கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: ஒளவை தந்த அறநெறிச் செல்வம் (நினைவு வெளியீடு)

Page 1

Magdg.org In
Glassic
23

Page 2

அமரர் திருமதி புவனசுந்தரி குமாரசாமி
தோற்றம் மறைவு 21.1.1935 29.08.2003
திதி வெண்பா வருடம் சுபானு வரும் ஆவணியின் பெருகும் துதியைத் திதியில் - அருளும் சிவனடியைச் சேர்ந்து சிறந்தார், நமது
*புவனம்மை அன்பைப் புரிந்து.
SqSLSLSLCL 0 LSS qS qTSqSqqS qqSS qqSAS A SAS AA L AASAASqAATSAqATS لئےص

Page 3

நிலவெனக் குங்குமம் நெற்றியில் துலங்க மலரெனச் செழித்த மாண்புறு அன்னை
தாய் எனும் தெய்வதம் தான் மறைந்ததுவாம். தூய நல் அன்பதால் துலங்கிய தாயவள், காயமும் நீக்கிக் கடவுளாய் ஆனாள். ஓயாதென்றும் ஒளிதரும் விளக்கு மாயாச்சோதியில் மறைந்தது காணிர்
பிள்ளைகள் தன்னைப் பேணியே வளர்த்த நல்லளாம் அன்னை நானிலம் கடந்தாள். கண்ணெனக் கணவனை காத்த நல் மங்கை
மண்ணினைத் துறந்து மலரடி சேர்ந்தாள்.
பிள்ளைகள் உயர பெருஞ்சுமை ஏற்று
ஓயாதென்றும் உழைத்த நற்றாயவள். வல்லராய்ப் பிள்ளைகள் வளர்ந்தது கண்டு மெல்லத் துயின்று மேதினி கடந்தாள். எல்லார் துயரமும் ஏற்றினிதிருந்தவள்
பொல்லாப்பின்றி போய்ச் சேர்ந்தனளாம் ஆளுமை மிக்க அன்னையள் ஆகி தோழமையோடு துயரெலாம் துடைத்தவள். பாரம் இறக்கிப் படுத்து உறங்கினளாம். நிலவெனக் குங்குமம் நெற்றியில் துலங்க மலரெனச் செழித்து மண்மீதிருந்தவள் கையெடுத்து என்றும் கடவுளைத் தொழுது

Page 4
நல்லவை நடக்க நாளும் பணிந்தவள் பிள்ளைகளின்றிப் பேறெதும் அறியா உள்ளம் உயர்ந்து ஓங்கிய அன்னை இசைகொண்டுயர்ந்த ஏந்தலாம் கணவனை வசையெதும் இன்றி வழிநடத்தியவள் கம்பன் பெயரால் கலை வளர்க்கின்ற எங்களின் கழகம் ஏற்றம் உறவே தன்னைத் தந்து தாங்கிய அண்ணல் நல்லவன் தன்னை நானிலம் தந்தவள். எல்லார் கண்களும் ஈரமே சேர தெய்வதமாகித் திருவுற்றனளாம். அன்னையின் பிரிவால் அயர்ந்தனம் நாமும் பிள்ளையாய் என்னையும் பேணிய அன்னை நல்லவள் பிரிவால் நலிந்தனன் நானும் காசில் புகழோன் கடவுளாம் இராமன் மாசில் அன்னையை மாண்புறச் செய்ய வேண்டித் தினமும் விருப்புடன் நாமும் நீண்டு தொழுவோம் நிம்மதி அடைந்து தாயின் ஆத்மா சாந்தி அடைக.
கம்பவாரிதி இ. ஜெயராஜ் கம்பன் கழகம்.

புவனத்தின் தவப்புதல்வி புவனசுந்தரி
சீரோங்கு சைவநெறியையும், மறைநனிகற்ற மதியாளர்களையும், வரலாற்றைத் தெளிவாகத் தெரிந்த பெரியோர்களையும், பல்துறைச் செல்வங்களையும் குறைவிலா நிறைவாக தன்னகத்தே பேணி வைத்திருக்கும் பெருநகரம் யாழ்ப்பாணம். இப் பெருநகருக்கு உலகளாவிய புகழ் உண்டு. ஆன்மிகத் துறையிலோ, கல்வி வளத்திலோ, உபசரிப்பிலோ, ஆட்சி அதிகாரத்திலோ, வீரத்திலேயோ ஈழ நாட்டின் சிறப்பான நகராக யார் மிளிர்கின்றது.
இந்நகரைக் கடல் சூழ்ந்து அலைமோதுவது நகருக்குத் தனியழகும் சிறப்பும் ஆகும். கடல் படு திரவியங்களுக்குத் தட்டுப்பாடே கிடையாத இப்பட்டினக் கடல் அலைகளின் நடுவே பல திட்டுக்களாக அமைந்து இருக்கும் தீவுக் கூட்டங்கள் அருகே இருப்பது ஊர்காவற்துரை. அங்கு சித்த வைத்தியத்துறையில் புகழ்பரப்பிய சீவரட்ணம் அவர்களின் மிகளாக உதித்த புவனசுந்தரி பெருமைமிக்க கலாபூஷணம் குமாரசாமி என்னும் வயலின் வித்துவானைக் கரம் பிடித்தவர். விமானப்படை அதிகாரியான பூரீ புவனகுமாரையும் நந்தினி என்னும் ஆசிரியையையும் கம்பன் கழகத்தில் இணைந்து கலைபரப்பும் வைத்திய கலாநிதி பூநீரட்ண குமாரையும், கணக்கியல் துறையில் புகழ்பூத்த நல்லாசிரியன் பூரீஸ்கந்தகுமாரையும், இந்து கலாசாரத் திணைக்களத்தில் இனிது சேவைபுரியும் தேவகுமாரியையும், ஜேர்மனில் இருக்கும் கோகுலகுமாரையும், புத்திரர்களாகப் பெற்று சான்றோர் வரிசையில் இடம்பெறச் செய்தவர். அறிவறிந்த மருமக்களையும், பேரக் குழந்தைகளையும் அள்ளி முகரும் பெருமை பெற்றார். தன் வாழ்நாள் முழுவதும் வறுமையையுஞ் செல்வத்தையும் அனுபவித்து அகமகிழ்ந்து வாழத்தெரிந்த தரும பத்தினி.
யாம் அவர்களுடன் பெரிதும் பழகிட வாய்ப்பு கிடைத்திடவில்லை. எனினும், தம் தவப்புதல்வர்கள் சான்றோராகப் புகழ் சேர்க்கின்றமை நாம் பலரும் அறிந்த உண்மையாகும். இன்று தன் திருவருட் பேராசையுந்திட அவன் திருவருட் பேறு பெற சென்றடைந்தார். அவரது ஆன்மா சாந்தியடைய பிரார்த்திக்கின்றோம்.
சாந்தி சாந்தி சாந்தி
என். கணேசலிங்கம் அதிபர் நீர்கொழும்பு விஜயரட்ணம் இந்து மத்தியக் கல்லூரி

Page 5
முன்னுரை
உலகம் நிலையாமையை அன்றாடம் விளக்கி நிற்கிறது. பொய்யான “வாழ்வின் நிஜங்களில்” மயங்கி நிற்போர்க்கு இவ்வுண்மை புலனாவது இல்லை. நிஜமுணர்ந்து நித்தியம் பெற்றோர் இவ்வுலகில் மிகச்சிலரே. அங்ங்னமாய் உண்மை உணர்ந்த “நீத்தார்” பெருமையை, இறந்தாரை எண்ணியுணர்க என்பார் வள்ளுவர்.
மற்றையோர்க்கு, நெருங்கியவர் மறைவின்போது இந்நிலையாமையின் நிச்சயம் மின்னல் கீற்றாய் மயங்கிய அறிவில் தோன்றி மறையும். கணமே தோன்றி மறையும் ஒளியாயினும் முற்றிருளில் மூழ்கிக் கிடக்கும் நம்போன்றோர்க்கு அதுவே ஆத்ம தேடலின் தொடக்கமாம், மரணம் தரும் துன்பமே ஞானமாக, துன்பங்களிலிருந்து விடுபடவேண்டுமென மனம் விளையும், அறிவு அதற்காம் வழி ஆராயத்தலைப்படும். அவ்வாராய்ச்சியின் பயனாக, இவ்வுலக இன்பங்களெல்லாம் எல்லைப்படுத்தப்பட்ட “சிற்றின்பங்களே” எனும் உண்மை வெளிப்பட நிலையான பேரின்பத்தில் விருப்புண்டாகும். அகங்காரம் நான் மமகாரம் (எனது அற்ற வீட்டுநிலையே நிலைத்த இன்பம் எனும் உண்மை தெளியும். அதனால் அவ்வுண்மை நிலைக்கான பாதை தேடத் தலைப்படுவோம். அங்ங்ணமாய்த் தேடத் தலைப்பட்டால், முத்திக்கான முதற்படி "அறவழி” நிற்றலே எனும் உண்மை புலனாகும். இதனையே “ஒழுக்கத்து நீத்தார் பெருமை விழுப்பத்து வேண்டும் பனுவல் துணிவு” எனும் குறளில் வள்ளுவர் சுட்டுவார். அறவழி நிற்க பாவம் தேயும் பாவம் தேய அறியாமை நீங்கும் அறியாமை நிங்க நித்த, அநித்தங்களது வேறுபாடு தோன்றும். அதனால் அழியும் இம்மை மறுமை இன்பங்களில் உவர்ப்பு உண்டாகி, பிறவித் துன்பங்கள் தோன்றும். அவை தோன்ற “வீட்டின்” மேல் ஆசை உண்டாகும். அஃது உண்டாக பிறவிக்கு காரணமான பயனில் முயற்சிகள் நீங்கி, “வீட்டுக்கு” காரணமான யோகமுயற்சிகள் உண்டாகும். அதனால் மெய்யுணர்வு பிறக்கும். அதன் பயனாய் புறப்பற்றாகிய “எனது” என்பதும், அகப்பற்றாகிய “யான்” என்பதும் விடும். இவ்விரண்டும் விட “வீடு” கிட்டும் என முத்தி நோக்கிய பாதையில் அறத்தின் முதல் நிலையை இக்குறளினூடு பரிமேலழகர் விளக்கம் செய்வார்.

அருளியலில் அறத்தின் அவசியம் இங்ங்னமாக உலகியலிலும் அவ்அறமே முதலாகிறது. அஃதாராய்வாம். இன்று அனைத்துத் துறைகளிலும் அறிவியல் உச்சம் எய்திய நிலை, சிந்தனைக் கூறுகளை உள்வாங்கிய இயந்திரங்களோடு, இன்று விஞ்ஞானத்தின் வேகவளர்ச்சி. எனினும், மனிதமனங்களில் அமைதி இல்லை. எங்கும் ஊழல், எதிலும் ஊழல், “திறமை” மற்றவர் வீழ்ச்சி பற்றியே திட்டமிடுகிறது. தன்வாழ்வை விட மற்றவர் வீழ்விலேயே அனைவருக்கும் அக்கறை. ஆதலால் வளர்ந்து வரும் அறிவியல், தேய்ந்து வரும் மானுடத்தால் மாசுண்டு போகிறது. இந்நிலை மாற்ற வழி என்ன? இன்று உலகெங்கும் “விஸ்வரூபம்’ எடுத்திருக்கும் கேள்வி இது. “அறிவியலும்”, “மானுடமும்” செம்மையுற்று உலகம் உய்யும் வழியென்ன? அற எல்லைகட்குட்பட்டு அவற்றை வளரச்செய்வதே நிச்சயமான ஒரே வழி. அறவரம்புகளுக்கு உட்பட்டால், அறிவு ஆற்று நீராய் அனைவர்க்கும் பயன் செய்யும் மானுடம் மாண்புறும். அறவரம்பு நிலைகுலையின், அதே அறிவு, காட்டு வெள்ளமாய் கரைபுரண்டு கெடுப்பதே நோக்கமாய் கேடுறும். மானுடம் மடிந்து போம். இவ்வுண்மை உணர அறம் உலகியலுக்கு முதலாகும் நிலை முற்றாய்ப் புலனாகும். அறத்தின் உயர்வு புரிய, இளம் தலைமுறையை அறநெறிப்படுத்தும் தேவை தெளிவாகிறது. புலனொடுக்கத்தால் “யோகக் காட்சி” பெற்ற துறவிகள் பலர் வாய்த்ததும், அப்பெரியோர் “இது அறம் இது மற”மென வாழ்வை வகுத்துத் தந்ததும், வகுத்தவற்றை நூல்களாய் என்றும் நிலைக்கும் வண்ணம் இயம்பிப்போனதும், அங்ங்ணமாய் அவர் இயம்பிய அறநூல்கள் இன்று வரை எம்மை வழி நடத்துவதும் நம் தமிழினம் செய்த பாக்கியம். நம் இனம் செய்த தவம். இப்பெரியோர் தந்த "அறநெறிச் செல்வமே” நம் தமிழினத்தின் தனிச்சொத்து. இயற்கையோடு ஒத்த நிலையே அறம், ஒவ்வாநிலையே மறம். ஒத்தவரை இயற்கையே காக்கும். ஒவ்வாதவரை இயற்கையே அழிக்கும். நம் சந்ததி இயற்கையோடு ஒத்து என்றும் நிலைக்க ஒரே வழி நம் மூதாதையர் தந்த அற வழியில் அவர்களை நடக்கச் செய்தலே.
அறநூல் தந்த ஆன்றோர் வரிசையில் நம் தமிழ் மூதாட்டி ஒளவையின் பங்கு தனித்துவமானது. குழந்தைகளிற்கும் விளங்கும் வண்ணம் அறமுரைத்த ஒளவையின் பெருமை வார்த்தைகளுக்குள் அடங்காதது. அவ்வடிப் படையிலேயே ஒளவை இயற்றிய நான்கு அறநூல்களை “ஒளவை தந்த அறநெறிச் செல்வம்” எனும் பெயரில் நூலாய் வெளியிடுகின்றோம். உண்மை
لكس

Page 6
உணர்ந்தால் சிறிதான இந்நூலின் பெருமை தெளிவாகும். பயன் கொள்ள வேண்டி பணிகிறோம். தம் குலவிளக்காம் அன்னை திருமதி புவனசுந்தரி அம்மையார் நினைவாகக் குடும்பத்தார் இப்பெரும்பணி இயற்றுகின்றனர்.
தாய்மைப் பண்புகளில் உறைவிடமாய் வாழ்ந்தவர் திருமதி புவசுந்தரிஅம்மையார் அவர்கள். அன்பு, அடக்கம், ஆளுமை மற்றவர் வாழ்வில் அக்றை இவையே அம்மையார் தம் அடிப்படை வாழ்வு தன்னை வெளிப்படுத்தாமல் “உப்பாய்’ குடும்பத்துள் கரைந்து நின்றவர். சமையலில் உப்பைப் போலவே குடும்பத்துள் அற்ற நிலையில் அவர் அவசியம் நன்கு உணரப்படுகிறது. என்றும் எதையும் தனக்கென வேண்டி நிற்காத் தாயவர். அவர் பிறர் மனம் நோக பேசியதும் இல்லை, வாழ்ந்ததும் இல்லை அத்தகு உத்தமி. புகழ்பெற்ற வயலின் வித்துவான் திரு. வி. கே. குமாரசுவாமி அவர்களை வாழ்க்கைத் துணைவராய்ப் பெற்று அன்பே பண்பாய், அறனே பயனாய் இல்லறம் நிகழ்த்தி, பூரீபுவனகுமார், நந்தினி, பூரீஇரத்தினகுமார், பூரீஸ்கந்தகுமார், தேவகுமாரி, கோகுலகுமார் ஆகிய புதல்வரைப் பயந்த அன்னை. அவர்தம் உணர்வுத் தூய்மை உறவுகளாய் இன்று பரந்து விரிந்தபடி, எங்கு விரியினும் கிளைகளும், இலைகளும் தாய்மரத்தின் தகுதிநினைந்த தவிப்பினால் கண்ணீரோடு இன்று. அது அன்பின் வெற்றி, அன்னையின் வெற்றியுமாம். அன்பு வேறு அன்னை வேறா? அவ்வன்புத் தாயின் நினைவாய் இவ் அருவிருந்தை அன்போடு படைக்கின்றார் குடும்பத்தார். அவர்கள் எம் கம்பன் கழகத்தை ஆரம்பம் தொட்டுப் புரக்கும் அன்பின் வடிவங்கள். அவர் சார்பாய் இவ் அன்பு விருந்தேற்று அருள வேண்டி நிற்கிறோம்.
இன்பமே எந்நாளும் துன்பமில்லை’
அன்புடன் அகில இலங்கைக் கம்பன் கழகத்தினர்

2.
ஒளவை தந்த அறநெறிச் செல்வம்
o edió564?
O கொன்றை வேந்தன்
O வாக்குண்டாம் (மூதுரை) o si66/u?
அமரர் திருமதி புவனசுந்தரி குமாரசாமி நினைவு வெளியீடு
2OO3 -

Page 7
ஆத்திருேடி
ஆத்தி சூடி அமர்ந்த தேவனை ஏத்தி ஏத்தித் தொழுவோம் யாமே.
ஆத்திசூடி-திருவாத்திப்பூ மாலையை அணிந்த சிவபெருமான்; அமர்ந்த தேவனை -விரும்பிய பிள்ளையாகிய விநாயகக் கடவுளை ஏத்தி ஏத்தி-துதித்துத்துதித்து, யாம் தொழுவோம் - நாங்கள் வணங்குவோமாக.
1. அறஞ் செய விரும்பு. அறம் - தருமத்தை, செய - செய்ய விரும்பு - விரும்புவாயாக.
2. ஆறுவது சினம். ஆறுவது - ஆற்றிக் கொள்ள வேண்டியது:சினம் - கோபமேயாகும் (கோபத்தை
அடக்கு).
3. இயல்வது கரவேல். இயல்வது- உன்னால் உதவக் கூடிய தொன்றை; கரவேல் -உதவாது ஒளிக்காதே.
4. ஈவது விலக்கேல். ஈவது - பிறர் கொடுப்பதை விலக்கேல் - தடுக்க முயலாதே.
5. உடையது விளம்பேல். உடையது - மறைக்கவேண்டியுள்ள இரகசியத்தை; விளம்பேல் - பிறரிடம் சொல்லாதே.
6. ஊக்கமது கைவிடேல். ஊக்கமது - விடாமுயற்சியை கைவிடேல் - கைவிட்டு விடாதே.
7. எண் எழுத்து இகழேல். எண் எழுத்து - கணித, இலக்கண இலக்கிய நூல்களை; இகழேல் - கற்பதற்குப் பின்நிற்காதே.

