கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: அண்மைக்கால ஈழத்துச் சிறுகதைத் தொகுப்புகள்

Page 1


Page 2


Page 3

Critical Insights: Recent Collections of Shri Lankan Thamil Stories

Page 4

அண்மைக்கால
ஈழத்துச் சிறுகதைத் தொகுப்புகள்
கே. எஸ். சிவகுமாரன்
பத்தி எழுத்துக்களும் பல்திரட்டுகளும் வரிசையில் இது நான்காவது நூல். திறனாய்வுக் குறிப்புகள் அடங்கியது

Page 5
Title
Sub Title
Genre
Author
Rights
Author's Address
Date of Publication :
Printer
Price
Thiranaivu: Anmaikkala Eelaththu Chiru Kathaith Thohupukal
(Critical Insights: Recent Collections of Shri Lankan Thamil Stories)
: Pathi Eluththuhalum Pal Thiratuhalum (Column and Miscellaneous Writing - 4)
: Literary Criticism
: K. S. Sivakumaran
: Author's
: 21, Murugan Place,
Off Havelock Road, Colombo - 6
Sri Lanka. Telephone: 0094 - 1 - 587617
August 1, 1998
: YaSeen PrinterS
17/1, Hulftsdorp Street, Colombo - 12.
: 125/=

10.
ll.
l2.
பொருளடக்கம்
நூலாசிரியர் விளக்கமும் நன்றி நவிலலும் க. தணிகாசலம்
பிரம்படி
உடுவை தில்லை நடராஜா
நிர்வாணம்
அருண் விஜயராணி
பெண்மை
முஸ்லிம் மாதர் ஆராய்ச்சி செயல் முன்னணி
சுமைகள்
மாத்தறை ஹஸினா வஹாப்
வதங்காத மலரொன்று
சோ. ராமேஸ்வரன்
சுதந்திரக் காற்று
ராஜ பூரீகாந்தன்
காலச் சாளரம்
அ. முத்துலிங்கம்
திகட சக்கரம்
மு. பொன்னம்பலம்
கடலும் கரையும்
மாத்தளை சோமு
அவர்களின் தேசம்
புலோலியூர் ஆ. இரத்தின வேலோன்
புதிய பயணம்
iV
5
21
27
31
38
43
47
5O

Page 6
13;
14.
15.
16.
7.
8.
கோகிலா மகேந்திரன்
வாழ்வு ஒரு வலைப்பந்தாட்டம்
யோ. பெனடிக்ட் பாலன்
விபசாரம் செய்யாதிருப்பாயாக
யூ. எல். ஆதம்பாவா
காணிக்கை
நீர்வை பொன்னையன்
ust 605
திருக்கோவில் கவியுவன்
வாழ்தல் என்பது . . .
ரஞ்சகுமார்
மோக வாசல்
பின்னிணைப்பு
கே. எஸ். சிவகுமாரன்
- எழுதிய நூல்கள் - ஊடகத்துறை அனுபவங்கள் - கெளரவங்கள்
56
67
78
83
93
98
O2 O2
lO3

- அண்மைக்கால ஈழத்துச் சிறுகதைத் தொகுப்புகள்
நூலாசிரியரின் விளக்கமும் நன்றி நவிலலும்
அன்பார்ந்த வாசக நேயர்களுக்கு வணக்கம்.
ஈழத்து எழுத்தாளர்களின் சிறுகதைத் தொகுப்புகள் பல வெளியாகியுள்ளன. அத்தனை தொகுதிகளையும் படித்துப் பார்க்கும் வாய்ப்பு எனக்குக் கிட்டவில்லை. ஒரு சிலவற்றையே படித்துள்ளேன். அவை பற்றிய திறனாய்வுப் பார்வை சார்ந்த பத்திகளை 1962 முதல் பத்திரிகைகளிலும், சஞ்சிகைகளிலும் எழுதி வந்திருக்கிறேன். இவற்றுள்ளே, ஒன்பது கதைத் தொகுப்புகள், கதைகள் பற்றிய பத்தி எழுத்துக்கள், திறனாய்வுப் பார்வைகள் என்ற நூலிலும், நாற்பத்தெட்டு கதைத் தொகுப்புகள்/ கதைகள் தொடர்பான பத்தி எழுத்துக்கள், ஈழத்துச் சிறுகதைத் தொகுப்புகள்: திறனாய்வு என்ற நூலிலும் சேர்க்கப்பட்டுள்ளன.
பத்தி எழுத்துக்களும், பல்திரட்டுக்களும் என்ற தொடர் வரிசையில் அமைந்த நான்காவது தொகுப்பாகிய, திறனாய்வு: அண்மைக்கால ஈழத்துச் சிறுகதைத் தொகுப்பு க்கள் என்ற நூலிலே, 17 சிறுகதைத் தொகுப்புகள் பற்றிய பத்தி எழுத்துக்கள் சேர்க்கப்பட்டுள்ளன.
இந்தப் பத்தி எழுத்துக்கள் யாவும் திறனாய்வுப் பார்வை சார்ந்த பகுப்பாய்வுகள் தாம்.
இத்தொடர்வரிசையிலே, வேறு சில தொகுப்புக்கள் பற்றிய பார்வையும் இடம் பெறும். எப்பொழுது அவை வெளிவரும் என்று இப்போதைக்குக் கூற முடியாதிருக்கிறது. பத்தி எழுத்துக்களும் பல்திரட்டுக்களும் என்ற தொடர் வரிசையில், ஈழத்து நாவல்கள், மேடை நாடகங்கள், மற்றும் திரைப்படம், அறிவியல் போன்ற பல பொருள்கள்
İV.

Page 7
அண்மைக்கால ஈழத்துச் சிறுகதைத் தொகுப்புகள்
பற்றிய நூல்கள் வெளிவரும். ஏறக்குறைய 45 வருடங்களாக நான் எழுதியவற்றைத் தொகுத்துத் தருவதில் குறைந்தது இரண்டு நோக்கங்கள் நிறைவேற்றப்படுகின்றன எனலாம். ஒன்று: புதிய வாசகர்களுக்குப் பழைய / புதிய ஈழத்துப் படைப்புகள் பற்றிய ஆவண ரீதியான தகவல், மற்றும் திறனாய்வு சார்ந்த மதிப்பீடுகள் தரப்படுகின்றன. இரண்டு: காலக்கிரமத்தில் எனது பார்வைகள் எவ்விதம் வளர்ந்து வந்துள்ளன /மாற்றமடைந்துள்ளன என்று என்னை மதிப் பீடு செய்பவர்கள் அறிந்து கொள்ள வகை செய்யப் படுகின்றது.
எனது நூல்களைப் படிப்பவர்கள் பயன்பெறுவார்கள் என்பது எனது நம்பிக்கை.
இந்த நூல் வெளிவருவதிலும் தீவிர அக்கறை காட்டிய எழுத்தாளர் / இலக்கியப் பத்தி எழுத்தாளர் புலோலியூர் ஆ. இரத்தின வேலோனுக்கும், அச்சிட்ட சிறுகதை ஆசிரியர் / கலை இலக்கியப் பத்தி எழுத்தாளர் ரஞ்சகுமாருக்கும் மிக்க நன்றி. நூல் அழகாக வடிவம் பெற்றிருப்பதையிட்டுப் பெரு மகிழ்ச்சி.
இந்த வரிசையில் மூன்றாவது நூலாகிய ஈழத்துச் சிறுகதைத் தொகுப்புக்கள்: திறனாய்வு நேற்று (ஜூலை 30, 1998) வெளியாகியது. எனது மூத்தமகன் ரகுராமின் பிறந்த தினம் அதுவாகும். இன்று (ஒகஸ்ட் 1, 1998) வெளியாகும் இந்த நூலையும் ரகுராமுக்கும், அவருடைய துணைவியார் மிஷேலுக்கும் சமர்ப்பணம் செய்கிறேன்.
தங்கள் ஆதரவிற்கு மிக்க நன்றி.
கே. எஸ். சிவகுமாரன்
V

அண்மைக்கால ஈழத்துச் சிறுகதைத் தொகுப்புகள்
க. தணிகாசலம்
IfЛиђиц
1974க்கும் 1988க்கும் இடையில் எழுதப்பட்டு, யாழ்ப் பாண இலக்கியச் சிற்றேடாகிய தாயகம் பத்திரிகையில் பிரசுரமான கதைகளின் தொகுப்பு இது. இக்கதைகளை எழுதியிருப்பவர் நன்கு பிரபல்யம் பெறாத ஓர் அற்புதமான சிறுகதை எழுத்தாளர். "அற்புதம்' என்று கூறுவது ஏனெனில், ஆசிரியர் தாம் கூற வருவதைத் தெளிவாகவும் கலை யுணர்வுடனும் நேரடியாகவும் யதார்த்தமாகவும் கூறி விடுவதுடன், நமது சிந்தனைக்கும் உணர்வுக்கும் வேலை வைக்கிறார் என்பதனாலாகும். நம்மிடையே கீழ்த்தட்டு மக்களின் வாழ்க்கையைப் பிரதிபலிக்கும் ஏராளமான எழுத்தாளர்கள் இருக்கிறார்கள். ஆயினும் அவர்களுள்ளே க, தணிகாசலம் தனித்துவ ஆளுமை கொண்டவர் என்றே கூறவேண்டியுள்ளது. அவருடைய ஆளுமை எத்தகையது என்பதை விளக்க அவர் எழுதியுள்ள கதைகளை நாம் பரிசீலிக்க வேண்டும்.
தணிகாசலத்தின் கதைகள் என்ன கூறுகின்றன என்பதைப் பார்க்குமுன், முற்சார்பாக அவர் பற்றிக் கூறப் பட்டிருப்பவைகளையும் நாம் அவதானித்தல் வேண்டும்.
1 கே. எஸ். சிவகுமாரன்

Page 8
அண்மைக்கால ஈழத்துச் சிறுகதைத் தொகுப்புகள்
"எழுத்து என்பது இன்றைய சுரண்டலும் அடக்கு முறையும் கொண்ட தனிஉடமை சமூக அமைப்பை மாற்றி அமைப்பதற்குரிய சாதனங்களில் ஒன்று என்பதை மிக அடக்கமாகவே ஏற்றுக்கொண்டு அதற்காகவே தன் எழுத் தாற்றலைப் பயன்படுத்தி வருபவர் நண்பர் தணிகாசலம். இதை அவரது சிறுகதைகளுக்குள் புகுந்து தேடலை நடத் துவோர் இலகுவாக இனங்கண்டு கொள்ளலாம். வர்க்க சமுதாயத்தின் கேவலங்களையும் கோரத் தனங்களையும் புட்டுக்காட்டி அதன் ஊடாக லட்சோப லட்சம் மக்களின் துயர் நிறைந்த வாழ்வை முன்னிறுத்திக் காட்டும் போக்கு மட்டுமன்றி அத்தகைய சமூக அமைப்பை மாற்றி அமைப் பதற்கும் கட்டியம் கூறி நிற்பதே அவரது சிறுகதைகளின் சிறப்பம்சமாகும். (தேசிய கலை இலக்கியப் பேரவை)
கவிஞர், விமர்சகர், நாடகாசிரியர் இ. முருகையன் இத்தொகுப்புக்கு எழுதிய முன்னுரையில் என்ன அளவு கோல்களை வைக்கிறார் என்பதை அடுத்துப் பார்ப் போம்.
"பல கதைகள் வாழ்வின் மேற்பரப்புத் தோற்றங்களை மிகவும் பரும்படியாகப் பார்ப்பதுடன் நின்று விடுகின்றன. இவைகளெல்லாம் நடப்பியல் மெய்ம்மைகளைச் சித்திரிப்பன போலத் தெரிந்தாலும் அம்மெய்ம்மைகளைக் கூறுகளின் அகத் தொடர்புகள் பற்றியும், புறத்தொடர்புகள் பற்றியும், உள்ளோட்டங்கள் பற்றியும், வெளிவீச்சுக்கள் பற்றியும் நிதானமாய் நோக்கும் ஆற்றல் இல்லாதவை."
"ஆனால் தணிகாசலம் தந்துள்ள கதைகள் அப்படிப் பட்டவை அல்ல. நிகழ்ச்சிகளையும் மாந்தர்களையும்
கே. எஸ். சிவகுமாரன் 2

அண்மைக்கால ஈழத்தச் சிறுகதைத் தொகுப்புகள்
தெரிவு செய்யும் முறையிலே தான் இந்தக் கதைகளின் உள்ளொளி உற்பத்தியாகின்றது. .வகைமாதிரியான நிகழ்வு கள் வகைமாதிரியாக பாத்திரங்கள் - இவையே இவருடைய கலையாக்க நெறியின் உயிர்நிலைகள்,
"இலங்கைத் தமிழ்ச் சமூகத்தின் அண்மைக்கால வரலாற்றுச் சூழலிலே தோய்ந்து நின்று எழுதப்பட்ட இக்கதைகளின் பொருளுருவும் மொழியுருவும் அன்பர் தணிகாசலத்தினை நல்லதொரு சிறுகதை எழுத்தாளராக நமக்கு அறிமுகம் செய்து வைக்கின்றன. நிகழ்கால இலங்கைக் கலைஞன் ஒருவனின் வேள்வியிலே பிறப்பெடுத் தவை."
ஒரு சிறு கிராமத்தின் மக்கள் அனைவரும் ஒரு கதையின் பாத்திரங்களாக வரும் "அற்புதத்தை' தணிகாசலம் நிகழ்த்திக் காட்டியிருக்கிறார். ஒரு பாதை திறக்கப்படுகிறது என்ற கதையை ஒரு துண்டு தொலை நாடகமாகப் படம் பிடிக்கலாம். அவ்வளவு தத்ரூபம். அது மாத்திரமல்ல - மண்வாசனை, கிராமியப் பேச்சுமொழி, கூட்டு மனப் பான்மை, புதிய அணுகல் முறையான சமுதாய விழிப் புணர்வு அத்தனையையும் இக்கதையிலே கொண்டுவந்து விடுகிறார் ஆசிரியர்.
இனரீதியான பகைமை உணர்ச்சிகளும், மனிதத்துவம் என்ற சக்திமிகு தாக்கத்தினால் கரைந்துவிடுவதையும், இனத்தவர் என்று சொல்லத் தக்கவர்கூடத் தமது வர்க்க உணர்வைக் காட்டுவதையும் ஆசிரியர் நலுங்காமல், குலுங்காமல் உறவுகள் தெரிகின்றன என்ற கதையில் காட்டுவது பாராட்டத்தக்கது.
3 கே. எஸ். சிவகுமாரன்

Page 9
அண்மைக்கால ஈழத்தச் சிறுகதைத் தொகுப்புகள்
எதிர்காலத்துக்கான நம்பிக்கையோடு ஒழுங்குபடுத்தி எழுப்பப்பட்ட சயந்தனின் வாழ்க்கை, கஷ்டங்கள் நிறைந்த தானாலும் ஒரு புதிய நாகரிகத்திற்கே கருவாக வளர்வதை மூர்த்தி உணர்கிறான்' என்ற நல்நோக்குடன் "மண்ணின் மைந்தர்கள்" என்ற கதையை எழுதும் தணிகாசலத்தை ஓர் அச்சுக் கோப்பாளராகக் கருத முடியாதிருக்கின்றது. அவர் விமான நிலையச் சூழலை கொண்டு வருவது ஆச்சரியமாய் இருக்கின்றது.
கூலிக்குழப்பம் கதை மூலம் ஒரு பாத்திரம் அனுபவ ரீதியாக முதிர்ச்சியடைவதை, அப்பாத்திரத்தின் வாயிலா கவே ஆசிரியர் கூறுகிறார்
'இனிச் சும்மா இருக்கேலாது, சரியாய் சிந்தித்துச் செயற்பட்டால்தான் பிரச்சினையள் எல்லாம் தீரும் என்று நிதானமாகக் கூறுகிறேன்.'
மற்றுமொரு "பொஸிட்டிவ் கதை மழை. இங்கும் கூட்டு முயற்சி பயனளிப்பதையும், 'அந்த இழப்புகளின் மத்தியிலும் அவர்களிடையே ஒரு புத்துணர்வு பிறக்கின்றது.' என்பதும் உணர்த்தப்படுகின்றது.
என்னைப் பொறுத்தமட்டிலே ஏனைய கதைகளைப் போலன்றி, சிவந்த பாதையில் என்ற கதை சிறப்பாக அமையவில்லை. சிறிது அலுப்புத் தட்டுகிறது. கதை முற் பகுதி உடனிகழ் காலச் சித்திரிப்பாக அமைந்தாலும் பின் னோக்காக அமைந்த பகுதி, முற்று முழுதாகக் கதை ஆரம் பத்துடன் தொடர்புடையதாய் அமையவில்லை.
கல் என்ற கதையின் ஊடாக ஆசிரியர் தமது முதிர் ச்சியும் பக்குவமும் அடைந்த போக்கையும் காட்டுகிறார்.
கே. எஸ். சிவகுமாரன் 4

அண்மைக்கால ஈழத்துச் சிறுகதைத் தொகுப்புகள்
"மெல்ல மெல்லப் பாயும் தண்ணி கல்லையும் ஊடுருவிப் பாயும்' என்பர். அதுபோல, அனுபவரீதியாக உணர்வு பெற்று இயங்க வகை செய்கிறார் ஆசிரியர். "அவன் கற்றறிந்த உண்மைகள் அவனது வாழ்க்கையின் அனுபவங் களூடாகப் பரீட்சிக்கப்பட்டு அவனது வாயிலிருந்து சமுதாய
அமைப்பினை மாற்றும் போர்க்குரலாக வெளிவருகிறது என்கிறார் ஆசிரியர்.
தெற்கு நோக்கி என்னும் கதை தமிழ்ப் பிரதேசத்து மக்கள் அனுபவித்து வரும் சொல்லொணாத் துயரங்களிற் சிலவற்றை எடுத்துக் கூறுவதுடன், யதார்த்த நிலைமை களையும் கோடிட்டுக் காட்டுகிறது.
விடுதலை இயக்கங்கள் என்ற பெயரிலே, சரியான பார்வையிழந்த சில இளைஞர்கள் சிந்திக்காது தன்னிஷ்டப் போக்கில் நடந்து எல்லாவற்றையுமே குழப்பியடிப்பதைத் துணிகரமாக வேலிகள் என்ற கதையில் ஆசிரியர் சுட்டிக் காட்டியிருப்பது வரவேற்கத் தக்கது. "எதிரிக்கு எதிராக மக்களை அணிதிரட்டுவது மட்டுமல்ல, போராட்டத் திசைகளை நேர்படுத்தி சீராக்கவும் அது போன்ற ஊர் வலங்கள் தொடர்கின்றன. மக்கள் மென்மேலும் விழிப்படை கின்றனர்' எனக் கதை முடிவதும் அவதானிக்கத்தக்கது.
அகதி, நாய்களோ, பிரம்படி, நல்ல நாள் ஆகியன
நிகழ்காலத்தின் தரிசனங்கள். இவை கதைகள் அல்ல, வாழ்க்கையின் சொற் சித்திரிப்புகள்.
தினகரன் வாரமஞ்சரி : 05-11-1984
5 கே. எஸ். சிவகுமாரன்

Page 10
அண்மைக்கால ஈழத்தச் சிறுகதைத் தொகுப்புகள்
உடுவை தில்லை நடராஜா LijililI/TOUTLib
உடுவை தில்லை நடராஜா தமது இந்தச் சிறுகதைத் தொகுதி மூலம் எம்மைப் பழைய அனுபவங்களை இரை மீட்ட உதவுகிறார். அதாவது கொழும்பிலும், யாழ்ப்பாணத்திலும் தமிழர் வாழ்க்கை முறைகள், பயன் மதிப்புகள், எழுத்து உத்திமுறைகள் போன்றவை எவ்வாறு இருந்தன என்றறிய இந்த எழுத்தாளரின் ஆக்கங்கள் உதவுகின்றன.
நிர்வாணம் என்ற இத்தொகுப்பில் பன்னிரெண்டு
கதைகள் இடம் பெற்றுள்ளன. 1967ஆம் ஆண்டிற்கும் 1976ம் ஆண்டிற்கும் இடைப்பட்ட காலத்தில் இவர் பத்திரிகைகளில் எழுதிப் பிரசுரித்த கதைகளே இத் தொகுப்பில் இடம்பெற்றிருக்கின்றன.
இந்தத் தொகுப்பிற்கு நவீன பாணியில் சித்திரம் வரைந்திருப்பவர், பல்கலைத் திறனாற்றல் மிக்க பூரீதர் பிச்சையப்பா.
உடுவை தில்லை நடராஜா தமது விடாமுயற்சியாலும் திறன்களை ஒன்று திரட்டிச் செயற்படுத்தியது காரண மாகவும் படிப்படியாக உயர்ந்து இன்று இலங்கை நிர்வாக சேவையில் உயர் பதவி வகிக்கின்றார்.
கே. எஸ். சிவகுமாரன் 6

அண்மைக்கால ஈழத்துச் சிறுகதைத் தொகுப்புகள்
'தாகம்' என்ற ஏட்டின் ஆசிரியரான மைக்கல் கொலின் கூறியிருப்பது போல, "எந்த இஸம்களுக்குள்ளும் மாட்டிக் கொள்ளாதவர். மானுட நுண்ணிய உணர்வை மிக அழகாகப் படம் பிடிப்பவர்.'
அறுபதுகளின் பிற்பகுதிக்கும் எழுபதுகளின் முற்பகுதி க்குமிடையில் நிலவி வந்த இந்நாட்டுச் சமூக, பொருளாதார, தார்மீகச் சூழல்களுக்கு உடுவை தில்லை நடராஜாவும் உட்பட்டார் என்பதற்கு ஆதாரமாக அவர் கதைகளும், எழுத்து முறையும் காட்டி நிற்கின்றன.
இவர் நேரடியாகவே கதையைக் கூறுகிறார். நல்ல தார்மீகக் கருத்துக்களைக் கூறுவதே இவருடைய நோக்கம். "யாழ்ப்பாணம் தேவனர்', 'சொக்கன்' போன்ற சிரேஷ்ட எழுத்தாளர்களின் ஆளுமைக்குட்பட்டவர். எனவே அவர்கள் வலியுறுத்தும் விஷயங்கள் சில இவர் கதைகளிலும் படிந்து நிற்கின்றன.
உடுவை தில்லை நடராஜாவின் கதைகளில் இழைந் தோடும் நகைச்சுவையும் மெலியார் மீதான பச்சாதாபமும், மெல்லிடையார் போக்குகளைப் படம் பிடிக்கும் தன்மையும் குறிப்பிடத்தக்கன.
"வா சக் கட்டி' என்ற கதை மிகவும் எளிமையான விதத்தில் எழுதப்பட்டிருக்கிறது. இக்காலக்கதைகளைப் போன்று வண்ணமும் வடிவமும் பெறவில்லை என்று ஓரளவு குறையிட்டுக் கொண்டாலும், ஒரு சிறுவனின் ஆதங்கத்தின் வாயிலாகப் பெரியவர்களாகிய நமக்கும் சில படிப்பினைகளை ஆசிரியர் புகட்டுகிறார் எனலாம். பாவனைப் பொருள் நுகர்ச்சி அதிகரித்திருக்கும் சூழலிலே
7 கே. எஸ். சிவகுமாரன்

Page 11
அண்மைக்கால ஈழத்தச் சிறுகதைத் தொகுப்புகள்
விளம்பர உத்திகள் மேலிடம் பெறுவது தவிர்க்க முடியாதது தான். விளம்பரத்தினால் ஏமாற்றப்பட்ட தாழ்வுணர்ச்சி கொண்ட ஒரு பையனின் குணச்சித்திரத்தை ஆசிரியர் காட்டுகிறார்.
'காலம் காத்திருக்குமா" கதையில் சுயநலமிக்க ஓர் இளைஞனின் போக்கையும் அவன்மீது பாசங்கொண்ட தாயினதும் தங்கையினதும் மனோநிலையையும் ஆசிரியர் விளக்குகிறார்.
ஆசிரியர் உடுவை தில்லை நடராஜா விருந்து' என்ற தமது கதையில் பணக்காரர்களின் மனோபாவத்தையும் இல்லாதவர்கள் மனோபாவத்தையும் ஒப்பிட்டுக் காட்டு கிறார்.
'சந்நிதி கோயில் சாப்பாடு" கதையில் வேஷதாரித் தனத்தைக் கிழித்துக் காட்டுகிறார். வலியாரும், மெலியாரும் மோதும் கட்டங்களில் நல்லதை உணர்த்துபவர்கள் மெலியர்கள்தான் என்ற ரீதியில் ஆசிரியர் தமது கதைகளைச் சமைக்கிறார். இக்கதை இதற்கு ஒரு நல்ல உதாரணம்.
'பிரபலம்" என்ற கதையில் அக்கால இளைஞர் சிலரின் மேம்போக்கான பயன் மதிப்புகளைச் சுட்டிக் காட்டுவதுடன், நகைச்சுவைகளையும் எழுதியிருக்கிறார். கதையின் இறுதியில் வரும் வாக்கியம் உண்மைதான்.
"பெரியவர்களின் சிறிய திருவிளையாடல்களையும், பெரிதாக வெளியிடும் பத்திரிகைகளும் வானொலியும் சிறியவர்களின் பெரிய விடயங்களைக் கூடப் பிரபல்யப்படுத்த மாட்டா என்பது கந்தசாமிக்குத் தெரிந்திருக்க நியாயமில்லை."
கே. எஸ். சிவகுமாரன் 8

அண்மைக்கால ஈழத்துச் சிறுகதைத் தொகுப்புகள்
நிர்வாணம்" கதையும் இளைஞரின் விகற்பமான மனப் போக்கைக் காட்டுகின்றது. 'ஒருவரிடம் வெறுக்கும் காட்சியை இன்னொருவரிடம் காணத் துடிப்பதுதானே மனித மனம்' என்றும் ஆசிரியர் கதைக்கு வெளியே நின்று விளங்கப்படுத்துகிறார்.
இதுவும் ஒரு காதல் கதை'யை சுவாரஸ்யமாக எழுதி யிருப்பதுடன் நிதர்சனங்கள் சிலவற்றையும் ஆசிரியர் தொட்டுக் காட்டுகிறார்.
"கன்னத்தில் கதையும் ரயில் பயணக் கதைதான். இக்கதையும் படிப்பதற்கு சுவாரஸ்யமாக இருக்கின்றது. முரண்பாட்டு நிலைகளை வெளிப்படுத்தியிருக்கிறார். கதையின் முடிவிலே பெண்ணின் தன்மையை ஆசிரியர் இவ்வாறு விளக்குகின்றார்.
'பெண்மை ஒவ்வொரு நேரமும் ஒவ்வொரு தன்மை யுடையதாக இருந்தாலும், அவையெல்லாம் மேன்மையான தன்மைகளே. பெண்மையின் தன்மைகளை ஒவ்வொருவரும் அனுபவித்துத்தான் அறிய வேண்டும்.'
'பாமா படித்துக் கொண்டிருக்கிறாள்' என்ற கதையும் நன்றாக இருக்கின்றது. போட்டாபோட்டி உலகத்திலே, பல்கலை வேந்தர்களாக எல்லோருமே வர முடியாது. ஓரிருவரே அவ்விதம் ஒளிர்விட முடியும். எனவே இரண்டு மூன்று தோணிகளில் கால் வைக்காது, குறிப்பிட்ட ஒரு துறையில் நன்கு பரிச்சயம் பெற்றுவிட்டுப் பின்னர் வேறு துறைகளில் ஈடுபடலாம் என்பதை ஆசிரியர் உணர்த்துகிறார்.
"ஷணப்பித்தம்" - "கவர்ச்சி ஒரு கணநேர மயக்கம். உயர் நடத்தைதான் மிகச் சிறந்த ஆண்மை’ என்பதை ஒரு
9 கே. எஸ். சிவகுமாரன்

Page 12
அண்மைக்கால ஈழத்தச் சிறுகதைத் தொகுப்புகள்
கன்னி உணர்ந்து கொள்வதாக ஆசிரியர் இந்தக் கதையைப் படைத்திருக்கிறார்.
வேஷதாரித்தனத்தினை அம்பலப்படுத்தி, பாத்திரங் களே தமது தவறுகளை உணர்வதாகவும் தில்லை நடராஜா கதை எழுதுகிறார். ‘ஒரு சோக நாடகம் தொடர்கிறது" இந்த ரீதியல் எழுதப்பட்டிருக்கிறது.
இறுதிக் கதையான 'அப்பக் கடை நடக்கிறது" கதையில் யாழ்ப்பாணத்துப் பேச்சு மொழியையும், பந்த பாசங் களையும் அழகாக ஆசிரியர் நமக்குத் தருகிறார். இவருடைய கதைகள் வாசகர்களுக்குச் சிரமம் தராதவை. இலகுவில் புரிந்து கொள்ளத் தக்கவை. சிக்கலான கதைப்பொருள் முரண்கள் இல்லாதவை. நேர்த்தியாக எழுதப்பட்டவை.
ஒய்வின்மை காரணமாகவோ என்னவோ நண்பர் தில்லை நடராஜா இப்பொழுதெல்லாம் கதைகள் எழுது வதில்லை. அவருடைய சமூக அவதானிப்புகளும், மனித உறவுகளைப் புரிந்து கொள்ளும் முறையும், பாத்திர வார்ப்புகளும் மொழி வளமும் புதிய அனுபவங்களை கதைகளில் வடிக்க உதவுமாகையால் 90களில் சமூக சித்திரங்களைக் கதைகளாக அவர் படைக்க வேண்டும்.
தினகரன் வாரமஞ்சரி : 15-12-1991
கே. எஸ். சிவகுமாரன் O

