கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: ஆன்மிக வாழ்க்கைக்கான வழிகாட்டுதல்கள்

Page 1


Page 2


Page 3

ஆன்மிகவாழ்க்கைக்கான வழிகாட்டுதல்கள்
ஆங்கில மூலம்: சுவாமி கோகுலானந்தா தமிழாக்கம்: பெ.சு.மணி
ராமகிருஷ்ணா மிஷன் ராமகிருஷ்ணா சாலை, கொழும்பு - 6.

Page 4
முதற் பதிப்பு : செப்டம்பர் 1997
வெளியிடுவோர். ராமகிருஷ்ணா மிஷன்?
40, ராமகிருஷ்ணா சாலை, கொழும்பு-6. பூரீலங்கா.
விலை : ரூ. 60/- (பூரீலங்காவில்)
ரூ. 30/- (இந்தியாவில்)
ஒளி அச்சுக்கோர்வை வள்ளி லேசர் கிராபிக்ஸ் 293/1, அண்ணா சாலை, தேனாம்பேட்டை, சென்னை-18, தொ.பேசி:455564/458665.
அச்சிட்டோர்:- நடராஜ் ஆப்செட் பிரஸ் 28, முத்து காளத்தி தெரு திருவல்லிக்கேணி சென்னை-600 005. போன் - 8570188/8570284

This Book is Dedicated with Profound Reverence
and Deep Humility
tΟ
His Holiness
SRIMAT SWAMI VIRAJANANDAJI MAHARAJ The Sixth President of The Ramakrishna Math and the Ramakrishna Mission.
- Swami Gokulamanda

Page 5
இராமகிருஷ்ணா மடம், இராமகிருஷ்ணா மிஷனின் ஆறாவது தலைவரான தவத்திரு புரீமத் சுவாமி விரஜானந்தாஜி மகராஜ் அவர்களுக்கு நெஞ்சார்ந்த வணக்கத்துடனும், ஆழ்ந்த பணிவுடனும் இந்நூல்
காணிக்கையாக்கப்படுகின்றது.
- சுவாமி கோகுலானந்தர்
 
 

பொருளடக்கம் ത്ത
முன்னுரை: சுவாமி தபஸ்யானந்தா
(ஆங்கில மூலத்தின் தமிழாக்கம்) s: seumb கோகுலானந்தர்
(ஆங்கில மூலத்தின் தமிழாக்கம்) முன்னுரை: சுவாமி கோகுலானந்தர்
(தமிழ் நூலிற்கான முன்னுரை) பதிப்புரை: seAJTIS ஆத்மகனாநந்தர் மொழிபெயர்த்தோன்
குறிப்புரை: பெசுமணி
ஆன்மிக வாழ்க்கையில் தடங்கல்கள்
sitsa வாழ்க்கைக்குரிய சாதனங்கள் விவேகம், வைராக்கியம், ஷட்சம்பத்தி, முமுக்ஷத்வம் ജൂstട്ടങ്ങ് ഗ്രഞ്ഞ
്വgഞ്ഞ866് கட்டுப்படுத்துவது எப்படி? அஹங்காரத்தை ஒழிப்பது எப்படி?
. தேகம் - மனத்தின் தூய்மைப்பாடு
சுயக்கட்டுப்பாடே, ஆத்மஞானத்திற்கு திறவுகோல் மேலைநாட்டு ஞானிகள் காட்டிய பாதை
11.
கடவுளுடன் இயைந்த arásos
O
13
41
62
75
92
O8
2O
137
156
173
195

Page 6
முன்னுரை
(ஆங்கில நூலிற்கு எழுதப் பெற்ற முன்னுரையின் தமிழாக்கம்.)
இக்காலத்தில் ஏராளமான நூல்கள் வெளிவந்துக் கொண்டிருக்கின்றன. இவற்றுள் சிலவே அறிவு புகட்டுவன. இவற்றுள் மிகச் சிலவே மனவெழுச்சியூட்டுவன. சுவாமி கோகுலானந்தாவின் பதினொன்று சொற்பொழிவுகளைக் கொண்டுள்ள இந்தத் தொகுப்பு அறிவு புகட்டுவதாகவும் மனவெழுச்சியூட்டுவதாகவும் அமைந்துள்ளதைக் காணலாம்.
'பரவித்யை எனப்படும் ஆன்மிக அறிவை இந்நூல் அளிக்கின்றது. இந்த நூல் நுவலும் பொருளை, 'ஆன்மிக வாழ்க்கைக்கான வழிகாட்டுதல்கள்' என்று நூலாசிரியர் குறிப்பிடுகின்றார். உடல் உணர்வில் இருந்து விடுபடுவதே ஆன்மிக வாழ்க்கையின் குறிக்கோள். இது, பக்தி இலக்கியத்தில் "மோட்சம்' என்று கூறப்படுகின்றது. இந்த "மோட்சத்தை அடைவதற்கு ஒரு சாதகன் மேற்கொள்ள வேண்டிய பலவித சாதனைகளே "வழிகாட்டுதல்களாகும்."
இவ்விஷயத்தைப் பலர் தத்துவரீதியில் அணுகுவர்; ஆனால்,
பலருக்கு தத்துவம் என்றால் வெறும் வறட்டுத் தத்துவமாகி விடுகிறது. ஆயினும் இவ்வறட்சியைத் தவிர்க்க மனவெழுச்சி பெறத்தக்க அளவில் விளக்கும் பொழுது, ஓர் ஆன்மிக சாதகனுக்கு அது அறிவார்ந்த ஆன்மிக அமுதபானமாக இன்சுவை தருகின்றது.
சுவாமி கோகுலானந்தாவின் பதினொன்று சொற்பொழிவுகளைக் கொண்டுள்ள இந்நூல் முற்கூறிய தேவைகளை நிறைவு செய்கிறது. இது, கற்பிக்கின்றது, எழுச்சியூட்டுகின்றது.

7
இந்தப் பேருரைகள் பெரும்பாலும் விவேக சூடாமணி மற்றும் பகவத்கீதையில் இருந்து எடுத்துக்காட்டப்படும் மேற்கோள்களை ஆதாரமாகக் கொண்டுள்ளன. விவேக சூடாமணி, ஞானமார்க்கத்தின் மூலமாகவும், பகவத்கீதை பக்திமார்க்கத்தின் மூலமாகவும் உடல் உணர்வைக் கடந்து மேலே செல்வதற்கு சாதகனைத் தூண்டுகிறது. இந்த ஆன்மிக போதனைகளை விளக்குமிடங்களில் மேலைநாட்டுப் பல ஞானிகள் போதனைகளையும் இணைத்திருப்பது இந்நூலில் தனிச்சிறப்பாகும். நூலாசிரியன் குருநாதரான சுவாமி விரஜானந்தாஜி அவர்களுடைய போதனைகளில் இருந்தும் ஆங்காங்கே மேற்கோள்கள் காட்டப்பட்டுள்ளன. இந்நூல் அவருடைய குருநாதருக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. எழுச்சியூட்டும் சொற்பொழிவுகள் ஆற்றும் வல்லமையை சுவாமி கோகுலானந்தா அவருடைய குருவின் அருளால் பெற்றுள்ளார். தில்லி மாநகரத்தில் இவருடைய சொற்பொழிவுகளைக் கேட்டோர் பயன் பெற்றது போல் தற்சமயம் இந்நூல் காரணமாக ஆங்கிலமறிந்த வாசகர்களும் பயன்பெறுவார்கள்.
yToá566TIVITIT LDLub
Glasirsобот, 20.7.90.

Page 7
8
முகவுரை
(ஆங்கிலப் பதிப்பிற்கு எழுதப் பெற்றதின் தமிழாக்கம்.) பக்தர்கள் பலரது வேண்டுகோளுக்கு இணங்க 1989-ஆம் ஆண்டில் நான் 'ஆன்மிக வாழ்க்கைக்கான வழிகாட்டுதல்கள்" எனும் தலைப்பில் தொடர் சொற்பொழிவுகளாற்றினேன். பலர் சொற்பொழிவுகளை குறிப்பெடுத்துக் கொண்டனர். ஒலிப்பதிவு நாடாவிலும் இவை பதிவு செய்யப் பெற்றன. தகவல்கள் அறிய சான்றாதரவு நூலாகமட்டுமல்லாமல், சொற்பொழிவுகளை நேரில் கேட்காதவர்களுக்கும் பயன் தரும் வகையில் நூலாக வெளிவர வேண்டும் என பக்தர்கள் பலர் விரும்பியதால் இந்த நூல் வெளிவருகின்றது. சொற்பொழிவு நாடாவை ஒட்டியே நூலின் நடையும் அமைந்துள்ளது. ஆயினும், நூலிற்குரிய நடை பொருந்த போதுமான மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. உயர்ந்த குறிக்கோளாகிய வீடுபேறு நிலைய அடைய உண்மையாகப் பாடுபடும் சாதகர்களுக்கு இந்நூல் சிறிதேனும் உதவியது என்பது நிரூபணமானால், அதை எனக்குக் கிடைத்த வெகுமதியாக நான் கருதுவேன்.
என்னுடைய எளிய இம்முயற்சியை வாழ்த்தி. இந்நூலின் மதிப்பை பெருமளவில் உயர்த்தும் வண்ணம் அன்பார்ந்த முன்னுரையொன்றை வழங்கியருளிய சென்னை ராமகிருஷ்ண மடத்தின் தலைவர், வணக்கத்திற்குரிய சுவாமி தபஸ்யானந்தாஜி மகராஜ் அவர்களுக்கு நெஞ்சார்ந்த என் நன்றியறிதலைத் தெரிவித்துக் கொள்கிறேன். அவ்வாறே இந்நூலை வெளிக் கொணர்ந்த சென்னை ராமகிருஷ்ணா மடத்திற்கும் என்நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். இறுதியாக இந்நூல் வெளிவர பலவழிகளில் உதவி செய்த ஒவ்வொருவருக்கும் நெஞ்சார்ந்த என் நன்றி உரியது. அவர்கள் அனைவருக்கும் ஆசிகள் பூரணமாக அமைவதற்கு உளமாரப் பிரார்த்திக்கிறேன்.
சுவாமி கோகுலானந்தர்
Rodosio TT குருபூர்ணிமா:ஜூலை 7, 19
தில்லி.
 

தமிழ் நூலிற்கு முன்னுரை
“ஆன்மிக வாழ்க்கைக்கான வழிகாட்டுதல்கள்' (Some Guidelines towards the Goal Supreme) 6Tgib 6T6Tgj6DLugdi) (p56Sld) சென்னை ராமகிருஷ்ண மடத்தின் வெளியீடாக 1990-இல் வெளி வந்தது. அதே ஆண்டின் இறுதியில் இரண்டாவது பதிப்பும் வெளிவந்தது. இந்த நூலைப் படித்தவர்கள். இந்நூலின் தமிழாக்கம் வெளிவந்தால் தமிழ்மட்டுமே அறிந்தவர்களுக்கு பயன்தரும் என்று தங்கள் விருப்பத்தை வெளியிட்டார்கள். எனவே, இந்நூல் கொழும்பு ராமகிருஷ்ண மிஷனின் பதிப்பாக இப்பொழுது வெளிவருகின்றது.
ராமகிருஷ்ண மிஷனில் மந்திர தீட்சை பெற்றவரும், பூரீராமகிருஷ்ணர் பக்தரும், பல நூல்களை எழுதியவரும், ஆய்வாளருமான திரு. பெ.சு.மணி இந்நூலை தமிழில் மொழிபெயர்த்துள்ளார். தமிழ்நாடு அரசின் முதல் பரிசு பெற்ற 'இராமகிருஷ்ணர் இயக்கமும் தமிழ்நாடும்' எனும் திரு. பெ.சு.மணியின் நூலும் வேறுசில நூல்களும் பூரீராமகிருஷ்ண - விவேகானந்த இலக்கியத்திற்கு தமிழில் கிடைத்தது குறிப்பிடத்தக்க வரவுகளாகும். இந்நூலை மொழிபெயர்த்துதவிய அவருக்கு நன்றி கூறுகிறேன். பகவான் பூரீராமகிருஷ்ண பரமஹம்சரின் அருளாசிகள் அவருக்கு என்றென்றும் அமைய
வாழ்த்துகின்றேன்.
தமிழ் மக்கள் இந்நூலின் வாயிலாக ஆன்மிக வாழ்க்கையின் உயர்ந்த குறிக்கோள்களைப் புரிந்துக் கொள்வார்கள் என்று நம்புகின்றேன்.
a சுவாமி கோகுலானந்தர் பூநீராமகிருஷ்ணா மிஷன் புதுதில்லி,

Page 8
1Ο
பதிப்புரை
பூரீமத் சுவாமி கோகுலானந்தாஜி மகராஜ் அவர்கள் sobriléìaoš9ảo GrQọậu Some Guidelines Towards the Goal Supreme’ என்னும் நூலின் தமிழாக்கத்தை "ஆன்மிக வாழ்க்கைக்கான, வழிகாட்டுதல்கள்' என்னும் பெயரில் வெளியிடுவதில் பெருமகிழ்ச்சியடைகிறோம். இந்நூலை வெளியிட அனுமதியளித்த சுவாமியவர்களுக்கு எமது நன்றியைக் காணிக்கையாக்குகிறோம்.
இந்நூலின் மொழிபெயர்ப்பாளர் திரு. பெ.சு.மணி அவர்களைத் தமிழ் கூறும் நல்லுலகம் நன்றாகவே அறியும். அன்பும், அறிவும் ஒருங்கமையப் பெற்ற இவர் ஏற்கனவே பல நூல்களை எழுதியுள்ளார். இவரது மூன்று நூல்கள் தமிழக அரசின் விருதைப் பெற்றுள்ளன என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. இந்நூலைச் சிறந்த முறையில் மொழிபெயர்த்துத் தந்துள்ள திரு. பெ.சு.மணி அவர்களுக்கு நன்றி கூறுவதோடு, இறைவனது அருள் அவருக்குப் பூரணமாக அமையவும் பிரார்த்திக்கிறோம்.
ஆன்மிக வாழ்க்கை பல இடையூறுகளையும், சவால்களையும் கொண்டது. அவற்றையெல்லாம் எதிர்நீச்சலிட்டுக்கடந்து செல்ல சரியான வழிகாட்டுதல்கள் அவசியம் என்பதில் ஐயமில்லை. எனவே ஆன்மிக சாதகர்களுக்கு இந்நூல் ஒரு சிறந்த கைவிளக்காக வழிகாட்டும் எனத் திடமாக நம்புகிறோம். e ாநந்தர்
பதிப்பாளர்
 

11
மொழிபெயர்த்தோன் குறிப்புரை
"Some Guidelines towards the Goal Supreme" எனும்
ஆங்கில நூலின் தலைப்பை தமிழில் "ஆன்மிக வாழ்க்கைக்கான வழிகாட்டுதல்கள்' என அமைத்துக் கொண்டேன். இத்தலைப்பு நூலின் நோக்கத்திற்கும், போக்கிற்கும் ஏற்பவே அமைந்துள்ளது. Goal Supreme என்பது சாதகர்கள் அடையவேண்டிய பரநிலையாகும்.
இந்தி, வங்காளி, தெலுங்கு, ஸ்பானிஷ் மொழிகளில் வெளிவந்துள்ள இந்நூல் தமிழிலும் வெளிவருவது, தமிழறிந்தவர்களுக்குக் கிடைத்த பெரும்பேறு என்று நம்புகின்றேன். ஆன்மிக இலக்கியப் படைப்பில் தமிழ்மொழிக்கு வளமான நெடிய பாரம்பர்யம் உண்டு. இந்தப் பாரம்பர்யத்தை மேலும் முன்னெடுத்துச் செல்லும் இந்நூல் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நூலில் உள்ள சமஸ்கிருத சுலோகங்களும், பதவுரைகளும், அமரர் அண்ணா என்.சுப்பிரமணிய ஐயரின் "பூரீமத் பகவத்கீதை', 'விவேக சூடாமணி' எனும் நூல்களில் இருந்து எடுத்தாளப்பட்டுள்ளன என்பதை நன்றியறிதலுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.
தில்லியில் உள்ள என் மூத்தமகள் விஜயலட்சுமியும், அவர் கணவர் கணபதி சுப்பிரமணியமும் இந்நூல் தோற்றத்திற்கு வழிவகுத்தனர். சுவாமி கோகுலானந்தாவிடம் என்னை அறிமுகம் செய்த பொழுதுதான், இந்நூலின் தமிழாக்கம் பற்றிய முடிவு ஏற்பட்டது. தில்லியில் தங்க வைத்து மொழிபெயர்ப்பை முடித்துக் கொடுத்தபிறகே என்னை சென்னை திரும்ப அனுமதித்தனர் மகளும், மாப்பிள்ளையும்.

Page 9
12
"நூற்றாண்டு விழாக்காணும் சுவாமி விவேகானந்தர் சொற்பொழிவுகள்', 'இலங்கையில் இராமகிருஷ்ணர் இயக்கம்" எனும் என் இருநூல்களைத் தொடர்ந்து இந்நூல் கொழும்பு இராமகிருஷ்ணா மிஷன் சார்பில் வெளிவருகின்றது.இவ்வகையில் அரிய வாய்ப்பை அளித்த சுவாமி கோகுலானந்தாவிற்கும், சுவாமி ஆத்மகனாநந்தாவிற்கும் (கொழும்பு இராமகிருஷ்ணா மிஷன்) என் பணிவார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
இந்நூலில் தமிழக ஞானிகள், கவிஞர்கள் கூறியவற்றில் இருந்து சில மேற்கோள்கள் மூல நூலாசிரியரின் முன் அனுமதியோடு எடுத்தாளப்பட்டுள்ளன. இவை நூல் நுவலும் பொருளுடன் தொடர்புடையன. சென்னை ராமகிருஷ்ணா மடம் சுவாமி விமூர்த்தானந்தா அவர்களும் 'பூங்கொடி பதிப்பகம்’ உரிமையாளர் வே.சுப்பையா அவர்களும் இந்நூலின் உருவாக்கத்திற்கு செய்த உதவிக்குநன்றிகூறுகின்றேன். மேலட்டை வடிவமைப்பு செய்து கொடுத்த பி.சந்திரன், கணிப்பொறி அச்சுக்கோர்வை செய்த "வள்ளி லேசர் கிராபிக்ஸ்"க்கும் எம் நன்றி உரியது.
11, இராமகிருஷ்ணபுரம், 2-வது தெரு, பெ.சு.மணி மேற்கு மாம்பலம், சென்னை-600 033,

உள்ளிருந்து எழும் ஆன்ம அழைப்பு Op 13
உள்ளிருந்து எழும் ஆன்ம் அழைப்பு
பக்தர்களில் மிகுதியானோர், இராமகிருஷ்ண மடத்தில் மந்திர தீட்சை பெற்ற சீடர்களாக இருக்கின்றனர். "நாங்கள் மந்திர தீட்சை பெற்றிருந்தாலும், ஆன்மிகப் பாதையில் எவ்வித முன்னேற்றத்தையும் காணாமல் இருப்பதேன்' என்று அவர்கள் அடிக்கடி ஒரு கேள்வியை எழுப்புவார்கள். இந்த கேள்விக்குரியப் பதிலையும் சுட்டிக்காட்ட வேண்டும். முதலில் ஒருவருக்கு அவரது குறிக்கோளின் மீது மனப்பூர்வமான ஆர்வம் இருத்தல் அவசியமாகும். உயர்ந்த குறிக்கோளையும் தேர்வுசெய்ய வேண்டும்.
நம்மில் பலருக்கு சில உலகியல் வேட்கைகளை நிறைவேற்றிக் கொள்வதே குறிக்கோளாக அமைந்து விடுகின்றது. பலர், டாக்டர்களாக, என்ஜினியர்களாக, நிர்வாக அதிகாரிகளாக, வியாபாரப் பெரும் புள்ளிகளாக இருக்க வேண்டும் என்பதை குறிக்கோளாகக் கருதுகின்றனர். ஆனால் உயர்ந்த குறிக்கோள் என்பதொன்று உண்டு. அதுதான் ஆத்மபோதம் பெறுதல் என்பதாகும். நம்முள் உறைந்திருக்கும் கடவுட்தன்மையை பல்வேறு ஆன்மிக முயற்சிகளால் வெளிக்கொணர வேண்டும்.
தமிழகம் தந்த மகாகவி சுப்பிரமணிய பாரதியார் தெளிவு' எனும் ஆன்மிகக் கவிதையில் ஆத்ம போதம் பற்றியத் தெளிவை இசைத்துள்ள வரிகளில் சில பின்வருவன:

Page 10
14 up ஆன்மிக வாழ்க்கைக்கான வழிகாட்டுதல்கள்
"எல்லா மாகிக் கலந்து நிறைந்த பின்
ஏழைமையுண்டோடா? - மனமே!" "உள்ள தெலாமோர் உயிரென்று தேர்ந்தபின்
உள்ளங் குலைவதுண்டோ? - மனமே!' "செய்க செயல்கள் சிவத்திடை நின்றெனத்
தேவனுரைத் தனனே, மனமே! "ஆன்ம வொளிக்கடல் மூழ்கித் திளைப்பவர்க்
கச்சமு முண்டோடா? - மனமே!" பாரதியார், உபநிடதப் பேருண்மைகளையே தமது கவிதையில் எளிமையாக விளக்கியுள்ளார். "ஒவ்வொருஉயிரிலும் பிரம்மம் உறைகின்றது என்பதை உணர்பவர் அச்சத்தை ஒழித்து விடுகின்றார்' எனும் கடோபநிடதத்தின் ஆத்ம போதப் பேருண்மையை பாரதியார் "தெளிவு' என்று கூறினார். இந்தத் "தெளிவு', வாழ்க்கையின் முழு நிறைவை எய்திட, வழிகாட்ட வல்லது: உயர்ந்த குறிக்கோள் எது என்பதையும் சுட்டிக்காட்டுகின்றது. நமது உண்மையான ஆன்ம இயல்பை கண்டறியும் பொழுது "சச்சிதானந்தம்' எனும் பேரின்ப வைப்பு கிடைக்கின்றது. சச்சிதானந்த நிலையே பூரணமான இருப்பு: பூரணமான அறிவு; பூரணமான இன்பம், இதுவே மானுட வாழ்க்கையின் உயர்ந்த குறிக்கோளாக அமையவேண்டும். அதை அடைவதற்கு எளிமையான மார்க்கம், சத்குருவை நாடுதலேயாகும். 'குரு' என்ற சொல் அறியாமை இருளை அகற்றி, அறிவொளியைக் காட்டுபவர் எனும் பொருளைக் கொண்டது. இந்து சமய ஆன்மிக மரபில் குருமகிமை, வழிகாட்டும் நெறிகளில் தலைமை பெற்றுள்ளது என்பதை பரம ஞானிகள் பலர் போதனைகள் மூலம் அறிகின்றோம். குருவணக்கம் பற்றி ஞானச் சித்தர் திருமூலரின் "திருமந்திரம்" பாடல் ஒன்று கூறுவதாவது:
தெளிவு குருவின் திருமேனி காண்டல் தெளிவு குருவின் திருநாமம் செப்பல்

உள்ளிருந்து எழும் ஆன்ம அழைப்பு Qy 15
தெளிவு குருவின் திருவார்த்தை கேட்டல் தெளிவு குருவுரு சிந்தித்தல் தானே உயர்ந்த குறிக்கோளை உண்மையிலேயே அவாவி நிற்பவர் யார்? உள்ளிருந்து எழும் ஆன்ம அழைப்பை எவர் கேட்கின்றாரோ, அவரே ஆவார். சுவாமி விவேகானந்தர், தமது குருதேவரைச் சந்தித்த பொழுது அவர்க்கேயுரிய இசைப் புலமையுடன் இரு பாடல்களை இசைத்தார். நாதயோகப் பிரம்ம ஞானியான பரமஹம்ச குருதேவர், அவ்விரு பாடல்களைக் கேட்டு பெரிதும் மகிழ்ந்தார். அந்தப் பாடல்களில் ஒன்றின் முதல் வரி, உள்ளிருந்து எழும் ஆன்மிக அழைப்பைக் கேட்க, வழிகாட்டுவதாகும்.
"ஓ! மனமே! உன்னுடைய சொந்த இடத்திற்கு திரும்பிச் செல்க' எனும் அந்த முதல் வரி உள்ளுக்குள் இருக்கும் தெய்வீகத் தன்மையை நாடிச் செல்ல வழிகாட்டுகின்றது. இவ்வுலகம் நமது உண்மையான இருப்பிடமன்று. நமது உண்மையான இருப்பிடம் வேறு எங்கேயோ இருக்கின்றது; இப்படிச் சொல்லும் பொழுது, நமது இருப்பிடம் சொர்க்கத்தில் எங்கேயோ உயரத்தில் உள்ளது என்று பொருள் கொள்ளக் கூடாது. "இதோ, தேவனுடைய ராஜ்யம் உங்களுக்குள் இருக்கின்றது' என்று இயேசுநாதர் கூறியதற்கு ஏற்ப இது நமக்குள்ளேயே இருக்கின்றது. 'தத் த்வம் அஸி", "அகம் பிரம்மாஸ்மி' முதலான உபநிடதப் போதனைகளையெல்லாம் எண்ணிப்பார்க்க வேண்டும். பூரீமத் பகவத்கீதையின் பதினெட்டாம் அத்தியாயத்தின் 61-வது சுலோகத்தில் கூறப்பெற்றுள்ள பின் வரும் கருத்தும் இங்கு சிந்திப்பதற்குரியது.
ஈச்வரா ஸர்வ பூதானாம் ஹ்ருத்தேசே அர்ஜுன திஷ்ட்டதி ப்ராமயன் ஸர்வபூதானியந்த்ராரூடானி மாயயா - அர்ஜூனா, ஈசுவரன் உயிர்களையெல்லாம், உடல் என்னும் இயந்திரத்தில் ஏற்றி மாயாசக்தியினால் ஆட்டி வைத்துக் கொண்டு அவைகளின் உள்ளத்தில் இருக்கிறான்.

Page 11
16 gy ஆன்மிக வாழ்க்கைக்கான வழிகாட்டுதல்கள்
பேருண்மை இவ்வாறிருக்க, நாமோ உலகத்தில் இன்பங்கள் என்று சொல்லப்படுவனப் பின்னே ஓடிக்கொண்டிருக்கின்றோம். இதனால் நமது வாழ்க்கைதான் வீணாகின்றது. இந்த உண்மையை உணர்த்தும் வகையில் அமைந்தது சுவாமி விவேகானந்தர், குருதேவர் முன் பாடிய மற்றொரு பாடலின் பின் வரும் வரிகள்.
"ஓ! இறைவா என்னுடைய நாட்களெல்லாம்
முற்றிலும் பயனற்றுத்தான் போகவேண்டுமா?" உலக இன்பங்கள் என்று நாம் கருதுவனவற்றில் நாம் களைப்படையும் பொழுது, மாயத்தோற்றங்களில் களைப்படையும் பொழுது, நமது உண்மையான இருப்பிடம் எங்குளது என்று தேடித்திரும்பிச் செல்ல விரும்புகின்றோம். அப்பொழுது, புறத்தே தேடியலைந்த போதும், அகத்தேயிருப்பதை உற்று நோக்கத் திரும்புகின்றோம். இதன் பிறகுதான் எல்லா வகையான உலக பந்தங்களில் இருந்தும், கவர்ச்சிகளில் இருந்தும் விடுபட்டு விலகிச் செல்ல விரும்புகின்றோம். இவ்வாறு பாச பந்த மோகங்களில் இருந்து விடுபட உண்மையிலேயே பேரார்வம் கொள்பவர்களுடைய பசி, தாகமெல்லாம் எல்லையற்ற, நித்தியமான பரம்பொருள் நாட்டமாகவே அமையும்.
"இந்த மண்ணுலக இன்பங்களை நாம் ஏன் ஒதுக்க வேண்டும்? புறவுலகில் காணப்படும் இன்பங்களை நாடுவதில் என்ன தவறு?" எனும் கேள்விகள் எழுப்பப்பட்டால் அதற்கு பதில் இதுதான்: "அந்த இன்பங்கள் எல்லாம் நிரந்தர்மானவையல்ல, தற்காலிகமானவை என்பதில் சந்தேகமேயில்லை; ஆனால், நாம் தற்காலிகமான இன்பங்களைப் பற்றி அக்கறை கொள்ளவில்லை." நிரந்தரமான அமைதியும், நீடித்து என்றும் நிற்கக்கூடிய மகிழ்ச்சியும், அந்த எல்லையற்ற பரம்பொருளின் ஆத்ம சொரூபம் நாம் என்று உணரப்படும் பொழுதுதான் நமக்கு சாத்யமாகின்றது. ஆகவே தன்னையறிதல் என்பதில் மட்டுமே மானுட வாழ்க்கையின் உண்மையான நிறைவு ஏற்படுகின்றது. இது உண்மையான குறிக்கோளைப் பெறவும் வழி செய்கின்றது.

உள்ளிருந்து எழும் ஆன்ம அழைப்பு Quag 17
'எல்லையற்ற நித்தியமான பரம்பொருளை அடைய நாம் ஏன் பாடுபடவேண்டும்? உயர்ந்த குறிக்கோளை எவர் அடைய முடியும்?' என்று நமக்குள் கேள்விகளை எழுப்பி எவர் மனதிற்குள் போராடுகின்றார்களோ, அவர்கள் உயர்ந்த குறிக்கோளான ஆன்மிக வாழ்க்கையை நோக்கிச் செல்லத் தொடங்கிவிடுவார்கள். இவ்வித மனப்போராட்டத்திற்கு ஆட்படாத லட்சக் கணக்கான மக்கள் உலகம் முழுவதிலும் இருக்கின்றார்கள். ஆத்மா என்று ஒன்றிருப்பதை நம்ப மறுப்பவர்கள் உள்ளனர். மறுவுலகம் என்று ஒன்றிருப்பதை நம்ப மறுப்பவர்கள் இருக்கின்றார்கள். உலக இன்பங்களை துய்ப்பதில் தோய்ந்து, வாழ்க்கையின் உயர்ந்த இலட்சியங்களைப் பற்றிக் கவலைப் படாதவர்கள் இருக்கின்றார்கள். இத்தகையவர்களுக்கு உண்மையிலேயே மனப்போராட்டம் இல்லை. மனப்போராட்டம், ஆன்மிகத் தேடலின் முதல் கட்டமாகும். பாரதியார் சொற்களில் கூற வேண்டுமானால், "எந்தப் பொருளிலுமே உள்ளே நின்று இயங்கி' இருப்பதை அறிய முற்படுபவர்கள். 'பதர்களையே நெல்லாம்" என எண்ணி மயங்கமாட்டார்கள். அகத்தே ஏதாவதொரு வகையில் ஏற்படும் மனப்போராட்டம், உண்மையான ஆன்ம விழிப்புணர்வு உதயமாகத் தூண்டும். அகவயச் சிந்தனையுடைய வர்களுக்குத்தான் மனப்போராட்டம் தேவைப்படும். புறவயச் சிந்தனையுடையவர்களுக்கு மனப்போராட்டம் தோன்றாது. சிந்தனைப் பயிற்சி, உளப்பயிற்சி, ஆன்மானுபவப் பயிற்சி முதலானவையெல்லாம் மனப்போராட்டத்தின் பல்வேறு வடிவங்கள். y
சமயப் பற்றுடையவர்களாக சிலர் தங்களைப் பற்றிக் கூறிக்கொள்வதுண்டு. புனித யாத்திரை மேற்கொண்டு புனித நதிகளில் நீராடி, செல்லுமிடங்களில் எல்லாம் திருக்கோயில் வழிபாடுகளை நிகழ்த்தி வருவதை சமயப்பற்றிற்கு அடையாளமாகக் கருதுவர். ஆனால் உண்மையில் இவை சமயப் பழக்க வழக்கங்களாகுமேயல்லாமல், ஆன்மிகத் தேடலுக்குரிய சமயப் பற்றாகாது. சடங்காசாரங்கள் சமயாசாரங்கள் போதாது.

Page 12
18 - up ஆன்மிக வாழ்க்கைக்கான வழிகாட்டுதல்கள்
ஆன்மிக வேட்கையில் மனதிற்குள் போராட்டம் நிகழவே வேண்டும். அப்பொழுதுதான் உயர்ந்த குறிக்கோளாகிய ஆன்மிக வாழ்க்கைக்குரிய பாதை தெரியும்.
தங்களது வாழ்நாளிலேயே உயர்ந்த குறிக்கேளாகிய ஆன்மிக வாழ்க்கையைப் பெற விரும்புபவர்கள் சாதாரண ஆண் - பெண்ணின் எவ்விதப் பிரிவையும் சார்ந்தவர்களாகக் கருதப்பட மாட்டார்கள். அவர்கள் ஆன்ம விழிப்புணர்வு பெறத்துடிக்கும் அநுபூதியாளர்களாகக் கருதப்படுவார்கள். மிக உயர்ந்தப் பிரிவைச் சார்ந்த இவர்கள் தங்கள் அகவிழிப்பின் ஆன்மிகக் காட்சிகளைக் காண்பவர்களாகவும் கருதப்படுபவர்கள்.
வாழ்க்கையின் பூரணத்துவத்திற்கு அழைத்துச் செல்லும் உயர்ந்த இலட்சியங்களை, உன்னதப் பண்புகளை நாம் கடைபிடிக்க வேண்டும். ஆன்ம விழிப்புணர்வை நாடும் அதே சமயத்தில் உடல் உணர்வின் கோரிக்கைகளுக்கு நாம் கட்டுப்பட நேரிடுகின்றது. இதனால் ஆன்மவுணர்வா? உடல் உணர்வா? எனும் மனப்போராட்டம் ஏற்படுகின்றது. ஆன்மிக அழைப்பிற்கும் புலன் இன்ப மாயக்கவர்ச்சிக்கும் இடையே இழு - பறி போராட்டம் எழத்தொடங்குகின்றது. உயர்ந்த குறிக்கோளை நோக்கி உறுதியாக முன்னேற விரும்பும்பொழுது, புறஉலகின் மாயக்கவர்ச்சிகள் முன்னேறவிடாமல் எதிர்திசையில் நம்மை வளைத்து இழுக்கின்றன. நமது மனதில் உள்ள இலட்சியங்களுடன் இணைந்து செயலாற்ற உடலுணர்வு மறுக்கின்றது. இம்மாதிரியாக இருவேறு எதிர்திசையாக இழு - பறி போராட்டத்தில் நாம் சிக்கிக் கொண்டு சிதைவுறுகின்றோம். ஒரு பக்கம் இறையுணர்விற்கான உண்மையான வேட்கை கொண்டிருக்கின்றோம்; ஆனால் மறுபக்கம் இறையுணர்வு வேட்கைக்கு எதிரான சக்திகள் சூழ்ந்திட, தகாத புலன் இன்ப வேட்கை கொள்கின்றோம். இந்த நிலையில் உயர்ந்த குறிக்கோளை அடைந்திட அனைவராலும் இயலாது. அதற்குரியத் தகுதியையும் அனைவரும் பெறமுடியாது. ஆகவே, நாம் ஒன்றை நினைவில் நிறுத்த வேண்டும். அதாவது ஆன்மிக

உள்ளிருந்து எழும் ஆன்ம அழைப்பு − Qp 19
வாழ்க்கைக்குரியப் புனிதப் பயணம், தகுதி பெற்ற சிலருக்கே உரியது என்பதாகும். எனவே ஆன்மிகத்தில், "பெருந்திரள் மக்கள் ஆன்மிகம்' என்பதொன்றில்லை. ஏன் எனில் மக்கள் அனைவருமே ஆன்மிகமாக இருக்க இயலாது. எனவேதான். உடலுணர்வைக் கடந்த ஒரு சிலரே. உண்மையான இயல்புடையோரே, ஆன்மிக வாழ்க்கைக்குரியவராகின்றார்கள். அனைவருக்கும் இல்லை; ஒரு சிலருக்குத்தான் என்றால் அந்த "ஒருசிலரில் நானும் இருக்க விரும்புகின்றேன் எனும் எண்ணம் நமக்குள் தோன்ற வேண்டும். இதற்குரிய மகத்தான தன்னம்பிக்கையை வளர்த்துக் கொள்ளவேண்டும். தன்னம்பிக்கை, தயக்க - மயக்கங்களைத் தகர்த்து தலைமைத் தகுதி பெறத் துண்டுகின்றது. அருட்செல்வக் களஞ்சியம் பெற வழி நடத்துகின்றது. புலன் இன்ப நாட்டங்களில் மனதை அலையவிடாமல் தடுக்கின்றது. 'கண்டதே காட்சி, கொண்டதே கோலம்' எனும் பொய்மாயச் சுகங்களுக்குப் பின்னே ஓடுபவர்கள் தங்களைத் தாங்களே அழித்துக் கொள்கிறார்கள்.
'தன்னுடம்பு தானே தனக்குப் பகையாமென்
றெண்ணுமுணர் வில்லாம லின்பமென்று மாண்டேனே' என்று பட்டினத்துப் பிள்ளையார் எனும் தமிழ்நாட்டு ஞானி சாற்றியுள்ளதும் இங்கு சிந்திக்கத் தக்கது. தன் தேகமே தனக்குப் பகையாம் என்று கருதும் அறிவில்லாமல் அதைச் சுகம் என்று எண்ணி அழிந்தேன் என்று அந்த ஞானி விளக்கியுள்ளார்.
பிரவிருத்தி மார்க்கம், நிவிருத்தி மார்க்கம் இரண்டும் சமய வாழ்க்கையின் சாரம் என்று சூத்திரமாகக் கூறிய சுவாமி விவேகானந்தர், 'மனிதனின் அழிவு அவனுடைய புலன் இன்ப வேட்கையினால் ஏற்படுகின்றது. புலன் இன்பத்திளைப்பில் அன்று, புலன் உணர்வு மறுப்பில்தான் அழிவில்லாத மகிழ்ச்சிக்குரியத் திறவுகோல் உள்ளது' என்று எடுத்துக்காட்டியுள்ளார்.
ஆன்மிக வாழ்க்கையின் தேடலில் சிந்தனைப் பயிற்சிமுதிர்ச்சி அடைய நிவிருத்தி மார்க்கத்தில் நாட்டம் மிகுதிப்படும்.

Page 13
2O (p ஆன்மிக வாழ்க்கைக்கான வழிகாட்டுதல்கள்
உள்ளிருந்து ஓங்கும் ஆன்ம அழைப்பின் குரலைக் கேட்கப்பயிற்சி பெற்றவர்கள், பெருப்பேறு பெற்றவர்கள். இவர்கள் உட்செவி திறக்கப்பெற்றவர்கள்; அகக் கண் ஒளி பெற்றவர்கள்.
ஆதி சங்கரர், "விவேக சூடாமணி'யின் மூன்றாவது சுலோகத்தில் வாழ்க்கையில் ஒருவர் அடையக்கூடிய முப்பெரும் அரிய பொருட்களைப்பற்றி பின்வருமாறு கூறியுள்ளார்.
துர்லபம் த்ரய மேவைதத் தேவானுக்ரஹ - ஹேதுகம் மனுஷ்யத்வம் முமுகூடி"த்வம் மஹாபுருஷஸம் ச்ரய! மனிதப் பிறவி, முக்தியில் ஆசை, மகாபுருஷர்களை நாடியடைதல் ஆகிய இம்மூன்றும் அடைதற்கரிது. தெய்வத்தின் அருள் காரணமாகத்தான் இவற்றை அடைய இயலும்.
அரிது, அரிது மானிடராய்ப் பிறத்தல் அரிது என்பதை அறிவோம்; உண்மையான குருவின் அருளும் அரிது; வீடுபேறு பெற உண்மையாக விரும்புவதும் அரிது; இதற்கான மனப்பூர்வமான ஈடுபாடும் அரிதேயாகும். நமக்கு அரிதான மனிதப் பிறவி, குருவின் அருள், செயல்திற்ன், அறவோர் கூட்டுறவு முதலானவையெல்லாம் கிடைத்து விட்டதாகக் கருதினாலும், அவற்றின் மூலம் பயன்பெற வேண்டும் எனும் நீங்காத ஆர்வம் எப்பொழுதும் இருக்க வேண்டும்.
உயர்ந்த ஆன்மிகக் குறிக்கோளை நோக்கிச் செல்லும் நமது புனிதப் பயணத்தில் எவ்விதத் துன்பத்தையும் தாங்கிக் கொள்ள நாம் தயாராய் இருக்க வேண்டும். ஒரு செயலை வெற்றிகரமாகச் செய்துமுடிக்க அலட்சியப் போக்கு இல்லாத தீவிரம் நமக்குள் ஏற்படவேண்டுமல்லவா? அந்தத் தீவிரத்தன்மை என்பது என்ன? சரியான நேரத்தில் சரியான முடிவு எடுப்பதுதான் அந்தத் தீவிரத்தன்மையாகும். ஆன்மிக வாழ்க்கையில் தக்கத் தருணத்தில் தாமதிக்காமல் உறுதியாக முடிவெடுப்பது என்பது மிக முக்கியமானதாகும். ஆன்மிகப் பயணத்தில் சிற்சில சமயங்களில் களைப்பும், சலிப்பும் ஏற்பட்டாலும், நாம் தளர்ந்து விடக்கூடாது.

உள்ளிருந்து எழும் ஆன்ம அழைப்பு ۔۔۔۔.,, ۔۔۔ Op 21
பாதை மாறி தேய்ந்த பாதையில் சென்றுவிடக்கூடாது. இந்த மாதிரிச் சமயங்களில் நாம் குருவின் திருவருளை, மந்திரத்தின் வலிமையை தியானிக்கப் பழகிக்கொள்ள வேண்டும். குருதேவர் பரமஹம்சரின் அமுதமொழிகள், இயேசு நாதரின் பைபிள், பூரீகிருஷ்ண பரமாத்மாவின் பூரீமத் பகவத்கீதை முதலானவற்றை நாம் படிப்பது மட்டும் போதாது. தீவிரத்தன்மையில் தளர்ச்சியோ, பிறழ்ச்சியோ தோன்றிவிட்டால் ஆன்மிக முயற்சிகள் பாதிவழியிலேயே தடைபட்டுப் போய்விடும்.
ஆரம்பத்தில் சிறிதளவு ஆர்வமும், ஊக்கமும் கொள்கின்றோம். போகப் போக நமக்கு ஆன்மிக அனுபவ ஆனந்தம் கிடைத்துவிட்டதற்கான தெள்ளத்தெளிவான நிரூபணம் கிடைக்காத போதும் நாம் ஆர்வத்தை இழந்து விடுகின்றோம். இதனால் நமது ஆன்மிக முயற்சி உயிர் சக்தியில்லாத இயந்திர கதியில் சென்று விடுகின்றது. இங்குதான் பேராபத்து ஏற்பட்டு விடுகின்றது. நமது மனம் அமைதியற்று தவிக்கத் தொடங்குகின்றது; எப்பொழுதும் உள்முக நாட்டமில்லாமல், வெளியுலகத்தில் சஞ்சாரம் செய்யத் தொடங்கிவிடுகின்றது. நமது ஆரம்பகாலக் குறிக்கோளை நிலைநிறுத்தாமல் துன்பப்படுவது இயல்பாகிவிடுகின்றது. இவ்வாறு ஒரு பொழுதும் நிகழவிடாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். இவ்விடத்தில் புகழ்பூத்த ஆங்கிலக் கவிஞன் வில்லியம் வோர்ட்ஸ்வொர்த்தின் பிரபலமான “9 LDIUġig5GNuġġ$6oT 915leS' u l-qes6ir” (intimations to immortality) Girgo b கவிதையின் ஒரு வரி நமக்கு சரியாகவே படுகின்றது. "பிறப்பு என்பது தூக்கமும், மறதியாகும்' என்பதே அந்த அற்புதக் கவிதைவரி. ஆன்மிகவுணர்வுகள் இழையோடக் கவிதைகள் படைத்த இந்தக் கவிஞன், தமது ஒரு கவிதைக்கு மிகவும் குறிப்பிடத்தக்க ஒரு தலைப்பிட்டான். 'உலகப் பிரக்ஞை 5úbuÉle)LGuj L656 júb eglá95LDT&G36 | 2 GTCT5” (The World is too much with us) எனும் பொருட் கொண்டதுதான் அந்தத் தலைப்பு. கவிஞர் கூறியது போல் உலகப் பிரக்ஞை நமக்கு அளவுக்கு அதிகமாக அமைந்து விட்டால், ஆன்மிகக் குறிக்கோளை இப்பிறவியில்

Page 14
22 up ஆன்மிக வாழ்க்கைக்கான வழிகாட்டுதல்கள்
அடைவதென்பது இயல்பாகவே கடினமாகிவிடும். உலகப் பிரக்ஞை நம்மிடம் மிகுதியாகிவிடும் பொழுது நாம் புறவயச் சிந்தனையாளராக மாறிவிடுகின்றோம். இந்த மாற்றம் அந்தச் சூழலில் இயல்பானதேயாகும். இதனால் விலை மதிக்க முடியாத இந்த மனித வாழ்க்கையை பொய்மாயப் புலன் இன்பங்கள் என்று சொல்லப்படுவதில் மூழ்கடித்து விடுகின்றோம். இந்த வாழ்க்கையைக் கொண்டவர்கள் சாதாரண மனிதர்களாவர். அவர்கள் காணும் உலகம் புலன்உணர்வுகள் காட்டும் உலகம்; அது உண்மையன்று. இத்தகையவர்களுடன் மாறுபட்டவர்கள் ஆன்மிக சாதகர்கள். பொய்யான உலகத்தை பொய்யாக்கி, மெய்யான பிரம்மத்தை அறிந்து உணர்பவர் ஆன்ம சாதகன். "பொறிகளின் மீது தனியரசாணை செய்து, பொழுதெலாம் இறைவனின் பேரருள்நெறியிலே நாட்டம்' செலுத்தும் பிரம்மவித்யை நாடுபவன் ஆன்ம சாதகன். இதனால்தான் சாதாரண மனிதனுக்கு மெய்யெனத் தோன்றும் உலகத்தை பொய்யென ஆன்ம சாதகனால் தேர்ந்து தெளிய முடிகின்றது. "பிரம்மம் சத்யம், ஜகம் மித்யை' என்று முழங்க முடிகின்றது. புறத் தோற்றங்களுக்கு பின்னே உள்ள ஆன்மிக அக உலகத்தை உண்மையான உலகமாகக் காண்கின்றார் ஆன்ம சாதகன்.
நம்மில் பெரும்பாலோர் அகவுலகத்தைப் பற்றி கவலைப்படுவதில்லை. இதற்கென்னக் காரணம்? 'கண்டதே காட்சி, கொண்டதே கோலம்' எனும் புலன் உணர்வுகளுக்குக் கட்டுப்படுவதே இதற்குக் காரணம். ஆகவே, உயர்ந்தக் குறிக்கோளான ஆன்மிக வாழ்க்கையில் நாட்டம் செலுத்த விரும்புவோர் மிக, மிக ஜாக்கிரதையாக இருக்கவேண்டும். ஏன் எனில் ஆன்மிக வாழ்க்கை மகத்தான அர்ப்பணமாகும்; புனிதமான அர்ப்பணிப்பு மட்டுமன்று, தியாகவுணர்வும் இணைந்தது ஆன்மிக வாழ்க்கை; ஒருமுகப்படுத்தப்பட்ட வாழ்க்கையும் ஆகும். ஒருமுகப்படுத்துதல் என்றால் என்ன? புலன்கள் வழியே மனதை ஓடவிடாமல் உள் முகமாக ஒருமைப்படுத்தி ஒடுங்கச்செய்வது, ஒருமுகப்படுத்துதல். "ஒடக்காண்பது பூம் புனல் வெள்ளம்,

உள்ளிருந்து எழும் ஆன்ம அழைப்பு Op 23
ஒடுங்கக் காண்பது யோகியர் உள்ளம்' என்பது ஆன்ம ஞானிகள் வாக்கல்லவா? புறவுலகம் நமக்கு உண்மையான, நித்தியமான பேரின்பத்தைத் தரமுடியாது என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். இந்தத் தெளிவு ஏற்படும் பொழுது உலகியல் தொடர்பான பற்றுகள் நீங்க வழிபிறக்கும்.
ப்ரவிருத்தி, நிவிருத்தி எனும் இரு வழிகள் நம்முன் உள்ளன. ப்ரவிருத்தி என்பது செயலிற் புகுமுறை; வெளியே போகிற செயல். நிவிருத்தி என்பது செயலில் இருந்து விலகுவது, உள்ளே போகிற செயல். ப்ரவிருத்தி மார்க்கம் ப்ரேயஸ் என்றும், நிவிருத்தி மார்க்கம் ச்ரேயஸ் என்றும் கூறப்படுகின்றது. இன்பத்தை, உடனடியானக் கவர்ச்சியைக் குறிப்பது, ப்ரேயஸ். தலைசிறந்த உண்மையான பயனைக்குறிப்பது ச்ரேயஸ். புலன் வழிப்பட்ட இன்பங்கள் ப்ரேயஸில் எழுகின்றன. புலன்களை ஒடுக்கி பெறும் ஆன்மிகச் சிறப்பை ச்ரேயஸ் எழுப்புகின்றது. ஆன்மிக சாதகன் ச்ரேயஸ் மார்க்கத்தைச் சார்ந்தவன். ப்ரேயஸ் மார்க்கத்தைச் சார்ந்தவன் உயர்ந்த குறிக்கோளாகிய ஆன்மிக வாழ்க்கையில் இருந்து விலகி வீழ்ந்தவனாகின்றான். சுருக்கமாகச் சொல்ல வேண்டுமானால் ப்ரேயஸ், புலன்களின் சுதந்திரத்தைக் கோருவது. ச்ரேயஸ் புலன்களில் இருந்து விடுதலை பெறத் தூண்டுவது.
ஆதரவற்ற நிலையில் இருந்து, குறிக்கோளை நிறைவேற்றும் நிலைக்கு மனிதனின் ஆன்மிகப் பயணத்தை முண்டக உபநிடதம் இருபறவைகளை குறியீடுகளாகச் சித்தரித்து விளக்கியுள்ளது. ஒரே மரத்தில் ஆழ்ந்த நட்பு கொண்ட இரு அழகிய பறவைகள் வாழ்ந்தன. ஒன்று மரத்தின் சுவைமிக்க கனிகளை புசித்திருக்க, மற்றொன்று எதையும் சாப்பிடாமல் பேரின்பத்தில் ஆழ்ந்திருந்தது. கனியைச் சுவைத்திருப்பது ஜீவாத்மாவாகவும், எதையும் சாப்பிடாமல் பேரின்ப வைப்பில் ஆழ்ந்திருப்பது பரமாத்மாவாகவும் உருவகப்படுத்தப் பட்டன. ஆன்மிகப் பயணத்தில் செல்வோர் கணிச்சுவையில் திளைக்கும் பறவையின் நிலையில் இருந்து ஆன்மாவின் உண்மை சொரூபம்ாக விளங்கும்

Page 15
24 QU) ஆன்மிக வாழ்க்கைக்கான வழிகாட்டுதல்கள்
மற்றொரு பறவையின் நிலைக்கு உயர்வெய்த வேண்டும். எந்த வழி சிறந்தது என்று நாம் முடிவு செய்யவேண்டும். சுவாமி விவேகானந்தர் நியூயார்க்கில் உரையாற்றும் பொழுது கூறியதாவது: "மரணம் தவிர்க்க முடியாதது. அது ஓர் உன்னதமான வெற்றியில் அமையட்டும். தாழ்நிலையில் உள்ள நான்' எனும் உணர்வை வெற்றிக் கொள்வதைவிட வேறு எந்த வெற்றி உன்னதமாகும்?' தாழ்ந்த நான் என்பதை அடக்கி ஆளும் திறமையைப் பெறுவதற்கு நாம் கடும் விலையைத் தரவேண்டும். கடுமையாகப் போராடத் தயாராக வேண்டும். அப்பொழுதுதான் உயர்ந்த நான்' என்பது தன்னை வெளிப்படுத்தும்.
இதன் தொடர்பாக மாயைப்பற்றிய கோட்பாட்டையும் அதன் இருவகையான சக்திகளையும் நாம் அறிய வேண்டும். ஆவரணம், விகேஷபம் எனும் இருவித சக்திகளை இங்கு குறிப்பிடுவது பொருத்தமாகும். மாயையின் இவ்விரு சக்திகளைக் குறிக்கும் அதே பொருளில் "தூக்கம், மறத்தல்' எனும் இரு சொற்களை வோர்ட்ஸ்வொர்த் தமது கவிதையில் ஆண்டுள்ளார். இந்தியாவில் பிறக்காத இவர் மாயையின் இரு சக்திகளைக் குறிக்கும் சொற்களுக்கேற்ற பொருளில் ஆண்டுள்ளது வியப்பிற்குரியது. அவர் ஆண்டுள்ள "தூக்கம்' (sleep) எனும் சொல் நமது தெய்வீகத்தன்மையை உணராத தூக்கத்தைக் குறிப்பதாகும். நமது உண்மையான தெய்வீகத் தன்மையை மறப்பதையே அவர் "மறத்தல்' (Forgetting) எனும் பொருளில் ஆண்டுள்ளார். W ஆவரணம் என்பதென்ன? உண்மையான நான்' என்பதை ஒரு வகையான திரையிட்டு மறைப்பது ஆவரணம் என்பதாகும். உள்பொருளை திரித்து நம் மனதில் வேறொன்றாகக் காட்டுவது விகேஷபம் ஆகும். இவையிரண்டும் அவித்யை அல்லது அஞ்ஞானத்தின் செயற்பாடுகளாகும். மாயையின் இந்தக் காரணத்தினால்தான் அறியாமையில் உழலும் மக்கள், இரண்டற்ற ஒன்றேயாகிய பிரம்மத்தை பல்வேறு தோற்றங்களாகக் கண்டு ஏமாற்றமடைகின்றார்கள். உண்மையில் 'அகம் பிரம்மாஸ்மி

உள்ளிருந்து எழும் ஆன்ம அழைப்பு . Up 25
எனும் மகாவாக்கியத்திற்கு ஏற்ப பிரம்ம ஸ்வரூபமாவோம். தெய்வீகத் தன்மை கொண்டவர்கள் ஆவோம். இவ்வுண்மையை கண்டறியாத நாம் வரம்புகளுக்கு உட்பட்ட, எல்லைகளுக்கு உட்பட்ட ஜீவன்களாக நடந்து கொள்கின்றோம். ஆனால் உண்மையில் நாம் பிரம்மமே ஆவோம். "ஜீவோ ப்ரஹ்மைவ நா பர' என்பதற்கேற்ப ஜீவன் பிரம்மமே தவிர பிறிதொன்றில்லை.
நமது உண்மை இயல்பை அறியவிடாமல் மாயையின் விகேஷ்ப சக்தி தடுக்கின்றது. ஆவரணம், விக்ஷேபம் எனும் இரு சக்திகளை நாம் வென்றெடுப்பது எப்படி? அவித்யை அல்லது அஞ்ஞானத்தால் நமது உண்மையான இயல்பான சுத்த சைதன்யத்தை நாம் மறந்து விடுகின்றோம். இரண்டாவதாக, நாம் வரம்பற்ற, எல்லையற்ற ஆத்மா என்பதை மறந்து கட்டுப்பட்ட, எல்லைக்குட்பட்ட ஜீவன்களாக பாவித்துக் கொண்டு ஒழுகுகின்றோம். இதில் இருந்து விடுபட வழியுண்டா என்றால், வழியுண்டு. எவ்வித பொய்யான பற்றுக்கும் இடம் கொடாமல் இருக்க நாம் முனைய வேண்டும். இவ்வித முனைப்பு உண்மையான ஆன்மிக வாழ்க்கைக்கு தங்களைத் தாங்களே ஒப்படைத்துக் கொள்ளும் சிலருக்கே வாய்க்கும். பெருந்திரளான மக்களுக்கு இது சாத்யமில்லை.
ஆன்மிக வாழ்க்கைக்குரிய சில வழிகாட்டுதல்களைப் பார்ப்போம். குருதேவர் இராமகிருஷ்ண பரமஹம்சர் வழிகாட்டியுள்ளார். "நாம் நேர்மையுடன் இருக்கலாம், நமது எண்ணங்களுக்கு நாமே துரோகம் செய்ய வேண்டாம்' என்று குருதேவர் கூறியுள்ளார். "எவ்வாறு எண்ணுகின்றோமோ, அவ்வாறே ஆகிவிடுகின்றோம்" என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். "எண்ணியார் எண்ணி யாங்கு எய்துவர்; எண்ணியர் திண்ணியராகப் பெறின்' என்பது குறள்நெறியன்றோ.
ஒருவருடைய வாழ்க்கையில் ஏற்படும் திருப்பம், ஆன்மிக மாற்றத்தை அளிக்க வல்லது என்பதற்கு இராமாயணம் படைத்த வால்மீகியின் வாழ்க்கை தக்கதொரு சான்றாகும். தம்முடைய தாய்,

Page 16
2S pe ஆன்மிக வாழ்க்கைக்கான ഖഴ്സിങ്ങളേ?
தந்தையர், மனைவியைக் காப்பாற்ற வழிப்பறிக் கொள்ளையில் ஈடுபட்டவர் வால்மீகி. அவர் தமது கொள்ளையடிக்கும் தொழிலில் எவரையும் விட்டு வைக்கவில்லை. முதியவர்களையும் விட்டுவைக்கவில்லை.
தமது கொள்ளைத் தொழிலில் ஒரு நாள் வால்மீகி, நாரதரைச் சந்தித்தார். நாரதர் ஆன்மிகப் பேராற்றல் வாய்ந்த மகாஞானி என்பதை வால்மீகி அறியாதவர். நாரதரின் மேன்மையை அறியாமல் அவரிடமும் வழிப்பறி செய்தார் வால்மீகி. ஆனால் நாரதர் கொள்ளையடித்த இளைஞனிடம் பெருங் கருணை கொண்டார். வால்மீகியிடம் 'நீ ஏன் இந்த வழிப்பறிக் கொள்ளையை மேற்கொண்டாய்?" என்று அன்புடன் கேட்டார். "ஐயா, என் குடும்பத்தைக் காப்பாற்ற எனக்கு வேறு வழிஇல்லை' என்று வால்மீகி பதிலளித்தார். ஆனால், நாரத மாமுனிவர் வால்மீகியை நன்னெறியில் திருப்பிவிட எண்ணி, தொடர்ந்து கூறியதாவது.
"இந்த வழிப்பறியில் நீ பாபங்கள்ைச் சம்பாதிக்கின்றாய். வழிப் போக்கர்களை கொலை செய்யும் பாவமும் உன்னை வந்து அடைகின்றது. உன்னுடைய இந்தப் பாவங்களை உன் தாய் தந்தையர், உனது மனைவி, நீ கொள்ளையடித்த செல்வத்தைப் போல பங்கு போட்டுக் கொள்வார்களா? என்று அவர்களிடம் கேட்டுப்பார்."
"ஆஹா அதற்கென்ன கேட்டுவிடுகின்றேன். அவர்களை நான் காப்பாற்றிக் கொண்டு வருவதால் என்னுடைய பாவங்களிலும், செல்வத்தைப் போலவே பங்கேற்பார்கள் என்பது உறுதி' என்று வால்மீகி மறுமொழி கூறினார்.
"அப்படியானால் வீட்டிற்குப் போய் அவர்களைக் கேட்டுவிட்டு வா' என்று நாரத மாமுனிவர் கூறினார். தான் வருவதற்குள் நாரதர் ஓடிவிடுவாரோ என்று சந்தேகித்து அவரை மரத்தில் கட்டிப் போட்டுவிட்டு வால்மீகி வீடு நோக்கிச் சென்றார்.

உள்ளிருந்து எழும் ஆன்ம அழைப்பு up 27
நம்பிக்கையுடன் வீடு சென்றதும் வால்மீகி தனது குடும்பத்தில்
ஒவ்வொருவரையும் அழைத்தார். அவர்களிடம், "உங்களையெல்லாம் நான் எப்படி காப்பாற்றுகின்றேன் என்பதை நீங்கள் ஒவ்வொருவரும் அறிவீர்கள் அல்லவா?
கொள்ளையடித்து, கொலை செய்து வரும் செல்வத்தால் காப்பாற்றுகின்றேன். இவை பாவங்கள் என்றால் அவற்றை உங்களுக்காக செய்கின்றேன். ஆகவே நீங்கள் நான் கொண்டு வரும் செல்வத்தைப் பகிர்ந்து கொள்வதுபோல நான் சுமந்து வரும் பாவங்களையும் பகிர்ந்து கொள்ளவேண்டுமல்லவா?" என்று கேட்டார்.
வால்மீகிக்கு எதிர்பார்த்த பதில் கிடைக்கவில்லை. குடும்பத்தினரோ, அவர்களைக் காப்பாற்ற வேண்டியது வால்மீகியின் கடமை என்பதை உணர்த்தினார்கள். "நீங்கள் என் கணவர் மனைவியைக் காப்பாற்ற வேண்டியது கணவனின் கடமையல்லவா?" என்று மனைவி பதில் கூறினாள்.
'நீ எங்களுடைய மகன்; உன் பெற்றோர்களைக் காப்பாற்ற வேண்டியது உன் கடமை. ஆகவே, நீ செய்யும் பாவங்களை பகிர்ந்து கொள்ள நாங்கள் தயாராக இல்லை" என்று தாய் -தந்தையர் கூறினார்கள்.
எதிர்பாராத இவ்வித பதில்களைக் கண்ட முதிரா இளைஞன் வால்மீகி அதிர்ச்சியடைந்தார். நாரதரைக் காணத்திரும்பினார். அவரைக் கட்டவிழ்த்துவிட்டான்.
"தாங்கள் என் கண்களைத் திறந்துவிட்டீர்கள், ஐயா! உங்கள் புனிதத் திருவடிகளைத் தஞ்சமடைகின்றேன். நன்னெறி வாழ்க்கை வாழ எனக்கு வழிகாட்டுங்கள் உங்களைப் பணிந்து கேட்டுக் கொள்கின்றேன்; என்னைத் தங்கள் சீடனாக ஏற்றுக் கொள்ளுங்கள்' என்று வால்மீகி, நாரத முனிவரிடம் மன்றாடி வேண்டுகோள் விடுத்தார். நாரதரிடம் ஆன்மிக சாதனைக்குரிய சரியான வழியை கற்றறிந்தார். தன்னை மறந்து தவம் தியானத்தில் மூழ்கினார். அவரைச் சுற்றி எறும்புப் புற்று நெடிதுயர்ந்தது. புற்றில்

Page 17
28 up. ஆன்மிக வாழ்க்கைக்கான வழிகாட்டுதல்கள்
இருந்து வெளிப்பட்டதால் 'புற்று' எனப்பொருள் கொண்ட "வால்மீகி எனும் காரணப் பெயரும் நிலைத்துவிட்டது. கொள்ளைக்காரனாக வாழத் தொடங்கியவர் ஆன்மிகத்தை கண்டறிந்து மகரிஷி வால்மீகியாக உயர்வெய்தி விட்டார். இந்த விழுமிய மேனிலையை அடைய அவர் உலகியலான பந்தபாசங்களின் பயனற்றத் தன்மைகளை உணர்ந்தார்.
கெளதம புத்தரின் வாழ்க்கையும் ஆன்மிக சாதகர்களின் கவனத்திற்குரியது. கெளதம புத்தராகப் பெயர் பெறுவதற்கு முன் இளவரசன் சித்தார்த்தனாக வாழ்ந்தபோது, பிரம்மாண்டமான பரப்புடைய அரண்மனையில் ஏராளமான வேலைக்காரர்கள் புடைசூழ யசோதரா எனும் பேரழகு வாய்ந்த மனைவியுடனும், இராகுல் எனும் அன்பு மகனுடனும் வாழ்ந்தார்.
சுகபோக வாழ்க்கையில் ஒரு நாள் விருந்தனர் கூடத்தில்
நடனமாதர்களின் நாட்டிய நிகழ்ச்சியைக் கண்டுகளித்துக் கொண்டிருந்த சித்தார்த்தனுக்கு திடீரென்று uusisy வெறுப்புணர்வு மூண்டெழுந்தது. அரண்மனைத் தோட்டத்திற்குச் சென்றான். அங்கு ஒரு மரத்தடியில் தனது வாழ்க்கையில் என்ன செய்து கொண்டிருக்கிறோம் என்பதைப் பற்றித்தியானம் செய்யத் தொடங்கினார்.
"சற்று நேரத்திற்கு முன்பு நடன மாதர்களின் நடனத்தையும் கண்டுகளித்திருந்தேன். ஆனால் அதில் வந்த இன்பம்நிலையற்றது, தோன்றி மறைவது. இவ்வாறு புலன்கள் நாடும் இன்பங்கள் வழியே சென்றால் ஒரு பொழுதும் நான் நித்தியமான பேரின்பத்தை அடையமுடியாது' என சித்தார்த்தன் தியானத்தில் தேர்ந்து தெளிந்தான். மகத்தான வைராக்கிய சக்தி சித்தார்த்தனிடம் எழுந்தது. அதுவரை வாழ்ந்த வாழ்க்கையின் மீது தீவிரமான அதிருப்தி ஏற்பட்டது.
அப்பொழுது நள்ளிரவு; எங்கும் இருள் படர்ந்த தோட்டத்தில் அமைதி நிலவியது. அந்தச் சூழலில் தெய்வீகக் குரல்களைக் கேட்கும் நற்பேறு சித்தார்த்தனுக்கு வாய்த்தது. அந்தத் தெய்வீகக்

உள்ளிருந்து எழும் ஆன்ம அழைப்பு Op 29
குரல்கள் விண்ணக கந்தர்வக் குழுவின் இன்னிசையாகும். அவர்கள் இசைத்த பின்வரும் இன்னிசைப் பாடல் செல்வச்செழிப்பில் திளைத்த இளவரசனுக்கு வழிகாட்டும் பிரகடனமாக ஒலித்தது.
அமைதிக்காக நாம் புலம்புகின்றோம் ஐயகோ அந்த அமைதியை நாம் காணமுடியவில்லை எங்கிருந்து வந்தோம், எங்கே போகிறோம் என்பதை நாம் அறிய மாட்டோம் சிரிப்பும் கண்ணிரும் வட்டமாகச் சுழன்றுவர மீண்டும் மீண்டும் நாம் நடக்கின்றோம் எங்கே இந்தப் பாதை அழைத்துச் செல்கிறது ஏன் இந்தப் பொருளற்ற நாடகத்தை நடத்துகின்றோம் என்பதை அறிந்திட ஏக்கமுற்று தவிக்கின்றோம் கனவு காண்பவனே எழுக! மீண்டும் தூக்கத்தில் ஆழ்ந்திடாதே இந்தக் கந்தர்வ கானத்தால் சித்தார்த்தன் மனம் தெளிவுற்றது. இந்தத் தெளிவிலே துறவு வாழ்க்கையை மேற்கொள்ள ஓர் அகத்தெழுச்சி தோன்றியது. வட்டத்தில் ஒரு புள்ளியாகச் சுழன்று கொண்டிருந்த அமைதியற்றிருந்த சித்தார்த்தன் LD60T if வட்டத்தைவிட்டு வெளியேறியது. துறவு நெறியில் பிரவேசிக்க முடிவெடுத்தது. இந்த முடிவுடன் அரண்மனையில் தனது அறைக்குத் திரும்பினான் சித்தார்த்தன். உறக்கத்தில் ஆழ்ந்திருந்த மனைவியையும், மகனையும் இறுதியாகப் பார்த்துவிட்டு மனவலிமை படைத்த மாசிலாத்துறவியாக அரண்மனையை விட்டு வெளியேறினான். புலன் இன்பங்கள் அனைத்திற்கும் விடைகொடுத்தான்.
அன்று தொடங்கிய வரலாற்றுப் புகழ் கொண்ட புனிதப் uu68T b புத்தகயாவில் போதிமரத்தடியில் முடிந்தது. போதிமரத்தடியில் பேருண்மையின் ஞானச் சுடர் ஒளிவட்டத்தின் புத்தர் பெருமானாக எழுந்தார். பேரொளி பெற்றவர் எனும் பொருளுடைய புத்தர் எனும் பெயர் சித்தார்த்தன் எனும் பூர்வாச்ரமப் பெயருக்கு விடைகொடுத்து விட்டது.