8. ஏற்பது இகழ்ச்சி. ஏற்பது - பிச்சையெடுப்பது; இகழ்ச்சி - மிக இழிவான செயலாகும்.
9. ஐயம் இட்டுண். ஐயம் - (இரந்து வருவோருக்குப் ) பிச்சை, இட்டு உண் - முதலிற் கொடுத்துப் பின்னரே நீ உணவு உண்.
10. ஒப்புரவு ஒழுகு. ஒப்புரவு - உலகநடைமுறையை (அறிந்து); ஒழுகு - நீயும் அதற்கமைய நடந்து கொள்.
11. ஓதுவது ஒழியேல். ஒதுவது - கல்வி கற்கும் வழக்கத்தை ஒழியேல் - கைவிட்டு விடாதே.
12. ஒளவியம் பேசேல். ஒளவியம் - பொறாமை காரணமாக, வஞ்சனை நிறைந்த வார்த்தைகளை, பேசேல் - ஒருபோதும் நீ பேசாதே.
13. அஃகம் சுருக்கேல். அஃகம் -தானியங்களை (விளைவிப்பதை); சுருக்கேல் -குறைத்துக் கொள்ளாதே. (அளந்து கொடுக்கும்போது அளவைக் குறைக்காதே என்றும் கூறலாம்).
14. கண்டொன்று சொல்லேல். ஒன்று கண்டு - ஏதாவது ஒன்றைக் கண்டிருந்தும், (ஒன்று) சொல்லேல் - அதனைக் கூறாது காணாத பிறிதொன்றைக் கூறாதே.
15. ங்ப்போல் வளை. கப் போல் - சொல்லின் முதலில் அல்லது இறுதியில் வரும் வழக்கம் இல்லாத ங்கரம் ஏனைய எழுத்துக்களோடு கூடிச் சொல்லாக்கத்தில் இடம் பெறுவது போல; வளை - நீயும் பிறரை அணைத்து நன்மை அடை (இதற்கு ங்கரம் ஒன்றே சொல்லாக்கத்துக்குப் பயன்படுவது. அதற்காக அவ்வரிசையிலுள்ள பயன்படாத ஏனைய பதினொரு உயிர்மெய்களும் அரிச்சுவடியில் இடம் பெறுகின்றன. அவ்வாறு சுற்றத்தைத் தழுவிக் கொள் என்றும் பொருள் கொள்ளலாம்).
16. சனி நீராடு. .م சனி-சனிக்கிழமை தோறும் நீராடு-எண்ணெய் தேய்த்து முழுகும் வழக்க்த்தைத் தவற விடாதே. .نة لم * * متر
أسس المستعس

Page 8
17. ஞயம்பட உரை. ஞயம்பட - பிறருடைய உள்ளத்தில் மகிழ்ச்சி ஏற்படக் கூடியதாக, உரை - இனிய வார்த்தைகளையே பேசு.
18. இடம்பட வீடெடேல். இடம்பட - தேவைக்கு மேல் அதிக பரப்பளவு கொண்டதாக; வீடுஎடேல் - வீடு கட்டாதே. (அயலிலுள்ளவர்களின் வீட்டைப் பாதிக்கக்கூடிய திக்குகளில் வீடு கட்டாதே என்றும் பொருள் கூறலாம்).
19. இணக்கம் அறிந்து இணங்கு. இணக்கம் அறிந்து-நட்புக் கொள்ளுவதற்கு வேண்டிய இயல்புகள் ஒத்திருப்பதை அறிந்து இணங்கு - நீ ஒருவரோடு நட்புக் கொள்.
20. தந்தை தாய் பேண். தந்தை, தாய் - பெற்றோரை; பேண் - போற்றிக் காப்பாற்று.
21. நன்றி மறவேல். நன்றி - பிறர் செய்த நல்லுதவியை மறவேல் - என்றும் மறவாதே.
22. பருவத்தே பயிர் செய். பருவத்தே -பொருத்தமான காலத்திலேயே; பயிர் செய் - அவ்வப் பயிர் வகைகளை உற்பத்தி செய். (உரிய காலத்தில் செய்தற்குரிய கடமைகளைச் செய்).
23. மன்று பறித்து உண்ணேல். மன்றுபறித்து - நீதிமன்றில் பொய்ச்சாட்சி கூறி, உண்ணேல் - அவ்வருவாயைக் கொண்டு வாழாதே.
24. இயல்பு அலாதன செயேல். இயல்பு அல்லாதன - நல்லோரின் இயல்புக்கு மாறுபட்ட செயல்களை; செய்யேல் - செய்யாதே.
25. அரவம் ஆட்டேல். அரவம் - பாம்போடு; ஆட்டேல் - விளையாடாதே.
26. இலவம் பஞ்சில் துயில். இலவம் பஞ்சு பொதிந்த மெத்தை, தலையணை நித்திரை செய்வதற்கு ஏற்றவையாகும்.

27. வஞ்சம் பேசேல். பிறரை ஏமாற்றும் வஞ்சக வார்த்தைகளைப் பேசாதே.
28. அழகு அலாதன செயேல். அழகு அ(ல்)லாதன - பிறர் கண்டு இகழும் படியான செயல்களை செய்)யேல் - செய்யாதே.
29. இளமையிற் கல். கற்க வேண்டியவற்றைக் கல்விக்குரிய இளம் வயதிலேயே கற்றுக்கொள்.
30. அறனை மறவேல். தருமத்தை (ஒருபோதும்) மறந்து விடாதே.
31. அனந்தல் ஆடேல். அனந்தல் - நித்திரையை ஆடேல் - தூங்கவேண்டிய கால அளவுக்கு மேலே கொள்ளாதே.
32. கடிவது மற. கடிவது - தீயவை என நல்லோரால் கடியப்படும் செயல்களை; மற - விட்டுவிடு.
33. காப்பது விரதம். காப்பது - பிற உயிர்களுக்கு எவ்வித தீங்கும் செய்யாது அவற்றைக் காப்பதுவே: விரதம் - உண்மையான நோன்பு ஆகும்.
34. கிழமைப்பட வாழ். கிழமைப்பட - பிறர் உன்னோடு விரும்பி நட்புக் கொள்ளத்தக்கவாறு; வாழ் - நற்குண நற்செய்கைகள் உள்ளவனாக வாழ்வாயாக.
35. கீழ்மை அகற்று. கீழ்மை - தீயவனவற்றிலிருந்து; அகற்று - நீங்கிக் கொள். (தீயகுணங்களை நீக்கு). தீயவரோடு சேராது விலகிக் கொள் என்றும் பொருள் கூறலாம்.
36. குணமது கைவிடேல். w குணமது - நற்குணங்களை கைவிடேல் - (எந்தச் சூழ்நிலையிலும்) கைவிடாதே.
- ܥ

Page 9
37. கூடிப் பிரியேல். கூடி - நல்லவரோடு நட்புக் கொண்டால்; அந்நட்பை பிரியேல் - விட்டு விடாதே.
38. கெடுப்பது ஒழி. கெடுப்பது - பிறருக்கு எவ்வகையிலேனும் தீங்கு செய்வதை, ஒழி - விட்டுவிடு.
39. கேள்வி முயல். கேள்வி - கற்றுணர்ந்த பெரியோர் சொல்லும் நல்லுரைகளைக் கேட்டு; முயல் - அவ்வாறு நடக்க முயலுவாயாக.
40. கைவினை கரவேல். கைவினை - உனக்குத் தெரிந்துள்ள வித்தைகளை, கரவேல் - மறைக்காமல் பிறருக்கும் கற்றுக்கொடு. (கைவினை - கைவந்த செயல்கள்).
41. கொள்ளை விரும்பேல். பிறர் பொருளைக் கொள்ளையிட எண்ணாதே.
42. கோதாட்டொழி. கோது - குற்றமுள்ள ஆட்டு - விளையாட்டுக்களை (சூதாட்டம் போன்றவற்றை); ஒழி - விட்டொழிப்பாயாக.
43. கெளவை அகற்று. கெளவை - பிறரைப்பற்றிப் புறங்கூறும் தீய செயலை; அகற்று - நீக்குவாயாக (பிறருறும் துன்பம் துடைப்பாயாக). கெளவை - துன்பம்.
44. சக்கர நெறிநில், சக்கரம் - (ஆக்ஞா சக்கரம்) அரச ஆணைக்கு நெறிநில் - உட்பட்டு நட.
45. சான்றோர் இனத்து இரு. சான்றோர் இனத்து - அறிவும் ஒழுக்கமும் உள்ள நல்லோருடன்; இரு - கூடி வாழ்
46. சித்திரம் பேசேல். சித்திரம் - வாய்ச்சாதுரியமாக, பேசேல் - இட்டுக் கட்டிப் பேசாதே.
47. சீர்மை மறவேல். சீர்மை - நல்ல பண்புகளை; மறவேல் - கைக்கொண்டு ஒழுகுவதை மறந்து விடாதே.

48. சுளிக்கச் சொல்லேல். சுளிக்கச் - கேட்பவர் மனம் வருந்தி முகம் சுளிக்கும் படியாக; சொல்லேல் - கடுஞ்சொற் கூறாதே.
49. சூது விரும்பேல். சூதாட்டத்தை விரும்பாதே.
50. செய்வன திருந்தச் செய். செய்வன - எக்கருமத்தைச் செய்யினும்; திருந்தச் செய் - திருத்தமாகச் செய்துமுடி.
51. சேரிடம் அறிந்து சேர். சேரிடம் - நட்புக் கொள்ளும் ஒருவரது தன்மைகளை, அறிந்து சேர் - முன்னரே நன்கறிந்து அவரோடு நட்புக் கொள்.
52. சை எனத் திரியேல். சை என -பிறர் உனது நடத்தையைக் கண்டு 'சீ' என இகழத்தக்கவாறு; திரியேல் - நடவாதே.
53. சொற் சோர்வு படேல். சொல் - கூறிய பின் நினைந்து வருந்தத்தக்க வார்த்தைகளை; சோர்வு படடேல் - மறந்தும் கூறாதே.
54. சோம்பித் திரியேல். சோம்பேறியாக வாழாதே.
55. தக்கோன் எனத் திரி. தக்கோன் என - தகுதிபடைத்தவன் என்று நல்லோர் புகழும்படியாக, திரி-நடந்து கொள்.
56. தானமது விரும்பு. தானமது - உன்னால் பிறருக்குக் கொடுக்கக் கூடிய கொடையை, விரும்பு - விருப்பத்தோடு கொடு.
57. திருமாலுக்கு அடிமை செய்.
திருமாலுக்கு - காக்கும் கடவுளாகிய கண்ணனை; அடிமை செய் - வணங்கித் தொண்டுகள் புரி,
58. தீவினை அகற்று. தீவினை - பாவச் செயல்களைச் செய்வூதை, அகற்று - நீக்கிவிடு.
డిసే தமிழ்ச்சங்கம்

Page 10
59. துன்பத்திற்கு இடம் கொடேல். துன்பத்திற்கு - உள்ளத்தில் துயரை வளர்க்கக் கூடிய எச்செயல் நிகழினும்; இடம் கொடேல் - அதற்காக வருந்தாதே. (அதைத் தாங்கும் வலிமையைப் பெறுவாயாக).
60. தூக்கி வினை செய். வினை தூக்கி - செய்யப் போகும் காரியத்தினைச் சீர்தூக்கிப் பார்த்து செய் - (நல்ல பயன் தரக் கூடிய கருமங்களையே) மேற்கொள். (எண்ணித் துணிக கருமம்)
61. தெய்வம் இகழேல். தெய்வத்தைப் பழிக்காதே. (தெய்வத்தின் மேல் பழி சுமத்தாதே).
62. தேசத்தோடு ஒத்து வாழ். தேசத்தோடு - நாட்டிலுள்ள நல்லவரோடு, ஒத்து வாழ் - மாறுபடாது வாழ்வாயாக.
63. தையல் சொற் கேளேல். தையல் - (வஞ்சகமாகப் பேசும்) பெண்ணின்; சொற் கேளேல் - சொற்கேட்டு நடவாதே.
64. தொன்மை மறவேல். தொன்மை -(நம்மினத்தின்) பண்டைய பெருமைகளை மறவேல்-மறந்து விடாதே. (மரபு போற்று)
65. தோற்பன தொடரேல். தோற்பன - தோல்வியைத் தரக்கூடிய செயல்களில்; தொடரேல் - ஈடுபடாதே.
66. நன்மை கடைப்பிடி. நன்மை - நல்லன என ஆன்றோர் கூறியுள்ள செயல்களை; கடைப்பிழ் - கைக் கொண்டு ஒழுகு.
67. நாடு ஒப்பன செய். நாடு - நாட்டிலுள்ள பெரியோர், ஒப்பன செய் - ஒப்புக் கொள்ளக்கூடிய செயல்களையே செய்.
68. நிலையில் பிரியேல். நிலையில் - பிறர் மதிப்பில் உயர்ந்து நிற்கும் நிலையில் இருந்து; பிரியேல் - தாழ்ந்து விடாதே. ( கொண்ட குறிக்கோளைக் கைவிடாதே எனவும் கூறலாம்).

69. நீர் விளையாடேல். நீர் - உயிராபத்துத் தரக்கூடிய ஆழமான நீர்நிலையில்; விளையாடேல் - நீந்தி விளையாடாதே.
70. நுண்மை நுகரேல். நுண்மை - கொஞ்சம் தானே என எண்ணிச் சிற்றுண்டி வகைகளை; நுகரேல் - அடிக்கடி உண்ணாதே.
71. நூல் பல கல். நூல் பல - அறிவு நூல்கள் பலவற்றையும்; கல் -தேடிக் கற்றுக்கொள்.
72. நெற்பயிர் விளை. நெற்பயிர்-தமக்கும் பிறர்க்கும் உணவு தரும் நெற்பயிரை, விளை - விளைவித்தல் வேண்டும்.
73. நேர்பட ஒழுகு. நேர்பட - நேர்மையான இயல்பு உள்ளவனாக, ஒழுகு - நடந்து கொள்.
74. நைவினை நணுகேல். நைவினை - செய்துவிட்டு உள்ளம் வருந்தும்படியான செயல்களில்; நணுகேல் - பங்கு பற்றாதே. நைதல் - வருந்துதல்.
75. நொய்ய உரையேல். நொய்ய - பயனற்ற வார்த்தைகளை, உரையேல் - கூறாதே.
76. நோய்க்கு இடங் கொடேல். நோய்க்கு - நோய் தொற்றிக் கொள்ளுவதற்கு இடங்கொடேல் -இடம் கொடாதே (பரிகாரங்களை முன்னரே தேடிக் கொள்).
77. பழிப்பன பகரேல். (கூறுவது கேட்டுப் பிறர்) பழிப்பன - பழிக்கக் கூடிய வார்த்தைகளை, பகரேல் - கூறாதே.
78. பாம்பொடு பழகேல். பாம்போடு உறவு கொள்ளாதே (விடப்பாம்பு போன்ற தீயவரோடு பழகாதே).
79. பிழைபடச் சொல்லேல். பிழைபட - பிறர் குற்றம் காணக் கூடியதான வார்த்தைகளை; சொல்லேல் - கூறாதே. (ஆராய்ந்து பேசு).

Page 11
80. பீடு பெற நில். பீடு - பெருமை; பெறநில் - உண்டாகும்படி நடந்து கொள்.
81. புகழ்ந்தாரைப் போற்றி வாழ். புகழ்ந்தாரை - பிறரால் நல்லோர் எனப் புகழப்படுபவரது நற்குணங்களை அறிந்து போற்றிவாழ் - அவற்றை நீயும் கைக்கொண்டு ஒழுகு. (உனது என்னென்ன தன்மைகள் பிறரால் புகழப்படுகின்றனவோ, அவ்வொழுக்கங்களைக் கைவிடாது ஒழுகுவாயாக).
82. பூமி,திருத்தி உண். பூமி திருத்தி - மண்ணைப் பண்படுத்தும் உழவுத் தொழிலை மேற்கொண்டு; உண் - அதன் பயனை நுகர்ந்து வாழ்வாயாக.
83. பெரியாரைத் துணைக் கொள் பெரியாரை - அறிவாற்றல் மிக்க நல்லோரை; துணைக் கொள் - உறுதுணையாகக் கொண்டு வாழ்.
84. பேதைமை அகற்று. பேதைமை - உனது அறியாமையை, அகற்று - (கல்வி, கேள்விகள் மூலம்) நீக்கிக் கொள்.
85. பையலொடு இணங்கேல். பையலொடு - அறிவற்ற சிறுவர்களோடு; இணங்கேல் - நட்புக் கொள்ளாதே (சிற்றினம் சேரேல்)
86. பொருள்தனைப் போற்றி வாழ். பொருள்தனை - தேடிய செல்வத்தை (புதைத்து வைக்காது); போற்றி - எவ்வெவ் அறவழிகளிற் செலவிடப்பட வேண்டுமோ அவ்வழிகளை அறிந்து கடைப்பிடித்து ஒழுகி, வாழ் - வாழ்வாயாக.
87. போர்த் தொழில் புரியேல். போர்த் தொழில் - (சமூகத்தில் வாழ்வாரோடு) விண்சண்டை; புரியேல் - செய்யாதே (சமாதான வாழ்வே சிறந்தது).
88. மனம் தடுமாறேல். மனம் - உள்ளமானது; தடுமாறேல் - கலங்காது திடமாக எக்கருமத்தையும் செய்வாயாக.

89. மாற்றானுக்கு இடங்கொடேல். மாற்றானுக்கு - உனது பகைவனுக்கு இடங்கொடேல் - அவன் உனக்கு அழிவு செய்யக் கூடிய சந்தர்ப்பத்தைக் கொடுக்காதே.
90. மிகைபடச் சொல்லேல். மிகைபட - உண்மைக்கு மாறாக எதையும் அதிகப்படுத்தி; சொல்லேல் - பேசாதே.
91. மீதுண் விரும்பேல். மீதுரண் - அளவுக்கு அதிகமான உணவை விரும்பேல் - உட்கொள்ள ஆசை கொள்ளாதே.
92. முனை முகத்து நில்லேல். முனை முகத்து - வீண் சச்சரவுகள் நடக்கும் இடத்தில், நில்லேல் - நிற்காதே.
93. மூர்க்கரோடு இணங்கேல். மூர்க்கரோடு - தீயவரோடு;இணங்கேல் - உறவு கொள்ளாதே.
94. மெல்லின் நல்லாள் தோள் சேர். மெல்லின் நல்லாள் - மென்மையான நற்பண்புகள் அமைந்தவளை, தோள் சேர் - மனையாளாகப் பெற்று இல்லறம் நடத்து.
95. மேல் மக்கள் சொல் கேள். மேல் மக்கள் - கற்றறிந்த நல்லோரது சொல் கேள் - அறிவுரை கேட்டு அதன்படி நட
96. மை விழியார் மனை அகல். மைவிழியார் - காமமூட்டும் மைதீட்டிய விழிகளையுடைய வேசியரது மனை அகல் - வீட்டை நெருங்காதே.
97. மொழிவது அறமொழி. மொழிவது - எதனையும் கூறும்போது அறமொழி - சந்தேகத்திற்கு இடமின்றித் திட்ட வட்டமாகக் கூறு.
98. மோகத்தை முனி. மோகத்தை - தவறான இச்சைகளை, முனி - வெறுத்து ஒதுக்கு.
99. வல்லமை பேசேல். வல்லமை - உன்னுடைய ஆற்றலைப்பற்றி, பேசேல் - (தேவையற்ற இடத்தில்) நீயே புகழ்ந்து பேசாதே.

Page 12
100. வாது முன் கூறேல், முன் - பெரியோர் முன்னிலையில்; வாது - வீணான விதண்டா வாதங்களை; கூறேல் - கூறாதே.
101. வித்தை விரும்பு. வித்தை - பல்வேறு கலைகளையும்; விரும்பு - ஆசையோடு கற்றுக் கொள்.
102. வீடு பெற நில். வீடு பெற - வீடுபேற்றை (முத்தியை) அடைவிக்கக் கூடிய வழிகளை அறிந்து நில் - அவ்வழிகளைக் கடைப்பிடித்து ஒழுகு.
103. உத்தமனாய் இரு. உத்தமனாய் - சொல்லும், நினைவும், செயலும் தூயவனாய்;
gas - 6ITignitura.
104. ஊருடன் கூடிவாழ். ஊருடன் - ஊர்மக்களுடன்; கூடிவாழ் - ஒன்றுபட்டு இணங்கி வாழ்.
105. வெட்டெனப் பேசேல். வெட்டு என - வாளால் வெட்டுவது போன்ற துன்பந்தரும் கடுஞ் சொற்களை பேசேல் - பேசாதே.
106. வேண்டி வினை செயேல். வேண்டி - பிறருக்குக் கேடுகுழ வேண்டும் என எண்ணி; வினை செய்)யேல் - தீவினை செய்யாதே.
107. வைகறைத் துயில் எழு. வைகறை - அதிகாலையில், துயில் எழு - நித்திரை விட்டெழும்பு.
108. ஒன்னாரைச் சேரேல். ஒன்னாரை - பகைவர்களோடு; சேரேல் - எக்காரணங்கொண்டும் சேருதல் வேண்டாம்.
109 ஒரம் சொல்லேல். ஒரம் - நடுவுநிலை தவறி ஒருபக்கம் சார்ந்து; சொல்லேல் - பொய்ச் சாட்சி
சொல்லாதே.
★女★女

கொன்றை 3வந்தன்
காப்பு
கொன்றை வேந்தன் செல்வன் அடியிணை என்றும் ஏத்தித் தொழுவோம் யாமே.
ץ, கொன்றை வேந்தன்-கொன்றைப்பூமாலையைச் சூடிய சிவபெருமானது; செல்வன் அடி இணை - திருக்குமாரராகிய விநாயகக் கடவுளது இரு பாதங்களையும்; என்றும் ரத்தி யாம் தொழுவோம் - எப்பொழுதும் போற்றி யாம் வணங்குவோம்.
1. அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம். தாயும் தந்தையுமே யாம் முதலில் அறிந்து வணங்குதற்குரிய தெய்வங்களாவர்.
2. ஆலயம் தொழுவது சாலவும் நன்று. திருக்கோவிலுக்குச் சென்று வழிபாடு செய்வது பெரும்பயன் தரும். ஆலயம் - (35Tulli, érmév - L6ls.
3. இல்லறம் அல்லது நல்லறம் அன்று. திருமணம் செய்து மனைவியோடு கூடி இல்லத்தின்கண் இருந்து அறங்களைச் செய்தற்குரிய இல்லறமே சிறந்த அறநெறியாகும்.
4. ஈயார் தேட்டைத் தீயார் கொள்வர். கொடுக்காத உலோபிகளின் செல்வம் கள்வர் போன்ற கொடியவர்களால் அபகரிக்கப்படும்.
தேட்டம் - தேடிவைத்திருக்கும் செல்வம்,
5. உண்டி சுருங்குதல் பெண்டிர்க்கு அழகு. அளவுக்கு அதிகமாக உண்ணாது விடுதல் பெண்களின் உடலழகைப் பேணும் வழி
6. ஊருடன் பகைக்கின் வேருடன் கெடும். ஊரிலுள்ளார் பலரோடும் பகை கொள்ளும் ஒருவன் குலத்துடன் அழிய நேரிடும்.
7. எண்ணும் எழுத்தும் கண் எனத் தகும். கணிதநூலும் இலக்கணநூலும் மக்களுக்கு கண்கள் எணத்தக்கவை.

