்று விட்டு (மூன்று போதும்!) ஊரோடு மாரடிப்பதா? ஏன் ஊரைப் பற்றி இப்படி அலுத்துக் கொள்ள வேண்டும்?
ஊரைச் சுற்றி வயல்கள். வயல்களை முத்தமிடும் ஒடையும் களப்பும். தூரத்தில் வளைந்தோடும் தில்லையாறு • அதைத் தாண்டி இரையும் கடலோசை, கள்ளம் கபடமற்றக் கிராமத்து மக்கள். சிரிப்புக்கும் களிப்புக்கும் பாலிப் போடி யும் நாட்டுக் கூத்தும். மனமாறப் பிரார்த்திக்கக் கோயில். ஆறுதலுக்குச் சாமியார். அன்பான அம்மா அப்பா. விவாதம் செய்ய ஆச்சி. நன்றியுள்ள அமுதவல்லி நாய். என்ன இல்லை சந்தோஷப்பட? இதெல்லாம் எப்போதும் இருக்கும். கெளரி யின் நீண்ட நாள் ஆசை-அதுதான் ரீச்சராகி. ஊர் பாட சாலையில் படிப்பிப்பது அது நிறைவேறுமா?
எதற்கும் பரீட்சை முடிவு வரட்டும்.
பாலிப் போடிக் கிழவன் தொடக்கி வைத்த கல்யாணக் கதை ஆச்சியிடம் கெளரிக்கு ஒரு போரையே தொடக்கி விட்டிருந்தது.
மாமியாளும் மகனும் வாதப்பட்டுக் கொள்வதை அப்பா ஏன் என்றுக் கேட்கவில்லை. யார் வெற்றி பெற்றுக்

Page 163
コ 16 தில்லையாற்றங்கரை
கொண்டு வருகிருர்கள் என்று அப்பாவுக்குத் தெரியும். அப்பாவும் அண்ணுவும் ஒரே மாதிரி தேவையில்லாமல் அலட்ட மாட்டார்கள்.
"இதென்ன புதினக் கதை கவுரி. கல்யாணம் பேசிறது விசர்க்கதை எண்டு சொல்லுருய். உன்னுேட ஒத்த வயதுப் பெட்டைகள் எப்பவோ கல்யாணம் செய்யத் தொடங் கிறதுகள்"" ஆச்சியின் புலம்பல்.
*உங்களப் போல கிழடுகள் ஆதிக்கம் செலுத்தின பிறந்த வீட்டிலேயே பேசி முடிச்சுப் போடுவியள்' கெளரி யின் எதிர்த்தாக்குதல்.
*நீ வாத்திப் பெண்பிள்ளையாகிக் கல்யாணமாக எத்தனை வருஷம் செல்லுமடி?" கிழவி அழாக் குறையாகக் கேட்டது.
*இருபது வருசமாம் ஆகட்டும். உங்களுக்கென்ன என்னப் பற்றிப் புலம்பல்."
ஆச்சிக்கு மட்டுமல்ல வீட்டார் எல்லோருக்கும் தான் கேள்வி.
இரிவது வரியம் இப்படியே இரிக்கப் போருளாம்" கிழவி அழாக் குறையாகச் சொன்னுள். உலகத்தில் எந்த விதமாற்றமும் உண்டாகாமல் நிறுத்த முயற்சிக்கும் ஆச்சி! பெரியப்பாவுக்குக் கெளரியின் மறுமொழி. நீங்கள் கல்யாணம் பேசினல் என்ன? யார்தான் பேசினல் என்ன? நான் இப்போதைக்குக் கல்யாணம் முடிக்க போறயில்ல! எப்படியோ ஏதும் நடந்து முடியட்டும் என்று நினைப்பதும் வருவது வரட்டும் என்று வரட்டு வேதாந்தம் பேசி வாழ்க்கையை வீணுக்குவதும் கோழைத்தனம் என்பது கெளரியின் சித்தாந்தம். கல்யாணப் பேச்சு சரிவர வராமல் போக பெரியப்பாவும் ராசநாயகத்தாரும் தேர்தலில் நிற்பதை ஊரில் எவரும் தடுக்கவில்லை. அவர்கள் இருவரும் அபேட்சகப் பத்திரம் தாக்கல் செய்து விட்டனர். சின்னத்

ராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம் 317
தம்பி ராசநாயகத்தாருக்கும் சங்கரனும் பாலிப் போடியும் பெரியப்பாவுக்கும் சுவரொட்டி எழுதிக் கொண்டு திரிகிருர்கள்.
**இப்போதைக்கு கல்யாணம் வேண்டாம் என்பதை விடச் செல்வராசாவைச் செய்ய மாட்டன் என்று சொல் கிறது நேர்மையில்லையா' அண்ணு கெளரியை நேரடியாகக் கேட்டான்.
கெளரி மறுமொழி சொல்லவில்லை. சொல்ல விருப்ப மில்லை. தனக்குள் குமைந்து போராடும் சில விடயங்களை யாரிடமும் பகிரங்கமாகச் சொல்லத் தயாரில்லை. அண்ணு மட்டும் என்ன தனக்குக் கமலத்திலுள்ள விருப்பத்தை யாரிடமும் மனம் விட்டுச் சொன்னுரா?
பரீட்சை முடிவுகள் வந்தன. கிராமத்துப் பாடசாலை எதிர்பார்த்ததை விட நல்ல திறமான முடிவுகள். வாத்தியார் மிக மிகச் சந்தோஷப் பட்டார்.
தலைமையாசிரியரும் மற்றவர்களும் பாடசாலை நேரத் தில் மட்டும் படிப்பிப்பார்கள். ராமநாதன் வாத்தியார் பின்னேரங்களிலும் தன் வீட்டுக்குப் பிள்ளைகளை வரச் சொல்லியும் படிப்பிப்பார்.
அவரின் முயற்சியின் வெற்றி கிராமப் பாடசாலையின்" வெற்றி.
மனமும் முகமும் மலர்ந்த சந்தோஷத்தில் வீட்டுக்கு வந்தாள் கெளரி.
ஆச்சியைத் தவிர மற்றவர்கள் எல்லாரும் சந்தோஷம்.
அப்பாவிடம் சொல்லி மேலே படிக்கப்பார். சர்வகலா சாலைக்குப் போகப்பார்" பரமேஸ்வரி ரீச்சர் கெளரிக்குச் சொன்னுள்.
அப்படி ஒரு பேராசையுமில்லே கெளரிக்கு. ஒரு ஆசிரியை ாக வந்து ஊரோடு இருந்தால் போதும்.

Page 164
318 தில்லையாற்றங்கரை
பரமேஸ்வரி ரீச்சர் சொன்னதை அப்பா கேட்டார். **மேல் வகுப்பு படிக்கப் போறியா?" கெளரி அப்படி ஒன்றும் முடிவு-கட்டவில்லை.
சாரதா மாணிக்கவாசகத்துடன் மட்டக்களப்பில் குடி போகும் நிலைமை வரும் போலிருக்கிறது. அவர்களுடன் போயிருந்து கெளரி படிக்கலாமாம். அப்பா சொன்னர்.
சாரதாவுக்கு - இந்த மாதம் “வரவில்லையாம்.""
இப்போதே வயிற்றைத் தடவிப் பார்க்க தொடங்கி விட்டாள் சாரதா. காதல் கல்யாணம் தந்த சந்தோஷம் முகத்தில் பரவிக்கிடக்கிறது.
மட்டக்களப்பில் மாணிக்கவாசகத்துடன் போயிருக்கப் பெரியப்பா தடையாக இருக்கிருராம். ஊர் பெயர் தெரியாத இடத்தில் என்னவென்று போய்த் தனியாக இருக்கப் போகிருளாம்.
மட்டக்களப்பிலும் தமிழ்ர்கள் தானே இருக்கிருர்கள். சாரதா கெட்டிக்காரி. ஒரு சில வருஷங்களுக்கு முன் உலகத்துச் சந்தோசமெல்லாம் எங்களுக்குச் சொந்தமானது என்ற மனநிலையில் உல்லாசமாயிருந்த பெண்களின் வாழ்க்கையில் தான் இப்போது எவ்வளவு மாற்றம்?
மரகதம் கோர்ட்டுக்குப் போக வேண்டிய நாள் நெருங்கிக் கொண்டிருந்தது. மரகதத்தைப் பார்த்து அதிக நாட்களாகி விட்டன. மரகதத்தைப் பார்க்கப் போகும் போது செல்வராசாவைக் கண்டாலும் என்ற தயக்கம் இனி இருக்கத் தேவையில்லை. செல்வராசாவுக்கு இவள் க்ல்யாணத்துக்கு மாட்டேன் என்ற விஷயம் எட்டாம லிருக்காது. கெளரி மரகதத்தைப் பார்க்கப் போக வெளிக் கிட்டாள்.
சரியாக மெலிந்து ஆளே அடையாளம் தெரியாம லிருந்தாள் மரகதம் எப்போதும் சோகமான கண்கள் இன்னும் சோகமாக இருந்தன.

ராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம் 39
கெளரி போன நேரம் விருந்தையிலிருந்து தைத்துக் கொண்டிருந்தாள். மாமியும் பூரணியும் வீட்டுத் தோட்டத் தில் வேலையாயிருந்தார்கள். மாமா புதுக் கிணறு கட்டும் இடத்தில் நின்றர் பக்கத்து வளவில் கிணறு வெட்ட டைனமைட் வைத்து உடைத்தார்கள் என்று தெரியும்.
*என்னப்பா, கனகாலம் கண்டு' மரகதம் தையலை ஒரு பக்கம் வைத்துவிட்டுக் கெளரியைப் பார்த்தாள்.
மரகதத்தின் பார்வை மிக மிக சோகமாக இருந்தது. என்ன கதைப்பது என்றே தெரியவில்லை. மரகதம் தானுக ஏதும் கதைக்காதவள்.
தூரத்தில் கிணற்று வேலை செய்து கொண்டிருந்தவர்கள் வந்து கொண்டிருந்தார்கள்.
புதுக்கிணறு கம்பீரமாகத் தெரிந்தது. கிணறு கட்டத் தோண்டிய வெண்மணல் பரந்து கிடந்தது. கிணற்றைச் சுற்றி சிமெண்ட் போட்டுக் கட்டிக் கொண்டிருந்தவர்கள் வேலை முடிந்து வந்து கொண்டிருந்தார்கள்.
*கிணறு பார்ப்பம் வா' கெளரி மரகதத்தின் பதிலை எதிர் பாராமல் போனள். கிணறு அடுத்த வளவில் இருந்தது. மரகத மாக்களின் வீட்டை விட இறக்கமான தரைப் பகுதி. .
தூரத்தில் தில்லையாறு வற்றிப் போய் ஒடையின் கதைகளில் ஆயிரக்கணக்கான கொக்குக் கூட்டங்கள் தெரிந்தன. W
**இந்தக் கிணற்றை எப்போவோ கட்டியிருக்கலாமே?” கெளரி ஆற்றமையுடன் சொன்னள். எதையும் கட்டி முடிக்க எத்தனை சிரமம்?
கிணற்று சண்டை வராமலிருந்தால் எவ்வளவு
சந்தோஷமாயிருந்திருப்பார்கள். மரகதம் ஒன்றும் சொல்ல வில்லை. சொல்லவும் மாட்டாள் என்று தெரியும்.

Page 165
320 தில்லையாற்றங்கரை
சாரதா மட்டக்களப்புக்கும் போகப் போகிழுள்" கெளரி மர்கத்தின் முகத்தைப் பார்த்துக் கொண்டு சொன்னுள்.
உங்கட பெரியப்பா விடுவாரா போக" தயங்கிக் கொண்டு கேட்டாள் மரகதம், கணவனுடன் போவது சாரதாவின் உரிமை. யார் தடுப்பதாம்? மாமா தானே மரகதம் புருஷனுடன் போகத் தடையாயிருந்தார்.
**பெரியப்பா சொல்லித்தான் சாரதா கேட்டாளோ. தனக்கு விருப்பமானவனேட ஓடிப்போய்க் கல்யாணம் செய்தவள். இப்ப தன்ர புருஷனுேட போயிருக்கப் பெரியப்பாவை ஏன் கேட்க வேணும்" கெளரி சாதாரண மாகத் தான் கேட்டாள். மரகதத்தை எந்த விதமான நோக்கமும் கெளரிக்கிருக்கவில்லை.
பறிக்கப்படும் உரிமைகளை நாங்களாக எடுக்காவிட்டால் தட்டத்தில் வைத்துத் தரப் போவதில்லை என்று சொல்ல நினைத்தாள் கெளரி. ஆனல் அதற்கு முதல் மரகதம் விம்மீ விம்மியிழுத்தாள்.
புதுக் கிணற்றைச் சுற்றி வாழைமரம் நட்டிருந்தார்கள். அதனடியில் சாய்ந்திருந்து அழுதாள். கெளரிக்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை. மாலை மங்கி இருள் பரவச முதல் நிலவொளியின் கீற்றுக்கள் தென்னை மரங்களுக் கூடாகத் தெரிந்தது.
பூரணிக்கு முதல் நாள் நல்ல நிலவு. புதுக்கிணறு. மணல் பரந்த வாழை மரத்தடி, மரகதத்தின் சோகத் தோற்றம். அவ்வளவும் அந்தக் கணத்துக் காட்சியாக முடியுமென்றுதான் கெளரி நினைத்திருந்தாள்.
ஆனல் அந்த இடமும் அந்த நேரமும் மரகதத்தின் அந்த சோகமான தோற்றமும் கெளரியின் மனத்திலிருந்து ஒரு நாளும் மறையப் போவதில்லை என்று அப்போது தெரியாது. மரகதம் அழுது முடியுமட்டும் பேசாமலிருந்தாள் கெளரி.

ராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம்
“எனக்கேன் இந்த தலைவிதி' மரகதம் தானகக் கேடட கேள்வி கெளரியை உலுக்கியது.
*தலைவிதியை யாரும் பிடித்து வந்து எங்களுக்குத் தர வில்ல. நாங்களும் தான் சேர்ந்து நிர்ணயிக்கறம்" கெளரி இப்பிடி ஒரு நாளும் மரகத்துடன் கதைக்கும் சந்தர்ப்பம் தரவேயில்லை.
* ஊர் சிரிச்சு உலகம் பழிக்கிற மாதிரி இனிக் கோர்ட்டுக்கும் போய் இழுபட வேணும்' மரகதம் கேவிக் கேவி அழுதாள்.
*ஏன் கோர்ட்டுக்குப் போக வேணும்? அண்ணுவில விருப்பமாயிருந்தா என்னுேட வா போவம்'
கெளரி தைரியத்துடன் சொன்னுள்.
மரகதம் அழுகையை நிறுத்தி விட்டுக் கெளரியை ஏறிட்டுப் பார்த்தாள். நிலவு வெளிச்சம் கலங்கிய அவள் கண்களில் பளபளத்தது. நீரில் சிதறித் தெரியும் நிலவுத் துண்டுகள்!
'எனக்கு மானரோசம் இருக்கடி கெளரி** மரகதம் சேலைத்தலைப்பால் முகத்தைத் துடைத்தாள்.
**உன்னைக் கட்டிய புருஷனிட்டப் போக என்ன மான ரோஷம் மண்ணும் கட்டி!' கெளரிக்குக் கோபம். சரியான கோபம். மரகதத்தில் மட்டுமில்லை கெளரிக்குக் கோபம்,
மரகதத்தின் வாழ்க்கையோடு விளையாடிய மரகதத்தின் பெற்றேர், மறைமுகமாகத் தூபம் போடும் செல்வராசா குடும்பம், தலைக்கணம் பிடித்த பெரியப்பா, தைரியமில்லாத அண்ணு, எல்லோரிலும் கோபம். இந்தப் பேதைப் பெண் மரகதத்தை இப்படித் துயர்படுத்தும் பொல்லாத சமுதாயத் தில் கோபம், கெளரி கோபத்தில் வெடித்தாள்.
*எல்லாம் நடந்த பிறகு இதெல்லாம் யோசிச்சு என்ன பிரயோசனம்' மரகதம் ஆற்றமையுடன் அழுதாள்.
--21

Page 166
322 தில்லையாற்றங்கரிை
“இன்னெரு தரம் கல்யாணம் முடிச்சு வைப்பினம் உனக்கு" கெளரி இப்படிச் சொல்ல மரகதம் திடுக்கிட்டுப் பார்த்தாள்.
**என்னடி சொன்ன நீ கெளரி" மரகதம் இப்படி உணர்ச்சி வசப்பட்டு கெளரி கண்டதேயில்லை.
*மரகதம் உனக்கு பதினேழு வயது. ஏன் கல்யாணம் முடிக்கக் கூடாது" கெளரிக்கு வேறு என்ன சொல்வது என்று தெரியவில்லை.
மரகதம் கெளரியின் கைகளை இறுக்கிப் பிடித்தாள். :*கெளரி நான் என்ர மச்சானைக் கல்யாணம் செய்து அவருக்குப் புள்ளயும் பெத்தனன். எனக்கு எல்லாம் முடிஞ்சு போச்சு" மரகதம் இப்படிக் கதைப்பாள் என்ருே இப்படிக் கதைக்க கூடியவள் என்றே, கெளரிக்குத் தெரியாது.
உலகம் நினைத்துக் கொண்டிருப்பது போல் மரகதம் ஒன்றும் ஊமையுமில்லை ஆமையுமில்லை. எல்லாக் கொடுமை களையும் பொறுக்கும் பூமி. மழையும் வெயிலும் வந்து விழும் பூமித்தாயோ இவள்? எவ்வளவைத்தான் பொறுத்துக் கொண்டாள்?
ஓடக்கரையோரத்தில் புதைந்து கிடக்கும் எருமை மாடுகள் இரவின் நிழலில் பூதங்கள் மாதிரியசைந்தன.
இருட்டில ஏன் இரிக்கிறயள். பூச்சி புழுதிரியிற நேரம்" மாமியின் குரல் தூரத்தில் கேட்டது. மின் மினிப் பூச்சிகள் வாழை மரத்தைச் சுற்றி வட்டமிட்டன.
**ஆருக்கு என்ன செய்தேன். எனக்கேன் இந்த வினை' தனக்குத்தானே பேசிக் கொண்டாள் மரகதம்.
உலகத்தில நடக்கிற கொடுமைகள் எல்லாம் யாரும் செய்த வினைப்பயன' கெளரி எழுந்தாள். வீட்டுக்குத்

ராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம் 323
தனியாகப் போக வேணும். இன்னும் கொஞ்ச நேரமானல் ஆச்சி மாலைக் கண்ணுேடு இருட்டில் தடுமாறிக் கொண்டு வந்து சேர்ந்து விடுவாள்.
இப்படி அழுந்தி அனுபவிக்கிறத விடச் செத்துப் போனல் கவலயில்ல' மரகதத்தின் விரக்தி அறிவிப்பு இது.
**வாழ்க்கையில நடக்கிற கஷ்டங்கள் தாங்காம உலகத்தில இரிக்கிற ஒவ்வொருத்தரும் செத்தால் சனத் தொகை குறைஞ்சு போகும்" கெளரி பாவாடையில் ஒட்டி யிருந்த ஈர மண்ணைத் தட்டினுள்.
'நீ உன்ர அண்ணரோட சேர்ந்து புத்தகம் வாசிச்சி வாசிச்சி நிறையக் கதைக்கப் பழகிற்ருய்'
'உன்னைப் போல ஒப்பாரி வைச்சுக் கொண்டிருக்காமல் நல்ல புத்தகங்கள் வாசிக்கிறது பிரயோசனம்"
*உன்ர அண்ணகின்ற சினேகிதர் உன்னுேட கதைக் கிறவர்தானே' மரகதம் தயங்கிக் கேட்டாள்.
*நான் எல்லாரேடயும் கதைக்கிற நான்" கெளரி வெடுக்கென்று சொன்னுள், மரகதம் பத்மநாதனின் பெயரைச் சொல்வதையும் விரும்பவில்லை.
**நீயும் சாரதாவும் துணிஞ்ச நீங்கள்" மரகதம் ஏக்கத் துடன் சொன்னுள்.
கெளரி திரும்பிப் பார்த்தாள், இருவரும் மாமியின் வளவு மூலையில் நின்று கொண்டு ஒரு நிமிஷம் ஒருத்தரை ஒருத்தர் பார்த்தனர். "மரகதம் தாய் தகப்பன் சொல் கேட்கிறதுதான் தர்மமும் நியாயமும் எண்டு நாங்கள் படிச்சனங்கள்தான். கல்யாணமான பின் உன்ர புருஷன். ...GQLuif?8f)6iy 8kn) uumr?ʻʼ ʼ
என்ர புருஷன் என்னில அன்பிருந்தா என்ன வந்து கூப்பிட்டிருப்பார்"தங்களுக்குள் அன்பை வைத்துக்கொண்டு ஏன் வீம்பு பிடிக்கிருர்கள்?

Page 167
$24. தில்லையாற்றங்கரை
"நீதானே மாட்டேன் என்ருய் வரச்சொன்ன போது"
* அப்பாவோட சண்டை பிடிக்கக்க என்னண்டு போறது? கோவம் மாறினபின் வந்து கேட்கிற மாதிரி கேட்டிருந்தால் போயிருப்பன்' மரகதம் தகப்பன் மாதிரி வீம்பு பிடித்தவளா?
**நீ ஒரு நாளும்எங்களப் போல இரிக்கல்ல" கெளரி அலுத்துக் கொண்டாள். குட்டக் குட்டக் குனிந்து கொடுக்கிற மடச்சி இவள்!
அந்த வார்த்தைகள் சொல்லியிருக்கக் கூடாது என்று பின்னர்தான் துக்கப்பட்டாள்.
*மற்றப் பெண் பிள்ளைகள் போல கடவுள் எனக்கு எந்த சந்தோஷமும் தரயில்ல கெளரி" மரகதம் மடை திறந்தார் போல் அழத்தொடங்கினள். வார்த்தைகள் அர்த்தமற்று மனம் வெதும்பி அழுதாள்.
சந்தோஷம் என்றல் என்னவாம்? சந்தர்ப்பங்கள் தரும் மனத்திருப்தியா? சம்பங்கள் நடந்து கொண்டிருக்கும் போது எங்கள் மனநிலையில் உண்டாகும் ஒரு கிளர்ச்சியா? தனது உரிமைக்காகக் கெளரி ஆச்சியுடன் சண்டை பிடிப்பதில் சந்தோஷப்படுகிருள். ஆச்சி துக்கப்படுகிருள். ஒரே விஷயம் இருவரின் வேறுபட்ட மன நினைவோட்டத்தில் உண்டாகும் வித்தியாசமான உணர்வா சந்தோஷம் ?
என்னவாயிருந்தாலும் சந்தோஷம் தேடி கெளரி வாழ்க்கையைச் செலவழிக்கத் தயாரில்லை. வந்தால் நல்லது. வராவிட்டால் ஆச்சியிடம் கேட்கலாம்! கெளரியின் மனதில் எத்தனையோ யோசனைகள், ‘என்னடி யோசிக் கிருய்' மரகதம் அழுகையை நிறுத்தி விட்டுக் கேட்டாள்.
*நீ ஒரு நாளும் கணக்க கதைக்கிற இல்ல. இண்டைக்கு மட்டும் மழை பெய்யுற மாதிரிக் கதைச்ச நீ என்கிறது இப்பதான் திடீரென்று பட்டுது. அத்தோட வேறு எதை

vrgloaf ur somúruð6Raffluub :
புமோ யோசிச்சன்.எதையாவது யோசிக்கிறது என் பழக்கம். நான் கனக்கக் கதைக்க இல்ல, என்ன கதைக்க இருக்கு. என்ர கதை எல்லாரும் அறிஞ்ச கதை" மரகதம் பெருமூச்சு விட்டாள்.
ஒழுங்கையில் சைக்கிள் சத்தம் கேட்டது.
பக்கத்து வீட்டுச் செல்வராசாவினுடையதாக இருக்க லாம். வீட்டுக்குள் போய்த் தொலையட்டும் என்று பார்த் திருந்தாள் கெளரி.
ஆனல் சைக்கிள் இவர்களை நோக்கி வந்தது. மாமி வீட்டு நாய் குலைத்துக் கொண்டு வந்தது.
**கெளரி அக்காச்சி இரிக்கிருவோ" சங்கரன் சத்தம் போட்டுக் கேட்டுக் கொண்டு வந்தான், ஆச்சியின் தூதன் அரக்கன். 'நான் போறனடி மரகதம், சோதனையில பாஸ் பண்ணிட்டன். கேள்விப்பட்டிருப்பாய்." •
**பத்மநாதன் மாதிரி ரீச்சர் ட்ரெயினிங் எடுக்கப் போறயா' 'புனித மலர் ரீச்சர் மாதிரி வரப்போறன்' கெளரியின் பதில் இது. கெளரி ஒழுங்கையில் இறங்கி நடந்தாள். சங்கரன் சைக்கிளால் இறங்கி இவளுடள் சேர்ந்து நடந்தான்.
செல்வராசா வீட்டில் பெரிய சத்தங்களும் ஆரவாரமும் 'எளிய நாய்கள்; ஒரு வோட்டுக்குப் பத்து ரூபாய் கொடு* கிருன்களாம்" சங்கரன் முணுமுணுத்தான். ராசநாயகத் தாரின் சின்னம் சுவரொட்டிகளிற் தெரிந்தது.
பெரியப்பா எவ்வளவு குடுப்பாராம்"
*அப்ப நின்ற எங்க காசு" சங்கரன் அலுத்துக் கொண் டான். பெரியப்பா கிராமச் சங்கத் தேர்தல் செலவுக்கு தன் காணியை விற்க ஒடித் திரிவது தெரியும்,
அண்ணுவின் வழக்கு நாள்,

Page 168
32 தில்லயாற்றங்கரை
கடந்த ஒன்றிரண்டு நாட்களாக எல்லோர் மனத்திலும் ஓர் ஊமைத் துயரம். சொல்லவும் முடியாத மெல்லவும் முடியாத சோகம்,
மரகதத்தைப் பார்த்துவிட்டு வந்த நாளிலிருந்து கெளரி யின் மனம் பலவாறு யோசித்தது.
அண்ணுவும் மரகதமும் அவர்களைச் சுற்றியிருப்பவர்கள்,
ஆசை அபிலாசைகளுக்காகப் பலியான அப்பாவிகள் என்று
புரிந்தது கெளரிக்கு. ஏன் இவர்கள் இருவரும் பலி யானுர்கள்?
மரகதம்தான் தாய் தகப்பன் சொல்லைத் தட்டத் தெரியாதவள். குடும்பத்தில் பெரிய மகள் ஏதும் பிழை செய்தால் அதன் எதிரொலி அடுத்த பெண்களையும் பாதிக்க லாம் என்ற பயம் மரகதத்துக்கு இருந்திருக்கலாம்.
அண்ணுவுக்கு என்ன நடந்தது?
எப்படித்தான் இருந்தாலும் தனக்கென்று ஒரு தனி நியதி இல்லாத மனிதனு அண்ணு?
கமலத்தைக் கல்யாணம் செய்ய முடியாத காரணத் தைத் தெரிஞ்ச கொண்டு அதை எதிர்க்கத் தெரியாமல் குடும்ப கெளரவத்துக்காகவும் மாமா தரும் காசுக்காகவும் மரகதத்தைச் செய்து கொண்டான?
கெளரி யோசித்துக் குழம்பிக் கொண்டிருந்தாள்.
ஆண்களே எல்லோரும் ஒரு மாதிரி அடிப்படையில் யோசிப்பவர்களா? * . . . .
மாமா, பெரியப்பா, ராசநாயகம், செல்வராசா என்ற பலர் தங்களின் ஆதிக்கத்தைக் காட்ட எதையும் செய்யத் துணிவார்கள். "தன் அனுபவத்தில் கண்டிருக்கிருள் கெளரி. அவர்களைப்போல் நிர்த்தாட்சண்யம் இல்லாவிட்டா
லும் அண்ணுவும் ஒரு விதத்தில் மற்ற ஆண்களைப் போலத்

