கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: ஞான ஒளியைத் தேடி

Page 1
ஞான
ளிைை
சுவாமி யோகேஸ்
 

யத
My e e - -
ரானந்தா 06)

Page 2
With Complements from K. Siwallingalı III Deputy Director Planning Ministry of Agriculture, Livestock, Lands
Irrigation, Co — op & Fisheries 108, Post Office Road, TriII colla lee
 

ஞான
ஒளியைத்
625fpl......
துலகம்
சுவாமி யோகேஸ்வரானந்தா தமிழாக்கம் : சி. அர்ஜூனா
சுவாமி கங்காதரானந்தா சமாதி, ம்ே ஆண்டு டிசம்பர் மதம் 8, 24 திகத்தனி திருகோணஐ சிவகோசு.சமாஜத்தி' இடம்ந்ெது சொற்பொழிவு)

Page 3
Published by : Hamsa Publications
2348 NW 94th Avenue, Coral Springs FL- 33.065
U.S.A.
Swami Yogeshwarananda is the author of
I. "The Yoga of Understanding" 2. "Durle Wres" 3. "Whalistic View of Life" 4. "Mind ared the State of No-mind" 5. Path to Enlighteriment
All rights reserved. No part of this book lay be τερ το αίτιαaαι τη ατιν Γοττη αr bν ανιν τη εατιs τυίτιοιεί permission in uriting from the publisher:
Copyright (O 1996 by Hamsa Publications LLLLLL GLH SLLGEGCGGLGGELL LLLLL LLSS LLLS LLLLLLLLSS LLSS000EE0E
 
 
 
 

N
ாமி யோகேஸ்வரானந்தா, சங்கராச்சாரியாரின் மடத்தைச் சேர்ந்த சாது ஒருவர்.
இங்கையில் பிறந்த சுவாமிகள், தமது இருபத்தைந்து வருட காலத்தை இமயமலையில் கழித்தார். சிறந்த சமய எப்கேந்திரமாக விளங்கிய இந்தியாவில் இந்து சமய நூல்களையும், முன்னோடி சமய விழ்க்கைத் தத்துவங்களையும் ன்ேறார். 1984ம் 1888ம் ஆண்டுகளில், அமெரிக்க யாத்திரையின் மூலம் மப் போதனைகளையும் சொற்பெழிவுகளையும் பல்வேறு சர்வகலாசாலைகளிலும் மய மத்திய நிலையங்களிலும் ஆற்றியுள்ளார். இந்த சொற்பொழிவுகள்
ருகோணமலை சுWைமி கங்காதரானந்தா சமாதி மண்டபத்தில் மார்கழி 18ம் ம்ே, நிதிகளில் ஆற்றப்பட்டது.
"எப்போநொருவன் விருப்பு வெறுப்பின்றி, சதா நெளிவுடனும், மனநிறைவுடனும், அமைதியாகவும், சாந்த மனதுடன் செய்ய வேண்டியவற்றை மகிழ்ச்சியுடன் செய்கிறானோ, அவன் சரியான பாதையில் செல்கிறான். இறைவனின் ஆசியையும் பெறுகிறான்"
சுஜாதி யோகேஸ்வரானந்த",

Page 4

மெஞ்ஞான ஒளியைத் தேடி ...
இன்றைய சொற்பொழிவின் விடயம் ஞான ஒளியை அடையும் மார்க்கம் எண்பதாகும். உலகிலுள்ள அனைவரும் இந்த மார்க்கத்தையே தேடிச் செல்கிறார்கள். அதாவது வாழ்வின் உண்மைத் தத்துவத்தைக் கண்டு இறைவனை அடையும் வழி பாது என்பதே அனைவரது கேள்வியுமாகும். ஒவ்வொரு சமயமும் இதற்கான மார்க்கத்தைக் காட்டுவதாகவே கூறிப் போதிக்கின்றன. உலகிலே ஆண்டவனைத் தரிசிக்க விரும்பும் அனைவரும் நாம் கடவுளைக் கண்டுணரும் மார்க்கம் பாது என்பதையே வினவுகிறார்கள். நாம் அனைவரும் ஞான ஒளியை அடைவதையே நோக்கமாக கொண்டுள்ளவராக இருப்பதால் முதலில் இந்த ஞானஒளி என்பது என்ன என்பதையும் அதன்
அர்த்தம் என்ன என்பதையும் ஆராய்வோம்.
ஞானஒளி பெறுவது என்றால் என்ன என்பது பற்றிப் பல வாக்கியங்கள் பாவிக்கப்படுகிறது. தெய்வீக உணர்வு, மோக்ஷம் அவற்றுள் இரண்டு. ஆனால் அது என்ன அதன் தன்மை பாது எண்பது பற்றி எங்கள் மனதில் தெளிவான அறிவு இருந்தால் தான் அதைப் போற்றவும் அதை நோக்கிச் செல்லவும் முடியும். ஞான ஒளி எமக்கு வரும் போது வாழ்வின் உண்மையான தண்மை பங்களுக்கு விளக்கமாகும். வாழ்வின் உண்மையான தன்மை யாது? அனைத்து மதங்களும் கடவுள் ஒருவரையே சாஸ்வதம் என்று கூறுகின்றன. எனவே தெய்வீக உணர்வு அல்லது தெய்வீக நிலை என்பதன் விளக்கம் என்ன?
இந்து வேதங்களில், குறிப்பாக உபநிஷதங்களில், தெய்வீக நிலை என்பது மிகவும் தெளிவாகவும் அழகாகவும் பிரம்மம் என்ற வார்த்தையால் விளக்கம் தப்பட்டிருக்கிறது. இது நாம் கடவுளாக வணங்கும் பிரம்மாவைக் குறிப்பதாகாது. பிரம்மம் என்பது சர்வவியாபியாகிய பரப் பிரம்மத்தையே ாரிப்பதாகும். பிரம்மம் என்ற சொல்லே அதன் இயல்பை எடுத்துரைப்பதாகிறது. இச் சொல் சமஸ்கிருத மூலமாகிய பிரக என்பதிலிருந்து பிறந்ததாகும். பிரக என்றால் பரந்த முடிவற்ற, எல்லையில்லாத ஒன்று என அர்த்தமாகும்.

Page 5
இதனாலேயே ஆண்டவன் சர்வவியாபி, எங்கும் நிறைந்திருக்கிறான் எனக் கூறப்படுகிறது. இவ்வாறு கூறும்போது, கடவள் அதன் கடவுள் தன்மையில் எங்கும் வியாபித்திருக்கிறான் என அர்த்தமாகிறது. ஆண்டவன் தனது இயல்பில் அல்லது சுபாவத்தில் ஏற்ற தாழ்வின்றி ஒரு இடமும் பாக்கியின்றிப் பரந்து நீக்கமற நிறைந்து காணப்படுகிறான். ஒவ்வொரு அணுவிலும், எல்லா விந்துக்களிலும், மனிதனுட்பட இந்த பிரபஞ்சத்திலுள்ள அனைத்து ஜீவராசிகளிலும், தேவர்கள், தேவதைகளிலும் ஆண்டவன் ஏற்றத் தாழ்வின்றி நீக்கமற நிறைந்து நிற்கிறான். அனைத்திலும் நிறைந்து காணப்படும் ஆண்டவ எங்கள் அனைவரிலும் நிறைந்திருக்கிறான் என்பதை இதிலிருந்து புரிந்து கொள்ளலாம். இவ்வாறு எங்களில் நிறைந்திருக்கும் ஆண்டவனை அறியும்
୍]]
தேடி அலைந்து திரிகிறான். மனிதனுக்கு ஏன் இந்த அமைதியின்மை? ஏனிந்து அலைச்சல்? அவனில் உள்ள குறைபாடுகளே அவனுடைய நிம்மதியைப் பறித் இப்படி விரட்டுகிறது. இந்தக் குறைகளையெல்லாம் களைந்தெறிந்து பரிபூர நிலையை எய்தும் வரை அவனுக்குத் தன்னுடனான போராட்டம் ஒ
போவதில்லை.
 
 
 
 
 
 
 
 
 
 

தன் குறைபாடுகளை அகற்றி நிறைவு பெற்ற மனிதன் தெய்வநிலை எய்துகின்ற போது அது சிவபதம் எனப்படும் இன்பமயமான ஓர் அபூர்வ அநுபவத்திற்கு மனிதனை இட்டுச் செல்கிறது. மனிதன் இந்த உண்ணத நிலையை அடைவதற்கான மார்க்கத்தை எடுத்துரைப்பதே சமயம். எனினும் சமயம் மனிதனுக்குப் போதிக்கப்பட வேண்டிய விதத்தில் போதிக்கப்படாமல் தவறாக வழி நடத்திச் செல்ல முற்பட்டதாலேயே அறியாமையும் குழப்பநிலையும் உருவாகியது. துரதிருஷ்டமாக உலகில் பல்வேறு சம்பிரதாயங்களும், கிரியைகளும் சமயத்தின் பெயரால் பரப்பப்படுகிறது. இந்தத் தவறைத் திருத்துவதற்கு முன் தவறை நாம் சரியாக அடையாளம் காண்பது அவசியம். அது எங்கே ஏற்பட்டிருக்கிறது என்பதையறிவது முக்கியம். அது எம்மில் நான் உறைந்திருக்கிறது. பிரச்சினைகளை நாம் தான் எம்மைச் சுற்றி வளர்த்துக் கொண்டிருக்கிறோம். இதையறியாமல் நிம்மதி எங்கோ இருப்பதாக எண்ணி நாம் அலைவதால் தான் இத்தனை துன்பங்களும் ஏற்படுகிறது. எம்மைச் சுற்றியுள்ள அறியாமையை அகற்றி குறைபாடுகளை நிவிர்த்தி செய்து பூரணமாகும் போது தான் எம்முள்ளே வீற்றிருக்கும் ஆண்டவனை அடையாளம் காணும் மோக்ஷநிலை கைகூடும். இந்த நிலையை அடையும் முதற்படியாக சகல ஜீவராசிகளிலும் நிறைந்திருக்கும் இறைவன் என்னிலும் நிறைந்திருக்கிறான். சர்வவியாபியாகிய பரமாத்மா " என் மனதில் ஒளிவிட்டுக் கொண்டிருக்கிறது என்ற உண்மையை நேருக்கு நேர் சந்திப்பதே உண்மையான சமயத்தின் ஆரம்பம். பரமாத்மா "
தான் என்பதை விளங்கிக் கொள்ளாத மனிதன் உண்மையான
மயத்தின் முதற்படியைத் தவறவிட்டவனாகிறான்.
வேதங்களும், உபநிஷதங்களும் கூறும் இந்த முழுமுதல் உண்மையைச் ாதாரண மனிதனால் புரிந்து கொள்ள முடியாது என்பதை உணர்ந்த ரிஷிகளும், முனிவர்களும் வேதங் கூறும் உண்மைகளைக் கதைவடிவில் உருவம் கொடுத்து அங்கே இந்தத் தத்துவங்களைப் புகுத்திப் புராண இதிகாசமாகத் நந்தார்கள். இந்த நோக்கத்தைக் கூடச் சரிவரப் புரிய முடியாத நாங்கள் கதைகளை மட்டும் ஜீரணித்துக் கொண்டு அவை தரும் உண்மைகளை ஒதுக்கி விட்டோம்
இதுவே சைவசமயம் ஒரு சம்பிரதாயங்கள் முட நம்பிக்கைகள் நிறைந்த
3

