கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: அறநெறிச் செல்வம் (நீதி நூற் தொகுப்பு)

Page 1


Page 2

s
8
8 8
சுருவில்
1998

Page 3

ாடர் பாரு
அன்ன தெய்வாை
на пі л
U. " )
திதிவ்ெண்பா சீர்வெகு தானியச் சித்திரைத் தேம்பக்கஞ் சேர்நல் சதுர்த்தசியில் சென்றுற்றாள் - பார்புகழும் பெண்ணரசி தெய்வானைப் பேரெழிலாள் பீடாரும்
கண்மூன்றுடையான் கழல்.

Page 4

O Y பொருளடக்கம்
ஆத்திசூடி
கொன்றை வேந்தன்
வெற்றி வேற்கை (நறுந் தொகை)
உலக நீதி
முதுரை (வாக்குண்டாம்)
நல்வழி
நன்னெறி
SN
18
35
55
67
S5
1OS
ツ

Page 5

முன்னுரை
உலகம் நிலையாமையை அன்றாடம் விளக்கி நிற்கிறது. பொய்யான “வாழ்வின் நிஜங்களில்” மயங்கி நிற்போர்க்கு இவ்வுண்மை புலனாவது இல்லை.
நிஜமுணர்ந்து நித்தியம் பெற்றோர் இவ்வுலகில் மிகச்சிலரே. அங்ங்னமாய் உண்மை உணர்ந்து “நீத்தார்” பெருமையை
இறந்தாரை எண்ணியுணர்க என்பார் வள்ளுவர்.
மற்றையோர்க்கு, நெருங்கியார் மறைவின் போது இந்நிலையாமையின் நிச்சயம் மின்னல் கீற்றாய் மயங்கிய அறிவில் தோன்றி மறையும். கணமே தோன்றி மறையும் ஒளியாயினும் முற்றிருளில் மூழ்கிக் கிடக்கும் நம்போன்றோர்க்கு
அதுவே ஆத்ம தேடலின் தொடக்கமாம்.
மரணம் தரும் துன்பமே ஞானமாக, துன்பங்களிலிருந்து விடுபடவேண்டுமென மனம் விளையும். அறிவு அதற்காம் வழி ஆராயத்தலைப்படும். அவ்வாரய்ச்சியின் பயனாக இவ்வுலக இன்பங்களெல்லாம் எல்லைப்படுத்தப்பட்ட “சிற்றின்பங்களே’ எனும் உண்மை வெளிப்பட, நிலையான பேரின்பத்தில் விருப்புண்டாகும். அகங்காரம் (நான்) மமகாரம் (எனது) அற்ற வீட்டுநிலையே நிலைத்த இன்பம் எனும் உண்மை தெளியும். அதனால் அவ்வுண்மை நிலைக்கான பாதை தேடத் தலைப்படுவோம்.

Page 6
அங்ங்ணமாய்த் தேடத் தலைப்பட்டால்,
முத்திக்கான முதற்படி "அறவழி” நிற்றலே எனும் உண்மை புலனாகும். இதனையே,
"ஒழுக்கத்து நீத்தார் பெருமை விழுப்பத்து
வேண்டும் பனுவல் துணிவு” எனும் குறளில் வள்ளுவர் சுட்டுவார்.
அறவழிநிற்க பாவம் தேயும் பாவம் தேய அறியாமை நீங்கும். அறியாமை நீங்க நித்த அரித்தங்களது வேறுபாடு தோன்றும். அதனால் அழியும் இம்மை மறுமை இன்பங்களில் உவர்ப்பு உண்டாகி, பிறவித் துன்பங்கள் தோன்றும் அவை தோன்ற வீட்டின்”மேல் ஆசை உண்டாகும். அஃது உண்டாக பிறவிக்கு காரணமான பயனில் முயற்சிகள் நீங்கி, "வீட்டுக்கு ”காரணமான யோகமுயற்சிகள் உண்டாகும். அதனால் மெய்யுணர்வு பிறக்கும். அதன் பயனாய் புறப்பற்றாகிய "எனது”என்பதும் அகப்பற்றாகிய பான்”என்பதும் விடும் இவ்விரண்டும் விட "வீடு”கிட்டும். என முத்தி நோக்கிய பாதையில் அறத்தின் முதல் நிலையை இக்குறளூடு பரிமேலழகர் விளக்கம் செய்வார். அருளியளில் அறத்தின் அவசியம் இங்ங்னமாக உலகியலிலும் அவ்அறமே முதலாகிறது.
அஃதாராய்வாம்

இன்று அனைத்துத்துறைகளிலும் அறிவியல் உச்சம் எய்திய நிலை.
சிந்தனைக் கூறுகளை உள்வாங்கிய இயந்திரங்களோடு, இன்று விஞ்ஞானத்தின் வேகவளர்ச்சி.
எனினும் மனிதமனங்களில் அமைதி இல்லை. எங்கும் ஊழல் எதிலும் ஊழல். “திறமை", மற்றவர் வீழ்ச்சி பற்றியே திட்டமிடுகிறது.
தன்வாழ்வை விட மற்றவர் வீழ்விலேயே அனைவருக்கும் அக்கறை.
ஆதலால் வளர்ந்து வரும் அறிவியல் தேய்ந்து வரும் மானுடத்தால் மாசுண்டு போகிறது.
இந்நிலை மாற்ற வழி என்ன?
இன்று உலகெங்கும் "விஸ்வரூபம்’ எடுத்திருக்கும் கேள்வி இது.
"அறிவியலும்”“மானுடமும்” செம்மையுற்று உலகம் உய்யும் வழியென்ன?
அற எல்லைகட்குட்பட்டு அவற்றை வளரச்செய்வதே நிச்சயமான ஒரே வழி.
அற வரம்புகளுக்கு உட்பட்டால்,
அறிவு, ஆற்று நீராய் அனைவர்க்கும் பயன் செய்யும்
மானுடம் மாண்புறும்.
அறவரம்பு நிலைகுலையின், அதே அறிவு காட்டு வெள்ளமாய் கரைபுரண்டு கெடுப்பதே நோக்கமாய் கேடுறும். மானுடம் மடிந்து போம்.

Page 7
இவ்வுண்மை உணர அறம் உலகியலுக்கும் முதலாகும் நிலை முற்றாய் புலனாகும்.
எனவே இருமைக்கும் காரணமாம் அறத்தின் உயர்வு புரிய, இளம் தலைமுறையை அறநெறிப்படுத்தும் தேவை தெளிவாகிறது. புலனொடுக்கத்தால் “யோகக் காட்சி” பெற்ற துறவிகள் பலர் வாய்த்ததும்,
அப்பெரியோர் இது அறம் இது மறமென வாழ்வை வகுத்துத் தந்ததும் ,
வகுத்தவற்றை நூல்களாய், என்றும் நிலைக்கும் வண்ணம் இயம்பிப்போனதும்,
அங்ஙனமாய் அவர் இயம்பிய அறநூல்கள் இன்று வரை எம்மை வழிநடத்துவதும்,
நம் தமிழினம் செய்த பாக்கியம்.
நம் இனம் செய்த தவம். இப்பெரியோர் தந்த "அறநெறிச் செல்வமே” நம் தமிழினத்தின் தனிச்சொத்து.
இயற்கையோடு,
ஒத்த நிலையே அறம் ஒவ்வாநிலையே மறம் ஒத்தவரை இயற்கையே காக்கும் ஒவ்வாதவரை இயற்கையே அழிக்கும் நம் சந்ததி இயற்கையோடு ஒத்து என்றும் நிலைக்க ஒரே வழி
நம் மூதாதையர் தந்த "அற” வழியில் அவர்களை நடக்கச் செய்தலே.

அவ்வடிப்படையிலேயே "அறநெறிச் செல்வம்” எனும் இந் நூல் வெளியிடப்படுகிறது.
உண்மை உணர்ந்தால், சிறிதான இந்நூலின் பெருமை தெளிவாகும்.
பயன் கொள்ள வேண்டி நிற்கிறேன்.
தம் குலவிளக்காம் அன்னை தெய்வானை அம்மையார்
நினைவாகக் குடும்பத்தார் இப்பெரும்பணி இயற்றுகின்றனர்.
தாய்மைப் பண்புகளின் உறைவிடமாய் வாழ்ந்தவர் தெய்வானை அம்மையார் அவர்கள்.
அன்பு, அடக்கம், மற்றவர் வாழ்வில் அக்கறை இவையே அம்மையார் தம் அடிப்படை வாழ்வு.
தன்னை வெளிப்படுத்தாமல் “உப்பாய்” குடும்பத்துள் கரைந்து நின்றவர்.
சமையலில் உப்பைப் போலவே, குடும்பத்துள், அற்ற நிலையில் அவர் அவசியம் நன்கு உணரப்படுகிறது.
என்றும், எதையும் தனக்கென வேண்டி நிற்காத் தாயவர்.
அவர், பிறர் மனம் நோக பேசியதும் இல்லை வாழ்ந்ததும் இல்லை. - அத்தகு உத்தமி.

Page 8
அவர்தம் உணர்வுத் தூய்மை உறவுகளாய் இன்று உலகெலாம் விரிந்தபடி,
எங்கு விரியினும் கிளைகளும், இலைகளும் தாய்மரத்தின் தகுதிநினைந்த தவிப்பினால் கண்ணிரோடு. அது அன்பின் வெற்றி - அன்னையின் வெற்றியுமாம்.
அன்பு வேறு தாய் வேறா? அவ்வன்புத் தாயின் நினைவாய் இவ் அருவிருந்தை அன்போடு படைக்கின்றார் குடும்பத்தார்.
அவர்கள் எம்கம்பன் கழகத்தை ஆரம்பம் தொட்டு புரக்கும் அன்பின் வடிவங்கள்.
அவர் சார்பாய் இவ் அன்பு விருந்தேற்று அருள வேண்டி நிற்கின்றேன்.
"இன்பமே எந்நாளும் துன்பம் இல்லை”
அன்பன் இ. ஜெயராஜ்
அகில இலங்கைக் கம்பன் கழகம்

"ஆத்திசூடி என்பது, காரணப் பெயர். இந்நூலில் உள்ள கடவுள் வாழ்த்துப் பாடலின் தொடக்கத் தொடர் " ஆத்திப் பூமாலையை அணிந்த சிவன்” என்பது இத்தொடரின் பொருள்.
இது கடவுள் வாழ்த்து நீங்கலாக, நூற்று எட்டு ஒரடிச் செய்யுள்களைக் கொண்டது. எதுகை மோனை முதலிய தொடை அழகுகள் அமையப் பாடப்பெற்றது. பல பெரிய நூல்களில் உள்ள நீதிகளின் சாரங்கள் எல்லாம் மிகச் சிறிய தொடர்களில், அகர வரிசைப்படி, சிறுவர் பயின்று பயன் பெறும் வகையில் இயற்றப்பெற்றது.
ཡོད།
م
இந்நூலை இயற்றியவர் ஒளவையார் ஆவார் ܢܬ

Page 9
ஆத்திசூடி
காப்பு
ஆத்தி சூடி யமர்ந்த தேவனை ஏத்தி யேத்தித் தொழுவோம் யாமே.
ஆத்திப் பூமாலையை அணிபவராகிய சிவபெருமான் விரும்பிய விநாயகக் கடவுளை நாம் துதித்துத் துதித்து வணங்குவோம். (அமர்ந்த - விரும்பிய, தேவனை -
விநாயகக் கடவுளை)
 

நூல்
9Dfb6f 6f(5b. தருமத்தைச் செய்வதற்கு நீ ஆசைப்படு.
ஆறுவது சினம். தணியவேண்டுவது கோபமாகும்.
இயல்வது கரவேல். கொடுக்க முடிந்த பொருளை இரப்பவர்களுக்கு இல்லையென்று ஒழிக்காதே. (கரவேல் - மறைக்காதே)
ஈவது விலக்கேல். ஒருவர்க்கு மற்றொருவர் கொடுப்பதை இடையே நின்று தடுக்காதே. (ஈவது - கொடுப்பது)
உடையது விளம்பேல். உன்னிடத்து உள்ள பொருளைப் பிறர் அறியும் படி சொல்லாதே. (விளம்புதல் - சொல்லுதல்)
ஊக்கமது கைவிடேல். செய்யும் செயலில் மனத்துணிவைக் கைவிடாதே.
எண் எழுத்து இகழேல். கணித நூலையும் இலக்கண நூலையும் கல்லாமல் இகழ்ந்து தள்ளாதே.
ஏற்பது இகழ்ச்சி. ஒருவரிடத்தில் சென்று ஒரு பொருளை யாசிப்பது இழிவான செயல்.

Page 10
ஐயம். இட்டு உண். யாசிப்பவர்களுக்குக் கொடுத்து நீயும் உண்ணு. (ஐயம் - பிச்ச்ை
ஒப்புரவு ஒழுகு. உலக ஒழுக்கத்திற்குப் பொருந்த நட (ஒப்புரவு - உலக நடைமுறை)
ஒதுவது ஒழியேல். எப்பொழுதும் நூல்களைக் கற்பதைக் கைவிடாதே. (ஓதுவது - கற்பது)
ஒளவியம் பேசேல். பொறாமையான வார்த்தைகளைப் பேசாதே. (அவ்வியம் - பொறாமை)
அஃகம் சுருக்கேல்.
தானிய அளவை அதிக இலாபத்தைக் கருதிக் குறைக்காதே. (அஃகம் - தானியம்)
கண்டு ஒன்று சொல்லேல். கண்ணால் கண்டதுக்கு மாறாக வேறொன்றைச் சொல்லாதே.
ThisIG LITT6 606ID)6III. உயிர்மெய் எழுத்துக்களுள் நுகரம் போல உன் சுற்றத்தைத் தழுவு.
 

(ங்கர வரிசையில் உள்ள 12 எழுத்துக்களுள் நுகரம் ஒன்று மட்டுமே தமிழ் மொழிக்குப் பயன்படும். மற்றைய பதினோர் எழுத்துக்களும் மொழிக்குப் பயன்படுவதில்லை. எச்சொல்லிலும் அவ்வெழுத்துக்கள் வாரா. வாராவிடினும் நெடுங்கணக்கில் சேர்த்து எழுதுகின்றனர்.
ங்கரம் மட்டும், தான் பயனுடையதாய் இருந்து பயனற்ற மற்றைய பதினோர் எழுத்துக்களையும் தழுவிக் கொள்ளுதல் போல நீ பயனுடையவனாய் இருந்து, உன் சுற்றத்தார் பயனற்றவராயினும் ஆதாரித்துக் கொள்)
சனிநீர் ஆடு. சனிக்கிழமை தோறும் எண்ணெய் தேய்த்துக் கொண்டு நீரில் குளி.
(6b libLIL 2) _6OUT. கேட்பவர்களுக்கு இன்பம் உண்டாகும் படி பேசு. (ஞயம் - நயம் - இன்பம்)
SL libLIL 6i6 6TGEL 6i).
அளவுக்கு அதிகமாக இடம் இருக்கும் படி வீட்டைப் பெரிதாகக் கர்ட்டாதே.
இணக்கம் அறிந்து இணங்கு. நட்புக்குக் காரணமாகிய நட்குண நற்செய்கைகளை நன்கு அறிந்து பின் ஒருவரோடு நட்புச் செய்.

Page 11
தந்தை தாய் பேண். உன் தந்தையையும் தாயையும் போற்றிக் காப்பாற்று.
நன்றி மறவேல். ஒருவர் உனக்குச் செய்த நன்மையை எப்போதும் மறவாதே.
LI (56) j56835 LI LGJ LiI. தக்க காலத்தில் விளையும் பயிரை நீ பயிரிடு.
மன்று பறித்து உண்ணேல். நியாய சபைக்கு நீதி கேட்கவரும் மக்களிடம் பொருளை வலியப் பறித்து நீ சாப்பிடாதே.
(மன்று - நீதிமன்றம்)
இயல்பு அலாதன செயேல்.
இயற்கைக்கு மாறான செயல்களைச் செய்யாதே.
அரவம் ஆட்டேல். பாம்புகளைப் பிடித்து ஆட்டி விளையாடாதே.
இலவம் பஞ்சில் துயில். இலவம் பஞ்சினால் செய்த மெத்தையில் படுத்து உறங்கு.
வஞ்சகம் பேசேல். கபடமான வார்த்தைகளை யாரிடமும் பேசாதே.
 

அழகு அலாதன செயேல். ஒழுங்கில்லாத செயல்களை நீ ஒருபோதும் செய்யாதே.
இளமையில் கல். இளம் வயதிலேயே கல்வியைக் கற்றுக் கொள்.
அறனை மறவேல். அறச் செயல்களைச் செய்ய மறவாதே.
அனந்தல் ஆடேல். மிகுதியாக நித்திரை செய்யாதே. (அனந்தல் - உறக்கம்)
கடிவது மற. ஒருவரைப்பார்த்துக் கோபத்துடன் பேசுவதை மறந்து விடு.
காப்பது விரதம். பிற உயிர்களுக்குத் தீங்கு செய்யாதுகாப்பாற்றுவதே உயர்ந்த விரதமாகும்.
p60)IDIL 6)TD. உன்னுடைய உடல் பொருள் எல்லாம் பிறர்க்குப் பயன்படும் படி வாழ்ந்திரு. (கிழமைப்படுதல் - பயன்படுதல்)

Page 12
கீழ்மை அகற்று. இழிந்த குணத்தை நீக்கி விடு.
குணமது கைவிடேல். உயர்ந்த குணத்தைக் கைவிடாதே.
Jin 12 s1 ff Cult). நல்லவரோடு நட்புச் செய்து பின் அவரை விட்டுப் பிரியாதே.
கெடுப்பது ஒழி. பிறர்க்குத் தீமை செய்வதை விட்டு விடு.
கேள்வி முயல். கற்றோர் சொல்லும் நல்ல சொற்களைக் கேட்பதற்கு முயற்சி செய்.
கைவினை கரவேல். கற்ற கைதொழிலைப் பிறர்க்குத் தெரியாமல் ஒளிக்காதே. (கைவினை - கைத்தொழில்)
கொள்ளை விரும்பேல். பிறருடைய பொருளைக் கவர்வதற்கு
ஆசைப்படாதே.
கோது ஆட்டு ஒழி. குற்றம் பொருந்திய விளையாட்டை விட்டு விடு.
(கோது - குற்றம்)
 

சக்கர நெறிநில்.
அரசு விதிகளுக்கு அடங்கி நட (சக்கரம் - ஆணைச் சக்கரம்; அரசு விதி)
சான்றோர்இனத்து இரு. அறிஞர்கள் கூடியுள்ள கூட்டத்தில் நீ சேர்ந்திரு.
fjjJÍ EII($J6ð. பொய்யான வார்த்தைகளை மெய்போலப் பேசாதே. (சித்திரம் - பொய்ச் சொற்கள்.)
சீர்மை மறவேல். புகழுக்குக் காரணமான நல்ல செயல்களைச் செய்ய மறவாதே.
சுளிக்கச் சொல்லேல். கேட்பார் உள்ளம் வருந்தும் படி ஒன்றையும் பேசாதே.
தது விரும்பேல்.
பொருளுக்கு அழிவு வரும் சூதாடுதலை ஒருபோதும் விரும்பாதே.
6JFLİ660T jßhjhj (6 JuliI. செய்யும் செயல்களைச் செம்மையாகச் செய்.
6JfLib 95jhg5 (Jf.
சேரத்தக்க நல்ல இடத்தை ஆராய்ந்து அறிந்து சேர்ந்து கொள்.

Page 13
சை எனத் திரியேல். பிறர் உன்னைச் சீ என வெறுக்கும்படியாகத் திரியாதே.
GJI) (J6) ( ). நீ பிறரோடு பேசும் சொற்களில் தளர்ச்சி ஏற்படுமாறு பேசாதே.
(FIIstij, f(LI6t). நீ செய்ய வேண்டிய முயற்சியை உடனுக்குடன் செய்யாமல் சோம்பேறியாகத் திரியாதே.
தக்கோன் எணத்திரி. உன்னைப் பிறர் சான்றோன் எனக் கூறும்படி நடந்து கொள்.
தானமது விரும்பு. தக்கவர்க்குத் தானம் செய்தலை விரும்பு
திருமாலுக்கு அடிமை செய். காக்கும் கடவுளாகிய நாராயணமூர்த்திக்குத் தொண்டு செய்.
தீவினை அகற்று.
பாவச் செயல்களைச் செய்யாமல் விலக்கு.
துன்பத்திற்கு இடம் கொடேல். வருத்தத்தை உண்டாக்கக் கூடிய செயலுக்கு இடம்
கொடாதே.
 

தாக்கி வினைசெய்.
தொடங்குவதற்கு முன் நன்றாக ஆராய்ந்து பார்த்து ஒரு வேலையை முடியச் செய்.
தெய்வம் இகழேல். கடவுளை தாழ்த்திப் பேசாதே.
தேசத்தோடு ஒத்துவாழ். உன் நாட்டில் வாழ்பவருடன் பகையின்றிப்பொருந்தி வாழ்.
தையல் சொல் கேளேல். உன் மனைவி சொல்வதை எல்லாம் ஆராயாது அப்படியே கேட்டு நடவாதே.
தொன்மை மறவேல். பழமையான நட்பினரை மறந்து விடாதே
தோற்பன தொடரேல். தோல்வி அடையக் கூடிய செயல்களில் ஈடுபடாதே.
நன்மை கடைப்பிடி. நன்மை செய்தலை உறுதியாகப் பின்பற்று.
நாடு ஒப்பனசெய். உன் நாட்டினர் பலரும் ஏற்றுக் கொள்ளக் கூடிய
செயல்களைச் செய்.

Page 14
நிலையிற் பிரியேல். உன்னுடைய உயர்ந்த நிலையினின்று ஒருபோதும் தாழ்ந்து விடாதே.
st 6,6061TuIII (6L6). ஆழமும் சுழலும் உள்ள நீரில் நீத்தி விளையாடாதே.
நுண்மை நகரேல். நோய் தரும் பொருந்தாத உணவுகளை உண்ணாதே.
நூல்பல கல்.
அறிவைத் தருகின்ற நூல்கள் பலவற்றைக் கற்றுக் கொள்.
Gbsbuff 660)6. நெற்பயிரை மிகுந்த முயற்சி செய்து விளையப் பண்ணு.
நேர்பட ஒழுகு. ஒழுக்கம் தவறாமல் நேரிய வழியில் நட
நைவினை நணுகேல். பிறர் துன்புறத்தக்க தீவினைகளைச் செய்யாதே.
நொய்ய உரையேல். பயனற்ற அற்ப வார்த்தைகளைப் பேசாதே.
நோய்க்கு இடம்கொடேல். வியாதி உன்னை அணுக இடம் கொடாதே.
 

பழிப்பன பகரேல். பெரியோர்களால்பழிக்கப்படும் இழிந்த சொற்களைப் பேசாதே.
LITTb6 LITT 6 Iup G366). பால் கொடுத்தவர்க்கும் நஞ்சைக் கொடுக்கின்ற பாம்பு போன்ற கொடியவர்களுடன் பழகாதே.
பிழைபடச் சொல்லேல். சொல்லும் சொற்களில் குற்றம் உண்டாகும் படி ஒன்றையும் சொல்லாதே.
பீடு பெற நில். பெருமை பெறும்படி நல்ல வழியிலே நில்.
புகழ்ந்தாரைப் போற்றி வாழ். உன் பெருமையைப்பேசியவரை ஆதரித்து வாழ்ந்திடு
பூமி திருத்தி உண். உன் விளை நிலத்தை உழுது பயிர் செய்து உண்.
பெரியாரைத் துணைக் கொள். அறிவிற் சிறந்த சான்றோரை உனக்குத் துணையாக ஆக்கிக் கொள்.
பேதைமை அகற்று. அறியாமையைப் போக்கி விடு.

Page 15
பையலோடு இணங்கேல். அறிவில்லாத சிறுபிள்ளைகளோடு சேராதே. (பையல் - சிறு பையன்)
GITIOGil J560601 (SIT)0)IT). செல்வத்தை வீண் செலவு செய்யாமல் பாதுகாத்து 6ւյTԱg.
போர்த் தொழில் புரியேல். யாருடனும் சண்டையாகிய தொழிலைச் செய்யாதே.
மனம் தடுமாறேல். எதனாலும் உள்ளம் கலங்காதே.
மாற்றானுக்கு இடம் கொடேல். உன் பகைவன் அவன் நினைத்தபடி உன்னிடம் செயற்பட இடம் கொடாதே.
மிகைபடச் சொல்லேல். சுருங்கச் சொல்லாமல் சொற்கள் மிகுதிபடும் படியாகப் பேசாதே.
மீதாண் விரும்பேல். செறிக்கும் அளவுக்கு மேல் அதிகமாக உண்ணுதலை விரும்பாதே.
முனை முகத்து நில்லேல். போர் முனையில் முன் போய் நில்லாதே.
 

மூர்க்கரோடு இணங்கேல். கொடுங் குணம் உள்ளவர்களுடன் நட்புச் செய்யாதே.
மெல்லினல்லாள் தோள்சேர். மெல்லிய தன்மை உடைய உன் மனைவியாகிய பெண்ணினுடைய தோள்களையே கூடிவாழ்.
மேன்மக்கள் சொல்கேள். பெரியோருடைய சொல்லைக் கேட்டு நட.
. மைவிழியார் மனையகல்.
மை தீட்டிய கண்களை உடைய வேசியர் வீட்டை
அணுகாமல் விலகிப் போ.
மொழிவது அறமொழி. சொல்லப்படும் பொருளைக் கேட்போருக்கு ஐயம் நேராதவாறு சொல்லு,
மோகத்தை முனி. நிலையற்ற பொருள்களின் மீது கொள்ளும் ஆசையை வெறுத்து விடு.
வல்லமை பேசேல். உன்னுடைய சாமர்த்தியத்தைப் பிறரிடம் புகழ்ந்து பேசாதே.

Page 16
வாது முன் கூறேல். வாதிடும் சொற்களைப் பெரியோர் முன்நிலையில் முற்பட்டுப் பேசாதே.
. வித்தை விரும்பு.
கல்வியைக் கற்க ஆசைப்படு.
வீடு பெற நில். மோட்சத்தைப் பெறும் படி அதற்கான ஞானவழியில் நிலைத்திரு.
. உத்தமனாய் இரு.
உயர்ந்த குணங்களை உடையவனாக வாழ்ந்திடு.
. O6IhL6ÖT Jim I26)ITI).
ஊர்மக்களுடன் இன்ப துன்பங்களில் கலந்து வாழு.
. G6)6L60I (1636).
கத்திவெட்டைப் போல யாருடனும் கடினமாகப்
பேசாதே.
. வேண்டி வினைசெயேல்.
விரும்பி ஒருவனுக்கு தீமையைச் செய்யாதே.
 