அண்மைக்கால ஈழத்துச் சிறுகதைத் தொகுப்புகள்
அருணன் விஜயராணி
பெண்மை
விஜயராணி செல்லத்துரை என்ற பெயரில் எழுதத் தொடங்கி, அருண் விஜயராணி என்ற பெயரில் பிரபலமாகி, ஈழத்துப் பெண் எழுத்தாளர்கள் மத்தியில் வித்தியாசமாக எழுதுபவர்களிடையே இனங்காணப்பட்டு, தற்சமயம் அவுஸ் திரேலியாவில் வசித்து வரும் எழுத்தாளரினால், முன்னர் எழுதப்பட்ட சிறுகதைகளின் தொகுப்பான கன்னிகா தானங்கள் குறிப்பிடத்தக்கது.
1977-90 காலப் பகுதியில் விஜயராணி எழுதிய 12 கதைகளும், காலப்பின்னணியை கருத்திற் கொண்டு பார்க்கப்பட வேண்டும்.
தொகுப்புத் தலைப்புக்கதை ‘லிவிங் ரு கெதர்' என்ற மேனாட்டுச் சம்பிரதாயத் தாம்பத்திய வாழ்க்கை முறை, அப்பகுதிகளில் வாழும் தமிழ் மக்களிடையேயும் தவிர்க்க முடியாமற் பின்பற்றப்படுவதைக் கூறாமற் கூறுகிறது. புலம் பெயர்ந்தோர் வாழ்க்கைப்போக்குகள் பாரம்பரிய பயன்மதிப்புகளுக்கு முரணாகச் செல்வதையும், அதன் நியாயப்படுத்தும் அம்சத்தையும் கதை கூறுகிறது. நடை யாழ்ப்பாணப் பேச்சு வழக்கைக் கொண்டு அமைந்தாலும்,
கே. எஸ். சிவகுமாரன்

Page 13
அண்மைக்கால ஈழத்துச் சிறுகதைத் தொகுப்புகள்
சிறிது சிக்கனமாக, தேர்ந்தெடுத்த வார்த்தைக் கோலத்தைப் பூசி மெருகேற்றியிருப்பின் சுவை அதிகரித்திருக்கும்.
தமிழ்த் திரைப்படங்கள் கூட புதுமையான நோக்குகளில் "பெண்ணைப் பொருள் கொண்டு விளக்கும் இந்தத் தசாப்தத்தில், விஜயராணி பல வருடங்களுக்கு முன் எழுதிய ஒரு நிரந்தர நிழலைத் தேடி என்ற கதை இன்று எடுபடாமல் போகலாம். ஆயினும் அது எழுதப்பட்ட காலத்தில் நிச்சயமாக நவீனத்துவம் வாய்ந்த கதைதான். 1978ல் பிரசுரமாகிய சிலரது வாத்தியத்தில் இரண்டு பக்கங்கள் என்ற கதைகூட அருண் விஜயராணியின் துணிச்சலான பார்வையைத் துலாம்பரமாகக் காட்டுகிறது. சிந்தனையும், கற்பனையும் வரவேற்கத்தக்கதாக இருக்கும் அதேவேளையில் வடிவம் செப்பனிடப்பட்டிருந்தால் மேலும் சிறப்பாய் அமைந்திருக்கும்.
ஆசையின் ராகங்கள் அபஸ்வர கீதங்கள் என்ற கதை 1979ல் பிரசுரமானது. இதே கதையை ஆசிரியை இப்பொழுது எழுத நேர்ந்தால் நிச்சயமாகச் சிறிது மாற்ற ங்களுடனும் முதிர்ச்சிப் பார்வையுடனும் எழுதியிருப்பார். இந்தக் கதையில் தந்தையைப் பழி வாங்கும் மகளின் வீம்பு தான் முதலிடம் பெறுகிறதேயன்றி, கதாநாயகியின் தாம்பத் திய முதிர்வு நோக்கு இடம் பெறுவதாக இல்லை.
சில நியாயங்கள் ஆணுக்கும் பெண்ணுக்கும் பொதுவாக இருந்தாலும் உலகத்தாரின் கண்களுக்கு புரியாமல் போய்விடுகிறதோ?’ என்று கதாசிரியை கொண்ட சந்தேகம் சரியானதுதான். கதை எழுதப்பட்ட காலத்திலிருந்து பல ஆண்டுகள் சென்றுவிட்டாலும், யதார்த்த நிலையில் மாற்ற மெதுவும் இல்லை. கதையின் தலைப்பு பொதுவான நியாயங்கள். ஏணி என்ற கதையும் பல வருடங்களுக்கு
கே. எஸ். சிவகுமாரன் 2

அண்மைக்கால ஈழத்துச் சிறுகதைத் தொகுப்புகள்
முன் வெளிவந்த கதை. யதார்த்த நிலையைப் படம் பிடிக் கிறது. கமல் வேண்டாம்,ஒரு கமக்காரன் வாறானோ பார்ப்பம்' என்ற ஏக்கப் பெருமூச்சை உதிர்த்து விட்டுக் கதையை நன்றாகச் சமைத்திருக்கிறார் ஆசிரியர்.
மற்றொரு எக்ஸ்போஸே கதை மனிதாபிமானங்கள் மானம் போகின்றன. பெரிய இடங்களில் இடம்பெறும் வேஷதாரித் தனங்களையும், பொய்மையான உறவுகளையும் விஜயராணி அம்பலப்படுத்துகிறார். மனிதாபிமான இயக்கங்கள் எல்லாமே இக்கதையில் வருவது போன்று மோசடிகளில் இயங்காவிட்டாலும், ஓரிரண்டு அப்படித்தான் செயற்படுகின்றன.
பல வருடங்களுக்கு முன் வெளியாகிய கற்புநிலை யென்று சொல்ல வந்தால் கதையும் மற்றுமொரு புதுப் பார்வை கொண்ட கதை, பெண்நிலையில் நின்று வியாக்கியானம் அளிக்கும் பாங்கு நியாயபூர்வமானதாக அமைகிறது.
தோழி தொகுப்பில் இடம்பெற்ற வாழாவெட்டி கதையும் பெண்ணின் மனநிலையை மிகநேர்த்தியாய் வெளிக் கொணர்கிறது. கதை முடிவும் ஏற்றுக் கொள்ளத் தக்கது.
திறமைகள் ஏலத்துக்கு விடப்படுகின்றன 1984 இல் வெளியாகிய கதை. இங்கும் உயர் தொழில் புரிபவர்கள் சிலரின் பயன் மதிப்புக்கள் எவ்வாறு அடிப்படை மனிதாபிமான நீரோட்டத்திற்கு முரணாகச் செல்கின்றன என்பதைக் கதை சித்திரிக்கின்றது. ஒரு நெகழ்ச்சியை, ஓர் உறுத்தலைப் படிப்பவர் மனதில் ஆசிரியை ஏற்படுத்துகிறார். அருண் விஜராணியின் இக்கதைத் தொகுதியில் எனக்கு மிகவும் பிடித்த கதை அவசரம் எனக்கொரு மனைவி
13 கே. எஸ். சிவகுமாரன்

Page 14
அண்மைக்கால ஈழத்தச் சிறுகதைத் தொகுப்புகள்
வேணும், உடனிகழ் கால வாழ்க்கைப் போக்கு புலம் பெயர்ந்தவர்கள் மத்தியில் ஏற்படுத்தும் சலனங்களையும், வெள்ளைக்காரியாக இருந்தாலும், மனிதாபிமானம் கொண்ட ஓர் அற்புதமான மனிதப் பிறவியாக அதே வெள்ளைக்காரி இருக்கலாம் என்பதையும் விஜயராணி தமது முதிர்ச்சி பெற்ற பக்குவமான பார்வை மூலம் காட்டுவது பாராட் டத்தக்கது.
சில வருடங்களுக்கு முன் அவுஸ்திரேலிய வானொலி
யில் ஒலிபரப்பப்பட்ட கடைசிக் கதையான எத்தனை காலம்தான் தோட்டத் தமிழரின் பேச்சு மொழியில் எழுதப்பட்ட ஒரு யதார்த்தபூர்வமான கதை. நிர்ப்பந்தங்கள் வலிமை பெறுவது காரணமாக, இலட்சியமும் தார்மீகக் கோபங்களும் பின்னுக்குத் தள்ளப்படுகின்றன என்பதைத் தமது கதை மூலம் ஆசிரியை விளக்கியிருக்கிறார்.
அருண் விஜயராணியின் சிந்தைனயோட்டம் வரவேற் கத்தக்கது. கதையமைப்பும் பரவாயில்லை. ஆயினும் மெருகும் ஆழமும் இன்னுஞ் சிறிது தேவை. காவேரி என்ற பெயரில் எழுதும் லக்ஷமி கண்ணன், அம்பை என்ற பெயரில் எழுதும் சி. எஸ். லக்ஷமி போன்ற தமிழ் நாட்டுப் பெண் எழுத்தாளர்கள் இந்தப் பண்பையும் உள்ளடக்கி எழுதுவதை விஜயராணியும் அவதானித்திருப்பார்.
தினகரன் வாரமஞ்சரி : 06-06-1993
கே. எஸ். சிவகுமாரன் 14

அண்மைக்கால ஈழத்துச் சிறுகதைத் தொகுப்புகள்
முஸ்லிம் மாதர் ஆராய்ச்சிச் செயல் முன்னணி
dтіялшDѣілії
(Pஸ்லிம் பெண் எழுத்தாளர்கள் எழுதிய ஐந்து பரிசுக்கதைகளைக் கொண்டது இத்தொகுப்பு. முஸ்லிம் மாதர் ஆராய்ச்சிச் செயல் முன்னணி நடத்திய போட்டியின் அறுவடைகள், இந்த அமைப்பின் இணைப்பாளர் அன்பேரியா ஹனிபா. இவர் எஸ். எம். ஹனிபா அவர்களின் துணைவியாவார்.
இலங்கையில் "பெண்ணியம் தொடர்பாக தீவிர செயற்பாடுகளில் இறங்கும் தமிழ்ப் பெண்மணிகளில் முக்கியமான ஒருவர் சித்திரலேகா மெளனகுரு. இவர் இத் தொகுதிக்கு நுட்பமான கருத்துக் கோவையாக ஒரு அணிந்துரை எழுதியிருக்கிறார்.
முதற் பரிசு பெற்ற கதை "சுமைகள்" எழுதியவர் ஹளினா வஹாப் (முஸம்மில்). காலத்தின் துரித வேகத்திற்கும், தேவைக்கும் ஏற்ப விழுமியங்கள் மாறுபடுவதை உணராத சம்பிரதாயவாதிகள் குறிப்பாகப் பெண்களை அநியாயமாகத்
15 கே. எஸ். சிவகுமாரன்

Page 15
அண்மைக்கால ஈழத்துச் சிறுகதைத் தொகுப்புகள்
துன்புறுத்துகிறார்கள் என்பதைக் கதை சொல்கிறது. கருத்தளவில் நல்ல கதை என்றாலும் கலா ரீதியாக இன்னும் செப்பனிட்டிருக்கலாம். கதை நிகழ்ச்சிகள் துரிதமாக மாற்றமடையும் போது அவை திடீரென்று வருவதனால் கதையோட்டம் தர்க்க ரீதியாகச் செல்லாமலும் உடனடியாக ஏற்றுக்கொள்ள முடியாமலும் அமைந்து விடுகிறது. இக்கதாசிரியரின் சிறுகதைத் தொகுப்பில் காணப்பட்ட லாவகம் இக்கதையில் இல்லாமற் போனதையும் அவதானிக்கலாம்.
சம்பிதாயங்களை யதார்த்த ரீதியாக மாற்றும் துணிவு இல்லாமற் போவதனால் முரண்பாடுகள் ஏற்படுவதை நாம் காண்கிறோம். இதற்காகத்தானா?" என்ற எம். ஏ. ரஹீமாவின் கதையில் வரும் ஒரு பகுதி:
'இஸ்லாமிய வரன்முறையை மிகவும் நேசித்து அதனோடொன்றிய வாழ்வு வாழ விரும்பிய தாத்தாவுக்கு தானும் சேர்ந்து மாறு செய்வது போல மனசு கஷ்டப்படுகிறது. முரண்பாடான சமூக நடைமுறைகளை வெல்ல முயற்சித்து முப்பத்தைந்து வருடங்களைக் கடத்திய தாத்தா இன்று மாறிவிட்டாளா..? மனம் கேட்கிறது?
இத்தகைய கதையில் கருத்து விளக்கம் இருந்தாலும் கதையமைப்பில் சீர் இல்லை. சிறிது கவனம் செலுத்தினால், சுருதி பிசகாமல் இந்த எழுத்தாளரால் எழுத முடியும்.
ஃபாத்திமா ரஜாப் எழுதிய கதையின் தலைப்பு 'தப்புத் தாளங்கள்". ஒரே விஷயத்தை ஆண்கள் பார்க்கும் பார்வை பெண்கள் பார்க்கும் பார்வையினின்றும் வேறுபடுகிறது என்பதற்கு இக்கதை உணர்த்தும் நிகழ்ச்சி
கே. எஸ். சிவகுமாரன் 16

அண்மைக்கால ஈழத்துச் சிறுகதைத் தொகுப்புகள்
சான்று. இக்கதையில் வரும் இறுதிப் பகுதி வருமாறு,
"ஆமா சார் நாங்கள் மத்தளங்கள் போல் இரண்டு பக்கமும் அடி வாங்குகிறோம். அதனை உங்கள் நிறுவன நன்மைக்காகத் தாளம் என்று ரசிக்கிறீர்கள். ஆனால் ஒன்று மட்டும் நினைவில் வைத்திருங்கள். இவை எல்லாம் தப்புத்தாளங்கள் என்று நீங்கள் உணரும் காலம் விரைவில் வரும். எந்த நாளும் நாங்கள் அடிவாங்க முடியாது. திருப்பி அடிக்காவிட்டாலும் எதிர்த்தாவது நிற்க வேண்டும் என்கிற உண்மை எங்களுக்கும் புரிந்து விட்டது. வர்றேன்
éቻ: [T IT ”
இங்கும் கதையோட்டம் சுவாரஸ்யமாக இருந்தாலும், சிக்கனம் தேவை. அளவுக்கு மீறிய விபரங்களைத் தவிர்த்தல் நன்றாயிருக்கும்.
முஸ்லிம் எழுத்தாளர் இர்பானா ஜப்பார் தமது கதையில் தமிழ் பாத்திரங்களை உலவ விட்டிருக்கிறார். சிறுகதை வரையறையை சிறிது மீறியதாகவும், குறுநாவல் போன்று இக்கதை இருப்பதையும் அவதானிக்க முடிகிறது.
"கணவனுக்கு மனைவி மேல் பிடிப்பு இல்லாவிட்டால் அவன் வேறு ஒரு பெண்ணையும் வைத்துக் கொள்ளலாம். ஆனால் பெண் இதே காரியத்தைச் செய்யத் துணிந்தால் இந்தச் சமூகம் அவளை எப்படியெல்லாம் வதைத்துவிடும்? சே! என்ன உலகம் இது? ஆணுக்கொரு நீதி, பெண்ணுக் கொரு நீதியா? பெண் என்றால் எல்லோருக்கும் இளக் காரமாகிப் போய்விட்டதுதான்! கணவனின் நிர்ப்பந்தம் உக்கிரமான நிலையில். பொறுமையின் எல்லையில் நின்று எதிர்த்து வாதிடத் துணிந்தாள்.”
7 கே. எஸ். சிவகுமாரன்

Page 16
அண்மைக்கால ஈழத்துச் சிறுகதைத் தொகுப்புகள்
இர்பானா ஜப்பார் மிக நன்றாகவே எழுதுகிறார். ஆனால் வடிவத்தைத்தான் கோட்டை விட்டுவிட்டார். அவருடைய எழுத்தாற்றலுக்கும் தர்க்க நியாயங்களுக்கும் இன்னொரு உதாரணம்.
"சட்டம் மூலம் கட்டாய நிர்ப்பந்தத்தில் வாழும் வாழ்க்கையில் என்ன சார் பிரயோசனம்? இல்லறமென்பது மனம் இரண்டும் ஒன்றாய் இணைந்து இன்புற்றிருக்க வேண்டுமேயொழிய கட்டாயத்திற்காக வாழ்கிற அர்த்த மில்லாத வாழ்க்கையல்ல சார்.”
"இந்தக் கொடுமையை என்னவென்பது? மனதில் ஊறிப்போன இந்தச் சமுதாய விழத்துரவல்களை ஒரு புதிய வெற்றிப் பிரவாகம் பெருக்கெடுத்து மாற்றியமைத்து புதிய விழிப்பை ஏற்படுத்த வேண்டும். இல்லாவிட்டால் இந்தக் கேடு கெட்ட சமூகம் மாறப் போவதில்லை."
"தன் வாழ்க்கை முறையை நிர்ணயித்துக் கொள்ளும் உரிமை அந்தப் பெண்ணுக்கு அளிக்கப்படல் வேண்டுமே தவிர சமூகத்துக்கல்ல! மனித நேயம் வளர்ந்த இனங்களில் பெண் ஒரு பிரச்சினையாவதில்லை. பொருளாதாரச் செம்மையுடைய சமூகங்களில் அவள் கெளரவம் கேள்விக் குறியாவதில்லை. அவளுக்கு மனமுதிர்ச்சி வேண்டும். பொருளாதார சுதந்திரம் வேண்டும்.”
“.தன் கணவனின் சாவுக்கு ஒரு பெண் போக மாட்டேன் என்று சொல்கிறாள் என்றால், அவள் எத்தனை அடிபட்டிருக்க வேண்டும். அவள் மனசு எத்தனை வேதனையை விழுங்கியிருக்க வேண்டும்?. காலத்தை யொட்டி சில சம்பிரதாயங்களை மீறுவதில் தப்பில்லை. அவர் மகளைக் கனிவுடன் நோக்கினார்.”
கே. எஸ். சிவகுமாரன் 8

அண்மைக்கால ஈழத்துச் சிறுகதைத் தொகுப்புகள்
இத்தொகுதியில் இடம்பெற்ற ஐந்தாவது கதையை எழுதியிருப்பவர் பெளசியா யாசீன் கதையின் தலைப்பு தீர்க்கப்படாத நியாயங்கள்.
"கணவனைப் பிரிந்து வாழாவெட்டியாக வாழ்வதை விட கணவனின் இம்சைகளைச் சகித்து, அவனுடனேயே காலம் கடத்தும் இவளைப் போன்ற அப்பாவிகள் இன்னும் சமூகத்தில் இருக்கத்தான் செய்கிறார்கள். இதை இவர்களது அறியாமை என்பதா? அல்லது பண்பாடு கலாசாரம், சமூகம், சம்பிரதாயம் என்று இவர்கள் தமக்குத் தாமே போட்டுக் கொண்ட கட்டுப்பாடுகளா?”
இக்கதைகள் யாவும் மிகைப்படுத்தப்படாமல் அன்றாட வாழ்வில் பெண்கள் அனுபவிக்கும் கஷ்டங்களை எடுத்துக் கூறுகின்றன. பெண்களுக்கென்று ஒரு நியாயம் இருப்பதை ஆண்கள் புரிவதில்லை. பெண்கள் கேவலமாக நடத்தப் படுகிறார்கள். இந்த நிலை குறிப்பாகத் தமிழ் பேசும் சமூகங்களில் தொடர்ந்தும் இருந்து வருவதைக் கதைகள் தெரியப்படுத்துகின்றன.
இந்த எழுத்தாளர்களிடம் நிறையத் திறமை இருக்கிறது. இதனைச் செப்பனிட்டுக் கூர்மைப்படுத்தி சில ஆலோசனை களை சித்திரலேகா மெளனகுரு கூறுகிறார்.
“இத் தொகுதியில் அடங்கியுள்ள கதைகளில் படைப்புத் திறன் குறைந்து காணப்படுகிறது. ஒரு சில கதைகள் மிகவும் செயற்கைத் தன்மை வாய்ந்தனவாகவும் உள்ளன. மொழி கையாளுகையில் தற்புதுமையில்லை. இத்தகைய குறைபாடுகள் திருத்த முடியாதவையல்ல. அல்லது பெண் எழுத்தாளர்களுக்கு மாத்திரம் உரித்தானவையுமல்ல.
19 கே. எஸ். சிவகுமாரன்

Page 17
அண்மைக்கால ஈழத்துச் சிறுகதைத் தொகுப்புகள்
தன்னுணர்வுடன் முயலும் போது இலகுவில் நீக்கப்படக் கூடியவையாகும்.
"இவர்கள் செய்ய வேண்டியதெல்லாம் எந்த வடிவத்தை (கவிதை, சிறுகதை, நாவல்) அவர்கள் கையாளுகிறார்களோ அதன் இயல்புகளைச் சரிவரப் புரிந்து கொள்வதுதான். இதற்கு அந்தந்த வடிவங்கள் பற்றிய கல்வியும் அறிவும் அடிப்படையானவை. அத்துடன் காத்திரமான இலக்கியப் படைப்புக்களுடன் ஏற்படுத்தும் பரிச்சயமும் முக்கியமானது. தமிழிலும், வேறு மொழிகளிலும் (மொழி பெயர்ப்புகளுடனாவது) வெளியாகும் முக்கியமான இலக்கியங்களை முடிந்த வரையில் பெற்று வாசித்தல் வேண்டும். இது எழுத்தாளர்களது ஆக்கத் திறமை அபிவிருத்தி அடைவதற்கு உதவும்",
தினகரன் வாரமஞ்சரி : 19-09-1993
கே. எஸ். சிவகுமாரன் 2O

அண்மைக்கால ஈழத்துச் சிறுகதைத் தொகுப்புகள்
மாத்தறை ஹஸினா வஹாப் வகுங்காத மலரொன்று
இலக்கிய மாணவர்கள், இரசனை மேம்பாடு கொண்ட வாசகர்கள், இலக்கியத் திறனாய்வாளர் போன்றோர் தரம் பிரித்துத் தமது புத்தகங்களைத் தேடி படித்துச் சுவைத்துப் பயனடைவதுண்டு. புனை கதை நூல்களையும் அவர்கள் படித்துத் திறனறிவர். பிரசுரமாகும் எல்லாப் புனைகதை நூல்களுமே இலக்கியத் தேர்வில் தேறுவது இல்லை. மிகத் தரமானவையே தகுதிகண்டு, காலத்தை வென்று ஆழமான இலக்கிய நயஞ்செறிந்தவையாய் விளங்குகின்றன.
இலக்கியத் தரமான புனை கதைகள் ஒரு புறமிருக்க, புற்றீசல்கள் போல, பத்திரிகைகளின் தேவைக்காக பல விதமான வடிவங்களில் கதைகள் வெளியாகி வருகின்றன. தரமான, இலக்கியப் பண்புகள் கொண்ட கதைகள் சில வேளைகளில் அதே பத்திரிகைகளிலும் வெளியாகலாம். வெளியாகியிருக்கின்றன. ஆயினும் பெரும்பாலும், அத்தகைய உயர்ந்த, ரசனை தரும் கதைகள் "சிற்றேடு'களில் வெளி யாகின்றன. தொகுப்புகளாகவும் வருகின்றன.
2. கே. எஸ். சிவகுமாரன்

Page 18
அண்மைக்கால ஈழத்துச் சிறுகதைத் தொகுப்புகள்
நல்ல கதைகளைப் பிரசுரித்துவரும் நாளிதழ்களும். வாரமஞ்சரி/வெளியீடுகளும் சில வேளைகளில் பக்கங்களை நிரப்புவதற்காகத் துணுக்குக் கதைகள் போன்ற சில இலகு வாசிப்பு"க்கான விஷயங்களைப் பிரசுரிக்கின்றன. சாவகாசமாக இருந்து படித்துப் பயன்பெற முடியாத வாசகர்களின் உடனடித் தேவையைப் பூர்த்தி செய்வதற்காக இந்த ஜனரஞ்சகப் பத்திரிகைகளும் சஞ்சிகைகளும் தம்மாலியன்ற பங்களிப்பைச் செய்கின்றன. பெரும்பாலான வாசகர்கள் இத்தகைய ரசனைப் போக்குடையவர்களாக இருப்பது தவிர்க்க முடியாததே.
ஆக நல்ல இலக்கியம்' என்று சொல்லப்படும் ஆக்கங்கள் படைக்கப்பட்டும். வெளியிடப்பட்டும் வரும் அதே சமயத்தில், கூடவே, வெகுசனத் தொடர்புச் சாதனங்களின் வடிவத்திற்கும், தேவைக்கும் ஏற்ப புதுப்புது விதமான எழுத்து, பேச்சு வடிவங்கள் உருவாகி வருவது தவிர்க்க முடியாததும், வரவேற்கத்தக்கதுமான ஒரு பண்பு ஆகும்.
இந்த விதத்தில் பார்க்கும் போது, பத்திரிகைகளின் பங்களிப்பு பாராட்டத்தக்கது எனலாம். புதிய இளைய, ஆற் றலுடைய வர் களின் திறனை வர வேற் று உற்சாகமளிப்பது. இப்பதிரிகைகளின் குறிப்பிடத்தக்க பங்களிப்பாகும். -
நமது நாட்டுப் பத்திரிகைகளின் இந்தப் பயன்பாட்டுச் செயலினால் பயனடைந்தவர்களில் ஒருவர் மாத்தறை ஹஸினா வஹாப் (எம்.ஐ.எம்.முஸம்மில் என்ற நன்கறிந்த தரமான எழுத்தாளரின் துணைவியார்). இவர் கடந்த இரு தசாப்தங்களாக, அமைதியான முறையில் தமது ஆற்றல்களை
கே. எஸ். சிவகுமாரன் 22

அண்மைக்கால ஈழத்துச் சிறுகதைத் தொகுப்புகள்
வெளிப்படுத்தி வந்திருக்கிறார். அது மாத்திரமல்ல. சிறிய இடங்களுக்குள் பெரிய விஷயங்களைச் சுருங்கக் கூறி விளங்க வைக்க பலராலும் முடிவதில்லை. இந்த இடத்திற்றான் ஹஸினாவின் எழுத்துவன்மை புலப்படுகிறது. தனித்தனியாக, அவருடைய கதைகளைப் பற்றிய குறிப்புகள் சில தொடர்கின்றன.
உபாயங்கள்: நம்பிக்கையூட்டிப் பின்னர் தந்திரமாய் ஏமாற்றும் பேர்வழிகளின் சில்லறைத்தனங்களில் ஒன்றை மிக ரஸமாகக் கதாசிரியை எழுதியிருக்கிறார் . உரையாடல்களும் இயல்பாய் அமைந்துள்ளன.
தீர்மானம் தீர்க்கமானதல்ல: சுவாரஸ்யமாக எழுதப்பட்ட மற்றொரு கதை இது. இருந்தபோதிலும், இக்கதையில் வரும் அலீம் மாஸ்டர் செயலின் போக் கோடு ஒட்டியதாக, கதையின் முடிவு இல்லை என்பது குறைபாடுதான். நல்லெண்ணம் கொண்டவராகத் தன்னைக் காட்டிக் கொள்ளும் அலீம் மாஸ்டர், இடமாற்றத்தைக் காரணமின்றி ஏற்றுக் கொள்ள வேண்டும்? யாருடைய தீர்மானமும் தீர்க்கமானதல்ல? அலீம் மாஸ்டருடையதா? அதிபருடையதா? என் போன்ற வாசகர்களுக்குக் கற்பனை ஓடவில்லை.
உறங்காத உண்மை; உண்மைகள் உறங்கு வதில்லைத்தான். ஆயினும் உண்மைகள் சில வேளைகளில் உறைப்பாகவும், அதிர்ச்சியைத் தருவதாகவும் அமையும் அதேவேளையில், கடைசித்துரும்பும் கைவிட்டுப் போகும் போது, பெரும் அவலம் பேரதிர்ச்சியாகத்தான் இருக்கும். இக்கதையில் வரும் மனைவி (தன்னையும் கட்டி, மாற்றாள் ஒருத்தியுடன் பஞ்சணையில் துயின்று அவளையும் தனது
23 கே. எஸ். சிவகுமாரன்

Page 19
அண்மைக்கால ஈழத்தச் சிறுகதைத் தொகுப்புகள்
மனைவியாகக் காட்டும்) ஓர் வேஷதாரியின் உண்மைச் சொரூபத்தையறியும் கட்டத்தைக் கதை கூறுகிறது நன்றாக எழுதப்பட்ட கதை இது எனலாம்.
நாடகமே உலகம் கதாசிரியைக்குக் கைவந்த கதைக் கடைசித் திருப்பு முனை, இக்கதையிலும் பயன்படுத்தப் படுகிறது. ஓ ஹென்றி பாணிக் கதை என்போமே. அது மாதிரி. "அவனது பதில் அவளை ஆச்சரியத்துக்கும் ஏமாற்றத்துக்கும் உள்ளாக்கியது" என்று கதாசிரியை கதையை முடிக்கிறார். "அவனுடைய ஆழ்ந்த அன்பைப் புரிந்து கொள்ளவும் அவளால் முடிந்தது” என்று ஒரு வரியைக் கதாசிரியை சேர்த்திருந்தால் இன்னும் நன்றாய் இருக்கும் என்று என் போன்ற வாசகர்களுக்குப்படுகிறது. உங்களுக்கு எப்படியோ?
அறுவடை "வினை விதைத்தவர் வினை அறுப்பார்” என்ற கூற்றுக்கு ஆதாரம் காட்டும் போக்கில் கதை அமைந்துள்ளது. பொறாமை காரணமாகத் தவறிழைக்க விருந்த ஒரு பெண், தான் சமைத்த விபரீதப் பூதத்தினால் தாக்குப்படுவதைக் கதை காட்டுகிறது.
சந்தேகம் என்பது; மற்றுமொரு நகைச்சுவை தரும் பத்திரிகை ரகக் கதையிது. மணி பார்க்கத்தெரியாத பெண், மணி என்ன என்று கேட்க வந்தபோது, சந்தேகங் கொண்ட மனைவி, உண்மை தெரிந்ததும் கவலைப் படுவதைக் கதை காட்டுகிறது.
ஆசைகள்: இந்தக் கதையில், கதாசிரியையின் கருத்தோட்டம் எதுவெனத் தெரியவில்லை. நம்பிக்கைத் துரோகம் செய்தவன் மீது சார்பாகப் பேசுபவர்களின்
கருத்தை ஆமோதிக்கவில்லை என்பது தெளிவுதான்.
கே. எஸ். சிவகுமாரன் 24

