கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: வசந்தம் வந்து போய்விட்டது

Page 1
اج |
翡
吕
т.
 


Page 2

வசந்தம் வந்து போய்விட்டது
ராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம்
விற்பனை உரிமை:
பாரி நிலையம் 184, பிராட்வே: :சென்னை - 108

Page 3
(յ) թ. : . 14)ւնվ
விலை ரூபா
TITLE
SUBJECT AUTHOR
NO. OF PAGES PRICE
SZE
TYPE
PAPER
BINO NG
PUBLISHER
LASER TYPNG
PRINTERS
III டிசம்பர் 1997
55/-
VASANTHAM VANTHU
POVIDDATHU
SOCIAL NOVELIN TAMIL
RAJESWARI BALASUBRAMANIAM
215
RS. 55/-
1 2.5 X 1 8 Cm
10.5 POINT
1 1.6 KG CREAMWOVE
ART BOARD
KUMARAN PUBLISHERS
79, st Street, Kumaran Colony, Vadapalani, Chennai - 600 026.
NRA DESIGNS 217 Arcot Road, Vadapalani, Chennai - 600 026.
Monark Graphiks Chennai - 14.

III
முன்னுரை
'பிரிட்டிஷ் ரத்தம் என்னுள் ஒடுகிறது. இந்த ஆண்டு உலக அழகியாக தேர்ந்தெடுக்கப்பட்ட மகிழ்ச்சியில் அதற்கான காரணங்களில் ஒன்றாக இந்தியப் பெண் டயானா ஹைடன் இப்படிச் சொன்னார்.
பிரிட்டிஷ் ரத்தம் கொண்ட பெண்கள், பிரிட்டிஷ் ரத்தம் கொண்ட ஆண்களோடு வாழ நேரிடும் பெண்கள், பிரிட்டிஷ் ரத்தம் கொண்ட மக்களோடு வாழ நேரிடும் பெண்கள் அதற்காக உண்மையிலேயே பெருமைப்பட்டுக் கொள்ள முடியுமா?
இலங்கை ராணுவத்தின் தாக்குதல்களை எதிர்கொள்ள முடியாமல் புலம் பெயர்ந்த இலங்கைத் தமிழர்களின் முகமிழந்த வாழ்க்கையை சித்தரித்திருக்கும் ராஜேஸ்வரி அவர்களின் நாவலில் இந்தக் கேள்விக்கு 'இல்லை’ என்ற எதார்த்தமான உண்மை எதிரொலித்திருக்கிறது.
தம் மண்ணைவிட்டு, தம் மக்களை விட்டு, தம் கலாச்சாரத்தை விட்டு எங்கோ தொலைவில் நிற வெறி தாக்குதல், காழ்ப்புணர்ச்சி இவற்றுக்கிடையில் முற்றிலும் எதிர்மாறான ஒரு கலாச்சாரத்தில் தங்களை வலிந்து பொருத்திக் கொள்ள வேண்டியிருக்கும் தமிழர்களின் வாழ்க்கை எப்படி எல்லாம் திசை திரும்பி விடுகிறது என்று நாவலின் கதாபாத்திரங்கள் மூலம் மிகவும் ஆழமாக சொல்லியிருக்கிறார் ஆசிரியர்.
அதே நேரத்தில் பெண்கள் எந்த நாட்டை, எந்தக் கலாச்சாரத்தை சேர்ந்தவர்களாக இருந்தாலும் ஆணாதிக்க கருத்தியலின் பாதிப்புக்குள்ளாகி இருப்பதையும் நாவலின் பெண் கதாபாத்திரங்கள் வாயிலாக ராஜேஸ்வரி அழுத்தமாக சொல்லியிருக்கிறார்.

Page 4
IV
கணவன், குழந்தை, மகிழ்ச்சியான குடும்பம், இதில் மட்டும் அடங்கும் உலகம். கணவனின் பழைய காதலியை சந்திக்க நேரிடும்போது சீற்றம். பின் சமரசம். அமைதி என்று சராசரி தமிழ்ப்பெண்ணாக சாந்தி
கணவன், குழந்தை என்று இருந்தாலும் எதிலும் நிறைவமையாத, கணவனை சந்தேகிக்கும் பெண்ணாக அலிஸன்
பெண்ணின் வாழ்க்கை ஆணை சுற்றி மட்டும்தான் அமைய வேண்டும் என்பதில்லை, குடும்ப உறவுகள் தனிமனித சுதீந்திரத்திற்கு இக்கட்டாக இருக்கக் கூடாது போன்ற விடுதலை உணர்வுகளும் அதே சமயம் கட்டுப்பாடே சுதந்திரம் என்ற கொள்கையுடைய, ஆணாதிக்க அத்துமீறல்களை எதிர்த்து போராடும் பெண்ணாக எமிலி.
வெவ்வேறு கலாச்சாரத்தின் விளைவுகளை பிரதிபலிக்கும் இந்த கதாபாத்திரங்கள் சந்திக்கும் நிகழ்ச்சிகள், வெளிப்படுத்தும் உணர்வுகள் ஆகியவற்றை கலாச்சார இடையீட்டின் ஸ்தூலமான வெளிப்பாடுகள் என்பதை தெளிவாக முன் வைப்பதற்காக இந்த கதாபாத்திரங்களை அவர்கள், குழந்தைகள் மூலம் ஆசிரியர் இணைத்திருப்பது குறிப்பிடத்தக்க ஒன்று. மட்டுமன்றி, தான் சொல்ல வரும் விஷயத்தை எளிமையாக சொல்ல விபத்துக்குள்ளான குழந்தைகள் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெறுவது என்ற பின்னணியில் கதையை பின்னியிருப்பதும் குறிப்பிடத்தக்கது.
ஒண்டிப் பெற்றார் வளர்ப்பு Single Parenting என்பது ஓரளவு அங்கீகரிக்கப்பட்ட வாழ்க்கைமுறையாக இருக்கும் லண்டனில் அது போன்ற பெண்களுக்கு இதுவரை வழங்கி வந்த சமூக பாதுகாப்பு நடவடிக்கைகளை நிறுத்துவது என்ற கொள்கையால் பெண்கள் பகுதிநேர வேலையில் ஈடுபடுவது, பொருளாதார பாதுகாப்பு கருதி ஆணுடன், இணைந்து மட்டுமே வாழ முடியும் என்ற சூழல் உருவாகி அதன் மூலம் பழைய விக்டோரியா

V
காலத்து மதிப்பீடுகளை மீண்டும் நிறுவ முயற்சிப்பது என்ற சவாலை சந்திக்கும் இங்கிலாந்துப் பெண்களின் பிரதிநிதியாக எமிலியை சித்தரித்திருக்கிறார் ஆசிரியர்.
பெண்களின் முன்னேற்றப் பாதையில் வெவ்வேறு படிகளில் இருக்கும் இந்த பெண் கதாபாத்திரங்களின் வாழ்க்கை முறையில் அந்தந்த வளர்ச்சிப்படி நிலைகளில், அந்தந்த வாழ்க்கை முறையில் அவர்கள் ச்நதிக்கும் பல்வேறு பிரச்சினைகள் ஒட்டு மொத்த சமுதாயத்தில் உள்ள பெண்களின் வாழ்க்கை முறைகளை பிரதிபலிப்பதாக இருக்கிறது.
ஆணாதிக்க கருத்தியல் ஆண்களை மட்டுமன்றி பெண்களையும் பெண்களுக்கெதிராக திருப்பிவிடுகிறது என்பதை அலிஸன் மற்றும் பார்பரா மூலம் விளக்கி இருக்கும் ஆசிரியர், நிலவும் ஆணாதிக்க சூழலில் ஒரு பெண்ணின் கெளரவமான வாழ்க்கை எப்படி அமைய வேண்டும் என்பதை விவரிக்க எமிலியின் பாத்திரத்தை சிரத்தையுடன் கையாண்டிருக்கிறார்.
ராஜேஸ்வரி கனவு காணும் எமிலிகள் மட்டுமே ஆணாதிக்க கருத்தியல் சமூக மாற்றத்தின் முன் வைத்திருக்கும் சவால்களை எதிர்கொள்ள முடியும்.
வியாபார போக்குடன் பெண்களின் சுதந்திர உணர்வுகளை கொச்சைப்படுத்தும் கதைகள், கதாசிரியர்கள், பெருகிவரும் இந்தக் காலகட்டத்தில் சமூகப் பணிக் கடப்பாட்டுடன் ஒரு முன்மாதிரி நாவலைப் படைக்க ஆசிரியர் முயற்சி செய்திருக்கிறார். அவர் முயற்சி நிச்சயம் வெற்றி பெறும்.
சென்னை புவனேஸ்வரி 16.12.97 M.A. Ph.D. (Psychology)

Page 5
VI
என்னுரை
"வசந்தம் வந்து போய் விட்டது” என்ற என் நாவல் லண்டன் நகரின் வாழ்க்கையின் ஒரு அம்சத்தைக் காட்டுகிறது.
திருகோணமலையிற் பிறந்து, கோணேசர் மலை தரித்த இறைவனை வேண்டி வாழ்ந்த சாந்தி குடும்பத்தில் “குமார், சங்கர், சேகர் என்ற மூன்று ஆண்களும் சாந்தி என்ற பெண்ணும், இலங்கையில் நடக்கும் அரசியற் கொடுமைகளால் லண்டன் நகர் வருகிறார்கள்.
'நடராஜன் என்ற வழக்கறிஞனை சாந்தி சந்தர்ப்பவசத்தால் திருமணம் செய்கிறாள். அவனது பழைய வாழ்க்கை ஒன்றும் தெரியாது, தனக்குத் தெரிய வேண்டிய அவசியமூமில்லை என்று நினைக்கிறாள்.
நீண்ட நாட்களின் பின் மலையைக் குடைந்து கொண்டு பூதம் வெளிப்பட்டதுபோல் ஸேரா என்ற அழகிய பெண்ணைக் கணவனுடன் சந்தித்ததும் சாந்தி மனம் குழம்பிப் போகிறாள்.
சாந்திக்கு அவள் வாழும் சூழ்நிலையில் எமிலி ஸிம்சன், அலிஸன் என்ற இருவரின் நட்புறவும் கிடைக்கிறது. அவர்களின் வாழ்க்கை முறை சாந்தியின் வாழ்க்கை நெறிக்கு மிகவும் வேறுபட்டு இருந்தது.
சாந்தி, எமிலி, அலிஸன்- மூவரும் தங்கள் குழந்தைகளுக்கு நடந்த ஒரு விபத்து காரணமாக ஒரே வேளையில் லண்டன் ஆஸ்பத்திரி ஒன்றில் தங்க நேரிடுகிறது.
அந்த விபத்து மூலம் அவர்களின் சொந்த வாழ்க்கையை ஆழமாகச் சிந்திக்க அவர்களுக்கு ஒரு சந்தர்ப்பம் கிடைக்கிறது.
எமிலியின் பெண்விடுதலைக் கருத்துக்கள், அலிஸனின் குழப்பமான கருத்துகளைப் பின்னணியாகக் கொண்ட

1 திருமணக் கோட்பாடுகள், பார்பரா என்ற மிகவும் மனக்குழப்பமும் பாலியற் குழப்பமும் கொண்ட பெண்ணின் வாழ்க்கை முறைகள் இந்த நாவலில் விவாதிக்கப் படுகின்றன.
நடராஜனில் கொண்ட ஆத்திரத்தால் சாந்தி அவனை விட்டுப் பிரிவதா என்றும் மனம் குழம்பிப் போகிறாள்.
ஆண்களின் துணையின்றி வாழும் எமிலியின் வாழ்க்கை அவளைச் சிந்திக்க வைக்கிறது. ஆண் துணையை வெறுத்துப் பெண் உறவைத் தேடும் அலிஸன், சாந்தியின் மனநில்லயைக் குழப்புகிறாள். இவர்களின் வாழ்க்கையோடு இணைந்த ஆண்கள் இந்த நாவலில் சமுதாயத்தால் வதைக்கப்படும் ஆண்க ளாகத் தெரிகிறார்கள். நடராஜன் என்ற சாந்தியின் கணவனது தமக்கை டொக்டர் பிரமிளா ‘கலாச்சாரத்திற்காக” அவனின் காதலைக் குழி தோண்டிப் புதைத்து விடுகிறாள்.
கலாச்சாரம் என்றால் என்ன என்பது ஒவ்வொரு மனிதனின் தனிப்பட்ட அனுபவங்களைப் பொறுத்துக் கணிக்கப் பட வேண்டியது என்பதை அவள் மறந்து விடுகிறாள். டொக்டர் பிரமிளா தனது தம்பி ‘தமிழ் கலாச்சாரத்தைப் பாதுகாக்க” ஊருக்குப்போய் ஒரு நல்ல தமிழ்ப் பெண்ணைத் திருமணம் செய்ய வேண்டும் என்பதற்காக அவனது காதலை ஸேராவிடமிருந்து துண்டித்து விடுகிறாள். கால கட்டத்தில் பிரமிளாவின் பிள்ளைகள் மேற்குலக கலாச்சாரத்தில் வாழப் பழகி விட்டது கண்டு "அவமானப் படுகிறாள்.
இந்த நாவல் இங்கு வாழும் குடிபெயர்ந்த தமிழ்ச் சமுதாயத்தின் சில குழப்பமான கோணங்களைப் படம் பிடித்துக் காட்டுகிறது. "அரை குறையாய் வேதாந்தம் பேசவும், மற்றவர்களுக்குப் புத்தி சொல்லவும் முனையும் டொக்டர் பிரமிளா போன்றவர்கள் எப்படி உண்மைகளை உணருகிறார்கள் என்பதை நாவல் எடுத்துக் காட்டும்.
பெரும்பாலான தமிழர்களின் வெவ்வேறு பிரதிநிதிகளாக

Page 6
நடராஜன், ஆனந்த், சங்கர், சேகர், குமார் என்பவர்கள் படைக்கப்பட்டிருக்கிறார்கள். இதில்வரும் 'எமிலி' எனக்கு மிக மிகத் தெரிந்த சினேகிதி. மனித உணர்வுகளின் நேர்மைக்கு முக்கிய இடம் கொடுப்பவள்.
ஆங்கிலேயப் பெண்களில் முற்போக்கு மனம் கொண்ட எத்தனையோ எமிலிகளை எனக்குத் தெரியும். அவளுக்கு இந்தியக் கலாச்சாரத்தில் உள்ள மதிப்பும் மேற்கத்திய நாகரிகத்தில் அவள் காணும் பெலவீனங்களும் வாசகர்களால் உணர்ந்து கொள்ளப்படும் என நினைக்கிறேன்.
இந்நாவல் ஒரு காதல் கதையல்ல.
Sexuality பற்றிய ஒரு சிறு கருத்தரங்கத்தைப் பிறப்பிக்கக் கூடிய நாவல்.
"Sexuality is Constructed by religion, society and beliefs" என்பது என் கருத்து.
திருமண உறவுகளில் வரும் சுயநலம் சாந்தி மூலமும் அலிஸன் மூலமும் விளக்கப்படுகிறது. சேகரின் நடத்தையால் தெரியப்படுத்தப் படுகிறது.
இந்நாவல் ஒரு சிந்தனைக்குரிய விவாதத்தைத் தோற்றுவித்தால் மகிழ்ச்சியடைவேன்.
இந்நாவல் வெளிவர உதவிய குமரன் பதிப்பகத்தாருக்கு நன்றி. என்னை எழுத விடும் என் மகன்களுக்கும் என் மனமார்ந்த
நன்றி.
லண்டன் ராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம். 9. 12.97
2

வசந்தம் வந்து போய்விட்டது
1.
"வசந்த காலம் இப்படியா தொடங்கும்’? சாந்தி தனக்குள் முணுமுணுத்துக் கொண்டாள். இரவெல்லாம் இடியும் மழையும், அந்த ஆரவாரம் இன்னும் ஓய்ந்த பாடாயில்லை.
தன்னையணைத்துக் கொண்டு நிம்மதியாக நித்திரை செய்யும் கணவனின் தலைமயிரைத் தடவி விட்டாள் சாந்தி. இன்னும் ஒரு மணித்தியாலத்தில் அவன் ரெயின் எடுக்க வேண்டும்.
வழக்கமாக அவள் எழுந்து முகம்கழுவி கடவுள் கும்பிட்டு மெல்லிய சத்தத்தில் ஏதோ ஒரு பக்திப் பாடலை ரேப்பில் போட்டுவிட்டுக் கீழே சென்று அவனுக்ககாகக் காலைச் சாப்பாடு செய்வாள்.
இவள் தயாரிக்கும் வறுத்த பாணின் மணமோ என்னவோ இவள் பாணுக்கு பட்டர் பூசவும் அவன் எழும்பிக் குளியலறைக்குப் போகவும் சரியாயிருக்கும்.
ஆழ்ந்த நித்திரையில் இவள் மார்பில் அவன் தலை வைத்து உலகத்தை மறந்து நித்திரை செய்கிறான். அந்த அணைப்பின் சுகத்தில் வாழ்க்கை எல்லாமே காலத்தைக் கழிக்க வேண்டும் போல் அவனுக்கொரு கற்பனை பிறக்கிறது.
அவன் நேற்றும் மழையில் நனைந்து விட்டான். கொஞ்சக் குளிர் பட்டாலும் அவனுக்குத் தடிமல் வந்து விடும். காரை ரோட்டில் பார்க் பண்ணி விட்டு வீட்டுக்குள் வரும் வரைக்கும் நனைந்த மழையில் அவன் தும்மிக் கொண்டான். p

Page 7
வசந்தம் வந்து போய் விட்டது 4
அவள் கணவன் நடராஜன் ஒரு வழக்கறிஞன். அவனுடைய ஒவ்வீஸ் லண்டனிலிருக்கிறது. அவர்கள் செயின்ட் அல்பேன்ஸ் என்ற இடத்தில் வசிக்கிறார்கள். குழந்தையின் படிப்பை முன்னிட்டும், அமைதியாக வாழ வேண்டும் என்றும் நினைத்தும் அவர்கள் லண்டனுக்கு வெளியில் வீடு வாங்கினார்கள்.
லண்டனிலுள்ள சொந்தக்காரர்களைப் பிரிந்து செயின்ட் அல்பேன்ஸ் என்ற இடத்திற்குக் குடிபெயர அவனுக்கு முதலில் விருப்பமிருந்ததில்லை. முன் பின் தெரியாத இடத்தில் என்னவென்று தனியாக வாழ்வது என்று யோசித்துக் கொண்டு வந்தவனுக்குக் குழந்தை உஷா பாடசாலைக்குச் சேர்ந்ததும் கிடைத்த சினேகிதர்களின் உறவால் குழந்தைகளின் தாய்கள் சினேகிதமாகி விட்டார்கள்.
உஷாவை அவள் இன்று கொஞ்சம் முந்தி எழுப்ப வேண்டும். குழந்தைகளை அந்தப் பாடசாலை ஆசிரியர்கள் லண்டனிலுள்ள மியுசியம் ஒன்றுக்குக் கூட்டிக் கொண்டு செல்கிறார்கள். உஷா அந்த உற்சாகத்தில் இரவு படுக்கைக்குச் செல்லவே மிகவும் நேரமெடுத்தது.
சாந்தி கணவனின் தலையை மெல்லமாகத் தூக்கித் தலையணையில் வைத்தாள். அத்துடன் அவன் மெல்லமாகக் கண்களைத் திறந்தான். அரை குறை நித்திரைக் கலக்கத்தில் மனைவியை இன்னொருதரம் இறுக அணைத்தான்.
"குட்மோர்ணிங்' அவள் அவன் காதுகளில் முணுமுணுத்தாள்.
'உம். உம்' அவன் இன்னும் பிடியை விடவில்லை. 'குழந்தை உஷாவை எழுப்ப வேண்டும். அவள் இன்று மியுசியம் போகிறாள்'
அவள் அவன் காதுகளில் கிசுகிசுத்தாள்.
அவன் கொட்டாவியுடன் கண்களை அகல விரித்து அவளை

5 ராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம்
அப்படியே கண்களிலும் தழுவினான்.
“வேலைக்குப் போக மனமில்ல’ அவன் அவள் முகத்தை கூர்ந்து பார்த்தபடி சொன்னான்.
“எனக்கும்தான் உங்களை வேலைக்கு விட மனமில்ல. ஆனா வீட்டுக் கடன், டெலிபோன் பில், காஸ் பில், எலக்ரிசிட்டி பில், தண்ணிர் பில் என்று எத்தனையோ பில் வருமே”
அவள் குறும்பாகச் சிரித்தாள்.
'அம்மா கெதியாய் வெளிக்கிடுங்கோ' ஆறு வயது மகள் உஷா அவசரமாக இவர்களின் அறைக்குள் வந்தாள்.
"அம்மா ரவியும் வருவானா’ உஷா தாயைக்கேட்டாள். ரவி என்ற ஆறுவயதுப் பையன் உஷாவுடன் படிக்கிறான். ஆங்கிலேயத் தாய்க்கும் இந்தியத் தமிழனுக்கும் பிறந்த குழந்தை ரவி, உஷாவின் அன்புக்குரிய சினேகிதன்
"ஏன் ரவியும் வருவானோ என்று கேட்கிறாய்”
"நேற்றுத் தடிமலுடன் கஷ்டப்பட்டான்' உஷா சொன்னாள்.
தகப்பன் மகளையணைத்துக் கொஞ்சிவிட்டு எழும்பிக் குளியலறையை நோக்கி நடந்தான்.
சாந்திக்கும் நடராஜனுக்கும் திருமணமாகிப் பத்து வருடங்களாகின்றன. உஷாவைத் தவிர இன்னுமொரு குழந்தையுமில்லை. உஷாவே அவர்களின் அருமைக் கண்மணி.
சாந்தி தன்னையறியாமல் தன் வயிற்றைத் தடவிக் கொண்டாள். மாதவிடாய் வராமல் நின்று மூன்று கிழமைகளாகி விட்டன.
இப்படி எத்தனையோ தரம் அவளுக்கு மாதவிடாய் தவறியிருக்கிறது. அவளும் ஆசையுடன் தான் கற்பவதியாய் போவதாகக் கற்பனை செய்வாள். ஆனால் சில கிழமைகள் தாண்டியதும் பீரியட் வந்து விடும்.

Page 8
வசந்தம் வந்து போய்விட்டது 6
இந்தத் தடவை ஏதோ ஒரு காரணத்தினால் தன் வயிற்றில் ஒரு குழந்தை வளர்கிறது என்று நம்பிக் கொண்டிருக்கிறாள் சாந்தி. அந்த நம்பிக்கையின் காரணங்களை முழுக்க முழுக்க உண்மை என்று தெரிந்து கொள்ளும்வரை அவனிடம் ஒன்றும் சொல்வதில்லை என்று இருக்கிறாள்.
வெளியில் சரியான காற்று- மிகப் பயங்கரமாக வீசிக் கொண்டிருந்தது.
'இந்த மாதிரிச் சூழ்நிலையில் குழந்தைகளை மியுசியம் கூட்டிக் கொண்டு போகிறார்கள், கடவுளே எல்லாம் நல்லபடியாக நடக்க வேண்டும்’ சாந்தி தன் மனதுக்குள் பிரர்ர்த்தித்துக் கொண்டாள்.
மேல் மாடியில் தகப்பனும் மகளும் ஏதோ சொல்லிப் பெரிதாகச் சிரித்துக் கொள்வது கேட்டது.
"தனிக் குழந்தையான உஷாவுக்கு ஒரு தம்பியோ தங்கச்சியோ பிறக்க உதவிசெய் கடவுளே’
சாந்தி வாய் விட்டுக் சொல்லிக் கொண்டாள்.
ஒரு சில தினங்களுக்கு முன் தன் நிலையை அறிந்து கொள்ள அவள் தன் டொக்டரைப் போய்ப் பார்த்தாள். தான் கற்பம் அடைந்திருப்பதாகச் சொன்னதும் அவளின் சலத்தைப் பரிசோதித்துப் பார்ப்பதாகச் சொன்னார்.
நேற்று சலம் பரிசோதனை நடந்தது. அதன் முடிவில் இன்று டொக்டரிடம் போய்க் கேட்க வேண்டும்.
உஷாவைப் பாடசாலையில் கொண்டு போய்விட்டு வரும் வழியில் டொக்டரைப் பார்ப்பதாக நினைத்துக் கொண்டாள்.
மகளும் தகப்பனும் போடும் உற்சாகமான சப்தத்தில் அவளின் சிந்தனை தடைப்பட்டது.
எத்தனை சந்தோசமான குடும்பமிது.

7 ராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம்
பெருமையுடன் அவள் தன் வீட்டு வேலையில் ஈடுபட்டாள்.
எமிலி சிம்ஸன் தன் மகனைக் கனிவுடன் பார்த்தாள். ஒன்றிரண்டு நாட்களாகத் தடிமலுடன் அவதிப்பட்டு விட்டான் ரவி. எந்த நேரமும் எதையோ செய்து கொண்டிருப்பான் ரவி.
ரவியின் தந்தை தமிழ்நாட்டைச் சேர்ந்தவன். லண்டன் யூனிவர்சிட்டியில் படித்தபோது எமிலியைச் சந்தித்தான் ஆனந்த். எமிலியும் ஆனந்தும் சினேகிதமானார்கள். அதன் பிரதிபலிப்புதான் குழுந்தை ரவி.
‘இன்றைக்குக் கட்டாயம் பாடசாலைக்குப் போகத்தான் வேணுமா’ மகனை ஆதரவுடன் அணைத்துக் கொண்டு கேட்டாள் எமிலி.
'உம்; கட்டாயமாக. நாங்கள் மியுசியம் போகிறோம். டைனசோர் பார்க்கப் போகிறோம்". ரவி உற்சாகமாகச் சொன்னான்.
"உங்களுக்கு உடம்பு சரியில்லை மகன்’
"சும்மா தடிமல்தானே' பெரிய மனிதத் தனம் அந்தக் குழந்தையின் குரலில்.
அவன் தகப்பனும் அப்படித்தான். சிறிய விடயங்களைத் தூக்கிப் பிடிக்க மாட்டான், பெரிய விடயங்களென்றால் மிகவும் தீவிரமாக யோசித்து விட்டுச் சொல்வான்.
அந்தத் தகப்பனுக்கு லண்டனில் தனக்கு ஒரு மகன் வளர்கிறான் என்று தெரியுமா? தெரிந்திருந்தால் ஆனந்தன் எப்போதோ ஓடோடி வந்திருப்பான்.
கடைசியாக எமிலிக்கு அனுப்பிய கிறிஸ்மஸ் வாழ்த்து மடலுடன் தனது மனைவியுடையதும் இரண்டு வயது மகனுடையதுமான புகைப்படங்களை அனுப்பியிருந்தான்.

Page 9
வசந்தம் வந்து போய்விட்டது 8
அந்தப் புகைப்படங்களைக் கண்டதும் எமிலி கண்ணிர் விட்டாள். ஆனந்தக் கண்ணிரா அல்லது சோகக் கண்ணிரா என்று அவளுக்கே தெரியாது. ஆனந்தன் சந்தோசமாக இருக்க வேண்டும் என்று எப்போதும் பிரார்த்திப்பாள். தன் மகனைக் காணும்போதெல்லாம் ஆனந்தனின் முகம் அவள் மனத்திரையில் படம் போடும்.
ஆனந்தனின் சுருண்ட தலைமுடி ரவியிடமுண்டு, சிரிக்கும் கண்கள் ரவியிடம் அப்படியே மறு பிறவி எடுத்திருக்கிறது.
ஆழமாக எதையும் அளவிடும் மனப்போக்கு ரவியிடம் வளரலாம்.
ரவிக்கு இப்போதுதான் ஆறு வயது. இன்னும் பல வருடங்களில் அவனும் அவன் தகப்பன் ஆனந்தன் போல் வீணையில் ஒரு வித்துவானாக வரலாம்.
“என்னம்மா யோசிக்கிறீர்கள்’ ரவி தாயின் பொன் முடியைச் சீண்டினான்.
'உனது அப்பாவைப் பற்றிச் சிந்திக்கிறேன்’ என்று சொல்லலாமா?
அவள் மறுமொழி சொல்லாமல் மகனையணைத்துக் கொண்டாள்.
தனது மனைவியின் பெயர் காயத்திரி என்றும் மகளின் பெயர் தேவிகா என்றும் ஆனந்தன் எழுதியிருந்தான்.
முதற் குழந்தை மகனாய்ப் பிறக்கவில்லை என்று தன் தாய் அங்கலாய்த்ததாக அவன் எழுதியிருந்தான்.
சென்னையில் மிகப் பிரபலமான சங்கீதக் குடும்பமது. ஆனந்தன் தன் தகப்பனைப் போல் வீணையில் பாண்டித்தியம் பெறவேண்டும் என்று ஆசை. ஆனால் அதே நேரம் தாய் தகப்பனின் ஆசைப்படி எஞ்சினியரிங் படிப்பு அவன்தலையில் சுமத்தப் பட்டது.

9 ராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம்
‘'இப்போதெல்லாம் கர்நாடக சங்கீதத்துக்கு மதிப்புக் குறைந்து விட்டது. பொது ஜனங்கள் பெரும்பாலும் பொப் பாட்டுக்களைத்தான் விரும்புகிறார்கள். நான் என்னவோ வீணையை நம்பி வாழ்க்கையை ஒட்டிவிட்டேன். நீயாவது ஏதும் நல்ல படிப்பு படித்து முன்னுக்கு வா’ நாராயணசுவாமி ஐயர் சொன்னபோது ஆனந்துக்கு வயது பதினைந்து.
வீணையின் நரம்பைத் தடவி எழுப்பும் தெய்வீக ஒசையில் உலகத்துத் துயர்கள் எல்லாம் மறப்பவன் ஆனந்த்.
மூன்று தங்கைகளுக்குத் தமயனாகப் பிறந்தவன். தாய் தகப்பன் ‘நல்ல படிப்பு படித்து முன்னுக்கு வா என்று சொல்வதின் அர்த்தம் தெரியாதவன் அல்ல அவன்.
எமிலியிடம் தன் குடும்ப நிலையைச் சொல்வான். மத்திய தர பிராமண வாழ்க்கைத் தரத்தில் தான் வீணையைத் தூக்கி வைத்துக் கொண்டு மூன்று தங்கைகளுக்கும் வாழ்க்கையை அமைப்பது முடியாத காரியம் என்று தாய் தகப்பன் அங்கலாய்ப்பதை அவன் துயரத்துடன் எமிலியிடம் சொல்லி முறையிடுவான்.
இருவரும் ஒரு காலத்தில் லண்டன் யூனிவர்சிட்டியில் இரண்டு டிப்பார்ட்மெண்ட்டில் இருவிதமான பட்டங்களைப் பெறப் படித்துக் கொண்டிருந்தார்கள்.
பின்னேரம் ஐந்து மணிக்குப் பின் யூனிவர்சிட்டி மாணவர்கள் பார்களிலும் கிளப்புகளிலும்தான் காணப்படுவார்கள். கோடை விடுமுறைக்கு ஒன்றிரண்டு நாட்களுக்கு முன் எமிலி தன் சினேகிதி ஒருத்தியிடம் கொடுத்த நோட்சை வாங்க ஸ்ருடன்ட்ஸ் பாருக்குப் போனாள்.
அவளின் சினேகிதி மிகவும் ஆரவாரமாக இந்தியக் கலாச்சாரத்தைப் பற்றி விவரித்துக் கொண்டிருந்தாள்.
எமிலி தன் சினேகிதியுடன் விவாதித்துக் கொண்டிருக்கும் இளைஞனைப் பார்த்தாள். இருவர் கண்களும் சந்தித்துக்

Page 10
வசந்தம் வந்து போய்விட்டது O
கொண்டன.
'ஹலோ எனது பெயர் எமிலி ஸிம்சன்’ சினேகிதி தன்னை அந்த இளைஞனுக்கு அறிமுகம் செய்து வைக்காதபடியால் தானே அறிமுகம் செய்து கொண்டாள் எமிலி.
“ஹலோ, எனது பெயர் ஆனந்த் நாராயணசுவாமி ஐயர்' அவன் குரல் கணிரென்று ஒலித்தது. அவன் பெயர் மிகவும் நீண்டிருப்பதாகப் பட்டது. இந்தியர்களும் இலங்கையர்களும் ஏன் இப்படி நீண்ட பெயர்களை வைத்துக் கொண்டிருக்கிறார்கள் என்று அவளால் புரிந்து கொள்ள முடியவில்லை.
'ஆனந்த் என்று என் சினேகிதர்கள் அழைப்பார்கள்' அவன் புன்முறுவல் மிகவும் அழகானது.
'எமிலி என்று என் சினேகிதிகள் சொல்வார்கள்’ எமிலி அவனுடன் கைகுலுக்கிக் கொண்டாள்.
அவனது கைகள் மிகவும் மிருதுவாக இருந்தது. கோடை கால வியர்வைக்கோ என்னவோ மிகவும் குளிர்ந்து விட்டது.
வாழ்க்கையில் ஒரு நாளும் கஷ்டப்பட்டு வேலை செய்யாதவனாக இருக்க வேண்டும். ஆண்களுக்கு இப்படி மென்மையான கரங்கள் இருக்க முடியுமா? அவள் ஒரு கணம் அவன் கரங்களைப் பற்றி யோசித்தாள்.
'எமிலி, இந்த ஆனந்த் சரியான விவாதி. ஒரு விடயத்தை எடுத்துக் கொண்டால் அக்கு வேரும் ஆணிவேரும் ஆராய வெளிக்கிடுகிறார்". எமிலியின் சினேகிதியின் குரலில் ஆர்வம், சந்தோசம், ஆச்சரியமெல்லாம் பிணைந்து கிடந்தன.
“கெளரவத்திற்காக அல்லது மற்றவர்களின் கருத்தை அப்படியே ஏற்றுக் கொள்வதாக நடிப்பதற்காக நான் ஆமாம் சாமி போடமாட்டேன். சரியான கருத்துக்களைச் சொல்ல ஏன் பயப்படவேண்டும்? Politness என்பது dishonest என்றும் சொல்லலாமல்லவா’ அவன் சிரித்தபடி கேட்டான்.

1 ராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம்
எமிலிக்கு ஆனந்தைப் பிடித்துக் கொண்டது. அதன் எதிரொலி இரண்டு வருடங்களுக்குப் பின் ரவி அவன் வயிற்றில் கர்ப்பமாய் வளர ஆனந்த் தாய் தகப்பன் பேசி வைத்திருக்கும் பெண்ணைக் கை பிடிக்க தமிழ் நாட்டுக்குப் போனான்.
“எப்போதும் இந்த வீட்டில் தர்க்கமும் சண்டையும் தான்' அலிஸன் திட்டிக் கொண்டாள்.
“ஒரு கை அடித்தல் சத்தம் வராது, இரண்டு கைகள் அடிபட்டாற்தான் சத்தம் வரும்' டேவிட் முணுமுணுத்துக் கொண்டான்.
குழந்தைகள்- பீட்டர் ஆறுவயது, சைமன் இரண்டு வயதுஇருவரும் ஒருத்தரை ஒருத்தர் சீண்டிவிட்டு அலறிக் கொண்டிருந்தார்கள்.
அந்த வீடு அல்லோல கல்லோலமாகக் காட்சியளித்தது.
“பீட்டர் கெதியாக வெளிக்கிடு’ அலிஸன் மகனைப் பார்த்துச் சத்தம் போட்டாள்.
வெளியில் காற்றும் மழையும் போட்டி போட்டுக் கொண்டு வாரியிறைத்துக் கொண்டிருந்தன.
"நான் இன்றைக்கு வேலைக்குப் போகவில்லை’ டேவிட் சலித்துக் கொண்டான். அவனுக்கு ஒரு சிறிய படக் கொம்பனியில் எடிட்டிங் வேலை. பெரும்பாலான வேலை பின்னேரம்தான் தொடங்கும்.
கடைசியாக நடந்த படப்பிடிப்பின் படச்சுருள் நேற்றுப் பின்னேரம்வரை ஸ்டுடியோவை வந்து சேரவில்லை. இன்று வந்து சேருமென்றில்லை. அத்துடன் அவன் எழுதிக் கொண்டிருக்கும் Script ன் கடைசிப் பகுதியை அவன் இன்னும்

Page 11
வசந்தம் வந்து போய்விட்டது 12
சில நாட்களில் முடிப்பதாக இருக்கிறான்.
"ஏன் யாரும் உங்கள் கேர்ள் பிரண்டைச் சந்திக்கப் போகிறீர்களா' அலிஸன் எக்காளமாய்க் கேட்டாள்.
டேவிட் மறுமொழி சொல்லவில்லை. மறுமொழி சொல்லிப் பிரயோசனமுமில்லை. அவர்களுக்குத் திருமணமாகி ஏழு வருடங்களில் அலிஸன் ஒரு நாளாவது அவனை இப்படிக் கேட்காமல் விட்டதில்லை.
எலியும் பூனையுமாக அவர்கள் வாழ்வதின் எதிரொலிப்பு இது. ஏனோதானோ என்று இழுத்துக் கொண்டு போகும் தாம்பத்திய வாழ்க்கையின் தவிர்க்க முடியாத வரட்டு வாதமது.
குழந்தைகள் பீட்டரும் சைமனும் ஒரே நேரத்தில் அழத் தொடங்கி விட்டார்கள். அவசரமாகக் குழந்தைகளை வெளிக்கிடுத்தித் தானும் வெளியேறினாள். உள்ளம் கனத்தது. உப்புச் சப்பில்லாத தன் கல்யாண வாழ்க்கையை மனதார வெறுத்தாள்.
டேவிட்டில் ஆத்திரம் வந்தது. அவன் இவளை எடுத்தெறிந்து நடத்துவதாக இவள் நினைக்கிறாள். அவன் இன்னொரு பெண்ணுடன் தொடர்பு வைத்திருப்பதாக இவள் நம்புகிறாள். ஏழுவருட மண வாழ்க்கையும் உப்புச் சப்பில்லாமல் போனதாக இவள் துயர்படுகிறாள்.
அவனோ இவள் இதையெல்லாவற்றையும் கற்பனை செய்வதாகச் சொல்கிறான்.
அலிஸன் குழந்தைகளுடன் கதவைச் சாத்திவிட்டு வெளியேறினாள். தூரத்தில் சாந்தியும் உஷாவும் வருவது தெரிந்தது.
சாந்தியைக் கண்டால் சிலவேளை அலிஸனுக்கு பொறாமை வரும். எத்தனை அன்பான கணவன் நடராஜன்?
மனம் விம்மியது. சாந்தியும் உஷாவும் வரும் வரை

13 ராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம்
பொறுத்திருந்தாள் அலிஸன். அதே நேரம் முன்னுக்கிருந்த குறுக்கொழுங்கையால் எமிலியும் ரவியும் வந்து கொண்டிருந்தார்கள்.
எமிலியைக் கண்டால் அலிஸன் தர்மசங்கடப்படுவாள். ஏன் என்று அவளுக்கே தெரியாது. எமிலியின் எடுப்பான தோற்றமா அல்லது சுதந்திரமான வாழ்க்கை முறையா?
மறுமொழி தெரியாது.
2
பொன்னிறத் தலையில் படிந்து பணியாய்க் கொட்ட, நீலவிழிகள் சினேகிதிகளைப் பார்க்க எமிலி, சாந்தியையும் அலிஸனையும் நெருங்கினாள்.
“என்ன இண்டைக்கு வேலைக்குப் போகவில்லையா” சாந்தி கேட்டாள்.
“வீட்டில் நின்று சில வேலைகளை முடிக்கலாம் என்றிருக்கிறேன். நேற்றும் முதல் நாளும் நான் வேலைக்குப் போகவில்லை, ரவிக்குச் சரியான சுகமில்லை". எமிலி சொன்னாள். அவள் பிடித்திருந்த குடை காற்றில் பறக்கத் தவித்தது.
இந்த மழையிலும் காற்றிலும் ஏன்தான் குழந்தைகளை மியுசியம் கொண்டு போகிறார்களோ தெரியவில்லை.
அலிஸன் சலித்துக் கொண்டாள்.
சாந்தியும் எமிலியும் ஒருத்தரை ஒருத்தர் அர்த்தத்துடன் பார்த்துக் கொண்டார்கள். w
ஏன அலிஸன் எப்போதும் எரிச்சலும் முணுமுணுப்புமாக உலகத்தைப் பார்க்கிறாள் என்று இருவரும் எத்தனையோ தரம் தங்களுக்குள் பேசிக் கொண்டதுண்டு.

Page 12
வசந்தம் வந்து போய் விட்டது 4.
"ஒரு சிலருக்கு உலகத்தை எரிச்சலுடனும் வெறுப்புடனும் பார்க்கத் தான் தெரியும்' எமிலி எப்போதோ ஒரு தரம் சாந்திக்குச் சொல்லியிருக்கிறாள்.
குழந்தை சைமன் தள்ளுவண்டியிலிருந்தபடி நித்திரையாகிவிட்டான். அவனை இன்னும் கொஞ்ச நேரத்தில் நேர்ஸரியில் கொண்டுபோய் விடுவான் அலிஸன்.
சாந்தி குழந்தையை உற்றுப் பார்த்தாள். தனக்கும் ஒரு குழந்தை கிடைத்தால் அடுத்த வருடம் அவளும் இப்படித்தான் தள்ளுவண்டியில் வைத்துக் கொண்டு பாடசாலைக்கு வருவாள்.
திருமணமாகி அடுத்த வருடமே உஷா பிறந்தாள். அதன் பிற்கு ஆறுவருடமாகியும் ஒரு குழந்தையுமில்லை. இந்த மாதமும் அவனுக்கு மாதவிடாய் தவறிவிட்டது. இப்படி எத்தனையோ தரம் தவறியிருந்தாலும் இந்தமாதம் அவள் மனத்தில் ஏதோ ஒரு நம்பிக்கை.
“என்ன பெரிதாக அடிக்கிற காற்றோட சேர்ந்து உனது மனமும் ஓடிவிட்டதா” எமிலி சினேகிதியைக் கேட்டாள்.
எமிலியின் நீலவிழிகள் சாந்தியின் முகத்தை ஸ்கான் பண்ணிக் கொண்டிருந்தன. சாந்தி எதையோ தீவிரமாக யோசிக்கிறாள் என்று தெரிந்தது.
ஆங்கிலேயப் பெண்மணியான எமிலி மற்றவர்களின் விடயத்தில் தேவையில்லாமற் தலையைப் போட மாட்டாள்.
அலிஸன் அதற்கு எதிர்மாறானவள். ஒன்றில் தன்னைப் பற்றி அதாவது அவள் கணவன் டேவிட்டைப் பற்றித் திட்டிக் கொண்டிருப்பாள் அல்லது குழந்தைகளைப் பற்றி யோசித்துக் கொண்டிருப்பாள். எதையாவது யோசிக்காவிட்டால் அலிஸனால் வாழமுடியாது போலும் என்று சாந்தி நினைத்ததுண்டு.
பாடசாலை வளவுக்குள் மியுசியம் போவதற்கான பஸ் வந்து நின்று விட்டது. குழந்தைகளின் ஆரவாரம் காற்றை விட

5 ராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம்
வேகமாக எல்லா இடமும் பரந்தது.
மியுசியம் கூட்டிக் கொண்டு போகும் ஆசிரியர்கள் குழந்தைகளின் பெயர்களைக் கூப்பிட்டுத் தங்கள் அட்டவணையில் மார்க் பண்ணிக் கொண்டிருந்தார்கள்.
பஸ் புறப்பட்டபோது குழந்தைகளின் ஆரவாரம் வானைப் பிளந்தது.
பாடசாலைக்குப் பக்கத்திலிருக்கும் நேர்ஸரிக்குக் குழந்தையைக் கொண்டுபோய் விட அலிஸன் விரைந்தாள்.
எமிலியும் சாந்தியும் தங்கள் வீடுகளுக்குத் திரும்ப கேற் பக்கம் சென்றார்கள்.
அவர்கள் ரோட்டில் ஏறியபோது அலிஸன் இவர்களைச் சந்திக்க ஓடி ஓடி வந்து கொண்டிருந்தாள்.
'புருஷனைத் திட்டிப் பாராயணம் பண்ண அலிஸன் எங்களை கோப்பி சாப்பிடும் சாட்டில் கூப்பிடப் போகிறாள்'
சாந்தி எமிலியிடம் முணுமுணுத்தாள். மழை விடாமற் கொட்டிக் கொண்டிருந்தது. எமிலி தன் குடையைச் சரித்துப் பிடித்தபடி சாந்தியைக் கடைக் கண்ணாற் பார்த்தாள்.
'ஏன் இன்று சாந்தி அதிகப்படி சந்தோசமாக இருக்கிறாள்' எமிலியின் மனத்தில் இப்படி ஒரு எண்ணம் ஒடியது.
‘என்ன எமிலி அப்படிப் பார்க்கிறாய்’ சாந்தியின் முகம் வெட்கத்தால் சிவந்தது.
'ஏதோ மிகவும் சந்தோசமாய் இருக்கிறாய் போலத் தெரிகிறது’
சொல்லலாமா இவளுக்கு? இன்று நான் டொக்டரிடம் போய் நான் கர்ப்பவதியா இல்லையா என்று தெரிந்து கொள்ளப்

Page 13
வசந்தம் வந்து போய்விட்டது 16 போகிறேன், பெரும்பாலும் நல்ல முடிவாகத்தான்
இருக்குமென்று மனம் சொல்கிறது என்று இவளுக்குச் செர்ல்லலாமா?
அவளின் கணவன் ராஜனுக்கே அவள் இன்னும் சொல்லவில்லை. எப்படித்தான் சினேகிதமாக இருந்தாலும் எமிலியிடம் இப்படியான பிரைவேட்டான விடயங்களை எப்படித் திடீரென்று சொல்வது?
‘என்ன பெரிய யோசனை?’ எமிலி இப்போது சாந்தியை நேரடியாகப் பார்த்துக் கேட்டாள்.
* 'குழந்தைகள் ஒரு பிரச்சினையுமில்லாமல் போய் வர வேண்டுமென்று யோசித்துக் கொண்டிருக்றேன்’ சாந்திக்குத் தெரியும் தான் பொய் சொல்வதை எமிலி கண்டுபிடிப்பாள் என்று.
எமிலி முன்புறுவலுடன் பார்வையைத் திருப்பினாள்.
"ஹலோ, சாந்தி, எமிலி, என் வீட்டுக்கு ஒரு தரம் எட்டிப் பாருங்களேன். இந்த மழைக்கும் காற்றுக்கும் ஒரு சூடான கோப்பி நன்றாக இருக்குமில்லையா? 'அலிஸன் மூச்சு இளைக்க ஓடி வந்து இவர்களைக் கேட்டாள்,
"நோ தாங்க்ஸ் எனக்கு நிறைய வேலைகிடக்கு. ஒரு றிப்போர்ட் எழுதி முடிக்க வேண்டும். அதற்காகத்தான் லிவெடுத்தேன்.' எமிலி வழக்கமான தனது ஆறுதலான இனிய குரலிற் சொன்னாள்,
“எமிலி, நீ எப்பபோதும் பிஸியான மனுசி, நாங்கள் புருஷன் உள்ளவர்கள், எங்களுக்கில்லாத பிஸி உனக்கு" அலிஸன் இப்படிச் சொன்னது எமிலிக்கு எரிச்சலையுண்டாக்கியிருக்க வேண்டும், அவள் நீல விழிகள் ஒருதரம் அகல விரிந்தன.
“ஸோ, கணவன் உள்ள பெண்கள் மட்டும் தான் பிஸியாக இருப்பார்கள், கணவன் இல்லாதவர்கள் கனவு கண்டுகொண்டு கற்பனை உலகில் வாழ்வார்கள் என்று நினைக்கிறாயா?"

17 ராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம்
"நோ, நோ, நான் அப்படியெல்லாம் சொல்லவில்லை. ஆண்கள் வீட்டிலிருந்தால் அவர்களைச் சமாளிக்க எத்தனையோ வேலைகளைச் செய்ய வேண்டியிருக்கும், அப்படிப் பிரச்சினையில்லாத பெண்கள். அலிஸன் வார்த்தைகளை முடிக்கவில்லை.
'..தான்தோன்றித் தனமாக நடந்து கொள்ளலாம் என்று நினைக்கிறாயா’ எமிலி குரலில் சாந்தத்தை வரவழைத்தாலும் அவள் முகத்தில் எரிச்சலின் பிரதிபலிப்புத் தெரிந்தது.
"கணவர்களைப் பற்றிக் கருத்தரங்கம் ஏன் நடுத்தெருவில் செய்ய வேண்டும்’ சாந்தி நடுநிலைமை வகிக்கும் தொனியிற் சொன்னாள்.
"ஹலோ லேடிஸ்’ மிஸ்டர் பார்கின்ஸன் என்னும் எண்பது வயதுக் கிழவன் வழக்கம்போல் இதே நேரத்தல் இந்தப் பாதையால் தேகாப்பியாச நடைபோடுவார்.
“மழையும் பணியும் உங்களைப் பாதிக்காதா” சாந்தி ஒருநாள் கேட்டாள்
"மைடியர், எண்பது வயது உடம்பு, இவ்வளவு காலமும் உலகமெல்லாம் ஒடித் திரிந்த உடம்பு. உலக யுத்தத்தில் எத்தனையோ இறப்புக்களையும் இழப்புக்களையும் கண்ட உள்ளம், இந்த மழைக்கும் பனிக்கும் பயந்து விடுமா" பார்கின்ஸன் தனது செயற்கைப் பற்கள் பளபளக்கச் சிரித்தார்.
அவர் தலையில் ஓவர்கோட்டோடு சேர்ந்த ஹாட் போடப்பட்டிருந்தது.
பார்கின்ஸன் கிழவன் இரண்டாம் உலகயுத்தக் காலத்தில் இலங்கையிற் திருகோணமலையில் வாழ்ந்தவராம்.
“எந்த ஊரிலிருந்து வந்தாய் பெண்ணே’ என்று ஒரு நாள் அவர் சாந்தியைக் கேட்டார்.
'இந்து சமுத்திரத்தில் முத்துப் போல ஒரு அழகிய தீவு

Page 14
வ9த்தம் வந்து போய் விட்டது 18
இருக்கிறதே அதன் பெயர் இலங்கை, அங்கேயிருந்து வந்தேன்’ சாந்தி மகிழ்ச்சியுடன் சொன்னாள்.
‘என்ன இலங்கையிலிருந்து வந்தாயா.’ கிழவன் செயற்கைப் பற்கள் கட்டிய வாய் அகல ஆச்சரியத்துடன் அவளைப் பார்த்தார்.
அவளுக்கு இவரின் ஆச்சரியம் விளங்கவில்லை. வெளி நாட்டாரைக் கண்டால் வெறுப்புடன் முகம் சுளிக்கும் ஆங்கில மனிதர்களைத்தான் அவள் நிறையக் கண்டிருக்கிறாள். இந்த மனிதன் ஆச்சரியத்துடன் வாய் பிழக்கிறாரே?
'மை டியர், நான் எனது இளமைக் காலத்தில் இலங்கையிலிருந்தேன், சந்தோசம் தேடப் போகும் உல்லாசப் பிரயாணியாகப் போகவில:ல, மகா யுத்தத்தில் யப்பானியரை எதிர்த்துப் போராடும் ஆங்கிலச் சிப்பாயாகச் செல் றேன்’ அவரின் கண்களில் பழைய ஞாபகங்கள் பளிச்ட்டன போலிருந்தது.
"இலங்கையில் எந்த இடம்’
'திருகோணமலை, ஆஸ்பத்திரிக்கு அருகிலுள்ள பீச் ரோட்டில் உள்ள இடம்’ சாந்தி இப்படிச் சொன்னதும் எண்பது வயதுக் கிழவன் துள்ளிக் குதித்தார். அவர் சந்தோசத்துடன் இவள் கையைப் பிடித்துக் கொண்டு 'உலகம் மிகவும் குறுகித்தான் போய்விட்டது. பார்த்தாயா பார்த்தாயா, செயின்ட் அல்போன்ஸ் நகரில் எத்தனையோ ஆசியர்கள் இருக்கிறார்கள் ஆனால் நீ ஒருத்தி தான் திருகோணமலையிலிருந்து வந்திருக்கிறாய். எத்தனையோ தரம் அந்த ஊரிலிருந்து வந்த யாரையும் சந்திப்போமா என்று யோசித்திருக்கிறேன். என்ன ஆச்சரியம் இத்தனை வருடங்களுக்குப் பின் உலகத்தில் எனக்குப் பிடித்தமான இடத்திலிருந்து வந்திருக்கிறாய்”
அவரின் சந்தோசம் அவர்களின் நட்புறவுக்கு அடித்தளம், சாந்தி மகளுடன் பாடசாலைக்குப் போகும்போது பார்கின்ஸன் கிழவரைச் சந்திப்பாள். சில வேளை அவளுடன் பாடசாலை

19 ராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம்
வரைக்கும் வருவார். உலகத்தைப் பற்றி, சுவாத்தியத்தைப் பற்றி இலங்கையில் நடக்கும் சண்டையைப் பற்றி எத்தனையோ சம்பாஷணைகள் அவர்களால் எடுக்கப்படும்.
மழை இன்னும் உரத்துக் கொட்டியது.
'நான் வீட்டுக்குப் போக வேண்டும், அலிஸன் உனது அழைப்புக்கு நன்றி, இன்னொருதரம் உனது வீட்டுக்குக் கோப்பி சாப்பிட வருவேன். சாந்தி வீட்டுக்குப் போனதும் போன் பண்ணுவேன்’ எமிலி சாந்தியையும் அலிஸனையும் பார்கின்ஸன் கிழவனையும் பிரிந்து அவசரமாக நடந்து சென்றாள்.
'எனது வீட்டுக்குக் கோப்பி சாப்பிட வருகிறாயா’ என்று சாந்தி கேட்டிருந்தால் எமிலி ஒரு கொஞ்ச நேரமென்றாலும் வந்து விட்டுப் போயிருப்பாள்.
அலிஸனின் போக்கு எமிலிக்கு அவ்வளவு பிடிக்காது என்று சாந்திக்குத் தெரியும். ஏதோ சாட்டுப் போக்குச் சொல்லி அலிஸன் வீட்டுக்குச் செல்வதை எமிலி தவிர்த்துக் கொள்கிறாள் என்றும் தெரியும்.
"நானும் டொக்டரிடம் போக வேண்டும், மன்னிக்க வேண்டும்’ சாந்தி நாசுக்காக விடை பெற்றாள்.
“பை பை லேடிஸ்’ பார்கின்ஸன் கிழவன் தனது கைத்தடியை ஊன்றியபடி போனார்.
அலிஸன் தன் வீட்டுக்குப் போகும் தெருவில் திரும்பினாள். எமிலி அவசரமாக வீட்டை நெருங்கிக் கொண்டிருந்தாள். வீட்டுக்குத் திரும்பும் சந்தியில் கால் வைத்தபோது சட்டென்று அவள் அருகில் ஒரு கார் நின்றது. அவள் திரும்பிப் பார்த்தாள்.
முகம் தர்ம சங்கடத்துடன் தவித்தது. அவன் கார்க் கதவைத் திறந்து விட்டான்.

Page 15
வசந்தம் வந்து போய்விட்டது 20
"ஏன் இந்த மழையில் நனைய வேண்டும், ஏறிக் கொண்டால் வீட்டுக்குப் போகச் சுகமாக இருக்கும்’ டேவிட்டின் குறும்புத் தனத்தை ரசிக்கும் நிலையில் அவள் இல்லை.
'இப்போதுதான் உங்கள் மனைவியின் வேண்டுகோளை நிராகரித்து விட்டு வந்திருக்கிறேன், நீங்கள் வேறு தொல்லை செய்கிறீர்கள்’ அவள் ஒவ்வொரு வார்த்தையாக அழுத்தமாகச் சொன்னாள்.
அவன் அதை ரசித்தான். “எந்தவிதமான சூழ்நிலையிலும் என்னவென்று இப்படி நிதானமாகக் கதைக்கப் பழகினாய்’ அவன் எத்தனையோ தரம் கேட்டிருக்கிறான்.
அவன் திறந்த காரை மூடாமல் பேசாமலிருந்தான். சீறியடிக்கும் மழை முன் சீட்டை நனைத்தது
'96feio 6TLS6S' ‘'வேண்டாம் நான் உங்கள் காரில் ஏறினால் நான் போட்டிருக்கும் வாசனைத் திரவியத்தின் மணம் உங்கள் மனைவிக்குத் தடிமலைத் தந்து விடும்’
அவள் அவனின் மறுமொழிக்குக் காத்திராமல் விரைந்து நடந்தாள்.
டொக்டரிமிருந்து வீட்டுக்கு வந்தபோது சாந்தியின் மனம் சந்தோசத்தில் துள்ளியது.
தான் இரண்டாவது குழந்தைக்குத் தாயாகப் போகிறாள் என்பதை அவளாலே நம்ப முடியாதிருந்தது. உஷாவைத் தவிர தனக்கு ஒரு குழந்தையும் பிறக்காது என்றிருந்தவளுக்குக் கடவுள் அருளால் இன்னொரு குழந்தை பிறக்கப் போகிறது.

2 ராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம்
மழையில் ஓடிப் போய்க் குழந்தை போல நனைந்து விளையாடவேண்டும் போலிருந்தது.
ஆண் குழந்தையா, பெண்குழந்தையா பிறக்கும் என்று அவள் யோசிக்கவில்லை. ஒரு குழந்தை பிறந்தாற்போதும்.
கணவன் நடராஜன் எவ்வளவு சந்தோசப் படுவான்? மனம் விட்டு அவன் தன் துயரத்தைக் காட்டிக் கொள்ளா விட்டாலும் தங்களுக்கு இன்னொரு குழந்தை தேவை என்பதை அவன் ஆசைப்படாமலில்லை என்று தெரியும்.
அவனின் தங்கை கல்யாணமாகி நான்கு வருடங்களில் இரு குழந்தைகளைப் பெற்று விட்டாள்.
சாந்தியின் இரண்டு தமையன்களும் தங்களுக்கு இரு குழந்தைகள் பெற்று விட்டாள்.
தம்பி தனக்குக் கல்யாணமே வேண்டாமென்றிருக்கிறான். எல்லோருக்கும் இந்த சந்தோச சமாச்சாரத்தைச் சொல்ல வேண்டும். சொந்தக் காரர்களுக்குச் சொல்லி விட்டுப் பின் எமிலிக்குப் போன் பண்ணலாம்.
அவள் சந்தோசத்தில் என்ன யோசிக்கிறோம் என்ன செய்ய வேண்டும் என்று சரியாக நிர்ணயிக்க முடியவில்லை. அத்தனை சந்தோசம் அவளுக்கு. கணவனுக்கு டெலிபோன் பண்ண ரிசீவரை எடுக்க முயன்றபோது சொல்லி வைத்தாற் போல் டெலிபோன் மணியடித்தது.
எமிலியாகத்தான் இருக்க வேண்டும்.
குதுகலத்துடன் றிசீவரை எடுத்தாள் சாந்தி.
"மிஸஸ் நடராஜன். பாடசாலைத் தலைமையாசிரியர் பேசுகிறேன். ஐயாம் சொறி.’ ஆசிரியை ஏதோ முக்கியமான செய்தி சொல்லப் போகிறாள் என்று தெரிந்தது.
“என்ன விடயம்’ சாந்தி அவசரப்படுத்தினாள்.

Page 16
வசந்தம் வந்து போய் விட்டது 22
'குழந்தைகளை மியுசியம் கொண்டு சென்ற கோச் வண்டி விபத்துக்குள்ளாகி விட்டது'
3
மழை, காற்று, இடி மின்னல் என்பனவெல்லாம் பதறியழும் தாய் தகப்பனை பாடசாலைக்கு ஓடோடி வருவதை தடுத்தி நிறுத்த முடியவில்லை.
*என்ன நடந்தது எங்கள் குழந்தைகளுக்கு”
உலகத்து நாலா பக்கங்களிலுமிருந்த சனத்தொகை கூடிய நகரம் செயின்ட் அல்பேன்ஸ். அந்த சனத் தொகையில் எத்தனையோ நிறங்கள், மொழிகள், கலாச்சாரங்கள், நம்பிக்கைகள், பழக்க வழக்கங்கள் உள்ளன. அத்தனையின் பிரதிபலிப்பும் அங்கு தெரிந்தன.
மிகவும் நாகரீகமானவர்கள் வாய்விட்டு அழாமல் கேள்வி கேட்டார்கள், சாந்தி போன்ற உணர்ச்சி வசப்பட்டவர்கள் கேவிக் கேவியழுது கொண்டிருந்தார்கள். அலிஸன் வழக்கம்போல் ஆசிரியர்களைக் குறை சொல்லிக் கொண்டிருந்தாள்.
'இந்த இடியும் மின்னலிலும் கண்டறியாத மியுசியம போகத்தான் வேண்டுமா' அலிஸன் திரும்பத் திரும்ப அதையே கேட்டுக் கொண்டிருந்தாள்.
“எந்த இடத்தில் விபத்து நடந்தது, எத்தனை சீரியசான குழந்தைகள்' எமிலி ஒரு டொக்டர் மாதிரி நிதானமாகக் கேட்டுக் கொண்டிருந்தாள்.
'மோபைல் போனில் தொடர்பு கொண்டபடி இருக்கிறோம். , எல்லாக் குழந்தைகளும் லண்டனிலுள்ள ஒரு குழந்தைகள் ஆஸ்பத்திரியில் அட்மிட் பண்ணப் பட்டிருக்கிறார்கள்' தலைமை ஆசிரியை விளக்கமாகச் சொல்லிக் கொண்டிருந்தாள்.

23 ராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம்
'இவ்விடம் நின்று என்ன பிரயோசனம், நாங்கள் ஹொஸ்பிட்டலுக்குப் போவோம்’ டேவிட் அலிஸன், எமிலி, சாந்தி மூவரையும் பார்த்துச் சொன்னான்.
எமிலி அவனின் முகத்தைப் பார்க்காமல் கொட்டும் மழையை வெறித்துப் பார்த்தாள்.
'தயவு செய்து எனது குழந்தையிடம் என்னைக் கொண்டு போங்கள்' சாந்தி தவித்தாள். ஒரு மணித்தியாலத்திற்கு முன்தான் தன் வயிற்றில் ஒரு குழந்தை வந்துவிட்டாதாகக் கூத்தாடினாள், இப்போதோ தனது வளர்ந்த மகளின நிலை
குறித்துத தவித்துக் கதறினாள்.
கணவருக்குப் போன் பண்ணி விஷயத்தைச் சொல்லலாம் என்றால் அவன் வெளியே போய் விட்டானாம், அவள் கணவன் நடராஜன் ஒரு வழக்கறிஞன். பெரும்பாலும் கோர்ட் கேஸ் இருக்கும். ஆனால் வீட்டை விட்டு இன்று போகமுதல் தான் பெரும்பாலும் ஒவ்விசிலேயே இருப்பதாகச் சொன்னான்.
'ஏதும் அவசர வேலையா' என்று றிஸப்ஸனிஸ்டைக் கேட்டாள் சாந்தி.
அந்த றிஸப்ஸனிஸ்ட் புதிதாக வேலைக்கு வந்தவள், ஏனோதானோ என்று மறுமொழி கூறினாள்.
'அவர் வந்ததும் உடனடியாக வீட்டுக்குப் போன் பண்ணச் சொல்லுங்கள்’ என்று சாந்தி சொல்லிவிட்டு ஓடோடி
பாடசாலைக்கு வந்தாள்.
பாடசாலைக்கு வந்ததும்தான் கட்டாயம் குழந்தைகளை அட்மிட் பண்ணியிருக்கும் ஆஸ்பத்திரிக்குப் போக வேண்டும் என்று.
'டேவிட் உங்கள் மோபைல் போன் ஒருதரம் இரவல் தரமுடியுமா” சாந்தியின் பதட்டம் அவனைப் பரிதாபப் பட வைத்திருக்க வேண்டும்.