Page 18
3O o gy ஆன்மிக வாழ்க்கைக்கான வழிகாட்டுதல்கள்
போதி மரத்தடியில் புத்தர் பெற்ற ஞான தரிசனத்தை தமிழ்நாட்டு மகாகவி சுப்பிரமணிய பாரதியார் ஏற்றிப் போற்றி இசைத்ததில் ஒரு பகுதி பின்வருவது:
பொன்மரத்தின்கீழ் - அந்தப் பொன்மரத்தின்கீழ் - வெறுஞ் சின்மயமானதோர் தேவன் இருந்தனன் புத்த பகவான் - எங்கள் புத்த பகவான் - அவன் சுத்தமெய்ஞ்ஞானச் சுடர்முகங் கண்டேன் காந்தியைப் பார்த்தேன் - அவன் காந்தியைப் பார்த்தேன்-உப சாந்தியில் மூழ்கித்ததும்பிக் குளித்தனன் அறிஞர் ஆர்னால்ட் 'சிரிப்பும் கண்ணீரும் வட்டமாகச் சுழன்றுவர, மீண்டும் மீண்டும் நாம் நடக்கின்றோம்' என்று மிக அருமையாகக் குறிப்பிட்டுள்ளார்.
சுவாமி விவேகானந்தர் உயர்ந்த குறிக்கோள் இல்லாத வாழ்க்கையைப் பற்றிக் கூறியதாவது. "கீழ் நோக்கிச் செல்ல, செல்ல மீண்டும் நாம் மனித மிருகமாகின்றோம். உண்பது, குடிப்பது, இறப்பது எனும் சுழல் வட்டத்தில் மீண்டும் மீண்டும் நாமும் சுழல்கின்றோம்.'
'தேடிச் சோறுநிதந்தின்று - பல
சின்னஞ் சிறுகதைகள் பேசி - மனம் வாடித் துன்பமிக உழன்று - பிறர்
வாடப் பலசெயல்கள் செய்து - நரை கூடிக் கிழப்பருவ மெய்தி - கொடுங்
கூற்றுக் கிரையெனப் பின்மாயும் - பல வேடிக்கை மனிதரைப்போலவே -நான்
வீழ்வே னென்று நினைத் தாயோ'

உள்ளிருந்து எழும் ஆன்ம அழைப்பு ag 31
என்று மகாகவி பாரதியார் காளிமாதாவிடம் கேட்டது போல் நாமும் கேட்க பயிற்சிபெற வேண்டும்.
கொடுங் கூற்றுக் கிரையாகப் போகும் தவிர்க்க முடியாத இறுதிநேரம் வரும் என்பதை நாம் எல்லோரும் நினைவில் கொள்ள வேண்டும். இந்த இறுதி நேரத்தை அரசனும், ஆண்டியும் எதிர்நோக்கத்தான் வேண்டும். மரணத்தில் அனைவரும் சமமே. 'நெருநல் உளன் ஒருவன் இன்றில்லை எனும், பெருமை படைத்திவ்வுலகு' என்று திருவள்ளுவர், உலகத்தின் பெருமையே நேற்று இருந்தவன், இன்று இல்லை என்பதேயாகும் என்று கூறுகின்றார். மறுவுலகத்தின் அழைப்பு எப்பொழுது வரும் என்று நாம் நிச்சயம் அறிய முடியாது. எந்த நேரத்திலும் மரணம் நமது மண்ணுலக வாழ்க்கையை வெடுக்கனப் பறித்துக் கொண்டுபோய்விடும்.
'தாயின் கர்ப்பப் பையில் இருந்து வெளிவரும் பொழுது நிர்வாணமாகவே பிறக்கின்றோம். இவ்வுலகை விட்டு தனியே போகும் பொழுதும் நிர்வாணமாகவே போகிறோம்." உற்றார், உறவினர்கள், அன்பிற்குரியவர்கள் எவரும் நம்முடன் வருவதில்லை; நமது உலக உடைமைகளையும் எடுத்துச் செல்ல முடிவதில்லை. இது கசப்பான உண்மை; கசப்பான யதார்த்தமாகும். இப்பொழுதே இந்த வாழ்க்கையிலேயே உயர்ந்த குறிக்கோளாகிய ஆன்மிகத்தைப் பற்றி நாம் மனப்பூர்வமான ஆர்வம் கொள்வது விவேகம் ஆகுமல்லவா? இவ்வாறு கூறும் பொழுது நாம் அனைவரும் ஆண் துறவிகளாகவோ, பெண்துறவிகளாகவோ மாறிட வேண்டும் என்பதல்ல. வைராக்கியத்தை நாம் கண்டிப்பாக வளர்த்துக் கொள்ளவேண்டும். இவ்வுலகத்தில் ஒவ்வொன்றும் நிரத்தரம் இல்லை, தற்காலிகமானதே எனும் உண்மைச் செய்தியை நாம் எப்போதும் நினைவில் கொள்ள வேண்டும்.
"கடவுள் ஒருவரே உண்மை; இந்த உண்மையே நித்தியமானது, அழிவில்லாதது; பிற யாவும் உண்மையல்ல, நித்யமில்லாதவை என்பதை நாம் பகுத்தறிய வேண்டும்' என்று

Page 19
32 - Up ஆன்மிக வாழ்க்கைக்கான வழிகாட்டுதல்கள்
பகவான் இராமகிருஷ்ண பரமஹம்ஸர் அவ்வப்போது வலியுறுத்தி வந்தார்.
இவ்வுலகில் ஆயிரக்கணக்கான விஷயங்களிடையே நாம் கட்டுண்ட நிலையில், உயர்ந்த குறிக்கோளான ஆன்மிக வாழ்க்கை வாழவேண்டுமானால், அதற்கு மனதில் உறுதிவேண்டும்; வைராக்கியம் வேண்டும்.
'கனவு காண்பவரே, எழுக! மீண்டும் தூங்க வேண்டாம்" என்பதை மனதில் ஆழப்பதிய வைப்பது, சுவாமி விவேகானந்தரின். 'எழுமின் விழித்திருமின் குறிக்கோளைச் சாரும் வரையில் நில்லன்மின்' எனும் ஆன்மிக முழக்கமாகும். நனவுலக வாழ்க்கையை நாடுகின்றோம். பொய்மைக் கனவுகளைக் காண்கின்றோம். பொய்மைக் கனவுகளை வாழ்க்கையெனக் கொள்ளாது, நம்முள் பொதிந்துள்ள தெய்வத்தன்மையைத் தேர்ந்து தெளிய வேண்டும். இந்த ஞானம் வந்தால் பின் நமக்கேது வேண்டும்? மரணம் வரும்பொழுது, நாம் தேகமோ, மனமோ, புலன்களோ இல்லை. நாம் நித்தியமான, சுதந்திரமான ஆத்மா என்பதை உறுதிப்பட உணர்கின்றோம். மரணத்தைக் கண்டு பயப்படாமல், புன்முறுவலுடன் வரவேற்கத் தயராகி விடுவோம். நம்மில் எவ்வளவு பேர் இவ்வாறு நடந்துக் கொள்ளமுடியும்? ஆன்மிக வாழ்க்கையில் தீவிர சாதனை செய்வோரால்தான் .هنابلاجاها)
ஆன்மிக வாழ்க்கையில் சாதனைபடைத்த மகரிஷி வால்மீகி, கெளதம புத்தரை அறிந்ததோம், மேலை நாட்டு கிறிஸ்துவ ஞானசித்தர் புனித அகஸ்தீன் அவர்களையும் அறிந்து கொள்வோம். இத்தாலி நாட்டின் சமய ஞானப்பூங்காவில் பூத்த வாடா நறுமலர் புனித அகஸ்தீன். இலத்தீன் மொழியில் அவர் எழுதிய "விண்ணப்பங்கள்' (Confessions) எனும் நூல் சுயசரிதையானாலும், குடும்பச் சார்பான செய்திகள் மிக அருகியும், சமயச் சார்பான தியானமும் விளக்கமும் மிகுந்தும் கூறப்பட்டுள்ளன. "விண்ணப்பங்கள்' எனும் அக்கால இலக்கிய

உள்ளிருந்து எழும் ஆன்ம அழைப்பு QU 33
வடிவம் கண்ட அற்புத இலக்கியம் புனித அகஸ்தீனின் "விண்ணப்பங்கள்'. கடவுள் சந்நிதானத்தில் தன்னுடைய வரலாற்றை சொல்வது போல எழுதப்பட்டது, இந்த ஆன்மிக இலக்கியம். இந்நூல், படிப்போர்க்கு அளப்பரிய ஆன்மிக வலிமையைத் தரும் என்று கூறப்பட்டு வருகின்றது.
உள்ளிருந்து வரும் ஆன்மிக அழைப்பிற்கும், வெளியே தேகாதிவாசனைகளின் கவர்ச்சிக்கும் இடையே புனித அகஸ்தீன் உண்மையான போராட்டத்தை எதிர்கொள்ள வேண்டியதாயிற்று. ஒவ்வொரு நாளும் பின்வருமாறு பிரார்த்தனை செய்தார்.
"ஓ பரமபிதாவே, தாங்களே உண்மை; தாங்களே சத்தியம்; நான் உங்களை அடைய வேண்டும்; உங்களை உணர வேண்டும்; ‘கடவுளின் ராஜ்யம் உங்களுக்குள்ளேயே இருக்கின்றது' எனத் தாங்கள் கூறியவாறு தாங்கள் என்னுள்ளே இருக்கின்றீர்கள் என்பது உண்மைதான், நான் சில சமயங்களில் மிருகவாழ்க்கைக்கு கீழே போய்விடுகின்றேன், ஏன்? புலன்களின் தூண்டுதல்களை எதிர்த்து நிற்க கஷ்டப்படுகின்றேன்; நான் தங்களை ஆன்மாவாக உணர விரும்புகின்றேன். ஆனால், புலன்கள் என்னை கீழே இழுத்துத் தள்ளுகின்றன; ஒவ்வொரு நாளும் கூறுவதாவது: "பிதாவே, இன்று புலன் இன்பத்தை ஒரு சிறிதளவாவது அனுபவிக்கின்றேன்; அருள் கூர்ந்து என்னை மன்னித்து விடுங்கள், நாளையில் இருந்து புலன்களின் மாயக்கவர்ச்சிகளைக் கவனிக்கமாட்டேன்; நாளை தங்களைப் பின்தொடருவேன்; ஆனால் என் அன்பிற்குரிய பிதாவே இன்று நான் இன்பம் அனுபவிக்க வேண்டும்."
அகஸ்தீன் மனப்போராட்டம் ஓயவில்லை. அது மிகவும் தீவிரமடைந்தது; வேதனையால் வாய்விட்டு அலறினார்; 'பரமபிதாவே, எவ்வளவு காலம்? நாளை நாளை, ஏன் இன்றாக இருக்கக்கூடாது? அதுவும் இப்பொழுதுதாகவே இருக்கக்கூடாது? நான் ஏழையேன். நான் தவறிவிட்டேன்; என்னுடைய பலவீனங்களை, வரம்புகளை, குறைபாடுகளை நான் அறிவேன். தாங்கள் என்னை இரட்சிக்க வராவிட்டால், தங்கள் அழைப்பை

Page 20
34 Q9 ஆன்மிக வாழ்க்கைக்கான வழிகாட்டுதல்கள்
என்னால் செவிசாய்க்க முடியுமா? ஒவ்வொரு நாளும் நாளை முதல் புதியவனாவேன் என்று முடிவெடுப்பேன்; ஆனால் அந்த முடிவில் தோற்றுப் போவேன்; வீழ்ச்சியடைவேன். ஆகையால் பரமபிதாவே, தாங்கள் அன்பு பூண்டு அருள்புரிய வேண்டுகின்றேன்.'
"ஒராதார் உள்ளத்து ஒளிந்திருப்பனாகிய" இறைவனை, 'வினையேன் அழுதால் உனைப்பெறலாம்" என்பதற்கேற்ப அகஸ்தீன் நெஞ்சக் கனகல்லும் நெக்குருக கரைந்து தீவிரமாக அழுதார். "ஓ! பரமபிதாவே நாளை நாளை என்று எவ்வளவு காலம் காத்திருக்க வேண்டும்? இன்றே, இக்கணமே இரட்சிக்க வாருங்கள்' என்று அல்லும் பகலும் அரற்றினார்.
அந்தரங்க சுத்தியாக அவர் கதறி அழுதது வீண்போகவில்லை. அவர் அழுகையை இறைவன் திருச்செவி கொண்டு திருவுள்ளம் இரங்கி கொடுத்த தெய்வீகக் குரலை அகஸ்தீன் கேட்டார். கெளதம புத்தர் கேட்ட வானவர்களின் தெய்வீகக் குரல் போன்றதொரு குரலை அகஸ்தீன் கேட்டார்.
புனித அகஸ்தீன், தாம் செய்த பலவிதமான பாவங்களையும் தமது விண்ணப்பங்களில் ஒப்புக்கொண்டுள்ளார். அதே சமயத்தில் இறைவனை அறிய, அதை அறிவிக்கும் பேருண்மையை உணர்ந்திடவும் கொண்ட பேராவலையும் வெளிப்படுத்தினார். இதனாலேயே அவர் இரட்சிக்கப்பட்டார். தனக்குத்தானே துரோகமிழைக்கவில்லை என்பதையும் அகஸ்தீன் ஒப்புக் கொண்டார்.
கி.பி.நான்காம் நூற்றாண்ண்டச் சார்ந்த கிறிஸ்துவ மெய்ஞானி புனித அகஸ்தீன் கூறியதைப்போல பத்தொண்பதாம் நூற்றாண்டில் குருதேவர் பரமஹம்சர் பின்வருமாறு அமுத மொழி அருளியுள்ளார்.
"உனக்கு நீயே துரோகியாகிவிடாதே. உன்னுடைய பலவீனத்தை ஒப்புக்கொள். உன்னுள் கடவுள் இருக்கின்றார்.

உள்ளிருந்து எழும் ஆன்ம அழைப்பு Qp 35
உன்னுடைய தவறுகளை நீ ஒப்புக் கொண்டால் கடவுள் உன்னை மன்னிப்பார். நீயும் பேருண்மையை உணருவாய்."
அகஸ்தீன் வாழ்க்கையில் குருதேவர் அருளிய அமுத மொழியின் விளக்கத்தைக் காண்கின்றோம்.
"ஒ" பரமபிதாவே, எனக்கு உதவிட இன்றே ஏன் வரக்கூடாது?’ என்று அகஸ்தீன் முறையிட்ட பொழுது, "விழித்தெழுவாய், புனித பைபிளின் அந்தப் பக்கத்தைப் படித்துப்பார்' எனும் தெய்வீகக் குரலை கேட்டார். தெய்வீகக் குரல் பணித்தவாறே அகஸ்தீன் புனித பைபிளின் குறிப்பிட்ட அந்தப் பக்கத்தை திறந்த பொழுது, உள்ளத்தில் ஓர் வழிகாட்டுதல் தோன்றியது. அந்த வழிகாட்டுதலில், புலன்களின் தூண்டுதல்களை வென்றார், மகாஞானியானார். ஆகவே நமது எண்ணங்களுக்கு நமக்கு நாமே துரோகமிழைக்கக் கூடாது. நமது வரம்புகளை நமது குறைபாடுகளை நாம் அனைவரும் அறிவோம். நாம் கடவுளிடம் சரணடைந்தால், கடவுள் அன்புடையவர், பெருங் கருணையுடையவர் எனும் உண்மையை அறிவோம். நமது அணுகுமுறைகள் அனைத்தையும் அவர் மன்னித்துவிடுவார். இந்த மன்னிப்புப் பெற நமக்கு வேண்டுவதெல்லாம் நேர்மையும் உண்மையான உறுதியும் தான்.
உயர்ந்த குறிக்கோளாகிய ஆன்மிக வாழ்க்கையை நாடவிரும்பும் எவரும் தம்மை முழுமையாக கடவுளிடம் ஒப்படைத்து கொள்ள வேண்டும். மனதின் ஒரு பகுதியை அன்று. மனம் முழுவதையுமே அர்ப்பணித்து விடவேண்டும். மனதை ஒருமுகப்படுத்தாமல், ஒரு பகுதியை நமது குடும்பத்திற்கு, ஒரு பகுதியை உறவினர்களுக்கு, ஒரு பகுதியை நாம் பார்க்கும் உத்தியோகங்களுக்கு என்று பல பகுதிகளைக் கூறு போட்டு விடுவோமானால் மனதின் ஒருமுகப்படுத்தும் முழுமைத் தன்மைக்கு பங்கம் ஏற்பட்டு, நமது ஆன்மிகத் தேடலில் தவறுகள் சூழ்ந்துவிடும். ஆன்மிகப் பயணத்தில் தடைகள் மலிந்துவிடும். இப்பிறவியிலேயே இறையுணர்வைப் பெறவேண்டுமென்று மனம்

Page 21
36 Up ஆன்மிக வாழ்க்கைக்கான வழிகாட்டுதல்கள்
முழுவதையும் கடவுளிடம் விடவேண்டும். சரணம் சரணம்'என்று சமர்ப்பித்து விடவேண்டும்.
குடும்ப வாழ்க்கையில் நாள்தோறும் கவனித்து நிறைவேற்ற வேண்டிய பொறுப்புள்ள ஒருவர், அந்தப் பொறுப்புகளில் மனம் செலுத்தாமல் மனம் முழுவதையுமே கடவுள் சிந்தனைக்கே சமர்ப்பித்து விடுதல் எப்படி சாத்யமாகும் எனும் கேள்வி எழலாம். இத்தகைய கேள்விக்கு தீர்வு காண வழியுண்டு என ஞானிகள் கூறியுள்ளனர். கூட்டு உறவுகள், தனிமனித உறவுகள், சமூக உறவுகள் என்று நாம் செயலாற்றும் பொழுது அந்த உறவுகளையெல்லாம் ஆன்மிகமயப்படுத்தி விடவேண்டும்.
ஆன்மிக மயப்படுத்துதல் என்றால் என்ன? கடவுள் உலகியல் உறவுகள் அனைத்திலும் நீக்கமற நிறைந்துள்ளார். ஒவ்வொருவரிலும், செய்யும் தொழில் ஒவ்வொன்றிலும், நமது அனைத்து கடமைகளிலும் இறைவன் இருக்கின்றான் எனும் உணர்வைத் தோற்றுவிப்பதுதான் ஆன்மிகமயப்படுத்துதல் என்பதாகும். "நோக்கும் திசையெல்லாம் நாமின்றி வேறில்லை' என்பது ஆன்மிக மயப்படுத்துதலின் சாராம்சம் ஆகும். ஆகவே, அனைத்து செயல்களை, அனைத்து கடமைகளை செய்யும் போது ஒருவர் ՖՄ95] மனம் முழுவதையும் கடவுளிடம் சமர்ப்பித்துவிட்டால், மனப்போராட்டத்தில் இருந்து விடுபட்டு விடலாம்.
மனித வாழ்க்யிைன் குறிக்கோள் எதுவாக அமைய வேண்டும் என்பதைப் பற்றி சுவாமி விவேகானந்தர் சாற்றியுள்ள கருத்துக்களில் பின்வருவது ஒன்றாகும்.
"நம்முள் இருக்கும் தெய்வீகத் தன்மையை வெளிப்படுத்துவதே மனித வாழ்க்கையின் குறிக்கோளாகும்."
இந்தக் கருத்தை அவரே பின்வருமாறு விளக்கியுள்ளார். "மனித குலத்திற்கு அதனுடைய தெய்வீகத் தன்மையை போதித்து வாழ்க்கையின் ஒவ்வொரு கணத்திலும் அதை வெளிப்படுத்துவது எப்படி என்பதையும் விளக்குவது என்

உள்ளிருந்து எழும் ஆன்ம அழைப்பு yap 37
இலட்சியமாகும். அனைத்து வேலையும், வழிபாடே, எந்தவேலையும் சமயம் சாராததன்று."
ஒருவர் மருத்துவராகவோ, பொறியியலாளராகவோ, துறவியாகவோ, நூற்றுக்கணக்கான வேலைகளில் ஈடுபட்டவராகவோ குடும்பத் தலைவியாகவோ இருக்கலாம். நாம் செய்ய வேண்டிதெல்லாம் அன்றாட வாழ்க்கையில் நாம் மேற்கொள்ளும் உறவுத்தொடர்புகளை ஆன்மிகமயப்படுத்தச் செய்யும் முயற்சியேயாகும். "ஆம்" நமது வாழ்க்கையின் ஒவ்வொரு கணத்திலும் ஆன்மிகமயப்படுத்தும் முயற்சியில் ஈடுபடவேண்டும்.
அன்றாட வாழ்க்கையில் பிறருடன் கொள்ளும் உறவுகளை ஆன்மிகமயப்படுத்துதல் எப்படி என்பதை அறிய, சுவாமி அதுலானந்தாஜி மகராஜ் அவர்கள் வாழ்க்கையில் இருந்து ஒரு நிகழ்ச்சியைக் கொண்டு விளக்கிக் கொள்ளலாம். இது நமது முயற்சிக்கு உதவக் கூடியது. என் சொந்த அனுபவத்தை கொண்டு விளக்க விரும்புகின்றேன்.
நான் இராமகிருஷ்ண மிஷனில் அப்பொழுது தான் புதியவராக, பயிற்சிக்காக பிரம்மச்சாரியாக சேர்ந்திருந்தேன். புதியச் சூழலில் நான் ஒரு வகையான மனப் போராட்டத்தை எதிர்கொள்ள வேண்டியதாயிற்று. நான் ஒரு பிரம்மச்சாரி எனும் நிலையில் ஜபம், தியானம் முதலானவற்றை குறிப்பிட்ட நேரங்களில் செய்ய வேண்டியிருந்தது. அக்காலத்தில் பேலூர் வித்யா மந்திரில் தங்கிப்படிக்கும் மாணவனாக இருந்தேன். வித்யா மந்திரின் முதல்வர் சுவாமி தேஜஸானந்தாஜி அவர்கள் சரஸ்வதி பூஜையை முன்னிட்டு செய்ய வேண்டிய ஏற்பாடுகளை திட்டமிட்டு வந்தார். ஒரு நாள் என்னை அவர் அழைத்து பூஜைக்கான முன்னேற்பாடுகளை கவனிக்க உதவுமாறு கேட்டார். மாணவர்கள் நடிக்கும் நாடகம் ஒன்றிற்கான ஒத்திகை மாலை 6 மணி முதல் இரவு 7 மணி வரைநடைபெற்றது. அந்த நேரம்தான்நான் ஜபம், தியானம் செய்யும் நேரமாகும். -

Page 22
38 Qup ஆன்மிக வாழ்க்கைக்கான வழிகாட்டுதல்கள்
'விழாவில் நடைபெறப் போகும் நாடகத்திற்காக மாணவர்களுக்கு பயிற்சி தர வேண்டியுள்ளது. நீ எனக்கு உதவ. முடியுமா?' என்று சுவாமி மகராஜ் கேட்ட பொழுது, என்னுள் மனப்போராட்டம் எழுந்தது, நாடகப் பயிற்சிக்காக ஒதுக்கப்பட்ட நேரமும், என்னுடைய ஜபம், தியானத்திற்காக ஒதுக்கப்பட்ட நேரமும் ஒரே சமயத்தில் இருந்ததால் 'என்ன செய்வது' எனும் மனப்போராட்டம் எழுந்தது. விரைவிலேயே இதன் பிறகு, முஸ்ஸெளரிமலை அடிவாரத்தில் உள்ள பார்ல்லோகஞ்ச் எனுமிடத்துக்கு செல்லவேண்டியநல்லவாய்ப்பு எனக்குகிட்டியது. சுவாமி அதுலானந்தாஜி மகராஜ்அவர்கள் அங்கு வாழ்ந்துவந்தார். ஆன்மிக சாதனை ஆற்றல் பெற்ற சுவாமி அதுலானந்தாஜி மகராஜ் அவர்களைச் சந்திக்குமாறு சுவாமி சிரத்தானந்தாஜி என்னைப் பணித்திருந்தார். சுவாமி சிரத்தானந்தாஜி ஸாக்ரமெண்டோ எனும் ஊரில் இருக்கும் வேதாந்த சொசைட்டியின் தலைவராக தற்சமயம் இருக்கின்றார். இவர் பணித்தவாறு நான் சுவாமி அதுலானந்தாஜியை சந்திக்கும் நற்பேறு பெறுவதற்குச் சென்றேன். அவரைப் பணிந்து என் மனதில் இருந்த சுமையை இறக்கி வைத்தேன். 'மகராஜ், நான் புதிய பிரம்மச்சாரி மாணவன். சமீபத்தில் நான் மிஷனில் சேர்ந்தேன். வித்யா மந்திரில் என்னுடைய கடமைகளை ஆற்ற வேண்டிய நேரமும், என்னுடைய ஜபம் தியானம் செய்ய வேண்டிய நேரமும், ஒரே சமயத்தில் அமைகின்றது. எதை கவனிப்பது எனும் மனப்போராட்டத்தில் இருக்கின்றேன். என்ன செய்ய வேண்டும் என்று அருள் கூர்ந்து சொல்லுங்கள்' என்று வேண்டிக் கொண்டேன்.
என் மனப்போராட்டத்தை அறிந்த சுவாமி அதுலானந்தாஜி பதிலளித்ததாவது: "நீ கேட்ட இரு கேள்வியை நானும் அமெரிக்காவில் சாந்தி ஆசிரமத்தில் சுவாமி துரியானந்தாஜியுடன் இருந்த பொழுது அவர்களிடம் கேட்டேன்.
சுவாமி அதுலானந்தாஜி மகராஜ் கேட்ட கேள்வியையும், அதற்கு சுவாமி துரியானந்தாஜி மகராஜ் அளித்த பதிலையும்

உள்ளிருந்து எழும் ஆன்ம அழைப்பு Qp 39
அறிவதற்கு முன்பு சுவாமி அதுலானந்தாஜியைப் பற்றி வாசகர்களுக்கு சில விவரம் தெரிவிக்க விரும்புகின்றேன். சுவாமி அதுலானந்தாஜி ஐரோப்பாவில் ஹாலந்து நாட்டில் பிறந்தவர். புனித அன்னை சாரதா தேவி அவர்களிடம் தீட்சை பெற்றவர். சுவாமி விவேகானந்தர் உட்பட குருதேவர் இராமகிருஷ்ண பரமஹம்சர் நேர் சீடர்கள் பலருடன் தொடர்பு கொண்டவர். அமெரிக்காவில் சான்பிரான்ஸிஸ்கோ சாந்தி ஆசிரமத்தில் சுவாமி துரியானந்தாஜியுடன் சுவாமி அதுலானந்தாஜி இருந்த காலத்தை நான் குறிப்பிடுகின்றேன்.
சுவாமி துரியானந்தர், உண்மையைத் தேடும் நேர்மையான சாதகர்களுக்கு விசேஷப் பயிற்சி அளித்து வந்தார். இதன் மூலம் அவர்கள் தங்களுடைய தெய்வீக இயல்பை உணரமுடியம். இந்த நோக்கில் சாதகர்கள் குழுவை சாந்தி ஆச்ரமத்தில் சேர்த்துக் கொண்டார். இந்தக் குழுவில் சுவாமி அதுலானந்தாஜியும் சேரும் நற்பேறு பெற்றார். எப்பொழுதும் ஜபம், தியானம், புனித நூல்களைப் படிப்பது முதலானவற்றை செய்யலாம் எனும் மகத்தான நம்பிக்கையுடன் சென்றார். ஆனால் அங்கு அவர் எதிர்பார்த்ததற்கு மாறுபட்ட சூழல் காத்திருந்தது. சாதகர்கள் குழுவினருக்கு விறகு, தண்ணீர் கொண்டு வருதல் முதலான பல்வேறு வேலைகள் தரப்பட்டன. இதன் காரணமாக அவர்களுக்கு ஜபம், தியானம் செய்யப் போதிய நேரம் வாய்க்கவில்லை. இதைக் கண்டு அவர் வியப்படைந்தார்.
சுவாமி அதுலானந்தாஜி எதிர்பார்த்தது ஒன்று, நடப்பது ஒன்றாக இருந்ததால் சற்று மனக்கலக்கம் அடைந்தார். தன்னைக் கட்டுப்படுத்திக் கொள்ளாத நிலையில் ஒரு நாள் சுவாமி துரியானந்தாஜி மகராஜிடம் 'சுவாமி, தாங்கள் எனக்கு நிறைய வேலை தருவதால் தியானம், ஜபம் செய்வதற்கு நேரம் இருக்காது" என்று கேட்டார். சுவாமி அதுலானந்தாஜி மகராஜ் பின்வருமாறு பதிலளித்தார்.

Page 23
4O QC ஆன்மிக வாழ்க்கைக்கான வழிகாட்டுதல்கள்
"என்னருமை மகனே, ஓர் ஆன்மிக சாதகனுடைய வாழ்க்கை முழுவதுமே இடைவிடாத தியானமாகும். இதற்கு மேல் தியானத்திற்கென்று தனி நேரம் வேண்டுமா? இதை எப்பொழுதும் நினைவில் கொள்க."
அன்று சுவாமி துரியானந்தாஜி மகராஜ் அருளிய அந்த அறிவுரையை, சுவாமி அதுலானந்தாஜி பார்லோகஞ்சில் என்னிடம் எடுத்துக் கூறினார். என் கண்களைத் திறந்தார். இந்தப் புனிதச் சிந்தனையைக் கேட்பதற்கு முன்பு, விறகு, தண்ணீர் கொண்டு வரும் வேலைகளை சமயயுணர்வற்ற வேலைகள் என்று எண்ணியிருந்த அந்தத் தவறு எனக்குப் புரிந்தது. வாழ்க்கை முழுவதுமே தெய்வீகமானது. வாழ்க்கை முழுவதுமே இடைவிடாமல் தொடரும் தியானமாகும். செய்யும் தொழில் ஒவ்வொன்றும் தெய்வ வழிபாடாகும்.
சுவாமி துரியானந்தாஜி மகராஜ் அவர்களிடமிருந்து பெற்ற பதிலை சுவாமி அதுலானந்தாஜி மகராஜ் எனக்கு தந்ததால் என் பிரச்னை முற்றிலுமாக தீர்க்கப்பட்டு விட்டது.
வாழ்க்கை முழுவதும் தெய்வீகமானது; வாழ்க்கை முழுவதும் தியானத்திற்குரியது; செய்யும் தொழில் ஒவ்வொன்றும் வழிபாடாகும் எனும் உயர்ந்த நோக்குடன் அன்றாட வாழ்க்கையில் பிறருடன் உறவு கொள்ளும் பழக்கத்தை நாம் வளர்த்துக் கொள்ளும் பொழுதுதான் ஆன்மிகமயமாக்கப்படுதல் சாத்யமாகும். ஆன்மிகம், ஆன்மிகமற்றது எனும் வேறுபாட்டிற்கு இடம் தராமல் இருக்க பழகிக் கொண்டால் மனம் முழுவதையும் கடவுளுக்கு அர்ப்பணிக்கின்றோம் என்பதற்கு பொருளாகும்.
"உலகியல் வாழ்க்கையில் இருப்பவர்களுக்கு ஆன்மிகமயப்படுத்துதல் என்பது சாத்யமாகுமா?’ எனும் கேள்வி கேட்கப்படலாம். இந்த கேள்விக்கு மீண்டும் மீண்டும் நினைவில் கொள்ள வேண்டிய உண்மை என்னவென்றால், ஓர் ஆன்மிக சாதகரின் வாழ்க்கை தொடர்ச்சியாக தியானத்திற்குரியது. இது, இடையறாதது; தடங்கல் இல்லாதது.

ஆன்மிக வாழ்க்கையில் தடங்கல்கள் Up 4
ஆன்மிக வாழ்க்கையில் தடங்கல்கள்
ன்மாவின் குரலைக் கேட்டு நாம், நமது உண்மையான உயர்ந்த இருப்பிடத்திற்கு திரும்பினாலும், வெளியுலகக் கவர்ச்சிக் குரல்கள். கடைத்தெருவின் பரபரப்பையும், இரைச்சலையும் கொண்ட கவர்ச்சிக் குரல்கள் - ஆன்ம அழைப்புக் குரலை கேட்கவிடாமல் மூழ்கடித்து விடுகின்றது. ஆனால், இந்த வெளியுலகக் கவர்ச்சிகள் சிறிதுநேரம் தணியும் பொழுது, ஆன்ம அழைப்புக் குரலைக் கேட்கத் தீவிரமாய் இருப்பவர்கள் கணநேர ஆன்ம தரிசனத்தைப் பெறுகின்றனர். இந்த அனுபவம் சிறிது நேரமே ஏற்பட்டாலும், அந்த சமயத்தில் வெளியுலகக் கவர்ச்சிகள் நம் மனத்தைத் தாக்க நாம் அனுமதிப்பதில்லை.
ஒரு கணநேரம் மட்டும் ஆன்ம தரிசனம் பெறுபவர் தமக்குள் பின்வரும் உணர்வைக் கொள்கின்றனர். 'கடைத்தெருவில் ஒரு சில காசுகளையே நான் பெற்றுக்கொள்கிறேன். ஆனால், உண்மையான உள்ளிருப்பிடத்தில் எனக்காகப் பெருஞ்செல்வம் காத்துக் கொண்டிருக்கிறது.'
இந்த ஒரு சில காசுகளைப் பெற்றுக் கொள்பவன், ஆன்ம தரிசனத்தில் பெற வேண்டிய பெருஞ்செல்வத்தைப் பெற முயற்சியெடுக்காதவகையில் துரதரிஷ்டவசமாக அவனை அவலம் சூழ்ந்து விடுகின்றது. ஆனால் மனமார்ந்த முனைப்புடன் திடநம்பிக்கையுடன் இருப்பவர், "உலகியல் கவர்ச்சிகளில்

Page 24
42 Qap ஆன்மிக வாழ்க்கைக்கான வழிகாட்டுதல்கள்
சிக்குண்டது போதும், இனி நான் தீவிரமாக இருப்பேன்; என்னை மேம்படுத்திக் கொள்வேன்; என்னுள் இருக்கும் ஆன்மிகச் செல்வப் புதையலை உரிமையாக்கிக் கொள்வேன்' என்று கூறுவர். இவ்வுண்மையை உணர்வதால் மட்டுமே ஒருவர் நிரந்தரமான அமைதியையும், ஆனந்தத்தையும் அமரத்வத்தையும் பெறுவர். வெளியுலகக் கவர்ச்சிகளைப் புறக்கணித்து ஆன்மிக நாட்டத்தில் தீவிரம் காட்டுபவர், தங்களைத் தாங்களே ஆய்வு செய்து கொள்வர், ஆத்ம சோதனை செய்து கொள்வர்.
ஒரு தீவிரமான மாணவன் கல்விகற்கும்பொழுது பகுத்தறிந்து அறிவது போல, நாமும் நமது ஆத்மபோதத்தை ஒரளவு புரிந்துக் கொள்ள இயலும்.
"தத் த்வம் அஸி" (நீ அதுவாய் இருக்கிறாய்), "அகம் பிரம்மாஸ்மி" (நான் பிரம்மம்), "அயம் ஆத்மா பிரம்ம" (இந்த ஆத்மா பிரம்மம்) முதலான ஆத்மபோத அனுபவங்கள், உயர்ந்த ஆன்மிகப் பேருண்மை தரிசனத்தில் தோன்றுகின்றன. ஆத்ம போதம் பெறுவதற்கு மாயை எனும் திரையை கிழித்தெறிய வேண்டும். மாறிக் கொண்டு இயங்கும் உலகத்தோற்றம் எனும் மாயை, பிரம்மத்தை உணர்வதற்கு தடையாய் இருக்கின்றது. பொய்யான உலகத்தோற்றத்தை பிரம்ம ஞானத்தால் வீழ்த்தி அடித்தளமான பிரம்மத்தை நாம் கண்டறிய வேண்டும். இவ்வாறு சொல்வது எளிதாக இருக்கும், ஆனால் செய்வது மிகவும் கஷ்டம்.
ஆத்மபோதத்தை பெற முடியாமல் தடுக்கும் தடைகள் என்ன என்பதையும் பார்ப்போம். ஆத்மா அல்லாததின் மீது நாம் வைக்கும் பற்று, தடைகளில் ஒன்றாகும். தில்லி இராமகிருஷ்ண மடத்தில் பக்தர்கள் பெருங்கூட்டம் நடைபெறும் பொழுது காலை முதல் மாலை வரையில் தொடர்ச்சியாக வழிபாட்டு நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்படும். இதில் சற்று நேரம் தியானப் பயிற்சிக்கும் இடமுண்டு. வழிநடத்தப்படும் இந்தத்தியானப் பயிற்சியில் ஆத்மா அல்லாத ஒவ்வொன்றிலும் இருந்து விலகி நிற்க அறிவுறுத்தப்படுகின்றது. பொருளல்லாதவற்றை பொருளாகக்

ஆன்மிக வாழ்க்கையில் தடங்கல்கள் Up 43
கொள்ளும் மயக்கம் கூடாது. இந்த உலகம் பிரம்ம மயமானது: என்பதை உணரத் தடுப்பது ஆத்மா அல்லாத ஒன்றின் மீது நாம் வைக்கும் பற்று. இந்தப் பற்றினால் என்றும் நிலைபேறுடைய பேருண்மையை உணர்வது கஷ்டமாகின்றது.
இதை ஓர் உதாரணத்தின் மூலம் அறியலாம். ஒருவர் நகைப் பெட்டியை வாங்குவதாக வைத்துக் கொள்வோம். அதில் விலையுயர்ந்த நகைகள் நிறைந்துள்ளன. இந்தப் பெட்டியைப் பார்க்கும் ஒருவன் உள்ளிருக்கும் விலையுயர்ந்த நகையைப் பற்றி அறிய எண்ணமிலாமல், பெட்டியின் வெளிப்புறத் தோற்றத்தைப் பற்றி எண்ணினால் பயன் உண்டோ? இதைப் போலத்தான் நாம் உடலைப் பற்றி எண்ணுகிறோம். உடலுக்குள் உறைந்துள்ள ஆத்மாவைப் பற்றி எண்ணுவதில்லை. அவித்யை காரணமாக உடல் மீது மிகுந்த மோகம் கொள்கிறோம். நகைப்பெட்டிக்குள் இருக்கும் விலையுயர்ந்த நகைகளைப் பற்றி அறிய விரும்பாதவன் போல் உடலுக்குள் இருக்கும் ஆத்ம ரத்தினத்தை அறிய நாம் தவறி விடுகின்றோம்.
உடல் - மனம் பற்றிய உணர்வு நகைப்பெட்டிக்கு ஒப்பிடப்பட்டால், நகைப்பெட்டிக்குள் இருக்கும் விலையுயர்ந்த நகை உடலுக்குள் இருக்கும் விலை மதிப்பற்ற ஆத்மாவிற்கும் ஒப்பாகின்றது. விலையுயர்ந்த நகையைப் பெற்றவனுக்கு, நகைப்பெட்டி ஒரு பொருட்டாகாது. அறியாமை காரணமாக நாம் தேகத்தின் மீது மோகம் கொண்டு விடுவதால், தேகத்திற்குள் இருக்கும் ஆத்மாவை அறிந்து கொள்ளத் தவறி விடுகின்றோம். தேகம் - மனம் மீதான மிதமிஞ்சிய, முட்டாள்தனமான பற்று ஆத்ம தரிசனத்தைத் தடுத்து விடுகின்றது.
"மோகத்தை கொன்று விடு,' "யோகத்திருத்தி விடு' எனும் ஆத்ம விசார மார்க்கம், ஆத்ம தரிசனத்திற்கு அழைத்துச் செல்லும். ஆன்மிகப் பேருரைகளைக் கேட்கின்றோம். புனித சாத்திர நூல்களைக் கற்கின்றோம். இவற்றில் இருந்து நாம் ஒரளவு பயன் கொள்கின்றோம். ஆனால் இந்தப் பயனை, நாம் புறவுலகத்

Page 25
44. QP ஆன்மிக வாழ்க்கைக்கான வழிகாட்டுதல்கள்
தூண்டுதல்கள், கவர்ச்சிகள் காரணமாக இழந்துவிடும் அவலநிலைக்கு ஆட்பட்டுவிடுகின்றோம். நமது இந்த நிலைமையை ஓர் ஒப்பீடு வழியே புரிந்துக் கொள்ளலாம்.
குறிப்பிட்ட சில தாவரங்கள் நீர்நிலைகளிலே வளர்கின்றன. தண்ணீரின் மேற்பரப்பை ul-i Bg5 மூடிநிற்கும் இத்தாவரங்களுக்குக் கீழே பளிங்கு போன்றத் தெள்ளத் தெளிந்தத் தண்ணீர் இருக்கின்றது. ஆத்மாவைப் பற்றிய அறிவு, பளிங்கு போன்றத் தெள்ளத் தெளிவான தண்ணீர் போன்றது. இந்த அறிவைப் பெறுவதற்கு நாம் சமயப் பேருரையில் கேட்கின்றோம். சொற்பொழிவில் கேட்டபிறகு வீடு திரும்பியவுடன் மறுபடியும் சாரமற்ற, சோர்வு தரும் வாழ்க்கை நம்மீது படர்ந்து விடுகின்றது. தெளிந்து தண்ணீரின் மேற்பரப்பின் மீது படர்ந்து மூடிவிடும் தாவரங்கள் போன்று, சாரமற்ற சோர்வுகள் நம்முள் படர்ந்து விடுகின்றது. உலகியல் கவர்ச்சிகளான இவை, தாவரங்கள் தெளிந்தத் தண்ணீரை மறைத்து விடுவது போல, ஆத்மாவை மறைத்து விடுகின்றன.
இதற்கு பரிகாரம் என்ன? புறவுலகக் கவர்ச்சிகள்துண்டிவிடும் விளைவுகளை செயலற்றதாக்கி விடவேண்டும். அதாவது நமது அன்றாட வாழ்க்கையில் ஒவ்வொருவரிடமும் நாம் கொள்ளும் உறவை ஆன்மிக மயப்படுத்துதல் வேண்டும். பூரீஇராமகிருஷ்ண பரமஹம்ஸரின் நேர் சீடரான சுவாமி துரியானந்தஜி கூறியது போல, ஆத்ம போதத்தை நாடும் ஒரு சாதகரின் வாழ்க்கை முழுவதுமே தொடர்ச்சியான தியானமாகும். இடைவிடாத இந்த நினைப்பைக் கொள்வதின் மூலம் உலகக் கவர்ச்சிகளின் தூண்டுதல்களை செயலற்றதாக்கி விடலாம். நாம் இவ்வாறு முடிவு செய்த போதிலும், நமது முயற்சிகளில் அடிக்கடி நாம் தோல்வியடைகின்றோம். இந்தத் தோல்விக்குக் காரணம் என்ன? சுவாமி விவேகானந்தர் கூறியதைக் கேட்போம்."எல்லாவிதமான பொய்களிலும் பெரிய பொய், ‘தேகங்களே நாம்' என்று நினைப்பது. உடல் உணர்வில் இருந்து உலகியல் பற்று அனைத்தும் தொடருகின்றது." ܖ

ஆன்மிக வாழ்க்கையில் தடங்கல்கள் Up 45
முன்பு கூறிய நகைப்பெட்டி உதாரணத்தை மீண்டும் நினைவுகூர வேண்டும். நகைப்பெட்டிக்குள் என்ன இருக்கின்றது என்பதைப் பற்றி அறிய ஆர்வம் கொள்ளாமல் நகைப்பெட்டியின் மீது கவனம் செலுத்துவது போன்றதாகும், தேகத்திற்குள் இருக்கும் ஆத்மாவை அறிய ஆர்வம் காட்டாமல், தேகத்தின் மீது கவனம் செலுத்துவது. உடல் உணர்வுகளை வழிபடுபவர்களாக நாம் ஆகிவிட்டோம்.
"தேகம் பொய் யென்றுணர் தீரரை யென் செய்வாய்?. மாயையே' எனும் தமிழ்நாட்டு ஞானக் கவி பாரதியார் கேள்வி இங்கு இணைத்துச் சிந்திக்கத்தக்கது.
தூய அன்னை பூரீசாரதா தேவியார் தேகவுணர்வு பற்றி கூறியதும் நமக்கு வழிகாட்டக்கூடியது. தூய அன்னையார் பள்ளிக் கூடம் சென்று முறையான கல்வியைக் கற்காதவர். ஆனால் சரஸ்வதி தேவியாகவும், ஞானதாயினியாகவும் விளங்கியவர். பரமஹம்ஸர், தூய அன்னையாரிடம் தேகத்தத்வத்தைப் பற்றி உரையாடிய பொழுது, "தேகத்தில் என்ன இருக்கின்றது? இறுதியில் அது சாம்பலாகி விடுகின்றது. அழியக் கூடிய இந்த தேகத்தின் மதிப்பு ஒன்றரை சேர் எடையுள்ள சாம்பலாகும்' என்று தூய அன்னையார் குறிப்பிட்டார்.
நான் எனும் பொய்யை நடத்தும் தேகத்தின் மீது மோகம் கொள்வதை வங்காளத்தின் புகழ் மிக்க சித்தர் கவிஞர் ரஜனி காந்தாவும், "இப்பொழுதும் இந்த தேகத்தின் மோகம் கொண்டு, தேகமே நான் எனும் எண்ணத்தை கொள்கின்றேன்' என்று இசைத்துள்ளார்.
வாழ்க்கையின் ஒவ்வொரு கணத்திலும் தேகம், தேகம், தேகம் ஒன்றே எனும் எண்ணம் நிறைந்துள்ளது. இதைத் தவிர வேறொன்றில்லை. இத்தகைய தேகவுணர்வில் இருந்து நாம் விடுபடாமல் போனால் ஆத்ம போதவுணர்வு சித்தியாகாது. இந்தத் சூழலில் ஆன்மிக வாழ்க்கைக்குத் ಇಂಕ್ಜೆಟ್ಟಿ
வழிகாட்டுதல்களைப் பற்றி நாம் ஆர்வம் வண்டும்.

Page 26
As Up ஆன்மிக வாழ்க்கைக்கான வழிகாட்டுதல்கள்
இறையுணர்வை பெறுதல், நமது தெய்வீக இயல்பை அறிதல் எனும் நமது இலட்சியத்தை அடைய நமக்கு சில வழிகாட்டுதல்கள் தேவைப்படுகின்றன.
இதற்கான வழிகாட்டுதல்களில் ஒன்று, ஆத்மா அல்லாத நான்' என்பதை நாம் ஏற்கக்கூடாது. நம்மை அதுவாக அடையாளங் காட்டக்கூடாது.
சுவாமி விவேகானந்தர் கூறியதாவது: "உருவத்தில் உருவமற்றதைக் காண்பது உண்மையாகும். ஆனால் அறியாமை காரணமாக உருவமில்லாததில் உருவத்தைக் காண்கிறோம்."இங்கு கூறப்பட்டுள்ள உண்மை என்பது என்ன என்பதை விளங்கிக் கொள்வோம். உண்மை என்பது குறிப்பிட்ட ஒரு வடிவம் அன்று: அது தேகம், மனத்தைக் கடந்து மேல் நிற்கும் தூயவுணர்வான ஆத்மாவாகும். w
ஆத்மா அல்லாத அனைத்திலும் இருந்து நாம் முற்றிலும் விலகிக் கொள்ள வேண்டும்; முற்றிலுமாக தொடர்பைத் துண்டித்துக் கொள்ளவேண்டும். இவ்வாறு செய்யத்தவறினால் பிறவி தோறும் எண்ணற்ற துன்பங்களை அனுபவிப்போம். இதன் தொடர்பாக ஒரு கதையைக் கூறுவது இங்கு பொருத்தமாக அமையும். இந்தக் கதை ஒரு முதலை - குள்ள நரியைப் பற்றியக் கதை. குள்ள நரி மிகவும் சாமர்த்தியமுள்ளது; கபடமானது. ஒருநாள் ஒரு முதலை குள்ள நரியைச் சந்திக்க வேண்டியதாயிற்று. இரண்டும் உரையாடத் தொடங்கின.
குள்ளநரி முதலையிடம், "நண்பனே, மனிதர்கள் மிகவும் மேலானவர்கள், சக்தி வாய்ந்தவர்கள். அவர்கள் நிலத்தை உழுது, பலவிதமானப் பயிர்களை விளைவிக்கின்றார்கள். நாமும் ஏதாவது செய்ய வேண்டும். நாம் உழுது நெற்பயிர் செய்வோமா?' என்று பேசியது. குள்ளநரியின் இந்த யோசனையை முதலை வரவேற்று, "நண்பனே, நெற்பயிர் செய்ய நான் சம்மதிக்கின்றேன்.' என்று பதிலளித்தது. குள்ளநரியும், முதலையும் திட்டமிட்டபடி நெற்பயிர் செய்யப்பட்டது. விளைச்சலைப் பங்கிட்டுக் கொள்ளும் பொழுது

ஆன்மிக வாழ்க்கையில் தடங்கல்கள்• Op 47
குள்ளநரி, முதலையிடம், "நண்பனே, நெல்லின் எந்தப் பகுதி உனக்கு வேண்டும்?' என்று கேட்டது. முதலை குள்ளநரியைப் போல புத்திசாலியில்லை; மிகவும் மூடத்தனமானது. இதனால், "சரி, நான் நெல்லின் அடிப்பாகத்தை எடுத்துக் கொள்கின்றேன். மேல்பாகம் வேண்டாம்' என்று கூறியது. முதலையின்இந்தப் பதில் குள்ளநரிக்கு உண்மையிலேயே மகிழ்ச்சியளித்தது. குள்ளநரி நெல்லின் மேல்பாகமான நெற்கதிர்களையெல்லாம் எடுத்துக் கொண்டது. முதலைக்கு வெறும் வைக்கோல்தான் மிஞ்சியது.
சிறிது காலத்திற்குப் பிறகு குள்ளநரி, முதலையிடம், "நண்பனே, நாம் இப்பொழுது கரும்பு பயிர் செய்வோம்' என்று யோசனை கூறியது. கரும்பும் பயிரிடப்பட்டது. விளைச்சலைப் பங்கு போட்டுக் கொள்ளும் பொழுது, குள்ளநரி முதலையிடம் "விளைச்சலில் எந்தப் பகுதி உனக்கு வேண்டும்?' என்று கேட்டது. குள்ளநரியின் தந்திரத்தை இப்பொழுதும் புரிந்துக் கொள்ளாத முதலை "சென்ற முறை நான் அடிப்பாகத்தைக் கேட்டேன், இப்பொழுது மேல்பாகத்தைக் கேட்போம்" என்று எண்ணி அவ்வாறே கேட்டது. இந்த முறையும் நாம் தவறு செய்துவிட்டோம் என்பதை முதலை கண்டுகொண்டது. முன்பு தானியங்கள் நிறைந்த மேல் பாகத்தைக் கேட்காமல் தவறு செய்தது. ஆனால் இப்பொழுதோ கரும்பின் மேல்பாகம் வெறும் தழைகள்தான் என்றறியாமல் மேல்பாகத்தைக் கேட்டு ஏமாறியது. தனது நண்பன் குள்ளநரி தனது தவறைச் சுட்டிக் காட்டாமல் ஏமாற்றியதை முதலை கண்டு கொண்டது. இதன் காரணத்தை அறிய முதலை, குள்ளநரியிடம் "இரண்டு சமயங்களிலும் நான் தவறான விருப்பத்தைத் தெரிவிக்க நீ எப்படி சரியான முடிவெடுத்தாய்?" என்று கேட்டது. இந்த கேள்விக்கு, குள்ளநரி "நான் என்னுடைய உயர்வான புத்திசாலித்தனத்தால் சரியான முடிவை எடுத்தேன்." என்று குறிப்பிட்டது. இங்கு "உயர்வான புத்திசாலித்தனம்' எனும் சொற்றொடரைக் குறித்துக் கொள்ளவேண்டும்.

Page 27
48 Uy ஆன்மிக வாழ்க்கைக்கான வழிகாட்டுதல்கள்
குள்ளநரியின் 'உயர்வான புத்திசாலித்தனத்தைக் கேட்ட முதலை தனக்குள் பின்வருமாறு எண்ணியது. 'நமக்கோ வயதாகி விட்டது; ஒருநாள் இறந்து விடுவோம்; நமது குழந்தைகளாவது நன்றாக வளர்ந்து உயர்வான புத்திசாலித்தனத்தைப் பெற வேண்டும்." இந்த எண்ணத்துடன், தனது குழந்தைகளை புத்திசாலிகளாக்க, அவர்களை குள்ளநரியிடம் அனுப்பியது முதலை. காலம் கடந்ததே அல்லாமல் குழந்தைகள் திரும்பிவரவில்லை. குழந்தைகளுக்கு என்ன நேரிட்டதோ என்று தாய் முதலை கவலையுற்றது. தனது கணவனிடம் தனது துன்பத்தைத் தெரிவித்தது. மனைவியிடம் ஆண் முதலை "கவலைப்படாதே, நமது நண்பன் பொறுப்பிலே குழந்தைகள் செளக்கியமாக இருப்பார்கள். நண்பன் நமக்கு துரோகம் செய்ய மாட்டான்." என்று சமாதானம் கூறியது. இதற்குப் பிறகு நீண்ட காலமாகியும் குழந்தைகள் வீடு திரும்பவில்லை. தாய் முதலை, குழந்தைகளை மீட்டெடுத்துக் கொண்டு வர கணவனை வற்புறுத்தியது.
குள்ளநரியைத் தேடிச் சென்ற முதலை, வழியில் ஒரு குளத்தில் குள்ளநரி மகிழ்ச்சியுடன் நீந்திக் கொண்டிருந்ததைக் கண்டது. முதலை வந்ததை குள்ளநரி பார்க்கவில்லை. குழந்தை முதலைகள் இருப்பதற்கான அடையாளம் இல்லை. ‘ஒரு வேளை குழந்தைகளை குள்ளநரி தின்றுவிட்டிருக்குமோ என்று முதலை எண்ணியது. குள்ளநரியிடமே கேட்டு விடலாம் என்று முடிவு செய்து, குள்ளநரியிடம், "என் குழந்தைகள் எங்கே?' என்று கேட்டது. குள்ளநரி பதிலளிக்கவில்லை. இதனால் மிகவும் கோபமடைந்த முதலை, குள்ளநரியிடம் "நான் இனிமேல் காத்திருக்கப்போவதில்லை. நான் முதலை என்பதைநீஅறிவாயா? நீயோ ஒரு குள்ளநரிதான். உன்னை நான் தின்றுவிடப் போகின்றேன்." என்று கூறியது. இவ்வாறு கூறிக் கொண்டே குள்ளநரியின் கால்களில் ஒன்றை கவ்விப் பிடித்துக் கொண்டது முதலை. இந்தச் சமயத்தில் குள்ளநரி, முதலையிடம் "நீ என் காலைத்தான் கவ்விப் பிடித்திருக்கின்றாய். என்னைத் தொட

ஆன்மிக வாழ்க்கையில் தடங்கல்கள் Qp 49
உன்னால் முடியாது' என்று அச்சமின்றி பேசியது. முதலையோ மேலும் சீற்றம் கொண்டு, குள்ளநரியின் வயிற்றைக் கவ்வியது. இந்த நிலையிலும் குள்ளநரி, "ஓ! என்னுடைய வயிற்றை மட்டும்தான் நீ கவ்வியிருக்கின்றாய். என்னை நீ தொட முடியவில்லை; என்னைக் கொல்ல உன்னால் முடியாது" என்று கூறியது.
முதலில் காலைப் பிடித்தபொழுதும், பிறகு வயிற்றைப் பிடித்தபொழுதும் முதலையால் 'தன்னைத் தொடமுடியாது' எனும் குள்ளநரியின் கூற்றில் நீதி போதனை ஒன்று உள்ளது. இதில் தத்துவச் சிந்தனையும் அடங்கியுள்ளது. ஆத்மாவை மட்டும் உணர்ந்தவனுக்கு, ஆத்மா அல்லாததின் பல்வேறு அங்கங்களைப் பற்றி கவலையில்லை. ஆத்மா அல்லாததை, ஆத்மா அல்லாத மட்டுமே என்று தேர்ந்து தெளிந்தவனை உலகமாயை ஏமாற்ற (plu T35. அடிப்படையிலே, இயற்கையாகவே நாம் அழிவில்லாதவர்கள்; அமரத்வம் வாய்ந்தவர்கள் என்றும் சுதந்திரமானவர்கள். ஆத்மா அல்லாததின் எந்த ஆதிக்க சக்தியும் நம்மை பாதிக்காது. ஆத்மா ஒன்றை மட்டுமே நாம் சிந்திக்க வேண்டிய மிக முக்கியமான விஷயம் என்பதை சுவாமி விவேகானந்தர் நல்வாக்கால் அறிவோம். "ஒவ்வொரு ஆத்மாவும், மற்ற ஆத்மாக்களை தனது ஆத்மாவாக நினைத்துப் பழகி நடக்க வேண்டும் என்பதைக் கடமையாகக் கொள்ள வேண்டும்.'
"நோக்கும் திசையெல்லாம் நாமின்றி வேறில்லை; நோக்க நோக்கக் களியாட்டம்' என்பது தமிழ்க்கவிஞன் பாரதியார் வாக்கல்லவா?
வெளியுலகக் கவர்ச்சிகளுக்கு மயங்காமல் வெற்றி கொள்வதற்குரிய ஒரு வழி ஆண் - பெண் எனும் பால் வேற்றுமையைக் கடந்து மேலெழ வேண்டும் என்பதாகும். இந்தப் பால் வேற்றுமை, தேகம்- மனம் நம்மீது ஆட்சிசெலுத்தும்பொழுது எழுகின்றது. ஆனால், ஆத்மா பால் வேற்றுமையற்றது.

Page 28
5O U9 ஆன்மிக வாழ்க்கைக்கான வழிகாட்டுதல்கள்
இவ்வுண்மையை நாம் அறிகின்றோம். அதைப்பற்றிப் பேசுகின்றோம், அதைத் தியானம் செய்கின்றோம். ஆனால் அவ்வுண்மையை உணர்வதென்பது பெருங்கள்டமா யிருக்கின்றது. இந்தப் பெருங்கள்டத்தைத் தவிர்க்க நமக்குத் தேவைப்படுவது வைராக்கியம். இவ்வுலக விவகாரங்களில் பற்றின்மை. தேகம் - மனம் மீதான பொய்யானப் பற்றை நாம் விட்டுவிட வேண்டும். இது நமது மனோபாவத்தில் மாறுதல் ஏற்பட்டால் சாத்யமாகும்.
உயர்ந்த குறிக்கோளான ஆன்மிக வாழ்க்கையில் உள்ளார்ந்த ஆர்வம் கொள்பவர்கள் ஓர் உண்மையை நினைவில் கொள்ள வேண்டும். இதன் மூலமாக அவர்கள் புதிய பற்று வரவுக்கணக்கைத் தொடங்குவார்கள் என்று சொல்லலாம். இராமகிருஷ்ண மிஷனைச் சார்ந்த மகத்தான ஆன்மிக ஆளுமை பெற்ற சுவாமி யதீஸ்வரானந்தாஜி மகராஜ் அவர்கள், உண்மையான ஆன்மிக வாழ்க்கையை மேற்கொள்வது என்பது வங்கியின் புதிய கணக்கைத் திறப்பதற்குச் சமமாகும் என்று சொல்வது வழக்கம்.
பழங்கணக்குகளை யெல்லாம் முடித்துக் கொள்ளவேண்டும். இதற்கு என்ன பொருள்? ஆன்மிக வாழ்க்கையைத் தொடங்கும் பொழுது, பழைய பழக்கவழக்கங்கள், பழைய ஆசைகள், பழைய மனோநிலைகள் முதலியவற்றை நாம் கண்டிப்பாக மறந்துவிடவேண்டும். பழையனவற்றை மறந்த நிலையில் எவ்வித புதிய வேட்கைக்கும் இடம் தரக்கூடாது. இது சற்று நடைமுறையில் கஷ்டம்தான். ஏன் எனில் தேகவாசனை, மனோவாசனை அவ்வளவு எளிதில் நீங்காது.
ஆனால் உயர்ந்த குறிக்கோளை நோக்கி மேற்கொள்ளும் ஆத்மப்பயணம் இனிதே முடிவு பெற, நாம் தேக வாசனை, மனோ வாசனைகளின் எல்லையைக் கடந்தால்தான் முடியும்.
நாம் நம்முடைய உண்மையான தெய்வீகத் தன்மையை அடைய வேண்டுமானால், தூயவுணர்வாகிய ஆத்மாவை அறிய வேண்டுமானால், மீண்டும் மீண்டும் வலியுறுத்திச் சொல்லப்பட்டு

ஆன்மிக வாழ்க்கையில் தடங்கல்கள் Qp 51
வருவது போல, தேக - மனோ வாசனைகள் மீதான பற்றுகளை நாம்துறக்கத்தான் வேண்டும். இது சாத்யமாகுமா?’ எனும் கேள்வி எழலாம். சிலசமயங்களில் நமது மனதில் நமது கடந்தகாலம் மோசமானதாயிற்றே" எனும் எண்ணமும் தோன்றும். இவ்வித எண்ணங்களால் குழப்பமடைவோர்க்கு, சான்றோர் சிந்தனைகள் வழிகாட்ட வல்லன. "கடந்த காலம் பற்றிய ஆழ்ந்த எண்ணத்தை மனதில் பாதுகாப்பாக வைத்துக் கொள்ளவேண்டாம்; மறக்கப் பழகிக் கொள்ளவேண்டும்." என்பது சான்றோர் சிந்தனைகளில் ஒன்றாகும்.
மோசமான கடந்த காலத்தையே நினைந்து நினைந்து உழலவேண்டாம். காலத் தத்துவத்தில் நிகழ்காலமும் உண்டு; எதிர்காலமும் உண்டு என்பதை நினைவில் கொள்வோம். கடந்தகாலத் தவறுகளை நிகழ்காலத்தில் போக்கி சீர் செய்தால், ஒளிமயமான எதிர்காலம் அமையும். "ஒன்வொரு புனிதருக்கும் கடந்தகாலம் ஒன்று உண்டு; ஒவ்வொரு பாவிக்கும் எதிர்காலம் உண்டு' என்று கூறப்படுவதின் நுட்பத்தை அறியவேண்டும். இங்கு கடந்தகாலம் என்பது எவ்வகைப்பட்டது? கடந்தகாலம் இழிவு மிக்கதாக இருக்கலாம். இழிவுமிக்க காலத்தைக் கடந்து, புனிதர்கள் ஒளிமயமான எதிர்காலத்தை அடையவில்லையா எனும் உறுதியை நாம் கொள்ளவேண்டும். கடையனுக்கும் கடைத் தேற்றம் உண்டு என்பதல்லவா ஞானிகள் அருள்வாக்கு. ஆகவே பாவம் செய்யும் ஒவ்வொருவருக்கும் ஒளிமயமான சிறந்த எதிர்காலம் உண்டு எனும் மனவுறுதியைப் பெற வேண்டும். இவ்வாறான சிந்தனையோட்டத்தை நாம் வளர்த்துக் கொள்ள வேண்டும். இதனால் நம் மனதில் படியும் தூய்மையற்ற எண்ணங்களை வெளியேற்றி வெற்றி கொள்ளவேண்டும்.
பாவியும் புனிதனாக முடியும் எனும் ஒப்பற்ற பேருண்மையை பகவான்பூரீஇராமாகிருஷ்ணர் நமக்கு அருளிச் சென்றுள்ளார். மிக மிக விழுமிய இந்த மரபு நம்மை வழிநடத்திச் செல்லும். பகவான் இராமகிருஷ்ண பரமஹம்ஸர் ஒர் ஒப்பற்ற அவதார புருஷர்.

Page 29
52 Up ஆன்மிக வாழ்க்கைக்கான வழிகாட்டுதல்கள்
இவ்வுலகில் இதுவரை தோன்றிய அவதாரங்களில் மிகவுயர்ந்தவர்; அவர் தமது சீடர்கள் "நான் ஒரு பாவி, நான் ஒரு பாவி' என்று கூற ஊக்கமளிக்க மாட்டார். பரமஹம்ஸர் காலத்தில் பிரம்ம சமாஜம் கற்றோர்களிடையே பிரபலமாக இருந்தது. இந்த சமாஜத்தின் தலைவர்களில் ஒருவரான கேசவசந்திரஸென் காலத்தில் பிரம்ம சமாஜிகளும், கிறித்துவர்களைப் போல மனிதனின் பாவங்களைப் பற்றி அதிகமாகப் பேசி வந்தனர். குருதேவரும், கேசவசந்திரஸென்னிடம், 'உங்கள் பிரம்ம சமாஜத்து மக்கள் கேட்கும் ஒரே பேச்சு பாவத்தைப் பற்றியதே. நான் பாவி, நான் பாவி’ என அல்லும் பகலும் சொல்லுபவன் உண்மையாகவே பாவியாய் விடுவான்' என்று பேசியுள்ளார். இந்தப் பின்னனியில்தான் குருதேவர் தமது சீடர்கள் தங்களைப் பாவிகள் என்று சொல்லிக் கொள்ள ஊக்கமளிக்கவில்லை.
"ஒருவன் எவ்வளவு பாவியாயிருந்தாலும், "நான் பாவியாயிருக்கின்றேனே! எப்படி கட்ைத்தேறப் போகிறேன்" என்றேங்கி அழுது கொண்டிருக்காமல் தான் பாவி என்னும் எண்ணத்தையும் அறவே யொழித்து சொரூபத்யானத்தில் ஊக்கமுள்ளவனாக இருந்தால் அவன் நிச்சயமாய் உருப்படுவான்' என்று ரமண மகரிஷி மொழிந்ததும் கவனத்திற்குரியது. குரு தேவரைப் பின்பற்றி அவருடைய புகழார்ந்த முதன்மைச் சீடர் சுவாமி விவேகானந்தரும் தமது சொற்பொழிவொன்றில் "ஒரு மனிதனை பாவியென்று சொல்வது ஒரு பாவமாகும்' என்று குறிப்பிட்டார்.
வெளியுலகத்தின் பலவிதமான கவர்ச்சிகளில் நம்மனம் செல்வதற்குரிய வகையில் வெளிநோக்குடையவர்களாக நாம் கடவுளால் படைக்கப்பட்டிருக்கின்றோம். இந்தக் கருத்து கடோப நிஷத்தில் பின்வருமாறு கூறப்பட்டுள்ளது.
பராஞ்சி கானி வ்யத்ருணத் ஸ்வயம்பூஸ் தஸ்மாத் பராங் பச்யதிநாந்த ராத்மன்

ஆன்மிக வாழ்க்கையில் தடங்கல்கள் X Qap S3
இதன் பொருள். பரமேஸ்வரன் இந்திரியங்களை வெளி நோக்குடையவையாய்ச் சிருஷ்டித்துள்ளார். ஆகையால் (மனிதன்) வெளித் தோற்றங்களையே பார்க்கிறான்.
ஆகவே, மனம் உட்பட, ஐம்பொறிகளும் வெளிநோக்கு எனும் குறைபாடுடையதாகப் படைக்கப்படுவதால் மனிதன் புறவயமாகக் காண்கிறான். அகவயமாகக் காண்பதில்லை.
நமக்குள் இரு பாரம்பர்யங்கள் உள்ளன என்பதை அறியவேண்டும். ஒன்று, உயிரியல் சார்ந்த பாரம்பர்யம் (Biological Heritage), மற்றொன்று தெய்வீகப் பாரம்பர்யம் (Divine Heritage)
உயிரியல் சார்ந்த பாரம்பர்யம், தவறுகள், குறைபாடுகள், மாசுகள் தொடர்பான எண்ணங்களை சில சமயங்களில் நம்முள் தோற்றுவித்துத் துன்புறுத்துகின்றது. நமது சிந்தனைப் போக்கை பலவீனப்படுத்துகின்றது. இதனால் உயர்ந்த குறிக்கோளாகிய ஆன்மிக வாழ்க்கையை அடைய முடியாது. இந்த மாதிரியானச் சந்தர்ப்பங்களில் நம்முள் இருக்கும் உயர்ந்த இயல்பை நிலை நிறுத்தவேண்டும்.
உயிரியல் சார்ந்த பாரம்பர்யத்தின் தவறான மனோ விருத்திகளை பெறும் ஒருவன், தன்னுள் தெய்வீகப் பாரம்பர்யம் இருப்பதையும் நினைவில் கொள்ளவேண்டும். தவறான மனோவிருத்திகளைக் கொண்ட பாரம்பர்யத்தைப் பற்றியே பேசிக் கொண்டிராமல், உள்ளிருக்கும் தெய்வீகப் பாரம்பர்யத்தை நிலை நிறுத்திக்கொள்ளும் மனவுறுதியில் "நான் என்றென்றும் பூரணத்துவம் உடையவன்' எனும் ஆத்ம போதம் பிறக்கும்.
உயிரியல் சார்ந்த பாரம்பர்யமா, தெய்வீகப் பாரம்பர்யமிா என்பதை எவரால் பகுத்தறிய முடியும்? இங்கு நமது உதவிக்கு வருவது நாம் சரியாகப் பயன்படுத்தும் புத்தி. அதாவது தூய்மையான அறிவுத்திறமாகும். இந்தத் தூய்மையான அறிவுத்திறத்தின் காரணமாக நாம் மிருகங்களிடமிருந்து மாறுபட்டிருக்கின்றோம். நமது அறிவுத்திறன் பண்பால் மட்டுமே,

Page 30
S4 up ஆன்மிக வாழ்க்கைக்கான வழிகாட்டுதல்கள்
நமது தெய்வீகப் பாரம்பர்யத்தின் கண நேர தரிசனத்தையும் பெறமுடியும். இந்த அறிவுத்திறன் அல்லது புத்தி என்பது என்ன? நமது வாழ்க்கையில் குழப்பங்களும், தடுமாற்றங்களும் ஏற்படுவதுண்டு; செய்வதறியாமல் திகைத்துப் போகின்றோம். செயலற்றுப்போகும் நிலையில்உள்ளத்தில் இதைச் செய்க, அதைச் செய்யாதே' எனும் குரல் எழக் கேட்கின்றோம். இது அறிவுத்திறன் என்றும், விவேகம் என்றும் கூறப்படுகின்றது.
இவ்விடத்தில் இந்நூலாசிரியருக்கு இராமகிருஷ்ண மடத்தில் புதிதாக்ச் சேர்ந்தபொழுது, இராமகிருஷ்ணர் வழிமுறையைச் சார்ந்த மாமனிதருடன் உரையாடியது நினைவிற்கு வருகின்றது. அந்த மாமனிதர் பெயர் சுவாமி விசுத்தானந்தாஜி மகராஜ். அவரிடம் இந்நூலாசிரியர் தமது சுய ஆய்வு விவர விளக்கப் படத்தைக் காண்பித்தார். அந்தப் படத்தில் ஒவ்வொரு நாளும் தாம் எவ்வளவு நற்பண்புகளை வளர்க்க முயற்சி செய்ததும், அவற்றுள் எவ்வளவு தோல்வியுற்றன என்பதையும் குறிப்பிட்டிருந்தார். தாம் பழகிக் கொள்ள முயற்சிக்கும் நற்பண்புகளின் பட்டியலைத் தருமாறு கேட்டபொழுது, பூரீமத் பகவத் கீதையின் பதினாறாம் அத்தியாயமான "தைவாஸஸ்ர ஸம்பத் விபாக யோகம்' என்பதில் இருந்து பின்வரும் முதல் மூன்று சுலோகங்களைப் படித்தார், இந்நூலாசிரியர்.
1. அபயம் ஸத்வஸம்கத்திர்ஜ்ஞானயோகல்ய வஸ்த்திதி தானம் தமச்ச யஜ்ஞச்ச ஸ்வாத்யாயஸ்தப ஆர்ஜவம் இதன் பொருள்: அஞ்சாமை, மனத்தூய்மை, ஞானத்திலும், யோகத்திலும் நிலைத்திருத்தல், ஈகை, புறக்கரணங்களை அடக்குதல், யாகம், சாத்திரங்களை ஒதுதல், தவம், நேர்மை.
2. அஹிம்ஸா ஸத்யமக்ரோதஸ்த்யாகசாந்திரபைகனம் தயாயூ தேஷ்வலோ லுப்த்வம் மார்தவம் ஹ்ரீரசாபலம். இதன் பொருள்: அஹிம்சை, உண்மை, சினமின்மை, துறவு, அமைதி, வசை கூறாமை, உயிரிகளிடம் தயை, பிறர் பொருள் நயவாமை, மிருதுத்தன்மை, நாணம், மனவுறுதி.

