கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: நல்வாழ்விற்குரிய நடைமுறைச் சிந்தனைகள்

Page 1

7
2イ
{ کےــــــــــــ(72 Zエ
ந்தரம்

Page 2


Page 3

நல்வாழ்விற்குரிய
நடைமுறைச்
சிந்தனைகள்
குமாரசாமி சோமசுந்தரம்

Page 4
நூலின் பெயர் ஆசிரியர்
உரிமை
வெளியீடு
பதிப்பு பதிப்பு ஆண்டு ஒளி அச்சுக்கோர்வை:
Name of the Book
Author
Copy Right
Publication
Edition
Year of Publication
Typeset
Price
நூற்குறிப்பு
நல்வாழ்விற்குரிய நடைமுறைச் சிந்தனைகள். குமாரசாமி சோமசுந்தரம் திருமதி. தையல்நாயகி சோமசுந்தரம் : ரஜி வெளியீடு, 29, முதலாம் ஒழுங்கை
தெஹிவலை, கொழும்பு, இலங்கை,
முதற்பதிப்பு
: 1996
ஃபாண்ட்ஸ் டீ.டி.பி சர்வீஸஸ், நெ.243, திருவல்லிக்கேணி நெடுஞ்சாலை, திருவல்லிக்கேணி, சென்னை - 5.
ரூபா. 36/-
NALVAZHRITKURIYA NADAMURAI CHINTHANAIGAL. (Values of Life)
KUMARASAMY SOMASUNDRAM Mrs. THYALNAYAKISOMASUNDRAM
RAJI PUBLICATIONS 29, First Lane, Dehiwela, Colombo. Sri Lanka
First Edition
1996
FD NTE DTP Sevaceea
No.243, Triplicane High Road, Triplicane, Chennai - 5
Rs. 36/-

Clp856A6oy
ம்னிதப் பிறவியின் மேலாந்தன்மை, மனிதரின் நல்லொழுக்கம், நன்னடத்தை, நற்பண்புகள் நிறைந்த நல்வாழ்க்கையின் மூலமே விளக்கம் பெறுகின்றது. மனித குலத்தின் மேலாந்தன்மையைக் பேணிப் பாதுகாக்க வேண்டிய பொறுப்பும் கடமையும் மனிதகுலத்தில் தோன்றிய ஒவ்வொரு வருக்கும் உண்டு. அவற்றில் அசிரத்தை கொள்பவர்கள், மனிதகுல உறுப்புரிமையை இழந்தவர்கள் ஆகிவிடுகின்றனர்.
"தீதும் நன்றும் பிறர்தர வாரா"-
"ஒழுக்கம் விழுப்பம் தரலான் ஒழுக்கம்
உயிரினும் ஒம்பப் படும்.”
"அறிவினான் ஆகுவதுண்டோ பிறிதின்நோய்
தந்நோய் போல் போற்றாக்கடை."
நாம் அறிவில் செல்வர்கள். ஆனால் அறிவின் பயன் ஆகிய ஒழுக்கத்தில் வறியவர்கள் ஆகிவருகின்றோம். அதனால் மனிதகுல உறுப்புரிமை எங்கே எம்மிடமிருந்து பறிபோய் விடுமோ என்று பயங்கொள்ள வேண்டியுள்ளது.
மனித இனத்திற்குப் பெறுமதியும் பெறுமானமும் பெரு மதிப்பும் சேர்க்கக் கூடிய நற்குண இயல்புகளை, நல்ல மனிதப் பண்புகளை, வாழ்க்கை விழுமியங்களை தற்காலத்தில் ஏனோ வெறுத்து ஒதுக்குகிறார்கள் என்பதுதான் பெரும்புதிராக உள்ளது.
இந்நூலில் இடம் பெறும் விடயங்கள் மனித வாழ்க்கையை மேம்பாடடையச் செய்ய ஒரு சிறிதளவேனும் உதவுமாகில் அதனைப் பெரும் பேறாகக் கருதுவோம். அவை வாசகர்களின் சிந்தனைகளைக் கிளறிவிடுமாயின் அதுவே வெற்றியின் முதற்படியாகும்.
சீரும் திருவும் பொலிய; இன்பமும் மகிழ்ச்சியும் பொங்க; அமைதியும் சாந்தியும் ஓங்க; மனித வாழ்வு உலகில் நிறைவான வாழ்வாக மலர்ச்சி பெறவேண்டும் என்பது எனது பிரார்த்தனை.

Page 5
இலங்கை வானொலியார், இந் நடைமுறை வாழ்க்கைத் தத்துவக் கருத்துரைகளை ஒலிபரப்பி உதவினர். வீரகேசரிப் பத்திரிகை ஆர்வத்தோடு சிலவற்றைப் பிரசுரித்தன. எனது ஆழ்ந்த நன்றிகள் உரித்தாகுக. நேயர்கள், வாசகர்கள், நண்பர்கள் அவற்றைத் தொகுத்து நூலாக வெளியிடும்படி அன்புக் கட்டளை யிட்டனர். அதன் விளைவாகவே இந்நூல் வெளிவருகின்றது.
இந்நூலினை அழகாக அச்சிட்டு வெளிவர உதவிய
குமரன் பதிப்பகத்தினருக்கு எனது நன்றிகள். குறிப்பாக, திரு.க. குமரன் அவர்கட்கு நான் பெரிதும் நன்றியுடையேன்.
சொல்லும் பொருளும்; வாழ்க்கையும் விழுமியங்களும் சேர்ந்தே இருப்பது நீதி. அப்பொழுதுதான் அவற்றிற்கு அர்த்தம் உண்டு. அவை ஒன்றிலிருந்து மற்றொன்று பிரிக்கப்படும்போது உலகில் பிசகு ஏற்பட்டுவிடுகின்றது; நீதி தளம்புகின்றது; அர்த்தம் அற்று விடுகின்றது.
சொல்லுதல் யார்க்கும் எளிது; சொல்லிய வண்ணம் செயல் அரிது. எனினும், முயன்றால் முடியாததொன்றில்லை என்பதை உணர்ந்து செயல்படுவோம், மனித குல மீட்சியை நோக்கி.
சான்றோர்களுக்கும், சான்றோராக உருவாகி வருவோர்க்
கும் இந்நூல் சமர்ப்பணம்.
கொழும்பு, இலங்கை. குமாராசாமி சோமசுந்தரம்
24.O8. 1996

22.
23.
24.
பொருளடக்கம்
சீரிய வாழ்வு வாழ்வோம் மனிதர்கள் இயற்கையாக நல்லவர்கள் மற்றவர்களுக்கு உதவுதல் மனிதப்பண்பு சிறார்களுக்கு வழிகாட்டும் வல்லமை பிறர் கருத்துக்களுக்குச் செவிமடுப்போம் வாழும் வழி எது? பிழைக்கும் வழி எது? நிம்மதியை எங்கே தேடுவது? நேர்மையான உழைப்பினால் அடைவதே இன்ப சுகம் பிள்ளை வளர்ப்பின் பின்னணியில் சில உண்மைகள் நாம் இழக்கக் கூடாதது எது? போற்றுதற்குரிய செயற்கரிய செயல் பெற்றோர் கரிசனை மெளனம் - பலத்தின் விளைவு முதுமையின் இனிமை சோம்பல் மிகக் கெடுதி சமுதாய ஆரோக்கியம் பேணுவோம் மனிதரில் நிறைகளைக் காண்போம் மக்கள் நலம் பேணி வாழ்வோம் மனிதத் தன்மைகளே மனித உரிமைகள் வழிகாட்டுதல் என்பது வாழ்ந்து காட்டுதல் பிறர் வதைபடுவதில் இன்பம் காணும் விசித்திரப்
பிரக்கிருதிகள் அதிருஷ்டத்தை நம்பினால் வாழ்வு என்னவாகும் அநுபவங்களைப் பெறுதலே, கற்றல்
பண்புப் பரிவர்த்தனை
12
15
17
2O
22
25
27
3O
33
36
38
4O
43
46
48
51
53
56
59
62
65
68

Page 6
25.
26.
27.
28.
29,
3O.
31.
32.
33.
34.
35.
36.
37.
38.
39.
4O.
41.
42.
43.
44.
45.
46.
47.
48.
49.
5O.
51.
திருப்தி இல்லாதவர் வாழ்வில் விரக்தி குடியிருக்கும் போதை தரும் முகஸ்துதி சந்தேகம் சேர்ந்தாரைக் கொல்லி இரகசியம் இடும்பை தரும்
தொட்டிற் பழக்கம்
மங்கல விழாக்களில் அமங்கலம் நுழைந்துவிடல் ஆகாது மதிப்பு, மரியாதை, கணிப்பு - கொடுக்கல், வாங்கல் கவலையைத் தருபவர் யார்?
அலட்சிய மனப்பாங்கு வாழ்க்கைக்குத் தடைபோடும்
சமூகத்திற்குக் கடப்பாடுடையோம், பயப்பாடுடையோம்
நம்பிக்கையும் நாணயமும் நல்ல குடும்பம் பல்கலைக்கழகம் பிறரை மட்டந்தட்டுதல், பரிகசித்தல் ஆகாது பிஞ்சில் பழுப்பது வெம்பல் ஞாபகமும் மறதியும் வேண்டற்பாலனவே தூய்மையான வாழ்விற்குத் தாய்மையே ஆதாரம் சுத்தம் பேணுவோம்
யாரை யார் திருத்துவது மக்களின் மூன்று வகையினர் வாழ்க்கையை நரகமாக ஆக்கிக்கொள்வோர் uu? மனிதருள் எத்தனை வேறுபாடுகள் பரஸ்பரம் நம்பிக்கை, விசுவாசம் குடும்பச் சீர்குலைவுகள் எதனால் ஏற்படுகின்றன? போர் மனித உள்ளங்களில் தோன்றுகின்றது நேரம் தவறாமல் கருமம்
உண்மையே வெல்லும்
ஒன்றே குலம், ஒருவனே தேவன், நன்றே நினைமின்
1 O2
105
108
11 O
113
115
18
121
124
1.27
13 O
134
137
14O
142

1. சீரிய வாழ்வு வாழ்வோம்
நாம் இன்றைய சமுதாயத்தில் காண்கின்ற ஒரு விநோதம் என்னவெனில், நம் முந்தையோர் கூறிவைத்த நல்ல வாழ்வியல் நெறிமுறைகளை நம்புவதாகவும் இல்லை, அதேவேளை நம்பக்கூடியவகையில் ஏதாவது நவீன நெறி முறைகளை வகுத்துச் சீரிய வாழ்விற்கு வழிகோலும் நிலையிலும் இல்லை எனும் இரண்டும் அற்ற ஒரு நிலையேயாகும். இந்தப் பிசுபிசித்த சூழ்நிலையினால், மனிதவாழ்வு கண்டதே காட்சி, கொண்டதே கோலம் ஆகிவருகின்றது. மனித மனத்திற்கு என உடலில் ஒரு நிரந்தர இடம் இல்லை என்பதும்; நாக்குக்கு எலும் பில்லை என்பதும்; செயல் ஆற்றும் உடம்பிற்கு இயல்பில்லை என்பதும் இன்று வெளிப்படையாகத் தெரிகிறது. மனச்சாட்சி என்றால், அது என்ன பண்டம், எங்கேயுள்ளது என்று கேட்போர் தொகை அதிகரித்து வருகிறது. இவையெல்லாம் எதனைக் காட்டுகின்றது? மனிதன் தனது உயரிய நிலையிலிருந்து கீழிறங்கி வருவதையே சுட்டிக்காட்டுகின்றது எனலாம். 嵩
உண்மை பேசவேண்டும்; பிறர் நலனில் சிரத்தை கொள்ள வேண்டும்; எல்லோருடனும் அன்பாக இருக்க வேண்டும்; இனிய வார்த்தைகளிலேயே உரையாடவேண்டும்; பிற உயிர்களுக்குத் தீங்கு செய்தல் ஆகாது; கொலை, களவு, மது, பிறன்மனை நயத்தல், பெரியோர் நிந்தை முதலிய மாபாதகங் களைத் தவிர்க்க வேண்டும்; உண்ணும் உணவுப் பொருட்களில் கலப்படம் செய்யக் கூடாது; கொள்ளை இலாப மடித்தல், இலஞ்சம் பெறுதல் என்பன பாவச் செயல்கள் போன்ற அறவுரைகள், அறிவுரைகள், இன்றையநிலையில் சமுதாயத்தில் செல்வாக்குப் பெறுவதாகத் தோன்றவில்லை. இவை பற்றிய பொதுவான அபிப் பிராயம் என்ன என்றால், இத்தகைய அறச்செயல்கள், தர்மகாரியங்கள் எல்லாம் இவ்வுலக வாழ்க்கைச்
சுகங்களையும், இன்பங்களையும் தரவல்லன அல்ல என்பதாகும்.

Page 7
8 ஒ குமாரசாமி சோமசுந்தரம்
மாறாக வாழ்க்கை இன்பங்களை அனுபவிப்பதற்கும், திடீர் திடீரெனப் பணம், பொருள் பண்டங்களைச் சேர்த்துக் கொள் வதற்கும்; புகழ், அந்தஸ்து, செல்வாக்குகளை அடைவதற்கும் அறக்கோட்பாடுகளும், நீதிநெறிகளும் குறுக்கே நிற்கின்றன; முன்னேற்றத்திற்குத் தடைவிதிக்கின்றன என்ற நம்பிக்கையும், எண்ணமும் மனித சமுதாயங்களில் வலுப்பெற்று வருகின்றன. அறவழிகள், புண்ணிய வழிகள் ஆகும். அதனால் அவை மறு உலக சுகத்திற்கும், மறுமை இன்பத்திற்கும் தேவையானவையே யன்றி இம்மை இன்பத்திற்கு அல்ல என்ற கருத்தையும் சிலர் கூறிவருகின்றனர். இன்றைய சமுதாயத்தின் பரிதாபநிலைக்கு இத்தகைய விபரீதப்போக்கே காரணம் ஆக உள்ளது. 'விபரீத புத்தி, நாசகாலம்' என்பது ஆன்றோர் வாக்கு. ஆன்றோரின் வாக்குக்கும் சான்றோரின் கூற்றுக்கும் இன்று யார் மதிப்புக் கொடுக்கிறார்கள். இவற்தை நம்புவதற்கோ, ஏற்பதற்கோ அவற்றிற்குப் பணிவதற்கோ இன்று மக்களில் பலர் தயாராக இல்லை. மாறாக விஞ்ஞானத்திற்குப் பின்னால் செல்கின்றனர்; விஞ்ஞானம் கூறும் விளக்கங்களை வியப்போடு கேட்கின்றனர்; நம்புகின்றனர்; விஞ்ஞானம் தரும் கட்டளைக்குப் பணிகின்றனர். இதுதான் இன்றையநிலை.
ஆன்றோர்வாக்குகள், அறம்சார்ந்த விளக்கங்கள் நீதிநெறிமுறைகள் ஆகியவற்றை வாழ்க்கையில் மேற்கொள் பவர்கள் பிற்போக்காளர்கள் என்றும்; சமூக பொருளாதார முன்னேற்றங்களுக்குத் தடையாக உள்ளவர்கள் என்றும் கொள்ளப்படுகின்றனர். இது எந்தவகையிலும் நீதியற்ற கருத்து என்பதை உணர்ந்து கொள்ளவேண்டும். இவ்வுலக சுகம், இன்பம் மகிழ்ச்சி என்பன வெறுமனே பொருள் பணம், செல்வம் ஆகியவற்றில் மாத்திரம் தங்கியிருக்கவில்லை என்பது பலருக்குத் தெரிவதில்லை. சமுதாயத்தில் அமைதி, ஒழுங்கு. கட்டுப்பாடு, நிம்மதி, சாந்தி, சமாதானம், பாதுகாப்பு என்பன இல்லையானால் எத்தனை கோடி செல்வங்கள் இருந்தும் என்ன பயன்?
பொய்யர்கள், புரட்டர்கள், நன்றிகொன்றவர்கள்,
திருடர்கள், கொலைஞர்கள், வன்கண்ணாளர்கள், வஞ்சகர்கள்,

நல்வாழ்விற்குரிய நடைமுறைச் சிந்தனைகள் 3 g
என்போர் பெருந்தொகையில் இருக்கும் சமுதாயத்தில் எவ்வாறு அமைதியும், நிம்மதியும் இருக்கமுடியும். அத்தகைய அமைதி யற்ற சூழலில் மக்கள் வாழ்வில் மகிழ்ச்சி காண்பது எங்ஙனம் ? அதனாலேயே, நமது மூதாதையர் அறநெறிகளையும், நீதிமுறை களையும், தர்மக்கோட்பாடுகளையும் வகுத்துத்தந்தனர். அவைகள் சமூகநீதிச்சட்டங்கள் என்றனர். அவற்றைக் கடைப்பிடிக்குமாறு வற்புறுத்தினர். அறங்களும், நீதிநெறி முறைகளும் மறுஉலக இன்பத்துக்க மாத்திரமல்ல, இவ்வுலக அமைதிக்கும், வாழ்க்கைச் சுகத்துக்கும் இன்றியமையாதன என்பதையும் உணர்த்தினர். நீதிச்சட்டங்கள் ஒருபோதும் பிற்போக்கானவையல்ல; வாழ்வின் முன்னேற்றத்திற்குரியன. அன்பும் அறமும்; உண்மையும் அஹிம்சையும் முத்திக்கு வித்தாகும், பின்பு பார்த்துக் கொள்ளலாம் என அவற்றை ஒதுக்கி வைப்பது எத்துணை அறிவீனம்' அன்பும் அறனும் உடைத்தாயின் இல் வாழ்கை, பண்பும் பயனும் அது’ என்றாரே வள்ளுவர். இல்லறவாழ்க்கை சுகம் பேச வேண்டுமானால் அன்பும் அறனும் வேண்டும். நட்பு மலர வேண்டுமானால் பரஸ்பர நம்பிக்கை தேவை. சமூக, அரசியல், பொருளாதார விருத்திக்கும் மனித விழுமியங்களை மதிக்கின்ற மனிதவளம் வேண்டும். எனவே அன்பு, நேர்மை, உண்மை, இன்சொல், நன்றிமறவாமை, நீதி போன்றன எமது இவ்வுலக வாழ்க்கை இன்பங்களையும் தரவல்லன என்பதை உணர்வோம்; அவற்றை நம்புவோம்; அவற்றிற்குப்பணிவோம். நாளும் எம் வாழ்க்கையில் நல்ல பண்புகளைக் கடைப்பிடித்
தொழுகி நல்வாழ்வு வாழ்வோமாக.
2. மனிதர்கள் இயற்கையாக நல்லவர்கள்
நாம் நல்லவர்களாக வாழ வேண்டும். அப்பொழுது தான் எல்லோரும் நம்மீது பிரியமுள்ளவர்களாக இருப்பார்கள். நாம் தீயவர்களாக, கெட்டசெயல்களில் ஈடுபாடு கொள்ளும் போது, நம்மை எல்லோரும் வெறுக்கிறார்கள். பிறர் வெறுக்க, நாம் வாழ்வது என்பது மகிழ்ச்சியான வாழ்வாக அமையாது.

