கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: நவீனத்துவத்தின் தோல்வி

Page 1


Page 2

நவீனத்துவத்தின் தோல்வி
ஐரோப்பிய மைய சிந்தனைகள்
குறித்து ஒரு மறுவாசிப்பும் இஸ்லாமிய மாற்றுக்கான தேவை பற்றி ஒரு கவனயீர்ப்பும்
றவூப் ஸெய்ன்

Page 3
*நூல் : நவீனத்துவத்தின் தோல்வி, ஐரோப்பிய மைய சிந்தனைகள் பற்றிய ஒரு மறுவாசிப்பு *ஆசிரியர் : றவூப் ஸெய்ன *மொழி முலம் : தமிழ் *பதிப்புரிமை : ஆசிரியர் பக்கங்கள் : 66 + X 9 அட்டைப்படம் : அப்துல்லாஹ் இத்ரிஸ் வெளியீடு : உயிர்ப்பைத் தேடும் வேர்கள் *தளக்கோலம் : எம்.ஆர்.எம். பர்ஸான் முதற் பதிப்பு : 2002 ஜூன் *பிரதிகளின் எண்ணிக்கை : 1000 விலை: 50.00
Title: Naveenathuvathin Tholvi (Failure of Modernism, A Critique view on Euro-centric Thoughts) o Author : Rauff Zain
• Language:Tamil CopyRight: Author No. of Pages: 66 + X
• Cover Design : Abdullah Idrees Typesetting Layout: M.R.M. Farzan Edition: 2002 June No. of Copies : 1000 • Publisher : Uirpai Thedum Verkal Price: 50.00
 

பதிப்புரை
இருபதாம் நூற்றாண்டின் யுக சந்தியில் தோன்றிய மேற்கத்தேய மையவாத சிந்தனைகள் பற்றிய ஒரு திறனாய்வை வெளியிடுவதில் உயிர்ப்பைத் தேடும் வேர்கள் பெருமிதம் கொள்கின்றது. முன் தீர்வுகளுடன் வாழ்க்கையை நோக்கிய சித்தாந்தங்கள் முனைமழுங்கி சரிந்து கொண் டிருக்கும் இக்காலத்தில் இக்கட்டுரைகள் நுட்பமான விமர்சனங்களையும் மாற்றுக்களையும் முன்வைக்கின்றன.
பின்நவீனத்துவம் உலக அளவில் மிகுந்த சர்ச்சையை ஏற்படுத்திய ஒரு புதிய சிந்தனையாகும். அதிகார மையங்களை அழித்து திசைகளை/ சிறு கதையாடல்களை மேற்கிளம்ப வைக்க முயற்சித்தமை அதன் அனுகூலமாக கொள்ளும் அதேவேளை இலட்சியவாத ஒருமுகத் தன்மையை சிதைக்கும் ஒரு கோட்பாடாகவும் இனங்காணப்பட்டு வருகின்றது.
விஞ்ஞானம் என பயிலப்படும் சொல்லாடலில் உட்பொதிந்திருக்கும் மேற்கின் அதிகாரக் கட்டமைப்பாகவே நாம் அதைப் புரிந்து கொள்ள வேண்டும். மேற்கத்தேய கோட்பாடுகளை மட்டுமல்ல அதன் அறிதல் முறைகளையும் கேள்விக்குள்ளாக்கும் போதுதான் நமது வேர்களையும் அடையாளங்களையும் கண்டு கொள்ள முடியும்.
ஒரு கோட்பாடு முன்வைக்கப்பட்டு பத்தாண்டுகள் கழித்தும் நமது ஆய்வுப் பெரியவர்கள் அது பற்றித் தெரியாது இருக்கும் நிலையில் நமது இளம் ஆய்வாளரும் மீள்பார்வை உதவி ஆசிரியருமான றவூப் ஸெய்ன் அவர்கள் அவ்வப்போது எழுதிய இக்கட்டுரைகளை ஒருசேரப் படிக்கும் யாரும் முதிர்ந்த ஆய்வாளருக்கான தகுதியும் தேடல்மிக்க வாசிப்பும் கொண்டவர் எனப் புரிந்து கொள்ளலாம்.
முக்காடு, தரிசனம் ஆகிய வெளியீடுகளுக்குப் பின் உயிர்ப்பைத் தேடும் வேர்கள் நவீனத்துவத்தின் தோல்வி எனும் நூலை மூன்றாவது வெளியீடாக வாசகர்களுக்கு சமர்ப்பிக்கின்றது.
மஹற்முத் ஆலிம் வீதி, பதிப்பாசிரியர் வாழைச்சேனை - 05. ஏ.பீ.எம். இத்ரீஸ்

Page 4
நவீனத்துவத்தின் தோல்வி : நூலுக்கான முன்னுரைக் குறிப்பு
பேராசிரியர் கா. சிவத்தம்பி
இலங்கை முஸ்லிம்களிடையே நிலவும் சமூக, அரசியல் உணர்வுகளுக் கும், தலைமுறை, தலைமைத்துவ சமவீனங்களுக்குமுள்ள உறவுகள் மிக உன்னிப்பாக நோக்கப்பட வேண்டியதொன்றாகிறது. ஏறத்தாழ 90களிலிருந்து வளர்ந்துவரும் இந்தச் சிந்தனை மரபு இலங்கை முஸ்லிம்களின் அரசியல் தலைமைத்துவம் பற்றியும், சமூக நோக்குப் பற்றியும் பல கேள்விகளைக் கிளப்பியுள்ளது. இலங்கை முஸ்லிம்கள் சகலருக்கும் பொதுவான புலமை முனைப்புடைய ஒரு தலைமைத்துவத்தின் தேவைபற்றி காலஞ்சென்ற எம்எச்எம் அஷ்ரப் காலத்திலேயே கிளர்வுகள் காணப்பட்டன. முஸ்லிம்களுக் கான அரசியல் தலைமை முஸ்லிம்களுக்கு சனத்தொகை வாரியான பல முள்ள ஒர் இடத்திலிருந்து கிளம்பும்போதுதான் அரசியல் தயக்கமின்றிக் கோரிக்கைகளை முன்வைக்கலாம் என்பதை அஷ்ரபின் வாழ்க்கையும், அரசியலும் காட்டி நிற்கும் உண்மையாகும்.
இதற்குமேல் அஷ்ரப் தனது ஆள்நிலை வசீகரத்தின் மூலம் (PerSonal Cherishma) முஸ்லிம் அரசியலை ஒரு புதிய தேசிய நிலைக்குக் கொண்டு செல்வதற்கான முயற்சி மேற்கொண்ட போது துரதிஷ்டவசமாக அவர் காலமானார். அஷ்ரபுடன் எவ்வளவுதான் வேறுபட்டாலும் அவர் சுட்டி நின்ற முஸ்லிம் நிலை பற்றிய ஒரு தரிசனம் முக்கியமாகும்.
துரதிஷ்டவசமாக அவருடைய தேட்டத்தை மேற்கொண்டு வளர்த்துச் செல்வதற்கான முயற்சிகள் தேசிய மட்டத்தில் முடங்கிப் போயுள்ளன. ஏகோபித்த அங்கீகாரமுள்ள ஒரு முஸ்லிம் தலைமை பதியுதீன் மஹ்மூத் காலத்தின் பின்னர் இலங்கை முஸ்லிம்களிடையே இல்லையென்பதும் உண்மை.
இந்தச் சூழலில்தான் முஸ்லிம்களிடையே குறிப்பாக முதுநிலை முஸ் லிம்களிடையேயுள்ள புலமைத்துவக் குறைபாடு மிகுந்த முனைப்புடன் தெரிகிறது. இலங்கையின் பிரதான சிறுபான்மையினர் (தமிழர்) பெரும் பான்மையினத்தவரான சிங்களவரோடு மோதுகைநிலை உறவை மேற்கொண்ட சூழ்நிலையில் இரண்டாவது சிறுபான்மையினரான முஸ்லிம்களின் உதவி அதுவும் அவர்கள் தமிழ் பேசுவதினால் ஏற்படும் பலம் அரசியல் ரீதி
II

யாக சிங்களத் தலைமைக்கு வேண்டுவதாக இருந்தது. அதன் பின்னர் வடக்குக் கிழக்கில் தமிழ் இளைஞர் தீவிரவாதம் மேற்கிளம்பியபோது தமிழ்-முஸ்லிம் இளைஞர்களின் உறவுக்கான சாத்தியப்பாடுகள் நிறையக் காணப்பட்டபோது இந்தநிலையில் குறைந்தபட்சம் வடகிழக்கிலாவது ஒரு மாற்றத்தை ஏற்படுத்துமென்ற ஒரு எதிர்பார்ப்பு இருந்தது. துரதிஷ்ட வசமாக தமிழ் இளைஞர்களின் தீவிரவாத அரசியல் வரலாறு இந்த நம்பிக்கைக்கு நீண்ட ஆயுளைக் கொடுக்கவில்லை.
இதேவேளையில் சிங்களப் பிரதேசங்களிலுள்ள சிங்கள-முஸ்லிம் உறவுகள் மிகுந்த நெருக்கடிகளுக்காளாயின. 1977இல் இலங்கைக்குள் வந்த உலகமய மாக்கல் போக்கு சிங்கள இளைஞர்களுக்கும் சிங்களத் தொழின்மையினருக் கும் (Professionals) இருந்த மேலாண்மையினை உடைத்து, முஸ்லிம்களுக்கு வணிகநிலையான முக்கியத்துவத்தை மீண்டும் வழங்கத் தொடங்கியது மாத்திரமல்லாமல் மத்தியகிழக்கு அரசியலின் உலகநிலை முக்கியத்துவமும் சிங்கள மேலாண்மை வாதத்திற்கு பெருந் திருப்தியளிக்கவில்லை. (பெருந் தொகையான பெரும்பான்மைத் தொழிலாளர் மத்திய கிழக்கிலேயே வேலை செய்ய வேண்டி ஏற்பட்டது. இதனால் அந்த உறவிலும் பெருத்த விரிசல் ஏற்பட்டது)
இவையெல்லாம் நடந்து கொண்டிருக்க இலங்கையின் கல்வி மொழிக் கொள்கை காரணமாகத் தமிழையே போதனா மொழியாகக் கொண்ட ஒரு முஸ்லிம் இளைஞர் பரம்பரை படிப்படியாக வளரத் தொடங்கிற்று. இந்தத் தலைமுறை ராசிக் காலத்தில் ஒரு மட்டத்தில் நிலவிய தமிழ் எதிர்ப்பையோ அல்லது இரண்டாம் சிறுபான்மையினர் என்ற வகையில் கிடைக்கும் உதிரி நன்மைகளையோ கணக்கெடுக்காமல் அனைத்துலக இஸ்லாமியச் சிந்தனைப் பின்புலத்தில் குறிப்பாக அறபுத்தேசியம் பலஸ்தீனப் போராட்டம் ஆகியன தரும் உந்துதல்களை உள்வாங்கி ஒரு புதிய சிந் தனைத் தடத்தை உருவாக்க முனைகின்றது.
அத்தகைய பின்புலத்திலேயே நான் ரவூப் ஸெய்னின் கட்டுரைகளைப் பார்க்கின்றேன். இந்தக் கட்டுரைகளில் காணப்படும் சிந்தனைப் போக்கே எனக்கு முக்கியமாகப்படுகிறது. தரவு விடயங்கள் பற்றியோ கருத்துநிலை ஏற்புடமை பற்றியோ நான் எந்தவித வாத விவாதத்திலும் இறங்க விரும்பவில்லை. ஆனால் இத்தகைய எழுத்துக்களுக்கான சமூக, அரசியல், புலமைத்துவச் சூழல் பற்றியே நான் அழுத்த விரும்புகிறேன். ஸெய்னின் கட்டுரைகளை வாசிக்கும்போது இரண்டு விடயங்கள் என் மனதில் மேலோங்கி நிற்கின்றன. ஒன்று இத்தகைய சிந்தனைகளுக்கு அரசியல் எதிர்காலம் உண்டா? அரசியல் எதிர்காலம் யாது? வடகிழக்கு முஸ்லிம்
III

Page 5
களின் இலக்கிய முன்னோசைகள் இந்த சிந்தனை மரபுக்கு ஒரு நல்ல எதிர்காலம் உண்டென்றே கூறுகின்றன. ஆனால் இலங்கை முஸ்லிம்களி டையே இளைஞர் அபிப்பிராயம் முஸ்லிம்களின் பிண்டப்பிரமாணமான உலக நிலைப்பட்ட அரசியல் யதார்த்தங்களோடு இணையத்தக்கனவா? இது ஒரு பெரிய கேள்வி இந்தத் துறையில் முஸ்லிம் புலமைத்துவவாதிக ளின் பங்களிப்பு மிகக் குறைவாகவே உள்ளது. நுஃமான் போன்றவர்கள் அதிகம் பேசுகிறார்களில்லை. அமீர் அலி போன்றவர்கள் இலங்கையில் இருக்கிறார்களில்லை. இஸ்லாமிய தொழின்மை வல்லுநர்களின் குரல் கேட்கவேயில்லை. பேசுபவர்கள்கூட இலங்கை முஸ்லிம்களின் ஒட்டுமொத்த மான, பொதுப்படையான விடயங்கள் பற்றித் தெளிவுபடக் கூறுகிறார்களா என்பது பிரச்சினைக்குரிய விடயமே. இத்தகைய ஒரு பின்புலத்திலேதான் றவூப் ஸெய்ன் நளிமிய்யாவின் மாணவன் என்பது எனக்கு ஒரு முக்கிய விடயமாகப்படுகிறது. தமிழகத்து கிறிஸ்தவச் சிந்தனை மரபில் மதுரை அரசரடி நிறுவனம் ஏற்படுத்திய ஒரு தளமாற்ற அணுகுமுறை போன்ற ஒன்றைத் தருவதற்கான சாத்தியப்பாடு நளிமியாவில் உள்ளதா?
உண்மையில் இந்தப் புலமைத்துவ வெளியினை நிரப்ப வேண்டிய முக்கிய நிறுவனங்களிலொன்றாக தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தைப் பார்க்கின்றேன். சில குரல்கள் நம்பிக்கை தருகின்றன. ஆனால் வேறு சில குரல்கள் எதிர்நிலைப்பட்ட பதில் குறிகளையே (Response) கிளப்பு கின்றன.
இரண்டாவதான எனது மனப்பதிவு என்னதான் பரஸ்பர அரசியல் சந்தேகங்களும் பயங்களும் நிலவினாலும் கடந்தகால உறவு வரலாறு நம்பிக்கை தராவிட்டாலும் எனக்கு இந்த உறவுகள் ஏதோவொரு வகை யில் தமிழின் வளத்துக்கும் ஆற்றலுக்கும் உதவுகின்றனவாகவே படுகின்றன. இலங்கை முஸ்லிம்களின் பண்பாட்டுத் தொடர்ச்சி பற்றிய இப்புது இளந்தலைமுறையினரின் கருத்துக்கள் யாவை? என்பதை எதிர்பார்த்து நிற்கின்றேன்.
கா.சிவத்தம்பி 27, றாம்ஸ் கேட், 58, 37 ஆவது ஒழுங்கை கொழும்பு - 06. 03-15-2002
IV

முன்னுரை
இமய சாதனைகளின் இருண்ட பக்கமும் தீவிர மாற்றுக்கான தேவையும்
மேலைய உலகின் மிகப்பெரும் அறிவியல் சாதனை, பொருள்மைய வளர்ச்சி என்பன பற்றிய எக்களிப்புக்கள் இந்நூற்றாண்டில் மேலெழுந்து நிற்பது உண்மையே. எனினும் மேற்கின் இத்தகைய வளர்ச்சி நிலைகளை மிகவுமே பிரமிப்புடன் நோக்க வேண்டியதில்லை. மேற்குலகின் பெளதீக மேம்பாடு இயல்பானதும் நீதியானதும் அல்ல என்பதே இதற்கான காரணமாகும். மிகக் குறைந்த மூல வளங்களோ உற்பத்தி உள்ளீடுகளோ இல்லாத நிலையில் உலகத்தின் அதிகார மேலாண்மைச் சக்தியாக மேற்கு தன்னை தகவமைத்துக் கொண்டதற்குப் பின்னால் உள்ள மறை காரணி மேற்கின் சுரண்டல் கொள்கையும் ஆதிபத்திய மனோநிலையுமே.
தனது அறிவியலால் உருவாக்கிய, மனித உயிர்களைக் காவுகொள்ளும் அணுவாயுதக் கிடங்குகள், தனது நலன்களைக் காக்க `சர்வதேச” என்ற ஏமாற்றுப் போர்வையுடன் ஸ்தாபித்துள்ள உலக நிறுவனங்கள் (World Bank, International Monitory fund, U.N.Security Council), 960ypu p GJ66šT மேம்பாட்டைத் தடுத்து நிறுத்தும் நோக்கில் தோற்றுவித்துள்ள உளவுஸ்தாப னங்கள் (CIA, FBI), தனது ஆதிபத்திய சுரண்டலையும் இதர சமூகங்கள் மீதான ஒடுக்குமுறைகளையும் மூடிமறைக்க கட்டமைத்துள்ள கவர்ச்சிகரமான சில கருத்தியல்கள் (ஜனநாயகம், மனித உரிமைகள்) இவைதான் ஐரோஅமெரிக்க வல்லாதிக்கத்தின் முக்கிய மூலதனங்களாகும்.
இவற்றின் மூலமே வட அரைக்கோள ஐரோப்பிய மையவாதம் (Euro-centrism) தென்னரைக்கோளத்தை தனது அதிகாரச் சப்பாத்தின் கீழ் வைத்திருக்க முயல்கின்றது. காலனிய காலத்தில் தமது வணிக வளங்களையும் அறிவுப் பொக்கிஷங்களையும் ஏகாதிபத்தியத்தின் சுரண்டலுக் குள் இழந்துவிட்ட மூன்றாம் உலக நாடுகள் மீண்டும் மீண்டும் நவ காலனிய ஒடுக்குமுறைச் சக்திகளுக்கு இரையாகுவதையிட்டு நாம் எல்லோரும் எச்சரிக்கை உணர்வோடு இருக்க வேண்டும்.
V

Page 6
இந்நூல் மேற்குலகு நவகாலனியத்தைத் திணிப்பதற்கு முயலும் தந்திரோபாயங்களைக் கோட்பாட்டளவில் அடையாளப்படுத்த முனைகின்றது. ஜனநாயகம், கருத்துச் சுதந்திரம், உலகமயமாதல், தகவல் புரட்சி, பின்நவீனத்து வம் போன்ற நவீன காலனிய வடிவங்கள் எந்தளவு ஐரோப்பிய மைய வாதத்திலிருந்து மேலெழுகின்றன? அவற்றில் ஊடுருவி நிற்கும் முதலாளியத் தன்மை எத்தகையது? கவர்ச்சிகரமான ஆனால் சுரத்துக் கெட்டுப்போன இச்சுலோகங்களின் மோதுகை அம்சங்கள் (Aria of Conflict) யாவை? நம்மை எய்த்துப் பிழைப்பதற்கு இவை உபயோகிக்கப்படும் திட்டமுறைகள் (Stretegies) யாவை? இவ்வடிப்படைக் கேள்விகளே இந்நூல் முன்வைக்கும் மறுவாசிப்பின் அடித்தளங்களாக உள்ளன. சுருங்கச் சொன்னால் மேற்குலகம் அடைந்துள்ள இமய சாதனைகளின் இருண்ட வெளிகளை இந்நூல் இனங்காட்ட விழைகின்றது.
ஐரோ-அமெரிக்க மையவாத வணிக எழுதியலிலுள்ள கருத்தியல் சார்பு எத்துணை அபாயமானது என்பதை கீழைத்தேய உலகு மிக நுணுக்கமாக மறுவாசிப்புச் செய்வதோடு தனது பணியைச் சுருக்கிக் கொள்ளக் கூடாது. ஆற்றாமைக்குள் முடங்கிக் கிடக்கும் மேற்கின் வாழ்வியல் கோட்பாடுகளுக்குப் புறம்பான மாற்றீடுகளை உலகின் முன்வைக்க வேண்டியதும் கீழைத்தேய உலகின் குறிப்பாக இஸ்லாமிய உம்மத்தின் உடனடிக் கடமையாகும். ஏறத்தாழ உலகின் எல்லாக் கோட்பாடுகளுமே வெறும் கோட்பாட்டு நிலைப்பட்ட (Theoritical) விடயங்களாகிப் போய் விட்டன. மனித வாழ்வு பற்றிய மயக்கமான, தெளிவற்ற அணுகுமுறைகள் மேற்கின் சராசரி மனிதர்களைக் குழப்பத்திலும் சஞ்சலத்திலும் ஆழ்த்தி விட்டது. முழு உலகுமே ஒரு நீதியான, நடைமுறைச் சாத்தியமான மாற்று வடிவங்களை எதிர்பார்த்து நிற்கின்றது. இதனால் மனித நலன் களிலும் மேம்பாட்டிலும் அக்கறையுள்ள அனைத்து புலமைத்துவ சக்திகளும் தீவிர மாற்றுகள் குறித்து சிந்திப்பது அதீத அவசியமாகும்.
தனது தேசிய எல்லைகளுக்குள் மட்டும் ஜனநாயக வேஷம் போடும் அமெரிக்கா போன்ற அதிகார மையங்கள் தேசிய எல்லைகளுக்கு வெளியே வருகின்றபோது காட்டுமிராண்டிகளாக மாறிவிடுகின்றன. எனினும் அந்நாட்டு மக்கள் தமது அரச இயந்திரங்கள் ஜனநாயகத்தை அனுசரிப்பதாக புகழுரை வழங்கிக் கொண்டிருக்கின்றனர். தனி மனித சுதந்திரம், தாராண் மைவாத ஜனநாயகம் எல்லாமே தமது நாடுகளில் மேலோங்கி இருப்பதாக தம்பட்டம் அடிக்கும் மக்கள் மனநோய்களாலும் உள அழுத்தங்களாலும் வாழ்வின் துயரங்களுக்குள் மூழ்கி மூச்சுத் திணறிக் கொண்டிருக்கின்றனர். இன்னொரு புறம் கீழைத்தேய நாடுகள் மேற்கத்தேய வல்லாதிக்க
VI

சக்திகளின் தயவிலேயே வாழ வேண்டிய வகையில் தொடர்ச்சியாக சுரண்டப்பட்டு வருகின்றன. இவ்விரு தளங்களும் இந்நூலின் மறுவாசிப்பில் முக்கிய இடம் பெறுகின்றன.
நவீனத்துவத்தின் தோல்வி என்ற இந்நூல் ஏற்கனவே மீள்பார்வை, சரிநிகர் போன்ற பத்திரிகைகளில் பிரசுரமான கட்டுரைகளின் தொகுப்பாகவே வெளிவருகின்றது. இந்நூலுக்கு முன்னுரைக் குறிப்பொன்றை வழங்கிய பேராசிரியர் கா. சிவத்தம்பி அவர்களுக்கும் நூலை பதிப்பித்த உயிர்ப்பைத் தேடும் வேர்கள் பதிப்பகத்தின் உரிமையாளர் ஏ.பீ.எம். இத்ரீஸ் அவர் களுக்கும் தட்டச்சு மற்றும் தளக்கோலத்தை அழகுற வடிவமைத்த எம்ஆர்எம் பர்ஸான் அவர்களுக்கும் நூலை வெளியிடுமாறு தூண்டுதலளித்த எப்.எம். ஐயுப்கான் அவர்களுக்கும் எனது ஆழ்ந்த நன்றிகள்.
றவூப் ஸெய்ன் 16, பாடசாலை வீதி இறக்காமம். 2002.05.12
VII

Page 7
பொருளடக்கம்
மேற்கத்தேய ஜனநாயகம்
பின் நவீனத்துவம்
தகவல் பயங்கரவாதம்
தகவல் துறையில் அமெரிக்காவின் ஆதிக்கம்
கருத்துச் சுதந்திர்ம்
உலக மயமாதல்
நவீனத்துவத்தின் தோல்வி
மேலைய இனவாதம்
01.
12
22
30
35
43
5.

மேற்கத்தேய ஜனநாயகம்
கோட்பாட்டுச் சிக்கல் குறித்து ஒரு மறுவாசிப்பு
ர்வீக காலந்தொட்டு இற்றைவரை அரசு குறித்த பல கோட்பாடுகள் நிலவி வருகின்றன. சோஷலிஸம், அரசின்மைக் கோட்பாடு, பாசிஸம், நாசிளம் ஆகிய அரசு பற்றிய சிந்தனைக ளோடு ஒப்பிடுகின்றபோது ஜனநாயகத்தின் வருகை மனித குலத்திற்கு ஒரளவு சாதகமான சூழலை உருவாக்கிக் கொடுத்தது உண்மையே. எனினும் இந்நூற்றாண்டில் ஜனநாயகம் பற்றிய பூச்சாண்டிகளும் மிகைமதிப்பீடுகளும் மேலோங்கிய அளவுக்கு நடைமுறையில் அது -என்ன்ர்ள்ன்-தூரம் வெற்றியeபி.ஆஃoபது என்பது கேள்விக்குள்ளான ஒன்று. நிலமானிய (Feudalism) முறையை இல்லாதொழித்து உருவா கிய ஜனநாயக அரசியல் ஒழுங்கு அதன் தோற்றத்திலிருந்து முத லாளித்துவ சுரண்டல் சக்திகளின் அதிகாரத்தையும் அராஜகத்தையும் தக்கவைத்துக் கொள்ளவே பிரயோகிக்கப்படுவதால் சுரண்டப்படுகின்ற தேசங்களைப் பொறுத்தமட்டில் ஜனநாயகம் வெறும் கோட்பாட்டு நிலைப்பட்ட விடயமாகிவிட்டது. இன்றைய சமகால உலக அரசி யலை நோக்குகின்றபோது சமத்துவம், சகோதரத்துவம், சுதந்திரம்
8
நவீனத்துவத்தின் தோல்

Page 8
ஆகிய ஜனநாயகத்தின் அடிப்படைக் குறிக்கோள்கள் கேலிக்கூத் தாகின்ற அளவுக்கு மேற்குநாடுகள் அதனை தமக்கு சார்பாகவும் விருத்தியடைந்துவரும் நாடுகளுக்குப் பாதகமாகவும் பயன்படுத்தி வருகின்றன.
நவீன மேலைத்தேய தாராண்மைவாத ஜனநாயகத்தின் (Liberal Democracy) தோற்றச்சூழல் ஜனநாயகம் பற்றிய இரண்டு முக் கிய கருத்துக்களைப் புலப்படுத்துகின்றது. முதலாவது: ஜனநாயகம் கத்தோலிக்க மதவாதிகளின் ஆட்சிக்கு எதிர்வினையாக தோற்றமெ டுத்ததால் அது மதச்சார்பின்மையைக் (Secularism) கொண்டுள்ளது. இரண்டாவது: அப்போது நிலவிய நிலமானிய சமூக அமைப்புக்கு எதிராகப் போராடியவர்கள் முதலாளித்துவ சிந்தனையாளர்கள் என்பதால் ஜனநாயகம் முதலாளித்துவத்தின் காவலாளியாகவே செயற்படுகின்றது. இன்னொரு வகையில் கூறுவதாயின், மதச்சார்பின் மையும் முதலாளித்துவ நோக்கும் நவீன ஜனநாயகத்தின் இரண்டு பிரிக்க முடியாத பண்புகளாகும்.
இஸ்லாமிய அரசியல் சிந்தனைக்கும் நவீன ஜனநாயக மாதிரிக்கு மிடையிலான அடிப்படை வேறுபாடு, இறைமை பற்றியதாகும். ஜனநாயகத்தின் ஏனைய குறிக்கோள்களை கோட்பாட்டளவில் நோக்குமிடத்து அது தன்னளவில் சிறந்ததொரு அரசியல் ஒழுங்கு என்பதில் ஐயமில்லை. எனினும், ஜனநாயகம் தனக்குத்தேவையான ஒழுக்கப்பரிமாணங்களை நிராகரிப்பதால் அதன் தோல்வி தவிர்க்க முடியாததாகிவிட்டது. அதன் கோட்பாடுகளும் தன்னளவில் முரண் படுகின்ற தன்மையைக் காண முடிகின்றது.
ஜனநாயகத்திற்கும் ஒழுக்கப்பரிமாணத்திற்கும் இடையிலான தொடர்பு யாது? எனும் கேள்வி முக்கியமானது. பிரதிநிதித்துவத் தெரிவு, ஆட்சியாளர் தேர்வு, தேர்தல் முறை என்பவற்றின் நடை முல்ற வடிவங்கள்ை நோக்குகின்ற டபது இதற்கான பதிலைக் கண்டுகொள்ளலாம். ஜனநாயக அரசியல் அமைப்பில் நிலவும் ஒரு பெரும் கோளாறு யாதெனில், ஆட்சியாளனுக்கு இருக்க வேண்டிய ஒழுக்க வாழ்வும் தார்மீக நிலைகளும் கருத்தில் கொள்ளப்படாமையாகும். இதனால் யாருக்கெல்லாம் செல்வாக்கும் செல்வமும் உள்ளதோ அவர்களெல்லாம் அரசியல் ஆசனத்தில் அமர்ந்து கொள்ள முடிகின்றது. பாதாள உலக கும்பல்களுக்குக் கூட பாராளுமன்றத்தின் கதிரைகளை வாங்க முடிகின்றது. ஊழல்,
 

கறுப்புச்சந்தை, கழுத்தறுப்பு, கொள்ளை என்பவை ஜனநாயகத்தினதும் அதனது பிரதிநிதிகளதும் பண்புகளாகி விடுகின்றன. அரசு எனும் நிறுவனம் மக்கள் நலன்களை பேணுவதற்குப் பதிலாக தனிப்பட்ட நபர்களின் இலாபம் தேடும் சந்தையாக மாறிவிடுகின்றது. செல் வாக்கும் அதிகார பலமும் உள்ளவர்களின் மோசடிக்களமாக அது ஆகிவிடுகின்றது. இதன்விளைவாகவே நவீன ஜனநாயகத்தைப் பற்றி கலாநிதி தாஹா ஜாபிர் அலவானி அவர்கள் குறிப்பிடும் போது: 'அரசு பற்றிய கோட்பாடுகளுள் ஜனநாயகம் சிறந்தது என்பதில் ஐயமில்லை. எனினும், சர்வதேச உலகில் ஜனநாயகம் ஏன் தோல்வியடைகின்றது என்று நோக்குகின்றபோது ஜனநாயகம் தனக்கு அவசியமான ஒழுக்கவியலை நிராகரித்திருக்கிறது என்ற உண்மையைப் புரிந்து கொள்ளலாம். இதற்கான மூல காரணம் ஜனநாயகத்தில் உள்ளுறையாக இருப்பது மதச்சார்பின்மையாகும் என விளக்குகிறார். இந்தக் கருத்தை பேனாட்ஷா கூட கூறிவைத்தார். அவருடைய கருத்தில் தகுதி இல்லாதவர்கள் பலர் ஊழல் மிகுந்த சிலரை தேர்ந்தெடுத்து அதிகாரம் வழங்குவதே ஜனநாயகம்`. இன்றைய ஜனநாயகத்தின் ஒட்டத்துக்கு இவ்விளக்கம் நன்கு பொருந்துகின்றது.
ஒழுக்கத் தகுதிகளோ அறிவுத்தகுதியோ சமூக நலநோக்கோ இல்லாத ஜாம்பவான்களிடம் அதிகாரம் கையளிக்கப்படும்போது ஜனநாயகக் கருதுகோள்கள் பலபோது பாசிஸமாகவும் சர்வதிகாரமாக வும் மாறிவிடுகின்றன. 1990களில் யுகொஸ்லாவியாவின் ஜனாதிபதி தனது அதிகாரங்களை பொஸ்னியாவின் அப்பாவிப் பொதுமக்கள் மீது பிரயோகித்ததனால் ஏற்பட்ட மனிதப் படுகொலைகளும் அடிப்படை மனித உரிமை மீறல்களும் இதற்கு நல்லதோர் உதாரணம். இங்கு மக்களின் சுதந்திரம், மக்களின் சமத்துவம் பற்றிய கூச்சல்களோடு வெளிக்கிளம்பிய ஜனநாயகம் ஆட்சியில் அமர்ந்துள்ள ஒரு சிலரின் நலன்களை மட்டும் பேணுகின்ற கருவியாக மாறிவிடுகின்றது. இதனால் எத்தகைய பதட்ட நிலையிலும் கொந்தளிப்பான சூழலிலும் ஆட்சியாளன் மட்டும் பாதுகாப்பாக இருக்க முடிகின்றது. ஆனால் மக்கள் பீதியிலும் அத்திலும் வாழ நேரிடுகின்றது. ஜனநாயக அமைப்பில் சுதந்திரமாக் இருப்ப வர்கள் ஆட்சியாளர்களே என்ற அரிஸ்டோட்டிலின் கருத்து நவீன தாராண்மைவாத ஜனநாயகத்தின் முகத்தில் ஓங்கி அறைகிறது.