Page 13
8. ஏவா மக்கள் மூவா மருந்து. பெற்றோர்கள் கட்டளையிடாமல் தாமே உணர்ந்து வேண்டிய பணிகளைச் செய்யும் பிள்ளைகள் சாவா மருந்தாகிய அமுதத்துக்கு ஒப்பாவர்.
9. ஐயம் புகினும் செய்வன செய். செய்யப்பட வேண்டிய நல்ல கடமைகளைப் பிச்சை எடுக்கும் நிலைவந்தாலும் தவறாது செய்தல் வேண்டும்.
10. ஒருவனைப் பற்றி ஓரகத்து இரு. பெண்ணானவள் கணவனாக ஒருவனை அடைந்து அவனது உள்ளத்தில் இடம் பெற்றுவாழவேண்டும் (ஒருவன் என்பதற்கு இறைவன் என்றும் பொருள் கூறலாம்).
11. ஓதலின் நன்றே வேதியர்க்கு ஒழுக்கம். வேதங்களை ஒதி உணர்ந்தவர்களாய் இருப்பதைக் காட்டிலும், நல்லொழுக்கம் உடையவர்களாய் வாழ்வதே அந்தணர்களுக்கு அதிக பெருமை தரும்.
12. ஒளவியம் பேசுதல் ஆக்கத்திற்கு அழிவு. பொறாமை கொண்டு பிறரைப்பற்றித் தவறான வார்த்தைகளைப் பேசுதல் ஒருவனுடைய செல்வத்தை அழித்துவிடும்.
ஒளவியம் - பொறாமை,
13. அஃகமும் காசும் சிக்கெனத் தேடு. தானியங்களையும் பணத்தையும் வீண்செலவு செய்யாது தேடிக்கொள்.
அஃகம் - தானியம்; சிக்கென - இறுக்கமாக - வீண்செலவு செய்யாது சிக்கனமாக வாழ்ந்து,
14. கற்பு எனப்படுவது சொல் திறம்பாமை, கணவன் சொல்லைத் தட்டாமல் நடப்பதே கற்பு ஆகும்.
திறம்புதல் - வழுவுதல்.
15. காவல் தானே பாவையர்க்கு அழகு. தமது கற்பைக் காப்பாற்றிக் கொள்வதே பெண்ணுக்குப் பெருமைதரும் செயலாகும்.
16. கிட்டாது ஆயின் வெட்டென மற. முயன்றும் எண்ணியதொன்றை அடைய முடியாதுவிடின் அதனை உடனேயே மறந்துவிடு.
17. கீழோர் ஆயினும் தாழ உரை. கேட்பவர் உன்னிலும் தாழ்ந்தவரானாலும் பணிவோடு பேசு.

18. குற்றம் பார்க்கில் சுற்றம் இல்லை. எல்லோரிடத்திலும் குறைகாணப்புகின் அவனை விட்டுச் சுற்றத்தார் அகன்று விடுவர்.
19. கூர் அம்பு ஆயினும் வீரியம் பேசேல். கூரிய அறிவு படைத்திருந்தாலும் வீண் பெருமை பேசாதே.
20. கெடுவது செய்யின் விடுவது கருமம். தன்னோடு தொடர்புபூண்டோர் தீய கருமங்களைச் செய்வதை அறிந்தால், அவர்கள் தொடர்பை விலக்கி விடுவதே செய்யத்தக்க செயலாகும்.
21. கேட்டில் உறுதி கூட்டும் உடைமை. வறுமையுற்ற போதும் மனந்தளராமல் முயற்சிப்பவனிடம் செல்வம் தானே வந்து சேரும்.
22. கைப்பொருள் தன்னில் மெய்ப்பொருள் கல்வி. ஒருவன் தேடி வைத்திருக்கும் பொருட் செல்வத்திலும் பார்க்க அழிவற்ற உண்மையான செல்வம் கல்விச் செல்வமேயாகும்.
23. கொற்றவன் அறிதல் உற்றிடத்து உதவி. அரசனோடு அல்லது அரச அதிகாரிகளோடு கொள்ளும் அறிமுகம் நமக்கு ஒரு தீமை சம்பவிக்கும்போது உதவியாக இருக்கும்.
கொற்றவன் - மன்னன்.
24. கோட் செவிக்குறளை காற்றுடன் நெருப்பு. கோள் செவி - பிறர்மீது கூறப்படும் கோள்களைக் கேட்டுப் பழகிய செவியில்; குறளை - மேலும் ஒருவன் வந்து கூறும் கோளானது; காற்றுடன் நெருப்பு - காற்றுடன் சேர்ந்த தீ வேகமாகப் பரவுவதுபோல் விரைவாகப் பரவும். தீமையும் செய்யும்.
25. கெளவை சொல்லின் எவ்வருக்கும் பகை. பிறர்மேல் பழிச்சொற்களை ஒருவன் கூறிவருவானாயின் அவன் எல்லோரது பகைக்கும் ஆளாவான். ܫ
கெளவை - பழிச்சொல் - துன்பம்.
26. சந்ததிக்கு அழகு வந்தி செய்யாமை. குழந்தைப் பேறு இல்லாது போகாது; மக்கட் செல்வம் பெற்று விளங்குதல் சந்ததிக்குச் சிறப்பைத்தரும்.
வந்தி - மலட்டுத்தன்மை.

Page 14
27. சான்றோர் என்கை ஈன்றோர்க்கு அழகு. தமது மக்கள் அறிவு ஒழுக்கங்களிற் சிறந்தவர்கள் எனப் பிறரால் பாராட்டப்படுவது, பெற்றோர்க்குப் பெருஞ் சிறப்பைத் தரும்.
28. சிவத்தைப் பேணின் தவத்திற்கு அழகு. சிவபெருமானை அன்போடு தியானிப்பது தவம் புரிவோருக்குப் பெரும் பயன் தரும். (சிவம் என்பதற்கு அன்பு எனவும் பொருள் கூறலாம்).
29. சீரைத் தேடின் ஏரைத்தேடு. சிறப்புப் பெற விரும்பின் பயிர்த்தொழிலை மேற்கொள்.
சீர் - சிறப்பு ஏர் - கலப்பை,
30. சுற்றத்திற்கு அழகு சூழ இருத்தல். சுற்றத்தார் தன்னை என்றும் நெருங்கி இருக்கக் கூடியதாக வாழ்தலே சுற்றம் என்ற சொல்லுக்குப் பொருளாகும்.
சுற்றம் - சுற்றியிருப்போர்.
31. சூதும் வாதும் வேதனை செய்யும். சூதாட்டமும் பெரியோருடன் வீண் தர்க்கம் செய்வதும் துன்பத்தைக் கொண்டு வரும்.
32. செய்தவம் மறந்தால் கைதவம் மாளும். ஒருவன் தவமாகப் பேணித் தான் செய்யும் பணியில் தவறுவானானால் கைப்பொருளையும் இழக்க நேரிடும்.
செய்தவம் மறந்தால் கைதவம் ஆளும் என்றும் பாடபேதம் உண்டு. இதற்கு “செய்யும் தவத்தை மறந்தால் பொய்ம்மை அவனை ஆட்கொள்ளும்” என்பது பொருள்.
கைதவம் - கைப்பொருள், பொய்ம்மை.
33. சேமம் புகினும் சாமத்து உறங்கு. சேமம் புகினும் - பாதுகாப்புக் கடமையில் ஈடுபட்டாலும், சாமத்து உறங்கு - ஒரு சாம நேரமாவது தூங்குதல் வேண்டும். (உறங்காது கண்விழித்தால் உடல் நலம் கெடும்).
34. சை ஒத்து இருந்தால் ஐயம் இட்டு உண் . வருவாய் குறைவின்றி இருக்கும்போது ஏழைகளுக்கும் கொடுத்து நீயும் அனுபவி.

35. சொக்கர் என்பவர் அத்தம் பெறுவர் சொக்கர் என்பவர்- பொன்படைத்தோர் எனப்படுவோர்; அத்தம் பெறுவர்- அறம், பொருள், இன்பம் என்னும் மூன்றனுள் ஏனையவாகிய அறத்தையும் இன்பத்தையும் (அப்பொன்னின் உதவியால்) பெறுவர். சொக்கம் - பொன் (சொக்கத் தங்கம் என்பது காண்க) ; அத்தம் - பொருள்.
36. சோம்பர் என்பவர் தேம்பித் திரிவர். சோம்பேறிகளாய் உள்ளோர் வருந்தி அலைவர்.
37. தந்தை சொல்மிக்க மந்திரம் இல்லை. தந்தை கூறிய சொல்லைப் பேணுதல், மந்திரங்கள் தரும் பயனிலும் கூடிய பயனைத் தரும். (தந்தையின் அறிவுரையைத் தட்டாதே).
38. தாயில் சிறந்தொரு கோயிலும் இல்லை. கோயிலில் எழுந்தருளியிருக்கும் தெய்வத்திலும்பார்க்கக் கண்கண்ட தெய்வமாகிய தாயே சிறந்த தெய்வமாவாள். (தாயை வழிபடு).
39. திரைகடல் ஒடியும் திரவியம் தேடு. திரைகளோடு கூடிய கடலைக் கடந்து வேறு நாடு சென்றேனும் பொருளைச் சம்பாதிக்க வேண்டும்.
40. தீராக் கோபம் போராய் முடியும். அடங்காத கோபம் பெருஞ் சண்டைகளைக் கொண்டுவரும்; அழிவு தரும்.
41. துடியாப் பெண்டிர் மடியில் நெருப்பு. கணவனுக்கு வேண்டியவற்றைச் செய்ய வேண்டும் என்ற ஆர்வம் இல்லாத மனைவி மடியிலே கட்டிக் கொண்ட நெருப்புக்குச் சமமாவாள்.
42. தூற்றும் பெண்டிர் கூற்றெனத் தகும். கணவனின் குறைபாடுகளைப் பிறரிடம் எடுத்துரைக்கும் மனைவி யமனுக்குச் afLOLDIT6. Tir. கூற்று - யமன்
43. தெய்வம் சீறில் கைதவம் மாளும். தெய்வத்தின் கோபத்துக்கு ஒருவன் ஆளானால் அவன் செய்திருந்த தவமும், அழிந்துபடும்.

Page 15
44. தேடாது அழிக்கின் பாடா முடியும். பொருளைச் சம்பாதிக்கர்து கையில் உள்ள பொருளை ஒருவன் செலவிடுவானேயானால் ஈற்றில் வருந்த நேரிடும். பாடு - வருத்தம்.
45. தையும் மாசியும் வை அகத்து உறங்கு. தையும் மாசியும் கடும்பனிக்காலமாதலின் அக்காலத்தில் வைக்கோலால் வேய்ந்த வீட்டில் நித்திரை செய்தல் நன்று.
வை - வைக்கோல், அகம் - வீடு.
46. தொழுது ஊன் சுவையின் உழுது ஊன் இனிது. ஒருவருக்குக் கீழ்ப்பட்டுப் பணிபுரிந்து வரும் வருமானத்தில் பெறும் உணவினும், உழவுத் தொழில் புரிந்து பெறும் உணவு இனியதாகும்.
47. தோழனோடும் ஏழைமை பேசேல். நண்பனோடு கூடப் பயனற்ற வார்த்தைகளைப் பேசாதே. நண்பனுக்கும் உன்னுடைய வறுமை நிலையை எடுத்துக் கூறாதே என்றும் பொருள் கொள்ளலாம்).
48. நல்லிணக்கம் அல்லது அல்லல் படுத்தும். கூடாத நட்புத் தொல்லைகளைத் தரும்.
49. நாடெங்கும் வாழக் கேடு ஒன்றும் இல்லை. நாட்டுமக்கள் யாவரும் மகிழ்ச்சியாக வாழ்வார்களேயானால் கேடு என்பது எவர்க்கும் இல்லையாகும்.
50. நிற்கக் கற்றல் சொல் திறம்பாமை. சொன்ன சொல் தவறாமை, கற்றவண்ணம் ஒழுகுதலில் மிக உயர்ந்த பண்பாகும். திறம்புதல் - வழுவுதல், தவறுதல்.
51. நீரகம் பொருந்திய ஊர் அகத்து இரு. நீர்வளம் கொண்ட ஊரிலே வாழ்.
52. நுண்ணிய கருமமும் எண்ணித் துணி. மிகச் சிறிய செயலேயாயினும் நன்கு ஆராய்ந்து பார்த்தே அதனைச் செய்யத் துணிதல் வேண்டும்.
53. நூல் முறை தெரிந்து சீலத்து ஒழுகு. நீதி நூல்கள் கூறும் நல்ல நெறிகளைக் கற்றறிந்து ஒழுக்கத்துடன் வாழ்க.

54. நெஞ்சை ஒளித்து ஒரு வஞ்சகம் இல்லை. மனச்சாட்சிக்குத் தெரியாது எந்த வஞ்சகமும் செய்யமுடியாது.
55. நேரா நோன்பு சீர் ஆகாது. மனத்தோடு பொருந்தாத விரதங்கள் நற்பலனைத் தரமாட்டா.
நேர்தல் - பொருந்துதல்.
56. நைபவர் எனினும் நொய்ய உரையேல். (கேட்பவர் எதிர்த்து உரையாடாது) வருந்துபவரே ஆயினும், அவருடைய உள்ளத்தைப் புண்படுத்தக் கூடிய வார்த்தைகளைக் கூறாதே.
நைதல் - வருந்துதல்; நொய்ய - அற்ப வார்த்தைகள்.
57. நொய்பவர் என்பவர் வெய்யவர் ஆவர். இளகிய மென்மையான மனத்தையுடையவர்கள் எல்லோராலும் விரும்பப்படத் தக்கவர்கள் ஆவர்.
நொய்மை - மென்மை; வெய்தல் - விரும்புதல்,
58. நோன்பு என்பதுவே கொன்று தின்னாமை. உயிர்களைக் கொன்று தின்னாது இருப்பதுவே தலை சிறந்த விரதமாகும்.
59. பண்ணிய பயிரில் புண்ணியம் தெரியும். ஒருவன் உற்பத்தி செய்யும் பயிரின் விளைவு அவனது நல்வினைப் பயனின் அளவைக் காட்டிவிடும்.
60. பாலோடு ஆயினும் காலம் அறிந்து உண். பாற்சோறே ஆனாலும் உரிய வேளையிலேயே உணவை உட்கொள்ளுதல் வேண்டும். (காலந்தவறி உண்ணாதே)
61. பிறன் மனை புகாமை அறன் எணத்தகும். அயலான் மனைவியைச் சேர எண்ணி அவனுடைய இல்லத்திற்குச் செல்லாதிருப்பது சிறந்த அறமாகும்.
62. பீரம் பேணில் பாரந்தாங்கும். தாய்ப்பால் குடித்து வளர்ந்தவன் (உடல்வலு பெறுவான் ஆதலின்) எந்தப் பாரத்தையும் தூக்க வல்லவனாவான். பிரம் - முலைப்பால்,
63. புலையும் கொலையும் களவுந் தவிர். புலால் உணவு உண்பதையும், உயிர்களைக் கொல்வதையும், திருடுவதையும் செய்யாதே.

Page 16
64. பூரியோர்க்கு இல்லை சீரிய ஒழுக்கம். கீழ் மக்களிடம் நல்லொழுக்கம் இல்லையாகும்.
பூரியோர் - தீயவர்கள்; சீரிய - சிறந்த,
65. பெற்றோர்க்கு இல்லை சுற்றமும் சினமும்.
(ஞானமுதிர்ச்சி) பெற்ற துறவிகள் (பற்று அறுத்தவர்கள் ஆதலின்) சுற்றம் என எவரையும் நினையார். கோபமும் கொள்ளார்.
66. பேதைமை என்பது மாதர்க்கு அணிகலம். அறிந்தும் அறியார் போல் அடங்கியிருக்கும் மடம்' என்னும் குணம், பெண்களுக்குச் சிறப்புத்தரும் அணிகலம் ஆகும்.
67. பையச் சென்றால் வையம் தாங்கும். எதையும் அவசரப்படாது அமைதியாகச் செய்பவரை உலகத்தவர் மதிப்பர். வையம் - பூமி - பூமியில் உள்ளோர்.
68. பொல்லாங்கு என்பவை எல்லாம் தவிர். தீமை என்று கருதப்படும் செயல்கள் யாவற்றையும் நீக்கிவிடு.
69, போனகம் என்பது தான் உழந்து உண்டல், தான் வருந்திப் பாடுபட்டு உழைத்து உண்ணும் உணவே உண்மையான உணவாகும்.
போனகம் - போசனம் - உணவு உழத்தல் - வருந்துதல்,
70. மருந்தே ஆயினும் விருந்தோடு உண். (உண்ணுவதற்குக் கிடைத்தது பெறுதற்கு அரிய) அமுதமே ஆனாலும் பங்கிட்டு விருந்தினர்க்கும் கொடுத்து உண்,
மருந்து - சாவாமருந்து - அமுதம்,
71. மாரி அல்லது காரியம் இல்லை. மழை பெய்யாது விடுமாயின் உலகில் எந்தக் காரியமும் நடைபெறமாட்டாது.
72. மின்னுக்கு எல்லாம் பின்னுக்கு மழை. மின்னல்கள் தோன்றுவது மழைவரப் போவதற்கு அறிகுறியாகும்.
73. மீகாமன் இல்லா மரக்கலம் ஓடாது. கப்பல் ஒட்டி இல்லாவிட்டால் கப்பல் ஒடமாட்டாது. (அதுபோன்று உலக நிகழ்ச்சிகள் யாவற்றையும் இறைவனே நடத்துகின்றான். அவன் இன்றி ஒர் அணுவும் அசையாது)
மீ - மேலிடம்; மீகாமன் - கப்பல் தலைவன்மரக்கலம் - கப்பல்.