Page 8
10 ஒ குமாரசாமி சோமசுந்தரம்
எம்மை எப்போதும் நேசித்து வந்தவர்கள் ஒருநாள் திடீரென்று வெறுக்கத் தொடங்கினால், அவர்கள் மீது கோபித்துக் கொள்ளக் கூடாது. நம்மை ஒருமுறை நாமே ஆராய்ந்து பார்க்க வேண்டும். நாம் என்ன தவறுவிட்டோம் என்பதை அறிந்து கொள்ளமுடியும். தவறைத் தெரிந்து கொண்டால், உடனே நாம் நம்மைத் திருத்திக் கொள்ள வேண்டும். மீண்டும் அந்தத் தவறை விட நமக்குச் சந்தர்ப்பம் தரப்படக்கூடாது. எனவே, அன்புக்குரியவர்கள் எமக்கு ஆலோசனை கூறினால் அல்லது எம்மைக் கடிந்து கொண்டால், நாம் திருந்தி நடப்பதற்கு அவர்கள் வழங்கும் சந்தர்ப்பம் ஆக அவற்றை ஏற்றுக்கொள்ளுதலே விவேகமாகும்.
நற்பண்புகள் கொண்டிருத்தல், நல்லொழுக்கங்களை மேற்கொள்ளுதல், நன்னடைத்தைகள் உடையோராய் விளங்குதல் என்பன நல்லவரின் அடையாளங்கள். மனிதர்கள் இயற்கையில், இயல்புகளில் நல்லவர்கள். ஆனால் வாழ்க்கையில், சில வேளைகளில் தவறிவிடுகின்றனர்; தவறும் விடுகின்றனர். சற்று நேரம் ஆற அமர இருந்து தம்மைப் பற்றிச் சிந்தித்தால் தவறு களைத் திருத்தும் வல்லமை யையும் பெற்றுவிடுவர். அதற்கு அவகாசம் வேண்டுமே என்கின்றனர் சிலர். அவகாசம் என்பது எங்கிருந்தோ வருவதல்ல. நாமே ஆக்கிக் கொள்வதுதான்.
எதற்கெடுத்தாலும் நல்லவற்றைச் செய்வதற்கு நேரம் இல்லை என்கிறார்கள். கெட்டவற்றைச் செய்வதற்கும் கெடுதி களை விளைவிப்பதற்கும் எப்படியோ நிறைய நேரத்தைக் கண்டு பிடித்து விடுகிறார்கள். இது இன்று ஒரு மனிதப் பழக்கமாகி விட்டது. இன்னும் ஒன்றைச் சொல்கிறார்கள். அது என்னவெனில் கெட்டவர்களோடு சேர்ந்து வாழ்வது சுகம் தருகிறதாம். வாழ்க்கை யும் இலகுவாக உள்ளதாம். ஆனால் நல்லவர்களோடு இணைந்து வாழ்வது மிகவும் கடினமாம். வாழ்க்கையும் அலுப்பும் சலிப்பும் நிறைந்ததாகி விடுகிறதாம். உலகம் எங்கு நோக்கிச் செல்கின்றது என்பதை இதிலிருந்து தெரிந்து கொள்ளலாம். நன்மைக்குக் கால மில்லையென்றும், நல்லவர்களே அல்லல்படுகிறார்கள் என்றும் கூறுபவர்கள், நன்மையை அறியாதவர்களும் சுவையாதவர் களுமே. அவர்களைக் கணக்கில் எடுக்கக்கூடாது. சத்தியம்

நல்வாழ்விற்குரிய நடைமுறைச் சிந்தனைகள் ே 11
வெல்லும்; தர்மம் நிலைக்கும், நல்லவன் வாழ்வான், நன்மையே நலம் தரும் போன்ற மகுடவாசகங்களை உச்சாடனம் செய்ய வேண்டும். அப்பொழுது நம் வாழ்வில் இன்பம் மலர்ச்சி பெறுவதைக் காணலாம்.
எப்பொழுதும் உடன்பாட்டுச் சிந்தனைகளில் மனதைச் செலுத்தினால் நாம் அனைவரும் நன்றாக வாழ முடியும். இருண்ட சிந்தனைகள் எதிர்மறைச் சிந்தனைகளுக்கு நாம் ஒருபோதும் எம் மனத்தில் இடமளிக்கவே கூடாது. நல்லவர்களுக்கு இவையும்
அடையாளங்கள்.
கல்வியைக் கற்றும்; வீட்டிலும் சமூகத்திலும் ஏற்படும் நல்ல பழக்க வழக்கங்களினாலும்; பிறரைக் கரிசனையோடு கவனிப்பதினாலும்; விவேகத்தினாலும் பட்டறிவினாலும் நற்பண்புகளை வளர்த்துக்கொள்ளமுடியும்.
நமக்கு மிகவும் அந்நியோன்யமாக இருப்பவர்களா னாலும், தாய்தந்தையர், பெரியோர்கள், மூத்தோர்கள், ஆசிரியர் கள் ஆகியோரிடம் பேசும்போதும், பழகும் போதும் மரியாதைக் குறைவாகப் பேசவோ, பழகவோ கூடாது. கீழ்ப்படிதல், பணிவு
என்பன நம்மை நல்லவர்களாக உருவாக்கும் சக்தி கொண்டவை.
பெரியவர்களின் வாழ்க்கைச் சரித்திரங்களையும், வாழ்க்கை முறைகளையும்; போதனைகளையும் சாதனைகளையும் அறிந்து வைத்திருத்தல் நல்லது. அப்பொழுது எமது வாழ்க்கை யையும் சீர்செய்து கொள்ளலாம். எமக்கும் ஊக்கமும் நம்பிக்கை யும் ஏற்படும்.
புகைபிடித்தல், மது அருந்துதல், போதைப் பொருட் களை உட்கொள்ளுதல், காம உணர்வுகளுக்கு உள்ளாதல் ஆகியவை ஒருவருடைய உடல் ஆரோக்கியத்தைக் கெடுத்து விடுகின்றன. சமூகத்தில் மதிப்பும் மரியாதையையும் இழந்து விடுகின்றனர். பல நண்பர்களைக் கொண்டு வரும். ஆனால் என்ன பயன்? அனைவரும் தீயவர்கள்; அண்டிக் கெடுப்பவர்கள். பெரிய பதவிகளிலும், சமூக அந்தஸ்திலும் இருப்பவர்கள் அநேகர் இருட்டில் இத்தகைய பழக்கங்களில் ஈடுபட்டு, ஒருநாள்

Page 9
12 ஒ குமாரசாமி சோமசுந்தரம்
அம்பலத்திற்கு வரும் போது வெட்கித்தலை குனியும் நிலை ஏற்படுகின்றது. பொறுப்பானவர்கள் விடும் இத்தகைய ஈனத்தனமான தவறுகள், உடலிச்சைகளினால் ஏற்படுவன. அவற்றை முற்றிலாகத் தவிர்த்துக் கொள்ளுதலே நற்பண்புக்கு இலக்கணம் ஆகும். கெட்ட உள்ளக்கிளர்ச்சிகளுக்கு இடங் கொடாமல் தூய்மையான மனத்தினராய்; இனிமையான பேச்சின ராய்; நன்மைதரும் செயலினராய் எவர் விளங்குகிறார்களோ, அவர்களே தலைசிறந்த தலைவர்கள், மாபெரும் மனிதர்கள், மனிதருள் மாணிக்கங்கள். அத்தகைய நல்லவர்களையே சமகால சமுதாயம் வேண்டிநிற்கின்றது.
3. மற்றவர்களுக்கு உதவுதல் மனிதப் பண்பு
செய்தி ஒன்றினை, என் நண்பர் எனக்கு ஒருவர் மூலம் அனுப்பிவைத்திருந்தார். என் நெருங்கிய நண்பர் அனுப்பிய அந்தச்செய்தியை அவசரமாகப் பிரித்து, ஆவலோடு வாசித்தேன். தனது மிக நெருங்கிய நண்பர் ஒருவர் ரயிலில் வருவதாகவும்; அவரை ரயில் நிலையத்திற்குச் சென்று வரவேற்று, அவரின் வேலையை முடிப்பதற்கு உதவி செய்யுமாறும் அச்செய்தியில் கேட்கப்பட்டிருந்தது. முன்பின் தெரியாத ஒருவரை, சனநெருக்கடி நிறைந்த ரயில் நிலையத்தில் எப்படி அடையாளம் கண்டு வரவேற்பது என்பது எனக்குப் புதிராக இருந்தது. செய்தியை மேலும் படித்தேன். நல்ல வேளை, அவரைப் பற்றிய ஓரிரு தகவல்கள் மாத்திரம் குறிப்பிடப்பட்டிருந்தன. அத்தகவல்கள் இவைதான். ஆள் மெலிந்து சற்று உயரமாக இருப்பார். அத்துடன் எந்த நேரமும் யாருக்காவது உதவி செய்து கொண்டிருப்பார். மெலிந்தவர்களும் உயரமானவர்களும் அநேகம் பேர் ரயிலில் வருவார்கள். ஆகவே இந்த விவரம் ஆளைக் குறிப்பாக அடையாளங் கண்டுகொள்வதற்கு உதவமாட்டாது.
ஆனால், எந்த நேரமும் யாருக்காவது உதவி செய்த வண்ணமே இருப்பார் என்ற விவரம் ஆளைக் கண்டுபிடிக்க

நல்வாழ்விற்குரிய நடைமுறைச் சிந்தனைகள் & 13
உதவும் என்ற நம்பிக்கை ஏற்பட்டது. காரணம் இன்று ஒருவர் மற்றொருவருக்கு உதவுதல் என்பது காணக்கிடைக்காத காட்சி யல்லவா? என் நண்பரின் புத்திசாதுரியத்தை அப்பொழுதுதான் மெச்சினேன். பிறருக்கு விரும்பி உதவி செய்பவர் ஒருவர், இருவர்தான் இருப்பர். அதனால் இந்த விபரம் நிச்சயம் பயன் தரும் என்று எண்ணியவாறு எனக்கு இட்ட பணியை மேற்கொள்ள ஆயத்தமானேன்.
குறித்த நேரத்திற்கு முன்னரே ரயில் நிலையத்தை அடைந்தேன். வசதியாக எல்லோரையும் அவதானிக்கக் கூடிய ஓர் இடத்தில் நின்றேன். அன்று சரியான நேரத்திற்கே ரயிலும் வந்துவிட்டது. காரணம் என்ன தெரியுமா? எனது நண்பரின் நண்பர் அந்த ரயிலில் வந்த மைதான் என்பது எனது புத்திக்கு எட்டிய காரணம். 'நல்லார் ஒருவர் உளரேல், அவர் பொருட்டு எல்லோருக்கும் பெய்யும் மழை' என்ற ஒளவையாரின் நீதிப்பாடல் தான் எனக்கு நினைவிற்கு வந்தது. இன்று நீதிப்பாடல் நினைவிற்கு வருவதும் ஓர் அபூர்வ நிகழ்வுதான்.
ரயில் வந்தது; ஸ்டேசனில் நின்றது; எல்லோரும் ஒருவரையொருவர் தள்ளி விழுத்துவதிலும், முந்தி ஓடுவதிலும், தத்தம் பொதிகளை இறக்குவதிலும், அவசரம் காட்டினர். வயோதிபர்களையும், சிறுவர்களையும், நலிந்தோர்களையும் முட்டி மோதி, ஒரு புறம் தள்ளிவிட்டு வெளியே விரைவதில் பலர் இன்பம் கண்டனர். ஆனால் ஒருவருக்கு ஒருவர் உதவி செய்து பொதிகளை இறக்குபவர்களையோ; வயோதிபர்கள், கர்ப் பிணிகள், கைக்குழந்தையோடு நிற்கும் பெண்கள், நோயாளிகள் நலிந்தோர்கள், உடல் ஊனமுற்றோர் ஆகியோர் ரயிலில் இருந்து கீழே இறங்கும் போது வழிவிட்டு, தேவைப்படின் கைத்தாங்க லாகப் பிடித்து அவர்கள் இறங்க உதவி செய்பவர்களையோ என்னால் காணமுடியவில்லை. உதவிசெய்யாவிட்டாலும், உபத்திரங்கொடுக்காமல் ஆவது இருந்தால் போதாதா? ஒருசிலர் ஆவேசமாக சனக்கூட்டத்தைக் கிழித்துக்கொண்டு, போற போக்கிலே, அக்கம் பக்கத்தில் நின்றவர்கள், வெண்கலக் கடையினுள் யானை புகுந்துவிட்டதோ என்று அஞ்சி அல்லோல
கல்லோலப் பட்டனர்.

Page 10
14 ஒ குமாரசாமி சோமசுந்தரம்
எனது நோக்கம் இன்னும் நிறைவேறவில்லை. நான் யாரை வரவேற்க வந்தேனோ அவரை இன்னும் இனங்கண்டு கொள்ள முடியவில்லை. மெலிந்தவர்களும் உயர்ந்தவர்களும் இறங்கிப் போகிறார்கள். ஆனால் என் நண்பர் குறிப்பிட்டது போல, “ அவர் எப்போதும் யாருக்காவது உதவி செய்து கொண்டிருப்பார்’ என்ற விவரத்தோடு ஒருவரையேனும் கண்டு கொள்ளமுடியுவில்லை.
சிறிது நேரம் கடந்தது. சனசஞ்சடியும் ஓரளவு குறைந்து விட்டது. அப்பொழுது, நான் கண்ட காட்சி என்னை மெய் சிலிர்க்க வைத்தது. ஒருவர், வயோதிபர் ஒரு வரைப் பிடித்து இறக்கினார். கைக்குழந்தையைத் தான் வாங்கிக் கொண்டு ஒரு பெண் இறங்க உதவினார். அவர்களின் பொதிகளையும் தாமே தூக்கிக் கொண்டு அவர்களுடன் வந்தார். மெலிந்து, உயர்ந்த உருவம் தான். உதவியும் செய்கிறார். நிச்சயமாக என் நண்பர் குறிப்பிட்ட ஆள் அவர்தான். நேரே சென்றேன். அவரை அணுகி, நீங்கள். என்றேன். அவரும் உரிய பதில் தந்தார். மிக்க மகிழ்ச்சியடைந்தேன். ஒரு பொதியை நானும் வாங்கிக் கொண் டேன். எப்படிப் பிறருக்கு உதவலாம் என்பதையும் அன்று கற்றுக் கொண்டேன். நானும் படித்தவன் தான்; நூல்கள் பலகற்றவன். என்ன பயன்? அன்று வரை நானும் பிறருக்கு உதவிசெய்ய வேண்டும் என்ற எண்ணம் கூட எனக்கு ஏற்பட்டதில்லை.
'அவர் எப்பொழுதும் யாரேனும் ஒருவருக்கு உதவி செய்து கொண்டுதான் இருப்பார்’ என்று மனிதர்கள் ஒவ்வொரு வரையும் பற்றிப் பிறர் சொல்லக் கூடுமானால், இந்த உலகம்
எத்துணை இன்பமும் மகிழ்ச்சியும் நிறைந்ததாக இருக்கும்.

4. சிறார்களுக்கு வழிகாட்டும் வல்லமை
இன்று சிறுவர்கள் வழிதவறிச் செல்வதற்குச் சந்தர்ப் பங்கள், சூழ்நிலைகள் என்பன ஊக்குவிப்புகளாக விளங்கு கின்றன. அதேவேளை அதனைத் தடுத்து நிறுத்திச் சிறுவர்களுக்குச் சரியான பாதையைக் காண்பிப்பதற்குப் பெற்றோர்கள், பெரியோர்கள் பலருக்கு முடியாமலும் உள்ளது. பெற்றோர்களும் பெரியோர்களும் வழிகாட்டும் வல்லமையை இழந்துவிட்டார்களோ அல்லது வழிகாட்டல் பணியில் நின்றும் ஒதுங்கிக் கொண்டார்
களோ என்று எண்ணத் தோன்றுகின்றது.
பெற்றோர்களும் சமூகப் பெரியோர்களும் சிறுவர்
சிறுமிகளை விடப் பன்மடங்கு வாழ்க்கை அனுபவங்களையுடை யவர்கள் அத்தகைய அநுபவங்களைத் தம்முள்ளேயே அடக்கி வைத்துக் கொள்வதில் பயன் இல்லை. தாம் சம்பாதித்த சொத்துக்களைப் பிள்ளைகளுக்குப் பகிர்ந்தளிக்கும், பெற் றோர்கள், தாம் பெற்ற வாழ்க்கை அனுபவங்களையும் தம் பிள்ளைகளுடன் பகிர்ந்து கொள்ளவேண்டும், என்பதை உணர்ந்து கொள்ளுதல் அவசியம். நமது முன்னோர்கள் தமது அனுபவங் களை அடுத்த சந்ததியினருக்கு வழங்கி வந்தமையினால் தான் எமக்கென்று பண்பாடும் கலாசாரமும் கிடைத்திருக்கின்றன. அவர்களின் பங்களிப்பினாலும், அனுபவங்களை அவர்கள் பகிர்ந்தளிப்புச் செய்தமையினாலுமே மனித நாகரிகம் இற்றை வரை தொடர்ந்தும் வளர்ந்தும் வந்துள்ளது. எனவே, இந்தத் தலைமுறையினருக்கும் தமது வாழ்க்கை அனுபவங்களை அடுத்த தலைமுறையினருக்குக் கையளிக்க வேண்டிய கடமை உள்ளது. அதிலிருந்து அவர்கள் ஒதுங்கிக் கொள்ளமுடியாது.
பிள்ளைகளைப் பொறுத்த வரையில் பத்து வயதிலிருந்து பதினாறு வயது வரையிலுள்ள பருவம் மிகவும் முக்கியமானது. உடல் வளர்ச்சி, உடலியல் மாற்றங்கள், உள விருத்தி, சமூக விருத்தி என்பன விரைவாக ஏற்படுகின்ற பருவம். கல்விகற்கின்ற

Page 11
1.6 இ குமாரசாமி சோமசுந்தரம்
பள்ளிப் பருவமும் இதுவே. புதிய நண்பர்களுடன் பழகிப் பரிச்சயம் பெறுவதும் இக்காலத்திலேயேதான். வீட்டில் பெற்றோர்களுடன் முரண்படுவதும், சுதந்திரமான போக்கினை விரும்புவதும் இந்தப்பருவத்தில் தான். எனவே, பெற்றோர்கள் விழிப்புடனும் விவேகத்துடனும் இப்பருவப் பிள்ளைகளைக் கவனித்தும், கண்காணித்தும், ஆலோசனைகள் கூறியும் வர வேண்டியது மிகவும் இன்றியமையாதது. சில பெற்றோர்கள் தமது வேலைப்பழு காரணமாகவோ; பிள்ளைகள் வேறிடத்திலும் தாம் வேறிடத்திலும் பிரிந்து வாழ்வதன் காரணமாகவோ, தமது நல்ல வழிகாட்டல்களைத் தம் பிள்ளைகளுக்கு வழங்கத் தவறி விடுகின்றனர். அதனால் பாரிய விளைவுகளைப் பின்னர் எதிர்நோக்க வேண்டியவர்கள் ஆகின்றனர். போன புத்தி, யானை கட்டி இழுத்தாலும் திரும்பிவராது என்று கூறுவார்கள். பொறுத்த நேரத்தில் பிள்ளைகளுக்கு உதவி செய்வதை, சரியான வழியில் அவர்களை இட்டுச் செல்வதைத் தவறவிட்ட பெற்றோர்கள், பின்னர் பிள்ளைகள் நெறிதவறிய நடத்தைகளை மேற்கொள்ளும் போதும் ஊரார் அவர்களின் துர்நடத்தைகள் பற்றி இழிவாகப் பேசும்போதும் அவற்றைக் கண்டும் கேட்டும் தவிக்க நேரிடும்.
பெண்பிள்ளைகளுக்குத் தாயும், ஆண்பிள்ளைகளுக்குத் தந்தையும் வழிகாட்ட வேண்டியது அவர்கள் கடமை. பருவமாற்றங்களினால் ஏற்படுகின்ற உணர்ச்சிகள், உந்தல்கள் என்பன, இப்பருவப் பிள்ளைகளுக்குப் புதிய அனுபவங்கள். இத்தகைய புதிய அனுபவங்கள் காரணமாகப் பிள்ளைகள் திகில் அடையவும் கூடும்; அல்லது தவறான வழிகளில் செல்லவும் கூடும். இத்தகைய சந்தர்ப்பங்களில் இவர்களுக்கு ஆலோசனைகள் வழங்குபவர்கள் நம் நாட்டைப் பொறுத்தவரையில், இவர்களோடு ஒத்த வயதுடையவர்களாகவே பெரும்பாலும் காணப்படுகின்றனர். இது எதைப்போன்றதெனில் கட்புலன் அற்ற ஒருவனுக்குக் கட்புலன் அற்ற மற்றொருவன் வழிகாட்டுதல் போன்றதாகும். விஷயம் தெரிந்த, அனபவமுள்ள பெற்றோர்கள் சரியான ஆலோசனைகளைத் தம்பிள்ளைகளுக்கு வழங்குவதா னால் இத்தகைய நெருக்கடிகளைத் தவிர்க்க முடியும். பெண்

நல்வாழ்விற்குரிய நடைமுறைச் சிந்தனைகள் இ i.7
பிள்ளை தாயையோ, ஆண்பிள்ளை தந்தையையோ அணுகி விளக்கம் பெறுவதற்குக் கூச்சப்படுவார்கள். அன்றியும் பெரும்பாலான பெற்றோர்கள் தாமும் கூச்சமடைவார்கள். பெற்றோர்கள் தம் அனுபவங்கள் மூலம், பிள்ளைகளை வழிநடத்துவதற்குக் கூச்சப்படுவதில் அர்த்தமில்லை. 'சொல்லித் தெரிவதில்லை' என்ற கூற்றுப் பொருத்தமற்றது என்றே தோன்றுகிறது. பத்தாவது வயதிலிருந்து பதினாறு அல்லது பதினேழு வயதுவரை தங்கள் உடலை, உணர்வை, நடத்தையை, ஒழுக்கத்தை ஆண்பிள்ளையாயினும் சரி, பெண்பிள்ளையாயினும் சரி எப்படிக் கவனித்துக் கொள்ளவேண்டும் என்று அவர்களுக்குக் கற்றுத் தருவது மிக மிக முக்கியம். பெற்றோர்களே இதற்குப் பொறுப்பாக இருக்கவேண்டும். இந்த நேரத்தில் அலட்சியமாக உள்ள பெற்றோர்கள், பின்னர் பிள்ளைகளின் துர்நடத்தையைக் கண்டு கவலை கொள்வதைத் தவிர வேறுவழியில்லை.
பிள்ளைகள் பத்து வயது முதல் பதினாறு அல்லது பதினேழு வயதுப் பருவத்தில் எப்படி நடந்து கொள்கிறார்களோ என்பதைப் பொறுத்தே பிள்ளைகளின் பிற்கால வாழ்வு சீருள்ளதாகவோ சீரற்றதாகவோ அமையப் போகிறது, என்பதை உணர்ந்து, தம்பிள்ளைகளின் நல்வாழ்வில் அக்கறை கொண்ட பெற்றோர்கள் பிள்ளைகளைப் பேணி, நல்ல வழிகளைக் காட்டி
வளர்க்கவேண்டியது அவசியம் ஆகும்.
5. பிறர்கருத்துக்களுக்குச் செவிமடுப்போம்
நாம் சொல்வதைப் பிறர்கேட்க வேண்டும், அதுவும் கவனமாகக் கேட்கவேண்டும் என எண்ணும் நம்மில் பலர் பிறர் சொல்வதைக் கவனமாகவும் உன்னிப்பாகவும் கேட்க விரும்புவ தில்லை. காரணம், பொறுமைக்குறைவும், அவசரப் போக்கும் தான். பிறர் பேசி முடிக்கும் வரை பொறுத்திருந்து, கேட்டு, அவர்களுக்குரிய பதில்களை அளிக்க முடியாத நிலையில் இருப்போர் பலரை நாம் சந்திக்கிறோம். இதனால் பலருக்குப் பல கஷ்டங்களும் வசதியீனங்களும் ஏற்படுகின்றன.

