கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: நான்காணும் உலகம்

Page 1


Page 2
இதுவரை வெளியிட்டுள்ள நூல்களைப்பற்றிய சில வரிகள்
* நாம் ஒளியிழந்த போது, விழி இழந்தோரின் வாழ்வுதனை அவர்களின் உணர்வுதனை சாதாரண மக்களுக்கு எடுத்துச் சொல்ல.
许 ஆசைகளின் ஒசைகள், மனித வாழ்வின் கோடிக் கணக்கற்ற ஆசைகளை கோடிடும் போது எழும் ஆக்கங்களின் பிரதிபலிப்பு.
* சித்திரப் பூவிழி, நடைமுறை வாழ்வின் அனுப
வங்களின் அலங்காரமற்ற அறிவுரைகள்.
景 நினைவுகளின் நிழல், பிரிந்துபோன ஆத்மாவுக் காக உயிரோடு இருக்கும் நான் நடித்த மேடை இல்லா நாடகம்.
* நான் காணும் உலகம், பாவிகள் வாழும் இவ் வுலகிலே, என் ஆவி கலங்கி எழுதும் புதிய காவியம்.

நான்காணும் 96)6.
உண்மை நிலையின் விளக்கம்
ஆக்கியோன் தெருத்தூசியோன்

Page 3
நான்காணும் உலகம்
உண்மை நிலையின் விளக்கம்
முதற்பதிப்பு: 1990
ஆக்கியோன்: தெருத்தூசியோன்
பதிப்புரிமை - ஆசிரியருக்கே
விலை: 27-50

雛
i
ዶ?
சமாதிகளை சலவை செய்து சமர்ப்பணம் எழுதுகிறேன்.
மணக்கோலம் காண எங்கள் மனங்கள் துடித்தபோது பிணைக்கோலம் எங்கள் கண்களுக்குக் காட்டி பிரிவித்துயரை பரிசாகத்தந்துவிட்டுச் சென்ற என் கிராமத்து மின்னல் மயில் வாகனத்துக்கும் எம் நாட்டை செல்லரித்த போது அவ்வரிப்பை தடுப்பதற்கு அணைபோட்ட என் நண்பன் " சிவா " அவர்களுக்கும் தேசத்தின் விதி நாசமாய் போனதாலே நடுத்தெருவில் கருகிப்போன சடலங்களுக்கும் உருகிப்போன உள்ளங்களுக்கும் இந்த நூலை சமர்ப்பணம் ஆக்குகிறேன். சமாதியில் சந்தோசமாய் உறங்கும் என்னருமை சகோதரர்களுக்கும்
சமர்ப்பணமே ! F.J. ap
vÀr về ဒွိ ဒွိ
894, ܟܬ ܼܲ LLI இ SEE :: a-ala - ဒိမ္ပိ O S. 劉
s a မိမိဒ္ဒိင္ငံန္တိင္ကို Sila Y
E. 2 */ S*ÝCÚ/ r BN 5: ( 恩 8s. თდნჭდილ

Page 4
என்னுரை
உரை உரையாய் உரைத்த என் உதடுகள் இப்போது உணர்ச்சி யற்றுப்போயிற்று. உணர்ச்சியற்ற இந்த உதடுகளிலிருந்து புரட்சிகரமான பூக்கள் பூத்துக் குலுங்குகின்றன. அப் பூக்களின் நான் பள்ளி கொண்டாளும், பாசறை உணர்வுகள் என்ன “கை” காட்டி அழைத் தாலும் பாங்குடனே அப்பாதை வழியே பயணம் தொடர முடியவில்லை இளமைத் தோட்டத்தில் வறுமை வாட்டங்கள் வந்தாலே நான் இவ் நூலை வரைய எண்ணவில்லை. தனிமையில் இருந்து சிந்தித்தேன் தத்துவம் பாடிய தாலாட்டில் ஒரு கணம் தூங்கினேன். கடந்த காலத்தில் நான் விட்ட தவறுகளை உணர்ந்தேன், அதன் பின்பு ஒரு முடிவை எடுத்தேன் எனக்கு ஆயுள் முடிய முன்னரே வீட்டுக்குள் விட்ட தவறுகளை வீதிக்கு கொண்டு வருகிறேன். வீதியிலே விபரிக் கப்படும் என் தவறுகளைப் பார்த்து மக்களின் விழிகள் எழுதப்போகும் புதிய விமர்சனங்களிலேயே எனது எதிர்காலம் தங்கியுள்ளது.
இந்த நூலிநூடாக நானுெரு ஞானி என்ருே அல்லது முற்றும் சிறந்த முனிவர் என்ருே எடுத்துச் சொல்ல வில்லை. ஆத்மீகத்தின் எனது முதலடியாகவே இன் நூல் வெளியாகிறது. தற்போது நான் காணும் உலகம் ஆத்மீகம்தான் இவ் உலகத்துக்குள் நான் எவ்வளவு காலம் வாழப்போகிறேன் என்பது எனது மன உறுதியில் உள்ளது. இந்த நூலை எழுதுவதற்கு நான் டிகிதாக எந்தப் புத்தகத்தையும் படிக்கவில்லை. என்னை நானே வாசித்தேன் அதன் பின் யோசித்தேன் முடிவில் எழுதினேன். தொடர்ந்தும் ஆத்மீகம் சம்பந்தமான புத்தங்களை எழுதுவதற்கு உங்கள் ஒத்துழைப்பை நாடி நிற்கிறேன். இன் நூலை எனக்கு எழுதுவதற்கு தோளோடு தோள்நின்ற குறிப்பாக சுந்தர், பாத்திமாஹனுன், கருணாகரன், வேலரசி ஆகியோர்க்கு நான் நன்றி என்று கூறவில்லை. நன்றி கூறமுடியாத அந்த உதவிகளுக்காக நான் கடைமைப்பட்டவணுக இருக்கின்றேன்.
வாசியுங்கள் வாசிபபதால் பயன் பெறுங்கள்.

புவியில் புரியாத போக்கு
நான் தனிமைப் படுத்தப்பட்ட இரவுகளில் கொடுமை நினைவுகள் என் நெஞ்சை சுட்டு எரித்த போது, சூழ் நிலைகள் சம்பந்தமாக சிந்திக்கத் தொடங்கினேன். சூழ் நிலைகள் சூழ்ச்சிகளாக்கி கொடுமை களின் எல்லைகளுக்கு, என்னை அழைத்துச் சென்றபோது தான், பல உலகின் அமைப்பினை அவதானிக்க தொடங்கினேன். என் அவதானிப் புக்குள் அடங்கியதை எனது விரல்கள் எழுதிச் செல்கின்றன.
இந்த உலகம் விரிந்து பரந்து இருப்பதை நாம் அறிவோம். விரிந்து இருக்கும் இந்த உலகத்தை என்அக விழிகளால் அணைத்து இந்த நிலையில் என் இதயத்தை தொட்டதை என் எண்ணத்தில் எழுந்ததை எடுத்துச் சொல்கிறேன். இவ்வுலகத்தை பற்றிய தன்மை களும், அதனுேடு தொடர்புடைய தொடர்புகளும், ஏற்கனவே விஞ்ஞா னிகளால், ஆய்வுகளுக்கும், ஆராய்ச்சிகளுக்கும் உட்படுத்தப் பட்டு. பின்னர் அவர்களுடைய சிறந்த முடிவுகளை இவ்வுலகிற்கு வழங்கி யுள்ளார்கள். எனவே நான் இது தொடர்பாக எழுதத் தேவையில்லை என நினைக்கிறேன். ஆதிகாலத்தில் வாழ்ந்த மக்கள் பூமி தட்டை யானது என்றும், அதனை அட்லஸ் என்ற ராட்சதன் தன் கைகளிலே தாங்கிக் கொண்டிருக்கின்ருன் என்றும் கூறி வந்தனர். இவர்களுடைய மூட நம்பிக்கைகளை உடைத்து 'எறிய புதிய விஞ்ஞானிகள் உதய மாகினர். அவ்வாறு உதயமானவர்களில் குறிப்பாக மகலன் என்பவன் பூமி உருண்டை வடிவம் என்பதை தகுந்த சான்றுகள் பகர்ந்து விளக்கினன். ஆகவே இவ்வுலகத்தைப் பற்றி பலர் பல விதமான கண்கொண்டு நோக்கி, அவர்களின் முடிவுகளை, எம்மக்களுக்குக் கூறி வருகின்றனர். என்னைப் பொறுத்த வரைக்கும், மனக் கண் கொண்டு இவ்வுலகை நோக்குகிறேன். மனக் கண்ணால் நோக்கிய இவ் வுலகத்தை அதில் பெற்ற அனுபவத்தை, என் இதயத்தில், இவ்வேட்டில் பதித்து செல்கிறேன். உங்களில் அனேகர் பார்க்கும் பிறப் பார்வைக்கும் என்னைப் போன்ற சிலர் பார்க்க்கும் ஆழப்பார்வைக்கும், இவ்வுலகம் வேறு பட்ட இரண்டு கோணங்களில் காட்சி அளித்துச் செல்கிறது. எனது மட்டில் இவ்வுலகத்தின் புரியாத் போக்கினை புரிய முட்படுகிறேன். சமாதானங் களைத் தேடிச்செல்லும் சகோதரங்கள் சமாதியாக்கப் படுகிருர்கள். அநியாயத்தை அடியோடு எதிர்க்கும் அன்பு நெஞ்சங்கள் ஆக்கிரமிப்புக்கு உள்ளாகிருர்கள். நியாயத்தையும் நிம்மதியையும் தேடும் நெஞ்சங்கள். நிர்மூலமாக்கப்பட்டு, நிர்க்கதியாய் நிர்மானம் அடையச் செய்து, அவர் களை அந்த நியாயத்தின் நிழல்களை நிர்மூலமாக்குவதையும், இந்த உலகம் இன்னமும் நிறுத்தாமல், இருப்பதை நினைக்கும் போது கண்கள் மட்டுமல்ல, இதயங்களும் ஈரலிக்கின்றன. இந்த நிலை மக்கள் என்ன செய்ய முடியும் ? எங்கே அமைதி? எங்கே சமாதானம்? யாருக்கு யார் ஆறுதல் கூறுவது. வீட்டுக்கு வீடு பாடை ஊர்வலங்கள், அங் கெல்லாம் கண்ணீர் கோலங்கள். யாருக்காக யார் அழுவது. இக்கட்
1

Page 5
டான நிலையில தான் எமக்கு ஓர் ஆறுதல் தேவைப்படுகிறது. இவ்வாறு தலை எங்கே பெற்றுக் கொள்ளலாம். எனக்குள்ளே நானே மீண்டும்மீண்டும் விஞவை வினவுகிறேன். இவ் விஞவுக்கு விடை சற்றுத் தாமதமாகிக் கிடைக்கிறது. கைகளை விரித்துக் கொள்கின்றேன். மூடிய விழிகளை இன்னமும் அதிகமாக இறுக மூடிக் கொள்கின்றேன். மனத்தை ஒரு நிலைப்படுத்த முயற்ச்சிக்கிறேன். எனது முயற்சியில் சிறிது வெற்றி கிடைக்கிறது. முடிவில் இறைவனுக்குள் சங்கமமாகின் றேன். இது தற்காலிகமான சங்கமமாய் இருக்கிறது. நிரந்தரமான, ஏன். ஓர் சுதந்திரமான நிலையில் அமைதியாக வாழ விரும்புகிறேன். ஆஞல் அசாத்தியமாய்ப் போகிறது ஏன்? இந்த நிலை எனக்குள் சிந்திக்கிறேன். என் சித்தனைகள் சின்ன பின்னமாக்கப் படுகின்றன. மறு படியும் இக்கலியுக உலகத்திற்குள் என் மனம் அடித்துச் செல்லப் படுகிறது. அவதியுறுகிறேன். அலக்கழிக்படுகிறேன், அமைதியை இழக்கிறேன், ஏன் ? எதற்காக ? எனக்குள்ளேயே-எழுந்த விஞக்கள் எனக்குள்ளேயே விடைகாண முடியாமல் விபரீதமா போகிறது. முடிவு சந்தோசமாய் இருக்க முடியுமா என்ன ? வேதனைகள் என் விழிகளை மூடிக் கொள்கின்றன. நான் மெளனமாகிறேன். என் எண்ணங்கள் பூமியை ஒருமுறை வலம் வருகின்றன. நில்லாமல் புவி நித்தமும் தன் அச்சிலே சுழன்று கொண்டிருக்கின்றது. அதன் சுழற்சிக்கு ஏற்ப நாமும் சுழல்கிருேம். மேலே வானம் உள்ளது வானத்தை அலங்கரித் திட சூரியன், சந்திரன், முகில்கள், நட்சத்திரங்கள், கோள்களும் கீழே புவியிலே பச்சை பசேல் என்ற புல்வெளிகள், நீண்ட கடல், அதில் ஓயாதுராகம் இசைக்கும் கடல் அலைகள், நீல வானத்தை முத்த மிடத் துடிப்பதுபோல அவற்றின் உணர்வுகளின் பிரதி பலிப் புக்கள். நீண்ட மணல் விரிப்புக்கள். அதிலே துள்ளியோடும் மான்கள் துன்பத்தை மறந்து, உல்லாசமாய் சிறகடிக்கும் மயில்கள், குயில்கள், அடர்ந்த காடுகள், உயர்ந்த மலைகள், மலைத் தொடர்கள் சிகரங்கள், அவற்றிலிருந்து விழும் அருவிகள். இத்தனையும இயற்கைகள் அள்ளி வழங்கிடும் அழகுகளின் அடுக்கு மாளிகைகளே ! இப்படியான எழில் மிகு காட்சிகளை என் கண்கள் காணத் துடித்தன. அக்கணமே, என் இதயம் வெடித்தது. இருந்தும் என்னை தேற்றிக் கொள்கிறேன், இயற்கைகளின் தன்மைகளையெல்லாம், யார் யாரோ, எப்படியெல்லா மோ, எடுத்துரைத்தார்கள்-அவர்களின் உரைகள் என் உள்ளத்தை ஊடருக்கும் போது, இந்த-உலகத்தைப் பார்க்க வேண்டும் என்ற ஆவல், எனக்குள்ளே ஆரம்பித்து, எனக்குக்குள்ளேயே அஸ்தமித்து போய்விடும்.
காற்றை விட வேகமாக என் கற்பனை வேகம் அதிகரிக்கும். அந்த வேளையிலே நான் காணும் இயற்கை அழகு போன்று வேறு யாரும் கண்டதுண்டோ ! என வியக்கத்தோன்றும், ஆனலும் எனக்கு அதுவும் நிரந்தரமில்லை, கற்பனைக்ள் கலையும் போது, சுயநினை வுகள் சூழ்ந்து கொள்ளும் போது, என் கண்கள் குளமாவதை தடுக்க முடியாது. இருந்தாலும், பலவீனமோ, பதட்டமோ, அடையவில்லை, மாருக~ உற்சாகமும் உறுதியுமடைந்தேன். இந்த நிலைக்கு என்ன காரணம். என்னை நானே கேட்கின்ற கேள்வியது, ஆம். இதற்கு சுலபமாகவே பதிலைப் பெற்றுக் கொண்டேன், ஆத்மீகமும், அதனு டைய ஆளுமையையும் அறிய முற்பட்ட போதே வீணான வேதனை களை வேரோடு புடுங்கி எறிந்தேன். இருப்பினும் இந்த நிலை நீடிக்க வில்லை. உலக காரியங்களுக்குள் கைதியாக்கப்பட்டதே இதற்கு பிரதான காரணமாகும். முற்றும் திறந்த முனிவனுக ஒரு வேளை
2

இருந்திருந்தால் எனது நிலையில் மாற்றம் ஏற்பட்டிருக்காது. ஆனல், நானே வரையறுக்கப்பட்ட வாலிபத்தின் வயதுக் கோளாறுக்குள் வாழ்ந்து கொண்டிருக்கும் வட்டத்தில், ஒரு காந்தியைப் போலவோ அல்ல ஒரு புத்தனை போலவோ என்னை நானே உருவகப் படுத்தி, உப்பு சப்பு அற்ற முறையில் பொய் உரைகளை பொழுது போக்காக எழுத விரும்ப வில்லை. வாலிபன் என்ற நிலையில் நின்று கொண்டே நிதானித்து எனது உலகம் பற்றி எடுத்துச் சொல்ல விரும்புகிறேன். இவ்வுலகத்தின் போக்கு என் சிந்தனைகளுக்கு தூக்குக் கயிறான போது. சிரிப்பை மறந்து, சிந்திப்பன்த நினைத்து என் கருத்துக்களை தொடர்ந்து எழுதுகிறேன்.
இந்த உலகத்தை அகக்கண்ணால் உற்று நோக்கும்போது. ஆழமாக வும், அதே நேரத்தில் அழுத்தமாகவும் சில சம்பவங்கள் நித்தமும் நிகழ்வதை கண்டு என் நெஞ்சம் பொறுமைகொள்ளவில்லை மனித வடிவில் பல தெய்வங்களும், அதே நேரத்தில் மனித வடிவில் மிருகங் களும் இன்னமும் நம்மத்தியில் இருக்கின்றனர். மனித வடிவில் தெய்வங்களாக வாழும் மக்களைப் பார்த்து நீங்கள் தான் என் உலகம் என்று நான் கூறிவிடப் போவதில்லை. அதேவேளையில் மிருகங் களாக வாழும் மனிதரை எதிர்த்து எழுதுவதும் எனது எண்ணமல்ல, மனித வடிவில் மிருகங்களாக வாழ்பவர்களும் தெய்வீக தன்மையை அறிந்து கொள்ள வேண்டும். அவர்களும் தெய்வீக உலகத்தில் நுழைந்து கொள்ளவேண்டும். இது என் கருத்தாக அமைய தொடர்ந்தும் உலகின் போக்குகளை அவதானிக்கையில் நியூட்டனின் தத்துவத்தை நான் நினைவு படுத்துகிறேன். தாக்கத்திற்கு மறுதாக்க கம். இதன் மையப்பொருள் என்னவாக இருக்கும். அதாவது சக்திக்கு இன்ஞெர் சக்தி எதிராக உள்ளது. இதை இன்றும் தெளிவு படுத்தினர். ஓர் நல்லவனின் மத்தியில் இன்ஞேர் கெட்டவன் வாழ்கிருன் இன்னமும் அதிகமாய் இது தொடர்பாக என்னுகையில், மலைகளின் அருகே குன்றுகள் உள்ளன. மேடுகளின் பின் பள்ளங்கள் தென்படு கின்றன. இது மட்டுமா ? இன்னமும் பட்டியல் நீள்கிறது. பருந்து களும், பச்சைக் கிளிகளும் வானில் பறிந்து கொண்டுடிருக்கின்றன. காக்கைகளும், மாடப்புருக்களும் நிலைத்து நிற்கின்றன. பாம்புகளும் பசுக்களும் இது வரை தங்கள் பயணத்தை நிறுத்தவில்லை.ஓநாய்களும் ஆட்டுக்குட்டிகளும் நீர் ஓடையில் கண்ணிர் குடிப்பதை நிறுத்தவும் இல்லை. இவற்றை எல்லாம் நினைத்துப் பார்க்கும் போது அமுதமும், நஞ்சும் ஒரே மண்ணில் விளைகின்றன என்ற முடிவுக்கு வரலாம். இன் நிலையில் மனிதர்களாகிய நாம்,யாரோடு உறவுவைக்க வேண்டும். யாரை-விலக்கி வைக்க வேண்டும் என்ற தீர்மானத்தை எடுக்கவேண்டும். தீர்மானங்கள் பிழையான வழியில் திசை திருப்பப்படுவ தால் மக்களின் வாழ்வும் தீப்பிளம்பாகி விடுகின்றன. இதனுல் தான்-பலரு டைய வாழ்வு எரிமலையாகிப் போகின்றன. வாழ்க்கை விரக்தியாகி வேதனை கள் வேர் ஊன்றுவதற்கு, இதுவே காரணமாகிறது. என்வாழ்விலும் இன்னிலை ஏற்பட்டிருக்கிறது. நாவிலே தேனை-வைத்து, ந்ெஞ்சிலே நஞ்சை வைத்து என்னேடு பழகிய சில சகோதரர்களையும் .அவர்களின் சதி வலைக்குள் சிக்கித் தவித்த அனுவங்கள் ஏராளமாய் உண்டு. அவர்கள் வார்த்தைகளை நம்பி என்வாழ்க்கையையே இழக்க நேரிட்ட துர்ப்பாக்கிய மான நிலைகளும் உண்டு. அவர்களை முழுமையாகநம்பிஏமார்ந்து, போன நாட்களும் உண்டு. அவர்கள் என் பக்கத்தில் இருக்கையில், அவர்களே என் உலகமாகக் கற்பனை செய்த காலங்களும் உண்டு ஈற்றில் என் நிலை என்னவானது. மீண்டும் துயரம், மீண்டும் வேதனைகளை விரித்துக் கொள்கிறேன். மனக்கண்னில் முன்னுல் என் சிந்தனைகளை
3.

