கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: மறைஞானம் நல்கும் சிவஞான போதம்

Page 1
DᎠᏑᎧᏁ3ᎦᏏᎫᎱ60] சிவலுான
வெ6
gᎧ 6Ꮣ) ᏰᏏ 6ᏡᎠᏰᎰ6
மெய்த இலங்ை
Gangst
 
 


Page 2

மறைஞானம் நல்கும் சிவஞான போதம்
ஆக்கியோன் சைவநன்மணி நா. செல்லப்பா.
வெளியீடு: உலக சைவப் பேரவை, இலங்கைக் கிளை.

Page 3


Page 4

முதற் பதிப்பு
பிரதிகள்
பிரசுரிப்பும் பதிப்புரிமையும்
அச்சுப் பதிவு
1997ஆம் ஆண்டு கார்த்திகை 19
500
உலக சைவப் பேரவை இலங்கைக் கிளை இல. 39/23, நெல்சன் பிளேஸ், கொழும்பு - 03
(இலங்கை) ரூபா 50/- (இந்தியா) ரூபா 25/-
யூனி ஆர்ட்ஸ் (பிரைவேட்) லிமிடெட், 48 பி, புளூமென்டோல் றோட், கொழும்பு - 13.

Page 5

பொருளடக்கம்
முன்னுரை
நூல் ஆசிரியரைப் பற்றி
நூல் அறிமுகம்
அப்பியாச நெறி
சன்மார்க்க நெறி
பண்ணும் பரதமும் ஆற்றும் பங்கு
தூய ஞானக்கண் தரிசனம்
தன் நாமம் கெடுதல்
ஆனந்த நடனம்
மெய்யுணர்தல்
பக்கம்
O
07
13
22
27
30
43

Page 6

முன்னுரை
சைவசித்தாந்த வரலாற்றில் இந்த இருபதாவது நூற்றாண்டு ஒர் இருண்ட காலமாகும். பிள்ளையார் பிடிக்கப்போய் குரங்காய் முடிந்த கதையாக, சீர்குலைந்து கிடந்த தமிழ்ப் பண்பாட்டை சீர்திருத்த வந்த திராவிட இயக்கம் பெரியார் தலைமையில் ஒரு புதிய விழிப்புணர்ச்சியைத் தோற்றியதெனினும், தமிழ் உணர்வினை வளர்த்ததெனினும் அவற்றோடு நாத்திக வாதத்தையும் வளர்த்து, ஒரளவு இருந்த இறைநம்பிக்கையையும் சிதைத்து தமிழ் இனத்தை ஒர் பண்பாடற்ற இனமாக கீழிறக்கி விட்டது. உள்ளத்தில் அழுக்கேற ஊழல் நிறைந்த நெஞ்சினராக தமிழர்கள் வளர்ந்து விட்டனர். பத்தொன்பதாவது நூற்றாண்டில் சைவ முழக்கம் செய்த சைவசித்தாந்த சண்டமாருதம் சோமசுந்தர நாயக்கரும் அவரது மாணவராகிய மறைமலை அடிகளாரும் இன்னும் இவர்களைப் போன்ற இன்னும் பலரும் தொடக்கி வைத்த புதிய சைவசித்தாந்த சிந்தனா பாரம்பரியம், வேர்விட்டு வளராது பாலை வனத்தில் வீசப்பட்ட விதைகளைப் போல, கற்கள் நிறைந்த பொல்லாத களரி மண்ணில் வீசப்பட்ட விதைகளைப் போல வளராது காய்ந்து வெந்து
சாம்பலாகி விட்டது.
இப்படிப்பட்ட சூழ்நிலையில்தான் தவத்திரு சிவநந்தி அடிகளார் மெய்கண்டார் ஆதீனத்தின் ஓர் அமைப்பாக உலக சைவப் பேரவையை தோற்றுவித்து, நல்ல அறிஞர் பெருந்தகைகளை அரவணைத்து சைவசித்தாந்த சிந்தனாபாரம்பரியம் புதிய உலக சூழ்நிலைகட்கு ஏற்ப வளர்ந்து செழிக்கும் வகையில் உதவி வருகின்றார். 'சைவவுலகம் என்னும் முத்திங்கள் இதழில் புதுமை மிளிரும் பல கட்டுரைகளை வெளியிட்டு உலகெங்கும் பரப்புவதொடு, உலகெங்கும் பல கிளைகளை உருவாக்கி ஆண்டுதோறும் உலக சைவ மாநாட்டையும் திறம்பட நடத்தி வருகிறார். இந்த இயக்கத்தின் செயல் நாயகம் எனும் முறையில் எனது சைவசித்தாந்த ஆய்வுகள் நூல் வடிவிலும் கட்டுரை வடிவிலும் சைவ அன்பர்களை எட்டுதற்கு இவ்வியக்கமே ஆதாரத்தலமாக இருக்கின்றது.
இதன்வழி உண்டாகிய ஓர் இனிய நட்பே சைவநன்மணி திரு. செல்லப்பா அவர்களோடு கூடிய நட்பாகும். தனது எண்பதாவது அகவையிலும் இளமைத் திறம் குன்றாது அவர் சிந்தித்து படைத்துவரும் நூற்களையும் கட்டுரைகளையும் விடாது படித்து மகிழ்பவன் நான். பாலைவனத்திலே அழகிய பூஞ்சோலையாக புதுமைகள் மிளிரும் கருத்தாழமிக்க இவர்தம் கட்டுரைகளில், சைவசித்தாந்த பாரம்பரியம்

Page 7
புத்துயிர் பெற்று புதிய வீறுடன் நடைபழகுவதைக் காணக்கான உளம் உவக்கின்றது. புதுப்புது வழிகளில் சைவம் வளர்ந்து உலகெலாம் தன் வசப்படுத்தும் என்ற நம்பிக்கையையும் அளிக்கின்றது.
'மறைஞானம் நல்கும் சிவஞானபோதம்” என்ற அழகிய தலைப்பொடு வெளியாகி இருக்கும் இந்நூல், அளவில் சிறியதெனினும் சிந்தனைத் தெளிவிலும் ஆழத்திலும் மிக விரிந்தது. படிக்கப் படிக்க, சிந்திக்க சிந்திக்க பல நுட்பங்களை காட்டிக் கொண்டே இருக்கும் ஒர் அரிய நூல்.
"gu6óluu (ETG)6OT MÓ” (g|sù6ug Hermeneutic Science) 6T GOTŮLuGuh முறையியலையே முறையியலாகக் கொண்டு சிவநடராச திருமூர்த்தத்தின் அற்புதங்கள், அதன் அகத்தே மறையாக ஒளித்து வைத்துக் கொண்டிருக்கும் மறைஞானத்தை அரிதின் வெளிக்கொணர்ந்து அனைவரும் புரிந்துகொள்ளும் வகையிலான அழகிய எளிய தமிழில் விளக்குகிறார். அவ்வுருவத் திருமேனியின் அற்புத உண்மைகளை ஐரோப்பியர்கள் வளர்த்துவரும் பெளதிகத் துறையின் சமீபகாலக் கண்டுபிடிப்புகளோடு ஒப்பிட்டு ஒப்பிட்டு ஆனந்த சிவதாண்டவம் அணுக்களுக்குள்ளும் இருப்பதை அழகுற விளம்புகின்றார். இன்னும் பல இவ்வாறு.
சிந்தனா நியதி பிழையாது தத்துவார்த்த விளக்கம் தர, திருவள்ளுவர், திருமூலர், மெய்கண்டார் போன்றோர் மொழியாக்கிய ஆழமான தெளிவுகளை அகப்படுத்தி, இதுவரை யாரும் அவ்வளவு தெளிவாகச் சொல்லியிராத பரதநாட்டியத்தின் நுட்பங்களை நாதவிந்து தத்துவங்களோடு, பஞ்சகலைகட்கு வேறாகிய நிலையில் மேலான சிவகலைகளும் உண்டெனக் கண்டு விளக்குகின்றார். ஊனக்கண்களை இழந்தாலே, உலகப் பற்றுக்களை நசித்தாலே சிவஞானம் அகத்து மலர்ந்து சுடரும் எனும் நிலையில், உலக நாட்டத்தின் நசிப்பினைக் கொண்டு வருவதே பரதக்கலையின் சிறப்பு என்றும் கூறுகின்றார்.
நாதத்தின் வெளிப்பாடாக பண்கள் இருக்க, விந்துவின் வெளிப்பாடாக நடவுகள் இருக்கின்றன என்கின்றார். நடவுகளைக் கண்டு சுவைத்துப் பின் கழன்று பண்களோடு இசையும் ஆன்மா நசிப்பும் தலைப்படும் என்கின்றார். இவ்வாறான ஆன்ம இலயமே மெய்யான சமாதி என்றும், இப்படிப்பட்ட மேலான சமாதிநிலைகளில் ஆன்மாக்களை ஈடுபடுத்துவதற்காகவே ஆலயங்களும், அதனைச் சார்ந்த சரியா கிரியைகளும் என்று விளக்குவதோடு இவற்றை ஒவ்வொருவரும் தானே செய்ய வேண்டும், பிறரைக் கொண்டு செய்யலாகாது என்கின்றார். மெய்கண்டார்

கூறியதுபோல சிவஞானம் அன்றே எல்லார் அகத்திலும் உள்ளது ஓர் மற்ை நூலிலோ சம்பிரதாயத்திலோ பட்டு நின்ற்ால்தான் வரும் ஒன்றல்ல என்றும் விளக்கி, அகத்து சுடர்ந்து எரிந்து கொண்டே இருக்கும் சிவஞானத்தை மோனம் தலைப்படவே தான் உணர முடியும் என்றும், கற்பனாச் சேட்டைகளை எல்லாம் இழந்த மேலான மோன நிலையை அனைவரும் தலைப்பட்டு சிவஞானச் செஞ்சுடராக சிறக்கவும் முடியும் என்கின்றார்.
இன்னும் இவ்வாறு பற்பல புதிய புரட்சிகரமான கருத்துக்களைத் தாங்கி இவ்வழகிய சிறுநூல் வெளிவந்திருக்கின்றது. பன்முறை படித்த பின்பே, அதனை ஒரளவு புரிந்து கொண்டு இந்த முன்னுரையை எழுதவும் தொடங்கினேன். படித்துக் கொண்டே வரும் பொழுது, இயலியநூனெறி எனும் முறையியல் வழி சிவநடராச மூர்த்தத்தின் புதையறிவை, மறைஞானத்தை எவ்வளவு ஆழமான முறையில் உணர்ந்து எழுதுகின்றார் என்பது புரியவந்தது. அத்தோடு நவராத்திரி வழிபாட்டினைச் சிறப்பாக பல்லாண்டுகள் செய்ததின் பயனாகவே, பஞ்சகலைகள் கழன்று சிவகலைகள் வந்து ஒர்ஞானக்கண்ணும் கைவரப் பெற்றுக் காண முடியாத பொருளையெல்லாம் கண்டு மகிழும் திறமை வந்ததென தன்னையே தான் உணர்ந்த வராகவும் தென்படுவதைக் கண்டும் வியந்தேன். இறையருள் துணையின்றி ஞான விழிகள் திறக்காவென்பதையும், இந்த விழிகளைத் திறப்பிப்பதில் ஆலயங்கட்கு பெரும் பங்குண்டு என்பதையும் விளக்கி, ஆலய வழிபாட்டினை நிந்திக்கும் துட்டர்களைச் சாடுகின்றார்.
இச்சிறு நூலை பன்முறை படித்து முடித்த பின் என்னுள் ஒர் ஏக்கம். ஆழமான அற்புதமான பல புதிய கருத்துக்களைத் தாங்கி வரும் இந்நூல், நல்லதொரு பெருநூலாக வளர்ந்திருந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும். சைவசித்தாந்தம் புதிய புதிய வழிகளில் எவ்வளவு நன்றாக வளரும்? என்றெல்லாம் எண்ணி எண்ணி ஏங்கினேன்.
சைவநன்மணி திரு. செல்லப்பா அவர்கள் நீடூழிகாலம் வாழ்ந்து அரிய பெரிய நூற்களாக இன்னும் பல யாக்க வேண்டும், அதற்கு திருச்சிற்றம்பலமேவிய சிவநடராச பெருமான் அருள்பாலிக்க வேண்டும் என்று இறைஞ்சி இம்முன்னுரையை முடிக்கின்றோம்.
சைவ அன்பர்கள் இந்த அரிய சிறு நூலை கற்று சிவஞானம் தலைப்பட வேண்டும் என்றும் வேண்டிக் கொள்கிறோம்.
மலேசியா பல்கலைக்கழகம் டாக்டர் கி. லோகநாதன் பினாங் செயலாளர்நாயகம் உலக சைவப் பேரவை மலேசியா,

Page 8
நூலாசிரியரைப் பற்றி
யாழ். வண்ணார்ப் பண்ணையில் இராசா நாகலிங்கத்துக்கும், அன்னபூரணி அம்மாளுக்கும் 1917 ஆம் ஆண்டு பிறந்த இவர், தமது ஆரம்பத்தமிழ்க்கல்வியை ஆறுமுக நாவலர் பாடசாலையிலும் ஆங்கிலக்கல்வியை இந்துக்கல்லூரியிலும், சுழிபுரம் விக்ரோறியாக்கல்லூரியிலும், கரவெட்டி விக்கினேஸ்வராக் கல்லூரியிலும் பெற்றார். சைவப் பெரியார் சு. சிவபாதசுந்தரம் அவர்களிடம் 1930ஆம் ஆண்டு முதன்முதலாகச் சைவசித்தாந்த சாத்திர நூல்களுட் சுலபமான திருவருட்பயனைக் கேட்டுக் கற்றறிந்தார். பெரியார்மூலம் சைவசித்தாந்தத் தமிழ் முதற்சாத்திரநூல் சிவஞானபோதம் என்பதை அறிந்தார். 1934ஆம் ஆண்டில் அதனைப்பயில ஆரம்பித்தார். சுகாதாரப் போதனாசிரியராகக் கடமை ஆற்றிய காலத்திலும் கூடச் சிவஞான போதம், திருமந்திரம், திருக்குறள் முதலிய நூல்களை ஒப்பு நோக்கி ஆராயும் பணியில் ஈடுபட்டுவந்தார்.
1972ஆம் ஆண்டு முடிவில் அரச சேவையிலிருந்து ஒய்வு பெற்ற காலத்திலிருந்து சைவ சித்தாந்தமுறைப்படி சிவயோக சாதனையில் முழு நேரமும் இயன்றளவு செலுத்தியவாறு இற்றைவரையில் பத்து நூல்கள் வெளியிட்டுள்ளார். உயிருக்கு உயிராக இதயத்துள் நீங்காது நின்று சிவஞான தரிசனம் கொடுப்பவர் தட்சணாமூர்த்தி ஆவர். அவன் அருளே கண்ணாகக் கொண்டு சாதனா முறைக்கேற்ப இச்சிறுமறைஞானம் நல்கும் சிவஞானபோதம்” நூல் வெளிவருகிறது. உலக சைவப் பேரவையின் ஆறாவது மகாநாடு 1997ஆம் ஆண்டு மார்கழி மாதம் தஞ்சாவூர்ச் சர்வ கலாசாலையில் நடைபெறுகிறது. இந்நூல் அதனை முன்னிட்டு வெளியிடப்படுவதாகும். சிவனடியார்கள் இதனைப் பெற்றுக் கற்று அதற்குத்தக நின்று பயன் அடைவார்களாக இந்நூலின் பதிப்பு உரிமையையும், விற்பனை அதிகாரத்தையும் இலவசமாக எமக்கு வழங்கிய நூல் ஆசிரியருக்கு நன்றி.
இல, 19டி, சமீட் பிளட்ஸ் கா. தயாபரன் கொழும்பு - 05. தலைவர் உலக சைவப் பேரவை, இலங்கைக் கிளை. உதவிச் செயலாளர்நாயகம் உலக சைவப் பேரவை,

நூல் அறிமுகம்
சிவாகமங்களை மறை என வழங்குதல் தமிழ் மரபு ஆகும். எனவே சிவாகமத் தெளிவறிவையே நாம் இங்கு மறைஞானம் எனக் குறிப்பிடுகிறோம். மறை என்பது மறை பொருளைத் தன்னகத்தே கொண்ட சிவதோத்திர சாத்திர நூல்களாகும். தெளிவறிவு சுட்டறிவைக் கடந்ததாகும். அது விவேகப் படைப்புச் சக்தியின் அப்பாற்பட்டதாகும். அவன் அருளே கண்ணாகக் காண்பவர்க்கே மறைஞானம் புலப்படும். சிவாலய தரிசனத்தின் மறைபொருள் தெளிவறிவு பெறுதலாகும். வடநாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட ஆலய கிரியைகளும், வேறு கொள்கைகளும் வேறு. அவை சுத்தமான சிவாகமக்கிரியைகளும், கொள்கைகளும் ஆகமாட்டா. தமிழ் நாட்டின் தனி உரிமைச் சொத்துச் சைவசித்தாந்தமாகும். மறைஞானம் பெறும் சாதனா முறை நுட்பங்களைத் தெள்ளத்தெளியப் படம் பிடித்துக் காட்டுவது தூய தமிழ்ச்சைவசித்தாந்தமாகும். இன்று சிவாலயங்களில் பெரும் பாலும் ஜைமினிமுனிவர் காட்டிய மீமாம்சக கிரியாமுறைகள் தான் அனுசரிக்கப்படுகின்றன. சைவ சமுதாயத்தில் பதஞ்சலி முனிவரின் அட்டாங்க யோக நெறி பிரபல்யம் அடைந்து வருகிறது. பதஞ்சலியோகத்தைச் சிவயோகம் என நாம் நம்பி ஏமாறுதல் கூடாது. அநேகமான சைவமக்கள் அவதார புருஷர்களின் அற்புதங்களிலும் உபதேசங்களிலும் மயங்கி, அவையே சைவசித்தாந்த நெறியின் சிறந்த அம்சம் என நம்பி வழிபடுகின்றனர். மெய்கண்டார் அருளிய தமிழ் முதற் சாத்திர நூலாகிய சிவஞானபோதம் அநேகமாகப்புறக்கணிக்கப்படுவதைக் காண்கிறோம். அதன் அருமை பெருமைகளையும் அப்பியாச நெறிகளையும் சரிவர அறியாது சைவமக்கள் திசை திரும்புகின்றனர். சிவஞானபோத நூலுக்கு அற்புதமான சிறந்த விரிவு உரை எழுதியவர் அருள் நந்தி சிவாசாரியாராவர். அவர் படைத்த பாராட்டுக்குரிய நூல் சிவஞான சித்தியார் ஆகும். அதன் பரபக்கப் பகுதியில் மேற்குறித்த சமயக் கொள்கைகளும், கிரியா அனுட்டானங்களும் வலுவான அளவை இலக்கண (Logical Reasons) விளக்கங்களுடன் தீவிரமாக மறுக்கப்பட்டுள்ளன.
தூய சைவசித்தாந்த தத்துவமறைஞான விளக்கமும் அதைப் பெறும் அப்பியாச நெறிகளும் சுலபமான தமிழ் மொழியில் வேண்டியளவு வெளிவரவில்லை. அக்குறையை இயன்றளவு நிறைவு செய்யும் முகமாக இச்சிறு நூல் வெளிவருகின்றது. இத்துறையில் உலகசைவ மன்றத்துடன் இணைந்து செயற்படும் இலண்டன் மெய்கண்டார் ஆதீனம் ஆற்றும் பணி அளப்பரியதாகும். அந்த ஆதீனம் "சைவ உலகம்” எனும் காலாண்டுச் செய்தி மலரை ஆங்கிலம், தமிழ் ஆகிய இரு மொழிகளிலும் பிரசுரிக்கின்றது அதன் தலைவர் அருள் மிகு சிவநந்தி அடிகளார். சிவஞானபோத நெறியை அனுசரித்து அவசியமான பல சைவசீர்திருத்தங்களைச்

Page 9
செய்வதில் ஈடுபட்டுள்ளார். இலண்டன் மெய்கண்டார் ஆதீனத்தின் அச்சாணி போன்றவர் கலாநிதி கே. உலோகநாதன். அவர் ஆதீனத்தின் கெளரவ செயலாளராகவும், மலேசியா, பினாங் சர்வகலாசாலையில் பேராசிரியராகவும் கடமை புரிகிறார். சைவசித்தாந்த ஆய்வுப்பணியில் அவருக்கு நிகர் அவரேதான். திருக்குறளைப் போன்ற ஒர் ஆய்வுநூலை 2600 குறட்பாக்களில் அருட்குறள் என்னும் தலைப்பில் வெளியிட்டுள்ளார். அதன் விசேட விரிவுரையாக, வேறொரு உரை நூலையும் பிரசுரித்துள்ளார். சிவஞானபோதத்துக்கு ஒப்பு நிகரில்லாத ஒர் ஆங்கில மொழி ஆக்க நூலை வெளியிட்டுப் பெரும் பாராட்டைப் பெற்றுள்ளார். இன்னும் ஆங்கிலத்தில் சில முதற்தரமான ஆய்வு நூல்களை எழுதியுள்ளார். சைவசித்தாந்த வழிபாட்டு முறைகளில் சீர்திருத்தம் செய்வதில் தென் ஆபிரிக்கா, மொரீசியஸ் போன்ற பின்தங்கிய நாடுகளில் அரும்பணி ஆற்றிவருகிறார். சிவநந்தி அடிகளாரின் வலதுகையென விளங்குகிறார்.
நாம் அவருடன் இரு வருடங்களாக நெருங்கிய தொடர்பு கொண்டு அந்நியோந்நியமாகப் புனிதமான சைவசித்தாந்த நெறியில் பீடு நடையிட்டுப் பழகி வருகிறோம். அவருடைய உளவியல் உயர் கலா மாணிப்பட்டம் அவருக்கு இப்பணியில் கைகொடுத்து உதவுகிறது. அவர் அளிக்கும் மாபெரும் மறைஞான நூலை"அழிவில் உண்மை” எனும் 500 பக்கங்கள் வரையில் கொண்டு வெளியிட உள்ளார், அந்நூல் அவருடைய அரும் பணிக்கும், பக்திக்கும், மெய்யுணர்தலுக்கும் போதிய சான்று பகரும். மறைஞான விளக்கமும், விஞ்ஞானச் செயல்முறை நுட்பமும் நம்மை மிகவும் கவர்ந்துள்ளன. அவர் மெய்ப்பொருள் கிரகித்தற் செயல் முறையில் அதிக நாட்டம் கொண்டுள்ளார். அதே துறையில் நாமும் சென்ற இருபத்தைந்து வருடங்களாகச் செப தியான விசாரணையிலும் அப்பியாசத்திலும் ஈடுபட்டு வருகிறோம். இலண்டன் மெய்கண்டார் ஆதீனம் புரிந்து வெற்றிகண்டு வரும் சீர்திருத்தப் பணிக்கு இச்சிறு -"மறைஞானம் நல்கும் சிவஞானபோதம்” என்னும் - நூல் உதவும் என நம்புகிறோம். மேலும், சிவஞானபோதம் பெறவிரும்பும் சாதகர்களுக்கு அப்பியாச முறையில் வழிகாட்டியாக இது அமைகிறதென்பதையும் நினைவு படுத்தி நிற்கிறோம்.
இந்நூலை அச்சிட்டு வெளியிட வேண்டுமென்பதில் ஆர்வமுடன் செயற்பட்ட உலக சைவப் பேரவையின் இலங்கைக் கிளையின் தலைவர் உயர்திரு கா. தயாபரன் அவர்களுக்கு நான் என்றும் நன்றியுடையவனாவேன். அத்துடன் இந்நூலின் அச்சுப் பிரதிகளை ஒப்பீடு செய்து நூல் அழகுற வெளிவர வேண்டும் என்பதில் கருத்துடன் இயங்கிய உலக சைவப் பேரவை இலங்கைக் கிளையின் துணைச் செயலாளர் திரு. எஸ். தெய்வநாயகம் நூலை அழகுற அச்சிட்டு உதவிய யூனிஆர்ட்ஸ் பதிப்பக உரிமையாளர் திரு. விமலேந்திரன் ஆகியோருக்கும் எனது நன்றி உரித்தாகும்.
இல. டி1 அரசாங்கத் தொடர்மாடி, சைவ நன்மணி, சித்தாந்தச் சுடரொளி கொழும்பு -04. நா. செல்லப்பா. இலங்கை,