Page 6
சமயம் என்ற அபிப்பிராயத்தை ஏற்படுத்துவதற்குக் காரணமாக அமைந்தது. சரியாக ஜீரணம் செய்யப்படாத உணவு உடலுக்குச் சங்கடத்தையும் உபாதையையும் தருவது போல் சரியாக ஜீரணிக்கப்படாத சமய அறிவு மனிதனின் உள்ளத்தில் அமைதியின்மையையும் அறியாமையையும் வளர்த்தது. முடிவு? ஆரோக்கியம் குன்றிய பிரயோசனமற்ற ஒன்றாகச் சமயம் மாறத் தொடங்கியது.
உதாரணமாக முருகக் கடவுள் பழநியில் சென்றமர்ந்த புராண வரலாற்றைப் பாருங்கள். பெற்றோரிடம் பிள்ளை கோபித்துக் கொண்டு வீட்டை விட்டு ஓட வேண்டும் என்ற உதாரணத்துக்கா இந்த வரலாற்றை எங்கள் யோகிகள்
படைத்தார்கள்? இல்லவே இல்லை!! எது உண்மை, எது மாயை, அர
உன்ைமை எங்கே இருக்கிறது என்ற உன்னதமான தத்துவத்தை உலகுக்குச் சுவைபட எடுத்துரைப்பதே இக்கதை. பெற்றோரை உலகமாக மதித்த விநாயகனுக்கு அறிவு விளக்கம் இருந்ததற்கான பரிசே மாங்கனி. அந்த அறிவு விளக்கம் இல்லாமல் உடலால் உலகைச் சுற்றி வந்த முருகனுக்கு ஞானோபதேசம் செய்த வரலாறே இது. சாதாரண பழத்துக்கா கோபித்துச் சென்றாய்? நீயே பழம் ஞானப்பழம், உனக்கேன் வேறு பழம்? என்று கூறிப் பிரம்மோபதேசம் செய்கிறாள் அன்னை. இதுவே பழநி பிறந்த வரலாறு. சர்வ லோக் மாதாவாகி உமையவள், உலகுக்கு எடுத்துச் சொன்ன உண்மை இது தான். ஆண்டவ ஜீவாத்மாவாக உன் இதயத்தில் அமர்ந்து ஒளி வீசிக் கொண்டிருக்கிறா இதையறியாமல் அவனைத் தேடி எங்கு செல்கிறாய்? என்று கூறி எங்களை தடுத்தாட் கொள்கிறாள். இந்த உண்மையைப் புரிந்து கொள்வதால் தா ஞானிகளும், யோகிகளும் யாதும் ஊரே யாவரும் கேளிர்" என்று வாழ்கிறார்கள் அனைத்து ஜீவராசிகளிலும் பரமாத்மாவின் அம்சத்தைக் கண்ட பிறகு மனிதன்
அனைவருமே தெய்வத்தின் அம்சங்கள் என்ற உண்மையை அறிவதே ஆன் வாழ்வின் முதற்படி, முதலாவது சாதனை. இந்த நிலையை எய்தியதால் த கவிஞானி ரவீந்திரநாததாகூர் ஆண்டவன் படைப்பில் அனைத்தும் தெய்வீக
என்று கீதாஞ்சலி பாடினார். "எங்கெங்கும் காண்பது சக்தியடா’ என்று பாரதி
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

பாடினார். அவர் தேசத்தை பராசக்தியாகவும் சேவகனைக் கண்ணனாகவும் கண்டு களித்தார். நாமெல்லாம் அருவருத்து ஒதுக்கும் காக்கையின் சிறகிலே
கூடக் கண்ணனையே கண்டார்.
உண்மையறியும் தன்மையை அதாவது நான் தெய்வத்தின் அம்சம், தெய்வாம்சம் பொருந்தியவன் என்ற உண்மையை, யாவரும் அறிந்து ஆண்மீக வாழ்வைத் தொடங்கலாம். ஆனால் இந்த உண்மையை அறிய விடாது தடுப்பது யாது? சிவபெருமானுடைய நெற்றிக் கண்ணாக எடுத்துக் காட்டப்பட்ட இந்த ஞானக் கண் எங்களில் திறக்கப்பட முடியாமல் குறுக்கிடுவது என்ன? அதுவே அவித்யா. அவிவேகம் அல்லது அஞ்ஞானம். இந்த உலகில் பிறவி எடுத்து எமது கர்ம வினையைத் தீர்க்கும் நோக்கத்திற்காகத் தரப்பட்டதும் ஐம்புலன்களின் சேர்க்கையுமான இந்த உடலையே நாங்கள் "நாண்" என்று எண்ணுகிறோம். உண்மையில் நான் பரமாத்மா தான் என்பதை முற்றாக மறந்திருப்பதால் தான் நான் இந்த உடலுக்குரிய மானுடன் என்று மனிதன் எண்ணுகிறான். இந்த எண்ணத்தின் அடிப்படையிலே நான் அவன் சர்வகாலமும் செயல்படுகிறான். அதன் பலனாகவே உணர்ச்சி வசப்பட்டுப் பரபரப்பும் பதட்டமும் அடைகிறான். நிதானத்தை இழக்கிறான். நல்வினை தீவினைப் பயன்கள் அவனை ஒட்டிக் கொண்டு மறுபடியும் மறுபடியும் பிறப்பெடுக்க வைக்கிறது. இதுவே தன்னை உணராத அஞ்ஞான நிலை, இந்த உறக்கநிலையிலிருந்து மனிதனை விழிப்படையச் செய்வதற்காகவே ஞானி சோக்கிரட்டீஸ் "உன்னையே நீ அறிவாய் என்று உலகுக்கு அறை கூவினார். வேத வியாசர் மகாபாரதம் என்ற காப்பியத்தைத் தந்தார். அதில் அருச்சுனன் என்ற பாத்திரம் மூலம் கிருஷ்ண பரமாத்மாவின் வாயிலாக நோபதேசம் செய்தார். அருச்சுனன் ஷத்திரிய குலத்தைச் சேர்ந்த அரசன். ார் செய்வது அவனுடைய குலதர்மம். அவனோ போர்த்திறமை சாகஸங்களில் தன்மை பெற்றுத் தனது ஆசிரியரான துரோணாச்சாரியாரால் நேசித்துப் ாட்டப்பட்டவன். பல புத்தங்களைச் செய்து வெற்றிவாகை துடிய மாவீரன். ார்க்களமும், மரணமும், இரத்தமும் அவனுக்கு ஒன்றும் புதியவையல்ல, ருந்தபோதும் பாரதப் போர் தொடங்குமுன் அணிவகுப்பைப் பார்வையிட்டுக் ாண்டிருக்கையில் அவனுக்கேனிந்தத் தடுமாற்றம்? இதற்காகிய விடையை
5

Page 7
அவனுடைய வாயிலாகவே வியாசர் நமக்குத் தருகிறார். கடல் போல் பரந்து கிடக்கும் வீரர்கள் கூட்டம். ஆனால் அத்தனை பேரும் ஏதோ விதத்தில் அவனோடு தொடர்புடையவர்கள். துரியோதனாதியார் எனது தாயாதிகள்,
துரோனாச்சாரியார் எனது குரு, பீஷ்மரோ எங்கள் பிதாமகர். ஆகா, இங்கு நிற்கும் அனைவருமே எனது நண்பர்களும், உறவினர்களும். இவர்களை எப்படி எதிர்ப்பேன்? கொள்வேன்? என்று திகைத்துப் போய் வாளை உறையிலிடுகிறான். காண்டிபம் கையிலிருந்து நழுவுகிறது. உணர்ச்சி வயப்பட்டு உடல் சோருகிறது. அப்போது தான் கிருஷ்ண பரமாத்மா கீதோபதேசம் மூலம் உண்மையை உணர்த்துகிறார். "அருச்கனா நான் என்ற அகந்தையை அகற்றிவிடு, அதர்மத்தை அடக்க வேண்டிய உன் கடமையைச் செய், இதைச் செய்வதற்கு நீ ஒரு கருவியே. இச் செயலின் பலன்கள் உன்னைச் சாராது இறப்பு என்பது ஒரு உறக்க நிலையே. ஆத்மாவுக்கு "அழிவில்லை. தான் தரித்த உடலுக்குரிய கடமைகள் முடிந்ததும் அதை விட்டகன்று வேறு உடலை எடுக்கும். பிறப்பின் முடிவிலே இறப்பும், இறப்பின் முடிவிலே பிறப்பும் மாறி மாறி நடக்கும் நாடகமேயாகும். ஆன்மாவின் நீண்ட யாத்திரை ஏற்படும் திருப்பங்களே இறப்பும், பிறப்பும்" என்ற ஞானோபதேசம் பெற் அருச்சுனன் உணர்ச்சிகள் அடங்கியவனாய் சிந்தையில் தெளிவு கொண்டு நிதானமடைகிறான்.
ஒரு மனிதன் தன்னை உடலோடு சம்பந்தப்படுத்தி மானுடனாக எண்ணி நடக்கும் போது அவனுடைய செயல்கள் யாவும் உணர்ச்சிகளால் கட்டப்பட் குறைகள் நிறைந்த மனிதச் செயல்களாக அமைகிறது. அவனே தன்னையுணர்ந்து பரமாத்மாவைத் தன்னுள்ளே காணும்போது, அவனுடைய உணர்ச்சிகள் கட்டுக் 5. அடங்குகிறது. உணர்ச்சிவசப்படாதவனுக்கு நிதானமும் சிந்தையில் தெளி: தானாகவே ஏற்படும். நிதானமாகச் செயல்படும் ஒருவனுடைய செயல்களி தவறுகள் ஏற்பட இடமில்லை. அவனுடைய கடமைகள் தெய்வீகத் தன்மையுட
கர்மாவைக் கழித்துக் கொள்ளும் அதே வேளையில் புதிதாகக் கர்மா சேராதவி பார்த்துக் கொள்கிறான். இதுவே பிறப்பின் ரகசியம்.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

