கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: உலகமெல்லாம் வியாபாரிகள்

Page 1
1,9oy/1/171. Im JC9 qillqoqoqi (9oao-G
 

qırmụcc97] [11] 'Paolri yıfloaț9ĝ911

Page 2

உலகமெல்லாம் வியாபாரிகள்
ராஜேஸ்வரி பாலசுப்ரமணியம்
நீலமலர்

Page 3
7Title : Ulagamellam Viabariha
Author t Rajesuvar i Balasubramaniam
C) Author
First Edition : April 1991
Publishers : NEELAMALAR
Printers : Mithilla Achchaga m
5 Kutchery Lane Mylapore Madras 600 004
Price : Rs... 20.00
Copies available at : VAYAL
5 Kutchery Lane Mylapore Madras 600 004

அர்ப்பணம்
இலங்கைத் தமிழர்சளுக்காகத் தங்கள் வாழ்க்கையைத் தியாகம் செய்த தமிழ் இளைஞர்களுக்கு இந் நாவலை அர்ப்பணிக்கிறேன்.

Page 4
ஆசிரியரைப் பற்றிய குறிப்புகள்
இலங்கையில் மட்டக்களப்பு மாவட்ட அக்கரைப் பற்றுப் பிராந்தியத்தில் கோளாவில் என்ற அழகிய, இனிமை யான கிராமத்தில் பிறந்து கடந்த இருபது வருடங் களாக லண்டனில் வாழும் ராஜேஸ்வரி பாலசுப்பிரமணி யத்தின் தமிழ் நாவல்களில் இதுவுமொன்று.
லண்டன் திரைப்படப் பட்டதாரியான இவர் இப்போது ஆங்கில நாவல்கள் எழுதிக் கொண்டிருக்கிறார்.
ஆனாலும் தமிழ் நாவல்கள் எழுதுவதையும் மறக்காத இவர், குழந்தைகள் வளர்ந்து தங்கள் வாழ்க்கையை அமைத்துக் கொண்ட பின் திரைப்படத் துறையில் ஈடு படவேண்டும் என்ற இலட்சியத்துடன் வாழ்கிறார். இலக்கியம் மட்டுமல்லாது தமிழர்களின் நலம் பேணும் ஸ்தாபனங்கள், பெண் உரிமை இயக்கங்கள் என்ப வற்றில் ஈடுபாடு கொண்டுள்ளார்.

ஆசிரியருரை
உலகமெல்லாம் வியாபாரிகள்' 1978-ம் ஆண்டு எழுதப்பட்ட நாவலாகும், 1978க்கும் 1990க்கும் இடை யில்நடந்த விடையங்களை பின்னோக்கிப் பார்த்தால் இவ்வளவு மாற்றமும் எங்கள் தமிழ் சமுதாயத்தில் நடந்திருக்கின்றதா என்று ஆச்சரியப்பட வேண்டி இருக்கிறது.
எந்த ஒரு எழுத்தாளனும் (எழுத்தாளியும்) எழுத வேண்டுமென்பதற்காகவோ தங்கள் பெயர் பத்திரிகை மில் வரவேண்டுமென்பதற்காகவோ எழுத முயன்றால் அப்படியான படைப்புக்களில் உண்மையோ உணர்ச்சி யின் வெளிப்பாடோ இருக்காது. லண்டன் வாழ்க்கை யில் இயந்திர வேகத்தில் ஓடிக் கொண்டு மூன்று மகன் களுக்குத் தாயாகவும் உழைப்பாளியாகவும் மிகக் கஷ்ட மான வாழ்க்கையோடு போராடிக் கொண்டிருக்கும் எனக்கு எதையோ எழுதவேண்டுமென்றோ எனது பெயர் பத்திரிகையில் வர வேண்டுமென்றோ எந்தவித மான பேராசையுமில்லை.

Page 5
எங்கள் சமுதாயத்தில் ஊறிப் போயிருக்கும் சில அதர்ம மான கோட்பாடுகள், கலாச்சாரம் பண்பாடு என்ற போர் வைக்குள் ஒருத்தரை ஒருத்தர் சுரண்டுவதற்காக படைக் கப்பட்டிருக்கும் சட்டதிட்டங்கள் என்பன சிலவேளை என்னைச் சிந்திக்கப் பண்ணவேண்டிய சில அனுபவங் களை அனுபவித்ததின் பிரதிபலிப்புத்தான் இந்த நாவல். 1958-ம் ஆண்டு இலங்கைத் தமிழர்களுக்கு எதி ராக இலங்கை சிங்களப் பேரினவாதம் முடுக்கிவிடப் பட்ட வகுப்புவாதக் கொடுமைகளில் அல்லற்பட்ட தமிழ் மக்கள் கொஞ்சம் கொஞ்சமாக இலங்கையை விட்டு வெளியேறினார்கள். தமிழ் மொழியை, தமிழ் மக்களை அழித்துவிடும் நோக்கில் வகுப்புவாத சிங்கள அரசு கொண்டுவந்த பாகுபாட்டுக் கல்வி முறையால் தமிழ் இளைஞர்கள் மேற்படிப்புக்காக வெளிநாடு போக வேண்டி வந்தது. ஆங்கிலக் கல்வியை பெரும்பாலும் படித்த இளைஞர்கள் லண்டன் வந்து சேர்ந்தார்கள்.
இங்கிலாந்தில் இனத்துவேசம் இலங்கையில் வகுப்பு வாதம் என்பனவற்றால் தமிழ் இளைஞர்கள் பாதிக்கப் பட்டு தங்கள் எதிர்காலத்தைப்பற்றி விவாதங்களில் ஈடுபட்டார்கள். அந்தக் காலத்தில் தங்களுக்குப் பிரதி நிதிகளாய் இருந்த தமிழ்த் தலைவர்களின் அரசியல் நியாயங்களைப் பற்றி கேள்வி கேட்கவேண்டிய நிர்ப் பந்தம் வந்தது.
அரசியலைத் தங்கள் சொந்த நன்மை தீமைகளுக்காகலாப நட்டங்களுக்காக வியாபாரமாக்கிய தமிழ்த் தலைமையில் அதிருப்தி கொண்ட தமிழ் இளைஞர்கள் ஒரு புதிய தலைமை ஒரு புதிய அரசியல் போராட்டத் தின் தவிர்க்க முடியாத தேவையை உணர்ந்தார்கள்.
க்தையின் கதாநாயகன் கார்த்திகேயனும் அவனுடைய சினேகிதர்களும் 1970ம் ஆண்டுகளில் லண்டனுக்கு வந்து சேர்ந்த முற்போக்கான பல தமிழ் இளைஞர் களைப் பிரதிபடுத்துகிறார்கள்.

கார்த்திகேயனைப் பொறுத்தவரையில் ஒரு புதிய தமிழ்த் தலைமை, போராட்டம் தவிர்க்க முடியாதது என்று தெளிவாக தெரிகிறது. அதே நேரம் கோடானுகோடி வருடமாக பழமையை நம்பி தங்கள் வாழ்க்கையை அமைத்துக் கொண்ட தமிழ்க் குழுக்களிலிருந்து வரும் தமிழ் இளைஞர்களும் பெரும்பாலும் பழைமையான கருத்துக்களையே வைத்திருப்பது ஒன்றும் ஆச்சரியப் படவேண்டிய காரியமல்ல. கார்த்திகேயன் இந்த பழை மையான பண்பாட்டுக்குள் மறைந்திருக்கும் கொடுமை களை எடுத்துக் காட்டுகின்றான். தனிப்பட்ட வாழ்க்கை யில் அவனை விரும்பிய சகுந்தலாவை-அளப்பரிய பண ஆசையில் வாழ்க்கையின் நிம்மதி கிடைக்குமென்று நினைத்து அவளின் பெற்றோர்கள் அவளுக்குப் பிடிக் காத ஒருத்தனுக்கு மணம் முடித்து வைக்கின்றார்கள். ஐந்து வருடகாலம் லண்டனை விட்டு அமெரிக்காவில் வாழ்ந்திருந்த சகுந்தலா அவளின் தங்கை மீனாவின் கல்யாண விடயமாக லண்டன் வருகிறாள். சகுந்தலா எதிர்பாராத முறையில் அவளது பழைய காதலன் கார்த்தி கேயனைக் காண்கிறாள். அவன் இவளைத் திட்டித் தீர்க்காமல் இவளின் சோகத்துக்கு ஆறுதல் கொடுக் கின்றான்.
தன்னை ஏமாற்றிவிட்டாள் என்று குறை சொல்வான் என்ற பிரமையில் வந்தவளுக்கு அவனுடைய பெருந் தன்மையான மனப்பாங்கு, இலங்கைத் தமிழர்களுக் காகப் போராட அவன் கொண்டிருக்கும் இலட்சியம் என்பன அவன் மீது இன்னும் பெருமதிப்பை உண்டாக்கு கிறது,
அதேநேரம் லண்டனில் வாழ்ந்து தனக்கென்று ஒரு வாழ்க்கையைத் தேடும் அவள் தங்கை மீனா, வர்ழ்ந்து வாழா வெட்டியாக வாழும் உஷா என்பவர்களின் வாழ்க்கையையும் ஒப்பிட்டுப் பார்க்கிறாள் சகுந்தலா, அவள் கணவன் லண்டன் வந்து சேர்கிறான். சேர்ந்

Page 6
ததும் இல்லாமல் தன் மனைவியை அவளின் பழைய காதலன் கார்த்திகேயனின் அணைப்பில் காண்கிறான்.
இந்த நாவல் ஒரு பெரிய இலக்கியப் படைப்பென்று நான் பெருமையடிக்கவில்லை. 1970-1980ம் ஆண்டு களில் தமிழ் மக்களிடையே உள்ள பிரச்சனைகளை தெளிவாக எடுத்துக் காட்டுகிறதுஎன்று மட்டும் சொல்வேன்.
சந்தோசமற்ற ஒரு தனி மனிதன் ஒரு சந்தோசமான எதிர் காலத்தைப் பார்க்கவோ, சமுதாயத்தைப் படைக்கவோ உதவி செய்ய முடியாது என்பது எனது தனிப்பட்ட அபிப்பிராயம். எங்கள் சமுதாயத்தில் கொடுமைகள் ஊடுருவி இருக்கின்றன. இலங்கைத் தமிழ்ச் சமுதாயம் சிங்கள வகுப்பு வெறியினரால் முழு இன அழிவையும் எதிர்நோக்குகின்றது. இந்தக் கொடுமைக்கு சிங்கள அரசு மட்டும் காரணமல்ல. தமிழ் மக்களின் பிரதிநிதிகளாக வாக்களிக்கப்பட்டு பாராளு மன்றம் சென்று தங்கள் சொந்த லாபங்களுக்காக ஒரு இனத்தின் எதிர்காலத்தையே பலி கொடுத்த பெரும் பாலான தமிழ்த் தலைவர்களும் தான் காரணம்.
பாராளுமன்றப் பாதையை தூக்கி எறிந்து விட்டு இன்று பலாத்காரத்தால் பதவி எடுத்திருக்கும் புதுத் தலைவர் கள் ஒன்றும் உண்மைக்கும் நேர்மைக்கும் தலை வணங்கியவர்களோ வணங்கப் போகிறவர்களோ அல்ல என்பது அவர்கள் கொன்று குவிக்கும் கொலை களிலிருந்து தெரிகிறது. இலங்கைப் பிரச்சினையில் இதுவரை எத்தனையோ
ஆயிரம் தமிழ் மக்கள் தங்கள் உயிரை தியாகம் செய்து விட்டார்கள்,
இலங்கை வகுப்பு வெறி சிங்கள அரசாங்கத்தால் பட்ட கொடுமைகளைவிட எத்தனையோ மடங்கு கொடுமை களை பாதுகாப்புப் படை என்ற போர்வையில் 1987ம்

ஆண்டு எங்கள் மண்ணில் காலடி எடுத்துவைத்த இந்தியப் படையினரால் அனுபவித்தார்கள். இன்று எந்த அன்னியப் படையினரும் இல்லாத தமிழ்ப் பகுதி களில் எங்கள் தமிழர்கள் தங்களுக்குப் பிடிக்காதவர் களை கம்பத்தில் பிணங்களாக காகத்துக்கு இரையாகப் போடுகிறார்கள். கார்த்திகேயன் போன்றவர்கள் உண்டாக்கி விட்ட தியாகத்தீயில் இன்று இலட்சியத் தைத் தவறவிட்ட கொலைகாரர்கள் பிணமெரிக்கிறார் கள். வாழ்க்கை என்பது ஒவ்வொரு நாளும் மாறிக் கொண்டு போகும் ஒரு விஞ்ஞானம். மாற்றங்களைப் பிடித்து வைக்க யாராலும் முடியாது. துப்பாக்கி முனையில் இன்று இறந்து போகும் தியாகிகளின் ஆத் மாக்கள் என்றோ ஒரு நாள் எங்கேயோ ஒரு போராளி யாக உருவாகத்தான் போகிறது.
உலகத்தையே தன் பொருளாதாரத்துக்காக பங்கு போடும் வல்லரசுகளுக்கும் தமிழ் இனத்தையே தன் பயங்கரவாத வெறிக்கு அடகு வைக்கும் தற்போதய தமிழ்ப் போராளிகளுக்கும் அடிப்படையில் எந்த வித்தி யாசமும் இல்லை. தமிழ் போராளிகள் என்று சொல்லும் போது தமிழர் விடுதலைக்காக தங்கள் உயிரைப் பலி கொடுத்த ஆயிரமாயிரம் இளைஞர்களுக்கு என் மன மார்ந்த அஞ்சலி, எங்கள் எதிர்காலத்துக்காக தங்கள் இளம் உயிர்களை இலங்கைச் சிங்களப் படையினரால் இந்திய ஆக்கிரமிப்பாளர்களால் இழந்த எண்ணற்ற இளம் உயிர்களை நாம் மறக்கக் கூடாது.
சாதாரண ஆசாபாசங்களுக்கு ஆளான சகுந்தலா கார்த்திகேயன் காதல் கதையை நான் பெரிதாக ஒன்றும் புகழ்ந்து நாவல் எழுதவில்லை. சகுந்தலா கார்த்திகேயன் போன்ற சாதாரண மக்கள் தான் தமிழ் இனத்தின் எதிர்காலம். அவர்களின் ஆசாபாசம் இலட்சியம் என்பனதான் நாளைய சமுதாயத்தின் விதைகள். அந்த விதைகள் பழுதடைந்தால் எதிர்கால விருஷ்சமும் பழுதடைந்ததுதான்.

Page 7
எங்களைப் பிரதிபடுத்துவதற்காக பாராளுமன்றம் சென்ற சட்டத்தரணிகள் பேசிக்கொண்டே இருந்து எங்கள் இனத்தை புதை குழிக்குள் தள்ளினார்கள். ஆயுத பலத்தால் உரிமை பெற வெளிக்கிட்டவர்கள் எதிரிகளுடன் சல்லாபம் கொண்டாடி எங்கள் எதிர் காலத்தையே விலை பேசுகிறார்கள். ஒரு இயக்கத் தினரைவிட அடுத்த இயக்கம் அக்கிரமம் செய்வதில் சளைத்தவர்களில்லை என்பதை கடந்த பத்து வருடப் போராட்டம்தெளிவாக்கிவிட்டது.
உலகம் விஞ்ஞான ரீதியில் மிக மிக முன்னேறிக் கொண்டு போகும் இதே நேரம் எங்கள் தமிழ் இனம் உரிமையற்ற நாடோடியாக உலகமெல்லாம் திரிய வேண்டி இருக்கிறது. கலை கலாச்சாரம் பண்பு என்பன துப்பாக்கி குண்டு கொலை என பிரிவுபட்டு விட்டது. கலைஞர்கள்தான் ஒரு சமுதாயத்தை தங்களின் கலை களின் மூலம் பிரிதிபலிப்பவர்கள், கலைகள் என்பது சரித்திரக் குறிப்புகள். கடந்த பத்து வருடமாக நாங்கள் கண்டதெல்லாம் பயங்கரம் கேட்டதெல்லாம் வெடி குண்டுச் சத்தம். கார்த்திகேயன்கள் எமக்கு முன்னால் திரிகின்றார்கள் அவர்கள் படைத்த இலட்சியம் AK47க்கு பயந்து போய் மெளனமாகிவிட்டது. மனிதர் கள் ஆகாயம் போய் அடுத்த உலகம் பற்றி ஆராயும் இதே நேரம் தமிழர் ஆயிரக்கணக்கான வருடங்கள் பின் தள்ளிப்போய் மனித வேட்டையாடும் கலைகளில் களிப் படைகிறார்கள்.
AK 4' – sílsid +- 9 ibu AK 47=6T solony.
இந்த நாவலில் சில இடங்களில் பெண்ணுரிமை பற்றி எழுதி இருக்கின்றேன். இப்போது இந்த நாவலை திருப்பி எழுதுவதாய் இருந்தால் மனித உரிமைகளுக்கே முதலிடம் கொடுப்பேன். ஒரு ஆண் மகன் தான் சுதந்திரமற்று இருக்கும்போது என்னென்று ஒரு பெண் ணின் உரிமைகளை உணர முடியும். எங்கள் சமுதாயம்

மனித உரிமையற்ற மந்தைக் கூட்டங்களாக்கப் பட்டு உள்ளது. இன்று சிந்திப்பது, கேள்வி கேட்பது என்பன கடும் குற்றங்கள் என்று கணிக்கப்படுகிறது. குற்றங்கள் கொலைகளாகின்றன. எதிர்க்க கார்த்திகேயன்கள் பிறந்து கொண்டே இருப்பார்கள். அவர்களின் இலட் சியம் வளர்ந்து கொண்டே இருக்கும். கண்ணியம், கடமை, கட்டுப்பாடு என்பன எப்போதும் வெற்றி பெற்றே தீரும்.
இந்த நாவலில் வரும் பெயர்கள், சம்பவங்கள் யாவும் கற்பனையே. ஆனாலும் இவர்களைப் படைக்கத் தூண்டிய எத்தனையோ சந்தர்ப்பங்கள் கற்பனையல்ல. இந்நாவல் ஒரு தூய்மையான காதலை கண்ணியமான அரசியல் இலட்சியத்தை அடிப்படையாக வைத்து எழுதப்பட்டது.
இந்நாவலை அச்சிட்டு வெளியிட உதவி செய்த மிதிலா அச்சகத்தாருக்கு எனது மனமார்ந்த நன்றிகள். தனது பத்திரிகையில் இந்நாவலை தொடர் கதையாக வெளியிட்ட லண்டன் முரசு ஆசிரியர் சதானந்தனுக்கும் எனது நன்றிகள்.
என்னை நிம்மதியாக இருந்து எழுதவிடும் என் குழந்தை கள் நிர்மலன் அருணன் சேரன் மூவருக்கும் பெரிய நன்றிகள்.
ராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம் வண்டன்
1991

Page 8

கலைகள் எந்த உருவில் இருந்தாலும் சரி. இசையாகட்டும், இயலாகட்டும், நாடக உருவிலாகத்தான் இருக்கட்டும். மக் களின் பிரச்சனைகளையும் அவர்கள் வாழும் காலத்தின் முரண் பாடுகளையும், தெரிவிக்காதவரை அது உண்மையான கலை பாகாது. இன்று இந்த மண்டபத்தில் கூடியிருக்கும் தமிழ் மக்கள் எல்லோருக்கும் தெரியும், இன்றைய சிங்கள அரசியல மைப்பில் எங்கள் நிலை என்ன என்று, எங்கள் நிலையைத் தெளிவாக உணர்த்துவதற்கும், சில குழுக்களிடம் பரவலாகக் கிடக்கும் அபிப்பிராய பேதங்களைக் களைவதற்காகவும் இந்தக் கலை விழா உதவும் என நம்புகிறேன்.
"இலங்கையில் தமிழர் ஒடுக்கப்பட்டவர்களாகவும், சிங்களவர் அடக்கப்பண்ணுபவர்களாகவும் இருக்கிறார்கள். போதாதற்கு இந்த அடக்குமுறையை மக்களுக்காக மக்களாற் தேர்ந்தெடுக் கப் பட்டதென்ற ஜனநாயக அரசின் அமைப்பு முறை என்று போற்றுகிறார்கள். எங்கள் இனம் இந்த அடக்கு முறையால் பட்ட சேதம் போதும். பாராளுமன்ற அமைப்பில் நம்பிக்கை வைத்து நாம் பட்ட அனுபவங்கள் குழந்தைகளுக்குக் கிடைக் கக் கூடாது என்பதற்காக எங்கள் இனத்தின் விடுதலைக் கான போராட்டத்தின் ஆரம்பக் கட்டத்தில் இருக்கிறோம்.

Page 9
O ராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம்
எங்களால் இன்று உண்டாக்கப்படும் கலைகள் எங்கள் வரும் கால சந்ததியினரின் விடுதலைக்கும் உரிமைப் போராட்டத் திற்கும் உணர்ச்சியூட்டுவதாக இருக்கவேண்டும்."
நெற்றியில் முத்து முத்தாக வியர்வை துளிர்க்க அவன் பேசிக் கொண்டிருந்தான். "மைக்" சரியாக வேலை செய்யாமல் முரண்டு பண்ணிக்கொண்டிருந்தது. மேடையில் சரியான வெளிச்சம்கூட இல்லை. ஆனால் இதொன்றும் அந்த மண்ட பத்தில் கூடியிருந்த நூற்றுக்கணக்கான தமிழரின் கண் களுக்குத் தெரியவில்லை. ஆயிரமாயிரம் மைல்கள் கடந்து வந்தும் தங்கள் மொழி, இன உணர்ச்சியால் உந்தப்பட்டதன் தெளிவு அவர்கள் முகத்தில் இருந்தது.
கார்த்திகேயனின் உணர்ச்சிமயமான பேச்சால் சில தாய்மார் களின் கண்களில் நீர் கூடத் துளிர்த்தது. "எங்கள் காலத்தில் எங்களுக்கு ஏற்பட்ட கொடுமைகள்." என்று தொடங்கி கார்த்திகேயன் எழுபத்தியேழாம் ஆண்டின் கலவர நிலையை விளக்கிக் கொண்டிருக்கும்போது பக்கத்தில் இருந்த பெண் விம்மியழுது விட்டாள். இலங்கையில் நூற்றுக்கணக்காக இறந்த தமிழர்களில் அவளும் தன் தம்பியை, தாயை இழந்தி ருக்கலாமோ?
சகுந்தலா மேடையில் பார்வையைப் பதித்தாள். கார்த்தி கேயனின் பேச்சு முடிய குழந்தைகளின் கோலாட்டம் நடந் தது. திறமையான கண்காணிப்பில் அமைக்கப்படாததாய் இருந்தாலும் தமிழ்க் குழந்தைகளின் களிப்பு பொங்கும் முகங் கள் பார்க்கப் பரவசமாய் இருந்தது.
**அவர்கள் என்னம்மா செய்கிறார்கள்" குழந்தை கீதாஞ்சலி தாயைக் கேட்டாள். 'கோலாட்டம் ஆடுகிறார்கள்; நீ வளர்ந்த பிறகு சொல்லித் தருகிறேன்." தாயின் உறுதி மொழிக்குப் பின் குழந்தையின் கவனம் இன்னும் கூடியது. தாயின் சிந்தனை எங்கோ ஓடிக்கொண்டிருந்தது. ஐந்து

உலகமெல்லாம் வியாபாரிகள் 1.
வருடங்களின் பின் கார்த்திகேயனை மேடையில் திடீரெனக் கண்ட திகைப்பு அவளை விட்டு இன்னும் அகலவில்லை. எவனைக் காணக்கூடாதென்று ஐந்து வருடம் ஒழித்துக் கிடந்தாளோ அவனை வந்து ஒரு கிழமைக்கிடையில் கண்டாயிற்று. அவன் தன்னைக் கண்டிருப்பானா?
உடம்பெல்லாம் குப்பென வியர்த்தது அவளுக்கு. தற்செய லாக நேருக்குநேர் கண்டால் என்ன செய்வது. கடவுளே அந்தத் தர்மசங்கடமான நிலையை எனக்குத் தராதே. கஷ்ட மான நேரங்களில் எல்லாம் கடவுள் கைகொடுத்தால் உலகத் தில் ஏன் துன்பங்கள் மலிந்து கிடக்கின்றன. நானும் வரட் டுமா கலைவிழாவுக்கு என்று தகப்பனைக் கேட்டபோது பேரின்பநாயகத்தார் மெல்லவும் முடியாமல், விழுங்கவும் முடி யாமல் தவித்தது போன்று தெரிந்தது அவளுக்கு. இப்போது விளங்குகிறது பேரின்பநாயகத்தார் ஏன் அப்படி நடந்து கொண்டார் என்று.
இருக்காதா அவருக்கு? ஐந்து வருடங்களுக்கு முன் அவனைத் தானே உருப்படியில்லாத உதவாக்கரை என்று திட்டினார். 'காதலாம் கத்தரிக்காயாம். இவனைச் செய்து என்ன காணப் போகிறாய். இவர் தரவளிக்கு என்ன எஞ்சினியரிங் படிப்பு ஏதோ செய்து பிழைச்சாப் போதும் என்று திரிகினம். உமக்கு அவரில் காதலோ? தான் போக வழியில்லை தும்புத் தடிக்கு மூஞ்சுறையும் துக்கிக்கொண்டு போன கதைதான் இவர் தரவ ளியின்ர கதை. இவரை நம்பி சகுந்தலா பைத்தியத்தனமான யோசனைகளை வைத்திராதே? தகப்பன் பேரின்பநாயகத்தார் இப்படித் திட்டியபோது எதிர்க்கதை பேசாமல் போனவனின் அரசியல் பேச்சைக் கேட்க விம்பிள்டனில் இருந்து அண்டக்கிர வுண்ட் ரெயின் எடுத்து வந்திருந்து கேட்பதும் தன் தகப்பன் தான் என்பது அவளால் நம்பமுடியாமல் இருந்தது. தூரத் தில் இருக்கும் தகப்பனைத் திரும்பிப் பார்த்தாள்.
அவர் மேடையில் பார்வையைப் பதித்திருந்தார். என்ன நினைக்கிறார் இப்போது? இவர்களுக்கென்ன தகுதி அரசி

Page 10
2 ராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம்
யலையும் கலையையும் பற்றிப் பேச என்று நினைப்பாரா? நேற்றைய மழைக்கு முளைத்த பூண்டுகள் துள்ளுகின்றன என்றுதான் கட்டாயம் நினைப்பார். அப்பாவைப் பொறுத்த வரையில் அரசியல் பேசும் தகுதி சில படித்த மனிதர்கள்-சட் டத் தரணிகள், பாராளுமன்ற (புழுகு) வாதிகளுக்குத்தான் உண்டு.
மெல்லிய சிரிப்பு சகுந்தலாவின் உதடுகளில் நெளிந்தது, தகப் பனின் மாற்றத்தை நினைத்ததும். உண்மையாகத்தான் தமிழ்க் கலையார்வத்தில் வந்திருக்கிறரா அல்லது உந்தப் பெடிப் பிள்ளைகளின் விழல்க் கூத்தை விண்ணாணம் பார்க்க வந்திருக்கிறாரா?
எத்தனையோ வசதிக்குறைவிருந்தும் நினைத்ததை விடத் திறமையாக நடந்து கொண்டிருந்தன நிகழ்ச்சிகள். ஒவ்வொரு நிகழ்ச்சியும் முடிய கையிலுள்ள புரோக்கிராம் பேப்பர் துண் டைப் பார்த்துக்கொண்டாள். கடைசி நிகழ்ச்சி முடிவதற் கிடையில் மண்டபத்தை விட்டு வெளியேறிவிட்டால் தற்செய லாக என்றாலும் கார்த்திகேயனைச் சந்திக்கும் வாய்ப்பு கிடைக்காது.
சரியான ஒழுங்குகள் இல்லாமல் நிகழ்ச்சிகள் இழுபட்டுத் கொண்டிருந்தன. குழந்தை கீதாஞ்சலி மடியில் படுத்து நிக் திரை. தகப்பனைத் திரும்பிப் பார்த்தாள். அவர் யாரோ ஒருத் தருடன் மும்முரமாக வாக்குவாதத்தில் ஈடுபட்டிருந்தார். எதைப் பற்றிப் பேசிக்கொண்டிருக்கிறார். நிகழ்ச்சிகள் முடிய முதலே குடும்பக்காரர்கள் குழந்தைகளுடன் வெளியேறிக் கொண்டிருந்தார்கள்.
நிகழ்ச்சி நிரலின்படி இரவு பத்துமணிக்கு முடிகிறது. இப் போதே இரவு பத்தரைக்குமேல். மீனா வந்து காத்துக் கொண்டிருப்பாள். அப்பாவுக்கு ஞாபகம் இருக்குமா அல்லது போய்ச் சொல்லவேண்டுமா?

உலகமெல்லாம் வியாபாரிகள் 3
குழந்தையைத் தூக்கித் தோளில் போட்டுக்கொண்டு தகப்பன் இருக்கும் இடம் தேடிப் போனாள்.
ஹலோ கூப்பிட்ட குரலுக்குரியவனை அவள் திரும்பிப் பார்க்கவில்லை. ஐந்து வருடமென்ன? இன்னும் ஐந்நூறு வருடங்கள் அவள் உயிரோடிருந்தாலும் கார்த்திகேயனின் குரலை அவளால் மறக்க முடியாது.
அவள் திரும்பிப் பார்க்கவில்லை. கேட்காத மாதிரிப் போக லாமா? என்று நினைத்தாள்.
"ஹலோ சகுந்தலா" அவனின் குரலில் கோபத்தின் சாயல் இருக்கிறதா என்று ஆராய அவளால் முடியவில்லை. எவனைக் காணாமல் ஓடவேண்டுமென்ற உந்தலில் நிகழ்ச்சிகள் முடிய முதலே எழுந்தாளோ அவன் அவள் முன் நிற்கிறான்.
"ஹலோ" ஏதோ தன் குரலே தன்னால் அடையாளம் காண முடியாத மாதிரி மாறிப்போனதுபோல் இருந்தது அவளுக்கு. பூமி பிளந்து அப்படியே விழுங்கிக் கொள்ளாதா என்றிருந்தது அவளுக்கு. கொஞ்சநேரம் இருவருக்கும் என்ன பேசுவ தென்றே தெரியவில்லை. ஏன் எனக்கு முன்னால் வந்து நிற்கிறீர்கள், தெரியாமல் போய்த் தொலைப்பதற்கென்ன்? என்று கேட்கத் துடித்தாள். நா வரண்டு வாய் வரவில்லை கதைக்க.
'மீனா சொன்னாள் நீர் வந்திருப்பதாக" அவன்தான் மீண் டும் கதைத்தான். அவள் உம் கொட்டினாள். பார்வை இன்னும் எங்கேயோ இருந்தது. அவனைப் பார்க்கத் தைரிய மில்லை அவளுக்கு.
'மீனாவின் கல்யாணத்தைக் குழப்பும் நாசகார வேலைக்கு நீர் வந்திருப்பதாகக் கேள்விப்பட்டன்' அவனின் குரலில் நையாண்டி இருப்பதாகப் பட்டது அவளுக்கு.

Page 11
14 ராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம்
"நாசகாரவேலைக்கு" அழுத்தம் திருத்தமாக இன்னுமொரு தரம் சொன்னான். முதல் தான் சொன்னது தற்செயலாக அவளுக்குக் கேட்டிருக்காவிட்டாலும் என்ற சந்தேகமா? முதற் தரம் அவனை நேருக்கு நேர் பார்த்தாள். அவள் பார்வையில் எள்ளும் கொள்ளும் வெடித்தது. மேடையில் கண்டதை விட அருகில் பார்க்கும்போது அவன் முகம் வித்தியாசமாகத் தெரிந்தது. ஐந்து வருடங்களுக்கு முன் இருந்த அதே சிரிப்பு,
முகம், நடை, உடை, பாவனை.
"என்ன பார்க்கிறீர் திருமதி சிவனேசன். அடியேனின் பெயர் தற்செயலாகத் தங்களுக்கு மறந்திருந்தாலும்." அவன் கண்களில் குறும்பு தவழ்ந்தது. அவன் தன் வேதனையை மறக்க அப்படி நடக்கிறானா அல்லது தன்னை அவமானம் செய்யும் யோசனையில். அவளால் சிந்திக்க முடியவில்லை.
சகுந்தலாவுக்கு அழுகை பொத்துக்கொண்டு வருமாற் போல் இருந்தது. "ஷட்அப்" என்று கத்தவேண்டும் போலிருந்தது, அவனை நேரில் கண்டால் எப்படி நடந்து கொள்வான் என்று அவளால் முடிவுகட்ட முடியாமல் இருந்தது. முன்பின் தெரி யாதவன் மாதிரிப் போவானா அல்லது துரோகி, சண்டாளி என்று திட்டுவானா? என்றெல்லாம் யோசித்திருக்கிறாள்.
அவன் என்னவென்றால் மூன்றாம் பேர்வழிபோல்-மூன்றாம் பேர்வழியில்லாமல் யார் அவன் அவளுக்கு இப்போது
மேடையில் கிட்டத்தட்ட நிகழ்ச்சிகள் எல்லாம் முடிந்துவிட்ட தற்கான அறிகுறி. மண்டபத்தில் உள்ள அத்தனை பேரும் ஒரேயடியாகக் கதைக்க வெளிக்கிட்டதால் பலதரப்பட்ட ஓசை கள் பல திக்குகளிலுமிருந்து ஒலித்துக்கொண்டிருந்தன. சகுந்தலாவைப் பொறுத்தவரையில் யாருமில்லாத தனிக் காட்டில் அகப்படக்கூடாத இடத்தில் அகப்பட்டதுபோல இருந்தது. தோளில் குழந்தையின் பாரம் அழுத்தியது.
'குழந்தை நித்திரையா' அவன் கேட்டான்.

உலகமெல்லாம் வியாபாரிகள் 15
k', ;
'உம், அதுதான் வெள்ளணப்போக வெளிக்கிட்டன்" அவள் சமாதானம் சொன்னாள். தற்செயலாக அவன் கேட்டாலும் ஏன் நிகழ்ச்சிகள் முடியமுதல் ஓடுகிறீர் எனக்குப் பயந்தா?
எனறு.
"யார் தங்கச்சி சகுந்தலாவோ" தங்களைக் கடந்து போய்க் கொண்டிருந்த பெண்மணி திரும்பி நின்று கேட்டாள். சகுந்த லாவின் முகத்தில் புன்முறுவல். கார்த்திகேயனிடம் இருந்து தப்பினோம், பிழைத்தோம் என்றிருந்தது அவளுக்கு.
"என்ன கனகாலமாக லண்டனுக்கு வரவில்லை நீங்கள்' திருமதி நடராஜா கேட்டாள். பேரின்பநாயகத்தாரின் சினே கிதர்களில் ஒரு குடும்பத்து பெண்மணி.
'தங்கச்சியாருக்குக் கல்யாணம் அதான் வந்திருக்கிறா" கார்த்திகேயன் குரலில் ஒரு குறும்பும் இல்லாமல் சொன் னான்.
திருமதி நடராஜனின் முகத்தில் ஆச்சரியம் 'என்ன மீனா வுக்குக் கலியாணமோ?" சகுந்தலாவுக்குத் தர்மசங்கடமாகி விட்டது. கார்த்திகேயனில் ஆத்திரம் ஆத்திரமாக வந்தது அவளுக்கு. அவன் தன்னை வேண்டுமென்றே ஆட்களுக்கு முன்னால் அவமானம் செய்வதாகப் பட்டது அவளுக்கு.
"அவர் சும்மா சொல்கிறார். கனகாலமாக லண்டனுக்கு வராததால் பெரிய பகிடி இவருக்கு" கார்த்திகேயனை முறைத்தபடி சொன்னாள் சகுந்தலா.
"அதுதானே பார்த்தன் தெரிஞ்ச ஆட்கள் ஒருத்தருக்கும் சொல்லாமல் உமது தகப்பன் உமது கல்யாண வீட்டை நடத்தியதுபோல் மீனாவின் கல்யாணத்தையும் நடத்தினால் சினேகிதர்களுக்குள் பெரிய சண்டைதான் வரும் எண்டு சொல்லும் உமது தகப்பனுக்கு" திருமதி நடராஜா போய் விட்டாள்.

Page 12
ராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம்
"சொல்லாமல் கொள்ளாமல் கல்யாணம் நடத்தினார் உமது தகப்பன்" கார்த்திகேயன் ஒன்றும் தெரியாதவன் கதை கேட்பதுபோல் கேட்டான். அவளுக்கு ஆத்திரத்தில் எல்லை மீறிக் கண்கள் கலங்கின. வேண்டுமானால் என்னை வாயா சத் திட்டுங்கள். துரோகி, ஏமாற்றுக்காரி என்று என்ன வெல்லாம் சொல்லவேண்டுமோ சொல்லித் தொலையுங்கள், ஆனால் இப்படி என்னைக் குத்தாமல் குத்திக் கிழிக்காதீர் கள்! என்று கதறவேண்டும் போல இருந்தது. சொல்ல வேண்டிய சில சொல்லப்படாமற் போகின்றன சந்தர்ப்பங் களால்
சனங்கள் போய்க் கொண்டிருந்ததால் அவர்களைத் தாண்டி அவளால் ஓடமுடியாமல் இருந்தது.
"என்ன என்னிடமிருந்து ஒடப்பார்க்கிறீரா?" கார்த்திகேயன் கேட்டான், கதைக்க நேர்ந்த சந்தர்ப்பத்தை விடாமல்,
இவர் என்ன வழக்கறிஞரா என்னை விசாரணை செய்ய. கலங்கும் கண்கள் நீர்கொட்டாமல் தன்னைச் சமாளித்துக் கொண்டு அவனை நேருக்கு நேர் பார்த்தாள்.
'நீங்கள் வருவதாகத் தெரிந்திருந்தால் நான் நிச்சயமாக இங்கு வந்திருக்கமாட்டேன்" உணர்ச்சிவசப்பட்டு உதடுகள் துடித்தன. உண்மைகள் வெடித்துச் சிதறின வார்த்தை களாய்.
"எனக்காக ஒளிந்து வாழச்சொல்லி யாரையும் பயப்படுத்திய தாக எனக்கு ஞாபகம் இல்லை" அவன் சொன்னான். காதலின் மகத்துவம் மன்னிப்பதிலும் மறந்துபோவதிலுமா இருக்கிறது?
அவளின் பொறுமை எல்லை மீறியது. "என்னை வேண்டு மானால் மனம்போனபடி திட்டுங்கள். உள்ளொன்று வைத்துப் புறமொன்று கதைக்க வேண்டாம்" வேதனையில்

உலகமெல்லாம் வியாபாரிகள் 17
அவள் சொற்கள் தடுமாறின. அவள் கண்களில் துயரத்தின் சாயை தவழ்ந்து மறைந்தது. 'சொறி சகுந்தலா' மெல்லச் சொன்னான் பெருமூச்சுடன், காதலர்கள் பொய்மையுடன் இருந்ததாகச் சரித்திரம் இல்லை.
** இப்படியெல்லாம் மனவேதனை வருமென்றுதான் இவ்வ ளவு நாளும் லண்டனுக்கு வராமல் இருந்தேன்" அவளின் குரல் சோகமாக இருந்தது.
"இப்ப மட்டும் ஏன் வந்தீர். தங்கச்சிக்கு ஒரு நல்ல மாப்பிள்ளை பார்த்துக் கட்டி வைக்கவா வந்தீர்? அமெரிக்கா விலிருந்து இங்கு வந்து மாப்பிள்ளை வேட்டையாட கன செலவாகியிருக்குமே. உமது அப்பர் மலிவாக ஒரு விளம்பரம் போட்டிருப்பாரே மாப்பிள்ளை தேவை என்று. அதற்குக்கூட கஞ்சத்தனம் காட்டியிருப்பார்' அவன் பொரிந்து தள்ளி னான்.
"ஏன் அப்பாவில் இன்னும் இப்படி எரிச்சல் படுகிறீர்கள்" அவளுக்குத் தெரியும் எத்தனையோ காரணம் இருக்கும் எரிச்சலுக்கென்று.
'உமது அப்பாவிடம் தனிப்பட்ட முறையில் எனக்கொரு கோபமும் இல்லை. அரசியல் விஷயங்களில் அவர் செய்யும் தகிடு தத்தமான வேலைகள் உமக்கென்ன தெரியும். அவ னின் குரலில் ஆத்திரம் வெடித்தது.
"உங்கள் அரசியல் பேச்சைக் கேட்க நான் வரவில்லை. பிள்ளையும் தோளில் போட்டுக்கொண்டு" அவள் அலுப்புடன் முணுமுணுத்தாள்.
*பின்னர் என்ன பொழுதுபோக்குக்காக வந்தீரா? உமது தந்தையைப் போன்ற ஆட்களுக்கு அரசியல் ஒரு பொழுது போக்குத்தானே! படிப்பு, பட்டம், பதவி, நல்லவேலை இவை யெல்லாம் தேடியபின் பொழுதுபோக, ஒரு சுவையான

Page 13
18 ராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம்
பொழுதுபோக்காகத்தானே அரசியலைப் பாவித்து ஒரு இனத் தையே படுகுழிக்குள் தள்ளிவிட்டுக்கொண்டிருக்கிறார்கள் இலங்கையில்' அவன் குரலில் ஆத்திரம் வெடித்தது. அவள் இன்னும் நின்று கேட்டுக்கொண்டிருந்தால் வீண் சண்டை வரும் என்று நினைத்துக்கொண்டு கூட்டத்தை விலக்கிக் கொண்டுபோக வெளிக்கிட்டாள்.
"சகுந்தலா" அவன் கூப்பிட்டான். எரிச்சலுடன் திரும்பிப் பார்த்தாள். அவள் வாய் திறக்க முதல் பேரின்பநாயகத்தார் அவர்களை நோக்கி வருவது தெரிந்தது.
கார்த்திகேயனையும், தன்னையும் ஒன்றாகக் கண்டு தகப்பன் என்ன நினைக்கப்போகிறார் என்று ஒருகணம் நினைத்தாள். அவனை நிமிர்ந்து பார்த்தாள்.
உமது தந்தைக்குப் பயந்து ஒடியகாலம் மலையேறி விட்டது என்பதுபோல் அவளைப் பார்த்தான் கார்த்திகேயன். அவர் கள் நினைத்ததுபோல பேரின்பநாயகத்தார் அவர்கள் இரு வரையும் ஒரேயடியாகக் கண்டு திடுக்கிட்டதுபோல் இருந்தா லும் சமாளித்துக்கொண்டு கார்த்திகேயனைக் கண்டு ஒரு அசட்டுச் சிரிப்பை அவிழ்த்து விட்டார்,
சோழியன் குடுமி சும்மா ஆடுமா? என்ற கருத்தில் சகுந்தலா வைப் பார்த்தான் கார்த்திகேயன். அவர் சும்மா சிரிக்கும் பேர்வழியா?
'தம்பி கார்த்திகேயன் உங்களைப் பற்றித்தான் விசாரித்துக் கொண்டிருந்தன். நல்ல காலம் இஞ்ச நிக்கிறியள்." அவர் தன் விலை உயர்ந்த சூட்டின் கோட்டுப் பைகளுக்குள் கை களை விட்டுக்கொண்டு கார்த்திகேயனை நிமிர்ந்து பார்த் தார். பொய்மையும் புழுகும் என்ற சொற்களுக்கு அடுத்த பெயரா அவருடையது.

உலகமெல்லாம் வியாபாரிகள் 19
தம்பி கார்த்திகேயனாம்; பேரின்பநாயகத்தாரா கதைக் கிறார்? சகுந்தலாவுக்கு நேற்றுப்போல் இருக்கிறது தகப்ப னார் சண்ட மாருதமாய்ச் சீறி விழுந்த காட்சி. கார்த்தி கேயன் தலைகுனிய மாடிப்படிகளில் நின்றுகொண்டிருந்தான் வாய் பேசாமல், சகுந்தலாவின் ஒன்றுவிட்ட தமையன் ராமநாதன் மாடியின்மேல் நின்றிருந்தான் வாய்பேச வழி யில்லாது. மீனா பயத்துடன் முன் அறையால் எட்டிப் பார்த்துக் கொண்டிருந்தாள். அப்போது பேரின்பநாயகத்தார் இடி மழையெனப் பொரிந்து தள்ளினார்.
**மானம் மரியாதை இருந்தால் இனி இந்த வீட்டில் காலடி எடுத்து வைக்காதே. உமது சினேகிதனுடன் கதைப்பதா னால் ரோட்டில் தெருவில் வைத்துக் கதைத்துக்கொள். இது குமர்ப் பிள்ளைகள் இருக்கிற வீடு. கண்டவன் வந்துபோற சத்திரம் இல்லை."
அப்படி சொன்னவர் இன்று தம்பி கார்த்திகேயனாம். 'ஏன் என்னை விசாரித்துக் கொண்டிருக்கிறீர்கள். மீனாவின் கல்யாண வீட்டுக்கு வரச்சொல்லியா? அதுதான் சகுந்தலா சொல்லிக்கொண்டிருந்தா. பெரிய அமர்க்களமாக நடக்கும் போலக் கிடக்குது." குரலில் ஒரு துளியும் நையாண்டி இல்லை. ஆனாலும் அவளுக்குத் தெரியும் தங்களை எப்படி மனதுக்குள் கிண்டல் பண்ணுகிறான் என்று.
"சும்மா கிடங்கோ தம்பி, இந்தச் சின்னப்பெட்டகத்தை விடுங்கோ. மீனாவின்ர ஆட்டத்தைத்தான் நாங்கள் ஒருகை பார்க்கிறம் என்றிருக்கிறம். புத்தியில்லாத பெண்கள் சொன் னால் அவர்கள் விருப்பப்படி விடுகிறதா?" அவர் தூக்கி யெறிந்து கதைத்தார். கார்த்திகேயனின் முகத்தில் கோபம் துளிர்ப்பது தெரிந்தது. சகுந்தலாவுக்குப் பயம் பிடித்தது. அவர்கள் எப்படியும் அடிபடட்டும், அரசியல் விஷயமாகட் டும், சொந்தப் பிரச்சனையாகட்டும் அவளில்லாத இடத்தில் அடிபடட்டும். அவளுக்கு முன்னால் என்ன நடந்தாலும்

Page 14
20 ராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம்
அந்த நிகழ்ச்சியால் அவள் வாழ்க்கையில் எப்படிப் பாதிப்பு ஏற்படும் என்று தெரியும்.
*உம்முடைய கள்ளக் காதலனுக்கும். உமது தகப்பனாருக் கும் உம்மாலா சண்டை வந்தது" என்று அவள் கணவன் சிவநேசன் குரூரமாகக் கேட்கத் தயங்கமாட்டான்.
*' என்ன தம்பி நீங்கள் தமிழ், தமிழ்க் கலாச்சாரம் என்று கதைக்கிறியள். மீனா மாதிரிப் பெண்கள் வெள்ளைக்கார ரைக் கல்யாணம் செய்வது பிழை என்று சொல்லமாட்டீர்கள் போலக் கிடக்கு' அவர் முகத்தில் இன்னும் அசட்டுச் சிரிப்பை விடவில்லை. அவனுக்கு நன்றாகத் தெரியும் தன் னுடைய சொந்த வாழ்க்கையில் சில்வியாவுடன் வாழ்வதை யும் வைத்துத்தான் இப்போது மீனாவின் சாட்டில் கிண்டல் செய்கிறார் என்று.
"கல்யாணம் செய்வது அவர்கள் சொந்த விசயம். தனக்குரிய துணையைத் தானே தேர்ந்தெடுக்கத் தேவையான அறிவுடன் பெண்கள் வளர்ந்து வருகிறார்கள். அதாவது எங்கள் தமிழ் பெண்கள் வளர்ந்து வருகிறார்கள் என்பதே சந்தோசமான செய்தியில்லையா! ஒரு ஆளுக்கு ஒரு நீதி, ஆணுக்கு ஒரு நீதி, பெண்ணுக்கு ஒரு நீதி, ஒரு சாதிக்கு ஒரு நீதி, ஒரு சட்டம் என்று நாங்கள் பாத்து இந்த நிலமைக்கு வந்தது போதாதா" கார்த்திகேயனின் குரல் கடுமையாக இருந்தது. சகுந்தலா தர்மசங்கடமான நிலையில் தகப்பனைப் பார்த்தாள்.
"'என்ன தம்பி சொந்த வாழ்க்கையையும், அரசியலையும் ஒன்றாக்கிக் கதைக்கிறீர்கள்." பேரின்பநாயகத்தார் விட்டுக் கொடுக்காமல் கேட்டார்.
அரசியலும், தனிப்பட்ட வாழ்க்கையும் தனித்தனியானவை அல்ல. தனிப்பட்ட வாழ்க்கையில் சுதந்திரம் கொடுக்கத் தயங் காதவர்கள் தாங்கள் தமிழர் என்று சிங்கள ஏகாதிபத்தியத்

உலகமெல்லாம் வியாபாரிகள் 2.
திடமும் சுதந்திரம் கேட்கப்போவதில்லை. தன்னைவிடக் குறைந்ததாகச் சிலரை வைத்துக்கொண்டு, சாதி அடிப்படை யிலோ, தனிப்பட்ட அடிப்படையிலோ அவர்களுக்குச் சில சலு கைகள் கொடுத்து அன்றாட பிரச்சனையைச் சமாளிக்கலாம் என்று தப்புக் கணக்குப் போட்ட தலைவர்களாற்தான் எங்கட தமிழ்ச் சமுதாயமே இப்படி இருக்கிறது. கார்த்தி மென்மை யாகச் சொன்னான். கார்த்திகேயன் என்ன அர்த்த சாம யுத்தம் நடத்தத் துணிந்துவிட்டானா? நேரம் என்ன இருக் கும். நடுச்சாமமாய் இருக்காதா.
சகுந்தலா பொறுமையிழந்து விட்டாள். "குழந்தை பாவம். வசதியில்லாமல் படுத்திருக்கிறாள் அப்பா. சகுந்தலா தகப் பனைப் பார்த்துச் சொன்னாள்.
"ஒம், ஓம் வாரும் போவம்" பேரின்பநாயகத்தார் பின்னால் நடந்தாள். தகப்பனோ, மகளோ போய் வருகிறேன் என்று கூடச் சொல்லவில்லை கார்த்திகேயனுக்கு. அவனைத் திரும் பிப் பார்க்க விருப்பமில்லை-தைரியமில்லை அவளுக்கு. தகப் பனைப் பின் தொடர்ந்தாள்.
சோர்ந்த முகத்துடன் போகும் சகுந்தலாவைப் பார்த்துக் கொண்டு நின்றான் கார்த்திகேயன். அவன் எதிர்பார்க்க வில்லை. அவள் கலைவிழாவுக்கு வருவாள் என்று. தானும் ஒரு பேச்சாளன் என்று தெரிந்திருந்தால் பேரின்பநாயகத்தார் கூட்டிக் கொண்டு வந்திருக்கவும் மாட்டார். சகுந்தலாவும் வந்திருக்கமாட்டாள் என்று தெரிந்தது.
பேரின்பநாயகத்தார் தன்னைத் தேடியதாகச் சொன்னது ஞாபகம் வந்தது. ஏன் தேடியிருப்பார். கடந்த ஒன்றிரண்டு மாதமாக கண்ட இடங்களில் எல்லாம் முப்பத்திரண்டு பல்லும் தெரிய புன்முறுவல் சொரிகிறார். காரணம் என்னவாக இருக் கும.

Page 15
22 ராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம்
அரசியல் ரீதியில் பரம எதிரிகள். "பாவங்கள், இந்த மாண வர்கள். படிக்கவந்த இடத்தில் இந்தப் போலிப் புரட்சிவாதி களால் தவறான வழிகளில் நடந்தப் படுகிறார்கள்’’ என்று எதிரிகளில் ஒருவரான ஜெகநாதன் சொன்னதற்கு இவர் போல பெரியாட்கள் ஒத்துப்பாடியதாகக் கேள்வி. இப்போது என்ன கதைக்க இருக்கிறது இவருக்கு என்னிடம்.
என்ன கேட்கப்போகிறார். 'தம்பி கடவுள் பேரால் கேட் கிறன் மாணவர் சங்கங்களுக்கிடையிலும், அவர்கள் இயக்கங் களுக்கிடையிலும் ஒன்றும் செய்து குழப்பாதீர்' என்று சொல் லப்போகிறாரா. அல்லது தம்பி மீனா யாரோ வெள்ளைக் காரனைச் செய்யப் போகிறளாம். புத்திசொல்ல அமெரிக்கா வில் இருந்து மூத்தமகளை இறக்குமதி செய்திருக்கிறன். நீங் களும் ஒருக்கா மீனாவுக்குத் தமிழ்க் கலாச்சாரத்தைப்பற்றிக் கதையுங்கோ என்று சொல்லப் போகிறாரோ?
பேரின்பநாயகத்தார் மேற்சொன்ன இரண்டு விடயங்களுக்கும் கார்த்திகேயனை கடைசிவரைக்கும் கேட்கப் போவதில்லை. வேறு என்னவாக இருக்கும்? வேறு ஏதாகவும் இருக்கட்டும். அதைப்பற்றி யோசிக்க அவனுக்கு நேரமில்லை.
மண்டபத்தில் குப்பையும் கூழமாகக் கிடந்தது. எங்கு போனாலும் தமிழர்கள் தமிழர்கள்தான். சுயநலவாதிகள். எங்களின்ர மண்டபமா? யாரோ ஒருத்தனின் உரிமைதானே? என்பதுபோல் பேப்பரும் குப்பையுமாய்க் கிடந்தது.
"நீங்கள் எங்களுக்காக நிற்கவேண்டாம்" என்றான் சலீம். நாடகத்துக்குப் போட்ட பவுடரைத் துடைத்து விட்டுக் கொண் டிருந்த சிதம்பரநாதன் கேட்டான் ' என்னவாம் சகுந்தலா அக்கா' கார்த்திகேயன் மறுமொழி சொல்லவில்லை.
"ஏன் சகுந்தலா அக்காவுக்கு தேவையில்லாத வேலை. மீனா தான் விரும்பி யாரையும் கல்யாணம் செய்யட்டுமே? சிதம்பர

உலகமெல்லாம் வியாபாரிகள் 23
நாதன் முகம் துடைத்து முடிய சேர்ட் போட்டுக் கொண்டு சொன்னான்.
"நீர் சொல்வதுதானே சகுந்தலாவுக்கு. உமக்குத்தான் சகுந் தலா மைத்துணி. அந்த உறவில் என்றாலும் கதைக்கலாம். எனக்கென்ன உரிமை இருக்கு. சகுந்தலாவிடம்போய் மீனா வுக்காகக் கதைக்க." இப்படிச் சொன்ன கார்த்திகேயனை கருத்துடன் பார்த்தான் சிதம்பரநாதன். உங்கள் இருவரின் பழைய கதைகளும் எனக்குத் தெரியும் என்பதுபோல் இருந் ჭნტJ •
சிதம்பரநாதன் கார்த்திகேயனையும், சகுந்தலாவையும் விட ஐந்துவயது குறைந்தவன்தான். ஆனாலும் தங்கள் "கதை" தெரியாமல் இருக்காது. சிதம்பரநாதன் சகுந்தலாவின் சொந்தக்காரன். மைத்துனன் முறை. வயது வித்தியாசத்தால் "அக்கா" என்றுதான் சொல்வான் தன்னைவிட வயது கூடிய வர்களை. புவனேஸ்வரி மூலம் தெரிந்திருக்கலாம். புவனே சின் புருஷனும் ஜெகநாதனும் பேரின்பநாயகமும் எதிரிகள் அரசியலில். சகுந்தலா குடும்பத்துக்குச் சொந்தமோ இல்லையோ புவனேஸ் பேரின்ப மாமா குடும்பத்துடன் கதைக் காமல் விட்டு வருடக் கணக்காகி விட்டது. சகுந்தலா திருமண மாகி நியூயோர்க் போகும் வரை சகுந்தலா ஒன்றிரண்டுதரம் வந்திருக்கிறாள் புவனேசைப் பார்க்க. அதைவிட குடும்ப உறவு ஒன்றும் இல்லை. ஆனால் சிதம்பரநாதனை பொறுத்தவரை யில் மீனாவின் கல்யாண விடயத்தில் பேரின்பநாயகத்தாரின் முரட்டுப் பிடிவாதம் காட்டுமிராண்டித் தனமாக இருந்தது. இதைப் பற்றிச் சொன்னபோதுதான் சிதம்பரநாதனின் தமக்கை புவனேஸ் சொன்னாள் சகுந்தலாவையும் இப்படித் தான் படாதபாடு படுத்திக் கல்யாணம் பண்ணி வைத்தார் என்று.
சிதம்பரநாதனுக்கு சகுந்தலா மீனாவின் கல்யாணத்தைக் குழப்புவதற்காகத்தான் அமெரிக்காவிலிருந்து வருவதாக

Page 16
24 ராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம்
மீனா சொன்னபோது நம்பமுடியாமல் இருந்தது. சிதம்பர நாதனுக்கு மட்டுமல்ல கார்த்திகேயனுக்கும் நம்பமுடியாமல் இருந்தது.
தனக்கும் சகுந்தலாவுக்கும் உள்ள தொடர்பு தெரிந்து பேரின்ப நாயகத்தார் துள்ளிய காலத்தில் சகுந்தலா பட்ட வேதனை கள் ஞாபகம் வந்தன. தான் பட்ட வேதனை தங்கைக்கு வராது என்று நினைக்கிறாளா சகுந்தலா. காதலித்தும், காதலிக்கப் பட்டும் கண்ட வேதனையை சகுந்தலாவால் அறிய முடியாவிட் டால் வேறு யாரால் உணர முடியும். அப்படியிருக்க மீனா விடயத்தில் சகுந்தலா தலையிடுவதாகக் கேள்விப்பட்டவுடன் கார்த்திகேயனால் நம்பமுடியவில்லை. சகுந்தலாவில் எரிச் சலும் ஆத்திரமும் வந்தது. அந்த மனக்கொதிப்பில் அவளைக் கண்டதும் நடந்து கொண்ட விதம் அவனுக்கு ஒருவிதத்தில் ஆறுதலாக இருந்தாலும் சகுந்தலாவின் கலங்கிய கண்கள் ஞாபகம் வந்ததும் தேவையில்லாமல் சகுந்தலாவை மனவருத் தப்படுத்தி விட்டேனா என்று ஒருகணம் நினைத்தான்.
யார் நான் அவர்கள் குடும்பத்தில், தங்கையின் விடயத்தில் தமக்கையைத் தலையிடாதே என்று சொல்ல? நான் யார்? நான் யார் என்று சகுந்தலாவிடம் கேட்கலாமா ஒரு நாள்? தன்னைத்தானே கேட்டுக்கொண்டவன் மனத்தில் வேதனை யான அரிப்புத் தெரிந்தது. ஏன் தேவையில்லாமல் இவர்கள் குடும்பத்துப் பிரச்சினையைத் தலையில் தூக்கி வைத்துக் கொண்டு மாரடிக்க வேண்டும் என்று தோன்றினாலும் மீனாவை நினைக்கப் பரிதாபமாக வந்தது.
" "அடக்கப்பட்டு ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமை என்று சொன்னபோது நான் நினைக்கவில்லை கோடானுகோடி வரு டங்களாகக் கலாச்சாரம், பண்பு, கற்பு என்ற பெயரில் அடக் கப்பட்டுத் துன்புறுத்தப்படும் பெண்களின் பிரச்சினை தனிப் பட்டது என்று. அவர்களின் விடுதலை என்பது வெளியில் போய் வேலை செய்யக்கிடைக்கும் உரிமையில்லை. வீட்டிலும்

உலகமெல்லாம் வியாபாரிகள் 25
அவள் கணவனுக்குச் சரிசமமாக நடத்தப்படவேண்டும். மீனா போன்ற பெண்களின் உரிமையை பேரின்பநாயகத்தார் பண்பு கற்பு, கலாச்சாரம் சொல்லி அடக்கப் பார்க்கிறார். இதை விட்டுக் கொடுப்பதா? வெள்ளைக்காரனைச் செய்வதும் அத னால் வரும் பிரச்சனைகளுக்கு ஈடுகொடுப்பதும் மீனாவின் பிரச்சனை, அதில் மற்றவர்கள் ஏன் தலையிட வேண்டும்? பெண்கள் ஒன்றும் உயிர் உணர்ச்சியற்ற கத்தரிக்காய்கள் அல்ல. அவர்களுக்கும் மூளை இருக்கிறது யோசிக்க." சிதம் பரநாதன் முணுமுணுத்துக் கொண்டிருந்தான்.
தங்கள் மாணவர் இயக்கத்துக்கு எதிராக பேரின்பநாயகத்தார் போன்ற பெரிய மனிதர்கள் போடும் தடைகளால் வெகுவாக மனம் நொந்துபோய் இருந்தான் சிதம்பரநாதன். இரண்டு மூன்று நாளைக்கு முதல் மீனாவைக் கண்டபோது மீனா, தமக்கை வரப்போவதையும் தன் குடும்பம் முழுதுமே தனக் கெதிராக போர் தொடுக்கத் தயாராக இருப்பதையும் சொன்
னாள்,
'சிவனேசனும் வந்தானாமா"? சிதம்பரநாதன் கேட்டான். தெரியாது என்று தலையாட்டினான் கார்த்திகேயன். "எப் படி அமெரிக்கா பிடிச்சுதாமா?" சிதம்பரன் தொடர்ந்து கேட் டான். "அடுத்த தரம் சகுந்தலாவைச் சந்தித்தால் அது பற்றிக் கேட்கிறேன்." கார்த்தியின் குரலில் கிண்டல் தட்
• لۃ للا {ا
"சிவனேசன் சரியாகக் குடிப்பானாம்' சாமான்களை எல் லாம் அடுக்கிவைத்துவிட்டு நிமிர்ந்த சிதம்பரநாதன் சொன் னான்.
என்ன கருத்தில் சொல்கிறான் சிதம்பரநாதன்? கார்த்தி நண் பனின் முகத்தைப் பார்க்கவில்லை. அவன் என்ன கருத்தில் சொன்னாலும் அதைப்பற்றி அக்கறைப்படும் நிலையில் இல்லை அவன்.