Page 12
8 இ குமாரசாமி சோமசுந்தரம்
செவிமடுத்தல் என்பது ஓர் அருமையான கலை. அதைப் பலர் வளர்த்துக் கொள்வதில்லை. அதனால் புரிந்துணர்வு பாதிக்கப்படுகின்றது. புரிந்துணர்வு இருவரிடையேயோ, அல்லது இரண்டிற்கு மேற்பட்டோர் இடையேயோ நிகழ்வதற்குச் சரியான கருத்துப் பரிமாற்றம் அவசியம். ஒருவர் கருத்தை மற்றையவர் புரிந்து கொள்ளவேண்டும். அதற்குச் சிறந்த தொடர்பாடல் முக்கியம். ஒருவர் மட்டும் பேசுவது, மற்றையோர் கேட்பது மாத் திரம்தான் என்றால் அது தொடர்பாடல் அன்று. ஆணையிடுதல், அறிவுறுத்தல், போன்று அது ஆகிவிடும். அங்கே கருத்துப் பரிமாற்றம் நடைபெறாது.
நாம் அதிகமாகவும் தொடர்ந்தும் பேசிக்கொண்டே இருப்பதைக் குறைத்து, கேட்டுக் கொண்டிருப்போருக்கும் பேசச் சந்தர்ப்பம் வழங்க வேண்டும். ஒருவர் எந்நேரமும் பேசிக் கொண்டிருக்க, மற்றையவர் எந்நேரமும் கேட்டுக் கொண் டிருப்பது என்பது ஒரு நியாயமற்ற, ஆக்கிரமிப்பு நிறைந்த செயல். கேட்பவருக்கு அலுப்பு ஏற்பட, சலிப்புத்தட்ட எழுந்து போகமுடியாமலும் கேட்காமல் விடமுடியாமலும் ஒரு திரிசங்கு நிலை ஏற்படுகின்றது. அதனால், கேட்பவர் கேட்பது போல் பாசாங்கு செய்வதைத் தவிர அவருக்கு வேறு வழியில்லை. ஆனால் பேசுபவர்கள் இத்தகைய இக்கட்டான நிலைமையை உணர்கின்றார்களோ என்றால் அதுவுமில்லை.
பேசுவது மனித இயல்பு; அவ்வாறே கேட்பதும் மனித இயல்புதான். பேசவும் வேண்டும்; கேட்கவும் வேண்டும் என்ற நிலைப்பாட்டினைச் சமநிலையில் பேணுபவர்கள் நல்ல, சீரான மனித உறவுகளை வளர்த்துக் கொள்கின்றனர்.
குடும்பத்தில், உறுப்பினர்களுக்கிடையே உரையாடல் இடம் பெறுகிறது. அலுவலகங்கள், வேலைத்தலங்களில் உரை யாடல்கள் நடைபெறகின்றன. நண்பர்களிடையே உரையாடல் நடைபெறகின்றது. இங்கெல்லாம் சரியான முறையில், பங்கு கொள்வோர் யாவர்க்கும் பேசவும், கேட்கவும் சமசந்தர்ப்பங்கள் வழங்கப்படும் போதுதான் சுமுகமும், மகிழ்ச்சியும், திருப்தியும் காணப்படுகின்றன. அத்தகைய நிலையில், எந்தப் பிரச்சினையும் தீர்க்கப்பட்டு விடுகின்றன. உரையாடல் நல்ல உறவினை ஏற்

நல்வாழ்விற்குரிய நடைமுறைச் சிந்தனைகள் ே 19
படுத்த, அதனால் உறுதியான புரிந்துணர்வு உண்டாக, மனிதர் களிடையே பிரச்சினைகள் அற்றுப்போய்விடுகின்றன.
சரியான கருத்துப் பரிமாற்றம், உறுப்பினர்களிடையே இருக்கும் போதுதான் குடும்பங்களில் இன்பம் பொங்குகின்றது; அலுவலகங்கள், வேலைத்தலங்கள் என்பவற்றில் மகிழ்ச்சியும், திருப்தியும் கொழிக்கின்றன. இன்பமும் மகிழ்ச்சியும் எங்கு உண்டோ, அங்கு மனிதர்கள் நாடிச்செல்கின்றனர். மரம் பழுத்தால் வெளவாலை வாவென்று கூவி இரந்தழைக்க வேண்டிய அவசியம் இல்லை. அலுவலகங்களுக்கோ, வேலைத் தலங்களுக்கோ, ஆங்கு நல்ல மகிழ்ச்சி நிறைந்த சூழ்நிலை இருக்குமேயானால், பணியாளர்கள் நேரம் பிந்த மாட்டார்கள். அவர்கள் வரவில் ஒழுங்கிருக்கும். விருப்பமாகப் பணிபுரிவர். அப்போது ஸ்தாபனம் வளர்ச்சி பெறுகின்றது; உற்பத்தி வெளியீடுகள் பெருகுகின்றன.
மகிழ்ச்சியும் இன்பமும் குடும்பத்தில் நிலவும் போது, கணவன் மனைவி குழந்தைகளுக்கிடையில் சுமுகமான உறவு நிலவுகின்றது. கணவன் வேலை முடிந்ததும் சுணக்கமின்றி ஆவலோடு வீடு வந்து சேருவான். மனைவியும், கணவன் வருகையை விருப்பத்தோடு எதிர்பார்த்திருப்பாள். மனைவி தொழில் புரிபவள் ஆகில் வேலைமுடிந்ததும் வீடு திரும்பிவிடுவாள். பாடசாலைக்குச் சென்ற பிள்ளைகளும் வீடு நோக்கி விரைவர். இடையில் அங்கும் இங்குமாகத் திரிந்து வீண்பொழுது போக்க மாட்டார்கள். தற்காலத்தில் இது ஓர் அபூர்வ நிகழ்வு ஆகிவிட்டது. வீட்டில், புரிந்துணர்வு, அன்புணர்வு, பாசப்பிணைப்பு, கரிசனை, விசுவாசம், மகிழ்ச்சி என்பன இருக்கும்போது அவற்றை அனுபவிப்பதற்காக எல்லோரும் வீடு நோக்கி விரைந்து வந்து ஒன்று கூடுவர். அந்த ஒன்று கூடலில் ஏற்படுகின்ற ஆனந்தம் இவ்வளவு என்று சொல்லமுடியாது. இப்படி ஒவ்வொரு குடும்பமும் ஆனந்தத்தில் மிதந்தால், முழுச்சமூகமுமே நிறை வான ஆனந்தத்தின் உறைவிடம் ஆகிவிடும். இவ்வாறு மனிதர் களிடையே நல்லுறவினைப் பேணி வளர்க்கும் போது மனிதர்கள் நோய் நொடிகளின்றி, துன்பம் துயர்கள் நீங்க, இன்பப் பெரு வாழ்வினை வாழ முடியும்.

Page 13
6. வாழும் வழி எது? பிழைக்கும் வழி எது?
மக்கள் வாழ்க்கையை இரண்டு வழிகளில் தொடரு கிறார்கள். ஒன்று வாழும் வழி; மற்றையது பிழைக்கும் வழி. வாழும் வழி என்பது என்ன? பிழைக்கும் வழி என்று கூறுவது எதனை? என்னும் வினாக்கள் எழுகின்றன. தமிழ்மொழி மிகவும் பண்பட்ட மொழி. தமிழ்ச்சொற்கள் ஒவ்வொன்றும் ஆழமான கருத்தைக் கொண்டுள்ளன. எனவே வாழும் வழி, பிழைக்கும் வழி ஆகிய சொற்றொடர்கள் பொருள் நிறைந்தன.
வாழும் வழி என்பது, சான்றோர், உயர்ந்தோர், மேலோர் ஆகியோர் வாழ்க்கையை எப்படி வாழ்ந்து காட்டினரோ, அப்படி வாழ்தல்; வாழ்ந்து வாழ்க்கையில் உயர்தல். வாழ்க்கையின் உயர்ந்த குறிக்கோள்களை மனிதர்கள் அடைவதற்கு இட்டுச் செல்லும் சிறந்த வழியே வாழும் வழி. வாழுகின்ற நெறி முறைகளை அறிந்து, வாழ் வாங்கு வாழுதல்; இப்படித்தான் வாழவேண்டும் என்ற இலட்சிய உணர்வோடு வாழுதல்; தமக்கும் பிறர்க்கும் நன்மையே பயக்கும் விதத்தில் வாழுதல்; சுருங்கக் கூறின் மண்ணில் நல்ல வண்ணம் வாழுதல் என்பவற்றை உள்ளடக்கியதுதான் மனிதவாழ்வு என்று கொண்டால், அத்தகைய நிறைவான மனித வாழ்வினை வாழ்வதற்குச் சரியான முறை இந்த வாழும் வழியில் வாழ்க்கைப் படகினைச் செலுத்திச் செல்வ தேயாகும். வாழும் வழி அறிந்து, அந்த வழியில் செல்லும் போது இன்பங்களையும், இனியவைகளையும்; சாந்தி, அமைதி வெற்றி களையும் சந்திக்க நேரிடுமேதவிர, துன்பம், துயர், ஏக்கம், அங்க லாய்ப்பு, தோல்வி விரக்தி என்பவற்றைக் கிஞ்சித்தும் சந்திக்க முடி யாது. எனவே வாழும் வழி என்பது மனித உய்விற்கான வழி; மனித ஆக்கத்திற்கான நெறி; மனித உயர்வினை நோக்கிய பாதை ஆகும்.
அடுத்து, மனிதர்கள் பின்பற்றுகின்ற பிழைக்கும் வழி பற்றிச் சிறிது நோக்குவோம். பிழைக்கும் வழி என்று கூறும் போது பிழையான வழி என்பது அதனுள் தொக்கி நிற்பதை

நல்வாழ்விற்குரிய நடைமுறைச் சிந்தனைகள் 3 21
இதுவரையில் உணர்ந்திருப்பீர்கள் என்று நம்புகிறேன். பிழைக்கும் வழி என்பது எப்படியும் வாழலாம், எவ்வழியையும் பின்பற்ற லாம்; வழி பிழையாக இருந்தாலும் வாழ்ந்தால் போதும் என்ற நிலைப்பாட்டினைக் கொண்டதாகவே உள்ளது. வழி முக்கியம் அல்ல; அடைவுதான் முக்கியம் என்பதே பிழைக்கும் வழியின் பிரதான இலட்சியமாக இருக்கிறது. இந்த நிலையில் பேறுகள் சில கிட்டினாலும், அவை நிலைக்கக் கூடியனவாக அமைய முடியாது; நிம்மதியைத் தரக் கூடியனவாயும் இருக்கமாட்டா.
இரவு பகலாகப் பாடுபடுகிறோம்; உறங்காமல் உழைக் கின்றோம்; வருமானமும் வருகிறது தான், ஆனால் கையில் எதுவும் நிலைப்பதில்லையே; வாழ்வில் அமைதியைக் காண்பது அருந்த லாக உள்ளதே, நிம்மதியைக் காணமுடிவதில்லையே; இதுவும் ஒரு வாழ்க்கையா? என அங்கலாய்ப்பவர்கள் பலரைக் காண் கின்றோம். ஆம், உண்மையில் அவர்கள் பரிதாபத்திற்குரியவர்கள். என் செய்வது? அவர்கள், வாழ்க்கையில் பின்பற்றுகின்ற வழி பிழைக்கும் வழி. அதனால் அவர்களின் வாழ்க்கை பிழைத்து விட்டது.
பிறரை ஏய்த்துப் பிழைத்தல், ஏமாற்றிப்பிழைத்தல், வஞ்சித்துப் பிழைத்தல், உச்சிப்பிழைத்தல், அழவைத்துப் பிழைத் தல் என்பவற்றில் கையாளப்படுகின்ற வழிமுறைகள் பிழை யானவை, குற்றமுள்ளவை ஆகும். ஏய்ப்பது, ஏமாற்றுவது, வஞ் சிப்பது, உச்சுவது, அழவைப்பது என்பவை யாவுமே, மக்களின் வாழ்க்கையைப் பிழைப்பிப்பவை; அவை ஒருபோதும் மனிதர் களை உய்விப்பவையாக அமையமுடியாது.
வாழும் வழியானது மக்களை வாழ்விக்கும் வழி எனக் கொண்டால்; பிழைக்கும் வழி என்பது மாந்தரின் வாழ்க்கையைப் பிழைக்கச் செய்யும் வழி என்றே கொள்ளவேண்டும். வாழ்க்கையைப் பழுதாக்கும் வழியினைப் பராதீனப்படுத்தி விடுவதே விவேகமான செயல். பிழைக்கும் வழியைப் பின்பற்றுபவர்கள் தாங்கள் செல்லும் பாதையில் துன்பங்கள், துயர்கள்; அல்லல்கள், அங்கலாய்ப்புகள் என்பவற்றையே சந்திக்க நேரிடும். பாதை மாறியவர்கள், வழியைத்தவறவிட்டவர்கள், வாழ்க்கையில் அவதிப்படுவர்,

Page 14
22 3) குமாரசாமி சோமசுந்தரம்
அந்தரப்படுவர். நேர்வழியில் செல்பவர்கள், வாழும் நெறியறிந்து சரியான பாதையில் செல்பவர்கள் வாழ்க்கையில் அஞ்சுவதற்கு ஒன்றுமே இல்லை. எந்நாளும் இன்பமேயன்றித் துன்பம் ஒருநாளும் வாராது.
மனிதப்பிறவி அல்லல் நிறைந்தது; இந்த உலகம் பொல்லாதது என்று கூறுவது தவறு. இவ்வாறு கூறுபவர்கள் யாவர்? பிழைத்த வழி, பிழைக்கின்ற வழி, பிழைக்கும் வழியைத் தம் வாழ்க்கை வழியாகக் கொண்டவர்களே அவ்வாறு கூறு கின்றனர். நீதியின் அடிப்படையிலான மனிதர்களை வாழ்வித்த வழி, வாழச் செய்கின்ற வழி, வாழும் வழி அறிந்தவர்கள், அறிந்தபடி ஒழுகு பவர்கள் மனிதப் பிறவியையும், உலகினையும் நன்று என்றுதான் கூறுகின்றனர். மனித்தப்பிறவியும் வேண்டுவதே என்பது பெரியோர் வாக்கு. நாமும் வாழும் வகையறிந்து, வாழும் வழி தெளிந்து, வாழ்வாங்கு வாழ்ந்து பெறுதற்கரிய இந்த மனிதப் பிறவிக்கும், இந்த உலகிற்கும் பெருமை தேடித்தருவோமாக.
7. நிம்மதியை எங்கே தேடுவது
இன்று நமக்குத் தேவைப்படுவது நிம்மதி. வாழ்க்கை யில் நிம்மதி கிடைத்துவிட்டால், அதைவிடப்பெரிய செல்வம் வேறு இருக்கமுடியாது. எங்கும் அவதி, அவசரம், அந்தரம். எவரைச் சந்தித்தாலும், 'எனக்கு நேரமில்லை. ஆற, அமர இருந்து சற்று ஓய்வு எடுக்கலாமென்றாலும் அதுவும் முடிவதில்லை. எந்நேரமும் வேலை’ என்று கூறுகிறார்களேயன்றி, நின்று மகிழ்ச்சியாக உரையாடுபவர்களைக் காணமுடிவதில்லை. அப்படி ஒரு சிலர், உரையாடினால் தங்கள் கவலைகளையும், பிரச்சினை களையுமே சொல்லிச் சொல்லி மற்றவர்களின் நிம்மதியையும் கெடுத்து விடுகிறார்கள். மகிழ்ச்சியாக ஒரு வார்த்தை, 'நான் நல்லாயிருக்கிறேன். ஆண்டவன் புண்ணியத்தாலே சுகமாயிருக்கி றேன்’ என்று சொல்பவர்களைக் காண்பது மிக அரிதாக உள்ளது.
'என்னிடம் அது இல்லை, இது இல்லை; அடுத்த வீட்டுக்காரரிடம் அவையெல்லாம் உண்டு’ என்று அங்கலாய்ப்

நல்வாழ்விற்குரிய நடைமுறைச் சிந்தனைகள் இ 23
பவர்களிடம் நிம்மதி எப்படி இருக்கமுடியும். இல்லை, இல்லை என்று சொல்வதை இயன்றவரை தவிர்த்துக் கொள்வது நல்லது. 'போதுமென்ற மனமே பொன்செய்யும் மனம்' என்பார்கள். மன அடக்கம், மனத்திருப்தி ஏற்படும் போதே, மனநிம்மதி கிடைக்கின்றது.
ஒர் ஏழைக்குடியானவன் தனக்குக் கிடைக்கும் சிறிய அளவு பொருள், பண்டங்களைக் கொண்டு, அல்லை தொல்லை இல்லாமல் அமைதியாக வாழ்ந்து வந்தான். அவனுக்குத் தேவைகள் அதிகம் இருக்கவில்லை. தேவைகளையும் பெருக்கிக் கொள்ளவிரும்பவில்லை. ஒரு சிறிய அளவு பணத்தையும் சேமித்துவைத்திருந்தான். அவனது குடும்பமும் சிறியது. எனவே கவலையின்றி, ஒரளவு நிம்மதியுடன் காலத்தைக் கழித்தான். அவனுக்கு ஒரு மகன். படிப்பில் கெட்டிக்காரன். கிராமத்துப் பாடசாலையிலேயே தொடர்ந்து கற்றுக் கொண்டிருந்தான்.
ஒருநாள் அக்குடியானவன் காட்டு வழியே அடுத்த கிராமத்திற்கு, மாட்டு வண்டியில் தன் மனைவியுடனும், மகனுடனும் சென்று கொண்டிருந்தான். ஓர் ஆலமரத்துக்குப் பக்கமாக, வண்டி வந்து கொண்டிருந்தபோது, ஓர் ஓசை, குடியானவனின் காதில் கேட்டது. 'நீ நல்லவன், அதனால் மூன்று சாடி தங்க நாணயங்களை உனக்குத் தர விரும்புகிறேன். ஏற்றுக் கொள்வாயா' என்று ஒரு குரல் ஒலித்தது. அக்குடியானவன் நாற் புறமும் பார்த்தான். எவருமே அங்கு இல்லை. மூன்று சாடி தங்க நாணயங்களை வேண்டாமென்று சொல்ல யாருக்குத்தான் மனம் வரும். மீண்டும் மீண்டும், அதேகுரல், அதேவினாவை விடுத்தது. வண்டியை நிறுத்தினான். ‘ஏற்றுக்கொள்ளுகிறேன்' என்று பதில் கூறினான். அப்பொழுது'உன் வீட்டுக்குப் போ, அங்கு நீ மூன்று சாடிகளையும் காண்பாய்’ என்றது அக்குரல்.
வண்டியைத் திருப்பினான். விரைந்தான் வீட்டிற்கு. மனைவியும் மகனும் எதிர்பாராத இச்செயல் கண்டு திகைப் படைந்தனர். அவர்கள் கேட்ட வினாக்களுக்குப் பதில் கூறாமலே, வண்டியை வேகமாகச் செலுத்தினான். எப்படியும் மூன்று சாடிகளையும் பெற்றுவிடவேண்டுமென்ற ஒரே நோக்குடைய வனாகவே அவன் இருந்தான். 人

Page 15
24 3) குமாரசாமி சோமசுந்தரம்
ஓடோடிச் சென்று வீட்டுக்குள் நுழைந்தும் என்ன ஆச்சரியம். மூன்று சாடிகளும் அங்கே இருந்தன. ஒவ்வொன்றாகத் திறந்து பார்த்தான். இரண்டு சாடிகள் வாய் நிரம்ப தங்க நாணயங்கள் இருந்தன. மூன்றாவது சாடியில் வாய் நிரம்ப இல்லை; ஆனால் முக்கால்பங்கிற்கு சற்றுக் கூடுதலாகத் தங்க நாணயங்கள் இருந்தன.
தற்பொழுது இரண்டு கவலைகள் வந்துவிட்டன, இதுவரை கவலையில்லாதிருந்த அந்தக் குடியானவனுக்கு ஒன்று திருடர் பயம். மற்றையது மூன்றாவது சாடியையும் தங்க நாணயங்களால் நிரப்பிவிடவேண்டும் என்ற ஆசை. தன்சேமிப் பில் இருந்த பணத்தையெல்லாம் தங்க நாணயங்களாக மாற்றி னான். மனைவியின் தங்கநகைகளையும் அவ்வாறு செய்தான். பாடுபட்டு உழைத்தான். மனைவியையும் தொழிலுக்கு அனுப்பி னான். மகனையும் படிப்பை நிறுத்தி வயலில் வேலை செய் வித்தான். பட்டினிகிடந்தான். மூவரும் உழைக்கின்ற பணத்தில் செப்புக் காசுகூடச்செலவு செய்வதில்லை. வாயைக் கட்டி, வயிற்றைக் கட்டிச் சம்பாதித்தனர். தேடிய செல்வம் அனைத்தை யும் தங்க நாணயங்களாக மாற்றி மூன்றாவது சாடியில் போட்டுப் பார்த்தான். சாடியோ நிரம்பிய பாடில்லை. மகிழ்ச்சி குன்றியது; நிம்மதி குலைந்ததுதான் மிச்சம். ஆண்டுகள் பல கடந்தன. உழைத்து உழைத்து ஓடாய்ப்போனான். முதுமையும் வந்தது. சாடி நிரம்பவில்லை. ஊரில் உள்ள ஒரு பெரியவரிடம் சென்று தன் நிலையை எடுத்துக் கூறினான். அவர் சொன்னார், ' இது ஒரு தேவதையின் வேலை. அதுதரும் தங்கத்தை நம்மால் செலவு செய்யமுடியாது; சேர்த்து வைக்கத்தான் முடியும். எம்மிடம் பேராசையைத் தோற்றுவித்து, நிம்மதியைக் குலைப்பதற்காகவே தேவதை இவ்வாறு செய்கிறது. மூன்று சாடிகளையும் திருப்பிக் கொடுத்துவிடு. நிம்மதியைப் பெறுவாய்' என்று கூறினார். அக்குடியானவனும் அப்பெரியார் சொல் கேட்டு மூன்று சாடி களையும் தேவதையிடம் திருப்பிக் கொடுத்துவிட்டான். இழந்த நிம்மதியை மீளவும் பெற்றுவிட்டான். வாழ்க்கையில் நிம்மதியை வெளியிலிருந்து பெறமுடியாது. மனதைப் பொறுத்தது அது. மனஅடக்கமே நிம்மதியைத் தரவல்லது.