1 அப்பியாச நெறி
டயங்கரவாதமும், அதை அடக்கும் யுத்த அணுகுமுறைகளும் உலக நாடுகள் பலவற்றில் பரவி வருவதைக் காண்கிறோம். அதனால் இடம் பெயர்ந்து அகதிகளாகப் பஞ்சமும் பட்டினியும் நோயும், சாவுமாக அலைந்து அல்லற்படும் மக்களின் தொகை கோடானு கோடியாகும். இடம் பெயராது சொந்த ஊரிலும் வீட்டிலும் வசிப்பவர்களுக்கும் கூட மன நிம்மதியும், சாந்தி சமாதானமும் உள்ள வாழ்க்கை கிடைத்தல் அரிதாக உள்ளது. இந்நிலையில் இறைவனுடைய திருவருள் ஒன்றுதான் மக்களுக்கு விமோசனம் அளிக்கும் என நம்புவோர் பலர் உளர். தெய்வநம்பிக்கை இல்லாத நாஸ்திகர்கள் தெய்வம் இருந்தால் இப்படியும் அட்டூழியங்களும், அநியாயங்களும் தொடர்ந்து நடைபெறுதல் எவ்வாறு இயலும்? என வினாவுகின்றனர். மனிதன் அனுபவிக்கும் அளப்பரிய துன்பங்களுக்கும், அற்ப இன்பங்களுக்கும் மனிதனே காரணம், ஆகவே மனித சமுதாயத்திலும், அதனைக் கொண்டு நடத்தும் அரசியலிலும், புனிதமான பசுமைப்புரட்சி ஏற்பட்டாலன்றிச் சரித்திரத்தில் சாந்தியும், சமாதானமும், விமோசனமும் உண்டாவதற்கு வேறு வழியில்லை எனக் கொந்தளிப்போரும் உள்ளனர்.
கொந்தளிக்கும் கடலில் வலைவீசி மீன்பிடிக்கும் மீனவர்கள் போலத்தமது பிரசாரத்தாலும், பொருள் உதவியாலும் மக்களை மதமாற்றம் செய்யும் மதகுருமார்களின் கபடமுயற்சிகள் ஒரு புறம் வேகும் வீட்டில் பிடுங்குவதே ஆதாயம் எனச் செயற்படும் குண்டர்களைப் போல, அல்லல் உறும் மக்களை விக்கிரக அபிடேகம், அர்ச்சனை, நேர்த்திக்கடன் முதலியவற்றைச் செய்யத் தூண்டிப் பற்றுச்சீட்டுக்கொடுத்துப் பணத்தைக் கறக்கும் அநேக கோயில் முதலாளிமாரும் அர்ச்சகர்களும் மறுபுறம்! இறைவன், மனிதன் எவருக்கும் ஏகபோக உரிமை கொடுத்துப் பிறரை இரட்சிக்கும் ஆற்றலை அவருக்கு வழங்கவில்லை என்பதை வழுவற உணராத பொதுமக்கள், மந்தைப் போக்கில் கழுதை மயிர் பிடுங்கித் தீர்த்தம் ஆட முயற்சித்தல் ஒரு விந்தையல்ல. -
இத்தகையதொரு சூழ்நிலையில், கள்ளம் கபடமற்ற சைவமக்கள் மரபுவழிவரும் பிரார்த்தனையையும் தியானத்தையும் பற்றியும் சரியான தெளிவுடைய உண்மை விளக்கம் பெற்று, அதற்குத் தகத் தப்பாது நின்று ஒழுகுதலே விமோசனத்துக்கு உகந்த வழி என்பதை வலியுறுத்துகிறோம். இந்தவகையில் பக்தி பிரார்த்தனைக்கு உத்தம வழிகாட்டிகளாகச் சைவ நாயன்மார்களும், செபதியான சாதனைக்குச் சிறந்த குருமார்களாகச் சைவகுரவர்களும், சித்தர்களும் நிறைந்து விளங்கும் போது கவலை எதற்கு? போலிகளை நம்பி அலைதலும் ஏமாறுதலும் அடுக்குமா? கையில் வெண்ணெயை வைத்துக் கொண்டு சக்குப் பிடித்த பழைய

Page 10
நெய்க்கு அலையலாமா? சரியான முறையில் பிரார்த்தனையும் தியானமும் அனுட்டித்துப் பழகி ஒழுகுவதற்கு, அவற்றைப் பற்றிய தெளிவு விளக்கம் பெறுதல் அவசியமாகும். தெளிவறிவு இல்லாத விடத்து மூடநம்பிக்கைகளும், பழக்கவழக்க ஒழுக்கங்களும் நம்மிடையே பரவி நம்மை அடிமைப்படுத்துதல் இயல்பாகும். ஆகவே பக்திபிரார்த்தனை, செப தியானம் ஆகியவற்றைப்பற்றி முழுமையான உண்மை விளக்கம் ஆரம்பகட்டத்திலேயே ஆய்ந்து தெளிந்து கொள்வோம். அதுவே சாந்தி சமாதானம் பெற உகந்த வழியாகும்.
பிரார்த்தனை என்னும் பதம், வடமொழியிலிருந்து தமிழில் மருவப்பட்டதாகும். தூயதமிழில் அதை வேண்டுதல் அல்லது தொழுகை என வழங்கி வருகின்றோம். சமயத்துறையில் வேண்டுதல் செய்தலை நாம் பொதுவாக வரம் வேண்டுதல் எனக் கருதிப் பிரார்த்தனை செய்யும் போது ஆலயங்களில் நேர்த்திக்கடன் எடுத்துக் கொள்கிறோம். நேர்த்திக் கடன்கள் தான் எத்தனை விதமாகவும், வகையாகவும் விநோதமாகவும் உள்ளன? அவற்றை எல்லாம் இங்கு விபரிக்க இடம் போதாது. அதற்கு வேண்டிய அவசியம் இல்லை. நேர்த்திக் கடன் வைத்து இறைவனை வேண்டுதல் அவசியமாகுமா? அவ்வாறு பிரார்த்தனை செய்வோரிடம் உண்மை விளக்கம் உள்ளதா? பரம்பொருளை எண்குணத்தான் எனவும், மனித சீவன்களை முக்குணத்தார் எனவும் வேத, சிவ ஆகமங்கள் வர்ணிக்கின்றன. கடவுளை நாம் எண்குணத்தான் எனப் பூரணமாக விளங்கி, நம்பிவழிபடும் போது நேர்த்திக் கடன் வைத்து வேண்டிப் பிரார்த்தித்தல் அர்த்தம் அற்றதாகிறது.
எண்குணத்தில், முற்றும் உணர்தலும், ஈறிலா ஆற்றலும், பேரருள் உடைமையும், பிறர் வசம் அற்று விளங்குதலும் அடங்குவனவாகும். இத்தகைய ஒப்பு உவமை இல்லாத இறைவனைத் தமிழ் மறையாய திருக்குறள் “வேண்டுதல் வேண்டாமை இலான்” என வாழ்த்தி வணங்குகிறது. முக்குணம் படைத்த மனிதன், கடவுளையும் முக்குணமும் மனதும் உடையவனாக வீண் கற்பனை செய்து வரம் வேண்டி வழியடுதல் மூட நம்பிக்கையின் பாற்பட்டதாகும். மனிதனுக்கு அவசியமாக வேண்டிய அருட்சுத்த சக்தியை அல்லது தூய விவேகப்படைப்புச் சக்தியை அவன் பிறக்கும் பொழுதே அவனுடன் ஒன்று படுத்தி இறைவன் வழங்கி உள்ளான். முந்தி வந்த செவியைப் பிந்திவந்த கொம்பு மறைத்தது போல மனிதனிடம் பிறக்கும் பொழுதே கொடுக்கப்பட்ட கொடையை அவனுடைய பிந்திவந்த மனவிருத்திச் சிற்றறிவுக் கற்பனை ஆற்றல் மறைத்துள்ளது ஆலயத்தில் உள்ள கதவைத்திறந்து திரைச்சேலையை நீக்கிய பின்புதான் பக்தர்களால் விக்கிரக தரிசனம் பெறுதல் முடியும். சிரட்டையை உடைத்த பின்புதான் அதனுள் இருக்கும் பாற்தேங்காயைப் பெறுதல் இயலும். ஆலயவழிபாடு மூலம் அவன் பெறும் பாடத்தை அருள்ஞானம் பெறுவதிலும் பசநீக்கம் புரிவதிலும் சிறிதேனும் அப்பியாசிப்பதாகப் புலப்படவில்லை. மந்தைப் போக்கில் செல்லும் மனிதன் மீட்சி பெறுதல் எங்ங்ணம்?

மனிதனிடம் இயல்பாகவே உள்ள முக்குணங்களாவன, தாமதம் ராஜசம், சத்துவம் என்பனவாகும். அவற்றை மூன்று கோட்டைகளாகச் சிவபுராணங்கள் வர்ணிக்கின்றன. ஈசனாகிய இறைவனை இந்த முப்புரங்களையும் எரித்து அருளும் மூர்த்தியாகப் போற்றுகின்றன. இன்றைய சிவவழிபாட்டில் பெரும்பான்மையான சிவபக்தர்களும், அறிவாளிகளும் சிவனையே முதன்மையாக்கி கொண்டு பிரார்த்தனையும் தியானமும் செய்து வருதலைக் காண்கிறோம். முற்றறிவு இல்லாத ஒரு நீதிபதியிடம் தான் நாம் நீதிமன்றத்தில் வேண்டிய முறைப்பாட்டை நியாயம் கோரிச் சமர்ப்பிக்க வேண்டி உள்ளது. முற்றும் உணரும் முதற்கடவுளையும் அவ்வாறு கருதி அவர் நமது குறையையும் உண்மை நிலையையும் அறியவில்லை என நம்பி, அதை இதை வேண்டி வணங்குதல் அடுக்குமா? புனிதமான சைவப் பிராத்தனையும் தியானமும், இன்று உலக்கை தேய்ந்து உளிப்பிடியாக மாறிய நிலை அடைந்துள்ளன.
சிவஞானபோதம் பெற்ற பொற்காலம், சைவ உலகில் திருவாசகம் பாடப்பெற்ற நற்காலமாகும். பக்திநெறி நின்று மெய்ஞ்ஞான நிலை அடைந்த மணிவாசகப்பெருமான் அருளிய ஒரு திருவாசகமே நம்மைச் சரியான பிரார்த்தனை, தியான சாதனை செய்வதற்குச் சிறந்த வழிகாட்டப் போதுமாக உள்ளது. அதை இதோ நினைவு கூர்கிறோம்.
வேண்டத் தக்க தறிவோய் நீ வேண்ட முழுதும் தருவோய் நீ! வேண்டும் அயன்மாற் கரியோய் நீ! வேண்டி
என்னைப் பணிகொண்டாய் வேண்டி நீயா தருள்செய்தாய்? யானும்
அதுவே வேண்டின் அல்லால் வேண்டும் பரிசு ஒன்றுண்டெனில் அதுவும்
உந்தன் விருப்பு அன்றே
இறைவன் மனிதனுக்கு எது வேண்டும், எது வேண்டாதது என்பதை நன்கு தெளிந்து தான் அவனைப் படைத்துப் பணிசெய்யும்படி சுதந்திரமாக விட்டுள்ளான். மனப்பற்றுக் கட்டுப்பாட்டில் சுதந்திரம் இழந்த மனிதன், மதிமயக்கத்தால், இறைவன் எதற்காகப் தன்னைப் படைத்தான் என்பதை நன்கு தெளியாது தேவையற்றனவற்றை அவனிடம் இரந்து இடர்ப்படுகின்றான். மனிதனை இறைவன் இரந்து உயிர் வாழ வேண்டும் எனப்படைத்திருப்பான் ஆயின், அவ்விறைவன் எண்குணத்தான் ஆகுதல் அரிதாகும். பரிபூரணம் அற்ற ஒருகடவுள் மனிதனைப் படைத்திருப்பான் எனின், அவன் கெட்டுப்போகட்டும் அவனைப் பிரார்த்தித்தலோ, தியானித்தலோ

Page 11
வேண்டிய அவசியம் இல்லை. ஆண்டவன் எதற்காக மனிதனைப்படைத்து அருளினான் என்பதைச்சரிவர உணராத மனிதன், அவனிடம் தேவையற்றவைகளை மதிமயக்கத்தால் இரந்து வேண்டுதல், கிணறு வெட்டப் பூதம் புறப்பட்டவாறு போலாகும். நித்திய வரம்கேட்டுத்தவம் செய்த கும்பகர்ணன் மறதியால் நித்திரை வரம் பெற்ற கதை போல ஆகுதல் பரிதாபகரமானதாகும். ஆகவே வரம் வேண்டிப் பிரார்த்தனை செய்யும் மனிதன் அந்த வரவிருப்பத்தையும் ஆண்டவனிடம் விட்டு விடுதல் உத்தமம் ஆகும்.
கண்கள் இரண்டு காட்சி ஒன்று
பிரார்த்தனையும், தியானமும் நமது இருகண்கள் போன்றனவாகும். ஆனால் அவைகள் இரண்டாகத் தோற்றம் அளித்துபோதும், அவற்றின் காட்சி, (பார்வை) அல்லது இலட்சியம் ஒன்றாகும். அந்த ஒரே இலட்சியம் இறைவனுடைய திருவடி சேர்தல் ஆகும். சைவசித்தாந்தம் காட்டும் இந்த இலட்சியம் ஆலயத்தை மையமாகக் கொண்டதாகும். இலட்சியம் ஒர் இலக்கு உடையதாகும். வேடன் ஒருவன் இலக்கு இல்லாமல் வேட்டை ஆடுதல் அசாத்தியமாகும். பக்தனும், ஞானியும் வேடுவனைப் போன்று செயற்படுதல் அவசியமாகும். இலட்சியம் இல்லாத மனிதவாழ்க்கை சுக்கானில்லாத கப்பல் போன்றதாகும். நாம் சுக்கானில்லாத கப்பல் போன்று வாழ்க்கைச் சமுத்திரத்தில் வீணே அலைவோமாயின் இறைவனுடைய திருவடியாகிய திருப்பெருந்துறையை அடைதல் எவ்வாறு கைகூடும்?
இறைவன் ஆலயமே சைவர்களுடைய அற்புதமான திருப்பெருந்துறை ஆகும். ஆலயம் என்னும் பதம், புறப்பொருளையும் அகப்பொருளையும் கொண்டதாகும். ஆலயதரிசனத்தை புறக்கண் பார்வையைக் கொண்டு பெறுவதை விட அகக்கண் காட்சியாகப் பெறுதலே பேரானந்தமாகும். துரதிஷ்டவசமாக இன்றைய சிவாலய வழிபாடு புறக்கண் காட்சியையே பெரிதாகக் காட்டுவதாக உள்ளது. ஒருசாதகன் அகக் கண் காட்சியைச் சுயமாகவும், சுதந்திரமாகவும், நேரடியாகவும் மட்டுமே பெறுதல் வேண்டும் என்பது இயற்கையுடன் இசைந்து வழிகாட்டும் இறைவனுடைய நியதியாகும். இந்த நியதியில் இயற்கைக்கு மாறான செயற்கைச் செயற்பாட்டுக்கு இடமே இல்லை. ஆகவே செயற்கை நெறியில் சுதந்திரமும், சுயாதீனமும், இறைவனிடம் நேரடித் தொடர்பும் இல்லாது ஆலயங்களில் நடத்தப்படும் புறப்பூசைகளும், கிரியைகளும் பிரார்த்தனைகளும் பிரதான இடம் பெறுதல் வரவேற்கத்தக்கதல்ல. பிராமணியக் கொள்கையின் துர்ப்பிரயோகத்தினால் ஏற்பட்ட தீண்டாமைக் கோட்பாடே ஆலய வழிபாட்டுப் பிரார்த்தனை அகப்பூசைகளுக்கு முட்டுக்கட்டையாக உள்ளது.

முகவாதமாக இருந்த தீண்டாமை, இன்று ஆலய வழிபாட்டுமுறையில் திருகுவாதமாக மோசம் அடைந்தள்ளது. சூத்திரர்களுள் தீண்டாச்சாதி எனும் ஒருவர்க்கத்தினரை ஆக்கி, அவர்களைத் துடக்கு உடையவராக்கி ஆலயத்துள் செல்வதற்கு அன்று தடையிட்டது பிராமணியம். தன்மானம் உள்ளதீண்டாச் சாதியினர் கொதித்து எழுந்து பிராமணியம் விதித்த செயற்கைத் தடையை உடைத் தெறிந்து ஆலயப் பிரவேசம் செய்வதில் பெரும் வெற்றி கண்டனர். அந்த வெற்றி ஆலயப் பிரவேசத்துடன் நின்று விட்டது. சைவ மக்களாகிய சூத்திரர்களுக்கும் வைசியர்களுக்கும் ஏற்பட்ட திருகுவாதம் இன்னும் நீங்கிய பாடில்லை. அவர்களால் அந்தண அர்ச்சகர்களைப் போல ஆலய மூலஸ்தானப் பிரவேசம் செய்து சுதந்திரமாகவும், சுயாதீனமாகவும் நேரடியாகவும் இந்த முன்னேற்றம் அடைந்த இருபதாம் நூற்றாண்டின் முடிவில் கூடப்பூசை, பிரார்த்தனைகள் புரிய வாய்ப்பு இல்லை. பிராமணியம் இன்று கூடச் சைவ ஆலயங்களில் இறைவனைச் சிறைக்கம்பிகள் இட்டுப் பூட்டி வைத்துக் கொண்டு “உள்ளே இறைவன் ஆனந்த நடனம் ஆடுகிறான்; அந்த அற்புதத்தை தூரத்தில் மூலஸ்தானத்துக்கு அப்பால் நின்று வேடிக்கை பாருங்கள்” என ஏதோ சிறு சுதந்திரம் மட்டும் கொடுக்கிறது. சுதந்திரம் என்பது சுக்கா, சுரைக்காயா விலை கொடுத்து வாங்குவதற்கு? அதைப் பிச்சை கேட்டு வாங்குதல் வேண்டுமா? இச்சை கொண்ட நிமிஷமே நிச்சயமாக ஆலயத்திலாகினும் புரட்சி செய்து சைவச் சூத்திரர்களாற் பெறுதல் இயலாதா?
பிற்போக்குப் பிராமணியக் கோட்பாட்டை உடைத்தெறிதல் தான் உடனடித் தேவையாகும். ஆனால், இரத்தப் புரட்சி செய்து பிராமணர்களுடன் வாதுக்குச் சண்டைக்குச் செல்லும் படி நாம் சூத்திர மக்களை எந்த வகையிலும் தூண்டவில்லை. பிராமணர் பொதுவாகச் சாதுவானவர். சாந்தகுணம் படைத்த அவர்களுக்கு நெஞ்சில் உரம் ஊட்டிக் கபட நாடகம் நடிக்க வழிகாட்டுபவர் அநேகமான ஆலயப் பெருங்குலக் கர்த்தாக்கள் ஆவர். இதற்கு விதிவிலக்காக உள்ள் சிறு தொகையினரான ஆலய முதலாளிகள் மீது நாம் குற்றம் குறை சுமத்த முற்படவில்லை. இறைவன் சந்நிதியில் ஆண்டானும் அடிமையும் சமம் ஆவார்கள் என்னும் உண்மை விளக்கத்தை, ஆலயவழிபாடு செய்வோர் தெளிந்து நடந்து கொள்ளுதல் அவசியமாகும். வைத்தியசாலை போன்றதே சைவ ஆலயமாகும். வைத்தியசாலையில் உடல் நோயாளிகளுக்குச் சிகிச்சை அளிக்கப்படுகிறது.
ஆலயத்தில் ஆன்மீக நோயாளிகளுக்கு வைத்தியம் அளிக்கப்படுகிறது. உடல் நோய் நிபுணராகிய டாக்டரைப் போலவே வைத்திய நாதனாகிய சிவன் செயற்படுகிறான். நோயாளிகள் வைத்தியசாலைக்குட் சென்று நேரடியாகவே டாக்டரைச் சந்தித்து வைத்தியம் பெறுவதற்கு எவ்வித தடையும் இல்லை ஆனால்

Page 12
ஆலய மூலஸ்தானத்துக்குச் சென்று நேரடியாகவே வைத்திய நாதனிடம் வேண்டிய சிகிச்சை பெறுவதற்கு எதற்காக, யாரால் தடை ஏற்படுத்தப்பட்டுள்ளது? என்பது ஆய்ந்து தெளிந்து அகற்றப்பட வேண்டியதாகும்.
ஆசூசம், துடக்கு என்பன ஆஸ்பத்திரிகளில் மேற் கொள்ளப்படுவதில்லை. அதே போல ஆலயங்களிலும் ஆசூசம், துடக்கு என்பன மேற்கொள்ளுதல் கைவிடப்படுதல் வேண்டும். தொற்றுநோயாளிகளை மட்டும் ஆஸ்பத்திரியில் பொது நோயாளிகளுடன் ஒன்று சேர்த்து வைத்திருத்தல் அபாயகரமானதாகும். எது எவ்வாறாயினும் நோயாளிக்கே வைத்தியசாலை வேண்டியதாகும். சுகதேகிகளுக்கு ஆஸ்பத்திரி எதற்கு? ஆன்ம சுகம் உள்ள பிராமணர்களுக்கு ஆலயம் எதற்கு? அவர்கள் ஆன்மீக நோயாளிகளை வைத்திய நாதனிடம் நேரடியாகச் சென்று தொடர்புகொள்ள விடாது தடையாக இருத்தல் அடுக்குமா? சோழியன் குடுமிசும்மா ஆடாது. ஆய்ந்து தெளிக! பிராமண அர்ச்சகர்களால் ஒருபோதும் வைத்தியநாதனுடைய தொழிலைப் புரிதல் இயலாது, வாணிபத்துறையிற்றான் தரகர்கள் தேவைப்படுகின்றனர். புனிதமான சமயத்துறையில் தரகர்கள் எதற்கு? தருகுத் தொழிற் செப்படிவித்தை செய்து பொருள் சம்பாதிக்க உதவுவதாகும். காதல் கல்யாணத்தில் கல்யாணத்தரகர் எதற்கு? தெய்வீகக் காதலியாகிய ஆன்மாவை தெய்வமாகிய தலைவனுடன் சம்பந்தப்படுத்துவதற்கு அர்ச்சகரான தரகர் எதற்கு? பிரார்த்தனைக்கும், தியானத்துக்கும் பூசகரும் அர்ச்சகரும் வேண்டியதில்லை. ஆனால் அவற்றின் சாதனா நுட்பங்களை வழுவற விளக்கி, நல்வழிகாட்டும் ஆசிரிய
குருமார்கள் தான் தேவையாகும்.

2 சன்மார்க்க நெறி
பDனச்சார்பு இன்றிச் சத்தியத்தை அவதானிக்கும் போது அது இருமை வகை உடையதாகப் புலப்படுகிறது. அதாவது, சத்தியக்குக்கு எதிரானதொரு பொய் இருப்பதாகத் தெரிகிறது. அந்தப் புலப்பாடு மனத்தின் இயல்பைக் பிரதிபலித்துக் காட்டுகிறதே அன்றிச் சத்தியத்தின் உண்மையான ஒருமைப்பாட்டைத் தெளியப்படுத்துவதில்லை. அதற்குக் காரணம், மனத்தினுடைய இருமை வகையுடைய திரோதான சக்தியின் செயற்பாடாகும். சத்தியத்தின் தனித்துவச் சிறப்பை நாம் மனத்தினால் ஆக்கப்படும் திரோதான சக்தியின் ஆற்றலால் கண்டு பிடித்தல் இயலாது. இருமைவகை அற்ற தெய்வீக சுத்த சக்தியின் ஆற்றலை நாம் பெறுவதன் மூலமே புனிதமான பூரண சத்தியத்தரிசனம் அடையலாம்.
இதை இன்னும் தெளிவாகக் கூறுவதாயின், ஊனக் கண்பார்வை திரோதானசக்தியாலும் மெய்ஞ்ஞானக்கண் பார்வை சுத்த சக்தியாலும் பெறப்படுவன எனலாம். திரோதான சக்தியின் செயற்பாட்டினாற்றான் சத்தியத்தின் உண்மையான புலப்பாடு மறைக்கப்படுகிறது. திரோதான சக்தியின் மறைப்புத்தன்மையை முழுமையாக நீக்குவதற்கு நாம் சுத்தசக்தி அல்லது அருட்சக்தியின் ஆதரவை மட்டும் தேடிக் கொண்டாற் போதும். பிரார்த்தனை மூலமே சத்திய சொரூபமான அருட்சக்தியை நாம் பூரணமாகப் பெறலாம். அருட்சக்தி பெறுதலைச் சைவ சித்தாந்தம் சக்திநிபாதம் எனத்தெரிவிக்கின்றது. மனிதன் உரிய வயதிலே உயிருடன் இருக்கும் பொழுதே திருவடி சேர்தல் மிகவும் அவசியமாகும். இறந்த பின்பு திருவடி சேரலாம் எனக் கற்பனை செய்து பிரார்த்தித்தல் அர்த்த மற்ற வீண் சாதனையாகும். அருட்சக்தியை, வேறொருவிதமாகத் தெய்வீக விவேகப் படைப்புச் சக்தி எனக் கூறுதல் சைவமரபு ஆகும்.
பிரார்த்தனை செய்து பழகும் சாதகர்களுக்கு வேண்டிய வழிகாட்டியாக இச்சிறு நூல் அமைகிறது. பிரார்த்தனை செய்வதன் இலட்சியம் திருவடிசேரல் என்பதை மீண்டும் வலியுறுத்துகிறோம். அதன் மூலம் தான் தூய விவேகத்தை உள்ளிருந்து திருவருள் கொண்டு சுயமாகவே மலரச் செய்யலாம். இவ்விடத்தில் சாதகர்கள் அறிவுக்கும், விவேகத்துக்கும் உள்ள வேறுபாட்டை நன்கு தெரிந்து கொள்ளுதல் சாதனை செய்து பழகுவதற்கு ஒர் உத்தம தூண்டு கோலாக உதவும். அறிவு என்பது மொழிமூலம் ஆசிரியரிடமிருந்தோ நூல்கள், தொடர்பு சாதனங்கள் வாயிலாகவோ அல்லது பிறர் மூலமாகவோ கற்றுக் கேட்டுச் சம்பாதித்து மூளையிற் பதியவைத்திருக்கும் சம்பாத்தியமாகும். மனத்தின் அயர்வுப் புலம் இவ்வாறு பெற்ற அறிவுச் சம்பாத்தியத்தைக் கற்பனை மூலமும், கனவுமூலமும் விருத்தி செய்து கொள்கிறது. அறிவு பெறுவதற்கு ஆதாரம் அளிப்பன ஐந்து இந்திரியங்களான கண், காது, மூக்கு நாக்குச் சருமம் ஆகியனவாகும்.