rngsbauf uradstüvästfluh 827:
தானே? இல்லை என்ருல் மரகதத்தை இப்படிச் சித்ரவதை பட விடுவாஞ?
ஆண்களின் வாழ்க்கையில் முக்கியமாகத் தேவை யானது தாங்கள் ஆண்கள் என்ற அகம்பாவமான மனப் பான்மையா? அடுத்தவர்களை அடக்கவேண்டும் என்ற ஆதிக்க இவறியா? உலகத்தில் முக்கியமான மூன்று தேவை களான பணம், பதவி, பெண்கள் என்பவற்றை அடிமை கொள்வதுதான் இவர்களிடம் பதிந்துள்ள மனப் போக்கா? ஏதோ ஒரு வழியில் எல்லாவற்றையும் தங்களுடையதாக்கி அனுபவித்துவிடவேண்டுமென்ற வெறி செல்வராசாவின் கதைகளில் தெரிவதைக் கண்டுகொள்ளாத முட்டாளில்லை கெளரி.
சாரதாவுடன் சேர்ந்து காதலித்துக் கல்யாணம் செய்து மரகதத்துடன் சேர்ந்து குழந்தையை இழந்து வாழ்க்கை யையும் இழக்கும் அனுபவத்தைத் தானும் உணர்வதைக் கெளரியால் தடுக்க முடியவில்லை. ஒன்ருய்ச் சேர்ந்து வளர்ந் தவர்கள். ஒருவராய்ச் சேர்ந்து யோசித்தவர்கள். இப்போது தனித்தனியாய் அனுபவிக்க வேண்டிய நிலை. இதுதான் வாழ்க்கையின் நியதியா?
வீட்டில் ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு மனப் போராட்டம். இந்த ஊரில் இப்படி ஒரு வழக்கு-ஜீவனம்ச வழக்கு இதுவரை நடந்ததில்லை. ஆனலும் பெரியப்பா குடும்பம் கோர்ட்டுக்கு இழுபடுவதை ஊரில் எந்த மனிதரும் எதிர்பார்த்திருக்கமாட்டார்கள்.
காலையில் எழுந்ததும் முதலில் கேட்டது பெரியப்பாவின் குரல்தான்.
அம்பட்டன் மயில் வாகனத்தைப் பேசிக்கொண்டிருந் தார் பெரியப்பா. இவ்வளவு காலமும் பெரியப்பா வீடு தேடி வந்து பெரியப்பா குடும்பத்துக்குச் சவரம் செய்த பெரிய அம்புட்டின் அண்ணுமலே செத்துப் போய்விட்டான்.

Page 169
92 தில்லையாற்றங்கரை
அண்ணுமலை மகன் மயில்வாகனம் வீடுகளுக்கு வர மாட்டாளும். சவரம் தேவையென்ருல் தன்னுடைய "பாபர் சலூனுக்கு' வரச் சொல்லிவிட்டானும்,
அதிகாலையிலிருந்து அதிர்ந்து கொண்டிருக்கிருர் பெரி Uům. பெரியப்பாவுக்குக் கட்டபொம்மன் மீசை. கெளரிக்கு அந்த மீசையைக் கண்டாலே கோபம். கத்தரிக் கோலால் வெட்டிவிடவோ நெருப்புப் பந்தத்தால் எரித்து விடவோ எத்தனையோ தரம் மனதில் யோசித்திருக்கிருள். எண்ணெய் போட்டு முறுக்கிவிடும் அந்த மீசை தந்த அருவருப்பில் யார் மீசை வைத்துக் கொண்டாலும் கெளரிக்குப் பார்க்கப் பிடிக்காது. சாரதாவும் அவளும் சேர்ந்து அண்ணுவை மீசை வைக்காமல் பண்ணியது ஆச்சிக்கு இன்னும் கோபம்.
** நடைமுறை வழக்கம் தெரியாத நாய்கள் இப்ப தங்கட காலடிக்கு எங்கள வரச் சொல்லுகினம்' பெரி யப்பா பேசிக்கொண்டேயிருந்தார். கோர்ட்டுக்குக் கம்பீர மாய்ப் போகவேண்டுமென்ற அவர் ஆசையை நிறைவேற்றி வைக்காத அம்பட்டனைத் தாறுமாருகத் திட்டிக்கொண் டிருந்தார். w
அண்ணு வேப்பங்குச்சியால் பல் விளக்கிக் கொண்டிருந் தான். கோர்ட்டில் என்ன நடக்கும் என்று கெளரி யோசித் தாள்.
இவ்வளவு காலமும் இவர் என்னை நிராகரித்தார் என்று மரகதம் சொல்லப் போகிருளா? என்ன பேசிக் கொள் arrissair.
குடும்பமாயிருந்து பிள்ளையும் பெற்று விட்டிருக் கிழுர்கள். இப்போது அந்நியர் மாதிரி எப்படி எல்லா உறவு களையும் அறுத்துக்கொள்ள முடியும்? /7
திருமணம் என்ன சங்கிலியா நினைத்தவுடன் அறுக்கவும் இணைக்கவும்? இன்றுடன் இவர்களின் பிரிவு சட்டபூர்வ

von Egoivauf umsosüMoruoseflud 329
மாக்கப்படும். இவர்களின் நினைவு இவர்களுடன் எப்போதும் இருந்து சித்ரவதை படுத்தாதா?
அண்ணுவுக்கு இப்போதுதான் இருபத்திரண்டு வயது. இதற்கிடையில் வாழ்ந்து முடிந்தாகிவிட்டது. இனி என்ன நடக்கும்? அண்ணு பிரம்மசாரியாய் இருக்கப் போகிருன? இறப்பதும் பிறப்பதும் ஒருதரம்தான் நடக்கும். ஏன் இப்படித் தங்களைத் தாங்களே வருத்திக் கொள்கிருர்கள்?
எவ்வளவு அன்பான அண்ணு? ஆசையாக நாலு குழந்தைகளைப் பெற்று அன்பான தந்தையாக இருக்கக் கூடியவன் ஏன் இப்படி அநியாயமாகப் போகிருன்.
'நீ என்னுடைய மனைவி. என்னுடன் வரப்போகிருயா இல்லையா" என்று கேட்கும் நெருக்கமும் உறவுமில்லாமல் என்னென்று குடும்பமாயிருந்தார்கள்.
மரகதம் சொன்னுளே அண்ணு கூப்பிடுகிற மாதிரிக் கூப்பிட்டால் நான் போகமாட்டேன என்று. இந்தப் பிடிவாதம் பிடித்த அண்ணு மாமாவிலுள்ள கோபத்தை மறக்குமளவுக்கு மரகதத்தில் அக்கறையில்லாதவன? அல்லது ஏதோ சாட்டுக்கும் போக்குக்கும் கல்யாணம் செய்து கொண்டவன? மனைவியில் உண்மையான அன்புள்ள எந்தக் கணவனும் தன்பிடிவாதம் பெரிதென்றிருப்பான? மரகதம் வரமாட்டாளா? இவன்தான் அவளை விட்டுவிட்டு வந்தான் இவன்தான் போய்க் கூப்பிட வேண்டும்.
*என்ன கெளரி தியானமா' அண்ணு கேட்டான். கெளரி செவ்வரத்தம் பூ ஆய்ந்து கொண்டிருந்தாள் சாமிப் படங்களுக்கு வைப்பதற்கு.
கெளரிக்குப் பதில் சொல்லத் தெரியவில்லை. அண்ணு வின் வாழ்க்கையை நினைக்க மனம் ஏதோ செய்தது.
**என்ன கெளரி மெளன விரதமா?' அண்ணு தன் துயரை மறைத்துவிட்டுச் சிரித்துக் கதைக்கத் தெரிவது

Page 170
930 தில்லையாற்றங்கரை
அப்பட்டமாய்த் தெரிந்தது. கெளரியிடமுமா நடிக்க வேண்டும்?
"ஆம்பிளேகள் பொல்லா ஆட்கள். சுயநலவாதிகள்" திடீரென்று வெடித்தாள் கெளரி. தங்களைக் கொண்டு சமுதாயத்தை அளப்பவர்கள்தானே ஆண்கள்! மரகதத் தைப் பார்த்துவிட்டு வந்த நாளிலிருந்து இதைத் தவிர வேருென்றும் யோசிக்க முடியவில்லை அவளால். ஆண் வர்க்கம் செய்யும் எல்லாம் விடிவது பெண்களிலா! அண்ணு கூர்மையாக அவளைப் பார்த்தான்.
**ஒருத்தருக்கொருத்தர் விட்டுக்கொடுக்க முடியாத சுயநல வாதிகள் ஏன் சாட்டுக்கு கல்யாணம் முடிக்க வேணும்' கெளரி கேட்டாள்.
*மரகதமா சொன்னுள் நான் சுயநலவாதி எண்டு" அவன் அமைதியான முகபாவத்துடன் கேட்டான்.
'உங்களுக்கென்ன? பெண்களைத் தானே எல்லாரும் பழி சொல்லுவினம்" கெளரி அண்ணுவை நேரடியாகப் பார்த்துக் கதைத்தாள். இன்றைய பொழுதை விட்டால் இனி ஒரு சந்தர்ப்பம் எப்போது வரப் போகிறது. “அவளுக் கென்ன முடமா நடந்து என்னிட்ட வர?" அவனுடைய குரலிலும் உஷ்ணம். காலைச் சூரியனின் ஒளி மல்லிகை மரங் களைத் தொட்டுச் சேட்டை விட்டது.
மா மரத்தில் குயில் கூவத் தம்பிகளும் தங்கைகளும் தாங்களும் குயிலுடன் சேர்ந்து கூவி ஆச்சியின் வயிற் றெரிச்சலைக் கட்டிக் கொண்டார்கள். கெளரி அண்ணுவை நிமிர்ந்து பார்த்தாள்.
**ஏதோ ஒரு சாட்டுக்குக் கல்யாணம் செய்தால் இப்பிடித்தான்" அவள் முணுமுணுத்தாள். மற்றவர்களின் சந்தோசத்துக்காக ஏன் இவர்கள் வாழ்க்கை பாழாக வேண்டும்? எப்படித்தான்?". அவள் விடும் பாடாயில்லை,