「ー
74. முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும்.
காலையில் நாம் ஒருவருக்குத் தீமையோ நன்மையோ செய்தால் அதற்கான
தீமையோ நன்மையோ மாலையில் நம்மை வந்தடையும்.
75. மூத்தோர் சொல்லும் வார்த்தை அமிர்தம். அறிவால் முதிர்ந்த பெரியோர் கூறும் அறிவுரைகள் அமுதம் போல நம்மைக் காப்பாற்றும்.
76. மெத்தையில் படுத்தல் நித்திரைக்கு அழகு. பஞ்சு மெத்தையில் படுத்தால் சுகமாக நித்திரை கொள்ளலாம்.
77. மேழிச் செல்வம் கோழை படாது. உழவுத் தொழிலால் ஈட்டும் செல்வம் மிக உயர்ந்ததாகும்.
மேழி - கலப்பை, கோழைபடுதல் - கேவலமாகக் கருதப்படுதல்.
78. மைவிழியார்தம் மனை அகன்று ஒழுகு. கண்ணுக்கு மைதீட்டிக் காமவலை வீசும் தாசிகளது வீட்டை அடையாதே. (ஒழுக்கமாக வாழ்).
79. மொழிவது மறுக்கின் அழிவது கருமம். பெரியோர் கூறும் அறிவுரைகளைக் கேட்டு நடவாதுவிடின் அழிவடைவது நிச்சயமாகும்.
80. மோனம் என்பது ஞானவரம்பு. மெளன நிலையில் தியானம் செய்வதே ஞான நிலையின் உச்ச எல்லையாகும்.
மோனம் - மெளனம் - பேசாதிருத்தல்.
81. வளவன் ஆயினும் அளவறிந்து அளித்து உண். அரசனே ஆனாலும் தன்னிடமுள்ள பொருளின் அளவை அறிந்து அதற்கமையவே ஏழைகளுக்குக் கொடுத்துத் தானும் அனுபவிக்க வேண்டும். (அன்றேல் பொருளின்றி வருந்த நேரிடும்).
வளவன் ஆயினும் அளவறிந்து அழித்து உண்’ எனவும் பாட பேதம் உண்டு. அழித்து உண் என்பதற்குச் செலவிட்டு வாழ் எனப்பொருள் கூறலாம்.
82. வானம் சுருங்கில் தானம் சுருங்கும். மழை குறைந்து விடுமாயின் உலகில் தான தருமங்களும் குறைந்து விடும்.
வானம் - மழை தானம் - கொடை.

Page 17
83. விருந்து இல்லோர்க்கு இல்லை பொருந்திய ஒழுக்கம். விருந்தினரை உபசரிக்காதவர் இல்லறத்திற்கு உரிய ஒழுக்கம் அற்றவர் ஆவர்.
84. வீரன் கேண்மை கூர் அம்பாகும். உடல்வலு, உளவலு படைத்தவனுடன் கொள்ளும் நட்பானது கூரிய அம்பு போன்று பகைவரை அழிக்கும்.
கேண்மை - நட்பு.
85. உரவோர் என்கை இரவாது இருத்தல். எத்தகைய கொடிய வறுமை வந்தபோதும் பிறரிடம் இரந்து செல்லாது வாழ்பவரே மனத்திண்மை படைத்தவராவர்.
உரம் - வலிமை,
86. ஊக்கம் உடைமை ஆக்கத்திற்கு அழகு. ஊக்கத்துடன் உழைப்பவனிடம் செல்வம் சிறந்து விளங்கும்.
87. வெள்ளைக்கு இல்லை கள்ளச் சிந்தை. தூய்மையான உள்ளம் உடையவர்களுடைய மனத்தில் கபட எண்ணம் தோற்றாது.
வெள்ளை - தூய்மை.
88. வேந்தன் சீறின் ஆம்துணை இல்லை. அரசனுடைய கோபத்துக்கு ஆளானவரைக் காப்பாற்ற எவரும் துணை செல்லார்.
89. வையம் தோறும் தெய்வம் தொழு. எந்தத் தேசத்திற்குச் சென்றாலும் மறவாமல் கடவுளை வணங்கு.
வையம் - பூமி - தேசம். வைகல் தோறும் தெய்வந் தொழு’என்றும் பாடபேதம் உண்டு. “காலையில் எழுந்து கடவுளைத்துதி” என்பது பொருள்.
வைகல் - வைகறை - அதிகாலை.
90. ஒத்த இடத்து நித்திரை கொள். குன்று குழி இல்லாத சமமான இடத்தில் நித்திரை செய்வது உடலுக்குக் கூடிய ஆறுதல் தரும்.
91. ஓதாதார்க்கு இல்லை உணர்வொடு ஒழுக்கம்: அறிவு நூல்களைக் கல்லாதவர் நல்லறிவு பெறார். ஆதலின் கற்றவண்ணம்
ஒழுகவும் மாட்டார்.
*太大大

ஊக்குண்ட4சி (eyølø9)
காப்பு வாக்குண்டாம் நல்ல மனமுண்டாம் மா மலராள் நோக்குண்டாம் மேனி நுடங்காது - பூக் கொண்டு துப்பார் திருமேனித் தும்பிக்கை யான் பாதம் தப்பாமற் சார்வார் தமக்கு.
பதவுரை:- துப்பு ஆர்திருமேனி-பவளம் போன்ற சிவந்த உடலையும், தும்பிக்கையான் பாதம் - துதிக்கையையும் உடைய விநாயகப் பெருமானது திருவடிகளை; பூக் கொண்டு தப்பாமற் சார்வார்தமக்கு - நாள் தோறும் அடைந்து தவறாது மலரிட்டு வணங்கி வருவோருக்கு நல்ல வாக்குண்டாம் - சிறந்த பேச்சு வன்மை உண்டாகும்; நல்ல மனம் உண்டாம் -உயர்ந்த மனம் உண்டாகும்; மாமலராள் நோக்குண்டாம் - சிறந்த செந்தாமரைப் பூவில் வீற்றிருக்கும் மகாலட்சுமியின் அருட்பார்வை கிட்டும்; மேனி நுடங்காது - அவர்களுடைய உடல் பிணியால் வாட்டமடையாது.
தரப்பு - பவளம் ; நுடங்குதல் - வாடி வதங்குதல்.
1. நன்றி ஒருவற்குச் செய்தக் கால் அந்நன்றி
என்று தருங்கொல் எனவேண்டா - நின்று தளரா வளர்தெங்கு தாளுண்ட நீரைத் தலையாலே தான் தருதலால். நின்று தளரா வளர் தெங்கு -நிலைபெற்று உயர்ந்து வளரும் தென்னைமரமானது; தாள் உண்டநீரை-தனது அடியிலே ஊற்றத்தான் பருகிய தண்ணிரை;தலையாலே தான் தருதலால் - (அதற்கு நன்றியாக) தனது தலையிலே இனிய இளநீராகத் தருவதால், ஒருவற்கு நன்றி செய்தக்கால்-ஒருவனுக்கு யாதேனும் ஓர் உபகாரத்தை நீ செய்தால், அந்நன்றி என்று தருங்கொல் எனவேண்டா - அவன் அதற்குப் பதிலுபகாரம் எப்பொழுது செய்வானோ என எண்ண வேண்டியதில்லை.
ஒருவன் + கு - ஒருவற்கு - ஒருவனுக்கு; சிதங்கு - தென்னை.

Page 18
2. நல்லார் ஒருவர்க்குச் செய்த உபகாரம்
கன்மேல் எழுத்துப் போற் காணுமே - அல்லாத ஈரமிலா நெஞ்சத்தார்க் கீந்த உபகாரம் நீர்மேல் எழுத்திற்கு நேர்.
நல்லார் ஒருவர்க்குச் செய்த உபகாரம் - நற்குணமுடைய ஒருவருக்குச் செய்த உதவியானது; கல்மேல் எழுத்துப்போல் காணும் - கல்லின் மேல் எழுதிய எழுத்தைப்போல் என்றும் நினைவில் நிற்கும்; அல்லாத - நல்லார் அல்லாத ஈரம் இல்லா நெஞ்சத்தார்க்கு ஈந்த உபகாரம் - அன்பில்லாத மனத்தினருக்குச் செய்த உதவியானது; நீர்மேல் எழுத்திற்கு நேர்-நீரின்மேல் எழுதப்பட்ட எழுத்து மறைவது போல மறக்கப்பட்டுவிடும் .
கல் + மேல் - கன்மேல்; ஈரம் - அன்பு.
3. இன்னா இளமை வறுமைவந் தெய்தியக்கால் இன்னா அளவில் இனியவும் - இன்னாத நாளல்லா நாட்பூத்த நன்மலரும் போலுமே ஆளில்லா மங்கைக் கழகு. வறுமை வந்து எய்தியக்கால் இளமை இன்னா - வறுமை ஏற்பட்டால் இளமைப் பருவம் துன்பந் தருவதாகும்; இன்னா அளவில் - துன்பம் தரும் முதுமைப் பருவத்தில்; இனியவும் இன்னாத - இன்பத்தைத் தர வேண்டியனவும் துன்பமே தரும்; எதுபோலவெனில், நாள் அல்லா நாள் பூத்த நல் மலரும் - பயன்படும் சுபவேளையில்லாத நாளிற் பூத்த நல்ல மலரும்; ஆள் இல்லா மங்கைக்கு அழகும் - பார்த்து அனுபவிக்க வேண்டிய கணவன் இல்லாத இளம் பெண் பெற்றிருக்கும் அழகும் போலும்.
இன்னா - துன்பம்; இன்னர அளவு - முதுமைப் பருவம்.
4. அட்டாலும் பால் சுவையிற் குன்றா தளவளாய்
நட்டாலும் நண்பல்லார் நண்பல்லர் கெட்டாலும் மேன்மக்கள் மேன்மக்களே சங்கு சுட்டாலும் வெண்மை தரும். அட்டாலும் - காய்ச்சினாலும், பால் சுவையிற் குன்றாது - பால் தனது சுவையிற் குறையாது; சங்கு சுட்டாலும் வெண்மைதரும் - சங்கை (நீறாகும் வரை) சுட்டாலும் அது மிகுந்த வெண்மை நிறத்தையே கொடுக்கும்; அவைபோன்று, மேல் மக்கள் கெட்டாலும் மேல்மக்களே - நல்லோர் (விதிப்பயனால்) கேடுற்ற காலத்திலும் தம்முடைய மேலான இயல்பிற் சிறிதும் குறைவுபடார்; அளவளாய் நட்டாலும் நண்பு அல்லார்நண்பு அல்லர் -ஒருவரோடு அளவளாவிக் கலந்து நட்புப் பூண்டாலும் சிநேகித குணமற்ற கீழ் மக்கள் நண்பர்கள் ஆகார். - அடுதல் - காய்ச்சுதல்; நட்டல் - நட்புக் கொள்ளல்.

5. அடுத்து முயன்றாலும் ஆகுநா ளன்றி எடுத்த கருமங்கள் ஆகா - தொடுத்த உருவத்தால் நீண்ட உயர்மரங்க ளெல்லாம் பருவத்தால் அன்றிப் பழா. தொடுத்த உருவத்தால் நீண்ட உயர்மரங்கள் எல்லாம்-நீண்டு கிளைகளோடு கூடி விளங்கும் பெரிய மரங்கள் யாவும்; பருவத்தால் அன்றிப் பழா - அவை அவை பழுக்கும் பருவகாலம் வந்தால் அன்றிப் பழுப்பதில்லை. (அதுபோல) ஆகும் நாள் அன்றி - நிறைவேறும் காலம் வந்தால் அன்றி, அடுத்து முயன்றாலும் - எவ்வளவு விடாமுயற்சியுடன் செயற்பட்டாலும்; எடுத்த கருமங்கள் ஆகா - தொடங்கிய முயற்சிகள் நிறைவேறாவாம்.
6. உற்ற இடத்தில் உயிர்வழங்கும் தன்மையோர்
பற்றலரைக் கண்டால் பணிவரோ - கற்றுாண் பிளந்திறுவதல்லாற் பெரும் பாரந் தாங்கின் தளர்ந்து வளையுமோ தான். கல் தூண் - கல்லால் அமைந்த தூணானது; பெரும் பாரந்தாங்கின் - பெரிய பாரத்தைச் சுமக்க நேர்ந்தால், பிளந்திறுவதல்லால் - பிளந்து உடைவதேயல்லாமல்; தான் தளர்ந்து வளையுமோ - அத்தூண் தளர்ச்சியடைந்து வளையுமோ (வளையாது). அதுபோல, உற்ற இடத்தில் - (தமக்கு ஆபத்தோ அவமானமோ நேர்ந்தால்) அவ்விடத்தில்; உயிர் வழங்குந் தன்மையோர் - தமதுயிரையும் விட்டுவிடக்கூடிய மான உணர்வுடையோர்; பற்றலரைக் கண்டால் பணிவரோ - தமது பகைவரைக் கண்டால் அஞ்சிப் பணிவார்களோ (பணியார்).
பற்றலர் - பற்று + அல்லர் - பகைவர்; கற்றாண் - கல் + தாண்; இறுதல் - உடைதல், அழிதல்,
7. நீரளவே ஆகுமாம் நீராம்பல் தான்கற்ற
நூலளவே ஆகுமாம் நுண்ணறிவு - மேலைத் தவத்தளவே ஆகுமாம் தான் பெற்ற செல்வம் குலத்தளவே ஆகும் குணம். நீர் ஆம்பல் நீரளவே ஆகும் - நீரில் வளர்கின்ற ஆம்பற் கொடியானது அந்த நீர்நிலையிலுள்ள நீரின் உயரத்திற்கு ஏற்பவே உயர்ந்து தோன்றும்; தான் கற்ற நூலளவே ஆகுமாம் நுண்ணறிவு - ஒருவன் கற்ற நூல்களின் அளவாகவே அவனுடைய அறிவு நுட்பமும் அமையும்; தான் பெற்ற செல்வம் - ஒருவன் பெற்று அனுபவிக்கும் செல்வமானது; மேலைத்தவத்தளவே ஆகும் - முற்பிறவியிற் செய்த தவப்பயனின் அளவாகவே கிட்டும்; (அதுபோன்று) குலத்தளவே ஆகும் குணம் - தான் பிறந்த பரம்பரைக்குத் தக்கவாறே ஒருவனுடைய குணமும் அமையும். தான் - அவன் - ஒருவன் ; மேலை - முற்பிறவி,

Page 19
8. நல்லாரைக் காண்பதுவும் நன்றே நலமிக்க
நல்லார் சொற் கேட்பதுவும் நன்றே - நல்லார்
குணங்கள் உரைப்பதுவும் நன்றே அவரோ(டு)
இணங்கி இருப்பதுவும் நன்று. நல்லாரைக் காண்பதுவும் நன்றே - நல்லவர்களைக் காணுவதும் நல்லதே, நல்லார் நலம்மிக்க சொற் கேட்பதுவும் நன்றே - நல்லவர்கள் கூறும் பயனுடைய சொற்களைக் கேட்பதுவும் நல்லதே, நல்லார் குணங்கள் உரைப்பதுவும் நன்றே - நல்லவர்களுடைய நற்குணங்களைப் பாராட்டிக் கூறுவதும் நல்லதே; அவரோடு
இணங்கி இருப்பதுவும் நன்று - அந்த நல்லவர்களோடு கூடி நண்பர்களாக
| வாழ்வதுவும் நல்லதேயாகும்.
9. தீயாரைக் காண்பதுவுந் தீதே திருவற்ற
தீயார் சொற் கேட்பது வுந்தீதே - தீயார்
குணங்கள் உரைப்பதுவுந் தீதே அவரோ(டு)
இணங்கி இருப்பதுவுந் தீது, தியாரைக் காண்பதுவுந்தீதே - தீயவர்களைக் காண்பதும் தீமையானதே; தியார் திருவற்ற சொற் கேட்பதுவும் தீதே - தியவர்களின் பயனற்ற வீண்வார்த்தைகளைக் கேட்பதும் தீமையானதே; தியார் குணங்கள் உரைப்பதுவும் தீதே - தீயவர்களின் தீய குணங்கள் பற்றி எடுத்துரைப்பதும் தீமையானதே; அவரோடு இணங்கி இருப்பதுவுந் தீது - அத்தீயவரோடு உறவு பூண்டு ஒழுகுவதும் தீமையே விளைக்கும்.
10. நெல்லுக் கிறைத்த நீர் வாய்க்கால் வழியோடிப்
புல்லுக்கும் ஆங்கே பொசியுமாம் - தொல்லுலகில் நல்லார் ஒருவர் உளரேல் அவர் பொருட்டு எல்லார்க்கும் பெய்யும் மழை. நெல்லுக்கு இறைத்தநீர்வாய்க்கால் வழியோடி - நெற்பயிருக்கு இறைத்த நீரானது வாய்க்கால் வழியே ஒடும்போது, புல்லுக்கும் ஆங்கே பொசியுமாம் - கசிந்து ஊறி அருகே இருக்கும் புற்களுக்கும் பயனாகும் (அதுபோல்) தொல் உலகில் - பழைமையாகிய இவ்வுலகத்திலே, நல்லார் ஒருவர் உளரேல் - நல்லவர் ஒருவர் இருப்பின்; அவர் பொருட்டு எல்லார்க்கும் மழை பெய்யும் - அவருக்காகப் பெய்யும் மழை எல்லார்க்கும் பயன் தரும்,
7ேயாசிதல் - கசிந்து ஊறுதல்; தொல் + மை - சிதான்மை - பழைமை; அவர் சிபாருட்டு - அவருக்காக,
11. பண்டு முளைப்ப தரிசியே ஆனாலும்
விண்டுமி போனால் முளையாதாம் - கொண்டபேர் ஆற்றல் உடையார்க்கும் ஆகா தளவின்றி ஏற்ற கருமம் செயல்.