8. நேர்மையான உழைப்பினால் அடைவதே இன்பசுகம்
சகலரும் இவ்வுலகில் இன்பத்தையே நாடுகின்றனர். இன்பத்தை அடைந்து அனுபவிப்பதே ஒவ்வொருவரின் வாழ்க்கைக் குறிக்கோள் ஆகவும் உள்ளது. இன்பத்தை அடை வதற்கு மனிதர்கள் படாத பாடு படுகின்றனர். மனித உழைப்பே இந்த இன்பத்தைப் பெற்றுக்கொள்வதற்காகத்தான். இன்பத்தில் நாட்டமில்லாதவன் சோம்பேறி ஆகிவிடுகின்றான். அவன் இயக்கமற்றவன் ஆகி வெறும் ஜடம் போல் வாழாவிருப்பான். எனவே, அத்தகைய இயக்கமற்ற மனிதன் இருந்தும் இல்லாதவனே. அத்தகையோரை விட்டு விட்டுப் பார்த்தால், வாழும் மனிதர்கள் இன்பத்தைத் தேடி, நாடி, அடைந்து அனுபவிக்க முயற்சிக்கிறார்கள் என்பது தெளிவாகின்றது. இத்தகைய முயற்சிகளின் போது மனிதர்கள், பல்வேறு தடைகள், இடர்கள், இன்னல்கள் ஆகியவற்றைச் சந்திக்க நேரிடுகிறது. ஆனால் அவை எத்துணை பாரம் மிக்கவையானாலும், கிடைக்கப் போகும் இன்பத்தை எண்ணிப் பார்க்கும்போது அவை வெறுந் தூசுகளாகவே தோன்றுகின்றன. இந்த வகையில்தான் மனிதரின் உழைக்கும் ஆற்றல் பெருகுகின்றது; உழைப்பின்போது ஏற்படும் துன்பச்சுமையைத் தாங்கும் சக்தியும் வளர்ச்சிபெறுகின்றது.
பாடு பட்டவன் பட்டத்திற்கு இருப்பான் என்பர். பாடுபட்டு, கஷ்டங்களை எதிர்கொண்டு, உழைப்பினால் அதுவும் நேர்மையான உழைப்பினால் வெற்றிகொண்டு இன்பத்தையும் பயனாக அடையும் போதுதான், அந்த இன்பம், இனிதாகவும், நீடித்ததாகவும் விளங்கும். இது நேர்வழியால், அறவழியால், நீதி காட்டும் பாதையால் சென்று, உழைப்பினால் ஊதியமாகப் பெற்ற
A
இன்பம். இந்த இன்பம் சந்ததி சந்ததியாகத் தொடரும் வாய்ப்பு
உண்டு. வருகின்ற சந்ததியினர், வழிவழிவந்த இன்பத்தை

Page 16
26 ஐ குமாரசாமி சோமசுந்தரம்
மறவழியில், அதர்மமாக துஷ்பிரயோகம் செய்யாது தாமும் அறவழியில், நீதிமார்க்கத்தில், நேர்மைத் திறனோடு தாம் பெற்ற இன்பத்தை அனுபவிக்கும் போதுதான் அது நிலைக்க்வும், நீடிக்கவும், மேலும் தொடரவும் அதற்கு வாய்ப்புக் கிடைக் கின்றது. அவ்வாறு செய்யாது விடின், அந்த இன்பம் அத்தோடு அஸ்தமித்துவிடும். அரசனும் ஆண்டியாகிவிடுவது; செல்வந் தனும் பரம ஏழை யாகிவிடுவது; செல்வாக்கு உள்ளவனும் செல்லாக்காசு ஆகிவிடுவது; உலகத்து இயற்கை என்று கூறிப் பலர் தப்பித்தக் கொள்ளமுயல்கின்றனர். ஆனால் கூர்ந்து நோக்கினால் அவை யெல்லாம் உலக இயற்கை அன்று. அவை செயற்கை; மனிதரால் இவ்வுலகில் செய்யப்படுபவை. மனிதரின் செய் வினைகள், மனிதரின் செய்காரியப் பிழைகள் என்பவற்றால் அவைசம்பவிக்கின்றன.
மனிதரின் தாழ்வுக்கு மனிதரே காரணம். அவர்களின் செய்காரியப் பிழைகள், பிறழ்வான நடத்தைகள் பொருந்தா நாட்டங்கள், அநீதியான தேட்டங்கள் மனித சமூகச் சீர்கேட்டுக்கும் சீரழிவுக்கும் ஏதுக்கள் ஆகின்றன. மனிதன் தன் தவறான செயல்களினால், தனக்குத் தானே தாழ் வினை ஏற்படுத்திக் கொண்டு, உலகத்து இயற்கை என்று காரணம் கற்பிப்பது உடன்பாடு ஆனது அன்று. இயற்கை எது, செயற்கை எது என்பதை அறிந்து கொண்டால், பிரச்சினை மறைந்துவிடும்.
மனிதர்கள் இன்பத்தைத் தேடுகின்ற வழிமுறைகள்,
விரும்புகின்ற இன்பங்கள் என்பவற்றில் நிறைய வேறுபாடுகள் உள்ளன. சிலர் குறுக்கு வழியில் சென்று, குறுகிய காலத்தினுள் இன்பத்தை அடைய விழைகின்றனர். அதனை அனுபவிக்கும் காலமும் மிகக் குறுகியதாகவே உள்ளது. இத்தகைய குறுக்கமும் கோணலும் ஆன இன்பம், முடிவில் முடிவில்லாத் துன்பத்தில் மாட்டிவிடும் என்பதை நம்மில் எத்தனைபேர் உணர்ந்து உள்ளோம். இதனைப் பாரதியார் உணர்ந்திருந்தபடியினால்
'இன்பம், இன்பம், இன்பம்
இன்பத்திற்கோர் எல்லைகாணில்
துன்பம் துன்பம் துன்பம்"

நல்வாழ்விற்குரிய நடைமுறைச் சிந்தனைகள் இ 27
என்ற பாடல் வரிகளை எழுதி வைத்தார். வேதாந்த நிலையில் நின்று இவ்வாறு பாடவில்லை. சமுதாயத்தில் மிகக் கீழ்த்தரமான, கேடுகெட்ட, இன்பங்களை நாடி ஒடுகின்றவரை நேரில் பார்த்தே அவர்களுக்கு, இவ்வாறு அறிவுரை கூறுகின்றார் பாரதியார். இன்பத்தின் எல்லையும் இன்பமாகவே அமைய வேண்டும். அது நல்லது. இன்பத்தின் முடிவு துன்பமாகவே அமையுமாயின் அந்த இன்பம் நமக்கு வேண்டாம். அதை விலக்கிக்கொள்வதே விவேகமான செயல். அந்த வகையில் மது, புகைத்தல், போதைப்பொருட்களைப் பாவித்தல், காமம், தன்னினச் சேர்க்கை, விபசாரம் ஆகியவற்றின் மூலம் கிடைக்கின்ற அற்பசுகமும், சொற்ப நேர இன்பமும் முடிவில் முடிவேயில்லாத துன்பமும் நமக்குத் தேவைதானா என்பதை நாம் ஒவ்வொருவரும் ஆராய்ந்து மனஉறுதியுடன் துன்பம் தரும் இன்பங்களை விலக்கி, இன்பமே தருகின்ற இன்பங்களை அடைந்து நலமுடன் வாழ்வோமாக.
9. பிள்ளைவளர்ப்பின் பின்னணியில் சில
உண்மைகள்
எம் மனதில் தோன்றுகின்ற எண்ணம் எமது உடலை மட்டுமன்றி, எமது சுற்றாடலில் வாழுகின்ற, வளருகின்ற பிறவற்றையும் ஆட்சி செய்கின்றது.
ஒரு தாயானவள் தன் குழந்தைக்குப் பாலூட்டும் போதும், உணவூட்டும் போதும், அவளது முழுமையான எண்ணங்களுக்கு அக்குழந்தையின் வளர்ச்சி பற்றியதாகவே இருக்கின்றன. குழந்தை அருந்திய பாலும், உணவும் விரைவில் சமிபாடு ஆகவேண்டும் என்று எண்ணுகிறாள்; அவை இரத்தமாக மாறிக் குழந்தையின் உடலைத் தளதள தங்கம் போல அழகாக வளர்ச்சிபெறச் செய்யவேண்டும் என நினைக்கிறாள். உண்ட உணவினால் நோய் நொடி நேர்ந்துவிடக்கூடாது என எண்ணு கிறாள். குழந்தை முரண்டுபிடித்தாலும் தாயானவள் கோபிக்க

Page 17
28 இ குமாரசாமி சோமசுந்தரம்
மாட்டாள். உணவை உண்ணும்படி குழந்தையைக் கெஞ்சுவாள்; கொஞ்சுவாள்; நல்ல பாடல்களை இசைப்பாள். கிளியையும், காக்கையையும், மைனாவையும், நிலாவையும் உதவிக்கு அழைப்பாள். அந்த நேரத்தில் தாயின் எண்ணம் முழுவதுமே குழந்தை உணவு உண்ண வேண்டும், நன்றாக வளரவேண்டும், பெரியவனாக வேண்டும், செளக்கியமாகத் திகழ வேண்டும் என்பதுதான். வேறு எண்ணங்கள் எதுவுமே தாயின் மனதில் உதிப்பதில்லை.
குழந்தைக்குக் குளிக்க வார்க்கும் போதும் அன்னை யானவள் என்ன சொல்லி நீரை ஊற்றுகின்றாள். 'வளர், வளர், நல்லாய் வளர்' என்னும் வார்த்தைகளைச் சொல்லிக்கொண்டு தான் குழந்தையின் உடம்பில் தண்ணிரை வார்க்கின்றாள் தாய். குளிக்க வார்த்துமுடிக்கும் போது, 'சுகம், சுகம், நல்லசுகம், ’’ 'சுபம், சுபம், நல்லசுபம்’ என்று கூறிக்கொள்கிறாள். குளித்து முடித்ததும், குழந்தையை உச்சிமோந்து, ஈரம்துவட்டி, உடையணி விக்கும்போதும், குழந்தைக்கு நல் வாழ்த்துக் கூறியபடியே தாயானவள் அவற்றையெல்லாம் செய்து முடிக்கிறாள். குழந்தை நன்றாக வளர்ச்சி பெற வேண்டும் என்ற எண்ணமே தாயின் மனதில் மேலோங்கிநிற்கின்றது. அந்த நல்லெண்ணத்தின் வெளிப் பாடே தாயின் மங்களகரமான வார்த்தைகள். எண்ணங்கள் வீண்
போவதில்லை. குழந்தையும் கொலு கொலு என்று வளர்கின்றது.
குழந்தையைத் தொட்டிலிலிட்டு நித்திரையாக்கும் போதும் 'கண் வளராய், கண் வளராய்' என்று சொல்லிச் சொல்லி, தாயானவள் தாலாட்டுப்பாடி, ஒராட்டி, நித்திரை யாக்குகிறாள். அங்கும் தாயின் எண்ணம் முழுவதும் தன் குழந்தை வளரவேண்டும் என்பதற்காகவே உள்ளது.
குழந்தை தும்மல் செய்கிறது. உடனே தாயோ அல்லது அருகில் இருப்பவர்களோ, 'ஆயுசு நூறு, ஆயுசு நூறு; நூறு, நூறு' என்று உரக்கக் கூறித்தும்மல் நிற்கும் வரை வாழ்த்துவார்கள். இவ்வாறு பல கட்டங்களில், தாயின் எண்ணங்களுக்கும், குழந்தையின் வளர்ச்சிக்குமிடையே தொடர்பு காணப்பட்டு வந்த நிலை நம்முன்னோர்களிடையே இருந்து வந்தது. நவீன மருத்துவ

நல்வாழ்விற்குரிய நடைமுறைச் சிந்தனைகள் 29
வசதிகள் இல்லாத அன்றைய காலங்களில் தாயின் நல்ல எண்ணங்களே குழந்தையின் ஆரோக்கிய உடல் வளர்ச்சிக்கும், உள்ள வளர்ச்சிக்கும், ஏன் ஆளுமை வளர்ச்சிக்கும் பேருதவியாக விளங்கின. பயன், ஆரோக்கியமான சமூகம் அமைந்தமை. இன்று, பெரும்பாலான குடும்பங்களில், குழந்தை வளர்ப்பு, ஆயாக்களிடமும், வேலைக்காரர்களிடமுமே ஒப்படைக்கப்பட் டுள்ளது. அவர்களுக்குக் குழந்தைகள் ஆரோக்கியமாக வளர வேண்டும் என்ற நினைப்பே இருப்பதில்லை. அவ்வாறிருக்க, குழந்தை பற்றிய நல்லெண்ணம் எவ்வாறு உருவாகும்? அது எவ்வாறு குழந்தையின் வளர்ச்சிக்கு உதவும்? மாறாக, அவர்கள் தங்கள் சோலிகளைப் பற்றியே எண்ணுவர். எனவேதான், வளர்ந்து வரும் குழந்தைகளும் நடத்தைப் பிறழ்வு உள்ளவர்களாகவும்: சோலி தொந்தரவு தருபவர்களாகவும்; கட்டுக்கடங்காதவர்களாக வும் ஆகிவிடுகின்றனர்.
பயிர் வளர்ச்சி பற்றிய ஒரு பரிசோதனையை விஞ் ஞானிகள் சிலர் நடத்தினர். ஒரு தோட்டத்தில், பயிர்களை நாட்டும்போதே, அப்பயிர்கள் நன்றாக வளர்ந்து நல்ல பயன் தரவேண்டும் என்று எண்ணி நாட்டினார்கள். அத்தோட்டத்தை பராமரிக்கும்போது, பயிர்களை அன்போடு அணைத்து, வளருங்கள், நன்றாக வளருங்கள் என்று சொல்லிச் சொல்லியே பசளை இட்டனர்; நீரூற்றினர். இன்னொரு தோட்டத்தில் பயிர்கள் நாட்டப்பெற்று வேறொரு குழுவினரிடம் அவற்றை வளர்க்கும் பொறுப்பு ஒப்படைக்கப்பட்டது. அவர்களோ வேண்டா வெறுப்புடன், பயிர்கள் ஏன்தான் வளருகின்றனவோ என்று பேசிப்பேசி, திட்டித்திட்டி நீர் ஊற்றிவந்தனர். நாளடைவில், அன்போடு, வளருங்கள் என்று எண்ணியும் சொல்லியும் வளர்த்த பயிர்கள் செழித்து வளர்ந்து பெரும் பயன் நல்கின. திட்டிப்பேசி, வெறுப்புடன் வளர்த்த பயிர்கள் செழிப்பாக வளரவுமில்லை; நல்ல பயனைத் தரவுமில்லை. பயிர் செடிகள் அவ்வாறு என்றால், மனிதக் குழந்தைகள் எவ்வாறு இருப்பர் என்பதை உய்த்து உணர்ந்துகொள்ளலாம். எனவே குழந்தை வளர்ப்பில் பெற்ற தாயும், தந்தையும் நல்லெண்ணத்தோடு பங்குகொள்ள வேண்டும். ஆரோக்கியமான சமுதாயத்தைக்கட்டியெழுப்ப இதுவே வழியாகும்.