Page 17
26 ராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம்
"அமெரிக்காவில் கணவன் குறட்டைவிட்டால் விவாகரத்துச் செய்யுமளவுக்கு சட்டங்கள் சுகமாக இருக்கிறது. கணவன் குடித்துவிட்டுக் கொடுமைப்படுத்துவதானால் இன்னும் சுக மாக எடுக்கலாம். இல்லை இதெல்லாம் சரியில்லை, குடும்பம் என்றால் எல்லாவற்றையுப் போட்டு மூடிமறைத்து வாழ வேண்டும் என்று போலியாக வாழ நினைத்தால் மனத்தை அமைதிப் படுத்த அமெரிக்கா முழுக்க மணவைத்திய நிபுணர் கள் இருக்கிறார்கள். போய் "ராங்குலைஸா' குளிகைகள் எடுப்பதுதானே? அதெல்லாம் சரிவராவிட்டால் மகரிஷிகளைத் தேடி இந்தியாவுக்குப் போவது. எல்லாவற்றிற்கும் தானே அமெரிக்காவில் “எவரெடி' மருந்துகள் இருக்கின்றனவே?
கார்த்தியின் குரலில் எரிச்சலும் கிண்டலும் கலந்திருந்ததை சிதம்பரநாதன் கவனிக்கத் தவறவில்லை.
மண்டபம் கிட்டத்தட்ட காலியாகிவிட்டது. சலீமும் இன்னும் சில வாலிபர்களும் கதிரை மேசைகளைச் சரியாக்கிக் கொண் டிருந்தார்கள்.
சிதம்பரநாதனும், கார்த்தியும் வெளியில் வந்தார்கள். கார்த்தியின் காரை சலீம் கொண்டுவருவதாகச் சொன்னான். கூட்டத்திற்கு கொண்டு வந்த சாமான்களைக் கொண்டு வைத்துவிட்டுச் செல்லக் கார் தேவையாம்.
"என்ன ரெயினிலா போவது?" சிதம்பரன் கேட்டான்.
'இல்லை சில்வியா வருவதாகச் சொன்னாள்" சொல்லிக் கொண்டே மண்டபத்தைவிட்டு வெளியே வந்தார்கள்.
வானத்தில் கோடிக்கணக்கான நட்சத்திரங்கள். அதன் நடுவே தவழும் பாதிநிலா. இரவின் அமைதியில் அந்தச் சூழ்நிலை மனதுக்கு இதமாக இருந்தது. சித்திரை மாதத்துக் குளிர் காற்று முகத்தில் பட்டுத்தழுவியது. கலை நிகழ்ச்சிக்கு வந்தவர்களில் பெரும்பாலோர் போய் ஒன்று

உலகமெல்லாம் வியாபாரிகள் 27
இரண்டுபேர் அங்குமிங்கும் நின்று கதைத்துக்கொண்டிருந்த Gorff.
மண்டபத்தின் படிகளால் இறங்கிய கார்த்தியின் கண்களில் தூரத்தே குழந்தையைத் தோளில் போட்டுக்கொண்டு நிற்கும் சகுந்தலாவின் உருவம் தெரிந்தது. இரவின் அமைதியில் மெல்லிய நிலவொளியில் அவள் உருவம் சோகமாகத் தெரிந்
53. . .

Page 18
2
மீனா வந்து கூட்டிக்கொண்டு போவதாகச் சொன்னாரே பேரின்பநாயகத்தார். இன்னும் வரவில்லையா மீனா? யோசித்துக்கொண்டிருக்கும்போது சில்வியாவின் கார் வந்து நின்றது. வழக்கமான தன் ஆரவாரமான குரலில் "ஹலோ கார்த்தி", "ஹலோ சிதம்பரன்" என்று கூவிக்கொண்டு இறங்கினாள். "எப்படி கலை நிகழ்ச்சிகள்' வந்ததும் வரா ததுமாகக் கார்த்தியைக் கேட்டாள்.
பரவாயில்லை. பொடியன்கள் பாவம். உள்ளதைக்கொண்டு கூடுமானவரையில் சிறப்பாகச் செய்திருக்கிறார்கள். எப்படி இருந்தது நிகழ்ச்சிகள் என்பதைவிட என்ன இருந்தது என்று கேட்டிருக்கலாம். நன்றாக இருந்தன விடயங்கள். கார் கதவைத் திறக்கப்போன கார்த்தி தூரத்தில் சகுந்தலாவைப் பார்த்துவிட்டு தயங்கினான். இவ்வளவு நேரமும் மீனா வர வில்லை. மீனாவின் காரில் ஏதும் பழுதோ தெரியாது. இனி மேலும் பிந்தினால் அண்டர்கிரவுண்ட் ட்ரெயினையும் விட்டு விடப்போகிறார்கள். -م
போய் கேட்கலாமா எங்களுடன் வரச்சொல்லி? நிச்சயம் பேரின்பநாயகத்தாரில் அக்கறை பொங்கி வழியவில்லை. பாவம் குழந்தையுடன் சகுந்தலா.

உலகமெல்லாம் வியாபாரிகள் (29
‘சகுந்தலா அக்கா நிக்கிறா எங்க போய்விட்டார் உபதேசிப் பேரின்பர்?" சிதம்பரன் கேட்டான் எரிச்சலுடன்.
எனக்கென்ன தெரியும்? நீர் போய்த் தேடும் உமது மாமனாரைத் தேவை என்றால்!" பேரின்பநாயகத்தார் பக்கத்திலிருந்த டெலிபோன் பூத்தில் இருந்து வந்துகொண்டிருந்தார். "ஏன் மீனா இன்னும் வரவில்லையா" சிதம்பரநாதன் மாமனாரைக் கேட்டான்.
'காரில் ஏதோ தகராறாம். அண்டர்கிரவுண்ட் ட்ரெயினில் வரலாமோ என்கிறாள்' பேரின்பநாயகத்தார் இருளில் முணு முணுத்துக்கொண்டு வந்தார். குழந்தை சிணுங்கியது கேட் டது. "எங்களுடன் வரலாம் விம்பிள்டனில் இறக்கி விடு கிறோம்" கார்த்திகேயன் தானாகச் சொன்னான். தகப்பன் தர்மசங்கடத்துடன் மகளைப் பார்த்தார். சகுந்தலாவின் முதற்பார்வை கார்த்திகேயனுடன் ஒட்டிக்கொண்டு நின்ற சில்வியாவில் தெறித்து விழுந்தது.
பாம்பின் கால் பாம்புதான் அறியுமாம்; பெண்களுக்குத்தான் பெண்களின் பார்வை விளங்குமா? கார்த்திகேயனைப் பார்த் தாள் சில்வியா. அவளுக்குத் தெரியும் பேரின்பநாயகத் தாரை. சகுந்தலா?
தெரிந்தும் தெரியாத குழப்பம் முகத்தில் தெரிந்தது. அப் போதுதான் இவர்களை அறிமுகப்படுத்தவில்லை என்ற எண்ணம் வந்தது கார்த்திக்கு.
"ஓ, அறிமுகப்படுத்த மறந்துவிட்டேன். உமக்குத் தெரியும் தானே பேரின்பநாயகத்தாரின் குடும்பத்தை. இதுதான் இவரின் மூத்தமகள் திருமதி சகுந்தலா சிவநேசன். சகுந்தலா இவள் என்." கார்த்திகேயன் ஒருகணம் தயங்கினான். இவள் என். umtř?

Page 19
90 ராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம்
'இவள் என் கேர்ள் பிரண்ட் மிஸ் சில்வியா பார்னட்"
கார்த்திகேயன் இரு பெண்களையும் அறிமுகப்படுத்தி வைத்தான்.
"ஹலோ மிஸஸ் சிவநேசன், ஹவ் டு யு டூ" தன் வழக்கம் போல சிரித்த முகத்துடன் கைகுலுக்கினாள் சில்வியா. குழந் தையை சிதம்பரநாதன் வாங்கிக்கொண்டான். சகுந்தலா *"ஹலோ சில்வியா" என்றாள். சொன்னவளுக்கு விளங்கி யதோ இல்லையோ நிச்சயம் தெரிந்தது கார்த்திகேயனுக்கு சகுந்தலாவின் குரலில் பொறாமை பொங்கி வழிகின்றது என்று.
குளிர்காற்று முகத்தில் பட்டு குழந்தை கண்விழித்தது. நித்திரைக் கண்களுடன் சுற்றி நின்றவர்களைத் தன் சுருங்கிய அழகிய விழிகளாற் துளாவியது குழந்தை.
*"ஒ வழி இஸ் பியூட்டிபுல்" சில்வியா குழந்தையின் கன்னங் களைத் தட்டினாள்.
*" என்ன பேர் குழந்தைக்கு" சில்வியா கார்க் கதவை திறந்து கொண்டு கேட்டாள்.
** கீதாஞ்சலி** சகுந்தலாவின் பார்வை கார்த்தியின் முகத்தில் பதிந்திருந்தது. அவன் ஒருகணம் தன் காதுகளை நம்பமுடியாமல் திகைத்தான். ஒருநிமிடம் தன் திகைப்பில் தன்னை மறந்து நின்றான்.
"நான் ஒருநிமிடமும் உங்களை மறக்கவில்லை" என்று சொல் லாமல் சொல்ல என் நினைவாக "அந்த"ப் பெயரை வைத் திருக்கிறாளா? பெண்கள் ஏன் நினைவுப் பெட்டகமாய் இருக் கிறார்கள்?
அல்லது தன்னைத்தானே திருப்திப்படுத்தி இறந்துவிட்ட
இனிய பழம் கதையின் ஞாபகத்துக்காகத் தன் குழந்தைக்கு அந்தப் பெயரை வைத்திருக்கிறாளா?

உலகமெல்லாம் வியாபாரிகள் 3.
தெருவிளக்கின் வெளிச்சத்தில் காருக்குள் ஏறிய சகுந்தலா வின் கண்களில் ஏதோ தேட நினைத்தான். கார் வெளிக் கிட்டது. வெறும் அமைதியாக நகர்ந்தது கார்.
"எப்படியக்கா அமெரிக்கா" சிதம்பரன் கேட்டான்.
**எப்படி என்றால் என்ன? ஆகாயத்தை முட்டிய கட்டிடங் களைப் பற்றி கேட்கிறாயா? அல்லது அதையும்விடத் தாங்கள் உயர்ந்தவர்கள் என்று நினைக்கும் அமெரிக்கரில் சிலிரைக் கேட்கிறாயா?" சகுந்தலா முணுமுணுத்தாள்.
சகுந்தலா எந்தக் கேள்விக்கும் பதில் சொல்லும் "மூட்"இல் இல்லை. ஏன் வந்தோம் இந்தக் கலை நிகழ்ச்சிக்கு என்று கார்த்திகேயனைக் கண்டதும் நினைத்தாள். ஏன் கண்டேன் கார்த்திக்ேயனை என்று நொந்தாள். இப்போது ஏன் லண்ட னுக்கு வந்தேன் என்று எரிச்சலாக வந்தது.
**ஏன் சகுந்தலாவைக் கேட்கவேண்டும்? எந்த பேப்பரிலும் அமெரிக்க புராணம் படிக்கலாமே! உலகத்தை உய்விக்க வந்த கார்ட்டரின் சமாதானப் பேச்சுக்களைக் கேட்டுக்கேட்டு அலுத்துவிட்டது. அமெரிக்காவில் எப்படி? ஒருதலைப்பட்ச மான கார்ட்டரின் சமாதான முயற்சிக்கு அமெரிக்க மக்கள் என்ன நினைக்கிறார்கள்? பாலஸ்தீன மக்களின் உரிமை களைப் பற்றி ஒன்றும் சொல்லப்படாத எகிப்திய சமாதான உடன்படிக்கையைப் பற்றி என்ன சொல்லிக்கொள்கிறார் கள். " சில்வியா விடாமல் கேள்விகளாய்க் கேட்டுக்கொண் டிருந்தாள்.
சகுந்தலாவுக்குத் தர்மசங்கடமாகப் போய்விட்டது. "அரசிய லைப் பற்றி எனக்கொன்றும் அக்கறையில்லை" என்றாள் வெடுக்கென்று. காரோட்டிக் கொண்டிருந்த சில்வியா திரும் பிச் சகுந்தலாவைப் பார்க்கத் திரும்பினாள்.

Page 20
32 ராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம்
'குழந்தையைப் பார்க்கவே சகுந்தலாவின் நேரம் சரியாக இருக்கும். நீங்கள் தனியாக இருக்கும்போது அரசியலும் பொது சேவையும் பெரிய சுவையானதாக இருக்கும். குடும்பப் பெண் என்று ஆகிவிட்டால் இப்படி வெளியில் திரியக்கூடாது. குடும்பத்துக்கு நல்லதும் இல்லை." பேரின்பநாயகத்தார் மகளுக்காகச் சொன்னார். சில்வியாவை அவருக்கு ஒருநாளும் பிடிக்காது. கட்டுப்பாடற்ற மேலைநாட்டு நாகரிகத்தின் அவிட்டு விட்ட மாடுகள் போன்ற பெண்கள் என்று அவர் கூறிக்கொள்ளும் பெண்களில் சில்வியாவும் ஒருத்தி என்று அவர் நினைப்பது அவளுக்குத் தெரியும்.
"குடும்பப் பெண்கள் என்றால் என்ன? வீட்டில் கல்யாணம் என்ற சிறைக்குள் அகப்பட்ட கைதிகளா? ஏன் குடும்ப ஆண் களுக்கு ஒரு கட்டுப்பாடும் இல்லை. வீட்டிலும் குடும்பத்தி லும் அவர்களுக்கும் தானே வேலையிருக்க வேண்டும்" சில்வியா பேரின்பநாயகத்தாரை மட்டும் தட்டும் குரலில் கேட்டாள். -
அவருக்குப் பொறுமையில்லை. சில்வியாவின் பிரசங்கத்தைக் கேட்க என்று அவர் முகம் போகும் போக்கில் இருந்து தெரிந் தது. சிதம்பரநாதன் மாமனாரைப் பார்த்து மனதுக்குள் சிரித்தான். ‘சகுந்தலா அக்கா ஐந்து வருடங்களுக்குப் பிறகு லண்டனுக்கு வந்திருக்கிறா என்னென்ன மாறுதல் களைக் கண்டிருக்கிறா என்று கேளுங்கள் சில்வியா' என்று சொன்னான் சிதம்பரநாதன்.
"என்னைச் சும்மா விடுங்கள். இன்னும் நான் வெளிக்கிட வில்லை. வந்த நாளில் இருந்து மழை, ஷொப்பிங் கூடச் செய்ய இன்னும் ஒக்ஸ்போர்ட் ஸ்ரீட்டுக்குப் போகவில்லை" சகுந்தலா சலிப்புடன் சொன்னாள்.
உங்களைப் போன்ற பெண்கள் வெளியில் போவதானால் ஒரு காரணம் ஷொப்பிங், அடுத்த காரணம் கோயில் அல்லது

உலகமெல்லாம் வியாபாரிகள் 33
படம் என்று மட்டுப்ா இருக்கவேண்டும் என்று கேட்க நினைத் தான் கார்த்தி. ஆனால் பேரின்பநாயகத்தார் முன்னிலையில் அவரின் மகளுடன் அதிகம் பேச்சு வார்த்தை வைத்துக் கொள்ள விரும்பவில்லை. ஒருகாலத்தில் தன் மகளின் காதல னாக இருந்தவன் இப்போது எல்லாத்தையும் மறந்து சாதாரணமாக பழகுவான் என்பதைக் குறுகிய மனப்பான்மை பிடித்த பேரின்பநாயகம் போன்றவர்கள் ஒப்புக்கொள்வார்கள் என்றில்லை. அவரைப் பொறுத்தவரையில் ஆண்களுக்கும் பெண்களுக்கும் உள்ள உறவு "ஒரே ஒரு’ அடிப்படையிற்தான் இருக்கமுடியும்.
ரோட்டுகளில் அதிகம் கார் நெருக்கம் இல்லை. லண்டன் மத்தியில் கார் ஓடிக்கொண்டிருந்தது. வெஸ்ட்மினிஸ்ரர் பாலத்தால் கார் ஓடிக்கொண்டிருந்தபோது தான் செக்ரட்டரி கோஸ் படிக்க வந்த இடங்கள் ஞாபகம் வந்தன சகுந்தலா வுக்கு. இந்தப் பாலத்தில் எத்தனையோ தரம் தனக்காக காத்து நின்ற சகுந்தலாவை ஞாபகம் வருமா கார்த்திக்கு. பார்லிமெண்ட் கட்டிடத்தைக் கடக்கும்போது சில்வியா சொன்னாள் "லண்டனைப் பொறுத்தவரையில் அதிகம் மாறுதல்கள் இல்லை. லண்டனில் உள்ள உடமைகளில் பெரும்பாலானவற்றை அராபிய செல்வந்தர் வாங்குகிறார் கள். அரசியலைப் பொறுத்தவரையில் மிஸஸ் மார்க்கிரட் தாச்சர் தான் உலகைத் திருத்த வந்த மிஸஸ் மோஸேஸ் என நினக்கிறார். லேபர் பார்ட்டியும் கொன்சர்வேட்டிவ் பார்ட்டி யும் நாய், பூனை விளையாட்டு விளையாடுகிறார்கள். இந்த நாடகத்தைப் பார்த்துப் பார்த்து சனங்களுக்கு அலுப்பு வந்து விட்டது.' 'பாராளுமன்ற முறையாட்சி இருக்கும்வரை இப்படியான விளையாட்டுக்கள் தொடர்ந்து இருக்கத்தான் போகிறது. பொய் உத்தரவாதங்கள் போலியான நாடகங்கள் தவிர்க்கமுடியாதவை பாராளுமன்றப் பாதையில்" சிதம்பர நாதன் சொன்னான். அவனுக்குத் தெரியும் மாமனார் துள்ளி எழுந்து ஏதும் சொல்வார் என்று. எதிர்பார்த்ததற்கு மாறாக அவர் பேசாமலிருந்தார்.

Page 21
34 ராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம்
விம்பிள்டனுக்குப் போய்ச் சேர நடுச்சாமமாகி விட்டது. "கீதாஞ்சலியைத் தூக்கிக்கொண்டு போகாமல் இருந்திருக்க லாம்' என்றபடி குழந்தையை வாங்கிக்கொண்டாள் பார்வதி: சகுந்தலாவின் தாய். 'வந்திட்டுப் போங்களேன்" என்றாள் மீனா. கார்த்திகேயன் தயங்கினான். இந்த வீட்டுக்குள் காலடி வைக்க அவனுக்கு விருப்பமில்லை.
"ஒரு தேத்தண்ணீர் குடிச்சிட்டுப் போங்கோ சில்வியா' மீனா சினேகித பாவத்தில் சில்வியாவை கேட்க சில்வியா கார்த்தி யின் அனுமதியை எதிர்பார்க்காமல் குதித்துக்கொண்டு ஓடி னாள், சகுந்தலா திடுக்கிட்டாள்-இவர்கள் எல்லாம் சினேகி தர்களா?
கார்த்திகேயனைக் கண்டதும் பார்வதியின் முகம் கடுமையாக மாறியதை கார்த்திகேயன் கவனிக்கத் தவறவில்லை. இன் னும் எதிரிகளாகவா இருக்கிறோம்? முன்னறை முழுக்கக் கடவுள் படங்கள், காந்தி, புத்தர் சிலைகள், நடுநாயகமாக சகுந்தலாவின் திருமணப் படம். தாழ்ந்த தலையுடன் குனிந் திருக்க சிவநேசன் தாலி கட்டிய படம் பெரிதாக்கப்பட்டு சுவ ரில் தொங்கியது. கார்த்திகேயன் படத்தில் உள்ள சகுந்தலா வின் துயர் படிந்த முகத்தை அவதானித்தவன் தன்னையறி யாமல் சகுந்தலா பக்கம் திரும்பினான். அவள் வேண்டு மென்றே பார்வையைத் திருப்பிக்கொண்டாள் அவன் பார்வை யைச் சந்திக்க விருப்பமில்லாமல். வாழ்க்கையிலிருந்து விலகி விட்டவர்கள் பார்வையால் சேர்ந்து பயன் என்ன! முன்பின் தெரியாதவர்கள் போல் அவர்கள் பழகுவதை அவர்கள் உணர்ந்துகொள்ளத் தவறினாலும் மீனாவோ அல்லது சில்வியாவோ, சிதம்பரநாதனோ கவனிக்கத் தவறவில்லை. பார்வதி குசினியில் தேனீர் போடப்போக சகுந்தலா தாயைப் பின் தொடர்ந்தாள்.
"என்னவோ என்னைத் தேடியதாகச் சொன்னீர்கள்' என்று பேரின்பநாயகத்தாரைப் பார்த்துக்கேட்டான் கார்த்திகேயன்

உலகமெல்லாம் வியாபாரிகள் 35
"அதுவா தம்பி, இலங்கையிலிருந்து தமிழ்ப் பிரமுகர் ஒருவர் வருகிறார். அவருக்கு வரவேற்புக்கூட்டம் ஒன்று நடத்த வேணும் என்று யோசிக்கிறம். லண்டனில் இருக்கிற ஒவ் வொரு சின்னக் குழுக்களும் ஒவ்வொரு கூட்டம் வைக்காமல் ஒரேயடியாகச் சேந்து வைப்பம் என்று யோசிக்கிறம். நீங்க என்ன சொல்றியள்? உங்களின்ர ஸ்டுடன்ஸ் என்ன சொல்லு வினம்? ஏன் நாங்கள் ஆளுக்கொரு பக்கத்தில் இழுபட வேணும்? இவ்வளவு காலம் நடந்ததுபோதும் இனியாவது ஒன்றுபடுவம்" பேரின்பநாயகத்தாரா பேசுவது? மாணவர் களைத் தங்களுடன் சேரச்சொல்வது இவர்தானா? இவர் களுக்கு என்ன தகுதி இருக்கிறது இந்தப் பிரச்சனைகளைப் பற்றிக் கதைக்க என்று துள்ளிக் கொண்டிருந்தவரா கேட் கிறார். y
சிதம்பரநாதனும், கார்த்திகேயனும் ஒருத்தரை ஒருத்தர் பார்த்துக்கொண்டனர் கருத்துடன். இருவரில் ஒருவராவது மறுமொழி சொல்லவில்லை கொஞ்சநேரம்.
** மாணவர்கள் என்ன நினைக்கிறார்கள் என்பது எனக்குத் தெரியாது. அவர்களின் கொள்கைகள் தமிழர் பிரச்சனை பற்றிய கருத்துக்கள் எனக்குப் பிடிக்கிறது. அவர்கள் கூட்டத் துக்கும், நிகழ்ச்சிக்கும் போகிறேன். அதற்காக நீங்கள் நினைக்க வேண்டாம் என்னிடம் ஏதோ செல்வாக்கு இருக் கிறது மாணவர்களை உங்களின் வழிக்குத் திருப்ப" என் றான் கார்த்திகேயன். எக்காரணம் கொண்டும் பிற்போக்கு வாதத்துக்கு எடுபடத் தயாரில்லை அவன். பேரின்பநாயகத் தார் தர்மசங்கடத்துடன் நெளிந்தார். சிதம்பரநாதனை "பெரிய மனிதனாக நினைத்து கதைக்க அவர் தயாரா யில்லை. எஞ்சினியராக வந்தபின் சிலவேளை பெரிய மனித னாக நினைத்துக் கதைக்கலாம். இப்போதைக்கு "டொக் டர்" பட்டம் பெற்ற பெரிய படித்த மனிதர்களான பேரின்ப நாயகம் போன்றவர்கள் விம்பிபாரில் கோப்பை கழுவிக் கொண்டோ அல்லது பெற்றோல் செட்டில் வேலைசெய்து

Page 22
36 ராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம்
கொண்டோ படித்துகொண்டோ இருப்பவர்கள் முக்கியமான இலங்கை அரசியல் பற்றிக் கதைப்பதை அவர் விரும்ப வில்லை விரும்பப்போவதுமில்லை அவர் போன்ற பெரிய மனிதர்கள். அவரின் முகபாவனையைப் படித்த சிதம்பர நாதன் எழுந்தான். நடுச்சாமத்தில் பேரின்பநாயகத்தாருக் கும் சிதம்பரநாதனுக்கும் எந்தவிதமான தர்க்கமும் உண்டாகி அதனால் அடுத்தவீட்டுக்காரன் போலீசுக்குப் போன் பண்ணு வதைக் கார்த்தி விரும்பவில்லை. மண்டைக்கனம் பிடித்த இந்த மேதாவிகளுக்கு ஒரு பாடம் படிப்பிப்பதாக சிதம்பர நாதன் சொல்லிக்கொண்டிருக்கிறான் கொஞ்ச நாளாக. சில்வியாவுக்கு அவர்கள் மூவரின் அமைதியும் அசாதாரண மாகப் பட்டது தான் பேரின்பநாயகத்தார் வீட்டுக்கு வந்த தற்குக் காரணம் என்பதால் கார்த்திகேயன் கடிந்துகொள் வானோ என்ற பயம் மனதில் ஏற்பட்டது. அரையும் குறையு மாகக் குடித்த தேத்தண்ணியை வைத்துவிட்டு எழுந்தாள்.
கீதாஞ்சலி தாத்தா பேரின்பநாயகத்தார் அருகில் சுருண்டு படுத்திருந்தாள். சில்வியா குனிந்து குழந்தையின் கன்னத் தில் முத்தமிட்டாள். "சில்வியா போற இடமெல்லாம் குழந் தைகளைக் கொஞ்சிக்கொண்டிருக்கிறீர்கள். நாலைந்து பெற்றுத் தள்ளுவதுதானே?" சிதம்பரநாதன் வேடிக்கை யாகக் கேட்டான். ""நாலைந்தா? சில்வியா அலறிப் புடைத்துக்கொண்டு கேட்டாள்.
'உலகத்தில் இருக்கிற அரைவாசிக் குழந்தைகளுக்கே அரைப்பட்டினி கால்பட்டினியாக இருக்கிறது. ஏன் சனத் தொகையைக் கூட்டவேண்டும்? ஆசைக்கு ஒரு பெண்ணும் அருமைக்கு ஒரு ஆணும் போதும்" சில்வியா செல்லமாகச் சொல்லிக்கொண்டே கார்த்தியைப் பார்த்தாள். தேனீர்க் கோப்பைகளைத் தட்டில் அடுக்கிக்கொண்டிருந்த சகுந்தலா வுக்கு சில்வியாவின் கொஞ்சல் பொறாமையைத் தூண்டியது.
சில்வியா அதை கவனித்தும் கவனியாதமாதிரி எழுந்து எல்லோருக்கும் "குட்பை" சொல்லிவிட்டு போய்க் காரை

உலகமெல்லாம் வியாபாரிகள் 37
ஸ்ராட் செய்தாள். கதவைச் சாத்த அவர்கள் பின்னால் வந்த சகுந்தலா கேட்டாள். 'யார் அந்த ஆட்டக்காரி' சகுந்தலா மெல்லத்தான் கேட்டாள். அவள் குரலிலிருந்த எரிச்சலும், பொறாமையும் கார்த்தியைத் தூக்கிவாரிப் போட்டது. முன் னால் போன சிதம்பரநாதனுக்கும் கேட்டிருக்கவேண்டும். சட்டென்று திரும்பிப் பார்த்துவிட்டுப் போனான். பெண் களின் அடுத்த பெயர் எரிச்சலா? பொறாமையா? தேவை யில்லாமல் சில்வியாவை அவ்வளவு கீழ்த்தரமாகக் கதைத்த தால் சகுந்தலாவில் கோபம் பொத்துக்கொண்டு வந்தது. அவள் கேட்ட கேள்விக்கு மறுமொழி சொல்லாமல் நடந் தான் கார்த்தி. தன்னை மதித்து மறுமொழி சொல்லாமற் போகும் கார்த்திகேயனில் உள்ள ஆத்திரத்தில் கதவைப் படா ரென்று அடித்து மூடுவது கேட்டது அவனுக்கு. அவன் காரில் ஏறியிருந்ததும் திரும்பிப் பார்க்கவில்லை. இனம் தெரியாத வேதனை மனதைக் கவ்வியது. நடு இரவுக்கு மேலாகி விட்டதால் ரோட்டுகள் எல்லாம் நிசப்தமாகக் கிடந்தது. சில்வியா கொஞ்சநேரம் காரோட்டிக்கொண்டு போனாள் மெளனமாக, கார் ட்ரவிக் லைட்டில் நின்றதும் கேட்டாள் "இந்தச் சகுந்தலாதானே ஒரு காலத்தில் உங்கள் கேர்ள் பிரண்டாக இருந்தவள்?' கார்த்தி பதில் சொல்லவில்லை.
பெண்கள் ஏன் இவ்வளவு “விண்ணானமாக' இருக்கிறார்கள்? அவன் எப்போதோ சொல்லியிருக்கிறான் பேரின்பநாயகத் தார் தன்னிடம் எதிரியாய் இருப்பதற்கு ஒருகாரணம் அவர் மகளுடன் ஒருகாலத்தில் தனக்கிருந்த தொடர்பு என்று. அந்த மகள் அமெரிக்காவில் இருக்கிறாள் என்றும் தெரியும். இன்றைக்கு அறிமுகம் செய்யும்போது சொன்னான் பேரின்ப நாயகத்தாரின் மூத்த மகள் மிஸஸ் சகுந்தலா சிவநேசன் என்று. இப்போது என்ன விழல் கேள்வி கேட்கிறாள் சில்வியா?
"நான் நினைக்கிறேன்." சில்வியா சொல்ல வந்ததை நிறுத்திவிட்டு கார்த்தியைப் பார்த்தாள். 'நீர் என்ன

Page 23
38 ராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம்
நினைக்கின்றீர்' சோர்ந்த கண்களுடன் திரும்பிச் சில்வியா
வைக் கேட்டான்.
"நான் நினைக்கிறேன் சகுந்தலா இன்னும் உங்கள் நினை வில் அதாவது உங்களை விரும்புகிறாள் என்று" சில்வியா தெளிவாகச் சொன்னாள். பின்னால் இருந்து கேட்டுக் கொண்டிருக்கும் சிதம்பரநாதனுக்கு என்ன செய்வது என்று தெரியவில்லை. காதலர்கள் இருவரும் சண்டை தொடங்கப் போகிறார்களோ என்று ஒருகணம் பயந்தான். கார்த்தி எளிதில் உணர்ச்சிவசப்படுபவன் இல்லை. கோபம் இலேசில் வராது. வந்தாலும் கெதியில் போகாது. கொஞ்சநேரம் சில்வியாவின் முகத்தில் பார்வையை ஒட்டியவன் பெருமூச்சு டன் திரும்பிக்கொண்டான். கடந்தோடும் கட்டிடங்களில் அவன் பார்வை வெறுத்துக்கிடந்தது.
"நீங்கள் அவள் பின்னால் பைத்தியமாகத் திரிந்ததில் ஆச்சரியமுல்லை; சகுந்தலா நல்ல அழகு."
* சில்வியா தயவுசெய்து வேறு எதையாவது பேசித் தொலை" என்று சொல்லவேண்டும்போல் இருந்தது கார்த்திகேயனுக்கு. சில்வியாவின் குணம் கள்ளம் கபடமற்ற குழந்தைக் குணம். அதனால் சில வேளை எத்தனைபேரை மனம் வருந்தப்பண்ணு கிறாள் என்று தெரியவில்லை அவளுக்கு. கார்த்திகேயன் இன் னும் வாய் திறக்கவில்லை.
"ஏன் பேசாமல் இருக்கிறீர்கள்" வீட்டருகில் காரை நிறுத்தி யதும் கேட்டாள் சில்வியா. அவன் முகத்தில் ஒரு குறும்பு சிரிப்புத் தோன்றி மறைந்தது. "என்ன பேச இருக்கிறது? நீராகக் கேள்விகள் கேட்டு மறு மொழியும் சொல்கிறீர்.
சலீம் வந்து கதவைத் திறந்தான். சிதம்பரநாதன் பேரின்ப நாயகத்தார் இலங்கையிலிருந்து வரும் தமிழ்ப்பிரமுகரை வர

உலகமெல்லாம் வியாபாரிகள் 39
வேற்கச் செய்யும் ஏற்பாடுகளைப் பற்றிச் சொன்னான். மாண வர் இயக்கமும் சேர்ந்து ஒத்துழைக்கத் தேவையானதுதான். என்றான் சலீம்.
இந்தப் பிற்போக்குவாதிகளுடன் சேர்ந்து என்ன பலன். எங் களைப் பாவித்து இன்னும் ஏதும் பிரயோசனமில்லாத காரியங் களைச் செய்து கொண்டிருப்பார்கள்" சிதம்பரநாதன் கொதித் துக் கொண்டிருந்தான். எழுபத்தி ஏழாம் ஆண்டுக் கலவரத்தில் மலைநாட்டிலிருந்தும் மற்றைய சிங்களப்பகுதிகளிலிருந்தும் தமிழ்ப் பகுதிகளுக்கு வந்த தமிழர்களுக்கு புனத்தாருண அமைப்பில் உள்ள சீர்கேடுகளை எடுத்து விளக்குகிறான் சிதம்பரநாதன்.
இவர்களைப் பொறுத்தவரையில் தமிழர் பிரச்சனை வெறும் ஒரு சிறு பிரச்சனை. தங்கள் சுயநலத்துக்கு ஒரு இனத்தின் விடுதலை வேட்கையை அடகுவைக்கிறார்கள் ஒரு காலத்தில் இவ்விடமிருந்து எடுக்கும் பென்சனுடன் போய்ச் சுகமாக இருக்க ஒருசில வழிகள் சொல்கிறார்கள். அகதிகளைச் சாட் டிக்கொண்டு ஒரு தெளிவான பொருளாதார திட்டமில்லாத வர்கள் இவர்கள். கடந்த முப்பதுவருடமாகச் செய்யமுடியாத காரியங்களை எதிர்வரும் கொஞ்ச நாட்களில் இவர்கள் செய்து முடிக்கப்போவதில்லை. இவர்கள் பெரியவர்கள் என்று நம்பி யிருக்கும்வரை எங்களுக்கு விடிவில்லை. உளுத்துப்போன எங்கள் தமிழ்த்தலைவர்களின் தலைமையைத் தூக்கியெறிய வேண்டும். அதற்குப் பேரின்பநாயகம் போன்ற பெரிய மனி தர்கள் முட்டுக்கட்டை போட்டால் தகர்த்தெறிய முற்போக்கு சக்திகள் எல்லாம் ஒன்றுபடவேண்டும்" சிதம்பரநாதன் ஆத்திரத்தில் கத்தினான்.
*"சிதம்பரநாதன் இவர்களைத் திருத்தமுடியாது என்று சொல் வது தவறு. இவர்களின் தலைமை சரியில்லாமல் இருக்க லாம். அதற்காக இவர்களுடன் சேர்ந்திருக்கும் எல்லோரை யும் எதிர்க்க வேண்டும் என்றில்லைத்தானே? இப்படியானவர்

Page 24
40 ராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம்
களுடன் சேர்ந்துதான் எங்கள் கொள்கைகளைப் பரப்பவேண் டும். சலீம் ஆறுதலாகச் சொன்னான்.
பணம் படைத்தவர்களை எதிர்த்து நட்டம் அடையவர்கள் யார் என்று தெரியும். எவ்வள்வோ கஷ்டப்பட்டு இன்று ஒரு கலைநிகழ்ச்சியை ஒழுங்கு பண்ண அதைக் குழப்புவதற் கென்றே ஒரு சமய விழாவை இன்னொரு இடத்தில் ஏற்பாடு செய்தவர்கள் இவர்கள். இந்தப் பணம் படைத்தவர்கள். பேரின்பநாயகத்தார் குறிப்பிட்ட வரவேற்புக்குப் போக யோசித்தான் சார்த்தி.
"யார் கூட்டத்துக்கும் போய் அவர்கள் என்ன சொல்கிறார் கள் என்று கேட்பதில் எனக்கு ஆட்சேபணையில்லை. அதற் காக உங்களை என்னுடன் வரச்சொல்லிக் கேட்க உரிமை யில்லை. உங்களுடன் சேர்ந்து திரிவதற்காக மற்றவர்கள் கூட்டத்துக்கு நான் போகக்கூடாது என்ற தடையும் எனக்கி ருப்பதை நான் விரும்பவில்லை." என்றான் கார்த்திகேயன்.
இலங்சையிலிருந்து வரும் தலைவருக்கு நாங்கள் எவ்வளவு ஒற்றுமையாக இருக்கிறோம் என்று போலி நாடகம் போட்டுக் காட்டத்தான் பேரின்பநாயகத்தார் எங்களுடன் சேர்ந்து வாயெல்லாம் பல்லாகச் சிரிக்கிறார் என்று தெரியும் அவ னுக்கு. மனிதர்கள் எவ்வளவு கேவலமானவர்கள்?
"என்ன யோசிக்கிறீர்கள்?' கார்த்தி சிந்தனையில் முழ்கிக் கிடந்தான். அவள் உடுப்பு மாற்றிக்கொண்டிருந்தாள். சில் வியா நைட்ரெஸை மாற்றிக் கொண்டு கேட்டாள். அவள் பார்வை அவனில் நிலைத்திருந்தது.
இலங்கையில் எங்கள் இனத்துக்கு ஏற்படும் அழிவையும் சிலரின் தலைமையால் ஏற்படும் நட்டத்தையும் யோசிக்கி றேன் என்று சொன்னால் நம்புவாளா. சகுந்தலாவைக் கண்ட நேரத்திலிருந்து ஒரு மாதிரி இருக்கிறீர்கள்? சொல்லி கொண்டே கட்டிலுக்கு வந்தாள்.

ஷ்லகமெல்லாம் வியாபாரிகள் 蟹L
அவனையிறுக அனைத்துக்கொண்டு சொன்னாள் சில்வியா. சில்வியா நீர் விளையாட்டுக்குச் சொல்கிறீரோ என்னவோ தெரியாது. ஆனால் நீர் இப்படியெல்லாம் பேசுவது எனக்குப் பிடிக்காது. பக்க்த்து அறையில் இருக்கும் சலீமும், சிதம்பர நாதனும், என்னைப் பற்றி என்ன நினைப்பார்கள்? நான் ஒரு நாளும் பேரின்பநாயகத்தார் வீட்டிற்குப் போய் இல்லை. இன் றைய சந்தர்ப்பத்தில் போய்விட்டேன். நீரே இப்படிச் சாட்டுச் சொல்லிச் சொன்னால் சலீமும், சிதம்பரநாதனும், என்ன நினைப்பார்கள்? நான் அவர்களின் கண்களின் முன் இலட்சிய வாதி. புரட்சிவாதி என்று சொல்லிக்கொண்டு திரியவில்லை. நேர்மையுடன் இருக்கிறேன். அதைக் குழப்பாதே. என் அரசியற்பிரச்சனைகளுக்குள் சொந்த வாழ்க்கையை இழுக் காதே. அவன் குரல் கடுமையாக இருந்தது.
கார்த்திகேயனின் கடுமையான குரலால் கொஞ்சநேரம் பேசா மல் இருந்தவள் சொன்னாள். "யாரும் தங்கள் முதற் காதலை ஒருநாளும் மறப்பதில்லை' என்றாள். அவள் குரல் குழந் தைத் தனமாக இருந்தது.
"ஐ சீ" அவன் இப்படிச் சொல்லிக்கொண்டு திரும்பிப் படுத் தான். அவன் முதுகில் அவள் கைகள் கோலம் போட்டன. அவன் உணர்ச்சிகள் சிலிர்த்தன. 'அதுவும் கல்யாணம் செய் யும் அளவுக்கு, எல்லாரையும் எதிர்த்துக் கொண்டு கள்ளமாக ஓடிப் போய்க் கல்யாணம் செய்யுமளவுக்கு இருந்த உறவை நான் நினைக்கவில்லை நீங்கள் சுலபத்தில் மறந்துவிட்டீர்கள் என்று." சில்வியா ஏன் நெருஞ்சிமுள் கொண்டு என் நெஞ்சில் குத்துகிறாய் என்று கேட்க நினைத்துத் திரும்பினான். அவ ளின் கண்கள் களங்கமற்று இருந்தன. பொன்னிறத்தலை புரண்டு முகத்தில் பாதியை மறைத்துக் கொண்டிருந்தது. மிகவும் அழகாக இருந்தது அவள் முகம்.
"நீரும் அப்படியா? உமது முதற் காதலை ஒவ்வொரு நிமிட மும் நினைத்துக் கொண்டிருக்கிறாயா?" அவன் அவள்

Page 25
42 ராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம்
அழகிய இதழ்களை முத்தமிட்டபடி கேட்டான். அவள், அவன் பிடியிலிருந்து விலகி விட்டு ஓகோ என்று சிரித்தாள். அவள் சிரிப்பு அனாவசியமாகப் பட்டது அவனுக்கு.
"ஏன் சிரிக்கிறீர்." அவன் எரிச்சலுடன் கேட்டான். 'எனது முதற் காதல் எனது ஆசிரியரில். அவருக்கு அப்போது 40 வயது இருக்கும். எனக்கு வயது பதின்மூன்று. நான் நல்ல கெட்டிக்காரி என்று என்னில் நல்ல விருப்பம். அதுதான் காதல் என்று நினைத்தேன்." சில்வியா கலகலவென்று சிரித் தாள.
"சில்வியா உமக்கு விளையாட நேரம் காலம் இல்லையா?" அவன் கடிந்துகொண்டான். இன்னொருதரம் அவள் சகுந்த லாவைப் பற்றிய பேச்சை எடுக்கக் கூடாதென்று அவன் மனம் தவித்தது. பழைய கதைகளைக் கிண்டிக்கேட்டுத் தொலைப் பாளோ என்று யோசித்தான். "நீங்கள் நினைக்கிறீர்களா சகுந்தலா சந்தோஷமாக இருக்கிறாள் என்று." சில்வியா இன்னும் சகுந்தலாவிற்தான் இருக்கிறாளா? கொஞ்சநேர இடைவெளியில் கேட்டாள்.
"எனக்குத் தெரியாது. தெரிந்து கொள்ளும் ஆவலுமில்லை" அவன் எடுத்தெறிந்து பேசினான்.
'பாவம் சகுந்தலா, சகுந்தலா மட்டுமென்ன? இன்னும் எத் தனையோ பெண்கள் சமுதாயக் கொடுமையால் சகுந்தலா போல் வேண்டா வெறுப்பான கல்யாண வாழ்க்கையால் கஷ் டப்படுகிறார்கள். உப்புச்சப்பற்ற திருமணம், உலகத்துக்காக இப்படி எத்தனையோ பெண்கள் வெறும் வாழ்க்கை வாழ்ந்து தொலைக்கிறார்கள், சில்வியா உண்மையான பரிவுடன் சொன்னாள். தனிப்பட்ட முறையில் சகுந்தலாவில் ஒருவித பொறாமையுணர்ச்சியுமில்லை அவளுக்கு. கார்த்திகேயனைப் பார்த்த விதத்திலிருந்து தெரிந்தது. சகுந்தலா உடம்பால் ஆள முடியாமல் உள்ளத்தால் மற்றவர்களைத் தடுக்கும் வல்லமை

உலகமெல்லாம் வியாபாரிகள் 43
யுள்ளவள் என்று. கார்த்திகேயனில் என்ன மாதிரியான உணர்ச்சிகள் இருக்கின்றன என்று தெரியாவிட்டாலும் இருவ ருக்குமுள்ள உறவு ஒரேயடியாய் அறந்து விடவில்லை என்று சில்வியாவுக்குத் தெரிந்தது. சகுந்தலாவைக் காணும்வரையில் கார்த்திகேயனின் பழைய வாழ்க்கையைப் பற்றிப் பெரிதாக எதுவும் நினைக்கவில்லை சில்வியா. அவளின் வாழ்க்கை முறையைப் பொறுத்த வரை யில் மேலைநாட்டுப் பெண்கள் கல்யாணமாக முதல் ஒன்றுக்கு மேற்பட்ட நண்பர்களை வைத்திருப்பது குற்றமில்லை. ஆனால் அதையே இன்னொருவனைக் கல்யாணம் செய்தபின் னும் நினைத்துக்கொண்டிருப்பதில்லை. சகுந்தலா தன்னில் இன்னும் குற்ற உணர்ச்சியுடனா இருக்கிறாள்? என்ன குற்றம் செய்துவிட்டாள். அல்லது இன்னும் கார்த்திகேயனை நினைத்துக்கொண்டிருக்கிறாளா.
கொஞ்சநேரம் சில்வியாவின் சிந்தனை எங்கோவெல்லாமோ அலைந்தது. கார்த்திகேயனுடையதும் சகுந்தலாவினுடையது மான பழைய காதலைப் பற்றி அவளுக்கு எந்தவிதமான அக் கறையுமில்லை, ஆனால் தன் சந்தோஷமான சீவியத்தில் சகுந்தலா வின் வருகை எந்தவிதமான இடையூறையும் உண் டாக்குவதை அவளால் தாங்கமுடியாதிருந்தது.
கார்த்திகேயனுக்கு விளங்குகிறதோ இல்லையோ சில்வியா வைப் பொறுத்தவரையில் அவளுக்குத் தெரியும் அவள் எவ்வ ளவு தூரம் கார்த்தியில் உயிரை வைத்திருக்கிறாள் என்று. உலகத்தைப் பொறுத்தவரையில் அவர்கள் ஒன்றாகச் சீவிக்கி றார்கள் என்று வெறுமையாகச சொல்லிவிட்டுப் போகலாம். அவளைப் பொறுத்த வரையில் ஒன்றாக மட்டுமல்ல அவனில் உயிரையே வைத்திருக்கின்றாள். நேர்மையும் அறிவும் பண்பும் முற்போக்குக் கொள்கைகளுமுள்ள கார்த்திகேயன் போன்ற ஒருசிலரைத்தான் அவள் சந்தித்திருக்கிறாள் இது வரை. இனி என்னென்ன நடக்குமோ தெரியாது. என் னென்ன நடந்தாலும் கார்த்தியை மனதாலோ உடம்பாலோ

Page 26
44 ராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம்
இழக்கத் தயாரில்லை. அதிக நேரம் அவள் மெளனத்துடன் சிந்தித்தாள். "கார்த்தி" என்றாள் மெல்லிய குரலில்.
'உம்' அவன் கண்களை மூடிக்கொண்டு படுத்திருந்தான். என்ன நினைக்கிறான்? சொல்லமாட்டானா என்னிடம்? *ஒன்று கேட்கட்டுமா" அவள் குரலில் தயக்கம் இருந்தது.
** கேட்பது சரி. பதிலையும் நீதானே சொல்ல நினைத்திருப் பீர்." அவனின் குத்தலான மறுமொழியில் அவள் சிரித்தாள்.
**இந்தக் கேள்வி எனக்கு மறுமொழியில் தெரியாத கேள்வி" அவள் மெல்லமாக முணுமுணுத்தாள். அவன் ஏதும் பேச வில்லை.
"டூ யூ லவ் சகுந்தலா?" (சகுந்தலாவைக் காதலிக்கிறாயா?) அவள் தெளிவான குரலில் கேட்டாள். கட்டாயம் நேர்மை யான பதிலை எதிர்பார்க்கிறேன் உங்களிடமிருந்து என்ற தொனி குரலிலிருந்தது.
நெஞ்சில் ஏதோ அடைப்பது போன்ற பிரமையவனுக்கு, கடந்த ஐந்து வருடமாக அவன் தன்னையே கேட்டுகொள்ளாத கேள் வியது. சேராமற் சேர்ந்திருந்து வாழாமல் வாழ்ந்து கொண்டு இருந்த உணர்ச்சி திடீரென்று களைந்தபின் வாழ்க்கையே சூனியமாகிய உணர்ச்சியில் இருந்தது அவனுக்கு சகுந்தலா திருமணமாகிப் போய்விட்டாள் என்று தெரிந்ததும். நினைக்க விரும்பாத சில கசப்பான நினைவுகளில் அதுவும் ஒன்று.
என் கேள்விக்கு எங்கே மறுமொழி என்பதுபோல் அவனைத் தடவினாள் சில்வியா. என்ன மறுமொழி சொல்வது? சகுந் தலா யாருடையதோ உடமை இனி அவனுக்கு என்ன உரிமை?
"நோ, ஐ டோன்ட் லவ் சகுந்தலா' அவன் மறுமொழியைச் சொல்லிவிட்டுத் திரும்பிப் படுத்தான்.

உலகமெல்லாம் வியாபாரிகள் 45
இரவெல்லாம் அரையும் குறையுமான நித்திரை சகுந்தலா வுக்கு. கார்த்தியைக் கண்டது கதைத்த்து எல்லாம் கனவு போல் இருந்தது. கனவிலும் நினைக்கவில்லை காணுவாள் என்று. லண்டனுக்கு வரும்போதே அவனைப்பற்றிய நினை வுகள் அவளையரித்துக் கொண்டிருந்தன. அதைக் காட்டிக் கொள்ளப் பயம். யாரும் கார்த்தியைப் பற்றிக் கதைக்க வில்லை வந்து இவ்வளவு நாளும்.
அவளையும் கார்த்தியையும் பற்றித் தெரிந்தவர்களையும் இது வரை சந்திக்கவில்லை. அவர்கள் காதலைப்பற்றித் தெரிந்த சினேகிதிகளை அவள் சந்திக்கவில்லை சந்திக்க விரும்பவு மில்லை. பழைய கதைகள் பழம் கனவாகப் போகட்டும் என்றே நினைத்திருந்தாள். அவள் கல்யாணத்துக்கு அவளின் சினே கிதிகள் யாருக்கும் அழைப்புக் கொடுபடவில்லை. கொடுத்தி ருந்தாலும் வந்திருப்பார்கள் என்றில்லை. என்ன நினைத்தி ருப்பார்கள் என்னைப் பற்றி? துரோகி, ஏமாற்றுக்காரி என் றெல்லாம் நினைத்திருப்பார்களா?
சினேகிதிகள் மட்டுமென்ன ஒன்றைவிட்ட தமயன் தியாக ராஜன் கூட சகுந்தலாவுடன் ஒரு தொடர்பும் வைத்துக் கொள்ளவில்லை. கடந்த ஐந்து வருடம் தன்னைத் தெரிந்த ஒருவருடனும் லண்டனில் தொடர்பு வைத்திருக்கவில்லை தாய் தகப்பனை விட, தாய் தகப்பன் ஒவ்வொரு தரம் கூப்பி டும்போதும் ஒவ்வொரு சாட்டுச் சொல்லி மறுத்துவிட்டாள், லண்டனுக்கு வரும் யோசனையை. இப்போது கொஞ்சநாட் களாக தாயின் தொல்லை தாங்கமுடியவில்லை. தாய் கிட்டத் தட்ட ஒவ்வொரு கிழமையும் போன் பண்ணி அழுகிறாள் தங்கை மீனா யாரோ வெள்ளைக்காரனைச் செய்வதாகச் சொல்லிவிட்டாள் என்று. சகுந்தலா வரவேண்டுமாம். நல்ல பெண்கள் தாய் தகப்பன் சொற்படி நடக்கவேண்டும் என்று தங்கைக்குப் புத்தி சொல்ல வேண்டுமாம். தாய் தகப்பன் ஆசீர்வாதம் இல்லாமல் யாரோ ஒரு அன்னியனைச் செய்து இவள் சந்தோஷமாக இருக்கமாட்டாளாம்.

Page 27
46 ராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம்
அவர்களுக்குத் திருப்தி சகுந்தலா லண்டனுக்கு வந்தது சகுந் தலாவைப் பொறுத்தவரையில். மீனா தமக்கையுடன் முகம் கொடுத்துக் கதைக்கவேயில்லை வந்த நாளிலிருந்து, போதாக் குறைக்கு போகுமிடமெல்லாம் சொல்லியிருக்கிறாள் போலும்! தன் கல்யாணத்தைக் குழப்பும் நாசகார வேலைக்கு தான் வந் திருப்பதாக, கார்த்தியின் கிண்டல் நிறைந்த கேள்விகள் நினைவுக்கு வந்தன. தான் ஏமாற்றியது போதாது ஒருவனை, தன் தங்கையும் ஒருவனை ஏமாற்றவேணும் என்று நினைக் கிறாள் என்று தானே என்னைப் பற்றி நினைக்கிறான்? யாரி டமும் சொல்லவும் தன்னால் மெல்லவும் முடியாத துன்பமான வாழ்க்கை வாழும் தன்னைப்பற்றி யார் புரிந்துகொள்ள போகிறார்கள்?
காலையில் எழும்பிய நேரத்திலிருந்து தாய் கேட்டுக் கொண்டி ருக்கிறாள் வாரவிடுமுறையில் போன் பண்ணுவதாக சொன்ன சிவனேசன் ஏன் போன் பண்ணவில்லை என்று. இன்று ஞாயிற் றுக்கிழமை. இன்று போன் பண்ணா விட்டால் எதிர்வரும் ஒருகிழமையும் நேரமிருக்காது. வேலைவிடயமாக நியூயோர்க் கில் இல்லாமல் எங்கோ போவதாகச் சொன்னான். தங்கள் கல்யாண வாழ்க்கையைப் பற்றி தாய் தகப்பன் என்ன நினைக் கின்றார்களோ, தெரியாது என்று தெரியும் சகுந்தலாவுக்கு. சிவனேசன் குடித்துக்கொண்டு திரிவதைப் பற்றி இவர்கள் கேள்விப்பட்டிருப்பார்களோ தெரியாது. குடி மட்டுமா? சகுந் தலாவுக்கு யோசிக்க விருப்பமில்லை. சிவனேசன் ஏன் போன் பண்ணவில்லை.
மீனா குழந்தை கீதாஞ்சலியுடன் பார்க்குக்குப் போய்விட்டாள். தகப்பன் இலங்கையிலிருந்து வரும் தமிழ்ப் பிரமுகரை வர வேற்பதற்கான விடயங்களைக் கதைப்பதற்காகச் சினேகிதர் வீட்டுக்குப் போய்விட்டார். அம்மா ஒவ்வொருதரமும் மணிக் கூட்டைப் பார்த்து ஏன் சிவனேசன் போன் பண்ணவில்லை என்று கேட்கிறா. 'தனியாக இருக்கும்போது சமையல் வேலை வீட்டு வேலை என்றிருக்கும். எல்லாம் முடிய ஆறுத

உலகமெல்லாம் வியாபாரிகள் 47
லாகப் போன் பண்ணட்டும்." தாய் தன்னைத்தானே சமாதா னம் செய்து கொண்டு சகுந்தலாவுக்குச் சொன்னாள். சகுந்த லாவுக்குச் சிரிப்பு வந்தது. சிவனேசன் சமைப்பதாவது, அது முட்டாள் பெண்களின் வேலை என்றல்லோ நினைப்பவன். சைனாக் கடைச் சாப்பாட்டுடன் நல்ல குடியும் நடக்கும்.

Page 28
3
மாலை ஏழு மணியாகிக் கொண்டிருந்தது. Áåálsor wrs இளம் குளிர் காற்றில் ரியுலிப்ஸ் பூக்கள் தலை சாய்த்து ஆடிக் கொண்டிருந்தன. இன்னும் நல்ல வெய்யில் அடித்துக் கொண்டிருந்தது, குளிர் காற்றுடன்.
அம்மா தொண தொணத்துக் கொண்டே இருக்கிறா. நான் ஒரு தரம் போன் பண்ணினால் என்ன? நியூயோர்க் நம்பரை அவள் விரல்கள் சுற்றின.
"ஹலோ" சகுந்தலாவின் குரல் மென்மையுடன் அழைத்தது. என்ன செய்கிறார், என் அருமைக் கணவர். நியூயோர்க்கில் இப்போது என்ன நேரம். அதிகாலையாக இருக்கும். அதற் கென்ன கட்டிலுக்குப் பக்கத்தில் போன் இருக்கிறது. எடுத்து விட்டு இன்னொரு தரம் நித்திரை கொள்ளட்டும். அவள் மறு படியும் "ஹலோ" என்றாள். அடுத்த பக்கத்தில் ஹலோ கேட்காமல் ஏதோ கலகலப்பும் கேட்டது.
என்ன நடக்கிறது இந்த அதிகாலையில் என் வீட்டில்? என் படுக்கையறையில்? சிலவேளை தவறான நம்பரோ? நிச்சய மாக இல்லை! சகுந்தலாவுக்குத் தெரியும் தவறான நம்பர்

உலகமெல்லாம் வியாபாரிகள் 49
இல்லையென்று. ஹலோ கேட்டது அடுத்த முனையிலிருந்து. ஒரு பெண்ணிடமிருந்து.
O O O
எலக்ஷன் விடயமாக நிருபர் கோஷ்டியொன்று லண்டனிலி ருந்து ஸ்கொட்லண்டுக்குப் போகிறது. சில்வியா பேப்பர் நிரு பர். அவளும் போகிறாள். போகமுதல் தாய் தகப்பனைப் பார்க்கவேண்டும். காலையில் எழும்பி றிச்மண்டுக்குப் போய் விட்டாள் பெற்றோர் வீட்டுக்கு. அடுத்த அறையில சலீமும் சிதம்பரநாதனும் எதையோ பெரிய சத்தம் போட்டுத் தர்க்கப் பட்டுக்கொண்டிருந்தது அரை குறை நித்திரையில் கேட்டது கார்த்திக்கு. கொஞ்சம் கொஞ்சம் கேட்டது என்ன சண்டை பிடிக்கிறார்கள் என்று.
இலங்கையிலிருந்து வரப்போகும் தமிழ்ப் பிரமுகரின் வரவேற் பைப் பகிஸ்கரிக்க வேண்டுமென்கிறான் சிதம்பரநாதன். இவர்களை நம்பி எங்களுக்கு என்ன நடந்துவிட்டது எங்கள் இனத்திற்கு, இவர்களின் தலைமையைத் தூக்கியெறிய வேண்டும். அவர்களுக்கு எங்கள் எதிர்ப்பைக் காட்டவேண்டும் என்று வாதம் செய்கிறான் சிதம்பரநாதன்.
ஒவ்வொருவரிலும் தவறு கண்டு ஒவ்வொருவரையும் பிரித்து வைத்துத்தான் தமிழர்களுக்கு ஒன்றும் கிடைக்காமல் இருக் கிறது. தமிழரில் எத்தனை பிரிவு. யாழ்ப்பாணத்தான், தீவான், மட்டக்களப்பான், வன்னிநாட்டான், மன்னார்த் தமிழன், தமிழ்சாதிக்குள் ஆயிரம் சாதி. இதெல்லாம் உடைய வேண்டும். எதிரிகளின் உள்ளே புகுந்து அவர்களைத் திருத்த முடியுமென்றால் திருத்துவோம். அவர்களுடன் சேர்ந்திருப்ப வர்களுக்கு, நம்புவர்களுக்குச் சொல்லுவம் எது நல்வழி, எது நம்வழி என்று. அதைவிட தனிமனித எதிர்ப்பிலோ, தனி மனித பலாத்காரத்திலோ நம்பிக்கை வைக்கக் கூடாது. இது சலீமின் வாதம், هر )

Page 29
50 ராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம்
இமய மலையை நகர்த்தினாலும் எங்களின் தமிழ்த் தல்ைவர் களின் நேர்மையற்ற போக்கைத் திருத்த முடியாது. இவ் வளவு காலமும் இவர்களால் எங்களுக்கு இரண்டு இனக்கல வரமும் எண்ணற்ற அப்பாவி மக்களும் இறந்தது போதாதா? சிதம்பரன் கர்ச்சிக்கிறான்.
இரண்டு கலவரம். என்ன கோரமானது என்று அதில் அகப் படாதவர்களுக்குத் தெரியாது.
கார்த்திகேயன் கண்களை மூடிக்கொள்கிறான். அம்பாறைக் கரும்புத் தோட்டம். அதன் நடுவில்..அவன் சிந்தனை படர் கிறது.
எட்டு வயதுக் குழந்தை, பயத்தில் அலறக்கூட முடியாமல் தன் தகப்பன் பாதகர்களால் கண்டதுண்டமாக வெட்டுவதைப் பார்த்துக் கொண்டிருக்கிறான். 'தமிழன் இரத்தத்தைப் பார்' சிங்கள வெறியர்கள் தகப்பனின், மாமனின் இரத்தத் தில் அள்ளியெடுத்த துளிகளைத் தங்கள் மார்புகளில் பூசிக் கொண்டு சிரித்தார்கள். மனிதர்களாகத் தெரியவில்லை அவர்கள் அப்போது. பற்றை மறைவில் தமக்கையின் அணைப்புக்குள் முகம் பதித்து வெடிக்கிறான் கார்த்திகேயன். நிறைமாதக் கர்ப்பவதி கார்த்திகேயனின் தாய். அவளையும் இரண்டு குமர்ப் பிள்ளைகளையும் தங்கையையும் தங்கையின் குழந்தை மூன்றையும் தெரிந்த ஒரு முஸ்லீமின் காரில் மூட்டைபோல் கட்டியனுப்பிவிட்டு கார்த்திகேயனின் தந்தை யும் மைத்துனனும் கார்த்திகேயனும் அவனின் ஒரு தமக்கை யும்-அவளுக்குப் பத்துவயது-கரும்புத் தோட்டத்துக்குள் ளால் ஓடிக்கொண்டிருந்தார்கள்.
வழியில் தெரிகிறது சிங்கள வெறியர்களின் கொடுமை கொடுமையாகக் கொலைசெய்யப்பட்டு, சின்னாபின்னமாக் கப்பட்டு சித்திரவதை செய்யப்பட்ட தமிழ் இனம் உயிரிழந்து கரும்புத் தோட்டத்தில் சிதறுப்பட்டுக் கிடக்கின்றன. இளம்

உலகமெல்லாம் வியாபாரிகள் 51.
கன்னிப் பெண்களின் மார்பகங்கள் கேவலமாகச் சிதைக்கப் பட்டு சிங்கள டறி குறிபோட்டு. தகப்பன் பார்க்க விட வில்லை இரு குழந்தைகளையும். கொஞ்சதூரம் போவதற் கிடையில் கொலை வெறி பிடித்த சிங்கள வெறியர்கள் கண்டு விட்டார்கள். தப்பியோடும் சில தமிழர்களை விடாப்பிடி யாகத் துரத்தினார்கள். குழந்தைகள் இரண்டும் பற்றைக்குள் ஒழித்துக்கொண்டனர். தகப்பன் கத்தியின் வீச்சால் விழுந்த போது மாமனை உயிருடன் பிடித்துக்கொண்டு கோரச் சிரிப்புச் சிரித்தார்கள் வெறியர்கள். சிறுவன் கார்த்திகேயன் அலற வாய் எடுத்தான், வானத்தில் நிலவு பகல் என எரிந்துகொண்டிருந்தது. தமக்கை பத்துவயது தம்பியை இறுக்கிப் பிடித்துக் கொண்டாள்.
மூச்சு விடாதே தம்பி. விம்மல்களுக்கிடையில் சொன்னாள். முருகா, முருகா. தகப்பனும், மாமனும் அதைவிட வேறொன் றும் சொல்லி அலறவில்லை.
பறத் தமிழா பறத் தமிழா வெறியர்கள் சிரித்தார்கள். கோர மான, கொடூரமான சிரிப்பு. கார்த்தியின் உடம்பு நடுங்கியது கேட்டு. வானமும் பூமியும் சாட்சியாக நீதியும் நேர்மையும் மனிதத் தன்மையும் மெளனமான அந்த இரவில் தன் தகப்ப னின் உடல் அவயம் அவயமாக வெட்டுப்பட. பார்க்காதே தம்பி கண்ணை மூடிக்கொள். பத்மாவின் கண்ணிர் தம்பியின் உச்சம் தலையில் சூடாகப் பட்டது.
பூகம்பம் முடிந்ததுபோல் கொலை செய்துவிட்டு அவர்கள் இன்னும் உயிர் வேட்டையில் ஓடினார்கள் அந்தச் சிங்கள வெறியர்கள். என்ன செய்வது கரும்புத் தோட்டம் பூதாகார மாகத் தெரிந்தது. கொஞ்சம் நகர்ந்தாலும் நிலவின் ஒளியில் தெரியும்.
"அவர்கள் இதே வழியால் திரும்பி வந்தாலும் ஆபத்து. தம்பி வா போவம்' பத்மா அழைத்தாள்.