ஆன்மிக வாழ்க்கையில் தடங்கல்கள் URU 555
3. தேஜ க்ஷமாத்த்ருதிசெளசமத்ரோஹோ நாதிமானிதா பவந்தி ஸம்பதம் தைவீமபிஜா தஸ்யபாரதா இதன் பொருள்: தைர்யம், பிறர் குற்றம் பொறுத்தல், தளராமை, தூய்மை, வஞ்சனை செய்யாமை, செருக்கின்மை - எனுமிவையெல்லாம் தெய்வ சம்பத்துடன் பிறந்தவனுக்கு இயல்பாகின்றன, அர்ஜூனா!
நான் கூறிய சுலோகங்களைக் கேட்டபிறகு, சுவாமி விசுத்தானந்தாஜி குறிப்பிட்டதாவது: "மகனே! ஏதாவது ஒன்றைப் பழகிக் கொள். மனசாட்சி அனுமதிக்காத எதையும் செய்யாதே. மனசாட்சியின் குரலே தெய்வத்தின் குரல் என்பதை எப்பொழுதும் நினைவில் கொள்க. மனசாட்சி எப்பொழுதும் நமக்கு நல்லதையே சொல்லும். ஆனால் மனசாட்சியின் குரலைக் கேட்க நாம் லட்சியம் செய்வதில்லை. மனசாட்சியின் குரலைக் கேட்காமல் அலட்சியம் செய்வதே, நமது எண்ணற்றத் துன்பங்களுக்குமூல காரணமாகும்." பகவான் பூரீகிருஷ்ணன், அர்ஜூனனுக்கு இருபத்தாறு நற்பண்புகளை உபதேசம் செய்திருக்க, மகராஜ் அவர்கள் ஒரே ஒரு நற்பண்பை மட்டும் குறிப்பிடுகின்றாரே என்று நான் வியப்புற்றேன். நான் ஒப்புவித்த சுலோகங்களில் இருபத்தாறு நற்பண்புகள் பட்டியலிடப்பட்டுள்ளன. ஆனால் மகராஜ் அவர்கள் மனசாட்சி ஒன்றை மட்டுமே நற்பண்பாகக் கொள்ள எனக்கு உபதேசம் செய்தது ஏன்? என்று சிந்தித்தேன். அவருடைய ஆத்மபோதத்தின் ஆழத்தில் இருந்தும், திடநம்பிக்கையில் இருந்தும் வெளிபட்டதே அவருடைய உபதேசம் எனும் எண்ணம் என் சிந்தனையில் உதயமாயிற்று.
உயர்ந்த குறிக்கோளான ஆன்ம ஈடேற்றத்தைக் குறித்து சுட்டிக்காட்டும் வேறொரு விளக்கமும் உண்டு. நான்' எனும் உணர்வில் இருநிலைகள் உள்ளன. ஒன்று மேல்நிலை நான்'; மற்றொன்று கீழ்நிலை நான்". பரமஹம்சர், இருவித நான்களைப் பற்றி விளக்கியுள்ளார். ஒன்று பழுத்தநான்", மற்றொன்று பழுக்காத நான்". பழுத்த 'நான் இறைவனுடைய அடிமை என்ற நான்",

Page 31
S6 U ஆன்மிக வாழ்க்கைக்கான வழிகாட்டுதல்கள்
பாகுபடுத்தி அறியக்கூடிய "நான் என்ற நான்களில் எந்தத் தவறும் இல்லை. உலகப் பற்றுடையவனின் நான் அவித்யை என்னும் நான்', பழுக்காத நான்' என்று பரமஹம்சர் விளக்கியுள்ளார். இவையிரண்டிற்கும் இடையே மிக நுண்ணிய வித்தியாசம்தான் உள்ளது என்பதைப் புரிந்து சொள்ளுதல் அவசியமாகும். கீழ்நிலை நான்', 'இதைச் செய், அதைச் செய்யாதே' என்று நம்மிடம் சொல்கின்றது. இதன் விளைவாக நமக்கு அனேக ஆசைகள் ஏற்படுகின்றன. இந்த ஆசைகளுக்கு முடிவேயில்லை; அத்துடன் எப்பொழுதும் நிச்சயமற்றதும் ஆகும்.
சாதாரணமாக மனிதர்கள் யாவரும் தம் உடம்பே தாம் என்னும் அகந்தையுணர்வையே "நான் என்று கருதுகின்றனர். மக்கள் கருதும் இவ்வகந்தைத் தன்மையுணர்வு உண்மையான தன்மையுணர்வல்ல, ஆன்மாவே மெய்யான தன்மையுணர்வு. அகந்தையுணர்வானது அதன் நிழலாகிய போலித்தன்மை யுணர்வே. முற்றிலும் பரிபூரணத்துவம் வாய்ந்த ஆன்மிகப் பாதையில் முன்னேற விடாமல் தடுக்கும் எல்லாவிதமான ஆசைகளையும் வெற்றி கொள்ள நாம் விரும்பினால் கீழ்நிலை நான் என்பதை மேல்நிலை நான் வெற்றி காண்பதற்குரிய தீவிரமானப் பயிற்சிக்கு நாம் ஆட்படுத்திக் கொள்ளவேண்டும். இதற்கான விதிமுறை பூரீமத் பகவத்கீதையில் ஆறாவது அத்யாயத்தில் ஐந்தாவது சுலோகத்தில் பின் வருமாறு கூறப்பட்டுள்ளது.
உத்தரேதாத்மனாத்மானம்நாத்மானமவஸாதயேத் ஆத்மைவஷ்யாத்மனோபந்துராத்மைவ ரிபுராத்மன இதன் பொருள் தன்னாலே தன்னை உயர்த்திக் கொள்ள வேண்டும்; தன்னை தாழ்த்திக் கொள்ளக் கூடாது; நிச்சயமாக தானே தனக்கு உறவினன், தானே தனக்கு பகைவன்.
மனிதன் தன்னைத்தானே உயர்த்திக் கொள்ளவேண்டும்; தாழ்த்திக் கொள்ளக் கூடாது. நமக்கு நாமே நண்பர்கள்; நமக்கு நாமே பகைவர்களும்கூட. கீழ்நிலை நான் நம்மைத் தூண்ட நாம்

ஆன்மிக வாழ்க்கையில் தடங்கல்கள் V up 57
அனுமதிக்கும் பொழுது, நம்மை நாமே தாழ்த்திக் கொள்கின்றோம். நமக்குள்ளே இருக்கும் எதிரிகளாய் நாம் நம்மையே தோற்கடித்துக் கொள்ள அனுமதிக்கின்றோம்.
கீழ்நிலை நானை வெற்றி கொள்ள நாம் ஆன்மிகப் பயிற்சிகளைப் பின்பற்றச் சிரமப்படும் பொழுது, மேல்நிலை நான்' உயர்ந்து மேலே எழுகின்றது. பிறகு நமது மனம் நமது நண்பனாகி விடுகின்றது. கவிஞர் சாமுவேல் டானியல் என்பவரும் இதே சிந்தனையை பின்வருமாறு கூறியுள்ளார். "தனக்கு மேலே தன்னைத்தானே உயர்த்தி நிமிர்ந்து நிற்காத வரையில், ஒருவன் எவ்வளவு பரிதாபத்திற்குரியவனாகி விடுகின்றான்." ஆகவே, நம்மை நாமே உயர்த்தி நிமிர்ந்து நிற்கவேண்டும்.
நமது தெய்வீக பாரம்பர்யத்தை நாம் உறுதி செய்து கொள்ள சிரமப்படாத வரையில் எவ்வளவு பரிதாபத்திற்கு உரியவர்களாகி விடுகின்றோம்! கீழ்நிலை நான்', மிருகசுபாவமுள்ள நான்', உயிரியல் மரபு சார்ந்து நான் முதலானவை தன்னை ஏவல் கொள்ள மனிதன் - அனுமதிப்பானாயின், அவன் பரிதாபத்திற்குரியவனே. "எவன் தன்னுடைய தெய்வீக இயற்கையுணர்வை அறிகின்றானோ, அவனே மனிதன்' என்று பூரீஇராமகிருஷ்ணர் கூறியுள்ளார்.
1886 ஜனவரி 1-இல் கல்கத்தா அருகே காசிப்பூர் தோட்ட வீட்டில் கல்பதரு திருநாளில் பூரீஇராமகிருஷ்ணர், பக்தர்களை நோக்கி அன்பினாலும், கருணையாலும் உள்ளம் நெகிழ்ந்து "நீங்கள் அனைவரும் ஆன்மிக விழிப்புணர்வு பெறுங்கள் என்று ஆசிர்வதிக்கின்றேன்' என்றார். தெய்வீக பரவச நிலையில் குருதேவர் அப்பொழுது கூடியிருந்த பக்தர்களிடம் விசேஷப் பெருங்கருணை கொண்டு அனைவரையும் தொட்டார். இதன் விளைவாக ஒவ்வொருவரிடமும் உடனடியாக உள்ளுக்குள்ளே ஒரு மாபெரும் தெய்வீக மாற்றம் நிகழ்ந்தது. ஒவ்வொருவரும் அவரவருடைய இஷ்ட தெய்வீக காட்சியைக் கண்டு வாழ்த்துகள் பெற்றனர்.

Page 32
S8. Up . ஆன்மிக வாழ்க்கைக்கான வழிகாட்டுதல்கள்
பூரீஇராமகிருஷ்ணரின் ஆசீர்வாத மொழி மிகவும் குறிப்பிடத்தக்கது. ஏன் எனில், நாம் ஆத்ம விழிப்புணர்வு பெறும் பொழுதுதான் நாம் நமது தெய்வீக இயல்பை உணருகின்றோம். அன்று அவர் பக்தர்களை ஆசீர்வாதம் செய்தபொழுது விண்ணுலகத்தில் இருந்து எந்தத் தெய்வத்தையும் அவர்கள் முன் அவர் கொண்டு வந்துவிடவில்லை. ஆனால் எங்கும் உள் உறைந்திருக்கும் உணர்வான சத் - சித் - ஆனந்தத்தை அவர்கள் உணர்ந்திட வைத்தார்.
மனித குலத்திற்கு பகவான் பூரீராமகிருஷ்ணர் வழங்கிய அருட்கொடை, ஆன்மிக உள்ளொளியாகும். தங்கள் வாழ்நாளிலேயே ஆத்மபோதம் பெறுபவர்கள் தங்கள் சிந்தனை, செயல் முறைகளை முழுவதுமாக மாற்றியமைத்துக் கொள்ள வேண்டும். இந்த மாற்றம் முற்றிலும் அவசியமாகும். நாம் மிக உயர்ந்த உண்மையை விரும்புகின்றோம். ஆனால் அதற்குரிய தியாகத்தைச் செய்ய நாம் தயாராக இல்லை. தியாகம் செய்வது என்பது மிக நீண்ட, துன்பம் தரும் வழிமுறை என்பதில் சந்தேகமில்லை. ஆனால் தியாகத்தாலன்றி ஆன்மிகப் பேருண்மையைப் பெற முடியாது. ஆகவே நம்மை நாமே தோற்கடித்துக் கொள்ளக் கூடாது.
ஆன்ம அழைப்பை நாம் பெற்ற பிறகு, மதிப்பு வாய்ந்த மானுடவாழ்க்கை வீணாகப் போகவிட்டுவிடக்கூடாது. ஆன்மிகப் பயணத்தில் ஏற்றங்கள், இறக்கங்கள் இருக்குமென்பதில் ஐயமில்லை. இதனால் நாம் தாழ்வுற்று சோர்ந்துவிடக் கூடாது. நம்பிக்கையார்வத்தைக் கொள்ளவேண்டும்; முனைந்து செயலாற்ற வேண்டும்; பொருளுக்காக வாழும் வாழ்க்கையின் எல்லைகளைக் கடந்துசெல்ல நாம்தியாகம் செய்யவும் பழகிக்கொள்ள வேண்டும். இதனால் அமரநிலை எய்த முடியும். பலவிதமான ஆசைகள் நம்மை மேலே செல்ல விடாமல் கீழே இழுக்கும். உண்மையானப் பாதையில் இருந்த வழிதவறச் செய்யும். இவ்விதச் சந்தர்ப்பங்களில் திசை காட்டும் கருவியாக மனசாட்சி எனும் புத்தி நம் முன் இருக்கின்றது என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.

ஆன்மிக வாழ்க்கையில் தடங்கல்கள் up 59.
நம்மிடம் உள்ள இந்தத் திசை காட்டும் கருவியான புத்தியின் துணை கொண்டு வழியில் குறுக்கிடும் அபாயங்கள், துன்பங்கள், சபலங்கள் அனைத்தையும் முற்றிலுமாக அப்புறப்படுத்தி உயர்ந்த குறிக்கோளை அடையலாம். இதற்கான முயற்சிகளை இடைவிடாது தொடர்ந்து மேற்கொண்டு நமது ஆன்மிக மேன்மையை வளர்த்துக் கொள்ள வேண்டும். இந்த வழிமுறையில் கீழ்நிலை நான்', மேல்நிலை நானா'ல் வீழத்தப்படும்.
எந்தப் பாதையில் செல்வது என்று பகுத்தறியபோதிய திறமை பெறாதவர்கள், பக்தி மார்க்கத்தை எளிதில் பின்பற்றலாம். இந்த மார்க்கத்தில் அவரவர் இஷ்டதெய்வவழிபாட்டிற்குவாய்ப்புண்டு. அவதாரங்களில் தெய்வலீலைகளைப் பற்றியச் சிந்தனைகள் பக்தர்களுக்கு உதவுகின்றன. ஒருவர் தாம் போற்றிப் பரவும் அவதார தெய்வத்தின் லீலைகள் பற்றியச் சிந்தனையில் அவதார தெய்வத்துடன் தொடர்புடைய இடங்களுக்கு தங்கள் கற்பனையிலேயே சென்று திரும்பி விடுவார்கள். m
பகவான் இராமகிருஷ்ண பரமஹம்ஸரின் பிறந்த இடமான கமாபுகூருக்கும், துய் அன்னை சாரதா தேவி பிறந்த இடமான ஜெயராம்பாடிக்கும் நேரில் செல்ல முடியாதவர்கள் கற்பனையுலகின் மனோவேகத்தில் அவ்விடங்களுக்கு புனித யாத்திரை மேற்கொண்டு விடுகின்றனர். இவ்வாறே பூரீராமகிருஷ்ணருடன் தொடர்புள்ள தட்சணேசுவர காளிமாதா திருக்கோயில், காசிப்பூர் தோட்ட வீடு முதலானவற்றிற்கும் சென்று வருகின்றனர். இவ்விடத்தில் தமிழ் நாட்டைச் சார்ந்த சேக்கிழார் சுவாமிகள் படைத்தத் திருத்தொண்டர் புராணத்தில் பூசலார் நாயனார் தமது மனத்திலேயே சிவபெருமானுக்குத் திருக்கோயில் கட்டிய அற்புதச் செய்தி பின்வரும் வரிகளால் குறிப்பிடப்பட்டுள்ளன. : 1. அன்றினார் புரமெரித்தார்க் காலய மெடுக்க வெண்ணி
யொன்றுமங்குதவாதாக வுணர்வினா லெடுக்குந் தன்மை நன்றென மனத்தினாலே நல்லவா லயந்தான் செய்த நின்றவூர்ப் பூசலார்.

Page 33
GO up ன்மிக வாழ்க்கைக்கான வழிகாட்டுதல்கள்:
2. மனத்தினாற் கருதி யெங்கு மாநிதி வருந்தித் தேடி
யெனைத்துமோர் பொருட்பேறின்றி யென்செய்கே
னென்றுநைவார் நினைப்பினா லெடுக்க நேர்ந்து நிகழ்வுறுநிதிய மெல்லாந் தினைத்துணை முதலாத் தேடிச் சிந்தையாற் திரட்டிக்
கொண்டார்
பூசலார் நாயனார், திருக்கோயில் கட்ட அனைத்துப் பொருட்களையும், தொழில் செய்வாரையும் மனத்தால் தேடித் திரட்டியத் திருக்கோயில் சிவபெருமானுக்கு உகந்தது. காடவர் கோமான் எனும் அரசன் பெருஞ்செல்வம் கொண்டு எழுப்பிய திருக்கோயிலிற்கு முதல் நாள் போகாமல், சிவபெருமான் பூசலார்” நாயனார் மனத்திலே கட்டிய கோயிலுக்கு செல்லப் போவதாக" அரசனிடம் கனவில் வந்து கூறினார். அரசனும் வியப்புற்று பூசலார் நாயனாரை சந்தித்து பணிந்தான்.
பூசலார் நாயனாரின் இந்த வழிபாடு, ஆன்மிக வாழ்க்கையில் இருந்த இடத்தில் இருந்துக் கொண்டே மனத்தினால் சாதிக்க முடியும் என்பதை விளக்கவல்லது. இடையறாத அன்பினால், நினைப்பைக் கொண்டேதிருக்கோயில் எழுப்பி அதில்இறைவனை எழுந்தருளச் செய்து விட்டார், பூசலார் நாயனார்.
இவ்விதமான மனசஞ்சாரங்களினால், மனம் தனது போக்கில் திரிந்து அலையும் பழக்கங்களில் இருந்து விடுபடுகின்றது. அவரவர் இஷ்ட தெய்வம் உறையும் இதயத்தினுள்ளே புகலிடம் கான ஒருமுகப்படுத்தப் படுகின்றது.
இஷ்ட தெய்வ வழிபாட்டில் நாம் உள்ளார்ந்த பக்தி பூண்டு, இஷ்ட தெய்வமே நமக்கு நிரந்தர துணை என்று கொண்டால், அஞ்சுவதற்கு ஒன்றுமில்லை. நம்முள்தெய்வம் இருக்கும்வரையில் தீமைகள் நம்மை நெருங்கிடாது. நம்முள் தெய்வம் இல்லையென்றால் தீமைகள் திமுதிமுவெனப் புகுந்துவிடும். ஓராதார் நெஞ்சத்துள்ளும் ஒளிந்திருக்கும் அருளுடையது தெய்வம். தெய்வம் நம்முள் இருந்தபோதிலும், நாம் தெய்வத்துள்

ஆன்மிக வாழ்க்கையில் தடங்கல்கள் U9 (31
இல்லையென்பதும் ஓர் அவல நிலையாகும். ஆகவே, பக்தர்கள் மேற்கொள்ள வேண்டிய சரியான வழிமுறையாதெனில், தெய்வம் நம்முள் இருப்பதைப் போலவே, நாமும் எப்பொழுதும் தெய்வத்துடன் இருக்க வேண்டும் என்பதேயாகும். "நெஞ்சத்தை சக்தி தனக்கே கருவியாக்கு" என்று பாரதியார் சாற்றியுள்ளதும் சிந்திக்கத்தக்கது.
மேலே ஒரு கற்பனை வழிபாட்டு முறையைப் பற்றி பேசப்பட்டது. இத்தகைய வழிபாட்டு முறையும் விமர்சனத்திற்கு உள்ளாவதுண்டு. கற்பனை வழிபாட்டுமுறை என்பது ஒரு வகையான உள்தூண்டுதலாகாதா? என்று கேட்கலாம். உள்துண்டுதல் நமக்கு உதவுமா? எனும் கேள்வியும் எழலாம். உள்தூண்டுதல்களில் பயனுள்ளதும் உண்டு; தீங்கு பயப்பதும் உண்டு.நம்மை உயர்த்தி, வாழ்க்கையின் உயர்ந்த பரிமாணங்களை அடைய உதவி செய்யும் உள் தூண்டுதல்களும் உள்ளன என்று பதில் கூற முடியும். இவ்வகையான உள்துண்டுதல்கள் வரவேற்கத்தக்கன.
இந்நூலாசிரியருக்கு ஒரு சமயம் உள்துண்டுதல் அல்லது கற்பனாரீதியான வழிபாட்டுமுறையைப் பற்றி அறிய வாய்ப்பேற்பட்டது. இராமகிருஷ்ண மிஷனின் மரியாதைக்குரிய மூத்தத் துறவியும், பிரான்சில் வேதாந்தத்தைப் பரப்பிய முன்னோடியுமான சுவாமி சித்தேஸ்வரானந்தா, இந் நூலாசிரியரிடம் உள்துண்டுதல் அல்லது கற்பனாரீதியான வழிபாட்டுமுறை, ஆன்மிக வெளிப்பாட்டிற்கு உதவக்கூடியது, குறிப்பிடத்தக்கத் தத்துவத்தையும் கொண்டது என்று சுட்டிக்காட்டினார். ஆகவே, ஒரு சாதகனின் ஆன்மிகத்தன்மையை வெளிப்படுத்த உதவும் உள்தூண்டுதலை பயனற்றது என்று கூறக்கூடாது. இதற்கு மாறாக சக்தி வாய்ந்ததுணை என்று ஏற்றுக் கொள்ள வேண்டும்.

Page 34
ஆன்மிக வாழ்க்கைக்கான வழிகாட்டுதல்கள் Up 62
ஆன்மிக வாழ்க்கைக்குரிய சாதனங்கள்
ஒருவருடைய ஆன்மிக முயற்சியால் அவருடைய
கற்பனையும் முக்கியப் பங்கு வகிக்கின்றது என்று ஒரு சமயம் சுவாமி விவேகானந்தர் கூறியுள்ள பின்வரும் கருத்து இங்கு நினைவு கூர்தலுக்குரியது.
"முழுநிறைவை நோக்கி மேலும் மேலும் உன்னை அருகில் கொண்டு செலுத்தும் ஒரு நிலைமையைப் பற்றிக் கற்பனை செய்து கொள். அப்பொழுது முழுநிறைவை நெருங்கிவிட்டதை நீ அறிவாய். நீ மீண்டும் பெருமளவில் ஒத்திசைவு பெறுவாய்; உன்னுடைய ஆன்மிக ஒளிவீச்சு விரிவடையும்; உன்னுடைய செயல் வீறு பெருகும்."
சுவாமி விவேகானந்தர் கூறும் கற்பனை உள் தூண்டுதல் வலிமையான தத்துவத்தை அடிப்படையாகக் கொண்டது. இந்தத் தத்துவம் போதிப்பது என்னவென்றால், உலகத்தின் பின்புலத்தில் உள்ள இறுதியான உண்மை, வேற்றுமைத் தோற்றங்களற்ற ஒருமையாகும்; ஒன்றாகக் காண்பதே காட்சி. எங்கெங்கும் நாம் பன்முகக் காட்சிகளையே பார்க்கின்றோம். உள் தூண்டுதலின் துணையுடன், பன்முகக் காட்சிகள் எனும் மாயத்திரைக்குப் பின்னால் நாம் ஒருமையைக் காண கோரப்படுகின்றோம். ஆகவே, இவ்வித வலிமையானத்தத்துவத்தை ஆதாரமாகக் கொள்ளும் உள் தூண்டுதல் நம்மை வழிநடத்தக் கூடியது; எப்பொழுதும் பயனுள்ளது; வரவேற்கப்பட வேண்டியது.

33 Up ஆன்மிக வாழ்க்கைக்குரிய சாதனங்கள்
நாம் ஒரு பயணத்தை மேற்கொள்கிறோம். உயர்ந்த குறிக்கோளாகிய ஆன்மிக வாழ்க்கையை மெதுவாக நாம் நெருங்கிக் கொண்டிருக்கிறோம். புனிதப் பயணத்தை மேற் கொள்ளும்பொழுது, சில சந்தர்ப்பங்களில் கடுமையானப் போராட்டத்தைச் சந்திக்க வேண்டியுள்ளதை நாம் அனைவரும் ஒப்புக் கொள்ளுகின்றோம். இவ்விஷயத்தைப் பற்றி இந்து மனோதத்துவ நிபுணர்கள் என்ன சொல்வார்கள் என்பதைப் பார்ப்போம். நமது பண்டைய ரிஷிகள் மகத்தான திறமை வாய்ந்த மனோதத்துவ நிபுணர்களும் ஆவார்கள். நமது புத்தி தாழ்நிலையடையும் பொழுது தவறுகள் குறுக்கிடுகின்றன என்று அவர்கள் சுட்டிக் காட்டியுள்ளனர். நமது அந்தகரணங்கள் முற்றிலுமாக தூய்மையுற வேண்டியவனவாகும். நம்மில் பெரும்பாலோர்க்கு அந்தகரணம் தூய்மையாக இல்லை. ராஜஸ் தாமஸ் குணங்கள் எனும் அசுத்தங்களால் மூடப்பட்டுள்ளது. அந்தகரணத்தைத் தூய்மைப்படுத்த நாம் சிரமம் எடுத்துக் கொள்ளவேண்டும். இதற்கான முயற்சிக்கு சுய உள் தூண்டுதல் உதவும்.
காலில் தைத்த முள்ளை, முள்ளாலே எடுப்பது போல என்று பூரீஇராமகிருஷ்ணர் கூறுவது வழக்கம். ஒரு முள்ளாலே, மற்றொரு முள்ளை எடுத்தப் பிறகு இரண்டையுமே எறிந்து விடுகின்றோம்.
உள் தூண்டுதல் உதவியுடன் நம்முள் கம்பீரமான மேன்மையான சிந்தனைகளை எழுப்புகின்றோம். இத்தகைய மேன்மையானச் சிந்தனைகளின் துணை கொண்டு, சிந்தனைப்பிடிப்பில் இருந்து மேலே எழுந்து நேரடியான சாட்சாத்காரம் பெறுகின்றோம். மனதைக் கொண்டே மனோநாசம் செய்யப்படுகின்றது. இன்றைய உள்துண்டுதல் அல்லது கற்பனை நாளைய மெய்யுணர்வாகும் என்று கூறப்படுகின்றது. "என்ன நினைக்கின்றோமோ, அதுவாகவே ஆகுகின்றோம்." "உள்ளுவதெல்லாம் உயர்வுள்ளல்" -என்பதற்கேற்ப உயர்ந்தனவற்றை சிந்திக்க வேண்டும். ஆன்மிக வாழ்க்கைக்கு

Page 35
ஆன்மிக வாழ்க்கைக்கான வழிகாட்டுதல்கள் QU - CS4
"உயர்வுள்ளல் சிந்தனைப் போக்கு உதவி செய்யும். பூரணத்துவம் பெற நினைப்போமாயின், பூரணத்துவம் பெறுவோம்.
அடுத்து, நாம் கவனிக்க வேண்டியது, தியானத்தின் பங்களிப்பாகும். நாம் தியானம் செய்யவேண்டும். தகுதி மிக்க ஆன்மிகப்பெருங் கருணையும் பேரருளும் உடைய குரு உபதேசம் செய்யும் சித்த மந்திர பீஜத்தைப் பற்றி மந்திர தீட்சை பெறுபவர்கள் அறிவார்கள்.
"இது உன்னுடைய இஷ்ட தெய்வம்; இதை நீ தியானம் செய்தால், போகப்போக நீ பூரணத்துவத்தைப் பெறுவாய்' என்பது குருவின் உபதேசம்.
தியானத்தின் உதவியால் நாம் நம்முள் புதிய வாழ்க்கையை படைக்கமுடியும். இஷ்டதெய்வத்தைத்தியானம் செய்வது என்பது, அதன் பெளதிக வடிவத்தைத் தியானிப்பது என்று பொருளாகாது. இதை நாம் நினைவில் கொள்ளவேண்டும். பூரீகிருஷ்ணரோ, பூரீராமரோ அல்லது பூரீராமகிருஷ்ணரோ அல்லது பிற எந்த இஷ்ட தெய்வமோ அதன் பெளதிக அம்சத்தின் மீது மட்டும் நாம்தியானம் செய்யக்கூடாது. அந்தத் தெய்வத்தின் ஒளிக்கதிர் வடிவத்தின் மீது தியானம் செய்யவேண்டும். நாம் இதை உறுதிப்பட நினைவில் கொள்ளவேண்டும். இந்த நினைப்புடன் நமது அன்பார்ந்த இஷ்ட தெய்வத்தின் திருவடிகளின் கீழ் அமர்ந்து நாள்தோறும் தியானிக்க வேண்டும். இதை மனப்பழக்கமாக அமைத்துக் கொள்ளவேண்டும். இஷ்ட தெய்வத்தையோ, குருவையோ அவ்வப்பொழுது மாற்றிக் கொள்ளும் தவறை நாம் செய்யக்கூடாது. இவ்வாறு செய்வது முறையற்றதாகும். பின்னடைவு இல்லாத உறுதியுடனும், ஒருமுகப்படுத்தப்பட்ட மனதுடனும் தியானம் அமைதல் வேண்டும்.
இராமகிருஷ்ண மிஷனைச் சார்ந்த வணக்கத்திற்குரிய சுவாமி ஒருவர் தமது உதவியாளரிடம் தம்முடைய ஆன்மிக சாதனைகளைப் பற்றி பின்வருமாறு கூறினார்.

65 un ஆன்மிக வாழ்க்கைக்குரிய சாதனங்கள்
"நான் அனாசக்தியோகத்தைப் பயின்றேன். பற்றின்மை எனும் அனாசக்தியோகத்தை வலியுறுத்தும் பகவத்கீதையின் குறிப்பிட்ட ஒரு விளக்கவுரையை தியானம் செய்வேன். குருக்ஷேத்திரப் போர்க்களத்தில் பூரீகிருஷ்ணர் உபதேசம் செய்த அனாசக்தியோகத்தின் உருவங்களாக பூரீராமகிருஷ்ணரையும், அவருடைய தெய்வீகத் துணைவியார் சாரதா தேவியார் அவர்களையும் மனதில் பாவித்துக் கொண்டேன். பிறகு ஜபசாதனை செய்தேன். மேலும் சில நேரம் பகவான் பூரீராமகிருஷ்ணரின் லீலைகளைப் பற்றிச் சிந்தித்தேன். அவர் அவதரித்த கமார்புகூர் திருத்தலத்தில் அவருடைய லீலையையும், பிறகு தட்சணேசுவரத்திற்கு அவர் வந்ததையும், இறுதியாக காசிபூர் சென்றடைந்ததைப் பற்றிய லீலா சிந்தனையில் சில நிமிடங்கள் ஆழ்ந்தேன். இவ்வித தியான முறை என்னுடைய ஆன்மிக வெளிபாட்டிற்கு மிகவும் உதவியது."
ஜபம், தியானம் செய்யும் சமயங்களில் அடிக்கடி நமது மனம், நாம் தியானம் செய்யும் உருவத்தை விட்டு விலகி அலையும். அந்தச் சமயங்களில் ஒருவர் தமது தியானத்தின் உருவமாக விளங்கும் அவதார புருஷர்களின் தெய்வீக லீலைகளுடன் தொடர்புடைய இடங்களுக்கு கற்பனைச் சிறகுகளைக் கொண்டு பறந்துச் செல்ல உதவும் லீலா சிந்தனைக்கு முயற்சி செய்யலாம். இவ்வாறு செய்வது மிக்க உதவியாகவும் அமையும்.
தியானம் புரிவது உண்மையிலேயே சற்று கஷ்டம்தான். தியானத்தின் அளவிற்கும் அதன் தரத்திற்கும் இடையிலான வித்தியாசத்தையும் நாம் உணர வேண்டும். தியானம் செய்வதில் காலக்கணக்கைப் பார்ப்பதைவிட, மனம் ஒன்றித்தோயும் தரத்தைப் பார்க்க வேண்டும். பக்தர் ஒருவன் கோயிலுக்கு சென்று அரைமணி நேரம் உட்கார்ந்து விட்டு, "நான் தியானம் செய்தேன்' என்று கூறினால் அக்கூற்றின் தரத்தை அறிய வேண்டும். அரைமணி நேரத்தில் அவருடைய மனம் அலைபாயாமல் ஒரிரு நிமிடங்களிலாவது தியானத்தில் ஒன்றிப் போயிருந்தால், அது

Page 36
ஆன்மிக வாழ்க்கைக்கான வழிகாட்டுதல்கள் O 60.
போதுமானதாகும். மனத்தைக் கட்டுப்படுத்தி, இஷ்ட தெய்வத்தின் மீது ஏகாக்கிரத்தன்மை ஏற்படுவதற்கு சற்று நேரமானாலும் பரவாயில்லை. ஆகவே, இங்கு நேரத்தைவிடத் தரத்தையே நாம் கருத்தில் நிறுத்தவேண்டும். ஆகவே, தியானம் செய்வது கஷ்டமாக இருக்கும் சந்தர்ப்பங்களில் லீலா சிந்தனை உதவும்.
தியானத்தில் அமரும் பொழுது, சிலசமயங்களில் நாம் புனிதமான முடிவுகளை எடுக்கின்றோம். ஆனால் அந்த முடிவுகளுக்கு ஏற்ப நடக்க முடியாமல் பழைய நிலைமைக்குத் திரும்பிவிடுகின்றோம். இதற்கு என்ன பரிகாரம் என்பதைப் பற்றி பூரீராமகிருஷ்ணர் கூறியதாவது: "எல்லாச் சூழ்நிலைகளிலும் மனதின் ஆன்மிகப் பாங்கை நிலைநிறுத்த வேண்டும்.
ஜபம், தியானம் செய்ய அரைமணி நேரம் உட்காரும்பொழுது, ஐந்து நிமிடங்கள்தான் நம்மால் மனதை ஒருமுகப்படுத்த முடிகின்றது என்றால், அதுவே மிகவும் மதிப்பு வாய்ந்ததாகும். எவ்வளவு நேரம் என்பது முக்கியமன்று தீவிர முனைப்பே முக்கியமாகும். கடவுள் நினைப்பிலேயே ஆழ்ந்து விடும் தீவிர முனைப்பின் அந்த நிலையில் நம்முன் இறைக்காட்சி அனுபவத்தைப் பெறும் உணர்வில் நாம் மகிழ்ச்சி அடைகின்றோம். மேன்மை எய்தினோம் எனும் உணர்வும் மேலோங்கும்.
நாள்தோறும் நாம் பலவிதமான வேலைகளில் ஈடுபடுகின்றோம். இந்தச் சூழலில் நாம் காணும் உலகின் கவர்ச்சிகளுக்கு ஆட்பட்டு விடுகின்றோம்; தடுமாற்றங்களுக்கு ஆளாகி விடுகின்றோம். இவற்றைத் தவிர்ப்பதற்கு நாள்தோறும் தியானம் செய்யும் நற்பழக்கத்தைக் கடைப்பிடிக்க வேண்டும். மனம் கட்டுப்பாட்டிற்குள் வரும் பொழுது உலகியல் மாயக் கவர்ச்சிகள் நம்மை அணுகாது. ஆன்மிக வாழ்க்கையை உண்மையிலேயே விரும்புவோர் எவரும் மாயக் கவர்ச்சிகளைத் தூண்டும் உருவம், வாசனை, சுவை, தொடுதல், ஒலி முதலானவற்றின் மீது மனம் ஆழ்ந்து படராமல் பாதுகாத்துக் கொள்ளவேண்டும். புலனடக்கம் பேண வேண்டும்.

37 Up ஆன்மிக வாழ்க்கைக்குரிய சாதனங்கள்
மந்திரஜபம், தியானம் முதலிய பயிற்சிகளில் மனம் ஐம்புலப் புறப் பொருள்களை நோக்கிப் பற்பல எண்ணங்களாகப் பிரிந்து பலவீனப்பட்டு விடாமல் தடுக்கப்படுகின்றது. ஐம்புல நுகர்ச்சியால் அறியப்படும் பொருள்களுள் கொள்ளப் படுவனவற்றைக் கொண்டு தள்ளப் படுவனவற்றைத் தள்ளும் அறிவுடையார் கண்ணது உலகம் என்று திருவள்ளுவர் கூறியுள்ளது இங்குநினைவு கூர்வதற்குரியது.
"சுவையொளி யூறோசைநாற்றமென்றைந்தின் வகைதெரிவான் கட்டே யுலகு." - என்பது திருக்குறள். ஏகாக்கிர சக்தியை - மனத்தின் ஒருமுகப்படும் பலத்தை -அடைய வேண்டியது சாதகர்கட்கு மிக முக்கியமானதாகும்.
பூரீராமகிருஷ்ணர் அருளிய பின்வரும் அமுதமொழி தியானத்தின் மாண்பை விளக்குகின்றது.
"தியானத்தில் ஏகாக்கிரசக்தியை பெறுபவர் எதையும் பார்க்க மாட்டார் அல்லது எதையும் கேட்க மாட்டார்; தொடுதல் உணர்வும் இல்லாமல் இருப்பார். உடல் மீது பாம்பு ஊர்ந்தாலும் அந்த ஸ்பரிசத்தை அவர் அறியமாட்டார். ஆழமான தியானத்தில் ஐம்பொறிகள் செயலற்று விடுகின்றன. மனம் வெளிப்புறக் காட்சிகளைப் பார்ப்பதில்லை. வீட்டின் வெளிப்புறக் கதவை மூடி வைப்பதற்கு இது ஒப்பாகும். சுவை, ஒளி, ஊறு, ஒசை, நாற்றம் எனும் நுகர்ச்சிகள் ஐந்தும் வெளியில் நிறுத்தப்பட்டு விடுகின்றன." அகநோக்கு கொள்ளும் பேறு பெற்றவர்கள் உலகின் பொய்த்தோற்றங்களை ஊடுருவி உண்மை இருப்பை அடைவர். "ஒவ்வொரு மனிதனிலும், பெண்ணிலும், குழந்தையிலும் அகஒளியைக் கொண்டு கடவுளைக் காணுங்கள்' என்று சுவாமிஜி கூறியுள்ளார். இது, உண்மையான வைராக்கியம், பற்றின்மை ஒருவருக்கு வாய்க்கப் பெற்றால் சாத்தியமாகும்.
நல்ல சாதுக்களை எங்கு காணலாம் என்று பக்தர்கள் வந்து சில சமயங்களில் கேட்கின்றார்கள். அவர்கள் தாங்கள் கண்ட

Page 37
Ms. R. மன் அமைதியை நாம் அப்பியசிக்க வேண்டும். சில சமயங்களில்
ஆன்மிக வாழ்க்கைக்கான வழிகாட்டுதல்கள் 8
சாதுக்களை வைராக்கியமுடைய சாதுக்கள் என்று கூறுவார்கள். இதில் ஒரு திருத்தம் செய்யலாம். துறவறம் பூண்டவர்களை வைராக்கியமுடைய சாதுக்கள் என்று கூறுவது போல இல்லறம் நடத்துபவர்களில் பற்றின்மை பேணுபவர்களையும் வைராக்கியசாலிகளான இல்லறத்தார் என்று கூறலாம். இல்லறத்தார் தங்கள் உலகியல் கடமைகளையெல்லாம் செய்து கொண்டு உயர்ந்த ஆன்மிக வாழ்க்கையை நாடும் பொழுது புறவுலகப் பொருள்களில் இருந்து உண்மையான பற்றின்மையை வளர்த்துக் கொள்கின்றார்கள். இதற்காக அவர்கள் விவேகம், வைராக்கியம், ஷட்சம்பத்தி, முமுக+"த்வம் எனப்படும் நான்கு சாதனை முறைகளை கடைப்பிடிக்க வேண்டும்.
இவற்றுள் ஷட்சம்பத்தி என்பன பின்வருவன: சமம், தமம், உபரதி. திதிகூை+, சிரத்தை ஸமாதானம், மோட்சமடைய விரும்புதல் முமுக+"த்வம் எனப்படும்.
இந்த சாதனை முறைகளில் தலையாயது, விவேகம், உள்ளது எது இல்லாதது எது என்று பகுத்தறிவ்து விவேகம் ஆகும். இப்பிறவியிலேயே உயர்ந்த குறிக்கோளாகிய ஆன்மிக வாழ்க்கையை நாம் அடைய வேண்டுமானால், நாம் இந்த விவேக ஞான ஒளியைப் பெற வேண்டும். இதன் மூலம் நித்ய ஆனந்தத்தை அடைய முடியும். நித்தியா நித்திய வஸ்து விவேகம் என்று சாஸ்திரம் குறிப்பிடுகின்றது.
விவேகத்தை வளர்த்துக் கொள்ளும் பொழுது, நாம் வைராக்கியம் எனும் பற்றின்மையையும் வளர்த்துக்கொள்கிறோம். ஆகவே, விவேகத்தில் இருந்து தானாகவே வைராக்கியம் தொடருகின்றது. இதை அறிந்த பிறகு உறுதியுடனும், கடும் உழைப்புடனும் ஆன்மிக வாழ்க்கைப் பயணத்தில் மேற்செல்ல வேண்டும்.
சாதனை முறையை எவ்வாறு செய்யவேண்டும்? சமம், தமம்,
நாம் குழப்பமட்ைடயும் பொழுது மனம் சலனமில்லாமல் இருக்க

69 κυ ஆன்மிக வாழ்க்கைக்குரிய சாதனங்கள்
நாம் மனதை வென்றடக்கப் பயிற்சி செய்ய முயற்சி எடுக்கவேண்டும். சமம், மனத்தைத் தன் இலட்சியத்தில் இருத்துவது.
விஷயங்களிற் செல்லும் ஞான கர்ம இந்திரியங்களைத் திருப்பி அதனதன் ஸ்தானத்திலேயே இருக்கச் செய்வது தமம்.
எவ்வளவு இன்னல்கள் வரினும் அவைகளைத் தடுக்காமலும், அவற்றிற்காக ஏங்கி அழாமலும் தைரியத்தால் அவைகளைச் சகித்தல் திதிசுைஷ் எனப்படும்.
உபரதி என்பது. பூர்வ வாசனைகளால் மீண்டும் வெளி விஷயங்களை நினையாது மனத்தைத் தன் லட்சியத்திலேயே ஸ்திரமாய் நிறுத்தி, இதர கர்மங்களை விட்டு விடுதல் ஆகும்.
அடுத்து நமக்கு வேண்டியது, சிரத்தை என்பதாகும். நமது சாஸ்திரங்கள், குருவின் வழிகாட்டுதல்களில் நம்பிக்கை வைப்பது, சத்தியம் எனக் கொள்வது சிரத்தையாகும்.
கடைசியாக, ஒருமுகப்படுத்துதல் எனப்படும் சமாதானமாகும், சஞ்சல சுபாவமுள்ள மனத்தைப் போனபடிப் போகவிடாமல் சர்வப்பிரயத்தனங்களாலும் பரிசுத்தப்
பிரம்மத்திலேயே ஸ்திரமாயிருத்துதல் சமாதானமாகும். விவேகம், வைராக்கியம் மற்றும் ஷட்சம்பத்திகள் - அறுவகைத் தவப்பேறுகள் -ஆகியனவற்றில் நாம் நம்மைத் தகுதிப் படுத்திக் கொண்டப் பிறகு தன்னையுணர்தல் எனும் உயர்ந்த குறிக்கோளுக்குப் பாடுபடவேண்டும்.
ஆகவே, விவேகத்தை நிறைவு செய்வதே வைராக்கியம் என்பது தெளிவாகின்றது. வைராக்கியமுடன் செயலாற்றுவதில் ஒரு வியாபாரி காட்டும் சிரத்தையைப் பார்ப்போம். அவர் பெருமளவில் பொருளிட்ட விரும்பும் முயற்சியில் உணவையோ, தேக நலத்தையோ பொருட்படுத்துவதில்லை. அவர் கடுமையாக உழைக்கின்றார். தனது வியாபாரத் தொழிலில் உண்ை 亨占F几
ಛೀ? 恶 தாழி --rh ஆEழிச்

Page 38
ஆன்மிக வாழ்க்கைக்கான வழிகாட்டுதல்கள் Op 7G)
இந்த வியாபாரியின் ஈடுபாட்டை, வைராக்கியத்தை நாமும் நமது ஆன்மிக உயர்ந்த குறிக்கோளில் கடைப்பிடிக்க வேண்டும். உண்மையான ஈடுபாட்டையும், பற்றுறுதியையும், விடா முயற்சியையும் ஆன்மிக வாழ்க்கையில் கடைப்பிடித்தால், இகலோக வாழ்க்கையிலேயே உறுதியாக உயர்ந்த குறிக்கோளை அடைய முடியும். உயர்ந்த குறிக்கோளுக்குரிய நமது புனிதப்பயணத்தின் முதல் தேவை, துறவாகும்.
பூரீராமகிருஷ்ணர் ஒரு கதை சொல்வது வழக்கம். படகோட்டிகள் சிலர் அளவிற்கு மிஞ்சி குடித்து விட்டு அன்றிரவு முழுவதும் படகை வலித்தனர். ஆனால், படகோ அசையவே இல்லை. நங்கூரமிடப்பட்ட படகு எப்படி அசையும். படகோட்டிகள் குடிமயக்கத்தில் இதை அறியவில்லை. இதே மாதிரியாக ஒரு குடத்தில் வாசனை அல்லது பற்று எனும் வடிவத்தில் ஒட்டை விழுந்துவிட்டால் உள்ளிருக்கும் நீர் வெளியேறிப் போவதைப் போலநமது சாதனைகள் யாவும் ஒழுகிப் போய்விடும். நங்கூரமிடப்பட்ட படகை இரவு முழுவதும் வலித்தாலும், அசையாது இருப்பது போல, பற்றுகள் எனும் நங்கூரத்தில் நாம் கட்டப்பட்டிருந்தால் இறுதியாக நித்தியத்தை நோக்கி நாம் அசையமுடியாது. நங்கூரமிடப்பட்ட படகு, ஒட்டை விழுந்த குடம் இரண்டையும் போலல்லாமல் சாதகன் கட்டுகளுக்கு உள்ளாகாமல், முயற்சிகளில் ஒட்டைகள் விழாமல் தன்னைப் பாதுகாத்துக் கொள்ளவேண்டும். நம்மை கீழ் நோக்கி இழுக்கும் இழுப்புகளையெல்லாம் வீழ்த்த வேண்டும்.
சொல்வது எளிது; செய்வது கஷ்டம் என்றாலும் முடியாதது இல்லை என்று தைரியமாகச் சொல்லவேண்டும். லட்சக்கணக்கான மக்கள் எதிர்நீச்சல் போடாமல் நீரோட்டத்தின் இழுப்பின் வழியே செல்கின்றார்கள். ஆனால் உயர்ந்த குறிக்கோளை அடைய விரும்புகின்ற சிலர் "நீர் வழிப்படும் புனை போலல்லாது' நீரோட்டத்தை எதிர்த்துத்தான் நீந்த வேண்டும். அவர்கள் போராட வேண்டியது, இயல்பாகி விடுகின்றது. போராடித்தான்

71 up ஆன்மிக வாழ்க்கைக்குரிய சாதனங்கள்
வெற்றியடைய வேண்டும். புலன் இன்ப நாட்டத்திலேயே வாழ்க்கையைக் கழிக்க விரும்புகின்றவர்களுக்கு போராட்டம் தேவையில்லை. மனிதர்களேயானாலும் மிருக இச்சைகளை வளர்த்துக் கொண்டு தங்களை மேம்படுத்திக் கொள்ள விரும்பாதவர்களுக்கு போராட்டம் தேவையில்லைதான். உயர்ந்த குறிக்கோளையுடைய மனிதர்கள், மிருக இச்சைகளை எதிரித்துப் போராடி, தங்களுக்குள் இருக்கும் தெய்வீக இயல்புகளை வெளிப்படுத்த வேண்டியது அவசியமாகின்றது.
தியானங்களும், மந்திரங்களும் விடுதலைக்கு வழி என்ற குறிப்பிடுமிடத்தில் தமிழ்நாட்டு கவிஞர் பாரதியார், "என் அறிவில் தெய்வத்தன்மை காணப்படுகிறது. நான் ஒரு தேவனைப் போலவே சிந்தனை செய்ய வல்லேன். இனி என் செய்கைகளிலும் தெய்வத் தன்மை விளங்குதற்குரிய வழி செய்ய வேண்டும்" என்று கூறியிருக்கின்றார்.
இந்த மனிதப்பிறவியிலேயே ஒருவன் தேவன் அல்லது தேவியாகலாம். இது நடக்கக் கூடியதா எனும் சந்தேகம் எழலாம். சந்தேகமில்லாமல் கடினமான செயல்தான். இருந்தாலும் அதை எதிர் கொள்ளத்தான் வேண்டும். ஏன் இப்படி என்ற கேள்விக்கு கடோபநிஷத்தில் பதில் கிடைக்கின்றது. கடோபநிஷதம் கூறுவதாவது கச்சித்தீர ப்ரத்யகாத்மன - மைக்ஷ - க்ஷ" - ரம்ருதத்வ - மிக்சன் இதன் பொருள்: யாரோ ஒரு தீரன் சாகா நிலையை விரும்பி, அடக்கி உள்முகமாய்த் திரும்பப் பெற்ற பார்வையுடையவனாய்ப் பிரத்யகாத்மாவைப் பார்க்கின்றான். நான்' என்பது யார்? அது ப்ரத்யகாத்மா உண்மையில் அது பரமாத்மாவின் பிரதிபிம்பம்.
உயர்ந்த குறிக்கோளை அடைய நாம் விரும்பினால் உள்முகப் பார்வையில் பயிற்சி பெறவேண்டும். வெளியுலகத்தில் இருந்து மனதை உள்முகமாகத் திருப்ப நாம் பழகிக் கொள்ளவேண்டும்.

Page 39
ஆன்மிக வாழ்க்கைக்கான வழிகாட்டுதல்கள் (Op. 72
இத்தகைய மனப்பழக்கத்தால் நாம் நமது உண்மையான தெய்வீக இயல்பை உணர்ந்து கொள்கின்றோம். இவ்வித மனப்பழக்கம் இல்லாதவர்கள் வாழ்க்கை வீணாகி விடுகிறது.
மனதை உட்புறமாகத் திருப்பும் பயிற்சியை எல்லோராலும் செய்யமுடியாது. மனவுறுதி படைத்த அறிவாளிகள் சிலரால்தான் முடியும் என்று கூறப்படுமானால், அப்பொழுது ஒரு கேள்வி இயல்பாகவே எழும். 'மிகவுயர்ந்த தன்னுணர்வு பெற எல்லோராலும் முடியாது என்றால் வேதாந்தநூல்களை,வேதாந்தப் பிரசங்கங்களை கற்பதற்கோ, கேட்பதற்கோ என்ன பயன் ஏற்படும்' எனும் கேள்வி எழத்தான் செய்யும். இலட்சக்கணக்கான அந்த எல்லோர்களில் ஒருவர் நாமாக ஏன் இருக்க முடியாது என்பதே அந்தக் கேள்விக்குரிய பதிலாகும். நம்பிக்கையும், வலிமை வாய்ந்த எதிர்பார்ப்பும் நம்முள் ஊற்றம் பெறவேண்டும். ஆன்மிக சாதகர் ஒருவர் எதிர் கொள்ள வேண்டிய மேற்காணும் பிரச்சனைக்கு ஆதிசங்கரரின் விவேக சூடாமணியின் 79-வது சுலோகம் பின்வருமாறு தீர்வு காண்கின்றது.
ஆபாத வைராக்யவதோ முமுகூடி0ன் பவாப்தி - பாரம் ப்ரதியாது - முத்யதான் ஆசாக்ரஹோ மஜ்ஜயதே அந்தராலே நிக்ருஹ்ய கண்டே விநிவர்த்ய வேகாத் இதன் பொருள். பிறவிக்கடலின்கரையை கடப்பதற்குமுயற்சி செய்யும் முமுகூ40க்கள் திடமான வைராக்கியமில்லாதவர்களாயின் அவர்களை ஆசையெனும் முதலை குரல்வளையைக் கவ்வி வேகமாக இழுத்து நடுவழியில் முழுகடித்து விடுகிறது.
இந்த உபதேசத்தில் ஆதிசங்கரர் பொய்யான வைராக்கியம் நெடுநாள் நிற்காது என்று எச்சரிக்கை செய்கின்றார். உற்றார் உறவினர் மரணத்தினால் ஏற்படும் துக்கம், நோய் தரும் துன்பம், அதிர்ச்சி தரும் ஏமாற்றம் முதலானவற்றால் தற்காலிகமான வைராக்கியம் ஏற்படலாம். மயான வைராக்கியம், பிரசவ

73. Qy ஆன்மிக வாழ்க்கைக்குரிய சாதனங்கள்
வைராக்கியம் என்பன போன்று தற்காலிகமான வைராக்கியம் தோன்றும். பலரிடம் இந்த மாதிரியான வைராக்கியம் நீடித்து நிற்காது என்பதை நாம் வாழ்க்கையில் கண்டு வருகின்றோம்.
வைராக்கியத்தில் ஊன்றி நிலைத்திருக்க வேண்டுமானால் உண்மையான விவேகம் எனும் வலுவான அடித்தளத்தை ஆதாரமாகக் கொள்ள வேண்டும். "புகழின் வழிகள் கல்லறைக்கு அழைத்துச் செல்வன' என்பது ஒரு கவிஞர் வாக்கு. ஆகவே எவ்வழி உகந்த வழியென்பதை விவேகம் ஒன்றே நிலை நிறுத்தும். விவேகத்தின் அடிப்படை மீது, போலி வைராக்கியம், உண்மை வைராக்கியம் இரண்டிற்கும் இடையிலான வேறுபாட்டை ஆதிசங்கரர் எடுத்துக் காட்டியுள்ளார். போலித்தனமான வைராக்கியத்தால் மோட்சத்தை அடையமுடியும் என்று ஒருவர் கருதினால், அது உண்மையான வைராக்கியம் பெறாத ஒருவர் சம்சாரக் கடலைக் கடக்கவிரும்புவதாகச் சொன்னால், அவருடைய வைராக்யம் ஆழமற்ற, மேலெழுந்தவாரியான வைராக்கியமாகும். இந்தப் போலித்தனமான வைராக்கியத்தினால் சம்சாரக் கடலைக் கடக்கும் பொழுது, ஆசை எனும் முதலை அவனுடைய குரல்வளையை கவ்விப் பிடித்துவிடும் என்று ஆதிசங்கரர் குறிப்பிட்டுள்ளார். இந்த ஆசையெனும் முதலை கடல் நடுவில் நம்மை மூழ்கடித்து கீழே இழுத்துக் கொண்டு சென்றுவிடும். உண்மையான, நேர்மையான வைராக்கியம் உடையவர்களே சம்சாரக் கடலைக் கடக்க முடியும். சம்சாரக் கடலைக் கடக்க விரும்புகின்றவனுக்கு தேக உணர்வில் மோகம் மிகுந்திருந்தாலும் அவனுக்கு வீடு பேறு சாத்யமில்லை என்றும் ஆதிசங்கரர் சுட்டிக் காட்டியுள்ளார்.
புகழ்பெற்ற இந்தி மொழிக் கவிஞர் துளசிதாஸ்,"எங்குகாமம் உள்ளதோ அங்கு இராமர் இருக்கமாட்டார்' என்று பாடியுள்ளதும் சிந்தனைக்குரியது.
விவேக சூடாமணியின் 85-வது பாடலில் ஆதிசங்கரர் பின்வருமாறு கூறியுள்ளார்.

Page 40
ஆன்மிக வாழ்க்கைக்கான வழிகாட்டுதல்கள் up 74
மோஹ ஏவ மஹாம்ருத்யர் - முமு க்ஷோர் - வடராதி ஷவு
மோஹோ விநிர்ஜிதோ யேன ஸ முக்தி - பத - மர்ஹதி
இதன் பொருள் உடம்பு முதலியவற்றில் மதிமயக்கமே, முக்தியில் நாட்டமுடையவனுக்கு கொடிய யமன். எவனால் இந்த மதிமயக்கமானது வெல்லப்பட்டதோ அவன் முக்திப் பதவிக்கு உரியவனாகின்றான்.
மதிமயக்கம் என்று கூறப்படுவது, "நான்' என்பதை தேகம் என்றும், 95ے என்னுடையது என்றும் கருதப்படும் பொய்யுணர்வாகும்.
தேகம் பிராணாதிகளை இது நானல்ல, இது நானல்ல" என்று தீர்மானித்து மொத்தமாகப் பற்றுகளை வெற்றி கொள்பவன்தான் முக்தி பெறமுடியும். "மொத்தமாக" என்பதை குறித்து வைத்துக் கொள்ளவேண்டும். இதற்காக நாம் செய்ய வேண்டியதைப் பற்றி ஆதிசங்கரர் தமது விவேக சூடாமணியின் 321-வது சுலோகத்தில் பின்வருமாறு உபதேசம் செய்துள்ளார்.
ப்ரமாதோ ப்ரஹ்ம - நிஷ்ட்டாயாம் நகர்த்தவ்யாகதாசன ப்ரமாதோம்ருத்யு - ரித்யாஹ பகவான்ப்ரஹ்மண ஸ்தா
இதன் பொருள். பிரம்ம நிஷ்டையில் கவனக் குறைவு ஒரு பொழுதும் செய்யக் கூடாது. பிரம்மாவின் புத்திரராகிய பகவான் ஸ்நத் ஸ"ஜாதர் "கவனக் குறைவே யமன்' என்று கூறியுள்ளார்.
நாம் உண்மையாகவே முக்தி பெற விரும்புகின்றோமா? இந்த இப்பிறவியிலேயே உயர்ந்த குறிக்கோளை அடைய விரும்புகின்றோமா? "ஆம்" என்றால் நமது வாழ்க்கையின் ஒவ்வொரு கணத்திலும் நாம் ஜாக்கிரதையுடனும், சுறுசுறுப்புடனும், விழிப்புடனும் இருக்க வேண்டும். பிரம்ம நிஷ்டையில், பிரம்மம் பற்றிய உணர்வில், நாம் உறைந்திட இடையறாத, தொடர்ச்சியான முயற்சி செய்ய வேண்டும். முயற்சியின்மை இன்மை புகுத்திவிடும். ஆன்மிக வாழ்க்கைப் பயணத்தில் முன்னேற முடியாது.

விவேகம், வைராககயம, ஷட்சம்பத்தி, முமுகடித்வம் uap 75
விவேகம், வைராக்கியம், ஷட்சம்பத்தி, முமுகூடி"த்வம்
ன்ம விசாரத்திற்கு உதவும் சாதனை முறைகளாக விவேகம், வைராக்கியம், ஷட் சம்பத்தி, முமுகூடிஸத்வம் நான்கும் சாஸ்திரங்களில் வகுக்கப்பட்டுள்ளன. இவற்றுள் ஷட் சம்பத்தி என்பது, அறுவகை சாதனைச் செல்வங்கள் ஆகும். முமு கூடி"த்வம் என்பது முக்தியில் நாட்டம்.
பிரம்மவுணர்வு கொள்வதில் நிரந்தர முயற்சியுடன் இருக்க வேண்டும். நாம் பிரம்மம், நாம் சத் - சித் - ஆனந்தம் எனும் பிரம்மவுணர்வு இருக்க வேண்டும். எப்பொழுதும் தூய பேருணர்வைப் பற்றிய பிரக்ஞையோடு இருக்கவேண்டும். இயற்கையாக நமக்குள்ளே இருக்கும் தெய்வீகத்தன்மையை நாம் அறிய வேண்டும். நம்முடைய உண்மையான, நித்தியமான ஆத்மாவுடன் இணைந்து வாழ முயற்சி செய்யவேண்டும். நாம் இந்த முயற்சியை செய்யாவிட்டால், வெளியுலகத்தின் பல வகையான தூண்டுதல்கள், தடுமாற்றங்கள் நம் மனதைத் தாக்குவதற்கான சாத்யக் கூறுகள் உள்ளன. ஆன்மிக தளத்தில் நாம் வாழவில்லையென்றால், நாம் தாழ்நிலையான 'நான்' எனும் தளத்தில் வாழ்வதாகத்தான் பொருள்படும்.
உண்மையான நான்' என்பதைப் பற்றி அறிய விரும்பாத பெரும்பாலான மனிதர்களைப் பற்றி நாம் அக்கறைகாட்டவில்லை. பேருண்மை நாட்டம் கொள்ளும் உண்மையான சாதகர்களைப்

Page 41
78 Qp ஆன்மிக வாழ்க்கைக்கான வழிகாட்டுதல்கள்
பற்றி நாம் அக்கறை கொள்கின்றோம்; வீடு பேறு பெற விரும்பும் உண்மையார்வம் உள்ள சாதகர்களுக்கு ஆன்மிக முயற்சிகள் ஒரு பொழுதும் தளர்வடையக் கூடாது. அவர்களுக்கு பிரம்மநிஷ்டை கூடியிருக்க வேண்டும். பிரம்மநிஷ்டை இல்லாவிட்டால் அவர்களை அவித்யை பற்றிப் படர்ந்து விடும். இதைப்பற்றி விவேக சூடாமணியின் 324-வது சுலோகம் கூறுவதாவது.
யதாபக்ருஷ்டம் சைவாலம் கூடிணமாத்ரம் ந திஷ்ட்டதி ஆவ்ருணோதித்தாமாயா ப்ராஜ்ஞம் வாபி பராங்முகம் இதன் பொருள். விலக்கப்பட்ட நீர்ப்பாசி எவ்வாறு கணப்பொழுது கூட ஒதுங்கிநிற்காதோ, அவ்வாறே மாயையானது வெளி நோக்குடையவனை, அவன் புத்திசாலியாயிருந்தாலும் வந்து மூடிக் கொள்ளுகிறது.
இந்தக் கருத்து மிகவும் முக்கியமான கருத்தாகும். தண்ணீரின் மேற்பரப்பில் படர்ந்திருக்கும் பாசி விலக்கப்பட்டாலும், கணப்பொழுதில் கலங்காத தண்ணீரின் மேற்பரப்பை மீண்டும் மூடி விடுவதைப் போல, நாம் கவனக் குறைவாக இருந்தால் மாயை நம் மனத்தின் மீது படர்ந்து மூடிவிடும். மாயையின் சக்தி மகத்தானது. புத்திசாலியும் கூட ஆன்ம விழிப்பில்லாமல் போனால் அந்த மகா மாயையின் பிடியில் இருந்து தப்புவது இயலாது என்பது இங்கு எடுத்துக் காட்டப்பட்டுள்ளது.
இங்கு ஆதிசங்கரர் சுட்டிக்காட்டுவது என்னவென்றால், நாம் பரநிலையை see- விரும்பினால், நாம் 985 நோக்குடையவர்களாக இருக்க வேண்டும்; L-AD நோக்குடையவர்களாக இருக்கக் கூடாது. பலர் சம்பிரதாயமான சமயத்தைப் பின்பற்றுபவர்களாக இருக்கலாம்; ஆனால் அது 2.ண்மையான ஆன்மிகம் ஆகாது. சடங்காசார, சாஸ்திராசார சம்பிரதாயங்கள் கொண்ட சமயவுணர்வு பெரும்பாலான மக்களிடையே உள்ளது. ஆனால் பரநிலை வேண்டும் ஆன்மிகவுணர்வு தகுதியுடையோர் சிலருக்கே சாத்யமாகும். இந்தக் கருத்தை பூரீமத் பகவத்கீதை ஏழாவது அத்யாயத்தின் மூன்றாவது சுலோகம் பின்வருமாறு விளக்குகின்றது.

விவேகம், வைராக்கியம், ஷட்சம்பத்தி, முமுகூடித்வம் ag 77
மனுஷ்யாணாம் ஸஹஸ்ரேஷ0 கச்சித்யததி ஸித்தயே யததாமபிஸித்தானாம் கச்சின் மாம் வேத்தி தத்வதா இதன் பொருள். ஆயிரக் கணக்கான மனிதர்களுள் யாரோ ஒருவன் சித்தி பெற முயற்சி செய்கின்றான். முயலுகின்ற பெருவாய்ப்புள்ளோர்களுக்குள்ளும் யாரோ ஒருவன் என்னை உள்ளபடி உணர்கின்றான்.
இயல்பாகவே நற்பண்புகள் உடைய சிலர் மட்டுமே உள்ளிருந்து எழும் ஆன்மிக அழைப்புக் குரலைக் கேட்கின்றார்கள். இவர்களைப் பற்றித்தான் நாம் அக்கறை கொள்கின்றோம். ஆன்மிக அழைப்புக் குரலைக் கேட்ட பிறகு நாம் எப்பொழுதும் விழிப்புடனும், கவனத்துடனும் இருக்கவேண்டும்.
ஆதிசங்கரரின் விவேக சூடாமணியின் 325-வது சுலோகம் கூறுவதாவது:
லக்ஷயச்யுதம் சேத்யதி சித்த - மீஷத் பஹிர்முகம் ஸந்நிபதேத் ததஸ்தத ப்ரமாதத ப்ரச்யுத - கேலி - கந்துக ஸோபான -பங்க்தெள பதிதோ யதாததா இதன் பொருள்: மனதானது சிறிதளவு பிரம்மாகிய குறிக்கோளினின்று நழுவியதாய் வெளிநோக்குடையதாய் ஆகுமேயானால், அதிலிருந்து படிப்படியாக வீழ்ச்சியடைவதாகும்; கவனக் குறைவால் நழுவிய விளையாட்டுப் பந்து மாடிப்படிகளில் விழுந்து எப்படி - படிப்படியாய் உருண்டு கீழே ஓடிவிடுமோ - அப்படியே.
இதைப்போலவே, உயர்ந்த இலட்சியத்தில் இருந்து சிறிதளவு கூட மனம் வழி தவறி அலையுமானால், அது கீழ் நோக்கியே சென்று கொண்டிருக்கும். ஒரு முறை வழி தவறிவிட்டால், மனதை அதன் ஆதி பிறப்பிடத்திற்கு திருப்பிச் செலுத்துதல் என்பது மிக மிக கஷ்டமாகி விடும். இத்தகைய தவறு நிகழாமல் இருக்க, பிரம்ம நிஷ்டை நமக்கு உதவும். அகநோக்குடன் ஆத்மா அல்லாத அனைத்திலுமிருந்து மனதை விலக்கிக் கொள்ள வேண்டும்.

