கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: அறநெறிப் பா மஞ்சரி

Page 1
சொக்
திருவாட்டி சின்னம்
ஞாபகார்த்த
 
 
 
 
 
 
 

II DJ
கன்
மா இராமலிங்கம் வெளியீடு
aaaaaaa

Page 2


Page 3

அறநெ றிப் Um Lo65&olfo
தொகுப்பு, கருத்துரை, விளக்கம் "சொக்கன்'
(சேர். பொன் இராமநாதன் அவர்களின் "ஆத்திசூடி மந்திர விளக்கம் சேர்ந்தது.)
திருவாட்டி சின்னம்மா இராமலிங்கம் அவர்கள் ஞாபகார்த்த வெளியீடு
நாயன்மார்கட்டு
யாழ்ப்பாணம்

Page 4
முதற்பதிப்பு மே 1969
அச்சுப்பதிவு பூரீ சண்முகநாத அச்சகம்
யாழ்ப்பாணம்

அராலி இந்துக்கல்லூரி அதிபரும், யாழ். கூட்டுறவுத் தமிழ் நூற் பதிவு விற்பனைக் கழகத் தலைவருமாகிய
35. f. fal5.5556ö 9alidi di M.A., Dip. in Ed. அளித்த
அணிந்துரை
--- //v//WM-y-1/\-1NMS/\/\/WY
வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வானுறையும் தெய்வத்துள் வைக்கப் படும்."
தெய்வத்துள் வைக்கப்படுவதை மனிதன் விரும்பு வதனலேயே அவன் வையத்துள் வாழ்வாங்கு வாழ விழைகின்றன்; இவ்விழைவாலேயே வையத்துள் வாழ் வாங்கு வாழ்ந்த பெரியோர்களின் வாழ்வையும் வாக் கையும் அறிய முயல்கின்றன். அம் முயற்சியில் ஈடுபட் டிருப்போருக்கு ஓர் அருவிருந்தாக அமைகிறது. இந் நுTல.
இதனைச் சொக்கன் "பொன் வைக்கவேண்டிய இடத் திலே வைக்கப்பட்ட பூ" என்கிருர் 1 இல்லை. இது நாற்ற முடைய பொன் மலரே யாம் !
தொன்மை வளஞ் சான்ற தமிழ்மொழியில், பரந்து கிடக்கும் இலக்கியப்பரப்பில், தேடியெடுத்த அருமணி களாகிய அறிவுடையோர் ஆணைகளைச் சேர்த்து ஆக்கப் பட்டதே இம் மஞ்சரி.
இம் மஞ்சரி மக்களை எங்ங்ணம் வையத்துள் வாழ் வாங்கு வாழச் செய்யும் ? அது எங்ங்ணம் என்பதை, முன்னுரை விளக்குகின்றது :- سی

Page 5
'நாள்தோறும் காலைப்பொழுதில். . என்பது உறுதி' அங்ங்ணம் நிகழ்ந்தால் 'உண்டால் அம்ம இவ் வுலகம்' என்பதும் உறுதி என நாமும் கூறுவோம்.
ஓதி யுணர்ந்தும் பிறர்க்குரைத்தும் தானடங்காப் பேதையிற் பேதையார் இல், என்பதும் வள்ளுவர் வாக்கு. இம் மஞ்சரியைப் படித் துப் படித்தபடி ஒழுகுவோமாக,
இம் மஞ்சரி வெளியீடு, "கரும்பு தின்னக் கைக்கூலி தருவது" போலாகின்றது. சொக்கன் தருங் கரும்பைத் தின்ன உத்தமி சின்னம்மாவின் நன் மக்கள், கைக்கூலி தருகின்ருர்கள்.
இம் மஞ்சரியைத் தொகுத்தளிக்கும் சொக்கனும் இலவசமாக வழங்கும் அறிவறிந்த மக்களும், தெய்வத் துள் வைக்கப்பட்ட திருவாட்டி சின்னம்மா இராமலிங்க மவர்களின் வாழ்த்துக்களுக்கும், எங்கள் பாராட்டுக்க ளுக்கும், படிப்போரின் நன்றிக்கும் உரிமையுடையரா கின்றனர்.
வாழ்க அவர்கள் தெய்வப்பணி
சி. சிவகுருநாதன்
அராலி இந்துக் கல்லூரி,
அராலி, w வட்டுக்கோட்டை. 28-5-69

மனிதராய்ப் பிறந்த ஒவ்வொருவரும் வையத்துள் வாழ்வாங்கு வாழ அறநெறியே உறுதுணையாயும், ஊன்று கோலாயும் அமைகின்றது. இவ்வறநெறியினின்றும் ஒரு வர் விலகும் பொழுது அவருக்கும், விலங்கிற்கும் எவ்வித வேறுபாடும் இல்லாது போய்விடுகின்றது. அறவாழ்வு இம்மைக்கு மாத்திரமன்றி, மறுமைக்கும் வழிகாட்டி யாய் அமைவதால் அதனை மறத்தலைப் போலக் கேடு விளைவிப்பது வேறு எதுவுமில்லை.
சிறப்பீனுஞ் செல்வமு மீனும் அறத்தினூஉங் காக்கம் எவணுே உயிர்க்கு.
(திருக்குறள் - அறன் வலியுறுத்தல் க1
அறத்தினூஉங் காக்கமு மில்லை அதனை மறத்தலி னுரங்கில்லைக் கேடு.
(ைெடி - டிெ உ]
இவ்வுண்மையை நம் முன்னேர் நன்குணர்ந்திருந்த னர்; அதனல், பிறந்து மொழி பயிலத் தொடங்குங் காலத்திலிருந்து, நரைதிரையோடு கூனி க் குறு கி க் கோலூன்றித் தளர்நடையிடுங் காலம்வரை ஒவ்வொரு வருங் கடைப்பிடித்தொழுக வேண்டிய நெறிகளை வகுத் துச் சென்றுள்ளனர். அவை எமது சமுதாயத்தைப் பல நூற்ருண்டுகளாய் நேர்வழியில் நடத்தி வந்துள்ளன. இன்றுவரை தமிழினம் முற்ருய் அழிந்துபோகாது, தனது தனித்தன்மையைப் பேணி உலக அரங்கிலே மதிப்போடு வாழ்ந்து வருவதற்குத் தமிழ்ச் சான்றேர் வகுத்த ஒழுக்க நெறியே அடிப்படைக் காரணமாகும். மந்திரங் களைப் போலச் சுருக்கமாகவும், தெளிவாகவும், ஆழ மாகவும், உறுதியாகவும் அவை கூறப்பட்டிருப்பது தனிப் பெருஞ் சிறப்பு. வயதிற்கும். பருவத்திற்கும் பக்குவத் திற்கும் ஏற்ப அவை நன்கு வகுக்கப்பட்டிருக்கின்றன.

Page 6
iv
முற்காலத்தில் மாணுக்கர் இவற்றை மனனஞ்செய்து தம் வாழ்விலே செறியச் செய்துவந்தனர். ஆ ன ல், அவசர யுகமாகிய இந்த இருபதாம் நூற்ருண்டில் மன னஞ் செய்யும் வழக்கமே அருகிவருவதால், எமது முன் னேரின் அரிய அறநெறிப்பாச் செல்வங்களை இத் தலை முறையினர் சிறிது சிறிதாய் இழந்து வருகின்றனர். இந் நிலை மிகவும் பரிதாபத்திற்குரியது. ஆத்திசூடி, கொன்றை வேந்தன், நல்வழி, வாக்குண்டாம், நன்னெறி முதலாம் அறச் செல்வங்களை இழப்பதுபோன்ற பேரிழப்பு வேறு இல்லை என்று துணிந்து கூறலாம். இவை மட்டுமோ ? சங்க காலந்தொட்டு இன்றுவரை கல்வி, வீரம், கடமை, நன்றி, ஒப்புரவு, கண்ணுேட்டம், அன்பு முதலான பண்பு களின் உயர்வுபற்றி ஆயிரக்கணக்கான அரிய பாடல்கள் இருந்து வருவதையும் நாம் மறத்து விட்டோமானல், "நாம் தமிழர்" என்று கூறித் தருக்குவதால் எதுவித பயனும் இல்லை. எனவே, மீட்டும் எமது குழந்தைகளி டையே அறநெறிப் பாடல்களை மனனஞ் செய்விக்கும் பழக்கத்தை நாம் புதுப்பித்தல் இன்றியமையாததாகின்
D5le
மேனுட்டார் அறநெறிகளை ஒழுக்கவியல் (Ethics) என ஒர் இயலாகவே வகுத்து, அவற்றை விஞ்ஞானரீதியாய் ஆராய்ந்து பல புதிய உண்மைகளைக் கண்டுள்ளனர். கி. மு. 5-ஆம் நூற்றண்டிலே வாழ்ந்த சோக்கிரட்டீஸ் என்ற மாபெரும் ஞானி ஒழுக்கவியலுக்கு வித்திட்டார் g56ör 60) LD (Good), egy pub (Virtue), 51-565) 5 (Character) முதலாகப் பல பிரிவுகளாய் அதனைப் பிரித்து அவரின் காலந்தொட்டு இன்றுவரை பல ஒழுக்கவியலறிஞர்கள் (Moralists) ஆராய்ச்சி நிகழ்த்துவதை ஒழுக்கவியலைக் கற்கும் மாணவர் நன்கறிவர். இவ்வாராய்ச்சி மனித சமுதாயத்தின் உள, பண்பாட்டு வளர்ச்சிகளை அறிந்து கொள்ளப் பேருதவி புரிந்துவருகிறது. இத்துறையில் தமிழராகிய நாமும் ஆராய்ச்சி நடத்தினுல் எ ம து இனத்தின் உளப்போக்கும், பண்பாடும் சென்ற வகையி
னைத் தெளிவாக அறிந்து கொள்ளலாம்.

Vy
இவ்விரண்டு குறிக்கோள்களையும் முன்வைத்து, சங்க காலத்திலிருந்து இன்று வரை எழுந்த அறநெறிப் பாடல் களைத் தொகுத்து வெளியிடல் வேண்டும் என்ற எண் ணம் என் உள்ளத்திலே நெடுநாளாய் இருந்துவந்தது. இவ்வெண்ணத்தை நிறைவு செய்ய அன்பர் திரு. இது சரவணமுத்து அவர்களின் ஊக்கமும் தூண்டுகோலா யிற்று. அவர் தமது தாயாரின் நினைவுமலராக ஓர் அறநெறிப் பாமஞ்சரியைத் தொகுத்துத் தரும்படி என்னை வேண்டினர். அதன் பெறுபேருகவே இந்நூல் வெளியாகின்றது.
இது பூரணமான ஒரு தொகுப்பென்று நான் கூற மாட்டேன். பல ஆண்டு காலம் முயன்று இதுவரை வெளிவந்த எல்லாத் தமிழிலக்கியங்களையும் ஆராய்ந்து தொகுத்து வெளியிடவேண்டிய ஒரு நூலை, இருவாரங் களில் வெளியிட்டுவிட்டேன் என்று பெருமைப்படுவதில் அர்த்தம் இல்லை. பொன் வைக்கவேண்டிய இடத்திலே பூ வைத்ததுபோல ஆங்காங்கே ஒரு சில வ ற்றை யே தொகுத்துச் சிறிய நூல் வடிவிலே தமிழ் கூறும் நல் லுலகின் முன் படைக்கின்றேன்.
இதனை இலவச வெளியீடாய் வெளியிட்டு உங்கள் கரங்களிலே தவழவிடுகின்ற திருவாட்டி சின்னம்மா இராமலிங்கம் அவர்களின் புதல்வர்களுக்கு நீங்கள் செய்யக்கூடிய கைம்மாறு ஒன்றுதான்.
இந்நூலை நீங்கள் படிப்பதோடு உங்கள் இளம் பரம் பரையினரும் கற்று மனனஞ்செய்து அவற்றை வாழ்விலே செறியச்செய்ய அவர்களை ஊக்குவிப்பது சிறந்த அறப் பணியாகும். நாள்தோறும் காலைப்பொழுதில், இம் மஞ் சரியிலுள்ள ஒவ்வொரு பாடலை அவர்கள் மனனஞ்
செய்து வந்தால், அஃது அவர்களின் வாழ்விற்குத் தக்க
வழித்துணையாய் அமையும் என்பது உறுதி.
இந் நூ லி ற் சேர்த் துள்ள Gaft. Qureir இராமநாதன் அவர்களின் 'ஆத்திசூடி மந்திர விளக்கம்"

Page 7
νi
பரமேஸ்வரக் கல்லூரியினல் வெளியிடப்பட்ட ஒரு கைந் நூல். அதனை இந்நூலில் வெளியிடுதற்கு அனுமதி வழங் கிய, பரமேஸ்வரக் கல்லூரி அதிபர் திரு. மு. ஞானப் பிரகாசம் B.A., B. Sc. அவர் களு க் கு, எ னது ம். திருவாட்டி சின்னம்மா இராமலிங்கம் அவர்களின் புதல் வர்களதும் உளங்கனிந்த நன்றி உரியதாகுக.
இந்நூலுக்குச் சிறந்ததோர் அணிந்துரை தந்து எம்மை ஊக்குவித்த, திரு. சி. சிவகுருநாதன் அவர்களுக் கும் எமது உளங்கனிந்த நன்றி.
நாயன்மார் கட்டு, க. சொக்கலிங்கம்
யாழ்ப்பாணம். ('சொக்கன்")
20-5-69.

léi. சிவமயம்
தேவாரம்
திருச்சிற்றம்பலம்
திருவேயென் செல்வமே தேனே வானுேர்
செழுஞ்சுடரே செழுஞ்சுடர்நற் சோதிமிக்க உருவேயென் னுறவேயென் ஊனே ஊனின்
உள்ளமே உள்ளத்தின் உள்ளே நின்ற கருவேயென் கற்பகமே கண்ணே கண்ணிற்
கருமணியே மணியாடு பாவாய் காவாய்
அருவாய வல்வினை நோ யடையா வண்ணம் ஆவடுதண் டுறையுறையும் அமரரேறே.
திருச்சிற்றம்பலம்
- அப்பர் சுவாமிகள்
திருவாசகம்
திருச்சிற்றம்பலம்
வெள்ளந்தாழ் விரிசடையாய் விடையாய் விண்ரூேர்
பெருமானே எனக்கேட்டு வேட்ட நெஞ்சாய்ப் பள்ளந்தாழ் உறுபுனலிற் கீழ்மே லாகப்
பதைத்துருகும் அவர்நிற்க என்னையாண் டாய்க்கு உள்ளந்தாள் நின்றுச்சி அளவும் நெஞ்சாய்
உருகாதால் உடம்பெல்லாங் கண்ணுய் அண்ரூற வெள்ளந்தான் பாயாதாம் நெஞ்சங் கல்லாம்
கண் இணையும் மராமாந்தி வினையி னேற்கே,
திருச்சிற்றம்பலம்
- மாணிக்கவாசக சுவாழிகள்

Page 8
viii
திருவிசைப்பா
திருச்சிற்றம்பலம்
ஒளிவளர் விளக்கே உலப்பிலா ஒன்றே
உணர்வுசூழ் கடந்ததோர் உணர்வே தெளிவளர் பளிங்கின் திரண்மணிக் குன்றே
சித்தத்துட் டித்திக்குந் தேனே அளிவளர் உள்ளத் தானந்தக் கனியே
அம்பலம் ஆடரங் காக வெளிவளர் தெய்வக் கூத்துகந் தாயைத்
தொண்டனேன் விளம்புமா விளம்பே.
திருச்சிற்றம்பலம்
- திருமாளிகைத்தேவர்
திருப்பல்லாண்டு
திருச்சிற்றம்பலம்
மிண்டு மனத்தவர் போமின்கண் மெய்யடியார்கள்
விரைந்து வம்மின் கொண்டுங் கொடுத்துங் குடிகுடி யீசற்காட்
செய்ம்மின் குழாம்புகுந்(து) அண்டங் கடந்த பொருள் அளவில்லதோர்
ஆனந்த வெள்ளப்பொருள் பண்டும் இன்றும் என்றும் உள்ளபொருளென்றே
பல்லாண்டு கூறுதுமே.
திருச்சிற்றம்பலம்
- சேந்தனர்

iX
திருப்புராணம்
திருச்சிற்றம்பலம்
தண்ண னிவெண் குடைவேந்தன் செயல்கண்டு தரியாது மண்ணவர்கண் மழைபொழிந்தார் வானவர்பூ
மழைசொரிந்தார் அண்ண லவன் கண்ணெதிரே அணிவீதி மழவிடைமேல் விண்ண வர்கள் தொழநின்றன் வீதிவிடங்கப் பெருமான், திருச்சிற்றம்பலம்
- சேக்கிழார் சுவாமிகள்
திருப்புகழ் திருச்சிற்றம்பலம்
எழுகடல் மணலை அளவிடி னதிகம் எனதிடர்பிறவி
அவதாரம்
இனியுன தபயம் எனதுயிர் உடலும் இனியுடல்
விடுகமுடியாது
கழுகொடு நரியு மெரிபுவி மறலி கமலனு மிகவும்
அயர்வானுர்
கடனுன தபயம் அடிமையு னடிமை கடுகியு னடிகள் தருவாயே விழுதிக ழழகி மரகத வடிவி விமலிமு னருளு முருகோனே விரிதல மெரிய, குலகிரி நெரிய விசைபெறு மயிலில் வருவோனே எழுகடல் குமுற அவுணர்கள் உயிரை இரைகொளும்
அயிலை உடையோனே இமையவர் முனிவர் பரவியபுலியூ ரினில்நட மருவும் பெருமாளே.
திருச்சிற்றம்பலம்
- அருணகிரிநாதர்

Page 9
பொருளடக்கம்
அறநெறிப் பா மஞ்சரியின் . விளக்கம் கல்வியின் சிறப்பு தமக்கென வாழாப் பிறர்க்குரியாளர் மானவீரம் நல்லாரைப் பொறுத்ததே நானிலம் யாதும் ஊரே, யாவருங் கேளிர் உழவும் வாணிகமும் மாட்சிபெறு மன்னன் முனிபுங்கவர்களின் தவநிலை மாண்பு நன்மக்களைப் பெற்ருே ரை நாடுஞ் சிறப்பு நயனில் மாக்கள் பெற்ருேர்க்குப் பெண்களில் ஏதுரிமை ? மண்ணுசை அழிவிற்கே வித்து இளங்கோவடிகளின் இன்னுரை சாத்தன் வகுத் துரைத்த நல்லறம் வள்ளுவன் வாய்மொழி சமண முனிவர்களின் சால்புரை இனியவை எவை ? அறமாலையில் ஒளிர் மணிகள் இன்னு தன எவர் க்கும் செய்ய ம்க நல்லாதனுர் நவின்ற நல்லறம் தாரியா சானின் சீரிய உரை கூடலூர்க் கிழாரின் நீடிய நல்லுரை கணிமேதையாரின் அணியுரை பெருவாயின் முள்ளியாரின் பெருநெறி
காவியங்கள் கவினுறக்கூறும் அறிவுரைகள்
ஆத்திசூடி மந்திரம் ஒளவையார் பற்றிய ஒரு குறிப்பு
கொன்றை வேந்தன்
வாக்குண்டாம்
நல்வழி
வெற்றிவேற்கை
நன்னெறி தெரிவுறக் கேட்ட திருத்தகு நல்லீர் ! பாரதி பகர்ந்த புதிய ஆத்திசூடி அருஞ்சொற் பொருள் அகராதி

அறநெறிப்பா மஞ்சரியின் வைப்புமுறை ஒரு விளக்கம்
எட்டுத்தொகை நூல்களுள் கலித்தொகை, பரிபாடல் தவிர்ந்த ஆறும், பத்துப்பாட்டு நூல்களுள் திருமுருகாற் றுப்படை தவிர்ந்த ஒன்பதும் ஏறக்குறைய இரண்டாயிர மாண்டுகளுக்கு முற்பட்டவை என்பது, தமிழிலக்கிய வர லாற்ருசிரியர்களின் முடிவாகும். இவற்றிலும் பழைமை யானவை என ஆங்காங்குச் சில நூல்கள் பெயரளவிற் குறிக்கப்பட்டாலும் அவை இன்று எமக்குக் கிடைத்தில. இந்நிலையில் தமிழர்தம் பண்பாடு, நெறிமுறைகளின் ஆரம்ப தன்மைகளை அறிய முதலிற் கூறிய தொகை நூல்களே நமக்கு உறுதுணையாகின்றன.
இலக்கியங்களிற் குறிப்பிட்டுள்ளபடி எமது முன்னே ரின் வாழ்வு இயற்கையோடியைந்ததாகவும், ஆன்மீக நெறி பற்றிய சிந்தனைப் போக்குக் குறைந்ததாகவுமே விளங்கக் காணலாம். அறநெறியுபதேசங்கள் கூடச் சமு தாயம் முழுவதையும் முன்னிலைப்படுத்தி, "இதைச் செய்க, இதைத் தவிர்க" எனக் கட்டளை செய்வதாய் அமையாமல், தனி மனித அனுபவங்களைப் புலப்படுத்திக் குறிப்பாக நன்மையை அறிவுறுத்துவனவாய் உள்ளன. புலவன் அரசனுக்குச் செவியறிவுறுத்துவது, அரசன் வஞ் சினம் புகல்வது, போன்ற வழிகளைக் கையாண்டு அவற்றி னுாடாகவே அற உபதேசஞ் செய்யப்படுகின்றது.
இதன்பின் சமணர்கள் வருகின்றனர். அறநெறியுப தேசத்தைச் சமுதாயத்தை முன்னிலைப் படுத்திச் செய் கின்ற போக்கும், அறநெறிவிதியாக்கமும் ஏற்படுகின் றன. சிலப்பதிகாரம், பதினெண்கீழ்க்கணக்கு நூல்கள் மணிமேகலை என்பவற்றில் இவ்வழி முறையைத் தெளி வாகக் காண்கின்ருேம்.
சமணர், பெளத்தர்களின் வருகையைத் தொடர்ந்து வடமொழி இலக்கியங்களின் செல்வாக்குத் தமிழிலக்கி
|-

Page 10
- 2 -
யங்களிலே படிவதாயிற்று. இதனல் காவியங்கள் (கம்ப ராமாயணம், சீவகசிந்தாமணி இன்னபிற) புராணங்கள் (பெரியபுராணம், கந்தபுராணம் இன்னபிற) தமிழிலே தோன்றுகின்றன. அவை பாத்திரங்கள் வாயிலாகவும், உருவகங்கள் வாயிலாகவும், அறநெறிப் போதனையை நடாத்துகின்றன. இந்நிலை ஐரோப்பியர் காலம்வரை நீடிக்கிறது. ஐரோப்பியர் காலத்திலிருந்து புராணங் கள், காவியங்களினிடத்தை நவீனங்களும், சிறுகதை களும் பெறுகின்றன. எனினும் பதினெண்கீழ்க்கணக்கு நூல்களைப் போல நீதி யுபதேசங்களை நேரடியாகச் செய் கின்ற ஆத்திசூடி, கொன்றைவேந்தன், வாக்குண்டாம், நல்வழி, நன்னெறி போன்ற நூல்களை நாயக்க மன்னர் காலத்திலிருந்து அவ்வப்போது புலவர்கள் செய்தே வந்துள்ளனர். இவை எளிமை, தெளிவு, முதலியவற்ருல் பதினெண்கீழ்க் கணக்கு நூல்களிலும் வளர்ச்சியடைந் தனவாய் விளங்கக் காண்கின் ருேம். இவை கல்வியறிவு குறைந்த பெண்கள், சிறுவர்களாகியோர்க்காய்ச் செய் யப்பட்டமையாலேயே இவ்விரு தனிப்பண்புகளையும் பெற்று விளங்குகின்றன. அன்றியும் சைவசமய உண்மை களையும், கதைகளையும் இவை பொதிந்திருப்பதும் ஒரு சிறப்பமிசமாகும்.
இவ்விருபதாம் நூற்ருண்டில் "இதைச் செய், இதைத் தவிர்" என்று கட்டளை செய்தல் கல்வியுளவியலின்படி பிழையானதாய்க் கருதப்படுகின்றது. எனவே அறப் போதனையைக் கவர்ச்சியுள்ளதா யாக்கி உள்ளங்களிலே படியச் செய்யும் போக்குக் காணப்படுகின்றது. எனி னும் பாரதி, தேசிகவிநாயகம்பிள்ளை, சோமசுந்தரப் புலவர் போன்றேர் பழைய முறையிலே, ஆனல் புதிய மெருகோடு அந்நெறிப் பாக்களைச் செய்து தந்துள்ளனர். இன்றுங் கவிஞர் சிலர் இத் துறையிலே கவிதைகள் யாத்து வருகின்றனர்.
முன்னர் க் கூறியது போன்றே, பொன்வைக்கு மிடத் திலே பூ வைப்பது போன்று மிகச் சிலவாகிய அறநெறிப் பாமலர்களை உங்கள் முன் சமர்ப்பிக்கின்றேன்.
சொக்கன்

- 3 -
1. கல்வியின் சிறப்பு
உற்றுழி உதவியும் உறுபொருள் கொடுத்தும் பிற்றைநிலை முனியாது கற்றல் நன்றே பிறப்போ ரன்ன உடன்வயிற் றுள்ளும் சிறப்பின் பாலால் தாயும்மனந் திரியும் ஒருகுடிப் பிறந்த பல்லோ ருள்ளும் மூத்தோன் வருக என்னுது அவருள் அறிவுடை யோனு றரசுஞ் செல்லும் வேற்றுமை தெரிந்த நாற்பா லுள்ளும் கீழ்ப்பா லொருவன் கற்பின் மேற்பால் ஒருவனும் அவன்கட் படுமே.
பாண்டியன் ஆரியப்படை கடந்த நெடுஞ்செழியன்
(புறநானூறு 183)
ஒருவன் தன் ஆசிரியர்க்கு இடையூறு ஏற்படுங் காலத் திலே முன்னின்று உதவியும், அவருக்கு வேண்டிய பொருள் கொடுத்தும், அவரை வழிபடுதலை வெருது கல்வியைக் கற்பது மிகவும் நன்று. ஏனெனில் ஒரே வயிற்றிற் பிறந்த உடன்பிறப்புக்களிடையிலும் கல்விச் சிறப்பு வாய்ந்தவன் பக்கமே, அவன் தாயின் மனமும் சார்கின்றது. ஒரு குடும்பத்திலே பிறந்த பலருள்ளும் மூத்தவனை "வருக" என வரவேற்காது, அவர்களுள் அறி வுடையோனையே வரவேற்று அவன் கூறும் வழியிலே அரசனும் நடப்பான் . வேறுபாடு தெரிந்த நான்கு வரு ணங்களாகிய அந்தணர், அரசர், வணிகர், வேளாளர் என்ற இவர்களுள்ளே கீழ்வருணத்தில் உள்ளவனும் கல்வியிலே உயர்வடைவானனல், மேல்வருணத்தான் அவனிடம் சென்று வழிபட்டுக் கல்வி க ற் பா ன். (ஆகவே கல்வியை விடச் சிறந்த செல்வம் இல்லை.)

Page 11
-- 4 س--
2. தமக்கென வாழாப் பிறர்க்குரியாளர்
உண்டால் அம்மவிவ் வுலகம் இந்திரர் அமிழ்தம் இயைவ தாயினும் இனிதெனத் தமியர் உண்டலும் இலரே முனிவிலர் துஞ்சலும் இலர்பிறர் அஞ்சுவ தஞ்சிப் புகழெனில் உயிருங் கொடுக்குவர் பழியெனின் உலகுடன் பெறினுங் கொள்ளலர் அயர்விலர் அன்ன மாட்சி அனைய ராகித் தமக்கென முயலா நோன்ருட் பிறர்க்கென முயலுனர் உண்மை யானே.
கடலுண்மாய்ந்த இளம்பெருவழுதி
[ւյ0ւb 1821
இந்திரன் உண்ணும் அமிர்தம் தெய்வத்தாலாவது, முன்னைத் தவத்தாலாவது தமக்கு வந்து கிடைப்பதாயி னும் அதனை இனியது என்றுகொண்டு தனித்து உண் ணுர் யாரையும் வெறுக்கார். பிறர் அஞ்சத்தக்க துன் பத்திற்குத் தாமும் அஞ்சி வாளாதிராது முன்வந்து அத் துன்பத்தைப் போக்க முயல்வர் புகழுக்காய் உயிரையுங் கொடுப்பர். பழியெனில் உலகோடு கிடைத்தாலும் அதனை ஏற்கார். இவர்கள் எதற்கும் அஞ்சி வருந்து தல் இல்லை. தமக்கென முயலாது பிறருக்காய் முயலும் இத்தகையோர் இருப்பதாலேயே இவ்வுலகம் நிலைபெற் றுள்ளது.
3. மானவீரம்
குழவி இறப்பினும் மூன்றடி பிறப்பினும் ஆளன்(று) என்று வாளிற் றப்பார் தொடர்ப்படு ஞமலியின் இடர்ப்படுத் திரீஇய கேளல் கேளிர் வேளாண் சிறுபதம்

- 5 -
மதுகை யின்றி வயிற்றுத்தீ தணியத் தாம் இரந் துண்ணும் அளவை ஈன்மரோஇவ் உலகத் தானே.
சேரமான் கணைக்காலிரும் பொறை
(புறம் 741
பிள்ளை இறந்து பிறந்தாலும், குறைப்பிரசவத்தின் காரணமாய் வெறும் தசைப்பிண்டமாய்ப் பிறந்தாலும் அவற்றை வாளால் வெட்டிய பின்னரே அரசர் புதைத் திடுவர். ஆளல்ல என்று அவற்றை விடாத வீர உணர்வு அவர்களுக்கு உண்டு. தம்மைப் பகைவர் நாயைப் போலச் சங்சிலியாலே பிணித்து, உபகாரமாய்த் தரு கின்ற தண்ணிரைத் தமது வயிற்றுத்தீ தணியும் வண்ணம் இரந்துண்ணும் மக்களை அவர்கள் தம் மக்களாய்ப் பெறு onu G3 pr fr ? GLu(g?rř.
4. நல்லாரைப் பொறுத்ததே நானிலம்
நாடா கொன் ருே காடா கொன்றே அவலா கொன் ருே மிசையா கொன் ருே எவ்வழி நல்லவர் ஆடவர் அவ்வழி நல்லை வாழிய நிலனே.
ஒளவையார் (புறம் 187)
நீ நாடாயினும் ஆகுக'. அன்றிக் காடேயாயினும் ஆகுக'. பள்ளமாயினும் ஆகுக. அன்றி மேடே யாயினும் ஆகுக. உன்னகத்தே வாழும் மக்கள் நல்லவராயின் நீயும் நல்லையாவாய். நிலமே! நீ வாழ்க,

Page 12
ܚܘܝܕ 6 ܗܣܚܡ
5. யாதும் ஊரே, யாவருங் கேளிர்
யாதும் ஊரே யாவருங் கேளிர் தீதும் நன்றும் பிறர்தர வாரா நோதலும் தணிதலும் அவற்ருே ரன்ன சாதலும் புதுவ தன்றே வாழ்தல் இனிதென மகிழ்ந்தன்று மிலமே முனிவின் இன்னு தென்றலும் இலமே மின்னுெடு வானந் தண்டுளி தலைஇ யானுது கல்பொரு திரங்கு மல்லற் பேர்யாற்று நீர்வழிப் படூஉம் புணைபோல் ஆருயிர் முறைவழிப் படு உம் என்பது திறலோர் காட்சியிற் றெளிந்தனம் ஆகலின் மாட்சியிற் பெரியோரை வியத்தலும் இலமே சிறியோரை இகழ்தல் அதனிலும் இலமே.
எல்லாம் எம் ஊரே. யாவரும் எம் உறவினரே. தீமையும் நன்மையும் பிறர் தந்து வருவன அல்ல. மரண மும் புதியதன்று. அது நாம் கருவுற்ற நாளிலிருந்தே எமக்கு அமைந்து விடுவதாகும். இன்பத்தைக் கண்ட விடத்து "வாழ்வே இனிது" என நாம் மகிழ்வதுமில்லை. துன்பம் நெருங்கி வரும்போது "வாழ்தல் தீது" என வெறுப்பதுமில்லை. ஏனெனில் மின்னலோடு கூடி வானம் குளிர்ந்த மழைத் துளிகளைச் சொரிய அவை பெருகிக் கற்களை அலைத்துப் பேரோசையுடன் செல்கையில், அதிலே மிதக்கும் மிதவை போன்று உயிரானது ஊழ் இழுத்துச் செல்லும் வழியிலேயே செல்லும் என்பதை நாம் அற நூல்களால் உணர்ந்துள்ளோம். ஆதலால் பெரியோரை நாம் மதிப்பதுமில்லை; சிறியோரை இகழ் வது அதனிலும் இல்லே.

6. உழவும், வாணிகமும்
கொலை கடிந்துங் களவு நீக்கியும் அமரர்ப் பேணியும் ஆவுதி அருத்தியும் நல்லாணுெடு பகடோம்பியும் நான்மறையோர் புகழ்பரப்பியும் புண்ணிய மட்டியும் பசும்பதங் கொடுத்தும் புண்ணிய முட்டாத் தண்ணிழல் வாழ்க்கைக் கொடுமேழி நசையுழவர் நெடுநுகத்துப் பகல்போல நடுவுநின்ற நன்னெஞ்சினுேர் வடுவஞ்சி வாய்மொழிந்து தமவும் பிறவு ஒப்பம் நாடிக் கொள்வதுரஉ மிகைகொளாது கொடுப்பது உங்
(குறை கொடாது பல்பண்டம் பகர்ந்துவீசுந் தொல்கொண்டித் துவன்றிருக்கை.
கடியலுரர் உருத்திரங்கண்ணனர்
(பட்டினப்பாலை 199-212
கொலைத்தொழில் நடைபெருது அதனை நீக்கியும், களவை நிகழாது வழிப்படுத்தியும், தேவர்களுக்கான கடன்களைச் செய்தும், அவர்களுக்கு ஆவுதி வழங்கியும் நல்ல பசுக்களோடு எருதுகளையுங் காத்தும், பிராமணர் களை அவர்களின் ஒழுக்கத்தின் வழி நிறுத்தி அவர்களது புகழைப் பரவச் செய்தும், பெரிய புண்ணியங்களைத் தாம் செய்வதோடு அவற்றையே பிறர்க்குத் தானமாய் வழங் கியும், விளைந்த நெல்லையும், பாக்கு முதலியவற்றையும் உண்ணக் கொடுத்தும் குறைவுபடாத அறத் தொழில்க ளைச் செய்பவராகிய வளைந்த கலப்பைகளையுடைய விருப் பிற்குரிய உழவர் அருளோடு கூடி இல் வாழ்க்கை நடத் தும் இருக்கைகள், (காவிரிப்பூம் பட்டினத்தில் உள்ளன.)

Page 13
- 8 -ܡ-
இவ்வுழவர்களின் கலப்பை நுகத்தின் நடு ஆணியைப் போன்று நடுவுநிலைக்கண் நிற்கும் நல்ல நெஞ்சுடையோ ரும், பழிபாவங்களுக்குப் பயந்து, தமது கொள்விலையை யும், விற்கும் விலையையும் நன்கு ஆராய்ந்து கொடுக்கும் பொருளைக் குறைக்காதும், வாங்கும் பொருளை அளவிற் கதிகமாய்ப் பெருதும் இலாபத்தை வெளிப்படச் சொல்லி விற்போருமாகிய வணிகரின் பழைமையான செல்வம் நிறைந்த குடியிருக்கைகள் (புகார்ப்பட்டினத்தில் உள்ளன)
7. மாட்சிபெறு மன்னன்
உயர்நிலை உலகம் அமிழ்தொடு பெறினும் பொய்சே எணfங்கிய வாய்நட் பினையே முழங்குகட லேணி மலர்தலை யுலகமொ டுயர்ந்த தேனத்து விழுமியோர் வரினும் பகைவர்க் கஞ்சிப் பணிந்தொழு கலையே, தென்புல மருங்கின் விண்டு நிறைய வாணன் வைத்த விழுநிதி பெறினும் பழிநமக் கெழுக என்னுய் விழுநிதி ஈத லுள்ள மொ டிசைவேட் குவையே அன்னுய் நின்ணுெடு முன்னிலை எவனுே.
மாங்குடி மருதனுர் (மதுரைக்காஞ்சி 197-206
உயர்வான தேவருலகை அதன் அமிர்தத்தோடு பெறு தற்கு வாய்ப்புக் கிடைத்தாலும், அந்தப் போகங்களைத் தருவதாகிய பொய்யினின்றும் நீங்கி, மெய்யுடனே நட் புச் செய்யும் பண்பை உடையாய். ஒலிக்கின்ற கடலை எல்லையாய்க் கொண்ட உலகத்தாரோடு தேவருங்கூடி உனக்குப் பகைவராய் வந்தாலும் அவர்களுக்கு அஞ்சிப் பணியமாட்டாய். தென்னுட்டின் மலைகளெல்லாம் நிரம் பும்படி வாணனென்ற சூரன் வைத்த பெருஞ் செல்வம் முழுவதும் பெற்ருலும் பிறர்பழிப்பாரானல் அச்செல்

- 9 -
வத்தை வேண்டா" எனத் துறக்க வல்லாய். சிறப்புட னும் செல்வத்தைக் கொடுக்கின்ற கொடையுள்ளத் தோடு, புகழையும் விரும்புவாய். அத்தகைய உன் க்கு மெய், வாய், கண், மூக்கு, செவியாகிய ஐம்பொறிகளா லும் அநுபவிக்கப்படுகின்ற உலகப் பொருள்களோடு தொடர்பும் உண்டோ? இல்லை.
இங்கு நீ" என்று புலவர் விளித்தது தலையாலங்கா னத்துச் செருவென்ற நெடுஞ்செழியன. இவனே, "என் னைச் சிறுவன் என்று கருதி என் நாட்டின் மீது படை யெடுத்து வந்த பகைவரின் போர்முரசை அருஞ்சமரிலே கைப்பற்றி அவர்களையும் என்னடிப்படுத்தேனுயின், எனது நிழலிலே வாழ்கின்ற என் குடி மக்கள், செல்வதற்கு வேறு நிழல் கிட்டாது. "எம் மன்னன் கொடியன்" என்று கண்ணிர்விட்டுப் பழித்துரைக்கும் கொடுங்கோலேணுகுக' என்று வஞ்சினம் புகன்றவன்.
சிறுசொற் சொல்லிய சினங்கெழு வேந்தரை அருஞ்சமஞ் சிதையத் தாக்கி முரசமொ(டு) ஒருங்ககப் படேன ஞயிற் பொருந்திய என்னிழல் வாழ்நர் சென்னிழற் காணுது கொடியனெம் இறையெனக் கண்ணிர் பரப்பிக் குடிபழி தூற்றுங் கோலே குைக. த, கா, செருவென்ற நெடுஞ்செழியன் (புறம் 72 7-12
8. முனியுங்கவர்களின் தவநிலை மாண்பு
சீரை தைஇய உடுக்கையர் சீரொடு வலம்புரி புரையும் வானரை முடியினர் மாசற இமைக்கும் உருவினர் மானின் உரிவை தைஇய ஊன்கெடு மார்பின் என்பெழுந் தியங்கு மியாக்கையர் நன்பகற்
2-إ9ی

Page 14
سس 10 سسه
பலவிடன் கழிந்த உண்டியர் இகலொடு செற்ற நீக்கிய மனத்தின ரியாவதுங் கற்றேர் அறியா அறிவினர் கற்றேர்க்குத் தாம்வரம் பாகிய தலைமையர் காமமொடு கடுஞ்சினங் கடிந்த காட்சியர் இடும்பை யாவது மறியா இயல்பினர்.
நக்கீரனுர் (திருமுருகாற்றுப்படை 126-1331
மரவுரியைத் தைத்தணிந்த உடையை உடையவர்; அழகாலும், வடிவாலும், நிறத்தாலும் வலம்புரிச் சங் கொத்த நரைத்த தலைமயிரை உடையவர்; நாள் தோறும் நீராடுவதால் அழுக்கற்ற வடிவினர் கடின மான விரதங்களால் தசைகெட்டு, எலும்பு வெளிப் போந்த உடலினர்; உண்ணுமலே பல பகற்போதுகளைக் கழித்த தன்மையர் மாறுபாடும், நீடித்த வெறுப் புணர்வும் அற்றவர்; பலவற்றையும் கற்றுணர்ந்த அறி வாளிகளாலும் அறியொணுத பேரறிவு வாய்த்தவர்; பல கற்ரூேரின் அறிவிற்கும் வரம்பு செய்யத் தகும் ஆற் றல் பொருந்தியவர். இவற்றேடு காமத்தையும், கடுங் கோபத்தையும் கட்டுப்படுத்தி, எவ்வித மனத்துன்பங் களும் இல்லாது வாழ்பவர். (முனிவர்கள் எ-று)
9. நன்மக்களைப் பெற்ருேரை நாடுஞ் சிறப்பு
இம்மை உலகத் திசையொடும் விளங்கி மறுமை உலகும் மறுவின் றெய்துப செறுநரும் விழையுஞ் செறுதிர் காட்சிச் சிறுவரைப் பயந்த செம்மலோர்.
செல்லூர்க் கோசிகன் கண்ணனர்
(அகநானூறு 66, 1-4
பகைவரும் விரும்பும் குற்றமில்லாச் சிறப்பும், கவினும் பொருந்திய மக்களைப் பெற்ற பெருமக்கள், இவ்

வுலகிலும் புகழோடு விளங்கி, மறுமையுலகிலும் பிழை யிலா இன்பம் பெறுவர்.
எழுபிறப்புந் தீயவை தீண்டா பழிபிறங்காப் பண்புடை மக்கட் பெறின்
திருக்குறள். (புதல்வரைப் பெறுதல் எ-உ1
10. நயனில் மாக்கள்
நிறைந்தோர்த் தேரும் நெஞ்சமொடு குறைந்தோர் பயனின் மையிற் பற்றுவிட் டொரூஉம் நயனின் மாக்கள் போல வண்டினம் சுனைப்பூ நீத்துச் சினைப்பூப் படர
Y0L LLLLLL 0LLL LL0L LLL LLLLL S S SLLLL LSSLSLS SS LLLLLS LLL0L 0LL0 LLLLLLL
அந்தியிளங்கீரனர் (அகநானூறு 71, 1-4)
செல்வரை நாடிச்செல்லும் விருப்பமைந்த உள்ளத் தால், வறியவரை நாடுவதாலாம் பயனின்மையை அறிந்து அவர்களை நீங்கும் (தன்னலம் நிறைந்த) நடுவுநிலை யில்லா மக்களைப்போல வண்டுக்கூட்டம் குளங்களிலுள்ள பூக்களை நீங்கிச் சினைப்பூக்களை நாடிச்செல்ல.
11. பெற்றேர்க்குப் பெண்களில் ஏதுரிமை
பலவுறு நறுஞ்சாந்தம் படுபவர்க் கல்லதை மலையுளே பிறப்பினும் மலைக்கவைதாம் என்செய்யும்? நினையுங்கால் நும்மகள் நுமக்குமாங் கண்யளே.
சீர்கெழு வெண்முத்தம் அணிபவர்க் கல்லதை நீருளே பிறப்பினும் நீர்க்கவைதாம் என்செய்யும்? தேருங்கால் நும்மகள் நுமக்குமாங் கனையளே,

Page 15
r- 12 -
ஏழ்புணர் இன்னிசை முரல்பவர்க் கல்லதை
யாழுளே பிறப்பினும் யாழ்க்கவைதாம் என்செய்யும்?
சூழுங்கால் நும்மகள் நுமக்கும் ஆங்கு அணையளே.
(கலித்தொகை - 9, 1-9)
மலையின் கண்ணே பிறந்தாலும், பெருமை வாய்ந்த சந்தனம் அதனைப் பெற்று அணிபவர்க்கல்லாது மலைக்கு என்ன பயனைத் தரும் ? நினைத்துப் பார்த்தால் உங்கள் மகளும் உங்களுக்கு அத்தகையளே.
சிறப்புப் பொருந்திய முத்தானது கடலிலே பிறந் தாலும் தன்னைப் பெற்று மாலையிலே பதித்து அணிப வர்க்கன்றித் தான் தோன்றிய கடலுக்கு எவ்விதத்தி லும் பயன்படாது. சிந்தித்துப் பார்த்தால் உங்கள் மகளும் உங்களுக்கு அத்தகையளே.
ஏழு சுரங்களோடும் இயைவதான இன்னிசை, யாழி டத்தே பிறந்தாலும், அதனை மீட்டுபவர்க்கன்றி. யாழிற்கு எவ்விதத்திலும் உப யோ க ம |ா வ தி ல் லை ஆராய்ந்து பார்த்தால் உங்கள் மகளும் உங்களுக்கு அத் தகையளே. (அ-து பருவமடைந்த பெண் தன் காத லற்கேயுரியவளன்றிப் பெற்றேர்க்கு உரியவளல்லள் என் ւմՖl.1
12. மண்ணுசை அழிவிற்கே வித்து
எஞ்சா மண்ணசை வேந்தனை வேந்தன் அஞ்சுதகத் தலைச்சென் றடல்குறித் தன்று. தொல்காப்பியர் (தொல்காப்பியம் அகத்திணையியல் 7
பிறர் மண்மேல் தணியாத ஆசையுடைய ஒரு வேந்தனைப் பிறிதொரு மன்னன், முன்னவன் அஞ்சு மாறு சென்று வென்று அடக்குதல் புறத்திணைகளிலே வஞ்சித் திணையுள் அடங்கும்.