வைகறைத் துயில் எழு. விடியற் காலத்தில் உறக்கத்தை விட்டு எழுந்திரு.
ஒன்னாரைத் தேறேல். பகைவர்களை ஒருபோதும் நம்பாதே.
ஒரம் சொல்லேல். யாதொரு வழக்கிலும் ஒரு சார்பாகப் பேசாதே.
(ஒரம் - நடு நிலைமை இன்மை)

Page 17
கொன்றை வேந்தன்
“கொன்றை வேந்தன்” என்பது, காரணப் பெயர். இந்நூலில் உள்ள கடவுள் வாழ்த்துப் பாடலின் தொடக்கத் தொடர். "கொன்றைப் பூமாலையைச் சூடிய சிவன்” என்பது இத்தொடரின் பொருள். “கொன்றை வேய்ந்தோன்’ (வேய்ந்தோன் - சூடியவன்) என்பது, இந்நூலின் முன்னைய பெயர். அது மருவி "கொன்றை வேந்தன்” என ஆகி விட்டது.
இது கடவுள் வாழ்த்து நீங்கலாக91ஓரடிச் செய்யுள்களைக் கொண்டது. "ஆத்திசூடியினும்” சற்றுப் பெரிய சொற் தொடர்களால் அமைந்தது. "ஆத்திசூடியில்” மெய் எழுத்து 18 க்கும் பாடிய ஆசிரியர், “கொன்றை வேந்தனில்’ அதைச் செய்யவில்லை. "ஆத்திசூடியில்” பாடாத “கெள” எனும் உயிர் மெய் எழுத்துக்குக் "கொன்றை வேந்தனில்” இடமளித்துப் பாடியுள்ளார். ஆதலால் "ஆத்திசூடியை” விட இதில் 17 பாடல் குறைவாக உள்ளன.
இந்நூலை இயற்றியவர் ஒளவையார் ஆவார்.
 

கொன்றைவேந்தன்
காப்பு
கொன்றைவேந்தன் செல்வன் அடி இணை
என்றும் ஏத்தித் தொழுவோம் யாமே.
கொன்றைப் பூமாலையை அணிந்த சிவபெருமானுக்குப் புதல்வராகிய விநாயகக் கடவுளுடைய இரண்டு திருவடிகளையும் நாம் எப்போதும் துதித்து வணங்குவோம்.

Page 18
நூல்
அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம். தாயும் தகப்பனும் முதலில் அறியப்பட்ட தெய்வங்கள் ஆவார்கள்.
ஆலயம் தொழுவது சாலவும் நன்று. கோயிலுக்குச் சென்று இறைவனை நாள்தோறும் வணங்குவது மிகவும் நல்லது.
இல்லறம் அல்லது நல்லறம் அன்று. நல்லமனைவியோடு கூடி வாழும் இல்லறமானது நல்ல அறமாகும். துறவறமோ எனில், எழிதில் செய்ய முடியாததால் நல்ல அறம் அன்று.
ஈயார் தேட்டைத் தீயார் கொள்வர். வறியவர்க்குக் கொடாதவர் தேடிய செல்வத்தைக் கள்ளவர் முதலிய கொடியோர் அபகரிப்பர்.
உண்டி சுருங்குதல் பெண்டிர்க்கு அழகு. உணவைக் குறைத்து உண்ணுதல் பெண்களுக்கு அழகாகும்.
ஊருடன் பகைக்கின் வேருடன் கெடும்.
ஊராருடன் இணைந்து வாழாது பகைத்துக் கொள்வான் ஆயின், அவன் அடியோடு கெட்டழிவான்.
 

எண்ணும் எழுத்தும் கண்ணெனத் தகும். கணிதமும் இலக்கணமும் மாந்தர்க்கு இரண்டு கண்கள் என்று சொல்லத் தகும்.
GJ6)II ID35356íT elp6)IT ID(5.jjI. பெற்றோர்கள் கட்டளை இட்ட பின்னர்ச் செய்யாது தாமாகவே குறிப்பறிந்து முன்னதாகச் செய்யக்கூடிய மக்கள், அப்பெற்றோர்க்கு என்றும் முதுமையைத் தராத அமிழ்தமாவர்.
auIb II56)IIb செய்வன் செய். பிச்சை எடுத்தாலும் செய்ய வேண்டிய நல்ல செயல்களை விடாது செய்.
ஒருவனைப் பற்றி ஓர் அகத்து இரு. நல்ல குணமுள்ள ஒருவனைத் துணையாகப் பற்றிக் கொண்டு ஒரு வீட்டிலேயே நிலையாக வாழ்ந்திரு.
ஒதலின் நன்றே வேதியர்க்கு ஒழுக்கம். பிராமணர்க்கு வேதம் ஒதுவதைக் காட்டிலும் நல்ல ஒழுக்கமே மேலானது.
ஒளவியம் பேசுதல் ஆக்கத்திற்கு அழிவு. ஒருவன் பொறாமையான சொற்களைப் பேசுதல், அவனுடைய செல்வத்திற்கு அழிவைத் தருவதாகும்.
அஃகமும் காசும் சிக்கெனத் தேடு. தானியத்தையும் பணத்தையும் வீண்செலவு செய்யாமல் சம்பாதி.

Page 19
கற்பெணப் படுவது சொற்றிறம் பாமை. பெண்களுக்குக் கற்பு என்று சொல்லப்படுவது பெற்றோரும், கணவனும் தங்களுக்குக் கற்பித்த சொல்லைத் தவறாமல் பின்பற்றி நடப்பதாகும்.
காவல் தானே பாவையர்க்கு அழகு. கற்புக்குக் கேடு வராமல் தங்களைத் தாங்களே காத்துக் கொள்வது பெண்களுக்கு அழகாகும்.
dÊLLIT 57TUî6ÖI (66)III (6L6OT ID). விரும்பிய ஒரு பொருள் கிடையாமல் போனால் விரைவில் அப்பொருளை மறந்து விடு.
கீழோராயினும் தாழ உரை. கேட்பவர் உன்னிலும் தாழ்ந்தவராயினும் அவருடன் பணிவான சொற்களையே பேசு.
குற்றம் பார்க்கின் சுற்றம் இல்லை. குற்றத்தையே ஆராய்ந்து பார்த்தால், நல்ல் சுற்றத்தார் ஒருவரும் இலராவர்.
கூர் அம்பு ஆயினும் வீரியம் பேசேல். உன் கையில் இருப்பது கூர்மையான அம்பாய் இருந்தாலும், உன் வீரத்தன்மையை வியந்து பேசாதே.
கெடுவது செய்யின் விடுவது கருமம். உன் நண்பன் கெடுதலைச் செய்வான் ஆயின் அவன் நட்பை விட்டு விலகுவதே நல்ல செயலாகும்.
 

கேட்டில் உறுதி கூட்டும் உடைமை.
செல்வத்தை இழந்த காலத்திலும் மனம் தழராது இருப்பது, மீண்டும் செல்வத்தை உண்டாக்கும்.
கைப்பொருள் தன்னின் மெய்ப் பொருள் கல்வி. கையில் கிடைத்த செல்வத்தைப் பார்க்கினும்
உண்மைப் பொருளாவது கல்வியே ஆகும்.
கொற்றவன் அறிதல் உற்றிடத்து உதவி. அரசன் அறிமுகமாகி இருப்பது தனக்குத் தீங்கு நேர்ந்த இடத்து ஒருவனுக்கு பெரிய உதவியாகும்.
கோள் செவிக் குறளை காற்றுடன் நெருப்பு.
புறங்கூறுதலை விரும்பிக் கேட்பவனிடம் கோள் சொற்களை வலிந்து சொல்லுதல் காற்றோடு சேர்ந்த நெருப்பு போலாகும். (குறளை - புறங்கூறுதல்)
கெளவை சொல்லின் எவ்வருக்கும் பகை. பிறர் மீது ஒருவன் பழிச் சொற்களைச் சொல்வான் ஆயின், அவன் எல்லார்க்கும் பகைவன் ஆவான். (கெளவை - பழிச்சொல், எவ்வருக்கும் - எவருக்கும்)
சந்ததிக்கு அழகு வந்தி செய்யாமை.
தன் குடும்பம் பெருகுதற்கு அழகாவது, தன் மனைவியை மலடியாக்காமல் அவள்ளோடு கூடி
வாழ்தலாம். (வந்தி - மலடி)

Page 20
சான்றோன் என்கை ஈன்றோட்கு அழகு. தன் மக்களை அறிஞர்கள் என்று பிறர் சொல்லக் கேட்பது, பெற்ற தாய்க்கு அழகாம்.
சிவத்தைப் பேணின் தவத்திற்கு அழகு. ஒருவன் பரமசிவனை வழிபட்டால் அதுவே அவன் செய்யும் தவத்திற்கு அழகாகும்.
சீரைத் தேடின் ஏரைத் தேடு. நலத்தை உனக்குத் தேடுவாய் ஆனால், உழுது பயிரிடும் தொழிலை மேற் கொள்ளு.
சுற்றத்திற்கு அழகு சூழ இருத்தல். உறவினர்க்கு அழகாவது அவர்களுடன் கலந்திருந்து வாழ்தலாம்.
ததும் வாதும் வேதனை செய்யும். சூதாடுதலும் விதாண்டாவாதம் பேசுதலும் வருத்தத்தை உண்டாக்கும்.
செய்தவம் மறந்தால் கைத்வம் ஆளும்.
ஒருவன் செய்யும் தவத்தை மறந்தானானால் அவனை அறியாமையாகிய மாயை அடிமை கொண்டுவிடும்.(கைதவம்-பொய்யாகிய அறியாமை)
(8JID) LJf60Db LIITTIDjJI 0 0 hiljö. காவல் தொழிலை மேற்கொண்டிருந்தாலும் நடு இரவில் உறக்கம் கொள்ளு.
 

சை ஒத்து இருந்தால் ஐயம் இட்டுண். ஈட்டிய பொருள் உனக்கு உதவியாக இருந்தால் ஏழைகளுக்குப் பிச்சை இட்டு நீயும் உண்டு வாழ். (சை - பொருள்)
சொக்கர் என்பவர் அத்தம் பெறுவர். பொன்னுடையார் என்று சொல்லப்படுபவர் மற்றறைய அறமும் இன்பமுமாகிய உறுதிப் பொருள்களை எளிதில் அடைவர். (சொக்கர் - பொன்னை உடையவர், அத்தம் - அறமும் இன்பமும்)
(JTibLIŤ 6T6öIII6)IŤ (835íbLfij5 jBTf6)|Ť. சோம்பல் என்று சொல்லி சும்மா இருப்பவர் வறுமையால் வாடிப் பிச்சை எடுத்து அலைவர்.
தந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை. தகப்பன் சொல்லுக்கு மேற்பட்ட நன்மையைத் தரும் மந்திரமாவது வேறு இல்லை.
தாயிற் சிறந்து ஒரு கோயிலும் இல்லை. அன்னையைக் காட்டினும் சிறப்புப் பொருந்திய ஓர் ஆலயமும் இல்லை.
திரைகடல் ஓடியும் திரவியம் தேடு. அலைகளை உடைய கடலிலே கப்பல் ஏறிப் பிறநாடுகளுக்குச் சென்றாயினும் பொருள்ை நிரம்பத் தேடு.

Page 21
JTjh (GJITLI GLEITJTTİ upI? ULI). தணியாத கோபமானது, பின்பு பெரிய சண்டையாகி விடும்.
JIQUIITTI 6 LI6ðÖTIQÍ IDIQUî6ÕI 6hb II. தம் கணவருக்குத் துன்பம் வந்த போது, அதனைக் கண்டு மனம் பதறாத பெண்டிர், கணவர்க்கு மடியில் கட்டிக்கொண்ட நெருப்பாவர்.
தாற்றும் பெண்டிர் கூற்றெனத் தகும். தம் கணவர் மீது பழி சொல்லித் தூற்றுகின்ற பெண்களை, அவருக்குக் கூற்றுவன் என்று சொல்லத் தகும்.
தெய்வம் சீறின் கைதவம் மாளும். தெய்வமானது ஒருவனைக் கோபித்தால் அவன் இதுவரை முயன்று பெற்ற தவமும் பயன் தராது அழிந்து போகும்.
(Sj5LTj 9Isä56öT IITI Ti (pI9us.
ஒருவன் மெய்யை வருத்திப்பொருள் சம்பாதிக்காது, இருக்கின்ற பொருளைச் செலவழித்தால், பின்னர் அது அவனுக்குத் துன்பமாக முடியும். (பாடு - துன்பம், வருத்தம்)
தையும் மாசியும் வை அகத்து உறங்கு. தை மாதத்திலும் மாசி மாதத்திலும் பணியால் வருந்தாமல் இருக்க, வைக்கோலால் வேய்ந்த கூரை வீட்டில் உறக்கம் கொள்ளு. (வை - வைக்கோல்)
 

தொழுது ஊண் சுவையின் உழுது உளண் இனிது. ஒருவரை வணங்கி அவர் கொடுக்கும உணவை வாங்கி உண்பதைப் பார்க்கினும், உழுது பயிர் செய்து அதனால் வரும் உணவை உண்பது மிக்க இனிமை உடையதாகும்.
தோழனோடும் ஏழைமை பேசேல். உனக்கு சிறந்த நண்பனாயினும் அவனிடத்து உன்வறுமையைச் சொல்லாதே.
நல்லிணக்கம் அல்லது அல்லல் படுத்தும். நல்ல சேர்க்கை இல்லாத கெட்டவர் தொடர்பு துன்பத்தையே கொடுக்கும்.
நாடெங்கும் வாழக் கேடொன்றும் இல்லை. நாடு முழுவதும் செழித்திருக்குமானால் யாருக்கும் ஒரு கெடுதியும் இல்லை .
நிற்கக் கற்றல் சொல்திறம் பாமை. கல்வி நிலைத்துப் பொருந்தும் படி கற்றலாவது, தான் சொல்லும் சொற்களில் பிழை ஏற்படாமையாம். (திறம்பாமை - தவறாமை)
நீரகம் பொருந்திய ஊரகத்து இரு. நீர்வளப்பம் தனக்குள்ளேயே பொருந்திய ஊரினிடத்தே. குடியிரு.

Page 22
நண்ணிய கருமமும் எண்ணித் துணி. சிறிய செயலையும் நன்கு ஆலோசித்துப் பின் செய்யத் துணிவு கொள்.
நூல்முறை தெரிந்து சீலத்து ஒழுகு. நீதி நூல்களில் சொல்லி உள்ள விதிமுறைகளை நன்கு அறிந்து, நல்லொழுக்க வழியைப் பின்பற்று.
நெஞ்சை ஒளித்து ஒரு வஞ்சகம் இல்லை. நம்முடைய மனத்துக்குத் தெரியாமல் மறைக்கப்பட்ட வஞ்சகம் யாதொன்றும் இல்லை.
நேரா நோன்பு சீர் ஆகாது.
மனத்திற்கு பொருந்தாத தவமானது, செம்மையாக நிறைவேறாது.
நைபவர் எனினும் நொய்ய உரையேல்.
கேட்பவர் மறுவார்த்தை கூறாமல் வருந்துவோர் ஆயினும், அவரிடத்தும் கீழான சொற்களைச் சொல்லாதே. (நைபவர் - வருந்துபவர், நொய்ய -
இழிவான)
நொய்யவர் என்பவர் வெய்யவர் ஆவர். பார்வைக்குச் சிறியவர் என்று சொல்லப்படுவோரும், தாம் செய்யும் செயலால், உயர்ந்தோரால் விரும்பப்படுபவர் ஆவர். (வெய்யவர் - விரும்பப்படுபவர்)
 

நோன்பு என்பதுவே கொன்று தின்னாமை. தவம் என்று சொல்லப்படுவது, யாதொரு உயிரையும் கொன்று, அதன் ஊனைத்தின்னாமல் இருத்தலாம்.
I6)I60f I LIuifiab I60I60fuID Gigi flui). ஒருவன் செய்த பயிர் நன்கு விளைவதனாலும் விளையாமையாலும் அவனிடத்தில் இருக்கும் புண்ணியத் தன்மை அறியப்படும்.
பாலோடு ஆயினும் காலம் அறிந்து உண். பாலோடு கலந்த சோறாயினும் பசிக்கும் வேளை அறிந்து அதனை உண்.
பிறர் மனை புகாமை அறம் எனத் தகும்.
பிறனுடைய இல்லாள் இடத்து ஆசை வைத்துச் செல்லாமையே உயர்ந்த அறம் என்று சொல்லத்
தகுதியுடையதாகும்.
iTID (860Of II TIUJh JóITńIJD. தாய்ப்பாலை நிரம்ப உண்டு வளர்ந்தவன், பெரும்பாரத்தைச் சுமக்க வல்லவன் ஆவான். (பீர்தாய்ப்பால்)
புலையும் கொலையும் களவும் தவிர்.
ஊன் உண்ணுவதையும், பிற உயிர்களை
கொல்லுவதையும், பிறர் பொருளை திருடுதலையும் செய்யாது நீக்கி விடு.

Page 23
பூரியோர்க்கு இல்லை சீரிய ஒழுக்கம். கீழ்மக்களுக்கு மேலான நடக்கை உண்டாவதில்லை. (பூரியோர் - கீழ் மக்கள்)
பெற்றோர்க்கு இல்லை சுற்றமும் சினமும். மெய்யுணர்வினைப் பெற்றவர்க்கு உற்றார் மேல் ஆசையும், அயலார் மேல் வெகுளியும் இல்லை.
பேதைமை என்பது மாதர்க்கு அணிகலம். தெரிந்தும் தெரியாதவர்போல் அடங்கி இருக்கும் குணமானது, பெண்களுக்கு ஆபரணமாகும். (பேதைமை - அறியாமை)
பையச் சென்றால் வையம் தாங்கும். அமைதியாக ஒருவர் மற்றையோரிடம் நடந்து கொள்வார் ஆனால், துன்பம் ஏற்பட்ட காலத்து உலகத்தார் அவரைத் தாங்குவர்.
பொல்லாங்கு என்பவை எல்லாம் தவிர். தீமைகள் என்று சொல்லப்படுபவை யாவற்றையும் செய்யாது நீக்கி விடு. (பொல்லாங்கு - தீமை)
போனகம் என்பதுதான் உழந்து உண்டல். உணவு என்று சொல்லப்படுவதுதான் மெய்வருந்திச் சம்பாதித்து உண்ணுதலாம். (போனகம் - போசனம் - உணவு)
மருந்தே ஆயினும் விருந்தோடு உண். உண்பது கிடைத்தற்கரிய அமிழ்தமே ஆயினும், தனியே உண்ணாமல் விருந்தினர்களோடு கலந்து உண்ணு. (மருந்து - அமிழ்தம்)
 

மாரி அல்லது காரியம் இல்லை. மழை பெய்யாதாயின் உலகில் யாதொரு காரியமும் நடப்பது இல்லை. (மாரி - மழை)
மின்னுக்கு எல்லாம் பின்னுக்கு மழை. வானத்திலே தோன்றும் மின்னலுக்கு எல்லாம் பின்னே மழை உறுதியாகப் பெய்யும். (மின்னுக்கு - மின்னலுக்கு.)
மீகாமன் இல்லா மரக்கலம் ஓடாது. தன்னைச் செலுத்தத்தக்க மாலுமி இல்லாத கப்பல், கடலில் ஓடாது. (மீகாமன் - கப்பல் ஒட்டி, மாலுமி.)
முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும். ஒரு நாளின் முன்பகுதியில் பிறனுக்குத் தீங்கு செய்யின், அவ்வாறு செய்தவனுக்கு அந்நாளின் பின்பகுதியிலே அத்தீங்கு தானே உண்டாகும்.
மூத்தோர் சொன்ன வார்த்தை அமிர்தம். கல்வி அறிவில் சிறந்த முதியோர் சொன்ன வார்த்தையானது, அமிழ்தம் போல இன்பம் செய்யும்.
மெத்தையில் படுத்தல் நித்திரைக்கு அழகு. பஞ்சணையில் படுத்தலானது, ஒருவன் செய்கிற உறக்கத்திற்கு அழகாகும்.
மேழிச் செல்வம் கோழை படாது. ஏர்த்தொழிலால் வரும் செல்வமானது, ஒருகாலத்தும் தாழ்வை அடையாது. (மேழி - கலப்பை, கோழை - குறைவு

Page 24
மைவிழி யார்தம் மனை அகன்று ஒழுகு. மை பூசிய கண்கள் உடைய பரத்தையரது வீட்டினை நெருங்காமல் விலகிச் செல்,
மொழிவது மறுக்கின் அழிவது கருமம். உயர்ந்தோர் சொல்வதைக் கேளாமல் நடந்தால், ஒருவன் செய்யும் தொழில் கெடுவது திண்ணம்.
(DTI60TD 6166135i (GT60 வரம்பு. உண்மை மெய்ஞ்ஞானத்திற்கு எல்லையாவது,
மெளன நிலையாகும்.
வளவன் ஆயினும் அளவு அறிந்து அழித்து 9 60I. செல்வத்தில் சோழனுக்கு நிகரானவனாக நீ இருந்தாலும், பொருள் வருவாயின் அளவினை அறிந்து, அதற்கேற்பச் செலவழித்து அனுபவி. (வளவன் - சோழன்)
வானம் சுருங்கின் தானம் சுருங்கும். மழையானது பெய்வது குறையுமானால், உலகில் தருமம் செய்வது குறைந்து போகும்.
விருந்திலோர்க்கு இல்லை பொருந்திய ஒழுக்கம் விருந்தினரை ஒம்புதல் செய்யாதவருக்குத் தகுதியான இல்லற ஒழுக்கம் இல்லையாகும்.
 

விரன் கேண்மை கூர் அம்பாகும். ஒருவன் சிறந்த வீரனோடு கொண்டுள்ள நட்பானது அவன், தன் பகைவனை அழிக்க உதவும் கூர்மையான அம்புக்குச் சமமாகும்.
உரவோர் என்கை இரவாது இருத்தல். வல்லவர் என்று சொல்லப்படுவது, தாழ்வு வந்த இடத்தும் பிறரிடம் சென்று யாசிக்காமல் வாழ்வதாம். (உரவோர் - வலிமையுள்ளவர்)
உளக்கம் உடைமை ஆக்கத்திற்கு அழகு. மனத்தளர்ச்சி அடையமல் இருப்பது, செல்வத்திற்கு அழகாகும்.
வெள்ளைக் இல்லை கள்ளச் சிந்தை. களங்கமில்லாத குணமுடையயவனுக்கு,
வஞ்சனையான எண்ணம் தோன்றுவது இல்லை.
வேந்தன் சீறின் ஆம்துணை இல்லை. அரசனானவன் ஒருவனை வெகுண்டால், அப்போது அவனை எதிர்க்கத்தக்க உதவி ஒன்று மில்லை.
வையம் தோறும் தெய்வம் தொழு. உலகிலுள்ள தலங்கள் தோறும் சென்று
இறைவனை வணங்கு. (வையம் - உலகம்.)

Page 25
ஒத்த இடத்து நித்திரை கொள். மேடு பள்ளம் இல்லாத சமமான இடத்திலே படுத்து உறங்கு.
ஒதாதார்க்கு இல்லை உணர்வொடு ஒழுக்கம். நல்ல நூல்களைக் கல்லாதவருக்கு நல்ல அறிவுடன்
கூடிய ஒழுக்கம் உண்டாதல் இல்லை.
N \\Ամ:Z
 

(நறுந்தொகை)
நறுந்தொகை' என்பது, நல்ல அறக் கருத்துக்களின் தொகுதியாகும். நற்றமிழ் தெரிந்த நறுந்தொகை' என வருவதனால், இப்பெயர் ஆசிரியரால் வைக்கப் பெற்ற பெயராகும். இந்நூலில் நூற்பயன் கூறும் செய்யுளின் முதலில், ‘வெற்றி வேற்கை என்னும் தொடர் இருக்கிறது. அதனால், அப்பெயரும் இந்நூலுக்கு மறுபெயராகத் தொன்றுதொட்டு வழங்கி வருகிறது.
இது கடவுள் வாழ்த்து, நூற் பயன், வாழ்த்து நீங்கலாக, 82 செய்யுள்களைக் கொண்டது. மொத்த அடிகள் 137. குறைந்தது ஒரடி கூடியது ஆறு அடி.
இந்நூலில் உள்ள நீதிகள் எல்லாம் சொல்லாலும் பொருளாலும் பழைய நூல்களில் - சிறப்பாகப் புறநானூறு, நாலடியாரில் - காணப்படுவனவே ஆகும்.
இது சிறார்களால் தொன்றுதொட்டுப் படித்துப் பாடம் செய்யப்பட்டு வரும் நீதி நூல்களுள் ஒன்றாகும்.
இந் நூலை இயற்றியவர் அதிவீரராமபாண்டியர் ஆவார்.

Page 26
வெற்றிவேற்கை
(நறுந்தொகை)
கடவுள் வாழ்த்து
பிரணவழ் பொருளாம் பெருந்தகை ஐங்கரன்
சரணவரீபுதமலர் தலைக்கு அணிவோமே.
எல்லா மந்திரங்களுக்கும் முதன்மையான பிரணவ மந்திரத்தின் (ஒம்) பொருளாகிய பெருந்தன்மை உடைய, ஐந்து திருக்கைகளை உடையவராகிய விநாயகக் கடவுளின் திருவடியாகிய ஆச்சரியம் மிகுந்த செந்தாமரை மலரைத் தலையில் யாம் அணிந்து கொள்வோம், வணங்குவோம்.
ஐங்கரன் - விநாயகன் சரணவற்புதம் - சரணம் அற்புதம் சரணம் - திருவடி
 

|h|s)IIUI6ðI
வெற்றி வேற்கை வீர ராமன்
கொற்கை ஆளி குலசேகரன்புகல் , நற்றமிழ் தெரிந்த நறுந்தொகை தன்னால்
குற்றங்களைவோர் குறைவு இலாதவரே.
கொற்கை என்னும் நகரத்தை ஆள்பவனும், பாண்டிய குலத்திற்கு முடிபோல்பவனுமாகிய வெற்றி பொருந்திய வேலினை தாங்கிய கையை உடைய அதிவீரராம பாண்டியன் சொல்லிய நல்லி தமிழில் பெருமையுற்ற நறுந்தொகை என்னும் இந்நீதி நூலைக் கொண்டு தம் குற்றத்தை நீக்கி கொள்வோர் ஒரு குறைவும் இல்லாதவராவர்
ஆளி - ஆள்பவன் நறுந்தொகை - நல்ல நீதிகளைத் தொகுத்து
அமைத்த நூல்.
6) TDjj
வாழிய நலனே வாழிய நலனே.
எல்லா நன்மைகளும் சிறப்புற்று ஒங்குக, எல்லா நன்மைகளும் சிறப்புற்று ஒங்குக;

Page 27
Gísl எழுத்துவித்தவன் இறைவன் ஆகும்.
ஒருவனுக்கு எழுத்துக்களை (கல்வியை)க் கற்பித்த ஆசிரியன் அவனுக்குத் தெய்வமாவான்.
கல்விக்கு அழகு கசடற மொழிதல். ஒருவன் கற்ற கல்விக்கு அழகாவது, ஐயம் திரிபு இல்லாமல் தான் கற்றவற்றைப் பிறர்க்கு எடுத்துச் சொல்லுதலாம்.
செல்வர்க்கு அழகு செழுங் கிளை தாங்குதல். மிகுந்த செல்வம் உடையவர்க்கு அழகாவது,
சுற்றத்தவரை வறுமையுற்ற காலத்தில் பாதுகாத்தலாம்.
வேதியர்க்கு அழகு வேதமும் ஒழுக்கமும். மறையவர்க்கு அழகாவது, வேதம் ஒதுதலும், ஒழுக்கத்தில் தவறாது இருத்தலுமாம்.
மன்னவர்க்கு அழகு செங்கோன் முறைமை. அரசர்க்கு அழகாவது, நீதி ஆட்சி செலுத்துவதாம்.
வைசியர்க்கு அழகு வளர்பொருள் ஈட்டல். வணிகர்க்கு அழகாவது, வளர்கின்ற செல்வத்தை மேலும் மேலும் தேடிச் சேர்த்தலாம்.
உழவர்க்கு அழகு இங்கு உழுது உளண் விரும்பல். வேளாளர்க்கு அழகாவது, உழுது பயிர் செய்து , உணவு உண்ணுதலை விரும்புதலாம்.
 