Page 30
52 ராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம்
"அப்பா அக்கா" சிறுவன் கார்த்திகேயன் விம்மினான். தமக்கையின் பார்வை பகுதி பகுதியாய் கிடக்கும் தகப்பனின் உடம்பைப் பார்க்க அஞ்சின.
"அப்பா செத்துப்போய்விட்டார் தம்பி’ குழந்தைகள் இருவ ரும் அழுதார்கள். 'ஏன் அப்பாவைக் கொலை செய்தார் கள்" சிறுவன் கேட்டான். கொடுமையின் கருத்து விளங்கா மல் அவன் கேட்டான்.
*ஏனென்றால் நாங்கள் தமிழர்கள் தமக்கை விரக்தியுடன் பதில் சொன்னாள்.
மழையில், குளிரில், இரவில், பயந்து பயந்து இரண்டு நாள் காட்டு வழியாக ஓடி சம்மாந்துறையை அடைந்து அன்புள்ளம் கொண்ட முஸ்லீம்களால் காப்பாற்றப்பட்டு. எவ்வளவு கோரமான நினைவுகள். கார்த்திகேயனின் கண்கள் கலங்கு கின்றன. அடுத்த அறையில் சலீமும் சிதம்பரநாதனும் இன் னும் தர்க்கப்படுவதை விடவில்லை. பெருமூச்சுடன் எழும்பிய கார்த்திகேயன் நண்பர்களின் அறையை எட்டிப்பார்க்கிறான். இருவரும் தங்களின் கட்சியை எடுத்துரைக்கிறார்கள். இந்தத் தலைமையால் என்ன கண்டுவிட்டோம். சிதம்பரன் திருப்பித் திருப்பிக் கேட்கிறான். "எதற்கும் மற்ற மாணவர்களையும் கலந்து ஆலோசிப்போம்." அடக்கமாகச் சொல்கிறான் கார்த்திகேயன்.
O O O "இல்லை நான் டயல் பண்ணியது தவறான நம்பர் இல்லை. வீட்டு நம்பர்தான்." சகுந்தலா தனக்குத்தானே சொல்லிக் கொண்டாள். அடுத்த பக்கத்திலிருந்து மூன்றாம் தரம் அந்தப் பெண்
"ஹலோ" என்றாள். சகுந்தலா இன்னும் பதிலுக்கு "ஹலோ" என்று சொல்லவில்லை.

உலகமெல்லாம் வியாபாரிகள் 53
அடுத்த பக்கத்திலிருந்து "ஹலோ" கேட்டது. இந்தத் தடவை சிவனேசனின் குரல்.
சகுந்தலாவின் உடம்பு நடுங்கியது ஆத்திரத்தில். என் வீடு, என் கணவர், என் படுக்கையறை என்ன செய்கிறாள் இந்த பெண்? என்ன செய்வார்கள்? படுக்கையறையில் பகவத் கீதையா படிப்பார்கள்? என் அருமைக் கணவர் எவ்வளவு காலமாகக் காத்திருந்திருப்பார் இந்தச் சந்தர்ப்பத்துக்கு?
கொஞ்சநேரத்தின் பின் சகுந்தலாவின் கைகள் தன்பாட்டுக் குப் போனை வைக்கின்றன.
என்ன சகுந்தலா மறுமொழியில்லையா? தாய் பார்வதி கோவா இலைகளுடன் வந்தபடி கேட்கிறாள்.
அம்மா என்ன கேட்கிறா? ஏதோ காதுகள் அடைத்த உணர்ச்சி. அம்மா திரும்பவும் அதே கேள்வி கேட்கிறா,
"இல்லை. வீட்டில் யாரும் இல்லைபோல் இருக்கிறது." சகுந்தலாவுக்கு நம்பமுடியாமல் இருக்கிறது தன் குரலில் இருக்கும் நிதானம் உணர்ச்சி செத்துவிட்டதா?
தானா சொல்கிறேன்; என் குரலா கேட்கிறது. உடம்பு மரத்து விட்ட பிரமை, இதயம் வெடிக்கிறது. எவ்வளவு அடக்கியும் கண்ணிர் கட்டுக்கடங்காமல் வருகிறது. அம்மா கண்டால் விழல் கேள்விகள் கேட்பாள். விடுவிடுவென்று கதவைத் திறந்துகொண்டு வீதியில் இறங்குகிறாள் சகுந்தலா.
**எங்கே போகிறாய் சகுந்தலா" தாய் அவசர அவசரமாக வந்து கேட்கிறாள் வாசலில் நின்றுகொண்டு.
'மீனாவையும் கீதாவையும் காணவில்லை. போய் பார்த்து விட்டு வருகிறேன்" திரும்பாமல் பதில் சொல்கிறாள் சகுந்தலா, நீர்மாரி பொழிகிறது கண்கள். திரும்பினால் தாய் பதறிவிடுவாள் மகள் ஏன் இப்படி அழுகிறாள் என்று.

Page 31
54 ராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம்
"சகுந்தலா, மீனா காரில் போறாள். எந்தப் பார்க்குக்குப் போறாளோ தெரியாது." தாய் மகளை விளங்காமல் கேட் கிறாள்.
"அதற்கென்ன சும்மா ஒரு நடை போய்விட்டு வருகிறேன். அவர்களைக் கண்டால் அவர்களுடன் வருகிறேன்" சகுந் தலா தாயின் மறுமொழியை எதிர்பார்க்காமல் போகிறாள். குளிர் காற்றடிக்கிறது. திறந்த கதவால் இந்தக் குளிரில் வெறும் சட்டையுடன் ஜீன்சும் போட்டுக்கொண்டு-ஒரு ஓவர் கோட்டும் போடாமல். தாய் முணுமுணுக்கிறாள்.
சகுந்தலாவின் இருதயம் படபடவென்று அடித்துக்கொள் கிறது. என்ன துணிவு இவருக்கு. நான் எப்போது வீட்டை விட்டுத் தொலைகிறேன் என்று பார்த்துக்கொண்டிருக்கிறார் போல் இருக்கிறது. உடம்பெல்லாம் ஆத்திரத்தில் கொதித் தது. ஞாயிற்றுக்கிழமையாதலால் விம்பிள்டன் தெருக்கள் வெறிச்சென்று கிடந்தன. உலகமெல்லாம் உறங்கிவிட்டதா இந்த நேரத்தில்? என்ன செய்கிறார்கள் எல்லோரும். ஒரு விதத்தில் நல்லது. அல்லது என்னடா இந்தப் பெண் அழுத கண்களுடன் பைத்தியம்போல் போய்க்கொண்டிருக்கிறாள் என்றல்லவா பார்ப்பார்கள்? தங்களுக்கு விளங்காத மற்றவர் களின் பெயர்தானே பைத்தியங்கள்.
*" என்ன கேவலமான வாழ்க்கை? ஒருவருக்கொருவர் உண் மையில்லாத-அன்பில்லாத வாழ்க்கை. உலகத்துக்காக; கல்யாணம் முடித்த குற்றத்திற்காக ஒன்றாய் வாழும் உப்புச் சப்பில்லாத வாழ்க்கை. இப்படியமையாத வாழ்க்கை எப் போது உருவாகும்?' நீர் மழை பொத்துக்கொண்டு கன்னத்திட்டுக்களில் வழிந் தோடியது. இந்த லட்சணத்தில் மீனாவுக்குப் புத்தி சொல்லட்டுமாம். "கண்ணாடி வீட்டிலிருந்துகொண்டு கல் எறியவா?’ விரக்தியான சிரிப்பு அவள் உதடுகளில் நெழிந்து மறைந்தது. உபதேசம் செய்யமுதல் உபதேசம் செய்யப்பட வேண்டுமா?

உலகமெல்லாம் வியாபாரிகள் w 55
என்ன சொல்ல மீனாவுக்கு 'தங்கச்சி என்னைப் பார் தாய் தகப்பனுக்காக என் அன்பைக் கொன்றுவிட்டு என்னில் உயி ராய் இருந்த கார்த்திகேயனுக்கு துரோகம் செய்துவிட்டுத் தாய் தகப்பன் பார்த்த "பெரிய" இடத்தில் கல்யாணம் செய்து விட்டு சாதாரண ஆள் என்றாலும் பரவாயில்லை, குடிகார னைச் செய்துவிட்டு மெளன வேதனைகளுடன் வாழ்ந்து கொண்டிருக்கிறேன். நீயும் அப்படி உன் ஆத்மாவின் ஆசை களைக் கொன்றுவிட்டு சாதி, சமய, கலாச்சார அடிப்படையில் அந்தஸ்துள்ள ஒருவனைச் செய் என்றா சொல்வது?"
யரரும் என்ன பாடும் படட்டும். என்பாட்டைப் பார்க்க வழி யில்லை. எனக்கேன் மற்றவர்கள் பிரச்சனை. மைன்ட் யுவர் ஒன் பிசினஸ் என்று மீனா முகத்திலடித்தாற்போல் சொன்னா லும் ஆச்சரியமில்லை. ஐந்து வருடங்களின் பின் லண்டன் வந்தது போதும், படும் பாடும் போதும். மீனா யாரையும் செய்யட்டும்!
சகுந்தலாவின் கண்களில் நீர் வழிந்துகொண்டே இருந்தது. கால் போன போக்கில் நடந்துகொண்டிருந்தாள்.
குளிரான காற்று முகத்தில் சில் என்று அடித்தது. எந்தத் தெருவில் திரும்பி எந்த ரோட்டால் போய்க்கொண்டிருக்கி றாள் என்றே தெரியவில்லை அவளுக்கு. மீனாவும் குழந்தை யும் இப்போது வீட்டுக்குப் போயிருக்கலாம். அம்மா மீனா வுக்குச் சொல்லியிருக்கலாம் சகுந்தலாவைத் தேடிப்போகச் சொல்லி.
சகுந்தலாவின் மெல்லிய சட்டைக்குள்ளால் குளிர் ஈட்டிபோல் குத்தித் துளைத்தது. வாழ்க்கையே இடியும் மழையும் சேர்ந்து பூகம்பமாகிக் கொண்டிருக்கிறது. இந்த மழை என்ன செய் யும்? கால் வலித்தது நடந்து. எப்படித் திரும்பிப்போவது என்று தெரியவில்லை. மனம்விட்டு அழுதபடியால் மனம் கொஞ்சம் இலேசாக இருந்தது. முகம் வீங்கியிருப்பது

Page 32
56 ராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம்
போன்ற உணர்ச்சி. மழையில் நனைந்தால் அழுத கண்க ளும் வீங்கிய முகமும் சிலவேளை அம்மாவுக்குத் தெரியாமல் இருக்கும். எல்லாம் மற்றவர்களுக்காக என்று சீவிக்க வேண்டியா ஆகிவிட்டது என் சீவியம்?
கண்ணிர் திரும்பவும் முட்டிக்கொண்டு வந்தது. வெறிச் சென்று றோட்டுக்கரையில் கிடந்த பெஞ்சில் உட்கார்ந்தாள்.
தன்னைப் பார்க்க அவளுக்கே எரிச்சலும் பரிதாபமும் வந்தது. யார் இருக்கிறார்கள் சொல்லி அழ? யார் இருக் கிறார்கள்?
"சகுந்தலா'" அவள் திடுக்கிட்டுத் திரும்பினாள். அவன் நின்றுகொண்டிருந்தான். அவளின் நீர் தவழும் விழிகளை ஆழமாக ஊடுருவிப் பார்த்தன அவனது கண்கள். வேதனை யின் நிழல் அவனின் விழிகளில் தோன்றி மறைந்தன.
*" என்ன செய்கிறீர் இந்த நேரம்? இந்த ரோட்டுக்கரையில்" அவன் குரலில் வியப்பு மேலிடக் கேட்டான். பரிவு முகத்தில் பரந்து கிடந்தது.
அவளுக்கு அவனின் பரிவு இனம் தெரியாத ஆத்திரத்தை உண்டாக்கியது. யாரும் என்னில் பரிதாபப் படவேண்டாம் என்று கத்தவேண்டும்போல் இருந்தது. பரிதாபம் தேவைப் படுவது கோழைகளுக்கு எனக்கில்லை. "சகுந்தலா என்ன செய்கிறீர்' கார்த்திகேயன் கேட்டான்.
*செய்கிறேன் சட்டியும் பானையும். வேணுமா விலைக்கு?" அவள் வெடுக்கென்று கத்தினாள். அவன் பக்கத்தில் உட்கார்ந்தான். மழைத்துளிகள் பொட்பொட் என்று தலை யில் விழத் தொடங்கிவிட்டன. பொல்லாத குளிர்காற்று வேறு. அவள் உடம்பு வெடவெடவென்று ஆடியது.
"மழை வருகிறது வீட்டுக்குப் போவதானால் கொண்டுபோய் விடுகிறேன்." அவன் ஆதரவாகச் சொன்னான்.

உலகமெல்லாம் வியாபாரிகள் 57
"உங்கள் தயவுக்கு நன்றி. வந்த வழியைப் பார்த்துப்போக எனக்குத் தெரியும்" அழுகையூடே அவள் சொன்னாள். திடீரென்று அவளுக்குத் தன்னை அவனுடன் யாரும் பார்த் தால் என்ற பயம் வந்தது.
'உமது வீட்டை விட்டு ஒன்றரை மைல்களுக்கு மேலே வந்து விட்டீர். உம்மைப் பார்த்தால் உல்லாசப் பயணத்துக்கு பணத்துடன் வெளிக்கிட்ட மாதிரித் தெரியவில்லை. டாக்ஸி யில் போய் ஏன் உமது தகப்பனுக்குச் செலவு வைக்க வேணும்? இலவசமாகக் கொண்டுபோய் விடலாம். மீனாவின் அக்கா என்பதற்காக-சிதம்பரனின் மச்சாள் என்பதற்காக. உம்மில் தனிப்பட்ட முறையில் தயவு காட்டுவதாக தப்பபிப்
பிராயப் படவேண்டாம்.
அவன் வேண்டுமென்றே குறும்பை குரலில் காட்டுகிறான் என்று தெரியும் அவளுக்கு.
ஏன் ஒப்பாரி வைக்கிறீர் என்று கேட்டு இன்னும் அழப் பண்ணாமல் குறும்புத்தனமான பேச்சால் தன் குழப்பத்தைத் திசை திருப்பப் பார்க்கிறான் என்று தெளிவாகத் தெரிந்தது அவளுக்கு.
இவனுக்கு இன்னும் தன்னில் இருக்கும் பரிவும், அன்பும் ஏன் தொட்டுத் தாலிகட்டிய கணவருக்கு இல்லாமல் போய் விட்டது?
கணவனில் உள்ள ஆத்திரமும், தன்னால் கைவிடப்பட்ட-ஒரு காலத்தில் தன் காதலனாக இருந்த கார்த்திகேயன் காட்டும் பரிவும் அவளை இன்னும்கூட அழப்பண்ணியது. கதைப்பதை விட்டு அழுதாள். கையில் கைக்குட்டைகூட இல்லை அவளிடம்.
அவன் தன் கைக்குட்டையைக் கொடுத்தான். அவள் பெற்றுக்கொள்ளாமல் வேண்டாம் என்று தலையாட்டினாள்.

Page 33
58 ராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம்
தகப்பன் தங்கள் காதலையறிந்து தன்னைப் பேசுகிறார் தாய் கண்டபாட்டுக்குத் திட்டுகிறா என்று அழுத சகுந்தலாவை அணைத்து அவள் கண்ணிரைத் துடைத்த காலம் ஞாபகம் வந்தது. இப்போது மெளனமாக அவன் உட்கார்ந்திருந் தான். ஒன்றும் சொல்லவோ கேட்கவோ உரிமையில்லாமல். **சகுந்தலா இந்தப் பகுதி நிறையத் தமிழ் ஆட்கள் இருக்கிற பகுதி' அவன் அக்கம் பக்கம் பார்த்தபடி சொன்னான்.
**இருக்கட்டும் எனக்கென்ன அதைப்பற்றி. உங்களுக்குப் பயமென்றால் போங்கள். யாரும் உங்களை வெற்றிலை வைத்துக் கூப்பிடவில்லை." அவள் குரலில் இன்னும் எடுத் தெறிந்து பேசும் ஆத்திரம்.
"ரோட்டோரத்தில் இருந்து அழுதுகொண்டிருந்தால் யாரும் விசரி என்று நினைத்து போலீசுக்குப் போன் பண்ணி விடு வார்கள்." அவன் சொன்னான்.
அவள் இருக்கும் வரைக்கும் அவன் போகமாட்டான் என்று தெளிவாகத் தெரிந்தது அவளுக்கு. அவன் சொன்னது உண்மையானால்-இந்தப் பக்கம் நிறையத் தமிழாக்கள் இருக்கிறார்கள் என்பது உண்மையானால் அதைவிட வேறு வினை வேண்டாம். அவள் எழுந்தாள். குளிர் கொடும் ஊசி களாய்த் துளைத்தது.
"சரியான குளிர் சகுந்தலா, என் ஜக்கட்டைத் தருகிறேன் போட்டுக்கொண்டு போ. வீட்டுக்குப் பக்கத்தில் குப்பை தொட்டி கிடந்தால் போட்டுவிடு அனுப்பாவிட்டால். முல்லைக்குத் தேர் கொடுத்த பாரியில்லை நான். எனக்குத் தெரிந்த பெண் குளிர் பிடித்து நிமோனியா வந்து சாவதை விரும்பவில்லை நான்." அவன் அவள் மறுமொழி சொல்லு முதல் தன் ஜக்கட்டைக் கழட்டி அவள் தோள்களில் போட்
60.

உலகமெல்லாம் வியாபாரிகள் 59
அவனின் உடம்பின் சூடு இன்னும் ஜக்கட்டிலிருந்து அவளின் "உடலில்" தொட்டது.
அவள் சட்டென்று ஜக்கட்டை எடுத்து அவனிடம் கொடுத்து விட்டுக் கேட்டாள் 'கொண்டுபோய் விட்டால் மிகவும் நன்றி." குரல் மென்மையாக இருந்தது. அவனின் ஜக்கட்டைப் போட்டுக்கொண்டு ஊர்வலம் போவதைவிடப் பேசாமல் காரில் போய் இறங்கலாம்.
அவன் கார்க் கதவைத் திறந்து விட்டான். அவள் பேசாமல் ஏறி உட்கார்ந்தாள்.
கேட்கமாட்டானா ஏன் அழுகிறேன் என்று? உங்களை ஏமாற்றிவிட்டு ஓடிப்போய் எப்படி வாழ்கிறேன் என்று அலற வேண்டும்போல் இருந்தது. அவன் ஒன்றும் பேசாமல் கார் ஒட்டிக்கொண்டிருந்தான்.
இப்படியான பண்பான உள்ளத்தை ஏமாற்றிவிட்டுப் போய் என்ன கண்டேன். ஏமாற்றினேனா? இந்த உலகத்தின் சட்ட திட்டங்களால் விற்கப்பட்டேன். தன்னையறியாமல் அவள் கண்கள் பொலபொலவென்று கொட்டியது.
"சகுந்தலா வீட்டுக்குப் போகும் மனநிலை இல்லை என்றால் ஏதும் பார்க்கில் கொஞ்சநேரம் இருந்துவிட்டுப் போகலாம்." அவன் சொன்னான். அவளுக்கு வீட்டுக்குப் போய் தாய் தகப்பனைச் சந்திக்கவும் அவர்களின் கேள்விகளுக்கு மறுமொழி சொல்லவும்முடியாது.
ஆனால் தாய் தேடுவாள் எங்கே போய்விட்டேன் என்று.
* வேண்டாம் அம்மா தேடுவா எங்கே போய்விட்டேன் என்று.”*

Page 34
60 ராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம்
'யாரோ தெரிந்த சினேகிதியை வழியில் கண்டேன் என்று சொல்லேன்"
நல்ல யோசனைதான். அப்படி யாரும் இருந்தால் ஏன் ரோட் டில் இருந்து அழுதாளாம்.
"எனக்குத் தெரிந்த யாரும் இந்தப்பக்கம் இல்லை "" அவள் அவனைப் பார்க்காமல் சொன்னிாள். கெரஞ்சநேரம் சிந்தித் தான்.
'உமது மச்சாள் புவனேஸ் பக்கத்தில்தான் இருக்கிறார். அங்கு போனதாகச் சொல்லும் வீட்டில்."
** எந்தப் புவனேஸ்" அவள் ஆச்சரியத்துடன் கேட்டாள்.
"என்ன தெரியாதா சிதம்பரனின் தமக்கை. கொழுக்கட்டைப் புவனேஸ் என்று உமது அண்ணர் அடிக்கடி சொல்லுவார். அப்படி என்ன உமக்குச் சொந்தக்ககாரரைக் கூடவா மறந்து விட்டது." அவன் வியப்புடன் கேட்டான்.
**புவனேஸ் மான்ஸெஸ்டரில் என்றல்லோ கேள்விப்பட் டேன்." அவள் சொன்னாள்,
"ஓம் அது ஐந்து வருடத்துக்கு முதல். இப்போ விம்பிள்டனில் தான் இருக்கிறாள்.'"
"புவனேஸிடம் அம்மா கேட்டால். " தயக்கத்துடன் சொன்னாள்.
"உமது தாய் தகப்பனுக்கும் புவனேஸ் வீட்டுக்கும் சரிவராது. புவனேஸின் கணவர் ஜெகநாதனும், உமது தகப்பனும் எதிரி கள் அரசியலில்."
சகுந்தலா கொஞ்சநேரம் பேசாமல் இருந்தாள். 'என்ன லண் டனில் எல்லாவிடமும் அரசியல் சண்டையா" என்றாள் கடை éuaras.

உலகமெல்லாம் வியாபாரிகள் 61.
*எல்லா இடமும் அரசியலைப் பற்றிய அக்கறையிருந்தால் ஏன் எங்கள் நிலையிப்படி இருக்கிறது? இருக்கிற கொஞ்சப் பேரில் எத்தனையோ பிரிவு. ஒவ்வொரு பிரிவுக்கும் ஒவ்வொரு தலைவர். தமிழர்நிலை என்றுதான் திருந்தப்போகிறதோ தெரியாது" அவள் மெளனமாக இருந்தாள்.
அவளின் சொந்தப்பிரச்சினைகளால் ஏற்பட்ட துயர் மறைந்து இவனுடன் கதைத்துக்கொண்டிருப்பது அவளுக்குப் பிடித்தது. தூரத்தில் ஒரு டெலிபோன் பூத் தெரிந்தது. அவன் காரை நிறுத்தினான். அவள் கொஞ்சநேரம் தயங்கினாள். உமது விருப்பம் என்னும் பாவனையில் அவன் இருந்தான். அவள் இறங்கிப்போய் தாய்க்குப் போன் பண்ணினாள். தான் புவ னேஸ் மச்சாளின் வீட்டுக்குப் போய்விட்டு வருவதாக, தாய்க் குப் பிடிக்கவில்லை; அப்பாவுக்குப் பிடிக்காது என்று ஏதேதோ முணுமுணுப்பது கேட்டது.
இந்த வயதிலும் அவர்கள் இவர்களுக்கு என்ன பிடிக்கிறது என்று பார்க்கவேண்டிக் கிடக்கிறது என்று ஆத்திரம் வந்தது சகுந்தலாவுக்கு. முணு முணுத்துக் கொண்டு வந்து காரில் ஏறினாள். மழை பெலத்துப் பெய்யத் தொடங்கியிருந்தது. **இந்த லட்சணத்தில் எந்தப் பார்க்குக்குப் போவது," என்று அலுத்துக் கொண்டாள்.
'எனக்குப் பசி உயிர் போகிறது சகுந்தலா. காலையில் குடித்த கோப்பியைத் தவிர உடம்பில் ஒன்றும் போகவில்லை" அலுத்துப்போன களைப்பில் சொன்னான். அவள் அவனைப் பார்த்தாள்.
ஐந்து வருடங்களாகி விட்டன இவ்வளவு நெருக்கத்தில் பார்த்து. ஆனால் இன்னும் அதே களையான முகம். குறும்பு தவழும் விழிகள். அவளின் நேரடிப்பார்வை தர்மசங்கடமாக இருந்தது அவனுக்கு. அவளின் நேரடிப்பார்வையால் முகத்தை வேறு பக்கம் திருப்பினான். ' என்ன அப்படிப்

Page 35
62 ராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம்
பார்க்கிறீர். இன்னும் நரைமயிர் வரவில்லை என்றா?" அவன் புன்முறுவலுடன் கேட்டான்.
"இல்லை, உங்கள் அருமைக் கேர்ள் பிரண்டுக்கு சமைத்துப் போடுவதற்கென்ன என்று யோசிக்கிறேன்." அவளின் குரலில் இருந்த பொறாமை அவனுக்கு வியப்பாக இருந்தது. என்ன விசித்திரமான பெண்கள் இவர்கள். தான் கல்யாணம் முடித்துக் குழந்தை குட்டியுடன் இருக்கலாம் என்றால் நான் ஒருத்தியுடன் இருப்பதால் என்ன பொறாமையாம் இவ ளுக்கு?
*ஒன்றாய் இருப்பதென்றால் ஒருத்தருக்கு ஒருத்தர் அடி மையோ அல்லது சேவகரோ என்றில்லை. எங்கள் இருவருக் கும் தனிப்பட்ட விதத்தில் நிறைய வேலைகள் இருக்கும் கவனிக்க. அதை விட்டுவிட்டு உண்பதும் உடுப்பதும்தான் பெரிய வேலையா?" என்றான்.
*ஒமோம் நீங்கள் எல்லாம் பெரிய இலட்சியவாதிகள்" அவள் நக்கலாகச் சொன்னாள்.
'இலட்சியம் என்றால் என்ன? எனக்குத் தெரியாது. ஆனால் இப்போது எங்களுக்கு ஒருகடமை இருக்கிறது எங்கள் இனத் துக்கு நடக்கும் கொடுமைகளை எதிர்த்துப் போராட. அதை யாரோ பிரச்சனை என்று பேசாமல் இருந்தால் நாளைக்கு எங்கள் அடுத்த சந்ததியை அழிக்கப் புதைகுழி தோண்டியவர் களாகிவிடுவோம்." அவளுக்கு விளங்கவில்லை என்ன சொல் கிறான் என்று.
எதிர்த்துப் போராடப் போகிறார்களாம். யாரை? படை பலமும் ஆள்பலமும் நிறைந்த இலங்கை ஆட்சியை, 'என்ன விழற் கதை கதைக்கிறீர்கள். உங்கள் தரவழி சும்மா ஒன்று கதைக்க அங்க இருக்கிற ஆட்களுக்கு அடிவிழுகுது." அவள் அலுப்புடன் சொன்னாள்.

உலகமெல்லாம் வியாபாரிகள் 63
* பொறுப்பில்லாமல் கதைத்து சாதாரண சனங்களை அழியப் பண்ணப் போகிறீர்கள். இரண்டு தரமும் அவர்கள் செய்த கொடுமை போதாதா?" அவள் குரலில் விரக்தி தொனித்தது.
"நாங்கள் ஒன்றாய் இருக்கிறோம், உரிமை தந்தால் என்று கேட்டபோது அடித்தார்கள். நீங்கள் அடிக்கிறீர்கள் பிரியப் போகிறோம் என்று சொன்னாலும் கொலைசெய்கிறார்கள். உமக்கு விளங்கவில்லையா? இலங்கையில் இனித் தமிழரும் சிங்களவரும் ஒன்றாகச் சீவிக்கமுடியாது என்று. சரித்திரத் தின்படி இரு இனமும் ஒன்றாக இருக்கவில்லை. தங்கள் சுய நலத்துக்கு அன்னியர் தங்கள் ஆட்சியின் கீழ் எங்களை ஒன் றாய் வைத்திருந்த குற்றத்துக்காக நாங்கள் இன்றும் சிங்கள ஏகாதிபத்தியத்தின் அடக்கு முறையிலோ சீவிக்க வேண்டும். தமிழ்ப் பகுதிகளில் ராணுவமும் பொலிசும் எண்ணிக்கையில்லா மல் பெருகிக் கொண்டிருக்கின்றன. தான் பிடித்த நாட்டில் தன் படையை வைத்திருப்பதுபோல். தமிழ்ப்பகுதி தமிழருக் குரியது. அதில் சிங்கள ஏகாதிபத்தியத்தின் படையினருக்கு என்ன வேலை?' அவன் உணர்ச்சி வசப்பட்டுக் கேட்டான்.
*யாழ்ப்பாணம் பெரிய கடையில் சிங்களப் போலீசார் செய்த கொடுமையிலிருந்து தெரியவில்லையா? மக்களைப் பாதுகாப் பவர்களே கேவலமாக நடந்துகொள்கிறார்கள் இன வெறி பிடித்தென்று. இவர்களுடன் ஏன் கொழுவவேண்டும்" அவள் பரிதாபமாகக் கேட்டாள்.
**சகுந்தலா பொலிஸார் எந்த நாட்டிலும் எந்த மக்களுக்கும் காவலர்கள் இல்லை. பொலிஸார் ஆளும் வர்க்கத்தின் கூலிப் பட்டாளம். வெறும் கைப்பொம்மைகள். அவர்கள் ஒருநாளும் சாதாரண மக்களின் பக்கத்தில் நிற்பதில்லை. ஆனால் உண் மையாக உரிமைப் போருக்கு தமிழர் எல்லாம் பிரண்டெழுந் தால் இந்தக் காவாலிப் பட்டாளம் எந்த மூலைக்கு.'
அவன் ஒரு சாப்பாட்டுக் கடையருகே காரை நிறுத்தினான். அவனுடன் கடைக்குப்போக அவள் தர்மசங்கடப்பட்டாள்.

Page 36
64 ராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம்
பயப்படாதீர் இவர்கள் இத்தாலியர்கள். உமது தகப்பனுக்கோ கணவனுக்கோ கோள் சொல்லி வைக்கமாட்டார்கள்." அவள் தயங்கிக் கொண்டு இறங்கினாள். கோள் மூட்டிவைத்தாலும் என்ன? அவள் என்ன அப்படித் தவறு செய்து விட்டாள்?
சிவனேசன் இப்போது என்ன செய்துகொண்டிருப்பான்? யார் போன் பண்ணியது என்று தெரிந்திருக்குமா அவனுக்கு? தெரிந்திருந்தால் என்ன செய்திருப்பான். இல்லை என்று மறுக்க முடியுமா? இந்த அதிகாலை நேரத்தில் என் வீட்டில் என்ன வேலை எந்தப் பெண்ணுக்கும். அவள் கொஞ்சநேரம் மறந்திருந்த வேதனை திரும்பவும் மனதில் பட்டது.
'உமக்கு என்ன ஓர்டர் பண்ண" அவன் கேட்டான். 'எனக் குப் பசிக்கவில்லை. அத்தோடு அம்மா தோசை செய்து வைத் திருக்கிறா. சாட்டுக்கு என்றாலும் ஒன்று சாப்பிட்டு வைக்கா விட்டால் கோபிப்பா" அவள் சொன்னாள்.
அவளுக்கு நேரே இருந்துகொண்டு அவள் முகத்தை உற்றுப் பார்த்தான் அவன்.
வாழ்க்கையின் ஒவ்வொரு வினாடியும் ஒவ்வொரு காரியத்தை யும் மற்றவர்களின் திருப்தியை எதிர்பார்த்து வாழும் சகுந் தலா போன்ற பெண்கள் எப்போது திருந்துவார்கள். பெண் களே நீங்களும் மனித ஜன்மங்கள். உயிரும் சதையும் கொண்ட உயிரினம். ஏன் மற்றவர்கள் உங்களைப் பாவிப்பதைப் புரிந்து கொள்ளாமல் இருக்கிறீர்கள்? என்று கேட்கவேண்டும் போல் இருந்தது.
தேவையில்லாமல் அவளுடன் ஏதும் கதைத்து சண்டையை உண்டாக்க விரும்பவில்லை. அவன் சாப்பிடுவதை மெளனமாகத் தன் தோடம்பழத் தண்ணி யைக் குடித்துக்கொண்டு பார்த்துக் கொண்டிருந்தாள் சகுந் தலா.

உலகமெல்லாம் வியாபாரிகள் 65
என்ன விசித்திரம் யாரை இனிக் காணக்கூடாது என்று இர வெல்லாம் பிரார்த்தனை செய்தாளோ அவனுக்கு முன்னாள் உட்கார்ந்திருக்கிறாள். உண்மையான பிரார்த்தனைகள் பலிக்கும் என்றார்களே ஏன் அவளின் எந்தப் பிரார்த்தனை யுமே பலிக்கவில்லை? உலகத்தில் யார் வெறுத்தாலும் யார் மறுத்தாலும், கார்த்திகேயனை கல்யாணம் செய்ய உதவி செய் கடவுளே என்று பிரார்த்தித்தேனே ஒருகாலத்தில். அந்தப் புனிதமான பிரார்த்தனைக்கு என்ன நடந்தது?
'நீர் அமெரிக்காவில் இருந்து இறக்குமதியாக்கிய அரிய உபதேசம் எல்லாம் போதித்தாயிற்றா மீனாவுக்கு' அவன் கேட்டான் அவளின் மெளனத்தைக் கலைத்தபடி.
'யார் உபதேசம் பண்ணவந்ததாக உங்களுக்கு அறிவித்தார் கள்" அவள் கோபத்துடன் கேட்டாள்.
"அப்படித்தான் கேள்விப்பட்டேன். அப்பாவி மக்கள் அமெ ரிக்க இறக்குமதிச் சாமானில் மயங்குவதுபோல உப்முடைய அமெரிக்கநாட்டு ஞானம் நிறைந்த உபதேசங்களையும் மீனா வுக்குச் சொல்ல வந்ததாக" அவளின் ஆத்திரம் எல்லை கடந்தது. அவன் கிண்டலைக் கேட்டு.
"'உங்களைப்போல ஆட்கள் அப்படித்தானே சொல்வீர்கள். சொல்வது ஒன்று செய்வது ஒன்று." அவள் படபடத்தாள்.
என்ன வெடிக்கிறாள் இவள்,
"உண்மையைத்தான் சொல்கிறேன் தமிழர், தமிழர் பிரச்சினை என்றெல்லாம் வெளுத்துவாங்குகிறீர்கள். ஏன் நீங்கள் மட்டும் வெள்ளைக்காரிக்குப் பின்னால் திரிகிறீர்கள்? அதுதான் மீனாவும் வெள்ளைக்காரனுக்குப் பின்னால் திரி வதைப்பற்றி உங்களுக்கு அக்கறையில்லை." சகுந்தலா படபடவென்று பொரிந்துகொட்டினாள்.

Page 37
66 ராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம்
*சகுந்தலா குழந்தைத்தனமாகக் கதைக்காதே. கல்யாணம் என்பது என்னைப்பொறுத்தவரையில் இரண்டு மனிதப்பிறப்பு களுக்கிடையில் நடக்கும் ஒரு நிகழ்ச்சி. அது சமயச்சார்பிலோ அல்லது வேறு எந்தப் பொருளாதார முறையிலோ அமைவது வெறும் வியாபாரம். உன் தந்தை போன்றவர்களுக்கு வாழ்க் கையில் எல்லாமே வியாபாரம். தனிப்பட்ட வாழ்க்கையிலோ அரசியலைப் பொறுத்தவரையிலோ எதிலும் லாபநட்டத்தின் அடிப்படையில்தான் அவர்களால் யோசிக்கமுடியும். நான் அவர்களைப் போல இல்லை. நீரும் வேண்டுமென்றால் இந்த உலுத்தர் வியாபாரத்தில் சேர்ந்து ஏதும் லாபம் தேடும். எனக்கு அக்கறையில்லை." அவன் தன்னை இப்படிப் பேசி யது ஆத்திரத்தைவிட அழுகையை உண்டாக்கியது அவ ளுக்கு.
எதுவும் லாப நட்ட அடிப்படையில் இருக்க வேண்டுமென்று எதிர்பார்ப்பவர்களில் என்னையும் ஒருத்தியாகவா நினைக்கி நீர்கள் கார்த்திகேயன்? கண்ணீர் முட்டிக்கொண்டு வந்தது. "சகுந்தலா மன்னித்து விடும். நான் உம்மை மனவருத்த ஏதும் சொல்லவில்லை" அவன் குனிந்து சாப்பிட்டுக் கொண்டிருந்தான்.
*நான் றோட்டிலிருந்து ஏன் அழுதேன் என்று கேட்கவில்லை நீங்கள்' அவள் குரல் தழுதழுத்தது.
"எனக்குக் கேட்க உரிமையில்லை. சொன்னால் கேட்கத் தடையுமில்லை" எடுத்தெறிந்து சொன்னான் அவன்.
** என் கணவருக்குப் போன் பண்ணினேன். இந்த அதிகாலை நேரத்தில் என் வீட்டில் என் கணவருக்கு ஒரு பெண்ணுடன் என்ன வேலையிருக்கும் என்று நினைக்கிறீர்கள்' அவன் கையிலெடுத்த சாப்பாட்டை வாயில் வைக்காமல் திடுக்கிட்ட படி சகுந்தலாவைப் பார்த்தான் கார்த்தி

Z
வீட்டுக்கு வரும்போது தகப்பனார் இரவு பத்து மணிச் செய்தி கேட்டுக்கொண்டிருந்தார் டெலிவிஷனில். மீனாவின் அறை யில் குழந்தை கீதாஞ்சலியின் சிரிப்பொலி கேட்டது. "என்ன செய்கிறாள் இன்னும் நித்திரை கொள்ளாமல்." தாய் இன் னும் குசினியில் ஏதோ செய்துகொண்டிருந்தாள். இவ்வளவு நேரமும் காத்திகேயனுடன் இருந்ததை யாரும் கண்டு சொல் லியிருந்தால்? அப்படி என்ன பிழை செய்து விட்டேன்? பாவத் துக்கு இரங்கி என்னைக் கொண்டுவந்து விட்ட கார்த்திக்கு இவர்கள் என்னென்ன சொல்லித் திட்டுவார்கள் தெரிந்தால்? மெளனமாக உட்கார்ந்தாள்.
தகப்பன் திரும்பிப் பார்த்துவிட்டுத் தலையைத் திருப்பிக் கொண்டார். அம்மா சொன்னது ஞாபகம் வந்தது. புவனே சின் கணவர் ஜெகநாதனுக்கும் தகப்பனுக்கும் சரிவராது என்று. அதுதான் மூஞ்சியைத் திருப்பிக்கொண்டிருக்கிறார். புவனேஸ் குடும்பத்தைப் பற்றி ஏதும் கேட்டால் என்ன மறு மொழி சொல்வது. கார்த்திகேயனைக் கேட்டிருக்கலாம். செய்திகள் முடியத்தகப்பன் திரும்பிப் பார்த்துக் கேட்டார் "யார் சிதம்பரநாதனோ கொண்டு வந்து விட்டான்?"

Page 38
68 - ராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம்
*" என்ன கேட்கிறார்?" ஒ, ஐ, சீ, புவனேஸின் வீட்டுக்குப் போய் வந்தேன் என்றல்லவோ நினைக்கிறார்.
'உம்' என்றாள் மனம் படபடவென அடித்துக்கொண்டது. ‘ என்ன சொன்னான் கூட்டத்துக்கு வருவதைப்பற்றி தகப்பன் ஆவலுடன் கேட்டார். என்ன? கூட்டமா? என்ன கேட்கிறார்?
*" என்னிடம் ஒன்றும் சொல்லவில்லை" பட்டும் படாமலும் மறுமொழி சொன்னாள்.
'உம், நேற்றைய மழைக்கு இண்டைக்கு முளைத்த காளான் கள் இவர்கள். மைத்துனர் ஜெகநாதன் ஒரு சீர்திருத்தவாதி. இவர் சிதம்பரநாதனார் ஒரு புரட்சிவாதி. இவர்கள் மண்டைக் குள் களிமண்தான் இருக்கு புத்தி ஒன்றும் இல்லை. என்ன சொன்னார் பெரியவர் ஜெகநாதன். ' தகப்பன் சுவாரஷயத் துடன் பேசத் தொடங்கினார். மேலே கீதாஞ்சலியின் குரல் கேட்டது. ‘என்னிடம் ஒன்றும் சொல்லவில்லை யாரும்" என்று சொன்னவள் என்ன கீதாஞ்சலி இன்னும் நித்திரை யில்லையா என்றபடி எழுந்து மாடிக்குப் போனாள்.
"சகுந்தலா தோசை ஆறிப்போய்க் கிடக்கு சாப்பிடன்" தாய் கூப்பிட்டாள்.
'பசியில்லை, புவனேஸ் வீட்டில் வடை சாப்பிட்டன்" தாய் மேலே கேள்வி ஒன்றும் கேட்காமல் இருப்பதற்காக விடு விடு வென்று மேலே போனாள்.
மீனாவும் கீதாஞ்சலியும் விளையாடிக் கொண்டிருந்தார்கள். சகுந்தலா மீனாவின் அறைக்குப் போனதும் மீனா தமக்கை யைக் கூர்மையாகப் பார்த்தாள்.
** என்ன தேடுகிறாள் என் முகத்தில்". தங்கையின் பார்வை சகுந்தலாவுக்குத் தர்ம சங்கடத்தை உண்டாக்கியது.

உலகமெல்லாம் வியாபாரிகள் 69
"எப்படி புவனேஸ் மச்சாள்' மீனாவின் அழகிய முகத்தில் குறும்பு தவழ்ந்தது. தோளில் புரளும் தலைமயிரை விலத்திக் கொண்டு சிரித்தாள். சகுந்தலா மறுமொழி சொல்லவில்லை. மறுமொழி சொல்லத் தெரியவில்லை. தங்கையை நேருக்கு நேர் பார்க்கத் தயங்கினாள்.
"அம்மா சொன்னா புவனேஸ் மச்சாள் வீட்ட போனதாக."" என்னை ஏன் எல்லோரும் கேள்விகளாகக் கேட்டுத் தொலைக் கிறார்கள்.
'நான் புவனேஸ் வீட்டுக்குப் போகவில்லை" தங்கையின் முகத்தைப் பார்க்காமல் சொன்னாள் சகுந்தலா.
மீனா என்ன யோசிக்கிறாள். எதையும் யோசிக்கட்டும் எனக் கென்ன? யாரையோ கொலையா செய்துவிட்டேன்? அல்லது யாருடைய குடும்பத்தையா குலைத்துவிட்டேன்? 'கார்த்திகே யனை அப்பாவுக்குப் பிடிக்காது' மீனா சொல்வது கேட்டது. ஏதோ உள்ளொன்று வைத்துத்தான் புவனேஸ் எப்படி என்று மீனா கேட்டாள் என்று தெரியும் சகுந்தலாவுக்கு. ஆனால் கார்த்திகேயனைப்பற்றித் தன்னிடம் நேரடியாகப் பேசுவாள் என்று எதிர்பார்க்கவில்லை. சகுந்தலா-காத்திகேயன் கதை மீனாவுக்குத் தெரியாததல்ல என்று சகுந்தலாவுக்குத் தெரியும். ஆனால் ஒருநாளும் சகோதரிகள் இருவரும் தங்கள் சொந்த வாழ்க்கையை ஒருவருக்கொருவர் சொல்லிக்கொண்டதில்லை; சொல்லிக் கொள்ளச் சந்தர்ப்பமுமில்லை. மீனா சகுந்தலாவை விட ஐந்து வயது இளையவள்தான். ஆனால் அறிவில் அழகில் உலகத்தைப் புரிந்துகொண்ட விதத்தில் மீன்ா எவ்வளவோ வித்தியாசம். அவள் வாழ்க்கையைப் பார்க்கும் விதம் வேறு. வாழும் முறையும் வேறு. அதுதான் தாய் தகப்பனுக்கும் மீனாவுக்கும் இவ்வளவு சண்டையை உண்டாக்கி விட்டது. கார்த்தியைத் தகப்பனுக்குப் பிடிக்காது என்று இவளா சொல்ல வேண்டும். எனக்கு எப்பவோ தெரியும். சகுந்தலா தனக்குத் தானே சொல்லிக்கொண்டாள்.

Page 39
70 ராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம்
*"அதிலும் நீர் கார்த்தியுடன் திரிவதாகத் தெரிந்தால் கொலை செய்யவும் தயங்கமாட்டார்" மீனா தமக்கையின் முகத்தைப் பார்த்துச் சொன்னாள்.
நானும் கார்த்தியும் ஒன்றாய்ப் போனதை மீனா கண்டிருக்கி றாள். இவள் கண்டதுபோல் எத்தனை "எதிரிகள்" கண்டார் களோ? கண்டால் என்ன?
"நான் கார்த்தியுடன் திரிவதற்காகத்தான் இங்கு வந்ததாக நினைக்கிறாயா?" தங்கையில் எரிந்து விழுந்தாள். 'மற்ற வர்கள் என்ன செய்கிறார்கள் என்பதில் எனக்கு அக்கறை யில்லை. ஆனால் மற்றவர்கள் என் சொந்த விடயங்களில் தலையிடுவதுதான் எனக்கு பிடிக்கவில்லை." மீனா குழந்தை கீதாஞ்சலியைத் தன் கட்டிலில் கம்பளிப் போர்வைக்குள் மூடிய படி சொன்னாள். மற்றவர்கள், நான் எல்லாருக்கும் மற்ற வர்கள்தானா?
** மீனா தேவையில்லாமல் கதைக்கவேண்டாம். நான் உமது சொந்தவிடயங்களில் தலையிடவந்ததாக மூஞ்சியை நீட்டிக் கொண்டிருக்கிறாய். என் வாழ்க்கையே பூகம்பமாகிக் கொண் டிருக்கிறது. இந்த லட்சணத்தில் மற்றவர்கள் சொந்த விடயங்களில் தலையிட எனக்கென்ன பைத்தியமா?' " சொல்லிக்கொண்டிருக்கும் போது சகுந்தலாவின் வார்த்தை கள் வேதனையில் தடுமாறின, மீனா ஏன் தமக்கையின் முகம் இப்படிக் கலங்கிப் போயிருக்கிறது என்று தெரியாமல் தவித் தாள .
மீனாவுக்கு முழுக்கத் தெரியாவிட்டாலும் சகுந்தலா கார்த்தி கேயனைப் பற்றிய முழுவிபரமும் உஷா தெளிவாகச் சொல்லி யிருந்தாள். தன் அருமைச் சினேகிதியின் காதல் தோல்வி யடைந்த விதத்தை. உயிருக்குயிராகப் பழகிய உஷாவுக்குக் கூட ஒரு கடிதம் எழுதாமல் எல்லோருடைய உறவையும் முறித்துக் கொண்டு அமெரிக்காவில் இருக்கும் தன் சினேகிதி

உலகமெல்லாம் வியாபாரிகள் 71.
யைப் பற்றி எத்தனையோ தரம் கதைத்திருக்கிறாள் உஷா மீனாவைக் கண்ட நேரங்களில், எவ்வளவு தான் நெருக்க மாகப் பழகியிருந்தாலும் கல்யாணம் என்று ஆகி குழந்தை குட்டி என்று வந்துவிட்டால் பழைய கதைகள், பழம் நினை வாகக்கூட இருக்கக்கூடாது என்பது மீனாவின் அபிப்பி ராயம்.
கார்த்திகேயனில் எத்தனையோ மதிப்பு அவளுக்கு. லண்ட னில் உள்ள பெரிய மனிதர்கள் ஆளுக்கொரு கட்சியும் இயக்க மும் வைத்துப் போட்டிபோடுவதைப் பார்க்க அவளுக்குத் தலை யிடிவரும். இவ்வளவு கேவலமாக நடத்தப் படுகிறோம் இலங் கையில், இப்போதுகூட எங்களுக்குப் புத்தியில்லையா ஒன் றாய்ச் சேர என்று எத்தனையோ தரம் தகப்பனைக் கேட்டிருக் கிறாள். குடும்பத்தில் ஒவ்வொருவரும் ஒவ்வொரு கட்சி. தகப்பன் ஒரு கட்சி, மைத்தினி முறையான புவனேசின் கண வர் ஜெகநாதன் ஒரு பக்கம். படிக்க வந்த சிதம்பரநாதனின் மாணவர் இயக்கம் மறுபக்கம். இந்தச் சிக்கலான சூழ்நிலை யில் சொந்த வாழ்க்கையில் மட்டுமல்ல அரசியலிலும் தனக்கு எதிராக மாணவர்கள் இயக்கத்துடன் சேர்ந்து நிற்கும் கார்த் திகேயனில் அவருக்கு அளவில்லாத வெறுப்பு. அப்படியான கார்த்திகேயனுடன் தமக்கை அதுவும் ஒரு காலத்தில் காதலர் களாய் இருந்தவர்கள் ஒன்றாய்த் திரிவதென்றால்.
தமக்கையை விளங்கிக்கொள்ள முடியவில்லை மீனாவால். தன் பழைய நினைவுகளுக்குப் பயந்துதான் லண்டனுக்கு வராமல் இருக்கிறாள், எப்படி கார்த்திகேயனின் முகத்தில் விழிப்பது என்ற பயமாக இருக்கும் என்று உஷா சொன்னது நினைவு வந்தது மீனாவுக்கு, லண்டனுக்கு வந்ததும் வராததுமாகக் கார்த்திகேயனுடன் திரிகிறாளா சகுந்தலா? உலகம் தன் பாட் டுக்குக் கிடக்கட்டும். உலகத்தைப்பற்றி எனக்கு அக்கறை யில்லை என்று நினைக்கிறாளா தமக்கை? போதாததற்குச் சிவனேசனைப் பற்றி அரையும் குறையுமாக எத்தனையோ கேள்விப்பட்டிருக்கிறாள் மீனா. இதெல்லாம் உண்மையா?

Page 40
72 ராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம்
அதுதான் தன் மணவாழ்க்கையில் ஏற்பட்ட விரக்தியின் கார ணமாக பழைய காதலனைக் கண்டதும் மனம் பேதலித்து விட் டதா? தமக்கையைப் புரிந்து கொள்ளமுடியாமலிருந்தது மீனா வுக்கு. அதே நேரம் கார்த்தியின் செயலும் விளக்கமுடிய வில்லை. தகப்பனின் எதிரி, மகளின் காதலனாக இருந்தவன். இப்போது சகுந்தலாவைக் கண்டதும் இப்படியா நடந்து கொள்வது? தமக்கையும் தங்கையும் கொஞ்சநேரம் பேசிக் கொள்ளவில்லை.
* கார்த்தியுடன் என்னைக் கண்டதை அம்மாவுக்குச் சொன் னாயா?" சகுந்தலா கேட்டாள்.
'அவ்வளவு முட்டாள் இல்லை நான். ஆனால் ஒன்று சொல்ல விரும்புகிறேன். இந்தப் பக்கம் நிறையத் தமிழ் ஆட்கள். இப்படித்தான் நாம் வாழவேண்டுமென்று எதிர்பார்ப்பவர்கள். கல்யாணமான பெண் தனது பழைய." மீனா முடிக்க வில்லை.
சகுந்தலாவின் கழுத்து நரம்புகள் புடைத்தன. ஆத்திரத்தில் முகம் சிவந்தது. கோபத்தின் எல்லைமீறி கண்கள் நெருப்புக் கிண்ணங்கள் போல் இருந்தன.
'சட் அப் மீனா. கல்யாணமாகிய பெண் எப்படி வாழவேண் டுமென்று எனக்குச் சொல்லத் தேவையில்லை. நான் எந்த சொந்த சந்தோஷத்தையும் தேடி லண்டனுக்கு வரவில்லை. என் வாழ்க்கையில் மற்றவர்கள் நினைக்கிறபடி சந்தோஷம் பொங்கி வழியவில்லை. அதற்காக நியாயமற்ற வழிகளில் சந்தோஷம் தேடுமளவுக்கு என் புத்தி பேதலித்துப் போக வில்லை. எனக்குத் தெரியும். கார்த்திகேயனுடன் ஒன்றும் உல்லாசப் பிராயணம் போகவில்லை" மிகுதியை எப்படி இவ ளுக்கு விளங்கப்படுத்துவது. என் கணவருக்குப் போன் பண்ணி னேன். அவர் இன்னொரு பெண்ணுடன் உல்லாசம் பண்ணிக் கொண்டிருக்கிறார். அந்த வேதனையில் கால்போன போக்கில்

உலகமெல்லாம் வியாபாரிகள் 73
நடந்துபோய் மழையில் அகப்பட்டபோது கார்த்தியைக் கண் டேன் என்று சொல்வதா?
ஏன் எல்லோருக்கும் என் சொந்த வாழ்க்கையைப் பற்றிச் சொல்லிக்கொண்டு திரியவேண்டும். தன்னை முழுக்கமுழுக்கப் புரிந்தவனான கார்த்திகேயனே என்ன சொன்னான். சொறி சகுந்தலா. என்னால் ஒன்றும் சொல்லத் தெரியவில்லை. இது உன் சொந்த விடயம்! என்றுதானே சொன்னான்.
இவள் என்ன சொல்லி விடப்போகிறாள்? சொறி சகுந் தலா' என்று சொல்லலாம். யாருக்கு வேணும் வெறும் "சொறி?" யாருக்கு வேணும் பரிதாப வார்த்தைகள்? அதை விட மீனா நினைக்கமாட்டாள் என்று என்ன நிச்சயம் தன் கணவன் இன்னொரு பெண்ணைப் பார்ப்பது என் பிழைதான் என்று, தமக்கையின் கோபத்தைக் கண்டு ஒருகணம் பயந்து போனாள் மீனா. 'நியூயோர்க்கில் இருந்து வந்திருக்கிறாய் சகுந்தலா, லண்டனில் தமிழர்கள் எப்படி மனம் படைத்திருக் கிறார்கள் என்று சொல்ல நினைத்தேன்' என்றாள் அமைதி யாக தமக்கையின் முகத்தில் ஒரு விரக்தியான சிரிப்புத் தோன்றி மறைந்தது. 'மீனா எங்கிருந்தாலும் நான் தமிழ்ப் பெண் என்பதையோ ஒரு கல்யாணமான தமிழ் பெண்ணின் கடமை என்ன என்பதையோ நான் மறக்கவில்லை. உன்னை யும் கீதாஞ்சலியையும் தேடவந்த நான் ஏதோ யோசனையில் சும்மா நடந்துபோய் மழையில் அகப்பட்டு விட்டேன். அம்மா வுக்குக் கார்த்தியுடன் வருவதைச் சொல்ல விருப்பமில்லை. அதற்குத்தான் புவனேஸ் வீட்டுக்குப் போவதாகச் சொன் னேன்'. சகுந்தலா விளக்கமாகச் சொன்னாள்.
"ஏன் உடனடியாக வீட்டுக்கு வரவில்லை" என்று கேட்க நினைத்தாள் மீனா. தமக்கை ஏன் என்னைக் குறுக்கு விசாரணை செய்கிறாய் என்று கேட்டாலும் என்று நினைத் துக்கொண்டு மெளனமானாள்.

Page 41
74 ராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம்
'மீனா உன்னை மனம் மாற்ற வந்ததாக நினைக்காதே. எனக்குத் தெரியும் நீ எப்படி வேதனைப்படுவாய் என்று. ஆனால் எங்கள் கலாச்சாரம் பண்பு எல்லாம் மறந்து ஒரு ஆங்கிலேயனுடன் எப்படிச் சீவிக்கலாம் என்று தெரியாது. உஷாவும்தான் இங்கிலீஷ்க்காரனைச் செய்தாள். என்ன நடக்கிறதோ தெரியாது அவள் வாழ்க்கையில். கார்த்தி போன்ற ஆட்களை ஒன்றும் பாதிப்பதில்லை. ஆனால் நாங்கள் பெண்கள். யோசித்துச் செய்." மீனா பிரமை பிடித்துப்போய் இருக்க சகுந்தலா எழுந்து போய்விட்டாள்.
உஷா இங்கிலீஷ்க்காரனைச் செய்து எப்படி இருக்கிறாளோ தெரியாதாம். உஷா விவாகரத்துச் செய்துவிட்டாள் என்று தெரிந்தால் எப்படியிருக்கும் சகுந்தலாவுக்கு?
O O O
மீனா அன்று வேலைக்குப் போகவில்லை. சகுந்தலா இர விரவாக நித்திரையின்றிப் புரண்டுவிட்டு நித்திரையாக விடியற்காலை ஆகிவிட்டது. எழுந்தபோது மீனாவும் கீதாஞ் சலியும் எங்கேயோ வெளிக்கிடத் தயாராக இருந்தார்கள்.
"எங்க பிரயாணம்?" கோப்பி குடித்துக்கொண்டே கேட்டாள் சகுந்தலா.
"நான் இன்று வேலைக்குப் போகவில்லை. கீதாஞ்சலியைக் கூட்டிக்கொண்டு வெளியால் போக யோசிக்கிறன். நீங்கள் வரவில்லையா சகுந்தலா'' என்றாள்.
வீட்டிலிருந்துதான் என்ன? மீனாவுடன் போக யோசித்தாள். அம்மா தொண தொணத்துக்கொண்டிருப்பா மீனாவுக்கு புத்தி சொல்லச் சொல்லி. சகுந்தலா வெளிக்கிட்டாள்.
வைகாசி மாத இளம் குளிரில் பச்சைப் பசேல் என்ற இளம் தளிர்கள் சுகம் கண்டுகொண்டிருந்தன. இங்கிலாந்தில்

உலகமெல்லாம் வியாபாரிகள் 75
பெய்த பனிமழை குறைந்து இளம் சூடு உடம்பில் பட்டது. குளிர்கால ஓவர் போடத் தேவையில்லை. உலகம் பிரகாச மாய்த் தெரிந்தது. பெருமூச்சுவிட்டாள் சகுந்தலா, என்னைப் பொறுத்தவரையில்?
சிவநேசன் இன்னும் போன் பண்ணவில்லை. கடிதம் எழுத லாம். எழுதுவானா நான் இன்னொரு பெண்ணுடன் இருந் தேன் என்பதை?
இப்படி எவ்வளவு பொய்ம்மைகளை மறைத்துக்கொண்டு வாழவேண்டியிருக்கிறது. உலகத்தில் எத்தனை தம்பதிகள் இப்படி ஒருவரில் ஒருவர் உண்மையில்லாமல் வாழ்கிறார்கள். இப்படி ஒரு தாம்பத்திய வாழ்க்கை அவசியமா? கார் நீண்ட நேரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. எங்கு போகிறாள் மீனா. கார் ஓல்ட்கேன்ட் ரோட்டில் ஓடிக்கொண்டிருந்தது.
'மீனா எங்கு போகிறாய். குழந்தையை லண்டன் காட்டக் கூட்டக்கொண்டு போகிறாய் என்றெல்லவோ நினைத் தேன்." சகுந்தலா புதிதாக எழும்பிக்கொண்டிருக்கும் வான ளாவிய கட்டிடங்களைப் பார்த்துக்கொண்டு கேட்டாள். இந்த இடங்கள் ஐந்து வருடங்களுக்கு முன் இடிக்கும் நிலை யில் இருந்த விக்டோரியன் வீடுகளுடன் காட்சியளித்தது ஞாபகம் வந்தது அவளுக்கு. நியூகுறோஸ் ஸ்ரேசன்! உஷா எங்கேயிருப்பாள் இப்போது, நியூகுறோஸ் ஸ்ரேசனுக்கு முன் உள்ள ரோட்டில் தானே றொபினைக் கல்யாணம் முடித்தபின் வசித்தாள். கார் கிறினிவிச் பார்க்கில் நுழைந் தது. மத்தியான வெயிலின் மெல்லிய சூட்டில் ஆயிரக்கணக் கான டவோர்டில் பூக்கள் முகம் மலர்ந்து சிரித்தன, தூரத் தில் சில புள்ளி மான்கள் விழிகள் உயர்த்தி இவர்களை வியப் புடன் பார்த்தன. கார் நின்ற இடத்திலிருந்து தூரத்தில் உள்ள பெஞ்சில் இருந்த வாலிபனிடம் போய் மீனா ஏதோ கதைத்தாள். பின் இருவரும் ஏதோ கதைத்துச் சிரித்துக் கொண்டு வந்தார்கள்.