- 13 -
13. இளங்கோவடிகளின் இன்னுரை
பரிவும் இடுக்கணும் பாங்குற நீங்குமின் தெய்வம் தெளிமின் தெளிந்தோர்ப் பேணுமின் பொய்யுரை அஞ்சுமின் புறஞ்சொல் போற்றுமின் ஊனுரண் துறமின் உயிர்க்கொலை நீங்குமின் தானம் செய்ம்மின் தவம்பல தாங்குமின் செய்ந்நன்றி கொல்லன் மின் தீநட்பு இகழன் மின் பொய்க்கரி போகன் மின் பொருள்மொழி நீங்கன்மின் அறவோர் அவைக்களம் அகலாது அணுகுமின் பிறவோர் அவைக்களம் பிழைத்துப் பெயர்மின் பிறர்மனை அஞ்சுமின் பிழையுயிர் ஒம்புமின் அறமனை காமின் அல்லவை கடிமின் கள்ளுங், களவும், காமமும், பொய்யும் வெள்ளைக் கோட்டியும் விரகினில் ஒழிமின் இளமையுஞ் செல்வமும் யாக்கையும் நிலையா உளநாள் வரையாது ; ஒல்லுவது ஒழியாது செல்லும் தேனத்துக்கு உறுதுணை தேடுமின் மல்லன்மா ஞாலத்து வாழ்வீர் ஈங்கென,
சிலப்பதிகாரம் (வருந்தருகாதை 186-202)
கவலை, இடர் ஆகியவற்றை விட்டொழியுங்கள் தெய்வம் உண்டெனத் தெளிந்து கொள்ளுங்கள். அந்தத் தெளிவினை அடைந்த அடியார்களை மதித்தொழுகுங்கள் பொய்சொல்ல அஞ்சுங்கள். புறங்கூறுதலை ஒழியுங்கள் புலால் உண்பதை விடுங்கள். உயிர்க்கொலை தவிருங்கள். தானதருமங்களைச் செய்யுங்கள். தவநெறியைக் கடைப் பிடியுங்கள், செய்ந்நன்றி கொல்லாதீர்கள். தீயநட்பை இகழ்ந்து ஒதுக்குங்கள். பொய்ச்சாட்சி கூரு தீர்கள். பொருளமைந்த நன்னெறி காட்டும் சொற்களின் வழியி னின்றும் நீங்காதீர்கள். அறச்சான்ருே ரின் அவைக் களத்தை என்றும் விலகாது சென்றடையுங்கள். அவர்க ளல்லாத தீயோரின் கூட்டத்தை மறந்தும் அடையாதீர் கள், பிறர் மனைவியரை விரும்பாதீர்கள். துன்புற்ற உயிர்

Page 16
- 14 -
களைக் காத்திடுங்கள். அறச்செயல்களில் ஆசை கொள் ளுங்கள். மறவழியை நீக்குங்கள். கள்ளுண்டல், கள வாடல், காமம், பொய், பயனற்ற பேச்சுப் பேசும் கூட் டம் என்பவற்றைத் திறமையாக விலக்குங்கள். இளமை, செல்வம், உடல் என்பன நிலையானவையல்ல. உள்ளன வாகிய வாழ்நாள்கள் கழிவதைத் தவிர்த்தல் இயலாது. மரணம் தப்பாது. ஆகையினல், இவ்வுலகினை விட்டுச் செல்லும் மறுமைக்கு உற்றதுணையாகிய அறத்தைத் தேடிக்கொள்ளுங்கள். அகன்ற இப் பேருலகில் இவ்வாறு நல்வாழ்வு வாழ்வீர்களாக.
14. சாத்தன் வகுத்துரைத்த நல்லறம் மாரியும் மன்னுயிரும்
கோன்நிலை திரிந்திடின் கோள்நிலை திரியும்
கோள்நிலை திரிந்திடின் மாரிவறம் கூரும்
மாரிவறம் கூரின் மன்னுயிர் இல்லை.
மணிமேகலை
அரசன் தனது நடுவுநிலையினின்றும் விலகினல் கிர கங்கள் நிலைமாறும். கிரகங்கள் நிலைமாற மழைவளம் குன்றும். மழை வளம் குன்றவே நிலைபெற்ற உலகுயிர் கள் நிலைகெட்டு அழிவெய்தும்.
தானத்தில் சிறந்தது அன்னதானம்
sy மண்திணி ஞாலத்து வாழ்வோர்க் கெல்லாம் உண்டி கொடுத்தோர் உயிர்கொடுத் தோரே மக்கள் தேவர் என இரு சார்க்கும் ஒத்த முடிவின் ஒரறம் உரைக்கேன் 'பசிப்பிணி தீர்த்தல்". a 8 e o
மணிமேகலை

ー15ー
மண்செறிந்த உலகத் தி ல் வாழ்கின்றவர்களுக்கு உணவைக் கொடுத்தவர் உயிர்கொடுத்தவராவர். மக் கள், தேவர் எனும் இருபகுதியார்க்கும் ஒப்பமுடிந்த தான ஒர் அறத்தினை எடுத்து உரைக்கின்றேன். அவ் வறமே பசியாகிய நோயைத் தீர்த்தலாகும்.
பிறவி துன்பமயமானது பிறந்தோர் உறுவது பெருகிய துன்பம் பிறவார் உறுவது பெரும்பே ரின்பம் பற்றின் வருவது முன்னது பின்னது அற்றேர் உறுவது அறிக.
மணிமேகலை
உலகிலே பிறப்பெடுத்தோர் அடைவது பெருகிவரு வதாகிய துன்பமே. பிநவாதவர் அடைவது பெரிதாம் இன்பமே. முன்னையது உலகப்பற்றினுலே ஏற்படுவது; பின்னையது பற்றற்ற நிலையை அடைவோர் பெறுவது,
சான்ருேர் கடிந்தவை மயக்கும் கள்ளும் மன்னுயிர் கோறலும் கயக்கறு மாக்கள் கடிந்தனர்.
மணிமேகலை
நில்லாதவற்றை நிலையெனக் கொள்ளும் மயக்க நிலையையும், கள்ளுண்டலையும், உயிர்க்கொலையையும் பற்றறுத்த சான்றேர் தீயவை என இழித்தனர்.
15. வள்ளுவன் வாய்மொழி
இறைவனே உலகிற்கு முதல்வன்
அகர முதல எழுத்தெல்லாம் ஆதி பகவன் முதற்றே உலகு.
திருக்குறள் (கடவுள் வாழ்த்து 11

Page 17
- 16 -
எழுத்துக்கள் அகரத்தை முதலாக உடையன. உல கம் இறைவனை முதலாக உடையது.
வான்மழை இன்றேல் வாடிடும் உயிர்கள்
விண் இன்று பொய்ப்பின் விரிநீர் வியனுலகம் உண்ணின்று உடற்றும் பசி.
திருக்குறள் (வான் சிறப்பு 31
மேகம் மழை பொழியாது பொய்த்தால் கடல்சூழ் உலகிலுள்ள உயிர்களினுள் நின்று பசி வருத்தும்,
துறந்தார் பெருமை
துறந்தார் பெருமை துணைக்கூறின் வையத்(து) இறந்தாரை எண்ணிக்கொண் டற்று.
திருக்குறள் (நீத்தார்பெருமை 2)
துறவிகளது பெருமையின் அளவைக் கூறுவதாயின், இவ்வுலகிற் பிறந்திறந்தோரின் தொகையினை எண்ணிக்
கணக்கிட்டுரைப்பது போன்றதாகும். (முடியாத காரி աւն)
அனைத்தறன் என்பது எது ?
மனத்துக்கண் மாசில ஞதல் அனைத்தறண் ஆகுல நீர் பிற.
திருக்குறள் (அறன் வலியுறுத்தல் 41
அறத்தின் அளவு மனத்தில் தூயனதலே. மற்றைய வெல்லாம் வெறும் ஆரவாரத் தன்மையன.

ー17ー
முயல்வாருள் முன் நிற்பவன்
இயல்பினுன் இல்வாழ்க்கை வாழ்பவ னென்பான் முயல்வாருள் எல்லாந் தலை.
திருக்குறள் (இல்வாழ்க்கை 71
தனக்கு வகுத்த நெறியிலே இல்வாழ்க்கை நடத்தும் ஒருவன், பிரமச்சாரி, வானப்பிரஸ்தன், சன்னியாசியா கிய ஒழுக்க நெறியாளரிலும் உயர்ந்தவனுவான்.
பெண்ணெனப்படுவள் யார்?
தற்காத்துத் தற்கொண்டாற் பேணித் தகைசான்ற சொற்காத்துச் சோர்விலாள் பெண்.
திருக்குறள் வாழ்க்கைத்துணைநலம் 61
கற்பு நெறிநின்று தன்னைக்காத்தும், உபசாரங்களைச் சரிவர நடத்திக் கணவனைப் பேணியும், தன்னிடத்தும்,
தன் நாயகனிடத்தும் வசை ஏற்படாது காத்தும் வருப வளே உண்மையான பெண்,
மகன் தந்தைக்கு ஆற்றும் உதவி
மகன் தந்தைக்கு ஆற்றும் உதவி இவன்தந்தை என்னுேற்ருன் கொல்எனுஞ் சொல்.
திருக்குறள் (புதல்வரைப் பெறுதல் 10
தந்தைக்கு மகன் செய்யுங் கைம்மாறு 'இவனைப் பெற இவன் தந்தை என்ன தவம் செய்தானுே ?" என்ற சொல்லைப் பெற்றுக் கொடுத்தல்.
அன்பும் என்பும் அன்பிலார் எல்லாந் தமக்கு உரியர் அன்புடையார் என்பும் உரியர் பிறர்க்கு.
திருக்குறள் (அன்புடைமை 21
அ-3

Page 18
அன்பில்லாச் சுயநலமிகள் எல்லாப் பொருளையும் தமக்னெவே வைத்திருப்பர். அன்புள்ளம் வாய்த்தவர் கள் தமது எலும்பையும் பிறர்க்கே அளிப்பர்.
இலக்குமி வாழும் இல்லம்
அகனமர்ந்து செய்யாள் உறையும் முகனமர்ந்து நல்விருந்(து) ஒம்புவான் இல்.
V, திருக்குறள் (விருந்தோம்பல் 41 தன்னை நாடிவந்த விருந்தினரை முகமலர்ச்சியோடு வரவேற்கும் ஒருவனின் இல்லத்தில் இலக்குமி மகிழ்ச்சி யோடு வந்திருப்பாள்.
கனியும் காயும்
இனிய உளவாக இன்னுத கூறல் கணியிருப்பக் காய்கவர்ந் தற்று.
திருக்குறள் (இனியவைகூறல் 10 இனிய சொற்கள் இருக்கவும் கடிய சொற்களை
உரைத்தல், ஒரு மரத்திலே இனிய பழங்கள் இருக்கவும் புளித்த காய்களைக் கவர்ந்தது போலாகும்.
செய்யாமற் செய்த உதவி
செய்யாமற் செய்த உதவிக்கு வையகமும் வானகமும் ஆற்றல் அரிது,
திருக்குறள் (செய்நன்றி அறிதல் 11
முன்பு தனக்கு ஒர் உதவியும் செய்யாதிருக்கவும் முன்வந்து உதவி தேவைப்படுபவனுக்கு உதவுவதாகிய நன்றிக்கு ஈடாக மண்ணுலகையும், வானுலகையும் அளித்தாலும், அவை ஈடாகா.

ܘܚ- 19 ܚ
அல்லன செய்தால் கேடு உறுதி
கெடுவல்யா ணென்ப தறிகதன் னெஞ்ச நடுவொரீஇ அல்ல செயின்.
திருக்குறள் (நடுவுநிலைமை 91
நடுவுநிலையினின்று நீங்கித் தன் மனத்திற்கு விரோத மான செயல் செய்யும் ஒருவன் தான் அழிவது உறுதி என்பதை அறிவாணுக.
அடக்கமே உயர்ந்த செல்வம்
காக்க பொருளா அடக்கத்தை ஆக்கம் அதனினுTஉங் கில்லை உயிர்க்கு.
திருக்குறள் (அடக்கமுடைமை 21
அடக்கத்தை எல்லாப் பொருளிலும் உயர்ந்த பொரு
ளாய்க் காத்து வருக. அதனைவிடச் சிறந்த செல்வம் வேறில்லை.
மேன்மையும் பழியும்
ஒழுக்கத்தின் எய்துவர் மேன்மை இழுக்கத்தின் எய்துவர் எய்தாப் பழி.
திருக்குறள் (ஒழுக்கமுடைமை 71
எல்லாரும் ஒழுக்கத்தால் மேன்மை அடைவர்; ஒழுக்கத்தினின்றும் வழுவியவர்கள் அடைதற்குரியதல் லாத மாளா வசையை அடைவர்.
புகழ் எங்குள்ளது?
ஒறுத்தார்க் கொருநாளை இன்பம் பொறுத்தார்க்குப் பொன்றுந் துணையும் புகழ்.
திருக்குறள் (பொறையுடைமை ே

Page 19
- 20 -
தமக்குத் தீங்கிழைத்தவரைத் தண்டித்தவர்க்கு இன் பம் ஒரு நாளைக்கே. பொறுத்தார்க்கோ உலகம் அழி யும் வரை புகழ் உண்டு.
16. சமணமுனிவர்களின் சால்புரை செல்வம் நிலையற்றது
அறுசுவை உண்டி அமர்ந்தில்லாள் ஊட்ட மறுசிகை நீக்கிஉண் டாரும் - வறிஞராய்ச் சென்றிரப்பார் ஓரிடத்துக் கூழேனின் செல்வம்ஒன்(று) உண்டாக வைக்கற்பாற்(று) அன்று.
நாலடியார் (துறவறவியல் செல்வநிலையாமை 11
மனைவி, முன்னர் அமர்ந்திருந்து முகமலர்ச்சியோடு உணவினை ஊட்ட "மறுகவளம் வேண்டா" என்று நீக்கி யுண்ட செல்வரும், ஒரு காலத்தில் வறியவராகி வேறி டஞ்சென்று "கூழாவது தருக" என்று இரந்துண்பர். ஆகவே செல்வம் நிலையானது எனக் கொள்ளல் இய லாது,
இளமை நீர்க்குமிழி
பணிபடு சோலைப் பயன்மரம் எல்லாம் கணிஉதிர்ந்து வீழ்ந்தற் றிளமை - நனிபெரிதும் வேற்கண்ணள் என்றிவளை வெஃகன்மின் மற்றிவரும் கோற்கண்ணள் ஆகும் குனிந்து.
இளமைநிலையாமை 7
குளிர்ச்சி பொருந்திய சோலையிலே பயன்தந்து நிற் கும் மரங்களும் ஒருகாலத்தில் கனிகள் யாவும் உதிரப் பெற்றது போன்றதே இளமையாகும். ஆதலால் பெண் ணைப் பார்த்து "இவள் மிகுந்த கூர்மையான வேல்

போலும் கண்களை உடையவள்" என்று இச்சை கொள் ளாதீர்கள். இவளே முதிர்ந்த காலத்தில் கோலையே கண்ணுய்க் கொண்டு கூனித் தளர்நடை நடப்பவளாக 6ծուհ.
உடல் அழியும்
படுமழை மொக்குகளில் பல்காலும் தோன்றிக் கெடும் இதோர் யாக்கையென் றெண்ணித் - தடுமாற்றம் தீர்ப்பேம்யாம் என்றுணரும் திண்ணறி வாளரை நேர்ப்பர்யார் நீள்நிலத்தின் மேல்.
யாக்கை நிலையாமை 7
"பெய்யும் மழைவெள்ளத்திலே தோன்றும் குமிழி போலப் பலமுறை தோன்றித் தோன்றி அழிவதே இவ் வுடல்" என்பதை அறிந்து, "தடுமாற்றத்தை நீக்கி உண்மைவழிச் செல்வோம்" எனக் கருதும் உறுதி வாய்ந்த அறிஞருக்கு நிகராவார் இவ்வுலகில் யாவர்?
தவமெனும் நல்விளக்கு
விளக்குப் புகஇருள் மாய்ந்தாங்(கு) ஒருவன் தவத்தின்முன் நில்லாதாம் பாவம் - விளக்கின்நெய் தேய்விடத்துச் சென்றிருள் பாய்ந்தாங்கு நல்வின் தீர்விடத்து நிற்குமாம் தீது.
துறவு 51
இருளிடத்திலே விளக்கு வந்தால் இருள் அழியும் அதுபோல ஒருவனின் தவமாகிய விளக்கிற்கு முன்பு பாவமாகிய இருள் நில்லாது. விளக்கிலே நெய் குறை யக்குறைய இருள் பழையபடி குடியேறும். அதுபோல ஒருவன் தன் தவமுயற்சியிலே குறைவடைகையில் மீண் டும் பாவ இருள் அவனைக் கெளவிவிடும்.

Page 20
- 22 -
மேல்மக்கள் மாண்பு
கூர்த்துநாய் கெளவிக் கொளக்கண்டும் தம்வாயால் பேர்த்துநாய் கெளவினுர் ஈங்கில்லை - நீர்த்தன்றிக் கீண்மக்கள் கீழாய சொல்லியக்கால் சொல்பவோ மேன்மக்கள் தம்வாயால் மீட்டு.
சினமின்மை 10
நாய் தம்மைப் பற்றிக் கெளவக் கண்டாலும் திருப்பி நாயைத் தாம் கெளவுவார் இவ்வுலகில் இல்லை. பண்பற்ற கொடுஞ் சொற்களைக் கீழோர் கீழ்மையுறச் சொன்னலும், உயர்ந்தோர் அவற்றைத் திருப்பித் தாமும் சொல்வாரோ? சொல்லார்.
பிறர்மனை விரும்பேல்
அறம்புகழ், கேண்மை, பெருமை யிந்நான்கும் பிறன்தாரம் நச்சுவார் சேரா - பிறன்தாரம் நச்சுவார்ச் சேரும் பகைபழி பாவமென்(று) அச்சத்தோ டிந்நாற் பொருள்.
பிறன் மனை நயவாமை 2
தருமம், கீர்த்தி, நட்பு, பெருமிதமாகிய இந் நான்கு பண்புகளும் பிறன் மனைவியை விரும்புவோரை அடையா. பகை, வசை, பாவம், அச்சமாகிய இந் நான்கு பொருளுமே பிறன் மனைவியை விரும்புவாரை அடையும்.
ஈதலே பிறவியின் பயன்
முன்னரே சாம்நாள் முனிதக்க மூப்புள பின்னரும் பீடழிக்கும் நோயுள - கொன்னே பரவன்மின் பற்றன்மின் பாத்துண்மின் யாதும் கரவன்மின் கைத்துண்டாம் போழ்து.
ஈகை 2

---- 23 --س--
சாகும் நாள் முன்னரே உள்ளது; வெறுக்கத்தக்க மூப்பும் உள்ளது. அதனேடு சிறப்பை அழித்திடும் நோய்கள் பலவும் உள்ளன. ஆதலால் வீணுய் உங்க ளையே நீங்கள் புகழ்ந்து கொள்ளாதீர்கள்; அகப் புறப் பற்றுக்களையும் வளர்க்காதீர்கள் இருப்பதைப் பகுத்துக் கொடுத்து உண்ணுங்கள். கையிலே பொருளை வைத்துக் கொண்டு இல்லை என்று மறைக்காதீர்கள்.
பண்டை வினையின் பயனே காண்
பல் ஆவுள் உய்த்து விடினும் குழக்கன்று வல்லதாம் தாய்நாடிக் கோடலைத் - தொல்லைப் பழவினையும் அன்ன தகைத்தேதற் செய்த கிழவனை நாடிக் கொளல்,
பழவினை 1
பல பசுக்களிடையே கொண்டுசென்று விடுத்தாலும் கன் ருனது தாயைத் தேடிக் கண்டுகொள்ள வல்லதாகும். இது போன்றே பழையதான வினையும் அதனைச் செய்த கருத்தாவை நாடி அடைய வல்லது.
எச்சூழலிலும் இயற்கைக் குணம் மாருது
தக்காரும் தக்கவர் அல்லாரும் தம்நீர்மை எக்காலும் குன்றல் இலராவர் - அக்காரம் யாவரே தின்னினுங் கையாதாம் கைக்குமாம் தேவரே தின்னினும் வேம்பு.
மெய்ம்மை 2
தகுதி வாய்க்கப்பெற்ற சான்ருேரும், தகைமையில் லாக் கீழோரும் எச் சந்தர்ப்பத்திலும் தமது தன்மை யில் மாறமாட்டார். அக்காரம் எவர் உண்டாலும் கைக்காது. வேப்பங்கனியை எவர் தின்ருலும் கைக்கும்,

Page 21
- 24 -
விழைவதும் வெறுப்பதும்
அறிமின் அறநெறி அஞ்சுமின் கூற்றம் பொறுமின் பிறர்கடுஞ்சொல் போற்றுமின் வஞ்சம் வெறுமின் வினைதீயார் கேண்மைஎஞ் ஞான்றும் பெறுமின், பெரியார்வாய்ச் சொல்.
நல்லினம் சேர்தல் 2
தரும வழியினை அறியுங்கள். யமனுக்கு அஞ்சுங்கள். பிறரின் கடுஞ்சொற்களைப் பொறுங்கள். பழிவாங்கு முணர்வை நீக்குங்கள். கொடிய செயலுடையாரை வெறுங்கள். பெரியார்களின் உபதேசங்களை ஏற்று நட வுங்கள்.
17. இனியவை எவை?
ஏவது மாரு விளங்கிழமை முன்னினிதே நாளும் நவைபோகான் கற்றன் மிகவினிதே ஏருடையான் வேளாண்மை தானினி தாங்கினிதே தேரின் கோள் நட்புத் திசைக்கு, 1. மான மழிந்தபின் வாழாமை முன்னினிதே தான மழியா மை தானடங்கி வாழ்வினிதே ஊனமொன் றின்றி உயர்ந்த பொருளுடைமை மானுடவர்க் கெல்லா மினிது. 2. கற்ருர்முன் கல்வி யுரைத்தல் மிகவினிதே மிக்காரைச் சேர்தல் மிகமான முன்னினிதே எட்டுணை யானு மிரவாது தானிதல் எத்துணையு மாற்ற இனிது. 3. நட்டார்ப் புறங்கூருன் வாழ்தல் நனியினிதே பட்டாங்கு பேணிப் பணிந்தொழுகல் முன்னினிதே முட்டில் பெரும்பொருள் ஆக்கியக்கால் மற்றது தக்குழி ஈதல் இனிது. 4.
பூதஞ்சேந்தனர் இனியவை நாற்பது

- 25 -
1. தான் கட்டளையிடுவதை மறுக்காமற் செய்கின்ற இளைஞரைப் பெற்றிருத்தல் மிகவும் இனிது. எந் நாளும் குற்றமான வழியிற் செல்லாது கல்விகற்றல் மிகவும் இனிது. கலப்பையைச் சொந்தமாய் வைத் திருப்பவன் செய்யும் உழவுத் தொழில் இனிது ஆராய்ந்து பார்த்தால் தான் செல்லும் திசையெல் லாம் ஆதரவு பெறுதற்கு நண்பரை உடைத்தாதல் இனிது.
2. மானத்தை இழந்து வாழாமல் உயிரை விடுதல் மிக இனிது. தனது நிலையினை நீங்காது அடக்கத்துடன் வாழ்வது இனிது. குற்றவழி நீங்கிச் சேர்த்த செல் வத்தை உடையராதல் மக்கள் யாவர்க்கும் இனிது.
3. கற்றவர் முன் அமர்ந்திருந்து தாம் கற்றவற்றை எடுத்துரைத்தல் மிக இனிது. தம்மிலும் கல்வி, அறிவு, ஒழுக்கங்களிலே உயர்ந்த சான்றே ரைச் சேர்ந்து வாழல் மிக இனிது. மற்றவரிடம் தான் இரந்து பொருள் பெருது, தன்னை வந்தடைந்து இரப்போர்க்குச் சிறிதா யினும் உவந்தளித்தல் மிக இனிது.
4. தன் நண்பர் இல்லாத இடத்தில் அவர்களைப் பழித்துரையாத வனப் வாழ்தல் மிகவும் இனிது, பழை மையான அறநூல்கள் கூறும் வழியினைப் பேணி ஒழுகல் மிக மிக இனியது. குறைவில்லாத பெருஞ்செல்வத்தினைச் சம்பாதித்தால் அதைத் தக்கோர்க்கு ஈதல் மிக இனி Liğil .
18. அறமாலையில் ஒளிர்மணிகள்
மண்ணி யறிய மணிநலம் பண்ணமைத் (து) ஏறிய பின்னறிப மாநல மாசறக்
சுட்டறிய பொன்னி னலங்காண்போர் தெட்ட கேளிரா சூறய பலன்.
அ-4

Page 22
- 26 -
இன்னுமை வேண்டின் இரவொழுக இந்நிலத்து மன்னுதல் வேண்டின் இசைநடுக தன்ணுெடு செல்வது வேண்டின் அறஞ்செய்க வெல்வது வேண்டின் வெகுளி விடல்.
மனைக்குப்பாழ் வாணுத லின்மைதான் செல்லும் திசைக்குப்பாழ் நட்டோரை யின்மை இருந்த அவைக்குப்பாழ் மூத்தோரை யின்மை தனக்குப்பாழ் கற்றறி வில்லா உடம்பு. கண்ணிற் சிறந்த உறுப்பில்லைக் கொண்டானின் துன்னிய கேளிர் பிறரில்லை மக்களின் ஒண்மைவாய்ச் சான்ற பொருளில்லை ஈன்ருளோ(டு எண்ணக் கடவுளும் இல்,
மாணிக்கக் கற்களைக் கழுவிப் பார்த்து அவற்றின் சிறப்புக்களை அறிவர். சேணம் அமைத்துக் குதிரையில் அமர்ந்த பின்னரே குதிரையின் சிறப்பை அறி வர். பொன்னின் சிறப்பை உருக்கிய பின்னரே அறிவர். தம் செல்வங்களை இழந்து வறியரான பின்னரே உற வினராலாம் பயனை அறிவர்.
இழிவை விரும்பின் இரந்து வாழ்க. இவ்வுலகில் நிலைக்கவேண்டுமேல் புகழை நிறுவுக. இறப்பின் பின்ன ரும் தன்னேடு தொடர்ந்து துணையாய் வருதற்கு விரும் பினல் அறத்தைச் செய்க. பிறரை வெல்வது குறித் தால் வெகுளியை விடுக.
மனையாளில்லாத மன பாழ். செல்லுந் திசையில் நண்பரின் மை பாழ். மூத்தோரில்லாத அவைக்களம் பாழ். கல்வியற்ற வெற்றுடம்பால் தனக்கே பாழ்.
கண்ணைப்போல மேலான உறுப்பு வேறில்லை. பெண் களுக்குக் கணவரைப்போல நெருங்கிய உ ற வி ன ர் வேறில்லை. பெற்றேருக்கு மக்களைப்போன்று பெருமை தரும் பொருள்கள் வேறில்லை. ஒருவனுக்குத் தாயிலுஞ் சிறந்த கடவுள் இல்லை.

-- 27 ܚܚܘ
19. இன்னுதன எவர்க்கும் செய்யற்க
பூவுட்கும் கண்ணுய்! பொறுப்பர் எனக்கருதி யாவர்க்கே யாயினும் இன்னு செயல் வேண்டா தேவர்க்குங் கைகூடாத் திண்ணன்பி னுர்க்கேயும் நோவச்செய் நோயின்மை இல்.
முன்றுறையரையனர் பழமொழி 43
வினைப்பயன் ஒன்றின்றி வேற்றுமை கொண்டு நினைத்துப் பிறர்பனிப்பச் செய்யாமை வேண்டும் புனைப்பொன் அவிர்சுணங்கிற் பூங்கொம்ப ரன்னுய் தனக்கின்னு இன்னு பிறர்க்கு.
பழமொழி 44
ஆற்ற ரிவரென் றடைந்த தமரையும் தோற்றத்தா மெள்ளி நலியற்க - போற்ருன் கடையடைத்து வைத்துப் புடைத்தக்கால் நாயும் உடையானைக் கெளவி விடும்.
பழமொழி 45
தோற்றத்தாற் பொல்லார் துணையில்லார் நல்கூர்ந்தார் மாற்றத்தாற் செற்ருர் எனவலியார் சூட்டியக்கால் ஆற்ரு தவரழுத கண்ணி ரவையவர்க்குக் கூற்றமாய் வீழ்ந்து படும்.
பழமொழி 47
மலரையும் வென்ற கண்ணுய்! "இவர் நாம் செய் யும் பிழையினைப் பொறுப்பார்' என்று எண்ணி யார்க் கும் பொல்லாதன செய்யவேண்டா. தேவர்க்கும் செலுத்தவியலாத அத்துணை உறுதிவாய்ந்த அன்புகடை யார்க்கும் நோகச் செய்தால் அதனைப் பொறுக்கும் பொறுமை இல்லை.

Page 23
தேமல்படர்ந்த பூங்கொம்பை ஒத்த பெண்ணே ! தான் செய்யத் தொடங்கும் செயலினலே ஒருவித பயனை யும் காணுது, பகைமைகொண்டு பிறர் துயரமடையத் தக்கவற்றைச் செய்யாதொழிதல் வேண்டும். தனக்குத் துன்பந்தருபவை பிறர்க்கும் துன்பந் தருவனவே என் பதை அறிதல் வேண்டும்.
தம்மை அடைந்தவர் வலியற்றவர்தாமே என்று அவர் தமராயினும் இகழ்ந்துகூறி வருத்தாதொழிக. பாதுகாப்பில்லாது கதவை அடைத்து அறையினுள்ளே தான் வளர்த்த நாயை அடித்தால், அந்நாய் வளர்த்த வனையே கெளவும்.
தோன்றிய குடியால் பொல்லாதவர், துணைவரற்ற வர், வறியவர், பேசும் பேச்சுக்களாற் பகைவர் என்று கருதி வலியார் மெலியாரை நசித்து வருத்துவார்களா ஞல், அவ்வாறு வருத்தப்பட்டவர்கள் ஆற்ருது அழுத கண்ணீர், வருத்தியவர்க்கு யமனுய்விடும் .
20. நல்லாதனுர் நவின்ற நல்லறம்
இது மருந்து
அருந்ததிக் கற்பினுர் தோளும் திருந்திய தொல்குடியின் மாண்டார் தொடர்ச்சியும் - சொல்லின் அரில் அகற்றுங் கேள்வியும் நட்புமிம் மூன்றும் திரிகடுகம் போலு மருந்து.
நல்லாதனுர் திரிகடுகம் 1
அருந்ததி போலும் கற்புடைய பெண்களின் தோள் களும், பழைமையான குடியிலே பிறந்தவரோடு கொள் ளும் தொடர்ச்சியும், சொற்களிலே குற்றம் நீக்கவல்ல அறிஞரோடு நட்புமாகிய இம் மூன்றும் சுக்கு, மிளகு, திப்பிலி சேர்ந்தமைந்த மருந்தை ஒக்கும்.

மூடர் விரும்பும் முன்று
பெருமை யுடையார் இனத்தின் அகலல் உரிமையில் பெண்டிரைக் காமுற்று வாழ்தல் விழுமிய அல்ல துணிதலிம் மூன்றும் முழுமக்கள் காத லவை.
திரிகடுகம் 9
பெருந்தன்மையுடையார் கூட்டத்திலிருந்து விலகல், தமக்கு உரியரல்லாத பெண்களிலே ஆசை வைத்து வாழ்தல், சிறந்தவை யல்லாதவற்றைச் செய்தற்குத் தீர்மானித்தலாகிய இம் மூன்றும் மூடர் விரும்புவனவாம்.
பெறுதற்கரியவர்
சீலம் அறிவான் இளங்கிளை சாலக் குடியோம்பல் வல்லான் அரசன் - வடுவின்றி மாண்ட குணத்தான் தவசினன் றிம்மூவர் யாண்டும் பெறற்கரி யார்.
திரிகடுகம் 13
பிறரின் பண்புகளை அறிந்து நடக்கின்ற இளமை தொட்டுவந்த சுற்றத்தவன், குடிகளைக் காத்திட வல்ல வணுகிய அரசன், குற்றங்களேந்த மாட்சிமைப்பட்ட குணத்தினணுகிய துறவியாகிய இம் மூவரும் பெறுதற்
கரியவராவர்.
இவர் நட்பு இனிது
தாளாளன் என்பான் கடன்படா வாழ்பவன் வேளாளன் என்பான் விருந்திருக்க உண்ணுதான் கோளாளன் என்பான் மறவாதான் இம்மூவர் கேளாக வாழ்தல் இனிது.
திரிகடுகம் 12

Page 24
- 30 -
முயற்சியை ஆற்றுதலுடையவன் என்பவன் கடன் படாது வாழ்பவனுவன். உதவியாளன் எனத் தகும் உழவன் விருந்தினர் அகத்திருக்க உண்ணுன். கொள்ளு தஃ உடையவன் என்பவன் மறத்தவில்லாதான். இம் மூவரையும் தனக்கு நட்பினராக்கி வாழ்தல் ஒருவனுக்கு மிக இனிதாகும்.
சாவா உடம்பினர்
மண்ணின்மேல் வான்புகழ் நட்டானும் மாசில்சீர்ப் பெண்ணினுட் கற்புடையாட் பெற்ருனும்-உண்ணுநீர் கூவல் குறைவின்றித் தொட்டானும் இம்மூவர் சாவா உடம்பெய்தி னுர்,
திரிகடுகம் 16
உலகிலே தனது புகழினே நிலை நிறுத்தியவனும், பெண்களுள்ளே கற்புடையவ&ளத் தன் மனேவியாப்ப் பெற்றவனும், குற்றமற்ற சிறப்புடைத்தான கிணற்றி னேக் குறைவுபடாது வெட்டியவனும் இறவாப் புகழு டம்பினே அடைந்தவர்களாவர்.
21. காரியாசானின் சீரிய உரை
அறம் அருளுடையான் கண்ணதே
பொருளுடையான் கண்ணதே போகம் அறனும் அருளுடையான் கண்ணதே ஆகும்-அருளுடையான் செய்யான் பழிபாவம் சேரான் புறமொழியும் உய்யான் பிறர்செவிக்கு உய்த்து,
காரியாசான் சிறுபஞ்சமூலம் 3
உலக இன்பம் பொருளுடையானிடத்திலேயே உண் டாகும். நல்லொழுக்கமும் இரக்கமுள்ளவனிடத்திலேயே

- 31 -
ஏ ற் படும் அருளுடையவன் பழிக்கப்படுவனவாகிய செயல்களேயும், பாவச்செயல்களேயும் செய்யமாட்டான் புறங்கூறும் சொற்களேப் பிறர் செவிகளிலே ஓதிப் பிழைக்கமாட்டான்.
ஐவர்தம் அரியநிலை
பற்றினுள் பற்றற்ருள் நூல்தவசி எப்பொருளும் முற்றினுன் ஆகும் முதல்வன்நூல் - பற்றினுல் பாத்துண்பாசின் பார்ப்பான் பழியுனர்வான் சான்றவன் காத்துண்பாள் காணுன் பிணி.
சிறுபஞ்சமூலம் 8
எல்லாப் பொருள்களிலும் கலந்து நின்றும் அவற் றிலே சார்பற்றவணுய் விளங்கும் இறைவனுலே செய்யப் பட்ட முதனூல்களேக் கற்றுக் கடைப்பிடித்து ஒழுகு பவனே உண்மைத் துறவியாவான். எப்பொருளேயும் முற்ருய் உணர்ந்தவனே முதல்வனுவான். நூல்களிலே கூறப்பட்ட அறங்களேக் கைக்கொள்ளும் வகையில் பகுத்துண்பவனே மறையவன் எனப்படுவான். வசை யைத் தரும் செயல்களே அறிந்து விலக்கியவனே அறிஞ ஜவான். உடலுக்கு ஏற்காத உனவுகளே உண்ணுது விலக்கியவனே பிணிகளினின்றும் நீங்கியவனுவான்.
வனப்பு எவை?
கண்வணப்புக் கண்ணுேட்டம் கால்வனப்புச் செஸ்லாமை எண் வனப்பு இத்துண்யாம் என்றுரைத்தல்-பண் வனப்புக் கேட்டார்நன் றென்றல் கிளர்வேந்தன் தன்னுேடு வாட்டான்நன் றென்றல் வனப்பு
சிறுபஞ்சமூலம் 8
கண் சுளுக்கு அழகு இரக்கம். கால்களுக்கு அழகு பிறரிடம் இரக்கச் செல்லாமை. ஆராய்ச்சிக்கு அழகு

Page 25
பொருளே வரையறை செய்து உரைத்தல். இசைக்கு அழகு அதனேக் கேட்பார் "இது நன்று" என்று கூறுதல் புகழால் விளங்கும் மன்னனனுக்கு அழகு தன் குடிமக் கண் வாட்டாது "இவன் நல்லாட்சியாளன்" என்ற புகழை உலகுயிர்களிடம் பெறுதல்.
கூற்றங்கள் ஐந்து சிலம்பிக்குத் தன்சினே கூற்றம் நீள் கோடு விலங்கிற்குக் கூற்றம் மயிர்தான் - வலம்படா மாவிற்குக் கூற்றமாம் ஞெண்டிற்குத் தன் பார்ப்பு நாவிற்கு நன்றல் வசை,
சிறுபஞ்சமூலம் 11
சிலம்பிக்குத் தன் முட்டையே யமன். எருது முதி லாம் விலங்குகளுக்கு அவற்றின் நீண்ட கொம்புகளே யமன். வெற்றியுண்டாகாத கவரிமானுக்கு அ த ன் மயிரே யமன். நண்டுக்குத் தன் குஞ்சுகளே யமன். நாவிற்கு நன்றல்லாத பழியுரைகளே யமன்.
பாதகங்கள் தவிர்ந்திடுக பொய்யாமை பொன்பெறினும் கள்ளாமை மெல்லியலார் வையாமை வார்குழலார் நச்சினும் - நையாமை ஒர்த்துடம்பு பேருமென்று ஊனவாய் உண்ணுனேல் பேர்த்துடம்பு கோடல் அரிது.
சிறுபஞ்சமூலம் 19
ஒருவன் பொன்னே கிடைக்கப் பெற்ருலும் பொய் உரையாமலும், பிறர் பொருளேக் களவு செய்யாமலும் தன்னிலும் கீழோரைத் திட்டாமலும், நீண்ட கூந்தல் புடைய பெண்கள் தன்னே விரும்பினுலும் உள்ளந் தள ராமலும், தன் உடம்பு மெலியும் என்பதற்காய் ஊனே உண்டு உடலே வளர்க்காமலும் இருப்பானுயின், அவன் மீட்டும் உடம்பெடுத்து இவ்வுலகிலே பிறத்தல் இல்லை யாகும்; அரிதாகும்.
 

- 33 -
22. கூடலூர்க் கிழாரின் நீடிய நல்லுரை
கல்வியிற் சிறந்தது ஒழுக்கம்
ஆர்களி உலகத்து மக்கட் கெல்லாம் ஒதவிற் சிறந்தள்(று) ஒழுக்க முடைமை.
கூடலூர்க்கிழார் முதுமொழிக்காஞ்சி 1
ஒலிக்கின்ற கடலாலே குழப்பட்ட உலகத்து மக் கள் யாவருக்கும் கல்வியிலும் சிறந்தது ஒழுக்கமுடைய ராய் வாழ்தலே.
உயர்குலம் அருளால் அறியப்படும்
ஆர்கவி உலகத்து மக்கட் கெல்லாம் பேரிற் சிறந்தது ஈரத்தின் அறிப.
முதுமொழிக்காஞ்சி அறிவுப்பத்து
. மக்கட் கூட்டத்தில் ஒருவன் உயர் குடிப் பிறந்தான் என்பதை அவனுக்குள்ள கருஃணயின் மூலம் சான்ருேர் அறிந்து கொள்வர்.
இழிகுலம் தற்பெருமையால் அறியப்படும்
சிற்றிற் பிறந்தமை பெருமிதத்தி னறிப.
அறிவுப்பத்து 6
தாழ்குடிப் பிறந்தான் ஒருவனே அவன், தன்னே
வியந்து பெருமை பாராட்டுவது கொண்டு அறிஞர் அறிந்து கொள்வர்.
பணியுமாம் என்றும் பெருமை சிறுமை அணியுமாந் தன்ஃன வியந்து
என்ருர் திருவள்ளுவரும், 叫一5

Page 26
- 34 -
அருமையுடைத்தென்று அயரற்க
பெருமை உடையதன் அருமை பழியார்.
பழியாப்பத்து 3
பெருமை உடையதொரு பொருளை முயன்று பெறுத லாகிய அருமைப்பாடு காரணமாகப் பழித்து அறிஞர் முயற்சி செய்யாமலிரார்.
காலமறிந்து செயலாற்றுக
கால மறியாதோன் கையுறல் பொய்.
பொய்ப்பத்து 4
முயற்சி செய்வதற்குரிய காலத்தை அறிந்து முய லாதவன் செயலை முடித்தல் என்பது பொய்யாகும்.
கோளுரைப்போர் இரகசியம் காத்திடார்
குறளை வெய்யோர்க்கு மறைவிரி எளிது.
எளியபத்து 4
கோட்சொற்களை விரும்புபவர்கள் இரகசியத்தை வெளிப்படுத்துவது எளிதாகும்.
பிறரை உயர்த்தப் பெரியணுவாய்
ஆர்கலி உலகத்து மக்கட் கெல்லாம் ஓங்கல் வேண்டுவோன் உயர்மொழி தண்டான்.
தண்டாப்பத்து 1
S SS SS SSL S S S S S S SL SSL S L SL SLL LS S மக்களிலெல்லாம் உயர்ந்து விளங்கு
வதை விரும்புபவன் பிறரை உயர்த்திச் சொல்லும் மொழிகளை என்றுந் தவிரான்.

- 35 -
உள்ளத்தால் வறியவனை உகவாதே
அகம்வறி யோன் நண்ணல் நல்கூர்ந் தன்று.
நல்கூர்ந்தபத்து 8
உள்ளத்தால் நலம்பெருதவனை அணுகுவதால் எவ் வித பயனும் இல்லை.
மீதுரண் விரும்பேல்
உண்டி வெய்யோர்க்கு உறுபிணி எளிது.
எளியபத்து 7
மிகுந்த உணவை விரும்பி உண்போரைப் பிணி அடைதல் எளிது.
பொருளை நச்சுவோன் நடுவுநிலை நில்லான்
பொருணசை வேட்கையோன் முறைசெயல் பொய்.
பொய்ப்பத்து 9
பொருளை விரும்புதலை மிகுதியாயுடையவன், அற நெறிப்படி நீதி செய்தலென்பது பொய்யாகும்.
23. கணிமேதையாரின் அணியுரை
தேவர்க்கும் மேலானுேன்
கொலைபுரியான் கொல்லான் புலான்மயங்கான் கூர்த்த அலைபுரியான் வஞ்சியான் யாதும் - நிலைதிரியான் மண்ணவர்க்கு மன்றி மதுமலியூங் கோதாய் விண்ணவர்க்கு மேலாய் விடும். "
கணிமேதையார் ஏலாதி 2

Page 27
தேன் நிறைந்த மலர்சூடிய கூந்தலாய்! கொலைத் தொழிலை விரும்பாதவனும், கொலை செய்யாதவனும், புலாலுணவில் மயங்காதவனும், பிறர்க்குத் துன்பமிழைக் காதவனும், பிறரை வஞ்சியாதவனுமாகிய பெரியோன் உலக மாந்தரினும் மேலானவன் மாத்திரமல்லன்: தேவர்க்கும் மேலானவனவான்.
உயிர்க்கெல்லாந் தாய்
நிறையுடைமை நீர்மை யுடைமை கொடையே பொறையுடைமை பொய்ம்மை புலாற்கண்-மறையுடைமை வேயன்ன தோளாய் இவையுடையான் பல்லுயிர்க்கும் தாயன்னன் என்னத் தகும்.
- ஏலாதி 6
மூங்கிலைப் போன்ற தோள்களை உடையாய் மன அடக்கமும், நற்பண்பும், கொடைத்தன்மையும் பொறு மையும், பொய்யையும், புலாலையும் மறுத்தலுமாகிய இவ் வரும்பண்புகளுடையோன் பலவகைப்பட்ட உயிர்களுக் கும் தாயாகும் தன்மையுடையான்.
இவ்விடங்களிற் செல்லாதீர்
கொலைக்களம் வார்குத்துச் சூதாடும் எல்லை அலைக்களம் போர்யானை யாக்கும் - நிலைக்களம் முச்சா ரிகையொதுங்கும் ஒரிடத்து மின்னவை நச்சாமை நோக்காமை நன்று.
ஏலாதி 12
கொலை செய்யப்படும் இடம், வெள்ளம் பெருக் கெடுக்கும் நீர்நிலைகள், சூதாட்டிடம், போர் யானைக ளைப் பழக்குமிடம், யானை, தேர், குதிரைகள் ஒட்டம் பயில்கின்ற இடமாகிய ஓர் இடத்தினையும் விரும்பாமை பும், இவ்விடங்களுக்குச் செல்லாமையும் ஒருவர்க்கு நல்லது.