Page 13
விவேகம் என்பது அறிவைப் போலப் புற உலகிலிருந்து சம்பாதித்து மூளையில் திணித்து வைத்து மீட்டு எடுத்து விருத்தி செய்யக் கூடிய எந்த ஒரு பொருளும் அல்ல. அது உள்ளிலிருந்து சுயமாகவே மலர்ந்து பூமணம் போலப் பரிமளித்து வியாபித்து விளங்கக் கூடிய ஒரு தெய்வீக ஆற்றலாகும். அதை எவராலும் கொடுக்கல் வாங்கல் செய்தல் இயலாது. விவேக சொரூபியானவன் இறைவன், அவன் ஆன்மாவுடன் அநாதியே அத்து விதமாக இரண்டறக்கலந்து உள்ளவன். ஆகவே அவனுடைய தூய விவேக ஆற்றலும் ஆன்மாவுடன் ஒன்றாகக் கலந்துள்ளது என்பது பிரார்த்தனையின் பேறாகப் புலப்படும். விவேகம் தான் அறிவுக்கும் அளவை இலக்கணரீதியில் சரியான உண்மை விளக்கம் கொடுக்க வல்லதாகும். அறிவை விருத்தி செய்வதனால் விவேகத்தை நாம் வளர்க்கலாம் என நினைத்தல் பேதைமையாகும். அத்தகைய முயற்சி வீணாகும்.
அறிவு நமக்கு ஒருசிறு கைவிளக்குப்போல, நாம் சன்மார்க்க நெறியில் செல்வதற்கு ஒருவழிகாட்டியாக உதவுவதாகும். அது எவரையும் நேரடியாக விவேக உலகிற்குச் சுமந்து சென்று சேர்த்து விடமாட்டாது. நாம் சரியான அறிவொளி விளக்கம் பெற்று அதன் வழியே பிரார்த்தனைச் சாதனா நுட்பங்களை நன்கு தெளிந்து அனுட்டிப்போமாயின் அருள் ஆற்றல் மலரக் கிடைக்கும் பாக்கியம் அடைதல் நிச்சயமாகும்.
பிரார்த்தனைக்குப் பக்க பலமாகவும், உத்தமதுண்டு கோலாகவும் உள்ளது தூய்மையான பக்தி சிரத்தையாகும். சுக்கு அற்ற கசாயக்குடி நீர் ஆகாதது போல, நாத விந்து, பண் பரதம் இல்லாத பக்தி சிரத்தை இல்லை எனலாம். நாதவிந்துவைத் தனித்தமிழில் ஒலியும், ஒளியும் என வழங்குதல் மரபாகும் நாத சொரூபியாகவும் அதிபதியாகவும் விளங்கும் தெய்வம் விநாயகராகும். விந்து சொரூபியாகவும் தலைவனாகவும் பிரகாசிக்கும் தெய்வம் திருமுருகனாகும். பண்ணுக்கும் பாதத்துக்கும் அதிதேவதையாகப் பொலிபவள் சரஸ்வதியாகும். பிரார்த்தனை செய்வோர் கிரமப்படி இம்மூன்று தெய்வங்களுக்கும் வணக்கம் செலுத்துதல் சித்திக்கு வித்தாகும். நாமும் இத் தெய்வங்களின் புனித நிலை அடைதல் வேண்டும்.
உலக நன்மை கருதிப் புறப்பூசைகளும் நிவேதனமும் படைத்துப் புறவழிபாடு, வணக்கம், வாழ்த்து முதலியன செய்தல் சரியான பிரார்த்தனை ஆகாது. இவைகள் யாவும் ஒரு சாதகனைப் பிரார்த்தனை நிலைக்குத் தயார் செய்து கொள்வதற்கு உதவுதல் கூடும். அவற்றை நாம் முக்கியமான பிரார்த்தனைச் சாதனையாகக் கருதுதல் பொருத்தம் அற்றதாகும். புறப்பூசைகளைக் காட்டிலும் அகப்பூசையே ஆயிரம் பங்கு சிறந்த பயனைக் கொடுக்க வல்லதாகும். மனம் படைத்த மனிதன் என்ன காரியத்தையும் சிந்தனை, சொல், செயல் என்னும் கிரமத்தில் ஆற்றும் வல்லமை உடையவன். பிறச்வராசிகளுக்கு இந்த ஆற்றல் கிடைக்காது. சிந்தனைக்கும் சொல்லுக்கும் அடிப்படையாக உள்ளது மொழியாகும். மொழிதான்

அவற்றுக்கு மூலகருவியாக உதவுகிறது. அது தூய்மை இல்லாது போயின் மனிதன் ஆற்றும் செயல்கள் யாவும் தூய்மை அற்றதாகிவிடும். தூய்மை அற்ற செயல்களைச் சைவசித்தாந்தம் இருவினை எனக் கூறுகிறது. இருவினையினாற்றான் பாவ புண்ணியமும் துன்ப இன்பங்களும், இறப்புப் பிறப்பும் மக்களுக்கு நிகழ்கின்றன. நாம் திருவடி சேர்வதற்கு இருவினையே பிரதான தடையாக உள்ளது. ஆகவே அகப்பூசையின் குறிக்கோள் பிரார்த்தனை மூலம் இருவினை நீக்கம் செய்தலாகும்.
நமது சிந்தனை, சொல், செயல் ஆகியன தூய்மை இழந்து போவதற்கு இருமை வகை உடைய அத்துவாக்களேயாகும் எனச் சைவ சித்தாந்தம் திறம்பட அற்புதமாக விளக்கம் அளிக்கிறது. அத்துவாக்கள் ஆறாகும். அவற்றை இன்னதெனச்சரிவர தெளிந்து விளங்கி, அந்த இருமைவகையை நீக்க உதவுவதே பிரார்த்தனையாகும். அத்துவாக்களைப் பற்றிச் சைவ சமயத்தைப் போல வேறு எந்த ஒரு சமயமும் தெளிந்து விளக்கம் கூறி, அவற்றைச் சுத்தி செய்வதற்கு வேண்டிய வழிகாட்டல் முறைகளை நுட்பமான பிரார்த்தனை மூலும் போதித்துள்ளதாகப் புலப்படவில்லை. அருட்புலப் பாட்டுக்கு அத்திவாரமாக உள்ள சாதனை அத்துவா சுத்தியை இலட்சியமாகக் கொண்ட அற்புதமான பிரார்த்தனையாகும். மீனுக்கு நீச்சல் அவசியமாவது போலச் சைவசாதகர்களுக்கு அத்துவாசுத்தி செய்யும் பிரார்த்தனை உள்ளதென்பதை எத்தனை தடவைகள் வலியுறுத்தினாலும் உவப்பு ஏற்படாது.
அருட்சக்தி ஆற்றற் புலப்பாட்டைச் சைவசமயம் சிவஞானபோதம் என ஆச்சரியமாக வியாக்கியானிக்கிறது. சிவஞானபோதத்தையே தலை அங்கமாகக் கொண்ட திவ்யமான சைவமுதல் நூல் சிவஞான போதமாகும். அதை ஆக்கியவர் சைவசூத்திர மரபைச் சேர்ந்த தமிழ்மேதை மெய்கண்டார் ஆவர். அவருக்கு முன்னோடியாக விளங்கியவர் அத்துவா சுத்தி செய்து, மையல் தீர்ந்து, திருமந்திரம் செப்பிய அருள்வள்ளல் திருமூலர் ஆவர். அவரும் ஒருசைவ சூத்திர மரபைப் சேர்ந்த வராவர். இதை நாம் இவ்வாறு கூறுவதற்கு முக்கிய காரணம் பிராமணர்களிலும் பார்க்கச் சூத்திரர்களே தமிழ் உலகுக்கே தனிச் சிறப்பு ஈய்ந்த சைவசித்தாந்த தத்துவஞான உண்மை விளக்கம் அளித்துள்ளார்கள் என்பதைத் தமிழ் உலகுக்கு எடுத்துக் காட்டுவதற்காகும். அத்துவாசுத்தி விளக்கத்தைத் திருமந்திரத்தைப்போலும் சிவஞானபோதத்தைப் போலும் வேறு எந்தச் சைவநூல்களும் தெளிவறிவு புகட்டி உள்ளதாகப் புலப்படவில்லை. எனவே இவ்விருநூல்களையும் ஆதாரமாகக் கொண்டே இந்த ஆய்வு மேற்கொள்ளப்படுகிறது. பக்தி சிரத்தையுடன் நேயர்கள் இதைத் தொடர்ந்து நடவு நிலையில் நின்று பயின்று அனுட்டித்துச் சிவனடிசேரல் வேண்டும் எனப் பிரார்த்திக்கிறோம்.
அத்துவாக்களைப்பற்றிய சில அருமையான குறிப்புக்கள் திருமந்திரத்தின் ஏழாந்தந்திரத்திலும், சிவஞான போதத்தின் இரண்டாவது சூத்திரத்திற் கூறப்படும்
9

Page 14
மாயாத்தத்துவ இருவினை விளக்கத்திலும் வருகின்றன. ஆனால் அவற்றுக்குரிய சாதனை நுட்பவிளக்க உரை அந்நூல்களில் கொடுக்கப்படாதது கண்டு நாம் மனம் வருந்தினோம். நூல் உரை ஆசிரியர்கள் பலரிடம் சென்று வினாவி விசாரணை செய்தோம். அவர்கள் கூறிய சாதனை நுட்பவிளக்க உரைகள் யாவும் வெறும் போதனைக் கொள்கை விளக்கமாகவே அமைந்தன. போதிய சாதனை வழிகாட்டல் முறைகளை யதார்த்தமாக அளவை இலக்கண விளக்க ரீதியில் பெறமுடியாது ஏமாந்தோம். பத்தொன்பதாம் நூற்றாண்டில் ஐந்தாவது சைவகுரவர் எனப் பெயர்பெற்றழநீஆறுமுக நாவலர் அருளிய பலசைவ நூல்களைப் புரட்டிப்பார்த்தோம். மேலும் இருபதாம் நூற்றாண்டில் இலங்கையில் அண்மையில் இந்து சமய கலாசார அலுவல்கள் அரசாங்க அமைச்சினால் தலைசிறந்த சைவ தெய்வீக மாமணி எனக் கெளரவ பட்டம் அளித்து மதிக்கப்பட்ட பேராசிரியர் கைலாச நாதக்குருக்கள் இயற்றிய சில சிறந்த ஆய்வு உரை நூல்களையும் துருவிப் பயின்றோம். எதிர் பார்த்த அந்தர்யாக பூசை அனுட்டானச் செயல்முறை நுட்பங்கள் அத்துவாகத்தியைப் பொறுத்தளவில் சிறிதேனும் கிடைக்கவில்லை.
இது சம்பந்தமாகத் திருமந்திரத்தில் வரும் ஒரு திருப்பாடலையும் சிவஞானபோதத்தில் வரும் இரண்டாவது சூத்திரத்தையும் இவண் தருகிறோம்.
திருமந்திரம் (1708 வது செய்யுள்)
. மேதாதி யாலே விடாதோ மெனத்தூண்டி
ஆதார சோதனை அத்துவ சோதனை தாதார மாகவே தானெழச் சாதித்தால் ஆதாரஞ் செய்போக மாவது காயமே!
சிவஞானபோதம் (இரண்டாஞ் சூத்திரம்)
2. அவையே தானே ஆய்இரு வினையிற்
போக்கு வரவு புரிய ஆணையின் நீக்கம் இன்றி நிற்கும் அன்றே!
மேற்குறித்த இருபாடல்களில் முதலாவதில் 'அத்துவசோதனை”யைச் சாதனை செய்யும் வண்ணம் வெளிப்படையாகக் கூறப்பட்டுள்ளது. ஆனால் அதைப்பற்றிய சாதனை நுட்பமுறைகள் எதுவும் கொடுக்கப்படவில்லை. அதைப்பற்றி வேண்டிய விபரங்கள் பெறும் பொருட்டு, திருமந்திரத்தில் உள்ள மூவாயிரம் செய்யுள்களையும் கவனமாகப் பயின்று பார்த்தோம். பலன் கிடைக்கவில்லை.
சிவஞானபோத இரண்டாஞ் சூத்திரத்தில் அத்துவாக்களைப் பற்றி வெளிப்படையாக ஒன்றும் கூறப்பட்டதாகத் தெரியவில்லை. ஆயினும், இருவினை நீக்கத்தின் பொருட்டு இறைவன் காட்டிய சிவஞானபோத நெறிவழி சாதனை செய்து பயன் அடையும் படி அறிவுறுத்தப்பட்டுள்ளது புலப்படுகிறது. இருவினை நீக்கத்துக்கு உரியசாதனை இருவினை ஒப்பு என்பது சிவஞானபோத விளக்கமாகும். திருமந்திரக்
O

குறிப்பைக் கொண்டு இருவினை ஒப்புக்குரிய சாதனை அத்துவாசோதனையும், சுத்தியும் என்பதைத் திருவருளால் பிரார்த்தனை, தியானம் செய்த பேறாகக் கிரகித்து உணர்கிறோம். எனினும் அத்துவா சுத்தியைப் பற்றியோ அல்லது அத்துவாக்கள் ஆறும் இன்னது தான் எனும் முழுமையான விளக்கமோ பெறவழி தெரியாது தவிக்கிறோம். இவ்வாறு அவதியுறும் பொழுது சிவஞானபோத மாபாடிய உரையைச் சுயமாகவே பயிலும் தெய்வசந்தர்ப்பம் அதிஷ்டவசமாகக் கிடைத்தது. அதில் உரை ஆசிரியர் சிவ ஞானமுனிவர் அத்துவாக்களைப் பற்றிய உண்மை விளக்கத்தை மிகவும் சிறப்பாகக் கொடுத்திருப்பது கண்டு பரவசம் அடைகிறோம்.
அந்த உண்மை விளக்கத்தை நமது வாசகநேயர்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறோம். அது நேயர்களை நேரடியாகவே திருவடி சேர்ப்பிக்க முடியாத போதும், நிச்சயமாக அத்துவாசுத்தி சாதனை நுட்பங்களைத் தெளிந்து செயற்பட உதவும் என நம்புகிறோம். சத்தியமாகிய பரம்பொருளை எவராலும் பிற மனிதரிடமிருந்து சுட்டறிவு மூலம் சம்பாதித்துக் கொள்ள முடியாதென்பதையும், அதை ஒவ்வொருவரும் தனித்தனியே சுயமாகவே உள்ளிலிருந்து பிரார்த்தனை தியானம், விழிப்புணர்வு, விசாரணை முதலியவற்றின் உதவியுடன் கண்டு பிடித்தல் வேண்டும் என்பதையும் மீண்டும் வலியுறுத்தித் தொடர்ந்து செல்கிறோம். கூட்டுப்பிரார்த்தனையும், தியானமும் இன்று சாதகர்களிடையே பிரபல்யம் அடைந்து வருகின்றபோதும் சாதகர் சமுதாயத்தைக் கூட்டமாக இறைவன் இரட்சித்த வரலாறு எந்தச் சமய வரலாற்றிலும் இல்லையென்பதை நினைவுபடுத்துகின்றோம். கும்பலிலே கோவிந்தா போட்டுப்பெரும் கோஷம் எழுப்புதல் மனித இனத்தினுடைய மந்தைப் போக்கையும் பரபரப்புச் சிலுசிலுப்பு மனப்பான்மையையும் பிரதிபலிப்பதாகும். புனிதமான செபதியானத்தில் இதற்கு இடமில்லை.
அத்துவாக்களைப்பற்றிச் சிவஞானபோதமாபாடியத்தில் வரும் உண்மை விளக்கத்தை இங்கு சுருக்கமாகத் தருகிறோம். அத்துவாக்கள் பொதுவாக மொழிசம்பந்தமானவையாகும். அவை இருமைவகையுடைய மனிதமனத்தின் ஆக்கமாகும். ஆனபடியால் அவற்றிலும் இருமைவகை இயல்பாகவே உண்டு. இருவினை ஆற்றுவதற்கு அத்துவாக்கள் வாயில்களாக உள்ளன; மொழியின் கூறுகள் ஆறு ஆகும். அவையே அத்துவாக்கள் எனப்படும் அவையாவன; எழுத்து சொல், சொற்றொடர், வாக்கியம், தத்துவம், உலக இலக்கியம் என்பனவாகும். மனம் மாயா சம்பந்தமானது. அதன் இயல்பு விரிதலும் ஒடுங்குதலும் ஆகும். அதனால் ஆக்கப்பட்ட எந்த ஒரு உலக மொழிக்கும் இந்த இருமைவகை உண்டு. விரிதலும் ஒடுங்குதலுமே நன்மை தீமைகளாக உருவெடுக்கின்றன. இந்தப்போலி உருவப்புறப்புலப்பாடே இருமைவகை என்னும் இருவினைச் செயற்பாட்டுக்கு வாயிலாக உள்ள தெனத் தெளிந்து கொள்ளுதல் அவசியாகும்.
இதன் பிரகாரம், ஆறு அத்துவாக்களும் விரிவதும் ஒடுங்குவதுமாகச் செயற்படுதலை பக்திசிரத்தையுடனும் விழிப்புணர்வுடனும் அவதானித்துப் பார்த்து உண்மையை உணர்வோம். எழுத்துக்களில் உள்ள இருமைவகை வல்லினமும், மெல்லினமும் ஆகும். சொற்களில் உள்ள இருமைவகை வன்சொல், இன்சொல்

Page 15
என்பனவாகும், சொற்றொடரில் உள்ளது, கசப்பதும் உவப்பதும் ஆகும், வாக்கியக்கலை விருப்பு வெறுப்பு உடையதாகும். தத்துவம், பருப் பொருளாகவும், கருப்பொருளாகவும் உள்ளதாகும். அதனுடைய தன்மை தடத்தமாகவும் சொரூபமாகவும் உள்ளது. விரிதலும் ஒடுங்குதலும் பற்றிய பூரண அறிவே தத்துவ ஞானம் எனப்படும். சிவஞானபோதத்தில் வருவதுபோல ஒரு நூலிலும் வருவதை நாம் கண்டதில்லை. தத்துவத்தை அடுத்து உள்ள ஆறாவது அத்துவா ஆகிய உலக இலக்கியம் யாவும் இருமை வகை உடையனவாகும். அவை நன்மை, தீமை - அறம், மறம் - புண்ணியம் பாவம் - இன்பம் துன்பம் - உயர்வு தாழ்வு - போன்ற இன்னும் சில இருமை வகை உடையனவாகும். இவற்றில் பக்கச்சார்பு கொண்டு தாம் விரும்பியவற்றை மட்டும் சுவைத்து இன்புறுவோர் அத்துவா சுத்தி பெறுதல் அரிதாகும். சிவஞானபோதம் அவர்களுக்குக்குத் திரைக்கொம்பாகும்.
இவ்விடத்தில் நாம் விசேடமாகக் கவனிக்க வேண்டிய விடயம் ஒன்றுண்டு. அதாவது சிவபுராணங்களும், தேவார திருவாசகங்களும், மெய்கண்டசாத்திர நூல்களும், இதிகாசங்களைப் போன்றன அல்ல என்பதாகும். சிவாசாரியார்கள் இதிகாச ஆசாரியர்கள் போல இருமைவகையில் எந்த ஒரு இனிய இன்பச்சுவை வகைக்கும் வக்காலத்து வாங்கி இலக்கிய வர்ணனைகள் செய்பவர்கள் அல்லர். சிவம் என்னும் பதம் தூய்மையான ஆனந்தத்தைக் குறிப்பதாகும். அது தனித்துவம் உடையதாகும். அது இன்பதுன்பம் எனும் இருமை வகை கடந்ததாகும். இருமை வகை கடந்த தனி ஆனந்தமான சிவத்தை நாம் கடவுள் என வணங்குகிறோம். தமிழ் மொழியின் தனி இனிமையைக் கடவுளிடம் கலப்பற்ற மாசறு காட்சி மூலம் காண்கிறோம். கடவுளின் மொழி மெளன மொழியாகும். அக்கடவுள் ஆனந்த சொரூபியாக, ஆலமர நிழலில், தட்சணாமூர்த்தி குரு வடிவில் அத்துவாகத்தியுடன் தூய காட்சி அளிக்கிறார். அவரை நாம் ஊனக்கண்மூலம் காணும் காட்சி அரைகுறையானதாகும். அவரைப் பூரணமாகத் தரிசிக்க வேண்டும் எனின் நாம் கட்டாயமாக அத்துவாசுத்தியுடன் கூடிய இருமை வகை அற்ற சிவஞானக் கண் காட்சி பெறுதல் வேண்டும். அதற்குரிய வழிகாட்டியாக அமைகிறது பிரார்த்தனையும் தியானமுமாகும்.
குழந்தையின் உடல் வளர்ச்சிக்குத் தாய்ப்பால் அவசியமாவதுபோல ஆன் மீகமுன்னேற்றத்துக்குத் தாய் மொழி இன்றி அமையாததாகும். புட்டிப்பால் ஊட்டிவளர்க்கப்படும் குழந்தைகளுக்கு இயற்கையாகவே நோய் எதிர்ப்புச் சக்தி ஏற்படுதல் குறைவாகும். பிறமொழியில் சைவ போதனை பூசை, பிரார்த்தனை, தியானம் முதலியன புரிந்து வழிநடத்தப்படும் சாதகர்களிடம் இருமை வகை உள்ள அத்துவா நோயைத் தடுக்கும் ஆற்றல் உண்டாதல் குறைவாகும். அழுக்கை அழுக்காலேயே நீக்குதல் போல மொழியால் ஆக்கப்படும் அத்துவா அழுக்கை மொழியாலேயே நீக்குதல் வேண்டும். அகவே நாம் எந்த வகையிலும் தாய் மொழியாகிய தமிழைப் புறக்கணித்தல் கூடாது. இன்று பெரும்பாலும் நமது சைவ ஆலயங்களில் அர்ச்சனைகளும் பூசைகளும் வடமொழியில் நடைபெறுதல் வருந்தத்தக்கதாகும். அதை மாற்றி அமைக்க ஆவன செய்தல் நமது கடமையாகும்.
12

3 பண்ணும் பரதமும் ஆற்றும் பங்கு
பிரார்த்தனை செய்பவர்களுக்கும், தியானிப்பவர்களுக்கும் உறுதுணையாக உள்ளது வித்தியா கலையும் சிவக் கலையுமாகும். வித்தியா கலை அறுபத்து நான்கு பகுதிகளையும், சிவக்கலை ஐந்து அம்சங்களையும் கொண்டனவாகும். வித்தியா கலை சிவக்கலையில் அடங்குமேயன்றி அது தனித்துவம் உடையதன்று. எனவே அதைச்சார்புக் கலை எனக் கூறலாம். சிவக்கலையானது தனித்துவம் உடையதாகும். எவ்வகைச் சார்பும் இல்லாது நேரடியாகவே சுத்த சக்தியின் பொலிவுற்று விளங்குவதாகும். வித்தியா கலை, மாயாசக்தியின் சார்புடையதாய் மூன்று பரிமாணங்களை உடைய (நினைவு, கனவு, உறக்கம் எனப்படும்) எல்லைக் கோட்பாட்டுக்குள் விருத்தி அடைவதாகும். சிவக்கலையானது, மூன்று பரிமாணங்களையும் கடந்த எல்லையற்ற தில்லை வெளியாகிய சாந்த சமாதி நிலையில் சுயப்பிரகாசமாக மிளிர்வதாகும். நாம், வித்தியாகலை மூலம் கலைஞானமும், சிவக்கலை மூலம் சிவஞானமும் பெறுகிறோம். ஐந்து சிவக்கலைகளாவன:- நீத்தற்கலை, பதிவுக் கலை, புலக்கலை; அமைதிக்கலை; அமைதி கடந்த கலை என்பனவாகும். இவற்றின் செயற்பாடு சிவயோக சாதனையாக இந்நூலில் விளங்குகிறது. சிவயோகத்தின் முடிவு சிவஞானபோதம் ஆகும்.
கலைஞானம் உலகப் பேறுகள் பெறுவதற்கும், சிவஞானம் சிவப்பேறாகிய மோட்சப் பேரின்பம் அடைவதற்கும் ஆதாரமாக உள்ளனவாகும். கலைஞானம் மனவிருத்தியாலும், சிவஞானம் அருள் மலர்ச்சியாலும் உருவாகுவனவாகும். கலைஞானத்தைப் பெருக்குவதனால் சிவஞானம் ஒருபோதும் மலர்ச்சியாவதில்லை என்பதை நாம் வழுவற விளங்கிக் கொள்ளுதல் அவசியமாகும். ஏனெனில் இன்று பெரும்பாலும் கல்வி, கேள்வி, அறிவு விருத்தி ஆகிய சிந்தனைகள் மூலம் சிவஞானம் மலரப்பெறும் முயற்சியில் சைவ மக்கள் ஈடுபட்டு வருவதனால் என்க. கலை ஞானமும் சிவஞானமும் ஒரே வேளையில் எவரிடமும் சமமாகப் பிரகாசிக்க மாட்டா. ஒன்று கூடும் போது மற்றது குறைந்து விளங்கும் இயல்புடையதாகும். கூழுக்கும் ஆசை, மீசைக்கும் ஆசை என்ற ரீதியில் இரண்டையும் ஒரே அடியில் ஒன்றாகப் பெற்று வைத்திருக்க முயற்சி செய்தல் பேதைமையாகும். சிவஞானத்தைப் பூரணமாகப் பெறுதல் வேண்டுமாயின் கலைஞானப்பற்றை நீக்குதல் வேண்டும். ஒன்றன் முடிவுதான் மற்றதன் ஆரம்பமாகும்.
கலைஞானப்பற்றை மட்டும் நீக்குதல் வேண்டுமேயன்றிக் கலைஞானத்தை முற்று முழுதாக நீக்குதல் அவசியம் எனக் கருதுதல் பேதைமையாகும். இருமை வகைக் கலப்பற்ற கலைஞானம், உண்மையாகவே சிவஞானம் பெறுவதற்கு ஒருபற்றுக் கோடாக உள்ளது. இந்த விளக்கத்துடன் நாம் இப்பொழுது, பண்ணும்
3.