Page 9
மேற்போந்த எடுத்துக் காட்டிலிருந்து ஜனநாயகத்திற்கும் ஒழுக் கத்திற்கும் இடையிலான இடைவெளியை அவதானிக்கலாம். அதாவது ஆட்சியாளனுக்கு இருக்கவேண்டிய தகுதிகளை நிர்ணயிப்பதற்கான எவ்வித தார்மீக அளவுகோல்களும் ஜனநாயக அரசியல் சிந்தனை யிடம் கிடையாது. இஸ்லாமிய அரசியல் சிந்தனையில் ஒர் ஆட்சியாளன் பெற்றிருக்க வேண்டிய அறிவு மற்றும் ஆன்மீகத் தகுதிகள் மிக முனைப்பாக வலியுறுத்தப்படுகின்றது. இஸ்லாமிய வரலாற்றில் மிக ஆரம்பகாலம் தொட்டே அதனை நடைமுறையிலும் இஸ்லாம் செயற்படுத்திக் காட்டியது.
மேற்கத்தேய ஜனநாயக முரண்பாடுகள் ஆள்பவர்களும் ஆளப்படுபவர்களும் சமமானவர்களா?
மேலைத்தேய ஜனநாயகத்தின் ஆதிகர்த்தாக்களான ரூஸோ, டேவிட் ஹியூம், மொன்டஸ்கி ஆகியோர் `மக்களுக்காக மக்கள் தெரிவு செய்யும் மக்களாட்சியே ஜனநாயகம்` என வரையறை செய்தனர். இதுவே இன்றும் ஜனநாயகத்தின் வரைவிலக்கணமாகக் கொள்ளப்படுகின்றது. இதன்படி எவரும் எவரையுமே ஆளக்கூடாது. மற்றொருவரை ஆள்வதை நோக்காகக் கொள்ளல் என்பது ஜனநாய கத்திற்கு நேர்முரணானதாகும். எனினும் இந்த அடிப்படையை இன்றைய ஜனநாயகம் எவ்வளவு தூரம் பின்பற்றுகின்றது என்பது கேள்விக்குள்ளானது. இன்று சர்வதேச அளவில் ஜனநாயக ஆட்சி நிலவுவதாக கூறிக்கொள்ளும் எந்த நாட்டிலும் மக்கள் தமது பிரதிநிதிகளைத் தெரிவு செய்கின்றார்கள். பிரதிநிதிகள் அமைச்சரவை யைத் தேர்ந்தெடுக்க, பெரும்பான்மை ஆசனங்களைக் கைப்பற்றும் கட்சி ஆட்சிபீடத்தில் அமர்ந்து கொள்கின்றது. இங்கு பாராளுமன்ற ஜனநாயகத்தில் ஒரு பெரும்பான்மைக் கட்சி அல்லது குழு ஆளும் நிலை உருவாகின்றது. அவர்களே சட்டங்களையும் தாராள மாக உருவாக்குகின்றார்கள். ஆக, நவீன ஜனநாயகம் என்பது சூட்சுமமான ஒரு சர்வதிகார அலகாக உருமாறிவிடுகின்றது. இத னால் மக்களதிகாரம் அல்லது மக்களாட்சி என்பது ஜனநாயகத்தின் வெளிக்கவர்ச்சியாகவே உள்ளது. மக்களை மக்கள் ஆள்வதென்பது அவர்களை ஏமாற்றுகின்ற வெளிப்பகட்டாகவே அமைந்துவிடுகின்றது.
 

இன்றைய ஜனநாயக ஒழுங்கு இன்னும் சிக்கலானதோர் விடயமாக மாறி இருக்கின்றது. குறிப்பாக நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமை அப்பட்டமான சர்வதிகாரத் தன்மை வாய்ந்தி ருப்பதை அதன் நடைமுறையின் போது கண்டு கொள்ளலாம். இப்பகைப்புலத்தில் நோக்கும்போது எந்த சந்தர்ப்பத்திலும் அரசானது மேலதிகமான எந்த ஒப்புரவின்மைகளையும் திணிக்கக்கூடாது அல்லது தனது மக்களை சமமாகவும் சமத்துவமாகவும் நடாத்த வேண்டும் என்ற ஜனநாயகத்தின் குறிக்கோள் அர்த்தமற்றதாகிவிடு கின்றது.
`மக்கள் தங்களைத் தாங்களே ஆள்வது` என்ற கோட்பாடு அடிப்படையில் சாத்தியமற்றதொன்றாகும். இந்த உண்மையை மேற்கத்தேய ஜனநாயக சிந்தனையாளர்களே வெகுவாக உணர்கின்ற னர். `முற்றுமுழுதாகவே மக்களால் செய்யப்படும் ஆட்சி என்று கருதப்படுகின்ற ஜனநாயகக் கொள்கையில் ஆள்பவர்கள், ஆளப்படுப வர்களுக்கிடையிலான வித்தியாச பேதமின்மை நடைமுறைச் சாத்திய மற்றதாகும் என பேராசிரியர் அல்பிரட் கியுபென் தனது நாகரீகங்க ளின் சிக்கல் என்ற நூலில் குறிப்பிடுகின்றார். ஆள்வது ஒரு மக் கள் குழு ஆளப்படுவது மற்றொரு மக்கள் கூட்டம் என அல் பிரட் இந்தக் கருத்தை இன்னும் தெளிவுபடுத்துகின்றார். நவீன உலகின் சிக்கல் எனும் நூலிலே ஜனநாயகத்தின் மீதான அல்பிரடின் இக்கூர்மையான விமர்சனங்களை நாம் அவதானிக்கலாம்.
இஸ்லாமிய அரசியல் ஒழுங்கில் மட்டுமே இக்கோட்பாடு சாத்தியமாகின்றது. இதற்கான காரணம் ஆட்சியாளனும் ஏனைய குடிமக்களைப்போன்ற ஒரு சாதாரணப் பிரஜையாகவே இஸ்லாமிய ஆட்சியமைப்பில் கருதப்படுகின்றான். தவறிழைக்கும்போது அதனைத் தட்டிக்கேட்கவும் தண்டிக்கவும் விமர்சிக்கவும் ஒவ்வொரு பிரஜைக்கும் உரிமையுண்டு. நீங்கள் அதனைச் சொல்லாவிட்டால் உங்களில் எந்த நன்மையும் இல்லை. நாங்கள் அதனைக் கேட்காவிட்டால் எங்களில் எந்த நன்மையும் இல்லை` என உமர் பாரூக் (ரழி) ஒரு முறை கூறினார். இது ஆட்சியாளர்களுக்கு எதிராக வ்வைக் கப்படும் ஆரோக்கியமான விமர்சனங்களுக்கு இஸ்லாமியூ சியல் ஒழுங்கு மதிப்பளிக்கின்றது என்பதைப் புலப்படுத்துகின்றது.

Page 10
Ο இறைமை யாருக்கு? Co° | Ü Ü9
தாராண்மை ஜனநாயகத்தின் மிக முக்கிய அடிப்படை இறைமை மக்களுக்குரியது என்பதாகும். இதன்படி ஒரு சட்டத்தை ஆக்கவும் நீக்கவும் கூட்டவும் குறைக்கவும் மக்களுக்கே உரிமையுண்டு. கோட்பாட்டளவில் ஜனநாயகம் இதைத்தான் கூறுகின்றது. இங்கு சட்டமியற்றுதல் முற்றிலும் மக்களைச் சார்ந்ததொன்று. ஆனால் நடைமுறை ஜனநாயகத்தில் இது ஒரு அப்பட்டமான அபத்தம். ஏனெனில் இன்றைய உலக நாடுகளில் எங்கெல்லாம் ஜனநாயகம் பின்பற்றப்படுவதாகக் கூறப்படுகின்றதோ அங்கெல்லாம் சட்டத்தை ஆக்குபவர்கள் ஒன்றில் ஆளும் கட்சியாக அல்லது பெரும்பான்மை இனமாகவே இருக்கின்றார்கள். இன்னொரு வார்த்தையில் கூறுவ தாயின் இன்றைய நிலையில் பாரம்பரிய பாராளுமன்றங்களே ஜனநாயகத்தின் சட்டமியற்றும் கருவியாக தொழிற்படுகின்றது.
ஜனநாயகம் பற்றிய பிரச்சினையில் அல்லது சட்டவாக்கத்தில் பாராளுமன்ற அரசாங்கம் பலபோது தவறான பாதைக்கு இட்டுச் செல்லும் தீர்வாகவே அமைந்துவிடுகின்றது. ஏனெனில் ஜனநாயகம் என்பதன் கருத்து மக்களின் அதிகாரமே ஒழிய அவர்கள் சார் பாக இடம்பெறும் அதிகாரமாகாது. உண்மையான ஜனநாயகம் மக்கள் பங்கு கொள்வதனாலேயே வெற்றியளிக்கின்றது. மக்களுடைய பிரதிநிதிகள் உண்மையான மக்கள் அதிகாரத்தை பிரதிநிதித்துவம் செய்யவில்லை என்பதையே ஜனநாயகத்தின் நடைமுறை காட்டு கின்றது. இதற்கு மாறாக பாராளுமன்றங்கள் அதிகாரத்தைப் பெறுவதிலிருந்தும் மக்களுக்கும் அதிகாரச் செயற்பாடுகளுக்குமிடை யில் எழுப்பப்பட்டதொரு சட்டபூர்வமான தடைச்சுவராகவே இருந்து வருகின்றன.
இதனை இன்னும் நாம் விளங்க வேண்டுமாயின், சட்டவாக்கம் எனும் பகுதியை நோக்க முடியும் பாராளுமன்றங்கள் பலபோது இயற்றும் சட்டங்கள் மக்கள் நலனைப் பேணுவதற்குப் பதிலாக அவர்களது முதுகெலும்புகளை முறித்துவிடுகின்றன. ஜனநாயக நாடுகளில் நிலவும் வரிச்சட்டங்களின் இறுக்கமும் நெருக்குதல்களும் மக்களைப் பாரியளவு பாதிக்கின்றன. இதுபோன்று ஏனைய சட்டவாக்கப்பகுதிகளிலும் மக்கள் மீதான சுமையை அரசாங்கம்
 

ஏற்படுத்தி விடுகின்றது. இதனால் இன்றைய ஜனநாயக நாடுகளில் மக்களுக்கு எஞ்சியிருப்பது ஜனநாயகத்தின் வெளிப்பகட்டான வாக்குப்பெட்டிகளில் வாக்கைச் செலுத்துவதற்குக் காத்திருக்கும் நீண்ட மக்கள் வரிசைகளே. பாராளுமன்றங்கள் இயற்றும் சட்டங்கள் மக்களின் ஆதரவைப் பெற, மக்களை அழிவுச் சக்திகளிலிருந்து காக்க சர்வஜன வாக்குரிமைக்கு இடம் கொடுக்க வேண்டும் என இத்தாலிய அரசியல் சிந்தனையாளர் மாஸ்னி வலியுறுத்துகின் றார். அரசு என்பது மக்களின் நலன்களுக்காக உழைக்கும் ஒரு நிறுவனம் என்ற பன்மைவாதிகளின் கருத்தின்படி ஒரு ஜனநாயக அரசியல் அமைப்பில் இயற்றப்படும் சட்டங்கள் மக்களது வாக் கெடுப்புக்கு உட்படவேண்டியது அவசியமாகும். ஆனால், இன்று இது மறுக்கப்படுகின்ற சூழலையே நாம் ஜனநாயக நாடுகளில் காண்கிறோம். இங்கு இறைமை மக்களுக்கு வழங்கப்படவில்லை. மாறாக சுரண்டல் சக்திகளின் நலன்காக்கும் கருவியாக அது மாறிவிடுகின்றது.
மக்கள் நலனை நிர்ணயிப்பதற்கான அளவுகோல் எது?
மக்களுக்காகவே அரசு என்ற குறிக்கோளின் அடிப்படையில் சட்டங்களை ஆக்கும் பாராளுமன்றங்கள் மக்கள் சார்பாக செயற் படும்போது மக்களின் நலனை வரையறுப்பதில் பெரும் சவால்களை எதிர்நோக்குகின்றன. இது ஜனநாயகத்தில் தன்னளவிலான முரண் பாடுகளை தோற்றுவிக்கின்றது. மக்கள் நலன்களை நிர்ணயிப்பது யார்? அல்லது எது? என்பது ஒரு ஜனநாயக அமைப்பில் பெரும் அறைகூவலாகவே இருந்து வருகின்றது. தங்களது நலன் எவை? என்பதை மக்களோ மக்களுக்கான நலன்கள் இவைதான் என பாராளுமன்றங்களோ சட்டவாக்கக் கொள்கைகளை வரையறை செய்ய முனைகின்றபோது இவ்விரு தரப்பினர்களுக்குமிடையில் மோதல்களும் நெருக்கடிகளும் ஏற்படுகின்றன. மக்கள் நாட்டம் கொள்ளும் அனைத்திலும் ஏதோவொரு நலன் இருக்கும் என்பது ஒர் எளிய உண்மையாகும். அந்த நலனின் தீங்கு ஒரளவு இருப்பினும் கூட இதுபோன்று அரசியல் சமூக கலாசார, பெளதீக ரீதியான சில நலன்களைக் கருத்தில் கொண்டு அரசு சில விடயங்களை மக்களுக்குத் தடை செய்யலாம். அவற்றுள் சில பொது நலன்களைப் பாதிப்பதாக அமைந்திருந்தாலும் கூட
த்துவத்தின் தோல்வி z

Page 11
இத்தகையதொரு நிலையில் மக்களின் நோக்கில் நலன் பற்றிய கருத்தும் அரசின் நோக்கில் நலன் பற்றிய கருத்தும் முரண் படுவதற்கான சூழல் ஏற்படுகின்றது. இதற்கான மாற்றுத்தீர்வு யாது என்பது ஜனநாயகத்தைப் பொறுத்தமட்டில் ஒரு சவாலே.
சில தசாப்தங்களுக்கு முன்னர் அமெரிக்காவில் மதுவிலக்குச் சட்டம் அரசினால் அமுலுக்கு வந்தது. உடல் ஆரோக்கியத்துக்கு தீங்கு விளைவிக்கக்கூடியது என்ற விஞ்ஞான நோக்கிலேயே இவ்மதுவிலக்குச் சட்டம் நடைமுறைக்குக் கொண்டு வரப்பட்டது. எனினும், இச்சட்டவாக்கத்தின் பின்னர் அதிகமான தொகை மக்கள் அந்நாட்டில் மது அருந்தத் தொடங்கினார்கள். கள்ளச் சாராயம் அதிகளவில் கையாளப்பட்டது. இச்சட்டத்தை நீக்குமாறு பல அரச சார்பற்ற நிறுவனங்கள் ஆர்ப்பாட்டத்தில் குதித்தன. இந்நெருக்கடிகளுக்கு முகங்கொடுக்க முடியாத அமெரிக்க அரசு இச்சட்டத்தை ரத்துச் செய்துவிட்டு மதுவை சட்டபூர்வமாக அருந்துவதற்கு அனுமதி வழங்கியது. முற்றுமுழுதான அதிகாரம் மக்களுக்கே என பிரகடனப்படுத்தும் ஜனநாயகம் எதிர்கொள்ளும் ஒரு பெரும் சிக்கலே மக்கள் நலனை நிர்ணயிக்கின்ற அளவுகோள் எது என்பதாகும்.
இன்று பிரான்ஸ், ஜேர்மனி ஆகிய நாடுகளில் ஒருபாலுறவு சட்டபூர்வமாக்கப்பட்டுள்ளது. இதன்விளைவாக அந்நாடுகளில் எயிட்ஸ் மிகப்பெரும் அச்சுறுத்தலாக உருவெடுத்துள்ளது. இங்கு மனித இயல்புகளையும் பலயினங்களையும் மனோஇச்சைகளையும் மிகச் சரியாகப் புரிந்து வைத்துள்ள ஒரு சக்தியினாலேயே மனித நலன்களை மிகச் சரியாகவும் பொருத்தமாகவும் நிர்ணயிக்க முடியும். அந்த சக்தி எது என்பதே இங்குள்ள கேள்வியாகும். மட்டுமன்றி சட்டவாக்கத்தில் சில அடிப்படையான கட்டுப்பாடுகளும் வரம்புகளும் இருத்தல் வேண்டும் அவை சுதந்திரத்தின், அதிகாரத்தின் இறுதி எல்லைகளாகவும் அதேவேளை மனித இயல்புகளோடு ஒன்றித்துச் செல்வதாகவும் அமைய வேண்டும். இவை நவீன தாராண்மைவாத ஜனநாயகத்தில் எவ்வளவு தூரம் உள்ளது என் பதே முக்கிய பிரச்சினையாகும்.
ஆட்சியாளனையோ அமைச்சரவையோ தீர்மானிக்கின்ற வழிமுறை யாக ஜனநாயகத்தில் தேர்தல்கள் விளங்கினாலும் தேர்தலுக்கான
 

ஜனநாயகம் மேற்கில் படுதோல்வியடைந்து விட்டது. தேர்தல் காலம் என்பது வன்முறைகளும் ஊழல்களும் உச்சகட்டம் நிகழ்கின்ற களமாக மாறியுள்ளது. ஆட்சியாளனுக்கு நியமனக்கட்டணம் செலுத் தல் மட்டுமே தகுதி என ஜனநாயகம் கருதுவதால் பலபோது பெரும் திருடர்களும் பாராளுமன்ற ஆசனங்களைக் கைப்பற்றி விடுகிறார்கள். `தங்கத்தைத் திருடியவன் சிறையில் வைக்கப்படுகிறான். ஆனால் நாட்டையே திருடியவன் பாராளுமன்றத்தில் வைக்கப் படுகிறான்’ என்ற ஒரு ஜப்பானியப் பழமொழி மிகத்தெளிந்ததொரு உண்மையாகும். கட்சி அரசியலில் இது இன்னும் அதிகமாகும். பிரச்சார மேடைகள் அவதூறு மன்றங்களாகவும் எதிர்கட்சிக்காரர்கள் பரமவிரோதிகளாவும் வாக்காளர்கள் கடவுளர்களாகவும் ஆகிவிடுவ தால் உண்மையான மக்கள் அபிப்பிராயத்தைப் பெறுவது தேர்தல் ஜனநாயகத்தில் குதிரைக்குக் கொம்பாகி விடுகிறது. அதிகாரத்திலுள்ள அரச இயந்திரம் தன்னிடமுள்ள எல்லா அதிகாரங்களையும் உச் சளவில் பயன்படுத்தி மீண்டும் ஆட்சியைத் தக்கவைத்துக் கொள்வதற் கான பிரயத்தனங்களை லாவகமாக மேற்கொள்ள முனைகின்றது.
Tஜனநாயகம் எனப்படுவது நமக்கு வாக்குத் தேவைப்படும் போதெல் லாம் நம்மால் மக்கள் முன் ஒதப்படும் மந்திரமே... என்ற ரொபட்டின் வாசகம் ஒரு பெரிய உண்மையாகும். வாக்களித்தவனின் விரலில் குத்தும் கரும்புள்ளி தேர்தலின் பின்னர் அவனது முகத் தில் பூசப்படவிருக்கும் கரிக்கு முன்னுரையாகிறது. ஆகவே ஜனநாய கத்திலே தேர்தல்கள் மக்கள் அபிப்பிராயத்தைப் பெறுவதற்கான வழிமுறையாக அமைவதில்லை.
ஜனநாயக அமைப்பில் சிறுபான்மை
பதினெட்டாம் நூற்றாண்டின் முதற்கூறுகளில் ஜனநாயக சிந்தனை களைகட்டியபோதும் இன்று வரை ஜனநாயகம் நிலவும் எந்த நாட்டிலும் குறிப்பாக மேற்கு நாடுகளில் சிறுபான்மையினரது சிவில், அரசியல் உரிமைகள் மிகச்சரியாக பேணப்பட்டு வரவில்லை. ஐரோப்பாவின் பல்லின சமூகங்கள் வாழும் தேசங்களில் இனவாதம் மேலெழுந்து உள்நாட்டு நெருக்குவாரங்கள் கூர்மையடைந்தபோது சிறுபான்மையினரின் உரிமைகளை அங்கீகரிப்பதே நெருக்கடியைத் தீர்பதற்கான வழி என்ற கருத்து பலமாக முன்வைக்கப்பட்டது.

Page 12
ஐரோப்பிய காலனித்துவத்திலிருந்து அரசியல் சுதந்திரம் பெற்ற மூன்றாம் உலக நாடுகளில் இத்தகைய இனங்களுக்கிடையிலான உள்நாட்டு முரண்பாடுகளையும் மோதல்களையும் சிறுபான்மை இனங்களின் போராட்டமாகப் பார்க்கும் உலக நோக்கு 1960களில் முனைப்புப்பெற்றது. மேற்கு நாடுகளிலும் ஜனநாயகம் பின்பற்றப் படுவதாகக் கூறப்படும் பிராந்தியங்களிலும் பெரும்பான்மை இனங் களே அரச இயந்திரத்தின் காவலாளிகளாகவும் தலைமைகளாகவும் செயற்பட்டு வருகின்றன. ஆதலால் சமகால பாராளுமன்ற ஜனநாய கம் என்பது பெரும்பான்மையான அல்லது பெரும்பான்மை இனத்தின் ஜனநாயக ஆட்சியையே பிரதிபலிக்கின்றது. இவ்வாறான நெருக்கடிகளுக்கு இருபதாம் நூற்றாண்டின் கடைசிப் பகுதியில் ஜனநாயகம் வேறு ஒரு வகை தீர்வினை முன்வைத்தது. அதுவே பங்குபற்றல் ஜனநாயகம் (Participatory Democracy) எனும் மாற்றினை அங்கீகரித்தது. எனினும், பங்குபற்றல் ஜனநாயகம் கூட நடைமுறை யில் வெற்றியளிக்கவில்லை என்றே சர்வதேச அரசியல் ஆய்வாளர்கள் கருதுகின்றார்கள். ஐக்கிய அமெரிக்காவில் நிலவும் கறுப்பின ஒதுக்கல் கொள்கையும் அயர்லாந்து தொடர்பிலான ஐக்கிய இராச்சியத்தின் நிலைப்பாடும் இதனை நன்கு தெளிவுபடுத்துகின்றது.
மூன்றாம் மண்டல நாடுகளிலும் ஜனநாயகம் எழுப்பும் சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் போன்ற வெற்றுக் கோஷங்கள் அர்த்தமற்றதாக ஆகியுள்ளன. அரசியல் ரீதியாக சுதந்திரம் அடைந்த இந்நாடுகளில் பாராளுமன்ற ஜனநாயகம் என்பது உண்மையில் அதிக எண்ணிக்கை கொண்ட மக்கள் குழுவிடம் அல்லது இனத்திடம் காலனித்துவ நாடுகள் ஒப்படைத்துப்போன ஜனநாயக மாகவே விளங்குகின்றது. அங்கு காலனித்துவவாதிகள் ஒரு தேசத்தின் எல்லா மக்களையும் அனுசரித்துச் செல்கின்ற ஜனநாயக மாதிரி யொன்றை விட்டுச் செல்லவில்லை. இதனால் இனத்துவ அடை யாளம், குறியீடுகள் என்பன நுண்ணிய எல்லைகளால் வரையறுக்கப் பட்டதோடு சிறுபான்மை எனும் அடைமொழி சார்ந்த பிரச்சினை கள் பாரியளவில் தலைதூக்கின. குழுப் பாரம்பரியமும் மொழியும் மதமும் இந்நாடுகளில் பிரதானப்படுத்தப்பட்டு சிறுபான்மைகள் அரசியல் ரீதியாக ஒதுக்கப்படுவதற்கு இது காரணமாக அமைந்தது.
இவ்வெடுத்துக்காட்டிலிருந்து நாம் விளங்கிக் கொள்ளும் உண்மை யாதெனில், ஜனநாயகத்தில் சிறுபான்மை தொடர்பிலான நேர்மை
IO.
 