- 37 -
துறவிற் சிறந்தது இல்வாழ்க்கை
அதுறந்தார்கட் துன்னித் துறவார்க் கிடுதல் இறந்தார்க்(கு) இனிய இசைத்தல் - இறந்தார் மறுதலை சுற்றம் மதித்தோம்பு வானேல் இறுதலில் வாழ்வே இனிது.
ஏலாதி 16
துறவிகளை ஆதரித்து, இரப்பவர்க்கு வேண்டுவன கொடுத்து, கல்வியால் உயர்ந்தார்க்கு இனியன கூறித், துணையின்றித் தன்னிடத்தே வந்து இறந்தார்க்குச் செய்ய வேண்டிய கிரியைகளைச் செய்து, தனக்குத் தீமை செய்தாரையும், உறவினரையும் தீமைக்காய் வெருமலும், உறவுக்காய் நடுவுநிலை மீறிய குருட்டன்பு செலுத்தாம லும் பேணிப்பாதுகாத்து நன்மையில் அழிவில்லாது நடாத்துகின்ற இல்லற வாழ்க்கையே துறவற த்திலும் இனியதாகும்.
பிறவாப் பெருநெறி
பிணிபிறப்பு மூப்போடு சாக்காடு துன்பம் தணிவி னிரப்பவை தாழா - அணியின் அரங்கின் மேல் ஆடுநர்போல் ஆகாமல் நன்றம் நிரம்புமேல் வீட்டு நெறி.
ஏலாதி 24
நோய், பிறப்பு, முதிர்வு, மரணம், துன்பம் போது மென்ற அமைதியைத் தராத வறுமையாகிய இவை சிறி தும் தாழ்க்காது உடன் வந்தடையும் . ஆதலால் கூத் தாட்டவையிலே மாறி மாறிப் பல அணிபு?னந்து ஆடு கின்ற கூத்தர் போல மாறி மாறிப் பிறந்து, இறந்துழலா மல் முத்தியை அளிப்பதாகிய துறவுநெறியிலே ஒருவன் முற்றிநிற்பானயின், அவனுக்குப் பேரின்பம் உண்டாகும்

Page 28
- 38 -
24. பெருவாயின் முள்ளியாரின் பெருநெறி
ஆசாரவித்து
நன்றி அறிதல் பொறையுடைமை இன்சொல்லோ(டு) இன்னுத எவ்வுயிர்க்குஞ் செய்யாமை கல்வியோ(டு) ஒப்புர வாற்ற அறிதல் அறிவுடைமை நல்லினத் தாரோடு நட்டல் இவையெட்டும் சொல்லிய ஆசார வித்து.
பெருவாயின் முள்ளியார் ஆசாரக்கோவை 1
தனக்குப் பிறர்செய்த நன்றியை மறவாமையும் பொறுமையும், இனிய சொல்லும், எந்த உயிர்க்கும் துன் பந்தருபவற்றைச் செய்யா மையும், கல்வியும், உலக நடை யினை அறிதலும், அறிவுடைமையும், நல்லாரோடு நட் புச் செய்தலுமாகிய இவ் வெட்டுப் பண்புகளுமே சொல் லப்பட்ட ஒழுக்கமாகிய மரத்தின் வித்துக்களாம்.
வைகறையில் செய்தற்குரியன
வைகறை யாமந் துயிலெழுந்து தான்செய்யும் நல்லறமும் ஒண்பொருளும் சிந்தித்து வாய்வதில் தந்தையுந் தாயுந் தொழுதெழுக என்பதே முந்தையோர் கண்ட முறை.
ஆசாரக்கோவை 4
விடியற் காலமாகிய பின் சா மத்திலே நித்திரை விட்டெழுந்து தான் அன்று செய்யவேண்டிய நல்ல தரு மங்களையும் , ஒள்ளிய பொருள் வருவாய்க்கு மேற்கொள் ளும் செயல்களையும் சிந்தித்துப் பின் தாய் தந்தையரை யுந் தொழுதெழுதல் வேண்டும் என்பதே எம்முன்னேர் வகுத்த முறைமையாகும்.

- 39 -
நீராடவேண்டிய அமயங்கள்
தேவர் வழிபாடு தீக்கணு வாலாமை உண்டது கான்றல் மயிர்களைதல் உண்பொழுது வைகு துயிலோ டிணைவிழைச்சுக் கீழ்மக்கள் மெய்யுறல் ஏனை மயலுறல் ஈரைந்தும் ஐயுரு தாடுக நீர்.
ஆசாரக்கோவை 10
தன்னல் வழிபடப் பெறுந்தெய்வத்தை வணங்கச் செல்கையிலும், தீய கனவினைக் கண்ட பொழுதிலும், தூய்மை குன்றிய வேளையிலும், உண்டதை வாந்தித்த சந்தர்ப்பத்திலும், சவரம் செய்தபோதும், உண்பதற்கு முன்னும், பொழுதேறத் தூங்கிய காலையிலும், உடலு றவின் பின்னும், கீழானுேரைத் தொட்டபொழுதும், மலசலங் கழித்த காலத்திலும் சந்தேகமின்றி உடன் நீராடுக.
ஆடை அணிதலிற் கவனிக்கவேண்டுவன
உடுத்தலால் நீராடார் ஒன்றுடுத் துண்ணுர் உடுத்தாடை நீருட் பிழியார் விழுத்தக்கார் ஒன்றுடுத் தென்றும் அவைபுகார் என்பதே முந்தையோர் கண்ட முறை.
ஆசாரக்கோவை 11
சிறப்புடையோர் ஓர் ஆடையை உடுத்தன்றி நீரா டார். இரண்டு உடைகளை அணியாது உணவுண்ணுர், உடுத்த உடையை நீரினுட் பிழியார். அவைக்குச் செல் கையில் ஒராடையோடு செல்லமாட்டார். எம் முன் னுேர் கண்ட முறை இதுதான்:

Page 29
ー40ー
பிறர் புறப்படுகையில் இச் செயல்கள் பெட்பல்ல
எழுச்சிக்கண் பிற்கூவார் தும்மார் வழுக்கியும் எங்குற்றுச் சேறிரோ என்னுரே - முன்புக் கெதிர்முகமா நின்றும் உரையா ரிருசார்வுங் கொள்வர் குரவர் வலம்.
ஆசாரக்கோவை 58
ஒருவர் எழுந்து செல்கையில் அவரைப் பின்னே நின்று அழையார் : தும்மமாட்டார். மறந்தும் "எங்குச் செல்கிறீர்?" என்று கேளார். முன்னர்ப்போய்நின்று எதிர்நோக்கி ஒன்றையும் சொல்லார், அப் பெரியாரை இரு பக்கங்களிலும் வலஞ்செய்து செல்வர்.
தாயெனினும் தனித்துறையேல் ஈன்ருள் மகள்தம் உடன்பிறந்தாள் ஆயினும் சான்ருர் தமித்தா உறையற்க ஐம்புலனுந் தாங்கற் கரிதாக லான்.
ஆசாரக்கோவை 85
ஐம்புலன்களையும் அடக்கியாளல் அரிதாதலால் அறி வுடையோர் தாயுடனயினும், உடன்பிறந்தாளுடனயி னும், பெற்ற மகளுடனயினும் தனித்துத் தங்காதிருப் Lintnissant IT 35.
25. காவியங்கள் கவினுறக் கூறும் அறிவுரைகள்
கல்விசேர் மாந்தர்
சொல்லருஞ் சூற்பசும் பாம்பின் தோற்றம்போன் மெல்லவே கருவிருந் தீன்று மேலலார் செல்வமே போற்றலை நிறுவிற் றேர்ந்தநூல் கல்விசேர் மாந்தரின் இறைஞ்சிக் காய்த்தவே.
திருத்தக்கதேவர் - சீவகசிந்தாமணி

- 41 -
நெல்லானது சூல் கொண்ட பசிய பாம்பின் தோற் றத்தைப்போல மெல்லமெல்லக் கருவாகிக் கதிரை ஈன்று, இழிந்தவரின் செல்வம் போலத் தலைதுாக்கி இறுமாந்து, பின் முதிர் வடைகையில் அறிவால் நிறைந்த நூற் கல்வியுடைய சான்றேர் அடக்கங் காரணமாகத் தலை வணங்கி நிற்றல் போலத் தலை வணங்கிக் காய்த்து நிற்கின்றது: -
அறங்காப்பான் அரசன்
மானிலங்கா வலஞவான் மன்னுயிர்க்குங் காலை தானதனுக்கு கிடையூறு தன்னுற்றன் பரிசனத்தால் ஊனமிகு பகைத்திறத்தாற் கள்வரால் உயிர்தம்மால் ஆணபயம் ஐந்துந்தீர்த் தறங்காப்பான் அல்லனுே?
சேக்கிழார் பெருமான் திருத்தொண்டர் பெரியபுராணம்
பெரிய நிலவுலகத்தினைக் காக்கின்ற அரசன், தன்னு லும், தன் அதிகாரிகளாலும், பகைவராலும், கள்வர்க ளாலும், விலங்குகளாலும் உயிர்களுக்கு அச்சம் உண்டா காமற் காப்பாற்ற வேண்டியவனல்லனே ?
(இவ்வாறு கூறிய மனுநீதிகண்ட சோழன், தன் மகன் தேர்க்காலில் நெரித்துக் கொன்ற பசுக்கன்றிற்கு ஈடாய்த் தன் மகனைத் தானே தேர்க்காலில் இட்டுக் கொல்ல முன் வந்தான்.
தருமந்தன் வழிச் செல்கை கடன்
ஒருமைந்தன் தன்குலத்துக் குள்ளானென் பதுமுணரான் தருமந்தன் வழிச்செல்கை கடனென்று தன் மைந்தன்
மருமந்தன் தேராழி உறவூர்ந்தான் மனுவேந்தன் அருமந்த அரசாட்சி அரிதோமற் றெளிதோதான்.
திருதொண்டர் பெரிய Կg Tsծմմ):
워-6

Page 30
-س- 42 --س-
மனுநீதிச் சோழன் தன் குலத்திற்கு ஒரு மகனே உள்ளான் என்பதையும் நினைத்துப் பாரான். தருமம் செலுத்தும் வழியிலே செல்வதே தன் கடன் என்று கொண்டவனுய்த் தனது புதல்வனுடைய மார் பின் மேல் தேர்ச்சில் அழுந்துமாறு தேரினைச் செலுத்தினன். அடை தற் கருமையான அரசாட்சி நெறி அரியதோ ? அன்றி எளியதோ ? (நீங்களே யூகித்துக் கொள்ளுங்கள்.)
பெண் கல்வி விளைத்திடும் பீடு
பெருந்த டங்கட் பிறைநுத லார்க்கெலாம் பொருந்து செல்வமும் கல்வியும் பூத்தலால் வருந்தி வந்தவர்க் கீதலும் வைகலும் விருந்தும் அன்றி விளைவன யாவையே.
கவிச்சக்கரவர்த்தி கம்பன் (கம்பராமாயணம்)
பெரிய அகன்ற விழிகளையும், பிறைபோலும் நெற்றி யினையும் உடைய பெண்கள் யாவர்க்கும் (அயோத்தி யில்) பொருந்துவனவாகிய செல்வத்தோடு கல்வியும் ஒரு சேர விளங்கிப் பொலிவதால், தம் மனைகளுக்குப் பசி யால் வருந்தி வருபவர்க்கு நாள்தோறும் ஈதலும், விருந் தளித்தலுமன்றி வேறு நிகழ்வன யாவை ?
இலட்சிய நாடு வண்மை இல்லைஓர் வறுமை இன்மையால் திண்மை இல்லைநேர் செறுநர் இன்மையால் உண்மை இல்லைபல் உரையி லாமையால் வெண்மை இல்லைபல் கேள்வி மேவலால்,
கம்பராமாயணம்
(அயோத்தியில்) வள்ளன்மை இல்லை. ஏனெனில் அங்கு வறுமையே இல்லை. வலிமை இல்லை. ஏனெனில் பகைவரே இல்லை. உண்மை இல்லை. ஏனெனில் பொய்யே இல்லை. அறியாமை இல்லை. ஏனெனில் பல வகையான கேள்வியறிவும் அங்கு மேவியிருப்பதால்:

- 43 -
நன்னெறி காட்டும் தேசிகர்
தேக்கு தெண்டிரைப் புணரிநீர் வெம்மையைச் சிந்தி ஆக்கி வாலொளி யுலகில்விட் டேகலா லடைந்தோர் நீக்க ரும்வினை மாற்றிநன் னெறியிடைச் செலுத்திப் போக்கின் மேயின தேசிகர்ப் பொருவின புயல்கள்.
கச்சியப்பசிவாசாரியர் கந்தபுராணம்
நிறைக்கப்பட்ட தெளிந்த அலைகளோடு கூடிய கட லிலுள்ள நீரின் உவர்ப்புத் தன்மையைப் போக்கிச் சுத் தமும் தெளிவுமுடைய நீராயாக்கி நிலவுலகிலே மழை யாய்ப் பொழிந்து செல்லும் முகில்கள், தம்மை அடைந் தோரின் அரிய வினைகளை நீக்கி அவர்களைத் தூயவர்க ளாய் மாற்றி, முத்திநெறியை அடைதற்கான வழிகளில் அவர்களை நடாத்திச் செல்லும் ஞான குருமாரைப் போன்றன.
உலகுய்யும் விழைவில் எழுந்த வாழ்த்து
வான்முகில் வழாது பெய்க மலிவளஞ் சுரக்க மன்னன் கோன்முறை அரசு செய்க குறைவிலா துயிர்கள் வாழ்க நான்மறை அறங்கள் ஓங்க நற்றவம் வேள்வி மல்க
மேன்மைகொள் சைவ நீதி விளங்குக உலக மெல்லாம்.
கந்தபுராணம்
வானத்தினின்று மேகங்கள் காலந் தவருது மழை பொழிக. அதனுல் பெருவளம் சுரப்பதாக. அரசன் செங்கோன் முறை நின்று அரசு புரிக உயிர்கள் எவ் வித குறையுமில்லாது வாழ்க. நா ல்வே தங்களும் வகுத்த நல்லறங்கள் ஓங்குக, நல்ல தவ முயற்சிகளும், வேள்விகளும் பெருகுக. மேன்மையைப் பொருந்துவதா கிய சைவ நீதி உலகெங்கணும் விளங்குவதாக,

Page 31
- 44 -
செம்மை நினையாரின் தீநெறி
காதல் கவருடல் கள்ளுண்டல் பொய்ம்மொழிதல் ஈதல் மறுத்தல் இவைகண்டாய் - கோதில் சினையாமை வைகுந் திருநாடா செம்மை நினையாமை பூண்டார் நெறி.
புகழேந்திப்புலவர் நளவெண்பா
தாமரை மலரின் இதழ்களிலே சினை கொண் ட ஆமை அமரும் செல்வநாடா ! காமம், சூதாட்டம், கள்ளுண்ணல், பொய்யுரைத்தல், கொ  ைட த ரே ன் என்று மறுத்தலாகிய இவைதாம் செந்நெறியை நினை யாதார் கடைப் பிடிக்கும் வழிகளாகும் என்பதை அறி ST
மழலைக் குழவியர் மாண்பு
கல்லா மழலைக் கணியூறல் கலந்து கொஞ்சுஞ் சொல்லா லுருக்கி யழுதோடித் தொடர்ந்து பற்றி மல்லார் புயத்தில் விளையாடும் மகிழ்ச்சி மைந்தர் இல்லா தவர்க்கு மனைவாழ்வில் இனிமை என்னும்.
மெய்தானம் வண்மை விரதம் தழல்வேள்வி தாளுஞ் செய்தாலும் ஞாலத் தவர்நற் கதிசென்று சேரார் மைதாழ் தடங்கண் மகவின் முகமன்னு பார்வை
யெய்தா தொழியிற் பெறுமின்ப மிவணு மில்லை.
வில்லிபுத்தூராழ்வார் வில்லிபாரதம்
கற்றறியாத மழலைமொழியைக் கணிச்சாற்றை ஒத்த உமிழ்நீரோடு கலந்து கொஞ்சுகின்ற சொல்லாலே உள் ளத்தினை உருக்கி (எம்மைக் கண்டதும்) அழுது ஒடித் தொடர்ந்து வந்து பற்றிப் பின் மல்லார்ந்த புயங்களிலே ஏறிவிளையாடும் மகிழ்ச்சியின் விளைநிலங்களாகிய மக்களைப் பெருதவர்க்கு இல்வாழ்விலே இனிமை ஏது !

- 45 -
உண்மை, தானம், வள்ளன்மை, நோன்பு, தீ எழுப் பிச் செய்யும் யாகங்கள் என்பவற்றை நாள்தோறும் நிகழ்த்தினலும் உலக மக்கள் முத்தியாகிய நல்வழியினைச் சென்று சேரார். மையிடப்பெற்ற அழகிய அகன்ற விழிகளோடு கூடிய குழந்தையின் முகத்திலே நிலைபெற்ற பார்வையானது அடையப்பெரு தொழிந்தால் நாம் பெறுதற்குரிய இன்பம் யாதும் இல்லை.
* மழைகூட ஒருநாளில் தேனுகலாம்
மணல்கூடச் சிலநாளில் பொன்னுகலாம் ஆணுலும் அவையாவும் நீயாகுமா ?
அம்மாவென் றழைக்கின்ற சேயாகுமா ? ஆராரோ ஆராரோ ஆரிரரோ
ஆராரோ ஆராரோ ஆரிரரோ விண்மீனும் கண்ணே உன் கண்ணுகுமா?
விளையாடும் கிளியுன்றன் மொழிபேசுமா ? கண்ணுடி உண்ப்போலக் கதை கூறுமா ? கைவீசி உலகாளும் மகனுகுமா ? ஆணுலும் அவையாவும் நீயாகுமா?
அம்மாவென் றழைக்கின்ற சேயாகுமா?"
என்று பாடினர் எங்காலக் கவிஞரான கண்ணதாசனும்

Page 32
ஒளவையார் ஈந்த
ஆத்திசூடி மந்திரமும்
அதற்குச்
சேர். பொன் இராமநாதனவர்கள் இயற்றிய
விளக்கமும்
அறஞ்செய விரும்பு
"அறம்" என்றது விதிவிலக்கு ரூபமாயிருக்குந் தரு மத்தை "செய விரும்பு" என்றது அநுசரித்தே வர வேண்டும் என்ற ஆவலோடு இருப்பாயாக என்றவாறு.
இருள் நிறைந்த அறையில் அகப்பட்டு, இருளேயும் இருளென்றறியாமல் வழிகெட்டுத் தடுமாறுகின்றவ னுக்கு ஒர் ஒளிக்கிரனம் சுகத்தைக் கொடுக்கும்.
அதுபோல, வஞ்சனே. பொருமை, லோ பம் மோகம், மதம் முதலிய விஷகுணங்களால் வாதிக்கப் பட்டு, நன்மை எது, தீமை எது, என்று அறியாமல் மயங்குகிறவனுக்குச் சுகத்தைக் கொடுக்கும் பொருட் டுக் கருணுநிதியாகிய சிவபெருமான், தமது பேரறிவி லும் பேரன்பிலும் நின்று தோன்றிய ஒரு ஞானரேகை யைக் கொடுத்தருளினூர்.
இந்தச் சச்சிதானந்த ரேகை சணுதன த ரும ம் என்று கூறப்படும். அஃதாவது, ஆணவ இருளில் அகப் பட்டிருக்கும் ஆத்மா சதாகாலமும் தரிக்கத்தக்க சிவு சக்தி,

ー47ー
இந்தத் தேவாத்மசக்தி விதிவிலக்கு ரூபமாய் நின்று ஜீவாத்மாவை மலத்தில் நின்று ஈடேற்றும், உத்தாரணஞ் செய்யும்.
எவன் விதிக்கப்பட்ட கர்மங்களே அநுசரித்தும் விலக்கப்பட்ட கர்மங்களே நிஷேதித்தும் வாழ்வாணுே அவனுக்குச் சித்த சுத்தி உண்டாகிப் பேரன்பும் பேரறி வும் தஃலப்படும்.
வேதாகமங்களே ஆதாரமாகக்கொண்ட தர்ம சாஸ் திரங்களில் விளங்கும் விதி நிஷேதங்களே ந ன் ரு க வாசித்து, அவற்றை மறவாமல், செய்யவேண்டிய கர் மங்களேச் செவ்வையாகச் செய்தும் செய்யத்தகாத கர் மங்களேச் செய்யாது விட்டும். இருப்பது ஆத்ம உத்தார ணத்துக்கு அவசியம்.
உலகவாழ்விலுள்ள கர்மங்கள் யாவும் ஜீவனுேபாய கர்மமென்றும் ஆத்மோபாய கர்மமென்றும் இருவகைப் படும். இவ்விருவகைக் கர்மங்களுக்கும் விதி விலக்குக்கள் e-Sar (G.
ஜீவனுேபாய கர்மங்கள் அறிவுக்கும் அன்புக்கும் மாருயிருந்தால், அக்கர்மங்களே அதுசரிக்கின்றவர்கள் தாழ்ந்த ஜாதிகள் எனப்படுவார்கள்.
அறிவிலும் அன்பிலும் பிரதிஷ்டைபெற்ற ஜீவனுே பாய கர்மங்களே அநூஷ்டிக்கின்றவர்கள் உயர்ந்த ஜாதி கள் எனப்படுவார்கள்.
ஜீவனுேபாயங்கள் எவ்வித மிருப்பினும், ஆத்மோ பாய கர்மங்களேப் பக்தியோடு செய்துவருகின்றவர்கள் தங்களே மலதோஷங்களினின்று மெல்ல மெல்ல உத்தார னஞ் செய்வார்கள்.
பதினுன்கு உலகங்களிலும் பிரசித்திபெற்ற ஆத்மோ பாய கர்மங்களே. யஜ்ஞம் தானம் தபசு என்ற சிவ ஆராதனையும் ஈகையும் பொறுமையும் என்றறிக;

Page 33
- 48 -
இவற்றின் விதிகளைத் தேடி அறிந்து அநுஷ்டிக்கின்ற வர்களே அறிவாளிகள். தேடுதற்கும் அறிதற்கும் அநுஷ் டித்தற்கும் காரணம் விரும்புதலே யாதலால், எங்கள் அருமைத் தாயாகிய ஒளவைநாயகி "அறஞ்செய விரும்பு" என்ருர், "அறனை மறவேல்" என்றும் வற் புறுத்தி இருக்கின்றர்.
ஆறுவது சினம்
" சினம் ' என்றது கோபம், "ஆறுவது " என்றது தணியத்தக்கது என்றவாறு.
இரும்பிலே சூடு ஏறுவதுபோல மனசிலே கோபம் ஏறும்.
கோபம் ஏறின மனம் தானும் வெந்து கண்களைச் சிவக்கச் செய்யும். பெருமூச்சை உண்டாக்கும். நெஞ் சைப் படபடக்கப் பண்ணும். கைகால்களை உதறுவிக் கும். வாக்கு நிதானத்தை அழிக்கும். அறிவை மயக் கும்.
கோபத்தால் அறிவு மயங்க, தீய சொல்லும் தீய செயலும் தோன்றும். அவைகளால் பிறர் வருந்துவார் கள். பகைவராகவும் வருவார்கள்.
ஒருவன் மனசில் ஏறிய கோபம் அவனையே சுடும். பிறரால் அவனுக்கே துன்பத்தையும் வருவிக்கும். இந்த உண்மையை அறிந்தவர்கள் கோபத்தைத் தணிக்க முயல்வார்கள்.
இரும்பில் ஏறிய சூடு நெடுநேரம் ஆரு மல் நிற்கும். தங்கத்தில் ஏறிய சூடு சீக்கிரம் தணிந்துவிடும்.
அதுபோல, தீய மனசில் ஏறிய கோபம், நெடு நேரம் நின்று. அம் மனமுடையவர் தம்மையும். அடுத்த

ܗ-- 49 ܘܡܚ
வர்களையும் வாதித்து, துக்கத்தில் விழுத்தும். நல்ல மனசில் ஏறிய கோபம் சீக்கிரத்தில் நீங்கும்.
மனசையும் அறிவையும் கெடுக்கத்தக்க கோபத்தைச் சாதியாமல் ஜாக்கிரதையாக மெல்ல மெல்லத் தணித்து முற்ருக ஒழிக்க வேண்டும்.
இயல்வது கரவேல்
"இயல்வது" என்றது உனக்கு இசைந்ததை, " கரவேல்" என்றது மறைக்காதே, உன்னிடம் இல்லை யென்று சொல்லாதே என்றவாறு.
ஒரு வறியவன் ஆயினும், நோயாளி ஆயினும் பரோபகாரி ஆயினும் வந்தால், உனக்கு இசைந்ததை இல்லை என்னமல் கொடுப்பது உன்னுடைய கடமை.
இது சிறுவருக்கும் முதியவருக்கும் உரிய முறை.
ஒருவனுக்குப் பத்து ரூபா வருமானம் இருந்தால், தனக்கு அவசியமானது போக மிச்சத்தில் ஒரு பங்கா வது தருமவழியில் விடவேண்டும்.
மிச்சம் இருந்தும் என்னிடம் ஒன்றும் இல்லை என்று சொல்வது அறம் விரும்பலுக்கு நேர் விரோதம்,
இப்படி வஞ்சனையைப் பழகி வருகின்றவனுடைய மனம் பழுதுபடும். அது அவனை அறத்தில் நிறுத்தாமல் மறம் என்ற பாபவழியிலே செலுத்திவிடும்.
ஈவது விலக்கேல்
"ஈவது " என்றது கொடுத்தலையும் கொடுக்கப்படும் பொருளையும், " விலக்கேல் " என்றது தடுக்காதே என்றவாறு
의-7

Page 34
ஒருவன் ஒரு பொருளை ஒருவனுக்குக் கொடுக்கும்
பொழுது அதைக் கொடாதே என்று சொல்லுவது அன்பு வளர்ச்சிக்குத் தடையாகும்.
இந்த உலகத்தில் நாங்கள் பிறந்தது அன்புப் பெருக் கத்துக்கும் அறிவு விருத்திக்குமே.
ஒருவனுடைய துன்பங்களைக் கேட்டபொழுது அன்பி ஞல் மனம் உருகும். அந்த உருக்கத்தில் அவனுக்குக் கொடுப்போம் என்ற எண்ணம் வரும். அந்தச் சமயத் தில் ஒருவன் தடுத்தால், கிணற்றில் சுரக்கின்ற நீர் ஊற்றுத் தடைப்பட்டது போல, வந்த அன்பு மறைந்து விடும்.
அன்புப் பெருக்கையும் அதனேடு வரும் மகிழ்ச்சியை யும் ஒருவன் பல முறையும் அநுபவித்தால் கொடையை மேன்மேலும் செய்தே வருவான்.
இந்த மேலான அற நிலையையும் அதனல் பிறருக்குக் கிடைக்கும் சுகங்களையும் தடுப்பவன் பெரும்பாவி,
ஈவதை விலக்கினவன் தெய்வத்தின் அன்பைப் பெற மாட்டான். அவனுக்கு இந்த உலகத்திலே மெய்யான சுகம் இல்லை. மேல் உலக சுகமும் இல்லை.
உடையது விளம்பேல்
*உடையது' என்றது உனக்கு அருளப்பட்ட நற் குணங்களையாவது செல்வப் பொருளையாவது, 'விளம் பேல்" என்றது சொல்லாதே என்றவாறு.
தெய்வம் உனக்குக் கொடுத்த நற்குணங்களைப் பற் றிப் பாராட்டிப் பேசுவாயாகில், நாவடக்கம் என்ற நன்னிலை குன்றும். கேள்வியுற்ற சிலர் பொருமை கொள்ளுவார்கள். வேறு சிலர் இவன் மூடன் என்று அவமதிப்பார்கள்,

- 51 -
உன்னிடத்தில் உள்ள பணம், நகை முதலிய பொருள்களைப் பற்றி வெளியிட்டால், பணம் இல்லாத வன். கடன் கேட்பான். நகை இல்லாதவள் இரவல் கேட்பாள்.
தகாதவர்களுக்குக் கடனுவது இரவலாவது கொடுத் தால் தொல்லை உண்டாகும். பணமும் நகையும் நஷ்ட மாகும்.
உடையது விளம்பல், வாய் அடக்கத்தைக் கெடுத்து, பிறர் மனசில் பொருமையை உண்டாக்கி, நல்லோ ருடைய அபிமானத்தை இழப்பித்து, பொருளை நாச மாக்கி, அறநெறியினின்று விலக்கி விடும்.
ஆதலால் அறிவிலே சிறந்த பெரியோர்கள் உடையது விளம்பேல் என்று உபதேசித்தார்கள்.
ஊக்கமது கிைவிடேல்
"ஊக்கம்" என்றது முயற்சியை, அது என்ற து அசை, "கைவிடேல்" என்றது வழுவ விடாதே என்ற 6մո Ո].
எங்களுடைய வல்ல பங்கள் எல்லாம் தெய்வத்தால் கொடுக்கப்பட்டன. ஒரு தடாகத்தில் எப்படித் தண் ணிர் வந்து நிற்குமோ, அதுபோல, ஜீவ ஆத்மாவில் சக்திகள் வந்து குமியும். அந்தச் சக்திகளைப் பலதிக்கில் ஓடிச் சிதறவிடாமல், நல்ல பலனைத் தரும் வழியிலே செலுத்த வேண்டும். V
கையிலே கிடைத்த நல்ல பொருளைப் புத்திமான் நழுவவிடாமல் காப்பான். அதுபோல ஆத்மா வில் ஊறும் சக்திகளை வீண்போகாமல் சேகரித்துப் புண்ணிய வழிகளில் விடவேண்டும்.

Page 35
- 52 -
முயற்சி என்னும் ஆத்மசக்தி, நல்ல நினைவுகளாக வும், நல்ல செயல்களாகவும் விரியும். நல்ல நினைவு தோன்றினவுடனே, அதை மறையவிடாமல் மனசிலே நிறுத்தி, சீக்கிரத்தில் செயலுக்குக் கொண்டுவர வேண் டும்,
இப்படி நல்ல நினைவை நிறைவேற்றினல் இச்சித்த பலனைப் பெறலாம். தோன்றிய நல்ல நினைவுகளைச் சிதையவிட்டால் இந்த உலக வாழ்வு பயன்படாது.
நல்ல வாழ்வுக்குரியவர்கள், நல்ல சிந்தனை உதய மானவுடன், விழிப்பாக இருந்து, அதைத் தணியவிடா மல் மனசில் உறுதியாக்கிப் பெருக்கிச் செயலுக்குக் கொண்டுவந்து, நல்ல பலன்களைப் பெற்றுத் தாங்களும் தங்கள் உறவினரும், அநுபவிப்பார்கள்,
அவர்கள் நன்முயற்சி என்னும் ஊக்கத்தால், கல்விப் பொருளையும் செல்வப் பொருளையும் சம்பாதித்து, அநேக தர்மங்களை நாட்டிக் கீர்த்தியுடையவர்களாகிச் சிவ பெருமானுடைய திருவடியைச் சேருவார்கள்.
எண்ணெழுத் திகழேல்
"எண்" என்றது அளவை கணக்குக்கு உரிய உபாயங் களையும், "எழுத்து" என்றது எழுத்துச் சொல் வசனங் களின் இயல்புகளையும், இகழேல் என்றது அறிவது அவ சியம் இல்லை என்று நீ நினைத்தல் ஆகாது என்றவாறு.
எண்ணி அறிதலுக்குத் தொடர்ந்து பிடிக்கும் நினை வும், ஞாபகசக்தியும் வேண்டும். பலர் எண்ணினதை எழுத்துமூலமாகக் கூட்டிக் கழித்துப் பெருக்கி வகுத்து அறிவார்கள்

சிலர் எழுத்துக்களை உபயோகியாமல், மனசின லேயே கணிப்பார்கள். கையுள்ளவனுக்கும், ஏடுள்ளவ னுக்கும், எழுத்தாணியுள்ளவனுக்கும், எழுத்துக் கணக் குச் சித்திக்கும். கருவிகள் இல்லாதவனுக்கு எழுத்துக் கணக்குப் பயன்படாது.
மனசிலே கணிக்கப்படும் கணக்கு விசேஷ வல்லபத் தைத் தரும். இந்த மானச கணிதத்தை அப்பியா சஞ் செய்தவர்கள் சபையிலே சிறந்தவர்களாய் விளங்குவார் கள்.
எழுத்தானது ஒலியை ரூபிக்கும். வாக்கில் நின்று பிறந்த ஓசையையும் வேறு வழியால் தோன்றின ஓசை யையும் எழுத்தால் ரூபிக்கலாம். கண்ணுல் கண்டதை யும், மூக்கால் மணந்ததையும், நாவால் சுவைத்ததை யும், உடலால் பரிசித்ததையும் எழுத்தானது கற்றவர் யாவர்க்கும் அறிவிக்கும். உன் அநுபவங்களையும் பிறர் அநுபவங்களையும் ஆயிரம் யோசனைக்கு அப்பால் உள்ள வர்களுக்கும் அது தெரிவிக்கும். இப்படிப்பட்ட வல்ல பத்தையுடைய எழுத்தை நாள் தோறும் விரைவாக மணி போல் எழுதப் பழகிவந்தால் அது நன்முயற்சிகளுக்கு உற்ற துணையாகும்.
இந்த எண்ணும் எழுத்தும் என்ற சக்திகள் சிவ பெருமானல் புண்ணிய ஆத்மாக்களுக்கு அருளப்படுவன. அரிய பொருளாதலால் அவைகளை மிக்க அன்போடு பாதுகாத்து வரவேண்டும். இந்தச் சக்திகள் உள்ளத்திலே பிரகாசியாது போனல், அவற்றை மேன்மேலும் மனே பாவனை செய்து துலக்க வேண்டும்.
எண்சுவடி என்ற கணித சாஸ்திரத்தை மானசமாக அப்பியாசஞ் செய்தவனுக்கு அளவை விஷயங்களில் தூர திருஷ்டி யுண்டாகும்,

Page 36
سے 54 سے
எழுத்து, சொல், தொடர்மொழிகளின் இயல்பை விரித்துக் கூறும் இலக்கண சாஸ்திரங்களைக் கசடறக் கற்றல், வசன ரூபமாயும் பா ரூபமாயும் உள்ள இலக் கியத்தில் இருக்கின்ற மேலான அறிவுகளை எளிதில் அறி யலாம். அதுவுமன்றித் தான் கற்ற கல்வியை அலங் காரமாகவும் பிறருக்குப் போதிக்கலாம்,
ஏற்ப திகழ்ச்சி
*ஏற்பது' என்றது, கொடுப்பதற்கே எழுந்தருளி யிருக்கும் சிவபெருமானிடத்தும் தெய்வ சொரூபங்களா கிய தந்தை தாய் குரு முதலியவர்களிடத்தும் அன்றி மற்றவர்களிடத்துக் கைநீட்டி வாங்கல், "இகழ்ச்சி" என்றது பெரியோர்களுடைய கொள்கைப்படி இழிவான செயலாகும் என்றவாறு.
உனக்கு ஒரு பொருள் வேண்டுமானல் உன்னைக் காப்பதற்குக் கடமைபூண்ட தாய் தந்தையரிடம் கேட்க லாம். அவர்கள் மூலமாகப் பெறக்கூடாத கல்வியைத் தக்க ஆசானிடம் சென்று அவருடைய பணிகளைப் பத்தி யோடு செய்தால், உன் மனசிலே தோன்றிய விருப் பத்தை அவர் அறிந்து, உன்னுடைய நிலைக்கேற்றபடி கல்வியை அருளுவார். பத்தினிகள் தங்கள் பதிகளிடம் வேண்டுவதைப் பெறலாம்.
அப்படியே ஆத்மகோடிகளுக்குப் பரமபதியாயிருக் கின்ற சிவபெருமானிடத்தும், எங்கள் சுகதுக்கங்களை விண்ணப்பஞ்செய்து, நாங்கள் விரும்பினவற்றைப் பெற லாம் . −
பூரண அன்பில்லாத ஸ்தானங்களில் சென்று இரத்த லாவது வாங்கலாவது மானபங்கமாகும்.

- 55 -
கொடைக்கு உரிமையற்றவரிடம் வாங்குவது கடன கும். அக்கடனை இப்பிறவியிலே அன்போடு தீர்க்காத வன் வேருெரு பிறவியில் தீர்ப்பதற்கு ஆளாகுவான்.
நீ ஒருவனுக்குச் செய்த உதவிக்காக, அவன் அன்பு கூர்ந்து செய்யும் பிரதி உபகாரத்தை ஏற்பது உலகத் தாரால் இகழ்ச்சியாக எண்ணப்படாதாயினும், அந்தக் கைம்மாற்றைப் பெரு திருத்தல் சித்தசுத்திக்கு அனுகூல LonTeg Lh.
ஐய மிட்டுண்
" ஐயம்" என்றது உனக்குள்ள பொருளை ஐந்து பாகமாகப் பிரித்து அதில் ஒரு பாகமாகிய ஐயத்தை, "இட்டு உண்" என்றது உரியவர்களுக்குக் கொடுத்து நீயும் புசிப்பாயாக என்றவாறு. x
தருமசாஸ்திரம் தினசம்பத்தில் ஒரு கூற்றைப் பிதிர் களுக்கும், ஒரு கூற்றைத் தான் உபாசித்து வரும் தெய் வத்துக்கும், ஒரு கூற்றைச் சாதுக்களுக்கும் வறியவர்க ளுக்கும், ஒரு கூற்றை உறவினர்களுக்கும், மற்றக் கூற் றைத் தனக்கும் உபயோகிக்க வேண்டுமென்று விதிக் கின்றது.
பிதிர்களுக்கு மாசாந்தரம் எள்ளும் தண்ணிரும் இட்டுத் திருப்திபண்ணி வர வேண்டும்.
தெய்வத்துக்குக் காலையிலும் மாலையிலும் ஒரு புஷ்ப மாவது, ஒரு பத்திரமாவது அன்போடு பாதத்தில் இட்டு வழிபாடு செய்யவேண்டும்.
சாதுக்களுக்கும், வறியவர்களுக்கும், அரிசி அன்னம் பணம் வஸ்திரம் முதலியவற்றைக் கொடுத்துச் சந்தோ ஷிப்பிக்க வேண்டும்.