Page 18
10. நாம் இழக்கக் கூடாதது எது?
இந்த உலகத்தில் இழக்கக் கூடாதது எது? என ஒரு பெரியார் கேட்க, அங்கு கூடியிருந்த சிறுவர்கள் தத்தமது அறிவுக்கு எட்டிய அளவிற்கு, ஒவ்வொரு விடை அளித்தனர். ஒரு சிறுவன், இந்த உலகத்தில் இழக்கக் கூடாதது பணம் என்றான்; மற்றொரு சிறுவன் வீரம் என்றான்; இன்னொரு சிறுவன் கல்வி என்றான்; பிறிதொரு சிறுவன், தாய்தந்தை என்றான். இவ்வாறே அங்கிருந்த சிறுவர்கள் மேலும் பலவற்றைப் கூறினர். அவ் விடைகளையெல்லாம் கேட்ட அப்பெரியார் சிரித்துக் கொண்டே, 'ஆமாம், நீங்கள் கூறிய விடைகள் எல்லாம் கிட்டத்தட்டப் பொருத்தமானவைதான். ஆயினும் நான் எதிர்ப்பார்த்த விடையை நீங்கள் எவரும் கூறிவில்லை. அந்த விடையை இப்பொழுது கூறப் போகிறேன். கவனமாகக் கேளுங்கள்’’ என்றார். அந்த விடையைக் கேட்க வேண்டுமென்ற ஆவல் கொண்ட சிறுவர்கள், ‘எங்கள் பொறுமையைச் சோதிக்காதீர்கள் ஐயா. நாம் பொறுமையை இழக்குமுன், அந்த விடையை சொல்லி விடுங்கள் ஐயா’’ என்றனர்.
'இதோ நான் எதிர்பார்த்த சரியான விடையை இப்பொழுது நீங்களே கூறிவிட்டீர்கள். என் வேலை சுலபமாகி விட்டது. ’’ என்றார் அப்பெரியவர், அவரின் முகத்தில் மலர்ச்சி தென்பட்டது.
சிறுவர்கள் திகைத்தனர். 'என்ன, சரியான விடையைச் சொல்லிவிட்டோமா? எப்போ சொன்னோம். தயவு செய்து மேலும் எங்கள் ஆவலைத் தூண்டாமல் விடையைக் கூறி விடுங்கள். பொறுமைக்கும் ஓர் எல்லை உண்டு அல்லவா??? என்றனர் சிறுவர்கள். அவர்களின் அங்கலாய்ப்பு அதிகமாயிற்று.
'சரி, நீங்கள் பொறுமையை இழக்காதீர்கள். விடையைச் சொல்லிவிடுகிறேன். உலகத்தில் நாம் எப்போதாயினும் இழக்க முடியாதது, இழக்கத் தகாதது, இழக்கக்கூடாதது பொறுமை,

நல்வாழ்விற்குரிய நடைமுறைச் சிந்தனைகள் 3 31.
பொறுமை, பொறுமை. இனிமேலும் பொறுமையை இழப்பீர் களா?' என்று கேட்டுவிட்டு சிறுவர்களின் திருமுகங்களை ஒரு முறை கூர்ந்து பார்த்தார் அந்தப் பெரியார்.
சிறுவர்கள் ஏகோபித்த குரலில், 'நிச்சயம் பொறுமை யைப் பேணுவோம். எச்சந்தர்ப்பத்திலும், பொறுமையை இழக்கமாட்டோம். ' என்றனர். அவர்களின் முகங்கள் அன்றலர்ந்த செந்தாமரை மலர் போல் குளிர்ச்சியும் மலர்ச்சியும் பெற்றுக்
காணப்பட்டன.
'சரி, இனி நீங்கள் பொறுமை பற்றி உங்களுக்குத் தெரிந்தவற்றைக் கூறுங்கள் கேட்போம். ' என்றார் பெரியவர். அங்கிருந்த சிறுவர்கள் ஒவ்வொருவராகப் பொறுமை பற்றிக் கூறத்தொடங்கினர்.
'பொறுத்தார் பூமியாள்வர்; பொங்கினார் காடுறைவர் என்றொரு பழமொழி உள்ளது?’ என்றான் ஒரு சிறுவன். 'பொறுமை அத்துணை பெருமை வாய்ந்தது. இப்பூமியை அரசாட்சி செய்யும் அளவிற்கு, பொறுமை சாலியை உயர்த்த வல்லது. ஆனால் பொறுமையை இழந்துவிட்டால் அதனால் ஏற்படிக்கூடிய தீங்குகள் மிகக் கொடியன. பால் பொங்குவதைப் பார்த்திருப்பீர்கள். பொங்கினபால் சரிவதையும் அவதானித்திருப் பீர்கள். பொங்கினால் நிச்சயம் கீழ்நோக்கி வரவேண்டியிருக்கும் என்பதை இது உணர்த்துகின்றது,' என அப்பெரியார் விளக்கம்
சொன்னார்.
'வில்லுக்கு விஜயன், மல்லுக்கு வீமன், சொல்லுக்கு அரிச்சந்திரன் போல, பொறுமைக்குத் தருமன் என்பர்’ என்றான் இன்னொரு சிறுவன்.
"ஆமாம் தர்மமகாராசாவுக்கு எத்தனையோ சோதனைகள் எதிர்ப்பட்டன. நகரிழந்து, நாடிழந்து, கட்டின மனையாளையும் இழந்து, ஈற்றில் திரெளபதி மான பங்கப்படுத்தப்பட்ட நிலையிலும், மனந்த டு மாறாது தன்நிலை தளம் பாது இருந்தவர் தருமர். அத்தகைய பொறுமை சாலி தருமர். ஆகவேதான் மகாபாரத யுத்தத்தில் தருமர் வெற்றிவாகை சூடினார்,' என்றார் பெரியவர்.

Page 19
32 இ குமாரசாமி சோமசுந்தரம்
"பொறுமையென்னும் நகையணிந்து, பெருமை கொள்ளவேண்டும் பெண்கள்’
என்றொரு பாடல் இருக்கிறது. ’’ என்றாள் அங்கிருந்த சிறுமி ஒருத்தி. 'பொறுமை என்னும் மிகச்சிறந்த, விலைமதிப் பற்ற அணிகலனை அணிந்து கொண்டால், வேறு நகைதேவை யில்லை. அழகு தருவதற்கு அது ஒன்றே போதும். பொறுமை யென்ற நகையை பெண்கள் மாத்திரம் அணிந்து பெருமை பெற்றால் போதாது. அதை ஆண்களும் அணிந்து அழகு பெற வேண்டும்’ என்றார் பெரியவர்.
'அகழ்வாரைத் தாங்கும் நிலம் போலத் தம்மை இகழ்வார்ப் பொறுத்தல் தலை” என்ற திருக்குறள் அடிகளை ஒரு சிறுவன் சொன்னான். 'ஆம் மிக அருமையான குறள், எங்களைத் தாங்குகின்ற இந்தப் பூமியை வெட்டுகிறோம், கொத்துகிறோம், கிண்டு கிறோம், தோண்டுகிறோம். வேண்டாத அசுத்தங்களையெல்லாம் நிலத்தினுள் போட்டுப் புதைக்கிறோம். பூமிக்கு எவ்வளவு தொல்லைகளைச் செய்தாலும், அந்தப்பூமித்தாய் அத்தனையை யும் தாங்கிக் கொண்டு, பொறுமையோடு, எம்மையும் தாங்கிக் கொள்கிறது. இன்னா செய்தவர்க்கு நன்மையே செய்கிறது. பூமிக்குப் பெருமை அதன் பொறுமை. பூமி போன்று, நாமும் பொறுமையைக் கடைப்பிடிக்கவேண்டும் என்பது இக்குறளின் தாற்பரியம்’ என்றார் பெரியவர்.
'பெரிது பெரிது, பொறுமை பெரிது அதனினும் பெரிது இளமையில் பொறுமை’
என்றான் இன்னொரு சிறுவன்.
'இது என்ன புதுப்பாடல், ஆனாலும் நல்ல கருத்து. இளமையில், துடியாட்டம் உள்ள பருவத்தில், பொறுமையைக் கடைப்பிடிப்பது மிக அற்புதமான சாதனைதான்' என்று கூறி முடித்தார் பெரியவர்.
எல்லோரும் பொறுமையைப் பேணினால், எம் வாழ்வு மிகச்சிறப்பாக அமையும் என்பது உறுதி. -

11. போற்றுதற்குரிய செயற்கரிய செயல்
ஓர் ஊரிலே ஒரு செல்வந்தர் வாழ்ந்துவந்தார். அவர் நல்ல வர்; புழனிதப் பண்புகள் நிறைந்தவர்; செல்வச்செருக்கு அற்றவர். தான் தேடிய செல்வங்களில் பெரும் பகுதியை நல்ல காரியங்களுக்குச் செலவு செய்தவர். அவர் அடிக்கடி இப்படிக் கூறுவார், "நான் இத்துணை செல்வங்களுக்கும், உடமைகளுக்கும் தர்மகர்த்தாவாக இருக்கிறேனே தவிர, அவற்றின் சொந்தக்காரனாக இருக்கவில்லை. செல்வங்கள் அனைத்தும் எல்லோருக்கும் சொந்தமானவை. தர்மகர்த்தா என்ற வகையில், நீதிநெறி நின்று சொத்துக்களை நிர்வகித்து வருகிறேன். தேவைகளை அறிந்து எல்லோருக்கும் பங்கீடு செய்கிறேன். 'அச்செல்வந்தர் எத்துணை பேரறிவு பெற்றவர் என்பதை இதிலிருந்து அறியக்கூடியதாக உள்ளதல்லவா? 'ஈதல் அறம்' என்பதை உணர்ந்தவர் மட்டு
மல்ல, உணர்ந்தபடி வாழ்ந்தும் காட்டியவர் அப்பெரியார்.
அச்செல்வந்தருக்கு மூன்று பிள்ளைகள் இருந்தனர். நல்ல கல்வியைப் பெற்றமையினாலும், சிறந்த பண்புள்ள குடும்பச் சூழலில் வாழ்ந்து வந்தமையினாலும், அம்மூன்று பிள்ளைகளும் மனிதப் பண்புகள் நிறைந்தவர்களாகவே விளங்கினர். தந்தை அறிவைக் கொடுத்தார்; தாய் அன்பைச் சொரிந்தார். பிள்ளைகளின் நற்குண, நற்செய்கைகளைக் கண்ணுற்ற பெற்றோர் அவர்களை ஈன்ற பொழுதில் அடைந்த மகிழ்ச்சியிலும், பன்மடங்கு பேரு வகை கொண்டனர். அப்பிள்ளைகளின் நல்லியல்புகளை அவதானித்த உறவினர்களும், ஊர்மக்களும், 'பிள்ளைகள் என்றால் இவர்களைப் போலல்லவோ இருக்க வேண்டும். இவர்களைப் பிள்ளைகளாக அடைவதற்கு, இவர்களின் தாய் தந்தையர், என்ன தவஞ் செய்தனரோ?' என்று கூறி அவர்களைப் போற்றினர்.
ஒருநாள், அவர்களின் தந்தையார், தமது பிள்ளைகளின் நற்பண்புகள், நற்குண இயல்புகளை மதிப்பீடு செய்வதற்கு ஒரு

Page 20
34 ஓ குமாரசாமி சோமசுந்தரம்
சோதனையை நடத்த எண்ணினார். அதில் மிகச் சிறந்த நற்குணம், நல்லியல்பு கொண்ட மகனுக்குத் தன்வசமுள்ள விலையுயர்ந்த இரத்தினம் ஒன்றைப் பரிசாக வழங்கவும் தீர்மானித்தார். பிள்ளைகள் மூவரையும் அழைத்துத தன் திட்டத்தைக் கூறி, 'உங்களில் யார் இந்த வருடத்தில் மிக மேம்பாடானதும், மனிதாபிமானம் நிறைந்ததுமான செயலைச் செய்திருக்கிறாரோ, அவருக்கு விலையுயர்ந்த இரத்தினம் ஒன்றைப் பரிசாகத் தருவேன்’ என்றார். பிள்ளைகள் ஒவ்வொருவராகத் தாம் செய்த மேன்மையான செயல்பற்றி விளக்கம் தரத் தொடங்கினர்.
மூத்த மகன் தந்தையை விழித்து, 'அப்பா, சில தினங் களுக்கு முன்னர் ஒரு வைர வியாபாரி பல லட்சக்கணக்கான ரூபாய் களையும், வைரக் கற்களையும் ஒரு பெட்டியினுட் போட்டுப் பூட்டி, அப்பெட்டியைக் கொண்டு சென்று தான் குறிக்கும் ஒருவரிடம் கொடுக்கும்படி என்னிடம் கொடுத்தான். பெட்டியின் சாவியையும் தந்தான். அவன் அவற்றைத் தரும் போது, எண்ணிக் கணக்கிடவில்லை. நான் நினைத்தால் அவற்றுள் சிலவற்றையெடுத்து விற்றுப் பெரும் பணக்காரன் ஆகியிருக்க லாம். நம்பிக்கைத் துரோகம் செய்ய விரும்பாத நான், அப் பெட்டியைப் பொறுப்புடன், பாதுகாப்பாக கொண்டு சென்று குறித்த ஆளிடம் கொடுத்துவிட்டேன். இச்செயல் நான் செய்த உயர்வான செய்கையல்லவா? என்று கூறிமுடித்தான். அதுகேட்ட தந்தை மூத்த மகனின் நேர்மையையும், பொறுப்புணர்வையும் பாராட்டினார்.
இரண்டாம் மகன் தன் மேன்மைச் செயலைப் பின்வருமாறு கூறினான். நான் ஒரு பஸ் வண்டியில் பிரயாணம் செய்து கொண்டிருந்தேன். சனங்களோ எக்கச்சக்கம். பலர்நின்று கொண்டே பயணம் செய்தனர். சிறிது நேரத்தில் ஒரு தாய், தனது கைக்குழந்தையுடன் பஸ்சுக்குள் ஏறினாள். பிடிக்கவும் முடி யாமல், நிற்கவும் முடியாமல் தவித்தாள். எவருமே தனது ஆசனத்தைக் கொடுக்க முன்வரவில்லை. கண்டும் காணாதவர் போல் நடித்தனர். உடனே நான், எனது இருக்கையிலிருந்து எழுந்து, அத்தாய்க்கும் குழந்தைக்கும் எனது ஆசனத்தைக்

நல்வாழ்விற்குரிய நடைமுறைச் சிந்தனைகள் . 8 35
கொடுத்து உதவினேன். மிகுதி ஐம்பது மைல் தூரத்தையும், நின்றே பயணம் செய்து முடித்தேன்,' என்றான். அதற்குத் தந்தை, ‘'நீ உன் கடமையைச் செய்தாய். உன் இரக்க குணத்திற்காக உன்னைப் பாராட்டுகிறேன். நல்ல பண்புகள் மேலும் வளரட்டும்" என்றார்.
மூன்றாவது மகன் தந்தையை நோக்கி, 'அப்பா, வியாபாரத்தை நான் நீதி வழியில் நின்று நடத்துவதாலும், பொருட்களை பதுக்காமல், கலப்படம் செய்யாமல் நியாய விலைக்கு விற்பதாலும் என்னிடம் பொருட்களை வாங்க வருவோர் தொகை அதிகரித்தது. இது சிலருக்குப்பிடிக்கவில்லை. அவர்களின் போக்கோடு நான் ஒத்துப் போவதாக இல்லை. அதனால் எனக்குத் தீங்கு விளைவிக்கத் திட்டமிட்டிருந்தனர். நான் ஒருநாள் மலைப்பாதையில் காரைச் செலுத்திக் கொண்டு போகும்போது, அந்தச் சதிகாரர்களில் ஒருவன், மலைஓரத்தில் கட்டப்பட்டிருந்த செங்குத்தான சுவரின் மேல் படுத்து உறங்கிக் கொண்டிருந்தான். உறக்கத்தில் தற்செயலாக மறுபக்கம் திரும்பினால், நிச்சயம் அவன் வீழ்ந்து இறந்துவிடுவான். அவன் பகைவனாக இருந்தும், அவனை காப்பாற்றும் படி என் மனச் சாட்சி சொன்னது. அவனை அணுகி மெதுவாக எழுப்பினேன். என்மீது கோபித்தான். ஆயினும் விஷயத்தை விளக்கி அவனை என் காரில் ஏற்றி வந்து வீடு சேர்த்தேன்’ என்றான். உடனே தந்தை தன் மகனை மார்போடணைத்து 'மகனே, நீ செய்தது செயற்கரிய செயல். தீமை செய்கிறவர்களுக்கும், நன்மை செய்வதே மேலான செயல். செயற்கரிய செய்வர் பெரியர்' என்று கூறி, அந்த இரத்தினத்தைப் பரிசாக அவனுக்கே வழங்கினார். மற்றைய இரண்டு புதல்வரிகளின் செயல்களும் நல்ல செயல்கள் தான் என்பதால் அவர்களுக்கும் பரிசில்களைக் கொடுத்து யாவரும் மகிழ்ந்தனர். தீங்கு செய்பவர்களுக்கு நன்மை செய்வதன் மூலம் தீயவர்களையும் நல்லவர்களாக மாற்றலாம் என்பதை உணர்ந்து
கொள்வோமாக.

Page 21
12. பெற்றோர் கரிசனை
நல்ல நண்பர்கள் கிடைப்பது, ஒர் அரியநற்பேறு என்றே கொள்ளவேண்டும். நண்பர்களால் வாழ்வும் உண்டு; தாழ்வும் உண்டு. உயிர் காப்பான் தோழன் என்பார்கள். அதே போன்று, நண்பர்களாக நடித்து, நயமாக உறவாடி, ஈற்றில் தகாத வழிக்குக் கொண்டு செல்லும் நயவஞ்சகர்களும், நண்பர்களின் போர்வை யில் வந்து சேருவார்கள். எனவே, நண்பர்களைத் தெரிவு செய்யும் போதும், பழகும்போதும் முதலில் மிகுந்த கவனமாக இருத்தல் வேண்டும். அசலுக்கும், போலிக்கும் வேறுபாடு தெரிந்திருத்தல் அவசியம். இது விடயத்தில் பெற்றோரும் கண்ணும் கருத்துமாக இருத்தல் நலம். தமது பிள்ளைகள் யார், யாருடன் நட்புக் கொள்ளுகிறார்கள்; அவர்களின் நண்பர்கள் எத்தன்மையினர்; நல்ல பழக்க வழக்கங்கள் உள்ளவர்களா; நல்ல பண்பட்ட குடும்பத்தைச் சார்ந்தவர்களா என்பவற்றையெல்லாம் தம்பிள்ளை களின் நல்வாழ்வில் அக்கறையுள்ள பெற்றோர்கள் கண்காணித்துக் கொள்ளுதல் அவசியம்.
பிள்ளைகள் உலக அனுபவங்கள் குறைந்தவர்கள். வெளுத்ததெல்லாம் பால் என்று எண்ணும் இயல்பினர். கவர்ச்சியினால் எளிதில் ஈர்க்கப்படக் கூடியவர்கள். பத்துப் பன்னிரண்டு வயது வந்த பின்னர் வாழுகின்ற சூழல்களிலும், பாடசாலைகளிலும் ஒத்த வயதினருடன், தோழமையும் நட்புக் கொள்ளத் தொடங்குகின்றனர். இந்த நேரங்களில், பெற்றோர் தம்பிள்ளைகளையும், அவர்களின் நண்பர்களையும் கண்காணித்து, வழிகாட்டவேண்டும். பிள்ளைகளின் மனம் போனபோக்கில் விடாது, அவர்களுக்கு தகுந்த ஆலோசனைகளும் புத்திமதிகளும் கூற வேண்டியது பெற்றோரின் கடமை. பன்னிரண்டு வயதுக்குப்பின்னர் படிப்படியாக, பிள்ளைகளில் பருவமாற்றங் கள், ஏறத்தாழ இருபது வயது வரை நிகழ்கின்றன. உடலியல் ரீதியாகவும், உணர்வு ரீதியாகவும், சமூக ரீதியாகவும், மாற்றங் களும் வளர்ச்சிகளும் இப்பருவத்தில் பிள்ளைகளில் ஏற்படு

நல்வாழ்விற்குரிய நடைமுறைச் சிந்தனைகள் 3 37
கின்றன. இப்பருவத்தைக் கட்டிளமைப்பருவம் என்று உளவிய லாளர் கூறுவர். இப்பருவத்தில் தான் நண்பர்களுடனான உறவுகள் உண்டாகின்றன. பெற்றோர்களுக்குப் பிரச்சினைகளை உண் டாக்கும் பருவமும் இதுதான்.
தோளுக்கு மிஞ்சினால் தோழன் என்றொரு பழமொழி உண்டு. எனவே, பெற்றோர் வளர்ந்த பிள்ளைகளுடன் தோழமையுடனும் அன்புடனும், அனுதாபத்துடனும் பேசிப் பழகி அவர்களை நன்னெறிப்படுத்த வேண்டும். சில பெற் றோர்கள் தம் பிள்ளைகள் வளர்ந்து விட்டால் அவர்களின் பிரச்சினைகளைப் புரிந்துணர்வோடு அணுகுவதில்லை; அவர் களை அவர்கள் பாட்டில் விட்டு விடுகிறார்கள். சிலர் அவர் களுடன் பேசிப் பழகுவதையே நிறுத்தி விடுகிறார்கள். வேறு சில பெற்றோர் தமது தொழில்கள், பதவிகள் ஆகியவற்றில் தம்மை உயர்த்திக் கொள்வதன் பொருட்டு, அவற்றையே இறுகப் பற்றிப்பிடித்துச் சதாகாலமும் திரிவதால், தம் பிள்ளைகளுடன் அன்பாகப் பேசி மகிழவோ, வீட்டுக்கு நேரத்துக்கு வந்து, உரிய வேளைகளில் குடும்பத்தினர் யாவரும் ஒன்றாக இருந்து உணவு உண்ணவோ, பிள்ளைகளின் தேவைகளை அறியவோ, அவர்களின் பிரச்சினைகளுக்கு வழிகாணவோ, அவர்களின் நடத்தை ஒழுக்கங்களைக் கண்காணித்து நெறிப்படுத்தவோ அவர்களுக்கு நேரம் இருப்பதில்லை. அவர்கள் தம்மைப் பற்றிச் சிந்திக்கிறார்களே தவிர, தமது பிள்ளைகளின் எதிர்கால வாழ்வு பற்றிச் சிந்திப்பதில்லை. இப்பிள்ளைகள் யாவரும் பெற்றோர்கள் இருந்தும் கைவிடப்பட்ட நிலையில் ஆதரவும், அன்பும் நாடி நண்பர்களிடம் தஞ்சம் அடைகின்றனர். இன்றைய உலகில் பெரும்பாலும் நல்ல நண்பர்கள் கிடைப்பது அரிதிலும் அரிது. கெட்டநண்பர்களிடம் சிக்கிக் கொள்ளும் பிள்ளைகள் தம் எதிர்கால வாழ்வினைப் பழுதாக்கி கொள்கிறார்கள். எனவே, பெற்றோர்கள் எந்த நிலையில் இருப்பினும் தம்பிள்ளைகளைப் பேணி, அன்பும் ஆதரவும் தந்து அவர்களைக் கண்காணித்து, நன்னெறிப்படுத்தவேண்டிய பொறுப்பு உண்டு என்பதை நினை விற்கொள்ளவேண்டும்.