Page 6
நிலை நிறுத்த முயல்கிறேன். சில கணங்கள் வெற்றி, சில கணங்களில் தோல்வி மறு படியும் மனம் அலைபாயுதே. உலகியல் நினைவுகள் என்னை உருக்குலைக்கின்றது.
பத்திரிகை வியாபாரிகள் விற்பனைக்காய் வாசிக்கும் செய்திகளின் ஓசைகள். செவிகளின் நுழைந்திடவே, நாடுகளின் நாளாந்த நிலை களை நானும் அறிகிறேன். வானுேலி கட்டையை அழுத்துகையிலும், தொலைக் காட்சி பெட்டிக்கு அருகே அமருகையிலும், ஆக்கினைகள், ஆர்ப்பாட்டங்கள், ஆட்கொலைகள், சம்மந்தமான, செய்திகள் என் நெஞ்சைக்கிழித்துச் செல்கின்றன-என்ன செய்வது எனக்கே தெரியவில்லை இப்படியான சமூக நிலையில் ஓர் இறைவனை அந்த இனிமையான இறை யுலகத்தை எண்ணிப் பார்க்க முடியுமா ? அல்லது அவ்வுலகத்துக்குள் பிரவேசிக்க முடியுமா ? தடுமாற்றத்துடன் தலையைச் சொறிகிறேன். மீண்டும் ஓர் ஆசனத்தில் அமர்ந்த படியே, புரியாத உலகத்தின்போக் கினை புரிய முற்படுகிறேன். இன்பத்தைத் வைத்து துன்பத்தை துணை யாக்கிக்கொண்ட மக்கள் சமூகத்திற்கு, துயரத்தின் கொடுமைகளை எடுத்துச் சொல்வது. என்னதான் பயன் இருக்கப் போகிறது. மக்கள் சமூகமே அதிலும் விலக்கி ஒதுக்கி வெட்கப்பட்ட என் இதயங்களே. உலகின் நிலையினை நிதானித்து கொள்ளுங்கள். நிதானிக்க மறந்தால் நிச்சயம் நிர்மூலம் ஆக்கப் படுவீர். நான் விலைக்கிவைக்க பட்டதையும், ஒதுக்கி வைக்கப்பட்டதையும், ஒரு முறை சிந்துத்துப் பார்க்கிறேன். இது கடந்த காலத்தில் நிகழ்ந்து முடிந்த நிகழ்ச்சிகள், எவ்வாறு ஒதுக்கி வைக்கப்பட்டேன். இதற்கு, காரணமென்ன ? இதன் விளைவாக என் குடும்பம் பாதிப்புக்கு உள்ளாகியமை, இது தொடர்புகளான கருத் ' துக்களை புத்தகத்தை முழுமையாக வாசிக்கும் போது தெரிந்து கொள் стGрtфичtѣ.
என்னுடன் பிறப்புக்களே. என்னைப்பற்றி புரிவதை விட புவியின் தன்மையினை அறிந்து கொள்ள முற்படுகிறேன். பூகம்பத்தின் எதிர் ஒலிகள் என்னைத் தாக்குகின்றன. என்னை மட்டுமா ?. உங்களையும் சேர்த்தே தாக்குகின்றது. விஞ்ஞான உலகத்துக்குள் வாழ்ந்து கொண்டி ருக்கும் நாம், அதன் விந்தைகளை நினைத்து வியர்க்கிருேம். அது பிழையில்லை, கிராமங்களை நகரங்கள் ஆக்கியது, ஒவியங்களை காவி யங்களாக மாற்றியது, குடிசைகள் கோபுரங்களாக உயர்ந்து வானத்தை எட்டிப்பிடித்தது. சந்திரனுக்கு ராக்கட் பயணங்கள் விரைந்தன. இக்காட் சிகள் எல்லாவற்றையும், கண்கள் கண்ணாற்கண்டு, நெஞ்சம் மகிழ்வு விழா நடத்திக் கொண்டிருந்தன. இந்த மகிழ்வு விழாவில் பிணக் கோலங்கள். ஊர்வலமாக செல்லும் நிலையினை எங்கள் கண்கள் காணும் போது தான் கண்ணில் குருதிகள் கொப்பளித்தன.
ஓர் நாட்டிலிருந்து இன்னேர் நாட்டிற்கு பறந்து செல்லும் விமானங்கள் ஓர் நாட்டில் அத்துமீறி குண்டு மழை பொழிகின்றன ஒடும் கப்பலில் இருந்து ஒரு சில பிரங்கி தாக்குதலில் ஓர் ஆயிரம் உயிர்கள் தங்கள் உடல்களை '; ராஜினுமா. " செய்து கொள்கின்றன கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவு கணைகள் பல சரித்திரங்களை முடித்து முற்றப்புள்ளிவைக்க முற்படுகின்றன. சமூகத்தை சாம்பல் பூத்த மேடுகளாக்க, முற்படும் முட்டாள் தனமான செயல்களை செயல் இழக்க செய்ய வேண்டும் மக்கள் உயிர்களை குடிக்கும் விமா னங்கள் விரட்டி அடிக்கப் பட வேண்டும். குண்டுத் தாக்குதலை நடத்தி வரும் கப்பல்கள் கரைசேர வேண்டும்.
4.

அவற்றை மூலைகளில் போட்டு விடுவோம் எம்மை அழிக்கா திருக்கும் ஏவுகணைகளை எடுத்து எறிவோம் இந்தநிலை மாறவேண்டும் மக்களின் அவலநிலை அகலவேண்டும் ஆயுத தொற்பூழிசாலைகள் யாவும் காகித தொழிற்சாலைகளாக்கப்பட்டு மக்களின் உணர்வுகளும் இறை இயல் கருத்துக்களும் அவற்றில் எழுதப்படவேண்டும். இங்கே எனது சில கார் மேகங்கள் மக்களின் சாதாரண பார்வையின் பாணியிலேயே அமைகின்றது. இன்றைய உலகில் சமாதிகள் கட்டப்படுவதற்கே இட மின்றி ஒரே சமாதிக்கு மேல் இன்னெரு ஒரு சமாதி கட்டப்படும் நிலை ஏற்படுத்தித் தந்தது. ஆயுத உற்பத்தி தானே இன்னமும் சில இடங்களில் தொழிலாக சவக்குழிகள் வெட்டுவதும் சடலங்களை அடக்கம் செய்வதும் சடலங்களை வைப்பதற்கு பெட்டிகள் செய்வதும் அவற்றை எரிப்பதற்கு விறகுகள் வெட்டுவதுமாகவே வேலை நடைபெற்றுக் கொண்டு இருக்கிறது. இப்படியான தொழில் வாய்ப்புக்களை ஏற்படுத்தித் தந்த ஆயுதங்கள் இன்னமும் இந்த உலகில் உடைந்துபோன உள்ளங் களுக்கும் நினைவிருந்த நெஞ்சங்களுக்கும் ஆறுதலற்ற இதயங்களுக்கும் ஒரு நிம்மதி தேவை இந்த நிம்மதியை சாதாரண இதே உலகத்தில் பெற்று விடமுடியாது. இறையியல் உலகத்திற்குள் பிரவேசிப்பவர்கள் நிரந்திர நிம்மதியை பெற்றுக்கொள்ள முடியும். தத்துவஞானியாக அல்லது ஓர் இறையியல் ஞானியாக என்னை நானே கற்பனை செய்த வண்ணம் உங்களுக்கு இக்கருத்துக்களை எழுதவில்லை. நான் பெற்றுக் கொள்ளமுற்பட்டது. உங்களுக்கு பெற்றுதர விரும்புகிறேன். எனது விருப்பத்தின் இறைவு எந்த அளவிற்கு நிறை ஏறப் போகிறது, என்பதை பொறுத்து இருந்து தான் பார்க்கவேண்டும்.
தனிமை எனும் பிரதேசத்தில் என் நினைவுகள் என்னும் நிழல்கள் நிர்மூலம் ஆக்கப்படுவதை நான் அதே வேளையில் நான் தனிமையாகக் கைவிடப்படும் சந்தர்ப்பங்களில் தான் ஆத்மீக வழிகளைப்பற்றிச் சிந்திக் கும் நிலையும் எனக்கேற்படுகிறது. இந்த புவியின் போக்கு என்ஜன யோர் சிந்தனையாளனுக்க உருவாக்கி வருவதை, நான் மெல்ல மெல்ல உணரத் தொடங்குகிறேன். எனது கால்கள் நடைபாதைகளில் பல தடவை இடறிய போதே என்னைப் பார்த்தவர்கள் என் மீது பரிதாபப் பட்டார்கள். அப்படி பரிதாபப்பட்டவர்கள் என் கை கால்ககளை பிடித்து இடறப்பட்ட என்னை இடையூறுகளைக் கடத்தி போகவேண்டிய இடத்திற்கு அழைத்துச் சென்ருர்கள். ஆளுல் வேறு சிலரோ ஐயோ பாவம் தன்னந்தனியாக இப்படிப்போகிருனே என்றெல்லாம் என்னை விமர்சித்தவர் கள் தொடர்ந்தும் அவர்களுடைய விமர்சனங்களை வீதி வழிநின்று சொல் லிக்கொண்டே போகிருர்கள். இவர்களைப் பற்றியெல்லாம் நான் எனது மனதில் கணக்குப் போட்டபோது. என்னை நானே பலவீனம்படுத்திக் கொள்வதை அறிகிறேன். இப்படியான விமர்சனங்கள் அனுதாபங்கள் என்மீது படரத் தொடங்கிய போது நான் பைத்தியகாரத்தனமாகக் பதட்டப் பட்டுப் புலம்பியிருக்கிறேன். கால்ப்போக்கில் சமூகமும் சமூகத் தின் நிலையையும் புரிந்து கொள்ள முற்பட்டபோது பலதெரியாத விடையங்களை எனக்குத் தெரியவந்தன, உலகியலின் உட்கருத்தையும். இறையியலின் உட்கருத்தையும் எடுத்து அதைப்பற்றி esploritas சிந்திக்கின்ற போது மன நிம்மதியை எப்படிப் பெற்றுக்கொள்ளலாம்.
ஆத்மீக விடுதலை இலங்கை எவ்வாறு அடையலாம் என்பதைப் பற்றிய விரிவான விளக்கங்கள் எனக்குக் கிடைக்கின்றது. இந்த உலகியலுக்கு நான் நுளைந்து நுகர்ந்து முடிவில் எனக்குக் கிடைத்த ககவல்களை சற்று எண்ணிப் பார்க்கும்போது அகவிழிகளோ ஒளி இழந்து
5

Page 7
விடுகின்றன. கற்பழிப்புக்களும், கொள்ளைகளும் பெருமைகளும் இந்த உலகை ஆட்டிப்படைப்பதை அவதானித்துக் கொள்ளும் போது அர்த்த மற்ற மனிதனின் வாழ்க்கை புலனுகிறது. இந்நிகழ்சிகளை புறவிழிகளால் பார்க்கலாம். ஆனுல் அக வழிகளுக்கு அப்பால் பட்டவையாகவே அமைகிருன். தூய்மையான நிகழ்வுகளையும், உண்மையான உத்தர
வாதமான சம்பவங்களையும் அகவிழிகளால்தான் ஆளமாகப் பார்க்க முடியும். இந்த நேரத்திலே இதை வாசிக்கும் போது பல கேள்விகள். இன்னும் பல பிரச்சனைக்குரிய சங்கடங்கள், இதை
வாசிப்போர் நெஞ்சில் எழுதுவது ஐயம் இல்லை. இவ்வாறு எழும் பிரச்சனைக்குரிய விஞக்களுக்கு விடை அளிக்கச் சொல்கிறேன். பிற விழிகளுக்கும், அகவிழிகளுக்கும் இடையே உள்ள வேறுபாடுகள். கைவிரல் விட்டு எண்ணமுடியாதவையாக இருக்கிறது, கண்களால் காணும் காட்சிகள், அகத்தால் காணும் காட்சிகள் என இருவகைப் படுத்தும் போது, அவற்றின் வகைகளை வகுத்துக் கூற முடிகிறது. உலகின் விழிகள் படர்ந்து செல்லும் பாதைகளில் பயங்கரப் பாறைக் கற்கள் அவர்களின் விழிகளை, வேறு வழிகளில் மாற்றி விடுகின்றன. அதாவது அவர்களின் பயணத்தைத்தடை செய்து கொள்கைகளையும் வேறு திசையில் மாற்றி வருகின்றது. இந்த நிலை தொடரும் போது துயரங்கள் மீதியாகிறது. ஆனல் கொள்கைகளைத் தடுத்து நிறுத்தும் அல்லது சரியான பாதையில் நடை பயில முடியாது. பிழையான வழியில் திசைதிருப்புவதற்கு அகவிழிகள் பயன் பட முடியாது அகவிழிகளில் பதிவு செய்யும் நிகழ்ச்சிகள், உருவம், அருவம் அற்ற வையாகவே காணப் படுகின்றது. இந்த நிலையில் தான் எனது அகம் ஆத்மீக பாதையை நோக்கி நகரத்தொடங்குகின்றது. ஏன் இவ்வளவு சீக்கிரமாக இந்தப் பாதையில் எனது பயணம் தொடர்கிறது. ஒரு கணம் நான் என்னிடமே கேட்கிறேன். வழமையான பதில் தான் நாகரீகத்தின் போர்வையில், மனிதர்கள் நாய்த்தனம் கொண்டு வாழ் கிருர்கள். இப்பட்டியலில் என்னையும் சேர்த்துக்கொள்ளுங்கள். சில இடங் களுக்குச் சென்ற போது. சில செய்திகள் என் காதில் எட்டுகின்றன. விபச்சார விடுதிகளின் விலாசங்களை விசாரிக்கும் வெண்புருக் கூட்டங் கள். வீதிக்கு வீதி இவ்விடுதிகளின் விஸ்தரிப்புக்கள். இளைஞர்கள். ஏன் முதியவர்கள் கூட இவ்விடுதியை நோக்கி யாத்திரைப்பயணங்கள் இவற்றைப் புரிந்து கொள்ளும் ப்ோது, எனக் குள்ளேயும் ஒரு பர பரப்பு, அடுத்த-விஞடியில் என் மனம் அமைதி கொள்கிறது. பூமியில் இப்படியாக நடக்கும் நிகழ்ச்சிகளை நினைத்துப் பார்க்கும் போது, நெஞ்சம் வெடிக்க வில்லை. ஏன் தெரியுமா ? ஏற்கனவே வேதனை யால் வெடித்துப்போன நெஞ்சம் தானே. வயிற்றுப் பசிக்கு உணவுக் கடைகளில் தஞ்சம் புகுகிருேம். உடல் பசிக்கு விபச்சார விடுதிக்குள் நுழைகிருேம் இவை எல்லாம் நிரந்தரமற்றவை. ஆனல் நிரந்தர ஆத்மீகப் பசிக்கு உணவளிக்க வேண்டும். இவ்வுணவை இறையியல் பிரதேசத்தில் பெற்றுக் கொள்ள முடியும். இதைத் தவிர்த்து நாகரீக முன்னேற்றம் என்று சொல்லிக் கொண்டு நாய்த்தன மான காரியங்களில் ஈடுபடுவோமானுல். ஆதிகாலத்தில் எவ்வாறு வந்தோமோ அந்த நிலைக்குத்தான் நாங்கள் தள்ளப்படுவோம். சமூகமே அலங்கோலமாய் ஈடுபட்டு அந்த அசிங்கங்களிையே அற்புதம், அதிசயம் என்று சொல்லிக் கொள்வோமானுல் எம் நிலை என்ன வாகும். அவலங்கள் தான் மிஞ்சும், ஆகவே எமது முடிவை சற்று மாற்றிக் கொள்ள வேண்டும். இல்லா விட்டால் நாங்கள் சமாதியாக்கப் படுவோம். இப்புவியைப் பற்றி ஆராய்ந்தால், ஆரம்பத்திலிருந்து இறுதி வரைக்கும், எனக்கு கிடைத்த அனுபவங்கள் பல பாடங்களை புகட்டியுள்ளது.
6

-சந்தியிலே சந்தித்த சம்பவங்கள் புதிய ஒரு சரித்திரத்தை எழுத எனக்கு எழுது கோலை எடுத்துக் கொடுத்தது. இவ்வெழுது கோலைப் பெற்றுக் கொண்ட பின்புதான் இறையியல் பூங்கா-வனத்துக்குள் கால்களை பதிக்க விரும்பினேன். காரணம் என்னவென்று கேட்டால் இக்காரணங்களை வைத்துக் கொண்டு ஒரு புதிய காவியத்தை என்னல் எழுத முடியும். குளிக்கவோ இவள் போகிருள் என்று குழம்பினேன். அன்று நீச்சல் உடைகளுடன் வீதியிலே உலாவரும் நாகரிக மங்கைகள் பாதையோரங்களின் மின் வெளிச்சத்தின் கீழும் பாலியல் பாடல்கள் தேவைதான ? இந்த காட்சிகள் என் கண்கள் மட்டுமல்ல காதுகளும் செவிடுகளாய் இருந்திருந்தால் நிம்மதியாய் சற்று நேரம் உறங்கி யிருப்பேன். என்ன செய்கிறது செவியில் தெளிவாக ஒலி கேட்கிறது அன்னியர் கூறும் அவசரமான செய்திகளை வைத்துக் கொண்டு என்னல் அமைதியாய் இருக்க முடிய வில்லை. அவசரமாய் எழுது கிறேன் இந்த உலகியலை விட்டு இறையிலனுக்குள் உங்களை அழைத்துக் செல்ல விரும்புகிறேன்.
அன்புள்ள மக்களே எனக்கொரு உலகத்தை நான் அமைத்துக் கொண்டேன். இது கனவுலகம் கற்பனையுலகம் என்று சொல்ல முடியாது. தெய்வீக உலக்ம் ஆனலும் இந்த மண்ணுகலத்தைவிட பரந்து, விரிந்து, ஆழ்ந்து இருக்கின்றது. இந்த உலகத்துக்குள் பிரவே சிப்பதென்ருல் மிகவும் சிரமம்தான். பிரச்சனைகளும் துயரங்களும் நிறைந்த என்வாழ்வில். சமாதானம் 6T6irg சொல்லபப்டுகின்ற, இந்த . உலகத்துக்குள் மற்றவர்களையும் உட்பிரவேசிக்க வேண்டுமாயின், முதல் சமாதானமாக வாழப் பழகிக்கொள்ள வேண்டும். சமாதானம் என்பது சமத்துவம், சகோதரத்துவம், ஒற்று மை, அன்பு ஆகிய பண்புகளின் பாதை வழியே இவ்வுலகத்துக்குள் எல்லோரும் பிரவேசிக்க முடியும். இவவுலகத்துக்குள் பிரவேசிக்கும் ஒவ்வொருவரும் தன்னம்பிக்கை, தெய்வீக உணர்வு, நீதி, நேர்மை நியாயம் ஆகிய அணிகலன்களை அணிந்து இதற்குள் வர முடியும். என்னைப் பெறுத்தமட்டில் இந்த உலகத்திற்குள் நான் முழுமையாய் பிரதேசித்து விட்டேன்-என்று முற்றுப் புள்ளி வைத்துவிடல் ஆகாது இந்த உலகத்திலிருந்து காணும் பல தடவை வெளியே வருகிறேன். வெளியே வரும் நேரங்களில் எல்லா வேதனைகளையும் கண்ணிர் சிந்தும் கோரைக் கொடுமைகளையும் அனுபவிக்க வேண்டிய நிலமை ஏற்பட்டது. மண்ணில் மனிதனுக பிறந்த ஒவ்வொருவரும் சிரிப்பை இழந்து. சிந்தை கலங்குவதும் வறுமையின் கொடுமைகளாய் வாடி வதங்குவதும் உலக தத்துவம் தானே. இவ்வாருக நீங்கள் சுவாசிக் கலாம் உண்மையிலேயே இந்த உலகம் பாவத்தின் பாறைகளை தினமும் சுமந்த் வண்ணம் இருக்கிறது. மனிதர்கள் எல்லோரும் போட்டியிலும், பொருமைகளும் வஞ்சக எண்ணம் கொண்டவர்களா கவும். அனேகர் வாழ்ந்து கொண்டிருக்கிருர்கள் இந்த உலகத்துக்கு சொந்தமானது எல்லா சோகங்களும் அதை தாங்கிக்கொள்ள முடியாத நிலைக்கு ஏற்படும் சோர்வுகளுமே, ஆளுல் இறையியல் தந்துவத்தின் அடிப்படையால் இந்த உலகியலில் இருந்து இறையில் முற்று முழுதாக வேறுபட்டுச் செல்வதை நீங்கள் பல முறையில் தத்துவப் புத்தகங்களை வாசிப்பதின் மூலம் அறிந்து கொள்ளலாம். எனவே இவற்றிக்கு விளக்கம் கொடுக்காமல். தொடர்ந்தும் எனது உலகத்திற்குள் நுழைய எத்தனித்ததை எழுதுகிறேன்.