அண்மைக்கால ஈழத்துச் சிறுகதைத் தொகுப்புகள்
ஆயினும், "பணம் கையிலிருந்தும் கொடுக்காது டிமிக்கி" விடப் போன அந்த நபர் மாத்திரம் எதுவுமே பேசாது" ஏன் அமைதியாக இருந்தார் என்பதுதான் புரியவில்லை.
விடிவை நோக்கி: நடைபாதை வாசிகளின் பிரச்சினைகளுள் சிலவான உடுதுணியில்லாமை, இருக்க இடமில்லாமை, சுவாத்தியப் பாதுகாப்பு இல்லாமை, சுகாதார வசதியில்லாமை போன்றவற்றினால் பாதிக்கப்பட்ட கிழவன் ஒருவனினதும், மனையினதும் ஏக்க நிலையை எடுத்துக்கூறும் கதாசிரியை, வீடமைப்புத் திட்டத்தில் தமக்கும் ஒரு வீடு கிடைக்கும் என்ற நம்பிக்கையில் அக்குடும்பம் காத்திருப்பதாக கதையை முடிக்கிறார். பச் சாதாபத்தை ஏற்படுத்தும் இதுமாதிரியான பல கதைகளில் இதுவும் ஒன்று.
பெரிய குறை சீதனமாகக் கொடுக்கப்படும் பணத்திற்கு பெண் வீட்டார், மாப்பிள்ளை வீட்டாரிடம் கணக்குக் கேட்கக்கூடும் என்ற ஐயத்தில் வந்த சம்பந்தத்தை மகளின் தாயாரான ஓர் இளைப்பாறிய ஆசிரியைத் தட்டிக் கழிப்பதை கதை கூறுகிறது. எனினும் கதையில் விளக்கம் குறைவு. கதாசிரியையின் நோக்கம் எது என்பதைப் பொறுத்தே நமது விளக்கமும், வியாக்கியானமும் அமைய வேண்டுமல்லவா?
அடுத்ததாக, “வதங்காத மலரொன்று" என்ற ஹஸினாவின் ஆக்கம் பற்றிய சில அவதானிப்புக்கள்:
இலட்சிய நோக்குக் கொண்ட ஒரு பெண்ணின் பாத்திர வார்ப்பைக் கச்சிதமாக ஆசிரியை மாத்தறை ஹஸினா வஹாப் செய்திருப்பது பராட்டத்தக்கது. அபரிமிதமான உணர்ச்சிகளோ, சென்டிமென்டலிஸம்
25 கே. எஸ். சிவகுமாரன்

Page 20
அண்மைக்கால ஈழத்துச் சிறுகதைத் தொகுப்புகள்
எனப்படும் அசட்டு அபிமான உணர்ச்சிகளோ இல்லாமல், வாழ்க்கையை நேர்கொண்டு நோக்கும் சுய மரியாதையுடைய சரீனாவின் பாத்திரம் நினைவில் நிற்கத்தக்கது. சாலி நடந்து கொள்ளும் விதம் சுவாரஸ்யமாக இருப்பதுடன், கதையில் எதிர்பாராத திருப்புமுனையைக் கொண்டு வருவதாகவும் அமைகிறது.
வீரகேசரி வாரவெளியீடு : 06.02.1994
கே. எஸ். சிவகுமாரன் 26

அண்மைக்கால ஈழத்துச் சிறுகதைத் தொகுப்புகள்
சோ. ராமேஸ்வரன்
சுதந்திரக்காற்று
இலங் கையில் புனைகதை எழுதுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. நீண்டகால எழுத்து அனுபவங் கொண்ட சோ. ராமேஸ்வரன் புனைகதைகளும் எழுதியிருக்கிறார். வீரகேசரி, மித்திரன் வாரமலர், வீரகேசரி வாரவெளியீடு வாசகர்கள் இவரை நன்கு அறிவர். இப்பத்திரிகைகளின் ஆசிரியபிடத்தில் இடம்பெற்றவர். கடந்த 15 வருடங்களாக கமநல ஆராய்ச்சி பயிற்சி நிறுவகத்தில் தகவல் வெளியீட்டு உத் தியோகத் த ராகக் கடமையாற்றுகிறார். கமநலம் என்ற சஞ்சிகையின் ஆசிரியரும் இவரே.
இவருடைய நூல்கள்: யோகராணி கொழும்புக்குப் போகிறாள் (1992), இவர்களும் வாழ்கிறார்கள் (1993), இலட்சியப் பயணம் (1994). இவையாவும் நாவல்கள். சுதந்திரக் காற்று என்பது இவருடைய முதலாவது சிறுகதைத்தொகுதி. கடந்த கால் நூற்றாண்டாக இவர் எழுதிய சிறுகதைகளில் பதினொரு கதைகள் இதில் இடம்பெற்றுள்ளன.
27 - கே. எஸ். சிவகுமாரன்

Page 21
அண்மைக்கால ஈழத்துச் சிறுகதைத் தொகுப்புகள்
வீரகேசரி வாரவெளியீட்டில் இடம்பெற்ற பத்துக் கதைகளை அவர் சிறிது மெருகுபடுத்தித் தொகுத்திருக்கிறார். சிறுகதைத் தொகுதியின் அட்டைப்படத்தை ஒவியரும் சினிமாப்பகுதிப் பொறுப்பாளருமான அகஸ் டின் மொறாயஸ் வரைந்திருக்கிறார். ‘வீரகேசரி வாரவெளியீடு' ஆசிரியர் பொன். ராஜகோபாலுக்கு நூல் சமர்ப்பிக்கப் பட்டுள்ளது. இத்தொகுதி பற்றிய நல்லதோர் கணிப்பை தேவகெளரி ஏற்கனவே எழுதியிருக்கிறார். எனவே, ஒவ்வோரு கதை பற்றியும் தனித்தனியே பார்க்காமல், ஒரு சிலவற்றை மாத்திரம் மாதிரி மதிப்பீட்டுக்கு எடுத்துக் கொள்வோம்.
நாம் பரிசீலிக்கும் கதைகளாவன: மண்ணை நம்பி (1994), சொந்தமண் (1993), தில்ரு க்ஷியும் ஒரு பாலன் அய்யாவும் (1992).
இம்மூன்று கதைகளும் இந்தத் தசாப்தத்தில் எழுதப்பட்டமையால், ஆசிரியரின் தற்போதைய வளர்ச்சி நிலையை ஓரளவு கணிக்கக் கூடியதாக இருக்கும்.
தில்ரு க்ஷி என்ற கதை மேல் தட்டுப் பாத்திரங்கள் நடந்து கொள்வதுபோல நடந்து கொள்ளும் இரண்டுங் கெட்டான் நிலையிலுள்ள பாத்திரங்கள் இருவருடைய கதை. இந்த மாதிரிக் கதைகளைக் கலை நயத்துடன் எழுதுபவர்களுள் இலங்கையில் க. சட்டநாதன், உமா வரதராஜன், சாந்தன் போன்றோர் பெயர்கள் தான் மனதில் வருகின்றன. தமிழக எழுத்தாளர்கள் என்றால் எண்ணிக்கை அதிகம்! பிரபஞ்சன், ஆதவன், அசோக மித்திரன், லக்ஷமி கண்ணன், அம்பை போன்ற பலர்
கே. எஸ். சிவகுமாரன் 28

அண்மைக்கால ஈழத்துச் சிறுகதைத் தொகுப்புகள்
இருக்கிறார்கள். ஆனால் ராமேஸ்வரன் நேரிடையாகவே கதையை விவரணப்பாங்கில் கூறிவிடுகிறார். துணிகரமாக எழுதிய போதிலும் பத்திரிகை ரகக் கதைபோன்று நம்பும் தன்மை குறைந்து, செயற்கைக்கோலம் காணப்படுகிறது. ஆயினும், எழுத எழுதக் கலைத்துவம் அவரிடம் அதிகரிக்கும் என எதிர்பார்க்கலாம்.
"சொந்த மண்' என்ற கதையிலே 'வெறுப்பு மிகைந்திருந்தது' என்ற பிரயோகம் இடம்பெறுகிறது. இது சரியா என்று தெரியவில்லை. அதேபோல் அசங்கதமான தகவல்கள்' என்பது எனக்குப் புரியவில்லை. இந்தக் கதையிலே மத்தியதர வர்க்கச் சராசரி தமிழ்க் குடும்பங்களின் அபிலாஷைகள் சிலவற்றை ஆசிரியர் எடுத்துக்காட்டுகிறார். பெரும்பாலான மக்களுக்குச் சுதந்திரகாற்று என்பது கானல்நீர் போன்றதுதான் என்பது கதையிற் புலப் படுத்தப்படுகிறது.
இலக்கியப் பண்புகள் கொண்ட ஒரு நல்ல சிறுகதைக்குரிய கட்டமைப்பும், பாத்திர வார்ப்பும், சிக்கனமும் இக்கதையில் இடம்பெற்றிருந்தால், பத்திரிகை ரகக் கதைகள் போலாகியிருக்க மாட்டாது.
சோ. ராமேஸ்வரனின் கதைகளில் நாம் அடுத்து எடுத்துக் கொள்வது, 'மண்ணை நம்பி" இது ஓர் அருமையான ஆவணச் சித்திரம். ஒரு செய்தி நிருபர், முக்கிய செய்திகளைத் திரட்டி ஓர் ஒழுங்கு முறையிற் தருவது போன்று, யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு வர முற்படும் ஒரு பயணி எதிர்நோக்கும் பகீரதப் பிரயத் தனங்களைத் துடிப்பாகவும், விறுவிறுப்பாகவும் ஆசிரியர்
29 கே. எஸ். சிவகுமாரன்

Page 22
அண்மைக்கால ஈழத்தச் சிறுகதைத் தொகுப்புகள்
எழுதியிருக்கிறார். இத்தகைய ஆபத்து நிறைந்த பயணங்களை மேற்கொள்ளாத வாசகர்களுக்கு இது புதுத் தகவல்கள். இறுதியில் அக்கரைக்கு இக்கரை பச்சை என்ற யதார்த்த நிலையை உணருபவனாகவும், கஷ்டங்களுக்கு மத்தியிலும் தனது பிறந்த மண்ணின் சொர்க்கத்தை விரும்புபவனாகவும் அரவிந்தன் என்ற பாத்திரத்தை ஆசிரியர் வரைந்தி ருக்கிறார். இத்தொகுப்பில் இடம்பெறும் கதைகளில் ராமேஸ்வன் கடைசியாக எழுதிய கதை இதுவாக இருப்பதனாலோ என்னவோ, அவருடைய எழுத்து நடையிலும், பார்வையிலும், முன்னேற்றம் காணப்படுகிறது.
வீரகேசரி : 06-01-1995
கே. எஸ். சிவகுமாரன் 30

அண்மைக்கால ஈழத்தச் சிறுகதைத் தொகுப்புகள்
ராஜ மரீகாந்தன்
dati/TG Lif FITTIJLlib
ரTஐ பூரீகாந்தன் என்ன மாதிரி எழுதுகிறார். (அதாவது, எவ்வளவு அற்புதமாக எழுதுகிறார்!) சிறுகதை, மொழிபெயர்ப்புத் துறைகளில் ஈடுபட்ட இவர் மாலுமியாகவும் அனுபவம் பெற்றிருக்கிறார். மனித முரண்பாடுகளிடையே மனிதத்துவத்தையும், கயமையையும், மெல்லிய உணர்வுகளையும் இனங் கண்டுகொள்வது மாத்திரமல்லாமல், தகுந்த சொற்களைக் கொண்டு அனுபவத்தை வெளிப் படுத் தும் ஆற்றலையும் பெற்றிருக்கிறார். இவருடைய அனுபவ வீச்சு பரந்திருப்பது போல, இவருடைய அறிவின் ஆழமும், கூடியவரை கட்டுக்கோப்புடன் கதையை நிர்மாணிக்கும் பரிச்சயமும் இவர் தகமையைப் பறைசாற்றுகின்றன.
க. சட்டநாதன், உமா வரதராஜன், ரஞ்சகுமார் போன்ற ஈழத்துப் புனைகதையாளர் போன்று ராஜ பூரீகாந்தனும் தனித்துவத் திறமை பெற்றவர். உமா வரதராஜனின் ஆக்கத் திறனும், கலை நுட்பமும் தமிழக பத்திரிகைகளின் வரவேற்பைப் பெற்றுள்ளன. ஏனையவர்கள் மகத்துவம், இன்னமும் நமது "ஆழமான பல்கலைக்கழக மட்ட ஆய்வாளர்களின் கவனத்தைப் பெறாதிருக்கிறது.
3. , கே. எஸ். சிவகுமாரன்

Page 23
அண்மைக்கால ஈழத்துச் சிறுகதைத் தொகுப்புகள்
காலச் சாளரம் என்று பெயரிடப்பட்ட இந்தச் சிறுகதைத் தொகுதியில் 12 கதைகள் இருக்கின்றன. யாவுமே தலைசிறந்தவை என்று ஒரேடியாகப் புளுக முடியாவிட்டாலும், அரைஞாண், தாலி, ஓர் உண்மைக் காகம் செத்துப் போச்சு, தத்து, நினைவுத் தடத்திலொரு கொடிய வடு, ஜேன் ஆச்சி, நண்பனை இனம் புரிந்து கொண்டான், காலத்தின் கதவுகள், உயரச் செல்பவர் களெல்லாம் உயர்ந்தவர்களல்ல ஆகியன நிச்சயமாகப் புத்தனுபவம் தருபவை. ஏனையவற்றில், என்னைப் பொறுத் தமட்டில், கலைப்பண்பு இன்றியும், வியாக்கியானங்கள் தேவையை மீறி அமைந்தும், கதையமைப்பில் செயற்கைத் தன்மை புகுந்தும் உள்ளன. நமது பெரும்பாலான ஏனைய எழுத்தாளர்களின் பெரும்பாலான கதைகளுடன் ஒப்பிடும் பொழுது, இவை பெரிய குறையாய் இல்லை.
ஒவ்வொரு கதையைப் பற்றியும் மேலோட்டமாகக் குறிப்புகளைத் தருவதற்கு முன்னர் (ஒரு பத்தி எழுத்தாளர் வேறு என்னதான் செய்ய முடியும்?) கதாசிரியரின் நோக்கம் என்ன என்பதை நாம் அறிய வேண்டாமா?
ராஜ பூரீகாந்தன் ஒரு முதிர்ச்சி பெற்ற எழுத்தாளர் என்பதற்கு அவருடைய பின்வரும் வாசகம் எடுத்துக்காட்டு:
“சமூக வாழ்க்கையினை, சமகால வரலாற்று நிகழ்வுகளை உள்வாங்கி, அவற்றைத் தெளிவான சிந்தனைத் தளத்தில் புடமிட்டு, தேவையான போது கடந்த கால நிகழ்வுகளுடன் தொடர்புபடுத்தி, கற்பனைச் சுவை சேர்த்து "வாசிக்கின்ற" மனிதர்களுக்குப் பயனுள்ள கருத்துகளைக் கலையம்சத்துடன் தருபவனே "படைக்கின்ற" மனிதன்.
கே. எஸ். சிவகுமாரன் 32

உ அண்மைக்கால ஈழத்துச் சிறுகதைத் தொகுப்புகள்
யதார்த்தத்திற்கும் கற்பனைக்கும் இடையிலான தொடர்பு களைச் சரியான விகிதத்தில் அழகியல் அம்சங்களுடன் பேணுவதிலேயே படைக்கின்ற மனிதனின் ஆற்றல் தங்கியுள்ளது.”
ஆசிரியரின் முதலாவது நூலாகிய இதற்குப் பதிப்புரை எழுதிய பிரேம்ஜி ஞானசுந்தரம், தமது விமர்சனத்தில் ஆசிரியரையும், கதைகளையும் விளங்கும் தமிழில் அழகாகப் படம் பிடித்துள்ளார். அவருடைய கூற்று வாசகம் ஒன்று சீக்கிரமாய் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும்.
"இத்தொகுப்பிலுள்ள கதைகள் முழுவதுமே பிறநாட்டு மொழிகளில் வெளிவருவது ஓர் அவசியமான இலக்கியத் தேவை. அப்போதுதான் மானுடம் முழுமையும் இந்த நாட்டை, இந்த நாட்டின் ஒரு பகுதி மக்களை சத்திய நோக்கில் தரிசிக்க வாய்ப்பாக இருக்கும்." ஆம், உடனடி யாகச் சிங்களத்திலும், ஆங்கிலத்திலும் இவை ஆக்கப்பட வேண்டும்.
இனி, கதைகளுக்கு வருவோம்: ஆசிரியரின் கூற்றுப்படி, "அரைஞான் தாலி” 1987 வடமராட்சி "ஒப்பரேசன் லிபரேசன்" நிகழ்வின் போது ஏற்பட்ட மனப்பதிவுகள். தமிழ்நாட்டு எழுத்தாளர் பிரபஞ்சனின் கதையொன்றை படிக்கும் போது ஏற்படும் உணர்வே எனக்கு இக்கதையைப் படிக்கும் போது அனுபவமாகியது. ஒரு சின்னக் கவனக் குறைவு: இக்கதையில் வரும் இளநங்கை அந்த மனித குணம் நிறைந்த "தாழ்த்தப் பட்டவனிடம், தன்னை ஒரே மூச்சாக அறிமுகப்படுத்துவது கதையோட்டத்தில் நம்புந் தன்மையைக் குறைத்துவிடுகிறது. ஆசிரியர் "ஜம்ப்-கட் உத்தியைப் பயன்படுத்தியிருக்கலாம்.
33 கே. எஸ். சிவகுமாரன்

Page 24
அண்மைக்கால ஈழத்துச் சிறுகதைத் தொகுப்புகள்
இக்கதைகளின் கதைப் பின்னலை நான் எடுத்துரைக்க மாட்டேன். நீங்கள்தான் படித்துப் பார்க்கப் போகிறீர்களே!
குழந்தை உள்ளங்களின் கரவின்மையையும், ஒரு ஹிப்பியின் 'கல்லுக்குள் ஈரம் பாங்கையும் “ஓர் உண்மைக் காகம் செத்துப் போச்சு" கதை கூறாமற் கூறுவது பாராட்டத்தக்கது. நமது இன்றைய போர்ச் சூழலில் 'காகம் ஒரு சின்னம்.
“தத்து" என்ற கதையில் எனக்குப் பிடித்த ஒரு வரி: '.இதயக் கொம்பியூட்டரின் திரையில் வலமிருந்து, இடமாக மெதுவே நகர்ந்து மறைந்தன, மற்றையது கடைசி வரி: 'அன்றைய கண்டம் அகன்றது.’ நாளாந்த அனுபவம் யாழ் மண்ணில் எவ்வாறு அமைகிறது என்பதை நம்மில் பலர் அறியோம்.
அடுத்த கதையான "நினைவுத் தடத்திலொரு கொடிய வடு", தெற்கில் தமிழ் மகன் அனுபவிக்கும் பயங்கரச் சூழலுக்கு ஆசிரியர் பெளதிகவியல் விதியொன்றை நியாயப்படுத்துகிறார். அது என்ன? ஒவ்வொரு தாக்கத் திற்கும் எதிரானதும், சமமானதுமான தாக்கம் உண்டு.
இவ்வாறான முரண்பாடான நிகழ்வுகளுக்கிடையில், "இனம்' எவ்வாறிருந்தாலும், "மனிதம்' எவ்வாறு சாதாரண மக்களிடையே முகிழ்கிறது என்பதை 'ஜேன் ஆச்சி’ காட்டுகிறது. தமிழர் என்றால் என்ன, சிங்களவர் என்றால் என்ன, எல்லா ஊமைப்பிள்ளைகளும், ஒரே மொழியாகிய சைகை மொழியிலேயே பேசுகின்றன என்பது கதையில் வரும் ஒரு விளக்கம்.
"உயர்குலத்து உத்தமர்கள்” வழமையான வர்க்கபேதக் கதைதான், மேற்கோள்கள் அதிகரித்துவிட்டன. கறுப்பு,
கே. எஸ். சிவகுமாரன் 34

அண்மைக்கால ஈழத்துச் சிறுகதைத் தொகுப்புகள்
வெள்ளை என்ற அடிப்படையில் எதிர்துருவங்களாக இல்லாரும், இருப்பவரும் (இவர் ஒரு வெளிநாட்டு வேவுதாரிப் பெண்ணாம்) காட்டப்பட்ட போதிலும், கதையின் திருப்பமாகவும், முரண்படுமெய்மையாகவும் (Paradox) குப்பை வண்டி குப்பையைக் கொட்டி விட்டு, அடுத்து குப்பையாகக் கருதப்படும் "புள்ளைத் தாச்சிக்குட்டி"யை ஆஸ்பத்திரிக்கு எடுத்துச் சென்று திரும்பும் காட்சி மனதைத் தொடுகிறது.
"நண்பனை இனம்புரிந்து கொண்டேன்" கதையும், மாலுமி வாழ்க்கை போன்ற புதிய அனுபவங்களைத் தருவதுடன், 'மனிதம்' என்பது முற்சார்பு வெறுப்பையும் தாண்டி எங்கெல்லாம் ஒளிந்திருக்கிறது என்பதைக் காட்டுகிறது. இக்கதையைப் படித்தபொழுது, கடல்சார் பொறியியல் (Marine Engineering) சார்ந்த ஒரு கதையின் ஞாபகம் வந்தது. அதனை எழுதியவர் வேறுயாருமல்ல, இளக்காரமாகக் கணிக்கப்படும் புஷ்பா தங்கத்துரை தான்! எவ்வளவு தகவல்களை அவர் தமது கதையில் தருகிறார். சரி, அந்தக்கதைக்கும் ராஜபூரீகாந்தனின் இந்தக் கதைக்கும் எந்தவித தொடர்புமில்லை. மனத்திரைக் காட்சியொன்றை எடுத்துரைத்தேன். அவ்வளவுதான்.
பேராசிரியர் சி. தில்லைநாதன் எழுதி மேடையேற்றிய "தகுதி” என்ற நாடகம், ராஜ பூரீ காந்தனின் "காலத்தின் கதவுகள்" கதையைப் படித்த பொழுது எழுந்தது. இங்கும் வெறும் மனப்பதிவுதான். இரண்டு ஆக்கங்களுக்கும் தொடர்பில்லை. ஆனால், "கல்வி" என்பது சாதி வேறுபாடுகளைக் கடந்து முன்னேறச் செய்யும் கருத்து இரண்டுக்கும் பொதுவானது.
35 கே. எஸ். சிவகுமாரன்

Page 25
அண்மைக்கால ஈழத்துச் சிறுகதைத் தொகுப்புகள்
கப்பல் அனுபவம் போன்று விமான அனுபவத்தையும் ஆசிரியர் தமது, "உயரச் செல்பவர்களெல்லாம் உயர்ந்தவர் களல்ல" என்ற கதையில் கொண்டு வருகிறார். இக்கதையில் வரும் சம்பாஷணையில், பின்வரும் பகுதி, "நல்லவர்கள் போல் பழகிக் கழுத்தறுக்கும் கயவர்களைப்" படம் பிடிக்கிறது. அந்தப்பகுதி வருமாறு:
"அவரைத் தற்காலிகமாக வேலை நீக்கம் செய்துவிட்டார்கள்."
"லீவு நாளன்று அறிவித்தலோ, உத்தரவு பெறாமல் கட்டுப்பாட்டு நிலையத்திற்குள்ளே போய் கருவிகளை இயக்கியதற்காக அவரை நிரந்தரமாகவே வேலை நீக்கஞ் செய்துவிட்டால், அவருடைய பதவி எனக்குக் கிடைக்கலாம்." "அல்பிரட் எவ்வளவு நன்றிகெட்ட எதிர்பார்ப்பு" என்றான் சயந்தன்.
"இதெல்லாம் பார்த்தால் வாழ்க்கையிலே முன்னேற முடியாது. எப்பெப்ப சந்தர்ப்பம் கிடைக்கிறதோ, அப்பவே அதனைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.”
"உன்ரை உயிரைக் காத்த ஒருவரையே, உனக்கு உதவி செய்வதற்காகவே, தன்ரை வேலையை இழக்க விருக்கும் ஒருவரையே நீ உதாசீனஞ் செய்கிறாயே"
அர்த்த ராத்திரியிற் குடைபிடிக்கும், பிறரது தகமை யையும் பதவிகளையும் குறைத்து மலினப்படுத்தும், கையா லாகாதவர்களும் இப்படித்தான் "முன்னேறு"கிறார்கள். கீழே பாதாளம் விரிந்துகிடக்கிறது.
யதார்த்தம்' என்ற கதையில், சமய ரீதியான சடங்கொன்றின் விபரிப்பும், அது பற்றிய இருவர்
கே. எஸ். சிவகுமாரன் 36

அண்மைக்கால ஈழத்துச் சிறுகதைத் தொகுப்புகள்
அச்சடங்குகளின் உளவியல் பங்குபற்றி விவாதிப்பதும், இறுதியில், யதார்த்தச் சூழலுக்கேற்பவே, உளவியல் ரீதியான நடவடிக்கைகளோ, ஏனைய நடவடிக்கைகளோ அமையும் என்ற வாய்ப்பாட்டு ரீதியான முடிவுடன் கதை முற்றுப் பெறுகிறது. ஒரு வித செயற்கைத்தன்மையிருப்பதனால், கதை எ ர்ை  ைன அதிகம் க வர வரில் லை . "வல்லுணர்வுகளிடையே மெல்லுணர்வு", "ஹரிக்கேன் லாம்பு வெளிச்சத்தில்" ஆகிய இதர கதைகளும் என் இரசனை மட்டத்துக்கு அமையவில்லை. ஒரு வேளை சிலர் என்னைப் பற்றி மதிப்பிட்டிருப்பதுபோல, நான் 'ஆழமில்லாத வனாகவும் இருக்கலாம். எப்படியோ? இந்தச் சிறுகதைத் தொகுப்பு, அண்மைக்காலத்தில் நான் தமிழில் படித்த, கிளர்ச்சியூட்டும் (Stimulatingஎன்ற அர்த்தத்தில்) புத்தகங்களில் ஒன்று.
தினகரன் வாரமஞ்சரி : 28-05-1995
37 கே. எஸ். சிவகுமாரன்

Page 26
அண்மைக்கால ஈழத்துச் சிறுகதைத் தொகுப்புகள்
அ. முத்தலிங்கம்
திகடசக்கரம்
பேராசிரியர் கனகசபாபதி கைலாசபதி, தினகரன் பத்திரிகையின் ஆசிரியராக இருந்தார் என்பதை இன்றைய வாசகர்கள் அறிந்திருக்காவிட்டால் ஆச்சரியப்படுவதற் கில்லை. அமரர் கைலாசபதி இனங்கண்ட ஈழத்துச் சிறுகதை ஆசிரியர்களில் ஒருவர் அ. முத்துலிங்கம். அவரு டைய முதலாவது சிறுகதைத் தொகுதி அக்கா 60களில் வெளிவந்தது. இப்பொழுது இரண்டாவது தொகுதியான திகடசக்கரம் வெளிவந்திருக்கிறது.
இந்தத் தொகுதி, ஈழத்துத் தமிழ்ச் சிறுகதைத் துறைக்கு மாத்திரமல்ல, முழுத் தமிழ்ச் சிறுகதைத் துறைக்குங்கூட, புதுமாதிரியாகவும், எளிமையாகவும் எழுதப்பட்ட கதை களைக் கொண்டது எனலாம். புதுமைப்பித்தனின் சாயல்கள் நிரம்பவும் காணப்படுகின்றன.
ஆசிரியரிடம் நேர்மை இருக்கிறது. நகைச்சுவை இருக்கிறது. எமது முன்னோரளித்த அருஞ்செல்வங்கள் பற்றிய பிரக்ஞை இருக்கிறது. நேரிற் கதைப்பதுபோல எழுதும் லாவகம் இருக்கிறது. யாழ்ப்பாணப் பேச்சுத் தமிழைக் கவித்துவமாக்கும் மாண்பு இருக்கின்றது. தார்மீகக் கோபமும், ஒப்பீட்டுத் தன்மையும் ஆசிரியரிடம் இருக்கின்றன.
கே. எஸ். சிவகுமாரன் . 38