Page 37
- 56 -
இனத்தவர்களுக்கு ஆகாரம், விகாரம், யாத்திரை முதலியவற்றல் அன்பைப் பெருக்க வேண்டும்.
தனக்குரிய ஆத்ம அநாத்ம சுகங்களைக் கவனித்தல் வேண்டும்.
எனவே, உனது பொருளை ஐந்து பாகமாகப் பிரித்து ஒவ்வொரு ஐயத்தையும் உரியவர்களுக்குக் கொடுத்து அநுபவிப்பதே புண்ணிய வாழ்வு.
ஒப்புர வொழுகு
* ஒப்புரவு" என்றது சமத்துவ நிலையை, 'ஒழுகு என்றது நீ அநுசரி என்றவாறு.
s
சமத்துவ நிலையில் நீ புத்தியை நிறுத்தி அதன் பிர காசத்தால் விஷயங்களை விசாரித்து வாழவேண்டும்.
சமத்துவ நிலை பாரபகடி நிலைக்கு எதிர்மறை. உன் னுடைய மனசில் ஒரு விருப்பாயினும் ஒரு வெறுப்பா யினும் வந்தேறினல், அந்த மனசைப் பற்றி நிற்கும் புத்தி, அவ்விருப்பாலாயினும் வெறுப்பாலாயினும் இழு பட்டு, முன்நிற்கும் விஷயத்தை ஒழுங்காக விசாரியாது. விருப்பு வெறுப்புக்களை நீக்கியே புத்தியை விசாரணையில் விடவேண்டும். ஒருவன் தனது விருப்பையும் வெறுப்பை யும் ஒப்புரவு செய்ய அவன் மனம் சமநிலையைப் பெறும்.
அந்தச் சமநிலையில் புத்தியை நிறுத்தினவன், அதன் பிரகாசத்தால், தன்னைச் சூழ்ந்திருக்கும் பொருளை நன் ருக அறிவான்.
தராசுத் தட்டுக்கள் உயர்வு தாழ்வற்று நிற்கும் சமயத்தில் ஊசி ஒருபக்கமும் சாயாமல் நேராக நிற்பது போலப் புத்திபாரபகடிமின்றி விஷயங்களை விசாரிக்குமா கில் உலகம் அவனைப் புத்திமான் என்று கொண்டாடும் ,

ー57ー
புத்தி யாவரிடத்தும் உள்ளதே ஆயினும், மாறி மாறி மனசில் தோன்றும் விருப்பு வெறுப்புக்களுக்கு அடிமைப்பட்டவனைப் புத்திமான் என்று உலகம் போற் டுது
ஒப்புரவு இல்லாத மனம், புத்தியின் பிரகாசத்தை யும், விசாரிக்கும் வல்லபத்தையும் கெடுத்து விடும் ஆதலால் மனசின் ஒப்புரவு ஆகிய சமநிலையை எப் பொழுதும் அநுசரித்தல் வேண்டும்.
ஒதுவ தொழியேல்
* ஒதுவது' என்றது தேவாரம் திருவாசகம் முத லிய தமிழ் வேதங்களை "ஒழியேல்" என்றது ஒரு நாளா வது பாராயணம் பண்ணுமல் இராதே என்றவாறு.
ஆத்மாவின் நன்மைக்காக ஓதத்தக்க நூல்களைத் தலையாய ஒத்து என்றும், இடையாய ஒத்து என்றும், கடையாய ஒத்து என்றும் பெரியோர்கள் பிரித்தார்கள்,
சரீர விருத்திக்காகவும் விஷய சுகத்துக்காகவும் கற்க வேண்டிய நூல்கள் கடையாய ஒத்திலும் அப்பாற்படுத்தி விலக்கப்பட்டன.
தேக விஷயங்களைப் பற்றிய நூல், 'சாமர்த்தியத்தை யும், தோன்றி அழியும், சிற்றின் பங்களையும் தரத்தக்கதே யன்றி, நற்குணங்களையும் சாந்தியையுங் கொடாது.
வஞ்சகம், பொருமை, லோபம் முதலிய துஷ்ட குணங்களை மனசினின்று அகற்ற வேண்டுமா கில், தேவா ரம் திருவாசகம் முதலிய திருமுறைகளையும், சிவபுரா ணங்களையும், மகாபாரதம், ராமாயணம் முதலிய இதி காசங்களையும், புண்ணிய பாப கர்மங்களை விளக்குகின்ற தர்ம சாஸ்திரங்களையும் ஓயாது கற்றுணர வேண்டும்,
8- إى

Page 38
یا 58 - است.
இப்படித் தினமும் ஓதிவராதவனுடைய மனசை மெல்ல மெல்லக் குளத்துநீரைப் பாசி மூடுவது போலத் தீய ஆசைகளும், வஞ்சிக்கும் நினைவுகளும் சேர்ந்து மூடும்,
உலக வாழ்வின் விஷங்களுக்குப் பரிகாரம் திவ்விய வேதாகம சாஸ்திரங்களே.
ஒளவியம் பேசேல்
"ஒளவியம்" என்றது அப்பிரீதியைக் கொடுக்கும் வசனங்களை, "பேசேல்' என்றது சொல்லாதே என்ற
வாறு.
உன்னைப்பற்றி ஒருவன் தகாத வார்த்தையைப் பேசினல் உன் மனம் எவ்வளவு வருத்தப்படுமோ என் றதை அறிந்த நீ, பிறரைப்பற்றித் தகாத வார்த்தைகள் பேசலாகாது. அன்பற்ற சொல்லாகிய ஒளவியத்தைக் கேட்டவர்களுடைய மனசில் அது பகையை உண்டாக் கும். உன் மனசையுங் கெடுக்கும்,
உன் மனசில் நல்ல நினைவுகள் உதித்தால், அவை அதற்குச் சுகத்தைக் கொடுக்கும். தீய சிந்தனை மனசில் தோன்றினுல் அதைப் பழுதுபடுத்தும் .
மடியில் கட்டிவைத்த மலம் மடியைக் கெடுப்பது போல, அன்பில்லா நினைவுகளை அநுசரிக்கின்ற மனமும் அன்பில்லா வார்த்தைகளை உச்சரிக்கின்ற வாக்கும் கெட்டேபோகும்.
அன்பில்லாத சொற்களைக் கேட்டவர்களுடைய மன சிலும், கோபம், வெறுப்பு, பகை முதலிய மலங்களேறி அதனை அசுத்தப்படுத்தி, மிக்க விரோதங்களை விளைவிக் بالا ن)

- 59 -
சகல லோக முயற்சிகளும், சிவபுண்ணியங்களும் மனசால் செய்யப்படுவதால் அதைப் பழுதுபடுத்துகின்ற onu 6ör LD5Turrı?.
தன்னிடத்தும் பிறரிடத்தும் அன்பு ஊறும்படி பேசு கின்றவன், தன் மனசையும் பிறர் மனசையும் காப் பாற்றுபவனகிப் பெரும் புண்ணிய பலன்களை அடை வான்,
சகிக்கக்கூடாத வார்த்தைகளைக் கேட்ட குணசீலன், தன்மனசு அவற்றைப் பற்றவிடாமல் பாதுகாத்து, ஐயோ ! இவன் ஈசுவர தண்டத்துக்கு ஆளாகுகின்றனே என்று இரங்குவான்.
அந்த இரக்கமாகிய அன்பு மனசைப் பரிசுத்த நிலை யிலே நிறுத்தி மேலான ஞாபகத்துக்கு அதிகாரி ஆக்கும்.
அஃகஞ் சுருக்கேல்
"அஃகம்" என்றது தானியத்தை விளைவிக்கும் நிலங் களை, "சுருக்கேல்" என்றது பங்கம் பண்ணிக் குறைக் காதே என்றவாறு.
நெல்லு முதலிய தானியம் வளரும் வயல்களை அவ மதித்து நிரவித் தோட்டங்கள் ஆக்குதல் புத்தி யன்று.
ஒவ்வொரு தேசமும் தமக்கு வேண்டிய தானியங் களை விளைவித்துக்கொண்டு இருந்தால் அவைகளுக்கு ஒருபோதும் கேடுவராது.
அந்நிய தேசங்களோடு சம்பந்தப்பட்ட வியாபாரி கள், கப்பல் மூலமாகவும் வேறு வகையாகவும் அத் தேசங்களில் இருந்து தானியங்களை வருவித்து மலிவாக விற்பதால், சுவதேசிகள் தங்கள் வேளாண்மைத் தொழிலை

Page 39
விட்டு, வயல்களை மேடாக்கித் தோட்டங்களாகச் செய் வார்கள். தோட்டங்களால் வரும் பிரயோசனம் அன் னத்தைப்போல் ஜீவனைக் காக்கத் தக்கதன்று,
மேலும் அந்நிய தேசத்துத் தானியம் பகை காலத் திலும் பஞ்சகாலத்திலும் தடைப்பட்டுவிடும்.
இவைபற்றிப் புத்தியுள்ள அரசர்களும், வேளாளர் களும் தங்கள் தேசத்து வயல்களைப் பங்கப்படுத்தாமலும் தரிசாக விடாமலும் திருத்தி, வருஷந்தோறும் சூரிய பகவானுக்கும் வருணபகவானுக்கும் பிரீதி செய்து, கால போகங்களை எதிர்பார்த்து நிற்பார்கள்.
கண்டொன்று சொல்லேல்
" கண்டு " என்றது அறிவினுல் உள்ளத்தில் உணர்ந்த தற்கு "ஒன்று" என்றது விரோதமான வார்த்தைகளை, " சொல்லேல் " என்றது கூருதே என்றவாறு.
மெய், வாய், கண், மூக்கு செவி என்னும் ஐம் பொறிகள் தத்தம் விஷயங்களாகிய ஊறு, சுவை, ஒளி, நாற்றம், ஓசை என்பவைகளை அறியும்.
இவ்வாறு அறியப்பட்ட விம்பங்களின் பிரதி விம்பங் களை மனம் பற்றினல் அந்தப் பிரதி விம்பங்கள் நினைவு களாகும். அந்த நினைவுகளைப் புத்தி விசாரித்து நிச்ச யித்தவுடனே ஆத்மா அறியும்.
எனவே, ஐம்பொறி வழியால் தோன்றின விஷயங் களையும் அவற்றினின்று பிரதிவிம்பித்த நினைவுகளையும் அவற்றின் தீர்மானங்களையும் ஆத்மா சாகF ரூபமாய் நின்று காணும்,

- 61 -
இப்படி ஆத்மா கண்டதற்கு ஒவ்வாத வார்த்தை களைச் சொன்னல், சத்திய வாக்கு விருத்தியுண்டாகாது. வர வரக் கெட்டே போகும்.
தாயுமானசுவாமிகள் தமது பாடல் ஒன்றி ல் "பொய் வார்த்தை சொல்லிலோ திருவருட்கு அயலு மாய்ப் புன்மையன் ஆவேன், அந்தோ' என்ருர்.
புன்மை என்ற இழிவான நிலை, அசத்திய வாக்கா லும் கபடுள்ள மனசாலும் ஆத்மாவுக்கு வந்து பொருந் தவே, அது ஆத்மாவைத் திருவருளுக்கு அந்நியமாக்கி துக்க சமுத்திரத்தில் ஆழ்த்தும்.
ஆதலால் சாசுழியாக நின்று ஆத்மா கண்டதற்கு விரோதமாக உரைத்தல் ஆகாது.
நுப்போல் வளை
"ங்ப்போல்" என்றது, ஒரு தமிழ்ச் சொல்லிலும் பிரயோசனப்படாது நிற்கும் தன்னினங்களைத் தழுவி அவைகளை வழங்குவித்து வரும் நுகர அக்ஷரம்போல் "வளை" என்றது நீயும் பிரயோசனமற்ற உற்ருரை இகழ்ந்து வெறுக்காமல், அநுசரித்தே வரவேண்டும் என்றவாறு,
தமிழ்ப் பாஷையில், ங் என்ற அக்ஷரமும், ங் என்ற அக்ஷரமும் தவிர, மற்ற ங்ா சூதலிய அக்ஷரங்கள் உப யோகிக்கப்படாது நிற்கின்றன. இப்படிப் பயன்படாது நிற்பினும் அவற்றை ங்கரம் ஜீவிக்கச் செய்துகொண்டே இருக்கின்றது.
அதுபோலத் தமக்காவது பிறருக்காவது உபயோக
மற்ற இனத்தவர்களை, நீயும் அன்பு வார்த்தையாலும் ஈகையாலும் தூக்கி, அறநிலையில் நிறுத்த வேண்டும்,

Page 40
- 62 -
இப்படித் தனது அன்பைக் குன்றவிடாமல், எவன் கல்வி செல்வம் முதலியவற்ருல் சிறப்பிழந்த உற்ருரை யும் ஆதரிப்பாணுே அவன் திருவருளுக்கு ஆளாவான். ஏனெனில், திருவருள் எல்லோருக்கும் மழையையும், வெயிலேயும், அன்னத்தையும், பானத்தையும் அநுக்கிர கித்து வருவதால் என்க,
சனி நீராடு
" சனி" என்றது சனீசுவரன் அதிஷ்டான தேவதை யய்ே நின்று நடத்தும் வாரமாகிய சனிக்கிழமையில், "நீராடு" என்றது எண்ணெய் தேய்த்துச் சிகைக்காய்க் கூட்டினல் அங்கத்தைச் சுத்திசெய்து நீரில் ஸ்நானஞ் செய்வாயாக என்றவாறு,
எங்கள் தேசம் உஷ்ணபூமி ஆதலால், தேகத்தின் தோல் வரட்சி அடையாமலும், நாடி நரம்புகள் குட்டி ணுல் குன்ருமலும் இருக்கும்படி பெரியோர் கற்பித்த உபாயம் எண்ணெய் தேய்த்து முழுகுதல் என்ற அப் பியங்க ஸ்நானம்.
மதுஸ்பிருதி முதலிய தரும சாஸ்திரங்களில் ஸ்நான விதிகள் கூறப்பட்டிருக்கின்றன. வியாசரிஷியினது புத் திரராகிய பராசரரிஷி தாம் ஐயாயிரம் வருஷத்துக்கு முன்னே இயற்றிய ஸ்மிருதியில் அப்பியங்க ஸ்நானம் சரீரத்தைப் பற்றிய மலங்களே நீக்குகின்றபடியால் மலா பகர்ஷண ஸ்நானம் எனப்படும் என்று கூறுவர்.
ஜ்யோதிவு (சோதிட சாஸ்திரப்படி ஞாயிற்றுக் கிழமையில் அந்த ஸ்நானத்தைச் செய்பவர்களுக்குச் சந் தானமும், திங்களில் சாந்தகுணமும், செவ்வாயில் அற் பாயுளும், புதனில் சம்பத்தும், வியாழனில் தரித்திரமும், வெள்ளியில் வியாதியும், சனியில் தேக சுகம், மனுே சுசும், ஆத்ம தெளிவு முதலியவைகளோடு பல சித்தி களும் உண்டாகும் என்றும் கூறினூர்.
 

- 63 -
சனி நீராடு என்ற மந்திரம் மனம் வாக்குக் காயம் என்ற திரிகரணங்களால் செய்யப்பட்ட அறங்களே ஸ்திரப் படுத்தும் பொருட்டு உபதேசிக்கப்பட்டது.
ஞயம்பட வுரை
"ஞயம்பட " என்றது பிறருக்கு நல்ல பிரயோசனம் உண்டாகும்படி, "உரை " என்றது சுகவார்த்தைகளைப் பேசு என்றவாறு.
வீண் வார்த்தைகளே நீக்கி நல்ல விஷயங்கஃனப்பற்றிப் பேசுவதே சிறுவருக்கும் முதியோருக்கும் பொதுவான அறம்.
ஒருவரோடு ஒருவர் சம்பாஷிக்கும் பொழுது தம் மைப் புகழ்ந்து பேசாமலும், தங்களுக்குள்ள பொருளேப் பாராட்டாமலும், அதட்டாமலும், பழிக்காமலும், உருட்டாமலும், மருட்டாமலும் மிகைபடப் பேசாம லும், எடுத்த விஷயம் முடியமுன் வேறுென்றைப் பற்று மலும், கூறியதை மீளக் கூருமலும், இரையாமலும், பெருநகை செய்யாமலும் பேசவேண்டும்.
மனசிலே தோன்றியதெல்லாம் வாய் திறந்து பேசக் கூடாது. புத்தியால் ஆராய்ந்து இது பேசத்தக்கதோ தகாததோ என்று நிச்சயித்துக் கேட்போருடைய கால வசதிகளேயும், குனபேதங்களேயும் அறிந்து, சொல்வதை இன்பமுறக் கூறவேண்டும்.
அற்ப கதைகளேயாவது தமக்குச் சம்பவித்த அற்ப துன்பங்களேயாவது பெருப்பித்துப் பேசலாகாது. பிற ருக்கு அருளப்பட்ட செல்வம், கல்வி சுகாதுபவம் முத லியவற்றைச் சிறுப்பித்துப் பேசலாகாது.
முன்னிலேயில் நிற்பவர்களோடு சந்தோஷமாகப் பேசிச் சென்றபின், தூசித்தல் ஆகாது. உனக்கு ஒரு

Page 41
- 64 -
கஷ்டம் வர, எப்படி உன் மனம் பதைக்குமோ அப் படியே பிறருக்குக் கஷ்டம் வர அவர் மனமும் பதைக்கு மென்று ஆலோசித்துச் சுகவார்த்தைகளைப் பேச வேண்டும்.
சாதுக்கள் சகவாசத்தாலாவது, நற் கல்வியாலாவது அறியப்பட்ட சங்கதிகளேத் தக்க சமயம் பார்த்து அறி யாதவர்களுக்கு உபகதைபோல் அன்புடன் உரைத்தல் வேண்டும்.
பயன்படப் பேசுதல், வாக்கினுற் செய்யப்படும் அறமாம்.
இடம்பட வீடெடேல்
" இடம்" என்றது இடம், விஸ்தாரம் " பட " என்றது ஆக, " வீடு எடேல்" என்றது வீட்டை உண் டாக்காதே என்றவாறு.
சனங்கள் தங்கள் செல்வத்துக்கு ஏற்றபடி வீட்டைக் கட்டுவார்கள். செல்வம் நிலேயாமை அறிந்த புத்திமான் வீட்டைக் கூடியவரையில் அடக்கமாகவே கட்டுவான்.
தூதன செல்வத்தை அநுபவிக்கின்றவன், டம்பத் திற்காக மூடர்களுடைய மதிப்பை விரும்பி, வீட்டை விஸ்தாரமாகக் கட்டுவான். அயலாருக்கு மேற்பட்டவ ணுல் விளங்க விரும்பி மேடையையும் அமைத்து அலங் கரித்து வைத்துவிட்டுக் கீழ்வீட்டில் ஒரு சிற்றறையிற் சென்று முற்பழக்கப்படி அற்பணுய் வாழ்வான்.
இப்படி வாழுங் காலத்தில் அவன் அந்தப் பெரிய வீட்டைத் தன்னுடைய மூத்த புத்திரனுக்கே கொடுக்க வேண்டும் என்றும் அவனுல் தன் கீர்த்தி நெடுங்காலம் பிரபல்லியமாகும் என்றும் எண்ணிப், பல கட்டுப்பாட் டுடன் தானபத்திரஞ் செய்து, பிறருக்கு ஒருகாசுங் கொடாமல் இறப்பான்.
 
 
 
 
 
 
 
 

அறநெறி அறியாத அவன் புத்திரன், வருமானத் துக்கு அதிகரித்த வீண் செலவுகளேச் செய்து கடன் பட்டு முடிவில் வீட்டைப் பாதிவிலேக்கு விற்றுச் செல்
வான்.
உலகத்திலே உள்ள பெரும் பட்டணங்கள் தோறும் விசாலமாகக் கட்டப்பட்ட எத்தனையோ வீடுகள், தக்க வாடகங் கொடுத்திருப்பவர் இல்லாமையாற் பாழாய்க் கிடக்கின்றன.
இந்த உண்மையை அறிந்த எங்கள் முன்னுேர்கள் வீடுகளேச் சிறுகக் கட்டி ஆசைகளே ஒடுக்கி, தான தரு மங்களேப் பெருக்கி, சிவலோக சுகத்துக்கு ஆளானூர்கள்.
மேலேத் தேசத்தார் வரமுன் இந்த ஈழ தேசத்திலும் இந்தியா எனப்படும் பிரதேசத்திலும் நகரங்களில் அலங் கார மனேகள் மிகச் சொற்பமாக இருந்தன.
ஆணுல், தமிழ் அரசர்களும் தமிழ் அடியார்களும் பிர திஷ்டை செய்த தேவாலயங்களின் விஸ்தாரத்தையும், அலங்காரத்தையும் வெல்லும்படியான கோயில்கள் மற் றெத்தேசத்திலும் இல்லே. இடமும் அலங்காரமும் பெறத்தக்கது தேவாலயமே .
இணக்கமறிந் திணங்கு
"இணக்கம் " என்றது பொருத்தம், " அறிந்து " என்றது ஆராய்ந்து, " இனங்கு ' என்றது பொருந்து
ii I If என்றவாறு கொழும்பு தமிழ்ச் சங்க
அறிவினர் சந்திக்குமிடத்துத் தம்முள் ஒருவர் ஒருவ ரது முன் பின் வரலாறுகளே விசாரியாமலும், குணு குணங்களே அறியாமலும் வேடிக்கைக் #፫፻፻ኃoomዲ£) றியே உறவு கலக்கின்ருர்கள், نة شة تنقل Tز
அ-9

Page 42
- 66 -
அதன்மேல் அவ்வுறவை விஷய போகங்களைத் தொட்டு உறுதியாகும்படி செய்வார்கள். முடிவில் துக் கத்துக்கு ஆளாவார்கள்.
அறிவாளிகள் பழங் குடிப்பிறப்பாலாவது, கல்வி யாலாவது, ஞானத்தாலாவது சிறப்புப் பெற்றவர் களோடு உறவு கொள்ள விரும்புவார்கள்.
அறிவாளிகளாக வர எத்தனிக்கின்ற பிள்ளைகள் நல் லவர்களோடு சகவாசம்பண்ணி, அவர்களிடத்துள்ள விசேஷ குணங்களை மனனஞ் செய்து, அந்த மனுேபாவ னையால், தாங்களும் அவற்றைப் பற்றிக் கொள்வார்கள்
நல்லவர்கள் என்றது நல்ல மனசை உடையவர்கள் அஃதாவது விதிவிலக்கனுசரணையாலும், பொறுமையா லும், கல்வியாலும், அன்பாலும், பரோபகார முயற்சி யாலும் சிறந்தவர்கள்.
தீயோர்கள் தீயோரோடு கூடினல் அதிசீக்கிரத்தில் நாசப்படுவார்கள். தங்கள் தீமையை அறிந்து "ஐயோ மானுடப் பிறப்பைப் பெற்றும் மிருகசாதிகளைப் போலத் திரிகின்ருேமே ' என்று துக்கப்படுகின்றவர்களுடைய மனம் நல்லவர்களையே பின்பற்றிப் பொருந்த நினைக்கும்.
நல்லவர்கள் பொருத்தமே பொருத்தம். நற்குண இணக்கம் ஒருவனிடம் உள்ளதோ என்று பலமுறை ஆராய்ந்து கண்டால் அவனேடு இணங்கியே வாழ வேண்டும்,
தந்தைதாய் பேண்
"தந்தைதாய்' என்றது பிதாவையும் மாதாவையும், " பேண் ' என்றது பற்றி வாழ்வாயாக என்றவாறு,

- 67 -
ஒளவையார் தமது கொன்றைவேந்தனில், 'அன்னை யும் பிதாவும் முன்னறி தெய்வம்" என்று உபதேசித்தது இந்த மந்திரத்தை விளக்கும்.
தாயும் தந்தையும் முன்னறி தெய்வங்களே என்ற தற்கு ஐயமில்லை. தெய்வம் அறிவு சொரூபமாயும், அன்பு சொரூபமாயும் இருக்கும். எந்தப் பத்தர்களுக்கு எது அவசியமோ அதை அறிந்து அன்புடன் அருளும்.
இந்தத் தெய்வபக்தி உதயமாகமுன், பிள்ளைகள் தங்கள் தாயிடத்திலும் தந்தையிடத்திலுமே அறிவும், அன்பும் உள்ளனவாக முதலிற் காண்கின்றர்கள்.
பிள்ளைகள் அந்த அநுபவத்தைக் கொண்டே தாய், தந்தையர் காட்டிக் கொடுக்கும் தெய்வத்தினிடம் மேலான அறிவும், மேலான அன்பும் உண்டென்று விசு வசித்துத் தெய்வ பக்தியைப் பெறுகின்றர்கள்.
அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வங்கள் என்று உணர்ந்த பிள்ளைகள் சதாகாலமும் அவர்களைப் பின்பற் றித் தழுவி நடப்பார்கள். தங்களுக்கு அறிவும் அன்பு மில்லாத காலத்தில், அதிக பொறுமையோடு அநேக புத்திகளையும் சுகங்களையும் ஊட்டி வளர்த்தார்களே என்று, நல்ல பிள்ளைகள் நன்றியறிவோடிருந்து தந்தை தாயர்களைச் சகல துன்பங்களினின்றும் காப்பார்கள்.
அவர்களுடைய வீட்டை விட்டுப் பிள்ளைகள் வேறு வீட்டில் சென்று வாழுங் காலத்தில், இயன்ற மட்டும் அவர்களைத் தரிசித்தும், தங்கள் வீட்டுக்கு அழைத்துப் பாராட்டியும், அவர்களுடைய சித்தப்படி நடந்தும், இனிய வார்த்தையாலும் இச்சித்த பொருளுதவியாலும் பூசித்தும் வருவார்கள்.
இவையெல்லாம் மக்கட்குரிய புண்ணிய கர்மங்கள். அக்கர்மங்களுக்குச் சிவபெருமானல் விதிக்கப்பட்ட சுக பலன்கள் சுவர்க்கலோகப்பேறு, மறுபிறவியில் வளந்

Page 43
- 68 -
தளம் பொருந்திய தேசத்தில் ஜனனம், அறிவோடும் அன்போடும் பராபரிக்கும் தந்தை தாய் வாய்ப்பு, நற் புத்திர பாக்கியம், சிறந்த சுற்றத்தார் சகாயம் முதலி யனவாகும்.
தந்தைதாய் மீது பகை பாராட்டி வருகின்ற பிள்ளை கள், பிதிர்சாபம் பெற்று வறந்த தேசத்திலும் எளிய குலத்திலும் பிறந்து, சத்துருக்களால் வாதிக்கப்பட்டும், சனங்களால் நகைக்கப்பட்டும் பெருந்துன்பம் அடைவார் Ꮿ5 ᎧnᎢ .
நன்றி மறவேல்
"நன்றி " என்றது நற்கருமத்தை, " மறவேல்" என் றது மனசினின்று தவற விடாதே என்றவாறு.
அறஞ்செய விரும்பு என்ற மந்திரம் நற்கருமத்தைச் செய்யக்கூடிய ஸ்திதியைப் பெற்றவனுக்கு உபதேச மாயிற்று. இந்த மந்திரம் நற்கருமத்தைச் செய்ய இய லாதவனுக்கு உபதேசமாகின்றது.
உனக்காவது, உறவினர்க்காவது, உன் சனத்துக்கா வது, உலகத்துக்காவது ஒருவன் நன்மை செய்தால் அந்த தன்மையை உன் மனசில் நின்று வழுவ விடலா காது: &
மனம் நற்கருமங்களைப் பற்றி எல்வளவு சிந்திக்கின் றதோ அவ்வளவும் சுத்தப்படும். சுகிர்த கருமங்களைச் சிந்தியாத மனம் சுத்தப்படாது.
பேரறிவாளிகளாகிய ம கா ன் களு  ைடய மனம், நினைப்பு, மறப்பற்றுச் சும்மாவிருப்பதுபோலச், சிற்றறி வாளிகளுடைய மனம் சும்மாவிராது, ஒன்றைப் பற்றிக் கொண்டே இருக்கும். பற்ருத காலத்தில் தூக்கத்திற் சென்றுவிடும்,

سيس 69 سادس
பகவான் இருள் மூடியிருந்த ஆத்மாவை ஒளியிற் கொண்டுவரும் பொருட்டு அதற்கு மனமென்ற கருவி யைக் கொடுத்து நினைக்கச் செய்தார். புண்ணிய கர் மங்களைப்பற்றி நினையாது போனுல் பாப கர்மங்களைப் பற்றியாவது, புண் ணியமும் பாபமுங் கலந்த மிசிர கர் மங்களைப் பற்றியாவது நினைக்கும்.
மிசிர கர்ம நினைவுகளும் பாபகர்ம நினைவு களும் ஜீவாத்மாவுக்குச் சுகவாழ்வைக் கொடா. புண்ணிய கர்மத்தையே மனமானது பாவனை செய்யவேண்டும்.
புண்ணிய கர்மத்தில் பிரதிஷ்டை பெற்ற மனம் தான் பாதுகாத்துவரும் ஆத்மா வுக்குச் சகல ஐசுவரியங் களையும் இந்தப் பிறவியிலேனும் மறுபிறவியிலேனும் பயக்கும் என்பது சிவபெருமானது ஆஞ்ஞை .
பருவத்தே பயிர்செய்
* பருவத்தே" என்றது பக்குவ காலத்திலேயே, 'பயிர்செய்' என்றது விதைகளையிடு என்றவாறு.
வேளாண்மைத் தொழில் செய்கின்றவர்கள், எப் படிக் கால தேச வர்த்தமானங்களை அறிந்து, நிலத்தை உழுது, நல்ல வித்துக்களைத் தேடி விதைப்பார்களோ, அப்படியே புத்தியுள்ள பிதா மாதாக்கள் தம் மக்களுக் குப் பாலிய காலத்திலேயே நற்பழக்கத்தையும், நற் கல்வியையும் ஊட்டுவார்கள்.
கிருஷிகத் தொழிலுக்கு நல்ல நிலம் அவசியமாவது போலத் கல்வித்தொழிலுக்கு நல்லமனம் அவசியமாகும்.
வஞ்சனை, பொருமை, லோபம் முதலிய துஷ்ட குணங்களை அநுசரிக்கின்ற மனசில், உபாத்தியாயர் வித் தியா பீஜங்களை விதைத்தால், அந்த வித்தைக்குரிய பிர யோசனங்கள் விளையா,

Page 44
- 70 -
மனம் வயசினல் முதிர்ந்து விசாரணைக்குரிய புத்தி யால் கிண்டப்படாமல் கடினமானலும், வித்தியாபீஜங் கள் வேரூன்ரு .
ஆதலால் நல்ல தாய் தந்தையர் ஐந்து வயது வரைக்கும் தங்கள் பிள்ளைகளுடைய மனசில், கோபம், பொருமை, சோகம் முதலிய தோஷங்கள் அடையா மற் காத்து, மனசுக்கு ஆறுதலைக்கொடுத்து, அவர்களே ஆரும் வயசு தொடக்கமாகத் தக்க ஆசானிடம் ஒப்பு விப்பார்கள். இப்படிக் குருவினிடம் ஒப்புக் கொடுக்கப் பட்ட புத்திரரது புத்திக்குச் சரியான பார்வை உண் டாவதால் அது உபநயனம் எனப்படும். அஃதாவது நல்ல கண்ணெனப்படும்.
உபநயன கிருத்தியத்தைப் பருவத்திலேயே ஆரம் பித்து அதை ஒயா முயற்சியோடு சித்திக்கச் செய்ய வேண்டும்.
மன்றுபறித் துண்ணேல்
" மன்று பறித்து" என்றது மன்னவன் சபைக்குத் தங்கள் குறைகளை உரைக்கும் பொருட்டு வருபவர்களை மருட்டி அவர்களிடம் பொருள் கவர்ந்து, உண்ணேல் "ஜீவனஞ் செய்யாதே' என்றவாறு.
அவர் அவர் கருமங்களுக்குத் தக்கபடி பரமேசு வரன் சிலரை வல்லவர்களாக்கியும், பலரை ஏழையராக்கி யும் விட்டார். வல்லவர்களில் அரசன் முதலாகவும், மந்திரிமார் அடுத்த படியாராகவும், அவர்களுடைய உத்தியோகஸ்தர் மூன்ரும் வகுப்பினராகவும் படிப்படி யாக இருப்பார்கள்.
அரசனுக்குத் தம் குறையை ஒதும் படி வரும் ஏழை களுக்கு அநேக தடைகளை உண்டாக்கித் தந்திரமாய்

- 71 -
அவர்களிடம் பணத்தைப் பறிக்கின்றவர்கள் இராச துரோகிகளாகிக் கொடிய துன்பங்களுக்கு ஆளாவார்கள்.
இவர்கள் தர்மசாஸ்திரங்களைக் கற்றிருந்தும் ஈசுவர நிச்சயம் இல்லாமையாலும், பகவானுடைய கர்மசக் கரத்தின் இயல்பை அறியாமலும் இந்தப் பாதகத்தைச் செய்கின்றனர்.
தேகம் நழுவினபின் ஆத்மாவும் மனுேகருவிகளும் தப்பாமல் வேறு சரீரத்தைப் பெறுமென்றும், பூமியில் மறுபடியுஞ் சனித்துப் பொறுத்தற்கரிய பெருந் துன்பங் களை அநுபவிக்க வேண்டுமென்றும் விசுவாசித்தவர்கள் மன்று பறித்து உண்ணுர்கள்.
இயல்பல்லாதன செயேல்
* இயல்பு அலாதன' என்றது உன் இ யல் புக்கு விரோதமான கர்மங்களை " செயேல்" என்றது செய் யாதே என்றவாறு .
இந்த மந்திரத்தில் தோன்றும் இயல்பு. அலாதன என்ற தமிழ் வாக்கியம் சமஸ்கிருதத்தில் பரதர்மங்கள் எனப்படும்.
வேதாகம சாஸ்திரங்களில் பரதர்மத்தைச் செய் யாது சுவதர்மத்தையே செய்யவேண்டுமென்று உபதே சித்தவாறு ஈண்டு தன் சொந்த இயல்புக்கு மாரு ன நினைவுகளையாவது, வாக்குக்களையாவது, செயல்களையா வது பாவனை செய்தல் ஆகாதென்று கண்டிக்கப்பட்டது.
சுவதர்மமென்ற இயல்பான தொழில் மாதாவி னுடைய கர்ப்பத்திலே பூர்வகர்ம பலனுக அமைக்கப்படும். இதை ஜன்னிய குண மென்றும், பிறப்பியல் பென்றும் கூறுவார்கள். பிறந்தநாள் முதலாகப் பிள்ளைகளிடம்

Page 45
-- 72 -
ஒரே விதமான குணங்களைக் காணுமல் பலவித குணங் களைக் காண்கின்ருேம்.
சில பிள்ளைகள் ஆதி தொட்டுச் சாந்தமுடையரா யும், வேறு சிலர் தங்கள் நன்மையைக் கருதாமல் பிறர் நன்மையைக் கருதுபவராயும், பலர் பொருட்பற்று மிகவு முடையவர்களாய்த் தங்க ள் கையில் வந்ததைக் கைமாறு பெருமற் கொடுப்பதற்கு விருப்பில்லாதவர் களாயும், இன்னும் வேறு பலர் பிரித்துப் பார்க்கவும் கூட்டி முடிக்கவும் சக்தியில்லாமையால் ஏவியதை மாத் திரமே செய்யும் புத்தியுடையராயும் இருக்கின்றர்கள்.
எனவே, புத்தி நான்கு இயல்புகளைப் பெற்றிருக் கின்றது என்பது அநுபவத்தால் அறியலாம். இந்த நான்கு இயல்புகளை வேதாகமங்கள் சதுர்வர்ணங்க ளென்று கூறும்,
சாந்த புத்தி பெற்றவர்களை ப்ராஹ்மணர்கள் என் றும், பரோபகார புத்திபெற்றவர்களை கூடித்திரியர்க ளென்றும், விநிமயபுத்தி பெற்றவர்களை வைசியரென் றும், ஏவலைக் காத்திருக்கும் புத்திபெற்றவர்களைச் சூத் திரரென்றும் கூறுவர்.
இது எல்லாத் தேசங்களுக்கும் பொதுவான ஜன் னியகுணப் பிரிவுபாடு. இந்த மனேதர்ம வர்ணங் களைப் பிறப்பியல்புகள் என்றறியாதவர்கள், சதுர்வர் ணம் என்றபதம் தேகத்தைப் பற்றிய பிரிவுபாடுகளைக் குறிக்கின்றதென்று எண்ணுகின்றர்கள்.
எப்படி எனில், ஒரு காலத்தில் சாந்தபுத்தியோடு வாழ்ந்த வன், பிரமத்தைத் தரிசிக்கும்பொருட்டுப் பிராணலய யோகம், மனேலய யோகமென்ற முத்திநெறி யிற் பிரவேசித்துப் பிரமமென்ற பரசிவத்தை அடைந் தது பற்றிப் ப்ராஹ்மணனென்று பெரியோரல் அழைக் கப்பட்டான். இவனுடைய தேகத்தினின்று பிறந்த பிள்ளை

- 73 -
யையும் ப்ராஹ்மணனென்று உபசாரமாக உலகத்தார் கூறினர்கள். அப்பிள்ளை தன்னிடத்துச் சாந்தபுத்தியும், முத்திநெறியில் விருப்பும் இல்லாதிருந்தும் உலகத்தா ருடைய எண்ணப்படி தன்னையும் பிராம ண ன க க் கொண்டான்,
இப்படியே பரோபகார புத்தியாலும்,  ைத ரி ய வீரிய சக்திகளாலும் சிறப்புப்பெற்று யா வருக்கும் கூேடித்திரமாக வாழ்ந்தவன் பெரியோரால் கூடித்திரியன் எனப்பட்டான். இவனுடைய பிள்ளை தன்னிடத்தில் கூyத்திரியகுணம் இல்லாதிருந்தும் தன்னையும் கூடித்திரிய ஞகக் கொண்டான்,
இவ்வாறு வைசியபுத்தி உடையவனுடைய பிள் ளையை, அவன் ப்ராஹ்மண புத்தியாவது, க்ஷத்திரிய புத்தியாவது, சூத்திர புத்தியாவது பெற்றிருந்தாலும் வைசியனென்றே உலகத்தார் பாராட்டுவார்கள்.
இப்படியே சூத்திரனுடைய் பிள்ளை ப்ராஹ்மண புத்தியோடாவது, க்ஷத்திரிய புத் தியோ டா வது, வைசிய புத்தியோடாவது பிறந்திருந்தாலும், அவனை மூடலோகம் சூத்திரனென்றே கொள்ளும்.
தேகப் பிரிவுபாடுகள் குண விபாகங்களை மறைத்து நிற் 8 ன்றன என்று அறிந்த மகான்கள் உலகத்தா ருடைய வழுக்களை அநுசரித்துப் ப்ராஹ்மண குலத்திற் பிறந்தவர்கள் சிலர் ப்ராஹ்மணராயும், சிலர் க்ஷத்திரி யராயும், பலர் வைசியராயும் சூத்திரராயும் இருப்பார் கள் என்றும், கூடித்திரிய குலத்திற் பிறந்தவர்கள், சிலர் ப்ராஹ்மணராயும், சிலர் கூத்திரியராயும், பலர் வைசிய ராயும் சூத்திர ராயும் இருப்பார்கள் என்றும், வைசிய குலத்தில் பிறந்தவர்கள், சிலர் ப்ராஹ்மணராயும், சிலர் கூடித்திரியராயும், பலர் வைசியராயும் குத்திரராயும் இருப்பார்கள் என்றும், சூத்திரகுலத்திற் பிறந்தவர்கள், சிலர் ப்ராஹ்மணராயும், சிலர் கூடித்திரியராயும், பலர்
அ-10

Page 46
- 74 -
வைசியராயும் சூத்திரராயும் இருப்பார்கள் என்றும் சமாதானம் கூறினர்.
ஞான சாஸ்திரங்களாகிய உபநிஷத்களிலும், சைவ சித்தாந்த நூல்களிலும் கூறப்பட்ட ப்ராஹ்மணத்துவம், கூடித்திரியத்துவம், வைசியத்துவம், சூத்திரத்துவம் என்ற பிறப்பியல்கள் எனப்படும் ஜன்னிய குணங்கள் புத்தி யைப் பற்றியே இருக்கும் அன்றித் தேகத்தைப் பற்றியிரா.
ஞான சிரோ மணியாகிய ஒளவையார் ஞான சாஸ்திரங்களிற் கூறியபடியே ஜன்னிய குணங்களுக்கு மாருண் கர்மங்களைச் செய்யலாகாது என்பதையே செந்தமிழில் "இயல்பு அலாதன செயேல் ' என்று அருளிச்செய்தார் -
சாந்தமயமான ப்ராஹ்மணத்துவத்தைப் பெற்ற புத்திமானுக்கு, கூத்திரியனுக்குரிய துஷ்ட நிக்கிரகத் தொழிலாவது, வைசியனுக்குரிய வியாபார பண்டமாற் றுத் தொழிலாவது, சூத்திரனுக்குரிய ஏவல் வேலையா வது பொருந்தா. மனம் தனக்கு உவப்பான கர்மங் களைச் செய்யாமல் விபரீத கர்மங்களைச் செய்து சலனப் பட்டுக் கெடும். அப்படியே பரோபகார புத்தி பெற்ற வன் தனக்கு உவப்பான துஷ்ட நிக்கிரக சிஷ்ட பரிபால னத் தொழில்களை விட்டு மற்ற மூன்று வர்ணத்தாருக் குரிய தொழில்களைச் செய்தால் அவன் மனம் வலிமை கெட்டு ஆத்ம உத்தாரணத்துக்கு (ஈடேற்றத்துக்கு) உதவாது,
இப்படியே எஞ்சிய இருவர்ணத்தாரைப் பற்றி <罗Dö。

- 75 -
அரவ மாட்டேல்
* அரவம்" என்றது பாம்பு, "ஆட்டேல்' என்றது ஆட்டாதே என்றவாறு.
கொடிய விஷமுள்ள நாகத்தைப் பிடித்துச் சீவனத் தின் பொருட்டு ஆட்டுங் குறவர் அதற்குப் பயந்தே இருப்பார்கள்.
தாகத்தின் விஷப்பற்களைப் பிடுங்கியும், காலந் தோறும் விஷப்பையிலூறும் விஷத்தைப் பிழிந்து ம் வளர்க்கின்ற பாம்பாட்டி அதி ஜாக்கிரதையாய் இருந்து பணத்தைச் சம்பாதித்தாலும் அந்த நாகம் அவனுக்குத் தீமையைத் தரத்தக்கதென்றிருப்பான்.
பாம்பாட்டிகள் அநேகர் அந்தத் தொழிலைச் செய் யும் பொழுதே பாம்பு தீண்டி இறப்பர்.
அதுபோலத் துஷ்டரைக் கொண்டு ஒருவன் ஜீவனம் பண்ணலும் ஆகாது, ஏவல்வேலை செய்வித்தலும் ஆகாது.
பேராசை, பொருமை, வஞ்சகம், துரோகம் முத லிய தீக்குணங்கள் ஏறிய மனமுடையவனைத் தன் வீட்டி லாவது வெளிவேலைக்காவது வைக்கலாகாது.
எவ்வளவு ஆதரவாக யஜமானன் நடத்தினுலும் அவனுடைய விஷம் அறிவைக் கெடுத்துக் களவு, கற் பழித்தல், கொலை முதலிய கர்மங்களைச் செய்விக்கும்.
ஆதலால் யாவரும் தங்களை அடுத்த வேலைக்கார ருடைய குணுகுணங்களை முற்ருகப் பரிசோதித்தே அவர் களைச் சேர்த்தல் வேண்டும்.

Page 47
- 76 -
இலவம் பஞ்சிற்றுயில்
*இலவம் பஞ்சு " என்றது இலவம் பஞ்சாற் செய் யப்பட்ட மெத்தையில், “ துயில்" என்றது படுத்து நித்திரை செய் என்றவாறு,
அறஞ் செய்வதற்குச் சகாயமான ஆகார விதிக ளும் ஆசன விதிகளும் தர்மசாஸ்திரத்தில் கூறப்பட்டன.
இந்த மந்திரத்தில் ஆசன விதிகளில் ஒன்று கூறப் பட்டது:
எங்கள் தேசத்திலே உபயோகமாகும் பஞ்சு, இலவ மரத்திலும், பருத்திச் செடியிலும் விளையும் பருத்திப் பஞ்சு, வஸ்திரம் நெய்தற்கு உரியது. இலவம் பஞ்சு படுக்கைக்கு உரியது. இலவம் பஞ்சாற் செய்யப்பட்ட மெத்தை தலையணைகளை எவ்வளவு அழுத்துகினும் அவை அடைந்து கடினமாகாமல் வளைந்து விரிந்து மிருதுவாக இருக்கும்.
இலவம் பஞ்சு உஷ்ணகாலத்தில் போது மா ன குளிர்ச்சியையும் சீதள காலத்தில் போதுமான குட்டை யும் தரும் இயல்புடையது.
இலவம் பஞ்சு மெத்தை, மற்ற மெத்தைகளைப் போலத் தேகத்துக்கு வேதனையைத் தந்து சோம்பல் முதலிய தமோகுணங்களை உண்டாக்காது.
ஆகமங்கள் சயன அறைக்குரிய கருவிகளை மிகச் சாதுரியமாகக் கூறுகின்றன. பதமிட்ட புலித்தோல் மான்தோல்களாற் செய்யப்பட்ட உறையில் காற்றை அடைத்து வைத்திருக்கும் மெத்தை சர்மஜ மஞ்சமென் றும், அன்னம் முதலிய சுத்த பகூரிகளுடைய மார்பி லுள்ள தூளி என்னும் மிக மெதுவான இறகுகளால் நிறைக்கப்பட்ட மெத்தையை ஹம் சஜம் என்றும், தாமரை முதலிய சுகந்த மலர்களால் நிறைக்கப்பட்ட

மெத்தையைப் பங்கஜம் என்றும், சாமரக்கடாவின் மயிரைச் சுத்தமாக்கி உறையில் அடைத்த மெத்தையை ரோமஜம் என்றும் கூறும்.
ரோமஜ புஷ் மஜ ஹம்ச ஜ சர் மஜ மஞ்சங்கள் தேடுதற் கரியனவாய் இருப்பதாலும், அதிக விலை உள்ளனவாய் இருப்பதாலும், இல்லற தர்மிக்கு இலவம் பஞ்சுமெத்தை போதுமான சுகத்தைத் தரும் என்று இந்த மந்திரம் உபதேசிக்கின்றது.
வஞ்சகம் பேசேல்
* வஞ்சகம் ' என்றது துரா சையினின்று ஜனித்த தோஷங்களை, ' பேசேல் ' என்றது பாராட்டாதே என்ற வாறு
ஆசையானது விருப்பு வெறுப்பு ரூபபமாயிருக்கும் கண்ணுக்குப் புலப்படாதாயினும், அது மனசில் ஒரு விருப்பமாகவாவது, வெறுப்பாகவாவது வந்து ஏறும்? நல்ல விஷயத்தை விரும்புகின்ற ஆசையும், தீய விஷ யத்தை வெறுக்கின்ற ஆசையும் நல்ல ஆசை எனப் படும். தீய விஷயத்தை விரும்புகின்ற ஆசையும் நல்ல விஷயத்தை வெறுக்கின்ற ஆசையும் துராசை எனப்படும்.
ந கூடித்திர சோதி கலவாத இருளைக் காரிருள் என் றும், நக்ஷத்திர சோதி கலந்த இருளை வெள் இருள் என்றும், சூரியோதய சமீபத்தில் உள்ள இருளைப் புலரி இருளென்றுங் கூறுவார்கள்.
ஒளியின் சேர்க்கையால் இருள் பலவிதப்படுவது போல, சிவபெருமானது அருட்பிரகாசத்தால் ஆசை என்னும் பாச இருள், நல்ல ஆசை என்றும் அந்த அருட்பிரகாசம் இன்மையால் துராசை என்றும் விபா கப்படும் ,

Page 48
- 78 -
இந்தத் தூராசையில் நின்று பிறந்த நினைவுகளும், வார்த்தைகளும், செயல்களும் வஞ்சகம் எனப்படும்.
எனவே, வஞ்சகம் பேசேல் என்ற மந்திரம் துரா சைக்கு அடிமைப்பட்டு நீ ஒருவனைக் கெடுக்க எண்ண வுங் கூடாது. பேசவுங் கூடாது, செய்யவுங் கூடாது என்ற பொருட்களை அடக்கி நிற்கின்றது.
துராசையை, மனம் வாக்குக் காயங்கள் பற்றி ஞல் அவை பிறருக்குத் தீங்குகளைச் செய்வதும் அன் றித் தம்மையும் பழுதுபடுத்தித் தமது யஜமானகிய ஆத்மாவுக்கும் உத்தாரண ஸ்திதியைப் பழுதுபடுத்தி விடும்.
அழகலாதன செயேல்.
"அழகுஅலாதன" என்றது சிறப்பற்ற செயல்களை, * செய்யேல் ' என்றது செய்யாதே என்றவாறு.
விதிகளை அநுசரித்தும் நிஷேதங்களை விலக்கியும் வாழ்வது அறமாயினும், அதன் சூஷ் ம கதியான விசால அறிவையும் அன்பையும் பற்றியே நடக்கின்றவன் அறத்திலே சிறப்புப் பெற்றவன்.
நான் கொலை செய்யவில்லை, நான் களவு செய்ய வில்லை, நான் கள்ளுண்ணவில்லை, நான் பொய் சொல்ல வில்லை என்று கூறுகின்றவன், கடையிலுள்ள மாமி சத்தை வாங்குவித்துப் புசித்துக்கொண்டும், ஒரு வ ன் மேல் குற்றஞ் சுமத்தி அவனுடைய கீர்த்தியைப் பங்கம் பண்ணிக்கொண்டும், அறிவை மயக்கும் "உவையினை' யும், புகையிலையையும் அடிக்கடி உபயோகித்துக்கொண் டும், தன் சித்தத்தில் உள்ளதை மறைக்கும் பொருட்டுத் தந்திரமான சொற்களால் வேருேர் அர்த்தமாகும்படி பேசிக்கொண்டும் ஒழுகுவானுயின் அவன் அழகுள்ள

- 79 -
வாழ்வாகிய பேரறிவையும் பேரன்பையும் அடையமாட் டான்.
அவன் ராஜ தண்டத்துக்கும் ஜனங்களுடைய நிந்த னைக்கும் ஆளாகாது போனலும், இறப்புப் பிறப்புற்ற துக்கப் பிரவிர்த்தியைப் பற்றியே நின்று உழலுவான்.
பரமேசுவரனுடைய கருணையைப் பெற்றுத் துக்க நிவிர்த்தி மார்க்கமாகிய முத்தி நெறியிலே செல்லவேண்டு மாகில், சித்த சுத்தியும், சத்திய வாக்கும், ஜீவகாருண் ணியமும் அமைதற்குச் சதா காலமும் முயலவேண்டும்.
இந்த மேலான சத்துவ குணங்களுக்கு மாறன நிலை கள் அழகு அலாதனவாம்.
எனவே, அழகலாதன செயேல் என்ற மந்திரத்தின் அர்த்தம் எதைச் செய்தாலும் சித்த சுத்தியோடும் செய்ய வேண்டும் என்பதே .
(சேர். பொன். இராமநாதன் அவர்களின் " ஆத்திசூடி மந்திர விளக்கம்' " அழகலாதன செயேல்" என்பது வரை தான் எழுதிப் பூர்த்தி செய்யப்பட்டதாயுள்ளது. எனவே, அதனை அடுத்து வரும் ஆத்திசூடி வாக்கியங்கள் கருத் துரையோடு கீழே தரப்படுகின்றன.)
இளமையிற் கல்
இளமைப் பருவத்தில் கல்வியைக் கருத்தூன்றிக் கற்பாயாக.
அறனை மறவேல்
அறமாகிய ஒழுக்கத்தினை என்றும் மறவாதே.