Page 8
இந்த உலகில் நடந்து முடிந்த சரித்திரங்களையும் நடந்து கொண்டிருக்கும் நாளாந்த நிகழ்வுகளையும், நினைத்து பார்த்த போது. இந்த உலகிய விட்டு வெகு தூரம் பிரிந்து செல்வதே எனது முடிவாகும். என் முடிவைப் போன்று இன்னும் பலர்தங்கள் முடிவு களை எடுத்து கொள்வாராயின், அவர்களது ஆட்மீகத்துக்கு நிஜமான தும் நித்தியமானதுமான, ஓர் ஆட்மீக விடிவு கிடைக்கும் என்பது உறுதி. இத்தருணத்தில் பலர் பலவிதமான விளுக்களை. என்மீது தொடுப்பார்கள், வாழ்க்கை என்பது வாழ்வதற்காக வருவது. அதில் இன்பம், துன்பம் இரண்டும் இரவு, பகல் மாதரி, இன்னேரத்தில் இன்பம் எமை விட்டு விலகிச் செல்லும் போது, துன்பம் எமக்கு துணையாக இருக்கும் போது. உலகியல் வாழ்வை விட்டு இறையில லுக்குள்-நுழைவது சர்வ சாதாரணம். அப்படியாக ஏற்படும் ஒரு முடிவுகள் நீடித்து ஓர் ஆட்மீக விடுதலையை பெற்றுத்தரப் போவ தில்லை, ஏன் தெரியுமா ? பிரச்சனை வரும் போது, இறைவனிடம் நெருங்கி ஜிவிக்கும் நாம். பிரச்சனை எமை விட்டு விலகியபோது இன்பத்தில் இருக்கிருேம் இறையனை மறந்து, எனவே உலகியலில் வாழ்ந்து கொண்டிருக்கும் நாம் இறையியலுக்கு நுழைந்து விட்டால் அவ்வுலகைவிட்டு வெளியே வராதவர்களாக அவ்வுலகத்திற்குள் உறுதி யுடன் வாழ வேண்டும்.
இவ்வார்த்தைகளை வரியாய் வரிக்கும் போது, இன்னும் சில சிந்தனைக்குரிய கருத்துக்களை உங்களுக்கு எழுதா விட்டால் என் எழுது கோலை-கடையில் விற்பனிடம் கணக் கெழுதக் கொடுப் பதுதான் சரி உலகை வாழும் ஒவ்வொரு வரும் இதயரத்தினூ டாகவே இறையியலுக்கு நுழைய வேண்டும். குடும்பம் என்பது கோயில். அந்த கோயினுள்ளேயே இறையியல் சம்பந்தமான, போத னைகளை படித்து பற்றிப் பிடித்துக் கொள்ளுங்கள். இங்கே நான் சுட்டிக்காட்ட விரும்புவது-என்னவென்றல் மனிதனுய் பிறந்த ஒவ்வொருவருக்கும் திருமணம் என்பது அவசியமான ஒன்று. அதை விட அவசியமானது ஆட்மீக விடுதலை. இங்கே இல்லறத்தை இழிவு படுத்தி. துறவியாக இருக்க உங்களை தூண்ட வில்லை. வீடு, மனைவி, மக்கள், சொந்தம், பந்தம் இவை யாவும் மனித வாழ்வின் சங்கிலிப் பிணைப்புகளாக பின்னிப்-பிணைத்திருக்கும். ஓர் இறுகிய பிணைப்பாடும். இப்பிணைப்புக்கள் எல்லாவற்றையும் தூக்கி எறிந்து விட்டு இறையியலுக்கு நுழையும் எனது கருத்தை இங்கு வலியுறுத்த வில்லை. உலகியலுக்குள் வாழும் ஒவ்வொருவரும் இறையியல் உலகம் பற்றி சிந்தியுங்கள் சிந்தனைகள் சீராகும் போது சிதைந்து போன எம்வாழ்வு சீர்பெறும். பூமியின் போக்கிலே போகப் போகும் போது சந்திக்க போகும் சங்கடங்களை-கடைசி சந்தியில் நின்று சிந்தித்துப் பாருங்கள். நாம் பூமியின் துணிந்து விலகித் செய்கிறேன்.
நான் ஏன் விலகிக் செல்கிறேன் என்பது விளங்கவில்லை தொடர்ந்து இன் நுாலை வாசிக்கும் போது விளங்கிக் கொள்வீர்கள்.

என்னை நானே ஆராய்கிறேன்
என் சுயரூபத்தைச் சுருக்கி சுய நலப்பெட்டியிலே பூட்டியபோது, பத்துரமாய்ப் பாதுகாக்கப்பட்ட என் சுயநலம். தன்னலமற்ற வாதிகளின் தட்டல்களால், தவறாகப் பூட்டி வைக்கப்பட்ட சுயநலத்தின் பெட்டி சுயமாகத் திறந்துகொள்ள என் சுயரூபம் மக்கள் முன் விபரிக்கப்படுகிறது.
சந்தேகங்கள் எனது தேகங்களில் நாளாந்தம் தேரோட்டம் நடத்து கின்றன. இதனால் மனப் போராட்டங்கள், மகிழ்விழந்த திண்டாட்டங் களும் நிலையாக என் நெஞ்சில் நிலைபெற்று நின்றன. இதன் பலனாய் சிலையாய்ப் போன என் சினேகிதர்களும், சடமாய்ப்போன எனது சகோதரர்களும், கசந்து நொந்து மனத் துயரமடைந்த அன்புக்குரிய வர்களும் என் சந்தேகத்தின் ஆயுதங்களால் தாக்கப்படுகிறார்கள். இவர் களின் நிலைப் பாடுகள் வெளிப்பாடுகளாக்கப்பட்டு. அந்தரங்கமான வேதனைகள் வெளி அரங்கமாக்கப் படுகையில், நான் வீட்டுக்குள் விட்ட தவறுகளை, வீதியில் உணர்ந்து கொள்கிறேன். சந்தேக நோயி லிருந்து, பூரணமாய் என்னைக் குணப்படுத்தி கொள்ள அயராது அந்த நோவோடு போராடி வருகிறேன். என் சுயரூபம் சூழ்நிலைகளின் எல்லைகளை எட்டிப் பிடித்த போது என்னை நானே விசரரணை செய்யத் தொடங்கினேன். என் விசாரணையின் விசாலங்களுக்கு நடத்தப் பட்ட நேர்முகப் பரீட்சையில் தோற்றுவிட்டேன். தோற்று விட்டதற்காக தோத்திரங்கள் பாடி விரக்தியின் விளிம்பில் நின்று விபரீதமான முடிவு கள் எடுக்கப் போவதில்லை மேலும் மேலும் என்னை நானே பல கேள்விகள் கேட்கிறேன். இதன் மூலம் எனக்கு கிடைக்கின்ற விடைகள் மென்மேலும் என்னைத் தெழிவுபடுத்துகின்றன. "நான் யார் " " நான் ஏன் உலகில் வாழ வேண்டும் ". நான் வாழ்வதில் எனக்கு என்ன பயன் " " என் சமூகததுக்கு என்ன பயன் " இந்த விளுக்கள் என் நாவிலே தவழ்ந்த போது சிந்தனைகள் கல்லூரியிலே முதல் தடவையாக ஓர் பரீட்சை கடுமையான முறையில் கலகலப் பின்றி நடந்து முடிந்தது. முடித்து விட்ட பரீட்சைகளின் பெறுபேறுகள், பெரியதோர் இடை வேளைக்குப் பின் சிந்தனைக் கல்லூரியின் அதிபரான மனசினல் வெளிப்பட்டது. பெறுபேறுகள் வெளியானதும் பலகையிலே எனது முழுமையான தகவல்களும் A5 stutter Losta எழுதப்பட்டுவிட்டன. என் செயலே இன்று புத்தகத்தின் பக்கங்களில் படம் பிடித்து காட்டப்படுகின்றன. என்னைப் பார்த்து நான் யார் என்று கேட்கிறேன். நானு ? சந்தர்ப்பவாதிகளின் சாட்சியாளன் இரக சியங்களை காப்பாற்றத் தெரியாத பரகசியப்படுத்துபவனும், பரபரப் பானவனும், பயங்கரமானவனும் பொய்யுரைகளை போதியளவு உரைக் கும் பேர் போன உண்மையற்ற உரைச்சித்திரக்காரன். அளவுக்கு அதிகமாய் வார்த்தைகளை புலம்பும் புலம்பக்காரன், முற்கோபத்தின் முன்னிப்பவன், சில நேரங்களில் முட்டாள் தனமாக சிந்திப்பவன். பொறுமையில்லாதவன் பெருமையில்லாதவன், சகிப்புத்தன்மை சற்று
'9

Page 9
குறையாதவன், காம சூத்திரத்தைக்கடதாசியில் படித்து கரைகண்டவன் இத்தோடு "நான் யார்' எனும் வினவுக்கு சம்பூரணமான பதில்களை பகிர்ந்தேன். என்று சொல்வது உண்மைக்குப் புறம்பானது, என்னை நானே இன்னமும் ஆளமாய் அலசி ஆராய்கிறேன். எதற்காக ? ஆனந்த மாய் வாழ்வதற்கா ? ஆம், ஆத்மிகத்துக்குள் நித்தியானந்தமாய் ஜிவிப் பதற்கு தற்போது என்னிடம் இருக்கும் பலவீனங்களையும், குறைபாடு களையும், கெட்ட எண்ணங்களையும் நீக்கி ஆத்மீகத்துக்கு இடையூறாக இருக்கும் தடைகளை தகத்தெறிந்து, என் அகத்தையும் தூய்மைப்படுத்து கிறேன். என் அகம் ஆத்மீக எண்ணங்களால் வண்ணங்களாக்கப்பட்டு இறை சிந்தனைகள் அவை அங்கே அலங்காரமாய் அமையும், வீணான மன சோர்புகளும் வேண்டாத வெறுப்புக்களும், எனக்குள்ளே ஏற்ப
நான் ஏன் வாழ வேண்டும், என்ற கேள்வி தினம் தினம் எனக்குள்ளேயே எதிரொலிக்கும் அப்போதெல்லாம், தற்கொலையைத் தாரமாக்க தவி யாய் தவிப்பேன். எனது தவிப்புக்கு தகுந்த பதிலுரைகள் மிகவும் விரிவாக விரிந்தது விரிவாக விரிந்த பதிலுரைகளுக்குள் என் எண்ணக் கோடிகள் படரத்தொடங்கின. கொடிகள் படரத் தொடங்கியதால் நெறி யான என் வாழ்வுக்கு சரியான பாதையை சரி செய்து தந்தது, பாழ் பட்ட உலகத்தில் பாவி நான் வாழ்ந்து தான் ஆகவேண்டும். என்னை விட்டு ஆவி அகலும்வரை, அவனியில் என் கால்கள் பயணித்துத் தீர வேண்டும். எனக்குள் ஏற்படும் பிரச்சனைகளுக்கு அர்ச்சனைகள் செய்து செல்வம், விலகாத் சொந்தம், ஆத்மீக நட்பு, கலையாத உறவு, குலையாத குதூகலம் ஆத்மீக வாழ்வு. முடிவே இல்லற பாதை, இரவே இல்ல்ாக் காலை ஆத்மீகச் சோலை. இவ்வாரெல்லாம் வர்ணிகப்படும் வர்ணனையற்ற அந்த வையத்துள் வாழ்வாங்கு வாழ்வதற்கு, வாருங்கள் சமூகமே, இவ்யுகமதிலே, புதியதோர் உலகம் சமைப்போம் புவியெங்கும் அதனைப் பரவச் செய்வோம். பாரினிலே பயணத்தை முடிக்க முன் முன்னேறி முந்திக்கொள்வோம். ஆத்மீகப் பாதையிலே அதிசீக்கிரமாய் பயணம் தொடங்குவோம்.
10

இதய அழைப்புகள்
போலி வாழ்க்கையடா போதும் இவ்வுலகில் வாழ்ந்ததடா நாட்டில் நரி மனங்களடா. நாளை இதுவே நிலைக்குமெடா, சாதிக்கொடுமை யடா? இது சாகும் வரை நின்று சாடுமடா: ஆத்மீக உலகமடா, அதுவே அன்பின் அமைவிடமடா.
நான் பாடுகிறேன். எனை மறந்து வாயைத் திறந்து பாடுகிறேன் என் தொண்டை வறுமையின் வளையங்களால் வரிந்து கட்டப்பட்டிருக்கும் கட்டத்திலும், உதடுகளால், உற்சாகமாய் உதடு களை உச்செரித்து உள்ளத்து உள்ளக் கிடைக்கைகளை, உணர்ச்சி யோடு பாடிக் கொண்டிருக்கிறேன். விடிவு காலம் பிறக்க, விண்ணும் மண்ணும் சிறக்க. வீணாக எழும் விவாதங்கள் விலக, எங்கும் எல் லோரும், இறையருள் பெற்றிட, இன்னல்கள் அகன்றிட, இறை வாழ்வு கிடைத்திட உங்களுக்காக நான் வாழ்த்துப் பாடும் நேரம் வான், முகில்கள் வாவேன்று வரவேற்று வாழ்த்துப்பாடி என் எண்ணத் துயரை களைகின்றன. அவை பாடும் பாடல், நான் தேடும் தேடல். வானத்தின், வாகனத்தில் பிரயாணம் செய்யப் போகிறேன். என்ன இவ்வளவு சீக்கிரமாக . ஆம் அவசரமாய் பிரயாணத்தை தொடங்குவது எனக்கு பிரயோசமாய் இருக்கும். பிரயாணத்தின் சில தடங்கல்கள், சில்லறைத் தடங்களாய் இருந்தால் சீறிச் சினந்து தடை d.56) 6.Is உடைத்து விட்டு உற்சாகமாக பயணத்துக்கு புறப் பட்டு இருப்பேன். ஆளுல் தவிர்க்க முடியாததும் தடைகளை தாண்ட முடியாததுமான, ஓர் இக்கட்டில் இடர் பட்டுக் கொண்டிருக்கிறேன். இருப்பினும் காலம் வரும் வரை காலத்துக்காகக் காத்திருக்கி றேன். அது வரைக்கும் ஆத்மீக பரப்புக்களுக்கு பங்குகாரர்களை சேர்க்கும் பணியில் ஈடு பட்டுக் கொண்டிருக்கிறேன்.
ஆத்மீக நீர் ஓட்டத்திற்குள் நீச்சல் பயில விரும்பும் ஆத்மீக வீர வீராங்கனைகளே ! அணிதிரண்டு வாருங்கள் அவைபாடும் நீ யின் நீரோட்டம் நிஜமாய் உங்களையும் தாலாட்டும், இவ்இளைஞன், உங்கள் கலைஞன் உங்கள் உள்ளங்களை உழுது செல்கையில் அதிர் விதைக்க விரும்புவது விளைதரா வித்துக்களையும், விலை மதிப்பற்ற முத்துக்களையும் அல்ல, விளை தரும் வித்துக்களான என் உயிர் சொத்துக்களே, அவையே அழியாத ஆத்மீக வித்துக்கள், அழியாத நிதானமாக நடந்து இவ்வுலகில் தோன்றும் சவால்களை சவாலாய் ஏற்று அதை சமாளிக்க பயிற்சி எடுத்த பின்னரே நான் வாழத்தான் வேண்டும், என்ற முடிவுக்கு தீர்க்கமாய் தீர்மானித்து முடிவெடுத் துள்ளேன். வாழ்வது ஒரு முறை வாழ்ந்து பார்க்கிறேன். நான் வாழ்வதில் பயனிருக்கிறது, அந்த பயனின் பயன்பாடுகள் யாருக்கு ? இந்தவினவுக்கு சமூகங்களின் வாய்களிலிருந்து பல வருடங்கள் கழிந்தே பதில்கள் வெளியாகும். அதற்கிடையில் சமூகத்திலுள்ள ஒவ்வொரு
11

Page 10
வரும் தன்னைத்தானே சல்லடை போட்டு ஆராய வேண்டும், அப்போது தான் சமூகமே ஒரு தெளிவான முடிவை அடைய முடியும். நானே எனக்குள்ளே பெரிய தேடுதல் வேட்டையை நடத்திக் கொண்டிருக் கின்றேன். நாளை காலைப் பொழுதில் ஆத்மீக உலகத்தின் அகன்ற வெளிகளில் உல்லாசமாய் நான் பவனி வருவேன் அப்போது எனக் குள்ளேயே நடத்திய தேடுதல் வேட்டையில் பலாபலன்களை அனுப வித்துக் கொள்வேன். அதற்காக இந்த வேளையில், என்னை ஓர் ஆராய்ச்சி மண்டலமாக ஆக்கிக்கொள்வேன், ஆயத்தப்பட்டு போக நினைப் பது நிஜமற்ற நிலா வெளிச்சங்களை தேடி அல்ல, நிரந்தமான நிலா வெளிச்சங்களைத் தேடி செல்கிறேன், இனி என்ன மக்கள் சமூகமே நீங்களும் ஆத்மீக அரங்குகளில் பேரானந்தக் களியாட்டம் நடத்திட விரைந்து செல்லுங்களே. அன்புடனும், பண்புடனும், அமைதியுடனும் வர்ருங்களே அகநிம்மதியைத் தேடி ஓடிச் செல்கிறேன். நீங்களும் அவ்வழியே ஒடுங்களேன். −
2