யான நிலைப்பாடு இல்லை என்பதாகும். ஒரு குறிப்பிட் (i லைக்குட்பட்டு வாழும் மக்கள் அனைவரும் சமமான உரிமைகளை அனுபவித்து வாழ நவீன ஜனநாயக அரசாங்கங்களின் கீழ் எந்த உத்தரவாதமும் கிடையாது. பெரும்பான்மைக்கு முன்னுரிமை என் பதை ஏற்றுக்கொண்டாலும் சிறுபான்மையினருக்கு அவ்வுரிமை எவ்வாறு மறுக்கப்பட முடியும் என்பதே இங்குள்ள பிரச்சினையா கும். இதனால் பங்குபற்றல் என்பது வெறும் பம்மாத்தான ஒன் றாகி விடுகிறது. இன்று உலகில் கம்போடியா, பர்மா, தாய்லாந்து, சீனா, ரஷ்யா, அயர்லாந்து, இந்தியா, இலங்கை போன்ற நாடுகளில் சிறுபான்மை இனங்களுக்கும் பெரும்பான்மை அரசாங்கங்களுக்கு மிடையிலே அரசியல் உரிமைகளுக்கும் தனிநாட்டுக் கோரிக்கைக்கு மான போராட்டங்கள் வலுத்து வருகின்றன. ஆனால் ஜனநாயகம் வலியுறுத்துகின்ற சுயநிர்ணயம் என்பது இந்நாடுகளில் கேலிக்கூத்தாகி இருக்கிறது. ஆக, எந்த தேசத்திலும் பங்குபற்றல் ஜனநாயகம் திருப்திகரமானதாக அமையவில்லை. ஏனெனில் சிறுபான்மையினருக்கு தகுந்த அதிகாரப் பகிர்வும் உரிமைகளும் அந்நாடுகளில் வழங்கப்பட வில்லை. இவ்வாறான ஒரு சூழலில் ஜனநாயகம் வலியுறுத்துகின்ற சமத்துவமும் சுதந்திரமும் சகோதரத்துவமும் வெற்றுக் கோஷங் களாகவும் ஏமாற்றாகவும் சுரண்டல் சக்திகளின் அதிகாரக் கருவிக ளாகவுமே விளங்குகின்றன.
எனவே, நவீன ஜனநாயக அரசியல் குறித்து நுண் தளங்களிலான விமர்சனச் சிந்தனைகளை பகிர்ந்து கொள்வதோடு மட்டுமன்றி அதற்கப்பால் ஜனநாயகத்திற்கான பயனுறுதி வாய்ந்த ஒரு அரசியல் மாற்று தொடர்பில் உலக அரசியல் புலமைத்துவவாதிகள் தீவிரமாக சிந்திக்க கடமைப்பட்டிருக்கிறார்கள்.
துணை நின்றவை * கலாநிதி அப்துல் வஹாப் மிஸைரி - மேற்கத்தேயப்
பார்வையினூடாக உலகம் (அல் ஆலம் மின் மன்ழுரின் கர்பிய்யி) * கலாநிதி முனிர் ஷபீக் - மேற்கத்தேய அனுபவத்தில் ஜனநாயகமும்
மதச்சார்பின்மையும் ஓர் இஸ்லாமியப் பார்வை கட்டுரை முஜ்தமஃ சஞ்சிகை. 1498 * கலாநிதி இஸ்லாயில் பாரூக்கி - Islamization of Knowledge -
General Principals and Ground plan)
George H.Sabine - A History of Political Theory 1956

Page 13
பின்நவீனத்துவம்
சில விமர்சனக் குறிப்புக்கள்
No man was ever yet a great poet without being at the same time a profound philosopher- 6rGăTp Goldridge Gð7 GunTF5Lb g)Goj:6uugëĝSG&T உண்மையான நோக்கத்தையும், தாக்கத்தையும் புலப்படுத்துகின்றது. எனினும் இலக்கியம் பயணித்து வந்த வரலாற்றுப்பாதையில் இந்த உண்மை சிலபோது மறக்கடிக்கப்படுவதுண்டு விளைவாக, மானுடத்தின் முன்னோக்கிய வளர்ச்சிப் போக்கிற்கும் இலக்கியத்தின் சமூகப்பங்கிற்குமான இடைத்தொடர்பு புறந்தள்ளப்படுவதுண்டு. இலக்கியம் என்பது மனித இனத்தின் அனைத்துலக மொழி, குறிப்பிட்ட கலாசார, பண்பாட்டு வரையறைகளின் கட்டுப்பாடு களைக் கடந்து மனித இனத்தின் விருப்பு, வெறுப்பு, வேட்கை, குறிக்கோள், எழுச்சி, வளர்ச்சி என்பவற்றை அது எதிரொலிக்கின்றது. எனவேதான், சமுதாயத்தின் இலட்சியவாதமும், சுதந்திர தாகமும் இலக்கியத்தின் கருப்பொருளாக இருந்து வந்துள்ளதை நவீன கால வரலாற்றில் கூட காண்கின்றோம்.
 
 

இந்த வகையில் கடந்த கால வரலாற்றின் எல்லாக் காலப் பகுதியிலும் தோன்றிய சமூகவியல் சிந்தனைகளும், கோட்பாடுகளும் இலக்கியத்திற்கான கருப்பொருளையும், உள்ளிட்டையும், செல்நெறி யையும், அமைப்பியலையும் நிர்ணயிப்பதில் பரஸ்பரம் முண்டியடித் துக் கொண்டு முன்னேறி வந்துள்ளன. அந்த வரிசையிலே இலக் கிய உலகம் பல்வேறு காலப்பகுதியிலும் பல்வேறு இலக்கியக் கோட்பாடுகளைச் சந்திக்க நேர்ந்தது. அவற்றுள் சில சத்திழந்து, சாரமிழந்து செத்துவிட்டன. இன்னும் சில உயிர்த்துடிப்போடும் உத்வேகத்துடனும் உலாவருகின்றன. இருப்பியல்வாதம் (Existentialism), இயற்கைவாதம் (Naturalism), எதிர்காலவாதம் (Futuralism), கட்டமைப்புவாதம் (Structuralism), அகயதார்த்தவாதம் (Surrialism), (sóluf" G GunTg5b (Simbolism), gyp&#FTřiřLGunTg5b (Moral Relatism), பழைமைவாதம், நவீனத்துவம், பின்நவீனத்துவம் (Post Modernism), என்பன அவற்றுள் முதனிலை வகிக்கின்றன.
மேற்போந்த கோட்பாடுகளில் பல மேற்கத்தேய தத்துவங்களின் அடியாக எழுந்த சிந்தனைகளைப் பிரதிநிதித்துவம் செய்கின்றன. ஏனெனில் அவை மேற்கத்தேய கலாசார சூழலிலிருந்து தோன்றியவை யாகும்.
நவீன கால மெய்யியல் வரலாற்றில் கூட இலக்கியம் குறித்த நான்கு முக்கிய கோட்பாடுகள் முன்மொழியப்படுகின்றன.
1. g .6007fd3d G5ITGita0.5 (Emotional theory) 2. Lily' 3.5G)5(TGiró05 (Revolutionary theory) 3. ஒழுக்கக்கொள்கை (Moral theory)
4. கலை கலைக்காகவே எனும் கொள்கை (Art for Art shake)
இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் அகயதார்த்தவாதம் (Surialism) கணிசமான செல்வாக்குச் செலுத்தியது. எனினும் சிந்திக் காதே, ஆராயாதே உள்ளத்தின் அக உணர்வுகளோடு பேனையையும் தூரிகையையும் இணைத்து விடு. அங்கேதான் கலை இலக்கியம் ஊற்றெடுக்கிறது என்னும் அதனது உள்ளடக்கம், சழுதாயப் பண்பாட்டு விழுமியங்களுக்கும் உட்பொருளுக்கும் முக்கித்துவம் கொடுக்கத் தவறியதால் அக யதார்த்தவாதம் தனது "ஊடுருவலை முற்றாக இழக்க நேரிட்டது.

Page 14
தொடர்ந்துவந்த காலப்பகுதியில் கற்பனாவாதமும், யதார்த்தவாத மும் இலக்கியம் குறித்த இருபெரும் சர்ச்சைக்குரிய வாதங்களாக மாறின. சமூகமாற்றம், சீர்திருத்தம், உருவாக்கம் (Construction) என்பவற்றுக்கு எவ்வித முக்கியத்துவமும் அளிக்காததால் கற்பனா வாதத்தின் செல்வாக்கிலும் தேய்மானம் ஏற்பட்டது. இதே காலப் பகுதியிலே மேற்கிலும், கிழக்கிலும் நவீனத்துவ சிந்தனைகள் ஆழ வேரூன்ற ஆரம்பித்தன. இலக்கிய வரலாற்றில் சர்வ வியாபகத் தன்மை (Globalized) எய்திய ஒரு முக்கிய கோட்பாடே நவீனத்துவம் (Modernism) என்பது மிகையல்ல.
செவ்விலக்கியப் பண்புகளை அடிப்படையாக வைத்து டிஎஸ், எலியெட் முன்னிறுத்திய இலக்கிய வரையறைகளை நவீனத்துவப் படைப்பாளிகள் பெரும்பாலும் ஏற்றுக் கொண்டனர். இறுக்கமும், குறிப்பமைதியும் கொண்ட படிமம், தேவைக்கு மேலான வார்த்தைப் பிரயோகமின்மை, மிகைப்படுத்தலின்மை (Non EXraggrative) என்பன இதன் சிறப்புப் பண்புகளாகும்.
மனித வாழ்க்கையோட்டத்தில் பத்தொன்பதாம் நூற்றாண்டில் ஏற்பட்ட பல சிறந்த எதிர்பார்க்கைகள் இருபதாம் நூற்றாண்டில் தளர்ந்தன. உலகில் பல புதிய தேவைகளினால் ஜனநாயக முறை உருவானபோது ஏற்பட்ட உற்சாகம் குறைந்து கொண்டு சென்றது. எனவே, இலட்சியவாதத்திற்குப் பதிலாக சரிவுகளை அணுகி ஆராய்வதில் படைப்பாளிகளின் கவனம் திரும்பிற்று. அதற்கு நவீனத்துவம் பெரிதும் கைகொடுத்தது. ஒவ்வொரு மொழியும் பல நவீனத்துவ வடிவங்களைப் பெற்றன. மனித வாழ்வின் சிதி லங்களையும், சிதைவுகளையும் இலக்கிய வடிவங்களுடே காட்சிப் படுத்தப்படலாயிற்று. நவீனத்துவத்துக்கு பின் வந்த காலமான சமகால உலகின் (Contemperory World) இலக்கிய வடிவமாக பின் நவீனத்துவம் (Post Modernism) முகம் காட்டத் தொடங்கியுள்ளது. மேலைத்தேய நாகரிகத்தையும், கலாசாரத்தையும் உள்வாங்கிய பின்நவீனத்துவம் ஒரு தனித்த இலக்கியப்போக்கு என்று கருதப் பட்டாலும் இதன் அடக்குமானம் சில பலவீனப் புள்ளிகளைக் கொண்டுள்ளதாக விமர்சனவியலாளர்கள் கருதுகின்றனர்.
லெஸ்லி பீட்டர் இதன் பிரதிநிதிகளில் முன்னோடியாவார். இவர் தனது `எல்லைகளைக் கடத்தல், இடைவெளியை நிரப்புதல்,
 

96ồT[5Gf’GOTgjigj Gul b`` (Cross the Border, Close the gap, Post Modernism) எனும் பிரபல்யமான கட்டுரையொன்றிலேயே பின்நவீனத்துவம் என்ற பதத்தை முதலில் பயன்படுத்தினார் எந்தெந்த குணங்கள் நவீனத்துவ இலக்கியப் போக்கின் சிறப்பம்சங்களோ அவைதாம் பின்நவீனத்துவத்தின் எல்லைகள் என லெஸ்லி வரையறை செய்தார். நவீனத்துவ இலக்கியப் போக்கின் பலவீனங்களைக் களைந்து அதற்குப் பிறகு உருவான பிற அறிவுத்துறைகளையும் இணைத்துக் கொண்டு இலக்கிய ஒட்டத்தினை முன்னகர்த்திச் செல்வதற்கான தொரு முயற்சியே பின்நவீனத்துவம் என்பது இவரது கருத்தாகும். எனினும், கீழைத்தேய மொழியியலாளர்களினதும், இலக்கியவாதிகளி னதும் விமர்சனங்களை பின்நவீனத்துவம் எதிர்கொள்வது தவிர்க்க முடியாததாகி விட்டது.
பின்நவீனத்துவத்தின் வருகைக்குப் பின்னர் நவீனத்துவம் கடு மையான விமர்சனத்திற்குட்பட்டது. மாட்டின் செய்மோர் ஸ்மித் gTaitug Irfait Guide to modern world Literature' 6T657p DITGi g)5fposito, சிறந்த உதாரணமாகும். நவீனத்துவம் யதார்த்தவாதத்தைத் தாண்டிச் செல்கின்றது. அது பாரம்பரியத்தை நிராகரிக்கிறது. அத்துடன் அவமானப்படுத்தும் தன்மை கொண்டது. மனிதாபிமானத்தை புறக்கணிக்கிறது. (De humanization) என்பதெல்லாம் ஸ்மித்தின் விமர்சனக் கணைகளாகும். ஆனால் அதை விட மேலாக பின்நவீ னத்துவம் உள்ளடக்கிய கட்டுக்கோப்பும் கறாரான எதிர்வினைக ளுக்கும் நெருக்கடிக்கும் முகங் கொடுக்க வேண்டியாயிற்று.
லெஸ்லி பீட்டர் நவீனத்துவ இலக்கியப் படைப்பைத்தாண்டிச் செல்ல புதுப்படைப்பாளிகள் மூன்று விடயங்களை நிராகரிப்பது அவசியம் எனக் கருதினார்.
1. இருத்தலியல் சார்ந்த அணுகுமுறை.
2 ஜனநாயக மனிதாபிமான அணுகுமுறை (Liberal Humanism)
3. நவீனத்துவ விமர்சனப் பார்வைகள்.
இனிமேல் தேவையானது புது விமர்சனமல்ல புதுப்புது விமர் சனம்தான் (Newnew Criticism) என்றார் பீட்டர் மேலும் இலக்கியம் குறித்த எந்தப் படைப்பும் அல்லது ஆய்வும் இனிமேல் இலக்கியப் படைப்பைச் சார்ந்ததாக அமையக்கூடாது. மாறாக அவ்வாய்வு அவ்விலக்கிய முயற்சி தோற்றம் பெற்ற சந்தர்ப்ப சூழலை ஏற்

Page 15
Dyll GL15u IIT-5 GalgóTGSub. Not texual but contexual 6T657l J605 அவர் அழுத்தமாக வலியுறுத்தினார்.
எனினும் கருப்பொருள் சார்ந்த பின் நவீனத்துவக் கோட்பாடு காரசாரமாக இன்று விமர்சிக்கப்படுகின்றது. இலக்கியத்தின் அடிப்படை நோக்கையும் அகநிலையையும் புறக்கணித்துவிட்டு வெறுமனே மனித இயல்புக்கும், இலட்சியவாதத்திற்கும் தடையாக உள்ள காரணிகளை பின்நவீனத்துவம் முன்னிலைப்படுத்துவதே இவ்விமர்சனத்திற்கான காரணமாகும்.
நவீனத்துவம் அல்லது யதார்த்தவாதம் உள்ளடக்கியிருந்த அறி வார்ந்த தன்மை, தத்துவார்த்தம், தர்க்கம், என்பவற்றை இலக்கிய ஆக்கங்கள் சார்ந்திருக்கக்கூடாது. அவை கனவுகளுக்கும், தரிசன நிலைகளுக்கும், பித்து நிலைகளுக்கும் மீண்டும் முதலிடம் தர GoGoTGSub 6Taipmfir GausfugS LSL" Lit. (The dream, The Vision, The Esctacies, these have again become around the gool of literature) யதார்த்தவாதமும் நவீனத்துவமும் ஆராய்ச்சிக்கும், உபதேசத்திற்கும் அளித்த முக்கியத்துவத்தை பரவசநிலைக்குத் தரவில்லை என்று சாடினார் பீட்டர். இலக்கியம் மீண்டும் அதை நோக்கிப் போவதே பின்நவீனத்துவ இலக்கியப் போக்கின் அடிப்படையென்று அவர் வலியுறுத்தினார்.
உண்மையில் இப்பகைப்புலனில் நின்று பார்க்கையில் இலக்கியம் எந்த நோக்கத்தை மையப்படுத்தித் தோன்றியதோ அது பின் நவீனத்துவத்தால் முற்றாகப் புறக்கணிக்கப்படுவதை உணர முடியும். “Art and Literature” 6 TGörp stöffGól6iv Stalin (g5sp62w'n SGBIGAug Gurt Giv இலக்கியவாதிகள் மனித சமூகத்தின் கட்டிட கலைஞர்கள் என் பதற்கு தலைகீழ் அர்த்தம் கொடுக்க நிர்ப்பந்திக்கப்படுகின்றது. முழுப் பிரபஞ்சத்தின் சிரேஷ்ட சிருஷ்டியான மனிதன், அவனது இலட்சியவாதம், அதற்கான சுதந்திரம், உரிமைகள் என்பனவெல்லாம் இலக்கியத்திற்கான கருப்பொருளாக அமையும் விதத்தில் மனித இனத்தின் அவலங்களைக் களைந்து வாழ்க்கையை வாஸ்தவமாக்கு வதற்கான மைல்கற்களாக இலக்கியப் படைப்புகள் பயன்படவேண்டும் பயன்பட்டுமுள்ளது. சமூக சீர்திருத்தம், மாற்றம், உருவாக்கம் என்பவற்றை இறுதியடைவுகளாகக் கொண்டு ஒரு சமூகத்தின் அவலத்தையும், ஆதங்கத்தையும் விருப்பையும், வேட்கையையும்,
 

ܐ
துயரங்களையும் துக்கத்தினையும் உரத்து ஒலிக்கும் புரட்சிநாவுகளாக இலக்கியம் இலங்க வேண்டும்.
வரலாற்றை மாற்றியதில் இலக்கியமும் ஒரு காத்திரமான பாத்திரத்தை ஏற்றிருக்கின்றது என்பதை எப்படி மறுக்க முடியும். ஒரு காலத்தில் ரஷ்ய எழுத்தாளர்களது பேனைகள் ஆஸ்தியையும், அதிகாரத்தையும் அனுபவித்து பாட்டாளி வர்க்கத்தை பட்டினியால் வாட்டிய முதலாளித்துவத்தின் சட்டையைப் பிடித்து சுரண்டல் உழைப்பை சுட்டிக்காட்டி எச்சரித்தன. அதேபோல் அமெரிக்க எழுத்தாளர்களது பேனாமுனைகள் தனி மனிதனுக்கு சர்வசுதந்திரம் உண்டு என நிரூபிக்க முனைந்தன. எனவே மனித வரலாற்றை பாதித்தவற்றில் இலக்கியத்திற்கும் மகத்தான பங்குண்டு என்பதை நாம் மறுக்க முடியாது.
இப்படி நோக்குகையில் பின்நவீனத்துவத்தின் உள்ளடக்கம், போக்கு நிலை என்பன சீர்திருத்தத்திற்கு எதிராக சீர்குலைவையும் உருவாக்கத்திற்குப் புறம்பாக உருக்குலைவையுமே உருவாக்கிவிடும் தன்மையைக் கொண்டுள்ளது. வேடிக்கை (Comical) இலட்சியவாதத் திற்கான தடைக்கல்லாகவும், ஆபாச (Vulgar) பண்பாட்டுக்கெதிரான சவாலாகவும் அறச்சார்பின்மை (reverant) நன்மைக்குப் புறம்பான அறைகூவலாகவும் அமைந்துவிடும் பொழுது இலக்கியம். நிர்மாணித் தலுக்கான சாதனம் ஆகுவதற்கு பதிலாக நிர்மூலத்திற்கான கருவி களாக மாறிவிடுவது தவிர்க்க முடியாததாகிவிடும்.
மனிதன் உருவாக்கிய அனைத்துத் துறைகளுமே மனித மேம்பாட் டுக்கும் பண்பாட்டுக்குமே உழைக்கும் போது, இலக்கியம் மாத்திரம் இந்த இலட்சியத்தில் இருந்து நழுவிப்போகக் கூடாது நழுவி விடவும் முடியாது. மானிடவியல், சமூகவியல், உளவியல் போன்ற அனைத்து அறிவியல் துறைகளும் மனித வர்க்கத்தின் முன்னேற்றத் திற்காக பிரயோகிக்கப்படும் போது இலக்கியம் மனித நாகரிகத்தின் நலிவுக்குக் காரணமாக அமைவதை அங்கீகரிக்க முடியாது.
மேலைத்தேய இலக்கியப் போக்கான பின் நவீனத்தும்தான் ஒரு வகையில் மனிதாபிமானத்தை மறுதலிக்கின்றது: ஆனால், கிழக்கு தேசங்களில் இன்றும், இனிமேலும் இலக்இப்ம்' அபலை களின் அவலக்குரலாகவும் ஒடுக்கப்பட்ட மக்கள் 'குழுமங்களின்

Page 16
புரட்சி நாவுகளாகவும், சுதந்திரப் போராளிகளின் இதய ஆயுதமாகவும் புழுங்கிக் கொண்டே இருக்கிறது. இதற்கான காரணம் அவை பின்நவீனத்துவ சிந்தனையை உள்வாங்காமையே. புலம்பெயர்ந்தோர் இலக்கியம், தலித் இலக்கியம் போன்றன இதற்கு நல்ல உதாரணங் களாகும்.
பின் நவீனத்துவ இலக்கிய மாதிரிகள் ஒரு போதும் சமுதாயப் பின்புலங்களை காட்சிப்படுத்த விளைவதில்லை. மாறாக அதன் உட்பொருள் கட்டுக்கடங்காத (Barbarism) தன்மையையும் ஏற்படுத் துவது மாத்திரமன்றி படைப்பாளிகள் வன்முறைகளுக்கும், ஆபாசத் துக்கும், வக்கிரங்களுக்கும் துணை நிற்கிறார்கள். இதற்காகவே பின் நவீனத்துவப் படைப்பாளிகள் பேய்க்கதை, திகில் கதை, ஆபாசக்கதை போன்றவற்றைப் பயன்படுத்துகின்றனர். Literature is one of the Most Powerfull instrument for forming character 6T607 girSlag, திறனாய்வாளர் (Collan Marcy) குறிப்பிடுகின்றார். இத்தகைய இலக்கி யப் படைப்புகள் மனிதர்களிடம் வன்முறையுணர்வையும், போர்க் குணத்தையும் கிளர்ந்தெழச் செய்யும் தன்மை கொண்டுள்ளன.
பின் நவீனத்துவத்தின் வெகுசனக்கலாசாரப் பாதிப்பு
பின் நவீனத்துவம் மேற்கத்தேய வெகுசன இலக்கியத்துடன் (Mas Communicatioal literature) FLIDIJSFLb GoldFuigj Gole55ÍTGðITGB) ) (15GJITGØTg/ எனக் கூறப்படுகின்றது. மேற்கத்தேய நவீனத்துவம் அடிக்கடி அதன் இலக்கியப்படைப்புகள் வெகுசனங்களை விட்டு விலகி நின்றதால் அதில் அலுப்புற்ற பின்நவீனத்துவ படைப்பாளிகள் வெகுசனரசனைக் கூறுகளான காமம், திகில் என்பவற்றை தங்கள் படைப்புகளில் பயன்படுத்தத் தொடங்கினர். விளைவாக பின் நவீனத்துவப் படைப்பாளிகளின் நாவல், கதை போன்றன இவற்றைக் காட்சிப்படுத்தலாயின.
நாகரிக வளர்ச்சியும் அறிவியல் முதிர்ச்சியும் கண்ட நவீன உலகில் அனைத்துத் துறைகளும் பரிணாமங்களைத் தரிசிக்க வேண்டும் என்ற மேற்குலகின் வேணவா மனித வாழ்வின் அடிப் படை அம்சங்களிலும் பரிணாமத்தையும், மாற்றத்தையும் வலியுறுத்தி அவற்றைச் சீரழித்தது. ஒழுக்கப் பரிணாமம் (Moral Evolution)
 

என்ற மேற்கத்தேய தத்துவ விசாரணை ஈற்றில் மனிதனை எத்த கைய பெறுமானமுமற்ற ஒரு நிர்வாணப் பொருளாக ஆக்கிவிட்டது. அவ்வகை நிர்வாண நாகரிகத்தையே மேற்கத்தேய கலாசார சூழலில் உருப்பெற்ற இலக்கிய கோட்பாடும் பிரதிபலிக்கின்றது என்பதில் சிஞ்சிற்றும் ஐயமில்லை.
உண்மையில் காமமும், திகிலும் ஒரு சராசரி வாசகனின் புற வயமான சமூக வாழ்வின் ஒழுக்க விழுமியங்களுக்குக் குந்தகம் விளைவிக்கின்றதேயொழிய மனிதனை ஒர் அர்த்தமுள்ள ஜீவியாக நோக்கப் பயன்படப்போவதில்லை. பின் நவீனத்துவம் இழைத்த மிகப் பெரும் தவறு இதுவே.
மனஅழுத்தமும் = பின் நவீனத்துவமும் Depression and Post Modernism
நவீன அரசாங்கங்கள் மனித வரலாற்றில் தோன்றிய அரசுகளை விட அதிகார வர்க்கங்களை (Beroucracy) அதிகம் கொண்டவை. அடக்குமுறை, பொருளாதார நிர்வாக உரிமை, கருத்துத்தொடர்பு மேலாதிக்கம் ஆகியவற்றை அவை தம் அதிகாரத்தின் கீழ் வைத் துள்ளன. இந்நிலையில் படைப்பாளி என்ன செய்யமுடியும்? அவனுடைய பணிகள் என்ன? என்பன விடை கண்டாகவேண்டிய வினாக்களாகும். நவீனத்துவ கால கட்டத்தில் படைப்பாளிகள் எல்லாவற்றின் மேலும் நம்பிக்கை இழந்தவர்களாக இருந்தாலும் படைப்பின் மீதும் படைப்பாளர் மீதும் மிகவும் நம்பிக்கை கொண்டிருந்தனர். கவிஞனின் தனித்தன்மை, அவனுடைய சுதந்திரம் ஆகியவற்றைப் பெரிதும் நம்பியிருந்தனர்.
எனவேதான், அவர்கள் தங்கள் நோக்கத்தை அடைந்து கொள்ள முடியும் என்ற நம்பிக்கையில் மானிட குலத்தை முன்னிறுத்திப் பேசலாயினர். ஆனால் பின்நவீனத்துவப் படைப்பாளிக்கு இந்த நம்பிக்கையில்லை. சமுதாயத்திலும் மக்களிடத்திலும் அதிர்ச்சியை ஏற்படுத்துவது சாத்தியம் அற்றது என்ற அவனது நம்பிக்கையில் இத்தகைய அதிகார வர்க்கங்களது அராஜகங்களுக்கான படைப் பாளியின் எதிர்ப்பு, கோபம், வேகம் அனைத்தும் அபத்தமாகி விடுகிறது. எனவே மனப்பிறழ்வுத் தன்மையின் உந்துகணைகள்
一亦
நவீனத்துவத்தின் தோல்வி

Page 17
அவனது இலக்கியப் படைப்பில் நுழைவிக்கப்படுகின்றது. எனவேதான் பெரும்பாலான பின்நவீனத்துவப் படைப்புகளில் விரக்தி, நம்பிக்கையீனம் இழையோடுவதை அவதானிக்கலாம்.
பின் நவீனத்துவப் படைப்புகளில் ஆங்கிலம் வழியாக 66D), LuLu Guibgó)6iv GGv6iv Gó) l f” ffi GỗT “Waiting for the end” (முடிவுக்காக காத்திருத்தல்) ஜாய்ஸ் கரோல் ஏட்ஸ் எழுதிய Matter and Energy' (fL(plb Faii.5uylb) LITGofugi) 6iuGLITGir எழுதிய "The Suicide Acadamy (தற்கொலைக் கழகம்) என்பவற்றைக் குறிப்பிட முடியும்.
மேற்குறிப்பிட்ட அனைத்துப் படைப்புகளும் நவீனத்துவத்தில் இல்லாத இன்னொரு குறைபாட்டைக் கொண்டிருப்பதாக ஆங்கிலத் திறனாய்வாளர் அங்கலாய்க்கின்றனர். அதுவே இறுக்கமான மொழிநடையும் கருத்து நிலைச் சிக்கலுமாகும். இதனால் வாசகர்கள் சிலரிடம், வாசித்து விளங்காவிடினும் தானும் வாசித்துள்ளேன் என்ற தாழ்வு மனப்பான்மையை பின்நவீனத்துவப் படைப்புகள் தோற்றுவிக்கின்றன. அதேபோல் மிக நுட்பமான மொழி அமைப்பியலையும் குறையீட்டியலையும் இவை பயன்படுத்தியுள்ளன. மற்றும் குறிப்பிட்ட ஒரு சூழலை மாத்திரம் இவை விழித்துப் பேசுகின்றன. நவீனத்துவ இலக்கிய அமைப்புகள் போன்று மனித இனத்தையே விழித்துப் பேசும் பண்பு இவற்றில் அறவே இல்லை. பன்முகத்தன்மை பின்நவீனத்துவப் படைப்பில் இல்லாத நிலை அதன் மற்றொரு குறைபாடாகும்.
எது எவ்வாறிருப்பினும் பின்நவீனத்துவ இலக்கியப் போக்கு கணிசமான செல்வா க்கை கிழக் கத்தேய நாடுகளில் பெற்றுக்கொள்ளவில்லை. எமது அயல்நாடான இந்தியாவில் கூட சமூக சீர்திருத்த நாவல்கள், கவிதைகள் பெரும்பாலும் யதார்த்தவாதத்தைச் சார்ந்தே வெளிவந்து கொண்டிருக்கின்றன. மறுபுறம் நவீனத்துவ அலைகளே இந்திய மொழிகளில் வலுவாக வீசிக் கொண்டிருக்கின்றன. நவீனத்துவம் இந்தியாவின் சுதந்திர தாகத்திலும் சுதந்திரத்துக்கான போராட்டத்தை வழிநடாத்துவதிலும் அதற்குரிய பங்கினை ஆற்றியிருக்கின்றது. மனித சமத்துவத்தையும் தார்மீக சரிவுகளையும் முன்னிறுத்திப் பேசுவதில், விவாதிப்பதில் நவீனத்துவம் ஒரளவு முன்னிற்கின்றது. ஆனால் பின்நவீனத்துவம் சூழல் மீது அக்கறையோ சூழல் மீது பிடிப்போ இல்லாத விமர்சனங்களை வெறும் மேற்கத்தேய போக்குக்கூடாக அறிமுகப்
 