Page 17
வசந்தம் வந்து போய்விட்டது 24
"நிச்சயமாக சாந்தி நீங்கள் எனது மோபைல் போனைப் பாவிக்கலாம்" டேவிட் தனது போனைக் கொடுத்தான்.
"அவர் இன்னும் வரவில்லை, இன்று பின்னேரம் வரைக்கும் வரமாட்டேன் என்று போன் பண்ணிச் சொன்னார், நீங்கள் வீட்டுக்குப் போன் பண்ணச் சொன்னதைச் சொன்னேன்." றிஸப்ஸனிஸ்ட் சொன்னாள்.
"இன்றைக்கு என்று பார்த்து அவரும் ஒவ்விசில் இல்லை என்ன செய்வேன்’ சாந்தி கண்ணிரை அடக்கிக் கொண்டாள்.
"நாங்கள் இருக்கிறோம், துக்கப்பட வேண்டாம். இப்போது நாங்கள் லண்டனுக்குப் போக வேண்டும். நான் வீட்டில் நின்றது நல்லதாகப் போய் விட்டது.”
டேவிட்டின் குரல் இதமாக இருந்தது. டேவிட்டின் மனைவி அலிஸனுக்கு எதிர்மாறானவன் டேவிட், மிகவும் கருணை மனம் கொண்டவன். சிந்தித்துச் செயற்படுபவன், சாந்திக்கு ஆங்கிலேயர்களுடன் அவ்வளவு பழக்கமில்லை. வேலைக்குப் போகாமல் வீட்டிலிருப்பதால் அவளுடைய உலகம் மிகவும் குறுகியதாக இருந்தது.
இரண்டு தமயன்களின் குடும்பம், உலகத்தில் ஒரு பிடிப்புமற்ற தம்பியின் தொடர்பு, ராஜனின் (நடராஜன்) குடும்பத்தில் அவனது தமக்கையை எப்போதாவது சந்திப்பாள். அவர்கள் டொக்டர்கள். கணவனும் மனைவியும் விழுந்து விழுந்து உழைக்கிறார்கள். வயது வந்த இரண்டு பிள்ளைகள் உண்டு. ராஜனை எப்போதாவது வந்து சந்திப்பார்கள்.
அலிஸன் ஓடிப்போய் குழந்தை சைமனைக் கூட்டிக் கொண்டு வந்தாள். சாந்தி பாடசாலை ஹோலில் உள்ள பப்ளிக் டெலிபோன் பூத்தில் போய் நின்று தனது தமயன்கள் குடும்பத்தினருடன் பேசிக் கொண்டிருந்தாள்.
எமிலி அவசரமாக ரோட்டைத் தாண்டிக் கொண்டிருந்தாள். லண்டனுக்கு அவள் காரில் போவதில்லை. ரெயின்

25 ராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம்
எடுத்துத்தான் வேலைக்குப் போவாள்.
அந்த ரெயினிற்தானே டேவிட்டைச் சந்தித்தாள். அன்றும் இப்படித்தான் மழைபெய்து கொண்டிருந்தது. ஸ்ரேசனுக்குப் போகும் படிகள் மழையில் வழுக்கிக் கொண்டிருந்தது.
அவள் ஓடிப்போன அவசரத்தில் கையிலிருந்த பைலைத் தவற விட, அந்தப் பேப்பர்கள் எல்லாம் கீழே விழ அவன் அவற்றைப் பொறுக்கி எடுக்க உதவி செய்தான்.
அவன் முகத்தைக் கூடப் பார்க்க நேரமில்லை. “தாங்க் யூ" சொல்லி விட்டு அவசரத்தில் ரெயினில் ஏறிக் கொண்டாள். அவனும் ஓடிவந்து அவள் பின்னாற் தொற்றி ஏறிக் கொண்டான்.
இருவரும் மழையில் தொப்பமாக நனைந்திருந்தனர். “என்ன வசந்த காலைமோ, சமர் தொடங்க மழையும் தொடங்கி விட்டது' அவன் இவளுடன் பேச வேண்டும் என்பதற்காக ஏதோ சொல்லி வைத்தான். நனைந்து விட்ட பொன்னிறத் தலைமயிரை ஒதுக்கிக் கொண்டு, அவள் அவனை நிமிர்ந்து பார்த்தாள்,
அவளுடைய ஆழமான நீலவிழிகளில் அவன் விழுந்துவிட்டான்.
அவன் ஒருதரம் என்ன சொல்வதென்று தெரியாமல் தடுமாறினான். "இப்படி ஒரு சோடி நீலக் கண்களை நான் ஒரு நாளும் கண்டதில்லை’ என்று ஆனந்த் சொன்னது போல் இவனும் சொல்லப் போகிறானா?
அவள் தன்னையறிமுகம் செய்து கொள்ள நினைத்து வாயெடுத்தபோது ரெயின் அடுத்த ஸ்ரேசனில் பட்டென்று நின்றது. சனங்கள் அவசரத்துடன் ஏறினார்கள்.
அவர்கள் தங்களை அறிமுகப்படுத்திக் கொள்வில்லை.
எமிலி மழையைப் பொருட்படுத்தாமல் பஸ் ஸ்ரொப்புக்குப்

Page 18
வசந்தம் வந்து போய் விட்டது 26
போனாள். பாடசாலைக்கு வந்திருந்த எத்தனையோ தாய் தகப்பன் அவசர அவசரமாகத் தங்கள் கார்களில் ஒடிக் கொண்டிருந்தார்கள்.
'உனக்கென்ன பைத்தியமா, யாரிடமாவது லிப்ட் கேட்பதற்குப் பதில் மழையில் இப்படி நனைகிறாயே" அலிஸன் தன் கீச்சுக் குரலில் எமிலியைப் பார்த்துச் சத்தம் போட்டாள்.
அலிஸனின் காரில் சாந்தியும் குழந்தை சைமனுடன் அலிசனும் பின் சீட்டுகளிலிருக்க டேவிட் காரை ஓட்டிக் கொண்டிருந்தான்.
அவள் அருகில் அவன் காரை நிறுத்தினான். அவளுக்குத் தர்மசங்கடமாக இருந்தது. ஒரு சில மணித்தியாலங்களுக்கு முன் அவன் அவளருகில் காரை நிற்பாட்டினான். இப்போதும் அவள் அருகில் காரை நிற்பாட்டுகிறான்.
ஆனால் அவன் இவளைத் தன் காரில் ஏறிக் கொள்ளச் சொல்லவில்லை.
"என்ன டேவிட், காரைத் திறந்து விடுங்களேன்’ அலிஸன் உத்தரவு போட்டாள்.
அவன் இடதுபக்கம் சரிந்து காரைத் திறந்து விட்டான். எமிலி சரியாக நனைந்திருந்தாள்.
"தாங்க் யு" சொன்" படி டேவிட் அருகில் உட்கார்ந்தாள. அவன் முகத்தில் ஒரு கணம் குறும்புச் சிரிப்புத் தவழ்ந்ததை அவள் கவனிக்காமலில்லை.
'பாவம் எமிலி, தனியாக எவ்வளவு கஷ்டப்படுகிறாள். எனக்கும் சாந்திக்கும் இருககிற உதவி அவளுக்கில்லையே’
அலிஸன் பரிதாபம் எமிலிக்கு எரிச்சலையூட்டியது. அலிஸனும் டேவிட்டும் ஒருத்தருக்கொருத்தர் எடபடி 'உதவிக்" கொள்கிறார்கள் என்று அவளுக்குத் தெரியாதா என்ன?

27 ராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம்
'அலிஸன் நீ எனக்காகப் பரிதாபப் படுவதைப் பற்றி மிகவும் சந்தோசப்படுகிறேன். ஆனால் உங்களைப் போல் ஊர் உலகமெல்லாம் சொந்தங்கள் இல்லாவிட்டாலும் என் காலிலேயே நிற்கப் பழகிக் கொண்டு விட்டவள். எனது விடயங்களையும் எனது குழந்தையின் விடயங்களையும் முடியுமானவரையில் சுமுகமாகச் செய்திருக்கிறேன் என்று நம்புகிறேன்"
எமிலியின் குரலில் அடக்கம் இருந்தாலும் அலிஸனின் தேவையற்ற ஸ்ரேட்மென்ட்டுக்கு எமிலியின் பதில் சாட்டையடியாகிறது என்று டேவிட்டுக்குத் தெரியாமலில்லை. அவன் தன் மனைவியின் குரலில் தொனிக்கும் 'முட்டாள் தனத்தை முழுக்க முழுக்கப் புரிந்து கொண்டவன். சாந்தி இவர்களின் சம்பாஷணையில் சம்பந்தப்படாமல் மூக்கைச் சிந்திக் கொண்டிருந்தாள்,
'என்ன உன் குழந்தை உஷா மட்டுமா விபத்தில் சிக்கிக் கொண்டாள்? எங்கள் குழந்தைகளும்தானே விபத்தில் சிக்கிக்
கொண்டார்கள்’
அலிஸன் சாந்தியைப் பார்த்துக் கூறினாள். டேவிட் கார் ரேடியோவைத் திருப்பி விட்டான். பகல் பன்னிரண்டு மணிக்குச் செய்தி சொல்லிக் கொண்டிருந்தார்கள். பாடசாலைச் சிறுவர்களை ஏற்றிச் சென்ற பஸ்சுடன் இன்னொரு லொறி மோதியதால் குழந்தைகளில் பலர் காயமடைந்திருப்பதாகச் செய்தி சொல்லப்பட்டது.
"கேட்டாயா சாந்தி யாரும் செத்துப் போய் விட்டதாக இல்லையே” அலிஸன் சாந்தியைத் தேற்றும் தோரணையில் சொன்னாள்.
சாந்திக்கு இன்று எத்தனையோ அதிரடிகள். தனக்குக்
குழந்தை தரித்திருக்கிறது என்ற சந்தோச செய்தியில் குதூகலப் பட்டவளுக்கு இப்போது உஷாவின் விபத்து மனக்கலக்கத்தை

Page 19
வசந்தம் வந்து போய் விட்டது 28
உண்டாக்கி விட்டது.
இன்றைக்கெல்லாம் ஒவ்விசிலேயே இருப்பேன் என்று சொல்லி விட்டுப் போன கணவன், ஒவ்வீசுக்கு வந்ததும் வராததுமாக வெளியே போய் விட்டானாம்.
ராஜன் எப்போதும் தான் எப்போது ஒவ்வீசில் இருப்பேன் வெளியிற் போவேன் என்று சாந்திக்குச் சொல்வான். அவசரமாக எங்கும் செல்வதானால் வீட்டுக்குப் போன் பண்ணி விட்டுத்தான் போவான். இன்றைக்கு என்ன நடந்தது?
அலிஸன் எப்போதும் வாய்விட்டுச் சொல்வதுபோல் சாந்தி ஒரு அதிர்ஷ்டசாலி. ராஜன் மிகவும் குடும்பப் பொறுப்புள்ள தகப்பன், நல்ல அன்பான கணவன், அவள் கொடுத்து வைத்தவள்.
அலிஸன் டேவிட் பற்றி எப்போதும் குறை சொல்லிக் கொண்டிருப்பாள். அவர்கள் காதலித்துத் திருமணம் செய்து கொண்டவர்களாம். எப்போதும் எலியும் பூனையும் போல் இருக்கிறார்கள்.
சாந்தி கார் ஜன்னலுக்கு வெளியே பார்வையைத் தவழ விட்டாள். மோட்டோர் பாதை குழந்தைகளின் சின்னக் கார்களைக் குவித்து வைத்தாற்போல் அடுக்கடுக்கான கார்களால் நிறைந்திருந்தது. வேறு நகர்களிலிருந்து லண்டனுக்குச் செல்லும் லாரிகள், வான்கள், வேலைக்குச் செல்லும் மனிதர்கள், உல்லாசப் பிரயாணிகள் என்று எத்தனையோ பேர் இந்தப் பாதையில் அடைந்து கிடக்கிறார்கள்.
பாதையை அடுத்த வயல்வெளிகளில் கொழுத்துப் பெருத்த மந்தைக் கூட்டம் மழையில் நனைந்தபடி இரை தேடிக் கொண்டிருந்தன. மந்தைகள் கூட்டத்தை ஒரு மனிதன் தன்னுடைய பயிற்றப்பட்ட நாயுடன் மேய்த்துக் கொண்டிருந்தான்.
மட்டக் களப்பிலுள்ள அவளின் பெரியம்மா வீட்டுக்குப்

29 ராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம்
போயிருந்த போது இப்படித்தான் பெரிய திறந்த வெளிகளில் மாடுகள் மேய்ந்து கொண்டிருக்கும் கொடிய வெயிலுக்கு நிழல் தேடும் மாடு மேய்க்கும்பையன் வயற்பரப்பில் விழுது விட்டுப் பரந்து நிற்கும் ஆல மர நிழலில் அமர்ந்திருந்து புலலாங்குழல் இசைப்பான், சினிமாப் பாட்டு ராகங்களை மிகவும் இனிமையாக இசைப்பான்.
ஏதோ மரக் குழாய்களுக்குள் அந்த மாட்டுக்காரனின் இதய நாதம் இசையாய்க் கனிந்து மதிய வெயிலையும் குளிராக்கும் இனிமையுடன் தவழும்.
மதிய நேரங்களில் இளம் பெண்களை வெளியில்- அதாவது வயல் வெளிகளிற் போக விடமாட்டார்கள். பேய், பிசாசு பிடித்து 68)(5)штio!
அவனுக்குக் காரை தீவுக்குப் போனால் காரைதீவின் கடற்கரையும் பச்சைப் பசேல் என்ற வயல் வெளிகளும் உள்ளத்தைக் கவர்ந்து விடும்.
திருகோணமலைக் கடற்கரையையண்டிய வீட்டில் பிறந்துவளர்ந்தவள். காலையில் சூரியன் கடலுக்குள்ளால் பிறப்பெடுத்து தாய்மையின் துவாலைக்குள்ளாள் தலை தூக்கும் குழந்தைபோல் முகத்தில் சிவப்பு ரத்தைத்தைப் பூசிக் கொண்டு இளம் கதிரால் கடலலைகளை முத்தமிடும் காட்சி அற்புதம் அற்புதம்.
குழந்தையாய் இருக்கும் போது அவள் தாத்தாவுடன் அவளின் மெல்லிய பாதம் பதித்துக் கடற்கரையில் நடை போடுவாள் சாந்தி. மணலுக்குள் தங்களை மறைத்துக் கொள்ளும் நண்டுகளைத் தேடித் தோண்டி விட்டுத் தோல்வியால் அழும் சாந்தியைப் பார்த்து நகைப்பார் பல்லிழந்த அவள் தாத்தா.
மட்டக்களப்புக் காரைதீவில் அவள் பெரியம்மா ஆசிரியையாயிருந்ததால், கொழும்பில் வெள்ளவத்தையில் அவளின் மாமா எக்கவுண்டனாக இருந்தார்.

Page 20
வசந்தம் வந்து போய் விட்டது 30
விடுமுறையில் கொழும்புக்குப் போனால் வெள்ளவத்தைக் கடற்கரையும், மட்டக் களப்பு காரைதீவுக்குப் போனால் கடற்கரையும் மட்டுமல்லாமல் பச்சைப் பசேல் என்ற வயல்வெளிகளும், அவற்றில் வடு வைத்தாற்போல் கிடக்கும் சில குளம் குட்டைகளும் அந்த குளங்களில் முகம் சிரிக்கும் அல்லிமலர்களும் தாமரை மொட்டுக்களும் அவளை ஒரு கலாரசனையாக்கி விட்டது.
தம்பி குமார் அப்போது சிறு குழந்தை. அவனையும் இழுத்துக் கொண்டு கடல் அலைகளைப் பிடித்து விளையாட அவளுக்கு
ஆசை.
"என்ன காருக்கு வெளியால் கண்களைப் பறி கொடுத்து விட்டாயா’
அலிஸனின் குரல் அவளை இலங்கையிலிருந்து லண்டனுக்கு இழுத்து வந்தது.
அலிஸனின் தாய் தகப்பன் லண்டனுக்கு மிகவும் அருகில் இருக்கிறார்கள், அவள் ஒரு யூதப்பெண், டேவிட் ஒரு கத்தோலிக்க குடும்பத்திலிருந்து வந்தவன். ஆனால் கடவுளில் நம்பிக்கையில்லாதவன். குழந்தைகளை எந்தச் சமய அடிப்படையிலும் வளர்க்கவில்லை. ஆனாலும் குழந்தைகளுக்கு ஏதும் துன்பமென்றால் அலிஸனின் தாய் மூட்டை முடிச்சுகளுடன் மகளின் வீட்டுக்கு ஓடி வந்துவிடுவாள். தாய் வந்தால் டேவிட்டுக்கும் அலிஸனுக்கும் தர்க்கங்கள் இன்னும் கூடும். மாமியின் வருகையை அவன் பெரும்பாலும் வரவேற்பதில்லை. அகில உலகத்திலும் நடக்கும் பிரச்சினையா இது?
கார் ஓடிக் கொண்டிருந்தது. லண்டனையணுகியதும் வாகனங்களின் அதிகரிப்புக் கூடித் தெரிந்தது.
'அம்மாவும் அப்பாவும் இப்போது ஆஸ்பத்திரியில் இருப்பார்கள்' இது அலிஸன்.

31 ராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம்
“எப்போது எங்கள் குடும்பத்தில் வந்து நுழைவது என்று பார்த்துக் கொண்டிருப்பவர்களோடு இது ஒரு பெரிய சந்தர்ப்பம் இல்லையா' டேவிட்டின் குரலில் நக்கல்.
"குடும்பத்தைப் பாராமல் அவள் இவள் பின்னால் நீங்கள் சுற்றித் திரிந்தால் எனது தாய் தகப்பன் எனக்குத் துணையா இருக்கத்தானே வேணும்” அலிஸனின் சாட்டையடி.
"தயவு செய்து அடுத்த அண்டக்கிரவுன் ரெயின் ஸ்ரேசன் வரும்போது என்னை இறக்கி விடுகிறீர்களா?
இது எமிலியின் வேண்டுகோள். கார் ட்ரவிக் லைட்டில் நின்றது. எமிலி கதவைத்திறந்து ஓடிவிடுவாள் போலிருந்தது. எமிலியுடனும் அவன் 'சுற்றித் திரிந்தான்’ என்பது அலிஸனுக்குத் தெரிந்தால் என்ன செய்வாள்?
எமிலியின் பார்வை மழை பெய்யும் பாதையில் பதிந்திருக்க அவள் மனம் ஒரு வருடம் பின்னோக்கி ஓடியது.
எமிலியும் குழந்தை ரவியும் அப்போதுதான் செயின்ட் அல்போன்ஸ் என்ற நகருக்குக் குடியேறி வந்தார்கள். ஒரு காலத்தில் எமிலியின் பாட்டி செயின்ட் அல்பேன்ஸ் நகர்ப் புறத்திலுள்ள ஒரு கிராமத்தில் வாழ்ந்தவள். அப்போது ஐந்து வயது எமிலி சில வார விடுமுறைகளைப் பாட்டியுடன் இந்த நாட்டுப் புறத்தில் கழிப்பாள். எந்த நேரமும் ஆரவாரமான லண்டனை விட்டு நாட்டுப்புறச் சூழ்நிலையை ரசிப்பது அவனுக்குப் பிடித்ததாக இருந்தது.
தமயன் தம்பி, தமக்கை, தங்கை என்று ஒருத்தரும் இல்லாமற் தனியாகப் பிறந்தவள் எமிலி, எமிலியின் தாய் ஐயர்லாண்டைச் சேர்ந்த மிகவும் கட்டுப்பாடான கத்தோலிக்கப் பெண். லண்டனுக்குப் படிக்க வந்தபோது எமிலியின் தாயின் அழகில் மயங்கி அவளை மணந்து கொண்டார் மிகவும் வசதி படைத்த மிஸ்டர் ஸிம்சன்.

Page 21
வசந்தம் வந்து போய் விட்டது 32
உலகம் தெரியாத வயதில் ஏன் தாய் இரவில் தகப்பனுடன் ஏதோ தர்க்கப்பட்டு விம்முகிறாள் என்று புரியாமல் சில இரவுகளைத் தன் தனிமையான அறையில் கழிக்கும் எமிலிக்கு பாட்டியின் அன்பான அரவணைப்பு வாரவிடுமுறைகளில் மிகவும் இதமாக இருந்தது.
அதன் பிரதிபலிப்பு அவள் மனதில் படிந்திருக்க எத்தனையோ ஆண்டுகளுக்குப் பின் அவளுக்கென்று ஒரு வீடு வாங்க வசதி வந்ததும் செயின்ட் அல்பேன்சுக்குக் குடிவந்தாள் 6TSeS).
பாட்டியாள் உலகை விட்டுப் போய் எத்தனையோ வருடங்களாகி விட்டன. ஆனாலும் ப்ாட்டியை நினைத்துக் கொண்டால் வரும் ஆறுதலை எப்போதாவது காணலாம்
என்றுதான் வந்தாள்.
வந்து அடுத்த கிழமையில் ஒரு அடைமழை நேரத்தில் டேவிட்டுடன் ஸ்ரேசனில் மோதிய சந்திப்பு லண்டனில் அவனைத் தெருவிற் சந்தித்ததும் கோப்பி சாப்பிடும் பாருக்குப் போகுமளவுக்கு நீடித்தது.
அவன் செயின் அல்பேன்ஸில் வாழ்கிறான் என்றும் லண்டனில் ஒரு பிலிம் ஸ்டூடியோவில் எடிட்டராக இருப்பதாகவும் சொல்லிக் கொண்டான்.
தனக்கு ஒரு மகன் இருப்ப்தாகவும் தான் ஒரு பெண்கள் புத்தக சாலையில் பார்ட் ரைம் வேலையும் ஒரு கல்லூரியில் பார்ட் ரைம் ஆசிரியையாக இருப்பதாகவும் சொல்லிக் கொண்டாள் எமிலி.
'இரண்டு பார்ட் ரைம் வேலையுடன் குழந்தையையும் பார்ப்பது கஷ்டமில்லையா' லெமன் ட்ரிங்கை உறிஞ்சியபடி அவன் கேட்டான்.
'இதைவிட எத்தனையோ கஷ்டமான வேலைசெய்யும் பெண்களுடன் ஒப்பிடும்போது எனது வாழ்க்கை ஒன்றும்

33 ராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம்
பெரிதான கஷ்டமான வாழ்க்கையாகத் தெரியவில்லை. குழந்தையை நான் போகும் வரைக்கும் பார்த்துக் கொள்ள ஒரு நல்ல உதவி இருக்கிறது. அது ஒரு பெரிய காரியம்’ அவள் அவளுடைய நீல விழிகளைத் தாழ்த்தியபடி சொன்னாள்.
அடுத்த தரம் அவள் அவனைச் சந்தித்த போது அவன் அவள் மனதில் எரிமலையைக் கொட்டி விட்டான்!
கார் ஆஸ்பத்திரி வாசலில் நின்றது, சாந்தி விழுந்தடித்துக் கொண்டு கசுவல்டியை நோக்கி ஓடினாள். அவளைத் தொடர்ந்து எமிலியும் ஓடினாள். டேவிட்டும் அலிஸனும் குழந்தை சைமனைத் தூக்கிக் கொண்டு பின்னாற் சென்றார்கள்.
கசுவல்டி டிப்பார்ட்மென்ட் அல்லோலகல்லோலமாக இருந்தது. பாடசாலை ஆசிரியர்கள், பெற்றோர்கள், உள்ளூர் உறவினர்கள், பத்திரிகைக்காரர்கள், படப்பிடிப்பாளர்கள், T.V. றிப்போர்ட்டர்ஸ் எல்லோரும் சேர்ந்து திருவிழாக் கோலம் பூண்டிருந்தது கசுவல்டி.
மெடிகல் சுப்பிறீன்டன்ட் மேற்பார்வை செய்ய அவரின் உதவியாளர்கள் தாய் தகப்பனுக்கு அவர்களின் குழந்தைகளின் விபத்து பற்றிய விபரங்களைச் சொல்லிக் கொண்டிருந்தார்கள்.
சாந்திபதைபதைத்தாள். அவளின் மூத்த தமயன் சங்கர் வந்து தங்கையை அணைத்துக் கொண்டார்.
“ஒரு குழந்தையும் இறந்து போகவில்லையாம், ஆனால் சில குழந்தைகள் மிகவும் சீரியசான நிலையில் இருக்கிறார்களாம்" சங்கரின் குரல் தழுதழுத்தது. அவனின் ஒரே ஒரு தங்கை அவள்.
"அவர் வரவில்லையா' சங்கரின் கண்கள் மைத்துணரைத் தேடியது.
'இல்லை ஒவ்வீசில இல்லயாம், இப்ப ரேடியோ, டி.வி நியுஸ் கேட்டிருப்பார். இன்னும் கொஞ்ச நேரத்தில கட்டாயம் வருவார்’

Page 22
வசந்தம் வந்து போய்விட்டது 34
அவள் நம்பிக்கையுடன் சொன்னாள்.
இருவரும் போய் உஷாவின் நிலையை விசாரித்தார்கள். ஒரு நேர்ஸ் அவர்களை அழைத்துக் கொண்டு ஒரு சிறிய அறைக்குச் சென்றாள்.
சாந்தியின் இதயம் படபடத்தது. ஏதோ மிகவும் பயங்கரமாக நடந்து விட்டது. "கடவுளே என் குழந்தையைக் காப்பாற்று”.
கட்டிலில் இரத்தக் குவியலாகத் துவண்டு கிடக்கும் உருவமாக அவளின் மகள் உஷா?
பின்னேரம் நான்கு மணியாகி விட்டது. இப்போதுதான் உஷாவைத் தியேட்டருக்குக் கொண்டு போயிருக்கிறார்கள். தலையில் பலமான அடி. முதுகிலும் பலத்த காயம். நிறைய இரத்தம் போய் விட்டதாம்.
மூன்று பைந்த் இரத்தம் கொடுத்த பின் தியேட்டருக்குக் கொண்டு போகிறார்கள். பிழைப்பது ஐம்பது வீதம்தான் என்று
திட்டவட்டிமாகச் சொன்னார் டொக்டர்.
உயர்ந்து வளர்ந்திருந்த கம்பீரமான அந்த ஆங்கிலேய சேர்ஜன் அழுது வடிந்து கொண்டிருக்கும் இந்த ஆசியத் தாயை அன்போடு தடவிக் கொடுத்தபடி சொன்னார்.
'நீ அழுவதன் துயர் எனக்குத் தெரியும், ஆனாலும் என்னால் முடிந்ததை நான் செய்து உனக்கு உதவுவேன் என்பதையும் நீ நம்ப வேண்டும். தலையில் பெரிய காயம். இரத்தம் சில இடங்களில் கட்டி பட்டுமிருக்கலாம். இந்தச் சத்திர சிகிச்சை எத்தனை மணித்தியாலம் எடுக்கும் என்று எனக்குத் தெரியாது. அவ்வளவு நேரமும் நீ இந்த மூலையில் குந்திக் கொண்டிருந்து

35 ராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம்
அழப் போகிறாயா?
அவள் கேவிக் கேவியழுதாள். "உன்னுடன் யாருமில்லையா” "எனது தமயன் நிற்கிறார்’
"அவருடன் இரண்டு மணித்தியாலம் வெளியே போய் விட்டு வா. மழை விட்டு விட்டது. இந்த ஆபரேஷனுக்குப் பின் எத்தனை மாதம் உன் குழந்தையுடன் நீ ஆஸ்பத்திரியில் இருக்க நேரிடுமோ தெரியாது. இப்போதே மனத்தைத் திடமாக வைத்துக் கொள்'
டொக்டர் தன் டியுட்டியின் தோரணையில் சொல்லி முடித்தார்.
எமிலி தன்னால் முடிந்த மட்டும் தன் கண்ணிரைக் கட்டுப் படுத்திக் கொண்டாள். மகன் ரவிக்கு இடுப்பெலும்பு ஒடிந்து விட்டதாம். அதன் தாக்கத்தால் அவனுடைய சலப் பைகள் பாதிக்கப்பட்டிருக்கலாமாம். குழந்தையின் முகம் பேதலித்துக் காணப்பட்டது. அவன் உஷாவைப் போல் நினைவிழக்கவில்லை. எவ்வளவோ இரத்தம் போயும் இன்னும் மூச்சு இழைக்க ஒன்றிரண்டு வசனங்கள் பேசினான். அவனையும் சத்திர சிகிச்சை நிலையத்துக்குக் கொண்டு போகப் போகிறார்கள்.
"அம்மா நாங்கள் சொன்னபடி பஸ்ஸில் குழப்படி செய்யாமற்தான் இருந்தோம். ஆனால் ஒரு பெரிய லொறி, எதிர்மாறாக வந்த லொறி எங்கள் பஸ்ஸில் மோதி விட்டது. பாவம் உஷா, செத்துப்போய் விட்டாளா?’ குழந்தையின் குரல் மிகவும் பரிதாபமாக இருந்தது.
ரவி தேம்பித் தேம்பியழுதான்.
"இல்லைடா கண்ணே. அவள் மிகவும் ஸிரியசான நிலையில் இருக்கிறாள். கடவுள் அவளைக் காப்பாற்றி விடுவார்."

Page 23
வசந்தம் வந்துபோய்விட்டது 36
"பீட்டர் எப்படியிருக்கிறான்”
"அவனின் கால்கள் இரண்டும் உடைந்து விட்டன. அதை விட பெரிதாக ஒன்றும் இல்லை." அவள் எப்படிச் சொல்வது உஷாவின் காயம் மூளையைப் பாதிக்கும் என்றும், ரவியின் காயம் கிட்னிகளைச் சேதப்படுத்தும் என்றும் இந்தப் பிஞ்சு மனத்தில் பதிக்கத்தான் வேண்டுமா?
"சொறி அம்மா, உன்னை இன்று வேலைக்குப் போகாமற் பண்ணி விட்டேனே' ரவி வழக்கம்போல் பெரிய மனிதத் தனத்துடன் சொன்னான்.
"யோசிக்காதேடா கண்ணே உனக்காக நான் வேலையை விட்டு விட்டு வாழ்க்கை முழுக்க உன்னருகில் இருப்பேன்."
குழந்தை தாயை உற்றுப் பார்த்தான். என்ன சிந்தனை அவன் மனதில் ஒடும்?
இந்த டிப்பார்ட்மெண்ட் முழுதும் இன்று தாய், தகப்பன், பாட்டி, பாட்டன்களாக நிறைந்திருக்கிறார்கள், எனக்கு மட்டும் அம்மா ஒருத்திதான் நிற்கிறாள் என்று நினைக்கிறானா?
"அம்மா." குழந்தை ஏதோ சொல்லத் தயங்கினான். "என்னடா கண்ணே' "ரவியின் மெளனம் அவளைப் பிழிந்தது. “என்ன செல்வமே என்ன சொல்லப் போகிறாய்”
"கேட்டாற் கோபிக்க மாட்டீர்களே’
‘.’ அவளுக்கு அழுவதாசிரிப்பதா என்று தெரியவில்லை. அந்த நிமிடம் அவன் இவளின் உயிரைக் கேட்டாலும் கொடுக்கத் தயார்.
'அம்மா. தாத்தாவுக்கு நான் ஹொஸ்பிட்டலில்

37 ராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம்
இருப்பதைச் சொல்வீர்களா’ அவள் திடுக்கிட்டாள். “எனக்குத்தான் அப்பா இல்லையே. இருக்கிற தாத்தாவைக் கூட என்னை வந்து பார்க்கச் சொல்ல மாட்டீர்களா? ரவியின் குரலிற்தான் எத்தனை சோகம். தனக்குத் தகப்பன் இல்லை என்பதை எத்தனை சோகத்துடன் புதைத்து வைத்திருக்கிறான்.
"மகனே." அவளால் கண்ணிரை அடக்க முடியவில்லை. குலுங்கிக் குலுங்கியழுதாள்.
அலிஸனின் தாய் தகப்பன், சொந்தக்காரர்கள் எல்லாம் பட்டாளமாக வந்திருந்தார்கள். பீட்டர் உடைந்த காலின் வேதனையில் ஓவென்று அழுது கொண்டிருந்தான்.
சாதாரணமாகவே பீட்டர் ஒரு அழுமூஞ்சி. தாய் ஒரு அவசரக்காரி, மகன் ஒரு அழுமூஞ்சி. பாடசாலைக் குழந்தைகளின் அழுகை, முனகல்களுக்குள் அவன் முனகல் எல்லாச் சத்தத்தையும் விட உரத்துக் கேட்டது.
டேவிட் மகனை அணைத்தபடி ஆறுதல் சொல்லிக் கொண்டிருந்தான். 'இந்தக் காலத்து ரீச்சர்ஸ்சுக்கு நாங்கள் புத்திமதி சொல்ல வேண்டிக் கிடக்கு, இந்தக் கால நேரத்தில் யாரும் பிள்ளைகளை உல்லாசப் பிரயாணம் கொண்டு போவார்களா?’ அலிஸன் கேள்வி மேல் கேள்வி கேட்டுக் கொண்டிருந்தாள்.
'அலிஸன், குழந்தைகளைச் சமர் காலத்தில் கூட்டிக் கொண்டு போகாமல் எப்போது கூட்டிக் கொண்டு போவார்கள்? மழையும் காற்றும் எப்பபோதும்தான் வரும். வின்ரர் என்றால் என்ன சமர் என்றால் என்ன இயற்கையைத் தவிர்க்க முடியுமா”
பாவம் டேவிட் மனைவிக்காக மற்றவர்களிடம் மன்னிப்புக்
கேட்கும் தோரணையிற் சொன்னான்.
அலிஸனின் பார்வை தூரத்தில் நிற்கும் சாந்தியிடம் பறந்தது

Page 24
வசந்தம் வந்து போய் விட்டது 38
'பாவம் சாந்தி, அவள் கணவன் இன்னும் வரவில்லை. எப்போது பார்த்தாலும் என் கணவரைப் போல் ஒருத்தரும் உலகில் இல்லை என்று புழுகிக் கொண்டிருப்பாள், இப்போதுதான் தெரிகிறது புழுகும் பொய்யும், இந்த நேரத்தில் அருகில் இருக்காத புருஷன் ஒரு மனிதன்தானா?”
எமிலிக்கு அலிஸனின் வார்த்தைகளைக் கேட்க ஆத்திரத்தில் உடம்பெல்லாம் நடுங்கியது.
இந்த அலிஸன் வாய் திறந்தால் நச்சுப் பொய்மை பெருக்கெடுக்குமா?
தன்னுடைய கணவனை எந்த நேரமும் மட்டம் தட்டுவதுபோல் மற்றவர்களையும் மட்டம் தட்டத் தொடங்கி விட்டாளே?
ராஜனுக்கு என்ன பிரச்சினையோ, டெலிபோனில் கதைக்க முடியவில்லை என்று சாந்தி சொன்னாள். அவன் அவசர வேலையாய் வெளியில் போயிருந்தால் TV நியுஸ் அல்லது ரேடியோ நியுசும் கேட்டிருக்க முடியாது. அதை வைத்துக் கொண்டு ராஜன் ஒரு அனுதாபமில்லாத தகப்பன் என்று முடிவு கட்டலாமா?
சாந்திக்கு அலிஸன் சொல்லும் வார்த்தைகளைக் கேட்டால் எப்படியிருக்கும்?
'அலிஸன், சாந்திக்கு நீ சொல்வது கேட்டால் மிகவும் துன்பமாக இருக்கும் என்று நினைக்கிறேன்"
எமிலியின் குரலின் கடினம் டேவிட்டுக்கு விளங்கியது. சங்கரும் சாந்தியும் ஒப்பரேஷன் தியேட்டர் வரைக்கும் சென்றார்கள்.
'ஒப்பரேஷன் முடிய மணிக் கணக்காக எடுக்கும் என்று டொக்டர் சொன்னார். நீ காலையிலிருந்து சாப்பிடாமலிருக் கிறாய், வெளியிற் போய் ஏதாவது குடிக்கலாம்' சங்கர்

39 ராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம்
பாசத்துடன் சொன்னான்.
'அண்ணா தயவு செய்து என்னை வற்புறுத்த வேண்டாம் எனது நிலையில் என் தொண்டைக்குள் ஒரு துளி தண்ணிரும் இறங்காது."
அவள் தமயனை ஏக்கத்துடன் பார்த்தபடி சொன்னாள்.
"அண்ணா நீங்கள் என்னுடன் ஒரேயடியாக நிற்க முடியாது. நீங்கள் வீட்டுக்கு போங்கள். அவர் எப்படியும் உடனே வந்து விடுவார். ஒவ்வீசில் மேஸேஜ் வைத்திருக்கிறேன்’
"என்ன சொல்கிறாய்? உன்னைத்தனியே விட்டுவிட்டு நான் தனியாகப் போவதா’ சங்கர் உரிமையுடன் கேட்டான்.
எமிலி மகன் ரவியையும் இப்போது ஸ்ரெச்சர் வண்டியில் வைத்து ஆபரேசன் தியேட்டருக்குக் கொண்டு சென்றார்கள்.
"தாத்தாவுக்குப் போன் பண்ணச் சொல்லி ரவி சொல்கிறான்’ தனக்குத் தானே சொல்லிக் கொள்வது போல் சாந்திக்குச் சொன்னாள் எமிலி.
எமிலியின் தகப்பனுக்கு எமிலி ஒரு ஆசியனிடம் உறவு கொண்டது பிடிக்கவில்லை. இங்கிலாந்து முழுதும் படித்த வசதி படைத்த எத்தனையோ ஆங்கிலேய வாலிபர்கள் இருக்கும்போது ஏன் தனது மகள் தற்காலிகமாக லண்டனுக்கு வந்த ஒரு தமிழனிடம் தன் வாரிசை வாங்கிக் கொண்டாள் என்று அவரால் விளங்க முடியாமலிருந்தது.
பரம்பரையாகவே ஆங்கிலேய சாம்ராச்சியத்தின் பிரதிநிதியாக உலகமெல்லாம் சென்ற ஆங்கிலேயர்களின் பரம்பரையில் வந்தவர் மிஸ்டர் ஸிம்சன்.
அவரிடம் உள்ள எத்தனையோ அகங்காரமான குணங்களில் எமிலிக்குப் பிடிக்காத எத்தனையோ குணங்கள் இருந்தன. அதன் பிரதிபலிப்பாக அவருக்கெதிராக எத்தனையோ விடயங்களைச் செய்தாள் என்று அவர் நினைத்தார்.

Page 25
வசந்தம் வந்து போய்விட்டது 40
ஆனந்துடன் அவள் வைத்திருந்த தொடர்பை அடியோடு வெறுத்தார் சிம்ஸன். அதன் பிரதிபலிப்பு தகப்பன் மகள் உறவைத் துண்டு படுத்தி விட்டது.
'பாவம் ரவி, பெரும்பாலான குழந்தைகள் அம்மா அப்பாக்களுடனிருக்கும் போது ரவிக்கும் அந்த உணர்வு வரும்தானே’ சாந்தி தன் சினேகிதியை ஆறுதல் படுத்தச் சொன்னாள்.
"தகப்பன்கள் என்ற பெயரில் உப்புச் சப்பில்லாமல் சில மனிதர்கள் உறவைத் தொடர்கிறார்கள் என்று உணர்ந்து கொள்ள முடியாத வயது ரவிக்கு. அவனது தகப்பன் வித்தியாசமானவன். ஆனால் அந்தத் தகப்பனுடன் வாழும் நிலை ரவிக்கில்லை. அந்தக் குறையைத் தீர்க்க நான் எத்தனையோ தரம் முயன்று பார்த்திருக்கிறேன். ஆனாலும் சில வேளைகளில் எனது அப்பா எங்கேயிருக்கிறார்? எப்படியிருக்கிறார்? என்னைப் பார்க்க ஏன் வரமாட்டேன் என்கிறார் என்றெல்லாம். அவன் கேட்காமலில்லை”
எமிலி தன்னைப் பற்றி அதிகம் சொல்லிக் கொள்ளாதவள். சாந்தியும் தூண்டித் துருவி ஒன்றையும் கேட்பதில்லை. சந்தர்ப்பம் வரும்போது அவளாகச் சொல்வாள் என்று நினைப்பாள்.
மழை நின்று விட்டது. வானம் வெறித்து சூரியன் இப்போதுதான் சோம்பல் முறித்தெழுந்துக் கொண்டு எழும்பும் கணவன்போல் மேகத்திரையை நீக்கிவிட்டு எட்டிப் பார்த்தான்.
சங்கர் எத்தனையோ சொல்லியும் சாந்தி தான் இருந்தவிடத்தை விட்டு நகர மாட்டேன் என்று சொல்லி விட்டாள். 'நீங்கள் போய் ஏதாவது வாங்கிக் கொண்டு வாருங்கள்’ தமயனிடம் சொன்னாள் சாந்தி.
அரைகுறை மனத்துடன் சங்கர் தெருவைக் கடந்தான். தெருவெல்லாம் இன்னும் மழையின் கொடுமை தெரிந்தது.

4. ராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம்
அங்கும் இங்குமாகப் படிந்து கிடக்கும் நீர்க் குட்டைகளைக் கடந்து செல்லும் கார்கள் வருவோர் போவோரில் நீர் இறைத்துச் சென்றன.
“என்ன, உஷாவின் நிலைபற்றி டொக்டர் என்ன சொன்னார்’ எமிலி சினேகிதியை அன்புடன் கேட்டாள்.
"தலையிற் பெரிய அடி, உணர்வில்லாமல் இருக்கிறாள். அத்துடன் முதுகிலும் பெலத்த தாக்கம், எப்படி அவள் நிலை சீரடையுமென்பது தங்களால் சொல்ல முடியாது என்று டொக்டர்கள் சொன்னார்கள்.”
“லண்டனிலுள்ள மிகவும் பிரசித்தி பெற்ற ஹொஸ்பிட்டல் இது. எங்கள் குழந்தைகள் சரியான இடத்தில் தானிருக்கிறார்கள் என்று நம்புகிறேன்’
வாழ்க்கையை எதிர்த்துப் போராடப் பழகியவள் எமிலி. இந்த மாதிரியான கட்டங்களில் நிலைகுலையாமலிருக்கப் பழகியிருக்கிறாள். சாந்தியின் மனமே அலைகடலில் சிறுபடகாய்த் தழும்பிக் கொண்டிருந்தது.
இன்னும் கொஞ்ச நேரத்தில் பின்னேரம் ஐந்து மணியாகும். அதன்பின் ராஜன் வீட்டுக்குப் போக ஆயத்தம் செய்வான்.
சாந்தி சட்டென்று எழும்பினாள் 'எமிலி அண்ணா வந்தால் நான் இவரின் ஒவ்லீஸ் பக்கம் போய்விட்டேன் என்று சொல்’
எமிலியின் மறுமொழியை எதிர்பார்க்காமல் சாந்தி தெருவைக் கடந்தாள். ராஜனின் ஒவ்வீசுக்கு ஒன்றிரண்டுதரம் வந்திருக்கிறாள். எப்போதும் காரிற்தான் வந்திருக்கிறாள். இப்போது அண்டர் கிரவுண்ட் ரெயின் எடுத்துக் கொண்டு போவது கொஞ்சம் யோசிக்க வேண்டிய விடயமாக இருந்தது.
டாக்ஸியில் போவதானால் எவ்வளவு முடியும்? நல்ல காலம் கையில் கிரடிட் கார்ட் இருப்பது. தெருவைக் கடந்து காஷ் பொயின்டடில் கொஞ்சப் பணம் எடுத்துக் கொண்டாள்.

Page 26
வசந்தம் வந்து போய் விட்டது 42
டாக்ஸி ஒவ்வீஸ் நோக்கி ஓடிக் கொண்டிருந்தது. உஷாவை ஒபரேஷன் தியேட்டராற் கொண்டு வரும்போது அவளால் தனிமையாக எதையும் கிரகிக்க முடியாது. அவசர அவசரமாகக் கண்களைத் துடைத்துக் கொண்டாள்.
டாக்ஸி ஒவ்வீசின் எதிர்ப்பக்கத்தில் நிற்கவும் ராஜன் ஒவ்வீசை விட்டு வெளியே வரவும் சரியாக இருந்தது.
யார் அவனை ஒட்டியபடி வரும் ஆங்கிலேயப் பெண்மணி? அவனை மிகவும் உரிமையுடன் தொட்டுப் பேசுகிறாளே யாரிது? புதிய ஹிசப்சனிஸ்ட் சாந்திக்குத் தெரிந்தவள். இந்தப் பெண் றிஸப்சனிஸ்ட் இல்லையே?
4.
ராஜன் வீட்டை விட்டு வெளிக்கிட்ட நேரத்திலிருந்து அதிசயமான விடயங்களை எதிர்நோக்க வேண்டியிருந்தது. ராஜன் (நடராஜன்) அவனுடைய பதினெட்டாவது வயதில் லண்டனுக்கு வந்தவன்.
இலங்கையில் எழுபத்தி ஏழாம் ஆண்டுக் கலவரத்தில் இலங்கைத் தமிழர்கள் மிருகமாக வேட்டையாடப் பட்டபோது ஆங்கிலம் படித்த தமிழர்களில் பலர் ஆயிரக் கணக்காக ஊரை விட்டு ஓடிவிட்டார்கள்.
கொழும்பில் வசதியான குடும்பத்தில் பிறந்த ராஜனின் மேற்படிப்பை லண்டனிற் தொடரலாம் என்று அவன் தமக்கை எழுதியிருந்தாள்.
ஒரு சில வருடங்களுக்கு முன் ராஜனின் தமக்கை பிரமிளா கணவருடன் இங்கிலாந்து வந்திருந்தாள். கணவரும் மனைவியும் டொக்டர்கள். மிகவும் கவனமாகத் தங்கள் குடும்பத்தைப் பார்ப்பவர்கள்.
இனி இலங்கையில் தமிழர் நிம்மதியாக வாழ முடியாது என்று

43 ராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம்
முடிவு கட்டிய பலரில் நடராஜனின் குடும்பமும் ஒன்று.
எண்பதாம் ஆண்டில் - பதினெட்டாவது வயதில் லண்டன் மாநகரிற் காலடி எடுத்து வைத்தான் ராஜன்.
கொழும்பில் எத்தனையோ சாதிகளுடன் வாழ்ந்திருந்தாலும் லண்டனுக்கு வந்ததும் உலகத்து இனங்களில் அத்தனை முகத்தையும் சந்திப்பது அவனுக்குப் பிரமையாயிருந்தது. தமக்கையின் கட்டளைப்படி படிப்பில் கண்ணும் கருத்தும் செலுத்தினான் ராஜன்.
சென்ரல் லண்டன் கொலிச் ஒன்றில் ‘ஏ’ லெவலை முடித்துக் கொண்டு யூனிவர்சிட்டிக்கு இருபதாவது வயதிற்காலடி எடுத்து வைத்ததும் தமக்கையும் மைத்துனரும் ஸ்கொட்லண்ட் போய் விட்டார்கள்.
லண்டன் யூனிவர்சிட்டிகளில் ஒன்றிரண்டு தமிழ் மாணவர்களின் உறவும், பலதரப்பட்ட மறுசாதியினரின் உறவும் ராஜனின் உலகை விரியப் பண்ணியது.
“என்ன செய்தாலும் வெள்ளைக்காரியை மட்டும் பார்த்துவிடாதே" மைத்துனர் எத்தனையோ தரம் எச்சரித்திருக்கிறார்.
"கெதியாயப் படிப்பை முடித்து விட்டு ஊரிற் போய் நல்ல வசதியான பெட்டை ஒன்றைப்பார்’ தமக்கையின் அறிவுரை இது.
ஆங்கிலேயர்களைப் பற்றி அவ்வளவு பயமிருந்தால் - அல்லது அருவருப்பிருந்தால் ஏன் லண்டனுக்கு ஆசிய நாட்டுப் படித்த மனிதர்களிற் பலர் பதறி அடித்துக் கொண்டு வருகிறார்களாம்?
'ஏய் பாக்கி ஏன் எங்கள் நாட்டை நாற்றம் செய்ய வந்தாய்” ஒரு மொட்டைத் தலை ஆங்கில வாலிபனை ராஜனின் முக்த்திற் காறித் துப்பினான்.

Page 27
வசந்தம் வந்துபோய்விட்டது 44
மாலை மயங்கிய நேரம். உலகம் பனிமழையில் நனைந்து கொண்டிருந்தது. வீதியிலுள்ள மனிதர்கள் விழுந்தடித்துக் கொண்டு தங்கள் வீடுகளுக்கோ அல்லது விடுதிகளுக்கோ விரைந்து கொண்டிருந்தார்கள். 1984 ம் ஆண்டில் திரும்பிய இடமெல்லாம் ஆங்கிலேயப் பிச்சைக்காரர். 65 நீட்டிப்பிழைக்காத காலமது. ஒருத்தன் ராஜனை ஒரு பந்துபோல் உதைத்தான். அடுத்தவன் நெஞ்சில் ஏறி மிதித்தான். இன்னொருத்தன் இவர்களின் செய்கையைப் பார்த்து ரசித்தான். "ஐயோ எனது சக மாணவர்களைக் கொலை செய்கிறார்களே’ ஸேரா வில்ஸன் கூக்குரல் போட்டிருக்காவிட்டால் அவன் அன்று கொலை செய்யப்பட்டிருக்கலாம்.
"இனம் தெரியாத ஒரு ஆசிய மாணவனின் உடல் லண்டன் யூனிவர்சிட்டியருகில்’ கண்டெடுக்கப் பட்டது என்று அடுத்த நாள் லண்டன் பத்திரிகைகளில் செய்தி வந்திருக்கலாம்.
இந்த ஆசிய மாணவனைக் கொலை செய்தவர்களை இன்னும் கண்டுபிடிக்க முடியவில்லை என்று ஆறுமாத காலத்தின் பின் பொலிஸார் அறிக்கை விட்டிருக்கலாம்.
உலகம் மங்கிய வேளையில் உணர்வு இழந்து கொண்டிருக்கும் வேளையில் ஸேரா வில்ஸனின் கருணிை முகம் தெய்வீகமாகத் தெரிந்தது.
"எனது இனத்தவர்கள் செய்த கொடுமைக்காக உன்னிடம் மன்னிப்புக் கேட்கிறேன்" அவள் கலவரத்துடன் சொல்லிய அந்த வார்த்தைகள் எங்கேயோ கிணற்றுக்குள் கேட்பது போலிருந்தது.
அடுத்த நாள் ஆஸ்பத்திரியில் கண்விழித்தபோது அவனது கல்லூரிப் பேராசிரியர்களும் அவளும் அவனுடைய சினேகிதர்களும் கட்டிலைச் சுற்றியிருந்தனர். “ஸேரா சரியான நேரத்தில் உன்னைக் காப்பாற்றியிருக்கா விட்டால் என்ன நடந்திருக்குமோ தெரியாது’ பேராசிரியர் தங்கள் நன்றியைச் ஸேராவுக்குச் சொன்னார்கள்.

45 ராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம்
ஸேராவை யூனிவர்சிட்டி மாணவர் மண்டபத்தில் எத்தனையோ தரம் கண்டிருக்கிறான் ராஜன். அவன் சட்டப் படிப்பு டிப்பார்ட்மெண்ட் அவள் கல்லூரியின் அடுத்த கட்டிடத்திலுள்ள பைன் ஆர்ட் டிப்பார்ட்மெண்ட்டில் படிக்கிறாள்.
மூன்றாம் வருட மாணவர்களின் கலாச்சாரக் கண்காட்சி நடந்தபோது ஸேராவின் ஒவியங்கள் எத்தனையோ பேரின் பாராட்டைப் பெற்றது. modern artist ஆகப் பிரபலம் எடுக்கப் போகிறாள் என்று எத்தனையோ பேர் அவர்களைப் புழுகியிருக்கிறார்கள்.
"என்னைக் காப்பாற்றியதற்கு மிகவும் நன்றி' அவன் முனகிய படி சொன்னான். அவள் சிரிப்பு அவன் வீட்டு மல்லிகையை ஞாபகப் படுத்தின.
அவளின் பச்சை கலந்த கறுப்புக் கண்கள் எகிப்திய பூனைச்
சிற்பத்தின் அதியற்புத சக்தியை ஞாபகப் படுத்தின. நீண்ட கூந்தல் பனியற்ற மேகத்தில் படம் போடும் மேகக் கூட்டத்தை
மனத்தில் வரைந்தது.
கண்ணியமான அந்தப் பார்வை அவளிடம் ஒரு பிடிப்பை ஏற்படுத்தி விட்டது.
அடுத்த நாள் தமக்கையும் மைத்துனரும் ஸ்கொட்லாந்திலிருந்து ஓடோடி வந்தனர். அன்றைக்கு ஸேரா நிறைய சிவப்பு ரோஜாக்களுடன் ராஜனைப் பார்க்க வந்திருந்தாள்.
"யாரிந்தப் பெண்” பிரமிளாவின் கண்களிற் சந்தேகம், "எனது யூனிவர்சிட்டியில் பைன் ஆர்ட் பட்டப் படிப்பை படித்துக் கொண்டிருக்கிறாள்."
"ஏன் கண்டவர்களெல்லாருடனும் கதை வைத்துக் கொண்டிருக்கிறாய்"

Page 28
வசந்தம் வத்து போய் விட்டது 46
"அவள் கண்டவள் யாரோ இல்லை. கயவர்களிடமிருந்து என் உயிரைக் காப்பாற்றியவள்’
'சரி சரி டிஸ்சார்ஜ் பண்ணி விட்டு வீட்டுக்கு வா. ஹொஸ்பிட்டலில் இருக்க வேண்டும் என்று ஒன்றுமில்லை’
தலைக் கட்டுடன் ஸ்கொட்லாண்ட் போய்ச் சேர்ந்தான் ராஜன்.
அக்காவின் மனப்போக்கை அவன் அறிவான். லண்டனுக்கு வந்த நாளிலிருந்து 'ஒரு நல்ல தமிழனாக வாழ வேண்டுமென்று சொல்லிக் கொண்டேயிருக்கிறாள்.
எங்கள் ‘கலாச்சாரத்தைப் பேண வேண்டும் என்று சொல்லிக் கொண்டிருக்கிறாள். கொழும்பில் இருக்கும்போது பக்கத்து வீட்டு பறங்கியர்களுடனும் முன் வீட்டு முஸ்லிம்களுடனும் ஆங்கிலத்தில் பேசியவள், பின் வீட்டுப் பெண்மணிக்குச் சிங்களம் தவிர ஒரு மொழியும் தெரியாதென்ற படியால் புன்முறுவலைத் தவிர ஒரு சொற்களையும் பரிமாறிக் கொள்ளாதவள்.
77ம் ஆண்டுக் கலவரத்தில் தமிழர்களுக்கு உதவி செய்தால் தங்களுக்கும் அடிவிழும் என்று பயந்தார் பறங்கியர்கள், முஸ்லீம்கள். இவர்களை உடனடியாக வீட்டைக் காலி செய்து விட்டு யாழ்ப்பாணம் போய் உயிரைக் காப்பாற்றச் சொல்லப் புத்திமதி சொன்னார்.
பின் வீட்டு மிஸ்டர் ஜெயசிங்கா இவர்களைத் தன் வீட்டுக் கழைத்துச் சென்று பாதுகாத்தார்.
மற்ற மனிதர்களுடன் கலந்து பழகாமல் அவர்களின் மொழி, கலை, கலாச்சாரங்களை உணர்ந்து கொள்ளாமல் 'தமிழ்ச் சுயமை என்ற குறுகிய உலகத்துக்குள் வாழ்வதுதான் கலாச்சாரம் என்பது டொக்டர் பட்டம் பெற்ற அக்காவின் கருத்து.
மெடிகல் கொலிச்சில் உடம்பை வெட்டி, உதிரத்தைப் பரிசோதித்து, நிணநீரின் கெமிக்கல் தன்மையை ஆராய்ந்த

47 ராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம்
பிரமிளாவுக்கு இந்த உலகில் கடவுளாற் படைக்கப்பட்ட மனித இனத்தின் பல தரப்பட்ட நிறம், கலை, மொழி, கலாச்சாரத்தின் பரிமாணங்களை யறிந்து கொள்ள அக்கறையில்லை.
ஸ்கொட்லாந் போயிருந்தபோது அவன் அக்கா நினைத்ததுபோல் 'குழந்தையல்ல." அவனுக்கு வயது இருபத்தி மூன்று. மூன்றாம் வருட சட்டப் படிப்பு மாணவன். சட்டக் கல்லூரியில் இதுவரை 'ஆசிய மாணவர்களுடன் மட்டும் பிணைத்துக் கொண்டிருந்தான்.
இப்போது தனது வயது வளர வளர அறிவின் பல்வேறு பரிமாணங்களையும் அனுபவ ரீதியாக ஆராய முற்பட்டான். எதையும் பற்றித் தீவிரமாக ஆராயும் மனம் அவனுக்கு இயற்கையாகவே இருந்தது.
அக்காவின் 'குறுகிய எல்லைக்கப்பால் மனிதர்களுடன் உறவு வைத்துக் கொள்ளலாம். சினேகிதமாக இருக்கலாம், ஆத்மீகமான அன்பின் வளர்ச்சிக்கு இந்த உறவுகள் தேவை, இன்றியமையாதது என்று அவனுக்குத் தெரியும்.
தலையிற் பட்ட காயம் ஆறியபோது மனத்தில் பல வடுக்கள் தோன்றின. அக்கா போன்றோரின் சமூகப் பார்வைக்குப் பின்னால் படிந்திருக்கும் காரணங்கள் சுயநலத்தின் அடிப்படையில் வளர்ந்தது என்று தெரியும்.
தன்னால் லண்டனுக்கு வரவழைக்கப்பட்ட தம்பி தன்னுடைய சொற் கேட்டுத் தன்னைத் திருப்திப் படுத்துவதையே பிரமிளா விரும்புகிறாள் என்று அவனுக்குத் தெரியாததல்ல.
லண்டனிற் படித்தாலும் கலை கலாச்சாரங்களை மறத்தல் கூடாது என்று அடிக்கடி அவள் சொல்வது ஏன் என்றும் விளங்கியது.
‘ராஜன் இளம் வயதில் எத்தனையோ யோசனைகள் வரத்தான் செய்யும், அனுபவிக்கிற காலத்தில் அனுபவிக்கத்தான்

Page 29
வசந்தம் வந்து போய் விட்டது 48
தோணும். சேறு கண்ட இடத்தில மிதி, தண்ணிர் கண்ட இடத்தில கழுவு என்று ஆண்களுக்கு ஏன் சொல்லப் பட்டிருக்கிறது என்றால் ஆண்கள் உணர்ச்சிகளை அடக்க முடியாதவர்கள். அவர்கள் தற்செயலாக விடும் தவறுகளை உலகம் கண்டும் காணாததுமாக இருக்க வேண்டும் என்பதற்காகத்தான்’ பிரமிளாவின் கணவரின் இந்தச் சொல் அவனுக்கு அருவருப்பையுண்டாக்கின. 'இப்படி எளிய குணமுள்ள மனிதன் என்னவென்று ஒரு நோயாளிப் பெண்ணைப் பாரபட்சமற்ற கண்ணோடு பார்ப்பான்' அவன் தனக்குத் தானே கேட்டுக் கொண்டான்.
யூனிவர்சிட்டி தொடங்கியபோது ஸேரா வில்ஸன் அவளது ஆர்ட் எக்ஸிபிஷனுக்கு ஓடி ஒடி வேலை செய்து கொண்டிருந்தாள்.
அவளுடன் நெருங்கிப் பழகாதே என்று தமக்கை பிரமிளா சொன்னதும் ஞாபகம் வந்தது.
ஆனால் ஸேராவுக்கோ யாருடனும் நெருங்கிப் பழக நேரமிருக்கவில்லை. இவன் தன்னை விட்டுத் தூர நிற்கிறான் என்பதையும் அவள் கண்டு கொள்ள நேரமில்லை.
ராஜன் வீட்டுக்கு வரவும் டெலிபோன் அடிக்கவும் சரியாயிருந்தது.
"என்ன ராஜன் இன்னும் ஆஸ்பத்திரிக்கு வராமல் வீட்டில் நிற்கிறீர்கள்’ சங்கரின் குரலிற் தெரிந்த பதட்டம் ராஜனுக்கு விளங்கவில்லை.
"ஆஸ்பத்திரிக்கா ஏன்’
'அட கடவுளே, இன்டைக்கு ரேடியோ, டெலிவிஷன் ஒன்றுமே கேட்கவில்லையா'

49 ராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம்
- - - - - - - ’ ராஜனுக்குப் பேச்சே வரவில்லை.
‘ராஜன், உஷாவும் மற்றக் குழந்தைகளும் போய்க் கொண்டிருந்த பஸ் வண்டி ஒரு லொறியில் மோதிக் குழந்தைகளுக்குப் பலத்த காயம். மத்தியானத்திலிருந்து உங்களைக் கண்டுபிடிக்கத் தேடிக் கொண்டிருக்கிறோம். சாந்தி உங்களைத் தேடி ஒவ்வீசுக்கு வந்தாளே அவள் இப்போது எங்கே’’
ராஜனுக்கு எல்லாம் திகைப்பாக இருந்தது. தனது வாழ்க்கையில் இன்றைக்கு ஒரு மறக்க முடியாத நாள் என்பது காலையில் ஒன்பது மணிக்குச் ஸேராவை அண்டர்கிரவுண்ட் ரெயினிற் சந்தித்த போது தெரிந்தது.
அந்தச் சந்திப்பை எப்படிச் சாந்திக்குச் சொல்வது என்று அவனுக்குத் தெரியாது என்று திண்டாடிக் கொண்டு வீட்டுக்கு வந்தபோது இன்னும் ஏதோ அதிர்ச்சிகள் காத்திருக்கின்றனவே.
'உஷாக் கண்ணுக்கு என்ன காயமோ' அவன் மனம் பதறியது. சாந்தி ஒவ்வீசுக்கு என்னைத் தேடி வந்தாளாமே எத்தனை மணிக்கு வந்திருப்பாள்? ஸேராவுடன் என்னைப் பார்த்திருப்பாளா? புதிதாக வேலைக்கு வந்திருக்கும் றிஸ்ப்ஸனிஸ்ட் என்ன சொல்லியிருப்பாள்? காலையில் வேலைக்கு வந்த அடுத்த கணமே அவர் யாரோ ஒரு பெண்ணுடன் வெளியில் போய் விட்டார் என்று சொல்லியிருப்பாளா?
அவனுக்குக் கையும் ஒடவில்லை. காலும் ஓடவில்லை. பத்து வருடத் திருமண வாழ்வில் உல்லாசமாய்ப் போய்க்கொண்டிருந்த படகு இப்போது இருட்டில், மழையில், இடியில் அகப்பட்டு ஏதோ ஒரு பெரும் பாறையில் சிக்கி உடைபட்டுச் சிதறுவதை அவன் மனம் படம் போட்டது. 'எனது குழந்தை உஷா விபத்தில் அகப்பட்டு உணர்வற்று ஆஸ்பத்திரியிற் கிடக்கிறாள். நானோ எனது பழைய வாழ்க்கையின் சிக்கலில் மாட்டுப் பட்டிருக்கிறேன்' ராஜனின்

Page 30
வசந்தம் வந்து போய்விட்டது 50
கார் அதி விரைவாக லண்டன் நோக்கி ஓடிக் கொண்டிருந்தது.
வழக்கமாக அவன் காரை ஸ்ரேசன் பக்கத்தில் பார்க் பண்ணி விட்டு ரெயினில் லண்டனுக்குப் போவான். பெரும்பாலான நகர்ப்புற வாசிகள் அப்படித்தான் செய்வார்கள்.
வீட்டுக்கு வந்ததும் வழக்கமாக அப்பா ன்ேறு அழைத்துக் கொண்டோடி வரும் அருமைமகள் உஷாவின் குரல் கேட்கவில்லை. பசியோடு வரும் கணவனுக்கு ருசிக்க ருசிக்கச் சமைத்து வைத்திருக்கும் சாந்தியின் சிரித்த முகம் வரவேற்கவில்லை. என்னடா ஒருத்தரையும் வீட்டில் காணவில்லையே யாரும் சினேகிதர்கள் வீட்டுக்கு போனார்களோ? டெலிபோன் அடித்ததும் இப்படித்தான் சிந்தித்துக் கொண்டிருந்தான்.
இப்போது மனம் எத்தனையோ குழப்பங்களுடன் போராட கார் ஒட்டிக் கொண்டிருந்தான்.
காலையிலிருந்து காற்றும் மழையுமாயிருந்த சுற்றாடல் மாறி இப்போது பாதையெல்லாம் சரியான பிஸியாக இருந்தது. லண்டனிலிருந்து வீடு திரும்புவோர் கார்கள் காற்றைக் கிழித்துக் கொண்டு பறந்தன. லண்டனுக்குப் போவோரின் தொகை அவ்வளவாகவில்லை.
உஷாவுக்கு என்ன நடந்திருக்கும். கார் ரேடியோவைத் திருப்பி விட்டான். பின்னேர ஆறுமணி செய்தி சொல்லிக் கொண்டிருந்தார்கள். பாடசாலை பஸ் விபத்துக்குள்ளான செய்தி மிகவும் விஸ்தாரமாக வர்ணிக்கப்பட்டுக் கொண்டிருந்தது. சில பத்திரிகையாளர்கள் விபத்தில் அகப்பட்ட குழந்தைகளின் தாய் தகப்பனை இன்டர்வியு பண்ணிக் கொண்டிருந்தார்கள்.
"சாந்தி கண்ணிரும் கம்பலையுமாக இருப்பாள், ஒரு சின்ன விடயத்தையும் தாங்காத மனம் அவளுக்கு, அடக்கமான ஒரு குடும்ப அமைப்புக்குள் வளைய வந்த மனம் இப்போது இந்த அதிர்ச்சியை ஏற்றுக் கொள்ள என்ன மாதிரித் துடிக்குமோ”

51 ராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம்
கார் ரோட்டில் பறந்து செல்ல அவன் மனம் மனைவியிடம் பறந்து சென்றது.
அவளை முதற்தரம் சந்தித்தது ஞாபகமிருக்கிறது. பத்து வருடங்களுக்கு முன் ஊருக்குப் போயிருந்தபோது தாய் தகப்பன் இவனைத் தங்களுடன் திருகோணமலைக்குச் செல்ல அழைத்தனர்.
இலங்கையில் சமாதானம் நிலவிய காலமது. இந்தியப் படை இலங்கைக்கு ‘சமாதானம் செய்து வைக்க வந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக் கொண்டு இலங்கைக்குப் போகப் பயந்திருந்த எத்தனையோ இலங்கைவாசிகள் ‘உல்லாசப் பிரயாணிகளாகப் போய் வந்து கொண்டிருந்தனர்.
யூலை மாதக் கடைசியில் தாயின் நச்சரிப்புத் தாங்காமல் இலங்கைக்குப் போனான். இவனுடைய வயதினை ஒத்த எத்தனையோ இளைஞர்கள் படிப்பு முடிந்ததும் ஊருக்குப் போய் ஒரு நல்ல விலையில் தங்களை ‘விற்றுக் கொள்ள ஒடிக் கொண்டிருந்தபோது இவன் ஊருக்குப் போகப் பயந்து கொண்டிருந்தான். ஊருக்குப் போனால் எப்படியும் தாய் தகப்பன் தனக்கு ஒரு கால்கட்டுப் போட்டு வைப்பார்கள் என்று தெரியும்.
ஸேரா எங்கே போனாள் என்று தேடிக் களைத்துப் போனவனுக்கு அம்மாவின் தொன தொணப்பு ஒரு பக்கம் தொல்லை கொடுத்துக் கொண்டிருந்தது.
பிரமிளா அக்கா எழுதியிருக்கலாம் இவனுக்கும் இவனுடன் படித்த ஸேரா என்ற பெண்ணுக்கும் தொடர்பு இருந்தது பற்றி.
அம்மா அப்பா அதுபற்றி ஒரு வரியும் எழுதவில்லை.
"Have a fun with white girls but always you must marry your Own kind" என்ற இலங்கை, இந்திய மாணவர் சிலரின் தத்துவப்படி ஸேராவை இவன் தனது வேடிக்கைத் தோழியாக ஒரு நாளும் நினைக்கவில்லை.