அண்மைக்கால ஈழத்துச் சிறுகதைத் தொகுப்புகள்
அ. முத்துலிங்கத்தின் மறுவருகை நவீன தமிழிலக்கியத் துக்குப் பெருமிதம் அளிக்கிறது.
கனடாவின் நிரந்தரப் பிரஜையாக இருக்கும் இவர், பாக்கிஸ்தான் தலைநகரான இஸ்லாமாபாத்தில் தற்சமயம் வேலை பார்த்து வருகிறார். மேற்கு ஆபிரிக்கா, வடமேற்கு ஆசியா போன்ற பகுதிகளில் தொழில் காரணமாகத் தாம் பெற்ற அனுபவங்களைக் கதைகளாக ஆசிரியர் வடித்திருக் கிறார். இவருடைய இந்தப் புதிய கதைகளைப் படிக்கும் போது, வாசகர் புதிய அனுபவங்களைப் பெறுவர் என்பது நிச்சயம்.
'சிறுகதை' என்ற இலக்கிய வடிவம் பற்றிய பிரக்ஞை பூர்வமான அறிவு இப்படைப்பாளிக்கு இருக்கிறது என்பதை இவருடைய கதைகள் மூலமும், இவருடைய திகடசக்கரம் சிறுகதைத்தொகுப்புக்கு இவரே எழுதிய முன்னுரை மூலமும் நாம் அறிந்து கொள்கிறோம்.
'பார்வதி' என்ற முதலாவது கதையில், மூன்று வருட மனப்பதிவுகள் மூலம் ஒரு பரம்பரையின் கதையைச் சிக்கனமாகக் கூறிவிடுவதுடன் பல அர்த்தங்கள் விரியும் வண்ணம், கதையை நிறுத்த வேண்டிய இடத்தில் ஆசிரியர் நிறுத்தி விடுவது, அவருடைய பக்குவத்தைக் காட்டுகிறது.
"குங்கிலியக் கலய நாயனார்’ என்ற கதை ஆய்வறிவு ரீதியான சம்பாஷணைகளை உள்ளடக்கியது. ஒரு கனேடியர், ஒரு ஜேர்மனியர், ஓர் இலங்கை யாழ்ப்பாணத் தமிழர் ஆகியோர், ஆப்கானிஸ்தானில், போதைவஸ்து, குடிப்பழக்கம், பக்திப் பிடிப்பு போன்ற அடிமைப் பழக்கங்கள் பற்றி உரையாடுகிறார்கள்.
இந்த உரையாடலின் போது, தத்தமது நாட்டு அனுபவங்களையும் கூறுகின்றனர். ஆயினும், சிறுகதையை
39 கே. எஸ். சிவகுமாரன்

Page 27
அண்மைக்கால ஈழத்துச் சிறுகதைத் தொகுப்புகள்
மிஞ்சிய தருக்கப்பேச்சின் தொகுப்பாக அமைகிறது கதையின் முற்பகுதி. கதையின் கடைசி ஒன்பது பந்திகளும், உரையாடல்களை உள்ளடக்கியவைதான் என்றாலும், அவற்றின் மூலம் ஒரு திடீர் திருப்பத்தை ஆசிரியர் கொண்டு வந்து இதுவும் ஒரு கதைதான் என்பதை நிரூபிக்கிறார். கதையனுபவத்தைச் சிந்திப்பதன் மூலம், எம்மைச் சிந்திக்க வைக்கிறார். இதில், ஆசிரியரிடம், ஓர் அறிவுமிக்க ஆற்றல் இருப்பதைக் காண்கிறோம்.
அடுத்த கதையின் பெயர் 'பெருச்சாளி' முதலில் வியாக்கியானம். பின்பு கதைக்குள் நுழைவு. அதுவும் ஒரு கணந்தான். பெருச்சாளி தொடர்பான தனது அனுபவம் ஒன்றைக் குறிக்கிறார். பின்பு, கதை நகைச்சுவையாகத் துரிதவேகத்தில் சொல்லப்படுகிறது. இடையிடையே நமது மரபுத் தொடர்களையும், பழமொழிகளையும் பெய்து, பிறநாட்டு அனுபவங்களை ஒரு தமிழனின் கண்களூடாக வெளிப்படுத்துகிறார்.
அ.முத்துலிங்கம் தனது வெவ்வேறு அனுபவங் களிடையே நடுநாராக இருக்கும் ஓர் அம்சத்தை சொல்லாமற் சொல்லி விளங்க வைத்துவிடுகிறார். இந்தக் கதையில் ஊழலைப் பெருச்சாளியுடன் சம்பந்தப்படுத்துகிறார்.
'மாற்றமா, தடுமாற்றமா' என்ற கதையில், 15 வருடங்களுக்குப் பின் கதாசிரியர் தன் சொந்த நாட்டுக்கு வந்து பெற்ற அனுபவங்களை ஒப்பீட்டு அடிப்படையில் விபரிக்கும் பொழுது, அங்கு ஏளனம், அங்கதம், நகைச்சுவை, நிதர்சன நிலை போன்ற யாவற்றையுமே சிக்கனமாகக் கெட்டியாகத் தந்து வாசகர்களைப் பரவசப்படுத்துகிறார். "வையென்னா, கானா' என்பது இன்னொரு கதை. ஏழரைப் பக்கத்துக்கு அக்கதைக்கு ஒரு முன்னுரை, அது
கே. எஸ். சிவகுமாரன் 40

அண்மைக்கால ஈழத்துச் சிறுகதைத் தொகுப்புகள்
முன்னுரை மாத்திர மா? இல்லை, ரசனை என்றால் என்ன என்பதற்கு ஒரு விமர்சனம்.
அ. முத்துலிங்கம் வெறுமனே ஒரு விஞ்ஞானப் பட்ட தாரியோ, கணக்காளனோ, கணனிப் பொறியியலாளனோ, சிறுகதை ஆசிரியனோ மாத்திரம் அல்லன், அவர் ஒரு கலைஞன். நுண்ணிய உணர்ச்சி வெளிப்பாட்டை கட்டான முறையியல் தரும் ஓர் யாழ்ப்பாணத் தமிழன்.
முன்னுரைக்கு இசைந்ததாகக் கதையை எழுதியிருக் கிறார். கதை ஒன்றும் பெரிதாக இல்லைத்தான். ஆனால் அது உணர்த்துவிக்கும் உண்மை ரசிக்கத்தக்கது.
உலக நாடுகளில் நாகரிகம், பயன் மதிப்புகள், விழுமியங்கள் எல்லாம் நாட்டுக்கு நாடு வேறுபடுகின்றன என்பதைக் கலைத்துவமாகக் காட்டும் கதை, குதம்பேயின் தந்தம்'. அது மாத்திரமல்ல-மனிதாபிமானமும், ஜீவ காருண்யமும், கதையினுடாகவே வெளிப்படுத்தப் படுகின்றன. கதையை விபரித்தால், சுவை கெட்டுவிடும்.
“செல்லம்மான்' என்ற கதையில் ஒரு கிராமத்து நாயகனை காதாசிரியர் சுவை கெடாமல் தமது செட்டான வார்த்தைப் பிரயோகம் மூலம் கொண்டு வருவதுடன், அந்நாயகன் கதாசிரியரின் ஆதாரபுருஷர்களில் ஒருவராக இருந்ததாகவும் காட்டுகிறார்.
அ. முத்துலிங்கத்தின் எல்லாக் கதைகளிலுமே இவருடைய கிராமிய, இவருடைய மாகாண, இவருடைய தமிழ் வாழ் நிலைகள் எல்லாம் கொணரப்படுகின்றன.
கடைசிக் கதை 'திகடசக்கரம்'. இக்கதையை இவ்வாறு
ஆசிரியர் முடிக்கிறார்.
4. கே. எஸ். சிவகுமாரன்

Page 28
அண்மைக்கால ஈழத்துச் சிறுகதைத் தொகுப்புகள்
ஒரு யுக்தியை ஒரு முறை கையாளலாம். இரண்டாவது முறையும் சமயோசிதமாகக் கையாண்டு தப்பிவிடலாம். ஆனால், மூன்றாவது முறை எதிராளி உசாராகி விடுவான். அடுத்த முறை புதிதாக, ஏதாவது யுக்தி தயார் பண்ண வேண்டியது தான், கந்தபுராணம் போனால் என்ன? சிவபுராணம் இருக்கிறதே! ஏதாவது தோன்றாமலா போய்விடும் என்றேன்.'
“கந்தபுராண ஆசிரியர் கச்சியப்பசிவாசாரியார்' திகடசக்கரம்' என்ற தொடரைப் பயன்படுத்தி, அறிஞர்கள் மத்தியில், சவாலுக்கு உட்பட்டபோது, தொல்காப்பியத்தின் படி திகழ் + தேச + சக்கரம் என்பதைத் திகட சக்கரம் என்று அவ்வாறு கூறமுடியாதென அறிஞர்கள் விவாதித்தனர். ஆயினும் கச்சியப்பர். முருகனின் ஆசியுடன் தந்திரமாக வீரசோழியம் என்ற இலக்கண நூலை ஆதாரங் காட்டி விவாதத்தில் வென்றாராம். அதேபோல, இக் கதையிலும், தந்திரமாக, ஒர் ஆலோசகர் ஒரு விவாதத்தில் வெல்வதாகக் கதை தீட்டப்பட்டுள்ளது.
சுற்றுச் சூழல் சம்பந்தமாகவும், மாறுபட்ட குணாதிசயங் கொண்டவர்களின் போக்குகள் தொடர்பாகவும், கதை அருமையாகப் புனையப்பட்டு எழுதப்பட்டுள்ளது.
திக ட சக் கரம் சிறுகதைத் தொகுதி மூலம் அ. முத்துலிங்கம் மீண்டும் அறிமுகமாகிறார். இவருடைய எழுத்துநடை இவருடைய ஆளுமையின் வெளிப்பாடு.
தினகரன் வாரமஞ்சரி: 05-05-1996
கே. எஸ். சிவகுமாரன் 42

அண்மைக்கால ஈழத்துச் சிறுகதைத் தொகுப்புகள்
(LP. பொன்னம்பலம்
கடலும் கரையும்
(p. பொ. 50களின் பிற்பகுதியில் எழுதத் தொடங்கிய, பரிமாணம் பெற்ற ஓர் எழுத்தாளர், சிந்தனையாளர். திசை என்ற பத்திரிகையின் ஆசிரியராகவும் இருந்தவர்.
மு. பொ. புங்குடுதீவில் பிறந்தவர் என்பதால் அங்கு இனங்காணக்கூடிய தமிழ்நாட்டு வாழ்க்கை முறையின் சில கோலங்களையும் உள் வாங்கியுள்ளார் என்பது இவருடைய கதைகளிற் சிலவற்றுள் காணப்படும் உரையா டல்களிற் பிராமணியத் தமிழ் அசைவுகள் உச்சரிக்கப்படு வதன் மூலம் காணலாம். இவருடைய தமையனார் - மு. தளைய சிங்கத்தின் ஆளுமை இவருடைய எழுத்துக்களில் ஆதிக்கம் செலுத்துகிறது.
வட மாகாணக் கலாசாரத்தை இளமையிலும் அண்மையிலும் தனதாக்கிக் கொண்ட மு. பொ., தமது வளரிளம் பருவத்தின்போது சப்ரகமுவ மாகாண சூழலி னாலும் பாதிக்கப்பட்டவராவார். எனவே மு. பொ. குறுகிய யாழ்ப்பாண வட்டத்திலிருந்து வெளியே வந்து சிந்திக்கத் தொடங்கியவர்.
43 கே. எஸ். சிவகுமாரன்

Page 29
அண்மைக்கால ஈழத்துச் சிறுகதைத் தொகுப்புகள்
இவ்வாறு குறிப்பிடப்படும் தகவல்களின் பின்னணியில் இவருடைய சிறுகதைகளைப் படிக்கும் போது, ஏற்படும் அனுபவம் புதுமையானது.
எந்தவொரு கலை இலக்கியவாதிக்கும் ஏதாவதொரு தத்துவத் தளம் இருத்தல் வேண்டும். இக்கதைகளிலே அத்தகைய தரிசன நோக்கில் இவர் வாழ்க்கை நோக்கு விரிவடைகின்றது. அதற்கேற்ப வாழ்க்கையை கூர்ந்து நோக்கி சித்திரிக்கும் ஆற்றல் பெறுகின்றன இவரது கதைகள்.
மு. பொ.வின் தத்துவத்தளம் ஆன்மீகரீதியானது. மனித நேயம் கொண்டது. இவருடைய ஆரம்ப காலக் கதைகளில் மு. தளையசிங்கத்தின் கதைகள் போன்றே மனித வேஷதாரித்தனங்கள் மீதான ஒரு வெறுப்பு படிந் திருப்பதைக் காணலாம்.
போலந்தில் பிறந்து ஆங்கில மொழியில் வல்லுனராகி ஆழமான படைப்புகளைத் தந்த ஜோசப் கொன்றட் எவ்வாறு கடலைப் பின்னணியில் பயன்படுத்தினாரோ, அதேபோன்று மு. பொ. வும் கடலை மையமாகக் கொண்டு இந்துமத தர்மத்தின்படி, ஆன்மீக விடுதலையைத் தேடிக்காட்டும் கதைகளை நிதர்சனமாக எழுதியிருக்கிறார்.
இவருடைய கதைகளில் கடல் ஒரு குறியீடு. திரும்பத் திரும்ப வந்து நிற்கும் ஒரு படிமம், அடிமனது ஆழத்தில் புதையுண்ட ஒரு இலச்சினை. எனவே கடல் எதைக் குறிக்கிறது, அதன் தன்மைகள் என்ன என்பதை அறிந்தால் அவற்றின் பிரயோகத்தில் மு. பொ. வின் கதைகளை நாம் அணுக முடியும்.
கே. எஸ். சிவகுமாரன் 44

அண்மைக்கால ஈழத்தச் சிறுகதைத் தொகுப்புகள்
கடலோடு கலத்தல்' என்ற மு. பொ. வின் முன்னுரையும் தொகுப்பின் இறுதியிலுள்ள மு. பொ, மது, கவியுவன் ஆகியோரின் உரையாடல்களும், கதைத் தொகுதியை நன்கு புரிந்து கொள்ள உதவும். 144 பக்கங்களைக் கொண்ட இத்தொகுதியில் 1963 முதல் 1995 வரை மு, பொ. எழுதியுள்ள 11 கதைகள் இடம் பெற்றுள்ளன.
மூடுபனி, அரைநாள் பொழுது, தவம், கடலும் கரையும், மாயை, கணவன், காடுபுகுதல், யுகங்களை விழுங்கிய கணங்கள், வேட்டை, பயம் கக்கும் விஷம், இருப்பின் அடையாளம் எது? அடையாளத்தின் இருப்பு எது? என்பன கதைகளின் தலைப்புகள், இவை மேலோட்டமாக கதைகளின் போக்கை உணர்த்தி நிற்பன.
மு. பொ.வின் கதைகளைப் புரிந்து கொள்ள இலக்கிய, அரசியல், சங்கேதக் குறிப்புக்களையும் நாம் தொடர்பு படுத்தி பார்க்க வேண்டியுள்ளது. நிதர்சனமான வாழ் நிலைமைகளை கதாசிரியர் யதார்த்தமாகவும் கற்பனை விருப்பு கொண்டும் மானுஷ்ய பாத்திரங்களைக் கொண்டும் விபரிக்கின்றார். வெறும் கதைகளை மாத்திரம் சொல்லாது அதற்கும் அப்பாற் சென்று சில அனுபவங்களைத் தொற்றுவிக்க முனைகிறார். இவர் கையாளும் உத்திகளும் மொழிநடையும் இப்பரிவர்த்தனைக்கும் பெரிதும் உதவு கின்றன.
இவரது முன்னைய கதைகளில் ஒரு வித அங்கதத் தொனி காணப்படினும் பின்னைய கதைகளில் சகல பக்கங்களையும் பார்த்து பதிவு செய்யும் முதிர்ச்சியுடன் கூடிய சமநிலையை ஏற்படுத்தும் பாங்கு இடம் பெற்றிருக் கின்றது.
45 கே. எஸ். சிவகுமாரன்

Page 30
அண்மைக்கால ஈழத்துச் சிறுகதைத் தொகுப்புகள்
ஒவ்வொரு கதையுமே ஒவ்வொரு அனுபவத்தைத் தருகின்றது. உதாரணமாக கடைசிச் சிறுகதையான "இருப்பின் அடையாளம் எது? அடையாளத்தின் இருப்பு எது?’ என்ற கதை. இது இன்றைய பரிதாபகரமான அரசி யற் சமுதாய சூழலை ஒரு வித தொடர் உருவமாக சித்தி ரிக்கின்றது.
'. 'மனிதனாக நின்றுதான் போராடுவேன், எனது போராட்டம் எந்த அடையாளத்திற்குள்ளும் புதைக்க முடியாதது. அப்போதுதான் எல்லா மனிதருக்கும் அது உரியதாய் இருக்கும்." என்கிறார் இந்தக் கதையின் ஊடே மு. பொ.
அரசியல் சார்ந்த கதைகளில் எவ்வாறு கருத்துப் பரி வர்த்தனையை நேர்த்தியாகச் செய்கிறாரோ அந்தக் கலைத்தன்மையுடன் தாம்பத்திய உறவுகளையும் வாழ்க்கை யின் அடிப்படை பண்புகளையும் உணர்த்தி நிற்கச் செய் கிறார். மு. பொன்னம்பலம் தரமான சிறுகதையாசிரியனாக இதுவரை இனங்காணப்படாதது விந்தையே.
மூன்றாவது மனிதன் : ஆகஸ்ட் - செப்ரெம் 1996
கே. எஸ். சிவகுமாரன் 46

அண்மைக்கால ஈழத்துச் சிறுகதைத் தொகுப்புகள்
மாத்தளை சோமு
அவர்களினர் Bதசம்
இலங்கையிலும், பிற நாடுகளிலும் நன்கு அறியப்பட்ட தமிழ் மொழி ஆக்க இலக்கியப் படைப்பாளிகளுள் முக்கியமான ஒருவர் மாத்தளையைப் பிறப்பிடமாவும் திருச்சியை புகலிடமாகவும், அவுஸ்திரேலியாவை வசிப்பிடமாகவும் கொண்ட சோமு எனப்படும் சோமசுந்தரம்.
வெளிநாடு சென்றமையால், "சோமுவின் கதைகளது களங்கள் விரிவடையலாயின. அகலுலகத் தொடர்பு கொள்ளலாயின. புதிய பரிமாணங்களைப் பெறலாயின. அவரது சமூகப்பார்வை மென்மேலும் விசாலமும் ஆழமும் பெறலாயின' என்று கலாநிதி க. அருணாசலம் கூறுகிறார். இவருடைய கதைகள் இலங்கைப் பத்திரிகைகளில் மாத்திரமன்றி, தீபம், தினமணி, சுபமங்களா, தினமணிக்கதிர், கணையாழி, புதிய பார்வை, குமுதம், கல்கி, குங்குமம், கலைமகள் போன்ற சென்னைப் பத்திரிகைகளிலும் வெளியாகியுள்ளன.
இவருடைய இதர படைப்புகள்:- நமக்கென்றொரு பூமி, அவன் ஒரு வனல்ல, இலங்கை நாட்டுத்
47 கே. எஸ். சிவகுமாரன்

Page 31
அண்மைக்கால ஈழத்துச் சிறுகதைத் தொகுப்புகள்
தெனாலிராமன் கதைகள், அந்த உலகத்தில் இந்த மனிதர்கள், எல்லை தாண்டா அகதிகள்.
மாத்தளை சோமுவின் கதைகளை, நடிகர் சிவகுமார், ஜெயகாந்தன், அமரர் பேராசிரியர் க. கைலாசபதி, எஸ். பொன்னுத்துரை போன்றவர்கள் வியந்து பாராட்டியிருக் கிறார்கள். இவருடைய முன்னைய கதைகள் என்ன கூறு கின்றன?
"மலையகத் தோட்டத்தொழிலாளர்களின் வாழ்க்கை யைச் சித்திரிக்கின்றன. அவர்களது வாழ்க்கை அவலங் களை, தொழிற்துறையிலுள்ள பிரச்சினைகளை, அவர்களை அடக்கி ஆளும் அதிகார வர்க்கங்களை, இன ஒடுக்கல் களைப் பின்னணியாகக் கொண்டு இக்கதைகள் புனையப் பட்டுள்ளன. மலையக மக்கள் குறித்து தெரிந்து கொள்ளவும் அவர்களது பிரச்சினைகளை ஓரளவு புரிந்து கொள்ளவும் உதவுகின்றன’
அவர்களின் தேசம் கதைகள் எப்படிப்பட்டவை?
கதாசிரியரே கூறுகிறார்:
"இத்தொகுதியில் உள்ள சிறுகதைகள் பல நாட்டுக் களங்களைக் கொண்டவை. இத் தொகுதி சற்று வித்தியாசமானது. மலையகம், தமிழகம், யாழ்ப்பாணம், ஆஸ்திரேலியா எனப்பல தேசங்கள்' களங்களாக அகன்று போயிருக்கின்றன. இஃது தமிழில் முதல் முயற்சி என்பதை ஒரு அடையாளமாகத்தான் சொல்லிவைக்க விரும்புகிறேன்"
1986ல் அவுஸ்திரேலியாவில் குடிபுகுந்த மாத்தளை சோமு, 1984ல் எழுதிய ஒரு கதையையும், தொண்ணுரறுகளில் எழுதிய 11 கதைகளையும் இத்தொகுப்பில் சேர்த்துள்ளார்.
கே. எஸ். சிவகுமாரன் 48

அண்மைக்கால ஈழத்துச் சிறுகதைத் தொகுப்புகள்
"இவற்றில் நான்கு மலையகத்தைக் களமாகக் கொண்டவை. இரண்டு, தமிழகத்துக் கிராமப் புறங்களைக் களமாகக் கொண்டவை. ஆறு கதைகள் அவுஸ்திரேலியா - தமிழகம் -இலங்கை ஆகியவற்றைக் களமாகக் கொண்ட அகலுலகத் தொடர்புடையன."
160 பக்கங்களைக் கொண்ட இத்தொகுப்புக்கு 19 பக்கங்களில் அருமையானதொரு முன்னுரையைப் பேராதனைப் பல்கலைக் கழகத் தமிழ்த்துறைத் தலைவர் கலாநிதி க.அருணாசலம் எழுதியிருக்கிறார். மாத்தளை சோமுவையும் அவருடைய கதைகளையும் நன்கு புரிந்து கொள்ள இந்த ஆய்வுரை உதவும்.
கதைகளை நீங்களே படித்துப் பாருங்கள். புதியதோர் உலகம் உங்கள் மனத்திரையில் விரியும். காட்சி தரும்.
நவமணி :1-12-1996
49 கே. எஸ். சிவகுமாரன்

Page 32
அண்மைக்கால ஈழத்துச் சிறுகதைத் தொகுப்புகள்
புலோலியூர் ஆ. இரத்தின வேலோன்
LyfjuLI LILLIGJIJTLİ)
புதிய பயணம், வடமராட்சி எழுத்தாளர், புலோலியூர் ஆ. இரத்தின வேலோன் ஆரம்பத்தில் எழுதிய சிறுகதை களின் தொகுப்பு.
இந்த நாட்டிலே, இலங்கைத் தமிழ் இலக்கியப் "போக்குடன் பின்னிப் பிணைந்துள்ள தரமான இலக்கிய ஏடாகிய மல்லிகையில் வெளிவந்த ஆறு கதைகளும், வீரகேசரி வார வெளியீட்டில் வெளிவந்த ஐந்து கதைகளும் இத்தொகுப்பிலே இடம்பெற்றுள்ளன. மொறாயசின் அட்டைப்படம், அழகான பதிப்பு. ஆக்க இலக்கியகாரரும், விமர்சகருமான தெளிவத்தை ஜோசப் தமது முன்னுரையில், இக்கதைகளின் சாரத்தைத் தருகிறார்.
இதன் மூலம், எழுத்தாளரும் அவருடைய கதைகளும் எத்தகையன என்பதை நாம் அறிந்து கொள்கிறோம். ஆசியுரை வழங்கிய, வீரகேசரிப் பத்திரிகையின் முன்னாள் பொது முகாமையாளர் எஸ். பாலச்சந்திரன் அவர்கள்
கே. எஸ். சிவகுமாரன் 50

அண்மைக்கால ஈழத்துச் சிறுகதைத் தொகுப்புகள்
தெரிவித்துள்ள ஒரு கருத்து மிக முக்கியமானதொன்று. அவர் கூறுகிறார். ‘ஒரு வாசகன் படித்து முடிந்ததும் எழுத்தாளன் கூற முனையும் பாடத்தையே, புரிந்து கொள்கிறான். வாசகர் மனதிலும் அதையொத்த தாக்கம் ஏற்படும் போது, எழுத்தாளனின் முயற்சி பூரணத்துவ மடைகின்றது. அவசர வேகத்தில் சமுதாய நிகழ்வுகளை அதி நவீன ஊடகங்கள் மூலமாக வெளிக்கொணரும் இவ்வவசர யுகத்தில் அமைதியான போக்குடனும் தெளிவான சிந்தனையுடனும், சிறுகதை இலக்கியமாக தன் எண்னக் கருவூலங்களை சமுதாயத்திற்கு அளிக்கும் புலோலியூர் இரத்தின வேலோன்' என்கிறார்.
புலோலியூர் ஆ. இரத்தின வேலோன் கூற்றொன்றையும் நாம் மனதிற் கொள்ள வேண்டும். அதாவது: "பிற பாத்திரங்களைச் சிருஷ்டித்து கதை சொல்வதை விட நான் நானாகவே நின்று கதை கூறுவதையே பெரிதும் விரும்புகிறேன். அப்போதுதான் மன எழுச்சிகளை, மனித முரண்பாடுகளை, மனக்குமுறல்களை இயல்பானதாக வெளிக்கொணர முடியும் என நான் நம்புகிறேன்' என்கிறார்.
இது காட்டுகிறது என்னவெனில் இரத்தின வேலோன் வெறுமனே கதைகளைக் கட்டாமல், கட்டுக் கதைகளை எழுதாமல், தான் உணர்ந்ததை ஆக்கமாகத் தருவதில் அக்கறை கொண்டுள்ளார் என்பதாகும்.
அதிகம் அலட்டிக் கொள்ளாத, அதிகம் சிரிக்காத, எந்த நேரமும் சீரியசாகத் தோற்றமளிக்கும் வேலோன், ரஞ்சகுமார் என்ற இன்றைய முன்னணி எழுத்தாளர் கூறுவதுபோல, வேறொரு மனிதனாக எம்முன் தோற்று கிறார். 1977 முதல் எழுதுகிறார். இவருடைய ஆக்கங்கள்
5 கே. எஸ். சிவகுமாரன்

Page 33
அண்மைக்கால ஈழத்துச் சிறுகதைத் தொகுப்புகள்
இடம்பெற்ற நூல்கள் - காலத்தின் யுத்தம், அறிமுக விழா, மல்லிகைக் கவிதைகள். சிறுகதையுடன் கவிதையிலும் ஈடுபாடு கொண்ட புலோலியூர் ஆ. இரத்தின வேலோன் தரமான கலை/இலக்கியப் பத்தி எழுத்தாளருமாவார்.
இந்தத் தொகுதியில் உள்ள எல்லாக் கதைகளையும் ஒவ்வொன்றாக எடுத்துப் பகுப்பாய்வு/ செய்முறைத் திறனாய்வு செய்தால் மாத்திரமே, ஆசிரியருக்கு நீதி வழங்கியதாக இருக்கும். ஆயினும் இந்தக் குறுகிய இடத்தில் அதனை நாம் செய்ய முடியாது. எனவே மேம்போக்காகச் சில குறிப்புக்களைத்தான் தரலாம்.
அப்படிப் பார்க்கும்போது, முதலாவது கதையான "எழுச்சி'யை சிறுகதை என்று நாம் கூற முடியாதிருக்கிறது. சிறுகதைக்குரிய கட்டுகோப்பு இறுக்கமாய் அமையவில்லை. உள்ளடக்கத்தில் முற்போக்குத் தன்மை காணப்படுவது வரவேற்கத்தக்கதுதான். ஆனால் வெறும் விவரண எடுத்துரைப்பும், முற்போக்கு எண்ணமும் போதுமானதாய் இல்லை. கதையைச் சுருங்கச் சொல்லி இறுக்கமாகக் கூறும் ஆற்றல் வேண்டும். "எழுச்சி கதை இவ்வாறான குறைபாடுகளைக் கொண்டது என்றால் ஏனைய கதைகளும் அப்படியே என்றில்லை.
உதாரணமாக அடுத்த கதையான தானம் வடமராட்சி பேச்சுவழக்காலும் பெரும்பாலும் உரையாடல் வடிவத்தில் எழுதப்பட்டதனாலும், கதையில் விறுவிறுப்பு இருப்பதை அவதானிக்க முடிகிறது. வேஷதாரித்தனத்தை செயல்கள் மூலம் ஆசிரியர் அம்பலப்படுத்துகிறார்.
தொடர்ந்து வரும் 'மீறல்கள் கதையும் சுவாரஸ்யமான முறையில் இக்கட்டான நிலைமைகளை, வேகமான
கே. எஸ். சிவகுமாரன் 52

அண்மைக்கால ஈழத்துச் சிறுகதைத் தொகுப்புகள்
ஓட்டத்துடன் சித்திரிக்கிறது. இங்கும் ஆசிரியரின் முற் போக்கான எண்ணங்கள் பிரதிபலிக்கப்படுகின்றன. தாம்பத்திய உறவுகளின் நேர்மையைச் சித்திரிக்கிறது
கதை.
ஓர் 25வயது இளைசனின் 'புளூபிலிம்' பார்க்கும் முதலாவது அனுபவமும், அந்த நீலப்படம் காட்டப்படும் இடம் பற்றிய விவரணையும், உள்நாட்டுச் சிறுகதைத் துறையில் முதற் தடவையாக இடம் பெறுகிறது என நினைக்கிறேன். நன்றாகவே எழுதிக் கொண்டுவந்த ஆசிரியர் இடையிலே பிரசங்கம் செய்வது போல, தார்மீகம் பற்றிப் பேசுவது கதையின் ஒருமைப்பாட்டுக்கு (Unity in structure) இடையூறு செய்கிறது. இந்தக் கதையின் பெயர் "புத்துணர்ச்சி'
அண்மைக்காலச் சிறுகதை எழுதும் பாணி / பாங்கு மெல்ல இரத்தின வேலோனிடம் வரத் தொடங்குகிறது என்று கூறுமளவிற்கு இவருடைய 'பாரதி” என்ற கதை அமைகிறது. நமது எழுத்தாளர்களின் பெயர்கள் இடம்பெறுவது ஒரு புறமிருக்க மற்றொரு புறத்தில் மத்தியதர ஆண்பெண் தாம்பத்திய உறவை மிக லேசாக ஆசிரியர் தொட்டுச் செல்வதும் கவனத்திற்குரியது. நன்றாக எழுதப்பட்டது இக்கதை.
இத்தொகுப்பிலே, தொடர்ந்து வரும் கதைகள் அனைத்துமே நன்றாக வடிவம் பெற்றிருப்பதுடன், அனுபவச் சித்திரிப்புக்களை ஆழமான முறையிலும் தருவன. "புதிய பயணம் தலைப்புக்கதை கதையில் வடமராட்சிய பேச்சு வழக்கு, ஆக்கபூர்வமான முறையில், செயற்பாட்டுத் தன்மையுடன் பிரயோகிக்கப்படுவதைக் காண்கிறோம்.
53 கே. எஸ். சிவகுமாரன்