s
வேண்டா வெறுப்பாய் சீவிக்கிறது டிவோர்ஸ் எடுக் கிறது" அண்ணுவுடன் நேரடிச் சண்டை கெளரி பிடித் தாள்.
மரகதத்தின் துயர் படிந்த கண்கள் கெளரியை இப்படிப் பேச வைத்தது. அன்றைய இரவை-மரகதத்துடன் கதைத்த அந்த இரவை அவளால் மறக்க முடியாது.
அவள் சாமி படங்களுக்குப் பூ வைத்துக் கும்பிட்டு முடியவும் மாமி வீட்டுப் பக்கமிருந்து பயங்கரமான அலறல் கேட்கவும் சரியாக இருந்தது. எல்லோர் முகத்திலும் கலவரம்.
அண்ணு கையிலிருந்த வேப்பங்குச்சியை எறிந்துவிட்டு மாமி வீட்டுப்பக்கம் ஓடினன். அவனைத் தொடர்ந்து கெளரி ஆச்சி, அம்மா, அப்பா, பெரியப்பா எல்லோரும் ஓடினர்.
மரகதம் கால் வழுக்கிக் கிணற்றில் விழுந்து விட்டா ளாம்! பரிமளம் மாமி கதறிக் கொண்டிருந்தாள். புதுக் கிணரும். புதுச் சீமேந்துப் படிகளும் வழுக்கும் தானே" ஆளுல் உண்மையாகத்தான் மரகதம் கால் தடுக்கி விழுந் தாளா?
அண்ணு கிணற்றுள் இறங்கினன். புதுக்கிணறு இன்னும் செங்கற்கள் கிடந்தன. நீர் மட்டம் அவ்வளவில்லை. ஆனல் சரியான ஆழம். டைனமைட் வைத்தல்லவா உடைத் தார்கள்.
கிணற்றைச் சுற்றி ஊரே திரண்டுவிட்டது.
ஒவ்வொருத்தரும் ஒவ்வொரு கதை. கோர்ட்டுக்குப் போய் மரியாதை கெடுவதைவிடச் செத்துப் போவது மேல் என்று மரகதம் தன்னிடம் சொன்னதைக் கெளரி யாரிட, மும் சொல்லவில்லை.
அவள் சொல்லத் தேவையில்லை,

Page 171
89. தில்லையாற்றங்கரை
ஊராரின் கற்பனை ஒவ்வொரு கதையும் சொல்லிற்று. பரிமளம் மாமி கதறி கதறியழுது கொண்டிருந்தாள்.
*எந்த அறுவான் செய்த சூனியமோ இப்பிடி என்ர குடும்பத்தை ஆட்டிப் படைக்குது' என்று புலம்பினள்.
செய்வினையாம் குனியமாம்? வேப்பிலையும் பூசாரியும் குறைவில்லையே ஊரில் கெளரி மெளனமாய் நின்று கொண்டு எல்லாப் பேச்சையும் எல்லோர் நடவடிக்கையும் கவனித் தாள்,
செல்வராசா குடும்பம் வேடிக்கை பார்க்க வந்திருந்தது.
மாணிக்கவாசகமும், சாரதாவும் ஓடி வந்தார்கள்.
ஒருபடியாக அண்ணுவையும் மரகத்தையும் வெளியே எடுத்தார்கள் மரகதத்திடம் மூச்சுப் பேச்சில்லை.
குப்புறப் படுக்க வைத்து முதுகை யமர்த்தி கைகளை யுயர்த்திவிட்டு வயிற்றிலிருந்து தண்ணிரை வெளியேற்றப் பண்ணினர்கள்.
சங்கரன் சைக்கிளில் டொக்டரைக் கூப்பிடப் போயிருந் தான்.
**மரகதத்தை உடனே ஆஸ்பத்திரிக்குக் கொண்டு போக வேணும்" செல்வராசா சொன்னன்.
*நீ உன்ர வேலையைப் பார்" அண்ணு தோய்ந்து நனந்த தோற்றத்துடன் சீறிப் பாய்ந்தான் செல்வராசா விடம். -
ஊர் வேடிக்கை பார்த்தது. சண்டை வந்தால் ரசிப்பது பிழையா?
*உயிரோடு இருக்கும் போது இல்லாத அக்கறை என்னண்டு இப்ப வந்தது' செல்வராசாவின் குரலில் கிண்டல்,

wrogຕ່ລານີ້ பாலசுப்பிரமணியம் 333
*படுபாவி வாயைப் பொத்தடா' அண்ணு அதட்டி ஞன். இந்த அலாதியான நேரத்திற்கூட அவனுக்கு ஈவிரக்க மில்லாத கிண்டல்.
நேரம் ஒடிக் கொண்டிருந்தது. தலையில் அடிபட்டிருந்த தால் இரத்தமும் போய்க் கொண்டிருந்தது. அவளுக்கு உணர்வே வரவில்லை.
டொக்டர் வந்தார். ஊரும் திரண்டு நின்று கண்ணிர் வடித்தது. அண்ணு குனிந்திருந்து அவனின் உணர்வற்ற மனைவியின் முகத்தைத் தடவினன். மரகதத்தின் முகம் வெளுத்துப் போயிருந்தது.
உணர்வு வரவில்லை.
உயிரும் வரவில்லை.
பரிமளம் மாமி மெய் சிலிரிக்கக் கதறினுள். மாமா தன் மகளில் புரண்டு புரண்டு துடித்தார்.
பெரியப்பா பிரமை பிடித்துப் போயிருந்தார்.
ஆச்சி, அம்மா, பெரியம்மா, சாரதா, கெளரி, பூரணி புழுவாய்த் துடித்தார்கள்.
மரகதத்துடன் கதைத்திருந்த அந்த இரவு ஞாபகம் வந்தது.
மெல்லிய நிலவின் சுகத்தில் சோகத்துடன் அவள் சொல்லிய விடயங்கள் கெளரியின் காதுகளிற் கேட்டது போலிருந்தது.
அவளை வாழவிடாமல் செய்த சம்பிரதாயங்களுக்கு குடும்ப முறைகளுக்கு ஊர் பழக்க வழக்கங்களுக்குத் தலை வணங்கியவர்கள், இன்று இவள் மரணத்துக்கு முதலைக் கண்ணீர் வடித்தனர்.
தங்களின் சுய தேவைக்ளுக்காக-பதவி ஆசைக்கு, பட்டத்துக்குக் கெளரவத்துக்கு மற்ற மனிதர்களின்

Page 172
334 தில்லையாற்றங்கள்ர்
வாழ்க்கையை அநியாமம் பண்ணுபவர்கள் ஆடு நனைய அழுத ஒநாய்யகளாய் ஒப்பாரி வைக்கிருர்கள்.
அண்ணு எழுந்து போனன். அவன் பின்னல் கெளரி பின் தொடர்ந்தாள்.
தென்னம் குந்தியிற் குந்தி இருந்து குலுங்கிக் குலுங்கி அழுதான். ஆறுதல் சொல்லத் தெரியாமல் அவனருகில் சேர்ந்திருந்து அழுதாள் கெளரி.
பின்னேரத்துக் கிடையில் பத்மநாதன் வந்தான்.
ராமநாதன் வாத்தியார் என்ன சொல்லி மற்றவர்களை ஆறுதல் படுத்துவது என்று தெரியாமல் துடித்தார்.
அவர்களின் ஊரில் இதுவரைக்கும் தற்கொலை செய்து சாகவில்லை. இதுதான் முதல்தரம் யாரும் இப்பிடி அநியாயமாய்ச் செத்துப் போனர்களா?
கிராமத்தில் நடக்கும் அநியாயத்துக்கு மரகதம் பலி யாகிப் போனள்.
அண்ணுவின் வாழ்க்கை அநியாயமாகி விட்டது.
மரகதம் போன்ற பெண்களை-வலிமையற்ற பெண் களைச் சமுதாயம் எப்படி நடத்துகிறது என்பதைப் பார்க்க பயமாக இருந்தது கெளரிக்கு.
வாழ்க்கை ஒரு குழப்பமான பிரயாணம். சந்திக்கும் மனிதர்கள் பெரும்பாலான வேலைகளின் பொல்லாதவர் களாக இருக்கிருர்கள். நல்லவர்களும் இல்லாமல் இல்லையே. மரகதத்தை அவள் வாழ்ந்தபோது நடைப் பிணமாக்கிய பெரிய மனிதர்கள் அவளின் பிணத்தைச் சுமந்து கொண்டு போனுர்கள்.
அவர்களின் ஊரே அதிர்ச்சியால் பேலிதத்துப் போயி ருந்தது, இரண்டு மாதங்கள் ஒன்ருய்ச் சீவித்து இரண்டு