படுத்துகின்றது. பின்நவீனத்துவம் உருவாகக் காரணமாக அமைந்த மேற்கத்தேய சமூக சூழல் கிழக்கத்தேய சமூக சூழல், பண்பாடு, கலாசாரம், நாகரீகம் என்பவற்றிலிருந்து முற்றிலும் மாறுபட்டதாகும். பொருள் முதல் வாதத்தையும் பயனிட்டு வாதத்தையும் (Utilierialism) அடிப்படையாகக் கொண்ட மேற்கு நாகரீகம் மதத்தையும் தனிமனித சமூக நலன்களையும் அனுசரிக்கும் கிழக்கத்தேய நாடுகளின் மீது திணிக்கும் ஒரு கலாசார மேலாதிக்கத்தின் (Cultural Hegemony) பிரத்தியட்சமான வெளிப்பாடே பின்நவீனத்துவ இலக்கியப் போக்கு என்பது மிகையன்று.
இலக்கியம் உட்பட அனைத்தையும் வர்த்தகத்தன்மை கொண்ட நுகர் பொருளாகக் கருதும் மேற்கு நாகரீக வாழ்க்கை முறை (LifeSystam) எப்போதும் தனது சிந்தனையை சர்வமயப்படுத்தவே (Globalization) முனைகின்றது. அதற்கான மற்றொரு ஊடகமாக இன்று பின்நவீனத்துவம் என்ற மறைகரத்தைப் பிரயோகிக்கின்றது. இதன் மூலம் மேற்குலகில் தோன்றிய அனைத்து இலக்கியவாதிகளும் மனித வாழ்விற்குப் பாதகமான அம்சங்களையே முன்னிறுத்தினர் என்று பொருள் அல்ல. பலர் சிறந்த ஆக்க இலக்கியங்களின் முக்கியத்துவத்தையும் முன்மொழிந்துள்ளனர்.
“The Great Poets are Judged by the Frame of Mind they induce” 6T657 of Ji, glu Emenson, The Fundemental of Poem is the Criticism of life at airp Arnold ஆகியோர் மேற்கத்தேய இலக்கியப் பிரதிநிதிகளே. எனினும் சமுதாயத்தின் முன்னோக்கிய வளர்ச்சிப் போக்கிற்கும் இலக்கியத்துக்கு மிடையிலான இன்றியமையாத தொடர்பை உணர்த்தியவர்களுள் இவர்கள் முக்கியமானவர்கள். எனவே பின்நவீனத்துவ இலக்கியப் போக்கை கீழைத்தேய நாடுகளின் படைப்பாளிகள் உள்வாங்குவது எப்போதும் பாதகமான சூழலையே உருவாக்கி விடும். ஏனெனில், நாம் முன் குறித்துக் காட்டியது போல் பிரபஞ்சம் மனிதன் வாழ்க்கை ஆகியவற்றை சத்தியம், உண்மை, நன்மை என்பவற்றோடு இணைத்து உருவாக்கப்படுவதே உண்மையான இலக்கியம் கவிஞர்கள் பயனற்றவர்கள் அவர்களை நாடு கடத்த வேண்டும் என்று கண் டித்த பிளேட்டோ, கவிஞர்கள் ஒருவகையில் ஞான ஆசி கள் என்று அவர்களைச் சிலாகித்தது சமூக மேம்பாட்டிற்கும் க்கியத் திற்கும் இடையிலான இணைப்பை புடம் போட்டுக்கோட்டுகிறது.

Page 18
தகவல் பயங்கரவாதம்
இந்த யுகத்தின் மிகப்பெரும் ஒடுக்குமுறை ஆயுதம்
தொழினுட்பம் மற்றும் அறிவியல் எட்டிய அபரி மிதமான வளர்ச்சியின் விளைவாக தகவல் வெள்ளம் மடைதிறந்து UiTuyub 6905 updilb (Era of Information flood) 6T607 Giffgoofidis, ILGLb அளவுக்கு இந்நூற்றாண்டில் "தகவல் தொழினுட்பம்" விருத்தியடைந் துள்ளது. ஜனநாயகக் கருதுகோள்கள் (Democracy) மேற்கு நாடுகளில் குற்றுயிராய்ப் போயினும் தகவல்கள் (Cybercracy) மட்டும் இந்நூற்றாண்டை வெற்றி கரமாக ஆளுகின்றன என்பதை நம்மால் துணிந்து கூற முடியும். இந்நூற்றாண்டின் மாபெரும் தீர்மானிக்கும் சக்தியாக (Decisive Factor) தகவல் ஊடகங்களே விளங்குகின்றன.
உலக வளர்ச்சி வேகத்தோடு தன்னை இணைத்துக் கொள்ள விரும்பும் எந்த சக்தியும் நவீன தகவல் தொழினுட்பங்களை உள் வாங்கும் திட்டங்களை வகுத்துச் செயல்பட வேண்டியது தவிர்க்க முடியாதது மட்டுமன்றி, எந்த சமூகம் அல்லது தேசம் தகவல் தொழிநுட்பம் கைவரப் பெறுகின்றதோ அது தனது அரசியல்,
 
 

பொருளாதார, ராணுவ மேலாதிக்கத்தை ஏனைய சமூகங்கள் மீது திணிக்கும் ஆற்றலையும் பெற்றுக் கொள்கின்றது எனலாம். எனினும் இத்தகைய தகவல் தொழினுட்பத்தின் நேர்ப்படியான தாக்கங்களை (Possitive) விட எதிர்த்திசை விளைவுகள் (Negative) பாரிய தாக்குதல்களைத் தொடுத்து வருகின்றன. பல்வகை கலாசார, தார்மீக சரிவுகளுக்கு அவை வழிகோலும் அதேவேளை அவற்றுக்குப் பெரும் அச்சுறுத்தலாகவும் மாறியுள்ளன. இன்னொரு புறம் முதலாளித்துவ ஏகாதிபத்திய சக்திகளின் மறைமுகமான ஒடுக்குமுறை வடிவங்களுக்கு முகங் கொடுக்க வேண்டிய சூழலையும் தகவல்கள் ஏற்படுத்தி வருகின்றன.
இதன் விளைவாக இன்று தகவல் தொழினுட்பத்தின் பன்முகத் தாக்கங்கள் பற்றிய சமூக ஆய்வுகள் கூர்மையடைந்து வருகின்றன. சர்வதேச மற்றும் சுதேச சமூக, அரசியல், பொருளாதார கலாச்சாரத் தளங்களின் மீது தகவல் தொழினுட்பம் ஏற்படுத்தி வரும் தாக் கங்கள் குறித்தான ஆய்வுகள் மேல் நிலைக்குத் தள்ளப்பட வேண்டியதன் அவசியத்தை பல சமூக விஞ்ஞானிகள் இப்போது வலியுறுத்தி வருகின்றனர். இந்நூற்றாண்டில் இது தொடர்பில் மிகப் புரட்சிகரமான கோட்பாட்டை முன்வைத்தவராக நோம் ஸொஸ்கி அடையாளப்படுத்தப்படுகின்றார்.
நவீன தகவல் தொழினுட்பத்தின் எதிர்த்தாக்கங்களை (Negative Impacts) ஆய்வு செய்த திரு. நோம் ஸொஸ்கி அதனை ஒரு வகை தகவல் பயங்கரவாதம் (Cyberhorer) ஊடகப் பயங்கரவாதம் (Media terrorism) g55616i 61637(p60p (Cyber Violence) LDfb Dylb குறிப்பிட்ட அதிகாரக் கும்பல்களின் நலன்களைப் பேணும் தகவல் LDITl Slun (Cyber Mafia) 6TGOTj 5 TG6lasipitri.
இந்நூற்றாண்டில் சர்வதேச பொருளாதார, அரசியல் மற்றும் ராணுவப் பெரும் போக்கைத் (Mainstream) தீர்மானிப்பதில் தக வல் தொழினுட்பம் வகித்து வரும் பாத்திரத்தை ஆராய்கின்ற போது நோம் ஸொஸ்கியின் கூற்றில் பல உண்மைகள் உண்டு என்பதைக் கூர்ந்து அவதானிக்கலாம். ஏனெனில் தகவல் தொழினுட் பத்தின் பெரும்பகுதி அமெரிக்க மற்றும் மேற்கத்தேய முதலாளிய சக்திகளின் கைகளில் குவிந்து கிடப்பதே இந்த உண்மையைத் தெளிவுபடுத்துகின்றது.
நவீனத்துவத்தின் தோல்

Page 19
எல்லாவற்றையும் போலவே தகவல் தொழினுட்பமும் சுரண்டல் சக்திகளின் ஏகாதிபத்திய நலன்களைக் காக்கவே பயன்படுத்தப்படுகின் றது. இன்று சர்வதேச மக்கள் அபிப்பிராயம் (International Mass Opinion) என்ன என்பதையும் சர்வதேச நிறுவனங்களின் அபிவிருத்தி உளவியலையும் கட்டமைப்பது முதலாளித்துவ நாடுகளின் கையிருப்பி லுள்ள தகவல் களஞ்சியங்களே. உலகில் எந்த மூலைமுடுக்கில் வாழ்கின்ற மக்கள் சமூகத்தின் உளவியலையும் இந்நாடுகளே தீர் மானிக்கின்றன. இதனால் மக்களது அடிப்படையான பிரச்சினைகள், போராட்டங்களை மறக்கடிக்கச் செய்து மேற்கின் ஒடுக்குமுறைச் சக்திகளின் உள்வீட்டு விவகாரங்கள் கூட சிலவேளை மூன்றாம் மண்டல மக்களின் உளவியலில் அதீத முக்கியத்துவம் பெற்று விடுகின்றன.
எதியோப்பியாவிலும் சோமாலியாவிலும் பட்டினியால் மரணிப் போரை விட அமெரிக்க அழகு ராணிகள் ஊடகங்களில் முதன்மை பெறவும் கென்யா, உகண்டா போன்ற மிக வறிய நாடுகளில் மக்கள் எதிர்நோக்கும் ஜீவமரணப் போராட்டத்தை விட பிரித்தானியாவின் ஜனாதிபதித் தேர்தல் பிரித்தானியர்களை விட ஆபிரிக்க மக்களிடம் முக்கியத்துவம் பெறவும் காரணம் இதுவே. இதனையே ஸொஸ்கி "மீடியா மாபியா" எனச் சாடு கின்றார்.
கணிணித் திரையில் கபாலம் சுழல்கின்றது. ஹிட்லரின் மீசை அல்லது மைக்கல் ஜெக்ஸன் நிர்வாணத்தோடு தோன்றுகிறான். ராட்சதக் குண்டுகள் பீரங்கிகள் சகிதம் துருப்புக்கள் துப்பாக்கிகளை இயக்குகிறார்கள். ஏவுகணைகளும் யுத்தத் தாங்கிகளும் தொடுக்கும் தாக்குதல்களால் நகரங்களும் நாடுகளும் பற்றி எரிகின்றன. சினிமா வில்லன் கத்தியோடு ஆஜராகி ஒரு பெண்ணை வல்லுறவு கொள்கிறான். இவற்றையெல்லாம் ஒரு ஆறு வயதுச் சிறுவன் பார்த்துக் கொண்டிருக்கிறான். இவனது உளவியல் எவ்வாறு கட்டமைக்கப்படும் என்பதை நாம் ஊகித்துக் கொள்ள முடியும்.
தொழினுட்பத்தின் அபார விருத்தியின் காரணமாக இன்று தகவல்களைக் கடத்தும் இன்ரநெட் வெப்தளங்கள்; இலத்திரனியல் ஊடகங்கள் மீது நடாத்திவரும் படை யெடுப்பு அதிகரித்துவருவதை அவதானிக்கலாம். இணையத்தில் இவ்வாறு கட்டுப்பாடில்லாதளவு பொங்கி வழியும் தகவல்களை நெறிப்படுத்துவது எவ்வாறு என்று
 

தெரியாமல் சர்வதேச அரசுகள், சமூகவியலாளர்கள், திக்கித் திணறுகின்றனர்.
அச்சு ஊடகங்களில் தகவல்களைக் கட்டுப்படுத்தத் தணிக்கையைக் கையாளலாம். ஏனைய இலத்திரனியல் ஊடகங்களின் தகவல்களைக் கட்டுப்படுத்த தடையுத்தரவுகளைப் பிறப்பிக்கலாம். ஆனால் இணைய வலைப் பின்னலில் பிரவாகித்துப் பாயும் தகவல் வெள்ளத்தைக் கட்டுப்படுத்தும் பொதுவானதொரு தார்மீக நெறியை உருவாக்க முடியாமல் இருக்கின்றது. இது குறித்து குறைந்த பட்ச பன்னாட்டுப் பொது உடன்பாடுகளுக்குக் கூட வரமுடியாத சூழலே இப்போ தைக்குள்ளது. . . . . . .
இன்று 304 மில்லியன் குடும்பங்கள் உலக இணைய வெப் தளங்களில் இணைந்துள்ளன. இத்தகைய இணையத்தில் எதனை அனுமதிக்கலாம் எவற்றை அனுமதிக்கக்கூடாது என்பதில் வளர்ச்சி யடைந்த நாடுகளுக்கிடையே கருத்து பேதங்கள் நிலவி வருகின்றன. அமெரிக்க-ரஷ்ய பனிப்போரின் பிற்கூறுகளிலும் தற்போதும் நிலவும் அதிகாரப் போட்டி இன்னும் இது தொடர்பிலான பிரச்சினையைச் சிக்கலாக்குகின்றது. இதுமட்டுமன்றி இப்போது சர்வதேச அரசியல் அரங்கில் தமக்கான செல்வாக்கைச் செலுத்த முனைப்புக் காட்டும் சீனா, இந்தியா, பிரான்ஸ் மற்றும் ஸ்கண்டிநேவிய நாடுகள் இது தொடர்பில் முரண்பட்ட கொள்கைகளைக் கடைப்பிடிக்கின்றன.
இணைய வலைப்பின்னல்கள் ஒரு கட்டுப்பாடற்ற தகவல் களஞ்சியங்களாக செயற்படுவதை பல நாடுகள் வரவேற்றுள்ளன. சில நாடுகள் கட்டுப்பாடுகள் கொண்டுவருவதை நிராகரித்து வரு கின்றன. இதனால் இப்பிரச்சினைக்குத் தீர்வு காண்பது சர்வதேச சமூகத்துக்கு ஒரு குதிரைக் கொம்பாக மாறியுள்ளது. விழுமியங்க ளைத் தாக்குகின்ற இணையத் தகவல் மையங்களைக் கண்டறிய 1996 ஜனவரியில் டச் இணைய அமைப்பாளர்கள் ஒரு ஒழுக்கக் கோவையை ஏற்படுத்தினர். எனினும், அது வெற்றியளிக்கவில்லை. நெதர்லாந்து போன்ற நாடுகள் இத்தகைய சட்ட்ங்களைக் கொண்டு வர மறுப்புத் தெரிவிக்கின்றன. . . .
1995ல் தகவல் களஞ்சியங்களைக் கட்டுப்படுத்தி அவற்றைத் தமது இலாப நோக்கங்களுக்காகக் கைப்பற்ற எண்ணிய அமெரிக்கா தகவல் ஒழுக்க நெறிச் சட்டம் என்ற போர்வையில் ஒரு சட்

Page 20
டப் பிரமாணத்தை அறிமுகப்படுத்தியது. எனினும், அடுத்த ஆண்டி லேயே அது அமெரிக்காவின் அரசியலமைப்புச் சட்டத்துக்கு முரணானது என்று கூறி உச்ச நீதிமன்றம் அதனை ரத்துச் செய்து விட்டது. இன்றும் கருத்துச் சுதந்திரம் என்ற பெயரில் நாசிகளின் தொலைத்தகவல் மையங்கள் அமெரிக்காவில் தொழிற்பட அனுமதியளித்த நிலையிலேயே அமெரிக்கா தகவல் ஒழுக்க நெறிச் சட்டத்தைப் பற்றிப் பேச முன்வந்துள்ளமை மிக எதிரிடையானதும் வேடிக்கையானதும் ஆகும்.
ஒரு துருவ உலகின் தனிக்காட்டு ராஜாவாக விளங்கும் அமெரிக்கா; தகவல் தொழினுட்பத்தின் பெரும்பாலான பகுதியைத் தனது மேலாதிக்கத்தின் கீழ் வைத்திருக்கின்றது. 1900ம் ஆண்டளவில் அதாவது 100 வருடங்களுக்கு முன்னர் அமெரிக்காவின் மொத்தத் தொழிலாளர்களில் 10% தினர் மட்டுமே தகவல் தொழினுட்பத் துறையில் பணியாற்றினர். இப்போது 45% ஆன தொழிலாளர்கள் இத்துறையில் ஈடுபட்டுள்ளனர். அமெரிக்காவின் மொத்த ஊழியச் செலவில் 63% இதற்காக ஒதுக்கப்படுகின்றது. நவீன தகவல் களஞ்சியங்களின் ஊடகமான இன்ரனெட் தளங்களில் சுமார் 45% அமெரிக்காவின் மென்பொருள் நிறுவனங்களுக்கே சொந்த மானது.
இன்று உலகிலுள்ள அனைத்து நாடுகளுமே தமது எதிர்கால பொருளாதார ராணுவ வரைவுகளையும் திட்டமுறைகளையும் (Stretegy) ஒழுங்கமைக்க தகவல்கள் மீதே தங்கியிருக்க வேண்டி யுள்ளது. இதன் விளைவாக C.I.A, N.S.A போன்ற அமெரிக்க செய்தி மற்றும் உளவு நிறுவனங்கள் பல்தேசிய தகவல் களஞ்சியங் களை ரகசியமாகத் திருடுகின்ற திட்டங்களிலும் தமது கவனத்தைக் குவித்து வருகின்றன. இவ்வாறு ஆதிக்க சக்திகள் தகவல் தொழி னுட்பத்தில் நிலையூன்றி தத்தமது தன்னாதிக்கத்தைத் தக்க வைத்துக் கொள்ளப் பெரும் எத்தனங்களை எடுத்துவருகிறது. இதன் மூலம் நாம் வாழும் இன்றைய சூழலில் தகவல்கள் எவ்வளவு தூரம் முக்கியமானவை என்பதை உணர்ந்து கொள்ளலாம்.
இவ்வாறு மேலைத்தேய குறிப்பாக அமெரிக்க தகவல் தன்னா திக்க மனப்பாங்கு பிற்போக்கான ஆதிக்க சக்திகளின் சின்ன விவகாரங்களையும் பெரும் கதையாடல்களாக ஊதிப் பெருப்பித்து
 

உருமாற்றிவிடும் தன்மை கொண்டன. இதனால் பலபோது வெறும் செயற்படுபொருளாகவே கையாளப்படும் மூன்றாம் மண்டல சமூகங் கள் தவறாக வழிநடாத்தப்படுகின்றன. இது சர்வதேச அரங்கில் மட்டுமன்றி சாதாரணமாக ஆதிக்க சக்திகள் செல்வாக்குச் செலுத்து கின்ற சுதேசிய சூழ்நிலைகளிலும் இடம் பெறுகின்றது. டயானாவின் உள்ளாடைகளும் கிளின்டனின் வளர்ப்பு நாயும் சிலபோது சர்வ தேச ஊடகங்களில் முக்கியத்துவம் பெறும் அதேவேளை பப்புவா நியுகினி, மொரிட்டானியா போன்ற நாடுகளின் பெயர்களே உலக அரங்கில் தெரியாமல் போகலாம்.
ஊடகங்கள் எம்மை அசைக்க முடியாது என்று அவற்றின் தாக்கத்தை நம்மால் ஒரந்தள்ளி விடமுடியாது. ஏனெனில் தொலைத் தொடர்பூடகங்கள் வெறும் இடையீட்டுக் கருவியாக (Linguesting channel) மட்டும் தொழிற்படவில்லை மாறாக அவை முன்வைக்கும் தகவல்களின் அடிப்படையிலேயே மக்கள் அபிப்பிராயம் கட்ட மைக்கப்படுகின்றது. செய்திகளை, சம்பவங்களை உள்ளவாறே அவை மக்களுக்குச் சொல்வதை விட அவற்றைக் கூட்டியும் குறைத்தும் மிகைப்படுத்தியும் சேர்த்தும் புனைந்தும் வெளியிடுவதால் அவை ஏதோவொரு வகையில் மனித நடத்தைகளைக் கட்டுப் படுத்தும் ஆற்றலைக் கொண்டுள்ளன.
எனவே, ஏதோ ஒரு வகையில் சமகால உலகின் அரசியல் இத்தகைய தகவல்களாலும் ஊடகங்களாலும் தீர்மானிக்கப்படுவதை நாம் மறுத்துவிட முடியாது. இன்று நுகர்வுப் பொருளாதார அமைப்பில் தரங்குறைந்த ஆனால் விலை கூடிய உற்பத்திப் பண் டங்களை முன்நிலைக்குத் தள்ளி விடுவதில் விளம்பர உளவியல் வெகுவாக முன்நிற்கின்றது. வானொலி, தொலைக்காட்சி போன்ற ஊடகங்களை விட இணைய வெப்தளங்களில் முன் நிறுத்தப்படும் அட்டகாசமான விளம்பரங்கள் திறந்த பொருளாதார நவ காலனியத் தின் இருப்பைப் பாதுகாக்கத் துணை நிற்கின்றது. ஊடகங்கள் நம்மையறியாமல் நமக்குள் ஊடுருவி நம்மையே நம்மால் நம்ப முடியாதளவுக்கு நம்மை ஏமாற்றிவிடுகின்றன என்று ஸொஸ்கி இதனை அப்பட்டமாக வெளிக்காட்டுகிறார்.
விளம்பரங்களுக்குப் பல் தேசியக் கம்பனிகள், தேசிய உற்பத்தி நிறுவனங்கள் என்பன ஒவ்வொரு நிமிடத்துக்கும் கொடுக்கும் பணத்தொகையே விளம்பரம் ஏற்படுத்தும் பிம்பங்களினதும் மாயை

Page 21
களினதும் அபாயத்தை நமக்கு உணர்த்துகின்றன. நவீன தகவல் தொழினுட்பம் புறச்சூழலில் ஏற்படுத்தும் இத்தகைய பாரிய தாக் கங்களைப் போன்று அது தனது உட்கட்டமைப்பிலும் பல்வேறு சவால்களை எதிர்நோக்கியிருக்கின்றது. இன்று வெப்தளங்களில் தனிநபர் தகவல்கள் எதனையும் பாதுகாத்து வைக்க முடியாமல் உள்ளது தனிப்பட்ட நிறுவனங்களின் வர்த்தக ரகசியங்கள் பரஸ்பரம் திருடப்படுகின்றன. மட்டுமன்றி போதைப்பொருட் கடத்தலில் ஈடுபடும் மாபியாக்கள் தற்போது "தகவல் கொள்ளை (Cyber robbing) யிலும் ஈடுபட்டு வருகின்றன. இதனால் சர்வதேச தக வல் உலகம் பெரும் நெருக்கடிகளுக்கு முகங்கொடுக்க நேர்ந்துள்ளது.
"ஒருவனுடைய தனிமை, வீடு, கடிதத் தொடர்புகள் ஆகியவற்றில் எதேச்சதிகாரத் தலையீட்டுக்கு எவரும் உள்ளாக்கப்படலாகாது. இத்தகைய தலையீட்டுக்கு அல்லது தாக்குதலுக்கு எதிராகப் பாதுகாப்புப் பெறும் உரிமை ஒவ்வொருவருக்கும் உண்டு" சர்வதேச மனித உரிமைப் பட்டயத்திலுள்ள இப்பிரமாணம் தற்போது தகவல் தொழினுட்பத் துறையில் உரத்து ஒலிக்கும் அளவுக்குத் தகவல் பெரும் பயங்கரவாதமாக மாறிவருகின்றது.
எது எவ்வாறிருப்பினும் "நவீன தொழினுட்பம் பின்வரும் துறைகளில் தவறாகப் பயன்படுத்தப்படுவதாக ஐரோப்பிய ஒன்றியம் அடையாளப்படுத்தியுள்ளது. 01. தேசிய பாதுகாப்பு (பயங்கரவாதம் அல்லது வெடி
குண்டுகள் அல்லது சட்ட விரோத போதைப் பொருள் தயாரிப்புக் கான அறிவுறுத்தல்கள்) 02. இளைஞர்களைப் பாதுகாத்தல் (வன்முறை மற்றும் ஆபாச
வர்ணனை) .. 03. மனித கண்ணியத்தைக் காத்தல். (இனவேற்றுமை மற்றும்
இனப்பகையைத் தூண்டுதல்) 04. பொருளாதாரப் பாதுகாப்பு (மோசடி கடன் மற்றும்
கூட்டுத் திருட்டுப் பற்றி அறிவுறுத்தல்) 05. தகவல் பாதுகாப்பு (தகவல் கொள்ளை)
06. தனிமைக்குப் பாதுகாப்பு (சொந்த விபரங்களை
 

அனுமதியின்றி அனுப்புதல் மற்றும் மின்னஞ்சல் வழித்தொல்லை) 07. நற்பெயரைக் காப்பாற்றுதல். (அவதூறு மற்றும்
சட்டவிரோத ஒப்பீட்டு விளம்பரம்) 08. அறிவுத்திறன் சார்ந்த பாதுகாப்பு (மென்பொருள் போன்ற
பதிப்புரிமைச் சாதனங்களை அனுமதியின்றி வழங்கல்)
இத்தகையதொரு சூழலிலேயே இன்று தகவல் பயங்கரவாதம் பற்றிப் பரந்தளவில் பேசப்படுகின்றது. தகவல்களைப் பரிமாறுவதற்கும் மாற்றீடு செய்வதற்கும் விநியோகிக்கவும், தகவல் கொள்கைகள் (Cybernetics) வகுக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டு வருகின்றது. தகவல் வெளியில் (Cyber Space) ஒரு பெரும் பனிப் போர் நிகழ்ந்து கொண்டிருக்கிறது. நானா நீயா என்ற முதலாளிய கழுத்தறுப்புப் போட்டியும் இடம்பெற்று வருகிறது. மாபியாக்களின் கொள்ளை விரிவடைந்து வருகின்றது. திறந்த பொருளாதாரம் என்ற போர்வையில் சுரண்டல் பேர்வழிகள் இப்போது உலகமய மாதல் என்ற ஏகாதிபத்தியம் குறித்து சிலாகிக்கின்றார்கள். முதலாளித் துவத்தின் இலாப ஈரம் இன்னும் காயாமலே உள்ளது. இத்தனைக்கு மிடையில் மீண்டும் மீண்டும் முருங்கை ஏறும் "மேற்கு" வேதாளம் முன்வைக்கும் தகவல் நெறிச் சட்டக்கோவை வெற்றி பெறுமா? என்ற கேள்விக்குறி நமக்கு முன்னால் எழுந்து நிற்கிறது. நாளை நெருங்கி விட்டது.
துணை நின்றவை * யுனெஸ்கோ கூரியர் 1998 நவம்பர்
கட்டுரை சிலந்தி வலையில் சிக்கிய
* Cyber Terrorism- Daily News 1999
* இஃலாமுல் இஸ்லாமிய்யி பீ முவாஜிகதில் இஃலாமில்
முஆஸர்
* முஹம்மது ரமழான் யூஸஸீப் - மின் ஹஸாயிசி இஃலாமில்
இஸ்லாமிய்யி
* Echo of Islam-Laliburr 1995
* Da’wah Highlights Vol. VIII, Issue. VII August 1997