Page 34
அண்மைக்கால ஈழத்துச் சிறுகதைத் தொகுப்புகள்
அயத்துப் போனன், பத்தாது, ஒல்லுப்போல, கருக்கல், மைமல், வெள்ளன போன்ற சொற்கள் மட்டக்களப்புப் பிராந்தியத்திலும் பயன்படுவதை நாம் காண்கிறோம்.
சூழல் மாற, நெருக்குவாரங்கள் அதிகரிக்க, வாழ் நிலைகள் நிச்சயமற்ற தன்மையில் இருக்க, புதிய பரம்பரை யினரின் வாழ்வு நோக்கு வேறுபட, நிலவும் இக்கட்டான நிலையில், வடபுலத்து மக்களின் நிகழ்வை, நாளாந்த வாழ்க்கையின் சில கூறுகளை, இக்கதை சித்திரிக்கிறது. (மொன்டீசூரிப்) பாலகனிடமிருந்து புதிய படிப்பினைகளைக் கொழும்பில் வசிக்கும் வயதில் இளைய மாமனார் கற்றுக் கொள்கிறார்.
'பிறந்தநாள் என்ற கதையில், கொழும்பிலே ஓர் வளரிளம் பருவத்தினன் மேற்கொண்ட பஸ் பிரயாண அனுபவம் சித்திரிக்கப்படுகிறது. சாமான்யமாகப் பெரும் பாலான பிரயாணிகளுக்கு ஏற்படும் அனுபவம்தான். ஆயினும், கதை உணர்த்தும் சிந்தனை அதிர்வுகள் இயல்பாய் அமைந்துள்ளன. கதையில் நேர்மையான சித்திரிப்பு உள்ளது.
'அறிமுகவிழா ஒரு புதிய உத்தியில் எழுதப்பட்ட கதை. வேஷதாரித்தனத்தை சொல்லாமற் சொல்லி விளங்க வைக்கும் கதை. படிப்பது தேவாரம் இடிப்பது சிவன் கோவில் என்று கூறுவதுபோல, சொல்லும் செயலும் மாறுபடும் ஓர் எழுத்தாளன் இக்கதையில் சித்திரிக்கப் படுகிறான். புலோலியூர் ஆ, இரத்தின வே லான், விமர்சனத்துறையிலும் ஈடுபட்டவர். ஆகையால், திறனாய்வுப் பாங்கில் அமைந்த சில மதிப்பீடுகளையும் தருகிறார். இத்தொகுதியில் இடம்பெற்ற கதைகளில் குறிப்பிடத்தக்கது "அறிமுகவிழா'.
கே. எஸ். சிவகுமாரன் 54

அண்மைக்கால ஈழத்துச் சிறுகதைத் தொகுப்புகள்
'தப்புக் கணக்கு" மற்றுமொரு கொழும்பு வாழ் அலுவலக ஆண் - பெண் தொடர்புகள் பற்றியது. இயல்பான முறையில் ஆசிரியர் எழுதியிருக்கிறார். பார்வைகள் வேறுபடுவதை ஆசிரியர் காட்ட முனைகிறார்.
"தேன் சிந்துமோ வானம்' என்ற கதையில் ஆசிரியர் லேசாக முரண் நிகழ்வுகளைக் கொண்டு வருகிறார். ஒரு விஷயத்தை அறிவதற்கு முன் இருந்த மனோபாவமும், அறிந்த பின் உள்ள மனோபாவமும், குறிப்பால் உணர்த்தப்படுகின்றன.
இறுதியாக ஒரு விடியலுக்கு முன்’ என்ற கதையை எடுத்துக் கொள்வோம். வடபுலத்து இளைஞர்கள் கொழும்பில் நடத்தும் கஷ்டமான வாழ்க்கை நிலையையும், வடக்கில் ஒளிமயமான எதிர்காலம் வந்து, வாழ்க்கைச் சுமைகள் இறங்கும் என்ற எதிர்பார்பும் கதையில் தொனிக்கிறது.
கூட்டு மொத்தமாகப் பார்த்தால், புலோலியூர் ஆ, இரத்தின வேலோன் எழுதிய கதைகளின் புதிய பயணம் என்ற தொகுப்பு, கதாசிரியருள்ளே பொதிந்திருக்கும் ஆற்றலை ஓரளவு வெளிப்படுத்துகிறது. அவருடைய தனித்துவமான ஆளுமையின் வளர்ச்சியைக் கதைகள் காட்டி நிற்கின்றன. சமுதாயத்தையும், மனிதர்களையும் அவர் பார்க்கும் பார்வை அவருக்கேயுரியது. இதனால் வித்தியாசமான அனுபவத்தை வாசகர் நுகர முடியும், ஆயினும் அவருடைய முழுத் திறமையும் இத்தொகுதிக் கதைகளில் வெளிப்பட்டுள்ளன என்று கூறமுடியாது. அவர் தொடர்ந்தும் நுட்பமாக எழுதி எமது அனுபவத் தையும், அறிவையும் விரிவுபடுத்துவார் என்று எதிர் பார்க்கலாம்.
நவமணி : 26-10-96
55 கே. எஸ். சிவகுமாரன்

Page 35
அண்மைக்கால ஈழத்துச் சிறுகதைத் தொகுப்புகள்
கோகிலா மகேந்திரன்
GITLD5l. all வலைப் பந்தாட்டம்
கோகிலா மகேந்திரன் அவர்களுடைய ஆற்றல் ஏற்கனவே பல நூல்கள் மூலம் வெளிப்படுத்தப்பட்டுள்ளது. அவருடைய ஆக்க இலக்கியப் படைப்புகளில் காணப்படும் உளவியல் சார்ந்த பண்புகள், ஈழத்து உடன்நிகழ்காலப் புனைகதைத் துறையில் வரவேற்பைப் பெற்றுள்ளன. அலட்டிக் கொள்ளாமலே பெண்ணியக் கருத்துக்களை அவர் சிக்கனமான முறையில் தெரிவித்திருக்கிறார். உள்ளத் தில் ஒளியுண்டாயின் வாக்கினிலும் ஒளியுண்டாதற் போல, அவர் நோக்கம் தெளிவுற அமைவதனால், அவர் ஆக்கங் களும் ஓர் ஒழுங்கு முறையில் தெளிவாகச் சித்திரிக்கப் பட்டவையாகவும் அமைகின்றன. கதைகள் என்ன கூறுகின் றன என்பது சொல்லாமற் சொல்லப்படும் அதே வேளையில், கதைப் புனைவு, கதைப்பின்னல், கதாபாத்திர வார்ப்பு, கதை நிகழுமிடச் சூழற் பின்னணி, கதையோட்டம், விறு விறுப்பு, படிப்பவர் ஆர்வத்தை உண்டு பண்ணச் செய்யும் உத்தி, மொழி நடை, ஆக்கத் திறன் போன்றவை குறித்தே ஒரு மதிப்புரையில் நாம் அதிகம் கவனம் செலுத்த
கே. எஸ். சிவகுமாரன் 56

அண்மைக்கால ஈழத்துச் சிறுகதைத் தொகுப்புகள்
வேண்டும். The Organic Structure எனப்படும் உள்ளார்ந்த உறுப்பு அமைதி இடம் பெறும் கட்டுமானம் பற்றி ஆய்வறி வாளர்களோ, திறனாய்வாளர்களோ, மதிப்புரையாளர்களோ, பத்தி எழுத்தாளர்களோ, கலை இலக்கியச் செய்தி யாளர்களோ, அறிமுகஞ் செய்பவர்களோ அதிகம் அக்கறை கொள்வதில்லை. இதனாற்றான் போலும், அரைத்த மாவையே அரைத்து யதார்த்த வாழ்வின் ஆவணப் பதிவு களாக மாத்திரம் கதைகளை விவரணப் பாங்கில், நம்மிற் பல ஈழத்து எழுத்தாளர்கள் செய்து வருகிறோம். இதனை மனதிற் கொண்டு போலும் ஜெயமோகன் போன்ற இந்திய ஆக்க இலக்கியப் படைப்பாளிகள் எமது ஈழத்து இலக்கியப் படைப்புகளின் சிருஷ்டித்தன்மை பற்றிக் கூற நேர்ந்தது. அது ஒரு புறமிருக்கட்டும்.
இனி கோகிலா மகேந்திரன் அவர்களின் முதலாவது கதையான பிறழும் நெறிகள் என்பதனை எடுத்துக் கொள்வோம்.
அதாவது இப்படித்தான் இருக்கும் என்ற ஊகம் என்போமாக. அந்த ஊகத்தில், வளரிளம் பருவ மாணவன் ஒருவனின் விரும்பத் தகாத செயல்களை மாத்திரம் கருத் திற் கொண்டு அவனை பலரும் எடை போடுகிறார்கள். அவனிடம் உள்ள நல்ல அம்சங்களைத் தட்டிக் கொடுத்து அவனை உற்சாகப்படுத்தத் தவறியதுடன், அவன் இயல் பான வளர்ச்சியைத் தடைப்படுத்தியும் வருகின்றனர். ஆயினும் அதிர்ஷ்டவசமாக அவன் ஆசிரியை அவனைப் புரிந்து கொண்டு, அவனுக்குப் புது நம்பிக்கையை அளிக்கின்றாள் என்பதுதான் கதைக் கருவூலம்,
இந்தக் கதை 17 வருடங்களுக்கு முன் எழுதப்பட்ட கதை என்பதை நாம் மனதில் இருத்தினால், இக்கதை,
57 கே. எஸ். சிவகுமாரன்

Page 36
அண்மைக்கால ஈழத்துச் சிறுகதைத் தொகுப்புகள்
அக்காலத்தில் ஒரு புதுப் பார்வை கொண்ட கதையாக மிளிர்ந்திருக்கும் என்பதை ஏற்றுக் கொள்வோம். பாத்திர வார்ப்பு இயல்பாயமைவதையும் குறிப்பிட வேண்டும். அடி வாங்கினாலும், அடித்த பிரம்புடன் ஒரு நாயகனாக அவன் வகுப்பறைக்குத் திரும்பும் பொழுது, எல்லோர் கவனத்தையும் தான் கவர்ந்ததை அவன் உணரும் போதுள்ள பெருமிதமும், பின்னர் அதே மூர்க்கத் தனமானவன், தம்பி, வசந்தன் என்றெல்லாம் அழைக்கப் படும் போது அவனுள் எழும் இளகிய தன்மையும் பாத்திர வார்ப்பில் சடநிலையாகத் தீட்டப்படுகின்றன. ஆயினும், இன்னும் இறுக்கமாகக் கதாசிரியர் எழுதியிருப்பின், சிறுகதைக்குரிய கவிதைத் தன்மை நன்கு துலங்கியிருக்கும் எனத் தோன்றுகிறது.
ஒவ்வொரு கதைக்கும், சிறுகதையின் குணப் பண்புகளைப் பொருந்திப் பார்த்துக் கருத்துத் தெரிவிக்க முடியுமாயினும் அவ்வாறு இங்கு செய்யப்படவில்லை. எனவே, அடுத்த கதையான, மரணிப்பிலும் உயிர்க்கும் என்ற கதைக்கு வருவோம். இக் கதையும் எண்பதுகளின் நடுக்கூற்றுக்குச் சிறிது பிந்தி எழுதப்பட்ட ஒன்று "நோய் வெளிப்படு முன்பே, அதை ஒருவரின் நரம்புத் தொகுதி உணர்ந்து, மூளைக்குத் தெரிவிக்கின்றது. மூளைக்கு வரும் இந்தச் செய்தியே எமக்குச் சுவையாகத் தோன்றுகிறது" என்ற கருத்தை வெளிப்படுத்தும், போர்காலச் சூழற்கதை இது. ஆசிரியையின் மருத்துவ, உளவியல் ஞானம் கதையை யதார்த்தபூர்வமாக எழுத உதவியிருப்பது மட்டுமல்லாமல், சிறுவர் உளப் பாங்கையும், தாய்மையுணர்வையும் விவரணை ரீதியிலும் சித்திரிக்க வகை செய்கிறது. ஒதுக்கப்படும் பொழுது, எதிர்த்து நிற்பதும் ஒரு மனித சுபாவம் என்பது ஆட்டுக்குட்டிகளுக்கு மாத்திரமல்லாமல், இளம் பாலகர்
கே. எஸ். சிவகுமாரன் 58

அண்மைக்கால ஈழத்துச் சிறுகதைத் தொகுப்புகள்
களுக்கும் பொருந்தும் உளவியல் பாங்கை, ஆசிரியர், மர ணத்துள் வாழும் வட புல மக்கள் மரணிப்பிலும் உயிர்ப் புப் பெறுவதைக் காட்டு கின்றார். பப்பாசிக் குழாய் ஒன்றில் கயிறு கட்டித் தோளில் தொங்கப் போட்டிருந்த மகனின் பயமறியாத் துணிவை இதற்குச் சான்றாகக் காட்டி நிற்கிறார். புரிந்தவர்களுக்குப் புரியும் இந்தச் சின்னத்தின் செயற்பாட்டுத் தன்மை,
இக்கதையிலும் செட்டான உருவ வார்ப்பு இருப்பதை அவதானிக்கலாம். கூறாமற் கூறும் பண்பு வரவேற்கத்தக்கது. ஒலி
விஞ்ஞான, மருத்துவ, உளவியற் செய்திகளைப் பொருத்தமான முறையில் உள்ளடக்கிக் கதைகளை எழுதும் பாங்கு, ஏனைய எழுத்தாளர்களைவிட, கோகிலா மகேந்தின் அவர்களிடம் கூடுதலாக வந்து அமைவதை நாம் காண்கிறோம். Noise Polution காதுகளுக்கு விகாரமாக ஒலியினால் ஏற்படும் மாசுக்களைக் கூறப்புகுந்த ஆசிரியர், இளைய பரம்பரையினரின் அறியாமை காரணமான அடாவடித்தனங்களையும் இக் கதையில் தொட்டுச் செல் கிறார். அத்துடன் மானம், மரியாதை பார்க்காத வீராப்பு மிக்க அசட்டு வீரங் கொண்ட பையன், சுதந்திரம்' என்பதைப் பிழையாக விளங்கிக் கொண்ட எதேச்சாதிகாரப் போக்கையும் சுட்டிக் காட்டுகிறார். கதைப் போக்கு மொழி நடை ஆகியன யாவுமே 1986ல் எழுதப்பட்ட இந்தக் கதை யில் கச்சிதமாய் இடம் பெறுவதும் குறிப்பிடத்தக்கது. சமுதாயம் ஒரு சறுக்குப் பாதை
1987ல் எழுதப்பட்ட சற்று வித்தியாசமான கதை, சமுதாயம் ஒரு சறுக்குப்பாதை. இதன் விளக்கத்தைக் கதையின் இறுதியில் இவ்வாறு கூறுகிறார்.
59 கே. எஸ். சிவகுமாரன்

Page 37
அண்மைக்கால ஈழத்துச் சிறுகதைத் தொகுப்புகள்
"சமுதாயம் என்ற பாதையில் பணம் என்ற பிடிகளைக் கொண்டு வேகமாக ஏறிய செல்லம்" இங்கு செல்லம் என்பவர், இக்கதையின் நாயகியாக வரும் தங்கராணியின் அயல்வீட்டுக்காரி. கிராமியச் சூழலில், பணச் செருக்குக் காரணமாகக் குணம் மாறும் சிலருக்கு ஓர் உதாரணமாக இந்தச் செல்வம் சித்திரிக்கப்படுகிறாள். கதை நிகழ் காலத்திலும், பின்னோக்கு உத்தி மூலம் சென்ற காலத்திலும் நிகழ்கிறது. இங்கு ஒரு ஆடு நஞ்சூட்டப்பட்டுக் கொலை செய்யப்படுகிறது. தங்கராணியின் மகன் மூன்று வருடங் களுக்கு முன் போய் விடுகிறான். அயல் வீட்டுக்காரியின் மகன் பயத்தினால் வெளிநாடு செல்கிறான். இந்த மட்டில் கதை புரிகிறது. ஆயினும் சிதம்பரப் பிள்ளை மாஸ்டர் என்பவர் பற்றிக் கதையில் குறிப்பிடப்படுகிறது. ஆனால் அவர் தங்கராணிக்கு உதவினார் என்று செல்லம் கூறுவது, தங்கராணியைப் பாதிக்கிறது. ஆனால் இவர் யார், இவரின் பங்கு என்ன என்ற விபரம் கதையிலிருந்து பெற முடியா திருக்கிறது. இத் தகவல்கள் கூறாமலும் கூறப் படவில்லை. தங்கராணியின் கணவர் கனகுடன் கொடுக்கல் வாங்கல் வைத்துள்ளார் என்பது மாத்திரமே கூறப்படுகிறது. இவருக்கும் மல்லிகா என்ற ஆட்டின் கொலைக்கும் என்ன தொடர்பு என்பதை, தங்கராணி கேட்பது போலவே நாமும் ஆசிரியையிடம் கேட்க வேண்டியுள்ளது. இந்தக் கதையில் உருவ நேர்த்திக்கு அதிகம் கவனம் செலுத்தப்பட வில்லை போல் தெரிகிறது. ஆயினும் எரிச்சல், பொறாமை, புதுப் பணக்காரர் மனப்பாங்கு போன்றவை உணர்த்தப் படுகின்றன. கொஞ்சம் இறுக்கமாக எழுதியிருக்கலாம் என நினைக்கிறேன்.
அடுத்து, இத் தொகுப்பின் தலைப்புக் கதையான வாழ்வும் ஒரு வலைப் பந்தாட்டம் என்ற கதைக்கு
கே. எஸ். சிவகுமாரன் 60

அண்மைக்கால ஈழத்துச் சிறுகதைத் தொகுப்புகள்
வருவோம். இந்தக் கதையும் எண்பதுகளின் பிற்பகுதியில் எழுதப்பட்டது. மற்றைய எழுத்தாளர்கள் அதிகம் தொடாத சம்பவங்களை- உதாரணமாக, இந்தக் கதையில், வரும் வலைப்பந்தாட்டம் என்ற விளையாட்டு நிகழ்ச்சியையும் கதையில், சம்பந்தப்படுத்தி எழுதுபவர் கோகிலா மகேந்திரன் அவர்கள். பெண்களின் பாத்திரங்களை ஆண்கள், தமது கண் கொண்டுதான் எழுதுவார்கள் எனப் பெண்ணிய வாதிகள் சுட்டிக்காட்டுகின்றனர். ஆனால் கோகிலா அவர்கள் போன்ற எழுத்தாளர்கள், தமது பார்வைகளில் பெண்பாத்திரங்களைச் சிருஷ்டிப்பது குறிப்பிடத்தக்கது. இவருடைய கதைகளில் நம்புந்தன்மை அதிகமாக இருப் பதற்கான காரணம் ஓர் ஆசிரியர் பாடசாலை அதிபர் என்ற முறையில் அவர் பட்டுத் தேர்ந்த அனுபவங்களைக் கொண்டு எழுதுவதுதான். இக்கதையிலும் வழக்கம் போல உளவியல் பார்வையும் ஆய்வறிவும் இணைவதனால், வாழ்க்கையையே ஓர் வலைப் பந்தாட்டத்துக்கு ஒப்பிட்டுப் பார்க்கும் புதுப் புனைவு இவரிடத்திற் காணப்படுகிறது. பெண்களே, பெண்களுக்கு எதிரி என்ற கூற்று ஓரளவு உண்மை என்பதைக் காட்டுவது போலவும், அனுபவம் காரணமாக, வாழ்க்கையில் சாதிகளைத் தாக்கி, எதிர்த்து உயிர்ப்புக் கொள்வது போலவும், எதிர் கால நம்பிக்கையுடன் முக்கிய கதாபாத்திரத்தை இயங்க வைத்திருக்கிறார். “தனக்குக் கோபம் வரக் கூடும் என இவர் எதிர் பார்த் தார். ஆனாலும் வர வில்லையே” என்று முடித்திருக்கும் பாங்கு அவர் முதிர்ச்சித் தன்மையைக் காட்டுகிறது. சருமம் தடிப்பது என்பதும் மற்றுமோர் உதாரணம்.
கதை எழுதப்பட்ட முறை மூலம், ஆசிரியரின் செப்ப னிடும் தன்மை சீரடைந்திருப்பதை நாம் அவதானிக்கக்
6 கே. எஸ். சிவகுமாரன்

Page 38
அண்மைக்கால ஈழத்தச் சிறுகதைத் தொகுப்புகள்
கூடியதாய் இருக்கிறது. இது ஒரு நல்ல நீதி சுட்டிய கதை எனலாம்.
மனிதம் மதலைகளிடம் மட்டும்
கோகிலா மகேந்திரன் அவர்களின் இத் தொகுப்பில் இடம் பெற்ற கதைகளுள், என்னை அதிகம் உலுக்கி விட்ட கதை இது. அவ்வாறு தத்ரூபமாக வருணிப்பும், விவரணமும் அமைந்திருந்தது. கதையைப் படிக்கும் போது கண்ணிர் மல்கும் போலிருந்தது. கதாநாயகனின் மீதான கழிவிரக்கத் தினைப் பச்சாதாபம் ஏற்பட்டது என்பதை விட இக்கதையில் வரும் மதலையின் மனிதத்துவத்தையிட்டுத்தான் உருக்கம் ஏற்பட்டது.
இக் கதையிலும் கூட உலக வாழ்க்கைக் கோலங்களின் வேறுபட்ட தன்மையையும், பெண்கள் சிலரின் மனப் பாங்கையும் ஆசிரியர் நேர்த்தியாகப் படம் பிடித்திருக்கிறார். கட்டமைப்பு, உள்ளடக்கச் சிறப்பு, கவிதை நடை ஆகியன யாவுமே திருப்தியளிக்கின்றன.
ஆழ்ந்த அநுதாபங்கள்
அடுத்து 1989ல் வெளியாகிய ஒரு கதை இதில் நகைச் சுவையும், ஏளனமும் நன்கு வெளிப்படுகின்றன. என் போன்ற பத்தி எழுத்தாளர்களும் இக் கதையில் வரும் பாத்திரம் போல புத்தகங்களை இரவலாகக் கொடுத்துத் திருப்பிப் பெறாதவர்கள்தான். இது ஒரு இலகு வாசிப்புக் கதை என்றுங் கூறலாம்.
எரியும்
‘எரியும்' என்ற கதையுடன் 1990களுக்குள் கோகிலா மகேந்திரன் அவர்கள் பிரவேசிக்கிறார். மனதைத் தொடும்
கே. எஸ். சிவகுமாரன் 62

அண்மைக்கால ஈழத்தச் சிறுகதைத் தொகுப்புகள்
மற்றொரு கதை. சுருதி கெடாமல் ஒரே சீராய்ச் சென்று எதிர்பாரா முடிவுடன் சோகம் ததும்பி நிற்கும் கதை. கதை நிகழ்வு யுத்த காலப் பின்னணி. இந்தக் கோர யுத்தம் உயிர்களை மட்டும் பறிக்கவில்லை. பிறக்கப் போகும் உயிர்
களையும் முளையிலேயே கிள்ளிவிடும் அளவிக்குப் பதற்ற நிலையை உண்டு பண்ணுகிறது. இதுவும் பாராட்டும் படியான கதை.
கோகிலா அவர்களின் எழுத்துத்துறை வளர்ச்சிக் கிரமத்தை இக்கதை மூலமும் நாம் அறிந்து கொள்ளக் கூடியதாக இருக்கிறது.
அடுத்து நாம் 1994க்குச் செல்வோம். ஓர் ஆசிரியரின் கடமை தவறாச் செயற்பாடு, இக்கதையில் சித்தரிக்கப் படுகிறது. தனது சொந்த மகன் இறக்கும் தறுவாயில் இருக் கும் பொழுது கூட, தனது வகுப்பு மாணவர்களின் நலன் கருதி, அவர் பாடசாலைக்குச் சென்று பாடத்திட்டத்தைப் பூர்த்தி செய்கிறார். இப்படிப்பட்ட ஆசிரியர்கள் யாழ்ப்பாணக் குடாநாட்டில் இருப்பது ஒன்றும் புதுமையல்ல. அத்தகைய ஓர் ஆசிரியரின் பலனை எதிர்பாராத முயற்சி, இக் கதை யில் விவரிக்கப்படுகிறது. ஆயினும், கோகிலா அவர்களின் வேறு சில கதைகளிற் காணப்படும் உழைப்பு நிலைச் சித்திரிப்பை இக்கதையிற் காண முடியாது போய்விட்டது. அவர் தமது எடுத்துரைப்பை, உரையாடல்கள் மூலமும், சற்று எட்ட நின்றும் விபரிக்கிறார். பாத்திரத்தின் இக்கட்டான நிலையை அவருடைய மனத்தினுடாகவும் காட்டியிருந்தால் மிக நன்றாயிருந்திருக்கும் என நினைக்கிறேன். மனதையே கழுவி
கோகிலா மகேந்திரன் அவர்களின் கவித்துவமான மற்றொரு கதைத் தலைப்பு, மனதையே கழுவி. இது மிக
63 கே. எஸ். சிவகுமாரன்

Page 39
அண்மைக்கால ஈழத்துச் சிறுகதைத் தொகுப்புகள்
அண்மைக்காலக் கதை. 1995ல் வெளியாகியது. கதைத் தலைப்பு உணர்த்தும் ஒரு திகைப்பனுபவத்தைக் கவிதை சார்ந்த நடையில் ஆசிரியர் எழுதியிருக்கிறார். உளவியல் பகுப்பாய்வுடன் மூன்று பெண்களின் மனோபாவத்தை பெண் எழுத்தாளரான கோகிலா அவர்கள் செட்டாகத் தீட்டியிருக்கிறார். ஆணாதிக்கக் கண்கள் ஊடாகவே பெண்கள் சித்திரிக்கப்படுகிறார்கள் என்று அவசர அவசர முடிவுக்கு வரும் பெண்ணியவாதிகள், பெண்களின் குறை களையும், நிறைகளையும் பெண்ணியக் கண்கள் ஊடாகவும் சித்திரிக்கலாம் என்பதை அடிக்கடி மறந்து விடுகிறார்கள். ஆண்கள் கூட பெண்களின் நிலை நின்று கதைகளைப் படைக்கலாம் என்பதையும் மறந்து விடுகிறார்கள்.
மூன்றாந்தர சினிமா பரபரப்புச் செய்தியாளர் தமிழ் நாட்டில் சமன் கவர்ச்சி சமன் என்று ‘கவர்ச்சி' என்ற வார்த்தைக்கு அர்த்தம் கொடுப்பர். அது மாத்திரமல்ல. ‘அழகியல்' என்ற பதத்துக்கும் அவர்கள் அறியாமையால் கொடுக்கும் விளக்கங்களும் அபத்தமானது.
நஷ்டம் என்னவென்றால், இந்த இந்தியப் பத்திரிகை காரனைப் பின் பற்றி இங்குள்ள பத்திரிகையாளர்களிற் சிலரும் பிரதி பண்ணுவதுதான். அவ்வளவு தூரத்துக்கு தமிழ்நாட்டு மூன்றாந்தரப் பத்திரிகைகளின் செல்வாக்கு இங்கு ஆட்சி செலுத்துகிறது. போகட்டும்.
பெண்ணின் அழகையும், கவர்ச்சியையும் ஆய்வறிவு ரீதியாகவும், உளவியல் சார்ந்ததாகவும் எழுதும் கோகிலா மகேந்திரன் அவர்கள் விபரிக்கும் தோரணையைப் பாருங்கள்.
"அவளின் கழுத்து வளைவில் மட்டும்தான் இளமை நெடி அடித்தது. வட்ட விழிகள். வரம்பாய் இரு புருவம். கண்ணுக்குள் அம்பு மாதிரித் துளைக்கும் பார்வை. இவை
கே. எஸ். சிவகுமாரன் 64