Page 42
76 ராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம்
"சகுந்தலா இவர்தான் என் வருங்காலக் கணவர் அன்ரனி கார்ட்டர். அன்ரனி இவள் என் சகோதரி சகுந்தலா சிவநேசன்" காரை விட்டுக் கீழே இறங்கக்கூட இல்லை. சகுந்தலா ஒருகணம் திடுக்கிட்டுப்போய் இருந்தாள். தங்ை யின் திடீர் ஏற்பாட்டில் குழம்பிப்போய், சகுந்தலா அவசர அவசரமாய் இறங்கி "ஹலோ, ஹவ் டூ யூ டூ என்றாள். இங்கிலிஸ்க்காரருக்கே உரிய பெரிய தோற்றம். பூனைக் கண்கள். பொன்னிறத் தலை. சிரித்த முகம். பார்த்த உடனேயே சகுந்தலாவுக்கு அன்ரனியைப் பிடித்துவிட்டது. தாய் தகப்பனுக்கல்லவோ பிடிக்கவேண்டும். அன்ரனி எடுத்த எடுப்பிலேயே கேட்டான் 'என்னைச் செய்ய வேண்டாம் என்று உங்கள் தங்கைக்குச் சொல்ல வந்ததாகக் கேள்விப் பட்டன்." சகுந்தலாவுக்கு மீனாவில் கோபம் வந்தது. எத்தனை பேருக்குச் சொல்லி வைத்திருக்கிறாள் இப்படி.
**நான் அப்படி ஒன்றும் பிளான் பண்ணிக்கொண்டு வர வில்லை. அம்மா அப்பா மீனாவின் எதிர்காலத்தைப் பற்றி பயப்படுகிறார்கள். கல்யாணம் என்பது ஆயிரம் காலத்துப் பயிர் எங்களைப் பொறுத்தவரையில். உங்களைப் பொறுத்த வரையில் கல்யாணம் பெரிய முக்கியமில்லை. இன்றைக்கு கல்யாணம் நாளைக்கு விவாகரத்து. அதுதான் மீனாவைச் சொன்னேன், செய்வதை யோசித்துச் செய்யச் சொல்லி. சகுந்தலா கஷ்டப்பட்டு தன் பிரசங்கத்தை முடித்துக்கொண் டாள். அன்ரனியின் ஊடுருவும் பார்வையைத் தாங்காமல் எங்கோ பார்வையைத் திருப்பிக் கொண்டாள். பார்க் முழுக்க நிறநிறமான பூக்கள் போல வித்தியாசமான உடையணிந்த பலநாட்டு மக்களும் நிறைந்து வழிந்தனர். குழந்தை கீதாஞ்சலி குதூகலத்துடன் கிறினிவிச் ரேகையில் துள்ளிக் குதித்து விளையாடினாள். மீனா குழந்தைக்குச் சொல்லிக் கொண்டிருந்தாள், இந்த ரேகையில் இருந்துதான் உலகத்தில் நேரத்தைக் கணிக்கிறார்கள் என்று. தூரத்தில் தேம்ஸ் நதி பாம்புபோல் வளைந்து பலதரப்பட்ட கப்பல்களைச் சுமந்து கொண்டு தவழ்ந்தது.

உலகமெல்லாம் வியாபாரிகள் 77
"ஏன் உங்கள் தாய் தகப்பன் மீனாவின் கல்யாணத்துக்கு எதிராக இருக்கிறார்கள்" அன்ரனி கேட்டான். என்ன பதில் சொல்வது இவனுக்கு? மீனா இவ்வளவுநாளும் சொல்லாமலா இருப்பாள் ஏன் எதிர்க்கிறார்கள் என்று.
"பலகாரணங்கள். வித்தியாசமான வாழ்க்கைமுறை ஒரு காரணம் என்று நினைக்கிறேன். இங்கிலாந்தில் கறுப்பரின் எதிர்காலம் எப்படியிருக்கும் என்ற பயம் இன்னொரு கார ணம், கலப்புக் குழந்தைகளின் பிரச்சனைகள்தான் இப்போதே தெரிகிறதே? தாயின் வழியிலா தகப்பனின் வழியிலா வாழ்க் கையை அமைத்துக் கொள்வது என்ற பிரச்சனையவர்களுக்கு ஏற்படலாம். காதலிக்கும்போது எதிர்காலம் ஒரு பிரச்சனை யும் இல்லாமல் தெரியலாம். நாள் போகப் போகத்தான் தெரியும் எப்படிப் பிரச்சனைகள் வருமென்று." சகுந்தலா தனக்குத் தெரிந்தமாதிரி இலகுவான விதத்தில் விளங்கப் படுத்தினாள் தாய் தகப்பனின் மனநிலையை.
**சகுந்தலா நீங்கள் தாய் தகப்பன் சொன்னவரைத்தானே செய்தீர்கள்?" அன்ரனி மரத்தில் சாய்ந்தவாறு நின்று கேட்டான்.
ஓகோ இவருக்கும் சொல்லியிருக்கிறாளா மீனா தன் பழைய கதையைப் பற்றி?
"ஓம் அதற்கென்ன’’ சகுந்தலா அவனின் கேள்வியின் உள் அர்த்தம் தெரியாமல் கேட்டாள்.
"தயவுசெய்து நினைக்கவேண்டாம், தனிப்பட்ட விடயங்களை பற்றிக் கேட்பதாக நினைக்கவேண்டாம். சொல்லுங்கள் சகுந்தலா, உண்மையான மனத்துடன், நீங்கள் மேலைநாட்டு வழக்கமுறை தெரிந்துகொண்டும் முன்பின் தெரியாத ஒருத்த ரைச் செய்து விட்டு அவரின் திருப்திக்காக வாழ்க்கை எல்லாம் அர்ப்பணிப்பதை விட்டு விட்டு ஒரு நாளும் நினைக்க

Page 43
உலகமெல்லாம் வியாபாரிகள் 78
வில்லையா எனக்குப் பிடித்த ஒருத்தரைச் செய்து. அன்ரனி யின் பேச்சை சகுந்தலாவின் கூரிய பார்வை தடுத்தது.
"அன்ரனி, உங்கள் வாழ்க்கை முறையில் காதலித்த துணை யைக் கல்யாணம் செய்வது பண்பாடு. எங்கள் வாழ்க்கை முறையில் கல்யாணம் செய்தவரைக் காதலிப்பது பண்பாடு. எதற்கும் ஒரு விலையுண்டு. என்ன கொடுக்கிறோமோ அதன் விலைதான் கிடைக்கும்." சகுந்தலாவின் மனம் அழுதது. எப்படித் திருத்த முயன்றும் தன்னில் சந்தேகப்பட்டு நடத்தும் கணவனை வைத்துக்கொண்டு இப்படி என்னால் பொய் சொல்ல எப்படி முடிந்தது என்று நினைத்தாள். தனக்குப் பிடித்த ஒருவனைச் செய்துகொண்டு. அவனுக்குத்தான் அந்தத் தலைவிதியில்லையோ அதற்காக வாழ்க்கையில் எனக்குத் தோல்வி என்று சொல்லிக் கொள்ளத் தயாராய் இல்லை.
என்ன போலி வாழ்க்கை?
"'என்ன பெரிய தர்க்கம் நடக்கிறது?"மீனா கேட்டுக்கொண்டு வந்தாள். அன்ரனியையும் அவளையும் பார்க்க பூரண நில வும், அமாவாசையும் போல் இருந்தது. மீனா நல்ல நிறம் தான். ஆனால் அன்ரனியின் வெளிறிய தோலுக்கு முன்னால் மீனாவின் நிறம் தெரியவில்லை. இங்கிலாந்தில் சாதாரண மாக நடக்கும் கல்யாணங்கள்போல் இவர்கள் கல்யாணமும் விவாகரத்தில்போய் முடியுமா?
'ஏன் எங்கள் கல்யாணத்துக்கு உங்கள் தாய் தகப்பன் எதி ராக இருக்கிறார்கள் என்று உங்கள் தமக்கையைக் கேட்டேன். அதற்குப் பல தத்துவக் கருத்துக்கள் மறுமொழிகளாக வரு கின்றன." அன்ரனி சிரித்துக்கொண்டு சொன்னான். எவ்வளவு துணிவு மீனாவுக்கு? எனக்கேன் இல்லாமற் போய் விட்டது. இலங்கையனைக் காதலித்ததற்கே எனக்குப் பேச்சு. இவள் இந்த வெள்ளைக்காரனுடன்; எவ்வளவு

உலகமெல்லாம் வியாபாரிகள் 79
பேச்சு விழுந்திருக்கும். இப்படித் துணிவுள்ளவள் ஏன்
சொல்லாமல் கொள்ளாமல் கல்யாணத்தை முடித்துவிட்டு
இருப்பதுதானே? ஏன் உத்தியோகபூர்வமாக அறிவித்துவிட்டு அவதிப்படுகிறாள்? போதாதற்கு என்னையும் இழுத்தடித்து. மத்தியானச் சாப்பாடு ஒரு இந்தியன் கடையில் சாப்பிட்டு விட்டு அன்ரனியைக் கொண்டுபோய் கிறினிவிச்சில் விட்டாள் மீனா.
சொல்லாமல் கொள்ளாமல் அன்ரனியை அறிமுகப்படுத்தியது போல் இன்னும் என்னென்ன செய்வாளோ இந்தக் குறும்புக் காரி எனத் தங்கையைப் பேசிக்கொண்டாள் மனதில்.
"ஏன் விம்பிள்டனில் ஒருவரும் இல்லை என்று கிறினிவிச்சுக்
குத் தேடி வந்தாயா மாப்பிள்ளையை பிடிக்க" தங்கையைக் கேட்டாள் சகுந்தலா, மத்தியான வெயில் முடிந்து குளிர்காற்று திறந்திருந்த கார் ஜன்னலால் உள்ளே புகுந்து விளையாடி யது. "இவர் கிறிணிவிச்சில் வேலைசெய்கிறார். சொந்த இடம் வால்த்தம்குறோஸ். யூனிவர்சிட்டியில் பழக்கம்" என்றாள் மீனா. தமக்கை அன்ரனியைப் பற்றி என்ன நினைக்கிறாள் என்று தங்கை கேட்கவில்லை. நீங்கள் யார் நினைத்தாலும் என்ன நினைத்தாலும் அக்கறை இல்லை" என்று நினைக்கிறாளா மீனா? "அவ்வளவு துணி வுள்ள நீ ஏன் அம்மா அப்பாவுக்குச் சொல்லித் துக்கப் படுத்த வேணும். பேசாமல் கல்யாணம் செய்வதுதானே? என்னையும் இழுத்தடித்து என்ன கூத்துக் காட்டுகிறாய்" சகுந்தலா கடிந்துகொண்டாள் தங்கையை.
"அப்பாவும் அம்மாவும் இப்படிக் காட்டுமிராண்டித்தனமாக எதிர்ப்பார்கள் என்று நான் நினைக்கவில்லை. அத்துடன் உலகம் முன்னேறிக்கொண்டு போகிறது. அவர்களும் முன் னேறியிருப்பார்கள் என்று நினைத்தேன். உனக்குச் செய்த கொடுமையை எனக்குச் செய்வார்கள் என்று நான் நினைக்க வில்லை." மீனா காரோட்டும் கவனத்தில் பார்வையைப்

Page 44
80 ராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம்
பதித்திருந்ததால் சகுந்தலாவின் முகத்தில் படர்ந்த இருளைக் கவனிக்கவில்லை.
'மீனா அவர்கள் எங்களுக்கு நன்மையைத்தான் செய்கிறார் கள். திட்டம்போட்டு எங்களைத் துன்பப்படுத்தவில்லை." சகுந்தலா தங்கையைச் சமாதானம் பண்ணும் தொனியிற் சொன்னாள்.
"சகுந்தலா, தாய் தகப்பனில் எனக்கு அன்பில்லாமல் இல்லை. அவர்களில் உனக்கு எவ்வளவு அன்பிருக்கிறதோ அதைவிடக் கூட எனக்கிருக்கலாம். எங்கள் படிப்புக்காக முன்னேற்றத்துக்காக அவர்கள் எவ்வளவு செய்கிறார்கள் என்று தெரியாமல் இல்லை. ஒன்று உனக்கு விளங்க வேண் டும். சகுந்தலா எங்களில் அன்புக்காக மட்டுமல்ல தங்கள் அந்தஸ்துக்காகவும்தான் இவ்வளவு கஷ்டப்படுகிறார்கள். ஒரு எக்கவுண்டனின் மகள் உதவாக்கரை யாரையும் செய்யக் கூடாது என்றுதான் தங்கள் அந்தஸ்துக்குத் தகுந்த மாப்பிள்ளை தேடுகிறார்கள். எங்கள் விருப்பு வெறுப்பைப் பற்றி அவர்களுக்கு அதிகம் கவலையில்லை. எல்லாம் பணம் அந்தஸ்து அடிப்படையில்தான்' மீனா சொல்லிக்கொண்ட்ே போனாள்.
** மீனா அப்பா அம்மாவைப் பற்றி இவ்வளவு குரூரமாகப் பேசாதே. உலகத்தில் எந்தத் தாய் தகப்பனும் பிள்ளை களுக்குத் தகுந்ததைத்தான் செய்வார்கள்' சகுந்தலா தாய் தகப்பனுக்குப் பரிந்து பேசினாள்.
"இவள் மீனாவுக்குப் புத்திசொல் சகுந்தலா" என்று கெஞ்சும் தாயின் முகம் ஞாபகம் வந்தது, எவ்வளவு பரிவு பாசம் அந்தத் தாயின் முகத்தில்.
"அப்படியா சகுந்தலா, எங்கள் சந்தோஷத்தில் அக்கறை உள்ளவர்கள் ஏன் உன் விருப்பப்படி நடந்துகொள்ளவில்லை. என்ன குறை கார்த்திகேயனுக்கு? ஏதோ யார் காலையோ,

உலகமெல்லாம் வியாபாரிகள் 8.
கையையோ பிடித்து லண்டனுக்குப் படிக்க வந்தாற்போல் இவர்கள் எல்லாம் பெரிய ஆட்களோ என்ற சின்ன மனப் பான்மையிற்தானே உன்னைச் சிவநேசனுக்குச் செய்து வைத் தார்கள். மீனாவின் கேள்விகள் ஈட்டிகளாய்க் குத்தித் துளைத்தன சகுந்தலாவின் மனதில்,
"எல்லாம் என் தலைவிதி. என் விதி அப்படி என்பதற்காக ஏன் மற்றவர்களை நொந்துகொள்ள வேண்டும்?' சகுந்தலா ஏனோதானோ என்று சொன்னாள். மீனா மெல்லமாகச் சிரித்தாள். ' என்ன இளிக்கக் கிடக்கு" தங்கையில் எரிந்து விழுந்தாள் சகுந்தலா.
*நான் விதியிற் பழியைப் போட்டுவிட்டு எந்தக் குடிகாரனை யும் செய்யத் தயாராயில்லை." என்ன துணிவு இவளுக்கு இப்படி சகுந்தலாவை மட்டம்தட்ட. சகுந்தலாவுக்கு மனம் நொந்தது.
சகுந்தலாவின் முகம் சிவந்தது. கோபத்தில் தங்கையைப் பேச வாய் எடுக்கமுதல் கார் சட்டென்று நின்றது. மீனா துள்ளிக் குதித்துக்கொண்டு போய் கதவைத் தட்டினாள். இது யார் வீடு? சொல்லாமற் கொள்ளாமல் எங்கெல்லாம் இழுத்தடிக்கிறாள் இவள். குழந்தை சித்திக்குப் பின்னால் குதித்து ஓடியது. தங்கையில் முணுமுணுத்துக்கொண்டு பின்னால் போனாள் சகுந்தலா.
தட்டிய கதவு திறந்தது. சகுந்தலா திறந்த வாய் மூடாமல் கதவைத் திறந்தவளைப் பார்த்தாள். அவள் கண்கள் வியப் பால் விரிந்தன. உஷா சகுந்தலாவுக்கு வாய் வரவில்லை. "என்னடி ராசாத்தி நான்தான். என்ற ஆவியல்ல இது." உஷா ஒரு துளியும் மாறவில்லை. அதே அழகிய முகம். கலகலப்பான வாய். நீண்ட பெரிய விழிகள்.
'உஷா," சகுந்தலா மேலே ஒன்றும் சொல்லவில்லை. மீனா குழந்தை கீதாஞ்சலியுடன் ஐஸ்கிறீம் கடைக்குப்

Page 45
82 ராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம்
போய்க்கொண்டிருந்தாள். ' என்ன சகுந்தலா அப்படிப் பார்க்கிறாய்? உள்ளுக்கு வா. நீதான் எங்களையெல்லாம் மறந்தாலும் நாங்கள் யாரும் உன்னை மறக்கவில்லை." உஷா சினேகிதியின் தோளில் கைபோட்டு அழைத்தாள். 'இவள் மீனா எனக்கேன் சொல்லவில்லை? உன்னிடம் கூட்டிக்கொண்டு வருவதாக" சகுந்தலா சந்தோஷத்தின் பரபரப்பில் கேட்டாள். உஷாவின் கலகலப்பு ஒருதரம் மறைந்தது முகத்திலிருந்து.
'நான்தான் சொன்னேன் சொல்லாமற் கொள்ளாமல் கூட்டிக்கொண்டு வரச்சொல்லி. " உஷா குசினிக்குப் போய்க் கொண்டு சொன்னாள். ? ? ஏன் உஷா சகுந்தலா விளங்காமற் கேட்டாள். எல்லாம் என்ன மர்மமா மீனாவையும் உஷா வையும் பொறுத்தவரையில்? பின்தொடர்ந்து வந்த சினேகிதி யின் முகத்தில் தவழும் வியப்பைக் கவனித்தபடி சொன்னாள் உஷா.
"எங்களுடன் ஒரு தொடர்பும் வைத்துக்கொள்ளக் கூடாது என்று நினைத்திருக்கிறாய். அதுதான் இவ்வளவுநாளும் ஒரு கடிதம்கூடப் போடாமல் இருந்தாய். நான் உன் மெளனத்தைக் கலைக்க விரும்பவில்லை. உனக்கு உன் பழைய நினைவுகளைக் கிளறுவது வேதனையாக இருக்கு மென்று இருந்தால் நான் எதுவும் கதைக்கவில்லை. ' உஷா சினேகிதியின் முகத்தைக் கூர்மையாகப் பார்த்துக்கொண்டு சொன்னாள்.
என்ன பெருந்தன்மை என் சினேகிதிக்கு. இத்தனை நாள் ஒரு கடிதம்கூடப் போடாமல் இருந்த என்னை மன்னிக் கிறாள். எனக்குத் துன்பமாக இருந்தால் பழைய கதைகளைக் கதைக்கக்கூட விரும்பவில்லை என்கிறாள்.
"'நான் கோழையாக இருந்தது உண்மைதான் உஷா. உன் கடிதங்களுக்குக்கூட பதில் எழுதாமல் இருந்தது கோழைத் தனத்தில்தான். இப்போது அப்படியில்லை. எப்படித் துன்

உலகமெல்லாம் வியாபாரிகள் 83
பங்களோடும் துயரங்களோடும் வாழ்வது என்று பழகிவிட் டேன். எந்தப் பழைய நினைவும் என்னைப் பைத்தியக்காரி யாக்காது என்று நினைக்கிறேன்.' சொல்லும்போது கண்கள் கலங்கின.
மீனா குழந்தையுடன் வருவது தெரிந்தது.
**தாயைப் போலவே இருக்கிறாள் உனது மகள். என்ன பெயர்" குழந்தையை அணைத்துக்கொண்டு கேட்டாள் உஷா. கோப்பிக் கோப்பையுடன் ஆறுதலாக உட்கார்ந்தவள் சினேகிதி உஷாவை நேரடியாகப் பார்த்துக்கொண்டு சொன் 6Tf6
*" என் மகளின் பெயர் கீதாஞ்சலி" உஷா திடுக்கிட்டுப் பார்த் தாள் சினேகிதியை. மீனா டெலிவிஷனில் ஏதோ திருப்பிக் கொண்டு இருந்தாள். சினேகிதிகள் இருவரும் ஒருவரை ஒருவர் பார்வையால் படித்துக்கொள்ள முயல்வதை அவள் அறியவில்லை. உஷா முகத்தில் சிரிப்பை வரவழைத்துக் கொண்டு 'என்ன மீனாவின் கல்யாணத்துக்கா வந்தீர்" என்றாள்.
'ஒமோம் மீனா வெற்றிலை வைத்துக் கூப்பிட்டாள் வெள்ளைத் தோலுக்குப் பின்னால் ஓடப்போவதாக, வந்து சேர்ந்திருக்கிறேன்" சகுந்தலா சொன்னாள் உஷாவுக்கு. நீயும் என்ன என்னை மீனாவின் கல்யாணத்தைக் குழப்ப வந்திருக்கிறாயோ என்று கேட்கவா போகிறாய் என்பது போல் பார்த்தாள் சகுந்தலா.
*உடுப்புத் தைப்பதும், உரியவனைத் தேர்ந்தெடுப்பதும் அவரவர் உள்ளத்தைப் பொறுத்தது என்பார்கள். எனக்கேன் தேவையில்லாத வேலை" சகுந்தலா அமைதியாகச் சொன் னாள்.

Page 46
84. ராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம்
*" என்னிடம் சொல்லும் இதே கருத்தை உமது தாய் தகப்ப
னுக்குச் சொன்னால் என்ன? வெள்ளைக்காரனைச் செய்வதை
விட நீ செத்துப்போனால் சந்தோஷப்படுவேன் என்று சொன் னாவாம் உனது தாய்" உஷா சொன்னாள். 'என்னைப் பொறுத்த அளவில் எனக்கிருக்கும் சொந்தப் பிரச்சனைகளே போதும். மீனாவுக்குத் தெரியும் என்ன செய்யவேண்டு மென்று. ஏன் கெதியாய்ச் செய்கிறாள் இல்லை என்றுதான் தலையிடியாக இருக்கிறது. இந்தக் கூத்து ஒன்றையும் பார்க் காமல் ஓடிவிடலாம்.' சகுந்தலா அலுத்த குரலில் சொன்
6T6.
'இவ்வளவு செலவழித்து வந்துவிட்டாய். இன்னும் ஒரு மாதத்தில் எல்லாம் முடியவிட்டுப் போகலாம். இந்தக் கிழமை முடிவில் அன்ரனி வியாபார விடயமாக ஹொஸ்கொக் போகிறார். ஒரு மாதத்தில் வருகிறார். பின்னர் யாருக்கும் கவலையில்லாமல் போய்த் தொலைகிறேன்." மீனா வேடிக்கையாகச் சொன்னாலும் போய்த் தொலைகிறேன் என்பதை அழுத்தமாகச் சொல்லும்போது தமக்கையைப் பார்த்தாள்.
தங்கையின் மனநிலை புரிந்தது சகுந்தலாவுக்கு. இந்த நாடகம் பார்க்க வராமல் நியூயோர்க்கிலேயே இருந்திருக்க லாம் என்று தோன்றியது சகுந்தலாவுக்கு
"அதுசரி உஷா எங்கே உமது கணவர்?" சகுந்தலா சினேகிதியைக் கேட்டாள்.
உஷா மீனாவைக் கருத்துப்பொதிந்த விதத்தில் பார்த்தாள். 'உமது கணவர் றொபினை மீனா என்ன அவளின் ஜின்ஸ் பொக்கட்டிலா வைத்திருக்கிறாள்?* சகுந்தலா வேடிக்கை யாகச் சிரித்துக்கொண்டு கேட்டாள். மீனா டெலிவிஷன் பார்க்கும் பாவனையில் முகத்தைத் திருப்பிக் கொண்டாள்.
உஷா மீனா மாதிரி தாய் தகப்பனை எதிர்த்துக்கொண்டு வெள்ளைக்காரனைச் செய்தவள். அதன் காரணமாக

உலகமெல்லாம் வியாபாரிகள் 85
பேரின்பநாயகத்தார் சகுந்தலாவை உஷாவுடன் பழகக் கூடாது என்றுகூடத் தடை விதித்திருந்தார்.
எங்கே றொபின் போய்விட்டான். கேள்விக்குறியுடன் சினேகிதியைப் பார்த்தாள் சகுந்தலா, "மீனா சொல்ல வில்லை. நான் றொபினை விவாகரத்துச் செய்துவிட்டேன்" என்றாள் உஷா.

Page 47
திடீரென்று கல்யாணம் நிச்சயமாகி, கல்யாணம் நடந்து, அமெரிக்கா போய் ஐந்து வருடங்களாக நடக்காத நிகழ்ச்சிகள் எல்லாம் லண்டனுக்கு வந்து இரண்டு கிழமைக்கிடையில் நடப் பதாகப் பட்டது சகுந்தலாவுக்கு. உலகத்தின் ஒருகோடிக்கு ஓடிவிட்டால் எல்லாம் நடக்காமல் விடுமா?
உஷா பெரிய குடும்பத்துப் பெண் கொழும்பில். தமயன் லண் டனில் படித்துக் கொண்டிருந்தான். மகளைப் பிடித்து அனுப் பியிருந்தார்கள் படிக்க. பேரின்பநாயகத்தாரின் சினேகித ருக்குத் தெரிந்த குடும்பம் உஷாவினுடையது. குமர்ப்பிள் ளையை அனுப்பியிருக்கிறோம். புண்ணியமாக இருக்கும் உங்களுக்கு; அவளில் ஒருகண் வைத்திருங்கோ என்று பேரின்ப நாயகம் தம்பதிகளை கேட்டுக்கொண்டார்கள் உஷாவின் பெற்றோர். வந்து கொஞ்சநாட்கள் ஒரு கரைச்சலும் கொடுக்கவில்லை உஷா.
தமயன் படிப்பு முடிய கனடாவுக்குப் போய்விட்டான். வார விடுமுறையில் பேரின்பநாயகம் வீட்டுக்கு வருவாள். காலம் போகப் போக உஷாவின் வருகை குறைந்தது. சகுந்தலா வுக்குத் தெரியும் ஏன் என்ற காரணம். ஒருநாள் வந்து சொன்

உலகமெல்லாம் வியாபாரிகள் 87
னாள் தான் றொபின் என்னும் வெள்ளைக்காரனைச் செய்யப் போவதாக.
பேரின்பநாயகத்தார் உஷாவின் தாய்தகப்பனுக்குத் தந்தி அடித்தார். தமயனுடன் டெலிபோனில் கதைத்தார். ஆனால் உஷா யாருடைய எதிர்ப்பையும் பொருட்படுத்தாமல் பதிவுத் திருமணம் செய்துகொண்டாள். ኣ
சகுந்தலா உஷாவுடன் கதைக்கக் கூடாது என்று தடை விதிக் கப்பட்டது. சகுந்தலாவைப்பொறுத்தவரையில் எல்லாம் பேச் சளவில்தான். மறைமுகமாகச் சினேகிதியைச் சந்தித்தாள்.
உஷாவின் உதவியாற்தான் கார்த்தியுடன் கதைக்கமுடிந்தது. தாய் தகப்பனுக்குத் தெரிந்ததோ இல்லையோ சகுந்தலா கள்ளமாகக் கார்த்திகேயனுடன் கதைப்பதை அவர்களாற் தடுக்க முடியவில்லை. உஷாவைப் பற்றி, வாய் போனபடி திட்டினாள் பார்வதி. பெண்கள் பெண்களாக அடக்கமாக இருக்காமல் என்ன ஆட்டம் இவர்களுக்கு. பிடித்தவள் பிடித்தாள் ஒரு இலங்கைப் பெடியனைப் பிடிக்கக்கூடாதோ என்று பார்வதி சீறிக்கொண்டிருந்தாள்.
**மானம் மரியாதையில்லாமல் இங்கிலிஸ்காரனுடன் பழகும் உஷாவுடன் உனக்கு ஒரு கதையும் தேவையில்லை" என்று சகுந்தலாவை வெருட்டி வைத்துவிட்டாள். இலங்கையாட்கள் தன்னைப் பற்றி என்ன சொல்கிறார்கள் என்பதைப்பற்றி ஒன்றும் கவலையில்லை என்றாள் உஷா.
"எங்கள் சமுகத்தைப் பொறுத்தவரையில் ஆண்களுக்கு ஒரு நீதி பெண்களுக்கு ஒருநீதி. எத்தனை இலங்கைப் பெடியன் கள் வெள்ளைக்காரப் பெட்டைகளுடன் திரியவில்லை. திரிவது மட்டுமா? கற்பவதிகளாக்கிவிட்டு ஏமாற்றிவிட்டு காசுக்காக இலங்கையில் போய்க் கல்யாணம் செய்கிறார்கள். அதெல் லாம் ஒன்றுமில்லை ஆண்களைப் பொறுத்தவரையில், நான்

Page 48
88 ராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம்
எனக்குப் பிடித்தவனுடன் திரிந்தேன் கேவலமாகச் சொல் கிறார்கள். பிடித்தவனைக் கல்யாணம் செய்துவிட்டேன். என் முடிவு இது. என்ன நடந்தாலும் நான் விதியிற் பழியைப் போடவில்லை. என் பிழை என்றுதான் சொல்வேன்.
சினேகிதிகள் கொஞ்சநேரம் ஒன்றும் பேசவில்லை. * உன்னைப் போல் மீனாவையும் வெள்ளைத்தோல் தேடச் சொன்னாயா? என்று கேட்க நினைத்தேன்" என்றாள் சகுந்தலா.
உஷாவின் நீண்ட கண்களில் ஒரு குறும்புச் சிரிப்புத் தோன்றி மறைந்தது. "உன்னைப்போல் நல்ல பிள்ளைகளாக எங் களால் இருக்க முடியவில்லை" என்றாள் உஷா. 'நல்ல பிள்ளை' என்று சொல்லும்போது உஷாவின் தொனியில் ஒரு அழுத்தம் தெரிந்தது. சகுந்தலாவுக்கு விளங்கவில்லை அவள் குரலில் கிண்டல் தொனிக்கிறது என்று. அப்படி விளங்கினா லும் என்ன விதத்தில் தன் சினேகிதி தன்னைக் கிண்டல் அடிக்கிறாள் என்று தெரியாமல் தவித்திருப்பாள். கார்த் தியை ஏமாற்றிவிட்டு உன்னால் எப்படிச் செய்யமுடிந்தது என்று உஷா கேட்காமல் விடப்போவதில்லை என்று தெரியும். அதே நேரத்தில் பெண்கள் உரிமைகளில் நம்பிக்கை கொண்ட உஷா சகுந்தலாவிடம் கேட்டாலும் ஆச்சரியமில்லை "உனக் கென்ன தகுதி இருக்கிறது மீனாவுக்குப் புத்திசொல்ல" என்று. ** அமெரிக்காவின் நல்லுபதேசம் ஒன்றும் உமது தங்கைக்கு போதிக்கவில்லையா. உஷா கேட்டாள். சகுந்தலாவுக்குத் தர்மசங்கடமாக இருந்தது. தனக்குத் தெரிந்த எல்லோருக்கும் மீனா என்ன சொல்லிவைத்திருக்கிறாள் என்று தெரிந்த போது.
மீனாவைப் பிழைசொல்லிப் பிரயோசனம் என்ன. வீட்டில் இத்தனை எதிர்ப்பு இருக்கும்போது தனக்குத் தெரிந்தவர்களி டம் சொல்லியாவது உதவி கேட்டிருப்பாள். அவளுக்குத்

உலகமெல்லாம். வியாபாரிகள் 89
தெரிந்தவர்கள் எல்லாம் தனக்கும் தெரிந்தவர்களாக இருப் பதுதான் பிரச்சனை என்று தோன்றியது சகுந்தலாவுக்கு, லண்டனில் கிட்டத்தட்ட எல்லோரும் மாறிவிட்டார்கள். கார்த் திகேயன் சடங்குகளில் நம்பிக்கையில்லாமல் சில்வியாவுடன் ஒன்றாய்ச் சீவிக்கிறான். ஏன் வெறும் பேப்பரில் கையெழுத் துப் போடவேண்டும்? எங்களுக்கு ஒன்றாக இருக்க விருப்பம், ஒன்றாய் இருக்கிறோம் என்கிறான். இவர்களுக்கு என்ன வென்று உலகம் தெரிகிறது?
விடிந்தால் பொழுதுபடும்வரை அம்மா முருகனையும் பிள்ளை யாரையும் துணைக்குக் கூப்பிட்டுப் பிரார்த்திக்கிறாள். அந் தச் சூழ்நிலையில் வளர்ந்த மீனா எதிர்மாறான சூழலில் வாழப் போகிறேன் என்று பிடிவாதம் பிடிக்கிறாள். உலகத்தில் யார் வெறுத்தாலும் சரி காதலித்தவனையே கல்யாணம் செய் வேன் என்று செய்த உஷா எவ்வளவு நிதானமாகச் சொல் கிறாள் விவாக ரத்துச் செய்துவிட்டேன் என்று. தான் மாற வில்லை. தன்னைச் சுற்றியவர்கள் எப்படி மாறியிருக்கிறார் கள் என்பது இவ்வளவு நாளும் தெரியாமல் இருந்தது அவ ளுக்கு. குழந்தை கீதாஞ்சலி சிறுவர் நிகழ்ச்சியில் "ரொப் , கற்" பார்த்து விழுந்து விழுந்து சிரித்துக்கொண்டிருந்தாள். மீனா தன் வீடுபோல் உஷாவின் குசினிக்குள் ஏதோ செய்து கொண்டிருந்தாள்.
{
உஷாவின் முகத்தில் நிதானம்.
"ஏன் றொபினை விவாகரத்துச் செய்தாய்" திடீரென்று கேட்டாள் சகுந்தலா.
உஷா சினேகிதியை மேலும் கீழும் பார்த்தாள். "சகுந்தலா ஒரே வசனத்தில் மறுமொழியை எதிர்பார்க்கிறாயா அல்லது விளக்கமாக எதிர்பார்க்கிறாயா என்று முதலில் விளங்கப் படுத்து" உஷாவுக்கு எப்படி இவ்வளவு நிதானமாகப் பதில் சொல்லத் தெரிகிறது. இருபத்தெட்டு வயதில் வாழ்விழந்து

Page 49
90 ராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம்
போயிருக்கிறாள். கட்டான இளமை அப்படியே இருக்கிறது. கயல்விழிகள் காந்தம்போல் பாய்கிறது. இவள் ஏன் இப்படித் தன் வாழ்க்கையை அநியாயம் பண்ணிவிட்டு இருக்கிறாள். இலங்கையாட்கள் எப்படி இவளை மதிக்கப்போகிறார்கள். சகுந்தலா குழப்பத்துடன் சினேகிதியைப் பார்த்தாள்.
"அப்படி என்னைப் பார்க்காதே. என்னில் பரிதாபப் படுவ தாகப் பாசாங்கு பண்ணாதே. உனக்குத் தெரியும் எனக்கு யாரின் பரிதாபமும் தேவையில்லை என்று" உஷா சொன் னாள்.
என்ன மண்டைக்கனம். விழுந்தும் மீசையில் மண்படாத வீரத் தனம். மீசை எங்கே இருக்கிறது. உஷாவுக்கு. 'நீர் வரும் பியோ விரும்பாமலோ உலகம் உன்னில் பரிதாபப்படத்தான் போகிறது." சகுந்தலா சொன்னாள்.
"ஐ சீ, உமக்கு உலகத்தைப் பற்றிக் கணக்கத் தெரியும். அதுதான் ஐந்துவருடம் ஒழிந்திருந்து தவம் செய்தீரோ, உபதேசத்துக்கு வெளிக்கிட"
உஷா உன்னால் எப்படி இப்படிக் கதைக்க முடியுகிறது. நீ மட்டுமல்ல எல்லோரும்தான் என்னைத் தூக்கி எறிந்து கதைக்கிறீர்கள். சகுந்தலா வாய்விட்டுச் சொல்லாமல் மனதுக்குள் பொறுமினாள்.
குழந்தை கீதாஞ்சலி தாயிடம் ஓடிவந்து ஏதோ சொன்னாள். சகுந்தலாவும் இளமையில் கீதாஞ்சலிபோல் இருந்திருக்க லாம். தாய்க்கும், மகளுக்கும் அதே அச்சுவார்த்த முகம். அதே குழிவிழும் கன்னங்கள்.
**சகுந்தலா குழந்தைக்கு என் கீதாஞ்சலி என்று பெயர் வைத் தாய்' உஷாவுக்கும், சகுந்தலாவுக்கும், கார்த்திக்கும் மட்டும் தெரிந்த ரகசியம் அது. பேரின்பநாயகத்தார் கடைசிவரைக்

உலகமெல்லாம் வியாபாரிகள் 91
கும் சகுந்தலாவை கார்த்திகேயனுக்குக் கல்யாணம் பண்ணி வைக்கமுடியாது என்று சொல்லிவிட்டார். கார்த்திகேயன் சோதனை பெயில் ஒருவருடம். இலங்கையிலிருந்து காசும் வரவில்லை.
கஷ்டப்பட்டு வேலை செய்துகொண்டிருந்தான். படிக்கிற தென்று சாட்டுவிட்டு வந்து இங்கு கோப்பை கழுவும் கார்த்தி கேயன் தரவளிக்கோ பெண் கொடுப்பேன்" என்று கர்ச்சித் தார் பேரின்பநாயகத்தார்.
'உமது தகப்பன் உம்மை ஒன்றும் செய்யமுடியாது. உமக்கு இருபத்தொரு வயதுக்குமேல் சட்டப்படி நாங்கள் கல்யாணம் செய்யலாம்' என்றான் கார்த்தி சகுந்தலா வுக்கு.
* கள்ளமாகக் கல்யாணம் செய்துகொண்டு ஓடப்போகிறீர்கள். உலகத்தில் எந்த மூலைக்கு ஓடி ஒழிப்பீர்களோ தெரியாது. என்னையும் சில வேளை நினைப்பீர்களா?" உஷா விளை யாட்டாகக் கேட்டாள்.
*"நிச்சயமாக உஷா. உம்மைப்போல் அழகான பெட்டை பிறந்தால் உமது பெயரையே வைப்போம்" கார்த்திகேயன் விளையாட்டாகச் சொன்னான்.
*"ஐயையோ என்ர பெயர் வேண்டாம். உதவாத பேர். ஏதும் நல்ல இலக்கியத்தில் உள்ள பெயராய். என்று தொடங்கிக் கடைசியாக ரவீந்திரநாததாகூரின் கீதாஞ்சாலியில் வந்து நின்றது. கீதாஞ்சலி
குழந்தை பிறந்தபோது சிவநேசன் தாய் தகப்பனுக்கு எழுதி னான் சாத்திரம் பார்க்கச் சொல்லி. அவர்கள் க, கா, கி, கீ வரிசையில் பெயர் வைப்பது சாத்திரத்தின்படி நல்லது என்று எழுதியிருந்தார்கள். காஞ்சனா, கற்பனா, காந்திமதி, சிவநேசன் சொன்னான். “கீதாஞ்சலி' என்று வைப்போம்

Page 50
8. ராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம்
சகுந்தலா கேட்டாள் கணவனை. மனத்திரையில் கார்த்தி கேயனும் உஷாவும் அவர்களின் சம்பாஷணையும் ஞாபகம் வந்தன.
"கீதாஞ்சலி நீண்டு போச்சு வெள்ளைக்காரருக்கு, கீதா" என்று கூப்பிடுவம்' என்றான் சிவநேசன். ஆனால் சகுந்தலா எப்போதும் கீதாஞ்சலி என்றுதான் கூப்பிடுகிறாள். மனதின் ஒரு இருண்ட மூலையில் கார்த்திகேயனின் முகம் ஞாபகம் வருவதுண்டு.
"ஏன் கேட்கிறாய் உஷா. இன்னும் நான் கார்த்தியை நினைத்துக்கொண்டு இருப்பதாக இருக்கிறாயா" சகுந்தலா நேரடியாகக் கேட்டாள் சினேகிதியை.
உஷா சகுந்தலாவின் நேரடிக் கேள்வியால் நிலைகுலைந்து விட்டாள் ஒருகணம். 'அப்படியில்லை. நீ பழைய ஞாபகங் களை ஒரேயடியாக அழித்து விட்டாய் என்று நினைத்தேன்" உஷாவின் முகம் உணர்ச்சியற்று விழிக்கும் சினேகிதியின் பார்வையைத் தாங்காது திரும்பியது.
"சில நினைவுகளும் சில மனிதர்களும் இறக்கும்வரை எங்கள் மனதிலிருந்து மறையும் என்று நான் நம்பவில்லை. மறந்த தாக, மறப்பதாக நாங்கள் எங்களை ஏமாற்றிக்கொள்கி றோம். சகுந்தலா சொல்லிக் கொண்டிருக்கும்போது மீனா வந்தாள். ** என்ன இருவரும் இறந்தகாலத்தைப் பற்றி வர்ணிக்கிறீர்களா?" மீனா சிரித்துக்கொண்டே கேட்டாள். இறந்தகாலத்தின் அதிர்ச்சியின் பிரதிபிம்பங்கள்தான் நிகழ் காலமும் எதிர்காலமும் என்றாகிவிடும்போது இறந்தகாலம் ஒன்று தனியாக இல்லை என்று நினைக்கிறேன்" சகுந்தலா குழந்தையை அணைத்துக் கொண்டு எழும்பினாள். உஷா வும், மீனாவும் ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டனர்.
**சகுந்தலா அமெரிக்கா திரும்பமுதல் கட்டாயம் ஒருதரம் வா' உஷா கெஞ்சிய குரலில் கேட்டாள். "கட்டாயம் உஷா.

உலகமெல்லாம் வியாபாரிகள் 93
உமது கல்யாண புராணத்தைக் கேட்கும் வரை எனக்கு நித் திரை வராது." சிரித்துக்கொண்டு சொன்னாள் சகுந்தலா.
கார் விம்பிள்டன் நோக்கிப் போய்க்கொண்டிருந்தது. வாழ்க்கை எவ்வளவு விசித்திரம். வாழ்ந்து காட்டுகிறேன் என்று உலகத்துக்குச் சாவல் விட்ட உஷா வாழ்விழந்து போய் நிற்கிறாள். காதலில்லையேல் சாதல் என்று தனக்குத்தானே சொல்லிக்கொண்ட சகுந்தலா..?
சிவனேசன் ஏன் இன்னும் போன் பண்ணவிலலை. நான்தான் போன்பண்ணினேன் என்று தெரியுமா? தெரிந்தால் ஓராயிரம் பொய் சொல்லித் தன்னைச் சமாதனம் செய்ய போன் பண்ணி யிருப்பான் சிவனேசன்.
கார்த்திகேயன் சொன்னது ஞாபகம் வந்தது அவளுக்கு. "நான் ஏன் அழுகிறேன் என்று ஏன் நீங்கள் கேட்கவில்லை" என்றாள் சகுந்தலா. ** மற்றவர்கள் சொன்னாற்தவிர மற்றப்படி தேவையில்லாமல் ஏன் மற்றவர்களின் வாழ்க்கையில் வீணாகத் தலையிட வேண் டும்" என்றான்.
அவளுக்கு ஆத்திரம் வந்தது. நான் ஏன் உங்களுக்கு மற்றவர் களாகிவிட்டேன் என்று கேட்க நா துடித்தது. "என் கணவர் இன்னொரு பெண்ணுடன் இருக்கிறார்" என்று சகுந்தலா சொன்னபோது அதிர்ச்சியில் அவன் முகம் இருண்டது ஒரு
560.
"என்ன ஒரு தலைப்பட்சமான முடிவு. இந்த நேரத்தில் என்ன வேலை யாரோ ஒருத்திக்கு என் வீட்டில்" சகுந்தலா பொரிந்து தள்ளினாள்.
"லேட் நைட் பார்ட்டியாக இருக்கும். சில்வியாவும் நானும் எத்தனையோ தரம் காலை ஆறுமணிக்கு பார்ட்டி முடிந்து வந்திருக்கிறோம்" அவன் தர்க்கரீதியாகச் சொன்னான்.

Page 51
94 ராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம்
உண்மையாக அப்படித்தான் இருக்குமோ? தான் அவசரமான முடிவில் விசரிபோல் ரோட்டில் அலைந்து. அவனின் வாதத்தை அவளால் ஒரேயடியாக ஏற்கவும் முடியாதிருந்தது.
**நான் இருக்கும் வரையும் இல்லாத பார்ட்டியும் கூத்தும் நான் இல்லாதபோது நடக்கிறதென்றால் அதன் அர்த்தம் என்ன" அவள் கடு கடு என்று பொரிந்தாள்
"சகுந்தலா நான் சிவனேசன் இல்லை. என்னிடம் கத்திப் பிர யோசனம் இல்லை. உம்முடைய வீட்டில் பார்ட்டி நடக்காமல் இருக்கலாம். வேறு எங்கேயோ பார்ட்டிக்குப் போய்விட்டு போகிற வழியில் கொஞ்சநேரம் வீட்டுக்கு வந்து போகும் சினேகிதர்களாக இருக்கலாம்." ஏன் கார்த்திகேயன் சிவ னேசனுக்காகக் கதைக்கிறான். என்னைச் சமாதானப்படுத் தவா அல்லது கார்த்திகேயன் சொல்வதுபோல் சிவனேசன் யாரோ சினேகிதர்களுடன் இருந்திருப்பானா.
** என்ன சிந்தனை' மீனா ஒரக்கண்ணால் தமக்கையை பாத்துக் கேட்டாள்.
"'என் கணவரைப்பற்றி யோசிக்கிறேன்" உணர்ச்சியற்றுச் சொன்னாள் சகுந்தலா.
மீனா திரும்பவும் தமக்கையைத் திரும்பி ஒரு நீண்ட பார்வை பார்த்துவிட்டுப் பாதையில் பார்வையை ஒட்டினாள். மாலைக் கதிரவனின் மங்கிய ஒளி மறைந்து இருள் பரவத் தொடங்கி விட்டது . குழந்தை காரோட்டத்தில் நல்ல நித்திரை.
" என்ன யோசனை என் கணவரைப் பற்றி! எந்த ரோட்டில் குடித்துவிட்டுக் கிடக்கிறார் என்று யோசிக்கிறேன் என்று நினைக்கிறாயா" சகுந்தலா தங்கையிடம் கேட்டாள்.
மீனாவுக்குத் "திக்" என்றது, தமக்கையின் கேள்வியைப் பார்த்து. 'தவறாக நினைக்காதே சகுந்தலா. நான் ஒன்றும்

உலகமெல்லாம் வியாபாரிகள் 95
அப்படி நினைக்கவில்லை' மீனா மன்னிப்புக் கேட்கும் பாவ னையில் சொன்னாள்.
"'என் கணவர் இந்த நேரம் எந்தப் பெண்ணோடு திரிகிறார் என்று யோசிக்கிறேன்" மெல்லிய வெளிச்சத்தில் சகுந்தலா வின் முகம் சோக சித்திரத்தை நினைவூட்டியது.
** என் தேவையில்லாமல் யோசிக்கவேண்டும்? மற்றவர்களில் குறைதேடிக் கொண்டிருப்பது கூடாது. எல்லாரும் எங்களுக்கு எதிராக இருக்கிறார்கள் என்பதே ஒரு மனவிய தி, புராசிக்கி யுஷன் கொம்பிளக்ஸ் , அடுத்தவர்களைப்பற்றி அளவுக்குமீறி யோசிக்கக்கூடாது' மீனா சொல்லி முடிய சகுந்தலா கலகல வென்று சிரித்தாள். மீனா தமக்கையை விளங்காமல் திரும்பிப் பார்த்தாள்.
'அடுத்தவர் என்று யாரை நீ சொல்கிறாய் தெரியுமா? என் கணவனை. அவர் என்ன செய்துகொண்டிருந்தார் தெரியுமா? நான் போன் பண்ணியபோது யாரோ ஒரு பெண் ணுடன் கொஞ்சிக்கொண்டிருந்தார்." சகுந்தலா விரக்தி யான சிரிப்புடன் சொன்னாள். காரின் வேகம் திடீரென்று குறைந்தாற் போன்ற உணர்ச்சி.
"ஐயம் சொறி சகுந்தலா" தங்கையின் குரலில் உண்மை யான பாசம் தெரிந்தது.
"கடவுளே ஏன் எல்லோரும் "சொறி சொல்கிறீர்கள். அவ் வளவு பரிதாபகரமான விதத்தில் என் சீவியம் இல்லை. அப்பா எதிர்பார்த்துச் செய்ததெல்லாம் கிடைத்திருக்கிறது. பெரிய வீடு, கார், வீடு நிறைந்த தளபாடங்கள் எல்லாம் கிடைத்தி ருக்கின்றன. எதற்காக நீ சொறி சொல்லவேண்டும். மீனா தமக்கையைப் புரிந்துகொள்ளாத விதத்தில் பார்த்தாள். இவ ளுக்கு என்ன மூளை குழம்பிவிட்டதா லண்டனுக்கு வந்து?
O O O

Page 52
96 ராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம்
"என்னப்பா நீங்கள் எல்லாம் பெரியாக்கள் இப்ப, சொந்தக் காரரைக்கூடப் பார்க்க ஏலாமற் போயிற்று" புவனேஸ் சகுந்தலாவை இப்படிச் சொல்லிக்கொண்டு வரவேற்றாள். கொழுக்கட்டை புவனேஸ். இன்னும் கொழுத்துப்போய் இருக்கிறாள பாடசாலை விடுமுறைக்கு கொழும்புக்கு வரு வதுண்டு புவனேஸ் பெற்றோருடன் .
"என்னடி புவனேஸ் உளுத்தம் மா கஞ்சியிலா சீவிக்கிறாய். கொழுத்துப்போய்க் கிடக்கிறாய்' தியாகராசா இப்படித்தான் பகிடி பண்ணுவான். அவ்வளவு கொழுப்பு. இப்போது ஒன்றும் குறைந்துவிடவில்லை. இரண்டு மூன்று குழந்தை கள் இருக்கலாம். கதவைத் திறந்ததும் திறவாததுமாக குழந்தைகளின் ஆலாபனைகள் கேட்டன.
சகுந்கலா இன்னொருதரம் புவனேசைப் பார்க்கப் போவ தாகச சொன்னபோது பார்வதிக்குப் பிடிக்கவில்லை.
"நான் உன்னை என்னத்துக்குக் கூப்பிட்டன்? இவள் மீனா வுக்கு பைத்தியம் பிடிச்சுப்போய்க் கிடக்கு. ஒருக்காப் புத்தி சொல் என்று கூப்பிட்டால் நீ என்ன செய்து கொண்டு திரி கிறாய். சோசியல் விசிட் அடித்துக்கொண்டு திரிகிறாய் உன் சினேகிதிகள் வீட்டுக்கு" தாய் பொரிந்து தள்ளினாள். உஷாவைப் பார்க்கப் போனதைக் கேள்விப்பட்டபோது தாயும் தகப்பனும் எள்ளும் கொள்ளுமாக வெடித்தனர்.
*பார்த்தாய சகுந்தலா! நீ கல்யாணம் முடித்துப் பிள்ளை குட்டியும் பெற்றுவிட்டாய். இன்னும் தங்களின் பிடியில் நீ இருக்கவேண்டும் என்று நினைக்கிறார்கள். நாங்கள் பலவீன மாக இருக்கும் வரையும்தான் மற்றவர்கள் பெலசாலிகள். எனக்கு என் விடயங்களைப் பார்க்கத் தெரியும் என்று நீ சொல்லாதவரை தாய் தகப்பன் மட்டுமல்ல மற்ற மனிதர் களும்தான் முட்டாள்களாக மதிப்பார்கள்' மீனா சொன்னாள் தாய் வெடிப்பதைப் பார்த்துவிட்டு. மீனா சொன்னது சரி.

உலகமெல்லாம் வியாபாரிகள் 97
அடுத்தநாள் புவனேசைப் பார்க்க வெளிக்கிட்ட போதும் தாய் தனக்குப் பிடிக்கவில்லை என்பதைக் காட்டிக்கொண்டாள். புவனேசில் ஒரு கோபமுமில்லையாம் பார்வதிக்கு. ஒன்று விட்ட தமயனின் மகள் புவனேஸ். ஆனாலும் ஜெகநாதனைப் பிடிக்காதாம் தகப்பனுக்கு. அதற்காக சகுந்தலா புவனேசைப் பார்க்கப் போய்க்கொண்டிருப்பதும் பிடிக்கவில்லை என்று காட்டிக்கொண்டார்கள்.
சகுந்தலா உணர்ந்து கொண்டாள், குனியும்வரை குட்டு விழும் என்று.
'மீனா உன் தங்கச்சி. உனக்கு வாய் திறந்து சொல்ல முடி யாதா? அவள் செய்யப்போகும் காரியம் சரியில்லை என்று." தாய் பரிதாபமாகக் கெஞ்சினாள். அந்த அழுமூஞ்சித் தொண தொணப்புக்கு விலகிப்போகும் யோசனையில்தான் புவ னேசைத் தேடிவந்தாள்.
புவனேசைக் கண்டதும் அழுது ஆலாபனை வைத்த ஒரு குழந்தை தன் சங்கீதத்தை நிறுத்திவிட்டுக் கீதாஞ்சலியைப் பார்த்துச் சிரித்தது. கைக்குழந்தை இன்னும் அழுது கொண்டிருந்தது.
** என்ன தங்கச்சியின் கல்யாணத்துக்கு வந்தநீரோ" புவ னேஸ் கள்ளமில்லாமல் கேட்டாள். வந்த நாளிலிருந்து எத்தனையோ பேர் கேட்டுவிட்டார்கள். அவளுக்கு ஆரம்பத் தில் தர்மசங்கடமாக இருந்தது. அம்மாவையும் அப்பாவை யும் பொறுத்தவரையில் ஊர் உலகத்துக்குத் தெரிந்து அவ மானம் வரமுதல் மீனாவுக்குப் புத்தி சொல்லட்டாம். என்ன வேடிக்கை? பூனை கண்ணை முடிக்கொண்டால் பூலோகம் இருண்டு விடுமா? அம்மாவுக்குத் தெரியுமா தங்களைத் தெரிந்த எல்லோருக்கும் மீனாவின் விடயம் தெரியுமென்று? இந்த லட்சணத்தில் அப்பா ஒடித்திரிகிறார். ஒரு நல்ல மாப்பிள்ளை அகப்பட்டால் மீனாவைச் செய்துவைக்க.

Page 53
98 ராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம்
**உமது அப்பர் மீனாவைப் பேசிக்கொண்டிருப்பதாகத் தம்பி சொன்னான் '' புவனேஸ் தொடர்ந்து சொன்னாள். சகுந்தலா மெல்லமாகத் தலையாட்டினாள்.
'ஒடித்திரிகிறாராம் யாரையும் நல்ல மாப்பிள்ளை பிடித்துத் தரச்சொல்லி?’ புவனேஸ் தொடர்ந்து சொன்னாள்.
'எனக்குத் தெரியாத விபரம் எல்லாம் உனக்குத் தெரிந் திருக்கு புவனேஸ் , கனநாளாய் sரவில்லை என்று லண்ட லுக்கு வந்திருக்கிறன் . மீனா வின் கல்யாண விடயம் அவளின் சொந்த விடயம். அப்பாவும், அம்மாவும் என்னைப்போட்டு நச்சரிக்கினம் மீனாவுக்குப் புத்தி சொல்லச் சொல்லி' சகுந் தலா அலுத்துக் கொண்டாள். நல்ல காலம் புவனேஸ் கேட்க வில்லை புத்தி சொல்ல வந்தாயா என்று?
"என்ன துணிவு மாமாவுக்கு? இவ்வளவு தெரிந்த பின்னும் யாரும் எங்கட தமிழ் ஆக்கள் மீ31ாவைச் செய்விலாமோ? எவ்வளவு காலமாக ஆக்கள் கதைக்கினம் மீனா அன்ரனி யுடன் திரிகிறாள் என்று." புவனேஸ் கைக்குழந்தைக்குப் பால் போத்தலில் பால் ஊட்டியபடி சொன்னாள்.
"என் இல்லாம? காசுக்காக எதையும் வாங்க எத்தனையோ தமிழர்கள் காத்திருக்கினம். எங்கட தமிழர்களைப் பொறுத்த வரையில் பெண்கள் வெறும் கத்தரிக்காய்கள்தானே. வாங்க லாம், விற்கலா ம், இங்கு வந்து நிரந்தரமாக இருக்க முடி யாத எத்தனையோ பேர் மீனாவைப்போல் பிரிட்டிஸ் பிரஜா உரிமையுள்ள பெண்களைச் செய்யத் தயங்கவா போகிறார் கள்? மீனா அப்பா அம்மா பேச்சைக் கேட்கப் போகிறாளோ இல்லையோ என்பதில்லை அவர்களின் பிரச்சனை' சகுந்தலா சொல்லி முடிக்கமுதல் ஜெகநாதன் வந்துகொண்டிருந்தான்.
சகுந்தலாவுக்கு ஜெகநாதனை அவ்வளவு பழக்கம் இல்லை. அதனால் போகலாமோ இல்லையோ என்ற தயக்கத்தில்
எழுந்தாள்.