Page 16
பரதமும் பற்றிய கலைஞானம் எவ்வாறு நமது பிரார்த்தனைக்கும், தியானத்துக்கும் பங்கு ஆற்றி ஆதரவு அளிக்கின்றது என்பதை ஆய்வோம். இந்த ஆய்வுக்கு அடிப்படையாக உள்ளது அத்துவா சுத்தியாகும். அத்துவாகத்தியை இன்னொரு வகையில் தீக்கை எனச் சைவசித்தாந்த சாத்திரங்கள் விளக்குகின்றன. தீக்கையின் அகப்பொருள், ஆன்மீக அழுக்கைக நீக்குதல் என்பதாகும். அதன் புறப்பொருள் விளக்கத்தை பற்றியோ அல்லது அதைப்பற்றிய புறக் கிரியை அனுட்டானங்களைப் பற்றியோ நாம் இங்கு ஆயவேண்டிய அவசியமில்லை. ஏனெனின் அத்தகைய தேவையற்ற ஆய்வில் ஈடுபடும் போது நாம் உளவியல் ரீதியில் சன்மார்க்கத்தில் இருந்து வேறு திசையில் திரும்பிச் செல்ல ஏதுவாகும் என்பதனாலாகும். ஆன்மீக அக அழுக்கு என்பது இருமை வகையுடைய சிந்தனை, சொல், செயல் ஆகிய மூன்றினாலும் ஆக்கப்படுவதாகும். ஆகவே இந்த மூன்று நிலைகளிலும் ஏற்படும் ஆன்மீக அழுக்கைச் சுத்தி செய்தலே உண்மையான தீக்கையாகும். இதைத் திருவள்ளுவர், "இருமைவகை உணர்ந்து ஈண்டு அறம் பூணுதல்” எனத் திறம்பட அற்புதமாக விளக்குகிறார்.
தீக்கை அனுட்டானம் செய்யும் போது மந்திரம் ஓதுதல் அவசியமாகும். அதேபோல, மந்திரத்துக்குப்பதிலாகப் பண்ணும் பரதமும் தீக்கை அனுட்டானத்துக்கு உதவக் கூடியனவாகும். இவ்விடத்தில் தியான சாதனைக்கு அனுசரணையாகப் பஞ்சாட்சர மந்திரமும், பிரார்த்தனைக்கு ஆதாரமாகப் பண்ணும் பரதமும் உள்ளன என்பதை நன்கு தெரிந்து கொள்வோம். அவை இரண்டும் சிந்தனையிலும், சொல்லிலும், செயலிலும் இருமைவகை விருத்தி அடையாவண்ணம் அற்புதமாகத் தடைசெய்து உதவுகின்றன. சிந்தனைக்கும், சொல்லுக்கும், செயலுக்கும் மனவிருத்தியே முக்கிய காரணமாகும். மனவிருத்தி நீங்க வேண்டும் எனின் மனம் முழுமையான மெளனம் அடைதல் மிகவும் அவசியமாகும். மனத்தை மெளனம் அடையச் செய்வதிலே தான் மந்திரமும், பண்ணும், பரதமும் பெரும்பங்கு பெறுகின்றன.
பிரார்த்தனையே முதற் சாதனையாக அமைவது ஆதலின், அதற்கு இன்றியமையாத பண்ணும் பரதமும் எவ்வாறு அதிற் பங்குகொள்கின்றன என்பதை விசாரணை செய்வோம். பண்ணையும் பரதத்தையும் பற்றிய உண்மை விளக்கம் இல்லாது அவற்றை விசாரணை செய்தல் வீணாகும். பண்ணுக்கு அத்திவாரமாக உள்ளது நாதமாகும். பரதத்துக்கு அடிப்படையாக உள்ளது விந்துவாகும். நாதமானது நான்கு பரிமாணங்களைக் கொண்டதாகும். அதேபோல விந்துவாகிய ஒளியும் நான்கு பரிமாணங்களை உடையதாகும். இவற்றுள் முதல் மூன்று பரிமாணங்களும் மன இந்திரியங்களுக்கு எட்டக் கூடியனவாகும். நாம் சாதாரணமாகக் கேட்கும் பண்ணும் இசையும் மூன்று பரிமாணங்களாகிய வைகரி (விரி), மத்திமை (இடை), பைசந்தி (பிண்டம்) ஆகிய வாக்குகளில் அமையும். நான்காவது பரிமாணத்தில் உள்ள சூக்குமை (மூல) வாக்கானது மனஇந்திரியங்களுக்கு எட்டாத மெளன நிலையில் உள்ளதாகும். அது வியாபகமாகப்
14

பாவெளி எங்கும் பரந்துள்ளதாகும். இதற்கு உதாரண விளக்கம் செவிக்கு எட்டும் ரேடியோ ஒலியும், எட்டாத வான் நுண் ஒலியுமாகும்.
பரதமும் நாட்டியமும் விந்துவை அடிப்படையாக உடையனவாகும். விந்துவில் உள்ள முதல் மூன்று பரிமாணங்களாவன, இந்திரியக் காட்சி, மானதக்காட்சி, தன்வேதனை அல்லது ஆன்மீகக் காட்சி என்பனவாகும். இவை மனஇந்திரியங்களுக்கு எட்டுவனவாகும். நான்காவது பரிமாணத்தில் உள்ளது மாசறு காட்சியாகும். அதைச் சிவக் காட்சியெனக் கூறுதல் சைவமரபாகும். அக்காட்சியானது மணஇந்திரியங்களுக்கு எட்டாத மெளன நிலையில் உள்ளதாகும். அதுவும் வியாபகமாகப்பரவெளி எங்கும் பரந்துள்ளதாகும். இதற்கு உதாரண விளக்கம் கண்ணுக்குப் புலப்படும் (ரி.வீ.) தொலைக்காட்சியும் புலப்படாத ரி. வீ. ஒளிக்கதிர்களுமாகும். மெளன நிலையில் வியாபித்து உள்ள சூக்குமை வாக்கையும், மாசறு காட்சியையும் அனுபவம் கடந்து தெய்வீகமான அனுபூதி நிலையிலிருந்து சரிவரத்தெரிதல் வேண்டும். ஆயின் நமது மனம் மெளனம் அடைதல் மிகவும் அவசியமாகும். மனமெளனத்தையே சைவசித்தாந்தம் சமாதி என வழங்குகிறது.
பிரார்த்தனை தியான சாதனை செய்யும் போது, பண்ணும் பரதமும் எவ்வாறு சமாதி நிலை அடைவதற்கு நமக்கு உதவிப்பங்கு அளிக்கின்றன என்பதை விசாரணை செய்வோம். நாத விந்துக்களின் அதிர்வு அதிக உயர்வுறும் போது அவை செவி, கண் புலப்பாட்டுக்கு அப்பாற் செல்கின்றன. பண்ணும் பரதமும் மன அதிர்வை உச்ச கட்டத்துக்கு உயர்த்தவல்லன. அங்ங்ணம் உயர்வு பெறுதல் அவற்றைக் கையாளும் சாதகனுடைய பக்தி, சிரத்தை, நம்பிக்கை ஆகிய பான்மையிலேதான் தங்கி உள்ளது. இவற்றுடன் கூடிய பண்ணும் பரதமும், மன அதிர்வுகளைத் தெய்வீக வியாபக நிலைக்கு உயர்த்தி மெளனம் அடையச் செய்யும் வல்லமை உடையனவாகும். இவ்விடத்தில் சாதகர்கள் சரிவர விளங்கிக் கொள்ள வேண்டிய ஓர் உண்மை உள்ளது.
அதாவது பால்இயல் சம்பந்தமாக மன அதிர்வு உயர்வுறும் போது தன் மறதியைக் கொடுக்கும் உணர்ச்சி மேலோங்குதலும், ஆன்மீக சம்பந்தமான இதய அதிர்வு உயர்வுறும் போது பரவசமெய் உணர்வு உருவாகுதலும் ஆகும்.
பண்ணும் பரதமும் மனரசனை நிலையில் உணர்சியையும், ஆன்மீகப் பரவச நிலையில் மெய் உணர்வையும் கொடுக்கின்றன என்பதே சாதகர்கள் நன்கு விளங்கிக் கொள்ள வேண்டிய உண்மையாகும். பண்ணும் பரதமும் உணர்ச்சி நிலையில் பொருள் அல்லவற்றை நிலையுடையதென நம்பும் மருளையும், மெய்யுணர்வு நிலையில் இருள் நீங்கிப் பேரின்பம் பயக்கும் அருளையும் பெறுவதற்கு வழி காட்டுவனவாகும். நள்ளிருளில் ஆழ்கடலில் செல்லும் கப்பல் மாலுமிக்குத் திசை காட்டும் கருவி போல அமைந்துள்ளது பண்ணும் பரதமுமாகும். திசையறிகருவி காட்டும் வழியை விட்டு அக்கருவியையே போற்றிப் புகழ்ந்து வணங்குதல்
15

Page 17
பேதைமையாகும். அவ்வாறு பண்ணும் பரதமும் காட்டும் வழியிற் சாதனை செய்யாது பண்ணையும் பரதத்தையும் தெய்வமாகக் கற்பனை செய்து போற்றிப் புகழ்ந்து புறப்பூசை செய்தல் மருளின் பாற்பட்டதாகும்.
பிரார்த்தனைக்குப் பண் பேருதவியாக உள்ளதால் பண்ணைப் பற்றி மேற்கொண்டு விசாரணை செய்வோம். நமது விசாரணையின் நோக்கம் பண்ணைத் தனி விடயமாகக் கொண்டு அதன் பல்வேறு அம்சங்களையும் அக்குவேறு ஆணிவேறாக அலசி ஆய்வதல்ல. பக்தர்கள் புரியும் பிரார்த்தனைக்குப் பண் எவ்வாறு ஆதரவு அளித்து இதய கனிவு கொடுத்துப் புனிதமான அருள் சுரந்து பரவசம் ஊட்டி இறையடி சேர்வதற்கு ஒத்தாசை நல்குகிறது என்பதே நமது இலட்சியமாகும். அதன் பொருட்டுச் சாதகர்கள் சகலரும் பண் இசைவல்லுநர்களாக இருத்தல் வேண்டும் என்பதில்லை. பண்ணோடு இசை பாடமுடியாதவர்கள் மக்கள் தொகையில் கூடிய அளவினர் உள்ளனர். அவர்கள் இறையடி சேரும் பாக்கியம் இல்லை என்றோ அல்லது கிட்டாது என்றோ கவலைப்பட்டு ஒதுங்கி இருத்தல் வேண்டியதில்லை. இசைக்கலைஞர்களை விட இசை ரசிகர்களே கூடிய இன்பம் அனுபவிக்கும் வாய்ப்புப் பெற்றவர்களாவர். இன்றைய இசைக் கலைஞர்களுட் பெரும்பாலானோர் கலை அகங்காரம் மிகுந்தவர்களாகவும் துர் நடத்தை உடையவர்களாகவும் தென்படுகின்றனர். அவர்களிடம் உண்மையான அருட் பொலிவைக் காணுதல் குதிரைக் கொம்பாகும். அவர்களுடைய இசைவல்லமை மக்களைக் கவர்ந்து பாராட்டும், புகழும் பணமும் சம்பாதிப்பதிலேயே நாட்டம் உடையதாக உள்ளதைக் காண்கின்றோம். இசைப்பாடல் ஞானத்தை விடத் தெய்வீகப் பண்கேட்டல் உணர்வு ஞானமே சிறந்ததெனச் சாதகர்கள் தெளிவுற்றால் பண்ணிசை ஞானமும் சாரீர வளமும் தம்மிடம் இல்லை என்ற கவலை ஏற்படமாட்டாது.
பண்ணுடன் கூடிய அருட்பாக்களை நாம் இசை நுட்பம் அறிந்து ஒதும் போது நம்மிடம் ஒர் அற்புதம் நிகழ்வதைக் காணலாம். பல சம்பவங்களால் நாம் அடிக்கடி தாக்கப்படுகிறோம். அவ்வாறு தாக்கப்படும் போது நம்மிடம் உணர்ச்சி அலைகள் எழுந்து மோதுகின்றன. அதன் பிரதிபலிப்பாக நம்மிடம் எட்டு மெய்ப்பாடுகள் நிகழும்போது தான் பண்ணுடன் அருட்பாக்களை இசைத்துப் பிரார்த்தித்தல் அவசியம். சுடச்சுட எதையும் உண்ணுதல் இன்பமாகும். சுகாதாரத்துக்கும் உகந்ததாகும். அதே போல நாம் மெய்ப்பாடுகளால் தாக்கப்படும் போது, அந்த மெய்ப்பாட்டு நிலைக்கு உகந்த பண்ணை - ராகத்தைத் தெரிந்து எடுத்து அதற்குரிய அருட்பாவை ஓதிப் பிரார்த்தனை செய்தல் மிகவும் சிறந்ததாகும். அப்பொழுதுதான் ஒர் உளவியல் அற்புதம் நிகழ்கிறது. அந்த அற்புதம் யாது? அறிய ஆவற்படுகிறீர்காள? எழுத்தாளர் தனது சொந்த அறுபது வருட காலப் பிரார்த்தனை அனுபவத்தைக் கொண்டு எழுதுகிறார். நன்றாக நம்புங்கள். நாம் ரட்சணை பெறுவதற்கு இது ஒரு சுலபமான சிறந்த வழியாகும். சந்தேகமில்லை. ஆம்! அந்த அற்புதம், நமது மானசீக உணர்ச்சி மெய்ப்பாடுகள் சாந்தமான தெய்வீக உணர்வாக மாற்றம் அடைதலாகும்.
16

இதை இன்னும் அழுத்தந் திருத்தமாக உரைப்பதாயின் அனுபவம் அனுபூதியாக மாறுதல் எனலாம். அறிவுச் சம்பாத்தியம் மெய்மை மலர்ச்சியாக மிளிர்தல் எனலாம். அறிவைக் கொடுக்கும் மனமாகிய கருவி திருஅருளை ஏற்கும் உத்தம பாத்திரமாக மாறி உருவாகுதலைக் காணலாம். இத்தகையதொரு மாற்றத்தை அண்மைக் காலத்தில் பெற்றவர், கவிஞர் சுப்பிரமணிய பாரதியார். பிள்ளைப் பராயத்தில் பள்ளிப்படிப்பில் அவருடைய நாட்டம் செல்லவில்லை. மூன்று தெய்வீகச் சக்திப் பெண்களிடம் காதல் கொண்டார். அந்த காதல் உணச்சி அவர் புரிந்த புனிதமான பிரார்த்தனை தியானத்தினால் அருள் உணர்வாக மடைமாற்றம் பெற்றுப் பொங்கிப் பாய்ந்து உலகெலாம் பரவியது. அனுபவ உணர்ச்சி, அனுபூதி உணர்வாக அவரிடம் மடைமாற்றம் பெற்ற அற்புதத்தைக் காண்கிறோம்.
பாரதியார் சிந்தனை, சொல், செயல் ஆகிய மூன்று சக்திகளையே தாம் பெற்ற அனுபூதியின் பேறாக, இலக்குமியாகவும், சரஸ்வதியாகவும், உமாதேவியாகவும் உருவகப்படுத்தியுள்ளார். இந்த மூன்று சக்திகளுள்ளும் சிவசக்தியை வேண்டி அவர் செய்த தூய பண்ணுடன் கூடிய பிரார்த்தனை நமது உள்ளத்தைக் கொள்ளை கொள்கிறது. அவர் இசைத்த அற்புதமான அருட்பாவின் முதற் பகுதி இதோ:-
நல்லதோர் வீணை செய்து நலங்கெட மண்ணில் வீசுவது உண்டோ? சொல்லடி சிவசக்தி”
பாரதியார் வெறும் காரிகை கற்று வயிற்றுப் பிழைப்புக்காகப் பேரிகை கொட்டிய புலவர் அல்ல. அவர் பெற்ற அனுபூதியை நாமும் பெறும் பொருட்டு இந்த அருட்பாடலைச் சரிவரப் பொருள் உணர்ந்து ஒதிப் பிரார்த்திப்போம்” சிவசக்தி நீ கொடுத்த நமது சரீரமும், மனஇந்திரியங்களும், ஒரு வீணை போன்றது. அதைச் சரிவரச் சாதனை செய்யாது மண்ணோடு மண்ணாக மடிந்து போக நாம் விடலாமா? நமது மன இந்திரிய உணர்ச்சிகளை எல்லாம் உனது அருள் உணர்வாக மாற்றும் இதய கீதத்தை இதில் எம்மால் மீட்டத் தெரியவில்லையே! இதைப் பயனற்றதாக விட்டு நாம்மாள்வதா? இல்லை இதைப் பயனுடையதாக ஆக்கும் தகுதியை நமக்குக் கொடுப்பவள் நீயே பராசக்தி ஆகவே நின்னருள் வேண்டியே
நல்லதோர் வீணைசெய்து நலங்கெட மண்ணில் வீசுவது உண்டோ?
என உன்னை நினைந்து, உணர்ந்து ஊற்றெழும் கண்ணிருடன் உள்ளம் ததும்பி வெதும்பிப் பண்ணுடன் இசைத்துப் பிரார்த்திக்கின்றோம். அருள்வாயாக!
17

Page 18
பராசக்தியின் அருள் வேண்டுவோர் அவளை நாயகியாகவும், பரம்பொருளின் திருவடி சேர விளைவோர் பரமனை நாயகனாகவும் பாவனைசெய்து பிரார்த்திப்பதும் தியானிப்பதும் சைவ மரபாகும். இத்தகைய பாவனையை நாயகி நாயக பாவனை எனக் கூறுவர். இதற்கும் பால் இயலுக்கும் எவ்வித தொடர்பும் இல்லை. பால் இயலுக்கும் அப்பாற்பட்ட தெய்வீகக் காதல் ஒன்று, நாயகனுக்கும் நாயகிக்கும் இடையே உண்டு என்பதைச் சைவசித்தாந்தம் அழகாக எடுத்துக் காட்டுகின்றது. வைஷ்ணவ சித்தாந்தமும் நாயகி நாயக பாவனையை அருட்பாசுரங்கள் மூலம் புலப்படுத்துகின்றது. இந்த வகையில் தேவார திருவாசகங்களைப் போலும் ஆழ்வார்களுடைய திருப்பாசுரங்களைப் போலும் அற்புதமான பக்திப் பாடல்கள் உலகில் வேறு யாது மதங்களிலும் காண்பதற்கில்லை. ஊனினை உருக்கி உள்ளொளி பெருக்கும், அப்பர் சுவாமிகள் அருளிய நாயக பாவனைப் பொலிவுடைய ஒரு கனிவான தேவாரத்தை இவண் தருகிறோம்:-
முன்னம் அவனுடைய நாமங் கேட்டாள்; மூர்த்தி அவனிருக்கும் வண்ணங் கேட்டாள் பின்னை அவனுடைய ஆரூர் கேட்டாள்; பெயர்த்தும் அவனுக்கே பிச்சி ஆனாள் அன்னையையும் அத்தனையும் அன்றே நீத்தாள் அகன்றாள் அகலிடத்தார் ஆசாரத்தை தன்னை மறந்தாள் தன்னாமங் கெட்டாள் தலைப்பட்டாள் நங்கை தலைவன்தாளே”
இத்தேவாரத்தைப் பாராயணம் செய்து பிரார்த்திப்போர் முதலில், இதன் மறைஞானப் பொருளை வழுவறத் தெரிந்து கொண்டு பின்பு பண்ணிசையோடு ஒதுதல் நற்பயன் கொடுப்பதாகும். அத்துடன் அப்பர் சுவாமிகள் அனுட்டித்த சைவசித்தாந்தப் படிமுறைக்கிரம சாதனையைப் பற்றியும் அறிதல் பேருதவியாகும். ஆரம்பகட்டத்தில் சூலைநோயினால் பீடிக்கப்பட்டு வேதனையுற்ற போது சரியாமார்க்கத்தைப் பின்பற்றி ஆலயத்துக்குச் சென்று சிவனை நோக்கித் தமது நோயை நீக்கி அருளும்படி பிரார்த்தித்தார். கிரியை நிலை அடைந்த போது, ஆலய உழவாரத் தொண்டு புரிந்து தேவாரங்கள் அருளினார். மூன்றாவதாகிய யோக நிலை அடைந்த போது “காயமே கோயிலாகக் கடிமணம் அடிமையாக” என்னும் தேவாரத்தை அருளிப்பிரார்த்தித்தார். நான்காவதாகிய சன்மார்க்க ஞான நிலை அடைந்த போது தான் மேற்குறித்த “முன்னம் அவனுடைய நாமம் கேட்டாள்" என்னும் தேவாரத்தை அருளினார்.
உலகியல் நன்மை கருதிச் சரியாமார்க்கம் கூடுதலாக அனுட்டிக்கப்படுகிறது. ஆன்மீக விடுதலையாகிய திருவடிசேரலை நாடுவோர் மறைஞான நெறியாகிய
18

சன்மார்க்கத்தை அப்பியசித்தல் சாலச்சிறந்ததாகும். நால்வர் காட்டிய நல்வழி ஒரே சாதகனால் படிமுறைக் கிரமப்படி பக்குவ நிலைக்கேற்ற வண்ணம் அனுசரிக்கப்பட வேண்டியதாகும். வெவ்வேறாக உள்ள நான்கு சாதகர்களுக்கு வெவ்வேறாகத் தனித் தனியாகச் சாதனை செய்வதற்காகக் கூறப்பட்டவைகள் அவை அல்ல என்பதை வலியுறுத்துகிறோம். யோக, ஞான மார்க்கம் தமக்குத் தேவையில்லை எனவும் சரியை, கிரியை மட்டுமே போதும், அதுவே தம்மை இரட்சித்துக்கொள்வதற்குப் போதுமானது எனவும் அடம் பிடிப்போர் அப்பர்சுவாமிகளைப் போல் படிமுறைக்கிரமப்படி ஆன்மீக முன்னேற்றம் அடைதல் அவசியம் என்பதைத் தெரிந்து கொண்டு தூய செபதியான சாதனை செய்து பயிற்சித்தல் பெரும் பயனுடையதாகும்.
தியானத்தின் முன்னோடி பிரார்த்தனை என்னும் தெளிவுடன் அப்பர்சுவாமிகள் அருளிய மேற்குறித்த தேவாரத்தின் மறைஞானப் பொருளை மட்டும் ஆய்ந்து விளங்கி ஒதிப் பிரார்த்தனை செய்வோம். பசுவாகிய ஆன்மாவைத் தலைவியாகவும், பரம் பொருளாகிய பதியை தலைவனாகவும் அப்பர்சுவாமிகள் கொண்டு பாவனை செய்து "முன்னம் அவனுடைய நாமம் கேட்டாள்” எனும் தேவாரத்தை அருள ஆரம்பிக்கிறார். சகல ஆண் சாமுத்திரிகா இலட்சணமும் பொருந்திய சிற்பம் ஒன்றைச் சிவாலயத்தில் தரிசிக்கிறார். ஆலயம் என்பதன் மறை பொருள் ஆன்மா இலயம் அடையும் இடமாகும். அது கோயிலாகத்தான் இருத்தல் வேண்டும் என்ற கட்டாயம் இல்லை. இலயம் என்னும் பதம் பரவசத்தைக் குறிப்பதாகும். சிற்பத்தைக் கண்ட அப்பர் பரவசம் அடைகிறார். சிற்பத்தின் உண்மை உருவானவன் யாரோ? அவர் பெயர் யாதோ? ஊர் ஏதோ? அவனுடைய இயல்புகள் என்னவோ? என்பதையெல்லாம் விசாரணை செய்து அறிகிறார். ஆம்! அவர் கண்ட சிற்பத் தலைவன் ஆனந்த நடராஜன் என்பதை அறிகிறார். அவன் இருக்கும் ஊர் தில்லை அம்பலமாகிய பாவெளி என்பதை உணர்கிறார். ஊரில் உள்ள சிவாலயம் அதற்கு ஒர் எடுத்துக்காட்டாகும். கோயில் காட்டும் சித்தாகாசத்தை நன்கு தெளியவேண்டும் எனின் அதுகாட்டும் வழியில் அதை விட்டு அதற்கு அப்பால் செல்லுதல் வேண்டும். ஆனந்த நடராஜச் சிற்ப வடிவில் கோயிலில் உள்ள இறைவன் இப்பொழுது ஊனக் கண்பார்வையில் நடனம் புரிவதாகப் புலப்படவில்லை.
ஊனக் கண்பார்வையில் பூரணமான உண்மைத்தரிசனம் பெற முடியாத அப்பர் ஞானக் கண்கொண்டு தலைவனைத் தரிசிக்க விரும்புகிறார். சரியை கிரியைமூலம் அவர் பெற்ற உண்மை விளக்கம் போதாது என உணர்கிறார். ஆகவே யோக ஞான சாதனைகளாகிய தூய பிரார்த்தனை, செபதியானம் வாயிலாக மெய்யுணர்தல் பெற முற்படுகிறார். எனவே தலைவன் தானே தஞ்சமெனத் தன்னையே சரணாகதியாக ஒப்புவித்து விட்டு ஆன்ம இலயம் அடைகிறார். அங்ங்ணம் சரணாகதி அடையும் போது உலக ஆசார சம்பிரதாயப் பற்றுக்கள்
19

Page 19
யாவையும் அந்த நிமிடமே நீக்கிவிடுகிறார். அதன்பேறாக ஆன்ம இலயம் எனப்படும் தன்னை மறத்தல், தன் நாமம் கெடுதல் ஆகிய இருநிலைகளிலும் ஸ்தீரம் அடைகிறார். ஆலயவழிபாடு செய்வோர் தன்னை மறத்தலிலும் தன் நாமம் கெடுதலிலும் பெரும்பாலும் அக்கறை செலுத்துவதில்லை. அதற்குப்பதிலாக தம்மை நினைந்து, தமக்கு வேண்டிய உற்றார் உறவினரின் நாமத்தை சொல்லிப் பணம் செலவளித்துப் பூசகரைக் கொண்டு அர்ச்சனை செய்விக்கின்றனர். ஆனால் "முன்னம் அவனுடைய நாமம் கேட்டாள்” என்னும் தேவாரத்தைப் புறப்பொருள் உணர்ச்சியுடன் (மெய் உணர்வு பெறாது) ஒதிக்கொள்வர். அப்பர் சுவாமிகளுடைய அந்தரங்க மறைஞானப் பொருளை அத்தகைய கோயில் அர்ச்சகரோ, அடியார்களோ பெரும்பாலாகச் சரிவரத் தெளிந்ததாகத் தெரியவில்லை. அப்பர் அடியார்க்கு அடியவராகிய நாம், அவருடைய மறைஞானத்திருவுள்ளப் பாங்கை நன்கு தெளிந்து அதற்குத்தக நிற்போம்.
அவர் அருளிய அற்புதமான அகப்பொருள் கொண்ட இத்தேவாரத்தின் உச்சக்கட்டம் "தன்னை மறந்தாள்; தன் நாமம் கெட்டாள்" என்பதாகும். படர்க்கை நிலையில் உள்ள இவ்விருவாக்கியங்களையும் ஆதரமாகக் கொண்டு பிரார்த்தனை, தியானம் செய்யும் சாதகன் ஒருவன் அதன் இலக்கணப் படர்க்கை நிலையை தன்னிலையாக மாற்றி “என்னை மறந்தேன்; என் நாமம் கெட்டேன்;’ என ஒதிப்பார்த்தல் சிறப்பாகும். அங்ங்ணம் ஒதும் போது அவன் இதய சுத்தியுடன் உண்மையாகவே தன்னை மறந்து தன் நாமம்கெட்டு அவற்றை ஒதுகின்றானா? எனச் சுயவிசாரணை செய்து பார்த்தல் மிகவும் அவசியமாகும். அதன் பொருட்டுத் தன்னை மறத்தலும் தன் நாமம் கெடுதலும் யாது? என்பதை அறிந்து கொள்ளுதல் வேண்டும். அதன் பிற்பாடு அவ்விரு நிலைகளிலும் அப்பியாசம் என்ன என்பதை விளங்கி அனுட்டித்தல் வேண்டும். இன்றேல் சாதனையிற் சித்தி பெறுதல் அரிதாகும்.
தன்னை மறத்தலையும், தன் நாமம் கெடுதலையும் சிவஞானபோத சாத்திர பாடியம் இன்னொருவிதமாக அத்துவாசுத்தியும், ஆன்மசுத்தியும் என எடுத்து இயம்புகிறது. அத்துவாசுத்தியின் பொருட்டுப் பிரார்த்தனையும் ஆன்மசுத்தியின் பொருட்டுத் தியானமும், அப்பியாச நுட்ப விளக்கம் பெற்றுச் சாதனை செய்தல் வேண்டும். தன்னை மறத்தலுக்கு வேண்டிய சாதனை பண்ணோடு திருவருட் பாடல் இசைக்கும் பயிற்சியாகும். உடல் வளர்ச்சிக்குப் பால் உணவும், உளவியற் காதல் வளர்ச்சிக்குச் சங்கீதமும், ஆன்மீகவளர்ச்சிக்குப் பக்திப் பெருக்கைக் கொடுக்கும் தெய்வீகப் பண்இசையும் இன்றி அமையாதன என்பதை உணர்வோமாக. மனவிகார உணர்ச்சி நிலைக்கும், காலநிலைக்கும் ஏற்ற பண்கள் வெவ்வேறாக அமைக்கப்பட்டு உள்ளன. அத்துவாசுத்தியைப் பற்றி நாம் ஏற்கனவே ஆய்ந்து விளங்கிக் கொண்டபடியால் மீண்டும் அதைப் பற்றி விபரிக்க வேண்டிய தேவையில்லை. இவ்விடத்தில் நாம் உணர வேண்டியது யாதெனின் அத்துவாசுத்தி செய்யும் பொழுது,