ஆன்மீகத்தின் அகழ்விளக்கு
ஆன்மீகம் என்பதன் பொருள் அன்பு சந்தோஷம் சமாதானம்
நீடிய பொருமை தன்னடக்கம் அருள்நிறை இறைவழி காட்டல் என்பதா
D.
@ உலகலாவிய ரீதியிலும் சரித்திர ரீதியிலும் சமூகசமய சன்மார்க்க ரீதியிலும் பண்டு தொட்டு ஆய்வுகள் நடந்து கொண்டிருக்கின்றன. எத்தனை எத்தனையோ துறவிகள் முனிவர்கள் ஆயர்கள் பக்தர்கள் ஆன்மீகத்தின் ஆக்கத்தையும் நோக்கத்தையும் அறிந்து கொள்வதற்கு துறவறம் பூண்டவர்கள் ஆயிரமாயிரமாவர் என்பதை சரித்திரங்கள் சாட்சி பகருகின்றன என்பதை அலசி ஆராயும் பொழுது அவர் சொன்ஞர் இவர் சொன்னர் என்ற சிந்தனைகள் அல்ல அதாவது ஆய் வாளர்களின் ஆய்வுகளும் அல்ல எமது தூய சிந்தனைகளும் அதன் செயல்பாடுகளுமே ஆன்மீக வழிக்கு எம்மை வழி நடத்துவைகளாகும்.
எனவே தெய்வீகத்தன்மைக்குரிய வாழ்க்கை என்பது விசித்திர மான விளையாட்டுமல்ல மென்மையான உணர்ச்சிக் கூத்துமல்ல ஒரு எழுத்தாளன் அந்த இடத்தில் எப்படி எழுத வேண்டும் என்றும் ஒரு பேச்சாளன் எந்த இடத்தில் எப்படி பேசவேண்டும் என்றும் ஒரு ஒவியன் தான் வடித்த சிலைக்கு எந்த இடத்தில் வெள்ளை நிறம் பூசவேண்டும் எந்த இடத்தில் கருநிறம் பூசவேண்டும் என்று இப்படிச் செய்தாலொழிய அவர்கள் மனம் களிப்படைவதில்லை. இதை வாசிக் கின்ற வாசகர்கள் இறை வழிபாட்டின் வாழ்வு அப்படிப்பட்ட தல்ல என்பதை தாழ்மையுடன் அறிவுறுத்துகின்றேன்.
இன்றைய உலகில் சமாதானம் வேண்டும் என்று வஞ்சிக்கின்ற நண்பனே ஆண்டவனின் அன்பனே பிறரிடம் அல்ல உன்னிடம் , அச் சமாதானம் உண்டா என்பதை நீயே நிர்ணயத்துக்கொள். இன்று மனிதகுலம் அழிந்து கொண்டு போவதற்குக் காரணம் உலகில் சமாதானம் இல்லை. ஆனல் தெய்வீக வாழ்க்கையில் மாத்திரமே தூய சமாதானம் உண்டு என்பது பசு மரத்தாணி அடித்தால் போன்ற உண்மை, இதை யான் அறிந்து உணர்ந்து விழிப்புணர்ச்சியடைந்தேன். அப்படி என்னை விழிப்படையச் செய்தது ஆன்மீகவாழ்வே வேறெந்த வாழ்வும் இதற்கு ஈடு இணையாகாது சிந்தனைகள் தெளிவாக இருந் தால் செய்கின்ற செய்கைளிலும் தெளிவு இருக்கும். இப்படியான சிந் தனைகள் எங்கிருந்து பிறக்கின்றன என்பதனை பல ஆய்வாளர்கள் ஆராய்ந்து அறிந்த உண்மை. அவ்வாய்வாளர்களில் நானும் ஒருவன் என்பதை உறுதியாகக் கூறுகின்றேன். அந்த உண்மை என்ன வெனில் " ஆன்மீகத்திலிருந்து அரும்பிய தெளிவுகள் " ஆக்கபூர்வ மான உண்மை இது நாட்டின் சரித்திரத்தில் கண்ட உண்மையல்ல. உலக சரித்திரத்தில் கண்ட உயரிய உண்மையுமல்ல சமூகத்தில் கண்ட
13

Page 11
றிந்த உண்மையுமல்ல எனது சொந்த நடைமுறை வாழ்வில் நான் கண்ட ஆன்மிக உண்மைகள் அவைகளை எழுத்துருவில் எழுத ஏடு அடங்கா என்பதை எனது பேனை முனை எடுத்துரைக்கின்றது.
அந்த மாண்புமிக அதி உன்னத உண்மையை உணர மனப்பக் குவம் வைக்கும் பொழுதுதான் அந்த அனுபவம் ஏற்படும். இது எனது வாழ்வில் நான் கண்ட உண்மை ஒரு மனிதன் எதையும் செயல் முறை படுத்துகின்றபோது தான் அவனுக்கு சிறந்த அனுபவங்கள் கிடைக்கின்றன. இதை இப்புத்தக ஆசிரியனே சித்தரித்துள்ளான் என்பதை வாசித்தறிந்து நான் ஆச்சரியப்பட்டேன். இந்த இளம் வயதில் உண்மையிலேயே இறைவனை ருசித்தபின் நற்பயனே என்ற முடிவுக்குள் என்னை ஒரு நிலைப் படுத்திக் கொண்டு இறைவா ஆசிரிய னுக்கு நீண்ட ஆயுசு கொடுப்பாயாக என்று பிரார்த்தித்தேன். '
ஆன்மீகத்தை அனுசரிக்கின்ற அனைவரும் இந்த அனுபவத்தை அடைவர் என்பது உறுதியன்ருே ஆண்டவனிடத்தில் காணப்படுகின்ற ஏகசிந்தனைகள் எம்மிலும் காணப்படுவதாக அவற்றை செயல்முறைப் படுத்திக் கொள்வீர்களாக அப்பொழுது சாந்தியும் சமாதானமும் புவி எங்கும் சிறக்கும் (நன்றி). எஸ். டி. மனுவேல் முருகையா, 7ம் நாள் திருச்சபை சின்ன ஊறணி,
மட்டக்களப்பு.
14

பின்னோக்கி பார்க்கிறேன்
என்நினைவுக்கு எட்டிய தூரத்தில் நின்று கொண்டிருக்கிறேன். விபரம் தெரிந்த வயதிலிருந்து என்கிராமத்து மக்களை அடையாளம் கண்டு கொள்கிறேன். கிராமத்து வீதிகளிலே நடக்கத் தொடங்கு கிறேன், அச்சூழலின் நிலமைகளை மெல்ல மெல்ல உணர்ந்து கொள் கிறேன். உணர்ந்துகொண்ட உணர்வுகள் உள்ளத்தின் ஊடாக என் உதட்டைத் தொட்டுவிட தொடர்ந்தும் மனம்விட்டு மக்களுக்கு எழுது கிறேன்.
நான் கடந்து வந்த பாதையிலே கண்ட கனவுகள். கற்பனைகள் கண்ணீர் சிந்திய சம்பவங்கள் யாவற்றையும் யாவருக்கும் எடுத்துரைப் பதில் அமைதி கொள்கிறேன். நான்கு திசைகளையும் நோக்குகிறேன். இமைகள் தம்மை மறந்து ஒன்ருேடு ஒன்று பின்னிப் பிணைந்திருக் கின்றன. இதனுல் இருண்டமேகங்களுக் கூடாகவே என் பயணம் தொடர்கையில் தொடர்ந்துவிட்ட அந்தத் தொடர்புகளின் தொடர்கதை களைத் தொடர்ந்து எழுதிச் செல்வது என்விரல்களாக இருக்க முடியாது. என்விழி நீரே இவ்வரியினை வடித்துச் செல்கின்றன. சொந்தங்கள் சுடுகாடாய், பந்தங்கள் பாலைவனமாய் உறவுகள் ஊமையானபோது, என் உள்ளம் உறக்கம் கொள்ளாமலே கலக்கத்தின் கானல் பிரதேச சங்களிலே கண்ணிமைக்காமல் உலாவந்து கொண்டிருக்கிறேன். குதூகலத்தை தரவேண்டிய குடும்பம் என்னும் கோயிலே குப்பை மேடு ஆக்கப்பட்டதை எண்ணும் போது எண்ணும் எண்ணங்களே வானவில்லின் வர்ண ஞாலங்களாகி விடுகின்றன. மதுவாய் வந்த அரக்கன் என்குடும்பத்தின் குதூகலத்தை குழிதோன்றிப் புதைத்து மதம் பிடித்த யானையாய் தினம் தினம் எம்மோடு மோதுகிருன். மதுவால் நலிவடைந்து நலன் இழந்து நாயாய் நடுருோட்டில் அலையும் நிலைக்கு நம்மவரை ஏற்படுத்தியது சில காலம். என்னையும் விரட்டத் தரவில்லை ஆணுல் என்னைவிரட்டிய மதுவிலங்கிலிருந்து விடுதலை பெற்றுக்கொண்டேன். மதுவின் விலங்குகளில் கைதியாக்கப்பட்ட எனது குடும்பம் கதம்பமாய் போனதும் எனது சகோதரர்கள் சடுதியாட சந்தோசத்தை இழந்து சலனமாய் வாழ்ந்ததையும், பின்னுேக்கிப் பார்க்கிறேன். உறவுகள் என்னை உதறித்தள்ளி உதாசீனம் செய்து உருக்குழைந்த பின்னும் அவர்களை அந்த அன்பு நெஞ்சங்களை என் நெஞ்சத்தால் நேசிக்க முடியவில்லை பந்தபாசங்கள் பரிகாசங்களாய் மாறி அவையே மோசங்களாய்ப் போனதை இப்போது மறக்கத் தொடங்குகிறேன். மறக்கத் தொடங்கிய அந்த உறவுகளை எனது உலகமாகக் கொண்ட அந்தக் காலத்தை, கடந்த நிகழ்காலத்தில் நின்று கொண்டிருக்கிறேன். இருந்தும், அந்தநாள் ஞாபகங்களை நிராக ரிக்க முடியாதவாறு கஸ்டப்பட்டுக் கொண்டிருக்கின்றேன் அதனுள் தான் அவர்களை ஒரு நிமிடம் நினைக்கிறேன்.
15

Page 12
இங்கே குறுதியில் மலர்ந்த மலர்களின் மணங்களை முழுமையாக நூகரும் உரிமை எனக்கில்லை, உரிமை இல்லாதபோதும் என்உள்ளத்தை ஊடறுத்துச் செல்லும் சில நிகழ்ச்சிகளை உங்கள் பார்வைக்காக தெளிவு படுத்துகிறேன். தனி ஒருமனிதனின் தனித்துவமான வாழ்வில் தலையிடுவதற்கும் அருகதையற்றவன் எனவே எங்கள் சமூகத்தின் சாயல்களை பெயர்குறிப்பிடாமலே சுட்டிவிரலால் சுட்டிக்காட்டாமலே சுருக்கமாய் சொல்லுகிறேன். எங்கள் தேசத்தின் தேசப்படங்களை என் நினைவுகள் நிழல்லிடுகின்றன ஊர்ரடங்கி தூங்கிஞலும் என் உடலும் உள்ளமும் தூங்குவதில்லை நடு நிசியில்கூட தெரு வோரத்து மரங்களுடன் கதைகள் பல நான் பேசியிருக்கிறேன். கண்ணிர் கதவு கள் திறந்து என் கன்னத்தை கடந்து சென்றிருக்கின்றன. எங்கள் வீட்டிலே இரவு பன்னிரண்டு மணியை கடந்தும் யுத்தம் நடை பெறும். இது அக்கிராமத்தின் நித்தமும் கேட்கும் சத்தமாகி விட்டது. அக்கிராம மக்களைப் பொருத்தளவில் இச்சத்தங்கள் கேட்பது புதிய தொன்றல்ல இப்படியே இப்பட்டியலின் பக்கத்தை நீட்டினுல் ஒரு புதிய பாரதத்தை நீட்டி முடிக்காமலே முடிக்கலாம்.
பட்டினியின் கொடுமையால் பச்சைத் தண்ணீரைக் குடித்து வயிற்றை நிரப்பிய வாரங்கள். உமியிலே குருணல் புடைத்து கஞ்சி காச்சி குடித்த காலங்கள், பசியின் கொடுமையால் பக்கத்து வளவுக்கு பயத்தோடு களவாய் தேங்காய் பிடுங்கி பசியாற்றிய நேரங்கள் இன்னும் எழுதினுல் வறுமைக்குள் வரையறுக்கப்பட்டவர்களாக வாடிவதங்கிய கோரக்கொடுமைகள். அவற்றின் விளைவுகளால் விபரீத மாகிவிட்ட நாட்களை குறுதிப்பாட்களாக குவலயத்தில் ராகமில்லாமல் வாடமுடியும்.
1981ல் எனது தாயார் சிறுதவறு ஒன்று செய்யநேர்ந்ததன் மூலம் தன் உபதபால் தலமை பதவியை தற்காலிகமாக இழக்க நேரிட்டது. இதன் விளைவாக மின்னல் வேகத்தில் இன்னல்கள் அதிக ரித்து வறுமை வழிமையாகி தன்வழியிலே எம்மை அழைத்துச் சென் றது. எனது தாயரின் வேலை அவருடைய இரத்தப் பாசத்தில் வழி வந்தவருக்கு கைமாறிச் செல்கிறது. வேலையைப் பெற்றுக் கொண்ட வர்கள் வேல்வி கடாக்களை வெட்டி இன்பக்களியாட்டம் நடாத்து கின்ருர்கள். வேலையை இழந்த நாமே விதிவழி நின்று சோகங்களை சோருக்கி திண்டாட்டத்துடன் சாப்பிட்டுக் கொண்டிருக்கின்ருேம், அச்சந்தர்ப்பத்தில் என்னை சமாதியாக்கிய ஒரு சம்பவம், இப்போது என்நினைவுக்கு எட்டுகிறது.
அன்று ஒரு தைபொங்கள் காலையிலே கரு முகில் கலைந்து கதிரவன் கண்முழிக்கிருன். நாமும் கண்விழிக்கிருேம். எங்கும் பரபரப்பு. எங்கள் வீட்டில் மட்டும் பரபரப்புக்கள் இல்லாமல் பரிதாபத்தின் அமை தியாக இருக்கின்றது. நானும் என் சகோதரர்களும், வயிற்றின் பசி யினை மனதில் பட்ட ஆசையினை மணல் மேட்டில் வரைந்து கொண்டி ருக்கிருேம். இந்நிலை இப்படியே தொடர எனது தாயாரின் வேலையை தர்க்காலிக மாகப் பெற்றவர் விட்டிலும் பல ரூபாய்க் கணக்காண வெடிகள் கணக்கற்று முழங்குகின்றன. ஆனல் எங்கள் வயிறுகளோ வழக்கத்தின் கொடுமையினுல் பட்டினிக் கவிதைகள் புலம்புகின்றன. இப்படி ஒன்றல்ல இரண்டல்ல கோடிக்கணக்காண அனுபவங்கள் கோடிட்டு காட்டலாம். நான் இப்போது எதை பின்னுேக்கிப் பார்க் கிறேன். நானும் எனது குடும்பத்தின் வாழ்வும், சொந்தமும் சொந்தத் தின் சூழ்ச்சியையும், இதுமட்டுமா சமூகமும் சமூகத்தின் பின்னனியை யும். ஆராய்ந்து பார்த்து விட்டேன். இப்பொழுது என்னை நானே ஆராய்ந்து கொண்டிருக்கிறேன். என் ஆராய்ச்சிகளின்
16

முடிவுகள் என்னை ஒரு ஆத்மீக ஆளாக உருவாக்கப் போகின்றது. அவ்வானந்தத்துடன் கருகிப்போன என் கடந்த காலத்தில் உருகிப் போன என் >உள்ளங்களை விட்டு விலகி நிகழ்கால சக்கரத்துக்குள் சந்தோசமாய் சுழல்கிறேன். வறுமைப்பட்டு வருத்தப்பட்டு துன்பத்துக் குள் துவண்டு கொண்டு இருப்போரை தூய்மையான இறையியல் உலகிற்க்குள் துணிந்துச் சென்று துயரம் போக்கி நிலையான இன்பம் பெறுவோம் வாருங்கள்.
17

Page 13
பொய்த்துப்போன (பொய்யான) பொழுதுகள்
இளமை என்னும் சோலையிலே பசுமை யென்னும் மலர்களிலே பள்ளிகொண்ட என் நினைவுகளே பசுமரத்து ஆணி போல பதிந்து விட்டது. இதயத்தில் பதிந்ததையே இப்போது எழுதுகிறேன்.
இன்னமும் மறக்க முடியாமல் என் மனம் எனும் ஒளிப்பதிவு நாடாவிலே மீண்டும் மீண்டும் சுழன்று கொண்டிருக்கும், நிகழ்வுச் சுழல்வுகளை நான் நிம்மதியாக இருந்து திரும்பவும். ஓர் தடவைகேட்க விரும்புகிறேன். பாடசாலையால், வீதியில் போக்குவரத்து வண்டிகளில் நான் நாடத்தி முடித்த நாடகங்க்ள் என்நினைவு எனும் வீடியோ நாடாவின் மூலம் ஓர் பார்வையாளஞக இருந்து அக்காட்சிகளைப் பார்த்துக் கொண்டிருக்கிறேன். என்பார்வையில் வியர்த்துப் போனது எனது உடல் மட்டுமா என்உள்ளமும் தானே நான் நிஜனப்பதை நிலை நாட்ட நினைக்கவில்லை நடந்ததை நடந்த வண்ணமாக எடுத்துரைக்கிறேன், தென்மராட்சியில் தென்றல் காற்றை என்தேகம் தழுவிச்செல்கிறது, என் அனுபவ புத்தகத்தில் வாழ்க்கையை பாழ் லடித்த பாடங்களின் பக்கங்களை பலதடவை புரட்டிப் படிக்கின்ற சமயம் சரமாய் உதிர்ந்து போகிறேன். பள்ளிமானவர்களோடு பள்ளியிலே கை கோர்த்து துள்ளித்திரிகிறேன் பட்டம் தெழித்து பல்லித்த காலத்தின் வேகத்தையும் வாழ்வில்வந்த சோகத்தையும் மறந்து உல்லாசத்தின் தேரினிலே ஊர்வலம் போகின்றேன். கற்றிடும். கல்வியை நாளை எனும் எதிர்காலத்தை மறந்தவனுய் மங்கையரின். மனங்களிலே இடமெடுத்து மாளிகை கட்ட அலைகிறேன், பொன்ஞன காலங்கள் கண்ணீரின் கோலங்களில் கரையப்படுவதை கவனிக்காதிருக் கிறேன். களியாட்டு விழா நடத்துகிறேன் கல்விப்புத்தகங்களில் என் கரங்கள் காதல் வலிகள் எழுதிப்பழகுகின்றன, இத்துடன் நிற்கவில்ஜல. பாதையிலே பள்ளிப் பாவையர்கள் பவணி வரும் பொழுது அவர்களின் எதிர் திசையில் நானும் சில மாணவர்களும் சென்று கொண்டிருப்போம் அடுத்த எனது விருப்பம் நிறைவேறும் எனது கரங்களை பிடித்திருக்கும் மாணவர்கள் நலுவவிட்டு விடுவார்கள் அடுத்தகணமே எதிர்திசையில் வரும் மாணவிகளோடு மோதுப்படுவேன் மோதலிலேயே மோகனப் புன்னகை பூக்கள் என் உடலை உரசிச் செல்லும். எதையும் வெளியாகச் சொல்ல விரும்புகிறேன் இதில் வெட்கமோ வேதனையோ இல்லை அப்போதெல்லாம் அவர்களே எனது உலகமாக இருந்தார்கள். அவ்வுலகத்துக்குள் கழிந்து போன பொழுதுகள் பயனற்று போய் விட்டதை இப்போது புரிந்து கொள்கையில் நான் சந்தோசக் கனவு களில் மிதக்கிறேன். காரணம் காலம் கடந்த பின்னுவது உணர்ந் தேனே 1 அப்பொழுது அர்த்த மற்றவை மனவருத்தமாவை.
தொடர்ந்தும் எனது பொழுது போக்குகள் என்னும் அறைக்குள் உங்களை அழைத்துச் செல்கிறேன் வீதிவழி நின்று வீண் வம்பு செய்து, வீணாய்கழிந்த வினுடிகள், சந்திக்கு சந்தி நின்று வலயல் தாங்கி வரும்,
18