Page 31
வசந்தம் வந்து போய்விட்டது 52
அவளுடைய அழகிய மனத்தின் வெளிப்பாடு அற்புத சித்திரங்களாய்க் 'கான்வசிலும் கடதாசிப் பேப்பர்களிலும் பிரதிபிம்பம் செய்யப்பட்டது.
நிற, இன, சமய, மொழிகளுக்கு அப்பாற்பட்டது ஒரு ஆத்மீகமான உறவு. அவளின் காருண்ய பாவம், கலையிலுள்ள ஈடுபாடு அவளிடம் இவனுக்கு மிகவும் ஒரு பிடிப்பை உண்டாக்கி விட்டது.
தன்னுடைய வயதுப் பையன்களுடன் ஸ்ருடன்ஸ் பார்களில் நேரத்தைச் செலவழித்தவனைத் தன் கலையுலகத்துக்கு அழைத்துச் சென்றாள் ஸேரா. லண்டனில் தியேட்டர்களில் உலகப் பிரசித்தி பெற்ற நாடகங்கள் மேடையேறினால் இவனையும் இழுத்துக் கொண்டு போவாள்.
லண்டனில் கிழக்கில் ஸ்ராட்போர்ட் றோயல் தியேட்டரில் கறுப்புக் கலைஞர்களின் அற்புதப் படைப்புக்களில் தன்னை மறப்பான் ராஜன்.
மியுசியம், ஆர்ட் தியேட்டர்ஸ் என்பன அவனால் இதுவரையும் முழுமையாக ரசிக்கப்படாமல் இருந்த பாகங்கள். கலையின் அரிய படைப்புக்களை நாடகங்கள் உருவில், சித்திரத்தின் பிரதிபிம்பத்தில், இசையின் ராகத்தில், நடனத்தின்
நெளிவில், சிற்பத்தின் சிருங்காரத்தில் ரசிக்கச் சொல்லிக்
கொடுத்தவள் ஸேரா.
அக்கா பிரமிளாவின் குறுகிய உலகமும் சினேகிதிஸேராவின் பரந்த உலகமும் அவனுக்கு இரு துருவங்களாகப் பட்டன. கிழக்குக்கும் மேற்குக்கும் இடையில் அவன் ஒரு குழந்தையாய் உலகத்தை ரசித்தான்.
வெறும் சினேகிதம் இறுக்கமாகி அதன் எதிரொலி நான் ஸேராவைத்தான் திருமணம் செய்வேன் என்ற அவன் பிரகடனத்தில் முடிந்தபோது பிரமிளாவால் அதைத் தாங்க முடியவில்லை.

53 . ராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம் 5
"எவ்வளவு நேரம் பசியைத் தாங்கிக் கொண்டிருக்கப் போகிறீர்கள் எமிலி, நான் எதையும் வாங்கித் தரலாமா' டேவிட்டின் குரலின் கனிவு ஒரு கணம் எமிலியை நிலைகுலையப் பண்ணியது.
"நோ, தாங்க்ஸ், நான் கொஞ்ச நேரத்தில் வெளியே போய் வரலாம் என்றிருக்கிறேன்’ அவனைப் பார்க்காமற் சொன்னாள் 6Tu&l65l.
அலிஸன் மகனுடன் செல்லம் பண்ணிக் கொண்டிருந்தாள். அவளின் குடும்பம் இப்போதுதான் வார்ட்டை விட்டுப் போய் இருந்தார்கள். இரண்டு கால்களிலும் பிளாஸ்டர் பண்ணி உயரக் கட்டிவிட்டிருந்தார்கள். பீட்டர் சிணுங்கிக் கொண்டிருந்தான்.
உஷாவும், ரவியும் இன்ரென்ஸிவ் கெயர் யூனிட்டில் அனுமதிக்கப் பட்டிருந்தார்கள். ரவிக்கு இடுப்பெலும்பு ஒடிந்திருந்ததால் வயிறு வரைக்கும் பிளாஸ்டர் போட்டு அசையாமல் வைத்திருக்கும்படி சொல்லப் பட்டிருந்தது. குழந்தையின் வேதனையைத் தீர்க்க மோர்பின் ட்ரிப் போய்க் கொண்டிருந்தது. குழந்தை அரைகுறையாய் அனுங்கிக் கொண்டிருந்தான்.
ஆபரேஷன் தியேட்டருக்குப் போகமுதல் தாத்தாவைக் கூப்பிட மாட்டாயா" என்று கேட்டவன் இப்போது நோவில் முணுமுணுத்துக் கொண்டிருந்தான். காலையில் துள்ளிக் கொண்டோடிய செல்வம் இப்போது வாடிய கொடியாய்த் துவண்டு கிடந்தது.
அந்த யூனிட் நிறைய மிகவும் ஆபத்தான நிலையிலிருக்கும் குழந்தைகள் இரண்டு வயது குழந்தையிலிருந்து பதினைந்து வயதுக் குழந்தைகள் வரை எத்தனையோ நோய்களுடன் சிகிச்சைக்காக அனுமதிக்கப் பட்டிருந்தார்கள். எமிலி மகனின் கட்டிலருகில் உட்கார்ந்திருந்தாள். இரவு ஏழு மணிக்கு

Page 32
வசந்தம் வந்து போய் விட்டது 54
மேலாகிவிட்டது.
காலை ஏழு மணிக்கு நிம்மதியாகப் படுக்கையை விட்டு
எழும்பியவனுக்கு இப்படி ஒரு திருப்பம் நடக்கும் என்று ஒரு கணம் கூட யோசித்திருப்பாளா?
தூரத்தில் சாந்தி சோகத்துடன் உட்கார்ந்திருப்பது தெரிந்தது. அவளது குடும்பத்தினர் பலர் வருவதும் போவதுமாக இருக்கிறார்கள். ஆனால் அவளின் கணவன் ராஜன் இன்னும் வந்து சேரவில்லை.
சாந்தியுடன் அவளின் இரு தமயன்களும் தம்பியும் நின்றிருந்தார்கள். இப்போது அவளுடன் அவள் தம்பி மட்டும் நிற்கிறான் போலும், சாந்தியின் இரண்டு தமயன்களையும் எமிலிக்குத் தெரியும். என் பிரண்டு சாந்தியின் வீட்டிற் சந்தித்திருக்கிறாள். அவளின் தம்பி குமார் பற்றி சாந்தி பல தடவை சொல்லியிருக்கிறாள்.
இலங்கையில் நடக்கும் போராட்டத்தில் ஒரு காலத்தில் தன்னைப் பிணைத்துக் கொண்டவன் என்றும் இப்போது உலகத்தில் அதிகம் பற்றில்லாமல் ஏனோ தானோ என்று வாழுகிறான் என்றும் சாந்தி சொல்லியிருந்தாள்.
"நான் வாங்க வரும் சாப்பாடு பிடிக்காவிட்டால் நீங்களாவது போய் ஏதும் வாங்கிக் கொள்ளுங்கள் எமிலி. நான் ரவியுடன் கொஞ்ச நேரம் இருக்கிறேன்’
டேவிட்டின் பிடிவாதம் எமிலிக்கு இப்போது தர்மசங்கடத்தைத் தந்தது. அலிஸன் இன்னும் கொஞ்ச நேரத்தில் இவனைத் தேடிக் கொண்டு வந்தாலும் வருவாள். சும்மாவே எந்த நேரத்திலும் கணவனிற் சந்தேகப்படும் அலிஸன் இப்போது இந்த இடம் ஹொஸ்பிட்டல் என்றும் பார்க்காமல் எதையும் தேவையற்றுப் பேசி விடுவாள். அவள் வாய் எப்போதும் எதையாவது மென்று கொண்டிருக்கும். அந்த சும்மா மெல்லும் வாய்க்கு எமிலி 'அவலாக விரும்பவில்லை.

55 ராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம்
'டேவிட் என்னைப் பற்றிய உங்கள் கரிசனத்திற்கு மிகவும் நன்றி. ஆனால் இந்த ஹொஸ்பிட்டலில் நான் தங்கும் வரை உங்கள் தலையீடு இல்லாமலிருப்பதை விரும்புகிறேன். எனது குழந்தையுடன் நான் படும் துன்பமே என்னால் தாங்க முடியாதிருக்கிறது. அதற்கு மேல் அலிஸனின் அலட்டல் வந்தால் அதை என்னாற் தாங்க முடியாது’ எவ்வளவு நிதானமாக நடக்க முயன்றாலும் ரவியை அந்த நிலையிற் பார்த்த போது அவள் மனம் கலங்கிவிட்டது.
டேவிட் அவளை மெளனமாக ஏறிட்டுப்பார்த்தான். அவளிற் பரிதாபம் வந்தது. தன்னால் தன் குழந்தைக்குத் தாயாகவும் தகப்பனாகவுமிருந்து எல்லாம் செய்து முடிப்பேன் என்று எத்தனையோ கஷ்டப் பட்டாலும் அவளும் ஒரு சாதாரண பெண். அண்ணன் தம்பி, தமக்கை, தங்கை என்று ஆதரவு தர யாருமில்லாதவள்.
'என்னிடம் பரிதாபப் படவேண்டாம், இப்படித் துயரங்கள் ஒரேயடியாக வருவதில்லை. திடீரென்று யாருக்குத் தான் இந்தக் கஷ்டங்கள் வரும். நான் உங்களிற்தான் பரிதாபப் படுகிறேன் டேவிட்’
அவள் அவனை நிமிர்ந்து பார்த்துச் சொன்னாள். எரிச்சலும், இடைவிடாச் சண்டையுமான திருமண வாழ்க்கையில் அலிஸனும் டேவிட்டும் ஒருத்தரை ஒருத்தர் வதைத்துக் கொண்டிருக்கிறார்கள். அந்தக் கொடுமைகளிலிருந்து ஒரு கொஞ்சம் நிம்மதி தேட டேவிட் எமிலியின் உறவைப் பாவிக்க யோசிக்கிறான் என்பது அவள் கருத்து.
அவனிடம் பரிதாபம் இருந்தாலும் அலிஸனுக்கு தெரியாமல் அவன் தன்னிடம் சினேகிதமாய் இருக்க முயல்வதை அவளால் மன்னிக்க முடியாததாக இருந்தது.
யாருடையவும் 'சின்ன வீடாக இருக்க அவள் ஒரு நாளும் நினைத்ததில்லை. உறவுகள் சரியாக அமையாவிட்டால் அவர்கள் விவாகரத்துச் செய்து கொள்வது நல்லது என்பது அவள்

Page 33
வசந்தம் வந்து போய்விட்டது 56
அபிப்பிராயம்.
சம்பிரதாயங்களுக்காகவும் சமுதாயக் கோட்பாடு களுக்காகவும் சமய ரீதியாக ஒரு சடங்கைச் செய்து விட்டு ஒருத்தரை ஒருத்தர் வருத்திக் கொள்வது மிகக் கொடுமையான விடயம் என்று அவள் எத்தனையோ தரம் விவாதித்ததுண்டு.
அவன் ஏதோ சொல்ல வாயெடுத்தான். அதேநேரம் சாந்தியும் அவளின் தம்பியும் எமிலியை நோக்கி வந்து கொண்டிருந்தார்கள்.
“எமிலி இவரை இன்னமும் காணவில்லை.
சாந்தி சொல்லிய வார்த்தைகள் முடிய முதல் ராஜன் அவசரத்தில் ஓடோடி வருவதைக் கண்டதும் சாந்தியின் கண்கள் குளமாகின.
காலையில் அவள் அணைப்பில் கண் திறந்த கணவனை மத்தியான நேரம் இன்னொருத்தியின் இணைப்பில் பார்த்த துன்பம் சாந்தியின் மனத்தை ஈட்டியாய்த் துளைத்தது. அவன் ஓடோடி வந்து மனைவியை அணைத்துக் கொண்டான். “உஷா எங்கே" சாந்தி மெளனமாய் நடக்க ராஜன் பின் தொடர்ந்தான்.
குமார் தமக்கையையும் மைத்துணரையும் பின் தொடராமல் நின்றான்.
"ஹலோ குமார்’ எமிலி குமாரிடம் பேசினாள். ஒருத்தரும் அவர்களை அறிமுகப் படுத்தவில்லை. ஆனால் எமிலிக்கு அவனைப் பற்றித் தெரியும். எமிலி பற்றி அவனுக்குத் தெரியும்.
டேவிட் இன்னும் நின்று கொண்டிருந்தான். எமிலி இருவரையும் ஒருத்தருக்கொருத்தர் அறிமுகம் செய்து வைத்தாள்.
"உங்கள் மகன் எப்படியிருக்கிறார்’
குமார் டேவிட்டைக் கேட்டான்.

57 ராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம்
'கால்கள் இரண்டையும் முறித்துக் கொண்டிருக்கிறான்' டேவிட் சோர்ந்த குரலிற் சொன்னான்.
'நான் போய் வருகிறேன்' டேவிட் எமிலியுடன் பேசிக் கொண்டிருக்காமல் போனான்.
"சாந்தி பாவம், உஷாவின் நிலை மிகவும் பரிதாபமாக இருக்கிறது. ஆனாலும் டொக்டர்கள் நம்பிக்கையாய் இருக்கும் படி சொல்கிறார்கள்’
குமார் தூரத்தில் நிற்கும் தமக்கையையும் மைத்துனரையும் பார்த்த படி சொன்னான்.
"வருவது வரட்டும் என்றில்லாவிட்டால் பெரிய காற்றில் அடிபட்ட இலையாகப் பறந்துபோய் விடுவோம். சாந்தி மிகவும் இளகிய மனம் கொண்டவள். அவள் இந்த அனுபவத்தின் பின் திடமானவளாக வரலாம்'
குமாருக்கு அவளின் தத்துவம் பிடித்து விட்டது. எமிலி மிகவும் உறுதி வாய்ந்தவள் என்று எத்தனையோ தரம் சாந்தி சொல்லக் கேள்விப் பட்டிருக்கிறான்.
‘வாழ்க்கையைப் பற்றிய உங்கள் பிலோசபி எனக்குப் பிடித்திருக்கிறது’
“பாடசாலையில் படிப்பது கையளவு. வாழ்க்கையின் அனுபவத்திற் தெரிந்து கொள்வது உலகளவு என்று நினைக்கிறேன்’
அவளின் நீல விழிகள் சோகத்துடன் அவனைப் பார்த்தன. ரவியின் முனகல் அவர்களின் பேச்சைத் தடைபடுத்தியது. ஒரு நேர்ஸ் வந்து குழந்தையின் நிலையைப் பார்த்து எழுதிக் கொண்டிருந்தாள்.
கொஞ்ச நேரத்தில் ரவி அயர்ந்து தூங்கினான்.
உலகத்தை இருள் கவ்விக் கொண்டது.

Page 34
வந்த வந்து போய்விட்டது 58
T வெளியில் கார்கள் ஆரவாரம் தணிந்து கேட்டது.
'குமார் எனக்கொரு உதவி செய்வீர்களா’ எமிலி தயங்கியபடி குமாரைக் கேட்டாள் “என்ன செய்ய வேண்டும் சொல்லுங்கள்’ நான் கொஞ்சம் வெளியிற் போக வேண்டும், ரவி தனது தாத்தாவைப் பார்க்க வேண்டும் என்றான்.
வெளியிற் போய் போன் பண்ணி விட்டு வருகிறேன். கொஞ்ச நேரம் ரவியுடன் இருக்க முடியுமா"
"தாராளமாக" குமார் ரவியின் கட்டிலுக்கருகிலுள்ள கதிரை ஒன்றில் உட்கார்ந்தான்.
ஆங்கிலத் தாய்க்கும் தமிழனுக்கும் பிறந்த ரவியைப் பார்த்தால் பிராமணப் பையன் போல் மஞ்சள் கலந்த நிறமாயிருந்தான். நோவில் முனங்கிக் கொண்டு கண் திறந்தவன் குமாரை ஏற இறங்கப் பார்த்தான்.
'அம்மா எங்கே’ "அம்மா தாத்தாவுக்கு போன் பண்ணப் போய்விட்டாள்" குழந்தை ரவி இவனை ஏற இறங்கப் பார்த்தான். "என்ன ரவி வலிக்குதா’ குமார் குழந்தையின் தலையை அன்புடன் தடவிவிட்டான். V
ரவியின் கண்களிலிருந்து தாரை தாரையாக நீர் வழிந்தது. குழந்தைக்குச் சரியான வலிபோலும்.
'அழாதேயுங்கோ ரவி, எல்லாம் சரியாகப் போகும்’ குமார் குழந்தையின் கைகளைப் பற்றிய படி சொன்னான்.
'நீங்கள் நீங்கள். குழந்தை ஏதோ சொல்லத் தவறினான்.

59 ராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம்
குமார் குழந்தையை அன்புடன் தடவி விட்டான்.
"நீங்கள் எனது தகப்பன்தானே’ குழந்தை ரவி தேம்பி தேம்பி அழுதபடி கேட்டான். R
குமார் மலைத்துப் போய்ச் சிலையாய் அமர்ந்தான்.
உஷாவை செயற்கையாக மூச்செடுக்கும் இயந்திரத்துடன் இணைத்திருந்தார்கள். அவள் உடம்பு இயந்திரத்துடன் சேர்ந்து மூச்செடுத்தது.
இப்போதுதான் ராஜன் மகளைப் பார்க்க வந்திருக்கிறான். காலையில் வீட்டை விட்டுப் போகும்போது கள்ளம் கபடமற்ற கணவனாகத் தெரிந்தவன் இப்போது அப்படித் தெரியவில்லை.
அவள் மனம் பாறாங் கல்லாய்க் கனத்தது. காலையில் கலவி புரிந்து மகிழ்ந்த நெகிழ்ச்சி எத்தனையோ வருடங்களுக்கு முன் நடந்ததாக ஒரு பிரமை. பத்து வருடகாலத்தின் இனிமையான நினைவுகளை இன்று மதியம் அடித்த பேய்க்காற்று சீரழித்து விட்டதான கற்பனை.
பத்து மணியளவில் தான் இன்னுமொரு குழநதைக்குத் தாயாகப் போகிறதாக மழையில் நின்று குதித்தாளே அந்த மகிழ்ச்சி எங்கேயோ அடிபட்டுப் போயிற்று.
இரண்டுதரம் குழந்தை வருமாற்போல் சாடைமாடை காட்டிவிட்டு இயற்கை விளையாடி விட்டதே. இப்போது பூகம்பமாய் மனம் வெடிக்கும்போது ஒரு குழந்தை உயிரோடு போராடுகிறது. இன்னொரு குழந்தை உயிராக மலர்கிறது அவள் வயிற்றில்.
சாந்தி தேம்பித் தேம்பி அழுதாள்.

Page 35
வசந்தம் வந்து போய்விட்டது 60
"அழக்கூடாது சாந்தி, உஷாவின் நிலை சரிவரும் என்று டொக்டர்கள் சொல்லியிருக்கிறார்கள் தெரியும்தானே’ ராஜனின் குரல் அவள் காதுகளில் கிசுகிசுத்தன. அவளுக்கு அந்தக் குரல் நாராசமாக இருந்தது. அவன் அணைப்பு ஒரு பாம்பின் அணைப்பை ஞாபகப் படுத்தின.
அவளுக்கு அவனை இன்னொரு பெண்ணுடன் சந்தித்தது ஆச்சரியமல்ல.
அவன் ஒரு வழக்கறிஞன், எத்தனையோ பேர்கள் அவனின் உதவிக்கு வருவார்கள். ஆண்கள் பெண்கள் என்று பேதமில்லாமல் அவன் தனது வாடிக்கையாளரை கோர்ட்ஸ்க்கு அழைத்துச் செல்வது அவளுக்குத் தெரியும்.
ஆனால் இன்று அவனை இன்னொரு பெண்ணுடன் கண்ட தோற்றம் அப்படி உத்தியோக பூர்வமானதல்ல என்று அவள் மனம் சொல்லியது.
அப்படி முட்டாள்த் தனமாக அவள் ஏன் நினைக்கிறாள் என்றும் புரியவில்லை. ஆனால் அது முட்டாள்த்தனமான நினைவல்ல என்று மட்டும் மனம் சொல்லியது.
'பகலெல்லாம் உங்களைத் தேடினேன் உங்களைக் கண்டுபிடிக்க முடியவில்லை’ என்று அவள் அழவில்லை.
எதிர்பாராத எத்தனையோ விடயங்களை அவள் மனம் கிரகிக்க முடியாமற் தத்தளித்தது.
இதுதான் வாழ்க்கையா? எதிர்பாராத சோதனைகளைக் கொடுத்து என்னைச் சீண்டுவதுதான் உனக்கு விளையாட்டா என்று கடவுளைக் கேட்க வேண்டும் போல் இருந்தது.
இருவருக்குமிடையில் ஏதோ பாரிய திரை விழுந்து விட்டாற் போலிருந்தது. அவனும் இவளை நிமிர்ந்து பார்க்கவில்லை. இவர்களைச் சுற்றிய உலகத்தில் நேர்சும் டொக்டர்களும் அலைந்து திரிந்தார்கள். இரவு நீண்டு கொண்டே போனது. ஒவ்வொரு பதினைந்து நிமிடமும் உஷாவின் உடல்நிலை

61 ராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம்
பரிசோதிக்கப் பட்டது.
கணவனும் மனைவியும் அதிகம் ஒன்றும் பேசிக் கொள்ளவில்லை. இவர்களைச் சுற்றி டொக்டர்ஸ், நேர்ஸஸ் அடிக்கடி வந்ததால் அதிகப்படியாக ஒன்றும் பேசமுடியவில்லை. 'நீங்கள் இன்னும் சாப்பிடவில்லை’ அவள் அவன் முகத்தைப் பார்க்காமற் சொன்னாள்.
'நீ சாப்பிட்டாயா? அவள் இல்லை என்று தலையாட்டினாள்.
இன்னும் சரியாக அவன் முகத்தைப் பார்க்க முடியவில்லை. காலையிற்தான் அவன் தலைவருடி அன்பு தந்தாள். இப்போது இந்த மாலை நேரத்தில் எத்தனையோ மைல்களுக்கப்பால் அவனைப் பார்ப்பது போலிருந்தது.
'உங்களைப் பார்த்தால் எத்தனையோ சொல்ல வேண்டுமென்ற துடிப்புடன் ஒவ்வீஸ் தேடி ஓடி வந்தேன். ஆனால் உங்களுடன் மிக நெருக்கமாக ஒரு பெண்ணைப் பார்த்ததும் என் இருதயத்தை நெருப்பில் வாட்டியதுபோல் துடித்து விட்டேன். யார் அந்தப் பெண்? அவள் அவனிடம் கேட்கத் துடித்தாள். வாய்வரவில்லை.
நினைவில் வந்த வசனங்கள் நெஞ்சுக் குழிக்குள் அடைபட்டுக் கொண்டன.
பத்து வருடம் உடலையும் உணர்வையும் பகிர்ந்து கொண்ட மனிதன் இப்போது அந்நியமாய்த் தெரிந்தான்.
அவன் அந்நியமாய் வாழ்க்கையெல்லாம் இருந்திருக்கலாம். இவள்தான் ஏதோ கற்பனையில் அவனைத் தன் உயிராய் மதிக்கிறாள்.
அவள் எப்படி அடக்கியும் அவளின் விம்மலை அவளால் அடக்க முடியவில்லை. வயிற்றில் ஒரு கரு, கட்டிலில் இன்னொரு உயிர். இரண்டையும் தந்தவன் இப்போது இவளின்

Page 36
வசந்தம் வந்து போய் விட்டது 62
விம்மலுக்குக் காரணம் தெரிந்தும் தெரியாமலும் தர்மசங்கடப் பட்டுக் கொண்டிருந்தான்.
'நீங்கள் இருவரும் ஏன் கஷ்டப் படுகிறீர்கள். ஒரு ஆள் றெஸ்ட் எடுக்க மற்ற ஆள் குழந்தையுடன் இருக்கலாமே" ஒரு நேர்ஸ் வந்து சொன்னாள்.
'நீங்கள் வீட்ட போங்கோ’ சாந்தி அவனிடம் சொன்னாள். அவன் பக்கத்திலிருந்தால் அவளின் அழுகை கூடும்போல் இருந்ததே தவிரக் குறையவில்லை.
அவன் மார்பில் முகம் புதைத்துத் தன் துயர் மறக்க வேண்டும் என்று துடித்தாளோ அவன் முகம் பார்க்கவே தயங்கினாள்.
"நீயும் வந்தால் உனக்குத் தேவையான சாமான்களை எடுத்துக் கொண்டு வரலாம்'
"நான் உஷாவை விட்டுப் பிரிய மனம் வரவில்லை’
அவன் மெளனத்துடன் வெளியேறினான்.
6
எமிலி தகப்பனுக்குப் போன் பண்ணியபோது அவர் வீட்டு ஆன்ஸ்வர் போன்தான் வேலை செய்தது. அவர் வீட்டிலில்லை.
மிஸ்டர் ஸிம்சனுக்கும் மகளுக்கும் ஒரு நாளும் சுமுகமான உறவிருக்கவில்லை.
அவள் யோசனையுடன் நடந்து வந்து ஹொஸ்பிட்டல் வாசலில் நின்றாள்.
டேவிட்டும் அலிஸனும் காரில் ஏறுவது தெரிந்தது. அலிஸனின் சொந்தக்காரர்கள் ஆஸ்பத்திரி அருகில் இருக்கிறார்கள். அலிஸன் அங்குபோய்த் தங்கி விட்டுக் காலையில் வருதாகச் சொன்னாள். டேவிட் அவளைக் கொண்டு போய் விட்டு விட்டு வந்து பீட்டருடன் வார்ட்டில் தங்குவதான

63 ராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம்
ஏற்பாடு எமிலிக்குத் தெரியும்.
அலிஸனின் சின்ன மகன் சைமன் தாயில்லாமல் ஒரு இடமும் போக மாட்டான். அவனுடன் ஹொஸ்பிட்டலில் தங்குவது அலிஸனால் முடியாத காரியம்.
இன்னும் சில தினங்களுக்கு டேவிட்டை அடிக்கடி சந்திக்க வரும் என்று நினைத்தபோது எமிலியால் தர்ம சங்கடப் படாமல் இருக்க முடியவில்லை.
"எனது பெயர் டேவிட்” என்று அவன் தன்னை அவளுக்கு அறிமுகம் செய்து கொண்டபோது எனக்கு அலிஸன்என்றொரு மனைவியும் பீட்டர், சைமன் என்ற பெயர்களில் இரண்டு குழந்தைகளும் இருக்கிறார்கள் என்று சொல்லியிருந்தால் அவன் தொடர்பு தொடர்ந்திருக்குமா?
வழக்கமாகவே தன்னுடன் ஒட்டிக் கொள்ள வரும் உதவாக்கரைகளை ஒதுக்கி நடக்கப் பழகியிருந்தாள் எமிலி. சாதாரண பெண்களின் ஏக்கங்களும் எதிர்பார்ப்புகளும் அவளிடம் இல்லை.
குழந்தையாயிருக்கும்போதே அவள் வாழ்க்கையில் அனுபவித்த துயர்கள் அவளின் உறுதியான மனப் போக்குக்கும் காரணமாக இருக்கலாம்.
அழகிய குழந்தை எமிலி ஒரு பனிபெய்யும் பின்னேரம் பாடசாலையில் தாயை எதிர்பார்த்து நின்றதும் தாய் நீண்ட நேரம் வராமல் போனதும் கனவு போலிருக்கிறது.
ஆறுவயது எமிலிக்குத் தாயின் மெளன விம்மல்களின் அர்த்தம் புரிவதில்லை. வெறித்துப் பார்க்கும் தாயின் விரக்தியான பார்வையின் சோக மொழி என்ன என்று துல்லியமாக விளங்கிக் கொள்ள முடியாத வயது.
தனது ஆறு வயது மகன் அடிபட்ட நாயாய்ப்
படுத்திருக்கிறான். அவனுக்கும் விளங்காது இவள் படும்பாடு. எல்லாக் குழந்தைகளுக்கும் தகப்பனோ தாத்தாவோ

Page 37
வசந்தம் வந்துபோய்விட்டது 64
பக்கத்திலிருக்கிறார்கள். ரவியைத் தடவி விடத் தன்னைத் தவிர யாருமில்லை.
அவனுக்குத் தாயாகும்போது தான் செய்யும் முடிவு சரியானதுதானா என்று எத்தனையோ தரம் யோசித்தாள். ஆனந்தனைத் திருமணம் செய்யத் தான் ஒரு நாளும் நினைத்ததில்லை.
ஆனந்த் ஒரு தமிழன். மரபுக் கொள்கைகளில் மிகவும் ஈடுபாடுடையவன். ஏழைப் பிராமணக் குடும்பத்தில் பொறுப்புள்ள சகோதரனாகக் கடமையாற்ற வேண்டிய நிர்ப்பந்தத்துக்கு ஆளானவன்.
இளம் வயதுத் துடிப்புக்களின் பரிமாணத்தில் மட்டுமல்லாமல் பரந்த வாழ்க்கைப் போராட்டத்தையுணர்ந்த ஒரு ஏழைத் தமிழனின் மனத்தில் உருவாகிய அன்பு எமிலியைத் தன் துணைவியாக்கும் மனநிலைக்குத் தள்ளியது.
எமிலியைச் செய்து கொண்டு லண்டனிற் தங்கி விட்டால் இந்தியாவிற் தன் தங்கைகளின் சுமை எப்படியிறங்கும் என்று அவன் யோசிப்பது தெரிந்திருந்தது.
ஆனால் திருமண உறவுகளைப் பற்றி அவள் வைத்திருக்கும் தத்துவங்களை அவனுடன் வாதம் பண்ணி விவாதிக்க அவள் தயாராகவில்லை.
அவளில் எத்தனைதான் அன்பாயிருந்தாலும் அந்த அன்புக்குள் தன்னைச் சிறை பிடித்துக் கொள்ளத் தான் தயாராயில்லை என்பதை அவள் எத்தனையோ தரம் அவனுக்குச் சொல்லியிருக்கிறாள்.
பெரும்பாலான ஆசிய ஆண்கள் தங்கள் சுகத்துக்கும் கேளிக்கைகளுக்கும் ஆங்கிலேயப் பெண்களைப் பாவித்து விட்டுத் தங்கள் படிப்பு முடிய 'நல்ல பிள்ளைகளாய்த் தங்கள் ஊருக்குப் போய்த் திருமணம் செய்து கொள்வது ஆனந்துக்குத் தெரியும்.

65 ராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம்
தனது குடும்பத்துச் சுமைகளைப் பார்த்துவிட்டு எமிலியைத் திருமணம் செய்து கொள்ள நினைப்பதாக அவன் சொன்னபோது அவள் சிரித்து மழுப்பி விட்டாள்.
"இங்கிலாந்தின் இனவாதம் என்னை மிகவும் வருத்துகிறது. ஆனால் அதே நேரம் இந்தியாவின் சாதிப் பாகுபாடும் என்னைத் துக்கப் படுத்துகிறது. நான் பிராமணன் என்பதால் எங்கள் மூதாதையர்களும் அவர்களைப் பின் பற்றிய தற்போதைய தலைவர்களும் செய்வதெல்லாம் சரியென்று நான் நினைக்கவில்லை. என்னோடு நீவாழ நினைத்தால் லண்டனில் மட்டுமல்ல. உலகில் எந்த இடத்திலும் எந்த இடர்களையும் சமாளிக்கத் தயார்.” ஆனந்த் இப்படிச் சொன்னபோது எமிலிக்குச் சிரிப்பதா அழுவதா என்று தெரியவில்லை.
உலகத்தில் எத்தனை கோடி மனிதர்கள். இப்படிச் சங்கற்பங்கள் எத்தனை கோடி வருடங்களாச் சொல்லிக் கொண்டு வருகிறார்கள்?
அம்மாவும் அப்பாவும் இப்படித்தானே ஒருத்தருக்கு ஒருத்தர் சொல்லிக் கொஞ்சியிருப்பார்களா? அப்பாவுக்கு அந்த அன்பு இருந்திருந்தால் என்னவென்று என்தாய் பனிபெய்யும் பட்டப் பகலில் தன்னைத் தானே மாய்த்துக் கொண்டாள்?
எமிலியின் கண்களில் நீர் வழிந்தது. ஆனந்தைத் தன் நீர் வழிந்த கண்களுக்குள் நிழலாய்ப் பிடித்துக் கொண்டு உருக்கமாய்ச் சொன்னாள் 'உலகத்தில் எத்தனையோ மனிதர்கள் இப்படித்தான் ஒருத்தருக்கொருத்தர் சொல்லியிருப்பார்கள். ஆனால் மனித மனம் குரங்குபோன்றது. இடத்துக்கு இடம் தாவும். எல்லை மீறிக் குதிக்கும். இப்போது நாங்கள் சந்தோசமாக இருக்கிறோம். எதிர்காலம் எப்படி இருக்குமோ தெரியாது. அளவுக்கு மீறிக் கற்பனைக் குதிரைகளை அவிழ்த்து விடாமல் அளவோடு சந்தோசத்தை அனுபவிப்போம்’
எமிலி ஏன் இப்படிப் பிடிகொடுக்காமற் கதைக்கிறாள் என்று அவனால் விளங்கிக் கொள்ள முடியவில்லை. தனது தாய்

Page 38
வசந்தம் வந்து போய்விட்டது 66
தகப்பன் தங்களின் காதலை ஏற்க மாட்டார்களோ என்ற பயத்திற்தான் எமிலி இப்படி நடக்கிறாளோ என்று ஒரு கணம் யோசித்தான்
‘காதல் என்பது ஒரு மயக்க நிலை. இளமையின் உணர்வுகளின் குழப்பத்தை வர்ணிக்கப் பாவிக்கப் படும் ஒரு சொல் என்றும் எடுக்கலாம். அந்த மயக்கத்தில் இரண்டு மனிதர்களின் வாழ்க்கையை ஒன்றாகப் பிணைத்துப் பின்னர் உணர்வுகளின் உற்சாகம் தளர்ந்தபின் அவதிப் படுவதைவிடக் கவனமாக இருந்து வாழ்க்கையை நடத்த வேண்டும் என்கிறேன்’ இது எமிலியின் வாதம்
"அப்படியானால் நீ என்னைக் காதலிக்கவில்லையா? இது ஆனந்த்தின் அவசரமான கேள்வி.
“சூரியக் கதிர்கள் பூமியை முத்தமிடாமலிருக்குமா மல்லிகை மணம் தென்றலிற் கலக்காமலிருக்குமா புல் நுனியில் பனிமலர்கள் உறங்காமல் முடியுமா”
அவள் சிரித்தபடி கேட்டாள்.
‘அதெல்லாம் இயற்கையின் நியதிகள்’ அவள் மெல்லிதழ்களைச் சுவைத்தபடி ஆனந்த் சொன்னான்.
"அதே போலத்தான் எனது உணர்வுகளும் இயற்கையானது, இந்த நிமிடத்தில் இந்தக் கணத்தில் எனது உடம்பையும் உயிரையும் என் உணர்வுகள் அனைத்தையும் உன்னுடன் கலந்த தாக்கி விட்டேன். இந்த இன்ப நிலையும் நெருக்கமும் நாளைக்கு அல்லது அடுத்த வருடத்துக்கு நிலைக்குமென்று என்ன நிச்சயம்’
அவனின் இளம்தாடியை வருடியபடி அவள் கேட்டாள். அந்த நேரம் ஒரு வசந்த காலமாலைப் பொழுது. அவனின் பரீட்சை நெருங்கிக் கொண்டிருந்தது.
அவனுடைய தாய் தகப்பன் படிப்பில் அக்கறை காட்டச் சொல்லி அடிக்கடி எழுதிக் கொண்டிருந்தார்கள்.

67 ராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம்
இவன் தனது காதலை விளக்கி எழுதிய கடிதத்திற்குத் தகப்பனிடமிருந்து எந்தப் பதிலும் வரவில்லை.
“எல்லாம் மாயை' என்று இவன் தகப்பன் இவனுக்குப் பதில் எழுதவில்லை.
ஒரு தங்கை மட்டும் இவனது முறைப்பெண்ணைப் பெண்கேட்டுத் தாய் தகப்பன் போனது பற்றி ரகசியமாய் எழுதியிருந்தாள்.
'உனக்கு இந்தக் கடிதங்களைப் பற்றி எரிச்சல் வருவதில்லையா’’ ஆனந்த் எமிலிக்குத் தன் தங்கையின் கடிதத்தைக் கொடுத்த படி கேட்டான்.
'இல்லை’ அவள் தன் நீல விழிகளை இவனுடன் பிணைத்தபடி சொன்னாள்
" நீ புதினமான பெண்’ அவன் சலித்துக் கொண்டான்.
'இல்லை கொஞ்சம் புத்திசாலித்தனமாக வாழ நினைக்கும் பெண்’
"அப்படி என்றால்." அவன் ஆச்சரியத்துடன் கேட்டான்.
"சமய வாதிகளின் திருப்திக்காகவும், சமுகவாதிகளின் முன்னுக்குப் பின் முரண்பாடான கோட்பாட்டுக்களுக்காகவும் குடும்பங்கள் ஒரு நாட்டின் ஆணிவேர் என்று போலிக் கூச்சல் , போடும் அரசியல் வாதிகளுக்காகவும், வாழ்க்கை எல்லாம் ஒரு மனிதன் போடும் இலவச உணவுக்காகவும் எனது உடம்பையும் உணர்வுகளையும் 'கல்யாணம்’ என்ற சடங்கின் மூலம் இன்னொருத்தரின் சொத்தாக்க நான் விரும்பவில்லை’
எமிலி நிதானமாகச் சொன்னாள்.
ஆனந்த் அவளை வியப்புடன் பார்த்தான். கடந்த பல மாதங்களாகத் 'திருமணம் (?) செய்து கொள்ளாத தம்பதிகளாக அவர்கள் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். ஆனந்த் இந்தியா திரும்பிப் போவதை அவள் விரும்ப மாட்டாள் என்று அவன்

Page 39
வசந்தம் வந்து போய்விட்டது 68
எதிர்பார்த்தான்.
அவளோ இவனுடன் தன்னையினைத்துக் கொள்ள மறுக்கிறாள்.
"அப்படி என்றால் நீ என்னைக் காதலிக்கவில்லையா’
அவன் கேள்வி அப்பாவித்தனமாகப் பட்டது அவளுக்கு.
"I love you from the bottom of my heart but doesn't mean that I will let my self imprisoned by that word".9667 ff.55 Tsit.
'உனது ஞாபகம் என்னுடன் எப்போதும் வாழும். நான் உன்னில் வைத்திருக்கும் அன்பின் வெளிப்பாடு உனக்குத் தெரியாமலே போகலாம். ஆனால் தயவு செய்து என்னைத் திருமணம் என்ற சிறைக்குள் இழுக்க வேண்டாம். உங்களுக்கு லண்டன் அலுக்க அதிக நாட்கள் எடுக்காது. படிப்பை முடித்து விட்டு ஊருக்குப் போங்கள். இல்லை என்றால் இதே தர்க்கம் எங்களுக்குள் நீண்டு கொண்டே போகும். ஒருத்தரை ஒருத்தர் பகைத்துக் கொள்வோம். எங்கள் அன்பின் பிணைப்பு மிகவும் வலிமையாக இருக்கும் போது எங்களைப் பிரித்துக் கொள்வோம். ஏனென்றால் இந்த இனிய நினைவுகள் எங்கள் எதிர்கால வாழ்க்கையின் ரசனையாக இருக்கும்.
ஒருத்தரில் ஒருத்தர் அலுத்துப் போய்ப் பிரிந்து விட்டு அந்தப் பிரிவினையைத் தாங்க முடியாமல் இன்னொரு உறவைத் தேடியலைந்து இந்த உறவில் பழைய சினேகிதத்தின் பகைமை எரிச்சலைப் பிரதிபலிக்காமல் இப்போது நாங்கள் இன்பமாய் இருக்கும் போது எங்கள் துன்பமான பிரிவை முடிவு கட்டுவோம்’
கல்லூரி ஆசிரியை போலச் சொல்லி முடித்தாள் அவள். அவர்கள் அப்போது இங்கிலாந்தின் கிழக்குக் கடற்கரை ஒன்றின் கரையில் பதிந்த குன்று ஒன்றில் சாய்ந்து கொண்டு பேசிக் கொண்டிருந்தார்கள்.
உல்லாசப் பிரயாணிகளாகக் கடற்கரையில் புரண்டு

69 ராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம்
விளையாடிய சிறுவர்களும் பெரியவர்களும் ஒவ்வொருத்தராய்க் கலைந்து கொண்டிருந்தார்கள்.
யூலை மாத வெய்யிலிற் கடல் அலைகள் வெள்ளித் துணிக்கைகளாய்ச்சிதைந்து பாய்ந்தன. நீலவானம் வெண்மேகக் கூட்டங்களில் முகம் மறைத்து முஸ்லீம் பெண்ணைப் போல் உலகத்தை எட்டிப் பார்த்தது.
கடல் தழுவிய இளம் காற்று இவர்களையும் கொஞ்சி விளையாடியது.
'நீங்கள் இன்னம் சில கிழமைகளில் ஊருக்குப் போகப் போகிறீர்கள், இன்றைய பினனேரம் எங்கள் கடைசிச் சந்திப்பின் சாட்சியாக இருக்கட்டும்’
அவள் குரல் தழுதழுத்தது. அவளுக்கு இரும்பு மனமா என்ன? அவனைத்திருமணம் செய்து கொள்ள மாட்டேன் என்கி றாள். அவன் இந்தியாவுக்குத் திரும்பும் வரை ஒன்றாகவும் சேர்ந்திருக்க மாட்டேன் என்கிறாள்.
‘நான் ஊருக்குப் போகும் வரைக்கும் உன்னுடன் பழகக் கூடாது என்று சொல்கிறாயா’ அவன் குரலிற் கோபம்.
'பார்த்தீர்களா, இப்படியெல்லாம் கோபம் வரும் என்று தெரிந்துதான் எங்கள் பிரிவைச் சட்டென்று முடித்து விடுவோம் என்று சொன்னேன்’
அவள் அவன் தலைமுடியைச் செல்லமாகத் தீண்டினாள். அவனால் எதுவும் பேச முடியவில்லை. அவள் அவன் என்ன சொன்னாலும் மறுமொழி சொல்லக் காத்திருக்கிறாள். அவள் பிடிவாதமானவள். ஆனால் ஏன் இப்படித் திடீரென்று தன்னைப் பிரிந்து விடச் சொல்லிச் சொல்கிறாள் என்று அவனால் விளங்கிக் கொள்ள முடியவில்லை. ኣ
இருவர் அணைப்பிலும் வெகுநேரம் கட்டுண்டு

Page 40
வசந்தம் வந்து போய்விட்டது 70
கிடந்தார்கள். இந்த நிமிடமும் இந்த இன்பமும் இனி ஒரு நாளும் திரும்பி வராது என்று அவனுக்கு நிச்சயமாகத் தெரிந்தது. அவளை இறுக்கி முத்தமிட்டான். அவனின் தாபம், சோகம், பிரிவின் துயர் அவன் அணைப்பிற் பிரதிபலித்தது.
ஒரு வெறி, ஒரு ஆங்காரம் ஒரு துயரமான ஒலம். இயற்கையன்னை அணைகளையுடைத்துக் கொண்டு அகிலத்தையே மூடிக் கொண்டதுபோல் அவன் உணர்வுகள் வெடித்துப் பெண்மையின் ஒவ்வொரு அணுக்களையும் ஆண்டு கொண்டது.
இரவு நடுச்சாமம் கடற்கரையிலிருந்து அவர்கள் பிரிந்தபோது அடுத்த நாள் அவளைச் சந்திக்க முடியாது என்று அவனுக்குத் தெரியாது.
அவள் இரண்டு மூன்று கிழமைகளுக்கு முன்னரே வேறு இடம் பார்த்து விட்டாள். அவன் இந்தியா போக ஒரு சில வாரங்களுக்கு முன்னரே அவனுடனுள்ள தொடர்பை அறுத்துக் கொள்வதாக அவள் முடிவு செய்து விட்டாள்.
அப்படி அவள் முடிவு செய்யா விட்டால் ஏதோ ஒரு சூழ்நிலையில் 'ஆனந்த் நான் உங்கள் குழந்தையைச் சுமக்கிறேன். உங்களில் உள்ள அன்பின் சின்னமாக அந்தக் குழந்தையைப் பராமரிப்பேன்’ என்று உணர்ச்சி வசப்பட்டுக் கதறிவிடுவாள் என்று தெரியும்.
அலிஸனைக் கொண்டு போய்ச் சினேகிதர்கள் வீட்டிற் சேர்த்து விட்டு வார்ட்டுக்குத் திரும்பியபோது டேவிட் மிகவும் களைத்து விட்டான். விடிந்த நேரத்திலிருந்து ஒரே கார் ஒட்டும். ஒரே அலைச்சல்.
மற்றக் குழந்தைகளுடன் ஒப்பிடும்போது டேவிட்டின் மகன்

71 ராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம்
பீட்டரின் கால் மட்டும்தான் உடைந்தது. உஷாவின் தலையோ மிகவும் பாரதூரமான அடிக்குள் உணர்விழந்து கிடக்கிறது.
டேவிட் மேற் கண்டவாறு சிந்தித்துக் கொண்டு வந்த போது "ஹலோ” என்ற குரல் அவனைத் திடுக்கிடப் பண்ணியது.
ஆஸ்பத்திரி விறாந்தையிலுள்ள பெஞ்ச் ஒன்றில் தனிமையாக உட்கார்ந்திருந்த அந்த உருவத்தைக் கண்டதும் அவன் ஒரு தரம் கண்களை அகல விரித்துப் பார்த்தான்.
“என்ன டேவிட் அப்படிப் பார்க்கிறாய் நான் தான் பார்பரா’ அவள் வசீகரமாய்ச் சிரித்தாள்.
"ஹலோ பார்பரா, கண்டு கனகாலம். எப்படி இருக்கிறீர்கள். 'அலிஸன் இப்போதுதான் வீட்டுக்குப் போனாள்' அவன் படபடவென்று சொல்லிக் கொண்டு போனான்.
மத்தியானம் பெய்து கொட்டிய மழைக்கு எதிராக இப்போது வானம் மிகவும் தெள்ளத் தெளிவாகத் தெரிந்தது. நட்சத்திரங்கள் அங்கொன்றும் இங்கொன்றுமாய் பூமி மனிதர்களுக்குக் கண் சிமிட்டியது.
விறாந்தையின் ஜன்னலால் வானத்தை வெறித்துப் பார்த்தான் டேவிட்.
‘என்னை அடிக்கடி காண நேரமிருந்தாலும் தவிர்த்துக் கொள்வீர்கள் டேவிட் அப்படித்தானே'
அவள் அலங்காரமாய்ச் சிரித்தாள்.
குழந்தையை வார்ட்டில் வைத்துக் கொண்டிருக்கும் தகப்பனுடன் அவள் பேசும் சிருங்கார பாவனை ஒரு நாடகம் போலிருந்தது. பார்பரா என்றுதான் யதார்த்த உலகத்தைக் காணப் போகிறாள்?
அவள் கேட்ட கேள்விக்கு அவன் மறுமொழி சொல்லவில்லை.

Page 41
மந்தம் வந்து போய்விட்டது 72
"பீட்டரின் கால் உடைந்து விட்டது. மற்றக் குழந்தைகளிற் சிலருக்குப் பலத்த காயம், நல்ல காலம் பீட்டரின் நிலை பரவாயில்லாமலிருக்கிறது’ டேவிட்டின் படபடப்பு இன்னம் மாறவில்லை.
"ஏன் என்னைக் கண்டால் உங்களுக்குக் கை கால்கள் தடுமாறுகின்றன." அவள் குரலில் ஏளனம்.
அவனுக்கு எரிச்சல் வந்தது. யூனிவர்சிட்டியில் அவனுடன் படிக்கும்போது பார்பரா இப்படி எத்தனையோ தரம் கேட்டிருக்கிறாள்
இரவில், உலகுறங்கும்போது ஒற்றையாய் வந்து மனித உணர்வுகளைச் சுண்டியிழுக்கும் மோகினிப் பேயா இவள்?
இவன் குழந்தைக்குச் சுகமில்லை. ‘எப்படி உன்குழந்தை என்று கேட்காமல் என்னைக் கண்டு ஓடுகிறாயே என்று இளிக்கிறாளே பார்பாராவின் இந்த நடிப்பு அலிஸனுக்குத் தெரியப் போவதில்லை. ஏன் என்றால் அலிஸனைக் கண்டதும் 'ஐயோ என் அருமைச் சினேகிதியே உனக்கு ஏன் இந்தத் தண்டனை? அன்பில்லாத ஒரு கணவன் அடிபட்டுக் கிடக்கும் ஒரு குழந்தை. இதெல்லாம் கடவுள் சோதனையா” என்று கட்டி அழுதிருப்பாள்.
ஒஸ்கார் பரிசு எடுக்கக் கூடியவள் "வார்டுக்குக் குழந்தையைப் பார்க்கப் போனேன் தாய் தகப்பனைத் தவிர யாரும் இந்த நேரம் குழந்தைகள் வார்ட்டுக்குள் வரமுடியாதாம்’
பார்பரா சூயிங்கத்தைச் சுவைத்தபடி சொன்னாள். 'நடு இரவிற்தான் சுகம் கேட்க,நேரம் கிடைத்ததா உனக்கு” "என்ன செய்வது, என்னைப் போன்ற பெண்கள் தங்கள் வாழ்க்கைக்கு இரவு பகலாக உழைக்க வேண்டியிருக்கிறது." அவள் பெருமூச்சு விட்டாள். பெரு மூச்சு விடும்போது அவள்

73 ராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம்
பெருத்த முலைகள் மெலெழுந்து தாழ்ந்தன.
டேவிட் பார்வையை இருளிற் செலுத்தினாள். அவளிடமிருந்து தப்புவது கடினம். என்ன சாட்டும் சொல்லி அவனுடன் வார்ட்டுக்கு வராமல் அவள் போகப்போவதில்லை.
பீட்டர் தூங்கிக் கொண்டிருக்கிறான். டேவிட் வார்ட்டை நோக்கி நடந்தான்.
அதே நேரம் எமிலி தனது குழந்தையிருக்கும் இன்ரென்ஸிவ் கெயர் யூனிட்டுக்குப் போக இவர்களை நோக்கி வந்து கொண்டிருந்தாள்.
எமிலிக்கு பார்பராவைத் தெரியாது. அலிஸனின் அல்லது டேவிட்டின் சினேகிதர்களாக இருக்கலாம் என்று நினைத்துக் கொண்டு வந்தாள்.
ஆஸ்பத்திரி வெளிச்சத்திலும் எமிலியின் அழகிய தோற்றம் டேவிட்டைக் கிறங்கப் பண்ணியது. இன்றெல்லாம் பசியோடும் துயரோடும் தவித்தும் அவள் முகம் இன்னும் நிதானமாகவும் வசீகரமாகவுமிருந்தது.
அவனின் பார்வையை ஒரு நொடியிற் புரிந்து கொண்டாள் பார்பரா, தங்களை அண்மிக்கும் எமிலியைக் கண்டதும் அவளைத் தான் எங்கேயோ பார்த்திருப்பதாக பார்பராவின் மூளையிற் தட்டியது.
டேவிட் படக்கொம்பனியில் வேலை செய்பவன். எத்தனையோ பெண்களுடன் பார்பரா அவனைத் தெருவில் சந்தித்திருக்கிறாள். படப்பிடிப்புக்கு அல்லது ஏதோ ஒரு பார்ட்டிக்கு என்று அவன் 96)J &FJLDT 65 விரைந்து கொண்டிருப்பான்.
பார்பரா இங்கிலாந்தில் பெயர் பெற்ற ஒரு மொடல், இப்போது பாரிசில் தனது ஒய்யார நடைபோட்டு நிறைய உழைத்து விட்டு வந்திருக்கிறாள்.

Page 42
வசந்தம் வந்து பேய் விட்டது 74
மொடல்களுக்கே உரித்தான வாளிப்பான உடலும் வசீகரமான சிரிப்பும் கொண்டவள் பார்பரா, நீண்ட தலைமயிர் எப்போதும் மேக்அப் போட்டுக் கொண்ட முகம், சிரிப்பை ஒட்டி வைத்த பாவம். இவ்வளவும் பார்பராவுக்குச் சொந்தம்.
'அலிஸன் வீட்டுக்குப் போய்விட்டாளா’ ஏதோ கேட்க வேண்டுமென்பதற்காகக் கேட்டு வைத்தாள் எமிலி. அவனுடன் நிற்கும் பெண் அவளைத் துருவிப் பார்ப்பதை அவள் விரும்பாததால் முகத்தைத் திருப்பினாள். அவன் 'உம்' கொட்டினான்.
'குட் நைட்' சொல்லி விட்டு எமிலி நகர்ந்தாள். டேவிட் தன்னுடன் நிற்கும் பெண்ணை எமிலிக்கு அறிமுகம் செய்து வைப்பதா இல்லையா என்று தடுமாறுவது தெரிந்தது.
எமிலி இவர்களைக் கடந்து போனதும் பார்பரா திரும்பி நின்று அவளையே பார்த்துக் கொண்டிருந்தாள்.
"இந்தப் பெண்ணை எங்கோ பார்த்திருக்கிறேன்’ அவள் தன் உதட்டில் விரலை வைத்தபடி யோசித்தாள்.
"உனது மொடல்களில் ஒருத்தியாகச் சந்தித்தாயா' டேவிட் கிண்டலடித்தான்
பார்பராவுக்கு அவன் கிண்டல் பிடிக்கவில்லை என்பது அவளின் முக மாற்றத்திலிருந்து தெரிந்தது.
சட்டென்று அவள் முகத்தில் ஒரு குறும்பு.
“ஹலோ, ஹலோ, இந்தப் பெண்ணுடன் ரெஸ்ட்ரோண்டுகளுக்குப் போய்ச் செல்லம் பண்ணுவது அலிசனுக்குத் தெரியுமா?"
டேவிட் திகைத்து நின்றான், பார்பரா அவனைப் பார்த்துச் சிரித்தாள்.

75 ராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம்
7
இரண்டு நாட்களாகியும் உஷ்ாவுக்கு உணர்வு வரவில்லை. 'கோமா (Coma) நிலையில் குழந்தையின் மூளைஇயங்குவதாக டொக்டர்கள் சொன்னார்கள்.
சாந்தியால் எதையும் கிரகிக்க முடியவில்லை. அவள் சரியாகச் சாப்பிட்டு, நித்திரை செய்து இரண்டு நாட்களாகிவிட்டன.
மூன்றாம் நாள் அவளின் தமயன் சங்கர் வந்து தான் குழந்தையுடன் நிற்பதாகவும் சாந்தியும் ராஜனும் அன்றைக்கு வீட்டுக்குப் போய்க் குளித்து உடை மாற்றிக் கொண்டு வரும்படியும் சொன்னான்.
தமயனின் பாசம் அவள் இருதயத்தைத் தொட்டது. எவ்வளவோ படித்த தமயன் லண்டனில் ஒரு நல்ல வேலைக்கு போக முடியாமல் மளிகைக் கடை வைத்திருக்கிறான்.
எத்தனையோ படித்த தமிழன்களின் நிலையது. அவன் கடையை விட்டு விட்டு அடிக்கடி ஆஸ்பத்திரிக்கு வந்தால் அவனது மனைவிக்கு பிடிக்காது. லண்டனுக்கு வந்து எதைக் கண்டோம் என்று பெருமூச்சு விடுபவர்களில் ஒருத்தி. எதைக் கொடுத்தாலும் நிறைவு காணாத மனம் அவளுக்கு.
சங்கரின் மனைவி ராசிகா பெரிய இடத்துப் பெண். வாழ்க்கையின் நிறைவை வீட்டில் குவித்து வைக்கும் பொருட்களின் மூலம் அளவிடுபவள் அவள்.
‘'வேண்டாம் அண்ணா, குமார் வருவதாகச் சொல்லியிருக்கிறான் அவன் வந்ததும் நான் போகிறேன்’.
சாந்தி தமயனை அனுப்பி விட்டு மகளின் அருகில் உட்கார்ந்திருந்தாள்.
அன்று பின்னேரம் ரவியை வார்ட்டுக்கு மாற்றி விட்டார்கள். சாந்தி மட்டும் மகளுடன் அந்த இன்ரென்ஸிவ் கெயரில் குந்திக் கொண்டிருந்தாள்.

Page 43
வசந்தம் வந்து போய்விட்டது 6
ராஜன் வேலைக்குப் போவதில்லை. ஆனால் யாருக்கோ அடிக்கடி போன் பண்ணினான், அடிக்கடி வெளியே போய் வந்து கொண்டிருந்தான்.
அவளின் சிந்தனைகள் மிகவும் குழம்பிப் போயிருந்தன. நேற்று வரைக்கும் எமிலி அருகில் இருந்தாள். இப்போது ரவிக்குக் கொஞ்சம் பரவாயில்லை என்ற நிலை வந்ததால் வார்ட்டுக்கு அனுப்பி விட்டார்கள்.
அன்று பின்னேரம் குமார் வந்தான். தமக்கையின் கலைந்த தலையும், உறக்கமற்ற கண்களும், கசங்கிய உடுப்பும் அவளை மிகவும் பரிதாபமாகக் காட்டின.
‘ராஜன் அக்காவைக் கூட்டிக் கொண்டு போங்கள். நான் உஷாவுடன் நிற்கிறேன்"
வாழ்க்கையில் எந்த அனுபவமுமில்லாத குமார் பெரிய, குடும்பத்தான் போல பேசினான்.
ராஜன் மெளனமாக மனைவியைப் பார்த்தான். அவள் பிளாஸ்டிக் பை ஒன்றில் தேவையில்லாத சாமான்களைத் திணித்துக் கொண்டிருந்தாள். கடந்த மூன்று நாட்களாக அவள் கணவனின் முகத்தை நிமிர்ந்து பார்க்கவில்லை. ஏனோ தானோ என்று பழகிக் கொண்டார்கள்.
f :
சாமான்களைத் திணித்ததும் “சரி நான் போய் வருகிறேன் உஷாவின் நிலையில் ஏதும் மாறுதல் என்றால் எனக்கு உடடினடியாகப் போன் பண்ணு' தம்பிக்கு உத்தரவிடும் தோரணையில் சொன்னாள்.
எனக்கு உடடினடியாகப் போன் பண்ணு என்று அவள் சொன்னது அவனுக்குப் புதிராக இருந்திருக்க வேண்டும். ராஜனை ஏறிட்டுப் பார்த்தான் குமார். ராஜன் அவன் பார்வையைச் சந்திக்க விரும்பாமல் மெஷினின் உதவியுடன் உயிரைப் பிடித்துக் கொண்டு கிடக்கும் தன் அருமை மகளைப் பார்த்தான்.

77 ராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம்
சாந்தி படபடவென்று வெளிக்கிட்டாள், ராஜன் பின் தொடர்ந்தான்
காரில் ஏறும் வரைக்கும் இருவரும் ஒன்றும் பேசிக் கொள்ளவில்லை.
லண்டன் நகரம் பின்னேரம் குதூகலத்தில் ஆரவாரித்துக் கொண்டிருந்தது. இவர்களைப் போல் எத்தனை மனிதர்கள் தம்பதிகள் என்ற சட்டத்துக்குள் தங்களைத் தாங்களே சித்திரவதை செய்து கொண்டிருக்கிறார்கள்? சாந்தியின் மனம் யோசித்தது.
கடந்த பத்து வருடம் அனுபவிக்காத துயர்களைக் கடந்த இரண்டு நாட்களில் அனுபவித்த அலுப்பு.
சென்ரல் லண்டனை விட்டு மோட்டோர்வேயில் கார் வேகமாக ஓடியது. அவளின் மெளனம் அவனுக்கு ஆத்திரத்தையுண்டாக்கியது.
'அண்டைக்கு ஒவ்வீசுக்கு வந்தேன்’ சாந்தி சொன்னாள், குரலில் எரிமலை வெடித்தது.
"தெரியும்’ அந்த எரிமலையைத் தணிக்கும் குளிர்ச்சி அவன் குரலில்
"யார் அந்தத் தேவடியாள்" சாந்தி கெளரவத்தைப் பார்க்காமற் கத்தினாள். காரின் வேகம் சட்டென்று குறைந்தது. மிகவும் விரைவாக இவர்களுக்குப் பின்னால் வந்த கார் ஹோர்ன் அடித்துத் தன் ஆத்திரத்தை வெளிப்படுத்தியது. அவன் இவளைத் திரும்பி பார்த்தான்.
அவள் அழாமல் அவனை எரித்து விடுவது போல் பார்த்தாள். "என்ன வாயில முட்டையா"
அவள் பைத்தியம் போற் சத்தம் போட்டாள்.