பண் இசையுடன் கலந்த தேவார திருவாசகங்கள் தன் மறதி பெறுவதற்குப் பேருதவியாகும் என்பதாகும்.
பண்இசையுடன் பக்திப்பாடல்களை உரத்து ஒதும் சாரீர நலமும் சங்கீத ஞானமும் இல்லாதவர்கள் கவலைப்படவேண்டியதில்லை. அவர்கள் அவற்றைப் பிறர் செவிகேளா வண்ணம் தம் செவியே கேட்கும் அளவுக்கு ஒதினாற்போதும். அவ்வாறு ஒதுதல் உரத்து ஒதுதலிலும் பார்க்கக் கூடிய பலனைத்தரும். உதாரணமாக “முன்னம் அவனுடைய நாமம் கேட்டாள்” என்னும் நாம் கற்ற தேவாரத்தை எவ்வாறு பண்ணிசையுடன் ஒதுதல் வேண்டும் என்பதைக் கவனிப்போம். நாம் இதை ஆனந்த - சந்தோஷ மனநிலையிலிருந்து ஒதவேண்டியதாகும். இதற்குரிய ராகம் ஆனந்தபைரவியாகக் கொள்ளுதல் நன்றாகும். இராக ஆலாபனை செய்து சங்கீத அலங்காரத்துடன் இதை ஒதவேண்டியதில்லை. பக்க வாத்தியங்கள் கூடத் தேவை இல்லை. தாளம் தட்டித் தலையாட்டிக் கையசைத்துப் பிருக்கா பண்ணவும் வேண்டியதில்லை. இத்தேவாரத்தில் வரும் வாக்கியங்களை அறிந்து அவற்றின் அட்சரங்களைத் தெளிவாக உச்சரிக்கும் போது ஆனந்த பைரவிராகம் தொனித்தாற் போதும். ஒவ்வொரு வாக்கிய முடிவிலும் தரித்து நின்று சாவதானமாக ஒதுதல் வேண்டும். அத்துடன் சிவனையே தலைவனாகப் பாவனை செய்து, அவனுடன் நேரடியாகவே முன்னிலையில் நிற்பதாக நினைந்து, தெய்வீகக் காதல் கொள்ளுதல் உகந்ததாகும். அதற்கு ஆதாரமாக ஆனந்த நடராஜனுடைய சிற்பத்தையோ அல்லது வர்ண ஒவியத்தையோ வைத்திருத்தல் சிறப்பாகும்.
கனவு காண்பதற்கும் அப்பால் மிகவும் அதிகமாகப் பிரார்த்தனை செய்தல் மூலம் வேண்டிய பலாபலன்களை அடையலாம் என்னும் அசையாத நம்பிக்கை பூணுதல் வேண்டும். நம்பிக்கை இல்லாத பிரார்த்தனை,தும்பிக்கை இல்லாத யானை போன்றதாகும். பண்ணிசை போதிய பெறுபேறு கொடுத்தல் வேண்டுமாயின் ஒதும் அருட்பாடலின் பொருள் உணர்தல் அவசியமாகும். தன்னை மறத்தல் என்னும் தேவார உச்சக்கட்டத்தின் உட்பொருள் நான், எனது என்னும் செருக்கு அறுத்தலாகும். அதை ஆணவமல நீக்கம் எனவும் கூறலாம். திருவடி சேரலுக்குத் திறவுகோலாக உள்ளது தன் மறதியும், தன் நாமம் கெடுதலுமாகும். இற்றை வரையும் பிரார்த்தனையைப் பற்றி ஆய்ந்து தெளிந்தோம். மேற்கொண்டு தியானத்தைப் பற்றி அவதானிப்போம்.
21

Page 20
4 தூயஞானக் கண்தரிசனம்
தின்னை மறத்தலாகிய அத்துவாசுத்தி பெறுவதற்குச் சூக்குமை வாக்கு ஆணிவேராகும் என்பதை அறிந்தோம். அதற்கு நாம் செய்யவேண்டிய சாதனை நுட்பங்களைத் தெளிந்தோம். சூக்குமை வாக்கு நிலை அடைவதற்கு அச்சாதனைகளை அனுட்டித்து மெளனமாகிறோம். மொளனம் என நாம் இங்கே குறிப்பிடுவது இருமை வகையற்ற மனஇயக்க நிலையையாகும். அந்நிலையில் மனமானது தன்னியக்கம் அற்று, திருவருள் இயக்கமாகச் செயற்படுதலாகும். அதைச்சைவசித்தர்கள் சும்மா இருத்தல் எனக் கூறுவர். அதன் மெய்யான மறைபொருள் அறியாத பல அடியார்கள் சிந்தனையும் செயலும் அற்று மரக்கட்டையோ கல்லோ போலச் சும்மா கிடத்தல் என நினைத்து செயற்படுகின்றனர். தவக்காலத்தை அவக்காலம் ஆக்குகின்றனர். தன்னை மறந்த மனம் திருவருட்சிந்தனையும், செயலும் மேற்கொண்டு இருமை வகை இல்லாது சதா சுறு சுறுப்பாக இருக்கும். அவ்வாறு இருக்கும்போது ஓர் அற்புதம் அவன் அருளால் நிகழ்கிறது.
அதுயாது? என்பதை அறிய விரும்புகிறீர்களா? தொடர்ந்து இதைப்படியுங்கள்; உண்மை புலப்படும். அது மனவாசக விளக்கம் அல்லாத பூரணமான சத்திய தரிசனமாகும். அந்த அற்புதம் சூக்கும ஞானம் விளக்கும் மாசறு காட்சியாக மாறுதலாகும். அதுவே மறைஞானம் விளக்கும் ஆலய தரிசனமாகும். ஊனக்கண் கொண்டு காணும் கட்டடமான ஓர் ஆலயத்தை நாம் இங்கே குறிப்பிடவில்லை. சிவஞானக்கண் கொண்டு காணும் தன் நாமம் அற்ற ஆன்மபரவச நிலையில் புலப்படும் சத்திய தரிசனத்தையே நாம் புனிதமான ஆலயதரிசனம் எனத்தெளிகிறோம். சத்தியத்தை நாம் வாக்குமூலம் தெளிதல் இயலாது. அதை மாசறு காட்சி மூலமே தரிசித்தல் வேண்டும். சத்தியமானது ஒரு புலப்பாடாகுமேயன்றி அகச்சுட்டறிவு விளக்கமாகாது. சத்திய தரிசனம் பெறுவதற்கு நமக்கு உறுதுணையாக உள்ளது பண்ணுடன் கூடிய பரதமாகும். பரதத்தின் மெய்ப்பொருள் தெய்வீக இயக்க அசைவாகும். அதைச் சைவசித்தர்கள் சிவானந்த நடனம் எனப்போற்றி வணங்குவர். உலகில் அசையாத பொருள் எதுவுமேயில்லை. அசையாது கண்ணுக்குத்தோற்றமளிக்கும் கல்லுக்கூட ஒயாது அசைந்த வண்ணம் உள்ளது. கல்லின் உள்ளே சூக்குமமாக உள்ள அணுக்களின் ஓயாத அசைவே அதைக்கல்லாக்குகின்றது.
இசையுடன் கூடிய அசைவை இயல்பாக உள்ள சிவானந்தக்கூத்தைப் பற்றித் திருமூலநாயனார் அருளிய திருமந்திரம் இதோ :-
22

1. ஆனந்தம் ஆடரங்(கு) ஆனந்தம் பாடல்கள் ஆனந்தம் பல்லியம் ; ஆனந்தம் வாச்சியம் ; ஆனந்தமாக அகில சராசரம் ; ஆனந்தம் ஆனந்தக் கூத்துஉகந் தானுக்கே !
2. எங்கும் திருமேனி எங்குஞ் சிவசத்தி
எங்குஞ் சிதம்பரம் எங்குந் திருநட்டம் எங்குஞ் சிவமாய் இருத்தலால் எங்கெங்குந் தங்குஞ் சிவனருள் தன்விளையாட்டே.
மேற்குறித்த முதலாவது திருமந்திரத்தில் இசையும் அசைவும், பாட்டும், பரதமும் ஆகவும் நாதமும் விந்துவாகவும் ஒன்றுபட்டுவருகின்றன. தமிழ் மரபின்படி இவற்றைத் திருமூலர் கூத்து எனக்குறிப்பிடுகிறார். பரத முனிவர் இயற்றிய பரதநூலுக்கு முன்பே தமிழ் நாட்டில் கடைச்சங்க காலத்தில் சாத்தனார் என்பவரால் நடனக்கலை பற்றிய கூத்து நூல் வெளியிடப்பட்டுள்ளது. கூத்த நூலைப்பின் பற்றியே திருமூலர் இச்செய்யுளில் பல்லியம், வாச்சியம் என்னும் பதங்களைத் தமிழுக்கு முக்கியத்துவம் கொடுத்து உபயோகித்திருப்பதைக் காண்க. இவற்றுடன் கூத்தனார் விளக்கிய அல்லியம் என்றும் பதத்தையும் சேர்த்து அல்லியம், பல்லியம் வாச்சியம் எனக் கொண்டு அவற்றின் இசை, அவிநயங்களுடனும் தொடர்புபடுத்தி விசாரணை செய்தல் நாட்டியக்கலை அமைப்பைப் படிமுறைக் கிரமப்படி தெளிந்து கொள்வதற்குப் பேருதவியாகும். பல்லியம் என்னும் பதத்தில் தாளம், ராகம் அல்லது வாச்சியமும் அல்லியமும் அடங்குவதால் திருமூலர் அல்லியத்தைக் குறிப்பிடவில்லைப் போலும்.
இறைவனுடைய கூத்துக்கள் பன்னிரண்டு உள்ளன. அவற்றைத் தாண்டவம் எனக் கூத்தனார் விளக்குகிறார். அவையாவன :-
1 அல்லியம் 2. எல்லியம் 3. பல்லியம் 4. உள்ளம் 5. நுதல்விழி 6. நுதல்கால் 7. நோக்கம் 8. நுணுக்கம் 9. கால்வரி 10. களிற்றுஉரி 11. பேய்வரி 12. நச்சம்
என்பனவாகும். இப்பன்னிரண்டு தாண்டவமும், தக்கமும் சொக்கமும் எனப்படும் 144 கூத்துக்களாக விரிவுபெறும். தக்கம் என்பது, நளினமான அவிநயம் நிறைந்த வாச்சியத்தைக்குறிக்கும். சொக்கம் என்பது சுத்த நிருத்தத்தைக் குறிக்கும். இங்கு சிவதாண்டவம் எனப்படும் ஆனந்த நடனத்தைப்பற்றிய பன்னிரண்டு அம்சங்களுக்கும் விளக்கம் அளிக்க இடம்போதாமை பற்றி வருந்துகிறோம். அவற்றை நன்குவிளங்க விரும்புவோர், சாத்தனாரின் கூத்த நூலைப்பயில்க! மேலும்

Page 21
இலங்கையில் தலைசிறந்த தத்துவஞானக் கலை மேதையாக விளங்கிய ஆனந்த குமாரசாமி இயற்றிய அற்புதமான "சிவநடனம்” என்னும் நூலையும் பயில்க ! அவையாவும் திருமூலநாயனார் அருளிய மேற்குறித்த இரு திருமந்திரச் செய்யுள்களுக்கும் விரிவுரையாக அமைந்துள்ளன.
நமது குறிக்கோள் தனி ஊனநடனக்கலைஞானம் பெறுவதுடன் நின்று விடவில்லை. அதன் முடிபு. சிவநடனத்தின் மெய்ப்பொருளைச் செபதியான வாயிலாகத்துTயஞானக்கண் தரிசனமாக நேரடியாகப் பெறுதல் வேண்டும் என்பதாகும். தத்துவஞான மனவாசக விளக்கத்தை விட நேரடியாகவே சிவானந்த நடனதரிசனம் பெறுதல் சாலச்சிறந்ததாகும். சிவப்பரம்பொருள் சர்வவியாபியாக நீக்கமற எங்கும் நிறைந்திருந்த போதும், அப்பொருளை ஞானக்கண் மூலம் சிதம்பரத்தில் தரிசித்தல் வேண்டும் என்பதை மேற்குறித்த இரண்டாவது திருமந்திரம் சுட்டிக்காட்டுகிறது. சிதம்பரத்தைப் புனிதத்திற் புனிதமான ஆலயம் எனச் சைவர்கள் வழிபடுவர். சிதம்பர ஆலயத்தில் உள்ள சிதாகாசம் பரவெளியைக் குறிப்பதாகும். சிதம்பர இரகசியத்தைப் பற்றிப்பல சைவ எழுத்தாளர்கள் விளக்கமளித்து அநேக நூல்களும், கட்டுரைகளும் வெளியிட்டுள்ளனர். சிதம்பர ஆலயத்துக்குப் பொறுப்பாகத்தில்லை மூவாயிரப் பிராமணர் இருந்து வருகின்றனர். பறையகுலத்தைச் சேர்ந்த சிவனடியாராகிய நந்தனார் பெற்ற சிவதரிசனத்தைப் பூரணமாசறு காட்சியாகத்தில்லை மூவாயிரவர்களால் பெறமுடியாது போனது ஏன் ? என்பது விசாரணைக்குரியதாகும்.
அருவமான சிவதரிசனம் பெறுவதற்கு உருவமுடைய ஆனந்த நடராஜனைச் செபதியானம் செய்தல் எவ்வாறு உதவுகின்றதென்பதை அவதானிப்போம். தூய செபதியானத்தை மணிவாசகப் பெருமான் "நினைப்பறநினைத்தல்" என இன்னொரு விதமாகத்தெளிவுபடுத்துகிறார். அதன் பிரகாரம் திருமூலநாயனாரும்,
"தலைப்படலாம் எங்கள் தத்துவன் தன்னை நிலைப்பெற நாடி நினைப்பற உள்கில்"
எனத் தியானிப்பவர்களுக்கு வழிகாட்டுகிறார். இதே கருத்தை நாவுக்கரசர் வேறு ஒருபாங்கில் அற்புதமாகத் தன்னாமம் கெடுதல் என நம்மை நெறிப்படுத்துகிறார். தன்னாமம் கெடுவதற்கு அவன் நாமத்தைச் செபதியானம் செய்தல் சிறந்த சாதனையாகும். நாமத்தை நாமத்தால் கெடவைத்தல், உருவத்தை உருவத்தால் நீக்குதல், நினைவுகளை நினைவால் அகற்றுதல் எப்படி ஆகும்? என்பதை ஆய்ந்து தெளிந்து அதன்படி நிற்கும் சாதனை செய்தலே நமது இலட்சியம் ஆகட்டும்.
இதற்குப் பேராதரவாக உள்ளது பரதநாட்டிய நிலையில் உள்ள ஆனந்த நடராஜனுடைய திருஉருவமாகும். சிவனருள் பெற்ற சாத்தனார் தமது கூத்த நூலில் நடராஜனைச் சித்தரிக்கும் செய்யுட் பகுதி நமது தியானசாதனைக்கு நல்வழி காட்டுகிறது. இதோ அச்செய்யுட் பகுதி - இது அல்லியம் எனப்படும் ஆனந்த நடன விளக்கமாக அமைகிறது.
24

பெண்ணொரு பாகப் பித்தப் பெருமான் இடக்கால் ஊன்றி வலம்எதிர் ஏற்றி இடக்கை காப்ப வலம்எதிர் வார்ப்ப துடியும் கனலும் துணைஎதிர் சிவனக் கடிக்கணை கடுப்பச் சடைக்கணை அலைப்பக் கூடிய கூத்தோர் அல்லியக் கூத்து.
(Φ 60ου)
பெண்ணாகிய உமை அன்னையைத் தனது பாதியாக உடைய பித்தனாகிய சிவபெருமான், நடராஜ வடிவில் தனது இடது காலை ஊன்றி, வலதுகாலை மேற்பக்கம் உயர்த்தி, இடக்கையில் அபயம் அளிக்கும் காப்பு முத்திரையும் வலது கையில் வார்ப்பாகிய வரம் அருளும் முத்திரையுமாக, மறு வல இடக்கைகளில் உடுக்கை இசைக் கருவியும், மழுக்கனலும் தரித்து திவ்வியதோற்றம் பொலிவுற திருச்சடைமுடி அசைந்து துலங்கக் கூத்து ஆடுதல் அல்லியத்தின் ஒரு கூறு ஆகும். இத்தகைய பரதம் தியான, சாதனைக்குப் பெரும் பங்கு அளிக்கிறது. இவ் விளக்கத்துடன் நாம் இப்பொழுது செபதியான சாதனையில் பக்தி சிரத்தையுடன் தீவிரமாக ஈடுபடுவோம்.
நமது தியான சாதனை திருவடி சரணத்துடன் தொடங்குகிறது. திருவடிசரணம் என்பது எந்த ஒரு மனித குருவினுடைய காலடிகளையும் கதி என நம்பிச் சரண் அடைவதல்ல. தட்சணாமூர்த்தியாகிய நடராஜனுடைய திருவடிகளைச் சரண் அடைதலே சாலச்சிறந்ததெனத் தெளிகிறோம். நடராஜனுடைய அபயகரம் சரண் அடைவோர்களைப் பாதுகாக்கும் என்பதை எடுத்துகாட்டுகிறது. உருவமான நடராஜனுடைய காலடிகள், அருவமான அவனுடைய திருவருட்சக்தியைச் சித்திரிக்கிறது. இச் சக்தி இரு நிலைகளில் ஒயாது இயங்கிக் கொண்டு இருக்கிறது. ஊன்றிய திருவடியின் மறைபொருள் திரோதான சக்தியாகும். உலகியல் நன்மை கருதும் போது நாம் திரோதான சக்தியாகிய ஊன்றிய திருவடியை வழிபடுகிறோம். ஆன்மீக நன்மையாகிய பாசநீக்கம் கருதும் போது தூக்கிய திருவடியைத் தொழுகிறோம். மனஇந்திரியக்காட்சி கடந்த பரம்பொருள் கடவுளாகவும், ஆன்மாக்களின் பாசநீக்கம் அருளும் பொருட்டு அப்பரம்பொருள் இயவுளாகவும் ஓயாது இயங்கிய வண்ணம் உள்ளது.
நாம் உலகிற் காணும் புறப்பொருள் இயக்கத்துக்கு ஏதாகினும் எரிபொருட்சக்தி தேவைப்படுகிறது. மனித உடல் உளஇயக்கத்துக்குக் உணவாகிய எரிபொருட் சக்தி அவசியமாகிறது. நடராஜனுடைய அருட் சக்தி இயக்கத்துக்கு எந்த ஒரு புற எரிபொருளும் வேண்டியதில்லை. அவன் சுயசக்தியின் சொரூபமானவன். எனவே நாம் அவனிடம் சரணாகதி அடையும்போது பஞ்சாமிர்த
25

Page 22
நிவேதனமோ, பொங்கல் படையலோ செய்வதில்லை. அவன் இன்பகனமானவன். பிறருக்குப்பேரின்பம் அளிப்பவனே அன்றி தான் அதை அனுபவிப்பவன் அல்லன். ஆகவே அவனைத் திருப்திப்படுத்தும் பொருட்டு அவனுக்கு இன்பம் ஊட்டும் செயல்கள் எதிலும் நாம் ஈடுபடுவதில்லை. அவன் புனிதத்தின் சின்னமானவன். ஆகவே அவனுக்குக் குடமுழுக்கு அபிடேகம் செய்து சுத்தப்படுத்த வேண்டியதில்லை என உணர்கிறோம். இத்தகைய கிரியைகள் யாவும் அவனுடைய சிலைக்குப் புறவழிபாடு செய்பவர்களால் திரோதான சக்தியை வேண்டி புரியப்படுவனவாகும் . சுத்த சக்தியை வேண்டித்தியானம் செய்யும் நமக்கு இவைகள் எதற்கு? திரோதான சக்தியை மட்டும் வேண்டி மணஇந்திரிய முயற்சிப் பூசைகள் செய்யும் முயலகனை நடராஜன் ஊன்றிய திருவடியால் நசிப்பதைக் காண்கிறோம். அதன் மறைபொருளை உணர்ந்து நமது மணஇந்திரிய முயற்சிகளை விட்டுத்தூய தியானத்தில் தூக்கிய திருவடியை நோக்குகிறோம்.
அத்திருவடி பரவெளியாகிய சிதாகாசத்தைச் சுட்டிக்காட்டுவதைத் தரிசிக்கிறோம். அதன் மறைபொருள் எம்மைப்பரவெளிக்குப் பறந்து செல்லும்படி தூண்டுவதாக உள்ளது. பறந்து செல்வதற்கு நாம் பறவைகள் அல்லவே! பறவைகள் பறந்தாலும் அவைகளால் பூமியின் ஈர்ப்புச் சக்திக்கு அப்பாலுள்ள ஆகாய வெளிக்குச் செல்லமுடிவதில்லை. நாமும் கற்பனை உலகில் வெறும் சிந்தனைச் சிறகுகளை அடித்து உயரப்பறந்தாலும் திரோதான சக்திக்கு அப்பாலுள்ள சுத்தசக்தி இயங்கும் தில்லை வெளிக்குச் செல்ல இயலாது தவிக்கிறோம். கற்பனை கடந்தசோதியைத் தரிசிக்கக்கூடிய அற்புதமான இடம் சிற்றம்பலமென உணர்கிறோம். அங்கு செல்லவிடாது நம்மைத்தடைசெய்வது யாது? பூமியின் ஈர்ப்புச்சக்தி பறவைக்குத்தடையாக இருத்தல் போல நமது மன ஈர்ப்புச்சக்திதான் நமக்குத்தடையாக உள்ளதைத் தெளிகிறோம். இத்தடை நீக்கம் செய்தாற்றான் நம்மால் மெய்யான சிதம்பரம் செல்லமுடியும்.
மன ஈர்ப்புச்சக்தித் தடையை நீக்குவதற்கு உகந்த சாதனை தன் நாமம் கெட்டு நினைப்பற நினைத்தல் என்பதை நாவுக்கரசரும், திருமூலரும் போதித்து நமக்கு வழிகாட்டுகின்றனர். நாம் தியான ஆரம்ப கட்டத்திலே சரணாகதி அடைந்து விட்டோம். அதனை அடுத்துச் செய்யவேண்டிய சாதனை தன் நாமம் கெடுதலாகும். நாமம் கெடுதல் என்பதன் மறைபொருள் யாது? அதை எவ்வாறு செய்தல் வேண்டும்? என்பனவற்றை நன்கு அறியாது சாதனை செய்ய முற்படுதல் பேதைமையாகும். அதனால் எவ்விதமான பிரயோசனமும் இல்லை. ஆகவே சரணாகதிமூலம் நாம் பெறும் திருவருள்கொண்டு அவற்றை விசாரணை செய்து சரிவரத்தெளிவோம்.
26