வஞ்சியரை வழி மறித்த நாட்கள் டியூசன். வகுப்புக்களில் மாணவிக ளுக்கு பின்ஞல் அமர்ந்து பின்னலைப் பிடித்திழுத்த அநாகரீகச் செயல் கள் இத்துடன் என் சேட்டைகள் நின்றதா ? இல்லவே இல்லை இன்ன மும் நீடித்தது. சாவக்கச்சேரியிலுள்ள மணல் புட்டியிலும் புகையிரத நிலையத்திலும் நண்பர்களுடன் அரட்டையடித்து அலுத்துப்போக்கிய போலித்தனமான பொழுதுகள் இப்பொழுது. அவை என்னிடம் நியாயம் விசாரிக்கின்றன. அவ்விசாரணிைகளுக்குள்ளிருந்து விலகிச் செல்ல விரும்புகிறேன். எனது விருப்பம் விரும்பப்பட்டாலும் நிறை வேறவில்லை திரும்பவும் பொய்யாய்போன அந்தப் பொழுதுகளுக்குள் புகுந்துகொள்கிறேன். போக்குவரத்து வண்டிகளிலும் என் போக்கி கில் மாற்றம் ஏற்படவில்லை. சனக்கூட்டம் நிறைந்த பஸ்சில் சட்டென ஏறி ஒரு மிஸ்சின் பக்கத்தில் நிற்பேன் மிஸ் சரியும் வேளையிலும் அந்த மிஸ்சோடு சாய்வேன் மிஸ் சரியாதபோதும் அதிகமாய் அருகில் நிற்கும் மிஸ்சோடு சாய்வேன் சாரதி பிரேக் பிடிக்க மறக்கும் கட்டத்தில் எல்லாம் அடுத்த பிரேக் எப்பபிடிக்கும் என ஆண்டவ அவசரமாக வேண்டுவேன் பஸ்சாரதி பிரேக் பிடிக்கும் போது மிஸ் கையைத்தட்டுத் தடுமாறிப் பிடிப்பேன் இது இளமையின் அரங் கேற்றத்தால் விழைந்த மாற்றம். விழைந்த மாற்றங்களை விட்ட பிழை களை நீங்கள் வாசித்து என்னை விமர்சிக்கலாம் அல்லது விமர்சிக்காமல் விடலாம், எது எப்படியாயினும் இளமை வயதில் விழிப்புணர்ச்சியாய் எல்லாச் செயல்களைச் செய்யும்போதும் விழிப்புடன் விழித்திருங்கள் நானே விழிப்புணர்வற்றவர்களுக்குள் ஓர் வித்தியாசமான கோலத் துக்குள் வாழ்ந்து கொண்டிருக்கிறேன். என்னைப் போலவே ஏனைய விழிப்புலன் அற்றவர்களும் அநாகரீகச் செயல்களில் ஈடுபடுவர்கள் எனும் தப்புக்கணக்கை உங்களுக்குள் வளர்க்காதீர்கள்.
மேலும் என் நெஞ்சம் திறந்து நான் சொல்லுவதாவது நான் ஒரு பஸ்சில் பயணம் செய்கிறேன் என்று வைத்துக்கொள்ளுங்கள். எனக்குப் பக்கத்தின் யார் இருக்கிருர் என்பதை அடையாளம் காண வேண்டும் அவ்வாறு எனக்குள்ளே எழும் அவா பேராவலாக மாற எனது வழி முறைகளை கையாளுவேன் அதாவது பக்கத்தில் இருப்பவர் ஆணா பெண்ணா இச்சந்தர்ப்பத்தின் நான் கையாளும் உபாயங்களை உங்களுக்கு எடுத்தியம் புகிறேன் என் கையை எடுத்து எனது சப்பாத்தை துடைப்பது போல் பாசாங்கு செய்வேன் அதன் பின் கையைஎடுக்கும் போது எனது பக்கத்தில் இருப்பவரின் மேல் என்கையை அணைத்துக் கொள்வேன் அப்பொழுது அவர்அணிந்திருக்கும் ஆடையை என்னுல் மதிப் பீடு செய்யமுடியும் அடுத்தபடியாக எனது தோள்பட்டை சாய்ந்திருக்கும் ஆசனத்தில் கையை வைத்துக் கொள்வேன் அந்நேரத்தில்அந்நபருடைய முடி கட்டையா நீளமா என்பதை என்னல் முடிவு செய்ய Cpl. b இவ்வாறாகவே பஸ்பயணங்களில் எனது ஆவலின் ஆட்சிகள்பொழுது போக்குகள் என்பன காலங்களைக் கடத்திக் கொண்டன எனக்குள்மறை ந்திருக்கும் உள்ளக்கிடைக்கைகளை வெளிப்படுத்துவதன் மூலம் நான் வெறுமையாகின்றேன். இறையியல் உலகத்திற்கு செல்வதற்கு என்னை தயார் செய்து கொள்வதற்காகவே நான் விட்ட தவறுகளை வெளிக் கொணருகிறேன் இதை நீங்கள் தப்பாகவோ தவறாகவோ எடுத்து என்ன தள்ளி ஒதிக்கி விடாதீர்கள் என உங்களை கெஞ்சிக் கேட்கிறேன்.
மீண்டும் ஆண்டுகள் சில சென்ற அக்காலப்பகுதிகளில் என் கால் களைப் பதிக்கும்போது நானும் தந்தையாரும் யாத்திரை செய்த முகவரி பற்ற முகாம்கள் என் முகத்திரைக்குள் தெளிவாய் தெரிகின்ற போது
19

Page 14
அடிவயிறு எரிகின்றது. மச்சானும் மச்சானுபோல நானும் தந்தையாரும் சுன்னுகம். மல்லாகம் ஏழாலைப் பகுதிகளில் கள்ளுக் கடைகளின் கத்ஷ களைத்தட்டி அங்கே கள்ளுப் போத்தல்களோடு ஒட்டி உறவாடியதை நினைத்துப் பார்க்கிறேன் சாராயக்கடைகளில் போலிச் சாதகங்க்ள் பார்த்து வாழ்கையையே பாதகமான பாதையிலே, போதையின்மயக்கத்தினுல் புலம்பிய பொழுதுகளையும், போகும் வழி தெரியாது வேறு வீடுகளுக்கு நுழைந்து பேச்சு வாங்கிய கசப்பான சம்பவங்களும் ஏற்பட்டதுண்டு. சந்தர்ப்ப சூழ்நிலை வசத்தால் என் மனம்மாற நானும் அந்த மனம் மாற்றத்துக்குள் ஏமாற்றத்துடன் மாறிப்போயிருந்தேன். இதுமட்டுமல்ல நண்பர்களோடு சேர்ந்து நாளுக்கொரு சிகரட்டு புகைத்திருக்கிறேன் எல்லாம் கடந்த காலத்தில் நடந்து முடிந்த, கறைபடிந்த அசடுகள்.
இப்போது நான் எப்படி இருக்கிறேன் என்னை பலதடவை கேட் கிறேன் பொய்யான பொழுதுகளில் இருந்து வெளியேறி விட்டேன். அது உறுதியாகி எனக்குள்ளே உறுதியாக்கப்பட்டு விட்டது. இதை யாரும் நம்பவேண்டும் என்பதற்காகச் சொல்லவில்லை. நீங்கள் என்னை நம்ப வேண்டிய அவசியமும் இல்லை. நம்ப நட நம்பி நடவாதே " யாரோ ஒருவன் சொன்ன தத்துவம் இத்தரணியிலே தழைத்து, தளிர்விட்டுக் கொண்டிருக்கிறது. அத்தளிர்களின் நம்பிக்கையில் நிழல்களைக் கொடுக் கட்டும், என்னைப் பொறுத்தளவிற்கு நான் தெளிவாக இருக்கிறேன், மனச்சாட்சியின் வண்டி இறையியல் உலகம் நோக்கி புறப்படத் தொடங்கிவிட்டது; சகோதரர்களே சகோதரிகளே நிம்மதி வெளிச்சத்தின் நிரந்தர சமாதான கொடிகளைக் காண்பதற்கு நீங்களும் இறையியல் உலகத்திற்குள் வாருங்களேன் புதிய தொரு சமாதன வலையம் அமைக்க சமூகங்களே அணிதிரண்டு ஆத்மீக யாத்திரைக்கு ஆயத் தப்படுவோமாக,

பாசங்களின் பாசறைகளில்
இன்னமும் என் நெஞ்சறைக்குள் நேசமாய் நல்லதொரு வாசமாய் கோசம் எழுப்பிக் கொண்டிருக்கும் அன்பின் அகல் விளக்குகளில் ஆனந்த ஒளிக்கிற்றுக்களிலே நான் குளிர் காய்ந்து கொண்டிருக்கிறேன். குதூகல வயல்களிலே கும்மாளம் போட்டு குவளையத்தை மறந்திருக்கும் போது மனதிலே மலர்ந்த மறக்க முடியாத சில மர்மங்கள் என் உடலிலே பல உருவங்கள் சீறிய போது தான் கீதாஞ்சலி கீதமாய் பாட ஆரம்பித்தேன். வேதனையும் விரக்தியும் செவியோரம் கவி பல பொழிந்தன இதனை இந்த நிலையில் என் இளமைக்கால வசந்த மேகங்கள் வருடிச் செல்கின்றன, இலையுதிர்காலம் நெருங்கி நிற்கையிலே சருகாகப் போகும்" என் சரித்திரத்தை மாற்றி அமைக்க உறவுகள் வலுப்படுத்த என் விரல்கள் விழியிலே வழியும் குருதியால் பாசத்தின் தேசப்படத்தினை மைதீட்டிச் செல்கின்றன.
என்னைச் சுற்றி ஓர் உலகத்தை அமைத்திருந்தேன். அந்த உலகம் கலகமற்று, எல்லையற்று, இன்பமாய், இதமாய் கனிந்து போன நாட்களை நினைத்துப் பார்க்கையிலே நினைவுகளின் நீளங்கள் நீட்டம் அடை கின்றது. இவ்வாறு நீட்டமடைந்திருக்கும் பாசங்களின் பண்பினை பலதடவை சிந்தித்துப் பார்த்திருக்கிறேன். குருதியில் பூத்த ஒரு கொடி மலர்களுக்கு கோடிக் கணக்கான என் அன்புகளைக் கொட்டி என் உயிரி லும் மேலாக நேசித்திருக்கிறேன். சகோதரர்களின் சந்தோசமே என் சந்தோசமாகக் கொண்டு எண்ணி கருமம் ஆற்றினேன். இன்ன மும் கருமமாற்றி வருகிறேன். இந்த முடிவை அல்லது இதோடு தொடர்புடைய கருத்தை எந்த அண்ணனும் தன் இதய வெளியீடாக வெளியிடுவது வழக்கம். எனது மட்டில் பாசங்களின் பாதைவெளி களிலே என் பயண்ம் நடந்த போது கால்கள் பதறி என் பயணம் சிதறிப் போன சந்தர்ப்பங்களும் நான் மாறிப்போன நிர்பந்தமான முடிவு களும் என்னுடைய வாழ்க்கையிலே ஏற்பட்டது உண்டு. இப்படியான சூழ் நிலைகளில் சொந்தங்கள் அணையாத பந்தங்கள் ஏந்தி அதன் வெளிச்சத்தின் வழியாக நடத்தி வாழ்வளித்து வளம் கொடுத்த வழிகாட்டிகளுக்கு என்றும் கடமைப்பட்டவணுக உள்ளேன். அவர்களுக்கு கடமைப்பட்டவன் என்ற வகையில் ஒரு சில வரிகள் அவர்களுக்காக இன் நூலில் ஒதுக்குகிறேன். உறுதிதளர்ந்து உற்சாகம் குறைந்து தன் னம்பிக்கை இளந்தவனுக தவியாய் தத்தளித்துக் கொண்டிருக்கையிலே "பாதை முடியவில்லை பயணம் தொடரவில்லை. இலட்சியத்தை ஏந்திய கரங்கள் இலட்சிய , தீபங்கள் அணவதை அலட்சியமாய் பார்த்துக் கொண்டிருக்கலாமா ? நாளைய உலகை புதிய ஒரு வரலாற்றை இப் புவி யிலே படைத்திட புறப்படுவாய் ' என்று கூறி பாசத்தின் பாசறையிலே பாங்குடனே பயிற்சி அளித்த இவர்களை இந்த இதயம் மறப்பதற்கில்லை. இவரையும் ஒரு நேரத்தில் என் உலகமாகக்கொண்டிருந்தேன். இப்போ அவ் உலகத்தையும் விட்டுவெளியேறி எனது போக்கில் போய்க்கொண்டி
ருக்கும் போது கல்விக்கு தளம் அமைத்து தந்த எனது நேசமணிமாமி யையும் மறந்து எனது எண்ணப்படி ஏன் என்னுடைய இஷ்டப்படி என்
21

Page 15
கால்கள் நடக்க முற்பட்ட போது, அன்பால் அடக்கி நல்வழிப்படுத்திய அம்மம்மா அன்னமுத்துண்வக் கூட அரைவினுடி நினைக்காமல் அந்த அன்பையும் கடந்து செல்கிறேன். சகோதர பாசங்களின் வலைக்குள் சிக்கிக் தவித்து சிலையாகும் கதையை சிற்சில வரியில் எழுதும் கட்டத்தில் பாசத்தின் சிறைக்குள் சிறை பிடிக்கப்படுகிறேன். இச்சிறைக்குள்ளே பட்டயாடுகள் பல காவியமாய் பாடினுலும் தீர்ந்து போகாது என்தாகம். சோகங்களின் விலங்குகளால் கட்டப்பட்டு பிரச்சினை என்னும் ஆயுதங் களால் தாக்கப்படுகிறேன். இவ்வரிகளும் கூட அனேகருடைய வாழ்க் கையில் வந்து போவது வழக்கம் தான். இங்கே என் சுய சரிதையை சொல்லவில்லை. என் சுயநலத்தை சொல்கிறேன் என் கடைசித் தங்கை மீது அளவு கடந்த பாசத்தை வைத்து அவளை யே எனது உலகமாக்கி வாழ்ந்தேன். எனக்குத் தேவையான எல்லாவற்றையும் அத்தங்கையே செய்து முடிப்பாள். எனது உடையில் இருக்கும் அழுக்கை மட்டுமல்ல எனது உள்ளத்தில் இருக்கும் அழுக்குகளையும் அகற்றுவதற்கும் அவளே. அடித்தளமானுள். இந்த நிலையில் எனது முதல் தங்கையை வெறுத்து ஒதுக்கி என்ன நேசித்தவளையே நானும் நேசித்தேன். இருந்தும் காலப் போக்கில் எனது முதல் தங்கை என்மீது வைத்த அன்பை உணரும் நிலை ஏற்பட்டது. வரையறுக்க முடியாத அவளின் அன்பின் அளவை அளக்க முடியாமல் நான் தோற்றேன். எனது கடைசி தங்கையால் பல தடவை ஏமாற்றப் பட்டிருக்கிறேன் இருந்தும் அன்பு குறைய வில்லை ஆணுலும் அந்த உலகத்தை விட்டு நான் வெளியேறிக் கொண்டிருக் கின்றேன். எனது பெற்ருேரை உலகமாய்க்கொண்டு நான் வாழ்ந்த தில்லை. இதன் காரணத்தை என்ஞல் எழுதவும் முடியாது என் மரணத்தின் பின் எழுதப்படும் என் நினைவு மலரின் இதுபற்றி கோடிட்டு காட்டப்படும்.
* எது எப்படி இருந்தாலும் பாசங்களின் பாசறைகளில் நான் பெற்றுக் கொண்ட பயிற்சி எனக்கு நல்ல தொரு உயர்ச்சியைக் கொடுத்தது. என்று கூறிக்கொள்ள முடியாது. இங்கே வீழ்ச்சிகளின் விதைகள் என வாழ்வில் விதைத்து அவையே வேதனைவிருட்சங்களாக நிம்மதியற்றநிழல்களே தினமும் எனக்குத் தந்திருக்கிறது. ஆகவே எனது பயணம் சிரமப்பட்டு இறையியல் உலகம் நோக்கிபுறப்பட்டுக் கொண்டி ருக்கிறது. நான் கடந்து வந்த பாதையை விட இனி கடக்கப் போகும் பாதையைப் பற்றி நிதானமாக இருக்கிறேன். எனது இறையியல் உலகம் சம்பந்தமான வாழ்வில் எவ்வாறு அமையப்போகிறது என்பது எனக்குத் தெளிவாகத் தெரியும். விலகாத சொந்தங்களில் இருந்து விடுதலைபெற்று ஆத்மீக சொந்தங்கள் பற்றி ஆராய்ச்சிகள் என்மன அரங்குக்குள் ஆரம்ப மாகி விட்டன . எனவேதான் விலக்கி வைக்கவிருக்கும் உறவுகள் எனது மனக் கோலத்தில் அல்ல என்பிணக்கோலத்திலே கண்ணீர் கோலங் கள் வரையப் போகின்றன. அவை வரையும் கண்ணீர்க் கோலங்கள் அர்த்தமற்றவை. பொருத்தமற்றவை எனக்கு கண்ணீர்க்கோலம் வரைய இருக்கும் அந்த நெஞ்சங்களை நான் தாழ்மையுடன் கேட்ப தென்ன வென்ருல். நீங்களும் ஆத்மீக விடுதலைக்காக அன்பு எனும் ஆயுதம் ஏந்திப் போராடுங்கள் உங்கள் போராட்டங்கள் பாசமெனும் பாசறைக்குள் நடக் கப்படும் போது திண்டாட்டங்கள் ஏற்படும். ஆகவே பாசறைக்குள் இருந்து வெளியேறி நீதியற்ற நிலங்களிலே அன்புப் போராட்டம் நடத்தும்போது அதன் விடுதலையின் விளைவு விரைவு பெறும் என்பது நிச்சயம்.நான் தொடர்ந்து நடக்கிறேன் துயரங்களை தூக்கி எறிந்து விரைவு பெறுகிறேன் இடையில் தோன்றி மறையும் இன்பத்துக்காக நான் ஓடவில்லை. நிரந்தர இன்பத்துக்காக தான் நிதானமாய் ஓடுகிறேன். நீங்களும் வாருங்கள் என்னோடு சேர்ந்து இருங்கள் வெற்றி நிச்சயம்.
22