Page 49
- 80 -
அனந்த லாடேல்
தூக்கத்தினே அதிகமாகக் கொள்ளாதே. தூக்கம் சோம்பலின் தாய்.
கடிவது மற
சினங் கொள்வத&ன மறப்பாய்.
காப்பது விரதம்
பிற உயிர்களேக் கொல்லாது காத்தலே உண்மை நோன்பாகும்.
கிழமைப் படவாழ் உனக்கு மாத்திரமன்றி உன்னோத் சார்ந்தோர்க்கும் பிறர்க்கும் உன் பொருள் உரியதெனக் கொண்டு பகுத் துண்டு வாழ்க.
கீழ்மை யகற்று
உன் தகுதிக்குக் கீழ்மையான செயல்கஜ அகற்றி நட.
குணமது கைவிடேல்
நற்குணத்தினைக் கைவிடாது ஒழுகுக.
கூடிப் பிரியேல்
நட்புக் கொண்டபின் பிரியாது வாழ்க.
கெடுப்ப தொழி
பிறரைக் கெடுக்கின்ற தீமையினின்றும் நீங்கு

- 81 -
கேள்வி முயல் கேள்வியால் வரும் அறிவிஃன முயன்று பெறுவா யாக, கேள்வியாவது பிறர்வாய்க் கேட்டும், உலக அனு பவத்தைப் பெற்றும் அறிகின்ற அறிவு,
கைவினோ கரவேல்
உனக்குத் தெரிந்த கைத்தொழில் முதலியவற்றைப் பிறர்க்கு மறையாது கற்பிப்பாய்.
கொள்ளை விரும்பேல் பிறர் பொருளேக் கொள்ளேயடித்து வாழும் வாழ்க் கையை விரும்பாதே.
கோதாட் டொழி குற்றமான விளையாட்டுக்களே நீக்குவாய்,
கெளவை யகற்று
பிற ரீ கூறு ம் பழிச்சொற்களுக்கு இடமளியாது அவற்றை நீக்கி வாழ்க,
சக்கர நெறிநில் அரசனது ஆஃணயின் வழி ஒழுகு.
சான்ருேர் இனத்திரு
கல்வி, ஒழுக்கம் முதலியவற்றல் உயர்ந்தோரின் கூட்டத்தில் என்றும் நீங்காது இருப்பாயாக,
சித்திரம் பேசேல்
உண்மை போலத் தோன்றும் கற்பஃனப் பொய்க ளேப் பேசாதே,
g-ll

Page 50
- 82 -
சீர்மை மறவேல்
சிறப்பான செயல்களே மறவாதே
சுளிக்கச் சொல்லேல்
பிறரின் அகமும் முகமும் சுருங்கத்தகும் கொடிய வார்த்தைகளேப் பேசாதே.
சூது விரும்பேல்
சூதாடுவதை விரும்பாதே,
செய்வன திருந்தச்செய்
செய்தற்குரிய நற்செயல்களே ஒழுங்காகத் திருத்த முறச் செய்.
சேரிட மறிந்துசேர்
சேர்ந்து வாழ்தற்குரிய தகுதியுடையோரைத் தெரிந்து அவர்களோடு சேர்ந்து வாழ்க.
சையெனத் திரியேல்
பிறர் "சீ" என இகழும்படி அலேந்து திரியாதே;
சொற்சோர்வு படேல்
சொல்லற்குரியவற்றை மறந்து பிழைபடச் சொல்
வாதே. "வாக்குறுதிகளே நிறைவேற்றுவதில் தளர்ச்சி காட்டாதே" எனலுமாம்.
சோம்பித் திரியேல்
சோம்பல் கொண்டு திரியாதே
 
 

- 83 -
தக்கோ னெனத்திரி
தகுதி வாய்ந்த சான்ருேன் எனப் பிறர் சொல்லும்
வண்ணம் நடந்து கொள்,
தானமது விரும்பு
சற்பாத்திரர்க்குத் தானம் வழங்குதலே விரும்புவா
திருமாலுக் கடிமைசெய்
விட்டுணுவிற்கு நீ தொண்டு செய்.
தீவினை யகற்று
பாவமான காரியங்களே நீ தவிர்த்துவிடுக
துன்பத்திற் கிடங்கொடேல்
மனக்கவலேக்கு இடமளியாதே.
தூக்கி வினைசெய்
எக் கருமத்தையும் சீர்தூக்கி ஆராய்ந்து செயல் செய்வாய்.
தெய்வ மிகழேல்
கடவுளே இழித்தலாகிய கொடும் பாவத்தினேச் செய் யாதே. தெய்வம் என்பது விதி எனவும் பொருள்படும். அவ்வாறயின் விதியினே இகழ்ந்து செயல்புரியாதே" என்று கருத்துக் கொள்ளலும் பொருந்தும்,

Page 51
- 84 -
தேசத்தோ டொத்துவாழ் நீ வாழ்கின்ற தேச மக்களின் வழமைகளை அநுசரித்து வாழ்வாயாக, "ஊரோடுகில் ஒத்தோடு" என்பது பழமொழி.
தையல்சொற் கேளேல்
பெண்கள் சொல்லும் அறிவுரைகளுக்குச் செவி சாயாதே
தொன்மை மறவேல் பழைமையான நட்பினை என்றும் மறக்காதே. பழைய மரபுகளை மறந்தொழுகாதே எனலுமாம்.
தோற்பன தொடரேல்
உனக்குத் தோல்வி பயப்பனவாகிய செயல்களைத் தொடர்ந்து நிகழ்த்தாதே.
நன்மை கடைப்பிடி நன்மையானவற்றைப் பின்பற்றி ஒழுகு.
நாடொப்பன செய்
நாட்டுமக்கள் சரியென ஒப்புக்கொள்ளும் பழக்க வழக்கங்களைக் கடைப்பிடி:
நிலையிற் பிரியேல்
எச் சூழலிலும் உனது உயர்ந்த நிலையிலிருந்து நீ நீங்காதே.
நீர்விளை யாடேல் ஆழமான நீர் நிலைகளில் நீந்தி விளையாடாதே;

நுண்மை நுகரேல் நோய் பயப்பனவாகிய சிற்றுணவுகளை நீ உண்ணுதே
நூல்பல கல்
பல துறைகளிலும் அறிவைத்தரும் பல வகை நூற் களையும் கற்பாயாக
நெற்பயிர் விளை
உணவை உதவும் நெற்பயிரின விளைவிப் பா ய் "உண்டி முதற்றே உணவின் பிண்டம்" என்பது புற கானுர் று.
நேர்பட ஒழுகு
நடுவு நிலையினின்றும் தவழுது நேரிய வழியைக் கடைப்பிடித்து நட.
நைவினை நணுகேல்
வருத்தத்தையும், இழைப்பையும் அளிக்கும் செயல் களை அணுகாமல் நடந்திடு.
நொய்ய உரையேல் அற்பத்தனமான சொற்களைக் கூருதே.
நோய்க்கிடங் கொடேல்
தேகாரோக்கியத்தைப் பேணி வியாதிகளுக்கு இடங் கொடாது நடந்து கொள்.
பழிப்பன பகரேல்
பிறரால் பழிக்கத்தக்க வார்த்தைகளை உரையாதே;

Page 52
- 86 -
பாம்பொடு பழகேல்
பாம்பைப் போன்ற தீயவர்களோடு சேராதே.
பிழைபடச் சொல்லேல்
பிழைபடும் சொற்களைப் பேசாதே.
பீடு பெறநில்
பெருமையைப் பெறத்தக்கவாறு, நிலே தளராது நடந்துகொள்.
புகழ்ந்தாரைப் போற்றிவாழ்
உன் சிறப்பறிந்து உளமாரப் புகழ்ந்து உன்னே நாடி வந்தோரைக் காப்பாற்றி வாழ்க.
பூமி திருத்தியுண்
சோம்பவின்றி நிலத்தைத் திருத்திப் பாடுபட்டு முயன்று உழவு செய்து உண்பாயாக.
இலமென்று அசைஇ இருப்பாரைக் காணில் நிலமென்னும் நல்லாள் நகும்.
என்பது திருக்குறள்:
பெரியோரைத் துணைக்கொள்
உன்னிலும் பெரியோரைத் துஃணக்கொண்டு வாழ்
பேதமை அகற்று
(கல்வியின் துணையாலும், கேள்வியின் துணேயாலும்) கன்னப் பற்றியுள்ள மூடத்தனத்தை அகற்றிக்கொள், !
 
 
 
 

- 87 -
பையலோ டிணங்கேல் சிறிய இனத்தானேடு நட்புக் கொண்டொழுகாதே.
பொருள்தனைப் போற்றிவாழ்
உனது உடைமையாயுள்ள பொருள்களேப் பேணிப் பாதுகாத்து வாழ்வாயாக!
போர்த்தொழில் புரியேல் பிறருடன் சண்டைபிடிக்கும் செயவினைச் செய்யாதே.
மனந்தடு மாறேல்
எத்தகைய இடையூறுகள் உன்னே அடுத்து வந்தா லும் மனந்தடுமாறுதலே அடையாதே
மாற்ருனுக் கிடங்கொடேல்
பகைவனுக்கு இடமளிக்கக் கூடிய செயல்களைச் செய் யாதே. அது தற்கொலைக்குச் சமமாகும்.
மிகைபடச் சொல்லேல்
அளவுக்கதிகமான சொற்களேப் பேசாதே. (அவ் வாறு பேசுஞ் சொற்கள் உன்மதிப்பை அழிப்பதோடு ஆபத்தையும் உண்டாக்கும். )
மீதூண் விரும்பேல் அளவுக்கதிமான உணவை நீ விரும்பாதே,
முனைமுகத்து நில்லேல்
சண்டை நடக்கின்ற இடத்தில் முன்னணியிற்போய் நில்லாதே.

Page 53
- 88 -
மூர்க்கரோ டிணங்கேல்
முரடரோடு நட்புக் கொள்ளாதே, "மூர்க்கரும் முர டருங் கொண்டது விடா" ஆதலின்.
மெல்லினில்லாள் தோள்சேர் மென்மைத் தன்மை பொருந்திய உன் மனைவியோடு அன்பாய்ச் சேர்ந்து வாழ்வாய்.
மேன்மக்கள் சொற்கேள் பண்பு, அறிவால் உயர்ந்த சான்ருேரின் சொற்களைக் கேட்டு நட.
மொழிவ தறமொழி
சொல்ல வேண்டியதைக் கேட்போர் ஐயமூருதபடி விளக்கிக்கூறு.
கேட்பார்ப் பிணிக்குந் தகையவாய்க் கேளாரும் வேட்ப மொழிவதாஞ் சொல்.
என்பார் வள்ளுவரும் மோகத்தை முனி கொள்வதற்குரிய தல்லாததான கீழான ஆசையை நீ வெறுத்து நீக்கு.
வல்லமை பேசேல்
உனது சொந்த வன்மையை எடுத்துப் பேசாதே.
வாதுமுற் கூறேல் குதர்க்கமான சொற்களேப் பெரியோர்க்கு முன்னே கூறற்க,
 
 
 

- {80 سم
வித்தை விரும்பு
கல்வியை நீ மனவிருப்பத்தோடு கற்பாயாக.
வீடுபெற நில்
மோட்சத்தை அடைதற்குரிய ஞான வழியிலே தளர்ச்சியின்றி நிற்பா பாசு.
உத்தமனுயிரு
யாவர்க்கும் நல்லணுய் இருப்பாய்.
ஊருடன் கூடிவாழ்
நீ வாழும் ஊர் மக்களோடு ஒற்றுமையாக வாழ் வாய்.
வெட்டெனப் பேசேல்
கத்தியின் வெட்டைப்போலக் கூர்மையும், கொடு மையும் நிறைந்த வார்த்தைகளேப் பேசாதே. (பிறர் மனம் புண்படும் வார்த்தைகளேப் பேசாதே.)
வேண்டி வினைசெயேல்
பிறர் கருமத்தைக் கருதாது தன் கருமத்தை மாத் திரம் கருதித் தன்னலத்தோடு செயல்புரியாதே.
வைகறைத் துயிலெழு
அதிகாஃப் பொழுதில் நித்திரை விட்டெழு,
ஒன்ஞரைத் தேறல்
உன் பகைவரை உனக்கு இனியார் என்று கொண்டு
நடவாதே அ-12

Page 54
-90 -
ஒரம் சொல்லேல்
நீ, வேண்டியவராயினும் வேண்டாதவராயினும் பார பட்சமின்றி நியாயத்தையே எடுத்துரை, அ வ்வாறு கூருது மன்ருேரம் போனவர் வீடு இந் நிலையைத்தான் அடையும்.
வேதாளஞ் சேருமே வெள்ளெருக்குப் பூக்குமே பாதாள மூலி படருமே - மூதேவி சென்றங் குறைவாளே சேடன், குடிபுகுமே மன்ருேரஞ் சொன்னுர் மனை.
ஒளவையார் பற்றிய ஒரு குறிப்பு
இந்நூலின் ஆரம்ப பகுதியில் " நாடா கொன்ருே " எனத் தொடங்கும் புறநானூற்றுப் பாடல், ஒளவை யாராலே பாடப்பட்டது எனக் குறிப்பிட்டுள்ளமையை நினைவிற் கொள்ளுங்கள். ஆத்திசூடியையும் ஒரு தடவை படியுங்கள். இவ்விரண்டினதும் மொழிநடை, அமைப்பு என்பவற்றில் பெரும் வேறுபாடு உள்ளது. இதற்குக் காரணம் யாது ?
ஒளவையார் புறநானுாற்றில் வேறு சில பாடல்களை யும் பாடியிருக்கின்றர். அவற்றுட்
சிறிய கட் பெறினே எமக்கீயு மன்னே
எனத் தொடங்கும் பாடலும் ஒன்று. அதியமான் சிறிது கள் கிடைப்பின் அதனைப் புலவர், பாணர் போன்

- 91 -
முர்க்கு ஈவான் என்றும், பெருங்கள் பெறின் தானும் அருந்திப் புலவர்க்கும் அருத்தி, அவர்கள் பாடக் கேட்டு மகிழ்வான் என்றும் அப்பாடல் சொல்லிச் செல்வதாய் அமைந்து கிடக்கின்றது.
* பொல்லாங் கென்பவை எல்லாந் தவிர் " என்று அறமூரைத்த ஒளவையார் இவ்வாறு பாடியிருப்பாரா என்பது சிந்தனைக்குரியது.
அன்றியும், சங்ககாலத்திற்குப் பின் தோன்றிய தேவார திருவாசகங்கள் பற்றிய குறிப்புக்களும், ஒளவை யாரின் நீதி நூல்களில், வருகின்றன.
"தேவர் குறளுந் திருநான் மறைமுடிவும்
மூவர் தமிழும் முனிமொழியுங் - கோவை திருவா சகமும் திருமூலர் சொல்லும் ஒருவா சகமென் றுணர்'
நல்வழி 38
எனப் பாடும் ஒளவையார் சங்க காலத்திற்கு எத் தனையோ நூற்றண்டுகள் பிந்தி வாழ்ந்தவர் என்பதுறுதி.
நீதி நூல்களில் மாத்திரமன்றித் தனிப்பாடற் றிரட் டுக்களிலும் ஒளவையார் யாத்தவை எனச் சில பாடல் கள் குறிக்கப்படுகின்றன. அப்பாடல்கள் கம்பர் புகழேந்தி, ஒட்டக்கூத்தர் முதலாம் பெரும் புலவர்க ளோடு ஒளவையாரைத் தொடர்புபடுத்தும் சான்றுக ளாகின்றன.
இவற்றிலிருந்து ஒளவையார் என்ற பெண்பாற் புல வர் ஒருவரல்லர், பலர் என்ற முடிவே ஏற்கத்தத் கதா யிருக்கின்றது.
ஒளவையார் என்ற சொல்லிற்கு மூதாட்டி, தாய் என்னும் பொருள்கள் தமிழிலே வழங்கி வந்துள்ளன: அவ்வாருயின் ஒளவையார், எனும் பெயர் புலவரின்

Page 55
- 92 -
இயற்பெயரன்று என்றுகின்றது. வயது, கல்வி, பண்பு என்பவற்ருல் முதிர்ந்த பெண்பாற் புலவர்களின் பெயர் கள் தெரியப்படாத விடத்து அவர்கள் "ஒளவையார்" என்னும் காரணப் பெயரால் வழங்கப்பட்டவராதல் வேண்டும். இதுவே தமிழிலக்கிய வரலாற்ருசிரியர் களின் முடிவுமாகும்.
அஃது எவ்வாருயினுமாகுக. ஒளவையார் என்னும் பெயரோடு வாழ்ந்த பெண்பாற் புலவர்கள் யாவரும் சிறந்த கவிஞர்களாய் மாத்திரமின்றி, உயர்ந்த அற நெறியாளராயும் விளங்கியுள்ளனர். அவருள்ளும், நீதி நூல்களே யாத்த ஒளவைப் பிராட்டியார் எமது வணக் கத்திற்கும். நன்றிக்கும் என்றென்றும் உரியர்.
அவர்யாத்த ஆத்திசூடியை மாத்திரமன்றி.
கொன்றைவேந்தன், வாக்குண்டாம், நல்வழி முதலாம் நூல்களையும், அவற்றிற்கு யான் எழுதிய கருத் துரையையும், தமிழ் மக்கள் முன்பு சமர்ப்பித்து, அவரது
அறநெறியை நினைவுகூர வைப்பதில் மிகவும் மகிழ்ச்சி படைகின்றேன்.
சொக்கன் "
 
 
 
 
 
 
 
 
 
 

கொன்றை வேந்தன்
காப்பு கொன்றை வேந்தன் செல்வ னடியினை என்று மேத்தித் தொழுவோம் யாமே.
கொன்றைப்பூ மாலே அணிந்த சிவபெருமானின் திருப்புதல்வனுகிய விநாயகப் பெருமானுடைய திருவடி க3ள நாம் என்றும் துதிசெய்து வணங்குவோம்.
அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம்
நாம் முதன்முதலில் அறிந்து கொள்ளும் கடவுளர் தாயுந் தந்தையுமே.
ஆலயந் தொழுவது சாலவும் நன்று
கோயிலிற் சென்று கடவுளே வணங்குதல் மிகவும் நன்று.
இல்லற மல்லது நல்லற மன்று
இல்லாளாகிய மனேவியோடு சேர்ந்து நடத்தும் அற வாழ்வைவிடச் சிறந்த அறம் வேறில்லே. அல்லது என்பதைத் துறவெனக்கொண்டு அதிலும் இல்லறம் சிறந்தது எனவும் பொருளுரைக்கலாம்.
ஈயார் தேட்டைத் தியார் கொள்வர்
பிறர்க்குத் தானம் கொடாது வாழ்வோர் தேடி வைத்த செல்வப் பொருளேத் துட்டர்கள் கவர்ந்து கொள்வர்.

Page 56
உண்டி சுருக்குதல் பெண்டிர்க் கழகு
அளவுக்கதிகமின்றி மிதமாக உணவு உண்ணல் மெல் வியலாராகிய பெண்களுக்கு அழகைத் தரும்,
ஊருடன் பகைக்கின் வேருடன் கெடும்
தான் வாழும் ஊர் மக்கஃாப் பகைத்துக் கொள்ப வரின் வம்சம் பூண்டோடு அழியும்,
என்னுமெழுத்துங் கண்ணெனத் தகும்
கணிதமும் மொழியறிவும் மாந்தர்க்கு இரு கண்கள் ான்த்தக்கவை.
ஏவா மக்கள் மூவா மருந்து "ஒரு செயலேச் செய்க" என்று ஏவப்படமா தாமே உணர்ந்து குறிப்பறிந்து செய்யும் புதல்வர் மூப் பினின்று காக்கும் அமிர்தத்தை ஒப்பர்.
ஐயம் புகினுங் செய்வன செய்
பிச்சை எடுக்க நேரினும் செய்யவேண்டி அறங்களை யும், கருமங்களையும் செவ்வனே செய்துவா.
ஒருவனைப் பற்றி யோரகத்திரு ஒருவனையே உன்துணைவனுய்க் கொண்டு ஒரு மனே யிலே வாழ்வாயாக. இறைவ&ன நெஞ்சில் இருத்தி எந் நாளும் வழிபாடியற்று எனினுமாம்.
ஒதவி னன்றே வேதியர்க் கொழுக்கம்
வேதத்தை நாள் தோறும் பாராயணம் செய்வதி அலும் பார்ப்பனர்க்கு ஒழுக்கமே உயர்வானது,
 
 
 

- 95 -
ஒளவியம் பேசுத லாக்கத்திற் கழிவு
பொருமைச் சொற்களைப் பேசுதல் ஒருவனின் சொந்த வளர்ச்சிக்கும், செல்வத்திற்கும் அழிவைத் தந்துவிடும்
அஃகமுங் காசுஞ் சிக்கெனத் தேடு
தானியத்தையும் காசையும் பிற்காலத்திற்கென உறுதியுடன் தேடி வைத்திரு.
கற்பெனப் படுவது சொற்றிறம் டாமை
தன் கணவன் சொல்லுக்கு மாறுரையாது நடத்தலே கற்பென்னும் உயரொழுக்கமாகும்.
காவல் தானே பாவையர்க் கழகு
தமது சுற்பைத் தாமே பேணிக் காத்துக் கொள்ளு தல் பெண்களுக்கழகாகும்.
கிட்டா தாயின் வெட்டென மற
நீ இச்சை வைத்த பொருள் கிடைக்கப் பெருதா யின் அதனே உடனேயே மறந்துவிடு.
கீழோர் ஆயினுந் தாழ வரை
உன்னிலும் கீழானவரிடத்தும் அடக்கமான வார்த் தைகளேப் பேசு.
குற்றம் பார்க்கிற் சுற்றமில்லை
ஒருவரிடத்துள்ள குற்றத்தையே துருவி ஆராய்ந்து கொண்டிருந்தால் அவரின் உறவினை இழத்தல் நேரிடும்:

Page 57
-- 96 -
கூரம்பாயினும் வீரியம் பேசேல்
கூரிய அம்பை உடையவனுயினும் செறுகளத்திலே தற்புகழ்ச்சி பேசல் கூடாது. உயர்ந்த விவேகியா னும் தன்ஃனத் தானே புசுழல் தக்கதன்று.
கெடுவது செய்யின் விடுவது கருமம் ஒருவனுலே கெடுதி நிகழுமாயின் அவனுேடு உனக் உள்ள தொடர்பை விடுவதே நற்செயல்,
கேட்டில் உறுதி கூட்டுமுடைமை நட்டம் விளைந்த காலத்திலும் மன உறுதி பெற்றி ருத்தல் செல்வத்தை மேலும் ஒருவனுக்குச் சேர்த்திடும். கைப்பொருள் தன்னின் மெய்ப்பொருள் கல்வி
கையிலே உள்ள செல்வத்திலும் உண்மையான நற் செல்வம் கல்வியேயாம்.
கொற்றவ னறித லுற்றிடத் துதவி அரசன் தன்னே அறியுமாறு புகழ்பெற வாழ்தல், ஆபத்தோ, நீமையோ நேருங் காலத்தில் பேருதவியா கும்.
கோட்செவிக் குறளை காற்றுட னெருப்பு கோளினே விரும்பிக் கேட்பவனுடைய காதில் விழு
கின்ற கோட்சொற்கள் காற்ருேடு சேர்ந்த நெருப்பிற் குச் சமமாகும்.
கெளவை சொல்லி னெவ்வருக்கும் பகை
ஒருவன் பழிப்புரைகளேச் சொல்வதினுல் எல்லார்க் கும் பகைவணுவான்,
 
 
 
 
 
 

- 97 -
சான்றே ரென்கை ஈன்ருேட் கழகு
"உன் மக்கள் அறிஞர்" என மேன்மக்களாற் சொல் லப்படுதல் தாய்க்குச் சிறப்பை உண்டாக்கும்:
சிவத்தைப் பேணிற் றவத்திற் கழகு
சிவனே வழிபடலே தவ முயற்சிக்குச் சிறப்பாகும்;
சீரைத் தேடி னேரைத் தேடு
சிறப்பை விரும்புவாயானுல் கலப்பையைத் தேடி உழவுத் தொழிலே மேற்கொள்.
சுற்றத்திற் கழகு சூழ விருத்தல்
உறவினர்க்கு அழகாவது ஒற்றுமையாக ஒரிடத்தில் சூழ்ந்து உறவாடி வாழ்தல்.
சூதும் வாதும் வேதனை செய்யும்
சூதாடுதலும் தர்க்கித்தலும் (குதர்க்கம் பேசலும்)
எந்நாளும் துன்பத்தையே விளேவிக்கும்.
செய்தவ மறந்தால் கைதவ மாளும்
ஒருவன் தான் செய்தற்குரிய தவத்தை மறப்பாணு
யின் துன்பம் அவனே ஆண்டு கொள்ளும்.
சேமம் புகினும் யாமத் துறங்கு
காவல் புரியும் தொழில் மேற்கொண்ட காலத்தி
ஆலும் நடு யாமத்திலாவது நீ சற்று உறங்குவாயாக.
இல்லையேல் உன் உடல் நலம் கெட்டுக் கடமையிலுத் தவறிவிடுவாய்,
அ-13

Page 58
- 98 -
சையொத் திருந்தா லைய மிட்டுண் பொருள் வருவாய் வாய்ப்பாக இருக்கும் காலத்தில்
தருமம் கொடுத்து நீயும் உண்,
சொக்க ரென்பவ ரத்தம் பெறுவர்
செல்வர் எனப்படுவோர் அறம், பொருளாகிய இரு அர்த்தங்களையும் (செல்வங்களேயும்) பெற்ருேராவர்:
சோம்ப ரென்பவர் தேம்பித் திரிவர்
சோம்பஃல உடையோர் வறுமையால் வருந்தி அலேந்து திரிவர்.
தந்தை சொன்மிக்க மந்திர மில்லை
பெற்ற தகப்பனின் சொற்களிலும் (புத்திமதிகளி ஆலும்) உயர்ந்த மந்திரோபதேசம் வேறில்&ல.
தாயிற் சிறந்தொரு கோயிலு மில்லை
பெற்ற தாயிலும் பார்க்க வணங்குதற்குரிய வேறு கோயிலும் ஒன்று இல்ஃ.
திரைகட லோடியுந் திரவியந் தேடு
அலே பொருந்திய கடல்களிலே கப்பலோட்டிப் பெரும் பொருள் தேடுவாயாக.
தீராக் கோபம் போராய் முடியும்
நீங்காத கோபமானது இறுதியிலே போ சி லுே கொண்டு சென்றுவிடும் (அது அழிவையே தரும்)
 
 
 

- 99 -
தெய்வம் சீறிற் கைதவ மாளும்
தெய்வம் ஒருவனேக் கோபிக்குமானுல் அவனுக்குக் கைகூடிய தவமும் அழிந்துபோம்.
தேடா தழிக்கிற் பாடா முடியும்
பொருளேத் தேடாமல் கைப்பொருளேச் செலவு செய்தால் அது பெருந் துன்பமாய் முடிந்துபோம்.
தையும் மாசியும் வையகத் துறங்கு
தை மாசி மாதங்களிலே குளிரைப்போக்க வைக் கோலால் வேய்ந்த மனேயில் நித்திரை செய்.
தொழுதூண் சுவையி னுழுது ணரினிது
பிறரை வணங்கிப் பொருள் பெற்று உண்டு வாழ் வதினும், உழவுத் தொழிலால் கிடைக்கும் உணவே இனியது.
தோழனுேடு மேழைமை பேசேல்
சிநேகிதனிடத்திலும் உனது வறுமை நிஃபயினே எடுத் துப் பேசாதே.
நல்லிணக்க மல்ல தல்லற் படுத்தும்
நல்லவரல்லாதாருடன் நட்புக் கொள்ளல் பெருந் துன்பத்திற்குக் காலாகும்.
நாடெங்கும் வாழக் கேடொன்று மில்லை
நாடு முழுவதும் வாழுமாயிகிச###டு,ே எவ்வித கேடும் விண்யாது. (மக்களிடையே உயர்வு, தாழ்வு
疊
கூடாது. அதுவே கேட்டிற்கு வித்து) * rap- ы 4
I, 53E f)
* ثم، في مقق
நநிர்ர் சங்க

Page 59
- 1 OO -
நிற்கக் கற்றல் சொற்றிறம் பாமை
சொன்ன சுொல் மாருது இருத்தலே கற்ற கல்வி யின் வழி ஒழுகுவோனுக்கு அடையாளமாகும்.
நீரகம் பொருந்திய வூரகத் திரு
நீர்நில்கள், ஊற்றுக்கள் பொருந்தியுள்ள ஊரின் கண்ணே வாழ்க.
நுண்ணிய கருமமு மெண்ணித் துணி
சிறியதொரு செயலேயும் நன்கு ஆராய்ந்தே முடிவு
செய்.
நூன்முறை தெரிந்து சீலத் தொழுகு
அறநூல்களே நன்கு கற்றுத் தெரிந்து கொண்டு ஒழுக்க நெறியின்கண் நிற்பாயாக
நெஞ்சை யொளித்தொரு வஞ்சக மில்லை
உனது நெஞ்சிற்கு ஒளித்து வைக்கத்தக்க வஞ்சகச்
செயல் எதுவுமில்லே. ஆதலின், உன் மனச் சான்று வழி
5 TIL TAF; .
நேரா நோன்பு சீரா காது
மனத்திற்கு ஒவ்வாத தவமுயற்சி சிறப்புப் பெருது
நைபவ ரெனினு நொய்ய வுரையேல்
எதிர்ப்பைக் காட்டுந் துணிவின்றி வருந்துவோரா
யினும் அவர் உள்ளம் துன்பப்படும் சொற்களைப் பேசாதே
 

H 101 -
நொய்யவ ரென்பவர் மெய்ய வராவர்
உருவத்தில் மெலிந்தார், சிறியராயிருப்பினும் மற் றவரால் விரும்பத்தக்க குணமுடையோராயிருப்பர்.
நோன்பென் பதுவே கொன்றுதின் ஞமை
உண்மையான விரதம் என்பது ஒரு யி  ைர யு ம் கொன்று அதன் ஊனே உண்ணுமையே.
பண்ணிய பயிரிற் புண்ணியந் தெரியும் ஒருவன் அநுபவிக்கும் நன்மைகளிலிருந்து அவனது
புண்ணியத்தின் அளவு தெரியும், முயற்சியின் அளவு பயிர்விஃளவிலே தெரிவது போன்றதாகும் இது.
பாலோ டாயினுங் கால மறிந்துண்
பால் கலந்த உணவேயாயினும் உண்ண வேண்டிய காலத்தையறிந்து உண்பாயாக.
பிறன்மண் புகாமை யறமெனத் தகும்
பிறனது மனேவியை இச்சிக்காமையே உயர்ந்த அற மெனச் சொல்லத் தக்கது.
பீரம் பேணி பாரம் தாங்கும்
தாய்ப்பாலினே விரும்பி உண்டு வளர்ந்தவன் எந் தப் பெரிய சுமையையும் சுமக்கும் வன்மை உடையவ ணுவான்.
புலையுங் கொலையுங் களவுந் தவிர்
புலாலுண்ணலேயும், உயிர்க்கொலேயையும், களவு செய்தலேயும் நீக்குவாயாக.

Page 60
- 102 -
பூரியர்க் கில்லை சீரிய வொழுக்கம் இழிந்தவர்க்கு உயர் ஒழுக்க நெறிகள் இல்லை;
பெற்ருேர்க் கில்லைச் சுற்றமுஞ் சினமும்
ஞான நிலேயைப் பெற்ற ஞானிகளுக்கு இவர் தம் சுற்றம் என்பதும், சினம் முதலாய இழி குணங்களும் இல்லே,
பையச் சென்ருல் வையந் தாங்கும்
மெல்ல மெல்ல நல்வழியிலே ஒருவன் நடப்பாளுகில் உலகிலுள்ள நல்லோர் அவனே மதிப்பர்.
பொல்லாங் கென்பவை யெல்லாந் தவிர்
நீங்கு என்று சொல்லப்படும் எல்லா இழி குணங்க ளேயும் தவிர்த்துவிடு.
போனக மென்பது தானுழந் துண்டல்
உண்மையான உணவு என்பது தானே வரு நீ தி உழைத்து உண்பதேயாகும்.
மருந்தே யாயினும் விருந்தோ டுண்
நீ உண்பது மருந்தாக இருதாலும் அதனை விருந்தி னர்க்குப் பகுத்தளித்து உண்க.
மாரி யல்லது காரிய மில்லை
மழையில்லாமல் எவ்வித செயல்களும் இவ்வுலகில் இல்ஃy,
 
 
 
 

- 103 -
மின்னுக் கெல்லாம் பின்னுக்கு மழை
மின்னல் மின்னப் பின்னர் மழை பெய்யும் அது போல ஒருவன் முயற்சியில் தலைப்படச் செல்வம் உண்
டாகும்.
மீகாமன் இல்லா மரக்கல மோடாது
கப்பற்றலேவன் இல்லாத கப்பல் ஓடுதலைச் செய் யாது. (தஃலவன் இல்லாத சமூகம் முன்னேருது)
முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும்
ஒருவனுக்கு முன்னர்த் தீங்கு செய்தால் அதன் பய ணுய் வரும் துன்பங்கள் மறுபிறப்பிலும் உண்டாகும்.
மூத்தோர் சொன்ன வார்த்தை யமிர்தம் '
அறிவாலும், வயதாலும் முதிர்ந்தோர் கூறும் அற
வுரைகள் உண்டாரை நெடிது காலம் வாழ்விக்கும் அமிர் தம் போன்றவை .
மெத்தையிற் படுத்தல் நித்திரைக் கழகு
சுகமான நித்திரை செய்யவேண்டுமானுல் மெத்தை யிலே படுத்துறங்குக.
மேழிச் செல்வங் கோழை படாது
கலப்பையால் உழுது பெறப்படும் தானியச் செல் வம் என்றும் குறைவுபடாது.
மொழிவது மறுக்கி னழிவது கருமம்
அநுபவம், ஆற்றல் அறிவால் முதிர்ந்தோர் கூறும் மொழிகளே மறுத்தால் அழிவே பயணுகும்.

Page 61
- 104 -
மோன மென்பது ஞான வரம்பு மென்னமே ஞானமார்க்கத்திற்கு எல்லேயாகும்.
வளவ குயினும் அளவறிந் தழித்துண்
சோழ மன்னன் போன்ற பெருஞ் செல்வனுயினும்
நீ அளவு அறிந்து செலவு செய்து அநுபவி
வானஞ் சுருங்கிற் ருனஞ் சுருங்கும் மழைவளங் குறை யுமானுல் தானம் முதலான நல் லறங்கள் சுருங்கிவிடும்.
விருந்திலோர்க் கில்லை பொருந்திய வொழுக்கம்
விருந்தினரைப் பேணி ஒழுகாதார்க்குச் சிறந்த இல் வாழ்க்கை நெறி இல்லே.
வீரன் கேண்மை கூரம் பாகும்
வீரன் ஒருவனே நட்பாய்ப் பெறுதல் தனது கையில்
கூரிய அம்பினே வைத்திருத்தலேப் போன்றது.
உரவோ ரென்கை யிரவா திருத்தல்
மனவலிமை உடையவர் என்பது இரவாமல் இருக் கும் பண்பேயாகும்.
ஊக்க முடைமை ஆக்கத்திற் கழகு
செய்யுங் கருமத்திலே தளராத ஊக்கமுடைமையே செல்வத்திற்கு அழகாகும்.

- 105 -
வெள்ளைக் கில்லை கள்ளச் சிந்தை
பரிசுத்தமான கள்ளமறு சிந்தை உடையானுக்கு நினேவிலே கள்ளம் புகாது.
வேந்தன் சீறி ஞந்துணை யில்லை
அரசன் வெகுண்டு சீறுவாணுணுல் குடிமகனுக்குத் துண் எவரும் இல்லாது போய்விடுவர்.
வையந் தோறும் தெய்வந் தொழு
பூமியிலுள்ள பல தலங்களுக்கும் சென்று இறைவன் வணங்குக.
ஒத்த விடத்து நித்திரை கொள்
மேடு பள்ளமற்ற சமதரையிலே நித்திரை செய்வா யாக
ஒதாதார்க் கில்லை யுணர்வோ டொழுக்கம்
அறிவு நூல்களேக் கல்லாதவர்க்கு நல்லுணர்வும் நல் லொழுக்கமும் இல்லேயாகும் .

Page 62
வாக்குண்டாம்
காப்பு
வாக்குண்டா நல்ல மனமுண்டா மாமலராள் நோக்குண்டா மேனி நுடங்காது - பூக்கொண்டு துப்பார் திருமேனித் தும்பிக்கை யான்பாதம் தப்பாமற் சார்வார் தமக்கு.
பவளம் போலுஞ் சிவந்த திருவுருவுடையவரும், தும்பிக்கையருமாகிய விநாயகக் கடவுளின் திருவடி களைத் தவருது வழிபடுபவர்களுக்கு நல்ல சொல்வன்மை ஏற்படும் நல்லெண்ணங்கள் தோன்றும், அவர்களின் உடல்கள் என்றும் வாடுதலையடையா.
நன்றிக்கு நாள் இல்லை நன்றி யொருவற்குச் செய்தக்கா லந்நன்றி என்று தருங்கொல் எனவேண்டா - நின்று
தளரா வளர்தெங்கு தாளுண்ட நீரைத் தலையாலே தான்தருத லால்.
சோர்வின்றி நிலையாய் வளர்கின்ற தென்னையானது தன் வேர்கள் உண்ட நீரினை ஒரு காலத்திலே தனது தலையிற் சுமந்து இளநீராய் மக்களுக்குத் தருகின்றது. அதுபோல, ஒருவருக்கு நாம் செய்யும் நன்றியின் பயன் எப்போது கிட்டும் என்று ஐயுற வேண்டியதில்லை, என்ருே ஒருநாள் அது நம்மை வந்தடையும்,
நீர்மேல் எழுத்தும் கல்லில் எழுத்தும்
நல்லார் ஒருவர்க்குச் செய்த உபகாரங் கல்லில் எழுத்துப் போற் காணுமே - அல்லாத ஈரமிலா நெஞ்சத்தார்க் கீந்த உபகாரம் நீர்மேல் எழுத்துக்கு நேர்.

- 107 -
நல்லவரான ஒருவருக்கு நாம் செய்த உதவி, அவர் நெஞ்சத்திலே கல்லின் மீது பொறிக்கப்பட்ட எழுத்தாக நின்று நிலவும். நல்லவரல்லாத கொடியவருக்கு நாம் செய்கின்ற உபகாரம் நீரில் எழுதிய எழுத்தாக அவ ரால் உடன் மறக்கப்பட்டுவிடும்.
இளமையில் வறுமை இன்னலுக்கு ஏது
இன்னு இளமை வறுமைவந் தெய்தியக்கால் இன்னு அளவி லினியவும் - இன்னுத நாளில்லா நாள்பூத்த நன்மலரும் போலுமே ஆளில்லா மங்கைக் கழகு.
பருவமல்லாத பருவத்திலே மலர்ந்த நல்ல மலரைப் போலவும், கணவனில்லாத பெண்ணிற்கு அழகைப் போலவும், முறையே இளமைக் காலத்து வறுமையும், முதிய காலத்தின்பப் பொருள்களும் துன்பத்தையே
65Cj5 LD.
மேன்மக்கள் என்றும் மேன்மக்களே
அட்டாலும் பால்சுவையிற் குன்ரு தளவளாய் நட்டாலும் நண்பல்லார் நண்பல்லர் கெட்டாலும் மேன்மக்கள் மேன்மக்க ளேசங்கு சுட்டாலும் வெண்மை தரும்.
நன்கு காய்ச்சினும் பால் சுவையிலே குறையாது. அது போல நன்கு கலந்துறவாடிப் பழகினலும் நட்பிற் குரியரல்லாதார் நண்பராக மாட்டார். சங்கை எத் துணைச் சுட்டாலும் அதன் வெண்மை மாருது. அது போல உயர்குடி மக்கள் வறியவரான காலத்தும் தம் நிலையினின்றும் இறங்கமாட்டார்.

Page 63
- 108 -
ஆங்காலமே எவையும் ஆகும்
அடுத்து முயன்ருலும் ஆகுநா பிளன்றி எடுத்த கருமங்கள் ஆகா - தொடுத்த உருவத்தால் நீண்ட உயர்மரங்க ளெல்லாம் பருவத்தால் அன்றிப் பழா.
வடிவத்தால் உயர்ந்து வளர்ந்த மரங்களும் தமக் குரிய பருவ காலத்திலன்றிக் கணிகளேத் தரமாட்டா. இது போலவே எவ்வளவு முயன்று லும் அவை நிறை வேறுங் காலத்தன்றி எக் கருமங்களும் நிறைவேரு.
மானம் நீங்கின் வாழா மாந்தர்
உற்ற இடத்தி லுயிர்வழங்குந் தன்மையோர் பற்றலரைக் கண்டால் பணிவரோ? - கற்றுரண் பிளந்திறுவ தல்லாற் பெரும்பாரந் தாங்கின் தளர்ந்து வளையுமோ தான்.
கல்லாலமைந்த தூணுனது பெரிய பாரத் தை ச் சுமக்க நேர்ந்தால் தளர்ச்சியடைந்து வளேந்து கொடாது; பிளந்து முறிந்து வீழும். அதுபோன்று தமக்கு அவ மானம் நேருமானுல் உயிரையே கொடுக்கும் மான வீரர் பகைவரை எதிர்க்க நேர்ந்தால் அவர் க் கு ப் பணிந்து போவார்களோ ? போகார்.
அறிவு, திரு, பண்பு
நீரளவே யாகுமாம் நீராம்பல் தான் பெற்ற நூலளவே யாகுமாம் நுண்ணறிவு - மேலைத் தவத்தளவே யாகுமாந் தான் பெற்ற செல்வம் குலத்தளவே யாகுங் குசராம்,
 
 
 

- 109 -
தண்ணிர் உயரும் அளவிற்கேற்பவே அல்வியும் வள ரும். ஒருவனின் கல்வியின் உயர்வு அவன் கற்கின்ற நூல் களின் அளவிற்கேற்பவே அமையும். ஒருவன் பெறுஞ் செல்வம் அவன் முன்பு செய்த தவத்தின் அளவாகவே அமையும், பிறந்த குலத்திற் கேற்பவே பண்பு விளங் (gյք,
நல்லாரைக் காண்பதும் நன்று
நல்லாரைக் காண்பதுவும் நன்றே, நலமிக்க நல்லார்சொற் கேட்பதுவும் நன்றே - நல்லார் குனங்கள் உரைப்பதுவும் நன்றே அவரோ(டு) இணங்கி இருப்பதுவும் நன்று.
நல்ல குணமுடையாரைக் காண்பதுவும் நல்லது. நன்மை மிகுந்த உத்தமரின் அறிவுரைகளேக் கேட்பதுவும் நல்லது. நல்லவரது குணங்களே உரைப்பதுவும் நல்லது அவரோடு நட்பாகக் கூடி வாழ்வதுவும் நல்லது.
தியரால் என்றும் தீமையே
தீயாரைக் காண்பதுவும் திதே, திருவற்ற தியார்சொற் கேட்பதுவும் திதே - தியார் குணங்கள் உரைப்பதுவுந் தீதே அவரோ(டு) இணங்கி இருப்பதுவுந் தீது,
கொடியவரைக் காண்பதும் தீமை, சிறப்பில்லாத அவர்களின் சொற்களேக் கேட்பதுவும் தீமை, அவர்கள் தம் தீக்குணங்களே எடுத்துப் பேசுவதும் தீமை, அவர்க ளோடு நட்பாய்க் கூடி வாழ்வதும் தீமை.