Page 44
வசந்தம் வந்து போய்விட்டது 78
கல்யாண வாழ்க்கையில் அவர்கள் எல்லாத் தம்பதிகள் மாதிரியும் தர்க்கம் பண்ணி யிருக்கிறார்கள். ஆனால் அவள் இப்படிப் பைத்தியத்தனமாகக் கத்தவில்லை.
'வீட்டுக்குப் போய்ப் பேசலாம்’, நிதானமாகச் சொன்னான்.
அவள் வாயில் வந்தபடி முணுமுணுத்துக் கொண்டு வந்தாள். கடந்த மூன்று நாட்களாக மனத்தில் அடக்கி வைத்திருந்த ஆத்திரம், நித்திரையற்ற களைப்பு, பசியின் கொடுமை எல்லாம் சேர்த்து அவளை நிலை தடுமாற வைத்தன.
கார் பார்க் பண்ணும்போது இரவு கவிழ்ந்து கொண்டு வந்தது. கிழவன் பார்க்கின்ஸன் "ஹலோ லேடி” என்றபடி இவளைக் கண்டதும் ஓடிவந்தார்.
"ஐயாம் சொறி, ஐயாம் சொறி, குழந்தைகளுக்கெல்லாம் பலத்த அடியாம். உஷா எப்படி” கிழவன் பரிவுடன் கேட்டார்.
அவள் அழத் தொடங்கி விட்டாள்.
"நிலைமை இன்னும் சீரியஸாக இருக்கிறது’ ராஜன் கிழவனுக்கு மறுமொழி சொன்னான்.
"நான் உன்னுடன் ஆறுதலாகக் கதைப்பேன் பெண்ணே’
கிழவன் கை காட்டி விடை கொடுத்தார்.
வீடு உஷாவில்லாமல் செத்த வீடாய்த் தெரிந்தது அவனுக்கு.
மாடிப்படியில் குந்தியிருந்து குலுங்கிக் குலுங்கி அழுதாள்,
"சாந்தி’ ராஜன் மனைவியை அன்புடன் அணைக்க வந்தான்.
பாம்பாகச் சீறி விழுந்தாள்.
"பட்டப்பகலில் தோளில் கை போட்டுக் கொண்டு சிரித்தபடி போனாளே அந்தத் தேவடியாள், அவளைப் போய்க் கட்டிப் பிடியுங்கள். அவளோட தான் கடந்த மூன்று நாளும்

79 ராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம்
படுத்தெழும்பியிருப்பீர்கள்’ அவள் நாராசமாகப் பேசினாள்,
அவன் விடுவிடுவென்று மேலே போனான். மறுமொழி சொல்லிப் பிரயோசனமில்லை என்ற தோரணையில் நடந்து கொண்டான்.
அவள் விடுவதாக இல்லை. "இந்த வீட்ட நான் கோயிலாக வச்சிருந்தன். உங்களைக் கடவுளாக மதிச்சன். நான் பைத்தியக்காரி'
அவள் தலையிலும் மார்பிலும் அடித்துக் கொண்டாள், தலையைப் பிய்த்துக் கொண்டாள். பைத்தியம் போல் தன் சட்டையைக் கிழித்துக் கொண்டாள்.
"நான் உங்களுக்கு என்ன குறை வச்சன்’ அவள் அவன் காலில் விழுந்து கதறினாள்.
அவன் குழந்தைபோல அவளை வாரியணைத்துக் கொண்டான்.
‘சாந்திக் குஞ்சு'அவன் அவளை இறுக்கியணைத்துக் கொண்டான். ر
“என்னில இப்பிடி நம்பிக்கையில்லாம கதைக்கிறதுக்கு உன்னிடம் நிறயப் பலம் இருக்கு. ஆனால். ஆனால் .." அவன் அவள் முகத்தை இறுக்கிப் பிடித்து அவன் முகத்திற்கு முன் நிமிர்த்தினான்.
“என் கண்ணே உனது திட்டுக்களை எல்லாம் நான் வாங்கிக் கொள்கிறேன். ஆனால் அதற்கு முதல் ஒரு கேள்வி கேட்க விரும்புவன்' அவன் உதடுகள் நடுங்கின, கண்கள் பனித்தன. கைகள் நடுங்கின.
அவள் அவனிடமிருந்து திமிறியழுதாள், அவன் தலையைப் பிடித்துக் குழப்பினாள், மார்பில் குத்தினாள்.
'நான் உனக்குத் துரோகம் செய்வன் என்கிற நம்பிக்கை உனக்கிருந்தால் நான் இப்பவே இந்த வீட்டை விட்டுப் போறன்.

Page 45
வசந்தம் வந்து போய்விட்டது 80
ஏனென்றால் என்னில் நம்பிக்கை வைத்து நான் சொல்லும் விடயங்களைக் கேட்க முடியாத உன்னால் ஒன்றையும் சீரியஸாக எடுக்க முடியாது.”
'அலிஸன் சொல்கிறதெல்லாம் சரி, ஒரு ஆண்களையும் நம்பக் கூடாது. கல்யாணம், சடங்கு, மோதிரம் தாலி என்றதெல்லாம் சொல்லிப் பெண்களை ஏமாற்றிப் போட்டு எப்படியும் தாங்கள் நினைத்த மாதிரி நடப்பினம், எமிலி சொல்கிறது சரி, கல்யாணம் என்கிற சடங்கு ஆண்களின் மரியாதைக்கு, சமுதாயக் கெளரவத்திற்கு உண்டாக்கப் பட்ட ஒரு சமுதாய வழக்கு” w
ராஜனுக்கு எரிச்சல் வந்தது. இவளுக்குப் பைத்தியம் பிடித்து விட்டது. கல்யாணமாகி பத்து வருடமாகிறது. இப்படிப் பயங்கரமாகச் சண்டை போட்டதில்லை.
இப்போது அவள் பைத்தியம் மாதிரிக் கத்திக் கொண்டாள்.
'அலிஸன் ஏன் இப்படிக் கணவரில் சந்தேகப்படுகிறாள் என்று நான் அடிக்கடி நினைத்ததுண்டு. டேவிட், நீங்கள் எல்லாம் ஒரே ரகத்தைச் சேர்ந்தவர்கள். உங்களுக்கு சமைத்துப்போட ஒருத்தி, சல்லாபத்திற்கு இன்னொருத்தி’
அவன் பேசாமல் வெளிக்கிட்டான். அவளுடன் பேசிப் பிரயோசனமில்லை. அவன் இரண்டு நாட்களாக நினைத்தவற்றைச் சொல்ல நினைத்தால் அவள் இருக்கும் மனநிலையில் நஞ்சையோ நாராசத்தையோ குடித்துச் செத்துப் போனாலும் ஆச்சரியப் படுவதற்கில்லை.
கால்போன போக்கில் நடந்தான். செயின் அல்போன்ஸ் நகரம் இரவின் கேளிக்கைகளுக்குத் தன்னை அலங்காரம் செய்து கொண்டிருந்தது.
இவனைத் தாண்டிப் போன ஒரு ஆங்கிலேயப் பெண் ஸ்ேராவை ஞாபகப்படுத்தினாள்.
ஸேராவைத் தேவடியாள் என்று பட்டம் கட்டிய சாந்தியிற்

\81 ராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம்
கோபம் வந்தது.
வெள்ளைத் தோல் பெண்கள் எல்லாம் ஒழுக்கம் கெட்டவர்கள் என்பதும் கறுப்புத்தோல் போர்த்த பெண்கள் எல்லாம் பத்தினிகள் என்பதும் சாந்தியின் நம்பிக்கையா?
செயின் அல்போன்ஸ் கதிட்ரல் கம்பீரமாக நிலாவொளியிற் காட்சியளித்தது. அவன் ஒன்றும் பெரிய பக்திமான் இல்லை. ஆனால் சமயங்களைக் கிண்டல் செய்யும் அஞ்ஞானியுமில்லை. உலகத்தில் சரி பிழைகளைத் தன்னால் முடிந்த மட்டும் உணர்ந்து பழக வாழும் ஒரு சாதாரண மனிதன்.
வாழ்க்கையில் ஒரு மிகவும் சோதனையான இக்கட்டில் மாட்டுப் பட்டுக் கொண்டிருக்கிறான். இந்த நேரம் பார்த்துத்தானா எல்லாத் தொல்லையும் வரவேண்டும்? குழந்தைக்கு அக்ஸிடென்ட் பட்ட அதே நேரத்தில் அவன் அண்டர்கிரவுண்ட் ரெயினில் பன்னிரண்டு வருடங்களுக்கு முன் தன் வாழ்க்கையில் தோன்றி மறைந்த ஸேராவைக் காணுவேன் என்று கனவு கண்டானா?
ஸேராவை மட்டுமா கண்டான். தன்னையே உரித்து வைத்திருக்கும் அந்தப் பையனைச் ஸேராவுடன் கண்டபோது அவள் எத்தனை நிதானமாக அந்தப் பையனுக்குச் சொன்னாள். "கிருஷ்ணா, இதுதான் உனது அப்பா'
அவனுக்கல்லவா பைத்தியம் வந்திருக்க வேண்டும்.
தனக்கு ஒரு மகன் அமெரிக்காவில் வளர்கிறான் என்பதை அவன் கனவிலும் நினைத்திருப்பானா?
இவள் எங்கே போய்விட்டாள் என்று இரண்டு வருடங்களாகப் பைத்தியம் போற் சுற்றித் திரிந்தானே அந்த நேரத்தில் தான் தனியாக இந்தப பையனைக் கவனித்தேன் என்று கண்கலங்கச் சொன்னாளே இந்தக் கதை எல்லாம் சாந்திக்குச் சொன்னால் தற்கொலை செய்யாமல் விடமாட்டாள் என்று என்ன நிச்சயம்.

Page 46
வசந்தம் வந்து போய் விட்டது 82
கற்பவதியாகத் தான் எழுதிய கடிதங்கள் ஒன்றும் தனக்குக் கிடைக்காததன் மர்மத்தின் பின்னால் அக்கா பிரமிளாவின் கொடூரத்தனம் எப்படிப் புதைந்திருக்கிறது என்று அவனுக்குத் தெரியுமா?
அமெரிக்காவுக்குக் கலைக் கண்காட்சிக்குப் போனவள் கல்லூரிக்குக் கடிதம் போட்டாள். ஒரு சில மாதங்களிற் திரும்பி வருவதாகவும் அப்போது மிகவும் 'முக்கியமான விடயத்தை அவனிடம் சொல்லப் போவதாகவும் எழுதியிருந்தாள்.
அவன் அப்போது சட்டப் படிப்பை முடித்து விட்டு "சேம்பரில் சேர இடம் தேடிக் கொண்டிருந்தான்.
லண்டனில் இனவாதத்தின் கொடுமை அப்போது நன்றாகப் புரிந்தது. சட்டத்துறையை ஆங்கிலேய மேல்மட்டம் தன் பிடியில் வைத்திருக்க எதையும் செய்யும் என்று தெரிந்தது.
அவன் இளைஞன், இந்தக் கொடுமைகளால் மனம் தளர்ந்து விட்டான். கல்லூரி வாழ்க்கை முடிந்தபோது தனக்குத் தமக்கை வீட்டு விலாசத்திற்குக் கடிதம் எழுதச் சொலலி அவன் எழுதியிருந்தான்.
கெதியில் ஒரு இடம் எடுத்ததும்தான் தன்பாட்டுக்கு இடம் எடுத்துக் கொண்டு போவதாகச் சொல்லியிருந்தான்.
“லண்டனில் வழக்கறிஞராகப் பிரபலம் ஆவதைவிட ஸ்கொட்லாந்தில் நன்றாக உழைக்கலாம். ஸ்கொட்டிஸ் மனிதர்கள் ஆங்கிலேயர் மாதிரி இனவெறி பிடித்தவர்கள் இல்லை’ அவனின் அத்தானும் புத்திமதி சொன்னார்.
அவனுக்கு அது சரியானதாகப் பட்டது. லண்டனில் அலைந்து திரிந்தபோது ஸேராவின் ஒரே ஒரு கடிதம் கிடைத்தது. அது அவள் தனது கலைக் கண்காட்சி நியுயோர்க்கில் நடத்தியபோது எழுதிய கடிதம். அடுத்த கண்காட்சி கலிபோர்னியாவுக்குப் போன பின் தான் கடிதம் எழுதுவதாகச் சொன்னாள்.

83 ராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம்
அவன் லண்டனில் இருந்தபோது அவளிடமிருந்து வந்த அந்தக் கடிதத்திலுள்ள முக்கிய விடயம் தங்களின் கல்யாணமாக இருக்கலாம் என்று அவன் கற்பனை செய்து கொண்டான்.
கற்பனைகள் அபூர்வமானது. அந்தக் களிப்பில் அவன் தன் எதிர்காலத்தைப் பற்றிச் சிந்தனை செய்தான், ஸேராவுடன் தனது வாழ்க்கை இணைவதைப் பற்றித் தமக்கை என்ன சொல்வாள் என்றும் தெரியும்.
நான் லண்டனுக்கு வர உதவி செய்ததற்காக எனது ஆத்மாவின் வேட்கையை விரயமாக்கலாமா?
கலிபோர்னியாவில் கலைக் கண்காட்சியை முடித்த கையோடு ஸேரா லண்டன் திரும்பினாள். தெரிந்த நண்பர்களின் கூற்றுப்படி ராஜன் தமக்கை வீட்டுக்கு ஸ்கொட்லாந்துக்குப் போய்விட்டான் என்று கேள்விப்பட்டதும் ஓடோடிப் போனாள்.
இலையுதிர்காலத்தில் மரங்கள் பழுத்து மஞ்சள் வெயிலுடன் சல்லாபம் செய்து கொண்டிருந்தது. அறுவடை முடிந்த வயல்கள் அடுத்த பயிர்ச் செய்கைக்குப் பதப்படுத்திக் கொண்டிருந்தது.
இருமாதக் குழந்தை வயிற்றில் வளர ஸேரா பிரமிளாவின் கதவைத் தட்டினாள்.
கல்லூரிப் படிப்புடன் தம்பியின் காதலும் முடிந்துவிடும் என்றிருந்த பிரமிளா ஸேராவைக் கண்டதும் தன் அதிர்ச்சியைக் காட்டாமல் அன்புடன் வரவேற்றாள். ஸேராவின் கலைக் கண்காட்சி பற்றிக் கேட்டாள். ஸேராவுக்கு பிரமிளாவில் ஒரு மதிப்பு பிறந்தது.
நீண்ட நேரப் பேச்சு ஒரு நெருக்கத்தை உண்டாக்க ஸேரா தான் ராஜனின் குழந்தையைத் தாங்கிக் கொண்டிருப்பதைப் பற்றிச் சொன்னாள். பிரமிளா சிரித்தபடி விடயத்தைக் கிரகித்துக் கொண்டு 'என்ன சோதனையிது’ என்று புலம்பத் தொடங்கி விட்டாள்.
லண்டனிலிருந்து ஸ்கொட்லாந்துக்குத் தன் வாழ்க்கையை

Page 47
வசந்தம் வந்து போய்விட்டது 84
மாற்ற முதல் சில சினேகிதர்களுடன் ராஜன் பாரிசுக்குப் போயிருந்தான். ஒரு கிழமைப் பிரயாணத்தை அன்று காலையிற்தான் தொடங்கினான்.
ஸேரா வரும் ஒரு சில நிமிடங்களுக்கு முந்தி அவன் பாரிசில் சுகமாய்ப் போய்ச் சேர்ந்திருப்பதாகப் போன் பண்ணினான்.
ஸேரா ராஜனை இனி ஒரு நாளும் பார்க்காமல் செய்ய வேண்டும் என்ற தீவிரம் பிரமிளாவின் மனத்தில், ஸேராவை அணைத்துக் கொண்டு அழுதாள்.
'ஏன் இப்படித் துக்கப் படுகிறீர்கள்' ஸேரா வியப்புடன் கேட்டாள்.
"ஆண்களை நம்பக் கூடாது ஸேரா’ பிரமிளா மூக்கைச் சிந்திக் கொண்டாள்.
ஸேரா விளக்கமில்லாமல் வெறித்துப் பார்த்தாள். "நான் எனது தம்பி உன்னுடன் பழகும்போதே இப்படி நடக்கும் என்று நினைத்தேன்’
பிரமிளா மூக்கைச் சிந்திக் கொண்டாள்.
“உலகத்தில் பெரும்பாலான ஆண்கள் எப்போதும் பெண்களைத் தங்கள் இச்சைக்கும் இசைவுக்கும் தானே பாவித்துக் கொள்கிறார்கள். நாங்களும் காதல், கல்யாணம் என்று நம்பிக் கொண்டு அவர்கள் விரிக்கும் வலைகளில் விழுகிறோம்’
பிரமிளா என்ன பேசுகிறாள் என்று ஸேராவால் ஒரு கொஞ்ச நேரம் புரிந்து கொள்ள முடியாமலிருந்தது.
வெளியில் பெரிய காற்றடித்து பழுத்த இலைகளை விழுத்தி மரத்தைப் பட்ட மரமாக்கிக் கொண்டிருந்தது.
வெட்ட வெளிச்சமாயிருந்த வானம் இப்போது கருமேகங்களைத் தாங்கிக் கொண்டு ஸேராவுடன் சேர்ந்தபடித் தயாராகிக் கொண்டிருந்தது.

85 ராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம்
பக்கத்து வீதியில் யாரோ ஒரு குழந்தை தாய் தகப்பனைப் பிரிந்து விட்டதோ என்னவோ பரிதாபமாக அழுது கொண்டிருந்தது.
தூரத்தில் ஏதோ பஸ்சும் காரும் அடிபட்ட சத்தம். போலிஸ் வானும் ஆம்புலன்சும் அலறிக் கொண்டு பறந்தன.
ஸேரா தனக்குப் பரிதாபப் படும் தன் காதலனின் தமக்கையைத் தன் வெறித்த பார்வைக்குள் நிழலாக்கினாள்.
'படிப்பு முடிந்ததும் கல்யாணம் செய்வதாக இருந்தோம், ஆனால் எனது கலைக் கண்காட்சி முன்னரே ஏற்பாடு செய்யப் பட்டிருந்ததால் நான் அமெரிக்கா போக வேண்டியிருந்தது'
ஸேராவின் பேச்சு முன்னுக்குப் பின் முரணானதாகப் பட்டது. அவள் குழபம்பிப் போயிருக்கிறாள் என்று அவளின் வெளிறிய முகம் சொல்லியது.
'உம். இதெல்லாம் இப்போது சரித்திரமாக வேண்டிய விடயம்தான். ராஜன். ராஜன்’ பிரமிளா இப்போது நிச்சயமாகவே அழுதாள். -
“ராஜனுக்கு என்ன நடந்தது’ ஸேரா பதறினாள் 'அவனுக்கு ஒன்றும் நடக்கவில்லை. நீதான் பாவம்' ஸேராவைத் தழுவிக் கொண்டு சொன்னாள் பிரமிளா.
'இத்தனை அழகான பெண்ணுக்கு எத்தனை அழகான குழந்தை பிறக்கும் என்று கற்பனை செய்து பார்க்கிறேன். உம். அவனுக்குக் கொடுத்து வைத்திருக்கவில்லை’ பிரமிளா ஸேராவின் தலையைத் தடவி விட்டாள்.
'என்ன நடந்தது ராஜனுக்கு”
"அதுதான் சொன்னேனே அவனுக்கு ஒன்றும் நடக்கவில்லை. அவன்தான் போன கிழமை பெரிய ஆரவாரமாகப் பெரிய கல்யாணம் செய்து கொண்டானே' பிரமிளா பெருமூச்சு விட்டாள்.

Page 48
வசந்தம் வந்து போய் விட்டது 86
"என்ன" ஸேரா அடிபட்ட நாகம் போற்ச் சீறி விழுந்தாள்,
'இரண்டு கிழமைக்கு முதல் இலங்கைக்குப் போனான். போன கிழமை கல்யாணம் நடந்தது.” பிரமிளா கவனமாகத் தன் பொய்யை உண்மை போல் அவிழ்த்து விட்டாள்.
"நடக்காது நடக்காது நிச்சயம் ராஜன் இன்னொரு பெண்ணைக் கல்யாணம் செய்திருக்க மாட்டார்’ ஸேரா அலறினாள்.
பெண் நாகம் சீறியது. பூகம்பம் வெடித்தது, எரிமலை சிதறியது. ஸேரா அலறினாள்.
'உம், நாங்கள் அப்படித்தான் எல்லாரையும் நம்புகிறோம். எனக்கு அவன் அப்படிச் செய்வான் என்று தெரிந்திருந்தால் இலங்கைக்குப் போகவே விட்டிருக்க மாட்டேன்."
பிரமிளா கோபத்துடன் சீறினாள்.
"இப்படியும் நடக்குமா"
ஆங்கில நாகரீகத்தில் வளர்ந்த ஸேரா தான் கேட்பது உண்மையா இல்லையா என்பதுபோல் தன்னையே கேட்டுக் கொண்டாள்.
பிரமிளாவின் மனத்தில் சந்தோசம்.
'நீங்கள் பொய் சொல்கிறீர்கள், ராஜன் அப்படிச் செய்ய் மாட்டார். நான் இப்போதே விமானம் எடுத்து இலங்கைக்குப் போகிறேன்’ என்றெல்லாம் ஸேரா இல்லாமல் தான் சொன்னதை நம்பி விட்டதை எண்ணிப் பூரித்தாள்.
"அடுத்த கிழமை கல்யாணப் படங்கள் வரும் அனுப்பி வைக்கிறேன்' பிரமிளா அன்புடன் ஸேராவின் முகத்தை வருடினாள்.
“ஸே, என்ன நான் மஸோக்கிஸ்டா? என்னை நானே துன்பப்படுத்திச் சந்தோசப்பட”

87 ராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம்
ஸேராவின் ஆச்சரியம் இப்போது ஆத்திரமாக மாறுவது கண்டு பிரமிளா பூரித்தாள். t
இருவரும் கொஞ்ச நேரம் ஒன்றும் பேசவில்லை. ஸேரா முகத்தை மூடிக் கொண்டு தலையைத் தாழ்த்திக் குனிந்து கொண்டிருந்தாள்.
பூமி பிழந்து விழுங்காதா என்றிருந்தது அவளுக்கு, சொன்னதெல்லாம் பொய்யா? என்னை மலராக்கிய மன்னன் இன்று இன்னொருத்தி மடியிலா? ஸேராவுக்கு இதயம் வெடிப்பது போலிருந்தது.
தலையடிபட்டுப் பரிதாபமாகக் கிடந்த ராஜனின் சோர்ந்த முகம் ஞாபகம் வந்தது.
"அந்தத் தடியன்கள் அடித்துக் காயம் பண்ணியபோதே சாக விட்டிருந்தால் எனக்கு இந்த கதி வராமற் போயிருக்கலாம்’
அப்படி நினைக்கிறாளாஸேரா. அவனைத் தேடி சிவப்பு ரோஜாக்களுடன் ஓடிவந்த அந்த மென்மையான பெண்ணாக ஸேரா இல்லை.
6)յոլգա மலராகத் துவண்டுபோய்க் கதிரையில் அமர்ந்திருந்தாள்.
"இனி அவன் லண்டனுக்கே வரமாட்டானாம். திருமணம் செய்திருப்பது பெண் டொக்டராம். அவுஸ்திரேலியாவுக்குப் போகிறானாம்’
பிரமிளா பெரிய கற்பனை எழுத்தாளராக இருந்திருந்தால் நிறைய எழுதிக் காசு உழைத்திருப்பாள்.
ஸேரா தன் காதைப் பொத்திக் கொண்டாள்.
என்னையவன் பொன் என்றான் பூவென்றான்,
புனலாகும் நீரென்றான் - இன்று

Page 49
வசந்தம் வந்து போய்விட்டது 88
அனலாகும் உலகிற் தள்ளி
அவன் என்னை வாட்டலாமா?,
ஸேரா மூடிய முகத்தைத் திருப்ப வில்லை.
பிரமிளா ஸேராவின் அருகில் வந்து உட்கார்ந்தாள், அன்று பின்னேரம் அவள் கணவன் வீட்டில் இல்லை. குழந்தைகள் இருவரும் சினேகிதர்கள் வீட்டுக்குப் போய் விட்டார்கள்.
பிரமிளாவின் சேர்ஜரி காலையில் முடிந்து விட்டது, அந்த நேரம் ஸேரா வந்தது பிரமிளாவிற்கு மிகவும் நன்மையாகப் ull-gi.
குழந்தைகள் யாருமிருந்தால் அவளால் இப்படிப் பொய்களைச் சொல்ல வழியிருக்காது. அவர்கள் எப்போதும் வந்துபோய்க் கொண்டிருப்பார்கள்.
பிரமிளாவின் கணவன் தன் மைத்துனர் ஆங்கிலேயப் பெண் ஒருத்தியுடன் தொடர்பு வைத்திருப்பதை விரும்பவில்லை. ஆனால் ஸேரா வாயும் வயிறுமாய் வீடு தேடி வந்தபோது அவள் முகத்தை நேரே பார்த்துக் கொண்டு உன்னை காதலித்தவன் போன கிழமை இன்னொருத்தியைச் செய்து விட்டான் என்று பொய் சொல்லியிருக்க மாட்டார்.
தான் சொன்னதை ஸேரா நம்பி விட்டாள் என்று தெரிந்ததும் பிரமிளா மிகவும் சந்தோசப் பட்டாள். ஆனாலும் தன் முகத்தைச் சோகமாக வைத்துக் கொண்டு ஸேராவைத் தடவினாள்.
'என்னதான் உறவென்றாலும் இப்படி ஒரு பெண்ணைத் தவிக்க விட்ட மனிதனை என்னால் மன்னிக்க முடியாமல் இருக்கிறது’
பிரமிளாவின் முதலைக் கண்ணிர் பேதலித்துப் போயிருந்த ஸேராவையும் கலங்கச் செய்தது. இப்படியான ஒரு அருமைத் தமக்கைக்குத் தம்பியான ராஜனா இப்படி என்னை ஏமாற்றினான்!

89 ராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம்
கண்ணிருந்தும் குருடாகக் காதிருந்தும் செவிடாக ஏன் இருந்தேன், என் இதயத்தைப் பிழக்கும் இந்தத் துயரை யாரிடம் சொல்வேன்.
"நான் உன் நிலையில் இருந்தால் என்னை ஏமாற்றிய அந்தப் பாவியின் சின்னத்தை என் வயிற்றில் வளர விடமாட்டேன்’ பிரமிளா ஸேராவின் வயிற்றைத் தடவி விட்டாள்.
ஏனோ ஸேராவுக்கு அந்த வார்த்தைகள் பிடிக்கவில்லை. சட்டென்று எழுந்தாள்.
“உங்கள் அட்வைஸ்க்கு நன்றிகள்’ உதடுகளை இறுக்கிப் பிடித்துத் தன் உணர்வுகளை அடக்கிக் கொண்டு விடுவிடுவென்று வெளியேறினாள் ஸேரா.
வானுயர்ந்த மலை முகடுகள் அவள் துயர்கண்டு பெரு மூச்சு விட்டோ என்னவோ புகார் பரப்பித் துயர் கொண்டாடின.
ஸ்கொட்லாந்தின் வளைந்தோடும் இளம் நதிகள் இந்தப் பேதையின் கண்ணிரைத் தன்னோடு பிணைத்துக் கொண்டன. உலகத்தின் பெரும்பாலான ஆண்களே ஒன்று சொல்லிவிட்டு இன்னொன்று செய்பவர்களா?
அடுத்த கிழமையே லண்டனை விட்டுப் போய்விட்டாள் ஸேரா. லண்டனில் இனிக் காலடி எடுத்து வைக்கக் கூடாது என்று அவள் மனம் அழுதது.
அவளின் தாய் தகப்பன் நியுகார்ஸல் என்ற இடத்தில் வசிப்பவர்கள். ஏன் தங்கள் மகள் அமெரிக்காவைத் தன் வாழ்விடமாகக் கொண்டாள் என்று புரியாமற் தவித்தார்கள்.
ஒவ்வொரு வருடமும் மகளையும் மகளுக்குப் பிறந்த பேரனையும் பார்க்க அமெரிக்கா போய் வந்தார்கள். இந்த வருடம் அவளின் தகப்பன் இறந்து விட்டபடியால் ஸேரா தகப்பனின் இறுதிச் சடங்குகளை கழிக்க லண்டன் வந்தாள்.
பன்னிரண்டு வயதான மகன் எனது 'அப்பா எங்கே’’ என்று

Page 50
வசந்தம் வந்து போய்விட்டது 90
கேட்கும்போதெல்லாம் அவன் லண்டனில் இருப்பதாகச் சொன்னாள்.
பிரமிளா சொன்னதுபோல் ராஜன் அவுஸ்திரேலியாவில் வாழ்வதானாற் தான் ஒரு நாளும் லண்டனில் ராஜனைச் சந்திக்கும் சந்தர்ப்பம் வராது என்று நினைத்திருந்தாள்.
அமெரிக்காவிலிருந்து வந்த அடுத்த கிழமையே ராஜனை அண்டர்கிரவுண்ட் ரெயினிற் சந்தித்த போது அவளால் மெல்லவும் முடியவில்லை விழுங்கவும் முடியவில்லை. எல்லோர் முன்னிலையிலும் 'அட பாவி ஏன் என்னை ஏமாற்றினாய்’ என்று கேட்டுச் சண்டை பிடிப்பதா அல்லது தகப்பன் அளவு வளர்ந்திருக்கும்மகனிடம் எனது அப்பா எங்கே என்று கேட்டாயே இதுதான் உன் அப்பா’ என்று சொல்வதா என்று திண்டாடினாள்.
ஸேராவைக் கண்ட ராஜன் திடுக்கிட்டான். அத்துடன் தன்னை உரித்து வைத்திருக்கும் அந்தப் பையனைப் பார்த்ததும் அவன் உணர்வுகள் சிலிர்த்தன.
இதுதான் உனது அப்பா என்று சொன்னதும் அவன் அப்படியே உறைந்து போனான்.
அவளைப் பிரிந்ததும் ஒரு சில மாதங்களில் அவள் ஏன் தன் வாழ்க்கையிலிருந்து மறைந்து போனாள் என்று திண்டாடினான். கலிபோர்ணியா போனவள் ஏன் தன்னுடன் தொடர்பு கொள்ளவில்லை என்று யோசிக்கப் பைத்தியம் வரும்போலிருந்தது.
ஒரு வார விடுமுறையில் பாரிசுக்குப் போயிருந்தபோது அவள் அவனின் தமக்கையிடம் வந்ததோ பிரமிளா ஸேராவுக்குப் பொய் சொல்லித் திருப்பி அனுப்பிவிட்டதோ அவன் அறியான்.
ஒவ்வொரு நாளும் ஓடோடி வந்துகடிதங்களைத் தேடுவான். ஏமாற்றம் , ஏமாற்றம்.
என் உயிர் நீயென்றாள். நீயின்றி நானில்லை என்றாள். இன்று

91 ராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம்
ஏன் என்னைப் பிரிந்து விட்டாள், எண்ணெயிற் புழுவாய் வதக்குகிறான்.
'இனவாதம் பிடித்த ஆங்கிலேய ஆண்கள் தெருவில், ஒழுங்கையில் தனியாக வரும்போது அடிப்பார்கள், இனவாதம் பிடித்த பெண்களோ எப்படியும் ஒரு கறுப்பனுடன் படுத்துப் பழிவாங்க வேண்டும் என்று நினைக்கிறார்கள் போலும்’ பிரமிளா குத்தலாகச் சொன்னாள்.
‘நான் சொன்னேனே கேட்டாயா? என்ன இருந்தாலும் இந்த
வெள்ளைக்காரிகளை நம்பக் கூடாது.
'தசையாசைக்குமேல் எந்த ஒரு தத்துவத்தையும் புரிந்து கொள்ள முடியாதவர்கள்’ பிரமிளா எரியும் தீயில் எண்ணெய் வார்த்தாள்.
‘எங்கள் ஊர்ப்பெண்ணாக இருந்தால் இப்படி ஏமாற்றி விட்டுப் போவாளா? கை தொட்ட மனிதனுக்காகத் தன் உயிரையே கொடுக்கத் தயங்க மாட்டாள் ஒரு தமிழ்ப் பெண்’ பிரமிளா தன் கலாச்சாரத்தில் கண்ணகிகள், சத்திய சாவித்திரிகள், தீயிறங்கும் சீதைகள், சேலை பறிகொடுக்கும் திரெளபதிகள் பற்றித் துதி பாடினாள்.
அடிக்குமேல் அடி அடித்தால் அம்மியும் நகரும் என்பார்கள். 1985ம் ஆண்டு லண்டனில் போலிஸாரின் அட்டூழியத்தால் ஒரு கறுப்புப் பெண் மரணித்தாள்.
பிறிக்ஸன் என்ற நகரில் கலவரம் நடந்தது. இனத்துவேசத்தின் பிரதிபலிப்பு அவனை ஆங்கிலேயர் களிடமுள்ள நல்ல குணங்களின் அம்சத்தையும் மறைக்கப் பண்ணியது.
அக்கா சொல்வதுபோல் ஸேரா தன்னை உண்மையாகத் தான் ஏமாற்றி விட்டாளா? தனக்குத் தானே எத்தனையோ தரம் அந்தக் கேள்வியைக் கேட்டுக் கொண்டான்.

Page 51
வசந்தம் வந்து போய் விட்டது 92
அவள் சொன்னதெல்லாம் பொய்யா?
அவள் புன்னகை போலியா? செவ்விதழ் விஷம் தோய்ந்ததா? சட்டத்துறையில் அவன் கவனம் செலுத்தினான். உலகத்துப் பெண்களில் எல்லாம் வெறுப்பு வந்தது. எத்தனை பெண்கள் ஸேரா மாதிரி சல்லாபத்துடன் தொடர்ந்த உறவால் கண்ணியமான இளைஞர்களின் வாழ்க்கையைக் கெடுத்திருப்பார்கள்?
அவன் குழம்பிப் போனான், அவளின் மறைவு மிகவும் மர்மமாக இருந்தது.
தமக்கை சாப்பாடு போடும்போதும் தண்ணிர் கொடுக்கும் போதும் தம்பியின் பாசத்தில் அவனை ஏமாற்றிய வெள்ளைக்காரியைத் திட்டுவாள்.
அப்படி அவனைக் குமுறப் பண்ணியவள் பன்னிரண்டு வருடங்களின் பின் திடீரென்று முளைத்திருக்கிறாள்.
நீதானா என் தகப்பன் என்ற பாவனையில் தன்னையுற்று நோக்கும் அந்தப் பையனின் பார்வை குத்திக் கிழித்தது.
'கலைக்காட்சி தொடர்பாகக் கலிபோர்னியா போன நீ ஏன் ஒரேயடியாக மறைந்து போனாய்’ தன்னைச் சுதாகரித்துக் கொண்டு கேட்டான்.
“என்னைப் பிரிந்த இரண்டு மாதத்தில் இன்னொருத்தியைத் திருமணம் செய்த உங்களைத் தேடி உலகமெல்லாம் ஓடி வந்திருக்க வேண்டும் என்று நினைக்கிறீர்களா’
"என்ன சொல்கிறாய்" அண்டர்கிரவுண் ரெயினிற் தன் கடந்த காலச் சரித்திரத்தைத் தொடர அவன் விரும்பவில்லை.
அடுத்த ஸரேசனிற் தன்னுடன் இறங்கிக் கொள்ள முடியுமா என்று கேட்டான்.
“மகன், என்னைக் கொஞ்ச நேரம் உன் தகப்பனுடன் பேச

93 ராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம்
அனுமதி தருவாயா’ ஸேரா கெளரவமாகத் தன் மகனைக் கேட்டாள்.
அந்தப் பையன் என்ன செய்வது என்று தெரியாமல் நினைத்துக் கொண்டிருந்தவன் “உங்களை மீண்டும் சந்திக்க ஆசைப்படுகிறேன்’ என்றான்.
"கட்டாயமாக, கட்டாயமாக' ராஜன் அவசரப்பட்டு சொன்னான்.
அன்று முழுதும் ஸேராவும் ராஜனும் பன்னிரண்டு வருடங்களுக்கு முன் நடந்த வாழ்க்கையின் திருப்பத்தைத் துயருடன் பகிர்ந்து கொண்டார்கள்.
பைத்தியக்காரன் மாதிரி இரண்டு வருடங்கள் அவன் அவள் உறவை நினைத்துத் துடித்ததை அவள் கேட்டு அழுதுவிட்டாள்.
பிரமிளா செய்த கொடுமை நம்ப முடியாமலிருந்தது. இப்படியும் பெண்கள் உலகத்திலிருப்பார்களா? இன்னொரு பெண்ணை வாயும் வயிறுமாகக் கண்டும் இப்படி ஒரு கொடுமை செய்ய மனம் வருமா?
ஸேரா ஒரு ஆங்கிலேயப் பெண் என்பதால் பிரமிளா இப்படிக் குரூரமா நடந்தாளா? தனது சொந்தத் தம்பியின் உயிருக்கு உயிரான காதலியிடம் இப்படிக் காழ்ப்புணர்ச்சியுடன் நடந்து கொள்ள அவளால் எப்படி முடிந்தது.
ஸேரா இந்தக் கேள்வியை எத்தனையோ தரம் அவனிடம் கேட்டாள். அவனுக்கு மறுமொழி சொல்லத் தெரியவில்லை. அன்றெல்லாம் அவர்கள் தங்கள் பழைய வாழ்க்கையைப் பகிர்ந்து கொண்டார்கள். தனது 'புதிய மகனுடன் மத்தியானச் சாப்பாடு உண்டான். TV ரேடியோ கேட்கவில்லை. மகள் ஆஸ்பத்திரியில் இருப்பதும் தெரியாது.

Page 52
வசந்தம் வந்து போய்விட்டது 94
8
டேவிட் பார்பராவுடன் மெளனமாக நடந்து வந்தான். பெரும்பாலான விசிட்டர்கள் போய் விட்டார்கள். அங்கும் இங்கும் ஒன்றிரண்டு தாய் தகப்பன் துயர் படிந்த முகங்களைத் தொங்கப் போட்டுக் கொண்டிருந்தார்கள்.
பார்பரா ஒரு காலத்தில் டேவிட்டுடனும் அலிஸனுடனும் படித்தவள். வாழ்க்கையின் குறிக்கோள் டேவிட்டைத் தன்னுடையவனாகக் கொள்வது என்று கனவு கண்டாள்.
பார்பராவின் உண்மையான தாய் அவளைச் சிறு வயதிலேயே கைவிட்டு விட்டாள். வளர்ப்புத்தாய் தந்தையர் வசதி படைத்தவர்கள் என்றாலும் தன்னைப் பெற்ற தாய் தன்னை அனாதையாக்கி விட்டாள் என்ற அவமானம் பார்பராவை அழித்துக் கொண்டிருந்தது.
சுமந்து பெற்ற தாயே தன்னை வெறுத்து விட்டாள். யார்
என்னை உண்மையாக நேசிப்பார்கள் என்று துயர் பட்டாள்.
தாய் தகப்பனுடன் சந்தோசப்படும் தன் சினேகிதிகளிற் பொறாமை வரும்.
டேவிட்டின் தாய் தகப்பன் கடவுள் பக்தி நிறைந்த கண்ணியமான மனிதர்கள். கல்லூரி நாட்களில் அவர்களைச் சந்தித்தவளுக்கு அவர்களின் மருமகளாக வரும் பாக்கியம் தனக்கு வராதா என்று ஏங்குவாள்.
அலிஸன் அவளின் சினேகிதி, வெட்கம் நிறைந்த பெண். டேவிட் அலிஸனிற் பரிதாபப் படுவது பார்பராவுக்குப் பொறாமையாக விருந்தது.
அவன் அன்பைப் பெற அவள் எத்தனை மயக்க விளையாட்டுக்கள் காட்டலாமோ அத்தனையும் செய்தாள். பார்பரா மிகவும் உயர்ந்து வளர்ந்த தோற்றமுடையவள். பார்ப்பவர்களைக் கவரக் கூடிய தோற்றம். ஆனால் டேவிட்டுக்கு

95 ராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம்
அவளின் போக்கு பிடிக்கவில்லை. எந்த ஆண்களுக்கும் தங்களைத் துரத்திப் பிடிக்கும் பெண்களைப் பிடிக்காது.
அன்பு என்பது இரு உள்ளங்களின் ஒருமித்த சங்கமத்தில் வளர்வது. பார்பரா தன் வசீகரமான தோற்றத்தால், வாளிப்பான உடம்பின் நெழிவு சுழிவால் அவனை ஆட்கொள்ளலாம் என்று எத்தனம் செய்தாள்.
டேவிட்டின் உறவு அலிஸனுடன் தொடங்கியது. சாதாரண சக மாணவி என்ற பெயரிற்தான். காலகட்டத்தில் அலிஸனுடன் நெருங்கிப் பழகினான்.
அவனைத் தெரிந்த பெண்களுக்கு அவன் எடுத்த முடிவு ஆச்சரியம் தந்தது.
“ஆண்கள் எப்போதும் அசடுகளும் அழுமூஞ்சி களையும்தான் விரும்புவார்கள், ஏனென்றால் அப்போதுதானே அந்த அசடுகளைக் கொன்ட்ரோல் பண்ணுவதன்மூலம் தங்கள் "ஆண்மையைக் காட்டிக் கொள்ளலாம்’ இப்படி ஒருத்தி சொன்னாள்.
"போடி டேவிட் போன்ற ஆண்கள் ஒரு பெண்ணுடன் திருப்தி பட்டுக் கொள்வதில்லை. அலிஸன் போன்ற முட்டாள்களை வீட்டில் வைத்துக் கொண்டு வெளியில் தனக்கு விருப்பமானவர்களுடன் திரிவார்கள்." பார்பரா தன் தேன் குரலிற் செல்லம் செய்தாள்.
அவனை முழுமையாகத் தன்னுடையவனாக ஆக்க முடியாவிட்டாலும் அலிஸன் அவள் சினேகிதி என்றபடியால் அவள் உறவு டேவிட்டுடன் தொடரும் என்று பார்பராவுக்குத் தெரியும்.
அவனின் எடுப்பான தோற்றம் எந்தப் பெண்ணையும் கவரும், இனிய இரக்க சுபாவம் எவரையும் கவர்ந்திழுக்கும், குறும்புத் தனமான போக்கு எந்தப் பெண்களையும் குதூகலிக்கச் செய்யும். அவன் படக்கொம்பனி ஒன்றில் வேலை செய்கிறான்.

Page 53
வசந்தம் வந்து போய்விட்டது 96
சினிமா நடிகைகள், செக்கிட்டரிகளுடன் அவன் கும்மாளம் போடவில்லை என்று யார் கண்டார்கள்?
பார்பராவைப் பொறுத்தவரையில் டேவிட் அலிஸனுடன் இணைந்து கொண்டது இலகுவான வாழ்க்கை ஒன்றையமைப்பதற்குத்தான் என்று தெரியும்.
இலைமறை காயாய் இருந்த அன்பை அவனிடம் பார்பரா எடுத்துக் கூறியபோது டேவிட் அவளை ஏறிட்டுப் பார்த்தான்.
அந்தப் பார்வையை அவளாற் சகிக்க முடியவில்லை.
“என்னிடம் இல்லாத அழகு, கவர்ச்சி அலிஸனிடம் இருக்கிறதா’ குரூரமாகக் கேட்டாள்.
“பார்பரா நான் உன்னுடன் சினேகிதமாகப் பழகுகிறேன், அதற்கப்பால் உன்னுடன் எதையும் வளர்த்துக் கொள்ள விரும்பவில்லை. நீ எனது மனைவியின் சினேகிதி என்பதைத் தவிர வேறு எந்த விதமான தொடர்பையும் நான் வைத்துக் கொள்ள விரும்பவில்லை.”
அவன் கெளரவமாகச் சொல்லிக் கொண்டான்.
தாடகைகள் இப்போதெல்லாம் நாகரீகமாக நடமாடுகிறாள்.
அவனின் உதறல் அவளையுறுத்தியது. அலிஸனின் சந்தோசம் அவளை எரியப் பண்ணியது.
இயற்கையாகவே அலிஸன் கொஞ்சம் மந்தம், வெட்கம், எதையும் நம்பும் சுபாவம்.
தன் கணவனின் காந்தரூபத்தில் மயங்கிவிட்டாள் அலிஸன்,
பார்பராவைக் கண்டால் டேவிட் புகழ்பாடத் தொடங்கிவிடுவாள். பார்பரா லண்டனிலும் பாரிசிலும் மொடலாக வேலை செய்கிறாள். ஒவ்வொரு நாளும் எத்தனையோ ஆண்களைச் சந்திக்கிறாள், ஒரு சிலர் அவள் அழகுக்கும் கவர்ச்சிக்கும் மயங்கி எதையும் செய்யத்

97 ராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம்
தயாராகியிருக்கிறார்கள். அவளோ யாரோ ஒருத்தியின் கணவனில் கருத்தைப் பறிகொடுத்து விட்டாள்.
பச்சை மண்ணான தன்னை யாரோ ஒருவர் கையில் ஒப்படைத்துப் போன தாயில் கோபம், தன் கருத்தைக் கவர்ந்து தன்னை உதாசீனம் செய்யும் டேவிட்டில் ஆத்திரம், அவனைத் தன்னுடையவனாக்கிக் கொண்ட அலிஸனிற் பொறாமை.
நேரம் கிடைக்கும் பேதெல்லாம்.அலிஸன் வீட்டுக்குப் போவாள், அல்லது தனது வசீகர மொழியால் அலிஸனைத் தன் மிகவும் படாடோபமான வீட்டுக்கும் வரப் பண்ணிவிடுவாள்.
விலையுயர்ந்த உணவு வகைகளும், கருத்தைக் கலக்கும் மதுபானங்களையும் நிறைத்து வைத்திருந்தாள் பார்பரா.
'எனது அருமைச் சினேகிதியே நீ என்னில் எவ்வளவு அன்பாய் இருக்கிறாய்’ சிவப்பு வைன் மயக்கத்தில் அலட்டுவாள் அலிஸன்.
'உம். சில வேளைகளில் உன்னிற் பரிதாபப்படுகிறேன்’ பெருமூச்சு விடுவாள் பார்பரா.
"ஏன் என்னில் பரிதாபப்படுகிறாய், கண் நிறைந்த கணவன் ஆசைக்குக் குழந்தைகள், கை நிறைய உழைப்பு, வசதியான வீடு இவ்வளவும் எனக்கிருக்கிறது ஏன் என்னிற் பரிதாபப்படுகிறாய்”
பேதைத்தனமாகக் கேட்பாள் அலிஸன். "ஐயோ ஐயோ என் சினேகிதியே, உனது முட்டாள்த்தனத்தை என்னாற் புரிய முடியாமலிருக்கிறது” தன் குரலில் தேனையும் பாலையும் குழைத்து அலிஸனின் உணர்வைத் தூண்டி விட்டாள் பார்பரா
‘என்ன முட்டாள்த்தனம்’ அலிஸன் தன் கீச்சுக் குரலிற் கேட்டாள். அலிஸன் கண்ணாடி அணிபவள்.
ஒரு அலங்காரமும் செய்து கொள்ளாதவள். ஒரு சில பிரச்சினைகளுக்கும் உடனடியாகக் குழம்பிப் போவாள்,

Page 54
வசந்தம் வந்து போய்விட்டது 98
கண்ணிர் எப்போதும் ஊற்றெடுக்கும்.
தன் அப்பாவிச் சினேகிதியை அன்புடன் அணைத்துக் கொண்டாள் பார்பரா. அலிஸனுக்கு அந்த அணைப்புத் தர்ம சங்கடமாக இருந்தது. சாதாரணமாகவே சங்கோஜப்படுபவள். பார்பராவின் அணைப்பு வெறும் சாதாரணமான அணைப்பாகத் தெரியவில்லை.
வாழ்க்கை முன் அலிஸனுக்குக் குழப்பம் தருபவை. மெலனிக்கு ஆண் சினேகிதர்கள் இருக்கிறார்களா அல்லது பெண் சினேகிதர்கள் இருக்கிறார்களா என்று அவள் குழம்பிப் போவாள். ஏனென்றால் பார்பராவின் 'அந்தரங்க வாழ்க்கை அல்லது தனிப்பட்ட வாழ்க்கை என்று கூறிக் கொள்வது அலிஸனாற் கற்பனை செய்ய முடியாத வாழ்க்கை, கணவனுக்கு விருப்பமான மாட்டு வரட்டலையும் உருளைக் கிழங்கு பொரியலையும், இரண்டு மூன்று அவித்த மரக்கறிகளையும் செய்து விட்டு அவனுக்குப் பிடித்த வைனை எடுத்து பிறிட்ஜில் வைத்து விட்டு வீட்டைத் துப்புரவாக்கி விட்டு அவன் வரவில் சந்தோசப் படுவாள் அலிஸன்.
யூனிவர்சிட்டிப் படிப்புடன் அவள் வெளியிற் கொஞ்ச நாள் வேலை செய்தாலும் குழந்தைகள் வந்தவுடன் அவள் வேலையை விட்டு விட்டு நல்லதொரு குடும்பத் தலைவியாகி விட்டாள்.
அமைதியான அந்தக் குடும்ப அமைப்பு பார்பராவின் பொறாமைத்தீயில் எண்ணெய் வார்த்தது.
எவ்வளவோ பணம் உழைத்தும், எத்தனையோ வசதிகள் இருந்தும் தான் நினைத்த அன்பன் யாரோ சொத்தாக இருப்பது அவள் இதயத்தைப் பிழிந்தது.
குழம்பிப் போயிருக்கும் அலிஸனை அணைத்து முத்தமிட்டாள் பார்பரா. 'நான் உன்னில் எவ்வளவு அன்பு வைத்திருக்கிறேன் என்று தெரியுமா’’ அலிஸனை இறுக்கியணைத்தபடி கிசுகிசுத்தாள்.

99 ராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம்
அலிஸனுக்கு உடம்பெல்லாம் எரிந்தது. கஷ்டப்பட்டுத் தன்னை பார்பராவிடமிருந்து விடுவித்துக் கொண்டு இன்னொரு கிளாஸ் வைனை ஊற்றிக் கொண்டாள்.
"உனது நன்மைக்குத்தான் சொல்கிறேன். டேவிட்” பார்பரா தான் சொல்ல வந்ததைச் சொல்லாமற் தன் அசட்டுச் சினேகிதியின் முகத்தை அளவெடுத்தாள். பார்பராவின் முகத்தை ஏறிட்டுப் பார்த்தாள் அலிஸன்.
“டேவிட்டைப் பற்றி என்ன சொல்லப்போகிறாய்” அலிஸனின் குரல் நடுங்கியது.
பார்பரா எத்தனையோ போய் பிரண்ட்ஸ், கேர்ள் பிரண்ட்ஸ் அதாவது பார்பரா தான் ஒரு 'பைசெக்சுவல்’ என்று மறைமுகமாக எத்தனையோ தரம் அலிஸனுக்கு சொல்ல முயன்றும் அரை மந்தம் அலிஸனுக்கு அவ்வளவாக விளங்கவில்லை. இப்போது என்ன சொல்லப் போகிறாள் இவள். தன்னுடைய கட்டிற் சினேகிதர்களில் டேவிட்டும் ஒருத்தன் என்று சொல்லப் போகிறாளா?
அலிஸன் மடமடவென்று இரண்டு கிளாஸ் வைன் குடித்து முடித்து விட்டாள்.
“பார்பரா உண்மையைச் சொல்." அலிஸன் அழத் தொடங்கி விட்டாள். “என்ன உண்மை பொய் சொல்வது? உன் கணவன் போல் வாட்ட சாட்டமான ஆண்கள் உன் ஒருத்தியுடன் திருப்திப் படுவான் என்று நினைக்கிறாயா? பார்பரா குத்தலாகக் கேட்டாள். அலிஸன் ஓவென்று அழுதாள். பார்பராவின் மனம் சந்தோசத்தில் துள்ளியது. டேவிட்டைப்
பழிவாங்க எந்த இடத்தில் அடிபோடலாம் என்று எதிர்பார்த்தவளுக்கு அலிஸனின் முட்டாள்த்தனம் மிகவும்

Page 55
வசந்தம் வந்து போய்விட்டது 00
இலகுவாகப் பயன்படுத்தப்பட்டது.
'பார்பரா. பார்பரா “அலிஸன் பிதற்றத் தொடங்கினாள், ஒரு சில நிமிடங்களுக்கு முன்னால் பார்பராவிடமிருந்து தன்னைப் பிரித்துக் கொண்டோடியவள் இப்போது ஓடிவந்து பார்பராவை அனைத்துக் கொண்டு குலுங்கிக் குலுங்கிக் கொண்டழுதாள்,
“டேவிட்டுடன் கட்டிலுக்குப் போகும் பெண்களில் நீயும் ஒருத்தியா’ அலிஸன் கேவிக் கேவியழுதாள். ஆணழகனாக யூனிவர்சிட்டி மாணவர்களால் கருதப்பட்ட டேவிட் அசட்டு முகம் படைத்த தன்னை விரும்பியதற்குக் காரணம் தன்னை வீட்டு வேலைக்காரியாக வைத்துக் கொண்டு உலகம் சுற்றவா?
“அடி அசட்டுஅலிஸனே, நான் அப்படியெல்லாம் துரோகம் செய்வேனா? உன்னில் உள்ள அன்பில் அவனைப் பற்றிய சில விடயங்களைச் சொல்கிறேன்’
பார்பராவின் நச்சு வார்த்தைகள் குழம்பிப் போயிருந்த அலிஸனை மிகவும் கலக்கி விட்டது. அதுதான் ஆரம்பம்.
அதன்பின் ஒரு கொஞ்சம் பிந்தி வந்தாலும் “யாருடன் இருந்து விட்டு வருகிறாய்' என்று கீச்சு குரலிற் கத்துவாள் அலிஸன். .۰ن -
அலிஸனின் இந்தக் கேள்விகளை டேவிட் ஆரம்பத்தில் சட்டை செய்யவில்லை. வீட்டுக்குள் அடைந்து கிடக்கும் எத்தனையோ பெண்மணிகளுக்குத் தங்கள் கணவர்களில் இப்படிச் சந்தேகம் வரும் என்று அவனுக்குத் தெரியும். சாதாரணமாகவே அவன் மிகவும் பிஸியானவன்.
காலை ஒன்பது தொடக்கம் பின்னேரம் ஐந்து மணி வரைக்கும் செய்யும் வேலையல்ல அவனது வேலை. எப்போது படப்பிடிப்புத் தொடங்கும், எப்போது முடியும் என்று சொல்ல முடியாத நிலையற்ற தொழில்.
அந்த மாதிரி வேலை செய்து விட்டு வீட்டுக்கு வந்தால் அலிஸனின் வார்த்தைகள் வில் அம்புகளாய்த் துளைத்தன.

101 ராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம்
சாதாரணமாகவே ها 60 كمنهلr60 மனமுள்ள அலிஸன் குழந்தைகள், வீடு என்று பல பிரச்சினைகளிலும் தலையைப் போட்டுக் குழப்பிக் கொண்டு கஷ்டப்படுவதாக அவன் யோசித்தான்.
'சில பெண்கள் தீட்டுத் துடக்கு வந்தால் இப்படிச் சினந்து கொள்வர் என்று ஒரு சினேகிதன் சொன்னான்.
'கணவர்களில் சந்தேகப்படுபவர்கள் போல் நடந்தாற்தான் சில பெண்களுக்குத் திருப்தி வரும் என்றான் இன்னொருத்தன்.
'இப்படியான சந்தேகப் பேச்சுக்கள் எல்லாம் யாரோ அவர்களின் மனத்தைக் குழப்பி விடுவதால் வரும் பிரதிபலிப்பு என்றான் சைக்கோலாஜி படித்துக் கொண்டிருக்கும் சினேகிதன் ஒருத்தன்.
'உங்கள் செக்ஸ் உறவில் பிரச்சினையா” என்று கண்ணடித்தான் இன்னொரு குறும்பன்.
ஆறுதலாக அலிஸனுக்குத் தன் விளக்கங்களை எல்லாம் சொல்லிக் களைத்து விட்டான் டேவிட். அந்த நேரத்திற்தான் எமிலியை ரெயினிற் சந்தித்தான்.
தொடர்பு வளர்ந்தது. ஒன்றிரண்டு தரம் சாப்பிடவும் ஒன்றிரண்டு தரம் சினிமாவுக்கும் போனார்கள், ஆனாலும் எமிலி இவனிடமிருந்து தூரத்திற் தன்னை வைத்துக் கொண்டு பழகினாள்.
ஒரு நாள் சாப்பிட்டு விட்டு வரும்போது தன்னை யாரோ கூர்ந்து நோக்குவது போலிருந்தது. யாரென்று திரும்பிப் பார்த்தான். பார்பரா தன் ஆடம்பரமான உடையுடன் ஒரு பெரிய மாளிகை மாதிரியான காரிலிருந்து இறங்கி வந்து இவனுடன் சாப்பாட்டுக் கடையால் வெளிவரும் பெண்ணை உற்றுப் பார்த்தாள். டேவிட் தர்மசங்கடப்பட்டான். ஆனால் எமிலி டேவிட்டின் தர்ம சங்கடத்தையோ அல்லது பார்பரா என்றொரு பெண் தன்னைக் கொலை செய்வது போல் பார்ப்பதையோ

Page 56
வசந்தம் வந்து போய் விட்டது 02
கவனிக்கவில்லை.
ஒரு சில கிழமைகளின் பின் சாந்தியும் ராஜனும் அலிஸன் குடும்பத்தையும் எமிலியையும் சாப்பிடக் கூப்பிட்டார்கள். இடி, மின்னல், புயல் எல்லாம் ஒரு நிமிடத்தில் வெடித்துச் சிதறியது.
அன்றுதான் எமிலிக்கு டேவிட் யார் என்று தெரிந்தது. அலிஸனின் கணவன் என்று தெரிந்திருந்தால் அவள் அவனுடன் நெருங்கிப் பழகியிருக்க மாட்டாள்.
சாந்தியும் கணவரும் அவர்களை அறிமுகம் செய்து வைத்தபோது கெளரவமாக "ஹலோ ஹவ் டு யு டூ” சொல்லிக்
கொண்டார்கள்.
அடுத்த நாள் ரெயினிற் கண்டபோது “உங்களைப் போல் எத்தனையோ பேர் இப்படி மற்றவர்களை ஏமாற்றிக் கொண்டிருக்கிறீர்கள்’ என்று கேட்டாள் எமிலி.
"நான் உன்னை ஒன்றும் ஏமாற்றவில்லை’ “நான் முட்டாளுமில்லை’ அவள் முனங்கிக் கொண்டாள்,
'அலிஸன் உங்களில் நம்பிக்கையில்லாமல் பேசுவது சரியென்று படுகிறது. 'எனது கணவன் டேவிட் யாரோ பெண்ணுடன் லண்டனிற் திரிந்தாராம் என்று அலிஸன் அழுதபோது அந்த டேவிட் என்னைச் சாப்பாட்டுக்குக் கூட்டிக் கொண்டு போன நீங்கள்தான் என்பதை நான் என்னவென்று சிந்திக்காமல் விட்டேன்’ எமிலி உதடுகளை இறுக்கிப் பிடித்துத் தன் உணர்ச்சிகளை அடக்கிக் கொண்டாள்.
இப்போது செத்த பிணம் தின்னும் பேயாய் டேவிட்டின் பின்னால் வந்து கொண்டிருந்தாள்.
'நீங்கள் யாரோ முன் பின் தெரியாத பெண்ணுடன் கூத்தடித்துக் கொண்டு திரியவில்லை, அலிஸனுக்குத் தெரிந்த பெண்ணுடன்தான் உங்கள் கேளிக்கைகளை வைத்துக் கொள்கிறீர்கள்’

103 ராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம்
பார்பரா சுருதி தவறிய தாளம் மாதிரி உதிர்த்துக் கொண்டிருந்தாள்.
““Lumiil u JIT''
டேவிட் குரலில் உறுதியுடன் அவளைத் திரும்பிப் பார்த்தான்.
என்ன என்பது போல் அவள் புருவங்களையுயர்த்தி அவனைப் பார்த்தாள்.
'எனது மகன் ஆஸ்பத்திரியில் இருக்கிறான். அலிஸன் சும்மாவே என்னில் சந்தேகப்பட்டுத் தன் மனத்தை வீணாகக் குழப்பிக் கொண்டிருக்கிறாள். தயவு செய்து நீவீண் கதைகளைப் பேசி அவளைக் கலக்காதே’
'ஓ மனைவியில் எவ்வளவு அன்பு. அப்படி அன்புள்ளவர் ஏனாம் இன்னொரு பெண்ணுடன் சாப்பாட்டுக் கடைப்பக்கம் போகிறீர்களாம்"
"அந்தப் பெண்ணுக்கும் எனக்கும் நீ நினைக்கும் அளவுக்கு எந்த உறவுமில்லை. நாங்கள் சினேகிதர்கள்’
"அப்படிச் சினேகிதமாக என்னுடனும் இருந்து கொள்ளலாமே” பார்பரா வயலின் வாசிப்பது போற் சொன்னாள்.
“என்ன’ டேவிட்டின் குரலில் எரிச்சல்
'உங்கள் ரகசியத்தை நான் அலிஸனிடம் சொல்லாமல் இருப்பதானால் அதற்கு நிபந்தனையை நீங்கள் நிறைவேற்ற வேண்டும்’
அவன் கேள்விக் குறியுடன் அவளைப் பார்த்தான். “என்னுடன் ஒரு கிழமை பாரிசுக்கு வரவேண்டும்’ அவன் சிலையாய் நின்றான்.
பார்பரா அவனை ஏற இறங்கப் பார்த்தாள். அப்படியே

Page 57
வசந்தம் வந்து போய்விட்டது 104
அவனை அள்ளி எடுக்க வேண்டுமென்று இச்சை அவள் கண்களில் பிரவகித்து ஓடியதை டேவிட் கவனிக்காமல் இல்லை.
"என்ன பிளாக் மெயில் செய்கிறாயா’
"அப்படி ஒன்றுமில்லை, மரமண்டை அலிஸனை ஒரு கிழமை பிரிந்து விட்டு என்னுடன் பாரிசுக்கு வாருங்கள். சொர்க்கத்தின் யதார்த்தம் எப்படி இருக்கும் என்பதை இருவரும் சுகிப்போம்’
அவளை விட்டு உலகத்தில் எந்த மூலைக்கோ ஓடி விட வேண்டும் போலிருந்தது டேவிட்டுக்கு.
'உலகத்தில் இதெல்லாம் நடக்காத விடயங்களா?
அலிஸனுக்கு நான் சத்தியம் செய்திருக்கிறேன் அவளுடன் உங்களைப் பகிர்ந்து கொள்ள மாட்டேன் என்று'
அவள் கவர்ச்சியாகச் சிரித்தாள். "உன் சினேகிதியில்லையா அலிஸன்’ பார்பரா இப்போது சத்தம் போட்டுச் சிரித்தாள்.
"நான் அவளுடன் சினேகிதமாய் இருப்பது உங்களுடன் நெருக்கமாய் வரத்தானே'
"உன் கனவு ஒரு நாளும் பலிக்காது” அவளை விட்டு அவன் வேகமாகப் போனான்.
9
'சாந்தி வீட்டுக்குப் போனது நல்லது. மூன்று நாட்களாக இங்கேயே கிடந்தாள்’ எமிலி குமாரிடம் சொன்னாள். தனது மகன் நித்திரையானாலும் உஷாவைப் பார்க்க இன்ரென்ஸிவ் கெயார் யூனிட்டுக்கு வந்தாள் எமிலி.