பண்டு முளைப்பது அரிசியே ஆனாலும் - உமியோடு கூடியிருக்கும்போது முளைப்பது (நெல்லினுள் உள்ள) அரிசியே ஆயினும்; உமி விண்டு போனால் முளையாதாம்-உமி நீங்கிப் போனால் அவ்வரிசி முளைவிட மாட்டாது; (அதுபோல) கொண்ட பேர் ஆற்றல் உடையார்க்கும் - நீங்காத பெரிய ஆற்றலை I உடையவர்களுக்கும்; அளவு இன்றி ஏற்ற கருமம் செயல் ஆகாது - ஒரு கருமம் நிறைவேறுதற்குரிய காலம் வாய்த்தால் அன்றித் தொடங்கிய கருமத்தைச் செய்து முடித்தல் இயலாது.
விண்டு - நீங்கி விள்ளுதல் - நீங்குதல். குறிப்பு: அளவு - அளந்த அளவு’ எனக் கூறப்படும் வினைப்பயன். அடுத்து முயன்றாலும் ஆகும் நாளன்றி எடுத்த கருமங்கள் ஆகா”என முன்னர் கூறப்பட்டிருப்பதும் இதுவே. இதற்கு, ஒரு கருமத்தை நிறைவேற்றுவதற்கு வேண்டிய துணைவலி எனவும் பொருள் கூறுவர்
12. மடல் பெரிது தாழை மகிழ் இனிது கந்தம்
உடல் சிறியர் என்றிருக்க வேண்டா - கடல்பெரிது மண்ணிரும் ஆகா (து) அதனருகே சிற்றுாறல் உண்ணிரும் ஆகி விடும். தாழைமடல் பெரிது - தாழம்பூ நீண்ட பெரிய இதழ்களையுடையது; (ஆனால்) மகிழ் இனிது கந்தம் - (சிறிய இதழையுடைய) மகிழம்பூ இனிய வாசனையுடையது; (அவ்வாறே) கடல்பெரிது - சமுத்திரம் மிகப் பெரியதாயிருப்பினும், மண்ணிரும் ஆகாது- அதன் நீர் அழுக்கைக் கழுவுதற்கேற்ற நீரன்று (ஆனால்) அதன் அருகே சிற்றுாறல் - அச்சமுத்திரத்தின் கரையின் அயலிலே (தோண்டப்படும்) சிறிய ஊற்றினது நீரானது; உண்ணிரும் ஆகிவிடும்-குடிப்பதற்கும் ஏற்றதாய் அமைந்து விடும். (ஆதலின்) உடல் சிறியர் என்றிருக்க வேண்டா - உருவத்தாற் சிறியர் என்று எண்ணி ஒருவரை இகழுதல் ஏற்றதன்று.
மடல் - பூவிதழ்; மண்ணுதல் - கழுவுதல்; சிறுமை + ஊறல் - சிற்றறல் - சிறிய ஊற்று.
13 கவையாகிக் கொம்பாகிக் காட்டகத்தே நிற்கும் அவையல்ல நல்ல மரங்கள் - சபைநடுவே நீட்டோலை வாசியாநின்றான் குறிப்பறிய மாட்டாதவன். நல் மரம். கவையாகி கொம்பாகி - கிளைகளையும்; (அக்கிளைகளிலிருந்து தோன்றும்) கொப்புக்களையும் உடையனவாய்; காட்டகத்தே நிற்கும் - காட்டினுள்ளே வளர்ந்து ஓங்கி நிற்கும்; அவை நல்ல மரங்கள் அல்ல - அவற்றை நல்ல மரங்கள் என்று கூறுதல் பொருந்தாது; ஏனெனில் சபை நடுவே நீட்டோலை வாசியா நின்றான் - சபையின் நடுவிலே ஒருவர் வாசிக்குமாறு நீட்டிய ஒலையை வாசிக்க முடியாதவனாய் நிற்கும் எழுத்தறிவற்றவனும்; குறிப்பறிய மாட்டாதவன் - பிறருடைய உள்ளக்குறிப்பை அறிய மாட்டாதவனுமே;நல்மரம் - நல்ல மாங்காா.ை

Page 20
கவை - பெரிய கிளை கொம்பர் - கிளைகளில் தோன்றும் கொப்புக்கள்; ஒலை - எழுதிய ஒலை.
14 கான மயிலாடக் கண்டிருந்த வான்கோழி
தானும் அதுவாகப் பாவித்துத் - தானுந்தன் பொல்லாச் சிறகை விரித் தாடினாற் போலுமே கல்லாதான் கற்ற கவி. கல்லாதான் கற்ற கவி - (இலக்கண இலக்கியங்களைக் கற்றோர் பொருத்தமான பாடல்களைக் கூறிப் பொருள் உரைப்பதையும்; அதனைப் பலரும் பாராட்டுவதையும் பார்த்து) கல்வியறிவற்ற ஒருவன் பொருத்தமற்ற இடத்தில் தான் கற்ற பிழையான பாடலைக் கூறுதல்; கான மயிலாட்க் - காட்டிலுள்ள மயிலானது (தனது அழகிய சிறகை விரித்து) நடனமாட கண்டிருந்த வான்கோழி - அதனைப் பார்த்த ஒரு வான்கோழியானது; தானும் அதுவாகப் பாவித்து - தன்னையும் அந்த மயிலாகப் பாவனை செய்து; தன் பொல்லாச் சிறகைத் தானும் விரித்து ஆடினாற் போலும் - அழகு குறைந்த தனது சிறகை விரித்து ஆடுவதற்கு ஒப்பாகும்.
15. வேங்கை வரிப்புலிநோய் தீர்த்த விடகாரி
ஆங்கதனுக் காகாரம் ஆனாற்போல் - பாங்கறியாப் புல்லறிவாளர்க்குச் செய்த உபகாரம் கல்லின் மேல் இட்ட கலம். வரிப்புலி வேங்கை நோய் தீர்த்த விடகாரி - வரிகளோடு கூடிய வேங்கைப்புலி விடந் தீண்டியதால் உற்ற நோயைக் குணப்படுத்திய விட வைத்தியன்; ஆங்கு அதனுக்கு ஆகாரம் ஆனால் போல்-அப்புலிக்கே அவ்விடத்தில் ஆகாரம் ஆகியது போன்று; ( தமக்கு அழிவு வரும் என்பதைச் சிறிதும் சிந்தியாது) பாங்கறியாப் புல் அறிவாளர்க்குச் செய்த உபகாரம் - நன்மை என்பதை அறியாத அற்ப புத்தியுடையவர்களுக்குச் செய்யும் உபகாரம்; கல்லின்மேல் இட்ட கலம் - கல்லின்மேற் போடப்பட்ட மண் பாத்திரம் உடைவது போல உடனேயே அழிந்து விடும்.
விடகாரி - விடந்தீர்க்கும் வைத்தியன்; பாங்கு -நன்மை; புன்மை - அற்பம் - புல்லறிவு - அற்பபுத்தி ; கலம் - மட்கலம் - மண்பாத்திரம்.
16. அடக்கம் உடையார் அறிவிலர் என்றெண்ணிக்
கடக்கக் கருதவும் வேண்டா - மடைத்தலையில் ஒடு மீன் ஒட உறுமின் வருமளவும் வாடி இருக்குமாங் கொக்கு. கொக்கு - கொக்கு என்னும் பறவை, மடைத்தலையில் - நீர் ஒடும் வாய்க்காலில்; ஒடும் மீன் ஒட - ஒடுகின்ற சிறுமீன் குஞ்சுகளை எல்லாம் ஒடவிட்டு உறுமின் வரும் அளவும் வாடியிருக்கும் - ஏற்ற பெரியமீன் வரும்வரை காத்து நிற்கும்; (அதனைப்போல) அடக்கம் உடையார் - தமது (உள்ளத்து உணர்ச்சிகளை)

அடக்கியாளும் ஆற்றல் படைத்தோரை, அறிவு இலர் என்று எண்ணி - அறிவு இல்லாதவர் என்று தவறாகக் கருதி, கடக்கக் கருதவும் வேண்டா - வெல்லுவதற்கு நினைக்கவும் வேண்டாம்.
மடை - வாய்க்கால்; உறுமின் - பெரியமின்.
17. அற்ற குளத்தில் அறு நீர்ப் பறவை போல்
உற்றுNத் தீர்வார் உறவல்லர் - அக்குளத்தில் கொட்டியும் ஆம்பலும் நெய்தலும் போலவே ஒட்டி உறுவார் உறவு. அற்ற குளத்தில் - நீர் வற்றிப்போன குளத்தை விட்டு அறும் நீர்ப் பறவைபோல் - நீங்கிப் போகின்ற நீர்வாழ் பறவைகளைப் போல, உற்றுழி - (ஒருவருக்கு வறுமை) வந்து சேர்ந்த பொழுது, தீர்வார் உறவு அல்லர் - அவரைவிட்டு நீங்கிச் செல்வார் உறவினர் ஆகார்; அக்குளத்தில் கொட்டியும், ஆம்பலும், நெய்தலும் போலவே - அக்குளத்திலே வளர்ந்திருந்த கொட்டியும் அல்லியும் நெய்தலும் (அக்குளத்தை விட்டு நீங்காது தாமும் வரண்டு கருகி மடிவது) போன்று ஒட்டி உறுவார் உறவு - தாமும் அவரது துன்பத்திற் பங்கு கொண்டு அவரைவிட்டு நீங்காதவரே உண்மையான உறவினராவர்.
நீர்ப்பறவை - அன்னம், கொக்கு நாரை ஆதியன; அறுதல் - விட்டு நீங்குதல்; தீர்தல் - விட்டு நீங்குதல்; உழி - இடம், காலம்.
18. சீரியர் கெட்டாலும் சீரியரே சீரியர் மற்(று)
அல்லாதார் கெட்டாலங் கென்னாகும் - சீரிய பொன்னின் குடம் உடைந்தாற் பொன்னாகும் என்னாகும் மண்ணின் குடம் உடைந்தக் கால். சீரியர் - நல்லோர்; கெட்டாலும் சீரியரே - (தம்முடைய செல்வத்தை இழந்து) வறுமையுற்றாலும் மேலோராகவே மதிக்கப்படுவர்; சீரியர் அல்லாதார் கெட்டால் அங்கு என்னாகும் - நல்லோர் அல்லாத கீழோர் செல்வத்தையும் இழந்து விட்டால் அவர் நிலை யாதாகும்? (இகழவேபடுவர்) சீரிய பொன்னின் குடம் உடைந்தால் பொன்னாகும் - சிறந்த பொன்னாற் செய்யப்பட்ட குடம் உடைந்தாலும் அப்பொன்னுக்கு உரிய மதிப்புக் குறையாது; மண்ணின் குடம் உடைந்தக்கால் என்னாகும் - மண்ணாற் செய்யப்பட்ட குடம் உடைந்து விட்டால் வெறும் ஒடேயாகும்.
சீரியர் - நல்லோர்; உடைந்தக்கால் - உடைந்தவிடத்தது; மற்று - அசை.
19. ஆழ அமுக்கி முகக்கினும் ஆழ்கடல்நீர் நாழி முகவாது நானாழி - தோழி நிதியும் கணவனும் நேர்படினும் தந்தம் விதியின் பயனே பயன்.

Page 21
தோழி-தோழியே:ஆழ்கடல்நீர்-ஆழமான கடலிலுள்ளநீரில் ஆழஅமுக்கிமுகக்கினும் -நன்றாக ஆழும்படி அமுக்கிஅள்ளினாலும்,நாழிநால்நாழிமுகவது-ஒருநாழியானது நான்கு நாழிதண்ணிரைத்தன்னுள்ளே கொள்ளது(அதுபோல பெண்களுக்கு)நிதியும் கணவனும் நேர்படினும்-செல்வமும் ஏற்ற கணவரும்வந்துவாய்த்தாலும் தம்தம்விதியின் பயனே பயன் - அவரவரது விதிப்பயனுக்குத் தக்க சுகத்தையே அனுபவிப்பர்.
நாழி - படி - ஒரு முகத்தலளவை, இலங்கையில் கொத்து எனக் குறிக்கப்படுவதும் அதுவே.
நால் + நாழி - நானாழி; தம் சிதம் - தந்தம் - தத்தம்.
20. உடன் பிறந்தார் சுற்றத்தார் என்றிருக்க வேண்டா
உடன் பிறந்தே கொல்லும் வியாதி - உடன் பிறவா மாமலையில் உள்ள மருந்தே பிணி தீர்க்கும் அம்மருந்து போல்வாரும் உண்டு. உடன்பிறந்தே கொல்லும் வியாதி-சில வியாதிகள் பரம்பரையாகப் பிறக்கும்போதே வந்தடைந்து ஒருவனது மரணத்துக்கும் காரணமாவன: (அத்தகைய நோய்களையும்) உடன்பிறவா மாமலையிலுள்ள மருந்தே பிணி தீர்க்கும் - அவனுடன் பிறவாதனவும் பெரிய மலையினிடத்துக் காணப்படுவனவுமாகிய மருந்து மூலிகைகளே தீர்க்கும் வல்லமை வாய்ந்தனவாய்க் காணப்படுகின்றன; அம்மருந்து போல்வாரும் உண்டு - அம்மருந்துபோல் ஆபத்து வேளையில் வந்து உதவும் அந்நியரும் உண்டு; (ஆதலின்) உடன் பிறந்தார் கற்றத்தார் என்றிருக்க வேண்டா - உடன் பிறந்த சகோதரர் மட்டுமே உறவினர் என்று எண்ண வேண்டாம்.
21. இல்லாள் அகத்திருக்க இல்லாத தொன்றில்லை
இல்லாளும் இல்லாளே ஆமாயின் - இல்லாள்
வலிகிடந்த மாற்றம் உரைக்குமேல் அவ்வில்
புலி கிடந்த தூறாய் விடும்.
இல்லாள் அகத்திருக்க - குணவதியான மனையாள் வீட்டில் இருப்பாள் ஆயின், இல்லாதது ஒன்று இல்லை - அவ்வீட்டில் இல்லாத பொருள் ஒன்றுமேயில்லையாம் (எல்லாம் நிறைவாக இருக்கும்); இல்லாளும் இல்லாளே ஆம் ஆயின்-மனையாள் இல்லாத வீடும்;இல்லாள் வலிகிடந்த மாற்றம் உரைக்குமேல்-கடுஞ்சொற்களைக் கூறும் மனையாள் உறையும் வீடும்; புலி கிடந்த தூறாய் விடும் - புலி பதுங்கிக் கிடக்கும் பற்றை போலாகிவிடும்.
மாற்றம் - சொல்; வலிகிடந்த மாற்றம் - கடுஞ்சொல்; தரற - பற்றை, புதர்.
22. எழுதியவா றேகாண் இரங்கு மடநெஞ்சே
கருதியவா றாமோ கருமம் - கருதிப்போய்க் கற்பகத்தைச் சேர்ந்தோருக்குக் காஞ்சுரங்காய் ஈந்ததேல் முற்பவத்திற் செய்த வினை.

இரங்கும் மட நெஞ்சே - துன்பங்கண்டு வருந்தும் அறிவற்ற மனமே, கருதியவாறு ஆமோ கருமம் - எண்ணியவாறு யாவும் நடந்து விடுமா, எழுதியவாறே காண் - தலையெழுத்து என்று சொல்லும் விதிப்படியே தான் எதுவும் நடக்கும் என அறிவாயாக, கருதிப் போய்க் கற்பகத்தைச் சேர்ந்தோர்க்கு - கேட்பதைத் தரும் என எண்ணிக் கற்பக மரத்தை நாடிச் சென்றோர்க்கு; காஞ்சுரங்காய் ஈந்ததேல் - அம்மாம் எட்டிக்காய் எனப்படும் நஞ்சுக்காயைக் கொடுப்பின்; (அதற்குக் காரணம்) முற்பவத்திற் செய்த வினை - முற்பிறவியில் அவர் செய்த தீவினைப் பயனேயாகும். கற்பகதரு - விரும்பியதைக் கொடுக்கவல்ல மரம்; காஞ்சுரங்காய் - எட்டிக்காய் - பயங்கர நஞ்சுக்காய்; பவம் - பிறவி,
23. கற்பிளவோ டொப்பர் கயவர் கடுஞ் சினத்துப்
பொற்பிளவோ டொப்பாரும் போல்வரே - விற்பிடித்து
நீர் கிழிய எய்த வடுப்போல மாறுமே
சீர் ஒழுகு சான்றோர் சினம். கயவர் கடுஞ் சினத்துக் கல் பிளவோடு ஒப்பர் - கீழ் மக்கள் கடுங்கோபம் கொண்டால் கல் பிளந்தது போல உறவைப் பிளந்து கொள்வர்; (அவ்வெடிப்புப் பின்னர் ஒன்று சேராது) கடுஞ்சினத்துப் பொற்பிளவோடு ஒப்பாரும் போல்வர் - நல்லோர் கடுஞ்சினத்தால் பிரிந்துவிடினும் பின்பு பிளந்த பொன் ஒட்டி விடுவது போல சேர்ந்து விடுவர்; சீர் ஒழுகு சான்றோர் சினம் - நல்லொழுக்கமுடைய அறிவுடையார் கோபம்; விற்பிடித்துநீர்கிழிய எய்த வடுப்போல மாறும் -விற்பிடித்து எய்த அம்பினால் நீரில் ஏற்படும் வடு உடனேயே மறைந்து விடுவதுபோல, தோன்றிய உடனேயே மறைந்துவிடும்.
24. நற்றாமரைக் கயத்தில் நல்அன்னம் சேர்ந்தாற்போல்
கற்றாரைக் கற்றாரே காமுறுவர் - கற்பிலா மூர்க்கரை மூர்க்கர் முகப்பர் முதுகாட்டில் காக்கை உவக்கும் பிணம் நல்தாமரைக்கயத்தில்நல் அன்னம் சேர்ந்தால் போல் - நல்ல தாமரைப்பூ நிறைந்த குளத்தை நல்ல அன்னப்பறவை தேடி அடைவதைப்போல, கற்றாரைக் கற்றாரே காமுறுவர் - கற்றவர்களைக் கற்றவர்களே விரும்புவர்; (அவ்வாறே) கற்பிலா மூர்க்கரை மூர்க்கர் முகப்பர் - கல்வியறிவற்ற மூடரை மூடரே விரும்பிக் கொண்டாடுவர்; முதுகாட்டில் காக்கை உவக்கும் பிணம் - சுடுகாட்டிலே (நாறும்) பிணத்தையே காகம் விரும்புவது போன்று.
நல் + தாமரை = நற்றாமரை, கயம் - குளம்.
25. நஞ்சுடைமை தானறிந்து நாகம் கரந்துறையும்
அஞ்சாப் புறங்கிடக்கும் நீர்ப்பாம்பு - நெஞ்சிற் கரவுடையார் தம்மைக் கரப்பர் கரவார் கரவிலா நெஞ்சத் தவர்.
ך

Page 22
நாகம் தான் நஞ்சு உடைமை அறிந்து - நாகபாம்பு தன்னிடம் விஷம் இருப்பதை அறிந்து, கரந்து உறையும் - மறைந்து வாழ்கின்றது; நீர்ப்பாம்பு அஞ்சாப் புறங்கிடக்கும் - (நஞ்சு இல்லாத) நீர்ப்பாம்பு அச்சமற்று வெளியிலே திரியும்; (அவை போன்று) நெஞ்சிற் கரவுடையார் தம்மைக் கரப்பர் - உள்ளத்திற் கள்ளம் உடையோர் தம்மை மறைத்துக் கொள்ள முயல்வர்; கரவு இலா நெஞ்சத்தவர் கரவார் - வஞ்சகம் இல்லாத மனத்தையுடையோர் தம்மை மறைக்க மாட்டார்.
கரத்தல் - மறைத்தல்; கரவு - வஞ்சனை.
26. மன்னனும் மாசறக் கற்றோனும் சீர் தூக்கின்
மன்னனிற் கற்றோன், சிறப்புடையன் - மன்னற்குத் தன் தேசம் அல்லால் சிறப்பில்லைக் கற்றோற்குச் சென்ற இடம் எல்லாம் சிறப்பு. மன்னனும் மாசு அறக் கற்றோறும் சீர்தூக்கின் - அரசனையும் குறைவு அறக் கற்றோனையும் ஒப்பு நோக்கி ஆராய்ந்தால், மன்னனில் கற்றோன் சிறப்புடையன் - அரசனிலும் பார்க்கக் கல்வியில் மிக்க வித்துவானே கூடிய சிறப்பை உடையவனாவன்; (ஏனெனில்) மன்னற்கு - அரசனுக்கு; தன் தேசம் அல்லால் சிறப்பில்லை - தன்னுடைய தேசத்தில் அன்றிப் பிறதேசங்களில் சிறப்பு இல்லை; கற்றோருக்குச் சென்ற இடம் எல்லாம் சிறப்பு - வித்துவானுக்குச் செல்லும் தேசங்கள் தோறும் சிறப்பு உண்டாகும்.
மாசு - குற்றம்; சீர்தரக்கல் - ஒப்பு நோக்குதல்.
27. கல்லாத மாந்தர்க்குக் கற்றுணர்ந்தார் சொற் கூற்றம்
அல்லாத மாந்தர்க்(கு) அறம் கூற்றம் - மெல்லிய
வாழைக்குத் தான் ஈன்ற காய் கூற்றம் கூற்றமே
இல்லிற்(கு) இசைந்து ஒழுகாப் பெண். மெல்லிய வாழைக்குத் தான் ஈன்ற காய் கூற்றம் - மென்மையான வாழை மரத்துக்குத் தான் குலைதள்ளிய காய்களே யமனாகும்; (அதுபோல) கல்லாத மாந்தர்க்குக் கற்று உணர்ந்தார் சொல் கூற்றம் - கல்வி கற்காத மனிதர்களுக்கு அறிவுபடைத்தோர் கூறும் அறிவுரைகள் யமனாகும்; அல்லாத மாந்தர்க்கு அறம் கூற்றம் - நல்லோர் அல்லாத தீயோருக்குத் தருமமே யமனாகும். (அவ்வாறே); இல்லிற்கு இசைந்து ஒழுகாப் பெண் கூற்றம் - கணவனது கருத்தறிந்து ஒழுகத் தெரியாத பெண்ணும் கூற்றமாகும்.
28. சந்தன மென்குறடு தான் தேய்ந்த காலத்தும்
கந்தம் குறைபடா(து) ஆதலால் - தந்தம் தனம்சிறியர் ஆயினும் தார்வேந்தர் கேட்டால் மனம் சிறியர் ஆவரோ மற்று.