Page 64
- 11 O -
நல்லாரால் எல்லார்க்கும் நன்மை
நெல்லுக் கிறைத்தநீர் வாய்க்கால் வழியோடிப் புல்லுக்கு மாங்கே பொசியுமாம் - தொல்லுலகில் நல்லார் ஒருவர் உளரேல் அவர்பொருட்(டு) எல்லார்க்கும் பெய்யும் மழை.
நெற்பயிருக்கென இறைக்கப்பட்ட நீரானது வாய்க் காலின் வழியாய் ஓடிப் புல்லுக்கும் உணவாகக் கசிந்து ஊட்டுகிறது. அதுபோன்றே பழைமை வாய்ந்த உலகத் திலே நல்லவர் ஒருவர் வாழ்வாராணுல் அவரால் எல் லார்க்கும் மழை பெய்யும்.
துணைஇன்றேல் செயல்இல்லை பண்டு முஃாப்ப தரிசியே யானுலும் விண்டுமி போனுல் முஃாயாதாம் - கொண்டபேர் ஆற்றல் உடையார்க்கு மாகா தளவின்றி ஏற்ற கருமஞ் செயல்.
நெல் விற்கு முன்பு அரிசியே தோன்றினுலும் உமி நீங்கிய பின்னர் அரிசி முன்னக்காது. பொருந்திய பெருந் திறமை உடையவர்களானுலும் தக்க துணையில்லாமல், எடுத்த கருமத்தை இழைத்திடல் இயலாது.
உருவு கண்டு எள்ளாமை வேண்டும்
மடல்பெரிது தாழை மகிழினிது கந்தம் உடல்சிறிய தென்றிருக்க வேண்டாம் - கடல்பெரிது மண்ணிரு மாகா ததனருகே சிற்றுாறல் உண்ணிரு மாகி விடும்.
 
 
 
 

- 111 -
இதழாற் பெரியது தாழைப்பூ இதழாற் சிறியது மகிழம் பூ. ஆணுல் சுகந்த மனத்தால் மகிழம்பூவே சிறந்தது. ஆதலின் உடலாலே சிறியவர் என்று எவரை பும் கருதல் வேண்டா. கடல் அளவால் எத்துஃணப் பெரிது ஆணுல் அது உண்ணுதற்கேற்ற நீராவதில்லை" அதன் கரையிலே ஊறும் சிறிய ஊற்ருே உண்ணுதற்கு அமைந்த நன்னீராவதை நாம் காண்கின்ருேமன்ருே ?
குறிப்பறியாதவன் நல்ல மரம்!
கவையாகிக் கொம்பாகிக் காட்டகத்தே நிற்கும் அவையல்ல நல்ல மரங்கள் - சபைநடுவே நீட்டோலை வாசியா நின்றன் குறிப்பறிய மாட்டா தவனன் மரம்.
கிளேகளே உடையவும், கொம்பர்களே உடையவுமாகக் காட்டிலே வளர்ந்து நிற்கின்ற பெரு மரங்கள் மரங்க எல்ல. சபையின் நடுவிலே கற்றறிந்தார் கொடுக்கும் ஒ3லயை வாசிக்க இயலாதவனும், அவற்றின் குறிப்புப் பொருளிஜன உணர மாட்டாதவனுமான மூடனே நல்ல LDTLDITIT పT -
மயிலும் வான்கோழியும்
கான மயிலாடக் கண்டிருந்த வாள்கோழி தானு மதுவாகப் பாவித்துத் - தானுந்தன் பொல்லாச் சிறகைவிரித் தாடினுற் போலுமே கல்லாதான் கற்ற கவி.
கல்வியறிவில்லாத ஒருவன் பாடிய கவிதை, காட் டிலே அழகிய மயில் ஆடுவதைப் பார்த்துத் தன்னேயும் அதுவாகவே கருதி வான்கோழி, தனது இழிந்த சிறகை விரித்து ஆடிய ஆடல் போன்றதாகும்:

Page 65
H 112 -
புல்லர்க்குச் செய்யும் நல்லவை
ஆங்கதனுக் காகார மானுற்போல் - பாங்கறியாப்
புல்லறி வாளர்க்குச் செய்த உபகாரம் கல்வின் மே விட்ட கரும்
வேங்கை வரிப்புவிநோய் தீர்த்த விடகாரி
கோடுகளோடு சு டிய வேங்கைப் புலியின் நோயைத் தீர்த்த விடவைத்தியன் அவ்விடத்திலேயே அதற்கு இரையானதுபோல, முறைமையை அறியா மூடர்க்குச் செய்கின்ற உதவியும், செய்பவனுக்கு ஆபத்தைத் தந்து கல்வின்மேல் போடப்பட்ட பாத்திரமாகிவிடும்.
அடககததை அவமதியாதீர்
அடக்க முடையா ரறிவிலரென் றெண்ணிக் கடக்கக் கருதவும் வேண்டா - மடைத்தக்Uயில் ஒடுமீன் ஒட உறுமீன் வருமளவும் வாடி யிருக்குமாங் கொக்கு.
அடங்கியிருப்பவரை அறிவில்லாதவர் என்று தினத்து அவர்களே வெல்லுதற்குக் கருதாதீர். நீர்நிறைந்த குளத் தருகே வாடிக் கண்மூடியிருக்கும் கொக்கு, ஒடுகின்ற சிறிய மீன்களைத் தவிர்த்துப் பெரிய மீன்க3 எதிர் நோக்கியிருப்பது போன்றதே அவர்தம் அடக்கம்.
முகனக நட்பும், அகனக நட்பும்
அற்ற குளத்தின் அறுநீர்ப் பறவைபோல் உற்றுமித் திர்வார் உறவல்லர் - அக்குளத்தில் கொட்டியும் ஆம்பலும் நெய்தலும் போலவே ஒட்டி உறவார் உற4பு.
 
 

صة 113 مــد
நீர் வரண்டுபோன குளத்தினே நீங்கிச் செல்கின்ற பறவைகள் போல வறுமை வந்த வேளேயில் நீங்கிச் செல்வோர் உறவினராகார், அதே குளத்தில் படர்ந் திருக்கும் கொட்டிப் பூண்டும், அல்விக் கொடியும் குளம் வரளத் தாமும் வரஸ்வது போலத் துன்பகாலத்தும் துனேநின்று துன்பத்திலே பங்கு பெறுபவரே உண்மை யான உறவிற்கு உரியவர்கள்.
மண் னின்குடமும் பொன்னின்குடமும்
சிரியர் கெட்டாலும் சீரியரே சீரியர்மற் நல்லாதார் கெட்டாவங் கென்னுவர்? - சீரிய பொன்னின் குடமுடைந்தாற் பொன்னுகும் என்னுகும் மண்ணின் குடமுடைந்தக் கால்,
பொன்னுலாகிய குடம் உடைந்தாலும் பொன்னு கவே இருக்கும். மண்ணுலாகிய குடம் உடைந்தால் மண்ணுகிவிடும். உயர்ந்தோர் வறுமைக் காலத்தும் உயர்ந்தோராகவே விளங்குவர். இழிந்தார் வறுமைப் போதிலும் இழிந்தவராகவே இருப்பர்.
அவரவர்க் கமைத்தனவே அமையும்
ஆழ வமுக்கி முகக்கினும் ஆழ்கடல்நீர் நாழி முகவாது நாணுழி - தோழி நிதியுங் கணவனும் நேர்படினும் தந்தம் விதியின் பயனே பயன்.
ஆழ்கடல் நீரிலே அமுக்கி மொண்டாலும் ஒரு கொத்துக் கொள்ளும் அளவன்றி அதனிலும் கூடுத வாய்க் கொள்ளாது. ஒருத்திக்கு வேண்டிய செல்வமும், நாயகனும் தன் மனம் போலக் கிடைக்கப் பெற்றுலும் அவை அவள் செய்த விதியின் அளவாகவே அமைவன
T
15 – إلى

Page 66
- 114 -
உடன்பிறந்தே கொல்லும் வியாதி
உடன்பிறந்தார் சுற்றத்தார் என்றிருக்க வேண்டா உடன்பிறந்தே கொல்லும் வியாதி - உடன்பிறவா மாமலையில் உள்ள மருந்தே பிணிதீர்க்கும் அம்மருந்து போல்வாரும் உண்டு.
தன்னுடன் தோன்றிய வியாதி தன்னைக்கொல்ல, உடன்தோன்ருது எங்கோ தோன்றிய மருந்துச் செடி கள் பிணியைப் போக்கி உதவுவதை நாம் கண்கூடாகக் கண்டிருக்கிருேம். எனவே, எம்முடன் பிறந்த எம் சகோதரர் முதலான உறவினர் தாம் எமக்கு உதவும் சுற்றத்தவர் என்று நாம் கருதுதல் கூடாது. அந்நிய ரும் உதவுதல் உண்டு.
வாழ்க்கைத் துணை
இல்லா ளகத்திருக்க இல்லாத தொன்றில்லை இல்லாளும் இல்லாளே யாமாயின் - இல்லாள்
வலிகிடந்த மாற்ற முரைக்குமேல் அவ்வில் புலிகிடந்த தூறய் விடும்.
உத்தமியான மனைவி வீட்டில் இருந்தால் அங்கு இல் லாத செல்வமே வேறு இல்லை. அவள் மனையிலே இல்லாத போதிலும், இல்லாள் கடுமையான சொற்களைப் பேசும் கொடியவளான சந்தர்ப்பத்திலும் அந்த வீடானது புலி வாழ்கின்ற புதராய் மாறித் துன்பந் தரும்,
ஊழிற் பெருவலி யாஉள?
எழுதியவா றேகாண் இரங்குமட நெஞ்சே கருதியவா ருமோ கருமம் - கருதிப்போய்க் கற்பகத்தைச் சேர்ந்தோர்க்குக் காஞ்சிரங்காய்
ஈந்ததேள் முற்பவத்திற் செய்த வினை.

- 115 -
பெரும்பேறுகளை அடையக் கருதிக் கற்பகதருவை யடைந்தவர்க்கு அத்தெய்வ தருவே விடமாகிய காஞ்சிரங் காயை வழங்குமானல் அது முற்பிறவியிலே செய்த வினை யின் பயனேயன்றி வேறென்ன ? ஆதலால், இரங்கியழு கின்ற மூடநெஞ்சமே! எவையும் பிரமன் எழுதிவைத்த வகையிலேயே நிகழும். நாம் சிந்தித்து முடிவு செய்தது போல் கருமங்கள் நடைபெறுமோ ? நடைபெருது. இதனை அறிந்து கொள்.
குணக்குன்றனையார் கொண்ட வெகுளி
கற்பிளவோ டெரப்பர் கயவர் கடுஞ்சினத்துப் பொற்பிளவோ டொப்பாரும் போல்வாரே -
விற்பிடித்து நீர்கிழிய எய்த வடுப்போல மாறுமே சீரொழுகு சான்றேர் சினம்,
கயவர்கள் சினங்கொண்டால் கல்பிளந்ததைப்போலப் பின் ஒருகாலுங் கூடார். சாதாரணர் வெகுளியின் பின் பொன் பிளந்ததுபோலப் பெருமுயற்சியால் ஒன்று சேர்வர். சான்ருேரோ வில்லிலிருந்து புறப்பட்ட அம்பு நீரைப்பிளக்க அது கணப்பொழுதிலே ஒன்று கூடுவது போலத் தம் சினத்தின் முடிவில் உடனே கூடுவர். அவர் சினம் வாழும் நேரம் மிகச் சிறிது,
கற்ருர் கொள்ளும் நட்பு
நற்ரு மரைக்கயத்தில் நல்லன்னம் சேர்ந்தாற்போல் கற்றரைக் கற்ருரே காமுறுவர் - கற்பிலா மூர்க்கரை மூர்க்கர் முகப்பர், முதுகாட்டில் காக்கை உகக்கும் பிணம்,

Page 67
- 116 -
நல்ல தாமரைக் குளத்திலே அழகிய அன்னப்பட்சி கள் ஒன்று சேர்வதுபோலக் கல் வி யறிவு ைட யார் தம்மைப் போன்ற கல்வியாளரின் நட்பையே பெரிதும் விரும்புவர். கல்வியறிவற்ற மூடரோ மூடரையே தம் நட்பிற்குரியராய்க் கொள்வர். சுடுகாட்டிலே காகம் உவப்பது பிணத்தையன்ருே ?
வஞ்சனை மறைந்துறையும்
நஞ்சுடைமை தானறிந்து நாகங் கரந்துறையும் அஞ்சாப் புறங்கிடக்கும் நீர்ப்பாம்பு - நெஞ்சிற் கரவுடையார் தம்மைக் கரப்பர், கரவார் கரவிலா நெஞ்சத் தவர்.
நாகபாம்பு தான் நஞ்சை உடையதாயிருத்தலை அறிந்து மறைந்துவாழும். நீர்ப்பாம்போ (தன்னிடம் நஞ்சின்மையால்) அஞ்சாமல் வெளியான இடங்களிலே கிடக்கும். இவை போலவே மனத்தில் வஞ்சகமுடை யவர் தம்மை மறைத்து வாழ்வர். அவ்வாறில்லாதவர் தம் உள்ளத்தை மறைக்காது யாவருடனும் நன்கு வெளிப்பட வாழ்வர்.
கற்றவனுக்குக் காசினியெங்கும் மதிப்பு
மன்னனும் மாசறக் கற்ருேனும் சீர்தூக்கில் மன்னனிற் கற்ருேன் சிறப்புடையன் - மன்னற்குத் தன் தேச மல்லாற் சிறப்பில்லைக் கற்றேற்குச் சென்ற இடமெல்லாஞ் சிறப்பு.
அரசனையும், குற்றங்கள் நீங்கும் வண்ணம் கற் றுயர்ந்த சான்ருேனையும், ஒப்பிட்டுப் பார்க்கையில் அரச னிலும், சான்ருேனே உயர்ந்தவன். அரசனுக்குப் பெய ரும், புகழும், மதிப்புமெல்லாம் தன் நாட்டில் மட்டுமே உண்டு. சான்றவனுக்கோ சென்ற நாட்டிலெல்லாம் சிறப்புக் கிட்டும்.

- 117 -
உயர்விலுந் தாழ்விலும் ஒத்த தன்மையன்
சந்தன மென் குறடு தான்றேய்ந்த காலத்துங் கந்தங் குறைபடா தாதலாற் - றந்தந் தனஞ்சிறிய ராயினுந் தார்வேந்தர் கெட்டால் மனஞ்சிறிய ராவரோ மற்று.
சந்தனக் கட்டையானது தான் தேய்ந்து மெலிந்த காலத்திலும் சுகந்தமணத்தாலே குறைவுபட்டாது. நாடா ளும் அரசரும் தமது செல்வத்தாலே குறைவுறுங் காலத் தும் தம் உள்ளங்களாற் சிறியராகார்; எக்காலத்திலும் அவர்களின் தாராள சிந்தை மாறுபடாமலே விளங்கும்.
செல்வமே சிறப்பிற்கு வித்து
மருவினிய சுற்றமும் வான்பொருளும் நல்ல உருவும் உயர்குலமும் எல்லாம் - திருமடந்தை ஆம்போ தவளோடு மாகும் அவள் பிரிந்து போம்போ தவளோடும் போம்.
கலந்துறவாடுதற்கு இனியதாகிய உறவுமூறைகளும், பெரும் செல்வமும், அழகிய வடிவமும், உயர்ந்த குலப் பெருமையுமாகிய எல்லாம் இலக்குமி வந்து சேரும் போது ஒருவரை வந்தடையும். அவள் விட்டு நீங்குகை யில் எல்லாம் ஒருசேரப் போய்விடும்.
அழிப்பாரையுந் தாங்குவர் ஆன்ருேர்
சாந்தனையுந் தீயனவே செய்திடினுந் தாமவரை ஆந்தனையுங் காப்பர் அறிவுடையோர் - மாந்தர் குறைக்குந் தனையுங் குளிர்நிழலைத் தந்து மறைக்குமாங் கண்டீர் மரம்.

Page 68
- 118 -
மக்கள் மரத்தை வெட்டிக் கீழே வீழ்த்தும் வரையும் மரமானது அவர்களுக்குக் குளிர் நிழலைத்தந்து காக் கிறது. இதைப்போன்றே தாம் இறக்கும்வரையும் தமக் குத் தீமை செய்கின்ற கொடியவரையுந் தம்மாலனவரை அறிஞர்கள் காத்திடுவர்.
ஒளவை நூலின் அருஞ்சிறப்பு
தேக்குண்ட நற்பொருளைத் தேடிக் குவித்திருக்கும் வாக்குண்டாஞ் சீரை வகுத்துரைக்க-நாக்குண்டோ? கெளவைதீ ரிந்நூல் கடலுலகில் எந்நூற்கும் ஒளவையாம் என்றே அறி.

நல்வழி
காப்பு
பாலுந் தெளிதேனும் பாகும் பருப்புமிவை நாலும் கலந்துணக்கு நான்தருவேன்-கோலஞ்செய் துங்கக் கரிமுகத்துத் தூமணியே நீயெனக்குச் சங்கத் தமிழ்மூன்றுந் தா.
அழகுவாய்ந்த பெருமையையுடைய பரிசுத்தமான சிந்தாமணியனைய விநாயகனே ! உனக்குப் பாலு ந், தெளிந்த தேனும், வெல்லப்பாகும், பருப்பும் ஆகிய நான்கையும் கலந்து நான் தருவேன். இவற்றிற்குப் பதிலாக நீ இயல், இசை, நாடகம் எனும் முத் தமிழையும் எனக்குத் தருவாயாக.
நூல் தீதினை நீக்கு, நன்மையைச் செய்
புண்ணியமாம் பாவம்போம் போனநாட்
செய்த அவை மண்ணிற் பிறந்தார்க்கு வைத்தபொருள் -
எண்ணுங்கால் ஈதொழிய வேறில்லை எச்சமயத் தோர்சொல்லும் தீதொழிய நன்மை செயல்.
புண்ணியமே செய்யத்தக்கது பாவமே நீக்கத்தக் கது. உலகிலே பிறந்த மக்களுக்கு அவர்கள் முற்பிறப் பிலே செய்த பாவ, புண்ணியங்களே வைப்புநிதியாகும்: ஆராய்ந்து பார்க்கையில் இதைவிட வேறு நிதியே இல்லை. ஆதலால் "தீமையை நீக்கி நன்மையைப் புரிக' என்பதே எல்லாச் சமயத்தவரும் எடுத்துரைக்கும் அறி வுரையாகும்.

Page 69
- 120 - இரண்டே சாதி
சாதி இரண்டொழிய வேறில்லைச் சாற்றுங்கால் நீதி வழுவா நெறிமுறையின் - மேதினியில் இட்டார் பெரியோர் இடாதார் இழிகுல்த்தோர் பட்டாங்கில் உள்ள படி,
சாதிகள் இரண்டே உள்ளன. நீதியினின்றுந் தவ ருத ஒழுங்கின்படி தமக்கு உள்ளவற்றில் பகுத்துண்டு வாழ்பவரே உயர்ந்த சாதியினர். தருமஞ் செய்யாத வரே இழிந்த சாதியினர். இதுவே அறநூலிலே கூறப்
பட்டுள்ள உண்மை .
விரைந்து தருமம் செய்க
இடும்பைக் கிடும்பை இயலுடம்பி தன்றே இடும்பொய்யை மெய்யென் றிராதே - இடுங்கடுக உண்டாயின் உண்டாகும் ஊழிற் பெருவலிநோய் விண்டாரைக் கொண்டாடும் வீடு.
"துன்பங்களை அடைத்து வைத் தற்கு ரிய தொரு பைதான் இது" என்று சொல்வதற்கு அமைவாக உள் ளதே இந்த உடம்பாகும். ஆதலின் பொய்யாகிய இதனை மெய்யென்று இராமல், பொருள் உள்ளதாயின் தருமத்தைச் செய்வீராக. அவ்வாறு தருமஞ் செய் தால் ஊழின் வலியாலே விளைகின்ற துன்பங்களினின்றும் நீங்கியவர்களைச் சிறப்பிக்கும் வீடானது உ மக்கும் கிடைக்கும்.
குருடன் எறிந்த மாத்திரைக்கோல் எண்ணி ஒருகருமம் யார்க்குஞ்செய் யொண்ணுது புண்ணியம் வந்தெய்து போதல்லால் - கண்ணிலான் மாங்காய் விழஎறிந்த மாத்திரைக்கோல் ஒக்குமே ஆங்கால மாகும் அவர்க்கு,

- 121 -
கண்ணில்லாத குருடன் வழியளக்கும் கோல்கொண்டு மாங்கணிக்கு எறிய மாங்கனி தற்செயலாய் விழுவது போன்று ஒரு கருமத்தின் முடிவு ஏற்படுங்காலத்தில் அது தானகவே எய்துவதாகும். அஃதன்றிப் புண்ணியத்தின் பலன் ஒருவரை வந்து சேரும் காலத்திலல்லாமல், ஆராய்ந்து செய்வதால் மாத்திரம் ஒரு கருமத்தை எவராலும் நிறைவேற்றிவிட முடியாது.
மாந்தர் தொழில்
வருந்தி அழைத்தாலும் வாராத வாரா பொருந்துவன போமினென்றற் போகா -
0 w இருந்தேங்கி நெஞ்சம்புண் ணுக நெடுந்தூரந் தாநினைந்து துஞ்சுவதே மாந்தர் தொழில்.
நாம் எத்துணை முயன்ருலும் எமக்கு உரியன அல்லா தவை எமக்குக் கிட்டவே மாட்டா. எமக்கென ஊழால் விதிக்கப்பட்டவற்றைப் "போ" என்ருலும் அவை போக மா ட் டா . இவ்வுண்மையை உணர்ந்து கொள்ளாது மனம் புண்ணுகும்படி நெடிதாகச் சிந்தித்து ஏங்கி ஏமா றிச் சாவதே மனிதர் செயலாகும்.
பிறர்தர வருவதன்று
உள்ள தொழிய ஒருவர்க்(கு) ஒருவர்சுகங் கொள்ளக் கிடையா குவலயத்தில் - வெள்ளக் கடலோடி மீண்டு கரையேறி ஞலென் உடலோடு வாழும் உயிர்க்கு
16 – إلى

Page 70
- 122 -
நீர் நிறைந்த கடலிலே கப்பலிற் சென்று பொருள் சேர்த்து ஒருவர் வந்தால் உடலோடு கூடி இவ்வுலகின் கண்ணே வாழ்கின்ற உயிர்களுக்கு அதனலாம் பயன் என்ன ? ஒருவருக்கு அமைந்த சுகங்களைத்தவிர வேருெரு வரின் சுகங்களை அவர் அநுபவித்தல் இயலாத காரிய LD nr 35 Lib.
தாமரையிலைத் தண்ணிர்
எல்லாப் படியாலும் எண்ணினுல் இவ்வுடம்பு பொல்லாப் புழுமலிநோய்ப் புன்குரம்பை - நல்லார் அறிந்திருப்பர் ஆதலினு லாங்கமல நீர்போல் பிரிந்திருப்பார் பேசார் பிறர்க்கு,
எவ்வகையாய் எண்ணிப் பார்த்தலும் இந்த உடலா னது கொடிய புழுக்கள் மலிந்ததும், நோய் நிறைந்தது மான ஒரு சிறு வீடாகும். இவ்வுண்மையைப் பேரறி ஞர்களாகிய ஞானிகள் அறிந்திருப்பதால் தாமரையிலை யின்மேல் நீர்த்துளிபோல ஒட்டியும், ஒட்டாமலும் பிரிந்தேயிருப்பர்; பிறரோடு வீண்வார்த்தைகள் பேச மாட்டார்.
செல்வம் உருண்டோடும்
ஈட்டும் பொருண்முயற்சி எண்ணிறந்த வாயினுமூழ் கூட்டும் படிக்கன்றிக் கூடாவாம் - தேட்டம் மரியாதை காணும் மகிதலத்தீர் கேண்மின் தரியாது காணும் தனம்.
உலகீர்! பொருளைத் தேடுகின்ற முயற்சிகள் பல வாய் இருப்பினும் விதி அதனை அநுபவித்தற்குச் சேர்த்து வைத்தாலன்றி அது ஒருவரைச் சேராது. அவ்வாறு சேரினும் அது தரித்து ஒருவரிடம் நில்லாது. உண்மை யான சேமிப்பு உலக மக்களிடமிருந்து 'நல்லார் இவர்" எனப் பெறும் மதிப்பு ஒன்றுதான்.

இல்லை என்றுரையா இதயத்தர்
ஆற்றுப் பெருக்கற் றடிசுடுமந் நாளும் அவ்வா(று) ஊற்றுப் பெருக்கால் உலகட்டும் - ஏற்றவர்க்கு நல்லகுடிப் பிறந்தார் நல்கூர்ந்தா ராணுலும் இல்லையென மாட்டா ரிசைந்து.
ஆறு தனது பெருகுதல் அற்றுப்போய் அதன்வழி யிலே நடப்பவர்களின் பாதங்களைச் (கோடையில்) சுடு கின்ற வேளையிலும், ஆங்காங்கே ஊற்றுக்களாய் வெளிப் பட்டு உலக மக்களுக்கு உண்ணும் நீரினை ஊட்டும். இச் செயல் போலவே நல்ல குலத்திலே பிறந்தவர்கள் வறிய வரான காலத்திலும் தம்மிடம் வந்து இரந்தவர்களுக்கு மனம் வந்து இல்லை என்று கூறமாட்டார்.
இட்டுண்டிரும்
ஆண்டாண்டு தோறும் அழுது புரண்டாலும் மாண்டார் வருவரோ மாநிலத்தீர் - வேண்டா நமக்கும் அதுவழியே நாம்போ மளவும் எமக்கென்னென் றிட்டுண் டிரும்.
பரந்த பூமியில் வாழும் மக்களே ! இறந்துபோன வரின் இடத்திலே அமர்ந்து, ஆண்டுதோறும் புரண்டு புரண்டு அழுதாலும் இறந்துபோனவர் திரும்பி வரு வரோ ? வரமாட்டார். ஆதலின் நீங்கள் வீணே அழ வேண்டா. அதுவே எமக்கும் உரிய வழியாகும். நாம் இறந்து போமளவும் "இவ்வுலகில் எமக்கு என்ன இருக் கிறது ?" என்று கருதி உம்மிடம் உள்ளவற்றைப் பகுத் துண்டு வாழ்வீர்களாக,

Page 71
- 124 -
பாழ்வயிறே ! உன்னுடன் வாழ்தல் அரிது
ஒருநாள் உணவை ஒழியென்றல் ஒழியாய் இருநாளுக் கேலென் ருல் ஏலாய் - ஒருநாளும் என்ணுே அறியாய் இடும்பைகூர் என்வயிறே உன்னுேடு வாழ்தல் அரிது.
துன்பம் மிகுந்த எனது வயிறே ! உணவு கிடைக் காதபோது ஒரு நாள் உணவை விட்டிரு என்ருல் விட மாட்டாய். உணவு கூடுதலாய்க் கி  ைட த்த போது இரண்டு நாள்களுக்கான உணவை ஏற்றுக்கொள் என்ரு லும் ஏற்கமாட்டாய், ஒரு நாளாவாது எனது துன்பத் தினை நீ அறிகின்ரு ய் இல்லை. உன்னேடு கூடிவாழ்வது மிகக்கடினம்
உழு தொழிலே உலகில் உயர் தொழில்
ஆற்றங் கரையின் மரமும் அரசறிய வீற்றிருந்த வாழ்வும் விழுமன்றே - ஏற்றம் உழுதுண்டு வாழ்வதற் கொப்பில்லை கண்டீர் பழுதுண்டு வேருேர் பணிக்கு.
ஆற்றங்கரை ஓரத்தில் யாவர்க்கும் நிழலளித்துநின்ற பெருமரமும், அரசரும் அறியும் வண்ணம் வாழ்கின்ற பெருமித வாழ்வும் ஒரு நாள் வீழ்ந்துபோம். ஆனல் உழுது பெறும் பயனை உண்டு வாழ்வதற்கு நிகரான வாழ்வு வேறில்லை. ஏனெனில் மற்றைத் தொழில்க ளுக்கு எப்பொழுதும் குறைகள் உள்ளன.
விதி வலிது
ஆவாரை யாரே அழிப்பர் அதுவன்றிச் சாவாரை யாரே தவிர்ப்பர் - ஒவாமல் ஐயம் புகுவாரை யாரே விலக்குவார் மெய்யம் புவியதன் மேல்.

- 125 -
அழகிய பூமியின் மேல் வாழ்கின்றவரைக் கெடுக்க வல்லவர் யார் ? இறப்பவரை அவரின் மரணத்தினின் றும் தவிர்க்க வல்லவர் யார் ? இடைவிடாது பிச்சை எடுப்போரைப் பிச்சையெடுத்தலினின்றும் தவிர்க்கவல்ல வர் யார் ? எவரும் இல்லை; ஊழைத் தடுத்து நிறுத்த வல்லார் ஒருவருமில்லை.
மானமிழந்தும் வாழ்வதோ ?
பிச்சைக்கு மூத்த குடிவாழ்க்கை பேசுங்கால் இச்சைபல சொல்லி இடித்துண்கை - சிச்சீ! வயிறு வளர்க்கைக்கு மானம் அழியா(து) உயிர்விடுகை சால உறும்.
சொல்லுமிடத்து, பிச்சை எடுப்பதிலும் கூடிய முற் றிய வாழ்க்கை யாதெனில், ஒருவர்க்கு இச்சகமான வார்த்தைகளை எடுத்துக்கூறி அவரைத் து தி செய்து, வருத்தி உண்ணுதலேயாகும். சீச்சி ! இப்பிழைப்பு மிக வும் இழிந்ததாகும். இவ்வாறு வயிற்றை வளர்ப்பதி லும், தன் மானத்தைக் கெடாது உயிரை விடுதல் மிக வும் பெருமை தருவதாகும்.
விதியினை வெல்லும் மதி
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்(கு) அபாயம் ஒருநாளும் இல்லை - உபாயம் இதுவே மதியாகும் அல்லாத எல்லாம் விதியே மதியாய் விடும்.
"சிவாயநம என்னும் பஞ்சாக்கர மந்திரத்தினைக் கூறிச் சிவனடிகளையே நினைத்திருப்பவர்களுக்கு ஆபத்து ஒரு நாளும் இல்லையாகும். விதியை வெல்லும் உபாயம் இதுவே. இது தவிர்ந்த மற்றவழிகளெல்லாம் விதி செலுத்துகின்ற வழியே மதி செல்வதாய் அமைந்து விடும்,

Page 72
- 126 -
நாற்பெரும் அற்புதங்கள்
தண்ணிர் நிலநலத்தால் தக்கோர்
குணங்கொடையால் கண்ணிர்மை மாருக் கருணையால் - பெண்ணிர்மை கற்பழியா ஆற்ருற் கடல்சூழ்ந்த வையகத்துள் அற்புதமாம் என்றே அறி.
குளிர்ந்த நீர் அது சார்ந்த நிலத்தின் தன்மைக் கேற்பவும், தகுதி வாய்ந்த சான்ருேர் அவர்களின் வள் ளன்மை, நற்குணங்களுக்கேற்பவும், கண்கள் அவற்றின் கண் அமைந்த கருணைக்கேற்பவும், பெண்ணுனவள் அவ ளின் கற்பழியாத் தன்மைக்கேற்பவும் சிறந்து விளங்குவ தாகிய பண்பு, கடலாலே சூழப்பட்ட இவ்வுலகத்திலேயே உயர்ந்த அற்புதமாகும் என்பதை அறிவாயாக
தெய்வத்தை நொந்து பயன்என்?
செய்தி வினையிருக்கத் தெய்வத்தை நொந்தக்கால் எய்த வருமோ இருநிதியம் - வையத்(து) அறும்பாவம் என்ன அறிந் தன்றிடார்க் கின்று வெறும்பானை பொங்குமோ மேல்.
மூன்பு செய்த தீயவினைகள் இருப்பவும் அவற்றை எண்ணுது தெய்வத்தை நொந்துகொள்வதால் இப்பிறப் பில் நாம் அடையுமாறு பெருஞ்செல்வம் வந்திடுமோ ? வராது. இவ்வுலகிலே நாம் செய்த பாவங்களெல்லாம் பகுத்துண்டு வாழ்வதாலே தொலையும் என்பதை அறிந்து தருமஞ் செய்யாதவர்களுக்கு நற்பயனம் புண் ணியம் கிட்டாது. வெறும்பான மே ல் வந்து பொங்குவ துண்டோ? இல்லை.

- 127 -
ஈயார் தேட்டைத் தீயார் கொள்வர்
பெற்றர் பிறந்தார் பெருநாட்டார் பேருலகில் உற்றர் உகந்தார் என வேண்டார் - மற்றேர் இரணங் கொடுத்தால் இடுவர் இடாரே சரணங் கொடுத்தாலுந் தாம்.
தம்மைப் பெற்றவர்கள், கூடிப்பிறந்தோர், பெரிய நாட்டிலுள்ளவர்கள், அகன்ற உல்கில் உறவினராயமைந் தோர், அன்பிற்குரிய நண்பராகிய இவர்கள் இரந்து கேட்பினும் ஒன்றையும் ஈயமாட்டார். ஆனல் மாற்ருர் உடலிலே புண் உண்டாகும்படி தாக்கினுல் மட்டும் அவர் கள் கேட்பனவெல்லாம் கொடுப்பர்.
வயிறு படுத்தும் பாடு சேவித்துஞ் சென்றிரந்துந் தெண்ணிர்க்
கடல்கடந்தும் பாவித்தும் பாராண்டும் பாட்டிசைத்தும்-போவிப்பம் பாழின் உடம்பை வயிற்றின் கொடுமையால் நாழி அரிசிக்கே நாம்.
நாம் பாழான இந்த உடம்பை வளர்த்தற்காய் வயிற்றின் கொடுமை காரணமாகப் பிறரின் ஏவல்களை நிறைவேற்றியும் செல்வரிடம் சென்று இர ந் தும், தெளிந்த நீருடைய கடல் கடந்து சென்று உழைத்தும், தகுதியற்ற கீழ் மக்களை மேன்மக்களாய்க் கருதியும், பூமியை அரசாண்டும் வாழ்நாள்களைக் கழிக்கின்ருேம்.
பரத்தை தொடர்பாற் பாழாவீர்
அம்மி துணையாக ஆறிழிந்த ஆருெக்கும் கொம்மை முலைபகர்வார் கொண்டாட்டம் - இம்மை மறுமைக்கு நன்றன்று மாநிதியம் போக்கி வெறுமைக்கு வித்தாய் விடும்.

Page 73
- 128 -
வட்ட வடிவமைந்த தம் முலைகளினின் பத்தை விலை பேசும் பரத்தையரோடு கொள்ளுந் தெ ர ட ர் பு அம்மியைத் துணையாய் உடலிலே கட்டிய வண்ணம் ஆற்றில் இறங்கியது போலாகும். இவ் விழி செயல் இம்மைக்கும், மறுமைக்கும் தீதாகும். அன்றியும் பெரிய செல்வத்தினை அழித்து வறுமைக்கும் மூலமாய்விடும்.
வஞ்சமிலார் வாழ்வர்
நீரும் நிழலும் நிலம்பொதியும் நெற்கட்டும் பேரும் புகழும் பெருவாழ்வும் - ஊரும் வருந்திருவும் வாணுளும் வஞ்சமிலார்க் கென்றுந் தருஞ்சிவந்த தாமரையாள் தான்.
உள்ளத்திலே கபடில்லாதவர்களுக்கு என்றும் நீர் வளத்தையும், நல்ல வீட்டையும், வயல் நிறைந்த நெற் சுமையையும், நல்ல பெயரையும், கீர்த்தியையும், பெரு வாழ்வையும், நல்ல ஊரையும், மேலும் மேலும் பெருகு கின்ற செல்வத்தையும் நிறைந்த வாழ்நாளையும் சிவந்த தாமரையில் வீற்றிக்கும் இலக்குமி தானே உ வந் து கொடுப்பாள்.
பாவி புதைத்த பணம்
பாடுபட்டுத் தேடிப் பணத்தைப் புதைத்துவைத்துக் கேடுகெட்ட மானிடரே கேளுங்கள்-கூடுவிட்டிங்(கு) ஆவிதான் போயினபின்(பு) ஆரே அனுபவிப்பார் பாவிகாள் அந்தப் பணம்.
பல துன்பங்களை மேற்கொண்டு முயன்று தேடிய பணத்தினைப் புதைத்து வைத்துக் கேடடைந்த மக்களே! பாவிகளே ! இதைக் கேளுங்கள். உங்கள் உடல்களா கிய கூடுகளை விடுத்து உயிர்ப்பறவை பறந்த பின்னர் உங்கள் புதையலை அநுபவிப்பவர் யார்?

- 129 -
பட்சபாதம் விளைவிக்கும் கேடு
வேதாளஞ் சேருமே வெள்ளெருக்குப் பூக்குமே பாதாள மூலி படருமே - மூதேவி சென்றிருந்து வாழ்வளே சேடன் குடிபுகுமே மன்ருேரஞ் சொன்னுர் மனை.
நியாய சபையில் இருந்துகொண்டு நடுவுநிலை திரிந்து நீதி வழங்கியோரின் மனையிலே வேதாளஞ் சேரும்; வெள்ளெருக்குப் பூக்கும்; கறையான் புற்றுப் படரும்: மூதேவி சென்று அங்கு அமர்ந்து வாழ்வாள்; நாகபாம்பு குடிபுகும்.
இவையெலாம் பாழ்
நீறில்லா நெற்றியாழ் நெய்யில்லா உண்டிபாழ் ஆறில்லா ஊருக் கழகுபாழ் - மாறில் உடன்பிறப் பில்லா உடம்புபாழ் பாே மடக்கொடி இல்லா மனை.
திருநீறு தரியாத நெற்றி பாழாகும். நெய் சேர்க் காத உணவு பாழாகும். ஆறு இல்லாத தேசத்துக்கு அழகு பாழாகும். மாறுரைக்காது ஒற்றுமையோடு வாழும் உடன்பிறந்தோர் இல்லார்க்கு உடம்பு பாழா கும். கொடிபோன்ற நல்ல இல்லாள் இல்லாத வீடு பாழாகும்.
வரவிற்கேற்பச் செலவு செய்க
ஆன முதலில் அதிகஞ் செலவானுல் மானம் அழிந்து மதிகெட்டுப் - போனதிசை எல்லார்க்குங் கள்வணுய் ஏழ்பிறப்புந் தீயணுய் நல்லார்க்கும் பொல்லணும் நாடு.
அ-11

Page 74
- 130 -
ஒருவன் தனக்கு உண்டான முதலிலிருந்து அதிக மாய்ச் செலவு செய்தால் தன்மானத்தை இழந்து, அறிவும் அழிந்து, போகின்ற இடங்களிலும் எல்லாரா லும் கள்வன் என்று குற்றஞ் சாட்டப்பட்டு நல்லவர்க் கும் பொல்லாதவனுய் மாறிவிடுவான். இதனை நீ அறிந்து கொள்.
பசிக்குமுன் யாவும் பறக்கும்
மானங் குலங்கல்வி வண்மை அறிவுடமை தானந் தவமுயற்சி தாளாண்மை - தேனின் கசிவந்த சொல்லியர்மேற் காமுறுதல் பத்தும் பசிவந் திடப்பறந்து போம்.
பசி உண்டானபோது ஒருவனின் பெருமிதம், நற் குடிப்பிறப்பு, கல்வியறிவு, கொடை, அறிவுடைமை தருமம், தவத்திலே ஈடுபாடு, முயற்சி, தேனிலுங் கனி வான சொல்பேசும் கன்னியர் மேல் ஆசைவைத்த லாகிய பத்துப்பண்புகளும் பறந்து போய்விடும்,
எல்லாம் இறைவன் செயல்
ஒன்றை நினைக்கின் அதுஒழிந்திட் டொன்ருகும் அன்றி அதுவரினும் வந்தெய்தும் - ஒன்றை நினையாத முன்வந்து நிற்பினும் நிற்கும் எனையாளும் ஈசன் செயல்.
ஒரு பொருளை அடையும் வண்ணம் நாம் நினைத் தால் அது கிட்டாமல் வேறென்று கிடைக்கும். அல்லா மல் சிலசமயம் அதுவே கிடைப்பினும் கிடைக்கும். நாம் ஒன்றை நினையாதிருக்கும் பொழுது அது எம் கைக்கு வந்து சேரினும் சேரும். இவையெல்லாம் என்னை ஆள் கின்ற இறைவனின் செயல்களேயாகும்.

- 131 -
ஆசைக்கோர் அளவு வேண்டும்
உண்பது நாழி உடுப்பது நான்குமுழம் எண்பது கோடிநினைந் தெண்ணுவது- கண்புதைந்த மாந்தர் குடிவாழ்க்கை மண்ணின் கலம்போலச் சாந்தனையும் சஞ்சலமே தான்.
நாம் உண்பது ஒருபடி அரிசியே, உடுப்பதும் நான்கு முழத்துண்டே. ஆனல் மனத்தில் நினைக்கின்ற எண்ணங்களும், ஆசைக் கனவுகளுமோ எண்பது கோடி யாகும். இவ்வாறு விழிகண் குருடராகி மக்களின் குடும்ப வாழ்க்கையானது மண்ணுலான பா ன் ட ம் போலச் சாகும்வரைக்குந் துன்பமயமே.
கரவாது அளித்திடுக.
மரம்பழுத்தால் வெளவாலை வாவென்று கூவி இரந்தழைப்பார் யாவருமங் கில்லை - சுரந்தமுதம் கற்ற தரல்போற் கரவா தளிப்பரேல் உற்றர் உலகத் தவர்.
கனிதருமரம் பழுக்குமேயானல் வெளவாலைக் கூவி " இ ங் கே வா' என்று கெஞ்சி அழைக்க வேண்டு வதில்லை. கன்றையுடைய பசுவானது அமுதம் போலும் தனது பாலை வஞ்சியாது சுரந்தளித்தல் போலத் தமது செல்வத்தைக் கரவாது யாவர்க்கும் கொடுத்து வாழ் வார்களேயானல் உலகத்தவர் யாவரும் அவர்க்கு உற வினராவார்.
வினை மிக வலிது
தாந்தாம்முன் செய்தவினை தாமே அநுபவிப்பார் பூந்தா மரையோன் பொறிவழியே - வேந்தே ஒறுத்தாரை என்செயலாம் ஊரெல்லாம் ஒன்ருய் வெறுத்தாலும் போமோ விதி.