அப்படியாயின் பிறப்புக்குக் காரணமாகிய, நான் எண்ற உடலோடு சம்பந்தமான, அகந்தையை அகற்றுவது எப்படி என்ற நியாயமான கேள்வி எழுகிறது. ஞானக் கண்ணைத் திறக்க விடாமல் மூடி வைத்திருப்பது இந்த நான் என்ற அஞ்ஞானம் என்பதை அறிந்து கொண்ட நாங்கள் அதை அகற்றும் வழியை ஆராயுமுன் அது எப்படி உண்டாகிறது என்பதை அறிவது அவசியம். அதன் உற்பத்திக்கான காரணிகளைக் கணி டறிந்து களைந்தெடுக்காவிட்டால் அது மீண்டும் மீண்டும் முளைத்துக் கொண்டிருக்கும். இந்தக் காரணிகளை எம்மில் இனங் கண்டு வேரோடு களைந்தெடுத்தால் தான் நான் என்ற அஞ்ஞான உணர்வும் அகற்றப்பட்டு மெய்ஞானம் பிறக்கும். ஆன்மீக வாழ்வு மலரும்.
மனிதனுடைய உடலோடு ஒட்டிய ஐவகை உணர்வுகள் உண்டு. எது உண்மை, எது உண்மையற்றது, (Real and Inreal) அல்லது எது நிஜம், எது மாயை என்று பகுத்தறிய முடியாத நிலையில் இருக்குமட்டும் அவ்வுணர்வு எங்களுக்குள் இருக்கும். அவிவேகம் என்ற இந்த நிலையின் காரணமாக நமக்கு மேலும் நான்கு உணர்வுகள் ஏற்படுகிறது. அதுவே நான் என்ற அகந்தை, விருப்பு, வெறுப்பு, பற்று என்பனவாகும். இந்த ஐந்து குணங்களின் மொத்தச் சேர்க்கையையே நாங்கள் சாதாரணமாக மனிதன் எண்கிறோம். நான் என்ற அகந்தை காரணமாகவே பொருள் சேர்க்கும் ஆசையும், பதவி வெறி, புகழ்மோகம் போன்றவையும் ஏற்படுகிறது. இவற்றோடு எங்களை ஒட்ட வைத்து அடையாளம் காண்பதால் அவற்றை மேலும் மேலும் பெருக்க எண்ணிப் பாவமூட்டையைக் கட்டிக் கொள்கிறோம். விருப்பு, வெறுப்பு பற்று என்பன காரணமாகவே எங்களுக்கு ஆத்திரம், கோபம், மோகம், எரிச்சல், பொறாமை போன்ற சகல விதமான குணங்களும் ஏற்படுகிறது. இவை காரணமாகவும் பாவச் செயல்களைச் செய்கிறோம். இவை யாவற்றையும் ாங்களோடு சேர்த்து இருத்தி, நான், எனக்கு, என்னுடைய, என்னால் என்று எதற்கெடுத்தாலும் பேசும்போது ஒரு வகை மயக்க நிலையிலேயே நாங்கள் இருக்கிறோம். அது பதவி வெறியால் அல்லது பணத் திமிரினால், அல்லது ஆத்திரம், மோகம், காமம் போன்ற உணர்வுகள் தரும் வெறியினால் ஏற்படுவதாகும். இந்த நிலையில் இருக்கும்போது மனிதன் தனது ஆன்மாவை,
7

Page 8
முற்றாக மறந்து விடுகிறான். தன்னுடைய இந்த உடலும், அதன் உணர்வுகளுமே நான் என்று எண்ணி நடக்கத் தலைப்படும் போது வழிதவறித் தான் அடைய வேண்டிய குறிக்கோளைத் தவறவிட்டு வெகுதூரம் போய் விடுகிறான். இதைத் தவிர்க்க வேண்டுமானால் அவன் முதலில் உண்மை எது மாயை எது என்று பிரித்தறியும் (Power of discrimination) இயல்பை வளர்த்துக் கொள்வது அவசியம். ஏற்கெனவே மனித உணர்வு, தெய்வீக உணர்வு பற்றி ஆராய்ந்த போது, தெய்வீக உணர்வு உள்ளவனுக்கு சிந்தையில் தெளிவும், நிதானமும் இருக்கும் என்று கண்டோம். சிந்தையில் தெளிவு உள்ளவனுக்கு
உணர்மையையும் மாயையையும் பிரித்தறிவது தானாகவே கைவரும்.
என்றும், எனது திறமை அதிஷ்டத்தால் வந்தது என்பதும், என்னால் எதையும் சாதிக்க முடியும் என்பதும் போன்ற எண்ணங்களும் அவற்றின் பிரதிபலிப்
உண்மை. கருணை மிக்க கடவுள் இவற்றையெல்லாம் நான் சுயநலத்திற்கா பாவித்து மற்றவர்களுக்குக் கெடுதல் செய்ய ஒரு போதும் தர மாட்டான் இவ்வாறு சிந்திக்கத் தொடங்கினால் எம்மை மூடியுள்ள அஞ்ஞானம் என்னும் மாயைத் திரை விலகும்.
தெய்வீகம் நிலையானது. மனிதம் நிலையற்றது. அதனால் மாயை அகன்று
நிலையானது எது என்று உணர்ந்து அறிந்து கொண்ட மனிதன் தெய்வீக உணர்வோடு வாழத் தொடங்குகிறான். தெய்வீக உணர்வோடு தனது
கடமைகளைச் செய்கிறான். இந்தத் தெய்வீக உணர்வு மனிதர்கள் யாவருக் ஏற்படத் தான் செய்கிறது. ஆனால் அது எவ்வளவு நேரம் நிலைத்து நிற்கிற என்பதில் தான் வேறுபாடு. இதனாலேயே ஒரு மனிதன் நல்ல செயல்கை செய்கிறான். தீய செயல்களையும் செய்கிறான். எப்போதுமே கெட்டவ
இருப்பதில்லை. இந்த தெய்வீக உணர்வு எங்களுடன் சதாகாலமும் இருக்கு
B
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

எங்களை மாற்றிக் கொள்வதற்குக் கடுமையான பயிற்சி தேவை. இது தான் ஆன்மீகப் பயிற்சி, யோகநெறிகள். இவற்றை நாங்கள் ஞானிகள், யோகிகளிடமிருந்தும், வேத ஆன்மீக நூல்களிலிருந்தும் அறிந்து கொள்ள முடியும். எனினும் பயிற்சி என்பதும் அதில் தேறுவது என்பதுவும் எங்களுடைய சாதனையாகும். அதை எவரும் எங்களிடம் தூக்கித் தர முடியாது.
ஆன்மீக பயிற்சிக்காக நாங்கள் எங்கும் செல்லத் தேவையில்லை. அன்றாட வாழ்க்கை முறையை நாங்கள் எப்படி அமைத்துக் கொண்டு வாழுகிறோமோ அதுவே ஒரு பயிற்சிக் கூடமாக மாற முடியும். வேத வியாசர் பகவத் கீதையில் கிருஷ்ண பரமாத்மா மூலம் உலகுக்குத் தந்த உபதேசமும் இதுவே. வேதங்களில் கூறப்படாத கடுமையான தபசு முறைகளைப் பின்பற்றித் தனது உடலை வருத்துபவன் அறியாமையினாலும் சொர்க்கம் என்னும் போதையினாலும் உந்தப்பட்டுத் தனது உடலையும் உள்ளே வீற்றிருக்கும் என்னையும் வருத்துகிறான்."
இறைவணக்கம், மாதா பிதா, குரு மூத்தோர் கற்றோரை மதித்தல், நேர்மை, தன்னிறைவு, தீமைகளை விலக்கல் என்பன உடலினால் செய்யும் தபஸ்: பேச்சில் உண்மை, இனிமை, நயம் எண்பனவும் வேத நூல்களைக் கற்பதும் வாக்கினால் செய்யும் தபஸ்: மகிழ்ச்சி, நிதானம், அமைதி, புலனடக்கம், தன்னடக்கம் என்பவற்றுடன் மனச் சாட்சிக்கு நேர்மையாய் இருப்பது மனதினால்
செய்யும் தபஸ்.
மேற்கூறப்பட்ட மனம், வாக்கு, காயம் ஆகிய மூன்றும் ஒருங்கிணைந்து செய்யும் தபஸ் எங்கள் வீடுகளிலே கடைப் பிடிக்கக் கூடிய ஒன்று. எங்களுடைய சமயநூல்கள் பாவும் இதையே போதிக்கின்றன. மனம், வாக்கு காயம், மூன்றினாலும் தவறிழைக்காதவன் தன்னுடன் தெய்வீக உணர்வை எப்போதும் தங்க வைத்துக் கொள்கிறான். நான் என்ற அகந்தைக்குக் காரணமான உடல் உணர்வுகளையும் உள அலைகளையும் அடக்குவதற்கு நேர்மையான தூய்மையான வாழ்வு வழிவகுக்கும். எனவே ஆண்மீகப் பயிற்சி தொடங்குமுன் ஒவ்வொருவரும் நமது வாழ்க்கை முறையை அதற்கேற்றவாறு அமைத்துக் கொள்வது
அவசியம். இதைச் செய்யும் போது உங்கள் வழிமுறைகளை உங்களோடு
9