அண்மைக்கால ஈழத்துச் சிறுகதைத் தொகுப்புகள்
அவளுடையவை. அவளிடமே ஒரு குழந்தை மனம் நிறைந்து வழிந்தது. அவளின் கண்ணிமை மயிரில் புல்லின் மேல் பனித்துளிபோல் நீர், மெதுவாகச் சிரித்தாள். விரக்தி கலந்த புன்னகைதான் என்றாலும், அழகாக இருந்தது. மெல்லிய மஞ்சளும், பச்சையும் சேர்ந்த எளிமை யான சட்டை என்றாலும், அந்தத் தெரிவில் ஒரு கலைத்துவம் இருந்தது."
இவ்வாறு எழுதும் ஆசிரியர் கையாளும் உத்திமுறையும் குறிப்பிடத்தக்கது. ஒரு ஆலோசகர் என்ற முறையில், கதா பாத்திரத்தின் உணர்வுகளை நெறிப்படுத்தி விளக்கம் கொடுக்கும் கதை சொல்பவர், பின்னோக்கு உத்தியையும் கையாண்டு, முதல்/ இடை / கடை என்ற பிரிவுகளற்றுக் கதையை நகர்த்திச் செல்கிறார். இப்படியாக உத்திகளில் நமது ஈழத்து எழுத்தாளர்கள் எழுதுவது மிகவும் குறைவு. இந்தக் கதை எனக்குப் பிடித்ததற்கு மற்றொரு காரணம், கதையின் பின்னணியில் அமையும், வடபுல மக்களின் யுத்தகால வாழ்க்கை நிலையின் யதார்த்த சித்திரிப்பு ஆகும்.
இறுதியாகக் கடைசிக் கதைக்கு வருவோம். தலைப்பு: சர்ப்ப மரணம். இது இரண்டு வருடங்களுக்கு முன் எழுதப்பட்ட கதை, கதாசிரியர் கூறவருவது ஒரு வாறு புலப்படுகிறது. ஆயினும் வாசகனுக்கு ஒரு மயக்கம் ஏற்படுகிறது. ஒரு பாம்பின் மரணம் போல, அவ்ரோ விமானத்தின் வெடிப்பைச் சமப்படுத்தும் ஆசிரியை, எழுதிய முறைமையில் சில தெளிவின்மை இருப்பது போலத் தெரிகிறது. கதாசிரியையின் விளக்கத்தைக் கொண்டு தான், இக் கதையையும் மேலும் புரிந்து கொள்வோம்.
கோகிலா மகேந்திரன் அவர்களின் வாழ்வு ஒரு வலைப்பந்தாட்டம் என்ற இத் தொகுதியில், ஆசிரியை 80
65 கே. எஸ். சிவகுமாரன்

Page 40
. அண்மைக்கால ஈழத்தச் சிறுகதைத் தொகுப்புகள்
களிலும் 90களிலும் எழுதிய 11 கதைகள் இணைக்கப் பட்டிருப்பதைக் கண்டோம். இந்த நாட்டின் முக்கிய எழுத்தாளர்களுள் ஒருவராகிய இவர், பெண்களின் சித்திரிப் பைக் கச்சிதமாகச் செய்யும் ஒரு பெண்ணியவாதி என்பதை யும் கண்டோம். இவருடைய கதைகள், இவருடைய நேரான அனுபவத்தின் சித்திரிப்பாகவும், கல்விச் சூழல்களில் நடைபெறுவதையும், உளப்பகுப்பியல் பாங்கில் பாத்திரச் சித்திரிப்பு அமைவதாயும் கண்டோம். பிறர் அதிகம் எழுதாத விஞ்ஞான, மற்றும் உடனிகழ்கால பிற செய்திகளை உள்ளடக்கிக் கதைகளுக்குப் பொருத்தமாய் அவற்றைச் சேர்ப்பதையும் கண்டோம். கவித்துவமான நடையும், நுண்ணியதாக அவதானித்து எழுதுவதும் இவருடைய பாங்குகள். இக் கதைகள் யாவும் பாராட்டும் படியாக எழுதப்பட்டிருந்தாலும் உணர்வலைகளை என்னுள் அதிகம் எழுப்பிவிடாது போயின. வாழ்வும் ஒரு வலைப்பந்தாட்டம், மனிதம் மதலைகளிடம் மட்டும், மனதையே கழுவி ஆகிய கதைகள், ஈழத்துத் தமிழ் ஆக்க இலக்கியம் செழிப்புடையதாக இருக்கிறது என்பதற்குச் சான்றாக அமைகின்றன.
w பல கஷ்டங்களுக்கு மத்தியிலும் எழுத்து மூலம், உலகின் வெவ்வேறு தரிசனங்களை எமக்குத் தந்து கொண்டிருக்கும் கோகிலா மகேந்திரன் அவர்கள் பாராட்டுக்குரியவர்.
தினகரன் வாரமஞ்சரி : 10-08-1997
கே. எஸ். சிவகுமாரன் 66

அண்மைக்கால ஈழத்துச் சிறுகதைத் தொகுப்புகள்
யோ. பெனடிக்ட் பாலன்
GlsLJd'IJli GlfIgjijLILITLIdi
Gurt. பெனடிக்ட் பாலன் எழுதிய 18 அருமையான சிறுகதைகளின் தொகுப்பு விபசாரம் செய்யாதிருப்பாயாக. "அருமையான' என்ற அடைமொழியை அர்த்தத்துடன் தான் குறிப்பிடுகின்றேன். எந்த ஒரு எழுத்தாளனும் எடுத்த எடுப்பிலேயே உன்னதமான படைப்புகளைப் படைப்பது அபூர்வம். பெனடிக்ட் பாலனும் படிப்படியாகத் தமது இலக்கியத் திறனைத் தமது எழுத்துக்களில் (1962 - 1996) காட்டி வந்துள்ளார். ஒருவருடைய படைப்பை நாம் அணுகு முன்னர், அது எழுந்த காலச்சூழல், எழுத்தாளரின் வயது, அனுபவம் போன்றவற்றையும் கருத்திற் கொண்டே மதிப்பிட வேண்டும். இவருடைய கதைகள் ஈழநாடு முதல் வீரகேசரி வரையிலுமான பத்திரிகைகளில் வெளி வந்துள்ளன. இவற்றில் சில தாமரை, தாயகம், குமரன், வசந்தம் போன்ற இடதுசாரிக் கருத்தோட்டங்களைப் பிரதிபலிக்கும் ஏடுகளிலும் வெளிவந்தன என்பதை நாம் கவனத்திற் கொள்ள வேண்டும்.
வெளிப்படையாகவே, மனிதனை அவன் அவலங்களை மையமாக வைத்தே பாலன் கதைகளை எழுதியிருக்கிறார். மனிதனை, மனித விழுமியங்களை சித்திரித்து உன்னதப்
67 கே. எஸ். சிவகுமாரன்

Page 41
அண்மைக்கால ஈழத்துச் சிறுகதைத் தொகுப்புகள்
பண்புகளைச் சொல்லாமற் சொல்லி, கலைநயத்துடன் கூறும் படைப்புக்களை பெனடிக்ட் பாலன் தந்திருப்பதை நாம் முதலில் அவதானிக்க வேண்டும். இந்த நூற்றாண்டைச் சேர்ந்த பொறுப்புள்ள எந்த ஒரு எழுத்தாளனுமே, மனிதனின், அவன் வாழ்வின், அவன் மேன்மையில் அக்கறை கொண்டவனாகவே இருத்தல் சொல்லாமலே விளங்கும். அந்த விதத்திலே பெனடிக்ட் பாலனின் கதைகள் ஒவ்வொன்றிலும் நிகழும் உன்னதமான, முற்போக்கான, கருத்துக்களை நான் முழுமையாக வரவேற்கிறேன். அவர் கதைகள் உள்ளடக்கும் செய்திகளில் எந்தவிதமான முரண்பாடும் எனக்குக் கிடையாது. எனவே இது பற்றி அதிகம் கூறுவதற்கு இல்லை.
மொழியின் ஆக்கபூர்வப் பயன்பாடு
கதைகளின் ஏனைய உறுதிப் பொருள்களை நாம் கவனத்தில் எடுக்க வேண்டும். பெனடிக்ட் பாலன் 30, 35 வருடங்களுக்கு முன்னதாகவே மொழியை ஆக்கபூர்வமாக, செயற்பாட்டுத் தன்மையாகக் கையாண்டிருப்பதை நாம் கவனித்தல் வேண்டும். இலக்கியம் என்பது சொற்களினால் ஆனது. எனவே, சொற்களின், சொற்றொடர்களின், சொற் படிமங்களின் பண்புகளை நாம் கிரகித்துக் களிப்படையலாம். ஒவ்வொரு கதையிலும் இந்தச் சிறப்பை நாம் அவதானிக்கக் கூடியதாக இருக்கிறது.
அந்தோனியும் விசேந்தியும் என்ற கதையிலே, இதனை நாம் விஷேசமாக உணரலாம். இந்தப்பகுதிகளைப் பாருங்கள்:
‘வாழ்க்கையின் பரப்பை அடக்கி மனப்புழுக்கத்தில் பின்னிய நினைவின் வலைக்குள் அவன் ஒரு சிலந்தி. இரை தேடி அலையும் சிலந்தி அல்ல. அந்த வலையின்
கே. எஸ். சிவகுமாரன் 68

அண்மைக்கால ஈழத்துச் சிறுகதைத் தொகுப்புகள்
இழைகளைப் பிட்டுக் கொண்டு வெளிநாட வழி மோப்பும் சிலந்தி' இன்னும் சில வரிகள்:
'அவன் கண்கள் பாயில் விளக்குப் பூச்சி பிடித்தன. "அந்தோனியின் இதய இழைகள் விபரிக்க முடியாத அன்பின் இறுக்கத்தில் முறுவி இறுகின.'
முரண்நிகழ்வுகளைச் சொற் செட்டால் விளக்கி, இனம் இனத்துடன் சேரும் பண்பை ஆசிரியர் கலை நயமாகக் கூறுவது வரவேற்கத்தக்கது.
அடுத்ததாக 1963ல் எழுதப்பட்ட விபசாரம் செய்யா திருப்பாயாக என்ற கதைக்கு வருவோம்.
1963க்கும் 1996க்கும் இடையில் Sex எனப்படும் பால் உறவு தொடர்பான பார்வைகள் மாறுபட்டுள்ளன. எனவே, ஒரு பெண் தொழிலுக்காக அல்லது சிற்றின் பத்துக்காக உடலுறவு கொள்ளல் அப்படியொன்றும் புதுமையான விஷயமாக இன்றில்லை. ஆயினும் 60களில், இது ஒரு விழுமியப் பிரச்சினையாக இலங்கை போன்ற கீழைத்தேய நாடுகளில் இருந்து வந்துள்ளது.
பெனடிக்ட் பாலன், கத்தோலிக்கச் சூழ்நிலைகளில் கதைகளைத் தந்திருப்பது ஒரு குறிப்பிடத் தக்க அம்சம். இந்தப் பின்னணியில், டொமினிக் ஜீவா, கே. டானியல், எஸ். பொன்னுத்துரை, எஸ். அகஸ்தியர் போன்ற கத்தோ லிக்க மதச் சூழலில் பிறந்த எழுத்தாளர்களும் சில நல்ல கதைகளைத் தந்துள்ளனர். பெனடிக்ட் பாலன், விபசாரம் G3 titutiful illustust 3, (Thou shall not commit adultery)
69 கே. எஸ். சிவகுமாரன்

Page 42
அண்மைக்கால ஈழத்துச் சிறுகதைத் தொகுப்புகள்
என்ற கத்தோலிக்கப் பிரகடனத்தை மையமாக வைத்து இயற்பண்புவாத(Naturalistic) வரைபடத்தில், பெரும் பாலும் உரையாடல்களைக் கொண்ட உத்தியிலே, யதார்த்த வாதமான (Realistic) கதை ஒன்றைத் தந்திருக்கிறார். ரீடா என்ற அந்தப் பெண், மனம் விரும்பாவிட்டாலும், வேறுவழியின்றி தன் இரு பெண் குழந்தைகளையும், தன்னையும் உயிர் வாழ வைப்பதற்காக விபசாரத்தில் ஈடுபடல் தவிர்க்க முடியாமற் போய்விடுவதைக் காட்டும் ஆசிரியர், உண்மையில் சமூக விமர்சனமே செய்கிறார்.
பெனடிக்ட் பாலன் 60களில் எழுதிய மற்றொரு கதை சமுதாய விதி எனப் பொருளடக்கத்தில் குறிப்பிடப்பட்ட போதிலும் இக்கதையின் இறுதியில் இக்கதை 1995ல் வீர கேசரியில் வெளிவந்ததாகத் தரப்பட்டுள்ளது. இதில் எது சரியெனத் தெரியவில்லை. அதுவல்ல முக்கியம். இக்கதையில் நுட்பமாக உணர்த்துவிக்கப்படும் செய்திகளே முக்கியம். சீதனப் பிரச்சினை ஒரு சமுதாயப் பிரச்சினை என்பதை வெளிப்படையாகவே உரையாடல் மூலம் தெரிவிக்கும் ஆசிரியர், கதையின் கடைசிப் பகுதியில், விதியையும் வெல்ல, புனிதமும், வேதநாயகமும் முற்படத் துணிவதைச் சூசகமாக உணர்த்துவிக்கிறார்.
விரக்தியாய் இருந்த வேதநாயகத்திடம் புனிதம் கூறுகிறாள்;
'அண்ணை நாளைக்கு தாடியை வழியுங்கோ'
ஆசிரியர் முடிக்கிறார்; 'மெளனமாக அவனின் கண்கள் நனைந்து கொள்கின்றன. அது அவளுக்காக மட்டுமல்ல. ஒரு வித சுய - இரங்கல் , கழிவிரக்கம் இருப்பதுபோல் பட்டாலும், சாதகமற்ற சூழலைச் சாதகமாகப் பார்க்கும்
辩
கே. எஸ். சிவகுமாரன் 70

அண்மைக்கால ஈழத்துச் சிறுகதைத் தொகுப்புகள்
தன்மையைச் சகோதரியின் கூற்றுமூலம் கதாசிரியர் உணர்த்துவது கலைநுட்பம்.
O O O
60களில் வெளிவந்த மற்றொரு கதை தேயிலைப்பூ
யாழ்ப்பாணக் கிறிஸ்தவ சூழலில் நின்று பெனடிக்ட் பாலன் மலையகத்துக்கு வருகிறார். யாழ்ப்பாணக் குடாநாட்டை விட்டு வெளியே வந்து, மற்றுமொரு விரிந்த உலகத்தைப் பார்க்க நேர்ந்த எழுத்தாளர்களின் படைப்பு க்கள் இயல்பாகவே ஒரு சமநிலைத் தன்மையைப் பெறுவது ஆச்சரியமில்லை. நந்தி, பெனடிக்ட் பாலன், ஞானசேகரன், சொக்கன், புலோலியூர் சதாசிவம், சுதந்திர ராஜா போன்ற எழுத்தாளர்கள் மலையக வாழ்க்கையைப் படம் பிடித்து நேர்த்தியாய் எழுதுவதை தெளிவத்தை ஜோசப் போன்ற விமர்சகர்கள் பாராட்டியிருப்பதை நாம் அவதானித்தல் வேண்டும்.
இந்தக் கதையிலே, பெருந்தோட்டத் தொழிலாள மக்களின் பேச்சு மொழியை வெகு இயல்பாகவே கொண்டுவரும் ஆசிரியர், அளவாக ஓரிரண்டு அழகிய வருணனைகளையும் அள்ளித் தெளித்துள்ளார். யோ. பெனடிக்ட் பாலனின் கவிதைகள் சில தமிழ் நாட்டு ஏடான எழுத்து இல் வெளிவந்தமை ஞபாகத்திற்கு வருகிறது. கருப்பாயி என்ற பெண்ணை இவ்வாறு பெனடிக்ட் பாலன் வருணிக்கிறார்;
"அத்தோட்டத்தில் அவள் எல்லார் கண்களையும் சறுக்கி விழுத்திவிடும் அழகி. குறுகுறுத்து வாளித்திருக்கும் மென்மையின் திமிர் ஒவ்வொரு அங்கத்திலும் மிஞ்சி
7 கே. எஸ். சிவகுமாரன்

Page 43
அண்மைக்கால ஈழத்துச் சிறுகதைத் தொகுப்புகள்
விழுகின்றது. வெளியில் உருண்டு விழுவதுபோல் மயக்கமாக துள்ளும் மீனாட்டம் அமைந்துள்ள அவளது கண்கள், எத்தனை பேருக்கு மன இடறலைக் கொடுத்திருக்கிறது. ஆனால் அவை கிட்ட நெருங்க முடியாத திராணி கொண்ட கண்கள்.”
இப்படியான வரிகள் கதைக்கு அழகூட்டினால், கதை சொல்லும் பாங்கும், கதை ஈற்றில் வரும் திருப்பமும் பெனடிக்ட் பாலனின் வடிவமைப்பு நேர்த்திக்கு (Craftsmanship) சான்று. கதையின் இறுதியில் நடக்கப் போவதை முன்கூட்டியே, கருப்பாயியின் நடத்தை மூலம் கோடிகாட்டி விடுகிறார் ஆசிரியர். அவள் நடத்தை பயத்தினால் ஏற்பட்டது வெள்ளைக்காரத் துரை "சின்ன ராஜாவைப் போல நடை பழகும்போது விரும்பிய பூக்களை பிடுங்கிக் கசக்கி எறிந்தால் அவை மீண்டும் அவன் காலடியில் தானே விழுந்து கிடக்க வேண்டும்?” என்று கருப்பாயியின் இயலாமையைக் கூறாமற் கூறுகிறார் ஆசிரியர். “இவ்வளவு காலமும் அவளை வீட்டிற்கு விரட்டியும் அவள் துரையிடம் போகவேயில்லை. இன்றைக்கு போகிறாள். ஆச்சரியமாக அவளைப் பார்த்து துரையைப் பார்த்தான் கணக்குப் பிள்ளை, அவன் இறைச்சித் துண்டை நினைத்துவிட்ட நாயைப்போன்று கண்வெட்டாது அவளையே பார்த்துக் கொண்டிருந்தான்."
இந்த ஒப்புவமையைப் பாருங்கள்;
"அவள் பேசவில்லை. அவனுக்கு முன்னால் அவளுடைய வனப்பான மார்பகங்களையுடைய நெஞ்சம் கீழிருந்து உருகிவிடும் அக்கினிக் குழம்பால் மேலுயர்ந்து தாழும் பூதியை போல் அசைந்து கொண்டிருந்தது.”
கே. எஸ். சிவகுமாரன் 72.

அண்மைக்கால ஈழத்துச் சிறுகதைத் தொகுப்புகள்
ஈற்றில் கதை இவ்வாறு முடிகிறது. "அவளின் உள்ளத்தின் தீர்ப்பு, அவனோடு அதன் நீதி அவளுக்கு மட்டுதான் தெரியும். கருப்பாயி தானே அவனை நோக்கி நடந்து கொண்டிருந்தாள்." புதுமைப்பித்தனின் கதாநாயகி ஒரு வார்ப்பு, பெனடிக்ட் பாலனின் கருப்பாயி இன்னொரு வார்ப்பு ஆக்கத்திறன். எழுபதுகளில் பெனடிக்ட் பாலன் எழுதிய கதைகளில் இரண்டு இத்தொகுப்பில் இடம் பெற்றுள்ளன.
மரியாயி ஒரு மாடுதானே?
இந்தக் கதை, என்னைப் பொறுத்த மட்டில் ஓர் Reportage. ஒரு பத்திரிகைச் செய்தி போன்று எழுதப்பட்டிருக்கிறது. 70களில் சுலோகங்கள் அதிகம் எழுந்தன. கலை நயம் எங்கேயோ ஒளிந்துவிட, வீறாய்ப்பு வசனங்களை எழுதி அதுதான் மக்கள் இலக்கியம் என்றொரு மயக்கம் ஏற்பட்ட காலம், புதுக்கவிதை என்ற பெயரில் புற்றீசல்கள் போல் சுலோகங்கள் எழுதப்பட்ட காலம்.
யதார்த்தம் எங்கேயோ நழுவி, இயற்பண்பு வாதம் தலை தூக்கிய காலம். அரசியல் தேவைக்கு அது அவசியமாகப் பட்டதனால், எழுத்தாளர்களும் விட்டில் பூச்சிபோற் ஆகர்ஷிக்கப்பட்ட காலம். பெனடிக்ட் பாலனும் விதிவிலக்கல்ல. அதே சமயத்தில் அ. பால மனோகரன், அருள் சுப்பிரமணியம், நித்திய கீர்த்தி போன்ற எழுத் தாளர்களின் படைப்புகள் வெளிவந்த காலம்.
கொழும்பையும், மலையகத்தையும் இணைக்க முற்படும் கதாசிரியர் பெனடிக்ட் பாலன் வேஷதாரித்தனத்தை (Hypocrysy) இக்கதையில் அம்பலப்படுத்துகிறார். ஆயினும் சொல்லாமற் சொல்லும் பண்பு பறிபோயிற்று. ஆசிரியர் எழுதுகிறார்.
73 கே. எஸ். சிவகுமாரன்

Page 44
அண்மைக்கால ஈழத்துச் சிறுகதைத் த்ொகுப்புகள்
“தேயிலைத் தோட்டத்தில் உழைப்பை மட்டும் சுரண்டுவார்கள். இங்கே இவர்கள் அவள் உழைப்பை மட்டுமல்ல, உணர்ச்சிகளையும், ஆசாபாசங்களையும் நசுக்கிச் சாகடித்து வருவார்கள். மரியாயிக்கு இருக்கிற பெண் ணுணர்ச்சிகளும் யோசப்பருக்கும் மனைவிக்கும் புரியாதவை யல்ல. தம் மகளுக்கு காலா காலத்தில் திருமணம் செய்து வைத்தவர்களுக்கு புரியாதென்பது பொய்"
இன்னொரு இடத்தில் “மரியாயி சுரண்டப்பட்ட, ஒடுக்கப்பட்ட வர்க்கத்தைச் சேர்ந்தவள். அவர்களால் இவளை நேசிக்க முடியாதுதான்." என்று தெட்டத்தெளிவாக எழுதுகிறார் ஆசிரியர். ஓர் அரசியல் கட்டுரைக்கு இது பொருந்தும். ஆனால் சிறுகதை ஒரு கலை என்றால் இத்தகைய பிரகடனங்கள் சிறுகதைக்குப் பொருந்தா. இதேவிதமான கதைகளின் அடிநாதத்தை ஒரு செக்கோவ், ஒரு மோப்பசோன் கலைத்துவமாகத்தான் தருவார்கள்.
இதேமாதிரி ஒரு கதை உனக்கு இது போதும். குமரன் பத்திரிகையில் வெளிவந்தது. செ. கணேசலிங்கன், மு. வரதராசன் போன்றோர் பாணியில் முற்போக்கான அரசியற் சிந்தனைகளைத் தரும் எழுத்துருவங்கள். உள்ள டக்கம் வரவேற்கத்தக்கதாய் அமைந்த போதிலும், அதனைச் சொல்லும் முறையில் கலைத்துவம் நழுவிவிட்டது.
பெனடிக்ட் பாலன் 80களில் எழுதிய ஆறுகதைகள் இத்தொகுதியில் இடம்பெற்றுள்ளன. குமரன் ஏட்டில் வெளிவந்த கதை கவரிமான்கள். பெனடிக்ட் பாலனின் கலைத்துவம் மீண்டும் ஒளிர்விடத் தொடங்குகிறது. சாதி வெறி பிடித்தவர்கள் கண்மண் தெரியாமல் செய்யும் அட்டூழியங்களையும், அவர்கள் பிதற்றும், வெறுப்பு வார்த
கே. எஸ். சிவகுமாரன் 74

அண்மைக்கால ஈழத்துச் சிறுகதைத் தொகுப்புகள்
தைகளையும், சீரான நீரோட்டமாகக் கொண்டு வருகிறார். ஆசிரியர் சாதி வெறி கொண்டவர், தனது இயலாமையை மறைக்கத் தூக்குப் போட்டுச் சாவதாகக் கதை முடிகிறது. சமுதாயத்தில் உள்ள ஒரு சிலரின் சாதிவெறியின் முழு வீச்சையும் ஒரு கதையிலே ஆசிரியர் காட்டிவிடுகிறார். கவரிமான்கள் என்று அங்கதச் சுவையுடன் முன்னைய கதைக்கு எவ்வாறு தலைப்புக் கொடுத்தாரோ, அவ்வாறே பட்டத்துக்குரிய இளவரசன் என்ற தலைப்பு மற்றொரு கதைக்கு அங்கதமாகக் கொடுக்கப்படுகிறது. 80களில் யாழ்ப்பாணத்துச் சராசரி இளைஞனின் கொழும்பு வாழ்க்கையையும், அவன் பழுக்களும், சுமைகளும், குடும்பப் பொறுப்புக்களும் எவ்வாறு இருந்தன என விளக்கும் கதை இது.
ஒரு பாவத்தின் பலி:
அன்றைய யாழ்ப்பாணத்து இளைஞர்களில் ஒரு சிலரின் போக்கை நன்றாகப் படம் பிடித்துக் காட்டுகிறது. யதார்த்தம் தொனிக்கிறது. ஆண்-பெண் அன்னியோன்னிய சம்பாஷணையைச் சுவையுடன் ஆசிரியர் தருகிறார்.
80களில் பெனடிக்ட் பாலன் எழுதிய தாம்பத்திய உறவுக் கதைகளில் குறிப்பிடத்தக்க கலைநயமான கதை கீழைக்காற்று. குடும்ப வாழ்வில், ஆணாதிக்கம், தாழ்வுச் சிக்கல், சீதனப்பெருமை, நிலப்பிரபுத்துவ பயன்மதிப்புக்கள், அடங்கிய பெண்மையின் நியாயபூர்வமான சீற்றம், பெண்ணுரிமையும் விடுதலையும் போன்றவற்றைச் சுருக்கமாகவும், கதையோடு ஒட்டியதாகச் சொல்லாமற் சொல்லியும் ஆசிரியர் வெற்றி பெறுகிறார்.
கடந்த தசாப்த கால நடவடிக்கைகளில் 1985 அளவில் பிரவேசிக்கும் பெனடிக்ட் பாலன், யாழ்ப்பாணவாழ்
75 கே. எஸ். சிவகுமாரன்

Page 45
அண்மைக்கால ஈழத்தச் சிறுகதைத் தொகுப்புகள்
மக்களின் அன்றாட அவல நிலையை, பயத்தை, அமைதி யின்மையை, பதற்றத்தை இப்படி எத்தனை காலம் என்ற கதையில் கொண்டு வருகிறார். அது மாத்திரமல்ல வன்செயல், பிரதி விளைவாக வன்செயல்களைத்தான் கொண்டுவரும் என்பதையும், பயத்தின் காரணம் எழும் தற்காப்புச் சூழல் விபரிப்பையும் கொண்டு வருகிறார்.
அரசியலையும், வர்க்க ஐக்கியத்தையும் தெரிவிப்பதற் காக ஒரு வண்டியில் பூட்டிய மாடுகள் என்ற கதையை
எழுதியிருக்கிறார். இதுவும் யதார்த்தம் தொனிக்கும் ஒரு கதை. ஒரு சீரான ஓட்டம் கதையில் இழை ஒடுகிறது. வறு மையை அவர் பல சமூகத் தட்டுக்களினின்றும் படம் பிடிக்கும்போது, இனங்கடந்த ஒருமைப் பாட்டைக் காண் கிறார். ஆயினும், கட்டப்பட்ட கதைபோல் இது இருப்பதையும் புறக்கணிக்க முடியாது.
எஞ்சிய ஆறு கதைகளும், 90களில் எழுதப்பட்டவை. தினம் தினம் நமது இளைஞர்கள் படும்பாடுகளில் ஓரிரு அம்சங்களைத் தொட்டுக் காட்டும் நடப்பு விவரணையாக பட்டம் விடுவோம் அமைந்துள்ளது. சட்டத்தின் பாது காவலரே சட்டத்தை மீறி லஞ்சம் பெறுவதும், இன வேறு பாடுகளற்ற சாதாரண மக்களின் அன்பும், படித்த இளை ஞர்கள், நெருக்குவாரம் காரணமாக கூலி வேலை செய்வ தையும், ஊதாரிகள் கோடீஸ்வர ராய் மாறுவதையும் சித்தி ரிக்கும் கதை. இங்கு இனம் கடந்த ஒருமைப்பாடுகளே படம் பிடிக்கப்படுகின்றன.
தமிழ் இன இளைஞர்கள் இடையே இருக்கும் கயமைத் தனங்களின் ஒரம்சத்தை கரையேறும் மீன்கள் சித்திரிக் கின்றது. நடப்பு உலகில் யாவருக்கும் பரிச்சயமான கதைதான்.
கே. எஸ். சிவகுமாரன் 76

அண்மைக்கால ஈழத்துச் சிறுகதைத் தொகுப்புகள்
லூக்கஸ் மாஸ்டர் என்ற கதை உருக்கமான சுயசரிதை. உண்மைச் சம்பவங்களின் எடுத்துரைப்பு. லூக்கஸ் மாஸ்டர் என்ற தலைப்புக்கேற்ப பாத்திர வார்ப்பு இன்னும் செழுமைப்படுத்தப் பட்டிருக்கலாம். குமரன் பத்திரிகைக் கதைகள் போல இது அமைந்து விட்டதையும் குறிப்பிட வேண்டும்.
சபிக்கப்பட்டவனா? என்ற கதையைப் படிக்கும் பொழுது மக்ஸிம் கோர்க்கியின் பாத்திரங்கள் தான் என் நினைவுக்கு வருகின்றன. பெண்ணுடன் உடலுறவு கொள்ளாத, தன்னையே சபித்துக் கொண்ட, அழகில்லாத, வயோதிபத்தை எய்தும் ஒரு தியாகியின் படப்பிடிப்பு நன்றாக வந்து அமைகிறது.
ஒர் அக்கினிக் குஞ்சு
கண்ணில் நீரை வரவழைக்கும் கதை. வயதுக்கு மீறிய அறிவும் அன்பும் கொண்ட ஒரு பாலகனின் தைரியமும், மரணத்தை ஏற்கும் பக்குவமும் சித்திரிக்கப்படுகின்றன.
பட்டத்துக்குரிய இளவரசன் யாழ்ப்பாணத்து இளை ஞர்கள் சிலரின் குடும்பப் பொறுப்புணர்ச்சியை வெளிப் படுத்துகிறது.
கைசேர்ந்தவர்கள் சுரண்டுபவர்களின் ஏமாற்று வித்தைகளைக் காட்டுகிறது. அப்பாவிகளின் இயலாத் தன்மையையும் வெளிப்படுத்துகிறது.
மொத்தத்தில், இத் தொகுதி அழகியதோர் ஆக்க இலக்கியம்.
நவமணி : 1997
77 கே. எஸ். சிவகுமாரன்