நெஞ்சே நீ கேளாய்!
வறுமையின் கொடுமையில் வாடிவதங்கி வெந்து கொண்டிருக்கும், என் அருமை உடன்பிறவா ! உடன் பிறப்புக்களே, உங்கள் உள்ளங்கள் கண்ணிர் வெள்ளங்களில் மிதப்பதை, நானும் உங்களில் ஒருவன் என்ற படியால் மிகவும் இலகுவாக உங்கள் இதயக் குமுறல்களை விளங்கிக் கொள்ளக்கூடியதாக இருக்கின்றது. உங்களில் ஒருவனுக இருப்பதால், நான் எழுதிச் செல்லும் வரிகளும், உங்கள் வாழ்வின் நிரந்தர நிம்ம திக்கு நிலக்கலனுக அமையவேண்டும். அந்த அமைப்பின் தேசப் படத்தை என் தேகத்தின் உணர்வுகள் கோடிட்டுச் செய்கின்றன. ஒரு மனிதன் பிறக்கிருன் வாழ்கிறன். அதன் பின் இறக்கிருன். இது இப்பூவுலகின் சாதாரண நிலை. சாதாரண நிலைகளில் வாழும் நாம் ஏதாவது சாதிக்கவேண்டாமா ? வாழ்வில் பாதிக்கப்பட்ட மனங்களே ஏதாவது சாதனைகளையும், சாதிக்கப்படுவதற்கு ஆதாரமாக அமைந்து விடுவதை அவதானிக்கலாம். உண்மையிலேயே பிறப்புக்குப் பின் இறப்பு நிகழ்வது நிச்சயமாகிறது. நிச்சயமில்லாத உலகத்திலே, நிச்சயமான இந்த மரணத்தைத் தவிர, நிச்சயமானதும், நிலையானதுமான சில சாதனைகளையும் ஒவ்வொரு மனிதனும் நிலை நாட்ட வேண்டும். பிறந்து வளர்ந்து படித்துப் பட்டம் பெற்று, திருமணம் முடித்து, பிள்ளைப் பெற்று பேணி அவர்களை வளர்த்து, அவர்களையும் இந்த உலகத்தில் மகத்தான மனிதர்களாய் மாற்றுவது மட்டுமின்றி, வேறு சில உன்ன தமானதுமான, உயிர் ஊட்டம் உள்ளதுமான நினைவுச் சின்னங்களை எம்மண்ணில் நீங்கள் பதிக்க வேண்டும். இவ்வாறு நீங்கள் செய்வதன் மூலம் உலகில் உங்களுக்கென ஒரு தனி இடத்தைப் பிடித்துக் கொள்ள முடியும். மரணத்தின் பின்னும் சில மனிதர்களின் பெயர்கள் காலம் காலமாய் மக்கள் மத்தியில் நிலைத்து நிற்பதற்குக் காரணம் என்ன ? அவர்கள் இந்த மண்ணிற்காக, இந்த சமூக விடிவுக்காக ஓயாது உழைத்தவர்கள் என்ற வரிசையினுல் அவர்கள் உடல் அழிந்தாலும், அவர்கள் புகழ் என்றுமே அழியாது இருக்கும். இந்த மண்ணில் கோடான கோடி பேர் தோன்றி மறைந்தனர். அவர்களில் ஒரு சிலரை மட்டும் இந்த உலகம் மறந்து விடவே இல்லை. நாம் இந்த மண்ணில் பிறந்தது போலி வாழ்க்கை வாழ்வதற்காக அல்ல. மனிதர்களாக மண்ணில் பிறந்து, மனிதர்களாக வாழ்ந்து, மனித நேயத்தில் வழுவிச் செல்லாதவர்களாக மரணிக்க வேண்டும். ஒ. சமூகமே மனித குலத்தின் வாழ்வும் அவர்களது செயல்களும் ஒருவருக்கொருவர் ' uusär படக்கூடியதாக இருக்கவேண்டும். அப்பொழுது தான் மனித குலத்தின் ஒற்றுமை, ஒருமைப்பாடு, பிரிவினை என்பன ஏற்படா மல் இருக்கும். ஒருவரை யொருவர் புகழ்ந்து கொள்ளும் தன்மை, பரஸ்பர உணர்வுகள் மூலமாக எமக்கிடையே ஏற்படும் பிரச்சினை களுக்கு தீர்வுகாண முடியும், தவறுகளை மன்னிக்கும் தன்மை, மாற் ரூனின் மன நிலையை அறிந்து கொள்ளும் நிலைமை போன்ற வற்றின் ஊடாக ஒற்றுமையை வளர்கலாம். ஒரு மனிதன் என்ற நிலையில்
23

Page 16
இருந்தபடி இவ்வாறன செயல்பாடுகளை செய்யமுடியாது. என நினைக் கிறேன். நாம் எமது சமயங்களை பின்பற்றுவதன் ஊடாக மனிதன் சமூகத்தின் நல்வாழ்வுக்கு எம்மை அர்ப்பணிக்க முடியும்.
நெஞ்சே பத்திரமாய் என்னிடம் பாது காப்பாய் உள்ள சில கருத்துக்களை, சித்திரமாய் சிலைவடித்து, பாங்குடனே எடுத்துரைத்துக் கொண்டே போகிறேன். நீ பொறுமையுடன் இதைக் கேட்பாயா ? நீ பொறுமையுடன் கேட்பாய் என்ற நம்பிக்கையில், என் தொண்டைக் குழிகளில் குவிந்திருக்கும், கருத்துக்களை கக்குகிறேன். ஒரு பைபிளோ, ஒரு பஹவத் கீதையிலே ; இல்லா விட்டால் ஓர் குர்ஆனிலையே ? பக்கம் பக்கமாய் எழுதப்பட்டிருக்கும் நெறியான கருத்துக்களைக் கண் ணுற்று அதன் போதனைகளின் படி உன் போக்கை மாற்றி அமைத்துக் கொள்வாயா ? அப்படி அமைந்து கொண்டால் அகங்காரங்கள் உன்னை விட்டு அகன்று, ஆணவம் உனக்கு அடிபணிந்து, அகிம்சையே உன் அணிகலனுகும். அப்போது நீ ஆத்மீகத்தின் அறைகளிலே ஆறுதலாக உறங்குவாய், ச்மாதானப் பூக்கள் உனக்குப் போர்வையாகும். சந் தோஷ மரங்கள் சரமாரியாக இன்பத்தின் நிழல்களை உன் தேசமெங்கும் பரப்பிக்கொள்ளும். இதை விட ஓர் சமாதானச் சூழலை, எந்த இடத் திலும் நீ பெற்றுக்கொள்ள மாட்டாய். ள்னவே விழித்திடுவாய், விரைந்திடுவாய் ஆத்மீக உலகம் நோக்கி.
24

உப்புக்களாய் போன நட்புக்கள்
சந்தியிலே நிற்கிறேன் போவதற்கு வழி தெரியாது. தட்டுத்தடு மாறி, திக்கித்திசையற்று திகைத்து நிற்கிறேன். தெருவில் வீசும் தென்றல் காற்றும் என் உடலில் பட்டு செல்கிறது. எனது கால்கள் ஒன்றை ஒன்று பின்னின. இச்சந்தர்ப்பங்களில் வீதியில் நிற்கும் என்னை என் வீடுவரை அழைத்துச் சென்ற அந்த அன்பு நெஞ்சங் களில் நான் பள்ளி கொள்கிறேன். அந்த நெஞ்சங்களின் நெஞ்சறை களில் புகுந்த தன்மையினை தற்செயலாக எழுதவில்லை. தத்துவமாய் தரணியிலே என்னைத் தலை நிமிர்ந்து நிற்க வைத்த என் விழியின் ஒளிகாட்டிகள், வாழ்வின் வழிகாட்டிகள், இவர்களை இதயத்துக்குள் பூட்டிவைத்துள்ளேன். பூட்டிய என் இதயக்கதவுகள் திறக்கும் போது என் இதைய வீட்டிலே தங்குமடம் அமைத்திருந்த நண்பர்கள் எங்கே ஓடிப்போஞர்கள் இவர்களை இப்போதும் தேடுகிறேன். சீக்கிரமாய் தேடி என் இதய வீட்டுக்கு அழைத்துச் சென்று விருந்தழிக்க போகி றேன். அவர்களுக்கு அளிக்கப் போகும் விருந்து, பிரிவு எனும் பிரியா விடையால் பித்தஞன செய்திகளை செக்கச்சிவந்த வரிகளை எழுதி அன்பளிப்பு செய்யப்போகிறேன். மீண்டும் ஓர் தடவை என் இதயக் கதவுகள் திறந்து மூடப்போவதில்லை. ஏன் தெரியுமா ? என் இதயக் கதவுகள் திறக்கும் திறவு கோலை இறையியல் உலகத்தில் தொலைத் விட்டேன் இருந்தும் என் நண்பர்களே. இதயத்தில் இருக்கும் உறுதியான முடிவுகளை இறுதியாத்திரையில் உங்களுக்காக அளிக்கப் போகிறேன். 9قہHترق[ மட்டும் என் விருப்பத் துக்காக காத்திருங்கள் என்று மட்டும் தான் என்னுல் கூற முடியும். காத்திருக்க வைப்பது உங்கள் கால்கள் கடுக்கும் வரை அல்ல. பொறுமையை சோதிக்க அல்ல. நீங்கள் தான் என் பொறுமையை --சோதிக்கிறீர்கள் என்னை சோதித்தால் சோதனையின் சோக வர லாற்றில் சோர்ந்து போனு நிலையில் என் உதடுகள் எடுத்து சொல் கின்றன.
கூடிக்களித்து குதுகலமாய் கும்மாளம் போட்ட அந்த நிகழ்ச்சி நிரல்கள் இன்று நிர்மூலமாய்ப் போய்விட்டன. கண்ணுக்கு கண்ணாய் என் உயிரிலும் மேலான இரண்டு நண்பர்கள் இன்று நிரந்தரப்பிரிவு எனும் பரிசை எனக்கு அன்பளிப்பு செய்தார்கள். இவர்களை நான் நினைத்துப் பார்ப்பதில்லை ஏன் தெரியுமா ? மறந்தால் தானே நினைத் துப் பார்ப்பதற்கு, கண்ணில் ஒளிக்கீற்று என் பாதையின் படிக்கட்டுகள். நான் பார்க்கும் காட்டுகளில் கருப்பொருள்கள் இவர்கள்தான் என் நண்பர்கள், இவனை எனது உலகமாக்கினேன். இவன் காணும் காட்சிகளை நானும் கண்டேன். இவன் சென்ற பயணங்களில் நானும் சென்றேன். என் நெஞ்சில் நிறைவில் எழுத்தில் என் வாழ்வில் இவனை அழியாத அடையாத சின்னமாய் அன்றும்இன்றும் நிலைத்து நிற்கிருன் இவனது ஞாபங்களைக் காற்றில் எறிந்து என்னுல் தனிமையில் செல்ல முடி யாது. ஏன் தெரியுமா ! இவனது ஞாபகங்கள் என் பாதைக்ள் அல்ல
25

Page 17
அவை என் நிழல்கள். நான் உயிரோடு இருக்கும்வரை என் செயல்கள் ஒவ்வொன்றிலும் இவன் பிரதிபலிப்பான், இவனது நட்பின் பிணைப்பிணை என் விரல்கள் எழுதுமானுல் அது ஒரு வீரகாவியமாக' எழுதப்படும்.
காவியத்தின் முடியில் எனது வாழ்வு முற்றுப்பெறும், இருந்தாலும் இத் தொடர்ச்சி ஏன் நண்பர்களின் இளமைக்காலங்களை அல்லது வாழ்க்கைக் காலங்களை எடுத்துச் சொல்வது எனது நோக்கம் அல்ல நண்பர்களின் வழிநடத்தல் இறையியல் எவ்வாறு வழிவகுத்தது என்பதனையே வரைந்து செல்ல கடந்த காலத்தில் என்னை ஒரு சிந்தனையாளனுக உருவாக்கிய சிவா’ இறையியல் உலகத்திலும் என் கால்கள் அடியெடுத்து வைக்க எனக்கு அடிகோலினுல். தெய்வீக உலகம் சம்பந்தமாய் ஒரு சில விவாதங்க ளையே என்னுடன் விவாதிக்கிறேன். இருந்து இவனது போக்கும் வழி நட த்தலும் ஏன் ஒரு ஆத்மிகத்துறைக்கு வழிநடத்திச் சென்றது சொல்வது
ஒரு அர்த்தமற்றதாகும். உலகியல் வாழ்வுக்குள் எனது வாழ்க்கை எவ்
வாறு அமையவேண்டும். எப்படி உலகியல் காரியங்களை சமாளிக்க வேண் டும் இது சம்பந்தமாக இவன் எனக்குக் கொடுத்த பயிற்சி இந்த உலகில்
எனக்கு ஓர் முயற்சியின் முன்னுேடியாக முன்னேற்றப் பாதையிலே
நான் நடந்து செல்வதற்கு நல்லதொரு பயற்சிக்களமென என்று
சொல்வதற்கு மிகையாகாது. இவனைப் போன்ற நண்பன் தெய்வேந் திரனும் என் நட்புக்கு இலக்கணமாக விளங்கினன். இவன் மூலமே என் கல்விக்கு இலக்கணம் அமைக்கப்பட்டது. இவன் ஓரளவுக்கு எனது ஆத்மிகத்துறைக்கு துறைமுகம் அமைத்துக் கொடுத்தான். இவர்கள் என்னை வழி நடத்திய தன் வழிமுறைகளை ஓர் சில வரிகளில் எழுதி முடிக்க முடியாது. இவ் நண்பர்களை எனது உலகமாகிக்கொண்டி ருந்த போது எனக்குள்ளே இருந்த கால்களும் துயரங்களும் காற்றேடு கலந்து போயின. V−
வசந்த காலங்களும், குளிமையின் இனிமைகளும் என்னைத் தொட்டுத் தழுவின சிந்திப்பதை மறந்து சிரிப்பிலே நிலைத்திருக்கிறேன். மகிழ்ச் சியான கொடியிலே புன்னகையின் பூக்கள் கோர்த்து கழுத்திலே மாலையாய் அணித்திருந்தேன். மாலை இரவுகளை மறந்துவிட்டு காலைப் பொழுதில் குளிர்ச்சிக்குள் குளித்துக் கொள்கிறேன். ஆனந்த ஊஞ்சல் என்னைத் தாலாட்டுகிறது. அமைதியாக நான் தூங்குகிறேன். அடுத்து நடந்ததென்ன ஆனந்தம் அநந்தமானது. மகிழ்வின் மாலைகள் மலர் வளை யங்களாய் மாறிப்போனது. இரண்டு நண்பர்களும் நிரந்தர நித்திரையில் ஆழ்ந்து உறங்கிக் கொண்டிருக்கிருர்கள். சுடு காட்டின் வெளிச்சம் அவர்களைச் சூழ்ந்து கொண்டிருக்கிறது. கல்லறைக்குள் கண் தூங்கும் அந்த காளையர்களின் முகவரிகளை நான் தேடிக் கொள்கிறேன். முகவரி களின் கையில் கிடைக்கும் நாளில் நானும் அவர்கள் பக்கத்தில் பள்ளி கொள்வேன். அவர்கள் எனக்கு அளித்த விருந்து ரணமாய்போன என் இதயங்களில் ரதங்கள் ஒட்டுகின்றன. இனி நான் ஒரு விருந்து என் உயிரோடு இருக்கும் நண்பர்களுக்காகப் படைக்கப்போகிறேன் . அது மரணத்தின் வாசல் அல்ல, ஆத்மீகத்தின் வாசல்.
எனக்கு உப்புக்களாய்ப் போன நட்புக்களில் நம்பிக்கை நட்சத் ரங்களே நாளை என்ற எதிர்காலம் இறையியல் உலகத்துக்குள் அமையும். என்னை பார்வையிட வருபவர்களே ! நீங்கள் ஓர் பார்வை யாளனுகப் பார்க்கவேண்டாம், எனது உலகத்துக்குள் வரவிரும்புவர்கள் பங்காளிகளாக மாறுங்கள். எனக்கு நிச்சியமாகத் தெரியும் நிகழ்காலத் தில் என்னேடு வாழ்ந்து கொண்டிருக்கும் சில நண்பர்கள் என் கருத்து
26

கள் எழுத்ப்பட்ட இக் கடதாசிகளை குப்பைதொட்டிகளில் எறிந்து விடத் தயாராய் இருக்கிறர்கள். அவர்கள் மனக்கழியாட்டத்தில் மனதை பறிகொடுத்துவர்கள். இறைவன் இல்லையென விவாதித்து, வெற்றியும் அடையக் கூடியவர்கள் சமயங்கள்! மனிதர்களின் உணர்வுகளை கட்டுத படுத்துகிறது. சமயங்களின் சங்கிலிகள் ஒருவருடைய சுதந்திரத்தை கட்டிப் போட்டு விடுகிறது. சமயக் கருத்துக்கள், தனித்துவமான மனித னுடைய வாழ்வை தவிடுபொடியாக்குகின்றது. மதங்கள் என்பது மதம் பிடித்த யானைக்கு ஒப்பானது. மனிதனுடைய மறுமலர்ச்சிகளை மறு தலித்து அவனுடைய தன்னிச்சையான செயல்களை செயல்லிழக்கச் செய்கிறது. இவ்வாருக அவர்கள் என்னுடன் விவாதிக்கிருர்கள் " கடவுள் கடவுள் ' என்று திரியாதே இந்த வழி உன் முன்னேற்றத்துக்கு ஒரு குழியாகிறது. தயவு செய்து, இதை தள்ளி ஒதுங்கி விட்டு உன் வாழ்க்கைக்கு பயன் தரக்கூடிய வேறு ஏதாவது முயற்சியில் ஈடுபட் டால் நாநூறு ரூபாய் சம்பாதிக்கலாம் என நாணயமாக அவர்களின் நாக்குக்கள் எனக்காகப் பரிந்து பேசின. அவர்களின் கருத்தை நான் மறுப்பதற்கில்லை. ஆனல் அதே நேரத்தின் என் கருத்துக்களை சுருக்கி விடவும் என்னுல் முடியவில்லை. எனவே எனது கருத்துக்களை தொடர்ந்து சொல்லுகிறேன்.
நண்பர்கள் என்னை நலன்பட வைத்திருக்கிருர்கள் ஒரு சிலர் என்னை வலிவடையவும் வைத்திருக்கிருர்கள். இருந்தும் இரு வேறு நண்பர்களின் நடத்தைகளை அதனுல் என் வாழ்கையில் ஏற்பட்ட பாதிப்புக்கள்ை நான் வருந்திச் சொல்வதற்கில்லை. இங்கு நான் விசேடமாக சொல்வது என்னவென்ருல் என்னமும் நாம் நிலையாக இருக்கிறேன்என்ருல் அது நண்பர்களால் தான். இலக்கியத் துறையில் வளர்த்த தெடுத்த நண்பன் குயின்ரன் சுமையான வேலைகளிலே சுமை இறக்கிய சுந்தர் போன்ருேரை நான் கூறும் போதும் இவர்களை விட்டும் நான் பிரிந்து செல்ல விரும்புகிறேன். என்ன தான் நான் பிரிந்து சென்ருலும் தோழர்கள் என் தோள் சுமையை போக்குபவர் களாக தோல்வியைக் கண்டு நான் அஞ்சிய போதெல்லாம் ஏன் தோள்களைப் பிடித்துக் தூக்கி விட்டவர்களாக என் பிரயாணத்தில் என்னேடு பின் தொடர்கின்ருர்கள். ஒன்று மட்டும் இங்கே வெளி யாகுகின்றது. நண்பர்களை முற்று முழுதாக விட்டு விட்டு அந்த இறையியல் உலகத்துக்குள் என்ஞல் பிரவேசிக்க முடியாது. அவர் களின் கரங்கள் என் கரங்களோடு நெருக்கமாகப் பிணைக்கப்பட்டுள்ளது. அந்த நெருக்கத்தில் ஒரு இடைவெளியை ஏற்படுத்தி விட்டு என்னுல் தன்னந்தனியே அவ்வுலகத்துக்குள் ஓர் அங்குலம் கூட நகரமுடியாது. ஆகவே 1 தனிமையில் செல்லமுடியாது என்ற தோல்வியையும் எனது பலவீனத்தையும் ஏற்றுக் கொள்கிறேன். நண்பர்கள் என்னும் உலகத்தில் இருந்து நான் முற்றுமுழுதாக வெளியேறவில்லை, அப்படி வெளியேற வும் முடியாது. ஆத்மீகத்துறையின் பாதையில் நான் நடக்கும் போது என் கால்கள் இடறிவிழாத படி எனது பயணம் நின்று விடதா படிக்கும் என் கால்களைக் பிடித்து என்னை உற்சாகப்படுத்த ஓர் சில நண்பர்கள் தேவைப்படுகின்ருர்கள். என் தேவையை அறிதே நண்பர்கள் என்றைக்கும் எனக்குசேவை செய்ய ஓடோடி வருவார்கள் ' என்ற எதிர்பார்ப்புடன் என் கால்கள் அந்த அமைதியான உலகம் நோக்கி மெல்ல நகருகின்றன. இருளான வாழ்வின் இணையற்ற விடிவை நோக்கி என் பாதங்கள் பயணப்படுகின்றன. நண்பர்களின் துணையே எனக்குத் துணிவாக அமைய தூக்கத்தையும் ஏக்கத்தையும் எடுத்தெறிந்த நிலையில் நிச்சமயற்ற இந்த உலகில் நிச்சயமான அந்த விடியலத் தேடி விரைகிறேன்.
27