Page 9
இருப்பவர்கள் மீது திணிக்க முயலக் கூடாது. கட்டாயப்படுத்தும் எதுவும் எதிர்ப்பையே உண்டாக்கும். இது மனித இயல்பு. நீங்கள் மாறுங்கள். உங்களில் உருவெடுக்கும் தெய்வீக உணர்வு உங்களைச் சூழ உள்ளவர்களையும் பற்றிக்கொள்ளும், மெல்ல மெல்ல அது அவர்களையும் ஆட்கொள்ளும் ஏனென்றால் அவர்களும் நீங்கள் ஏற்கெனவே அறிந்து கொண்டது போல் தெய்வsே. வாழ்க்கை முறை புனிதமாக அமையும் போது எங்கள் எண்ணங்கள், செயல்களும் மாறும், பிறருடனான எங்கள் உறவு முறைகளும் மாறும். கோபம், ஆத்திரம், பொறாமை, பேராரசை, காமம், ஆசை என்று எங்களைப் பற்றிக் கொண்டிருந்த குணங்கள் மெல்ல மெல்ல விலகத் தொடங்கும். அவை விலகுவதால் ஏற்படும் வெற்றிடத்தில் தெய்வீக உணர்வுகள் வந்தமரும் மனிதன் எந்த உணர்வுகளோடு தன்னை ஒட் வைத்துக் கொண்டிருந்தானோ அவற்றிலிருந்து விடுவித்துக் கொண்டு பற்று (ஒட்டுதல்) இல்லாத நிலையை அடையும் போது அவனை வேறொன்று வந்து பற்றிக் கொள்கிறது. ஆனால் இதில் உள்ள உன்னதமான வேறுபாட்டை நீங்கள் அவதானிப்பது மிகவும் அவசியம். மனிதன், மனித உணர்வுகளை பற்றிக் கொள்கிறான். இதனால் மனிதத் தன்மைக்குரிய தவறுகள் செய்கிறாள் தவறுகளுக்குப் பரிகாரம் காண மறுபடியும் பிறப்பெடுக்கிறான். பந்த பாசங்கை விலக்கி (அறுத்தல்ல) பற்றற்றவனாக மாறும் போது தெய்வீகக் குணங்க தாமாகவே அவனை வந்தடைகின்றன. அவன் அவற்றை நாடிப்போவதில்லை மோக்ஷத்துக்கு ஆசைப்பட்டுக் கொள்வதும் கூட பிறப்புக்கு வழிவகுக்கிறது பற்றற்ற நிலையில் தெய்வமாகவே மாறி விட்ட மனிதனுக்கு மோக்ஷ ஆை கூட வருவதில்லை. அவன் மனதில் எதுவுமேயில்லை. அலைகள் ஓய்ந்த நிலையில் உள்ள நீர்ப்பரப்பாக அவன் மனம் காட்சியளிக்கிறது. அலைக ஓய்ந்த நிலையில் உள்ள நீர்ப்பரப்பு சலனமற்றுத் தெளிவாக அதனடியில் உள்ளே இருக்கும் பொருளைக் காட்டுவது போல் அவன் தனக்குள் அமர்ந்திருக்கு
இறைவனைக் காண்கிறான்.
இந்த நிலையை அடையும் வரை மனிதன் தனது அன்றாட வாழ்க்கையை ஒரு இறைவழிபாடாக மாற்ற வேண்டும். இந்த லெளகீ வாழ்வை இறைவழிபாடாக மாற்றுவதா என்று ஆச்சரியப்பட வேண்ட
O
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

இந்த வாழ்வு இறைவன் தந்தது. அதை வழிநடத்துவதற்குரிய விதிகளையும் வகுத்துத் தந்திருக்கிறான். போதாமைக்கு எங்கள் இதயங்களில் வீற்றிருந்து வழிநடத்தவும் தயாராயிருக்கின்றான். நாங்கள் தான் இதையெல்லாம் மறந்து புறக்கணித்து விட்டுச் சம்பிரதாயங்கள் சடங்குகள் என்று எங்களைச் சுற்றி வேலைகளை அமைத்து அதற்குள் சிறைப்பட்டு விட்டதாகப் புலம்பித் தவிக்கிறோம். இதை உணர்ந்து இறைவன் தந்த வாழ்வை வழிபாடாக மாற்றி, வாழ்வுக்குரிய கடமைகளை ஒரு வேள்வியாக எண்ணி நடந்தால் இறையெண்ணம் எங்களுடனேயே தங்கி நிற்க ஆரம்பிக்கும், நாங்கள் ஒவ்வொருவரும் முற்பிறவிகளிலே செய்த நண்மை தீமைகளே கர்மமாக மாறிப் பிறப்புக்களை அமைத்துத் தருகிறது. எனவே எங்களுடைய வாழ்வும் அந்த அடிப்படையிலே தான் அமையும். இந்தப் பிறவியில் நாங்கள் கழித்துத் தீர்க்க வேண்டிய பிராப்தகார்மம் எதுவோ அதுவே வாழ்வு, நிகழ்வுகள் சம்பவங்கள் பாவும் தாமாகவே நடக்கும். யாரும் தடுத்து நிறுத்தவோ துரிதப்படுத்தவோ முடியாது. இறைவனால் நியமிக்கப்பட்ட பிரபஞ்ச நியதிப்படி (Universal Law) அதது நடக்கிறது. இதையே போகர் சுவாமிகள் "எப்பவோ முடிந்து போன விஷயம் என்றார்.
இறைவனின் நியதிப்படி நாங்கள் இந்தப் பிறவியில் செய்து கழித்து விட வேண்டிய கடமைகளை, ஆண்டவன் கட்டளையாய் ஏற்றுச் செய்யும் போது, நான் செய்கிறேன் என்ற எண்ணம் நாளுக்கு நாள் குறைந்து நாளாவட்டத்தில் அற்றுப் போய்விடும். அப்போது கடமைகளை எதுவித சுயநல நோக்கமுமில்லாமல் நாங்கள் செய்வதால் அதனால் வரும் விளைவுகளும் இறைவனுக்கே அர்ப்பணமாகிறது. இதில் ஒரு முக்கியமான விடயம் ஞாபக்தில் இருக்க வேண்டும். இந்தக் கடமைகளை ஒரு வேள்வியாக நினைத்து தியாக சிந்தனையோடு செய்ய வேண்டும். மகிழ்வுடன், முழுமனதுடன், திறமையைக் காட்டிச் செய்ய வேண்டும். அரை மனதுடனும் சலிப்புடனும் செய்யும் கடமைகள் மேலும் கர்மத்தை வளர்க்கும். தீர்க்காது.
தனது குடும்பத்தைக் காப்பாற்றுவதற்காக மணிக்கணக்காக உழைக்கும் மனிதனின் வாழ்வும் ஒரு தியாக வேள்வியே. வயலில் உழுது உணவு பெருக்கும்
11

Page 10
உழவனும் ஒரு வேள்வியிலேயே ஈடுபட்டிருக்கிறான். வீட்டிலேயே இருக்கும் தாயைப் பாருங்கள். தன் கணவனுக்கும் பிள்ளைகளுக்கும் அர்ப்பன சிந்தையோடு சமையல் செய்வதும், அவர்களுக்கு இன் முகத்தோடு சிருஷை செய்வதும் ஒரு வகை தவநிலை தான். அவர்களின் சுகத்திலும் சந்தோஷத்திலும் ஊறித் தனக்கெனச் சிந்தியாத தாயின் அன்பே தலையன்பாக உலகில் போற்றப்படுகிறது.
அவர்களின் நலனிலும் உயர்விலும் தனது வாழ்வு பூரணத்துவம் அடைந்து
விட்டதை உணர்ந்து பூரிப்படைகிறாள்.
வாழ்வைத் தவமாக்கி, கடமையை வேள்வித் தீயாக்கி, தியாகம் என்னும் சந்தனக் கட்டைகளை அடுக்கி அன்பென்னும் நெய்யூற்றி, கடமையுணர்வு என்னும் தியானத்தில் ஈடுபட்டு வாழ்பவனே உண்மையை நேரில் சந்திக்கும் தபசி. இந்தத் தியாக வேள்வி அவனைப் புனிதமாக்குகிறது. தெய்வநிலைக்கு உயர்த்துகிறது. இந்த உண்மை மறைக்கப்பட்டு வாழ்வு வேறு சமயம் வேறு என்று சமயவாதிகள் பிரிவினை செய்து காட்டியிருக்கிறார்கள். வாழ்வே சமயம் கடமைகளே சடங்குகள் என்ற நிலை மறுக்கப்பட்டுச் சமயம் வாழ்விலிரு பிடுங்கி எடுக்கப்பட்டு விட்டது. சடங்குகள் பல கண்டு பிடிக்கப்பட்டு ஒரு
இறைவனின் உறைவிடமான கோவிலாகவும் மாற்ற வேண்டும்.
இவ்வாறு செய்வதென்பது இலகுவான காரியமல்ல. எங்களை ஆட் படைக்கும் ஆசாபாசங்களை அடக்க வேண்டும். உணர்வு அலைகை மோதித் திரிய விடாது கட்டுப்படுத்த வேண்டும். குரங்கு போல் பாய்ந்து திரியும் மனதை ஒரு நிலைப்படுத்தி அமைதியாய் நிதானமாய் இருக்க வைக் வேண்டும். இவையெல்லாம் சுலபமான காரியங்களல்ல. மனிதனுடைய இந்த
12
 
 
 
 
 
 
 