T6gsia f பாலசுப்பிரமணியம் $35
வருடங்கள் பிரிந்திருந்த அண்ணு மரகதத்தின் பிணத்தைப்
பார்த்துப் பார்த்துக் குலுங்கி குலுங்கி அழுதான்.
"ஆண்டாண்டு தோறும் அழுது புரண்டாலும்
மாண்டார் வருவாரோ மாநிலத் தீர்"
என்று பாடினர் சாமியார்.
அழுதார்கள், புரண்டார்கள், அவளைப்பற்றி எத்தனை யோ கதை சொன்னர்கள் சொந்தக்காரரும் ஊர் மக்களும்.
பரிமளம் மாமி பைத்தியக்காரி போல் ஏதோ சொல்லிச் சொல்லிப் புலம்பினள். எந்தப் பாவி செய்த சூனியமோ என்று ஆச்சி சொல்லிச் சொல்லியழுதாள். சூனியத்திலும் பேய் பிசாசுகளிலும் ஆச்சிக்குப் பெரிய நம்பிக்கை. அவைப் பற்றியே சொல்லிக் கொண்டிருந்தாள். ஆச்சிக்குத்தான் யாரோ சூனியம் செய்து விட்டார்களோ என்றிருந்தது.
செத்த வீட்டு எட்டு நாட்கள் சடங்குகள் நடந்து முடிந்தன.
சொந்தக்காரர்கள் சோகம் தவிர்த்து கதைத்துப்பேச முற்பட்டார்கள். பெரியப்பாவைத் தான் கனபேர் பிழை சொன்னர்கள்.
பெரியவர்களின் பிடிவாதத்தால் இவர்கள் வாழ்க்கை அநியாயமாகி விட்டது என்று அண்ணவிலும் மரகதத்திலும் பரிதாபப்பட்டார்கள்.
"என்ன செய்தாலும் எங்கட பிள்ளபளுக்கு இப்ப்டி அநியாயம் நடக்க விட் மாட்டம்" என்று பெண்ணைப் பெற்றவர்கள் சொன்னர்கள்.
மரகதத்தின் மரணத்தின் பின் யாரும் கெளரியிடம் கல்யாணம் பற்றிக் கதைக்கவில்லை.
அண்ணு பெரும்பாலும் மெளன சாமியாராகி விட்டான்

Page 173
336 தில்லையாற்றங்கல்ர்
முப்பத்தி ஓராம் சடங்கு முடிந்த அடுத்த நாள் அதி காலையில் கெளரி முகம் கழுவப் போன போது அண்ணு
கிணற்றடியில் நிற்பது தெரிந்தது.
அவன் முகத்தை இவள் நேரடியாகப் பார்க்க முடியா தளவு சோகம்.
**தங்கச்சி, யாருக்காகவும் உன்ர வாழ்க்கையை நாச மாக்கிப் போடாதே." அண்ணு இவளைத் தங்கச்சி என்று கூப்பிடுவது குறைவு. கெளரி என்று தான் பெரும்பாலும் கூப்பிடுவான்.
இன்று அவன் தங்கச்சி என்று கூப்பிட்டதும் அவள் பாசத்துடன் அவனைப் பார்த்தாள்.
**இந்த உலகம் மிகப் பொல்லாதது. பெலவீனமாய் இருந்தால் பிணமாக்கிப் போடும். வாழ்க் கை யே போராட்டம் தான். ஆணுல் நயவஞ்சகர்களை எதிர்த்துப் போராடுவதுலே இல்லை' அவன் தத்துவம் பேசினன். அவள் மெளனமாய்க் கேட்டுக் கொண்டிருந்தாள். அந்தக் காலைத்தான் அவள் அவனைக் கடைசியாய்க் கண்டது. அதன் பின் அவனைக் காணவே இல்லை.
ஊரை விட்டுப் போய்விட்டதாகப் பெரியம்மா அழுத படி சொன்னுள்.
சாமியாராகப் போய் விட்டதாகச் சொன்னர்கள். பத்மநாதன் அடிக்கடி வந்தான் பெரியம்மாவைத் தேற்ற,
8
கலேம் ஓடிக் கொண்டிருக்கிறது. மூன்று வருடங்கள்
ஓடிவிட்டன. கெளரி இப்போது தான் ஆசிரிய பயிற்சிக் கலாசாலைக்கு எடுபட்டிருக்கிருள்.

ராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம் 33?
பெரிய சந்தோஷம். ஆச்சி பெருமூச்சு விட்டாள். செல்வராசாவுக்கு ஆலையடி வேம்பிலிருந்து ஒரு அழகான பெண்ணைச் செய்து வைத்தார்கள். ஏதோ சண்டை அடுத்த கிழமையே பிரிந்து விட்டார்கள். அண்ணு வுக்கும் மரகதத்துக்கும் செய்த பாவம் என்று ஊரார் கதைத்துக் கொண்டார்கள்.
பூரணிப் பெட்டை முழுநிலவு போல் அழகுச் சிலையா யிருக்கிருள். சங்கரன் பூரணிக்குக் காதல் கடிதம் எழுதிப் பெரியப்பாவிடம் அகப்பட்டுக் கொண்டான்.
சாரதாவுக்கு இரண்டு குழந்தைகள். மட்டக்களப்பிற் சீவியம். குழந்தைகளைச் சினிமாப் பாட்டில் தாலாட்டிக் கொண்டிருக்கிருள்.
ஆசிரிய கலாசாலைப் பயிற்சி தொடங்க முதல் கெளரி ஒரு நாள் ஆச்சியைக் கூட்டிக் கொண்டு மட்டக்களப்பு ஆஸ்பத்திரிக்குப் போனள். ஆச்சிக்கு இருந்த மாலைக் கண் இப்போது பெரிய மோசம். கிட்டத்தட்டக் குருடுதான். இரவில் ஒன்றும் தெரியாது. வாழை மரத்தில் கள்ளன் ஏறிப் படுத்திருப்பதாகக் கனவு கண்டோ கற்பனை செய்தோ புலம்புகிருள்.
அவளைக் கண் வைத்தியரிடம் காட்டக் கொண்டு போன போது மட்டக் களப்பு ஆஸ்பத்திரியில் தற்செயலாகப் பத்ம நாதனைச் சந்திக்க வேண்டி வந்தது. கமலத்தைப் பார்த்து விட்டு வருகிருணு?
யோசித்துக் கொண்டிருக்கும் போது கமலாவே வந்து சேர்ந்தாள். கமலாவோ பத்மநாதனே கெளரிக்கு நேரடி யாகச் சொல்லத் தேவையில்லை. அவர்கள் உறவைப் பற்றி,
அது ஊரெல்லாம் அடிபடுகிறது. பத்மநாதனின் களுக்கென்ற சிரிப்பும் காந்தம் போல வசீகரமான கண்களும் கெளரிக்கு வாழ்க்கை முழுதும் ஞாபகத்திலிருக்குமென்று அவனுக்குத் தெரியும்.
நெஞ்சில் நெருஞ்சி முள் ஏறிய மாதிரி வேதனை. அதைக் காட்டிக் கொள்ளவில்லை.
22-ست.

Page 174
$38 ܢ தில்லையாற்றங்கர்ை
கமலம் தன்னுடைய "குவார்டசுக்கு' இவர்களைத் தேத் தண்ணீர் குடிக்க வரச் சொல்லிக் கேட்டாள்.
ஆச்சி கக்கூசிக்கும் கமலம் குசினிக்குத் தேத் தண்ணி போடவும் போன போது கெளரியும் பத்மநாதனும் தனித்து விடப் பட்டார்கள்.
அவனை நேரடியாகப் பார்க்காமல் தினகரன் பத்திரிகை யில் பார்வையை பதித்தாள்.
**நானும் கமலாவும்." அவன் தயங்கித் தயங்கிப் பேச்சைத் தொடங்க அவள் நிமிர்ந்து பார்த்தாள். இருவர் கண்களும் முட்டிக் கொண்டன.
அவனை நேரடியாகப் பார்த்தாள். எத்தனையோ ஆண்டுகளுக்கு முன் கெளரியும் கமலமும் அவனுக்கு மஞ்சள் நீர் ஊற்றியதும், பின்னர் பரிபூரண நிலவொளியில் அவன் இவளைப் பின் தொடர்ந்து வந்ததும் ஞாபகம் வந்தது. t
எவ்வளவு அழகான கண்கள், எவ்வளவு வசீகரமான சிரிப்பு. அவள் கண்களில் நீர் முட்டுவவைத் தடுக்கப் பார்வையைத் தாழ்த்திக் கொண்டாள்.
கெளரி.." அவன் என்ன சொல்ல வாயெடுத்தான் என்று அவளுக்குத் தெரியவில்லை.
* தயவு செய்து ஒன்றும் சொல்ல வேண்டாம்" அவள் குரல் தழுதழுத்தது.
என்ன சொல்ல யோசித்தான் என்பதை அவள் கேட்டு ஒன்றும் பிரயோசனமில்லை.
அவன் அவர்களின் ஊருக்கு வந்தது அவளுக்கு ஞாபகம் வருகிறது.
அயலூரான் என்று அவள் முதல் முதல் கதைத்த இளைஞன் அவன். அவர்களுக்குத் தெரியாத அநுபவங் களுக்குக் காரணமாக இருந்தவன் அவனும் அவன் தமயன் ராமநாதன் வாத்தியாரும்.
மரகதம் மரணம் ஊரையே உலுக்கியது போல ராமநாதன் வாத்தியாரையும் உலுக்கியது.