Page 22
13. மெளனம், பலத்தின் விளைவு
நாவையும் அடக்கி, சிந்தையையும் ஒருமுகப்படுத்தி, வாக்கும் மனமும் செயலின்றி இருத்தல் மெளனம் ஆகும். இது மிக உயர்ந்த நிலை. ஞானம் கைவரப் பெற்றவர்களுக்குத்தான் இது சாத்ததியமாகும். எம்மில் ஞானம் கைவரப் பெற்றவர் எத்தனைபேர் என்பதை நாம் அறியோம். ஆயினும், ஞானம் கைவரப் பெறாதவர்கள் மிகப் பலர் என்பது மட்டும் உண்மை. மெளனத்தை வாழ்வில் மேற்கொள்வதற்கு, ஞானம் வரும்வரை காத்திருக்கவேண்டியதில்லை. அப்படியாயின், மெளனத்தினால் கிடைக்கும் பலாபலன்களை என்றுமே அனுபவிக்க முடியாதவர் களாகி விடுவோம். எனவே, எங்களால் இயன்றளவு, உரிய வேளைகளில் ஏற்ற சந்தர்ப்பங்களில், மெளனத்தைக் கடைப் பிடிப்பதால், பல தொல்லைகள், வீண் சோலி தொந்தரவுகள் ஆகியவற்றிலிருந்து எம்மைப் பாதுகாத்துக் கொள்ள முடிகிறது. வாய்மட்டும் பேசாதிருந்தால் நாம் ஊமையாகிவிடுவோம் என்று அஞ்சத்தேவையில்லை. வாயினால் இனியவற்றை, இன்பமான வற்றை, பிறருக்கு துன்பம் பயக்காதவற்றைப் பேசக்கூடாது என்று தடை போடப்படவில்லை. ஆனால் கடுஞ்சொற்கள், வன் சொற்கள், வீண்வார்த்தைகள், பொய்யுரைகள், சூழுரைகள் புறங்கூறல், அமங்கல வார்த்தைகள் ஆகியவற்றை வாயினால் உரைக்காது, அதனால் பிறருக்கு ஆத்திரமூட்டாது, அச்சந்தர்ப் பங்களில் மெளனம் சாதிப்பதால் எத்தனையோ கொடிய விளைவுகளைத் தவிர்த்த பெருமைக்கு ஆளாகின்றோம். அப்படி மெளனம் மேற்கொள்ளப்படுவதால், பேசத்தெரியாதவர்களென்றோ, பலம் அற்றவர்களென்றோ, தோல்வியைத் தழுவியவர்களென்றோ எண்ணுவது அறிவீனமாகும். உண்மை யில், பலம் உள்ளவர்களே மெளனத்தைக் கடைப்பிடிக்க முடியும். மெளனத்திலேதான் பலம் அதிகம். மெளனம் தோல்வியின் அறிகுறியல்ல; அது வெற்றியின் சிகரம்.

நல்வாழ்விற்குரிய நடைமுறைச் சிந்தனைகள் இ 39
நிறைகுடம் தளம் பாது என்பர். வெறுங்குடத்தில் உள்ள சொற்பநீர்தான் பெருஞ்சத்தத்தை எழுப்புகின்றது. அதேபோல, அறிவுடையோர், பலமுடையோர் அதிகம் பேசிச் சக்தியை
வீணாக்கமாட்டார்கள்.
பலவீனர்களே அதிகம் பேசுபவர்களாக உள்ளனர்.
பேச்சைக் குறைத்தால் அவர்களும் பலம் பெறுவர்.
குடும்பத்திலும், சமூகங்களிலும், ஏன் நாடுகளிலும் கூட,
சண்டைசச்சரவுகள், யுத்தங்கள் எல்லாம் மூளுவதற்கு மூல காரணமாக இருப்பது யாரோ ஒருவர் அல்லது ஒரு சிலர் பேசிய பேச்சுத்தான் என்பதை ஆராய்ந்து பார்த்தால் தெரியும். எத்தனையோ குடும்பங்கள், கணவன் மனைவிக்கிடையில் ஏற்பட்ட வேண்டாத வாக்குவாதங்களினால் பிளவுபட்டுப் போயின. உடன்பிறந்த சகோதரர்களும் இறுக்கமான நண்பர்களும் பிரிந்துபோவதற்கும் தகாத பேச்சுக்களே காரணம். அண்டை அயலவர்களுடன் பகைத்துக் கொள்வதற்கும் வீணான பேச்சுக் களே ஏதுவாகின்றது. பொதுவில், வாய்ப் பேச்சு, பகைமைக்கும் குரோதத்திற்கும், சண்டை சச்சரவுகளுக்கும் வித்தாகின்றது. எனவேதான், வள்ளுவப் பெருந்தகையும்,
'யாகாவா ராயினும் நாகாக்க' - என்றும்
'தீயினாற் சுட்டபுண் உள்ளாறும் ஆறாதே
நாவினாற் சுட்ட வடு’ - என்றும் கூறியுள்ளார்.
எவற்றைக் காத்துக் கொள்ளாதவராயினும், தம் நாவி
னைத் தவறாது காக்கவேண்டும். அல்லாவிட்டால், பாரதூரமான விளைவுகளை எதிர்நோக்க நேரிடும். எனவேதான் பேசுவதற்கு முன் நன்கு சிந்தித்து, அளவாகப் பேசவேண்டும். அப்படிப் பேசமுடியாத சந்தர்ப்பங்களில், வாய்மூடி மெளனியாகி விடுதல் சாலச்சிறந்தது. 'மெளனம், கலகநாஸ்தி' என்பர். கலகத்தை அழிப்பதற்கு ஒரே வழி மெளனம் பேணுவதுதான், தீயினால் சுடப்பட்ட புண்ணை மருந்துபோட்டு ஆற்றி விடலாம். அதுவிரை வில் குணமாகிவிடும். ஆனால் நாவினாலே சுட்ட வடு உள்ளத்தில் ஆழப்பதிந்துவிடும். எஞ்ஞான்றும் அந்த வடு ஆறவே ஆறாது. ஆகவேதான் 'நா காக்க’ என்கிறார் வள்ளுவனார்.

Page 23
40 ஒ குமாரசாமி சோமசுந்தரம்
தனிமரம் தோப்பாகாது. ஒரு கைதட்டி ஓசை எழாது. ஓசை எழுவதற்கு இரண்டு கைகளையும் படும்படி இறுக்கித் தட்டவேண்டும். ஒருவர் மாத்திரம் பேசும்போது, வாக்குவாதம் ஏற்படஇடமில்லை. இருவர் பேசினால்தான் எதிரும் புதிருமாக, வாக்குவாதம் உண்டாகிறது. ஆத்திர மூட்டக் கூடிய இத்தகைய சந்தர்ப்பங்களில் ஒரு தரப்பினராவது மெளனமாக இருந்தால், அதுவே செயற்கரிய செயலாகும். வலியவர் மெளனத்தைக் கடைப்பிடித்தால் அதுவே பெரிய அறமாகும். எனவேதான்
'அடக்கம் அமரருள் உய்க்கும் அடங்காமை ஆரிருள் உய்த்து விடும்' என்கிறது தமிழ் மறை. அடக்கம், பணிவு, பொறுமை என்பன மனிதனைத் தெய்வீக நிலைக்கு இட்டுச் செல்ல வல்லன. அதை மனிதனில் காணப்படாவிட்டால், மனிதன் விலங்கு நிலைக்குத் தள்ளப்பட்டுவிடுகின்றான். 'மோனமென்பது ஞான வரம்பு’ என்பர் பெரியோர். எனவே, மெளனம் பேணி, தொல்லை கள் தவிர்த்து, மனிதத்தன்மையுடன் நல்வாழ்வு வாழ்வோமாக.
14. முதுமையின் இனிமை
இப்பூமியில் வாழுகின்ற ஒவ்வொருமனிதனும் இளமை, முதுமை, மூப்பு எனும் பருவங்களுக்கூடாகச் செல்லவேண்டியவ னாக உள்ளான். எவருக்குமே விதிவிலக்கு கிடையாது. இது உலகத்து இயற்கை, எனும் உண்மையை உணர்ந்தவர்களே அறிஞர்கள் ஆவர். ஒவ்வொரு பருவமும், ஒவ்வொரு விதத்தில் இன்பப் பேற்றினை மனிதனுக்கு அளிப்பதாகவே உள்ளது. இளமையில் ஒரு வித அழகு தோன்றுகிறது. முதுமை யிலும், மூப்பிலும் கூட வெவ்வேறு விதத்தில், மனிதர்களில் அழகுப் பொலிவுகள் தோற்றம் பெறத்தான் செய்கின்றன. இளமை நிலையாமை கண்டு மக்களில் பலர் வாழ்க்கையே இளமை முடிவடைந்ததோடு, அற்றுவிடுகின்றது என ஏங்குகின்றனர். இது 6,367 ? JGOLD L T, Lb. "The best is yet to be" 6tairS airpiti, gif ஆங்கிலக் கவிவாணர். இளமையைவிடச் சிறந் பருவம், முதுமை;

நல்வாழ்விற்குரிய நடைமுறைச் சிந்தனைகள் 3 41
அவை இரண்டினையும் விட சாலச் சிறந்த பருவம் மூப்பு என்பது அக்கவிஞர்தி லகத்தின் கருத்து. எனவே முதுமை யையோ, மூப்பையோ எண்ணி இளமையிலிருந்தே அஞ்சத் தேவை யில்லை. வேதனைப்படுவது வீண்செயலாகும். முதுமையையும் மூப்பையும் வரவேற்கும் பக்குவத்தை மனிதர்கள் பெற்றுக் கொள்ளுதல் வேண்டும்.
ஒரு புதிய யந்திரம் போன்றது இளமை. எல்லா உறுப்புக்களும் ஒத்திசைவாக இயங்கும்போது அழகு பொங்கு கின்றது. பழுதுகள் ஏற்படுவது மிகக் குறைவு. சக்தி, வேகம் அதிகம். எனவே, இளமை அழகு, உடல் அழகுதான். ஆனால் முதுமை, மூப்புப் பருவங்களில் அறிவு, அனுபவங்களினால் மனிதர்கள் அழகுபெறுகின்றனர். இப்பருவங்களிற்றான் தாம் அதுவரைகாலமும் பெற்ற முதிர்ந்த அறிவையும், அனுபவங் களையும், உலகத்தவர்க்கு எடுத்துரைக்கவும், அவர்களுடன் பகிர்ந்து கொள்ளவும், உலகமாந்தரை நன்னெறியில் வாழுமாறு செய்யவும் முடிகிறது. பிறருக்குப் பயன்பட வாழுகின்றகாலம் முதுமையேயாகும். தியாகம், அர்ப்பணம், சேவை, பிறர்நலம் பேணல், தன்னலமறுப்பு போன்ற அகத்துள் முகிழ்க்கும் ஆன்மிக அழகு முதுமையில்தான் பிரவாகித்து எழுகின்றது. இத்தகைய அகத்தின் அழகு முகத்தில் தெரியும் போது சாந்தம், அமைதி, தெளிவு, தண்ணளி, சாத்வீகம், ஒளி, மங்கலம் என்பனவற்றோடு இணைந்த தெய்வீகப் பொலிவுத் தோற்றம், ஒருவகை விளக்க முடியாத அழகினை முதுமைக்குத் தருகிறது. இத்தகைய முதியவர்களைக் காணும்போது எம்மையறியாமலே, அவர்களை இருகரங்கூப்பி வணங்குகின்றோம்; மதிப்பு மரியாதை செய்கின்றோம்; அவர்களின் அன்புக் கட்டளைகளை மறுப்பின்றி ஏற்று நிறைவேற்றுகின்றோம். அத்தகைய மாபெரும் சக்தி முதுமைக்கு உண்டு என்பதை நாம் உளங்கெள்ளுதல் வேண்டும்.
முதுமைக்கு முதலிடம் கொடுத்து, முதியவர்களைப் பேணிப் பாதுகாத்துப் பெருமை பெற்ற வரலாற்றுப் பாரம்பரியம், தமிழ் மக்களுடையது. குடும்பப் பெரிய வர்கள், சமூகப் பெரிய
வர்கள், நாட்டுப்பெரியவர்கள் என விளங்கியவர்கள் யாவரும்

Page 24
42 3) குமாரசாமி சோமசுந்தரம்
வயதிலும், அறிவிலும், அனுபவத்திலும் முதிர்ந்தவர்கள். மூத்தோர் சொல், வார்த்தை அமிர்தமாகக் கொள்ளப்பட்டு வந்தது. இளையவர்கள், முதியவர்களின் நல்லாசிகளையும் நல்வாழ்த்துக்களையும் பெற்றுத் தொல்லைகள் இன்றி வாழ்ந்த னர். முதுமைக்குக் கணிப்பும் கெளரவமும், இருந்த அக்காலத்தில், முதுமையைக் கண்டு பயம் கொள்ளவில்லை. ஓய்வூதியம், சேமிப்பு, வேறுபணவருவாய் அந்நியகாலச் சகாயநிதி, காப்புறுதி போன்ற வசதிவாய்ப்புக்கள் இல்லாத அக்காலங்களில், முதுமை யையும் மூப்பையும் அடைந்து விட்ட தாய் தந்தையர், பேரன் பேர்த்திமார், பூட்டன், பூட்டிமார் ஆகியோரை இளைய தலை முறையினர் நன்கு அன்புடனும் பண்புடனும் பராமரித்துப் பாதுகாத்து வந்துள்ளனர். பெற்றோர், மூதாதையர்களைப் பேணுவது, பராமரிப்பது, கணிப்பது, மரியாதை தருவது என்ப வற்றைப் பிள்ளைகள் தமது கடமையாகவும், பெரும்பேறாகவும் ஏற்றுக் கொண்டிருந்தனர். ஏன், நிறை வாழ்வு வாழ்ந்து இவ்வுலகை நீத்து, தென்புலத்தார் ஆனபின்பும், அவர்களுக்குச் செய்ய வேண்டிய பிதுர்காரியங்களைச்செய்யவும் வழிபாடுகள் செய்ய வும், காவல் தெய்வங்களாகக் கொள்ளவும் பிள்ளைகள் தவறுவ தில்லை. இத்தகைய தமிழர் பண்பாடுகள் தற்காலத்தில் காலஞ் சென்றுவிட்டனவோ என எண்ணத்தோன்றுகிறது. ஆம், முதியவர் களைப் பேணிப் பாதுகாத்து மதிப்பளித்து வந்த பண்பாடு இன்று சரித்திரமாகிவிட்டதோ என எண்ணத்தோன்றுகிறது. அதனால் வாழும் நெறியாக, நிஜவாழ்வில் காணும் நிலை பெரிதும் அரிதாகி விடுகிறது. இந்தநிலை நீடிக்குமானால், முதுமை, மூப்பு என்பன சுமையாகத்தான் தோன்றும்; அவற்றை எதிர்கொள்வதும் சங்கடமாகத்தான் இருக்கும். எனவே, மூத்தோரைப் பேணிப் பாது காக்கின்ற பண்பு மறுமலர்ச்சியடைய வேண்டியது அவசியம். முதியோரின் பாதுகாப்பு, பராமரிப்பு; அவர்களுக்கு உரிய மதிப்பு, மரியாதை, கணிப்பு என்பன வழங்கப்படுதல் ஆகியன இளைய வர்களினால் உறுதிசெய்யப்படும் பட்சத்தில் முதுமையை எதிர் நோக்குதல் என்பது சுவையாகிவிடுமே தவிர சுமையாகப் போகாது. இதனை உணர்ந்து, விரைந்து செயற்பட்டு முதுமை முட்டினைத்தீர்க்க முயல்வோமாக.

15. சோம்பல் மிகக் கெடுதி
சுறுசுறுப்பு மனிதர்களை வாழ் விக்கும் மகத்தான சஞ்சீவி. மனிதகுலத்தை எல்லாதுறைகளிலும் முன்னேறச்செய்வ தற்கு ஆதாரமாக விளங்குகிறது சுறுசுறுப்பு. 'முயற்சியுடையார் இகழ்ச்சியடையார்' என்பது நம்மிடையே வழங்கிவருகின்ற பொருள் பொதிந்த கூற்று. 'முயற்சி திருவினையாக்கும்' என்கிறது தமிழ் மறை. மனிதர்களை முயற்சிகளில் ஈடுபாடு கொள்ளச் செய்வதற்கு உந்துசக்தியாக இருப்பது அவர்களிடம் காணப்படுகின்ற சுறுசுறுப்பு. சோம்பல், மடி, பஞ்சி, இயங்காமை, அவநம்பிக்கை, சோர்வு என்பன சுறுசுறுப்பு உள்ளவர்களிடமிருந்து அகன்றுவிடும். ஆர்வம் உற்சாகம் உழைப்பு, ஊக்கம், உறுதி என்பன சுறுசுறுப்பு உள்ளவர்களிடம் பிறக்கின்றன. வாழ்க்கையில்
வெற்றி அடைவதற்கு இவைதான் உறுதுணையாக வருபவை.
மனிதர்கள் மிகவும் உயர்ந்த, வளர்ச்சிபெற்ற இனத்தைச் சார்ந்தவர்கள். தாழ்ந்த உயிரினங்களான விலங்குகள், பறவைகள், ஊர்வன, நீர்வாழ்வன ஆகியவற்றைப் பாருங்கள். அவை எத்துணை சுறுசுறுப்பாகத் திரிகின்றன. அவைகளின் சுறு சுறுப்பையும் விரைவையும் நோக்கும்போது ஆச்சரியமடை கின்றோம்; அழகை இரசிக்கின்றோம். எந்நேரமும் விரைந்து செல்லும் எறும்புகள்; சிறகடித்துப் பறக்கும் சின்னஞ்சிறிய சிட்டுக்குருவிகள்; துள்ளி நீந்தும் குஞ்சு மீன்கள்; பிறந்ததும் குதித்தோடும் கன்றுக்குட்டிகள் எல்லாமே உருவத்தில் சிறியன, ஆனால் உற்சாகத்தில் பெரியன. தமிழ்க் கவிஞர்கள் பலர் அவற் றின் சுறுசுறுப்பை மெச்சிப் பாடல்கள் புனைந்துள்ளனர். பாரதிதாசன் சிட்டுக்குருவிக்குப் பாடிய பாடலைப் பார்ப்போம்.
"சிட்டு
இத்தனைச் சிறிய சிட்டு-நீபார் எத்தனை சுறுசுறுப்பு-தம்பி

Page 25
44 இ குமாரசாமி சோமசுந்தரம்
இத்தனைச் சிறிய சிட்டு! எத்தனை சுறுசுறுப்பு. இந்தச் சின்னஞ்சிறிய சிட்டுக்குருவியிடம் காணப்படுகின்ற சுறுசுறுப்பு, எமது தம்பி, தங்கையரிடமும் காணப்படவேண்டும் என்று தமது ஆதங்கத்தைத் தெரிவிக்கிறார் பாரதிதாசன்.
'ஓடி விளையாடு பாப்பா, நீ ஒய்ந்திருக்கலாகாது பாப்பா' என்று குழந்தைகளை விழித்துப் பாடுகின்றார் மகாகவி பாரதியார். ஒரிடத்தில் ஓய்ந்திருந்துவிட்டால், எங்கே சோம்பல் வந்து விடுமோ, அதனால் சுறுசுறுப்பு குழந்தைகளை விட்டு அகன்றுவிடுமோ என்று பாரதியார் பரிதவிக்கிறார்.
புள்ளினங்கள், விலங்குகள் யாவும் சூரியன் புலர்வதற்கு வெகுநேரத்திற்கு முன், அதிகாலையில் கண்விழித்துவிடுகின்றன. அவ்வாறு அதிகாலையில் கண்விழித்து விடுவதனாலேயே அவை நாள்முழுவதும் சுறுசுறுப்பாகவும், உற்சாகமாகவும் காணப்படு கின்றன. களைப் படைவதை நாம் காண்பதில்லை. இப்புள்ளினங் களின் ஒலிகளைக்கேட்டு அதிகாலையில் படுக்கையை விட்டு எழுபவர்கள் சிலர் உள்ளனர். அவர்கள் நாள்முழுவதும் சுறுசுறுப் புடன் திகழ்கின்றனர். அவ்வாறு புள்ளினங்களின் இனிய ஒலிகளைக் கேளாது, அதிகாலையில் உறக்கத்தில் இருப்பவர் களும் உளர். அவர்களிடம் சுறுசுறுப்பு இல்லாது போய்விடுகிறது. அங்கு சோம்பல் குடிகொண்டுவிடுகிறது. சோம்பல் குடிகொண்டு விட்டால், அதுவும் குறிப்பாக இளம்பராயத்தில், அதனை அகற்றுவது பெருஞ்சிரமம். ஆகவே, சோம்பலுக்கு எச்சந்தர்ப் பத்திலேயும் இடம் கொடாது விடுதலே மிகுந்த புத்திசாலித்தன மாகும். எனவேதான்,
"சோம்பல் மிகக் கெடுதி பாப்பா' - என்கிறார் பாரதியார்’.
"சோம்பிக் கிடப்பது தீமை-நல்ல
தொண்டு செயாது கிடப்பவன் ஆமை' - என்கிறார் பாரதிதாசன்.
"தூங்காதே தம்பி, தூங்காதே- ஒரு
சோம்பேறி என்ற பெயர் வாங்காதே' - என்று தட்டியெழுப்புகிறார் இன்னொரு கவிஞர்.