5 தன் நாமம் கெடுதல்
இப்பொழுது நாம் தன்நாமம் கெடுதலின் மறைபொருளைப் பற்றி விசாரணை செய்வோம். எதற்காக? ஆனந்த நடராஜ தரிசனம் பெறுவதற்கு இவ்விசாரணையும் உண்மை விளக்கமும் ஆதரவும் வழிகாட்டுதலும் நல்கும் என்பதற்காகும். நாமம் இடுதல் உளவியற் செயலாகும். நாமம் இடும்போது விசேடமாக இரண்டு மன நிபந்தனைகளுக்கு நாம் கட்டுப்பட்டு ஆன்மீக சுதந்திரத்தை இழப்பதை அவதானிக்கிறோம். முதலாவது, "நான் எனது என்னும்” மன நிபந்தனையாகும். இரண்டாவது, அதனால் ஏற்படும் இருமை வகையாகும். ஒருபொருள் அல்லாத நாமத்தைப்பொருள் என நம்பி ஏமாறுகிறோம். நான் என்பது உண்மையாகவே ஓர் அருவப்பெயராகும். அப்பெயரை ஆன்மா என நம்பி மோசம் போகிறோம். சில சமய போதகர்கள் கூடத் தெளிவின்மையால், நான் என்பது ஆன்மா எனப்பேசியும் எழுதியும் வருகின்றனர். உண்மை விளம்பும் திருவள்ளுவர் "நான் எனது என்பதை அகங்காரம் ஆகிய செருக்கு (ஆணவம்) எனவே குறிப்பிடுகிறார். எனவேதான் நாமம் என்பது ஆணவத்தினால் பாதிக்கப்பட்ட மனத்தினால் ஏற்படும் செருக்கு என்பது புலப்படுகிறது. தன் நாமம் கெடுவோர் வானுலகம் புகுதல் சுலபமாகும். அவர்கள், தில்லை வெளியாகிய வானுலகில் தியாகராஜனின் திருக்கூத்தை ஞானக் கண் கொண்டு காணுதல் நிச்சயமாகும். அதன் பொருட்டு நாம் இவ்விளக்கத்தை அடுத்து பரதத்தின் ஆதாரத்துடன் செபதியான சாதனையில் ஈடுபடுகிறோம்.
தன் நாமம் கெடுதல் எவ்வாறு? என்னும் வினாவிற்குரிய பதில் பிரார்த்தனையுடன் கூடிய செபதியான சாதனை செய்தல் என்பதாகும். சிவானந்த நடனமாகிய பரதம் நமது தியானத்துக்குப் பேருதவியாகிறது. சாமுத்திரிகா இலட்சணம் பொருந்திய கன்னிப் பெண் ஒருத்தி மேடையில் சிவநடனம் ஆடுகிறாள். அந்நடனத்தைப் பார்க்கும் சபையோர், அக்கட்டழகியின் கவர்ச்சியான உடல் உறுப்புக்களைப் பார்த்து ரசிக்கிறார்களா அல்லது சிவ நடனத்தின் தத்துவங்களை அந் நடனத்தில் காண்கிறார்களா? நடனமாடும் நாரி "நான் நடனமாடுகிறேன்; எனது நடனத்தைச் சபையோர் கண்டு பாராட்டுதல் வேண்டும்” எனத்தன் நாம நினைவுடன் ஆடுகிறாளா? அல்லது சிவநடனத்தத்துவத்தைத் தெளிந்து தன் நாமம் கெட்டு நடனமிடுகிறாளா? என்பன ஆய்வுக்குரியனவாகும். அதேபோல, நாமும் நடராஜனுடைய ஒவியத்தையோ அல்லது சிற்பத்தையோ முன்வைத்துத் தியானம் செய்யும்போது அதன் அழகைக் கண்டு ரசிப்பதுடன் திருப்தி அடைகிறோமா? அல்லது நடராஜனுடைய நடனத்தின் தத்துவத்தை உணர்ந்து தன் நாமம் கெடும் பொருட்டுத்தியானிக்கிறோமா? என்பதை விசாரணை செய்து தெளிதல் நன்றாகும்.
நடராஜனுடைய திருஉருவம் அடியிலிருந்து முடிவரை சிவதத்துவத்தை எடுத்துக் காட்டுவதாக அமைந்துள்ளது. நடனமிடும் அவனுடைய திருவடிகளின்
27

Page 23
தத்துவத்தை நாம் ஏற்கெனவே அறிந்துள்ளோம். மேற்கொண்டு நமது தியானத்தைத் தொடரும்போது அவனுடைய திருக்கழுத்தில் திலங்கும் நாகபாம்பு படம் எடுத்து விழிப்புணர்வுடன் இருப்பதைக்காண்கிறோம். பாம்பைக் கண்டால் படையும் நடுங்கும். சிவனுக்கு அச்சம் இல்லை. பாம்பைத்தமிழில் கட்செவி எனவழங்குதல் மரபாகும். அதற்குச் செவியாகிய இந்திரியக் கருவி இல்லை. அது ஒலியை அற்புதமாகக்கேளாது கேட்டு அறியும் ஆற்றலைக் கண்மூலம் பெறுகிறது. ஒலியின் சிறு அதிர்வைக் கூட அது கண்ணாலும் சருமத்தாலும் உணரும் இயல்புடையதாகும். பகல் நேரத்தில் அதற்குக் கண்பார்வை மங்கலாக உள்ளது. ஆயினும் அது யாரும் நடந்து வரும் கால் மிதி அதிர்வுகளை அறிந்து விழிப்புணர்வு கொள்கிறது. விழிப்புணர்வுக்குப் பாம்பு ஒர் எடுத்துக் காட்டாகும். தியான சாதகர்களுக்கு நடராஜன் அணிந்துள்ள பாம்பு விழிப்புணர்வின் அவசியத்தை எடுத்துக்காட்டுவதாக உள்ளது.
பாம்புக்குப் பாதுகாப்பாக உள்ளது விழிப்புணர்வாகும். இதை எடுத்துக் காட்டாகக் கொண்டு நாமும் விழிப்புணர்வு எந்நேரமும் இரு-தத்தல் வேண்டும். மன உணர்ச்சியை விழிப்புணர்வு என மயங்குதல் கூடாது. விழிப்புணர்வு மட்டும் போதாது. அத்துடன் மன ஒருமைப்பாடு உடைய அவதானமும் வேண்டும். தியான சாதனை மூலம் குறிப்பிட்ட இடத்திலும் காலத்திலும் நாம் பெறும் விழிப்புணர்வும், அவதானமும் எவ்விடத்திலும் எந்நேரத்திலும் நம்மிடம் ஏற்பட்ட வண்ணம் இருத்தல் ஆனந்த நடராஜ உண்மைத் தரிசனத்தின் ஆணிவேராகும். தியான காலத்தையும் இடத்தையும் கட்டுப்படுத்தல் மயிலைப் பிடித்துக் காலை ஒடித்து ஆடச்சொல்வது போலாகும். சிவானந்த நடனத்துக்குக் காலமும் இடமும் இல்லை. அது ஒயாது நிகழ்ந்த வண்ணம் உள்ளது. அதைப் பின்பற்றாது ஏதோ சில குறித்த புண்ணிய காலத்திலும், சேத்திரத்திலும் மட்டும் பிரார்த்தனையும் தியானமும் செய்வோர் வாழ்க்கையில் வெற்றி பெற்றுப் பேரானந்தம் அடைதல் அரிதாகும். இதைப் பயிலும் போது நேயர்கள் விழிப்புணர்வும் அவதானமும் கொண்டு சதா இருக்கப் பயிலுதல் ஒரு தியான சாதனையாகும்.
விழிப்புணர்வும் அவதானமும் நம்மிடம் போதியளவு இல்லாமையால், நமது தியானத்தை இன்னும் தீவிரப்படுத்தி அவற்றை நிறைவு செய்ய முயற்சிக்கிறோம். இப்பொழுது நாம் பெற்றுள்ள விழிப்புணர்வு ஆற்றலைக் கொண்டு தியான விசாரணையில் ஈடுபடுகிறோம். விசார ஞானத்தின் அவசியத்தை நன்கு விளங்கிக்கொள்கிறோம். மீண்டும் ஒருதரம் நாம் இற்றைவரை செய்த தியானசாதனைகளை நினைவு மீட்டுகிறோம். அவையாவன.
, பத்தி சிரத்தை கொள்ளுதல். 2. சரணாகதி அடைதல். 3. திரோதான சக்தியைக் குறிக்கும் நடராஜனின் ஊன்றிய திருவடியை விட்டுத்
சுத்த சக்தியைக்குறிக்கும் தூக்கிய திருவடியை வழிபடுதல். 4. அதன் பேறாகச் சக்திநிபாதம் ஓரளவு பெற்றுத்தியான விசாரணை செய்தல். 5. விசாரணைக்கு வேண்டிய விழிப்புணர்வும், நடுவுநிலையும் அவதான
ஆற்றலும் பெறும் வழியை நாடுதல்.
28

இந் நிலையில் நமது விழிப்புணர்வையும், அவதான ஆற்றலையும் நிறைவு செய்யும் வண்ணம் மேற்கொண்டு தியான விசாரணை செய்வோம். நடராஜனுடைய தூக்கிய திருவடி சிதாகாசத்தைச் சுட்டிக்காட்டுதல் நாமும் திருவடி சேர்தல் வேண்டும் என்பதற்காக எனத்தெளிகிறோம். சிதம்பரம் காட்டும் தில்லை நடனம் பரமுத்தர்களுக்காகும். நாம் இன்னும் இப் பிறவியிலேயே சீவன் முத்திகூடப்பெறவில்லை. பரமுத்தியைப் பற்றிக் கற்பனை செய்து யாது பயன்? எனவே முதலில் சீவன் முத்தி பெறுவதற்கு வேண்டிய தியான சாதனையைத் தொடர்கிறோம். தில்லை வெளியில் நடராஜன் திருநடனம் புரியும் காட்சியை நாம் பரமுத்தி பெற்ற பின்பு காணலாம். இப் பிறவியிலேயே இப்பொழுதே இங்கேயே அக்காட்சியை முழுமையாக - சிலைகள் சித்திரங்கள் மூலம் அல்லாது நேரடியாகவே, நமது இதயத்திற் கண்டு களிப்பதற்கு வழி இல்லையா? என விசாரணை செய்கிறோம். பக்தி சிரத்தை அதிகரிக்கிறது. திருவடி சேர்ந்த திருநாவுக்கரசு நாயனார் மீண்டும் நமக்கு வழிகாட்டமுன் வருகிறார். முன்பு அவருடைய "முன்னம் அவனுடைய நாமம் கேட்டாள்” என்னும் தேவாரம் நமது பிரார்த்தனைக்குக் கைகொடுத்து உதவியது. இப்பொழுது அவர் அருளிய பிறிதொரு தேவாரம் நமது தியானத்துக்கு வழிகாட்டுகிறது. இதோ அவருடைய அடுத்த தேவாரம் :-
விறகில் தீயினன் பாலிற்படு நெய்போல் மறைய நின்றுளன் மாமணிச் சோதியன் உறவு கோல்நட் டுணர்வு கயிற்றினால் முறுக வாங்கிக் கடையமுன் நிற்குமே !
இத்தேவாரத்தைப் பக்திசிரத்தையுடனும் விழிப்புணர்வுடனும் அவதானமாக ஒதும் போது நாம் தேடிய வழிகாட்டற் பொருள் கண்முன் வருகிறது. விறகில் உள்ள தீயைப் போல் நமது உயிருக்கு உயிராக உள்ள நடராஜனை நீங்கள் எங்கே தேடுகிறீர்கள்? அவன் உங்கள் உள்ளேயே மறைந்து நிற்கிறான். ஆம்! உங்கள் இதயத்துள்ளேயே மறைவாக ஆனந்த நடனம் இடுகிறான். மறைந்துள்ள அவனை வெளிக்கொணர்வதற்கு என்ன செயல் வேண்டும்? என வழிதெரியாது விசனப்படுகிறீர்களா? வேண்டாம் விசனம்; விட்டுத்தள்ளுங்கள். பாலில் மறைந்துள்ள வெண்ணெயைப் பெறுவதற்கு யாது செய்வீர்கள்? அதை மத்தினால் கயிற்றின் உதவி கொண்டுகடைந்து நீங்கள் பெறுவதில்லையா? அதே செயல் முறையை உங்களிடம் மறைந்துள்ள நடராஜனை ஞானக்கண்ணாற் காண்பதற்குச் சாதனை செய்து பாருங்களேன். அச்சாதனையாது? என்பது புரியவில்லையா? அது ஒரு தியான பாவனைமுறையாகும். பால்கடையும் மத்தாக அவன் மீதுள்ள அன்பு உறவைக் கொள்ளுங்கள் மெய்யுணர்வு பெறும் விழிப்புணர்வை மத்துக்கயிறாகக் கொள்ளுங்கள். அவ்வாறு கொண்டு, அன்பு உறவை நன்றாகச் சுழற்றிப்பாருங்கள். (விசாரணை செய்து பாருங்கள்) அப்பொழுது சிதாகாசத்தில் நடமிடும் நடராஜன் உங்கள் இதயத்தின்முன் நின்று ஆடுவதை நிச்சயமாக ஞானக்கண்ணால் (ஊனக்கண்ணால் அல்லாது) காண்பீர்கள்.
இதே கருத்தை நாம் இன்னும் இலகுவானதொரு உதாரணத்துடன் விளங்கிக் கொள்வோம்.
29

Page 24
6 ஆனந்த நடனம்
திருக்கோயிலின் மூலஸ்தானத்தில் உள்ள நடராஜ விக்கிரகத்தைத் திரைச்சேலை மறைத்துள்ளது. நாம் அவ்விக்கிரக ஆராதனை செய்ய வேண்டுமாயின் அத்திரைச்சேலையை நீக்கியே ஆகுதல் வேண்டும். அச்செயலை அவதானமாக விழிப்புணர்வுடன் நோக்கினால் ஒர் உண்மை புலப்படும். மூலஸ்தானத்திரை நீக்கத்தினால் விக்கிரகதரிசனம் புற உலகில் பெறுகிறோம். அத்தரிசனம் ஊனக்கண் தரிசனம் ஆகுமேயன்றி, ஞானக்கண் காட்சியாக அமையாது. அத்தகைய விக்கிரக தரிசனம் பெறும் அடியார்கள், தாம் சிவஞானக் கண்கொண்டு நடராஜ தரிசனத்தை உண்மையாகவே பெற்று விட்டதாக உருக்கொண்டு பேயாட்டம் ஆடுதல் பேதைமையாகும். அது வான்கோழி ஆட்டம் ஆகும்; மயிலாட்டம் ஆகாது. விக்கிரக வழிபாட்டை நாம் ஒருபோதும் இழிவுபடுத்தவில்லை. அது நாம் சத்திய தரிசனம் பெறுவதற்கு வேண்டிய வழிமுறைகறைச் சுட்டிக் காட்டுகின்றதேயன்றி உண்மையான சிவதரிசனம் நேரடியாகவே கொடுப்பதில்லை. இன்னும் ஒரு சுலபமான விளக்கத்தை இவண் தருகிறோம். ஆனந்த நடராஜனின் திருநடனத்துக்கு உரிய இடம் பரவெளியாகும். அது வெறும் பாழ்பட்ட தனி இடமற்ற இடமாகும். அதைச்சூனியம் எனவும் கூறுவர். நமது மனம் சிந்தனைக் குப்பை கூளங்களால் நிறைந்துள்ளது. அங்கு நடராஜன் நடமிட இடமில்லை. நாம் மனதைக் காலி செய்து ஒரு வெளியாக்குவோமாயின் அங்கு நடராஜன் நிச்சயமாக திரு நடனம் புரிவான். மனதைக்காலி செய்ய உதவுவதே செபதியானமாகும்.
ஆலய விக்கிரக தரிசனம் நமக்கு எடுத்துக்காட்டும் சன்மார்க்க நெறியாதெனின் பாசமாகிய திரையை மனத்தினிலிருந்து நீக்காவிடின் நடராஜ தரிசனத்தை முழுமையாகப் பெற முடியாதென்பதாகும். பாசநீக்கத்துக்கு உரிய சிறந்த சாதனை மெய்யுணர்தலே அன்றி விக்கிரக புறப்பூசைகள் அல்ல. மெய்யுணர்தல் பெறுவதற்கு நாம் ஆன்மாவின் இயல்பை முதலில் நன்கு அறிந்து கொண்டு அதற்குத்தக வேண்டிய சாதனை செய்தலாகும். ஆன்மாவின் இயல்பு சார்ந்ததன் வண்ணம் விளங்குதல் என்பதை நாம் பாடசாலையில் பயின்ற மெய்கண்ட சைவ சாத்திரங்கள் மூலம் அறிந்துள்ளோம். அதன் உண்மை விளக்கத்தைச் சரிவரப் பெற்று அப்பொழுது சாதனை செய்யக் கற்றுக் கொள்ளவில்லை. இப்பொழுது திருவருளுடன் கூடிய தியான விழிப்புணர்வு விசாரணை மூலம் உண்மை விளக்கம் பெறுகிறோம். ஆன்மாவைப் பூங்கொடி போன்ற பெண்ணாக - பசுவாகச் சைவசித்தாந்தம் வர்ணிக்கிறது. மல்லிகை போன்ற பூங்கொடி, பற்றுக்கோடு இன்றி நன்கு வளரும் ஆற்றல் உடையதல்ல. அதனால் அதை நாம் பந்தலிட்டு வளர்க்கிறோம். பசுவாகிய ஆன்மாவும் அத்தகையதாகும். பந்தலிட்டு வளர்க்காது அதைக் கொடிய முட்பத்தை மீது படரவிடுவோமாயின் அதன் வளர்ச்சி குன்றிவிடும்.
30

அட்டாங்க சிவ யோகசாதனை, பந்தல் போட்டு மல்லிகைக் கொடியைப் படர்ந்து சுயமாகவே வளர்ந்து பூக்க விடுதல் போன்றதாகும். அட்டாங்க சிவயோக சாதனை செய்யும் பல யோக சித்தர்கள் அதன் மெய்யுணர்தல் பெறாது, திசைதிரும்பி அட்டமாசித்திகள் பெறுவதிலேயே கண்ணும் கருத்துமாக உள்ளனர். அதன்மூலம் தாம் பெற்ற சிவயோக சித்திகளைக் கொண்டு அநேக அற்புதங்களைச் செய்து காட்டிப் பாமர மக்களையும் திசை திருப்புகின்றனர். வெட்டு ஒன்று துண்டு இரண்டுமாகப் பணமும் புகழும் சம்பாதிக்கின்றனர். அற்புதங்களை விட்டுச் சும்மா இருந்து இறைபணி நிற்க அவர்கள் விரும்புவதில்லை. கலியுகத்துக்கு உகந்த நெறி அற்புதங்கள் மூலம் ஞானபோதனை செய்தலாகும் எனப் பிரசாரம் செய்து தமது அற்புதச் செயல்களைக் காட்டுகின்றனர். அற்புதங்களில் மயங்கும் பகுத்தறிவற்ற படித்த மக்கள் கூடத்திசை திரும்பி இறைபணி நிற்றலில் இருந்து தூரவிலகுகின்றனர்.
மனம் பேதலித்துப் புத்தி தடுமாறி அற்புதப் பிரசார ஆற்றலில் திசை திரும்பும் உண்மையான சைவ மக்களுக்குச் சிவஞான தத்துவமேதை மெய்கண்டார் காட்டும் உத்தம நெறியை நாம் இவ்விடத்தில் எடுத்துக் காட்ட விரும்புகிறோம். அந்நெறியானது பொய்யானவற்றைத் தீரவிசாரணை செய்து பொய்யெனத் தெளிதல் பெற்று அவற்றை நீக்கி மெய்ஞ்ஞானம் பெறுதலாகும். அட்டமா சித்திகளும் ஒரு போதும் சிவஞானபோதம் நல்க மாட்டா என்பதைப் படம் பிடித்துக்காட்டும் தாயுமான சுவாமிகள் அருளிய திருப்பாடல் ஒன்று இதோ:-
கந்துக மதக்கரியை வசமா நடத்தலாம்
கரடிவெடம் புலிவாயையும் கட்டலாம்; ஒரு சிங்க முதுகின்மேல் கொள்ளலாம்
கட்செவி எடுத்து ஆட்டலாம்; வெந்தழலின் இரதம் வைத்து ஐந்துலோகத்தையும்
வேதித்து விற்று உண்ணலாம்; வேறுஒருவர் காணாமல் உலகத்து உலாவலாம்;
விண்னவரை ஏவல் கொள்ளலாம் சந்ததமும் இளமையொடு இருக்கலாம் மறறும் ஒரு
சரீரத்திலும் புகுதலாம்; சலம்மேல் நடக்கலாம் கனல்மேல் இருக்கலாம்
தன்னிகரில் சித்தி பெறலாம் சிந்தையை அடக்கியே சும்மா இருக்கின்ற திறமரிது; சத்து ஆகிஎன் சித்தமிசை குடிகொண்ட அறிவான் தெய்வமே!
தேசோமயம் ஆனந்தமே!
31

Page 25
இந்த அருட்பாடலின் பொருள் சுலபமாக விளங்கிக் கொள்ள இயலுமாதலின் இதற்கு விளக்க உரை எழுத வேண்டிய அவசியமில்லை. இதில் இருந்து நாம் கிரகித்து உணரவேண்டியது யாதெனின், சிவனடியார்கள் அட்டமாசித்திகள் பெறுவதை விடச்சும்மா இருந்து சிவதரிசனம் பெறும் சிவக்கலையையே அரிதாகக் கருதி அனுட்டித்தனர் என்பதாகும். அரியவற்றைச் செய்தல் தான் பெரியோரின் இயல்பு, இன்னும் வள்ளுவன் வாக்கை உணர்ந்து அதற்குத்தக நிற்போமாக! திருமூலரும், மெய்கண்டாரும், சைவசமய நாயன்மார் நால்வரும் காட்டிய சைவ சித்தாந்த நெறியைப் பின்பற்றுதல் எதற்கு? தில்லை மன்றுள்வெளியில் திருநடனம் புரியும் தியாகராஜன் காட்டும் சைவசமய நெறியே சன்மார்க்க நெறி என்பதைத் தெளிவோமாக! தாயுமானவர் அருளிய வண்ணம் "நாம் சமயாதீதப் பழம் பொருள் கைவந்திவந்திடச், சாதனை செய்தல் வேண்டுமேயன்றிப் பொய்வந்து உழலும் பிறசமயநெறி புகுதாது இருத்தல்” அவசியமாகும்.
தாயுமானவடிகளார் பரம் பொருளாகிய சிவத்தைச் சமயாதீதப் பழம் பொருள் எனக்குறிப்பிட்டது எதற்காக? என்பது ஆய்வுக்குரியதாகும். சைவசித்தாந்தம் ஒரு சமயமாகப் புலப்பட்ட போதும், அதன் மறைபொருள் சமயத்தைக் கடந்த (அதீதமான) சிவதத்துவத்தைப் பற்றுக் கோடாகக் கொண்டு சமயாதீதப்பழம் பொருளைத் தன்னகத்தே அமையப்பெற்றுள்ளது. தில்லை மன்று பரவெளி காட்டும் மறைஞானம் சமயாதீதமாகும். சமயாதீத நிலை அடைந்தாற்றான் நாம் பரிபூரணமாகச் சமயாதீதப்பழம் பொருளைத்தரிசிக்கலாம். வெறும் சமயப்பற்றும், தீவிர அபிமானமும் கொண்டு செயற்பட்டால் நாம் சமயாதீதநிலை அடைதல் அரிதாகும். அப்படியாயின் சைவசமயம் என ஒன்று எதற்கு? என்னும் வினா எழுகின்றது. தடியைக் கொண்டு உயரப்பாயும் ஒரு விளையாட்டு வீரனுக்கு அவன் உபயோகிக்கும் தடி ஒருபற்றுக்கோடாக அமைகிறது. உயர்கோட்டைத் தாண்டும் போது அவன் தடியைக் கைவிட வேண்டியதுதான்- தடியைக் கைவிடாது உயர் கோட்டைத் தாண்டுதல் அரிதாகும். சைவ சித்தாந்தம் காட்டும் முப்பத்தாறு தத்துவங்களிலும் முப்பத்தொரு தத்துவங்களையும் தாண்டித்தில்லை வெளிக்கோட்டை அடையும் மட்டும் அதாவது சிவதத்துவத்தை அண்மிக்குமட்டும் சைவசமயம் ஒரு பற்றுக் கோடாக உள்ளது. எல்லைக் கோட்டைத் தாண்டும் போது நாம் சுயமாகவே சமயப்பற்றைக் கைவிட நேரிடும். சிவதத்துவ நிலை அடையும் போது நாமும் தாயுமானவனைப் போன்று "யாது சமயத்திலும் அபிமானம் என் கொல்? சித்த மிசைகுடி கொண்ட சிவமே' எனத் தியானிக்கின்றோம். பிரகிருதிதத்துவம் அசுத்தமாயா தத்துவம், வித்தியா தத்துவம் ஆகிய முப்பத்தொரு படிகளிலும் நின்று சாதனை செய்வோர் சைவ சமயத்தை ஒருபோதும் கைவிடுதல் கூடாது. சிவதத்துவத்தில் உள்ள முழுமையான மெய்யுணர்தல் பெறும் வரை சைவசமயப் பற்றுக்கோடு அவசியமாகும். மெய்யுணர்தல் பெற்ற திருவள்ளுவர் சமயம் கடந்த திருக்குறளைப் படைக்கும் ஆற்றல் பெற்றமை நமது கவனத்துக்கு உரியதாகும்.
32