மென் சந்தனக் குறடு - மென்மையான (நறுமணம் வீசும்) சந்தனக் கட்டையானது; தான் தேய்ந்த காலத்தும் கந்தம் குறைபடாது- மிகவும் தேய்ந்து மெலிந்த வேளையிலும் தன்னிடமுள்ள வாசனையிலே சிறிதும் குறைவுபடாது; ஆதலால் - ஆதலினாலே;தார்வேந்தர் கேட்டால்தம்தம்தனம் சிறியர்ஆயினும்-சேனைகளை உடைய அரசர்கள் நேர்ந்த கேட்டினாலே தங்கள் தங்கள் செல்வத்திற் குறைந்து போனாலும்; மனம் சிறியர் ஆவரோ - அவர்களது உள்ளம் கொடைக்குணத்திற் சிறிதும் குறைந்துவிடாது.
குறள் - குறுகியது - குறடு - கட்டை; கந்தம் - நறுமணம்; தனம் - செல்வம்.
29. மருவினிய சுற்றமும் வான் பொருளும் நல்ல
உருவும் உயர்குலமும் எல்லாம் - திருமடந்தை ஆம்போ (து) அவளோடும் ஆகும் அவள்பிரிந்து போம்போ(து) அவளோடும் போம். மருவு இனிய சுற்றமும் - நெருங்கிச் சூழ்ந்துள்ள இனிய உறவினரும்; வான்பொருளும் - தேடிக்குவித்த செல்வமும்; நல்ல உருவும் - நல்ல உடலழகும்; உயர்குலமும் எல்லாம் - உயர்ந்த குடிப்பிறப்பும் ஆகிய இவை யாவும்; திருமடந்தை ஆம்போது அவளோடும் ஆகும் - மகாலட்சுமி வந்து கூடும் பொழுது அவளுடனே வந்து சேரும்; அவள் பிரிந்து போம்போது அவளோடும் போம் - அவள் பிரிந்து போகும் போது அவளுடனே நீங்கிப் போகும்.
மருவுதல் - அணைதல்; வான் சிபாருள் - உயர்ந்த செல்வம்; திருமடந்தை - திருமகள்.
30. சாந்தனையும் தீயனவே செய்திடினும் தாமவரை
ஆந்தனையும் காப்பர் அறிவுடையோர் - மாந்தர் குறைக்குந் தனையும் குளிர்நிழலைத் தந்து மறைக்குமாம் கண்டீர் மரம், மரம் - மரங்களானவை; மாந்தர் குறைக்குந்தனையும் - தம்மை மனிதர் வெட்டி வீழ்த்தும் வரையும்; குளிர்நிழலைத்தந்து மறைக்கும் - வெயில் அவர் மேலே படாது தனது குளிர் நிழல் கொடுத்து மறைக்கும்; (அதுபோல) தீயனவே சாந்தனையும் செய்திழறும் - தமக்கு ஒருவர் சாகும்வரையும் தீமையே செய்தாலும்; அறிவுடையோர் தாம் அவரை ஆந்தனையும் காப்பர் - அறிவுடையோர் அவரைத் தம்மால் முடிந்தளவும் காக்க முயல்வர்.
குறைத்தல் - வெட்டுதல்.
大大水*

Page 23
நல்வழி
காப்பு பாலுந் தெளிதேனும் பாகும் பருப்புமிவை நாலுங் கலந்துனக்கு நான் தருவேன் - கோலஞ் செய் துங்கக் கரிமுகத்துத் தூமணியே நீ எனக்குச் சங்கத் தமிழ் மூன்றுந் தா.
பதவுரை: கோலம் செய் - அழகு தருகின்ற, துங்கக் கரிமுகத்துத் தூமணியே - உயர்ச்சி பொருந்திய யானை முகத்துடன் விளங்குகின்றவரும்; தூய்மை பொருந்திய இரத்தினம் போன்று ஒளி பொருந்திய திருமேனியை உடையவருமாகிய விநாயகப் பெருமானே, பாலும் தெளிதேனும் பாகும் பருப்பும் இவை நாலுங்கலந்து - பாலும், தெளிந்த தேனும், வெல்லப்பாகும், பயற்றம் பருப்பும் ஆகிய நான்கினையும் கலந்து: நான் உனக்குத் தருவேன் - அடியேன் உமக்குப் படைப்பேன்; நீ எனக்குச் சங்கத் தமிழ் மூன்றும் தா - தேவரீர் எனக்குச் சங்கத்தில் வளர்ந்த இயற்றமிழ், இசைத் தமிழ், நாடகத் தமிழ் ஆகிய முத்தமிழின் ஆற்றலையும் தந்தருளுவீராக.
துங்கம்-உயர்ச்சி
1. புண்ணியமாம் பாவம்போம் போனநாட் செய்தவவை
மண்ணிற் பிறந்தார்க்கு வைத்தபொருள் - எண்ணுங்கால் ஈதொழிய வேறில்லை எச்சமயத் தோர் சொல்லும் தீதொழிய நன்மை செயல். புண்ணியம் ஆம் - புண்ணியமே செய்யத் தக்கது; பாவம் போம் - பாவச் செயல்களே விட்டுவிடத் தக்கன; போன நாட் செய்த அவை - முற்பிறவிகளிலே அவரவர் செய்த புண்ணிய பாவங்களே, மண்ணிற் பிறந்தார்க்கு வைத்த பொருள் - இப்பிறவியில் இப்பூமியிற் பிறந்தார் அனுபவிப்பதற்குரிய வைப்பு நிதியாகும். எண்ணுங்கால் - ஆராய்ந்து பார்க்குமிடத்து; எச்சமயத்தோர் சொல்லும் ஈது ஒழிய வேறில்லை - எல்லாச் சமயங்களும் இதனையே கூறுகின்றன. வேறு காரணம் கூறப்படுவதில்லை, தீது ஒழிய நன்மை செயல் - ஆதலினாலே நாம் பாவத்தை ஒழித்துப் புண்ணியத்தையே செய்தல் வேண்டும்.

2. சாதி இரண்டு ஒழிய வேறில்லைச் சாற்றுங்கால் நீதி வழுவா நெறி முறையில் - மேதினியில் இட்டார் பெரியோர் இடாதார் இழிகுலத்தோர் பட்டாங்கி லுள்ள படி, சாற்றுங்கால் மேதினியில் சாதி இரண்டு ஒழிய வேறில்லை - ஆராய்ந்து சொல்லுமிடத்து இப்பூமியில் (உயர்ந்த சாதி, தாழ்ந்த சாதி என்னும்) இரண்டு சாதிகளேயன்றி வேறு ஒன்றும் இல்லை; (அவ்விரு சாதியாருள்) நீதி வழுவா நெறிமுறையில் இட்டார் பெரியோர் - நீதி வழுவாத அற நெறியில் தம்முடைய வாழ்வை அமைத்துக் கொண்டவர்கள் பெரியோராவர்; நீதி வழுவா நெறி முறையில் இடாதார் இழி குலத்தோர் - அறவழியில் தம்முடைய வாழ்வை அமைத்துக் கொள்ளாதவர்கள் இழிந்தோராவர்; பட்டாங்கில் உள்ளபடி - இதுவே நீதி நூல்கள் கூறும் கருத்தாகும்.
சாற்றுதல் - சொல்லுதல்; மேதினி-பூமிபட்டாங்கு -அறநூல்நெறி
3. இடும்பைக்கு இடும்பை இயல்உடம்பி தன்றே
இடும் பொய்யை மெய்யென் றிராதே - இடும் கடுக உண்டாயின் உண்டாகும் ஊழிற் பெருவலி நோய் விண்டாரைக் கொண்டாடும் வீடு. இயல் உடம்பு இது - நடமாடும் இவ்வுடம்பு இடும்பைக்கு இடும்பை அன்றே - துன்பங்களைப் போட்டு நிரப்பிவைத்துள்ள பை போன்றதல்லவா, இடும் பொய்யை - உணவூட்டி நாம் வளர்க்கும் பொய்யாகிய இவ்வுடலை, மெய் என்று இராதே - நிலையானது என்று எண்ணல் வேண்டா, இடும் கடுக - ஆதலின் உடம்பு அழிந்து படுமுன் விரைவாகத் தானம் செய்யுங்கள்; (அதனால் வரும் புண்ணிய பலன்) உண்டாயின் - உங்களுக்கு இருக்குமேயாயின்; பெருவலி நோய் விண்டாரைக் கொண்டாடும் வீடு- மிக்க வலிமையுடைய கன்மவினை நீங்கியோரை மகிழ்வோடு தன்னகத்தே அழைக்கும் வீட்டுலகமானது ஊழின் உண்டாகும் - முறைப்படி உங்கட்கும் கிட்டும்.
இடும்பை - துன்பம், விள்ளுதல்-நீங்குதல்; விண்டார்-நீங்கியோர்.
4. எண்ணி ஒருகருமம் யார்க்குஞ்செய் யொண்ணாது
புண்ணியம் வந்தெய்து போதல்லால் - கண்ணிலான் மாங்காய் விழ எறிந்த மாத்திரைக்கோல் ஒக்குமே ஆங்காலம் ஆகும் அவர்க்கு. புண்ணியம் வந்து எய்து போது அல்லால் - முன் செய்த புண்ணியப்பலன் வந்து கைகூடும் பொழுதே அல்லாமல்; யார்க்கும் எண்ணிஒரு கருமம் செய்யொண்ணாது - தாம் நினைத்த ஒரு கருமத்தை நிறைவேற்றுதல் எவர்க்கும் முடியாத தொன்றாகும்; (வினைப்பயன் வந்து கூடாத காலத்தில் ஒரு கருமத்தை முடிக்க எண்ணுதல்) கண்ணிலான் மாங்காய் விழ எறிந்த மாத்திரைக் கோல் ஒக்கும் -

Page 24
கண்ணில்லாத குருடன் மரத்திலுள்ள மாங்காயை வீழ்த்துவதற்குத் தன்னுடைய
கைத்தடியை வீசுவதற்கு ஒப்பாகும்; ஆங்காலம் அவர்க்கு ஆகும். - வினைப்பயன்
வந்து கூடும் போது எக்கருமமும் அவர்களுக்குத் தாமாகவே நிறைவெய்தும். ஒண்ணாது - முடியாது; மாத்திரைக்கோல் - கைத்தடி
5. வருந்தி அழைத்தாலும் வாராத வாரா
பொருந்துவன போமின் என்றால் போகா - இருந்தேங்கி நெஞ்சம் புண்ணாக நெடுந்துாரம் தாம் நினைந்து துஞ்சுவதே மாந்தர் தொழில். வாராத வருந்தி அழைத்தாலும் வாரா - தமக்கு வந்து சேர முடியாதன எவ்வாறு வருந்தி முயன்றாலும் வந்து அடைய மாட்டா; பொருந்துவன போமின் என்றால் போகா - வந்து சேரவேண்டியன வெறுத்து ஒதுக்கினாலும் போகாது வந்தடையும்; இருந்து ஏங்கி - இவ்வுண்மையை உணராமல் ஏக்கமுற்று; நெடுந்தூரம் தாம் நினைந்து நெஞ்சம் புண்ணாகத் துஞ்சுவதே - நெடுநேரம் கவலைப்பட்டு உள்ளம் புண்பட்டு மடிவதே, மாந்தர் தொழில் - அறிவற்ற மனிதர்களுடைய தொழிலாகும்.
போமின்- போங்கள்; துஞ்சுதல் - இறத்தல்,
6. உள்ளதொழிய ஒருவர்க் கொருவர் சுகம்
கொள்ளக் கிடையா குவலயத்தில் - வெள்ளக் கடலோடி மீண்டு கரையேறி னால்என் உடலோடு வாழும் உயிர்க்கு. ஒருவர்க்கு உள்ளது ஒழிய - விதிப்பயன்படி ஒருவர் அனுபவிக்க வேண்டிய அளவே அன்றி; குவலயத்தில்- இப்பூமியில்; ஒருவர்சுகம் கொள்ளக்கிடையா-மற்றொருவர் உதவுவதால் அனுபவிக்க விரும்பும் மேலதிக சுகம் பெறமுடியாததாகும்; வெள்ளக் கடலோடி மீண்டு கரையேறினால் - நீர் மிகுந்த சமுத்திரத்தைக் கடந்து சென்று பொருளிட்டி மீண்டுவந்தாலும்; உடலோடு வாழும் உயிர்க்கு என் - உடம்போடு கூடிவாழும் உயிர்களுக்கு வினைப் பயனில்லாவிட்டால் அப்பொருளால் என்ன பயனுண்டாகும். (உண்டாகாது)
குவலயம்-பூமி-பூமண்டலம்
7. எல்லாப் படியாலும் எண்ணினால் இவ்வுடம்பு
பொல்லாப் புழும லிநோய்ப் புன்குரம்பை - நல்லார் அறிந்திருப்பார் ஆதலினால் ஆங்கமல நீர்போல் பிறிந்திருப்பார் பேசார் பிறர்க்கு. இவ்வுடம்பு எல்லாப் படியாலும் எண்ணினால் - இந்த உடம்பானது எவ்வகையில் ஆராய்ந்து பார்த்தாலும்; பொல்லாப் புழுமலி நோய்ப் புன்குரம்பை - பொல்லாத புழுக்களுக்கும், அளவிறந்த நோய்களுக்கும் இருப்பிடமாக விளங்கும் சிறு

குடிலாகும்; நல்லார் அறிந்திருப்பர் ஆதலினால் - இந்த உண்மையை நல்லறிவினோர்கள் அறிந்துள்ளமையால்; ஆம் கமலநீர் போல் பிறிந்து இருப்பர்தாமரையிலையில் நீர் ஒட்டாது நிற்றல் போல பற்றற்று வாழ்ந்திருப்பர்; பிறர்க்குப் பேசார் - (தமது அறிவுரை பயன்படாத) பிறர்க்கு உடம்பின் இழிநிலையை எடுத்துரையார்.
குரம்பை - சிறுவிடு - கொட்டில், கமலம் -தாமரை
8. ஈட்டும் பொருள் முயற்சி எண்ணிறந்த வாயினும் ஊழ்
கூட்டும் படி அன்றிக் கூடாவாம் - தேட்டம் மரியாதை காணும் ம்கிதலத்தீர் கேண்மின் தரியாது காணும் தனம். மகிதலத்தீர் கேண்மின் - இப்பூமியில் வாழும் மனிதர்களே கேளுங்கள்; பொருள் ஈட்டும் முயற்சி எண்ணிறந்த வாயினும் - பொருளை ஈட்டுவதற்கு அளவிறந்த வழிகளில் முயற்சி செய்தாலும்; ஊழ் கூட்டும் படி அன்றி கூடாவாம் - விதிப்பயனால் வந்தடையுமே அன்றி எமது முயற்சியால் வந்தடையாது; தனம் தரியாது - அவ்வாறு வந்து சேரும் செல்வமும் நிலைத்து நிற்கமாட்டாது; (ஆதலின்) தேட்டம் மரியாதை காணும் - ஒருவர் தேடிக் காப்பாற்ற வேண்டியது (பண்பாளன் என்னும்) நற்பெயரையேயாகும்.
தேட்டம் - தேடிவைக்கும் செல்வம் மகி-பூமி, மகிதலம்-பூதலம்;
தனம் - செல்வம்
ஆற்றுப் பெருக்கற் றடிசுடுமந் நாளுமல்வா (று) ஊற்றுப் பெருக்கால் உலகூட்டும் - ஏற்றவர்க்கு நல்ல குடிப்பிறந்தார் நல்கூர்ந்தார் ஆனாலும் இல்லையென மாட்டார் இசைந்து. ஆற்றுப் பெருக்கு அற்று அடிசுடும் அந்நாளும் - ஆற்றில் நீர்ப்பெருக்கு வற்றி (அதன் அடியில் உள்ள மணல்) நடந்து செல்வோரின் பாதங்களைச் சுடுகின்ற காலத்திலும், அவ் ஆறு ஊற்றுப் பெருக்கால் உலகு ஊட்டும் - அந்த ஆறானது (மணலின் அடியில் தோண்டும்போது பெருகும்) ஊற்று நீரால் மக்களின் நீர்த்தேவையை நிறைவு செய்யும்; (அதுபோல) நல்ல குழப்பிறந்தார் - நல்ல குடியிலே பிறந்த பெரியோர், நல்கூர்ந்தார் ஆனாலும் - வறுமை அடைந்துள்ள வேளையிலும் ஏற்றவர்க்கு இசைந்து இல்லை என மாட்டார் - தம்மிடம் வந்து இரந்தவர்களுக்கு மனம் ஒப்பி இல்லை என்று கூறமாட்டார். (இயன்ற அளவு கொடுத்தே விடுவர்).
ஏற்றவர்-இரந்துநிற்போர் நல்குரவு - வறுமை, நல்கூர்ந்தார் - வறுமையுற்றார்.

Page 25
10. ஆண்டாண்டு தோறும் அழுது புரண்டாலும்
மாண்டார் வருவரோ மாநிலத்தீர் - வேண்டா நமக்கு மதுவழியே நாம்போ மளவும் எமக்கென்னென் றிட்டுண் டிரும். மாநிலத்தீர் - இப்பெரிய பூமியில் உள்ள மனிதர்களே; ஆண்டு ஆண்டு தோறும் அழுது புரண்டாலும் - இறந்தோர்க்காக வருடந் தோறும் அழுது புரண்டாலும்; மாண்டார் வருவரோ - இறந்தவர் மீண்டும் உயிர்பெற்று வருவாரோ, (வரமாட்டார்) வேண்டா- (ஆதலினாலே) அழவேண்டியதில்லை; நமக்கும் அது வழியே-நமக்கும் அம்மரணமே இறுதியாகும்; (ஆதலின்) நாம் போமளவும் எமக்கு என் என்று - நாம் இறக்கும் வரையும் எமக்கு உறுதுணையாவது எது என்று உணர்ந்து இட்டு உண்டு இரும் - இரப்போருக்குக் கொடுத்து நீங்களும் அனுபவித்துக் கவலை இன்றி இருங்கள்.
எமக்கென்னென்றிட்டுண்டிரும் - எமக்கு என்
என்று இட்டு உண்டுஇரும்
11. ஒருநாள் உணவை ஒழி என்றால் ஒழியாய்
இரு நாளுக்கு ஏல் என்றால் ஏலாய் - ஒருநாளும் என்நோ அறியாய் இடும்பைகூர் என்வயிறே உன்னோடு வாழ்தல் அரிது. இடும்பை கூர் என்வயிறே - துன்பத்தையே மிகச் செய்கின்ற என்னுடைய வயிறே. ஒருநாள் உணவை ஒழி என்றால் ஒழியாய் - ஒருநாள் உணவு உண்ணாது இரு என்றாலும் இருக்கின்றாய் இல்லை; இருநாளுக்கு ஏல் என்றால் ஏலாய்- உணவு வசதியாகக் கிடைக்கும் இடத்தில் இரு நாட்களுக்குப் போதிய உணவை ஏற்றுக் கொள் என்றாலும் ஏற்கின்றாய் இல்லை; ஒருநாளும் என்நோ அறியாய் - ஒரு நாள் கூட என் வேதனையை அறிகின்றாயும் இல்லை; (ஆதலினால்) உன்னோடு வாழ்தல் அரிது - ஆதலால் உன்னோடு கூடி வாழ்தல் அரிதினும் அரிது.
ஏல் - ஏற்றுக்கொள்,இடும்பை - துன்பம்) அரிது - செய்ய முடியாது
அருமை
12. ஆற்றங் கரையின் மரமும் அரசறிய
வீற்றிருந்த வாழ்வும் விழுமன்றே - ஏற்றம் உழுதுண்டு வாழ்வதற்(கு) ஒப்பில்லைக் கண்டீர் பழுதுண்டு வேறோர் பணிக்கு. ஆற்றங் கரையின் மரமும் விழும் - ஆற்றங்கரையில் நிற்கின்ற மரமும் (மண்ணரிப்பால்) விழுந்துவிடும்; அரசு அறிய வீற்று இருந்த வாழ்வும் விழும் - அரசனும் அறியக்கூடியூநெஞ்சில்வனாய் அதிகாரஞ் செய்து வாழ்ந்த
-