Page 46
அண்மைக்கால ஈழத்தச் சிறுகதைத் தொகுப்புகள்
யூ எல். ஆதம்பாவா
காணிக்கை
பூ எல். ஆதம்பாவின் கதைகளைப் படிக்கும் பொழுது கிழக்கிலங்கை முஸ்லிம்களின் பேச்சுமொழி, கவித்துவமாகப் பயன்படுத்தப்படுவதை நாம் முதலில் அவதானிக்கலாம். அடுத்ததாக அப்பகுதி மக்களின் வாழ்நிலை யதார்த்தமாகப் படம் பிடிக்கப்படுகின்றது. எல்லாவற்றிற்கும் மேலாக எழுத்தாளரின் நேர்மைக்குணமும் ஆளுமையும் கதைகளில் படிந்திருப்பதை நுகரலாம். இத்தகைய அம்சங்களினால், கதைகளில் நேர்மை தொனிக்கிறது.
இத்தொகுப்பில் இடம் பெற்றுள்ள கதைகள் 1966க்கும் 1995க்கும் இடையில் வெளிவந்தவை. பெரும்பாலான கதைகள் 80களில் பிரசுரமானவை. பத்திரிகை ரகக் கதைகளாக எழுதப்பட்டவை. இந்தப் பின்னணியை மனதில் கொண்டே நாம் இவருடைய கதைகளை அணுகவேண்டும்.
கதாசிரியர் யூ, எல். ஆதம்பாவா ஒரு கல்விமான். நல்லாசிரியர். எனவே, நல்லவற்றை படிப்பினை ஊட்டக் கூடியவற்றையே ஆசிரியர் கதைகளாக எழுதியிருக்கிறார். நல்ல குணவியல்பு கொண்டவர்களின் மனப்பாங்கை சித் திரிக்கும் கதைகளை ஆசிரியர் இத்தொகுப்பில் சேர்த்திருக்கிறார். இக்கதைகளில் தார்மீக நெறிகள்
கே. எஸ். சிவகுமாரன் 78

அண்மைக்கால ஈழத்தச் சிறுகதைத் தொகுப்புகள்
வலியுறுத்தப்படுகின்றன. பெண்களின் கருத்துக்களுக்கு மதிப்புக் கொடுக்கும் கணவன்மார்கள் இக்கதைகளில் வருகிறார்கள், பெண்ணியவாதிகள் இதனை அவதானிக்க. நெறிமுறைகள், விழுமியங்கள், உதாசீனப்படுத்தப்படும் இக் கால கட்டத்திலே, குறிப்பாக மாணவர்கள், இக்கதைகளைப் படித்துப் பார்ப்பது பயனளிக்கக் கூடும். காணிக்கை சிறுகதைத் தொகுதி ஆசிரியர் பற்றியும் அவர்தம் ஆக்கங்கள் பற்றியும் அறிஞர்கள் எஸ். எச். எம். ஜெமீல், வி. எம். இஸ்மாயில் (மருதூர்க் கொத்தன்) மருதூர் ஏ. மஜீத். கதாசிரியர் யூ.எல்.ஆதம்பாவா ஆகியோர், உரிய முறையில் தகவல்களையும் மதிப்பீட்டையும் இந்நூலிலே தந்துள்ளனர். அவற்றிற்கு மேலாக நான் வேறு ஏதும் விஸ்தாரமாகக் கூறவேண்டிய அவசியமில்லை. தவிரவும், கூறியது கூறல் என்ற முறை ஏற்பட்டு விடும்.
இந்த மதிப்பரையில், நான் என்ன செய்ய முனைகிறேன் என்றால் - இப்பன்னிரண்டு சிறுகதைகளையும் ஒருங்கே படித்தபொழுது, என்னில் எழுந்த மனப்பதிவுகளை. உங்களோடு பகிர்ந்து கொள்வதுதான். இக்கதைகளை நீங்கள் படிக்கும் பொழுது, உங்கள் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான அனுபவங்கள் ஏற்படும். சில கதைகள் நன்றாகவும், சில கதைகள், சுமாராகவும், சில நேர்த்தித் திறன் செம்மைப்படுத்தாத விதத்திலும் அமைந்திருக்கலாம். அதற்காக, இந்நூலைப் பற்றித் திறனாய்வு சார்ந்த மதிப்புரைகளைப் பதிவு செய்யாமல் இருக்கமுடியுமோ?
இனி, கதைகளை ஒவ்வொன்றாகப் பார்ப்போம்.
வீடு - ஒரே மாதிரியான வாய்ப்பாடு கதைகளைப் படித்துச் சலித்துப்போன வேளையில் கிழக்கு மாகாண முஸ்லிம் பேச்சுவழக்கும் இடம் பெறும் ஒரு தாய் - மகள்
79 கே. எஸ். சிவகுமாரன்

Page 47
அண்மைக்கால ஈழத்தச் சிறுகதைத் தொகுப்புகள்
உறவுக் கதை ஒரு பெரிய ஆறுதலாய் இருக்கிறது. இக்கதையில் வரும் பாத்திரச் சித்திரிப்பும், கதை உணர்த்துவிக்கும் முரண்நிகழ்வும் திடீர் திருப்பங்களும், சிக்கனமான கதைக் கட்டும், ஓட்டமும், கதாசிரியரின் திறனை வெளிக்கொணருகின்றன.
நஸிருக்கு இன்று நோன்புப் பெரு நாள் - ஒத்த மனதுடைய தம்பதிகளின் நிறைந்த வாழ்வை, இலட்சிய ரீதியாகச் சித்திரிக்கிறது. இக்கதை 16 வருடங்களுக்கு முன் வெளியான கதை என்பதையும் நாம் மனதில் வைத்திருக்க வேண்டும்.
ஒரு விடி வெள்ளி உதயமாகின்றது - பெண் கல்வி அவசியத்தைக் கூறாமற் கூறுகிறது. கதை எழுதப்பட்ட முறைமை சுவாரஸ்யமானது. ஆயினும், வெறுமனே விவரணமாகக் கதை அமைந்துள்ளது. பாத்திரங்களின் உள்ளுணர்வை குறிப்பாக, அந்தப் பள்ளிக்கூட மாணவியின் மனவோட்டத்தை இன்னும் நுட்பமாக எழுதியிருக்கலாம். காணிக்கை - அதீத நாடகப்பண்பு (melodrama) இக்கதையில் இடம் பெற்றிருப்பது, இக்கதை பத்திரிகைத் தேவைக்காக எழுதப்பட்டதனாற் போலும். ஆயினும் கதை, உணர்த்துவிக்கும் ஒரு பண்பை நாம் அவதானிக்கத் தவறக்கூடாது. ஆசிரிய-மாணவ உறவின் நேர்மையும், கெளரவமும் வரவேற்கத்தக்கவை. மிகச் சிக்கனமாக எழுதவேண்டும் என்பதற்காக, கதாசிரியர் வீண் விபரிப்புகளைத் தவிர்த்துக் கொள்கிறார். நேரிடையாகவே கதையைச் சொல்வது பொருத்தமாய் அமைகிறது.
மீண்டும் அவன் சவுதிக்குப் போகிறான் - இந்தக் கதையும் மனதை உருக்கும் விதத்தில் எழுதப்பட்டுள்ளது. கிழக்கு மாகாண முஸ்லிம்களின் பேச்சுவழக்கு எனக்குப் புரிவதனாலோ என்னவோ இக்கதையின் உரையாடல்களை,
கே. எஸ். சிவகுமாரன் 80

அண்மைக்கால ஈழத்தச் சிறுகதைத் தொகுப்புகள்
கதையின் பின்னணியில் வைத்துப் படிக்கும் பொழுது சுவையாக இருக்கிறது. நாணயம் தவறாத ஒரு மனிதரின் நிலைப்பாட்டை, இக் கதையிலும் காணலாம்.
திருந்திய உள்ளங்கள் - நன்னெறி சார்ந்த மெளலவி சமயக் கிரியைகளை வியாபாரப் படுத்துதல், மதத்தின் அறநெறிக்கு முரணானது என்பதை ஏனையோருக்கும் வலியுறுத்துவதைக் கதை சொல்கிறது. இலட்சியநெறியை வலியுறுத்தும் மற்றொரு கதை இது.
இணையும் ஒரு குடும்பம் - எதிலுமே நல்லதையே விரும்பும் ஆசிரியரின் மற்றொரு இலட்சிய வடிவக் கதை இது. தம்பதிகளிடையே ஏற்பட்ட அர்த்தமற்ற பூசல்களை காதி தீர்த்து வைக்கும் பாங்கு அருமையாக இருக்கின்றது. இங்கும் கிழக்கு முஸ்லிம் மக்களின் பேச்சுவழக்கில் உரையாடல்கள் இடம் பெற்றிருத்தல் சுவையளிக்கிறது. நன்றாகவே கதையின் பெரும் பகுதியை ஆசிரியர் எழுதியிருக்கிறார். ஆயினும், கதையைப் பட்டென முடித்துவிடுவது பத்திரிகைத் தேவைக்காகவே போலும். அதனால், இக்கதையின் முழு பிரமாணங்களையும் நுகர முடியாமற் போய் விடுகிறது.
தண்டனை - தர்ம சங்கட நிலையை விளக்கும் ஓர் அருமையான கதை. நீதி பிறழப்படுவதை ஆசிரியர் நேர்த்தியாய் உணர்த்துவிக்கும் பாங்கு ரசிக்கத்தக்கது. கதாசிரியர் யூ.எல். ஆதம்பாவா அவர்கள், தனக்கு நன்கு பழக்கப்பட்ட சூழல்களையே பின்னணியாகக் கதைகளுக்கு எடுத்துக் கொள்வதனால், அவருடைய கதைகள் பெரும் பாலும் யதார்த்தமாய் அமைகின்றன.
ஆசை - இக்கதையில் ஓர் ஏழை மனைவியின் ஆசை வீணாகப்போகிறது. அதிகாரத்தினால் ஏழைகள் சூறை
8 கே. எஸ். சிவகுமாரன்

Page 48
அண்மைக்கால ஈழத்தச் சிறுகதைத் தொகுப்புகள்
யாடப்படுகின்றனர். இக்கதையில் ஒரு முரண் நிகழ்வு. போடியாரின் மனைவிக்குப் பிடிக்காத மீனைத்தான் போடியார், மீனவரிடம் பறித்துச் சென்று, ஏழையின் உழைப்பைச் சுரண்டுகின்றார். அன்டன் செக்ஹோப் கதைகளில் தோற்றுவிக்கப்படும் உணர்வு இங்கும் பரிவர்த் தனை செய்யப்படுகிறது.
தந்தையை விஞ்சிய தனையன் - இக் கதையிலும் வாழ்க்கை சிக்கலில்லாத முறையில் அமைகிறது. சீராக ஒடும் வாழும் பாங்கு. கதாபாத்திரங்கள் எல்லோரும் நல்வர்கள். உன்னத நோக்குடையவர்கள். கதாசிரியரின் லட்சியங்கள் வெளிப்படுகின்றன.
நினைவுகளும் நிகழ்வுகளும் - நாம் ஒன்றை நினைக்க தெய்வம் ஒன்றை நினைப்பதாகக் கதை முடிகிறது. இங்கும் முரண் நிகழ்வும் எதிர்பாராத முடிவும் இடம் பெறுகின்றன.
சிறுகதை என்ற இலக்கிய வடிவத்தில் இடம் பெறக்கூடிய கதைகளையும், உருவகக்கதைகளையும் யூ.எல் ஆதம்பாவா அவர்கள் எழுதியிருக்கிறார் என்பது உண்மையே. ஆயினும், சில இடங்களில் சில விவரணங்களைத் தவிர்த்து பாத்திர வார்ப்பைக் குறைந்தது இரு பரிமாணங்கள் கொண்டதாக அமைத்திருக்கலாம். கதாசிரியர், இனி எழுதும் கதைகளில் முழுக்க முழுக்க நல்லவர்களைக் கொண்ட பாத்திரங்களை எழுதும் போதுங்கூட அவர்களுடைய பலவீனங்களையும் இணைத்துச் சித்திரித்தால், கதைகளில் மெய்ம்மை மேலும் புலப்படும்.
இந்தச் சிறுகதைத் தொகுப்பு நாடுபூராவும் தமிழ் போதிக்கப்படும் பாடசாலை நூலகங்களில் வைத்திருக்க வேண்டிய ஒரு நூல்.
தினகரன் வாரமஞ்சரி : 25.05.1997
கே. எஸ். சிவகுமாரன் 82

அண்மைக்கால ஈழத்தச் சிறுகதைத் தொகுப்புகள்
நீர்வை பொன்னையன்
LIITIDj
இந்த நாட்டிலுள்ள எழுத்தாளர்கள் அனைவருமே, சுரண்டப்படுபவர்கள் சார்பாக நின்று குரல் எழுப்பும், சமதர்மவாதிகள் என்பது மிகையான கூற்று அல்ல. ஆயினும் எல்லோருமே ஒரே தளத்தில் நின்று முற்போக்கான சிந்தனைகளை வெளிப்படுத்துபவருமல்லர். ஒவ்வொருவரும் தத்தம் பாங்கில் தமது பார்வையை வெளிப்படுத்துபவர்தாம்.
அதே வேளையில் கலைத்துவமாக, சுவையான முறை யில், கதைகளை எழுதுபவர்களுள் குறிப்பிடத்தகுந்த ஒருவர் நீர்வேலியைச் சேர்ந்த பொன்னையன் அவர்கள். இவர் முன்னரும் ஒரு சிறுகதைத் தொகுதியை அளித்தவர். அதன் பெயர், மேடும் பள்ளமும், 1960களிலிருந்தே எழுத துலகில் பவனி வரும் நீர்வை பொன்னையன் 1970களில் எழுதிய தரமான கதைகளடங்கிய பாதை என்ற இத் தொகுதி, இளைய பரம்பரையினருக்கு, அக்கால யதார்த்தச் சூழலை ஆவணப்படுத்தும் ஒரு தொகுதியாக மட்டுமின்றி, இந்த எழுத்தாளரின் கலைத் திறனையும் வெளிப்படுத்தி நிற்கிறது.
83 கே. எஸ். சிவகுமாரன்

Page 49
அண்மைக்கால ஈழத்துச் சிறுகதைத் தொகுப்புகள்
உள்ளடக்கச் சிறப்பு மேலோங்கி நிற்கும் அதே வேளையில், முற்போக்கான அச்சிந்தனைகளை ஏந்தி வரும் வாகனமும் உருவ அமைதி கொண்டு கலை மெருகுடன் அமைந்து வாசகனுக்குச் சுவை அளிக்கிறது. இந்த வெற்றி சாத்தியமாவதற்குக் காரணம், ஆசிரியர் தான் வரித்த கொள்கைகளில் அவர் கொண்டுள்ள நம்பிக் கையும் நேர்மையுமாகும்.
நீர்வை பொன்னையன் கல்கத்தாவில் பட்டப்படிப்பை மேற்கொண்ட கலையுள்ளம் கொண்ட ஒரு ரசிகன்/ சுவைஞன். அவ்விதமான பின்னணியைக் கொண்ட ஒருவர் வாழ்க்கையை நோக்கும் பாங்கு, வெறுமனே மேலோட்டமான ஆவணச் சித்திரிப்பாக இருக்க மாட்டாது. கூறாமற் கூறும் கலைத்துவப் பூச்சு, வெளிப்படையான பிரசார வாடையை நீக்கி விடுகிறது. எனவே படிப்பவர் தாமே சிந்தித்துத் தாமே உணர்வலைகளின் வீச்சினால் ஆட்பட்டு மாற்றத்துக்கு உட்படுகிறார். இதுவே கலைஞன் சமூக மாற்றத்துக்கு செய்யக் கூடிய பணியாகும்.
நீர்வை பொன்னையன், ஒரு தொழிற்சங்கவாதியாகவும், பள்ளிகூட ஆசிரியராகவும் தொழிற்பட்டவர். ஒரு விவசாயியின் மைந்தன். ஆயினும் தாழ்த்தப்பட்ட மக்கள் எனக் கூறப்படுகிறவர்களின் நலன்களுக்காகப் போராடி வருவபவர். எண்ணத்தாலும், இதயத்தாலும் ஒரு முற் போக்காளன். இப்பொழுது 'விபவி என்ற நிறுவனத்தினரின் தமிழ் மொழி மூலக் கலாசார நடவடிக்கைகளுக்குப் பொறுப்பாக இருக்கிறார். இவருக்குப் பக்கத்துணையாக, அயராது உழைத்துவரும் சிங்கள-தமிழ் பரிவர்த்தனை யாளர், எஸ். சிவகுருநாதன் மற்றும் 'ஜீவா ஆகியோர் இருந்து வருகின்றனர்.
கே. எஸ். சிவகுமாரன் 84

அண்மைக்கால ஈழத்துச் சிறுகதைத் தொகுப்புகள் -
நீர்வை பொன்னையன் போர்க் குணம் கொண்ட ஒர் ஆவேசப் பேச்சாளர், சிறுமை கண்டு பொங்குபவர். அதே வேளையில் தன்னடக்கமும், பெருந்தன்மையும் கொண்ட ஒரு பரோபகாரி. பழகுவதற்கு இனியவர். எளிமையானவர். அழகுணர்ச்சியும், உயர்மட்ட ரசனையும், பகுத்து அறியும் விருப்பும், நேர்மைக் குணமும் கொண்டவர். இத்தகைய குணநலன்கள் கொண்ட ஒருவரே தமது ஆக்க இலக்கியங்களை உரிய முறையில் படிப்பவர்கள் பயனுறச் செய்யும் வண்ணம் உதவுபவர்களாக இருக்கிறார்கள்.
நீர்வை பொன்னையனின் கதைகள் சிலவற்றை ஒரே தடவையில் நாம் இப்பொழுது படிக்கும் பொழுது, அவை எழுதப்பட்ட கால கட்டத்தையும் மனதிலிருத்த வேண்டும். அக்கால கட்டத்தில் நிலவிய சிந்தனைகள், யதார்த்தச் சூழல், ஆக்க இலக்கியத்தில் பயன்படுத்தப்பட்ட உத்தி முறைகள், மொழிநடை போன்றவற்றை கருத்திற்கொண்டு, அவற்றிற்கிடையே எழுதப்பட்ட கதைகள் வெற்றியளித் துள்ளனவா என்று நாம் பார்க்க வேண்டும்.
அவருடைய நோக்கம் என்ன?
‘என்னுரை' என்ற தலைப்பில் ஆசிரியர் தெட்டத் தெளிவாகத் தனது சிந்தாந்தங்களையும் நோக்கங்களையும் தெரிவித்திருக்கிறார்.
"முற்போக்கு எழுத்தாளர்களாகிய நாங்கள் உழைக்கின்ற சுரண்டப்படுகின்ற மக்களின் பக்கம் தான் நிற்கின்றோம். எனது படைப்புக்களில் தொழிலாளர், விவசாயிகள் தான் கதாநாயகர்கள். வர்க்க உணர்வுடைய, தன்னலமற்ற அர்ப்பணிப்பு. கூட்டுச் செயற்பாடு, தர்மாவேச போர்க்குணம் ஆகிய குணாம்சங்களையும், சுரண்டல், சூறையாடல்,
85 கே. எஸ். சிவகுமாரன்

Page 50
அண்மைக்கால ஈழத்துச் சிறுகதைத் தொகுப்புகள்
அநீதி அக்கிரமங்கள் நிறைந்த மனிதனை மனிதனே விழுங்குகின்ற இந்தச் சீர்கெட்ட சாக்கடைச் சமுதாயத்தை முற்று முழுதாக மாற்றி, இல்லாரும் உள்ளாரும் இல்லாத ஒரு புதிய உன்னத உலகை அமைக்க வேண்டுமென்ற லட்சிய வேட்கையையும் கொண்ட தொழிலாளர், விவசாயிகள்தான் எனது கதாநாயகர்கள்."
ஆசிரியர் நீர்வை பொன்னையன், தனது கதைகள் மூலம் என்ன சொல்ல வருகிறார் என்பதை இவருடைய உரை மூலம் கண்டோம். இனி, ஒவ்வொரு கதை பற்றியும், விமர்சனச் சாயல் படிந்த சில பத்தி எழுத்துக் குறிப்புக்களைப் பார்ப்போம்.
சுருதிபேதம்
தான் கொண்ட கொள்கை பிடிப்பு காரணமாகத் தன்னை காதலிக்கும் ஒரு வசதியுள்ள பெண்ணை, ஒரு வறிய விவசாயியின் மகனும், சுருட்டுக் கடைக்காரன் ஒருவனின் தம்பியுமான, பல்கலைக்கழகப் படிப்பை இடை நிறுத்திய தொழிற்சங்கவாதி, உதாசீனம் செய்கிறான். அக்காலக் காதல் பரிமாற்றங்களை அக்காலச் சூழலில் கதாசிரியர் கவினுற விபரிக்கிறார். படிப்பதற்குச் சுவையாக உள்ளது.
வேப்பமரம்
பிரிட்டிஷார் காலத்தில், மக்களிடையே இருந்த ஆட்சி எதிர்ப்பு, ஐக்கியம், சுதந்திர வேட்கை போன்ற பண்புகளைப் பிரசார வாடையின்றி, கதையினுாடாக, சம்பாஷணை வடிவில், விறுவிறுப்பாகக் கூறி விடுகிறார் ஆசிரியர். கூறாமற் கூறும் பண்பை கலை மெருகின் ஓர் அம்சமாகவும்
கே. எஸ். சிவகுமாரன் 86

அண்மைக்கால ஈழத்துச் சிறுகதைத் தொகுப்புகள்
கருதுவர். அந்த வகையில், இக்கதையும் சுவாரஷ்யமான முறையில் எழுதப்பட்டுள்ளது. மலை காய்கிறது
சுரண்டல்களும், சாதி வெறியர்களும், படிப்படியாகப் பலம் இழந்துவரும் காட்சியை சுவையான யாழ்ப்பாணப் பேச்சு வழக்கில், நாடகத் தன்மை கொண்ட விறு விறுப்புடனும், பாத்திரங்களின் முகத்திரைகளைச் கழற்றிக் காட்டும் விதத்திலும், கதையை ஆசிரியர் சுவைபட எழுதி யிருக்கிறார்.
யுகபுரு ஷர்கள்
தலைப்புக்கு ஏற்ற விதத்தில், சமூக மாற்றத்தைக் கொண்டுவரும் கதாபாத்திரங்களை ஆசிரியர் அறிமுகப் படுத்துகிறார்.
நீர்வை பொன்னையனின் கதாபாத்திரங்களை லட்சிய வாதிகள் என்று ஒதுக்கிவிட முடியாது. ஏனெனில் நடைமுறை வாழ்க்கையோடு ஒட்டிய நம்புத்தன்மைகளைக் கொண்ட பாத்திரங்களாக அவை இருக்கின்றன. அது மாத்திரமல்லாமல், கதையை அவர் எழுதிச் செல்லும் லாவகம் அவர் கலைத்திறனைச் சிரமம் ஏற்படுத்தாமல், வெளிக்காட்டச் செய்கின்றன.
எரிசாரம்
மாத்தறையில் தொழிலாள வர்க்க மக்கள் போராட்டம் ஒன்றில் கலந்து கொண்டு தலையில் வடு ஏந்திய பெண் ஒருத்தியை அவள் கிழவியாகிப் போய் சுயமாக மரக்கறி வியாபாரம் மேற் கொண்டு தனது போராட்டக் குணத்தைத்
87 கே. எஸ். சிவகுமாரன்

Page 51
அண்மைக்கால ஈழத்துச் சிறுகதைத் தொகுப்புகள்
தொடர்ந்து பிரதிபலிப்பதைக் கதை கூறுகிறது. கதையின் ஆரம்பத்தில், ஒரு இலட்சியப் பாத்திரம் மூலம், முற்போக்குக் கருத்துக்களை ஆசிரியர் முன்வைக்கிறாரோ என்று எண்ணிக் கொண்டிருக்கையில், கதை நிகழ்வுப்போக்கு, அப்படியில்லை என்பதை யதார்த்த நிகழ்ச்சிகளின் எடுத் துரைப்பு காட்டுகின்றது.
ரத்தச் சுவட்டில் ஒரு அடி
இதுவும் மற்றொரு தொழிற்சங்கத் தோழர்கள் கதை, மே தின ஊர்வலம் தடை செய்யப்பட்டமை போராட்ட உணர்வைத் திசை திருப்பிக் களியாட்ட ரீதியாக அதனைச் சீரழிக்க முற்பட்டமை, தடுத்து வைக்கப்பட்ட சிறை அறைச் சூழல், சம்பாஷணை மூலம், சம்பவச் சித்திரிப்பு என்று பல விஷயங்களை ஒரே வார்ப்பில் கதை தருகிறது. இன்றைய வாசகர்களுக்குச் சுவையான பழைய வரலாற்றுச் செய்திகள்.
புதிய தலைமுறை
நீர்வை பொன்னையனின் கதைகளைச் சலிப்பின்றி ஒருவர் படிக்க முடியும். இதற்கு முக்கிய காரணம் அவர் கதைகளைப் பெரும்பாலும், சம்பாஷணை வடிவில், யாழ்ப் பாணக் கிராமிய மணங் கமழும் சொற்களில் எழுதுவதுதான். படித்த ஒரு வாலிபன். குடும்பத்தினர் அவன் பொருளாதார வசதிக்காகவும், அதன் மூலம் தாம் உய்யவும் காத்திருக்கும் அவ்வேளையில், பொதுநலன் கருதி, ஆவணத் திமிர் பிடித்த சுரண்டல்காரனுக்கெதிராக எழும் போராட்டத்தில் அவன் ஈடுபடுகிறான். இத்தகைய புதிய தலைமுறையினர் தலையெடுக்க வேண்டிய அவசியத்தை ஆசிரியர், யதார்த்த சமநிலைச் சித்திரிப்பு ஊடாகத் தெரிவிப்பது பாராட்டத் தக்கது.
கே. எஸ். சிவகுமாரன் 88

அண்மைக்கால ஈழத்துச் சிறுகதைத் தொகுப்புகள்
உலைக்களம்
"போராட்ட உலைக்களத்தில் வார்த்தெடுக்கப்பட்ட உலகத் தொழிலாளர் வர்க்கத்தின் ஒரு அம்சம் நாங்கள். ஆனபடியால் தான் நாங்கள் எது வந்தாலும் அஞ்சப் போவதில்லை" என்று இக்கதையில் வரும் தொழிற்சங்கத் தலைவர் கூறுகிறார். மெத்தச் சரி. ஆயினும், கதை எழுதப்பட்ட முறையில், ஏனைய கதைகளிற் காணப்பட்ட இயல்புத் தன்மை இதிற் காணப்படாததால் கலை/ உருவக் குறைபாடு காணப்படுகிறது. நம்புந்தன்மையும் சிறிது வீழ்ச்சியடைந்துள்ளது. ஆயினும் இலட்சிய ரீதியில் வரவேற்கப்பட வேண்டியதொன்று. மாறிவரும் பொருளா தார நோக்கில், இதன் சாத்தியப்பாடும் நோக்கத்துக்கு உட்பட வேண்டும்.
இதுவும் ஒரு சுரண்டல் கதை "ஒ மற்றவையின்ற உழைப்பைச் சுரண்டினால் சுகசீவியம் நடத்தலாம் தான்? உங்களைப் போல ஏமாந்த சோனகிரிகள் இருக்கு மட்டும் விதானையாரைப் போல பெருச்சாளியள் இருப்பினை தானே” இது ஒரு பாத்திரத்தின் அங்கலாய்ப்பு. அரச உத்தியோகத்தர் ஒருவர் மேலும் சுரண்டுகிறார். காணி உச்சவரம்புச் சட்டம் வந்த காலை, இக்கதை எழுதப் பட்டுள்ளது. போராட்ட உணர்வைக் கைவிடக்கூடாது என்ற ஆசிரியரின் ஆதங்கம் கதையில் தொனிக்கிறது.
நியதி
சாதி வெறி, நிலச்சுரண்டல், வேஷதாரிதனம், சுயநலம் போன்ற இழிவான குணங்கள் சில, வடபுலத்துக் கனவான்
களிடையே இப்பொழுதும் இருக்கிறதோ சரியாகத் தெரியவில்லை. ஆனால் 70கள் வரை, 80களிலும் கூட மிக
89 கே. எஸ். சிவகுமாரன்