இனி ஆனந்த நடராஜனின் திரு உருவம் நமக்கு எவ்வாறு சமயாதீத நிலை அடைவதற்கு வழிகாட்டி உதவுகின்ற தென்பதைக் கவனிப்போம். இதற்கு முன்பு திருவடிகள் காட்டும் மறைஞான சக்தி தத்துவத்தைப்பற்றி ஆய்ந்தறிந்தோம். இப்பொழுது விழிப்புணர்வுடன் அவனுடைய திருக்கரங்களை அவதானிப்போம். அவற்றுள் ஒருகரம் அபயம் கொடுப்பதை உணர்ந்து நாம் அவனிடம் சரண் அடைந்தோம். மறுகரம் தூக்கிய திருவடியைச் சுட்டிக் காட்டுவதை அவதானிக்கிறோம். சுட்டிக் காட்டப்படும் தூக்கிய திருவடி புலப்படுத்தும் வழியில் நாம் சாதனை செய்து சமயாதீதமான சிவதத்துவ நிலை அடைய முற்படுகிறோம். அதற்கு ஆதாரமாக அவனுடைய இரு மறுகரங்களிலும் உள்ள உடுக்கையும் அக்கினியும் எடுத்துக் காட்டும் தத்துவ விளக்கம் பெற முற்படுகிறோம். உடுக்கை எனும் இசைக்கருவி, நாததத்துவத்தையும் அக்கினி எனும் சோதி விந்து தத்துவத்தையும் எடுத்துக் காட்டுகின்றன. இவை இரண்டையும் வெவ்வேறாகக் காண்பதை விட ஒன்றாகத் தரிசித்தலே சிறந்த மார்க்கம் என்பதைத் தெளிகிறோம். கணபதியும் முருகனும் ஒம் எனும் மூலமந்திரத்தில் ஒன்றாகக் காட்சி அளிக்கின்றனர். ஓங்காரமந்திரத்தை ஒதிய வண்ணம் மெளன தியான சாதனையில் ஈடுபடுகிறோம். இச்சாதனை மனச்சார்பற்றுச் சிந்தித்தல், தெளிதல், சமாதி கூடுதல் என்னும் மூன்று அம்சங்களைக் கொண்டதாக அறிகிறோம். அத்துடன் நாதம் விந்துவாகிய ஒலி ஒளித்தத்துவம் மனஇந்திரியங்களுக்குப் புலப்படும் தூல நிலையிலும் இவற்றுக்குப் புலப்படாத சூக்கும (நுண்ணிய) நிலையிலும் உள்ளன என்பதைத் தெளிகிறோம். உலகியலுக்கு ஆதாரமாக உள்ள தூல நாத விந்து பொதுக்கல்விக்கும், கலைவிஞ்ஞானத்துக்கும் உதவும் சாதனங்களாக உள்ளன. பொதுக்கல்வியும், கலைவிஞ்ஞானமும் நாம் போதுமான அளவு பெற்றுள்ளோம். ஆனால் ஆன்மீக இயலுக்கு இன்றியமையாத சூக்கும நாதவிந்து மூலம் பெறப்படும் சிவஞான போதத்தைப் போதியளவு பெறாது சங்கடப்படுகிறோம்.
எமது சங்கடம் நீங்கும் பொருட்டு, மீண்டும் தூக்கிய திருவடியைப் பிரார்த்தனை தியானம் செய்து அவன் அருள் கொண்டு ஓங்கார மந்திரத்தின் சூக்குமமான மறைபொருள் உணரும் பொருட்டு சிந்தித்தல், தெளிதல், சமாதிகூடுதல் ஆகிய சாதனை புரிவதில் முனைகிறோம். புறக்கண்கொண்டு புறப்பூசைகள் செய்து ஆலய தரிசனம் பண்ணுவதை விட்டு அகக்கண் கொண்டு அந்தர்யாகபூசை செய்து உண்மையான ஆலயதரிசனம் பண்ணுவதையே பெரும் பாக்கியம் எனக் கருதுகிறோம். ஊனக்கண்பார்வை நீங்கி மறைஞானக்கண் காட்சி பெறுவதில் சித்தி எய்தி வருகிறோம். நினைப்பற நினைத்தல் தான் தியான சாதனையின் மூலவேர் என்பதை முன்பே ஆய்ந்து விளங்கியமையால் இப்பொழுது சரிவரச் சிந்தித்தல் செய்ய முடிகிறது. இத்தகைய சிந்தனைக்கு அனுசரணையாகச் சிவோகம் பாவனையை மீண்டும் செய்து பயில்கிறோம். அதனால் அவன் அருளே நம்முள் நீங்காது நின்று நல்லுதவி செய்கிறது. புற உலகில் உள்ள மதகுருமார்களின் போதனைகள் நமக்குத்
33

Page 26
தேவைப்படுவதில்லை. சிவோகம் பாவனையுடன் ஒங்கார மந்திரத்தையும் சேர்த்து ஒம் சோகம் எனத் தியான வேளையில் தொடந்து மெளனமாக உச்சரித்துப் பல வருடங்களாக வருகிறோம்.
இதன் பேறாக மனதில் ஓர் உள்ளொளித்தாக்க மின்வெட்டுப் போலப் புலப்படுகிறது. அது வாக்கும், வடிவும் முடியும் இல்லாது திகழ்வதாகும். தூல நாம ரூபநாதவிந்து - அதாவது செவிக்கு கேட்பதும், கண்ணுக்குப் புலப்படுவதும் அல்லாதனவாகும். இந்த உள்ளொளித் தாக்கத்தை சைவசாத்திரங்கள் சக்தி நிபாதமெனக் குறிப்பிடுகின்றன. அதன் பலாபலன் தெளிதல் ஞானமாக மிளிர்கின்றது. இதை மறைஞானம் என அழைத்தல் சைவ மரபு ஆகும். மறைஞானத்தை மேல் நாட்டுத் தத்துவஞானிகள் மிஸ்ரிசிஸிம் - MySticism - எனக் கூறுவர். மறைஞான விளக்கம் மட்டும் தனிய அளிக்கும் அநேக நூல்கள் ஆங்கிலத்தில் உள்ளன. அத்தகைய சைவ சித்தாந்த மறைஞான விளக்க ஆய்வு நூல்கள் தமிழில் இல்லாமை குறைபாடாகும். தேவார திருவாசகங்களும், மெய்கண்ட சாத்திரங்களும் மறைஞானம் நிறைந்துள்ளன. மனவாசக விளக்கம் மட்டும் அவற்றுக்குப் பெறுவதன் மூலம் நம்மால் மறைஞானம் அடைதல் அசாத்தியமாகும். சைவசித்தாந்த மனவாசக விளக்கநூல்கள் குப்பையாகச் சந்தையில் குவிந்துள்ளன. அவற்றைப் பயின்று வெறும் பாண்டித்தியம் பெற்றவர்கள். மறைஞானச் சைவர்களாக அல்லாது சைபர்களாக சூனியமாக உள்ளனர். சைவசமயநீதி நெறி கிரியா விதி விளக்க நூல்களை மிகவும் சிறப்பாகப் படைத்தளித்த ஆறுமுக நாவலர் கூட, மறைஞான அகப்பொருள் விளக்கம் அளிப்பதில் அவ்வளவு அக்கறை எடுத்துள்ளதாகப் புலப்படவில்லை.
சிவன் கரங்களில் விளங்கும் நாத விந்துவின் விரிவான விளக்கத்தை நாம் மறைஞானம் மூலம் பெறக்கூடியதாக உள்ளது. சார்பற்ற சிந்தனையால் நாம் பெறும் தெளிதல் ஞானமே மறைஞானம் என உணர்கிறோம். தெளிதல் ஞானத்தை விஞ்ஞானிகள் ஹேர் மோனியூட்டிக் சயன்ஸ் - (Hermeneutic Science) எனக் கூறி வர்ணிக்கின்றனர். தெளிதல் ஞானம் நேரடியாகவே நமக்குச் சிவஞான போதத்தைக் கொடுக்காவிடினும், அதிற் கூறப்படும் செயல் முறை உத்திகள் வேண்டிய வழிகாட்டியாக உள்ளன. அதேபோல நவீன விஞ்ஞான பெளதிக இயல், தெளிதல் ஞானம் பெறுவதற்கு வழிகாட்டுகின்றது. பெளதிக இயலை நாம் விழிப்புணர்வுடனும் அவதானத்துடனும் கவனிப்போமாயின் வழிகாட்டல் முறை புலப்படும். ஒலியிலும் பார்க்க ஒளி சக்தி வாய்ந்ததாக இயற்கையில் தென்படுகிறது. நாம் கேட்கக் கூடிய தூல ஒலி வியாபித்து வான்வெளியில் வியாபிக்கக் கூடியதல்ல. ஆனால் அதன் அதிர்வை மின்சக்தி மூலம் ஒளிக்கதிர்களுடைய அதிர்வு நிலைக்கு உயர்த்தி விட்டால் அது வியாபிப்பதை அறிகிறோம். மனிதனுடைய செவியிலும் பார்க்கக் கண் இருபது மடங்கு கூடிய சக்தி கொண்டுள்ளது. ஒலி மூலம் நாம் பெறும் சிந்தனை
34

அலைகளை ஒளியின் நிலைக்கு உயர்த்தி வியாபகச் சிந்தனை ஆக்கலாம். வியாபகச் சிந்தனையே தெளிதல் ஞானமாக உருமாற்றம் பெறுகிறது. இவ்வுண்மையைத் தெள்ளத் தெளிய உணர்ந்த திருவள்ளுவர். விஞ்ஞானம் வளர்ச்சி அடையாத இரண்டாபிரம் ஆண்டுகளுக்கு முன்பே,
உள்ளுவதெல்லாம், உயர்வுள்ளல் மற்றது தள்ளினும் தள்ளாமை நீர்த்து"
என விளக்கியுள்ளார். சிவன்கைகளில் உள்ள உடுக்கையும் அக்கினியும் இவ்வுண்மையை ஆதிகாலம் தொட்டே எடுத்துக் காட்டிய வண்ணம் உள்ளன. வள்ளுவர் கூறிய செய்யுளின் உரைநடையை ஆய்ந்து தெளிதல் நமது சாதனைக்கு உறுதுணையாகும். அதன் உரை நடை இதோ:- ஊக்கம் கொண்டு உயர்வு பெறச் சிந்திக்க வேண்டும் என்பதெல்லாம் உயர்ந்த நல்ல இறைபணி நிற்கும் காரியத்துக்காகத்தான். மற்றும் கீழ்த்தரமான பற்றுக்களுக்கு ஊக்கம் வேண்டியதில்லை. ஏனெனில் கிழான சிந்தனைகளை நாம் விலக்க முயற்சித்தாலும் அவை விலக்க முடியாதபடி இயல்பாகவே மனித பிறவியில் இருக்கின்றதனால் என்க! இக்குறட் கருத்துக்கள் நமக்கு 1936ம் ஆண்டு தொடக்கம் வழிகாட்டிய வண்ணம் உள்ளன. வாக்குமூலம் பெற்ற இக்கருத்துக்களுக்கு ஆனந்த நடராஜனின் காட்சி மூலம் பூரணமான தெளிவு இப்பொழுது பெறுகிறோம். அதற்கு விஞ்ஞான, பெளதிக இயல் உத்தம வழிகாட்டியாக உள்ளது. இதை வாசக நேயர்களுக்கும் அறிவித்து அவர்களையும் இதனைப் பகிர்ந்து செபதியான சாதனை செய்து சுயமாகவே சிவக்காட்சி மூலம் மறைஞானம் பெறவழிகாட்டும் பொருட்டே இச்சிறுநூல் வெளிவருகின்றது. இதை வாசிப்பவர்கள் இதன் மூலம் நேரடியாகவே மறைஞான போதம் பெறுவார்களென நாம் தற்பெருமைத்தம்பட்டம் தட்டவில்லை.
ஏற்கனவே பெளதீக இயல் அணுசக்தி விளக்கம் சைவசித்தாந்த இருமை வகைத்தெளிதலுக்கு எவ்வாறு உரம் ஊட்டுகின்றதென்பதை விசாரணை செய்து அறிந்தோம். அது தெளிதல் இருவினை ஒப்புச் சாதனைக்குச் சார்புக் கொள்கையைக்கைவிட வேண்டிய அவசியத்தை வலியுறுத்துவதை உணர்ந்தோம். இப்பொழுது பெளதிக விஞ்ஞான அணுசக்திப் பொதிவைப்புக் கொள்கை எவ்வாறு நமது தெளிதல் ஆற்றலுக்கும் அதனைப் பாதுகாப்பதற்கும் உதாரண விளக்கம் அளிக்கிறதென்பதைக் கவனிப்போம். அணுசக்திப்பொதி வைப்புக் கொள்கையை ஆங்கிலத்தில் குவான்ரம் தியறி (Quantam theory) என அழைப்பர். அணுவுக்குள்ளே அது இயற்கையாகவே உற்பத்தியாகிய பொழுதே, மின்சக்தி பொதி உருவத்தில் அமைக்கப்பட்டுள்ளது. குவான்ரம் என்ற சொல் விசேடமாகச் சக்திப் பொதியைக் குறிப்பிடுகிறது.

Page 27
அணுவின் உள்ளே இருக்கும் எலெக்திறோன் பொருளின் இயக்கத்துக்குச் சக்தி அவசியமாகும். அச்சக்தி அதன் உள்ளேயே பொதி வடிவில் அமைக்கப்பட்டுள்ளது. எலெக்திறோனின் இயக்கம் மூன்றுவட்ட எல்லைக் கோட்டில் புறற்ரோன் எனும் மையப் பொருளைச் சுற்றி வருவதாக அமைந்துள்ளது. எலெக்திறோன் இந்த மூன்று வட்ட எல்லைக்கோடுகளிலும் தேவைக்கேற்பப்பாய்ந்து பாய்ந்து இயங்குதல் ஒர் அற்புதமான நடனமாகும். அதுமுதலாவது எல்லைக் கோட்டுக்குள்ளேயே மெதுவாகச் சாதாரணமாக இயங்குகிறது. அதற்கு ஏற்படும் புறத்தாக்கங்களுக்கு ஏற்ப அது மற்றும் இரு எல்லைக்கோடுகளுக்கு பாய்ந்து மிகவும் வேகமாக இயங்குகிறது. அதனால் அதன் பொதியிலுள்ள சக்தி அதிகமாக விரயம் ஆகிறது. அவ்வாறு இழக்கப்படும் சக்தியை அது எவ்வாறு ஈடு செய்கின்றது என்பதுதான் நமது ஆய்விற்குரிய விடயமாகும். இந்த ஆய்வு விளக்கம், நமது ஆன்மீக சாதனைக்கு மிகவும் சிறந்த வழிகாட்டியாக உள்ளது. ஆகவே வாசக நேயர்கள் இதை இக்கட்டத்தில் அதிக கவனத்துடன் படித்தல் நன்றாகும்.
அணுவில் உள்ள எலெக்திறோன் தனக்கு வேண்டிய சக்தியை இயற்கையாகவே பெற்றுள்ளது. அச்சக்தி இழக்கப்படும் நேரத்தில், அதுதானாகவே இழக்கப்பட்ட சக்தியை இயற்கையிலிருந்து சேமித்துத் தனது பொதிக்குள் வைத்திருக்கும் சுய ஆற்றல் பெற்றதாகும். அதனுடைய இயக்கம் சுதந்திரமாக உள்ள பாயும் இயல்பு பெற்றுள்ளதாகும். இயற்கை ஒழுங்காகவும், அமைதியாகவும் இயங்குகின்றது என்னும் சிலருடைய கொள்கையை அதன் திடீர்ப்பாய்ச்சல்கள் பொய்யாக்குகின்றது. நாமும் நமக்கு வேண்டிய ஆன்மீக சக்தியைப் பிறக்கும் போதே இறை அருளால் அமைக்கப்பெற்றுள்ளோம். எனவே நாம் “என்றைக்குச் சிவன் கிருபை கிடைக்குமோ?’ என ஏங்கிக் கவலை கொண்டு முகாரி பாடவேண்டியதில்லை. நம்மிடமே சிவசக்தியைப் பெறும் ஆற்றல் உள்ளதென்பதைத் தெளிந்து கொள்வோம். நாம் நமது சுதந்திரத்தை இழந்து பூசகர்களைக் கொண்டு அர்ச்சனை செய்வித்து ஆன்மலாபம் பிறர் மூலம் பெறலாம் என நினைந்து ஏமாற வேண்டியதில்லை. அணுவுக்கு வேண்டிய சக்தியை அதனுள்ளேயே வைத்த இறைவன் நமக்கு வேண்டிய ஆற்றலை நம்மிடமே அமைக்காது விட்டிருப்பானா? இல்லவேயில்லை.
அணுவை ஆணவம் பீடிப்பதில்லை. அதனால் அதன் சக்தி பாதிக்கப்படுவதில்லை. நம்மை ஆணவம் அநாதியே பீடித்துள்ளதால் நமது சக்தி மறைக்கப்பட்டுள்ளது. அதை நீக்கி நமது சுய சக்தியை வெளிக்கொணர்வதற்கு வேண்டிய சாதனா முறைகளைச் சிவானந்த நடனம் நமக்கு புலப்படுத்துகின்றது. விசேடமாக நடராஜனுடைய கரங்களில் உள்ள உடுக்கையும், அக்கினியும் அவற்றை வெளிப்படுத்துகின்றன. மூன்று பரிமாணங்களுக்குள் ஒலிக்கும் உடுக்கை நாதமும்
36

பிரகாசிக்கும் அக்கினி ஒளியும் நம்மிடம் நான்காவது பரிமாணத்திலும் புலப்படுதல் அவசியமாகும். இன்றேல் நாம் சிவஞானபோதம் பெறுதல் இயலாததாகும். காதுக்குக் கேளாத மெளன ஒலியும், கண்ணுக்குப் புலப்படாத ஒளியும் உண்டென்பதை நவீன பெளதிக இயல் நிரூபிக்கின்றது. கண்டு கேட்டறிய முடியாததை நாம் தரிசிப்பது எப்படி? இதற்கு வேண்டிய விடையைச் சைவசன்மார்க்கம் போல் வேறு எந்த மதமும் விஞ்ஞான அளவை இலக்கண ரீதியில் கொடுப்பதாகத் தெரியவில்லை. ஆனந்த நடராஜனின் திரு உருவம் இறைவனுடைய கேளாமற் கேட்கும் இயல்பையும், காணாமற் காணும் தன்மையையும் நாமும் பெறுதல் வேண்டும் என்பதற்காகவே அற்புதமாக அமைக்கப்பட்டுள்ளது. நாமோ ஊனக்கண் காது மூலம் அவனுடைய பெருமைகளைப் பாடிக்கேட்டுப் புகழ்வதிலும், ஏராளமான பணம் செலவழித்துப் பூசாரிகளைக் கொண்டு அபிடேங்களும், அருச்சனைகளும் செய்வித்து அவற்றைக் கண்டு மனக்களிப்பு எய்துவதிலும் காலம் கடத்துகிறோம். இச்செய்கைகளினால் பணமும் சக்தியும் விரயமாகின்றதே அன்றி, ஆணவ மறைப்பு நீங்குவதில்லை. விரயமாகும் ஆன்மசக்தியை அணு எலெக்திறோன் போல மீளச்சுயமாகவே பெற இயலாது தவிக்கிறோம். இந்நிகழ்ச்சி நமது வாழ் நாட்களில் முடிவில்லாது தொடர்கின்றது. இதற்கு ஒரு முடிவு, ஆனந்த நடராஜ தத்துவத்தைப் புறப்பொருள் நீக்கி மறைபொருட்தெளிவு பெற்று உரிய சாதனை செய்வதிலே தான் தங்கி உள்ளது.
நடராஜனுடைய கரங்களைவிட்டுச் சிரசை நோக்கி நமது செபதியானத்தைத் தொடர்கிறோம். அதற்கு அனுசரணையாகப் பஞ்சாட்சர மந்திர உச்சாடனத்தை மேற்கொள்கிறோம். அதை எவ்வாறு உச்சரிக்க வேண்டும்? எனும் விபரத்தை முன்பே சிவஞான முனிவர் அருளிய சிவஞானபோதமாபாடியத்திலிருந்து கற்றுள்ளோம். அதை நினைவு மீட்டி நாம் இப்பொழுது அடைந்துள்ள பக்குவ நிலைக்கேற்றவாறு "நமசிவாய" என்பதை மாற்றி அமைத்துக் கொள்கிறோம். அதாவது சரியை நிலையில் உள்ளோர் நமசிவாய என்றும், கிரியை நிலையில் உள்ளோர் அதன் எழுத்து வரிவை மாற்றிச் "சிவாய நம” என்றும்; யோக நிலை அடைந்தோர் ஐந்து எழுத்துக்களை மூன்றாகக் குறைத்து 'சிவாய' எனவும் ஞானசாதனை செய்வோர் மூன்றெழுத்துக்களை இரண்டாகக் குறைத்து 'சிவா” என்றும் மெளனமாக உச்சரித்தலாகும். ஐந்து எழுத்துக்களும் குறிக்கும் பொருளை உணர்ந்து உச்சரித்தல் சிறப்பாகும். தனித்தனியே ஒவ்வொரு எழுத்தும் குறிக்கும் பொருள் இதோ.
சி - கலப்பற்ற தனிப்பரம்பொருள் - சிவம் வா - கத்தசக்தியாகிய பராசக்தி - உமை ய - சார்ந்ததன் வண்ணம் விளங்கும் - ஆன்மா ந - ஆன்மாவைப் பிடித்த மூலமலம் - ஆணவம் ம - இருவினையுடன் கூடிய - மாயை

Page 28
நாம் இப்பொழுது மெளன நிலையிலிருந்து சிவசக்தியை மட்டும் சிவஞானபோத உள்ளொளி பெறும் பொருட்டுச் “சிவசிவ” எனும் மூல மந்திரத்தை உச்சரித்த வண்ணம் நடராஜ விக்கிரகத்தின் முகத்தை உற்று அவதானிக்கிறோம். அத்திருமுகத்துக்கு ஒளி ஊட்டுவது கண்களாகும். அவருடைய முகக் கண்கள் இரண்டும் சந்திரனைப் போன்று தண்ணொளி பரப்புவதைக் காண்கிறோம். இவ்விருகண்களைவிட, அவருடைய நெற்றியில் இருபுருவங்களுக்கும் இடையே இன்னும் ஒரு கண் இருப்பது புலப்படுகிறது. அது சூரியனைப் போல எமது கண்களைப் பறிக்கின்றது. மிகவும் கூசச் செய்கின்றது. அதனால் நமது சுட்டறிவு சூரியன் முன்னுள்ள மின்மினியின் ஒளிபோல் மறைகின்றது. அதை நேருக்கு நேர் நோக்கும் போது கண்ணைப் பறிக்கின்றது. அதன் பேரொளியை கொண்டு பிறபொருள்களை நோக்கும் போது அவையாவும் ஐயம் திரிபு அற உண்மையாகப் பளிச்செனப்புலப்படுகின்றன. என்ன ஆச்சரியம் என்ன அற்புதம்! எப்பொருள் எத்தன்மையதாகினும், அப்பொருளின் உண்மையான இயல்பைக் காணும் மெய்யுணர்தல் பெறுகிறோம். அப்பேறாகவே இச்சிறுநூல் வெளிவருகின்றது.
சிவசிவ என ஓதியபடி நடராஜனின் அகண்டாகாரமாகிய நெற்றியைக் கவனிக்கிறோம். அதில் வெண்ணிறு துலங்குவதைக் காண்கிறோம். அவ்வெண்ணிறு நாம் அணியும் திருநீறு போலத்தென்படவில்லை. அது எந்நீறு என விசாரணை செய்கிறோம். அதைக்கண்டு பிடித்து உறுதி செய்வதற்குத் திருஞானசம்பந்த சுவாமிகள் அருளிய முதற் தேவாரம் துணைக்கு வருகிறது. ஆம் அது காடுடைய சுடலைப் பொடி என்பதை உணர்கிறோம். இதை அருளிய ஞானசம்பந்தர் இதன் மறைஞானப் பொருளை விளக்கவில்லை. இதை வழுவற விளங்கி இதற்குத்தக நிற்க விழைகிறோம். சுடலை என்பது மனித உடலைத் தகனம் செய்யும் இடமாகும். தகனம் செய்யப்பட்ட இறந்த மனித உடலின் சாம்பரே சுடலைப்பொடியாகும். சுடலையை அசுத்தமான இடம் எனக்கருதும் பிராமணர்கள், முடியான மரணச் சடங்கு செய்வதற்கு அங்கு செல்ல மாட்டார்கள், அசூசம் எனக் கருதப்படும் சுடலையில் நடராஜன் ஊர்த்த தாண்டவம் எல்லை இல்லாது ஆடிக்கொண்டே திகழ்கிறான்.
சுடலையைப்பற்றியும், சுடலைப்பொடியைப் பற்றியும் நாம் இந்நேரம் மறைஞான விளக்கம் பெறும் பொருட்டு நுட்பமாக ஆய்வோம். பிணத்தைச் சுட மயானத்துக்கு செல்வோர் ஒன்று கூடிச் சுடலை ஞானம் பேசுதல் வழக்கமாகும். அவர்களுடைய சுடலை ஞானம் அத்துடன் நின்று விடுகிறது. அவர்கள் வீடு சென்று நீரில் மூழ்கிச் சுடலைஞான நினைப்பே ஒழிந்து விடுகிறார்கள். பாமரமக்களிடம் சுடலைஞானம்

ஒருகேலிக் கூத்தாக உள்ளது. நடராஜனே! உனது சுடலைக் கூத்து நமது உள்ளத்தில் ஒரு கேலிக்கூத்தாக ஆகிவிடக்கூடாது எனப் பிரார்த்தனையும் சிவசெபதியானமும் தீவிரமாகச்செய்த பின்பு ஆய்வை மேற்கொள்கிறோம். தியான ஞான விசாரணை மூலமே சுடலை ஞானத்தின் உண்மையான மறைஞானப் பொருளைச் சரிவரச் சுயமாகவே தெளிந்து கொள்ளலாம் என்பதை உணர்கிறோம். வாசக நேயர்களிடமும் இத்தெளிவு பொலிதல் வேண்டும் எனப் பிரார்த்திக்கிறோம்.
நடராஜன் புரியும் ஊர்த்த தாண்டவம் இருவகைப்படும். ஒன்று நுதல் விழித்தாண்டவம் மற்றது நுதல் கால் தாண்டவம் . நுதல் விழித்தாண்டவம் அவன் முகக்கண்வாயிலாக ஞானத்தீப்பொறிகளை உயிர்ப்பித்து முப்புரத்தை எரித்தும், ஆறுமுகனையும், முருகனையும் அவதரிக்கும் படி செய்தும் உலகுக்குக் காட்டியமையாகும். நுதல் கால் தாண்டவம், சிவன் காளியை நடனத்தில் வென்றமையையும் முயலகனை நசித்து எரித்து அவனுடைய சாம்பரைத் தனது நெற்றியில் அணிந்து கொண்டமையையும் குறிப்பிடுகிறது. இங்கு குறிக்கப்படும் சம்பவங்கள் சிவபுராணங்களில் இருந்து எடுக்கப்பட்டனவாகும். இலக்கியரசனையுடன் புராணக் கதையை ரசிப்பதில் நாம் எவ்விதமான கவனமும் செலுத்துவதில்லை. அதன் மறைஞான மெய்ப்பொருள் காண்பதிலேயே கண்ணும் கருத்துமாக உள்ளோம். தேவையற்ற ஆய்வுகளில் ஈடுபட்டு நமது மறைஞானத்திசையை வேறுவழியில் திரும்ப விடாது காத்தருள்வது நடராஜனின் கருணையேயாகும். அதற்கு நன்றி நவிலத்தெரியாது ஆனந்தக் கண்ணிர் சொரிகிறோம்.
இனி நுதல் கால் தாண்டவ மறைபொருளை உணர்ந்து கொண்டு பின் நுதல் கண்தாண்டவ உண்மை விளக்கத்துக்கு வருவோம். காளி என்பவள் தூய நுண்மாயையுடன் சிவசக்தி தொடர்புற்று நிற்கும் சிவதத்துவ நிலையை உருவகப்படுத்திக் காட்டுபவள் ஆவாள். அவள் சிவனின் பாதியாக உள்ள உமாதேவி அல்லள் என்பது மறைபொருளாகும். தூயமாயை சிவசக்கியுடன் தொடர்புற்ற போது அதற்குச் சிவனுடைய ஆற்றல் இல்லை என்பதை எடுத்துக்காட்டுவதே சிவன் நுதல் கால் தாண்டவத்தில் காளியை வென்றமையின் நோக்கமாகும். காளிக்குப் போட்டியாக ஆடியதாண்டவத்தில் சிவன் தனது ஒரு காலை நன்றாக மடக்கி கழுத்திற் போட்டுக்கொண்டு, மறு ஒற்றைக் காலில் பாய்ந்து பாய்ந்து ஆடியமை அற்புதமாகும். காளியால் அவ்வாறு செய்ய இயலாது தோல்வியைத் தழுவினாள். இதன் மறைபொருள் யாது? என்பதை விழிப்புணர்வுடன் கவனிப்போம். விண்வெளியில் உள்ள நவக்கிரகங்களை உற்று நோக்கும் போது அவைகளுடைய
39