Page 42
78 (p. ஆன்மிக வாழ்க்கைக்கான வழிகாட்டுதல்கள்
ஆத்மா அல்லாத ஒவ்வொன்றில் இருந்தும் மனம் விலகும் பொழுது, எப்பொருளும் இன்றி மனம் சூன்யத்தில் இருக்கமுடியாது. ஆகவே பற்றின்மை ஒன்றை மட்டும் கொண்டு நமது பிரச்னையை தீர்த்துவிட முடியாது. பற்றின்மையுடன் ஆக்கபூர்வமான ஒன்றையும் மனம் ஏற்கவேண்டும். விவேக சூடாமணி 374-ம் சுலோகத்தில் இதற்கான வழிமுறை பின்வருமாறு குறிப்பிடப்பட்டுள்ளது.
வைராக்ய - போதெள புருஷஸ்ய பசுழிவத் பாகூெடிள விஜான்ஹி விச்கூடிணத்வம் w விமுக்திஸெளதாத்ரதலாதிரோஹணம்தாப்யாம் விநாநான்ய தரேண ஸித்த்யதி இதன் பொருள்: வைராக்கியமும், விவேகமும் ஒரு புருஷனுக்கு பறவைக்கு இறக்கைகளைப் போன்றவை என்று அறிவாளி நீ அறிய வேண்டும். ஒரு மாளிகையின் மேல்தளம் போன்ற முக்தியை ஏறி அடைதல், வைராக்கியம், விவேகம் என்ற இரண்டும் அல்லாமல் அவ்விரண்டிற்குள் ஒன்றினால் மட்டும் சித்திக்காது.
பறவை ஒரே ஒரு இறக்கையுடன் வானில் பறக்க முடியாது. இதைப் போலவே நாம் முக்தி பெற வேண்டுமானால் வைராக்கியம், போதம் இரண்டும் வேண்டும். இங்கு போதம் என்பதற்கு பிரம்ம நிஷ்டை என்பது பொருளாகும். உயர்ந்த குறிக்கோளாகிய முக்தியை அடைய இரண்டுமே வேண்டும். எல்லையற்ற பரவெளியெனும் முக்தியை நோக்கி பறப்பதற்கு வைராக்கியமும், பிரம்ம நிஷ்டையும் இரு இறக்கைகளாகப் பயன் தருவன. இதன் பிறகே நமக்கு வெற்றிக்கான நம்பிக்கை பிறக்கும். இவ்வாறு செயல் முறைக்கேற்ற வழிமுறை என்ன? வைராக்கியம் வேண்டுமென்பதில் சந்தேகமில்லை.
இந்த உலகத்தின் முழுமையானப் பொய்த் தோற்றத்தை நாம் அறிவோம். 'உலகம்' என்ற சொல் 'லோகம்' என்ற சம்ஸ்கிருத மொழிச் சொல்லிலிருந்து உண்டாயிற்று. 'லோகம்’ என்றால் 'காணப்படுவது' என்றே பொருள். அது 'இருப்பது' அல்ல:

விவேகம், வைராக்கியம், ஷட்சம்பத்தி, முமுக்ஷத்வம் up 79.
காணப்படுவதே என்றுமே இல்லாததான உலகத்தை இருப்பற்றதாக உணர்த்தி, என்றுமே உள்ளதான ஆன்மாவை (பிரம்மத்தை) நித்திய ஸித்தமாய் அனுபவப்படுத்துவதே உயர்ந்த குறிக்கோளாகும். இவ்வுலகம் நமக்கு உண்மையான மகிழ்ச்சியைத் தராது. நிறைவான அமைதி, நீடித்த மகிழ்ச்சியை நாம் இவ்வுலக விவகாரங்கள் எதில் இருந்தும்பெறுவதென்பது ஒருபோதும் நம்பக் கூடியதன்று. ஆகவே, நாம் அக நோக்கிற்கான பயிற்சியை மேற்கொண்டு, புறவுலகில் இருந்து மனத்தை உள்முகமாகத் திருப்பிவிட முயற்சி செய்யவேண்டும். இதற்கு வைராக்கியம் வேண்டும்; அத்துடன் நமக்கு சாதனை பயிற்சியும் வேண்டும்.
வாழ்க்கை நிலையாமையைப் பற்றிய பிரக்ஞை நம்மிடம் எப்பொழுதும் இருக்கவேண்டும். பிறந்தவர் எவரும் இறப்பது உறுதி. இறந்தவுடன் உற்றார், உறவினர் எவரும் கடைசி வரை வருவதில்லை. வீடு வரை, வீதி வரை, காடு வரையில் உற்றார் உறவினர் படிப்படியாக நின்றுவிடுவர். நேற்று இருந்தவன் இன்று இல்லை எனும் பெருமையை இவ்வுலகம் கொண்டுள்ளது. இறப்பு பற்றியச் சிந்தனை வரும் பொழுது, கடவுள் பற்றியச் சிந்தனையும் வரும். ஆன்மிக நாட்டம் எழும். ஆன்மிக வாழ்க்கைக்குரிய சாதனை முறையை அறிய சாத்திரங்களில் இருந்தும், உண்மையான குருவிடமிருந்தும் வழிகாட்டுதல்களை எதிர்பார்ப்போம், நாம். வைராக்கியத்தை கடைப்பிடிப்போம். அத்துடன் ஆன்மிக சாதனைப் பயிற்சியையும் மேற்கொள்வோம். இரண்டுமே அவசியமாகும்.
குருவின் வழிகாட்டுதலைப் பெற்று, ஒரு சாதகன் தனது ஆன்மிகப் பயிற்சியைத் தொடங்கும்பொழுது மிக்க ஊக்கமும், உற்சாகமும் கொள்கிறார். ஆனால் நாட்கள் செல்லச் செல்ல, மாதங்கள் செல்லச் செல்ல ஆன்மிகப் பயிற்சியை மேற்கொண்ட பலருக்கு ஆரம்பகால பேரார்வம் நீர்த்துப் போய் மறைந்து விடுகின்றது. ஆனால் ஆரம்பகால பேரார்வத்தை இழக்காதவர்கள்தான் முக்தியை அடைய முடியும். முக்தி

Page 43
BO Up ஆன்மிக வாழ்க்கைக்கான வழிகாட்டுதல்கள்
எனப்படும் மோட்சமே நித்திய வஸ்து என்று அறிவதால் சாஸ்திர நுட்பச் சொல்லாக முமுகூடி"த்வம் விளங்குகின்றது.
வைராக்கியமும், முமுகூடித்வமும் இணைய சாதகன் பெறும் பயனை 'விவேக சூடாமணி' சுலோகம் 29 பின்வருமாறு கூறுகின்றது.
வைராக்யஞ்சமுமுகூடி"த்வம் தீவ்ரம் யஸ்யது வித்யதே தஸ்மின்னே வார்த்த வந்த ஸ்யு பலவந்த சமாதய W இதன் பொருள்: வைராக்கியமும், முமுகூடி"த்வமும் எவனுக்கு தீவிரமாக இருக்கின்றதோ அவனிடத்தில்தான் சமம் முதலிய குணங்கள் அனுஷ்டிக்கப்பட்டு அர்த்தமுடையனவாகவும், பயனை அளிப்பனவாகவும் ஆகின்றன.
உலகத் தோற்றமனைத்தும் முற்றிலும் பொய்யாகும். பிரம்மம் ஒன்றே சத்தியம் எனும் நோக்கில் கூறப்படும் தத்துவம் இதுவாகும். இவ்வுலகப் பொருள்கள் மீது பற்றின்மையை உண்மையாக நாம் வளர்த்துக் கொண்டால் ஒழிய நாம் முக்தி பெறமுடியாது. இதற்கான முக்கியமான முதல் தேவை உண்மையான வைராக்கியம். ஆனால் அது மட்டும் போதாது. இதை ஓர் உதாரணத்தின் மூலம் விளக்கலாம். நான்கு கால்களைக் கொண்ட ஒரு மேஜையை எடுத்துக் கொள்வோம். விவேகம், வைராக்கியம், ஷட் சம்பத்தி, முமுகூடி"த்வம் என்பன நான்கு கால்களாகும். சமம், தமம், உபரதி, திதிகூைஷ், சிரத்தை, சமாதானம் என்பன ஷட்சம்பத்தி என்பதையும் அறிவோம்.
மேஜை சாயாமல் இருக்கவேண்டுமானால், அதன் நான்கு கால்களும் சரியான நிலையில் இருக்கவேண்டும். இவற்றுள் முமுகூடி?த்வம், நான்காவது கால் ஆகும். ஆகவே, முக்தி பெறுவதற்கு உண்மையான விருப்பம்` கொள்ளும்பொழுது ஒருவருடைய சாதனை முறை பயன்தருகின்றது.
"நான் என்னுடைய ஆன்மிக வாழ்க்கையில் அக்கறை கொண்டுள்ளேனா? நான் உண்மையிலேயே முக்தி அடைவதில்

விவேகம், வைராக்கியம், ஷட்சம்பத்தி, முமுகடித்வம் Up 8
பேராவல் உடையவனா?" எனும் கேள்விகளுக்குக் கிடைக்கும் பதிலில்தான் நாம் ஆன்மிக வாழ்க்கையில் முன்னேறியிருக்கின்றோமா என்பதை அறியமுடியும்.
"வழிமுறையைப் பற்றி அக்கறை எடுத்துக்கொள்; முடிவு, தனக்குத்தானே அக்கறை எடுத்துக்கொள்ளும்' என்று சுவாமி விவேகானந்தர் தமது பேருரைகள் ஒன்றில் குறிப்பிட்டுள்ளார். 'முடிவு' என்பது யாது? உயர்ந்த குறிக்கோளைச் சாருதல் எனும் ஆன்மிக பூரணத்துவமே 'முடிவு' ஆகும். 'வழிமுறை' என்பது யாது? விவேகம், வைராக்கியம், ஷட் சம்பத்தி, முமுகூடி"த்வம் என்பன "வழிமுறை'யாகும்.இவைகள் யாவும் அனுஷ்டிக்கப்பட்டு, கண்டறிந்த உண்மைகளாகும். இவற்றை சாதனை செய்பவர்கள் உயர்ந்த குறிக்கோளான முக்தியை அடையவார்கள். ஆகவே, முக்தி பெறுவதற்கான உண்மையான வைராக்கியமும், விருப்பமும் இருந்தால் உயர்ந்த குறிக்கோளை நோக்கிய நமது புனிதப் பயணம் பயன் தரும்.
வைராக்கியம் எனும் நீர் பாய்ச்சப்படும் பொழுதுதான், உள்ளத்தில் ஆன்மிக வெளிப்பாடு, ஆன்மிக முன்னேற்றம் ஏற்படும்.நீர் பாய்ச்சுவதோடு, உழுதலும் நிகழவேண்டும்.நிலத்தில் பயிர் செய்யும்பொழுது, நீர் பாய்ச்சுவது மட்டும் போதாது என்பதையும் அறிவோம்.
இரு வகையாக இயங்குவது என்பதை எல்லா வழிகளிலும் நாம் தவிர்க்க வேண்டும். இரு வகையில் இயங்குவது என்றால் என்ன பொருள்? இந்த இரு வகை இயக்கம் இறைவன் படைத்த ஐம்புலன்கள் வழியே நிகழ்கின்றது. ஒன்று, புறவுலக இயக்கம்: மற்றொன்று அகவுலக இயக்கம். புறவுலக இன்பங்களை ஐம்புல நுகர்ச்சிகளாகக் கொண்டு இயங்குதல். புறவுலக இயக்கத்தினர் வெளியுலக மாயக் கவர்ச்சிகள் அனைத்திலும் உழன்று, உயர்ந்த குறிக்கோளாகிய "பரநிலையை அடைய முடிவதில்லை. புலன்கள் வழியே சென்று அலைந்து திரியாமல், "பொறிகளின் மீது தனியரசாணை' செலுத்தப் பழகிய விவேகிகள் அகவுலக

Page 44
82 UV ஆன்மிக வாழ்க்கைக்கான வழிகாட்டுதல்கள்
இயக்கத்தில் நாட்டம் செலுத்தி தன்னுணர்வு பெற்று முக்தி நிலை எய்துகின்றனர்.
ஐம்பொறிகள் அருள் வெள்ளம் பருகிடவும் துணை நிற்பன என்பதை தமிழ் நாட்டு ஞானச்சித்தர் திருமூலர் தமது திருமந்திரத்தில் குறிப்பிட்டுள்ளார். ஆசையைக் களைய வேண்டுமாயின் ஐம்பொறிகளை அடக்க வேண்டும். பொறிகள் கட்டற்று, காட்டில் திரியும் பசுக்களாக உள்ளன. இவற்றைக் கட்டி வைத்து அடக்க முடியுமானால் அருள் வெள்ளம் பருக அவையே துணையாக நிற்கும்.
"பார்ப்பான் அகத்திலே பாற்பசு ஐந்துண்டு மேய்ப்பாரும் இன்றி வெறித்துத் திரிவன மேய்ப்பாரும் உண்ட்ாய் வெறியும் அடங்கினால் பார்ப்பான் பசு ஐந்தும் பாலாய்ச் சொரியுமே! - என்பது திருமந்திரம். இதனையே பாரதியார், "பொறிகளின் மீது தனியரசாணை' என்று குறிப்பிட்டுள்ளார்.
மேற்கூறிய இருவகை இயக்கம் எதற்கு எனும் கேள்வியைப் பார்ப்போம். பழவினை காரணமாக தேகம், மனம் கணக்கற்ற ஆசைகளைக் கொள்கின்றன. இதன் காரணமாக இரு வகை இயக்கம் தோன்றுகின்றது. இதற்கு பரிகாரம் உண்டா என்றால், உண்டு. மனமானது உணர்வு பூர்வமாகவும், சுயமாகவும் கட்டுப்பாட்டை விதித்துக் கொள்ளவேண்டும். பொறிகளின் மீது
தனியரசாணை செலுத்தவேண்டும். ペ
உயர்ந்த ஆன்மிக வாழ்க்கையை மேற்கொள்ள விரும்புபவர்கள், உள்நாட்டம் பயில புலன்களிடம்,
போராட்டத்தை எதிர்கொள்ள வேண்டியுள்ளது. உயிரியல் சார்ந்த பாரம்பர்யம் தோற்றுவிக்கும் இந்தப் போராட்டம், நமது பழவினையின் விளைவும் ஆகும். உயிரியல் சார்ந்த பாரம்பர்யம் ஏற்படுத்தும் போராட்டங்களை வென்று முன்னேறி தெய்வீக பாரம்பர்யத்தை அடைய வேண்டும். இந்த உயர்ந்த நிலையை அடைவதற்கு முன்பு இயல்பாகவே போராட்டம் இருக்கும்.

விவேகம், வைராக்கியம், ஷட்சம்பத்தி, முமுகூடித்வம் Op 83
சுவாமி பிரம்மானந்தாஜி மகராஜின் சீடர் சுவாமி பிரபவானந்தா இந்நூலாசிரியரிடம் கூறியதாவது:
"நாங்கள் புதியவர்களாக (ஆன்மிக பயிற்சிக்கு) இருந்தபொழுது எங்கள் கஷ்டங்களை சுவாமி பிரம்மானந்தாஜி மகராஜிடம் கூறிக் கொள்வோம். அப்பொழுது அவர், "மேற்குறிப்பிட்ட போராட்டத்தை ஒவ்வொருவரும் கடந்தே ஆக வேண்டும்; மனம் தளர்ந்து போகாதீர்கள், போராட்டத்தை கைவிடாதீர்கள்." என்று கூறுவார்.
ஒரு முறை போராட்டத்தைக் கைவிட்டு விட்டால், பிறகு நம்பிக்கைக்குஇடம் இல்லை. போராட்டத்தில் தோல்வி கண்டாலும் தளர்ந்து போய்விடாமல் நம்பிக்கையுடன் போராட்டத்தை முன் எடுத்துச் செல்லவேண்டும். போராட்டம் ஒருபோதும் நேர் கோட்டில் செல்லாது. ஆன்மிகப் பயணத்தில் செல்வோர் தீவிரமானப் போராட்டத்தில் செல்வர். பலவிதமான உள்மனப் போராட்டங்களுக்கு எதிராக எழுச்சி பெற வேண்டும். அதற்குரிய விலையைக் கொடுக்க வேண்டும். இறுதி வரையில் போராடினால், வெற்றி உறுதி. நமது தெய்வீகத்தன்மையை உணர வேண்டும். நாம் கடவுளால் ஆசிர்வதிக்கப்பட்டவர்கள் என்றும் கருத வேண்டும்.
ஆன்மிக வாழ்க்கைப் பயணத்தில் கணக்கற்றத் தடைகளை, சோதனைகளை சந்திக்க வேண்டியிருந்தாலும், முடிவில் வெற்றிக்கு உத்தரவாதம் கிடைத்து விடுகின்றது. மனோமயச் சிக்கல்கள் குறுக்கிட்டாலும், ஆசைகள் பெருகினாலும் அவற்றை நாம் புனிதப் படுத்தும் சாதனை முறைகளைக் கைக் கொள்ளவேண்டும். ஆசைகளைப் பெருக்கும் பொறி புலன்களைப் போக்கறுத்து, மனதை நெறிப்படுத்தினால் ஆசைகள் புனிதமாகின்றன. உலகியல் ஆசைகள் உண்மைப் பேருணர்வைக் கண்டறியத்தக்க ஆசைகளாக புனிதமடையும். இந்நிலையில் நமது ஆசைகள் ஆன்மிகக் கட்டுப்பாட்டை சுயமாக விதித்துக் கொள்ளத் தூண்டுவன.
எல்லா இந்திரிய விஷயங்கள் மீதும் உள்ள பற்றை ஒருநாளில் விட்டுவிட இயலாது. இத்தகைய கருத்தே பலருக்கு நடுக்கம்

Page 45
84 W ஆன்மிக வாழ்க்கைக்கான வழிகாட்டுதல்கள்
விளைவிக்கும். பண்படாத உள்ளங்கள், சிறு குழந்தைகளைப் போன்று உலக போகத்தை விரும்புகின்றன. முழுதும் பற்றற்றிருத்தலை அவை பெறும் அவசியம் இல்லை. இதற்காக ஆரம்ப முறையாக விதிக்கப்பட்ட பிரவிருத்தி மார்க்கம், ஆசை நெறியாகும். இதன் வழி எல்லா ஆசைகளையும் விடவேண்டியதில்லை. சாஸ்திரங்களில் கூறப்பட்டுள்ள விதிவிலக்குகளை வழுவாது பின்பற்றும் வாயிலாக இவர்கள் அவற்றை அடக்கியாளுவதொன்றே போதும். இதனால் உள்ளங்கள் ஓர் அளவிற்கு தூய்மை அடைகின்றன. இந்திரியங்களையும், மனதையும் படிப்படியாகவே அடக்கிவர வேண்டும். இக்காரணம் பற்றியே பிரவிருத்தி மார்க்கம் ஆசைகளைப் பின்பற்றும் முறையையும் ஓர் எல்லைக்குள் அனுமதிக்கின்றது.
ஆசைகள் அனைத்தையும் அடியோடு அடக்கி ஒடுக்குவதில் விரும்பத்தகாத விளைவுகள் ஏற்படுவதைப் போல, விவேகம் இல்லாமல் ஆசைகளை வளர்த்துக் கொண்டே செல்வதிலும் விரும்பத்தகாத விளைவுகள் ஏற்படுகின்றன. நெய்யைச் சொரிந்து தீயினை ஒருகாலும் அணைக்க முடியாது. அதுபோல ஆசைகளை அனுபவித்து ஓய்ந்துவிடுதல் ஒருகாலும் முடியாது. ஆசையெனும் சக்திமிக்க நீர்ச் சுழலில் அலைப்புண்டு அமிழ்ந்துபோய் நாம் வாழ்க்கை முழுவதும் மீளமுடியாமல் துன்பமடைவோம்.
ஐம்புலப் பொருள்களின் மீது நமக்குள்ள ஆசையே நம்மை உலக பந்தத்திற்கு உள்ளாக்கி உண்மையான ஆன்மிக வாழ்விற்கு முட்டுக்கட்டையாகின்றது. நாம் போகம் பெறுவதற்காக ஐம்புலப் பொருள்களிடை அழுந்திக் கிடக்கும் காலம் வரை உள்ளுறையும் இறைவன் நமது காட்சிக்கு மறைவாகவே இருக்கின்றான். அவனைத் தரிசிப்பதற்கு நமது பார்வையைப் புறப் பொருள்களின்றும் இழுத்து உள்முகமாக்குதல் அவசியம். அப்போதுதான் நாம் பூரணத்தன்மையை எய்துதலும், நித்தியானந்தத்தையும், அழியாப் பெருவாழ்வையும், எல்லையற்ற அறிவைப் பெறுதலும் நமக்கு இயலும்,

விவேகம், வைராக்கியம், ஷட்சம்பத்தி, முமுகஷத்வம் U 8
ஆசையெனும் நீர்ச்சுழலில் சிக்கித் தடுமாறாமல் தப்பித்துக் கொள்ள வேறொரு வழிமுறையுள்ளது. இந்த வழிமுறை தத்துவ நோக்குடையது. வேதாந்த நோக்கில் புறவுலகம் ஐந்து பொருள்களையுடையது. நாமம்.ரூபம், அஸ்தி, பாதி, பிரியம் (சத் - சித் - ஆனந்தம்) என்பனவே அந்த ஐந்து பொருட்கள். நாம் தொடர்ந்தாற் போன்று நாமம், ரூபத்தை அகற்றிவிட்டால், பிறகு எங்கும் நிறைந்துள்ள பிரம்மத்தை-அஸ்தி, பாதி, பிரியம் அல்லது சத், சித். ஆனந்தத்தை - பூரணமாக உணர்கின்றோம்.
நாம, ரூபம் வேறுபட்டாலும் அனைவரும் தூயவுணர்வு எனப்படுவதின் ஆக்கமே. "ஒவ்வொரு மனிதனுள்ளும் தெய்வீகம் உறைந்துள்ளது; உள்ளுக்குள் இருக்கும் தெய்வீகத்தை வெளிப்படுத்துவதே குறிக்கோளாகும்' என்னும் சுவாமி விவேகானந்தரின் வாக்கை நினைவு கூர்வோம். நமது பண்டைய ரிஷிகள் தங்கள் சூழ்நிலை அநுபூதியில் கண்டெடுத்தத் தத்துவ உண்மையும் இதுவேயாகும்.
இந்தப் பிரபஞ்சத்தில் உள்ள உயிருள்ள, உயிரற்றவை அனைத்திலும் ஐந்துதத்துவங்கள் உள்ளன. அவையாவன: இருப்பு (அஸ்தி), வெளிப்படுத்தப்படுவது(பாதி), பிரியமுள்ளது (பிரியம்), பெயருடையது (நாமம்), வடிவம் (ரூபம்). ஆத்ம விசாரத்தில் நாம, ரூபத்தை நீக்கிக் கொண்டே வரும்பொழுது, எஞ்சுவது பரம்பொருளே தன்னுணர்வே. இந்த ஆன்மிகப் பயிற்சியை நாள்தோறும் செய்ய வேண்டும்.
நாம, ரூபம் எனும் பன்மைத் தோற்றங்களை மறுத்து எழும் ஒன்றே எனும் உண்மையுணர்வு, சச்சிதானந்தமாகின்றது. ஒன்றாகக் காண்பதே காட்சி எனும் பேருண்மை அடித்தளமாகின்றது. உலகம் பிரம்ம மயமானது எனும் ஞானத் தெளிவும் தோன்றுகின்றது. இந்த உயர்ந்த பரநிலையை எய்தும்பொழுது, நமது அந்தகரணங்களுக்கு சரியான செல் திசை கிடைக்கின்றது. இதனால் எல்லாவிதமானத் தவறுகளும் விலக்கப்படுகின்றன. உலகமாயையால் விளையும் வீழ்ச்சிகள் தவிர்க்கப்படுகின்றன. எல்லையற்ற பரநிலையில்தான்

Page 46
86. Up ஆன்மிக வாழ்க்கைக்கான வழிகாட்டுதல்கள்
உண்மையான நித்யானந்தம் உள்ளது. ஆம், "பார்க்கும் இடம் எங்கும் ஒரு நீக்கம் அற நிறைகின்ற பரிபூரணானந்தமே" உள்ளது. நூற்றுக் கணக்கானத் தீய ஆசைகள் நம்மை வீழ்த்திட அணிவகுத்தபோதும், நமது கடவுள் நம்பிக்கை காத்திடும். மனந்திறந்து கடவுளிடம் பின்வருமாறு முறையிட கடவுள் நம்பிக்கை வழிப்படுத்தும்.
"இறைவன்ே, lades இன்பங்களை நாடித்தான் செல்லவேண்டும் எனும் அளவிற்கு என்னைத் தாங்கள் படைத்து விட்டீர்களே. என்னுள்ளே இருக்கும் மோசமான சம்ஸ்காரங்கள், நம்பிக்கையற்றத் தன்மையை ஏற்படுத்தி விடுவதை உணர்கின்றேன். என்னுள்ளே இருக்கும் இறைவனே, என்னுடைய குறைகளை, தோல்விகளையெல்லாம் நீ அறிவாய். என்னுடைய எல்லா பலவீனங்களையும், குறைகளையும் வெற்றிகொள்வதற்கும் போதுமான வலிமையை தாங்கள் எனக்கு அருளவேண்டும்." ஆகவே எங்கும் நிறைந்துள்ள பிரம்மம் நமக்கு வழிகாட்டும் எனும் நம்பிக்கையிருந்தால், நாம் பாதுகாப்பாக இருப்போம். ஏதேனும் ஒரு தவறு செய்யப்போகும் சமயத்தில் உடனடியாக பின்வரும் எண்ணம் தோன்றவேண்டும்.
"நான் உலகத்தை ஏமாற்றி விடலாம்; கடவுளை ஏமாற்ற முடியாது. நான் துணையற்றவன். கடவுளே, உலகத்தின் பல்வேறு விவகாரங்கள் பின்னே ஓடுகின்றேன். என்னை காத்தருள வாருங்கள். எப்படி, நான் படைக்கப்பட்டேன் என்பதை தாங்கள் மட்டுமே அறிவீர்கள்.' நம் முறையீட்டைக் கேட்டு இறைவன் நிச்சயமாக விரைந்து வருவார்.
உணர்வின் மேற்பரப்பிலே குமிழிட்டு வருவதைப் போல், விரும்பத்தகாத பலவித எண்ணங்கள் நம் மனதில் வருகின்றன. இந்த மாதிரியானச் சந்தர்ப்பங்களில் பயந்து விடக்கூடாது. நம்மைத் தூய்மைப்படுத்திக் கொள்ளத் தொடர்ந்து செயல் படுகிறோம் என்பதற்கு குமிழிடும் எண்ணங்கள் அறிகுறிகளாகும். ஆழ்மனதின் அடுக்கிலே புறக்கணிக்கப்பட்ட பல மூலை

விவேகம், வைராக்கியம், ஷட்சம்பத்தி, முமுகூடித்வம் Uev 87
முடுக்குகள் இருக்கின்றன என்பதை இந்த அறிகுறிகள் காட்டுகின்றன.
உண்மையை ஆழமாக அறியாமல் மேற்போக்காக அறிந்தால் உண்மையான மாற்றம் ஏற்படாது. நமது ஆழ்மனதின் மூலை முடுக்குகளில் எல்லாம் செல்லவேண்டும். தியானம் புரியும் பொழுது சிறிய ஒளிக்கீற்று நம் மனதிற்குள் நுழைகின்றது. இதனால் குப்பை கூளங்களை யொத்த பல்வேறு தீய எண்ணங்கள் தற்காலிகமாக மனதின் மூலை முடுக்குகளில் தள்ளப்படுகின்றன. தியானத்தை முடித்துக் கொண்டநிலையில் தள்ளப்பட்டத் தீய எண்ணங்கள் மேலெழும்பி மனதின் மேற்பரப்பிற்கு மீண்டும் வந்து விடுகின்றன. ஆகவே ஆழ்மனதின் மூலை முடுக்குகளில் தள்ளப்படும் குப்பை கூளங்களை அகற்ற நாம் முயற்சி எடுக்கவேண்டும்.
சில சமயங்களில் மனதின் மீது அதிகாரம் செலுத்த நாம் முயற்சி செய்து, ஐம்புலன்கள் மீது கட்டுப்பாட்டை விதிக்கின்றோம். ஆனால் இந்த முயற்சி உள்ளுக்குள் ஏற்படும் மாற்றம் என்று தவறுதலாக நினைத்து விடக்கூடாது. மனதிற்குள் மாற்றம் ஏற்படவேண்டுமானால் புறத்தே மட்டுமல்லாமல அகத்திலேயும் மனதைக் கட்டுப்படுத்த வேண்டும். இதைப்பற்றி பின்வருமாறு பகவத்கீதையில் (2-59) அறிகின்றோம்.
விஷயா விநிவர்த்தந்தே நிராஹாரஸ்ய தேஹின ரஸவர்ஜம் ரஸோ அப்யஸ்ய பரம் த்ருஷ்ட்வா நிவர்த்ததோ இதன் பொருள். தம்மைக் கவராத ஜீவனிடமிருந்து விஷயங்கள் தாமே விலகிக் கொள்ளுகின்றன. எனினும் அவற்றிடமுள்ள 6066) இவன் மறப்பதில்லை. பரம்பொருளைக் காண்பானாயின் அச்சுவையும் அழிகின்றது.
ஸ்திதப் பிரக்ஞன் எங்ங்ணம் அமர்கின்றான் என்று அர்ஜுனன் கேட்ட கேள்விக்கு விடையாக கூறப்பட்ட சுலோகங்களில் முதலாவது மேற்காணும் சுலோகம். புறத்தே இந்திரிய

Page 47
88 Up ஆன்மிக வாழ்க்கைக்கான வழிகாட்டுதல்கள்
விஷயங்களில் மேற்கொள்ளும் கட்டுப்பாடு, அகத்தே மேற்கொள்ளும் கட்டுப்பாடு இரண்டிற்கும் இடையேயுள்ள வேற்றுமையை இந்த சுலோகத்தில் பூரீகிருஷ்ணர் விளக்குகின்றார். புறக் கட்டுப்பாடு காரணமாக இந்திரியார்த்தங்களை நுகர இயலாமல், விஷயங்களையெல்லாம் விட்டு ஒருவன் பலவந்தமாக விலக்கப்பட்டாலும், அவைகளை அனுபவிக்க வேண்டும் என்ற ஆசை உள்ளத்தில் உதித்துக் கொண்டேயிருக்கும். யாராலும் அதை அடக்கி வைக்கமுடியாது. புலனடக்கம் முதலிய தபசுகளைச் செய்பவனது நிலைமையும் அத்தகையது. இந்நிலையில் ஒருவன் வெளிக்கட்டுப்பாட்டை மட்டும் கொண்டு ஆன்மிக வாழ்க்கையை அடைய விரும்பினால், அவன் மோசமான தவறு செய்தவனாகி விடுவான். புலனடக்கத்தில் கூட வாசனைகள் மிக சூட்சமமாக ஒளிந்துக் கொண்டு இருக்கும்.
தீயிலிட்டு வறுத்த விதை முளைக்காது. அவ்வாறு வாசனை அறவே ஒழிய வேண்டும். இந்த ஆசை. ரஸம் என்று பகவத்கீதையில் குறிப்பிடப்படுகின்றது. வாசனை, ரஸம், ஆசை ஆகிய சொற்களுக்குப் பொருள் ஒன்றே. ஆசையானது, திரும்பவும் முளைக்காதபடி அவிந்து பட்டுப்போகவேண்டும்.
நாம, ரூப பேதம் சார்ந்த உலகத்தின் பொய்த் தோற்றத்தை தேர்ந்து தெளிந்து அனைத்திற்கும் அடித்தளமாக உள்ள பரம்பொருளைக் காண்பவருக்கு சுவை (ரசம்) அழிபட்டுப் போகிறது. 'பரம்பொருளைக் காண்பானாயின் அச்சுவையும் அழிகின்றது' என்று பகவத்கீதை குறிப்பிட்டுள்ள முக்கியமான சுலோகத்தை நாம் என்றும் எப்பொழுதும் நினைவில் கொள்ளவேண்டும்.
புற - அகவயமான இருவகைக் கட்டுப்பாடுகளையும் பெறப் பயிற்சி பெற விரும்புவோர். பின்வரும் பகவத்கீதை சுலோகத்தையும் நினைவில் நிறுத்தவேண்டும்.
யததோ ஹ்யபி கௌந்தேய புருஷஸ்ய விபச்சித இந்த்ரியாணி ப்ரமாதீனி ஹரந்தி ப்ரஸ்பம் மன - (2-60)

விவேகம், வைராக்கியம், ஷட்சம்பத்தி, முமுகூடித்வம் uno 89°
இதன் பொருள். குந்தியின் மகனே! முயற்சியுடையவனும், நல்லறிவுடையவனும் ஆகிய புருஷனிடத்தும் கொந்தளிப்புள்ள இந்திரியங்கள் பலாத்காரமாய் மனத்தை இழுத்துச் செல்கின்றன அன்றோ?
இந்த சுலோகம் சாதகனுக்கு ஓர் எச்சரிக்கை விடுக்கின்றது. இந்திரியங்கள் முரட்டுத்தனமும், அடங்காத கொந்தளிப்பும் கொண்டவை. தவ விரதமுடையவர்களையும் அவைகள் தத்தளிக்கச் செய்கின்றன. அறிஞர்களையே அவைகள் படுகுழியில் வீழ்த்துபவைகள். தறி கெட்டு ஒடும் குதிரை மீது சவாரி செய்யும் பொழுது, அதை எவ்வாறு அடக்கி வெல்லவேண்டுமோ, அவ்வாறு இந்திரியங்களை அடக்கி வெல்லவேண்டும். இதற்கு தூய்மையான வாழ்க்கையும், மனவுறுதியும் வேண்டும். ஆத்மா அல்லாத பிறவற்றை விஷமாக வெறுக்கவேண்டும். இந்திரியங்களை வெல்லுமளவு மனிதன் மேலோன் ஆகின்றான். இந்திரிய நிக்கிரகத்தில் ஒருவர் எவ்வாறு விழிப்புணர்வுடன் இருக்க வேண்டுமென்பதற்கு பூரீஇராமகிருஷ்ணரின் பின்வரும் உபதேசம் சிறந்ததொரு வழிகாட்டுதல் ஆகும்.
"விஷப் பாம்புகள் நடமாடும் வீட்டில் வசிப்பவர்கள் எப்போதும் வெகு ஜாக்கிரதையாக இருப்பதைப் போல் உலகத்தில் வாழும் மக்கள் காமத்துக்கும், காசு ஆசைக்கும் உட்படாமல் எப்போதும் ஜாக்கிரதையுடன் இருக்கவேண்டும்.'
வெளித் துறவு, உள்ளத் துறவு - இரண்டிற்கும் இடையே உள்ள வேற்றுமையைப் பற்றி மீண்டும் அறிவோம். வெளித்துறவில் ஒருவர் உலகத்தைத் துறந்து குகைக்கோ, காட்டிற்கோ சென்றாலும், உள்ளத்துறவு இல்லாவிடில் புலன் இன்பப் பற்றுதல்கள் கூடவே இருக்கும். பொல்லாத புலனின்பப் பற்றுதல்களால் மனம் வஞ்சிக்கப்பட்டு ஏமாற்றமடையும். ஆகவே, உள்ளத்துறவுடன் இணையாத வெளித்துறவினால் பயன் ஏதும் இல்லை.
நாம் வாழ்க்கையில் எந்த நிலையில் இருந்தாலும் மிக்க விழிப்புடன் புறத்துறவு, உள்ளத்துறவு இரண்டையும் கவனத்தில்

Page 48
90 u. ஆன்மிக வாழ்க்கைக்கான வழிகாட்டுதல்கள்
கொண்டு உயர்ந்த குறிக்கோளாகிய ஆன்மிக நாட்டம் கொள்ளவேண்டும். இல்லாவிடில் நம்மை ஒருவராலும் காப்பாற்றமுடியாது. இதன் தொடர்பாக, தட்சணேசுவர காளி கோயிலில் பகவான் பூரீராமகிருஷ்ண பரமஹம்சருக்கும், இல்லறம் சார்ந்த சீடர் ஒருவருக்கும் இடையே நிகழ்ந்த உரையாடல் இங்கு பொருந்துவதாகும்.
இல்லறச் சீடர், 'குரு மகராஜ், பூரணமானத் துறவு கொள்ளாமல், நாம் கடவுளை உணரமுடியாதா?’ என்று கேட்டார். இந்தச் சீடரின் கேள்வியில் பூரணமானத் துறவு என்பது வெளித்துறவும், உள்ளத்துறவும் இணைந்தத் துறவைக் குறிப்பதாகும். இந்தக் கேள்விக்கு கருணையும், இரக்கமும் கொண்ட பூரீராமகிருஷ்ணர் பரிவுடன் அளித்த பதில் பின்வருவது.
"ஆம், உன்னால் முடியும். ஒவ்வொன்றையும் நீ ஏன் துறக்க வேண்டும்? நீ இடைநிலைப்பட்ட நடுவழியைப் பின்பற்றுவது சரியே. ஒர் உண்மையை உனக்கு சொல்வேன். உன்னுடைய உலகவாழ்க்கையில் தவறொன்றும் இல்லை. ஆனால் கடவுளை நோக்கி உன் மனதை நீ செலுத்த வேண்டும். இல்லாவிடில் நீ முன்னேற முடியாது. ஒரு கரத்தால், உன்னுடைய அன்றாட வேலையைச் செய்க, மற்றொரு கரத்தால் கடவுளைப் பிடித்துக் கொள்க. வேலை முடிந்தவுடன் கண்டிப்பாக இருகரங்களாலும் கடவுளைப் பிடித்துக் கொள்க."
'கண்டிப்பாக எனும் அழுத்தத்தைக் குறித்துக் கொள்ளவேண்டும். "அடிமைத்தனமும் மனதின் பாற்பட்டதே: விடுதலையும் மனதின் பாற்பட்டதே' உலகப்பற்றுகளில் நம்மை அடிமைப்படுத்துவதும் மனமே, பற்றுகளில் இருந்து விடுதலை பெறவைப்பதும் மனமே. "விடுதலை’ எனும் சொல்லிற்கு 'விடு' என்பது பொருள். 'விடு' என்ற பகுதியில் இருந்து 'வீடு' என்ற சொல் வந்தது. வீடாவது பரமாத்மாவுடன் அறிவு கலந்து நிற்பது. "அறம், பொருள், இன்பம்' எனும் மூன்று புருஷார்த்தங்களும் நான்காவது புருஷார்த்தமாகிய "வீடு' நோக்கியே நிற்கவேண்டும்.

விவேகம், வைராக்கியம், ஷட்சம்பத்தி, முமுகடித்வம் * 0.9 91
"நான் சுதந்திரமான ஆத்மா, வீட்டில் வாழ்ந்தாலும், காட்டில் வாழ்ந்தாலும் நான் எப்படி கட்டுக்குள் அடங்கமுடியும்? கடவுளின் குழந்தை நான் அரசர்களுக்கு அரசன் என்னைக் கட்டுப்படுத்த எவருளர்?" இவ்வாறு ஒருவர் இடைவிடாது சிந்தித்தால், அவர் சுதந்திரமானவர். மனோதிடத்துடனும், உறுதியுடனும் "நான் கட்டுப்பட்டவன் அல்லன், நான் சுதந்திரமானவன்' என்று திரும்பத் திரும்ப சொன்னால் உண்மையிலேயே அவ்வாறே ஆகிவிடுவோம்.

Page 49
ஆன்மிக வாழ்க்கைக்கான வழிகாட்டுதல்கள் ump 02
ஜப்சாதன முறை
2ப சாதன முறையை விளக்கி குருதேவர் இராகிருஷ்ண பரமஹம்சர், ஒரு பக்தரிடம் பின் வருமாறு பேசினார்:
"ஜபம் செய்வதென்பது தனிமையில் அமைதியாகக் கடவுளின் பெயரை ஒதுவது. ஒருமனதாகப் பெயரைஒதடித, ஜபம் பழகப் பழக, இறைவனது காட்சி கிடைக்கும். அவனை அறிந்து கொள்வாய். ஒரு கட்டை கங்கையில் மூழ்கியிருக்கிறது. அதில் கட்டியுள்ள சங்கிலியைக் கரையில் கட்டி வைத்துள்ளனர். இச்சங்கிலியைப் பிடித்துக் கொண்டே சென்றால் கடைசியில் சங்கிலியோடு கட்டப்பட்டிருக்கும் கட்டையைத் தொட்டு விடுகிறாய்! அது போன்று ஜபம் பழகிக் கொண்டேயிருந்து அதில் மூழ்கிவிட்டால் நாளடைவில் இறைவனது காட்சி கிடைக்கிறது." இதை விளங்கிக் கொள்வதற்கு முன்பு சுவாமி துரியானந்தரைப் பற்றி சற்று அறிவோம்.
புறக்கட்டுப்பாடு எது? அகக்கட்டுப்பாடு எது? என்பதைப் புரிந்து கொள்ள, சுவாமி துரியானந்தாஜி மகராஜ் கூறியுள்ளது உதவும். சுவாமி துரியானந்தாஜி, பகவான்பூரீஇராமகிருஷ்ணரின் நேர்முக சீடர் வேதாந்தத்தின் உயிர்வடிவம். சுவாமி விவேகானந்தரின் வேண்டுகோளை ஏற்று அமெரிக்காவில் கலிபோர்னியா சென்று சாந்தி ஆசிரமத்தை நிறுவியவர்.
சுவாமி துரியானந்தர், சுவாமி விவேகானந்தர் அழைப்பை ஏற்று அமெரிக்காவிற்கு செல்ல முதலில் தயங்கினார். ஆனால் சுவாமிஜியின் அன்புப் பெருக்கு துரியானந்தரின் தயக்கத்தைப்

93 Qup ஜபசாதன முறை
போக்கியது. "சகோதரா! நான் என்னுடைய வாழ்க்கையை பூரீ குருமகராஜ் அவர்களுக்கு அர்ப்பணித்துவிட்டேன். நீ எனக்கு பக்கத்துணையாக இருந்து உதவ முடியாதா” என்று சுவாமிஜி, சுவாமி துரியானந்தரிடம் அன்பாகக் கேட்டுக் கொண்டார். தமது தயக்கத்தைப் பின் வருமாறு வெளியிட்டார், சுவாமி துரியானந்தர். "தங்களைப் போல சொற்பொழிவுகளாற்ற என்னால் இயலாது; நான் நாவலரும் இல்லை."
சுவாமிஜி தமது சகோதரத் துறவியிடம் மேலும் கூறியதாவது: "என்னுடைய வேதாந்தச் சொற்பொழிவுகளை போதிய அளவு மேலைநாட்டினர் கேட்டுள்ளனர். அவர்கள் வேதாந்த வாழ்க்கை எவ்வாறானது என்பதை கண்ணாறக் காண விரும்புகின்றனர். வேதாந்தம் பற்றி நான் போதனை செய்ததை, உன்னுடைய வாழ்க்கையின் மூலம் அவர்களுக்கு எடுத்துக்காட்டு.'
சுவாமிஜியின் இந்த விளக்கம், சுவாமி துரியானந்தரின் தயக்கத்தைப் போக்கியது."தங்கள் சொல்லுக்கிணங்க அமெரிக்கா வருகின்றேன்." என்று கூறி, சுவாமிஜியின் அன்பார்ந்த அழைப்பை ஏற்றுக் கொண்டார், சுவாமி துரியானந்தர்.
சுவாமி துரியானந்தரிடம் ஓர் அமெரிக்க மாணவன் தன்னுடைய அடிமனத்துணர்வைகளைக் கட்டுப்படுத்தும் பயிற்சியில் தோன்றும் பிரச்னைகளைப் பற்றி குறிப்பிட்டு ஆலோசனைக் கேட்டார். அந்த மாணவருக்குசுவாமிதுரியானந்தர் பின் வருமாறு உபதேசம் அளித்தார்.
"சாதாரணமாக, நம் மனதில் மேல்மட்ட அலைகளைத்தான் அறிவோம். ஆனால், யோக சாதனை மூலம் ஆழமாகச் செல்ல கற்கின்றோம். நம் மனதை உற்று நோக்கியும், கற்றறிந்தும் மனதின் மேற்பரப்பு உணர்விற்கு கீழே ஆழ மூழ்கி அங்கே என்ன நடந்து கொண்டிருக்கின்றது என்பதை கவனிக்கின்றோம். Jod சம்ஸ்காரங்கள், மறைந்துள்ள ஆசைகள், ஆழ் மனதில் சேமித்து வைக்கப்பட்டுள்ளன. அவை தங்களை வெளிப்படுத்திக் கொள்ள ஒரு சந்தர்ப்பத்திற்காகக் காத்துக் கொண்டிருக்கின்றன. அவை,

Page 50
ins carubá க்கான வழிகாட்டுதல்கள் up 94
மேற்பரப்பிற்கு மேலேழுந்து வருவதற்கு முன்பு உள்முகச் சிந்தனை வழியே அவற்றைக் கண்டு பிடிக்கலாம். இவ்வாறு செய்ய வேண்டியது மிக முக்கியம். ஏன் எனில் மேற்பரப்பிற்குவந்துவிட்ட எண்ணத்தைக் கட்டுப்படுத்துவது மிகவும் கஷ்டமாகும். ஆனால், தொடக்கத்தில் எளிதாகும். விதையை எளிதாக அழிந்துவிடும். விதை முளையிட்டு வளர்ந்தோங்கி பெரிய மரமாகிவிட்டால், அதை வெட்டி வீழ்த்த மிக்க வலிமையும் முயற்சியும் தேவைப்படும். ஆகவே நமது ஆசைகள் வளர்ச்சியடையாதக் கட்டங்களில் இருக்கும் பொழுது நாம் கண்காணிக்க வேண்டும். மனதை அடக்குவதற்கு இதுதான் சரியான வழிகாட்டும் குறிப்பாகும்."
நாம் நமது மனதின் மேற்பரப்பைத்தான் அறிந்திருக்கின்றோம் என்று சுவாமி துரியானந்தாஜி சுட்டிக் காட்டுகிறார். ஜப சாதனை, தியானம் வழியாக மனதில் மேற்பரப்பிற்குக் கீழே ஆழ மூழ்கி, மேற்பரப்பில் வரக்கூடிய ஆசைகளைப் பற்றி அடி மட்டத்திலேயே அறியலாம். இவ்வாறு செய்வதால் ஆசைகள் முளைவிட்டு பெருமரமாகிவிடும் நிலைமை தோன்றாது. இதற்கு ஜபம், தியானம் இரண்டும் நமக்கு பயன்படுகின்றன.
"இளைதாக முள்மரம் கொல்க, களையுநர் கைகொல்லும் காழ்த்த இடத்து" - என்பது திருக்குறள்.
ஆசைகள், பெருமரங்களாக வளர்வதற்கு முன்பாகவே வெட்டிவீழ்த்த நாம் பெருமுயற்சி செய்ய வேண்டும் என்று சுவாமி துரியானந்தர் கூறுகிறார்.
ஜபசாதனை மூலம் நாம் ஒவ்வொருவரும் நம் மனதின் அடித்தள உணர்வின் அடுக்கை அறியமுடியும். இந்த ஆழ் மனஅடுக்கில் கணக்கற்ற கடந்த கால தற்கால பிறப்புகளின் பல வகையான பதிவுகள் சேமித்துவைக்கப்படுகின்றன. அவை மேலே வந்து நம்மைத் தாக்குவதற்கு முன்பு, அவற்றை ஆரம்ப

(p • • • ஜபசாதன முறை
நிலையிலேயே வெட்டி வீழ்த்திட வேண்டும். இதை நாம் செய்துவிட்டால், நம் மனதை நாம் அடக்கி ஆளலாம்.
நாம் தியானத்தில் உட்காரும் பொழுது சிற்சில சமயங்களில் பலவிதமான மாசு படிந்த எண்ணங்கள் குமிழிட்டு மேலே வருகின்றன. இதற்கு ஏதேனும் மாற்றுவழியுண்டா? நமது மனம் பல அடுக்குகளைக் கொண்டது. உணர்வு அடுக்கு, ஆழ் மனவுணர்வு அடுக்கு, உணர்வற்றஅடுக்குஎனஇன்னோரன்னபிற. ஆழ் மனவுணர்வு அடுக்கில் புதைந்துள்ள விரும்பத்தகாத எண்ணங்கள் மேலெழுந்து வருவது நம்மில் பெரும்பாலோரின் அனுபவமாகும்.
தியானத்தில் விரும்பத்தகாத எண்ணங்கள் நம்மைத் தாக்கினால், மனதைத் தூய்மைப்படுத்தும் வழிமுறை, செம்மையுறவில்லை, முழுமையடையவில்லை என்பதைக் காட்டுகின்றது. ஆகவே தூய்மைப்படுத்தும் வழிமுறையில் கடுமையான முயற்சிகளைத் தொடரவேண்டும். இதை எவ்வாறு செய்ய முடியும்? இதற்கு நமது ஆத்மாவின் அடி ஆழத்தில் நமது கவனத்தைக் குவியச் செய்ய வேண்டும். இவ்வாறு நமது முயற்சி தொடர்ந்த போதிலும் மேற்கொண்டு முன்னேற்றம் காணவில்லை என்பதை அறிகின்றோம். மேற்கொண்டு மேலே போகவிடாமல் தடுக்கும் உலகத்தின் முன்னே நாம் இருக்கின்றோம் போலும். இந்த அனுபவம் அனேகமாக துறவிகள் பலருக்கும் உண்மையைத் தேடுபவர்களுக்கும் ஏற்படுகின்றது. இவ்வாறு தடைகளை எழுப்பும் சுவர்களை அகற்ற வெற்றிகரமான வழிமுறை ஏதேனும் உண்டா? உயர்ந்த குறிக்கோளாகிய ஆன்மிக வாழ்க்கைப் பயணத்தில் செல்லும் சாதகன் எதிர்படும் துன்பங்களை வெல்ல ஏதேனும் வழி இருக்கின்றதா? இந்தக் கேள்விகளுக்கு, ஆம் எனும் பதில் உண்டு. இந்த "ஆம்" என்ற பதில் சொல்லளவில் அல்லாமல் செயலளவில் நிரூபிக்கப்பட்ட வழிமுறையாகும். நிரூபிக்கப்பட்ட இந்த வழிமுறையில் அனேகமாக வெல்ல முடியாத எல்லாத் தடைகளும் அகற்றப்படும்.

Page 51
ஆன்மிக வாழ்க்கைக்கான வழிகாட்டுதல்கள் Up 96
இந்த வழிமுறைதான் ஜப சாதன வழிமுறையாகும். இதன் தொடர்பாக தூய அன்னை பூரீ சாரதா தேவியார் தமது அணுக்கச் சீடர்களில் ஒருவரிடம் எடுத்துக் கூறியது இங்கு எடுத்துக்காட்டத்தக்கது. அந்த அணுக்கச் சீடரின் பெயர் சுவாமி சாந்தானந்தாஜி. இந்நூலாசிரியர் அவருடன் புனித உறவு கொண்ட பெரும்பேறு பெற்றவர். அவருடைய துறவு வாழ்க்கையின் மாண்பிற்க்காக ஒவ்வொருவரும் அவரிடம் பெருமதிப்பு வைத்திருந்தனர். அவர் தூய அன்னை பூரீ சாரதா தேவியாரைச் சந்தித்த போது பெற்ற அனுபவத்தை பற்றிக் கூறியுள்ளார். ஒரு சமயம் அவர் தூய அன்னையாரிடம், "அன்னையே கடவுளை நான் எவ்வாறு உணரமுடியும்? எவ்வாறு நான் தெய்வீகத்தை வெளிப்படுத்துவேன்?" என்று கேட்டார். தூய அன்னையார் எளியதொரு வழிமுறையைப் பரிந்துரைத்தார்.
"ஜப சித்தி ஜப சித்தி ஜப சித்தி ஜப சித்தியின் மூலமாகத்தான் ஒருவர் ஆன்மவுணர்வுபெறமுடியும்' என்ற எளிய வழிமுறையை தூய அன்னையர் பரிந்துரைத்தார்.
ஜப சாதனம் என்றால் என்ன? நமது குரு அல்லது ஆன்மிகத் தலைவரிடமிருந்து பெற்ற சித்த ஜப மந்திரத்தை மீண்டும் மீண்டும் சொல்லும் புனிதமான வழிமுறையே ஜபசாதனம் ஆகும். நாம் மந்திர தீட்சை பெறும் பொழுது அதைத் தகுதி பெற்ற ஆன்மிகத் தலைவரிடமிருந்து பெறுகிறோம் என்பதை நினைவில் கொள்ள வேண்டும். மந்திரத்திற்கு உள்ளுறை ஆற்றல் உண்டு; தந்திர சாத்திரங்கள் கூறும் ஆன்மிகப் பயிற்சி முறைகளில் பல மந்திரங்கள் உள்ளதை நாம் அறியலாம். நாம் ஏதோ ஒரு மந்திரத்தை எடுத்துக் கொண்டு ஜபம் செய்யத் தொடங்கினால், அது எவ்விதப் பயனையும் தராது. சாத்திர நூல்களில் அந்த மந்திரங்கள் எல்லாம் உள்ளன. நூல்களில் காணப்படும் மந்திரங்கள் குரு பரம்பரை வழியே பெறப்படுவன. அவை குரு - சீடர் தொடர்ச்சியில் குருமுகமாக மந்திரத்தைக் கேட்டுணர்ந்து அறிய வேண்டும். குருவின் வாக்கில் இருந்து எழும் மந்திரத்தில் வலிமை சேர்கின்றது.

97 Up ஜபசாதன முறை
அது சீடரைச் சென்றடைந்து, அதில் சித்திபெற்றபொழுது அவர் குருவாகி தனது சீடர்களுக்கு மந்திர உபதேசம் செய்கின்றார். அத்துடன் மந்திர சக்தியும் கூடவே சீடர்களைச் சென்றடைகிறது. இவ்வாறு குருபரம்பரை தொடர்ந்து கொண்டே செல்கின்றது. இதனால் மந்திர சக்தியும் ஒவ்வொரு தலைமுறையாலும் சுழற்சியாகப் பயனளித்து வருகின்றது. - குருவின் ஆன்மிக சக்தி சீடரிடம் செலுத்தப்படும் ஆன்மிக நிகழ்வை நாம் நம்பவே வேண்டும். இந்த நம்பிக்கை குருவிடம் மந்திர தீட்சையை நாடும் பொழுது அவசியம் தேவை. குரு உணர்த்தும் Aர்தையைப் பின்பற்றவும் இந்த நம்பிக்கை அவசியமாகும்.
உயூர்ந்த குறிக்கோளை நோக்கிச் செல்லும் பொழுது, நாம் ஓர் இஷ்ட தெய்வத்தை நமது விருப்பத்திற்கு ஏற்ப தேர்ந்தெடுத்துக் கொள்ளவேண்டும். நமது இஷ்ட தெய்வத்தை எவ்வாறு தியானிப்பது? இதற்கான வழியை தகுதி வாய்ந்த ஆன்மிகத் தலைவரிடம் இருந்து கற்றறிய வேண்டும். எல்லையற்ற பெருங்கருணை கொண்டு குரு தமது சீடருக்கு மந்திர உபதேசம் அளிக்கின்றனர். இவ்வாறு உபதேசிக்கப்படும் மந்திரத்தை வெறும் ஒலிக்குறியீடாகவோ, சொல்லாகவோ, சீடர் எடுத்துக் கொள்ளக்கூடாது, மந்திரத்திற்கு ஓர் அநுபூதி ஆற்றல் உண்டு.
நமது குருவின் சொற்களில் நமக்கு உண்மையான நம்பிக்கை இருந்து, ஜப சாதனத்தை செய்து கொண்டேயிருந்தால், நமது இஷ்ட தெய்வத்தை நாம் உணரலாம். தெய்வத்தின் திருநாமத்தை திரும்பத் திரும்ப ஒதுவதுதான் ஜபம் என்பதை நாம் அறிவோம். தெய்வத்தின் திருநாமத்தை ஒலிக்குறியீடாகத் தியானம் செய்யும் பொழுது, இஷ்ட தெய்வத்தின் உயிருணர்வுள்ள திருவுருவம் நம் மனதில் காட்சி அளிக்கத் தொடங்கிவிடும்.
இஷ்ட தெய்வத்தையும், அத்துடன் இணையும் சித்த பீஜ மந்திரத்தையும் நாம் பெறும் பொழுது என்ன நிகழ்கின்றது? ஆன்மிக உணர்வு திட்டவட்டமாக மையம் கொள்கின்றது; அதை

Page 52
ஆன்மிக வாழ்க்கைக்கான வழிகாட்டுதல்கள் up 9.
நாம் பற்றுகின்றோம். மீண்டும், மீண்டும் நமது இஷ்ட தெய்வத்திடம் நாம் திரும்பி வரவேண்டும். இது முற்றிலும் அவசியமாகும்.
குரு உபதேசம் செய்த மகத்தான நாம மந்திரத்தின் பொருளை குரு உணர்த்தியவாறு புரிந்து கொண்டு ஜபம் செய்யும் போது அது பயன் அளிக்கின்றது. இஷ்ட தெய்வம் தெய்வீக அருளின் மையமாகின்றது. 'தத் ஜப; தத் அர்த்த பாவனம்' என்று பதஞ்சலியோக சூத்திரம் கூறுகின்றது. சொல்லின் பொருளை உணர்தல் அடிப்படையில் அவசியமாகும். பதஞ்சலியோக சூத்திரம், மந்திரத்தின் ஆன்மிகச் சிறப்பை இடைவிடாது உணர வேண்டும் என்று குறிப்பிடுகின்றது. ஆரம்பத்தில் மந்திர உச்சாடனத்தை இயந்திர கதியில் செய்தாலும் பரவாயில்லை. இறுதியில் நாப்பழக்கமும், மனப் பழக்கமும் பண்படுத்தப் பெற்று, இறைவனின் நாம மகிமையின் அருஞ்சுவையை நாம் உணர முடியும். ஆரம்பத்தில் குருட்டுத்தனமான நம்பிக்கையில் தொடங்கினாலும் பரவாயில்லை. ズ ஜப சாதனை சொற்களின் ஒலிக் குறியீடுகளின் துணை கொள்வதை வலியுறுத்துகின்றது. ஏன் எனில்ஒலியும் எண்ணமும், பரஸ்பரத் தொடர்புடையன. தட்டச்சாளர், தட்டச்சுப்பொறியின் மேல் உள்ள குறிப்பிட்ட எழுத்தை இயக்கினால், உடனடியாக அது அங்குள்ள தாளில் பதிவாகி விடுகின்து. இதைப் போலவே , "ராமா ’கிருஷ்ணா அல்லது "ஹரி' எனும் ஒலிக்கும் குறியீடுகளை நாம் உச்சரிக்கும் போது உடனடியாக அதனுடன் தொடர்புடைய எண்ணம் நம்மனதில் உதித்துவிடுகின்றது. இந்த உச்சரிப்பு முறை உயர்ந்த குறிக்கோளான பரநிலையை அடையும் பயணத்திற்கு உதவும். کي
மந்திரத்தில் நமக்கு நம்பிக்கை இருந்தால், நாம் இயந்திர கதியிலேயே மந்திரத்தை திரும்பத் திரும்பச் சொல்லிக் கொண்டிருந்தால் முடிவில் அது பயன்தரும். ஏன் எனில் தெய்வீகப் பெயரில் மகத்தான சக்தி அடங்கியுள்ளது. நாமஜபத்தின் பொழுது

90 up ஜபசாதன முறை
குறுக்கிடும் பலவித எண்ணங்களை தடுத்து நிறுத்துவது மந்திரச் சொற்கள். ஆன்மிக உணர்வைப் பெற அல்லது நம்முள்ளே இருக்கும் தெய்வீகத்தை வெளிப்படுத்த ஜப சாதனை சிறந்த வழிமுறைகளில் ஒன்றாகும். இது நம்முடைய எல்லா ஆன்மிக குருமார்களின் கருத்தாகும்.
நமக்கு வேண்டப்படுவது, அகத்தூய்மை. உடல் - மன இயக்கத்தில் உண்மையாக மாறுதல் நமக்கு தேவைப்படுகின்றது. எண்ணம், சொல், செயல் மூன்றையும் நாம் தூய்மைப்படுத்த சிரமப்படாத வரையில் ஆன்ம வெளிப்பாடு சாத்யமில்லை. பூரண மனத்தூய்மையைப் பெறுவது எப்படி? இதற்கு இராமகிருஷ்ண மிஷனின் முதல் தலைவரான சுவாமி பிரம்மானந்தாஜி மகராஜ் கூறியதாவது: "ஒருவர் ஜப சாதனை செய்யாத வரையில் எவரும் பூரண மனத்தூய்மையை ஒரு போதும் பெறமுடியாது என்பதை அனுபவ பூர்வமாக சொல்ல விரும்புகின்றேன்."
மனத்தூய்மை பெற ஒவ்வொருவரும் குறிப்பிட்ட அளவு ஜப சாதனம் செய்ய வேண்டும் என்று இராமகிருஷ்ணரின் பெருமதிப்பிற்குரிய சுவாமி விசுத்தானந்தாஜி இந்நூலாசிரியரிடம் அறிவுரை கூறினார். அவர் சிபார்சு செய்த குறிப்பிட்டளவு என்பது சிறிதளவேயான பத்தாயிரம் ஆகும்.
இதே நோக்கில் இறைவன் திருநாமத்தை ஜபிக்கும் முக்கியத்துவத்தைப் பற்றிஇராமகிருஷ்ணா மிஷனின் மூத்தத்துறவி சுவாமி சித்தேஸ்வரானந்தாஜி அவர்களும் இந்நூலாசிரியரிடம் உணர்த்தியுள்ளார். அவர் எனக்கு எழுதியதாவது: "உன்னுடைய ஆன்மிக வாழ்க்கையை மனப்பூர்வமாக எடுத்துக் கொள்க. இந்தக் கலியுகத்தில் இறைவனின் புனித நாமத்தைத் திரும்பத் திரும்ப உச்சரிப்பதே மிகவுயர்ந்த சாதனமாகும் என்று பூரீ ராமகிருஷ்ணர் சொல்வார். நான் ஜப சாதனத்தில் பித்துக் கொண்டவன்.'
ஆனால், நாமோ இயந்திரகதியில் எப்படியோ ஜபம் செய்து கடவுளை உணர விரும்புகின்றோம்; ஒரு நாளைக்கு நூற்றெட்டு முறை கூட ஜபம் செய்ய நமக்கு நேரம் கிடைப்பதில்லை! இந்த

Page 53
ஆன்மிக வாழ்க்கைக்கான வழிகாட்டுதல்கள் up 100
நிலைமைக்குக் காரணம் நேரம் கிடைப்பதில்லையா அல்லது உண்மையான ஊக்கம் இல்லாததா? என்பதுதான் இங்கு கேள்விக்குரியது. நமது எண்ணங்களுக்கு நாமே துரோகம் செய்யக்கூடாது. நாம் திறந்த மனதுடன் இருக்க வேண்டும். நமக்கு எது எதற்கோ நேரம் கிடைக்கின்றது. ஆனால் ஜபம் செய்யவும், தியானம் செய்யவும் நேரம் கிடைப்பதில்லை! இது எதனால்? என்பதைப் பற்றி நமக்கு நாமே கேட்டுக் கொள்ள வேண்டும்.
மேலே குறிப்பிடப்பட்ட அருளாளர் சொற்களில் நமக்கு நம்பிக்கை ஏற்படவேண்டும். மனம் அமைதியற்று, புறநாட்டம் கொண்டுவிட்டால், தீய எண்ணங்கள் உள்ளே புகுந்துவிடும். இதைத் தடுப்பதற்கு ஊக்கமுடனும், விடாமுயற்சியுடனும் ஜப சாதனையை செய்ய வேண்டும். இவ்வாறு செய்வது இன்றியமையாதது. ஏனெனில், உடலும் தூய்மையடையும். புனித நாமத்தைத் திரும்பத் திரும்ப ஒதுவதால் ஒருவிதமான ஆன்மிக அலையதிர்வுகளை நாம் பெறுகின்றோம்.
நாம் வாழும் இந்தவுலகம் தூய்மையற்ற அதிர்வலைகளால் நிறைந்துள்ளது. விரும்பத்தகாத இந்தத் தூய்மையற்ற அதிர்வலைச் சூழலை அழித்திட நாம் தூய்மையான அதிர்வலைச் சூழலைப் படைக்க வேண்டும். எப்படி படைப்பது? ஜப சாதனம் மூலம்தான். பயிரை வேலி காப்பது போன்று, நாட்டை கோட்டை காப்பது போன்று, ஜப சாதனை ஏற்படுத்தும் ஆன்மிக அதிர்வலைகள் நம்மைக் காக்கவல்லன. தூய்மையற்ற தீமை பயக்கும் அதிர்வலைகளை செயலற்றதாக ஆக்கிவிடுகின்றன ஆன்மிக அதிர்வலைகள். இடைவிடாது புனிதத் திருநாமத்தை ஜபிப்பதால் ஜீவாத்மா - பரமாத்மா இடையே நெருக்கம் ஏற்படும்.
ஜப சாதனை மந்திரச் சொற்களுக்கு இருவேறு மதிப்புகள் உள்ளன. ஒன்று சாதர்களுக்கு மட்டும் புரியும் மறைபொருள் (ESOTRIC) கொண்டது. மற்றொன்று அனைவருக்கும் புரியும்படியான வெளிப்படையானப் பொருளைக் (EXOTRC) கொண்டது. மந்திரச் சொற்களின் உட்பொருள் மிக்க கவனத்துடன்

101 gy ஜபசாதன முறை
கற்றறியப் பட வேண்டியதாகும். ஆன்மிக கவனத்துடன் அநுபூதி மொழியின் சொற்களின் ஒலிமட்டுமே ஆன்மிக விழிப்புணர்வை எழுப்ப வல்லன. ஜப சாதனையின் வெளிப்படையான பயனாகப் பிறக்கும் சக்தி மாறுபட்ட பலவிதமான சக்திகளை ஒன்றுபடுத்தி தம்முள் ஒரே வடிவிலான சக்தியாக அமைக்கின்றது. இந்த ஒருமுகப்படுத்தப்பட்ட சக்தியால் சாதகன் தன்னுள் உறங்கிக் கிடக்கும் குண்டலினி சக்தியை எழுப்ப முடியும்.
குண்டலினி யோகம் பயில்வோர், குண்டலினி சக்தியை தெய்வீகத் தாயாக வணங்குவர். வங்க மொழியில் தெய்வீக அன்னையை வணங்கிப் பாடப் பெறும் பாடலொன்று உள்ளது. "ஓ குண்டலினி தாயே, அருள் கூர்ந்து மூலாதாரத்தில் இருந்து எழுக" என்று அப்பாடல் தொடங்கும்.
குருமகராஜ் பரமஹம்சரிடம் ஒருமுறை ஒரு பாடகர் வந்தார். குருமகராஜ் கேட்டுக்கொண்டதற்கிணங்க குண்டலினி அன்னையைப் பற்றிய பின் வரும் பாடலைப் பாடினார்.
எழுக தாயே! எழுக! எவ்வளவு காலம்தான் தாங்கள் மூலாதாரத் தாமரையில் உறங்குவீர்கள் தாயே தங்கள் ரகசியத் தொழிலை நிறைவு செய்க தலையில் உள்ள ஆயிரம் இதழ்கள் கொண்ட தாமரையை மலரச் செய்க! ஆங்கே அருட்சக்தி யுடைய சிவபெருமான் இருக்கின்றார் ஆறு தாமரைகளை வேகமாக துளைத்து விடுக! ஓ! உணர்வின் சாரமே என் துன்பத்தை அகற்றி விடுக! இப்பாடலை விளக்கி பூரீ ராமகிருஷ்ணர் கூறியதாவது: "இப்பாட்டில் குண்டலினி சக்தி சக்கரங்களைத் துளைப்பது பற்றிய செய்தி இருக்கிறது. இறைவன் உள்ளும் புறமும் இருக்கிறான். அவன் உள்ளிருந்து மனத்தின் பலநிலைகளை உண்டு பண்ணுகிறான். ஆறு சக்கரங்களைத் துளைத்துச் சென்றால் மாயைக்

Page 54
ஆன்மிக வாழ்க்கைக்கான வழிகாட்டுதல்கள் Op 1O2
கடந்து ஜீவாத்மாவானது பரமாத்மாவோடு சேர்ந்து ஒன்றாகி விடுகிறது. இதனை இறைவனைக் காணல் என்பர்.'
குண்டலினி யோகத்தின் இடை, பிங்கலை, ஸலஷலம்னை எனும் நாடிகள் முக்கிய பங்கேற்கின்றன. ஸ0ஷலம்னை கீழேயிருந்து (மூலாதாரத்திலிருந்து) இதயம்வரை வந்துதலையுச்சி வரை செல்கிறது. ஸ0ஷoம்னையின் இடதுபக்கத்தில் இடையும், வலதுபக்கத்தில் பிங்களையும் இருக்கின்றன. சாதகன் இறைவனின் புனிதத் திருநாமத்தை இடைவிடாது திரும்பத் திரும்ப ஜபித்துக் கொண்டே இருப்பதின் மூலம், மூலாதாரத்தில் பாம்பு போல் சுருண்டு படுத்துறங்கும் குண்டலினி சக்தியை எழுப்ப முடியும். மூலாதாரத்தில் எழும் குண்டலினிசக்தி ஸ0ஷoம்னைநாடி வழியே உடம்பில் உள்ள பல வித சக்கரங்கள் வழியே சென்று மேலே சகஸ்ராரம் என்ற இடத்தை அடைகின்றது. ஆயிரம் இதழ்களைக் கொண்ட தாமரை சகஸ்ராரம் ஆகும். இந்த இடத்தை அடைந்து விட்டால் எல்லாமே கைகூடும். இந்த சகஸ்ராரத்திற்கு குண்டலினி வந்து சேர்ந்ததும் அமிர்தம் பெருகும். இந்த அமிர்தத்தினால் சாதகனின் ஞானப்பசி தீர்க்கப்படுகின்றது. பரமாத்மாவுடன் ஐக்கியமாகிறான்.
குண்டலினி சக்தியை எழுப்புவது தொடர்பாக சுவாமி பிரம்மானந்தா மகராஜிடம் ஒரு கேள்வி கேட்கப்பட்டபொழுது, அவர் "அதை எழுப்புவதற்கு சில விசேஷ பயிற்சிகள் உள்ளன. ஆனால் ஜபம், தியானம் மூலம் விசேஷப் பயிற்சிகளை செய்ய முடியும் என்று நம்புகின்றேன். தற்காலத்திற்கு ஜபம் செய்வது சிறப்பாகப் பொருந்தும்' என்றார். குண்டலினி சக்தியை எழுப்ப மிதமிஞ்சிய ஆவலை வெளிப்படுத்துவதில் எச்சரிக்கையுடன் இருக்கவேண்டும். சூட்சம முறைகளை. தகுந்த வழிகாட்டலும், பயிற்சிகளும் இல்லாமல் கையாண்டு துன்ப படக்கூடாது. இடைவிடாத நாமஜபமே, பாதுகாப்பான முறையாகும். இந்த வழிமுறையில்தான் குண்டலினி சக்தியை எழுப்பும் உண்மையான சூட்சமம் இருக்கின்றது.