ஆற்றாமையினால் தான் சமயச் சடங்குகள் உண்டாக்கப்பட்டு அவை மூலம் கர்ம வினை கழியும் என்றும் தேவலோகம் கிட்டும் என்றும் கூறி ஏமாற்றப்பட்டான். இதனால் அவன் தனது இதயத்தையும் உள்ளத்தையும் கத்தமாக்க வேண்டியதன் அவசியத்தைப் புறக்கணித்தான். கடமைகளை யோகமாக மாற்ற வேண்டியதை மறந்து குறுக்கு வழியில் தெய்வத்தைக் காணப் புறப்பட்டதால் உண்மையான சமயத்தை இழந்து தெய்வத்தைத் தன்னிடத்திலேயே காண முடியாமல் அலைந்து திரிகிறான்.
வாழ்வைத் தெய்வ வழிபாடாகவும் கடமைகளை யாகமாகவும் எண்ணிப் புனிதமாகச் செயல்பட்டு நல்வழியில் செல்பவனுக்கு வாழ்வு கர்ம யோகமாக மாறத் தொடங்குகிறது. இவ்வாறு மாறத் தொடங்கும் போது அவன் தனது வாழ்க்கையில் நிர்மலமானதாகவும், அமைதியானதாகவும் வாழ்கிறான். வாழ்வின் ஏற்றத் தாழ்வுகள் அவனைப்பாதிப்பதில்லை. இந்த நிலை நீடிக்கும்போது தெய்வீகத் தன்மை அவனைத் தேடி வரும். அது அவனது உள்ளத்தையும் உடலையும் ஆக்கிரமித்துக் கொள்ளும், சர்வம் தெய்வ மயம் என்ற நிலையை அவன் அநுபவிக்கிறான். இப்போது மற்றுமொரு முக்கியமான கேள்வி எழுகிறது. மனிதனுக்குப் பிரார்த்தனைகள் அவசியமில்லையா என்பதே அது. எங்கே எவ்வாறு பிரார்த்தனை செய்ய வேண்டும் என்ற கேள்விகளும் தொடர்ந்து எழுகிறது. வாழ்க்கையே வழிபாடாக மாற்றித் தெய்வீக சிந்தனையோடு வாழும் மனிதனுக்கு அதற்குப் புறம்பான ஒரு பிரார்த்தனை செய்ய வேண்டிய தேவைப்பாடு இல்லை. இருப்பினும் பிரார்த்திக்க வேண்டும் போல் மனதில் தோன்றினால் கட்டாயம் செய்யுங்கள். அது ஒரு நல்ல செயல். அச் செயல் உங்கள் உள்ளத்தை மேலும் மேலும் புனிதமாக்க உதவுகிறது. ஆனால் பிரார்த்தனை செய்யும் போது மனதை முழுமையாக அதில் ஈடுபடுத்தி முழு மனதோடு வணங்குங்கள். இது முக்கியம். முழுமனதோடு இல்லா விட்டால் பிரார்த்தனை அதன் வர்த்தத்தை இழந்து போலியாய் நிற்கும். பிரார்த்தனை செய்வதற்கு வழி முறைகள், குறிப்பிட்ட இடம், சூழ்நிலை, நேரம் என்ற கட்டுப்பாடுகள் இல்லை. டங்கள் பிரார்த்தனை உள்ளத்தின் அடியிலிருந்து புறப்பட வேண்டும். சர்வ Iல்லமை படைத்த ஆண்டவன் அச் செய்தியை அறிவான். அது மெளனமாகக்
கூட நடத்தப்படலாம். அதுவும் அவனுக்குப் புரியும்.
13

Page 11
பொதுவாக நாங்கள் எங்களுக்குத் துன்பம் ஏற்படும் போது அல்லது தேவைகள் ஏற்படும் போது வேண்டுதல் செய்து பிரார்த்திக்கிறோம். சில வேளைகளில் நன்றி சொல்லியும் வணங்குகிறோம். எல்லாம் வணக்கமே. இது மனதைத் தெய்வத்தின் பால் செலுத்தி அதன் மூலம் புனிதமடைய வழிகோலும், பந்த பாசங்களிலிருந்து விடுபட உதவும். ஆண்டவனின் உதவி கிடைக்கும் என்ற எண்ணத்தில் வாழ்வின் பிரச்சனைகளை நம்பிக்கையோடு அணுகவும், உதவும். எனவே பிரார்த்தனையால் நன்மைகளே அன்றித் தீமை எதுவுமில்லை. ஆனால் அது வெறும் சடங்காக மாறி அச் சடங்குகளோடு முடியும் விடயமாக மாறக் கூடாது. ஆண்டவனுடைய சித்தத்துக்கு மாறான செயல்களைச் செய்து
மடமை. வெள்ளை நிறப் பூவுமல்ல, வேறெந்த மலருமல்ல, உள்ளக் கமலமடி
உத்தமனார் வேண்டுவது என்று விபுலானந்தர் கூறியது இதைத்தான்.
- - - 气。垂
சர்வம் அன்பு மயம் என அறிகிறோம். அன்பே சிவம் எனும் தத்துவத்தை விளங்கிக் கொள்கிறோம். ஆண்டவனால் படைக்கப்பட்ட அனைத்தையும்
உண்மையான சமயம்.
இறைபதம் தேடி ஆன்மீக வழி செல்வதற்குகந்ததாக இரு மார்க்கங்கள்
முன்னேற்றம் கண்டு முதிர்ந்து பற்றற்ற நிலையை எய்தி விட்டவர்களுக்கா ஞான மார்க்கமும் உலக பந்தங்களின் மத்தியில் வாழ வேண்டிய தேவைப் இன்னமும் உள்ள கிரகஸ்தன் அல்லது இல்லறவாசிக்கான கர்ம நிஷ் அல்லது கர்ம யோகமுமே அவ்விரண்டு பாதைகளாகும்.
ஆன்மீக வாழ்வில் முதிர்ச்சியடைந்தவர்களுக்கு அதன் விளைவாக சிந்தையும் அறிவும் முதிர்வதோடு உணர்ச்சிகளும் பக்குவநிலையை அடைவத அவர்கள் ஆன்மசாதளை பெற்றவர்களாகுகிறார்கள். இதுவே பக்குவநிை இந்த நிலையில் மனமும் சிந்தனையும் அம் மனிதனைத் தமதிஷ்டத்துக் இழுத்துச் செல்ல முடியாது. மாறாக அவை அவன் காட்டிய வழியில் நடக்கு உணர்ச்சிகளுக்கு அடிமையாய் இருந்த அவனிடம் உணர்ச்சிகள் அடங்
14
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ஒடுங்கி அடிமைப்பட்டுவிடும். தான் வேறு பூரமாத்மா வேறு என்ற மயக்கநிலை முற்றாக அகன்று அவன்பரமாத்மாவாகவே நடக்கத் தலைப்படுகிறான். இந்த உன்னதமான நிலையை அடைந்தவர்கள், இவ்வுலக பந்தங்களிலிருந்து விடுபட்டுத் தனிமையை வேண்டியவராய் ஆச்சிரமத்தையோ, மலையடி ாரத்தையோ வனத்தையோ நாடிச் சென்று தவவாழ்வை மேற்கொள்கிறார்கள். இவர்களுக்குப் பற்றற்றதன்மை என்னும் முதிர்ச்சி நிலை நீண்ட கால ஆன்மீகப் பயிற்சி காரணமாகத் தானாகவே, அதாவது இயல்பாகவே ஏற்படுகிறது. இந்த முதிர்ச்சி ஏற்பட்டதும் முற்றிக் கனிந்த கனியின் காம்பு தானாகவே மரத்திலிருந்து விடுபட்டுக் கனி விழுவது போல் இவர்களும் உலக பந்தங்களிலிருந்து கழன்று கொள்வார்கள். பழுத்த பழம் இயற்கையாகவே விழுவது போல் ஞானம் பெற்ற இம் மனிதரும் இயற்கையாகவே பந்தங்களிலிருந்தும் விடுபடுவர். இத்தகைய சந்நியாசிகள் எல்லா மதத்திலும் இருக்கிறார்கள். இவர்களுக்கு வாழ்வின் ஒரே குறிக்கோள் கடவுளை அடைவது மட்டுமே. இதைத் தவிர வேறெந்த எண்ணமும் அவர்களுக்கிருப்பதில்லை. இந்த நிலை தமக்கு வந்து விட்டது என்பதை அம் மனிதர் தாமாகவே புரிந்து கொள்வர். தமக்குப் பற்றற்ற நிலை அல்லது ஆன்மீக மொழியில் கூறுவதானால் வைராக்கியம் வந்து விட்டதா இல்லையா என்பதில் அவருக்கு ஏதாவது சந்தேகம் எழுமானால் அது வில்லை என்பதே அர்த்தமாகும். உண்மையிலேயே வைராக்கியம் வந்தபோது இத்தகைய சந்தேகம், தடுமாற்றம், ஏதுமின்றி அவர் சாதாரண வாழ்விலிருந்து ாவாரமில்லாமல் வெளியேறுகிறார். அவரே உண்மையான சாது. இந்தச் ாதுக்கள் தனிமையைத் தேடிச் சென்று தியான வாழ்வை மேற்கொள்வர். இவர்களுக்கு மனப் போராட்டங்களில்லை. அதே போல் வெளியேயும் போட்டமில்லை. உள்ளத்திலும் அமைதி உலகத்தவரோடும் சமாதானம், சாந்தியும், மைதியும், சுயகட்டுப்பாடும் இவர்களுடைய நிர்மலமான முகத்தேஜஸ் மூலம் பிரகாசித்து இவர் ஒரு உண்மையான சாது என்பதைப் பறை சாற்றும். வேறு 'Tடயாளங்கள் அவசியமில்லை. இத்தகைய முதிர்ச்சி நிலையை அதாவது க்ருவநிலையை ஒருவர் அடையும் வரை அவர் சாதாரண வாழ்வில் ஈடுபட்டுத் க்குரிய கடமைகளைச் சரி வரச் செய்து கொண்டிருக்க வேண்டும். அல்லாமல்
ாலும் சந்நியாசியாகப் போகிறேன் என்று சொல்லிக் கொண்டு கடமைகனை
15

Page 12
உதறியெறிந்து விட்டு ஒருவர் செல்வாராயின் அவர் நிச்சயம் தவ வாழ்வு வாழப்போவதில்லை. மனம் பக்குவமடையாத நிலையில் அங்கேயும் மனப் போராட்டங்கள் அவரைத் தியான வாழ்வு மேற்கொள்ள விடாது. முடிவு? அவரே அதையும் உதறி விட்டு மீண்டும் சாதாரண வாழ்வுக்குத் திரும்புவார். உண்மையில் பக்குவமடைந்த சாது வாழ்வுக்குத் தயாராகி விட்ட ஒருவர் கடமைகளை உதறுவதில்லை. தாம் சந்நியாசியாகப் போகிறோம் என்று சொல்வதுமில்லை. கோபித்துக் கொண்டு ஓடிப் போவதுமில்லை. கர்மவினைகள் முற்றுப் பெறுகிற தறுவாயில் கடமைகள் ஓய்ந்து விட்டன என்று மனமே ஒருவருக்குக் கூறும். அந்த நிலையை அடைந்த போது அது வரை அவர் வாழ்ந்து வந்த நெறியான வாழ்வு அவரில் பற்றற்ற நிலைை
ஏற்படுத்தியிருக்கும். எனவே வாழ்வை உதற வேண்டிய அவசியம் C ஏற்படுவதில்லை. தானாகவே "விடுபட்டு விலகிச் செல்கிறார். கனிந்த பழம் காம்பு விடுபடுவது போல் பந்தங்களிலிருந்து தம்மைப் "பிடுங்கி எடுப்பவ
பிஞ்சிலே பலவந்தமாகப் பிடுங்கப்பட்டுப் பழுக்க வைக்க முயன்ற :
இயற்கையான கனிவு இல்லாத அக் கனி பூஜைக்கு உகந்ததாகாது. இந்
வேறுபாட்டை மிகவும் துல்லியமாக உணர்ந்து கொள்ள வேண்டும். தனக்கு 茄 காலம் வருமுன் தன் கடமைகளை உதறி விட்டுச் சந்நியாசியாக முற்படுபவன்
என்று கூறிச் சென்றானோ அதையும் அடைய முடியாமல் திரும்பி வரு எவருக்கும் பிரயோசனமில்லாமல் தனக்கும் சிறப்பில்லாமல் மேலும் பிறப்புக்
வழிகோலும் கர்மாவையும் சேகரித்துக் கொண்டு.
இப்போது சில முக்கியமான கேள்விகள் எழுகின்றன. துறவற வாழ்வு
மேற்கொள்வதற்கான பற்றற்ற பக்குவகாலம் வரும்வரை என்ன செய்க
ஆரம்பத்தில் நாம் அறிந்தோம் மனிதன் தான் சர்வவியாபியாகிய பரமாத்மா
என்பதை அறியும் வரை இந்த மா
16
 