Page 29
இயக்கத்தில் எவ்விதமான பாய்ச்சல்களும் தென்படுவதில்லை. அவை ஒரு அற்புதமான ஒழுங்கு நியதிக்கு உட்பட்டு அமைதியாகவே சக்கரவடிவில் இயங்குகின்றன. நவக்கிரகங்கள் வீடு மாறும் போது உரிய காலத்தை மீறி என்றும் பாய்வதில்லை. இதைக் காணும் நாம் "இயற்கை பாய்வதில்லை. அதன் இயக்கம் யாவும் ஒழுங்காக உள்ளது.” என நினைக்கிறோம். ஒழுக்கமான மனக்கட்டுப்பாடு மூலமே சிவன் அருளை முழுமையாகப் பெற முயல்கிறோம். இந்த நினைவையும் நம்பிக்கையையும் சிதற அடிக்கின்றது சிவனுடைய நுதல் கால் தாண்டவத்தில் உள்ள பாய்ச்சல் நேயர்களே! இதன்மறை பொருள் நன்கு புரிகிறதா? பாய்ச்சல் மூலமே நாம் மறைஞானம் பெறுகிறோம். அது ஒரு திடீர்ச்சம்பவமாகும்.
அவசரப்படவேண்டாம். நமது ஆய்வைத் தொடர்ந்து நடுவு நிலையிலிருந்து விழிப்புணர்வுடன் படியுங்கள். எழுத்தாளரை விட்டுப் பாய்ந்து தாண்டவமாடும் சிவனே கதியெனச் சரண் அடைந்து இதன் உண்மை விளக்கம் பெறும் ஆற்றல் உங்களிடம் உண்டெனும் நம்பிக்கையுடன் நீங்களும் எழுத்தாளரைப் போலச் சொற்பநேரம் சிவசிவ! எனச் செபதியானம் செய்து கொண்டு பயிலுங்கள். நிச்சயமாகவே மெய்யுணர்தலும் முழுமையான உண்மை விளக்கமும் பெறுவீர்கள். இது சத்தியம்! அரைகுறையாக இவற்றை நாம் பெற்றிருப்பதனாலேயே நாம் வாழ்க்கையில் மயக்கமும் சந்தேகமும் இடர்ப்பாடும் அடைகிறோம். சிவசக்தி தூய மாயையுடன் தொடர்புறும் போது காளிதேவி உருவாகிறது. சிவதத்துவமாக விளங்குகிறாள். பிரகிருதிமாயாசக்தி ஆன்மாவை ஆட்கொண்டு ஆட்டிப்படைக்கும் போது ஆதியே ஆணவத்தால் பீடிக்கப்பட்ட ஆன்மா இருவினையில் மதிமயங்கி இயங்குகின்றது. ஆன்மாவின் இந்நிலையை உருவகப்படுத்திக் காட்டுபவன் முயலகனாகும். குறுகிய கொள்கையும் இருவினைச் செயலும் கொண்டு விளங்கும் குள்ளன் முயலகனாகும். அவன் பிரகிருதி மாயாதத்துவத்தின் பிடியில் சிக்கி மனோசக்தியைச் சிவசக்தி எணமயங்கி முயல்பவன். அவனைச் சிவன் நசிப்பது கொல்ல அல்ல. பொல்லாத வல்வினையைப் போக்குவதற்காக என்பதை மறைஞானம் மூலம் உணர்கிறோம். நடராஜ நடனத்தின் முக்கிய கூறாகிய நுதல் கால் தாண்டவத்தின் மறைபொருளை நிறைவாகத் தெளிந்து கொள்கிறோம்.
இத்தெளிவுடன் நமது சிவசெபதியான விசாரணையைத் தொடர்கிறோம். சுடலையில் தாண்டவம் ஆடும் சிவன், முயலகளை நசித்தும் அவனுடைய சாம்பரை நெற்றியில் அணிந்தும் காட்சி அளிப்பதன் மர்மம் என்ன? மறைபொருள் யாது?
என்பனவற்றை ஆய்கிறோம். சங்காரம் செய்யும் சங்கரன் மரணத்தின் மர்மத்தையும்

மறைபொருளையும் தாண்டவ மூலம் நமக்கு எடுத்துக் காட்டுகிறான். மரணம் என்பது வாழ்க்கையின் முடியும் அல்ல; அழிவும் அல்ல. அது ஒரு ஆன்ம நிலை மாற்றமேயாகும். உழைத்துக்களைத்துச் சலித்த தொழிலாளிக்கு ஒய்வு கொடுப்பது போன்றதே மரணம். மரணத்தைக் கொடுக்கும் சுடலை ஆண்டி ஒருகொடியவன் அல்ல. அவன் கருணையின் சொரூபியாவான். மனம் இறக்காது. சரீரம் மட்டும் இறக்கப் பெறும் சீவன் மறுபிறவி எடுக்கிறது. சரீரம் இறக்காது இந்திரிய மனம் மட்டும் இறக்கப்பெறுபவன் இப்பிறவியிலேயே சீவன் முத்தன் ஆகிறான். சாம்பராகி விட்ட முயலகனின் அடையாளமே சுடலைப் பொடியாகச் சிவனுடைய நெற்றியில் பொலிவுற்று விளங்க விளைகிறோம். ஜிவன் முத்தியை இன்று, இன்னே பெறுவதே எமது இலட்சியமாகும். நாளை நாளை என்று காலத்தை கடத்துவோமாயின் நாம்
காலனுக்கு இரையாவோம்.
முயலகன் திருவடியில் நசிதல் நமது இருவினைக்கு விளைவிடமான மனம் நசிதல் வேண்டும் என்பதை உணர்த்துகிறது. மனக்கட்டுப்பாட்டைவிட மனம் நசிதலுக்கே சைவசித்தாந்தம் கூடிய இடமளிக்கிறது. அதன் காரணம் யாது? என்பதைக் கவனிப்போம். மனமானது காலம், இடம், காரணம் எனப்படும் மூன்று பரிமாணங்களுக்கும் கட்டுப்படுவதாகும். அதனால் நான்காவது பரிமாணமான காலம், இடம், காரணம் கடந்த பரவெளியில் - தில்லை அம்பலத்தில் இயங்குதல் இயலாது. எனவே அதைக் கட்டுப்படுத்துதல் ஆன்மீக விடுதலைக்கு வழியல்ல. அணுவால் ஆக்கப்பட்டதே மனமாகும். அணுவின் எலெக்திறோன் சக்தி மூன்று எல்லைக்கோடுகளுக்குள் பாய்ந்து இயங்குதல் போலவே, மனோ சக்தியும் மேற்குறித்த மூன்று பரிமாணங்களுக்குள் பாய்ந்து இயங்கும் இயல்புடையதாகும். நாம் வேண்டுவது மனச் சாந்தியும் சமாதியுமாகும். மனம் நசிதல் இன்றி நாம் நிட்டைகூடுதல் ஒருபோதும் கைகூடாது. இவ்விளக்கத்துடன் சிவசெபதியான விசாரணையைத் தொடர்கிறோம். மூன்று பரிமாணத்துள் கட்டுப்பட்டுப் பாய்தல் நமக்கு வேண்டியதில்லை. சுதந்திரமாகவும், சுயாதீனமாகவும் பாயும் நுதல்
கண்தாண்டவப்பாய்தலே நமக்கு வேண்டும்.
நடராஜனின் நடனத்தில் விரித்த செஞ்சடை ஆடுவதையும், சிரசில் உள்ள
கங்காதேவி பாய்வதையும் கண்டு முடியில் தரிசிக்கிறோம். செஞ்சடையானது சிறப்பு
என்னும் செம்பொருளை உருவகப்படுத்துவதை உணர்கிறோம். புறக்கண்ணுக்குச்
41

Page 30
செஞ்சடை சிவப்பு நிறமுடைய பின்னப்பட்ட கொண்டையாகத் தெரிகிறது. மறைஞான அகக்கண்ணுக்கு அது நீக்கம் அற எங்கும் செறிந்த செம்பொருளாகப் புலப்படுகிறது. திருவள்ளுவன் காட்டிய திருநெறியில்,
பிறப்பு என்னும் பேதைமை நீங்கச் சிறப்பெனும் செம்பொருள் காண்பது அறிவு”
என்பதையே நமது இலட்சியமாகக் கொண்டு அதில் இப்பொழுது வெற்றிப்பாதையை அடைந்து விட்டோம். இதனை அடுத்துக் கடைசியாகக் கங்காதேவியின் பிரவாகத்தை அவதானிக்கிறோம். உலக உயிர்கள் உய்யும் பொருட்டு, அது மழையாகவும் ஆறாகவும் பிரவகிப்பதைத் தரிசிக்கிறோம். அதற்கும் மேலாக அப்பிரவாகத்தின் மறைஞானப் பொருள், ஆன்மாக்கள் விடுதலை பெற்றுப்பேரின்பம் அடையும் பொருட்டு அது திருவருட் பிரவாகமாகப் பாய்ந்தபடியே என்றென்றும் இருப்பதைத் தரிசிக்கிறோம். வாசக நேயர்களையும் அதில் மூழ்க வாரீர் என அழைக்கிறோம்.
சிவனுடைய சடாமுடி மறைஞானச்சின்னமாகும். அதிலிருந்து பாயும் கங்காதேவி தான் கலைமகளாகிய சரஸ்வதி ஆவாள். அவள் எடுத்துக்காட்டாக நமக்குப் போதிக்கும் கலைகள் இரண்டாகும். அவை அறுபத்து நான்கு வித்தியாகலைகளும், ஐந்து சிவகலைகளும் ஆகும். மறைஞானம் பொதிந்து மிளிரும் நவராத்திரி பூஜையில் 1930ம் ஆண்டு தொடக்கம் இடைவிடாது தொடர்ந்து மிகுந்த அக்கறை கொண்டு அனுட்டித்து வருகிறோம். புறப்பூசையாகச் செய்து வந்ததை அகப்பூசையாக மறைஞான நெறியில் 1950ம் ஆண்டுதொடக்கம் மெளனமாக அப்பியாசித்து வருகிறோம். அதன் பேறு 1972ம் ஆண்டு அரசசேவையிலிருந்து ஒய்வுபெற்ற காலத்தில் கலைமகள் விளக்கம் அல்லது சித்திரச் சுடரொளி எனும் கன்னி நூலாக வெளிவந்தது. வித்தியாகலை சிவக்கலையாக மடைமாற்றம் பெற்றது. சிவக்கலையே சைவசித்தாந்த தத்துவ ஞானம் என்பதை உணர்ந்து மேலும் ஏழு நூல்களை வெளியிடும் சிவகடாட்சம் பெற்றோம்.
42

7 மெய்யுணர்தல்
சிவஞான தத்துவரீதியில் இச்சிறு முடிபுரையைத் தொகுத்துச் சாராம்சமாகக் கொடுத்து விடைபெற விழைகிறோம். புறப்பூசைக்கு ஆலய வழிபாடு அத்திவாரமாகும். அது அகப்பூசையாக மடைமாற்றம் பெறுதல் அவசியமாகும். அதற்குரிய நெறியை அப்பர் சுவாமிகள் மறைஞான விளக்கமாக அருளிய அற்புதமான ஒரு தேவாரத்தை நினைவுபடுத்துகிறோம். அதன் முதல் இரு அடிகளுமே நமக்கு இப்பொழுது ஆலய வழிபாட்டின் மறைபொருளை நன்கு உணர்த்துவதாயின் அவற்றை மட்டும் இவண் தருகிறோம்:-
உயிரா வண்ணம் இருந்து உற்று நோக்கி
உள்ளக் கிளியில் உருவு எழுதி”
என்பதேயாகும். இதில் வரும் உயிராவண்ணம் இருத்தலின் மறைபொருள் பிரார்த்தனை செபதியானம் மூலம் மெளன சமாதிநிலை அடைதலைக் குறிக்கின்றது. ஆலய வழிபாடு செய்வோர் உயிராவண்ணம் இருத்தல் மிகவும் அவசியமாகும். அவ்வாறு இருந்து கொண்டு மூலஸ்தானத்தில் உள்ள விக்கிரகத்தை விழிப்புணர்வுடன் வழுவற அவதானித்தல் வேண்டும். அவ்வாறு அவதானித்து அவ்வுருவத்தை உள்ளக் கிளியில் உரு எழுதிப் பயிலவேண்டும். இதன் மறைபொருள் நமது இதயமாகிய வெள்ளைத் திரைச்சேலையில் அந்த உருவத்தை ஆழமாகப் பதிவு செய்து கொள்ளுதல் வேண்டும். எதற்காக? என்பது நமது ஆய்வுக்குரியதாகும். பதிவுசெய்யப்பட்ட திரு உருவம் நமது தனிமையான செபதியானத்துக்குப் பின்பு பேருதவியாகும். மேலும் ஆலய புறவழிபாட்டை விட்டு அந்தர்யாக பூசை செய்வதற்கு உள்ளக்கிளியின் உருவம், ஆக்கமும், ஊக்கமும் உதவியும் நல்கும் என்பதனால் ஆகும.
இவ்வாறு உறுதியாக உள்ளத்தில் பதிவுசெய்யப்பட்ட ஆனந்த நடராஜனின் திருஉருவத்தைக் கொண்டே நமது செபதியான சாதனை அமைகிறது. இன்று நவீன விஞ்ஞான பெளதிகப் பேராசிரியராகக் கலிபோனியா வளாகத்தில் கடமை ஆற்றும் புகழ்பெற்ற பிறிற்ஜோய் கப்றா என்பவர் கோயிலிலும் வீட்டிலும் அல்லாது கடற்கரையில் தனிமையில் உலாவிக்கொண்டிருக்கும் போது, தமது உள்ளக்கிளியில் உருவெழுதப்பட்ட ஆனந்த நடராஜனின் திரு உருவைக்கொண்டு பெளதிக அணுசக்திக்கும் மேலான உயர் பராசக்தியைப் (Super Energy) பற்றித் தியான விசாரணை செய்து அதன் அத்துவித தன்மையைத் தரிசித்து உணர்ந்ததாகக் குறிப்பிட்டுள்ளார். நாம் புற ஆலயதரிசனத்துடன் நமது வழிபாட்டை நிறுத்திக் கொண்டால் மறைஞான சத்திய தரிசனமாகிய பூரண சிவதரிசனம் பெறுதல் அரிதாகும்.

Page 31
சிவத்தியான சாதனைக்கு இன்றியமையாத சில சாதனங்களைப் பற்றி அகப்பொருள் விளக்கத்துடன் அறிந்து செயற்படுதல் நன்றாகும். அவற்றைச் சிவசின்னங்கள் என வழங்குவர். அவற்றுள் முக்கியமானவை திருநீறும், உருத்திராக்கமும் ஆகும். திருநீற்றின் மகிமையைத் திருஞானசம்பந்த மூர்த்தி நாயனார் "மந்திரமாவது நீறு’ என்னும் தேவாரத் திருப்பதிகத்திற் சிறப்பாக விளக்கியுள்ளார். "நீறில்லா நெற்றி பாழ்' என ஒளவைப் பிராட்டியாரின் பொன் மொழியை உணர்ந்து இன்று பெரும்பான்மையான சைவ மக்கள் திருநீறு அணிவதைப் பழக்கவழக்கமாகக் கொண்டிருத்தல் போற்றுதற்குரியதாகும். அற்புதம் செய்து பெறப்படும் நீறும், பூமியில் தோண்டி எடுக்கப்படும் வெண்புழுதியும், உமிச்சாம்பரும் உண்மையான சைவத் திருநீறு அல்ல. பசுவின் சாணத்தை அக்கினியிற் சுட்டெரித்ததே விபூதியாகும். விபூ என்னும் பதத்தில் இருந்து வந்ததே விபூதி எனப்படும் திருநீறாகும். பசுவின் சாணத்தின் மறைபொருள் ஆன்மாவைப் பீடித்துள்ள மும்மலங்களாகும். அக்கினியால் சாணம் எரிக்கப்படும் போது அது தூய்மை அடைந்து வெண்ணிறாகத் துலங்குகிறது. அவ்வாறு ஆன்ம மலங்கள் சிவஞான போதம் ஆகிய நெருப்பில் எரிக்கப்படும் போது, அது தூய வெண்மையாகிறது. எனவே போலித் திருநீறுகளை அணிவதை விலக்கிச் சிவாகமங்களில் விளக்கப்பட்ட உண்மையான விபூதியையே அணிதல் வேண்டும். அதன் உண்மை விளக்கம் ஆன்மசுத்தி அளிக்கிறது.
விபூதி சுட்டிக் காட்டுவது விபூவாக நீக்கம் அற எங்கும் வியாபித்துள்ள ஞான அருட்சக்தியையாகும். விபூதியை ஞான அருட்சக்தி எனப்பாவனை செய்து அதை அணியும் போதெல்லாம் நமது மும்மலங்களும், அதிற் சாம்பராகின்றன எனப்பக்தி சிரத்தையுடன் தியானித்தல் சிறந்ததாகும். முயலகன் வடிவில் உள்ள நமது சார்பு நிலையுடைய மனம் நசிகிறதென பாவனை செய்து ‘சிவ சிவ” என ஒதுதல் வேண்டும். ஈரமான சாணம் விரைவில் வேகுவதில்லை. பற்றுக்கள் நிறைந்த ஆன்மா அருட்சக்தியில் விரைவாகப் புனிதமாவதில்லை. எனவே நாம் உலர்ந்த சாணத்தைப் போலப்பற்றற்றுத்தியானித்தல் அவசியமாகும். திருநீறு அணிபவர்கள் கள்ளங்கபடம் அற்ற வெள்ளை உள்ளம் படைத்தவர்களாக விளங்குதல் வேண்டும் எனத் தியானித்தல் சைவசாதனையாகும். வெறும் வேடம் பூண்பதற்கு உரியது விபூதியல்ல.
இனி இரண்டாவது சிவசின்னமாக உள்ள உருத்திராக்கம் எவ்வாறு நமது தியான சாதனைக்கு உரியதென்பதைப் பயின்று அவதானித்துத்தெளிந்து அனுட்டிப்போம். உருத்திராக்கத்தின் புறப்பொருள் அக்குமணியாகும். அதை எட்டி மரவிதை எனவும் கூறுவர். அதன் அகப்பொருளே நமது தியான சாதனைக்குரியதாகும். கலைமகளின் கையில் ஓர் உருத்திராக்க மாலை இருப்பதைக் காண்கிறோம். அது செபம் செய்ய வேண்டிய அவசியத்தை எடுத்துக் காட்டுகின்றது. செபதியானம் ஒருசிவக்கலையாகும். அக்கலை பிறந்தது நடராஜனுடைய நெற்றிக்

கண்ணிலிருந்தாகும். அந்த நெற்றி ஒற்றைக் கண் ஆக்கபூர்வமான மறைஞான ஒளிக்கண்ணாகும். உருத்திரன் முத்தொழிலில் ஒன்றாகிய அழித்தலைச் செய்பவனாகும். இங்கே அழித்தல் மூலம்தான் அற்புதமான ஆக்கம் உருவாகுவதை மறைபொருளாகக் காண்கிறோம். அஞ்ஞான அழிவிலேதான் மெய்ஞ்ஞானம் பிறக்கிறது. உருத்திரனின் மிக அற்புதமான இந்த ஆக்கமே உருத்திராக்கம் எனும் மறைபொருளைக் கொண்டுள்ளதாகும். பிறருடைய போதனை இன்றி தியான சாதனை மூலம் இதைச் சுயப் பிரகாசமாகச் சிவப்பிரகாசத்திலிருந்து பெறுகிறோம். அதனால் உருத்திராக்கம் என்றென்றும் நமது இதய அணியாகத் திகழ்கிறது. அதன் ஆக்கமே இச்சிறு நூலாகும். மறைஞான விளக்கம் பெற்ற பின்பு, நாம் உருத்திராக்கத்தை ஒருபுற அணியாகக் கொள்ள வேண்டிய அவசியம் இல்லை.
நடராஜனின் கரங்களில் விளங்கும் உடுக்கையும், அக்கினியும் நாத விந்து தத்துவத்தை எடுத்துக் காட்டுவதை முன்பு அறிந்தோம். அவை ஆன்மாவையும் சிவனையும் தொடர்புபடுத்தும் தெய்வீக சாதனங்களாக அவற்றின் நுண்ணிய வியாபக நிலையில் விளங்குகின்றன. அவை இணைந்து சிவலிங்கமாகக் காட்சியளிக்கின்றன. சிவலிங்கத்தின் அடின்யயும், முடியையும் விஷ்ணுவாலும் பிரம்மாவினாலும் கூடக் கண்டுபிடிக்கமுடியவில்லை. அவர்களும் மனிதப்பிறவி எடுத்தே பூரணமான சிவலிங்க மறைஞான தரிசனம் பெறவேண்டியுள்ளதென்பதைச் சிவபுராணங்கள் கூறுகின்றன. சிவலிங்கக் காட்சி பெற்ற திருமூல நாயனார் பஞ்சலிங்கவடிவில் அவற்றைத் திருமந்திரத்தின் ஏழாவது தந்திரத்தில் அழகாக அருளி உள்ளார். பஞ்சலிங்கங்களாகிய அண்டலிங்கம், பிண்டலிங்கம், சதாசிவலிங்கம், ஞான லிங்கம், ஆத்மலிங்கம் என்பனபற்றிச் சிவலிங்க விளக்கத்துடன், அறுபத்தாறு அருட்பாக்கள் உள்ளன. சிவலிங்கத்தையும் உள்ளக்கிளியில் உருஎழுதிச் செபதியானஞ் செய்தல் சிவநெறியாகும். திருமந்திரத்தில் வரும் அறுபத்தாறு திருப்பாடல்களுக்கும் இங்கு மறைபொருள் விளக்கம் அளித்தல் இயலாத காரியமாகும்.
எனினும் சிவலிங்கத்தை ஆதாரமாகக் கொண்டு செபதியானம் செய்வதற்கு ஊக்கம் அளிக்கும் இரு திருமந்திரங்களை மட்டும் இவண் தருகிறோம்.
1. ஆதாரம் ஆதேயம் ஆகின்ற விந்துவும் ஏதாதிநாதமும் மீதே விரிந்தன ஆதார விந்து அதிபீடம் நாதமே போதவிலிங்கப் புணர்ச்சிய தாமே

Page 32
சிவலிங்கம் இருபகுதிகளைக் கொண்டுள்ளது. ஒன்று பீடம், அல்லது ஆவுடை அது நாதசக்தியைக் குறிப்பதாகும். மற்றது அதிலுள்ள இலிங்கமாகும். அது சிவசோதியைக் குறிப்பதாகும். அவை இரண்டும் இணைந்து சிவலிங்கமாகக் காட்சி அளிக்கிறது. அவை இரண்டையும் ஆதார தெய்வமாகப் பிரணவ மந்திர செபதியானம் செய்வோர் நிச்சயமாகச் சக்தி நிபாதமும், சிவஞான போதமும் பெறுவர்.
2 ஆகார முதலாய் அனைத்தாய் நிற்கும்
உகாரமுதலாய் உயிர்ப்பெய்திநிற்கும் ஆகாரம் உகாரம் இரண்டும் ஆறியில் ஆகாரம் உகாரம் இலிங்கர் ஆதாமே!
ஓம்கார மந்திரத்தில் விளங்கும் அகரமுதல் எழுத்தையும், உகர உயிர்ப்பெழுத்தையும் உருவகமாகக் கொண்டதே இலிங்கம் ஆகும். அது திருவள்ளுவன் வாழ்த்தியவாறு"அகரமுதல எழுத்தெல்லாம் ஆதிபகவன் முதற்றே உலகு" எனும்படி முழுமுதற் கடவுளாக விளங்குபவன் சிவனாகும். மெய்யுணர்தல் பெறுவதற்கு இலிங்க வழிபா டும் ஓங்கா செபதியானமும் இன்றியமையாதனவாகும்.
அதற்குரிய சிறந்த'ச்ாதனைகள் படிமுறைக்கிரமப்படி, அமைந்துள்ள அட்டாங்க சிவயோகமாகிய,
பக்தி சிரத்தை கொள்ளுதல்" சரணாகதி அண்டதன் துரக்கிய திருவடி வழிபடல் சக்திதிபாத விசாரணை செய்தல் விழிப்புணர்வும் அவதானமும் கொள்ளுதல் சார்பறச் சிந்தித்தல் சத்தியர் தெளிதல் மொன சமாதி அடைதல்
என்பனவாகும்.
இவற்றைத் தெரிந்து கொண்டால் வாழ்க்கையில் சகல சுகபோகங்:ரும் நிறைந்து இன்பமுடன் வாழ்ந்து, இனிய பேரின்ப வாழ்வைத் தேடிக்கொள்ள 'பு' என்பதைச் சைவ சித்தாந்தம் தெளிவுற உணர்த்துகின்றது.
முற்றும்.
As


Page 33

------------------- |- |-|-