மந்திரிக்கு அழகு வரும் பொருள் உரைத்தல். அமைச்சனுக்கு அழகாவது, வரப்போகும் செயலை முன்னதாகவே அறிந்து அரசனுக்குக் கூறுதலாம்.
தந்திரிக்கு அழகு தறுகண் ஆண்மை. சேனைத் தலைவனுக்கு அழகாவன, அஞ்சாமையும் வீரமும் ஆகும்.
உண்டிக்கு அழகு விருந்தோடு உண்டல். உணவிற்கு அழகாவது, புதியதாக வந்தவரோடு (விருந்தினரோடு) கலந்து உண்ணுதலாம்.
பெண்டிர்க்கு அழகு எதிர்பேசாதிருத்தல். பெண்களுக்கு அழகாவது, கணவன் பேசும் சொல்லுக்கு எதிர்த்து பேசாமல் அடங்கி இருத்தலாம்.
குலமகட்கு அழகு தன் கொழுநனைப் பேணுதல். குலமாதுக்கு அழகாவது, தன் கணவனைப் போற்றுதலாம்.
விலைமகட்கு அழகு தன் மேனி மினுக்குதல். பொது மகளுக்கு அழகாவது, தன் உடம்பை எப்போதும் அலங்கரித்து கொள்ளுதலாம்.
அறிஞர்க்கு அழகு கற்றுணர்ந்து அடங்கல். அறிவுடையவர்க்கு அழகாவது, கற்க வேண்டிய நூல்களைக் கற்று நன்குணர்ந்து, அந்நூல்களில் கூறியபடியே அடக்கத்தோடு நடத்தலாம்.

Page 28
வறிஞர்க்கு அழகு வறுமையில் செம்மை. தரித்திரம் உடையவர்க்கு அழகாவது, அவ் வறுமைக் காலத்திலும் நேர்மை உடையவராக வாழ்தலாம்.
தேம்படுபனையின் திரள் பழத்து ஒரு விதை 6)IIgDI 0 62 hi f 6)IGITIDG IIp 6)IGIT 6)Ii ஒருவர்க்கு இருக்க நிழல்ஆகாதே. பனைமரத்தின் இனிமை பொருந்திய, திரண்ட கனியில் ஒரு விதையானது, விண்ணைப் பொருந்தும் படி உயர்ந்து செழுமையாக வளர்ந்தாலும் ஒருவர்க்காயினும் தங்கியிருப்பதற்கு நிழலைத்தாராது.
தெள்ளிய ஆலின் சிறIழத்து ஒருவிதை தெண்ணிர்க் கயத்துச் சிறுமீன் சினையினும் நுண்ணிதே ஆயினும் அண்ணல் யானை அணிதேர் புரவி ஆள்பெரும் படையொடு மன்னர்க்கு இருக்க நிழல்ஆகும்மே. ஆலமரத்தின் தெளிந்த சிறிய பழத்தில் உள்ள ஒரு விதையானது, தெளிந்த நீரை உடைய குளத்தில் வசிக்கிற சிறிய மீனினது முட்டையினும் மிகச் சிறியதாக இருந்தாலும், அவ்விதை முளைத்து வளர்ந்து பெரிய மரமாகி, பெருமையுள்ள யானையும் அழகிய தேரும் குதிரையும் காலாஞம் ஆகிய நால்வகைப் பெருஞ்சேனையோடு அரசர்க்கும் தங்கி இருப்பதற்கு குளிர்ந்த நிழலைத் தரும்.
 

(தோற்றத்தால் சிறியவரெல்லாம் சிறுமை உடையவராகாது தேரின் அச்சாணி போன்று பெருமை உடையவராக இருப்பர்’ என்னும் கருத்து இப்பாடலில் உள்ளது.)
6II'f(SullÍ GIda'TÍ FLIful(hli 96ða)Í. தோற்றத்தால் பெரியவர் எல்லாரும் பெருமை உடையவரும் ஆகார்.
fÚ(éuITÍ AI6ða)TÍ fljul(hÚ SI6ða)Í. தோற்றத்தால் சிறியவர் எல்லாரும் சிறுமை உடையவரும் ஆகார்.
பெற்றோர் எல்லாம் பிள்ளைகள் அல்லர்.
ஒருவர் பெற்ற பிள்ளைகள்எல்லாரும் நல்ல பிள்ளைகள் ஆக மாட்டார்.
உற்றோர் எல்லாம் உறவினர் அல்லர். சுற்றத்தார் எல்லாரும் நல்ல சுற்றத்தினர் ஆகார்.
கொண்டோர் எல்லாம் பெண்டிரும் அல்லர். மணம் செய்து ஏற்றுக்கொள்ளப்பட்ட மனைவியர் எல்லாரும் நல்ல மனைவியரும் ஆகார்.
அடினும் ஆவின் பால் தன் சுவை குன்றாது. எவ்வளவு வற்றக் காய்ச்சினாலும் பசுவின் பால் தன் இனிமையில் குறையாது.

Page 29
சுடினும் செம்பொன் தன்னொளி கெடாது. எவ்வளவு சுட்டாலும் சிவந்த பொன்னானது தன் ஒளியில் குறையாது. (மிகும்).
அரைக்கினும் சந்தனம் தன் மணம் அறாது. எவ்வளவு அரைத்தாலும் சந்தனக் கட்டையானது தனது வாசனை நீங்காது.
புகைக்கினும் கார் அகில் பொல்லாங்கு கமழாது. தீயில் இட்டு எவ்வளவு புகைத்தாலும் கரிய அகில் கட்டையானது கெட்ட நாற்றம் வீசாது. (பொல்லாங்கு-தீமை, கெட்ட நாற்றம்).
கலக்கினும் தண்கடல் சேறு ஆகாது. எவ்வளவு கலக்கினாலும் குளிர்ந்த கடலானது சேறாகமாட்டாது. (23 முதல் 27 முடிய உள்ள ஐந்து பாடல்களும் பெரியோர்க்கு எவ்வளவு கேடு செய்தாலும், அவர்கள் தம் பெருமைக் குணத்தினின்று மாறுபடார்’ என்னும் கருத்தை அடக்கிக் கொண்டுள்ளன)
அடினும்பால் பெய்துகைப்பு அறாது பேய்ச்சுரைக்காய். பாலை விட்டுச் சமைத்தாலும் பேய்ச் சுரைக்காயானது கசப்பு நீங்காது. (அடினும் - சமைத்தாலும் "உப்பொடு நெய்பால் தயிர்காயம் பெய்துஅடினும் கைப்பு:அறா பேய்ச்சுரையின் காய்” - நாலடியார்
 

உளட்டினும் பல்விதை உள்ளி கமழாதே பல வித மணப்பொருள்களைச் சேர்த்தாலும் உள்ளிப் பூண்டானது நறுமணம் வீசாது. தன் மணமே வீசும். (28,29 ஆகிய இரு பாடல்களும் சிறியோர்க்கு எவ்வளவு நன்மை செய்தாலும் அவர்கள் தம் சிறுமைக் குணத்தினின்று மாறுபடார் - என்னும் கருத்தை அடக்கிக் கொண்டுள்ளன.)
I(b6)IDL j)I6)IDLLID J6õJJ6)I(b(3D. மேன்மையும் கீழ்மையும் தான் செய்யும்
செயல்களாலேயே உண்டாகும்.
fĵGLITĪ 6 Juil fî6Dp Iida,Ti) பெரியோர் ஆயின் பொறுப்பது கடனே. அறிவில் சிறியவர்கள் செய்த சிறு குற்றங்களை எல்லாம் பெரியோராயிருப்பவர் பொறுத்துக்
கொள்வது முறைமையாகும்.
சிறியோர் பெரும்பிழை செய்தனர் ஆயின் 6IIIsGuIIÍ 9IÚlfleDip 6LIIIMIjóJ53IÍ SIf635.
சிறியவர்கள் பெருங்குற்றங்களைச் செய்ரோயின்
பெரியோர் அக்குற்றங்களைப் பொறுத்துக் கொள்ளுதல் இயலாத செயலாகும்.

Page 30
நாறTண்டு பழகினும் மூர்க்கர் கேண்மை நீர்க்குள் பாசிபோல் வேர்க்கொள்ளாதே. நூறு ஆண்டுகள் பழகினாலும் கீழ்மக்களோடு கொண்ட நட்பானது, நீரில் உள்ள பாசி போல வேர் ஊன்றாது (நிலைத்திராது).
FI('hhT6ÍI IIIpfSOIlí 6LIs:6UIIÍ ($J,6ÖI6ð)ID இருநிலம் பிளக்க வேர் வீழ்க்கும் கும்மே. ஒரே ஒருநாள் பழகினாலும் மேன்மக்களுடைய நட்பானது, பெரிய நிலம் பிளக்கும்படி வேரூன்றி நிற்கும் மரத்தைப் போல நிலைத்து நிற்கும்.
கற்கை நன்றே கற்கை நன்றே பிச்சை கினும் கற்கை நன்றே நூல்களைக் கற்பது மிக நல்லது; பிச்சை எடுத்தாலும் கல்வி கற்பது நல்லது.
கல்லா ஒருவன் குலநலம் பேசுதல் நெல்லினுள் பிறந்த பதர்ஆகும்மே. கல்வியைக் கற்காத ஒருவன், தனது குலத்தின் பெருமையைப் பற்றிப் பேசுவது,நெற்பயிரில்
தோன்றிய பதர்போலப் பயனற்றதாகும். நாற்பால் குலத்தின் மேற்பால் ஒருவன் கற்றிலன் ஆயின் கீழ்இருப் புவனே. நான்கு பிரிவான குலங்களில், மேல் குலத்தில் பிறந்த ஒருவன், கல்வி கல்லாதவனானால், அவன் தாழ்ந்தவனே ஆவான்.
 

எக்குடிப் பிறப்பினும் யாவரே ஆயினும் அக்குடிக் கற்றோரை மேல்வரு கென்பர். எந்தக் குலத்தில் பிறந்திருந்தாலும், யாராயிருந்தாலும், அக்குலத்தில் கற்றவரை மேலோர், வருக என உபசரித்துப் போற்றுவர்.
அறிைெட ஒருவனை அரசனும் விரும்பும். கல்வி அறிவுடைய ஒருவனை அரசனும் விரும்பிச்
சிறப்புச் செய்வான்.
அச்சம் உள் அடக்கி அறிவகத்து இல்லாக் கொச்சை மக்களைப் பெறுதலின் அக்குடி எச்சமற்று ஏமாந்து இருக்கை நன்றே. மனத்தில் அச்சத்தை அடக்கி வைத்துக் கொண்டு, உள்ளத்தில் அறிவில்லாத இழிந்த குணமுடைய பிள்ளைகளைப் பெறுவதைக் காட்டினும், அக்குடியிலுள்ளோர் சந்ததி இல்லாமல் இன்பத்துடன் இருத்தல் நல்லது. (கொச்சை-இழிவு; எச்சம் - பிள்ளைகள்; ஏமாத்தல் - இன்பத்துடன் இருத்தல்.)
யானைக்கு கில்லை தானமும் தருமமும். யானைக்குத் துதிக்கை நீண்டிருந்தாலும், அது தக்கார்க்குப் பொருளைக் கொடுத்தலும் வறியார்க்கு ஈதலும் இல்லையாம்.

Page 31
பூனைக்கு இல்லை தவமும் தயையும். பூனை கண்ணை மூடிக்கொண்டு அமைதியாக இருந்தாலும், அது தவம் செய்தலும் உயிர்களிடத்துக் கருணை கொள்ளுதலும் இல்லையாம். (41,42 ஆகிய இரண்டும் பாடல்களும், வேடத்தினாலேயே ஒருவரை மதித்தல் ஆகாது என்னும் கருத்தைக் கொண்டுள்ளன.
ஞானிக்கு இல்லை இன்பமும் துன்பமும். உண்மையான ஞானம் உடையவனுக்கு இன்பமும் துன்பமும் இல்லையாம்.
சிதலைக்கு இல்லை செல்வமும் செருக்கும். கறையானுக்குச் செல்வம் உடையவர் என்பதும், இறுமாப்பு உடையவர் என்பதும் இல்லையாம். (யாவருடைய பொருளையும் அரித்து அழிக்கும்)
முதலைக்கு இல்லை நீத்தும் நிலையும்.
முதலைக்கு நீந்தக்கூடிய ஆழமான 鲇 என்பதும் நிலைக்கக் கூடிய நீர் என்பதும் இல்லையாம்.
அச்சமும் நாணமும் அறிவிலோர்க்கு இல்லை. தீய செயலைச் செய்ய அஞ்சுவதும், பழிக்குப் பின்வாங்குவதும் கல்வி அறிவில்லாத கீழோர்க்கு இல்லையாம். நாளும் கிழமையும் நலிந்தோர்க்கு இல்லை. நல்ல நாள் பார்த்தலும் நல்ல வாரம் பார்த்தலும் பிணியால் வருந்துவோர்க்கு இல்லையாம்.
 

கேளும் கிளையும் கெட்டோர்க்கு இல்லை. நல்ல நண்பரும் உறவினரும் வறுமையுற்றோர்க்கு இல்லை.
9 6OL 60) Dulb 6)IJI6OIDLII b 2(56) If 56ù6)T.
செல்வமும் தரித்திரமும் ஒரிடத்தில் நிலைத்து நிற்கமாட்டா; மாறி மாறிவரும்.
குடைநிழல் இருந்து குஞ்சரம் ஊர்ந்தோர் நடைமெலிந்து ஒரூர் நண்ணினும் h613)16)If. வெண்கொற்றக் குடை நிழலில் இருந்து யானைமீது ஊர்ந்து சென்ற அரசரும், வறுமையுற்று நடந்து செல்லுதலால் சோர்வுற்று வேறோர் ஊரை அடைந்தாலும் அடைவர்.
(யானை எருத்தம் பொலிய- நாலடியார்)
சிறப்பும் செல்வமும் பெருமையும் உடையோர் அறக்கூழ்ச் சாலை அடையினும் அடைவர். புகழும் பெருஞ்செல்வமும் மேன்மையும் உடையவர்கள் கூட வறுமையுற்று உணவின்றி, கஞ்சிவார்க்கும் தருமசத்திரத்தைச் சேர்ந்தாலும் சேர்வர்.
அறத்திடு பிச்சை கூவி இரப்போர் அரசோடு இருந்து அரசாளினும் ஆளுவர். வீட்டு முகப்பில் நின்று கூவி அழைத்து தருமத்தினை எண்ணி இடும் பிச்சையினை ஏற்கும் வறியவரும் அரச அங்கங்களில் ஒருவராக இருந்து அரசை ஆண்டாலும் ஆள்வர்.

Page 32
குன்றத் தனைஇரு நிதியைப் படைத்தோர் அன்றைப் பகலே அழியினும் அழிவர். மலையினளவு பெரிய செல்வத்தைப் படைத்த வரும் படைத்த அன்றைய தினமே வறுமையுற்று அழிந்தாலும் அழிவர்.
எழுநிலை மாடம் கால்சாய்ந்து உக்குக் கழுதை மேய்பாழ் ஆயினும் ஆகும். ஏழு அடுக்குகளைக் கொண்ட மாளிகையும் அடியோடு சாய்ந்து விழுந்து நொறுக்கி, கழுதைகள் மேய்கின்ற பாழ்நிலம் ஆனாலும் ஆகலாம்.
6 Li jġib g (pb) J5(60) J5 u Ib (ċID li jħġb, 9 IHI ITT) பொற்றொடி மகளிரும் மைந்தரும் கூடி நெற்பொலி நெடுநகர் ஆயினும் ஆகும். எருதுகளும் கழுதைகளும் மேய்ந்து திரிந்த அந்தப் பாழ்நிலமானது, பொன்வளையல் அணிந்த பெண்களையும் ஆடவர்களையும் பொருந்தி, நெல்குவியல்கள் நிறைந்த பெரிய நகரம் ஆனாலும் ஆகலாம்.
மணவனி அணிந்த மகளிர் ஆங்கே பிணவணி அணிந்துதம் கொழுநரைத் தழ்இ உடுத்த ஆடை கோடி ஆக முடித்த கூந்தல் விரிப்பினும் விரிப்பர். மணக்கோலம் பூண்ட மகளிர், அப்பொழுதே கணவர் சாதலால் பிணத்திற்குரிய கோலத்தைப் பூண்டு, தம் கணவர் உடலைத் தழுவி, முன்னே உடுத்த ஆடையே கோடிக் கூறையாக, பூச்சூடிப் பின்னிஇருந்த கூந்தலை விரித்து அழுதாலும் அழுவர். (கோடி - புதிய ஆடை)
 

இல்லோர் இரப்பதும் இயல்பே இயல்பே. வறுமையுற்றவர் யாசிப்பதென்பது இயற்கையே; இயற்கையே.
இரந்தோர்க்கு ஈவதும் உடையோர் கடனே. தம்மிடம் வந்து யாசித்தவர்க்குக் கொடுப்பதும் செல்வமுடையவர் கடமையே ஆகும்.
நல்ல ஞாலமும் வானமும் பெறினும் எல்லாம் இல்லை இல்இல் லோர்க்கே. நல்ல நில உலகத்தையும் வானுலகத்தையும் ஒருங்கே பெற்றாலும், மாண்புள்ள மனைவி இல்லாதவர்களுக்கு அவற்றால் ஒரு பயனும் இல்லை.
தறுகண் யானை தான்பெரிது ஆயினும் சிறுகண் மூங்கில் கோற்குஅஞ்சும்மே. வீரம் நிறைந்த யானையானது உருவத்தால் தான் பெரிதாக இருப்பினும், சிறிய கணுக்களை உடைய மூங்கில் கோலுக்கு அஞ்சும்.
('உருவமும் வலிமையும் பெருமையும் உடையவராயிருப்பினும் சிறியவரால் அடக்கி ஆளப்படுதலும் உண்டு என்பது இப்பாட்டின் கருத்து)
குன்றடை நெடுங்காடு 93II (8L 6)). Tyf 30DIt புன்றலைப் புல்ன்ர்ய் புலிக்குஅஞ்சும்மே. மலைகளை உடைய பெரிய காட்டினுள்ளே வாழ்ந்தாலும், சிறிய தலையை உடைய மானானது புலியைக் கண்டு பயப்படும். (புன்றலை-புல்தலை-சிறிய தலை; புல்வாய்-மான்)

Page 33
59,60) JULI TID I 6i 6j 5 96T (8 L 6OITTI SOI) தேரை பாம்பிற்கு மிகஅஞ்சும்மே. ஆரைக்கீரை படர்ந்துள்ள ஆழமான நீர்நிலையினுள்ளே வாழ்ந்தாலும், தேரையானது, பாம்பினுக்கு மிகவும் பயப்படும். (ஆரை - நீரில் படரும் ஒருவகைக் கீரை. (61,62 இவ்விரண்டு பாடல்களும், வீரரல்லாதார் எவ்வளவு பாதுகாப்போடு வாழ்ந்தாலும் வீரரைக் கண்டு அஞ்சுவர் என்னும் கருத்தைக் கொண்டுள்ளன.)
கொடுங்கோல் மன்னர் வாழும் நாட்டின் கடும்புலி வாழும்தாடு நன்றே.
நீதியல்லாத மன்னர் வாழ்கின்ற நாட்டில் வாழ்வதைக் காட்டினும், கொடிய புலி வாழும் காடு நல்லது.
சான்றோர் இல்லாத் தொல்பதி இருத்தலின் தேன்தேர் குறவர் தேயம் நன்றே. கற்ற பெரியோர் இல்லாத பழைய நகரத்தில் இருப்பதைவிடத் தேனைத் தேடித் திரியும் குறவர்கள் வாழ்கின்ற மலைநாட்டில் இருப்பது நல்லது.
காலையும் மாலையும் நான்மறை ஒதா அந்தணர் என்போர் அனைவரும் பதரே. காலைப் பொழுதிலும் மாலைப் பொழுதிலும் நான்கு வேதங்களையும் ஒதாத வேதியர் எனப்படுவோர் அனைவரும் பதர்போலப் பயனற்றவராவர்.
 

குடியலைத்து இரந்துவெங் கோலொடு நின்ற (p?U60) oO))6)60Tib pöö560ID (o. குடிமக்களை வருத்திப் பொருளைவாங்கிக் கொடுங்கோல் ஆட்சி நடத்தும் மகுடம் தரித்த அரசனாகிய கொடியவனும் பதரே ஆவான்.
முதல்உள பண்டம் கொண்டு வாணிகம் செய்து அதன்பயன் உண்ணா வணிகரும் பதரே. முதலாக உள்ள பொருளை வைத்துக் கொண்டு வியாபாரம் செய்து, அதனால் வரும் ஊதியத்தை அனுபவியாத வாணிகரும் பதரே ஆவர்.
வித்தும் ஏரும் உளவாய் இருப்பு எய்த்தங்கு இருக்கும் ஏழையும் பதரே. விதையும் உழவிற்குரிய ஏரும் தன்னிடத்து
இருக்கவும், அவ்விடத்தில் சோம்பியிருக்கும் அறிவிலியாகிய வேளாளனும் பதரே ஆவான். (எய்த்து - சோம்பி, மெலிந்து)
தன்மனையாளைத் தாய்மனைக்கு அகற்றி பின்புஅவள் பாராப் பேதையும் பதரே. தன் மனைவியைத் தாய் வீட்டிற்கு அனுப்பிவிட்டு, பின்பு அவளை ஆதரிக்காது இருக்கின்ற அறிவில்லாதவனும் பதரே ஆவான்.

Page 34
70. தன்மனை யாளைத் தனிமனை இருத்திப் பிறர்மனைக்கு ஏகும் பேதையும் பதரே. தன் மனைவியை வீட்டில் தனியே இருக்கச் செய்து, பிறர் மனைவியை விரும்பி அயல் வீட்டிற்குச் செல்லும் அறிவில்லாதவனும் பதரே ஆவான்.
தன்ஆயுதமும் தன்கையில் பொருளும் பிறன்கையில் கொடுக்கும் பேதையும் பதரே. தன் தொழிலுக்குரிய கருவிகளையும் தன் கையில் இருக்கும் பொருளையும் அயலான் கையில் கொடுத்து வைக்கும் அறிவில்லாதவனும் பதரே
ஆவான்.
வாய்ப்பறை ஆகவும் நாக்கடிப்பு ஆகவும் சாற்றுவது ஒன்றைப் போற்றிக் கேண்மின். வாயே பறையாகவும் நாவே அடிக்கும் கோலாகவும் கொண்டு சான்றோர் சொல்வது ஒன்றைக் கவனித்துக் கேளுங்கள்.
பொய்யுடை ஒருவன் சொல்வன்மையினால் 6LDİI GITT Ii(&ID 6 IDLİI GLITT 3D (BID. பொய்யே கூறும் ஒருவன் சொல்லுகின்ற
திறமையால், அவன் சொல்லுவது பொய்யே யாயினும் உண்மைபோலவே தோன்றும்.
 

GIDLiILII6oL 956)I6ö 63IIGIDT LT6oIDUITai 6 LITTLİI GLITT SIGID 6 LITTLİI GLITT SIGLD. உண்மையை பேசச்கூடிய ஒருவன், சொல்லும் திறமை இல்லாமையால், அவன் கூறும் உண்மையும் பொய் போலவே தோன்றும்.
இருவர்தம் சொல்லையும் எழுதரம் கேட்டே இருவரும் பொருந்த உரையார் ஆயின் மனுமுறை நெறியின் வழக்குஇழந்தவர்தாம் D60ID) O ID OIf 86ðI AI 9 QJ5 J6 6ðI 600İİ முறையுறத் தேவர் மூவர் காக்கினும் 6)IIf6lj FFÍ6lj519 6)ITGiT9, (JD8ID. வாதி பிரதிவாதி ஆகிய இருவருடைய சொற்களையும் ஏழுமுறை கேட்டுணர்ந்து, இருவரும் ஒத்துக் கொள்ளும்படி மனுநூலின் நீதிப்படி, தீர்ப்புக் கூறாவிட்டால், நீதி கிடைக்காமல் வழக்கில் தோல்வி அடைந்தவர் மனம் மிகுதியும் கலங்கி நின்று அழுத கண்ணிரானது, முறையாக அரனும் அரியும் அயனும் ஆகிய மூம்மூர்த்திகளும் காத்தாலும், அவர் வமிசம் முழுவதையும் அறுக்கும் ஒர்வாளாகும். (ஈர்வது - அறுப்பது). “அல்லல்பட்டு ஆற்றாது அழுத கண்ணீர்” திருக்குறள்)
பழியா வருவது மொழியாது ஒழிவது. பழியாக வரக்கூடியதை வெளியில் பேசாது விட்டுவிடுதல் நல்லது.

Page 35
சுழியா வருபுனல் இழியாது ஒழிவது. சுழித்து வருகின்ற வெள்ள நீரிலே இறங்காது தவிர்ப்பது நல்லது.
துணையோடு அல்லது நெடுவழி போகேல். துணை இல்லாமல் நெடுந்தொலைவு செல்லாதே.
புணைமிதநல்லது நெடும்புலன் ஏகேல். தெப்பத்தின் மேல் அல்லாமல் பெரிய வெள்ள நீரில்
போகாதே.
. எழிலார் முலைவரி விழியார் தந்திரம்
இயலாதனகொடு முயல்வு ஆகாதே.
அழகு பொருந்திய தனங்களையும் செவ்வரி பரந்த கண்களையும் உடைய மாதர்கள் கூறும் உபாயங்களுள் பொருந்தாதனவற்றை மேற்கொண்டு முயலுதல் கூடாது.
வழியே ஏகுக வழியே மீளுக. நேர்மையான வழியிலே செல்லுக! நேர்மையான வழியில் திரும்பி வருக!
இவைகாண் உலகிற்கு இயலாம் ஆறே. நறுந்தொகை என்னும் நூலில் சொல்லிய இந்த நீதிகள் எல்லாம், உலகத்தவர் பின்பற்றி நடத்தற்குரிய நல்ல வழிகள் ஆகும்.
 

‘உலக நீதி’ என்பது, உலகத்தில் பழங்காலம் தொடங்கிச் சிறார் முதல் பெரியவர் வரை எல்லாராலும் கையாளப் பெற்று வரும் மிகச் சிறந்த பழைய நீதிகளை எல்லாம் தொகுத்து, கடவுள் வாழ்த்துப் பாடல் நீங்கலாக, பன்னிரண்டு எண்சீர் விருத்தப்பாக்களால் பாடப்பெற்ற ஒரு நீதி நூல் ஆகும். வேறு சிலர், ஆசிரியர் பெயரோடு தொடர்புடைய நூல் என்றும் கூறுவர்.
இதில் அடங்கியுள்ள நீதிகள் அறுபத்தொன்றாகும். எல்லா நீதிகளுமே எதிர்மறைக் கூற்றுக்களாகவும், அழுத்தமாகவும், பேச்சு வழக்கு நடையிலும், பழகு தமிழிலும், நடைமுறை மொழியிலும் நெஞ்சுக்கு அறிவுறுத்தும் வகையிலும் அமைந்துள்ளன.
தமிழ்க் கடவுளாம் முருகக் கடவுளை எல்லாரும் தவறாது வழிபடல் வேண்டும் என்று எல்லா விருத்தங்களின் இறுதி அடிகளும் வற்புறுத்துகின்றன.
இதில் உள்ள செய்யுள் கருத்துக்கள் அனைத்தும் வள்ளுவர் வாக்குக்கு விரிவுரைபோல விளங்குகின்றன.
இந்நூலின் காலம் கி.பி. பதினெட்டாம் நூற்றாண்டின் பிற்பகுதியாகும் என்பர்.
(இந்நூலை இயற்றியவர் உலகநாதர் ஆவார்)

Page 36
உலக நீதி
காப்பு
உலக நீதி புராணத்தை உரைக்கவே கலைக ளாய்வருங் கரிமுகன் காப்பு
உலக நீதியாகிய பழைய செய்திகளை யான் கூறுதற்குப் பண்டைய வேதம் முதலிய நூல்களால் ஆராய்ந்து அறிய ஒண்ணாத யானை முகத்தை உடைய விநாயகக் கடவுள் காப்பாவார்.
(கரிமுகன் - விநாயகன்; காப்பு - இடையூறு வாராமல் காத்தல்.)
 