Page 22
தகவல் துறையில்
அமெரிக்காவின் ஆதிக்கம்
回。 உலக தகவல் தொழிநுட்பத்தினதும் இலத்திரனியல், அச்சு ஊடகங்களினதும் பெரும்பகுதியை அமெரிக்கா தன்னாதிக்கத் தில் வைத்துள்ளது. கடந்த நூற்றாண்டில் இத்துறையில் 10%யினரே அமெரிக்க ஊழியப்படையில் பணியாற்றினர். இப்போது 45% ஆன தொழிலாளர்கள் அந்நாட்டின் தொடர்பூடகத்துறையில் பணியாற்றுகின்றனர். அமெரிக்காவின் மொத்த ஊழியச் செலவில் வருடாந்தம் 63% தகவல்-ஊடகத்துறைக்கென ஒதுக்கப்படுகின்றது. அமெரிக்கா தகவல் துறையில் காட்டும் அக்கறையையும் அதற்குப் பின்னால் அந்நாடு அடைய முனையும் இலாபங்களையும் இது தெளிவாக எடுத்துக் காட்டுகின்றது.
அமெரிக்க ஊடகத்துறையின் பெரும்பகுதி தனிநபர்கள், வர்த்தக சமூகங்கள், கூட்டுக்கம்பனிகளுக்கே சொந்தமாக உள்ளது. இது தவிர கிறிஸ்த திருச்சபைகளுக்கும் மிஷனரிகளுக்குமென தனித்தனி யான ஊடக வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
 
 

வெகுசன ஊடகங்களில் பெரும்பாலானவை அமெரிக்காவின் நிர்வாக, ராணுவ திட்டமுறை (Stretegy) இலக்குகளை அடிப் படையாகக் கொண்டு செயற்படுகின்றமை குறிப்பிடத்தக்கது. சர்வதேச அரசியலின் கணிசமான பகுதியிலும் மற்றும் உள்நாட்டு அரசியல், பொருளாதார, வர்த்தகம் குறித்தான பெரும்போக்கைத் தீர்மானிக்கும் சக்தியாக அந்நாட்டின் தகவல்-ஊடகத்துறை விளங்குகின்றது.
முதலாளிய பொருளியலாதிக்கம், லிபரல் ஜனநாயகம் யூத, கிறிஸ்த மதப்பிரச்சாரம் போன்றவற்றுக்கான பாதுகாப்புச் சுவர் களாக அமெரிக்க தகவல் தொழிநுட்பம் உச்சளவில் பயன்படுத்தப் படுகின்றது. அமெரிக்காவின் அச்சு ஊடகங்களை நோக்குகின்ற போது பெருவாரியான செய்திப் பத்திரிகைகளும் சஞ்சிகைகளும் வர்த்தக நோக்கிலேயே வெளியிடப்படுகின்றன. அவற்றுள் சில உள்நாட்டு அரசியல் போக்குகளை நிர்ணகிக்கின்ற அளவுக்கு சுதந்திரமான விமர்சனங்களைத் தாங்கி வருகின்றன.
அமெரிக்காவின் மிதவாத ஜனநாயக அரசியல் சிந்தனை பத்திரிகைச் சுதந்திரத்துக்கு விரிவான இடத்தை அளித்திருப்பதால் சிலபோது அச்சு ஊடகங்கள் அரசியல் அநீதிகளையும் திருகுதாளங் களையும் துணிவோடு அம்பலத்துக்குக் கொண்டு வருகின்றன. தேசிய அரசைப் பொறுத்தமட்டில் முதலாளித்துவ லிபரல் ஜனநாய கத்தின் கீழ் அது முகங்கொடுக்கும் நெருக்கடியாகவே இதனை எதிர்கொண்டு வருகிறது எனலாம். அமெரிக்காவில் வெளியிடப்படும் தகவல்களின் ஊடகங்களாக பின்வருவனவற்றை அடையாளப்படுத்த லாம்.
01. பத்திரிகைகள், செய்தி முகவர் நிலையங்கள். 02. சஞ்சிகைகள் 03. தொலைக்காட்சி சேவைகள் 04. வானொலிச் சேவைகள் 05. நேரடி அஞ்சல் சேவைகள்
06. வர்த்தகப் பதிப்புக்கள், நிர்வாக அறிக்கைகள்
பத்திரிகைத் துறையில் உள்நாட்டுக்கும் சர்வதேச விவகாரங்களுக்கு மென தனித்தனியான செய்திப் பத்திரிகைகள் வெளிவருகின்றன. உள்நாட்டுப் பத்திரிகைகள் அமெரிக்காவின் பிராந்திய, மானில, நகர செய்திகள், ஆய்வுரைகள், அறிக்கைகளைத் தாங்கி வருகின்றன. சர்வதேச விவகாரங்களுக்கென 1676 தினப்பத்திரிகைகள் வினியோகிக்

Page 23
கப்படுகின்றன. Audit Bureau of Circulation நிறுவனத்தின் கணிப்பீட் டின்படி சான்பிரான்ஸிஸ்கோ, மியாமி, லோனா, அயர்லாந்து பூட்கன், பிலெடெல்பியா, ஹெய்டன், சேன்ட்லூவிஸ், நிவ்யோர்க், லொஸ், என்ஜெல்ஸ், சிகாகோ போன்ற நகரங்களிலேயே அதிகள விலான செய்திப் பத்திரிகைகள் வெளிவருகின்றன. இவற்றுள் யூதக் கும்பல்கள், கிறிஸ்தவ மிஷனரிகள் என்பவற்றின் வெளியீடு களும் உள்ளடங்கும். இவ்வகை வெளியீடுகள் இஸ்லாம் பற்றிய பக்கச்சார்பான கருத்துக்களைத் தாங்கி வருவதோடு இஸ்லாத்தைப் பற்றிய உருக்குவைத்த விம்பங்களையும் கட்டமைக்கின்றன.
இவற்றுள் நடுநிலை வகிக்கும் பத்திரிகைகளும் உள்ளன. Christion Science monitor எனும் நிறுவனத்தினால் வெளியிடப்படும் தினப்பத்திரிகை இதற்கு உதாரணமாகும். இது முஸ்லிம் அறபு உலகு பற்றிய செய்திகளை உண்மைக்குப் புறம்பில்லாத வகையில் வெளியிட்டு வருவது குறிப்பிடத்தக்கது. பலஸ்தீன், இஸ்ரேல் பிரச்சினையில் அவை எப்போதும் பலஸ்தீனர்களின் நிலைப்பாட்டி லேயே நிற்கின்றன. பலஸ்தீன் மக்களுக்கே நியாயம் கிடைக்க வேண்டும் என்று வாதிக்கின்றன.
பத்திரிகைகள் பின்வருமாறு வெளிவருகின்றது.
பத்திரிகைகள் நகரம் நாளாந்த வினியோக பிரதிகள் Wall Street journal Newyork 775,086 Newyork Dailynews Newyork 781, 786 los Angels times los Angels 1,164,388 Newyork times Newyork 1,201, 970
Chicargo tribune Chicargo 733, 775 Newyork post Newyork 470,987 Chicargo Suntime Chicargo 530,856 Washington post washington 846, 635
Boston globe Boston 505,744
அமெரிக்காவில் வெளியிடப்படும் சஞ்சிகைகளை பின்வருமாறு வகைப்படுத்தலாம்.
01. பொதுவான அரசியல் சஞ்சிகைகள்
02 சிறப்புச் சஞ்சிகைகள்
 

03. சமூகவியல், பெண்ணியம், கலைகள் தொடர்பிலான சஞ்சிகை 04 அறிவியல் சஞ்சிகைகள் (விஞ்ஞானம், கைத்தொழில்,
விவசாயம்)
இவற்றுள் பெரும்பாலான சஞ்சிகைகள் வாராந்தம் வெளியிடப் படுவதோடு சில முக்கிய சஞ்சிகைகள் மாதாந்த அடிப்படையிலும் வெளியிடப்படுகின்றமை கவனிக்கத்தக்கது. World press review.world view, The new Stretegy, republic Gustairpgoal intungsg(plb, Executive intelligence review, The American Zionist, foreign affairs, The plain truth, world monitor, middle east insight இது போன்ற ஆயிரக் கணக்கான மாதாந்த சஞ்சிகைகளும் ப்ரவலாக வெளியாகின்றன.
சர்வதேச முக்கியத்துவம் வாய்ந்த, உலகில் அதிகளவில் விற்பனை யாகும் சஞ்சிகைகளாகப் பின்வருவனவற்றை இனம் காண முடியும்
Reader's digest 16, 269, 637 National geographic 9,763, 406 Time 4, 473,530 News week 3, 224, 770 us. news and world report 2, 237,009
சர்வதேச, மற்றும் தேசிய மட்டத்தில் வெளியாகும சஞ்சிகை கள் மட்டுப்படுத்தப்பட்ட பிரதிகளே அச்சிடப்பட்டு வினியோகிக்கப் படுகின்றன. இவற்றைக் குறிப்பிட்ட சில அமைப்புக்களே வெளியிட்டு வருகின்றன.
இவை பின்வருமாறு அமைகின்றன. s 01. காங்கிரஸ் அறிக்கைகள் அமெரிக்க அரசியல் ராணுவ
நிர்வாகம் தொடர்பான அறிக்கைகள். " .. 3 02. திட்டமுறை (Stretegy) நிலையங்களால் வெளியிடப்படும்
FG56F6D55556ir (Middele east institute, us pease institute, Bro. kings
itoover institute போன்றவற்றால் வெளியிடப்படும் சஞ்சிகைகள்) 03. கல்வி நிறுவனங்கள், பல்கலைக்கழகங்கள் என்பவற்றால்
GaugrfuSL'il Gub F65.660556it. (Stanford, john hopking, carenegie
georgetown, columbia, barkly, chicargo)

Page 24
தொலைக்காட்சியைப் பொறுத்தவரை ஐந்து பிரதான சேவைகள் தேசிய மட்டத்திலும் சர்வதேச ரீதியிலும் ஒளிபரப்பு சேவைகளை ஆற்றி வருகின்றது. 01. American broad casting cor. (A.B.C) 02. Colombia broad casting cor. (C.B.C) 03. National Broad casting cor. (N.B.C) 04. Cable news metwork (C.N.N) 05. Public broadcasting servis (P.B.C)
செய்தி வெளியீட்டில் A,B,C நிறுவனம் வாராந்தம் 30 மணித்தியால சேவையையும் C.B.C 25 மணித்தியால ஒளிபரப்பையும் N.B.C. 20 மணித்தியால சேவையையும் CNN தலைப்புச் செய்தி மட்டும் 24 மணி நேரத்தையும் கொண்டுள்ளன. இது தவிர அவை நாளாந்தம் 20 மணித்தியால ஒளிபரப்பு சேவை நேரத்தைக் கொண்டிருக்கின்றன. பிரஸ்தாப நிறுவனங்கள் வானொலிச் சேவை மூலமும் தமது செய்திகளை வெளியிடுவதோடு உலகிலுள்ள அரைவாசி வானொலி தொலைக்காட்சி நிறுவனங்களை தமது செய்திச் சந்தாதாரர்களாகக் கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
அறிக்கைகளைப் பொறுத்தவரை 01. Forign Broad Casting Information 02. Forign Policy 03. Forign Affairs 04. Defece and Forign Affairs 05. Journal of South Asia 06. Middle East Studies 07. The Journal of Religion
08. The Cristian Science Journal
09. Commentary 10. The Muslim World.
என்பன குறிப்பிடத்தக்கன.
 

கருத்துச் சுதந்திரம்
ஒரு சுதந்திரமான கருத்துப் பகிர்கை
а в т. நூற்றாண்டின் இறுதி அத்தியாயத்திலும் இருபத்தி யோராம் நூற்றாண்டின் நுழைவாயிலிலும் அமர்ந்து கொண்டிருக்கும் சர்வதேச சமூகங்கள் தத்தமது உரிமைகளுக்காகப் போர்க்கொடி தூக்கிக் கொண்டிருக்கும் காலம் இது சுய நிர்ணயம், மனித உரிமை, கருத்துச் சுதந்திரம் போன்றன விறைப்பான சொல்லாடல் களுக்கும் அழுத்தமான வாதப் பிரதிவாதங்களுக்கும் உட்பட்டு வருகின்ற, மாற்றுக்களைத் தேடும் ஒரு அரசியல் சூழலில் நாம் வாழ்கிறோம். இத்தகையதொரு பகைப்புலத்தில் `கருத்துச் சுதந்திரம் (Freedom of Expression) என்பதன் வரலாற்றுப் பின்புலத்தையும் சமூகவியல் சார்ந்த அதனது செல்நெறியையும் சமகால கருத்தியல் தளத்தில் அது பிரயோகமாகும் தன்மை குறித்தும் சில அவதானங் களை முன்வைப்பதே இப்பத்தியின் குறிக்கோளாகும்.
தஸ்லீமா, ருஷ்தி ஆகியோரது இலக்கியங்களுக்கு இஸ்லாமிய உலகில் எழுந்த எதிர்ப்புக்குரல்கள் கருத்துச் சுதந்திரத்தை மறுப்பதாக மேற்கத்தேய ஒரு பக்க ஊதுகுழல்களான தொடர்பூடகங்களும்

Page 25
கலாசார ஆதிக்கத்தின் காவலர்களும் கண்டனம் தெரிவித்ததை கடந்த சில ஆண்டுகளில் நாம் கண்டு கொண்டோம் குறிப்பிட்ட இவ்விருவரது நூல்களுக்கும் பிறப்பிக்கப்பட்ட தடையுத்தரவு அநீத மானது என்ற மேற்கத்தேய சுரண்டல் சக்திகளின் வாதம் ஏகாதிபத்தியவாதிகளே கருத்துச் சுதந்திரத்தின் பாதுகாவலர்கள் என்றொரு மூடநம்பிக்கையை ஏற்படுத்தியிருக்கலாம். அவ்வாறிருப்பின் அது நூறுவீதமானதொரு கற்பிதமாகவே இருக்க முடியும். ஏனெனில் ஐரோப்பிய கருத்துச் சுதந்திர வரலாற்றின் மீதான பரந்த பார்வை இந்த உண்மையையே உறுதி கூறுகின்றது.
இருண்ட யுகம் (Age of Dackness) என வர்ணிக்கப்படும் மத் திய காலப்பகுதியில் பெளதீகவியல் மற்றும் பிரபஞ்சவியல் (Cosmology) என்பன குறித்து கருத்து வெளியிட்ட பல அறிவியலாளர் கள் கிறிஸ்தவ திருச்சபையின் ஒடுக்குதலுக்கு உள்ளானார்கள். மனித மேம்பாட்டின் அடித்தளங்களை உருவாக்கத் துணை செய்த விஞ்ஞானிகளது கண்டுபிடிப்புகளும் கருத்துகளும் மத நம்பிக்கைக்கு விரோதமானவை எனத் தீர்ப்பளிக்கப்பட்டதால் அவர்கள் சிறைச்சாலைகளுக்குப் பலியாக நேர்ந்தது. பல ஆய்வாளர்கள் தீக்கம்பங்களுக்குத் தீனியாகினர். மிகப் பெரும் படைப்பெனப் போற்றப்பட்ட தொலமியின் `அல்மாகெஸ்ட்” 1538ம் ஆண்டு வரை லத்தீன் மொழியில் அச்சாவதற்கு கத்தோலிக்கத் திருச்சபை அங்கீகரிக்கவில்லை. இரத்த ஓட்டத்தைக் கண்டுபிடிக்கும் தறுவாயிலிருந்த 'செர்வேடஸ் என்பவரை கல்வின் எரிகம்பத்தில் கட்டி எரிக்கச் செய்தார். சந்தேகம் ஏற்படுவதனால் நாம் வினா எழுப்புகிறோம். தேடுவதனால் உண்மையை அறிகிறோம். என்று கூறிய அபிலாம் போன்றவர்களையும் கிறிஸ்தவ சமய ஏகாதிபத்தியம் (Religious Imperialism) விட்டுவைக்கவில்லை. கல்வி, மத நம்பிக்கையின் புற நோக்கில் சந்தேகிக்கும் உரிமையை நாடி நின்றபோது அபி லாம் ஒரு கிரேக்க சிந்தனையாளராகப் பேசினாரே அன்றி ஒரு கத்தோலிக்க மத குருவாகப் பேசவில்லை என அவரது நூல்கள் தீக்கிரையாகின. அன்று கொப்பனிகஸ"க்கும் கலிலியோவிற்கும் மூட்டப்பட்ட தீக்கம்பத்தில் அவர்களோடு சேர்ந்து கருத்து, சுதந் திரம் எல்லாமே எரிந்து சாம்பலாயிற்று. is . . . .
உண்மையில் `கருத்துச் சுதந்திரம், மனித உரிமைகள்’ என்பதெல் லாம் ஐரோப்பாவுக்கும் அமெரிக்காவுக்கும் மிக அண்மைக்காலமே
 

அறிமுகமானவை. குறிப்பாக இரண்டாம் உலக யுத்தத்திற்குப் பிற் பட்ட காலம் எனலாம். நாஸிஸ்த்தைத் தோற்றுவித்து சுமார் பத்து லட்சம் யூதர்களைப் பலியெடுத்த ஹிட்லர் போன்ற சர் வதிகாரிகள் பின்பற்றிய கோரமான தேசியவாத சிந்தனையும் அதனடியான மனித வேட்டைகளுமே மேற்கத்தேய புத்திஜீவிகள் மத்தியில் மனித உரிமைகள் பற்றிய பிரக்ஞையை ஏற்படுத்தியது. மட்டுமன்றி கடந்த நூற்றாண்டின் இறுதிப் பகுதியிலேயே அது பற்றிய பரந்தளவிலான விழிப்புணர்வையும் அதற்கான அரசியல் வேலைத்திட்டத்தையும் வலியுறுத்த வழிகோலியது. இதன் விளை வாகவே கருத்துச் சுதந்திரம் முற்று முழுதாகத் தழை நீக்கப்பட்ட ஒரு கோட்பாட்டு வடிவத்தைத் பெற்றுக் கொண்டது.
உண்மையில் கருத்துச் சுதந்திரத்தின் வரலாறு இரத்தக்கறை படிந்த பல்வேறுபட்ட நிகழ்ச்சிகளின் தொகுப்பாகவே விளங்கி வந்துள்ளதை பிரான்ஸியப் புரட்சிக்கு முந்திய காலத்தின் மீதான பார்வை மிகத் தெளிவாக எடுத்துக் கூறுகின்றது. ஜனநாயகத்துக்குச் சற்று முந்திய காலப் பிரிவின் இறுதிக்கட்டம் வரை அதாவது பதினோராவது லூயி மன்னனின் கொடுங்கோண்மை மிக்க மன் னராட்சி காலத்தில் சுதந்திர சிந்தனை, கருத்துச் சுதந்திரம் என் பது செல்வாக்குடைய சிலரின் சிறப்புரிமையாகவே விளங்கியது.
இவ்வாறு ஐரோப்பாவில் கிறிஸ்தவ சமயாதிக்கமும் சகிப்புத் தன்மையின்மையும் வரலாற்றில் இருண்ட காலம் ஒன்றை சிருஷ் டித்தமை தவிர்க்க முடியாமல் போயிற்று. கிறிஸ்தவ மதம் கடைப்பிடித்த இச்சமய ஏகாதிபத்தியம் ஈற்றில் அதன் வீழ்ச்சிக்கு வழிகோலியது. மட்டுமல்ல மதச்சார்பற்ற (Secularism) தன்மையும் ஐரோப்பிய சமுக வாழ்க்கையில் ஆழ வேரூன்றவும் காரணமானதை நாம் வரலாற்றில் காண்கிறோம்.
இனி கருத்துச் சுதந்திரத்தின் முக்கியத்துவம் எத்தகையது என்பதும் நோக்கத்தக்கது. மனிதன் புவியில் தோன்றிய பூர்வீக காலந்தொட்டு உருவாகிய மிகத் தொன்மையான கருத்தோட்டங்களும் மனித உரிமைகள் குறித்த கருதுகோள்களும் `கருத்துச் சுதந்திரம் என்பதை மனிதனிலிருந்து பாராதீனப்படுத்த முடியாது என்பதை உறுதி கூறுகின்றன. ஒவ்வொரு மனிதனுடைய வாழ்வியல் சூழ் நிலையும் அவன் ஏற்றுக் கொண்டிருக்கும் நம்பிக்கையும் அவனது

Page 26
அறிவுப் பின்னணியும் கருத்துச் சுதந்திரத்தின் இயல்பையும் யதார்த்தத்தையும் அங்கீகரிக்கின்றன. நவீன சமூகவியலாளர்கள் இதற்கு வழங்கிய மிகை அழுத்தத்தின் காரணமாக சிலர் அதனை `இயற்கைச் சுவாசம்’ (Natural Respiration) என்றனர். ஏனெனில் இது கூட மனிதனின் இயல்பூக்கங்களின் விளைவு என அவர்கள் கருதுகின்றனர். இக்கருத்து ஒரு வகையில் நியாயமானதே. ஏனெனில் எல்லா உரிமைகளுக்கும் தலையாயதாக இது விளங்குகிறது. இதனை தனிமனிதனிலிருந்து பிரித்தெடுப்பதானது அவனுக்கு சுவாசக் காற்றைத் தடை செய்வதற்கு சமனாகும்.
மனித சிந்தனையின் சுதந்திர வாயில்களை மூடுவது சமூகப் பிரச்சினைகளை தூர திருஷ்டியோடு அணுகி ஆராய்வதற்கு இடையூறாக அமையும் ஆக அனைத்து சுதந்திரத்துக்கும் அடிப்படை மட்டுமல்ல இது எல்லா வகையான மக்களுக்கும் அவசியமானதும் கூட பொதுசன அபிப்பிராயங்களை ஏற்படுத்தவும் கருத்தொற்றுமை மூலம் தெளிந்த தீர்மானம் பெறவும் இது இன்றியமையாதது. இது மறுக்கப்படும் நிலையில் ஏனைய எல்லா உரிமைகளும் வெறும் கேலிக் கூத்தும் மோசடியுமே, மற்றெல்லா உரிமைகளுக்கும் மேலாக தன்னுரிமையாக யாதொன்றையும் அறிந்து கொள்ளும் உரிமையையும் தர்க்கிக்கும் உரிமையையும் எனக்குத் தாருங்கள் என்று கூறிய மில்டென் இந்த உண்மையைத்தான் தெளிவுபடுத்தி னார். இந்த வகையில் கருத்துச் சுதந்திரம் மிக முக்கியத்துவம் பெறுகின்றது.
கருத்துச் சுதந்திரத்தின் களம் மிக விரிந்ததாகும். அதனைப் பின்வருமாறு வரையறை செய்ய முடியும் `கருத்துச் சுதந்திரமென்பது குறிப்பிட்ட ஒரு சமுதாயத்தில் தனிமனிதன் அல்லது குழு அல் லது ஒரு சமூகம் சுதந்திரமாக தமது கருத்தை எடுத்துச் சொல்ல அல்லது உணர்ச்சிகளுக்கு விளக்கமளிக்க தனது கருத்தைப் பதித்து வைக்க, உரைக்க, சிந்திக்க அவற்றைக் கடைப்பிடித்தொழுக நாகரிகமான முறைப்படியும் பண்பாட்டிற்கேற்பவும் நடைமுறையி லுள்ள சட்ட ஒழுங்குக்கு அமையவும் ஒழுக்க நெறி பழக்க வழக்கங்களுக்கு ஏற்பவும் வெளிப்படுத்தும் உரிமையாகும். சுருங்கச் சொல்லின் பேச்சுச் சுதந்திரம், எழுத்துச் சுதந்திரம், நம்பிக்கைச் சுதந்திரம் ஆகியனவற்றை உள்ளிட்ட எண்ணக்கருவே கருத்துச் சுதந்திரம் ஆகும்.
 

எனினும் கருத்துச் சுதந்திரம் என்பதன் வரையறை குறித்துப் பல தவறான கண்ணோட்டங்கள் நிலவுகின்றன. எந்தவொரு நாகரீகமடைந்த சமூகத்தினதும் பாரம்பரிய நம்பிக்கைக்குக் களங்கம் கற்பிக்காத வகையிலும் அச்சமூகத்தின் மானசீக உணர்வுகளைப் பாதிக்காத வகையிலும் முன்வைக்கப்படும் நியாயமான விமர்சன மதிப்பீடுகளை எந்தவொரு சமூகமும் அங்கீகரிக்கிறது. இதற்கு நேர்மாறாக ஒரு சமூகம் மேலானதெனக் கருதி பின்பற்றியொழுகும் ஒரு சிந்தனையை அல்லது நம்பிக்கையை அல்லது கருத்தை இன்னொரு தனிமனிதன் அல்லது குழுமம் சுதந்திரம் என்ற போர்வையில் பக்கச்சார்பான (Bias) முறையில் கேள்விக்குட்படுத்தும் போது அச்சமூகம் அதற்கெதிராக கிளர்ந்தெழுகிறது. அதனைக் கண்டிக்கிறது. அத்தகு அபாண்டமான விமர்சனம் ஒரு சிந்தனையைச் சிதைப்பதற்கான கருத்துக் கருவியாகவே கருதப்படுகிறது. கருத்துச் சுதந்திரத்தைப் பொறுத்தவரை இது ஒரு வரலாற்றுப் பேருண் மையாகும். உலகிலுள்ள எந்தவொரு கொள்கைக்கும், வாழ்வியலுக்கும் இவ்வுண்மை பொருந்துகிறது என்பதற்கு வரலாறு சான்று மாக் ஸியக் கோட்பாட்டிலும் முதலாளித்துவ ஜனநாயகம் எனும் கண்ணோட்டத்திலும் சமகால மதங்களின் போக்கிலும் இந்த யதார்த்தத்தை நாம் காணலாம்.
எப்போதும் ஒரு தனிமனிதன் தான் சரியானது என ஆதரித்து வழிபடும் ஒரு கொள்கையைக் கொல்வதற்கு, சிந்தனையை சிதைப் பதற்கு அல்லது அதனது அடிப்படைக்கருத்தோட்டங்களைத் தகர்ப்ப தற்கு பக்கச் சார்பின் அடிப்படையில் முன்னிறுத்தப்படும் எந்தக் கருத்துக்கும் மாக்ஸியம் எதிரானது என மார்க்ஸ் அவரது உரை களில் வலியுறுத்தி வந்தார். இதன் விளைவாகவே சோஸலிஸம் ரஷ்யாவில் நடைமுறையிலிருந்த சுமார் 73 வருடகாலத்திலும் ரஷ்யா பின்பற்றிய தொடர்பூடகக் கொள்கையில் மாக்ஸினது இக்கருத்தின் செல்வாக்கை காண முடிகின்றது. சோஷலிஸக் கொள்கைக்குப் புறம்பான எந்தவொரு கொள்கைப் பிரச்சாரத்திற்கும் ரஷ்யாவில் இம்மியளவேனும் இடமில்லாமல் இருந்தமையும் இதன் பிரத்தியட்சமான வெளிப்பாடுதான். மாக்ஸிய சிந்தனையில் மாத்திர மல்ல நவீன முதலாளித்துவ ஜனநாயகம் என்ற கண்ணோட்டத்திலும் கருத்துச் சுதந்திரம் இவ்வகையில்தான் விளங்கப்படுகின்றது. விளக் கப்படுகின்றது. 1980களில் P. Wright எழுதிய SpyCather என்ற DIT Gylp Jerry AdemSG57 Death of Princess 6T657p G5IT606).js. Tl' 5