 
 
 

உடலும் அதற்குரிய உணர்ச்சிகளுமே நான் என்றெண்ணிச் செயல்படுகிறான் என்று. இந்த அறியாமை காரணமாகத் தன்னுடைய சொந்த ஆசாபாசங்களினால் எழும் விருப்பு வெறுப்புகளுக்குக் கட்டுப்பட்டவனாகச் செயலாற்றி அச் செயல்களின் மூலம் பிறவிக்குக் காரணமான கர்மாவை உற்பத்தி செய்து பெருக்குகிறான். தன்னை யார் என்பதை மனிதன் அறிந்து கொள்வதே ஆன்மீக வாழ்வின் முதற்படி என்பதையும் ஆரம்பத்தில் கண்டு கொண்டோம். இந்த உண்மையை அறிந்து கொண்ட மனிதன் என்ன செய்கிறான்? தன்னை யாரென்று அறிந்த மனிதன் தன்னைச் சுற்றியுள்ள கர்மாவை விலக்கவும், மேலும் கர்மாவை வளராமல் பார்த்துக் கொள்ளவும் முயலத் தொடங்குகிறான். இந்த விழிப்பு எப்போது வரும்? ஒருவருடைய கர்மா கணிசமான அளவு கழிந்தபோது
வரும். இதையே யோகிகள் "காலம் வர வேண்டும் என்பர். விழித்துக் கொண்ட மனிதன் மெள்ள மெள்ள மாயை என்ற இருள் விலகுவதை உணருகிறான். இந்த உலகத்தை வெளிச்சத்தில் வேறு விதமாகப் பார்க்கத் தொடங்குகிறான். முன்பு தெரியாத பல உண்மைகள் தெரிகின்றன. புரியாத புதிர்களுக்கு விடைகள் புரிகிறது. இப்போது அவன் தன்னைச் சுற்றியுள்ள உலகத்திலிருந்து பல பாடங்களைக் கற்கத் தொடங்குகிறான். பல அநுபவங்கள் மூலம் அறிவு முதிர்ச்சியடைகிறான். இதனால், கிடைக்கும் ஞானமே ஆன்மஞானம். இந்த ஆன்ம ஞானத்தைப் பெறுவதற்கான பயிற்சிக் கூடமே இந்தப் பூலோகம் இங்கு தான் இதைப் பெற முடியும். தேவர்களும் ஞானம் பெறப் பூலோகம் என்ற பயிற்சிப் பாசறைக்கே அனுப்பப்படுகிறார்கள் என்பதை புராணங்களில் படிக்கிறோம். பூலோகத்தில் பிறப்பாயாக என்று ஆண்டவன் அவர்களுக்குக் கட்டளையிடுகிறான். தவறுகளைத் திருத்தி அறிவு பெறப் பூலோகமே இறைவனால் நியமிக்கப்பட்ட இடம். எனவே விழிப்புப் பெற்ற மனிதன் துறவறத்தை மேற்கொள்ளுவதற்குரிய காலம் வரும்வரை தனது அன்றாடக் கடமைகளைத் தெய்வத்தின் ஆக்ஞையாக ஏற்று அன்போடு செய்து வர வேண்டும். ஒரு மனிதனுடைய வாழ்வில் அவனுக்குரிய கடமைகள் யாது?
முற் பிறவிகளில் நாங்கள் ஆசை, விருப்பு, வெறுப்பு போன்ற உணர்வுகளால் உந்தப்பட்டுச் செய்த கருமங்கள் கர்மாவாகச் சேரும் என்பது
பற்றி ஏற்கனவே இக் கட்டுரையில் அறிந்தோம். இந்தக் கர்மாவானது ஒரு
17

Page 13
வங்கிக் கணக்குப் போன்றது. வரவு, செலவு போல பாவ, புண்ணிய என இரு அம்சங்களைக் கொண்டது. இந்த இரு பகுதிகளில் எதிலேனும் கணக்கு முடிக்கப்படாமல் இருக்கும் வரை பிறப்பும் இருக்கும். முற்றாக வரவு, செலவு இரண்டும் முடிந்த நிலையில் தான் கணக்கு முடிக்கப்படும் கணக்கியலில் எப்படி சில விதி முறைகள் இருக்கிறதோ அது போல் கர்மக் கணக்கை முடிப்பதற்கும் ஒரு பிரபஞ்ச விதி முறை உண்டு. அந்த விதியின் முறைப்படி தான் எங்கள் பிறப்பு அமைந்து கர்மாவை முடிவுக்குக் கொண்டு வரும்.
அதற்கேற்ற முறையில் தான் வாழ்வும் அமையும். எனவே எங்களுடைய வாழ்வு எப்படி அமையும் என்பதை நாங்களே முற் பிறப்புகளில் அறியாமையினால் வரையறுத்து விட்டோம். இதனால் தான் எங்கள் எங்கள் கர்ம வினைப்படி ஏற்றத் தாழ்வுகளுடன் வாழ்வுகள் அமைகிறது. அல்லாமல் கருணையே வடிவான கடவுள் ஏன் இப்படி ஒரு வஞ்சகம் செய்தார் என்று கேட்பு மடமை? ஒவ்வொரு செயலுக்கும் பிரதிபலிப்பு உண்டு. (Every action h (1 reaction) என்ற பிரபஞ்ச இயற்கை விதியை அறியாதவரே இப்படிப்பட்ட
கேள்வியைக் கேட்பார்.
நாமாகச் சேர்த்த கணக்கை நாமே தான் தீர்த்துக் கொள்ள வேண்டு இல்லையா? சரி, இந்த உண்மையை அறிந்தால் நமக்குரிய கடமைகள் என்ன என்பதற்கான விடையும் விளங்கும். அவை கர்ம விதிப்படி நம்முன் தாமாகவே வந்தடையும். இவற்றைத் தட்டிக் கழிக்க முடியாமல் மனைவி, மக்கள், உற்றம் சுற்றம் என்ற பந்தங்களுடன் வந்து நின்று கட்டாயப்படுத்தும். எனவே இந்த கடமைகளை அன்போடும், மகிழ்வோடும், ஏற்று முழுமனதுடனு
உற்சாகத்துடனும் செய்யுங்கள். அர்ப்பண சிந்தையோடும், பயபக்தியோடு செய்யுங்கள். எதையும் அரைகுறையாகச் செய்யாமல் முழுக் கவனத்தை திறமையையும் செலுத்திச் செய்யுங்கள். நாம் செய்யும் காரியங்கள் மேலு மேலும் கர்மாவை வளர்க்காமலிருக்கும் வழியையும் அதே சமயம் கை அவசியம். இல்லாவிட்டால் பிறவிக் கடலைத் தாண்டக் காலம் நீடித்து கொண்டே போகும். எங்களுடைய கருமங்கள், கடமைகளை உண்ை அறிவுடன் சரியாகச் செய்யும் போது பிறவிப் பந்தங்கள் சேருவதில்லை. மனிதனுடைய உணர்ச்சிகளை அவன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு
B
 
 
 
 
 
 
 
 
 
 
 

சிந்தையில் தெளிவு கொள்ளும் போது அவனுக்கு அறிவு முதிர்ச்சி அல்லது விவேகம் (Wisdom) கிடைக்கும். விவேகம் என்பது புத்திக் கூர்மை (intelligence) அல்ல. இந்த வேறுபாட்டையும் நன்கு விளங்கிக் கொள்ளுங்கள். விவேகம் இல்லாதவனுடைய புத்திக் கூர்மை சிறுபிள்ளையின் கையிலுள்ள கத்திக்குச் சமானம். ஒரு மனிதனுக்கு விவேகம் ஏற்பட்ட போது அவனுக்கு ஒவ்வொன்றையும் அதனதன் உண்மையான தண்மை எது என்று பகுத்தறியும் வல்லமை உண்டாகும். ஆன்மீக வளர்ச்சிக்கு இத்தகைய பகுத்தறிவு (power (fdiscrimination) மிக மிக அவசியம். இந்த விவேகத்துடன் நாம் செய்யும் கருமங்களும் கடமைகளும் எங்களுடைய கர்மாவைக் கழித்துப் பிறவியைக் குறைத்துக் கொண்டே போகுமல்லாது கர்மாவை வளர்க்கும் பந்தங்களை ஏற்படுத்தாது. இந்த விவேகத்தின் பலனாக சாஸ்தவம் எது மாயை எது (real and unreal) என்பது புரியும். இது புரியும் போது வாழ்வில் சரி பிழை அவசியம் அநாவசியம் / பிரயோசனம் பிரயோசனமற்ற / உண்மை / பொய் பொதுநலம் / தன்னலம் / என்ற வேறுபாடுகள் நன்கு தெரியவரும். ஏற்கனவே தூய பழக்கங்களினால் உண்டாகிய சிந்தைத் தெளிவுடன் இந்த விவேகமும் சேரும்போது அம் மனிதனுக்குப் பற்றற்ற தன்மை இயல்பாகவே வரும். இந்தப் பற்றற்ற தன்மையே ஆன்மீக மொழியில் வைராக்கியம் எனப்படுகிறது.
இந்தப் பற்றற்ற தன்மை அல்லது வைராக்கியத்தை அடையும் வரை ஒரு மனிதன் தனது அன்றாடக் கடமைகளையும் கருமங்களையும் தெய்வத்திற்குச் செய்யும் அர்ச்சனையாக எண்ணி செய்து வர வேண்டும். இவற்றை உண்மை அறிவுடன் சரியாகச் செய்யும் போது பிறவிப் பந்தங்கள் சேருவதில்லை என்பதை ஏற்கனவே கண்டு கொண்டோம். சரியாகச் செய்வதற்கு விவேகம் வேண்டும் என்றும் விவேகம் என்றால் என்ன என்பதையும் இனங் காண்டுள்ளோம். இனிமேல் இந்தப் பிறவிப் பந்தத்தை எமக்கு உண்டாக்கும் காரணிகள் பற்றி ஆராய்வோம்.
முதலாவது நாங்கள் ஒவ்வொருவரும் ஒரு கருமத்தை அல்லது கடமையைச் செய்து விட்டு அதனால் ஏற்படும் பலாபலன்களையும்
19