1O3 (Map ஜபசாதன முறை
சுவாமி விவேகானந்தர் எப்பொழுதும் வலியுறுத்தும் மற்றொரு முக்கியமான கருத்து நமது நினைவிற்குரியதாகும். எளிதில் உணர்ச்சி வசப்படும் பரவச நிலையில் சுவாமி விவேகானந்தருக்கு சம்மதமில்லை. காசிப்பூர் தோட்ட வீட்டில் தேவைக்கதிமாக ஆடிப்பாடுவதைப் பற்றித் தமது சகோதரத் துறவிகளிடம் அவர் எச்சரித்துள்ளார். இவ்விதச் செயல்கள் மனத்தை உயர்ந்த தளத்திற்கு எழச்செய்யலாம். ஆனால் அது தற்காலிகமானதே. ஏன் எனில் அவ்வித ஆடல் பாடல்களில் கிடைக்கும் தூண்டுதல்கள் நின்றதும், அதே மனமானது உயர் தளத்தில் இருந்து திடீரென்று கீழே இறங்கிவிடும் என்பார் அவர்.
ஆகவே, உண்மையைக் கண்டறிய நமக்குள்ளே மிக ஆழமான தளங்களில் பாய்ந்து செல்லவேண்டும் என்பது மிகவும் அவசியமாகும். ஜப சாதனை ஒன்றுதான் மிகவுயர்ந்த உள்ளுணர்வை எளிதில் விழிப்படையச் செய்ய வல்லது.
இடைவிடாமல் பிரார்த்தனை செய்வது சாத்யமாகுமா? எனும் கேள்வி எழக்கூடும். யதார்த்தமாகப் பார்த்தால் எல்லா நேரத்தையும் பிரார்த்தனையில் மட்டும் செலவழிப்பது என்பது சாத்யமில்லைதான். பிரார்த்தனையின் தொடர்ச்சியிலே, இடையில் சற்று ஓய்வு தவிர்க்க முடியாததுதான், ஆனாலும் சாதகன் தவிர்த்தே ஆகவேண்டும். ஆன்மிக உள்ளொளி பெற விரும்பினால், இடைவிடாது தொடர்ச்சியாக பிரார்த்தனையை செய்தே ஆகவேண்டும், பிரார்த்தனை செய்து கொண்டு வரும்பொழுது, இடையியே பிற எண்ணங்கள் நம் மனதிலே படையெடுத்துப் புகுந்து இடையூறுகள் செய்யும். நாம் தொடர்ந்தாற் போன்று பிரார்த்தனை செய்வதைத் தடுத்து நிறுத்தும். இவ்வாறு ஏற்படும் தடையை அகற்ற, மனவுறுதி சக்தியைப் பிரயோகம் செய்து துராக்கிரமாகப் புகும் எண்ணங்கள் யாவையும் விலக்க வேண்டும். மனதில் உறுதியிருந்தால்தான் நாம் இதைச் செய்ய முடியும். இதற்கு மனப்பழக்கம் வேண்டும். மனப்பழக்கம் வலிமை பெற, வலிமை பெற அலைபாயும் மனம் அடக்கப் பெற்று, தியானத்தில் இருக்கும்

Page 55
ஆன்மிக வாழ்க்கைக்கான வழிகாட்டுதல்கள் Qp 104
மனம் காற்றில்லாத இடத்தில் உள்ள தீப ஜுவாலையைப் போல ஆடாது அசையாது இருக்கும். இந்த நிலையில் மனதில் தோன்றும் மந்திரஜபம் தானாகவே இயங்கும். எவ்விதத் தூண்டுதலுக்கும் அவசியமில்லை. எவ்வித முயற்சியும் தேவையில்லை. இதுதான் இடைவிடாத பிரார்த்தனை எனப்படும்.
நமது வாழ்க்கையின் அன்றாடச் சூழலில் நாம் பல விஷயங்களைக் கவனிக்க வேண்டியுள்ளது. பசி, தூக்கம், தனிமனித உறவு, குடும்ப உறவு, சமூக உறவு, முதலானவற்றை கவனிக்க வேண்டியுள்ளது. இந்தச் சூழலில் இடைவிடாத பிரார்த்தனையை செய்ய இயலுமா? எனும் ஐயம் எழத்தான் செய்யும். இந்த ஐயம் நீங்க, ஒரு ரஷ்ய யாத்திரிகரைப் பற்றியக் கதையொன்று நினைவு கூரத்தக்கது. இந்த ரஷ்ய யாத்திரிகர் பிரார்த்தனை செய்யும் போது ஒரு வினாடிப் பிரார்த்தனை தடைப்பட்டுவிட்டால், ஏதோ ஒன்றை இழந்துவிட்டதாக உணர்வார். அதே வினாடி முதல் மீண்டும் பிரார்த்தனையைத் தொடங்குவார். இதை அவர் எளிதாகவும், மகிழ்ச்சியாகவும் செய்து வந்தார். இந்த மனப்பழக்கத்தால் தூக்கத்தில் கூட, குருவிடம் தாம் கற்ற பிரார்த்தனையை சொல்லிக் கொண்டிருப்பதாக சிற்சில சமயங்களில் கனவில் காண்பார். இது எதைக் காட்டுகிறது? உயிர் கலந்த, இதயங் கலந்த இடைவிடாத பிரார்த்தனையின் ஆற்றலைக் காட்டுகின்றது.
பல்வேறு கடமைகளை ஆற்றிக் கொண்டிருக்கும் சூழலிலும் பிரார்த்தனையை இடைவிடாது செய்யத் தக்க ஜப சாதனத்தைக் கைவரப்பெறவேண்டும். "செய்க செயல்கள் சிவத்திடை நின்று' என்று பாரதியார் குறிப்பிட்டதும் இங்கு கவனத்திற்குரியது.
மேற்குறிப்பிடப்பட்ட ரஷ்ய யாத்திரிகர் ஒரு நாளில் நாற்பது அல்லது அறுபது மைல்கள் கூட நடந்து செல்வார். நடந்துக் கொண்டிருக்கும் போதும் நாம ஜெபத்தை செய்து கொண்டே செல்வார். நடக்கும் பொழுது எவ்விதக் களைப்பையும் உணரமாட்டார். மனதிற்குள் சொல்லிக் கொள்ளும்

1OS up ജ98ങ്ങ് തെ
பிரார்த்தனையை மட்டுமே அவர் நடந்து கொண்டிருக்கும் போது அறிவார்.
எளிய உதாரணங்கள் மூலம் நுட்பமானத் தத்துவக் கருத்தை பூரீ ராமகிருஷ்ணர் விளக்கவல்லவர் என்பது நாமறிந்ததேயாகும். பல செயல்களுக்கிடையே பிரார்த்தனை செய்ய இயலும் என்பதையும் எளிய உதாரணம் மூலம் குருதேவர் விளக்கியுள்ளார். கிராமத்தில் பெண்கள் தண்ணீர் கொண்டுவர நீண்ட தூரம் செல்ல வேண்டியிருக்கும். பலர் சேர்ந்து சென்று திரும்பும் பொழுது ஒவ்வொருவரும் கேலியும் கிண்டலுமாக சிரித்துப் பேசி உடல் அசைவுகள் மேலோங்க நடந்து வருவார்கள். அவர்கள் தலையில் உள்ள தண்ணீர் குடங்கள் ஆடாது அசையாது இருக்கின்றனவா என்பதிலும் அவர்கள் கவனம் பதிந்து இருக்கும். இத்தகைய கவனப்பதிவு போன்று பிரார்த்தனை அமைய வேண்டும். இவ்விளக்கத்தை சாதகர்களுக்கு பரமஹம்சர் கூறியுள்ளார்.
"அன்றாட முக்கிய எண்ணங்கள் யாவும் கடவுள் வழிப்பட்டதே' என்று சுவாமி விவேகானந்தர் குறிப்பிட்டுள்ளார். "உண்பது, உறங்குவது, அருந்துவது, எல்லாம் கடவுளுக்காகவே, அனைத்திலும் அவரைத் தரிசனம் செய்க" என்று சுவாமிஜி விளக்குவார்.
'உண்ணும் சோறு பருகுநீர்தின்னும் வெற்றிலையும் கண்ணன் எம்பெருமான் என்றென்றே." என்று வைணவ சமய ஞானி நம்மாழ்வார் கூறியுள்ளது, சுவாமிஜி கருத்துடன் இணைத்துச் சிந்திப்பற்குரியதாகும்.
சுவாமிஜி தொடர்ந்த கூறியதாவது: "ஆத்மா முழுவதுமே கடவுளிடம் ஆற்றொழுக்கின் நீரோட்டம் போன்று கொட்டப்படுவதால் >பெயர், புகழ், பணம் சேர்த்தல், போன்ற இம்மைக்குரிய எதுவும் தனியாக இல்லை. கடவுள் நினைவைத் தவிர பிறவற்றை நினைத்துப் பார்க்கவும் நேரமில்லை, இதையடுத்து கடவுளின் எல்லையற்ற அற்புதமான அன்பு நம் உள்ளத்தில் பிரவேசிக்கின்றது.

Page 56
ஆன்மிக வாழ்க்கைக்கான வழிகாட்டுதல்கள் Up: 1.O.S
சகோதரர் லாரன்ஸைப் பற்றிக் குறிப்பிடுவதும் இங்கு பொருந்தும். சகோதரர் லாரன்ஸ் சமையலறையில் கடுமையாக உழைப்பவர். அவரிடம் பலர் பலவிதமான தேவைகளைப்பற்றி உரத்தக் குரலில் கேட்டுக் கொண்டேயிருப்பார்கள். இவ்வளவு பரபரப்பிலும், சப்தத்திலும் சகோதரர் லாரன்ஸ் முற்றிலுமாக அமைதியாகப் பணியாற்றுவார். அந்த அமைதி சாதாரணமான அமைதியன்று; தேவாலயத் திருச்சபையில் கர்த்தர் முன் மண்டியிட்டு பிரார்த்தனை செய்யும் சமயத்தில் தவழும் அமைதியை போன்றது அது. அவரைப் பொறுத்தவரையில் பரபரப்பான சமையலறையும், தெய்வீக அமைதி தவழும் தேவாலயத் திருச்சபையும் ஒன்றே. இது எவ்வாறு சாத்தியமாகும். இது சாத்யமாகக் கூடியதே. எப்படியெனில் தமக்கென்று அவர் எதையும் செய்வதில்லை. கடவுளுக்காகவே அவர் எல்லா வேலைகளையும் செய்வார். எப்பொழுதும் எங்கும் கடவுளின் இருப்பை உணர முயற்சி பெறவிரும்பும் எவரும் கடவுள் நாட்ட மார்க்கத்தில் குறுக்கிடும் புலன்களை மனப்பூர்வமாக துறக்க வேண்டும் என்று சகோதரர் லாரன்ஸ் கூறுவது வழக்கம்.
இடைவிடாத பிரார்த்தனை என்பதற்குப் பொருள், தொடர்ச்சியான நாமஜபம் என்பதாகாது. கடவுள் சாந்நித்தியத்தில் நாம் இருக்கின்றோம் என்பதே இடைவிடாதப் பிரார்த்தனை என்பதற்குப் பொருளாகும். கடவுளுக்கு உகப்பில்லாத சிந்தனை, சொல், செயல் எதையும் நாம் செய்யாமல் இருக்க உரிய கவனம் செலுத்த வேண்டும். கடவுளிடம் காட்டும் அன்பே, இடைவிடாதப் பிரார்த்தனையின் வெற்றிக்கு அடிப்படையாகும் எனும் பாடத்தை நாம் முதலில் கற்கவேண்டும். ஆனால் நாமோ கடவுள் நாட்டத்தில் அன்பு செய்வதில்லை என்பதுதான் யதார்த்த நிலையாய் இருக்கின்றது. நாம் காலையில் ஒரு மணி நேரம் அல்லது மாலையில் ஒரு மணி நேரம் பிரார்த்தனை செய்கிறோம். இது போதுமா? இதை விளங்கிக்கொள்ள, இராமகிருஷ்ணா மிஷனில் வணக்கத்திற்குரிய சுவாமி யதீஸ்வரானந்தாஜி மகராஜ் கூறியதைப் புரிந்து கொள்ளவேண்டும். "காலையில் அரைமணி நேரம்

107 u gкописи (урор
மாலையில் அரை மணி நேரம் நாம் பக்திமான்களாக இருக்கின்றோம். இதனால் ஆன்மிக வாழ்க்கையை வளர்த்துக் கொள்ளமுடியாது. உள்ளும் புறமுமாக கடவுள் இருக்கிறார் எனும் இடையறாத உணர்வைப் பெறுவதே ஆன்மிக வாழ்க்கையாகும்." இவ்வாறு சுவாமி யதீஸ்வரானந்தாஜி மகராஜ் கூறுவது வழக்கம்.
குருவிடம் பெற்றுக்கொண்ட மந்திர உபதேசத்தை குறிப்பிட்ட சில நேரங்களில் மட்டும் ஜபம் செய்வதால் மட்டுமே நாம் கடவுள் சாந்நித்தியத்தில் எப்பொழுதும் இருக்கின்றோம் என்பதாதகாது. கடவுள் நாட்டம், ஓர் ஆரா வேட்கையாகும். வாழ்க்கை முழுவதுமே ஒரு பிரார்த்தனை வேள்வியாக அமைய வேண்டும். இவ்வித வாழ்க்கையைப் பெறுவதற்கான இரகசியம் கடவுளிடம் செலுத்தும் ஆழ்ந்த அன்பில்தான் இருக்கிறது.

Page 57
ஆன்மிக வாழ்க்கைக்கான வழிகாட்டுதல்கள் Up 108
6F6063606 கட்டுப்படுத்துவது எப்படி?
"தொடர்ந்த பழக்க வசத்தால் கடந்த கால அனுபவங்களை அல்லது எதிர்கால விளைவுகளைப் பற்றிச் சிறிதும் சிந்திக்காமல் திடீரென ஒரு பொருளைப் பற்றிக் கொள்வதே வாசனை" என்று யோக வாசிஷ்டம் கூறுகின்றது.
உயிர்கள் அனைத்தும் வாசனை என்ற கயிற்றால் கட்டுண்டே இயங்குகின்றன. தீரனும், கல்விமானும், ஞானம் மிக்குடையோனும் கூட சங்கிலியால் கட்டப்பட்ட சிங்கம் போல, ஆசையால் கட்டுப்படுகிறான் என்றும் யோக வாசிஷ்டம் விளக்குகின்றது.
சில சமயங்களில் தூய்மையற்ற எண்ணங்களை, தூய்மையற்ற நடுமணத்தின் பரப்பில் இருந்து எழுகின்றன. விரும்பத்தகாத இத்தகைய எண்ணங்கள் அடிமனத்தின் பரப்பில் இருந்து எழுந்தால் நம்முடைய இஷ்டதெய்வத்திடம் பின்வருமாறு பிரார்த்தனை செய்ய வேண்டும்.
"ஓ! தெய்வமே எனக்கு உதவுவார் எவருமில்லை, இந்தத் தூய்மையற்ற எண்ணங்களும், நினைவுகளும் என்னுடையன அல்ல. இவை தங்களுக்குரியன. என்னிடம் இருப்பது எல்லாம் தாங்கள் அளித்ததே. ஆகவே உதவுவார் இல்லாமல் இருக்கின்றேன்."
'நன்றே செய்வாய், பிழை செய்வாய், நானோ இதற்கு நாயகமே" என்று திருவாசகம் கூறுவதும் இங்கு நினைவு

1O9 Lap வாசனைகளை கட்டுப்படுத்துவது எப்படி?
கூரத்தக்கது. இத்துடன் பூரீமத் பகவத்கீதையில் கூறப்படும் பகவான் கிருஷ்ணன், விஷப்பாம்பு காளிங்கன் கதையும் நினைவு கூரத்தக்கது. காளிங்கன் தான் வாழ்ந்து வந்த யமுனை நதியில் விஷத்தை கக்கி, குடிநீரையெல்லாம் விஷ நீராக்கி பயங்கரக் கொடுமை செய்து விட்டான். யமுனை நீரை நம்பியிருந்த கோகுலத்தின் மக்கள் தங்களுக்கு ஏற்பட்ட கொடிய துன்பத்தை பூரீகிருஷ்ணனிடம் முறையிட்டு காளிங்கனை கொன்றுவிடும்படி வேண்டினர். அடியவர்கள் பிரார்த்தனைக்கு செவி சாய்க்கும் பெருங்கருணையை எப்பொழுதும் கொண்ட பூரீகிருஷ்ணன் அவர்களைக் காப்பாற்ற முனைந்தார். யமுனை நதியில் குதித்து காளிங்கன் நீள்முடி ஐந்திலும் நின்று நடனம் ஆடினார் பூரீகிருஷ்ணன். பூரீகிருஷ்ணனின் ஆட்டத்தின் வலிமையால் காளிங்கன் தாங்க முடியாதத் துன்பத்தினால் இரத்தத்தைக் கக்கினான். அந்த ரத்தம் சாதாரண ரத்தமன்று. விஷரத்தம். இறைவனின் துஷ்ட நிக்கிரக சிஷ்டபரிபாலனைத் திருவிளையாடலில் துஷ்டர்கள் மேனிலையை எய்துவதும் உண்டு. பூரீகிருஷ்ணனின் திருப்பாதங்கள் காளிங்கனுக்கு வாய்த்த தென்றால் அது காளிங்கன் முற்பிறப்பில் செய்த புண்ணியமே யாகும். பயங்கரமான துன்பத்தை அனுபவித்துக் கொண்டிருந்த அந்தக் கணத்திலும் பூரீகிருஷ்ணனின் புண்ணியத் திருப்பாதங்களில் சரணடைந்து பின் வருமாறு கண்ணீர் மல்கி முறையிட்டது காளிங்கன்.
"தெய்வமே தங்களுடைய புனிதத் திருவடிகளில் நான் என்னை மட்டும் ஒப்படைக்கவில்லை. மேலும் சிலவற்றையும் சமர்ப்பிக்கின்றேன். தங்களிடம் சமர்ப்பிக்க பல விதமான பொருட்கள் இருக்கின்றன. ஆனால் என்னிடம் இந்த விஷரத்தத்தைத் தவிர வேறொன்றும் இல்லை. ஏன் எனில் இந்த விஷரத்தம் தங்கள் படைப்பு. இதையே தங்கள் தாமரைத் திருவடிகளில் சமர்ப்பிக்கிறேன்."

Page 58
ஆன்மிக வாழ்க்கைக்கான வழிகாட்டுதல்கள் u 110
விஷரத்தத்தைத் தவிர மேலான ஒன்று என்னிடம் இல்லையே என்று காளிங்கன் வருத்தமுற்றது. இந்தக் கதையில் ஓர் ஆன்மிக உண்மை புதைந்துள்ளது. அதாவது நம்மிடம் நல்லதும் தீயதுமான இரு வாசனைகளும் உள்ளன. முற்றிலுமாக இறைவனிடம் சரணாகதி அடைய நாம் தயாராக வேண்டும். நல்லதோ, தீயதோ ஒவ்வொன்றையும் இறைவனிடம் முழுமையாக சமர்ப்பித்து விடவேண்டும். இத்தகைய முழுமையான சரணாகதி மனோபாவத்துடன் நாம் இறைவனை அணுக வேண்டும்.
உலகியல் வாழ்க்கையில் பலவிதமான சூழல்களுக்கிடையில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம். உலகியல் தூண்டுதல்கள், ஆசைகள் நம்மை கட்டிப் போட்டுவிடுகின்றன. தப்பித்துச் செல்ல இயலாது. இந்தத் தூண்டுதல்களை வழிமறிக்கும் ஆசைகளை செயலற்றதாக்க வேண்டும். இதற்கு விசேஷ முயற்சிகளும், உழைப்பும் தேவை. ஆன்மிக வாழ்க்கைக் குறிக்கோளில் முன்னேற உலகியல் தூண்டுதல்களை செயலற்றதாக ஆக்குவதற்கு நமது வாழ்க்கையில் ஒவ்வொரு கணத்தையும் ஆன்மிகமயப்படுத்த வேண்டும். அதாவது ஒவ்வொன்றிலும் தெய்வீகத்தைக் காணவேண்டும். இந்த நோக்கு உண்மையில் கஷ்டமேயானாலும் இதுதான் மிகவும் பயன் தரும் பயிற்சியாகும். இதற்கான வழிமுறையை ஆதி சங்கரர் அருளிய விவேக சூடாமணியின் பின் வரும் சுலோகம் கூறுகின்றது.
ஸர்வத்ர ஸர்வத ஸர்வப்ரஹ்ம - மாத்ராவலோகனை ஸத் பாவ-வாஸனா-தார்ட்யாத்தத்த்ரயம் லயமச்னுதே இதன் பொருள். அவ்விரண்டாலும் (சிந்தனையாலும், செயலாலும்) வளர்ச்சியடைந்த அந்த வாசனை ஆத்மாவிற்கு ஸம்சாரத்தையும் பிறப்பிக்கின்றது. இம்மூன்றின் அழிவிற்கு வழியாவது எல்லா நிலைகளிலும் எல்லாக் காலத்திலும், எல்லா இடத்திலும் எல்லா வகையிலும் பிரம்மம் மாத்திரமே என்ற பார்வையில் ஏற்படுவது. இந்த ஸத் பாவனை திடப்படுவதால் மேற்கூறிய மூன்றும் மறைத்தொழுகின்றன.

111 mg வாசனைகளை கட்டுப்படுத்துவது எப்படி?
மேற்காணும் சுலோகத்தில் 'ஸர்வத்ர ஸர்வத" எனும் சொற்கள் வலியுறுத்தும் பொருள் பூரீராமகிருஷ்ணரின் அமுத மொழிகளில் இருந்தும் அறிகின்றோம். குருதேவரின் அமுத மொழிகளைத் தொகுத்த மகேந்திரநாத்குப்தர் பூரீராமகிருஷ்ணரைத் தரிசிக்க தட்சிணேசவரக் கோயிலுக்கு இரண்டாம் முறையாக வந்த பொழுது தமது ஐயங்கள் சில குறித்து உரையாடினார். குருதேவரிடம் நான்கு கேள்விகள் கேட்டார். ܗ
முதல் கேள்வியாக "சுவாமி ஈசுவரனிடம் மனத்தைச் செலுத்துவது எப்படி?" என்று பணிவாகக் கேட்டார். குருதேவர் பலவிதமாக விளக்கம் அளித்தார். "ஈசுவரனே உண்மை, என்றுமுள்ள அழியாப் பொருள்; மற்றவையெல்லாம் நிலையற்றவை. அழியக்கூடியவை" என்று உபதேசம் செய்து "எப்பொழுதும் பகுத்தறிந்து பார்க்கவேண்டும்." என்று உணர்த்தினார். 'எப்பொழுதும்" என்ற சொல்லிற்கு அழுத்தம் கொடுத்து வலியுறுத்தினார். 'ஸர்வத்ரஸர்வத' என்று ஆதிசங்கரர் வலியுத்தியவாறே குருதேவரும் வலியுறுத்தியுள்ளார். எல்லாவிடங்களிலும் எப்பொழுதும் ஈசுவர நினைவோடு இருத்தல், உலகியல் தூண்டுதல்களை செயலற்றதாக்கிவிடும்.
ஆன்மிகப் பயணத்தில் தீவிரமானத் தடைகளாய் விளங்குவன. ஆசைகள்வளரக்கூடியன. நாம் புலன்விஷயங்களில் எப்பொழுதும் மூழ்கியிருந்தால், உலகியல் இன்பங்கள் பின்னே வேட்கை கொண்டு ஓடினால் ஆசைகள் பெருகுகின்றன. பிறவிதோறும் சுழன்று சுழன்று வருகின்றன. வாசனைகள் அல்லது ஆசைகள் இருவழிகளில் தூண்டப்படுகின்றன. ஒன்று உள்ளே தோன்றும் எண்ணம். மற்றொன்று வெளியே நிகழும் செயல். எனக்கு இதுவேண்டும், இன்பநுகர்ச்சி பெறவேண்டும் எனும் மனோ வேட்கை வழியே ஆசைகள் பெருகுகின்றன. மனதில் எண்ணமாகத் தோன்றும் ஆசை படிப்படியாக வளர்ந்து செயல்படத் தொடங்குகின்றது. இப்பொழுது மனதிற்குள் ஆசை, வெளியில் செயல் என இரு வழிகளில் வாசனைகள் தூண்டப்படுகின்றன.

Page 59
ஆன்மிக வாழ்க்கைக்கான வழிகாட்டுதல்கள் tuag 1122
எண்ணம், செயல் இரண்டின் பிறப்பிடம் எங்கே என்பதை கண்டறிய வேண்டும். அஹங்காரம்தான் அதன் பிறப்பிடம். நான் என்ற முனைப்புணர்வேதான் அந்தக்கரணத்தில் ஒன்றான அஹங்காரம். சாதாரணமாக அஹங்காரம் என்றால் கர்வம்: ஆனால் இங்கு நான் என்ற உணர்வு மட்டுமே அஹங்காரம் எனப்படுகிறது. இது பலகோடி வாசனைகளின் மூட்டையாகும். இந்த அஹங்காரம் மிகவும் நுட்பமானதால் அது முதலில் உள்வேட்கையாலும் பிறகு வெளிப்புறச்செயலாலும் புத்தியைப் பாதிக்கின்றது. .
இயற்கையால் அழிக்கப்படாத பிறவி என்ற மரத்திற்கு முளையாக இருப்பது அஹங்காரம். இந்த நான் என்ற சொல் ஆயிரக்கணக்கில் கிளையாகப் படர்ந்து செல்லும் ஆற்றல் பெற்றது, இங்கும் கூட, பூரீசங்கராச்சார்ய சுவாமிகள் நம்மைக் கட்டுப்படுத்தும் எல்லா வகையானத் தடைகளையும் அழித்திட நாம் எடுக்க வேண்டிய முயற்சிகளைப் பற்றி மிகச் சரியாகவே சுட்டிக்காட்டியுள்ளார். உடல் உணர்வை நான் என்று முடிவுகட்டுதல், உடல்-மன இயக்கத்தில் இயங்குதல் முதலானத் தடைகளை ஒழிக்க நாம் விசேஷ முயற்சிகளை எடுக்காவிட்டால் நமது பிறப்பு - இறப்பு சுழற்சி தொடர்ந்து கொண்டே இருக்கும் என்று பூரீ சங்கராச்சார்ய சுவாமிகள் சுட்டிக்காட்டியுள்ளார். இதற்குரிய விமோசனம்தான் என்ன என்பதையும் பின்வரும் விவேகசூடாமணி சுலோகத்தில் குறிப்பிட்டுள்ளார்.
ஸம்ஸாரபந்த-விச்சித்த்யை தத்த்வயம்-ப்ரதஹேத்யதி
* வாஸனா - வ்ருத்தி-ரேதாப்யாம் சிந்தயா க்ளியயாபஹிர
இதன் பொருள்: ஸம்ஸார பந்தத்தை அறுப்பதற்கு வாஸனை, காரியம் ஆகிய இரண்டையும் முமுகூடிஸ்வானவன் சுட்டெரித்து விடவேண்டும். விஷயங்களைப் பற்றி எண்ணுவதாலும், வெளியில் செயல் புரிவதாலும் இவ்விரண்டினின்றும் வாஸனை வளர்ச்சி ஏற்படும்.

113 gy h− வாசனைகளை கட்டுப்படுத்துவது எப்படி?
இதற்கொரு வழிமுறையுள்ளது. நமது குறிக்கோள் இறுதி உண்மையான பரம்பொருளைச் சார்வது. நம்முள் இருக்கும் தெய்வீகத்தை வெளிப்படுத்த நாம் விரும்புகின்றோம்; பரம் பொருளை உணர விரும்புகின்றோம். இதற்காக நாம் பிறப்பு - இறப்பு எனும் விஷச் சுழற்சியை அறுத்தெறிய வேண்டும். நம்மை கீழ்நோக்கி இழுக்கும் மறுபிறவி எனும் சங்கிலித் தொடரை அறுத்தெறிய வேண்டும். நாம் செய்யவேண்டியது என்ன என்பதைப் பற்றி பூரீசங்கராச்சார்ய சுவாமிகள் எடுத்துரைத்துள்ளார். புலன் விஷயங்களைப் பற்றியத் தொடர்ச்சியான எண்ணம், அதன் மீதான செயல் இரண்டையும் சுட்டெரித்து சாம்பலாக்கி விட வேண்டும்.
புலன் இன்ப விஷயங்களையே நினைத்துக் கொண்டிருந்தால். பிறகு அவை செயல்களாகி வெளிப்பட்டு மேலும் ஆசைகளைப் பெருக்கிக் கொள்வதற்கு அழைத்துச் செல்கின்றன. ஆகையினால் தான், பூரீசங்கராச்சார்ய சுவாமிகள் எல்லாவிதமான சம்சார பந்தங்களையும் நாம் அழிக்க விரும்பினால், முற்கூறிய சிந்தனை, செயல் எனும் நமது இரு பகைவர்களையும் சுட்டெரிக்க வேண்டும் என்று சரியாகவே சொல்லியுள்ளார்.
புலன் இன்ப விஷயங்களில் திளைப்பதை ஏதாவதொரு காரணத்தால், நாம் கட்டுப்படுத்தினாலும் வெற்றி பெறமுடியாமல் அதே புலன் இன்ப விஷயங்களில் எப்பொழுதும் தொடர்ந்து வாழ்கின்றோம். இந்த நிலைமையில் நமது கட்டுப்பாடு என்பது வெறும் நடிப்பாகிவிடுகின்றது.இதனால் பிரச்னைகள் தீர்வதில்லை, இதையே பூரீ கிருஷ்ணன் பூரீமத் பகவத்கீதையில் பின் வருமாறு கூறியுள்ளார்.
கர்மேந்த்ரியாணி ஸம்யம்ய ய ஆஸ்தே மனஸா ஸ்மரன்
இந்த்ரியார்த்தான் விமூடாத்மா மித்யாசார ஸ உச்யதோ
இதன் பொருள். எவன் கர்மேந்திரியங்களை அடக்கிவிட்டு, இந்திரியங்கள் நாடும் பொருட்களை முனத்தால் நினைத்துக் கொண்டு இருக்கிறானோ அந்த பெரும் மூடன் பொய்யொழுக்கமுடையவன் என்று சொல்லப்படுவான்.

Page 60
ஆன்மிக வாழ்க்கைக்கான வழிகாட்டுதல்கள் vío 114
மனதில் புலன் விஷயங்களில் தொடர்ந்து நாம் கவனம் செலுத்தி, அவற்றை அடைய மனதில் ஆசை கொண்டு - வெளிப்பார்வைக்கு அவற்றை ஒதுக்குவது போல் காண்பித்துக் கொண்டிருக்கின்றோம். இவர்கள் வேஷதாரிகள். மனவடக்கத்தைக் கருதாமல் இந்திரியங்களை மட்டும் அடக்கிவிட்டதாக வேஷம் போடுதல் பொய்யொழுக்கமாகும். ஆகவே உண்மையான ஒழுக்கத்தை அடிப்படையாகக் கொண்ட வலிமை மிக்க அடித்தளம் அமைக்கப்பட வேண்டும். நேர்மையான எண்ணங்கள் செயல்கள் இந்த அடித்தளத்தின் மீது அமைய வேண்டும்.
சுருக்கமாகச் சொல்லவேண்டுமானால், அகவயப்பட்ட எண்ணங்களும், புறவயப்பட்ட செயல்களும் வலிமை மிக்க வாசனைகளின் விளைவுகளாகும். உள்ளத்தில் திடமாக ஊறியுள்ள வாசனைகள் பல பிறவிகளையும் கொடுக்கும் தன்மையுடையவை.
சில சமயங்களில் குருவிடமிருந்து பெற்றுக்கொண்ட ஆன்மிகப் பயிற்சியைப் பழக்கப்படுத்திக் கொண்டு சில கணங்கள் நாம் அதில் உயர்ந்து விட்டோம் என்று எண்ணிவிடுவோம். ஆனால் அது உண்மையன்று மயக்கவுணர்வேயாகும். இதைப் புரிந்து கொள்ள சுவாமி விவேகானந்தர் நியூயார்க்கில் 'எனது குருநாதர்' எனும் தலைப்பில்பேசியதின் பின்வரும் பகுதி உதவும்.
"இந்தக் கணத்தில் சுவர்க்கத்தின் வாயிற் கதவுகள் திறக்கப்பட போகின்றன என்று தோன்றும்; இந்தக் கணத்தில் பேரருள் ஒளிவெள்ளத்தில் நாம் பாய்ந்துவிடப் போகின்றோம் என்றும் தோன்றும். ஆனால் நம் முன் இருக்கும் மிருக சுபாவம் நாம் காணவிரும்பும் தெய்வீகக் காட்சிகளையெல்லாம் மீண்டும் சிதறடித்து விடும். நாம் கீழ் நோக்கிச் செல்லும் பொழுது மிருக சுபாவம் மீண்டும் வெளிப்படுகின்றது. உண்பது, குடிப்பது, இறப்பது, எனும் சுழற்சியில் இந்த மிருக சுபாவம் மீண்டும் மீண்டும் நம்மை தள்ளுகின்றது."
ஆகவே, ஆன்மிகப் பயிற்சி முற்றிக் கணியும் பொழுது ஏற்படும் பேரின்ப உணர்வை தொடக்க நிலையிலோ அல்லது

11S Up வாசனைகள்ை கட்டுப்படுத்துவது எப்படி?
இடைநிலையிலோ நாம் எய்துவிட இயலாது. தேவ சக்திகளை நம்முள் எழுப்பும் ஆன்ம உணர்வு எய்தப்படவேண்டும். ஆன்மிக சாதனையின் சிகரங்களை அடைவது என்பது எளிதன்று. உண்மையான சிகரம் எது? வெளித்தோற்றமாக மயக்கும் சிகரம் எது? என்பதைக் கண்டறிய வேண்டும். உண்மையானச் சிகரத்தின் மீது ஏறிவிட்டாலும் அங்கு முழுமையான பாதுகாப்புடன் நிலைத்திருப்பதும் இயலாதாகிவிடும். நாம் சறுக்கிவிழவும் வாய்ப்புண்டு.
ஆகவே, நாம் செய்ய வேண்டியது என்ன? ஜாக்கிரதையாக கவனமாக விழிப்பாக இருக்க வேண்டும். உயர்ந்த குறிக்கோளாகிய ஆன்மிக வாழ்க்கைப் பயணத்தில் ஒருவர் புறவயச் சிந்தனையாளராக மாறிவிடக் கூடாது. இந்தச் சிந்தனைப் போக்கு மனதை கீழே தாழ்த்திவிடும். நான்' எனும் தன்னுணர்வு உடனடியாக தலையெடுத்துவிடும். புலன் இன்ப விஷயங்கள் மீண்டும் நம் கவனத்தைச் சூழ்த்துக் கொள்ளும், தீய வாசனைகள் பிறப்பெடுத்துவிடும். மீண்டும் நாம் வீழ்ச்சியுறுவோம். இதனால் நமது சாதனை நேரத்தையும் சக்தியையும் வீணடிக்கும் வெற்றுச் செயலாகிவிடும். ஆகவே, நாம் மிகவும் ஜாக்கிரதையாக இருக்கவேண்டும். எண்ணமும், செயலும் தொடர் சங்கிலி போன்றது. சில சமயங்களில் காமவிகார எண்ணங்கள் தோன்றும். எண்ணங்கள் மனதைத் தாக்கும். நம்முள் பலாத்காரமாகப் புகும்; இதனால் நாம் இவ்வித எண்ணங்களைப் பிறகு ஊக்குவிப்போம். இந்தக் காமவிகார எண்ணங்கள் செயலாக வெளிப்படுவதை நம்மால் தடுக்க முடியாது.
எண்ணங்கள் ஊக்கம் பெறும் பொழுது, செயல்களைத் தோற்றுவிக்கின்றன. தீய எண்ணம் நம்முள் படையெடுத்து வரும் பொழுது, நாம் அதற்கு ஊக்கம் தரலாகாது. அதற்கு மாறாக காமவிகாரமான தீய எண்ணத்தை மேன்மையுறச்செய்து தெய்வீக எண்ணமாக நல்வழிப்படுத்த வேண்டும். புனித நாம ஜெபத்தை ஆர்வப் பெருக்குடன் ஒதவேண்டும்.

Page 61
ஆன்மிக வாழ்க்கைக்கான வழிகாட்டுதல்கள் Op 116
இந்தக் கருத்தை இரு அவதார புருஷர்களான புத்தர், பூரீராமகிருஷ்ணர் வாழ்க்கை நிகழ்ச்சிகளிலிருந்து விளக்கமாக அறிந்து கொள்வோம். ஒரு சமயம் காமவிகாரம் கொண்ட ஒரு பெண், புத்த பகவானின் பேரழகில் மயங்கி அவரைச் சந்திக்க நள்ளிரவில் அரண்மனைக்குள் சென்று புத்தர் இருந்த அறையின் வாயிற் கதவைத் தட்டினாள். வெளியில் வந்த புத்தர் அந்தப் பெண்ணிடம் வந்தக் காரணத்தைப் பற்றிக் கேட்டார். 'தங்களிடம் சில பழங்களை நிவேதனமாகச் சமர்ப்பிக்க வந்தேன்' என்று அந்தப் பெண் பதிலளித்தாள். புத்தர், அவள் உள் நோக்கத்தை உடனடியாகப் புரிந்து கொண்டார். அந்தப் பெண் புத்தரை மயக்கப் பார்த்தாள். ஆனால் புத்தரோ அப்பெண்ணைத் தாயாக பாவித்து, அன்பும், பரிவும் கொண்டு, 'தாயே! தங்களுக்கு இந்த மகன் என்ன செய்ய வேண்டும்' என்று கேட்டார். காமத்தீயால் கனன்று நின்ற பரிதாபத்திற்குரிய அந்தப் பெண் புத்தரின் தாயன்பு பொங்கி வழிந்த சொற்களைக் கேட்டு பேச்சு மூச்சற்றுப் போய்விட்டாள்.
பூரீராமகிருஷ்ணரின் வாழ்க்கையிலும் இதே போன்று ஒரு நிகழ்ச்சி நடந்துள்ளது. சுவாமி சாரதானந்தர் எழுதியுள்ள 'குருதேவர் பூரீராமகிருஷ்ணர்' எனும் அரிய வாழ்க்கை வரலாற்று நூலில் வெளிவந்துள்ள பின் வரும் பகுதி புத்தரின் வாழ்க்கையில் நிகழ்ந்த மேற்காணும் நிகழ்ச்சியை ஒத்ததாகும்.
'பிரம்மசரியத்தை உறுதியாகக் கடைப்பிடித்ததால்தான் குருதேவருக்கு மூளைகுழம்பி இறைஏக்கம் என்ற உருவத்தில் அது வெளிப்பட்டுள்ளது' என்று ராணி ராசமணியும், மதுர்பாபுவும் குருதேவரின் முதல் நான்காண்டு சாதனைக் காலத்தில் ஒரு சமயம் கருத நேர்ந்தது. குருதேவரின் பிரம்மசரியத்தைக் குலைத்துவிட்டால் மறுபடியும் அவர் உடல் நலம் பெறக்கூடும் என்ற கற்பனையில், அவர்கள் லட்சுமிபாய் முதலான சில விலைமாதர்களை முதலில் தட்ணேசவரத்தில் பின்னர் கல்கத்தாவில் மேசுவாபஜார் என்ற இடத்திலும் குருதேவரிடம் அனுப்பிவைத்து அவரது மனத்தைக் கலைக்க முயன்றனர். அந்த

117 Qp வாசனைகளை கட்டுப்படுத்துவது எப்படி?
விலைமாதர்களிடம் அருள்மிகு அன்னையையே கண்ட குருதேவர் 'அம்மா! அம்மா!' என்று கூறிக்கொண்டே வெளியுலக நினைவை இழந்தார். அவரது சமாதிநிலையைக் கண்டு குழந்தை போன்ற இயல்பால் மனம் கவரப்பட்டும் அந்தப் பெண்களிடம் தாய்மையுணர்வு மேலெழுந்தது. குருதேவரின் பிரம்மசரியத்திற்கு ஊறு விளைவிக்க முயன்றது பெரும் பாவச் செயல் என்று எண்ணி கண்களில் நீர் ததும்பிய அவர்கள் அவரிடம் மன்னிப்புக் கோரினர், கலங்கிய மனத்துடன் விடைபெற்றுக் கொண்டு சென்றனர். -
வாசனைகள் இருவகைப்படும்; ஒன்று சத் வாசனை: மற்றொன்று அசத் வாசனை. பலவிதமான அசத் வாசனைகளை -
தீய ஆசைகளை, சத் வாசனைகளைக் கொண்டு - புனிதமான ஆசைகளைக் கொண்டு - அகற்ற வேண்டும். சத் வாசனை சாசுவதநிலையைத் தரும்.
சில வாசனைகள் விதைகளுக்கு ஒப்பானவை. வாசனை விருத்திக்கு இடமளித்தால், விதைகளாகிய வாசனைகள் வளர்ந்தோங்கி எண்ணிக்கையில் மிகுந்துவிடும். இந்த நிலையில் ஒருவர் தன்னுடைய இயலாமையை உணர்ந்து "ஒ என்னிடம் உள்ள சக்திமிக்க வாசனைகள் என்னை மிகவும் தாழ்ந்த நிலைக்கு இழுத்துத் தள்ளிவிடுகின்றன. அதில் இருந்து என்னால் தப்ப முடியவில்லை' என்று ஒப்புக்கொள்வர்.
வாசனை, விதை ரூபத்தில் இருக்கும் பொழுதே அழிக்கப்பட வேண்டும். விதையொத்த of F60)660)LJU ஒழிப்பதற்கு ஆதிசங்கரரின் விவேகசூடாமணி பின் வருமாறு உபதேசம் புரிகின்றது.
கார்ய-ப்ரவர்த்தனாத் பீஜப்ரவ்ருத்தி பரித்ருச் யதே கார்ய - நாசாத் பிஜ -நாசஸ் - தஸ்மாத் கார்யம் நிரோத யேத்| இதன் பொருள்: விஷய ஆசையுடன் செய்யும் காரியங்கள் வளர்வதால் அதற்கு விதைபோன்ற அஹங்காரம் வளர்ந்து

Page 62
ஆன்மிக வாழ்க்கைக்கான வழிகாட்டுதல்கள் Op 118
காணப்படுகிறது. காரியங்கள் நாசமடைவதால் விதை போன்ற அஹங்காரம் நாசமடைகின்றது *றுரால் விஷய ஆசையுடன் கூடிய காரியத்தை ஒழிக்க வேண்டும்.
'காரியங்கள் வளரும் பொழுது விதைகள் வளருகின்றன. காரியங்கள் நாசமடையும்பொழுது விதைகளும்நாசமடைகின்றன. ஆகவே காரியங்கள் நாசமாக்கப்படவேண்டும்; அடக்கப்பட வேண்டும். விதை வளருவதற்கு அனுமதிக்கப்பட்டால். அது பெரிய மரமாகி வளர்ச்சி பெற்று விடுகின்றது. இதனால் இலட்சக்கணக்கான புதிய விதைகள் தோன்றுகின்றன. இவ்வாறாக புதிய விதைகளின் விளைச்சல் ஏற்படாமல் இருக்க, மரத்தை நாசமாக்கிவிட வேண்டும். ஆகவே நாம் செய்ய வேண்டுவதென்ன? காரியங்களை நாம் நிறுத்த வேண்டும்; பிறகு விளைவுகள் தோன்றாது. விளைவு காரியங்கள் எனும் சங்கிலித் தொடர் என்றும் தொடரக் கூடியதாகும்; முடிவற்றதாகும்.
இந்த உடல் வாசனைகளை வெளியிட சக்தியற்றுப் போகும் பொழுது புதிய உடலின் உதவி எடுத்துக் கொள்ளப்படுகிறது. புதிய உடல் என்றால் புதிய வாசனைகள், இவை மீண்டும் மீண்டும் சுழற்சியாக வந்துக் கொண்டும், போய்க் கொண்டும் இருப்பது.
இந்த விஷச்சுழற்சியைத் தடுத்து நிறுத்த நாம் வாசனைகளுடன் நேரடியாக எதையும் அதிகம் செய்ய முடியாது. வேரும், வேரடிமண்ணும் இல்லாமல் செய்வது போல, வாசனைகளை ஒழிக்க வேண்டும். இந்த வேரும் வேரடிமண்ணும் இல்லாமல் என்பதை ஓர் உதாரணத்தின் மூலம் தெளிவுப்படுத்திக் கொள்ளலாம். பூந்தோட்டத்தில் அவ்வப்பொழுது களையெடுக்க தோட்டக்காரனை ஏற்பாடு செய்கிறோம். தோட்டக்காரனும் களைகளை பிடுங்கி எறிந்து விடுகின்றான். அடுத்த நாள் தோட்டக்காரனுக்கு ஏமாற்றம் காத்திருக்கின்றது. ஏன் எனில் பிடுங்கி எறிந்த இடத்திலேயே மேலும் முளை தோன்றிவிட்டது. களைகளை வேரும் வேரடிமண்ணும் இல்லாமல் பிடுங்கி எறிந்திருந்தால் களைகள் அதேவிடங்களில் தோன்றியிருக்காது.

119 up வாசனைகளை கட்டுப்படுத்துவது எப்படி?
சில சமயங்களில் வளராத விதைகள் சிதறிப்போய் அத்துடன் களைகளும் வளர வாய்ப்புண்டு.
இந்த விதைகளைப் போன்றவை வாசனைகள். நாம் கஷ்டப்பட்டு நம்முடைய பல விதமான வாசனைகளை பயனுள்ள எண்ணங்களாக மாற்றிய போதிலும்; விரும்பத்தகாத சில வாசனைகள் மீண்டும் விளைந்து மேலே வந்து விடுவதை அறிகின்றோம். எப்படியெனில், நம்முள்ளே பதுங்கிக்கொண்டு உறங்கிப்போன சில வாசனைகளும் இருந்திருக்கும்.
ஆகவே, வாசனைகளை களையெடுப்பதில் ஒரு போதும் ஓய்வெடுப்பதற்கு நிச்சயமாக இடமளிக்கக் &alms. களையெடுத்தல் என்பது நிகழ்ந்துக் கொண்டே இருக்கவேண்டும். நமது தீய எண்ணங்களில் பழைய பாரம்பரிய வாசனைகளையும் குறைக்க வேண்டும். தோட்டத்தில் சுத்தமாக களையெடுப்பது முடிந்தவுடன், நல்ல மலர்கள், கனி தரும் மரங்கள் முதலானவற்றை பயிரிடுவது போல, புலன் நுகர்வு எண்ணங்களை முற்றிலுமாகக் களையெடுத்தப் பிறகு, ஆக்க பூர்வமான நற்பண்புகளை வளர்க்க வேண்டும்.
வாசனையை விட்டு இறைவனின் அருளில் நிலை பேற்றைக் காண்பதைவிட வேறு சாதனையுண்டோ? என்பது தாயுமான சுவாமிகள் கண்ட அநுபூதியாகும்:
"வாதனைவிட்டு உன்அருளின் மன்னின் அல்லால் வேறு சாதனைதான் உண்டோநீசாற்றாய் பராபரமே"

Page 63
ஆன்மிக வாழ்க்கைக்கான வழிகாட்டுதல்கள் Qp 120
அஹங்காரத்தை ஒழிப்பது GmůĽurq?
கிறிஸ்துவ சமய சித்தர் ஒருவர் சிலுவையை அஹங்காரத்தை ஒழிக்கும் சின்னமாகக் கூறியதாக ஒரு செய்தியுண்டு. 'ஐ' - நான்' எனும் ஆங்கில எழுத்தின் மீது குறுக்கே ஒரு கோடு போடப்பட்டால் அது 'ஐ' எனும் எழுத்தை வெட்டுவது போல் அமையும். பார்ப்பதற்கு சிலுவை குறி போலத் தெரியும்.
கீதையின் மூன்றாவது அத்யாயத்தின் 27-வது சுலோகத்தில் பூரீகிருஷ்ண பகவான் கூறுவதாவது:
ப்ரக்ருதே க்ரியமானானி குணை கர்மாணி ஸர்வச அஹங்கார விமூடாத்மா கர்த்தாஹமிதி மன்யதோ இதன் பொருள். பிரகிருதியின் குணங்களால் எங்கும் கர்மங்கள் செய்யப்படுகின்றன; அகங்காரத்தால் அறிவிழந்தவன் தான் செய்பவன் என்று நினைக்கிறான்.
பிறப்பு - இறப்பு சுழற்சிக்குக் காரணமான அறியாமையின் மாறுபட்ட வடிவமே அஹங்காரமாகும். இது, விவேகசூடாமணியின் 298-வது சுலோகத்தில் பூரீ சங்கராச்சார்ய சுவாமிகளால் பின் வருமாறு எடுத்துக் காட்டப்பட்டுள்ளது.
ஸந்த்யன்யே ப்ரதிபந்தா பும்ஸ் ஸம்ஸார - ஹேத வோ த்ருஷ்டா தேஷா - மேகம் மூலம் ப்ரதம விகாரோபவத்யஹங்கார

121 QU அஹங்காரத்தை ஒழிப்பது எப்படி?
இதன் பொருள் புருஷனக்கு பிறவிப் பிணிக்குக் காரணங்களாகக் காணப்பட்ட வேறு தடைகளும் - ராகத்வேஷம் முதலியவையும் - இருக்கின்றன. அவைகட்கெல்லாம் அஞ்ஞானத்தின் முதல் அவதாரமாகிய அஹங்காரம் ஒன்றே வேர் போன்றது.
கடவுளை உணர்ந்த ஞானிகள் அனைவரும் மீண்டும் மீண்டும் சுட்டிக்காட்டுவது யாதெனில் பொய்யான அஹங்காரத்தை ஒருவர் துறக்க வேண்டும் என்பதே. அஹங்காரத்தின் காரணமாக புத்தி ஏமாற்றமடைந்து 'நான்' எனும் கற்பனையான கருத்தை முன்நிறுத்துகிறது. அஹங்காரமே, நமது எல்லா பிரச்னைகளின் வேர்மூலமாகும். இதை தருக்க நெறி மொழியில் பின் வருமாறு கூறலாம். ஆதாரத்தின் பொய்மை எனும் கருதுகோள் ஒன்றுளது. தத்துவ அறிஞர்கள் அனைவரும் பைத்தியக்காரர்கள் என்று நாம் கூறுவதாக வைத்துக் கொள்வோம். தத்துவ அறிஞர்களுள் இமானுவேல் கண்ட் ஒருவர். அப்பொழுது இமானுவேல் கண்ட் ஒரு பைத்தியக்காரர் என்பதாக ஆகிவிடும். இதை எளிதாக மறுத்து விடமுடியம். இங்கே முதல் ஆதாரமாக 'தத்துவ அறிஞர்கள் அனைவரும் பைத்தியக்காரர்கள்" என்பது தவறாகிவிடுகின்றது. முதல் ஆதாரத்தின் பொய்மை எனும் தருக்கநெறியால் இந்தத்தவறு நிகழ்ந்து விடுகிறது. • இதே அணுகு முறையை அஹங்காரம் எனும் கருதுகோளை ஆராயுமிடத்தில் பின்பற்றலாம். "நான்' எனும் அஹங்காரத்தின் பல்வேறு வித்தியாசங்களைக் காணலாம். "நான் இன்னாருடைய பிள்ளை, குறிப்பிட்ட குடும்பத்தில் பிறந்தவன்; இந்த சமயத்தை சார்ந்தவன்; இந்த மொழியைப் பேசுபவன்; நான் ஒரு எஞ்சினியர் நான் ஒரு டாக்டர்; நான் ஒரு மாணவன்; நான் ஒரு இல்லத்தரசி" என்பன போன்ற பல வித்தியாசமான நான்களாகக் கூறிகொள்கிறோம்.
நமது உண்மையான தெய்வீக ஆத்மாவை நாம் மறந்து வருகின்றோம். நமது பொய்யான அஹங்காரத்தை ஆதாரமாகக்

Page 64
ஆன்மிக வாழ்க்கைக்கான வழிகாட்டுதல்கள் Qu 122
கொள்கின்றோம். துன்பப்படுகின்றோம். ஆகவே, நாம் கடவுளை அடைய உண்மையாக விரும்பினால் அஹங்காரமாகிய நான்' எனும் உணர்வை முற்றிலுமாக நாசப்படுத்த வேண்டும். இதைச் செய்து முடிக்காத வரையில் ஒருவர் தன் உண்மையானத் தன்மையை உணர முடியாது.
பொய்யான அஹங்காரப் பிரச்னையை ஆதிசங்கரர் அடுத்து வரும் சுலோகத்தில் விளக்கியுள்ளார்.
யாவத்ஸ்யாத் ஸ்வஸ்ய ஸம்பந்தோ அஹங்காரேண துராத்
தாவந்ந லேச - மாத்ராபி முக்திவார்த்தா விலக்ஷணா இதன் பொருள் எதுவரை எல்லாக் கெடுதல்களுக்கும் காரணமான அஹங்காரத்துடன் ஒருவனுக்கு தொடர்பு உண்டோ அதுவரை அதினின்று முற்றும் பிறிதாயுள்ள முக்தியைப் பற்றிய பேச்சுக்கு கொஞ்சங்கூட இடமில்லை.
இழிவான அஹங்காரத்துடன் நாம் தொடர்பு வைத்திருக்கும் வரையில் முக்தியைப் பற்றிக் கொஞ்சம் கூட பேசுவதென்பது சாத்யமாகாது. அஹங்கார தளத்தில் நாம் வாழ்கின்ற வரையில் முடிவே இல்லாத பல விதமான மனப்போராட்டங்களில் ஈடுபடுகிறோம். பெயருக்காக, குடும்பத்திற்காக, செல்வத்திற்காக, படிப்பிற்காக எனப் பல்வேறு மனப்போராட்டங்கள் எழுகின்றன. இந்த அஹங்காரத்தை வென்றதும், நம்மை அடிமைப் படுத்தியிருக்கும் பலவித உபாதிகள் எனப்படும் வேஷங்கள் மறைந்திட நாம்-புரம்பொருளை உணர்வோம்.
இங்கு அஹங்காரம், துராத்மா என்றழைக்கப்படுகின்றது. நமது வழக்கமான நடவடிக்கை எப்படி இருக்கின்றது? கருத்தாவாகவும், போக்தாவாகவும் இருக்கின்றோம். அதாவது கருமத்தை செய்பவராகவும், அதன் பலனை அனுபவிப்பவராகவும் இருக்கின்றோம். இவ்விரண்டுமே அஹங்காரத்தின் வெளிப்பாடுகளே யல்லாமல் வேறொன்றுமில்லை. உடலையும்,

123 (U அஹங்காரத்தை ஒழிப்பது எப்படி?
மனத்தையும், இந்திரியங்களையும், பிராணனையும், புத்தியையும், அஹங்காரத்தையும் பிரகிருதியே (இயற்கையே) ஆட்டி வைக்கிறது. தொழில் புரியச்செய்கிறது. அப்பிரகிருதியே எல்லாச் செயல்களுக்கும் அனுபவங்கட்கும் உண்மையான கருத்தாவும், போக்தாவும் ஆகுகின்றது. ஆதலின் உடலும், மனமும் ஒரு தொழிலில் ஈடுபட்டிருக்கும் போது பிரகிருதியே தன்தொழிலை நடத்தி வருகிறது என்பதையும், உண்மையான ஆன்மா கருத்தாவுமன்று, போக்தாவுமன்று என்பதையும் ஒருவன் உணர முயலவேண்டும்.
இழிவான அஹங்காரத்திற்கு நாம் கட்டுப்பட்டு விட்டால் என்ன நேரிடும்? நாம் நமது உடல், புத்தி, மனம் மற்றும் புலன்களுக்கு கட்டுப்படுகின்றோம். இதன் காரணமாக அறியாமை வழியே பலவிதத் துன்பங்களை, குறைபாடுகளை நமக்கு நாமே நம்மீது சுமத்திக் கொண்டு துன்பப்படுகின்றோம்.
"நான் உடலைப் பெற்றிருக்கின்றேன்; நான் பிறந்திருக்கின்றேன்; எனக்கு இந்தத் துன்பம் தரும் நோய் உள்ளது: மனச் சோர்வு உள்ளது; மகிழ்ச்சி இல்லாமல் இருக்கிறேன்' என்று நான் என்பதுநினைக்கின்றது.இவ்வித நினைப்பெல்லாம். இழிந்த அஹங்காரத்தின் நோக்கில் எழுவன. ஆனால் நாம் அஹங்காரத்தின் வரம்புகளைக் கடந்த பிறகு வாழ்க்கையின் உயர்ந்த பரிமாணங்களை எவ்வாறோ அடைந்து விடுகிறாம். இந்த உயர்ந்த நிலையை அடைந்த பிறகு நமக்கு நாமே சுமத்திக் கொண்டவையெல்லாம் தாமாகவே வீழ்ந்து விடுகின்றன. அது வரையில் நாம் தவறான நம்பிக்கைகளால் ஏமாற்றமுற்று இருக்கின்றோம். நாம் தவறாக நினைப்பதேன்? ஏன் எனில் நாம் நம்மை உடல் - மன உணர்வுகளுடன் தவறாக ஒன்றுபடுத்திக் கொள்கிறோம்.
நாம் பலவித குறைபாடுகளைக் கொண்டிருக்கின்றோம். முடிவற்றத் துன்பங்களை அனுபவிக்கின்றோம். மரணமடையப் போகின்றோம் என்றெல்லாம் நினைக்கின்றோம். இவ்வித

Page 65
ஆன்மிக வாழ்க்கைக்கான வழிகாட்டுதல்கள் Op. 124
நினைப்பு வாழ்க்கையை துன்ப மயமாக்குகின்றது. இவையனைத்தையும் "ஆதாரத்தின் பொய்மை' எனும் தருக்க நெறியில்கண்டறியலாம். பூரீமத்பகவத்கீதையின் பதின்மூன்றாவது அத்யாயத்தில் எட்டாவது சுலோகத்தில் பகவான் கிருஷ்ணர் அருச்சுனனுக்கு பின் வருமாறு உபதேசம் செய்கின்றார். இந்த்ரியார்த்தேஷ" வைராக்யமனஹங்கார ஏவச ஜன்மம்ருத்யுஜராவ்யாதிது க்கதோஷானுதர்சனம் இதன் பொருள். இந்திரிய விஷயங்களில் விருப்பமின்மை, அஹங்காரமின்மை, பிறப்பு, இறப்பு, மூப்பு, பிணி, துன்பம் இவற்றிலுள்ள தீமைகளைச் சிந்தித்தல்.
சுவை, ஒளி, ஊறு, ஓசை, நாற்றம், எனும் ஐந்து விஷயங்கள் இந்திரியங்களுக்கு இருக்கின்றன. இவற்றின் போக விஷயங்கள் ஐந்திலுமே ஈடுபடும் மனிதன் கதி என்னாவது? இதை எண்ணிப்பார்த்து அவைகளிடத்தில் பற்று வைக்காதிருக்க வேண்டும்.
"இந்திரிய விஷயங்களின் மீதுள்ள பற்று எவ்வளவுக்கு குறைந்து வருமோ அவ்வளவுக்குக் கடவுளிடத்து பக்தி அதிகரித்து வரும்' என்ற குருதேவரின் அருளுரையும் சிந்திக்கத் தக்கது.
இந்திரிய போகங்களினால் வரும் துன்பங்கள் எவ்வாறு என்பதை பின்வரும் திருக்குறளில் திருவள்ளுவர் உணர்த்தியுள்ளார்.
யாதனின் யாதனின் நீங்கியான் நோதல் அதனின் அதனின் இலன் பிறப்பு, பிணி, மூப்பு, துன்பம், இறப்பு, முதலானவைகளின் தீயவிளைவுகளைப் பற்றி ஆழமாகச் சிந்திக்கவும், தியானம் புரியவும் அருச்சுனனுக்கு அறிவுறுத்தப்பட்டது. ஆனால், இந்தப்பிறப்பு முதலானவை கட்டுப்பட்ட, வரம்பிற்குட்பட்ட நமது நான்' எனும் உணர்விற்குரியன. இவற்றின் தீயவிளைவுகளைப் பற்றித் தொடர்ந்து ஆழமாக, தீவிரமாகச் சிந்திக்க வேண்டும்.

125 up அஹங்காரத்தை ஒழிப்பது எப்படி?
அவ்வாறு செய்யும் பொழுது, "நான் கர்த்தாவோ, போக்தாவோ அல்லன் எனக்கு வாழ்க்கையில் உயர்ந்த பரிமாணம் உள்ளது' எனும் சிந்தனையை வளர்த்துக் கொள்ளவேண்டும். இந்தச் சிந்தனை வளத்தினால் 'நான்' எனும் பொய்யுணர்வை முற்றிலுமாக அலட்சியப்படுத்த வேண்டும். இந்த அலட்சியப் போக்கு இறுதியில் இந்திரிய விஷயங்களை அழித்தொழிக்க அஹங்காரம் அறவே நீங்கிவிடும். அஹங்காரத்தில் இருந்து விடுபட்டவுடனேயே என்ன நிகழும் என்பதை விவேக சூடாமணியின் 306-வது சுலோகம் பின் வருமாறு கூறுகின்றது.
ஸ்தைக - ரூபஸ்ய சிதாத்மனோ விபோ - ரானந்த மூர்த்தே - ரனவத்ய - கீர்த்தே நைவான்யதா க்வாப்ய விகாரிணஸ்தே விநா - ஹமத் யாஸ் மமுஷ்ய ஸமம்ஸ்ருதிய இதன் பொருள். எப்பொழுதும் ஒரே வடிவாயிருப்பவனும், அறிவு மயமாகியவனும், எங்கும் நிறைந்தவனும், ஆனந்த ஸ்வரூபனும், குற்றங் குறையற்றவை னெனச் சுருதியில் புகழப்பட்டவனும், மாறுபாடில்லாதவனும் ஆகிய உனக்கு இந்த அஹங்கார அத்யாஸ் மில்லாமல் வேறு வகையில் எங்கிருந்தும் இதனுடைய ஸம்ஸார பந்தம் இல்லவே இல்லை.
இந்த அஹங்காரத்தின் பந்தத்தை நாம் வென்று விட்ட பிறகு இந்தப் பிறவியிலேயே என்றும் தூய்மையான, அறிவு சொரூபமான, அளவற்ற ஆனந்த வடிவான நம் உண்மைத் தன்மையை அறிவோம். நாம் உயர்ந்த குறிக்கோளை நோக்கிச் செல்லும் பொழுது எந்தெந்த வழிமுறையைப் பின்பற்ற வேண்டும் என்பது முன்னமேயே விவாதிக்கபட்டுவிட்டது. இப்பொழுது மேலும் ஒரு முக்கியமான வழிமுறையைப் பற்றி அறிவோம். அந்த வழிமுறை அஹங்காரமற்று இருப்பதாகும். இதை அறிந்து புரிந்துக் கொள்வதற்கு விவேக சூடாமணியின் 307-வது சுலோகம் வழிப்படுத்துகின்றது.

Page 66
ஆன்மிக வாழ்க்கைக்கான வழிகாட்டுதல்கள் Qap 12.5
தஸ்மா - தஹங்கார - மிமம் ஸ்வகுத்ரும் போக்துர்கலே கண்டகவத் ப்ரதீதம் விச்சித்ய விஜ்ஞான - மஹாஸினா ஸ்புடம் புங்கூடிவாத்ம - ஸாம்ராஜ்ய ஸ0கம் யதேஷ்டம்) இதன் பொருள்: அஹங்காரமெனும் இந்த உன் சத்துருவை, சாப்பிடுபவனின் தொண்டையில் உள்ள முள்ளைப் போல் இருப்பதை தெளிந்த ஞானமாகிற, சிறந்த வாளால் நாசம் செய்து நன்றாக இஷ்டப்படி பிறர்க்கடிமைப்படாத ஆத்மானந்தத்தை அனுபவிப்பாயாக.
அஹங்காரம், சக்தி மிக்கப் பகைவன் என்பதை எப்பொழுதும் நினைவில் நிறுத்த வேண்டும். தொண்டைக்குள் சிக்குண்டு முள்ளாக இருக்கும் அஹங்காரத்தை நாம் நிர்மூலமாக்காவிடில் நாம் பரம்பொருளை அடையமுடியாது. நாம் சாப்பிடும் பொழுது தொண்டையில் ஒரு முள் தைத்துவிட்டால், சாப்பாடு எவ்வளவுதான் சுவைமிக்கதாய் இருந்தாலும் அதை நாம் அனுபவித்து சாப்பிடமுடியாது. தொண்டையில் சிக்கிய முள் நம் சாப்பாட்டு இன்பத்தைத் தடை செய்துவிடுகின்றது. எப்பாடு பட்டேனும் அந்த முள்ளை வெளியே எடுத்துவிடவேண்டும் எனத் துடிப்போம்.
இதைப் போலவே, அஹங்காரம் எனம் நமது பகைவனை நாசம் செய்யவேண்டும். அதன்பிறகே ஆத்மானந்தத்தைத் துய்க்க முடியும். தொண்டையில் சிக்கிய முள்ளை குறடு அல்லது கத்திபோன்ற கருவியைப் பயன்படுத்தி எடுத்து விடுவது போல, அஹங்காரத்தை ஞானம் எனும் வாளால் அகற்றிவிடவேண்டும். தொண்டை முள் அகற்றப்பட்ட நிலையில் சாப்பாடு இன்பம் பயக்கின்றது. அஹங்காரம் அகற்றப்பட்ட நிலையில் ஆத்ம சாம்ராஜ்ய இன்பத்தின் வாயில் திறக்கப்படுகின்றது.
அஹங்காரம் எனும் கருத்தை நாம் விவாதித்துக் கொண்டிருக்கும் சமயத்தில் பூரீராமகிருஷ்ணர் கோஸ்வாமியிடையே நிகழ்ந்த உரையாடலையும் நினைவுகூர்வது

127 Uy அஹங்காரத்தை ஒழிப்பது எப்படி?
பயன்தரும். விஜயகிருஷ்ண கோஸ்வாமி பிரம்ம சமாஜத்தில் இருந்த பொழுது, குருதேவரைச் சந்தித்து உரையாடிப் பயன் பெறுவது வழக்கம். ஒரு சமயம் உரையாடலின்பொழுது, "சுவாமி, நாம் ஏன் இவ்வாறு பந்தப்பட்டவர்களாய் இருக்கின்றோம்? ஏன் ஈசனைக் காண இயலுவதில்லை?" என்று விஜயர், குருதேவரிடம் கேட்டார். இந்தக் கேள்விகளுக்கு குருதேவர் பின்வருமாறு பதிலளித்தார். "மனிதர்களின் அஹங்காரம்தான் மாயை. இந்த அஹங்காரமான மாயை எல்லாவற்றையும் திரையிட்டு வைத்திருக்கிறது. 'நான் இறந்தால்தான் எல்லாத் துயரங்களும் விலகும். கடவுளின் கருணையால் 'நான் அகர்த்தா" அதாவது செயலற்றவன் என்ற உணர்வு ஒருவனுக்கு உண்டாகுமேயானால் அவன் ஜீவன் முக்தனாகி, உடலோடு இருக்கும்போதே விடுதலை அடைந்தவனாகிறான். பிறகு அவனுக்கும் பயமில்லை." குருதேவரின் இந்த உறுதிமொழி நம் அனைவருக்கும் அளிக்கப்பட்டதாகும்.
துறவிகள் மட்டும் ஜீவன் முக்தர்களாக ஆகுகின்றார்கள் என்று பூரீராமகிருஷ்ணர் குறிப்பிடவில்லை. கடவுள் அருளினால் எவரொருவர் தான் கருத்தா (செயல்புரிபவர்) இல்லை என்று உணருகின்றாரோ, அவர் ஜீவன்முக்தராகுகின்றார். உடலோடு இருக்கும் போதே ஒருவர் முக்தி பெற்றவராகுகின்றார். அதாவது பொய்யான அஹங்காரத்தை விட்டு விடுகின்றார். இந்தக் கருத்தை விளக்குவதற்கு பூரீராமகிருஷ்ணர் மேலும் ஓர் உதாரணத்தை பின்வருமாறு வழங்கியுள்ளார்.
"உண்மையில் ஈசுவரனான இராமச்சந்திரர் இரண்டரை முழம் தூரத்தில்தான் இருக்கின்றார். சீதை என்ற மாயைத்திரை நடுவில் இருப்பதனால், இலட்சுமணனாகிய ஜீவனுக்கு, அந்த ஈசுவரனைப் பார்க்கமுடியவில்லை."
நான்' எனும் மாயைத் திரை மறைப்பதால் மனிதன், ஈசுவரனைப் பார்க்கமுடிவதில்லை. பிரம்மத்திடமிருந்து, ஜீவனைப் பிரித்து வைப்பதும் இந்த நான் எனும் மாயையே. மாயை

Page 67
ഷ്യബി வாழ்க்கைக்கான வழிகாட்டுதல்கள் up 128
அகன்றவுடன் ஜீவன் தான் பரமாத்மாவாகிய பிரம்மனைத் தவிர வேறொன்றுமில்லை எனும் பேருண்மையை உணருகின்றது. பிறகு பூரீராமகிருஷ்னர் கூறியதாவது. "மனிதன் என்பவன் சச்சிதானந்த சொரூபமான கடவுள்தான். ஆனால் மாயை அல்லது அஹங்காரத்தினால் பலவிதமான உபாதிகள் (தளைகள்) அவனுக்கு ஏற்பட்டிருக்கின்றன. இதனால் அவன் தன் உண்மையான இயல்பை மறந்துவிட்டான்."
மற்றொரு முக்கியமான விஷயம் ஒன்று இருக்கின்றது. கடவுள் அருளினால் அல்லது ஆன்மிக சாதனைகளால், நான் கர்த்தா", நான் அது, இது' எனும் உணர்வையெல்லாம் தோற்றுவிக்கும் அஹங்காரத்தை வேரோடு சாய்ப்பதில் வெற்றியடைகின்றோம். ஆனாலும் கூட, இந்த அஹங்காரம் எப்படியோ மீண்டும் முளைத்தெழும். இதைக் குறிப்பிட்டு ஆதிசங்கரர் 'விவேக சூடாமணி' யில் கூறியதாவது:
ஸமூலக்ருத்தோ அபி மஹானஹம் புனர் - வ்யுல்லே கித ஸ்யாத்யதி சேதஸா க்ஷணம் ஸஞ்ஜீவ்ய விக்ஷேப்சதம் கரோதி நபஸ்வதா ப்ராவ்ருஷி வாரிதோயதா இதன் பொருள்: பூதம் போன்ற பெரிய இந்த அஹங்காரம் வேருடன் வெட்டப்பட்ட பின்னும் ஒரு நொடிப்பொழுது மனதால் சிந்திக்கப் பட்டாலும் கூட மீண்டும் உயிர்பெற்றெழுந்து, மழை காலத்தில் எப்படி மேகம் எங்கிருந்தோ கொண்டு வரப்பட்டு மழையைக் கொட்டுமோ அந்த மாதிரி நூற்றுக்கணக்கான கோளாறுகளை உற்பத்தி செய்து விடுகின்றது.
"அழிக்கப்பட்ட அஹங்காரம் மீண்டும் உயிர் பெறுவது எப்படி சாத்யமாகும்?' என்று ஒருவர் கேட்கலாம். இறந்தவர் மீது அமுதம் தெளிக்கப் பெற்று உயிர்த்தெழுவது போன்றதாகும் இது. புலன் விஷயங்களை சிந்தித்துக் கொண்டிருப்பதால் ஏற்படும் விளைவாகும் இது. அஹங்காரத்தை எப்படியோ நாம் வென்று விட்டாலும் கூட, நமது புலன் விஷயங்களில் நம் மனது செல்ல நாம்

129 up அஹங்காரத்தை ஒழிப்பது எப்படி?
அனுமதிக்கின்றோம். மனத்தைப் புலன் விஷயங்களில் அசை போட அனுமதித்தால், நமது அனைத்து தீய எண்ணப் பதிவுகள் மீண்டும் உயிர்பெற்று விடுகின்றன.
எலுமிச்சைச் செடி ஒன்று உலர்ந்து போவதாக வைத்துக் கொள்வோம். இதற்கு தொடர்ந்தாற் போன்று நாம் தண்ணீர் ஊற்றிக்கொண்டேவந்தால், பட்டுப்போனச்செடிதுளிர்த்துவிடும். இதைப் போலவே, புலன்விஷயத்தொடர்பான எண்ணங்கள், நாம் ஆன்மிக வாழ்க்கையில் முன்னேறும் பொழுது, பின்புலத்திற்கு பின்வாங்குகின்றன. ஆனால் அந்தச் சந்தர்ப்பத்திலும் கூட நாம் எச்சரிக்கையுடன் இருக்கவேண்டும். இல்லையெனில் அஹங்காரம் நம்மை கீழே தள்ளிவிடும்.
தீங்கற்ற, முக்கியத்துவம் இல்லாத பொருள் மீது பற்று கொண்டாலும், அது நம்மை கீழே இழுத்துத் தள்ளி, முடிவேயில்லாத பந்தத்திற்கு அழைத்துச் செல்லும். இதை எதிர்த்து நிற்க எப்பொழுதும் விழிப்புடனும், சுறுசுறுப்புடனும் இருக்கவேண்டும். உள்ளும் புறமுமாக துறவு பூண்டதுறவி ஒருவர் இருந்தார். அவர் எப்பொருளையும் வைத்துக் கொள்ளவில்லை. அவருக்கென்று இருந்த ஒரே பொருள் இடுப்பில் அணியும் துணி ஒன்றுதான். ஆனால், இந்தத் துணியிடம் அவர் மிகவும் பற்று வைத்திருந்தார். வனம் சென்றதற்கான காரணத்தையும் அவர் மறந்துவிட்டார்.துணியை எலிகள் கடித்து கிழித்துவிட்டால் என்ன செய்வது என்ற கவலையால் எலிகளை ஒழிக்க பூனை ஒன்றை வாங்கி வளர்த்தார். பூனைக்கு பால் வேண்டும் என்பதற்காக பசுமாடு ஒன்றை வாங்கினார். பசுவை வேளாவேளைக்கு கவனித்துக் கொள்ள ஒருவர் வேண்டுமே என்று நினைத்தார். அப்பொழுது, தனக்கு ஒரு மனைவி வேண்டும் என்று முடிவு செய்தார். இதற்காகத் திருமணம் செய்து கொண்டார். பிள்ளைகளையும் பெற்றுக் கொண்டார். வனத்தில் தவம் செய்ய வந்தத் துறவி, சம்சாரியாகி விட்டார். புலன் விஷயங்களை நினைந்து நினைந்து அசை போட்டுக் கொண்டிருந்ததால் அவருடைய ஆன்மிக சாதனை/பாழடைந்தது.