உலகமெல்லாம் வியாபாரிகள் 99
என்னைக் கண்டு ஓடத்தேவையில்லை சகுந்தலா, உமது தகப்பன்தான் எங்கள் தரவளியைக் கண்டு ஓடிக்கொண்டிருக் கிறார் என்றால் நீரும் ஏன் ஓடவேண்டும்." ஜெகநாதனின் சினேகிதபூர்வமான பேச்சு சகுந்தலாவுக்குப் பிடித்துக் கொண்டது.
*"அப்பாவும் நீங்களும் அரசியல் விடயத்தில் அடிபட்டுக் கொள்ளுங்கள். என்னைச் சேர்த்துக்கொள்ள வேண்டாம்." சகுந்தலா சிரித்துக்கொண்டு சொன்னாள்.
**உமது தகப்பனார் போன்ற ஆட்களின் பிழை என்ன என் றால் தாங்கள்தான் அரசியல் கதைக்கவும் எங்கள் தமிழர் பிரச்சனைகளுக்கு விடிவுகாணவும் தகுதிபடைத்தவர்கள் என நினைக்கிறார்கள். தர்க்கரீதியாக விடயங்களை ஆலோசித்து முடிவுகட்டத் தெரியாமல் காட்டாற்று வெள்ளத்தில் ஒடும் கம்புகள் போல் இலங்கை அரசியல் வெள்ளத்தில் எங்களை இழுத்துக்கொண்டு போகிறார்கள். ஜெகநாதனின் சொற் பொழிவு கேட்கவா அவள் வந்தாள்?
சகுந்தலா பரிதாபத்துடன் புவனேசைப் பார்த்தாள். புவனேஸ் கணவனைப் பார்த்து முகத்தைச் சுளித்துக் கொண்டாள்.
"நான் புவனேசைப் பார்க்க வந்தன்' என்றாள் சகுந்தலா குரலில் தன் அரசியல் அறியாமையைக் காட்டாமல்.
*" அதாவது அரசியல் பெண்களைப் பொறுத்தவரையில் வெறும் சூனியமாக இருக்கவேண்டும் என்று சொல்கிறீர்கள்" ஜெகநாதன் குரலில் விருப்பமோ, விருப்பமில்லையோ கேட்டுத் தொலைக்கவேண்டும் என்ற அழுத்தம் இருந்தது.
**சும்மா இருங்கோ உங்களுக்குத்தான் வேலை இல்லை என்று சகுந்தலாவுக்குமா இல்லை? அவள் ஐந்தாறு வருடங் களுக்குப் பின் வந்திருக்கிறாள் லண்டனுக்கு. சும்மா அரசியல் கதைத்து போரடிக்காதீர்கள்' புவனேஸ் கணவனைக் கடிந்து கொண்டாள். く

Page 54
100 ராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம்
"புவனேஸ் எப்போதும் இப்படித்தான். அரசியலைப்பற்றி அறிந்துகொள்ள வேணும் என்று ஒரு அக்கறையுமில்லை." ஜெகநாதன் குரலில் தெரிந்த ஆற்றாமையைக் கண்டு புவன்ேஸ் சிரித்தாள்.
"எனக்கு இந்த குழந்தைகளுடன் மாரடிக்க நேரமில்லை. நீங்களும் உங்கள் அரசியலும்." புவனேஸ் சொல்லிக் கொண்டே குசினிக்குப் போனாள் தேத்தண்ணி போட
"எப்படி இங்கிலாண்ட். ஏதும் வித்தியாசம் தெரிகிறதா?"
ஜெகநாதனின் கேள்விக்கு மறுமொழி சொல்லாமல் தோள்
களை குலுக்கிக் கொண்டாள், அப்படி ஒன்றும் பிரமாதமான வித்தியாசம் இல்லை என்ற பாவனையில்.
*" மாறுதல் இல்லை என்கிறீர்கள்? அல்லது மாறுதல்களைக் கவனிக்கப் பொறுமையில்லை என்கிறீர்கள். பாருங்கள் சகுந்தலா வாழ்க்கையில் மாற்றம், மக்களின் அரசியற் போக் கில் மாற்றம், பிரச்சனைகளைப் பார்க்கும் விதத்தில் மாற்றம், உலகம் கடந்த கோடிக்கணக்கான வருடங்களில் மாறாத வேகத்தில் கடந்த ஒரு சில பத்தாண்டுகளில் மாறிவிட்டது. நாங்கள் எப்படி இருக்கிறோம்? பழைய புராணங்களைப் படித்துப் புளித்துப்போய் இருக்கிறோம். எங்கள் தலைவர் களைப் பாருங்கள்; கல்தோன்றி மண்தோன்றாக் காலத்தே முன் தோன்றி மூத்த தமிழ் என்று விசர்க்கதை கதைத்துக் கொண்டு திரிகிறார்கள். விஞ்ஞான ரீதியில் பிரச்சனை களைப் பார்க்கத் தெரியாதவர்கள்."
வெளியில் யாரோ கதவு மணியடிக்கும் சத்தம் கேட்டது. ஜெகநாதன் போய்க் கதவைத் திறந்தார். சிதம்பரநாதன் வந்து கொண்டிருந்தான்.
மைத்துனரிடம் ஒன்றும் கதைக்காமல் தமக்கையிடம் போய் விட்டு வந்தான். சிதம்பரநாதனையும், ஜெகநாதனையும் பார்க்க வேடிக்கையாக இருந்தது சகுந்தலாவுக்கு எலியும்,

உலகமெல்லாம் வியாபாரிகள் 101.
பூனையுமா இவர்கள்? ஒருகொஞ்ச நேரத்துக்கு முதல் தமிழர் எப்படி ஒற்றுமையாக இருக்கவேண்டும் என்று சொன்ன ஜெகநாதனின் பேச்சுக்கும் நடைமுறைக்கும் எவ்வளவு வித்தியாசம். சொந்த உறவுக்குள்ளே ஒற்றுமையாக இருக்கத் தெரியாதவர்கள் ஒரு பெரிய இனத்தை ஒற்றுமைப்படுத்தப் போகிறார்களாம். சிதம்பரநாதன் வெளிக்கிடுவதைக் கண்ட தும் தம்பினோம் பிழைத்தோம் என்று சொல்லிக்கொண்டு வெளிக்கிட்டாள் சகுந்தலா.
"ஏன் உன் மைத்துனருடன் கதைப்பதில்லையோ நீர்" என்றாள் சகுந்தலா.
"மச்சான் மாதிரிப் புல்லுருவிகளுடன் என்ன கதை? புத்த கத்து அரசியலை நடைமுறைப்படுத்தப் பார்க்கிறார்கள்."
சிதம்பரநாதன் காரை ஸ்ராட் பண்ணத் தொடங்கமுதல் புவனேஸ் ஏதோ பார்சலுடன் வந்துசேர்ந்தாள் காரடிக்கு, "ஏன் புவனேஸ் உமது சணவர் தமிழர் ஒற்றுமையைப் பற்றி ஒலம் வைக்கிறார். உன் தம்பியுடன் ஒற்றுமையாக்க முடி யாதா உனக்கு?"
புவனேஸ் வேண்டா வெறுப்பாக முகத்தைச் சுளித்துக் கொண்டாள். 'நடைமுறையில் ஒன்றும் செய்யத் தெரியாத வர்கள் புத்தகத்தைப் படித்துப்போட்டுப் புழுகுவதில் மட்டும் ஒன்றும் குறைச்சலில்லை."
புவனேசின் முகம் இருண்டிருந்தது. குடும்பத்தில் ஏதும் தகராறோ என்று நினைத்தாள் சகுந்தலா . ஆனால் கேட்க விருப்பமில்லை.
**ஏன் புவனேஸ் உமது மைத்துனருடன் முகத்தை நீட்டிக் கொண்டிருக்கிறாள்.' மெளனமாய் இருக்கும் சிதம்பரனைக் கேட்டாள் சகுந்தலா.

Page 55
102 ராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம்
'மச்சான்போல ஆட்களை அக்கா மாதிரி ஆட்கள் வீட்டில் வைத்திருப்பது அவர்களின் பிழை. அக்கா லண்டன் மாப் பிள்ளைக்கு ஆசைப்பட்டா. உள்ள சீதனம் எல்லாம் குடுத்துச் செய்து வைச்சினம். அவர் நடக்கிற நடப்பெண்டால்" சிதம் பரநாதன் என் எந்தநேரமும் சிடுசிடு என்று இருக்கிறான்?
"ஏன் சிதம்பரநாதன் எந்நேரமும் மற்ற ஆட்களில் பிழை பிடிச்சுக்கொண்டிருக்கிறீர்?" சகுந்தலா சமாதானக் குரலில் சொன்னாள். குழந்தை கார் ஜன்னலால் புதினம் பார்த்துக் கொண்டிருந்தாள்.
"நான் யாரிலும் பிழை பிடிக்கல்ல சகுந்தலா அக்கா. புவனேஸ் அக்கா மாதிரி ஆட்கள் வெறும் கெளரவத்துக்காக நாய் மாதிரி உழைப்பதாற்தான் பச்சான் மாதிரி ஆட்கள் பொறுப்பில்லாமல் நடந்துகொள்கிறார்கள்' கார் ட்ரவிக் லைட்டில் நின்றது.
"அப்படி என்ன பிழை செய்துவிட்டார் உமது மச்சான்?" சகுந்தலாவின் கேள்விக்கு சிதம்பரநாதன் பெருமூச்சு விட் டான்.
"ஏன் பெருமூச்சு விடுகிறீர்" சகுந்தலா விளங்காமற் கேட் LAr6ir.
*"மச்சானில் பிழை பிடித்து என்ன பிரயோசனம்? அக்காவைப் பொறுத்தவரையில் வீடு, கார், கதிரை மேசை அத்தோட ஒரு கணவன். எல்லாத் தமிழ்ப் பெண்களையும் போல பட்டதா ரிக் கணவன். இவ்வளவுதான் சீவியம். இதற்காக எதுவும் செய்யத் தயார். பிள்ளைகளை யார் வீட்டிலோ விட்டுவிட்டு மாடு மாதிரி உழைக்கிறா அக்கா. மச்சான்பிள்ளை விழல் அர சியல் கதைத்துக்கொண்டு திரிகிறார். தமிழர் பிரச்சினைக்குச் சிங்களவர்களும் சேர்ந்து போராடும் காலம் வரும்வரைக்கும் எங்கள் பிரச்சினைக்கு ஒரு முடிவும் இல்லையாம்.' சிதம்பர

உலகமெல்லாம் வியாபாரிகள் 103
நாதன் திரும்பி சகுந்தலாவைப் பார்த்தான் 'ஏன் பேசாமல் இருக்கிறீர்கள்" என்றான். என்ன பேச இருக்கிறது நீர் சொல்கிறீர் கேட்டுக்கொண்டு இருக்கிறேன்" புன்சிரிப்புடன் சொன்னாள் சகுந்தலா. * லண்டன் மாப்பிள்ளைக்கு ஆசைப் பட்ட அக்கா மாதிரி ஆட்களின்ர நிலையைப் பாருங்கோ. இந்தக் குளிரிலும், மழையிலும் கஷ்டப்பட்டு வேலை செய்து என்ன கண்டார்கள்? ஒரு கலர்டெலிவிஷன் , ஒரு கார், இருபத்தைந்து வருடக் கடனில் ஒரு வீடு இதற்கெல்லாம்
தான் வாழ்க்கையா?’’
சகுந்தலாவுக்கு சிதம்பரநாதனின் இளமையான முகமும் துடிப் பான பேச்சும் சுவையாக இருந்தன. அழுத கண்ணும் சிந்திய மூக்குமாக ஒரு காலத்தில் மாமி கமலத்தின் முந்தானையைப் பிடித்துக்கொண்டு திரிந்த அழுகண்ணிர் சிதம்பரநாதனா இவன். ‘சிதம்பரநாதன் வாழ்க்கை, திருமணம், குடும்பம் என்பது நீர் நினைப்பதுபோல் மிகவும் எளிதான காரிய மில்லை. மிக மிகச் சிக்கலானது. அதில் அகப்பட்டு அதன் அனுபவம்தெரியாத வரை உங்களைப் போன்றவர்களுக்கு வெள்ளையும் கறுப்புமாகதான் தெரியும்.'"
சிதம்பரநாதன் சகுந்தலாவைத் திரும்பிப் பார்த்தான். தன் னைச் சிறுபிள்ளைத் தனமாய் நினைக்கும் அவள் அறியா மையை நினைத்துச் சிரிப்பு வந்தது அவனுக்கு.
வீட்டுக்குப் போனபோது அம்மா வாசலில் நின்றிருந்தாள், சகுந்தலாவின் வரவை எதிர்பார்த்துக் கொண்டு. சிதம்பரநா தனின் முகத்தைக் கண்டதும் மாமியாரின் முகத்தில் ஏனோ தானோ என்ற பாவம் படர்ந்தது.
"என்ன இவ்வளவுநேரமும் புவனே சோட அலட்டல். புரு ஷன் வேலைக்குப் போகாம இருந்து புத்தக ஞானம் புலம்பு றார். பொஞ்சாதி உழைத்துப் போடுகிறா. அதைக் கேட்க இவ்வளவு நேரமோ" தாய் எள்ளி நகையாடும் விதத்தில்

Page 56
104 ராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம்
சொன்னாள். பார்வதிக்கு ஒரு நாளும் புவனேஸ் குடும்பத்தைப் பிடிக்காது. ஒரு வேளை புவனேசின் தாய் பார்வதியைவிட அழகாய் இருந்தது ஒருகாரணமாய் இருக்கலாம்.
'சிவனேசன் போன் பண்ணினான். நீ இல்லை என்றதும் கோபம் வந்துவிட்டது. இன்னொருக்காப் போன்
பண்ணுவார் என நினைக்கிறன்" தாய் சொன்னாள்.
கோபப்படுகிறாராம் என் கணவர். எதற்காக?

(ଟ୍ରି
வீட்டில் இரண்டு மூன்று நாட்களாக நச்சரிப்பு. மீனா வழக்கம் போல் இருக்கிறாள். தாய் தகப்பனுடன் பேச்சு வார்த்தை யில்லை. தாய் அன்றைக்குச் சொன்னதுபோல் சிவனேசன் திரும்பவும் போன்பண்ணவில்லை. காசு மிச்சம் பிடித்துப் "பார் பக்கம் போகிறாராக்கும்.
தாயும் தகப்பனும் அடிக்கடி எங்கோ போய் வந்தார்கள் எதற்காக இருக்கும்?
புவனேஸ் சொன்னதுபோல் யாரும் நல்ல மாப்பிள்ளை தேடி ஒடித்திரிகிறார்களோ? தனக்குச் செய்ததுபோல் சொல்லாமற் கொள்ளாமல் யாரையோ பேசி ஒழுங்கு செய்துவிட்டு பய முறுத்திக் கல்யாணம் செய்யப் போகிறார்களா?
இந்த வார விடுமுறையில் அன்ரனி ஹாங்கொங் போவதாக மீனா சொன்னாள். அவன் வந்தவுடன் கல்யாணம் நடத்துவ தாகத் திட்டம்,
ஏன் மீனா தாய் தகப்பனுக்குச் சொல்லி இத்தனை ஆரவாரத் ைேதயும் உண்டாக்கிக் கொண்டிருக்கிறாள் என்று புரியவில்லை சகுந்தலாவுக்கு.
90 பின்னேரம் சொல்லாமற் கொள்ளாமல் பெரிய கூட்டமே
நடந்தது பேரின்பநாயகத்தார் வீட்டில், இலங்கையில் இருந்து வரும் தமிழ்த்தலைவரை வரவேற்க மிக மும்முரமான ஏற்பாடு

Page 57
106 ராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம்
நடப்பது தெரிந்தது. இவர்களுடன் கார்த்திகேயன் கோஷ்டி சேரவில்லையா? யாரைக் கேட்பது. எல்லோரும் ஏதோ அவச ரத்தில் ஓடிக்கொண்டிருக்கிறார்கள். மீனா கிட்டத்தட்ட வீட் டில் இல்லை. பாடசாலை முடிய பிந்தி வருகிறாள். தாய் கேட்டால் ஒவ்வொரு சாட்டுச் சொல்கிறாள். தாயைப் பார்க் கப் பரிதாபமாக இருந்தது சகுந்தலாவுக்கு. சகுந்தலா சின்னக் குழந்தையாக இருக்கும்போது தாய் எத்தனையோ தரம் சொல்லியிருக்கிறாள் தான் எத்தனை விரதம் பிடித்தாள் ஒருபிள்ளை கேட்டு என்று. போகாத கோயில் இல்லை. கும்பிடாத தெய்வம் இல்லை. அப்படியெல்லாம் கஷ்டப் பட்டு உங்களைப் பெற்றால் நீங்கள் இப்படியா எங்களை மனவருத்தப் படுத்துவது என்று கேட்கிறாள் பார்வதி.
அம்மா பொய்மைகளையே நம்பி பொய்மைகளிலேயே வாழப் பிறந்தவள். நாங்கள் இப்படித்தான் இருக்க வேண்டும் என்று ஒரு வரைவிலக்கணம் வைத்திருக்கிறாள். அப்படி இருக்க முடியாது என்று நான் பிடிவாதம் பிடித்தால் அடங்காத பெண் என்கிறாள். இது மீனாவின் வாதம்.
**பெண்கள் என்ன மெஷினில் வார்த்தெடுத்த சிலைகளா இப் படித்தான் இருக்க வேண்டும், நடக்கவேண்டும். பழகவேண் டும் என்று படிப்படியாகக் குழந்தைப் பிள்ளை கல்வி புகட்ட . பெண்மை, பண்பு, கற்பு, என்கிறார்கள் எங்கள் தமிழர்கள். உஷாவைக் கேட்டுப் பார் இப்போதுதான் யாழ்ப்பாணம் போய்வந்தாள். இந்த இருபதாம் நூற்றாண்டும் முடியப் போகிறது. அமெரிக்கப் பெண் வான்வெளிக்குப் போகப் போகிறாள். யாழ்ப்பானத்தில் ஒருபெண் தனியாக நடக்க முடியாது. மீனா பொரு பொருவென்று முணுமுணுத்தாள், சகுந்தலா புத்தி சொல்ல வெளிக்கிட,
'மீனா எங்கட ஆட்கள் எப்போது ஒரு பெண்ணுக்கு "லேபிள்" குத்தலாம் என்று காத்திருக்கிறார்கள். சும்மா மெல்லும் வாய்க்கு அவல் கொடுக்கிற கதையாய் இருக்கிறது உன்

உலகமெல்லாம் வியாபாரிகள் 107
நடப்பு. நீ பிடித்த முயலுக்கு மூன்றுகால் என்று சொல்கிறாய். ஏதோ சொல்லித் தொலை, செய்து தொலை. அதற்காக இப் படி நினைத்தபடி நடக்கச் சொல்லிக் கிடக்கா"" தமக்கையின் உபதேசத்தைப் பார்த்துச் சிரிப்பு வந்தது மீனாவுக்கு.
"நீ வேணுமானால் உலகம் உலகம் என்று உன்னையே சுருக் கிக்கொள். உன்னையே ஏமாற்றிக்கொள். நான் என்னை மதிக்கிறேன். என் வாழ்க்கையில் என்ன செய்ய வேண்டும் என்று திட்டம் போட்டிருக்கிறேன். மற்றவர்கள் திட்டம் போட்டு இப்படித்தான் வாழ் என்று ஆட்டையும் மாட்டையும் சொல்லட்டும். நான் மனித ஜன்மம். எனக்கு உரிமையிருக் கிறது. என்ன செய்வது என்று திட்டம்போட."
மீனாவின் விதண்டா வாதத்தைக் கேட்டால் அம்மா என்ன Gls Tsishr?
" "மீனா உலகத்தை நீர் ஒரு வினாடியில் மாற்றமுடியாது கவனமாக இரு.'
சகுந்தலாவுக்கு வேறொன்றும் சொல்ல முடியவில்லை. மீனா வின் விதண்டாவாதம் குடும்பத்தில் இன்னும் பிரச்சினைகள் வந்து அதில் தான் அகப்பட்டுக் கொள்வதைச் சகுந்தலா அடி
யோடு வெறுத்தாள்.
கடைசியாகச் சிவனேசன் வார முடிவில் போன் பண்ணினான். அவன் குரலைக் கேட்டதும் அவள் ஆத்திரம் எல்லைமீறியது. தாயும் தகப்பனும் டெலிவிஷன் பார்த்துக் கொண்டிருந்தார் கள். இருந்தாலும் சகுந்தலா என்ன பேசுகிறாள் என்பது கேட்காமல் இருக்காது. சிவனேசன் குரலிலோ எந்தவிதமான மாற்றமும் இல்லை.
எப்படி நடக்க முடிகிறது இந்த ஆண்களால் அல்லது எப்படி மறக்க முடிகிறது எதையும் எளிதில். “எப்படிக் குழந்தை" அவன் குரலில் பாசம், 'சுகமாக இருக்கிறாள்"

Page 58
108 t ராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம்
கேள்விக்கு மறுமொழியைத் தவிர வேறொன்றும் சொல்லத் தெரியவில்லை அவளுக்கு. அன்றைக்குத் தான் போன் பண்ணியதைக் கேட்கலாமோ என்று மனம் துடித்தது.
"லண்டன் எப்படி' அவன் ஏதும் கேட்கவேண்டும் என்பதற் காகக் கேட்கிறானா.
"இருக்கிறது வழக்கம்போல். மழையும், குளிரும். அத்தோடு அரசியல் கூத்தும்' அவள் வேண்டா வெறுப்பாகச் சொன் னாள்.
"அன்றைக்கு நீர் இருக்கவில்லை. எங்கு போனிர். அவன் சாதாரணமாகக் கேட்டான். ஆனாலும் அவளுக்குக் கோபம் வந்தது. மறுமொழி சொல்லவில்லை.
நான் போகுமிடமெல்லாம் உங்களைக் கேட்டுக் கொண்டு போகவேண்டுமா? கேட்க நினைத்தாள் முடியவில்லை. நீங் கள் மட்டும் என்னைக் கேட்டுக்கொண்டா இன்னொருத்தி யுடன் ஆடுகிறீர்கள். இப்படியும் கேட்க நினைத்தாள். வாய் வரவில்லை.
'மீனாவின் கல்யாண விடயம் எப்படி இருக்கிறது?" அவன் கேட்டான்.
'எந்தக் கல்யாணம்" உண்மையாகச் சகுந்தலாவுக்கு விளங்க வில்லை. மீனா அன்ரனியைத்தான் கல்யாணம் செய்யப் போவதாகச் சொல்லிச் சண்டை பிடித்தாளே தவிர உடனடி யாகச் செய்யப் போவதாகவோ அதற்காக ஏதும் திட்டம் போடுவதாகவோ மீனாவுக்கு நெருங்கிய ஒன்றிரண்டு பேரைத்தவிர யாரிடமும் சொல்லவில்லை.
எப்படித் தெரியும் சிவனேசனுக்கு?

* W. - *லகமெல்லாம் வியாபாரிகள் 109
என்ன தெரியாத மாதிரிச் சொல்கிறீர்?" சிவனேசன் குரலில் வியப்புத் தொனித்தது
"உண்மையாகத் தெரியாது. மீனாவுக்குப் புத்தி சொல்லச் சொல்லி அம்மா நச்சரிக்கிறா. மீனா என்னுடன் முகம் கொடுத்துச் சரியாகக் கதைக்கக்கூட இல்லை. நான் வந்த நாளிலிருந்து ஏதும் கதைக்க வெளிக்கிட்டால் என் கல்யாண விஷயமாக ஏதும் கதைப்பதாக இருந்தால் தன்னுடன் கதைக்க வேண்டாம் என்று சொல்லிவிட்டாள்"
அரைவாசி உண்மையும் அரைவாசிப் பொய்யுமாகச் சொல்லி விட்டாள் சகுந்தலா.
"ஏன் இன்னும் உமது தாய் தகப்பன் உமக்குச் சொல்ல வில்லையா? எனக்குத் தெரியாது. உமது தகப்பன் யாரோ ஒரு ஸ்ருடன்ட்டைப் பார்த்திருப்பதாகக் கேள்வி. யார், என்ன என்று சொல்லவில்லை. கிட்டத்தட்டச் சரிவரும் என்று சொன்னார்' சிவனேசன் மனைவிக்குச் சொன்னான். சகுந்தலாவுக்குத் தலைசுற்றிக் கொண்டு வந்தது. கணவன் உண்மையாகச் சொல்கிறானா, அல்லது குடிவெறியில் பிதற்றுகிறானா. அவளால் மேற்கொண்டு எதும் கதைக்க முடியவில்லை. சந்தர்ப்பம் பார்த்து, போன ஞாயிற்றுக்கிழமை யாருடன் சல்லாபம் செய்கிறீர்கள் என்று சண்டை பிடிக்க இருந்தாள். மீனாவின் எதிர்காலத்தைச் சிதறடிக்கும் தன் தாய் தகப்பனின் திட்டத்தைக் கேட்டதும் மனம் வெடித்தது.
வெளியில் இன்னும் இருட்டவில்லை. வைகாசி பிறந்தும், குளிர்காற்று சுள் என்று அடிக்கிறது இதே மாதிரித் தானே தனக்கும் திட்டம்போட்டு ..தாய் தகப்பனைத் திரும்பிப் பார்த்தாள். தகப்பன் யாரோ சினேகிதருடன் கதைத்துக் கொண்டிருந்தார். தாய் வழக்கம்போல் குசினியில் ஒன்றுமே நடக்காததுபோல் இவர்களால் எப்படி இருக்கமுடிகிறது? இப் படித்தானே ஐந்தாண்டுகளுக்கு முன்பும்.சகுந்தலா கலங்

Page 59
1 1 0 ராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம்
கும் கண்களை மூடிக்கொண்டாள். நினைவுகள் பின்னோக் கிப் பறந்தன.
பேரின்பநாயகம் தம்பதிகள் வூல்விச்சில் வந்து குடியேறிய காலம். ஐம்பத்தெட்டாம் ஆண்டுக் கலவரத்தின் பின் சிங்களம் படிக்க முடியாது என்று கிளரிக்கல் வேலையை விட்ட பெரிய மனிதர்களில் பேரின்பநாயகத்தாரும் ஒருவர். கொழும்பில் இருப்பது அபாயம். யாழ்ப்பாண வாழ்க்கை பிடிக்காது வேறு எங்கே போவது? ஆசிரியர் நியமனம் எடுத்துக்கொண்டு வந்து விட்டார் இங்கிலாந்துக்கு. கறுப்பர்கள் தங்கள் அடிமைகள் என்ற மனப்பான்மையிற் தங்களை வெள்ளைக்காரர் நடத்திய தைக் கண்ட பேரின்பநாயகம் போன்றவர்கள் தங்களின் சீர் கெட்ட இரண்டாம்தரப் பிரசைகளின் வாழ்க்கையை வெகு சிரமத்தோட ஆரம்பித்தார்கள். சகுந்தலா பாடசாலைக்குப் போகும் வயது வரும்போது மீனாவுக்கு ஒன்றோ இரண்டோ தான். ஒரு சாதாரணமான குடும்ப வாழ்க்கைக்கு கணவனும் மனைவியும், உழைத்து வீடு வாங்கி தலை நிமிர வெகு காலம் எடுத்தது. ஒருதரம் இலங்கைக்குப் போய் சொர்க்க பூமியைப் பற்றிப் புழுகிவிட்டு வந்தார்கள்.
அதன்பின் இலங்கை கிட்டத்தட்ட மறந்துவிட்டது. எழுபதாம் ஆண்டு அரசியல் அமைப்பால் இலங்கையில் ஏற்பட்ட குழப் பங்களால் தமிழ் மாணவர்கள் இனரீதியாக கல்வி முறைகளால் ஒடுக்கப்படத் தொடங்கியதும் வெளிநாடு வந்த மாணவர் பட்டாளத்தில் கார்த்திகேயனும் ஒருவன். தகப்பனை ஐம்பத் தெட்டாம் கலவரத்தில் பறிகொடுத்தவன். தாய் சாதாரண கல்லூரி ஆசிரியை. யார் கையையோ காலையோ பிடித்து லண்டனுக்கு அனுப்பி வைத்தாள். அதேநேரம் பேரின்ப நாயகத்தார் தன் தம்பி மகன் தியாகராஜாவையும் கூப்பிட் டிருந்தார்.
தியாகராஜாவும், கார்த்திகேயனும் "தேம்ஸ் பொலிடெக்னிக் கில்' படித்துக் கொண்டிருக்கும்போது தியாகராஜனைத் தேடி பேரின்பநாயகத்தார் வீட்டுக்கு வருவதுண்டு.

உலகமெல்லாம் வியாபாரிகள் 111
இலங்கையிற் பிறந்தாலும் லண்ட ஒக்கு வந்ததும் தமிழ் மறந்துபோய் ஆங்கிலேய முறையில் வளரும் ஆயிரக்கணக் கான குழந்தைகளில் சகுந்தலா ஒருத்தியாக இருந்தாலும் தமிழையோ, தமிழர்களையோ அலட்சியம் செய்யப் பழக வில்லை. சில “டமில்" பெண்களைப்போல், நீண்ட கூந்தல் அப்படியே இருந்தது அரைவாசி வெட்டப்படாமல், அழகிய கண்கள் கயலாக இருந்தன அள்ளிப் பூசிய மைகளால் கறை u l- Fa LD6id.
அண்ணனிடம் வந்த கார்த்திகேயனில் காதல் ஒன்றுமில்லை முதலில் காலம் போகப்போக ஒன்றிரண்டு வசந்த காலம் (pl. . . . . . . . .
தியாகராசன் பெரியப்பன் புலிபோலப் பாயப்போகிறார் என்று நடுங்கினான். அவனுக்குத் தெரியும் தன் ஒன்று விட்ட தங்கை சகுந்தலா "புலம்ஸ்ரேட்' பெண்கள் பாடசாலை பார்க்குக் குப் பக்கத்தில் தன் சினேகிதன் கார்த்திகேயனுக்காகக் காத்திருப்பது.
என்ன விசித்திரம். பேப்பரில் விளம்பரம் போட்டு நேர்ஸ் வேலைக்கு வந்த பெண்கள் லண்டன் மண்ணில் கால் வைத்த தும் தாங்கள் வெள்ளைக்காரர் என்ற மாதிரி வெள்ளைத் தோலுக்குப் பின்னால் திரிந்து . அவைகள் எல்லாம் ஏன்?
இந்தப் பெண் என்றால். சரியாகத் தமிழே கதைக்கத் தெரி யாது. அதோட இந்த அரைப்பட்டினி ஆசாமி கார்த்தியில் என்ன கண்டாள்? தானும் அவனும் இலங்கையில தமிழர் பிரச்சனை பற்றி தாக்கப்படும்போது வாய்பிளந்து கேட்டுக் கொண்டிருப்பாள் சகுந்தலா.
அவர்களின் வாய்பேசுமுதல் கண்கள் பேசின. அவர்களுக் குத் தெரியும் தியாகராஜனுக்கு தங்கள் காதல் "சங்கதிகள் தெரியும் என்று.

Page 60
12 ராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம்
முதற்தரம் வூல்விச் ஓடியன் தியேட்டரால் வெளிக்கிட்டு வரும் சினேகிதனையும் ஒன்றைவிட்ட தங்கையையும் கண்டு வாய் அடைத்து விட்டது தியாகராசாவுக்கு என்பது சகுந்தலாவைத் தனயன் பார்த்த விதத்திலிருந்து தெரிந்தது.
'தயவு செய்து அப்பாவுக்குச் சொல்லாதே அண்ணா" தங்கை கெஞ்சினாள்.
"பள்ளிக்கூடத்தில் இன்று நாடக ஒத்திகை. இன்று நடனப் பயிற்சி, இன்று விளையாட்டுப் போட்டி" சகுந்தலாவின் பொய்கள் அழுத்தம் திருத்தமாக இருக்கும்.
கார்த்திகேயனின் பாடு பரிதாபம். முழுநேரப் படிப்பில் சேட்டை விடமுடியாது. அதுமுடிய பின்னேரம் பிங்கோ ஹோலில் வேலை. அதில் "கட்டடித்தால் சாப்பாட்டுக்கு வழியில்லை.
ஏதோ உடல் அரைப்பட்டினியுடன் தவித்தாலும் உள்ளம் சகுந்தலாவின் அன்பில் வளர்ந்தது. சகுந்தலா படிப்பு முடிய செகரட்டரி கோர்ஸ் படிக்க வெஸ்ட் மினிஸ்ட்டருக்குப் போக வரத் தொடங்கினாள் பஸ்ஸில். நாள் முழுக்க விடுதலை. விடுதலையான நாட்களில் இருவரும் ஹைட்பார்க்கில் கை கோத்துக்கொண்டு திரிந்தார்கள் பின்னேரங்களில், யாரும் இலங்கையர்கள் பார்க்கிறார்களோ என்ற பயத்துடன் இளம் காதலர்கள் பயந்து பயந்து லண்டனில் வசந்தகாலத்தைக் கழித்தார்கள். பின்னேரம் படித்துக் களைத்துப்போய் வரும் அருமை மகளுக்குத் தாய் பார்வதி கோழி சூப் வைத்துக் கொடுத்தாள் பாவம் படிக்கிற பிள்ளை என்று, போதாக் குறைக்குப் பேரின்பநாயகத்தாரின் சினேகிதனாருக்குத் தெரிந்த உஷா கணேசர் அப்போதுதான் லண்டனுக்கு வந் திருந்தாள். வெள்ளவத்தையில் சகுந்தலாவுடன் சைவமங்கையரில் படித் தவள் உஷா. அந்தச் சினேகம் இன்னும் மறக்கவில்லை.

உலகமெல்லாம் வியாபாரிகள் 13 ܖ
உஷா வந்ததும் வராததுமாக அடுத்த வருடமே வெள்ளைக் காரனுடன் ஓடிவிட்டாள் என்று பேரின்பநாயகத்தார் துள்ளி னார். நான் லண்டனிலேயே எவ்வளவு அடக்கமாகப் பிள்ளை வளர்த்து வைத்திருக்கிறேன் என்று பெருமை யடித்துக்கொண்டார். அவர் பெருமையில் மண் விழுந்தது ஒருநாள். மகளையும், கார்த்தியையும் கையோடு கை கோர்த்த நிலையில் படத் தியேட்டரில் கண்டபோது, போதாக்குறைக்கு அந்த வருடம் கார்த்திகேயன் தியாகராசா எல்லாரும் சோதனையிலும் பெயில்.
'பாவம் பரிதாபம் என்று வந்த இடத்தில் ஆதரித்தால் இப்படியா உண்ட வீட்டுக்கு ரெண்டகம் செய்வது" உறுமி னார் கார்த்திகேயனைப் பார்த்து. அவன் தலை கவிழ்ந்து போய் நின்றிருந்தான். 'ஏதோ சாட்டு போக்குச் சொல்லி லண்டனுக்கு வந்தால்போல நீங்கள் எல்லாம் பெரிய ஆட்களோ? விம்பிபாரில் கோப்பை கழுவத்தான் சரி. படிப்பும், பட்டமும் உங்களுக்கேன்? தான் போக வழியில்லை தும்புத் 25ty-dig5...... *" பேரின்பநாயகத்தார் வாய்விட்டுக் கத்தினார்.
சகுந்தலா கொஞ்சநாள் வெஸ்ட்மினிஸ்ரருக்குப் போக வில்லை. மகளை எப்படி நம்புவது என்று தாய் கண்ணிர் விட்டாள். கடைசியில் எத்தனையோ வாக்குவாதம், சத்தியங்களின் பின் சகுந்தலா தன் செகரட்டரிப் படிப்பைத் தொடர்ந்தாள்.
'சகுந்தலா நீர் சின்னப்பெட்டையில்லை. இருபத்தொரு வயதாகிறது. இன்னும் கொஞ்ச நாளில் படிப்பு முடிகிறது. எனக்கு இன்னும் இரண்டு வருடத்தில் படிப்பு முடிகிறது. சட்டப்படி கல்யாணம் செய்யலாம். என் படிப்பு முடியும்வரை தான் கஷ்டம். அதன்பின் ஒரு கஷ்டமும் இல்லை. கார்த்தி இப்படிச் சொன்னான் சகுந்தலாவுக்கு. அவன் கெஞ்சினான். மரமெல்லாம் இளம் துளிர்கள் துளிர்த்துப் பச்சைப்பசேல் என்றிருந்தது. பறவைகள் லண்டனில் "சமரை அனுபவித்

Page 61
114 ராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம்
துப் பாடிக்கொண்டிருத்தன. கிறின் விச் பார்க் மூலையில் உள்ள பெஞ்சில் அவன் மார்பில் முகம் பதித்து அவள் உட்கார்ந்திருந்தாள்.
"என்ன சகுந்தலா வாய் பேசாமல் இருக்கிறாய்" அவள் முகத்தை நிமிர்த்திக் கேட்டான் கார்த்திகேயன், 'ஏன் அவசரப்படுகிறீர்கள்" அவள் அவனை விளங்காமற் கேட்டாள்.
"ஏன் என்றால் உமது தகப்டனுடன் மனதைக் குழப்பி ஏதும் செய்யாமல் இருப்பதற்காகத்தான்." அவன் அவளின் அறியாமையைக் கண்டு கொதித்தான்.
"நீங்கள் சோதனை பெயில் என்றுதான் அப்பாவுக்குக் கோபம். கட்டாயம் என் சொல்லைக் கேட்பார், நீங்கள் படித்து முடித்ததும். நான் முதற்பிள்ளை அவர்கள் என்னைச் சந்தோஷமாக வைத்திருக்கத்தானே யோசிப்பார்கள் " சகுந்தலா களங்கமின்றிக் கேட்டாள்.
அதிக நாட்களின் பின் கண்டிருக்கிறாள் அவனை. சண்டை பிடித்து வீணாக்க விரும்பவில்லை.
'' Feiss6) r உன் தாய் தகப்பனைக் கேட்டா என்னை விரும்பினாய்" அவன் வெடித்தான். அவள் பேசாமல் இருந்தாள்.
'அல்லது நான் எஞ்சினியரிங் படிக்கிறேன் என்பதற்காகவா விரும்பினாய்" அவன் குரூரமாகக் கேட்டான்.
'ஏன் இப்படி எல்லாம் சொல்கிறீர்கள்." அவள் அழுதே விட்டாள். "ஏனென்றால் உமது தகப்பன் எனக்காகத் தன் மனத்தை ஒருநாளும் மாற்றப்போவதில்லை. நான் உங்கள் அந்தஸ்துக்குச் சரியில்லை என்று நினைக்கின்றார். எனக்குத்

உலகமெல்லாம் வியாபாரிகள் 15
தம்பி தங்கைகள் இருக்கிறார்கள். தகப்பன் இல்லை. பெரிய குடும்பபாரம் இருக்கிறது. இதெல்லாம் உமது தகப்பனுக்குத் தெரியும். அவர் ஒருநாளும் மனம்மாறப் போவதில்லை. நீர் சொல்வதுபோல் என் படிப்பு முடிய அவர் மாறுமென்றால் மாறட்டும். நாங்கள் சட்டப்படி கல்யாணம் செய்யலாம்."
அவன் எத்தனையோ சொல்லியும் அவள் மனம் மாறவில்லை. *" என்ன அவசரம். படிப்பை முடியுங்கள் முதலில். தாய் தகப்பனை மனம் வருத்தக்கூடாது."
"கிழட்டு உபதேசம் எனக்கு வேண்டாம்" அவன் கத்தி னான். முடியுமானவரையில் சகுந்தலாவைச் செய்வது அவன் திட்டம். -
"உங்களுடன் திரிந்ததற்காக என்னை எப்படியும் செய்யச் சொல்லலாம் என்று எதிர்பார்க்கிறீர்கள்." அவள் முதற் தரம் கத்தினாள் வேதனையில்.
'நான் உம்மை எதுவும் செய்யச் சொல்லவில்லை. என்னில் உண்மையான அன்பிருந்தால் என்னைக் கல்யாணம் முடி என்கிறேன்." அவன் கெஞ்சினான். அளவுக்கு மீறிக் கதைத்து அவளை மனம் வருத்தி விட்டேனோ என்று அவன் தவித்தான்.
அவள் அழுது முடிய எழுந்தாள். '"நான் சின்னப்பிள்ளை யில்லை எடுத்தார் கைப்பிள்ளையாக, படிப்பை முடித்து விட்டு வாருங்கள் உங்களுக்காகக் காத்திருக்கிறேன்." அவள் ஓடினாள் அவன் கூப்பிடுவதை அலட்சியம் செய்துவிட்டு. இருவருக்கும் தெரியவில்லை அதுதான் அவர்களின் கடைசிச் சந்திப்பு என்று.
இரண்டு மாதத்துக்குமேல் அவனைக் காணவில்லை. போதாக்குறைக்கு பேரின்பநாயகத்தார் விம்பிள்டனில் வீடு

Page 62
116 ராஜேஸ்வரி பாலசுப்பிர மணியம்
வாங்கிவிட்டார். இனி எங்கே அவனைக் காண்பது. ஒரு நாள் உஷாவுக்குப் போன் பண்ணியபோது உஷா சொன் னாள் தாய்க்குச் சுகமில்லை என்று இலங்கைக்குப் போய் விட்டதாக.
ஒருநாள் களைத்து விழுந்துபோய் கல்லூரியால் வந்து சேர்ந் தாள் சகுந்தலா. தாய் பரபர வென்று ஓடித்திரிந்து பலகாரம் செய்துகொண்டிருந்தாள். ' என்னம்மா விஷேசம?" சகுந் தலா கேட்டாள். மீனா தன் பாடசாலைச் சினேகிதியுடன் பிரான்சுக்குப் போயிருந்தாள். தமயன் தியாகராசா அவர் களுடன் இல்லை. லண்டனிலுமில்லை. கல்லூரி மாணவர் கோஷ்டியுடன் ஸ்கெரட்லாண்ட் போயிருந்தாள.
தாய் மகளை சந்தோஷத்துடன் பார்த்தாள். நாளை உன் தகப்பனின் சினேசிதர் குடும்பம் சாப்பிட வருகிறார்கள். நல்ல பலகாரம் செய்கிறேன். "நாளைக்கு வெள்ளன வரப்பார். அல்லது அரைநாள் லீவுபோடு." தாய் அன்புடன் சொன்னாள். எத்தனை பேர் வருகிறார்களோ தெரியாது அம்மா பாவம், அடுத்த நாள் அரைநாள் லீவோடு வந்து சேர்ந்தாள்.
அமர்களமான சமையல். அருமையான பலகாரங்கள்
அப்பாவின் சினேகிதர் அப்பாவுடன் கொழும்பு இந்துக் கல்லூரியிற் படித்தவராம். இன்னும் சினேகிதர்களாய் இருக்கிறார்களாம். அப்பாவின் சினேகிதரின் மகன்கள் மூன்றுபேரில் ஒருவர் அமெரிக்கா போகிறாராம் வேலை விடயமாக. மற்ற மகன்களில் ஒருவர் லண்டனில் படிக்கி றார். மற்றவர் கனடாவில் கல்யாணம் முடித்திருக்கிறாராம்.
நல்ல குடும்பம். சகுந்தலா நினைத்துக் கொண்டாள். கல கலவென்று நல்ல குடும்பம். "எப்படி ஆட்கள்?" அம்மா கேட்டா எல்லோரும் போய் முடிய

உலகமெல்லாம் வியாபாரிகள் 17
**நல்ல ஆட்கள்போலக் கிடக்கு." அதைத்தவிர அவள் ஒன்றுமே சொல்லவில்லை வெள்ளிக்கிழமை பின்னேரம் சோர்ந்துபோய் வந்தாள் சகுந்தலா. வரமுதல் உஷாவுக்குப் போன் பண்ணிக் கேட்டாள் கார்த்தியிடமிருந்து ஏதும் கடிதம் வந்ததா என்று. இல்லை என்ற மறுமொழி அவளை வருத் தியது. அவனை மனம் புண்படப் பண்ணி விட்டேனோ என்று தவித்தாள்.
அவன் வந்ததும் முதல் வேலையாக அவன் சொல்படி நடப்ப தாகச் சொல்லவேண்டும் என்று நினைத்துக்கொண்டாள். தாய் தகப்பனை மனம் வருத்திவிட்டுக் கார்த்திகேயனிடம் போவது அவளைத் துன்புறுத்தியது. தாய் தகப்பன் இவ்வளவு எதிர்ப்பார்கள் என்று தெரியாது. கார்த்திகேயன் சொல்வதுபோல் அவர்கள் ஒருநாளும் கார்த்திகேயனை ஏற்றுக்கொள்ளப் போவதில்லை என்றால் அவர்களுக்குத் தெரியாமல் போவதைவிட வேறு என்ன வழி?
சாப்பிட்டு முடிய தகப்பன் சகுந்தலாவுடன் கதைக்க வேண்டு மென்று சொன்னாராம். முன்னறையில் நுழைந்தபோது அவர் மெல்லிய வெளிச்சத்தில் டெலிவிஷனில் பார்வையைப் பதித்தார். மகளைக் கண்டதும் டெலிவிஷனை ஒப் பண்ணி விட்டு லைட்டைப் பிரகாசமாக்கிவிட்டு மகளின் அருகில் உட்கார்ந்தார்.
ஏன் தகப்பன் தன்னை எடைபோடுவதுபோல் பார்க்கிறார் என்று தெரியவில்லை அவளுக்கு.
"என்ன பார்க்கிறீர்கள்" மகள் தலையைத் தாழ்த்திக் கொண்டு கேட்டாள்.
"லண்டனில் வளர்ந்தும் எவ்வளவு அடக்கமாய் இருக்கிறாய் என்று என் சினேகிதர் குடும்பம் சொன்னது. அதுதான் பார்க்கிறேன் என் மகளை." தகப்பனின் குரல் தழுதழுத்தது.

Page 63
118 ராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம்
சகுந்தலா மறுமொழி சொல்லவில்லை. 'நீ அதிர்ஷ்டசாலி சகுந்தலா'' தகப்பன் தொடர்ந்தார். அவள் விளங்காமல் தகப்பனைப் பார்த்தாள்.
"லண்டன் முழுக்க இடறுபட்ட இடமெல்லாம் எத்தனையோ எஞ்சினியர்களும் எக்கவுண்டன்களும் இருக்கிறார்கள் தமிழ் ஆட்களுக்குள். ஆனால் எந்தக் குடும்பத்தில் இருந்து வந் திருக்கிறார்களென்பதில்தான் அவர்களின் தகுதி தங்கியிருக் கிறது.'
மகள் இன்னும் வாய் திறக்கவில்லை.
"நான் பேர்வழி சிங்களவர்களுடன் மோதாமல் இவ்விடம் வந்து மழையிலும், குளிரிலும் மாரடிக்கிறம், என்ர சினே கிதனைப் பார் இலங்கை அமைச்சு ஒன்றின் நிரந்தரக் காரிய தரிசி இப்போது. என்ன தகுதி தெரியுமா அது!"
சகுந்தலாவுக்குத் தெரியத் தேவையா?
"அவர்களின் மகனுக்கு உன்னைச் ச்ெய்யச் சம்மதித்திருக் கிறார்கள். எவ்வளவு அதிர்ஷ்டசாலி நீ' தகப்பன் பெருமை யாகச் சொன்னார்.
சகுந்தலா திடுக்கிட்டு உட்கார்ந்தாள். என்ன சொல்கிறார் தகப்பன்? கல்யாணம் பேசவா வந்தார்கள்? காதுகள் அடைத்துக் கண்கள் இருண்டுகொண்டு வந்தன அவளுக்கு.
என்ன சொல்கிறார் அப்பா? நா வரண்டு, தொண்டை யடைக்குமாற்போல் இருந்தது.
'பிள்ளைகளைப் பார்த்துவிட்டுப் போவதற்காக லண்டனுக்கு வந்திருக்கிறார்கள். மகன் சிவனேசன் நியூயோர்க் போக முதல் கல்யாணம் செய்து அனுப்ப நினைக்கிறார்கள். ஒரு விதத்தில் எங்களுக்கும் நல்லது. அவசரம் என்றபடியால்

உலகமெல்லாம் வியாபாரிகள் 119
ஆட்களுக்கு அறிவிக்கவில்லை என்று சொல்லலாம்." தகப்ப
னின் குரலில் எவ்வளவு மகிழ்ச்சி.
"என் உயிர் போனபின்தான் எனக்குக் கல்யாணம் செய்து வைப்பீர்கள்.'" அவள் குரல் அடைத்தது. விம்மலுடன் ஓடிப்போய்த் தன் அறையைப் பூட்டிாைள். தாய் தகப்பனால் இப்படி கொடூரமாக நடக்கமுடியுமா?
இவர்களுக்குத் தெரியாதா தன்னையும், கார்த்திகேயனையும் பற்றி அல்லது தெரியாததுபோல் நடக்கிறார்களா? என்ன செய்வது வீட்டை விட்டு ஓடலாமா? கண்கள் மரத்து நித்திரை கூட வரவில்லை. நடுச்சாமம் இருக்கும். அழுது களைத்து விட்டாள் சகுந்தலா. தாய் கதவைத் தட்டினாள், அழுத கண்ணும் சிந்திய மூக்கு மாகக கதவைத் திறந்தாள் சகுந்தலா. தாயின் முகத்தின் கருமை அவளைப் பயமுறுத்தியது.
'சகுந்தலா உன் தகப்பன் இருதய நோயாளி என்று தெரியும் உனக்கு. நெஞ்சைக் கையில் பிடித்துக்கொண்டு துடிக்கின் றார். போய்ப் பார். டொக்டர் பக்கத்தில் இருக்கின்றார். ஒன்று சொல்கிறேன். நீ என்ன நாடகத்தையும் ஆடு. ஆனால் உனது தகப்பனுக்கு ஏதும் நடந்தால் ...நீதான் கொலைகாரி, ""
இரவின் அமைதியில் தாயின் வார்த்தைகள் தெளிவாக இருந் தன. ஒவ்வொரு வார்த்தையும் சம்மட்டிகளாய்த் தலையில் அடித்தன.
கீழே டொக்டரின் குரல் கேட்டது. கீழே போய் பார்க்க sufruorr?
கார்த்திகேயனின் கெஞ்சலான முகம் மனத்திரையில் தெரிந்
தது. இப்படி ஏதும் நடக்குமென்று எதிர்பார்த்துத்தானா அன்று அப்படிக் கேட்டான்?

Page 64
120 ராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம்
என் மாட்டேன் என்று சொன்னேன். நினைவுகள் திரும்பத் திரும்ப கார்த்திகேயனில் வந்து நின்றன.
மனம் மட்டுமல்ல உடம்பே விரைத்த உணர்ச்சி. எத்தனை நாள் அப்படி இருந்தாள் என்று தெரியாது. "இரண்டு மூன்று நாட்களாக நித்திரையில்லாமல் இருக்கிறாள் டொக் டர். திடீர்க் கல்யாண ஷொக்காக இருக்கலாம்" தகப்பன் நெஞ்சக்குத்துடன் சொல்கிறார். 'என்ன ஒரு மாதிரி இருக் கிறாள் நேர்வஸ் பிறேக்டவுனா' தாய் பரிதாபமாகக் கேட் பது அவளுக்கும் கேட்டது.
சகுந்தலா இதுதான் சீவியமா? உஷா எங்கே போய்விட்டாள்? அண்ணா தியாகராஜா இருந்தால் என்றாலும் தாய் தகப்ப னுடன் சண்டை பிடித்திருப்பான். மீனா நீயாவது இல்லையா எனக்குத் துணையாக!
அவசரக் கல்யாணம் என்றபடியால் அதிகம் விருந்தினரோ சினேகிதரோ இல்லை. "பெண் மிகவும் வெட்கப்படுகிறாள் போல் இருக்கு!" விண்ணானம் பிடித்த சில பெண்கள் சொல்லிக் கொள்வது கேட்டது. உடம்பு வேலை செய்து கொண்டிருக்கும் சிலவேளை உள்ளம் மரத்துப்போய் இருக்கும்போது.
சிவனேசன் பார்வைக்குப் பரவாயில்லைத்தான். நல்ல உத்தியோகம். நல்ல குடும்பம். பார்வதியும், பேரின்ப நாயகத்தாரும் பூரித்துப் போய்விட்டார்கள் கல்யாணம் நடைபெற்று முடிந்தபோது.
'உங்கள் வீட்டுக்குச் சாப்பிட வந்தது உம்மைப் பெண் பார்ப்பதற்காகத்தான் என்று தெரியுமா" சிவனேசன் கிளுகிளுப்புடன் மனைவியை அணைத்துக் கேட்டபோது அவள் கண்கள் வெறுமையாக அவனைப் பார்த்தன.

உலகமெல்லாம் வியாபாரிகள் 21.
சகுந்தலாவின் கண்களில் நீர் வழிந்து கொண்டிருந்தது. இன்னொருதரம் இப்படிச் செய்யத் தயங்கமாட்டார்கள் தாயும் தகப்பனும், அதிலும் இலங்கைப் பெடியன் என்றா லும் பரவாயில்லை. வெள்ளைக்காரனுக்குப் பின் திரிகிறாள்
D56
மீனாவுக்கு இதெல்லாம் தெரியாது. கலகலவென்ற சத்தத் துடன் குழந்தையுடன் மீனா மேலே வருவது கேட்டது. மீனா இந்தச் சந்தோஷமான சிரிப்பு எவ்வளவு நாளைக்கு இருக்கப்போகிறது உன் முகத்தில்?
*" என்ன இஞ்சி தின்ற குரங்குபோல் மூஞ்சியை நீட்டிக் கொண்டிருக்கிறாய்" தமக்கையைக் கேட்டாள் மீனா. அறிவும், இளமையும், துணிவும் கொண்ட தன் தங்கையின் முகத்தைப் பார்த்தாள் சகுந்தலா.
"என்ன என்னை அப்படி பார்க்கிறாய்?" தங்கை குழப்பத் துடன் கேட்டாள். - சொல்வதா வேண்டாமா? அப்பா கூட்டத்துக்குப் போய் விட்டார். வரட்டும் நேரே அவரைக் கேட்டுவிட்டு இவளுக்குச் சொல்லலாம்.
கீழே சத்தம் கேட்டது. அப்பா கூட்டத்தில் இருந்து வந்து sí. Tyrr?
கோபத்துடன் அவர் குரல் கேட்டது. அவருடன் இன்னும் சிலரின் குரலும் சேர்ந்து கேட்டது. என்ன நடக்கிறது கீழே தமக்கையும், தங்கையும் ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டார்கள் ஒன்றும் புரியாமல்,

Page 65
122 ராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம்
"எதற்கும் கீழே போய்ப் பார்ப்போம்." மீனா தடதட வென்று கீழே இறங்கினாள்.
தகப்பன் உருத்திர மூர்த்தியாகத் துள்ளிக்கொண்டிருந்தார். கூட்டத்தில் ஏதும் அடிபிடியோ? தாய் வந்தவர்களுக்குக் கோப்பி போட்டுக்கொண்டிருந்தாள்.
"என்னம்மா நடந்தது' சகுந்தலா தாயைக் கேட்டாள்.
தாய் மகளின் முகத்தைப் பார்க்காமல் சொன்னாள் 'தாய் தகப்பன் இல்லாமல் வளர்ந்த சண்டியன்கள் தங்கள் எழிய குணத்தை இங்கிலாந்துக்கு வந்தும் மறக்கவில்லை."
கார்த்திகேயனுடனா சண்டை
சகுந்தலா மேலே ஒன்றும் கேட்கவில்லை.
'எழிய நாய்கள். நாங்கள் இவ்வளவு கஷ்டப்பட்டுக் கூட்டம் வைக்க குண்டுபோட்டு விட்டார்கள்." தகப்பன் கத்தினார்.
சகுந்தலா திடுக்கிட்டுப்போய் நின்றாள்.

亦
இரவெல்லாம் இடி மின்னல் மழை எல்லாம் பொழிந்ததுபோல் இருந்தது வீட்டில். பெரிய மனிதர்கள் ஒழுங்கு செய்த கூட் உத்தில் இந்தக் காவாலிப் பெடியன்கள் செய்த கலாட்டாவால் எவ்வளவு அவமானம். தாய் வாயாரத் திட்டினாள். தகப்பன் யார் இந்த வேலைக்குப் பின்னால் திரிகிறார்கள் என்று கண்டுபிடிக்காமல் விடுவதில்லை என்று கத்திக்கொண்டு திரிந் தார்.
**இந்த பொம்மலாட்டத் தலைவர்கள் சும்மா உருப்படியில்லா மல் புழுகிக்கொண்டு திரிந்தால் இப்படித்தான் நடக்கும் என்று அவர்களுக்குத் தெரியவேண்டாமா' மீனா சந்தோஷத்துடன் சொன்னாள்.
"உனக்கென்ன தெரியும் என்ன கூட்டமென்று? நீதான் தமிழ் பெண் இல்லை என்று யாரோ வெள்ளைக்காரனைப் பார்த்துக்கொண்டு ஓடப் பார்க்கிறாயே' சகுந்தலா சலித்துக் கொண்டாள்.
கலாட்டா செய்தவர்களைக் கார்த்திகேயன் தான் தூண்டிவிட்ட தாகத் தகப்பன் நேரடியாகச் சொல்லிப் பேசுகிறார். போலி சில் பிடித்துக் கொடுக்கிறேன் என்கிறார். காசு கொடுத்தென் றாலும் ஆள் வைத்து அடிப்பேன் என்கிறார் அடுத்த நிமிடம். பட்ட அவமானத்தில் மூளை குழம்பி விட்டதா இவருக்கு. மீனா விழுந்து விழுந்து சிரித்தாள்.