ஒதாமல் ஒருநாளும் இருக்க வேண்டாம்
ஒருவரையும் பொல்லாங்கு சொல்ல வேண்டாம் மாதாவை ஒருநாளும் மறக்க வேண்டாம்
வஞ்சனைகள் செய்வாரோடு இணங்க வேண்டாம் போகாத இடந்தனிலே போக வேண்டாம்
போகவிட்டுப் புறம்சொல்லித் திரியவேண்டாம் வாகாரும் குறவருடை வள்ளி பங்கன்
மயிலேறும் பெருமாளை வாழ்த்தாய்நெஞ்சே
1. நூல்களைக் கற்காமல் ஒருபொழுதும் வீணாக்காதே. 2. யாவர்க்கும் தீங்கு பயக்கும் சொற்களைச் சொல்லாதே. 3. ஈன்றெடுத்த தாயை ஒருபொழுதும் மறவாதே. 4. வஞ்சகக் செயல்களைச் செய்பவரோடு சேராதே. 5. செல்லத்தகாத இடத்தில் செல்லாதே. 6. ஒருவரைக் கண்டபோது புகழ்ந்து பேசி, அவர் இல்லாதபோது புறங்கூறித் திரியாதே.
மனமே! தோள்வுரிமிகுந்த குறவருடைய மகளாகிய வள்ளி நாயகியைப் பக்க 6 உடையவனாய், மயிலை ஊர்தியாகச் செலுத்தும் முருகப்பெருமானை நீவாழ்த்துவாயாக
(புறம் சொல்லல் - கோள் சொல்லல் வாகு - தோள்வலி)
நெஞ்சாரப் பொய்தன்னைச் சொல்ல வேண்டாம்
நிலையில்லாக் காரியத்தை நிறுத்த வேண்டாம் நஞ்சுடனே ஒருநாளும் பழக வேண்டாம்
நல்லிணக்கம் இல்லாரோடு இணங்க வேண்டாம் அஞ்சாமல் தனிவழியே போக வேண்டாம்
அடுத்தவரை ஒருநாளும் கெடுக்கவேண்டாம் மஞ்சாரும் குறவருடைய் வள்ளி பங்கன்
மயிலேறும் பெருமானை வாழ்த்தாய் நெஞ்சே

Page 37
1. மனமறியப் பொய் வார்த்தைகளைப் பேசாதே. 2. நிலையில்லாத காரியத்தை நிலை நிறுத்த முயலாதே. 3. நஞ்சையுடைய பாம்பைப் போன்ற கொடியவருடன் ஒருபொழுதும் பழகாதே. 4. நல்வர்களுடைய தொடர்பு இல்தேவர்களுடன் நட்புச் செய்யாதே. 5. பயமில்லாது தன்னந்தனியாகத் தனி வழியே செல்லாதே. 5. தன்னிடத்து வந்து சரணடைந்தவரை ஒருபொழுதும் கெடுக்காதே.
மனமே! வலிமை மிகுந்த குறவருடைய மகளாகிய வள்ளி நாயகியைப் பக்கத்தில் உடையவனாய் மயிலை ஊர்தியாகச் செலுத்தும் முருகப் பெருமானை, நீவாழ்த்துவாயாக (மஞ்சு - மைந்து வலிமை)
மனம்போன போக்கெல்லாம் போக வேண்டாம்
மாற்றானை உறவென்று நம்ப வேண்டாம் தனம்தேடி உண்ணாமல் புதைக்க வேண்டாம்
தருமத்தை ஒருநாளும் மறக்க வேண்டாம் சினம்தேடி அல்லலையும் தேட வேண்டாம்
சினந்திருந்தார் வாசல்வழிச் செல்ல வேண்டாம் வனம்தேரும் குறவருடைய வள்ளி பங்கன்
மயிலேறும் பெருமாளை வாழ்த்தாய் நெஞ்சே, 1. மனஞ்செல்கிற இடங்களுக்கெல்லாம் செல்லாதே. 2. பகைவனை உறவினன் என்று நம்பாதே. 3. செல்வத்தை முயன்று தேடி அதனை அனுபவியாமல் மண்ணில் புதைக்காதே. 4. அறஞ்செய்தலை ஒரு பொழுதும் மறவாதே. 5. கோபத்தை வருவித்துக்
 

கொண்டு அதனால் துன்பத்தினையும் தேடிக் கொள்ளாதே. 6. உன் மீது கோபங் கொண்டிருந்தவருடைய வீட்டு வழியாகச் செல்லாதே.
மனமே! காட்டினிடத்துப் பறவை, விலங்கு முதலியவற்றைத் தேடித் திரியும் குறவருடைய மகளாகிய வள்ளி நாயகியைப் பக்கத்தில் உடையவனாய் மயிலை
ஊர்தியாக நடத்தும் முருகப் பெருமானை நீவாழ்த்துவாயாக.
குற்றமொன்றும் பாராட்டித் திரிய வேண்டாம்
கொலைகளவு செய்வாரோடு இணங்கவேண்டாம் கற்றவரை ஒருநாளும் பழிக்க வேண்டாம்
கற்புடைய மங்கையரைக் கருத வேண்டாம் கொற்றவனோடு எதிர்மாறு பேச வேண்டாம்
கோயில்இல்லா ஊரில் குடிஇருக்க வேண்டாம் மற்றுநிகர் இல்லாத வள்ளி பங்கன்
மயிலேறும் பெருமாளை வாழ்த்தாய் நெஞ்சே, 1. ஒருவர் செய்த குற்றத்தை மட்டும் வெளியில் தூற்றித் திரியாதே. 2. கொலையும் திருட்டும் செய்கின்ற தீயவருடன் தொடர்பு கொள்ளாதே. 3. கற்றறிந்த அறிஞர்களை ஒருபொழுதும் பழித்துப் பேசாதே. 4. கற்புடைய பிற மாதர்களைக் கூடுதற்கு நினையாதே. 5. அரசனுக்கு முன்நின்று எதிர்மாறான சொற்களைப் பேசாதே. 6. கோயில் இல்லாத ஊரில் குடியிருக்காதே. -
மனமே ! வேறு ஒப்புமை சொல்ல முடியாத வள்ளி நாயகியைப் பக்கத்தில் உடையவனாய் மயிலை ஊர்தியாக
நடத்தும் முருகப் பெருமானை நீவாழ்த்துவாயாக.

Page 38
வாழாமல் பெண்ணைவைத்துத் திரிய வேண்டாம்
மனையாளைக் குற்றமொன்றும் சொல்லவேண்டாம் வீழாத படுகுழியில் வீழ வேண்டாம்
வெஞ்சமரில் புறம்கொடுத்து மீளவேண்டாம் தாழ்வான குலத்துடனே சேர வேண்டாம்
தாழ்ந்தவரைப் பொல்லாங்கு சொல்லவேண்டாம் வாழ்வாரும் குறவருடை வள்ளி பங்கன்
மயிலேறும் பெருமானை வாழ்த்தாய் நெஞ்சே, 1. மனைவியோடு கூடி வாழாமல் அவளை வீட்டில் துன்பமுறச் செய்து வெளியில் அலையாதே. 2. மனைவியின் மீது குற்றமான சொல்யாதொன்றும் (அயலாரிடம்) சொல்லாதே. 3. விழத்தகாத பெரும் பள்ளத்தில் வீழ்ந்து விடாதே. 4. கொடிய போரில் புறமுதுகிட்டுத் திரும்பி வாராதே. 5. கீழான குலத்தினருடன் சேராதே. 6. உயர்ந்த நிலையிலிருந்து தாழ்ந்து போனவர்களைத் தீமையாகப் பேசாதே.
நெஞ்சே! செல்வம் மிகுந்த குறவருடைய மகளாகிய வள்ளி நாயகியைப் பக்கத்தில் உடையவனாய், மயிலை ஊர்தியாக உடைய முருகப் பெருமானை, நீவாழ்த்துவாயாக. (சமர்-போர் வாழ்வு - செல்வம்)
வார்த்தை சொல்வார் வாய்பார்த்துத் திரியவேண்டாம்
மதியாதார் தலைவாசல் மிதிக்க வேண்டாம்
மூத்தோர்சொல் வார்த்தைதனை மறக்க வேண்டாம்
முன்கோபக்காரரோடு இணங்க வேண்டாம்
வாத்தியார் கூலியைவைத் திருக்க வேண்டாம்
வழிபறித்துத் திரிவாரோடு இணங்க வேண்டாம்
சேர்த்தபுகழ் ஆளன்ஒரு வள்ளி பங்கன்
திருக்கைவே லாயுதனைச் செப்பாய் நெஞ்சே
 

7.
1. பயனில்லாத சொற்களைப் பேசுவருடைய வாயைப் பார்த்துக் கொண்டு அவர் பின்னே அலையாதே.2.அவமதிப்பவர்களுடைய கடைவாயிலில் அடியெடுத்து வைக்காதே. 3. அறிவில் பெரியோர் சொல்லுகின்ற சொற்களை எப்போதும் மறவாதே. 4. முன்கோபம் உடையவரோடு சேராதே. 5. கல்வி கற்பித்த ஆசிரியருடைய சம்பளத்தைக் கொடாமல் வைத்துக் கொண்டிராதே. 6. வழிப்பயணம் செய்பவர்களின் பொருளைக் கவர்ந்து திரிபவருடன் சேராதே.
மனமேநிறைந்த புகழுடையவனும்நிகரற்ற வள்ளிநாயகியைப் பக்கத்தில் உடையவனும், அழகிய கையில் வேலாயுதத்தை உடையனுமாகிய முருகப் பெருமானை நீதுதிப்பாயாக
கருதாமல் கருமங்கள் முடிக்க வேண்டாம்
கணக்கழிவை ஒருநாளும் பேசவேண்டாம்
பொருவார்தம் போர்க்களத்தில் போக வேண்டாம் பொதுநிலத்தில் ஒருநாளும் இருக்க வேண்டாம் இருதாரம் ஒருநாளும் தேட வேண்டாம்
எளியாரை எதிரிட்டுக் கொள்ள வேண்டாம் குருகாரும் புனம்காக்கும் ஏழை பங்கன்
குமரவேள் பாதத்தைக் கூறாய் நெஞ்சே, 1. செய்யத்தக்க செயல்களை முடிக்கும் உபாயத்தை எண்ணாமல் முடிக்க முயலாதே. 2. பொய்க் கணக்கை எப்பொழுதும் பேசாதே. 3. ஒருவரை ஒருவர் தாக்குகின்ற போர் நடக்கும் இடத்திற்குப் போகாதே. 4. எல்லாக்கும் பொதுவாகிய இடத்தில் குடிஇராதே. 5. இரண்டு மனைவியர்களை ஒரு பொழுதும் மணந்து

Page 39
கொள்ளாதே. 6. வறியவர்களை எதிர்த்துப் பகைத்துக் கொள்ளாதே.
மனமே! பறவைகள் நிறைந்த திணைப்புனத்தைக் காக்கும் வள்ளி நாயகியைப் பக்கத்தில் உடையவனாகிய முருகனின் திருவடியை, புகழ்ந்து பேசு. (கணக்கு அழிவு - அழிவுக் கணக்கு, பொய்க்கணக்கு பொருவார் - சண்டை செய்பவர் தாரம் - மனைவி குருகு - பறவை)
சேராத இடந்தனிலே சேர வேண்டாம்
செய்தநன்றி ஒருநாளும் மறக்க வேண்டாம் ஊரோடும் குண்டுணியாய்த் திரிய வேண்டாம்
உற்றாரை உதாசினங்கள் சொல்ல வேண்டாம் பேரான காரியத்தைத் தவிர்க்க வேண்டாம்
பிணைபட்டுத்துணைபோகித் திரிய வேண்டாம் வாராரும் குறவருடைது வள்ளி பங்கன்
மயிலேறும் பெருமாளை வாழ்த்தாய் நெஞ்சே.
1. சேரத் தகுதி இல்லாதவருடன் சேராதே. 2. ஒருவர் செய்த நன்மையை ஒருபொழுதும் மறவாதே. 3. ஊரில் உள்ள தீயவர்களுடன் சேர்ந்து கோள் சொல்பவனாகித் திரியாதே. 4. உறவினரிடத்தில் இகழ்ச்சியான வார்த்தைகளைச் சொல்லாதே. 5. புகழ் பெறுவதற்குக் காரணமான காரியத்தைச் செய்யாது விலக்காதே. 6. கடன் வாங்குவோர்க்குப் பிணையாகித் துணையாகச் சென்று திரியாதே.
நெஞ்சே! விலங்கு, பறவை முதலியவற்றை அகப்படுத்தும் வலையினைக் கொண்ட குறவர்களுடைய மகளாகிய வள்ளி
நாயகியைப் பக்கத்தில் உடையவனாய், மயிலை ஊர்ந்து
 

9.
செல்லும் முருகனை, நீ வாழ்த்துவாயாக. (குண்டுணி - கோள்சொல்லி உதாசினம் -இகழ்ச்சிச் சொல் வார்- வலை)
மண்நின்று மண்ஒரம் சொல்ல வேண்டாம்
மனம்சலித்து சிலுகிட்டுத் திரிய வேண்டாம் கண்அழிவு செய்துதுயர் காட்ட வேண்டாம்
காணாத வார்த்தையைக்கட்டுரைக்க வேண்டாம் புண்படவே வார்த்தைகளைச் சொல்ல வேண்டாம்
புறம்சொல்லித் திரிவாரோடு இணங்க வேண்டாம் மண்அளந்தான் தங்கைஉமை மைந்தன் எங்கோன் மயிலேறும் பொருமாளை வாழ்த்தாய் நெஞ்சே, 1. நிலத்தில் நின்றுகொண்டு நிலத்தைப் பற்றி ஒருதலைச் சார்பாகப் பேசாதே. 2. உள்ளம் சலித்து யாரிடத்தும் சண்டையிட்டுத் திரியாதே. 3. அருளைக் கெடுத்துக் கொண்டு பிற உயிர்களக்குத் துன்பம் செய்யிதே 4. காணாதவற்றைக் கண்டது போலப் பொய் சொல்லாதே. 5. கேட்போர் மனம் நோவு படுமாறு சொற்களைச் சொல்லாதே. 6. முன்னே புகழ்ந்து பின்னே இகழ்ந்து அலைபவருடன் சேராதே.
மனமே! உலகத்தை மூவழயால் அளந்த திருமாலுக்குத் தங்கையாகிய பார்வதிக்கு மகனும் எமக்குத் தலைவனுமாய், மயிலை ஊர்தியாகச் செலுத்தும் முருகப் பெருமானை, நீ வாழ்த்துவாயாக. (ஒரம் - ஒருபக்கம் சார்ந்து பேசுதல், பட்சபாதம் சிலுகிடுதல் - சண்டையிடுதல் கண்அழிவு - அருளைக் கெடுத்தல் கட்டுவார்த்தை - பொய், கற்பனைச்
சொல் மண்அளந்தான் - திருமால்).

Page 40
10. மறம்பேசித்திரிவாரோடு இணங்க வேண்டாம்
வாதாடி வழக்கழிவு சொல்லவேண்டாம் திறம்பேசிக் கலகமிட்டுத் திரிய வேண்டாம்
தெய்வத்தை ஒருநாளும் மறக்க வேண்டாம் இறந்தாலும் பொய்தன்னைச் சொல்ல வேண்டாம்
ஏசலிட்ட உற்றாரை நத்த வேண்டாம் குறம்பேசி வாழ்கின்ற வள்ளிபங்கன்
குமரவேள் நாமத்தைக் கூறாய் நெஞ்சே, 1. வீரவாதம் பேசிச் சண்டைக்கு அலைபவருடன் தொடர்பு கொள்ளாதே. 2. மன்றம் ஏறிவாது கூறிக் கெடுவழக்குக் கூறாதே. 3. உன் வலிமையைப் புகழ்ந்து கூறிக் கலகம் செய்து அலையாதே, 4. இறைவனை ஒருபொழுதும் மறக்காதே. 5. சொல்லாவிடின் சாவு நேருமாயினும் பொய்யைச் சொல்லாதே. 6. உன்னை மதியாது இகழ்ந்த உறவினரை விரும்பாதே.
மனமே! சோதிடக் குறிசொல்லி வாழும் வள்ளிநாயகியைப் பக்கத்தில் உடையவனாகிய முருகப் பெருமானின் பெயர்களை, நீ சொல்லிப் போற்றுவாயாக (வழக்கு அழிவு - அழிவு வழக்கு - பொய் வழக்கு அழிவழக்கு - பேச்சுத்தமிழ் நந்துதல் - விரும்புதல் குறம் பேசுதல் - குறிசொல்லுதல்)
அஞ்சுபேர் கூலியைக் கைக்கொள்ள வேண்டாம்
அதுஏது இங்குஎன்னின்நீசொல்லக் கேளாய்
தஞ்சமுடன் வண்ணான் நாவிதன்தன் கூலி சகலகலை ஒதுவித்த வாத்தியார் கூலி
வஞ்சமற நஞ்சறுத்த மருத்துவிச்சி குடிலி
மகாநோவுதனைத்தீர்த்த மருத்ரிவன்தன் கூலி
இன்சொலுடன் இவர்கூலி கொடாத பேரை
ஏதேதும் செய்வானோ ஏமன் தானே.
 

ஐந்து பேருடைய கூலியைக் கைப்பற்ற வேண்டாம்; உடனே கொடுத்துவிட வேண்டும். அக்கூலியானது யாது என்று கேட்பின், யான் சொல்கின்றேன். நீ கேட்பாயாக. 1. வண்ணானுடைய கூலியும், 2. அம்பட்டன் கூலியும் 3. பலவிதக் கலைகளையும் கற்பித்த ஆசிரியர் கூலியும் 4. வஞ்சனை இல்லாது நச்சுக்கொடி அறுத்த மருத்துவிச்சியின் கூலியும் 5. போக்குதற்கரிய கொடிய நோயினை நீக்கிய மருத்துவன் கூலியும் ஆகும்.
மேலே சொன்ன ஐவர்கட்கும் கொடுக்க வேண்டிய &ւ6մl60ա அன்புடனும் இனிய சொல்லுடனும் கொடுக்காதவர்களை எமன் என்ன என்ன துன்பம் செய்வானோ? யான்அறியேன். (தஞ்சம் - அன்பு)
12. கூறாக்கி ஒருகுடியைக் கெடுக்க வேண்டாம்
கொண்டைமேல் பூத்தேடி முடிக்க வேண்டாம்
தூறாக்கித் தலையிட்டுத்திரிய வேண்டாம்
துர்ச்சனராய்த் திரிவாரோடு இணங்க வேண்டாம்
வீறான தெய்வத்தை இகழ வேண்டாம்
வெற்றியுள்ள பெரியோரை வெறுக்க வேண்டாம்
மாறான குறவருடை வள்ளி பங்கன்
மயிலேறும் பெருமாளை வாழ்த்தாய் நெஞ்சே,
1. ஒற்றுமையுள்ள ஒரு குடும்பத்தைப் பிளவுபடுத்திக் கெடுக்காதே. 2. மலரைத் தேடிப் (சேகரித்து) பிறர் காணுமாறு கொண்டையின் மீது முடித்துக் கொள்ளாதே. 3. பிறர் மீது பழிச் சொற்களைக் கட்டிவிட்டு அதுவே உன் தொழில்ாகத் திரியாதே.

Page 41
4. கெட்டவர்களாகி ஊர்தோறும் அலைபவருடன் சேராதே. 5. பெருமையுள்ள தெய்வத்தை இகழாதே. 6. வெற்றி பொருந்திய பெரியோர்களை வெறுக்காதே. மனமே!தம் கடவுளின் பெருமைக்கு மாறானவர்களுடன் பகைமை உடையவராகிய குறவர்களுடைய மகளாகிய வள்ளி நாயகியைப் பக்கத்தில் உ டையவனாய், மயிலை ஊர்தியாகச் செலுத்தும் முருகப்பெருமானை, நீவாழ்த்துவாயாக. (கூறுபிளவு பிரிவு. தூறு - பழிச்சொல் வீறு - பெருமை).
13. ஆதரித்துப் பலவகையால் பொருளும் தேடி
அருந்தமிழால் அறுமுகனைப் பாட வேண்டி ஒதுவித்து வாசகத்தால் உலக நாதன்
உண்ன்மயாய்ப் பாடிவைத்த உலக நீதி காதலித்ததுக் கற்றோரும் கேட்ட பேரும்
கருத்துடனே நாடோறும் களிப்பி னோடு போதமுற்று மிகவாழ்ந்து புகழும் தேடிப்
பூலோகம் உள்ளவும் வாழ்வர் தாமே. மிக விரும்பிப் பல நல்ல வழிகளில் பொருளையும் சம்பாதித்து, ஆறுமுகக் கடவுளைச் சிறந்த தமிழ் மொழியால் பாடுதலை விரும்பி, ஆசான் அறிவித்தருளிய வாசகங்களினால் உலகநாதன் என்னும் பெயருடையான், உலகநீதி என்னும் நூலை உண்மையாகப் பாடியுள்ளான். இந்நூலை விரும்பிக் கற்றவர்களும் கேட்டவர்களும் ஒவ்வொரு நாளும் நல்ல எண்ணத்துடனும் மகிழ்ச்சியுடனும் அறிவும் வாய்க்கப் பெற்று, சிறந்த வாழ்வுடையவராய்ப்புகழையும் பெற்று உலகம் உள்ளவரையிலும் வாழ்வார்கள். (போதம் - அறிவு)
 

(வாக்குண்டாம்)
முதுமையான உரைகளைக் கொண்டது “மூதுரை","வாக்குண்டாம்” என்பது, இந்நூலில் உள்ள கடவுள் வாழ்த்துச் செய்யுளின் தொடக்கத் தொடர். அது பிற்காலத்தவரால் இந்நூலுக்கு இரண்டாவது பெயராக வழங்கப்பட்டு வருகிறது.
இது கடவுள் வாழ்த்து நீங்கலாக 30 வெண்பாக்களை உடையது. பல பெரிய நூல்களின் சாரழாகவுள்ள நீதிகளும் கருத்துக்களும் நடையில் இந்நூலில் தெளிவுறக் கூறப் பெற்றுள்ளன. இந்நீதிகள் ust 6 to சிறுபருவம் தொட்டே
கற்பிக்கத்தக்கவை.
ர்
இந்நூலை இயற்றியவர் ஒளவையார் ஆவா

Page 42
மூதுரை
கடவுள் வாழ்த்து
வாக்குண்டாம் நல்ல மனமுண்டாம் மாமலராள் நோக்குண்டாம் மேனி நுடங்காது - பூக்கொண்டு துப்பார் திருமேனித் தும்பிக்கை யான்பாதம் தப்பாமல் சார்வார் தமக்கு.
பவளம் போலும் சிவந்த திருமேனியையும் துதிக்கையையும் உடைய கணபதியின் திருவடிகளை அருச்சனை செய்ய மலர் எடுத்துக் கொண்டு, தினமும் தவறாமல் சென்று பூசை செய்வோருக்கு, நல்ல சொல்வளம் உண்டாகும்; நல்ல சிந்தனை வளரும்; மேன்மை பொருந்திய செந்தாமரைப் பூவில் இருக்கும் திருமகளின் அருட்பார்வை உண்டாகும்; அவ்வாறு பூசிப்பவரின் உடம்பு பிணிகளால் நலிவுறாது. (மாமலராள் - இலக்குமி, நுடங்காது - வாட்டம் அடையாது; துப்பு - பவளம்).
நூல் 1. கைம்மாறு கருதாத உதவி
நன்றி ஒருவற்குச் செய்தக்கால் அந்நன்றி என்று தருங்கொல் எனவேண்டா - நின்று தளரா வளர்தெங்கு தாளுண்ட நீரைத் தலையாலே தான்தருதலால்,
 

ஒரே இடத்தில் நிலைத்து, சோராமல் வளர்கின்ற தென்னை மரமானது தன் வேரால் உண்ட தண்ணிரைத் தன் முடியாலே சுவையுள்ள இளநீராக்கித் தருதலால், நல்ல குணமுடைய ஒருவனுக்கு ஒர் உதவி செய்தால் அவ்வுதவியை அவன் மீண்டும் நமக்கு எப்பொழுது செய்வானோ என்று ஐயுற வேண்டுவதில்லை; உறுதியாகச் செய்வான். (தெங்கு - தென்னை)
2. தக்கவர்க்குச் செய்த உதவி
நல்லார் ஒருவர்க்குச் செய்த உபகாரம் கல்மேல் எழுத்துப்போல் காணுமே - அல்லாத ஈரமிலா நெஞ்சத்தார்க்கு ஈந்த உபகாரம் நீர்மேல் எழுத்திற்கு நேர்.
நல்ல குணமுடைய ஒருவர்க்குச் செய்த உதவியானது, கருங்கல்லின் மேல் செதுக்கப்பட்ட எழுத்தைப் போல அழியாது விளங்கும்; ஆனால், நல்லவரல்லாத அன்பில்லாத மனமுடையவர்களுக்குச் செய்த உதவியானது நீரின்மேல் எழுதப்பட்ட எழுத்தைப் போல அப்பொழுதே அழிந்துவிடும். (ஈரம் - அன்பு)
3. இளமையில் வறுமையும் முதுமையில் செல்வமும்
இன்னா இளமை வறுமைவந்து எய்தியக்கால் இன்னா அளவில் இனியவும் - இன்னாத நாள் அல்லா நாள்பூத்த நன்மலரும் போலுமே ஆள்இல்லா மங்கைக்கு அழகு.

Page 43
இன்பத்தை அனுபவித்தற்குரிய இளமைப்பருவத்தில் வறுமை வந்தடைந்தால், அது மிக்க துன்பத்தைத் தருவதாகும்; துன்பத்தைத் தரும் முதுமைப் பருவத்தில் நன்மையைத் தரும் பொருள்களும் துன்பத்தைத் தருவனவாம்; அவை, சூடுவதற்குரிய காலமல்லாக் காலத்தில் பூத்த நல்ல மலரையும், அனுபவித்தற்குரிய கணவன் இல்லாத மங்கையின் அழகையும் போன்றனவாகும்.
4. மேலோர் இயல்பு
அட்டாலும் பால்சுவையின் குன்றாது அளவளாய்
நட்டாலும் நண்பல்லார் நண்பல்லர்
கெட்டாலும் மேன்மக்கள் மேன்மக்களே சங்கு
சுட்டாலும் வெண்மை தரும்.
பாலினை எவ்வளவு காய்ச்சினாலும் அது தன்இனிய சுவையில் குறைவதில்லை; சங்கினை எவ்வளவு சுட்டாலும் அது வெண்மை நிறமாகவே இருக்கும்; அவைபோல, மேலோர் பொருளற்றாராயினும் மேலோராகவே விளங்குவர்; நட்புக்குணம் இல்லாத கீழோரிடத்துக் கலந்து நட்புச் செய்தாலும் அவர் நண்பராகார். (அடுதல் - காய்ச்சுதல், அளவளாவுதல் - கலந்து பழகுதல், இப்பாட்டில் தனிச்சொல் - இரண்டாம் அடியில் நான்காம் சீர் - இல்லாமையால், இதனைச்
R o y o
சவலை வெண்பா' என்பர்).
 