105 ராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம்
குமார் புத்தகம் வாசித்துக் கொண்டிருந்தான். நேர்ஸஸ் வந்து அடிக்கடி உஷாவின் நிலையைப் பார்த்தார்கள்.
சாந்தி தன் தம்பியைப் பற்றிச் சொல்லும்போது அவளின் தம்பி குமார் இலங்கையில் நடக்கும் இன விடுதலைப் போராட்டத்தில் ஈடுபட்டவன் என்றும் இப்போது எத்தனையோ பல கசந்த அனுபவங்களுடன் லண்டனுக்கு வந்திருப்பதாகவும் சொல்லியிருந்தாள்.
சாந்தியின் குடும்பத்தினரை எமிலி எப்போதாவது இருந்து சந்தித்திருக்கிறான். எமிலி ஒரு தமிழனின் அன்புக் காதலியாக இருந்திருக்கிறாள் என்று குமாருக்குத் தெரியும்.
உஷாவுடன் ரவி எப்போதும் இணைந்து விளையாடுவான். அந்த உறவு சாந்திக்குப் பிடித்திருந்தது. ரவிக்கு இசையில் இப்போதே ஒரு ஈடுபாடு. அவனது தந்தை ஆனந்த் ஒரு இசைக் குடும்பத்திலிருந்து வந்ததாக எமிலி சொல்லியிருந்தாள்.
"ரவி எப்படி” குமார் தன் புத்தகத்தை மூடி விட்டு எமிலியிடம் கேட்டான்.
'அவனது கிட்னியில் பட்ட காயம் குணமடைவதாக டொக்டர்கள் சொல்கிறார்கள். ஆனால் ரவியின் மனதில் மிகவும் போராட்டம் நடக்கிறது” எமிலியின் குரல் கரகரத்தது.
"தெரியும்’ அவளின் முகத்தைப் பார்க்காமல் புத்தகத்தின் தாளம் போட்டான் குமார்.
"எல்லாக் குழந்தைகளுக்கும் அப்பா இருக்கிறார்கள் எனக்கேன் அப்பா இல்லை என்று கேட்கிறான் “அவள் தனிமையான தன் வாழ்க்கையைச் சோகமான குரலிற் பிரதிபலித்தாள்.
'குழந்தைகள் உண்மையானவர்கள், நடிக்கத் தெரியாதவர்கள், மனதிற் பட்டதைக் கேட்பார்கள்’ குமார் விளக்கம் சொன்னான்.

Page 58
வசந்தம் வந்து போய்விட்டது 106
'கள்ளம் கபடமற்ற அந்த மனத்தில் தனது தகப்பனுக்குத் தன்னில் அன்பிருந்தால் வந்து பார்த்திருப்பார்தானே என்ற துக்கம் படிந்திருக்கிறது"
எமிலி பக்கத்திலிருந்த கதிரையில் உட்கார்ந்தாள். பூரணை நிலா ஹொஸ்பிட்டல் ஜன்னலில் இவர்களை எட்டிப்பார்த்தது.
‘என்னைக் கண்டதும் நீங்கள் என் அப்பாவா என்று ரவி கேட்டான்’ குமார் புன்னகையுடன் சொன்னான்.
"ஐயாம்சொறி” தன் குழந்தையின் அப்பாவித்தனமான கேள்விக்காக அவனிடம் மன்னிப்புச் சொன்னாள் எமிலி.
"இதில என்ன மன்னிப்புச் சொல்ல வேண்டியிருக்கிறது?
* ஏதோ கேட்க நினைத்தவன்போல் எமிலியை பார்த்தான் குமார்
அவன் என்ன சொல்ல நினைக்கிறான் என்று அவளுக்குப் புரிந்தது.
'ரவியின் அப்பாவுக்கு என்ன நடந்தது. அவள் எங்கே இருக்கிறார் என்றெல்லாம் கேட்க யோசிக்கிறீர்களா. அப்படி நினைப்பதில் ஆச்சரியம் இல்லையே’
அவன் தான் அப்படித்தான் கேட்க நினைத்தேன் என்பதுபோல் தலையாட்டிக் கொண்டான்.
'ரவியின் தகப்பன் ஒரு தமிழன், இந்தியாவிலிருந்து இங்கு படிக்க வந்தவர், இப்போது இந்தியாவுக்குப் போயத் திருமணம் செய்து கொண்டு சந்தோசமாக இருக்கிறார்’
"பாஸ்ரட்" குமாரின் வசனம் வேகத்துடன் வந்து விழுந்தது. "ஏன் அப்படிச் சொல்கிறீர்கள்'
'உங்களைக் குழந்தையுடன் தவிக்க விட்டு விட்டுப்

107 ராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம்
போனதுஒரு கொடூரமான விடயமல்லவா?”
"அப்படி நான் சொல்லவில்லையே’ அவள் முகத்தில் வெளியிலிருந்து வந்த நிலவு ஒரு பக்கத்திலும் ஹொஸ்பிட்டல் லைட்டின் ஒளி மறுபக்கத்திலும் படிந்து அவள் அழகிய முகத்தை இன்னும் தேஜசுடன் காட்டியது.
“வெளிநாட்டார் பலர் இப்படிச் செய்து விட்டுப் போவதால் எங்களைப் பற்றித் தவறான அபிப்பிராயம் இங்கெல்லாம் இருக்கிறது’ குமார் யார் யாருக்கோ மன்னிப்புக் கேட்டுக் கொண்டான்.
"என்னை ரவியின் தகப்பன் ஆனந்த் ஏமாற்றிவிட்டுப் போய் விட்டார் என்று எப்போது சொன்னேன்?
“எனக்கு விளங்கவில்லை’ குமார் குழப்பத்துடன் அவளைப் பார்த்தான்.
எமிலி சாந்தியின் சினேகிதி. ஆனால் எமிலியின் தத்துவங்கள் சாந்தியால் முழுக்கவும் உணர்ந்து கொள்ள முடியாதவை. அவள் தம்பி குமார் வித்தியாசமானவனாக இருப்பானா?
'குமார், பெண்களைப் பற்றி நீங்கள் என்ன அபிப்பிராயம் வைத்துக் கொள்கிறீர்களோ தெரியாது . "அவள் சொல்ல வந்ததை இடையில் நிறுத்தி விட்டு அவனைப் பார்த்தாள்.
"சமுதாயத்தில் பெண்களுக்குக் கொடுக்கும் மதிப்பை நான் கேள்வி கேட்பவன், நாங்கள் அதாவது ஆண்கள் எப்படியும் வாழலாம். எதையும் செய்யலாம், எங்களைச் சமுதாயம் தூக்கி எதிர்த்துவிடப் போவதில்லை, ஆனால் பெண்கள் வாழ்க்கையில் அவர்கள் ஒரு மயிரிழையிற் தவறினாலும் அவளை இந்த உலகம் மன்னிப்பதில்லை. அதிலும் பெண்களே பெண்களைத் தூற்றத் தயங்குவதில்லை’
குமார் சொல்லி முடித்ததும் எமிலி கொஞ்ச நேரம் கண்ணை மூடிக் கொண்டிருந்தாள்.

Page 59
வசந்தம் வந்து போய்விட்டது 3
சாந்தியின் கணவன் ராஜன் மிகவும் அன்பான மனிதன. ஆனால் குமார் மாதிரி ஒரு நாளும் பேசியதில்லை. காரணம் ராஜனுக்கும் குமாருக்கும் பத்து வயது வித்தியாசமிருக்கலாம்.
"ஏன் பெண்களைப் பெண்களே தூற்றுகிறார்கள் என்பதை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும். ஆண்களின் வரைவிலக்கணங்களுக்குள் வாழாத பெண்களுக்கு உண்டாகும் கஷ்டங்களால் எத்தனையோ பெண்களின் வாழ்க்கை குட்டிச் சுவராகப் போகிறது. அதனால் ஆணகள் சொல்வதற்கு ஆமாம் சாமி போட்டுத் தங்கள் வாயையும் வயிற்றையும் பார்த்தும் கொள்கிறார்கள் பெண்கள். ஆண்கள் செய்யும் கொடுமைகளை எதிர்க்க வெளிக்கிட்டால் பெண்களுக்கு வாயாடி, ஆட்டக்காரி, தேவடியாள், என்றெல்லாம் பட்டங்கள் சூட்டப்படும். பாவம் பெண்கள் ஒரு பிடிச்சோற்றுக்கும், உடுக்க உடுப்புக்கும், படுக்க ஒரு இடத்திற்கும் தங்கள் உடலை, ஆத்மாவை அப்படியே ஆண்களிடம் இழக்க வேண்டியிருக்கிறது.”
"நீங்கள் உங்களை ரவியின் தகப்பனிடமிருந்து காப்பாற்றிக் கொண்டிருக்கிறீர்கள் போலிருக்கிறது,' அவன் பாதி வேடிக்கையாகவும் பாதி உண்மையாகவும் அவளைக் கேட்டான்.
அவள் கலிரென்று சிரித்தாள். அந்தச் சிரிப்பு அமைதியான அந்தச் சூழ்நிலையில் அமுதகானமாகக் கேட்டது.
'அவர் ஒன்றும் என்னை சிறை பிடிக்கவில்லை. எதிர்காலத்தில் என்ன நடக்குமோ என்ற பயத்தில் நான்தான் என்னையவரிடமிருந்து பிரித்துக் கொண்டேன்.”
“நாளை நடப்பது என்னவாக இருக்குமோ என்று பயந்து இன்றைய வாழ்க்கையைக் குழப்பிக் கொண்டால் உலகத்தில் எதுவும் சரியாக நடக குமா’’ அவனின் கேள்வி நியாயமானதுதான்.
“எங்கள் வாழ்க்கை, எல்லோருடைய வாழ்க்கையும் ஏறத்தாள ஒரே மாதிரித்தான் உருவாகிறது, உறவாகிறது. உடைகிறது. பின்

109 ராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம்
பதப்படுத்தப்படுகிறது. அதில் அனுபவங்கள் பிறக்கின்றன. கால நேரம், நாடு, நகரம், இனம், மொழி, சமயம், சாதி என்று எத்தனையோ பிரிபாடுகள் இருந்தாலும் மனித உணர்வுகள், ஆசைகள், அபிலாசைகள், ஏக்கங்கள் எதிர்பார்ப்புகள் ஒரே மாதிரியாகத்தான் இருக்கின்றன. சில அனுபவங்கள் வாழ்க்கையுடன் போராட வேண்டும் என்ற உறுதியைத் தருகின்றன. சில அனுபவங்கள் வாழ்க்கையிலிருந்து ஒதுங்கிப் போக வேண்டும் என்ற தளர்ச்சியைத் தருகின்றன. எனது அனுபவங்கள் நான் எப்படி என் எதிர்காலத்தை நிர்ணயிக்க வேண்டும் என்பதை உறுதிப் படுத்தின’
'ரவியின் தகப்பன் அவ்வளவு கொடிய அனுபவங்களைத் தந்தவரா?”
"ஏன் ரவியின் தந்தை ஒரு பொல்லாத மனிதன் என்று முடிவு கட்டுகிறீர்கள்’
குமாருக்கு மறுமொழி சொல்லத் தெரியவில்லை. அவள் தகப்பனில்லாமல் குழந்தை வளர்ப்பது அவனைப் பொருத்ச வரையில் ஒரு பிரமாண்டமான பாரமாகத்தான் தெரிந்தது.
'ஆனந்த் ஒரு நல்ல மனிதன். நல்ல உலகத்தைக் கற்பனை செய்பவர், கொடுமைகளைக் கண்டு கொதித்தெழுபவர். குடும்பப் பொறுப்பு மிகவும் பாரமானது என்பதை உணர்ந்து கொண்டவர். லண்டனில் கறுப்பர்களுக்கெதிராக இனத்துரோகம் அவரை மிகவும் துன்பப் படுத்தி விட்டது. இசையோடும் கலையோடும் வாழ்க்கையைப் பிணைத்துக் கொண்ட மனிதனைக் கல்யாணச் சிறைக்குள் பிடித்து வைத்துத் துன்பப் படுத்தவிரும்பவில்லை. நான் தான் அவரைக் கல்யாணம் செய்ய மறுத்தேன். என்னைத் தாயாக்கி விட்டு ஏமாற்றிவிட்டு ஆனந்த் என்னைப் பிரியவில்லை. நான் தாயான விடயமோ அவருக்கு ஒரு குழந்தை லண்டனில் வளர்வதே தெரியாது. தெரியாமலே இருக்கட்டும் என்றுதான் நம்புகிறேன்"
ரவி பாவமில்லையா' குமாா சோகத்துடன் கேட்டாள்.

Page 60
வசந்தம் வந்து போய் சி'து 110
'ஏன் பாவம்
"அப்பா இல் லாமற் தனியே வளர்வது பாவம் என்கிறேன்’
‘அப்பா இல்லாத, அம்மா இல்லாத குழந்தைகள் உலகத்தில் ஆபிரககனசுக்காக இருக்கிறார்கள்’
'உங்களின் சுயநலமான சிந்தனைகளுக்காக ரவியின் தகப்டனை அவனிடமிருந்து பிரித்து விட்டதாக நீங்கள் ஒரு நாளும் நினைக்கவில்லையா’
அவனது கேள்வியின் ஆழத்தை அவள் கொஞ்ச நேரம் யோசித்தாள்
'இரண்டு பெற்றோரும் வளர்த்தாற்தான் குழந்தைகள் சரியாக வளர்வார்கள் என்பதில்லை. சண்டையும் சச்சரவுமான இரண்டு பெற்றோரிடம் வாழும் சூழ்நிலையை விட அமைதியும் அன்புமுள்ள ஒரு பெற்றோர் ஒரு குழந்தையின் மன, உடல் வளர்ச்சிக்கு மிகவும் உதவுவார்கள் என்று நம்புகிறேன்.”
“என்னை அவன் தனது தகப்பனாக நினைத்ததையிட்டு துக்கப் படுகிறேன்"
'குழந்தைக்கு நீங்கள் யாரென்று தெரியாது. அத்தோட ஆனந்தின் படம் பார்த்துப் பழக்கப்பட்ட ரவிக்கு உங்கள் முகத்தோற்றம் படத்திலிருக்கும் தகப்பனின் முகம் போலிருப்பதாகப் பட்டிருக்கலாம்.”
எமிலியின் கண்கள் தாழ்ந்தன. அவளது அன்பன் ஆனந்தை நினைத்துக் கொண்டாள் போலும்.
‘என்னைப் பார்த்தால் யாரும் ஒரு தகப்பனுக்குரிய முகபாவம் இருப்பதாக நினைப்பார்கள் என்று நான் நினைக்கவில்லை."
அவள் அவனை நிமிர்ந்து பார்த்தாள். இருவர் கண்களும் மோதிக் கொண்டன. அந்த நேரம் யாரோ வரும் காலடியோசை

l ராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம்
கேட்டது.
டேவிட் வந்து கொண்டிருந்தான். 'உங்கள் மகன் உங்களைத் தேடுகிறான்' அவன் எமிலியிடம் சொன்னான்.
“மீண்டும் உங்களைச் சந்திக்கச் சந்தர்ப்பம் கிடைக்கும் என்று நினைக்கிறேன். சாந்தி நாளைக்கு வருவாள் நான் அவளைச் சந்திப்பேன். சீ யு' சொல்லிவிட்டு எமிலி குமாரிடமிருந்து விலகிப் போனாள்.
டேவிட்டுடன் அவள் வார்ட்டுக்குப் போய்ச் சேரும் வரை அவர்கள் இருவரும் ஒருத்தருடன் ஒருத்தர் பேசிக் கொள்ளவில்லை.
குழந்தை ரவியுடன் ஒரு நேர்ஸ் நின்றிருந்தாள். 'எனது மகனைப் பற்றிய செய்தியை எனக்குச் சொன்னதற்கு நனறி' டேவிட்டிடம் சொல்லிவிட்டு அவசரமாகத் தன் மகனிடம் ஓடினாள் எமிலி.
குழந்தைகளுடன் நிற்கும் தாய் தகப்பன் வார்ட்டி 0. அங்குமிங்கும் திரிந்தார்கள்,
குழந்தை ரவியின் நோ தீர நேர்ஸ் ஒரு ஊசி பே ட் டான். குழந்தை தாயின் கைகளை இறுக்கிப் பிடித்தபப துரங்கிப் போனான்.
எமிலி கதிரையிலிருந்தபடி தூங்கி வழிந்தாள்.
வார்ட் மிகவும் அமைதியாய் உறங்கிக் கொணடிருந்தது. நைட் டியூட்டி நேர்ஸஸ் தங்களுக்குள் ஏதோ சொல்லிச் சிரித்துக் கொண்டிருந்தார்கள். எமிலி தன் வாழ்க்கையைக் கனவு
கண்டாள்

Page 61
வசந்தம் வந்து போய் விட்டது 12
அன்றிரவெல்லாம் அழுது அலுத்து விட்டாள் சாந்தி. 'யார் அந்தத் தேவடியாள்’ என்று அவள் காரிற் கேட்ட கேள்விக்கு “யாரைக் கேட்கிறாய், நீ என்னோட கண்டபெண் வழக்கு விடயமாக என்னைத் தேடி வந்தவள்’ என்று அவன் சொல்லியிருந்தால் மிகவும் நிம்மதியாயிருந்திருக்கும்.
வீட்டுக்குப் போய்ப் பேசிக் கொள்ளலாம் என்று அவன் சொன்ன நிமிடமே சாந்திக்கு இருதயத்தில் தேள் கொட்ட ஆரம்பித்து விட்டது.
அவனைப் பேச விடாமல் அவனுடன் சத்தம் போட்டது முட்டாள்த்தனமாகப் பட்டது. ஆனால் கடந்த சில நாட்களான சோர்விலும் நித்திரையின்மையிலும் அவள் நிலை குலைந்து கத்தி விட்டாள்.
சாதாரணமாக அமைதியும் நிதானமுமான பெண் சாந்தி இப்போது இப்படிப் பேய்க் கூக்குரல் போட்டதை அவளாலேயே நம்ப முடியாமலிருக்கிறது.
ஏனோ தானோ என்று வாழ்ந்து முடிக்கிறார்கள் சில தம்பதிகள், இப்படித்தான் வாழ வேண்டுமென்று சில வழிமுறைகளைக் கடைப்பிடிக்கிறார்கள் சில தம்பதிகள். இவனுக்கு நான், விட்டுக் கொடுக்க வேண்டும் என்று இழுபறி பட்டு வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் சில தம்பதிகள்.
ராஜனும் சாந்தியும் இரண்டாம் தரத்தைச் சேர்ந்தவர்கள். இப்படித்தான் வாழவேண்டும் என்று ஒரு வரைவிலக்கணத் துடன் வாழ்பவர்கள் அவர்கள். பேசிச் செய்த கல்யாணம் என்றாலும் இவளின் உண்மையான அபிப்பிராயத்தைத் தெரிந்து கொள்ளாத வரை தான் ஒரு முடிவும் எடுக்க மாட்டேன் என்று தாய் தகப்பனுக்கு ராஜன் சொல்லியது அவளுக்குத் தெரியும்.
அவனை முதற்தரம் கண்ட நினைவு இன்னும் பசுமையாக இருக்கிறது.
1985ம் ஆண்டு இலங்கை அரசாங்கம் தனது இன அழிப்புக்

; 3 ராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம்
கொடுமை வேலைகளில் கண்ட இடமெலலாம் தமிழ் இளைஞர்களை ஆடு மாடுகளாய்ச் சுட்டு வீழ்த்திக் கொண்டிருந்தார்கள்.
இப்போது விடுதலைக்குப் போராட வெளிக்கிட்ட தமிழ்க் குழுக்களும் தங்களுக்குள் வளர்ந்த அபிப்பிராய பேதங்களைப் பேசித் தீர்க்கத் தெரியாமல் அல்லது அரசியல் முதிர்ச்சியில்லாமல் ஒரு குழுவை இன்னொரு குழு இதயமற்றுக் கொலை செய்து கொண்டிருந்தது.
இலங்கையிற் தமிழ்ப் பகுதிகளில் இளம் தமிழ் வாலிபர்கள் மிருகங்கள் மாதிரி வேட்டையாடப் பட்டுக் கொண்டிருந்தார்கள்.
திருகோணமலையிற் தமிழர் வாழ்க்கை மிகவும் படுமோசமாகவிருந்தது. சொந்த பந்தம் அயல் நாட்டிலுள்ளவர்கள் அவர்களின் உதவியுடன நாட்டை விட்டு ஓடிக் கொண்டிருந்தார்கள்.
சாந்தியின் தமயன் தம்பிகளை வெளி நாட்டுக்கனுப்பத் தாய் தகப்பன் துடியாய்த் துடித்தார்கள். சாந்திக்கு இருபது வயது. ஒரே ஒரு பெண்ணான அவனுக்குப் பெரிய படிப்பு ஒன்றும் தேவையில்லை, நல்ல மாப்பிள்ளை வந்தாற் செய்து விட்டால் நல்லது என்று முடிவு கட்டியிருந்தார்கள்.
ஒருநாள், 1997ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் பின்னேரம் சினேகிதி ஒருத்தியின் வீட்டுக்குப் போயிருந்தாள். அவர்கள் கிறிஸ்தவர்கள். மிகவும் ஏழ்மைப் பட்டவர்கள் அவர்களின் மாமா ஒருத்தர் அமெரிக்காவிலிருந்தார். அந்த ம"மா ஒரு கிறிஸ்தவ பாதிரியின் உதவியுடன் எப்போதோ அமெரிக்காவுக்குப் போனவர்.
சாந்தியின் சினேகிதி வரோணிக்கா சாந்தியின் வயதை ஒத்தவள். ஒரு சில தெருக்களுக்கப்பால் வாழ்பவள். நினைவு தெரிந்த நாள் முதல் ஒன்றாய்ப் பழகியவர்கள்.
வரோணிக்காவின் மாமா அமெரிக்காவில் வாழபவர்.

Page 62
வசந்தம் வந்து போய் விட்டது 14
வரோணிக்காவின் குடும்பத்தில் பரிதாபப் பட்டவர், வரோணிக்காவின் தாயின் கெஞ்சலுக்குப் பரிதாபப் பட்டு வரோணிக்காவின் தமயனை அமெரிக்காவுக்கு அழைக்க முயற்சி செய்து கொண்டிருந்தார்.
வரோணிக்காவின் தமயன் அன்ரோனி ஒரு கவிஞன், சாதாரண வாலிபர்கள் போலில்லாமல் உலக்த்தை வித்தியாசமாகப் பார்ப்பவன்.
முத்தெடுக்கும் திருமலைக் கடற்கரைகாற்று வாங்கி வளர்ந்த மனம் கவிதையில் திளைத்திருந்தது, குப்பையில் ஒரு முத்து, கொடுமைக்குள் ஒரு புரட்சிவாதி, வறுமைக்குள் ஒரு கவிஞன் என்பது போல் அன்ரோனி வளர்ந்தான்.
வறுமையை மறக்க, இல்லாமையின் கொடுமையிலிருந்து மனத்தைத் திருப்ப, சுற்றாடலிலுள்ள அரசியற் கொடுமையிலிருந்து தன்னை மறக்க அவன் தன் உள்ளத்தை கலைத்தாயின் மடியில் அர்ப்பணித்தானோ?
அவன் தாய் அமெரிக்கா போகும் தன் மகன் அன்ரோனியை வழியனுப்ப ஆயத்தங்கள் செய்து கொண்டிருந்தாள்.
அன்பான, கனிவான மனம் கொண்ட அன்பானதாய் அன்ரோனியின் தாய் மேரி. அன்ரோனியின் சினேகிதர்களை அழைத்துத் தன்னால் முடிந்த ஒரு விருந்து வைக்க அந்தத் தாயுள்ளம் தவித்தது.
அந்த விருந்துக்கு சாந்தியும் அழைக்கப்பட்டாள். வரோணிக்காவுடதும் அன்ரோனியுடதும் திருமலைக் கடற்கரையில் நண்டு பிடித்து விளையாடிய வயது தொடர்பை இப்போது வளர்ந்து, படித்து வாழ்க்கையை ஒவ்வொரு திசையில் திருப்பிக் கொண்டிருக்கும் வரை ஒன்றாய்த் திரிந்தவர்கள்.
வரோணிக்கா வீட்டுச் சாப்பாடு முடிய நேரமாகி விட்டது. வீட்டுக்குப் போக வேண்டும் என்று சாந்தி அவசரப்பட்டாள். கொழும்பிலிருந்து தகப்பனுக்குத் தெரிந்த சினேகிதர் குடும்பம்

15 ராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம்
கோணேஸர் கோயில் பார்க்க வருகிறார்கள் என்றும் அவர்களுக்குத் தங்கள் வீட்டிற் சாப்பாடு கொடுக்க முடிவு செய்திருப்பதாகவும் அம்மா சாந்திக்குச் சொல்லியிருந்தாள்.
"சாப்பாட்டுக்கு வருபவர்கள் வீட்டுக்கு வரமுதல் நீ வந்து சேர்ந்து விடு' அம்மா அரிசியில் நெல் பொறுக்கியபடி சாந்திக்குச் சொன்னாள்.
அம்மாவின் சொல்லைத் தட்டாதவள் சாந்தி, வரோணிக்கா வீட்டுக்குப் போய்ச் சாப்பிட்டு விட்டுவர இருள் பரவத் தொடங்கியிருந்தது. வரோணிக்கா வீடு சாந்தியின் வீட்டை விட்டு ஒரு சில தெருக்கள் தள்ளியிருந்தாலும் சந்தியைத் தனியாக விட வரோணிக்கா தாய் விரும்பவில்லை.
"நான் கொண்டுபோய் விடுகிறேன், நான் அந்த வழியாக ஒரு சினேகிதனைப் பார்க்க வேண்டியிருக்கிறது' அன்ரோனி மலர்ச்சியுடன் சொன்னான்.
இருவரும் கடற்கரை வழியாக நடந்து வந்து கொண்டிருந்தார்கள்,
‘சாந்தி நான் அமெரிக்கா போய்விட்டால் என்னை மறந்து விடுவாயா' நாட்டை விட்டுப் போகும் எந்த மனிதரும் தங்களுக்கு நெருக்கமான மனிதர்களிடம் கேட்கும் கேள்வியிது.
நிச்சயமாக நான் மறக்க மாட்டேன் சாந்தியின் மனம் உண்மையில் கலங்கியது.
எத்தனை நெருக்கமான உறவு அவர்களுடையது. இரண்டு தமயன்களுடனும் ஒரு தம்பியுடனும் பிறந்தவள் சாந்தி, அந்த ஆண்களுடன் ஒப்பிடும்போது அன்ரோனி வித்தியாசமானவன்.
தமயன் சங்கர் ஒரு குடும்பப் பொறுப்புள்ளவன், அடுத்த தமயன் சேகர் உறவுக்காக ஏனோதானோ என்று பழகுபவன். தம்பி குமார் அப்பா சிறப்புக்களுக்குத் தலையிடி தரும்படி விடுதலை இயக்கமொன்றில் அதி தீவிரமாக

Page 63
வசந்தம் வந்து போய் விட்டது 6
ஈடுபட்டிருக்கிறான்.
அன்ரோனி வறுமையிற் பிறந்து கஷ்டப்பட்டுப் படித்து குடும்பத்தைக் காப்பாற்றும் நிலைக்குத் தள்ளப்பட்டாலும் தன் கலையார்வத்தால் கிடைத்த நேரத்தில் திருமலை கோணேஸர் கோயிற் தலத்தையும், குன்றலையும் கடலையும், மணல் பதிவும் சிறுவர் களிப்பையும் தன் சிறு கவிதைக்குள் சிறை பிடிப்பான்.
வரோணிக்காவும் சாந்தியும் அவனது வாசகிகள். அவனுக்கு இருபத்திரண்டு வயது. வரோணிக்காவுக்கும் சாந்திக்கும் இருபது வயது. இலங்கையில் தமிழன் வாழும் பகுதிகளில் கொந்தளிக்கும் கொடுமையாற் பயப்பட்டு வாழும் ஆயிரக் கணக்கான இடப் பெயர்களில் அவர்களும் சிலர்.
அன்ரோனியின் வயதொத்த எத்தனையோ தமிழ் இளைஞர்கள் வளர்ந்து வாழ்க்கை அனுபவிக்க முதல் காலன் வயப்பட்டு விட்டார்கள். அவர்களின் உயர் இனவெறி பிடித்த இலங்கை அரசாங்க சிப்பாய்களின் சித்திரவதைக்குப் பலியாக்கப்பட்டது.
அன்ரோனியின் தாயின் பிரார்த்தனையும் சொந்தக்காரர்களிடம் கெஞ்சியதின் பிரதிபலிப்பும் அன்ரோனி இலங்கையை விட்டு வெளியேற உதவி செய்தது.
தன் நினைவு தெரிந்த நாள் முதல் வரோணிக்கா குடும்பத்துடன் நெருங்கிப் பழகியவள் சாந்தி, அன்ரோனி இலங்கையை விட்டுப் போகிறான். இனி எப்போது மீண்டும் சந்திப்பார்கள்?
சிறு பறவைகள் போல இந்தக் கடற்கரையில் பிறந்து விளையாடிய ஞாபகங்கள் நேற்றைய சரித்திரமாகி விட்டது.
ஓடிவரும் கடலலையைத் தொட்டோடி விளையாடிய இளமைப் பருவம் இனிவராது.
தோணியருகிலமர்ந்து உலகத்து வம்பெல்லாம் அளந்த அந்த குறும்புத்தனம் இனியும் தொடருமா!

117 ராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம்
'சாந்தி’ மணலில் கால் புதைய இவளைத் தொடர்ந்து துணையாய் வந்தவன் இவளைக் கூப்பிட்டான்.
வீட்டுக்கு விருந்தினர் வருவர் என்ற அவசரத்தில் எட்டடி வைத்தவன் இவன் குரலிற் தொனித்த சோகத்தில் நிலைகுலைந்து தலை திருப்பினாள்.
'இதுதான் நாங்கள் இருவரும் சேர்ந்து நடந்து வரும் கடைசி மாலை நேரமாயிருக்குமா' அன்ரோனியின் முகம் இறங்கிச் செல்லும் சூரிய ஒளியின் தங்க நிறத்தில் சாடை காட்டியது.
"இருக்கலாம்’ சாந்தி குழந்தைத் தனமாகச் சொன்னாள். அமெரிக்காவிலுள்ள கலிபோர்னியாவுக்கு போகிறவன் எப்போது திரும்பி வருவான்?
திரும்பி வரும்போது இருவர் வாழ்க்கையிலும் எத்தனையோ மாற்றங்கள் நடந்திருக்கலாம், இருவரும் இன்றைய நெருங்கிய சினேகிதர்கள் மாதிரியில்லாமலிருக்கலாம்.
'சாந்தி நீ அவசரமாய் வீட்டுக்கு ஓடிக் கொண்டிருக்கிறாய் என்று தெரியும். ஆனாலும் .' அவன் தயங்கினான்.
அவள் அன்ரோனியைப் பார்த்தாள். அவளின் நினைவு தெரிந்த நாள் முதல் ஒன்றாய் விளையாடியவன், காலமும் நேரமும் வர ஒதுங்கிக் கொண்டவர்கள்.
அவள் அவனின் தங்கை வரோணிக்காவின் சினேகிதியாக மட்டும் இணைத்துக் கொண்டு இவனுடன் சம்பிரதாயங்களுக்காகச் சம்பாஷணைகளை வைத்துக் கொள்ளும் நிர்ப்பந்தத்திற்குள் தள்ளப்பட்டாள்.
சாந்தியின் தாய் மகளின் எதிர்காலத்துக்கு இரவும் பகலும் பிரார்த்திப்பவள். மூன்று மகன்களுக்கு ஒரே மகள். அவள் எதிர்காலம் தாயின் கனவும் நனவுமாக இருந்தது.
அன்ரோனி குடும்பம் மீனவர் சாதியைச் சேர்ந்த கிறிஸ்தவ குடும்பம். சாந்தி குடும்பம் உத்தியோகம் பார்க்கும் வேளாள

Page 64
வசந்தம் வந்து போய் விட்டது 118
சாதியைச் சேர்ந்தது.
மகளின் எதிர்காலத்துக்குத் தாயின் கனவில் உள்ள மாப்பிள்ளை ஒரு பெரிய உத்தியோகம் பார்க்கும் நல்ல சாதிக்காரன். சாந்திக்கு அது தெரியும்.
சாந்தி அவன் கேட்கிறான் என்பதை உணராதவள் இல்லை. “கொஞ்ச நேரம் என்னோடு பேசமுடியுமா சாந்தி’
அன்ரோனி நின்றான். அவள் சரியென்று தலையாட்டிவிட்டுப் பக்கத்திலுள்ள தோணியருகில் உட்கார்ந்தாள்.
கடற்கரையில் கிடக்கும் நூற்றுக்கணக்கான தோணிகளைச் சுற்றி எத்தனையோ காதற் சோடிகள் தங்கள் தனியுலகத்தில் சஞ்சரித்துக் கொண்டிருந்தார்கள்.
'சாந்தி நான் நீண்ட நேர பிரசங்கம் செய்து உனது நேரத்தை வீணாக்க விரும்பவில்லை’
அவள் கேள்விக்குறியுடன் அவனைப் பார்த்தாள். பூரண நிலவை நீலக் கடல் பிரசவம் செய்து பூரிப்புடன் மெல்லலையில் தள்ளாடியது. நட்சத்திரங்கள் சேவகிகளாய்த் தான் ஒரு இளவரசியாய்ப் பூரண நிலா மேகங்களை விலக்கி விட்டு உலகத்தை எட்டிப் பார்த்தது.
அவர்கள் மெளனமாக இருந்தார்கள். அந்த ஒரு சில நிமிடங்கள் ஒரு சில நூறு வருடங்கள் போலிருந்தன.
‘சாந்தி நீ கெட்டிக்காரப் பெண், நான் என்ன கேட்கப் போகிறேன் என்று உனக்குத் தெரியும்’
ரோனி எப்போதும் நேர்மையானவன். உள்ளத்துக் கொதிப்பை, சந்தோசத்தை, போராட்டங்களைத் தன்
கவிதைகளில் வெளிப்படையாக எழுதுபவன்.
'எனது கவிதை பிறக்கக் காரணமாயிருந்த பலரில் பல

119 ராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம்
விடயங்களில் உன் பங்கும் உள்ளது என்பதை நம்புவாயா'
என்ன மறுமொழி சொல்வதாம்.
கயல்விழி, மான்விழி, அன்ன நடை, மின்னல் இடை, கார்குழல், மதிமுகம் என்றெல்லாம் கவிஞர்கள் பெண்களைப் புகழ்ந்து தள்ளியிருக்கிறார்கள். ரோனி பெண்களைப் புகழ்ந்து பெரிதாக ஒன்றும் எழுதவில்லை. இயற்கையை பற்றி, மனித ஏழ்மையைப் பற்றி, இனக் கொடுமையின் பயங்கரம் பற்றியெல்லாம் எழுதியிருக்கிறான்.
‘'நீ பிறந்த நாளிலிருந்து உன்னைத் தெரியும். எனது மூன்றாவது வயதில் உனது மழலையைக் கேட்டு எல்லோரும் சிரித்தது ஏதோ என் அடிமனத்தில் கனவுகளாக அடிக்கடிவந்துபோகும். உண்மையான சம்பவத்தின் ஞாபகமில்லாமல் என்னுடைய வெறும் கற்பனையின் பிரதிபலிப்பாகவும் இருக்கலாம்."
அவள் மெளனமாக இருந்தாள்.
விருந்தினர்களை வரவேற்கும் அவசரம் அவள் விரல்கள் கடல் மணலிற் புதைவதுபோல் மனதில் புதைந்து கொண்டிருந்தன. மணற் சூடு உடம்பிலும் மனச்சூடு உணர்விலும் படர்ந்தது.
நான் ஏழை, ஆனால் எதிர்காலமும் அப்படியிருக்காது என்று நினைக்கிறேன். எனது சாதி உனது சாதியில்லை. ஆனால் நான் அந்தக் கொடூரமான பரம்பரையை முழுக்க முழுக்க வெறுக்கிறேன்."
சாந்தி எழும்பி ஓடவில்லை.
அவன் சொல்வதைக் கேட்டுக் கொண்டிருந்தாள்.
'நீ எனது மனைவியாகச் சம்மதித்தால் நான் மிகவும் அதிர்ஷ்டசாலி என்று நினைக்கிறேன்'
அவன் மேலதிகமாக ஒன்றும் சொல்லாமல் அவள் முகத்தைப்

Page 65
வசந்தம் வந்து போய் விட்டது 120
பார்த்தான்.
“வரோணிக்காவிடம் எனது விலாசமிருக்கிறது.உனது பதில் வந்தால் சந்தோசப்படுவேன்.இல்லை என்றால் உனது எதிர்காலம் பொன்னானதாக இருக்க எனது ஆசீர்வாதங்கள்’
அவன் எழுந்து கொண்டான். அவள் வீட்டை நோக்கி நடந்து வந்தார்கள். இன்று அவள் வாழ்க்கையின் நடந்து வந்த பாதையில் தொடர்நதவனைப் பிரிந்து விட்டு அவள் தன் வீட்டுக் கேற் திறந்து வீடு சென்றாள்.
அவள் முகம் வாடி தலை குழம்பிப் போயிருந்தது. “என்ன இவ்வளவு நேரம்” அம்மா அவசரப்பட்டாள். 'ஒடிப் போய் முகத்தைக் கழுவிக் கொண்டு பெளடர் போட்டுப் பொட்டு வைத்துக் கொள்” அம்மா பரபர வென்று ஓடி ஓடித் திரிந்தாள்.
அவள் வீட்டுக்கு வந்து பத்து நிமிடங்களில் விருந்தினர்கள் வந்தார்கள். வந்தவர்கள் வயிறாரச் சாப்பிட்டு மனதார மகிழ்ந்து பேசிக் கொண்டிருந்தார்கள்.
சாந்தி வந்த விருந்தினர்களில் யாரையும் பொருட்படுத்தி மனம் செலுத்தவில்லை. ஏனோதானோ என்று தாய் சொல்லும் விடயங்களைச் செய்து கொண்டிருந்தாள்.
வந்திருந்த பெரிய மனிதர் சாந்தியின் தகப்பனின் சினேகிதன். ஒரு காலத்தில் ஒன்றாகப் படித்தவர்கள், இப்போது விருந்தினராக வந்தவரின் குடும்பம் அயல்நாடுகளில் நன்றாக வசிக்கிறார்களாம்.
அம்மா அடுத்த நாள் இதெல்லாம் சொல்லிக் கொண்டிருந்தாள், சாந்தி அன்றிரவு சரியாக நித்திரை செய்யவில்லை.

21 ராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம்
இன்றோ நாளையோ அன்ரோனி கொழும்புக்குப் போகப் போகிறான். அதன்பின் சில கிழமைகளில் அமெரிக்காவிற்குப் போய் விடுவான்.
வரோணிக்கா தமயனை வழியனுப்பும் அலுவலில் பிஸியாய் இருந்தாள் போலும்,சாந்தி வீட்டுப் பக்கம் வரவில்லை.
விருந்தினர் வந்து மூன்றாம் நாள் சாந்தி முன் ஹோலில் ஏதோ வேலையாயிருந்தாள். அன்றைக்கு விருந்து சாப்பிட வந்தவர்கள் அப்பா அம்மாவிடம் சொல்லி விட்டுப் போக வந்திருந்தார்கள்.
சாந்தி இரண்டொரு நாட்களாகச் சரியாகத் தூங்காததால் தலையிடியுடன் கஷ்டப்பட்டாள். வீட்டுக்குப்பின்பக்கம் இரையும் கடலில் ரோனியின் கேள்வியும் சேர்ந்து இரைவதாகத் தோன்றியது. கடற்கரையில்கிடக்கும் ஒவ்வொரு தோணிக்கருகிலும் ரோனி உட்கார்ந்திருப்பது போற் பட்டது.
இருபது வருடகால உறவில் அவன் கேட்ட கேள்விக்குத் தானும் பொறுப்பாக இருந்திருக்கிறேன் என்பது அவனுக்குத தெரியாததல்ல.
அவள் கண்கள் அவன் கவிதை பிறக்கக் காரணமாக இருந்திருக்கலாம், அவள் மெல்லிதழ்கள் இந்தக் கவிதைகளுக்கு இசை போட ஏதுவாக இருந்திருக்கலாம்.
கலகலவென்று சிரிக்கும் அவள் பாவம். அவன் இளமனதில் எத்தனையோ ஏக்கங்களை எழுப்பியிருக்கலாம்.
அவளுக்கு மட்டும் சஞ்சலம் வரவில்லையா? அந்தக் கேள்வியை அவள் தன்னிடம் கேட்கத் தயாரில்லை.
காதலுக்குக் கண்ணில்லை, சாதியில்லை, சமயமில்லை, வர்க்க பேதமில்லை, வயது வித்தியாசமில்லை, இருவர் மனம் ஒருமித்தால் எந்தவிதத் தடையுமில்லை.
ரோனி அவளைக் குழந்தையாய், குமரியாய், ஒரு சினேகிதியாய்க் கண்டவன் இப்போது காதலியாய்க்

Page 66
வசந்தம் வந்து போய்விட்டது 122
காண்கிறேன் என்கிறான்.
திருமலைக் கடற்கரையில் அலைகள் குன்றுகள் தடவி இரைந்தன. அவள் மனதில் ரோனியின் வேண்டுகோள் இடைவிடாமல் இரைந்தது.
விடை சொல்லிவிட்டுப் போக வந்த விருந்தினர் ஆரவாரமாகச் சிரித்துப் பேசிக் கொண்டிருந்தனர்.
சாந்தி, அம்மா போட்டுக் கொடுத்த தேனிரைத் தாங்கிய ட்ரேயுடன் ஹோலுக்கு வந்தாள்.
அவளின் தமயன்மார், தகப்பன், வந்திருந்த விருந்தினர் எல்லோரும் ஹோலில் கூடியிருந்தனர்.
இவளைக் கண்டதும் அவர்களின் ஆரவாரம் கொஞ்சம் குறைந்தது. அம்மாவும் குசினிவேலையை விட்டுவிட்டு ஹோலுக்குள் வந்தாள்.
அப்பா இவளைப் பார்த்தார். அவள் யாரையும் நிமிர்ந்து பார்க்கவில்லை. திரும்பித் தன் அறைக்குப் போகத் திரும்பினாள்.
அன்று அவள் நீலப் பாவாடையும் ஒரு சிவப்புச் சட்டையும் தாவணியும் போட்டிருந்தாள். ஆங்கில முறைப்படி ட்ரெஸ் பண்ணுவது அம்மாவுக்குப் பிடிக்காது. அப்பாவுக்கு தன் ஒரே மகள் சரியான இந்துப் பெண்ணாக வாழ வேண்டும் என்று ஆசை.
"மகள் கொஞ்சம் உட்காரேன்' அப்பா மகளிடம் கேட்டார். தமயன் சங்கர் முகத்தில் சந்தோசம்,
'சாந்தி, முன்பின் அறிவிக்காமல் திடீரென்று இப்படி ஒரு சூழ்நிலைக்குள் உன்னிடம் ஒரு கேள்வியைக் கேட்க வேண்டியிருக்கிறது’
தமயன் சங்கர் தொண்டையைக் கனைத்துக் கொண்டு சொன்னான்.

123 ராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம்
அப்பா இன்னம் தன் புன்னகையை முகத்திலிருந்து எடுக்கவில்லை. அம்மா தனக்கும் எல்லாம் தெரியும் என்ற பாவனையில் கதவோடு கதவாய் நின்றிருந்தாள்.
ஒரு சில நூறடிக்கப்பால் கடல் இரைந்து கொண்டிருந்தது.
விருந்தாளியாய் வந்திருந்த மாமி எழுந்து வந்து சாந்தியின் தோளில் கை போட்டு அடுத்த கையால் அவள் நாடியைப் பிடித்துக் கொண்டு 'எனது மகன் ராஜன் உன்னைக் கல்யாணம் செய்து கொள்ள விரும்புகிறான்."
உடல் சிலிர்த்தது. உள்ளம் படபடத்தது. வயிற்றில் பட்டாம் பூச்சி வட்டம் போட்டது. தலை சுற்றியது.
அவள் தலையையுயர்த்தி தன் முன்னால் இருக்கும் ராஜனைப் பார்த்தாள். ஒரு சில நாட்களுக்குப் பின் விருந்தாளியாய் வந்தவன் இன்று அவள் வாழ்க்கைத் துணைவனாக வரப் போகிறானாம்.
"நீ பெரிய அதிர்ஷ்டசாலி சாந்தி’ தமயன் குரல் உணர்ச்சி வசப்பட்டுக் கரகரத்தது. தாயின் விசும்பல் அவள் காதைக் குடைந்தது.
ஒரு கொஞ்ச நேரம் மெளனம் எல்லோர் விழிகளிலும் அவளில் மொய்த்தன.
இப்படி ஒரு சந்தர்ப்பத்தை எத்தனை பெண்கள் அனுபவித்திருப்பார்கள்?
அவள் எழுந்தாள்.
முகம் குப்பென்று சிவந்திருந்தது. ஓடிப்போய்க் குசினிக்குள் அடைந்தாள்.
ஹோலில் மீண்டும் ஆரவாரம். வந்திருந்த மாமியின் குரல் கணிரென்று கேட்டது.

Page 67
வசந்தம் வத்து போய்விட்டது 124
'இதுதான் விதி பாருங்கோ லண்டனில் இருந்து வந்து இவ்வளவு நாளும் எங்கட ஆட்கள் இருக்க விடயில்ல. இவனும் எங்களப் பேசிக் கொண்டிருந்தான். ஏதோ இங்க வந்துதான் கோணேசர் அருளால் அவன் மனம் மாறியிருக்கு”
“எப்படித்தான் விஞ்ஞானம் மாறினாலும் மனிதர் விதி மாறாது பாருங்கோ. அவளின் சாத்திரத்தின்படி அவள் வெளிநாட்டிலதான் வாழுவாள் என்றிருந்தது' அப்பா பெருமையுடன் சொன்னார்.
'மாப்பிள்ளையும் தானாக வந்து அவளிடம் சேருவான் என்று சாத்திரத்தில் சொன்னார்கள்’ அம்மா ஊதுகுழல் வாசித்தாள்.
ரோனியும் வெளிநாடு போகிறான். அவனும்தான் தானாக அவளிடம் வந்து என்னைத் திருமணம் செய்து கொள்கிறாயா என்று கேட்டான்.
அவள் விதி எங்கே இருக்கிறது. அவள் மதியிலா? அவளின் பின்னால் காலடி கேட்டது. ராஜன் தொண்டையைக் கனைத்துக் கொண்டான்.
"விருப்பமில்லாவிட்டால் நேரே சொல்லலாம், நான் ஒன்றும் அழமாட்டேன்’
அவன் குரலில் குறும்பு தெறிப்பதாகப் பட்டது. அவள் திரும்பினாள்.
அவன் நேரே பார்த்தான். அவள் முகத்தை அவன் கண்கள்
அவள் கைகள் நடுங்கின.
மெளனம் மெளனம், வாய்க்குள் யாரோ ஒரு கல்லைப்
போட்டுத் திணித்து விட்ட பிரமை,
'மறுமொழி சொல்ல அவசரப் படவேண்டாம். ஆனால்

125 ராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம்
அதற்கு முன் நான் ஏன் இந்த முடிவுக்கு வந்தேன் என்று உனக்கு விளங்கப் படுத்த வேணும்’
அவன் ஆங்கில நாட்டிற் படித்தவன். ஒரு தயக்கமுமின்றிப் பேசினான். இருபது வருடம் அவளைத் தெரிந்த ரோனி அடைத்து வைத்திருந்த உணர்வுகளை மூன்று நாள் முன் கண்ட இவன் பளிச்சென்று அவிழ்த்து விடுகிறான்.
ரோனியின் தயக்கத்துக்குக் காரணம் அவன் ஒரு மீனவன், ஏழை, இவர்களின் வர்க்கத்தைச் சேராதவன் என்றிருக்கலாம்.
இவனின் துணிச்சலுக்குக் காரணம் இவன் மிகவும் படித்தவன், லண்டனில் வாழ்பவன் பெரிய சாதிக்காரன், இவளை விட வசதியானவன் என்பனவாக இருக்கலாம்.
அவள் மறுமொழி சொல்லவில்லை.
மூன்று நாட்கள் முதல் பிஞ்சாக இருந்த மனத்தை ஒருத்தன் மாறி ஒருத்தன் பெண்ணாக உருக்கிவிட்டார்கள்.
இனி ஐம்பது வருடமோ அறுபது வருடமோ ஒன்றாக வாழப் போகிறவர்கள் அந்தக் குசினிக்குள் சந்தித்துக் கொண்டார்கள்.
‘பேச விருப்பமில்லையென்றால் நான் ஒன்றும் செய்ய முடியாது. வரட்டுமா’ அவன் கண்கள் அவள் முகத்தில் ஒட்டிக் கிடந்தது.
வேண்டாம் என்று அவள் கண்கள் சொல்லின வாய் திறக்க முடியவில்லை. உடம்பில் இன்னும் நடுக்கம். அவன் இன்னும் நின்று கொண்டிருந்தான். அவள் உடம்பில் மின்சாரம் பரவிக் கொண்டிருந்தது. பார்வையில் கொஞ்சம் தைரியம் வந்திருந்தது.
ரோனியுடன் பழகும்போது உண்டாகாத பரபரப்பு, இனிய உணர்வு, உணர்வில் ஒரு மென்மை, இதுதான் காதலா?
அல்லது இருபது வருட உறவில் உண்டாகாத பரபரப்பு

Page 68
வசந்தம் வந்து போய் விட்டது 126
இந்தப் புதிய மனிதன் வித்தியாசமானவன் என்ற படியால் உண்டாகிறதா.
“வெளியில். கடற்கரையில் ஒரு பத்து நிமிடம் நடக்கலாமா, பேசலாமா' அவன் முகத்தில் குறும்பு. அவளுக்கு வெட்கம் வந்து விட்டது.
‘விருப்பமென்றால் வரலாம்' அவன் பழைய படி ஹோலுக்குப் போய் விட்டான்.
அவன் போய் அடுத்த வினாடி அம்மா ஒடோடி வந்தாள். தாயின் முகத்தின் தவிப்பு சாந்தி முன் எப்போதும் சந்திக்காதது.
"என்ன சொன்னார்’ தாய் மகளைத் தடவிய படி கேட்டாள். "கொஞ்சம் கதைக்க வேண்டுமாம், வெளியில் வர முடியுமா என்று கேட்டார்.' வார்த்தைகள் கிணற்றுக்குளிலிருந்து வருவது போல் கேட்டது.
அவள் குரலை அவளால் நம்ப முடியாமலிருந்தது. "மகளே, கொடுக்கிற தெய்வம் கூரையைப் பிய்த்துக் கொண்டு கொடுக்கும் என்பார்கள். உன் அதிர்ஷ்டத்தை உதைத்து எறியாதே மகளே’ தாயின் உருக்கமான குரல் அவள் மனத்தைப் பிசைந்தது.
இந்த நிமிடம் சாந்தி ரோனியைப் பற்றிச் சொன்னால் இந்தத் தாய் என்ன செய்வாள்?
ஒரு மீனவனை, ஏழையை, அவள் விரும்புகிறாள் என்று சொன்னால் நிச்சயமாக அம்மாவின் பிணம் அடுத்த நாள் இந்தக் கடற்கரையில் ஒதுங்கிக் கிடக்கும். தாயின் விசும்பல் மகளின் உணர்வுகளைப் பிழந்தது.
“என்னவாம் சாந்தி’ தமயன் சங்கர் வந்தான்.
"கொஞ்சம் தனியாகக் கதைக்கலாமோ என்று கேட்டாராம்"

127 ராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம்
'அதெற்கென்ன. போய்ப் பேசுவதுதானே’ சங்கர் உத்தரவிடுவது போற் சொன்னான்.
இவனிடம் ரோனியைப் பற்றிச் சொன்னால் என்ன நடக்கும்? “என்னடா உனக்குத் துணிவு' என்று சங்கர் குமுறுவான்.
தமயன் சேகர் என்ன செய்வான்? சேகர் சங்கர் மாதிரி நிதானமானவன் அல்ல.
“என்னடா கரையார நாயே உனக்குப் பணக்காரப் பெண் வேணுமா’ சேகர் இப்படிக் கேட்பதுடன் நிற்க மாட்டான், சிம்மமாய் மாறி ரோனியைக் கிழித்து விடுவான்.
சங்கர் உடனடியாகக் குசினியை விட்டு ஹோலுக்குள் போய் விட்டான்,
தம்பி குமார் அப்போதுதான் வீட்டுக்குள் வந்தவன். பதினெட்டு வயது, வீட்டிலுள்ள எல்லாரையும் விட வித்தியாசமானவன்.
ஹோலைத் தாண்டிக் குசினிக்கு வந்தான். அம்மா மெல்லிய குரலில் தன் கடைசி மகனுக்கு விடயத்தைச் சொன்னாள்,
குமார் தமக்கையை ஏறிட்டுப் பார்த்தான். பின்னர் தாயைப் பார்த்துக் கேட்டான். "ஏன் அக்காவை அவசரப் படுத்துகிறீர்கள்’ தாய்க்குக் கோபம் வந்துவிட்டது.
“மடையா, அந்தப் பையன் லண்டனைச் சேர்ந்த பையன். பெண் கொடுக்கப் போட்டி போட்டுக் கொண்டு கியுவில் நிற்பினம். இவளின்ர அதிர்ஷ்டம் உனக்குப் புரியல்லயா'
தாய் இப்போது அழுதுவிட்டாள். குமார் ஏதோ முணுமுணுத்துவிட்டுப் போய் விட்டான்.

Page 69
வசந்தம் வந்துபோய்விட்டது 28
தகப்பன் வந்தார்.
“என்ன குட்டி மகாநாடு நடக்குதா’ தாயையும் மகளையும் ஏறிட்டுப் பார்த்துக் கேட்டார் தகப்பன். "தன்னோடு கொஞ்சம் தனியாகப் பேச வரலாமா என்று ராஜன் கேட்டாராம்” அம்மா தவிப்புடன் சொன்னாள்.
ரோனியைப் பற்றி அப்பாவிடம் சொன்னால் என்ன நடக்கும்? அவரால் அந்தத் திருப்பத்தைத் தாங்க முடியவோ அல்லது சம்மிக்கவோ முடியாது.
தாயை வதைப்பார், தமயன்களை வைவார், தான் பைத்தியமாகி விடுவார். அது நிச்சயம். நிச்சயம்.
"அந்தப் பையனைப் பிடிக்கவில்லயா மகளே’ தகப்பனின் குரலிற் கெஞ்சல், அவரைப் பிடிக்கிறது என்று சொல்வேன் என்ற கெஞ்சல்.
கோணேசர் கோயில் மணியோசையோ என்னவோ காதில் கணிரென்ற கோயில் மணியோசை கேட்டது.
இரவைத் தழுவிய கடல் சந்திரனை எதிர்பார்த்து மென்மையாய் இரைந்தது. காகாக்கள் கூடுகள் தேடி ஓடிக் கொண்டிருந்தன. கடற்கரையில் மீனவர்கள் பின்னேர மீன் பிடிப்புக்கு ஆயத்தம் செய்து கொண்டிருந்தார்கள்.
"உன் தலவிதிப் படிதான் எல்லாம் நடக்கும்’
தகப்பன் போய் விட்டார்.
"கொஞ்சம் முகத்தைக் கழுவிக் கொண்டு வெளிக்கிடு" தாய் பரபரத்தாள்.
! - அடுத்த அறைக்குள் ஒடிப்ப்ோய் ஒரு நீலச் சேலையை மகளிடம் கொடுத்தாள்.
இயந்திரம் போற் செயற்பட்டுத் தன்னை நீலச் சேலைக்குள்

129 ராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம்
புதைத்துக் கொண்டாள் சாந்தி.
‘சாந்தி ரெடிபோல கிடக்குது' சங்கர் ராஜனுக்குச் சொன்னான்.
வந்திருந்தோர், வீட்டிலிருந்தோர் எல்லோரும் பார்த்திருக்க வீட்டுக்குப் பின்னாலிருந்த கேற்றை ராஜன் திறந்து கட்றகரையில் கால் வைக்க அவள் அவனைப் பின் தொடர்ந்தாள்.
'நான் இன்னும் உன் குரலைச் சரியாகக் கேட்கவில்லை தெரியுமா’ அவன் திரும்பிப் பார்த்துச் சொன்னான்.
வெட்கத்துடன் தலைகுனிந்தாள் சாந்தி. இன்னும் வாய்திறக்கவில்லை.
'இது பெரிய அதிர்ச்சியான விஷயம் தெரியுமா? அவன் மெல்லச் சிரித்துக் கொண்டான்.
அவன் நடந்துபோய் ஒரு தோணியருகில் நின்றான். அவள் உள்ளம் படபடத்தது.
அவளும் ரோனியும் உட்கார்ந்திருந்த அதே இடம். அதே தோணி.
‘கடவுளே இந்த மனிதனை இந்தத் தோணியிடத்தில் இருக்கப் பண்ணாதே அவள் மனம் வேண்டிக் கொண்டது. கடவுளும் அவனுடன் சேட்டை விட்டிருக்க வேண்டும். மூன்று நாட்களுக்கு முன் எந்தத் தோணியருகில் இன்னொருத்தனுடனிருந்தாளோ இன்றும் ஏதோ விதி துரத்தி விட அதே இடத்தில் அவன் உட்கார அவளும் உட்கார்ந்தாள்.
கொஞ்ச நேரம் அமைதி. அவன் கண்கள் கடலைப் பார்த்தன. கடல்வயிற்றைக் கிழித்துக் கொண்டு சந்திரன் பிரசவித்தது.
அவன் இப்போது அவள் முகத்தைப் பார்த்தான். "நீல சாரி உமக்கு நன்றாக இருக்கிறது"

Page 70
வசந்தம் வந்து போய் விட்டது 130
அவள் இன்னும் தலைகுனிந்திருந்தாள். "உமக்கு என்னைப் பிடிக்குதா'
அவனின் குரல் அவனுக்குள் ஒரு சிலிர்ப்பையுண்டாக்கியது. உடம்பு பட்டென்று சூடு கண்டது. கைகள் நடுக்கத்துடன் கடல் மண்ணில் கோலம் போட்டன. தொண்டை வரண்டது. கண்கள் தாழ்ந்தன. இதுதான் காதலா?
"நாங்கள் வயது வந்தவர்கள். எனக்கு வயது இருபத்தேழு. உமக்கு வயது இருபது என்று சங்கர் சொன்னான்’
‘.’ அவள் இன்னும் மெளனம். "லண்டனுக்கு வரவிருப்பமா” அவள் சம்மதம் என்று தலையாட்டினாள். அதன் பிறகு அவன் தயங்கவில்லை. மிகவும் அருகில் வந்து இரு கைகளாலும் அவன் அவள் முகத்தை ஏந்தி அவள் கண்களைப் பார்த்தான்.
வானத்து நட்சத்திரங்கள் அவள் கண்களில் பிரதிபலித்தன. 'நான் என்னால் முடிந்தவரை உன்னைச் சந்தோசமாக வைத்திருப்பேன்’ அவள் காதில் கிசுகிசுத்தான்.
அவள் கண்களில் தாரை தாரையாக நீர் கசிந்தது ஏன் என்று அவனுக்கே தெரியாது, மூன்று நாட்களுக்கு முன் அவளைக் கண்டவன். இன்று அவளுடைய அவனாக விட்டதை அவளால் நம்ப முடியவில்லை.
"நான் என்னைப் பற்றி உம்மிடம் சொல்ல வேண்டும்.’ அவன் ஆரம்பித்தான்.
அவளுக்குத் திடீரென்று பயம் பிடித்து விட்டது.
அவளும் ரோனியைப் பற்றிச் சொல்ல வேண்டுமா?
"வேண்டாம்" அவள் பட்டென்று சொன்னாள்.

31 ராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம்
ஏன்'
.." அவள் மறுமொழி சொல்லத் தடுமாறினாள்.
"எனது விருப்பு வெறுப்புக்களை, கடந்த கால வாழ்க்கையை உனக்குத் தெரிய வேண்டாமா”
"கொஞ்சம் கொஞ்சம் தெரிந்து கொண்டால் போதும்" அவள் கிசுகிசுத்தாள்.
இப்போது அவன் மெளனம்
அவளைத் தாங்கிய கைகளை இப்போது மணலிற் புதைத்து அவன் குழைந்து கொண்டிருந்தான்.
“என்னைப் பற்றி உனக்கு எதுவும் தெரியாதே'
“உங்கள் குடும்பத்தை எனது தாய் தகப்பனுக்குத் தெரியும். அவர்கள் எடுத்த முடிவு நல்ல முடிவாக இருக்கும்’
அவள் இவ்வளவும் சொல்லி முடிப்பதற்கிடையில் வியர்த்துக் கொட்டி விட்டது.
"அவர்களுக்காகத்தான் உனது சம்மதமா’
"அப்படி இல்ல."
அவள் குரலில் இப்போது துணிவு.
“என்னைப் பற்றிச் சொல்ல எவ்வளவோ இருக்கு”
"அத இப்ப சொல்லத் தேவையில்ல'
"ஏன்?
"அவசியமில்ல'
"ஏன் அவசியமில்ல' அவன் குரலில் குழப்பம். இப்போது அவள் நிமிர்ந்து அவனைப் பார்த்தாள். "நாங்கள் ஒருத்தரை ஒருத்தர் சந்திக்க முதல் வாழ்ந்த

Page 71
வசந்தம் வந்து போய்விட்டது 132
வாழ்க்கை வேற, இனி வாழப் போகிற வாழ்க்கை வேற. நீங்கள் சொன்னது போல நானும் உங்களுக்குச் சரியான சந்தோசத்தைத் தரும் துணையாக வாழ என்னால் ஆன முயற்சியைச் செய்வேன். அதற்கப்பால் வேறொன்றும் முக்கியமில்ல என்று நினைக்கிறன்’
அவன் மீண்டும் கொஞ்ச நேரம் மெளனமாகிறான். பின்னர் கொன்னான்.
"நான் லண்டனில் நீண்ட நாள் வாழ்ந்தவன் .
என்னைப் பற்றி உனக்குத் தெரியவேண்டும்’
“எனக்குத் தெரிய வேண்டியதைக் காலம் வரும்போது நானே தெரிந்து கொள்வேன்’
"சில விடயங்கள் மிகவும் அதிர்ச்சி தருவதாக இருந்தால்." அவன் கேட்டான்.
“அதை அப்போது பார்த்துக் கொள்வோம்’ அவள் இப்போது திடகாத்திரமாய்ச் சொன்னாள். அவர்கள் திருமணம் மூன்று கிழமையில் நடந்தது.
ஒரு சில மாதங்களில் அவள் லண்டன் வந்துசேர்ந்தாள். அவள் கல்யாணம் நிச்சயமானபோது ரோனி கொழும்பில்
தனது பிரயாண விடயங்கள் பார்க்கும் அலுவலாகப் போயிருந்தான்.
வரோணிக்கா வந்து விஷயத்தையறிந்த போது அவன் என்ன பாடுபட்டிருப்பான் என்று சாந்தி யோசித்தாள்.
அவள் திருமணம் நடந்தபோது அவன் அமெரிக்கா போய் விட்டான்.
லண்டனுக்கு வந்து பத்து வருடமாகிவிட்டது. அவன் எப்படி வாழ்ந்திருப்பான் என்று அவள் நினைத்துப் பயப்படும்படி

33 ராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம்
இதுவரையும் எந்த சந்தர்ப்பமும் வரவில்லை.
இப்போது ஒரு குழந்தை உயிருக்கு மன்றாடிக் கொண்டிருக்கும்போது இன்னொரு குழந்தை சிறு உயிராய் வளர்ந்து கொண்டிருக்கும்போது அவனைப் பற்றிய சந்தேகம் வந்திருக்கிறது.
சாந்தி முகத்தை மூடிக் கொண்டழுதாள். தன்மைத்துணிகளை விட, சினேகிதிகளை விடத் தான் பெரிய அதிர்ஷ்டசாலி என்று நினைத்தது எத்தனை அபத்தம்?
இதுதான் தலைவிதியா? அவள் குழம்பிப் போய் விட்டாள்.
1 O
இரவின் தனிமையில் ராஜன் நடந்து கொண்டிருந்தான். நீண்ட நேரம் தனிமையிலிருந்து யோசித்ததாலும் சாந்தி அவன் தலைமயிரைக் கண்டபடி இழுத்துக் குலுக்கியதாலும் அவனுக்குத் தலையிடித்தது.
செயின் அல்பேன்ஸ் நகரின் பெரிய கடைவீதி சன நாட்டமின்றி அன்னியமாகத் தெரிந்தது.
வாழ்க்கையும் இப்படித்தானோ? எங்களுக்குப் பரிட்சயப்பட்ட கோணத்திலிருந்து பார்க்கும்போது எல்லாம் சரியாக அல்லது திருப்பதியாகத் தெரிகிறது.
கோணம் பிழைத்து விட்டாற் கோலங்கள் தடுமாறுகின்றன.
செயின்ட் அல்போன்ஸ் நகரின் மூலை மூடுக்குகளில் வீடற்ற ஏழைகள் முடங்கிப் படுத்திருந்தனர். இவர்களுக்கும் ஒரு காலத்தில் அன்பான குடும்பமும் அம்மா, அப்பா மனைவி குழந்தைகளுமிருந்திருக்கலாம். இப்போது இவர்கள் மூடிக் கொண்டிருக்கும் கந்தையைத் தவிர எதுவும் இவர்கள் சொந்தமில்லை.