Page 68
ஆன்மிக வாழ்க்கைக்கான வழிகாட்டுதல்கள Op 130
உண்மையான சாதகர்கள் தங்கள் தெய்வீக இயல்பை உணர விரும்பினால், மனதை கீழ் நோக்கி இழுக்க வல்ல எதிலும் ஊக்கம் கொள்ளக்கூடாது. இவ்வரிய உண்மை பகவத்கீதையின் இரண்டாம் அத்யாயத்தில் 62, 63 சுலோகங்களில், தெய்வீக நிலையில் இருந்து வீழ்ச்சியடைவது, மிகப் பொருத்தமாக பின்வருமாறு ஆய்வு செய்யப்பட்டுள்ளது.
62-வது சுலோகம்: த்யாயதோ விஷயான்பும்ஸ ஸங்கஸ் தேஷ"பஜாயதே ஸங்காத்ஸஞ்ஜாயதே காமகாமாத்கக்ரோதோ அபிஜாயதோ இதன் பொருள் பொருட்களை ஆழ்ந்து நினைக்கின்ற புருஷனுக்கு அவற்றினிடம் பற்று உண்டாகின்றது. பற்றினின்று ஆசை தோன்றுகின்றது. ஆசையினின்று கோபம் பிறக்கின்றது.
63-வது சுலோகம்: க்ரோதாத்பவதி ஸம்மோஹ ஸம்மோஹாத் ஸ்ம்ருதிவிப்ரம ஸ்ம்ருதிப்ரம்சாத்புத்திநாசோ புத்திநாசாத் ப்ரணச்யதி இதன் பொருள். சினத்தால் மனக்குழப்பம் உண்டாகிறது; குழப்பத்தினின்று நினைவின்மை, நினைவு நாசத்தால் புத்தி நாசம்; புத்தி நாசத்தினால் ஆள் அழிகின்றான்.
அரச மரத்தின் வித்து கண்ணுக்குத் தென்படாது. அது மிக நுட்பமானது. ஒரு கற்கட்டிடத்தின் இடுக்கில் விழும் அரச மரத்தின் வித்து, வேர் விட்டு செடியாகி, மரமாகிக் கட்டிடத்தையே பெயர்த்துத் தள்ளுகிறது. எண்ணம் அவ்வளவு நுண்ணியதாக உள்ளத்தில் புகுந்து பெரிதாகப் பரிணமித்து ஆளையே மாற்றிவிட வல்லதாகிறது. தன்னை மேலோனாக அல்லது கீழோனாகப் படைப்பது தன் எண்ணம். கீழான எண்ணம் செய்யும் தீமை மேலே விளக்கப்பட்டுள்ளது.
பலவித எண்ணங்கள் மோதும் பொழுது, விவேகம் எனும் வாளைக் கொண்டு தள்ளத் தக்கனவற்றை வீழ்த்த வேண்டும்.

131 Qp அஹங்காரத்தை ஒழிப்பது எப்படி?
உலகியல் எனும் கடலைக் கடக்க விரும்புவோனுக்கு விவேகம் எனும் கைவாள் உறுதுணையாகும் என்றும் விவேக சூடாமணியின் மற்றொரு சுலோகத்தில் எடுத்துரைக்கப்பட்டுள்ளது.
விவேக சூடாமணியின் 326, 327, 329-ம் சுலோகங்களில் சித்தத்தின் கீழ் நோக்கிச் செல்லும் போக்கு மிகப் பொருத்தமாக ஆதிசங்கரரால் பின்வருமாறு விளக்கப்பட்டுள்ளது.
விஷயேஷ் - வாவிசச் - சேத ஸங்கல்பயதிதத் குணான் ஸம்யக் ஸங்கல்பனாத் காம காமாத்பும்ஸ் ப்ரவர்த்தனம்
- 326 இதன்பொருள்: விஷயங்களில் பற்றுக்கொண்டு அதில் புகுந்த மனது அதன் குணங்களை சிந்தனை செய்கின்றது. தொடர்ந்த சிந்தனையால் ஆசை எழுகிறது. ஆசையால் புருஷனுக்கு அதை அடைய முயற்சி ஏற்படுகிறது.
தத - ஸ்வரூப - விப்ரம்சோ விப்ரஷ்டஸ்து பதத்யதா: பதிதஸ்ய விநாநாசம் புனர் -நாரோஹ ஈககூடியதோ
- 327 இதன் பொருள்: அதன்பின் தன் ஸ்வரூப மறதி ஏற்படுகிறது. ஸ்வரூபத்தை மறந்தவன் கீழே விழுகின்றான். விழுந்தவனுக்கு நாசமில்லாமல் மீண்டும் எழுச்சியானது காணப்படவில்லை.
ஸங்கல்பம் வர்ஜயேத் தஸ்மாத் ஸர்வாணர்த்தஸ்ய காரணம் அபத்யானி ஹி வஸ்தூனி வ்யாதி கிரஸ்தோ யதோத் ஸ்ரு ஜேத்
- 329 இதன் பொருள் ஒரு நோயாளி தீமை செய்யும் உணவு வகைகளை விலக்குவது போல, எல்லாக் கெடுதல்களுக்கும் காரணமாகிய விஷய சிந்தனையை ஒழித்து விடவேண்டும்.
விஷய சிந்தனையை ஒழித்து விடவேண்டும் எனும் போது முக்கியமான ஒரு கருத்து கவனிக்கப்பட வேண்டியுள்ளது. உலக

Page 69
ஆன்மிக வாழ்க்கைக்கான வழிகாட்டுதல்கள் Q 132
வாழ்க்கையில் இயங்கும்பொழுது, கண்கள் பார்க்க வேண்டியுள்ளது; காதுகள் கேட்க வேண்டியுள்ளது; கால்கள் நடக்க வேண்டியுள்ளது. இவ்வாறு ஒவ்வொரு உறுப்பும் இயங்க வேண்டியதை நாம் தடுத்து விடமுடியாது. பலவிதமான மனப்பதிவுகள் ஏற்படுகின்றன. புலன் விஷயங்களுக்கு நாம் எப்பொழுது வேட்கை கொள்கின்றோம் என்பதில்தான் பிரச்னை தோன்றுகின்றது.
குருதேவரின் நேரடிச் சீடரான சுவாமி துரியானந்தாஜி மகராஜ் அவர்கள் ஒரு பக்தருக்கு எழுதியக் கடிதத்தின் பின் வரும் வாசகம் இங்கு குறிப்பிடத்தக்கது.
"உன்னுடைய மனக்கதவில் ‘உள்ளே நுழைய அனுமதியில்லை' என்று எழுதுங்கள். பலவிதமான விஷய சிந்தனைகள் வரும்; அவை வரட்டும்; 'அவற்றை நான் எஜமானன் எனும் முறையில் சந்திப்பேன். அவற்றின் அடிமை என்ற முறையில் சந்திக்க மாட்டேன். புலன்களின் பலவித வசீகர சக்திகளுக்கும், மயக்குதல்களுக்கும் அடிமைப்பட்டு பலியாகி விடுகின்றோம். ஒரு விஷயம் மனதிற்குள் வருவதால் கெடுதல் ஏற்பட்டு விடப்போவதில்லை. ஆனால், மனம் அவ்விஷயத்தைப் பற்ற விரும்பி அதன் பின்னே ஓடும் பொழுது பிரச்னை தொடங்குகின்றது. புலன் விஷயங்கள் நம் மனதிற்குள் வரும்பொழுது, 966 நம்மை அடிமைப்படுத்திட அனுமதிக்கலாகாது. தனக்குத்தானே எஜமானராக இருக்க வேண்டும். ஒருவருடைய இச்சா சக்தி - மனவுறுதி - இல்லாமற் போனாலோ அல்லது குறைந்து போயிருந்தாலோ உலகின் கவர்ச்சிகளுக்கும், மயக்குதல்களுக்கும் ஒருவர் பலியாகிவிடுகின்றார். உலகத்தின் பொய்மைத் தோற்றங்களுக்கு அடிமையாகி விடுகின்றார். தன்னுடைய உண்மையான இயல்பை மறந்து விடுகின்றார். இலட்சியத்தில் இருந்து வீழ்ச்சியடைகின்றார். இவை நிகழ்ந்துவிடின், மீண்டும் மேல் நோக்கி எழுந்திடசந்தர்ப்பம் கிடைப்பது அரிதேயாம். ஆகவே நாம் மிகவும் ஜாக்கிரதையாக

133 u அஹங்காரத்தை ஒழிப்பது எப்படி?
இருக்கவேண்டும். இந்த இப்பிறவியிலேயே உயர்ந்த ஆன்மிக வாழ்க்கை வாழ்ந்து தெய்வீகப் பேரானந்தத்தில் இணைந்து விடவேண்டும் எனும் உறுதியை எடுத்துக் கொள்ளவேண்டும். நமது தெய்வீக இயல்பை கண்டறிய வேண்டும். நம்முடைய முந்தையப் பல பிறவிகளில் இந்த வெளியுலகம் நம்மை ஏமாற்றியுள்ளது. மேற்கொண்டும் நாம் ஏமாற்றப்பட அனுமதிக்கக் கூடாது. விவேகம் எனும் கட்டுப்பாட்டை நாம் மேற்கொள்ளவேண்டும். இவ்வாறு செய்யாமல் போனால் கீழ் நோக்கியே சென்று கொண்டிருப்போம். இதை விவேக சூடாமணியின் பின்வரும் 328-வது சுலோகம் கூறுகின்றது.
அத ப்ரமாதாந் ந பரோஅஸ்தி ம்ருத்யுர் விவேகினோ ப்ரஹ்மவித ஸமாதொள ஸமாஹித ஸித்திமுபைதி ஸம்யக் ஸமாஹிதாத்மா பவ ஸ்ாவதானா இதன் பொருள். ஆகையால் விவேகமுடையவனாயும், பிரம்மஞான முடையவனாயுமுள்ளவனுக்கு ஸமாதியில் கவனக் குறைவைக் காட்டிலும் வேறு யமன் இல்லை. பிரம்மத்தில் நழுவாது நிலைபெற்றவன் செம்மையான ஸித்தியை அடைவான். கவனக் குறைவுக்கு இடங்கொடாதவனாய் பிரம்ம சிந்தனையில் ஆழ்ந்தவனாய் ஆவாயாக.
நாம் வீழ்ச்சியடையாமல் இருக்க வேண்டுமானால் அனைத்துத் துன்பங்களுக்கும் காரணமான புலன் இன்ப விஷயங்களில் மனம் கவனம் செலுத்தும் போக்கை தள்ளிவிட வேண்டும். ஒருவர் நோயுற்றபோது டாக்டருக்கு சொல்லியனுப்புகின்றார். டாக்டர் வந்ததும் நோயாளியிடம், 'எந்தெந்த உணவைச் சாப்பிடக் கூடாது என்று நான் உங்களுக்கு எழுதித் தருகிறேன். அதன்படி தாங்கள் என் ஆலோசனையைக் கேட்டால் தங்கள் வியாதி குணமாகிவிடும்' என்று கூறுவார். அதைப்போல உலகியல் எனும் வியாதியை போக்குவதற்கு தடை செய்யப்பட்ட உணவான புலன் இன்பத்தைத் துறக்கனேண்டும்,

Page 70
ஆன்மிக வாழ்க்கைக்கான வழிகாட்டுதல்கள் Up 134
உலகியலை வெற்றி கொள்ள வேண்டுமானால், புலன்களைப் பாதிக்கின்ற எண்ணங்களை நிராகரித்து மேலே உயரவேண்டும். புலன்களைப் பாதிக்கின்ற எண்ணங்களுக்குப் பின்னே யார் - யார் ஒடுகின்றார்கள். இவ்வாறு ஓடுவது வீழ்ச்சியில் தள்ளும் என்பதை நன்றாக அறிந்தும் ஏன் இப்படி ஒடுகின்றார்கள்? நம்மைநாமே ஏன் கட்டுப்படுத்திக் கொள்ளக்கூடாது? உலகத்தின் பொய்யான விஷயங்களை ஏன் அசை போட்டுக் கொண்டிருக்க வேண்டும்? இந்தக் கேள்விகளுக்கெல்லாம், விவேக சூடாமணியின் 311-வது சுலோகம் பின்வருமாறு பதிலளித்துள்ளது.
தேஹாத்மனாஸம்ஸ்திதஏவகாமீவிலக்ஷண காமயிதாகதம் ஸ்யாத் ܐܲܝܟ݂ அதோ அர்த்த - ஸந்தான பரத்வ - மேவபேத-ப்ரஸக்த்யா பவபந்த - ஹேது: இதன் பொருள்: தேஹமே ஆத்மா என்ற நிலையிலிருப்பவனே விஷயங்களில் ஆசையுள்ளவன்; மாறுபட்டவன் தேஹம், ஆத்மா அன்று என்று உணர்ந்தவன் -எங்ங்ணம் விஷய நாட்டமுடையவனாவான்? ஆகையால் விஷய நாட்டத்தில் பற்றுதலே பேத புத்தியை வளர்ப்பதால் பிறவித் தளைக்குக் காரணமாகிறது.
"புலன் இன்பங்களுக்குப் பின்னே ஏன் ஓடவேண்டும்?" எனும் கேள்வியைப் பற்றி மீண்டும் ஒரு முறை சிந்திப்போம். தேகத்தையே "நான்' என்று கருதுவதாலேயே புலன் இன்பங்களுக்குப் பின்னால் ஒடுகின்றோம். தேகவுணர்வை, நான்' எனும் உணர்வாக ஏற்காதவன் புலன் இன்பங்கள் பின்னே ஒடமாட்டான். ஆகவே, புலன் விஷயங்கள் நம்மைக் கட்டிப் போடும் தளைகளாகும். இதற்குக் காரணம், "பேத ப்ராஸக்தி' எனும் இருமையுணர்வு. ஒன்றை பலவாகக் காணுதல், உலகியல் விஷயங்களின் சிந்தனையால் தொடர்ந்து ஆழ்ந்திருத்தலைக் காட்டுகின்றது. உண்யை என்ன? ஆத்மா ஒன்றே நித்தியமானது. பிரம்மம் மட்டுமே சத்யம். நாம் பிரம்மம். இதை நாம் மறந்து

135 o. அஹங்காத்தை ஒழிப்பது எப்படி?
விடுகிறோம். கீழ்நிலை நான்' எனும் தாழ்ந்த தளத்திற்கு இறங்கி வருகின்றோம். தேகத்தையும், மனத்தையும் நான் என அடையாளங் காண்கின்றோம். பிறகு இயல்பாகவே ஆசை வருகின்றது. வெளியுலகத்தில் நாம் நம்மை அடையாளங் காண்பதும், வெளியுலகத்தை உண்மை என்றும் கருதுவதால் நாம் காணும் காட்சி பன்மைத்தன்மை பெற்று விடுகின்றது. ஆனால் இருப்பதெல்லாம் அடிப்படையில் ஒருமையேயாகும். பிரபஞ்சமனைத்திலும் பிரம்மம் பரவியுள்ளது.
இருப்பதெல்லாம் ஒன்றே என்பதை - பிரம்மம் - என்பதை நிறுவி விட்டால், பிறகு மனித வாழ்க்கையின் குறிக்கோள் நிறைவு பெற்று விடும். நிரந்தரமாக பேரானந்தக் கடலில் நீந்தி மகிழலாம். இது ஞானிகள் அனைவரும் சோதித்தறிந்து கண்டெடுத்த ஞானம் ஆகும். இதைப் பற்றி அவநம்பிக்கை கொள்ளவோ, சந்தேகப்படவோ வேண்டியதில்லை. −
இங்கு நுட்பமானத் தத்துவப் பேருண்மை உள்ளது. காமம் என்பதற்கு ஆசை என்று பொருள். இந்தக் காமத்தையுடையவன் எவன்? புலன் ஆசை கொண்டு தேகமே தான் என்று கருதி அந்த எண்ணத்தில் நிரந்தரமாக இணைபவனே அவன் ஆவான். தேகமே நான் என்று ஒருவன் உணர்ந்து கொண்டிருக்கும் வரையில், ஒருவன் புலன் இன்பங்களில் திருப்தியடைகிறான். அவன் வெட்கமில்லாமல் புலன் வேட்கையுடையவனாக இருக்கின்றான் என்பது வெளிப்படையான உண்மையாகும். இவ்வாறு தேகத்தை மட்டுமே நினைத்துக் கொண்டிருப்பவர்களுக்கு எதிராக சுவாமிஜி கூறியதாவது:
"தவறாக அடையாளம் காண்பதை நிறுத்துங்கள். இப்பொழுது தன்னைத் தேகமாக காணும் ஆத்மா தன்னைத்தானே ஆத்மா என்று உணரவேண்டும்." இதை அறிந்த ஒருவன் அக்கணத்திலேயே விடுதலை பெற்று விடுகின்றான். இது நம் அனைவருக்கும் பெரு நம்பிக்கையைத் தருகின்றது. கடவுள் ஞானத்தை அடைய நூற்றுக்கணக்கான ஆண்டுகளோ அல்லது

Page 71
ஆன்மிக வாழ்க்கைக்கான வழிகாட்டுதல்கள் Qp 136
மற்றொரு பிறப்புகூட அவசியமில்லை. சில தத்துவ விற்பன்னர்கள் 'பிறப்பிற்குப் பின் ஆன்மவுணர்வு' என்று பேசுவார்கள். நமக்கு இதில் அக்கறை இல்லை. கேள்வி என்னவென்றால் இது இப்பிறவியிலேயே இத்தேகத்துடனேயே சாத்யமாகுமா? என்பதுதான். W
பூரீராமகிருஷ்ணரும், சுவாமி விவேகானந்தரும் மற்றும் மகா ஞானிகளும் சாத்யமே என்று உறுதியளித்துள்ளார்கள். "ஆம், இது முடியும்; வழிமுறையில் கவனம் செலுத்தினால் முடியும். வழிமுறையைப் பற்றி நாம் கவனம் எடுத்துக் கொண்டால், முடிவு தன்னைத்தானே கவனித்துக் கொள்ளும்.'
ரமண மகரிஷியின் நான் யார்' எனும் ஆன்ம விசாரத்தின் "உபதேசவுந்தியார் எனும் உபதேச சாரம் முக்கியமானதொன்றாகும். இதில் உள்ள பின்வரும் பாடல் கவனத்திற்குரியது.
நானொன்றுதானத்து நானானென் றொன்றது
தானாகத் தோன்றுமே யுந்தீபற
தானது பூன்றமா முந்தீபற.
இதன் பொருள்: "நான் (என்றும் இவ்வகந்தையெண்ணம் இரண்டற) ஒடுங்கும் அவ்விடத்தில் ("நான் இது - நான் அது' என்ற தற்சுட்டும் இல்லாமல்) "நான் நானே' என்ற (போதகமாக) ஓர் (இருப்பு) உணர்வு தாமாகவே (விளங்கிக் கொண்டிருப்பது) தோன்றும். அதுதான் பரிபூரண வஸ்து.

தேகம் - மனத்தின் தூய்மைப்பாடு Op 137
தேகம் - மனத்தின் தூய்மைப்பாடு
தேகம், மனது இரண்டும் தூய்மையாக இருக்க வேண்டும். 'புறத்தூய்மை உடலைத் தூயதாக்கும்; அழுக்கடைந்த மனிதன் யோகியாயிருத்தல் இயலாது. இதனோடு அகத் தூய்மையும் வேண்டும். அகத்தூய்மை, புறத்தூய்மையினும் சிறந்தது. ஆயினும் இரண்டும் வேண்டப்படுவன. அகத் தூய்மையின்றிப் புறத் தூய்மையினாற் பயனில்லை." இவ்வாறு சுவாமி விவேகானந்தர் தமது ராஜயோக விளக்கவுரையொன்றில் கூறியுள்ளார்.
ஆன்மிக வாழ்க்கைக்கு உரிய வழிகாட்டுதல்களில் உடல் -உள்ளத் தூய்மையும் இன்றியமையாததாகும்.
எந்தக் கணத்தில் கடவுளைப் பற்றிச் சிந்திக்க முயற்சி செய்கின்றோமோ, அதே கணத்திலேயே கடவுளைப் பற்றியச் சிந்தனைகள் மனதிற்குள் நிறைந்துவிடுகின்றன. பலவிதத்தடைகள் மனத்தைச் சிதறடிக்கத் தாக்குகின்ற போது, கடவுளைத் தவிர உலகத்தின் ஒவ்வொரு விஷயத்தையும் சிந்திக்கத் தொடங்கிவிடுகின்றோம். இது மனம் மாசடைவதைக் காட்டுகின்றது. கடவுட் காட்சியைப் பெறுவதற்கு மனம் தயாராக இல்லை என்பதையும் காட்டுகின்றது. பிறவிதோறும் சேர்க்கப்பட்டு வரும் சம்ஸ்காரங்களே மாசுகள் ஆகின்றன.
சம்ஸ்காரங்களின் தோற்றத்திற்கு ஐந்து மூல காரணங்கள் உள்ளன என்று பதஞ்சலி யோக சூத்திரம் குறிப்பிடுகின்றது.

Page 72
138 up ஆன்மிக வாழ்க்கைக்கான வழிகாட்டுதல்கள்
அவையாவன: அவித்யை (அறியாமை) அஸ்மிதை (முனைப்பு),
ராகதுவேஷம் (விருப்பு - வெறுப்பு), அபிநிவேஷம் (உயிர்ப்பற்று). சம்ஸ்காரங்களின் வேர் மூலமாக இயங்குவது அவித்யை. சாட்சாத்காரத்தை அறியவொட்டாமல்
இருமையுணர்வைத் தோற்றுவித்து மயங்கச் செய்வது அவித்யை.
அவித்யையில் இருந்து பிறப்பது, அஸ்மிதை எனும் தன் முனைப்பு. நித்திய தூயதாய், எல்லையற்றதாய், மரணமற்றதாய் உள்ள ஆன்மாவே மனிதனுடைய உண்மைத் தன்மை. வேறுபாடற்ற ஆன்மாவை வேறுபடுத்திக் காட்டுவது அஸ்மிதை,
ராகம், துவேஷம் எனும் இவையிரண்டும் சக்திவாய்ந்த பகைவர்கள். இன்பத்தை நாடுவது விருப்பமெனப்படும்; துன்பத்தைப் பின்பற்றியது வெறுப்பு ஆகும்.
அடுத்து இறுதியாக வந்தாலும், முக்கியமானது அபிநிவேஷம் எனும் உயிர்ப்பற்று. ஆன்மாவுக்கு அழிவில்லை எனச் சொல்லுகிற, நன்றாகக் கற்றவர்களும் புத்தியளவிலே துணிந்துகொண்டாலும் உயிர்ப்பற்று உடையவர்களாக இருக்கக் காண்கின்றோம். சித்த விருத்திகளின் சம்ஸ்காரங்களில் ஒன்று உயிர்ப்பற்று. ஆன்மிக தளத்தில் வாழவிரும்பாமல், உலகியல் தளத்தில் வாழ விரும்புகின்றோம்.
மேற்கானும் ஐவகைத்தடைகளும் நமது தெய்வீக உண்மைத்தன்மையை அறியவிடாமல் தடுக்கின்றன.
இந்தத் தடைகள் பற்றி மேலும் விரிவாக மற்றொரு யோகசூத்திரத்தில் கூறப்பட்டுள்ளது. அறியாமை காரணமாக நாம் அநித்யத்தை (இல்லாததை) நித்தியமாகவும் (என்றும் இருப்பதாகவும்), அவீசியை (அசுத்தத்தை) வீசியாகவும் (சுத்தமாகவும்), துக்கத்தை (துன்பத்தை) சுகமாகவும் (இன்பமாகவும்), அனாத்மாவை (ஆத்மா அல்லாததை) ஆத்மாவாகவும் எடுத்துக் கொள்ளுகின்றோம். இவ்விதம் தவறாகப் புரிந்துக் கொள்வதற்கு நமது அவித்யை அல்லது

தேகம் - மனத்தின் தூய்மைப்பாடு о 139
அறியாமையே காரணமாகும். பதஞ்சலி முனிவரின் ராஜயோக சூத்திரம் ஒன்றை விளக்குமிடத்தில் சுவாமி விவேக Sors முக்கியமான இந்தப் பகுதியை பின்வருமாறு எடுத்துரைத்துள்ளார்: 'அவித்யை எனப்படும் அறியாமையைப் பற்றி அறிய வேண்டும். தூய்மையான ஒளிபொருந்திய ஆனந்தமயமான ஆன்மா நானல்ல, தேகமே நான் என்று நாமெல்லாம் நினைக்கிறோம். அது அறியாமை. நாம் மனிதத்தேகமாக எண்ணித் தேகமாகக் காண்கிறோம். இது பெரிய மயக்கம்.'
அறியாமை மற்றும் தவறாக அடையாளம் காணுதல் காரணமாக நாம் அனைவரும் இந்த மயக்கத்தில் இருக்கின்றோம். நாம், நமது உண்மையான ஆத்ம சொரூபத்தில் ஊன்றி உறைந்தால்தான் தூய்மையான இன்பம் பெறமுடியும். இதை நினைவில் கொள்ளவேண்டும். அறியாமை காரணமாக அழியக்கூடிய, நித்தியமற்ற, அற்ப ஆயுளையுடைய விஷயங்களில் இன்பம் காண்கின்றோம். உண்மையில் மிகப்பெரிய அவலமாகும் இது.
இதைப்பற்றி விவேக சூடாமணியின் 337-வது சுலோகம் கூறுவதை இங்கு எடுத்துக்காட்டுவது பொருந்தும்,
தேஹாதி - ஸம்ஸக்தி - மதோந முக்திர் - முக்தஸ்ய தேஹாத் - யபிமத்யபாவ: ஸப்தஸ்ய நோ ஜாகரணம் ந ஜாக்ரத ஸ்வப்னஸ் - தயோர் பின்னகுணாச்ரயத்வாத்ா இதன் பொருள். உடல் முதலியவற்றில் ஆழ்ந்த பற்றுள்ளவனுக்கு முக்தி இல்லை. முக்தி எய்தியவனுக்கு உடல் முதலியவற்றில் தான் என்ற புத்தி இல்லை. உறக்கத்திலாழ்ந்தவனுக்கு விழிப்பு இல்லை; விழித்திருப்பவனுக்கு உறக்கமில்லை; அவ்விரண்டிற்கும் வேறுபட்ட குணங்களின் சார்பு காரணமாதலால்,

Page 73
14ó eo ஆன்மிக வாழ்க்கைக்கான வழிகாட்டுதல்கள்
முக்தியடைந்தவருக்கு உடற்பற்றில்லை. ஜீவன் முக்தர் என்பவர் யார்? உடலில் வாழ்ந்துக் கொண்டிருந்தாலும் உடற்பற்றற்றவர். பார்ப்பதற்கு உடலில் வாழ்ந்துக் கொண்டிருப்பவர் போல் தோன்றினாலும், அவர் தனது உண்மை சொரூபமான ஆத்மாவில் வாழ்ந்துக் கொண்டிருப்பவர். "ஸ"Pப்தஸ்ய நோ ஜாகரணம்' - அதாவது தூக்கத்தில் ஆழ்ந்தவனுக்கு விழிப்பு இல்லை. விழித்திருப்பவனுக்கு துக்கம் இல்லை. இவ்விரு நிலைகளும் பரஸ்பரம் முரண்படுவன.
இதை மேலும் விளக்கமாக அறிவோம். தேகம் அல்லது தேக - மன உணர்வில் நாம் பற்றுக்கொண்டிருக்கும் வரையில் நாம்நமது உண்மை சொரூபமான ஆத்மாவில் உறைந்திருக்க முடியாது. நான் தேகம்' என்று நினைத்து தேகப்பற்று கொண்டவர் தேகத்தின் பலவிதத் தேவைகளை நிறைவு செய்ய வேண்டியிருக்கும். முக்தி பெற முடியாது. தேகப்பற்றை விட்டவர்க்கே முக்தி கிடைக்கும். "அற்றது பற்றெனில் உற்றது வீடு' என்பது நம்மாழ்வார் திருவாய்மொழியாகும்.
நமது தெய்வீகத் தன்மையை உணரநாம் விரும்புகின்றோம். ஜீவன் முக்தியை விரும்புகின்றோம். நாம்தான் ஆத்மா என்பதை உணரவிரும்புகின்றோம். ஆனால், அதே சமயத்தில் நமது தேகம், மனதின் முடிவற்ற ஆசைகளை நிறைவேற்றிக்கொண்டேபோனால் முக்தியடைவது சாத்யமாகாது. விவேக சூடாமணியில் கூறப்பட்டது போல தூங்கிக் கொண்டிருக்கும் மனிதன் விழிப்பில் இல்லை. தூங்கிக் கொண்டிருக்கும் மனிதன் யார்? அவன் தேகப்பற்று கொண்டவன், தனது தெய்வீக இயல்பை உணராதவன். இதற்கு மாறாக தேக - மன உணர்வுகளின் பொய்யானப் பற்றுகளை நிர்மூலம் செய்பவன் எவனோ, தன்னுடைய தெய்வீகத்தன்மையை உணர்ந்தவன் எவனோ, பேருண்மை நாட்டம் கொண்டவன் எவனோ, அவனே தூங்காமல் இருப்பவன்; அவனுக்குத் தளைகள் கிடையாது; அவன் ஜீவன் முக்தன். ஆகவே, இவ்விரு நிலைகளும் முரண்பாடுடையன.

தேகம் - மனத்தின் தூய்மைப்பாடு On 141
ஸ்தூல உடலில் இருந்து நமது மனதை விலக்கிக் கொள்ள சிரமம் எடுத்துக் கொள்ளும்பொழுது, முக்தியடைவது சாத்யமாகும். இதன் தொடர்பாக விவேக சூடாமணியின் 334-வது சுலோகம் கூறுவதாவது:
பாஹ்யானுஸந்தி பரிவர்த்தயேத் பலம் துர்வாஸனா மேவ ததஸ்ததோஅதிகாம் ஜ்ஞாத்வா விவேகை பரிஹ்ருத்ய பாஹ்யம் ஸ்வாத்மானு ஸந்திம் விததீத நித்யம் இதன் பொருள் வெளியுலகைப் பற்றியச் சிந்தனை அதற்குரிய பயனாகிய கெட்டவாஸனையையே மேன்மேலும் அதிகமாக வளர்த்துவிடும். பகுத்தறிவால் இதையுணர்ந்து வெளியுலகை விலக்கிவிட்டு எக்காலத்தும் ஆத்மானு ஸந்தானத்தை செய்யவேண்டும்.
இந்த சுலோகத்தில் பூரீசங்கராச்சார்ய சுவாமிகள், வெளியுலக விஷயங்களில் இடையறாதச் சிந்தனையைச் செலுத்துவது நமது கெட்ட வாசனையையே மிகுதிப்படுத்தும் என்று சுட்டிக் காட்டுகின்றார். இதற்கு ஏதெனும் பரிகாரம் உண்டா? விடுபடுவதற்கு வழியுண்டா? சந்தேகமில்லாமல் இதற்கு வழியுண்டு. விவேகத்துடன் வெளியுலக விஷயங்களில் இருந்து ஒருவர் விடுபடவேண்டும். இது சற்று எதிர்மறையான மார்க்கம். பூரீசங்கராச்சார்ய சுவாமிகள் ஏற்பு முறையாக சிலவற்றைச் சேர்த்திருக்கிறார். எண்ணங்களை விடவேண்டும் என்று அவர் கூறுகின்றார். ஆனால், அதே சமயத்தில், ஆன்மாவைப் பற்றிய தியானத்தில் ஈடுபட தொடர்ந்தாற் போன்று கவனம் செலுத்தவேண்டும். ஏன் எனில் மனம் ஏதுமற்ற வெற்றிடமாக இருப்பது இயலாது. இவ்விதம் செய்தால் கெட்ட வாசனைகளை விலக்கமுடியும். இல்லாவிடில் எவ்வளவுக்கெவ்வளவு ஒருவர் வெளியுலகத்தை நோக்கித்திரும்புகின்றாரோ, அவ்வளக்கவ்வளவு புறவயச் சிந்தனையாளராக மாறிவிடுகின்றார். பிறகு, வாசனைகள் நாளொரு மேனி பொழுதொரு வண்ணமாக வளர்ச்சி

Page 74
142. Up ஆன்மிக வாழ்க்கைக்கான வழிகாட்டுதல்கள்
யடைகின்றன. இதன் காரணமாக நமது மனப் போராட்டமும் அதிகரிக்கின்றது. இந்தச் சூழலில் ஆன்மாவைப் பற்றிய தியானம் செய்வதென்பது இயலாது. ஏன் எனில் வெளியுலக விஷயங்களுடன் இடைவிடாமல் தொடர்பு கொள்வதென்பது மனதின் போக்காகும்.
விவேகம், வைராக்கியம் இரண்டையும் கொண்டு உண்மை -பொய்மை, நித்தியம் அநித்தியம் என்பனவற்றிற் கிடையேயுள்ள வேற்றுமையை தொடர்ந்து அறிய வேண்டும். விவேகம், வைராக்கியத்தின் துணை கொண்டு நமது உண்மையான தன்மையுடன் இணங்கி இருக்க உண்மையான முயற்சியெடுக்க வேண்டும். இதை நாம் செய்தால் சுயாறுபூதி சாத்யமாகும்.
எல்லையற்ற பிரம்மத்தை, எல்லைக்குட்பட்ட மனதைக் கொண்டு அறிவதென்பது கஷ்டம்தான். முயற்சியுடையார் இகழ்ச்சியடையார் என்பதற்கேற்ப முயற்சி முற்றிக் கனியும் வரை தொடர்ந்து கொண்டேயிருக்க வேண்டும்.
வெளியுலகத் தொடர்பில் இருந்து மனதை வெளியேற்ற வேண்டியதின் அவசியத்தை விவேக சூடாமணி மூலம் பின்வருமாறு அறிவோம். N
பாஹ்யே நிஷித்தே மனஸ ப்ரஸன்னதா மன ப்ரஸாதே பரமாத்ம - தர்சனம் தஸ்மின்ஸுத்ருஷ்டேபவபந்த-நாசோபUர்நிரோத பதவி விமுக்தோ இதன் பொருள் வெளியுலகம் ஒதுக்கப்பட்ட பின் மனதிற்கு தெளிவு ஏற்படுகிறது. மனத் தெளிவு ஏற்பட்டால் பரமாத்ம ஸா கூடிாத்காரம் கிட்டுகிறது. அங்ங்ணம் ஆத்ம ஸாகூ4ாத்காரம் ஏற்பட்டதும் பிறவித்தளை அழிந்து போகிறது. இங்ங்ணம் வெளியுலக ஒழிவானது முக்திக்கு படியாகின்றது.
மேற்கானும் சுலோகத்தில் வெளியுலகத்தில் இருந்து மனதை விலக்கிக் கொள்ளுமாறு நமக்குக் கூறப்பட்டுள்ளது. வெளியுலக

தேகம் - மணத்தின் தூய்மைப்பாடு Op. 143
விஷயங்களில் இருந்த மனதை வெற்றிகரமாக மூடிவிட்டால் என்ன நிகழும்? மனம் அமைதியும், மகிழ்ச்சியும் கொள்ளுகின்றது. அமைதியான மனதில் பரமாத்மாவின் காட்சி எழுகின்றது. ஆனால் பூரீசங்கராச்சார்ய சுவாமிகள் மேலும் சிலவற்றைச் சேர்த்துள்ளார். பரமாத்மாவின் காட்சி மட்டும் போதுமானதன்று. உண்மையான சுயாறுபூதி, திட்டவட்டமான சுயாதுபூதி, பூரணமான சுயாறுபூதி நமக்குக் கிடைக்கவேண்டும்.
ஒருவர் பரமாத்மா தரிசனத்தில் பூரணமாக நிலைத்துவிட்டால், பிறப்பு - இறப்பு எனும் சங்கிலித்தொடர் உடைபட்டுப் போகின்றது. உலகியல் எனும் கடலைக் கடக்க முடிகின்றது. இந்த சுலோகத்தில் "பதவி' என்ற சொல்லிற்கு 'படி அல்லது "வழி" என்பது பொருளாகும். முக்தியடைவது குறிக்கோளாகும். இதற்கு வழி எது? 'பஹிர் நிரோத; வெளியுலகத்தை அடைத்துமூடிவிடுவது. ஆகவே, மீண்டும் இங்கு வலியுறுத்தப்படுவது ஆத்மா அல்லாதவற்றில் இருந்து மனத்தை விலக்கிக் கொள்வதுதான். வழிமுறையில் கவனம் செலுத்தி, வெளியுலகத் தொடர்பை வெற்றிகரமாக விலக்கிவிட்டால், என்ன நிகழும்? நாம் கிட்டத்தட்ட தன்னுணர்வு எனும் சத்தியத்தை நேருக்கு நேர் தரிசனம் செய்வோம். ஆகையினால் வெளியுலக விஷயங்களை அடைத்து மூடிவிடுவது என்பது முக்திக்கான முக்கியமான அம்சமாகும்.
இவ்விஷயம் மேலும் விளக்கமாக யோகவாசிஷ்ட ஸாரத்தில் கூறப்பட்டுள்ளது. தூய்மைப்படுத்தும் பயிற்சியை நாம் மேற்கொள்ளாவிடில் பரம்பொருளின் - சாட்சாத்காரம் - நேருக்கு நேரான தரிசனத்திற்கான முயற்சியில் நாம் நம்பிக்கை வைக்க இயலாது என்று கூறப்பட்டுள்ளது.
யோகவாசிஷ்ட ஸாரத்தில் "சுத்தி நிரூபண பிரகரணம்' அல்லது "துய்மைப்படுத்தும் வழிமுறை' எனும் ஓர் அத்தியாயம் உள்ளது. இதில் பின்வரும் முக்கியமானதொரு சுலோகம் உள்ளது.

Page 75
144 Up ஆன்மிக வாழ்க்கைக்கான வழிகாட்டுதல்கள்
க்வமாம்ஸ் - ருதிராதீனி க்வ த்வம் சைதன்ய விக்ரஹா விஜானன்னபி தேஹே அஸ்மின், ஆத்மா தீயம் ந ஜஹாஸி doubl − இதன் பொருள்: மாமிசமும், ரத்தமும் நிறைந்தத் தேகம் எங்கே? சைதன்ய சொரூபமான 'நீ எங்கே? இதை அறிந்த பிறகும் தேகாத்மாபிமானத்தைத் தியாகம் செய்யாமல் நீ இருந்து கொண்டிருப்பது ஏன்?
"நான் தேகம், தேகமின்றிவேறில்லை" எனும் எண்ணத்தால் ல்லா பக்கங்களிலும் திடமாகக் கட்டப்பட்டுள்ளோம். இந்தக் கட்டை எதிர்க்கும் மனப்போக்கை வளர்த்திட நாம் முயற்சி செய்யவேண்டும். ஞானசொரூபமான வாளைக் கொண்டு உடலோடு நமக்குள்ளத் தொடர்பை துண்டித்து விடவேண்டும். "நான் தூய உணர்வு', "நான் சுத்த சைதன்யம்', 'நான் சைதன்ய விக்ரகம்’ என நாம் இடையறாது நினைக்கவேண்டும். "நான் தேகம், தேகமின்றி வேறில்லை' எனும் எண்ணத்தால் நாம் இந்தச் சமயத்தில் தாக்கப்பட்டுள்ளோம் என்று நினைப்பதற்குப் பதிலாக "நாம் சுத்த சைதன்யம்' எனும் எண்ணத்தை மீண்டும் மீண்டும் வளர்த்துக் கொள்ள முயற்சி செய்யவேண்டும்.
நாம் முக்தியடைய விரும்பினால், ஞானம் எனும் வாள் கொண்டு கட்டுகளை வெட்டி எறியவேண்டும். 'நான் தேகமோ, மனமோ, இந்திரியங்களோ அல்ல; நான் சத் - சித் - ஆனந்தம்; தூயவுணர்வு' எனும் ஆக்கப்பூர்வமான மனோபாவத்தை வளர்க்க வேண்டும். நாம் இதைச் செய்தால், இந்த மனோபாவத்தில் நிலைபெற்றிருந்தால், பேரின்ப அருள் பெற்று மகிழ்ச்சிபெறுவோம் என்பதில் ஐயமில்லை.
நாம் சச்சிதானந்த சொரூபம் என்று கூறப்படுகின்றோம். நாம் இயற்கையிலேயே தெய்வீகப் பேரின்பம், தெய்வீக ஆனந்தம் உடையவர்கள். இதை நாம் மறப்பது முட்டாள்தனமல்லவா? "நாம் சைதன்ய விக்ரகம்" என்பதை மறப்பதேன்? நாம் இந்தத் தேகம் அல்லது மனம் என்று கீழ்நோக்கி நினைக்கும் அளவிற்கு நம்மை

தேகம் - மனத்தின் தூய்மைப்பாடு Up 145
நாமே தாழ்த்திக் கொண்டு வீழ்ச்சியடைவதேன்? இந்த உடல் அமைப்பின் கூறுகளைப் பற்றிச்சிந்திப்போம். இது, அருவருப்பான அசுத்தப்பொருள்களால் அமைந்தது.இவற்றுடன்தான்நம்மைநாம் அடையாளப்படுத்திக்கொள்கின்றோம். அழியக்கூடிய இந்த உடல் ஒருநாள் எரியூட்டப்பட்டு சாம்பலாகப் பொசுங்கிப் போவது. ஆனால் நமது உண்மையான தன்மையைப் பொறுத்த வரையில் நாம் 'சைதன்ய விக்ரகம்'. இத அழிவில்லாதது, ஆன்ம விழப்புள்ளது. இந்த எண்ணத்தை வளர்த்துக்கொள்ள வேண்டிய நாம் தெய்வீகநிலையில் இருந்து மிருகதிலைக்கு இழிந்து தாழ்ந்திடும் முட்டாள்தனத்தை நமக்கு நாமே அனுமதித்துக் கொள்கிறோம். சதை, எலும்பு எனும் நோக்கில் நினைக்கின்றோம். "சைதன்ய விக்ரக"மான -ஆத்மாவின் சுயவிழிப்புணர்வு ஒளிவீசும் உறைவிடமான - நாம் இவ்வுண்மையை மறந்து, நமக்கு சம்பந்தமில்லாவிடங்களில் பற்று கொள்கின்றோம். எவ்வளவு முட்டாள்தனமானது இது தூய்மையான உணர்வாகிய நமது உண்மையானத் தன்மைக்கும், சதை இரத்தமான 'நாம்' எனும் உணர்விற்கும் இடையே எத்தகைய மகத்தான வேறுபாடு உள்ளது! ஆகவே, நாம் தூய உணர்வு என்பதைத் தெளிந்து தேர்க! நாம் தேகம் இல்லை, சதைக்குவியல் இல்லை. இவையெல்லாம் எத்தகைய அவலம்? ஓ! மனமே! இதைச் சற்று சிந்தித்துப் பார் -என்பதையெல்லாம் நாம் அறியவேண்டும்.
உடல்பொறியுள்ள முயிரிரு ளெல்லாஞ் சடமசத்தானதாலுந்தீபற சத்தான நானல்ல வுந்தீபற - என்று ரமண மகரிஷியின் உபதேசவுந்தியார் உபதேசமும் இங்கு நினைவுகூர்வதற்குரியது. "பஞ்ச கோசங்களும் சுய அறிவோ, சுய இருப்போ அற்றவையாகையால் அவை உண்மையிருப்பான (சத்மாத்திர) நான் (ஆன்மா) ஆகா' என்பது இவ்வுபதேசத்தின் பொருளாகும்.

Page 76
146 es ஆன்மிக வாழ்க்கைக்கான வழிகாட்டுதல்கள்
நாம், சைதன்ய விக்ரகம்' என்பதை உணர்ந்தறிவதற்கு என்ன செய்யவேண்டும் என்பதைப் பற்றி மற்றொரு சுலோகம் கூறுகின்றது. உடலில் இருந்து நம்மை நாம் வேறுபடுத்திக் கொள்ளவேண்டும். நாம் 'சைதன்ய விக்ரகம்", விழிப்புணர்வு பெற்ற வடிவம், என்று நினைக்க வேண்டும். இவ்வுண்மையில் இடையறாது ஊன்றியிருத்தல் வேண்டும். நமது இருப்பின் ஒவ்வொரு கணத்திலும் இடைவிடாத இந்த எண்ணப் பயிற்சி அமைதல் வேண்டும். எப்படியோ நாம் உடல்வுணர்வை வேறுபடுத்தி தூயஉணர்வில், துன்பத்தில் இருந்து விடுபட்டு இருந்து நாம் 'சைதன்ய விக்ரகம்', தேகம் அன்று என்று நினைக்கும் நிலையை அடைந்துவிட்டப் பிறகு என்ன நேரிடும்? நாம் 'பிரம்மம்' ஆகிவிடுகின்றோம். சைதன்ய விக்ரமாகிவிடுகின்றோம். ஒவ்வொன்றும் நாமே வெளியுலகப்பற்று, அனைத்து ஆசைகள் முதலானவற்றைக் கொள்ளும் இந்த உடல் - மனப்பற்று அற்பத்தனமானப் பதராகி விடுகின்றது.
உடற்பற்றை நிர்மூலமாக்க வேண்டியதின் அவசியத்தைப் பற்றி அடிக்கடி குறிப்பிடப்பட்டு வரும்பொழுது சில கேள்விகள் எழக்கூடும்? வெளியுலகத்தில் இருந்து மனதை விலக்கிக் கொள்ளவேண்டும் என்பதை ஏன் வற்புறுத்த வேண்டும்? வெளியுலகத்தில் என்ன தவறு உள்ளது? உலகத்தின் நல்லனவற்றை அனுபவித்துக் கொண்டு சாதனைப்பயிற்சியை செய்யமுடியாதா? உலகத்தில் இருந்து மனதை விலக்கிக் கொள்ளவேண்டும் எனும் மறுப்பு முறையான அறிவுரை எதற்கு? - இவை சில கேள்விகள். இந்தக் கேள்விகள் எழுப்பப்படும் பொழுது நாம் இவற்றின் பின்னணியைக் கவனிக்கவேண்டும். யாருக்காக எவர் எழுப்புகின்ற கேள்விகள் இவை.
நாம் இங்கே அக்கறை கொள்வதெல்லாம்,இப்பிறவியிலேயே இறையுணர்வை அடையவிரும்பும் தீவிரமான சாதகர்களின் ஆன்மிக வேட்கையைப் பற்றித்தான். உலகியல் வாழ்க்கையில் பற்று கொண்டு ஆன்மிக விஷயங்களில் ஆர்வமற்ற

தேகம் - மனத்தின் தூய்மைப்பாடு “ »“ “ * o 147
லட்சக்கணக்கானவர்களைப் பற்றி நமக்கு அக்கறையில்லை. ஆன்மிகப் பேருண்மையை அறியவிரும்பும் சாதகர்கள், வெளியுலகத்தில் இருந்து மனத்தை விலக்கவேண்டும் என்பது மறுப்பு முறையிலான அறிவுரை ஆகாது என்பதை எளிதில் புரிந்துக்கொள்ளுவார்கள். உலகியல் பார்வையில் வேண்டுமானால் மறுப்பு முறையிலான அறிவுரையாக இருக்கலாம். W கண்ணுக்குத் தெரியும் விஷயங்களில் இருந்து மனத்தை விலக்கிக் கொள்வது மட்டும் போதாது. நமது தெய்வீக சொரூபத்தில் நமது கவனத்தை ஒருமுகப் படுத்தவும் வேண்டும். அதாவது உலக விஷயங்களில் எதிர்மறையானப் போக்கில் மனத்தை விலக்கிக் கொண்டு நமது தெய்வீக சொரூபத்தை ஆக்கபூர்வமான முறையில் தியானம் செய்யவேண்டும். மனத்தை விலக்கிக் கொள்ளவேண்டும் என்று சொல்லப்படும் அதே சமயத்தில் நமது உண்மையான இயல்பின் மீது நாம் தியானம் செய்யவேண்டும் என்பதும் திரும்பத் திரும்பச் சொல்லப்படுகின்றது. உண்மையான நான் மீது தியானம் செய்வது மூலம் பரமாத்மாவை நாம் அறிகின்றோம்.
மற்றொரு கேள்வி எழக்கூடும்? உயர்ந்த பேருண்மையான பரமாத்மாவை, ஏதாவதொரு சாதனை மூலம் அடையமுடியுமா? என்பது மற்றொரு கேள்வி. எவ்விதச் சாதனையும் ஓர் எல்லைக்கு உட்பட்டதாகும். ஆனால் பரமாத்மாவோ எல்லையற்றது. அப்படியானால் எல்லையற்றதை, நம்மைப் போன்ற அழிவிற்குட்பட்ட மனிதர்களின் வரையறுக்கப்பட்ட முயற்சிகளால் நாம் உணரமுடியுமா? மனத்தை விலக்கிக் கொள்வது என்பது முக்தியடைவதற்கான நேரடிக் காரணமாகாது. இது, தொடர்ச்சியான பல விளைவுகளை ஏற்படுத்துகிறது. இவையாவும் இறுதியில் சாதகனை முக்திக்கு அழைத்துச் செல்கின்றது. இதன் பல்வேறு கட்டங்களை ஒன்றன்பின் ஒன்றாக அறிவோம்.

Page 77
148 Q. ஆன்மிக வாழ்க்கைக்கான வழிகாட்டுதல்கள்
உலக விஷயங்களை நோக்கி மனமானது தீவிரமாகப் பாய்ந்து செல்கின்றது. இதில் இருந்து மனத்தை விலக்கவேண்டும். இவ்வாறு விலக்கப்பட்டதும் மனம் அமைதியும், தெளிவும் அடைகின்றது. எந்த அளவிற்கு மனம் வெளியுலக விஷயங்களில் இருந்து விலக்கிக் கொள்ளப்படுகின்றதோ அந்த அளவிற்கு மனமானது புலன் இன்ப விஷயங்களை நாடி ஓடாது. வெளியுலகில் இருந்து மனம் முற்றிலும் விலக்கிக் கொள்ளப்படும் பொழுது நாம் உயர்ந்த குறிக்கோளாகிய ஆன்மிக வாழ்க்கையை அடைகின்றோம்.
மேலும் ஒரு கேள்வி எழக்கூடும். சாதாரண மனிதனுக்கும், ஆன்ம ஞானம் பெற்றவருக்கும் இடையே உள்ள வித்தியாசம் என்ன? ஆன்ம ஞானி கூட உலகியல் விஷயங்களிடையே வாழவேண்டியுள்ளது. நாம் உண்மையாக மனத்தை உலகியல் விஷயங்களில் இருந்து விலக்கிக் கொள்ள முடியுமா? இங்கும் அங்கும் எங்கும் உலகியல் விஷயங்கள் சூழ்ந்திருக்க அதனுள் வாழ்ந்துக்கொண்டு இருக்கின்றோம். உலகியல் விஷயங்கள் எவருக்காகவும் இல்லாமல் இருக்கபோவதில்லை. அப்படியானால், வெளியுலகத்தில் இருந்து விலக்கிக் கொள்வது என்பதற்கு என்ன பொருளாகும்?
ஆன்ம ஞானி'உலகியல் விஷயங்களிடையே வாழ்ந்தாலும், அவருடைய நோக்கு வித்தியாசமானது. ஒவ்வொன்றிலும் ஆத்மா உள்ளது எனும் ஆன்மிகப் பார்வை அவருடையது. ஆத்மதிருஷ்டி, பிரம்மதிருஷ்டி அவருடையது. "நோக்கும் திசையெல்லாம் நாமன்றி வேறில்லை, நோக்க நோக்கக் களியாட்டம்' என்பது பிரம்மதிருஷ்டி, மனதில் பலவிதமான பதிவுகளை ஏற்படுத்தும் உலகியல் விஷயங்களிடையே ஆத்மஞானி வாழ்ந்தாலும் விவேகம் எனும் ஞான வாள் கொண்டு புலன்களை இழுக்கும் கவர்ச்சிகளை விலக்கமுடியும். அவர் உலகியல் விஷயங்களின் அடித்தள ஆழம் வரை ஊடுருவிப் பார்க்கும் ஆற்றல் கொண்டு அவையாவும் வெறும் தோற்றங்களே, பிரம்மம் ஒன்றே உண்மை என்பதை அறிவார். இந்த சர்வாத்மபாவம் ஆன்ம ஞானியை, சாதாரண மனிதனிடமிருந்து வேறுபடுத்துகின்றது.

தேகம் - மனத்தின் தூய்மைப்பாடு . Urug 149
அறியாமையால் சூழ்ந்த மனிதனிடத்தில் உலகியல் விஷயங்கள் புலன் இன்ப வேட்கைகளை உண்டாக்குகின்றன. அவனுக்கு உலகியல் விஷயங்கள் அவனைக் கவர்ந்திழுப்பதாகத் தோன்றுகின்றது. அஞ்ஞானத்தால், உலகத் தோற்றத்தின் பொருட்கள் அவனுக்கு முக்கியத்துவம் வாய்ந்தனவாகத் தோன்றுகின்றது. இதற்கு மாறாக ஞானிக்கோ அவை உண்மையிலேயே முக்கியத்துவம் இல்லாதவையாக ஒதுக்கப்படுகின்றன. உலகியல் விஷயங்கள் ஆன்ம ஞானியின் முன் தோன்றினாலும், அவற்றைப் பொருட்படுத்தவோ, அவற்றினால் கலக்கமடைவதோ இல்லை. ஏன் எனில் அவர் பிரம்ம திருஷ்டியுடையவர். வேற்றுமைகளுக்கிடையே ஏகத்வம் காணும் திறன் பெற்றவர் அவர் எந்தச் சூழலையும் அடக்கி ஆளும் தலைமைப் பண்புடையவர் அவர். உலகியல் விஷயங்கள் அவரைக் கவர்ந்திட முயன்றாலும், அதற்கு அனுமதியளிக்கமாட்டார் அவர். இதுதான் ஞானிக்கும், அஞ்ஞானிக்கும் இடையே உள்ள வித்தியாசம்.
மேலும் முக்கியமானதொரு விஷயத்திற்கு வருவோம். அதாவது, சிந்தனை, சொல், செயல் மூன்றிலும் தூய்மையை முற்றிலுமாக கடைப்பிடிக்கவேண்டும் என்பதே அந்த விஷயம். நாம் கடவுளை முடிவில்லாத, தடையில்லாத, ஆற்றொழுக்கான வகையில் சிந்திக்காவிடில் ஆன்மிக முன்னேற்றம் அல்லது ஆன்ம மலர்ச்சிக்கு வாய்ப்பில்லை. யார் இதைச் செய்யமுடியும்? நாம் கடவுட் சிந்தனைக்கு முயற்சி செய்வோம். நமது பிரார்த்தனை அறையில் அல்லது கோயிலில் தியானத்திற்கு அமரும்பொழுது நூற்றுக்கணக்கான விரும்பத்தகாத எண்ணங்கள் நமது மனங்களில் படையெடுத்து வருவதை நம்மில் பெரும்பாலோர் நமது அனுபவத்தில் கண்டுள்ளோம்.
"கடவுளே! இதுதான் தக்க சமயம், தங்களுடன் கூட்டுறவு கொள்ளுவதற்கு' என்று நாம் கடவுளிடம் தியானம் செய்யவேண்டும். நாம் கடவுளை நினைக்கும்போது, அந்த சில

Page 78
150 gy ஆன்மிக வாழ்க்கைக்கான வழிகாட்டுதல்கள்
வினாடிகளில் அல்லது நிமிடங்களில் கடவுட் சிந்தனை வரலாம். ஆனால், அந்த வினாடிகள் அல்லது நிமிடங்கள் கழிந்தப் பிறகு விரும்பத்தகாத எண்ணங்கள் குடியேறிவிடும். இவையெல்லாம் மனமாசுக்களின் அறிகுறிகள். மனம் தூய்மையாக இருந்தால், கடவுள் நினைவு நம்மிடம் நிரந்தரமாக நிலவும். ஆகவே, தூய்மை மிக மிக அவசியம். அதனால்தான் இயேசுநாதரும் தமது மலைப் பிரசங்கத்தில் 'இருதயத்தில் சுத்தமுள்ளவர்கள் பாக்கியவான்கள்; அவர்கள் தேவனை தரிசிப்பார்கள்' என்று சுவிசேஷச் செய்தியாக வழங்கினார். ஆகவே எவ்விதமான ஆன்மிக வெளிப்பாட்டிற்கும் மனத்தூய்மை இன்றியமையாததாகும். ஆனால் பலவகையான புலனின்ப வேட்கைகள் காரணமாக, இந்தத் தூய்மையை நாம் பெறவியலாது. அறத்தின் மேன்மையை வலியுறுத்துமிடத்தில் திருவள்ளுவர், "மனத்துக் கண் மாசிலன் ஆதல் அனைத்து அறன்" என்று குறிப்பிடுகின்றார்.
பலவித புலன்" இன்ப வேட்கைகள் காரணமாக, நாம் மனத்துய்மை பெறவியலாத நிலையில் நாம் செய்ய வேண்டியது ஒன்றுண்டு. கடவுளுடன் நிரந்தரமாக இணைந்திருக்க வேண்டியது ஒரே வழியாகும். இதை நன்கு புரிந்துக் கொள்ள வேண்டுமானால் பூரீராமகிருஷ்ண பரமஹம்சரின் அமுத மொழியை கருத்தில் கொள்ளவேண்டும். "தந்திக் கம்பி அறுந்து விழுந்துவிட்டால், அது பழுது பார்க்கப்பட்டு சீர் செய்யப்படும் வரையில் தந்திக்கு கொடுக்கப்பட்டச் செய்தி சேர வேண்டிய இடத்தில் சேராது" என்பது பரமஹம்சரின் அமுத மொழி. ஆகவே, இணைந்திருத்தலில் துண்டிப்பு இல்லாமல் பார்த்துக் கொள்ளவேண்டும்.
ஜபம்,தியானம் செய்து கொண்டிருக்கும்பொழுது நம்மனதில் ஆசைகள் நிறைந்திருந்தால், நமது எல்லா சாதனைகளும், பஜனைகளும் வீணேயாகும். தண்ணீர் நிறைந்த குடத்தை உதாரணத்திற்கு எடுத்துக் கொள்வோம். குடத்தில் ஒட்டை விழுந்துவிட்டால் எவ்வளவு தண்ணீர் ஊற்றினாலும் , அது

தேகம் - மனத்தின் தூய்மைப்பாடு U9 151
வெளியேறி விடுகின்றது. குடம் நிரம்புவதில்லை. இவ்வாறே சாதனைகளும், நாம ஜபங்களும் ஒழுகிப் போய்விடுகின்றன. ஜபம், தியானம் செய்யும் பொழுது, உடல் - மனப் பற்றுகள், பலவகையான வாசனைகள், கவர்ச்சிகள் எனும் ஒட்டைகள் ஏற்படும் பொழுது, அவற்றின் வழியே ஜபம், தியானத்தின் பலன்கள் யாவும் வெளியேறி விடுகின்றன. தியானம் எனும் குடத்தில் விழும் ஒட்டைகளை அடைக்க நாம் சிரமப்படவேண்டும். ஒட்டைகளை வைராக்கியத்தினால் அடைக்க வேண்டும். அப்பொழுதுதான் தியானம் நிறைவேறும்.
பற்றுகளை விட்டாலொழிய ஆன்மிக முன்னேற்றம் காண முடியாது என்பதை பரமஹம்சரின் பின்வரும் உவமை மூலம் நாம் மிகத் தெளிவாக அறிய முடிகின்றது. "கரையோரத்தில் நங்கூரமிட்ட படகை குடிகாரன் போல் எவ்வளவுதான் நாம் வலித்தாலும், அது அசைவதில்லை. இதைப் போலவே நாம் எவ்வளவுதான் ஜபம், தவம் முதலானவற்றை விடாப்பிடியாக செய்து வந்தாலும், நாம் நமது பற்றுகளை நிர்மூலமாக்கச் சிரமம் எடுக்காவிட்டால் எவ்வித முன்னேற்றத்தையும் காணமுடியாது.".
ஒருவர் இறையுணர்வை அடையும் பொழுது இதயமுடிச்சுகள் அவிழ்ந்து விழுகின்றன என்று சாந்தோக்ய் உபநிடதம் கூறுகின்றது. அஞ்ஞானம் காரணமாக புத்தியைப் பற்றிக் கொண்டிருக்கும் சம்ஸ்காரங்கள், ஆசைகளின் தொகுப்பு, இதய முடிச்சுகளாகும். இந்த இறையுணர்வு பெற ஒருவர் எப்பொழுதும் கடவுள் நினைவிலேயே இருக்கவேண்டும். இவ்வித நினைவை 'துருவாஸ்மிருதி' என்று தத்துவார்த்தமாகக் கூறுவார்கள். அசைக்கமுடியாத, உறுதியான நினைவு துருவாஸ்மிருதி'யாகும். சுத்தமான ஆகாரம் சாப்பிட்டாலொழிய இது சாத்யமில்லை. ஆகாரத் தூய்மையில் இருந்து எண்ணத் தூய்மையும், எண்ணத் தூய்மையில் இருந்து இடைவிடாத கடவுள் நினைப்பும் வருகின்றது. இதனால் நமது கட்டுகள் நீங்க 'விடுதலை’ பெறுகின்றோம். சுவாமி விவேகானந்தர், பக்தியோகப்

Page 79
152 up ஆன்மிக வாழ்க்கைக்கான வழிகாட்டுதல்கள்
பேருரையில் உள்ளத் தூய்மைக்கு ஆகாரத் தூய்மை துணை செய்கிறது என்பதை விளக்குமிடத்தில், 'நம் உடலமைப்பில் நாம் உணவாகப் பெறும் பொருள்களால் நம் உள்ளத்தின் அமைப்பு உண்டாகிறது. ஆகையால், நாம் உண்ணும் உணவில் நாம் மிக விழிப்புடன் இருக்கவேண்டியவர்களாகிறோம்' என்று கூறியுள்ளார்.
இங்கு "ஆகாரம்' என்ற உபநிடதச் சொல்லிற்கு பூரீராமானுஜரும், பூரீசங்கராச்சாரியாரும் இரு வேறு விளக்கங்களைக் கூறியுள்ளனர். பூரீராமானுஜர் வைதிக வழியில் சாப்பிடும் உணவு எனும் பொருளில் சாத்வீக உணவு முறைகளின் விதிகளுக்கு ஏற்ப விளக்கமளித்துள்ளார். பூரீசங்கராச்சாரியார் 'சாப்பிடும் சாத்விக உணவு' என்ற விளக்கத்தைத் தராமல், ஒழுக்கம் வழிபட்ட, மனோதத்துவ நோக்கில் "ஆகாரம்' என்பதற்கு விளக்கம் தருகின்றார். அவர், சேர்க்கப்படுவது ஆகாரம் என்கிறார். அதாவது ஆன்மானுபவத்திற்காக ஒலி முதலிய புலனறிவுகள் சேர்க்கப்படுகின்றன. ரூப, ரஸ், சப்த, கந்த, ஸ்பரிசம் வழியாக சேர்க்கப்படுவது "ஆகாரம்' ஆகும். இதை விளக்க சுவாமி விவேகானந்தர் கூறியதாவது: "புலனறிவில் சேர்கிற அறிவு தூய்மைப்படுதல், உணவுத் தூய்மை (ஆகாரம்) ஆகும். 'உணவுத் தூய்மை" என்னும் சொற்றொடருக்குப் புலனறிவை, பற்று, வெறுப்பு, மயக்கம் முதலியவற்றின் கலப்பில்லாமற் செய்வது என்பது பொருள். ஆகையால் அந்த அறிவு அல்லது சுத்தமாக்கப்பட்டபடியால் - அருந்துபவரின் சத்துவம் , அந்தக்கரணம் - தூய்மையாகிறது. இவ்வாறு சத்துவம் தூய்மைப்படுத்தப் படுவதால், சாத்திரங்களில் கூறப்படும் ஈசுவரனது உண்மை இயல்பில் அவனுடைய இடையறாத நினைவு ஏற்படுகிறது."
உணவுப் பழக்கவழக்கத்தில் மட்டும் தூய்மையைக் கொள்வது மட்டும் போதாது. இவ்விடத்தில் பூரீராமகிருஷ்ணர் கூறிய பின்வரும் அருளுரையொன்று நினைவிற்குரியது. பன்றி

தேகம் - மனத்தின் துய்மைப்பாடு **ஜ், Qup 1953
இறைச்சியை ஒரு மனிதன் சாப்பிட்டாலும், அவன் மனம் ஆத்மா அல்லது கடவுளிடத்தில் லயித்து இருந்தால் அவன் கடவுள் அருளுக்குப் பாத்திரமாவான். ஒருவன் சைவ உணவை மட்டும் சாப்பிட்டாலும், அவன் மனம் காம - காஞ்சனத்தில் லயித்திருந்தால் அவன் வெறுப்பதற்குரியவன்.
"ஆகாரம்' என்பதைப் பற்றி சாந்தோக்ய உபநிடதம் என்ன கூறுகின்றது என்பதைப் பார்ப்போம்.
ஆஹார ஸ்த்தெள ஸத்வ ஸத்தி ஸத் தெள த்ருவா ஸ்மிருதி ஸ்மிருதி லம்பே ஸர்வக்ரந்தீனாம் விப்ரமோக்ஷா இதன் பொருள் ஆகாரம் சுத்தமானால், அந்தக்கரணம் சுத்தமாகும்; அந்தக்கரணம் சுத்தமானால் (கடவுளின்) நினைவு நிலைபெறும்; நினைவு நிலைபெற்றால் எல்லாக் கட்டுகளும் தளர்ந்து போகும்; முக்தி கிடைக்கும்.
ஆகவே தூய்மை, சத்வ சுத்தி உலகத்தின் எல்லா ஞானிகளாலும், அநுபூதியாளர்களாலும் மீண்டும் மீண்டும் வலியுறுத்துப்படுகின்றது. சுத்தமான கண்ணாடிதான் முகத்தைப் பிரதிபலிக்கும்.
ஐம்புலன்களிடம் நாம் எச்சரிக்கையுடன் இருக்கவேண்டும். எல்லா புலன்களும் சரியாக வழிநடத்தப்பட வேண்டும். எந்தப் புலன்வழியாகவும் எவ்விதமான அசுத்த எண்ணங்களையும் நாம் பெறக்கூடாது. நம்மிடம் அசுத்த எண்ணங்கள் பல ஏற்கனவே , இருந்தாலும், அவைகளை சுத்தமான எண்ணங்களைக் கொண்டு வென்று செயலற்றதாக ஆக்கிவிடவேண்டும். எப்பொழுதும் வெளியுலகில் இருந்து சுத்தமான எண்ணங்களையே எடுத்துக் கொள்ளவேண்டும். • -
இங்கு ஒரு கேள்வி எழலாம். அதாவது, "நான் கெட்ட சம்ஸ்காரங்களைப் பெற்றிருக்கின்றேன்; என்னுடைய மனமானது கெட்ட எண்ணங்களாலேயே பெருமளவிற்கு அமைந்துள்ளது.