rrogalo Rufi uradakůArnarflub 389)
*தர்மம் கெட்ட பழைமைக் கட்டுப்பாடுகள். அவை களைத் தங்களுக்காகப் பிரயோசனப்படுத்தும் தலைவர்கள் மறையும் வரை தமிழர்களின் வாழ்வு உருப்படாது" ராமநாதன் வாத்தியாரின் குரல் துக்கமாயிருந்தது.
மரகதத்தின் மரணத்தால்-அண்ணுவின் பிரிவால், சாரதா மட்டக்களப்புக்குப் போயிருந்ததால் என்பன பல காரணங்களால கெளரி சோர்ந்து போயிருந்தாள். ராமநாதன் வாத்தியாரும் மனைவியும் மாறுதலில் போவதாக இருந்தார்கள். இனி அவர்களை எங்கே காணப் போகிருள்.
அவர்கள் வீட்டுக்கு அடிக்கடி போகத் தொடங்கினுள். சில வேளை பத்மநாதனைக் காணுவாள்.
இவள் அவளுடன் அன்பாயிருந்த அண்ணு, சாரதா, மரகதம் எல்லோரையும் பிரிந்து தனிமைப் பட்டு விட்டாள் என்ற பரிதாபம் அவளுக்கு.
அண்ணுவைப் போல அவனும் சில புத்தகங்கள் கொண்டு வந்து தந்தான். **வால்காவிலிருந்து கங்கை வரை" என்ற புத்தகத்தைக் கொண்டு வந்து தந்தான்.
ராமநாதன் வாத்தியார் பார்த்து விட்டு, ‘என்ன பத்மநாதன் உனக்கு அரசியல் படிப்பிக்க வெளிக்கிருனே"' என்று கேட்டார்.
சோவியத் வார வெளியீடுகள் வாத்தியார் வீட்டில் கண்டிக்கிருள்.
சமத்துவம், பொதுவுடைமை என்பன போன்றவற்றை புத்தகத்திற் படித்தாள். N
அந்த வார்த்தைகளுக்கு எதிர்மாருய் இயங்கும் தன் கிராமத்தையும் அப்படி அந்தக் கிராமத்தை இயக்கும் பெரியப்பா போன்ற பழைமை வாதிகளையும் ராசநாயகத் தார் போன்ற புது முதலாளிகளையும் 'சூனியம்' செய்து (அப்படித்தான் ஆச்சி சொல்வாள்) அழிக்க வேண்டும் என்று நினைப்பாள். அதைவிட வேறு விதமான புரட்சியும் ஒன்றையும் அவளுக்குத் தெரியாது. ܫ
பத்மநாதன் “அன்னை' என்ற புத்தகம் கொண்டுவந்து தந்தான். படிக்க மனம் கசிந்தது. ரஷ்யரின் வாழ்க்கை

Page 175
40 தில்லயாற்றங்கரை
கஷ்டம், போராட்டம் என்பன பற்றியது. தமிழில் நன்முக மொழி பெயர்த்திருந்தார்கள்.
தங்கள் ஊரிலும்தான் எத்தனையோ கஷ்டங்கள் வருகிறது. யார் மாற்றுவார்கள்? எப்படி மாறும்!
எப்படிக் கதை என்று வாத்தியார் கேட்டார். அவள் தன் மனதில் வந்ததைச் சொன்னுள். *"கடவுள், கலாச்சாரம், மொழி, பண்பாடு என்று எத்தனையோ விடயங்களைச் சொல்லிப் பதவி ஆசை யுள்ளவர்கள் பதவியைக் காப்பாற்றப் பார்க்கிறர்கள். அதே நேரம் ஏழ்மை, வறுமை, பெண் அடிமை என்பன வற்றைப் பற்றி ஒன்றும் சொல்கிருர்களில்லை. இதெல்லாம் எப்போது மாறும்' அவளுக்குச் சரியான கேள்வியே எப்படி கேட்பது என்று தெரியாது.
புத்தகத்தில் எழுதியுள்ள சுரண்டல் வாதிகளின் அவதாரத்தை அவள் ஊரில் பெரியப்பா, ராசநாயகத்தார், செல்வராசா என்ற பெயரிற் காண்கிருள். அவர்களை எதிர்க்க முடியாமல் மரகதம் செத்துப் போய் விட்டாள், அண்ணு ஊரைவிட்டுப் போய் விட்டான்.
அவர்களை எதிர்த்துக் கொண்டு சாரதா தனக்கு ஏற்ற வாழ்க்கையைத் தேடிக் கொண்டு போய் விட்டாள். கெளரி அவர்களை எதிர்த்த படியே இருக்கிருள்.
அநியாயத்தை எதிர்க்க நினைத்தால், நியாயம், தர்மம் அதுதான் என்று நினைத்தால் எதிர்க்க நினைத்தவர்கள் வெற்றியாளர்கள் என்றுணர்ந்தாள்.
ராமநாதன் வாத்தியார் வந்திருக்கா விட்டால் அவர் களின் ஊரில் புதுப் பாடசாலை திறந்திருக்க முடியாது. பெண்கள் படித்திருக்க முடியாது. கெளரி ஆசிரியையாக வந்திருக்க முடியாது. சின்னத் தம்பி போன்ற உணர்ச்சிக் கவிஞர்களால் கொம்யூனிஸ்ட் வாத்தியார் கடவுளுக்கு எதிரானவர் என்று வசை பாடப் பட்டவர் அந்த ஊருக்கு வந்திருக்கா விட்டால் கெளரிக்கு இப்போது இரண்டோ மூன்று குழந்தையாயிருக்கும். அவர்கள் பெண்களாயிருந் தால் அவர்களும் மேற்படிப்பு படிக்க முடியாமல் அவுரோடு

ndgevauf unadsüMyubsfluh 34t
வாழ்க்கை நடத்தி உலக்கை, உரல், சுளகு, பெட்டியுடன் அநுபவங்களைப் பிணைத்திருப்பார்கள்.
ராமநாதன் வாத்தியார் பெட்டிகளைத் தூக்கிய போது கெளரி அழுதாள். அப்பாவுடன் அரசியல் கதைக்க இனி யார் வருவார் என்று நினைத்தாள். தமிழரசுக் கட்சி அரசாங்கத்துடன் சேர்ந்து மந்திரி பதவியும் எடுத்துக் கொண்டது.
சிறிமா சாஸ்திரி ஒப்பந்தத்தின் படி இந்தியத் தமிழர் நாட்டை விட்டு வெளியேறிக் கொண்டிருக்கிருர்கள். சிங்கள மொழி படிக்கா விட்டால், சிங்களம் எஸ்.எஸ்.சி. பாஸ் பண்ணுவிட்டால் 'பிரமோஷன்" இல்லை என்று சொன்னதால் ஆங்கிலம் படித்துப் பெரிய உத்தியோகத்தி லிருந்த மத்திய வர்க்கம் நாட்டை விட்டு இங்கிலாந்து அமெரிக்கா என்று போய்க் கொண்டிருக்கிறது.
தமிழரசுக் சட்டத்தரணிகள் தங்கள் முதலாளிகளுக்கு இறக்குமதி, ஏற்றுமதியில் கோட்டா வாங்கி கொஞ்ச லாபம் பெற அரசாங்கத்தை வால் பிடிக்கவும், தங்களுக்குத் தெரிந்தவர்களுக்கு உத்தியோகம் வாங்கி கொடுக்க அரசாங்க மந்திரிகளைப் பந்தம் பிடிப்பதாகவும் ராமநாதன் வாத்தியார் தமிழரசுக் கட்சிக் காரரைத் திட்டிக் கொண் டிருந்தார்.
கல்லோயா, கந்தளாய், வன்னில் பகுதிகளில் சிங்களக் குடியேற்றம் கட்டுப் பாடின்றி நடந்து கொண்டிருந்தது* தமிழரசுக் கட்சி அதைப் பற்றிப் பேசவில்லை,
**அரசியலில் ஈடுபட்டவர்கள் மக்களின் விருப்பு வெறுப்பு மக்களின் அபிப்பிராயம் என்பனவற்றிற்கு மதிப்புக் கொடுத்தால் தங்கள் சுயநலத்துக்காக அரசியலைப் பாவித்தால் இந்தக் காவாலிகளுக்கும் வயிற்றுப் பிழைப்புக் காகக் களவெடுக்கும் கள்ளர்களுக்கும் என்ன வித்தியாசம். வறுமைக்காகத் திருடும் அந்தக் கள்ளர் மன்னிக்கப்பட வேண்டியவர்கள். மக்கள் பெயரைச் சொல்லி மக்களின் வாழ்க்கையை நாசமாக்கும் அந்த அரசியல் வாதிகளை அழிக்க வேண்டும். டிக்கன் மக்களாக நடத்தும் அரசாங்கம்