Page 75
H 132 -
அரசனே தாமரைப் பூவிலே வீற்றிருக்கும் பிரம னின் எழுத்தின்படி ஒவ்வொருவரும் தாம் முன்செய்த விண்களின் பயனே அநுபவித்தே தீருவர். வருந்தியவரை நாம் என் செய்யலாம்? ஊர்மக்கள் யாவரும் ஒன்று சேர்ந்து வெறுத்தாலும் விதி இவ்வுலகை விடுத்து எந் நாளும் போகாது.
ஒழுக்கம் உயர்குலத்தின் நன்று
இழுக்குடைய பாட்டின் இசைநன்று சால ஒழுக்கம் உயிர்குலத்தின் நன்று - வழுக்குடைய வீரத்தின் நன்று விடாநோய் பழிக்கஞ்சாச் தாரத்தின் நன்று தணி.
குற்றமுடைய பாடவிலும் இராக ஆலாபனையோ, வாத்திய இசையோ நல்லது. நல்லொழுக்கம் உயர்குடிப் பிறப்பிலும் நல்லது. குற்றம் பொருந்திய வீரத்திலும் தீராத நோய் நல்லது. அவமானத்திற்கு அஞ்சாத மனைவியிலும் பிரமச்சரியம் நல்லது.
"لي
உள்ள மேன்மையே உயர்ந்த செல்வம்
ஆறிடு மேடும் மடுவும்போ லாஞ்செல்வம் மாறிடும் ஏறிடும் மாநிலத்திர் - சோறிடும் தண்ணிரும் வாரும் தருமமே சார்பாக உண்ணிர்மை வீறும் உயர்ந்து.
ஆற்று விெள்ளம் ஓடுகையில் ஏற்படும் மேடும் பள் ளமும் போன்றதே செல்வம். அது நிலையற்றது. பெரிய நிலவுலகில் வாழ்வோரே ! பசியென இரப்போர்க்குச் சோற்றைக் கொடுங்கள் தண்ணீரும் ஊற்றுங்கள். அந்தத்தத் தருமத்தையே துனேக்கொண்டு உள் ள மேன்மையானது உயர்ந்தோங்கி வளரும்,
 

- 133 -
பாரையும் பசுமரமும்
வெட்டெனாவை மெத்தெனவை வெல்லாவாம்
வேழத்திற் பட்டுருவுங் கோல்பஞ்சிற் பாயாது - நெட்டிருப்புப் பாரைக்கு நெக்குவிடாப் பாரை பசுமரத்தின் வேருக்கு நெக்கு விடும்.
வேழத்தின் வலிய உடலிற்பட்டு ஊடுருவிச் செல் கின்ற அம்பு மென்மையான பஞ்சினுள்ளே பாயாது இரும்பினுலான கடப்பாரைக்குப் பிளந்து விடாத சுற் பாறை பசிய சிறு மரத்தின் வேருக்குப் பிளந்து கொடுக் கும். இவை போன்றே கடுஞ்சொற்கள் இன் சொற்
களே வெல்லமாட்டா.
இல்லாஃr எவர் விரும்புவர்?
கல்லானே யானுலும் கைப்பொருளொன் றுண்டாவின் எல்லாருஞ் சென்றங் கெதிர்கொள்வர் - இல்லான் இல்லாளும் வேண்டாள் ஈன்றெடுத்த
தாய்வேண்டாள் செல்லா தவன்வாயிற் சொல்.
படிப்பறிவில்லாதவனுய் இரு ந் தாலு ம் அவ ன் கையிலே பொருளிருந்தால் யாவரும் சென்று அவனே வரவேற்பர். பொருள் இல்லாத வறியவனே மனேவியும் விரும்பாள் பெற்ற தாயும் விரும்பாள். அவ ன து வாய்ச்சொல்லிற்கும் மதிப்பு இராது.
குறிப்பிற் பொருள் உணர்வோர்
பூவாதே காய்க்கும் மரமுமுள மக்களுளும் ஏவாதே நின்றுணர்வார் தாமுனரே - தூவா விரைத்தாலும் நன்ருகா வித்தெனவே பேதைக்(கு) உரைத்தாலும் தோன்று துணர்வு.

Page 76
- 134 -
மலரை வெளிக்காட்டாதே காய்க்கின்ற மரங்களும் உள்ளன. அவைபோல "ஒன்றைச் செய்" என்று ஏவா மலே குறிப்பாலறிந்து செயலாற்றுவோரும் உள்ளனர். நன்ருகத் தூவி விதைத்தாலும் நன்கு முளையாத விதை களும் உள்ளன. அவைபோல மூடனுக்கு நன்கு விளக்கி இடைவிடாது அறிவுரை வழங்கினலும் நல்லறிவு தோன் (ዐ፻él•
விதி என்செயும்?
வினைப்பயனை வெல்வதற்கு வேத முதலாம் எனைத்தாய நூலகத்தும் இல்லை - நினைப்பதெனக் கண்ணுறுவ தல்லாற் கவலையுறல் நெஞ்சமே விண்ணுறுவார்க்(கு) இல்லை விதி.
முன்செய்த வினைகளின் விளைவுகளைப் போக்குதற்கான உபாயங்கள் வேதம் முதலான எந்த நூலிலும் உரைக் கப்படவில்லை. எனினும் முத்தியை அடையும் பக்குவம் அடைந்தவரை விதியானது வருத்துதல் இல்லை. ஆகை யால் உனது சிந்தனை முழுவதும் வீடுபேற்றினை அடைதல் வேண்டும் என்பதிலேயே நிலைபெறுவதல்லால் கவலைப் பட்டு ஆவதொன்றில்லை.
சமநிலைத் தத்துவம்
நன்றென்றுந் தீதென்றும் நானென்றுந்
தானென்றும் அன்றென்றும் ஆமென்றும் ஆகாது - நின்றநிலை தானதாந் தத்துவமாம் சம்பறுத்தார் யாக்கைக்குப் போனவர் தேடும் பொருள்.

ー135ー
நல்லது என்றும் தீயது என்றும் நான் என்றும் அவன் என்றும் இல்லை என்றும் ஆம் என்றும் வேறுபாடு பாராட்டாமல் எல்லாவற்றையும் ஒரு நிலையிலே காண் கின்ற சம நிலை தா ன் வீடுபேற்றினை அடைதற்கான உண்மை வழியாகும். இதனை விடுத்து வேறுவழியை நாடுதல், சம்புப்புல்லை அறுத்தவர்கள் அதனைக்கொண்டே அதற்குக் கயிறு திரித்துக் கட்டுவதை விடுத்துக் கயிற் றினைத் தேடி அலைவதுபோன்ற பயனற்ற செயலாகும்.
ஒரு வாசகம் பற்றிய பெருவாசகம்
தேவர் குறளும் திருநான் மறைமுடிவும் மூவர் தமிழும் முனிமொழியும் - கோவை திருவா சகமும் திருமூலர் சொல்லும் ஒருவா சகமென் றுணர்.
திருவள்ளுவதேவ நாயனரின் திருக்குறளும், சிறப் புப் பொருந்திய நான்கு வேதங்களின் இறுதியாகிய உப நிடதமும், அப்பர் சம்பந்தர், சுந்தரராகிய மூவரும் பாடிய தேவாரங்களும், வியாச முனிவரின் வேதாந்த சூ த் திர மும், மணிவாச கனரின் திருக்கோவையும், திருவாசகமும், திருமூலநாயனரின் திருமந்திரமும் கூறு வன யாவும் ஒருபொருளே என்பதனை உணர்வாயாக.
நல்வழியைப் போதிக்கும் நல்வழி
அல்வழியிற் செல்லு அறிவைத் திருத்திமிக நல்வழியிற் போதிக்கும் நல்வழிசீர் - நல்வழியிற் கல்லார் அறிவரோ கற்கண்டின் நற்சுவையைப் பல்லறிவ துண்டோ பகர்.

Page 77
நைடதம் தந்த நாயகர்
அதிவீர ராமபாண்டியரின்
வெற்றிவேற்கை
கடவுள் வாழ்த்து
பிரணவப் பொருளாம் பெருந்தகை ஐங்கரன் சரனவற் புதமலர் தலேக்கணி வோமே.
"ஓம்" என்ற பிரணவ மந்திரத்தின் பொருளாய் விளங்கும் பெருந்தகைமையாளராகிய ஐங்கரங்களே யுடைய விநாயகப் பெருமானின் திருப்பாதங்களெனும் அற்புதமான தாமரை மலர்களே எமது த&லகளிலே குடிக் கொள்வோம்,
பாயிரம்
வெற்றி வேற்கை வீர ராமன் கொற்கை யாளி குலசே கரன்புகல் நற்றமிழ் தெரிந்த நறுந்தொகை தன்னுல் குற்றங் கண்வோர் குறைவிலா தவரே.
வெற்றி பொருந்திய வேலேக் கையில் ஏந்தியவனும் கொற்கையின் அரசனும் பாண்டிய குலத்தின் முடிமணி போன்றவனுமாகிய அதிவீர ராமபாண்டியன் கூறிய நல்லதமிழில் ஆராய்ந்து தொடுக்கப்பட்ட நறுந்தொகை யைக் சுற்றதனுலே தம் குற்றங்களே நீக்குபவர் எவ்வித குறைகளுமற்றவராவர்.

- 137 -
குருன்னும் இறைவன்
எழுத்தறி வித்தவன் இறைவ னுகும்.
எழுத்துக்களாலான நூல்களேக் கற்பித்த ஆசிரியன் இறைவனுக்குச் சமமாவான்.
அழகு எது?
கல்விக் கழகு கசடற மொழிதல்.
உண்மையான கல்விக்கு எழில் தருவது, குற்றமின்றிப் பேசுதல்.
செல்வர்க்கு அழகு
செல்வர்க்கு அழகு செழுங்கிளே தாங்குதல்
பணம் படைத்தோர்க்கு எழிலாவது நிறைந்த உற வினரைக் காத்தல்,
அந்தணர்க்கு எது அழகு?
வேதியர்க் கழகு வேதமும் ஒழுக்கமும்,
மறையவர்க்கு அழகு நால் வேதங்களேயும் ஓதுத லும், சுற்றதன் வழி ஒழுகுதலுமாம்.
மாநிலங் காவலன்
மன்னவர்க் கழகு செங்கோன் முறைமை.
செங்கோன் முறைமை வழுவாது குடிகளேக் காத் தலே அரசர்க்கு அழகாகும்.
욕-18

Page 78
- 138 -
வணிகச் செல்வர்
வணிகர்க் கழகு வளர்பொரு எளிட்டல்,
வர்த்தகருக்கு எழிலாவது பெருகும் செல்வத்தைச் சம்பாதித்தல்.
உழவர்தம் உயர்வு
உழவர்க் கழகு உழுதுரண் விரும்பல்,
பயிர் செய்து உண்பதை விரும்புதலே வேளாளர்க்டு அழகாகும்.
மந்திரி எவன்?
மந்திரிக் கழகு வரும்பொரு ரூரைத்தல்.
அமைச்சர் காரண காரியங்களே ஆராய்ந்து எதிர் வரப் போவனவற்றை உரைத்தல், அவர்களுக்கு அழகைத் தரும்.
தந்திரியின் தறுகணுண்மை
தந்திரிக் கழகு தறுக மூண்மை.
படைத்தலைவனுக்குப் பயமில்லாமையும், வீர மும் அழகாகும்.
விருந்தோடு உண்க
உண்டிக் கழகு விருந்தோ டுண்டல்.
விருத்தினரோடு அமர்ந்திருந்து உணவுண்னலே, உண்னலுக்கு அழகாகும்.

- 139 -
பெண்டிர்க்கு அழகு எது?
பெண்டிர்க் கழகு எதிர்பேசா திருத்தல்.
கணவரின் வார்த்தைக்கு எதிர் பேசாமலிருத்தலே பெண்களுக்கு அழகாகும்.
குலமகள் கடமை
குலமகட் கழகுதன் கொழுநனைப் பேணுதல்.
நற்குடியிலே பிறந்த பெண்ணிற்கு அழகாவது தன் கணவனேப் போற்றியொழுகுதல்.
அறிஞர்க்கழகு அடக்கம்
அறிஞர்க் கழகு கற்றுணர்ந் தடங்கல்.
கற்கவேண்டிய நூல்களே நன்கு கற்று அவற்றின் பொருள்களே உணர்ந்து அடங்கி நடத்தலே அறிஞர் கிளுக்கு அழகு தருவதாகும்.
வறுமையிற் செம்மை
வறிஞர்க் கழகு வறுமையிற் செம்மை.
ஏழைகள் தமது தரித்திர நிலையிலும் தம் பண்புகளே யிழவாது சிக்கனமாக வாழ்வார்களாயின் அது வே அவர்க்கு அழகாம்.
உருவுகண்டு அஞ்சற்க
தேம்படு பஃனயின் திரள் பழத் தொருவிதை
வானுற ஓங்கி வளம்பெற வளரினும் ஒருவர்க கிருக்க நிழலா காதே.

Page 79
- 140 -
பனையின் தித்திக்கின்ற பழத்தின் விதையானது வானளாவிப் பெருமரமாய் வளரினும் அஃது ஒருவர்க் குக் கூட நிழலைத் தரமாட்டாது. ஆதலால் உருவால் பெருத்தவர், பயனிற் சிறந்திருப்பர் என்று மயங்கல் வேண்டா,
சிறிதும் பெரும்பயன் தரும்
தெள்ளிய ஆலின் சிறுபழத் தொருவிதை தெண்ணிர் கயத்துச் சிறுமீன் சினையினும் நுண்ணிதே ஆயினும் அண்ணல் யானை அணிதேர் புரவி ஆட்பெரும் படையொடு மன்னர்க் கிருக்க நிழலா கும்மே.
செழித்து வளரும் ஆலமரத்தின் சிறிய பழத்திலுள்ள ஒரு விதையானது, தெளிந்த நீருடைய குளத்திலுள்ள சிறிய மீனின் முட்டையிலும் அளவாற் சிறியதே. எனி னும் அது வளர்ந்து மரமாகும்பொழுது பெரிய யானை, அலங்கரிக்கப்பட்ட தேர், குதிரை, காலாட்களோடு கூடிய பெரிய சேனைக்கும் அரசர்களுக்கும் நிழலைத் தரவல்லது. ஆதலின் உருவிற் சிறியார், பயணிலே குறைவானவர் என்று கருதுதல் தவருகும்.
உருவுகண் டெள்ளாமை வேண்டும் உருளுந்தேர்க் கச்சாணி அன்னுர் உடைத்து,
என்பது வள்ளுவர் வாய்மொழி'
பெருமையும் சிறுமையும்
பெரியோ ரெல்லாம் பெரியரு மல்லர் சிறியோ ரெல்லாம் சிறியரு மல்லர்,

உருவத்தாலும், குலங்குடியாலும், செல்வத்தாலும் பெரியராய் விளங்குவோர் எல்லாம் பெரியரல்லர். இவையில்லாச் சிறியோர்களெல்லாம் சிறியரும் அல்லர். அவரவர் செயலின் பெருமையும், சிறுமையுமே ஒரு வரைப் பெரியவராயும், சிறியவராயும் ஆக்கவல்லன.
நன்மக்கள் 6ாவர்? பெற்ருே ரெல்லாம் பிள்ளைகள் அல்லர். ஒருவர் பெற்ற பிள்ளை களெல்லாம் பிள்ளைகள் என்று சொல்லுதற்கு உரியராகார் . அறிவறிந்த நன்மக்களே உண்மையான பிள்ளைகள் எனத் தக்கவர்.
உற்றுழி உதவாதார் உறவினரோ? உற்ரு ரெல்லாம் உறவின ரல்லர்.
இரத்தத் தொடர்பாலும் குடும்பத் தொடர்பாலும் பந்துக்களானவரெல்லாம் உறவினர் என்று சொல்லப் படார். உண்மையான ஆபத்துச் சந்தர்ப்பங்களில் உதவு பவரே உறவினர் எனக் கூறத்தக்கவர்.
மனை மாண்பு கொண்டோ ரெல்லாம் பெண்டி ரல்லர்.
தாலிகட்டி , மனைவியாய் அடைந்தவரெல்லாம் மனை வியர் எனப்படார். கணவருக்கு உண்மையாயும், அவர் வழி நடந்தும் வருவோரே உண்மைப் பெண்டிராவர்
உத்தமர் பண்பு அடினும் ஆவின்பால் தன்சுவை குன்றது சுடினும் செம்பொன் தன் ஒளி கெடாது அரைக்கினும் சந்தனம் தன்மணம் ஆருது புகைக்கினும் கார்அகில் பொல்லாங்கு கமழாது கலக்கினும் தண்கடல் சேரு காது.

Page 80
س- 142 س
நன்ருய்க் காய்ச்சினும் பசுவின்பால் தன் சுவையிலே குறைவுபடாது. நெருப்பிலிட்டுச் சுட்டாலும் பொன் ஞனது தனது ஒளியிலே மாரு து. அரைத்தாலும் சந் தனம் தன் சுகந்தமணத்திலே குறைவுபடாது. புகை வெளிப்படினும் அகிற் கட்டையில் தீய மணம் என்றும் ஏற்படாது. நன்ருகக் கலக்கினலும் கடல் சேறுள்ள தாகாது. இவைபோலவே நல்லோர் எத்தகைய சோதனை ஏற்பட்ட காலத்தும் தம் உயர்பண்பிலிருந்து மாறு ul-Itti.
இழிந்தோர் இயல்பு
அடினும் பால்பெய்து கைப்பருது பேய்ச்சுரைக்காய் ஊட்டினும் பல்விரை உள்ளி கமழாது. பேய்ச்சுரைக்காய் பால்விட்டுக் காய்ச்சியகாலத்தும் தன் கசப்புச் சுவையினின்றும் மாறுபடாது. பலவகை வாசனைப் பொருள்களைச் சேர்த்தாலும், உள்ளிப்பூடு நறுமணம் கமழாது. இவைபோலவே இழிந்தோர் எத் துணை நல்லோரோடு சேர்ந்தாலும் தமது இழிதகைமை களினின்றும் மாழுர்,
செய்யும் செய்கையே பயனுக்குவித்து பெருமையும் சிறுமையுந் தான்தர வருமே. உயர்வும், தாழ்வும் தந்தம் செயல்களாலேயே ஒரு வர்க்கு அமைவன பிறரால் அளிக்கப்படுவன அல்ல.
தீமையைப் பொறுத்தல் சான்றேர் கடன்
சிறியோர் செய்த சிறுபிழை எல்லாம் பெரியோ ராயிற் பொறுப்பது கடனே.
அற்பர்கள் செய்த அற்பபிழைகளையெல்லாம், மேன் மக்களாயின் பொறுத்து மன்னித்துவிடுதல் கடனுகும்.

- 43 -
சிறியோரின் பெரும்பிழை
சிறியோர் பெரும்பிழை செய்தன ராயிற் பெரியோர் அப்பிழை பொறுத்தலும் அரிதே.
அற்பர் செய்யும் பிழைகள் பெரியனவாயிருப்பின் உயர்ந்தோர் அவற்றை மன்னித்துப் பொறுத்துவிடுதல், அரிதாகும்.
மூர்க்கரின் நட்பு
நூருண்டு பழகினும் மூர்க்கர் கேண்மை நீர்க்குட் பாசிபோல் வேர்கொள் ளாதே.
மூர்க்கராயுள்ளோருடன் நூ ரு ண் டு கள் நட்புக் கொண்டிருப்பினும், நீருள்ளே பாசி வேர்கொள்ளாதது, போல எக்காலத்தும் உறுதியுடையதாகாது.
பெரியோர் நட்பு
ஒருநாட் பழகினும் பெரியோர் கேண்மை இருநிலம் பிளக்க வேர்வீழ்க் கும்மே.
பெரியோருடன் ஒரு நாள் நட்புக் கொண்டாலும் அந்நட்பானது, பெரிய நிலத்தைப் பிளந்து செல்லும் வேர்போல உறுதியாய் நிலைத்து நிற்கும்.
கல்வியின் மாண்பு
கற்கை நன்றே கற்கை நன்றே பிச்சை புகினும் கற்கை நன்றே.
(கற்றற்குரிய நூல்களைக்) கற்பது மிக நன்று, கற்பது மிகநன்று. பிச்சை ஏற்குங்காலத்தும் கற்பது மிக நன்று.

Page 81
- 144 -
கற்றிலன் குலப்பிறப்புப் பயனற்றது நாற்பாற் குலத்தில் மேற்பால் ஒருவன் கற்றில ஞயிற் கீழிருப் பவனே.
அந்தணர், அரசர், வணிகர், வேளாளர் முதலான நாலுவருணங்களில் உயர் வருணத்திலே தோன்றியவனு யினும் கல்வியறிவில்லாதவன் கீழ்ச்சாதியானுகவே கரு தப்படுவான்.
கற்றேர்க்கு எங்கும் சிறப்பு எக்குடிப் பிறப்பினும் யாவரே யாயினும் அக்குடியிற் கற்ருேரே மேல்வரு கென்பர்.
எந்த இழிந்த குலத்திலே பிறந்தவராயினும், எச்
சாதியாராயினும் அக்குலத்திலே கற்றவர்களையே "நீர் உயர்க, மேலே வருக" என்று சான்ருேர் வரவேற்பர்
அறிவுடைமை
அறிவுடை ஒருவனை அரசனும் விரும்பும்.
அறிவாற் சிறந்தவனுெருவனை அரசனும் விரும்பி வரவேற்பான்.
கொச்சை மாக்கள்
அச்சமுள் ளடக்கி அறிவகத் தில்லாக் கொச்சை மக்களைப் பெறுதலி னக்குடி எச்சமற் றேமாந் திருக்கை நன்றே.
எக்காலமும் பயத்தைத் தம் உள்ளங்களில் அடக்கி, அறிவு இல்லாத கீழ்மக்களைப் பெறுவதினும், அவர் களைப் பெறும் குடும்பம், வழிமுறையின்றி ஏமாந்திருப் பது மிகவும் நல்லது.

一145_一
கையிருந்து என்ன பயன்? யானைக் கில்லை தானமுந் தருமமும்,
யானைக்குத் தும்பிக்கையிருப்பினும் தான தருமங் களைச் செய்யும் பேறு அதற்கில்லை. அதுபோல மக்களாய்ப் பிறந்தவருள்ளும் தான தரும உணர்வுடையோர் சிலரே.
சாதுக்கள் யாவரும் சன்மார்க்க ரல்லர்
பூனைக் கில்லை தவமும் தயையும்.
தவம் செய்வதும், கருணை காட்டுவதும் பூனேயிடம் காணமுடியாத குணங்களாகும். அஃதாவது கண்ணை மூடிச் சாதுவாயிருப்பவர் யாவரும் ஞானிகள் என்ருே தயையுடையவர் என்ருே நாம் கொள்ளல் இயலாது.
பற்றற்றவன் ஞானி ஞானிக் கில்லை இன்பமும் துன்பமும். ஒரு செயலால் நிகழ்கின்ற இன்ப துன்பங்கள் முற்றத் துறந்த ஞானியை எந்நாளும் பாதிப்பதில்லை,
கறையான்போல் வாழ்க
சிதலைக் கில்லை செல்வமும் செருக்கும்.
புற்றையமைத்து வாழ்ந்தாலும் கறையானுக்கு அது தன் உடைமை என்றே பற்றே அதனல் உண்டாகின்ற அகங்காரமோ இல்லை,
அறிவற்றேர் அஞ்சார் அச்சமும் நாணமும் அறிவிலோர்க் கில்லை.
தீயவற்றைச் செய்தற்கு அஞ்சும் அச் ச மோ பழியைக் கண்டால் நாணும் நாணமோ மூடர்களுக்கு இருப்பதில்லை.
의-19

Page 82
- 146 -
துன்புற்றேர்க்கு எவையும் ஒன்றே நாளுங் கிழமையும் நலிந்தோர்க் கில்லை.
இது நல்ல நாள், இது நல்ல கிழமை என்ற வேறு பாடுகள் வாழ்க்கைப் போரிலே அடிபட்டு வருந்து வோர்க்கு இல்லை. நோயுற்றேர்க்கு நாள், கிழமை இல்லை எனலுமாம்.
ஏழைக்கு உறவில்லை கேளுங் கிளையுங் கெட்டோர்க்கு இல்லை.
நண்பர், உறவினர் என்போர் வாழ்வில் வீழ்ச்சி யடைந்த ஏழைகளுக்கு இல்லை, அவர்களை யாரும் விரும், பாராதலின்.
நிலையாமை உடைமையும் வறுமையும் ஒருவழி நில்லா.
செல்வமோ, வறுமையோ நிலைத்து ஒரேயிடத்து நிற்பனவல்ல.
*செல்வம் சகடக்கால்போல் வரும்"
என்பது நாலடியார் கூற்று:
மாறிடும், ஏறிடும்
குடைநிழ லிருந்து குஞ்சர மூர்ந்தோர் நடைமெலிந் தோரூர் நண்ணினும் நண்ணுவர்.
வெண்கொற்றக் குடை நிழல் செய்ய ஆண்யானை மீது அமர்ந்து அதனைச் செலுத்திய அரசர்களும், தமது செல்வத்தை இழக்க நேருங்காலத்தில் நடந்து நடந்து களைத்துத் தம் நாடு விட்டுப் பிழைப்பிற்காக வேற்றுாரை நாடிச் செல்வதும் உண்டு.

- 147 -
வாழ்வும், தாழ்வும்
சிறப்பும் செல்வமும் பெருமையும் உடையோர் அறக்கூழ்ச் சாலை அடையினும் அடைவர்.
உயர்வையும், பெருநிதியையும், பெருமிதத்தையும் உடையோராய் வாழ்ந்தவரும் அவற்றையெல்லாம் இழந்து உணவைத் தருமமாய் அளிக்கும் சத்திரத்தை அடைந்து இரந்துண்டு வாழவும் நேரும்
வீழ்ந்தோர் எழுவர்
அறத்திடு பிச்சை கூவி இரப்போர் அரசோ டிருந்தர சாளினும் ஆள்வர்.
தருமத்திற்காக ஒருவர் பிச்சையிடல் வேண்டும் என்று அவரை அழைத்து இரக்கின்ற இரவலரும் ஒருகால் அரசு பெற்று அரியணையேறி ஆட்சி நடத்தி னும் நடாத்துவர்.
குன்றமும் குப்பைமேடாகும் குன்றத் தனையிரு நிதியைப் படைத்தோர் அன்றைப் பகலே அழியினும் அழிவர்
மலைபோன்ற பெருஞ்செல்வத்தைத் தமக்கு உடைமை யாய்ப் பெற்றிருப்பவர், அது கிடைக்கப் பெற்ற அன் றைப்பகலே அதனை இழந்து அழியவும் நேரிடும்.
மாடம் மண்மேடாகும் எழுநிலை மாடங் கால்சாய்ந் துக்குக் கழுதை மேய்பா ழாயினு மாகும்.
ஏழு அடுக்குகளைக் கொண்ட மாடமாளிகையும் அடி யோடு சாய்ந்து குட்டிச்சுவராய்க் கழுதை மேய்கின்ற பாழிடமாவதும் உண்டு.

Page 83
- 148 -
அழிவிலிருந்து ஆக்கம்
பெற்றமுங் கழுதையும் மேய்ந்த அப்பாழ் பொற்றெடி மகளிரும் மைந்தருஞ் செறிந்து நெற்பொலி நெடுநக ராயினு மாகும். மாடும், கழுதையும் மேய்ந்து திரிந்த அப்பாழிடம் காலமாற்றத்தால் பொன்னபரணங்களை அணிந்த இளம் பெண்களும், இளைஞரும் நிறையப்பெற்று நெற்பயிரால் வளம்பொலிகின்ற பெருநகருமாகாலாம்.
அழியும் இவ்வணி உடல்
மணவணி அணிந்த மகளி ராங்கே
பிணிவணி அணிந்துதங் கொழுநரைத் தழீஇ
உடுத்த ஆடை கோடி யாக
முடித்த கூந்தல் விரிப்பினும் விரிப்பர்.
திருமணத்திற்கான ஆபரணங்களை அணிந்த பெண்
கள் அம்மணவறையிலேயே அமங்கலக் கோலம் பூண்டு இறந்துபோன தங்கணவரைத் தழுவித் தம் புதுமணப் புத்தாடையே அமங்கலிப் புத்தாடையாய் மாற முடித் திருந்த கூந்தலை விரித்தவராய் விதவைக்கோலம் கொள் GJIT”
இரப்பது இயல்பு இல்லோர் இரப்பதும் இயல்பே இயல்பே. பொருளில்லாத ஏழைகள் இரப்பதும் இயற்கையே யாகும்:
கொடுத்தல் கடன் இரந்தோர்க்(கு) ஈவதும் உடையோர் கடனே.
அவ்வாறு இரந்து நிற்போர்க்குச் செல்வமுடையோர் ஈந்திடுவதும் கடனேயாகும்,

سم 149 -سس
இல்லாளே எல்லாம்
நல்ல ஞாலமும் வானமும் பெறினும் எல்லாம் இல்லை இல்லில் லோர்க்கே.
பெரிய பூமி முதலாகிய உடைமைகளும், அவற் றைத் துய்த்துப் பின் உவர்த்து மேலுலகமும் பெறினும் சிறந்த இல்லாளை இல்லாதவர்க்கு ஒன்றுமே இல்லாதாகி விடும்,
ஆண்மை எது?
தறுகண் யானை தான்பெரி தாயினும் சிறுகண் மூங்கிற் கோற்கஞ் சும்மே.
அஞ்சாமை உடைய யானை உருவாற் பெரியதாயி னும் சிறிய துளையோடு கூடிய மூங்கிற்றடிக்கு அஞ்சும். ஆகவே ஆண்மைக்குப் பெருமை சிறுமை இல்லை.
புலியும் புல்வாயும்
குன்றுடை நெடுங்கா டுடே வாழினும் புன்றலைப் புல்வாய் புலிக்கஞ் சும்மே.
மலைக்குன்றுகள் செறிந்த பெருங்காட்டின் நடுவிலே வாழ்ந்தாலும் சிறிய தலையோடு கூடிய மான், புலிக்கு அஞ்சும். ஆதலால், பலவீனர் பலசாலிகளுக்கு எச்சூழ லிலும் அஞ்சுவது இயல்பேயாகும்.
அஞ்சுவது அஞ்சல்
ஆரையாம் பள்ளத் தூடே வாழினும் தேரை பாம்பிற்கு மிக அஞ் சும்மே.
ஆரை முட்கள் நிறைந்த பள்ளத்திலே வாழ்ந்தா லும், தேரையானது பாம்பிற்கு மிகுதியும் பயப்படும்;

Page 84
-- 150 م
கொடுங்கோல் மன்னர் கொடுங்கோல் மன்னர் வாழு நாட்டிற்
கடும்புலி வாழும் காடு நன்றே.
நீதி பிறழ்ந்த வேந்தர் வாழ்கின்ற நாட்டிலும், கடிய புலி வாழ்வதாகிய காடு கூடிய பாதுகாப்புடையதாத லின் அது நல்லது.
சான்றேர் இல்லாத நாடு
சான்றே ரில்லாத் தொல்பதி யிருத்தலின் தேன்றேர் குறவர் தேய நன்றே.
அறிவும், பண்பும் வாய்ந்த பெரியோரை இல்லாத பழைய நாட்டிலே வாழ்வதிலும் தேனைத் தேர்ந்தெடுக் கும் மலைக்குறவர் வாழ்கின்ற நாடு நல்லது.
அந்தணரிற் பதர் காலையும் மாலையும் நான்மறை ஒதா அந்தணர் என்போர் அனைவரும் பதரே.
காலையிலும் மாலையிலும் நான்கு வேதங்களையும் பாராயணம் செய்யாத பிராமணர் யாவரும் நெல்லிற் பதர் போலாவர்.
வேந்தனிற் பதர்
குடியலைத் திறுத்துவெங் கோலெடு நின்ற முடியுடை இறைவனும் மூர்க்கனும் பதரே.
தன்கீழ் வாழும் குடிமக்களை வருத்திக் கொடுங்கோ லாட்சி நடத்தும் முடிமன்னனன் மூர்க்கனும் நெல்லிற் பதரேபோலாவன்,

- 151 -
வணிகரிற் பதர்
முதலுள பண்டங் கொண்டுவா ணிபஞ்செய்(து) அதன்பயன் உண்ணு வணிகரும் பதரே.
முதலாயுள்ள தனது பொருளின் உதவியால் வியா பாரஞ் செய்து அதனல் வரும் லாபங்கொண்டு உண்டு வாழாத வியாபாரியும் நெல்லிற் பதரேபோலாவன்,
உழவரிற் பதர்
வித்தும் ஏரும் உளவா யிருப்ப எய்த்தங் கிருக்கும் ஏழையும் பதரே.
விதைப்பதற்கான தானியமும், கலப்பையும் உள
வாகவும் அவற்றைப் பயன்படுத்தாமல் சோம்பியிருக்கும் ஏழையான உழவனும் நெல்லிற் பதரேபோலாவன்,
மனைவியை மறந்தவன்
தன்மனை யாளைத் தாய்மனைக் ககற்றிப் பின்பவட் பாராப் பேதையும் பதரே.
தன் மனைவியை அவளின் தாய்வீட்டிற்குப் போக விடுத்துப் பின்பு அவளைக் கவனியாதிருப்பவனும் நெல் லிற் பதரே போலாவன்.
பேதை
தன்னு யுதமும் தன்கையிற் பொருளும் பிறன்கையிற் கொடுக்கும் பேதையும் பதரே.
தனது கையிலுள்ள ஆயுதத்தையும், தனக்குரிய செல்வத்தையும் பிறர் அநுபவிக்குமாறு கொடுக்கும் மூடனும் பதர்போலாவன்.

Page 85
- 152 -
என்சொல் கேண்மின்
வாய்பறை யாகவும் நாக்கடிப் பாகவும் சாற்றுவ தொன்றைப் போற்றிக் கேண்மின்.
எனது வாயே பறையாகவும், எனது நாவே அதனை அடிக்கும் கோலாகவும் கொண்டு தான் கூறுவதைக் கவனமாகக் கேளுங்கள்.
பொய்யும் மெய்யும்
பொய்யுடை ஒருவன் சொல்வன் மையினுல் மெய்போ லும்மே மெய்போ லும்மே.
ஒருவன் தன் வாய்ச்சாதுரியத்தாலே சொல்கின்ற பொய்யும் மெய்போலவே தோன்றும்.
மெய்யும் பொய்யாகும்
மெய்யுடை ஒருவன் சொலமாட் டாமையால் பொய்போ லும்மே பொய்போ லும்மே.
உண்மை பேசும் இயல்புடையவனுயினும், சொல் லும் ஆற்றலற்றவன் உரைப்பன பொய்போலத் தோன்று வதும் உண்டு.
வாயாலே சொல்லற்க
பழியா வருவது மொழியா தொழிவது.
நிந்தைக்கிடமாய் வரக் கூடியவற்றை வாயாற் கூருமலே தவிர்த்து விடல்வேண்டும்
சுழியில் இறங்கேல்
சுழியா வருபுனல் இழியா தொழிவது
சுழிகளிட்டு வருகின்ற நீரிலே இறங்காதிருத்தல் நன்று

- 153 -
வழித்துணை துணையோ டல்லது நெடுவழி போகேல். துணைவரோடன்றி நீண்ட தூரம் செல்லாதே,
புனையின் துணை
புணைமி தல்லது நெடும்புன லேகேல்
பெரிய ஆற்றிலே தெப்பத்திலன்றிச் செல்லாதே
ஏகும் வழி வழியே ஏகுக வழியே மீளுக. ஒழுங்கான வழியிலேயே செல்க, ஒழுங்கான வழியி லேயே மீண்டும் வருக,
இவை உலகியல் இவைகா ணுலகிற் கியலா மாறே,
இவையே உலகியலில் நன்கு வாழப் பொருத்தமான வழிகளாம்.
வாழி வாழிய நலனே வாழிய நலனே !
நன்மைகள் வாழ்க. நன்மைகள் வாழ்க,
வெற்றி வேற்கை விரும்பிக் கற்ருேர் பெற்றி உற்றுப் பீடுற நிற்பர்.
20 –و

Page 86
துறைமங்கலம் ஞானப்பிரகாச சுவாமிகள்,
மக்கள் நிறைவிற்கென அருளிய
நன்னெறி
காப்பு
மின்னெறி சடாமுடி விநாயகன் அடிதொழ நன்னெறி வெண்பா நாற்பதும் வருமே.
மின்னெளி எனப் பிரகாசிக்கின்ற சடைமுடியோடு கூடிய விநாயகப் பெருமானின் திருவடிகளைத் துதித்தால் வெண்பாவிலமைந்த நன்னெறிப் பாடல்கள் நாற்பதும் கைவரும் .
உயர்ந்தோரின் அறம்
என்று முகமன் இயம்பா தவர்கண்ணும் சென்று பொருள்கொடுப்பர் தீதற்ருேர் -
துன்றுகவை பூவிற் பொலிகுழலாய் பூங்கை புகழவோ நாவிற் குதவும் நயந்து.
மலர் நிறைந்த கூந்தலை உடையாய் ! மிக்க சுவை யுள்ள உணவுகளை அழகிய கையானது நாவிற்கு அளிப் பது நாவின் புகழ்ச்சியைக் கருதியோ ? இல்லை. அது போன்றே தம்மை என்றும் புகழ்ந்து உபசார வார்த் தைகள் கூரு தவரிடத்திலும் தாமே வலிந்து சென்று நல்லோர் பொருள்கொடுத்து உதவுவர்,

- 155 -
பயன்தரு சொல் எது?
மாசற்ற நெஞ்சுடையார் வன்சொலினி தேனையவர் பேசுற்ற இன்சொல் பிறிதென்க- ஈசற்கு நல்லோன் எறிசிலையோ நன்னுதால் ஒண்கருப்பு வில்லோன் மலரோ விருப்பு.
அழகிய நெற்றியை உடையாய் ! களங்கமற்ற உள்ள முடையோர் சொல்கின்ற கடுமையான சொற்களும் இன்பம்பயக்கும். களங்கமுடைய வஞ்சகரின் இன் சொல் லும் துன்பம் பயக்கும். சிவபெருமானுக்குச் சாக்கிய நாயனுராகிய அடியவர் எறிந்த கல்லோ, மன்மத னுடைய பூங்கணேயோ எது உகந்ததாயிற்று? கல்லே யன்றே ?
கன்றுகொண்டு ஆவிலே கறந்திடுக
தங்கட் குதவிலர்கைத் தாமொன்று கொள்ளினவர் தங்கட் குரியவராற் றங்கொள்க - தங்கநெடுங் குன்றினுற் செய்தனைய கொங்கையாய் ஆவின்பால் கன்றினுற் கொள்ப கறந்து.
தங்க மலையாலமைந்தவை போலும் கொங்கைகளை உடையாய் ! எமக்கு உதவி செய்யாத ஒருவரிடமிருந்து ஒன்றைப் பெறவேண்டுமாயின் அவருக்குச் சார்பானவர் மூலமே பெறல் வேண்டும். உலகிலுள்ளோர் பசுவின் பாலை அதன் கன்றினது உதவிகொண்டு பெறுகின்றனர் இச் செயலும் அது போன்றதே.
உலோபிகள் செல்வம பிறர்க்கே உரியது
பிறர்க்குதவி செய்யார் பெருஞ்செல்வம் வேறு பிறர்க்குதவி யாக்குபவர் பேரும் - பிறர்க்குதவி செய்யாக் கருங்கடல்நீர் சென்று புயன்முகந்து பெய்யாக் கொடுக்கும் பிறர்க்கு.

Page 87
- 156 -
பிறர்க்கு உ த வா த உவர் நீரையுடைய கடலி லிருந்து மேகம் நீரை முகந்துசென்று நன்னீராய் உலகிற்கு உதவுகின்றது. அது போன்றே பிறர்க்கு உதவிசெய்யா தவருடைய பெரிய செல்வம், பிறர்க்கு உதவுவாருடைய செல்வம் என்றே கருதப்படும்.
நீங்கிப்பின் சேரல் அரிது
நீக்க மறுமிருவர் நீங்கிப் புணர்ந்தாலும் நோக்கி னவர்பெருமை நொய்தாகும் - பூக்குழலாய் நெல்லி னுமிசிறிது நீங்கிப் பழமைபோல் புல்லினுந் திண்மைநிலை போம்.
மலர் அணிந்த கூந்தலையுடையாய் ! நெல்லினது உமி நெல்லை விடுத்து ஒரு கால் நீங்கியபின் எவ்வாறு அதனைத் திருப்பி ஒட்டினுலும் பழைய உறுதிநிலை ஏற் படாதோ, அது போன்றே நண்பர் இருவர் ஒருகால் மனம் வேறுபட்டுப் பிரிந்தார்களாயின் மீண்டும் சேருங் காலத்து முன்னைய நட்புறுதியை இழந்துவிடுவர்.
இல்லறம் எது?
காதன் மனையாளும் காதலனு மாறின்றித் தீதில் ஒருகருமம் செய்பவே - ஒதுகலை எண்ணிரண்டும் ஒன்றுமதி யென்முகத்தாய்
நோக்கருன் கண்ணிரண்டும் ஒன்றையே காண்.
புகழ்ந்து கூறப்படும் பதினறுகலைகளையுடைய முழு மதிபோலும் முகத்தையுடையாய் ! கண்கள் இரண்டா யினும் அவை எக்காலத்தும் ஒரே பொருளையே காண் கின்றன. இவைபோல அன்பு நிறைந்த மனைவியும், கணவனும் மனவேறுபாடின்றித் தீமையில்லாத இல் வாழ்க்கையை ஒன்றித்து நடாத்துவர்

- 157 -
கல்வியாற் செருக்கடையேல்
கடலே அணையம்யாம் கல்வியா லென்னும் அடலே றனையசெருக் காழ்த்தி - விடலே முனிக்கரசு கையான் முகந்து முழங்கும் பனிக்கடலும் உண்ணப் படும்.
ஒலிக்கின்ற குளிர்மை பொருந்திய கடலினையும் முனி வர்க்குத் தலைவராகிய அகத்தியர் ( தமது அகங்கையில் ஓர் உழுந்தளவாக்கி ) ஆசமனம் செய்தார். ஆதலின் நாம் கடல்போலும் கல்வியறிவுடையோம் என்று, கொல் லும் சிங்கத்தைப்போலத் தருக்கித் திரிதலாகாது.
சினங் காக்க
உள்ளங் கவர்ந்தெழுந் தோங்கு சினங்காத்துக் கொள்ளுங் குண மே குண மென் க - வெள்ளந் தடுத்தல் அரிதோ தடங்கரைதான் போந்து விடுத்தல் அரிதோ விளம்பு,
உள்ளத்தை முற்ரு ய் ஆட்கொண்டு மேலெழுவதா கிய கோபத்தினை அடக்குதலே உயர்ந்த பண்பாகும். ஆற்று வெள்ளத்தினைத் தடுத்து அணைகட்டுதலே, அணை யைப் பெயர்ப்பதிலும் சிறப்புடையதாகும். அதுவே அருஞ் செயலுமாகும் .
ஈசன் முடியுறையும் பாம்பு
மெலியோர் வலிய விரவலரை அஞ்சார் வலியோர் தமைத்தா மருவின் - பலியேல் கடவு ள விர்சடைமேற் கட்செவிஅஞ் சாதே படர்சிறைப் புள்ளரசைப் பார்த்து.

Page 88
- 158 -
அடியார்களுடைய பிச்சைகளை ஏற்கின்ற இறைவ னுடைய திருச்சடைமேல் உறைகின்ற நாகம், பரந்த சிறகமைந்த பறவைகளுக்கர சாகிய கருடனைக் கண்டு அஞ் சாததுபோல, வலிமையுடையவரைச் சேர்ந்து வாழும் மெலியோர் தம்மிலும் வலிமை வாய்ந்த பகைவர்க்கு அஞ்சார் . ۔۔
விழுமியோர் மாண்பு
தங்குறைதிர் வுள்ளார் தளர்ந்து பிறர்க்குறுTஉம் வெங்குறைதீர்க் கிற்பார் விழுமியோர் - திங்கள் கறையிருளை நீக்கக் கருதா துலகில் நிறையிருளை நீக்குமே நின்று.
சந்திரன் தனது கறையினைப் போக்காது உலகின் கறையாகிய இருளைப் போக்குகின்றது. மேன்மையான குணமுடையோரும் தமக்குள்ள குறைகளை நீக்குவதை நினையாதவராய், இரக்கத்தோடு பிறர்க்கு நேர்கின்ற கொடிய குறைகளை நீக்குவர்.
புல்லியரும் மெய்ஞ்ஞானிகளும்
பொய்ப்புலன்க ளைந்துநோய் புல்லியர்பா லன்றியே மெய்ப்புலவர் தம்பால் விளையாவாம் - துப்பின் சுழற்றுங்கொல் கற்றுாணைச் சூரு வளிபோய்ச் சுழற்றுஞ் சிறுபுன் துரும்பு?
சுழல் கா ற் று வலிய கற்றுாணைச் சுழற்ற வலி யுடைத்தோ ? அது சிறிய புல்லிய துரும்பையன்ருே சுழற்றுகின்றது ? அது போன்றே பொய்ம்மை வாய்ந்த ஐம்புலன்களும் இழிந்தார்பால் தொல்லை தருவதன்றி, மெய்ஞ்ஞானிகளிடத்து அவ்வாறு செய்யும் வன்மையற் றவை

- 159 -
வியத்தகு செயல்
வருந்தும் உயிரொன்பான் வாயி லுடம்பிற் பொருந்துதல் தானே புதுமை - திருந்திழாய் ! சீதநீர் பொள்ளற் சிறுகுடத்து நில்லாது வீதலோ நிற்றல் வியப்பு.
நன்கமைந்த ஆபரணங்களை அணிந்த வளே! குளிர்மை பொருந்திய நீர் ஓட்டைச் சிறுகுடத்திலே நில்லாது ஓடுதலோ, நிற்றலோ? எது வியக்கத்தக்க செயல்? நிற்றலேயன்ருே? யன்ருே ? பிறவித்துன்பங் களால் வருந்திக்கொண்டிருக்கும் உயிரானது ஒன்பது துவாரக் குடமாகிய இவ்வுடம்பிலே தங்கி நிற்கின்றதே!
வளத்திற்கேற்ப வழங்குவர்
பெருக்க மொடுசுருக்கம் பெற்றபொருட் கேற்ப விருப்ப மொடுகொடுப்பர் மேலோர் - சுரக்கு மலையளவு நின்றமுலை மாதே ! மதியின் கலையளவு நின்ற கதிர்.
பால் சுரக்கும் மலைபோன்ற பருத்த மார்புடையாய் சந்திரன் தனது கலைகளுக்கேற்பவே ஒளியை வழங்குதல் போலத் தமது செல்வப் பெருக்கிற்கும். சுருங்கலுக்கும் ஏற்ப மேலோர் அதிகமாகக் கொடுப்பினும், சிறிதே கொடுப்பினும் அதனை விருப்பத்தோடு கொடுத்திடுவர்,
மேருமலையும் வளைந்தது
தொலையாப் பெருஞ்செல்வத் தோற்றத்தோ மென்று தலையா யவர்செருக்குச் சார்தல் - இலையால் இரைக்கும்வண் டுதுமல ரீர்ங்கோதாய் மேரு வரைக்கும்வந் தன்று வளைவு.