Page 80
S4 Up ஆன்மிக வாழ்க்கைக்கான வழிகாட்டுதல்கள்
எவ்வளவுதான் நான் முயற்சி செய்தாலும் என்னால் அசுத்தமான எண்ணங்களைப் பெறாமல் இருக்க முடியவில்லை." என்று ஒருவர் கேட்கலாம். இதற்கான விடையை சுவாமி விவேகானந்தர் பின்வருமாறு அளித்துள்ளார்.'அழுக்கை, அழுக்கால் சுத்தப்படுத்த முடியுமா? பாவம், பாவத்தைக் கொல்லமுடியுமா? பலவீனம், பலவீனத்தை நீக்கமுடியுமா?" இந்த எதிர்க்கேள்விகளால் நமக்கு வேண்டிய விடைகள் கிடைக்கின்றன.
மனத்தைத் தூய்மைப்படுத்துவதென்பது, உண்மையில் சம்ஸ்காரங்களை தூய்மைப்படுத்துவதாகும். ஆசைகள், இயல்புணர்ச்சிகள், உணர்ச்சி வேகங்கள், வாசனைகள்யாவும் சம்ஸ்காரங்களே. ஒவ்வொரு செயலும் ஒவ்வொரு சம்ஸ்காரத்தை மனத்தில் உண்டாக்கும். இவற்றைத் தூய்மைப்படுத்துவதென்பது மனத்தைத் தூய்மைப்படுத்துவதாகும்.
நம்மிடம் அசுத்தமான எண்ணங்கள், அசுத்தமான சம்ஸ்காரங்கள் இருந்தால் அவற்றை வலியுறுத்திப் பேச வேண்டாம். அதனால் நமக்கு பயனேதும் இல்லை. அவ்வாறு செய்வது கூட மனோதத்துவரீதியில் தவறாகும். "நான் குழந்தைப் பருவம் முதற்கொண்டே கெட்டப் பழக்கம் உடையவனாக இருக்கின்றேன். இப்பொழுதும் அந்தப் பழக்கம் நீடிக்கிறது" என்று ஒருவர் கூறும் வழக்கம் என்பது நமது இரண்டாவது இயற்கையான சுபாவம். ஆனால், அதைவிட மகத்தான உண்மை உள்ளது. அது, அந்த வழக்கத்தைச் செயலற்றதாக்க வல்லது. வழக்கம் என்பது நமது இரண்டாவது இயற்கையான சுபாவம் என்றால், நம்மிடம் முதலாவது இயற்கையான சுபாவம்கூட உள்ளதுதானே! அது என்ன? நமது உண்மையான சொரூபம் தெய்வீகமானது. இதுதான் முதலாவது இயற்கையான சுபாவம். இதை 'சைதன்ய விக்ரகம்" என்று நாம் ஏன் வலியுறுத்தக்கூடாது? நம்முடைய சரீர பலவீனங்களில் மட்டுமே நாம் நம்மை ஏன் இணைத்துக் கொள்ளவேண்டும்? சரீர ஆசைகள் காரணமாக நாம் அசுத்த எண்ணங்களைப் பெறுகின்றோம் என்றால், நாம் 'சைதன்ய

தேகம் - மனத்தின் தூய்மைப்பாடு up 15S
விக்ரகம்' என்பது ஏன் உண்மையாகாது? நாம் இயற்கையிலேயே
தெய்வீகமாவோம். இந்தத் தெய்வீகம் நமது பிறப்புரிமையல்லவோ? ஆகவே, இந்த ஆக்கபூர்வமான மனோபாவத்தை நாம் வளர்க்கவேண்டும். அவ்வாறு
செய்வோமானால் அனைத்து எண்ணங்களையும் வென்றிட (piqujub.

Page 81
ஆன்மிக வாழ்க்கைக்கான வழிகாட்டுதல்கள் ap 156
சுயக்கட்டுப்பாடே, ஆத்ம ஞானத்திற்கு திறவுகோல்
ஆன்மிக வாழ்க்கையில் எவ்வித முன்னேற்றமும் காண தங்களால் இயலாது என்று சிலர் நினைக்கின்றனர். தாங்கள் கெட்ட சம்ஸ்காரங்களுடன் (மனோ விருத்திகள்)பிறந்து விட்டதாக நினைக்கின்றார்கள். அதனால் தங்கள் வாழ்க்கை தோல்வியில் முடியும் என்று நினைக்கின்றார்கள். இவ்வாறு நினைப்பது தவறான வழிமுறையாகும். இவ்வித உணர்வை ஆக்கபூர்வமான எண்ணங்களைக் கொண்டு செயலிழக்கச் செய்ய வேண்டும். இதற்காகத்தான் நம்முள் இருக்கும் தெய்வீகத்தை நாம் திரும்பத் திரும்ப வலியுறுத்த வேண்டியுள்ளது. தூய்மை என்பது நமது பிறப்புரிமை என்று நாம் நினைக்க வேண்டும். நாம் அனைவரும் தூய்மையுணர்வுடையோர்கள்.
நாம் தெய்வீகம் பொருந்தியவர்கள் என்று நினைத்தாலும் கூட நாம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். விழிப்புடன் இருக்க வேண்டும். சில சந்தர்ப்பங்களில், பெருந்தவறுகள் செய்துவிடுகின்றோம். வெளியுலகத் தொடர்பினால் முக்கியத்துவமற்ற எண்ணங்கள் சிற்றலைகளாக மனதில் எழுகின்றன. சிறிய மனக்கிளர்ச்சிகள் தோன்றுகின்றன. இந்தச் சிறிய மனக்கிளர்ச்சிகள் எமக்குத் தீங்கு செய்யாது என்று நினைத்து நாம் அவற்றை ஒதுக்கிவிடுகின்றோம். அது சிறியதாகஇருந்தாலும், பார்வைக்கு முக்கியமற்றதாகத் தெரிந்தாலும், நாம் அதை அறியாது இருந்தாலும் முடிவில் அது நமக்குபெருந்தீமை செய்துவிடும். பற்று

157 up சுயக்கட்டுப்பாடே, ஆத்மஞானத்திற்கு திறவுகோல்
எந்த வடிவத்தில் இருந்தாலும், அது சாதகனின் ஆன்மிக வீழ்ச்சியைக் கொண்டுவர போதுமானதாகும். நாம் மிகக் கவனமாக தீங்கு தரும் தூண்டுதல்கள் அனைத்தையும் விலக்க வேண்டும். உயர்ந்த எண்ணங்களில் மனதை ஈடுபடுத்தப் பாடுபட வேண்டும். கீழ்த்தரமான மனோபாவங்களும், உணர்ச்சிகளும் நம்மை வெற்றி கொள்ள எவ்வித சந்தர்ப்பத்தையும் நாம் தந்துவிடக்கூடாது.
இராமகிருஷ்ண மிஷனின் ஆறாவது பெருந்தலைவர் சுவாமி விரஜானந்தாஜி மகராஜ் அவர்கள் மந்திர தீட்சை பெற்ற சீடர்களுக்காக பெரும்பயன் தரக்கூடிய நூலொன்றையும் படைத்தார். பிறகு பொதுமக்களுக்காகவும் அந்த நூல் "பரமார்த்த பிரசங்கம்' எனும் தலைப்பில் வெளிவந்தது. இந்த நூலில் மிகச் சரியாகவே சுவாமி விரஜானந்தாஜி மகராஜ் அவர்கள் சாதகர்கள் அனைவரையும் பின்வருமாறு எச்சரித்துள்ளார்கள்.
"எப்பொழுதும் விழிப்புடன் இருங்கள், ஒரு கணம் மனத்தை நம்பாதீர்கள். சூட்சமமான முறைகளில் தீமையானது நல்லொழுக்க வடிவத்தில் அல்லது கருணை வடிவத்தில் அல்லது நட்பு வடிவத்தில் நம்மை தந்திரமாக ஏமாற்றும்.' சில சந்தர்ப்பங்களில் நாம் இப்படியும் நினைப்போம்; "நான் சிலருக்கு உதவ விரும்புகிறோம். இது என்னுடைய கடமை; என்னுடைய கருமம், அல்லது நட்பிற்காகத் தேவைப்படுவது." ஆனால் இந்த நினைப்பு, நமது வீழ்ச்சிக்குக் காரணமாகலாம். கருணை வடிவில், கடமையுணர்வில் அல்லது தொண்டுள்ளத்தில் செல்லும் நம் நினைப்பு, குறிப்பிட்ட ஒரு மனிதனிடம் கொள்ளும் பற்றாகிவிடும். பற்றை எந்த வடிவத்திலும் ஏற்பது இறுதியில் சாதகருக்கு தடையாகவே அமையும் அல்லவா? ஆகவே, இவ்விஷயத்தில் நாம் மிக மிக விழிப்புடன் இருக்க வேண்டும்.
நண்பர்களை தேர்ந்தெடுப்பதில் கவனமின்மை காரணமாக ஏற்படும் விளைவுகளை விளக்கும் நகைச்சுவையான கதையொன்று உண்டு. ஒரு சமயம் அராபியன் ஒருவன் கூடாரம் ஒன்றை அமைத்தான். அங்கு வந்த ஓர் ஒட்டகம் கூடாரத்தின்

Page 82
ஆன்மிக வாழ்க்கைக்கான வழிகாட்டுதல்கள் uno 158
வாயில் வழியே தன் மூக்கை நீட்டியது. இதைக் கண்ட அந்த அராபியன் ஒட்டகத்திடம், "உன்னை நான் அனுமதிக்க மாட்டேன், இந்தக் கூடாரம் என்னுடையது, மிருகங்களுக்காக அன்று' எனக் கூறி ஒட்டகத்தை உள்ளே அனுமதிக்க மறுத்தான். ஆனால், ஒட்டகமோ, "தயவு செய்து என்னை அனுமதிக்கவும்; என் மூக்கை மட்டும் உள்ளே நுழைத்துக் கொள்கிறேன்" என்று கெஞ்சியது. "மூக்கு மட்டும்தானே' என்று அராபியன் அனுதாபப்பட்டு ஒட்டகத்தின் வேண்டுகோளுக்கு இணங்கினான். ஆனால், ஒட்டகமோ மூக்கை மட்டுமல்லாமல் உடல் முழுவதையும் கூடாரத்திற்குள் நுழைத்துவிட்டது. இதைக் கண்டு கோபமடைந்த அராபியன் ஒட்டகத்தை வெளியேற்ற விரும்பினான். அவன் செய்த தவறு முதலில் ஒட்டகத்திற்கு மூக்கை மட்டும் கூடாரத்திற்குள் நுழைய அனுமதித்தது. உள்ளே புகுந்து கொண்ட ஒட்டகம் அராபியனிடம், "சரி சரி நான் இங்கு இருப்பதை நீ விரும்பவில்லையென்கிறாய். நான் என்ன செய்ய முடியும் வேண்டுமானால் நீவெளியே போய்விடு. நான் போகமாட்டேன்." என்று கூறிவிட்டது.
"இடத்தைக் கொடுத்தால் மடத்தைப் பிடுங்குவார்' எனும் ஒரு பழமொழியுண்டு. ஒட்டகத்தின் கதையும் அப்படித்தான். புலனின்ப விஷயங்கள் ஒட்டகத்தின் மூக்குபோல் மெல்லதுழைந்து பின்பு முழுவதுமாக ஆக்ரமித்து கொண்டு நம் வீழ்ச்சிக்கு காரணமாகிவிடுகின்றன. ஆகவே, ஒட்டகத்தின் கதை நமக்கு பாடமாக அமையவேண்டும்.
உண்மையான ஆன்மிக வாழ்க்கைக்குத் தேவைப்படுவது மிகப் பெரிய அளவிலான சுயக்கட்டுப்பாடும், தூய்மையும் ஆகும். இப்பிறவியிலேயே உயர்ந்த குறிக்கோளாகிய ஆன்மிக வாழ்க்கையைப் பெறவிரும்பும் சாதகர்களுக்கு முழுமையான தூய்மை வேண்டும் என்று ஞானிகள் மீண்டும் மீண்டும் வலியுறுத்தி வருகின்றார்கள். இந்தத் தூய்மை துறவிகளுக்கு மட்டும் வேண்டப்படுவதன்று; பிரம்மச்சாரிகளுக்கும் இல்லறத்தாருக்கும்

159 up சுயக்கட்டுப்பாடே, ஆத்மஞானத்திற்கு திறவுகோல்
வேண்டப்படுவது. இறையுணர்வை அடைய விரும்பினால், தங்களுடைய உண்மைத்தன்மையை அறியவிரும்பினால், ஜீவன் முக்த நிலையை எய்தவிரும்பினால், கண்டிப்பாக சுயக்கட்டுப்பாடு பயிற்சியை மேற்கொள்ள வேண்டும்.
இல்லற பக்தர்களுக்கு பூரீராமகிருஷ்ணர் வழங்கிய அருளுரையில் கணவன் - மனைவி ஒன்று அல்லது இரு குழந்தைகளைப் பெற்றுக் கொண்ட பிறகு அவர்கள் சகோதரன் -சகோதரியாக வாழக் கற்றுக் கொள்ள வேண்டும் என்று அறிவுரை வழங்கியுள்ளார். இதனால் நாம் அறிய வேண்டியது என்னவென்றால் நமது அடிப்படை வேட்கையைத் தூய்மைப்படுத்தி பரிபூரண பிரம்மச்சாரி - பதிவிரதை வாழ்க்கையை மேற்கொள்ளாத வரையில் கடவுள் தரிசனத்திற்கு வாய்ப்பில்லை என்பதாகும். 魏
சுயக்கட்டுப்பாட்டில் பிரம்மச்சர்ய விரதம் முக்கியமானது. இக்கருத்தைப் பற்றி சகோதரர் கில்ஸ் கூறியுள்ளதும் கவனிக்கத்தக்கது. சகோதரர் கில்ஸ் மறைத்திரு பிரான்ஸிஸ் அவர்களின் தலையாயச்சீடர். அவர் கூறியதாவது: "எல்லாவித நற்குணங்களிலும், நான் பிரம்மச்சர்ய விரத நல்லொழுக்கத்தையே முதன்மையாக எடுத்துக் கொள்கின்றேன். ஏன் எனில் இனிய நல்லொழுக்கம் பரிபூரணத்தையும் தன்னில் கொண்டுள்ளது. இதைவிட வேறு பண்புடைமை வேறெதுவும் இல்லை. பரிபூரண ஒழுக்கம் இல்லாமல் ஆன்மிக அருளை ஒரு மனிதன் பெறமுடியாது."
"ஒழுக்கம் விழுப்பம் தரலான் ஒழுக்கம் உயிரினும் ஒம்பப்படும்' என்பார் திருவள்ளுவர். இந்நூலாசிரியர் இவ்விஷயம் பற்றி ஒரு சமயம் ஓர் ஆங்கில நாளிதழில் வெளிவந்தப் பேச்சைப் படித்தார். அதில் பேச்சாளர், 'சம்பூரண பிரம்மசர்யத்தை அனுஷ்டிக்க வேண்டும் என்று கூறப்படுவது மிகப்பெரியத் தவறாகும்" என்று பேசியிருந்தார். இத்தகையப் பேச்சு பிதற்றலானது, பொருளற்றது. உண்மையான தூய்மை

Page 83
ஆன்மிக வாழ்க்கைக்கான வழிகாட்டுதல்கள் Op 16O
நிறைந்த வாழ்க்கையை மேற்கொள்பவர்கள் வாழ்க்கையைச் சான்றாகக் கொண்டால், அந்தப் பேச்சு எவ்வளவு பிதற்றல் என்பது தெரியும். மிருகநிலையில் வாழ்கின்றவர்கள். தாங்களாகவே தாழ்ந்து போகின்றார்கள்.
ஆன்மிக வாழ்க்கையின் அனைத்து வலிமையின் பிறப்பிடம் தூய்மையில் உள்ளது. சகோதரர் கில்ஸ் ஒழுக்கம் எனும் சொல்லிற்கு 'இனிய' எனும் அடைமொழியைச் சேர்ந்துள்ளார். தூய்மையை சொல்லிலும், செயலிலும் நாம் கடைப்பிடித்து வரும் பொழுது. உலக இன்பங்கள் பெரும்பாலானவற்றை இழந்து விடக்கூடும். உலக இன்பங்களையும் அனுபவிக்கவேண்டும் என்று கருதும் பொழுது தவறு நிகழ்ந்து விடுகின்றது. ஆனால் இங்கு நாம் கவனிக்க வேண்டுவது உண்மையான இன்பம் எது? என்பதுதான். சுயக்கட்டுப்பாட்டில் வருவதுதான் உண்மையான இன்பம், கட்டுப்பாடற்ற, மனம் போன போக்கில் வாழும் வாழ்க்கையில் வருவது இன்பமன்று. இவ்வுண்மையை நாம் மறக்கக் கூடாது. ஒழுக்கம் நம் விருப்பத்திற்கு இசைந்த இன்பமாக இல்லையென்றாலும் சிக்கலான மனோநிலைகளை உண்டாக்கலாம்; அதிர்ச்சிகளும் ஏற்படலாம்.
பூரண பிரம்மசர்யம் இல்லாமல் எவரும் ஆன்மிக அருளை பெற இயலாது என்று சகோதரர் கில்ஸ் மிகச் சரியாகவே சொன்னார். அவருடைய பின் வரும் கருத்தை மீண்டும் நினைவு கூர்வோம்.
'காம வாசனைகளை நீங்கள் அடக்கி ஆளாத வரையில் ஆன்மிக அருளை ஒருபோதும் பெறமுடியாது. ஆகவே, உங்களை எதிர்த்து இரவு பகலாக போராடும் காம வாசனைகளை, சதைப்பசியை, உங்கள் உள்விரோதிகளில் GudmaudroT விரோதியை, வீரத்துடன் எதிர்த்துப் போராடுங்கள்." ஆனால் இவ்விதம் போராடுவதில் திறமையொன்று உள்ளது. சதைப்பசியின் வேட்கைகள் பல. அவற்றிற்கு நாம் இரையாகிவிட்டால் என்றென்றும் சுதந்திரமாகவுள்ள நமது தெய்வீகத்தன்மையை நாம்

151 Up சுயக்கட்டுப்பாடே, ஆத்மஞானத்திற்கு திறவுகோல்
அறிய முடியாது. பல விதமான உலகியல் வேட்கைகள், தூண்டுதல்களாகவுள்ள மோசமான விரோதிகளை எதிர்த்து ஓயாமல் போராட வேண்டும். ஆனால் இந்தப் போராட்டம் நேருக்கு நேராக நடக்க வேண்டுமா? கூடாது. ஏன் எனில் இதனால் பகைவன் கை ஓங்கிவிடும். பலாத்கார விளைவுகள் இதனால் ஏற்படுமாதலால் இது சரியான வழிமுறையாகாது. நமது மோசமான எதிரி நமது உடல், நேருக்கு நேர் போராடினால் நாடி நரம்புகள் எல்லாம் அதிர்ச்சியடையும். பின் என்னதான் வழி?
இந்த உள்விரோதிகளை வென்றிட செயல் நுட்பம் வாய்ந்த வழிமுறையைப் பின்பற்ற வேண்டும். சகோதரர் கில்ஸ் நமக்கு ஒர் உதாரணம் தருகிறார். பெரும் பாறாங்கல்லை நாம் அகற்ற சரீரபலத்தை மட்டும் பயன்படுத்தினால் சரீரத்தில் காயங்கள் ஏற்படும். ஆகவே அதை அசைத்து அசைத்து அகற்றுவதற்கு ஒரு கருவியை புத்தி சாதுயர்யத்துடன் பயன்படுத்தினால் வேலை சுலபமாகிவிடும். இவ்விதமான செயல்நுட்பத்தை புத்தி சாதுர்யத்துடன் கொண்டு சதைப்பசியின் வேட்கைகளையும், தூண்டுதல்களையும் வெல்லவேண்டும். சகோதரர் கில்ஸ் கூறும் வழிமுறை இதுதான். 'வினைத்திட்பம் என்பது ஒருவன் மனத்திட்பம்' என்பதையும் நினைவில் கொள்ள வேண்டும்.
ஜெர்மன் நாட்டு புண்ணியசீலர் கிறிஸ்துவ ஞானியான தாமஸ் எ.கெம்பிஸ், "தி இமிடேஷன் ஆஃப் கிரைஸ்ட்' எனும் உலகப்புகழ் பெற்ற நூலின் ஆசிரியர். சுவாமி விவேகானந்தர் தமது பரிவிராஜக பயணக்காலத்தில் இரு புத்தகங்களை எடுத்துச்சொன்றார். ஒன்று பூரீமத் பகவத்கீதை, மற்றொன்று 'தி இமிடேஷன் ஆஃப் கிரைஸ்ட்." தாமஸ் எ.கெம்பிஸின் இந்நூலில் இருந்து சில பகுதிகளைத் தேர்ந்தெடுத்துசுவாமிஜி வங்கமொழியாக்கம் செய்து அதை 'சங்கீத கல்ப துருமா எனும் வங்க மொழி மாத இதழில் வெளியிட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது. 2 இவ்வளவு புகழ் பெற்ற இந்த நூலில் தாமஸ் எ.கெம்பிஸ் பின்வரும் ஒரு கருத்தைக் கூறியுள்ளார். "மனிதனின் மண்ணுலக

Page 84
ஆன்மிக வாழ்க்கைக்கான வழிகாட்டுதல்கள் up 162
வாழ்க்கை மோகமயக்கம் நிறைந்த வாழ்க்கை. ஒவ்வொருவரும் இந்த மோக மயக்கத்திடம் மிக்க எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். மோகமயக்கம் எனும் பேய் துங்கவே தூங்காது. யாரை விழுங்கலாம் என்று எதிர்பார்த்து அதற்கான முதல் சந்தர்ப்பத்திற்காக காத்திருக்கும். பிரார்த்தனை செய்வோர் இதைக் கவனத்தில் கொள்ள வேண்டும்.'
மோகமயக்கப் பேய் எப்பொழுதும் தூங்காமல் இருப்பதினால் நாம் எப்பொழுதும் விழிப்புடன் இருக்க வேண்டும். அந்தப் பேய், சற்றே விழிப்பை இழப்பவனை வீழ்த்திவிடுகின்றது. 'ஒயுதல் செய்யோம், தலைசாயுதல் செய்யோம்' என்று இடையறாத விழிப்பு மிக அவசியமாகும், மோகமயக்கப் பேயை விரட்டுவதற்கு.
சில சந்தர்ப்பங்களில் தூண்டுதல்கள் நன்மை செய்கின்றன என்றும் கூறப்படுவதுண்டு. எப்படி? சில சந்தர்ப்பங்களில் போலித்தனமானப் பெருமை பாராட்டுகின்றோம். நமது ஆன்மிகச் சாதனைகளை பற்றி பெருமைப்படுகின்றோம். "நான் ஆன்மிகச் சொற்பொழிவுகளைக் கேட்கின்றேன். தியானத்தில் ஆழ்ந்துவிடுகின்றேன். புலன் இன்ப விஷயங்களில் நாட்டம் இல்லை' என்று நாம் நினைக்கின்றோம். ந்ம்முடைய முறைகளை நினைவுறுத்தி அறிவுறுத்தி பணிவும் தூய்மையும் ஏற்படச் செய்யும் தூண்டுதல்களும் உள்ளன. ஆகவே, ஒவ்வொருவரும் தூண்டுதல் எனும் காலகட்டத்தின் வழியே செல்ல வேண்டியுள்ளது. கிறிஸ்துவ சமய ஞானி மறைத்திரு ஜான், 'ஒவ்வொருவரும் ஆத்மாவின் இருள் படர்ந்த இரவு என்பதின் வழியே செல்ல வேண்டியுள்ளது' என்று கூறியுள்ளார். "ஓ! நான் உலகியல் எனும் கடலில் மூழ்கிவிடப் போகின்றேன். என்னுடைய விடிவிற்கோ, விடுதலைக்கோ, முற்றிலும் நம்பிக்கையில்லை" என்பதுபோலவும் சில சந்தர்ப்பங்களில் கருதுகின்றோம். இவ்வாறு நினைப்பதுதான், "ஆத்மாவின் இருள் படர்ந்த இரவு' என்பதாகும். ஆனால், இந்த பொய் இரவு மெய்ஞ்ஞான ஒளிப்பாய்ச்சலால் சுருண்டோடிவிடும்.

163 up சுயக்கட்டுப்பாடே, ஆத்மஞானத்திற்கு திறவுகோல்
இதற்காக நாம் உண்மையான போர்வீரன் போன்று வீரத்துடன் போராட வேண்டும். இவ்வாறு போராடினால் இறுதியில் வெற்றி நமக்கே.
சில சமயங்களில் தூண்டுதல்கள் நம்மை வென்று விடுகின்றன. இதனால் நாம் ஓடிவிட வேண்டுமா? ஆனால் மனம் என்று ஒன்று இருக்கின்றதே! அதைவிட்டு ஓடிவிட (փtդպւՌT? ஓடிவிடுவதாலேயே தூண்டுதல்கள் எனப்படும் உலகக் கவர்ச்சிகளை வென்றுவிடமுடியாது. ஓடாமல் ஊன்றிநின்று அந்தக் கவர்ச்சிகளை நேருக்கு நேர் சந்தித்து அறைகூவல் விடவேண்டும். தூண்டுதல்கள் நிறைந்த சூழலில் இருந்து ஓடிப்போய் விடுவதாக வைத்துக் கொள்வோம். அப்பொழுது நாம் ஒரு மூலையில் சென்று விடுவோம். ஆனால் அங்கும் அதே மனம் நம்முடன் கூடவே வந்துவிடுகின்றது. எப்படிப் பார்த்தாலும் பலவிதமானத் தூண்டுதல்களால் நாம் சூழப்படுகின்றோம். மனதைக் கட்டுப்படுத்தும் பயிற்சியளிக்கும் செயல்நுட்பத்தை நாம் வளர்த்துக் கொண்டு, சுற்றுக்குழலுக்கு மேலே எழுச்சி பெற மனவுறுதியைக் கொண்டு தூண்டுதல்களை புறங்காண வேண்டும். இதற்கான பொறுமையும், பணிவும் கைவரப் பெறவேண்டும். தொடக்கம் முதற்கொண்டே விழிப்புடன் இருக்க வேண்டியது மிக அவசியமாகும்.
உலகியல் தூண்டுதல் எவ்வளவு நமக்கு தீங்கிழைக்கின்றன என்பதைப் பார்ப்போம். முதலில் அது தீயனண்ணத்தை மனதிற்கு பரிந்துரைக்கின்றது. பிறகு அது வலிமைமிக்க கற்பனையாக வெளிப்படுகின்றது. அந்தக் கற்பனை தீட்டும் ஒவியத்தை நாம் பின் தொடர்ந்தால் நமக்கு திருப்தி கிட்டுகிறது. தூண்டுதல், பேய் வடிவத்தில் வந்து மனதிடம், "என்னைப் பின் தொடர்ந்து வா. என்னிடமிருந்து எவ்வளவு புலனின்பத்தை நீ அடையப் போகிறாய் என்பதைக் கற்பனை செய்து பார்' என்று தூண்டுகிறது. இந்தக் கற்பனைக்குரலில் மயங்கும் மனதில் கிளர்ச்சியான எண்ணம் தோன்றுகின்றது. இந்தத் தூண்டுதலைத் தொடர்ந்து

Page 85
ஆன்மிக வாழ்க்கைக்கான வழிகாட்டுதல்கள் u 164
மெல்ல மெல்ல அசைந்து கொடுகின்றோம். இறுதியாக உடன்பட்டு சம்மதித்து விடுகின்றோம். கொஞ்சம் கொஞ்சமாக மனது கீழ் நோக்கி செல்கிறது. இதை எதிர்த்திட மோகமயக்கப் பேய் தன்னுடைய ஆலோசனைகளை வெளியிடும் ஆரம்ப நிலையிலேயே விவேகத்துடன் பகுத்தறிய வேண்டும். "இது ஒருபேய்; என்னுடைய நன்மையை நாடவில்லை; என்னை ஏமாற்றிவிட்டது; வஞ்சித்துவிட்டது; பல சமயங்களில் என்னை வீழ்த்திவிட்டது, இந்தப் பேயின் தூண்டுதலுக்கு நான் பலியாகி புலன் இன்பநுகர்ச்சி பின்னே ஓடிவிட்டால், என்னுடைய உண்மைத்தன்மையாகிய தெய்வீகத்தை அதன் உயர்வை புரிந்து கொள்ளமுடியாது." ஆகவே, தொடக்கத்திலேயே இந்த விவேகத்தைக் கொண்டு செயலாற்ற வேண்டும். மோக மயக்கமெனும் பேய்தனை அடித்தோம் என்று ஜெயபேரிகை கொட்டவேண்டும்.
தாமஸ் எ.கெம்பிஸ் நாம் தூய்மையடைய வேண்டியதைப் பற்றி மேலும் கூறியதாவது.
"எந்தப் பிறவியிடமும் மனதைச் சிக்கவிடாதே; உன் அன்பிற்குரியது, இயல்பான உனது தெய்வீகத்தன்மை. இது, தனக்கு போட்டியாக எதையும் அனுமதிக்காது, அந்தத் தெய்வீகம் இதயத்தையே ஆசனமாக கொள்ளும்."
பூரீகிருஷ்ணர், பூரீராமர், பூரீராமகிருஷ்ணரின் பக்தர்களாக நாம் இருந்தால், மனதில் அன்னத்து அசுத்தங்களையும் தூய்மைப்படுத்தி, பந்த பாசங்களை களையவேண்டும். தாமஸ் எ.கெம்பிஸ் சொன்னது போல் நமது இதய ஆசனத்தில் இஷ்ட தெய்வத்தை எழுந்தருளச் செய்ய வேண்டும். "தாய் - தந்தையர், கணவன், மனைவி பிள்ளைகள், உறவினர்கள், சூழ்ந்திருக்கும் பொழுதில் என்ன செய்ய வேண்டும்?' எனும் கேள்வி எழுப்பப்படும். ஆம், அவர்களையும் நாம் நேசிக்க வேண்டும். நமது இஷ்ட தெய்வத்தை அவர்கள் அனைவரிலும் காணவேண்டும். நமது இஷ்ட தெய்வத்திற்கே நமது நேரம்

165 Qp. சுயக்கட்டுப்பாடே, ஆத்மஞானத்திற்கு திறவுகோல்
முழுவதும் உரியது, நமது பூரீராமர், பூரீகிருஷ்ணர், பூரீராமகிருஷ்ணரை நாம் ஒவ்வொருவரிலும் காண வேண்டும். தெய்வத்தை எங்கும் எதிலும் காணும் மனப்பக்குவம் ஏற்பட்டுவிட்டால், அது நம்மை காப்பாற்றும். குறிப்பிட்ட ஒருவரிடம் பற்றுவைப்பது, அறியாமை. பற்று முற்றிலுமாக துறக்கப்பட வேண்டும். இல்லையெனில் நமக்கு முக்தியில்லை. இந்தக் காரணத்தால் தான், 'எந்த பிறவியிடமும் மனதைச் சிக்க விடாதே" என்று கூறப்பட்டது.
கடவுளிடம் செலுத்தும் அன்பே நிலைத்து நிற்பது. மற்றவர்களிடம் செலுத்தும் அன்பு நிலையற்றது என்பதை உறுதியாகக் கொள்ள வேண்டும். நமது இஷ்ட தெய்வச் சிந்தனையிலே நாம் ஒன்றியிருக்க வேண்டும். மீண்டும் தாமஸ் எ.கெம்பிஸ் கூறியதை நினைவு கூர்வோம். "இயேசு நாதர் இருக்கும் பொழுது, எல்லாம் நன்றாக இருக்கின்றது. இயேசுநாதர் வாராத பொழுது ஒவ்வொன்றும் கஷ்டமாகின்றது." இது எதைக்காட்டுகிறது? இறைவன் சிந்தனையுள்ள விடத்தில் நலம்யாவும் நிறைந்திருக்கும். இறைவன் சிந்தனையற்றவிடத்தில் துன்பமே நிறைந்திருக்கும்.
பல்வேறு வேலைகளுக்கிடையே இருப்பவர்கள், தங்கள் இதய சிம்மாசனத்தில் வீற்றிருக்கும் இஷ்டதெய்வத்தின் சந்நிதானத்திற்கு செல்ல செளகரியப்படுத்திக் கொள்ள வேண்டும். அங்கு இஷ்ட தெய்வத்திடம் மெளனமாக உரையாட வேண்டும். இது, ஆன்மிக வலிமையைத் தருகின்றது. உலகியல் பாதிப்புகளை செயலற்றதாக்கிவிடுகின்றது.
பலவகையான அன்றாட நமது வேலைகளுக்கிடையே சில நிமிடங்களையாவது இறைவனிடம் பிரார்த்தனை செய்ய ஒதுக்க வேண்டும். "இறைவா! தியானம், ஜபம் செய்ய எனக்கு போதிய நேரம் கிடைப்பதில்லை, ஆனால் தாங்கள்தான் என் உள்ளங்கவர்ந்தவர் எனும் திடநம்பிக்கையுடையவன் நான். என் இதயத்தில் தங்களைத்தவிர பிறர் எவரையும் அமர்த்திட தாங்கள்

Page 86
ஆன்மிக வாழ்க்கைக்கான வழிகாட்டுதல்கள் Qp 163
அனுமதிக்கமாட்டீர்கள் என்பதும் எனக்குத் தெரியும், எந்தப்படைப்புப் பொருளிலும் நான் பற்றுக் கொள்ளக்கூடாது என்பதும் எனக்குத் தெரியும். அதற்கு அவசியமான வலிமையை நான் எப்படி பெற முடியும்? இதற்காகப் புனித நூல்களில் கூறப்பட்டுள்ள பயிற்சிகளை எப்படி பெறுவது? தாங்கள் பெருங்கருணை கொண்டு அருள் புரியாவிட்டால் நான் அதை எப்படிபெற முடியும்?' இவ்வாறு பிரார்த்தனை செய்ய வேண்டும். வெளியுலக விஷயங்களை இகழ்ந்திடக் கற்றுக் கொள்ளவேண்டும். அகவுலக விஷயங்களை அறிந்திடக் கற்றுக் கொள்ளவேண்டும். வெளியுலக விஷயங்களை நாம் மிகவும் மோகம் கொள்கின்றோம். தூய்மையாகத் தெரியும் வெளியுலகத்தில் நாம் சிக்கிக் கொள்கின்றேம். தோற்றம் அளிக்கின்ற உலகத்திற்குப் பின்னால்இருக்கும் உண்மையான, நாம் காணாத, உலகத்தின் அழகை நாம் அறிவதில்லை. பார்க்கப் போனால் நாம் இந்த ஊனக்கண்களால் பார்க்கும் உலகம் பிரம்மத்தின் தோற்றமேயாகும். தோற்றங்கள் அளிக்கும் உலகத்தின் அடிப்படை ஆதாரம், பிரம்மம் ஆகும். ஆனால் நாம் பிரம்மத்தின் உண்மையான இருப்பை பின்தள்ளி கட்புலனாகும் தோற்றங்களில் மயங்கிவிடுகின்றோம்.
தாமஸ் எ.கெம்பிஸ் கூறிய பின் வரும் கருத்தை அறிவது, இங்கு பொருந்தும், '.
"அக நோக்குடைய மனிதனிடத்தில் கடவுள் அடிக்கடி வந்த கொண்டிருக்கின்றார். மனிதனிடத்தில் Q6í6)udu Tesů பேசுகின்றார். ஆனந்த பூர்வமாக ஆறுதல் தருகின்றார். அதிக அமைதி தருகின்றார். வியக்கத்தக்க தோழமை கொள்கின்றார்." இவ்வுரையின் உண்மையை நாம் பூரணத்துவ நிலையை அடையும் நாளில் புரிந்து கொண்டு நிரூபணம் செய்வோம்.
கடவுள் இருக்கின்றாரா, இல்லையா என்று சந்தேகம் கொள்பவர்கள், குறிப்பாக இளைஞர்கள் பலரை நாம் காண்கின்றோம். இவர்கள் அறிய வேண்டியது கடவுள் ஒருவரே

157 up சுயக்கட்டுப்பாடே. ஆத்மஞானத்திற்கு திறவுகோல்
பரம சத்யம்; இதற்கு எதிரானக்கருத்து அறியாமையால் தோன்றுவதாகும்.
ஓராதார் உள்ளத்திலும் ஒளிந்திருக்கும் இறைவனை கண்டுணராது இருப்பது மனிதகுலத்தின் அவலமாகும். அடங்கிய மனம் ஆத்மாவுக்கு நிகரானது. மனம் தூய்மை பெறப் பெற அகத்தில் இறைவன் இருப்பது உணரப்படும். "தன்னைத் தந்து என்னைத் தடுத்து ஆண்ட நின் கருணைக்கு என்னைக் கொண்டு என்னபலன் எந்தாய் பராபரமே" என்று தாயுமான சுவாமிகள் நம்முள்ளே எழுந்தருளும் இறைவனின் பெருங்கருணையை போற்றி வழிபடுவதையும் கருத்தில் கொள்ள வேண்டும்.
வெளியுலகக் கவர்ச்சிகளின்மயக்கத்திலும் அகநோக்குபெறத் தவறிவிடுகின்றோம். புறநோக்குடையார் ஆன்மிக ஆனந்தத்தைப் பெறமுடியாது. அகநோக்குடையார் உள்ளங்களில் இறைவன் எழுந்தருள்வார். பேசாத பேச்செல்லாம் பேசுவார்.
சகோதரர் லாரன்ஸ் என்பவரை ஒருவர் சந்திக்கும் பொழுது ஒரு நிபந்தனை விதித்தார். தாம் பேசுவதையாரிடமும் வெளியிடக் கூடாது என்பதுதான் அந்த நிபந்தனை. ஆரம்பத்தில் சில ஆண்டுகள்சகோதரர் லாரன்ஸ் கஷ்டப்பட்டுப்போராடினார். பிறகு கடவுள் அருளினால் அவருக்கு ஏற்பட்ட அளப்பரிய ஆன்மிக ஆனந்தப்பேரருளை அவரால் கட்டுப்படுத்தமுடியவில்லை.அதை வெளியில் சொல்லாமல் இருக்கவும் முடியவில்லை, இந்த நிலை எப்பொழுது சாத்யமாகும் என்றால், எவரிடமும் பற்று கொள்ளாத நிலையை அடையும் பொழுது சாத்யமாகும்.
தாமஸ் எ.கெம்பிஸின்'இமிடேஷன் ஆஃப்கிரைஸ்ட்' எனும் நூலில் கூறப்படுவதாவது.
"உடல் ஆசைகளை நாடுவது வீண் பெருமையாகும். எது விரைவில் சென்று மறைகின்றதோ அதனிடத்தில் நீ அன்பு செலுத்துவது போலிப் பெருமையாகும். எங்கு என்றும் அழியாத ஆனந்தம் விளங்குகின்றதோ, அங்கு விரைந்து செல்லாமல் இருப்பதும் போலிப் பெருமையாகும்."

Page 87
in O O anúGsissi Qu) 168
"ஆகவே, முயற்சி செய்க, கண்களுக்குத் தெரியும் பொருட்களிடம் காட்டும் அன்பினில் இருந்து உன் இதயத்தை விலக்கிவிட்டு கண்களால் காணமுடியாததில் உன்னை ஈடுபடுத்திக் கொள்க."
"புலன் இன்பங்களை நாடுபவர்கள், தங்கள் மனசாட்சியைக் களங்கப்படுத்திக் கொள்கின்றார்கள். கடவுள் அருளை இழந்து விடுகின்றார்கள்."
கண்களுக்குத் தெரிவது உண்மையன்று கட்புலனைக் கடந்து அறிவது உண்மை. ஆகவே கட்புலனாகாத அகத்தில் மனத்தைத் திருப்ப வேண்டும். அதாவது அக நோக்குடையவர்களாக மாற வேண்டும்.
கடவுள் அருளை விரும்பினால், அவருடைய கூட்டுறவில் ஆனந்தத்தை அடைய விரும்பினால், அவருடைய இனிய நல் வரவை விரும்பினால், அவருடன் தோழமை கொள்ள விரும்பினால், நமது புலன் இன்ப வேட்கைகளை முற்றிலும் விட்டுவிடவேண்டும். "எங்கு பூரீராமர் இருக்கின்றாரோ அங்கே காமம்இல்லை, எங்குகாமம்இருக்குமோ அங்குபூரீராமர் இல்லை" என்பது ஒரு முதுமொழி, கடவுளையும், தீயவழிப்பட்டச் செல்வத்தையும் சேர்த்து வைத்து நாம் வழிபடமுடியாது. எது ஏற்றது என்பதை நாம் தேர்ந்து தெளியவேண்டும்.
மேற்குறிப்பிட்டுள்ள நூலில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது: "சிற்றன்பப் பிரியமுள்ள மனிதன் இதயத்தில் அமைதியிருக்காது. வெளியுலக விஷயங்களில் பழகப்பட்டவரிடத்திலும் அமைதி இராது. ஆனால் தீவிர ஊக்கத்துடன் ஆன்மிக நாட்டம் உள்ளவன் இதயத்தில் அமைதி இல்லை." இவ்வுரைகள் மகாமந்திரங்கள்; சத்தியத்தின் சூத்திரங்கள்.
மன அமைதி என்பது புலன்களைக் கட்டுபடுத்துவதிலும், அகநோக்குடைய ஆன்ம விஷயத்திலும் உறைந்து உவகை தருவதாகும். அகவுலகமும், புறவுலகமும் இருவேறு துருவங்கள்.

189 up சுயக்கட்டுப்பாடே, ஆத்மஞானத்திற்கு திறவுகோல்
இவற்றின் நுட்பங்களை அறிந்தவர்கள் இரண்டையும் எவ்விதத்திலும் ஒப்பிடமாட்டார்கள். வெளியுலகத்தோய்வில் துய்க்கும் இன்பம் எதிர் விளைவுகளைத் தோற்றுவிக்கும் இயல்புடையது; நிலையற்றது. அகவுலகத்தில் ஆழ்ந்து செல்லச் செல்ல ஏற்படும் ஆன்மிக இன்பம் எவ்வித எதிர்விளைவுகளையும் ஏற்படுத்தாது. அது நித்தியம், அது கட்டற்றது, சத்தியமானது. இந்த நிலையில் மனம் ஆத்மானந்தப் பெருமகிழ்ச்சியில் திளைக்கும் சுகம் தான் என்னே! வாழ்க்கையில் குறிக்கோள் எய்தும் பரிபூரணம்தான் என்னே!" என்று பரவசப் பண் பாடும்.
இதயகுகையில் ஆன்மஜோதி தரிசனம் கண்டவர்கள், அகநோக்குடையவர்கள். இவர்கள் வைராக்கியமும், விவேகமும் கொண்டவர்கள், "பார்க்கும் இடம் எங்கும் ஒரு நீக்கம் அற நிறைகின்ற பரிபூரணானந்தம்ே' எனும் ஆன்மிக அநுபூதியில் பேரமைதி கிட்டும் என்று ஒருவரியில் கூறலாம்.
“մ)Tծtulգամ) அன்பினால் மனிதன் உள்ளம் தூய்மையற்றுப்போய் பந்தப்பட்டு போகிறது" என்று தாமஸ் எ.கெம்பிஸ் கூறியுள்ளார். ஒரு தாய் தன் குழந்தையிடம் காட்டும் அன்பானது, அந்தக் குழந்தையில் தெய்வத்தைக் காண்பதாக அமைய வேண்டும். இவ்வாறு அன்றாட வாழ்க்கையில் தெய்வீகமயமாக்கப்படுதலும், ஆன்மிகமயம்ாக்கப்படுதலும்; பரஸ்பரம் ஒருங்கிணைவதுதான் தேவைப்படுவதாகும். பார்க்கும் ஒவ்வொரு நரனிலும், நாராயண சொரூபத்தைக் காணத் தொடங்கிவிட்டால், பிரச்னைக்கு வழியே இல்லை.
இதுவரை தாமஸ் எ.கெம்பிஸின் அரிய சில ஆன்மிக அருளுரைகளைக் கண்டோம். இதையடுத்து லொரன்ஸோ ஸ்கூப்லி என்பவரின் "கட்புலனாகாத யுத்தம்' எனும் நூலின் சில கருத்துகளைப் பார்ப்போம். இவர் ரோமன் கத்தோலிக்கப் பாதிரியார். இவரும் 'ஆத்மாவின் இருள்படர்ந்த இரவை'க்கடக்க வேண்டியிருந்தது. சமய வாழ்க்கையில் பற்றுறுதி கொண்டவர்கள், ஆன்மிக வாழ்க்கையின் குறிக்கோளை அடைய உளமார்ந்த

Page 88
ஆன்மிக வாழ்க்கைக்கான வழிகாட்டுதல்கள் του 17Ο
முயற்சியினால் ஒருபோதும் கைவிட மாட்டார்கள். அதற்காகப் போராடிக் கொண்டேயிருப்பார்கள். போராட்டத்தைக் கைவிடாதவர்கள், இறுதியில் வெற்றி பெறுவார்கள்.
நாம் மூழ்கிக் கொண்டிருக்கின்றோம் எனும் மனச்சோர்வு கொண்டு கலங்கும் பொழுது, கடவுளின் பெருங்கருணை நம்மை உய்விக்க வரும். நமது நோக்கங்களை கடவுள் அறிவார். "ஆழித்துரும்பு எனவே அங்கும் இங்கும் பாழில்திரியும்." உண்மையான சாதகனுக்கு உதவ கடவுளின் பெருங்கருணை வந்து சேரும். அகநோக்குடைய இந்த சாதகனுக்கு ஆன்ம ஒளி கிடைக்கிறது. "ஆத்மாவின் இருள் படர்ந்த இரவு'க்குப் பிறகு இருள் களையும் ஆன்மஓளி பாய்ந்து பரவும் ஆத்ம ஞானம் தோன்றும். இவையாவும் சாதகனின் இடையறாதப் போராட்டத்தின் வெற்றிவாகையாக வருவது. ۔۔۔۔
இங்கு குறிப்பிடப்படும் ரோமன் கத்தோலிக்கப் பாதிரியார் தமது சாதனை மார்க்கத்தின் போராட்டத்தில் பல படிநிலைகளை கடந்து வந்தவர். அவர் தமது அனுபவங்களை தமது நூலில் விவரித்து எழுதியுள்ளார். உண்மையான ஆன்மிக சாதகர்களுக்கு அறிவுரை வழங்கத் தக்கப் பாங்கில் எழுதியுள்ளார். "நீ பரிபூரணத்தின் சிகரத்தை அடைய விரும்புகின்றாய் என்று நான் அறிகின்றேன். உன்னுடைய இந்த ஆர்வத்தை நான் வரவேற்கின்றேன்' என்று தமது அறிவுரையைத் தொடங்குகின்றார், அந்த ரோமன் கத்தோலிக்கப் பாதிரியார். அடுத்த அவருடைய அறிவுரை விவேக சூடாமணியின் ஒரு சுலோகத்தின் கருத்துடன் வியக்கத்தக்க ஒற்றுமை கொண்டுள்ளது. பாதிரியாரிடம் வந்த ஒருவர் தமது ஆசையை பின் வருமாறு வெளிப்படுத்தியதாகக் குறிப்பிட்டு, பாதிரியார் எழுதியதாவது:
"பரலோகத்தில் இருக்கும் பரமபிதா பரிபூரணமாக இருப்பது போல் நீ பரிபூரணமாக இரு' என்று இயேசுநாதர் கூறியது போல் தான் இந்தப் பிறவியில் பரிபூரணத்துவத்தை அடைய விரும்புகின்றேன். இதற்காகநான்எல்லாவிதக் கஷ்டத்தையும் ஏற்க

171 m. சுயக்கட்டுப்பாடே, ஆத்மஞானத்திற்கு திறவுகோல்
விரும்புகின்றேன்.' இதைக் கேட்ட அந்த ரோமன் கத்தோலிக்கப் பாதிரியார், 'தங்கள் மேன்மையான நோக்கங்களை அறிய நான் மகிழ்ச்சியடைகின்றேன்." எனக்கூறிவிட்டு, 'தங்கள் ஆர்வம் புனிதமடையட்டும்" என்று வாழ்த்தினார்.
மேற்காணும் கருத்து, பூரீசங்கராச்சார்ய சுவாமிகளின் விவேகசூடாமணியில் வரும் குரு - சிஷ்ய உரையாடலில் வரும் கருத்துடன் ஒத்துள்ளது. ஒரு சீடர் குருவணக்கம் செய்துவிட்டு, குருவிடம் பின் வருமாறு கேட்டார்.
"தளை(பந்தம்)என்றால் என்ன? அது எப்படி வருகின்றது? அதில் இருந்து ஒருவர் எப்படி விடுதலை பெற முடியும்? ஆத்மா அல்லாதது(அனாத்மா)என்பது எது? பரமாத்மா என்பது எது? இவ்விரண்டையும் ஒருவர் எவ்வாறு பகுத்தறிவது? அருள்கூர்ந்து உபதேசம் செய்யவும்.'
சீடன் பணிவுடன் வேண்டியதற்கிணங்க, கருணையுள்ளம் கொண்ட குரு பின் வருமாறு உபதேசம் செய்தருளினார்.
"நீ புனிதமடைகின்றாய். உன்னுடைய வாழ்க்கையின் குறிக்கோளை அடைந்துவிட்டாய். தளைகள் எனும் சங்கிலிகளை அகற்றி பிரம்மத்தை அறிந்தவனாக வேண்டும். உன்னுடைய ஆர்வத்தால் உன் குடும்பத்தை நீ புனிதப்படுத்தி விட்டாய்."
"இந்தக் கணமே நீ விடுதலை பெற்றுவிட்டாய் என்பதை நம்பு' என்று ஒரு சமயம் சுவாமி விவேகானந்தர் கூறியுள்ளார். சுவாமிஜி அமெரிக்காவில் ஸான்பிரான்ஸிஸ்கோவில் தங்கியிருந்த ஒரு சமயத்தில் அவர் மனம் மிக உயர்ந்த தளத்தில் இருந்தது. எப்பொழுதும் போல் அப்பொழுதும் ஆத்மாவின் தளத்திலேயே இருந்தார். அச்சமயத்தில் அவர் பின் வரும் கருத்தை வெளியிட்டார்.
"மகா புருஷர்கள் தோன்றி, குழந்தைகளுக்கான பள்ளிகள் போல் இயங்கும் சமயத்திற்குப் பதிலாக உயிர்துடிப்பும், வலிமையும் வாய்ந்த உண்மையான சமயத்தைப்

Page 89
ஆன்மிக வாழ்க்கைக்கான வழிகாட்டுதல்கள் up 172
படைத்தளிக்க்ப்போகும் காலம் வரும்' என்று சுவாமிஜி சாற்றினார்.
இந்த நவீன யுகத்தில் இந்த அற்புதம் நிகழப்போகிறது. இப்பொழுது ஆத்மா தன்னைத்தானே தேகமாகப் பார்க்கின்றது. இதனால் வாழ்க்கையின் உயர்ந்த பரிமாணங்களை நாம் அறிவதில்லை. இந்த அரிய மானிட வாழ்க்கை, நமது தெய்வீகத்தன்மையை அறிந்து கொள்ளக் கொடுக்கப்பட்டுள்ளது. இதை நாம் சாத்யமாக்க வேண்டுமானால், நடைமுறைப்படுத்த வேண்டுமானால், தேகப்பற்று எனும் பெரும் பிழையை செய்யாமல் இருக்க வேண்டும். இதற்காக அரும்பாடு படவேண்டும். தேகப்பற்றோடு நான்' எனும் உணர்வைத் தொடர்புப் படுத்துவது கீழ்நிலையாகும். சாதாரணமாக மனிதர்கள் யாவரும் தம் தேகமே தாம் எனும் அகந்தையுணர்வையே "நான்' என்று கருதுகிறார்கள். இந்த அகந்தையுணர்வு கீழ்நிலை நான்' (மwer Self) என்று குறிக்கப்படுகின்றது. பக்தியோகத்தில் நான்' என்பதைப் பற்றிய ஒரு விளக்கத்தை குருதேவர் பின்வருமாறு வழங்கியுள்ளார்;
'ஏதோ இரண்டொருவருக்குச் சமாதி நிலை ஏற்பட்டு நான்' போய் விடுகிறது என்பது உண்மைதான். ஆனாலும் அனேகமாக நான் மறைவதே இல்லை. ஆயிரம் முறை ஆராய்ச்சி செய்தாலும் நான் என்பது அப்படியே சுற்றி வளைத்துக்கொண்டு மீண்டும் வந்து நிற்கிறது. அரச மரத்தை இன்று வெட்டிவிடு. நாளைக் காலையில் மறுபடியும் வேரில் துளிர் விட்டிருக்கும். ஆதலால் அடியோடு "நான் மறையாவிட்டால் அந்த நான்' எனும் போக்கிரிப் பயல், 'அடிமை நானாக இருந்து ஒழியட்டும். "இறைவா, நீ தலைவன். நான் அடிமை." என்னும் இந்த எண்ணத்தில் இரு. நான் அடிமை, நான் பக்தன். இப்படிப்பட்ட "நானில் எந்தவிதத் தவறும் இல்லை."

மேலைநாட்டு ஞானிகள் காட்டிய பாதை Quag 1773
அத்தியாயம் - 10
மேலைநாட்டு ஞானிகள் காட்டிய பாதை
உயர்ந்த குறிக்கோளான ஆன்மிக வாழ்க்கையை அடைய நாம் மேற்கொள்ளும் பயணத்தில் தீவிரமானப் போராட்டத்தைச் சந்திக்கிறோம். கட்புலனாகாத இந்தப் போராட்டத்தில் தீமைகள் எல்லாவற்றையும் எதிர்க்க இடைவிடாதப் போராட்டத்திற்கு நாம் தயாராக இல்லாவிடில், நமது குறிக்கோளை நாம் அடையமுடியாது. வெளியில் உள்ள மக்கள் அறிய முடியாவிட்டாலும் நமக்குள் மகத்தானப் போராட்டம் நிகழும். முந்தைய அத்தியாயத்தில் குறிப்பிடப்பட்ட கத்தோலிக்கப் பாதிரியார் லொரொன்ஸோ ஸ்கூப்லி, தமது நூலில் மிகச் சரியாகவே "கட்புலனாகாதப் போராட்டம்' என்று பெயரிட்டார். இந்த நூலில் நம்பிக்கையும், ஊக்கமும் பெறத்தக்கக் கருத்துக்களும் உள்ளன. உண்மையானப் போராளிகள் இறுதியில் வெற்றி பெறுவார்கள் என்று மேற்படி பாதிரியார் நூலில் எடுத்துக் காட்டப்பட்டுள்ளது.
இறுதிவரை போராடுபவர் யார்? பூரணத்துவத்தைப் பற்றி உண்மையிலேயே ஆர்வம் கொள்பவர்கள், இறுதிவரையில் போராடுபவர்கள். எல்லாப் போராட்டங்களிலும், நமக்குள் இயல்பாகவே இருக்கும் தீயகுணங்களை எதிர்த்து வெற்றிகொள்வதற்கு மனத்திற்குள் நடக்கும் அகப் போராட்டமே மிகக் கஷ்டமான போராட்டம் என்று கூறப்படுகிறது.

Page 90
174 U. ஆன்மிக வாழ்க்கைக்கான வழிகாட்டுதல்கள்
"என்றுமுள தோழன்' (ETERNALCOMPANON எனும் தமது நூலில். சுவாமி பிரம்மானந்தாஜி மகராஜ் அவர்கள், மனப்பூர்வமாக ஆன்மிக வெளிப்பாட்டிற்குரிய பாதையில் செல்வோர் எதிர்நீச்சல் போட வேண்டியுள்ளது என்று குறிப்பிடப்பட்டுள்ளார். தொன்னூற்று ஒன்பது சதவிகித மக்கள் நீரோட்டத்தை ஒட்டியே நீந்துகின்றார்கள். அவர்கள் புலன்களைத் திருப்தி செய்யும் பிரவிர்த்தி மார்க்கத்தைப் பின்பற்றுபவர்கள். ஆனால் வாழ்க்கையில் பூரணத்துவம் பெற விரும்புவோர் அதாவது கடவுளை அடைய விரும்புவோர் வேறு வகையைச் சார்ந்தவர்கள். அவர்கள் நிவிருத்தி மார்க்கத்தை அதாவது புலன்களை மறுத்துச் செல்லும் மார்க்கத்தைச் சார்ந்தவர்கள். நிவிருத்தி மார்க்கம் நல்லபாதை: போகநுகர்சியானப் பாதையன்று, சிரேய - விரும்பத்தக்கப்பாதை`புலன் இன்ப நுகர்ச்சிக்குரிய "ப்ரேய மார்க்கமன்று. நிவிருத்தி மார்க்கத்தில் செல்பவர்கள் இயல்பாகவே மகத்தானப் போராட்டத்தை எதிர்கொள்ள வேண்டியுள்ளது. ஆசைகளை வேரோடு களையும் வழியில் செல்வோர் போராட்டங்களைச் சந்திப்பது என்பது இயற்கைதானே.
பல ஆண்டுகள் போராடியும் ஆன்மிக உணர்வு பெறாத நிலையில், போராட்டத்தை விட்டுவிடலாம் எனும் தூண்டுதல் ஏற்படுவது சில சமயங்களில் நிகழ்வதுண்டு. இந்தத் தூண்டுதல் காரணமாகஇவ்வளவு காலமும் வீணாகிப்போய்விட்டதே என்றும் நினைக்கின்றோம்.இந்த மனநிலையில் 'சிரேய' எனும்உத்தமமான் வழியில் இருந்து விலகிப்ரேய' எனும் இன்ப வழியில் திசை மாறி சென்றுவிடுகின்றோம். உயர்ந்த குறிக்கோளை நோக்கிச் செல்லும் பயணத்தில் இத்தகையத் தூண்டுதல்களும், பலவீனங்களும் வரத்தான் செய்யும். தொன்னூற்று ஒன்பது சதவிகித மக்கள் தங்கள் கண்களுக்கு முன்னால் காணப்படுகின்ற பலவித உலகியல் இன்பங்களை நோக்கிச் செல்வதைப் பார்க்கும் பொழுது, நமது மனங்களிலும் இயல்பாகவே அந்தப் பெரும்பான்மையினரைப் பின்பற்றலாம் எனும் தூண்டுதல் எழும் என்று சுவாமி பிரம்மானந்தாஜி மகராஜ் அவர்கள் குறிப்பிட்டுள்ளார். இவ்வித

மேலைநாட்டு ஞானிகள் காட்டிய பாதை ep 17s
மனநிலைக்கு பலியாகிவிட்டால், நாம் நமது குறிக்கோளை இழந்து விடுவோம். ஆனால், போராட்டத்தை விடாமல் முன்னெடுத்துச் செல்ல அசைக்க முடியாத முடிவைக் கொண்டால் இறுதி வெற்றி உறுதிபடுத்தப்படுகிறது. இவ்விஷயத்தில் ஒருவர் இறுதியில் எப்படி வெற்றியடைவார்? எனும் கேள்விக்குரிய சில முக்கியமானக் கருத்துக்கள் கூறப்படுகின்றன. நமக்குள் நடக்கும் வெளிப்படையாகத் தெரியாத போராட்டத்தில் ந்ாம் வெற்றியடைய வேண்டுமானால் நமது இதயத்தில் நான்கு முக்கியமான விஷயங்களை நிலைநிறுத்தவேண்டும். அந்தநான்கு விஷயங்கள் எவை?
சில சமயங்களில் நம்மைப்பற்றி நாமே தவறாக மதிப்பீடு செய்து கொள்கின்றோம். "ஓ! நான் மிக முக்கியமான பெரிய மனிதன்' என்று மிகவும் பெருமிதமாக நினைத்துக் கொள்கின்றோம். நம்மைபற்றி நாமே மிக உயர்வாக எண்ணிக் கொள்கின்றோம். இது ஒர் ஆன்மிக வியாதி; இது கடவுள் வெறுப்புதற்குரிய விஷயம். சுயபெருமை பேசும் மனிதர்களைக் கடவுளுக்குப் பிடிக்காது. வீணான தற்புகழ்ச்சி பேசுபவர்கள், தங்களைப் பற்றித் தாங்களே தவறாக மதிப்பீடு செய்து கொள்பவர்கள்; கடவுளை அடையும் நம்பிக்கையை ஒருபோதும் பெறமுடியாது. ஆகவே, நம்மைப்பற்றி நாமே அதிகப்படியாக நினைத்துக் கொள்ள வேண்டாம். பணிவு பெறப் பயிற்சி செய்வோம். "பணியுமாம் என்றும் பெருமை சிறுமை, அணியுமாம் தன்னை வியந்து' என்று திருக்குறள் உணர்த்துகின்றது.
இரண்டாவதாக கடவுளிடம் மட்டுமே, ஆம்; கடவுளிடம் மட்டுமே, பரிபூரண நம்பிக்கை கொள்ளவேண்டும். கருணைமிக்கக் கடவுள் நம்மைக் காப்பாற்ற வரும் வரையில் நமக்கு நாமே எதையும் செய்யக்கூடாது. நமது தனிப்பட்ட சொந்த முயற்சிகளாலேயே நாம் வெற்றி பெறுவோம் என்று நம்பக்கூடாது. தெய்வத்தின் உதவி நமக்கு வேண்டும். 3:
மூன்றாவதாக, இடைவிடாமல் தொடர்ந்து போராடிக்
கொண்டே செல்லவேண்டும்.

Page 91
17s up ஆன்மிக வாழ்க்கைக்கான வழிகாட்டுதல்கள்
நான்காவதாக எப்பொழுதும் கடவுள் தியானத்திலேயே இருக்க முயற்சி செய்ய வேண்டும்.
இந்த நான்கு முக்கிய விஷயங்களில் முதலில் கூறப்பட்டது நமது அனைத்து வேட்கைகளுக்கும் நமது வீழ்ச்சிக்கும், தவறுகளுக்கும் வேர்மூலமாகும். கடவுள் அருளைப் பெறாதவரையில் ஒருவர் கடவுளை அடையவோ அல்லது பூரணத்துவம் பெறமுடியாது. நம்மைப்பற்றி நாமே அதிகப்படியாக கர்வப்பட்டுக்கொண்டால் இறையருள் நமக்குக் கிட்டாது. நம்மைப்பற்றிய மிதமிஞ்சிய மதிப்பீடு, இறையருள் வரும் வழியை அடைத்துவிடுகின்றது. ஆகவே, இந்த விஷயம் மிக முக்கியமானது. எல்லாம் கடவுள் செயல் என்றிருக்க வேண்டும். நம்மால் ஆவது ஒன்றுமில்லை என்பதை நினைவில் நிறுத்தவேண்டும்.
இந்தநான்குநற்பண்புகளைத்தவிர மற்றும் சில தகுதிகளையும் பெறவேண்டும். முதலில் நாம் 'வெறும் வெற்று ஆள்' என்பதை அறியவேண்டும். டமாஸ்கஸ் எனும் ஊரில் புகழ்பெற்ற பீட்டர் எனும் கிறிஸ்துவ ஞானி இருந்தார். "ஒருவர் தமது பலவீனத்தைவிட அறியாமையையும் உணர்ந்துக் கொள்வதைக் காட்டிலும் மேலானது எதுவும் இல்லை' என்று அவர் எழுதியுள்ளார். 'ஆன்மிக விருப்பம் உடையவனுக்கு குருவின் தேவை அவசியமா? பிறரிடமிருந்து உதவிபெறுவதற்கு என்ன அவசியம் இருக்கிறது? வெளியுதவியில் எங்களுக்கு நம்பிக்கையில்லை. ஆகவே, எங்களுக்கு குருவின் தேவை இல்லை' - இவ்வாறு சிலர் கேட்கக் கூடும். இவ்விதக் கேள்வியைக் கேட்பவர் ஜீவன் முக்தராய் இருந்தால், அவர் நினைப்பு சரிதான்.
ஆன்மிகம் சாராத - பெளதிக ஞானத்தை - அபரவித்யையை கற்பதற்குக் கூட நமக்கு வழிகாட்டுபவர் தேவைப்படுகின்றனர். இதற்கே நமக்கு ஒருவர் உதவி தேவையென்றால் அனைத்து கல்விக்கும் மேலான பிரம்மவித்யை எனப்படும் பரவித்யையைக்கு எத்தகைய உதவி தேவைப்படும் என்பது சொல்லாமலேயே

மேலைநாட்டு ஞானிகள் காட்டிய பாதை Op 177
அறியப்படவேண்டியதாகும். கடவுள் உதவியில்லாமல் நானே' எதையும் செய்யமுடியாது என்பதை அறிவதே ஒவ்வொரு நற்பண்பின் அடித்தளமாகும். அவனன்றி ஓரணுவும் அசையாது என்பது மூதுரை. நமது வெறுமையை நாம் உணரவேண்டும். நமது எல்லா செயல்களிலும் எப்பொழுதும் கடவுளின் துணை வேண்டும் என்று மிக்கப் பணிவுடன் வேண்டிக்கொள்ள வேண்டும்.
இரண்டாவதாக, நமது எண்ணற்ற அகப்புற பகைவர்களைக் கண்டு அச்சமுற பழகிக் கொள்ளவேண்டும். மகாமாயை, பிரபஞ்சமாயை, கடவுளை எளிதாக அறிந்து கொள்ள அனுமதிப்பதில்லை. நம்மை ஏமாற்ற மாயையிடம் பல்வேறு வழிமுறைகள் உள்ளன. அது பின்னும் வலைகள் கணக்கில் அடங்காதவை. ஆகவே, இந்த உண்மையை நினைவில் கொண்டு எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். அதாவது உயர்ந்த குறிக்கோளை நோக்கிய நமது பயணப்பாதையில் மாயை வழி மறித்து வஞ்சிக்கும், ஏமாற்றும். நம் குறிக்கோளை இழந்துவிடுவோம். ஆகவே, மாயையில் சிக்காமல் எப்பொழுதும் விழிப்புடன் இருக்க வேண்டும்.
"மாயா விகார மலம்அகல எந்தைபிரான்
நேயாது பூதிநிலைபெறவும் காண்பேனோ' என்று தாயுமானவ சுவாமிகள் ஏங்கியதைப்போல நாமும் ஏங்க வேண்டும்.
மூன்றாவதாக, முன்னேற்றம் காண கடுமையாக உழைக்க வேண்டும். சில சமயங்களில் தொடர்ந்து நமது முயற்சிகள் இருந்தும், தேகப்பற்றின் ஆசைகள் காரணமாக வழிதவறி விடுகின்றோம். புலன்களுக்கு அடிமையாகி விடுகின்றோம். இந்த நிலையில் நாம் என்ன செய்ய வேண்டும்? வரம்பு மீறி நடந்துவிட்டால், உடனே நமது பலவீனம் என்ன என்பதை அறியவேண்டும். ஒருவேளை செருக்குற்று இருக்கலாம். "நமக்கு ஒரு குரு கிடைத்துவிட்டார்; மந்திரதீட்சை பெற்றுவிட்டோம்; சாதுக்கள் சத்சங்கத்தில் இருக்கின்றோம்; புண்ணியத் தலயாத்திரை

Page 92
17e. up ஆன்மிக வாழ்க்கைக்கான வழிகாட்டுதல்கள்
செல்கின்றோம்; நமக்கு என்ன கவலை இருக்கின்றது' என்று நினைக்கத் தொடங்கிவிடுகின்றோம். இவ்வித நினைப்பு அபாயகரமான தவறாகும். இவ்வாறு வரம்பு மீறிய நினைப்பில், நமது விருப்பத்திற்கேற்ற நினைப்பில், நாம் ஆழ்ந்திடும் பொழுது, நமது தவறுகளையும், பலவீனங்களையும் உணரச்செய்யக் கடவுள் இருக்கின்றார் என்பதை நினைவில் கொள்ளவேண்டும். இது நமது குறிக்கோளை அடைவதற்கு வெகுதொலைவில் இருக்கின்றோம் என்பதை அறியவைக்கின்றது. ஒருவகையில் இது நன்மை பயப்பதாகும். எப்படியெனில் இது நமது தவறுகளையும், பலவீனங்களையும் உணரவைக்கின்றது.
மற்றவர்கள் மதிப்பீடுகளில் நாம் தாழ்ந்து போகின்றோமா அல்லது நம்மை நாமே குறைத்து மதிப்பீடு செய்து கொள்கின்றோமோ அல்லது மற்றவர்கள் நம்மைப் பற்றிக் குறைவாக எண்ணுகின்றார்களா? எனும் இந்த நினைப்புகளெல்லாம் நமது நன்மைக்கே. இந்த நினைப்புகள் நம்மை பணிவுடையவர்களாகச் செய்கின்றன. நமது முயற்சிகள் இருமடங்கு பலன் தருமாறு கடவுளிடம் பிரார்த்தனை செய்ய வைக்கின்றன. இந்தக் காரணத்தினாலேயே பலவிதத் தூண்டுதல்களும், பலவீனங்களும் நம்மைத் தாக்கிட கடவுள் அனுமதிக்கின்றார்.
இங்கு ஒரு முக்கியமான விஷயத்தைக் கவனிப்பேம். ஒரு நாளில் ஆறு அல்லது ஏழுமணி நேரம் தூங்குகின்றோம். பதினேழு அல்லது பதினெட்டு மணி நேரம் விழித்துக் கொண்டு இருக்கின்றோம். U&56óláb எண்ணற்றச் சிந்தனைகள் தோன்றுகின்றன. நிறையவே பேசுகின்றோம். சில கடமைகளை அல்லது வேலைகளைச் செய்கின்றோம். ஒரு நாளை எடுத்துக்கொண்டு, அந்தநாளை நாம் எப்படி போக்கினோம் என்று ஆராய்ந்து பார்ப்போம். நமக்கு நாமே அகவயமாகச் சிந்தித்தால், "நேற்று எவ்வளவு தேவையற்றச் சொற்களைப் பேசிவிட்டோம். எவ்வளவு தூய்மையற்றச் சொற்கள், எண்ணங்கள் நம்மனதில்

மேலைநாட்டு ஞானிகள் காட்டிய பாதை Op 17O
வந்து விட்டன" என்பதை அறிவோம். பெரும்பாலான சொற்கள், எண்ணங்கள் பாவகரமானவை, முட்டாள்தனமானவை, தவறானவை என்பதையும் அறிவோம். ஒரு நாளில் செய்யப்பட்ட சுயபரிசோதனை இது. இதை போதுமான அளவில் அக்கறையுடன் செய்தால் இறைவனை நாடும் மனோபாவத்தைப் பெறுவோம். "ஓ! மதிப்புவாய்ந்த மனித வாழ்க்கையின் ஒரு நாள் வீணாகப் போய்விட்டது; பாவகரமான எண்ணங்களிலும், செயல்களிலும் மூழ்கிப் போய்விட்டோம்; ஆகவே பொழுதெல்லாம் இறைவன் பேரருளின் நாட்டத்தில் திளைக்க வேண்டும்' எனும் மனோபாவத்தை வளர்த்துக் கொள்ளவேண்டும்.
ஒருவர் மனதில் பின் வரும் எண்ண ஓட்டமும் நிகழலாம். "போராட்டத்தைக் கைவிட வேண்டாம் என்று சொல்கின்றார்கள். பாவச் சுமையால் நிறைந்திருக்கும் மனதைக் கொண்டு என் செய்வது? பலவகையான மோசமான கற்பனைகளில் நம் மனம் மாசுபட்டுப் போகும் பொழுது என்ன செய்ய முடியும்? என்னதான் இவற்றையெல்லாம் விலக்க முயன்றாலும் நாம் விரும்பத்தகாத கஷ்டமான நிலையில் இருந்து விடுபட முடியவில்லை. இந்த நிலையில் நாம் செய்ய வேண்டியது என்ன? 'கடவுளை நம்பினோர் கைவிடப்படார்’ எனும் சத்ய வாக்கை நம்புவதுதான் ஒரே வழி.
"கடவுளே! உன்னை துதிக்கின்றேன்! புனித நூல்களைப் படிக்கின்றேன். சாது சத்சங்கத்தை நாடுகின்றேன். இவ்வளவு இருந்தும் மாறுதலடையாத அதே மனிதனாகக்தான் இருக்கின்றேன். சாதகனுக்கு விதிக்கப்பட்ட கடமைகளைப் பின்பற்றி என்ன பயன்." இவ்வாறும் எண்ணுகிறோம். இந்த மனோநிலை வரும் பொழுது ‘ஆன்மிகப் போராட்டத்தைக் கைவிட்டு விடக்கூடாது. இதுவே போராட்டத்தை விட்டுவிடக் கூடாது எனும் முடிவு செய்ய எடுப்பதற்குத் தக்க தருணம். இறுதி வரை போராடாதவர்கள், ஆன்மிக வாழ்க்கையை இழந்தவர்களாவார்கள்.