Page 72
வசந்தம் வந்து போய் விட்டது 134
இவர்களிற் ძileაfi இவனைப்போல் வழக்கறிஞர் களாகவுமிருந்திருக்கலாம். இப்போது இவனைப் போல் தனக்கே வாதம் செய்யத் தெரியாமற் தவிக்கலாம்.
ஸேராவும் சாந்தியும் இவனை நிழலாய்த் தொடர்வதுபோல பிரமை, ஸேராவை இப்போது தான் சந்திக்க வேண்டுமா? பன்னிரண்டு வருடங்களில் எத்தனையோ தரம் அவளைப் பற்றி யோசித்திருக்கிறான்.
எங்கே போனாள், எப்படி வாழ்கிறாளோ என்றெல்லாம் யோசிப்பான். எங்கேயாவது ஆர்ட் கண்காட்சிகள் நடைபெறுவதானால் அவள் பெயர் தெரிகிறதா என்ற அபிலாஷையுடன் அவன் பார்ப்பான்.
சாந்தியைப் பொறுத்தவரையில் அவன் எப்போதும் அவளது சொந்தம். அவனைக் கணவனாகப் பெற்றதில்தான் மிகவும் அதிர்ஷ்டசாலி என்று வாய்விட்டுச் சொல்வாள்.
எமிலியைப் பற்றிப் பரிதாபப் படுவாள், அலிஸனைப் பற்றி பெருமூச்சு விடுவாள் சாந்தி. அந்த இரு பெண்களையும் வைத்துக் கொண்டு தன் வாழ்க்கையை எடை போடுவாள் சாந்தி.
சுதந்திரப் போக்குள்ள எமிலியைப் பற்றிப் புரிந்து கொள்ள சாந்தி திணறுவாள். எடுத்ததற்கெல்லாம் சந்தேகப்படும் அலிஸனைப் பற்றி எரிச்சல் படுவாள் சாந்தி.
'டேவிட் பல பெண்களுடன் தொடர்பு வைத்திருப்பதாக அலிஸன் திட்டுகிறாள். ஆண்கள் பலர் பெண்களின் உணர்ச்சிகளைப் புரிந்து கொள்ளாதவர்கள், சந்தர்ப்பம் வந்தால் தவறி விழத் தயங்காதவர்கள் என்றெல்லாம் அலிஸன் சொல்கிறாள். நீங்கள் என்ன சொல்கிறீர்கள்’ சாந்தி இப்படிக் குழப்பமான கேள்விகளைக் கேட்பாள். மறுமொழி என்ன சொல்வது?
சாந்திக்குத் தன் பழைய வாழ்க்கையைப் பற்றி ஸேராவைப் புற்றிச் சொல்ல வேண்டும் என்று நினைத்துக் கொள்வான்.

135 ராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம்
காலப் போக்கில், சாந்தியிடம் அவனுக்குள்ள இறுக்கத்தில் பழைய வாழ்க்கை ஒரு இறந்த கால வாழ்க்கையாகிவிட்டது. ஏன் எலும்புக் கூடுகளைக் கிண்ட வேண்டும்? உஷாவும் சாந்தியும்தான் அவன் உலகம் என்றாகிவிட்டபின் ஸேராவைப் பற்றி என்ன யோசனை.
இருப்பதுண்டு.
1987ம் ஆண்டு இந்திய சமாதானப்படை வந்து இலங்கைத் தமிழ்ப்பகுதிகளில் சமாதானம் நிலவியபோது தாயின் இடைவிடாத நச்சரிப்பால் இலங்கை போய் வர உத்தேசித்தான்.
அம்மா ஏன் தன்னைப் பிடிவாதமாக அழைக்கிறாள் என்று தெரியும். அக்கா பிரமிளா இடைவிடாமல் போன் பண்ணி ‘இவனுக்கொரு கல்யாணம் பாருங்கள்’ என்று சொல்லியிருப்பாள்.
ஸேராவைப் பற்றிய தகவல் தெரிந்து இரண்டு வருடங்களாகி விட்டன. அவளைப் பற்றிய சோகத்தில் அமைதியிழந்த நாட்கள் மறந்து கொண்டிருந்தன. இவன் வாட்ட சாட்டமான வழக்கறிஞன். வேலை செய்யும் அல்லது வாடிக்கையாளராய் வரும் பெண்கள் இவனின் கவர்ச்சியில் கலங்கித் தடுமாறுவதை இவன் கவனிக்காமலில்லை. ஆங்கிலேயப் பெண்களைக் கண்டால் அவர்களின் கண்கள் இவனை வளைய வருவதைக் கண்டால் எங்காவது ஓடவேண்டும் போலிருக்கும்.
'நீ ஒரு இனவாதி’ என்றாள் ஒரு இங்கிலிஸ் பெண்.
'ஏன் அப்படிச் சொல்கிறாய்' இவன் குழம்பிப் போய்க் கேட்டான்.
"எங்களைக் கண்டால் எரிச்சல் படுகிறாய்' அந்த வார்த்தைகள் அவனைச் சுட்டது.
இன்னொரு ஆங்கிலேயப் பெண்ணை நம்பித்தான் ஏமாற

Page 73
வசந்தம் வந்து போய் விட்டது 36
விரும்பவில்லை என்று சொல்லலாமா?
"ஐயாம் சொறி. நான் யாரையும் கண்டு எரிச்சல் படவில்லை. எட்ட நிற்கப் பழகிக் கொள்கிறேன்’ என்று தயவாகச் சொன்னான்.
அந்த ஆங்கிலேயப் பெண்ணுக்கு இவனை விளங்கிக் கொள்ள முடியவில்லை. "நீ ஒரு வித்தியாசமான பேர்வழி' அவள் குரலில் கிண்டல்.
"ஏன் அப்படிச் சொல்கிறாய்" “பெண்களைக் கண்டால் பேய்களைப் பார்ப்பதுபோல் பார்க்கிறாய்"
"ஐயாம் சொறி, நான் அப்படி ஒரு சங்கடத்தைத் தந்ததற்கு மன்னிக்கவும்' அவன் குழைந்தான்.
அவனிடம் பேசிக் கொண்டிருந்த ஆங்கிலேயப் பெண் இவனின் சேம்பரில் இவனுடன் வழக்கறிஞையாக வேலை செய்பவள். எதையும்நேரே கேட்கும்துணிவு கொண்டவள். இவன் வயதை ஒத்தவள். மிகவும் சுதந்திர மனப் போக்குள்ளவள். இருவரும் சில வழக்குகளில் கலந்து வேலை செய்யவேண்டியிருந்தது.
ஒரு நாள் கார்டிவ் நகரத்தில் ஒரு இரவைக் கழிக்க வேண்டி வந்தது.
பகலெல்லாம் கோர்ட் கேசுடன் மாரடித்து விட்டு இரவில் சிவப்பு வைனுடன் தன்னை யிழந்து கொண்டிருந்தவள் ஒரேஞ் சாறு குடித்துக் கொண்டிருக்கும் ராஜனை வித்தியாசமாகப் பார்த்தாள்.
"நீ மதுபானம் எடுக்க மாட்டாயா’ அவள்கேட்டாள். அவன் இல்லை என்று தலையாட்டினான்.
“மகாத்மா காந்தி மாதிரி மது மங்கை மாமிசத்தைத்

137 ராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம்
தொடமாட்டேன் என்று உனது தாய்க்குச் சத்தியம் செய்து கொடுத்தாயா’ அவள் கிண்டல் செய்தாள்.
"நான் மாமிசம் சாப்பிடுபவன்' அவன் முணுமுணுத்தான்.
'மங்கைகளையும் சாப்பிடுவாயா’ அவள் போதையில் வார்த்தைகளைக் கொட்டினாள்.
அவன் மறுமொழி சொல்லவில்லை. சட்டென்று ஸேராவின் இனிய முத்தங்கள் ஞாபகம் வந்தது.
'நீ ஹோமோ செக்சுவலா’ அவள்கேள்வி எரிசசலாய் வந்தது.
'இல்லை’ என்று தலையாட்டினான் இவன்.
"அப்படியென்றால் ஏன் என்னை முத்தமிடக் கூடாது” அவள் தடுமாறி வந்து இவனில் விழுந்தாள். 'நிறைய ஆசியர்கள் ஹோமோ செக்சுவலாக இருந்து கொண்டு கல்யாணமும் செய்வார்களாம்' அவன் விலகிக் கொண்டான்.
'நான் இனவாதியில்லை, நான் ஹோமோ செக்சுவல் இல்லை, காதலிற் தோல்வி கண்டவன்' அவன் ஒப்பாரி வைக்கும் நிலைக்கு அவள் அவனைக் குழப்பி விட்டாள்.
"காதலா’ அவள் தன் பொன் மயிரைக் குழப்பிக் கொண்டு இவனைக் கேட்டாள்.
'உம்' குழந்தைத் தனமாகத் தலையாட்டினான்.
"முட்டாள், காதலாவது மண்ணாங்கட்டியாவது. படுக்க விருப்பமென்றால் படுத்தெழும்பு, கட்டிக் கொண்டு மாரடிக்க வேண்டுமென்றால் அதைச் செய்து பார். காதல் கீதல் என்று கண்ணிர் வடிக்க வேண்டாம். அப்படி ஒன்றும் இல்லை. அந்த வார்த்தைகள் கதை எழுதவும் கவிதை வடிக்கவும் உற்பத்தி செய்யப் பட்டது. சாதாரண வாழ்க்கையில் இதெல்லாம் வெறும் கனவு’
அவள் பிதற்றித் தள்ளினாள்.

Page 74
வசந்தம் வந்து போய்விட்டது 138
அவன் அன்றிரவெல்லாம் ஸேராவை நினைத்துத் துயர்பட்டான்.
அந்த சமர் வக்கேசனுக்கு இலங்கை போகச் சொல்லி அக்கா வற்புறுத்திக் கொண்டிருந்தாள். அம்மாவும் அப்பாவும் இடைவிடாமல் போன் பண்ணிக் கொண்டிருந்தார்கள்.
அவன் ஒரு சாதாரண தமிழன். அம்மா ஏன் அழுது வடிந்து கடிதம் எழுதிக் கொண்டிருக்கிறாள் என்று தெரியும். அதற்காக இலங்கைக்குப் போகாமலும் இருக்க முடியவில்லை.
அம்மா இவன் எதிர்பார்த்தபடி கனடா, அமெரிக்கா, அவுஸ்திரேலியா, நியுசீலண்ட், இங்கிலாந்து என்ற நாடுகளிலிருந்து தங்களுக்கு வந்திருக்கும் சாதகங்களை எடுத்து விரித்து வைத்தாள்.
அவனுக்கு அடுத்த விமானம் எடுத்து லண்டனுக்கு வரவேண்டும் போலிருந்தது.
அம்மா தன் ஆயுதங்களான, கெஞ்சல், மிரட்டல், கண்ணிர் என்பனவற்றையெல்லாம் பிரயோகித்துப் பார்த்தும் ஒரு பிரயோசனமுமில்லை.
‘இவனுக்கு ஏதோ பிழை" அம்மா மூக்கைச் சிந்திக் கொண்டாள்.
'காலமும் நேரமும் வந்தால் எல்லாம் சரியாக நடக்கும்’ அப்பா தத்துவம் பேசினார்.
சமாதானப் படை வந்ததாலும் யாழ்ப்பாணம் போய் உறவினர்களைப் பார்ப்பது சாத்தியப்படவில்லை. சில தமிழ் இயக்கங்கள் வவுனியா, பரந்தன் போன்ற பகுதிகளில் பயங்கர வேலைகளில் ஈடுபட்டுடிருந்ததால் இவர்களால் தயக்கமில்லாமல் பிரயாணம் செய்ய முடியவில்லை.
அப்பாவுக்குத் திருக்கேதீஸ்வரமும், திருக்கோணேசமும் மிகவும் பிடித்த இடங்கள். திருமலை போவதாக முடிவு

39 ராஜேஸ்வரி பாலசுப்பிரம்ணியம்
கட்டியபோது அவன் மறுக்கவில்லை.
கொழும்பில் நின்றபோது இவனுக்குச் சொல்லாமல் அம்மா எத்தனையோ குடும்பங்களை, அதாவது இவனுக்கு மணப்பெண்ணாக வரத் தகுதியுள்ள பெண் உள்ள குடும்பங்களைச் சாப்பிட அழைத்தாள்.
அம்மாவின் மறைமுக நாடகம் அவனுக்கு எரிச்சல் வந்தது. 'திருகோணமலைக்குப் போய் இந்த நாடகங்கள் போடுவதானால் நான் வரவில்லை’ அவன் திட்டவட்டமாகச் சொல்லி விட்டான்.
திருமலைச் சூட்டில் வதங்கிப் போனவனுக்கு நிலாவெளிக் கடற்கரை இதம் தந்தது. கன்னியாவின் வென்னீர் இதய வேதனையைத் தீர்த்தது.
இயற்கையழகில் எப்போதும் மனதைப் பறி கொடுக்கும் அவனுக்கு திருமலைக் கடற்கரையின் ஏகாந்த இரவுகள் மனதின் புண்ணை மாற்றின.
திருமலை வந்து ஒன்றிரண்டு நாட்களில் தனக்குத் தெரிந்த ஒரு நண்பர் வீட்டுக்குச் சாப்பிடக் கூப்பிட்டார் தகப்பன்,
தகப்பனை ஏறிட்டுப் பார்த்தான் ராஜன்.
"அவர்களுக்கும் ஒரு பெண் குழந்தை இருக்கிறாள். எத்தனை வயதென்று எனக்குச் சரியாகத் தெரியாது’ தாய் தர்ம சங்கடத்துடன் சொன்னாள். அதாவது நாங்கள் உனக்குக் கல்யாணம் பேசக் கூட்டிக் கொண்டு போகவில்லை என்ற உத்தரவாதம்.
வழக்கம்போல் சம்பிரதாயமான பேச்சுக்கள். நீலப் பாவாடையும் ஒரு நீலச் சோளிச் சட்டையும் தாவணியும் போட்ட ஒரு இளம் பெண் தேனீர் ட்ரேயைக் கொண்டு வைத்து விட்டுச் சட்டென்று மறைந்து விட்டாள். இவனை ஏறிட்டுப் பார்க்கவேயில்லை.

Page 75
வசந்தம் வந்து போய்விட்டது 140
எத்தனை விருந்தினர்கள் வந்திருக்கிறார்கள் என்று கூட அவள் கணக்கெடுக்கவில்லை.
இவ்வளவு காலமும் இவன் கண்ட பெண்கள் கிட்டத்தட்ட ஆங்கிலேய நாகரீகத்தைத் தழுவிக் கொண்ட தமிழ்ப் பெண்கள். இவனுக்குச் ஸேராவைப் போல் நீண்ட தலைமயிர். ஸேராவுக்கு இந்தியத் துணிகளிலும் நகைகளிலும் அபாரப் பிரியம். அவளின் பாட்டன் இந்தியாவிற் பிறந்து வளர்ந்தவர். ஸேரா குழந்தையாய் இருக்கும் போது இந்தியா போய் வந்தவள். வளர்ந்து யூனிவர்சிட்டியிற் படிக்கும்போது கிட்டத்தட்ட எல்லா ஆங்கிலேய மாணவர்களுக்கும் வரும் ஆசைபோல் இந்தியா போகும் ஆசை அவளுக்கும் வந்தது.
போய் வந்தபின் பருத்திப் பாவாடையும் மணிமாலையும் போட்டுத் தன்னை அலங்கரித்துக் கொள்வாள். ஸேராவின் பிடித்த நிறம் நீலம்.
நீல நிறத்தில் சாந்தியைக் கண்டதும் ராஜனின் இருதயம் இரத்தம் வடித்தது. அந்தப் பெண் மற்றைய பெண்கள் போற் தன்னை ஏற இறங்கப் பார்க்காமல் எடுத்தெறிந்து நடத்தியது அவனுக்கு ஆச்சரியமாக இருந்தது.
அன்றைய சாப்பாடுடன் வயிறும் மனம் நிறைய அம்மா வந்தாள். இவனிடம் அந்தப் பெண் எப்படி என்று கேட்காதது மிகவும சந்தோசமாக இருந்தது.
அடுத்த நாள்ப் பின்னேரம் ராஜன் கடந்த சில தினங்களாகத் தனியாகக் கடற்கரையில் நடந்து செல்வது போல் நடந்தான்.
சாந்தியின் வீடு கடற்கரையை அண்டியது.
கரையோடு நடந்து செல்லும்போது அவர்களின் வீட்டின் பின்னால் அவள் கோழிகளுக்குச் சாப்பாடு போட்டுக் கொண்டிருந்தாள்.
மாலை மயங்கும் நேரம், கரையோரம் கிடந்த ஆயிரக்

141 ராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம்
கணக்கான தோணிகளின் ஒன்றினருகில் அமர்ந்து தன் எதிர்காலத்தைப் பற்றி யோசித்தான்.
திரும்பத் திரும்ப ஸேராவும் சாந்தியும் வானத்து நட்சத்திரங்களாய் அவன் மனவானிற் கண் சிமிட்டினார்கள்.
தூரத்தில் மங்கிய நிலவு வெளிச்சத்தில் வீட்டு வேலை செய்யும் இந்தப் பெண்ணும் உலகமெல்லாம் ஒடித்திரிந்து கலைக் காட்சிகள் செய்து கொண்டு திரியும் ஸேராவும் வித்தியாசமான இரு உலகத்தைச் சேர்ந்தவர்கள்.
இவன் பார்த்துக் கொண்டிருக்கும்போது சாந்தி வீட்டுக் கேற் திறக்கப்பட்டது. சாந்தியும் இன்னொரு இளம்பெண்ணும் வந்தார்கள். இவன் தன்னைத் தோணியோடு மறைத்துக் கொண்டான். இருவரும் இவனைக் கடந்து போய் இன்னொரு தோணியருகிலுட்கார்ந்து ஏதோ அமர்க்களாமாகப் பேசி சிரித்துக் கொண்டிருந்தார்கள்.
மாலை மயங்கிப் போய் நிலவு வந்து விட்டது. கொஞ்ச நேரத்தில் இளம் பெண்கள் இருவரும் சாந்தியின் வீட்டையடைந்து விட்டார்கள்.
அவள் திரும்பியபோது நீண்ட பின்னல் நாகம்போல் சுருண்டடித்தது. அவன் இதயத்தை வருடுவது போலிருந்தது.
அன்றிரவு அவர்கள் தங்கியிருந்த ஹொட்டலுக்கு வந்தபோது அப்பாவும் அம்மாவும் தங்களுக்குத் தெரிந்த ஒருத்தரின் பெண் டொக்டராகத் திருமலை ஆஸ்பத்திரியில் வேலை பார்ப்பதாகப் பேசிக் கொண்டிருந்தார்கள்.
இவனுக்குத் தெரியும் அதன் பின்னணியின் கருத்து என்னவாகவிருக்குமென்று.
தாய் தகப்பனுடன் எதையும் நேரடியாகப் பேசுபவன் அவன். கொஞ்ச நேரம் அவர்கள் இருவரும் பேசுவதைக் கேட்டுக் கொண்டிருந்து விட்டுச் சொன்னான்.

Page 76
வசந்தம் வந்து போய்விட்டது 142
'அப்பா நான் உங்கள் நண்பரின் மகள் சாந்தியை விரும்புகிறேன். அவள் சம்மதித்தால் மிகவும் சந்தோசப் படுவேன்'
தாயும் தகப்பனும் கொஞ்ச நேரம் ஒன்றும் பேசவில்லை.
இவனுக்கு இவனைப் போல் ஒரு சட்டப்படிப்பு படித்த பெண்ணையோ அல்லது ஒரு டொக்டரையோ செய்யலாம்
என்றிருந்தால்
இவன் என்ன சொல்கிறான்? 'சாந்தி A லெவலுக்கு மேல் ஒன்றும் படிக்கவில்லை”
அம்மா முணுமுணுத்தாள். இவன் கேள்விக் குறியுடன் அம்மாவைப் பார்த்தான்.
"உம். உனக்கு உன்னைப்போல் ஒரு படித்த பெண்ணைப் பார்த்துக் கொண்டிருக்கிறோம்"
அம்மா தயங்கித் தயங்கிச் சொன்னாள்.
"அது உங்கள் பிரச்சினை' அவன் சிரித்தபடி சொன்னான்.
"அவசரப்பட்டு முடிவு செய்ய வேண்டாம்' அப்பா குறுக்கிட்டார்.
'g fu T5 )6 وعاما செய்திருக்கிறேன் என்று நினைத்திருக்கிறேன்' அவன் அவர்கள் விமர்சனத்தை எதிர்பார்த்தான்.
"இரண்டு நாள் யோசித்து முடிவு சொல்” அம்மாவின் அறிவுரை இது.
'அம்மா இதில் ஒன்றம் பெரிதாகயோசிக்க இல்ல. அந்தப் பெண்ணை எனக்குப் பிடிச்சிருக்கு. அவ்வளவுதான்’
"எல்லாம் தலைவிதி' அப்பாவின் பிடித்த வசனமிது. சாந்தியிடம் ஸேராவைச் சொல்லி அவளுக்குத்

143 ராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம்
தன்னைப்பற்றிச் சொல்ல வேண்டும் என்ற அவன் ஆசையை சாந்தி தடுத்து விட்டாள். 'நாங்கள் இதுவரை வாழ்ந்த வாழ்க்கையை மறப்போம். இனி வரப்போகும் வாழ்க்கையை நினைப்போம்” என்றாள்.
தன் வாழ்க்கையின் ஒரு அத்தியாயத்தை அப்படிச் சுலபத்தில் மறந்து விட அவன் தயாரில்லை. ஆனால் அவளோ அவன் எப்போதாவது இருந்து பழைய கதைகளைத் தொட்டால் அவள் அவன் இதழ்களில் விரல் வைத்து 'உஸ்உஸ் சொல்லி விடுவாள்.
இப்போது புதைத்து வைத்த பிணம் உயிரெடுத்து ருத்திரதாண்டவமாடுகிறது.
இந்த நேரம் பார்த்தா ஸேரா மீண்டும் வரவேண்டும்? வசந்த காலமென்ற படியால் காலை நான்கு மணிக்கே விடியத் தொடங்கி விட்டது. அவன் வீட்டுக்குப் போய்ச் சேர்ந்தபோது அவளும் தூங்கவில்லை என்று தெரிந்தது.
பெட்டிகளில் உடுப்புக்களைப் போட்டுக் கொண்டிருந்தாள். ‘என்னை விட்டுப் பிரிவதாக உத்தேசமா’ அவன் வாசற்படியில் நின்று கேட்டான்.
அவள் மறுமொழி சொல்லவில்லை. 'மற்றவர்களுக்கு நாடகம் காட்ட முதல் எங்கள் பிரச்சினையை நாங்கள் பேசித் தொலைத்தால் என்ன'
மெளனம், மெளனம், மெளனம் ஒரு சில தினங்களுக்கு முன் இதேயறையில் இதே படுக்கையில் ஒருத்தருக்குள் ஒருத்தரை இணைத்துக் கொண்டவர்கள் இப்போது எதிரிகளாய் வாதம் செய்து கொண்டிருந்தார்கள்.

Page 77
வசந்தம் வந்து போய்விட்டது 144
ரவியைப் பார்க்க மிஸ்டர் ஸிம்சன்-எமிலியின் தகப்பன் வந்திருந்தார். உயர்ந்து வளர்ந்த அந்த ஆங்கிலேயன் சுருண்டு படுத்திருக்கும் தனது ஆசியப் பேரனை அனைத்துக் கொண்டார்.
“தாத்தா நீங்கள் ஏன் நேற்று வரவில்லை’ ரவி தாத்தாவின் திடகாத்திரமான கைகளைப் பற்றிக் கொண்டு கேட்டான்.
"நான் வருவது உன் தாய்க்குப் பிடிக்காமல் இருக்கலாம் என்றுதான் வராமல் விட்டேன்’ கிழவன் பேரனின் கன்னத்தை வருடிவிட்டுச் சொன்னார்.
"ஏன் என் அம்மாவுக்கு என் அப்பாவையும் பிடிக்காது தன் அப்பாவையும் பிடிக்காது’ குழந்தை தன் மெல்லிய குரலாற் கேட்டான்.
தாய் எமிலி குழந்தையின் அப்பாவித் தனமான குரலைக் கேட்டு வேதனையுடன் சிரித்தாள்.
"மகனே எனக்கு எனது தகப்பனில் ஒரு நாளும் கோபமில்லை,உனது தகப்பனில் மிகவும் பிரியம். ஆனால் சந்தர்ப்ப வசத்தால் இப்படியாகி விட்டது”
எமிலி தகப்பனைப் போல மனஉறுதி கொண்டவள். தன் மகனின் குழப்பமான கேள்விகளுக்குத் தகப்பனின் சுற்றிவளைப்பான மறுமொழிகளை அவள் விரும்பவில்லை.
தகப்பன் ஒரு நியாயமான மனிதனாக இருந்தால் ஏன் தன் தாய் தற்கொலை செய்து கொண்டாள்? இளவயது எமிலி எத்தனையோ தரம் கேட்ட கேள்வியது.
கத்தோலிக்கத் தாயைக் காதலித்துத் திருமணம் செய்து கொண்டவர் தனது தந்தை என்று தெரிந்தபோது எமிலிக்குப் பதினேழுவயது. தாயை ஆறுவயதில் இழந்தவனுக்குத் தாய் வழிப்பாட்டி சொன்ன கதைகள் சில ஞாபகம் வருகின்றன.
மிஸ்டர் ஸிம்சனின் குடும்பம் நூற்றுக் கணக்கான

45 ராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம்
வருடங்களாக நன்றாக வாழ்ந்த குடும்பம். எமிலியின் தாய் ஐம்பதாம் ஆண்டளவில் லண்டனுக்கு நேர்ஸிங் செய்ய வந்த நூற்றுக்கணக்கான ஐரிஸ் பெண்களில் ஒருத்தி.
உடுப்புக் கடை முதலாளியான மிஸ்டர் ஸிம்ஸனின் கம்பீரத் தோற்றமும், லாவகமாகப் பெண்களைக் கவரும் பேச்சும் நேர்ஸ் மேரியைக் கவர்ந்தது.
சாதி, சமய, நாட்டு வேறுபாடுகளையறுத்துக் கொண்டு அவர்கள் காதல் வளர்ந்தது.
மிஸ்டர் ஸிம்சன் குடும்பம் தங்கள் மகன் கத்தோலிக்க - ஐரிஸ் குடும்பத்தில் நுழைவதை விரும்பாவிட்டாலும் தடுக்க முடியவில்லை.
சில வருடங்களில் எமிலி பிறந்தாள். கணவனின் போக்கில் மாறுதல்கள் கண்ட மேரி கேள்விகள் கேட்கத் தொடங்கி விட்டாள்.
கேள்விகளுக்குப் பதில் மெளன சாட்டைகளாய் விழுந்தன. தன்னை வீட்டிலும் இன்னொருத்தியைக் கடையிலும் கணவன் அனுபவிப்பதை மேரியாள் தாங்கிக் கொள்ள முடியவில்லை. மனத்துயரின்பிரதிபலிப்பு மனநோயாய் மாறியது. ஆழ்ந்த சோகத்திலிருப்பதாக டொக்டர் சொன்ன நிற நிறமான, பெரிய சிறிய குளிசைகளைக் கொடுத்தார்.
குழந்தை எமிலிக்கு ஆறுவயது. உலகத்தில்நிறைய விடயங்களில் ஒன்றிரண்டைத் தவிர மிகுதியைப் புரிந்து கொள்ள முடியாத வயது.
ஒரு பின்னேரம்,பனிபெய்யும் குளிரில் நடுங்கிக் கொண்டு பாடசாலை வாசலில் நின்றது கனவு போலிருக்கிறது. சினேகிதியின் தாயின் கையைப் பிடித்துக் கொண்டு வீட்டுக்கு வந்ததும் தாய் நித்திரையாயிருக்கிறாள் என்று நினைத்துக் கொண்டு தாயின் இறந்த பிணத்தின் அருகில் நித்திரையானதும் இளம் எமிலியால் மறக்க முடியாத நிகழ்ச்சிகள். -

Page 78
வசந்தம் வந்து போய்விட்டது 146
தகப்பன் வந்து கதவைத் திறந்ததும் 'அம்மா எழும்பமாட்டாளாம்' ஆறுவயது மழலை அழுதது. பிணம் விறைத்துக் குளிர்ந்து போய்க் கிடந்தது.
மிஸ்டர் ஸிம்ஸன் மகளைத் தூக்கித் தேற்றினார். அம்மாவை விட இன்னொரு நல்ல அம்மாவைக் கொண்டு வருவதாக உறுதி சொன்னார்.
அவரது காதலியும் அவளது இரு பொல்லாத மகன்களும் எமிலியின் தாயும் சகோதரர்களுமானார்கள். எமிலியின் பாட்டி எமிலியைத் தன் பாதுகாப்பில் வைத்துக் கொள்ளச் சட்டப்படி எடுத்த நடவடிக்கைகள் எல்லாம் மிஸ்டர் ஸிம்சனின் பணத்திற்கு முன்னால் எந்த வாதத்துக்கும் எடுபடவுமில்லை, வெற்றி பெறவுமில்லை, எமிலி தன் வீட்டிலேயே சிறை வைக்கப்பட்டாள்.
கல்யாணம் என்ற போர்வைக்குள் தன் தாயனுபவித்த துயர்களைப் பாட்டியைக் காணும்போது தெரிந்து கொள்வாள். அவளுக்குப் பதினாறு வயது வரைக்கும் மிஸ்டர் ஸிம்சன் அவளைப் பாட்டியிடம் செல்ல அனுமதிக்கவில்லை.
எமிலி O லெவல் முடித்துக் கொண்டு A லெவல் செய்ய கல்லூரி ஒன்றுக்குப் போனபோது தகப்பனுக்குச் சொல்லாமல் பாட்டியிடம் தொடர்பு கொண்டாள்.
மிஸ்டர் ஸிம்ஸன் ஏன் மேரியை அப்படி நடத்தினார் என்று பாட்டியிடம் கேட்பாள் எமிலி. பரமண்டலத்திலிருக்கும் பரமபிதாவிடம்தான் இந்தக் கேள்வியைக் கேட்க வேண்டும் என்று பதில் சொல்வாள் எமிலியின் பாட்டி.
எமிலியின் சிறியதாய்க்கு இரண்டு பையன்கள். சிறிய தாய் விஸ்கியில் எழும்பி, பிராண்டியில் முகம் கழுவி, வொட்காவில் பல் கழுவி, ஜின்னில் கண் துடைப்பவள்.
போத்தலும் கையுமாக இருப்பாள். எமிலியைத் திட்டுவாள். ஏன் தன்னை இந்தச் சிறிய தாய் திட்டுகிறாள் என்று எமிலிக்குப்

147 ராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம்
புரியாது.
தகப்பன் தனது உறுதியில் தனது சொத்தை எமிலிக்கு எழுதி வைத்திருப்பதுதான் காரணம் என்பது ஏழுவயது எமிலிக்குத் தெரியவில்லை,
சிறிய அன்னையுடன் வந்த தமயன்கள் எமிலியை விடப் பெரியவர்கள். தாயின் குடிப்பழக்கத்தால் மிகவும் சீரழிவாக வளர்க்கப் பட்டவர்கள்.
சேட்டையும் விளையாட்டுமாக எமிலியின் உடம்பின் தடவத் தடைப்பட்ட சில பாகங்களைத் தடவ வந்தபோது எமிலி சிறுகுழந்தை, ஒடிப் போய் ஒழிந்து விடுவாள்.
சிறிய தாய் தன் மகன்களின் சேட்டைகளைப் பார்த்து வாய் விட்டுச் சிரிப்பாள்.
கல்லூரிப்படிப்பை முடித்து விட்டு ஒரு நாள் வீடு திரும்பும் போது எமிலியின் தமயன்கள் நல்ல பார்ட்டி ஒன்று வைத்துக் கொண்டு கூத்தடித்துக் கொண்டிருந்தார்கள்.
why don't you join us" sedbš56öT Glej sluoleo உளறினான்.
"அவள் கத்தோலிக்க நாய்களுடன்தான் போவாள் போலும்’ இன்னொருத்தன் இழுத்தபடி சொன்னான்.
ஐரிஸ் கத்தோலிக்கர் எல்லாம் 1.R.A. யை ஆதரிப்பதாக பிரிட்டிஷ் மனிதர்கள் நினைப்பது சாதாரணம், 1.R.A. பிரிட்டிஷ் அரசாங்கத்தின் எதிரி. இவளைக் கத்தோலிக்கனுடன் போகச் சொன்னவன் பிரிட்டிஷ் ராணுவ சேவையிலிருப்பவனாக இருக்கலாம்.
தன் வீட்டிலேயே மற்றவர்களால் அவமானப் படுவதை அவளாற் தாங்கிக் கொள்ள முடியவில்லை. சிறிய தாயைக் காணவில்லை. ஜின் அன்ட் ரொனிக் வாங்கப் போயிருப்பாளாக்கும்.
எமிலி வெறியில் உளறும் இந்த இளைஞர்களுக்குப் பதில்

Page 79
வசந்தம் வந்து போய்விட்டது 148
சொல்லாமல் தன் அறைக்குள் சென்றாள். தகப்பன் வழக்கம் போல் வீட்டில் இல்லை. அவர் எப்போதும் பிஸினஸ் விடயமாகப் போய்விட்டார்.
தனது தந்தை என்னவென்று தன் சிறிய தாயின் உறவை மேற் கொண்டார் என்று எமிலியால் விளங்கிக் கொள்ள முடியவில்லை.
படிப்பு, அழகு, குடும்ப கெளரவம் நிறைந்த தாய்க்கும் எந்த நேரமும் போத்தலும் கையுமாக இருக்கும் சிறிய தாய்க்கும் தான் எத்தனை வித்தியாசம்?
அழகு வடிவுடன் மனைவியிருந்தாலும் குரங்கு மாதிரி ஒரு வைப்பாட்டி தேவையா?
சிந்தனை எங்கோ பறக்க செய்து கொண்டிருந்தவள் காலடியோசை கேட்டுத் திரும்பிப் பார்த்தாள்.
சிறிய தாயின் மகனும் அவனுடன் அவனுடைய சினேகிதன் ஒருத்தனும் இவளைப் பார்த்து வாயெல்லாம் பல்லாக இளித்துக் கொண்டு நின்றார்கள்.
“என்ன வேணும்’ எமிலி மிடுக்காகக் கேட்டாள். "நீ வேணும்’ சினேகிதன் தள்ளாடியபடி சொன்னான். 'சீநாயே வெளியே போ' எமிலி சீறிவிழுந்தாள். 'டேய் பிடியடா அவளை’ சினேகிதன் அவளின் சிறிய தாயின் மகனுக்கு உத்தரவு போட்டான்.
வெறி பிடித்த மிருகங்கள் இருவர் இடையில் அகப்பட்ட புள்ளி மானாகத் திணறினாள் எமிலி. தன் வீட்டில் தன் கற்பு பறிபோவதற்குத் தன் சிறிய தாயின் மகனே உதவியா?
'உதவி உதவி' என்று அவள் போட்ட சத்தம் எத்தனை
வீட்டுக்குக் கேட்டதோ அல்லது இறைவனுக்குத்தான் கேட்டதோ அடுத்த வீட்டுக்காரன் படபட வென்று கதவைத்

149 ராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம்
தட்டவும் அவள் ஆடையைப் பற்றிய துச்சாதனன் பயத்துடன் பாய்ந்தோடி விட்டான்.
இரவிரவாக வீட்டை விட்டு வெளிக்கிட்டுச் சினேகிதி அறையில் போயிருந்து தன் விதியை நினைத்து அழுதாள்.
தாயற்ற வாழ்க்கை, தகப்பன் பாதுகாப்பற்ற சூழ்நிலை தன்னைத் தானே காப்பாற்றிக் கொள்ள வேண்டிய நிலை ஒரு பதினேழு வயதுப் பெண்ணின் வாழ்க்கை தள்ளப்பட வேண்டுமா?
எந்தச் சூழ்நிலையிலும் எந்த ஆணிலும் நம்பிக்கை வைப்பதில்லை என்று முடிவு செய்து கொண்டாள். இந்த வைராக்கியம் ஆனந்தின் கெஞ்சலுக்கும் மசியவில்லை.
காதலுக்குத் தன்னைப் பறி கொடுத்துப் பின் அவன் பிடியில் வாழ வேண்டிய நிர்ப்பந்தத்தை அவள் உண்டாக்கத் தயாராயில்லை.
ஆனந்துடன் இணையாய்த் திரிந்தது மிஸ்டர் ஸிம்ஸனை ஆத்திரம் கொள்ளச் செய்தது. "அப்படி ஒரு ஆங்கிலேயன் இல்லாமல் ஆசியனைப் பார்க்க வேண்டுமா’ என்று மகளைத் திட்டினார்.
"என் சொந்த வீட்டில் உன் வைப்பாட்டியின் மகன் என்னைப் பலாத்காரம் செய்ய முனைந்தபோது வராத பாசம் இப்போது நான் எனக்குப் பிடித்த ஒருத்தனோடு வாழும்போது ஏன் எரிச்சலாக வருகிறது” எமிலி தகப்பனுடன் வாதாடினாள். அதன் பின் அவர்களின் உறவு கசந்து விட்டது. மகளும் தகப்பனும் உறவை அறுத்துக் கொண்டார்கள்.
அதன்பின் அவர் ரவிக்கு அனுப்பும் வாழ்த்து மடல்களும் அன்பளிப்புகளும் கூடிக் கொண்டு வந்தன. எத்தனையோ பேரிடம் சொல்லி ரவியை இரண்டொரு தரம் சந்தித்தார். பேரனில் உயிரை வைத்திருந்தார். மகளுக்கும் தகப்பனுக்குமுள்ள இடைவெளியால் மிஸ்டர் ஸிம்ஸன்

Page 80
வசந்தம் வந்து போய் விட்டது 156)
ரவியுடன் நெருங்கிய தொடர்பை வைத்திருக்க முடியாமற் பண்ணிவிட்டது.
இப்போது தளர்ந்து போன மனத்துடன் பேரனை அணைத்துக் கொண்டார் கிழவன். கிழவனையும் பேரனையும் தனியாக
விட்டு விட்டு கொஞ்ச நேரம் வெளியேறினாள் எமிலி.
பார்பராவும் அலிஸனும் வந்து கொண்டிருந்தார்கள். பார்பராவின் விழிகள் எமிலியை எரிச்சலுடன் முறைத்தன. பார்பரா அலிஸனுடன் ஏதோ ரகசியம் பேசிக் கொண்டாள்.
அலிஸன் உடனடியாக எமிலியைக் பார்பராவுக்கு அறிமுகம் செய்து வைத்தாள்.
'உங்களை நேற்று டேவிட்டுடன் சந்தித்தேன் என்று நினைக்கிறேன்’ எமிலி பார்பராவைப் பார்த்துச் சொன்னாள்.
பார்பராவின் முகத்தில் குறும்பு. குரூரமான குறும்பு, 'உன்னை எப்போதோ டேவிட்டுடன் பார்த்திருக்கிறேனே" எத்தனை குத்தல் அந்த வார்த்தைகளில்.
எமிலியின் உடல் கூனிக் குறுகிற்று. இந்த பார்பரா சாதாரணமான பெண் அல்ல என்று அவள் மனம் சொல்லிற்று.
“என்ன சொல்கிறாய்" அலிஸன் வழக்கம்போற் தன் கீச்சுக் குரலிற் கேட்டாள்.
'டேவிட்டுடன் எமிலியை ஒரு றெஸ்ட்ரோண்டில் கண்டேன். அப்படித்தானே எமிலி' குழந்தைத் தனமாகக் கேட்டாள் பார்பரா'
ஆயிரம் தேள் ஒரேயடியாய்க் குத்திய வேதனை எமிலிக்கு. தன் புருஷனை நம்ப முடியாது என்று அலிஸனுடன் ஒப்பாரி வைக்கும்போது ஒன்றும் தெரியாமல் இருப்பதுபோல் இருந்தாளே இந்த எமிலி என்று அலிஸன் பதறப்போகிறாள்.
அலிஸனின் கண்களில் நெருப்புப் பொறி.

151 ராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம்
“என் புருஷனுடன் எப்போதிருந்து படுக்கிறாய்" வார்த்தைகள் அவலட்சணமாய் வந்து விழுந்தன. 'அலிஸன் தயவுசெய்து என் விளக்கத்தைக் கேள்’ எமிலி அவமானத்தால் குன்றிப் போனாள்.
அப்போதுதான் வந்து கொண்டிருந்த டேவிட் மூன்று பெண்களைக் கண்டதும் அவர்களின் முக பாவத்தைக் கண்டதும் என்ன நடந்திருக்கும் என்று ஒரு நிமிடத்தில் ஊகித்துக் கொண்டான்.
'அலிஸன் தயவுசெய்து சீன் போட வேண்டாம்' அவன் கெஞ்சினான்.
எமிலி பயங்கர வேகத்தில் அந்த இடத்தைவிட்டு நகர்ந்து விட்டாள்.
'பார்பரா நீ செய்வது உனக்கே சரியாக இருக்கிறதா' ஆத்திரத்துடன் கத்தினான் டேவிட்.
'அட கோபத்தைப் பார். கோபப்படவேண்டியது யாரோ கோபப்படுவது யாரோ’ கிண்டலாகச் சொன்னாள் பார்பரா,
“பார்பரா உன்னுடைய சிறிய ஆசைக்கு இப்படி ஒரு குடும்பத்தைப் பழிவாங்கலாமா' அவன் இந்தக் கேள்வியைக் கேட்டு முடிப்பதற்கிடையில் அலிஸன் அழுது கொண்டு தன் மகன் இருக்கும் வார்ட்டுக்குப் போய்விட்டாள்.
“பார்பரா அலிஸன் ஒரு அவசரப் பிரயாணி. அவளை இப்படி ஏன் தூண்டி விடுகிறாய்' அவன் குரலில் ஆத்திரமும் அவமானமும்,
'நீங்கள் போடும் கூத்துக்கு ஒரு முடிவு வரவேண்டும், என் சினேகிதியின் வாழ்க்கையில் நிம்மதி வர வேண்டும் என்றுதான் நான் நேரடியாக விடயங்களைச் சொல்லுகிறேன்.'
'அஹா ஆஹா உன்னுடைய நடிப்புக்கு ஒஸ்கார் தரவேணும்.

Page 81
வசந்தம் வந்துபோய்விட்டது 52
பார்பரா உனக்கு இந்த உலகத்தில் யாருடைய இன்பதுன்பத்திலும் அக்கறையில்லை. உன்னுடைய உடல் இச்சையின் திருப்தி ஒன்றுதான் முக்கியம். உன்னுடன் கட்டிலுக்கு வர மறுத்த என்னைப் பழிவாங்க என் குடும்பத்தை நாசமாக்குவது உனக்கு நல்லதல்ல" டேவிட் ஆத்திரத்தில் கத்தினான்.
அவர்கள் நின்று பேசிக் கொண்டிருந்த இடம் ஆஸ்பத்திரி வராண்டா. போவோர் வருவோர் அதை அப்படி ஒன்றும் பிரமாதமாக எடுக்காவிட்டாலும் இவர்களின் வாக்குவாதத்தின் சில பகுதிகள் கேட்போரை ஆச்சரியப் படுத்தாமலிருக்க (Polqu u T35l.
"குடும்பமா, குடும்பமா? ஆஹா எவ்வளவு அக்கறையாகக் குடும்பத்தைப் பற்றி ஒப்பாரி வைக்கிறீர்கள். ஆசையாக எமிலியுடன் சுற்றித் திரிந்தபோது ஏன் இந்த குடும்ப தத்துவம் உங்கள் மரமண்டையில் ஏறவில்லை’
"முட்டாள்ப் பெண்ணே எமிலி நீ நினைப்பது போல் மலிவான தேவடியாளில்லை. மிகவும் சுதந்திர மனம் படைத்த புத்திசாலிப்பெண். அவள் உறவு நீ நினைப்பது போல் வெறும் உடல் இச்சைக்கு இரையான உறவல்ல’’
“o Con Intelectual Fucking" uniuyn 6 é em 676 (Bé சிரித்தாள்.
"சட் அப் யு பிளடி பிச்" டேவிட் அவ்விடத்தை விட்டு ஓட்டமும் நடையுமாகப் போனான்.
அலிஸன் இப்போது குழந்தை பீட்டரின் கட்டிலருகிலிருந்து ஒலம் வைத்துக் கொண்டிருப்பாள். அதே வார்ட்டில் எமிலியும் குழந்தையுடனிருக்கிறாள். அட கடவுளே என்ன சோதனையிது, பெருமூச்சுடன் நடந்தான் டேவிட்,

153 ராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம் 11
எமிலி தனியாக ஒரு பெஞ்சில் உட்கார்ந்திருந்தாள். ஹொஸ்பிட்டலுக்குப் போகும் வழியில் உள்ள பார்க்கில் எத்தனையோ தாய் தகப்பன், உற்றார் உறவினர் வந்து சில நேரம் இளைப்பாறுவார்கள்.
அவள் மனம் எரிமலையாய்க் குமுறிக் கொண்டிருந்தது. பார்பரா என்ற பெண் அலிஸனுக்கும் எமிலிக்குமிடையில் இந்த பூகம்பத்தைக் கிளறி விட எந்த அவசியமுமில்லை. ஏன் அந்தப் பார்பராப் பெண் இப்படிக் கொடூரமாக நடந்து கொண்டாள் என்றும் அவளாற் புரியமுடியவில்லை.
அவளுக்கும் டேவிட்டுக்கும் பார்பரா கட்டுக்கதை சொல்வதுபோல் ஒரு கட்டில் நாடகமும் நடக்கவில்லை. அவன் யார் என்று தெரியாமல் அவனை ரெயினிற் சந்தித்ததும் பழகியது, சாப்பிடப் போனது எல்லாம் உண்மை.
ஒரு கெளரவமான சினேகிதர்கள் என்பதற்கப்பால் வேறெந்த உறவுமில்லை. ஆனால் டேவிட்டைப் பொறுத்த வரையில் இவனுடன் நெருக்கமான உறவை வைத்துக் கொள்ளத் துடித்ததை இவள்அறியாமலில்லை.
அவன் தன்னைப் பற்றி முழுவிபரமும் சொல்லாதது இவளுக்குக் கோபம்தான். ஆனால் அதே வேளை இவளும் ஒரு நாளும் தன் வாழ்க்கையைப் பற்றி ஒருத்தரிடமும்சினேகிதமாய்ப் பழகும் சாந்தியிடமும் இதுவரை மனம் விட்டுப் பேசியதில்லை. பழைய புண்ணைத் தோண்ட இவளுக்கு விருப்பமில்லை.
நிதானமும் உறுதியும் கொண்ட எமிலி அன்று அந்த நேரம் துயரில் வெந்து கொண்டிருந்தாள், ரவி இல்லாவிட்டால் உலகத்தில் எந்த மூலைக்காவது ஓடி விட வேண்டும்போல் இருந்தது.
'என்ன தியானமா' குமார் தன்னை மறந்து யோசனையில்

Page 82
வசந்தம் வந்து போய் விட்டது 154
ஆழ்ந்திருக்கும் எமிலியைக் கேட்டான்.
எமிலி நிமிர்ந்து பார்த்தாள். அவளின் கலங்கிய கண்களும் சோர்ந்த பாவமும் பரிதாபத்தையுண்டாக்கியது.
அவள் மறுமொழி சொல்லவில்லை. "என்ன நடந்தது’ குமார் பரிவுடன் கேட்டான்.
‘'எதுவும் நடக்கவில்லை. எனக்குத்தான் உலகத்தை விட்டு எங்கேயாவது ஓட வேண்டும் போலிருக்கிறது’
'அப்படி விரக்தி வரும் அளவுக்கு ரவியின் நிலை இல்லையே. அவன் சுகமாகிக் கொண்டு வருகிறான் என்று தானே டொக்டர் சொன்னார்’
'அவன் உடலால் சுகம் அடையும்போது நான் உள்ளத்தால் பேதலித்துப் போய் இருக்கிறேன்' அவள் அழுதுவிடுவாள் போலிருந்தது.
அவன் இன்னும் நின்று கொண்டிருந்தான். எமிலி அவன் தமக்கையின் சினேகிதி. கடந்த இரண்டொரு நாட்களாகத்தான் தெரிந்தவள்.
அவளைப் பற்றி ஒரு உயர்ந்த அபிப்பிராயம்அவனுக்குள் உதயமாகி விட்டது. உலகத்துச் சாதாரண பெண்களைப் போலல்லாமல் தான் இப்படித்தான் வாழ வேண்டுமென்று ஒரு நிச்சய தத்துவத்துடன் வாழ்பவள்.
மதிய நேர சந்தடி பார்க்கைச் சுற்றித் தெரிந்தது. இவள் ஏதோ தான் ஒரு தனிமையான உலகத்தில் இருப்பதுபோல் பிரமை
பிடித்துப் போயிருந்தாள்.
பார்பராவாற் பட்ட அவமானத்தை அவளாற் சகிக்க முடியாதிருந்தது. என்ன செய்தாலும் இன்னொரு பெண்ணின் வாழ்க்கையில் குழப்பம் வரக் காரணமாயிருக்க மாட்டேன் என்ற தத்துவம் யாருக்குப் புரியும்.

155 ராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம்
யாரோ ஒரு பெண் அவள் தாயின் வாழ்க்கையில் ஈடுபட்டதாற்தானே தாய் தற்கொலை செய்து கொண்டாள். அதே தவறை இவ்வளவு படிப்புப் படித்த எமிலியும் செய்வாளா?
பார்பரா அப்படி நினைக்குமளவுக்குத் தன்னை அந்தச் சூழ்நிலைக்குள் பிணைத்துக் கொண்டதற்குத் தன்னையே வெறுத்தாள் எமிலி.
எப்படித்தான் நிதானமாயிருந்தும் அவள் கண்ணிர் அவளறியாது மடை திரண்டது.
அவளைப் பார்க்க மிகவும் பரிதாபமாக இருந்தது. "I wish I have a shoulder to cry"-96.6T (p69)(pg.9155mgit. அவன் பக்கத்தில் உட்கார்ந்தான். இருவருக்குமிடையில் நாலோ ஐந்தோ வயது வித்தியாசமிருக்கலாம். ஆனால் அப்போது அவள் ஒரு வழி தவறிய குழந்தையாய்த் தெரிந்தாள்.
'எமிலி என் நண்பனின் பிளாட் ஹொஸ்பிட்டலுக்கருகிற் தானிருக்கிறது. பார்க்கிலிருந்து அழுவதை விட யாரும் வீட்டிலிருந்து அழலாம் இல்லையா”
அவனின் குறும்புத் தனத்திற்கு அவள் தன் அழுகையினூடே சிரித்தாள்.
'உஷாவுடன் யார் இருக்கிறார்கள்’ நடந்த படி கேட்டாள் எமிலி.
'சங்கர் அண்ணா நிற்கிறான். சாந்தி இனி எந்த நேரமும் வரலாம்' அவன் நடந்த படி சொன்னான்.
ரஸ்ஸல் ஸ்குயாரில் ஒரு நாலாவது மாடியில் குமாரின் பிளாட் இருந்தது. லிப்ட் இல்லாத மிகவும் பழைய கட்டிடம்.
பிளாட்டுக்குப் போனதும் அவன் ஜன்னல்களைத் திறந்து விட்டான், உலகம் பரபரப்பாய்த் தெரிந்தது. ஜன்னலருகில் நின்று உலகத்தை வெறித்துப் பார்த்தாள் எமிலி, 'கடந்த சில

Page 83
வசந்தம் வந்து போய்விட்டது 156
நாட்களாக என்ன நடக்கிறது என்று தெரியாது’
குமார் சிரித்தான்.
.பெரிதாக ஒன்றும் நடக்கவில்லை لابعا لا لا إ9ے ‘‘ அரசகுடும்பத்தில் எக்கச் சக்கமான பிரச்சினைகள். இளவரசர் சார்ல்ஸ் தன் காதலியான கமிலாவுக்குப் பேர்த்டேய் பார்ட்டி வைத்து அகில உலகத்திற்கும் கமிலாவில் தான் வைத்திருக்கம் காதலைப் பிரகடனம் செய்தார்,
பாகிஸ்தான் டொக்டர் கான் இளவரசி டையானாவின் காதற் தொடர்பை முறித்த அடுத்த வினாடி இளவரசி டையானா எகிப்திய கடைக்காரன் மகன் டொடி வையாட்டுடன் கடல் நடுவில் படகுகளில் காதற் கேளிக்கை நடத்துகிறாள். மற்றப்படி மூன்றாம் உலகத்தில் இன்னம் சண்டைகளும் வெள்ளமும் மழையும் மனித உயிர்களை நாசம் பண்ணுகிறது. நான் பிறந்த இலங்கையில் இன்னும் போர் என்ற போர்வையில் ஒரு இன அழிப்பு வேலை தொடர்கிறது. எனவே பெரிதாக ஒன்றும் எங்கள் உலகத்திற்கு வந்து எங்களைச் சிறைப்படுத்தவில்லை’
குமார் சுவாரஸ்யமாகச் சொல்ல எமிலிக்கு சிரிப்பு வந்து விட்டது.
'நீங்கள் ஒரு வித்தியாசமானவன்” எமிலி வந்து உட்கார்ந்தாள்.
"அப்பாவும் அம்மாவும் அப்படித்தான் அடிக்கடி சொல்வார்கள்’
குமார் அவள் முன்னிருந்த கதிரையில் உட்கார்ந்தான். "ஹொஸ்பிட்டலுக்கு ஒரு தரம் போன் பண்ணட்டா' எமிலி தயங்கியபடி கேட்டாள்.
'நிச்சயமாக’ குமார் போனைத் தூக்கி அவளிடம் கொடுத்தான்.
சுவரிற் தொங்கிய கொன்ஸ்டபிள், நேர்னர் சித்திரங்களில்

157 ராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம்
கண்களை ஒட்டிய படி 'உங்கள் நண்பர் ஒரு ஆர்ட்டிஸ்ரா" என்று கேட்டாள்.
'இல்லை அவன் ஒரு இந்திய வியாபாரியின் மகன். படிக்கும்போது சந்தித்தேன். கலைகளில் விருப்பம். இங்கிலிஸ் ஆர்ட்டிஸர்களில் விருப்பம். பணக்காரப் பையன். வாழ்க்கையில் அரைவாசி நாள் மும்பையிலும் அரைவாசி நாள் லண்டனிலும் வாழ்வான். அவன் லண்டனில்லாத நாட்களில் அவன் சினேகிதர்கள் இந்த பிளாட்டைப் பாவிப்போம். இப்படி ஒரு ஆடம்பரமான பிளாட் வைத்திருக்க என்னைப்போல ஸ்ருண்ட்ஸால முடியாது”
அவள் ஹொஸ்பிட்டலை டையல் பண்ணி ஹலோ சொல்ல அவன் குசினிக்குள் போனான்.
தான் இன்று வரமுடியாதென்றும் தகப்பன் ரவியுடன் நிற்க முடியுமா என்று தகப்பனைக் கேட்டுச் சொல்லும் படி நேர்ஸைக் கேட்டுக் கொண்டிருந்தாள் எமிலி.
மகன் ரவியிடமே போக முடியாமல் எமிலியைத் துரத்தும் சோகம் என்ன? குமார் யோசித்தபடி தேனிர் தயாரித்துக் கொண்டிருந்தான்.
"சொறி குமார் உங்களுக்குக் கரைச்சல் தந்ததற்கு மிகவும் மன வருத்தப் படுகிறேன்’ குசினிக்குள் வந்தாள் எமிலி.
'ஐய்யோ அப்படி ஒன்றுமில்லை. உங்களுடன் ஒரு சில மணித்தியாலங்களைச் செலவழிப்பது மனத்திற்குப் புத்துணர்ச்சியைத் தருகிறது’
மரியாதையாகத்தான் குமார் சொன்னான். ஆனால் அவன் ஆர்வம் குரலிற் தொனித்தது.
அவள் தெரிந்தும் தெரியாததுமாகத் தேனிரைப் பருகிக் கொண்டிருந்தாள்.
வெளியில் மிகவும் ஆரவாரம். றஸ்ஸல் ஸ்குயாரைச் சுற்றி

Page 84
வசந்தம் வந்து போய் விட்டது 158
எத்தனையோ ஹோட்டல்கள். அவற்றை நிறைக்கும் உல்லாசப் பிரயாணிகள், எல்லோரும் ஒரேயடியாக லண்டனை முற்றுகையிடுவதுபோல் ஒரு சலசலப்பு.
எமிலி பெருமூச்சு விட்டபடி மீண்டும் ஜன்னலடிக்குச் சென்றாள்.
"அப்பாவைப் பார்க்கப் பிடிக்காமலா ஹொஸ்பிட்டலுக்குப் போகாமல் இருக்கிறீர்கள்’ ஆங்கிலேயர்களிடம் தனிப்பட்ட விடயங்களைப் பற்றிக் கதைத்தால் பிடிக்காது. அப்படியிருந்தும் குமார் அவள் படும் தர்ம சங்கடத்திற்குக் காரணம் என்னவென்று அறியும் ஆவலிற்கேட்டான்.
அவள் ஜன்னற் பக்கம் பதிந்து போயிருந்த பார்வையை அவனிற் சொலுத்தினாள். கடந்த சில தினங்களாக அவன் அடிக்கடி ஹொஸ்பிட்டலிற் சந்தித்திருக்கிறாள். ஆனாலும் இன்று ஏனோ ஆச்சரியத்துடன் அவனைப் பார்த்தாள். அவனை அளந்து பார்ப்பது போற் பார்த்தாள்.
“எனது அப்பாவுக்கும் எனக்குமுள்ள பிரச்சினை என்னை ஹொஸ்பிட்டலிலிருந்து பிரித்து விடாது. ஆனால்’ அவள் மேற்கொண்டு ஒன்றும் சொல்லாமல் தயங்கினாள்.
இலங்கைத் தமிழனான இவனுக்கு ஒரு ஆங்கிலேயப் பெண்ணின் வாழ்க்கையை விளங்கிக் கொள்ள முடியுமா? அவள் சிந்தித்தாள்.
'கல்யாணத்தில் நம்பிக்கையில்லை, ஆனாலும் ஒரு தாயாய் இருக்கும் ஆசையை என்னை விரும்பிய ஒரு இந்தியனின் மூலம் திருப்தி செய்து கொண்டேன் என்று இவள் இலகுவாகச் சொன்னால் இவன் எகிறிக் குதிக்க மாட்டானா? கல்யாணத்துக் கப்பால் உறவுகளை இவன் சந்திக்க முயல்வானா?
'ரெயினில் சந்தித்த ஒரு மனிதனுடன் பழக்கம் வந்தது, அந்தப் பழக்கத்தில் அந்த மனிதனுடன் சாப்பிடப் போனேன். அந்தச் சந்திப்பை மற்றவர்கள் கேவலமாகத் திரித்துப் பேசிய

159 ராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம்
போது பிரச்சினையை யுண்டாக்கிக் கொண்டிருக்கிறார்கள், அதனாற்தான் நான் எனது மகனிடம் போக முடியாமல் இப்போது குமுறிக் கொண்டிருக்கிறேன் என்று இவனுக்கு விளக்கம் சொன்னால் புரிந்து கொள்வானா?
‘புரிந்து கொள்பவனாக இருக்கலாம், இல்லை என்றால் இந்த பிளாட்டுக்குத் தன்னை அழைத்திருக்க மாட்டான்” எமிலி தேனீர்க் கோப்பையை மேசையில் வைத்தாள்.
‘உலகம் மிகவும் பொல்லாதது, பெலவீனமான மனிதர்களைப் பலிகொண்டு விடும்" அவள் மெல்லமாகச் சொன்னாள்.
“எனக்குத் தெரியாத தத்துவமா அது’ குமார் அவளை ஏற இறங்கப் பார்த்தான்.
தனது பதினாறாவது வயதில் இலங்கையில் தன் இன விடுதலைக்காகத் தாய் தகப்பன் சொற்களைப் பொருட்படுத்தாமல் ஒரு தமிழ் விடுதலை இயக்கக் குழுவிற் சேர்ந்தவன். அந்த இளம் வயதில் அவன் சந்தித்த சோதனைகள், கொடுமைகள், சித்திரவதைகள் என்பன அவனுக்கு உலகத்தின் அடுத்த பகுதியின் முகமூடியைக் கிழித்துக் காட்டியது.
தமிழ் விடுதலை என்ற பெயரில் தன்னலம் கொண்டலைந்த தலைவர்கள், அவர்களை நம்பிய இளம் சிறார்கள் என்பன அவனுக்குத் தெரியாதா?
சிங்களப் பேரினவாதத்தின் கொடுமையை எதிர்க்க அவன் போன்ற இளம் உள்ளம் பரிசுத்தமாகத் தன்னை அர்ப்பணித்ததைத் தங்கள் சுயநலத்துக்குப் பாவித்த குழுக்களின் செய்கைகள் அவனுக்குத் தெரியாதா?
வயதிலும் அனுபவத்திலும் பெலவீனமான இளம் வாலிபர்களைத் தங்கள் வெறிபிடித்த செய்கைகளால் பலி கொண்ட கோர நிகழ்ச்சிகள் படிப்பித்த பாடத்தை இவள் எந்தக் கல்லூரியிற் படித்திருப்பாள்?

Page 85
வசந்தம் வந்து போய் விட்டது 60
ஆங்கில நாட்டில், அரசியற் பிரச்சினைகளும் கொலைகளுமில்லாத நாட்டில் இவள் ஏதோ காதல் விவகாரத்தில் ஈடுபட்டிருக்கலாம் அதனால் பிரச்சினை வந்திருக்கலாம். அதை வைத்துக் கொண்டு சிக்கலான சந்தர்ப்பத்தில் முகம் கொடுக்காது சிந்திக்கிறாளா?
'உலகம் என்று எதைச் சொல்கிறோம், எங்களுக்காக மற்றவர்கள் படைத்து வைத்திருக்கும் சட்ட திட்டங்களுக்குப் பயந்து வாழ்ந்து செத்துப் போவதை சொல்கிறீர்களா அல்லது உலகத்தைக் கொண்டு நடத்துவதில் எங்களுக்கும் பங்குண்டு என்ற துணிவில் அதர்மத்தையும் அழிவுகளையும் எதிர்ப்பதையும் நாங்கள் வாழும் உலகம் என்று சொல்கிறீர்களா?
குமாரின் குரலில் ஆனந்த் பேசுவது போலிருந்தது எமிலிக்கு, பெண்களை அடக்கியும் சாதிக் கொடுமையால் மற்ற மனிதர்களை அடக்குவதற்கும் அப்பால் சில ஆசிய மனிதர்களை மனித உரிமையை மதிக்கிறார்கள் என்பதையுணர்ந்த போது அவள் மனம் சிலிர்த்தது.
இவனுடன் தன் துயரைப் பகிர்ந்து கொள்ளலாமா? எமிலியை விட நான்கோ ஐந்தோ வயது குறைவாக இருக்கலாம் குமாருக்கு.
அவனைப் பார்த்தால் அவளை விட எத்தனையோ உலக அனுபவமுள்ளவன் போலிருக்கிறது.
அவளைப் பற்றிச் சொல்வதானால் எங்கேயிருந்து தொடங்குவது? தாயைப் பிணமாய்க் கண்டதிலிருந்து ஆரம்பிப்பதா அல்லது தன்னைக் காதலித்தவனுக்கே அவன் குழந்தையைத் தான் சுமக்கிறேன் என்று சொல்லாமல் வழியனுப்பியவிடத்திலிருந்து தொடங்குவதா?