Page 66
ராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம்
"என்ன இளிக்கிறாய்?" தமக்கை கடிந்து கொண்டாள்.
"அக்கா நான் என் சிரிக்கிறேன் என்றால் அப்பாவின் அறியாமையை நினைத்துத்தான். அமெரிக்கன் தன் இலவச மாவைக் கொடுத்து ஏழை மக்களைத் தன் பக்கம் திருப்பலா மென்று கனவு காணுவதுபோல் இருக்கிறது அப்பாவின் கதையும். காசு கொடுத்து எதையும் செய்யலாம், யாரையும் வாங்கலாம் எந்தப் பதவியையும் எடுக்கலாம் என்று நினைக் கிறார்கள். பான்ன முட்டாள்த்தனம். இவர்களை இப்படிப் படாத பாடு படுத்தியது கார்த்திகேயனோ தெரியாது. தெரிந் திருந்தாலும் நான் ஆச்சரியப்படப் போவதில்லை விழல்ப் பேச்சு பேசாமல் ஏதாவது காரியத்தில் செய்வோம் என நினைக்கிறார்கள். அது பெரிய வீரமில்லையா" சகுந்தலா வைப் பார்த்தாள் மீனா. இந்தப் பெண்ணுக்கு எப்போது உருப்படியாகத் தெரியப் போகிறது அப்பா மாதிரி ஆட்களின் காசு எள்ளளவு வலிமையானது என்று.
தகப்பனார் கூட்டத்தில் பட்ட அவமானத்தால் மீனாவின் கல் யான விடயத்தில் அக்கறை காட்டவில்லைபோல் இருக் கிறது. வீட்டில் எதும் கசமுச பேச்சுக்கள் இல்லை. யார் இந்த தாரகாபான வேலையைத் தூண்டி விட்டவர்கள் எனத் துப்பறிந்து கொண்டு திரிந்தார்.
"என் கம்மா ஆவன் தரவளிடன் கொழுவுகிறீர்கள்? அங்கை யாழ்ப்பனாத்தில் எத்தனை பொலிஸ்காரன்களைச் சுட்டுப் போட்டான்கள். ஆனானப்பட்ட பொலீஸ்காரன்களாலே பிடிக்க முடி11ல் ஆப் டான் :ங்களுக்குத் தலையிடி ' பார்வதி பயத்துடன் சோன்ன ர்ெ.
காட்டிக்கோடுக்கும் எட்டப்பர்களை ஒழிப்பதுதான் எங்கள் முதல் வேலை என்பதுபோல் இளைஞர்கள் நடத்தும் தனி மனித பலாத்காரத்தால் பார்வதி பயந்துபோய் இருத்தாள். யாரும் கதவு 1 விரியை அடித்தால் யாரென்று தெரியாமல்

ք հ՝ իհլr i's1'r) լr hift:r t. In + 1, siT 1፰፥ኹ
திறக்காதே என்று உத்தரவிட்டிருந்தார் பேரின்பநாயகத்தார். தங்களைப் போன்றவர்களின் பணத்தின், படிப்பின், அதிகார மமதையின் செல்வாக்கு இந்த விடுதலை வீரர்களின் போராட் டத்தின் முன்னால் பொசுங்கிப் போவதை அவர் வெறுப்புடன் உணராமல் இருக்கமுடியவில்லை. ட எடிா இந்த நெருக்கடி களுக்குள் போன் பண்ணினாள். முடியுமென்றால் சாப்பிட வரட்டாம் சதுர்தலாவை அன்றைக்கு அவசரத்தில் வந்து ஓடி விட்டாளாம். இன் மைக்கு எந்து சந்திக்க முடியுமா என்று கேட்டா ர்ே உாை.
ஒரு சனிக்கிழமை பின் கோரம் சகுந்தலா உஷா வீட்டுக்குப் புறப்பட்டாள் அன்ரனி அன்று ஹாங்கொங் போவதால் எயார் போட்டுக் குL போய்விட்டாள் , ' எங்கே போகிறாய் விழுந்தடித்துக் கொண்டு" அவரமாகக் காரை ஸ்ராட் பண்: ணும் மீனாவைக் கேட்டாள்.
வழக்ாம்போல் மீனாவின் குறும்புத்தனமான சிரிப்பு தவழ்ந் தது. இப்போது என்ன பொய் சொல்லப்போகிறாள்? சகுந் தலா தன் வியப்பை வெளிக்காட்டாமல் தங்கையைப் பார்த் தாள்.
"என் மாணவிகளை வின்ஸ்ரர் காஸ்சில் பார்க்கக் கூட்டிக் கொண்டு போகிறேன். வர நேரமாகும்." இப்படி மீனாவால் எப்படித் தப்பமுடிகிறது.
சினேகிதிகளின் பிறந்த தின நாட்களைச் சாட்டிக் கொண்டு கார்த்திகேயனுடன் திரிந்த நாட்கள் ஞாபகம் வந்தன சகுந்த GJIT6jë gj.
தாய், என் கீதாவையும் இழுத்துக்கொண்டு பஸ்ஸில் அலையப் போகிறாய் குழந்தையை விட்டுவிட்டுப் போ என்றாள். சரி என்று பட்டது. இரவு உஷா வீட்டில் தங்கிவிட்டு வருவதாகச் சொல்லிவிட்டு வெளிக்கிட்டாள் சகுந்தலா. தற்செயலாகச்

Page 67
I ராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம்
சிவனேசன் போன்பண்ணினால் இன்னொருதரம் கோபிக்கப் போகிறான் எங்கே போய்விட்டாள் என்ற யோசனை வந்தது. கோபம் வாட்டும். தன் மனதுக்குள் சொல்லிக் கொண்டாள் சகுந்தலா. பஸ் ஸ்ரொப்பில் நின்றபோது சிந்தனை எங்கெல் லாமோ சென்றது. அன்ரனி வருவதற்கிடையில் மீனாவுக்கு ஏதும் நடக்காமல் இருக்க வேண்டும். என மனம் தவித்தது. கார்த்திகேயன் தாய்க்குச் சுகமில்லாமல் இலங்கைக்குப் போயி ருந்தபோதுதானே தனக்கும். நினைவு தடைப்பட்டது.
"என்ன நீண்ட பயனமோ" அவள் முகத்தில் எப்போதும் போல் சிரிப்பு, அவனையும் அவன் சிரிப்பையும் கண்டதும் அவளுக்குத் தகப்பன் துள்ளியது ஞாபகம் வந்தது.
"செய்ததையும் செய்துவிட்டுச் சிரிப்பு வேறு உங்களுக்கு" என்று சொல்ல நினைத்தாள்.
"'என்ன பிடித்துவைத்த பிள்ளையார் மாதிரி நிற்கிறீர்" அவன் கேட்டான். கார்த்திகேயன் போன்றவர்கள் எப்படிச் சிரித்த முகத்துடன் இருக்கிறார்கள்.
'வந்த எாழியால் போவதற்கென்ன என் சும்மா கரைச்சல் படுத்திறியள்." அவள் முடிக்கவில்லை. "ஆக்கள் ஆரும் பார்த்தாலும்" என்று அவன் சொல்லி முடித்தான்.
அவள் பொறுமையின்றிப் பார்வையைத் திருப்பிக் கொண் டாள் " "சகுந்தலா உம்மிடம் கொஞ்சம் கதைக்க வேண்டும்" அவன் கார் ஜன்னலால் தலையை நீட்டிச் சொன்னான்.
"ஓம் நாற்றக் குண்டு போட்ட எழிய வேலைபோதாது அதைப் பற்றிய விளக்கம் வேறோ " அவள் எரிந்து விழுந்தாள். பக்கத்தால் போன ஒரு பெரிய நெருப்பனைக்கும் லொறி சத்தம் போட்டுக் கொண்டு போனதால் அவள் சொன்னது அவனுக்குக் கேட்கவில்லை. ஆனால் அவள் முகம் கோபத் தில் துடிப்பது தெரித்தது

உதடெர் 'T' விடா பாரிகள் 137
"வேனுமானால் அடுத்த ஸ்ரொப்பில் இறக்கி விடுகிறேன். காரில் எறியிருந்து கத்தும்" என்றான் கார்த்திகேயன். அவள் வேண்டா வெறுப்பாக காரில் எறிக்கொண்டாள். மாதும் பார்த்தாள் கிேன்று ஒரு கணம் நினைத்தாள். அடுத்த கவனம் தகப்பனுக்கு ஏன் இவ்வளவு அவமானம் செய்தீர்கள் என்று கேட்காமல் விடுவதில்லை என்ற வைராக்கியம் பிறந்தது.
"என்ன உமது முகத்தில் எள்ளும் கொள்ளும் வெடிக்கிறது" அவன் வழக்கம்போல் புன்னகையுடன் கேட்டான்.
"நீங்கள் செய்யும் எழிய வேகாலக்கு முகத்தில் எள்ளும் கொள்ளும் வெடிக்காமல் 5TH Sr செய்யும்" ஆங்ஸ் குமுறினாள்.
"நான் ஒன்றும் செய்யவில்லை. உமது தகப்பன்தன் அப்பாவிப் பெடியனைப் பிடித்து ஆயிரக் கனக்கில் பவுண்ஸ் தருகிறேன் என் மகள் மீனாவைச் செய் என்று கூப்பாடு போட்டுக்கொண்டு திரிகிறார். என்ன கேவலம் இது கருவாட்டுக்கு விலை பேசுவது போல்" ஆவன வெறுப்புடன் சொன்னான்.
என்ன இது உண்கா மயா? இது சொல்லவா இவன் கூப்பிட் டான். அல்லது வேறு ஏதுமா?
"என்ன உம்முடைய முகம் விறைத்துப்போய்க் டேக்கு" அவளைத் திரும்பிப் பார்த்துவிட்டுக் கேட்டான். அவளுக்கு என்ன சொல்வது என்று தெரியவில்லை "எனக்குத் தெரியும் மீனா இதற்கெல்லாம் இடம் கொடுக்கமாட்டாள் என்று" நம்பிக்கையுடன் அவள் குரல் ஒலித்தது.
"உம்மைப்போல் கோழையாக fsTIT இருக்கமாட்டாள் என்று தெரியும்" அவன் பார்வை பின்னோத்து நெருக்க மான பாதையில் படிந்திருந்தது. லண்டன் மத்தியில் வேலை

Page 68
128 ராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம்
செய்துவிட்டு நாட்டுப் பக்கங்களுக்குப் போகும் கார்கள் மந்தைகள் மாதிரி நத்தை வேகத்தில் ஊர்ந்து கொண்டி ருந்தன.
அவன் சொற்கள் அவள் மனத்தில் சுரீரென்று தைத்தன. எப்படிக் கல்யாணம் நடத்தப்படடது என்று அவனுக்கு இது வரையும் தெரியாமல் இருக்கலாம். கோழைத்தனமாகத் தாய் தகப்பனை மீற முடியாமல் அந்தஸ்துக்கு ஆசைப்பட்டு கல்யாணம் முடித்ததாக நினைக்கிறானா? எப்போது சொல் வாள் தன் சோகக் கதையை.
"ஏன் என்னை இப்படித் தாக்குகிறீர்கள்." கஷ்டப்பட்டு தன் உணர்ச்சிகளைக் குரலில் காட்டாமற் கேட்டாள். "என்ன தாக்குகிறேன்." அவன் சாதாரணமாகக் கேட்டான்.
"என்ன நடந்தது என்று உங்களுக்கு ஒருநாளும் விளங்கப் போவதில்லை." அவள் குரல் மென்மையாக ஒலித்தது.
"எனக்கு இதுவரை விளங்கியதே போதும். ஒரு காதல் கதை கேட்க ஆசையிருந்தால் தமிழ்ப்படம் நிறையக் காட்டுகிறார் கள் லண்டனில், போய்ப் பார்ப்பேன். ஆனால் எனக்கு அப்படியான விழல் விடயங்களில் நேரம் செலவழிக்கக் கட்டாது."
என்வப்ாவ :டுத்தெறிந்து பேசுகிறான்.
" "ஒமோம். நீங்கள் எல்லாம் இலட்சியவாதிகள்."
கிண்டலாகச் சோன்னாள் சகுந்தலா.
"நான் விளம்பரம் போடவில்லை, நாள் இலட்சியவாதி என்று. எங்கள் நடுவில் இருக்கும் முக்கியமான பிரச்சனையில் அக்கறை எடுத்தால் இலட்சியவாதி என்று ஆகிவிடாது. எனக்கு சரியானது என்று எதை நம்புகிறேனோ அதற்காகப்

உலகமெல்லாம் வியாபாரிகள் 13)
போராடப் போகிறேன். இம்போது பிழையான காரியம் என்று சொல்பவர்கள் சரி என்று சொல்ல இன்னும் இருபது வருடம் எடுக்கலாம். உரிமைப் போராட்டங்கள் வெறும் விளையாட்டுப் போட்டியல்ல எத்தனையோ மனிதர்களின் தன்னலமற்ற தியாகம் தேவை அதற்கு."
அவள் பேசிக்கொண்டே இருந்தான். அவள் பொறுமை யின்றி முணுமுணுத்தாள்.
"எனக்கு அரசியலில் அக்கறையில்லை' அவனின் சொற் பொழிவைக் கேட்கமுடியாத பொறுமையின்மை குரலில் ஒலித்தது. அவன் முகத்தில் பச்சாதாபமான சிரிப்பு நெளிந்தது
"என்ன அப்படிப் பார்வை" அவள் அவனின் பார்வையின் கிண்டலைத் தாங்காமற் கேட்டாள்.
"உம்மைப்போன்ற பெண்களுக்கேள் அரசியல்? அடுப்படிச் சீவியம்தான் அருமை என்று நினைக்கிறவர்கள் நீங்கள், ஒரு சீலை. சட்டை, சோறு, கறி, வீடு. "" அவன் சொல்லிக் கொண்டே போனான்.
அவள் பொறுமையின்றிக் கத்தினாள். " பின்னே என்ன தும்புத்தடியைத் தூக்கிக்கொண்டு சண்டைக்குப் போகவா" அவளின் கோபம் அவனுக்கு வேடிக்கையாக இருந்தது.
"சண்டைக்குப் போகும் காலம் வரும்போது தன்பாட்டுக்குப் போளிர்கள். அதற்காக இப்போது தயார் செய்யவேண்டும். உலகத்தில் எத்தனையோ நாடுகள் பெண்களின் திறமை யுடன் முன்னேறுகின்றன. எங்கள் தமிழர்களைப் பொறுத்த வரையில் பெண்களின் திறமை புட்டவித்து அப்பம் சுடுவதில் தான் ஆயிரக்கணக்கான வருடங்களைச் செலவழித்துவிட் டது.'

Page 69
ராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம்
"உங்களுக்குப் பைத்தியம். விசர்த்தனமான கதைகள் கதைப்பது போதாதென்று விசர் வேலைகளும் செய்து கொண்டு திரிகிறீர்கள் , " அவளின் குற்றச்சாட்டை விளங்கா
மல் அவளைப் பார்த்தான். "என்ன கோழி தின்ற கள்ளன் போல் முழிக்கிறியள். நீங்கள்தானே அப்பா ஆட்களின் கூட்டத்தில் நாற்றக்குண்டு போட்டீர்கள்."
"" என்ன அலட்டுகிறீர் சகுந்தலா? படபடக்காமல் சொல்லும் என்ன நடந்தது என்று."
காரின் வேகம் குறைந்தது. அவறுக்குத் திண்டாட்டமாகி இருந்தது. உண்மையில் இவனுக்கு ஒன்றும் தெரியாதா? அப்பா சொல்லிக் கொண்டிருக்கிறார் கார்த்திகேயன் மாதிரி ஆட்கள்தான் மானவர்களைத் தூண்டிவிட்டு இதெல்லாம் செய்கிறார்கள் என்று. உண்மையில்லையா அது. குழப்ப மான முகத்துடன் அவனை நோக்கினாள். பின்னர் தகப்பன் சொன்னவற்றை விளங்கப்படுத்திச் சொன்னாள் அவனுக்கு, அவன் பெருமூச்சு விட்டான்.
"இவ்வளவு தூரம் உமது தகப்பன் என்னில் பழிபோடுவார் என்று நான் நம்பவில்லை சகுந்தவா. கூட்டத்தைக் குழப்பும் எந்த வேலையும் நான் செய்யவில்லை. செய்தவர்கள் யார் என்றும் தெரியாது. ஆனால் இந்த தலைவர்களுக்கு இப் போதாவது தெரிந்திருக்க வேண்டும். சும்மா வார்த்தை களால் இனியும் இளைஞர்களைப் பேய்க்காட்ட முடியாது என்று."
அவன் கூட்டம் குழப்பும் விடயத்தில் சம்பந்தப்படவில்லை என்று அவளுக்குச் சமாதானமாக இருந்தது. கார் அண்டர் கிரவுண்ட் ஸ்ரேசனுக்கு வந்ததும் அவள் இறங்க முற்பட் டாள். அப்போதுதான் அவன் கேட்டான் அவள் எங்கே போகிறாளாம்.

உலகமெல்லாம் வியாபாரிகள் S1
"உஷா வரச்சொன்னாள். மீனாவின் விடயம் என்னவாக முடியப்போகிறதோ தெரியாது. இந்தக் கூத்தை எல்லாம் பார்க்காமல் இருந்திருக்கலாம். லண்டனுக்கு வராமல் இருந் திருந்தால்" அவள் பெருமூச்சுடன் சொன்னாள்.
சிவனேசன் எப்படி' அவனின் கேள்விக்கு அவள் பதில் சொல்லவில்லை. முட்டாள்த்தனமான முடிவுகள் செய்து கொண்டு என்னையே நான் குழப்பிக்கொள்வதாகச் சொல் வான். என்ன சொல்லக் கிடக்கிறது என் கணவரைப்பற்றி?
"நான் லூவிஷாமுக்குச் சில மாணவர்களைச் சந்திக்க போகிறேன். யாரும் பார்ப்பார்கள் என்று ஒப்பாரி வைக்கா மல் இருந்தால் வரலாம்' என்றான் கார்த்திகேயன். "யாரும் என்னவும் சொல்லட்டும் உலகத்துக்கு ஏன் பயப்பட வேண்டும் என்று சொல்லாமல் உலகத்துக்காகவே வாழும் உம்போன்ற கோழைகள்தான் இன்று உலகமெல்லாம் நிறைந்திருக்கிறார்கள்." அவன் பிரசங்கம் வைக்கத் தொடங்கிவிட்டானா? ஏக்கம் நிறைந்த பார்வையுடன் அவள் முகத்தைத் திருப்பிக்கொண்டாள்.
"மனிதர்கள் மனதையடக்கப் பழக வேண்டும். இல்லா விட்டால் மனிதர்களுக்கும், மிருகங்களுக்கும் வித்தியாசம் இல்லாமல் போய்விடும்." அவள் சொல்லிக்கொண்டே கார்க் கதவைத் திறந்தாள்.
"தனக்குப் பயப்பட்டு தான் சரியானதுதான் செய்கிறேன் என்பதைச் சரிவர முடிவுகட்டத் தெரியாத முட்டாள்கள்தான் உலகம் என்று நீர் சொல்லிக்கொள்கிறவர்கள். உம்மில் உமக்கு நம்பிக்கை இருந்தால் சரியாகத்தான் நடந்து கொள் கிறாய் என்ற சுய உணர்வுடன் நடந்துகொண்டால் ஏன் சும்மா குழப்ப வேண்டும்."
அவள் இறங்கியதும் கார்க் கதவைச் சாத்தும் நோக்கத்துடன் திரும்பினான். அவள் இறங்கவில்லை. அவனை ஏறிட்டுப்

Page 70
32 ராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம்
பார்த்தாள் பார்வை மிகக் கடினமாக இருந்தது. திறந்த கதவை ஆத்திரத்தில் அடித்துச் சாத்திவிட்டு அவனைப் பார்த்துச் சொன்னாள்.
T = " "
"என்ன மாதிரி நடந்துகொள்கிறேன் என்ற சுயஉணர்வுடன் தான் இருக்கிறேன். என்னில் எனக்குப் பயமில்லை. டங்களிலும், பயமில்லை. ' அவளுடைய கோபமான முகத்தைப் பார்த்ததும் அவன் விழிகளில் குறும்புச் சிரிப்புத் தவழ்ந்தது. கார் கிறிணிவிச் பார்க்ாகக் கடந்தபோது மீனா வின் அன்ாணியை ஞாபகம் வந்தது அவளுக்கு. அத்துடன் முதற்தரம் தாய் தகப்பனுக்கு தேசியாமல் "கிறிணிவிச் ஒப்சவேற்றரி" கார்த்திகேயதுடன் பாாக்க வந்ததும் ஞாபகம் வந்தது. அவனுக்குத் தெரியும் அளின் முகத்தில் உண்டா கும் மாறுதலைக் கண்டதும் என்சை போசிக்கிறாள் என்று. காக்காாணம் கொண்டும் பழம் கதைகளைக் கிண்டுவதில்லை என்று முடிபுெ கட்டியிருக்கிறான். அவளாக ஏதும் கதைத் தாலும் அவள் மகாம் புண்படும்படியாக ஏதும் சொல்லிவிடக் கூடாது என்று திட்டமாக முடிவு சட்டியிருக்கிறான்.
துன்பமோ துக்கமோ நடந்தது நடந்துவிட்டது. இனிக் கதைத்து என்ன பிரயோஜனம் என்பதுதான் அவனின் யோசனை. அத்துடன் கார்த்திகேயனும் சரூந்தலாவும் பழைய மனிதர்கள் இல்லை. இருவருக்கும் சொந்த வாழ்க் யில் பெரிய பிரச்சனைகள் உண்டு. சொந்த வாழ்க்கை, கார்த்திகேயன் சிந்தித்தான். சில்வியா சொல்கிறாள் தனக்கு எந்த சொந்த வாழ்க்கையும் இருப்பதாகத் தெரியவில்லை கான்று.
ஏன் சில்வியா ஒரு மாதிரியாய் நடக்கிறாள்? ஆனால் சில்வியா சொல்கிறாள் நான்தான் கொஞ்சநாளாக ஒருமாதிரி இருக் கிறேனாம். அதுவும் சகுந்தலா வந்த நாளில் இருந்து,
என்ன வேடிக்கை?

உலகமெல்லாம் வியாபாரிகள் 133
எப்படித்தான் படித்தாலும் பெண்கள் பெண்கள்தானா? சந்தே கமும் அவசரபுத்தியும் உள்ள பெண் பிறவிதானா உலகமெல் லாம்?
"என்ன பெரிய யோசனை?" சகுந்தலா திடீரென்று கேட்டாள்.
। । । । "என்னவாக இருக்குமென்று நினைக்கிறீர்? நீர்தான் எல் லாம் தெரிந்த முனிவராச்சே" குறும்புத்தனம் குரலில் பளிச்சிட்டது.
"உங்களுக்கு வேடிக்கையாகத்தான் கதைக்கத் தெரியுமா?" அவள் வெடுக்கென்று கேட்டாள்.
"சகுந்தலா எங்களுக்குள் சண்டை வராமல் எந்த சம்பாஷ னையும் நடக்கமாட்டேன் சான்கிறது. நீர் கொஞ்சக் காலம் லண்டனில் நிற்கப்போ கிறீர் ஏன் வீண் சண்டை எங்களுக் குள். இனி காப்போது காணப்போகிறோமோ? இவ்வளவு காலமும் ஒழிந்திருந்ததுபோல் ஒழித்து மறைத்து வாழ யோசிக்காதீர்." அவன் பேச்சைக் கேட்கப் பொறுமையில்லா மல் இருந்தது அவளுக்கு.
"இவ்வளவுதான் சொல்லத் தெரியுமா உங்களுக்கு? சும்மா வேடிக்கையாகவா போய்விட்டது வாழ்க்கை ""
சகுந்தல என்ன செய்யச் சொல்கிறீர்? எப்படிக் கதைக்கச் சொல்கிறீர். அம்மாவுக்குச் சுகமில்லை என்று போய்விட்டு வருவதற்கிடையில் நீர் தாலியைக் கட்டிக்கொண்டு அமெரிக்காவுக்கு ஓடிவிட்டீர். நான் என்ன செய்திருக்க வேண்டும் என்று நினைக்கிறீர்? காதலில் தோல்வி என்று தேவதாஸ் நாடகம் போட்டுக் குடித்துக்கொண்டு திரிந்திருக்க வேண்டும் என்று நினைத்திருக்கிறீரா? அல்லது அனுமான் மாதிரி அத்தில்ாண்டிக் கடலைக் கடந்து உம்மிடம் வந்திருக்க

Page 71
34 ராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம்
வேண்டும் என்று நினைக்கிறீரா? வாழ்க்கையின் தோல்வி களைத் தாங்காமல் நான் சோர்ந்து போயிருக்கவேண்டும் என்று நீர் நினைக்கிறீர் போல் இருக்கிறது. காதல் வாழ்க் கையில் ஒரு பகுதி. அதுதான் வாழ்க்கையில்லை. எத்த னையோ நல்ல காரியம் செய்யக் கிடக்கிறது "
அவன் சொல்லி முடிக்கவும் கார் உஷா வீட்டுக்கு வரவும் சரியாக இருந்தது. கதவைத் திறந்த உஷா கார்த்திகேயனை யும் சகுந்தலாவையும் கண்டு திடுக்கிட்டாள். அவள் ஒரு நாளும் நினைக்கவில்லை கார்த்திகேயனும் சகுந்தலாவும் ஒன்றாய்த் தன் வீட்டுக்கு . ஏன் ஒன்றாய் எங்காவது போவார் கள் என்று.
*" என்ன உஷா அப்படிப் பார்க்கிறீர்? எங்களால் கல்யாணம் தான் முடித்துக்கொள்ளவில்லை என்றால் சினேகிதர்களாக வும் இருக்கக் கொடுத்து வைக்கக் கூடாதோ?” கார்த்திகேய னுக்கு எல்லாமே வேடிக்கைதானா? சகுந்தலா ஆத்திரத்து டன் அவனை முறைத்துப் பார்த்தாள். '"நான் ஒன்றும் உங்கள் சினேகிதி இல்லை." சகுந்தலா கோபத்துடன் சொல்ல உஷா சொன்னாள், 'ஏன் சண்டை விடிக்கிறீர்கள் இருவரும்.'
கார்த்திகேயன் அவசர்ப்பட்டான் போவதற்கு. மாணவர்கள் சிலரைக் காணுவதாகச் சொல்லியிருந்தான். 'பாவம் மாணவர்கள், பின்னேரம் வேலைக்கும் போகிறவர்கள் இருப் பார்கள். எனக்காகக் காத்திருந்து அவர்கள் நேரத்தையும் வீணாக்க நான் விரும்பவில்லை." உஷா போட்ட தேநீரை அவசரமாகக் குடித்துக்கொண்டு அவன் சொன்னான்.
"ஓம் இவர் பெரிய இலட்சியவாதி. தான் கெடுவது போதாதென்று படிக்க வந்த பெடியன்களையும் பழுதாக்கு கிறார்." சகுந்தலா வழக்கம்போல் எடுத்தெறிந்து சொன்
னாள்.

உலகமெல்லாம் வியாபாரிகள் 135
" "அப்படிச் சொல்லாதே சகுந்தலா. இலங்கைக்கு ஒரு தரம் போய் பார்த்தால் தெரியும் என்ன நடக்கிறது என்று
நாங்கள் ஊமைகளாய்ச் செவிடர்களாய் இருப்பதாற்தான் இரண்டு கலவரங்களிலும் இப்படிக் காட்டுமிராண்டித்தனமாக வெட்டிக் கொத்தி விட்டார்கள் எங்களை ஏதாவது செய்து உரிமைக்குப் போராடுவது என்றால் இனியும் காலம் தாழ்த் தக் கூடாது. இன்னொரு வகுப்புக் கலவரம் வந்தால் நூற்றுக்கணக்கில் இல்லாமல் லட்சக்கணக்கில் தமிழர் உயிர் கள் பலிபோகும். எப்போது சந்தர்ப்பம் வருகிறது என்று
வகுப்புவாதிகள் பார்த்துக்கொண்டிருக்கிறார்கள். ' உஷா சொன்னதைக் கேட்டு சகுந்தலா வாயடைத்துப்போய் இருந் தாள். 'உமக்கும் இவர்களைப்போல் பைத்தியம் பிடித்து
விட்டதா உஷா" என்றாள் சகுந்தலா. உஷா கார்த்தி கேயனைப் பார்த்துச் சிரித்தாள் கருத்துடன்.
"சகுந்தலா போன்ற தமிழ்ப் பெண்களுக்கு இலங்கையில் உள்ள தமிழ்ப் பெண்களின் பிரச்சனை தெரியாது. எங்கள் பெண்கள் கொழும்பிலும் கந்தளாயிலும் மலைநாட்டிலும் சிங்கள வெறியர்களால் கற்பழிக்கப்பட்டுவிட்டு யாழ்ப்பாணம் போய் சிங்கள ராசாக் குட்டிகளைப் பெறுங்கள் என்று துரத்தப்படுகிறார்கள், நாங்கள் இங்கு உல்லாசமாக இருந்துகொண்டு ஒன்றும் தெரியாத மாதிரி நடிக்கிறோம். இலங்கைத் தமிழர் பிரச்சனை யாரோ பிரச்சனை இல்லை சகுந்தலா. எங்கள் பிரச்சனை, நாங்கள் உலகத்தில் எந்த மூலைக்கு ஓடினாலும் நாங்கள் தமிழர். எங்களுக்கொரு நாடு தேவை சீவிக்க. இருக்கிற இடங்களையும் பிடுங்குகிறார்கள். இதைப் பார்த்துக் கொண்டு இன்னும் நாங்கள் சத்தியாக் கிரகம் செய்து கொண்டு சீவிக்க வேண்டுமா?'
சகுந்தலா கார்த்திகேயனையும் உஷாவையும் மாறி மாறிப் பார்த்தாள்.
*" என்ன பார்க்கிறாய் சகுந்தலா" உஷா கேட்டாள்.

Page 72
186 ராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம்
'தமிழ்த் தலைவர் வந்த கூட்டத்துக்கு நாற்றக் குண்டு போட்டார்களாம்." சகுந்தலா முடிக்கவில்லை.
*" . அது நானாக இருக்கலாம் என்று திட்டிக்கொண்டு வந்தாள். இப்போது நீராக இருக்கலாமோ என்று யோசிக்கி றாளாக்கும் சகுந்தலா.” கார்த்திகேயன் கதவைத் திறந்து கொண்டு வெளிக்கிட்டான். அவன் போகவிட்டுச் சினேகிதியை ஏறிட்டுப் பார்த்தாள் உஷா.
*" என்ன விண்ணானமாகப் பார்க்கிறிர் உஷா நான் ஒன்றும் கார்த்திக்குப் பின்னால் திரிய லண்டனுக்கு வரவில்லை."
உஷா சகுந்தலாவின் முகத்தைப் பார்த்துக் குறும்பாகச் சிரித்தாள். சகுந்தலாவுக்கு விளங்கவில்லை ஏன் சினேகிதி சிரிக்கிறாள் என்று
'என்ன இளிக்கிறீர் இப்போது?" சகுந்தலா பொறுமையின்றி துடித்தாள், கார்த்திகேயனும் உஷாவும் சேர்ந்து அரசியல் கதைத்த விதம் ஏதோ இனம்தெரியாத பொறாமையை உண்டாக்கியது. அன்று கார்த்திகேயனுடன் சில்வியாவைக் கண்டதும் ஏற்பட்ட பொறாமை ஞாபகம் வந்தது. கார்த்தி யும் உஷாவும் சினேகிதர்களா. '
"நான் ஒன்றும் உம்மைப் பார்த்து ஏளனம் செய்து சிரிக்க வில்லை சகுந்தலா, உமது அறியாமையை நினைத்துச் சிரிக்கிறேன்." உஷா தெளிவாகச் சொன்னாள்.
*" என்ன என் அறியாமை" விளங்காமல் கேட்டாள் சகுந்தலா.
"நீர் ஒரு காலத்தில் கார்த்திகேயனுக்குப் பெரிய பொக்கிச மாக இருந்திருக்கலாம். அதை நினைத்துக்கொண்டு கார்த்திகேயனில் இன்னும் உரிமைகொண்டாடுகிறாய் என்று நினைத்துச் சிரிக்கிறேன்." உஷாவின் முகத்திலுள்ள

உலகமெல்லாம் வியாபாரிகள் 137
அசாதாரணமான சிரிப்பும் அவளின் பேச்சும் சகுந்தலாவுக்குப் புரியாதவைகளாக இருந்தன.
"ஏன் எல்லோரும் இப்படி மாறிப்போய் விட்டீர்கள்." சகுந் தலாவின் குரல் கோபத்தில் தழுதழுத்தது.
'ஏனென்றால் நாங்கள் வளர்ந்துகொண்டு இருக்கிறோம். சகுந்தலா போன்றவர்கள் வளர மறுத்துக் கொண்டிருக்கிறார் கள்." உஷா தன் அழகிய பெரு விழிகளை விரித்துக் கொண்டு சொன்னாள்.
"என்னமாதிரி வளர்ந்துகொண்டிருக்கிறீர்கள்? ஒழுக்கம் பண்பு, ஒன்றுக்கும் மதிப்புக் கொடுக்காமல் வளர்ந்துவிட்டீர் கள் அப்படித்தானே?" சகுந்தலா தன் உணர்ச்சிகளை அடக் கிக் கொண்டு சொன்னாள். உஷாவையும் கார்த்தியையும் போல் தன்னாலும் நையாண்டியாகப் பேசமுடியும் என்பதை நிரூபிப்பதுபோல் இருந்தது அவள் தோற்றம். தான் விவாகரத்துச் செய்து விட்டுச் சீவிப்பதைத்தான் சொல்லாமற் சொல்லிக் கிண்டல் செய்கிறாள் சகுந்தலா என்பது தெளிவாக விளங்கியது உஷாவுக்கு.
*சொல்வதை நேரடியாகச் சொல் சகுந்தலா. நான் கட்டிய கணவருடன் வாழாமல் விவாகரத்துச் செய்துவிட்டுச் சீவிப் பதும் கார்த்தி சடங்குகளுக்கு மதிப்புக்கொடுக்காமல் சில்வியா வுடன் சீவிப்பதையும்தான் கிண்டலடிக்கிறாய் என்றால் நேரடி யாக சொல்வதற்கென்ன." உஷா தன் குற்றச்சாட்டுக்குக் கோபப்படாமல் மறுமொழி சொன்னது சகுந்தலாவுக்கு தர்ம சங்கடமாயிருந்தது. சண்டையை எதிர்பார்த்தால் தத்துவம் பிறக்கிறது.
"நான் யாரையும் கிண்டல் செய்ய வரவில்லை. நீர் கேட்ட
கேள்விக்கு மறுமொழி சொன்னேன்." சகுந்தலா பட்டும் படாமலும் மறுமொழி சொன்னாள்.

Page 73
188 ராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம்
"உனக்கு ஏன் கார்த்திகேயனில் இன்னும் உரிமை இருக் கிறது" உஷா கேட்டாள்.
**உஷா தேவையில்லாமல் கதைக்கவேண்டாம். கார்த்திக்கும் எனக்கும் ஒரு தொடர்பும் இல்லை" சகுந்தலா கடுமையாகச் சொன்னாள்.
**சகுந்தலா உம்மை உமக்குப் புரிந்துகொள்ளப் பயமாக இருக்கலாம். நான் சொல்கிறேன், நான் கார்த்தியுடன் சிரிப் பதைக் கண்ட அடுத்த வினாடி உமது முகத்தில் மாறுதல் இருந்தது. மீனா சொன்னாள் சில்வியாவை எப்படி முறைத் துப் பார்த்தாய் என்று. கல்யாணம் என்ற போர்வைக்குள் மறைந்துவிட்டதால் உமது மன உணர்ச்சிகளும் மடிந்துவிட வில்லை. உண்மைகளை ஆராயப் பழகவேண்டும்."
வீட்டில் நடக்கும் நாடகங்களை மறந்து ஒருநாளாவது உஷா வுடன் சந்தோஷமாக இருக்கலாம் என்று வந்தால் உஷா ஏன் இப்படிப் பேசுகிறாள். ஒருவேளை கார்த்தியுடன் வந்தது பிழையாகப் பட்டிருக்கலாம் இவளுக்கு. அல்லது கார்த்தி யுடன் சண்டை பிடித்தது பிழையாகப் பட்டிருக்கலாம்.
சகுந்தலா கொஞ்சநேரம் பேசவில்லை.
"சகுந்தலா உம்மைப் புண்படுத்தவேண்டும் என்று ஒன்றும் சொல்லவில்லை. அப்படி ஏதும் சொன்னால் மன்னித்து விடு." உஷா சினேகிதியின் அருகில் இருந்துகொண்டு சொன்னாள். ஐந்து வருடம் பிரிந்திருந்தாலும் அவர்களின் அன்பு பிரிந்தி ருக்கவில்லை. உஷாவுக்குத் தெரியும் ஏன் தன்னுடன் ஒரு தொடர்பும் வைத்திருக்காமல் இருக்கிறாள் சகுந்தலா என்று. அதற்காக சகுத்தலாவை பிழைசொல்லவில்லை அவள். நீண்ட நாள் பிரிவின் பின் காணும்போது ஏன் சகுந்தலாவைப் புண்படுத்த வேண்டும் என்று நினைத்தாள்.

உலகமெல்லாம் 65(uחנ_ן ח the66r 139
'மீனா எப்படி" உஷா கேட்டாள் பேச்சை மாற்ற. சகுந்தலா சினேகிதியை நிமிர்ந்து பார்த்தாள்.
சகுந்தலா தனக்குத் தெரிந்தவற்றைச் சொன்னாள். அன்ரனி ஹாங்காங் போவதையும் மீனாவுக்குத் தகப்பன் மாப்பிள்ளை தேடுவதையும் சொன்னாள்.
உஷாவுக்கு ஒருகணம் நம்பமுடியாமல் இருந்தது பேரின்ப நாயகத்தார் சகுந்தலாவுக்குச் செய்த கொடுமையை மீனாவுக் கும் செய்ய நினைப்பது.
**சகுந்தலா நீர் உமது போலிக் கெரளவத்தை விட்டு விட்டு மீனாவுக்காகச் சண்டைபிடிக்க முடியாதா?" உஷா கேட்டாள்.
"என்ன போலி" சகுந்தலா கேட்டாள். உஷாவிடம் எதை யும் மறைக்க முடியாது என்று தெரிந்தது.
"குடிகார மாப்பிள்ளையுடன் குடித்தனம் பண்ணும் சீவியம். கெளரவமான இடத்தில் கல்யாணம் செய்த போலிக் கெளரவம்."
"உஷா சகுந்தலாவுக்கு உடம்பெல்லாம் நடுங்கியது.
**சகுந்தலா இதில் கோபப்பட ஒன்றுமில்லை. நீர் மறைத் தாலும் இங்கு உம்மைத் தெரிந்த எல்லோருக்கும் தெரியும் சிவனேசன எப்படிப்பட்ட ஆள் என்று. உண்மையாகச் சொல் லப்போனால் உம்மைக் கல்யாணம் செய்ய முதலே சிவனேசன் எப்படி இருந்தான் என்று. கொழும்பில் அண்ணாவுடன் யூனி வர்சிட்டியில் படித்தவன்." சகுந்தலா எப்படி அடக்கியும் அடக்க முடியாமல் அழுகை பொத்துக்கொண்டு வந்தது.
லண்டனில் கோப்பை கழுவிப்படிக்கிற கார்த்திகேயனுக்கு தன் மகளைக் கொடுக்காமல் நன்றாகப் படித்த மாப்பிள்ளைக்கு

Page 74
140 ராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம்
மகளைத் திருமணம் செய்து கொடுத்ததாகப் பேரின்பநாயகத் தார் புழுகிக்கொண்டு திரிந்ததாகக் கேள்வி. உஷா பேசிக் கொண்டே இருந்தாள்.
சகுந்தலா சொன்னாள் "உம்மைப் போன்ற ஆட்களுக்கு எதுவும் வேடிக்கையும் கிண்டலும்தான். வாழ்க்கை அவ்வளவு மென்மையானது இல்லை சிரித்து மழுப்பிவிட." சகுந்தலா வின் கண்கள் நீரைக் கொட்டின.
"ஏன் ஒப்பாரிவைக்கிறீர். உமது தகப்பன் உமக்கு என்ன கிடைக்கவேண்டும் என்று எதிர்பார்த்தாரோ அதெல்லாம் கிடைத்திருக்கிறது. இன்னும் என்ன அழுகை? எங்களைப் போல் ஆட்கள்தான் அழவேண்டும். விவாகரத்துச் செய்தால் எங்கள் ஆட்களுக்கிடையிலுள்ள மதிப்புப் போய்விடுகிறது. கல்லோ, மண்ணோ, கட்டிய துணை எப்படியோ என்று சாட்டுக்கு வாழ்ந்து தொலைத்தால் ஒழுக்கம் பண்பு என்று போற்றப்படுகிறது. உமது தரத்தில் என் வாழ்க்கையில் ஒன்றும் இல்லாமல் இருக்கலாம்? என்னைப் பொறுத்தவரை யில் உண்மை இருக்கிறது.

8
போலியாக வாழ்வு தேவையில்லை. உஷா சொன்னாள். சகுந்தலா தன் கண்களைத் துடைத்துக் கொண்டாள். உஷா தன் தோல்வியான கல்யாணத்தைத் தனக்குச் சொல்லி முறை யிடுவாள் என்று நினைத்துக் கொண்டு வந்தாள் சகுந்தலா.
அதற்குப் பதிலாக தன்னையும் சகுந்தலாவையும் ஒப்பிட்டுப் பேசிய விதத்தில் உஷாவின் தீவிர மனப்பான்மை தெரிந்தது.
தான் விரும்பிய வெள்ளைக்காரனைத் தன் குடும்பம் எதிரித்த போதும் விட்டுக் கொடுக்கவில்லை. கல்யாணம் சரிவராமற் போனபோது தாய் தகப்பன் சொன்னார்கள், செய்வதைச் செய்துவிட்டாய் இனியாவது உருப்படியாகச் சேர்ந்திரு என்று. எனது சீவியம் எப்படி இருக்கவேண்டும் என்று விவாகரத்துச் செய்துவிட்டு இருக்கிறாள்.
*ஏன் சிவனேசன் குடிக்கிறான்" உஷா கேட்டாள். சகுந்தலா வுக்குத் தெரியாத மறுமொழி அது. சிலவேளை தான் சரியான பொருத்தமான மனைவியில்லையோ என்று தோன்றும் அவ ளுக்கு. ஆனால் தன் பழைய உறவை வைத்துக் கொண்டு இன்னும் கார்த்திகேயனுடன் தன்னைப் பிணைத்துப் பேசுவது அவளால் தாங்கமுடியாதிருந்தது. "எனக்குத் தெரியாது; ஆனால் ஏனோ இன்னும் அவருக்கு கார்த்தி யிலும் என்னிலும் சந்தேகம். கார்த்தி கல்யாணம் முடிக்கும் வரை எங்களுக்குள் சண்டை இருக்கலாம்."

Page 75
142 ராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம்
"என்ன சொல்கிறாய் சகுந்தலா. சிவனேசனுக்கு உம்மிலும் கார்த்தியிலும் சந்தேகமா' உஷா வியப்புடன் கேட்டாள். வைகாசி மாத மாலை வெயில் ஜன்னல் வழியாகப் பட்டு உஷா வின் முகத்தை தேவதைபோற் காட்டியது. அழகிய அவள் தோற்றம் வடித்தெடுத்த சிற்பத்தை நினைவூட்டியது. அவள் தன்னிடம் கேட்ட கேள்வியை மறந்து சினேகிதியின் அழகை ரசித்தாள் சகுந்தலா. இப்படியான அழகான பெண்ணை என்னவென்று விவாகரத்துச் செய்யச் சம்மதித்தான் றொபின்?
"நான் ஏதோ கேட்கிறேன் நீ ஏதோ கனவுலகத்தில் இருக்கி நீர்" உஷா அதட்டினாள் அன்புக் குரலில். வேதனையான புன்னகை சகுந்தலாவின் அதரங்களில் நெளிந்தது. வேதனை யுடன் சொன்னாள். "உமக்குத் தெரியாது உஷா, தாய் தகப்பனுக்காகக் கல்யாணம் முடித்து விட்டு இன்றும் நான் கார்த்திகேயனுடன் கடிதத் தொடர்பு வைத்துக்கொண்டிருப்பதாகக் குற்றம் சாட்டுவார் என் கணவர். ஏனோ தானோ என்று வாழ்க்கை யுடன் விளையாடும் உன்னையும், கார்த்திகேயனையும் போன்ற ஆட்களுக்கு என்னைப்போன்ற லட்சக்கணக்கான பெண்களின் பிரச்சினை விளங்காது.”*
சகுந்தலா சொல்வதை உஷாவால் நம்பமுடியாமல் இருந்தது. சகுந்தலா வின் பழைய கதைகளாற்தான் பிரச்சினைகள் என்று நினைத்திருந்தாள். ஆனால் சிவனேசன் கற்பனை செய்து கொண்டு பைத்தியக்காரனாக இருக்கிறான் என்பதை நம்ப முடியாமல் இருந்தது.
'நீங்கள் என்னை மோசக்காரி, ‘ஏமாற்றுக்காரி என்று பேசு வீர்கள் என்பதற்காக நான் லண்டனுக்கு வராமல் இருக்க வில்லை. என் கணவர் எப்படி நடத்துவார் என்று தெரியும்" சகுந்தலாவின் குரல் தழு தழுத்தது.

உலகமெல்லாம் வியாபாரிகள் 143
*"அப்படியிருக்க நீ துணிவாக கார்த்திகேயனின் காரில் வந்து குதித்தாயே என்ன துணிவு உனக்கு." "வேண்டுமென்று வரவில்லை. வரத் துணிவுமில்லை. ஆனால் சந்தர்ப்பமும் சூழ்நிலையும் திரும்ப இருவரையும் சந்திக்கப் பண்ணி விட்டது. என்ன நடக்கப் போகிறதோ தெரியாது. என் வாழ்க்கையில் இருக்கிற பூகம்பங்கள் போதாதென்று பட்டப் பகலில் என்னை யாரும் கார்த்திகேயனுடன் கண்டதாகச் சொன்னாலே சிவனேசனுக்கு வலி வரப்போகிறது."
சினேகிதியின் துயரக் கதையைக் கேட்டு வாயடைத்துப்போய் இருந்தாள் உஷா. இந்த லட்சணத்தில் மற்றவர்களை ஏளனம் செய்கிறாள். ஏனோ தானோ என்று சீவிப்பதாக, என்னென்று இருக்கிறாள் இப்படியான மனிதனுடன்.
"நான் கனவுலகில் இருப்பதாகச் சொன்னாய். இப்போது நீ கனவுலகில் இருக்கிறாய் உஷா." சகுந்தலா சொன்னாள்.
உஷா மறுமொழி ஒன்றும் சொல்லவில்லை. வெளியில் இன் னும் வெளிச்சமாய் இருந்தது. வீதி நெடுக சனக் கூட்டம் இருந்தது. வேலை முடிந்து வீட்டுக்குப் போகும் மனிதக் கூட்டம். இதில் எத்தனை பேர் சிவனேசன் போல் இருப்பார் கள் என எண்ணியது சகுந்தலாவின் மனம். சிவனேசனின் குடிப்பழக்கத்தை கேட்டு இப்படிக் குதிக்கும் உஷா, தான் அன்று போன் பண்ணும் போது தன் கணவன் யாரோடோ இருந்ததைச் சொன்னால் எப்படிக் குமுறுவாள்?
ஏன் உஷா தன் கதையைச் சொல்லவில்லை. ஏன் விவாகரத்து செய்தாள்? படிக்க அனுப்பிவைக்க அடுத்த வருடமே வெள் ளைக்காரனைக் கல்யாணம் முடித்துக்கொண்டு வீட்டாருடன் தொடர்பில்லாமல் இருந்தாள். இப்போது எப்படியிருக்கிறாள். வீட்டாருடன், இலங்கைக்குப் போய் வந்த கதை கதைத்தாள்; எப்போது போனாள், ஏன் போனாள்? சகுந்தலா தன் துன்பம் மறந்து உஷாவின் வாழ்க்கையை ஆராய முற்பட்டாள்.

Page 76
144 ராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம்
"உஷா ஏன் உன்னைப் பற்றி ஏதும் சொல்ல மாட்டேன் என் கிறாய்" சகுந்தலா கேட்டாள். உஷா சமைத்துக் கொண்டி ருந்தாள். சப்பாத்தி செய்து மரக்கறியும் சமைப்பதாகச் சொன்னாள், வதக்கிய மரக்கறிகளின் மணம் மூக்கைத் துளைத்துப் பசியையுண்டாக்கியது. டிசைனிங் கொம்பனியில் வேலை செய்வதாக மீனா சொன்னாள். உஷாவைப்பற்றி சகுந்தலா கேட்டபோது.
தன் வாழ்க்கையைச் சீராக்கத் தெரியாமல் குழம்பிக் கொண்டு திரிகிறவளுக்கு உடுப்பு டிசைனிங்தான் சரி.
"ஏன் இலங்கைக்குப் போனாய். வெள்ளைக்காரனுடன் போனதும் சரி எங்களின் முகத்தில் முழிக்காதே என்று உன் தாய் தகப்பன் திட்டியதெல்லாம் என்ன நடந்தது" சகுந்தலா செருப்பைக் கழற்றி எறித்துவிட்டு சோபாவில் சாய்ந்து கொண்டு சினேகிதியைக் கேட்டாள்.
"செய்தவனுடன் உருப்படியாக இருக்கத் தெரியாது டிவோர்ஸ் செய்கிறாய், எங்களின் முகத்தில் விழிக்காதே என்று திட்டினார்கள் றொபினுடன் பிரிந்திருக்கும்போது. இப்போது எல்லாம் சரி. அண்ணாவை கந்தளாயில் சிங்களவர்கள் எரியும் நெருப்பில் உயிருடன் போட்டுக் கொலை செய்ததோடு அப்பா வாழக்கையின் தத்துவத்தை மாற்றிவிட்டார். வாழ்க்கையில் முடியுமானவரை சந்தோஷமாக இரு என்கிறார். மரணம் இன்றோ நாளையோ என்று தெரியாத மாய உலகம் என்று சுடுகாட்டு வேதாந்தம் கதைக்கிறார்." தமையன் கொலை செய்யப்பட்டதை ஒரு உணர்ச்சியுமில்லாமல் சொல்கிறாளே. திடுக்கிட்டு எழும்பி உட்கார்ந்தாள் சகுந்தலா. "என்ன உன் அண்ணாவைக் கொலை செய்தார்களா?" சகுந்தலா திடுக் கிட்டுப்போய்க் கேட்டாள். உணர்ச்சியற்ற முகத்துடன் சினேகிதியைப் பார்த்தாள் உஷா. 'என் தமயனைப் போல் நூற்றுக்கணக்கான ஆண்களை கொலை செய்து என் மச் சாளைப் போல் நூற்றுக்கணக்கான பெண்களைக் கற்பழித்

உலகமெல்லாம் வியாபாரிகள் 45
தார்கள் சிங்கள வெறியர்கள். இலங்கையில் இன்றும் எங்கள் தலைவர் சத்தியாக்கிரகம் கதைக்கிறார்கள். உஷா மேஷை யில் சாப்பாட்டைக் கொண்டுவந்து வைத்தாள். சகுந்தலா வுக்குப் பசி மறந்துவிட்டது.
"எங்கள் இனம் உயிரோடும், மானத்தோடும் சீவிப்பதாக இருந்தால் நாங்கள் ஏதும் செய்தாக வேண்டும். அதுவும் உடனடியாகச் செய்யவேண்டும். இல்லாவிட்டால் இன்னு மொரு வகுப்புக் கலவரத்தில் எத்தனை லட்சம் அழியுமோ தெரியாது’* உஷா சப்பாத்தியைக் கோப்பையில் போட்டபடி சொன்னாள்.
**உமது தகப்பன் போன்ற ஆட்கள் வெறும் புகழுக்கும் பெய ருக்கும் தலைமைப் பதவிக்கும் தமிழர் பிரச்சனையை உபயோ கிக்கிறார்கள். அவர்களுக்குச் சுதந்திரக் கட்சி வந்தால் என்ன யூ. என். பி. வந்தால் என்ன? ஒன்றும் அக்கறையில்லை." உஷா வெறுப்புடன் சொன்னாள். இருள் பரவிக் கொண்டு வந்தது. உஷா எழும்பி ஜன்னல் சீலைகளைப் போட்டாள். "இவ்வளவு உணர்ச்சியுடன் கதைக்கிறாய், ஏன் கார்த்தி கேயன் ஆட்களுடன் சேருவதற்கென்ன' சகுந்தலா கேட்
6.
'என்ன உமக்குக் கேலியா இதெல்லாம். நான் மட்டுமில்லை எத்தனையோ லட்சம் பெண்கள் சேரத்தான் போகிறார்கள். போராட்டம் வரத்தான் போகிறது. தமிழ் ஈழம் வராமற் போகலாம். ஆனால் நாங்களும் சிங்களவர்களும் சரி என்ற மனப்பான்மை நாங்கள் சாகமுதல் வரப்பண்ணத்தான் வேண்டும்." உஷாவை வியப்புடன் பார்த்தாள் சகுந்தலா.
"தமிழ் ஈழமா? எங்கே ஆணையிறவுக்கு அப்பாலா" சகுந்தலா உண்மையாக வியப்புடன் கேட்டாள். "ஈழத்தின் எல்லை எங்கே என்பது இப்போது பிரச்சினையில்லை. ஈழத் துக்குப் போராடுவதுதான் பிரச்சினை, அந்தப் பிரச்சினை

Page 77
146 ராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம்
களுக்கு முட்டுக்கட்டை போடுபவர்களை முறியடிப்பதுதான் பிரச்சினை." உஷா சொல்ல சகுந்தலா கேட்டாள். "நீ இவர்களின் கூட்டத்துக்குப் போனாயா?' 'ஓம்; ஒன்று இரண்டு தரம். அதிகம் பெண்கள் வராதபடியால் போக ஒரு மாதிரி இருக்கிறது." உஷா சாப்பிட்ட கோப்பைகளை எடுத்துக் கொண்டு சொன்னாள்.
'உஷா பெர்ஸனல் கேள்வி கேட்கலாமா" சகுந்தலா தயங் கிக் கொண்டு கேட்டாள்.
"ஏன் டிவோர்ஸ் பண்ணினேன் என்பதுதானே? றொபினுக் கும், எனக்கும் சரிவரவில்லை. சமாதான ரீதியில் பிரிந்து விட் டோம். நாய் பூனை சண்டை பிடித்துக்கொண்டு உலகத்துக் காக ஒன்றாய்ப் போலியாக வாழ விரும்பவில்லை. ஏன் சரி வரவில்லை என்றால், என்னைப் பொறுத்தளவில் கல்யாணம் என்பது ஒரு விலங்கல்ல, பெண்கள் ஆண்களின் அடிமையு மில்லை. சமையல், துவைத்தல், அரைத்தல் என்பனவற்று டன் முடிவதா கல்யாணம்? றொபினைப் பொறுத்தவரையில் கல்யாணம் என்பது வேறு பொருள்-மலிவான செக்ஸ் லைஃப் இரண்டுபேரும் இரண்டு கோணங்கள்; எப்படிச் சரி வரும்?" t
சகுந்தலா கேட்க நினைத்த பலதரப்பட்ட கேள்விகளுக்கு ஒரே யடியாகப் பதில் சொல்லிவிட்டுத் தன் வேலையில் ஈடுபட்டிருந் தாள் உஷா. சகுந்தலா சோபாவிற் படுத்தபடி தன் நிலையை யோசித்தாள். தன்னோடு சேர்ந்திருந்தவர்களின் வாழ்க்கை யைத் தன்னுடையதுடன் ஒப்பிட்டுப் பார்த்தாள். விபரிக்க முடியாத வேதனை பீறிட்டுக் கொண்டு வந்தது. ஏனோ தானோ என்று சீவிப்பவர்கள் என்று ஆசை தீர உஷாவையும் கார்த்திகேயனையும் திட்டியதை நினைத்தாள், அவர்கள் அப்படி வாழவில்லை. உண்மைகளையும் நேர்மைகளையும் நம்பி வாழ்கிறார்கள். அடுத்துக் கெடுக்காமல் அன்பை அடிமைப்படுத்திப் பாவிக்காமல்.

உலகமெல்லாம் வியாபாரிகள் 147
சகுந்தலாவால் மேற்கொண்டு சிந்திக்க முடியாமல் இருந்தது. கல்யாணம் முடித்த நாட்களில் கணவனின் அணைப்பின் சுகம் தெரியாமல் வெறும் சந்தேகத்துடன் தொடங்கிய கல்யாணச் சீவியம், அதை உலகத்துக்குத் தெரிய விடாமல் வாழ்க்கையில் தோல்வியை மறைத்துக்கொண்டு போலியாக வாழும் வெற்று வாழ்க்கையை யோசித்துப் பார்த்தாள். இவ்வளவு செய்தும் என்ன புண்ணியம், என் பார்வை மறைய இன்னொருத்தி யுடன் இருக்கிறார் என் கணவர் ஒரேயடியாக நினைத்துக் கொண்டிருக்கப் பைத்தியம் பிடிக்கும்போல் இருந்தது.
முன்னால் ஆல்பம் கிடந்தது. எடுத்துப் புரட்டினாள். உஷா லண்டனுக்கு வந்த நாட்களில் எடுத்த படங்கள். புரட்டிக் கொண்டே போனாள். கிறினிவிச் கட்டிஷாக் கப்பல்; அதன் தளத்தில் உஷா, சகுந்தலா, கார்த்தி. எவ்வளவு நெருக்கம். கார்த்தியின் முகத்தைப் பார் எப்போதும் போல் கவர்ச்சியும் குறும்பும். கள்ளமாக எடுத்தார்கள். தமயன் தியாகராசாவு டன் போனார்கள், சகுந்தலாவும், மீனாவும், உஷாவும். தேம்ஸ் பொலிரெக்னிக் பஸ் ஸ்ரொப்பில் நின்றிருந்தான் கார்த்திகேயன்.
பெரியப்பா பார்த்தாலும் என்று முணுமுணுத்தான் தியாக ராசா கார்த்தியைக் கண்டதும். 'சொல்லடா உன்ர பெரியப் பாக்கு சீதனம் இல்லாமல் பெட்டை மாப்பிள்ளை பாக்குது என்று' தியாகராஜா பயத்துடன் திட்டினான். "உனக்கு எப் போதும் பகிடியும் விளையாட்டும் தான்.""
ஆசை தீரப் படம் எடுத்தார்கள். இந்தப் படம் எல்லாம் கார்த்தியிடமும் இருக்கும்தானே? என்ன நினைத்துக் கொள்வான் பார்க்கும்போது, துரோகி ஏமாற்றிவிட்டு ஓடி விட்டாள் என்று நினைப்பானா?
வந்து இவ்வளவு நாட்களில் எத்தனையோ தரம் சந்தித்தாகி
விட்டது. இதுவரையும் முழுதாக ஒன்றும் நடந்தவற்றைப் பற்றிக் கதைக்கவில்லை. கதைக்க விருப்பமில்லை என்பதைச்

Page 78
48 ராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம்
சொல்லாமல் சொல்லியிருக்கிறான். ஏன் வெந்த புண்ணில் வேல் பாய்ச்சக் கூடாது என்ற நினைப்பா? அல்லது என்னை ஏன் புண்படுத்த வேண்டும் என்ற நினைவா?
அப்படிப் பெருந்தன்மையான மனம் படைத்த கார்த்திகேயனி டம் எப்படிப் பழகுகிறேன்? கண்டதும் காணாததுமாகச் சண்டை பிடிக்கிறேன். உஷா சொல்வதுபோல் என்னையறி யாமல் இன்னும் கார்த்தியில் உரிமை கொண்டாடுகிறேனா? அமெரிக்காவுக்குப் போகமுதல் உஷாவைக் காண முடிய வில்லை. காண விரும்பவில்லை. கடந்த ஐந்து வருட சீவிய மும் இப்போது இந்த வைகாசிமாத மாலைவெயிலின் நிழலில் இருந்து சிந்திக்கும்போது கனவுபோல் இருக்கிறது. நித்திரை யாகியிருந்து விழித்ததுபோல் இருக்கிறது. லண்டனுக்கு வந்து ஒவ்வொருவரையும் காணவும் கதைக்கவும் தான் தன்னையே ஒடுக்கித் தன் திருமண சீவியம் ஒழுங்காக இருக்க எடுத்துக்கொண்ட பிரயத்தனங்கள் யாவும் தன் சினேகிதி யால் போலி வாழ்க்கையென சில நாட்களாகத் தூக்கியெறிப் பட்டதை யோசித்துப் பார்த்தாள்.
கோடானுகோடி வருடமாகப் பெண்கள் தங்களைத் தங்கள் இல்வாழ்க்கையின் நலத்துக்காகத் தியாகம் செய்கிறார்கள். இதனால் பெண் வர்க்கத்துக்கு என்ன நன்மை கிடைத்துவிட் டது? தங்களுக்கு நன்றாக இருக்கும்வரை போற்றுகிறார்கள் புழுகுகிறார்கள் எங்கள் ஆண்கள். அவர்கள் விதித்த சட்ட திட்டங்களை மீற யோசித்தால் ஆட்டக்காரியோ அடங்காப் பிடாரியோ எனப் பட்டம் கொடுத்துவிடுகிறார்கள். இவை களை எதிர்த்து வாழ உஷாபோன்ற ஒன்றிரண்டு பெண் களாற்தான் முடியுமா? என் போன்றவர்கள் நிலை என்ன? என் போன்ற பெண்களின் சீவியத்தில் சந்தோஷம் என்பது வானத்துத் தாமரையா?
உஷா தன் குசினி வேலைகளை முடித்துக்கொண்டு சினேகிதி யிடம் வந்து உட்கார்ந்தாள். வயது போகப்போகத்தான் சில

உலகமெல்லாம் வியாபாரிகள் 149
பெண்களுக்கு அழகு கூடுகிறதா? எப்போதும் உஷா கவர்ச்சி யானவள். கவர்ச்சி என்பது உடுப்பில் இல்லை. அவளின் சுவையான பேச்சு. சுவாரசியமான தத்துவங்கள் எல்லாம் சேர்த்து உஷாவை வெகுவாக அழகாக்கிக் காட்டின.
கல்லூரி வாழ்க்கையின் முதல் வருடமே உஷாவின் பின்னால் வாலிபர் பட்டாளம் சுற்றியிருக்கலாம். கீழ்நாட்டின் எளிமை யான அலங்காரமும் அழகும்தான் இப்போது வெள்ளைக்கார வாலிபர்களுக்குப் பிடிக்கிறதோ. இல்லை என்றால் ஏன் மீனா, உஷா போன்ற பெண்களைத் திருமணம் செய்ய விழுந்தடித்துக்கொண்டு முன்வருகின்றார்கள்.
"என்ன சகுந்தலா ஆல்பத்தை வைத்துக்கொண்டு ஆகாய யாத்திரை போகின்றாயா?" உஷா சகுந்தலாவின் கையிலி ருந்த ஆல்பத்தை வாங்கி அவள் என்ன பார்த்துக் கொண்டி ருந்தாள் என்பதில் பார்வையை ஒட்டினாள். உஷா சந்தே கித்தது சரிதான்; எதிர்பார்த்த இடம்தான். கார்த்திகேயன் சகுந்தலா சேர்ந்திருந்து எடுத்த படம் ஈரம் பட்டிருந்தது. அழுதிருப்பாளா சகுந்தலா. இவ்வளவு வேதனையை மறைத்துக்கொண்டு எப்படி வாழ்கிறாள்.
"சகுந்தலா. " உஷா அன்புடன் அழைத்தாள் சினேகி தியை.
என்ன என்பதுபோல் சகுந்தலா திரும்பிப் பார்த்தாள் டஷாவை . என்ன என்று கேட்பது?
'சிவனேசனுடன் இப்படி நரக சீவியம் வாழ்த்தான் வேண் டுமா?" ஒருமாதிரி நேரடியாகக் கேட்டுவிட்டுச் சினேகிதியைப் பார்த்தாள் உஷா. சகுந்தலாவின் முகத்தில் வழக்கம்போல் ஒருசோக சிரிப்புத் தோன்றி மறைந்தது.
"எனக்கு விதியில் நம்பிக்கை இருக்கிறது உஷா". சகுந்தலா எழும்பி உட்கார்ந்தாள்.

Page 79
i:0 - ராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம்
*விழல் கதை கதையாதேயும். தமிழர்கள் இப்படி மூடத்தன மான கற்பனைகளில் வாழ்வதாற்தான் இப்படியிருக்கிறோம். உனக்கு வாழ்க்கையுடன் போராடத் தெரியாமல் காட்டாற்று வெள்ளத்துடன் இழுபட்டோடும் வெறும் மரமாய் இருக் கிறாய். இருபத்தாறு வயதில் இப்படி தத்துவம் கதைக் கிறாய் இன்னும் எத்தனை வருடம் இப்படி வெற்று வாழ்வு வாழப் ப்ோகிறாய்" உஷா தன் வழக்கம்போன்ற தொனியில் கேட்டாள்.
"வாழ்க்கை என்பது நினைத்த நேரம் போகவும் நினைத்த நேரம் வரவும் என்று இலேசான சட்ட திட்டங்களுடன் அமைக்கப்பட்ட சத்திரமில்லை உஷா. சில விதிகள் அமைப்புகள் இருக்கின்றன. எனக்கு இப்படித்தான் இருக்க வேண்டும் என்று விதி. அதைவிட்டு ஓடிப்போக என்னால் முடியாது. விலகிப்போய் இதைவிட மோசமான சீவியம் கிடைக்காது என்று என்ன நிச்சயம்.'"
உஷா பொறுமையின்றித் தலையாட்டினாள். 'கல்லில் போட்டுத் தலையையுடைப்பது போலத்தான் உன்னுடன் விவாதங்கள் செய்வது" என்று சொல்லிக்கொண்டு எழுந் தாள் உஷா.
"உஷா எப்போது அமெரிக்கா திரும்புகிறேனோ தெரியாது. மீனாவின் விடயம் சரிவந்தால் அடுத்தநாளே திரும்பிப்போ வேன். அதற்குமுதல் கார்த்திகேயனிடம் கொஞ்சம் கதைக்க வேண்டும். எப்படி எனக்குக் கல்யாணம் நடந்தது என்று சொல்லவேண்டும். இதுவரைக்கும் எனக்குப் பழைய வாழ்க் கையை யோசிக்கவே பயமாக இருந்தது. நினைவாப்பிரகார மாக கார்த்தியைத் திரும்புவும் கண்டதும் நடந்தவற்றிற்கு நான் கார்த்தியிடம் மன்னிப்புக்கேட்கவேண்டும் போல் இருக் கிறது." சகுந்தலா உஷாவைப் பார்த்துக் கேட்கவில்லை.
தேவையில்லாத பிரச்சினைகளைக் கிண்டாதே. கார்த்திக் குத் தெரியும் உன் தகப்பன் எப்படியானவர் என்று.