Page 93
180 up ஆன்மிக வாழ்க்கைக்கான வழிகாட்டுதல்கள்
கீழ்த்தரமான ஆசைகளை அடக்கி, உயர்தரமானவற்றில் ஈடுபாடு கொள்வோமானால், வெற்றி நமதே. ஆனால் உயர்தரமானப் பண்புகளை நாடாமல், கீழ்த்தரமானவற்றை நாடினால், நம்மை நாமே தோற்கடித்தவர்களாவோம். கடவுளை அறிந்த ஞானிகள் பலரும் திரும்பத் திரும்ப நமக்கு வழங்கிய அறிவுரையாவது "உயர்ந்த ஆத்மாவின் உள்ளிருந்து ஓங்கி ஒலிக்கும் குரலை அலட்சியப்படுத்தி விடாதே. நாம் கீழ் நோக்கிப் போனாலும் நாம் வீழச்சியுற்றாலும் "விழுவது மீண்டும் எழுவதற்குத்தான்' எனும் பேருண்மையை நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும்.'
மீண்டும் எழுபவர் யார்? போராட்டத்தை கைவிடாமல் நடத்துபவர். போராட்டத்தைக் கைவிடாமல் நடத்துபவர் யார்? கடவுளிடத்தில் நம்பிக்கைக் கொண்டு ஆத்மாவில் திளைப்பவர்.
நம்முள்ளே இரண்டு இயல்புகள் உள்ளன என்பது அடிப்படை உண்மையாகும். ஒன்று கட்டில் அடங்காத சிற்றியல்பு. மற்றொன்று தெய்வப் பெற்றியுள்ள பேரியல்பு. சிற்றியல்பாகிய 'கீழ்நிலை நான்' போராட்டத்தைக் கைவிடுமாறு தூண்டுகின்றது. பேரியல்பாகிய "பெரிய நான்' தேகம், இந்திரியங்கள், மனம், புத்தி ஆகியவைகள் கட்டில் அடங்கியிருக்கும் பொழுது தலையெடுக்கிறது. இது போராட்டத்தை நிறுத்த விடாமல் உயர்ந்த குறிக்கோளை அறியத் தூண்டுகிறது. ஆகவே, தெய்வப் பெற்றியுள்ள பேரியல்பின் வழியில் நிற்பவருக்கு எந்த ஆசையும் தீங்கிழைக்காது.
ஆன்மிகச் சூழலில் உயர்நிலையில் இருக்கும் சாதகன் தனது சிந்தனைத் தளத்தின் மேல் மட்டத்தில் இருப்பதை உணர்வான். ஆனால் அந்தச் சூழலில் இருந்து, மறுபடியும் சாதாரணச் சூழலில் வந்த பிறகு, மனதை முன்பு போல் உயர்ந்த நிலையில் நிறுத்தக் கஷ்டப்படுவதால் மனதின் புலனின்ப ஆசைகள் அவனைக் கெடுத்து விடுகின்றன.

மேல்ைநாட்டு ஞானிகள் காட்டிய பாதை up 181
"ஒரு மணி நேரந்தானே, என்னுடைய ஆசைகளில் திளைத்து விட்டால், என்ன தீங்கு ஏற்பட்டுவிடும்" என்று ஒருவன் கேட்கலாம். இந்தக் கேள்வியைக் கேட்கும் அதே வேளையில் அவன் தெய்வீக வாழ்க்கைப் பாதையை விட்டு விலகி உலகியலுக்கு அடிமையாகி விடுகின்றான். கடவுளிடமிருந்து ஒடிப்போனவனாகி விடுகின்றான். 'ஒரு மணி நேரந்தானே' என்று முதலில் நினைத்தவன் இறையுணர்வற்ற அந்த வாழ்க்கை நேரத்தை மேலும் சில மணிநேரத்திற்கு பிறகு ஒருநாளிற்கு, பலநாட்களுக்கு, மாதங்களுக்கு, ஆண்டுகளுக்கு என்று விரிவுப்படுத்திக்கொள்ளும் மனோபாவத்தைப் பெற்று விடுகின்றான். இந்த நிலையில் அவன் வாழ்க்கையையும் முடித்துக் கொள்கின்றான். அவன் வாழ்க்கை வீணாகிக் கழிந்து விடுகின்றது. மனித வாழ்க்கை நிலையற்றது என்பதை அவன் எப்பொழுதும் நினைவில் கொள்ள வேண்டும். அடுத்த வினாடியில் என்ன நிகழப்போகிறது என்பதைப் பற்றி நம்மால் முன்கூட்டியே சொல்ல முடியாது.
இவ்வுண்மை புத்த பகவான் வாழ்க்கைச் சம்பவத்தில் விளக்கமுற்றுள்ளது. புத்த பகவான் வாழ்க்கையில் மாபெரும் திருப்பம் ஏற்பட நான்கு விஷயங்கள் காரணமாயிருந்தன. ஒரு நாள், வழியில் ஒரு முதியவரைச் சந்தித்தார். தம்முடன்வந்தசன்னா என்பவரிடம் "இந்த மனிதர் யார்?' என்று விசாரித்தார். அதற்கு சன்னா, "ஓ அவரா அவர் வயதான முதியவர்" என்று பதிலளித்தார். அது வரை முதுமைப் பருவத்தைப் பற்றி அறியாதிருந்த புத்தர் தாமும், தம் மனைவியசோதராவும் ஒருநாள் கிழவன், கிழவியாகிவிடுவோம் அல்லவா என்று நினைத்தார்.தேக அமைப்பின் காரணமாக ஒவ்வொருவரும் முதுமைப் பருவத்தைக் கடந்தேயாக வேண்டும். இந்தச் சிந்தனையால் வாழ்க்கையில் ஆர்வமெல்லாம் இழந்து அரண்மனைக்குத் திரும்பினார்.
மற்றொரு நாள் அரண்மனைக்கு வெளியே சென்ற பொழுது புத்தர் இம்முறை வழியில் ஒரு நோயாளியைப் பார்த்தார். இதற்கு முன் அவர் நோயாளியைப் பார்த்ததில்லை. இந்தக் காட்சியில்

Page 94
182 vep ஆன்மிக வாழ்க்கைக்கான வழிகாட்டுதல்கள்
மனித உடல் பலவித நோய்களுக்கு ஆட்படும் என்பதைப் புரிந்துக் கொண்டார்.
மூன்றாவது முறையாக புத்தர் ஒரு நாள் வழியில் ஒரு காட்சியைக் கண்டார். ஒரு பிணத்தை நால்வர் தூக்கி கொண்டுச் சென்றனர். இதற்கு முன் அவர் பிணத்தைப் பார்த்ததில்லை. எனவே, உடன் வந்த சன்னா "உங்களைப் போலவே இவர் உயிருடன் இருந்தவர். ஆனால் இப்பொழுது உயிர், உடலை விட்டுப் பிரிந்து விட்டது என்று பதிலளித்தார். "ஓ! நான் என்றும் இளமையாய் இருக்கப் போவதில்லை. வியாதி, முதுமை, இறப்பு என்னிடமும் வந்து சேரும். என்னுடைய அழகிய மனைவி யசோதரா, அன்பு மகன் இராகுல் ஆகியோரை விட்டு இறுதியில் பிரியவேண்டியத் துன்பத்திற்கும் ஆளாவேன்" என்று புத்தர் நினைத்தார்.
நான்காவதாக ஒரு காட்சியை வழக்கம் போல் அரண்மனைக்கு வெளியே சென்ற பொழுது வழியில் கண்டார். புத்தர் அமைதி ததும்பும் முகமுடைய ஒரு துறவியை இம்முறை கண்டார். புத்தர் சன்னாவிடம், "இவர் யார்?' என்று கேட்டார். இந்தக் கேள்விக்கு, சன்னா பின்வருமாறு பதிலளித்தார்.
"இவர் உலகம் துன்பமயமானது என்பதை உணர்ந்தவர். இவ்வுலகில் பிறந்த ஒவ்வொருவரும் வளர்ச்சி, பிணி, மூப்பு, இறப்பு எனும் நடைமுறையை விலக்க முடியாது. ஆகவே, அவருடைய சலனமற்ற முற்றிலும் அமைதி ததும்பும் முகத்தைத் தாங்கள் பார்த்தீர்கள்.'
நான்கு காட்சிகளால் சிந்தனை வயப்பட்டிருந்த புத்தர் அரண்மனைக்கு திருமபிய அதே நாளில் ஒரு முடிவிற்கு வந்தார். இந்த முடிவெடுக்க அவர் கேட்ட பின் வரும் தெய்வீகக்குரல் காரணமாயிற்று.
"ஓ! கெளதமரே! கருணையுள்ளம் கொண்டவரே! மனிதகுலத்தைக் காப்பாற்றத் தாங்கள் இவ்வுலகத்தில்

மேலைநாட்டு ஞானிகள் காட்டிய பாதை Op 183
பிறந்திருக்கின்றீர்கள். இதுதான் மிகப்பொருத்தமான வாய்ப்பு: காலந்தாழ்த்தாதீர், புறப்படுங்கள், துறந்து விடுங்கள் தங்கள் உண்மைத்தன்மையை உணருங்கள்; மனித குலத்தை ஈடேற்றுங்கள்; D6fs குலத்தின் இரட்சகனாகப் பிறந்திருக்கின்றீர்கள்." புத்தர் வாழ்க்கையின் இந்தச் சான்று, மரணத்தைப்பற்றிய எச்சரிக்கையுணர்வை நமக்கு பாடம் புகட்டுகின்றது.
"பரமார்த்த பிரசங்கம்' எனும் நூலில் சுவாமி விரஜானந்தாஜி கூறியுள்ளதாவது: "வாழ்க்கை மிகவும் மதிப்பு வாய்ந்தது. ஆகவே ஒரு நிமிடத்தைக் கூட வீணாக்கக்கூடாது. நமது கெட்ட மனோபாவங்களை நிர்மூலமாக்கப் போராடத நாள் வீணான நாளே என்று நாம் கருதவேண்டும். பூரணத்துவம் அடைய விரும்புவோர் ஐம்புலன்களையும் சரியான வழியில் செலுத்த வேண்டும்."
விவேக சூடாமணியின் 76-வது சுலோகத்தில் பூரீ சங்கராச்சார்ய சுவாமிகள், உலகத்தில் பல மிருகங்கள் ஒவ்வொன்றும் ஒரே ஒரு உறுப்பைக் கொண்டு துக்கமடைகின்றது; ஆனால் மனிதனுக்கோ ஐந்துபுலன்கள் இருப்பதால் அவன் விதி என்னாவது என்பதைச் சுட்டிக்காட்டியள்ளார்.
சப்தாதி பி பஞ்சபிரேவ பஞ்ச பஞ்சத்வமாபு ஸ்வகுணேன பததா? குரங்க- மாதங்க-பதங்கமீன-ப்ருங்காநரபஞ்சபி-ரஞ்சித கிம்
இதன் பொருள்: மான், யானை, விட்டில்பூச்சி, மீன், வண்டு ஆகிய ஐந்தும் தத்தம் முக்கிய குணத்தால் கட்டுண்டவைகளாய் சப்தம் முதலிய ஐந்து விஷயங்களுள் ஒன்றினாலேயே மரணத்தை அடைந்திருக்கின்றன. மனிதனோ ஐந்தினாலும் கவரப்பட்டவானயிருக்க என்ன செய்வது?

Page 95
184 up ஆன்மிக வாழ்க்கைக்கான வழிகாட்டுதல்கள்
புலன்களில் கீழ்த்தரமான இழுப்பைத் தவிர்ப்பதற்கு, நாம் இந்தப் புலன்களுக்கு சரியான திசையைக்காட்ட வேண்டும்.
"சென்ற இடத்தால் செலவிடாதீது ஒரீஇ
நன்றின்பால் உய்ப்பது அறிவு' - என்று திருவள்ளுவர் கூறுவதுபோல, மனத்தை அதுசென்ற புலத்தின்கண் செல்லவிடாது. அப்புலத்தின் நன்மை தீமைகளை ஆராய்ந்து தீயதனின் நீக்கி நல்லதன்கண் செலுத்துவது அறிவாகும். அறிவை இவ்வாறு பயன்படுத்தாத வரையில் நமது இலட்சியத்தை அடைய முடியாது. கடவுளிடமிருந்து நம்மைப் பிரித்தெடுக்கும் நமது எண்ணங்களையெல்லாம். நாம் கடவுளிடம் மாற்றிச்செலுத்த வேண்டும்.
இறைவனது படைப்புகளே இவ்வளவு அழகு, அறிவு, இன்பம் நிறைந்தவையாக இருக்கும் பொழுது அவரது அழகும், அறிவும், இன்பமும் எவ்வளவு எல்லையற்று இருக்க வேண்டும் என்பதை நாம் உணரவேண்டும்.
புலன் இன்ப நுகர்ச்சியா, என்றுமுள ஆன்மசாந்தியா என்பனவற்றில் எதை நாம் தேர்ந்தெடுக்க வேண்டும் என்பதையும் முடிவுசெய்யவேண்டும். ஆன்ம சாந்தியே உண்மையான இன்பம். புறத்தில் இருந்து வரம்பற்ற இன்பத்தை நாம் பெறமுடியாது. புலன்களை ஒடுக்கி அகத்தில் பெறும்இன்பமே நமது இலட்சியமாக அமைய வேண்டும்.
இங்கு, சுவாமி விவேகானந்தர் வாழ்க்கையில் இருந்து ஒரு சம்பவத்தை அறிந்து கொள்வது பொருத்தமாக இருக்கும். 1899 ஆகஸ்டு 16-இல் சுவாமி விவேகானந்தர். தமது சகோதரத் துறவி சுவாமி துரியானந்தாஜி மகராஜ், சகோதரி கிறிஸ்டீன், மற்றும் ஒரு பெண்மணியுடன் கிளாஸ்கோவில் இருந்து நியூயார்க்கிற்கு கப்பலில் சென்றார். கடற்பரப்பில் பத்துநாட்களும் செலவழிக்க வேண்டியதாயிற்று. அந்தப் பத்துநாட்களும் என்றும் நினைக்கத்தக்கன, அவை சுவாமி விவேகானந்தரின் வாழ்க்கையில்

மேலைநாட்டு ஞானிகள் காட்டிய பாதை 19 1835
பதிவு செய்யப்பட்டுள்ளன. நிலாவொளி வீசிய ஓர் இரவில் கப்பலின் மேல்தளத்தில் சுவாமிஜி உலாவிக் கொண்டிருந்தார்.
கடல் அலைகளின் மீது நிலாவொளியின் பிரதிபலிப்பு ஏற்படுத்திய அழகியக் காட்சியை, தம்மைச் சுற்றியிருந்த சகோதரி கிறிஸ்டின் மற்றும் சிலரிடமும் சுட்டிக்காட்டி "மாயையே இவ்வளவு அழகாய் இருந்தால், இதன் பின்னே உள்ள சத்தியத்தின் அழகு எவ்வளவு வியப்பிற்குரியதாக இருக்கும் என்பதைச் சிந்தித்துப் பாருங்கள்" என்று சுவாமிஜி கூறினார்.
சுவாமிஜியின் இந்த சத்திய வாக்கை நாம் ஆழமாகச் சிந்தித்துப் பார்க்க வேண்டும். வெளியுலக அழகைக் கண்டு மயங்கிவிடவேண்டாம் என்று சுவாமிஜி குறிப்பாக உணர்த்தியுள்ளார். வெளியுலகில் நாம் பார்க்கும் அழகு, உலகத்தைப் படைத்த ஆண்டவனின் எல்லையற்றப் பேரழகைச் சுட்டிக்காட்டுவதாக அமைய வேண்டும்.
அழகின் ஆராதனை, ஆண்டவனின் ஆராதனையாக அமைய வேண்டும். படைக்கப்பட்ட பொருள்களின் சுகங்களில் நாம் சிக்கிக் கொள்வதைக் காட்டிலும், மகத்தான படைப்புக்கர்த்தாவிடம் நமது கவனத்தைப் பதிய வைக்க வேண்டும். இதில் கிடைக்கும் சுகமே, சுகம். இந்தச் சுகம் பிரார்த்தனை மூலம் கிடைக்கின்றது. உண்மையான பிரார்த்தனை வாய்விட்டுச் சொல்லும் சொற்களில் மட்டும் அமைவதன்று, இதயமும், மனதும் இணைந்திருப்பதிலும் ஆகும். நமது எண்ணங்களுக்கு, நாமே துரோகிகளாக இருந்துவிடக் கூடாது." என்று பூரீ ராமகிருஷ்ணர் கூறியதை நினைவில் நிறுத்த வேண்டும். −
பிரார்த்தனையில் வெற்றிகரமாகப் பயன்பெற சில முக்கியமான கருத்துக்களை நாம் குறித்துக் கொள்ளவேண்டும். உடலைப் பேணுதல் அவசியமாகும். உணவு, உறக்கம், ஓய்வு முதலானவற்றிலும் கட்டுப்பாடுகளைக் கண்டிப்பாக கடைபிடிக்கவேண்டும். கட்டுப்பாடுகள், நியமங்கள் மீது சிற்சில சமயங்களில் அளவுக்கு மீறி ஆர்வம் காட்டிவிடுகின்றோம்.

Page 96
186 up ஆன்மிக வாழ்க்கைக்கான வழிகாட்டுதல்கள்
இத்தகைய ஆர்வம் ஆபத்தானது. பயித்தியம் பிடித்துவிடும் அபாயமும் ஏற்பட்டுவிடும்; மனப்பிறழ்ச்சியும் ஏற்பட்டுவிடும்.
கட்டுப்பாடுகள், நியமங்களில் தன்னிச்சையாக நடந்துக் கொள்ளாமல், தகுதி படைத்த குருவின் வழிகாட்டுதலை நாடிப் பெறவேண்டும். யோகப்பயிற்சியில் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். குருமுகமாகப் பயிற்சி பெறவேண்டும் எனும் எச்சரிக்கையை சுவாமி விவேகானந்தர் நமது ராஜயோகம் பேருரையில் குறிப்பிட்டுள்ளார்.
மிகுந்த புலன் நுகர்ச்சி, புலன்களை ஒரேயடியாக ஒறுத்தடக்குதல் என்னும் இரண்டு தீவிரங்களையும் விலக்கவேண்டும். இவையிரண்டிற்கும் இடைப்பட்ட மத்யம பாதையைப் பின்பற்ற வேண்டும்.
இந்த மத்யம பாதையைப் பற்றியச் சிந்தனையில் கெளதமபுத்தரின் சாதனா மார்க்கத்தையும் நினைவு கூர்வோம். அவர் மிகக் கடுமையானத் தவத்தை மேற்கொண்டார்; உணவு. தண்ணீர், கூட எடுத்துக்கொள்ளாமல், கடுந்தவம் செய்தார். இதனால் அவருடைய உடல் மிகவும் பலவீனமடைந்து விட்டது; மரணத்தின் நிழல் படர்ந்துவிடுமோ எனும் நிலைமையும் தோன்றிவிட்டது. எங்கிருந்தோ ஒரு பாடல் காற்றில் தவழ்ந்து வந்தது. மாடுகளை மேய்த்துக் கொண்டிருந்த ஒருவன் ஒரு கிராமியப் பாடலைப் பாடிக் கொண்டிருந்தான்.
"வீணையின் நரம்புகளை மிகவும் முறுக்கிவிடாதே.
அவை அறுந்து போய்விடும்; வீணையின் நரம்புகளை மிகவும் தளர்த்திவிடாதே; அவை இனிய நாதத்தை எழுப்பாமல் போய்விடும்.' இந்தப்பாடலின் கருத்தை கெளதமடத்தர் கேட்டார். வீணையொத்த உடலை வீணாகத் துன்புறுத்துவதில் பயன் இல்லை என்று தெளிவுபெற்றார். தேவையற்ற வகையில் புலன்களை ஒடுக்கி கடுந்தவம் செய்வதுதான் வாழ்க்கையின் குறிக்கோளாகுமோ?

மேலைநாட்டு ஞானிகள் காட்டிய பாதை wao 187
அவை வழிமுறையேயன்றி, அவையே முடிவாகாது; ஆன்மிகப் பூரணத்துவம் அல்லது இறைவனை அறிதல் என்பதுதான் முடிவாகும். ஆகவே, இருவேறுபட்டப் பாதைகளில் செல்லாமல் பொதுவான மத்யம பாதையைத் தேர்ந்தெடுத்தார் கெளதமபுத்தர். அதையே பெளத்த மார்க்கமாகவும் அளித்தார்.
பகவத்கீதையிலும் இருவேறு அதிதீவிர நிலைகள் ஏற்கத் தக்கதன்று எனும் கருத்து ஆறாவது அத்தியாயத்தின் பதினாறாவது சுலோகத்தில் கூறப்பட்டுள்ளது.
நாத்யச் னதஸ்து யோகோ அஸ்திந சைகாந்தமனச்னத
ந சாதி ஸ்வப்னசீலஸ்ய ஜாக்ர தோ நைவ சார்ஜுனா
இதன் பொருள்:
அர்ஜூனா அதிகமாய் உண்பவனுக்கு யோகம் இல்லை; ஒன்றும் உண்ணாதவனுக்கும் இல்லை; மேலும் தூக்கத்தில் அதிக விருப்பமுடையவனுக்கும் இல்லை; தூங்காமலேயே விழிப்பவனுக்கும் இல்லைதான்.
ஆகவே, மிதமான வழிமுறைகளில் உடலைக் கண்டிப்பாகக் கட்டுப்பாட்டில் வைக்க வேண்டும். உறங்குவதற்கும், ஒய்வெடுப்பதற்கும் மிதமான, போதுமான நேரத்தை ஒதுக்க வேண்டும். ஆனால் அதே சமயத்தில் உடல் கேட்பதையெல்லாம் கொடுக்கக்கூடாது. உடல் தேவைகளை நிறைவு செய்துகொண்டே போவோமானால், காம ஆசைகளின் ஆதிக்கம் மேலோங்கிவிடும்.
பிரார்த்தனை செய்வதில் வெற்றிபெற வேண்டுமானால், வெளியுலகத் தொடர்புகளைக் குறைத்துக் கொள்ளவேண்டியது அவசியமாகும். பிரார்த்தனைக்கு அடுத்தபடியாக நாம் கவனிக்க வேண்டிய இரண்டாவது முக்கிமான விஷயமாகும் இது.
மழையிலும், காற்றிலும் ஏற்றிவைக்கப்பட்ட மெழுகுவர்த்தி எரியாது என்பார்கள். அதுபோல வெளியுலகத் தொடர்பால் மனதில் வெள்ளமெனப்பாயும் எண்ணங்களால் பிரார்த்தனையின் தீச்சுடர் எரியாது. தனித்திரு என்னும் அருள்வாக்குநினைவில் நிற்க வேண்டும்.

Page 97
188 uo ஆன்மிக வாழ்க்கைக்கான வழிகாட்டுதல்கள்
மூன்றாவதாக கருத்தில் நிறுத்த வேண்டிய விஷயம் நூற்பயிற்சியாகும். ஆன்மிக எண்ணங்களைத்தூண்டும் நூல்களைக் கற்கவேண்டும். மனமொழி மெய்கள் அடங்குவதற்கு உதவும் நூல்களைக் கற்கவேண்டும். புற்றீசல்கள் போல் குவியும் மட்டரகமான நூல்களைப் பொழுது போக்கும் இன்பத்திற்காகப் படிப்பவர்கள் வீழ்ச்சியடைவார்கள். கல்விக்கு அழகு கசடறக் கற்றல் என்பதில் கசடுகளைப் போக்கும் கல்வியைக் கற்பதே'சித்தம் அழகியார் ஆக உதவும். எனவேதான் நூற்பயிற்சிப் பெறுவது ஆன்ம விழிப்பிற்கு உறுதுணையாக அமையுமாறு பார்த்துக் கொள்ளவேண்டும்.
"பயனற்ற ஆயிரம் செய்யுட்களைப் படிப்பதை விட, மன அமைதியைத் தருகிற ஒரு செய்யுளைப் படிப்பது மிக மேலானது' என்று தம்மபதம்' கூறுகின்றது.
ரஷ்ய நாட்டு ஞானியான புனித கிரிகோரி 'பிலோ காலியா' (PHLOKALA) எனும் நூலில் கடவுள் அருளை எவ்வாறு இழந்து விடுகின்றோம் என்பதை விளக்கியுள்ளார். மூன்று காரணங்களை பின்வருமாறு கூறியுள்ளார்.
முதலாவதாக, நமது கவனமின்மையால் கடவுள் அருளை இழந்து விடுகின்றோம். நமது குரு, குறிப்பிட்ட சில நியமங்களைப் பின்பற்றச் சொல்லுகின்றார். குறிப்பிட்ட சில வாழ்க்கை முறைகளைப் பின்பற்ற வேண்டாம் என்றும் உபதேசம் செய்கின்றார். நமக்கு மந்திரதீட்சை தரும் சமயத்தில் குரு அருளிய உபதேசங்களை மனப்பூர்வமாக நாம் பின்பற்றுவதில்லை.
இரண்டாவதாக எனக்கு எல்லாம் தெரியும் என்று கர்வம் கொள்ளும் போக்காகும்.
மூன்றாவதாக, தீட்சை பெற்றநாளில் நாம் கடவுள் அருளால் வாழ்த்தப்பட்ட போதிலும், நமது கர்வம், தவறான வாழ்க்கை முறைகள் காரணமாகவும், அலட்சியம் காரணமாகவும், முன்னேற்றம் காணத் தவறி விடுகின்றோம். நமது குரு, நமக்கு

மேலைநாட்டு ஞானிகள் காட்டிய பாதை U 189
உணர்த்திய வாழ்க்கை முறைகளுக்கு எதிரான வாழ்க்கை முறைகள் இங்குதவறான வாழ்க்கை முடிவுகள் என்று குறிப்பிடப்படுகின்றன. தவறான வழி காரணமாக, கடவுள் அருள் கிட்டாமல் திணறுகின்றோம்.
இதற்குப் பரிகாரம் ஏதேனும் உண்டா? என்று கேட்டால். ஆம், இருக்கின்றது என்பதே பதிலாகும். முன்னேற்றம் காணாமல் திணறும் பொழுது பின்வரும் உறுதியான முடிவை எடுத்துக்கொள்ள வேண்டும்.
'இறைவா உளங்கவர்ந்தத் தெய்வமே குருவே! உங்கள் அருளைப் பெற்றது உண்மைதான். ஆனால், என்னுடைய அலட்சியம் காரணமாக அதை நான் இழந்து விட்டேன். இப்பொழுது அருளைப் பெற அவாவி நிற்கின்றேன். தயவுசெய்து எனக்கு உதவ வாருங்கள்."
கடவுள் இந்தப் பிரார்த்தனையைக் கேட்டு, "சரி மகனே! உனக்கு எனது அருள் மீண்டும் அளிக்கப்படும். ஆனால், இதற்கு நீ இரண்டு நிபந்தனைகளை நிறைவு செய்ய வேண்டும்.' என்று பதிலளித்தார். அந்த இரு நிபந்தனைகள் வருமாறு.
1. முதலாவதாக குருவின் கட்டளைகளைப் பின்பற்ற வேண்டும். வெறுமனே கேட்டுவிட்டு அதன்படி நடக்காமல் அலட்சியமாக இருக்கக்கூடாது.
2. இரண்டாவதாக, குருவின் கட்டளைகளை நிறைவேற்றிவிட்டாலும் கூட அது கடவுள் அருளைப் பெற்றுத் தந்துவிட முடியாது. "இறைவா! என்னிடம் அன்பாக இருக்கவும்: என்னை கைவிட்டு விடவேண்டாம்; நான் பலவீனமானவன்; குறைபாடுகள் நிறைந்தவன் தடைகள் நிறைந்தவன்; தாங்கள் என்னைக் காப்பற்ற வராமல் இருந்தால் என்னுடைய தெய்வீகத் தன்மையை உணர எனக்கு சொந்த வலிமையில்லை." இவ்வாறு, ஒருவர் இடைவிடாமல் பிரார்த்தனையும் செய்ய வேண்டும். பிரார்த்தனை உண்மையாகவும், நம் இதயத்தின் அடி ஆழத்தில்

Page 98
19o eo ஆன்மிக வாழ்க்கைக்கான வழிகாட்டுதல்கள்
இருந்து வெளிவருவதாகவும் இருந்தால், அது நமது "கட்புலனாகாதப் போராட்டத்தில்' வெற்றி தரும் ஆயுதமாகப் uuj675(5b.
நம் இதயத்தைக் காத்துக் கொள்ள எவ்வளவு பெரிய அக்கறை காட்ட வேண்டும் என்பதைப்பற்றி வங்க மொழியில் ஒரு பாடல் உள்ளது. நம் உள்ளத்தில் நம்மைத் தவிர பிறர் எவரும் இடம் பெறக்கூடாது என்ற கருதுபவர் கடவுள். கடவுளின் இந்த ஒயா ஐயுறவு குறித்து நாம் சிந்திக்க வேண்டும். அவரே வலிய விரும்பி நமது உள்ளத்தை தமது சிம்மாசனமாகக் கொள்ள இருக்கும் நிலையில் நாம் என்ன செய்ய வேண்டும்? இவ்வுலகின் வேறு எந்த ஜீவனிடத்திலும், மற்றெவருடனும் பற்றுக் கொள்ளக் கூடாது. இந்த உலகில் பற்றை விடுவதற்கு, பற்றறாற்றன் பற்றினைப் பற்றவேண்டும். ஆம், எல்லாப் பொருளையும் பற்றி நின்றே பற்றற்ற இறைவனை சிக்கெனப் பிடிக்கவேண்டும். இவ்வாறு சிக்கெனப் பிடித்துவிட்டால், இறைவன் நம் இதயத்தைத் தவிர வேறெங்கு எழுந்தருள்வார்?
நமது குடும்பத்தில் கணவன், மனைவி, பிள்ளைகள், உறவினர்கள் அனைவரிடமும் கொள்ளும் உறவுகளை ஆன்மிகமயப்படுத்திக் கொள்ள வேண்டும். இது முன்னேறுவதற்குரிய வழியாகும். இங்கு மற்றொரு விஷயத்தை நினைவில் கொள்ளவேண்டும். அதாவது கடவுளிடம் நமக்குள்ள அன்பைக்காட்டிலும் பிறர் நம்மீது கூடுதலாக அன்புகாட்ட அனுமதித்தால் கடவுள் அருளை நாம் இழந்துவிடுவோம். கடவுளிடம் காட்டும் அன்பு அனைத்திற்கும் மேலானது: தன்னேரில்லாதது. உயர்வு தாழ்விற்கு அப்பாற்ப்பட்டது.
முற்கூறப்பெற்ற வங்கமொழிப்பாடல், நம் இதயம் இறைவனின் சிம்மாசனமாகவே அமையவேண்டும் என்பதை பின் வருமாறு இசைக்கின்றது.
அருளுருவாய சியாமா அன்னையை நெஞ்சே ஆர்வம் பெருகிட உள்ளே வைத்துப் பேணுதி, நானும் நீயும்

மேலைநாட்டு ஞானிகள் காட்டிய பாதை up 191
உருகியே தரிசித் தின்பம் உற்றிடுவோம்; மற்றோரை அருகிலும் வாரா மற்செய் தடக்கியே தடுப்பாய் நீயே.
"நெஞ்சினுள்ளே புகுந்தருளி, நெஞ்சுளே நின்று அமுதமூறி; இமைப்பொழுதும் என் நெஞ்சில் நீங்காதான்' என்று சிவபெருமானைத் துதிபாடும் மாணிக்கவாசக சுவாமிகள் திருவாசகத்திற்கு உருகாதார் யார்?
'நெஞ்சகமே கோயில் நினைவே சுகந்தம் அன்பே மஞ்சனநீர் பூஜைகொள்ள வாராய் பராபரமே"
என்று தாயுமானவ சுவாமிகள் குரல் கொண்டு இறைவனை இதய சிம்மாசனத்தில் அமர்த்திட அழைக்க வேண்டும்.
ஜான் க்ளோவ் எனும் கிறிஸ்துவ சமய ஞானியின் பின்வரும் சுயாதுபூதியுரையும் இங்கு நினைத்துப் பார்க்கத் தக்கது.
“மரத்தடியில் அமர்ந்திருக்கும் மனிதனைப் போன்றவன் நான். எண்ணற்ற மிருகங்களும், பகைவர்களும் என்னைத்தாக்க வருவதைக் கண்டேன், என்னைக் காப்பாற்றிக் கொள்ள நான் மரத்தில் ஏறாவிட்டால் அந்த மிருங்கங்களாலும், பாம்புகளாலும் நான் கொல்லப்படுவேன் என்பதை அறிவேன்; ஆகவே மரத்தின் மேல் ஏறி பாதுகாப்பாக உட்கார்ந்து கொண்டேன். இதைப்போலவே பலவிதமான கெட்ட ஆசைகளும், தீய எண்ணங்களும் என்னைத் தாக்க வரும் பொழுது நான் கடவுளிடம் விரைந்து சென்று பாதுகாப்பு தேடிக் கொள்கிறேன்.'
இவ்வாறு நாம் நடந்துகொண்டால், உள்ளிருக்கும் கடவுளிடம் நாம் தொடர்ச்சியாக தோழமை கொள்வோம். தேகாதிபற்றுக் கொண்டு, அளவுக்குமிஞ்சிய வகையில் புறவுலகச் செயற்பாடுகளைக் கொண்டால் இறைவனுடன் அகத்தே கொள்ளும் தோழமை சாத்யப்படாது. பூரீராமகிருஷ்ணரின் அமுத மொழிகளில் ஓரிடத்தில் குறிப்பிட்டவாறு மனம் முழுவதையும் கடவுளிடமே சமர்ப்பித்துவிட வேண்டும். இல்லையெனில் கடவுளை அறிய முடியாது. நம்முள் கடவுள் இருக்க வேண்டும்

Page 99
192 y ஆன்மிக வாழ்க்கைக்கான வழிகாட்டுதல்கள்
என்பதும், கடவுளுக்குள் நாம் இருக்க வேண்டும் என்பதும் இரண்டல்ல, ஒன்றே தான்.
முன்பு குறிப்பிடப் பெற்ற "பிலோகாலியா'வை மீண்டும் பார்ப்போம். இதயத்தைக் காப்பது என்றால் பிரார்த்தனை மூலம் கெட்ட எண்ணங்களை முற்றிலுமாக ஒழித்துவிட வேண்டும், தங்கத்தை உருக்கும் தழல் உலைக்கூடத்தில் இருப்பதுபோல் நம் உள்ளத்தில் ஆன்மிகத் தழல் எப்பொழுதும் ஒளிவீசிக் கொண்டிருக்க வேண்டும். இதற்கு அடிப்படையானது. பிரார்த்தனை செய்வதாகும்.
மேலைநாட்டு ஞானிகளில் மற்றொருவரான சிமியோன் கூறியதையும் கவனிப்போம். "உடல் தேவைக்கான உணவை அளவிற்கு மிஞ்சி வழங்கிவிட்டு அதே சமயத்தில் ஆன்மிக இன்பத்தையும் பெறமுடியாது." என்று அவர் எழுதியுள்ளார். மிதமான உணவு, ஆன்மிக முன்னேற்றத்திற்கு உதவுவது. வயிறு புடைக்க உண்பதால் பெளதிக திருப்தியடையலாம். ஆனால் கடவுளுடன் தோழமை கொள்ளும் திருப்தியைடைய முடியாது. மீதூண் விரும்பேல் என்பது உடல் தேவைக்கான அறிவுரை மட்டுமன்று, ஆன்மிகத்தேவைக்கான அறிவுரையுமாகும்.
இறுதியாக அப்பா அகாதென் எனும் மேலைநாட்டு ஞானியின் கருத்தையும் அறிவோம். அவரிடம் ஒருவர். "ஐயா உடல் உழைப்பு சிறந்ததா, அல்லது இதயத்தைக் காப்பது சிறந்ததா?' எனும் கேள்வியைக் கேட்டார். அதற்கு ஞானி "இதயத்தைக் காப்பதே சிறந்தது." என்று பதிலளித்தார். இங்கு உடல் உழைப்பு என்பது சமயாசாரம் தொடர்பான உழைப்பாகும். கும்பமேளாவிற்கு யாத்திரை சென்று புனித நீராடுதல், விரதங்கள் மேற்கொள்ளுதல் முதலானவை இங்கு உடல் உழைப்பாகக் கூறப்படுகிறது.
மனிதன் ஒரு மரமென்றால், அதன் இலைகள் உடல் உழைப்பு என்று கூறப்படுகின்றது. புனித கங்கையில் நீராடச் செல்கின்றோம். பல சடங்குகளைச் செய்கின்றோம். இவையெல்லாம் சமயத்தின்

மேலைநாட்டு ஞானிகள் காட்டிய பாதை Up 193
புறவயமானவைகளாகும். புறத்தே எவ்வளவு சடங்காசாரங்களை செய்தாலும், அகத்தே மாற்றம் காணமுடியாவிட்டால், சடங்காசாரங்களை செய்து பயனில்லை. சமயம் என்றால் இறையுணர்வு பெறுதலாகும். ஆனால் நாம் சமயத்தின் முக்கியதுவம் இல்லாத விஷயங்களைப் பற்றி மிகவும் அக்கறை கொள்கின்றோம். புறத்தே வெளுத்து, அகத்தே கறுத்திருப்பதால் என்ன பயன்?
மனிதனை மரத்திற்கும், உடல் உழைப்பான சடங்காசாரங்களை இலைகளுக்கும் ஒப்பிட்டால் மரம் தரும் கனியை இதயத்திற்கு ஒப்பிடலாம். "நல்ல பழங்களைத் தராத மரம் வெட்டப்பட்டு விறகுத் துண்டுகளாக்கி தீயிலிடப்படுகின்றது" என்று கூறுவார்கள். ஆகவே நமது கவனமெல்லாம் பழத்தின் மீதே இருக்கவேண்டும்.
வாழ்க்கை முழுவதும் செயல் திறனுடன் இருந்தாலும் இறையுணர்வை யடையாவிட்டால், அந்த வாழ்க்கை, கனிகளைக் தராது. வெறும் இலைகளைக் கொண்ட மரமாகத்தான் க்டவுளால் கருதப்படும் என்று ஞானி சிமியோனும் கூறியுள்ளார். ஆழித்துரும்புபோல் அங்கும் இங்கும் பாழில் திரிவதை நிறுத்தினால் ஒழிய இறையுணர்வைப் பெறுதல் இயலாது. நமக்குள்ளே கடவுள் இருக்கின்றார் என்பதை காலை முதல் இரவு வரையில் நாம் மறந்து விடுகின்றோம். கடவுளை உணர்ந்துவிட்டால் நாம் அனைத்தையும் பெற்றுவிடுகின்றோம். கடவுள் நமக்குள்ளே இருந்தாலும் நாம் அவருக்குள் இல்லை எனும் அடிப்படை உண்மையை நாம் மறந்து விடுகின்றோம்.
மனதின் ஆற்றல் அளப்பரியது; அந்த மனத்தை வெளியுலக சஞ்சாரத்தில் வீணே திரிந்தலைவதைத் தடுத்து இறைவனின் தாமரைத்திருவடிகளில் சமர்ப்பித்து விட்டால், நமது ஆன்மிக வெளிப்பாடு சாத்யமாகும். மனம் ஆன வானரக்கைம் மாலைஆகாமல் எனை ஆள் அடிகள் அடி எய்துநாள் எந்நாளோ.

Page 100
194 o ஆன்மிக வாழ்க்கைக்கான வழிகாட்டுதல்கள்
வேட்டைப் புலப்புலையர் மேவாத வண்ணம் மனக் காட்டைத் திருத்திக் கரைகாண்பது எந்நாளோ,
சித்தம் எனும் பெளவத் திரைக்கடலில் வாழ்துரும்பாய் நித்தம் அலை யாதுஅருளில் நிற்குநான் எந்நாளோ,
- தாயுமானவர்

கடவுளுடன் இயைந்த வாழ்க்கை Qu 1935
அத்தியாயம் - 11 கடவுளுடன் இயைந்த வாழ்க்கை
"ஆன்மிக வாழ்க்கைக்கான வழிகாட்டுதல்கள்' எனும் இந்நூலில் இதுவரை கூறப்பட்ட கருத்துக்களைத் தொகுத்து சுருக்கமாக அறிவோம்.
ஆன்மிக வாழ்க்கை என்றால் என்ன? கடவுளை அறிதல், தன்னுடைய உண்மையானத்தன்மையை அறிதல் என்பதாகும். இந்த ஆன்மிக வாழ்க்கையை நோக்கி எவர் இழுக்கப்படுகின்றார் எனும் கேள்வி எழுகின்றது. தன்னுள் இருந்து எழும் ஆன்மிக அழைப்புபின் குரலை கேட்கின்றவர் என்பது முதலாவதாக கூறப்படும் பதிலாகும். இரண்டாவதாக ஒருவர் தம்முள் உள்ள முரண்பாட்டை அறிபவர். ->
நம்முள் எதிரும் புதிருமாக இருவேறு மனப்போக்குகள் இழு-பறியாக பூசலிடுகின்றன. ஒன்று உயர்ந்த வாழ்க்கைக்கான அகத் தூண்டுதல். மற்றொன்று கீழ்நோக்கி இழுக்கும் புலன் உணர்வுகள். இந்த இரு மனப் போக்குகளின் முரண்பாடுகள் தோன்றும் பொழுது ஆன்மிக வாழ்க்கையை நோக்கி நாம் இழுக்கப்படுகின்றோம் என்று உணர்கின்றோம்.
பலவகைப்பட்ட மக்கள் இவ்வுலகத்தில் உள்ளனர். உலோகயத வாழ்க்கையையே முழுமையாக நம்புபவர்கள் பலர் இருக்கின்றனர். அவர்கள் ஆன்மிக வாழ்க்கையைப் பற்றி அக்கறை கொள்வதில்லை. இதனால் அவர்கள் எவ்வித முரண்பாட்டையும்

Page 101
1905 gy ஆன்மிக வாழ்க்கைக்கான வழிகாட்டுதல்கள்
மனதிற்குள் கொள்வதில்லை. அவர்கள் தங்கள் மனதிற்குள் போராட்டத்தைத் தொடங்கும் வரையில் அவர்களுக்கு ஆன்மிக வாழ்க்கை பற்றிய நம்பிக்கை ஏற்படாது. உள்ளுக்குள் இருக்கும் ஆன்மா எல்லையற்றப் பரம்பொருளை புரிந்துக்கொள்ள விரும்புகின்றது. ஆனால் உடல் சார்ந்த புலன்கள் புறவுலகவிஷயங்களை இழுக்கின்றன. 'ஆன்மாவிற்கு விருப்பம் உண்டு; ஆனால் தேகமோ பலவீனமாகயுள்ளது" என்று மிகச்சரியாகவே கூறப்படுகின்றது.
அரிது, அரிது மானிடராய்ப் பிறத்தல் அரிது. மானிடராய்ப் பிறக்கும் அரிய வாய்ப்பு கிடைத்தபோதிலும் முக்தி பெறுவதற்கான உண்மையான வேட்கை முதலில் வேண்டும். இதற்கடுத்தப்படியாக கடவுளை அறிய வழிகாட்டத் தகுதிவாய்ந்த குரு அமையும் பேறு பெறவேண்டும். இவையாவும் அமைந்த பிறகும், அவற்றின் உண்மையான பயனை அடைய நாம் ஆர்வம் கொள்ள இயலாத நிலை தோன்றும். ஏன் எனில் நாம் சிரமப்பட தயாராகவிருப்பதில்லை. உண்மை என்னவென்றால் ஆன்ம வெளிப்பாடு பெறுவதற்கான விலைகொடுப்பதற்கு சிலரே
தயாராகவுள்ளனர்.
கடவுளை அறிய மனம் முழுவதையும் கடவுளிடம் சமர்ப்பணம் செய்துவிட வேண்டும். மனதைப் பல பகுதிகளாக பிரிக்க முடியாது. மனதின் ஒரு பகுதியை உலகியல் இன்பங்களைத் துய்க்கவும்,மற்றொரு பகுதியை கடவுளுக்கு ஒதுக்க இயலாது. கடவுள் மனமாகிய சிம்மாசனத்தில் தான் மட்டுமே வீற்றிருக்க விரும்புகின்றவர். ஆகவே நாம் மனம் முழுவதையும் அவரிடமே கொடுத்துவிட வேண்டும்.
நாம் ஆன்மிகக் கட்டுப்பாடுகளை பயிற்சி செய்யலாம். நமது ஆன்மிக குருவின் சொற்படி நாம் நடக்கவேண்டும். ஆனால், ஆன்மிக வாழ்க்கையைப் பொறுத்தவரையில் நாம் உண்மையிலேயே தீவிரமாக இருப்பதில்லை. காலையிலும், மாலையிலும் ஓரளவு ஜபம் செய்கின்றோம். தேவைப்படாத

கடவுளுடன் இயைந்த வாழ்க்கை Qp 197
எல்லாவிதமான வேலைகளையும் செய்ய நமக்கு நேரம் கிடைக்கின்றது. ஆனால் கடவுளுக்காக நேரம் கிடைப்பதில்லை. கடவுளை நினைத்து ஜபம் செய்வது மட்டும் ஆன்மிக வாழ்க்கையாகாது. நமது இருப்பின் ஒவ்வொரு கணத்திலும், கடவுள் இருப்பதாக நாம் தொடர்ந்தாற் போன்று நினைக்கும் பழக்கத்தை மேற்கொள்ளா விட்டால் ஆன்மிக வெளிப்பாட்டிற்கு வாய்ப்பில்லை.
"என்னுடைய இலட்சியத்தை சில சொற்களில் சொல்ல வேண்டுமானால், மனிதகுலத்திற்கு அதனுடைய தெய்வீகத் தன்மையைப் போதிப்பதிலும், அதை வாழ்க்கையின் ஒவ்வொரு அசைவிலும் வெளிப்படுத்த உதவிசெய்வதும் ஆகும்.' என்று சுவாமி விவேகானந்தர், சகோதரி நிவேதிதாவிற்கு எழுதியக் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
காலையிலோ அல்லது மாலையிலோ நமது இஷ்ட தெய்வத்தின் மீது தியானம் செய்வது நமது தெய்வீகத்தை உறுதிப்படுத்த போதுமானதாகுமா? மற்ற நேரத்தில் கடவுளை மறந்துவிட GaugiTGLost? மறக்கக் கூடாது. நாம் தெய்வீகமானவர்களாதலால் வாழ்க்கையின் ஒவ்வொரு கணத்திலும் கடவுளைக் காண பயிற்சி செய்ய வேண்டும். ஆன்மிகம் தொடர்பான சொற்பொழிவுகளைக் கேட்கின்றோம். நூல்களைப் படிக்கின்றோம். இதனால் ஓரளவு விஷயத்தைப் புரிந்துக் கொள்கின்றோம். இழப்பதற்காகவே, சிலவற்றை பெறுகின்றோம். இதை விளக்கும் ஒரு சான்றையும் பார்ப்போம். ஒரு குளத்தில் முற்றிலுமாக பாசி படர்ந்திருந்தது. அங்கு நீர் அருந்தச் செல்கின்றோம். படர்ந்து நீரை முடியுள்ள பாசியை கைகளால் விலக்கி ஒருவகையாக நீர் அருந்துகின்றோம். கைகளை எடுத்தவுடனேயே பாசி மீண்டும் முன்பு போலவே நீர்ப்பரப்பை மூடிவிடுகின்றது. இதைப்போலவே, ஆன்மிகச் சொற்பொழிவுகளைக் கேட்கும் பொழுதும், ஆன்மிக நூல்களைப் கற்கும் போதும் சிறிது நேரம் நாம் உயர்ந்த நிலைக்கு சென்று

Page 102
1983 gy ஆன்மிக வாழ்க்கைக்கான வழிகாட்டுதல்கள்
விட்டதாக நினைக்கின்றோம். ஆனால் நம்மைச் சூழ்ந்துள்ள தூண்டுதல்களும், கவர்ச்சிகளும் நாம் கேட்டதை, படித்ததை மறக்கடிக்கச் செய்து விடுகின்றன.
மோகம் அல்லது பிரமாதம் (அக்கறையின்மை) என்பது அடிப்படையான மிகப் பெரியத் தடையாகும். உண்மைத்தன்மையுடன் நிலையான இயைபு கொள்ள நாம் அலட்சியம் செய்துவிடுகின்றோம். இந்தப் புறக்கணிக்கும் இயல்பு உண்மையைத் தேடும் ஆன்மிக சாதகனுக்கு சாவிற்கு நிகரானதாகும். சில சமயங்களில் நாம் ஆட்டிப்படைக்கும் புறவாற்றலைப் பெற்றிருப்போம். கெட்ட சம்ஸ்காரங்களுடன் பிறந்திருப்போம். நாம் தியானத்தில் அமரும் பொழுது பலவிதமான தீய ஆசைகள் வந்து தாக்கும். இந்த வாழ்க்கை தோல்வியடையப் போகிறது, நமக்கு முற்றிலும் நம்பிக்கையில்லை என்று நாம் எண்ணுவோம். அந்த மாதிரியாக எண்ணும்போது நாம் ஆக்க பூர்வமான எண்ணங்களை கொள்ள வேண்டும். தியானம் செய்யும் நேரத்தில் கெட்ட எண்ணங்களால் நாம்துன்பமடைந்தால், அது முற்பிறவியில் செய்த தீவினைப்பயனாகும். அதனால்தான் தியானம் செய்யும் நேரத்தில் உணர்வுதளத்தில் அவை வருகின்றன. மனிதன் தன்னைத் தானே உருவாக்கிக் கொள்ளும் சிற்பியாவான். தீயமனோபாவங்களைக் கொண்ட இன்றைய மனிதன் நிகழ்காலத்தை சரியாகப் பயன்படுத்திக் கொண்டு எதிர்காலத்தை உருவாக்குவது உறுதி. ஆகவே சென்றதைக் கருதியிருக்கவேண்டாம். 'சென்றதனைக் குறித்தல் வேண்டா, இன்று புதிதாய்ப் பிறந்தோம் என்று நெஞ்சில், எண்ணமதைத் திண்ணமுற இசைத்துக் கொண்டு" என்று பாரதியார் கூறியதுபேல நிகழ்காலத்தை ஆன்மிக நோக்கில் படைத்துக் கொள்ள வேண்டும். ஒருமணி நேரம் தியானம் அல்லது ஜபம் செய்த பிறகு நாம் நமது சுறுசுறுப்பான வாழ்க்கைக்குத் திரும்புகின்றோம். லெளகிக செயற்பாடுகள் என்று சொல்லப்படும் வாழ்க்கைக்கு மீண்டும் திரும்புகின்றோம். அன்றாட வாழ்க்கையை ஆன்மிகமயப்படுத்தாத வரையில் ஆன்மிக முன்னேற்றம்

ன் இய்ைந்த வாழ்ச் Qap 190
சாத்யமில்லை. அன்றாட வேலைகளில் கடவுளை பலிபீடத்தில் இருந்து சந்தையிடத்திற்குகொண்டு வரவேண்டும். தியானம், ஜபம் செய்யும் போது நமது அன்பிற்குரிய இஷ்ட தெய்வத்தின் திருவடித் தாமரையில் மனத்தைப் பதிய வைக்க வேண்டும். அதே மனநிலையை அன்றாட நமது செயல்களிலும் தொடர்ந்து நீடிக்கச் செய்ய வேண்டும். இல்லாவிடில் முடிவற்ற ஆன்மிகக் குழப்பத்தில் நம்மை நாமே ஆழ்ந்திடச் செய்வோம்.
திருக்கோயிலில் இருக்கும் பொழுது ஒரு மனநிலையில் இருக்கின்றோம்; வெளியில் வந்த பிறகு வேறொரு மனநிலையில் இருக்கின்றோம். இதன் காரணமாக இருவித மனவெழுச்சிகள் எனும் குற்றவுணர்விற்கு ஆளாகின்றோம்.
இந்த இருவித மனவெழுச்சிகள் எனும் கருத்தாக்கத்தை மேலும் நாம் விளக்கமாக அறியவேண்டும். நமது இஷ்ட தெய்வத்தின் மீது தியானம் செய்கின்றோம். அந்த நேரத்தில் நமது புலன்களை நாம் ஒடுக்கி விடுகின்றோம். தற்காலிகமாக உயர்ந்த மனோநிலையில் இருப்பதாக உணர்கின்றோம். மன அமைதியும், ஆனந்தமும் கிடைக்கின்றன. சில சமயங்களில் வெளியுலகத் தூண்டுதல்களுக்கும் இணங்கி விடுகின்றோம்.
ஒரு சமயத்தில் ஒருவர் ஆத்மாவெனும் உயர்ந்தத் தளத்தில்
இருக்கின்றார். ஆனால் சிறிது நேரத்திற்குப் பிறகு அவர் தேகாதி மனத்தளத்திற்க்கு மீண்டும் வந்து விடுகின்றார். புனிதமானத் தீர்மானங்கள் செய்ததைப் பற்றியெல்லாம் மறந்து விடுகின்றோம். நம்மை நாமே புலன்களின் வலையில் சிக்க வைத்துக் கொள்ள அனுமதித்து விடுகின்றோம். இதை இருவித மனவெழுச்சிகள் என்கின்றோம். இருவித மனவெழுச்சிகளில் இருந்து காப்பாற்றிக் கொள்ளத் தத்துவங்கள், கொள்கைகள் பற்றிய விவாதங்கள் மட்டுமே போதாது. நமது இலட்சியத்துடன் மேலேழுந்தவாரியானத் தொடர்பு கொள்வதும் போதாது. நமக்குள்ளேயே மிக ஆழ்ந்திருக்கும் உண்மையுடன் நிரந்தரத் தொடர்பு கொள்ள வேண்டும்.

Page 103
நமது தியானத்தின் பொழுது அடிக்கடி விரும்பத்தகாத எண்ணங்கள் நமது நடுமனதில் இருந்து எழுகின்றன. அவை நம்மை மேலும் முன்னேற விடாமல் தடுப்பதை அறிகின்றோம். இதற்கு மாற்று உண்டா என்று கேட்டால், உண்டு. இதற்குரிய மாற்று ஜபசாதானம் ஆகும். தெய்வீக மந்திரத்தை இடைவிடாது ஜபம் செய்வதின் மூலம் ஒருவர் கெட்ட எண்ணங்களையெல்லாம் வென்றிட முடியும். மனத்தூய்மையாக்கம் என்பதுதான் மிகவும் முக்கியமானதாகும்; பயன் தருவதாகும்.
இறைவனுடைய புனித நாமத்தை ஒருமுகப்பட்டு ஜபிப்பதனால் ஏற்படும் ஆன்மிக அதிர்வுகள், நமது கெட்ட சம்ஸ்காரங்களையும், தீய எண்ணங்களையும் வேரும் வேரடி மண்ணும் இல்லாமல் நிர்மூலமாக்கி விடுகின்றன. இவ்வாறு தொடர்ந்து செய்யும் பயிற்சியினால் நமது தீய சுபாவங்களை வென்று விடலாம்.
நாம் மரக்கறி உணவுப் பழக்கம் உடையவர்களானாலும் நமது மனம் அசுத்த எண்ணங்களினால் மாசுபடுத்தப்பட்டுவிட்டால், மரக்கறி உணவுப்பழக்கம் மட்டுமே நன்மை செய்துவிடமுடியாது. ஆகவே, நமது புலன் உணர்வுகள் தூய்மையாக இருக்கட்டும். சில சமயங்களில் கூடுதலாக இருந்தால், உண்ணாவிரதம், விழிப்புடைய சிறப்புப் பிரார்த்தனையை மேற்கொள்ள வேண்டும். நாவடக்கத்துடன் இருக்க வேண்டும். மீதூண் விருப்பத்தைக் கைவிட வேண்டும். நாக்கின் சுவைக்கு அடிமைப்படுபவன், ஆன்மிக ஆனந்தத்தை இழந்து விடுவான். அளவான சாப்பாட்டிற்கு மேல் நாம் சாப்பிட்டுக் கொண்டே போனால், நாம் ஆன்மிக நோக்கில் துன்பப்படுவோம். உணவைப் பற்றிய சில ஒழுக்கங்கள் அவசியமானவைகளாகும்.
நமக்குள் தொடர்ந்தாற் போன்ற இழு-பறி போராட்டம் அல்லது நாம் கண்களால் காணமுடியாத போராட்டத்தை எதிர்கொள்ள வேண்டியுள்ளது. ஆனாலும், போராட்டத்தைக் கைவிட்டு விடக்கூடாது. போராட்டத்தைக் கைவிட்டுவிட்டால்,

கடவுளுடன் இயைந்த வாழ்க்கை up 20
நமக்கு வேறு நம்பிக்கையில்லை. நாம் வீழ்ச்சியடையலாம். ஆனால் வீழ்ச்சியடைவது எழுச்சி பெறுவதற்குத்தான் என்பதை நினைவில் கொள்ள வேண்டும். நாம் வீழ்ச்சியுற்றுவிட்டோம், நம் நம்பிக்கை எல்லாம் போய்விட்டதென்று நினைத்தால், அந்த நினைப்பு நமது அழிவிற்கு வழிவகுக்கும். மனம் தளராமல், போராட்டத்தை தொடர்ந்து மேற்கொண்டால், அது நாம் கடவுளை நோக்கிச் செல்ல முயற்சி செய்கின்றோம் என்பதைக் குறிக்கும்.
ஒருமுறை போராட்டத்தைக் கைவிட்டு விட்டால், பின் நிகழ்வது எதுவாக இருக்கும்? கடவுளிடமிருந்து, கடவுள் பேரருளில் இருந்து நாம் விலகி வீழ்ந்து விடுவோம். தெய்வீக வாழ்க்கைக்கு வெளியே சென்று, தேகாதிவாசனையுள்ளி வாழ்க்கையில் பாய்ந்து விடுவோம். இந்த அவலம் ஏற்படாமல் காத்துக் கொள்ள, நாம் போராட்டத்தைத் தொடரவேண்டும். இடைவிடாமல் பிரார்த்தனை செய்ய வேண்டும்.
நம்மில் பெரும்பாலோர் புறவயச்சிந்தனையாளர்கள். அதாவது அகவுலகில் இல்லாமல் புறவுலகில் நாட்டம் கொண்டவர்கள். வெளியுலகத்தில் திரிந்தலையும் மனப்போக்கைத் தடுத்து நிறுத்த நாம் சிரமம் எடுத்துக் கொள்ளவேண்டும். மனத்தை அதன்உள்வட்டத்தில் இருந்து வெளியேற்றி, குறுகிய நோக்குடைய சாதாரண புறவுலக இயல்புகளில் சஞ்சாரம் செய்ய அனுமதிக்கக் கூடாது. நம் அகவுலகில் வாழ நாம் கற்றுக்கொள்ள வேண்டும். புறவுலகில் இருந்து நம் மனதை விலக்கிக் கொண்டு நம்மை ஆண்டுகொண்ட இறைவன் திருவடிகளில் பதிய வைக்க வேண்டும்.
இறுதியில் ஒரு கருத்தை மீண்டும் சுட்டிக் காட்டுவது பயன்தரும். அதாவது மனிதவாழ்க்கையின் இறுதி இலக்கு என்றும் அழிவுறாத அமைதியையும், பேரின்பத்தையும் அடைவதுதான். இந்த இலக்கை அடைய நமது ஆத்மா இருக்கும் இடத்திற்கு செல்லவேண்டும். "உலகியல் இன்பங்களை ஏன் நாடுகின்றாய்? பேரானந்தத்தின் தலையூற்றானக் கடவுளை நாடுக" என்று

Page 104
சுவாமிஜி ஒருமுறை கூறியுள்ளார். இத்துடன் அவர் மேலும் கூறியதாவது: "ஆத்மாவின் தளத்தில் வாழும் வாழ்க்கை ஒன்றுதான் பேரின்பத்தின் வைப்பாகும்.' இந்தப் பேரின்ப வைப்பிற்கு நாம் உண்மையிலேயே ஆசைப்பட்டால், புறவுலகத்தின் வாயிலை மூடிவிட்டு, அகவுலகில் நுழைய வேண்டும்.
"ஓ! மனமே! பெளதிக வாழ்க்கையின் தூண்டுதல்களான தேகாதி மனவுணர்விற்கு முட்டாள்தனமாக அதிக முக்கியத்துவம் கொடுப்பதேன்? நீ என்ன வெறும் சதைப் பிண்டமா? உடல் மீது கொண்ட மோகத்தால் பயனுள்ள உன்தேகத்தை வீணடிக்கின்றாய். இவையெல்லாம், தற்காலிகமானது. இவ்வுடல் மரணபாதையில், போகின்றது. சுடுகாட்டிற்கு எடுத்துச் செல்லப்படுகின்றது. தீயிட்டு கொளுத்தப்படுகின்றது. சாம்பலாக்கப்பட்டு போகின்றது. அழியப் போகின்ற இந்த உடல் மீது முட்டாள்தனமாக மோகம் கொள்வதேன்? இப்பிறவியில் நீ ஜாக்கிரதையாக இருந்தால், பேரானந்தத்தின் தலையூற்றை காண்பாய். நரம்புகளும், சதையும் கொண்ட வெறும் பிண்டமல்ல நீ. நீ தூய உணர்வு. நீ சைதன்ய விக்ரகம், சச்சிதானந்த சொரூபமாக, என்றும் சுதந்திரமாக உன்னுடைய தெய்வீகத் தன்மையில் குடியிருப்பதை விட்டுவிட்டு உன்னுடைய வாழ்க்கையை ஏன் விரயமாக்குகின்றாய்? உன்னுள் இருக்கும் என்றும் நிலைபேறுடைய ஆத்மாவை புறக்கணித்துவிட்டு ஆத்மா அல்லாததிடம் முட்டாள்தனமாக பற்று கொள்வது ஏன்? இவ்வாறு நாம் பலவிதமாக சிந்தித்து தியானம் செய்யவேண்டும்.
திருமணம் செய்து கொண்டு, குழந்தைகளைப் பெற்றுக் கொள்வதுதான் மனித வாழ்க்கையின் குறிக்கோள் என்று எந்தச் சாத்திர நூலிலும் கூறப்படவில்லை. இதைப் போலவே இல்லறம் துறந்த துறவியாக வேண்டும் என்று எந்தச் சாத்திரத்திலும் கூறவில்லை. ஆனால், கடவுளை அறிதல் வேண்டும் என்பது மனித வாழ்க்கையின் குறிக்கோள் என்பது சாத்திர நூல்களில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கடவுளுடன் இயைந்த வாழ்க்கை Qap 203
"பரலோகத்திலிருக்கும் உங்கள் பிதா சற்குணராயிருக்கிறது போல நீங்களும் பூரண சற்குணராயிருக்கக் கடவீர்கள்' என்று புனித பைபிளும் சாற்றியுள்ளது. ஆகவே, உன்னை அறிந்துகொள்: சுதந்திரமாக வாழ்க. V
நமது மகத்தான இராமகிருஷ்ண மிஷனின் ஆறாவது தலைவரான சுவாமி விரஜானந்தாஜி மகராஜ் அவர்களின் பயன்மிக்க "பரமார்த்த பிரசங்கம்' எனும் நூலில் கூறப்பட்டுள்ள சில சொற்களையும் கவனத்தில் கொள்வோம். "சகோதரர்களே! தாயின் கருப்பையில் இருந்து நாம் நிர்வாணமாகவே பிறந்தோம்." இந்தச் சொற்களில் புதைந்துள்ள கருத்துக்களை நாம் ஆழ சிந்திக்க வேண்டும். எப்படி வந்தோமோ, அப்படியே இவ்வுலகை விட்டுப் போகிறோம். நிர்வாணமாக பிறந்தது போல், நிர்வாணமாக இறந்து போகிறோம். பிறக்கும் போது கொண்டு வந்ததில்லை; இறக்கும் போது கொண்டு செல்வதில்லை; பேரினை நீக்கி பிணம் என்று பெயர் வைத்த நிலையில் நம்மை தனியாகவே அனுப்பி வருகிறார்கள். உடன் வருவோர் எவரும் இல்லை.
* நாம் பிறக்கும் பொழுது நம் குடும்பத்தினர் மகிழ்ச்சியடைகின்றார்கள்; இறக்கும் பொழுது துக்கம் அடைகின்றார்கள்; சுவாமி விரஜானந்தாஜி அவர்கள் பக்தகவி துளசிதாஸ் கருத்தை மேற்கோள் காட்டி கூறியதில், இறப்பிலும் ஆனந்தத்தை வெளிப்படுத்தும் இன்முகம் அமைதல் வேண்டும் என்பார். நாம் இறக்கும் பொழுது நமது முகத்தில் இருந்து புதுமையான ஆனந்தம், அழிவற்ற ஆனந்தம் தோன்ற வேண்டும். மற்றவர்கள் அழுது புலம்பட்டும்; ஆனால் நாம் இவ்வுலகை விட்டு புன்னகைத் தவழப் போவோம். இவ்வாறு எவர் செய்யமுடியும்? இது நடக்கக் கூடிய செயலா? ஆம்; நடக்கக் கூடியதுதான். எவர் ஒருவர் தம்மை 'சைதன்ய விக்ரகம்" என்று உணர்ந்து விடுகின்றாரோ, அவர் முகத்தில் இறப்பிலும் புன்னகை தவழும். தேகமே நான் என்ற உணர்வுடையோர் இறப்பில் புன்னகை

Page 105
204 uae ஆன்மிக வாழ்க்கைக்கான வழிகாட்டுதல்கள்
முகத்தைக் காணவே முடியாது. அழிவுறும் தேகத்தில் ஆனந்தம் வெளிப்படாது. ஆனால் நம்முள் இருப்பது என்றும் உள்ளது: அழிவற்றது; பிறப்பு - இறப்பு அற்றது; மிகவுயர்ந்த இந்த "நித்தமுத்த சுத்த புத்த சத்தபெரும்' பேருண்மையை அறிபவர் எவரோ, அவர் இப்பிறவியில் முக்தியடைந்தவர் ஆவார்.
உயர்ந்த குறிக்கோளாகிய ஆன்மிக வாழ்க்கையை அடைய
வேண்டுமானால், சுவாமி விராஜானந்தாஜி மகராஜ் கூறியதைப்போல உண்மையற்ற எதிலும் பற்றுக்கொள்ளக்கூடாது. பற்றறுத்து, நமது தெய்வீகத் தன்மையுடன் இயைந்து வாழப் பாடுபட வேண்டும். உண்மையான சற்குருவின் துணை நமக்கு வாய்த்து விட்டால், நமது குறிக்கோளை எளிதில் அடையலாம்.
ஆன்மிக வாழ்க்கையை மனப்பூர்வமாக ஏற்போமாக! உயர்ந்த அந்தக் குறிக்கோளை அறிவோமாக! இதுவே நமது புனித மும்மூர்த்திகளான பூரீராமகிருஷ்ணர், தூய அன்னை சாரதாதேவி, சுவாமி விவேகானந்தரிடம் நாம் செய்யும் பிரார்த்தனையாக அமையட்டும்.


Page 106


Page 107

In India Rs.3oloo In SriLanka Rs.60.oo