5. காலம் அறிந்து செய்தல்
அடுத்து முயன்றாலும் ஆகுநாள் அன்றி எடுத்த கருமங்கள் ஆகா - தொடுத்த உருவத்தால் நீண்ட உயர்மரங்கள் எல்லாம் பருவத்தால் அன்றிப் பழா.
கிளைகள் கிளைத்துள்ள, வடிவத்தால் நீண்ட
உயர்ந்த மரங்களெல்லாம் பழம்பழுக்கும் காலம் வந்தால் அல்லாமல் பழுக்க மாட்டா; அது போல, அடுத்தடுத்து விடா முயற்சி செய்தாலும் முடியும் காலம் வந்தால் அல்லாமல் எடுத்த காரியங்கள் முடியாவாம். (தொடுத்தல் - கிளைத்தல்).
6. மானத்தின் பெருமை
உற்ற இடத்தில் உயிர்வழங்கும் தன்மையோர் பற்றலரைக் கண்டால் பணிவரோ - கற்றுரண் பிளந்துஇறுவது அல்லால் பெரும்பாரம் தாங்கின் தளர்ந்து வளையுமோ தான்.
கருங்கல் தூணானது, பெரிய பாரத்தைச் சுமந்தால், பிளந்து முறியுமே தவிர, தளர்ந்து வளைந்து கொடுக்குமோ? வளையாது. அதுபோல, தம் மானத்திற்கு இழுக்கு ஏற்பட்ட விடத்துத்தம் உயிரை விடும் குணம் உடையார், பகைவரைக் கண்டால் பணிந்து போவாரோ? - பணியார். (பற்றலர் - பகைவர்; இறுவது - முறிவது)

Page 44
7. அறிவும் செல்வமும் குணமும்
நீரளவே ஆகுமாம் நீராம்பல்; தான்கற்ற நூலளவே ஆகுமாம் நுண்ணறிவு - மேலைத் தவத்தளவே ஆகுமாம் தான்பெற்ற செல்வம் குலத்தளவே ஆகும் குணம்.
நீரில் வளரும் அல்லிக் கொடியானது, நீரினது
ஆழத்தின் அளவாகவே இருக்கும்; அதுபோல, நுட்பமான அறிவானது, தான் படித்த நூல்களின் அளவாகவே இருக்கும்; தான் பெற்றுள்ள செல்வமானது, முற்பிறப்பில் செய்த தவத்தின் அளவாகவே இருக்கும்; குணமானது, தான் பிறந்த குடியின் அளவாகவே இருக்கும். (ஆம்பல்அல்லி).
8. நல்லவர் தொடர்பு
நல்லாரைக் காண்பதுவும் நன்றே நலமிக்க நல்லார்சொல் கேட்பதுவும் நன்றேன் - நல்லார் குணங்கள் உரைப்பதுவும் நன்றே அவரோடு இணங்கி இருப்பதுவும் நன்று.
நல்ல அறிவொழுக்கம் உடையோரைப் பார்ப்பதுவும் மிக நல்லதே நல்லவருடைய நன்மை நிறைந்த சொல்லைக் கேட்பதும் நல்லதே, நல்லவருடைய நல்ல குணங்களை எடுத்துப் பேசுதலும் நல்லதே, அவ்வாறான நல்லவருடன் கூடிக் கலந்திருத்தலும் நல்லதே.
 

9. தீயவர் தொடர்வு
தீயாரைக் காண்பதும் தீதே திருவற்ற தீயார்சொல் கேட்பதுவும் தீதே - தீயார் குணங்கள் உரைப்பதுவும் தீதே அவரோடு இணங்கி இருப்பதுவும் தீது,
தீய குணம் உடையாரைப் பார்ப்பதும் தீமைதருவதே; தீயவருடைய பயனற்ற சொற்களைக் கேட்பதுவும் தீமை தருவதே, தீயவருடைய கெட்ட குணங்களை எடுத்துச் சொல்லுதலும் தீமை தருவதே; அத்தீயவருடன் கூடி இருத்தலும் தீமை தருவதே. (திருஅற்ற - பயன்இல்லாத)
10. நல்லோரைச் சேர்ந்த பல்லோர்
நெல்லுக்கு இறைத்தநீர் வாய்க்கால் வழிஓடிப் புல்லுக்கும் ஆங்கே பொசியுமாம் - தொல்லுலகில் நல்லார் ஒருவர் உளரேல் அவர்பொருட்டு எல்லார்க்கும் பெய்யும் மழை.
நெற்பயிருக்காக இறைக்கப்பட்ட தண்ணிரானது வாய்க்கால் வழியாக ஒடிச் சென்று, அவ்விடத்துள் புற்களுக்கும் கசிந்து நீரைக் கொடுக்கும்; அதுபோல, பழமையாகிய இவ்வுலகில் நல்லவர் ஒருவர் இருப்பாராயின் அவரை முன்னிட்டு எல்லார்க்கும் மழை பொழிந்து கொடுக்கும். (பொசியும் - கசியும்)

Page 45
11. துணைவலிமையின் மேன்மை
பண்டு முளைப்பது அரிசியே ஆனாலும் விண்டுஉமி போனால் முளையாதாம் - கொண்டபேர் ஆற்றல் உடையார்க்கும் ஆகாது அளவின்றி ஏற்ற கருமம் செயல்.
மேலே உள்ள உமி நீங்குதற்கு முன்னர் முளைப்பது அரிசியே ஆனாலும் உமி நீங்கிப் போனால் அவ்வரிசி முளைக்காது; அது போல, அடைந்த பெரிய வல்லமை உடையவருக்கும் துணைவலிமை இல்லாமல் எடுத்துக்
கொண்ட செயலைச் செய்து முடித்தல் இயலாது. (விண்டுபோதல் - நீங்கிப் போதல்; அளவு -
துணைவலிமை).
12. உருவு கண்டு எள்ளாமை
மடல்பெரிது தாழை மகிழ்இனிது கந்தம் உடல்சிறியர் என்றிருக்க வேண்டா - கடல் பெரிது மண்நீரும் ஆகாது அதன்அருகே சிற்றுாறல் உண்நீரும் ஆகி விடும்.
தாழம்பூ மடல்களினாலே பெரிதாயிருக்கின்றது; மகிழம்பூ இதழ்களினால் சிறியதாக இருப்பினும் மணத்தினால் மிக இனியதாயிருக்கின்றது; கடல் மிகப் பெரிதாக இருக்கின்றது. ஆனால், அக்கடல் நீர் உடம்பழுக்கைப் போக்குதற்கும் தகுதி உடையதாகாது;
 

அக்கடலின் பக்கத்தே சிறிய மணற்குழியில் ஊறும் நீர் பருகுதற்கும் சிறந்த நீராகிறது; அதனால், ஒருவரை உருவத்தினால் சிறியர் என எண்ணி அவமதிக்கவேண்டா, அவர் ஆற்றல் மிக்கவராகவும் இருக்கலாம்.
(தாழை என்பதற்கு, தென்னைமரம் எனப் பொருள் காண்பர் நச்சினார்க்கினியர்; “தாழை விழுக்குலை உதிரத்தாக்கி” - திருமுருகாற்றுப் படை, இவ்வடியின்
உரை காண்க.
தென்னை ஒலை பெரிதாக இருந்தும் சிறிதும் மணம் இல்லை; கடல் பெரிதாக இருந்தும் அந்நீர் கழுவுதற்கும் பயனில்லை. இதுவே பொருத்தமாகப்படுகிறது.
மடல் - இதழ்; தாழை - தாழம்பூ - தென்னைமரம், கந்தம் - மணம், மண்ணுதல் - கழுவுதல்; சிற்றுாறல் - சிறிய ஊற்றுநீர், உண்நீர் - பருகும் நீர்).
13. கல்லாதவனின் இழிவு
கவையாகிக் கொம்பாகிக் காட்டகத்தே நிற்கும் அவை,அல்ல நல்ல மரங்கள் - சவைநடுவே நீட்டோலை வாசியா நின்றான் குறிப்பறிய மாட்டா தவன்நல் மரம்.
கிளைகளைக் கொண்டனவாகியும், கொம்புகளைக் கொண்டனவாகியும் காட்டினுள்ளே வளர்ந்து நிற்கின்ற அந்த மரங்கள் நல்ல மரங்கள் ஆகா, கற்றோர் கூடியுள்ள அவையின் நடுவே ஒருவர் நீட்டிய ஒலையைப் படிக்க மாட்டாமல் நின்றவனும், பிறருடைய குறிப்பை அறியமாட்டாதவனும் நல்ல மரங்களாகும். (கவை-கிளை-பெரியதுகொம்பு-சிறிய கிளை,சவை-அவை)

Page 46
14. கல்லாதான் கற்ற கவி
கான மயில்ஆடக் கண்டிருந்த வான்கோழி தானும் அதுவாகப் பாவித்துத் - தானும்தன் பொல்லாச் சிறகை விரித்துஆடினால் போலுமே கல்லாதான் கற்ற கவி.
கற்க வேண்டிய நூல்களை ஆசிரியரிடம் முறைப்படி கல்லாதவன், கற்றோர் கூறும் ஒரு கவியைக் கேட்டு மனப்பாடம் செய்து கொண்டு அக்கவியைப் பிறரிடம் எடுத்துக் கூறுதல், காட்டிலுள்ள மயில் தன் தோகையை விரித்து ஆட, அதனைப் பார்த்துக் கொண்டிருந்த வான்கோழியானது, தன்னையும் அம்மயிலாகவே எண்ணிக் கொண்டு, தன் அழகில்லாத சிறகை விரித்து ஆடினாற் போன்றதாகும். (பாவித்தல் - கருதுதல் - நினைத்தல்; பொல்லாச் சிறகு - அழகில்லாத சிறகு)
15. தீயோர்க்கு உதவுவதால் வரும் கேடு
வேங்கை வரிப்புலிநோய் தீர்த்த விடகாரி ஆங்குஅதனுக்கு ஆகாரம் ஆனால்போல்-பாங்குஅறியா புல்லறிவாளர்க்குச் செய்த உபகாரம் கல்லின்மேல் இட்ட கலம்.
செத்துக்கிடந்த வரிகளையுடைய வேங்கைப்புலியின் விடநோயைத் தன் மந்திரத்தால் போக்கிப் பிழைக்க வைத்த விடநீக்கும் மருத்துவன், அப்பொழுதே அப்புலிக்கு இரையானால் போல, நன்றி உணர்வு இல்லாத அற்ப அறிவினர்க்குச் செய்த உதவி, கல்லின் மேல் போடப்பட்ட மண்கலம் போல உடைந்து, செய்தவனுக்கே தீமையை விளைவிக்கும். (விடகாரி - நஞ்சை நீக்கும் மருத்துவன்).
 

16. அடக்கத்தின் மேன்மை
அடக்கம் உடையார் அறிவிலர்என்று எண்ணிக் கடக்கக் கருதவும் வேண்டா - மடைத்தலையில் ஒடுமீன் ஒட உறுமின் வரும்அளவும் வாடி இருக்குமாம் கொக்கு.
கொக்கானது நீரணையிலிருந்து பாய்கின்ற நீரில் ஒடுகின்ற சிறுமீன்கள் ஒடிக் கொண்டிருக்க, அவற்றை விட்டு விட்டு இரையாவதற்கேற்ற பெரிய மீன் வரும் வரையிலும் செத்தாற்போல அடங்கியிருக்கும்; அதுபோல, தக்க பகைவர் வரும் வரையிலும் அடங்கி இருப்பவரை அறிவில்லாதவர் என நினைத்து அவரை வெல்லுவதற்கு நினைக்கவும் வேண்டா, நினைப்பின் பெரிய கேடாகும். (மடை - மதகு, நீரணை. உறுமின் - பெரியமின்).
17. சிறந்த உறவினர்
அற்ற குளத்தில் அறுநீர்ப் பறவைபோல் உற்றுபூழித் தீர்வார் உறவுஅல்லர் - அக்குளத்தில் கொட்டியும் ஆம்பலும் நெய்தலும் போலவே ஒட்டி உறுவார் உறவு. நீர் வறண்ட குளத்தினின்றும் விட்டு நீங்குகின்ற நீர்ப்பறவை போல, செல்வம் மிகுந்த காலத்து ஒன்றியிருந்து வறுமை வந்த பொழுது விட்டு நீங்குவோர் சிறந்த உறவினர் ஆகார்; அக்குளத்திலுள்ள கொட்டியும் அல்லியும் நெய்தலும் போல (நீருள்ள காலத்து நன்று வளர்ந்து நீரற்ற காலத்துச் சேர்ந்து அழிவது போல) நீங்காது சேர்ந்திருந்து துன்பத்தைக் கூடி அனுபவிப்பவரே சிறந்த உறவினராவர்.
(அறுதல் - நீங்குதல்; தீர்வார் - நீங்குவார்).

Page 47
18. வறுமையிலும் செம்மையாக வாழ்பவர்
சீரியர் கெட்டாலும் சீரியரே சீரியர்மற்று அல்லாதார் கெட்டால்அங்கு என்ஆகும்? - சீரிய பொன்னின் குடம்உடைந்தால் பொன்ஆகும் என்ஆகு மண்ணின் குடம்உடைந்தக் கால் ?
சான்றோர்கள் வறுமையுற்றாலும் தம் சாற்றாண்மையிலிருந்து சிறிதும் குறையார்; சான்றோர் அல்லாத கீழ்மக்கள் வறுமையுற்றால் அப்பொழுது அவர் குணம் என்னவாகும்? மேலும் கீழாகும். பொன்னாலாகிய குடம் உடைந்தாலும் மீண்டும் அப்பொன் பயன் தரும்; மண்ணாலாகிய குடம் உடைந்தால் அதனால் என்ன பயனுடையதாகும்?
19. ஊழின் அளவே அளவு
ஆழ அமுக்கி முகக்கினும் ஆழ்கடல் நீர் நாழி முகவாது நால்நாழி - தோழி! நிதியும் கணவனும் நேர்படினும் தம்தம் விதியின் பயனே பயன்.
ஆழமாகிய கடலின் நீரை நன்றாக அழுந்தும்படி அமிழ்த்தி மொண்டாலும், ஒருபடியானது நான்கு படிநீரைக் கொள்ளாது; அதுபோல, தோழியே மாதர்க்கு மிகுதியான செல்வமும் தக்க கணவனும் வாய்த்தாலும் அவரவருடைய விதியின் பயனளவே அனுபவிக்கப்படும் பயனாகும்.
 

20. உடன் பிறந்தாரும் பிறரும்
உடன்பிறந்தார் சுற்றத்தார் என்றுஇருக்க வேண்டா உடன்பிறந்தே கொல்லும் வியாதி - உடன்பிறவா மாமலையில் உள்ள மருந்தே பிணிதீர்க்கும் அம்மருந்து போல்வாரும் உண்டு.
பிணியானது உடம்புடன் கூடவே பிறந்து அவ்வுடம்பினைக் கொல்லுகின்றது; அதனால் தம்மோடு உடன்பிறந்தவர் எல்லோரும் நல்ல சுற்றத்தார் என்று நினைக்க வேண்டா; உடன்பிறவாத பெரிய மலையில் வளர்ந்துள்ள மூலிகைகளே நோயைப் போக்கும்; அம்மூலிகை மருந்துகளைப் போல் அயலாராயிருந்தும் உதவி செய்பவரும் உலகில் சிலர் உளர்.
21. இல்லவள் இல்லா இல்லம்
இல்லாள் அகத்துஇருக்க இல்லாதது ஒன்றுஇல்லை இல்லாளும் இல்லாளே ஆமாயின் - இல்லாள் வலிகிடந்த மாற்றம் உரைக்குமேல் அவ்இல் புலிகிடந்த தூறுஆய் விடும்.
நற்குண நற்செய்கைகளை உடைய மனைவி வீட்டில் இருப்பின், அவ்வீட்டில் இல்லாத பொருள் என ஒன்றில்லை; எல்லாம் உளவாம். மனைவி இல்லாமல் போயினும், மனைவி கணவனிடத்தில் கடுஞ்சொற்களைப் பேசினும் அவ்வீடு புலி வாழ்கின்ற புதர்போல ஆகிவிடும்; அவ்வீடு காடேயாம். (வலிகிடந்த மாற்றம் - கடுமை பொருந்திய சொற்கள்; தூறு - புதர்).

Page 48
22. விதியின் வலிமை
எழுதியவாறேகாண் இரங்குமட நெஞ்சே! கருதியவாறு ஆமோ கருமம் ? கருதிப்போய்க் கற்பகத்தைச் சேர்ந்தோர்க்குக் காஞ்சிரங்காய் ஈந்ததேல் முற்பவத்தில் செய்த வினை.
வருந்துகின்ற அறியாமையை உடைய மனமே ! நினைத்த நன்மையைப் பெறலாம் என்று நினைத்துப் போய்க் கற்பகத் தருவை அடைந்தவர்க்கு, அம்மரம் நச்சுள்ள எட்டிக்காயைக் கொடுத்தது என்றால், அதற்குக் காரணம், அவர் கடந்த பிறப்பில் செய்த தீவினையேயாகும்; அதனால் செய்யும் தொழில்கள் நீ நினைத்தபடியே நிறைவேறுமோ ? தெய்வம் விதித்தபடியே ஆகும் என அறிவாயாக. (முற்பவம் - முற்பிறப்பு).
23. சான்றோர் சினமும் கயவர் சினமும்
கற்பிளவோடு ஒப்பர் கயவர் கடுஞ்சினத்துப் பொற்பிளவோடு ஒப்பாரும் போல்வாரே - விற்பிடித்து நீர்கிழிய எய்த வடுப்போல மாறுமே சீர்ஒழுகு சான்றோர் சினம்.
கீழ்மக்கள் கடுங்கோபத்தால் வேறுபட்டாராயின், கருங்கல் பிளவுபோல மீண்டும் சேரார்; அப்படிச் சேராதபோது, பொன் பிளந்தாலும் மீண்டும் சேர்வது போல, ஒருவர் சேர்த்து வைக்க மீண்டும் நட்பாவார் சிலர்; பெருமைமிக்க சான்றோருடைய கோபம், வில்லைப்பிடித்து அம்பினாலே நீர் கிழியுமாறு எய்த பிளவுபோல அப்போதே நீங்கும். (சீர் - சிறப்பு, பெருமை).
 

24. இயல்புக்கேற்ற தொடர்பு
நற்றாமரைக் கயத்தில் நல்லன்ஃசேர்ந்தாற்போல் கற்றாரைக் கற்றாரே காமுறுவர் - கற்பிலா மூர்க்கரை மூர்க்கர் முகப்பர் முதுகாட்டில் காக்கை உகக்கும் பிணம்.
குளத்தில் உள்ள நல்ல தாமரை மலரில் நல்ல அன்னப் பறவை சேர்ந்தாற்போல, கற்றவரைக் கற்றவரே விரும்பிச் சேர்வர்; இடுகாட்டில் உள்ள பிணத்தைக் காக்கை விரும்பும்; அதுபோல, கல்லாத மூடரை மூடரே விரும்பிச் சேர்வர். (கயம் - குளம்; காமுறுவர் - காமம் உறுவர் - விரும்பிச் சேர்வர், முதுகாடு - சுடுகாடு; உகக்கும் - விரும்பும்; முகப்பர் - விரும்புவர்).
25. வஞ்சனை உடையார் இயல்பு
நஞ்சுடைமை தான்அறிந்து நாகம் கரந்துஉறையும் அஞ்சாப் புறங்கிடக்கும் நீர்ப்பாம்பு - நெஞ்சில் கரவுடையார் தம்மைக் கரப்பர் கரவார் கரவிலா நெஞ்சத் தவர்.
நாகப் பாம்பானது தான் விடம்கொண்டிருத்தலை அறிந்து பிறர் அறியாமல் மறைந்து வசிக்கும்; விடம் இல்லாத தண்ணிர்ப் பாம்பானது அஞ்சாமல் புறத்தே கிடக்கும்; அவைபோல, வஞ்சனை கொண்ட மனத்தை உடையவர், தம்மைத் தாமே மறைத்துக் கொள்வர்; வஞ்சனை இல்லாத மனத்தை உடையவர், தம்மை மறையாது வெளிப்பட்டு ஒழுகுவர். (கரந்து - மறைந்து; புறம் - வெளியில், கரவு - வஞ்சனை).

Page 49
26. மன்னனும் கற்றோனும்
மன்னனும் ம்ரீகிற்றக் கற்றோனும் சீர்தூக்கின் மன்னனில் கற்றோன் சிறப்புடையன் - மன்னற்குத் தன்தேசம் அல்லால் சிறப்பில்லை கற்றோர்க்குச் சென்ற இடமெல்லாம் சிறப்பு.
அரசனையும் குற்றமறக் கற்ற புலவனையும் ஆராய்ந்து பார்த்தால், அரசனைக் காட்டினும் புலவனே மதிப்புடையவன் ஆவான்; ஏனெனில், அரசனுக்குத் தன் நாட்டில் மட்டுமே மதிப்புண்டு; புலவனுக்கோ அவன் சென்ற நாட்டிலெல்லாம் மதிப்புண்டு; அதனால், புலவனே சிறந்தோனாவான். (மாசு - குற்றம்}.
27. பலவகை எமன்கள்
கல்லாத மாந்தர்க்குக் கற்றுணர்ந்தார் சொல்கூற்றம் அல்லாத மாரிந்தர்க்கு அறம்கூற்றம் - மெல்லிய வாழைக்குத் தான்ஈன்ற காய்கூற்றம் கூற்றமே இல்லிற்கு இசைந்துஒழுகாப் பெண்.
கல்வி அறிவில்லாத மக்களுக்கு நன்கு கற்றவர்களுடைய சொல் எமனாகும்; அறத்தில் விருப்பமில்லாதவர்களுக்கு அவ்வறமே எமனாகும்; மென்மையான வாழைமரத்துக்கு அது காய்த்த காயே எமனாகும்; அதுபோல, இல்லற வாழ்க்கைக்கு ஏற்றவாறு அமைந்து நடவாத மனைவி கணவனுக்கு எமனாக இருப்பாள். (கூற்றம் - எமன், ஒழுகா - நடக்காத).
 

28. வறுமையிலும் செம்மையுடைய மன்னர்
சந்தன மென்குறடு தான்தேய்ந்த காலத்தும் கந்தம் குறைபடாது ஆதலால் - தம்தம் தனம்சிறியர் ஆயினும் தார்வேந்தர் கேட்டால் மனம்சிறியர் ஆவரோ மற்று
மெல்லிய சந்தனக் கட்டையானது, தான் தேய்ந்து போன காலத்திலும், மணம் சிறிதும் குன்றாது; ஆதலால், மாலையை அணிந்த மன்னர்கள், தங்கள் தங்கள் செல்வத்தில் குறைந்தவராயினும், அவ்வறுமையால் மனம் குன்றுபவர் ஆவரோ ? மனவிரிவு குன்றார். (குறடு - கட்டை, கந்தம் - மணம்; தனம் - செல்வம்; தார் - மாலை, கேட்டால் - கேடு+ஆல்- வறுமையால்).
29. திருமகளின் நிலை
மருவுஇனிய சுற்றமும் வான்பொருளும் நல்ல உருவும் உயர்குலமும் எல்லாம் - திருமடந்தை ஆம்போது அவளோடும் ஆகும் அவள்பிரிந்து போம்போது அவளோடும் போம்.
பொருந்திய இனிய உறவும், நிறைந்த பொருளும் நல்ல அழகும், உயர்ந்த குடிப்பிறப்பும் ஆகிய இவைகளெல்லாம், திருமகள் வந்துசேரும் போது அவளுடனே வந்து சேரும்; அவள் விட்டு நீங்கும் போது, அவளுடனே இவை யாவும் நீங்கிப் போகும். (மருவுதல் - பொருந்துதல்; உருவு - அழகு, திருமடந்தைஇலக்குமி).

Page 50
30. அறிவுடையார் இயல்பு
சாம்தனையும் தீயனவே செய்திடினும் தாம்அவரை ஆம்தனையும் காப்பர் அறிவுடையோர் - மாந்தர் குறைக்குந்தனையும் குளிர்நிழலைத் தந்து மறைக்குமாம் காண்டீர் மரம்.
மரங்களானவை, தம்மை மாந்தர் வெட்டுமளவும் குளிர்ந்த நிழலைத் தந்து வெயிலைத் தடுக்கும்; அதுபோல, அறிவுடையவர் தாம் சாகும் அளவும் பிறர் தமக்குத் தீமை செய்தாராயினும், அவரை வெறாது, தாம் அவரையும் தம்மாலே முடிந்த அளவு கரிப்பார்கள். (அத்தனையும் -
ஆகும் அளவும்)
 

“நல் வழி” என்பது, மெய்ந்நூல்களின் முடிந்த கருத்துக்களை - நல்ல நெறிகளைக் - கூறுவது. இப்பெயர் நூலுள் எந்த இடத்திலும் இடம்பெறாது, வழிவழியாக வந்த பெயராகும்.
இது கடவுள் வாழ்த்து நீங்கலாக 40 வெண்பாக்களைக் கொண்டது. மக்கள் தம் வாழ்வில் கடைப்பிடிக்க வேண்டிய நல்ல வழிகளையும் சமயக்கருத்துக்களையும் தத்துவக் கருத்துக்களையும் பழகு தமிழில் எளிய நடையில் கூறுவது. இந்நூலின் ஆசிரியர் பிள்ளையாரிடம் பால், தேன், பாகு, பருப்பு ஆகிய நான்கு பொருள்களைக் கொடுத்துச் “சங்கத் தமிழ் மூன்றை”யும் தருமாறு வேண்டிக் கொண்டுள்ளார். இந்நூலும் சிறுவர்கள் கற்க வேண்டிய நீதி நூல்களுள் ஒன்றாகும்.
இந்நூலை இயற்றியவர் ஒளவையார் ஆவார்)

Page 51
நல்வழி
கடவுள் வாழ்த்து
பாலும் தெளிதேனும் பாகும் பருப்பும்இவை நாலும் கலந்துஉனக்கு நான்தருவேன் - கோலம்செய் துங்கக் கரிமுகத்துத் தூமணியே நீஎனக்குச் சங்கத் தமிழ்மூன்றும் தா.
அழகினைச் செய்கின்ற மேலான யானை முகத்தை உடைய தூய்மையான மாணிக்கம் போலும் விநாயகக் கடவுளே! நல்ல ஆவின் பாலும், தெளிந்த தேனும், வெல்லப்பாகும், பருப்பும் ஆகிய இந்நான்கு பொருள்களையும் கலந்து, அடியேன் தங்களுக்குப் படைப்பேன்; முதல் இடை கடை ஆகிய முச்சங்கங்களால் வளர்க்கப் பெற்ற இயல் இசை நாடகம் ஆகிய முத்தமிழையும் அடியேனுக்குத் தந்து அருள் செய்வீராக.
(கோலம் - அழகு, துங்கம்- உயர்வு கரி - யானை).
நூல்
1. அறமே செய்க
புண்ணியம்ஆம் பாவம்போம் போனநாள் செய்தஅவை மண்ணில் பிறந்தார்க்கு வைத்தபொருள் - எண்ணுங்கால் ஈதுஒழிய வேறுஇல்லை எச்சமயத் தோர்சொல்லும் தீதுஒழிய நன்மை செயல்.
 