Page 14
எதிர்பார்க்கின்றோம். இதன் மூலம் இந்தப் பலாபலன்கள் மீது ஆசை வைத்து அதனால் பற்று ஏற்படுகிறது. இதுவே பேராசை, பொறாமை, போட்டி, குரோதம் என்ற பல்வேறு தீமைகளுக்கும் வித்திடுகிறது. எங்களுடைய கருமங்கள்
கடமைகள் யாவும் முற்பிறவிக் கடன். எனவே அவற்றுக்கான பலனை எதிர்பார்க்கும் உரிமை எங்களுக்குக் கிடையாது. இந்த உண்மையை விளங்கிக் கொண்டால் இந்தப் பலவீனம் அல்லது தவறு எங்களை விட்டுச் சிறுகச் சிறுக அகலும், பரமாத்மாவான கிருஷ்ண பகவான் கீதையில் இதையே கூறுகிறார். "சரியான விவேகமான செயல்களை இன்றே செய், அதன் பலனைப் பற்றிச் சிந்தியாதே
. (Do the right and wise thing today, and leave the result to takė care of itself")
இது சோம்பேறிகளின் தத்துவமல்ல. வேலையை விளையாட்டாகக் கருதி
உற்சாகத்துடன் செய்ய வைக்கும் மகத்தான உண்மை.
இரண்டாவது எங்களுடைய விருப்பு வெறுப்புக்கள். இந்த விருப்பு வெறுப்புக்கள் எங்களுடைய அன்றாடக் கருமங்களுடன் தொற்றிக் கொண்டு பிரதிபலிக்கின்றது. இதன் காரணமாக விருப்புள்ள கருமங்களோடு பந்தங்கள் ஏற்படுகின்றது. வெறுத்து ஒதுக்கும் கருமங்களைச் செய்து முடிக்க மீண்டும் பிறக்க நேரிடுகிறது. எனவே இரு வகையாலும் பிறப்புக்கான வழி சமைக்கப்படுகிறது. விரும்பிய கருமங்களைச் செய்யும்போது வாழ்வில் ஒரு பிடிப்பு அல்லது பற்றுதலும் விருப்பமில்லாத காரியங்களைச் செய்யும் போது வாழ்வில் வெறுப்பும் சலிப்பும் ஏற்படுகிறது. இதனாலேயே பிறப்புப் பந்தம் ஏற்படுகிறது. இந்தப் பந்தங்கள் எங்களைக் கட்டியிழுக்காத நிலையில் அதாவது பற்று அற்ற நிலையில் நாம் புனிதராகிறோம். மேல் நிலை அடைகிே th ஆம் பற்று என்றால் கட்டு என்று தானே அர்த்தம்? அது அற்ற நிலையில் நாம் மேலே உயர்வது தானே இயல்பு? மனிதனுக்குரிய சாதாரண உணர்ச்சிகளுக் அப்பாற்பட்டு மேலுயரும் போது சாதாரண உலகியலிலிருந்து விடுபட் உயருகிறோம். இதுவே பிறவிப் பந்தங்களிலிருந்து விடுபடும் இரகசியம். வி வெறுப்பற்றுக் கருமங்களைச் செய்வதற்கு நாங்கள் வளர்த்துக் கொன
2O
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

தெய்வீக உணர்வு உடன் நிற்கும், எந்தக் கருமமானாலும் மகிழ்வுடனும் மனநிறைவுடனும் ஏற்றுக் கொள்ளுங்கள். ஏற்ற கருமங்களை விருப்பு வெறுப்பற்று அமைதியாகவும், மெளனமாகவும் நிறைவேற்றுங்கள். இதைத் தெய்வீக உணர்வோடு செய்யும் போது அது ஆண்டவனுக்கு அர்ப்பணமாகிறது. அவனுக்குச் செய்யும் சேவையாகின்றது. எனவே அதன் பலனும் ஆண்டவனுக்கே அர்ப்பணமாகும். இதன் மூலம் பிறப்பின் மூலகர்த்தாவாகிய கர்மம் சேராமல் தடைப்படுகிறது. பொறுமையோடு, அமைதியாக அர்ப்பண சிந்தையோடும் தெளிவான மனதுடனும் செய்யும் எந்தச் செயலிலும் தவறுகள் ஏற்படுவதில்லை. ஒரு மனிதன் செய்யும் கருமங்களும் கடமைகளுமே அவனுடைய வாழ்க்கையாக அமைகிறது. வாழ்க்கை வேறு இவை வேறு என்று பிரித்துப் பார்க்க முடியாது. எமது கடமைகளும் கருமங்களும் தவறற்றவையாக அமையும் போது வாழ்க்கை தானாகவே தவறுகள் அற்றதாக அமைகிறது. மனித சிந்தையோடு செயல்படும் போது தான் பதட்டமும் தடுமாற்றமும் அவசரமும் ஏற்படுகிறது. தெய்வீக உணர்வோடு செயல்படும் போது அமைதியும், பொறுமையும், நிதானமும் கடைப் பிடிக்கப்படுவதால் செயல்களில் தெய்வீகத் தன்மை மிளிருகிறது. இதனால் இயல்பாகவே வாழ்க்கையும் தெய்வீகத் தண்மையுடையதாக அமைகிறது.
மூன்றாவது தவறு தான் நான் என்ற அகந்தை உணர்வு. இது பற்றி ஏற்கனவே சில குறிப்புகள் ஆராய்ந்து விட்டோம். எனினும் இச் சந்தர்ப்பத்தில் அது பற்றிச் சுருக்கமாக சில வரிகள் கூறுவது பொருத்தமாகும். சாதாரணமாக ஓஸ்வொரு மனிதரும் தாம் செய்யும் செயல்களை நான் செய்கிறேன் என்று கூறும் போது அவர் தமது உடலையும் அதனோடு ஒட்டிய உணர்வுட்பட்ட iாவங்களையே விளித்துக் கூறுகிறார். இதுவே மனித உணர்வாகிய அகந்தை,
ஆன்மீகப் பயிற்சியில் முன்னேறி மனித உணர்வுகளை மெல்ல மெல்ல அகற்றி தெய்வீக உணர்வு அந்த இடத்தைப் பிடித்துக் கொண்ட போது இந்த அகந்தை உணர்வும் தானாகவே அகன்று விடும். உண்மையை உணர்ந்து கொண்ட மனிதர் "எல்லாம் ஈசன் செயல். நம் கையில் ஏதுமில்லை" என்பார். ஒட்டுவிப்பவன் அவன், நான் அவன் கருவியாகச் செயல்படுகிறேன் என்ற நினைவுடன் செய்யும் அவருடைய கடமைகள் கருமங்கள் யாவும் இறை
நொண்டாக மாறி விடுகிறது. இறை தொண்டு செய்யும் போது ஏற்படும்
21

Page 15
அக்கறை, பயபக்தி, தியான உணர்வு என்பன அக்கருமங்களில் பிரதிபலிக்கும். இதன் பயனாக இறை தொண்டுக்குரிய பலன்களும் அவரை அடைகிறது. அது தான் பாபங்கள் கழிந்து புண்ணியம் சேருதல். இறை தொண்டாகக் கருமங்களைச் செய்யும் போது ஆசை என்ற துன்பங்களுக்கு மூலகாரணமான குணம் அம் மனிதனை விட்டகன்று விடுவதால் மறுபிறப்புக்கு வழிகோலும் பந்தங்களும் அற்றுப் போய் விடுகிறது.
மேற்கூறிய மூன்று தவறுகளையும் மனிதன் தனது செயல்களிலிருந்து களைந்தெடுத்து விடும்போது அவனுடைய கருமங்கள் யாவும் ஒரு தபஸ் அல்லது யோகமாக உருவெடுக்கிறது. இதுவே கர்ம யோகம். கருமங்கள் யாவும் யோகமாக மாறும் போது அவனுடைய வாழ்வும் கர்ம யோகமாகிறது. ஏனென்றால் எமது அன்றாடக் கருமங்களே எமது வாழ்வு என்பதும் இவை இருவேறு விடயங்களல்ல என்பதையும் ஏற்கனவே அறிந்துள்ளோம். தமது வாழ்வை இள்விதம் கர்மயோகமாக மாற்றி விட்டவன் கர்மயோகியாகிறான். இவனே பிறவி எனும் துன்பத்தோடு எங்களைக் கட்டி வைக்கும் பந்தபாசங்களிலிருந்து விலகிக் கொண்ட பற்றற்ற கர்மயோகி, தானாகப் பழுத் மரத்திலிருந்து வீழ்ந்த கனி. இந்த நிலையை அடைந்தவன் துறவி வாழ்வுக்குரிய பக்குவத்தை அடைந்தவனாகிறான். நாளடைவில் துறவு
நிலையிலிருந்து பரமாத்மா நிலையை அடைகின்றான். எங்கும் நிறைந்திருக் கு
பரம் பொருளாகின்றான்.
பிறவிக் கடலிலிருந்து ஜீவாத்மாவை மீட்கும் துறவற வாழ்ை
மேற்கொள்ளுவதற்கு ஒரு மனிதனைத் தகுதியானவனாக்கும் இந்தப் பாை
வாழ்வு, ஒளி தேடிச் செல்லும் மிக முக்கியமான ஒரு பகுதியாகும். அ எள்ளளவேனும் அலட்சியம் செய்தவன் தனது பரீட்சையில் சித்தியடையாதவன் மீண்டும் மீண்டும் பரீடைசைக்குத் தோற்ற வேண்டிய துன்பத்துக்கு ஆளாகி
22
 
 
 
 
 