161 ராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம்
சாந்தி அவள் முகம் உயர்த்தி அவள் கணவனைப் பார்க்கவில்லை, அவள் பெட்டியை அடுக்கிக் கொண்டிருந்தாள், சாநதியின் கணவன் நடராஜன் கேள்விகளைத் தொடுத்துக் கொண்டிருந்தான்.
வெளியிற்போய் நாடகம் போடவேண்டாமாம், எங்களுக்குள் பேசி முடித்துக் கொள்வோமாம்"
அவளுக்கு வந்த ஆத்திரத்தில் துணிகளைத் தாறுமாறாக எறிந்தாள். நேற்றிலிருந்து ஒன்றும் சாப்பிடாத காரணத்தாலோ அல்லது நான் உன் வயிற்றில் வளர்கிறேன் என்று அவள் குழந்தை சொல்வதன் எதிரொலியாகவோ என்னவோ வயிற்றை என்னவோ செய்தது.
‘எங்களுக்குள் பேசித் தீர்க்க ஒன்றுமில்லை’ அவனைப் பார்க்காமற் சொன்னாள்.
ஒரு சில தினங்களுக்கு முன்தான் அவன் வேலைக்கு வெளிக்கிடும்போது விழுங்கி விடுவதுபோல் அவனைப் பார்த்தாள்.
‘என்ன அப்படிப் பார்க்கிறாய்' அவன் விளையாட்டாக அவள் கன்னத்தைத் தட்டினான்.
'நீங்கள் வீட்டுக்குத் திரும்பி வரும் வரைக்கும் உங்களைப் பார்க்காமலிருக்க முடியாமற் சில வேளையிருக்கும். அதற்காக இப்போது உங்களை என் மனத்திரையிற் படம் பிடிக்கிறேன்" அவள் குரலில் குறும்பு.
அப்படியான சாந்தி இன்று அவன் முகத்தைப் பார்க்க விரும்பவில்லை. இருவருக்குமிடையில் எத்தனை பெரிய விரிசல்.
'நான் சொல்வதைக் கேள் சாந்தி’ அவன் கெஞ்சினான். அவள் காதைப் பொத்திக் கொண்டாள்.
'சாந்தி எங்கள் திருமணத்திற்கு முதல் என்னைப் பற்றி

Page 86
வசந்தம் வந்துபோய்விட்டது 62
வெளிப்படையாக உன்னிடம் எல்லாம் சொல்ல ஆரம்பித்த என்னை 'எனக்கு உங்களைப் பற்றி ஒன்றும் தெரியத் தேவையில்லை. கொஞ்சம் கொஞ்சமாகப் புரிந்து கொள்கிறேன் என்று சொன்னாயே ஞாபகமில்லையா? அவன் அவள் முகத்தை உயர்த்தி இறுக்கிப் பிடித்துக் கொண்டு கத்தினான்.
அவளுக்குத் தலை சுற்றியது. அவன் பிடியிலிருந்து திமிறினாள்.
பத்து வருடங்களுக்கு முன் அவன் எத்தனையோ தரம் அவளிடம் சொல்ல வந்த விடயத்தை அவள் தானே சொல்ல விடாமற் தடுத்தாள்?
கேள்விகள் புழுக்களாய் அவள் இருதயத்தில் நெகிழ்ந்தன. வயிற்றைக் குமட்டி, தலைசுற்றி இப்போது எல்லாமே சூனியமாகத் தெரிந்தது. -
ஏன் அவள் அப்போது அவன் சொல்ல வந்தவற்றை சொல்ல விடவில்லை?
அவன் தன்னைப் பற்றி ஒழிவு மறைவற்றுச் சொன்னால் தானும் அன்ரோனியைப் பற்றிச் சொல்ல வேண்டிவரும் என்ற Luuu Lor?
அவள் தானாக நினைத்து அன்ரோனியிடம் ஒழிவு மறைவாகப் பழகவில்லை. இருபது வருட உறவை அவன் அவளின் அன்பனாகத் தன்னை எண்ணி வளர்த்துப் பின் அவளையடைய ஆசைப்பட்டதை அவள் தன் குற்றமாக எண்ணிய குறுகுறுப்பிலா ராஜனுடன் ஒழிவு மறைவின்றிப் பேசத் தயங்கினாள்?
அல்லது மனமுதிர்ச்சியில்லையா? இருபது வயது இலங்கைப் பெண்ணுக்கு இங்கிலாந்தில் படித்தவன் என்ன சொல்லப் போகிறான் என்ற விளக்கம் தெரியாத அறியாமையிலா அவனைப் பேசவிடாமற் தடுத்தாள்?
அவனுக்கு உலகமே இருண்டு கொண்டு வந்தது. பத்து

163 ராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம்
வருடங்களுக்கு முன் இவனைப் பற்றி முழுக்கத் தெரிந்திருந்தால் 'அதற்கென்ன பழைய கதைகளை விட்டு விடுங்கள்’ என்று சொல்லியிருப்பாளா?
வயிற்றைக் குமட்டிக் கொண்டு வந்தது. பாத்ரூமுக்குப் போய் ஓங்காளமெடுத்தாள். வயிற்றில் வளரும் குழந்தையின் செல்லச் சேட்டை அதுவா? நான் வளரப் போகிறேன். எனக்கு வயிற்றில் இடம் தேவை என்று இப்போது என்னை ஓங்காளம் எடுக்கச் செய்கிறதா?
அல்லது உனது வயிற்றில் எனக்கு வளரவிருப்பமில்லை. எப்படியாவது வெளியேற வேண்டும். உன் வாயால் என்றாலும் என்னை ஓங்காளித்துத் துப்பிவிடு என்று ஒப்பாரி வைக்கிறதா அந்தச் சின்ன உயிர்?
'சாந்தி உனக்குச் சுகமில்லையா' அவன் பதறிப் போய்க் கேட்டான். இரண்டு மூன்று நாட்களுக்கு முன்னரென்றால் அவள் கற்பவதி என்று கேள்விப்பட்டதும் அவளைத் தூக்கிக் கூத்தாடியிருப்பான்.
இப்போது என்ன செய்வான்? வாந்தி எடத்தவாய் கசந்தது. தொண்டை எரிந்தது. வயிறு நொந்தது. கண்கள் பனித்தன. தன் கண்களை அவன் முகத்தில் படரவிட்டாள் ஒரு கணம். அவன் சில நாட்களாகச் சவரம் செய்யாத படியால் அடையாக மீசையும் தாடியும் அரும்பத் தொடங்கியிருந்தது. சரியாகச் சாப்பிடாததால் முகம் வாடி, உடம்பு நலிந்து தெரிந்தது. இன்றிரவு அவன் தூங்காததால் கண்கள் சிவப்பேறிக் கிடந்தன.
அவள் தொண்டையைக் கனைத்துக் கொண்டாள்.
'எனக்கு உடம்பொன்றும் பாதிக்கவில்லை. மனம்தான்

Page 87
வசந்தம் வந்துபோய்விட்டது 164
பைத்தியம் பிடிக்க வேணும் எண்டு பிடிவாதம் பிடிக்குது’ பைதத்யம் போற் சிரித்தாள்.
'குழந்தை உஷாவுக்கு இப்படியான நிலைமை வந்திருக்கும்போது நாங்கள் இப்படிச் சண்டை பிடிக்கக் கூடாது சாந்தி’ அவன் கெஞ்சினான்.
"ஹொஸ்பிட்டலில் உஷா, இப்போ என் வயிற்றில் இன்னொன்று. நீங்கள் என்னவென்றால் இன்னொருத்தியோட ’’bا۔ا۔انچوے
அவள் கற்பவதி என்று கேள்விப்பட்டதும் அவன் ஒருநிமிடம் உலகத்தை மறந்தான். கடந்த சில வருடங்களாக இருவரும் ஏங்கிக் கொண்டிருந்த ஒரு சந்தர்ப்பம்.
"சாந்தி, சாந்தி' அவன் இறுக அவளை அணைத்துக் கொண்டு கொஞ்சினான்.
ஒரு நிமிடம் அவள் அவன் அணைப்பில் அவளை மறந்தாள். உலகை மறந்தாள், ஒரு சில நாட்களுக்கு முன் அவனையணைத்தாற்போல் நடந்த ஆங்கிலேயப் பெண்ணை மறந்தாள். இந்த நெருக்கத்தின் சொர்க்கம் எத்தனை இனிமையானது.
"எதையும் மறைத்து வைத்து வாழ்வதில் எனக்குப் பிடிக்காது. வாழ்க்கை மிகவும் குறுகியது. நேற்றிருந்தோர் வாழ்க்கை ஒரு விஷயத்தில் இன்றைய துயராகி நாளைய சரித்திரமாகி டுெம். ஒரு தவிர்க்கமுடியாத வியாதி வந்தால் நான் வாழ்ந்த வாழ்க்கையின் பிரதிபலிப்பா இந்தச் சோதனை என்று எண்ணி ஏங்க வேண்டிவரும். மற்றவர்களுக்காக நல்லவர்களாக நடிப்பதை விட எங்களுக்குள் எங்களுக்கு நெருங்கிய மனிதர்களுக்குள் உண்மையாக நடந்து கொள்ள வேண்டும் என்று நினைக்கிறேன்' அவன் இன்னும் ஏதோ சொல்லிக் கொண்டிருந்தான்.
அவளுக்கு அவன் சொல்வது எல்லாம் சரியாகப் பட்டது.

65 ராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம்
ஆனால் எல்லாவற்றையும முழுமையாகக் கிரகித்துக் கொள்ள
முடியவில்லை. இதயம் குமுறிக் கொண்டிருந்தது.
வெளியில் வானம் வெளித்து சூரிய கிரகணம் ஜன்னற்
சீலைகளுக்குள்ளால் இவர்களை எட்டிப் பார்த்தது.
இரண்டு மூன்று நாட்களுக்கு முன்னால் ருத்திர தாண்டவமாடிய இயற்கை இப்போது தன்னிலைக்கு வந்து வெயிலையும் ஒளியையும் உலகத்திற்கும் பாய்ச்சிக் கொண்டிருந்தது.
காலை இளம் நேரத்தின் ஆரவாரம் கேட்கத் தொடங்கி விட்டது. பால்காரனின் வண்டியின் கடபுடா சத்தமும் அவன் குட்மோர்னிங் சொல்லிப் போவதும் கேட்டது.
‘எங்களுக்குள் சண்டை வேண்டாம்' அவன் அவள் காதுகளிற் கிசுகிசுத்தாள். அவள் இன்னும் அவன் பிடியில். "நான் எததனையோ தரம் ஸேராவைப் பற்றி உன்னிடம் சொல்ல இருந்தேன்’
“ஸேராவாம் அவள் பெயர். அவள் தனக்குத் தானே சொல்லிக் கொண்டாள்.
சட்டென்று அவன் பிடியிலிருந்து தன்னை விலத்திக் கொண்டாள்.
என் உயிரே சாந்தி என்று சொல்லும்போது என் உயிரே ஸேரா என்று இவன் மனம் சொல்லி யிருக்காதென்று என்ன நிச்சயம்?
உடலோடு என்னைப் பகிர்ந்து கொண்டவன் உள்ளத்தால் அவளை இத்தனை வருடமும் நினைத்துக் கொண்டிருந்தானா? அவனை ஏறிட்டுப் பார்த்தாள். அவன் அவளுக்குப் புரியாத ஒரு மனிதனாகத் தெரிந்தான்.
“ஸேராவை நான் பன்னிரண்டு வருடங்களுக்குப் பின் அன்றுதான் கண்டேன்’

Page 88
வசந்தம் வந்து போய்விட்டது G6
அவன் குரல் கணிரென்று ஒலித்தது. அவள் கேட்டுக் கொண்டு நின்றாள்.
“எனக்குப் பிறந்த ஒரு மகனை அவள் பன்னிரண்டு வருடமாக வளர்த்து வருகிறாள் சாந்தி’
அவன் என்ன கற்பனைக் கதை சொல்கிறானா? அல்லது உண்மையாகத்தான் சொல்கிறானா?
தோரணம் கட்டி துளாய் மாலை தொங்கவிட்டுப் பூரண மந்திரம் பொலிவாகச் சொன்ன முகூர்த்தத்தில் கன்னிகாதானம் செய்யப்பட்ட அவளைக் கைப்பிடிக்கும்போது இவன் ஒரு மகனுக்குத் தந்தையா?
சாந்தி அறையை விட்டு ஓடினாள். எப்படிப் பெட்டியைத் தூக்கிக் கொண்டு வெளியில் வந்தாள் என்று அவளுக்கே தெரியாது. இதயம் படபடவென அடித்துக் கொண்டது. கால்கள் நகர மறுத்தன. நாவரண்டது.
பெட்டியையும் தூக்கிக் கொண்டு ரோட்டிற் கால் வைத்த போது எதிர்பட்டவர்கள் எல்லாம் வேற்றுலக மனிதர் மாதிரித் தெரிந்தார்கள்.
பாற்காரன் குட்மோர்னிங் சொன்னான். அவள் பதில் சொல்லாததை பார்த்து வியப்புடன் நகர்ந்தான் அவன். எப்போதும் மரியாதையாகவும் பணிவாகவும் நடக்கும் ‘இந்தியப் பெண்மணி ஏன் இன்று தன்னை ஏன் என்றும் கேட்காமல் போகிறாள் என்று அவனுக்குப் புரியவில்லை.
மூலைக் கடை பட்டேல் ‘எப்படிக் குழந்தைக்கு’ என்று கனிவுடன் கேட்டார். அவள் ஏதோ சாட்டுக்குத் தலையாட்டி வைத்தாள்.
பாடசாலைகள் லீவு விட்டிருந்தபடியால் குழந்தைகளின் ஆரவாரமில்லாமல் ரோட்டெல்லாம் வெறித்தோடிக் கிடந்தது.
விடுதலைக்கு முன் குழந்தைகளை உல்லாசப் பிரயாணம்

167 ராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம்
கொண்டு போக வேண்டுமென்ற ஆசையிற்தானே குழந்தைகளை மியுசியம் கூட்டிக் கொண்டு சென்றார்கள்?
சாதாரண சம்பவம் அசாதாரண திருப்பத்தை எத்தனையோ பேர் வாழ்க்கையில் தொடக்கி விட்டிருக்கிறதே. அந்த விபத்து நடந்தபின் எத்தனை திருப்பங்கள் அவள் வாழ்க்கையில் நடக்கிறது?
எத்தனை உண்மைகள் வெளிவருகின்றன? இறைவனின் திருவிளையாடல்கள் எத்தனை எத்தனை?
ஆங்கிலேயக் கிழவன் பார்கின்ஸ் வழக்கம்போல் தன் காலை அப்பியாசமான நீண்ட நடையை (Long Walk) முடித்துக் கொண்டு வந்திருந்தார். V
அந்தக் கிழவனைக் கண்டால் சாந்திக்கு எப்போதும் தன் தாத்தாவைப் பார்ப்பது போலிருக்கும். தளர்ந்த வயதிலும் தளராக மனப் பலத்தைக் கொண்டவர் அவர்.
“என்ன சாந்தி குழந்தை உஷா எப்படியிருக்கிறாள்' சோகத்துடன் கேட்டார் கிழவர்
"பரவாயில்லை. ஆனால் இன்னும் மெஷினின் உதவியுடன்தான் சுவாசிக்கிறாள்.’ சாந்திநீர் மல்கும் கண்களைத் துடைத்துக் கொண்டாள்.
பஸ் ஸ்ரொப் தூரத்தில் தெரிந்தது. லண்டனுக்குப் போகும் பஸ் போய்க் கொண்டிருந்தது. இந்தப் பாரமான சூட்கேஸைத் தூக்கிக் கொண்டு ஸ்ரேசனுக்குப் போக முடியாது.
ரக்சி ஏதும் வருகிறதா என்று ரோட்டைப் பார்த்தாள். 'ஏன் உனது கணவர் உன்னைக் கூட்டிக் கொண்டு போகவில்லையா, காருக்கு ஏதும் பிழையா’ கிழவன் பரிவுடன் சாந்தியின் தோளைத் தொட்டார்.
அந்த அன்புப் பரிசத்தில் அடக்கி வைத்திருந்த சோகம் கண்ணிராய் வழிந்தது.

Page 89
வசந்தம் வந்து போய்விட்டது 168
'ஏன் கடவுள் இப்படிச் சோதனை செய்கிறார்’
அவள் கேள்வி அந்த எண்பது வயதுக் கிழவனின் புருவங்களை உயர்த்தியது.
"சாதாரண மனிதர்களுக்குத்தான் கடவுள் இருக்கிறார். அவர்கள் தங்கள் சஞ்சலமான நடவடிக்கைகளைத் தங்களுக்குத் தாங்களே சோதனைகளை உண்டாக்கிக் கொண்டிருக்கிறார்கள்.”
அவள் மெளனமானாள்.
"மண்தில் கோபமும் குழப்பமுள்ளபோது உண்மையின் பிரமாணங்கள் உருப்படியாய்த் தெரியாது. கோணலாகவும் குறுகலாகவும் தெரியும். நேற்றைய சோகமான நிகழ்ச்சி ஒன்றையே தத்துவமாகத் தெரியும். நேற்று துக்கப்படுத்தியவன் இன்று சந்தோசப்படுத்துவனாகத் தெரியும். விஷயங்களை ஒரு சம நிலையில் வைத்துப் பார்க்கும் முதிர்ச்சியில்லா விட்டால் தேவையில்லாத மனக்குழப்பம் வரும். உனது துயர் எனக்கு விளங்குகிறது. ஆனால் உனக்கு மட்டும்தான் இந்த நிலை வந்தது என்றும் கடவுள் உன்னை மட்டும்தான் சோதிக்கிறார் என்று நினைப்பதும் மிகவும் தவறு”
கிழவன் ஒரு ஆசிரியன் பிரசங்கம் செய்வது போல் சொல்லி முடித்தான்.
“எனது வாழ்க்கையை நினைத்தால் என்னையே அழித்துக் கொள்ள வேண்டும் போல் இருக்கிறது” அவள் விரக்தியாய்ச் சொன்னாள்.
அவர் மெல்லமாகச் சிரித்துக் கொண்டார். அன்றாடம் வரும் திடீர்ப் பிரச்சினைகளுக்கு முகம் கொடுக்காமல் வாழ்க்கையை அழித்துக் கொள்ள வெளிக்கிட்டால் உலகத்தின் சனத்தொகை மிக விரைவில் குறுகி விடும். உனக்கு மிகவும் அழகிய குடும்பமிருக்கிறது.
'அன்பான கணவன், ஆசைக்கு ஒரு குழந்தை. இதெல்லாம்

169 ராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம்
இல்லாத எத்தனையோ பெண்கள் வாழ்க்கையில் போராடிக் கொண்டிருக்கிறார்கள். நீ அதிர்ஷ்டசாலி சாந்தி நீ அதிர்ஷ்டசாலி" கிழவன் திரும்பத் திரும்பச் சொல்லிக் கொண்டிருந்தார்,
நான் அதிர்ஷ்டசாலியா?
தெரியாய்த் தனமாய் ஒரு குழந்தையின் தகப்பனைக் கல்யாணம் செய்து கொண்டது அதிர்ஷ்டமா?
அன்ரோனிக்கு மறுமொழி சொல்லப் பயந்து தாய் தகப்பன் பேசிய இந்த மாப்பிள்ளைக்கு உடனடியாகச் சம்மதித்தது அதிர்ஷ்டமா?
அல்லது கடவுள் தந்த தண்டனையா? இருபது வருடம் இவளை விரும்பிய ஒருத்தனை மணக்கப் பயந்து இங்கிலாந்து மாப்பிள்ளைக்குத் தலையாட்டியதற்கு இது கடவுள் தரும் தண்டனையா?
அரசன் அன்றறுப்பான், தெய்வம் நின்றறுப்பான் என்று சொல்வது உண்மையா? நல்லதோர் வீணை செய்து நலம் கெடப் புழுதியில் எறிவது என்பதுபோல் அருமையான வாழ்க்கையைத் தந்த கடவுள் இப்படி அரைகுறையிற் குழப்பலாமா?
தனக்கு ஒரு பெண் தொடர்பு மட்டுமல்ல அத்தோடு ஒரு குழந்தையுமிருக்கிறது என்கிறானே ராஜன், இந்த அதிர்ச்சியை எப்படி அவளாற் தாங்க முடியும்?
ஒரு குழந்தை உயிருக்குப் போராடிக் கொண்டிருக்கும் போது, இன்னொரு குழந்தை வயிற்றில் வளரும்போது தனக்கு இன்னொரு குழந்தை இருக்கிறது என்று சொல்கிறானே இவனை எப்படி எடுப்பது?
தூரத்தில் டக்சி வருவது தெரிந்தது. கையைக் காட்டி மறித்து ஏறிக் கொண்டு ஸ்ரேசனுக்குப் போனாள். அவள் தனியாகப் பிரயாணம் செய்து பழக்கமற்றவள். அவளை அவன் கணவன் கண்ணுக்குள் மணிபோல் உயிராகப் பாதுகாப்பவன்.

Page 90
வசந்தம் வந்து போய்விட்டது 170
அவனா அவளுக்குத் துரோகம் செய்தான்?
ரெயின் ஒடிக் கொண்டிருந்தது. அவள் மனமும் ஒடிக் கொண்டிருந்தது.
இளம் வயதில் லண்டனுக்கு வந்து இன்னும் குடிப்பழக்கம் இல்லாமலிருக்கும் தமிழர் ஒரு சிலர்தான்.
ராஜன் வித்தியாசமானவன். நேரமிருந்தால் தன் மனைவி குழந்தைகளுடன் சந்தோசமாய்ப் பொழுதுபோக்குபவன். அவர்களுக்கு நிறையச் சினேகிதர்கள். பிறந்த வீடு, கல்யாணவீடு என்பன தவிர மற்ற நாட்களில் பெரும்பாலும் போக மாட்டான். அவன் இலட்சியம் வித்தியாசமானது. எங்கேயாவது ஏதோ ஒரு ஆர்ட் எக்ஸிபிஷன் நடந்தால் விழுந்தடித்து ஓடுவான்.
தனக்குப் பணமிருந்தால் வீடு முழுக்க மொடர்ன் ஆர்ட் வாங்கி நிரப்புவேன் என்று பெருமூச்சு விடுவான். அவன் வழக்கறிஞன் சம்பளத்தில் வாழ்க்கை மிகவும் சுமுகமாகப் போய்க் கொண்டிருக்கிறது.
"இலங்கையில், இலங்கையரசாங்கத்தின் இன அழிப்புக் கொள்கையால் எண்ணற்ற தமிழர்கள் உயிரிழக்கிறார்கள், அவர்களில் எத்தனை பேர் தங்கள் உயிரைக் காப்பாற்றப் படாத பாடு பட்டிருப்பார்கள், லண்டன் வாழ்க்கை கிடைத்த தமிழர் தலை தெரியாது நடக்கலாமா' அவள் தன் கணவனை நினைத்துப் பெருமூச்சு விட்டாள். "உங்களுடன் வந்த பெண் யார் என்று கேட்ட கேள்விக்கு "அவள் என் உதவிதேடி வந்த வாடிக்கைக்காரி என்று சொல்வான் என்றுதான் அவள் எதிர்பார்த்தாள். அவன் 'வீட்டுக்குப் போய் அது பற்றிப் பேசுவோம்’ என்று சொன்ன தோரணையில் அவள் குற்றம் எதையோ உணர்ந்து கொண்டது.
ஹொஸ்பிட்டலுக்குச் சேர்ந்தபோது குமாரைக் காணவில்லை. சங்கர் குடும்பம் குழந்தை உஷாவுடன் இருந்தார்கள். "எங்கே உன் கணவன் ராஜன்’ தமயனின்

171 ராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம்
மனைவி ராதிகா கேட்டாள், சங்கரின் மனைவி ராதிகாவுக்கு சாந்தியில் ஏகப்பட்ட பொறாமை, தன் கணவன் கடைக்காரனாக இருப்பதும் சாந்தியின் கணவன் வழக்கறிஞனாக இருப்பதும் அவள் பொறாமைக்கு ஒரு காரணம்.
‘ராஜனின் பழைய வாழ்க்கையை இவள் தெரிந்து கொண்டால் என்னைப் பார்த்துச் சிரிக்க மாட்டாளா' சாந்தி தன்னைத் தானே கேட்டுக் கொண்டாள்.
"அவருக்குத் தலையிடி கொஞ்சம் பிந்தி வரச் சொல்லி நான் சொன்னேன். 'சாந்தி மனம் விட்டுப் பொய் சொன்னாள்.
"உனக்கும் தலையிடியா, முகமெல்லாம் உப்பிக் கிடக்கே’ ராதிகா சாந்தியை உற்றுப் பார்த்தபடி கேட்டாள்.
“குமார் எங்கே போய் விட்டான்’
சாந்தி பேச்சை மாற்றினாள். எப்போது ராதிகா போவாள் என்றிருந்தது.
"உன்னுடைய ஆங்கிலேயச் சினேகிதி எமிலியுடன் பார்க்கில் இருந்தானே’ கிண்டலாகச் சொன்னாள் ராதிகா. குமார் ஒரு காலத்தில் இயக்கத்தில் இருந்தவன்.
இப்போது லண்டனுக்கு வந்து இவர் தமிழர் தங்களை மறந்த வாழ்க்கை வாழ்வதை அவன் வியந்து பார்த்தான்.
ராதிகா போன்ற பணப் பிறவிகளை அவனுக்குப் பிடிக்காது. ராதிகா வீட்டுக்கு அவன் போவதும் குறைவு. பகுதி நேர வேலை செய்து கொண்டு பகுதிநேரப் படிப்புப் படிக்கிறான். பதினாறுவயதிலிருந்து இருபது வயது வரைக்கும் அவன் தன் இளமையைத் தமிழ்த் தேசியத்திற்குத் தியாகம் செய்தவன்.
ராதிகாவிற்கு அவன் போக்குப் பிடிக்காது. உருப்படியில்லாதவன் என்று குமாரைப் பற்றிச் சங்கருக்குக் கோள் சொல்வாள்.
எமிலியும் அவனும் கடந்த சில நாட்களாக மிகவும்

Page 91
வசந்தம் வத்துபோய் விட்டது 172
சினேகிதமாகப் பழகுவதை சாந்தி கவனித்திருக்கிறாள். ரவிக்குக் குமாரைப் பிடித்துக் கொண்டதுதான் பெரிய காரணம் என்றும் சாந்திக்குத் தெரியும்.
சாந்தி ஹொஸ்பிட்டலுக்கு வந்து கொஞ்ச நேரத்தில் டொகடர்கள் உஷாவைப் பார்க்க வந்தார்கள். உஷாவின் நிலை தெளிவாக இன்னும் சில காலம் எடுக்கும் என்று சொன்னார்கள்.
"எவ்வளவு காலம்' தணிந்த குரலிற் கேட்டாள் சாந்தி. பெரிய டொக்டர் தன் வெள்ளைக் கோர்ட் பைகளுக்குள் கையை விட்டபடி அவளை ஏறிட்டுப்பார்த்தார். பின் ஆறுதலாகச் சொன்னார்’ நாங்கள் சாதாரண டொக்டர்கள். கடவுள்கள் அல்ல. எங்களால் முடிந்தவற்றைச் செய்கிறோம். நல்ல மாறுதல்களை நம்பிக்கையுடன் எதிர்பார்க்கிறோம்’ என்றார். வாந்தியும் தலைசுற்றுமாய் வந்தது. எப்படி, எத்தனை நாள் இதெல்லாத்தையும் தாங்குவது?
12
அலிஸனின் அழுகை, ஆத்திரம், எரிச்சல், குமுறல்கள் எல்லாம் சாந்திக்குப் புரியக் கூடியதாக இருந்தது.
'உலகத்தில் யாரையும் நம்பக்கூடாது சாந்தி, கட்டிய கணவன், கூடிப் பழகும் சினேகிதிகள் யாரையும் நம்பக் கூடாது” அலிஸன் அவள் கணவன் டேவிட்டையும் சினேகிதி எமிலியையும் வாயாரத் திட்டித் தீர்த்தாள்.
'மகனுக்குக் கால் முறிந்து ஆஸ்பத்திரிக்கு வராமலிருந்தால் இந்த உண்மையெல்லாம் தெரியப் போகிறதா?’ அலிஸன் தன் கண்களைக் கசக்கிக் கொண்டாள்.
சாந்திக்கு அவள் மனத்தில் மின் வெட்டியதுபோலிருந்தது. -ക്ലെ விபத்தில் அகப்பட்டு ஹொஸ்பிட்டலுக்கு வராமலிருந்தால் ராஜனைப் பற்றித் தெரிய வந்திருக்குமா?

73 ராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம்
'என்னவோ பீட்டருக்குப் பிளாஸ்டர் போட்டு எக்ஸ்ரே எடுத்திருக்கிறார்கள். பார்த்து விட்டு அவனை வீட்டுக்குக் கொண்டு செல்லலாம் என்று சொன்னார்கள். வீட்டுக்குப் போகாமல் ஹொஸ்பிட்டலில் நின்றால் எனக்குப் பைத்தியம் பிடித்து விடும். எமிலியைக் கொலை செய்தாலும் கொலை செய்து விடுவான். பீட்டரை நான் பார்பரா வீட்டில் கொஞ்சக் காலம் வைத்திருக்கப் போகிறேன். என் வீட்டுக்குப் போக மனமில்லை.” அலிஸன் விடாமற் பேசிக் கொண்டிருந்தாள்.
அன்று பின்னேரம் பீட்டரை வீட்டுக்கு அனுப்பினார்கள். அலிஸனும் பார்பராவும் குழந்தைகளுடன் வெளியேறினார்கள். டேவிட் முகத்தைத் தொங்கப் போட்டுக் கொண்டு பின் தொடர்ந்தாள். சாந்தி தன் வாழ்க்கையையும் அலிஸன் வாழ்க்கையையும் ஒத்துப் பார்த்துக் கொண்டாள்.
எமிலியில் ஆத்திரம் வந்தது. என்னவென்று தன் சினேகிதியின் கணவருடன் காதல் நாடகம் ஆட முடியும்?
எமிலியில் வைத்திருந்த மரியாதை நம்பிக்கை எல்லாம் தவிடுபொடியாயின. உஷாவைக் கொஞ்ச நேரம் நேர்ஸ்மார் பார்க்கட்டும் என்று சொல்லிவிட்டு ரவியிருந்த வார்ட்டுக்குச் சென்றாள்.
ரவியின் தாத்தா மிஸ்டர் ஸிம்ஸன் மிகவும் சந்தோசமாகத் தன் பேரனைப் பார்த்துக் கொண்டிருந்தார்.
"எமிலி இன்னும் வரவில்லையா' சாந்தி கேட்டாள். “இல்லை, நான்தான் இன்றைக்கு வரவேண்டாமென்று சொல்லி வீட்டுக்கு அனுப்பினேன். இரண்டு மூன்று நாட்களாக இங்கு நின்று களைத்து விட்டாள். ரவிக்கும் நான் நிற்பது சந்தோசமாக இருக்கிறது’
மிஸ்டர் ஸிம்சன் உற்சாகத்துடன் சொன்னார். 'பீட்டர் வீட்டுக்குப் போய்விட்டான்' ரவி சாந்தியைப் பார்த்துச் சொன்னான்.

Page 92
வசந்தம் வந்து போய்விட்டது 74
ஆமாம் பீட்டரின் தாய் உன் தாயில் மிகவும் ஆத்திரமாக இருக்கிறாள்' என்று சொல்ல சாந்திக்கு வாய் வந்தது.
“குமார் அங்கிள் எங்கே’’ குழந்தை ரவி ஆர்வத்துடன் கேட்டான். 'உனது தாயுடன் கும்மாளம் போடுகிறான்' என்று சொல்ல வாய் வந்தது.
'பீட்டர் பாரிசுக்குப் போகப் போகிறானாம்’ குழந்தை ரவி சாந்திக்கு மேலதிக விடயங்களைச் சொல்லிக் கொண்டிருந்தான்.
"ஆன்டி பார்பரா நிறைய ஸ்வீட்தந்துவிட்டுப் போனாள்’ ரவி தொடர்ந்தான்.
சாந்தியின் அழகிய முகத்தைப் பார்த்தாள். எமிலி மாதிரி ஒருத்திக்கு ரவி மாதிரிக் குழந்தை ராஜனாய் பிறந்திருக்கும்.
அவளுக்கு எமிலியில் விபரிக்க முடியாத கோபம் வந்தது. யாரோ ஒரு இந்தியனின் குழந்தையைத தகப்பன் தெரியாத குழந்தையாக வளர்த்துக் கொண்டு இப்போது ஒன்றாகப் பழகும் சினேகிதியின் கனிவுடன் கள்ளமாகத் தொடர்பு கொண்டிருக்கிறாள் என்று தனக்குத் தானே சொல்லிச் சலித்துக் கொண்டாள்.
“ஸேரா'வைப் பற்றி ராஜன் சொன்னபோது யாரோ அன்னியப் பெண்ணாகத் தோன்றியது, இப்போது ஸேராவை எமிலியுடன் ஒப்பிட்டுப் பார்த்தாள்.
எமிலியின் காதலனாக இருந்த இந்தியனுக்கும் இப்போது இரண்டோ மூன்றோ குழந்தைகள் இருக்கலாம். ஏன் இந்த இங்கிலிஸ் பெண்கள் இப்படி நடந்து கொள்கிறார்கள்? கலப்புக் குழந்தையைப் பெற்றுக் கொண்டால் அந்தக் குழந்தைகளுக்கு எதிர் காலத்தில் ஏற்படும் கஷ்டங்கள் இவர்களுக்குத் தெரியாதா அல்லது தங்கள் பருவ இச்சைக்கு முன்னால் ஒரு அப்பாவிக் குழந்தையின் எதிர்காலம் பாழாகுவது பொருட்டாகத் தெரியவில்லையா?

175 ராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம்
அடுத்த இரண்டு மூன்று நாட்களும் ஹொஸ்பிட்டலில் மிகவும் அமர்க்களமாக இருந்தது. உஷாவுக்கு மேலதிக ரெஸ்ட் மேற்கொள்ளப் பட்டன. எமிலியுடன் சாந்தி முகம் கொடுத்துப் பேசவில்லை.
ராஜன் மனைவிக்குச் சாப்பாடு செய்து கொண்டோ அல்லது வாங்கிக் கொண்டோ வந்தான்.
அவள் ஏனோதானோ என்று சாப்பிட்டு முடித்தாள், அவனில் வெறுப்பாய் வந்தது. ஆனால் அவன் உழைப்பில்லாமல் அவன் தயவில்லாமல் வாழமுடியாது என்று தெரிந்தபோது தன் நிலைகுறித்துப் பரிதாபப்பட்டாள்.
அவன் அவளுடன் பேச முயன்றபோது அவன் எடுத்தெறிந்து பேசினாள். 'குழந்தையைப் பார்க்க வந்தால் பார்த்து விட்டுப் போங்கள் என்னுடன் ஒரு பேச்சும் வைத்துக் கொள்ள வேண்டாம்” என்று சத்தம் போட்டாள்.
அடித்துப் போட்ட நாராய் உஷாவின் உடம்பு சுவாசம் எடுக்கும் மெஷினுடன் பொருத்தப்பட்டிருந்தது.
ஒரு சில தினங்களுக்கு முன்னால் உயிரோவியமாய் ஒடித் திரிந்த செல்வம் இப்போது அசைவற்றுக் கிடக்கிறது.
பீட்டர் உடைந்த காலுக்குப் பிளாஸ்டரைப் போட்டுக் கொண்டு வீட்டுக்குப் போய் விட்டான். ரவியின் நிலைமை நாளுக்கு நாள் தேறிக் கொண்டுவருகிறது. ரவியும் இன்னும் சில நாட்களில் தாயுடன் வீடு போகலாம். உஷா எப்போது சுகம் பெறுவாள்? சாந்தி ஆயிரம் யோசனைகளுடன் துயர் பட்டாள். 'எனக்கின்னுமொரு குழந்தைச் செல்வம் தா கடவுளே என்று வேண்டிய போது இருக்கிற குழந்தையை ஏன் கடவுளே இப்படியாக்கினாய்’ சாந்தியின் மனம் கடவுளிடம் வாதம் செய்தது.
அன்றிரவு பெற்றோர்கள் தங்கும் அறையில் எமிலியைச் சந்தித்தாள் சாந்தி, அலிஸனின் அழுகை ஞாபகம் வந்தது.

Page 93
வசந்தம் வந்து போய் விட்டது 176
எமிலியைக் கண்டதும் முகத்தைத் திருப்பிக் கொண்டாள். 'நான் அப்படி என்ன தீண்ட முடியாதவளாகி விட்டேனா’ எமிலியின் நீலக் கண்கள் சாந்தியைத துளைத்தெடுததன.
G36m) Jim என்பவளும் எமிலி மாதிரி உயரமாக அழகிய ப்ொன்தலையுடனும் ஆழக்கடல் நிறத்தில் விழிகளுமுடைய அழகியாக இருப்பாளா?
அவளுக்கு ஒரு குழந்தை வருமளவுக்கு ராஜன் பழகியிருக்கிறான். எத்தனை ஆழமாக அவளைக் காதலித்திருப்பான்.
“என்ன சாந்தி என்னைக் கண்டால் வாயுமடைத்து விட்டதா? எமிலி நிதானமாகக் கேட்டாள். 'அலிஸனின் அழுகை ஞாபகம் வந்தது'
கொஞ்ச நேரம் எமிலியின் மெளனம் அந்த இடத்தை நிரப்பியது.
'அலிஸனின் அழுகைக்கு நான் காரணமில்லை' எமிலி எடுத்தெறிந்து பேசினாள்.
“ஓகோ அப்படியா’ சாந்தியின் குரலில் கிண்டல். 'அலிஸனின் அழுகைக்கு எத்தனையோ காரணம், அதற்கு என்னை ஒரு கருவாகப் பாவிக்கிறாள்'
"அவள் கணவருடன் உனக்குள்ள தொடர்பு அவளின் கண்ணிருக்குக் காரணம் என்று நினைக்கவில்லையா”
"அவள் கணவருடன் அவள் அழவேண்டிய அளவுக்கு நான் ஒரு தொடர்பும் வைத்திருக்கவில்லை' எமிலி சோகமாகச் சிரித்தாள்.
"அப்போது அலிஸன் சொன்னதெல்லாம் பொய்யா?
சாந்தியின் குரலில் குழப்பம்

177 ராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம்
“சாந்தி, காதாற் கேட்பது பொய், கண்ணாற் சில வேளை பார்ப்பதும் பொய் திட்டவட்டமாக ஆராய்ந்தபின் உண்மையை அறிந்து கொள்வது நல்லது' என்று நினைக்கிறேன்.
"நீடேவிட்டுடன் சாப்பாட்டுக் கடைக்குப் போனதை பார்பரா கண்டதாகச் சொன்னாளே”
"நான் உனது தம்பி குமாருடன் இன்றைக்குச் சாப்பிடப் போனேன். நீயும் அழலாமே” எமிலி கிண்டலாகச் சிரித்தாள்.
சாந்தி குழப்பத்துடன் வெறுமையைப் பார்த்தாள். தாய் தகப்பன்களுக்காக ஒதுக்கியிருக்கும் ஒரு சிறிய விடுதியது. வெளியில் சரியான வெயில் என்றபடியால் சில தாய் தகப்பன்கள் வெளியில் இருந்து உரையாடிக் கொண்டிருந்தார்கள்.
'சாந்தி ஒரு ஆணுக்கும் பெண்ணுக்கும் கட்டிலுக்குப் போகும் உறவைத் தவிர வேறொன்றுமிருக்காது என்று நினைக்கும் முட்டாள்களில் நீயும் ஒருத்தியாக இருப்பாயென்று நான் நினைக்கவில்லை’
சாந்தி முகத்தைத் திருப்பிக் கொண்டாள்.
'டேவிட்டுடன் நான் பழகியது உண்மை. ரெயினிற் சந்தித்துக் கொண்டேன். லண்டனில் ஒன்றிரண்டு தரம் சந்தித்திருக்கிறேன். சாப்பாட்டுக் கடைக்கும் போயிருக்கிறேன். டேவிட்டைப் பற்றிய விபரமும் உன் வீட்டுக்குச் சாப்பாட்டுக்கு வரும் வரை தெரியாது. சாந்தி உனக்கு ஞாபகம் வருகிறதா எங்கள் குழந்தைகள் பாடசாலைக்குச் சேர்ந்து கொஞ்ச நாளில் அலிஸனையும் என்னையும் சாப்பிடக் கூப்பிட்டாயே. அதுவரைக்கும் எனக்கு டேவிட் திருமணமானவன் என்று தெரியாது. தெரிந்து கொள்ள வேண்டுமென்ற ஆர்வமும் எனக்கில்லை. ஆனால் டேவிட்டின் அன்றும் கவர்ச்சியான தோற்றமும் என்னைக் கவரவில்லை என்று சொன்னால் நான் பொய் சொல்பவளாவேன்'
எமிலி நேர்மையானவள் என்ற மதிப்பு சாந்திக்கு

Page 94
வசந்தம் வந்து போய் விட்டது 178
எப்போதுமிருந்தது. ஸேராவைப் பற்றிய சம்பவமும் அலிஸனின் குற்றச் சாட்டும் ஒரேயடியான நேரத்தில் வந்தபடியால் அவள் மிகவும் உணர்ச்சி வசப்பட்டாள்.
சாந்தி முகத்தை لمp اqنق கொண்டு அழத் தொடங்கிவிட்டாள்,சாதாரண நாட்களாக இருந்தால் தன் உள்ளத் துயர்களை எல்லாம் சொல்லியழுதிருப்பாள். எமிலியைப் பார்க்கும் போது ஸேராவின் ஞாபகம் வந்ததால் அவளால் எதையும மனம் விட்டுப்பேச முடியவில்லை.
அடுத்த கிழமை சேகர் அவளைத் தன் வீட்டுக்கு அழைத்துச் சொன்றான். சேகர் சாந்தியின் மூத்த தமயன் சங்கர் மாதிரி அமைதியானவனல்ல. மிகவும் முன் கோபக்காரன். அவன் மனைவி மாலதி அவனுடன் எப்படித்தான் வாழ்கிறாள் என்று சாந்தி நினைத்ததுண்டு. சங்கர் எப்போதும் ராதிகாவின் விருப்பப் படி வாழ்க்கையைக் கொண்டு போகிறான் என்று தெரியும்.
சேகருக்கும் மாலதிக்கும் ஒரு குழந்தைகள். சேகர் எப்போதும் எதிலாவது குறை சொல்லிக் கொண்டிருந்தான். மாலதி தன் கண்ணிரைச் சோகச் சிரிப்புக்குள் சுருக்கிக்கொண்டாள்.
'உஷாவுக்குச் சுகமில்லாமல் வந்த நாள்முதல் நீ ஆஸ்பத்திரியிலேயே இருக்கிறாய். ராஜன் எவ்வளவு நல்ல மனிதன், வேலைக்கும் போய் உன்னையும்குழந்தையும் ஹொஸ்பிட்டலுக்கு வந்து பார்க்கிறார்’ மாலதி நன்றியுடன் சொன்னாள்.
அன்றிரவு சேகர் நல்ல வெறியில் வந்தான். குழந்தைகளைச் சாட்டாக வைத்துக் கொண்டு ஏதோ பெரிய சத்தம். தான் ஒரு விருந்தாளி என்று நினைக்க வேண்டாம் ஆனால் குழந்தையை ஆஸ்பத்திரியில் வைத்திருக்கும் ஒரு பெண் துயரத்துடன் வந்திருக்கிறாள் என்ற பரிதாபமுமில்லாமல் அவர்கள் தாறுமாறாகக் கத்திக் கொள்வதைச் சாந்தியால் நம்ப முடியாமலிருந்தது.

179 ராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம்
இந்தக் குடும்பங்களுடன் ஒப்பிடும்போது என் வாழ்க்கை எவ்வளவு நிம்மதியானது? சாந்தி நித்திரையின்றி யோசித்துக் கொண்டிருந்தாள்.
பணத்துக்காகக் கணவனை வதைக்கும் ராதிகா, ஒரு நேர சோற்றுக்கும் உடைக்கும் இருக்க ஒரு கூரைக்கும் அடிமையாக நடத்தப்படும் மாலதி.
கணவனில் எந்த நேரமும் சந்தேகமான அலிஸன் என்று இப்படி எத்தனையோ பெண்களுடன் ஒப்பிடும்போது என் வாழ்க்கை எவ்வளவு நிம்மதியானது என்று நினைத்தாள் சாந்தி
அடுத்த நாள் மாலதியின் கன்னம் பழுத்திருந்தது. தனது மைத்துணியை நிமிர்ந்து பார்க்காமல் தன் வேலையைக் கவனித்துக் கொண்டிருந்தாள் மாலதி,
'மாலதி உங்கள் நிலைமைக்கு நான் மிகவும் பரிதாபப் படுகிறேன்' சாந்தி துயருடன் சொன்னாள். மாலதியின் கண்களிற் தாரை தாரையாய் நீர் வழிந்து கொண்டிருந்தது.
"நேற்றுச் சொன்னேனே சாந்தி, நீ மிகவும் அதிர்ஷ்டசாலி. என்னைப் போல் ஆயிரக்கணக்கான பெண்கள் துயர்படும்போது உன்னைப் போல பெண்கள் மிகவும் அதிர்ஷ்டசாலியாக இருக்கிறார்கள். உஷாவின் நிலையைப் பார்த்து மிகவும் துயரப்படுகிறேன். ஆனால் அதே நேரம் உங்களைப் போல கணவன் பக்கபலமாக இருந்தால் நான் எந்தத் துயரையும் தாங்குவேன். என் வாழ்க்கையை நினைக்கும்போது சில வேளைகளில் தற்கொலை செய்ய வேண்டும் போலிருக்கிறது’
டேவிட் முகத்தைத் தாழ்த்திக் கொண்டிருந்தான். ஒகஸ்ட் மாத வெயிலில் லண்டன் காய்ந்து கொண்டிருந்தது. பார்பரா இவர்களை ஒரேயடியாகக் கண்ட ரெஸ்ட்டோரண்டில் எதிரும்

Page 95
வசந்தம் வந்துபோய்விட்டது 80
புதிருமாக உட்கார்ந்திருந்தார்கள் எமிலியும் டேவிட்டும்.
பக்கத்து மேசையில் சாப்பிட்டுக் கொண்டிருந்த சோடி அரசகுமாரி டையானாவையும் அராபிய செல்வர் தன் டோடி அல் பையாட் பற்றியும் மிகவும் சுவாரஷ்யமாகப் பேசிக் கொண்டிருந்தார்கள்
‘ராஜ குடும்பத்தைப் பழிவாங்கியே தீருவேன் என்றிருக்கிறாள் டையானா’ அந்தப் பெண்- அடுத்த மேசையிற் சாப்பிட்டுக் கொண்டிருந்தவள் சொன்னாள்.
"இதிலொன்றும் பழிவாங்கிப் பிரயோசனமில்லை. ஏதோ வழியில் அரசகுடும்பமும் டையானாவைப் பழிவாங்கியே தீரும்’ என்றான் அடுத்த மேசையிலிருந்த ஆண்.
அவர்களின் பேச்சை எமிலி கேட்டும் கேளாதவளாக டேவிட்டைப் பார்த்தாள்.
கடந்த சில வாரங்களாக அவன் வாழ்க்கையில் நடந்த நிகழ்ச்சிகள் அவன் வயதை இன்னும் பத்து வருடம் கூட்டிக் காட்டின.
நடந்து விட்ட நிகழ்ச்சிகளின் தாக்குதல்கள் அவன் முகத்தில் திரையோடிய கோடுகளாகத் தெரிந்தன. எந்த நேரமும் சிரித்தபடி இருக்கும் அவன் முகம் ஓயாத சிந்தனையுடன் தவித்தது.
அவன் அலிஸனைத் திருமணம் செய்யும் போது பார்பரா மட்டுமல்லாது மற்றும் எத்தனையோ பேர்கள் அவன் செய்யும் முடிவு சரிதானா என்று வியப்புடன் பார்த்தார்கள்.
அவனும் அலிஸனும் எத்தனையோ விதத்தில் வித்தியாசமானவர்கள். அவன் உலகத்தை மிகவும் சுவாரஸ்யமாகப் பார்ப்பவன், ரசிப்பவன், பகிர்ந்து கொள்பவன்.
அலிஸனோ உலகத்தைத் தூர நின்று பார்ப்பவள், பயப்படுபவள், தன்னை உலகத்திடமிருந்து ஒதுக்கிக் கொள்பவள்.

18 ராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம்
திருமணத்தின் பின் அவர்களின் போக்கு வெவ்வேறு திசைகளிலேயே போய்க் கொண்டிருந்தது.
குழந்தைகள், குடும்பப் பொறுப்பு என்பன இரு வித்தியாசமான மனிதர்களை ஒன்றாக்கி வைக்கும் என்ற மூட நம்பிக்கையில் அவர்களும் தங்கள் வாழ்க்கையைத் தொடர்ந்தார்களா?
யாருமே மறுமொழி சொல்லாத விடயமது.
இப்போது பார்பராவின் இடைவிடாத நச்சு மொழிகளை நம்பி அலிஸன் டேவிட்டுடனிருந்து தன் வாழ்க்கைய்ைப் பிரித்துக் கொள்கிறேன் என்கிறாள்.
இங்கிலாந்திலும் இப்போது உலகத்தில் எத்தனையோ நாடுகளிலும் சர்வ சாதாரணமாக விவாகரத்துக்கள் நடக்கின்றன. அந்த விவாகரத்துக்களில் அலிஸனினதும் டேவிட்டினுடையதும் வித்தியாசமல்ல.
நீண்ட நாட்களுக்குப் பின் டேவிட் எமிலியைப் பார்க்க வந்திருந்தான். அவளின் குழந்தை ரவியின் நிலை சீராகிக் கொண்டு வருகிறது. இனிச் சில நாட்களில் அவள் தன் குழந்தையுடன் வீட்டுக்குப் போகலாம் என்று டொக்டர்கள் எதிர்பார்க்கிறார்கள்.
அவனுடன் எந்தத் தொடர்பும் வேண்டாம் என்றிருந்த எமிலி டேவிட்டைக் கண்டதும் மிகவும் பரிதாபப்பட்டாள்.
‘என்னால் உங்களுக்கு இந்த நிலை வந்ததற்கு மிகவும் வருந்துகிறேன்' அவள் உண்மையான சோகத்துடன் சொன்னாள்.
"நீயாக இல்லாவிட்டாலும் பார்பரா இன்னொருத்தியின் பெயரைச் சொல்லி அலிஸனின் மனத்தைக் குழப்பியிருப்பாள்'
டேவிட் சோகத்துடன் சொன்னான்.
சாப்பாட்டுக்கடையில் ஜோன் வில்லியத்தின் கிற்றார் ஒலி

Page 96
வசந்தம் வந்து போய் விட்டது 182
கேட்டுக் கொண்டிருந்தது.
அவளுக்கு இசை மிகவும் பிடிக்கும். அதிலும் மெல்லிசைகள் என்றால் மிகவும் பிடிக்கும்.
ஆனந்துடன் சேர்ந்தனுபவித்த இந்திய வீணையிசை அவளை எப்போதும் இன்புறுத்தும். தன் தனிமையை மறக்க அவள் நாடுவது நல்ல புத்தகங்களும் காதுக்கினிய இசையுமாகும். VA
ஆனந்துடன் எத்தனையோ இசைக் கச்சேரிகளுக்குப் போயிருக்கிறாள். மேற்கத்திய, கிழக்கத்திய இசை என்று எத்தனயோ இசைகளை ரசித்திருக்கிறாள். டேவிட்டுடனிருக்கும்போது ஜோன் வில்லியத்தின் இசை மனத்தை எங்கேயோ இழுத்துக் கொண்டு போனது.
'பார்பராவுக்கு உங்களில் அப்படி என்ன கோபம்’ அவள் வெயிட்டர் கொண்டு வந்த சலட்டில் முள்ளுக் கத்தியைச் செலுத்திய படி கேட்டாள்.
'பார்பராவுக்கு என்னில் என்ன கோபமா' ஒரு தரம் அவளை நேரடியாகப் பார்த்தான்.
"நீ பெண் விடுதலையில் நாட்டம் கொள்பவள் நான் பார்பராவைப் பற்றி உண்மைகளைச் சொன்னால் உனக்குக் கோபம் வரும்’
"ஏன் எனக்குக் கோபம் வரவேண்டும்’
"அவள் என்னில் உள்ள பைத்தியத்தில் என் குடும்பத்தையே சீரழிக்கிறாள் என்பதை நீ நம்பப் போவதில்லை. இப்படியான கருத்துக்கள் ஆண்மையின் கற்பனை என்று நீ சொல்லலாம்’
அவள் மெளனம் சாதித்தாள். 'பெண் விடுதலையை நம்புவது சரி அதற்காகப் பெண்கள் செய்வதெல்லாம் சரி என்று சொல்லவில்லையே. சாதாரண உலகத்தில் சாதாரண ஆசை அபிலாஷைகளுடன் போராடுபவர்கள் மனிதர்கள். அதில்

183 М ராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம்
ஆண்கள் மட்டும் எப்போதும் கெட்டவர்களாகவும் பெண்கள் நல்லவர்களாகவும் இருப்பதில்லையே’
'அலிஸனுக்கு அது விளங்க மாட்டேன் என்கிறது நான் கண்ட பாட்டுக்குத் திரிவதாக அவள் விடாமற் சொல்லிக் கொண்டிருக்கிறாள். அவள் அப்படி நினைப்பதற்கு அலிஸனுக்குத் தன்னிலேயே உள்ள தன்னம்பிக்கையின்மை காரணமாக இருக்கலாம். அல்லது பார்பராவிலுள்ள நம்பிக்கை காரணமாக இருக்கலாம்." அவன் பெருமூச்சு விட்டான்.
அலிஸனைப் பற்றிய முழுத் தகவல்களையும் எமிலிக்குச் சொன்னால் அந்த உண்மையான தகவல்களை எப்படி எடுத்துக் கொள்வாள் என்று முடிவு கட்ட முடியவில்லை.
அலிஸன் பார்பராவுடன் பாரிசுக்குப் போய்விட்டாள். குழந்தை பீட்டரின் பிளாஸ்டர் போட்ட கால்களைப் பாரிஸ் டொக்டர்களிடம் காட்டுவதாச் சொன்னாள். அலிஸன் தன்னில் உள்ள கோபத்தில் குழந்தைகளின் வாழ்க்கையைப் பழிவாங்குவதை அவன் விரும்பவில்லை.
‘என்னில் உள்ள கோபத்தில் ஏன் குழந்தைகளை இப்படி நாடோடியாக்குகிறாய்” என்று அவன் கேட்டான்.
"அவர்கள் நாடோடிகள் இல்லை, ஒரு நல்ல அன்பான வாழ்க்கையின் சூழ்நிலையில் வளர்கிறார்கள்’ அலிஸன் தன் வழக்கமான கீச்சுக் குரலிற் சத்தம் போட்டாள்.
“என்ன அன்பான சூழ்நிலை? பார்பரா எப்படி வாழ்கிறாள் என்று எனக்குத் தெரியும்’ அவன் திருப்பிச் சத்தம் போட்டான். 'அவள் என்னை மிகவும் காதலிக்கிறாள்' அலிஸனின் குரலில் என்றுமில்லாத தெளிவு.
அவனுக்குத் தூக்கி வாரிப் போட்டது. பார்பராவின் செக்ஸ் வாழ்க்கை பற்றி எல்லோருக்கும் தெரியும் ஆனால் அலிஸனுக்கு மட்டும் ஏன் தெரியாமலிருக்கிறது?

Page 97
வசந்தம் வந்து போய் விட்டது 184
காதல் என்ற வார்த்தை இப்போதெல்லாம் கண்டபடி பாவிக்கப்படுகிறதா?
டேவிட் அலிஸனுடன் தர்க்கம் செய்ய விரும்பவில்லை. குழந்தை பீட்டர் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டது, எமிலியைப் பற்றி அலிஸன் தவறான கருத்துக்களைக் கொண்டிருப்பது எல்லாம் சேர்த்து அவளைக் குழப்பி விட்டிருக்கிறது. அப்படித்தான் அவன் நினைத்தான்.
அலிஸனின் உலகம் எப்போதும் குழப்பமானது, நம்பிக்கையற்றது. டேவிட்டைத்திருமணம் செய்து கொண்டதே தன்னால் நம்ப முடியாத விடயம் என்று சொல்லியிருக்கிறாள்.
போதாக்குறைக்கு அவள் மனத்தில் பார்பரா இடைவிடாது நச்சு விதைகளை விதைத்தும் கொண்டிருக்கிறாள். அலிஸனின் மனத்தைக் குழப்புவது தன்னைப் பழிவாங்கத்தான் என்று அலிஸனுக்குச் சொன்னால் அவள் நம்பவா போகிறாள்?
எமிலியிடம் தன் வாழ்க்கையின் சீரழிவைச் சொல்லி அவள் அனுதாபத்தை அவன் பெறவிரும்புவதாக அவள் நினைக்கக்கூடாது என்று நினைத்தான். அதே நேரம் அவனை முழுக்க முழுக்க உணரத் தெரிந்தவர்கள் யாரும் இருப்பதாக அவனுக்குத் தெரியவில்லை.
தாய் தகப்பனுக்கு ஒரே மகன். அவன் திருமண வாழ்வு சந்தோசமாக இருக்க வேண்டும் என்று அவன் தாய் இடைவிடாது பிரார்த்திக்கிறாள். மிகவும் பக்தியான கத்தோலிக்க மாது டேவிட்டின் தாய், மகனின் மனைவி அவனைப் பிரிந்திருக்கிறாள் என்பதைத் தாங்க மாட்டாள். அத்தோடு இவனைப் பிரிந்து விட்டு இன்னொரு பெண்ணுடன் வாழத் தொடங்கி விட்டாள் என்பதை அவள் தாங்க மாட்டாள். தனக்கு முன்னால் குழந்தைத் தனத்துடன் எதையோ மறைக்க எத்தனிக்கும் டேவிட்டை ஏற இறங்கப் பார்த்தாள் எமிலி.
அவனைப் பார்க்கப் பரிதாபமாகவிருந்தது. அலிஸன் அவனை விட்டுப் போவாள் என்பதை அவன் கனவு கூடக்

85 ராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம்
கண்டிருக்க மாட்டான். எப்படிச் சத்தம் போட்டாலும் கல்யாண உறவுகளில் மிகவும் நம்பிக்கை கொண்டவள் அலிஸன்.
டேவிட்டின் சிந்தனைகள் எங்கெல்லாமமோ சிதறின. சாப்பாட்டில் மனமில்லாமல் அங்கும் இங்கும் பார்த்துக் கொண்டிருக்கும் டேவிட்டை எப்படித் தேற்றுவது என்று எமிலிக்குத் தெரியவில்லை.
"அலிஸன் ஏதோ கோபத்தில் போனாலும் எப்படியும் திரும்பி வருவாள்' எமிலி அவனைச் சமாதானப்படுத்துவதற்காகச் சொன்னாள்.
சாப்பாட்டை ஒதுக்கிவிட்டு அவளை ஏற இறங்கப் பார்த்தான் டேவிட். நீண்ட நாட்களாக அவளை அவ்வளவு அண்மையில் வைத்துப் பார்க்கவில்லை. அவளின் அழகிய நீலவிழிகள் பட்டாம்பூச்சிகளாய் அவன் முகத்தை வளைய வருவதை ரசிப்பது மிகவும் சந்தோசமாக இருந்தது.
அவன் பார்வை தர்ம சங்கடமாக இருந்தது. பழச்சாற்றில் பார்வையைப் பதித்துக் கொண்டாள்.
"6T66S...'
அவன் எதையோ மிகவும் ஆழமாகச் சொல்ல நினைக்கிறான் என்பது அவன் பீடிகையிற் தெரிந்தது.
‘என்ன என்பது போல் அவனைப் பார்த்தாள்.
'அலிஸன் . அலிஸன் பார்பராவுடன் குடித்தனம் செய்வதாகப் போய்விட்டாள்"
எமிலி கொஞ்ச நேரம் பார்வையை வெளியிற் செலுத்தினாள். தெரு மிகவும் ஆரவாரமாகத் தெரிந்தது. இதில் எத்தனை கணவன் மனைவியர் நாளைக்குப் பிரிந்து போய் யாரோ ஒருத்தருடன் குடித்தனம் செய்யப் போகிறார்கள்?
‘நான் என்ன சொல்கிறேன் என்பது விளங்கும் என்று
நினைக்கிறேன்’

Page 98
வசந்தம் வந்து போய்விட்டது 186
'அதாவது அலிஸனும் பார்பராவும் லெஸ்பியன் என்று சொல்கிறீர்கள்’
அவள் வாயால் தன் மனைவியை லெஸ்பியன் என்று கேட்பதை அவனாற் சகிக்க முடியாமல் தவித்தான்.
மனைவி ஒரு கணவனை விட்டுப் போவதையே பெரும்பாலான ஆண்கள் தாங்கிக் கொள்ள மாட்டார்கள்.அதிலும் தன் மனைவி இன்னொரு பெண்ணுடன் போய் விட்டாள் என்பதை இவன் தாங்குவானா?
இவன் ஆண்மை சீறு கொண்டெழப் போகிறதே! எமிலி மெளனமாக அவனைப் பார்த்தாள்.
'அலிஸன் இப்போதுதான் தனது சுயமான சிந்தனையுடன் செயற்படுகிறாள் என்று நினைக்கிறேன்’
“என்ன’ டேவிட் அவசரமாகக் கேட்டான்.
"அவள் எப்போதுமே பெண்பாலியல் சேர்க்கையை விரும்புவளாக இருந்திருக்கலாம் ஆனால் அதை எப்படி உணர்ந்து கொள்வது என்பது தெரியாமலிருக்கலாம், அல்லது தான் லெஸ்பியன் என்று தெரிந்து கொண்டதும் அதை ஒப்புக் கொள்ளப் பயப்பட்டிருக்கலாம். இப்போது பார்பராவின் தயவால் உண்மைகளை ஒப்புக் கொள்ளத் துணிவு வந்திருக்கலாம்’ எமிலி வார்த்தைகளைக் கவனமாகச் சொன்னாள்.
அலிஸன் பார்பராவில் காதல் என்று சொல்வதற்குப் பார்பரா மட்டும்தான் காரணம் என்று டேவிட் பிடிவாதமாக நம்புவதை எமிலியால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை.
“டேவிட் யாரும் இன்னொருத்தரைப் போய் ஹோமோ செக்சுவல்களாகவோ அல்லது லெஸ்பியன்களாகவோ மாற்றுவதில்லை. ஒவ்வொரு மனிதரும் தன்னினச் சேர்க்கையில் ஒரு கொஞ்சமாவது இச்சையுடன்தானிருக்கிறார்கள். அந்த உறவுகளை சினேகிதம்

187 ராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம்
என்றளவில் மறைத்து விட்டுக் கலாச்சாரம், சம்பிரதாயம், மரபுக் கோட்பாடுகளுக்குப் பயந்து கல்யாணங்களுக்குள்த் தங்களைப் பிணைத்துக் கொள்கிறார்கள். உண்மைக்குப் புறம்பாக வாழ்ந்து தொலைக்கிறார்கள். சமுதாயத்துக்காக, சாத்திர கோத்திரங்களுக்காக இன்னொருத்தருடன் தன்னைப் பிணைத்துக் கொண்டு தங்களையுமழித்துக் கொண்டு இன்னொருத்தர் வாழ்க்கையும அழித்துக் கொள்கிறார்கள்’
எமிலி சொல்லி முடித்ததும் டேவிட் கண்கலங்கப் பார்த்தான். அவனைப் பார்க்க மிகவும் பரிதாபமாக இருந்தது. 'ஆண்கள் அழக்கூடாது என்றில்லையே. அழலாம்’ அவள் அன்புடன் சொன்னாள்.
“எமிலி எனக்குப் பைத்தியம் பிடிக்கும் போலிருக்கிறது’
"ஏன் டேவிட் உங்களுக்குப் பைத்தியம் பிடிக்க வேண்டும். ஒருத்தருக்கு ஒருத்தர் பிடிக்காவிட்டால் பிரிந்து போவது கொளரவமான விடயம். பிரிந்து போகும்போது தங்களுக்குப் பிடித்த துணையுடன் சேர்ந்து போவது பாதுகாப்பு என்று நினைப்பது இயற்கையில்லையா'
'எமிலி, அலிஸன் லெஸ்பியன் என்று இப்போதுதான் உணர்ந்து கொண்டாள் என்பதை என்னால் நம்ப முடியாமலிருக்கிறது. அதுவும் இரண்டு குழந்தைக்குத் தாயானபோது.”
அவன் சொல்லி முடிக்க முதல் எமிலி சிரித்தாள்.
“டேவிட் உலகத்தில் எத்தனையோ ஆண்களும் பெண்களும் தங்கள் செக்சுவாலிட்டியை உண்மையாய்த் தெரிந்து கொள்வதில்லை. ஏதோ வாழ்ந்து தொலைக்கிறார்கள், கல்யாணம் செய்கிறார்கள், கட்டிலுக்குப் போகிறார்கள், குழந்தைகளைப் பெற்றுக் கொள்கிறார்கள். தாம்பத்திய சேர்க்கையின் இன்ப நிலை என்னவென்றே தெரியாமல் எத்தனையோ பெண்கள் வாழ்ந்து முடித்து விட்டார்கள். அலிஸன் பார்பராவிடம்தான் இந்த இன்பத்தை அனுபவிக்க

Page 99
வசந்தம் வந்துபோய்விட்டது 38
உணர்ந்து கொண்டாள் என்பதை உங்கள் ஆண்மை ஏற்றுக் கொள்ளத் தயங்குவதை நான் உணர்வேன். ஆனால் இதுதான் யதார்த்தம், உண்மைகள் மிகவும் கசப்பானவை. ஆனால் வாழ்க்கை மூட்டத்தில் அனுபவிக்க வேண்டிய சில உண்மையது” எமிலி சொல்லி முடித்தாள்.
'எமிலி எனக்கு இப்போதுதான் முப்பத்தைந்து வயது: இப்படியா என் வாழ்க்கை குழம்ப வேண்டும்’
'நீங்கள் உங்களைக் குழப்பிக் கொள்கிறீர்கள் டேவிட். நான் மிகவும் கொடூரமாகச் சொல்கிறேன் என்று நினைக்கிறீர்கள். உண்மை என்னவென்பதை உணர்ந்தால் குழம்பிக் கொள்ளத் தேவையில்லை’
டேவிட் எழுந்து கொண்டான். மெளனமாக நடந்தான். அவள் தொடர்ந்து வந்தாள். அவள் சொன்ன விடயங்கள் அவனைத் துன்பப்படுத்தியிருக்கும் என்று தெரியும்.
சாப்பாட்டுக் கடையை விட்டு வெளியேறியதும் அவன் மெளனமாக நடந்து கொண்டேயிருந்தான்.
“என்னில் கோபமா’ அவள் கேட்டாள்.
'உன்னைக் கோபித்து என்ன பிரயோசனம்' அவன் பெருமூச்சுடன் சொன்னான்.
"ஐயாம் சொறி டேவிட். உண்மையாகவே உங்கள் நிலைக்கு மனம் வருந்துகிறேன்’
“என்னில் வருத்தப் பட வேண்டாம் எமிலி' அவன் திரும்பி அவள் முகத்தை ஏறிட்டுப் பார்த்தான். அவன் என்ன கேட்கப் போகிறான் என்று அவளுக்குத் தெரியும்.
“கொஞ்ச நாட்களாக நீ குமாருடன் நெருங்கிப் பழகுகிறாய் 6Tu6)6Sl’’

189 ராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம்
"ஏன் நான் குமாருடன் பழகுவது லண்டன் சட்டப்படி ஏதும் பிழையா’ அவள் கிண்டலாகக் கேட்டாள்,
"என்னிலிருந்து தப்பி ஓடத்தான் குமாருடன் நெருங்கிப் பழகுகிறாயா’
அவள் சிரித்தாள். “டேவிட் எனக்கு இப்போது முப்பத்து மூன்று வயது. குமாருக்கு இருபத்தெட்டு வயது. உங்களுக்குப் பயந்தோ அல்லது தப்பி ஓடுவதற்காகவோ நான் குமாருடன் பழகவில்லை. குமார் ஒரு நல்ல மனிதன். எனது ஆனந்தை ஞாபகப்படுத்தும் ஒரு அழகிய மனம் படைத்தவர், எங்கள் உணர்வுகளைப் பகிர்ந்து கொள்ள ஒரு சந்தர்ப்பம் கிடைத்திருக்கிறது. குமாருடன் பழகுவது ஒரு இனிமையான அனுபவம். அதைப் பற்றித் தயவு செய்து கேள்வி கேட்க வேண்டாம்’.
“எமிலி. டேவிட் தன் நடையை நிறுத்தினான். "என்ன? எமிலி கேட்டாள். "நீ குமாரைக் காதலிக்கிறாயா' எமிலி நீண்ட நேரம் அவனைப் பார்த்தாள், அவள் என்ன சொல்ல வேண்டும் என்று அவன் எதிர்பார்க்கிறான்.
'இப்போது காதலில்லை. ஒரு நாளைக்கு வரலாம் என்று நினைக்கிறேன்’ என்றாள் எமிலி.
13
இப்போது சாந்திக்கும் ராஜனுக்கும் பேச்சுவார்த்தை
கிட்டத்தட்ட நின்று விட்டது. ஒரு பின்னேரம் சாப்பாடு கொடுக்கும்போது ஒரு கடிதமும் கொடுத்தான் ராஜன்.