Page 18
மூடிய விழிகளின் மோகனங்கள்
என் இமைகள் இரவுகளை வருடிக்கொண்ட போது வாழ்வில் ஏதோ ஒரு இனம் புரியாத இதயதாகங்களை எனக்குள்ளே தாகவிடாயை ஏற்படுத்திக் கொண்டது-இதயத்தின் தாகவிடாய் தீர்க்கப் படாத போது கண்ணிமைக்குள் களங்கமாய் கடும் போர் நடத்தப்பட்டது. இந்த நிலையிலும் உற்சாகத்தை இழந்து விடவில்லை. என் விழி வயல் களில் விதைக்கப்படாத பெளர்ணமி விதைகள் தொடர்பாக் நான் துயரப்பட்ட போது தூண்டாமணி விளக்குகள் தூரத்தே காட்டிய சுதந்திர வெளிச்சங்களுக்குள் சுவிகரிக்கப்படுகின்றேன்.
என் பார்வையில் நரம்புகள் மீட்க விரும்பும் வீணையின் இனிய ஓசைகள் இன்னமும் சுருதிகலைந்த, சுவாரிகம் சுற்றதுமான ஓசைகளாக என் ஆசைகளை தூண்டிய வண்ணம் இருக்க, அவ்வாசைகளை அகற்றி விட்டு என் விழியின் விருப்பங்களையும் நிராகரித்து விட்டு அகவிழிகளின் , ஆராய்சிகளின் ஆய்வுகூடங்களின் ஆத்மீகம் சம்பந்தமான பரிசோதனை களில் ஈடுபட்டுக்கொண்டிருக்கிறேன். அக விழிகளில் ஆய்வு கூடங்களில் ஆத்மீகத்தின் ஆராய்சிகள் தொடர என் புறவிழிகளில் மாயை உலகத் தை பார்க்க வேண்டும் என்ற பேர் ஆவல் படர இரு இழு விசை களுக்கும் இடையில் தத்தளித்துக் கொண்டிருக்கின்றேன். இன் நேரத் தில் என் நிலை ஓர் பரிதாபமாக இருக்கின்றது-வேண்டாம் என்னைப் பார்த்து யாரும் பரிதாபப்படுவதை நான் விரும்பவில்லை. உங்கள் பரிதாபங்கள் என்னைப் பலவினப்படுத்துகிறது. என் மீதும் உங்களுக்கு அனுதாபம் ஏற்பட்டாலும் அதையும் அடியோடு வெறுக்கிறேன். ஏன் தெரியுமா ? உங்கள் அனுதாபங்களினுல் அலைக்கழிக்கப்படுகிறேன். எனவே உங்களை 1 என் நிலையைப் பெறுத்தளவில் நீங்கள் எடுத்த முடிவுகளை மாற்றிக் கொள்ளுங்கள் சமூகத்தின் பிரதேசங்களில் நான் சமாதானமாக நடக்க வேண்டுமாயின் உங்கள் கவ்னமற்ற பார்வை கள் என்னை மேய்ந்து கொள்ளவேண்டும். இதைத் தவிர்த்து வித்தியாச மான கோணங்களிலே என்னை நீங்கள் பார்ப்பீர்களானுல் என் அவல நிலையின் அறைகளிலே அடைக்கலக் குருவியாக அடைக்கலம் புகவேண்டியது தான். ஆகவே நீங்கள் எடுக்கப் போகும் முடிவுகள் என் சம்பந்தமான நிகழ்கால நிகழ்வுகளில் எவ்வாறு அமைகிறது, என்பதை தற்போது நான் அறிந்து கொண்டிருக்கிறேன். நானும் இந்த உலகமும் என்ற நிலையில் சமூகத்தின் வலயங்களிலே எனது வாழ்வின் பயணங்கள் ஓர் பலி பயணமாகவே அமைகிறது. இன்றும் எனது பஸ்தரிப்பு நிலையம் வரவில்லை. "எனது பஸ்தரிப்பு நிலையம் வரும் வரைக்கும் எனது பிரயாணம் தொடர்கிறது. எனது பிரயா ணத்தின் பொழுதுகளில் துயரங்கள், நெரிசல்கள், விம்மல்கள் நெரி சல்கள் இடர்பாடுகள் என்பனவும் ஏற்பட்டுக் கொண்டிருந்தாலும் அதிலும் இன்பம் காண்கிறேன். இருந்தாலும் இடையிடையே தோன்றி மறையும் தோல்வி மேகங்களைக் கண்டு அவை பொழியும் சோக மழை
28

யினை நெஞ்சிலே உந்திக் கொண்டு இருக்கையிலே விழிகள் எப்படி இமைமூடித் தூங்கமுடியும். இச் சந்தர்பங்களில் மூடிய என் விழிகள் சில ஒளியுள்ள விழிகளைத் தேடுகின்றன. சில காட்சிகளைக் காணத்துடிக் கின்றன, அழகுகளின் அலங்காரங்களை என் அகவிழிகள் அடைய முயற்சிக்கின்றன. ஆணுல் இவற்றை மனக்கண்ணுக்குள் மனக் கணக்கு போட்டு விடமுடியாது. மனப்பாடம் செய்யமுடியாத வொரு உலக நிகழ்ச்சிகளை வெளித் தெரியாத எனது உள்ளம் உணரத்தொடங்கு கின்றது.
இவ்வாருக என் அகத்தின் ஆழமான ஆராட்சிகளையும் உள்ளத் தின் உதயமான உணர்வுகளையும் கலைகளாய் படைக்கும் போது கவலைகள் என் கண்களை கவ்விக் கொள்கின்றன. அந்த நிலைக்காக நான் அதிகமாக அலட்டிக் கொள்வதில்லை. மாயை உலகத்தின் நிலைப் பாட்டை நிதானமாய் விளக்கிக் கொண்டவன். சூரியனுக்கு கீழ் உள்ள தெல்லாம் மாயை மாயை ' இப்படிச் சொல்லி ஏமாந்து போன என் விழிகளுக்கு சமாதானத்தை தூது அனுப்பவில்லை. எட்டாத பழம் புளிக்கும் என்னும் எனக்கு நானே சாட்டுப்போக்கு சொல்லவில்லை. என்னை நான் சமாதானப்படுத்திக் கொள்வது என்னைப் பொறுத்த வரைக்கும் சர்வசாதாரணம். ஐம்புலங்களையும் அடக்கி ஆத்மீகத்தின் ஆழுமையை அறிவதற்கு எனக்கோர் அரிய சந்தர்ப்பம். இச் சந்தர்ப் பத்தை பயன் படுத்தி எனக்கு கிடைக்கும் பயங்களையும் பலாபலங்களை யும் பல்லாயிரம் மக்களுக்கு தெரியப்படுத்துவதை நினைக்கும் போது, நேற்றைய பொழுதுகளை நிராகரித்து விடுகிறேன். இன்றைய இளமைக் காலங்களை ஒதுக்கிவிடுகிறேன். நாளை எனும் எதிர்காலத்தை எடுத் தெறிந்து விடுகிறேன். முக்காலங்களையும் மூட்டை கட்டி ஒரு மூலையில் போட்டு விட்டு என் ஆத்மாவின் செயல்களாகவே என்னைநான் ஈடுபடுத் திக் கொள்ளுகிறேன். இப்படி நான் கூறிக் கொள்ளும் போது என்னை ஒரு மரக்கட்டையாக அல்லது மரத்துப்போன மனிதனுக உங்கள் முன் காட்சியளிப்பதை உணர்கின்றேன். ' இல்லை " நான் ஒரு மனிதன் என்ற ரீதியில் என் நிலையினை நிராகரிக்கத் தயாரில்லை.
நடந்து முடிந்த அந்த நாடகங்கள் நடந்துபோன அந்த நாடகங் களை பார்த்து ரசிக்கும் சந்தர்ப்பங்களை இழந்து விட்டேன். படமாளிகை களில் பல தடவை படம் பார்த்திருக்கிறேன். படக் கதைகளைக் காதால் கேட்கும் போது கண்ணு ரக் காண வேண்டிய காட்சிகளை காணமுடியாமல் போவதும் சிலசந்தர்ப்பங்களில் சில சிரிப்புக்குரிய விடையங்களை பலர் பார்த்து அவர்களது சிரிப்பு ஒளிகள் முடியும் போதும் நான் மட்டும் தனியாகச் சிரிப்பதும் ஒரு பைத்தியக்காரத்தனமான செயல் தான். இப்படி ஒன்றல்ல இரண்டல்ல ஒர் ஆயிரம் நிகழ்ச்சிகளை காணும் சந்தர்ப்பத்தை இழந்திருக்கிறேன். என் இமைக்கதவுகள் திறக்கப் படும் நாளை நான் எதிர்ப்பார்க்க வில்லை. என் ஆத்மீகக் கதவுகள். திறக்கப்பட்டதை நினைத்து சந்தோஷம் குறையவும் இல்லை, இருந்தும் எனது பயணம் தாமதப்படுவதஞல் துர்க்கிப்புக்கள் குறையவுமில்லை. நான் காணும் உலகங்கள் அக விழியின் சுரங்கங்களில் வெளியுலக உறவுகளே முற்று முழுதாக ஒதுக்கி விட்டு ஒன்றும் சொல்ல முடி யவில்லை. இரண்டும் கெட்டநிலையில் நான் இடர் படுவதை நீங்கள் நினைக்கவும் தேவையில்லை. மூடிய விழிகள் தேடிய வழிகள் அர்த்தமற்றவை இதை அழுத்தமாகச் சொல்லுகிறேன். எனது மோகங்கள் இழுத்துச் சென்ற பாதைகளில் தாகங்கள் தீர்க்க நான் தயாராக இருந்தால் அது சோகத்தின் சுவடுகளை தெய்வீக மேகங்களில் அசடுபடியச் செய்துவிடும்.
29

Page 19
நான் தப்பித்துக் கொண்டேன். இதில் இருந்து பிழைத்துக் கொண் டேன். என் விழிகளை இன்னமும் அதிகமாய் மூடிக் கொள்கிறேன். இருண்டு போன என் இமைகளின் இடையே தெரிந்த தெய்வீக வெளிச்சங்கள். தேயாத வான் நிலாவின் தேன் நிலவுகள் எனவே மூடிய விழிகளின் மோகங்களில் இனி முகாரி ராகங்கள் இசைக்கப் போவதில்லை. நீங்களும் கண்களை அரை நிமிடமாவது இறுக மூடிக் கொண்டு ஆத்மீக உலகத்தை ஆராயுங்கள். நான் நிரந்தர இரவுக்குள் நிம்மதியின் அணையா விளக்குகளை என்ஞேடு அணைத்துக் கொள்ளு கிறேன். கலங்கரை விளக்கமாக விளங்கும் அந்த விளக்கு களின் அடியில் நானும் விடியல் தேடிக்கொண்டிருக்கிறேன். நீங்களும் அந்த விடில்லைத் தேடுங்கள் அது இரவைக் காணும் விடியல்லல்ல நிரந் தர விடியல்,

6T6óT காதலுக்கு Քեպ6ir முடியவில்லை
கண்விழியால் மொட்டவுள்க்காத என் காதலை காந்தியத்தின் போதனை உரைப்பது போல் என் உதடுகள் உரைக்கின்றது. காந்திய தேசத்தின் தென்றல் காற்று எம்மண்ணிலே புயலாய் மாறி பூகொம்பம் ஒன்றை ஏற்படுத்திச் சென்று விட்டது, இதன் விளைவுகள் விபரீதமாக எங்கள் வீதிகள் வெறிச்சோடி நாம் வசிக்கும் வீடுகள் வனக்காடாய்ப் போன பின்பும் என் காதல் கருத்தினை இங்கே கருத்தரிக்க விடுவது சமூகத்துக்கு ஓர் கறையான் அரிப்பை ஏற்படுத்துவது போல் இருக்குமென நினைக்கிறேன். ஆணுலும் என் வாழ்வில் ஏற்பட்ட காதலெனும் கறையான் கற்றிடும் கல்வியை ஆத்மீக அறிவை எவ்வாறு அழித்துச் சென்ற தென்பதை என்னுல் எழுதாமல் இருக்க முடியவில்லை. எழுது கிறேன் காதலின் சுவாரசியங்களை அல்ல தொடர்கிறேன் சோகங்கள் படிந்த சுவடுகளை. என் இனிய பேச்சினிலே இதயம் கவர்ந்தாள்இனியவள் ஒருத்திஇன்பமாய் பொழுதுகள் கழியுமென இன்பப்பொழுதுகளில் கழித் திருந்தேன் கனவுகள் கதையாய் மாறி என் கண்களுக்குள் கடும் போர் நடத்தும் என்று நான் நினைத்திருக்க நியாயமில்லை. கிழமைக்கு பத்து கடிதத்துக்கு மேல் பாவையவள் எழுதுவாள் கடிதம் ஒவ்வொன்றும் பதினைந்து பக்கத்துக்கு குறைவதில்லை. வஞ்சி மகள் வரைந்தனுப்பிய வார்த்தைகளை வாயிஞல்ே சொல்லி விடமுடியாது. இவளை நினைத்து நான் எழுதிய கவிதைகளுக்கு கணக்குக் கிடையாது," இணைந்தால் மணவறை இல்லையேல் கல்லறை' என அவள் வழங்கிய வாக்குறிதிகளுக்கு எண்ணிக் கை கிடையாது. இவ்வாறகவே காதல் தேரோட்டம் கண்ணீர்நீரோட்டம் இன்றி ஆண்டொன்று கடந்து செல்கிறது. அவ்வோராண்டுகாலப் பகுதிகளுக்குள் இறையியல் உலகத்தை மறந்தேன். இவளையே உலகமென நினைந்தேன். ஊர் வாசங்களையும் கைவிட்டேன். தெய்வத்தை மறந்த தேவி வேளை நினைந்து நாட்கள் நகரயிலே காதல் சாதலானது, பிரிவு துயரே எனக்கு உறவானது. காதல் தோல்வியை வைத்தே ஒரு புதிய தோத்திரம் பாடுவேன். ஆணுல் அது அசுத்தமற்றது சமூகமோ ஒர் அவல நிலையால் இருக்கும் போது அவ் தோத்திரத்தை பாடுவது பொருத்த
OfDs)g).
இருந்தும் அவள் நினைவுகள் என் நெஞ்சை கீறிக்கிழிக்கின்றன அந்த உள்ளத்தின் நினைவு வளையங்களை என்னுல் களட்டி விட்டுச் செல்ல முடியவில்லை. அது என் கால் செருப்புக்களாக இருந்தால் உதறிவிட்டு உற்சாகமாக நடந்து கொண்டிருப்பேன் என்ன செய்வது, அது என் கால்கள் ஆகி விட்டது. Sb6 அவள் பாதங்களில் இருந்து எழும் நாதங்கள் என் காதிலே இதங்களாய் அப்பொழுதும் கேட்டுக் கொண்டிருக்கிறது. அக்கிதங்களிடம் என் கேள்விகள் என் தோல்விக்கு ஒரு வேள்விசை என்பது, காளை நான் காதலித்த கட்டத்திலே கன்னியவள் வரைந்த மடலொன்று இன்னமும் என் மனதில் பாடமாய் உள்ளது. அம்மடலில் சில வரிகளை இங்கே பதிக்கிறேன். ஆனல் வேகிறேன் நான் வாழ்வதா சாவதா ? அது உன்கையில்த்தான் உள்ளது. காதலனே
31

Page 20
உங்களை கடைசி முறையாக கேட்கிறேன் என் சொந்த பந்தங்களை எல்லாம் ‘விட்டு விட்டு" நான் உங்களுடன் வரத்தயார். தங்கள் முடிவை எனக்கு உடனடியாக அறிவிக்கவும். இப்படித் தவறினுல் மணக்கோலம் காண இருக்கும் என்னை பிணக்கோலம் பூண்டு இருப்பதை யாழ்ப்பாணம் வந்து காண்பாய் உங்களுக்கு ஒரு மாதகால இடைவெளி தருகிறேன். நன்ருக யோசித்து முடிவு எடுக்கவும், உன் சரியான முடிவு எனக்கு கிடைக்காவிட்டால் என் விழிகளின் ஒளிகள் விடிவைத்தேடாது ஓர் நிரந்தர இரவைத் தேடும். இது உறிதியானது.
இவ்வரிகளை வாசிக்கும் போது நரிமனமாய் நான் நடந்திருக்கிறேன். ஏன் சந்தேகம் உங்களுக்கு எழுவது சரியானது. உண்மையிலேயே காரிகை அவளை ஒரு இமைப் பொழுதில் கூட நான் களங்கப்படுத்தவில்லை. அவள் என்மீது கொண்ட காதலை தூய்மையக வளர்க்கத் துடித்தபோது துயரத் துப்பாக்கிகள் என்னை துளைக்கத் தொடங்கின நேரம் ஒரு மடல் வரைவாள் நேற்று எழுதிய மடலில் என்னை மறந்து விடு மன்னித்துவிடு உன்னுேடு இணைந்து வாழமுடியாது என இருக்கும். இன்று எழுதும் மடலில் என்னை கைவிடாதே கணப் பொழுதும் உன்னை நினைக்காமல் இருக்கவும் முடியவில்லை. என்னை 'நீ கை விட்டால் நான் தற்கொலை செய்வேன் என எழுதிவிடுவாள் நான் என்ன செய்வேன். குழம்புவேன், புலம்புவேன் மீண்டும் அன்பாக ஓர் கடிதத்தை எழுதுவேன் அடுத்த மடலில் அவளோ நான் அவுஸ்ரோலியாய் போகப் போறன் என்று எழுதுவாள். அந்த நிலையில் ஆடவன் நானே ஆதவனை இழந்த பூமி அந்த காரத்தில் சிக்கிப் தவிப்பதுபோல தவியாய் தவிப்பேன். இந்த நிலையில் ஆத்மீக சிந்தனைகள் என்னை விட்டு அகன்றுவிடும் அவளின் சிந்தனைகளே என்னை ஆட் கொள்ளும் இன் நேரங்களில் என் இதயங்கள் பாரங்களாகி வாழ்க்கையே காரங்களாகும்.
இக்காதல் தற்போது தவடு பொடியாக விட்டது அவளை நான் தேடுகிறேன். என்னை விட்டு விலகிச் சென்ற பிறகும் என் விரல்கள் அவளை தேடிக் கொண்டிருக்கிறது. எனக்குள் அவள் தேக்க வைத்த நினைவுகளை அவளிடம் திருப்பிக்கொடுக்க முடியாத . போது அவள் நினைவுகளோடு நான் வாழ்ந்து கொண்டிருக்கிருேம். ஆயுள் முடியாத இந்த நினைவுகளை மனதில் ஒரு மூலையில் மறைத்துவிட்டு ஆத்மீகத்திருப்தியை அழித்தும் ஆண்டவனின் நினைவுகளை என் நெஞ்சத்தால் மறந்துசெல்கிறேன் காதல் பிரதேசத்தின் எல்லைகளில் இருந்து வெளியேறி இறையியல் பிரவேசத்தினுள் நுழைந்து செல்கிறேன். ஒன்றைமட்டும் ஒத்துக் கொள் கிறேன். காதலித்த காலத்தில் கணப் பொழுதில் கடவுளை நினைப்பது கடினம். தற்போது தாராளமாய் நினைக்க முடிகிறது. இருந்தும் இடை யிடையே நடைபெற்றுச் சென்ற அவள் தூதுகள் என்னை தூக்கிச் செல்லப் பார்க்கின்றன. நான் போராடுகிறேன். ஒருபுறம் ஆயுதப் போ ராட்டம் மறுபுறம் காதல் போரட்டம் இரண்டுக்கும் இடையே இவனே ஆத்மீக வழிகளில் திண்டாட்டம். செல்கிறேன் என் புதிய உலகம் நோக்கி.
32