நல்வாழ்விற்குரிய நடைமுறைச் சிந்தனைகள் ஐ 45
'விழித்தெழு,” “விழித்திரு’ என்பவை சுவாமி விவேகா னந்தரின் வாக்கு. தூங்குமூஞ்சியாக இருப்பவர் எதையும் சாதித்தது கிடையாது.
கொட்டாவி விடுதல், விரல்களில் நெட்டி முறித்தல், பகலில் நித்திரை செய்தல் என்பன சோம்பலின் அங்க அடை யாளங்கள். சிலர், மற்றையோரின் முன்னிலையில் சத்தம் செய்து கொட்டாவி விடும்போது, அவர்களையும் பற்றிக்கொள்கிறது. பகலில் நித்திரை செய்வது உடலைப் பாதிக்கும். பஸ்ஸிலே தூங்குபவர்களையும், பாடசாலையில் வகுப்பிலே தூங்குபவர் களையும், வேறு கருமங்களை ஆற்றும்போது தூங்குபவர்களை யும் நாம் சாதாரணமாகக் காண்கிறோம். அவர்கள் தம்மைத் தாமே ஏமாற்றிக் கொண்டவர்கள் ஆகின்றனர். இளமையில் கல்வி கற்கும் போதும் பின்னர் பல்வேறு தொழில்களில் ஈடுபடும் போதும் கண்துஞ்சாது, கருமமே கண்ணாகவும், சுறுசுறுப்புடனும் விளங்கும்போதுதான், எடுத்த காரியங்கள் யாவும் வெற்றியாகக் கைகூடும் என்பதை உணர்ந்துகொள்ளவேண்டும்.
சுறுசுறுப்பு நிலைப்பதற்கு உடலும், உள்ளமும் ஆரோக்கியமாக இருத்தல் அவசியம். உடலின் சோம்பலைப் போக்குவதாக நினைத்துக் கொண்டு, மருந்துகள், போதைப் பொருட்கள், மதுபானம், புகைபிடித்தல், ஆகியவற்றை நாடினால் சோம்பலுடன் உடலையும் போக்கிவிடும். சுறுசுறுப்பை, இத்தகைய போதைதரும் பொருட்கள் தரவல்லன அல்ல. உள்ளத் தின் அமைதியைப் பாதிக்கும் அளவற்ற ஆசைகள் அங்கலாய்ப்புக் கள் சுறுசுறுப்பைத் தரவல்லன அல்ல. நல்ல வாழ்க்கைப் பழக்கங்கள், தூய உள்ளம் என்பவற்றை இளமையிலிருந்தே கொண்டிருத்தல் மூலமே, சுறுசுறுப்பையும், முதுமையிலே இளமையையும், வாழ்க்கை முழுவதும் வெற்றிகளையும், மகிழ்ச்சியையும் பெற்றுக் கொள்ளமுடியும்.

Page 26
16. சமுதாய ஆரோக்கியம் பேணுவோம்
சமூக ஆரோக்கியம் இன்று எப்படி உள்ளது என்ற
வினாவைப் பலரிடம் கேட்டேன்.
'அதையேன் கேட்கிறியள். வர வர மோசம். படுமோசம் என்ற கருத்துப்படவே யாவரும் பதில்தந்தனர். இவ்வாறு பதில் தந்தவர்களும் ஏதோ ஒரு வகையில் சமூக ஆரோக்கியம் குன்றுவதற்குப் பங்களிப்பு செய்து கொண்டுதான் இருக்கின்றனர். உண்மை நிலையை உணர்ந்தும் பயனில்லை. அவ்வாறு உணர்ந்து கொண்ட பின்னரும் சமூக ஆரோக்கியக் குறைவிற்கான செயற் பாடுகளை ஊக்குவிப்பது, கண்டும்காணாதது போலப் பாசாங்கு செய்தல் என்பன எத்துணை பயங்கர விளைவுகளை ஏற்படுத்துப் போகின்றன என்பதை எத்தனை பேர் நம்மில் உணர்ந்துள்ளனர்.
நம்முடைய உடல், நல்ல ஆரோக்கியத்துடன் இருக்க வேண்டும் என்று விரும்பாதவர்கள் எவரும் இலர். அதே சிந்தனை, அதே பிரார்த்தனை, ஜெபம், தியானம் யாவுமே உடல் நலம் பற்றியதாகவே உள்ளன. உடலில் சிறிது சோர்வோ தளர்ச்சியோ அல்லது ஏதாவது வித்தியாசமோ ஏற்பட்டுவிட்டால் உடனே வைத்தியரிடம் சென்று நிவிர்த்தி செய்து விடுகின்றோம். உடம்பை வளர்ப்பதற்கு, பேணுவதற்கு, அழகு செய்வதற்கு நாம் முன்னிற்கிறோம். செலவு எவ்வளவு ஆனாலும் மகிழ்ச்சியே அடைகின்றோம். நமது உடல் ஆரோக்கியத்தில் எத்துணை கரிசனை கொள்கிறோம் என்பது இதிலிருந்து தெளிவு.
ஆனால் சமூக ஆரோக்கியம் வர வர மோசம் ஆகிறது என்பதை ஏற்றுக்கொள்ளும் அதேவேளை, சமூக ஆரோக்கிய நிலைமையைச் சீராக்குவதற்கு நாம் என்ன செய்கின்றோம்? ஏன் பாராமுகமாக இருக்கின்றோம்? என்பவை இன்னும் புரியாத புதிர்களாகவே உள்ளன.

நல்வாழ்விற்குரிய நடைமுறைச் சிந்தனைகள் ே 47
இந்த வகையில், நமது முற்சந்ததியினர், மூதாதைகள் நம்மிலிருந்து வேறுபட்டவர்கள். சமூக ஆரோக்கியத்திற்குப் பங்கம் ஏற்படுத்தக் கூடிய எச்செயலையும், எக்காரியத்தையும் பார்த்துக்கொண்டு கம்மா இருக்கமாட்டார்கள். சுட்டிக்காட்டித் திருத்த முற்பட்டனர். திருந்தாவிட்டால் சமூகத்திலிருந்து வேறு படுத்தி வைத்தனர். தொற்று நோயால் பீடிக்கப்பட்டுள்ளவர்களைத் தனிப்படுத்தி வைத்துச் சிகிச்சையளிப்பதால், நோய் பரவாமல் தடுக்கப்படுகிறது; நோயாளரும் குணமாகிவிடுகின்றனர்.
இன்று, தூய காற்றைத் தேடிக் குடும்பத்தாருடன் கடற்கரைக்குச் சென்று, மாலை நேரத்தில் மனமகிழ்ச்சியோடு உலாவி வரமுடிகின்றதா? நந்தவனத்திற்கும், பூங்காக்களுக்கும் சென்று மன அமைதி பெற இயலுகின்றதா? பொது இடங்களில் தரித்து நிற்கக் கூடியதாக உள்ளதா? போக்குவரத்து ஊர்திகளில் மனச்சலனமின்றிப் போய்வரமுடிகின்றதா? அங்கிங்கெனாதபடி, எங்கும் பிரகாசமாய்; ஒளிப்பு மறைப்போ கூச்சமோ அச்சமோ இன்றி, அகத்துறைக்காட்சிகள், காமப்பரிவர்த்தனைகள் என்பன படங்களாகவோ பதுமைகள் ஆகவோ அல்ல நிஜங்களாகவும், நிதர்சனங்களாகவும், அத்தனை இடங்களிலும் நீக்கமற நிறைந்து காட்சிதருகின்றன. இவையெல்லாம், சூழல் மாசு அடைவதற்கு சுருதிசேர்ப்பனவாகவே உள்ளன. அதனால், சமூக ஆரோக்கியம் கெட்டுக்கெட்டுச் சீர்குலைகின்றது. புறச்சூழலுடன், மனிதனின் அகச் சூழலும் பாதுகாக்கப்பட வேண்டும்.
ஆண் பெண் உறவு மிகமிகப் புனிதமானது. புனிதமான ஒன்று புனிதமாகப் பேணப்படவேண்டியது. அதைக் கொச்சைப் படுத்துவது இழிவான செயல். ஒருவனுக்கு ஒருத்தி, ஒருத்திக்கு ஒருவன் என்ற உயரிய நிலைப்பாடு, நமது பண்பாட்டுப் பரிமாண வளர்ச்சியின் சிகரம் ஆகும். இதனை நமது பண்பாட்டு மரபில் வந்த ஒவ்வொருவரும் உணர்ந்து, பேணுதல்கடமை.
'காதல்-மானிடத்திற்குக் கிடைத்த மதிப்பு மிக்க நன்கொடை, ' என்கிறார் அறிஞர் ஒருவர். நன்கொடை தானே எனறு எண்ணிவிட்டு வழக்கம் போல அதனையும் அலட்சியம்

Page 27
48 ஓ குமாரசாமி சோமசுந்தரம்
செய்பவர்கள் மலிந்துவிட்ட இக்காலத்தில், காதலின் தூய்மை உணர்த்தப்பட வேண்டும்; உணரப்படவும் வேண்டும்.
காதல், வெறும் காமம் ஆக மாற்றப்படலாகாது. காதல், கற்புடன் இணைந்து இருக்கும் வரை அத்தகைய இழிவான நிலைமை ஏற்பட இடம் இருக்காது. கற்பு என்பது ஆண், பெண் இருபாலருக்கும் உரியது என்பதை உணர்ந்தவர்கள் குடும்ப வாழ்க்கையைச் செவ்வையாக நடத்திச் செல்கின்றனர். அங்கு பிணக்குகள் இல்லை. குழந்தைகள் நல்ல ஆரோக்கியமாக வளர்வதற்கு ஏற்ற சூழ்நிலை நிலவுகின்றது.
மனிதனுக்கும் விலங்கிற்கும் இடையேயுள்ள ஒரு முக்கிய வேறுபாடு என்னவெனில், மனிதன் மானத்தைக் காப்பவன்; ஆனால் விலங்கிற்கு மானம் என்றால் என்ன என்பதே தெரியாது. மனிதனின் பெறுமானம், மதிப்பு எல்லாமே, அவன் மானத்தைக் காப்பாற்றிக் கொள்ளும் அளவில்தான் தங்கியுள்ளது. மானத்தைக் காப்பாற்றுதல் என்பது மனிதனின் ஒழுக்கம் சார்ந்த விடயம். எனவே, வாழ்வில் நல்லொழுக்கம் பேணி, மானத்தைப் பாதுகாத்து அதன்வழி மனிதப் பெறுமானத்தை உயர்த்தி, சமூக ஆரோக்கியத்தை உறுதி செய்வோமாக.
17. மனிதரில் நிறைகளைக் காண்போம்
சிலர் வாழ்க்கையில் குறைகளை மாத்திரமே தேடிக் கண்டுபிடித்து, அவற்றை வாலாயஞ் செய்து, பிறருக்கு எடுத்துக் கூறிக்கொண்டே இருப்பார்கள். இவர்கள் மனிதர்களின் நிம்மதியைக் கெடுக்கிறார்கள் என்ற உணர்வே இல்லாதவர்கள். மனிதர்களிடம் நிறைவுகளும் உண்டு என்பதை இத்தகையோர் ஏற்றுக்கொள்வதில்லை. அந்த நிறைவுகளைக் கண்டு, அவற்றைப் போற்றவேண்டும், பாராட்ட வேண்டும் என்ற எண்ணம் சிறிதும் இருப்பதில்லை. மற்றை யோரில் குறைகளைக்கண்டு பிடித்து, அவற்றைப் பெரிதுபடுத்தி, தூற்றித்திரிவதில் நயம் காண் பவர்களாக உள்ளனர். சமூகத்தில் இப்படியானவர்கள் பிரச்சினை

நல்வாழ்விற்குரிய நடைமுறைச் சிநதனைகள & 4g
களுக்கு வழிவகுக்கின்றார்களே தவிர, வேறு பயன்தரக்கூடிய விஷயங்களில் ஈடுபடுவதில்லை.
சமூகத்தில் குறைபாடுகள் இல்லாதவர்கள் இல்லை. உடற்குறைபாடுகள், புத்திக்குறைபாடுகள், பண்புக்குறைபாடுகள் நடத்தைப் பிறழ்வுகள், ஒழுங்கீனங்கள் -இவ்வாறு குறைபாடுகள் பலவகையாக உண்டு.
இந்தக் குறைகளையெல்லாம், சம்பந்தப்பட்டவர்களின் முன்னிலையில், நேருக்கு நேராகச் சொல்லமாட்டார்கள். அவர்கள் இல்லாத வேளைகளில், அவர்களைப் பற்றி இல்லா ததையும் பொல்லாததையும் வேறு பேர்வழிகளுக்குச் சொல்லு வார்கள். நாலு பேர் சேர்ந்து அரட்டை அடிப்பதென்றால், பிறரின் குறைகளைப் பற்றிப் பேசுவதே, பேசப்படும் தலைப்பாக இருக்கும். இது புறங்கூறுதல் எனும் குற்றமாகும் என்பது உணரப் படவேண்டியது. இதனால் பிறருக்குத் தீங்கு ஏற்படுகின்றது.
பிறரில் காணப்படுகின்ற குறைபாடுகள், சுட்டிக் காட்டப்படாவிட்டால், அவர்களைத் திருத்துவது எப்படி? என்ற கேள்வியைப் பலர் எழுப்பலாம். அதுவும் நியாயமான கேள்விதான். தங்களிடம் உள்ள குறைபாடுகளைத் தெரிந்து கொள்ளாதவர்களும் உண்டு. அதேவேளை, தெரிந்தும் தெரி யாதவர்போல் நடிப்பவர்களும் நிறைய இருக்கின்றனர். உலகம் பலவிதம் என்பதை எப்பவோ கண்டுபிடித்தும் விட்டார்கள். உலகில் பல விதமானவர்கள் இருக்கத்தான் செய்யும். அது உலக இயல்பு.
சரி, குறைகள், சுட்டிக்காட்டப்படத்தான் வேண்டும் என்பதை ஏற்றுக் கொண்டால், ஒன்றை மட்டும் ஞாபகத்தில் கொள்ளவேண்டும்; அதுதான், ஒருவரின் குறைகளை அவர் இல்லாதவிடத்துப் பலர் முன்னிலையில் பழித்துரைக்கக் கூடாது என்பதாகும். இவ்வாறு செய்வதால் சம்பந்தப்பட்டவர் திருந்தப் போவதில்லை. எனவே, அந்த அணுகுமுறை புறங்கூறல் சார்ந்த படியினால், பயனற்றதாகிவிடுகின்றது.
குறைபாடுகளைச் சுட்டிக்காட்டுவது, ஒருவரைத் திருத்து வதற்காகவே என்றால், அந்தக் குறைபாடு உள்ளவரை தனிமையில்

Page 28
5O இ குமாரசாமி சோமசுந்தரம்
அழைத்து; அன்புடனும் பண்புடனும் குறைபாடுகளை எடுத்துக் கூறி, திருந்துவதற்கான புத்திமதிகளையும் சொல்லி, அவர் ஏற்கத்தக்க விதத்தில் நடந்து கொள்வதே விவேகமானதும் பண்பானதுமான செயல். குறைபாடுகளை உணரச்செய்தால், திருந்திவிடுவர். குறைபாடுகளைப் பகிரங்கப்படுத்தினால், சமூகத்திற்குப் பயப்படுந்தன்மை குறைந்துவிடும். 'அறநனைந்த வனுக்குக் குளிர் என்ன, கூதிர் என்ன?’ என்பது போன்ற நிலை ஏற்பட்டு விடும். அதனால் திருந்த வேண்டிய தேவை அற்றுப் போகிறது. திருந்தி நடக்கக்கூடிவர்களும், திருந்தமாட்டார்கள்.
ஒருவரின் நிறைவுகளைப் பகிரங்கமாகப் பேசுதல் வரவேற்கத் தக்கது. அதனால் அவர் மேலும் பல நிறைவுகளை அடைய வழியேற்படுகிறது. குழந்தையைத் தாலாட்டுதல் ஒராட்டுதல், சீராட்டுதல் மூலம் தாய் வளர்க்கிறாள். குழந்தையின் வளர்ச்சிக்கு விதம் விதமான உணவுகள் மாத்திரம் அல்ல, தாலாட்டும், சீராட்டும் அவசியம் என்பதை உணர்ந்தவள் தாய்.
நிறைவுகள் மேலும் நிறைவுகள் ஆவதற்குப் பாராட்டு தல் அதுவும் பலர் முன்னிலையில் பகிரங்கமாகப் பாராட்டுதல் மிக மிகத் தேவையானது. ஆனால், உளமார ஒரு வரைப் பாராட்டுதல், தற்காலத்தில் அருகிக் கொண்டு வருவதைக் காணமுடிகிறது. அதனாலோ என்னவோ நிறைவுகள், நன்மைகள் என்பன வளர்ச்சியாவதும் அருகிக் கொண்டுவருகின்றன. இன்று நடைபெறுகின்ற பாராட்டல்கள், போற்றுதல்கள் என்பன போலிகள் ஆகத் தென்படுகின்றன. அவை முகமன்கள், முகஸ்துதிகள் ஆகிவிட்டன. காரியம் ஆவதற்காக நடைபெறுவன.
ஒருவரின் உண்மையான நிறைவுகளை உளமாரப்பலர் முன் போற்றவேண்டும். ஒருவரின் குறைகளைச் சுட்டிக்காட்டுவ தனால் அவரைத் தனிமையில் அழைத்து அதைச் செய்ய வேண்டும். இவ்விரண்டும் நன்மை பயக்கும்.

18. மக்கள் நலம் பேணி வாழ்வோம்
சமூகத்தில் நாம் பிறருக்காகவும் வாழவேண்டியுள்ளது. அதுவே சமூகவாழ்வு, நாகரிக வாழ்வு என்கிறோம். தனிமரம் தோப்பு ஆகாது. அவ்வாறே, தனிமனிதனும் சமூகம் ஆகிவிட முடியாது. எனவே சமூகம் எனும் போது பலமனிதர்கள் சேர்ந்து வாழ்தலையே, அது குறிக்கின்றது. பல மனிதர்கள் ஒன்று சேரும் போது, பிரச்சினைகள் எழத்தான் செய்யும். ஏற்றத் தாழ்வுகள்; பெரிது, சிறிது; வேற்றுமைகள் என்பனவும் இடம் பெறுகின்றன. பகைமை, பொறாமை, எரிச்சல், புகைச்சல், பூசல் என்பனவும் ஏற்படுகின்றன. துன்பங்கள், துயரங்கள், இடர்கள், அமைதியின்மை, அழிவுகள் போன்றன இல்லாத சமூகங்களும் இல்லையென்றே சொல்லவேண்டும்.
வேறொரு பார்வையில், நட்பு, மகிழ்ச்சி, ஆக்கங்கள் அனுசரணைகள்; அன்பு, பற்று, பாசம், நல்லெண்ணம், நற்செயல்கள் ஒருமையுணர்வு, ஐக்கியம், விட்டுக்கொடுத்தல் என்பனவும் மனித சமூகங்களில் இருக்கத்தான் செய்கின்றன. மனித சமூகங்களில், நிலவும் இருட்டும் மாறி, மாறி வருவதுபோல இன்பமும், துன்பமும்; பிரச்சினைகளும், தீர்வும்; சண்டையும் சமாதானமும் மாறி மாறி வந்து கொண்டிருக்கின்றன. மனிதர்கள் சமூகமாக வாழத் தொடங்கிய காலத்திலிருந்து இன்று வரை அதே நிலைமைதான் தொடருகின்றது. மனித வரலாறு, இன்ப நிகழ்வுகளும் துன்பநிகழ்வுகளும் கலந்த வரலாறுதான்.
மனிதர்கள் சமூகமாக வாழ்கின்ற மையினால் தான், பிரச்சினைகள் உருவாகின்றன என்பதில் எத்துணை உண்மை உள்ளதோ, அத்துணை உண்மை, மனிதர்கள் தம் தேவைகளை நிறைவு செய்து திருப்தியாகவும், மகிழ்ச்சியாகவும் வாழ்வது சமூகமாகக் கூடிவாழ்வதினால்தான் என்பதிலும் உள்ளது. இந்த வகையில் நோக்கும்போது, சமூகத்தில் மனிதர்கள் பிறருக்காகவும்