Page 52
அண்மைக்கால ஈழத்தச் சிறுகதைத் தொகுப்புகள்
மோசமாக இருந்தன என்பதை, நீர்வை பொன்னையன் போன்றோர் எழுதிய கதைகள் மூலம், தெரிய வருகிறது. இந்த ஆக்கினைகளும், நமது தமிழ் மக்கள் இன்று எதிர் நோக்க வேண்டிய இனப்படுகொலைகளுக்கு முன்னோடி யாக இருந்திருக்குமோ? அக் கொடுமைகளினாற் பாதிக்கப பட்ட மக்களின் சாபம்தானோ, இன்று சாதிபேதமின்றித் தமிழ் பேசும் மக்களை நிலை குலைந்த அளவிற்குத் தள்ளியுள்ளது. m
தொழிலாள வர்க்கம், சாதி பேதமின்றி ஒன்றாக இணைந்தால் புதுசக்தி பெற்று வீறுடன் முன்பாயும் என்ற இலட்சியத்துக்குக் கதை வடிவம் கொடுத்திருக்கிறார் ஆசிரியர். கதை சுவாரஸ்யமான முறையில் எழுதப்பட்டிருப் பதனாலும், சமூக விமர்சனம், உரையாடல் மூலம் வெளிப் படுத்தப்படுவதனாலும், கதையோட்டத்தில் சலிப்பு இல்லை, ஆசிரியரின் திறனாற்றலே புலப்படுகிறது.
ஞான ஸ்நானம்
“காரியாலத்திற்குள் சொகுசாக இருந்து கொண்டு உத்தியோகத்தர்களுடன் பழகி வரும் எமக்கு, படிப்பறிவற்ற முரட்டுத்தனம் பிடித்த தொழிலாளர்களுடன் பழகுவது ஆரம்பத்தில் கஷ்டமாகத்தானிருக்கிறது.”
"வெய்யில்-மழையில் அடிபட்ட, சீமேந்துத் தூசி படிந்த வியர்வை நாற்றமடிக்கும் அவர்களுடைய முரட்டு உடல்கள், அழுக்கு படிந்த உடை, எடுத்ததற்கெல்லாம் கூப்பாடு போட்டுக் கத்தும் முரட்டுத்தனம் எல்லாமே எமக்கு அருவருப்பை ஊட்டின. அவர்களை நாம் வெறுத்தோம்’- இது மத்தியதர வர்க்க ஓர் இந்துப் பெண் மணியின் கூற்று.
கே. எஸ். சிவகுமாரன் 90

அண்மைக்கால ஈழத்தச் சிறுகதைத் தொகுப்புகள்
அந்தப் பெண்மணி, இக் கதையின் நாயகி. அவள் சோமாவதி என்ற தொழிற்சங்கவாதியுடன் பழகிய பின்னர், தான் வெறுத்து ஒதுக்கியவர்களைப் பற்றி, இவ்வாறு குறிப்பிடுகிறாள்.
"தோற்றத்தில் எமது தொழிலாளர்கள் முரடர்களாகவும், அசிங்கமானவர்களாகவும் காட்சியளிக்கத்தான் செய்கி றார்கள். ஆனால் அவர்களுடன் நெருங்கிப் பழகப் பழக அவர்களுடைய இதயங்களின் அழகும், தியாக உணர்வும் தன்னலமற்ற சேவையும் எமக்குப் புலப்படுகின்றது”
சோமவதி மூலம் ஆசிரியர் தனது பற்றுக்கோடான கருத்தை இவ்வாறு வெளியிடுகிறார்.
"இந்த நாசமாய்ப் போன இனவெறி, மதவெறி, சாதி வெறி எல்லாத்தையும், தொழிலாளியைச் சுரண்டிச் சூறை யாடுகிற ஒரு கும்பல் தொழிலாள வர்க்கத்தைப் பிளவு படுத்த ஆயுதமாய்ப் பாவிக்கிறது"
தொழிலாள வர்க்கத்தினர், எவரும் அனாதைகளாகப் போக விட மாட்டார்கள் என்ற கருத்துப்பட 1979ல் இந்தக் கதையை ஆசிரியர் எழுதியிருக்கிறார்.
பாதை
“தொழிலாளர், விவசாயிகள் பற்றி” எழுதும் நீர்வை பொன்னையன், "அவர்களுக்காகவே எழுதுகின்றோம்" என்று கூறுகிறார்.
அதற்கேற்றாற் போலவே அவர்களுக்கு ஞான மூட்டுமாற் போன்று இக்கதையிலே, பண்டார என்ற பாத்திரத்தின் கூற்று அமைகிறது.
9. கே. எஸ். சிவகுமாரன்

Page 53
அண்மைக்கால ஈழத்துச் சிறுகதைத் தொகுப்புகள்
"தனி மனிதனை ஒழிக்கிறதாலை எங்கட பிரச்சினையள் தீரப் போவதில்லை. எங்களைச் சுரண்டுகின்ற வர்க்கத்தை அழித்து நிர்மூலமாக்கிவிட்டு அதிகாரத்தை உழைக்கும் வர்க்கம் கைப்பற்றினால்தான் எங்கடை பிரச்சினையள் தீரும்"
1973ல் இந்தக் கதையை நீர்வை பொன்னையன் எழுதியிருக்கிறார். இப்பொழுது 1997 ஆகஸ்ட் மாதத்திற்கு வந்து விட்டோம். இந்தக் கால் நூற்றாண்டுக்குள் எத்தகைய மாற்றங்கள் தமிழ்ச் சமூகத்தினரிடையே ஏற்பட்டுள்ளன. ஏற்படாமல் இருக்கின்றன என்பவற்றை சமூக வியலாளர்கள்தான் பகுத்தாய்ந்து கூற முடியும்.
நீர்வை பொன்னையன் தமது கதைகள் மூலம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தெளிவு பிறக்கச் செய்துள்ளார் எனலாம். அதாவது, அவருடைய கதைகளைப் படிக்கும் வாய்ப்புக் கிடைத்து வாசகர்கள் நிச்சயமாக சில உண்மை களைக் கண்டு உணர்ந்திருப்பார்கள். அந்த அளவில், இத்தொகுதி உள்ளடக்க ரீதியில் ஒரு வெற்றியே. உருவ ரீதியாகவும், இத் தொகுப்பில் அடங்கிய பெரும்பாலான கதைகள், வாசகர்களைத் திருப்திப்படுத்தியிருக்கும் நேர்மையின் விளக்கம் 'பாதை'
தினகரன் வாரமஞ்சரி : 27-07-1997
கே. எஸ். சிவகுமாரன் 92

அண்மைக்கால ஈழத்தச் சிறுகதைத் தொகுப்புகள்
திருக்கோவில் கவியுவன் வாழ்தல் என்பது.
தொண்ணுறுகளில் எழுதத் தொடங்கிய எழுத்தாளர் களுள் ஒரு புதிய 'கண்டுபிடிப்பு திருக்கோயில் கவியுவன் ஆவார். இவருடைய இயற்பெயர் இராசையா யுவேந்திரா. நெசவுத் தொழில் பொறியியளாளர். கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த இளைஞர். இவருடைய பெரும்பாலான கதைகள், பரிசோதனைக் களமாக விளங்கும் சரிநிகர் ஏட்டில் வெளிவந்துள்ளன.
இத்தொகுப்பில் பத்துக் கதைகள் அடங்கியுள்ளன. ஒவ்வொன்றும் ஒவ்வொரு சுவை, வாழ்தல் என்பது. என்னும் தலைப்பை உணர்த்தும் பொதுத்தன்மை வரக் கூடியதான" கதைகள் தொகுப்பில் இடம் பெறுகின்றன.
கதாசிரியர் நோக்கத்தைப் புரிந்து கொள்ளல் திறனாய்வாளருக்கு அவசியம். அல்லாவிட்டால், "ஆய்வு” என்ற பெயரில் எழுதப்படும் கண்டனம், பிதற்றல், அங்கதம், வயிற்றுக் கீழே அடித்தல் போன்றவை எல்லாம் திறனாய்வு எனத் தவறாக நம்பப்பட்டு விடும்.
கதாசிரியர் என்ன கூறுகிறார்: “பொதுவாக எந்தவொரு படைப்புமே வாழ்வின் ஏதோவொரு அனுபவத்தின்
93 கே. எஸ். சிவகுமாரன்

Page 54
அண்மைக்கால ஈழத்தச் சிறுகதைத் தொகுப்புகள்
தெறிப்புத்தான் எனினும் என்னுடைய இத்தொகுப்பில் வரும் கதைகளில் வாழ்க்கை தொடர்பாய் என் மனதில் மண்டியிட்டுக் கிடந்து உறக்கத்தின் முன் அல்லது உறக்கம் வராத சமயங்களில் திரைகளைக் கிழித்தெழுப்பும் ஆழ்மன உணர்வுகளைப் பதிய வைத்திருக்கின்றேன் என்று நம்புகிறேன்.”
நனைதலும் காய்தலும் என்ற கதையை முதலிற் படித்தேன், என் உணர்வில் ஒரு சிலிர்ப்பு ஏற்பட்டது. ஒரு கணநேர அனுபவங்களைத் தன்னும் கவிதை சார்ந்த உருவகங்களின் மூலம் அவர் வெளிப்படுத்தும் பாங்கு பயன்பாடுடையதாக இருக்கிறது. கதாசிரியர் ஒரு பெண்ணின் நிலை நின்று அகவயமான உணர்வைத் தொற்றவைக்கும் பண்பு மனதைத் தொடுகிறது. மேலீடான உணர்ச்சிச் சித்திரமாக இல்லாமல், கதையோடு ஒட்டிய விதத்தில் எழுதும் முறை இயல்பாய் இருக்கிறது.
மரணத்தின் தூது என்ற கதை கஃப்கா (Kafka) வின் கதைகளில் காணப்படும் ஒருவித மனப்பிராந்தியைத் தெரிவிக்கிறது. சொற்செட்டு உண்டு. கோர யுத்தகாலச் சூழலில், சிந்திக்கவும் உணர்ச்சியை மட்டுப் படுத்தவும் தெரிந்த அசாதாரண (அதாவது சராசரி மனிதனையும் மிஞ்சிய தன்மைகள் கொண்டவர்) மனிதனை ஆசிரியர், படம் பிடிக்கிறார்.
அந்நியப்படுத்தப்பட்ட, உடனிகழ் கால, படித்த இளைஞன் ஒருவனின் ஒரு கணநேர அனுபவங்களை, தொடுவானங்கள் சித்திரிக்கிறது. அதே வேளையில் சில குறியீடுகள், எனது வாசிப்பு எல்லைக் கட்டுகளுக்குள் மத்தியில் தெளிவாகத் தெரியவில்லை.
"உடைத்துப்போட்ட தெரு விளக்கு” கதையைத் தெளிவாகப் புரிந்து கொள்ள, கிழக்கு மாகாண யுத்த
கே. எஸ். சிவகுமாரன் 94

அண்மைக்கால ஈழத்தச் சிறுகதைத் தொகுப்புகள்
நிலைமை பற்றிய நேரடி அனுபவம் தேவை. எனது எல்லைக் கட்டுக்குள் நின்றுகொண்டு இதனைப் பகுப்பாய்வு செய்ய முடியாதிருக்கிறது.
ஒரு சிங்களப் பெண்ணின் நிலை நின்று ஒரு தமிழ் இளைஞனை மதிப்பீடு செய்யும் மதிப்பீடு என்ற கதை புதுமையானது மட்டுமல்ல, உளவியல் பாணியிலும் அமைந்திருக்கிறது. அசாதாரண மாணவர்களை, சாதாரண மானவர்கள் எவ்வாறு தப்புக் கணக்குப் போடுகிறார்கள் என்பதையும், தாங்கள் அத்தகைய அசாதாரமானவர்களின் தன்மையைப் புரிந்து கொள்ளவில்லையே என்று பின் உணர்வதையும் கதை காட்டுகிறது. இவ்விதமான உளவியல் பாங்கான கதைகளைத் தமிழில் எழுதும் இலங்கையர் மிகக்குறைவு. உறைவிடம் மேலிடம் என்ற தலைப்பிலே நான் எழுதிய இத்தகைய கதை, இரு மை என்ற எனது சிறு கதைத் தொகுப்பில் இடம் பெற்றுள்ளது.
தன்மை, ஒருமையில் ஒரு சிறுமியின், மட்டக்களப்பு வட்டாரப் பேச்சுவழக்கில் எடுத்துரைப்பதாக செவ்வந்தி என்ற கதை அமைகிறது.
மட்டக்களப்பு மாவட்ட மீனவர் பேச்சுமொழியில், எழுதப்பட்ட மற்றொரு சுவையான கதை ‘செவ்வந்தி' இங்கும் வாலைக் குமரியொருத்தி தன் சிறுமியர் பராய நினைவுகளை இரை மீட்டுகிறாள். பின்னணியில் இலேசாக, யுத்தக்களமும் தெரிகிறது. இந்த நினைவுக் குமிழ்கள் ஒலித்த பின்னர், கதாசிரியர் விபரிப்பை தனது நிலை நின்று எடுத்துரைக்கிறார். இத்தகைய கதைகளை எழுதுவது அவ்வளவு சிரமமல்ல, ஆயினும் தற்பாவித மொழிவளம் கைவரப் பெற்றதாய் இருக்கவேண்டும். கிழக்கிலங்கைப் பாஷையில் கதைகள் எழுதுபவர்கள் மிகமிகக் குறைவு.
95 கே. எஸ். சிவகுமாரன்

Page 55
அண்மைக்கால ஈழத்துச் சிறுகதைத் தொகுப்புகள்
திருக்கோவில் கவியுவன், இந்த விதத்தில் பாராட்டுக் குரியவர்.
அனுபவங்களைச் சிறைப்பிடித்துப் படிப்பவருக்கு அதே ஸ்ருதியில் தொற்றவைக்கும் நேர்த்தி இந்தக் கதாசிரியருக்கு உண்டு. இனியும் ஒரு சாவு லாவகமாய்
கண்களில் ஈரம் கசிந்தது. NA *R
கண்ணிலிருந்து நீர் மல்க வைத்த மற்றொரு கதை, வாழ்தல் என்பது. வட கிழக்குச் சமகாலச் சூழலினின்று விடுபட்டிருக்கும் என்போன்ற வாசகர்களுக்கு, அதனை நேரிற் கொண்டுவந்து அவஸ்தைப்பட வைக்கும் சக்தி இது போன்ற கதைகளுக்கு உண்டு. திருக்கோவில் கவியுவன் கதைகள் மனதை உருக்குவ.
திரைகளுக்கு அப்பால் என்னும் கதையில் வரும் உவமைகள் சில:
"அழகிய ஓவியத்தில் அசிங்கத்தைப் பரவியவள் போல்.
இனிய பாடல் ஒன்றை இடையில் நிறுத்தியவள் போல்.
மென்பூக்களை முள்ளால் கிழித்தவள் போல்.” இந்தக் கதையை எனக்கு நன்றாக விளங்க முடியா திருக்கிறது. ஒரே நபர் ஒரு பொருளைப்பற்றி இரு வேறு பார்வைகள் கொண்டிருக்கலாம் என்பதை விளக்குமாற் போல் கதை அமைகிறது எனவும் கூறலாம். அமைப் பியல்வாதம், பின் அமைப்பியல் வாதம் போன்றவற்றில் பரிச்சயமுடையவர்களே நம்மைப்போன்ற வாசகர்களுக்கு ஒளியூட்டலாம்.
கே. எஸ். சிவகுமாரன் 96

அண்மைக்கால ஈழத்தச் சிறுகதைத் தொகுப்புகள்
இறுதியாக, காற்று கணக்கும் தீவு என்ற கதையை எடுத்துக்கொள்வோம். இது சிறுகதை என்ற வடிவத்திற்குள் அடங்குமா என்பது புலமைமிக்கோர் விவாதிக்க வேண்டிய விஷயம். அது ஒரு புறமிருக்க, நேரடியாகச் சொல்ல முடியாத விஷயங்களை இத்தகைய கதைப்பாணியில் கூறவருவது செளகரியமாக அமைந்து விடுகிறது. கதை என்ன கூறுகிறது என்பது, தமிழராகிய நமக்குப் புரியும் G3g|Třigů při Gaugů (George Orwell)6(pgu (Animal Farm) விலங்குப்பண்ணை என்ற தொடர் உருவகமான மறை பொருள் உரை (Alegory) , இக்கதையைப் படித்தபோது என் ஞாபகத்திற்கு வந்தது.
திருக்கோவில் கவியுவனின் வாழ்தல் என்பது. என்ற இத்தொகுப்புக்கு முன்னுரை எழுதிய பேராசிரியர் கா.சிவத்தம்பி அவர்கள் கூற்றை இங்கு நினைவு படுத்தலாம்.
“தொண்ணுரறுகளில் மட்டக்களப்பு பகுதி எதிர்நோக்கிய அனுபவங்களை, இந்த அனுபவங்களில் சிசுவெனக் குறிப்பிடத்தக்க ஒருவரின் சித்திரிப்பு மூலம் அறிந்து கொள்ளும் வாய்ப்பை இத்தொகுதி தருகின்றது. இங்கு தமிழ்-முஸ்லிம் பரிமாணம் பதிவு செய்யப்படவில்லை”.
தமது முன்னுரையிலே, முதுதமிழ்ப் பேராசிரியர் அவர்கள், கதாசிரியரின் கதைகளின் திறன்களைச் சுருக்கமாகவும், பொருத்தமாகவும் 'ஆய்வு செய்துள்ளார். இதுவன்றோ திறனாய்வு. கண்டனமும், நையாண்டியும், அங்கதமும் முழு விமர்சனமாகா. அக்கூற்றுக்கள் கால வெள்ளத்தில் அடிபட்டுப்போகும். இது இலக்கிய வரலாறு தெரிந்தவர்களுக்குத் தெரியும்.
ஜூலை, 1998
97 கே. எஸ். சிவகுமாரன்

Page 56
அண்மைக்கால ஈழத்தச் சிறுகதைத் தொகுப்புகள்
ரஞ்சகுமார்
Ештаб fлшптағfлі)
FFழத்துச் சிறுகதைத் துறையின் அண்மைக்கால வரலாற்றிலே, பல்கலைக் கழக மட்டத்திலும், பரிசோதனைக் கதைகளைப் படிக்க விரும்பும் வாசகர்கள் மட்டத்திலும், ஏறக்குறைய கடந்த இரு தசாப்தங்களாகப் பேசப்பட்டும், புகழப்பட்டும் வருபவர் ரஞ்சகுமார் என்ற திறனாற்றலுடைய எழுத்தாளர். இவருடைய கதைகளை அங்கொன்றும் இங் கொன்றுமாக நான் படித்தேனாயினும், ஒன்பது ஆண்டு களுக்கு முன்னரே வெளிவந்த இவருடைய மோகவாசல் என்ற சிறுகதைத் தொகுதியை ஆறஅமர இருந்து படித்துச் சுவைக்க முடியாமற் போனது உண்மை. இப்பொழுது, இந்த நூலை (சென்னைப் பதிப்பு, 1995) எடுத்துப் படிக்கிறேன் இத்தொகுதியில் ஏழு கதைகள் இடம் பெற்று ள்ளன. ஒவ்வொரு கதையையும் படித்துவிட்டு என் உணர்விலும், அறிவிலும் படும் எதிரொலிகளைக் கீழே பதிவு செய்கிறேன்:
சுருக்கும் ஊஞ்சலும் - சிறு சிறு அனுபவங்களைத் தன்னும் ரசித்து மகிழத் தெரியாத மனிதர்களாய் நம்மில் பலர் இருப்பதற்குக் காரணங்கள் பல இருக்கலாம்.
ஆயினும் கலையுள்ளம் படைத்தவர்கள் இச்சிற்றின்பங்களை
கே. எஸ். சிவகுமாரன் 98

அண்மைக்கால ஈழத்துச் சிறுகதைத் தொகுப்புகள்
வெகுவாக ரசிப்பர். நமது எழுத்தாளர்கள் பலர் சமூகச் சித்திரிப்புக்களை புறநிலையாக நின்று எழுதுபவர்கள். அதே வேளையில் அகநிலைப்பட்ட கதைகளை எழுதுபவர் களை விரல்விட்டு எண்ணிவிடலாம். வாழ்க்கையின் தரிசனங்களை விரிவுபடுத்த, நீடிக்க இந்த அகவயச் சித்திரிப்புகளும் உதவுகின்றன. ரஞ்சகுமாரின் இந்தக் கதையைப் படித்ததும், அவருடைய பரந்த உலகநோக்கு தெளிவாகத் தெரிந்தது. இயற்பண்பு வாதமாக (Naturalistic Mode) எழுதும் ஆபத்தைத் தவிர்த்து, தேர்ந்தெடுத்த முறையிலே கதையை விபரிக்கிறார். விபரிப்புடன் விவரணையும் உண்டு. சிங்களப் பிரதேசத்தின் பகைப் புலத்தில், கதை சொல்லப்படுவதும் அவதானிக்கத்தக்கது.
கபரக்கொய்யாக்கள் - இதுவும் சிங்களப் பகுதியில் இடம் பெறும் கதை. கபரகொய்யாக்கள், காமுகர்களை வெளிப்படுத்தும் சின்னங்களாக வருகின்றன என்று நினைக்கிறேன். கதை கூறும் செய்தி வெளிப்படையல்ல. கலைத்துவம் மிக்க ஆக்கங்களில் பரிமாணம் ஒரு லயத் துக்குள் அடங்கமாட்டாது. பரவசப்படுத்தும் ஆக்கங்களை, அக்குவேறு ஆணிவேறாகப் பகுப்பாய்வு செய்தால், மிஞ்சுவது சூன்யம். சூன்யத்தைத் தேடும் முயற்சியில் அழகுச் சேர்க்கையை மறந்து விடுகிறோம். நிகழும் ஒவ்வொரு கணத்தையும் களிப்புடன் ரசிக்கத் தவறி விடுகிறோம். ரசனையுணர்வின்றி விமர்சனமில்லை. விமர்சனம் முடிந்த முடிவல்ல. கலைப் பயணமே அனுபவம். சில அனுபவங் களை விமர்சன ரீதியாக வருணிக்கமுடியாது. கபரக் கொயாக்கள் கதையின் பெரும் பகுதி சுகமான சங்கீதம். ரஞ்சகுமார் பெற்றோர் கலப்பு மணம் முடித்தவர்கள் என்பதனாலோ என்னவோ, சிங்கள, தமிழ் கலாசாரங்களின்
99 கே. எஸ். சிவகுமாரன்

Page 57
அண்மைக்கால ஈழத்துச் சிறுகதைத் தொகுப்புகள்
பிணைப்புக்களை அவர் கதைகளும் தாங்கி வருகின்றன. தமிழ் அவருக்குக் கை கட்டிச் சேவகம் புரிகிறது.
காலம் உனக்கொரு பாட்டெழுதும் - வடபுல நிகழ்கால போர்ச் சூழலில் நடைபெறும் கதை என்று காட்டிக் கொள்ளாமலே மனிதத்தன்மையைக் கலைத் துவமாகக் காட்டும் ஒரு நெடிய கதை இது. மந்திரம் போல் சொல். விளக்கினால், அனுபவ பரிவர்த்தனை சிதைந்து விடும்.
கோசலை - இதுவும் ஒரு நீண்ட கதை. இன்றைய தமிழ் இளைஞர்களின் அவல வாழ்வுக்கதை. இந்தக் கதையை மாத்திரம் எடுத்துக் கொண்டு, இதன் உள்ளுறை உவமைகளையும், இறைச்சிப் பொருளையும் தீவிரமான முறையில் பகுப்பாய்வு செய்யலாம். வெளிப்படையான காரணங்களுக்காக இதனை நான் இங்கு செய்யமுடியாது. புரிந்தவர்க்குப் புரியும் இக்கதை என்ன கூறுகிறதென்று. இக்கதையின் வடிவ அமைப்பு என்னளவில், பொருத்த மானதாய் இல்லை. இதற்குக் காரணம், இறுக்கம் குறைவு என்பதே - அதாவது நீட்சியைக் குறைத்து, சுருங்கச் சொல்லி விளங்க வைத்திருக்கலாம். இருந்தாலும், கதை உணர்த்தும் அனுபவம் மெய் சிலிர்க்க வைக்கிறது.
அரசி - தாம்பத்திய வாழ்க்கையைச் சித்திரிக்கும் இக்கதையிலே ஒரு பெண்ணின் ஆளுமை சுட்டிக் காட்டப் படுகிறது. வழக்கமாக ரஞ்சகுமார் எழுதும் கதைகளினின்று இது வேறுபட்ட கதை, சுவாரஸ்யமாக எழுதப்பட்டிருக்கிறது. கோளறு பதிகம் - இந்தக் கதையும் மரணத்துள் வாழும் தமிழ் இளைஞர்களின் சீவியத்தின் சில அம்சங்களைப் படம் பிடிக்கிறது. இதுவும் மற்றொரு ஆவணச்சித்திரம்.
கே. எஸ். சிவகுமாரன் OO

அண்மைக்கால ஈழத்துச் சிறுகதைத் தொகுப்புகள்
மோக வாசல் - புராணக் கதையைத் தாம் பொருள் கொண்டு விளங்கிய விதத்தில் கதை மூலம் ஆசிரியர் வியாக்கியானம் செய்துள்ளார். ரஞ்சகுமார் தமது கதை களுக்குப் பின்னணியாக முன்படிவப் புராணக் கதைகளை (Archetypal Myths) பயன்படுத்துவதும் அவதானிக்கத் தக்கது.
ரஞ்சகுமார் இப்பொழுதெல்லாம் சிறுகதைகள் எழுது வது போல் தெரியவில்லை. ஒரு வேளை ஒரு நாவலுக்கான திட்டங்களை வகுத்துக் கொண்டிருக்கிறாரோ அறியேன்.
இந்தத் தொகுப்புக்கு பேராசிரியர் கா. சிவத்தம்பி அவர்கள் பயனுள்ள ஒரு பின்னுரையை எழுதியிருக்கிறார்.
ரஞ்சகுமாரின் கதைகள் பற்றி அவர் கூறியிருக்கும் விளக்கவுரை புதுப்புனைவானது. இங்கு பதிவு செய்யப்பட வேண்டியது: பேராசிரியரின் வியக்கியானம் வருமாறு: "காலம் உனக்கொரு பாட்டெழுதும், கோசலை, கோளறு பதிகம் என்பன இளைஞர் தீவிரவாதம், யாழ்ப்பாண மண்ணில் வேரூன்றியுள்ள முறைமையினையும், அதன் வழியாகத் தோன்றியுள்ள சாதக, பாதக அமிசங்களையும் அமரத்துவமுடைய இலக்கியப் பொருளாக்கியுள்ளன.
இவற்றுள் கோசலை மிகச்சிறந்த காலப்பதிவான
படைப்பு ஆகும்”
விரிவான கணிப்புகளுக்கு பேராசிரியரின் பின்னுரையை வாசித்துப் பார்க்க.
ஜூலை 1998
O கே. எஸ். சிவகுமாரன்

Page 58
கே. எஸ். சிவகுமாரன் எழுதிய நூல்கள் Tamil Writing In Sri Lanka (1974) சிவகுமாரன் கதைகள் (1982) கலை, இலக்கியத் திறனாய்வு (1989) கைலாசபதியும் நானும் (1990)
Aspects Of Culture In Sri Lanka: Le Roy Robinson In Conversation With K. S. Sivakumaran (1992)
திறனாய்வுப் பார்வைகள் (1996) ஈழத்து இலக்கியம்: நால்களின் அறிமுகம் (1996) இருமை (1998) ஈழத்துச் சிறுகதைத் தொகுப்புக்கள்: திறனாய்வு (1998)
திறனாய்வு: அண்மைக்கால ஈழத்தச் சிறுகதைத் தொகுப்புக்கள். (1998)
. எஸ். சிவகுமாரனின் முக்கிய ஊடகத்துறை
அனுபவங்கள் நவமணி வார இதழின் ஸ்தாபக பிரதம ஆசிரியர் (Editor-InChief) வீரகேசரி நாளிதழின் இணை ஆசிரியர் (Associate Editor)
The Island, ஆங்கில நாளிதழின் சிறப்புச் சித்திராம்சப் பகுதிப் பிரதி ஆசிரியரும், பண்பாடு பக்கத் தொகுப்பு ஆசிரியரும் (Deputy Features Editor and Culture Page Editor)
102

இலங்கை ஒலிபரப்புக்கூட்டுத்தானச் செய்திப்பிரிவின் தமிழ்ப்பகுதிப் 6 TDssy Téfluff (Duty Editor)
ரூபவாஹினி ஸ்தாபக தமிழ்ச் செய்தித் தொகுப்பாசிரியர் (Copy Editor)
இன்னும் பல . . .
நூலாசிரியருக்கு அளிக்கப்பட்ட ஏனைய கெளரவங்களிற் சில
OCIC Award For Contribution. To Film Criticism
தமிழ்மணி ~ இந்த கலாசாரத் திணைக்களம்
1996ல் வெளியாகிய சிறந்த நூல்களில் ஒன்றாக இவருடைய திறனாய்வுப் பார்வைகள் பரிசு பெற்றது.
Member, English Literature And Drama Panel, Arts Council of Sri Lanka.
தலைவர், நாடகக் குழு, இலங்கை கலைக் கழகம். ரூபவாஹினியின் சிங்கள~தமிழ்-ஆங்கில ஒலிப்பேழைகள் மதிப்பீட்டுக் குழு உறுப்பினர். திரைப்படக் கூட்டுத்தாபனத் திரைப்பட முன்நோக்கு (PreView) குழு உறுப்பினர். இந்து கலாசாரத் திணைக்களம். மற்றும் வடகிழக்கு மாகாண இலக்கிய நூல்கள் மதிப்பீட்டுக் குழு உறுப்பினர். இன்னும் பல . . .
O3

Page 59


Page 60


Page 61
இந்நூலாசிரியர் இத்துடன் பத் இவற்றுள்ளே இரண்டு ஆங்கில G) இவர் எழுதிய சிறுகதைத் (ogs rest சம்பந்தப்பட்டவை.
1997 செப்டம்பர் முதல் இவர் 8 ரீலங்கள் ஸ்கூலில் o isičji tri ஆங்கில இலக்கியத்தையும் கற்பித்து யாகும் ஆங்கிலத் தினசரியான Time மகுடத்தில் வாராவாரம் கலை இ வருகின்றார்.
இவருடைய தற்போதைய 9 Sri Lankan se P.O Box : 198, P.C. 117,
Muscat : Sultanate of