இது வரை ஒளியை நாடிச் செல்லும் பாதை பற்றி நாங்கள் அறிந்து கொண்ட பல்வேறு விடயங்களைப் பின்வருமாறு சுருக்கிக் கூறலாம். ஆன்மீக வாழ்வுக்கான முழுமுதல் தேவை ஒருவன் தன்னையறிதல், தான் பரமாத்மா ஏன்பதை அறிகின்றான் இந்த உடலும் அதன் உணர்ச்சிகளும் அல்ல என்ற தெய்வீக உணர்வை, இறை எண்ணத்தைச் சதா சர்வகாலமும் ஞாபகத்தில் வைத்திருப்பதும் அதே போன்று முக்கியமானதாகும். ஆண்டவனின் சாம்ராஜ்யம் உன் உள்ளத்திலே உள்ளது. தத்வம் அஸி, இதையே சகல வேதங்களும்,
சமயங்களும் கூறுகின்றன.
இந்த உலகில் வாழும்வரை நாம் புறக்கணிக்க முடியாத கடமைகளும் கருமங்களும் எங்களுக்கு உண்டு. இது இரண்டாவது உண்மை. இவைகளை நாம் அறியாமையில் செய்யும் போது பந்தங்கள் ஏற்பட்டுப் பிறவிகள் பல பெருகுகின்றன என்பதால் அவை உண்மையில் பாவை என்பதை அறிந்துணர்ந்து ஆண்டவன் கட்டளையாக ஏற்று அர்ப்பன சிந்தையோடும் தெய்வீக நினைவோடும் செய்யப்படும் போது அது கர்மயோகமாக மாறுகிறது. எள்வாறு எங்களுடைய கருமங்களில் எங்களுக்குப் பந்தமில்லையோ அவ்வாறே அவற்றின் பலனிலும் எங்களுக்குப் பந்தமில்லை, பந்தமில்லையெனில் பிறவித் நளை இல்லை. செய்பவற்றை அன்போடு அர்ப்பன சிந்தையோடு செய்யுங்கள் அப்போது தான் அது இறைவனுக்குரிய நிவேதனம் என்ற தகுதியைப் பெறும், நக்கணித்த கடமைகளும், ஏனோதானோ என்று வெறுப்புடன் செய்த கருமங்களும் ஒத்திவைக்கப்பட்ட தண்டனை போன்று நீங்கள் எதிர்பாராத நேரத்தில் உங்கள் தலையில் வந்து விடும். இதற்கு இடமளிபாதீர்கள்.
மூன்றாவதாகக் கவனிக்க வேண்டிய முக்கிய விஷயம் மனதைக்
ட்டுப்படுத்தல். ஓயாத அலைகடல் போன்ற மனத்தைக் கட்டுப்படுத்துவது சம்மப் பிரயத்தனமான காரியம் என்பதற்கு உதாரணமாக ஒரு கதை உண்டு. ரு ஆலயத்திலலே சந்நியாசியொருவர் தியானத்திலிருப்பது வழக்கம் ஆலய வாகிகள் அவரைப் பேணுவது தங்கள் கடமையென்றுணர்ந்து அவருக்கு டணவளித்து வந்தனர். அவர் ஒரு வேளை மட்டுமே உண்பது வழக்கம். 'தே ஆலயத்தில் வேலை செய்யும் ஒரு ஊழியனுக்கு நிர்வாகிகள் ஊதியமாக ாண்டு வேளை உணவு கொடுத்து வந்தார்கள். அவனோ இது என்ன
23

Page 16
அநியாயம். சும்மா இருக்கும் சந்நியாசிக்கு ஒரு வேளை உணவு. நான் இரண்டு வேளை உணவுக்காக கஷ்டப்பட்டு உழைக்க வேண்டியிருக்கிறது
என்று குறைபட்டுக் கொண்டான். இதையறிந்து சந்நியாசி அவனைக் கூப்பிட்டு
நீயும் என்னைப் போல் கம்மாயிரு. உனக்கு நான் ஒரு வேளையில்லை. இரண்டு வேளை உணவையுமே தரச் செய்கிறேன் என்றார். ஊழியனும் அது ஒரு லேசான காரியம் என்றெண்ணி, அவரருகில் அமர்ந்தான். சிறிது நேரத்திற்குப் பின் அவன் அப்படியும் இப்படியும் அசையத் தொடங்கினான். சந்நியாசி அவனைத்
கேட்டார். அப்போது அந்த ஊழியன் உணர்ந்து கொண்டான் சந்நியாசி மேற்கொண்டுள்ள தியானநிலை எவ்வளவு கடினமானது என்று. இந்தக் கஷ்டமான சாதனையை வெற்றி கானன்பது ஆத்ம ஈடேற்றத்துக்கு அத்தியாவசியமாகும் தன் மனத்தையும் புலன்களையும் அடக்கியவனால் தான் நெறியான வா
வாழ்ந்து ஆன்மசாதனை பெற முடியும்.
நாலாவது ஒருவன் தன்னைத் தெய்வீகப் பிறவியாவதற்கு தகுதியுள்ளவனாக்குதல். அதாவது தன்னை ஒரு சாதுவாக மாற்றுத தன்னுடைய அன்பான, அமைதியான, பண்பான நெறிமிக்க அழகிய வாழ்வின தன்னுள்ளேயும் போராட்ட அலைகள் ஏற்படாது தடுத்து, தன்னை சுற்றியுள்ளவர்களையும் அமைதியும், மகிழ்வும் பெறச் செய்பவனே ஆண்டவனி ஆசீர்வாதத்துக்குப் பாத்திரமான சாது, தூய ஆத்மா பிறருடைய துன்பங்களையும் ஆசை அபிலாசைகளையும் அநுதாபத்துடன் நோக்குங்கள் உங்களுக்குக் கிடைப்பதை அன்போடு பகிர்ந்து கொள்ளுங்கள். ga, ஜீவராசிகளிடமும் கருணையோடு நடந்து கொள்ளுங்கள். ஏனென்றால் நீங்கள் வேறு அவர்கள் வேறு அல்ல என்ற உண்மை உங்களுக்குத் தெரியும் அனைவரும் பரமாத்மாவே, உங்களுக்கு ഖഗ്ര கஷ்டங்கள் துன்பங்களைப் பொறுமையோடும், இன்முகத்தோடும் கொள்ளுங்கள். இவைகள் உங்கள் மன உறுதியையும் சத்தியத்தையு
பரீட்சிப்பதற்காக நேரிடும் சத்திய சோதனைகள். இதுவே சிறந்த தவம். ஒள்
24
 
 
 
 
 
 
 
 
 

சோதனையும் உங்கள் ஆன்மபலத்தை இரட்டிப்பாக்குகிறது. எனவே துன்பத்தைக்
கண்டு துவண்டு விடாதீர்கள்.
ஐந்தாவதாக தெய்வ வழிபாடு, பிரார்த்தனை என்பன உங்களுடைய ஆன்மீகப் பயிற்சிக்கு உதவும் என்று உங்களுக்குத் தோன்றினால் அதை நிச்சயம் செய்யுங்கள். ஆலயத்துக்குப் போகத் தோன்றினால் செல்லுங்கள். வீட்டிலிருந்து வழிபடுவது நலம் என்று எண்ணினால் அவ்வாறே செய்யுங்கள். ஆனால் இதை உங்கள் உள்ளத்தின் அடித்தளத்திலிருந்து வரும் இறைவழிபாடாக எப்போதும் இருக்கும்படி பார்த்துக் கொள்ளுங்கள். தெய்வ வழிபாடு ஆண்டவனோடு நெருக்கமான உறவு ஏற்படுகிற உணர்வை உண்டாக்கும். தெய்வீக உணர்வோடு கடமைகளைச் செய்யக் கை கொடுக்கும். உங்கள் உள்ளத்தில் உள்ள மாசுகளைக் களைந்து சுற்றியுள்ளவர்களோடு
சுமூகமாகப் பழக உதவும்.
ஆண்டவனை நினைத்து அவன் பால் எண்ணத்தை இருத்தித் தியானத்தில் ஈடுபடுவது தங்களுக்கு நல்லது என்று கருதுகிறவர்கள் அவ்வாறே
செய்யலாம்.
இறுதியானதும் முக்கியமானதும் தான் இறையருள். சரியான வழியில் எல்லா முயற்சிகளையும் செய்யும் போது இறையருள் கேட்காமலே உங்களை நாடி வரும் நீங்கள் உங்களைத் தகுதியுள்ளவராக்கிக் கொள்ளும் போதுதானாகவே கிடைக்கும். ஆண்டவன் கருணைக்கடல். தகுதியில்லாதவர்களுக்கே சில மயங்களில் அருள் பாலிக்கிறார் என்றால் தகுதியடைந்த உங்களுக்கு எவ்வளவு அருள் மழை பொழிவான் இறைவன்?
மேற்கூறிய முக்கிய குறிப்புக்களை சதா நினைவில் வைத்துக் கொண்டு ஆன்மீகப் பயிற்சி வாழ்வில் ஈடுபடுங்கள். பந்தங்கள் கழன்று பிறவிக் கடலைத் ாண்டும் காலம் நெருங்கி வரும்போது உங்கள் உள்ளுணர்வு உங்களுக்குக் கூறும் கண்களில் ஞான ஒளி பிரகாசிக்கும், முகத்தில் ஆத்ம ஒளி தேஜஸ் ஆக வீகம். நீங்கள் ஒரு தெய்வீகப் பிறவி என்பதை உங்களைக் கண்ட
உடனேயே மற்றவர்கள் உணருவர். அது எப்போது நிகழும் என்று
25

Page 17
கூறமுடியாது. இதற்கு முந்திய பிறவியோடு கர்மவினை தீர்ந்து விட்டால் இந்தப் பிறவியில் அந்த அற்புதம் நிகழும், மூன்று வயதில் ஞானசம்பந்தருக்கு நிகழ்ந்தது போல், மார்க்கண்டேயருக்கு நிகழ்ந்தது போல் பதினாறு வயதிலும் நிகழலாம். கர்மம் தீர்ந்து விட்டால் முப்பதிலும் வரலாம். ஐம்பதிலும் வரலாம்.
அது வரை பொறுமையுடன் ஆண்மசாதனையில் ஈடுபடுங்கள். உங்களைக் கர்மயோகியாக மாற்றுங்கள். அதன் மூலம் பிறவிப் பந்தங்களைக் களைந்து
வாருங்கள்.
ஒம் சாந்தி,
26
 
 
 


Page 18


Page 19