Page 89
ー 160ー
ஒலிக்கும் வண்டுகளுதும் மலர்களாலான மாலையை அணிந்தவளே! பொன் மலையாம் மேருவிற்கும் ஒருகால் வளைவு நேர்ந்தது. ஆதலால் குறைவில்லாத செல் வத்தை உடையோம் என்று மதித்து உயர்ந்தோர் செருக்கடைவதில்லை.
அன்பிலான் பெற்றபேறு
இல்லானுக் கன் பிங் கிடம்பொரு ளே வன்மற் றெல்லா மிருந்துமவற் கென்செய்யும் ? - நல்லாய் ! மொழியிலார்க் கேது முதுநூல் தெரியும் விழியிலார்க் கேது விளக்கு.
நற்பண்புடைய நங்காய் ! அன்பில்லாதவனுக்கு மனை யாலும், செல்வத்தாலும், பணியாளராலும், மற்றும் பிறவற்ருலும் ஆகும் பயன் யாது ? மொழி பேசவிய லாத ஊமைகளுக்குப் பழமையான நூல்களாற் பயன் யாது ? விழிகளற்ற குருடர்களுக்கு விளக்கினலாம் பயன் என்ன ?
உயர்ந்தோர் பண்பு
தம்மையும் தங்கள் தலைமையையும்
பார்த்துயர்ந்தோர் தம்மை மதியார் தமையடைந்தோர் - தம்மின் இழியினுஞ் செல்வர் இடர்தீர்ப்பர் அல்கு கழியினுஞ்செல் லாதோ கடல்.
பரந்த 4 டலானது குறைவுடைய உப்பங்கழியிடத் தும் பெருகி ஓடுவதில்லையோ ? அது போன்றே தங்கள் உயர்வையும், தலைமைத் தன்மையையும் கருதி அறிவுடை யார் பெருமை பாராட்டாது, தம்மை அடைக்கலமா யடைந்தவர், தம்மிலும் தாழ்ந்தவராயினும் அவர்களுக்கு ஆண்டாகும் துன்பங்களைப் போக்குவர்,

سے 161 سے
குலநலம் மாருது எந்தைநல் கூர்ந்தான் இரப்பார்க்கீந் தென்றவன் மைந்தர்தம் ஈகை மறுப்பரோ - பைந்தொடீஇ நின்று பயனுதவி நில்லா அரம்பையின்கீழ்க் கன்றும் உதவும் கணி. பசுமையான வளையல்களை அணிந்தவளே! வளர்ந்து நின்று தன்னலாம் பயன்களாகிய கனி, பொத்தி, தண்டு முதலானவற்றை மக்களுக்கு உதவிவிட்டுத் தான் நில்லாது அழிந்த தாய் வாழையைக் கண்டும் அத னருகே நிற்கும் வாழைக் கன்ருனது தன் பயன்களைக் கர வாது அளிக்கின்றது. அதுபோல "எமது தந்தையார் இரப்பவர்களுக்குத் தருமம் கொடுத்து வறியரானுர்" என்று கருதி மக்கள் ஈகையை மறுத்திடுவரோ ? மறுக்கார் .
இன்சொல்லும் வன்சொல்லும் இன்சொலா லன்றி இருநீர் வியனுலகம் வன்சொலால் என்றும் மகிழாதே - பொன்செய் கதிர்வளையாய்! பொங்கா தழற்கதிராற் றண்ணென் கதிர்வரவாற் பொங்குங் கடல். பொன்னலே செய்யப்பட்டு ஒலிக்கின்ற வளையலை அணிந்த பெண்ணே சுடுகின்ற கிரணத்தோடு கூடிய சூரியன் வரவாலே, பொங்காத கடல், தண்கதிர் மதி யத்தின் வருகையாலே பொங்குகின்றதைப்போல, உலக மக்களும் இனிய சொற்களாலேயன்றிக் கடுஞ்சொற்க ளாலே மகிழார்.
தென்றலும் சூருவளியும் நல்லோர் வரவால் நகைமுகங்கொண் டின்புறீஇ அல்லோர் வரவால் அழுங்குவர் - வல்லோர் திருந்துந் தளிர்காட்டித் தென்றல்வரத் தேமா வருந்துஞ் சுழல்கால் வர.
욕-31

Page 90
- 162 -
இனிய மாமரம் தென்றல் வீசுகையில் இளந்தளிர் விட்டு அழகு பெறுகிறது. சுழல் காற்று வீசும்போது பூக்களை உதிர்த்து வருந்துகிறது. கல்வியும், பண்பும் வாய்ந்த சான்ருேர் நல்லவர் வருகையால் நகைமுகம் கொண்டு விளங்குவதும், கொடியோர் வரவினல் துன் புறுவதும் இம்மாமரத்தின் செயலை ஒத்ததேயாம்.
தம்நோய்போல் பிறர்நோய் காணல்
பெரியவர்தந் நோய்போற் பிறர்நோய்கண் டுள்ளம் எரியின் இழுதாவார் என்க - தெரியிழாய் மண்டு பிணியால் வருந்து பிறவுறுப்பைக் கண்டு கலுழுமே கண்.
தெரிந்தெடுத்த ஆபரணங்களை உடையாய் ! மிகுந்த நோயினல் வருந்துகின்ற மற்றைய உறுப்புக்களை நோக் கிக் கண்கள் நீரைச் சொரிதல்போல, உயர்ந்தோர் பிறர்க்கு வருகின்ற நோயினைத் தம் நோய் போல உணர்ந்து தீ வாய்ப்பட்ட நெய்போல உருகுவர்.
அறிஞர்முன் அறிவிலார் நிலை
எழுத்தறியார் கல்விப் பெருக்க மனைத்தும் எழுத்தறிவார்க் காணின் இலையாம் - எழுத்தறிவார் ஆயுங் கடவுள் அவிர்சடைமுன் கண்டளவில் வீயுஞ் சுரநீர் மிகை.
ஐந்தெழுத்துக்களாலான பஞ்சாக்கர மந்திரத்தை அறிந்து ஒதுகின்ற அடியார்கள் ஆராய்ந்து காண்கின்ற சிவபெருமானது விளக்கமான சடையின் பரப்பை முன்பு கண்டதும் ஆகாயகங்கையின் மிகுதியான பெருக்கம் மறைந்து விடுதலைப்போல, இலக்கண அறிவற்றவர் களின் கல்விப் பரப்பனைத்தும், இலக்கண அறிவுடை யோர்க்கு முன்னல் இல்லாது போய்விடும்.

-- 163 -
அறிவில் உயர்ந்தது அகிலத்தில் இல்லை
ஆக்கு மறிவி னலது பிறப்பினுல் மீக்கொ ஞயர்விழிவு வேண்டற்க - நீக்கு பவரா ரரவின் பருமணிகண் டென்றும் கவரார் கடலின் கடு.
சிறப்புக்களை ஆக்குகின்ற அறிவுடைமையாலன்றிப் பிறப்பினல் மேலெழும் உயர்வையோ இழிவையோ விரும்பல் வேண்டா. விட நாகத்திலுள்ள பெரிய இரத் தினத்தைக் கண்டு விரும்பாதவர் யாவர் ? பாற்கடலி லுண்டான ஆலகால விடத்தையோ எவரும் அடை தற்கு விரும்பார்,
எறும்பூரக் கற்குழியும்
பகர்ச்சி மடவார் பயிலநோன் பாற்றல் திகழ்ச்சி தருநெஞ்சத் திட்பம் - நெகிழ்ச்சி பெறும்பூரிக் கின்றமுலைப் பேதாய் பலகால் எறும்பூரக் கற்குழியு மே.
பெருக்கின்ற முலைகளோடு கூடிய பெண்ணே ! பல காலும் எறும்பு ஊர்ந்து செல்வதாலே கல்லிலே குழி விழுதல் போலப் பெண்களோடு வெறும் வார்த்தைகளைப் பேசிக்கொண்டு தவஞ்செய்தாலும், அத் தவத் தால் விளக்கமுறும் மனத்தின் திட்பமானது தளர்ந்து போய் விடுகின்றது.
கீழ்மக்கள்
உண்டு குணமிங் கொருவர்க் கெனினுங்கீழ் கொண்டு புகல்வதவர் குற்றமே - வண்டுமலர்ச் சேக்கை விரும்பும் செழும்பொழில்வாய் வேம்பன்ருே காக்கை விரும்பும் கணி.

Page 91
- 164 --
வண்டுகள் மலர்ப்படுக்கையினை விரும்பிச் சேர்கின்ற செழிப்பான பூஞ்சோலையினிடத்தே காக்கை விரும்புவது கசப்புடைய வேப்பங்கனியையன்ருே ? அதுபோல ஒரு வர்க்கு இவ்வுலகிலே பல நற்குணங்களிருப்பினும் இழிந் தோர் அவற்றை விடுத்து அன்னரின் குற்றங்களையே எடுத்துப் பேசுவர்
கூடாநட்பு
கல்லா அறிவிற் கயவர்பாற் கற்றுணர்ந்த நல்லார் தமதுகண் நண்ணுரே - வில்லார் கணையிற் பொலியும் கருங்கண்ணுய்! நொய்தாம் புணையிற் புகுமொண் பொருள்.
பொருந்திய வில்லிலே அம்பைப்போல விளங்கும் கரிய கண்களையுடையாய் ! தெப்பத்திலே சேரும் கன முடைய பொருள்களும், தெப்பத்திலே மிதக்கத்தக்கவை யாய் இலேசாகி விடுதல் போன்று கல்வி அறிவில்லாத மூடரோடு சேரும் நல்லோரும் தமது பெருமை இழந்து விடுவர்,
மேலோரும் கீழோரும்
முனிவினு நல்குவர் மூதறிஞ ருள்ளக் கனிவினு நல்கார் கயவர் - நணிவிளைவில் காயினு மாகுங் கதலிதா னெட்டிபழுத் தாயினு மாமோ அறை.
கதலியானது காய்ப்பருவத்திலும் பயனுடைத் தாகும். எட்டி பழுத்தும் பயன் தராது தீமையே விளைக் கும். இவைபோன்றே மூதறிஞர்கள் வெகுளியுடன் இருக் கும் போதும் இரப்போர்க்கு ஈவர். கீழோர் தம் மனம் இரங்கிய வேளையிலும் ஒன்றும் ஈயார்,

- 165 -
இடுக்கண்கண்டு நகைப்போர்
உடற்கு வருமிடர்நெஞ் சோங்குபரத் துற்றேர் அடுக்கு மொருகோடி யாக - நடுக்கமுருர் பண்ணிற் புகலும் பனிமொழியாய் அஞ்சுமோ மண்ணிற் புலியைமதி மான்.
பண்ணிசை போலும் இனிய மொழிகள் உடையாய்! வானில் விளங்கும் சந்திரனிடத்தே விளங்கும் மான் பூமியிலுள்ள புலியைக் கண்டு பயப்படுவதில்லை. அது போல உயர்ந்த பரமுத்தி நிலையையடைந்தவர் தம் உடல்களுக்கு அடுத்தடுத்து ஒரு கோடி துன்பம் வரினும் நடுக்கத்தை அடையார்.
கூற்றங் குறுகமுன் செய்க அறம்
கொள்ளுங் கொடுங்கூற்றம் கொல்வான்
குறுகுதன்முன் உள்ளம் கனிந்தறஞ்செய் துய்கவே - வெள்ளம் வருவதற்கு முன்ன ரணை கோலி வையார் பெருகுதற்க ணென்செய்வார் பேசு.
வெள்ளம் பெருகி வருவதற்கு முன்னரே அணைகட்டி வையாதவர்கள், வெள்ளம் பெருகத்தொடங்குமாயின் என்ன செய்வார்? சொல்வாயாக. அதுபோலவே உம் முயிரைக் கவரும் கொடிய யமன் கொல்வதற்காய் அருகடைவதற்கு முன்னரே நெஞ்சம் கசிந்து அறஞ் செய்து உய்வீராக,
மெய்யுங் கையும்
பேரறிஞர் தாக்கும் பிறர்துயரம் தாங்கியே வீரமொடு காக்க விரைகுவார் - நேரிழாய் மெய்சென்று தாக்கும் வியன் கோ லடிதன்மேற் கைசென்று தாங்குங் கடிது,

Page 92
- 166 -
செம்மையான ஆபரணங்களைத் தரித்தவளே ! உட லின்மீது சென்று தாக்குவதாகிய பெரிய கழியின் அடி யைக் கையானது விரைந்து சென்று ஏற்றுக்கொண்டு உடலைக் காத்தல்போலப் பெரிய அறிவாளிகள் பிறரைத்
தாக்குகின்ற துயரத்தைத் தாம் ஏற்று அவர் களை ஆண்மையோடு காப்பதற்காய் விரைந்து செல்வர்.
அறநூல் உணர்ச்சி அறிவிலார்க் கில்லை
பன்னும் பனுவற் பயன்றே ரறிவிலார் மன்னு மறங்கள் வலியிலவே - நன்னுதால் 1 காழொன் றுயர்திண் கதவு வலியுடைத்தோ தாழொன் றிலதாயின் முன்.
வைரம் பொருந்திய திண்ணிய கதவு தாழ்ப்பாளை இல் லா த தாயி ன் வலிமையுடையதாகுமோ ? இது போன்றே அறம்பற்றிக் கூறும் நூல்களின் பயனை த் தெரிந்துகொள்ளும் அறிவில்லாரின் நிலையான அறச் செயல்களால் எதுவித பயனுமில.
கடலும் குளமும்
எள்ளா திருப்ப இழிஞர்போற் றற்குரியார் விள்ளா அறிஞரது வேண்டாரே - தள்ளாக் கரைகாப் புளதுநீர் கட்டுகுள மன்றிக் கரைகாப் புளதோ கடல்.
தண்ணிரைத் தேக்கிய குளமானது உடையாத கரை யையும், காப்பாகிய அணையையும் உடையதேயன்றிக் கடல் இத்தகைய காப்பையும் அணையையும் உடைய தாகுமோ ? பி ற ர (ா ல் பழிக்கப்படாதிருத்தற்காய் இழிந்தோர் அறிஞராலே பாதுகாப்பதற்கு உரியராவர்.

- 167 -
பழிக்கு நாணுவார் அறிவுடை யாரன்றி அதுபெருர் தம்பால் செறிபழியை அஞ்சார் சிறிதும் - பிறைநுதால் வண்ணஞ்செய் வாள்விழியே அன்றி மறைகுருட்டுக் கண்ணஞ்சு மோ இருளைக் கண்டு.
பிறைபோலும் நெற்றியை உடையாய் ! முகத்திற்கு அழகைத் தருகின்ற ஒளி பொருந்திய விழிகளையன்றி, பார்வை மறைந்த குருட்டு விழிகள் இருளைக்கண்டு அஞ்சுமோ ? அஞ்சமாட்டா. தம்மை நெருங்குகின்ற பழிகளுக்கு அறிவுடைய சான் ருேர்களேயன்றி, அவ் வறிவைப் பெருத மூடர் சிறிதும் அஞ்சமாட்டார்.
கற்றரைக் கற்ருரே காமுறுவர் கற்ற அறிவினரைக் காமுறுவர் மேன்மக்கள் மற்றையர்தாம் என்றும் மதியாரே - வெற்றிநெடு வேல்வேண்டும் வாள் விழியாய் ! வேண்டா YA புளிங்காடி பால்வேண்டும் வாழைப் பழம்.
வெற்றி பொருந்திய நீண்ட வேற்படையையும் விரும்புகின்ற ஒளி பொருந்திய கண்களையுமுடையாய் ! வாழைப்பழத்தினைப் பாலே விரும்பிச் சேரும், புளித்த கள் விரும்பிச் சேராது. அதுபோலக் கல்வியால் உயர்ந்த அறிவாளரை உயர்ந்தோரே விரும்பியடைவர். மற்றைத் தாழ்ந்த அறிவிலிகள் என்றைக்கும் மதித்து நடக்கமாட்
fff o
விழுமியோர் கொடைச்சிறப்பு தக்கார்க்கே யீவர் தகார்க்களிப்பார் இல்லென்ழ் மிக்கார்க் குதவார் விழுமியோர் - எக்காலும் நெல்லுக் கிறைப்பதே நீரன்றிக் காட்டுமுளி புல்லுக் கிறைப்பரோ போய், -

Page 93
- 168 -
எந்தக் காலத்திலும் (பயன் தருகின்ற) நெல்லிற்கு இறைப்பதுதான் நீரேயன்றிக் காட்டில் வளரும் உலர்ந்த புல்லுக்குச் சென்று எவராவது நீரிறைப்பரோ ? இறை யார். உயர்ந்தோரும் "தகுதி வாய்ந்தவர்க்கே கொடுப் பதன்றித் தகுதியற்றேர்க்கு இறைக்கமாட்டார்" என்று அறிந்து தகுதி வாய்ந்தவர்க்கே உதவி புரிவார்கள்.
தன்னைப்புகழும் தற்குறி
பெரியார்முற் றன்னைப் புனைந்துரைத்த பேதை தரியா துயர்வகன்று தாழும் - தெரியாய்கொல் பொன்னுயர்வு தீர்த்த புணர்முலையாய் ! விந்தமலை தன்னுயர்வு தீர்ந்தன்று தாழ்ந்து.
இலக்குமியின் சிறப்பினை உனது அழகினலே குறைத்து விட்ட நெருங்கிய நகில்களை உடையாய் ! விந்தியமலை அகத்திய முனிவராலே தனது உயர்வு நீக்கப்பெற்றுத் தாழ்ந்துபோனதை நீ அறியாயோ ? பெரியோர் முன்பு தன்னை உயர்வாய்ப் புகழ்ந்து உரைத்த மூடன் சிறிதும் தாழ்க்காது அவ்விடத்திலேயே இழிக்கப்பட்டுவிடுவான்.
உயர்நட்பும் இழிநட்பும் நல்லார் செயுங்கேண்மை நாடோறும் நன்றகும் அல்லார் செயுங்கேண்மை ஆகாதே -
நல்லாய் கேள் காய்முற்றிற் றீன்றிங் கனியாம் : இளந்தளிர்காள் போய்முற்றின் என்ணுகிப் போம்?
நற்குணமுடையாய் ! கேட்பாயாக. கா யானது முற்றி முதிர்ந்தால் சுவை நிறைந்த கனியாகும். இள மையான பசுந்தளிர்களோ முற்றி இலையாகிப் பின் சரு காகிப் போய்விடும். இவைபோன்று நல்லவரின் நட்பு நாட்செல்லச் செல்ல வளர்ந்து நன்மை தரும். தீயாரது நட்பு, காலப்போக்கில் பயன் தராது ஒழிந்துபோம்.

مس 169 س
மூடரின் கேண்மை
கற்றறியார் செய்யுங் கடுநட்புந் தாங்கூடி உற்றுழியுந் தீமைநிகழ் வுள்ளதே - பொற்ருெடீஇ சென்று படர்ந்த செழுங்கொடிமென் பூமலர்ந்த அன்றே மணமுடை யதாம்.
பொன்னலான வளையல்களை அணிந்த பெண்ணே ! பல பக்கங்களிலும் சென்று படர்ந்த செழிப்பான பூங் கொடியிலே மலர்ந்த நாள் மலர் மலர்ந்த அன்று மட் டும் மணமுடையதாகும். அதுபோலக் கல்வியறிவில்லாத மூடர்களின் நெருங்கிய நட்பும் அவர்கள் நட்புக்கொண்ட இடத்திலேயே தீங்கினை வருவிக்கக்கூடியது.
கல்வியின் மாட்சி
பொன்னணியும் வேந்தர் புனையாப் பெருங்கல்வி மன்னும் அறிஞரைத்தா மற்றெல்வார்-மின்னுமணி பூணும் பிறவுறுப்புப் பெண்ணே அதுபுனையாக் காணுங்கண் ஒக்குமோ காண்.
நங்காய் ! ஒளிவிடுகின்ற ஆபரணங்களைப் பிற உறுப் புக்கள் அணிந்து தம்மை அழகுபடுத்துகின்றன. ஆனல் அவற்றையணியாத கண்ணைப்போலும் இவை சிறப்புடை யனவாகுமோ ? அதுபோலப் பொன்னலான ஆபரணங் களையணிந்த மன்னர்களும், அவற்றை அணிந்துகொள் ளாத பெரிய கல்வியால் நிலைபெற்ற அறிஞர்களுக்குச் சமமாவரோ ? ஆகார்.
அ-22

Page 94
தெரிவுறக் கேட்ட திருத்தகு நல்லீர்!
'அறம் என்பது எது? அதனை அறியும் அறிவே " என்று இரண்டாயிரத்தைந்நூறு ஆண்டுகளுக்கு முன்னர் கிரேக்க மகா ஞானியான சோக்கிரட்டீஸ் அருளிச் செ ன் ரு ர் . அறத்தை அறிந்து கொள் ஞ ம் வாய்ப்பே ஒரு நாடு பெறுதற்கரிய பெருந்தனமாகும். தமிழ்மக்கள் பாக்கியசாலிகள். பாண்டியன் அறிவுடை நம்பி, கணியன் பூங்கன்றனர், திருவள்ளுவர், ஒளவை யார் போலும் பேரறிவாளராகிய அறிநெறியாளரை அவர்கள் பெற்றுள்ளனர். அந்த மேலோர் வகுத்துச் சென்றபாதை அழகானது வலிமையானது; நேரானது: தன்வழிச் செல்வாரை ஆற்றுப்படுத்தி வீட்டுநெறிக்கண் உய்க்கவல்லது.
எனினும் நாம் எமது பாக்கியத்தை உணர்ந்து கொள்ள ரா து "பாதைவிட்டலைகின்ற பாவி களாயுள் ளோம். துறைமங்கலம் சிவப்பிரகாச சுவாமிகள் கூறி யருளியதுபோன்று, தாழ்ப்பாளில்லாத கதவுகள் போல அறநெறிப் பனுவல்களை ஒதாதும், உணராதும் வாழ்ந்து வருகின்ருேம்; அதனுல் வலியற்ருேராய் மாறிவிட்டோம்,
* நெஞ்சில் உரமு மின்றி
நேர்மைத் திறனு மின்றி வஞ்சனை சொல்வா ரடி - கிளியே வாய்ச் சொல்லில் வீரரடி"
எனப் பாரதி கூறியாங்கு அடிமைகளாய் வாழ்ந்து அற உணர்ச்சியேயற்றவர்களானுேம். இந்நிலை சென்ற சில நூற் முண்டுகளாய்த் தொடர்ந்து நிலவிவருகின்றது. இதனை எமது இலக்கியங்களிலுங் காணக்கூடியதாயிருக்கிறது. அறநெறி கூறும் நூல்களென்று சிறப்பித்துச் சொல்லத் தகும் நூல்கள் எம்மிடை அருகி வந்துகொண்டிருக்கின் றன. அவ்வப்போது, ஆங்காங்கே பாடித் தொகுக்கப் பட்ட தனிப்பாடல்களிலும், விவேகசிந்தாமணி போன்ற வற்றிலும், சுன்னகம் குமாரசுவாமிப் புலவரது சாணக்

سے 171 سس
கிய நீதி வெண்பாவிலும், பாரதி, தேசிகவிநாயகம் பிள்ளை, நாமக்கல் இராமலிங்கம்பிள்ளை, பாரதிதாசன் போன்றரின் சில பாடல்களிலும் அறநெறி சுடர் விடல் காணலாம். நவாலியூர்ச் சோமசுந்தரப் புலவ ரின் 'வாழையும் புலவனும்", "மனம் நிறைந்த செல்வன்" முதலாம் பாடல்களிலே பண்டையோரின் அறநெறிகள் பொன்னே போலப் போற்றப்படுகின்றன.
மலைவாழை யல்லவோ கல்வி - நீ
வாயார உண்ணுவாய் போஎன் புதல்வி" என்ற பாரதிதாசன் பாடல்வரிகள் கல்விச்சிறப்பை எவ் வளவு அழகாய் எடுத்துரைக்கின்றன !
பொய்சொல்லக் கூடாது பாப்பா - என்றும்
புறஞ்சொல்லல் ஆகாது பாப்பா தெய்வம் நமக்குத்துணை பாப்பா - ஒரு
தீங்கும்வர மாட்டாது பாப்பா என வரும் பாரதியின் குழந்தைப் பாடலிலே வாழ்வின் இலட்சியமே மிக எளிமையாகக் கூறப்படுகின்றது என 6) ITLD .
'உண்மை அன்பை உடையவரே
உலகை யளந்த பெருமானை அண்மை யாகக் கண்டிடுவர்
அல்லார் காணுர் காணுரே' என்று உண்மைப் பக்தியின் மாண்பிற்குத் தேசிக விநாயகம்பிள்ளை வரைவிலக்கணம் செய்வது உணர்ந்து இன்புற வல்லதாகும்.
வாழ்வின் நிலையாமையை எடுத்து மலர்ச்செடி வாடு வதிலே உருவகித்துக் கூறும் புலவர் மணி பெரியதம்பிப் பிள்ளையவர்களின் பாடலும், "வெள்ளைநிற மல்லி கையோ" எனத் தொடங்கும் விபுலானந்த அடிகளாரின் பத்தித்திறத்தினை விளக்கும் பாடலும் சாவாத அற நெறிப்பாக்கள் எனலாம். அவை எமது மாணவரின் பாடபுத்தகங்களை அணிசெய்து நிற்கின்றன

Page 95
- 172 -
*பதியிழந்தனம் பாலனை யிழந்தனம் படைத்த
நிதியிழந்தனம் இனிநமக் குளவெனக் கருதும் கதியிழக்கினும் கட்டுரை இழக்கிலோம்"
என அறக்குரல் எடுத்த அரிச்சந்திரனின் வரலாறு சென்ற நூற்ருண்டிலேயே எழுதப்பட்டது என்பதையும் சுட்டிக்காட்ட விரும்புகின்றேன். வல்லூர்த் தேவராச பிள்ளையின் குசேலோ பாக்கியானத்திலே சுசீலைக்கும், குசேலர்க்குமிடையே நடப்பதாகிய உரையாடல், நண்ப ராயினும் செல்வராயுள்ளவரிடத்தில் சென்று இரப்ப தன் இழிவை அறிவுறுத்துவதாயுள்ளது.
இன்னும் ஆங்காங்கே பலப்பல அறநெறிப்பாக்கள். - முனிசீப் வேதநாயகம் பிள்ளையின் பெண்கல்விக் கீர்த் தனங்கள் உட்பட - சென்ற நூற்ருண்டிலும், இந் நூற் முண்டிலும் தோன்றினவாயினும், அவை ஒரு திருக்குற ளுக்கு, ஒரு நாலடியாருக்கு, ஒரு நல்வழிக்கு, ஒரு நன் னெறிக்கு எவ்வாற்ருனும் ஈடாகாதவை என்று தயங் காது கூறலாம். அவற்றிலே கையாளப்பட்டிருக்கும் உவமைகளின் சிறப்பையும், சொல்லும் பாங்கையும், உண்மையொளியையும் நோக்கும்பொழுது இமயத்தின் முன் சிறுபாறைகளாகவே இவை விளங்குகின்றன: எனவே இவற்றையும் கற்பதோடு, முன்னையோரின் அற நெறிச்சுரங்கங்களை எங்கள் உள்ளங்களிலே நிலைபெற வைக்கவேண்டுவது எமது நீங்காக் கடனுகும்.
கற்பூரப் பொதி சுமந்த கழுதைபோல அறநெறி யுணரா அறிவிலியாகிய யான் உங்கள் முன்பு ஒரு பெரிய பொதியை வைத்துள்ளேன். பயன் செய்வது உங்கள் பொறுப்பு.
இனிப் பாரதியின் புதிய ஆத்திசூடியோடு அற நெறிப்பாமஞ்சரி இனிதுறும்.
வணக்கம்
சொக்கன்"

பாரதி பகர்ந்த புதிய ஆத்திசூடி
காப்பு
பரம்பொருள் வாழ்த்து
ஆத்தி சூடி, இளம்பிறை யணிந்து, மோனத் திருக்கும் முழுவெண் மேனியான் கருநிறங் கொண்டுபாற் கடல்மிசைக் கிடப்போன்: மகமது நபிக்கு மறையருள் புரிந்தோன், ஏசுவின் தந்தை; எனப்பல மதத்தினர் உருவகத் தாலே உணர்ந்துண ராது பலவகை யாகப் பரவிடும் பரம்பொருள் ஒன்றே; அதனியல் ஒளியுறும் அறிவாம்: அதனிலை கண்டார் அல்லலை அகற்றினுர்; அதனருள் வாழ்த்தி அமரவாழ்வு எய்துவோம்.
நூல் அச்சம் தவிர் ஆண்மை தவறேல் இளைத்தல் இகழ்ச்சி ஈகை திறன் உடலினை உறுதி செய் ஊண்மிக விரும்பு எண்ணுவது உயர்வு ஏறுபோல் நட ஐம்பொறி ஆட்சிகொள் ஒற்றுமை வலிமையாம் ஒய்தல் ஒழி ஒளடதம் குறை

Page 96
- 174 -
கற்றது ஒழுகு காலம் அழியேல்
கிளை பல தாங்கேல் கீழோர்க்கு அஞ்சேல் குன்றென நிமிர்ந்துநில் கூடித் தொழில்செய் கெடுப்பது சோர்வு கேட்டிலும் துணிந்துநில் கைத்தொழில் போற்று கொடுமையை எதிர்த்து நில் கோல்கைக் கொண்டு வாழ் கவ்வியதை விடேல் சரித்திரத் தேர்ச்சி கொள் சாவதற்கு அஞ்சேல் சிதையா நெஞ்சு கொள் சீறுவோர்ச் சீறு சுமையினுக்கு இளைத்திடேல் சூரரைப் போற்று செய்வது துணிந்து செய் சேர்க்கை அழியேல் சைகையில் பொருளுணர் சொல்வது தெளிந்துசொல் சோதிடந் தனையிகழ் செளரியம் தவறேல் ஞமலிபோல் வாழேல்
1 முயன்று தேடியதை

سس- 175 ----
ஞாயிறு போற்று Dமிறென? இன்புறு ஞெகிழ்வது? அருளில் ஞேயம் காத்தல் செய் தன்மை இழவேல் தாழ்ந்து நடவேல் திருவினை வென்றுவாழ் தீயோர்க்கு அஞ்சேல் துன்பம் மறந்திடு தூற்றுதல் ஒழி தெய்வம் நீ என்றுணர் தேசத்தைக் காத்தல்செய் தையலை4 உயர்வு செய் தொன்மைக்கு அஞ்சேல் தோல்வியில் கலங்கேல் தவத்தினை நிதம்புரி நன்று கருது நாளெல்லாம் வினைசெய் நினைப்பது முடியும் நீதி நூல் பயில் நுணியளவு செல் நூலினைப் பகுத்துணர் நெற்றி சுருக்கிடேல் நேர்படப் பேசு நையப் புடை
வண்டுபோல 3 திறம்புவது 4 பெண்ணை

Page 97
- 176 -
நொந்தது சாகும் நோற்பது கைவிடேல் பணத்தினைப் பெருக்கு பாட்டினில் அன்பு செய் பிணத்தினைப் போற்றேல் பீழைக்கு இடங்கொடேல் புதியன விரும்பு பூமி இழந்தி டேல் பெரிதினும் பெரிது கேள் பேய்களுக்கு அஞ்சேல் பொய்மை இகழ் போர்த்தொழில் பழகு மந்திரம் வலிமை மானம் போற்று மிடிமையில் அழிந்திடேல் மீளுமாறு உணர்ந்து கொள் முனையிலே8 முகத்துநில்? முப்பினுக்கு இடங்கொடேல் மேழி போற்று மொய்ம்புறத்* தவஞ்செய் மோனம் போற்று மெளட்டியந் தனக்கொல் யவனர்போல் முயற்சிகொள் யாரையும் மதித்து வாழ்
5 வறுமையில் தளராதே 6 போர்முனையில் 7 முன்னணியில் நில் 8 வீரம் அடைய

سنسے 177 س
யெளவனம் காத்தல் செய் ரஸத்திலே9 தேர்ச்சி கொள் ராஜஸம் 9 பயில் நீதி தவறேல் ருசி பல வென்றுணர் ரூபம் 1 செம்மை செய் ரேகையில் 2 கனி கொள் ரோதனம்?? தவிர் ரெளத்திரம் பழகு லவம் பல வெள்ளமாம் லாவகம் பயிற்சி செய் லீலை இவ்வுலகு (உ)லுத்தரை இகழ் (உ)லோகநூல் கற்றுணர் லெளகிகம் ஆற்று வருவதை மகிழ்ந்துண் வானநூற் பயிற்சி கொள் விதையினைத் தெரிந்திடு வீரியம் பெருக்கு வெடிப்புறப் பேசு வேதம் புதுமை செய்
வையத் தலைமை கொள்
வெளவுதல் * நீக்கு
9 சுவையுணர்வில் 10 வீரம் 11 வடிவம் 12 கொடிபோலும் பெண்ணில் 13 முணுமுணுத்தல் 14 உலகியல் 15 பிற்பொருளைக் கவர்தல்
叫一23

Page 98
அருஞ்சொற்பொருள் அகராதி
புறநானூற்றுப் பாடல் தொடக்கம், வில்லிபாரதம் வரை
உள்ளவை
Tuä. 3 – 44
அக்காரம் - சருக்கரை அடல் - அடக்குதல்
வெல்லுதல் அரில் - குற்றம் அவாய் - விரும்பி அட்டியும் - செய்தும் அனையள் - அத்தகைய
தன்மையை உடையவள் ஆகுலம் - துன்பம் ஆழி - சக்கரம் ஆர்கலி - ஒலிக்கின்ற கடல் ஆறு - வழி, நெறி ஆற்றல் - செய்தல் இசை - புகழ் இணைவிழைச்சு - பாலுறவு இறை - தலைவன், அரசன் ஈரம் - இரக்கம் உய்த்து - செலுத்தி என்னேற்ருன் -
என் + நோற்ருன், என்ன தவம் செய்தான்
ஏழ்புணர் - ஏழிசைகளாகிய குரல், துத்தம், கைக் கிளை, உழை, இளி, விளரி, தாரமாகிய இவற்றேடு சேர்ந்த ஒப்புரவு - உலகியலறிவு ஒறுத்தார் - தண்டித்தவர் ஒன்றே - ஒன்றுதானே ?
ஆயினும் ஆகுக கயக்கறுமாக்கள் - பற்று நீங்கிய சான்றேர் காமின் - விரும்புங்கள் கிழவன் - உரியவன்,
தலைவன் குறளை - கோட்சொல் கூர்த்த - மிகுதியான கூவல் - கிணறு கேண்மை - நட்பு கேளிர் - உறவினர் கொண்டி - செல்வம் கொன்னே - பயனில்லாது,
வீணுய்

- 179 ഞ
கோள் - கிரகம் சிகை - கவளம் சிறுபதம் - சிறிய அளவான
உணவு சுணங்கு - தேமல் சூழுங்கால் - ஆராய்ந்து பார்க்கும்பொழுது செறு - குற்றம் செறுநர் - பகைவர் செற்றம் - பகை சொல் - நெற்பயிர், நெல் தமியர் - தனித்தவர் நசை - குற்றம், விருப்பம் நடுஒரிஇ - நடுவுநிலைதவறி நாற்பால் - அரசர், அந்த
ணர், வணிகர், வேளா ளர் முதலான நான்கு வருணத்தார் தம - தமக்குரிய பொருள் தமர் - தம்மைச்சார்ந்த
நண்பர்
ஒரு குறிப்பு
தலைநிறீஇ - தலைநீக்கி நீர்த்தன்றி - நீர்த்து +
அன்றி, பண்பு இல்லாது பட்டாங்கு - நீதிநூல் பரவன் மின் - புகழாதீர் பாத்துண்பான் - பகிர்ந்து கொடுத்து உண்பவன் புணரி - கடல் பொன்றுந்துணையும்- இறக்
கும் வரையும் மது - தேன் மண்ணி - கழுவி மருமம் - மார்பு மல்க - பெருகுக மன்னும் - நிலைபெறும் வறங்கூரும் - வறுமை
அடையும் வாணுதல் - வாள் + நுதல், ஒளி பொருந்திய நெற்றி யையுடைய பெண் வியத்தல் - புகழ்தல் வெஃகன் மின் - விரும்பாதீர்
"யாதும் ஊரே யாவருங் கேளிர்" எனத் தொடங் கும் பாடல் (பக்கம் 6) கணியன் பூங்குன்றனர், என்ற
நல்விசைப் புலவராலே பாடப்பட்டது; 192 ஆம் பாடலாயுள்ளது.
புறநானூற்றின்

Page 99
- 180 -
வாக்குண்டாம்
அட்டால் - காய்ச்சினல் அளவு - துணை இல் - வீடு இறுவது - முறிவது இன்னு - துன்பம் ஈரம் - இரக்கம் உகத்தல் - விரும்புதல் உறுவார் - வருந்துகிறவர் ஊறல் - ஊற்று கயம் எ குளம் கயவர் - கீழோர் கரந்து - மறைந்து கரவு - வஞ்சனை கற்பு - கல்வி காமுறுதல் - விரும்புதல் குறடு - கட்டை குறைத்தல் - வெட்டுதல் கூற்றம் - எமன் சீரியர் . மேலோர் சீர்தூக்கின் - ஆராய்ந்தால்
ஒப்பிட்டால் தாள் - பாதம் திரு - செல்வம், சிறப்பு துப்பு - பவளம் தூறு - புதர்
தொல் உலகு - பழைய உல நஞ்சு - விஷம் Tash நன்றி - உபகாரம் நாழி - ஒரு படி நிதி - செல்வம் பண்டு - முன்பு பவம் - பிறப்பு பற்றலர் - பகைவர் பாங்கு - முறை புல்லறிவாளர் - அற்பபுத்தி
யுடையவர் பேராற்றல் மிக்க வல்லமை பொசிதல் . கசிதல் பொல்லா - அழகில்லாத மாசு - குற்றம் மாந்தர் - மனிதர் முகத்தல் - மொள்ளுதல்,
அளத்தல் முகப்பர் - விரும்புவர் முதுகாடு . சுடுகாடு மேனி - நிறம், உருவம் வடு - தழும்பு, குறி விடகாரி - விஷவைத்தியன் விண்டு - நீங்கி

- 181 -
நல்வழி
அமுதம் - பால் அம்புவி - பூமி அளிப்பர் - கொடுப்பர் ஆண்டு - வருஷம், அந்த இடும் பை - துன்பம் (இடம் இரு நிதியம் - பெருஞ் செல் இழுக்கு - குற்றம் (வம் உண்டி - ஆகாரம் உபாயம் - வழி ஏல் = ஏற்றுக்கொள் ஏற்றம் - பெருமை ஒண்ணுது - கூடாது ஒரு பொருள் - கடவுள் ஒறுத்தார் - தண்டித்தவர் ஒரம் - பட்ச பாதம் ஒவாமால் - விடாமல் கண்ணுறுதல் - கருதல் கமலம் - தாமரை கரி - யானை கற்ரு - கன்றையுடைய பசு காமுறுதல் - விரும்புதல் குரம்பை - கூடு கும்பை - பூமி கொம்மை - வட்டம் கோலம் - அழகு கோல் - அம்பு, ஈட்டி சமயம் = மதம்
சம்பு - ஒரு வகைப்புல் சால - மிகவும் சாற்று - சொல்லு சேடன் - பாம்பு தத்துவம் - உண்மை தாளாண்மை = முயற்சி திரு - செல்வம், அழகு,
இலட்சுமி, தெய்வத் தன்மை துங்கம் - சுத்தம், பெருமை துஞ்சுவது - துயிலல், து - சுத்தம் Taf mr.g5dio தேட்டம் - சம்பாத்தியம் தொடி - வளையல் நல்கூர்ந்தார் - தரித்திரர் நல்லார் - அறிஞர், மாதர் நீர்மை - தன்மை நீறு - விபூதி நெக்கு விடல் - பிளத்தல் நோ - துன்பம் பணி - தொழில் பாதாளமூலி - கறையான் பாரை - கடப்பாரை பார் - பூமி பாவித்தல் - மதித்தல் பாறை - கற்பாறை
பேதை - அறிவிலி

Page 100
- 182 -
பொறி - எழுத்து பொன்றுதல் - சாதல் போதம் - அறிவு மகிதலம் - பூமி மணி - இரத்தினம் மலி - மிகுந்த மன்று - சபை IGBartó) மாத்திரைக்கோல் - அளவு மாந்தர் - மனிதர் மேதினி - பூமி யாக்கை - கயிறு
வெறுமை - தரித்திரம் வண்மை - ஈகைத்தன்மை விண் - ஆகாசம் விண்டு - பிளந்து வேய் = மூங்கில் வேழம் - யானை வையகம் - பூமி பூமியின் பெயர்கள்:-
அம்புவி, குவலயம், பார் மகிதலம், மேதினி, வைய கம் வையம்,

ー183ー
நன்னெறி
அடல் - வெற்றி அரம்பை - வாழை அரவு - பாம்பு அல்கு - குறைந்த அவிர் - பிரகாசி அழல்கதிர் - சூரியன் இடர் - துன்பம் இழுது - நெய் இழை - ஆபரணம் ஈர்மை - குளிர்மை உகத்தல் - விரும்புதல் உழி - இடம் எயிறு - பல் எள் - இகழ் ஏறு - ஆண் சிங்கம் ஏனை - மற்ற ஒளி - கண்மணி கட்செவி - பாம்பு கணை - அம்பு கதிர் - பிரகாசம் கயவர் - மூடர் கலும்தல் - அழுதல் கலை - பங்கு கறை - களங்கம் காழ் - மரவயிரம் குழல் - கூந்தல் கைம்மாறு - பிரதிஉபகாரம் கோதை - பூமாலை
சிலை - கல்
சுரநீர் - கங்கை குருவளி - சுழல்காற்று செறி - நெருங்கு சேக்கை - படுக்கை தண்கதிர் - சந்திரன் தாழ் - தாழ்ப்பாள் திங்கள் - சந்திரன் திட்பம் - உறுதி துப்பு - வலிமை துன்று - நெருங்கு தோற்றம் - பிறவி நல்கு - கொடு நுதல் - நெற்றி, புருவம் பண் - இசை (சங்கீதம்) பலி - பூசை பனுவல் - தரும சாஸ்திரம் பிறிது - வேறு புகல் - சொல்லு புணை - தெப்பம் புயல் - மேகம் புள் - பட்சி புனைதல் - கட்டிச்சொல்லு பேறு - செல்வம் (வம் பொலி - பிரகாசி பொழில் - சோலை பொள்ளல் - துவாாம் மடவரல் - இளம்பெண்

Page 101
- 184 -
மண்டு - மிகு வாயில் - வழி, வாசல் மாசு - குற்றம் வியன் - பெரிய முகமன்-உபசார வார்த்தை விரவலர் - பகைவர் முளி = உலர் விழுமியோர் - மேலோர் முனிவு - கோபம், வெறுப்பு விள் - நீங்கு வண்ணம் - அழகு வீயும் - கெடும்
வரை - மலை வெள்ளம் - நீர்ப்பெருக்கு


Page 102


Page 103
நல்ல நகர்
* சொக்
தினகரனில் ே கட்டுரைகளின் நாவலர் பெருமானின் L3)si J2:lui GI0
! LL16ôT gD - GŵT
சண்முகநாதன்
ul III uplit
 
 

கன்
வெளியான
தொகுப்பு பல திறப்பட்ட த்ெதுரைக்கும் ள நூல்.
புத்தகசாலை T600Tid விலை ரூபா 1-50.