உலகமெல்லாம் வியாபாரிகள் 151
அத்தோடு நீ எவ்வளவு கோழை என்றும். நடந்தது நடந்து விட்டது. நான் உனக்குப் புத்திசொல்வதானால் சிவனேச னுக்கு விட்டுக் கொடுத்தது போதும். திரும்பிப்போய் உன் உரிமைகளுக்குச் சண்டைபிடி. குடிகாரனுடன் சீவிக்க உனக்கு எந்த நிர்ப்பந்தமும் இல்லை என்று சொல்." உஷா படபடவென்று சொன்னாள்.
சகுந்தலா சிரித்தாள். 'இப்படியெல்லாம் சொல்லிச் சண்டை பிடித்துச் சரிவராவிட்டால் உன்னைப்போல் விவாகரத்துச் செய்யவா?" சகுந்தலா வின் குரல் ஏளனமாக இருந்தது.
*"சகுந்தலா விட்டுக் கொடுக்கும் வரைதான் விடுதலை பறி போகும்."
சகுந்தலா பெருமூச்சுடன் பார்வையைத் திருப்பிக் கொண் டாள். திடீரென்று உஷாவைப் பார்த்துச் சொன்னாள் " என் னில் அன்பில்லாமல் குடித்துக்கொண்டு திரிவதாகத் தானே இப்படி ஆத்திரப்படுகிறாய். அதுவுமில்லாமல் இன்னொரு பெண்ணுடன் இருக்கிறார் என்று சொன்னால் எப்படி இருப் Luruin. "" ";
உஷா தம்பமுடியாமல் தவித்தாள். சகுந்தலா நிதானமாகச் சொன்னாள். தான் சிவனேசனுக்குப் போன் பண்ணியதை யும், யாரோ ஒரு பெண் பதில் சொன்னதையும், அந்த ஆத்திரத்தில் தான் வெளியில் மனம் வெடிக்கும் வேதனையில் போனபோது கார்த்தியைக் கண்டதையும் சொன்னாள்.
* சிலவேளை நான் நினைப்பதுண்டு உஷா , ஆழ்ந்த உணர் வின் அன்புக்கு ஒரு சக்தியுண்டென்று. லண்டனுக்கு வரும் வரை கார்த்தியைப் பற்றி நினைக்கவில்லை. இங்கு வந்த தும் பழைய ஞாபகங்கள் வந்தன. என்னால் தவிர்க்க முடியாமல் சுற்றிச் சுற்றிப் பழைய ஞாபகங்களே வரு கின்றன. போதாக்குறைக்குக் கார்த்தியையும் கண்ட இடங்

Page 80
15 ராஜேஸ்லரி பாலசுப்பிரமணியம்
களிலெல்லாம் சந்திக்கிறேன். என்ன கதைகள் உண்டா குமோ தெரியாது. எவ்வளவு கெதியாய் ஓட முடிகிறதோ அவ்வளவு கெதியாய் ஒடநினைக்கிறேன்."
உஷா தன் சினேகிதியைப் பரிதாபமாகப் பார்த்தாள். லண்டனுக்கு வரமுதல் கார்த்தியைப் பற்றி நினைக்கவில்லை யாம். உண்மையாகவா? அப்படியானால் கார்த்திக்குப் பிடித்தப் பெயரை ஏன் மகளுக்கு வைத்திருக்கிறாள். கீதாஞ்சலி என்று. கார்த்தியின் நினைவாகத்தானே? கேட்கலாமா? கேட்கிற கேள்விகளுக்கு சினேகிதி படுகிற பாடு போதும்.
'உஷா, கார்த்தி இலங்கையால் வந்தவுடன் எப்படி இருந் தார். என்னைப் பேசவில்லையா?' சகுந்தலா கேட்டாள்
ஒருவித தயக்கத்துடன்.
எப்படியிருந்தான்" கார்த்தி? தாய் இறந்த துக்கத்துடன் வந்திருந்தான். அதற்கு முதல் உஷாவின் விட்டுக்கு சகுந்தலாவின் பெயரில் கடிதம் எழுதியிருந்தான் தாயின் சுக வீனம் பற்றி. என்ன கடிதம் என்று தெரியாது. உஷா சகுந்தலாவின் வீட்டிற்குப் போவதில்லை. போன் பண்ணிப் பார்த்தாள். சகுந்தலாவின் தாய் சொன்னாள் சகுந்தலா வுக்குச் சுகமில்லை என்று. "என்ன சுகமில்லை நான் வந்து பார்க்கலாமா?" தயக்கம்தான் ஆனால் கேட்டாள் உஷா. "நீ வரத் தேவையில்லை. சும்மா தலையிடியும் காய்ச்சலும் தான்." தாய் அப்படித்தான் சொன்னாள். ஒன்றிரண்டு நாள் கழித்து இன்னொருதரம் போன் பண்ணினாள். கிட்டத் தட்ட அதே பதில். என்ன நடந்தது சகுந்தலாவுக்கு? போனில் கதைக்கக்கூட முடியாமல் இருக்கிறது. உஷா என்ன செய்வதென்று தெரியாமல் தவித்தாள். ஒரு சனிக் கிழமை பின்னேரம் சோர்ந்த முகத்துடன் வந்து சேர்ந்தான் சகுந்தலாவின் ஒன்றைவிட்ட தமையன் தியாகராஜா.

உலகமெல்லாம் வியாபாரிகள் 153
ஏன் இப்படி இருக்கிறீர்கள்? உஷா கேட்டாள். எப்படியிருக் கிறேன்? தங்கச்சிக்குத் திருமணம் சந்தோஷமாக இல்லையா? எரிச்சலுடன் கேட்டான் தியாகராஜா.ாயார் தங்கச்சி? உஷா விளங்காமல் கேட்டாள். தியாகராஜா தன் சினேகிதனின் காதலியான தன் ஒன்றைவிட்டதங்கச்சி சகுந்தலாவின் திடீர்த்திருமணத்தைப் பற்றிச் சொன்னான். உஷாவுக்கு இரத்த ஓட்டமே நின்றதுபோல் இருந்தது. கார்த்தியின் கடிதத்தை உடைத்தார்கள். இனிச் சகுந்தலாவுக்குக் கிடைக்கத் தேவையில்லாத கடிதம் அது என்ற நினைவுடன், "அம்மா இறந்துவிட்டா. ஒன்றிரண்டு கிழமையில் வருகின் றேன். நான் சொன்னதைப்பற்றி யோசித்து வைக்கவும். நாங்கள் முடிவு கட்டியபடி திருமணப் பதிவை கெதியில் வைப்போம். உமது தாய் தகப்பன் உம்மை ஒன்றும் செய்ய முடியாது. உமக்குச் சட்டப்படி கலியானம் செய்ய உரிமை யுண்டு. வயது 21 ல் தாய்தசுப்பன் அனுமதியின்றிச் செய்ய லாம்-கார்த்தி."
தியாகராஜாவின் கண்களில் நீர் கட்டியது. சினேகிதளின் கடிதத்தைப் பார்த்ததும். ஒன்றிரண்டு கிழமை மூடிய கார்த்தி வந்தான் உஷாவின் வீட்டுக்கு வாழ்க்கையில் கார்த்தியின் சோர்ந்த வேதனையான முகத்தை அன்றுதான் உடிைா முதலும் கடைசியுமாகக் கண்டாள். அவன் சகுந்தலாவைப் பற்றி நேரடியாக ஒன்றும் உஷாவைக் கேட்கவில்லை, தியாகராஜா சொல்லியிருக்கலாம் எப்படி நடந்தது என்று.
"சகுந்தலாவில் பிழையில்லை. இது அவளின் தகப்பனாரின்
> கோரமான விளையாட்டு, சாத்திரத்தையும் தோத்திரத்தை பு:ம் பயன்படுத்தி அப்பாவிப் பெண்களின் வாழ்க்கையைச் சீரழிக்கிறார்கள். சகுந்தலாவைப் பிழை சொல்லி என்ன பிரயோசனம்? பெண்கள்ாதங்கள் உரிமைகளையுணர்ந்து போராடாதவரை இப்படியான சோகக் கதைகள் தொடரத் தான் போகிறது?"

Page 81
5 ராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம்
கார்த்தி அதன்பின் அதிகம் உஷாவுடன் தொடர்பு வைத்த தில்லை. தியாகராஜா வெளிநாடு போய்விட்டான். கார்த்தி லண்டன்வாழ் மாணவர்கள் இயக்கங்களுடன் சேர்ந்து உழைக்கிறான். உஷா தன் கல்யாணம் குழம்பிப்போய் இருக்கிறாள். இதற்கிடையில் அவலமான கல்யாணச் சீவிய மும், அழகிய குழந்தையுமாகச் சகுந்தலா வந்து நிற்கிறாள் தங்கையின் கல்யாணத்தைக் "குழப்ப."
உஷா இவ்வளவும் சொல்லிமுடிய சகுந்தலா சொன்னாள். ** எப்பாடு பட்டும் மீனா தன் விருப்பப்படி கல்யாணம் செய்வ தற்கு உதவி செய்யப்போகிறேன். எனக்கு நடந்த கெதி அவளுக்கும் நடக்கவேண்டாம்." சகுந்தலாவின் உறுதி உஷாவுக்குச் சந்தோஷத்தையுண்டாக்கியது. நீண்டநேரம் பழைய கதைகளையே கதைத்துக்கொண்டிருந்தார்கள். இனி எப்போது காணப்போகின்றோம் என்ற நம்பிக்கையின்மை இருவரையும் மனம் விட்டுத் தங்கள் கதைகளை அலசப் பண்ணிக்கொண்டிருந்தது. இரவு ஒருமணிக்குமேல் இருக் கும் இருவரும் படுக்கப்போக யோசிக்கும்போது, நித்திரையே வரவில்லை.
"எப்படி என்றாலும் நேரடியாக கார்த்தியுடன் பழைய கதை களை மனம்விட்டுக் கதைக்க முடியாமல் இருக்கிறது." என்றாள் சோர்ந்த கண்களுடன் இருக்கும் உஷாவைப் பார்த்து.
"முகத்தைப் பார்த்துக் கதைக்கப் பயமென்றால் போன் பண்ணி கதையேன்." உஷா தூக்கக் கலக்கத்தில் சொல்லி விட்டுத் தூங்கிப் போனாள்.
சகுந்தலா யோசித்துக்கொண்டேயிருந்தாள். பைத்தியக் காரத்தனமா இப்போது போன் பண்ண யோசிப்பது. மாணவர் கூட்டம் முடிய இப்போதுதான் ரூட்டிங் போய்ச் சேர்ந்திருக்கலாம். ஏதோ குருட்டுத் துணிவில் போனை

உேலகமெல்லாம் வியாபாரிகள் 155
எடுத்து நம்பரைச் சுழட்டினாள். கார்த்தியில்லாவிட்டால் சிதம்பரநாதன் எடுப்பான். அவன் ஒன்றும் தப்பாக நினைக்க மாட்டான். எடுத்தது சிதம்பரநாதன் இல்லை. சில்வியா, சகுந்தலா எதிர்பார்க்கவில்லை சில்வியாவின் குரலை. கார்த்திகேயன் வீட்டில் இல்லையாம். ஏதும் சொல்ல இருந் தால் சொல்லட்டாம் சில்வியா கேட்கிறாள்.
நடு இரவின் மெல்லிய குளிர்காற்று ஜன்னலால் வந்து சகுந்தலாவின் முகத்தில் பட்டும் ஏனோ சகுந்தலாவின் முகம் எரிந்தது, திடீரென்று எதிர்பாராமல் சில்வியாவின் குரலைக் கேட்டு. அப்படி ஒன்றும் அவசரமில்லை என்று போனை வைத்தாள் சகுந்தலா.
என்ன விசர் வேலை? என்ன நினைப்பாள் சில்வியா? தான் இல்லாத நேரமெல்லாம் கார்த்தி என்னுடன் இருந்ததாக நினைப்பாளா? அவள் அப்படி நினைக்கப் போகிறாள் என்று நான் ஏன் நினைக்கவேண்டும்? ஆயிரக்கணக்கான யோசனை கள் முட்டிமோதி சகுந்தலாவின் நித்திரையைக் குழப்பியது. நித்திரையற்ற இரவாக அன்றிரவு முடிந்தது.
o O O
சில்வியாவுக்கு ஆத்திர ஆத்திரமாக வந்தது. நடு இரவில் சகுந்தலா போன் பண்ணியதும் அவசரமாக ஒன்றுமில்லை என்றதும்.
என்ன நினைக்கிறாள் இந்தப் பெண். இன்னும் கார்த்தி தன் உடமை என்றா நினைக்கிறாள். கார்த்தியிலும் கோபம் வந்தது. சிதம்பரநாதன் சொன்னான் பின்னேரம் சகுந்தலா வுடன் கார்த்தி போனதாய். மாணவர் கூட்டம் என்று சாட்டுவிட்டுக் கொண்டு பழைய காதலியுடன் லண்டன் சுற்றிப் பார்க்கின்றாரோ?

Page 82
16 ராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம்
ஏன் முட்டாள்தனமாக யோசிக்கிறேன். சில்வியா தன்னைத் தானே கேட்டுக்கொண்டாள். என்ன இருந்தாலும் நான் என்ன கல்யாணம் முடித்த பெண்சாதியா அதட்டிக் கேட்க? கல்யாணம் ஏன் முடிக்கக் கூடாது? இப்படித் தேவையில்லா மல் எந்தப் பெண்ணும் போன் பண்ணினால் தாறுமாறாகப் பேசவாவது ஒரு தகுதி வேண்டாமா? எப்படித்தான் முற் போக்குக் கொள்கைகள் நிறைந்திருந்தாலும் பெண்கள் பெண்கள்தான். பொறாமை பொறாமைதான்.
களைத்து விழுந்து வந்திருந்தான் கார்த்தி. பேரின்ப நாயகத்தார். தங்களில் வீண் பழி போட்டு அப்பாவி மாணவர் களின் பெயரைப் போலீசில் கொடுக்கத் தயங்கமாட்டார் என்பது அவனுக்குத் தெரியும். இலங்கையில் நடக்கும் சில தனிப்பட்ட அசம்பாவித சம்பவங்களில் லண்டன் மாணவர் களையும் சம்பந்தப்படுத்திப் போலீசில் ஒருதரம் புகார் கொடுத்தவர் பேரின்பநாயகத்தார். தங்கள் தலைமைப் பதவிக்கு ஏதும் அபாயம் வந்தால் அடுத்தவரைக் கெடுத்தும் தங்கள் பதவியைக் காப்பாற்றத் தயங்காதவர் பேரின்ப நாயகத்தார். எத்தனையோ கஷ்டங்களுக்கிடையில் இவ் விடம் படிக்கவந்த தமிழ் மாணவர்களை இப்படிச் சில குள்ள நரிகள் கொடுமை செய்வதை அவனால் தாங்க முடியா திருந்தது.
இப்படியான யோசனைகளுடன் வந்தவன் சில்வியாவின் நீண்ட முகத்தைக் கண்டதும் சோர்ந்து போனான்.
"நான் எந்தச் சண்டைக்கும் தயாரில்லை. வெள்ளைக் கொடி காட்டுகிறேன். சரணமடைகிறேன்." வழக்கம் போன்ற குறும்பு வார்த்தைகள் வெளிவந்தன கார்த்திகேயன் வாயால்,
"நாங்கள் எப்போது கல்யாணம் செய்யப்போகிறோம்" அதிகார தோரணையாகக் கேட்டாள் சில்வியா,

உலகமெல்லாம் வியாபாரிகள் 157
*உமக்குப் பிள்ளை வயிற்றிலா? ஏன் நடுச்சாமத்தில் வெருட்டுகிறீர்?" 'கார்த்திகேயன் உமக்குப் பகிடிதானா வாழ்க்கை எல்லாம். விளையாட்டு வேண்டாம். நான் கொஞ்ச நாட்களாக யோசித்து வருகிறேன்."" சில்வியா கோபத்துடன் சொன்னாள்.
"நீர் யோசித்தால் நான் கல்யாணம் செய்வதென்று சட்டமா?" இப்போது குறும்பில்லை. நிச்சயம் குறுக்கு விசாரணை.
'உங்களுக்குப் பகிடிதான். உங்கள் பகிடிகளுக்கு பல் இளித்த காலம் போய் விட்டது. என்னை இங்கு சாட்டுக்கு வைத்துக் கொண்டு எத்தனை பேருடன் திரிந்துவிட்டு வருகிறீர்கள்." அவளின் வெருட்டல் அவனுக்கு எரிச்சல் தந்தது.
'இப்பவே இப்படி வெருட்டிப் பார்த்தால் கல்யாணம் முடிய என்ன நடக்கும்' அவன் எரிந்து விழுந்தான். அவள் முகம் கறுத்தது. கண்கள் கலங்கின. படபடவென்று எழுந்தாள். பெட்டி எடுக்கப்பட்டு உடுப்புகள் போடப்பட்டன. பத்திர காளியாகத் தெரிந்தாள் சில்வியா,
'சில்வியா விளையாட்டுத்தனமாக இராதே. என்ன நடந்தது என்று சொல்." அவன் அவளை இறுக அனைத்துக் கொண்டு கேட்டான். அவளின் கோபம் முகத்தில் வெடித்தது.
** என்னை ஏன் அணைக்கிறீர்கள்? போய் உங்கள் சகுந்த லாவை அணையுங்கள். இப்போது கொஞ்ச நேரத்துக்கு முதல்தான் போன் பண்ணினாள்.' வார்த்தைகள் அக்கினி களாகப் பறந்தன. என்ன சொல்கிறாள் இவள். ஏன் சகுந்தலா இந்த நேரத்தில் போன் பண்ணினாள்.
ஏன் இந்தப் பெண்கள் என்னை இந்தப் பாடு படுத்துகிறார் கள்? அவன் யோசிப்பதற்கிடையில் அவள் தடதடவென்று படியிறங்கினாள்.

Page 83
158 ராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம்
இவர்கள் போடும் சத்தத்தில் சலீமும், சிதம்பரநாதனும் தங்கள் அறையால் எட்டிப் பார்த்தார்கள்.
"சில்வியா தயவுசெய்து திரும்பி வா." கார்த்திகேயன் கெஞ்சினான். நடுச்சாமம் எங்கே ஓடுகிறாள் இந்தப் பெண்.
வெளியில் கார்க்கதவு ஆத்திரத்துடன் சாத்தப்படும் சத்தம் கேட்டது. தோல்வி மனப்பான்மையுடன் திரும்பினான் கார்த்திகேயன், மாடிப்படிகளில் சிதம்பரநாதனும், சலீமும் நின்றுகொண்டிருந்தார்கள்.
"எப்படி நாடகம்? இன்ரஸ்ரிங்காக இருந்ததா?" எரிச்ச லுடன் கேட்டான் கார்த்திகேயன். அவர்கள் மறுமொழி சொல்லாமல் தங்கள் அறைக்குள் போய்விட்டார்கள்.
ஜன்னலால் எட்டிப்பார்த்தான். கார் இல்லை. அவள் போய்விட்டாள். ஒரேயடியாகப் போய்விட்டாளா? அவனுக்கு முதற்தரமாகச் சகுந்தலாவில் எரிச்சல் வந்தது.

9)
அடுத்தநாள் மீனா குழந்தையுடன் வந்திருந்தாள் தமக்கை யைக் கூட்டிப்போக. இவளையும் திடீர்த் திருமணத்திற்கு ஆயத்தம் செய்கிறார்கள் என்பதை மீனா எப்படி எடுத்துக் கொள்வாள். தமக்கை மாதிரி கோழைத்தனமாக ஒப்புக்கொள் வாளா? அல்லது.
உஷா கேட்க நினைத்தாள், ஆனாலும் சகுந்தலாவுக்கு முன் னால் பிரச்சனையைத் தொடங்க விருப்பமில்லை. இரவிர வாகக் கதைத்து அலுத்துப் போய் இருந்தாள். அத்தோடு சகுந்தலா குற்றம் சாட்டுவாள் தாய் தகப்பனை மீறிக் கல்யா ணம்செய்து என்ன சுகம் கண்டுவிட்டாய் என்று.
தன் கல்யாண வீட்டுக்குரிய ஆயத்தங்களை மீனா இப் பொழுதே செய்ய யோசிக்கிறாள் என்பது தெரிந்தது அவளின் பேச்சிலிருந்து. தாய் தகப்பனுக்குச் சொல்லாமல் கொள்ளாமல் செய்யப்போகும் கல்யாணத்தைப் பற்றி மீனா துக்கப்பட வில்லையா? உஷாவும் சகுந்தலாவும் இதுபற்றி இரவில் கதைத்தாலும் நேரடியாக மீனாவைக் கேட்டுப் புண்படுத்த விருப்பமில்லை. உஷா வீட்டிலிருந்து தர்ன் "றெஜிஸ்ரார்" ஒவ்வீசுக்கு வெளிக்கிட்டுப் போகமுடியுமா என்று மீனா கேட் டாள்? தாராளமாகத் தன் உதவி கிடைக்கும் என்றாள் உஷா. வாழ்விழந்த பெண்களில் விழித்துக்கொண்டு கல்யாண ஆயத் தம் செய்வதை அம்மா எவ்வளவு வெறுப்பாள் என்று சகுந்தலா வுக்குத் தெரியும். அதுவும் இவ்வளவு கூத்துமாடிக் களைத்துக் கல்யாணத்தைக் குழப்பிப்போட்டு இருக்கும் உஷாவின் உதவி

Page 84
60 ராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம்
யைக் கேட்டாலே தாய் பத்திரகாளிபோல் கத்தினாலும் ஆச்சரியமில்லை.
எதையும் யோசித்துப் பிரயோசனமில்லை. ஏதோ நடப்பது நடக்கட்டும் என்று முடிவு கட்டினாள் சகுந்தலா. தன்னால் ஏதும் முடிவுகட்டத் தெரியாதவர்கள்தான் சாத்திரத்திலும், விதியிலும் நம்பிக்கை வைப்பார்கள் என்று உஷா சொல்ல லாம். விம்பிள்டனுக்கு வந்துகொண்டிருக்கும் வழியில் தான் சிதம்பரநாதன் ஆட்களுக்குக் கல்யாணம்பற்றிச் சொல்ல வேண்டும் என்று மீனா சொன்னாள். இரவு அவசரப்பட்டு நடுச்சாமத்தில் கார்த்திக்குப் போன் பண்ணியதை நினைத்துச் சங்கடப்பட்டாள் சகுந்தலா. தான் கார்த்தியுடன் கதைக்க வில்லை என்று காலையில் உஷாவுக்குச் சொன்னாள்.
மீனாவுடன் போய் கார்த்தியின் வீட்டில் சில்வியாவைச் சந் திக்க ஏதோ செய்தது மனம், ஏன் நான் எதற்கும் பயப்பட வேண்டும்; என்ன பிழை செய்துவிட்டேன்? என்று தன்னைத் தானே சமாதானம் செய்துகொண்டாள்.
மீனா குழந்தை கீதாஞ்சலியுடன் மகிழ்ச்சியாகக் கதைத்துக் கொண்டிருந்தாள். அருமைத் தங்கையின் எதிர்காலம் தன் னுடையதுபோல் இருண்டதாய் இல்லாமல் மகிழ்ச்சியாய் இருக்க வேண்டுமென மனம் பிரார்த்தித்தது.
ஓவர்கோட்டுக்குள் ஒழிந்து கிடந்த உருவங்கள் அரைகுறை ஆடைகளுடன் தெருவை நிறைத்துக்கிடந்தன.
ஒரு உயிர் மிச்சமில்லாமல் எல்லோரும் சந்தோஷமாய் இருப் பதுபோல் இருந்தது சிரித்த முகங்களைப் பார்த்தபோது. உலகத்தில் என்னைத்தவிர எல்லோரும் சந்தோஷமாகத் தானே இருக்கிறார்கள். எனக்கு மட்டும் என்ன குறை. சார்டட் எக்கவுண்டன் புருஷன், அழகிய குழந்தை, அருமை யான வீடு, அலங்காரமான தளபாடங்கள் இதைவிட சந்தோ ஷத்திற்கு வேறு என்ன தேவை?

உலகமெல்லாம் வியாபாரிகள் 61.
நட்டிய கதவுக்கு அப்பால் கார்த்தியின் சோர்ந்த முகம் தெரிந் தது. மீனாவையும், சகுந்தலாவையும் கண்டதும் வழக்கம் போல் சிரிப்பு வரவில்லை முகத்தில். பார்வை வரண்டு கிடந் தது. மீனா தான் இருந்த மகிழ்ச்சி பிரவாகத்தில் கார்த்தியின் சோர்வைக் கவனிக்கவில்லை. ஆனால் நேற்றுப் பின்னேரம் கண்ட கலகலவென்ற முகத்துக்கும் இன்று காணும் சோர்ந்த முகத்துக்கும் உள்ள வித்தியாசம் சட்டென்று விளங்கியது சகுந்தலாவுக்கு. என்ன நடந்தது. ஏதும் தகராறா போன கூட்டத்தில் தகப்பன் ஏதும் செய்திருப்பாரா? மீனாவுக்கு முன் னால் அதிகம் கதைக்கவும் விரும்பவில்லை. அவள் வீடும் அமைதியாகக் கிடந்தது
**எங்கே போய்விட்டான் சிதம்பரன்" மீனா கேட்டாள்.
"சிதம்பரனும், சலீமும் பற்றசியில் ஒரு இன எதிர்ப்புக் கூட் டத்துக்குப் போய் விட்டார்கள்' கேள்விக்கு மறுமொழி வந்தது அவனிடமிருந்து.
'நீங்கள் போகவில்லையா' ஆச்சரியமாக இருக்கிறது மீனா கேட்டாள். 'சுகமில்லை போகவில்லை" கார்த்தி ஏனோ தானோ என்று பதில் சொன்னான்.
*சில்வியா எங்கே" மீனா களங்கமில்லாமல் கேட்டாள்.
*" போய்விட்டாள், வீட்டை விட்டுப் போய்விட்டாள். ஒரே யடியாகப் போய்விட்டாளோ தெரியாது? திரும்பிவரலாம் பார் கண்டார்கள்." கஷ்டப்பட்டு அவன் வேடிக்கையாகச் சொல்ல முயலுகிறான் என்பது குரலில் தெரிந்தது.
சகுந்தலாவுக்கு ஏதோ வயிற்றைக் குடைவதுபோல் இருந்தது. ஏதோ சொல்லியது மனதில் தான்தான் காரண மென்று அவனின் முகத்தைப் பார்க்கத் தைரியமில்லாமல் வேறு எங்கோ பார்த்தாள். "ஏன் வந்தேன் லண்டனுக்கு." எழும்பி ஓடவேண்டும்போல் இருந்தது அவளுக்கு.

Page 85
162 ராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம்
'ஐயம் சொறி, கார்த்தி. என்ன நடந்தது சில்வியாவுக்கு? ன்ன விடயங்களுக்குச் சண்டைபிடிக்கிறவள் இல்லையே?’’ வருத்தம் தொனித்த குரலில் சொன்னாள் மீனா.
'என்ன நடந்ததோ தெரியாது. பெரிய விடயத்தில் தான் சண்டை பிடித்துக்கொண்டு போய்விட்டாள். போவதற்காக 'ஒரு சாட்டுக்குச் சண்டை பிடித்தாளோ தெரியாது. எனக்கு அக்கறையுமில்லை. அதிருப்திப்பட்டு ஓடிக்கொண்டிருப்பவர் களுக்குப் பின்னால் எல்லாம் அலைந்து திரிந்து வாழ்க்கை யைச் செலவழிக்கத் தயாரில்லை. தமிழ்ப்படங்களில் வேண்டு மானால் ஓடிப்பிடித்து விளையாடட்டும். எனக்கு நேர மில்லை." குரலில் கண்டிப்புடன் சொன்னான். சில்வியாவிலா கோபம் அல்லது.
'திரும்பி வரமாட்டாள் என்றா நினைக்கிறீர்கள்" மீனா அவநம்பிக்கையுடன் கேட்டாள்.
"ஏன் அவளின் இடத்திற்கு அப்ளிக்கேஷன் போடப்போகி நீரோ" வழக்கம் போன்ற குறும்புத்தனம் குரலில் தெரிந்தது.
"உங்களுக்கு ஒரே பகிடிதானா எல்லாரிட்டயும். அவள் தன்ர கல்யாணத்திற்கு சொல்ல வந்திருக்கிறாள்" முதற் தரம் வெடித்தாள் சகுந்தலா.
"ஒ, சொறி மீனா. தகப்பனுக்குத் தகப்பனாய் நான் வந்து உம்மைத் தாரை வார்த்துக் கொடுக்கவா அன்ரனிக்கு" மீனா விழுந்து விழுந்து சிரித்தாள் அவனின் குறும்புக்கு.
"அப்பர் பேரின்பர் என்ன அமர்க்களம் செய்கிறாரோ தெரி யாது. அதற்கிடையில் காதும் காதும் வைத்தாற்போல் விஷ யத்தை முடிக்கப் போகிறோம்" மீனா அவனைப்போல் வேடிக்கையாகச் சொன்னாள்.

உலகமெல்லாம் வியாபாரிகள் 1.63
** என்ன அமர்க்களம். யாரோ அப்பாவியை உன் தலையில் கட்ட கங்கணம் கட்டிக்கொண்டிருக்கிறாராம். அவன் களங்க மில்லாமல் சொன்னான். மீனா திடுக்கிட்டுப்போய்ப் பார்த் தாள்.
'ஏதாகிலும் செய்வார் என்றுதான் யோசித்தன். உண்மை யாகத்தான் செய்வார்போல் இருக்கிறது" மீனா பெருமூச்
சுடன் சொன்னாள்.
'slibidr காஸ் அடுப்பில் தலையைக் கொடுக்கிறேன் என்று ஆலாபரணம் வைக்கட்டும், அப்பா மார்பைப் பிடித்துக் கொண்டு அலறட்டும். நீர் மறுபேச்சுப் பேசாமல் மங்கள காரியத்துக்கு ஒப்புக் கொள்வீர்.”*
**சகுந்தலாவுக்குத் தெரியும் ஒவ்வொரு வார்த்தையும் தன் னைக் கிண்டல் செய்யத்தான் சொல்கிறான் என்று. ஆத்திரம் பற்றிக்கொண்டு வந்தது அவளுக்கு.
*நான் சகுந்தலா இல்லை. அவர்கள் நாடகம் என்னிடம் பலிக்காது" மீனா கோபத்துடன் சொன்னாள்.
"எதற்கும் எங்களுக்குக் கல்யாணச் சாப்பாடு போட மறந்து விடாதேயும்" கார்த்திகேயன் சொன்னான். மீனா திரும்பி வரும்வரையும் முணுமுணுத்துக்கொண்டே வந்தாள்.
சகுந்தலாவுக்குப் பயமாக இருந்தது வீட்டுக்குப் போய் ஏதும் நாடகம் நடக்கக்கூடாதே என்று. யாருக்கு வெற்றி, யாருக் குத் தோல்வி என்றில்லை பொருள். எந்தக் கூத்தையும் அவள் பார்க்கத் தயாராய் இல்லை. "மீனா அப்பாவுக்குத் தேவையில்லாதவர்கள் தேவையில்லாத கதைகளைக் கடடிவிடுவார்கள் நம்பக்கூடாது." சகுந்தலா சொன்னாள். தாய் தகப்பனிடம் கேட்டு அவர்களின் வாயால் உண்மை வெளிவரும் வரை தேவையில்லாத சண்டைகள் உண்டாவதை சகுந்தலா விரும்பவில்லை,

Page 86
164 ராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம்
ச்குந்தலா எதிர்பார்த்ததுபோல் மீனா வீட்டுக்கு வந்ததும் ஸ்ராததுமாக ஏதும் நடக்கவில்லை. தாய் வழக்கம் போல் தன் அருமையான சமையலில் ஈடுபட்டிருந்தாள். தகப்பன் தான் வழக்கம்போல் யாரையும் திட்டிக்கொண்டிருக்காமல் ஏதோ ரகசியம் பேசிக்கொண்டிருந்தார் தன் சினேகிதருடன். யார் கழுத்தையமுக்கத் திட்டம் போடுகிறார்? மீனா தமக்கையைப் பார்த்தாள்.
மீனாவின் கல்யாண விடயமாகவில்லை அவர்கள் ரகசியம் பேசிக்கொண்டிருத்தது. தமிழ்க்கலாச்சார சங்கம் பற்றிப் பேசிக்கொண்டிருந்தார்கள். யாரை வெளியேற்றப் போகிறார் கள். இவர்களின் அரசியல் விவகாரத்தைப்பற்றிப் பேசாமல் விடுவது புத்திசாலித்தனம் என்றாள் மீனா. கார்த்திகேயனை வாய்க்கு வந்தபடி திட்டிக்கொண்டிருந்தவர் என்னவென்று இப்படி மெளனமாக இருக்கமுடியும். புலி பதுங்குவது பாயத் தானே?
அடுத்தடுத்து இரண்டு மூன்று நாட்களாக எந்த விஷேசமு மில்லை. தாய் கூட வழக்கத்துக்கு மாறாக அமைதியாக
இருந்தாள்.
சகுந்தலாவுக்கு மனதில் ஏதோ தைத்துக் கொண்டிருந்தது. ஏதோ மறைவாக நடப்பதாகத் தோன்றியது. மீனா வழக்கம் போல் வேலைக்குப்போய் வந்துகொண்டிருந்தாள். இனம் தெரியாத பீதி மனதில் குடிபுகுந்திருந்தது சகுந்தலாவுக்கு.
என் எல்லாரும் மெளனமாய் இருக்கிறார்கள். செய்கிறேன் வேலை பார் என்று திட்டிக்கொண்டிருந்தார் கார்த்தியை பற்றி. இப்போது கார்த்திகேயனைப்பற்றியும் பேச்சில்லை இவள் வெள்ளைக்காரனைச் செய்யப்போகிறாள் விடவா போகிறேன் மீனாவைப் பேசிக்கொண்டிருந்தார். ஒன்றிரண்டு நாட்களாக ஒரு கூச்சலுமில்லை. யாரைக் கேட்பது?

உலகமெல்லாம் வியாபாரிகள் 165
உஷாவுடன் கதைப்பதானால் தாய் வீட்டில் இருக்கும் போது மனம்விட்டுக் கதைக்கமுடியாது பின்னேரங்களில். பகலில் உஷா வேலைக்குப் போய்விடுவாள். சிவனேசனிடமிருந்து கடிதம் வந்தது. தகப்பன், கெதியில் மீனாவின் விடயம் முடி வாகும் என்று போன் பண்ணியதாக எழுதியிருந்தான். தன் னில் நம்பிக்கையில்லை தாய் தகப்பனுக்கு என்று உடனே தெரிந்தது. மீனாவின் மனத்தைப் புத்திசொல்லி மாற்றக் கூப் பிட்ட சகுந்தலாவே மீனாவுடன் சேர்ந்து திரிவது அவர்களுக்கு சகுந்தலாவில் நம்பிக்கையில்லாமல் ஆக்கியிருக்கும். சிவனேச னுக்குச் சொன்னால் தனக்குச் சொல்லமாட்டான் என்று ஏன் நினைக்கிறார் தகப்பன்? சிவனேசனுக்குக்கூடச் சொல்லும் போது சகுந்தலாவுக்குச் சொல்லவேண்டாம் என்று சொல்லி யிருப்பாரோ தகப்பன்? அப்படியானால் ஏன் எனக்கு எழுதி னான் சிவனேசன்? நீர் நின்று என்ன பிரயோசனம் உடனே திரும்பி வா என்று சொல்லாமல் சொல்கிறானா?
அப்படிச் சொல்லக்கூடிய ஆள் இல்லை சிவனேசன். நீர் போனாற் போய்ச்சேரும் என்று எடுத்தெறிந்து பேசக்கூடிய வன். எல்லாம் குழம்பிப்போய் விட்டதாகப்பட்டது சகுந்தலா வுக்கு. சில்வியாவுக்கு என்ன நடந்தது? அவள் ஓடியதற்கு நான் வந்தது ஒரு காரணம் என்று சொல்லப் போகிறார்களா? மீனாவின் விடயம் என்னவாகவும் ஆகட்டும் திரும்பிப்போவம் என்று ஒரு கணம் நினைத்தாள். சொல்லாமற் கொள்ளாமல் மீனா ஒடிப் போனால் தாய் தகப்பன் படப்போகும் வேதனை தான் ஒன்றிண்டு நாட்கள் நிற்பதாற் குறைத்துவிட முடியுமா? மீனாதான் இந்தக் குழப்பத்துக்குக் காரணம். **சொல்லாமற் கொள்ளாமற் செய்துகொள்வதற்கென்ன? ஏன் ஊரைக் கூப் பிட்டு பறையடிக்கிறாய்? இப்போது பார் எவ்வளவு கரைச்சல் என்று' மீனாவைப் பேசினாள் சகுந்தலா.
* உனக்குச் செய்த கொடுமை எல்லாவற்றையும் எனக்கும் செய்வார்கள் என்று எதிர்பார்க்கவில்லை." மீனா அலுப் புடன் சொன்னாள்.

Page 87
166 ராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம்
'எனக்கு அவர்கள் கொடுமை செய்ததாக நினைக்காதே. தாங்கள் ஏதோ நல்ல காரியம் செய்வதாகத்தான் நினைக்கி றார்கள். கார்த்திகேயனைப்போல் நூற்றுக்கணக்கானவர்கள் படிக்க வந்தாலும் எத்தனைபேர் உண்மையாகப் படித்து முன் லுக்கு வந்திருக்கிறார்கள்? அதுதான் அவருக்குப் பயமாக இருந்திருக்கும். லண்டனுக்கு வருவதற்காக எத்தனையோ பொய் புரட்டுக்கள் செய்து வந்துவிட்டுப் படிக்காமல் ஏதோ வேலை செய்து பிழைக்கிறார்கள்தானே. அவர்களில் ஒருவனா கத்தான் கார்த்தியையும் நினைத்தார். இவனை நம்பி என்ன செய்யப்போகிறாய்? இரண்டு மூன்று பிள்ளைகள் பிறந்தவுடன் சோசியல் செக்கியூரிட்டியிலா காசு எடுத்துச் சீவிக்கப்போகி றாய் என்று என்னைப் பேசினார்? அவருக்கு இன்னும் கொஞ் சக் காலத்தில் விளங்கும் சிவனேசன் இந்த வேகத்தில் குடித் துக்கொண்டு போனால் எனக்கு என்ன நடக்கும் என்று. நல்ல காலம் ஏதோ படித்து கையில் ஒரு சேர்ட்டிபிக்கற் இருப்பது" பெருமூச்சுடன் சொன்னாள் சகுந்தலா. இரண்டு மூன்று நாள் எரிந்த வெயில் குறைந்து மழைக்குணமாக இருந்தது.
அன்று மீனா வேலைக்குப் போய்விட்ட பின் கீதாஞ்சலியை கூட்டிக்கொண்டு மார்க்கெட்டுக்குப் போனாள். வழியில் சலீ மைக் கண்டாள். சிதம்பரநாதன் என்றால் துணிந்து கேட்க லாம் சில்வியா வந்துவிட்டாளா என்று? சலீமை அதிகம் பழக்க மில்லை ஆனாலும் சலீம் தானாக வந்து கதைத்தான்.
"இலங்கையிலிருந்து வந்த தமிழ்த்தலைவரின் கூட்டத்தைக் குழப்பியதற்கு நாங்கள்தான் காரணம் என்று உங்கள் தகப் பனார் பேசியதாகக் கேள்விப்பட்டன்" சலீம் தானாக விடயத் துக்கு வந்தான்.
"எனது தகப்பனை ஏன் கேட்கக் கூடாது. என்னிடம் ஏன் வருகிறீர்கள்' என்று சிரித்துச் சமாளித்துச் சொன்னாள் சகுந்தலா. W

உலகமெல்லாம் வியாபாரிகள் 167
* யார் யாருடைய கூட்டத்தைக் குழப்பினார்களோ தெரி யாது. அப்படிச் செய்தவர்களைப் பிழைசொல்லப் போவது மில்லை. ஆனால் உங்கள் தகப்பன் தேவையில்லாமல் எங்களில் பழிபோடுவது சரியில்லை."
சலீமும் சூடாகப் பேசுவான் என்று எதிர்பார்க்கவில்லை. இதெல்லாம் எனக்கு வேண்டாம் என்பதுபோல் பார்வையைத் திருப்பிக்கொண்டாள்.
**STůu சிதம்பரநாதன் ஆட்கள்" நேரடியாகக் கேட்காமல் மறைமுகமாகக் கேட்டாள். கார்த்திகேயன் எப்படி என்று.
"எங்களைப் போன்ற ஆட்களுக்குச் சுகமென்ன பார்ஸலிலா வருகிறது பகிர்ந்தெடுக்க. ஏதோ இருக்கிறோம், உழைக் கிறோம், பிழைக்கிறோம், உயிரோட சீவிக்கிறம்" சலீம் சிரித்துக்கொண்டு சொன்னான்.
'கார்த்தியின் வாய் உங்கள். எல்லாரிடமும் பரவிக்கிடக்கு. எதற்கும் எடுத்தெறிந்து பேசப் பழகி வைத்திருக்கிறீர்கள்" பஸ் ஸ்ரொப்பை நோக்கி நடந்துகொண்டே சொன்னாள் சகுந்தலா.
**ஆண்டாண்டு காலமாக எடுத்தார் கைப்பிள்ளையாக இருந்துவிட்டோம் இனியாவது பழகுவம் எங்கள் துணிவில் உயிர்வாழ’ சிரித்துக்கொண்டே சொன்னான் சலீம். அவன் கலகலவென அளந்து கொட்டுவதிலிருந்து தெரிந்தது சில்வியாவைப் பற்றிக் கேட்டாலும் தன்னைப்பற்றி ஒன்றும் நினைக்கமாட்டான் என்று. நேரடியாகக் கேட்டாள். 'காதலர்களின் ஊடல் என்ன நிலையில் இருக்கிறது" கூடுமானவரையில் குரலைச் சாதாரணமானதாக வைத்துக் கொண்டாள்.
ஒருகணம் அவள் என்ன கேட்கிறாள் என்று விளங்கவில்லை. சலீமைப் பொறுத்தவரையில் கார்த்திகேயனும், சில்வியாவும்

Page 88
■, (58 ராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம்
காதலர்கள் இல்லை. பேப்பரில் கையெழுத்து வைக்காத தம்பதிகள்.
சில்வியா வந்துவிட்டாளா என்று கேட்கிறேன்" என்றாள் சகுந்தலா. *ஓ, அதுவா, நான் நினைக்கவில்லை திரும்பி வருவாள் என்று. எங்கட தமிழ்ப் பெண்கள்தான் அம்மா வீட்டுக்கு எடுத்ததெற்கெல்லாம் ஓடி விளையாடுவார்கள். இங்கிலிஸ்ப் பெண்கள் இல்லை என்றால் இல்லைதான். இவ்வளவுக்கும் சில்வியா' இன்னொருத்தனைக் ஆல்யாணம் செய்தாலும் ஆச்சரியமில்லை."
அ.கடவுளே எப்படி எடுத்தெறிந்து வாழத் தெரிகிறது இந்த நவநாகரீக மனிதர்களுக்கு
" கார்த்திகேயன் அதைப்பற்றி ஒன்றும் துக்கப்பட வில்லையா?' மனதில் ஒருவிதமான நிம்மதி ஏ"ே பிறந் தது என் குரலில் ஏதும் விண்ணானேம் தெரிகிறதா?
"ஒகோகோ, கார்த்திகேயன். பேரின்பநாயகத்தார் போர்ப் பட்லம் உச்சக்கட்டத்தில் நடக்கிறது. இந்தக் காதல் விளையாட்டெல்லாம் பெரிசில்லை." அவளுக்கு நம்' முடியாமல் இருந்தது கார்த்திகேயன் அப்படி இலகுவில் அந்தப் பெண்ணின் உறவை மறந்துவிடுவான் என்று சில்வியா போன அடுத்த நாள் அவன் முகத்தில் இருந்த வேதனையும் பேச்சில் தொனித்த துக்கமும் ஞாபகம் வந்தது. சிலவேளை சலீம் சிதம்பரநாதனுக்குத் தன் துக்கத்தைக் காட்டிக்கொள்ளாமல் இருக்கலாம். இனி என்னதான் நடந்தாலும் கார்த்திகேயனுடன் எந்தத் தொடர்பும் வைத்துக் கொள்ளக் கூடாது என்று சகுந்தலா முடிவு செய்தாள். மற்ற வர்கள் என்ன தன் தாய் தகப்பனே தன்னில் நம்பிக்கை மில்லாமல் இருக்கிறார்கள்போல் இருக்கிறது. அமைதியாய் இருந்த தன் வாழ்வில் ஏதோ இருந்தாற்போல் இடியும்

உலகமெல்லாம் வியாபாரிகள்
மின்னலும் அடிப்பதுபோல் இருந்தது எல்லாக் குழப்பங்களும் சேர்ந்து.
அன்று வெள்ளிக்கிழமை. அம்மா வழக்கம்போல் காலையில் முழுகி வீடு துப்பரவாக்கித் தன் வெள்ளிக்கிழமையைத் தொடங்கினாள்: மீனா வேலைக்குப்போய்க் கொஞ்சநேரத் தில் தாயும் தகப்பனும் வெளிக்கிட்டுப் போனார்கள். கடைக்குப் போவதானால் கீதாஞ்சலியையும் கூட்டிக்கொண்டு போனார்கள்.
எங்கே போகிறார்கள்? காலையில் கோயிலுமில்லை, பூசையும் இல்லை விம்பிள்டனில், ஏன் மர்மமாக நடக்கிறார்கள்? மீனாவின் கல்யான விடயமாக நல்லநாள் பார்த்து ஏதும் செய்யப்போகிறார்களோ? குழம்பிக்கொண்டு அதிக நேரம் இருக்கவில்லை. ஒன்றிரண்டு மணித்தியால்ங்களில் யாரோ
கதவைத் தட்டினார்கள்.
திறந்தால் சிதம்பரநாதன் நின்றான். "என்ன காணும் கொலிச்சுக்குப் போகவில்லையோ? படிப்பைக் கெடுத்துக் கொண்டு ஊர் சுற்றுமளவுக்கு உமது அரசியல் நெறி அளவு கடந்து போயிற்றோ? என்ன ஏதும் நோட்டீஸ் கொடுத்துக் கொண்டு திரிகிறீரா?" அவள் விடாமற் கேட்டாள். அவன் பரபரவென்று அங்குமிங்கும் Lu Tiġġis Tsir.
"என்ன சிதம்பரம் கோழி எடுத்த கள்ளன்போல் முழிக் கிறாய். என்ன நடந்தது." அவனின் பரபரப்பு அவளுக்கு ஆச்சரியமாக இருந்தது. துறுதுறுவென்று கதைத்தாலும் சிதம்பரநாதனின் நிதானம் ஒருநாளும் இல்லாமற்போய் அவள் கண்டதில்லை. புவனேஸ்வரிக்கு என்னவுமா? குழந்தைகளுக்கு ஏதுமா?
"மீனா எங்கே?' அவன் கேட்டான்.
"வேலைக்குப் போய்விட்டாள். ஏன்?" சகுந்தலாளின் குரலிலும் பரபரப்பு.

Page 89
ராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம்
"மாமாவும் மாமியும் ரெஜிஸ்ரார் ஒவ்வீசுக்குப் போவதைக் கண்டேன். மீனாவை ஏதும் பயமுறுத்தி யாரையும் செய் கிறார்களோ என்று யோசித்தேன்."
சகுந்தல்ாவுக்கு நிம்மதியாக இருந்தது. காலை வெயிலில் கண்கூசியது. அவள் கண்களையிடுக்கிக் கொண்டு சிரித்தாள். "யாரும் சினேகிதர் பிள்ளைகளின் கல்யாணப் LI A55hi (Tas இருக்கும்." அவள் குரலில் நிம்மதி. TE
*சினேகிதர்கள் யாரும் இல்லை இவர்கள் இருவரும்தான் போனார்கள்." சிதம்பரநாதனின் குரலில் குழப்பம். அடியும் விளங்கவில்லை நுனியும் விளங்கவில்லை சகுந்தலாவுக்கு. "
என்ன தாயும் தகப்பனும் இரண்டாந்தரம் கல்யாணம் செய்யப்போகிறார்களா?
சட்டென்று சிவனேசனின் கடிதம் ஞாபகம் வந்தது. "மீனா வின் விடயம் கெதியில் முடியும்." எப்படி?
tit
"ஆ! இப்போதுதான் விளங்குகிறது. மீனாவுக்குப் பேசிய பெடியனை என்க்குத் தெரியும். அவனின் சினேகிதன் சொன்னான். இந்தச் சனிக்கிழமை சிலவேளை பேரின்ப நாயகத்தார் வீட்டுக்கு வருவதாக" சிதம்பரநாதன் சொன் னான்.
சகுந்தலாவுக்கு இன்னும் விளங்கவில்லை. அவர்கள் நாளைக்கு வருவதாக இருந்தால் இன்றைக்கு ஏன் தாய் தகப்பன் கல்யாணப் பதிவு காரியாலயத்துக்குப் போய் நிற் கிறார்கள்.
"விளங்கவில்லையா சகுந்த லா அக்கா" சிதம்பரன் உற்சாகத் துடன் கேட்டான். இல்லை என்று தலையாட்டினாள் சகுந்தலா.

உலகமெல்லா வியாபாரிகள் ர் 171
""நாளைக்குப் பையனைக் கூப்பிட்டு விஷயம் சரிவந்தால் அதாவது மீனாவை எப்படியோ சரிவரப்பண்ணிவிட்டுக் கல்யாண எழுத்தை வைப்பதற்காக இருபத்திநாலு மணித் தியால நோட்டிஸ் கொடுக்கக் கல்யாணப் பதிவுக் காரியால யத்திற்குப் போயிருக்கிறார்கள்." அவன் விளக்கமாகச் சொன்னான்.
உண்மையாக அப்படியா? தனக்குச் செய்த ஒவ்வொரு காரியத்தையும் அதே அச்சில் செய்கிறார்களா? ஆத்திரத்தில் மனம் கொதித்தது. என்ன செய்வது? மீனா வரவிட்டு இரவைக்கு இந்த வீட்டில் பூகம்பம் நடக்கப் போகிறதா?
மீனா அம்மா நடிக்கப்போகும் நாடகத்துக்கு விட்டுக் கொடுக்கப் போகிறாயா?
"சிதம்பரன் என்ன செய்வது" தன்னிலும் வயது குறைவான சிதம்பரனிடம் பரிதாபமாகப் புத்திமதி கேட்டாள் சகுந்தலா,
"'என்ன செய்வதா? மீனாவைப் பொறுத்தது. மீனாவுக்குச் சொல்லுங்கள். அவள் விருப்பப்படி செய்யட்டும்."
"கொலிச்சுக்குப் போகிறாயா?" அவள் பரிதாபமாகக் கேட் டாள். "ஏன்' அவன் விளங்காமற் கேட்டான்.
'மீனாவுக்கு ஒருக்காப் போய்ச் சொல்லமுடியுமா, என்ன நடக்கிறது என்று" சகுந்தலா கேட்டாள் அவசரமாக, சிதம்பரன் சரி என்று சொல்லிவிட்டுப் போனான்.
இப்படியா மனிதர்கள் இருப்பார்கள். சொந்த மகளின் துக்கத்தையோ சந்தோஷத்தையோ பொருட்படுத்தாமல் ஏதோ வியாபாரமா பேசுகிறார்கள்? மூளை குழம்பிவிடும் போல் இருந்தது. மீனா எப்படிச் சகிக்கப்போகிறாள் இந்தக் கொடுமையை, எவ்வளவு குள்ளத்தனமான காரியம்.
ஆத்திரம் எல்லை மீறியது. மீன்ா எப்படியும் இந்தக்

Page 90
2 ராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம்
கொடுமையிலிருந்து தப்பவேண்டும். அதன் பிறகு யாரும் எக்கேடும் கெடட்டும் நான் இவ்வளவு காலமும் யாரும் வேண்டாம் ஒன்றும் வேண்டாம் என்று இருந்ததுபோல் இருக்கிறேன்.
கோபத்தில் தன் பெட்டியை அடுக்கினாள். தாய் தகப்பனில் கேடு கெட்ட உலகத்திலேயே கோபம் வந்தது. பிள்ளையோ குட்டியோ கணவனோ மனைவியோ எல்லா உறவும் சுய நலத்தில்தானா அமைந்திருக்கிறது. ஒன்றையும் எதிர் பாராத அன்பு உலகத்தில் கிடையாதா? உறவே வெறும் வியாபாரமா? பின்னேரம் மீனா வந்தாள். முகம் வெறும் கற்சிலைபோல் இருந்தது. சிதம்பரன் எல்லாம் சொல்லி யிருக்கின்றான். தாய் தகப்பனிடம் எதுவும் கதைக்கவில்லை. தமக்கையிடம் முகம் கொடுக்கவில்லை. எந்தவிதத் துக்கத்திலும் கீதாஞ் சலியை அவளால் ஒதுக்க முடியவில்லை. ஓடிப்போய் மீனாவைக் கட்டிக்கொண்ட கீதாஞ்சலியைத் தூக்கிக்கொண்டு தன் அறைக்குப் போனாள் மீனா.
அம்மா பின்னேரம் கோயிலுக்குப்போக ஆயத்தமானாள். தகப்பனின் முகம் சரியாயில்லை. ஏனோ சோர்ந்துபோய் இருந்தது. என்னவென்று நாளைய நாடகத்தை நடத்துவது என்று ஒத்திகை பார்க்கிறாராக்கும்.
கோயிலுக்கு வெளிக்கிடமுதல் குழந்தையை அலங்கரித்துக் கொண்டு சகுந்தலா கீழே வந்தாள். குழந்தை கீதாஞ்சலி பாட்டியுடன் செல்லமாகக் காரில் ஏறிக்கொண்டாள். "லண்டன் நன்றாகப் பிடித்துக்கொண்டது போல் இருக் கிறது" தகப்பன் மகளைப் பார்த்துச் சொன்னார்.
"அவளுக்குப் பிடிக்கிறதோ இல்லையோ எனக்குப் பிடிக்க வில்லை. கெதியில் நியூயோர்க் போக யோசிக்கிறேன்." சகுந்தலாவைக் கூர்மையாகப் பார்த்தார் தகப்பன்.

உலகமெல்லாம் வியாபாரிகள் 1,3
**சகுந்தலா நீ சந்தோஷமாய் இருக்கிறாய் தானே?" தகப்பனின் இந்தக் கேள்விக்கு என்ன மறுமொழி சொல்வது என்று தெரியவில்லை.
'உன்னைப்போல் மீனாவுக்கும் ஒரு நல்ல வாழ்வு கிடைக்க வேண்டுவென்றுதான் என் பிரார்த்தனை. அந்த முருகன் இதற்கெல்லாம் உதவிசெய்ய வேண்டும்." அவர் குரல் அசாதாரணமாக இருந்தது. மீனாவை எப்படியும் தன் வழிக்குக் கொண்டுவர வேண்டுமென்ற திடம் மனதில் இருந் திருக்கவேண்டும்.
**சிவனேசன் சாடையாகக் குடிப்பழக்கம் என்று கேள்வி. லண்டனிலும் நியூயோக்கிலும் எத்தனை தமிழர் குடியாமல் இருக்கினம்? எல்லாம் உன்னைப் பொறுத்தது. கொஞ்சம் பொறுமையாக இருந்தால் காலமும் கடவுளும் உதவியாய் இருக்கும்.'
சொல்லாமல் சொல்கிறார் என்விதி அவ்வளவுதான் என்று. சகுந்தலா ஒன்றும் பேசவில்லை. தகப்பன் கதவைச் சாத்திக் கொண்டு வெளிக்கிட்டதும் தங்கையின் அறைக்குள் போனாள். ஜன்னல் வழியாகத் தாய் தகப்பனைப் பார்த்துக் கொண்டு நின்றாள் மீனா. கன்னங்களில் நீர் புரண்டோடிக் கொண்டிருந்தது.
"ஏன் இப்படிக் கொடூரமாக நடக்கிறார்கள். பெண்மை கற்பு என்றெல்லாம் பிதற்றிக்கொண்டு திரிபவர்கள் ஏன் ஒருத்தனில் மனதைப் பறிகொடுத்த ஒரு பெண்ணை வெறும் போலி நம்பிக்கைகளுக்காக இன்னொருத்தனிடம் ஒப்படைக் கத் துடிக்கின்றார்கள். கற்பு உடம்பிலா உள்ளத்திலா இருக் கிறது? ஒருவனை மனதால் நினைத்துக்கொண்டு இன் னொருத்தனுடன் உடம்பால் வாழச் சொல்கிறார்களே இதா பண்பு, இது கலாச்சாரமா" மீனா விக்கி விக்கியழுதாள்.

Page 91
174 ராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம்
'மீனா உன் கேள்விகளுக்கு உஷாவாக இருந்தால் நன்றாகப் பதில் சொல்வாள். கற்பு என்பது ஆண்களால் பெண்களுக்காக மட்டும் படைக்கப்பட்ட குரூரமான கட்டுப் பாடு. தன் உடமை வேற்றான் பிள்ளைகளுக்குப் போகக் கூடாது என்ற வியாபார மனப்பான்மையில் உண்டாகிய விலங்கு. இப்படித்தான் உஷா சொன்னாள். ஆணும் பெண்ணும் ஒன்றாகப் படிக்கும் வேலைசெய்யும் இடங்களில் இந்தக் காலத்தில் கற்பின் மதிப்பு எப்படிக் கணிக்கப்படு கிறதோ தெரியாது. தகப்பனில்லாமல் குழந்தை வராத வரைக்கும் கற்பைப் பற்றி யாரும் கதைப்பதில்லை இப் போது. அதுவா இப்போது உமது கண்ணிருக்குக் காரணம்?"
சகுந்தலா தங்கை அடுக்கி வைத்திருக்கும் பெட்டியை வெறித்துப் பார்த்தாள். அறை அலங்கோலமாகக் கிடந்தது.
**தேவையானது மட்டும் கொண்டுபோகிறேன். அப்பா அம்மாவின் நகைகள் அந்தப் பெட்டியில் இருக்கிறது. கொடுத்து விடு. அன்ரனிக்குத் தந்தியடித்திருக்கிறேன். என்ன நடக்குமோ தெரியாது." மீனாவின் குரலில் விரக்தி தொனித்தது. Y
*"கவலையப் படாதே மீனா. தாய் தகப்பனைத் துக்கப்படுத்து வதை யோசித்தால் உன் காதலைத் துக்கப்படுத்துவதையும் யோசிக்கவேண்டும். உலகத்தில் எல்லோரையும் சமாதானப் படுத்த முடியாது." சகுந்தலாவுக்குத் தன்னையே நம்ப முடியாமல் இருந்தது இவ்வளவு துணிவுடன் தங்கையை உற்சாகப்படுத்துவது.
'சகுந்தலா கார்த்திகேயனை மறந்துவிட்டு சிவனேசனை செய்யும்போது உன் மனம் எப்படியிருந்தது?" திடீரென்று இந்தக் கேள்வியைக் கேட்டாள் மீனா.
கார்த்திகேயனை மறந்துவிட்டாளா? யார் மறந்தார்கள்? எப்போ மறந்தாள் சகுந்தலா?

உலகமெல்லாம் வியாபாரிகள் 175
" "அதெல்லாம் எனக்கு ஞாபகமில்லை. அதைப்பற்றிக் கதைக்கவும் தயாராயில்லை. கெதியாய் வெளிக்கிடு." தமக்கை துரிதப்படுத்தினாள். இருள் பரவிக்கொண்டிருந் தது. இடி முழக்கத்துடன் மழைபெய்யத் தொடங்கியிருந் தது. நல்லகாலம் அக்கம் பக்கத்து வீடுகளில் ஜன்னல் சீலை
கள் போடப்பட்டுக் கிடந்தது. யாரும் அதிகம் கவனிக்க மாட்டார்கள்.
தமக்கையும் தங்கையும் அழுதார்கள். சகுந்தலாவால் நம்ப முடியாமல் இருந்தது. காலையும் மாலையும் கடவுள் பெய ரால் பல கட்டுப்பாடுகளுடன் வளர்க்கப்பட்ட மீனா எல்லாக் கட்டுப்பாட்டையும் மீறி வீட்டை விட்டுப் போவதை, 'மழையில் நனையாமல் உள்ளே போ சகுந்தலா" தங்கை பரிவுடன் சொன்னாள். தாங்கமுடியாத துயரம் வரும்போது மனிதர்கள் எந்தத் தடையையும் மீறிப் போராடுவார்கள் என்று கார்த்தி சொன்னது ஞாபகம் வந்தது. மீனாவின் (கார் கண்ணில் இருந்து மறையும்வரை பார்த்துக்கொண்டு
நின்றாள் சகுந்தலா.