வாழ்க்கையும் அழிந்துபடும்; உழுது உண்டு வாழ்வதற்கு ஒப்பு இல்லை - (ஆதலில்) பயிர்த்தொழில் செய்து உண்டு வாழும் வாழ்க்கைக்கு நிகர் வேறு இல்லை; ஏற்றம் -அதுவே மிக உயர்ந்ததும் ஆகும்; வேறோர் பணிக்குப் பழுது உண்டு கண்டீர் - வேறு தொழில்கள் கேடு அடையக் கூடியன என அறிந்து கொள்ளுங்கள்
ஏற்றம் - உயர்வு குறிப்பு: “உழுதுண்டு வாழ்வது ஏற்றம், அதற்கு ஒப்பில்லை” எனவும், “உழுதுண்டு வாழ்வதற்கு ஒப்பு எற்றம் இல்லை - உழவுக்கு ஒப்பானதும் மிக்கானதும் இல்லை”எனவும் பிரித்துப் பொருள் கூறலாம்.
13. ஆவாரை ஆரே அழிப்பார் அதுவன்றிச்
சாவாரை ஆரே தவிர்ப்பவர் - ஒவாமல் ஐயம் புகுவாரை ஆரே விலக்குவார் மெய்யம் புவியதன் மேல். அம்புவி அதன் மேல் - அழகிய இந்தப் பூமியில்; ஆவாரை ஆரே அழிப்பார் - நல்வினைப் பயனால் நீண்ட காலம் வாழ வேண்டியவரை (இடையிலே) அழிக்க யாரால் முடியும்; அது அன்றிச் சாவாரை யாரே தவிர்ப்பவர்- அதுவுமல்லாமல், தீவினைப் பயனால் (இடையிலே) இறக்க வேண்டியவரின் மரணத்தைத் தடுத்து நிறுத்த வல்லவர் யார்? ஒவாமல் ஐயம் புகுவாரை ஆரே விலக்குவார் - செல்வம் அழிந்துபடாத நிலையிலும் பிச்சை எடுக்கச் செல்பவரை தடுக்க வல்லவர் யாவர்; (இம்மூன்றும் சாத்தியமற்றவை என்பது) மெய் - உண்மையேயாகும். : :
ஓவுதல்-ஒருவுதல் - விட்டு நீங்குதல்; அம்புவி - அழகிய பூமி
14. பிச்சைக்கு மூத்த குடிவாழ்க்கை பேசுங் கால்
இச்சைபல சொல்லி இடித்துண்கை - சிச்சீ வயிறு வளர்க் கைக்கு மானம் அழியா (து) உயிர்விடுகை சால உறும். பேசுங்கால் - ஆராய்ந்து சொல்லுமிடத்து, பிச்சைக்கு மூத்த குழவாழ்க்கை - பிச்சை எடுத்து உண்ணும் அவமானத்தால் அதிகூடிய வாழ்க்கை என்பது; இச்சை பல சொல்லி இடித்து உண்கை - செல்வரை அடைந்து அவர் மகிழ அவரைப் பற்றிப் பலவாறு புகழ்ந்து பேசி: (ஏதாவது தருமாறு அவரை) நெருக்கி பெற்று வந்து உண்ணும் இழிசெயலாம்; சிச்சீ - சீ சீ இது என்ன இழிந்த செயல்; வயிறு வளர்க்கைக்கு மானம் அழியாது - (இந்த ஒரு சாண்) வயிற்றை நிரப்புவதற்காக மானம் அழிந்து பிச்சை எடுப்பதிலும் பார்க்க; உயிர் விடுகை சால உறும் - உயிரை விட்டு விடுவது மிக உயர்ந்த செயலாகும்.
சிச்சீ - சிஅருவருப்பைக் குறிக்கும் சொல்; சால உறும் - மிகப் பொருத்தமாகும். (சால - மிக)

Page 26
15. சிவாய நம என்று சிந்தித் திருப்போர்க்(கு)
அபாயம் ஒருநாளும் இல்லை - உபாயம் இதுவே மதியாகும் அல்லாத எல்லாம் விதியே மதியாய் விடும். சிவாயநம என்று சிந்தித்து இருப்போர்க்கு - சிவாய நம என்னும் ஐந்தெழுத்து மந்திரம் ஒதித் தியானம் செய்வோருக்கு அபாயம் ஒருநாளும் இல்லை - ஆபத்து என்பது என்றுமே ஏற்படமாட்டாது; இதுவே மதியாகும் உபாயம் - இதுவே விதியை வெல்லுதற்கேற்ற அறிவான உபாயமாகும்; அல்லாத எல்லாம் விதியே மதியாய் விடும் - இறைவனைச் சிந்தியாது செய்வன யாவற்றுக்கும் அறிவு விதிகாட்டிய வழியிலேயே செல்லும். (சிவத்தியானமே விதியை வெல்லும் வழியாகும்).
உபாயம்-சூழ்ச்சி மதி-புத்தி
16. தண்ணிர் நில நலத்தால் தக்கோர் குணங்கொடையால்
கண் நீர்மை மாறாக் கருணையால் - பெண் நீர்மை கற்பழியா ஆற்றால் கடல் சூழ்ந்த வையகத்துள் அற்புதமாம் என்றே அறி. கடல் குழ்ந்த வையகத்துள் - கடலாற் சூழப்பட்டிருக்கும் இப் பூமியின் கண்ணே; தண்ணிர்நில நலத்தால் - தண்ணிரின் (தூய்மையும் சுவையும்) நிலத்தின் நல்ல தன்மையாலும்; தக்கோர் குணம் கொடையால் - தகுதிபடைத்த நல்லோருடைய குணம் கொடையினாலும்; கண் நீர்மை மாறாக் கருணையால் - கண்ணின் சிறப்பு நீங்காத கருணையினாலும், பெண் நீர்மை கற்பு அழியா ஆற்றால் - பெண்ணின் சிறப்புப் கற்பைப் பேணும் தன்மையினாலும், அற்புதமாம் என்றே அறி - (அறிந்து பெருமைப்படத் தக்க) ஆச்சரியங்களாம் என அறிக.
நீர்மை-தன்மை; ஆறு-வழி, வையகம்-பூமி.
17. செய்தீ வினையிருக்கத் தெய்வத்தை நொந்தக்கால்
எய்த வருமோ இரு நிதியம் - வையத்(து) அறும் பாவம் என்ன அறிந்(து) அன்றிடார்க்கின்று வெறும் பானை பொங்குமோ மேல். வையத்துப் பாவம் ஆறும் என்ன அறிந்து- இப்பூமியின் கண்ணே செய்யும் நல்ல தான பலனால் நாம் முன் செய்த பாவங்கள் நீங்கும் என்பதனை உணர்ந்து அன்று இடார்க்கு - முற்பிறவியிலே கொடாதவர்கள்; செய்தீவினை இருக்க - தாம் செய்த தீவினைக் கேற்ப வறுமையுற்றிருந்து; தெய்வத்தை நொந்தக்கால் - இப்பொழுது கடவுளை வருந்தி வேண்டினாலும்; இரு நிதியம் எய்த வருமோ - பெரிய செல்வம் வந்து வாய்க்குமோ? (வாய்க்காது) வெறும் பானை பொங்குமோ மேல் - வெறும் பானையை அடுப்பில் வைத்து எரித்தாலும் மேலே பொங்கி வராத தன்மை போல.
நோதல் - வருந்துதல், குறைகூறல், நிதி - செல்வம்; இருநிதியம் - பெருஞ் செல்வம் ጎ

18. பெற்றார் பிறந்தார் பெரு நாட்டார் பேருலகில்
உற்றார் உகந்தார் என வேண்டார் - மற்றோர் இரணங் கொடுத்தால் இடுவர் இடாரே சரணம் கொடுத்தாலும் தாம். பேர் உலகில் - இப்பெரிய பூமியின் கண்ணே, (கொடுக்கும் குணமில்லாத உலோபிகள்) பெற்றார் - தாய் தந்தையரும்; பிறந்தார் - உடன் பிறந்த சகோதரர்களும்; பெருநாட்டார் - தமது ஊரினரும்; உற்றார் - உறவினர்களும்; உகந்தார் - சிநேகிதர்களும், எனவேண்டார் - எனக் கருதாது; சரணம் கொடுத்தாலும் தாம் இடாரே - அவர்கள் வணங்கி வேண்டி நின்றாலும் எதனையும் கொடுக்க மாட்டார்கள்; மற்றோர் - அந்நியராயுள்ளோர்; இரணம் கொடுத்தால் இடுவர் - தம் உடம்பிலே காயம் உண்டாகும் வண்ணம் தண்டனை கொடுத்தால் மட்டும் கைப்பொருளைக் கொடுப்பர்.
உகந்தார் - சிநேகிதர் இரணம் - ரனம் - புண் ; சரணம் - காலில் வீழ்ந்து வணங்குதல்.
19. சேவித்தும் சென்றிரந்தும் தெண்ணிர்க் கடல்கடந்தும்
பாவித்தும் பாராண்டும் பாட்டிசைத்தும் - போவிப்பம் பாழின் உடம்பை வயிற்றின் கொடுமையால் நாழி அரிசிக்கே நாம். வயிற்றின் கொடுமையால் - வயிற்றுப் பசிக் கொடுமையால், நாழி அரிசிக்கே - ஒருபடி அரிசி பெறுவதற்காக, உடம்பை - எமது உடலை; சேவித்தும் - பிறரை வணங்கவும்; சென்றிரந்தும் - செல்வரிடம் சென்று இரந்து நிற்கவும், தெண்ணிர்க் கடல் கடந்தும் - தெளிந்த நீர்ப் பெருக்குடைய கடல் கடந்து சென்று திரவியம் தேடவும்; பாவித்தும் - (அற்பர்களையும் பெரியவர்களாகப்) பாவிக்கவும், பார் ஆண்டும் - பூமியை ஆளவும்; பாட்டு இசைத்தும் - செல்வரைப் புகழ்ந்து பாட்டுப்பாடி நிற்கவும்; நாம் பாழின் போவிப்பம் - நாம் பாழாகப் போக்கி நிற்கின்றோம்.
சேவித்தல் - வணங்குதல் தெண்ணிர் - தெளிந்த நீர் பாவித்தல் - ஒன்றை இன்னொன்றாகப் பாவனை செய்தல்; பாழ்-அழிவு. கு24/7 முத்தி அடைவதற்கான வழிகளைத் தேடப் பயன்படுத்து வதற்காக இறைவன் படைத்த உடலை வயிற்றுப் பசி தீர்க்கப் பாழாக்குன்றோம்
20. அம்மி துணையாக ஆறிழிந்த வாறொக்கும்
கொம்மை முலைபகர்வார் கொண்டாட்டம் - இம்மை மறுமைக்கு நன்றன்று மாநிதியம் போக்கி வெறுமைக்கு வித்தாய் விடும்.

Page 27
கொம்மை முலை பகர்வார் கொண்டாட்டம் - திரண்ட முலைகளை விலை பேசும் பரத்தையரோடு கொள்ளும் உறவு அம்மி துணையாக ஆறு இழிந்தவாறு ஒக்கும் - அம்மியைத் துணையாகக் கட்டிக் கொண்டு ஆற்றில் இறங்குவதற்குச் சமமாகும் (மீள முடியாது அமிழ்ந்து போக நேரிடும்); (அன்றியும்) மாநிதியம் போக்கி வெறுமைக்கு வித்தாய் விடும் - கையிலுள்ள மிக்க செல்வத்துக்கு அழிவு தேடுவதோடு வறுமைக்கும் காரணமாகி விடும்; (ஆதலினாலே பரத்தையர் தொடர்பு) இம்மை மறுமைக்கும் நன்று அன்று - இப்பிறவிக்கும் நன்று அன்று, வரப்போகும் பிறவிக்கும் தீமையே தரும்.
இழிதல் - இறங்குதல்; கொம்மை - திரட்சி, இம்மை - இப்பிறவி, மறுமை - மறுபிறவி வெறுமை -இல்லாமை - வறுமை,
21. நீரும் நிழலும் நிலம் பொதியும் நெற்கட்டும்
பேரும் புகழும் பெருவாழ்வும் - ஊரும் வருந்திருவும் வாழ்நாளும் வஞ்சமிலார்க்(கு) என்றும் தருஞ்சிவந்த தாமரையாள் தான். வஞ்சம் இலார்க்கு - வஞ்சகம் இல்லாத மனத்தினையுடைய நல்லோருக்கு, நீரும் - நீர் வளத்தையும், நிழலும் - சோலைகளையும்; நிலம் பொதியும் நெற்கட்டும் - வயல் நிலத்தை மூடிநிற்கும் நெற்பயிர்க் கூட்டத்தையும்; பேரும் - நல்லோன் என்ற சிறப்பையும்; புகழும் - புகழையும்; பெருவாழ்வும்- செல்வ வளம் மிக்க வாழ்வையும், ஊரும் - நல்லோர் வாழும் நல்லூரில் வாழும் பாக்கியத்தையும்; வரும் திருவும் - மேன்மேலும் வந்து குவிகின்ற செல்வத்தையும் (தருவதோடு); வாழ்நாளும்- நீண்ட ஆயுளையும், சிவந்த தாமரையாள் தான் என்றுந் தரும் - செந்தாமரை மலரை ஆசனமாகக் கொண்ட மகாலட்சுமி எப்பொழுதும் உதவி நிற்பாள். திரு - செல்வம் சிவந்ததாமரையாள்-இலக்குமி குறிப்பு நிழலும் என்பதற்கு - நிழல் தரும் பெரிய மாளிகையும் எனவும் பொருள்கூறலாம். நீரும் நிழலும் என்பதுநீரும் நிலமும் என இருப்பது பொருத்தம் போற் காணப்படுகின்றது.
22. பாடுபட்டுத் தேடிப் பணத்தைப் புதைத்து வைத்துக்
கேடுகெட்ட மானிடரே கேளுங்கள் - கூடுவிட்டிங்(கு) ஆவிதான் போயினபின் யாரே அனுபவிப்பார் பாவிகாள் அந்தப் பணம். பாடுபட்டுத் தேடிப் பணத்தைப் புதைத்து வைத்து - மிகவும் வருத்தித் தேடிய பணத்தை (தானும் அனுபவியாமல் பிறர்க்குங் கொடாமல்) புதைத்து வைக்கும்; கேடுகெட்ட மானிடரே கேளுங்கள் - அறிவுகெட்ட மனிதர்களே யான் சொல்லும் அறிவுரையைக் கேட்பீர்களாக, கூடுவிட்டு ஆவிதான் போயினபின்-இந்த உடலை விட்டு உயிர் பிரிந்த பின்பு பாவிகாள் - ஓ பாவிகளே; அந்த பணம் ஆரே

r
அனுபவிப்பார் - நீங்கள் புதைத்து வைத்த பணத்தை எவர் அனுபவிக்க முடியும்? (வீணே மண்ணிற் புதைந்து கிடக்கும்).
கூடு - உடம்பு; ஆவி - உயிர்.
23. வேதாளம் சேருமே வெள்ளெருக்குப் பூக்குமே
பாதாள மூலி படருமே - மூதேவி சென்றிருந்து வாழ்வளே சேடன் குடிபுகுமே மன்றோரஞ் சொன்னார் மனை. மன்று ஒரம் சொன்னார் மனை- நீதிமன்றத்திலே ஒரு பக்கம் சார்ந்து பொய்ச்சாட்சி சொன்னவருடைய வீட்டிலே; வேதாளம் சேரும் - பேய் குடிபுகும்; வெள்ளெருக்குப் பூக்கும் - வெள்ளெருக்கு முளைத்துப் பூக்கும்; பாதாள மூலி படரும் - பாதாள மூலி எனப்படும் சிறுநெருஞ்சி படரும்; மூதேவி சென்றிருந்து வாழ்வாள் - மூதேவியும் நிரந்தரமாகத் தங்கி வாழ்வாள்; சேடன் குடிபுகும் - பாம்புகளும் தங்கி வாழும்.
சேடன் - ஆதிசேடன் - பாம்பு; மன்று - சபை - நீதிமன்றம் அல்லது பஞ்சாயத்துச்சபை, ஒரம் - பட்சபாதம் -ஒரு பக்கம் சார்தல்,
24. நீறில்லா நெற்றிபாழ் நெய்யில்லா உண்டிபாழ் ஆறில்லா ஊருக்(கு) அழகு பாழ் - மாறில் உடன் பிறப் பில்லா உடம்பு பாழ் பாழே மடக் கொடி இல்லா மனை. நீறில்லா நெற்றியாழ் - விபூதி அணியாத நெற்றி பாழாகும் நெய்யில்லா உண்டிபாழ் - நெய் இல்லாதுவிடின் உணவு பாழாகும்; ஆறில்லா ஊருக்கு அழகு பாழ் - ஆறு இல்லாவிடின் ஊரின் அழகு பாழாகும்; மாறு இல் உடன் பிறப்பு இல்லா உடம்பு பாழ்-தம்மோடு மாறுபாடு கொள்ளாத சகோதரர் இல்லாது விடின் உடம்பு பாழாகும். (அவ்வாறே) மடக்கொடி இல்லாமனை பாழ் - பாராட்டத் தக்க பண்புகளமைந்த இல்லாள் இல்லாத மனையும் பாழாகும்.
நிறு-திருநிறு; பாழ் - பாழ்படும் - வீணாகும் - கெடும்; மடக்கொடி - இளங்கொடி - பெண்.
25. ஆன முதலில் அதிகம் செலவானால்
மானம் அழிந்து மதிகெட்டுப் - போன திசை எல்லார்க்குங் கள்ளனாய் ஏழ்பிறப்பும் தீயனாய் நல்லார்க்கும் பொல்லனாம் நாடு. ஆன முதலில் அதிகம் செலவானால் - தனது வருமானத்திலும் பார்க்க அதிகம் செலவு செய்யும் ஒருவன்; மானம் அழிந்து-மானம் கெட்டு; மதிகெட்டு- அறிவும் பேதலித்து; போனதிசை எல்லார்க்கும் கள்ளனாய் - செல்லும் திசைகளில்

Page 28
உள்ளோரிடமெல்லாம் கடன்பட்டுப் பட்ட கடனைத் தீர்க்க முடியாத கள்ளனுமாகி; ஏழ் பிறப்பும் தீயனாய் - ஏழு வகையாகக் கூறப்படும் பிறப்புகளிற் பிறந்தாலும் கொடியவனாகி; நல்லார்க்கும் பொல்லனாம் - நல்லியல்புகள் நிறைந்த மனையாளுக்கும் பொல்லாதவனாவான்; நாடு - இதனை உணர்வாயாக.
ஏழ் பிறப்பு - தேவர், மனிதர், விலங்குகள், பறவைகள், தாவரங்கள், ஊர்வன, நீர் வாழ்வன.
26. மானம் குலம் கல்வி வண்மை அறிவுடமை
தானம் தவம் உயர்ச்சி தாளாண்மை - தேனின் கசி வந்த சொல்லியர்மேற் காமுறுதல் பத்தும்
மானம் குலம் கல்வி - மானமும், குடிப்பிறப்பும், கற்ற கல்வியும்; வண்மை அறிவுடைமை - வாய்மையும் அறிவுடைமையும்; தானம் தவம் உயர்ச்சிதாளாண்மை - கொடையும், தவமும், பெற்றிருந்த மேன்மையும், செய்யுந் தொழிலில் விடாமுயற்சியும், தேனின் கசிவந்த சொல்லியர் மேற் காமுறுதல் - தேன் சிந்துவது போன்ற இனிய சொற்களைப் பேசும் மங்கையர் மேலே கொள்ளும் ஆசையும் ஆகிய பத்தும்- மேற் கூறப்பட்ட பத்தும், பசிவந்திடப்பறந்து போம்-பசி வந்து வாட்டினால் ஒருவரிடமிருந்து விரைவாக நீங்கிப் போய்விடும்.
வண்மை - கொடை (மீண்டும் தானம் என வருதலின் வாய்மை
எனப் பொருள் கூறப்பட்டுள்ளது) தாளாண்மை - விடாமுயற்சி
27. ஒன்றை நினைக்கின் அது ஒழிந்திட்(டு) ஒன்றாகும்
அன்றி அது வரினும் வந்தெய்தும் - ஒன்றை நினையாத முன்வந்து நிற்பினும் நிற்கும் எனையாளும் ஈசன் செயல். ஒன்றை நினைக்கின் அது ஒழிந்திட்டு ஒன்று ஆகும் - நாம் ஒன்றைப் பெற நினைந்து முயற்சிக்கும் போது அது கிடைக்காது வேறொன்று கிடைப்பினும் கிடைக்கலாம்; அன்றி அதுவரினும் வந்தெய்தும் - அவ்வாறின்றி அப்பொருளே கிடைப்பினும் கிடைக்கலாம்; ஒன்றை நினையாத முன்வந்து நிற்பினும் நிற்கும் - நாம் எண்ணாதது ஒன்று நம் முன்னே வந்து நிற்கவும் கூடும்; எனை ஆளும் ஈசன் செயல்- இவை யாவும் வினைக்கு ஈடாக இன்ப துன்பங்களை உயிர்களுக்கு ஊட்டுகின்ற என்னை ஆளும் தலைவராகிய இறைவனது செய்கைகளேயாகும்.
28. உண்பது நாழி உடுப்பது நான்கு முழம்
எண்பது கோடி நினைந்து எண்ணுவன - கண் புதைந்த மாந்தர் குடி வாழ்க்கை மண்ணின் கலம்போலச் சாந்துணையும் சஞ்சலமே தான்.