அறமானது செய்யத்தக்கது; பாவமானது ஒழிக்கத்தக்கது; முற்பிறப்பில் செய்த அந்த அறமும் பாவமுமே இவ்வுலகில் பிறந்த மக்களுக்கு இன்ப துன்பங்களை அனுபவிக்கும்படி சேர்த்து வைத்த பொருள்களாகும்; எண்ணிப் பார்க்கும் பொழுது பல்வேறு சமயத்தவர் சொல்வதும் இதுவன்றி வேறில்லை; ஆகையால், பாவம் செய்யாது அறமே செய்க. (புண்ணியம் - அறம்திது - பாவம்)
2. ஈகையால் வரும் சாதி
சாதி இரண்டொழிய வேறுஇல்லை சாற்றுங்கால் நீதிவழுவா நெறிமுறையின் - மேதினியில் இட்டார் பெரியோர் இடாதார் இழிகுலத்தோர் பட்டாங்கில் உள்ள படி,
எடுத்துச் சொல்லுமிடத்து, இவ்வுலகில் இரண்டே சாதிகளைத் தவிர வேறு இல்லை; அவ்விரண்டு
சாதியினரும் யாவரெனில், நீதி தவறாத நன்னெறியில் நின்று முறையோடு ஏழைகளுக்கு ஈந்தவரே உயர்ந்த சாதியினர் ஆவர்; அவ்வாறு ஈயாதவர் தாழ்ந்த சாதியினராவர்; உண்மையான நூலில் சொல்லியுள்ள படி இதுவேயாகும்.
(வழுவா - தவறா; மேதினி - உலகம்; பட்டாங்கில் - உண்மை
நூலில்)

Page 52
3. ஈகையின் பெருமை
இடும்பைக்கு இடும்பை இயல் உடம்பு இது அன்றே
இடும்பொய்யை மெய்யென்று இராதே - இடும்கடுக
உண்டாயின் உண்டாகும் ஊழின் பெருவலிநோய் விண்டாரைக் கொண்டாடும் வீடு.
இயங்குகின்ற இந்த உடம்பு, துன்பங்களாகிய சரக்குகளை நிறைத்து வைக்கும் பை அல்லவா? உணவை இடுகின்ற பொய்யான நிலையற்ற இந்த உடம்பை, ! நிலையானது என்று எண்ணாமல், விரைந்து வறியவர்களுக்கு அவர் வேண்டியவற்றைக் கொடுங்கள்; இந்த அறச்செயல் உங்களிடத்து உண்டானால், மிக்க வலிமையுடைய பாசமாகிய நோய் நீங்கியவரை விரும்புகின்ற முத்தியானது, முறைப்படி உங்களுக்குக் கிடைக்கும். (இடும்பை - துன்பம், இடும்பை - நிறைத்து வைக்கும் பை, பொய் - உடம்பு விண்டாரை - நீங்கியவரை)
4. அறம் பலிக்கும் காலம்
எண்ணி ஒருகருமம் யார்க்கும்செய்யொண்ணாது புண்ணியம் வந்துஎய்து போது அல்லால் - கண் இல்லான் மாங்காய் விழஎறிந்த மாத்திரைக்கோல் ஒக்குமே ஆம்காலம் ஆகும் அவர்க்கு.
எப்படிபட்டவர்க்கும் முற்பிறப்பில் செய்த புண்ணியம் வந்து கூடும் பொழுதல்லாமல், ஒரு செயலை ஆராய்ந்து செய்து முடிக்க இயலாது; அவ்வாறு செய்யின், அச்செயல் கண்ணில்லாதவன் மாங்காயை அடித்து வீழ்த்துதற்கு எறிந்த அளவுகோலைப் போலாகும்; புண்ணியம் வந்து சேரும்போது, அவர்க்கு அச்செயல் எளிதாக முடியும். (மாத்திரைக் கோல் - அளவுகோல்.)
 

5. ஊழை எண்ணிக் கவலையை விடுக.
வருந்தி அழைத்தாலும் வஈத வாரா பொருந்துவன போமின் என்றால் போகா - இருந்துஎங்சி நெஞ்சம் புண்ணாக நெடுந்துாரம் தாம் நினைந்து துஞ்சுவதே மாந்தர் தொழில்.
ஊழின்படி வரக்கூடாதவை பரிந்து அழைத்தாலும் வரமாட்டா; ஊழால் நமக்கு வரக்கூடியவை போய் விடுங்கள் என்று வெறுத்தாலும் போக மாட்டா; ஊழ் இவ்வாறு இருப்பதை அறியாமல் வருந்தி, ஏக்கமடைந்து, மனம் நோகும்படி அவற்றைக் குறித்து நெடுங்காலம் சிந்தித்து, இறந்து போவதே மனிதர்களின் தொழிலாக உள்ளது.
(துஞ்சுவது - இறந்து போவது)
6. ஊழ்வினையின் அளவே நன்மை
உள்ளது ஒழிய ஒருவர்க்கு ஒருவர்சுகம் கொள்ளக் கிடையா குவலயத்தில் - வெள்ளக் கடல்ஒடி மீண்டு கரைஏறினால் என் உடலோடு வாழும் உயிர்க்கு?
ஒருவர்க்கு விதியின்படி கிடைக்க வேண்டியது தவிர, மற்றொருவருடைய இன்பங்களை அனுபவிக்க விரும்பினால், அவை கிடைக்க மாட்டா; ஆதலால் இவ்வுலகில் உடம்போடு இயைந்து வாழும் இந்த உயிருக்கு, நிறைந்த நீரை உடைய கடல் கடந்து சென்று செல்வத்தை நிரம்பத் தேடிக் கொண்டு திரும்பிவந்து கரை

Page 53
சேர்ந்தாலும், அதனால் பயன் என்? விதிக்கு மேலாக ஒன்றும் அனுபவிக்க முடியாது.
(குவலயம் - உலகம்)
7. பற்றற்றார் நிலை
எல்லாப் படியாலும் எண்ணினால் இவ்வுடம்பு பொல்லாப் புழுமலிநோய்ப் புன்குரம்பை - நல்லார் அறிந்திருப்பார் ஆதலினால் ஆம்கமலநீர் போல் பிறிந்திருப்பார் பேசார் பிறர்க்கு
எல்லா வகையாலும் சிந்தித்துப் பார்த்தால், இந்த உடம்பானது, கொடிய புழுக்களுக்கும் நிறைந்த பிணிகளுக்கும் நிலைத்து வாழும் ஒரு சிறிய குடிசை போல இருக்கின்றது; நல்ல அறிவினை உடையோர் இவ்வியல்பினை அறிந்திருப்பர்; ஆகையால், தாமரை இலையில் தண்ணிர் போல இவ்வுடலுடன் கூடி இருந்தாலும் பற்று இல்லாமல் இருப்பர்; அதனைப் பற்றிப் பிறரிடம் பேசமாட்டார்.
(குரம்பை - குடிசை, கமலம் - தாமரை, பிரிந்து என்பது எதுகை நோக்கி வல்லுனம் பெற்றது.)
8. ஊழின்படியே செல்வம் சேரும்
ஈட்டும் பொருள்முயற்சி எண் இறந்த வாயினும் ஊழ் கூட்டும் படிஅன்றிக் கூட்ாவாம் - தேட்டம் மரியாதை காணும் மகிதலத்தீர் கேண்மின் தரியாது காணும் தனம்.
 

இந்த உலகில வாழும் மாந்தர்களே! கேளுங்கள்! சம்பாதிக்கும் பொருள், முயற்சி அளவில்லாமல் செய்யப்படினும், விதிப்பயன் கூட்டும் அளவு அல்லாமல், மிகுதியாகச் சேராது; பழைய வினையினாலும் அப்பொருள் நிலைத்திராது; ஆதலால், நீங்கள் தேட வேண்டியது நல்ல ஒழுக்கத்தையே ஆகும். (மகிதலம் - உலகம்; எண் இறந்த - அளவில்லாதன; தரியாது - நிலைத்திராது.)
9. நல்ல குடிப்பிறந்தார் இயல்பு
ஆற்றுப் பெருக்கற்று அடிசுடும் அந் நாளும் அவ்வாறு ஊற்றுப் பெருக்கால் உலகூட்டும் - ஏற்றவர்க்கு நல்ல குடிப்பிறந்தார் நல்கூர்ந்தார் ஆனாலும் இல்லை என மாட்டார் இசைந்து.
ஆற்றில் வெள்ளம் வறண்டு போய், மணல் வெயிலில் காய்ந்து, நடப்பவர் பாதங்களைச் சுடுகின்ற அக்காலத்திலும், அந்த ஆறானது, ஊற்று நீர்ப் பெருக்கினால் உலக மக்களை உண்ணச் செய்யும்; அதுபோல, உயர்ந்த குடிப்பிறந்தவர் வறுமை உற்றாராயினும், தம்மிடம் வந்து இரந்து கேட்பவருக்கு மனம்பொருந்தி இல்லை என்று சொல்ல மாட்டார்; முடிந்தவரை கொடுத்துதவுவர். (ஏற்றவர் - இரப்பவர்; நல்கூர்ந்தார் - வறுமை உற்றவர்.)

Page 54
10. இறப்பை நினைத்துக் கவலை உறாமை
ஆண்டாண்டு தோறும் அழுது புரண்டாலும் மாண்டார் வருவரோ? மாநிலத்தீர் - வேண்டா நமக்கும் அதுவழியே நாம்போம் அளவும் எமக்கென்ன என்று இட்டு உண்டு இரும்.
உலக மாந்தர்களே! வருடந்தோறும் புரண்டு விழுந்து அழுதாலும் இறந்தவர் உயிர்பெற்று வருவாரோ? ஆதலால், அழவேண்டா; நமக்கும் அந்த இறப்பே வழியாகும்; நாம் இறந்து போகும் வரை நமக்கு உடலுடன் என்ன தொடர்பு இருக்கிற என்று எண்ணி, இரப்பவருக்குக் கொடுத்துவி, நீங்களும் உண்டு, கவலை இல்லாமல்
மகிச்சியுடன் இருங்கள்.
11. இடும்பை கூர் வயிறு
ஒருநாள் உணவை ஒழி என்றால் ஒழியாய் இருநாளுக்கு ஏல்என்றால் ஏலாய் - ஒருநாளும் என்நோ அறியாய் இடும்பைகூர் என்வயிறே! உன்னோடு வாழ்தல் அரிது
நிறைந்த துன்பத்தைத் தருகின்ற என்னுடைய வயிறே இல்லாத போது ஒருநாள் மட்டும் உணவை விட்டு இரு என்றால் விட்டிருக்க மாட்டாய்;. உணவு கிடைத்தபோது இரண்டு நாளைக்குச் சேர்த்து உண் என்றால் ஏற்றுக் கொள்ள மாட்டாய்; ஒரு நாளாவது என்னுடைய துன்பத்தை அறிய மாட்டாய்; அதனால் உன்னோடு கூடி வாழ்வது எனக்கு அரிதாக உள்ளது. (நோ - துன்பம்)
 

12. உழவுத் தொழிலின் மேன்மை
ஆற்றங் கரையின் மரமும் அரசறிய வீற்றிருந்த வாழ்வும் விழும் அன்றே - ஏற்றம் உழுதுண்டு வாழ்வதற்கு ஒப்பில்லை கண்டீர் பழுதுண்டு வேறோர் பணிக்கு.
ஆற்றின் கரையில் வளர்ந்துள்ள மரமும், அரசாங்கம் அறியுமாறு பெருமையாக வாழ்ந்த வாழ்வும் அழிந்துவிடும் அல்லவா? ஆகையால், உழுது பயிர் செய்து உண்டு வாழ்வதே மேலானதாகும்; அதற்கு இணையான வாழ்வு வேறில்லை; பிற தொழில் செய்து வாழும் வாழ்க்கைக்குக் கெடுதல் உண்டு. (பழுது - தவறு, கெடுதல்.)
13. வினைப்பயனை விலக்கல் இயலாது
ஆவாரை யாரே அழிப்பர்? அது அன்றிச் சாவாரை யாரே தவிர்ப்பவர்? - ஒவாமல் ஐயம் புகுவாரை யாரே விலக்குவார்? மெய்அம் புவி அதன் மேல்.
அழகிய உலகத்தின் மீது, உண்மையாக, நல்வினையின் காரணமாக நெடுங்காலம் வாழ்வதற்கு உரிய வரை, நடுவில் கெடுக்கக் கூடியவர் யாவர்? அதுவல்லாமல், இறப்பதற்கு உரியவரை, இறவாமல் தடுத்து நிறுத்தக் கூடியவர் யாவர்? எப்பொழுதும் பிச்சை எடுக்கச் செல்பவரைத் தடுத்து நிறுத்தக் கூடியவர் யாவர்? (ஒவாமல் - ஒழியாமல்; ஐயம் - பிச்சை, அம்புவி - அழகிய உலகம்.)

Page 55
14. மானத்தோடு வாழ்தல்
பிச்சைக்கு மூத்த குடிவாழ்க்கை பேசுங்கால் இச்சைபல சொல்லி இடித்துண்கை - சிச்சீ வயிறு வளர்க்கைக்கு மானம் அழியாது உயிர் விடுகை சால உறும்.
சொல்லுமிடத்து, பிச்சை எடுத்து உண்பதைவிட இழிவில் பெரிய இல்லற வாழ்க்கையாவது, இச்சையான பல சொற்களைப் பேசி அவரால் இடித்துரைக்கப்பட்டுப் பின் கொடுக்க வாங்கி உண்பதாகும்; சீசீ இப்படி வயிறு வளர்ப்பதை விட மானம் அழியாமல் இறந்து போவது மிக மேலானதாகும்.
15. திருவைந்தெழுத்தின் பெருமை
சிவாய நமஎன்று சிந்தித்து இருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை - உபாயம் இதுவே மதியாகும் அல்லாத எல்லாம் விதியே மதியாய் விடும்.
'சிவாய நம’ என்னும் திருவைந்தெழுத்து மந்திரத்தை எப்போதும் தியானிப்பவர்களுக்கு, ஒருநாளும் துன்பம் உண்டாகாது; விதியை வெல்வதற்கு இதுவே சிறந்த வழியாகும்; இதுவே சிறந்த மெய்யறிவுமாகும். இவ்வாறு சிவனைத்தியானம் செய்வது அல்லாத மற்றைய அறிவு எல்லாம், விதிப்படியே நன்மை தீமைகளை அனுபவிக்க நேரும்.
(அபாயம் - துன்பம், உபாயம் - வழி)
 

16. வையத்துள் அற்புதமாவன
தண்ணிர் நிலநலத்தால் தக்கோர் குணங்கொடையால் கண்ணிர்மை மாறாக் கருணையால் - பெண்ணிர்மை கற்பழியா ஆற்றால் கடல் சூழ்ந்த வையகத்துள் அற்புதமாம் என்றே அறி.
தண்ணிரானது நிலத்தின் நல்ல தன்மையாலும், சான்றோருடைய குணமானது வறியவர்க்கு ஈவதனாலும், கண்களின் குணமானது நீங்காத அருளினாலும், மாதர்களின் குணமானது திண்ணிய கற்புடைமையாலும் கடல் சூழ்ந்த உலகத்தில் வியக்கத்தக்க பெருமை உடையனவாகும் என்று நீ அறிவாயாக.
17. தீவினையே வறுமையைத் தரும்
செய் தீவினை இருக்கத் தெய்வத்தை நொந்தக்கால் எய்த வருமோ இருநிதியம் - வையத்து அறும்பாவம் என்ன அறிந்து அன்றிடார்க்கு இன்று வெறும்பானை பொங்குமோ மேல்.
உலகத்தில் அறம் செய்வதால் பாவம் நீங்கும் என்பதனை உணர்ந்து அக்காலத்தில் இரந்தோர்க்கு இரங்கி ஈயாதவர்க்கு, செய்த அப்பாவம் வறுமைக்கு வித்தாய் இருக்க, இப்பொழுது நன்மை கிடைக்கவில்லையே எனத் தெய்வத்தை நொந்து கொண்டால்; பெரிய செல்வம் பொருந்தி வருமோ? வாராது; வெறும் பானையை அடுப்பில் வைத்து எரித்தால் மேலே பொங்கி வருமோ? பொங்காது.

Page 56
18. உலோபிகள் இயல்பு
பெற்றார் பிறந்தார் பெருநாட்டார் பேர் உலகில் உற்றார் உகந்தார் எனவேண்டார் - மற்றோர் இரணம் கொடுத்தால் இடுவர் இடாரே சரணம் கொடுத்தாலும் தாம்.
பெரிய இவ்வுலகத்தில் இவர் எம்மைப் பெற்றவர்; இவர் எமக்குப்பிறந்த மக்கள்; இவர் எம்முடையதேயத்தவர்; இவர் எம்முடைய உறவினர்; இவர் எம்மை விரும்பி நேசித்தவர் என்று விரும்பாதவராகிய உலோபிகள், பிறர்தம் உடம்பில் அடித்துப் புண் உண்டாக்கினால் அவர்க்கு எல்லாம் கொடுப்பர்; முன்னே கூறப்பட்டவர் அடைக்கலம் புகுந்தாராயினும் அவருக்கு ஒன்றும் கொடார். (உகந்தார் - நேசித்தவர்;இரணம் - புண், சரணம் - அடைக்கலம்)
19. உணவிற்கு மட்டும் உழைத்தல்
சேவித்தும் சென்றிரந்தும் தெண்ணிர்க் கடல்கடந்தும் பாவித்தும் பாராண்டும் பாட்டிசைத்தும் - போவிப்பம் பாழின் ஆடம்பை வயிற்றின் கொடுமையால் நாழி அரசிக்கே நாம்.
வயிற்றுப் பசியின் கொடுமையினாலே பிறரை வணங்கியும், பலரிடத்துச் சென்று இரந்து யாசித்தும், தெளிந்த நீரையுடைய கடலைக் கடந்து வேற்று நாடுகளுக்குச் சென்றும், அற்பர்களைப் பெரியவர்களாகப் பாவித்தும், உலகை ஆண்டும், செல்வர்களைப் புகழ்ந்து பாட்டுப் பாடியும் நாம் இந்த உடம்பினைப் படி அரிசிக்காகவே வீணில் உழைத்துக் காலம் கடத்துகின்றோம். (போவிப்பம் -செலுத்துகின்றோம்; பாழ் - வீண்.)
 

20. பரத்தையரால் நேரும் இழப்பு
அம்மிதுணையாக ஆறிழிந்த ஆறொக்கும் கொம்மை முலைபகர்வார்க் கொண்டாட்டம் - இம்மை மறுமைக்கும் நன்றன்று மாநிதியம் போக்கி வெறுமைக்கு வித்தாய் விடும்.
பருத்த தனங்களை விற்கின்ற பரத்தையரை இன்பம் காரணமாகப் போற்றுதல், அம்மிக் கல்லைத் துணையாகக் கொண்டு ஆற்று வெள்ளத்தில் இறங்கிய தன்மையைப் போலும் அன்றியும், அப்பரத்தையரோடுதொடர்புகொள்ளுதல், பெரிய செல்வத்தை அழித்து வறுமைக்கு ஏதுவாகும்; ஆகையால், அச்செயல் இம்மைக்கும்மறுமைக்கும் நன்றாகாது. (கொம்மை - பருத்த, திரண்ட பகர்வார் - விற்பவர்; வெறுமை - வறுமை.)
21. திருமகளின் திருவருள்
நீரும் நிழலும் நிலம்பொதியும் நெற்கட்டும் பேரும் புகழும் பெருவாழ்வும் - ஊரும் வரும்திருவும் வாழ்நாளும் வஞ்சமிலார்க்கு என்றும் தரும்கிவந்த தாமரையாள் தான்.
செந்தாமரை மலரில் வீற்றிருக்கும் திருமகளானவள், வஞ்சனைக் குணம் இல்லாத நல்லோருக்கு, நீர்வளப்பத்தையும், நிழல் வளப்பத்தையும், நிலம் நிறைந்த நெற்கட்டுகளையும், நல்ல பேரையும், புகழையும், பெருமை பொருந்திய வாழ்க்கையையும், ஊர்களையும், வளரும் செல்வத்தையும், நீண்ட ஆயுளையும் எப்போதும் கொடுத்து உதவுவாள். (திரு - செல்வம்.)

Page 57
22. கருமியின் செல்வம்
பாடுபட்டுத் தேடிப் பணத்தைப் புதைத்து வைத்துக் கேடுகெட்ட மானிடரே!கேளுங்கள் - கூடுவிட்டு இங்கு ஆவிதான் போயினபின் யாரே அனுபவிப்பார் பாவிகாள் அந்தப் பணம்
செல்வத்தை அரும்பாடுபட்டுச் சேர்த்து, அதனை உண்ணாமலும் பிறர்க்கு வழங்காமலும் நிலத்தில் புதைத்து வைத்து அழிவினை அடைந்த மனிதர்களே! கேட்பீர்களாக உடம்பாகிய கூட்டினை விட்டு உயிர் பிரிந்த பின்னர், பாவிகளே! அந்தச் செல்வத்தை இங்கு யார் அனுபவிப்பார்கள்? இருக்கும் போதே நன்கு அனுபவியுங்கள்.
23. நீதிமன்றத்தில் ஒரம் சொல்பவர் நிலை
வேதாளம் சேருமே வெள்ளெருக்குப் பூக்குமே பாதாள மூலி படருமே - மூதேவி சென்றிருந்து வாழ்வளே சேடன் குடிபுகுமே மன்றோரம் சொன்னார் மனை.
நீதிமன்றத்தில் நடுவுநிலையை விட்டு ஒருவர் பக்கமாகச் சார்ந்து பொய்ச்சாட்சி சொன்னவருடைய வீட்டில், பேய்கள் குடிபுகும்; வெள்ளை எருக்கஞ் செடி
 

முளைத்து மலரும்; பாதாள மூலி எனப்படும் சப்பாத்திக் கள்ளி வளரும்; மூதேவி புகுந்து நிலையாக வாழ்வாள்; பாம்புகள் குடியிருக்கும்; அதனால் அவருக்கு அழிவே ஏற்படும்.
(வேதாளம் - பேய், சேடன் - பாம்பு)
24. வாழ்க்கைக்கு இன்றியமையாதவை
நீறில்லா நெற்றிபாழ் நெய்இல்லா உண்டியாழ் ஆறில்லா ஊருக்கு அழகுபாழ் - மாறில் உடன் பிறப்பு இல்லா உடம்புபாழ் பாழே மடக்கொடி இல்லா மனை.
சிவ சின்னமாகிய திருநீறு அணியாத நெற்றி பாழாகும்; நெய் இல்லாத உணவு பாழாகும்; ஆறு இல்லாத ஊருக்கு அழகு பாழாகும்; வேறுபாடு இல்லாத உடன்பிறந்தவர்கள் இல்லாத உடம்பு பாழாகும்; இல்லறத்திற்குத் தகுந்த மனைவி இல்லாத வீடு பாழே ஆகும்.
25. முதலுக்கேற்ற செலவு
ஆன முதலின் அதிகம் செலவானால் மானம் அழிந்து மதிகெட்டுப் - போனதிசை எல்லார்க்கும் கள்ளனாய் ஏழ்பிறப்பும் தீயனாய் நல்லார்க்கும் பொல்லனாம் நாடு.
ஒருவன் தான் சம்பாதித்த முதற்பொருளை விட மிகுதியாச் செலவு செய்வானானால், மானம் கெட்டு அறிவை இழந்து, தான் போன இடங்களிலெல்லாம்

Page 58
எல்லாராலும் திருடனாகக் கருதப்பட்டு, ஏழுவகைப் பிறப்புகளிலும் கெட்டவனாகி, தன்னிடம் அன்புகொண்டு மனைவிக்கும் பொல்லாதவனாவான்; இதனை நன்றாக அறிவாயாக.
(நல்லார் - பெண்டிர்)
26. பசி நோயின் கொடுமை
மானம் குலம்கல்வி வண்மை அறிவுடைமை தானம் தவம் உயர்ச்சி தாளாண்மை - தேனின் கசிவந்த சொல்லியர்மேல் காமுறுதல் பத்தும் பசிவந்திடப் பறந்து போம்.
உணவு கிடைக்காமல் பசிநோய் வந்துவிட்டால் மானமும், குடிப்பெருமையும், கல்வியும், கொடையும், அறிவுடைமையும் தானமும், தவமும், பெருமையும், தொழிலில் ஈடுபடும் முயற்சியும், தேன் கசிவது போல் இனிமை பொருந்திய பேச்சினைக் கொண்ட மங்கையர் மீது விருப்பம் கொள்ளுதலும் ஆகிய இவை பத்தும் இல்லாமல் ஓடிவிடும். (வண்மை - கொடை தாளாண்மை - முயற்சி சொல்லியர் - சொல்லினை உடைய மங்கையா)
27. இறைவன் எண்ணியவாறே நிகழும்
ஒன்றை நினைக்கின் அது ஒழிந்திட்டு ஒன்றாகும் அன்றி அதுவரினும் வந்தெய்தும் - ஒன்றை நினையாத முன்வந்து நிற்பினும் நிற்கும் எனையாளும் ஈசன் செயல்.
 

ஒரு பொருளைப் பெறவேண்டும் என நினைத்தால் அப்பொருள் கிடைக்காமல் வேறு ஒரு பொருள் கிடைக்கும்; அல்லாமல், அப்பொருளே வந்து கிடைத்தாலும் கிடைக்கலாம்; மேலும், ஒரு பொருளை நினையாதிருக்கு முன்னே அது தானே வந்து நின்றாலும் நிற்கும்; இவைலெல்லாம் என்னை ஆட்கொண்டருளும் இறைவனுடைய செயலாகும்.
28. போதும் என்னும் மனம் வேண்டும்
உண்பது நாழி உடுப்பது நான்குமுழம் எண்பது கோடிநினைந்து எண்ணுவன - கண்புதைந்த மாந்தர் குடிவாழ்க்கை மண்ணின்கலம் போலச் சாந்துணையும் சஞ்சலமே தான்.
உண்பது ஒருநாழி அரிசிச் சோறேயாகும்; உடுப்பது நான்கு முழ அளவுள்ள உடையேயாகும்; இப்படியிருக்க, மனத்தில் நினைத்து எண்ணும் காரியங்களோ எண்பது கோடிக்கும் மேலாகின்றன; ஆதலினால், அகக்கண் குருடாயிருக்கிற மனிதர்களின் குடிவாழ்க்கையானது, மண்ணால் செய்த கலம் போல, சாவும் அளவும் அவர்க்கு மன அமைதி இல்லாமலேயே இருக்கிறது.
(சஞ்சலம் - துன்பம், மன அமைதி இல்லாமை)
29. வள்ளலுக்கு யாவரும் உறவினர்
மரம்பழுத்தால் வெளவாலை வாஎன்று கூவி இரந்தழைப்பார் யாவரும்அங்கில்லை- சுரந்தமுதம் கற்றா தரல்போல் கரவாது அளிப்பரேல் உற்றார் உலகத் தவர்.