Page 27
நாடகமும் Allens எழுதிய Perdition எனும் நாவலும் அப்போதிருந்த பிரித்தானிய வெளிவிவகார அமைச்சினால் தடை செய்யப்பட்டன. பிரித்தானியாவின் சமூக வாழ்க்கைப் போக்குகளை விமர்சிப்பதாகவும் அவை அந்நாட்டின் பாரம்பரியங்களுக்கு எதிரானவை எனவும் அரசின் தடையுத்தரவுக்கு நியாயம் கற்பிக்கப்பட்டது.
இவ்வாறு தனக்குத் பாதகம் எனக் கருதியபோது கருத்துச் சுதந்திரத்தின் வாயில்களை அடைத்துவிட்ட அதே பிரித்தானிய அரசே ஸல்மான் ருஷ்திக்கு அடைக்கலம் வழங்கியது. ஆக இதி லிருந்து நாம் புரிந்து கொள்ளும் ஒர் யதார்த்தம்: கருத்துச் சுதந் திரத்துக்கு மேற்குலகம் வழங்கும் அர்த்தம் நகைப்புக்குரியது. அனைத்தையும் வர்த்தக மயப்படுத்தும் மேற்கத்தேய முதலாளித்துவ மனோநிலை கருத்துச் சுதந்திரத்தையும்` தனது நலன்களுக்குச் சார்பாகவும் இஸ்லாமிய எழுச்சிக்கு எதிராகவுமே பிரயோகித்து வருகின்றது என்பதற்கு இது நல்ல சான்று. ஒரு காலத்தில் (மத் திய நூற்றாண்டு) கருத்துச் சுதந்திரத்தின் குரல்வளையை நெரித்த கிறிஸ்தவ உலகும் இந்தக் கண்ணோட்டத்திலேயே கருத்துச் சுதந்திரத்தை ஆதரிக்கிறது.
கிறிஸ்தவப் போதனைக்கு மாசு கற்பிக்கும் எந்தவொரு விமர் சனத்தையும் அது ஏற்கத்தயாரில்லை மாத்திரமல்ல. அதனை ஒரு தெய்வ . நிந்தனையாக (Blasphemy) அது கருதுகிறது. 1984ல் இங்கிலாந்தில் Martin Secorsese என்பவர் தயாரித்து வழங்கிய The Cast of Temptation of Christ 6T6örp 560Ji'il IL-g5687 3CD, 5.T.' SuSci) இயேசு கிறிஸ்து இழிவாக சித்தரிக்கப்பட்டதற்காக லண்டன் நகரம் கிறிஸ்தவர்களின் ஆர்ப்பாட்டங்களாலும் எதிர்ப்புப் பதாகை களாலும் நிரம்பி வழிந்தது. இது கிறிஸ்தவம் எவ்வகையில் கருத் துச் சுதந்திரத்தை அணுகுகின்றது என்பதற்கு ஒர் உதாரணம் மட்டுமே.
எனவே, ஆரோக்கியமான அறிவார்ந்த, ஆக்கபூர்வமான மாற்றுக் கருத்தை வெளியிடும் ஒரு தனிமனிதனின் பேனைக்கும் உதடுகளுக்கும் பூட்டுப்போட முனைவது ஒரு நாகரிகமடைந்த சமூகத்தின் அடை யாளமாக இருக்க முடியாது என்பதை உறுதியாக நாம் ஏற்றுக் கொள்கிறோம். எனினும் அவ்விமர்சனம் தனது நியாயமான எல் லைகளைத் தாண்டும்போது கருத்துச்சுதந்திரம் என்ற வட்டத்திலிருந்து
 

அவை வெளியேறுகின்றது. பத்திரிகை தர்மம், மாற்றுக் கருத்தின் மதிப்பு, சுதந்திர தொடர்பூடகக் கொள்கை என்பதெல்லாம் நிச்ச யமாக இந்தக் கண்ணோட்டத்திலேயே நோக்கப்பட வேண்டும். ஏனெனில் இதுவே இயல்பானது. மனிதாபிமானது.
அனைத்துக்கும் வரையறை உண்டு என்ற வகையில் சுதந்திரத் துக்கும் வரையறையுண்டு. அந்த வரையறையே சுதந்திரத்தை ஒரு பொதுப் பண்டமாகவும் எல்லோருக்குமானதாகவும் நியாயப்படுத்து கின்றது. வரையறை மீறப்படும்போது அது மாற்று சமூகங்களின் உணர்வுகளைப் பாதிக்கும் வகையில் பிரயோகிக்கப்பட்டு சமுக இடை வினைகளில் (Social imtercation) நேரெதினான விளைவுகளை ஏற்படுத்த முயல்கிறது. இது சமூகவியல் ரீதியாக ஒப்புக் கொள்ளப் பட்ட ஒர் உண்மையாகும்.
Nicholas Astiford என்னும் சமகால சமூகவியலாளர் கருத்துச் சுதந்திரம் குறித்து பின்வருமாறு எழுதுகிறார். `எல்லா சுதந்திரங் களுக்கும் இருக்கின்ற பொறுப்பினைப்போலவே கருத்துச் சுதந்திரத் துக்கும் அதற்கான பொறுப்புக்களும் நிபந்தனைகளும் உண்டு. நாகரிகமடைந்த சமூகமொன்றில் குறைவான கட்டுப்பாடுகளை விதிப்பதன் மூலம் அல்லது மனமுவந்த சுய தவிர்ப்பின் மூலம் உரிமைகள் துஷ்பிரயோகம் செய்யப்படவில்லை என நாம் உறுதி செய்கிறோம். ஆனால் இவ்வாறானதொரு கருத்துச் சுதந்திரத்துக்கு சமய விரோத நூல்கள் வெளியிடுவோரும் உரிமை கோருவார்களா யின் அது ஆச்சரியத்துக்குரியதாகும். (இது ஸல்மான் ருஷ்தி தொடர்பாக Nicholas Asliford வெளியிட்ட கருத்தாகும்.)
எனவே, அனைத்து சமூகங்களும் கருத்துச் சுதந்திரத்தை இப்படித்தான் பிரயோகிக்கின்றது. ஆனால், துரதிஷ்டவசமாக மேற்குலகம் கருத்துச் சுதந்திரம் என்ற போர்வையில் இஸ்லாத்தையும் அதன் உயரிய கொள்கைகளையும் கீழ் மதிப்பீடு செய்யவும் அவற்றின் செல்வாக்கை இல்லாதொழிக்கவும் முயல்கின்றது. இஸ் லாத்தைக் கொச்சையாகக் கேள்விக்குள்ளாக்கும் எழுத்தாளர்களுக்கு அது வழங்கும் நோபல் பரிசும் அடைக்கலமும் இதற்கு நல்ல எடுத்துக் காட்டுகள்.
இஸ்லாத்தைப் பொறுத்தவரை அதன் கருத்துச் சுதந்திரம் பற்றிய களம் மிக விரிந்ததாகும். மாக்ஸிய கண்ணோட்டத்தைப்
ჯჯჯ

Page 28
போன்று நியாயமான விமர்சனங்களைக் கூட இஸ்லாம் மறுப் பதில்லை. ரஷ்யாவில் (சோஸலிஸ் அதிகார எல்லையில்) எந்த ஒரு தனிமனிதனும் கம்யூனிஸத்தை நியாயமாகக் கூட விமர்சிக்கும் உரிமை தடுக்கப்பட்டிருந்தது. ஆனால் இஸ்லாத்தைப் பொறுத்தவரை தனது ஆட்சி எல்லைக்குள் வாழும் இஸ்லாமல்லாத ஒரு பிர ஜையும் இஸ்லாத்தை பக்கச்சார்பின்றி விமர்சிப்பதைக்கூட அது அங்கீகரிக்கின்றது. கொள்கைச் சுதந்திரம், சிந்தனைச் சுதந்திரம் என்பன ஒவ்வொரு தனிமனிதனுக்கும் உண்டு என்பதை அல்குர் ஆனும் சுன்னாவும் விரிவாக விளக்கியுள்ளது. இஸ்லாமிய வரலாற் றின் மீதான பரந்த பார்வையும் இதனை உறுதி கூறுகின்றது. ஆக மனித உரிமை, கருத்துச் சுதந்திரம் போன்ற சொல்லாடல்கள் குறித்து பதினான்கு நூற்றாண்டுகளுக்கு முன்பே விழித்து அதனை நடைமுறைப்படுத்திக் காட்டிய பெருமை நிச்சயமாக இஸ்லாத்துக்கு மாத்திரமே உண்டு என்பதனை எந்தவொரு நடுநிலை ஆய்வாளனும் ஏற்றுக் கொள்ளவே வேண்டும்.
துணை நின்றவை
* George N. Nicholas - Fundamental Political Rights - London 1990 * வஃயுல் இஸ்லாமி சஞ்சிகை 1998 * முஹம்மது குதுப் - ருவய்யதுல் இஸ்லாமிய்யா அனில்
அஹ்வாலில் ஆலமில் முஆஸர் * முஹம்மது குதுப் - வாகிஉனா அல் முஆஸர்
தூது சஞ்சிகை
பின்நவீனத்துவம் - கட்டுரைக்கு துணை நின்றவை
1. இலக்கியக்கலை = ஞானசம்பந்தன் 2. கலை இலக்கியக் கோட்பாடுகள் 3. தேசிய இலக்கியமும் மரபு போராட்டமும் - சுபைர்
இளங்கீரன்
4. இலக்கியத்திறனில் ஒரு பார்வை - அந்தனி ஜீவா. 5. World Literature perpectives and prospects.
6. Art and Literature Stalin.
7. சுமபமங்களா - 1996
8. கணையாழி - 1996 ஜனவரி
துவத்தின் தோல்வி
 

a 6L6 Dupngol) நவ காலனியத்தின் புதிய வடிவம்
Larwna எனும் கருத்தாக்கம் இன்று சர்வதேச அரசியல் அரங்கில் பரவலாக விவாதிக்கப்பட்டு வருகின்றது. இது குறித்து இஸ்லாமல்லாத சமூகவியல் கண்ணோக்குகளில் பல்வேறு கருத்தரங்குகளும், செயலமர்வுகளும் நடந்து வருகின்றன. தொடர்பூடகங்களிலும் அரசறிவியல், சமூகவியல், பொருளியல் போன்ற துறைகளிலும் இப்பதப் பிரயோகம் பிரவேசித்து ஒரு சூடான விவாதப் பொருளாக மாறி வருவதோடு மட்டுமன்றி சாதாரண பொது மக்களின் நாவுகளிலும் இது பேசுபொருளாக மாறியுள்ளது.
பூகோளமயமாக்கல் (Globalization) அல்லது உலகமயமாதல் எனும் இச்சொல்லாடல் பல்வேறு கருத்து நிலைகளில் பயன்படு வதால் அதனை மிகத் திட்டமாக வரையறுப்பதில் பல முரண்பட்ட அணுகுமுறைகள் முன்வைக்கப்படுகின்றன. சமூகவியல் அறிஞன் ஒரு கருத்து நிலையிலும், பொருளியல் அறிஞன் இன்னொரு கருத்து நிலையிலும், அரசியலறிஞன் வேறொரு கண்ணோட்டத்திலும்

Page 29
இப்பதத்தை நோக்குகின்றான். எனினும் இதை கலாநிதி நாதியா முஃமூதா எனும் கெய்ரோப் பல்கலைக்கழக விரிவுரையாளர் பின் வருமாறு வர்ைவிலக்கணப்படுத்துவது ஒரளவு மனங்கொள்ளத்தக்க தாகும்.
`மேற்குலக முதலாளித்துவ முன்மாதிரியானது அதன் நிர்மாண உள்ளீடாகக் கொண்டுள்ள கொள்கை, கோட்பாடுகள் அவற்றின் பாற்பட்ட நடத்தை மாதிரிகள் நிஜவுலகில் மேற்கத்தேய நிதர்சனங்கள் என்பவற்றைப் பொருளாதாரம், அரசியல், சமூக - கலாசாரம் ஆகிய முப்பரிமாணங்களினூடாகப் பொதுமைப்படுத்தி முழு உல கையும் தன் ஆதிக்கத்தின் கீழ் கொண்டு வருவதற்கான ஒரு திட்டம் எனலாம்... இக்கருத்தியலின் பின்னணியிலேயே Global Culture, Globalization, Global Vision g5u (upd5ul DIT607 eupgård, நூல்கள் வொசிங்டனில் 1996ல் வெளியிட்டு வைக்கப்பட்டன. இந்நூல்கள் மேற்கத்தேய நாகரிகத்தின் அரசியல், பொருளாதார, சமூகவியல் சிறப்பியல்புகளையும் அவை கோளமயப்பட வேண்டி யதன் அவசியத்தையும் மீள வலியுறுத்தியுள்ளன. இதேபோன்று அமெரிக்கா, ஜப்பான், ஜேர்மனி, இங்கிலாந்து, பிரான்ஸ், கனடா, இத்தாலி போன்ற நாடுகளின் தலைவர்கள் வருடம் ஒரு முறை சந்திக்கின்றனர். இவர்களின் இச்சர்வதேசச் சந்திப்பு உலகப் பொருளாதாரதரத்தை இயக்குவதற்கான ஒரு கூட்டம் எனப்பட் டாலும், பொருளாதார ரீதியில் மட்டுமன்றி உலகளாவிய சமுதாயங் களை தமது அரசியல், சமூக, கலாசார மேலாதிக்கத்தின் கீழ் கொண்டு வருவதற்கான ஒரு சர்வதேச காலனித்துவப் பிரயத்தனத் தையே இச்சந்திப்பும் அது வரைய முனையும் பூகோளமயமாதலும் உணர்த்தி நிற்கின்றது என்பது பட்டவர்த்தனமான உண்மையாகும். இன்றைய காலப்பகுதியில் மேற்கத்தேய கலாசார, சிந்தனா ரீதியான மேலாண்மையை நேசித்தும் அதுவே அனைத்து அகிலத் தாலும் அனுசரிக்கத்தக்கது எனவும் கருதுகின்ற அமெரிக்க, ஐரோப்பிய புத்திஜீவிகள் மத்தியில் மிக ஆழமாக இக்கருத்து வேரூன்றியுள்ளதை அவதானிக்கலாம். எனவேதான் நவீனமயப்படுத்தல் (Modernization) பூகோளமயமாதல் (Globalization) மேற்குமயமாதல் (Westernation) எனும் கருத்தியல் தளங்களும் ஒரே குறிக்கோளை ஈட்டுவதற்கு முனையும் சமாந்தரக் கருதுகோள்களாக கருதப் படுகின்றன. உலகளாவிய ரீதியில் பூகோள மேற்பரப்பில் எந்தவொரு சமூகமும் எய்துகின்ற அரசியல், பொருளாதார, சமுகவியல் மாற்
 

றமும் புத்தெழுச்சியும் மேற்குலகின் கலாசார நாகரிகத்தையே பிரதிபலிக்க வேண்டுமென்பது தவிர்க்க முடியாத விடயம் என இத்தகைய புத்திஜீவிகள் நம்புவதற்கு இதுவே காரணமாகும்.
விஞ்ஞானத்தினதும், தொழில்நுட்பத்தினதும் பிரமாண்டமான வளர்ச்சியின் விளைவாக உலகம் ஒரு பூகோள கிராமமாக சுருங்கியுள்ளமையும் அதன்படி நாடுகளுக்கிடையிலான பொருளாதார, அரசியல் உறவுப் பரிவத்தனைகள் மிகத்துரிதமாக இடம்பெறு கின்றமையும் நாம் வாழும் சமகாலத்தின் ஒரு முக்கிய மாற்றமாகும். கண்டம் விட்டு கண்டம் வாழும் மனிதர்களை கணப்பொழுதில் இணைத்துவைக்கும் பேராற்றல் கொண்ட இலத்திரனியல் ஊடகங்களின் ராட்சத வளர்ச்சி ஒரு அகிலம் தழுவிய தகவல் பரிவர்த்தனையை சாத்தியப்படுத்தியுள்ளது. இத்தருணத்தை தனக்குச் சாதகமாகப் பயன்படுத்த மேற்குலகு, குறிப்பாக அமெரிக்கா கண்டுபிடித்த ஒரு புதிய தந்திரோபாயமே பூகோளமயமாதல் எனும் கருத்தாக்கம் ஆகும். 1991ம் ஆண்டு உலக அரசியல் அரங்கில் இடம்பெற்ற ஒரு குறிப்பிடத்தக்க மாற்றமே கம்யூனிஸத்தின் வீழ்ச்சியாகும். ரஷ்யா, மற்றும் கிழக்கு ஜேர்மனி போன்ற நாடு களில் ஏற்பட்ட சோஷலிஸத்தின் சரிவுகளைத் தொடர்ந்து முதலாளித்துவத்தின் தலைமை ஆதிக்கத்தில் அமெரிக்கா தன்னை தளம் அமைத்துக் கொண்டது. இந்த வகையில் நோக்கும் போது பூகோளமயமாதல் எனும் வேலைத்திட்டத்தில் அமெரிக்கா கணிசமான பங்கை வகிக்கப் போகின்றது என்பது தெளிவானதொரு விடயமாகும். இப்பகைப் புலத்தில் பூகோளமயமாதல் என்பது பின்வரும் பண்புகளைக் கொண்டிருக்கும் எனலாம்.
1. அமெரிக்க மயமாதல்: மேற்கத்தேய முதலாளித்துவம் அதன் தலைமையில் அமெரிக்க மேலாண்மை உலக விவகாரங்களில் ஆதிக்கம் செலுத்துவதன் மூலம் பொருளாதாரம் பெரும் பல்தேசியக் கம்பனிகள் ஊடாகவும்
சர்வதேச சட்டங்களை உலக நாடுகள் மீது பிரயோகிப்பதன் மூலமும் இது நடைபெறுகின்றது. இதேபோன்று அமெரிக்கக் கலாச்சாரப் பெறுமானங்களை உலக நாடுகளின் மீது உள்ளே வேரூன்ற விடுவதன் மூலமும் சர்வதேச கலாச்சாரங்கள் அமெரிக்க மயமாகின்றன. சினிமா, கம்பியூட்டர், இன்ரனெட் செய்மதிகள் போன்ற பல்வேறு தொடர்பூடகங்கள் மூலம் இது செயலுருப் பெறுகின்றது. அமெரிக்கப் பொருளாதார, அரசியல், சமூகப்

Page 30
பெறுமானங்களை உலக நாடுகள் மீது ஆதிக்கம் செலுத்த விடு வதும் பூகோளமயமாதலின் முக்கியமான அம்சமாகும். இந்தவகையில் பல்லின (Multi-Ethnicity) தேசிய அரசுகளிலிருந்து விடுதலை பெற்று சர்வதேச ஒழுங்குக்கு (international Order) வரல் என்ற கருத்து வலியுறுத்தப்படுகின்றது. இந்நோக்கத்தை அடைந்து கொள்ள அமெரிக்கப் பார்வையிலமைந்த மனித உரிமைகள், சந்தை, ஜன நாயகம், இனத்தேசிய பயங்கரவாதங்களை ஒழித்தல் போன்ற கருத்துக்களை மிகப்பாரியளவில் பரப்புகின்றது. சுருங்கச் சொன்னால் உலகம் ஒரே வகைப் பெறுமானங்களும் சிந்தனைகளும் ஆளும் சர்வதேசிய சமூகமாக மாறும் உணவு, உடை, சுவையுணர்வு, ஒழுக்கம் இவையனைத்திலும் உலகம் ஒத்த தன்மையைப் பெற வேண்டும். இப்பாதை பால் தேசிய இனங்களின் தனித்துவங்கள், பல்வகைக் கலாச்சாரங்கள், நாகரிகப் பண்புகள் என்பன ஒழிக் கப்படும். உலகமயப்படலின் இந்த ஒழுங்கைப் பணிந்து ஏற்கும் நாடுகளோடு இது சாத்வீக முறையில் நடைபெறும். இதை ஏற்க மறுக்கும் நாடுகளில் அதிகாரத்தால் நடைமுறைப்படுத்தப்படும்.
2. சர்வதேச சட்டங்களின் ஆதிக்கம் பெரும் முதலாளித்துவ நாடுகள் உலகைத் தம் அதிகாரத்தின் கீழ் வைத்திருக்க பல்வேறு சட்டங்களை இயற்றுவதையே இங்கு குறிக்கின்றோம். உதாரணமாக, உலக வங்கி சிறிய நாடுகளுக்குக் கடன் கொடுக்கும் போது இடும் நிபந்தனைகளை இங்கு தருகின் றோம். " சுங்கவரிக் கட்டுப்பாடுகளை நீக்குதல்.
* அந்நிய முதலீடுகளை கட்டுப்படுத்தும் சட்டங்களை நீக்குதல். * விலைகளிலும், கூலிகளிலும் அரசாங்கம் ஆதிக்கம்
செலுத்துவதை நீக்குதல், * சமூக சேவைகளுக்கான செலவினங்களைக் குறைத்தல், * பொது நிறுவனங்களை குறிப்பாக ஏழைகளுக்குப் பணிபுரியும்
நிறுவனங்களைத் தனியார் மயப்படுத்தல். * அந்நிய கைத்தொழில் பொருட்களுக்கான பிரதியீடுகளை
உருவாக்குவதற்கான திட்டங்களை ரத்துச் செய்தல்.
இந்த வகையில் உலக வங்கியும், சர்வதேச நாணய நிதியமும் இந்தியத் துணைக் கண்டத்திலும், ஆபிரிக்காவிலும், தென் அமெரிக் காவிலும் மனித வாழ்வைச் சிதைப்பதிலும் அவர்களது வாழ்வாதாரங்
 

களைத் தகர்ப்பதிலும் பல்லாயிரக்கணக்கான விவசாயிகள், தொழி லாளர்களை அகதிகளாக மாற்றுவதிலும் பெரும் பங்காற்றியுள்ளன.
3. பொதுசனத் தொடர்பு சாதனங்களின் ஆதிக்கம் அமெரிக்கா 65% மான உலக பொதுசனத்தொடர்பு சாதனங்களில் ஆதிக்கம் செலுத்துகின்றது. இந்தவகையில் பல நாடுகளிலும், சமூகங்களிலும் நிகழும் பெரும் துன்பங்களையும், கஷ்டங்களையும் விளக்கிக்காட்டி இந்த முதலாளித்துவ நாடுகளே அவற்றைக் காக் கின்றன எனக் காட்டுவதில் வெற்றியடைந்து வருகின்றன.
4. திறந்த சந்தைப் பொருளாதாரம் சுதந்திர வர்த்தகம், தாராளப் பொருளாதாரம் (Liberal Economics), சந்தைப் பொருளாதாரம் எனும் பெயர்களால் வழங்கப்படும் திறந்த பொருளாதாரக் கொள்கை ஒரு பயங்கர நவீன கால னித்துவமாகும். வறிய நாடுகளை தம் காலின் கீழ் மிதித்து வள மிக்க ஆசிய நாடுகளை சுரண்டி தம்மை வளர்த்துக் கொள்ள வளர்ச்சியடைந்த நாடுகள் கண்டுபிடித்த ஒரு கொள்கையே இது. தேசிய சந்தை, சுங்கவரி ஒழுங்குகள், தொழிலாளர் உரிமைகள் என்பவற்றைச் சிதைக்கும் வகையில் இச்சந்தைப் பொருளாதாரம் அமைகின்றது. இது உற்பத்திச் செலவினங்களைப் பாரியளவு குறைப்பதிலேயே தங்கியுள்ளன. இதனால் 1980-1995 காலப் பிரிவு களுக்கிடையில் 500 ராட்சத கம்பனிகளிலிருந்து 500 மில்லியன் தொழிலாளர்கள் வேலையற்றவர்களாய் மாறியுள்ளனர்.
சடவாதப் போக்கும், இலாப நோக்கமும் கொண்ட நவீன மேற்கத்தேய நாகரிகம், இயந்திர மயப்படுத்தலின் பயங்கர வளர்ச்சி, தொழிற்சாலைகளின் விசாலமான பெருக்கம், அளவு மீறிய உற் பத்திப் பெருக்கம் இவையனைத்தும் வளர்ச்சியடைந்த நாடுகளின் பண்புகள். இந்நிலையில்தான் அவற்றிடையே பெரும் போட்டி நிலவி அவை உலகில் தமக்கென சந்தைகளைத் தேடுகின்றன. விளைவாக சந்தைப் பொருளாதாரம், சுதந்திர வர்த்தகம் என்ற பெயரில் வளர்முக நாடுகளின் தேசிய பொருளாதாரத்தின் மீது அவை படையெடுக்கின்றன.
5. பெரும் கம்பனிகளின் ஆதிக்கம்.
டொனி கிளார்க் எனும் பொருளாதார அறிஞர் பின்வருமாறு விளக்குகின்றார். உலக மயமாதலில் பயனடையப் போவது இராட்சத நிறுவனங்களே. ஏனெனில் உலகப் பொருளாதாரத்தில் 47% இந்தக்

Page 31
கம்பனிகளின் ஆதிக்கத்திலேயே உள்ளது. சர்வதேச வர்த்தகத்தில் 500 இராட்சத நிறுவனங்கள் தம் ஆதிக்கத்தின் கீழ் வைத்துள்ளன. இந் நிறுவனங்களில் 153 அமெரிக்காவிலும், 155 ஐரோப்பாவிலும், 141 ஜப்பானிலும் உள்ளன. இந்தவகையில் 10% இராட்சதக் கம் பணிகள் மட்டுமே அந்நிய முதலீடுகளைக் கொண்டுள்ளன. இக்கம் பனிகளின் கீழ் இயங்கும் நிறுவனங்கள் பாரியளவு உள்நாட்டு முதலீடுகளைத் தரவேண்டுமென்பது அக்கம்பனிகள் பின்பற்றும் ஒழுங்காகும். இந்தவகையில் நோக்கும்போது இவ்விராட்சத நிறு வனங்கள் 3ம் உலக நாடுகளில் முதலீடுகள் செய்வதில் அதிகம் ஈடுபாடு காட்டுகின்றன என்பது வெறும் போலியாகும். உண்மையில் அந்நாடுகளின் செல்வங்களை இக்கம்பனிகள் உறிஞ்சுகின்றன என்பதே உண்மையாகும்.
மேற்குறிப்பிட்ட எடுத்துக் காட்டுகளிலிருந்து பூகோளமயமாதல் மூன்று முக்கிய தளங்களின் ஊடாகவே நிகழ்கின்றது என சுருக்கிச் சொல்ல முடியும். அவற்றுள் அரசியல் பரிமாணம் என் பது ஜனநாயக விழுமியங்களை நோக்கிய மாற்றங்களையும், மேற்கத்தேய மரபிலான மனித உரிமைகள் காப்பையும், தாராண் மைவாத ஜனநாயகக் கூறுகளையும் (Liberal Democracy), குறித்து நிற்க பொருளாதாரப் பரிமாணம் என்பது முதலாளித்துவ அபிவிருத் திக்கான பொருளியல் உற்பத்தி முறைமை, சர்வதேச முதலீடு, சர்வதேச மூலதனப்பாய்ச்சல் தொழில்நுட்பப் பரிமாற்றம் என்ப வற்றைக் கொண்ட சந்தைப் பொருளாதாரத்தையும் குறித்து நிற் கின்றது. இத்தகைய பல்வேறு பொருளாதாரத் துறைகளிலும் இன்று உலக அரங்கில் ஏற்பட்டுவரும் மாற்றங்கள் அனைத்தும் குறிப்பிட்ட சர்வதேச மையமொன்றிலிருந்து பரவிச் செல்வதை அவதானிக்கலாம்.
மூன்றாவது அம்சமாகிய சமூக, கலாசார பரிமாணம் தான் இன்று பூகோளமயமாக்கல் செயன்முறையின் முக்கிய அச்சாணியாக மாறியுள்ளது. இதன் காரணமாகத்தான் மேலாதிக்கப் போக்குள்ள மேற்கு நாகரிக மாதிரியானது தனது சித்தாந்தங்களையும் விழுமியங் களையும் எதிர்ப்பு, மறுப்புக்களற்ற முன்னணி நாகரிக மாதிரியாக மாற்றுவதற்குப் பகீரதப் பிரயத்தனங்கள் மேற்கொள்வதைக் காணலாம். கோளமயமாக்கல் சிந்தனையை முன்னெடுத்துச் செல்லும் சக்திகள் அதனை உலகப் பரப்பில் ஜனரஞ்சகமாக்குவதற்கும் சர்வதேச நிகழ்ச்சி நிரல் அட்டவணையில் அதனை நிர்ப்பந்தமாகப் புகுத்து
 