Page 176
$42 தில்லையாற்றங்கரை
உருவாக உழைக்க வேண்டும்' ராமநாதன் வாத்தியார் வழக்கம் போல் அவருக்குப் பிடிக்காத அரசியல் வாதிகளை (குறிப்பாகத் தமிழரசு வாதிகளைத்) திட்டினர்.
கெளரி வழக்கம் போல் குழம்பிப் போயிருந்தாள். ராமநாதன் வாத்தியார் வந்த நாட்களில் மார்க்ஸ் லெனின் என்றெல்லாம் கதைப்பார். அவர்கள் நல்ல மனிதர்கள் என்றும் சொல்வார்.
அவள் பாவம் அவர்களைப் பற்றி ஒன்றும் தெரியாது. (தெரிந்தது கொஞ்சம் தான்) சோவியத் பேப்பர்கள் வாத்தியார் வீட்டில் கிடைக்கும்.
பொதுவுடைமை ஆட்சியில் வறுமையற்றுவாழும் ரஷ்ய மக்களின் சிரித்த முகத்தையுடைய படங்களைக் கண்டதும் எப்போது எங்களுார் மக்கள் இப்படிச் சிரிப்பார்கள் என்றி ருக்கும் அவளுக்கு.
ஊர் மக்களிடம் அதிக வயலில்லை. காசில்லை. பெரியப் பாவிடமும் ராசநாயகத்தாரிடமும்தான் இருக்கிறது.
அவர்களைக் கடவுள் அழிக்க வேண்டும் என்று மனதுக் குள் பிரார்த்தனை செய்வாள்.
பத்மநாதனுடன் கதைக்கும் போது இவனுடைய அரசியல் அப்பாவித்தனம் அவளைச் சிரிக்கப் பண்ணும்.
கள்ளம் கபடமற்ற அவளுடைய சுபாவம் அவனுக்கு எப்போதும் பிடிக்கும். சுடச்சுட மறுமொழி சொல்வதும் புடிக்கும். அவள் கதைப்பதை அவனுடைய காந்தக் கண்கள் ரசிக்கும். அவனுடன் சிரித்துப் பழகாதே என்று ஆச்சி சொல்லிக் கொண்டிருந்தாள். கெளரியின் சாத்திரப்படி அயலூரானைத்தான் செய்வாள் என்பதைக் கிழவி மறக்க
ராமநாதன் வாத்தியார் போவதற்கு முதல் நாள் நல்ல முழு நிலவு.
ஆச்சி, அம்மா, அப்பா எல்லோரும் பாயில் உட் கார்ந்து ஏதோ கதைத்துக் கொண்டிருந்தார்கள். பாலிப் போடிக் கிழவன் வெறியில் பாடுவது ரோட்டிலிருந்து கேட்டது. தாங்கள் காலையில் வெளிக்கிடுவதாகச் சொல்லி

ராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம் - 343
விட்டுப் போக ராமநாதன் வாத்தியார் மனைவி குழந்தைகள் பத்மநாதன் எல்லோரும் வந்தார்கள்.
நீண்ட நேரம் பேசிக் கொண்டிருந்து விட்டுப் புறப் பட்டார்கள்.
போகும் போது ஆச்சி, அப்பா, அம்மா எல்லோரும் வாத்தியார் குடும்பத்துடன் ரோட்டுவரைக்கும்போனர்கள். அவர்களுடன் போகாமல் பின்னல் போய்க்கொண்டிருந்த பத்மநாதன் **கெளரி"' என்று மெல்லக் கூப்பிட்டான். அவள் திரும்பிப் பார்த்தாள்.
முன்னல் போய்க் கொண்டிருந்தவர்கள் தட்டுவேலி மூலையால் மறைத்து விட்டார்கள். இவர்கள் இருவரையும் தவிர அந்த நிலவில் யாருமில்லை.
இவன் கெளரி என்று கூப்பிட்டபோது அவள் திரும் . பினுள். இரண்டு ஆண்டுகளுக்கு முன் நிலவில் அவனும் அவளும் சேர்ந்து வர செல்வராசா வம்பு கதைத்தது ஞாபகம் வந்தது.
என்ன என்பது போல் அவனைப் பார்த்தாள். **இது ஒரு நல்ல புத்தகம். வாசியுங்கோ'" அவன் புத்தகத்தை நீட்டினன். வாங்கிக் கொண்டாள். அவன் இன்னும் தயங்கினன். என்ன என்பது போல் அவள் பார்த்தாள். *புத்தகத்தில் ஒரு கடிதமிருக்கு' அவன் சொல்லிவிட்டு நடந்தான். அவள் ஒரு வினடி யோசித்தாள். வியர்க்கத் தொடங்கியது.
இஞ்சாருங்கோ' அவள் கூப்பிட்டாள். அவன் திரும்பிப் பார்த்தான். அவள் புத்தகத்தைத் திருப்பிக் கொடுத்தாள். வேண்டாம் என்பது போல் தலையை ஆட்டினள். அவள் கண்களில் நீர் வழிந்து கன்னங்களில் புரள நிலவு வெளிச்சம் அதில் பளபளத்தது.
அவளையணைத்து அந்த நீரைத் துடைக்கத் துடித்திருக் கலாம் அவன். அவள் புத்தகத்தை அவன் கையிற்திணித்து விட்டு ஓடினன். அவனைத் திரும்பிப் பார்க்கவேயில்லை,
இப்போது.

Page 177
344 தில்லையாற்றங்கரை
எத்தனையோ ஆண்டுகளுக்குப் பின் இன்னெருத்தியின் சொந்தமாகப் போகிற உரிமையில் கெளரி முன்னல் உட்கார்ந்திருக்கிருன்.
கமலா தேனீர் கொண்டு வந்தாள் ஆச்சி மூத்திரம் போய் விட்டு வந்திருந்தாள்.
தேனீரைக் குடித்துவிட்டு அவர்கள் வெளிக்கிட்டார்கள் பஸ்சுக்கா போகிறீர்கள்' அவன் கேட்டான். கமலம் டியூட்டிக்கு வெளிக்கிட்டுக் கொண்டிருந்தாள்.
ஆச்சி. 'ஓம் தம்பி பஸ்சுக்குத்தான் போறன்" என்று சொன்னுள்.
‘நானும் பஸ்சுக்குத்தான் போறன்' அவன் பின் தொடர்ந்தான் கமலம் வழியனுப்பினுள்.
மட்டக்களப்பு பஸ் ஸ்ரேசன் வரைக்கும் அதிகம் கதைக்கவில்லை. பஸ் ஸ்ரொப்பில் வைத்துக் கிழவிக்கு ஏதோ ஞாபகம் வந்தது. “சாரதா வீட்டு சாமர்த்திய வீட்டில் இந்தப் பையனுக்குத் தானே நீயும் கமலமும் மஞ்சள் தண்ணி ஊத்தினியள்' கிழவி ஒகோ ஒகோ என்று சிரித்தது.
மஞ்சள் எறிந்தவனுடன் மாங்கல்ய பலமாம்! ஊர் நம்பிக்கை கிழவிக்கு ஞாபகம் வந்திருக்கவேண்டும்.
அக்கரைப்பற்று பஸ் வந்தது. கிழவியும் கெளரியும் ஏறிக் கொண்டார்கள். அவன் போகப் போவது தாமரைக் கேணிக்கு. வேறு பஸ்சுக்குக் காத்து நிற்க வேண்டும். இவர் களின் பஸ்சின் ஜன்னலடியில் அவன் வந்து நின்றன்.
கெளரி ஜன்னலால் அவனைப் பார்த்தாள். அவனும் பார்த்தான். இருவர் மனத்திலும் எத்தனையோ பழைய சம்பவங்கள் நினைவு வந்திருக்கவேண்டும். அவள் கண்களில் நீர் முட்டியது. அவன் தோற்றம் நிழலாய்த் தெரிந்தது. பஸ் புறப்பட்டது. அவள் கண்களை அவசர அவசரமாய்த் துடைத்துக் கொண்டாள்.
ලීව්‍රව්ඨිට8ෂී


Page 178


Page 179
ராஜேஸ்வரி பாலசுப்பிரம ஈழத்து இலக்கிய பிர6ே ஒருவராவார்.
தற்போது லண்டனில் வரையில் 50க்கு மேற்பட் எழுதியுள்ளார். ஈழத் அக்கறை கொண்ட இவ நாவல் தமிழ் வாசகர்கள் பட்டிருந்தது. லண்டனில் களிலும் ஈடுபட்டு உழைத் யிலும் அதிக நாட்டம் கொ படை வீரர்களுள் ஒருவர இலக்கியத் துறையிலிருந்து அண்மையில் காலடி எடுத்
*தில்லையாற்றங்கரையி இரண்டாவது நாவலாகும் துள்ளதென இவர் கூறு இவரது சிறுகதைத் வரவுள்ளது.
 

ராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம்
இலங்கைமட்டக்களப்பு அக்கரைப்பற்று கிராமத்தைச் சேர்ந்த திருமதி ணியம், "புரட்சி'க்குப் பிந்திய
வசங்களுள் மனங்கொள்ளத் தக்க
ல் வசித்துவரும் ராஜேஸ் இது ட சிறுகதைகளும் 5 நாவல்களும் தேசிய இனப் பிரச்சினையிலும் ாது "ஒரு கோடை விடுமுறை"- மத்தியில் பரவலாக அறியப் பல சமூக சேவை நிறுவனங் து வரும் இவர், பெண் விடுதலை ண்டுள்ளதுடன் அதன் முன்னணிப் ாகவும் செயற்பட்டு வருகிறார். து, திரைப்படத்துறையிலும் இவர் து வைத்துள்ளார்.
ல்.” நூலுருப் பெறும் இவரது தன்னைப் பெருமளவு பாதித் ம் இந்நாவலைத் தொடர்ந்து தொகுப்பொன்றும் நூலுருவில்
O