Page 59
மரங்கள் பழுத்திருந்தால், இப்பழங்களைத் தின்பதற்கு வா’ என்று வெளவாலைக் கூவி வேண்டி அழைப்பவர் அம்மரங்களுக்குப் பக்கத்தில் ஒருவரும் இல்லை; கன்றை உடைய பசுவானது பாலைச் சுரந்து கொடுப்பது போல, உள்ளத்தை ஒளிக்காமல் கொடுப்பாராயின், உலகத்தார் தாமே வந்து சுற்றத்தினராவர். (கற்றா - கன்று ஆ - கன்றை உடைய பசு)
30. ஊழின்படியே வினை விளையும்
தாம்தாம்முன் செய்தவினை தாமே அனுபவிப்பார் பூந்தா மரையோன் பொறிவழியே - வேந்தே ஒறுத்தாரை என்செயலாம்? ஊரெல்லாம் ஒன்றா வெறுத்தாலும் போமோ விதி?
அரசனே? அவரவர்கள் முற்பிறப்பில் செய்த நல்வினை தீவினைகளை, தாமரை மலரில் வீற்றிருக்கின்ற நான்முகன் விதித்த விதியின்படியே அவரவர்களே அனுபவிப்பார்கள்; தீவினையினால் தூண்டப்பட்டு நமக்குத் தீங்கு செய்தவரை நாம் என்ன செய்யலாம்? ஊரிலுள்ளவர் அனைவரும் ஒன்றாகக் கூடி வெறுத்தாலும், விதி நம்மை விட்டுப் போகுமோ? போகாது. (பூந்தாமரையோன் - பிரமன்)
31. நல்லவை நான்கு
இழுக்குடைய பாட்டிற்கு இசைநன்று சாலும் ஒழுக்கம் உயர்குலத்தின் நன்று - வழுக்குடைய வீரத்தின் நன்று விடாநோய் பழிக்கு அஞ்சாத் தாரத்தின் நன்று தனி.
 

இலக்கணப் பிழைகளை உடைய பாட்டைக் காட்டிலும் அஃதில்லாத வெறும் இசையே நல்லது உயர்ந்த குலத்தைக் காட்டினும் அஃதில்லாத மாட்சிமைப்பட்ட ஒழுக்கம் நல்லது தவறுதலை உடைய வீரத்தினும் நீங்காத நோய் நல்லது; பழிக்கு அஞ்சாத மனைவியோடு கூடி வாழ்வதை விடத் தனித்து வாழ்தல் நல்லது. (வழுக்குதல் - தவறுதல்; விடா - தீராத தாரம் - மனைவி)
32. பொருள் உள்ளபோதே உதவுக
ஆறிடும் மேடும் மடுவும்போல் ஆம்செல்வம் மாறிடும் ஏறிடும் மாநிலத்தீர்! - சோறிடும் தண்ணிரும் வாரும்; தருமமே சார்பாக உண்ணிர்மை வீறும் உயர்ந்து.
பெரிய உலகில் வாழ்பர்களே! ஆற்று வெள்ளத்தினால் ஏற்படும் மேடும் பள்ளமும் போல, செல்வம் வளர்வதும் குறைவதுமாக இருக்கும்; அதனால், யாசிப்பவருக்கு உண்ணச் சோற்றை இடுங்கள்; பருகுதற்கு நல்ல நீரையும் கொடுத்து உதவுங்கள்; இப்படிச் செய்வீர்களானால், இந்த அறமே துணையாக மனம் மாசற்று ஓங்கி விளங்கும். (மடு - பள்ளம்; சார்பு - துணை; உண்ணிர்மை - உள்நீர்மை, மனத்துய்மை, வீறும் - விளங்கும்.)
33. இனிய கூறலும் இன்னாத கூறலும் வெட்டனவை மெத்தனவை வெல்லாவாம்; வேழத்தில் பட்டுருவும் கோல்பஞ்சில் பாயாத - நெட்டிருப்புப் பாரைக்கு நெக்குவிடாப் பாறை பசுமரத்தின் வேருக்கு நெக்கு விடும்.

Page 60
பெரிய யானையின் உடலில் பட்டு உருவும் அம்பானது, மெல்லிய பஞ்சு மூட்டையின் மேல் பாயாது; நீண்ட இருப்புப் பாரைக்குப் பிளக்க முடியாத கருங்கற்பாறையானது, பசுமையான மரத்தின் வேருக்குப் பிளந்து போகும்; அதுபோன்றே, கடுஞ்சொற்கள் இனிய சொற்களை வெல்ல மாட்டாவாகும்; இனிய சொற்களே வெல்லும். (வெட்டனவை - வன்சொற்கள்; மெத்தனவை - இன்சொற்கள்; வேழம் - யானை, கோல் - அம்பு நெக்குவிடா - பிளக்க
முடியாத.)
34. வறுமையால் வரும் இன்னல்
கல்லானே ஆனாலும் கைப்பொருளொன்று உண்டாயின் எல்லாரும் சென்றங்கு எதிர்கொள்வர் - இல்லானை இல்லாளும் வேண்டாள் ஈன்றெடுத்த தாய் வேண்டாள் செல்லாது அவன்வாயிற் சொல்.
ஒருவன் கல்வியறிவு இல்லாதவனேயாயினும், அவன் கையில் செல்வம் மாத்திரம் இருந்தால், அவனை எல்லாரும் சென்று எதிர்கொண்டு உபசரிப்பர்; கற்றவனாயினும், பொருள் இல்லாதவனாயிருப்பின், அவனை அவன் மனைவியும் விரும்பாள்; அன்பு செலுத்த வேண்டிய பெற்றெடுத்த தாயும் அவனை விரும்பாள்; அவன் வாயில் பிறக்கும் சொல் எடுபடாது; யாவரும் ஒதுக்கி வைப்பர்.
 

35. பேதைக்கு உரைத்தாலும் அறிவு ஏறாது
பூவாதே காய்க்கும் மரமும் உள மக்களுளும் ஏவாதே நின்றுணர்வார் தாம் உளரே -தூவா விரைத்தாலும் நன்றாகா வித்தெனவே பேதைக்கு உரைத்தாலும் தோன்றாது உணர்வு
பூக்காமலே காய்க்கும் மரங்களும் உண்டு; அது போல, மனிதர்களுள்ளும் ஏவிச் செய்யாமல் தாமே உணர்ந்து செய்யவல்லவரும் உண்டு; தூவி விதைத்தாலும் முளைத்துப் பயன் தராத விதைபோல, மூடனுக்கு விளக்கமாக எடுத்துச் சொன்னாலும், அதனை உணர்ந்து நடக்கும் அறிவு அவனுக்கு உண்டாகாது. (பூவாதே காய்க்கும் மரமாவன - ஆல், அரசு, அத்தி பலா முதலியன; தூவா - தூவி)
36. பிறனில் விழையாமை
நண்டுசிப்பி வேய்கதலி நாசமுறும் காலத்தில் கொண்ட கருஅளிக்கும் கொள்கைபோல் - ஒண்டொடீ போதம் தனம்கல்வி நீபர்ன்றவரும் காலம் அயல் மாதர்மேல் வைப்பார் மனம்.
ஒளியுள்ள வளையலை அணிந்தவளே! நண்டும் சிப்பியும் மூங்கிலும் வாழையும் தாம் அழிந்து போகும் காலத்திலே முறையே தாம்கொண்ட குஞ்சும் முத்தும் அரிசியும் காயும் ஆகிய கருக்களை வெளிப்படுத்தும் தன்மை போல, மனிதர்கள் அறிவும் செல்வமும் கல்வியும் அழிய வரும் காலத்திலே பிறர்மனைவியர் மேல் விருப்பம் கொள்ளுவர். (வேய் - மூங்கில், கதலி - வாழை; போதம் - அறிவு; தனம் - செல்வம், பொன்றுதல் - அழிதல்.)

Page 61
37. வீடடைவார்க்கு ஊழ் இல்லை
வினைப்பயனை வெல்வதற்கு வேதம் முதலாம் அனைத்து ஆய நூல் அகத்தும் இல்லை - நினைப்பதெனக் கண்ணுறுவது அல்லால் கவலைபடேல் நெஞ்சே! மெய் விண்ணுறுவார்க்கு இல்லை விதி.
சென்ற பிறப்பின் பயனாகிய நல்வினை தீவினை ஆகிய இருவினைப்பயனை வெல்வதற்கு வேதம் முதலிய எந்த நூல்களுள்ளும் உபாயம் இல்லை; இருப்பினும், என் மனமே! கவலைப்படாதே உண்மையாகிய வீட்டு நெறியில் நிற்பவருக்கு, அவர் எண்ணுவது போலத் தோன்றுமே அல்லாமல், விதி என ஒன்று இல்லை. (விண் - வீடு)
38. இறைவனுடன் கலந்து நிற்கும் நிலை
நன்னென்றும் தீதென்றும் நானென்றும் தானென்றும் அன்றென்றும் ஆம் என்றும் ஆகாதே - நின்றநிலை தானதாம் தத்துவமாம் சம்பறுத்தார் யாக்கைக்குப் போனவா தேடும் பொருள்.
இது நல்லது என்றும், இது தீயது என்றும், இதனைச் செய்தவன் யான் என்றும், இதனைச் செய்தவன் அவன் என்றும், இது ஆகாதது என்றும், இது ஆகும் என்றும் வேறுபாடு கொள்ளாமல் இரண்டறக் கலந்து நிற்கும் நிலையே பசுவாகிய தான் பதியாகிய அதுவாகுகின்ற உண்மையான தத்துவமாம்; தன்னுள்ளே இருக்கும் மெய்ப்பொருளாகிய இறைவனை வெளியில் தேடுவது, சம்பம்புல்லை அறுத்தவர், அதனைக் கட்டுதற்கு அதுவே கயிறாக அமையும் என அறியாமல் வேறு கயிறு தேடிப் போனது போலும், (தானதாம் - தான் அது ஆம்; சம்பு - ஒருவகைப்புல்)
 

39. காமம் வெகுளி மயக்கம் நீங்குதல்
முப்பதாம் ஆண்டளவில் மூன்றுஅற்று ஒருபொருளைத் தப்பாமல் தன்னுள் பெறானாயின் - செப்பும் கலையளவே ஆகுமாம் காரிகையார் தங்கள் முலையளவே ஆகுமாம் மூப்பு.
முப்பது வயது அகும் அளவில் காமம், வெகுளி, மயக்கம் ஆகியமுக்குற்றங்களும் நீங்கப்பெற்று நிகரில்லாத பொருளாகிய இறைவனைத் தவறாமல் தனக்குள்ளே அறியப் பெறானாயின், வயது முதிர்ந்து கிழப்பருவம் அடைந்த பெண்கள் இன்பம் துய்க்க முடியாமல் தனங்கள் மட்டும் உடையவராக இருப்பது போல, அவன் முதுமையில் இறைவனுடன் கலந்து இன்பம் அடையப் பெறாமல், தான் கற்ற கல்வியை மட்டும் உடையவனாக இருப்பான். (ஒருபொருள் - கடவுள்)
40. ஒரே பொருள் முடிவை உடைய நூல்கள்
தேவர் குறளும் திருநாள் மறைமுடிவும் மூவர் தமிழும் முனிமொழியும் - கோவை திருவா சகமும் திருமூலர் சொல்லும்
ஒருவா சகம்என்று உணர்.
திருவள்ளுவர் இயற்றிய திருக்குறளும், நான்கு வேதங்களின் முடிவாகிய உபநிடதங்களும், அப்பர் சுந்தரர் சம்பந்தர் என்னும் சமயகுரவர் பாடல்களாகிய தேவாரமும், திருவாதவூர் முனிவராகிய மாணிக்க வாசகர் பாடியருளிய திருக்கோவையார், திருவாசகங்களும், திருமூலர் நாயனார் அருளிய திருமந்திரமும் ஒரே பொருளைக் குறித்து வருவன என அறிவாயாக. (தேவர்-திருவள்ளுவர் முனி - மணிவாசகர்)

Page 62
நல்ல நெறிகளை நாற்பது வெண்பாக்களில் கூறுவதனால் இதற்கு, 'நன்னெறி வெண்பா' என்பது முன்னர்ப் பெயராய் இருந்தது. அது பின்னர் நன்னெறி எனச் சுருங்கிவிட்டது.
y
இதில் உள்ள நீதிகள் யாவும் மக்களுக்கு மிகவும் இன்றியமையாதன. மெய்சார்ந்த உவமைகள், கதை உவமை, இயல்பு உவமைகள்,வினா-விடை முறை, பொருளும் உவமையும் இடம் மாறாது கிடத்தல், முன் இரண்டடியில் அறம் - பின் இரிடியில் விளக்கம் வைத்துப் பாடல் - இயற்கைப் பொருள்களின் இயல்புகள் ஆகியவை இந்நூலில் அழகுற க் கையாளப் பெற்றுள்ளன. இம்முறை குழந்தைக் கல்விக்கு மிகவும் எளியதாகும் என்று கருதி இவ்வாறு செய்யப்பட்டுள்ளது.
இந்நூலை இயற்றியவர் சிவப்பிரகாசர் ஆவார். )
 

7. [6ରjTଗର0TY) ।
இறை வாழ்த்து
மின்எறி சடாமுடி விநாயகன் அடிதொழ நன்னெறி வெண்பா நாற்பதும் வருமே.
மின்னல் போல ஒளியை, வீசுகின்ற F60) (plg. 60) LLLL 60) LLL விநாயகக் கடவுளின் திருவடிகளை வணங்குவதனால், நன்னெறி என்னும் நூலின் நாற்பது வெண்பாக்களும் இடையூறின்றி இனிது முடியும்.
நூல்
1. கைம்மாறு விரும்பாமல் உதவுக
என்று முகமன் இயம்பாதவர்கண்ணும் சென்றுபொருள் கொடுப்பர் தீதற்றோர் - துன்றுசுவை பூவிற் பொலிகுழலாய் பூங்கை புகழவோ நாவிற்கு உதவும் நயந்து.
மலரணிந்து விளங்குகின்ற கூந்தலை உடையவளே! அழகிய கையானது தன்னைப் புகழவேண்டுமென்று எண்ணியோ நாவினுக்கு மிக்க சுவையுள்ள உணவினை

Page 63
விரும்பிக் கொடுக்கும்? புகழ்வதற்காக அன்று; அதுபோல குற்றமற்ற பெரியோர்கள், எப்பொழுதும் தமக்கு அன்பு மொழிகளைச் சொல்லாதவரிடத்தும் தாமே வலிந்து சென்று அவர்க்குத் தேவையான பொருளைக் கொடுத்து உதவுவர்.
(குழல் - கூந்தல் பூ - அழகுநயந்து - விரும்பி)
2. குற்றமற்றார் கூறும் கடுஞ்சொல்
மாசற்ற நெஞ்சடையார் வன்சொல் இனிது ஏனையவர்
பேசுற்ற இன்சொல் பிறிதுஎன்க - ஈசற்கு நல்லோன் எறிசிலையோ நன்னுதால் ஒண்கருப்பு வில்லோன் மலரோ விருப்பு?
அழகிய நெற்றியை உடையவளே! குற்றம் நீங்கிய மனத்தை உடையவர் கடுஞ்சொல் கூறினாலும், அது இனிமை தருவதாகும்; குற்றம் பொருந்திய மனத்தை உடையவராகிய ஏனையோர் கூறும் இன்சொல்லோ, தீமை தருவதாகும்; சிவபெருமானுக்கு நல்ல குண முடையவராகிய சாக்கியநாயனார் அன்போடு தினமும் மலராக எண்ணி எறிந்த கல்லோ, சிறந்த கரும்பு வில்லை ஏந்திய மன்மதன் அன்பில்லாமல் எறிந்த பூவோ, எது விருப்பாயிற்று? சாக்கியர் கல்லே விருப்பாயிற்று (மாசு-குற்றம், ஈசன் - சிவன், நல்லோன் - சாக்கியன்; சிலை - கல்; வில்லோன் - மன்மதன். சிவன் பூ எறிந்த மன்மதனை எரித்தார்; கல்லெறிந்த சாக்கியர்க்கு அருள் புரிந்தார்.)
 

3. உரியவரைக் கொண்டு உதவி பெறுக
தங்கட்கு உதவிலர்கைத் தாம்ஒன்று கொள்ளின் அவர் தங்கட்கு உரியவரால் தாம்கொள்க - தங்கநெடும் குன்றினால் செய்தனைய கொங்கையாய் ஆவின்பால் கன்றினால் கொள்ப கறந்து.
பெரிய பொன்மலையினால் செய்தால் போன்ற தனங்களை உடையவளே! எளிதில் கொடாத பசுவின் பாலை, அப்பசுவிற்குரிய கன்றைக் கொண்டு கறந்து கொள்வார்கள்; அதுபோல, தங்களுக்கு ஒன்றும் உதவாதவருடைய கையினின்றும் தாங்கள் ஒரு பொருளைப் பெற வேண்டினால், அவர்களுக்கு வேண்டியவர் ஒருவரைக் கொண்டு, அப்பொருளைத் தாங்கள் பெற்றுக் கொள்வாராக.
4. பொருள், செலவு செய்வார்க்கே உரியது
பிறர்க்கு உதவி செய்யார் பெருஞ்செல்வம் வேறு பிறர்க்கு உதவி ஆக்குபவர் பேறாம் - பிறர்க்கு உதவி செய்யாக் கருங்கடல்நீர் சென்று புயல்முகந்து பெய்யாக் கொடுக்கும் பிறர்க்கு.
பிறருக்கு உதவி செய்யாத கரிய கடலின் நீரை மேகமானது போய் மொண்டு வந்து பிற உயிர்களுக்கு மழையாகப் பெய்து உதவும். அதுபோல, பிறருக்கு உதவி செய்யாதவருடைய பெரிய செல்வமானது, பிறர் செய்யாதவருடைய பெரிய செல்வமானது, பிறர்

Page 64
உடைமையதாயினும் அதனை எடுத்துப் பிறர்க்கு உதவி செய்பவருடைய செல்வமாகவே கருதப்படும். (பேறு - செல்வம் புயல் - மேகம் பெய்யா - பெய்து)
5. விட்டுப் பிரியா நட்பு
நீக்கம் அறும் இருவர் நீங்கிப் புணர்ந்தாலும் நோக்கின் அவர்பெருமை நொய்தாகும் - பூக்குழலாய்! நெல்லின் உமிசிறிது நீங்கிப் பழமைபோல் − புல்லினும் திண்மைநிலை போம்.
மலரணிந்த கூந்தலை உடையவளே! நெல்லினின்றும் உமியானது சிறிதளவு நீங்கி முன்போலவே ஒட்டிக் கொண்டாலும், முளைத்தற்கேற்ற வலிமை இல்லாது போய்விடும்; அதுபோல, பிரிதல் இல்லாத நண்பர் இருவர், மனவேறுபாட்டால் பிரிந்து முன் போலவே கூடினாலும், ஆராயுமிடத்து அவர் பெருமை அற்பம் உடையதாகும். (நொய்து - இழிவு புல்லுதல் - கூடுதல்)
6. காதலர் மனஒருமை
காதல் மனையாளும் காதலனும் மாறுஇன்றித் தீதில் ஒருகருமம் செய்பவே - ஒதுகலை எண்ணிரண்டும் ஒன்றுமதி எனுமுகத்தாய் நோக்கல்தான் கண்ணிரண்டும் ஒன்றையே காண்.
புகழ்ந்து கூறப்படும் பதினாறு கலைகளும் நிரம்பப் பெற்ற முழுச்சந்திரன் என்று சொல்லப்படும் முகத்தை
 

உடையவளே! கண்கள் இரண்டாயினும் பார்க்கும் போது ஒரு பொருளையே நோக்கும். அதுபோல, அன்புடைய மனைவியும் கணவனும் தம் மனத்தில் மாறுபாடு இல்லாமல் ஒத்து குற்றம் இல்லாத ஒரு செயலையே செய்து முடிப்பர்.
(தான், காண் - அசைநிலைகள்)
7. கல்வியில் கர்வம் கொள்ளற்க
கடலே அணையம்யாம் கல்வியால் என்னும் அடல்ஏறு அனையசெருக்கு ஆழ்த்தி - விடலே முனிக்கு அரசு கையால் முகந்து முழங்கும் பனிக்கடலும் உண்ணப் படும்.
அலை ஒலிக்கின்ற குளிர்ந்த கடலும் முனிவர்களுக்குத் தலைவராகிய அகத்திய முனிவர் கையால் மொண்டு உண்ணப்பட்டது. ஆதலால், நாம் கல்வியால் பெரிய கடலை ஒத்துள்ளோம் என்று எண்ணுகிற, வலிமை மிகுந்த ஆண்சிங்கத்தினது செருக்கைப் போலும் செருக்கிலே அமிழ்ந்து விடாது இருப்போமாக. (அடல் - வலிமை; ஏறு - ஆண்சிங்கம்; முனிக்கரசு - அகத்தியர்)
8. வெகுளியை அடக்குக
உள்ளம் கவர்ந்தெழுந்து ஓங்கு சினம்காத்துக் கொள்ளும் குணமே குணம்என்க - வெள்ளம் தடுத்தல் அரிதோ? தடங்கரைதான் பேர்த்து விடுத்தல் அரிதோ? விளம்பு

Page 65
மனத்தை தன்வயப்படுத்திக் கொண்டு ஓங்கி வளர்கின்ற கோபத்தை, வெளிவராமல் அடக்கிக் கொள்கின்ற குணமே மேலான குணம் என்று அறிவாயாக; பெருகி வருகின்ற நீர்ப்பெருக்கை அணை அமைத்துத் தடுத்தல் அரிய செயலோ? முன் கட்டப்பட்டிருந்த அணையை உடைத்து அதனுள் அடங்கி இருந்த வெள்ளத்தை வெளியில் செல்ல விடுத்தல் அரிய செயலோ? நீ சொல்வாயாக. (தடம்கரை - பெரியகரை, போர்த்து - பெயர்த்து, உடைத்து)
9. துணை வலிமை
மெலியோர் வலிய விரவலரை அஞ்சார்
வலியோர் தமைத்தாம் மருவில் - பலியேல் கடவுள் அவிர்சடைமேல் கட்செவிஅஞ் சாதே
படர்சிறையப் புள்ளரசைப் பார்த்து.
அன்பர்களுடைய தொழுகையை ஏற்றுக் கொள்ளும் சிவபெருமானது விளங்குகின்ற சடையின் மேல் தங்கி இருக்கின்ற பாம்பானது, விரிந்த சிறகுகளையுடைய பறவைகளுக்கு அரசாகிய கருடனைப் பார்த்து அஞ்சாது; அவ்வாறே, வலிமையில்லாதவர், வலிமையுடைய பகைவர்க்குத் தாம் அவரினும் வலிமை உடையோரைச் சேர்ந்தால், அஞ்சமாட்டார். (விரவலர் - பகைவர் மருவில் - சேர்ந்தால் பலி - தொழுகை, பூசை கட்செவி - கண்செவி- கண்ணையே காதாக உடைய
பாம்பு புள்அரசு - கருடன்)
 

10. பிறர்குறை நீக்குபவர்
தம்குறைதீர்வு உள்ளார் தளர்ந்து பிறர்க்குறுநூஉம் வெம்குறைதீர்க் கிற்பார் விழுமியோர் - திங்கள் கறைஇருளை நீக்கக் கருதாது உலகின் நிறைஇருளை நீக்கும்மேல் நின்று.
er 747rA
சந்திரைைகாவன், தன்னிடத்துள்ள களங்கமாகிய இருட்டை நீக்கிக் கொள்ளக் கருதாமல், விண்ணில் இருந்து உலகத்து நிறைந்துள்ள இருட்டை நீக்குவான்; அதுபோல, பெரியோர்கள், தமக்கு ஏற்பட்டுள்ள குறையை நீக்கிக் கொள்ள வேண்டுமென எண்ணாராகிப் பிறர்க்கு நேர்ந்த கொடிய குறையை நீக்கி வைப்பர். (விழுமியோர் - பெரியோர்)
11. புலன்களால் வரும் தீமை
பொய்ப்புலன்கள் ஐந்துநோய் புல்லியர்பால் அன்றியே மெய்ப்புலவர் தம்பால் விளையாவாம் - துப்பின் சுழற்றுங்கொல் கற்றுாணைச் சூறாவளி போய்ச் சுழற்றும் சிறுபுன் துரும்பு.
சுழற்காற்றானது சென்று சிறிய மென்மையான துரும்பை எடுத்துச் சுழற்றும்; அக்காற்றானது தன் வலிமையால் கருங்கல் தூணைச் சுழற்ற முடியுமோ? முடியாது; அதுபோல, சுவை, ஒளி, ஊறு, ஓசை, நாற்றம் என்னும் பொய்யாகிய ஐந்து புலன்களும் புல்லறிவாளரிடத்தன்றி - மெய்யுணர்ந்தவரிடத்தே துன்பத்தைச் செய்ய மாட்டா. - (நோய் - துன்பம் துப்பு - வலிமை)

Page 66
12. உடல் உயிர் அமைப்பு
வருந்தும் உயிர்ஒன்பான் வாயில் உடம்பில் பொருந்துதல் தானே புதுமை - திருந்திழாய் சீதநீர் பொள்ளல் சிறுகுடத்து நில்லாது வீதலோ நிற்றல் வியப்பு.
தேர்ந்த அணிகலன்களை அணிந்தவளே! குளிர்ந்த நீரானது தொளைகளை உடைய சிறிய குடத்திலே நில்லாது ஒழுகிப் போதல் ஆச்சரியம் ஆகுமோ? ஒழுகாது நின்றால் அதுவே ஆச்சரியமாகும்; அது போல, வருந்துகின்ற உயிரானது ஒன்பது தொளைகளை உடைய உடம்பிலே தங்குதல்தான் ஆச்சரியமாகும்; நீங்கிப்போதல் ஆச்சரியமாகாது. (வாயில் பொள்ளல் - தொளை இழை - அணிகலன்; கீதம் - குளிர்மை விதல் - ஒழுகுதல்)
13. விருப்புடன் உதவுதல்
பெருக்க மொடுசுருக்கம் பெற்றபொருட்கு ஏற்ப விருப்ப மொடுகொடுப்பர் மேலோர் - சுரக்கும் மலையளவு நின்றமுலை மாதே மதியின் கலையளவு நின்ற கதிர்.
மலையளவாக நின்ற பால் சுரக்கும் முலைகளை உடைய பெண்ணே! சந்திரனுடைய கிரணங்கள், வளர்தலையும் தேய்தலையும் பொருந்திய கலைகளின் அளவாக உள்ளன; அதுபோல, பெரியோர்கள், இயல்பாக வளர்தலையும் குறைதலையும் பொருந்திய செல்வத்திற்கு ஏற்பப் பிறர்க்கு அன்போடு கொடுத்து உதவுவர்; இல்லையென்று சொல்லார்.
 