வதற்கும் பல்வேறு வகையான நடைமுறைரீதியான உத்திகளையும் ராஜதந்திர நடவடிக்கைகளையும் நுட்பமாக முன்னெடுக்கின்றன. இந்தவகையில் கோளமயமாக்கல் சிந்தனையைக் கருவாகக் கொண்ட பல்வேறு பெயர்களிலான `சர்வதேச மாநாடுகள்’ நடாத்தப்படுவதைக் குறிப்பிடலாம். சூழல் பாதுகாப்பு மாநாடுகள், மனித உரிமைகளுக் கான மாநாடுகள், பெண்கள் தொடர்பான மாநாடுகள், ஆயுதப் பரிகரண மாநாடுகள் என பலவகை மாநாடுகளை பட்டியல் படுத்திக் கொண்டே செல்லலாம்.
கோளமயமாக்கல் தவிர்க்க முடியாதது என விவாதிப்போர் அதன் விளைவுகள் ஆக்கபூர்வமானவை எனவும் ஒருங்கிணைந்த அடிப்படைக் கோட்பாடுகளின் அடிப்படையில் உலகம் ஒற்றைக் கலாசாரக் குடையின் கீழ் வருவதன் ஊடாக பல்வேறு சாதகங்கள் ஏற்படமுடியும் எனவும் வாதிக்கின்றனர். அடுத்த சாரார் இத்தகு எந்த சாதகங்களும் தென்னரைக் கோளங்களுக்கு ஏற்படப் போவ தில்லை எனவும், பன்மைத்துவக் கலாசாரக் கூறுகளைக் கொண்ட (Cultural Pluralism) சர்வதேச சமூகங்களின் வெவ்வேறுபட்ட சமூக, சமய, நாகரிக பரிமாணங்களை இணைக்கும் வகையில் ஒரு fib60p LDITSrf (Ultimate Model for All) a CD56) irraig, frig5ul Dfbp.gif என்ற கருத்தையும் முன்னிறுத்துகின்றனர்.
உண்மையில் சமகால சர்வதேச உறவுகளை எடுத்து நோக்கு மிடத்து ஒரு நவீன சர்வதேச ஒழுங்கு பற்றிய குறிக்கோள் என் பது ஒரு புத்தம் புதிய கருத்தியலன்று. ஏனெனில் கடந்த இரு தசாப்தங்களுக்கு முன்னர் ஒரு புதிய சர்வதேச பொருளாதார брарiће, (New International Economic Order) Lippilu hobiji glub, சர்வதேச தகவல் பரிமாற்ற ஒழுங்கு {(NWICO) - New World Information and Communication Order upg5u 5(55g/Lib sgps1. சபையின் விவாதத்தின் போதும், மேற்குநாடுகளின் புத்திஜீவிகளின் வட்டத்திலும் (Thinking tank) மிக முக்கிய இடம் வகித்தன. எனி னும் காலப்போக்கில் அக்கருத்துக்கள் வலுவிழந்து உலக அரங்கி லிருந்து மறைந்துபோயின. அதே போன்றே நவ உலக ஒழுங்கு பற்றிய பெரும் புகழுரைகள் 1991ல் பாரசீக வளைகுடா யுத்தத்தின் போது ஜோர்ஜ் புஸ்ஸினால் ஆரம்பித்து வைக்கப்பட்டன. அப்போது அமெரிக்க பிரதிநிதியாக விளங்கிய “Thomas Pickering” இடம் நவ உலக ஒழுங்கின் எதிர்காலம் பற்றி வினவப்பட்ட

Page 32
போது அவர் அளித்த பதில் `அது மீண்டும் பெட்டகத்துள் போடப்பட்டுவிட்டது” என்பதாகும். தற்போது பேசப்படும் பூகோள மயமாதலின் எதிர்காலம் பற்றிய சில மேற்கத்தேய புத்திஜீவிகளின் கருத்தும் Thomas ன் பதிலை ஒத்திருக்கின்றது. அந்த வகையில் உலக மயமாதல் வெற்றி பெறுமா? அதன் விளைவுகள் எப்படி அமையப் போகின்றன? என்பதெல்லாம் விரிந்த ஒர் ஆய்வை வேண்டி நிற்கின்றது. இத்தருணத்தில் ஜேர்மனியில் பொருளாதார நிபுணர் `ஒலீப் காங்க் சோக்ஸ்’ விளக்கும் கருத்தொன்று கவனத்துக்குரியது.
`உலகமயமாதல் வெற்றிபெற முடியும். ஆனால் அதனால் பயன்பெற இருப்பவர்கள் மிகச் சிறிய தொகையினரே. ஏனைய பெரும் மனித சமூகம் குரோதங்களை வளர்த்துக் கொண்டு போராடிக் கொண்டிருக்க வேண்டியதுதான். உலகமயமாதல் என்பது தன்னைப் பயிற்றுவித்துக் கொள்வோர் எல்லோரும் நுழையும் ஒரு கழகமன்று. இந்தவகையில் பணக்காரன் தன்னை மேலும் பலப்படுத்திக் கொள்ள விரும்பியோ, ஏழைகள் செல்வம் தேடியோ அங்கு நுழைய முடியாது. பெரும் பணக்காரர்களும், பலவான்களும் மட்டுமே நுழையக்கூடிய வேறுயாரும் நுழையமுடியாத கழகம் அது
இதற்கு உதாரணமாக அமெரிக்காவின் நிலையையே சொல்லலாம். அங்கு நாட்டின் 40% மான செல்வம் 1% மானோர் கையிலேயே உள்ளது. அவர்களது தலா குடும்ப வருமானம் 2.3 மில்லியன் டொலர் அமெரிக்காவின் மேல்மட்ட குடும்பங்களில் 20% மானோரே நாட்டு செல்வத்தில் 80% மான செல்வத்தை தம் கையில் வைத் துள்ளனர். இந்த தகவலே `உலகமயமாதலின்’ விளைவு என்னவாகும் என்பதைக் காட்டப் போதுமானதாகும்.
ஆனால் முழு சர்வதேச சமூகங்களும், நாடுகளும் அமெரிக்காவின் தலைமைத்துவத்தை ஏற்றுக் கொள்ளுமா? ஏனைய நாடுகள் தமது தனித்துவமிக்க கலாசாரத்தையும், நாகரிக பண்பாடுகளையும் இழந்து இவ்வொற்றைக் குடையின் கீழ் ஒதுங்கி, மேற்கின் அரை நிர்வான’, ’நாகரிக மாற்றை` அங்கீகரிக்குமா என்பன போன்ற கேள்விகளுக்கு எதிர்காலமே பதில் சொல்ல வேண்டும்.
 

நவீனத்துவத்தின் தோல்வி
இஸ்லாமிய மாற்றுக்கான தேவை
ஞ்ஞானமும் தொழில்நுட்பமும் அதனடியான ராட்சத இலத்திரனியல் ஊடகங்களும் கைத்தொழில் பேட்டைகளும் முன் னெப்போதும் இல்லாதளவு விருத்தியடைந்துள்ளன. எனினும் அமைதியும் சமாதானமுமிக்க ஆரோக்கியமான அகிலம் ஒன்றைக் கட்டியெழுப்புவது இன்னும் குதிரைக்குக் கொம்பான கதையாகவே தொடர்கிறது. ஜனநாயகம், மனித உரிமைகள், கருத்துச் சுதந்திரம் போன்ற சுரத்துக் கெட்டுப்போன சுலோகங்களும் அவை குறித்த மாநாடுகளும் அவை வரையும் நகல் திட்டங்களும் விழலுக்கு நீரிறைக்கும் முயற்சிகளாய் முடிகின்றன.
மேலைத்தேய உலகம் புத்தாயிரமாம் ஆண்டின் நுழைவாயிலில் புரியும் வெற்றி எக்களிப்புகளிடையேதான் தென், வட அரைக்கோள நாடுகளின் அகநிலைப் போராட்டங்கள் வலுத்து பலகோடி உயிர்கள் பலியாகிக் கொண்டிருக்கின்றன. விளைவாக ஆயிரமாயிரம் அநாதைகளையும் அகதிகளையும் அபலைகளையும் உருவாக்கிவிட்ட யுத்தத்தின் கோர முகங்களுக்கு முன்னால் மனிதம் மரித்துக்

Page 33
கொண்டிருக்கும் ஒரு துரதிஷ்ட வசமான நூற்றாண்டில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். இரண்டாம் போப் ஆண்டவர் The Worst Century of All Known Human History 6T657 spy gli DiTibpstador டைச் சாடுவது சாலப்பொருந்தும்.
மனிதன் இதுகாறும் வரைந்த வாழ்வியல் முறைகளும் சிந்தனை களும் மனித ஆக்கத்தைவிட அவனது அழிவுக்கு வழிகோலியதே அனந்தம் உலக வரலாற்றின் மீதான பின்னோக்கிய பார்வை இவ்வுண்மையை நன்கு தெளிய வைக்கின்றது. எனவே, சமகால சமூக வாழ்வு குறித்த செல்நெறியையும் கொள்கைக் கட்டுமானத் தையும் நாம் மறுபரிசீலனைக்குள்ளாக்குவது தவிர்க்க வியலாதது. அப்போது மட்டுமே உலகம் தழுவியதோர் உன்னதமான ஒரு சமூக அமைப்பை உருவாக்குவதற்குப் பொருத்தமான இயங்கு திசையை இனங்காணலாம். இந்த வகையில் அண்மைக்காலமாக மேற்குலகில் மட்டுமன்றி கீழைத்தேய நாடுகளிலும் புலமைத்துவவாதி களின் கவனத்தைக் கவர்ந்துவரும் பின்நவீனத்துவம், நவீனமயமாதல், மேற்குமயமாதல் என்பன பற்றிய புரிதல்களையும் இஸ்லாமிய ஆளுமையை இக்கருதுகோள்கள் பாதிக்குமா என்பது பற்றியும் நோக்குதல் பொருந்தும்.
pofatuDulong6i (Modernization), L9667p6golj5jGljub (Post Modernity), உலக மயமாதல் (Globalization) போன்ற சொல்லாடல்கள் மேற்கத்தேய கலாசார மற்றும் சமூக சூழலில் இருந்து தோன்றியவை என்பது முதலில் மனங்கொள்ளத்தக்கது. ஆதலால் மேற்கத்தேய சமூக வாழ்வினைப் பற்றிப் படர்ந்திருக்கும் லோகாயுதம் (Secularism), சடவாதம் (Meterialism), மத எதிர்ப்புத்தன்மை என்பன இக்கருதுகோள்களில் கணிசமான அளவு இழையோடுவதை அவ தானிக்கலாம். இப்பகைப்புலத்தில் இக்கருத்தியல்கள் சாதாரண மொழிக் கருத்துக்கு அப்பால் ஒரு கொள்கை அச்சில் வார்க்கப்பட்ட பிரத்தியேக சிந்தனை முகாம்களாக நோக்கப்பட வேண்டியது மிக அவசியமாகும்.
மதத்துக்கும் அறிவியலுக்கும் இடையிலான போர் நிலை தணிந்த 17ஆம் 18ஆம் நூற்றாண்டுகளில் ஐரோப்பாவில் ஏற்பட்ட அறிவெழுச்சியைத் (Enlightenment) தொடர்ந்து உருவான கருத்து வடிவமே நவீனமயமாதல் ஆகும். அறிவெழுச்சிக் காலப்பகுதியின் ஆதிகர்த்தாக்களான மார்க்ஸ் வேபர் (Marx Weber), டேக்கீம்
 

(Durkheim) போன்றோர் முதல் சமகால ஐரோப்பிய அமெரிக்கப் புலமைவாதிகளான பி. ஹன்டிங்டன் (P. Huntington), புகயாமா (Pukayama) வரை நவீனமயமாதல் சிந்தனையை ஒரு தனித்த கோட்பாட்டு வடிவமாக வளர்த்தெடுப்பதில் பெரும் பங்காற்றுகின்ற னர். ஒரு கோட்பாட்டு நிலைக்கு வெளியே 19ஆம் 20ஆம் நூற் றாண்டில் மேலைத்தேய சமூகங்களின் புறவாழ்வைப் பெரிதும் நேரெதிராகப் பாதித்தவற்றுள் நவீனமயமாதல் முதன்மையானது என்பதும் குறிப்பிடத்தக்கது.
God is died or does not exist. This Man must take the place of god and that is why ‘freedom individualism and “Human rights are so important to the new “GOD MAN (Echo of Islam Oct. 1995)
இதுவே நவீன மயமாக்கல் அல்லது மயமாதல் என்பதன் வரைவிலக்கணமாகும். ஐரோப்பிய திருச்சபைகளுக்கு எதிராகவே அறிவெழுச்சி உதயமானதால் நவீனமயமாதல் என்பது மனிதனை கடவுளிலிருந்து பிரித்து வேறாக்கி, அவனையே கடவுளாக்க பெரும் பிரயத்தனங்களை எடுத்தது. இத்தகைய நவீன பகுத்தறிவாத கடவுள்மனிதனுக்கு சேவகம் புரிவதற்கு ஏற்பவே விஞ்ஞானமும் தொழில் நுட்பமும் பயன்பட வேண்டும் என்ற கருத்தையே நவீன மயமாதல் வலியுறுத்துகின்றது.
சமகால தலைசிறந்த இஸ்லாமிய சிந்தனையாளரும் மேற்கத்தேய நாகரிக விமர்சகருமான கலாநிதி நகீப் அத்தாஸ் தனது இஸ்லாமும் உலகியலும் (Islam and Secularism) எனும் நூலில் நவீனமயமாதல் உள்ளடக்கியிருக்கும் மூன்று முதன்மைப் பண்புகளை கீழ்வருமாறு அடையாளப்படுத்துகின்றார். (AJISS Spring 1997)
01. இயற்கையை வெற்றி கொள்ளல் (Control Over nuture) 02. அரசியல் புனிதத்துவத்தை இல்லாதொழித்தல் (Descralization
of Politics) 03. ஒழுக்க மதிப்பீடுகளைச் சிதைத்தல் (Deconsecration of
values)
நவீன மயமாதலின் சமூக இயக்கப் போக்கின் முழுமையைப் பற்றிய புரிதல் மிகச் சரியாக அமைய வேண்டுமாயின் இம்மூன்று குணாம்சங்களையும் சற்று விலாவாரியாக நோக்குதல் பெருந்தும், கலாநிதி அலி ஷரீஅத்தி குறிப்பிடுவது போன்று மேற்கத்தேய

Page 34
முழு வாழ்வியல் கோட்பாடும் மனிதன் எங்கே வாழ்கின்றான்? என்ற வினாவுக்கான விடை மீதே கட்டியெழுப்பப்பட்டுள்ளது. அதாவது மனிதன் வாழும் இப்பிரபஞ்சத்தின் மீதும் அவனைச் சூழவுள்ள இயற்கையின் மீதும் ஆதிக்கம் செலுத்தி அவற்றை வெற்றி கொண்டு ஒரு வாஸ்தவமான வாழ்க்கைக்கு அவற்றைப் பயன்படுத்துவதே மனித வாழ்வின் இறுதி நோக்கம் என்பது அதன் கருத்தாகும். இவ்விலக்கை எட்டவே மேற்கு தனது அறி வியல் வளத்தையும் தொழில்நுட்பத்தையும் கட்டியெழுப்பியுள்ளது. எனவே, நவீன மயமாதலில் இயற்கையும் அதன் அரிய வளங்களும் மனிதனின் எதிரிகளாகக் கொள்ளப்படுகின்றன. மட்டுமன்றி, இயற்கை அழிக்கப்படுவதற்கும் அனுபவிப்பதற்குமே எனும் முதலாளித்துவ மனோநிலை ஈற்றில் மனிதனை பேராபத்துக்கு இட்டுச் சென் றுள்ளதை இன்று அவதானிக்கிறோம். அறிவின் ஆபத்து (Crisis of Knowledge) பற்றி இப்போது பேசப்படுவதற்கு இதுவே காரண மாகும். இதுதான் நவீனத்துவம் இழைத்த இமாலயத் தவறாகும்.
பிரமாண்டமான கைத்தொழில் பேட்டைகளின் பிறப்பும் இயந்திர மயமாக்கலும் நகராக்கத் திட்டங்களின் விரிவும் அறிவியலையும் தொழில்நுட்பத்தையும் சாபக்கேடானதாக மாற்றியுள்ளன. இஸ்லாமிய நிலைக்களனில் பெளதீகமும் இயற்கைச் சூழலும் கிலாபத் (இறை சட்டத்தை அமுல்படுத்தல்), இமாரத் (பூமியை வளப்படுத்தல்) என்பவற்றின் மேய்ச்சல் தரையாகவும் ஈமானின் வெளிச்சவீடாகவும் தெளபாவின் ஆதார சுருதியாகவும் கணிக்கப்படுகின்றன.
இரண்டாவது குணாம்சம்; பாரம்பரிய அரசியல் சிந்தனையைக் களைதலும், அதற்கான பிரதியீடொன்றை மீள வலியுறுத்தலும் அதாவது, நவீனமயமாதல் அரசியல் தளத்தில் எவ்வாறு நிகழ் கின்றதெனின், கடவுளின் சட்டமாக்கும் உரிமையை மறுத்துரைப்பதன் மூலம் அது நடைபெறுகின்றது. இதற்கான மாற்றீடாக நவீனத் துவவாதிகள் முன்வைப்பதே ஜனநாயக சிந்தனையாகும். மக்களை மக்கள் ஆள்வதற்கு மக்களால் உருவாக்கப்படும் மக்களாட்சியே ஜனநாயகம் எனப்படுகின்றது. இங்கு மக்களுக்கான சட்டங்களை மக்களே இயற்றுகின்றனர் என்பது முக்கியமானது. உண்மையில் சர்வாதிகாரம், புரோகிதர் ஆட்சி, அரசின்மைக் கோட்பாடு என் பவற்றுடன் ஒப்பிடும் போது ஜனநாயகம் தன்னளவில் ஏற்புட மையான ஒரு அரசியல் வடிவமே. எனினும், அதன் நடைமுறை
 

சாத்தியத்திற்கு அவசியமான தார்மீக வரையறைகளை மறுத்து, வெறும் மதச்சார்பற்ற போக்கை அது கடைப்பிடிப்பதால் அதன் தோல்வி தவிர்க்க முடியாதது. உலகளாவிய ரீதியில் குற்றுயிராய்க் கிடக்கும் ஜனநாயகக் குறிக்கோள்களின் தோல்வி இதனையே காட்டுகின்றது.
இஸ்லாமிய அரசியல் சிந்தனை ஒரு பூரண ஜனநாயக முறையன்று. அதேபோன்று, ஒட்டுமொத்த தெய்வீக ஆட்சியுமன்று. அங்கு சட்டங்களை இறைவன் இயற்ற, அதனை நடைமுறைப்படுத் தும் பணியை ஒழுக்கத்திலும் ஆன்மீகத்திலும் உயர்ந்த மனிதர்கள் மேற்கொள்கின்றனர். இதுவே நவீன ஜனநாயகத்துக்கும் இஸ்லாமிய அரசியல் சிந்தனைக்கும் இடையிலான அடிப்படைப் பிரிகோடாகும். மெளலானா மெளதுாதி (ரஹ்) அவர்களின் இறை ஜனநாயகம் (Theo-Democracy) என்ற வார்த்தை இதற்கு மிகப் பொருத்தமாகும். முழு உலகிற்கும் சமத்துவத்தையும் சகோதரத்துவத்தையும் சுதந்திரத் தையும் மலரச் செய்ய இதுவே இன்றுள்ள ஒரே அரசியல் மாற்று. ஏனெனில் மேற்கத்தேய அரசியல்மயமாதல் அல்லது நவீனமயமாதல் என்பது எத்தகு பயனுறுதி வாய்ந்த தீர்வுகளையும் இன்றைய சமூகப் பிரச்சினைகளுக்கு வழங்காது என்பதே கடந்த கால வரலாற்றிலிருந்து நாம் உணர்ந்து கொண்ட விடயமாகும்.
நவீன மயமாதலில் மூன்றாவது முக்கிய பண்புதான், மதிப்பீடு களைச் சிதைத்தல், அதாவது, காலாகாலமாக நிலவிவரும் ஒழுக்கப் பண்பாடுகளையும் சமூக விழுமியங்களையும் மறுதலித்து ஒழுக்க மின்மை என்ற நிலையை அடைதல், அல்லது மனித ஆடம்பரத் துக்கும் இன்ப நோக்கங்களுக்கும் இசைவான புதிய ஒழுக்க மர புகளைத் தோற்றுவித்தல். இதன் மூலம் மனிதனது புறவாழ்வு, ஒரு புதிய இயங்குதிசையில் பயணிப்பதோடு சுவாரஷ்யமானதாக அமையும் என்பது இதன் வாதம்,
பின்நவீனத்துவ சமூக, ஒழுக்க வாழ்வியல்
பின்நவீனத்துவம் இன்றைய கலை, இலக்கிய, சமூக, ஒழுக்கப் பரிமாணங்களில் தனது வேர்களை ஆழப்பதிக்க முனைகின்ற மற்றொரு கருத்தியல் வடிவமாகும். மாற்றத்தை உள்வாங்குதல் (Absorbing Change) என்பது மேற்கத்தேய வாழ்க்கை முறையின் ஒரு முக்கிய பண்பாகும். இந்தவகையில் ஒரே வகையான வாழ்வை

Page 35
தொடர்ந்து அனுபவிக்கும் வேளையில் ஏற்படும் சோர்வும் சலிப்பும் ஒரு மாறுதலை நோக்கிய சிந்தனையை மேற்கு மனிதனிடம் ஏற் படுத்துகின்றது. எனவே வாழ்க்கையின் எல்லாப் பகுதிகளிலும் இந்த மாற்றத்தை அவன் எதிர்பார்க்கின்றான். இந்தப் பின்னணிலேயே பின்நவீனத்துவம் அதனது கோட்பாடுகளை உருவாக்கியுள்ளது.
இதுவரை சமூக அங்கீகாரத்துடன் இருந்துவரும் மதிப்பீடுகள் அனைத்தையுமே தாண்டிச் செல்லல், அவற்றைக் கேள்விக்குள்ளாக் குதல், மரபுகளை மீறிச் செல்லல் (Transgrating traditions), எவை எல்லாம் சமூக அமைப்பின் கட்டுக்கோப்புக்கான எல்லைகளாக கணிக்கப்பட்டு வருகின்றதோ அவற்றைக் கடந்து செல்லல் (CorSS the Borders), ஒழுக்க வரம்புகளாக இருந்துவரும் சமூக ஐதீகங்களை உடைத்தல் (Breaking Orthodox) இவைதான் பின்நவீனத்துவ கருத் தியல் வடிவத்தின் சாரம் கலை இலக்கியம் கல்வி தொழில்நுட்பம் அனைத்துமே இந்தக் குறிக்கோள்களை அடைய பிரயோகிக்கப்பட வேண்டும் என அது வேண்டுகோள் விடுக்கின்றது.
இப்பகைப் புலத்திலேயே மேற்கு நாகரிகம் மனிதனின் ஒழுக்கப் பரிணாமத்தை (Moral Evolution) வலியுறுத்தி ஈற்றில் மனிதனை ஒரு நிர்வாணப் பொருளாக ஆக்கியுள்ளது. எதனையும் தாண்டிச் செல்வதே சுவாரஸ்யமானதும் புதுமையானதும் என்ற வகையில் நிரந்தரமான ஒழுக்கக் கோவைகள் என எதுவுமே கிடையாது என்பது இதன் வாதம். இத்தகு கருத்தியல் செல்வாக்கு நவீன பகுத்தறிவு மனிதனின் சமூக வாழ்வைப் பெரிதும் பாதித்துவிட்டது. மருத்துவத்தால் நிவாரணம் காணமுடியாத பல நோய்களும் விஞ் ஞானத்தால் அவிழ்க்க முடியாத பல புதிர்களும் மேற்கின் சாதா ரண மனிதனை ஆக்கிரமித்துக் கொண்டிருக்க இதுவே காரணமாகும்.
இஸ்லாம் அரசியல், பொருளாதார சமூக மாற்றங்களுக்கு ஏற்ப நெகிழ்ந்து கொடுத்து ஒவ்வொரு காலத்துக்கும் சூழ்நிலைக்கும் ஏற்ற வழிகாட்டலை முன்வைக்கின்றது. அதேவேளை அது சமூக மாற்றங்களுக்கு ஏற்ப தன்னைத் தலைகீழாக மாற்றிவிடாது தனது அடிப்படைகளில் நிலைத்து நிற்கின்றது. அதனது சட்டங்களும் வழிகாட்டல்களும் போதனைகளும் மனித இயல்புக்கும் தேவை களுக்கும் இயைந்த வகையில் அமைகின்றன. ஆக, மாறாத்தன்மையும் நெகிழும் தன்மையும் இஸ்லாத்துக்கே உரிய தனிப்பண்பாகும்.
 

இவ்விரு பண்புகளாலும் அது காலத்தை வென்று வாழ்கின்றது. மாற்றங்களைக் கடந்து ஜீவிக்கின்றது.
மனித சிந்தனைகளும் மதங்களும் காலவோட்டத்தின் பரிணாமச் சக்கரத்துள் சிதையுண்டு தன்னையே தலைகீழாய் மாற்றி நிற்கின்றன. புதிய புதிய சமூக, அரசியல் பிரச்சினைகளுக்குத் தீர்வு சொல்லத் திராணியற்று காலாவதியான சிந்தனைகளாய் கிழடுதட்டி நிற்கின்றன. இஸ்லாம் பதினான்கு நூற்றாண்டுகளாக அதே இளமைப் பொலிவுடன் விளங்குகின்றது. மனித வாழ்வின் ஈருலக மேம்பாட்டை மலரச் செய்யும் மொத்தத் தகுதிகளையும் கொண்டிலங்குகின்றது. ஆதலால் இஸ்லாத்துக்கு வெளியே உள்ள ஒரு கொள்கைத் திட் டத்தை இஸ்லாமிய சமூகம் இறக்குமதி செய்ய வேண்டிய தேவை கிஞ்சிற்றும் கிடையாது. ஏனெனில் காலம், இடம், மாற் றம் என்பவற்றின் கட்டுப்பாடுகளையும் எல்லைகளையும் கடந்து பிரவேசிக்கும் பேராற்றல் இஸ்லாத்துக்கு மட்டும் எப்போதும் உண்டு.
இஸ்லாமிய உலகில் காட்டாறு போல் பிரவாகித்துப் பாயும் இஸ்லாமிய எழுச்சி அலைகள் மேற்கு நாடுகளிலும் இஸ்லாம் பற்றிய ஒரு புத்தெழுச்சியை உருவாக்கிவருகின்றது. அமெரிக்கா, மற்றும் ஐரோப்பிய நாடுகளில் இஸ்லாத்தை நோக்கிய மேற்கத்தேயர் களின் வருகை பெருக்கல் விருத்தியில் சென்று கொண்டிருக்கின்றது. கலாநிதி யூஸ"ப் அல் கர்ளாவி அவர்களின் வார்த்தையில் சொல்வதாயின், இஸ்லாமே நாளைய நாகரிகமாய் பரிணமிக்கும், ஏனெனில் இஸ்லாம் மட்டுமே எப்போதும் இளமையாய் இருக் கின்றது.
துணை நின்றவை * American Jornal of Islamic Social Sciences (AJISS) Spring 1997 * Dr. Naqib Al Addas - Islam and Secularism * Mariyam Jameela - Islam and Westernaization * P. Huntington - Clash of Civilization and Remaking the World Order * Echo of Islam October 1995 * Dr. Yoosuf Al Qurdawi - Islam Civilization of Tomorrow
நவீனத்துவத்தின் தோல்வி

Page 36
GDOGOu GeOTsungif
அதன் சமூக, அரசியல், பண்பாட்டுக் கூறுகள்
四、 கால மனித சமூகத்தின் புறவாழ்வைப் பாதித்தவற்றுள் மனிதன் தோற்றுவித்த சிந்தனைகள் பெரும் பங்கு வகிக்கின்றன. மேற்கு நாகரீகத்தை அனுசரிக்கும் பல்வேறு சமூகங்களின் ஒழுக்கப் பண்பாட்டியல் வீழ்ச்சியும் தார்மீகச் சரிவுகளும் மனித வாழ்வு குறித்த மேற்கின் மயக்கமான, தெளிவற்ற பார்வைக் கோணத்தின் விளைவே. இந்நூற்றாண்டில் மனித விழுமியங்களுக்கு அப்பால் ஒட்டுமொத்த மனித சமூகத்தின் முகத்திலேயே ஓங்கி அறைகின்ற மேற்கின் இனவாத சிந்தனையும் கிழக்கின் சாதிய அமைப்பும் நாம் வாழும் இருண்ட யுகத்திற்கு நல்ல உதாரணமாகும். இந்த வகையில் இனவாதம் மற்றும் சாதிய அமைப்பு பற்றி சில விமர் சனக் குறிப்புக்களை முன்வைக்க இக்கட்டுரை முயல்கின்றது.
உலக வரலாற்றில் நினைவுக்கெட்டாத காலம் முதல் இனப் பாகுபாட்டுச் சிந்தனையும் மக்களை வகைப்படுத்தி நோக்கலும் பல்வேறு வடிவங்களில் நிலவி வந்துள்ளன. ஆனால், இருபதாம் நூற்றாண்டில் இப்பிரச்சினை முன்னெப்போதும் இல்லாதவாறு கூர்மையடைந்திருக்கின்றது.
 