Page 100
வசந்தம் வந்து போய்விட்டது 90
'நீ என்னுடன் பேசமாட்டேன் என்கிறாய், நான் சொல்ல வேண்டிய எத்தனையோ விடயங்கள் இருக்கின்றன’
தன்னை முறைத்துப் பார்க்கும் சாந்தியைப் பார்த்துச் சொன்னான் ராஜன்,
'நீ உனது ஆங்கிலச் சினேகிதிகளின் பேச்சைக் கேட்டுக் கொண்டு ஆண்கள் எல்லாரையும் திட்டிக் கொண்டிருக்கிறாய், நான் சொல்வதைக் கேட்டு விட்டு நீ எதையும் முடிவு செய்து கொள்’
அவள் மெளனமாய் நின்றாள். அலிஸன் அவளுடைய கணவன் டேவிட்டைத் திட்டி விட்டு பார்பராவுடன் போய்விட்டதைக் கேள்விப் பட்டிருப்பான் போலும்.
'கோபமாய் இருக்கம் போது எல்லாம் குழப்பமாய்த்
தானிருக்கம், சாந்தி தயவு செய்து இந்தக் கடிதங்களைப் படித்துப் பார்’
சாப்பாட்டுப் பார்ஸலுடன் கடிதத்தையும் வைத்து விட்டுச் சென்று விட்டான்.
உடனடியாக வந்த கோபத்தில் அந்தக் கடிதத்தைச் சின்னா பின்னாமாகக் கிழித்து எறிய வேண்டும் போலிருந்தாலும் அவன் பார்வையில் தெரிந்த சோகத்தின் ஆழம் அவளைக் கொஞ்சம் நிதானிக்கப் பண்ணியது.
குழந்தை உஷா இன்னும் அப்படியே அடித்து விட்ட மரம் மாதிரிக் கிடக்கிறாள். அவள் நிலையைப் பற்றியழுவதா அல்லது தனது துயரை நினைத்து அழுவதா என்று தெரியவில்லை.
எமிலி வந்திருந்தாள்,குமாரை உஷாவுடன் இருக்க விட்டு அவர்கள் இருவரும் பக்கத்துப் பார்க்குக்குப் போனார்கள்.
'அலிஸன் பார்பராவுடன் ஒடிப் போனதுக்கு நான்தான் காரணம் என்று திட்டப் போகிறாயா'
எமிலியின் முகத்தில் குறும்பு.

191 ராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம்
சாந்தி முகத்தைத் திருப்பிக் கொண்டாள். “எனக்கென்னவோ உங்கள் கலாச்சாரம் விளங்கமாட்டேன் என்கிறது. கல்யாணம் செய்து இரண்டு குழந்தைக்குத் தாயாகும் வரை அலிஸனுக்கு இருந்த அறிவு எங்கே போய் விட்டது”
சாந்தி அலுத்துக் கொண்டாள். எமிலிக்கும் சாந்தியின் குழப்பத்தைப் பார்க்க வேடிக்கையாயிருந்தது. இயற்கையாகவே மிகவும் சங்கோஜமான பிறவி சாந்தி. இப்போது அலிஸன் பார்பரா என்ற பெண்ணைக் காதலிக்கிறாள் என்பதைத் தெரிந்ததும் அதைப் பற்றி வெளிப்படையாகப் பேசத் தயங்கினாள்,
“என்ன சாந்தி ஒன்றும் புரியாத குழந்தை மாதிரி முகத்தை வைத்துக் கொண்டிருக்கிறாய்? எங்கள் கலாச்சாரத்தில் மட்டுமல்ல எல்லார் கலாச்சாரத்திலும் இப்படியான காதல்கள் இருக்கின்றன. சமயத்தின் பெயரிலும் கலாச்சாரத்தின் பெயரிலும் அதை எல்லாம் மறைத்து வாழ்கிறார்கள். லண்டனில் இதெல்லாம் பெரிய சகஜம், மனிதர்கள் நேர்மையாக வாழப் பழகுகிறார்கள்’
"ஒழுக்கம் ஒன்று கிடையாதா”
'உனக்கு ஒழுக்கமற்றது என்கிற விஷயம் அலிஸனுக்கு ஒழுக்கமாகத் தெரிகிறது. ஒழுக்கமும் பண்பாடும் ஒவ்வொரு தனிமனிதனின் அனுபவத்தையும் அறிவையும் பொறுத்தது.”
சாந்தி பெருமூச்சு விட்டாள்,
தன் கணவரைப் பற்றி இதுவரை எமிலியிடம் எதுவும் சொல்லவில்லை. இப்போது அவன் கொடுத்த கடிதம் கையிற்கணத்தது.
'எமிலி.’ சாந்தி ஏதோ சொல்ல நினைத்தாள், பின்னர் சாந்தி களைப்புடன் சோர்ந்து போய் உட்கார்ந்தாள். ஆகஸ்ட் மாதக் கடைசியில் வெயில் கொழுந்து விட்டெரிந்தது.

Page 101
வசந்தம் வந்து போய் விட்டது 192
'வசந்த காலம் வாட்டி எடுக்கிறது” எமிலி தன் கறுப்புக் கண்ணாடியை மாட்டிக் கொண்டாள்.
இருவரும் கொஞ்ச நேரம் மெளனமாக இருந்தார்கள், "ராஜனுக்கும் உனக்கும் என்ன பிரச்சினை’ எமிலி சாந்தியை உற்றுப் பார்த்துக் கேட்டாள். சாந்தி திடுக்கிட்டு விட்டாள்.
"உனக்கு எப்படித் தெரியும்? எமிலி மெல்லமாகச் சிரித்துக் கொண்டாள். “பூனை கண்ணை மூடிக் கொண்டால் உலகமென்ன இருண்டு விடுமா?
சாந்திக்கு அதன் பின் தன் சோகத்தை அடக்கி வைக்க முடியவில்லை, பகிரங்கமான இடத்தில் உட்கார்ந்திருப்பதையும் மறந்து விம்மி விம்மியழுதாள்.
“எமிலி. என் கணவன் .' சாந்தியால் எப்படித் தொடர்வது என்று தெரியவில்லை.
'யாரோ ஒருத்தி அவனது ஒவ்வீசில் முந்தானை விரிக்கிறாளா” எமிலியின் கண்களில் இன்னும் குறும்பு.
எங்கே தொடர்வது? கொஞ்சம் கொஞ்சமாக ஸேராவைப் பற்றிச் சொன்னாள். பின்னர் ஸேராவுக்கும் ராஜனுக்கும் பிறந்த கிருஷ்ணாவைப் பற்றிச் சொன்னாள்.
இப்போது கணவன் தனது பழைய கதையை விவரித்து எழுதிய கடிதத்தைப் பற்றிச் சொன்னாள்.
“என்ன செய்யப் போகிறாய்? கடிதத்தை வாசிக்காமல் எறியப் போகிறாயா'
சாந்தி மறுமொழி சொல்லவில்லை.
'அலிஸனின் அவசர முடிவு மாதிரி நீயும் ஒடப் போகிறாயா?"

193 ராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம்
எமிலி தன் சினேகிதியின் கையைத் தடவி விட்டாள், அந்த அன்பான ஸ்பரிசம் சாந்தியை இன்னும் அழப் பண்ணியது.
'உணர்ச்சிவசப்பட்டு எதையும் முடிவு செய்யாதே." “எனக்கு உதவி செய்ய யாருண்டு. பெரியண்ணா சங்கர் ராதிகாவின் காலடியில் கிடக்கிறார், சின்ன அண்ணா
எந்தநேரமும் அடியும் குடியுமாகக் குடும்பத்தைப் பயங்கரமாக நடத்துகிறார். தம்பி குமார்.’’ சாந்தி இப்போது எமிலியின்
முகத்தை நிமிர்ந்து பார்த்தாள்.
எமிலிக்குத் தெரியும் சாந்தி என்ன கேள்வி கேட்கப் போகிறாள் என்று.
"என்ன சாந்தி உனது தம்பி குமாருக்கும் எனக்கும் என்ன உறவு என்று கேட்கப் போகிறாயா’
சாந்தி வாயால் கேட்கத் தேவையில்லை. பார்வையில் ஆயிரம் கேள்விகள்.
“என்ன உறவாக இருக்கலாம் என்று நினைக்கிறாய்” சாந்தி மென்று விழுங்கிக் கொண்டாள். எதையும் மேலே கேட்க விரும்பவில்லை.
தமயன் சேகர் எப்படித் துள்ளுவான் என்று அவளுக்குத் தெரியும். சங்கர் பேசாமலிருப்பான்.
"நாங்கள் இதைப் பற்றி விபரமாக ஒரு நாளைக்குப் பேசிக் கொள்வோம்’ எமிலி எழுந்தாள். சாந்தி தொடர்ந்தாள். அவளுக்கு எல்லாமே குழப்பமாக இருந்தது.
ராஜனின் கடிதம் மிகவும் பணிவாக ஆரம்பிக்கப் பட்டிருந்தது. அப்பாவியான சாந்திக்குத் தான் கொடுக்கும் தொல்லைகளுக்கு மன்னிப்புக் கேட்டு ஆரம்பித்திருந்தான்.

Page 102
வசந்தம் வந்து போய் விட்டது 94
அதைத் தொடர்ந்து எப்படிச் ஸேராவைச் சந்தித்தான், உறவு தொடர்ந்தது, காதல் வந்தது, பிரமிளா என்ன நாடகம் ஆடினாள். அவள் செய்த சதியால் ஸேரா அமெரிக்காவுக்கு ஓடிப் போய் விட்டாள். அவன் மனமுடைந்து போய் இரண்டு வருடங்கள் உலகம் வெறுத்துப் போயிருந்தான் என்பதை எல்லாம் எழுதியிருந்தான். \\
"சாந்தி நான் இதெல்லாம் உனக்கு எழுதத் தேவையில்லை. எனது பழைய வாழ்க்கையைப் பற்றி உனக்கென்ன அக்கறை என்று நான் உன்னிடம் கேட்கலாம். அப்படி எல்லாம் முட்டாள்த்தனமாகவோ முன் கோபமாகவோ விசயங்களை நான் எடுத்துக் கொள்வதில்லை. ஸ்ேரா எனது வாழ்க்கையில் ஒரு பகுதியாயிருந்தவள். இப்போது அவள் சரித்திரம். ஆனால் கிருஷ்ணா எனது மகன். பரிசுத்தமான அன்பின் பிரதிபலிப்பு. அந்தப் பாசத்தை நான் மறைத்து வைக்கப் போவதில்லை. பிரமிளா செய்த கொடுமைக்கு அந்தக் குழந்தை ஏன் தண்டனை அனுபவிக்க வேண்டும்? அந்தக் குழந்தைக்கும் தனது தகப்பன் தன்னிடம் அன்பு காட்ட வேண்டும் என்ற ஆசை இருக்குமென்று உனக்குத் தெரியும். இதெல்லாவற்றையும் ஏன் எழுதுகிறேன் என்றால் உன்னிடம் மன்னிப்புக் கேட்க வேண்டும் என்பதற்காக அல்ல. என்னை நீ உணர்ந்து கொள்ள வேண்டும் என்பதற்காகவே. அப்படி என்னை நீ உணர்ந்து கொள்ளத் தயாராகவில்லை என்றால்..?
அவன் அந்த வசனத்தை முடிக்கவில்லை. 'என்னிடம் என்ன எதிர்பார்க்கிறான்? நான் எங்கே போவேன்? எமிலி மாதிரி தனியாக வாழ என்னால் முடியுமா? அலிஸன் மாதிரி யாரிடமாவது ‘உதவி கேட்டு ஓடமுடியுமா?
சாந்தி இரவில் அமர்ந்திருந்து ஆறாக அழுது கொட்டினாள். எமிலி இன்னும் சில நாட்களில் ஹொஸ்பிட்டலை விட்டுப் போய் விடுவாள். அதன் பின் மனம் விட்டுப் பேசக் கூட யாருமில்லை.

195 ராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம்
குழந்தையின் அருகில் அமர்ந்தபடி அழுது கொண்டிருந்தாள். இரவு நகர்ந்து கொண்டிருந்தது. அவளுக்கு நித்திரை வரவில்லை.
உஷாவைப் பார்த்துக் கொள்ளும் நேர்ஸ் அன்புடன் தேனீர் கொண்டு வந்தாள்.
பெற்றோர் அறையில் TV பார்த்துக் கொண்டிருந்த ஒரு தாய் அழுது கொண்டு ஓடி வந்தாள். "நியூஸ் தெரியுமா. இளவரசி டயானாவும் டொடி அல் வையாட்டும் கார் விபத்தில் மரணமடைந்து விட்டார்களாம்’
"ஐயோ’ என்றலறினாள் அடுத்த தாய், நேர்ஸ்மார் எல்லோரையும் ஆறுதல் படுத்தினார்கள், "வாழ்க்கை மிகவும் குறுகியது, நாளை நடப்பதை யாரறிவார்’. அந்த அன்பான நேர்ஸ் சொன்னாள்.
"உனக்கும் அந்த தடிச்ச வெள்ளைக்காரிக்கும் என்ன தொடர்பு' சேகர் தம்பியைப் பார்த்து உறுமினான்.
“எமிலி ஒன்றும் தடிச்சியில்லை. நல்ல அழகான பெண்” குமார் வழக்கம்போல் குறும்புத்தனமாகச் சொன்னான்.
ராதிகாவின் முகத்தில் எள்ளும் கொள்ளும் வெடித்தது. மாலதி வழக்கம்போல் கதவுக்குப் பின்னால் ஒதுங்கி நின்றாள்.
சங்கர் பேசாமல் உட்கார்ந்திருந்தான்.
“என்ன அவன் ஆடிக் கொண்டு திரியிறான் நீங்கள் பேசாமல் இருக்கிறிகள்’ ராதிகா கணவனிற் பாய்ந்து விழுந்தாள்.
“எல்லாம் கடவுள் விட்ட வழி’

Page 103
வசந்தம் வந்துபோய்விட்டது 196
சங்கர் முணுமுணுத்தான், "அவளுக்கு எத்தனை வயது" சேகர் அருவருப்பாகக் கேட்டான்.
"அடக்கி வைக்கத் தேவையில்லாத வயது” குமார் எடுத்தெறிந்து சொன்னான்.
"உன்னை விட அவளுககு வயது கூட."
சேகருக்கு அடுத்ததாக என்ன சொல்லலாம் என்று தெரியவில்லை போலும், கைகளை மேசையில் அடித்துத் தன் கோபத்தைக் காட்டிக் கொண்டான்.
'காலாகாலத்தில் ஒரு கட்டுப் போடாமல் சுதந்திரமாய்த் திரிய விட்டதற்கு இதுவும் வேண்டும் இன்னமும் வேண்டும்’ ராதிகாவின் குரல் உயர்ந்தது.
"ஆடுகளுக்கும் மாடுகளுக்கும் கட்டுப் போடலாம் மனிதர்களுக்குத் தேவையில்லை" குமார் வாதம் செய்தான்.
"இலங்கையில் எத்தனையோ தமிழ்ப் பிள்ளைகள் மாப்பிள்ளை இல்லாமல் ஏங்குதுகள்.” ராதிகா தொடர்ந்தாள்.
"கல்யாணம் இரு மனிதர்களின் அன்பில் வளர்வது." குமார் முடிக்கவில்லை. சேகர் துள்ளி எழுந்தான். 'ஒகோ, பெரிய கல்யாணமும் கட்டுற யோசனையோ . ஏதோ ஆசைக்கு அலையுறாய் என்று பார்த்தால் அவளைக் கல்யாணமும் கட்டிப் புதினம் காட்டப் போகிறாயோ'
"ஏன் கல்யாணம் செய்யக் கூடாது? எமிலிக்குக் கல்யாணங்களில் நம்பிக்கையில்லை, அவளுக்கு என்னைக் கல்யாணம் செய்ய விருப்பமென்றால் அதில் என்ன தர்க்கம் செய்ய வேண்டிக் கிடக்கு”

197 ராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம்
கோர்ட்டில் வாதாடும் குற்றவாளி போல் தன் குடும்பத்துடன் வாதாடிக் கொண்டிருந்தான் குமார்,
"அடக்கி வைத்து வளர்க்காமல் கடைசிச் செல்லப் பிள்ளை என்று செல்லம் கொடுத்தபடியாற்தான் இந்தப் பிரச்சினை எல்லாம்’ ராதிகா கணைகள் மாதிரி வசனங்களை வீசிக் கொண்டிருந்தார்கள்.
"நீங்கள் சங்கர் அண்ணாவை வேண்டுமென்றால் அடக்கி வைத்துக் கொள்ளுங்கள். என்னை என் பாட்டுக்கு விடுங்கள்’ குமார் எரிச்சலுடன் எழுந்து கொண்டான்.
கடந்த சில வாரங்களாக அவன் எமிலியுடன் நெருங்கிப் பழகுவது இவர்களுக்குத் தர்மசங்கடத்தையுண்டாக்கி விட்டது என்று அவனுக்குத் தெரியும்.
அவனுக்கு எமிலியில் 'ஆசை" ஒன்றும் வழிந்து கொண்டவில்லை. அளவிடமுடியாத மரியாதைதான் இருந்தது. அந்த மரிய்ாதைக்குப் பின்னால் அவளிடம் ஒரு "கவர்ச்சி’ அவனுக்கில்லை என்று சொல்ல நினைத்தால் அது பொய்யாகும்.
எமிலி தன் வாழ்க்கையில் இவனுக்குச் சொல்ல வேண்டிய விடயங்களைச் சொல்லி விட்டாள். ஆனந்த் பற்றி அவள் சொல்லும்போது அவனில் இன்னும் எத்தனை அன்பு வைத்திருக்கிறாள் என்பது தெரிந்தது.
இலங்கை, இந்தியப் பெண்கள் தாங்கள் ஒரு காலத்தில் காதலித்த மனிதனைப்பற்றி இப்போது தன்னிற் கவரப் பட்டலையும் ஒருத்தனிடம் இப்படி மனம் விட்டுப் பேசுவார்களா?
டேவிட் பற்றி அவள் சொல்லும் போது அவனின் அரசியற் கொள்கையில், அவனின் கவர்ச்சியான தோற்றத்தில் தனக்கு ஒரு ஈடுபாடு தவிர அவனிடம் தன்னைப் பகிர்ந்து கொள்ளும் எந்த உணர்வுமிருக்கவில்லை என்று நேர்மையாகச் சொன்னாள்.

Page 104
வசந்தம் வந்து போய் விட்டது 198
டேவிட் இப்போதெல்லாம் சோகமாய்த் தெரிகிறான். ஆங்கிலேயர்கள் மிகவும் மனத்துணிவு உள்ளவர்கள் என்று அவன் நினைத்தது மிகவும் பிழை என்று குமார் தெரிந்து கொண்டான். குமாரை ஒரு நாள் டேவிட் ஹொஸ்பிட்டலில் வைத்துச் சந்தித்தான்.
என்ன பேசுவது என்று தெரியவில்லை போலும். குமாரை மேலும் கீழும் ஏறிட்டுப் பார்த்தான்.
குமாருக்குத் தர்ம சங்கடமாக இருந்தது. “பியர் குடிப்பாயா" டேவிட் கேட்டான். "இல்லை’ குமார் தலையாட்டினான். "எமிலிக்குச் சரியான ஆள்தான். அவள் மரக்கறி சாப்பிடுவாள். மது தொட மாட்டாள். இந்தியாவில் வாழ வேண்டியவள் இங்கிலாந்தில் பிறந்து விட்டாள்"
டேவிட்டுக்கு யாரிடமாவது பேச வேண்டும் போலிருந்தது என்பது தெரிந்தது. - "பியர் குடிக்காவிட்டால் என்ன. தோடம்பழத்தண்ணி குடிக்கிறேன்'
இருவரும் பார் ஒன்றுக்குள் நுழைந்தார்கள். "அலிஸன் என்னை விட்டு ஓடிவிட்டாள். எமிலி என்னை வேண்டாமென்கிறாள்." டேவிட் மூன்றாம் பியர் ரின்னை முடித்துவிட்டு உளறினான். "ஆங்கிலேயனுக்குத் தங்கள் பெண்களைத் திருப்திப் படுத்தத் தெரியாது என்று நினைக்கிறாயா" டேவிட்டின் கேள்வி குமாருக்குத் தர்ம சங்கடத்தையுண்டாக்கியது. டேவிட்டுக்கு நல்ல செய்தி.
"அரச குடும்பத்தில் பிறந்த டையானா, கடைக்காரனான அராபுக்காரனுக்கு ஆசைப்பட்டாள், என் மனைவி பெண்

199 ராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம்
ஒருத்தியுடன் இன்பம் காணப் போகிறாளாம். எமிலிக்கோ இந்திய ஆண்களைத்தான் பிடிக்குமாம். இங்கிலிஸ்காரன் என்ன
பிழை செய்தான்’
குமார் மறுமொழி சொல்லவில்லை. "நான் லண்டனை விட்டுப் போகப் போகிறேன்’ டேவிட் குமாருக்குச் சொன்னான். ‘'நீ அதிர்ஷ்டசாலி. எந்தப் பெண்ணையும் எந்த ஆணும் அனுபவிக்கலாம் ஆனால் எமிலி போன்ற இன்ரலிஜன்ட் ஆன பெண்ணை அடைவது." டேவிட்டின் கண்கள் திடீரென பனித்தது.
"You are Lucky to have Emily..... Enjoy her .... treat her nicely... good luck to your future"
டேவிட் சட்டென்று எழுந்தான்.
அதன் பிறகு அவனுக்கு என்ன நடந்தது என்று தெரியாது. தென் அமெரிக்க நாடொன்றுக்குப் போவதாகத் தனக்கு எழுதியதாக எமிலி சொன்னாள்.
“டேவிட்டிலிருந்து தப்பத்தான் என்னுடன் பழகுகிறாயா? குமார் கேட்டான்.
"நான் யாருக்கும் தப்பி வாழத் தயாராயில்லை. எனக்கு என்ன வேண்டும் என்று தெரியும். எப்படி வாழ வேண்டும் என்று தெரியும். என் பாதையில் என்னுடன் நீங்கள் துணைவரத் தயாராயிருந்தால் நான் மிகவும் சந்தோசப்படுவேன்.” எமிலி வழக்கம் போல் தெளிவாகச் சொன்னாள்.
"ஏன் அந்தப் பெண்ணுடன் அலைகிறாய்’ சங்கர் வழக்கம் போல் தனது ஆறுதலான குரலிற் கேட்டான்.
தமயனைப் பார்க்க அவனுக்குப் பரிதாபமாக இருந்தது. ராதிகாவின் வாழ்க்கைக்கு இந்த மனிதன் மாடாக உழைத்துத்

Page 105
வசந்தம் வந்து போய் விட்டது 200
தேய்வதாக அவன் நினைத்தான்.
மற்றவர்களுக்காக வாழ்ந்து முடிக்கும் சில மனிதர்களில்
ஒருத்தன் சங்கர்.
"நான் அந்தப் பெண் எமிலியுடன் அலையவில்லை.
அவளை மிகவும் நெருக்கமாய் நேசிக்கிறேன்’
'இதெல்லாம் மாயை. பருவக் கோளாறு’ சங்கர் முணுமுணுத்தான்.
"மாயைகள் சில வேளை வாழ்க்கைக்கு இன்றியமையாதது.”
"உனக்கு. குழந்தை குட்டிகள் பெற்றுக் கொள்ள வேண்டும் என்ற ஆசையில்லையா” சங்கர் தம்பியின் முகத்தைப் பார்த்துக் கேட்டான்.
"ஏன் எமிலிக்கும் பிள்ளை பிறக்காது என்று நினைக்கிறீர்களா’
"அவளுக்கு உன்னைவிட வயது கூட சங்கர் முகத்தைத் திருப்பிக் கொண்டு சொன்னான்.
'தங்களுக்குத்தேவையாக, அடக்கிக் கொள்ளத் தக்கதாக ஆசைக்குப் பாவித்துக் கொள்வதற்காகத்தான் ஆண்கள் பெண்களை இளமையுடன் எதிர்பார்த்தார்கள், ஒரு தம்பதிகள் சரிசமமாக ஒருத்தரை நினைக்கும்போது இந்த வித்தியாசங்கள் வராது அண்ணா.”
ஆண்களின் இச்சையை அனுபவித்து முடிக்க இளமைப் பெண்கள் தேவைப்படுகிறார்கள். ஆணுக்கும் பெண்ணுக்கும் ஒரு குறிப்பிட்ட வயது வரை குழந்தைகள் பெற்றுக் கொள்ள இயற்கை வசதி செய்து கொடுத்திருக்கிறது. அந்த நியதியின் படி எமிலிக்கு விருப்பமென்றால் இன்னும் பத்துக் குழந்தைகள் பெற்றுக் கொள்வாள். ஆனால் தனக்குள்ள ஒரு மகனுக்குப் பணிவிடை செய்வதில் திருப்தி காண்பவள் அவள். அத்துடன் உலகத்துக் குழந்தைகளை தன் குழந்தைகளாய்ப் பார்ப்பவள்

20 ராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம்
அவள். நீங்கள் பார்க்கும் குறுகிய குடும்ப அமைப்புக்குள் அவளின் அன்பை அடக்கிவிடாதீர்கள். ஆழ்கடல் போல் மிகவும் ஆழமானது அவள் அன்பு' குமார் தமயனுக்கு மேலும் விளக்கம் சொல்ல விரும்பாது நடந்தான்.
எமிலிக்குக் குமாரின் குடும்பத்தினரின் குழப்பம் தெரிந்தது. அவனும் ஆனந்தும் குடும்பம் நடத்த முயன்றிருந்தால் இந்தப் பிரச்சினைகள்தான் வந்திருக்கும்.
கிழக்கும் மேற்கும் காணும் வித்தியாசமான உலகமிது. எல்லாவற்றிற்குமே காரணங்கள் கண்டுபிடிக்க முயலும் கண்ணாமூச்சி விளையாட்டு.
மனித உணர்வுகளுக்கு காரணம் கண்டு பிடிக்க முயன்றால் உலகில் இத்தனை பிரச்சினைகள் வந்திருக்குமா? எமிலிக்கு ராதிகாவின் காழ்ப்புணர்ச்சி விளங்கியது. மாலதியின் தடுமாற்றம் புரிந்தது. சேகரின் வெறுப்பு அவள் எதிர்பார்த்தது. சங்கரின் தத்துவங்கள் காலம் கடந்தது. சாந்தி எமிலியைப் புரிந்து கொண்டாள். அதுவே எமிலிக்குத் தேவை.
பிரமிளாவும் கணவரும் உஷாவைப் பார்க்க லண்டனுக்கு வந்திருந்தார்கள். சாந்தி அப்போதுதான் ராஜனின் கடிதத்தை படித்து முடித்திருந்தாள்.
பிரமிளா சாந்தியின் முகத்தைப் பார்க்காமல் உஷாவின் நிலையை விசாரித்துக் கொண்டிருந்தாள். பிரமிளா ஒரு டொக்டர். அவள் உஷாவின் டொக்டரிடம் நிறையக் கேள்வி கேட்டுக் கொண்டிருந்தாள். பிரமிளாவின் கணவர் வழக்கம் போல் மனைவியின் வார்த்தைகளுக்குத் தலையாட்டிக் கொண்டிருந்தார்.
சாந்தி தன் மைத்துனியை மெளனமாக அளவிட்டாள். இவள்

Page 106
வசந்தம் வந்து போய்விட்டது 202
தலையிடாமலிருந்தால் இன்று கிருஷ்ணா தன் தகப்பன் ராஜனுடன் எவ்வளவு சந்தோசமாக வாழ்ந்து கொண்டிருப்பான்?
பிரமிளாவின் LD866bד இப்போது என்ன செய்து கொண்டிருப்பான்? பிரமிளாவின் மகன் தினேஸ் தன் ‘போய் பிரண்டுடன் தனிக் குடித்தனம் செய்கிறான். பிரமிளாவுக்கு இரண்டு குழந்தைகள். அவளின் மகள் தன்னுடன் பொலிட்டிக்கல் சயன்ஸ் படித்த ஆபிரிக்க இளைஞனைத் திருமணம் செய்து கொண்டதால் தாய் தகப்பனுடனுள்ள உறவு முறிந்து விட்டது.
‘எங்கள் கலாச்சாரத்தின்படி எப்படியும் தங்கள் குழந்தைகளைப் படிப்பிக்க வேண்டும்’ என்று ஓயாமற் சொல்லிக் கொண்டிருந்த பிரமிளாவின் மகள் தங்கள் கலாச்சாரத்துக்குப் புறம்பான ஒருத்தனைச் செய்ததால் தாய் தகப்பன் அவளை ஒதுக்கி வைத்து விட்டார்கள். மகன் தினேஸ் எப்போதும் அம்மா செல்லம். தகப்பனைப் பிடிக்காது. மனைவியிடம் காட்ட முடியாத சண்டித்தனத்தை மகனிடம் காட்டுவார் அவர். இளம் வயதிலிருந்தே ஒரு சங்கோஜப் பிறவியாக வளர்ந்து விட்டான் தினேஷ்.
தினேஷ் வளர்ந்ததும் ஊரிலிருந்து ஒரு நல்ல பெண்ணை எடுத்துக் கல்யாணம் செய்ய பிரமிளா ஒடித் திரிந்தாள். மகள் தங்கள் கலாச்சாரத்திற்கு அப்பால் ஓடிப் போனதுபோல மகனும் ஒடிப் போகக்கூடாது என்று அவள் அங்கலாய்த்தாள்.
"இவனுடன்தான் என் எதிர்காலத்தைச் செலவழிக்கப் போகிறேன்’ என்று தன் சினேகிதனைத் தாய்க்கு அறிமுகம் செய்தபோது இருதயம் நின்று விட்டது போலிருந்தது பிரமிளாவுக்கு.
'இருபத்திரண்டு வயது மகனை என்னவென்று திருத்துவது?"
மனைவியைக் கணவன் திட்ட, கணவனை மனைவி வைய ஒன்றிரண்டு நாட்கள் வீட்டில் மிகவும் நீண்ட களேபரம்.

203 ராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம்
“என்னவென்று என் குடும்பத்தின் முகத்தில் விழிப்பேன்" பிரமிளா ஸ்டெடஸ்கோப்பைச் சுழட்டியபடி அழுதாள்.
"காலம் கெட்டுப் போச்சு இப்படி எல்லாம் ஏன் நடக்கிறது’ அவள் மகனைக் கட்டிக கொண்டழுதாள்.
"அம்மா அன்புக்கு வரையறையில்லை. நான் ஸிரிவனை மிகவும் விரும்புகிறேன். அவனை என் வாழ்க்கைத் துணைவனாக ஏற்றுக் கொள்ளப் போகிறேன். ஆசீர்வாதம் தாருங்கள்’ தினேஷ் நேர்மையுடன் சொன்னான்.
லண்டனில் - இங்கிலாந்தில் ஹோமோசெக்சுவல் பிராக்டிஸ் மிகவும் சாதாரணம். தமிழ்ச் சமுதாயம் இப்போதுதான் எதிர்கொள்கிறது.
லண்டன் gay clubs-ல் சந்தோசம் அனுபவிக்கும் ஆசிய ஆண்களில் 40% கல்யாணமாகிப் பிள்ளை குட்டி வைத்திருப்பவர் என்று அறிக்கைகள் சொல்வதைத் தெரிந்து கொள்ளாத ஆசிய சமூகத்தில் பிரமிளாவும் ஒருத்தி.
தனது குழந்தைகள் தாங்கள் நினைத்தபடி போய் விட்டபடியால் பிரமிளா தங்கள் குடும்பத்தினருடன் எந்த உறவும் வைத்துக் கொள்ளாமல் கொஞ்ச நாள் அஞ்ஞாத வாசம்செய்தாள். ஸ்கொட்லாந்தில் வாழ்வது மிகவும் வசதியாயிருந்தது. லண்டனிற்தான் பெரும்பாலான சினேகிதர்களும் உறவினர்களும் வாழ்கிறார்கள்.
எத்தனையோ வருடங்களின் பின் இன்றுதான் தனது தம்பியின் மகள் உஷாவைப் பார்க்க லண்டனுக்கு வந்திருக்கிறாள்.
'நீ மிகவும் மெலிந்திருக்கிறாய்' பிரமிளா தன் மைத்துணியைப் பார்த்துச் சொன்னாள்.
இவளுக்கு என்ன சொல்வது? நீ துரத்திவிட்ட ஸேரா இன்று என் வாழ்க்கையில் பூதமாய்

Page 107
வசந்தம் வந்துபோய்விட்டது 204 முளைத்திருக்கிறாள். அதுதான் நான் சோகம் தாங்காமல் இளைத்திருக்கிறேன் என்று சொல்வதா அல்லது எனது ஒரே ஒரு மகள் உஷா உயிருக்குப் போராடுகிறாள் அந்தத் துயரில் களைத்து விட்டேன் என்பதா? அல்லது இன்னும் ஒரு குழந்தை என் வயிற்றில் வளர்கிறது அதுதான் சாப்பிட முடியாமல் மெலிந்து விட்டேன் என்ற சொல்வதா?
"ஸேரா லண்டனில் நிற்கிறாள்' தனக்குள் மெல்லிக் கொண்டிருந்த விடயத்தைத் தன் மைத்துணிக்குச் சொன்னாள் சாந்தி.
பிரமிளாவின் முகத்தில் பேயடித்தது போலிருந்தது. அவள் கணவர் பக்கத்துக் கடைக்குப் பேப்பர் வாங்கப் போயிருந்தாள். பிரமிளாவும் சாந்தியும் உஷாவின் கட்டிலுக்கருகில் உட்கார்ந்திருந்தார்கள்.
"அவளுக்கு ஒரு மகன் இருக்கிறான். கிருஷ்ணா என்று பெயராம். ராஜனுக்குப் பிடித்த பெயராம்’ சாந்தியின் குரல் அடைத்தது.
பிரமிளா இந்த இடிகளை எதிர்பார்த்து வரவில்லை. லண்டனில் யாரும் தங்கள் குழந்தைகளைக் கேட்டு தர்ம சங்கடங்களைத் தந்து விடுவார்களோ என்று வந்தவனுக்கு எப்போதோ புதைத்து விட்ட பிணம் தனக்கு முன்னால் எழுந்திருந்து சிரிப்பது போலிருந்தது.
"நான் என்ன செய்வது என்று யோசிக்கிறேன். உழைக்க வசதியிருந்தால் உங்கள் தம்பியை விவாகரத்துச் செய்து விடுவேன், வயிற்றில் ஒரு குழந்தை, கட்டிலில் அரைகுறையாக இன்னொரு குழந்தை. நான் என்ன செய்வேன்? ..." சாந்தி அழுகையை அடக்கிக் கொண்டு சொன்னாள்.

205 ராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம்
14
லண்டன் சோகத்தில் ஆழ்ந்து கிடந்தது. இளவரசி டையானாவின் அகால மரணம் உலகத்தையே மிகவும் அதிர்ச்சிக்கு ஆளாக்கி விட்டிருந்தது. மைல் கணக்கான வரிசையில் மக்கள் காத்து நின்று தங்கள் இளவரசிக்கு மலர்க் கொத்துக்களை அர்ப்பணித்தார்கள்.
‘வாழ்க்கை மிகவும் குறுகியது.அந்த உண்மை தெரியாமல் மனிதர்கள் ஒருத்தரை ஒருத்தர் குரூரமாக நடத்திக் கொண்டிருக்கிறார்கள்."
எமிலி பெருமூச்சுடன் சொன்னாள்.
டேவிட் ஊரை விட்டுப் போன செய்தி அவளை மிகவும் கலக்கியிருந்தது. ·r·
"என்னைக் காணாமலிருந்தால் டேவிட் இன்னும் அலிஸனுடன் சந்தோசமாக வாழ்ந்து கொண்டிருந்திருக்கலா மல்லவா?
எமிலி இந்தக் கேள்வியை எத்தனையோ தரம் கேட்டு விட்டாள்.
"உன்னைக் காணாவிட்டால் வேறு யாரையோ அவன் கண்டிருக்கலாம்’ சாந்தி சினேகிதியைத் தேற்றுவதற்குச் சொன்னாள்.
“டேவிட் மிகவும் பலவீனமான மனிதன்'
எமிலி பரிதாபப்பட்டாள்.
"இங்கிலிஸ்காரர் மிகவும் வலிமையானவர்கள், உலகத்தை ஆண்டவர்கள்’ சாந்தி சொன்னாள்.
"வலிமையற்ற மனிதர்கள், தூரத்தில் நின்றபடி பீரங்கியால் எதிரியை அழித்து வெற்றி கண்டவர்கள். உணர்வுகளை முகம் கொள்ளத் தெரியாதவர்கள் என்பது என் கருத்து” எமிலி விளக்கம்

Page 108
வசந்தம் வந்துபோய்விட்டது 206
கொடுத்தாள்.
"அலிஸன் பார்பராவுடன் போனது டேவிட்டுக்கு அவமானமாக இருந்திருக்க வேண்டும்.”
"ஆண்கள் தங்கள் காதலிகள், மனைவிகள் வேறு யாரையும் பார்த்தால் தங்கள் ஆண்மைக்குச் சவால் என்று நினைக்கிறார்கள். அதிலும் வாட்ட சாட்டமான தன்னை ஒதுக்கி விட்டு பார்பராவுக்குப் பின்னால் அலிஸன் ஓடியது அவனுக்கு அவமானமாக இருந்திருக்க வேண்டும்’
சினேகிதிகள் பேசிக் கொண்டிருக்கும்போது இவர்களை நோக்கி யாரோ வந்தார்கள். மிகவும் எடுப்பான உடையணிந்த ஒரு ஆங்கிலேயப் பெண் உஷாவின் கட்டிலை அணுகி வந்து கொண்டிருந்தாள்.
சாந்தியிடம் நேராக வந்து “எனது பெயர் ஸேரா’ என்றாள்.
எமிலியும் சாந்தியும் ஒருத்தரை ஒருத்தர் பார்த்துக் கொண்டார்கள்.
"உனது குழந்தையை ஒரு தரம் பார்த்து விட்டுப் போகலாம் என்று வந்தேன். அனுமதி தருவாயா'
ஸேராவின் குரல் வீணையை மீட்டுவது போலிருந்தது. அவள் ஒரு ஓவியம் வரையும் பெண் என்று ராஜன் சொல்லக் கேள்விப் பட்டிருக்கிறாள், இந்த அழகிய ஓவியத்தில் இவள் கணவன் மட்டுமல்ல உலகத்தில் அரைவாசி ஆண்களுமே அடிபணிந்திருப்பார்களே! இந்த வீணையை மீட்ட தேவர்கள் விரல்கள் துடித்திருக்குமே, இந்த புன்னகையைக் கண்டு முல்லைகள் வெட்கியிருக்குமே, இந்த நடைகண்டு அன்னம் அஞ்சியிருக்குமே, இவள் இடை கண்ட மின்னல் மனம் புழுங்காதா? இந்தக் குரலுக்கு ஏழு ராகங்களும் ஏவல் செய்யாதா?
இவளையா என் கணவன் காதலித்தான்?

207 ராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம்
இவளுக்கு முன்னால் நான் யார்? இவளுக்குள்ள அழகு, எளிமை, கலைத்தன்மைக்கு முன்னால் நான் யார்?
ஸேராவின் பொன்னிறத் தலை வசந்தக் காற்றில் செல்லம் பண்ணியது.
சாந்தியின் கண்கள் பனித்தன. "பின்னர் சந்திக்கிறேன்” எமிலி நழுவி விட்டாள், சாந்தியின் பிரமை இன்னும் தீரவில்லை.
"நான் நாளைக்கு என் கணவரிடம் போகிறேன். உன்னைச் சந்திக்காமல் போனால் நிம்மதி யாயிருக்காது." எந்த ராகத்தில் இவள் குரல் இயங்குகிறது. இவளின் இந்த இனிய குரலில் தேனா குழைந்திருக்கிறது? "நான் வந்ததற்கு என்னை மன்னித்துக் கொள். ராஜனின் குழந்தை உயிரோடு போராடும்போது என்னால் பார்க்காமல் போக முடியாது. இந்தப் பெண் என் மகனின் தங்கையில்லையா' ஸேரா அமைதியாகக் கேட்டாள்.
சாந்தி கஷ்டப்பட்டுக் கண்ணிரை அடக்கிக் கொண்டாள்.
"உனக்குப் பிடிக்கவிட்டால் நான் போய் விடுகிறேன்’ ஸேராவின் கண்கள் என்ற பொன்வண்டுகள் சாந்தியின் கலங்கிய முகத்தில் வட்டமிட்டன.
"அப்படியில்லை. உங்கள் 6606) நான் எதிர்பார்க்கவில்லை.” சாந்தி தடுமாறினாள்.
ஸேரா உஷாவின் நெற்றியைத் தடவி விட்டாள். "அப்படியே கிருஷ்ணாவின் முகபாவனை உஷாவிடமிருக்கிறது’ ஸேரா கனிவுடன் உஷாவின் முகத்தைத் தடவினாள்.
பின்னர் சாந்தியின் முகத்தை ஏறிட்டுப் பார்த்தாள்.

Page 109
வசந்தம் வந்துபோய்விட்டது 208
"சாந்தி." ஸேரா கொஞ்சம் மெளனம் சாதித்தாள்.
என்ன சொல்ல நினைக்கிறாள்?
இந்த உஷாக் குழந்தை என் வயிற்றில் பிறந்திருக்க வேண்டியவள் என்று சொல்ல நினைக்கிறாளா?
“பிரமிளா வந்திருந்தாள்' சாந்தி தடுமாறிக் கொண்டு
சொன்னாள்.
பிரமிளா செய்த கொடுமைக்கு நான் உன்னிடம் மன்னிப்புக் கேட்கிறேன் என்று சாந்தி சொல்ல நினைக்கிறாளா?
ஸேரா முகத்தைத் தாழ்த்திக் கொண்டு உஷாவைத் தடவி விட்டாள். தனது கண்ணிரை மறைக்கத் தான் அவள் பார்வையைக் குழந்தையில் படரவிடுகிறாள் என்பது தெரிந்தது.
அவளைக் கட்டிக் கொண்டு அழ வேண்டும் போலிருந்தது சாந்திக்கு. இப்படியான ஒரு நல்ல பெண்ணைத் தன் தம்பியின் துணையாக்காமல் பிரமிளா செய்த கொடுமை சாந்தியால் தாங்க" முடியாதிருந்தது.
இவளைத்தானே சாந்தி "எந்தத் தேவடியாளுடன் ஆடினிர்கள்’ என்று ராஜனிடம் கேட்டுச் சண்டை பிடித்தாள்?
"குழந்தைக்குக் கட்டாயம் சுகம் வரும்." Genown குழந்தையைத் தடவி விட்டபடி சொன்னாள். “மூளையதிர்ச்சியால் சிலர் மாதக்கணக்காக "கோமா' (Coma) என்ற நிலையிலிருப்பார்கள். இருந்தாற்போல் ஒரு நாளைக்கு எழும்பி அம்மா என்று உன்னைக் கூப்பிடப் போகிறாள்'
ஸேரா நம்பிக்கையுடன் சொன்னாள்.
“உங்கள் வார்த்தை பலிக்க வேண்டும் ஸேரா" நீர் பனிக்க வசனங்களை உதிர்த்தாள்.
‘ராஜன் ஒரு நல்ல மனிதன். அவர் தெரிந்தெடுத்த நீயும் அவரைப் போலத்தான் இருப்பாய் என்று நம்புகிறேன்.

209 ராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம்
உங்களுக்குக் கடவுள் தேவையில்லாத சோதனைகளைத் தரமாட்டார் என்று நம்புகிறேன்’
G36moym சிரித்தாள்.
வேதனையான சிரிப்பு. சாந்தியின் இடத்தில் தான் இருந்திருக்கலாமே என்ற நப்பாசையின் எதிரொலிப்பா அந்தச் சிரிப்பு?
"பிரமிளா எப்படி இருக்கிறாள்'
பேச்சை மாற்றுவதற்காகவோ என்னவோ ஸேரா திடீரென்று சாந்தியிடம் கேட்டாள்.
எப்படிச் சொல்வது?
தினேஷ் ஒரு ஹோமோசெக்சுவல் என்பதிலிருந்து ஆரம்பிப்பதா? மகள் சீதா ஆபிரிக்க இளைஞனுடன் செம்பாபுவே நாட்டுக்குப் போய்விட்டாள் என்பதைச் சொல்வதா? பிரமிளாவின் கணவர் போத்தலும் கையுமாக இருக்கிறார் என்பதைச் சொல்லலாமா?
'தினேஷ் பற்றி ராஜன் சொன்னார்’
ஸேரா தானே சொன்னாள்.
சாந்தி மெளனம் சாதித்தாள்.
"செக்சுவாலிட்டி ஒவ்வொருத்தரின் தனிப்பட்ட விருப்பு வெறுப்புக்களைப் பொறுத்தது. தாய் தகப்பன் தேவையற்ற பிரச்சினையுண்டாக்கக் கூடாது என்று நினைக்கிறேன்’’.
எத்தனையான பெருந்தன்மையான மனம் இவனுக்கு? அப்போது குமார் வந்து கொண்டிருந்தான்.
ஸேராவை யார் என்று ஊகித்திருப்பான். எமிலிக்குச் சாந்தி எல்லா விடயத்தையும் சொல்லியிருக்கிறாள்.
குமார் "ஹலோ” சொன்னான்

Page 110
வசந்தம் வந்து போய்விட்டது 210
"ஹலோ. நான் ராஜனின் சினேகிதி ஸேரா’ ஸேரா தன்னை அறிமுகம் செய்து கொண்டாள்.
"நான் சாந்தியின் தம்பி’ குமார் கை குலுக்கிக் கொண்டான்.
“உங்களை இவ்விடம் இருக்க விட்டு நாங்கள் ஒரு தரம் கோப்பிக் கடைக்குப் போகலாமா?
குமாரை உஷாவுடன் துணையாக இருக்கவிட்டு ஸேராவும் சாந்தியும் கோப்பிக் கடை நோக்கி நடந்தார்கள்.
"ஏன் ராஜனை வருத்த வேண்டும்’ ஸேரா நடந்த படி கேட்டாள்.
சாந்தி மறுமொழி சொல்லவில்லை.
“பழைய கதைகளைச் சொல்லாத கோபமா?
ஸேரா கேட்டாள்.
சாந்தி இன்னும் பதில் சொல்லவில்லை.
"அவருடன் பேசவே மாட்டேன் என்கிறாயாம்' உரிமையுடன் அவள் ராஜனின் பெயர் சொல்வதைக் கேட்க சாந்திக்கு என்னவோ செய்தது.
"இருவரும் அந்த மனிதனைப் பகிர்ந்து கொண்டவர்கள் ராஜனைப் புரிந்து கொண்டவர்கள்.நீ இப்போது ராஜனைப் பிரிந்து போவது என்று நினைக்கிறாய் என்று கேள்விப் பட்டேன். என்ன செய்யப் போகிறாய்"
சாந்திக்குக் கோபம் வந்தது. ஸ்ேராவில் கோபமா அல்ல ஸேராவிடம் எல்லாவற்றையும் சொல்லும் ராஜனிடமா என்று தெரியாது.
‘என்ன கோபம் வருகிறதா? என்னைத் தவிர ராஜனுக்கு இப்போது நெருக்கமாய் யாருமில்லை’
ஸேரா இப்படிச் சொன்னதும்சாந்தி தன் நடையை நிறுத்தி

211 ராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம்
விட்டுத் திரும்பிப் பார்த்தாள்.
'நெருக்கம் என்பதை வித்தியாசமாய் எடுத்துக் கொள்ளாதே. அவரின் துயர்களைச் சொல்லியழ நான்தான் அகப்பட்டிருக்கிறேன். அதற்குமேலாக ஒன்றும் நெருக்கமில்லை. நான் திருமணமானவள். என் கணவரை மிகவும் அன்பாக நேசிக்கிறேன்.
ஒரு காலத்தில் ராஜனுடன் காதலாய் இருந்தேன் என்பதால் இப்போதும் அப்படியில்லை. என் மகனின் தகப்பன் அவர். அதே நேரம் அமெரிக்காவில் எனக்கு இரு பெண் குழந்தைகளும் கணவருமிருக்கிறார்கள். என் தகப்பனின் மரணச் சடங்குகளுக்காக வந்தேன். உனது கணவரைச் சந்திக்க எந்த ஆசையுமிருக்கவில்லை. அவர் லண்டனில் இருக்கிறார் என்பதே எனக்குத் தெரியாது. பிரமிளா சொன்னபடி அவுஸ்திரேலியாவில் இருப்பதாகத்தான் இன்னும் நினைத்துக் கொண்டிருந்தேன்."
ஸேரா விளக்கமாகச் சொன்னாள்.
சாந்திக்கு விளக்கமாக எதையும் எடுத்துச் சொல்லத் தெரியவில்லை.
ஸேரா சொல்வதெல்லாம் உண்மை என்று தெரிந்தது.
'நாளைக்கு நான் அமெரிக்காவுக்குப் போகிறேன். நீயும் ராஜனும் சந்தோசமாக இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறேன். எனது வருகையால் உங்கள் வாழ்க்கையில் பிரச்சினை வரக்கூடாது என்று பிரார்த்திக்கிறேன். உஷாவின் நிலையில் நீங்கள் இருவரும் உங்கள் ஒன்றுபட்ட அன்பை அந்தக் குழந்தைக்குக் கொடுக்க வேண்டும். ஆத்மீக பலம் மிகவும் வலிமையானது. தாய் தகப்பன் அன்பு எந்தக் குழந்தையின் வளர்ச்சிக்கும் இன்றியமையாதது.”
ஸேரா போய்விட்டாள்.

Page 111
வசந்தம் வந்து போய்விட்டது 212
இளவரசி டையானவுக்கான அழுகை இன்னும் ஓயவில்லை. லண்டனில் மலர்க்குவியல் மலையாகக் குவிந்து கொண்டிருந்தது.
ஸேரா வந்து போன அன்றிரவு நேர்ஸஸ் டையானாவின் தொண்டு பற்றிப் பேசினார்கள். அவளின் நேர்மை பற்றிப் பேசினார்கள். ‘சில பெண்கள் தூய்மையுடன் தொண்டில் ஈடுபடுவதனாற்தான் உலகம் இன்னும் நின்று பிடிக்கிறது. இல்லாவிட்டால் இந்த உலகம் எப்போதோ சிதறி வெடித்திருக்கும்’ ஒரு நேர்ஸ் சொன்னாள்.
சில பெண்கள் தூய்மையான உணர்வுடன் வாழ்கிறார்கள் என்பதற்கு எமிலி, ஸேரா என்போர் உதாரணம் என்று நினைத்துக் கொண்டாள் சாந்தி.
அன்றிரவு குழந்தையைப் பார்த்துக் கொண்டு எதையோ வெல்லாம் யோசித்துக் கொண்டிருந்தாள். அடுத்தநாள் இளவரசி டையானவைப் புதைப்பதற்கான ஏற்பாடுகள் நடந்து கொண்டிருந்தன. அழகு மலர் கருகிவிட்டது, ஓவியம் கலைந்து விட்டது, கவிதை அழிந்து விட்டது, பெண்மை பிணமாகி விட்டது.
பஞ்ச வர்ணக்கிளி பேச்சிழந்து விட்டது. ஆடும் மயில் நொண்டியாகி விட்டது. பாடும் குயில் குரலிழந்து விட்டது. கவிதை சொனன கண்கள் மண்ணில் புதையப் போகிறது. டையானவுக்காக உலகமே அழுதது.
ஆகஸ்ட் மாதம் முடிந்து செப்ரம்பர் தொடங்கிவிட்டது. 97ம் ஆண்டின் வசந்த காலத்தின் பெரும்பகுதியை சாந்தி ஹொஸ்பிட்டலிலேயே முடித்து விட்டாள்?
வயிற்றில் வளரும் குழந்தையால் வாந்தியும் குமட்டலும் தலைச்சுற்றும் தாங்க முடியாதிருந்தது.
அன்றிரவு உஷாவின் முகத்தையே பார்த்துக் கொண்டிருந்தாள். சாந்தியின் பிரமையோ என்னவோ உஷாவின்

23 ராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம்
கைகள் அசைவது போலிருந்தது. இத்தனை நாட்களும் ஒரு அசைவுமின்றி இருந்த உடல் அசைந்தது.
"நேர்ஸ்’ சாந்தி சந்தோசத்தில் நேர்ஸ் ஒருத்தியைக் கூப்பிட்டாள்.
நேர்ஸ் வந்தாள். அவள் முகத்தில் சந்தோசம். அன்றிரவு டியூட்டியாய் இருந்த டொக்டர் உஷாவைப் பரிசோதித்தார்.
உஷாவின் நிலை சீராகிக் கொண்டு வருவதாகவும் மெஷின் இல்லாமல் உஷா சுவாசிக்க முடியும் என்றும் சொன்னார்.
அன்றிரவு சாந்தி நித்திரையின்றி எத்தனையோ யோசனைகளால் குழம்பிப் போயிருந்தாள்.
ஸேரா வந்து போனது இன்னும் கனவு போலிருக்கிறது. அவள் வந்ததும் குழந்தை சுகமாக வருவாள் என்று சொன்னதும் ஏதோ கடவுள் வாழ்த்துப் போலிருக்கிறது.
தன்னைச் ஸேரா எப்படிக் காப்பாற்றினாள் என்று ராஜன் எழுதியிருந்தான். அவனை இப்போது நம்பினால் ஸேரா ஒரு நல்ல பெண். ஆத்மீகமாக மற்றவர்களை நேசிப்பவள். அவள் வந்ததும் உஷாவின் நிலை சீரடைவதும் ஏதோ தற்செயலான செயலாக இருந்தாலும் ஏதோ தெய்வ அனுக்கிரகம் என்று நம்பினாள் சாந்தி.
தமயன் குடும்பம் வந்திருந்தது. அவர்களுக்குச் ஸேராவைப் பற்றித் தெரியுமா?
குமார் சொலலியிருப்பானா?
அவை பற்றி அவள் சிந்திக்கவில்லை.
ராதிகா எப்போதும் போல் பட்டும் நகையும் பூண்ட கப்பல் போல் வந்திறங்கினாள்.
மாலதி கணவனுக்குப் பின்னால் ஏதோ ஒரு கொத்தடிமையாய்க் குறுகிக் கொண்டிருந்தாள்.

Page 112
வசந்தம் வந்து போய்விட்டது 24
எல்லோரையும் ஒருநாடகம் பார்ப்பது போற் பார்த்தாள் சாந்தி. இவர்களோடு ஒப்பிடும்போது என் வாழ்க்கை எவ்வளவு வித்தியாசமானது?
டேவிட், சங்கர், சேகர், குமார், ராஜன் எல்லோரையும் பற்றி ஒரு கொஞ்ச நேரம் சிந்தித்தாள் சாந்தி.
டேவிட், சங்கர் இருவரும் பரிதாபத்துக் குரியவர்கள். எப்படியோ வாழ நினைத்து எதுவுமேயற்று நிற்பவர்கள்.
குமாரை நினைத்ததும் அவள் முகத்தில் ஒரு குறும்பு சிரிப்புத் தவழ்ந்தது. எமிலியும் குமாரும் எதிர்கால மனிதர்கள். நிகழ்காலப் பரிமாணத்தில் தங்களுக்குத் தேவையானவற்றைத் தெரிந்தெடுப்பவர்கள், இறந்த காலத்தின் குப்பைகளைப் பற்றி அக்கறைப்படாதவர்கள். நியாயத்தில், நேர்மையில் நம்பிக்கை கொண்டவர்கள், வாழ்க்கையை ரசிப்பவர்கள்.
'அம்மா’ யார் கூப்பிடுவது? சாந்தி திடுக்கிட்டு எழுந்தாள். உஷா மெல்லமாய் முனகினாள்.
சாந்தி மகளை ஆற்றிக் கொண்டாள். வசந்த காலம் முழுதும் வாடிய நாராய்க் கிடந்த அவள் குழந்தை 'அம்மா’ என்று சொன்னது ஒரு அற்புதக் குரலாகக் கேட்டது.
ராஜன் வந்தான். மனைவியையும் மகளையும் ஏறிட்டுப் பார்த்தான். குழந்தை கலக்கத்தில் தகப்பனின் கைகளைப் பற்றிக் கொண்டது.
அவன் ஒரு கையால் மனைவியை அழைத்துக் கொண்டு மற்றக் கையால் மகளை அள்ளி எடுத்தான்.
இவனின் அணைப்பில் ஸேராவும் கிருஷ்ணாவும் இருக்க வேண்டியவர்கள் என்ற நினைப்பு சாந்தியின் மனத்தில் வந்தோடியது.

215 ராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம்
வெளியில் வசந்த மலர்கள் வாடத் தொடங்கி விட்டன. இயற்கையின் நியதியில் அடுத்த பருவகாலம் வரப் போகிறது.
கணவனின் அன்பில் கட்டுண்டு தவித்தாள் சாந்தி.
‘சாந்தி, நாளைக்கு கிருஷ்ணாவைக் கூட்டிக் கொண்டு வரட்டுமா’ அவன் அவள் பதிலை எதிர்பார்த்தான்.
அவன் அவளின் உலகம். அந்த உலகின் அரசி அவள். சம்மதத்துடன் அவன் மார்பில் தலைசாய்த்தாள் சாந்தி.
☆

Page 113
ஆசிரியரின் பிற நூல்கள்
நாவல்கள்:
பனிபெய்யும் இரவுகள் தேம்ஸ் நதிக்கரையில் தில்லையாற்றங்கரையில் ஒரு கோடை விடுமுறை
உலகமெல்லாம் வியாபாரிகள்
சிறுகதைத் தொகுதிகள்:
அம்மா என்றொரு பெண்
நாளைக்கு இன்னொருத்தன்


Page 114
துறையில் பி.ஏ., சிறப்புப்
பெண்மணி; சுகாதார பணிபுரிகிறார்.
சமூக சேவையிலும் இராஜேஸ்வரி தமிழ் அகதிக அணி ஆகியவற்றின் தலைவி
தேம்ஸ் நதிக்கரையில், ! தில்லையாற்றங்கரையில், ஒ பெய்யும் இரவுகள் ஆகிய நா6 புகழ்பெற்றவை.
இந் நாவல் அன்னாரை
a
 

※
த மி பூழி லு ம் ஆ ங் கி லத் தி லும் நாவல், சிறுகதை, க ட் டு  ைர க ள் எ மு தி வ ரு ம் இ ரா ஜே ஸ் வ ரி இலங்கை கிழக்கு ம ட் ட க் க ள ப் பு மாவட்டம் சார்ந்த (ό 5 Π. ΘΤ π. வில் கி ர |ா ம த்  ைத ச் சேர்ந்தவர். கடந்த இருபத் தேழு வ ரு ட ங் க ள |ா க இலண்டன் மாநகரில் வ (ா ழ் ப வ ர் . மருத்து வ யி ய லில் எம். ஏ., பட்டமும் தி  ைர ப் ப ட த்
பட்டமும் பெற்ற முதல் தமிழ் அதிகாரியாக இலண்டனில்
ஆர்வமாக உழைக்கும்
5ள் நிறுவனங்கள், தமிழ் மகளிர் யாகவும் உள்ளார்.
உலகமெல்லாம் வியாபாரிகள்,
ஒரு கோடை விடுமுறை, பனி
வல்கள் ஏற்கெனவே வெளிவந்து
மேலும் அறிமுகப்படுத்தும்.