14. செல்வச் செருக்கின் தீமை
தொலையாப் பெருஞ்செல்வத் தோற்றத்தோம் என்று தலையா யவர்செருக்குச் சார்தல் - இலையால் இரைக்கும்வண்டு ஊதுமலர் ஈர்ங்கோதாய் மேரு வரைக்கும்வந்தன்று வளைவு.
ஒலிக்கின்ற வண்டுகள் ஊதுகின்ற குளிர்ந்த மலர்களால் ஆகிய மாலையை உடையவளே! எக்காலத்தும் அசையாதிருந்த மகாமேரு மலையும் ஒரு காலத்தில் சிவபெருமான் வளைக்க வளைய நேர்ந்தது; ஆகையால், சிறந்த அறிவுடையவர்கள் குறையாத பெரிய செல்வத்தில் பிறந்துள்ளோம் என எண்ணிச் செருக்கடைய மாட்டார்கள். (தோற்றத்தோம் - பிறந்துள்ளோம்)
15. பயனற்ற செல்வம்
இல்லானுக்கு அன்பிங்கு இடம்பொருள் ஏவல்மற்று எல்லாம் இருந்தும் அவற்கு என்செய்யும்? - நல்லாய்! மொழியிலார்க்கு ஏது முதுநூல் தெரியும்? விழியிலார்க்கு ஏது விளக்கு?
நல்ல குணமுடைய பெண்ணே! பேச இயலாதவராகிய ஊமைகளுக்குப் பழமையான நூல் என்ன பயனைச் செய்யும்? பார்க்கின்ற கண் இல்லாதவராகிய குருடர்க்கு விளக்கு என்ன பயனைச் செய்யும்? அதுபோல, இவ்வுலகில் அன்பில்லாதவனுக்குப்

Page 67
பெரிய இடமும், நிறைந்த பொருளும், ஏவல் செய்வாரும்
ஆகிய இவையெல்லாம் இருந்தும், அவனுக்கு என்ன பயனைச் செய்யும்? ஒரு பயனும் இல்லை.
16. மேலோர் தாழ்ந்தோருக்கு உதவுதல்
தம்மையும் தங்கள் தலைமையையும் பார்த்து உயர்ந்தோர் தம்மை மதியார் தமை அடைந்தோர் - தம்மின் இழியினும் செல்வர் இடர்தீர்ப்பர் அல்கு கழியினும் செல்லாதோ கடல்.
பெரிய கடலானது, தன்னை அடுத்துள்ள சிறிய உப்பங்கழியினும் சென்று பாயாதோ? பாயும்; அது போல, அறிவால் உயர்ந்தவர்கள், தங்களைச் சார்ந்தவர்கள் தங்களைக் காட்டினும் தாழ்ந்தவர்களாயினும், தம்மையும் தங்களுடைய தலைமைத் தன்மையையும் பார்த்துத் தங்களை மதிக்காதவர்களாகித் தாழ்ந்தோர் இருக்கும் இடம் சென்று அவர்கள் துன்பத்தை நீக்கி வைப்பர். (அல்குகழி - சிறிய உப்பங்கழி)
17. வறியார்க்கு ஈதல்
எந்தை நல் கூர்ந்தான் இரப்பார்க்கு ஈந்து என்று அவன் மைந்தர்தம் ஈகை மறுப்பரோ - பைந்தொடீ! நின்று பயனுதவி நில்லா அரம்பையின் கீழ்க் கன்றும் உதவும் கணி.
பசும் பொன்னாலாகிய வளையல்களை அணிந்தவளே! முன்னே நன்றாக வளர்ந்து நின்று
 

பழமாகிய பயனைக் கொடுத்து, அதனால் அழிவை அடைந்த வாழை மரத்தினது கீழே முளைத்த கன்றும், பழத்தைப் பிறர்க்குக் கொடுத்து உதவும்; அதுபோல, எங்கள் தந்தை, வறியவர்களுக்கெல்லாம் கொடுத்துக் கொடுத்து வறியவனானான் என்று, அவன் புதல்வர் வறியார்க்கு ஈவதைக் கைவிடுவாரோ? விடார்.
(நல்கூர்ந்தான் - வறியவனானான் தொடி - வளையல்;
அரம்பை - வாழை)
18. இனியவை கூறல்
இன்சொலால் அன்றி இருநீர் வியனுலகம் வன்சொலால் என்னும் மகிழாதே - பொன்செய் அதிர்வளையாய்! பொங்காது அழல்கதிரால் தண்ணென் கதிர்வரவால் பொங்கும் கடல்.
பொன்னால் செய்யப்பட்ட ஒலிக்கின்ற வளையல்களை அணிந்தவளே! கடலானது, குளிர்ந்த கிரணங்களையுடைய மதியின் வருகையினால் பொங்கும்; வெப்பம் பொருந்திய கிரணங்களை உடைய ஞாயிற்றின் வருகையினால் பொங்காது; அதுபோல, பெரிய கடலால் சூழப்பட்ட பரந்த உலகத்தில் உள்ளவர்கள் இனிய சொல்லைக் கேட்டு மகிழ்வாரேயன்றிக் கடுஞ் சொல்லினால் எக்காலத்தும் மகிழமாட்டார்கள். (இருநீர் - பெரிய கடல் வியன் உலகம் - பரந்த உலகத்தவர் அதிர்தல் - ஒலித்தல் தண்ணென்கதிர்-நிலவு அழல்கதிர்குரியன்)

Page 68
19. நல்லோர் வரவும் தீயோர் வரவும்
நல்லோர் வரவால் நகைமுகம்கொண்டு இன்புறீஇ அல்லோர் வரவால் அழுங்குவார் - வல்லோர் திருந்தும் தளிர்காட்டித் தென்றல் வரத்தேமா வருந்தும் தழ்ல்கால் வர.
தேமா மரமானது, தென்றுல் காற்று வரும்போது தளிர்த்துச் செழிப்புற்றிருக்கும்; சூழ்ல்காற்று வரும் போது, வருந்தும்; அதுபோல, கல்வி அறிவில் வல்லவர்கள், தம்மிடத்து நல்லவர்-வருகையினாலே, முகமலர்ச்சி கொண்டு, இன்பத்தை அடைந்து, தீயவர் வருகையினால், வருந்தித் துன்பத்தை அடைவர். (அழுங்குவார் - துன்பத்தை அடைவார் கால் - காற்று)
20. பிறர் துன்பத்திற்கு வருந்துதல்
பெரியவர்தம் நோய்போல் பிறர்நோய் கண்டுஉள்ளம் எரியின் இழுதுஆவர் என்க - தெரியிழாய்! மண்டு பிணியால் வருந்தும் பிறஉறுப்பைக் கண்டு கலுழுமே கண்.
ஆராய்ந்து எடுத்த அணிகளை அணிந்தவளே! கண்கள் நெருங்கிய நோயினால் வருந்துகின்ற பிற உறுப்புகளைப் பார்த்து அழாநிற்கும்; அதுபோல, சீலத்தால் பெரியவர்கள் பிறருக்கு வந்த துன்பத்தைக் கண்டு, அதனைத் தமக்கு வந்த துன்பமாகக் கருதி, நெருப்பிலே பட்ட நெய் போல, மனம் உருகுவர். (எரி- நெருப்பு இழுது - நெய்மண்டுபிணி- நெருங்கிய நோய் கலுழும் - அழும்)
 

21. இலக்கண அறிவின் பெருமை
எழுத்தறியார் கல்விப் பெருக்கம் அனைத்தும் எழுத்தறிவார்க் காணின் இலையாம் - எழுத்தறிவார் ஆயுங் கடவுள் அவிர்சடைமுன் கண்டளவில் வீயுஞ் சுரநீர் மிகை.
எழுத்துகளின் இயல்பை அறியும் சான்றோரால் ஆராயப்படும் சிவபெருமானது, விளங்குகின்ற சடை முடியைக் கண்ட அளவில் கங்கையின் வெள்ளமானது, வேகம் அடங்கிவிடும்; அதுபோல, இலக்கண நூலைக் கல்லாதவருடைய மற்றைய கல்வியினது மிகுதி முழுவதும் இலக்கண நூல் அறிந்தவரைக் கண்டால் பெருமை இல்லாம் போகும். (வீயும் - அடங்கிவிடும்; சுரநீர் - கங்கை மிகை - பெருவெள்ளம்)
22. உயர்வும் இழிவும்
ஆக்கும் அறிவான் அலது பிறப்பினான் மீக்கொள் உயர்வுஇழிவு வேண்டற்க - நீக்கு பவர்.ஆர் அரவின் பருமணிகண்டு என்றும் கவரார் கடலின் கடு.
நஞ்சையுடைய பாம்பினிடத்துத் தோன்றிய பருத்த மாணிக்கத்தைக் கண்டு வேண்டா என வெறுப்பவர் யாவர்? ஒருவருமில்லை; திருப்பாற்கடலினிடத்துத் தோன்றிய நஞ்சை ஒருநாளும் கொள்வாருமில்லை; ஆதலால், மேன்மையாகக் கொள்கின்ற உயர்வையும்,

Page 69
தாழ்வாகக் கொள்கின்ற இழிவையும், அறிவு ஒழுக்கங்களை உண்டாக்குகின்ற கல்வி அறிவினால் அல்லாமல், சாதியினால் கொள்ளாதிருப்பாராக. (மீக்கொள் - மேன்மையாகக் கொள்ளுகின்ற அரவு - பாம்பு கடு - நஞ்சு)
23. மனஉறுதி தளர்தல்
பகர்ச்சி மடவார் பயிலநோன்பு ஆற்றல் திகழ்ச்சி தருநெஞ்சத் திட்பம் - நெகிழ்ச்சி பெறும்பூரிக் கின்றமுலைப் பேதாய் பலகால் எறும்புறஊரக் கல்குழியுமே.
விம்முகின்ற கொங்கைகளை உடைய பெண்ணே! பல தடவை எறும்புகள் ஊர்ந்து கொண்டு வந்தாலும் கருங்கல்லும் குழிவிழுந்து போகும்; அதுபோல, பெண்களிடத்தில் அடிக்கடி உரையாடிப் பழகிக் கொண்டு வந்தாலும், தவம் செய்தலில் விளங்குகின்ற ஒருவனுடைய மனத்தின் உறுதியானது, நாளுக்குநாள் தளர்ந்து கெட்டுப் போகும். (பகர்ச்சி - உரையாடுதல் திகழ்ச்சி - விளங்குதல் நெகிழ்ச்சி - தளர்வு)
24. கீழ்மக்கள் இயல்பு
உண்டு குணம்இங்கு ஒருவர்க்கு எனினும்கீழ் கொண்டு புகல்வதுஅவர் குற்றமே - வண்டுமலர்ச் சேக்கை விரும்பும் செழும்பொழில்வாய் வேம்பன்றோ காக்கை விரும்பும் கணி.
 

செழுமையுள்ள சோலையினிடத்து மலர்ப் படுக்கையை வண்டுகள் விரும்பும்; சோலையில் பல இனிய கனிகள் இருந்தாலும், காக்கைகள் வேப்பம் பழத்தையன்றோ விரும்பும்? அதுபோல, இவ்வுலகில் ஒருவருக்குப் பல நற்குணங்கள் உளவாயினும், கீழ்மக்கள் எடுத்துப் பேசுவது அவர்களுடைய குற்றங்களை மட்டுமே ஆகும்.
(சேக்கை - படுக்கை பொழில் - சோலை)
25. கீழோர் தொடர்பின் தீமை
கல்லா அறிவிற் கயவர்பால் கற்றுணர்ந்த
நல்லார் தமதுகணம் நண்ணாரே - வில்லார் கணையிற் பொலியும் கருங்கண்ணாய்! நொய்தாம்
புணையிற் புகும்ஒண் பொருள்.
வில்லோடு பொருந்திய அம்பைப் போலப் புருவத்தோடு கூடி விளங்குகின்ற கரிய கண்களை உடையவளே! கனமில்லாத தெப்பத்திலே ஏற்றப்பட்ட கனமுடைய பொருள் எடுத்துச் செல்ல இலகுவாகும்; அதுபோல, நூல்களைக் கல்லாத அறிவினை உடைய மூடரிடத்தில் சேர்ந்தால், நூல்களைக் கற்றறிந்த அறிஞர் தமது பெருமையை இழப்பர். (கனம் - பெருமைகனை - அம்பு புணை - தெப்பம் நொய்து -இலேசானது, மெலிதானது)

Page 70
26. உருவுகண்டு எள்ளாமை
உடலின் சிறுமைகண்டு ஒண்புலவர் கல்விக் கடலின் பெருமை கடவார் - மடவரால் கண்ணளவாய் நின்றதோ காணும் கதிரொளிதான்? விண்ணள வாயிற்றோ? விளம்பு.
இளமையோடு கூடிய பெண்ணே! சிறந்த புலவருடைய உடலின் சிறுமையைக் கண்டு அவருடைய கல்வியாகிய கடலின் பெருமையை ஒருவரும் கடக்க மாட்டார்; ஞாயிற்றின் ஒளியோடு கூடிக் காண்கின்ற கருமணியின் ஒளியானது, தனக்கு இருப்பிடமாகிய சிறிய கண்ணின் அளவாக அடங்கி நின்றதோ? அன்றித் தான் காண்கின்ற பெரிய விசும்பின் அளவாக வியாபித்து நின்றதோ? நீ சொல்வாயாக. (மடவரல் - இளமை பொருந்திய பெண்)
27. கைம்மாறு வேண்டா உதவி
கைம்மா றுஉகவாமல் கற்றறிந்தோர் மெய்வருந்தித் தம்மால் இயல்உதவி தாம்செய்வர் - அம்மா! முளைக்கும் எயிறு முதிர்சுவை நாவிற்கு விளைக்கும் வலியனதாம் மென்று.
முளைக்கின்ற பற்களானவை, தமக்கு ஒர் உதவியும் செய்தற்கியலாத நாவினுக்குக் கடினமாகிய பண்டங்களைத் தாமே மென்று கொடுத்து, நிறைந்த சுவையை உண்டாக்கும்; அதுபோல, கற்ற அறிஞர்கள் பிரதி உதவியை விரும்பாமல் உடம்பை வருத்தித் தம்மால்
 

இயன்ற உதவிகளைத் தாமே பிறருக்குச் செய்வர்.
(உகவாமல் - விரும்பாமல் எயிறு - பல்)
28. அறிஞர் செயலும் மூடர் செயலும்
முனிவினும் நல்குவர் மூதறிஞர்; உள்ளக் கனிவினும் நல்கார் கயவர் - நனிவிளைவில் காயினும் ஆகும் கதலிதான்; எட்டிபழுத்து ஆயினும் ஆமோ? அறை.
பேரறிஞர்கள், கோபம் உள்ள காலத்திலும் பிறர்க்குக் கொடுத்து உதவுவர்; மூடர்களோ, மனமகிழ்ச்சி உள்ள காலத்திலும் பிறர்க்கு உதவார்; வாழையானது, மிகுதியும் முற்றாத இளங்காயானாலும் பயன்படும்; நஞ்சுள்ள எட்டியானது, பழுத்தாலும் பயன்படுமோ? நீ சொல்க. (கதலி - வாழை அறை - சொல்)
29. இடுக்கண் அழியாமை
உடற்கு வரும்இடர்நெஞ்சு ஓங்குபரத்து உற்றோர் அடுக்கும் ஒருகோடி யாக - நடுக்கமுறார் பண்ணிற் புகலும் பனிமொழியாய் அஞ்சுமோ மண்ணிற் புலியை மதிமான்.
பண்ணைப் போல இனிமையாகப் பேசுகின்ற குளிர்ச்சி பொருந்திய சொல்லை உடையவளே! திங்களினிடத்தில் இருக்கின்ற மானானது, பூமியில் இருக்கின்ற புலிகளைக் கண்டு அஞ்சுமோ? அஞ்சாது; அதுபோல, தம்முடைய மனம் மேலான இறைவனிடத்தே அழுந்தப் பெற்ற ஞானிகள், தம்முன்பே உடலுக்கு வரும்

Page 71
துன்பங்கள் அடுக்கடுக்காக ஒரு கோடி அளவினதாக இருந்தாலும், அதற்காக அஞ்ச மாட்டார்கள். (பரம் - இறைவன் இடர் - துன்பம்)
30. அறத்தை விரைந்து செல்க
கொள்ளும் கொடுங்கூற்றம் கொல்வான் குறுகுதல்முன் உள்ளம் கனிந்து அறம் செய்து உய்கவே - வெள்ளம் வருவதற்கு முன்னர் அணைகோலி வையார் பெருகுதற்கண் என்செய்வார்? பேசு.
உயிரைக் கொண்டு செல்கின்ற கொடிய இயமனானவன் கொல்லும்படி நெருங்குவதற்கு முன்னே மனம் கனிந்து அறங்களைச் செய்து பிழைத்துக் கொள்வாராக, வெள்ளம் வருவதற்கு முன்னதாக அணை
கட்டிவையாதவர், அவ்வெள்ளம் பெருகி வரும்போது என்ன செய்வார்? நீ சொல்வாயாக. (குறுகுதல் - நெருங்குதல் கோலுதல் - கட்டுதல்)
31. பிறர் துன்பம் நீக்குதல்
பேரறிஞர் தாக்கும் பிறர்துயரம் தாங்கியே வீரமொடு காக்க விரைகுவார் - நேரிழாய்! மெய்சென்று தாக்கும் வியன்கோல் அடிதன்மேல் கைசென்று தாங்கும் கடிது.
பொருந்திய அணிகளை அணிந்து பெண்ணே! உடம்பிலே சென்று தாக்குகின்ற பெரிய கோலினால் அடிக்கப்படும் அடியைக் கைவிரைந்து சென்று உடலில்
 

படாமல் தன் மீது ஏற்றுக் கொள்ளும்; அது போல, பேரறிஞர்கள் வருத்துகின்ற பிறருடைய துன்பத்தை ஆற்றலோடு தாம் ஏற்றுக் கொண்டு அவரைப் பாதுகாப்பதற்கு முற்படுவர்.
32. பகுத்தறிவற்றோர் செய்யும் அறம்
பன்னும் பனுவல் பயன்தேர் அறிவிலார் மன்னும் அறங்கள் வலியிலவே - நன்னுதால் காழொன்று உயர்திண் கதவு வலியுடைத்தோ தாழொன்று இலதாயின் தான்.
அழகிய நெற்றியை உடையவளே! வயிரம் பொருந்திய உயர்ந்த வலிய கதவானது, பொருந்திய தாழ்ப்பாள் இல்லாததாயின், வலிமை உடையதாகுமோ? ஆகாது. அது போல, புகழ்ந்து கூறப்படுகின்ற நூல்களினது பொருளை அறியும் அறிவில்லாதவர் செய்யும் மிகுந்த அறங்கள் பயனில்லாதனவேயாம். (பன்னும் - கூறும் பனுவல் - நூல் நுதல் - நெற்றி காழ் - வயிரம் தாழ் - தாழ்ப்பாள்.)
33. புகழ் வேண்டாத பெரியோர்
எள்ளாது இருப்ப இழிஞர்போற்றற்குரியர் விள்ளா அறிஞர் அது வேண்டாரே - தள்ளாக் கரைகாப்பு உளதுநீர் கட்டுகுளம் அன்றிக் கரைகாப்பு உளதோ கடல்?
நீரை தேக்கி வைக்கின்ற சிறிய குளமே உடைபடாத கரையைக் காவலாகக் கொண்டுள்ளது; அதுவன்றிப்

Page 72
பெரிய கடலானது, கரை காவலாக உள்ளதோ? இல்லை; அதுபோல, அறிவில்லாத சிறியோர் தம்மைப் பிறர் இழித்துக் கூறாதிருக்கும்படி காக்கப்படுதற்கு உரியவராவர்; ஆனால் நீங்காத அறிவினை உடையோர் அங்ங்ணம் காக்கப்படுதலை விரும்பார். (இழிஞர்- அறிவில்லாத சிறியவர் விள்ளா -நீங்காத தள்ளா -2.60LL stay.)
34. பழிக்கு அஞ்சுதல்
அறிவுடையார் அன்றி அதுபெறார் தம்பால்
செறிபழியை அஞ்சார் சிறிதும் - பிறைநுதால் வண்ணம்செய்வாள்வழியே அன்றி மறைகுருட்டுக்
கண்அஞ்சு மோஇருளைக் கண்டு?
பிறைமதிபோலும் நெற்றியை உடைய பெண்ணே! அழகு செய்கின்ற ஒளியையுடைய கண்களே அல்லாமல், | ஒளி குன்றிய குருட்டுக் கண்களானவை, இருளைக் கண்டு அஞ்சுமோ? அஞ்சா, அதுபோல, அறிவுடையவர் பழிக்கு அஞ்சுவரே அல்லாமல், அவ்வறிவைப் பெறாத மூடர், தம்மிடத்துக் கூடி வரும் பழிக்குச் சிறிதும் அஞ்சார். (பெறார் - மூடர் வண்ணம் - அழகு வாள் - ஒளி)
35. மேலோர் கீழோர் இயல்புகள்
கற்ற அறிவினரைக் காமுறுவர் மேன்மக்கள் மற்றையர்தாம் என்றும் மதியாரே - வெற்றிநெடும் வேல்வேண்டும் வாள்விழியாய் வேண்டா புளிங்காடி பால்வேண்டும் வாழைப் பழம்.
 

வெற்றியை உடைய நீண்ட வேற்படையை விரும்புகின்ற ஒளி பொருந்திய கண்களை உடையவளே! வாழைப்பழத்தை இனிப்பாகிய பாலானது அவாவும்; புளிப்புள்ள காடி நீரானது அப்பழத்தை விரும்பாது. அதுபோல, சிறந்த நூல்களைக் கற்ற அறிவுடையோரை மேலோர் எப்போதும் விரும்புவர்; ஆனால், கீழ் மக்களோ, அவரை எப்போதும் மதியார். (வேண்டும் - விரும்பும்)
36. விழுமியோர் செயல்
தக்கார்க்கே ஈவர் தகார்க்கு அளிப்பார் இல்என்று
மிக்கார்க்கு உதவார் விழுமியோர் - எக்காலும் நெல்லுக்கு இறைப்பதே நீரன்றிக் காட்டுமுளி
புல்லுக்கு இறைப்பரோ போய்.
எக்காலத்தும் நெற் பயிருக்கே நீர் இறைப்பதன்றிக் காட்டினிடத்தே காய்ந்த புல்லுக்குப் போய் நீர் இறைப்பாரோ? இறையார்; அதுபோல, தகுதி உடையவர்க்கே கொடுப்பர்; தகுதி இல்லாதவருக்குக் கொடுப்பவர் இல்லை என்று அறிந்து மேலார் தகுதி அற்றவருக்கு ஒன்றும் கொடார். (முளி - உலர்ந்த)
37. தன்னை வியப்பதன் தாழ்வு
பெரியார்முன் தன்னைப் புனைந்துரைத்த பேதை தரியாது உயர்வகன்று தாழும் - தெரியாய்கொல் பொன்னுயர்வு தீர்த்த புணர்முலையாய் விந்தமலை தன்னுயர்வு தீர்ந்தன்று தாழ்ந்து.

Page 73
திருமகளின் உயர்வை அழகினால் நீக்கிய நெருங்கிய கொங்கைகளை உடையவளே! பெரியோர் முன்னே தன்னைத்தானே புகழ்ந்து சொல்லிய மூடன் உயர்வைத் தாங்கமாட்டாது இழிந்து தாழ்வை அடைவான்; அகத்திய முனிவர் முன்னே தன்னைப் புகழ்ந்து சொல்லிய விந்திய மலையானது, அவர் கையினாலே அழுத்தப் பாதாளத்திலே தாழ்ந்தது. தன்னுடைய உயர்வு நீங்கியது; அதனை நீ அறிந்தில்லையோ? (தரியாது - தாங்கமாட்டாது பொன் - திருமகள்)
38. நல்லோர் நட்பும் தீயோர் நட்பும்
நல்லார் செயும்கேண்மை நாடோறும் நன்றாகும் அல்லார் செயும்கேண்மை ஆகாதே - நல்லாய்கேள்! காய்முற்றின் தின்தீங்கனியாம் இளந்தளிர்நாள் போய்முற்றின் என்னாகிப் போம்?
நல்ல குணத்தை உடைய பெண்ணே! கேட்பாயாக, காயானது நாள் கடந்து முற்றினால் தின்னுதற்குரிய இனிய கணியாகும்; இளந்தளிரானது நாள் கடந்து முற்றினால் எதற்குப்பயன்படும்? அதுபோல, நல்லோர் தம்முள் செய்யும் நட்பானது, நாடோறும் பெருகிவளர்ந்து நன்றாகும், நல்லவர் அல்லாதவர் செய்யும் நட்பானது அங்ங்ணம் நன்றாகாது. (கேண்மை -நட்பு தீங்கனி-இனிய பழம்)
39. தகவிலார் நட்பின் தீமை
கற்றறியார் செய்யும் கடுநட்பும் தாம்கூடி உற்றுபூழியும் தீமைநிகழ்வுள்ளதே - பொற்றொடீ சென்று படர்ந்த செழுங்கொடிமென் பூமலர்ந்த அன்றே மணமுடைய தாம்.
 

பொன்னாலாகிய வளையல்களை அணிந்தவளே! போய்ப் படர்ந்த செழுமையுள்ள கொடியின் மெல்லிய பூவானது, மலர்ந்த அப்பொழுதே மணம் உடையதாகிப்பின் உலர்ந்து கெடும்; அதுபோல, கல்லாதவர்கள் செய்யும் மிகுதியான நட்பும், நெடுங்காலம் தாங்கள் பழகியிருந்த விடத்தும் தீங்கு விளைவிப்பதாகவே முடியும்.
(தொழ - வளையல்)
40. அரசரும் புலவர்க்கு ஒவ்வார்
பொன்அணியும் வேந்தர் புனையாப் பெருங்கல்வி மன்னும் அறிஞரைத்தாம் மற்றொவ்வார் - மின்னும் அணி பூணும பிறஉறுப்புப் பொன்னே! அதுபுனையாக் காணும்கண் ஒக்குமோ? காண்.
திருமகளைப் போன்றவளே! ஒளி பொருந்திய ஆபரணத்தை அணிந்து கொள்ளுகிற கை, கால், காது முதலிய அவயங்களானவை, அதனை அணியாத பார்க்கின்ற கண்களுக்கு நிகராகுமோ? ஆகா, அதுபோல, பொன் அணிகளாலே தம்மை அலங்கரித்துக் கொள்ளும் அரசர்கள், அதனை அணியாத நிலைத்த பெருங்கல்வியைக் கற்ற அறிஞர்களுக்கு ஒப்பாகார்
(புனையா - அணியாத மன்னும் - நிலைத்த)
<> <>  <× K× <ộ> <ộ>

Page 74

-முய99குய்யன்கிற1ņ9-Tlogos ĝussi 与9R9坝或1ņ9ĝoğustos@go
-ມຸງມg@@ĢIIIIoĝĝņın
|(109 gặf,1ņ9@smsýtos@1ņ9ś9ļūĪýபடிநிதி:电4fg取
«»ņusoụITŮ1ņ9ĘğlıśGIỆŲ09 list9|g}1ņ999 JR9|[[ĝon10909013)||1991ğın
Jiġ9]|[1 ]]Ingstoņgặm19திருபசிற*டிmeஒஓ 9001ஓெவிதி +**
-----*七Ussorsúsošoje soņ990 șụm giginq10@@jose 1099 十十十十十十
Usoqosos).joi poolroosęupuolin yılı oặso qørşıpasınıms@点取圈图与GgsŲrtotų993)/gig
| –|||||
-1990s listolnosto # listoolisitariaenidostę qī£TIŲjo + (109|Ệĝasų990『C。9ŪTIGĖ
写巨9喻唱电+与电un固
Isotoo urternoe)+119,91,9 sırığrılgoso1999ĒJĀĪ09ņ95Í + sẽlloÐRoựIlocosos Ingữuosog IIIIIII?IIRÍ + Ins||mútuos@U 9$$) gooĝ1103) o + Joussolumsg;十 {{Tl|Inollo so + 1909ų9Ļsorgiolosooļsmo(191ĝIJI + Isous-IGÍ1909 urternoto) l'Ulqi1091||9||TIE) + @@rtos?|-| Lo的湖um卧+到過f}guáLUlqioloÍEPTuug9격T ~~';Im@09ĵoHņ@
ĮĮ9IO LIP@II(9)

Page 75


Page 76
Printed by Uni
 

Arts (Pvt) Ltd. Colombo 3.