உண்பது நாழி - ஒருவர் உண்பது நாழி அரிசி அன்னமே, உடுப்பது நான்கு முழம்- அவர் உடுப்பதற்குத் தேவைப்படுவது நான்கு முழத் துணியே நினைந்து எண்ணுவன எண்பது கோடி - (அவ்வாறிருக்கவும்) அவர் நினைத்துத் திட்டமிடுவதோ எண்பது கோடி கருமங்கள்; (ஆதலினால்) கண் புதைந்த மாந்தர் குடி வாழ்க்கை - குருட்டு உள்ளம் படைத்த மாந்தரது வாழ்க்கையானது; மண்ணின் கலம்போலச் சாந்துணையும் சஞ்சலமே - மண்பாத்திரம் அழிந்துபடுவது போல அவர்களுடைய சரீரம் அழிந்துபடும்வரையும் துன்பமயமானதே.
நாழி- ஒரு முகத்தல் அளவை சஞ்சலம் - கவலை, துன்பம்
29. மரம் பழுத்தால் வெளவாலை வா என்று கூவி
இரந்தழைப்பார் யாவருமங் கில்லை - சுரந்தமுதம் கற்றா தரல் போற் கரவாது அளிப்பரேல் உற்றார் உலகத் தவர். மரம் பழுத்தால் - மரம் பழுத்திருக்கும் போது, வெளவாலைக் கூவி வா என்று இரந்து அழைப்பார் யாவரும் அங்கில்லை - அப்பழங்களைத் தின்பதற்கு வரும்படி வெளவாலை இரந்து கூப்பிடுபவர் ஒருவருமிலர்; அமுதம் சுரந்து கன்று ஆ தரல்போல் - பாலைச் சுரந்து கன்றையுடைய பசு கொடுப்பது போன்று; கரவாது அளிப்பரேல் - ஒளிக்காது கொடுப்பாரேயானால்; உலகத்தவர் உற்றார் - உலகத்தவர் யாவரும் அவரை வந்தடைந்து உறவினராவர்.
சுரத்தல்-இரங்குதல்; அமுதம் - பால் கற்றா - கன்றையுடைய Luis - கன்று+ஆ; கரத்தல் - ஒளித்தல்.
30. தாம் தாம் முன் செய்த வினை தாமே அனுபவிப்பார் பூந்தா மரையோன் பொறி வழியே - வேந்தே ஒறுத்தாரை என் செயலாம் ஊரெல்லாம் ஒன்றாய் வெறுத்தாலும் போமோ விதி. தாம் தாம் முன் செய்த வினை - முற்பிறவிகளிலே அவரவர் செய்த நல்வினை தீவினைகளை, பூந்தாமரையோன் பொறிவழியே தாமே அனுபவிப்பர் - தாமரை ஆசனன் ஆகிய பிரமதேவன் விதித்த விதிப்படி அவரவரே அனுபவிப்பார்கள் (தடுத்தல் முடியாது); வேந்தே ஒறுத்தாரை என் செயலாம் - அரசனே தண்டனை வழங்கும் போது ஒருவரை எவ்வாறு காப்பாற்ற முடியும்? (அதுபோன்று) : ஊரெல்லாம் ஒன்றாய் வெறுத்தாலும் விதி போமோ - ஊரவர் யாவரும் திரண்டு வெறுத்தாலும் விதி மாறுமோ? (மாறாது) குறிப்பு:வேந்தே என்பதை விளியாக்கி உரை கூறுவாருமுளர்.

Page 29
பூந்தாமரையோன் - தாமரைப் பூவில் வீற்றிருக்கும் பிரமன்) பொறி வழி - பொறித்தபடி - இதனைத் தலையெழுத்து என்பர் ஒறுத்தல் - தண்டித்தல்,
31. இழுக்குடைய பாட்டிற்(கு) இசை நன்று சாலும்
ஒழுக்கம் உயர் குலத்தின் நன்று - வழுக்குடைய
வீரத்தின் நன்று விடாநோய் பழிக்கஞ்சாத்
தாரத்தின் நன்று தனி. இழுக்கு உடைய பாட்டிற்கு இசை நன்று - இலக்கண வழு உடைய பாட்டினும் பார்க்க இசையே நல்லது; உயர்குலத்தின் சாலும் ஒழுக்கம் நன்று- உயர் குலத்தில் உதித்தலினும் பண்பட்ட ஒழுக்கமே நல்லது; வழுக்குடைய வீரத்தின் நன்று விடாநோய் - விதிமுறைக்கு மாறாகப் போரிட்டு வெற்றியீட்டுவதிலும் பார்க்கத் தீராத நோயாளியாயிருத்தல் நல்லது; பழிக்கு அஞ்சாத்தாரத்தில் தனி நன்று - பிறர் கூறும் பழிக்கு அஞ்சாது தவறிழைக்கும் மனைவியோடு கூடி வாழ்தலிலும் பார்க்கத் தனிமனிதனாய் வாழ்வதே நல்லது. சாலும் ஒழுக்கம் - பொருத்தமான ஒழுக்கம்; வழு - குற்றம்; தாரம் - மனைவி
32. ஆறிடு மேடும் மடுவும் போ லாஞ்செல்வம்
மாறிடு மேறிடும் மாநிலத்தீர் - சோறிடும் தண்ணிரும் வாரும் தருமமே சார்பாக உண்ணிர்மை வீறும் உயர்ந்து. மாநிலத்தீர்- இந்தப் பெரிய பூமியில் உள்ளவர்களே, ஆறிடும் மேடும் மடுவும் போல் - ஆற்று வெள்ளம் உண்டாக்கும் மேடும் பள்ளமும் போல; ஆம் செல்வம் ஏறிடும் மாறிடும் - உண்டாகிய செல்வமானது பெருகும் பின்னர் தேயும்; (ஆதலினால் பொருளைப் பதுக்கி வையாது) சோறிடும் தண்ணிரும் வாரும் - சோறிட்டுத் தண்ணிரும் அளியுங்கள்; தருமமே சார்பு ஆக-(இவ்வாறு கொடுக்கும்) தருமத்தின் துணையினால், உள்நீர்மை உயர்ந்து வீறும் - உள்ளத்திலே சத்திய ஒளி மிகும்.
மடு-பள்ளம் உண்ணிர்மை-உள்+நீர்மை-உள்ளத்தின்தன்மை, வீறுதல் - மிக்கு விளங்குதல்.
33. வெட்டனவை மெத்தனவை வெல்லாவாம் வேழத்திற் பட்டுருவும் கோல் பஞ்சிற் பாயாது - நெட்டிருப்புப் பாரைக்கு நெக்குவிடாப் பாறை பசுமரத்தின் வேருக்கு நெக்குவிடும்
வேழத்திற் பட்டுருவும் கோல் பஞ்சிற் பாயாது - யானையின் உடலிலே தைத்து
ஊடுருவும் வலிமை பெற்ற அம்பானது பஞ்சுக் குவியலைத் துளைக்கமாட்டாது
ད།

தடையுறும்; நெடு இரும்புப் பாரைக்கு நெக்குவிடாப் பாறை - நீண்ட இரும்புக் கடப்பாரை (அலவாங்கு) இடிக்கும் போது நெக்குவிடாத வலிய பாறை கூட, பசுமரத்தின் வேருக்கு நெக்குவிடும் - பசிய மரத்தினது வேர் தன்னைத் துளைத்துச் செல்லக் கூடியதாக இளகிக் கொடுக்கும்; ஆதலின் மெத்தனவை வெட்டனவை வெல்லாவாம் - இனிய சொற்களைக் கடுஞ்சொற்கள்
வெட்டனவை - கடுஞ்சொற்கள் மெத்தனவை - மிருதுவான சொற்கள்; கோல் - அம்பு இருப்புப்பாரை - இரும்பு அலவாங்கு, நெக்கு விடுதல் - இளகிக் கொடுத்தல்.
34. கல்லானே ஆனாலும் கைப்பொருளொன்(று) உண்டாயின் எல்லாரும் சென்றங்(கு) எதிர்கொள்வர் - இல்லானை இல்லாளும் வேண்டாள்மற் றீன்றெடுத்த தாய்வேண்டாள் செல்லா தவன்வாயிற் சொல். கல்லானே ஆனாலும் கைப்பொருள் ஒன்று உண்டாயின் - ஒருவன் கல்வி பெறாதவன் ஆயினும் அவனிடம் பொருள் மாத்திரம் இருக்குமேயானால்; எல்லாரும் சென்று அங்கு எதிர் கொள்வர் - யாவரும் போய் அவனை வரவேற்று உபசரிப்பர்; இல்லானை இல்லாளும் வேண்டாள் - (கற்றவனாயினும்) பொருள் இல்லாதவனை மனைவியும் விரும்ப மாட்டாள்; ஈன்று எடுத்த தாய் வேண்டாள் - பெற்று வளர்த்த தாயும் விரும்பமாட்டாள்; அவன் வாயிற் சொல் செல்லாது - அவன் கூறுவதையும் யாரும் பொருட்படுத்த மாட்டார்கள்.
35. பூவாதே காய்க்கும் மரமுமுள மக்களுளும்
ஏவாதே நின்றுணர்வார் தாமுளரே - தூவா விரைத்தாலும் நன்றாகா வித்தெனவே பேதைக்(கு) உரைத்தாலும் தோன்றா(து) உணர்வு. பூவாதே காய்க்கும் மரமும் உள - அத்தி, பலா போன்று பூக்காமலே காய்க்கின்ற மரங்களும் சில உண்டு; (அதுபோல) மக்கள் உள்ளும் ஏவாதே நின்று தாம் உணர்வார் உளர் - மனிதர்களிலும் கட்டளையிடாமல் தாமே உணர்ந்து செய்யவேண்டிய பணிகளை நிறைவேற்றுவோர்களும் உள்ளனர்; தூவா விதைத்தாலும் நன்று ஆகா வித்தென - தூவி விதைத்தாலும் முளைத்துப் பயன்படாத விதைகள் போல; பேதைக்கு உரைத்தாலும் உணர்வு தோன்றாது - அறிவிலிகளுக்கு விளக்கமாக எடுத்துக் கூறினாலும் அதை உணர்ந்து செயற்படும் ஆற்றல் உண்டாகாது.
ஏவுதல் - கட்டளையிடுதல் ; தூவா - துரவி ; பேதை - அறிவு இல்லாதவன்.

Page 30
36. நண்டு சிப்பி வேய் கதலி நாசமுறுங் காலத்திற்
கொண்ட கருவளிக்கும் கொள்கைபோல் - ஒண்டொடி போதம் தவம் கல்வி பொன்றவரும் காலம் அயல் மாதர்மேல் வைப்பார் மனம். ஒள் தொடி - ஒளிபொருந்திய வளையல்களை அணிந்த பெண்ணே, நண்டு சிப்பி வேய் கதலி- நண்டும், சிப்பியும், மூங்கிலும், வாழையும்; நாசம் உறும் காலத்தில் - தாம் அழிவடைய வேண்டிய காலம் வந்தணையும் போது கொண்ட கரு அளிக்கும் கொள்கைபோல் - தாம் கொண்ட சினையும், முத்தும், மூங்கில் அரிசியும், காய்க்குலையும் ஆகியவற்றை ஈனும் தன்மை போன்று; போதம் தனம் கல்வி பொன்ற வரும் காலம் - (மனிதர்களும் தாம் பெற்றுள்ள) அறிவும், செல்வமும், கல்வியும் அழிவடைய வேண்டிய தீவினைப் பயன் ஏற்படும் போது; அயல் மாதர் மேல்மனம் வைப்பர்- தம்மனையாள் அல்லாத பிற பெண்களை அடைய விரும்புவர். ஒண்மை + தொடி - ஒண் + தொடி - ஒண்டொடி - ஒளி பொருந்தியவளையல் (இங்கு அதை அணியும்; பெண்ணைக்குறித்தது) வேய்-மூங்கில்; போதம்-ஞானம்-அறிவு; பொன்றுதல்-அழிவடைதல்
37. வினைப் பயனை வெல்வதற்கு வேதம் முதலாம்
அனைத்தாய நூலகத்தும் இல்லை - நினைப்பதெனக் கண்ணுறுவ தல்லால் கவலைபடேல் நெஞ்சே மெய் விண்ணுறுவார்க்(கு) இல்லை விதி. வினைப் பயனை வெல்வதற்கு - நல்வினை, தீவினைப் பயன்களை வெல்வதற்கு வேண்டிய உபாயம்; வேதம் முதலாம் அனைத்தாய நூலகத்தும் இல்லை - வேதம் முதலாகச் சொல்லப்படுகின்ற அறிவு நூல்கள் எதிலுமே கூறப்படவில்லை; நினைப்பு அது எனக் கண்ணுறுவது அல்லால் - வினைப்பயன் வந்தடையும் போது இது பண்டைய ஊழால் விளைந்தது என எண்ணி ஆறுதலடைவதேயல்லாமல்; நெஞ்சே கவலை படேல் - மனமே வீணாகக் கவலையடையாதே; மெய் விண் உறுவார்க்கு விதிஇல்லை - உண்மையான வீட்டுலகை அடைந்து இன்புறக் கூடிய ஞானிகளுக்குக் கர்மமே இல்லை ஆகும்.
கண் உறுதல் - பார்த்தல்; விண் உறுதல் - மோட்சம் அடைதல்,
38. நன்றென்றும் தீதென்றும் நானென்றும் தான் என்றும்
அன்றென்றும் ஆம் என்றும் ஆகாதே - நின்றநிலை தான் அதாம் தத்துவமாம் சம்பறுத்தார் யாக்கைக்குப் போனவா தேடும் பொருள்.
நின்ற நிலை - இறைவனோடு இரண்டறக் கலந்து ஆன்மா நிற்கும் முத்தி நிலை;
தான் அதாம் தத்துவமாம் - தானாகிய அவ்வான்மா அது ஆகிய சிவமே ஆகும்

தத்துவமேயாகும். (அந்நிலையில்) நன்று என்றும் திது என்றும் - நன்மை என்றும் தீமை என்றும்; நான் என்றும் தான் என்றும் - வேறாக ஆன்மா என்றும் சிவம் என்றும்; அன்று என்றும் ஆம் என்றும் ஆகாது- இல்லை என்றும் அதற்கு மாறாக உண்டு என்றும் நிலை இல்லையாகும். (எதுபோல எனின்) சம்பு அறுத்தார் யாக்கைக்குத் தேடும் பொருள் போனவா - சம்பம் புல்லை அறுத்தவர்கள் அதைக் கட்டுவதற்கு அப்புல்லையே கயிறு ஆகக் கொள்வது போல (பாசத்தின் வேறாகத் தன்னை உணர்ந்த ஆன்மா இறைவனோடு தன்னை இணைப்பதற்கு வேண்டிய கருவியாக்க வேண்டியதும் தன்னையே ஆகும்).
தான் - அது இறைவன்) ; தான் - ஆன்மாதானே; தான் அது ஆம் தத்துவம் - தத்துவம் அசி என உபநிடதம் கூறும் கருத்து சம்புஒருவகைப்புல்; யாத்தல் - கட்டுதல்.
39. முப்பதாம் ஆண்டளவில் மூன்றற்(று) ஒருபொருளைத்
தப்பாமல் தன்னுட் பெறானாயின் - செப்பும் கலை அளவே யாகுமாம் காரிகையார் தங்கள் முலை அளவே ஆகுமாம் மூப்பு. முப்பதாம் ஆண்டளவில் - ஒருவன் முப்பது வயதளவிலேயே மூன்று அற்று - ஆணவம், கன்மம், மாயை ஆகிய மும்மலங்களையும் அறுத்து; ஒரு பொருளை - முழுமுதற் பொருளாக விளங்கும் பரம்பொருளை; தப்பாமல் தன்னுள் பெறான் ஆயின் - தனது ஞான உணர்வினால் தன் உள்ளேயே தவறாது காணப்பெறானாயின்; செப்பும் கலை அளவே ஆகும் - இறையுணர்வு அவன் கற்ற கல்வியின் அளவினதாகவே நின்றுவிடும் (அநுபூதி ஞானம்
உண்டாகமாட்டாது); மூப்பு - முதுமையடையும் வரை (பந்தம் அறுக்க வேண்டிய) இவ்வுடலால் அவனடையும் பயன்; காரிகையார் தங்கள் முலையளவே ஆகுமாம் - பெண்களோடு கூடி அனுபவிக்கும்
சிற்றின்பமளவிலேயே நின்றுவிடும்
குறிப்பு: உடலும் உள்ளமும் உறுதியாக இருக்கும் இளவயதிலேயே ஞான
குருவையடைந்து ஞான சாத்திரங்களைக் கேட்டல், சிந்தித்தல், தெளிதல்,
நிட்டை கூடல் என்னும் நான்கும் கைவரப் பெறுதல் வேண்டும்.
மூன்று - மும்மலம் ஆணவம், கன்மம், மாயை) காரிகையார் - பெண்கள்.
40. தேவர் குறளும், திருநான்மறை முடிவும்,
மூவர் தமிழும் முனிமொழியும் - கோவை திருவா சகமும் திருமூலர் சொல்லும் ஒருவா சகம் என் றுணர்.

Page 31
ケー ר தேவர் குறளும் - திருவள்ளுவதேவ நாயனாருடைய திருக்குறளும்; திருநான்மறை முடிவும் - உயர்ச்சி பொருந்திய நால் வேதங்களின் சாரமாக விளங்கும் உபநிடதங்களும்; மூவர் தமிழும் - தேவார முதலிகள் மூவர் ஆகிய சம்பந்தர், அப்பர், சுந்தரர் பாடிய தேவாரத் திருப்பதிகங்களும்; முனிமொழியும் - வேதவியாச முனிவர் ஆக்கிய பிரம சூத்திரமும்; கோவை திருவாசகமும் - மணிவாசகப் பெருமான் அருளிய திருக்கோவையாரும் திருவாசகமும்; திருமூலர் சொல்லும் - திருமூல நாயனார் அருளிய திருமந்திரமும்; ஒரு வாசகம் என்றுனர் - கூறும் கருத்துக்கள் யாவும் பரம்பொருளாகிய ஒரு பொருளையே குறித்தன என்று அறிவாயாக.
மூவர் தமிழ் - பன்னிரு திருமுறைகளில் முதல் ஏழு திருமுறைகள்,
கோவை, திருவாசகம் - எட்டாந் திருமுறை , திருமந்திரம் - பத்தாந் திருமுறை; நான்மறைமுடிவு - வேதாந்தம் - வேதசிரசு - உபநிடதம்; முனிமொழி - பிரமசூத்திரம் - வேதாந்த சூத்திரம் - உத்தர மீமாம்சை (முனி மொழியும் கோவை திருவாசகமும் என மணிவாசகருக்கு அடையாக்கியும் பொருள் கூறுவர்)
★★女★


Page 32