 

கிரேக்கத்திலேயே இனப்பாகுபாடு முதன்முதலில் மேலெழுந்தது
என மானிடவியலாளர்கள் குறிப்பிடுகின்றனர். கிரேக்கர்கள் தமது சமூக உறுப்பினர்களை பாட்டாளிகள், உத்தியோகத்தர்கள், வியாபாரி கள் என பாகுபடுத்தியிருந்தனர். இம்மூன்று பிரிவிலும் ஏனையோரை விட பத்து மடங்கு அதிகமாக இருந்த தொழிலாளிகளின் முழுக் காலமும் எஜமானிகளுக்குப் பணி செய்வதிலும் கட்டளைகளை நிறைவேற்றுவதிலுமே கழிந்தது. உரோமர்களது சமூக அமைப்பிலும் நான்கு பிரதான மக்கள் குழுமங்கள் வாழ்ந்ததாக நம்பப்படுகின்றது. உயர் குலத்தோர் மத்திய வகுப்பினர், அடிமைகள், வீரர்கள் என்ற சாதிய வேறுபாடு ரோமர்களின் சமூக வாழ்வில் மிக இறுக்கமாக நிலவியது. இஸ்லாத்திற்கு முற்பட்ட அரேபியாவிலும் இவ்வகை குலகோத்திர வேறுபாடுகளும் அடிமை முறையும் காணப்பட்டது. நாடோடிகளின் தேசம் என வர்ணிக்கப்படும் அரேபியாவில் வாழ்ந்த கோத்திரங்கள் ஒவ்வொன்றும் தன்னைத்தானே மேன்மைமிக்கதாகக் கருதியதால் மேலெழுந்த கோத்திரமோதல்களும் பூசல்களும் பல வருடங்களுக்கு நீடித்தன. இஸ்லாத்தின் வருகையோடு இந்நிலை மாறியது. மனித சமத்துவம் மற்றும் சகோதரத்துவப் பிணைப்பால் அம்மக்களை இஸ்லாம் ஒன்றிணைத்தது.
இந்தியாவில் மிகத் தொன்மையான காலம் முதலே சாதிய சமூக அமைப்பு நிலவி வருகின்றது. இந்திய சமூக வாழ்வியலில் ஆழ வேரூன்றியுள்ள சாதியத்தின் ஊற்றுக்கண் மத ஆசாரங்களி லிருந்தே பிறக்கின்றன என்பதனால் இப்பிரச்சினை ஒயாமல் தொடர்கின்றன என சமூகவியலாளர்கள் கருதுகின்றனர். இந்துமதப் பாரம்பரியமும் நம்பிக்கைகளும் சாதியத்தை வளர்த்தெடுப்பதில் வலிமை சேர்த்துள்ளன. வைதா மனுசாஸ்திரம், பகவக்கீதை, பதஞ்ஞல், சம்ஸ்கிய, மகாபாரதம் ஆகிய நூல்களிலேயே சாதியத்தைத் தூண்டுவதற்கான புராணங்களும், மதக்கருத்து நிலைகளும் சிதறுண்டு கிடப்பதாக இந்திய சமூக வாழ்வை ஆராய்ந்த இஸ்லாமிய வர லாற்றாசிரியர் அபூரைஹான் அல் பிரூனி குறிப்பிடுகின்றார்.
பிராமணர்கள் (பார்ப்பனியர்கள்), ஹரிஜன்கள், சஸ்திரியர்கள், வைஸியர்கள், ஆகிய நான்கு பிரதான சாதியினர்களிடையே அதி மேன்மைமிக்க சாதியாக பார்ப்பணியம் தன்னை வடிவமைத்துக் கொண்டுள்ளது. மிக கீழ்மட்ட சாதியாக ஹரிஜன்யம் விளங்குகின் றது. உரிமைகளையும் டாம்பீக வாழ்வையும் அனுபவிக்கும் பிராம

Page 37
னர்களின் கைகளிலேயே அதிகாரம் முழுவதும் குவிந்து கிடக்கின் றது. இதனால் மத வழிபாட்டிலும் வியாபார நிலையங்களிலும் திருமண முறைகளிலும் ஹிரிஜன்களது அபிலாஷைகள் புறந்தள்ளப் படுகின்றன. இந்தியாவில் நிலவும் இந்த சமூக அடுக்கமைவினால் ஹரிஜன்கள் எனும் தாழ்த்தப்பட்ட சாதியினர் தீண்டாமைக்குரியவர் களாகவும் இழிவானவர்களாகவும் நோக்கப்படுகின்றனர். இந்தியாவின் கொந்தழிப்பு அரசியலில் வெறும் கட்சி லாபங்களுக்காக மட்டும் இவர்களது வாக்குகள் லாவகமாகப் பயன்படுத்தப்படுகின்றன. சாதா ரண வாழ்வில் பாதை போடல், பிணம் சுடல், கொட்டு அடித் தல், குழி வெட்டுதல், கக்கூசு கழுவுதல் போன்ற மட்டரகமான தொழில்களுக்கப்பால் எத்தகைய உயர்ந்த பதவியினையும் வகிக்க முடியாத அளவுக்கு பார்ப்பணியம் இவர்களை ஒடுக்கி வருகின்றது. இந்தியா சுதந்திரமடைந்து அரை நூற்றாண்டு கழிந்தும் தாழ்த்தப்பட்ட சாதியினருக்கு விமோசனம் கிடைக்கவில்லை. இந்து மதத்தில் அதிகம் பேர் இருக்கின்றனர் என்ற கணித உயர்வைப் பேணுவதற்காக மட்டும் ஹரிஜன்கள் இந்து மதத்தில் சேர்த்துக் கொள்ளப்படுகின்றார்களே ஒழிய வேறெந்த இலாபமும் அவர் களுக்குக் கிட்டுவதில்லை என சமூக ஆய்வாளர்கள் குறிப்பிடு கின்றனர்.
`தீண்டாமை`யும் சாதியமும் இன்றுவரை இந்திய சமூக வாழ்வியலில் ஒரு பண்பாட்டு மரபுரிமையாகப் பேணப்படுகின்றது. பிராமணியர்கள் தமது சின்னஞ்சிறுசுகளுக்கே தங்களது மேன்மை யையும் தீண்டாமையையும் சொல்லிக் கொடுக்கிறார்கள். இதனால் அவர்கள் பெற்றோரைப் போன்றே பிராமணிய கருத்துநிலை ஆதிக்கத்தினால் பாதிக்கப்பட்டு தொடர்ந்தும் அந்த வேறுபாட்டைப் பேண முனைகின்றனர். இதனால் சாதிய வேறுபாடுகள் ஒவ்வொரு தலைமுறையையும் தாண்டி சமூக வாழ்வில் பிரவேசித்து மிக மோசமான விளைவுகளைத் தோற்றுவித்து வருகின்றது. இந்திய சமூகத்தின் புராண அடித்தளங்களையே பெயர்த்து விடுவதன் மூலமே இந்நெருக்கடிகளுக்குத் தீர்வு கிடைக்கும் என்கிறார் கிளைரன்ஸ் எனும் சமூகவியலாளர்.
தாழ்த்தப்பட்ட மக்களின் உரிமைகளுக்கு இந்திய அரசியலமைப் புச் சட்டத்தில் உத்தரவாதம் அளிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்பட்டா லும் அது ஒரு கோட்பாட்டு நிலைப்பட்ட ஏட்டுச் சுரைக்காய் விவகாரமாகவே இருந்து வருகின்றது. மத்திய அரசோ இந்து
 

மதமோ அரசியல் கட்சிகளோ எந்த அமைப்பும் இவர்களது பிரச்சினைக்குத் தீர்வு சொல்லவில்லை. இருபத்தோராம் நூற்றாண்டில் கால் பதித்துக் கொண்டிருக்கும் மனித சமூகம் சந்திரனில் வாழ் வதற்கான தயாரிப்புகளில் இறங்கியிருக்கும் இந்த யுகத்தின் அடுத்த பக்கம் எவ்வளவு தூரம் இருள்படிந்து கிடக்கின்றது என்பதற்கு நாம் மேலே சொன்னவை நல்ல உதார ணங்களாகும். கீழைத்தேய மத நம்பிக்கைகளின் அடியாக மேலெழும் சாதியக் கோட்பாட்டை ஒத்ததே மேற்குலகில் பூதாகரமாக உருவெடுத்துள்ள இனவாதச் சிந்தனையாகும்.
இனவாதம் பல்வேறு வடிவங்களில் மேற்கத்தேய நாடுகளில் நிலவி வருகின்றது. ஐக்கிய அமெரிக்காவில் கடந்த மூன்று நூற் றாண்டு கால இடைவெளியில் இனவாதம் அதன் உச்சநிலையில் கட்டவிழ்த்த மிகக் கொடூரமான தாக்குதல்கள் ஒட்டுமொத்த மனிதத்துவத்தையும் கேள்விக்குள்ளாக்கி இருக்கிறது. மேற்கத்தேய சமூகங்கள் தமது அன்றாட வாழ்வில் அதனை அனுபவிக்கின்ற அளவுக்கு இனவாதத்தின் எல்லைகள் அகலித்திருக்கின்றன. நாகரீகத் தின் உயர்ந்த எல்லைகளைக் கடந்து கொண்டிருப்பதாக எக்களிக்கும் அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் இனஒதுக்கல் கொள்கை அதன் பிற்போக்குக் கூறுகளின் வெளிப்படையான குறிகாட்டியாகவே தென்படுகிறது.
ஏகாதிபத்திய காலத்தில் ஆபிரிக்கா மீது தன் மேலாதிக்கத்தைத் திணித்த ஐரோப்பா இன்றுவரை உலகத்தில் தாங்களே மேன்மை யானவர்கள் என்ற கற்பிதத்தைக் கட்டமைத்திருக்கிறது. ஒருவகையில் கலாசார காலனியத்தின் மறைமுக வடிவமாகக்கூட இதனை நோக்கலாம். இக்கற்பிதத்தின் புறநிலை வெளிப்பாடுகள் பலபோது வன்முறையாகவும் காட்டுமிராண்டித்தனமாகவும் மேலெழுந்தன. விளைவாக தென்னாபிரிக்காவில் எண்ணிக்கையில் அதிகமான கறுப்பின மக்கள் வாழ்ந்தபோதும் அவர்கள் மிக நீண்டகாலம் அடிமைத்தளையில் சிக்குண்டு தவிக்க நேர்ந்தது. அவர்கள் மீதான தழை நீக்கலுக்காக (Emencipation) மண்டேலா போன்றவர்கள் 27 வருடங்களைச் சிறைகளில் கழிக்க வேண்டியிருந்தது. மிக அண்மைக்காலங்களில் கூட அமெரிக்கச் செவ்விந்தியர்கள் மீதும் கறுப்பினத்தவர்கள் மீதும் அமெரிக்க இனவெறி இயக்கங்கள் திணித்துள்ள ஒடுக்குமுறைகள் மிகவுமே மிலேச்சத்தனமானவை. முழு மனித இனத்தையும் அவமானப்படுத்தும் தன்மை இக்கருத்தி

Page 38
யலுக்குப் பின்னால் தொழிற்பட்டு வருவது அவதானத்துக்குரியது. ஐக்கிய அமெரிக்காவில் இயங்கிவரும் இனவாத அமைப்புக்கள் கறுப்பின மக்களின் சுதந்திரத்திற்கும் சமத்துவத்திற்கும் எதிராகவே செயற்பட்டு வருகின்றன. Ku Klux Klans எனும் அமைப்பை ஒரு உதாரணமாக மட்டும் சுட்டிக் காட்டலாம். 1925ல் ஸ்தாபிக்கப்பட்ட இவ்வமைப்பில் சுமார் 4 மில்லியன் உறுப்பினர்கள் அங்கம் வகிக்கிறார்கள். இதன்மூலம் இவ்வினவாத இயக்கம் எவ்வளவு பாரியது என்பதை விளக்கத் தேவையில்லை. இது கடந்த சில காலங்களாக கறுப்பினத்தவர்களின் முகங்களில் அசிட்டை வீசியும் சாட்டைகளால் அடித்தும் சித்திரவதை புரிந்தும் வருகின்றது. லொஸ் ஏன்ஜல்ஸ், பிலடெல் பியா, ஹார்லம், கலிபோனியா போன்ற நகரங்களில் கறுப்பினத்தவர்களுக்கு எதிராகத் தொடரும் வெள்ளையர்களின் கொடுமைகள் மிக கொடூரமானவை. நியூயோர்க் நகரத்திலுள்ள ஹார்லெம் பகுதி அமெரிக்க கறுப்பின ஒதுக்கல் கொள்கைக்கு பெயர்போன இடமாகும்.
இருபதாம் நூற்றாண்டின் இறுதி அத்தியாயத்தில் நாகரிகத்தின் முன்னோடிகள் என்று தம்மை அழைத்துக் கொள்கின்ற அமெரிக் காவின் அநாகரிகச் சின்னமாகவே ஹார்லம் காட்சியளிப்பதாக ஆய்வாளர்கள் குறிப்பிடுகின்றனர். 319 சதுரமைல் பரப்புக் கொண்ட நியுயோர்க் நகரில் 4 இலட்சம் கறுப்பின மக்களைக் கொண்ட ஹார்லமின் பரப்பு 35 சதுர மைல்களே. இந்தளவுக்கு நிலவுரிமை அவர்களுக்கு மறுக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் தாழ்ந்த என்று அடையாளப்படுத்தப்படும் மக்கள் எவ்வாறு புறக்கணிக்கப்படுகின்றார் களோ அவ்வாறே ஹார்லமின் கறுப்பினத்தவர்களும் அமெரிக்க அரச இனவாத ஒதுக்கல் கொள்கைக்கு முகம் கொடுத்து வரு கின்றனர். அரசியல் சலுகைகள் ஒருபுறமிருக்க தமது அடிப்படை உரிமைகளிலிருந்தே அவர்கள் தூரமாக்கப்பட்டுள்ளனர். 1929ஆம் ஆண்டுக்குப் பின்னர் 10 சதவீதமான வீடுகளையே அரசாங்கம் அவர்களுக்கு அமைத்துக் கொடுத்தது. குடியிருப்புகள் பாதுகாப்பற்ற, ஆரோக்கியமற்ற சுற்றுப்புறச் சூழலில் உருவாக்கப்பட்டிருப்பதால் ஒவ்வொரு ஆண்டிலும் நூற்றுக்கணக்கான கறுப்பினக் குழந்தைகள் மாண்டு மடியும் துரதிஷ்டமான நிலையும் தொடர்கின்றது.
அமெரிக்காவிலுள்ள கணிசமான மருத்துவமனைகள் கறுப்பினத் தவர்களுக்கும் வெள்ளை இனத்தவர்களுக்கும் என வெவ்வேறாகப்
 

பிரிக்கப்பட்டுள்ளன. கறுப்பின மக்களுக்கான பகுதி மிகவுமே குறைந்த வசதிகளைக் கொண்டுள்ளன. உலகத்தின் சர்வ மேலாண் மைக்காகத் தொழிற்படும் ஒரு தேசத்தில் புரையோடிப் போயிருக்கும் இனவாதப் பிற்போக்குக் கொள்கையின் விளைவுகளே இவை, முதலாம் உலக யுத்தத்தின் பிற்கூறுகளில் கட்டமைக்கப்பட்டு மில்லியன் கணக்கான யூதர்களைப் பலிகொண்ட நாசிஸத்தினதும் இத்தாலியின் சர்வதிகாரி முசோலியினால் பின்பற்றப்பட்ட பாசிஸத் தினதும் பிரத்தியட்சமான தன்மைகளை இன்றைய மேற்குலக இனவாதம் அப்பட்டமாகப் பிரதிபலிக்கின்றது. தனது இனமே மேலானது என்ற ஹிட்லரின் கர்வம் ஐரோப்பாவின் அயல் பிராந்தியங்களுடனும் ஏனைய நாடுகளுடனும் ஹிட்லரைப் போராட இட்டுச் சென்றது. இதனால் மனித இன வரலாறு இரத்தத்தில் தோய நேர்ந்தது. காலவோட்டத்தில் இக்குரூர இனவெறி துரதிஷ் டவசமாக ஜேர்மனியின் எல்லைகளைத் தாண்டி இத்தாலி இங் கிலாந்து, ஐக்கிய அமெரிக்கா உட்பட உலகின் பல பிராந்தியங் களுக்கும் பரவியது. இதன் ஊடுருவலால் பல்தேசங்களுக்கிடையிலும் விறைப்பான இன வேற்றுமைகளும் அழுத்தங்களும் வியாபிக்கத் தொடங்கிற்று. இனஒதுக்கல், இனப்பாகுபாடு, இனப்படுகொலை, இனத்துடைப்பு என்பவற்றுக்கெதிரான சர்வதேச மனித உரிமைகள் பிரகடனம் ஐநாடுகளின் அங்கீகாரத்தைப் பெற்று பல வருடங்கள் கடந்தும் அது வெறும் ஏட்டு விவகாரமாகவே போய்விட்டது.
அமெரிக்காவின் இனவாதத்துக்கு இன்னொரு உதாரணம் அமெரிக்காவின் சில பகுதிகளில் பொதுத்துறைப் போக்குவரத்தில் கூட கறுப்பின மக்களுக்குக் கடுமையான பாகுபாடு காட்டப்படு கின்றது. கறுப்பினத்தவர்களுக்கும் வெள்ளையர்களுக்கும் ஆசனங்கள் வெவ்வேறாக ஒதுக்கப்பட்டுள்ளன. தவறுதலாக ஒரு கறுப்பன் வெள்ளையனின் ஆசனத்தில் அமர்ந்து விட்டால் அவனைத் தண்டிக்கும் சட்ட ரீதியான உரிமையை அமெரிக்க நீதிமன்றங்கள் வெள்ளை இனத்தவர்களுக்கு வழங்கியிருக்கின்றது. அண்மைக்காலமாக இத்தகைய ஒடுக்குமுறைகளுக்கு எதிராக கறுப்பின மக்கள் ஆர்த்தெழ ஆரம்பித்துள்ளனர். சுதந்திரமும் சமத்துவமும் கோரி எதிர்ப்பார்ப்பாட் டங்களை நடாத்தி வருகின்றனர். 1995 ஒக்டோபரில் பெரும் எண்ணிக்கையிலான கறுப்பு இனத்தவர்கள் வொசிங்டனில் அமெரிக்க இனவெறிக்கு எதிராக கிளர்ந்தெழுந்தனர். இஸ்லாம் எங்கள் உரிமை என்ற பதாதைகளோடு எதிர்ப்பு ஊர்வலத்தில் குதித்தனர்.

Page 39
இது குறித்து ஹார்வட் பல்கலைக்கழக பேராசிரியர் யும் என்பவர் பின்வருமாறு குறிப்பிடுகின்றார். இஸ்லாத்தை அவர்கள் எதிர்கால விமோசனமாக மட்டுமன்றி அதனூடே தமது உறுதியான ஐக்கியத் தையும் வெளிக்காட்ட விளைகின்றனர்.
இனவாதம் - கருப்பொருள் விளக்கம்
இனவாதம் என்ற பிரயோகம் எத்தகைய வரலாற்றுச்சூழலில் (Historical Context) மேற்கிளம்பியது என்ற கருத்தாடல், பின்புலத்தைப் புரிந்து கொள்வதன் மூலம் அதன் தோற்றச் சூழலின் பண்பாட்டுக் காரணிகளை இனம்காண முடியும், இனவாதம் அல்லது இனவெறி என்பதனைக் குறிப்பதற்கான Racism என்ற பதம் 1738ல்தான் ஆங்கில மொழியில் உருவாக்கப்பட்டது என பிரான்ஸைச் சேர்ந்த பண்பாட்டு மெய்யியல் பேராசிரியர் `ஏதியோன் பாபர்’ குறிப்பிடு கின்றார். ஜேர்மன் எழுத்தாளர் மாக்னஸ் ஹிர்ஸ்பெல்ட் எழுதிய நூல் ஒன்றின் மொழிபெயர்ப்பில்தான் இச்சொல் முதன்முதலில் பிரயோகிக்கப்பட்டது.
இன்றைய காலப்பகுதியில் இனவாதம் (Racism) என்னும் பதம் இருவேறு பொருள்களில் பிரான்ஸிய சமூக ஆய்வுகளில் பயன்படுத்தப்படுவதாக பியாரி ஆண்ட்ரே டாகுயெப்` என்னும் தத்துவத்துறை அறிஞர் குறிப்பிடுகிறார். 1895 - 1897 இடைப்பட்ட காலப்பகுதியில் `ஆர்ஸின் பிரான்ஜெய்ஸ்’ என்ற ஒரு அதிதேசிய வாத அமைப்பு பிரான்ஸில் செயற்பட்டு வந்தது. இவ்வமைப்பு பிரான்ஸில் வாழ்ந்து வந்த செமிட்டிக் இனத்தவருக்கெதிராக தமது கருத்துலகை முன்னெடுத்தச் செல்ல La Libre Parle என்ற தீவிர வலது சாரி செய்தித்தாள் ஒன்றைத் தொடங்கியது. பிரான் ஸியப் பூர்வீக இனத்தின் பிரதிநிதிகள் என தம்மை இனங்காட்டிக் கொண்ட இவர்கள் Racists என தம்மை அழைத்துக் கொண்டனர். இதன் பிற்காலத்தில் Raciste, Racism போன்ற சொற்கள் பரவலாகவே புளக்கத்துக்கு வந்தன. இரண்டாம் உலக யுத்தத்தின் பின்னர் இனவாதம் பாஸிஸத்தினால் இறுகும் நிலையை அடைந்தது. ஏனைய சமூகங்கள் மீது அதிகாரப் பொறியைத் திணிக்கும் அடக்குமுறைக்கருவியாக இனவாதம் தன்னை தக அமைக்கலானது. பதினைந்தாம் நூற்றாண்டின் பிற்கூறுகளில் புதிய இனவாத அலைகள் (Neo-rasisttrends) யூதர்களுக்கெதிராக செயற்பட ஆரம்பித்
 

ததிலிருந்தே அது பரிணாமம் அடைந்து வந்துள்ளதைக் காணலாம். முதலில் செமிட்டியர்களுக்கெதிராக (anti-Semic) விளங்கிய இன வாதம் பின்னர் கலாசார வேற்றுமையினடியான இனவாதமாக மாறி இன்று நிற, மொழி வடிவங்களை உள்வாங்கிக் கொண்டிருக் கின்றது.
இந்த விரிந்த பிரபஞ்சத்தையும் அதிலடங்கியுள்ள அனைத்து ஜீவராசிகளையும் சிருஷ்டித்தவன் ஒரே இறைவன்தான். பச்சைப் பசேல் என்னும் புல்வெளிகளையும் பள்ளி எழுச்சி கொண்டு துள்ளி விளையாடும் பட்சிகளையும் சலசலவென ஒடும் சங்கீத நதியையும் கம்பீரமாய்க் கனத்து நிற்கும் மாபெரும் மலைகளையும் படைத்த இறைவன் ஒருவன்தான். பல்வேறு நிறங்களைக் கொண்ட மலர்களையும் வெவ்வேறு வகையான விலங்குகளையும் அந்த ஏக இறைவன்தான் சிருஷ்டித்தான். ஆனால் இவ்வாறான விலங் குகளோ பட்சிகளோ புஷ்பங்களோ தமக்குள் பேதம் பார்ப்பதில்லை. பறவைகளுக்கு மத்தியில் சாதி வேறுபாடு இல்லை. மிருகங்களுக் கிடையில் இனப்பாகுபாடு இம்மியளவும் இல்லை. ஒன்றையொன்று ஒடுக்கிவிட அவை ஒற்றைக்காலில் தவமிருப்பதோ கட்சியமைத்துக் கொண்டு களத்தில் குதிப்பதோ இல்லை. இத்தனைக்கும் இவைகள் ஐயறிவு கொண்டவை.
ஆறறிவு படைத்த மனிதன் இத்தகு சிருஷ்டிகளுக்கெல்லாம் சிரேஷ்டமானவனாக விளங்கியும் தனக்குள் அதிகார எல்லைகளை நிர்ணயித்துக் கொண்டு வெளியே உள்ளவர்களை தனக்குக் கீழான வர்கள் என்று வேறாக்கிப் பார்க்கிறான். உண்மையில் மனிதர்கள் அனைவரும் அல்லாஹ்வின் பார்வையில் ஒன்றே தனது நிறத்தாலோ மொழியாலோ குலத்தாலோ ஒருவன் மற்றொருவனை விட மேன்மையானவனாகி விடுவதில்லை. ஏனெனில் அனைத்து மனிதர் களையும் அல்லாஹ் ஒரே தாழ்ந்த விந்துத்துளியிலிருந்துதான் சிருஷ்டித்துள்ளான். அவ்வாறு மேன்மை பார்ப்பதற்கு மனிதன் தகுதியற்றவன் என்பதை அல்குர்ஆன் இப்படிப் பிரலாபிக்கின்றது.
'மனிதன் எதிலிருந்து படைக்கப்பட்டான் என்பதைக் கவனிக் கட்டும்’ குதித்து வெளிப்படும் ஒரு துளி) நீரினால் படைக்கப் பட்டான்’ முதுகந்தண்டிற்கும் விலா எலும்புகளுக்கும் இடையி லிருந்து அது வெளியாகிறது. (அத்தாரிக் 5,67)
எல்லாவற்றையும் படைத்த இறைவன் மாத்திரமே உயர்ந்தவன்

Page 40
அவனால் படைக்கப்பட்ட மனிதர்கள் அனைவரும் ’மனிதன்
ன்ற ரீதியில் சமமானவர்களே. அறிவை, பொருளாதாரத்தை,
பட்டம் பதவியை மனிதர்களது உயர்வை, மேன்மையைக் கணிப்பிடு வதற்கான அளவுகோல்களாக எந்த வகையிலும் ஏற்றுக் கொள்ள முடியாது. ஏனெனில் ஒரே சோடி ஆண்பெண்ணிலிருந்தே இறைவன் முழு மனித வர்க்கத்தையும் படைத்திருக்கிறான். எனினும் மனிதக் குழுமங்களின் வியாபகம் காரணமாக பிரதேச ரீதியில் மனிதர்கள் வெவ்வேறு எல்லைகளில் வாழ்கின்றனர். அவர்களது வாழும் பல்வகை பெளதிக சூழல் அவர்களது கலாசார வடிவங்களிலும் நிறத்திலும் மொழியிலும் மாறுபாடுகளை ஏற்படுத்தியிருக்கலாம். ஆனால் இம்மாறுபாடுகள் மனிதர்களை இனரீதியாக தாழ்ந்தவர்கள் உயர்ந்தவர்கள் என எல்லைகளிட வழிகோல முடியாது.
மனிதர்களே நீங்கள் உங்கள் இரட்சகனுக்குப் பயந்து நடந்து கொள்ளுங்கள். அவன் எத்தகையவனென்றால் உங்களை ஒரே ஆத்மாவிலிருந்து படைத்தான். இன்னும் அவ்விருவரிலிருந்து அனேக ஆண்களையும் பெண்களையும் பரவச் செய்தான்.
(filaum2 - 1)
மனிதன் வாழும் வேறுபட்ட புவியியல் சூழல்கள் அவனது வாழ்வியல் கோலங்களில் தாக்கம் செலுத்துகின்றன. இது மனிதனது நாட்டத்திற்கு உட்பட்டதன்று. அதேபோன்று மனிதன் சிலவேளை செந்நிறமாக கறுப்பாக மஞ்சளாக விளங்கலாம். இத்தகைய நிர்ணயம் மனிதர்களது தெரிவுச் சுதந்திரத்துக்கு அப்பாற்பட்டதாகும். மனிதன் விரும்பியோ விரும்பாமலோ அதனை ஏற்றுக் கொண்டி ருக்கிறான். இது இறைவனின் நியதி மட்டுமல்ல அல்லாஹ் ஒருவன்தான் இம்முழு உலகத்தையும் அதிநுட்பமாகப் படைத்துப் பரிபாலிக்கிறான் என்பதற்கான அத்தாட்சியும் ஆகும். இந்தக் கருத்தைத்தான் அல்குர்ஆனும் குறிப்பிடுகின்றது.
வானங்களையும் பூமியையும் படைத்திருப்பதும் உங்களது மொழிகளும் நிறங்களும் வேறுபட்டிருப்பதும் அவனுடைய அத் தாட்சிகளில் உள்ளதாகும். நூம் 22
துணை நின்றவை
* Echo of Islam * Clarence - Sociology fundamental Aspects * Recism - A Socio-Political Perspective
 


Page 41
நவீன தமிழ் எழுத்தி கணிசமான மாற்றம் தெரிகின் மேற்கத்தேய ஜனநாயகம்,
பயங்கரவாதம், தகவல் து ஆதிக்கம், கருத்துச் சுதந் நவீனத்துவத்தின் தோல்வி, ே
தலைப்புக்களில் இதுவரை சேகரிப்புக்குள் இன்னும் இழு நுட்பமான விமர்சனங்கை முன்வைக்கின்றது. முஸ்லிம்
வெளிச்சங்களை பாய்
கைகூடியு
 
 
 
 
 
 
 

பின்நவீனத்துவம் தகவல் றையில் அமெரிக்காவின் திரம், உலகமயமாதல், மலைய இனவாதம் ஆகிய நாம் வாசித்திராத, நமது 2த்துக்கொள்ளப்படாத LIG) ளயும் மாற்றுக்களையும் புலமைத்துவ மரபில் புதிய ச்சும் முயற்சி இதில்
ளளது.