என்ன நானே இராஜினுமா செய்கிறேன்
தலைப்பை எழுதிவிட்டு தலைவலியில் தவிக்கும்போதே வாய்குழிக்குள் இருந்து வார்த்தைகள் வெளியே பொலு பொலுவென கொட்டுகின்றன. வார்த்தைகளை நான் எழுதப் போனுல் என் வாழ் நாட்களுக்குள் எழுதிவிட முடியுமா இல்லை! எல்லைக்கணக்கற்ற அந்த வார்த்தைகளை கணக்கிட்டு இக் கடதாசியில் தொடர்கிறேன்.
கவியரசு என வர்ணிக்கப்படும் கண்ணதாசன் ஒரு நாட்பொழுதின் சாவின் நிலையை மூன்றுதடவை எண்ணிப்பார்ப்பாராம் நானே மூவாயிரம் தடவை நினைத்துப் பார்க்கிறேன். சோகங்கள் சுமந்துவரும் சுலோ கங்கள் எனக்கு சொந்தமாகி விட்டதால் சுடுகாட்டில் சுதந்திர பொழு துகளை எனக்குள்ளே நானே இறை மீட்டுக்கொள்கிறேன் என நீங்கள் என்மீது ஒரு குற்றச்சாட்டை மாற்றினுலும் அச்சுமையை சுமக்க நான் தயார் இல்லை. ஆத்மீக விளக்கு வெளிச்சத்தை விலங்கினங்கள் கொள்வதற்கு முன்னமே சவக்குழிகளுக்குள்ளேயே சரியான சமாதா னங்கள் இருக்கும் என்பதை திடமாக நம்பினேன். சூரியக்கதிர்கள் எட மண்ணிலே சுடர்விட்டு பிரகாசிக்க பிஞ்சு நெஞ்சங்கள் நெருப்பிலே வேகத் தொடங்கிய சமயம் வாழ்க்கையால் வெறுப்பும் மகத்தான மண் விடுதலையால் விருப்மே எனக்கு ஏற்பட்டது. இதைத்தவிர சூழ்நிலை சூனியமாய்ப்போனதே போகும் வழிகள் ஒளிகள் இல்லாத இருளாய் மாறியதே என்பதற்காக என்னை நான் வெறுக்கவில் ல. இவை எல்லாம் எனக்கு சுகம்தரும் பொழுதுகள் இனிமை தரும் நினைவுகள் ஆகவே தற்போது என்னை நான் அடியோடு வெறுப் பதற்கு வேதனைகள் காரணமில்லை. தன்னைத்தானே வெறுத்து தன் தவறையும் வெறுத்து ஆத்மீக வாசலுக்குள் நுழைவது சம்பந்தமான விபரங்களை அறநெறிகளின் வழிகாட்டும் நூல்கள் எடுத்து விளக்குகின்றன
சாவது சிலருக்கு சாதாரணமாக இருந்தாலும் பலருக்கு அது அசாதாரணமாகவே இருக்கிறது. ஆத்மீக மலர்களை அலங்கரிக்கும் ஒருவன் சாவிலே சந்தோசம் காண்கிருன். ஆத்மீக பலத்தோடு ஆயுதப் போராட்டம் நடாத்தும் இளைஞ்ஞர்களும் கூட மரணத்தை மனமாக நேசிக்கிருர்கள் இங்கே இறைவனின் அழைப்பில் எமது சாவை சமர்ப் பணம் செய்ய வேண்டும். மரணத்தை நினைத்து அதிகமாய் மனதை அலட்டிக் கொள்ளும் மனிதர்களே ! மகிழ்ச்சியான மணக் கோலங்களை மரணம் தான் எமக்கு காண்மிக்கப் போகின்றது. வாழ்விலே சுகம் காணும் நாம் வாழ்வை முடிக்கும் போதும் சோகங்களை சுட்டெறிந்து சுகங்களை காண்போம் மரணத்திற்குப் பிறகும் எத்தனையோ மனிதர்கள் இந்த மண்ணில் எம் நெஞ்சில் ஏடுகளில் பிரதிபலித்துக் கொண்டி ருக்கிருர்களே ! சதாகாலம் வாழ்ந்து கொண்டு இருக்கிருர்களே அவர்கள் சகாப்தத்தை கூட தமக்குள் சரணடையைத் செய்தவர்கள், முடியாண்ட மன்னரும் பிடிசாம்பல் ஆளுர் என்ற கதை
33

Page 21
உங்களுக்குத் தெரியாதா அச்சாம்பல்களிலேயே ls) effTib TaTiger ஜியங்கள் உருவாக்கப்பட்டதும் அச் சாம்ராஜீஜியங்களின் நினைவு கூறுவதற்காக புதிய பல சரித்திரங்கள் படைக்கப்பட்டதும் நாங்கள் அறிந்த பழைய கதைதானே கவலைகளை களைந்தெறிந்து. கடைமைகளை கண்ணாக நினைத்து வரும் காலங்களை பொன்ஞக இருந்து மரணத்தை மகிழ்வோடு ஏற்றிடவேண்டும்.
இந்த உலகைவிட்டு எவ்வளவு சீக்கிரமாக இறைவன் என்னை அழைக்க விரும்பிகிருரோ அவ்வளவு சிக்கிரமாக இந்த உலகை தான் இராஜினமா செய்யத்தயாராய் இருக்கிறேன். ஒரு காலப்பகுதியில் அமைதியான அந்த இரவுகளில் எல்லாம் எனது பெற்ருேர் சகோத ரர்கள் கண்ணாக தான் நினைத்த காதலி ஆகியோரை எண்ணிப்பல கனவுகள் காண்பேன். அக்கனவுகளோடே கண்ணுற ங்குவேன், இப் போதெல்லாம் அப்படி இல்லை, உரிமைபோருக்காக தம் உயிரைக் கொடுத்த தியாகிகள் அவர்கள் பிணக்கோலமாய் போன பயணங்கள், அக்கோலங்களைக் கண்டு பொறுக்க முடியாது கண்ணிர் வடித்த கன்னியர் கள் காளையர்கள், என் பாசமிகு பெற்ருேர் இவைகளே நாம் காணும் புதிய கனவுகள், இவைகள் கண்டகனவுகளின் நினைவுகளல்ல. நினைவுகளாய்ப்போன கனவுகள், இவையே நான் காத்திருக்கிறேன். எதற்காக என்று கேட்கிருர்களா ! எனது மணமேடை ஊர்வலத்துக்கு புதிய கனவுகள் இவைகள் கண்டகனவுகளின் நினைவுகளல்ல, நினைவு களாய்ப்போன கனவுகள். இவையே நான் காத்திருக்கிறேன். எதற்காக என்று கேட்கிருர்களா ! எனது மணமேடை ஊர்வலத்துக்கு என்று நினைக்க்ாதீர்கள். நாம் பயணப்படப்போகும் பாடை ஊர்வலத்துக்காக அங்கே எனக்காக கண்ணிர் வடிக்க காத்திருப்பவர்களே நீங்கள் கை தட்டு ஆர்ப்பரியுங்கள். ஏன் தெரியுமா ! நாளைக்கும் உங்க ளூக்கும் அதேகதிதான் பிறகு என்ன அழுகை இருக்கிறது. என்னை நானே இராஜினுமாச் செய்து இருப்பது ஒரு புதிய பாதைக்குக்கா அல்ல. அது ஒரு பழைய பாதை அங்கே என் தோழர்களை சந்திப் பேன் என்ற மகிழ்ச்சியுறும் ஆத்மீகத்தின் வழியிலே வழிமீது விழி வைத்து போகுறேன் மனத்திருப்தியுடன் சதா நடந்து கொண்டி ருக்கிறேன். என் பாதம் பதித்திச் செல்லும் சுவடுகள் இறையியலுக் குள் பிரவேசிக்க விரும்புவோருக்கு ஒரு வழிகாட்டியாக நாளை அமையும் என்ற நம்பிக்கையில் என் கால்கள் தொடர்ந்து நடக்கின்றன அவ்வழியே.
34

இதயம் பேசுகிறது
சித்திரைப் பூவிழி புத்தகத்தில் அறிமுகப் படுத்திய இப்பகு தியால் உங்கள் இதய உணர்வுகள் கடிதங்கள் மூலம் வெளிப்படுத்தப் படுவதை வரவேற்கின்றேன். கடிதங்கள், விமர்சனம், பாராட்டு என்ற இரு கோணத்தில் அமையாலாம். சித்திரைப் 'பூ' விழி புத்தகத்தை வாசித்து நுற்றுக்கணக்கான கடிதங்கள் என் கரங்களின் குவிந்தன. அக்கடிதங்களை வாசித்த போது ரசியர்களின் ஆனந்த அலைகள் என்னை நீராட்டி அணைத்தன அனைவருக்கும் எனது நன்றிகள். இவ் நூலிலும் மூன்று கடிதங்கள் பிரசுரிக்க இடம் போதாமையினுல் இரு கடிதங்களை பிரசுரித்து உங்கள் இதய இராகங்களை பூர்த்தி செய்து கொள்கிறேன்.
விமர்சனம் :
மதிப்புக்குரிய ஆசிரியருக்கு?
இவளின் கலையுலக வந்தனங்கள்:
தங்களின் " சித்திரைப்பூவிழி ' படித்தேன்-சிந்தை நிறை கருத்துக்கள் செந்தேன் எனப் பாய்ந்து என் நாவில் இறங்கு உள்ளத் தில் இருப்பிடம் தேடிக்கொண்டது. மனித வாழ்வில்-பண்பட்ட வாழ்வுக் கருவூலங்கள் எவ்வாறு பிரதிபலிக்கப்படவேண்டும்-மாண வசமுதாயம் தங்கள் பயணத்தில் எவ்வாறு ஒவ்வொரு அடிமையும் நிதானமாய் எடுத்துவைத்து நடைபோடவேண்டும்-விலங்குகள் போல் மனிதன் வாழாது மனிதனுய்-மனிதநேயத்தோடு வாழப் பழக என்ன செய்யவேண்டும்-எத்தனையோ சுவையுள்ள கருத்துக்களை-சிந்தனை விளக்கைத் தூண்டும்- தூண்டுகோல்களைத் தெளிவாக-எளியநடையில் இயம்பிச் சென்ற உங்களின் சேவைக்கு எனது வாழ்த்துக்கள் வளர்ந் திடட்டும் திறமை-சிறந்த சமுதாயமாய்-நம்சமூகம் மாறட்டும்.
இவள் கல்வியூர் விஜயபாரதி.
இத(உ)யம் பேசுகின்றது
சகோதரனே ?
நல்லதுக்கு காலமில்லை ! நமக்கு தெரிஞ்ச மட்டுலே
இறைவன் தன் பக்தனுக்கு சோதனைகளையும் சோகங்களையும் கொடுத் தும் துடைத்தும் வருகின்ருன்.
35

Page 22
மேலும் சகோதரனே !
சடப்பொருளாகிய தேங்காய்க்கு மூன்றுகண்களையும். பகுத்த்றிவற்ற விலங்குகளுக்கும் பகுத்தறிவுள்ள அதிஷ்டவான வர்களுக்கு.
இரண்டு கண்களையும் படைத்திருக்கும் இறைவன்.
உனக்கு மட்டும் ஏன் ? ஏன் ?
வஞ்சகம் செய்துள்ளான் இருப்பினும் உன் அகக்கண்ணுக்கு பார்வை கொடுத்திருக்கின்றபடியால் நீ அவனுக்கு நன்றிகடன் செலுத்த கடமைப்பட்டிருக்கின்ருய்.
நான் சொல்வதை அமைதியுடன் கேள், ஏனெனில், கண் இருப்பின் எல்லாவற்றையும் பார்க்கலாம், ரசிக்கலாம் என்றெல்லாம் நீ எண்ண லாம். ஆயினும் தீய வற்றை மனித இதயத்திற்குள்ளிருக்கும் சாத் தான் விரும்பி நாடுகின்ரு ன். இருப்பினும் சாத்தான் என்று விட்ட நீ சாத்தானுக்கு அடிமையானவர்களின் கண்களைத் துடைக்கக்கூடிய நூல்களை படைத்து வருகின்ருய், புரிகிறதா ? கண் இருப்பவனை விடப்பாக்கியம் செய்திருக்கின் ருய் நீ.
நாம் உமது " சித்திரைப் பூவிழி " யைப் படித்து நம் வழிகளை
சித்திரை முதல் மார்கழிவரை ஈந்துவிட்டய்.
" எதிர் கொள்ளுங்கள் "
" வாழ்கை என்ருல் என்ன படிப்பின் படிக் கட்டுகள்," சாவுகள் நீங்கள் ஏன் சாவதில்லை ? * வேலிவேண்டும்." " பெண்ணினமே உன் பெகுமை எங்கே !
என்ற தலையங்கங்களிலே மனித வாழ்க்கையை தீட்டிவிட்டாய் வாசித்த என் நெஞ்சில் ஓவியமாய்ப்படிந்து விட்டது.
எல்லாம் பிரமாதம்-இன்னும் இது போன்ற நல்ல கருத்துக்கள் சொரிந்த நூல்களை ஆக்கி, எம்மைச் சிறந்த மானிடனுக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டும், விழிகளைப்பெற்றும், மேலும் சிறந்த எழுத்தாளனுகவேண்டும் என்றும் எனது மனதை விட்டுப் பிராத்திக்கும் நண்பன், சகோதரன்.
உ. தங்கவடிவேல் விவேகானந்த மாகா வித்தியாலயம் கொழும்பு.
36

போட்டி முடிவுகள்
சித்திரைப் பூவிழி புத்தகத்தில் (ஊழல் மலிந்த இந்த உலகம்) என்ற தலைப்பில் நடாத்தப்பட்ட கட்டுரைப் போட்டியில் முதலாம் பரிைசப் பெறு பவர் இ. திலகவதி, M. S. ஒழுங்கை. கோண்டாவில் தெற்கு, கோண்டா வில். இரண்டாம் பரிசான நூற்றைம்பது ரூபாவைப் பெறுபவர்இரத்தின வடிவேலு புஸ்பமால, இல, 27, கரைக்காட்டு வீதி, வண்ணார்பண்ணை, யாழ்ப்பாணம். போட்டியில் பங்குபற்றிய அனைத்து பல வாசகர்களுக்கு கோடி பல வணக்கங்கள்.
வளரக வளர்க வெல்க
கவிதைப் போட்டி
கவிதைக்கான விதிமுறைகள் இருபத்திரண்டு வரிக்கு கூடாமலும் இருபது வரிக்குக் குறையாமலும் இருக்க வேண் டும். படித்தவர்கள் மட்டும் அல்ல பாமரர்களும் எழிதில் விளங்கிக்கொள்ளக் கூடியதாக இருக்கவேண்டும். எழுத்துக் கள் தெளிவாக இருக்க வேண்டும். கவிதையில் வெற்றி பெறும் முதல் மூன்று போட்டிகளுக்கு முன்னூறு முறையே நூற்றைம்பது, நூறு முறையே வழங்கப்படும்.
37

Page 23
DURO PIPE INDUSTRIES LTD.,
Manufacturers of Duro PVC Pipes & Fittings 311, Old Moor Street, (Second Floor) Colombo 12.
Telephone: 540759, 540760, 546781; Telex: 21909, VIJAYА СЕ
With Best Compliments From THE NEWESTATTRACTION IN TRAVEL
The Frefessionals
... Air Ticketing ... Package Tours
... Visas & Travel Formalities ... Hotel Reservations Worldwide
... Travellers Cheques ... Europe Coach & Rail Tours
... Holiday Travel ... Travel insurance
... Business Travel ... Car Rentals
... Pilgrimages
SUPER SERVICE RELIABILITY &
PERSONALIZED CARE
For all Yಣ್ಣ Travel Requirements Just tell us your Destination and when you want to get There and we'll Make sure you do We'll take good Care of everything and leave you to Enjoy the Tri
THAT'S WHAT PROFESSIONALSMS ALLABOUT
VMS Travels & Tours (Pvt) Ltd. M4, Hotel Galedari Meridien 64, Lotus Road, Colombo 1 Telephone: 544544 - 26157 - 23929 - 437249

With Best Wishes
"Well Wisher"
Mr. Gamel Chummah.
With Best Compliments of
HOTEL DE LIBERTY 203, Galle Road, Kollupitiya Colombo. VEGETARAN HOTEL No. 203, Galle Road, Kollupitiya.
A BEST WISHES
FROM
WELL WISHER.

Page 24
PARIS HOTEL
380, Maradana Road, Maradana.
ISLAND LODGE
Room Available for Visitors 1St Floor-2nd FOOr-3rd Floor-4th Floor.
141 & 143, Sri Kathiresan Street, Colombo. 13. Sri Lanka. Phone: 548358.
GENERAL MERCHANTS AND COMMISSION AGENTS.
KARUNATRADING CO., 73, 5th Cross Street, Colombo - 11. Tphone: 421961
A
WELL WISHER.

A BEST WISHES FROM
WELL WISHER.
A
WELL WISHER.

Page 25
LAMBODARA EXPORTS.
COLPITY PRINTERS,
Paramount Travel Agency
92, First Floor
People Park Complex Bodhiraja Mawatha, COOmbO 1.
A Well Wisher
28, St John's Road, Colombo.

With Best Wishe from
M. K. De COSTA TRANSPORT CONTRACTOR
With the Compliments of
BLENDPOTASSOCATS
334, Darley Road, Colombo - 10.
FELICTATIONS.
FALCONTRADING (PTE) LIMITED.
334, Darley Road, Colombo - 10.
ASHOKA MOTOR (PVT) LTD.
IMPORTERS & DEALERS IN PSTONS RINGS ALL VEHICLES & ENGINES
T'phone: 546656 196/3, Panchikawatta Road, Colombo - 10.

Page 26
With Best Compliments from
Mr. Rushdi Al. Ayad. Managing Director
ARABEXASSOCATES ARABEX INTERNATIONAL SERVICES
Phone: 589338, Telex: 22270 Fax: 575599, 500301 44, Rajasingha road, Colombo 6, Sri Lanka.
TOWER LANKATRAVELS
international Air Ticketing, Visas and Tour Organizers.
No. 86/A, Chatham Street, Colombo - 1. Tele: 24051


Page 27
Priited Eo
ܩ 1 . ܕ +1 ܒ ܩ ܨܝܡܐܼ.
K AA AeqAAA S AAA A SK SS SSS S AAS ASASAS Suu u Su S u A S S SS

|-
|-
·
|-| |- ----+----|- |-+ · · - *| + ----+ ''----|- |-----|-|-|-|- |-|-|-|- |-|-|- |-|-|- |----+ ---- |-
y Meihandan Press Ltd.
|- |-
1-- 1