Page 92
1(O)
தாய் தகப்பன் வரவிட்டு என்னவென்று சொல்வது? எங்கே போய்விட்டாள் என்று சொல்வது?சகுந்தலாவுக்கே தெரியாது எங்கே போகிறாள் மீனா என்று? பெரும்பாலும் உஷா வீட்டுக் காக இருக்கலாம். அல்லது அன்ரனியின் தாய் தகப்பனிடமாக இருக்கலாம். பேரின்பநாயகத்தார் பிரேவேட் டிடக்டிவ் வைத்து ஆராயட்டும். சிவேனசனுக்குப் போன்பண்ணிச் சொல்லவேண்டும் தான் இன்னும் ஒன்றிரண்டு நாட்களில் நியூயோர்க் வருவதாக. ஏதோ செய்ய வந்து என்ன செய்து விட்டு இருக்கிறேன். வியப்பும் சிரிப்பும் வந்தது அவளுக்கு. என்னால் இவ்வளவும் செய்ய முடியும் என்ற வலிமை வந்த வுடன் மகளிர் என்ன இலட்சியத்தையும் செய்து முடிப்பார்கள் என்பது சகுந்தலா மீனாவை அனுப்பியதிலிருந்து தெரிந்தது.
கொஞ்சநேரத்தில் டெலிபோன் மணி அடித்தது. தாய் போன் பண்ணினாள். யாரோ சினேகிதர் வீட்டுக்குப் போகிறார் களாம் கோயிலால் வரச் சிலவேளை பிந்துமாம். ஒருவிதத்தில் நல்லது. நடுச்சாமத்தில் வந்தால் நித்திரை கொள்வதாகப் படுத்திருக்கலாம். அவர்களுக்குத் தெரியப் போவதில்லை மீனா வீட்டை விட்டு ஓடிப்போன விடயம்.
எப்படி நாளைக்குச் சொல்வது? காலையிலேயே ஆட்கள் வந்து சேரப் போகிறார்களா? அதற்கு முதல் சொல்லி அம்மா அப்பா வைத் தவிக்கப் பண்ணுவதா? அம்மா என்ன செய்வாள் விருந்தினர்களுக்கு முன்னால் தன் மகள் வீட்டை விட்டு ஓடிப் போய்விட்டாள் என்று கேள்விப்பட்டதும்?

உலகமெல்லாம் வியாபாரிகள் 177
மீனாவைத் தேடிக் கண்டுபிடிப்பார்களா? சகுந்தலா யோசித் துக் கொண்டிருக்கும்போது உஷாவின் ஞாபகம் வந்தது. போன் பண்ணிக் கேட்டால் என்ன? சிவனேசனுக்குக் காலை யில் போன்பண்ணிச் சொன்னால்போதும். பெரும்பாலும் வீட் டிலிருப்பார். சகுந்தலா யோசித்துக் கொண்டிருக்கும் போது டெலிபோன் மணி அடித்தது. மீனா அல்லது உஷாவாக இருக்கும். மீனா துணிந்து போன் பண்ணமாட்டாள் தற்செய லாகத் தாய் தகப்பன் திரும்பி வந்திருந்தாலும் என்ற பயத் தில். உஷாவா? போனை எடுத்தாள். t
*"பொலிஸ் நியூஸ் இது. மீனா பேரின்பநாயகம் கார் விபத் தில் அகப்பட்டு நகர ஆஸ்பத்திரியில் இருக்கிறாள். நிலைமை சொல்ல முடியாது.”*
தலைசுற்றி கண்கள் இருண்டு கொண்டு வந்தன சகுந்தலா வுக்கு. என்ன செய்தியாம்?நா தடுமாற உடம்பு நடுங்க இன் னொருதரம் சொல்லச் சொன்னாள் பொலிஸ்காரனை. அவன் தெளிவாகச் சொன்னான். எந்த ஆஸ்பத்திரியில் மீனா அட் மிட் பண்ணப் பட்டிருக்கிறாள் என்று. ஓவென்று அலறவேண் டும்போல இருந்தது சகுந்தலாவுக்கு. இதற்கா தங்கையை இவ்வளவு துரிதப்படுத்தி அனுப்பி வைத்தாள்? மணக்கோலம் காண ஓடிப்போ என்று துரத்தியது பிணக்கோலம் காணவா? உண்மையாகவா அல்லது இதெல்லாம் கற்பனையா? என்ன செய்வது? யாரைக் கூப்பிடுவது, எங்கே போவது? ஒன்றும் தெரியவில்லை. சினேகிதர் வீட்டுக்குப் போவதாகச் சொன் னார்கள்; எந்தச் சினேகிதர் என்று சொல்லவில்லை தாய் தகப்பன். யாரைக் கூப்பிடுவது? புவனேஸ், சிதம்பரநாதன், கை, கால்கள் ஓடவில்லை அவளுக்கு. யாரும் உதவி செய்யுங் களேன். வீடு பயங்கரமான அமைதியில் சூழ்ந்து கிடந்தது. வெளியில் இடியும், மின்னலும், மழையும். எத்தனை மணி யிருக்கும், பத்து, பதினொன்று, கைகள் டெலிபோன் நம்ப ரைச் சுழட்டின. 'சிதம்பரன் இருக்கிறானா." அவள் அல றினாள்.

Page 93
LTTE ராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம்
॥ "சிதம்பான் வேலைக்குப் போயிருக்கிறான். ஏன் சகுந்த்லா ஒரன் அழுகிறாய்?' கார்த்தியின் குரல் இதமாக இருந்தது அவளது வேதனைக்கு - அழுகையின் நடுவே அவள் சொல்லி முடித்தாள் மீனா வின் நிலையை. t
தனிமையைப் போல் கொடுமையானது ஒன்றுமில்லை. அது வும் தாங்கமுடியாத துயரத்தில் அகப்பட்டிருக்கும்போது அரை மணித்தியாலத்தில் கார்த்திகேயன் வந்து சேர்ந்தான். அவள் ஓவென்று அழுதாள். சகுந்தலா என் செத்தவீடு கொண்டாடுகிறீர்? சின்ன விபத்தாக இருக்கலாம், எள் 'தேலையில்லாமல் அழுகிறீர்." அவன் அதட்டினான்.
அவள் அழுகை பரிதாபமாக இருந்தது"
மழை விடுகிற பாடாயில்லை. மழை கொட்டு கொட்டென்று கொட்டியது. பாதையே சரியாகத் தெரியவில்லை. கவன மாகக் காரை ஓட்டினான் கார்த்திகேயன். மீனா ஆத்திரத் தில் அவசரத்தில் பாதையில் கவனமில்லாமல் காரை ஒட்டிக் கொண்டு போயிருக்கலாம்:
சகுந்தலாவின் அழுகை குறையவில்லை. விக்கலும் விம்மலுக் குமிடையில் நடந்தவற்றைச் சொன்னாள். தன்னால் தான் இதெல்லாம் வந்தது என்று தன்னைத் தானே நொந்துகொண் டாள். தனக்குக் தாய் தகப்பன் செய்த கொடுமைகளை LITT வும் அனுபவிக்கக்கூடாது என்று தான் உதவிசெய்ய வெளிக் கிட்டதாகப் புலம்பினாள். அவள் அழட்டும், அலட்டட்டும் எதையாவது செய்யட்டும். அவன் அவள் ஒலத்தில் குறுக் கிடாமல் மெளனமாகக் கேட்டுக்கொண்டு காரோட்டினான்.
சகுந்தலாவின் மனம் சிதைந்துபோய் இருந்தது' e- geľT5ň LD யில் மீனாவின் நிலை எப்படியிருக்கும்? அவன் பூேலேர் ஒன்றும் யோசிக்கமுடியாமல் தவித்தான்.

உலகமெல்லாம் வியாபாரிகள் g
"நான் ஒரு அபாக்கியசாவி, போற இடமெல்லாம், சந்திக்கிற ஆட்களுக்கெல்லாம் துரதிர்ஷ்டத்தைக் கொண்டு போகிறேன்" அவள் விம்மினாள்.
"சகுந்தலா தயவு செய்து விசர்க் கதைகள் கதையாதேயும்
தற்செயலாக, சந்தர்ப்பவசத்தால் நடப்பதெற் கெல்லாம் தன்னைத் தானே நொந்துகொள்வது முட்டாள்தனம்." சகுந்தலா அழுத கண்ணும் சிந்திய மூக்குமாக இருப்பது பொறுக்கமுடியாமல் இருந்தது அவனுக்கு, ஆஸ்பத்திரிக்கு வந்ததும் அக்ளிடென்ட் டிப்பார்ட்மெண்டுக்குப் போனார்கள்.
தலையிலும் நெஞ்சிலும் பெரிய காயமென்றும், சத்திர சிகிச் ஈசக்குக் கொண்டுபோய்விட்டதாகவும் சொன்னார்கள். விழுந்தடித்துக் கொண்டு தியேட்டருக்குப் போனால் அப் போதுதான் சத்திரசிகிச்சைக்கு ஆயத்தம் செய்துகொண்டி ருந் தார்கள். சத்திரசிகிச்சைப் பத்திரத்தில் கையெழுத்திட யாரும் இல்லையே என்று பார்த்துக்கொண்டிருந்தேன் என்றார் சேர்ஜன் மீனாவைக் காணவில்லை. இரத்தம் படிந்த முகம் உருக்குலைந்த உருவம்தான் தெரிந்தது. சகுந்தலா பைத்தி பாம்போல் அழத் தொடங்கிவிட்டாள். "பிழைப்பாள் என்று நி:னக்கிறீர்களா?" விடாமல் கார்த்திகேயனைக் கேட்டாள்.
அவளின் நிலை பரிதாபமாக இருந்தது. "எனக்குத் தெரியாது சகுந்தலா, டொக்டர்களிடம் விடவேண்டிய பொறுப்பு இது." பொறுமையுடன் மறுமொழி சொன்னான் கார்த்தி. குறுகுறுப்பும் இனிமையும் தவழும் மீனாவின் முகம் எங்கே போய்விட்டது. சிதைந்த மாமிசத் துண்டுக
ளாய் சிதறுப்பட்ட நிலையில் கோலம். பார்க்கவே சதிக்க முடியாதிருந்தது. பிழைப்பாளா? தன்னைத்தானே கேட்டுக் கொண்டான்.
அப்பா அம்மா வந்திருப்பார்கள் போன் பண்ண
வேண்டும்" அழுகையினூடே சொன்னாள் சகுந்தலா. இரவு

Page 94
SO ராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம்
நடுச் சமத்தைத் தாண்டிக்கொண்டிருந்தது நேரம், போன் பண்ணினால் வீட்டில் இன்னும் யாரும் வரவில்லை. எங்கு போய்விட்டார்கள்? எரிச்சலும் அழுகையும் வந்தது அவளுக்கு
நேரம் ஆமைவேகத்தில் போய்க்கொண்டிருந்தது. சத்திர சிகிச்சை அறைக்கு அப்பால் உள்ள பெஞ்சில் உட்கார்த்திருந் தார்கள் சகுந்தலாவும், கார்த்தியும், ஆஸ்பத்திரி மெல்லிய வெளிச்சத்தில் மயான அமைதியில் ஆழ்ந்திருந்தது. எப் போதோ ஒரு சிலநேரங்களில் ஒன்றிரண்டு நேர்சுகள் விருந் தறையில் போய் வந்தார்களே தவிர மற்றப்படி சுடுகாட்டு அமைதி சகுந்தலா அழுது அழுது கண்கள் வீங்கிப் போய் இருந்தன.
"ஒன்றிரண்டு நாட்களில் அமெரிக்கா போவதாக இருந் தேன்." அவள் சொன்னாள். அவன் மறுமொழி சொல்ல வில்லை.
அங்கே என்னென்ன பிரச்சனைகள் காத்திருக்கிறதோ" அவள் அலுத்தபடி சொன்னொள்.
பிரச்சினை வந்தபின் யோசிக்கலாம் என் இப்போது மண் டையைப் போட்டுக் குழப்பிக்கொள்கிறாய் சகுந்தலா' பொறுமையுடன் மறுமொழி சொன்னான்.
"என் துன்பம் துணையோடு சேர்ந்து வருகிறது" சகுந்தலா வின் குரலும் முகமும் பைத்தியக்காரிபோல் இருந்தது. அடுக் கடுக்காக வரும் பிரச்சனைகளால் பேதலித்துப்போய் இருக் கிறாளா?
"சில்வியாவைப் போய் கூப்பிடவில்லையா?" அவனுக்குச் சினம் வந்தது அவள் கேள்வியைக் கேட்க, இல்லை" என்று தலையாட்டி விட்டுப் பேசாமல் இருந்தான்.

உலகமெல்லாம் வியாபாரிகள் 芯1
"கெதியால் கல்யாணம் முடித்தால் என்ன" சகுந்தலாவுக்கு என்ன மூளை குழம்பி விட்டதா? புதிரைப் பார்ப்பது போல் பார்த்தான் அவன். என்ன இழவுக் கதை எல்லாம் கதைக் கிறாள்?
"நீங்கள் கலியானம் முடிக்கும் வரைக்கும் நான் லண்டனுக்கு வருவது முடியாது. சிவனேசனுக்குச் சந்தேகம் எல்லாவற் றிலும், எங்கள் தொடர்பு இன்னும் இருப்பதாகச் சொல்லிச் சண்டைபிடிப்பார் வெறிவந்தால்" அவள் சொல்லிக்கொண் டேயிருந்தாள். இவ்வளவு காலமும் சொல்லமுடியாதவை யெல்லாம் துயாத்தின் எல்லையில் இருக்கும்போது தன்பாட் டுக்கு வந்து கொண்டிருந்தது.
சிவனேசனுக்குச் சந்தேகமா? திடுக்கிட்டுப் போய்ப் பார்த்தான் கார்த்தி என்ன நினைக்கிறான் மடைச்சாம்பிராணி." அசரீரி யாக அத்திலாந்திக் கடலைத்தாண்டி அமெரிக்காபோய் அவர் மனைவியுடன் குலவுவதாக நினைக்கிறானா? ஆத்திரத் தில் பற்களை நறநறவென்று கடித்துக்கொண்டான்.
"உண்மையில் நீங்கள் எனக்குக் கடிதம் எழுதுகிறீர்கள் அல்லது போன் பண்ணுகிறீர்கள் என்று நினைக்கிறாரோ தெரியாது. ஆனால் என்னைக் கேவலமாகப் பேசவேண்டும் போல் வந்தால் இப்படி எத்தனையோ வேண்டாத பழியெல் லாம் சுமத்துகிறார். உங்களுக்கு விளங்களில்லையா ஏன் ஐந்து வருடமாக லண்டனுக்கு வரவில்லை என்று? அவள் விரக்தியுடன் சொன்னாள். இனிக் காணக்கிடைக்கிறதோ தெரியாது. சொல்வதெல்லாவற்றையும் சொல்லவேண்டும் போல் இருந்தது அவனுக்கு அவன் கேட்டுக் கொண்டிருந் தான். அவலுக்கு நம்பமுடியாமல் இருந்தது. சகுந்தலா சொன்னவைகளைக் கேட்டு, இப்படியும் கேவலமான மனிதர்கள் இருக்கிறார்கனோ என மனம் எண்ணியது.
பெண்கள் தங்கள் உடமை என நினைத்துக் கொண்டு கண்ட
பாட்டுக்குக் கதைத்துக் கண்ட பாட்டுக்கு நடத்தும் இந்தக்

Page 95
82 ராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம்
காட்டுமிராண்டிகனைச் சுட்டுத்தள்ளவேண்டும்போல் இருந் தது அவனுக்கு இதெல்லாம் தெரியாதா பேரின்பநாயகத் தாருக்கு. அல்லது தெரிந்தும் தெரியாமல் இருக்கிறாரா? தெல்லாம் குடும்பத்தில் சாதாரன சண்டைகள் என்று நினைக்கிறாரா?
"வீட்டுக்கு போன் பண்ணட்டுமா?" அவள் கேட்டாள். தூரத்தில் உள்ள டெலிபோனில் போய் போன் பண்ணி னாள். இப்போதுதான் வந்தார்களாம். எங்கே போய் விட்டீர்கள் மீனாவும் சகுந்தலாவும் அம்மா கோபத்துடன் கேட்கிறா. கதகளி நாட்டியத்துக்குப் போய் இருக்கிறோம். கந்த வேண்டும்போல் வந்தது சகுந்தலாவுக்கு. அழுகையை பும் ஆத்திரத்தையும் அடக்கிக் கொண்டு சொன்னாள் சகுந்தலா மீனாவின் விபத்தைப் பற்றி.
தாய் பதறிவிட்டாள். அப்பா கோயிலில் நிற்கும்போது நெஞ்சை நோகிறது என்றார். டொக்டரிடம் போய்க் காட்டி விட்டுவந்தோம் பக்கத்திலுள்ள ஆஸ்பத்திரியில், தாய் அரைகுறையாகச் சொன்னாள்.
it
மீனா வீட்டைவிட்டு ஓடிய கதை பொன்றும் சொல்லவில்லை சகுந்தலா, விபத்து நடந்ததைத்தான் சொன்னாள். அப்பா வுக்கு எப்படி என்று கேட்டாள் சகுந்தலா. அவருடைய பிளட் பிரஷர் கூடிவிட்டதென டொக்டர் சொன்னதாகத் தாய் சொன்னாள். முடியுமான கெதியில் வரச்சொல்லிவிட்டுப் போனை வைத்தாள்.
"எங்கேயாம் உல்லாசப் பிரயாணம் போயிருந்தார்கள்" கோபத்துடன் கேட்டான் கிார்த்தி.
"ஏன் எரிந்து விழுகிறீர்கள். அப்பாவுக்கு பிளட்பிரஷர் என்று ஆஸ்பத்திரிக்குப் போய்விட்டு வந்தார்களாம்" சகுந்தலா சொன்னாள். "என்னை உங்களுடன் காண அவருடைய

உலகமெல்லாம் வியாபாரிகள் 1:17,
பிளட்பிரஷர் இன்னும் கூடப்போகிறது" சகுந்தலா பெருமூச்
சுடன் சொன்னாள். சோர்ந்த முகமும் அழுத கண்களும்
அவளில் பரிதாபத்தை யூட்டின. அழாதே சகுந்தலா என்று
அனைத்துக்கொண்டு சொல்ல அவனுக்கு உரிமையில்லை. பேசாமல் பார்த்துக் கொண்டு இருந்தான்.
நான் இருந்தால் உமது தகப்பன் ஏதும் பேசினாலும் பேசு
வார். மீனா இந்த நிலையில் இருக்கும்போது நான் எந்தச்
சண்டைக்கும் தயாரில்லை போகட்டுமா" அவன் கேட்டான்.
இதுவரை சொல்லாத நினைக்காத எதைச் சொல்லப் போகி
றார்கள். நினைக்கப் போகிறார்கள். அவர்கள் வந்துசேர விட்டுப் போங்கள். தனியாக இருக்கப் பைத்தியம் பிடித்து விடும் போல் இருக்கிறது. அந்த ஜன்னலால் குதிக்கவேண் டும்போல் இருக்கிறது. "மீனா ஒருவிதத்தில் அதிர்ஷ்டசாலி. என்னைப்போல் இப்படிக் கோழைமனம் இல்லாதவள்" ஏதேதோ பிதற்றினாள் சகுத்தலா நேரம் ஒடிக்கொண்டி ருந்தது. சத்திரசிகிச்சை தொடங்கி இரண்டு மூன்று மணித் தியாலங்களாகி விட்டது. இன்னும் ஒன்றும் தெரியவில்லை.
தாய் தகப்பன் என்ன தவழ்ந்தா வருகிறார்கள். விம்பிள்டனி லிருந்து வெஸ்ட்மினிஸ்டருக்கு வர எவ்வளவு நேரம் எடுக்கும். தகப்பலுக்குச் சுகமில்லாத படியால் யாரையும் உதவிற்குக் கூட்டிக்கொண்டு வருகிறார்களாக்கும்? சகுந்தலா வின் நினைவு எங்கோ ஓடிக்கொண்டிருந்தது. எங்கோ மணிக்கூடு நான்கு தரம் அடித்தது. ஆஸ்பத்திரியில் சத்தம்போடும் மணிக்கூடு வைப்பார்களா?
கையுறைகள் கழற்றவில்லை. மூகத்தில் இன்னும் முகமூடி மாற்றவில்லை. சந்திரரிகிச்சை நிபுனர் சகுந்தலா கார்த்தி கேயனை நோக்கி வந்தார். அவரின் முகத்தைப் பா ர்த்ததும் கார்த்திக்கு விளங்கியது என்ன சொல்லப் போகிறார் என்று. நெஞ்சில் ஏதோ அமத்துவதுபோல் இருந்தது அவனுக்கு.

Page 96
184 ராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம்
அடிவயிறு பிசைவதுபோல், காதில் ஏதோ இரைவதுபோல். நிதானமும் தெளிவும் ஒரு நிமிடமும் குலையாத கார்த்தி கேயன் மனம் டொக்டர் சொல்லிக் கொண்டிருப்பவற்றைக் கேட்டு அலறியது. தங்களால் ஒன்றும் செய்யமுடியவில்லை யாம். விபத்தில் இழந்த இரத்தத்தால் ஏற்பட்ட அதிர்ச்சி யில். என்னத்தின் இழப்பால் இறந்தால் என்ன? மீனா போய்விட்டாள். 'மீனா. வானம் பிளக்க அலறிக்கொண்டு சாய்ந்தாள் சகுந்தலா. கொடிபோன்ற உடல் சரிந்து பூமியில் விழுந்தது. நினைவிழந்த சகுந்தலாவை வாரி எடுத்தான் கார்த்திகேயன். உலகமே சுழல்வது போல் இருந்தது அவ னுக்கு அதிர்ச்சியில். யாரோ வரும் காலடிகள் கேட்டன. அரை குறை உணர்வுடன் நிமிர்ந்தான். அவன் அணைப்பில் சகுந்தலா. அவன் முன்னால் சிவனேசன் நின்றுகொண்டிருந் தான.

11
நிமிடங்கள், மணிகள், நேரங்கள் ஏன் இப்படி ஒடித் தொலைக் கின்றன என்று அவள் யோசிக்கமுதல் நாட்கள் மாதங்களாகி விட்டன.
மீேனாவின் உடல் எரிந்து அவளின் சாம்பல் தேம்ஸ் நதிக்கரை யில் கரைந்து இங்கிலிஸ்க் கால்வாயில் எங்கோ போய்ச் சேர்ந்துவிட்டது. பேரிழந்து பிணமாகி வெறும் சாம்பலாய், அவள் கரைந்ததைக் கண்ணிர் பொங்கப் பார்த்துக் கொண் டிருந்தாள் சகுந்தலா.
"ஏன் இங்கிலாந்து வந்தேன். இப்போது என்ன பார்த்துக் கொண்டிருக்கிறேன்?" அவள் தனக்குத்தானே கேட்க நினைத்தாள். கேள்விகளும் மறுமொழிகளும் அவள் இதயத் தைத் தாண்டிவரத் தயங்கியோ என்னவோ இருதயத்தின் ஒரு மூலையில் குத்திக் கொண்டு வேதனைப் படுத்தின.
சிவனேசனை மீனாவின் திடீர்க் கல்யாணத்துக்கு அழைத்தார் களாம்; அதுதான் மின்னாமல் முழங்காமல் வந்து நின்றா னாம் தகப்பன் சொன்னார் அழுது வடியும்போது. என்ன செய்து கொண்டிருந்தாய் கார்த்திகேயனின் அணைப்பில் என்று வெடித்து விழவில்லை. பார்வைகளால், செய்கைகளால் அணு அணுவாகச் சித்திரைவதைப் படுத்திக் கொண்டிருந் தான்.
வீடு பெரும்பாலும் வெறும் அமைதியாய் இருந்தது. எல்லாம் விதி. ஒவ்வொன்றும் ஒவ்வொருவரினதும் தலை எழுத்து

Page 97
186 ராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம்
என்று மூக்கைச் சிந்திக்கொண்டிருந்தாள் அம்மா. அம்மா வுக்கு விதிக்கு மேலால் எதையும் விளங்காது.
விதிகளையும் தலையெழுத்துக்களையும் நிர்ணயிப்பவர்கள் யாராம்? எங்கள் வெற்று நம்பிக்கைகளா? வீண்பிடிவாதங் களா? வரட்டு வெறிகளா? சகுந்தலாவால் எத்தனையோ விட யங்களை விளங்கிக்கொள்ள முடியாதிருந்தது. விளங்கிக் கொள்ள துணிவில்லாமல் போன அறியாமையை நொந்தழு தாள.
தகப்பன் பேரின்பநாயகத்தார் கடவுளிலும், விதியிலும் பழி சொல்லித் துக்கம் கொண்டாடினார். மீனா தற்செயலாகத் தான் அடிபட்டுச் செத்தாள் என்று எல்லோரும் நினைத்திருந் தார்கள். ஏன் அவசரப்பட்டு வீட்டைவிட்டு ஓடிப்போனாள் என்பது கார்த்திகேயனையும், சகுந்தலாவையும் தவிர யாருக் கும் தெரியாது. மீனாவின் மரணச் சடங்குக்குக்கூட அன்ரனி வரவில்லை. தன் தாங்கமுடியாத இழப்பைச் சுமந்துகொண்டு ஹொங்கொங்கிலிருந்து வெறும் சாட்டுகளுக்குத் தான் வந்து யாரையும் திருப்திப்படுத்த தயாராயில்லை என்று சகுந்தலா வுக்கு எழுதியிருந்தான். மீனாவும் அன்ரனியும் அவர்களின் இனிமையான-இளமையான-வாழ்க்கையை அனுபவிக்கத் துடிக்கும் உணர்ச்சி ததும்பிய முகபாவம் சகுந்தலாவுக்கு ஞாபகம் வரும்போதெல்லாம் பழைய தன் இளமை நினைவு களும் வந்தலைந்து போவதுண்டு.
கார்த்திகேய்னைக் கண்டே எத்தனையோ மாதங்களாகி விட்டன. அவள் பார்வைக்கப்பால் மறைந்துவிட்டானா. வந்து கொஞ்சக் காலத்தில் திரும்பிய இடத்திலெல்லாம் அவனைக் கண்டதும் பழகியதும் கனவுபோல் இருந்தது. சிவனேசனின் கொடுமையான பார்வையின் கருத்துக்கள் கார்த்திகேயனின் நினைவுகளை ஞாபகம் வரப் பண்ணின. இப்படிப் பார்த்து, தன்னைப் பார்த்து, ஒருமாதிரி ஏளனமாகச் சிரிக்காமல் ஏன் தன்னிடம் கார்த்திகேயனைப் பற்றிக்

உலகமெல்லாம் வியாபாரிகள் 187
கணவன் நேரே கேட்கக்கூடாது என்று கூடச் சிலவேளை களில் நினைத்தாள். அந்த வேளையும் ஒருநாள் வந்தது.
சொந்தக்காரரைப் பார்க்கப் பாரிசுக்குப் போக வேண்டும் என்று ஆயத்தம் செய்துகொண்டிருந்தான் சிவநேசன். நியூ யோர்க் போய்விட்டால் இனி எப்போது லண்டனுக்கு வருவது என்று தெரியாது. "லண்டன் அலுத்துப்போனால் நீரும் வரலாம்" என்றான் சிவனேசன். காதலர்களின் களிப்பிட மான பாரிசுக்கு கால்பட்டால் குற்றம் கைபட்டால் குற்றம் என்று பிழைபிடிக்கும் கணவருடன் எப்படிப் போவது என்று யோசித்தாலும் போகாவிட்டால் அதில் இன்னொரு சண்டை வரும் என்று நினைத்துக்கொண்டு போகச் சம்மதித்தாள்.
கார்த்திகேயனுடன் சகுந்தலாவைக் கண்ட சிவனேசன் என்ன சொல்வானோ எப்படி நடந்து கொள்வானோ என்று மன துக்குள் பயந்துகொண்டிருந்த பேரின்பநாயகத்தார் மரு மகனின் தாராள மனப்பான்மை கண்டு சந்தோசப்பட்டார். இருக்கும் வீட்டை மீனாவுக்குக் கொடுப்பதாக வைத்திருந்த தாகவும், இனி என்ன அவள்விதி அப்படியாய்ப் போய்விட்டது எல்லாம் உங்களுக்குத்தான் என்று சிவனேசனுக்கு ஐஸ் வைத் தார். ஒருவிதத்தில் சகுந்தலாவை விட்டுவிட்டுப் போகாதே எதையும் தந்து உன்னைச் சமாளிக்கிறேன் என்பதுபோல் இருந்தது அவர் செய்கை என்று பட்டது சகுந்தலாவுக்கு. சிவனேசனும், சகுந்தலாவும் தாங்கள் நினைத்தபடி சந்தோச மாக இல்லை என்று தெரிந்து தாய் தகப்பன் செய்யும் வியா பார உடன்படிக்கைகள் அவள் மனத்தைச் சுக்குநூறாக்கின. தன் வாழ்க்கையை-தனக்கு முன்னாலேயே மூன்றாம் நபர் போல் தன்னை வைத்துக்கொண்டு நிர்ணயிப்பதாகப்பட்டது அவளுக்கு. என்ன சுயநலம்?
இதைவிட-இந்தப் போலியான உறவுகளை உதறி விட்டு நிம்மதியாக இருக்கவேண்டும்போல் இருந்தது. இப்படி ஒவ்

Page 98
188 ராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம்
வொருவரும் ஒழித்து மறைத்துப் போலி நாடகம் போடாமல் என் உண்மையாக யோசித்து உண்மையாக வாழக்கூடாது? அப்படி ஒரு காலமும் அப்படி ஒரு சமுதாயமும் உருவாகாதா என்று யோசித்தது அவள் மனம். அப்படி ஒரு சமுதாயம் உருவாகும்வரை தன்னைப்போல் பெண்களின் சீவியம் இப்படி இரண்டும் கெட்டதாகவா இருக்கும்?
பாரிசுக்குப் போகும் வழியில் சிவனேசன் கேட்டான் 'கார்த்தி யுடன் லண்டன் முழுக்கத் திரிந்ததாகக் கதை."
ஏன் எதற்கு இந்தப் பேச்சை எடுக்கிறான் என்று தெரிய வில்லை. 'இதைச் சொல்லிச் சண்டைபிடிக்கத்தான் பாரி சுக்குக் கூட்டிக்கொண்டு போவதானால் சண்டையை இங்கிலாந்திலேயே வைத்திருக்கலாம்" என்று சொன்னாள் சகுந்தலா.
"நான் சண்டை பிடிக்கக் கூட்டிக்கொண்டு வரவில்லை. அப்படி யோசிப்பவனாக இருந்திருந்தால் உம்மைக் கார்த்தி யுடன் கண்ட அடுத்த நாளே, உமது தங்கச்சியின் செத்த வீட்டுக்கும் நிற்காமல் போய் இருப்பேன்."
"அப்படி பெரிய மனது படைத்தவர் ஏன் இப்படி நடுக்கடலில் இந்தப் பேச்சை எடுக்கவேணும்" அவளுக்கு அழுகை வந்தது. கப்பலில் இருந்து கடலில் குதிக்கவேண்டும் போல் இருந்தது. கப்பல் இங்கிலாந்துக்கும் பிரான்சுக்கும் இடையில் போய்க் கொண்டிருந்தது. ஒருபக்கத்திலும் நிலத்தின் எந்த அடை யாளமும் இல்லாமல் வெறும் நீர்ப்பரப்பாய்த் தெரிந்தது. தன் வாழ்க்கையும் இப்படித்தானே என்று பெருமூச்சு விட்டாள். குழந்தை கப்பலில் அங்கும் இங்கும் ஓடி சந்தோஷப்பட்டுக் கொண்டிருந்தாள். '.
அமெரிக்கா போனதும் பழைய குருடி கதவைத் திறடி என்றி ருக்கப் போகிறது என்று நிச்சயமாகத் தெரிந்தது. லண்டனில் தாய் தகப்பனுக்கு முன்னால் எதுவும் பேசாமல் இருந்துவிட்டு

உலகமெல்லாம் வியாபாரிகள் 89
டோவரில் கப்பல் ஏறியவுடன் நையாண்டியும் நகைச் சுவையு மாகத் தன்னைச் சீண்டி அழப்பண்ணி வேடிக்கை பார்க்கும் தன் கணவனை யோசித்துப் பார்க்க இதயம் வெடித்தது. இந்தக் கேவலமான சீவியத்தைவிட உஷாவைப்போல் விவாகரத்துச் செய்துகொண்டால் எவ்வளவு சந்தோஷமாக இருக்கும் என்று கூட யோசித்தாள். أة
உஷாவைப்போல் ஏன் தனக்கும் துணிவு இல்லை என்பது இன்னும் வேதனையாக இருந்தது. பாரிஸில் அவனுடைய சொந்தக்காரர்களுக்கு முன் எப்படி நடத்துவானோ என்று மனம் அடித்துக் கொண்டது. அப்படிப் பயப்பட்டதுபோல் இல்லை. போயிறங்கியவுடன் எங்கெங்கே போவது யார் யாரைப் பார்ப்பது என்று அவசரஅவசரமாகச் செய்யவேண்டி
யிருந்தது.
அத்துடன் திரும்பிய இடமெல்லாம் கலைத்தன்மை வாய்ந்த பழம் நகரின் அழகு மனத்தின் துயரை மறக்கப்பண்ணியது. கட்டிட அமைப்பும் தெருக்களும் கடைவீதிகளும் லண்டனைப் போல நெருக்கியடித்துக்கொண்டிருந்தாலும் லண்டனில் இருப்பதை விட ஏதோ ஒரு கலைத்தன்மை கலந்துறைந்தது போல் இருந்தது பாரிஸ் நகரில். வந்து இரண்டு மூன்று நாட்கள் சுற்றிச் சுற்றிப் பார்த்தும் அலுக்கவில்லை.
அன்று இரவு லண்டனுக்குத் திரும்புவதாகத் திட்டம். அதற்கு முன்னால் பாரிசுக்கு வெளியே உள்ள அமெரிக்கன் கம்பனி ஒன்றில் வேலைசெய்யும் தன் சினேகிதனைப் பார்த்துவிட்டு வருவதாகச் சிவனேசன் தன் உறவினரின் காரில் போய்விட் டான். கீதாஞ்சலி இரண்டு மூன்று நாள் அலைச்சலில் களைத்துப்போய் விட்டாள். லண்டனுக்குப் போகமுதல் வாங்க வேண்டிய ஒன்றிரண்டு சாமான்கள் வாங்கவேண்டி இருந்ததால் ஒருதரம் கடைத் தெருவுக்குப் போக நினைத் தாள்.

Page 99
190 ராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம்
பிரான்சுப் பாஷை தெரியாதபடியால் போகும் பாதையைக் கவனமாகப் பார்த்துக்கொண்டு போயும் வரும்வழியைத் தவற விட்டதும் என்னசெய்வது என்று தெரியவில்லை. வீடு அதிகம் தாரமில்லை. ஆனால் திரும்பிய பக்கமெல்லாம் ஒரே மாதிரித் தெரிந்தபடியால் எந்தப் பக்கம் போவது என்று தெரிய வில்லை. யாரையும் கேட்கவும் மொழி தெரியவில்லை. ஆங்கிலச் சொல் கேட்டாலே பிரன்சுக்காரருக்குக் கோபத்தில் வலிவந்து விடும். ஆனால் ஒன்றிரெண்டு பேரைக் கேட்டும் சரியான மறுமொழி கிடைக்கவில்லை. அவசரத்தில் ஏன் மூளை மழுங்கிப் போகிறது என்று பலருக்குத் தெரியவில்லை. அன்று சகுந்தலாவுக்கும் தெரியவில்லை. கடைசியாகத் தான் தெரிந்தது சொந்தக்காரருக்குப் போன் பண்ணிக் கேட்கலாம் என்று. தான் எவ்வளவு முட்டாள்தனமாக நேரத்தை விரயமாக்கி நடந்துகொண்டேன் என்று தன்னைத் தானே நொந்துகொண்டாள்.
கைப் பையைத் திறந்து டெலிபோன் நம்பரை எடுத்துக் கொண்டு டெலிபோன் பூத் இருக்குமிடத்துக்குத் திரும்பிய போது ‘சகுந்தலா’ என்று குரல் கேட்டுத் திடுக்கிட்டுத் திரும் பினாள். கார்த்திகேயனும் இன்னும் சில வாலிபர்களும் நின்று கொண்டிருந்தார்கள். எல்லோரும் இலங்கையர்போல் தெரிந் தது. லண்டனைவிட்டு இவ்வளவு தூரம் வந்தும் பாரிஸ் நகர மாலைநேரத்தில் அவனைக் காணுவது அவளால் நம்பமுடி யாமல் இருந்தது. அவனைக் கண்டு சில மாதங்களாகி விட்ட படியால் அவள் கண்களுக்கு அவன் மெலிந்து தெரிந்தான். புரட்டாதி மாதத்தின் ஆரம்பம் என்றபடியால் குளிர் காற்ற டித்தது. அவள் குரிருக்கு ஓவர்கோட்டைப் போட்டபடி கேட் பrள் "என்ன செய்கிறீர்கள் பாரிஸில்" அவன் முகத்தில் வழக்கம் போல் ஒரு குறும்புச்சிரிப்பு மறைந்தது. முன் ஒரு காலத்தில் என்றால் 'உமக்குப் பின்னால் உலகமெல்லாம் ஓடிக் கொண்டிருக்கிறேன்" என்று சொல்லியிருப்பான். ஆனால் இப்போது அந்த விதமாகச் சொல்ல அவனுக்கு

உலகமெல்லாம் வியாபாரிகள் 191
விருப்பமில்லை. அதை அவள் ரசிக்கவும் மாட்டாள் என்று தெரிந்தது.
**சினேகிதன் ஒருவனுக்கு கல்யாணம். அதற்கு வந்தோம்" என்றான். மற்றவர்களிடம் பின்னர் சந்திப்பதாகக் கூறி விட்டு அவள் பக்கம் திரும்பினான். "என்ன பாரிஸ் ஷொப் பிங்கா" என்றான் அவன்.
"எதையாவது வாங்குவதுதான் வாழ்க்கையின் லட்சியம் என்று நினைக்கிறீர்கள் போல கிடக்கு" அவள் பெருமூச்சுடன் சொன்னாள். வழி தவறி கனதுTரம் நடந்ததால் நேரமாகி விட்டது. அவள் கைக்கடிகாரத்தைப் பார்த்தாள்.
'போகவேணுமா" என்றான். அவன் குரல் வித்தியாசமாய் இருந்தது. லண்டனுக்கு வந்த நாளில் தன்னைக் கிண்டலா கவும், எடுத்தெறிந்தும் நடத்திய கார்த்திகேயனின் குரல் போல் இல்லை. ஏழெட்டு வருடங்களுக்கு முன் பார்க்குகளில் கள்ளமாகச் சந்திக்கும்போது கேட்ட குரல்போல் இருந்தது.
"இரவு புறப்படுகிறோம் லண்டனுக்கு" அவள் அவன் முகத்தைப் பார்க்காமல் சொன்னாள்.
*எப்போ நியூயோர்க் பிரயாணம்" அவன் அதைப்பற்றி ஏன் அக்கறைப்பட வேண்டும் என்று அவளுக்குத் தெரியவில்லை. நிமிர்ந்து பார்த்தாள். அவன் பார்வை மிகக்கூர்மையாக அவளில் பட்டு மறைந்தது.
** என்ன பார்க்கிறீர்கள்" அவள் கேட்டாள். சரியாக மெலிந்து விட்டீர்" அவன் குரலில் பரிதாபம் இருந்தது.
மீனாவின் மரணத்தால் ஏற்பட்ட துக்கம் மட்டுமல்ல அவளின் சொந்த வாழ்க்கையில் நடக்கும் பிரச்சனைகளும்தான் அவளின் சோகமான தோற்றத்துக்குக் காரணம் என்று தெரி யும். அவள் மறுமொழி சொல்லவில்லை.

Page 100
192 ராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம்
'வழி தவறிப் போய்விட்டேன். எப்படி வருவது திரும்பி என்று போன் பண்ணிவிட்டு வாறன்" அவள் சொன்னாள்.
"எங்கே போகவேணும்" அவன் கேட்க அவள் இடத்தைச் சொன்னாள்.
நான் கொண்டுபோய் விடுறன்" என்றான். அவள் போன் பண்ணித் தான் தொலைந்து போய்விட்டதையும் கூடிய சீக்கிரம் வீடு வருவது பற்றியும் சொன்னாள்.
"ஷொப்பிங் எல்லாம் முடிஞ்சுதா’ அவன் கேட்க அவள் தலையாட்டினாள்.
*ஒரு பத்து நிமிடம் கதைக்க முடியுமா" எப்போதும் ஏதோ உலகம் அழியப்போகிறது என்பதுபோல் ஓடிக் கொண்டிருப் பவன் இன்று கொஞ்சம் கதைக்க நேரம் கிடைக்குமா என்று கேட்டது ஆச்சரியமாக இருந்தது. அவள் நிமிர்ந்து பார்த் தாள.
**விருப்பமில்லை என்றால் வேண்டாம்" அவன் வெறும் குரலில் சொன்னான். குரலில் தன் ஏமாற்றத்தை மறைக்கத் தெண்டிப்பது தெரிந்தது.
"என் விருப்பு வெறுப்பில் எல்லோருக்கும்தான் பெரிய அக்கறை" அவள் குரல் கரகரத்தது.
"எல்லோரின் அக்கறைக்கும் விட்டுக்கொடுப்பதுதான் பெருந் தன்மை என்று பெண்களை நம்பப்பண்ணி வைத்திருக்கும் சமுதாயத்தில் நீர் மற்றவர்களின் அக்கறைகளுக்காகப் பயன் படுத்தப்படுவது தெரியாதா" அவன் கேட்டான்.
**சும்மா போங்கோ. பெரிய பெரிய ஏதோ கதைத்து என்ன கிழிச்சுப் போட்டியள். "அவள் எடுத்தெறிந்து பேசினாள்.

உலகமெல்லாம் வியாபாரிகள் 93
இருவரும் பக்கத்தில் இருந்த பெஞ்சில் உட்கார்ந்தார்கள். லண்டனில் குரொய்டன் ரோட்டுக் கரையில் அழுது கொண்டு இருந்த சகுந்தலா ஞாபகம் வந்தது அவனுக்கு. இன்னும் சில மணித்தியாலங்களில் லண்டன்-பின்னர் நியூயோர்க் அதன்பின் எங்கே காணப்போகிறான்.
"சகுந்தலா ஒடுக்குமுறைகள், அநியாயங்கள் எங்கெல்லாம் இருக்கின்றனவோ அங்கெல்லாம் அதை எதிர்க்கும் வரை அநியாயங்கள் அழியாது. சொந்த விடயமாகட்டும், பொது விடயமாகட்டும் அநியாயங்களுக்கு எதிர்ப்புக்காட்டுவது பாவ மில்லை."
அவன் சொல்லி முடிக்கவில்லை. அவள் முணுமுணுத்தாள், "லண்டனில் முழங்குகிறது போதாதென்று பாரிசுக்கும் வந்திருக்கிறியள் போராட்டம் பற்றிக் கதைக்க."
"உண்மைதான், சினேகிதனின் கல்யாணத்துக்கு வந்தது என்று சொன்னது பொய். பாரிஸ்வாழ் தமிழ் இளைஞர் களின் கூட்டமொன்றுக்குத்தான் வந்தன்" அவன் சொல்லி முடிய அவள் நீர் வழியும் கண்களுடன் பார்த்தாள்.
**சும்மா விசர்க் கதைகள் கதைத்துப்போட்டு சுடுபட்டுச் சாகாதேங்கோ. கிழடுகள்தான் சும்மா வேலையில்லை எண்டு புலம்புதுகள் எண்டால் நீங்களும்." அவள் முடிக்காமல் அழுதாள்.
*சகுந்தலா கிழடுகள் சும்மா புலம்பவில்லை, சுயநல விளம்பரத்துக்காகக் கோமாளிக் கூத்துக்கள் செய்கிறார்கள். தங்கள் பட்டங்களைக் காட்டிப் பாமரத் தமிழ் மக்களை ஏமாற்றுகிறார்கள். கடந்த காலங்களில் எத்தனை நாடகங் கள் நடத்தியும் தலைமைப் பதவிக்கும், பிரமுகர் தகுதிக்கும் தமிழ் மக்களை விற்ற இந்தப் போலித் தலைவர்கள் சும்மா புலம்பவில்லை. தங்கள் சுயநலத்திற்கு, ஒரு இனத்தின்

Page 101
194 ராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம்
எதிர்காலத்தைப் பற்றிய ஒரு முழுமையான திட்டமுமின்றி அப்பாவித் தமிழ் மக்களை ஏமாற்றுகிறார்கள். இதன் உண்மை சொரூபத்தைச் சாதாரண மக்களுக்கு எடுத்துச் சொல்ல யாராவது முன்வரவேணும். இது உமக்கு முட்டாள் தனமாகப் படலாம். தன் சொந்த வாழ்க்கையைச் சரியாகப் புரிந்துகொள்ளத் தெரியாத உமக்கு ஒரு பெரிய அரசியற் பிரச்சனை என்னவென்று விளங்கும்?" அவன் அலுத்துக் கொண்டான்.
அவள் கோபத்துடன் கண்களில் பொறி பறக்க எழும்பினாள். "'உங்களுக்கென்ன? எதிலும் நம்பிக்கையில்லாதவர்கள். சொந்த வாழ்க்கையைப் புரிந்து சரிவர நடத்தத் தெரியாத வள் என்று நீங்கள் சொல்லத் தேவையில்லை. கல்யாணம் என்ன காலில் போடும் சப்பாத்தா தேய்ந்தால் இன்னொன்று வாங்க" அவள் குமுறினாள்.
"தேய்ந்தால் எடுத்தெறிய வேணும். போட்டிருந்தால் பைத்தியம் என்று சொல்லிவிடுவார்கள்." அவன் விட்டுக் கொடுக்காமல் சொன்னான். அவள் ஒன்றும் சொல்ல வில்லை. பாரிஸ் நகரம் மாலைப் பொழுதில் தன்னை மறைத்துக்கொள்ளத் தொடங்கியது. அவன் டாக்ஸிக்குக் கை காட்டினான். பாரிஸ் காதலர்களின் களிப்பிடமாம். கலைக்கும், காதலுக்கும் பிறப்பிடமோ என்னவோ அவளைப் பொறுத்தவரையில் அந்த இடமும் அந்த நிமிடமும் அவன் அருகில் இருப்பது என்னென்னவோ நினைவுகளைக் கிளறி விட்டது.
தானே யோசிக்கப் பய்ப்படும்-பயப்படுவதாகப் பாசாங்கு பண்ணும் சில விடயங்களை அவன் எடுத்தெறிந்து பேசுவது அவள் இருதயத்தைக் குத்திப் பிளந்தது. அவனிடம் அவள் அதைவிட வேறுவிதமான கருத்தை எதிர்பார்க்க முடியாது.
வெறும் உணர்வுகளின் மயக்கமோ-இளமைத் துடிப்பின் தாக்கமோ ஏதோ ஒன்றின் சங்கமத்தில் அவர்களின் உறவு

உலகமெல்லாம் வியாபாரிகள் 195
ஆரம்பித்த நாளிலிருந்து உறவுகளையும் வாழ்க்கை முறை களையும் பார்க்கும்விதம் வேறுவிதமானது. அவனை அவளாற் புரிந்துகொள்ள முடியர்து. இப்போது அவன் என்ன சொல்கிறான் என்றும் முழுக்க விளங்கிக்கொள்ளாமல் மூளை குழம்பிப்போய் இருந்தது.
மற்றவர்களின் நம்பிக்கைகள், கெளரவங்கள், வாழ்க்கை ஒப்பந்தங்கள் என்று தன் வாழ்க்கையைப் பறிகொடுத்துவிட்டு அந்தக் கதி தங்கச்சிக்கும் வரக்கூடாது என்று பாடுபட்டதை அவன் அறியமாட்டானா.
இருவரும் மெளனமாக இருந்தார்கள். ஒரு காலத்தில் இப்படிச் சந்திப்புகள் இனிமையாகவும் உணர்ச்சிக்குவியலாக வும் இருந்ததுண்டு. வெஸ்ட்மினிஸ்டர் பாலத்தின் கரையில் கலகலத்த அவன் குரல் காற்றோடு கலந்து அவள் காதில் கிசுகிசுப்பது போலிருந்தது. அதை நினைக்க அவள் கண் களில் நீர் புரண்டது. அதை அவன் பார்க்கக்கூடாது என்ப தற்காக முகத்தைத் திருப்பினாள். அவனுக்குத் தெரியும் அவள் அழுகிறாள் என்று. " 'சகுந்தலா" என்றான். அவள் திரும்பிப் பார்க்கவில்லை. அவன் அவள் முகத்தைத் தொட்டுத் திருப்பினான். அவள் எதிர்பார்க்கவில்லை அவன் தன்னை தொடுவான் என்று.
அவசரத்துடன் திரும்பினாள். அவள் கண்களை அவன் உற்றுப் பார்த்துக்கொண்டிருந்தான்.
*சகுந்தலா ஊருக்கு மறைத்து அழுவது சுகம். ஆனால் உனக்கு உன்னை ஏமாற்றுவது சுகமில்லை. எத்தனை காலம் இப்படி அழுவதாக யோசனை" அவன் கேட்டான். அவன் கேள்வியும் பரிவும் இன்னும் அழுகையைக் கூட்டி விட்டன.

Page 102
196 ராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம்
ர்த்தனை காலம் அழப்போகிறாளாம். அவர் கேட்கிறார். பதில் சொல்ல அவள் என்ன “சிங்கிளாயர் கால்குலேட்டரா' ஸ்வைத்திருக்கிறாள் கணக்குப் பார்த்துச் சொல்ல.
கணவன் கடல் நடுவில் வைத்துச் சொன்னான் இவள் லண்டனில் கார்த்தியுடன் "திரிந்ததைக் கேள்விப்பட்டதாக. திரிந்ததன் கருத்து நியூயோர்க் போனபின் எவ்வளவு திரிபு பட்டு அவள் இருதயத்தை இறுக்கப்போகிறது என்று இவனுக்கு எங்கே தெரியும்? ' எங்களைப்போல பெண்கள் அழாமல் என்ன செய்வது" அவள் கேவினாள்.
"உங்களைப்போல பெண்கள் என்றால் என்ன கருத்தில் சொல்கிறாய் என்று தெரியாது. பெண்களோ யாரோ தங்கள் வாழ்க்கைக்குத் தங்களின் வாழ்க்கை அமைப்புமுறைதான் காரணம் என்று ஏதோ விளங்காத உண்மைகளை நம்பிக் கொண்டு இருப்பதாற்தான் இந்த வினை. சகுந்தலா, தன் சுய உழைப்பைக் கொள்ளையடிக்கும் முதலாளியை எதிர்க் காத வரை எந்தத் தொழிலாளிக்கும் விடுதலை இல்லை. அதே நேரம் பெண்மை, கற்பு, கத்தரிக்காய் என்றெல்லாம் சொல்லி பெண்களை அடக்கும் ஆண்களை எதிர்க்காதவரை உம்மைப் போல பெண்களுக்கு விடுதலை கிடையாது. சகுந்தலா, அடக்கு முறைகளுக்குப் பல தர்மமான, பண்பான பெயர்கள் வைத்திருப்பதால் அதெல்லாம் நியாயம் என்று ஒத்துக் கொள்ளக்கூடாது. கல் என்றாலும் கணவன் புல் என்றாலும் புருஷன் என்று ஏன் சொன்னார்கள் தெரியுமா? பெண்கள் மனத்தில் ஆண்களின் கொடுமைகளுக்கெதிராக உண்டாகும் போராட்ட உணர்ச்சியை இல்லாமல் செய்யத் தான ,
**பெண்மையைப் பற்றியும் பெண்களைப் பற்றியும் எழுதிய தெல்லாம் ஆண்கள். கடவுளைப் பற்றியும் கற்பைப் பற்றி யும் எழுதியவர்களும் அவர்களே. அதனாற்தான் அவர்களின் கருத்துக்கள் தாங்கள் விரும்பிய பொருட்களை விரும்பிய

உலகமெல்லாம் வியாபாரிகள் 1.97
இடத்தில் வைத்திருக்கப் பண்ணியிருக்கிறது." அவன் பேசிக்கொண்டே போனான். அவளுக்குப் பொறுமையில்லை.
**உங்கள் உபதேசத்தை ஏதோ ஒரு மண்டபத்தில் வைத்துக் கொள்ளுங்கள் எனக்கு வேண்டாம்." அவள் கோபத்தில் கத்திவிட்டுத் தெருமுனையில் இறக்கிவிடச் சொன்னாள்.
* சில பெண்களுக்குத் தங்களைத் தாங்களே வருத்திக் கொள் வதில் ஒரு திருப்தி. தன் ஆத்மீக உணர்ச்சிகளைக் குழி தோண்டிப் புதைத்துவிட்டு மற்றவர்கள் கண்களுக்கு நல்ல பிள்ளைப் பட்டத்துக்கு நடிப்பதும் ஒரு வியாபாரம்தான். முதலாளியும், ஏகாதிபத்தியவாதியும் தங்கள் சுயதேவைக்கு மற்றவர்களின் உழைப்பையும் உரிமையையும் விலைக்கு வாங்குகிறார்கள். உன் போன்ற பெண்கள் ஊருக்கு வேடம் போட தியாகம், பெண்மை, கற்பு, குடும்பம் என்ற கெளரவ மான சொற்களுக்காகத் தங்களையே விற்றுக்கொள்கிறார் கள். தங்கள் தன் மானத்தை-சுய உணர்வை விற்றுக் கொள்கிறார்கள்." அவன் அவளைப்போல் உணர்ச்சிவசப் பட்டுச் சொல்லாமல் தெளிவாகச் சொன்னான். அவள் மெளனமாகக் கேட்டுக்கொண்டு நடந்தாள். வீடு வந்ததும் சொன்னாள், 'புத்திமதிக்கு நன்றி." அவள் குரலில் இருந்த கிண்டல் அவனுக்குச் சரியாகப் புரிந்திருந்தது.
**போதனைக்குச் சம்பளம் கொடுத்தால் பெரிய பணக்கார ராகி விடுவீர்கள்" அவள் முணுமுணுத்தாள் அவன் மறு மொழி சொல்லவில்லை. அவளைப் பின்தொடராமல் தெரு முனையில் நின்றபடி அவள் போவதைப் பார்த்தபடி நின் றான். பாரிஸ் நகரத்தின் மாலை நேர இருளில் அவள் மறைந்து போவது ஒரு சோக சித்திரத்தை ஞாபகப் படுத்துவதுபோல் இருந்தது. வீட்டுக்குள் நுழையமுதல் அவள் திரும்பிப் பார்த்தாள். அவன் நின்றிருப்பது தெரிந் தது. ஒருசில வினாடிகள் நின்று பார்த்துவிட்டு உள்ளே போனாள். சிவனேசன் எப்போதோ வந்துவிட்டான்.

Page 103
198 ராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம்
"பாரிஸ் ரோட்டில் எங்கோ தொலைந்துவிட்டீர் என்று பயந்து விட்டேன்" என்றான் சிவனேசன். வழக்கமாகப் பாய்ந்திருப்பான் 'தெரியாத இடங்களுக்கு ஏன் போய்த் தொலைக்கவேண்டும்" என்று. இன்று கணவரின் குரலில் கிடைத்த அமைதியையும் அன்பையும் அவளால் நம்ப முடியாமல் இருந்தது. நான் ஒன்றும் தொலையவில்லை. ஆனால் தொலைந்துபோக விரும்பிய ஒன்றிலிருந்து விடுபட முடியாமல் திண்டாடினேன் என்று சொல்லவேண்டும்போல் இருந்தது.
லண்டனுக்குத் திரும்பவேண்டிய நேரம்வர சாமான்களைக் கட்டுவதில் மும்முரமாக ஈடுபட்டார்கள். பின்னேரம் கணவன் வாங்கிவந்த சாமான்களை அடுக்கும்போது அழகாகப் பார்ஸல் பண்ணப்பட்டிருந்த பெட்டி கண்ணில் பட்டது. திறந்து பார்த்தாள். மிகவும் விலையுயர்ந்த சேலைகள் . அழகான-அவளுக்குப் பிடித்த நீலநிற சரிகைச் சேலைகள். சினேகிதனைப் பார்க்கப் போவதாகச் சொல்லிவிட்டுத் தன்னை அழைத்துச் செல்லாமல் போனது இதற்குத்தான் என்று அவள் மனம் சொல்லியது.
கணவன் அவளில் அன்பு காட்டத் தொடங்கிவிட்டானா? அவளால் நம்பமுடியாமல் இருந்தது. இருவரும் கடைக்குப் போய் அவள் விருப்பமானவற்றை வாங்கலாம் என்று சொல்லிவிட்டு எங்கோ பார்த்திருந்த சிவனேசன் மாறத் தொடங்கிவிட்டானா? அவள் ரசனையைப் புரிந்து அவளுக்கு மனதுக்குப் பிடித்த மாதிரி நடக்க முயன்றுவிட்டானா? அவளால் நம்பமுடியாமல் இருந்தது.
ஆனாலும் தன் வாழ்க்கையில் ஒரு சந்தோஷ மாற்றம் வருவதை அவள் இழக்கத் தயாராயில்லை. அவன் இந்த அன்பளிப்பு பற்றிப் பேசும் வரை ஒன்றும் தெரிந்ததுபோல் காட்டிக்கொள்ளக் கூடாது என்பதால் எல்லாவற்றையும் அடுக்கி வைத்தாள்.

உலகமெல்லாம் வியாபாரிகள் 199
நடு இரவில் கப்பல் புறப்பட்டது. பாரிஸ் நகர நினைவுகள் நிழலாடியது. பிரான்ஸ் நாட்டின் கரை கண்ணில் இருந்து மறையத் தொடங்க அங்கே பாரிஸ் நகரக் கட்டிடமொன்றில் நாளைக்குக் கூட்டம் வைக்கப்போகும் கார்த்திகேயனின் முகம் ஞாபகம் வந்தது. அவன் சொன்னதெல்லாம் ஞாபகம் வந்தது. தான் மெலிந்து சோர்ந்துபோய் இருப்பதைப் பார்த்துத் தன்னில் பரிதாபப்பட்டு புத்தி சொன்னது ஏதோ எத்தனையோ வருடங்களுக்கு முன் நடந்ததுபோல் இருந்தது.
*உமது அப்பா என்ன சொன்னார்." சிவனேசன் நினையாப் பிரகாரமாகக் கேட்டான். அவளுக்கு விளங்கவில்லை என்ன கேட்கிறான் என்று. "எதைப் பற்றி" அவள் கேட்டாள் விளங்காமல்,
"லண்டனில் உள்ள வீட்டை உமக்குத் தருவது பற்றிக் கதைத்தாரே, எப்போது எழுதுகிறாராம்" சிவனேசன் கேட்டான். உடனடியாக எழுதித் தருவதாக எதுவும் கதைத்ததாக ஞாபகம் இல்லை. அத்துடன் நியூயோர்க்கில் சீவிக்கும் இவர்களுக்கு ஏன் லண்டனில் வீடு. அவள் குழம்பிப்போய்க் கேட்டாள் 'ஏன் அதைப் பற்றி அவசரம்."
"லண்டனில் ஒரு வியாபாரம் தொடங்க யோசிக்கிறன். கையில் காசிருந்தால் கெதியாகத் தொடங்கலாம்.'" சகுந்தலாவுக்கு கடந்த சில நாட்களாக விளங்காததெல்லாம் உடனடியாக விளங்கியது.
பாரிஸ் நகரத்துக்குக் கூட்டி வந்ததும், கார்த்தியின் கதை தெரியும் என்று மறைமுகமாகப் பயப்படுத்தியதும், அழகிய சேலைகள் வாங்கியதும் எல்லாம் இவற்றுக்குப் பிரதிபலனாக இவள் தகப்பனிடம் என்னென்ன வாங்கலாம் என்பதைத் திட்டம்போட்டுத்தானா? கார்த்திகேயன் சொன்னதுபோல் எந்தவித உறவுமே வியாபார அடிப்படையிலா? இவள் அவன்

Page 104
200 ராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம்
ஒப்பந்தங்கள் சரிவராது என்று சொன்னால் திரும்பவும். கணவன் கேட்ட கேள்விகளுக்கு அவள் மறுமொழி சொல்ல வில்லை. கணவனின் திட்டம் விளங்கியது.
"அமெரிக்கா போகமுதல் இதெல்லாம் செய்து முடிய வேணும்" அவன் சொன்னான் அவசரத்துடன். "நீங்கள் போக முதலா" அவள் அமைதியாகக் கேட்டாள். அவளுக்கே ஆச்சரியமாக இருந்தது. அந்தக் குரலின் அமைதி அவளுக்குப் பிடித்திருந்தது.
"ஏன் நீர் எப்போது வரப்போகிறீர்" கணவன் விளங்காமற் கேட்டான்.
*" தெரியாது. தெரிந்தபின் சொல்வன்" அவள் குரலில் நிம்மதி. திரும்பிப் பார்த்தாள். கடலுக்கப்பால் கார்த்தி கேயன். ஒருநாள் திரும்பி வருவான்தானே? அவள் நிம்மதி யாகப் பெருமூச்சு விட்டாள்.


Page 105
இருபது வருடங்களாக ல பாலசுப்பிரமணியம் இல அக்கரைப்பற்றுப் பிர என்ற அழகிய கிராமத்தி படப் பட்டதாரியான இ எழுதிக் கொண்டிருக்கிரு ஸ்தாபனங்கள், பெண் தொடர்புள்ள இவர் தி
வேண்டும் என்பதைத் தன்
 

)ண்டனில் வாழும் ராஜேஸ்வரி ங்கை மட்டக்களப்பு மாவட்டம் ாந்தியத்திலுள்ள கோளாவில் ல் பிறந்தவர். லண்டன் திரைப் வர் ஆங்கிலத்திலும் நாவல்கள் ர். தமிழர்களின் நலன்பேணும்
உரிமை இயக்கங்களுடன் ரைப்படத்துறையிலும் ஈடுபட லட்சியமாகக் கொண்டுள்ளார்.
நீலமலர்