Page 29
52 ஐ குமாரசாமி சோமசுந்தரம்
வாழவேண்டும் என எண்ணி, அவ்வாறு எண்ணியபடி பிறருக்காக வாழும் போதுதான் அந்தச் சமூகம் எல்லா நலன்களும் சுபீட்சமும் பெறுகின்றது. அத்தகைய சமூகத்தில் வாழுகின்ற மக்கள் துன்பங்கள், துயர்களுக்குள் சிக்காமல்; மகிழ்ச்சியும் இன்பமும் நிறையப் பெற்று வளமாக வாழ்கின்றன. மாறாக, சுயநலம் மேலாண்மை செலுத்த, பிறரைப் புறக்கணித்துத் தமக்காக மட்டும் வாழ எண்ணுபவர்கள் வாழுகின்ற சமூகத்தில் ஒரு மிகச் சிறிய தொகையினர் உல்லாசமாக வாழ, மிகப்பெரிய தொகையினர், வறுமைக்கோட்டின்கீழ் உண்ண உணவில்லாமல், உடுக்க உடையில்லாமல் வாடித் தவிக்கின்றனர். பெருந்துன்பங்களை அனுபவிக்கின்றனர்.
மனிதர்கள் தமக்காக மட்டுமல்ல, பிறர் நன்மைக்காகவும் வாழும் நிலை ஏற்படும் போதுதான், சமூகங்களில் உள்ள பிரச்சினைகள் நீங்கும்; அமைதி நிலவும். அதுவரை, மனிதகுலத் திற்கு மீட்சி ஏற்படமுடியாது. மனிதகுலமீட்சி, மனிதர்களால்தான் ஏற்படுத்த முடியும். மனிதர்கள் அத்துணை ஆற்றல் படைத் தவர்கள். அந்த அற்புத ஆற்றலைப் பெற்றிருப்பதால்தான், மனிதன் அவ்வாற்றலைப் பயன்படுத்தித் தியாகம் செய்கிறான். ஆற்றல் படைத்த மனிதனைத்தவிர, வேறெந்த உயிரினத்தினாலும் தியாகம் புரிய முடியாது. தியாகம் செய்வது மனித உரிமை; தியாகம் புரியவேண்டியது மனிதக் கடமை. அந்த உரிமையையும் கோராது, கடமையையும் புரியாது நிற்கின்ற மனிதர்கள், மனித நிலையிலிருந்தும் கீழிறங்கி விடுகின்றனர். சமூக வாழ்வு சீராக நடைபெறத் தியாகங்களும் தேவை.
மக்கள் நலக் கொள்கை இன்று மனிதர்களிடமிருந்து அருகிக்கொண்டே வருகின்றது. நம்மில் எத்தனைபேர் எம் முடைய அயலவர்களுடன் நல்லுறவு பேணிவருகின்றோம்? நாம் ஒவ்வொருவரும், எம்மைக்கேட்க வேண்டிய கேள்வியாக உள்ளது. எம் வீட்டுக்குப்பைகளை முன் வீட்டு வாயிலில் கொண்டு போய்க் கொட்டுவதில் ஒர் அலாதி பிரியம். இரவிர வாகச் சத்தம் போட்டு, கும்மாளமிட்டு அயலவர்களின் அமைதியைக்குலைப்பதில் இன்பம் காண்கின்றோம். படிக்கும்

நல்வாழ்விற்குரிய நடைமுறைச் சிந்தனைகள் 3 53
மாணவர்களும்; தூக்கம் இன்றித் தவிக்கும் நோயாளர்களும்; வயோதிபர்களும் அயலில் உள்ளனர் என்பதை மறந்துவிடு கிறோம். இவ்வாறாக, இன்னும் எத்தனையோ விதத்தில், பிறருக்கு இடைஞ்சல் தரும் செயல்களைச் செய்யும் போது, அவர்கள் வேதனையில் வெதும் புவதை நாம் உணர்வதில்லை. எமக்கு மற்றையோர் இடைஞ்சல் தரும்போது நாம் எத்துணை வேதனையடைகின்றோம். அப்படித்தானே, பிறரும், நாம் இடைஞ்சல் செய்யும் போது, துன்பப்படுவார்கள் என்று நினைத்துப் பார்த்தால் சமூகத்தில் எத்தனையோ பிரச்சினைகளைத் தவிர்க்கலாம். தம்மைப் போல் பிறரையும் நேசிக்கும் மனப் பாங்கினைப் பெற்றுவிட்டால் உலகில் கோடி நன்மைகள் உண்டாகும் என்பது உறுதி.
19. மனிதத்தன்மைகளே மனித உரிமைகள்
பகைவரிடத்தும் பெருந்தன்மையுடன் பழகுகின்ற பாங்கு; மறந்தும் பிறருக்குக் கேடு நினைக்காத கேண்மை; குணம் என்னும் குன்றேறி நிற்கும் இயல்பு, ஒழுக்கத்தை உயரினும் மேலாகப் பேணும் பேறு உடைமை என்பன, மனிதத் தன்மைகள். அவை மனிதனுக்கே உரித்தானவை. மனிதன் இவற்றில் உரிமை கொள்ளும் போதுதான், மனிதன் ஆகின்றான். அந்த உரிமையை நெகிழ விடும்போது, மனிதன் தன் உயரிய நிலையிலிருந்து தாழ்ந்துவிடுகின்றான்.
மனிதன் உயர்நிலையை எய்துவதும், தாழ்நிலையில் வீழ்வதும், அவனின் கைகளிலேதான் உள்ளன. இதனை முன் கூட்டியே தெரிந்து கொண்ட நம் மூதாதையர், 'தீதும் நன்றும் பிறர் தர வாரா' என்றனர். இது ஒரு பெரும் வாழ்க்கைத் தத்துவம். எமக்கு ஏற்படுகின்ற தீமைகள் நாமாகத் தேடிப் பெற்றுக் கொள்ளுகின்ற சொத்துக்கள். அதற்காக நாம் மற்றவர்களை நொந்து கொள்வது, அறியாமையால் எழும் செயல். பிறரை நொந்து கொள்வது மட்டுமன்று, கடிந்து கொள்வதும், சில வேளைகளில் தண்டனை வழங்குவதும் உண்டு. ஒருவன்

Page 30
54 ஓ குமாரசாமி சோமசுந்தரம்
குற்றத்தைச் செய்வது அதனை மற்றொருவன் மீது சுமத்துவது என்பது இன்று நடைமுறை ஆகிவிட்டது. வாழ்க்கைத் தத்துவம் நடைமுறையாகவேண்டியது மிக அவசியம். ஆனால், வாழ்க்கைத் தத்துவம் அல்லாதது அதாவது வாழ்க்கைப் போலிகள் தாராளமாக நடைமுறையாதல் இன்று சர்வ சாதாரணமாகிவிட்டது. தத்துவம் நடைமுறையாவதற்குப் பதில், போலிகள் இன்றைய உலகில், நடைமுறையாதலே எம்முடைய பிரச்சினைகள் அனைத்துக்கும் காரணம் ஆகும். தத்துவம் என்பது உண்மை; போலிகள் யாவும்
பொய்யானவை.
பொய்மைக்கு மகுடம் சூட்டுவதில்தான் எத்துணை மகிழ்ச்சி, இந்த மாந்தர்களுக்கு. அதேவேளை, உண்மை அலட்சியத்திற்கு உள்ளாக்கப்படுகிறது. இதனால் சமூகத்தில் ஊழல்கள் மலிந்து காணப்படுகின்றன.
சாதாரணமாக, முள் தைத்துவிட்டது, கல் அடித்து விட்டது என்றுதான் கூறுகிறோம். ஆனால், அதில் உண்மை யில்லை. கல்லோ, முள்ளோ தாமாக எழுந்துவந்து நம்மைத் தாக்கவில்லை. மாறாக, நம் கால்கள் தான் அவற்றைத் தாக்கியுள்ளன. உண்மைக்குப் புறம்பானவற்றை ஆராதிப்பதில் மனிதசமூகம் திருப்தி காண்கின்றது. நாமே நமக்குத் தீங்கிழைக் கிறோம் என்பதை உணர்வதில்லை. நாம் செய்கின்ற பாவங் களைப் பிறர்தலையில்போட்டு, நம்மைத் தூயவர்களாகக் காட்டிக் கொள்வது கை வந்த கலையாகிவிட்டது. பொதுவாகப் பலம் கூடியவர்கள் இக்கலையில் தேர்ந்தவர்களாகக் காணப்படு கின்றனர். பலம் குறைந்தவர்கள் இரையாகின்றனர்.
மனிதன் தனக்கு உரிமையானவை எவை? அந்நிய மானவை எவை? என்பவற்றை பகுத்தறியும் ஆற்றலை வளர்த்துக் கொள்ளுதல் வேண்டும். மனிதனிடம் பகுத்தறிவு இயல்பாகவே உள்ளது. ஆனால், பெரும்பாலும் இது உள்ளார்ந்த நிலையில் வெளிப்படாமல் அடங்கிக்கிடக்கிறது. பகுத்தறிவு மனிதனுக்குள் உறங்கும்போது, அது எவ்வாறு அவனுக்குப பிரயோசனப்படும். அது பிரயோசனமுள்ளதாக ஆக்கப்படவேண்டுமானால், பகுத் தறிவு செயற்பாடாக வேண்டும். பகுத்தறிவு நடைமுறையில்

நல்வாழ்விற்குரிய நடைமுறைச் சிந்தனைகள் ே 55
செயல் ஆகும் போதுதான், நன்மை தீமைகளைப் பற்றியும்; உரிமைகள், உரிமைகள் அல்லாதன பற்றியும் மதிப்பீடு செய்யப்படும். மதிப்பீட்டினால் சரி, பிழைகள் என்றும்; உரிமை, அந்நியம் என்றும் வகைப்படுத்தப்படுகின்றன. சரியானவற்றை யும், உரிமையானவற்றையும் ஏற்றுக் கொள்வதும், அவற்றை நடைமுறை வாழ்க்கையில் கடைப்பிடிப்பதும் மனித தர்மம். அவ்வாறே, பிழையானவற்றையும், மனிதனுக்கு அந்நியமான வற்றையும் தள்ளிவைப்பதும், நடைமுறை வாழ்க்கையிலிருந்து விலக்கிவிடுவதும் மனித தர்மம் ஆகும். இவற்றிற்கெல்லாம் பெருந்துணிச்சல், தைரியம், மனஉறுதி, வீரம் என்பன தேவை. பேராண்மை என்றும், ஊராண்மை என்றும் இவற்றை நூல்கள் பேசுகின்றன. எல்லாவற்றையும் இழந்து, தனிமரமாகப் போர்க்களத்தில், நிலம் நோக்கி நிற்கின்ற இராவணனை நோக்கி, 'இன்று போய்ப் போர்க்கு நாளை வா' என்கிறான் இராமன். இதுதான் இராமனின் பேராண்மை - அதுவே அவனின் ஊராண்மை - அதாவது உயிர்கொடுத்தல் ஆகிய அதியுயர்ந்த வள்ளல் தன்மை. தவிச்சமுயல் அடிப்பது வீரம் அன்று; அது கோழைத்தனம். ஆனால் இன்றைய உலகில் கோழைத்தனம், வீரமாகும் விந்தையைப் பார்க்கின்றோம். தவிச்சமுயல் அடிப்பதே வாழ்க்கை நியதியாகிவிட்டது. வாழ்க்கையில் வெளிச் சம் எவ்வாறிருக்கும்? பகுத்தறிவு பயன்படுத்தபடி வேண்டிய இடத்தில் பயன்படுத்தப்படாமையே இதற்குக்காரணம். நல்லது, கெட்டது; சரி, பிழை, உரிமையானவை, அந்நியமானவை என்பவற்றை வேறு பிரித்து அறிவதற்கும் பகுத்தறிவு மனிதனுக்குத் துணையாகவேண்டும். பிரித்தறிந்து நல்லனவற்றை வாழ்க்கையில், மேற்கொள்வதற்குத் துணிச்சல் வேண்டும். கூடாதவற்றை விலக்குவதற்கு அதைவிடத் துணிச்சல் வேண்டும். இத்தகைய பகுத்தறிவும், துணிவும் உள்ளவனே மனிதன்.

Page 31
20. வழிகாட்டுதல் என்பது வாழ்ந்து காட்டுதல்
மிக எளிமையான வாழ்வையும், உயர்வான எண்ணங் களையும் கொண்டிருத்தல் மக்கட்பண்பு. அதுவே உயர்ந்த நாகரிகம் என்பர். நாகரிகம் ஆனது, ஆடம்பரத்திலோ, இடாம்பீக வாழ்விலோ; வெளிப்பகட்டிலோ; ஆடை அணிகள், மாட மாளிகைகள் என்பவற்றிலோ தங்கியிருக்கவில்லை. ஆனால் அவைதான் நாகரிகம் என்று நாம் தப்புக் கணக்குப் போட்டுக் கொண்டிருக்கிறோம். அது மட்டுமல்ல, சந்ததி சந்ததியாக அந்தத் தவறான எண்ணத்தை வளர்த்துக் கொண்டும் வருகிறோம். உண்மையான, நயத்தக்க நாகரிகம்; எளிய வாழ்விலும்; உயர்ந்த, தூய எண்ணங்களிலுமே தங்கியுள்ளது என்பதை நாம் உணர்ந்து கொள்ளுதல் நன்று. நாம் கற்கின்ற கல்வி, எம்மை இத்தகைய நாகரிகம் உள்ளவர்களாக உருவாக்க வேண்டும். அத்தகைய கல்வியே இன்று எமக்குத் தேவை. எளிய வாழ்வு என்பது ஏழ்மை வாழ்வு அல்ல. அதுதன்னையும், பிறரையும் வாழ் விக்கின்ற வாழ்வு; உயர்ந்த எண்ணங்களும் அப்படியே.
சிறுபராயத்திலே பழகிய பழக்கம், நல்ல தோ, கெட்டதோ பெரும்பான்மையும் சீவியபரியந்தம் தொடரும். அதனால் இளமையிலேயே பிள்ளைகள் நற்பழக்கத்தைப் பழகிக்கொள்ள வேண்டும். அதற்குப் பெற்றோர், ஆசிரியர், பெரியோர் பிள்ளைகளுக்கு வழிகாட்டவேண்டும். வழிகாட்டுதல் என்றால் வாழ்ந்துகாட்டுதல், என்பது கருத்து. வழிகாட்டுபவர்கள், எளிமையான வாழ்வினை வாழ்ந்து காட்டுவதன் மூலம்தான், பிள்ளைகளையும் பின்பற்றச் செய்யமுடியும். 'சொல்லுதல் யார்க்கும் எளிய, அரிய வாம் சொல்லிய வண்ணம் செயல், * என்கிறார் திருவள்ளுவர். சொல்வதிலும் செய்துகாட்டுதல் நல்ல பயனைத்தரும்.

நல்வாழ்விற்குரிய நடைமுறைச் சிந்தனைகள் இ 57
உணவு, உடை, விடயங்களிலும், ஏனையவற்றிற்குச் செலவு செய்கின்ற சந்தர்ப்பங்களிலும், பெற்றோர் சிக்கனத்தைக் கடைபிடித்தால், பிள்ளைகளும் அவர்களைப் பார்த்துச் சிக் கனத்தை மேற்கொள்ளப்பழகிக் கொள்வார்கள். சிக்கனம் என்பது உலோபித்தனமோ, கஞ்சத்தனமோ அன்று. ஊதாரித்தனமும், வீண்விரயமும் அற்று, தேவைக்குச் செலவு செய்வதையே சிக்கனச்செலவு எனப்படுகிறது. பணம் இருக்கின்றதே என்பதற் காகச் சிலர் வீண்செலவு செய்கின்றனர். இன்னுஞ் சிலர், அந்தஸ்தைப் பேண வேண்டுமென்பதற்காக, வருவாய்க்குக் கூடிய செலவில் ஈடுபடுகின்றனர். பிள்ளைகளுக்குத் தேவையற்ற தின்பண்டங்களையும், ஆடம்பர விளையாட்டுப் பொருட் களையும் விலைக்கு வாங்கித் திணிக்கின்றனர். உடுப்புக்களும், ஆடைகளும் வகை தொகையின்றி வாங்கிக் குவிக்கின்றனர். பாடசாலை செல்லும் பிள்ளைகளுக்கு 'பொக்கற் செலவுக்கென்று பணத்தை அள்ளிக் கொடுக்கின்றனர். சில வீடுகளில் வீசியெறியப் படுகின்ற உணவுப் பண்டங்கள் எத்தனையோ பேரைப் போஷிக்க உதவக் கூடியனவாக உள்ளன. கொட்டித் தூவப்படுகின்ற உணவுவகைகள் எம்மாத்திரம். இவற்றையெல்லாம் பகுத்தறி வுள்ள மனிதர்கள் ஆகிய நாம் சிந்திக்கும் காலம் எப்போது தான் வருமோ தெரியவில்லை.
இவ்வாறு ஊதாரித்தனமும், வீண் விரயங்களும் செய்வோர் மனித சமுதாயத்தில், இன்னொரு பகுதியினர் உணவின்றி, உடையின்றி, இருப்பிட வசதியின்றி, அடிப்படை வாழ்க்கை வசதிகளின்றி ஏழைகளாய், அகதிகளாய், ஆதர வற்றவர்களாய் கஷ்டப்படுவதை அறிந்தும் அறியாதவர்களாக இருக்கின்றார்களே! வீண் செலவு செய்யும் பணத்தைக் கொண்டு இவ்வாறு துன்புறுகின்ற ஏழைகளுக்கு வாழ்வளித்தால் எத்துணை நலமாக இருக்கும். இன்று எத்தனையோ பிள்ளைகள் வறுமை காரணமாகப் பாடசாலைப் படிப்பைப் பெற்றுக் கொள்ள முடியாதவர்களாக உள்ளனர். இன்னுஞ் சிலர் கல்வியைத் தொடரமுடியாமல், இடையில் நிறுத்திக் கொள்கின்றனர். நூல்கள், அப்பியாசக் கொப்பிகள், எழுதுகருவிகள் என்பவற்றை

Page 32
58 ஒ குமாரசாமி சோமசுந்தரம்
விலைக்கு வாங்கும் சக்தியற்றவர்கள் இவ்வாறு படிப்பை இடையில் முடித்துக் கொள்கின்றனர். இத்தகையவறிய பிள்ளைகளுக்குக் கல்வியைத் தொடர உதவி செய்தால், எத்துணை நன்மை செய்தவர்கள் ஆவர்.
'அன்ன யாவினும் புண்ணியங்கோடி ஆங்கோர் ஏழைக்கு எழுத்தறிவித்தல்"
- என்கிறார் பாரதியார்.
எளிமை வாழ்வு ஓர் அறம் ஆகும். பொருள், பணம் நம்மிடம் சேர்ந்துவிட்டால் அவையாவும் எமக்கே உரித்தானவை என்று எண்ணிவிடக்கூடாது. அவற்றின் தர்மகர்த்தாக்களாகவே நம்மை எண்ணவேண்டும். அவற்றைக் கண்டபடி ஊதாரித்தனம் செய்ய எமக்கு உரிமை இல்லை. இவ்வாறு காந்தியடிகள் கூறுவார். எமது பொருள் பண்டங்களைப் பகுத்துப் பலரும் பயன்கொள்ளச் செய்வதே நீதி. அளவு அறிந்து, சிக்கனம் பேணி, செலவு செய்து வாழ்க்கை நடத்தாதவர்களை வள்ளுவர் திருடருக்கு ஒப்பிடுகிறார். இடாம்பீக வாழ்விற்கும் திருட்டுக்கும் தொடர்பு உள்ளமையை வள்ளுவர் நன்கு காட்டுகின்றார்.
'அளவின் கண் நின்றொழுகல் ஆற்றார் களவின்கண் கன்றிய காதலவர்' - என்பது குறள்.
மகாத்மா காந்தியடிகள் மிக எளிமையான வாழ்வினை வாழ்ந்து காட்டியவர். எழுதி எழுதி நன்றாகத் தேய்ந்து கட்டையாகி விட்ட பென்சில்களைக்கூட எறிந்துவிடாமல் வைத்துப் பேணுவாராம். சிறு கடதாசித்துண்டுகளையும் வீசி விடாது, அவற்றில் கடிதங்களுக்கு மறுமொழி எழுதுவாராம். இவ்வாறு சின்னச் சின்ன விடயத்திற்கூட சிக்கனத்தைப் பேணிவந்தவர் காந்திமகான். இன்றைய பாடசாலை மாணவர்களும், காந்தியடி களைப் பின்பற்றிப் பேனா, பென்சில், கொப்பி, புத்தகங்களை நல்லமுறையில் பேணி, அவற்றைச் சிக்கனமாகப் பயன்படுத்த வேண்டும். பாடநூல்கள் இலவசமாகத்தானே கிடைக்கின்றன என எண்ணி அவற்றைத் துர்ப்பிரயோகம் செய்தல் ஆகாது. இன்னும் பலருக்குப் படிப்பதற்கு அடுத்துவரும் ஆண்டுகளில் இப்பாட நூல் ளைக் கொடுக்க வேண்டும். ஆதலால், அவற்றிற்கு உறை

நல்வாழ்விற்குரிய நடைமுறைச் சிந்தனைகள் 3 59
போட்டு, உள்ளே கிறுக்காமல் பவுத்திரமாகப் பேணிப் படித்து, பயன்பெறுதலே மாணவரின் கடமை. ஏழைமக்கள், மானத்தை மறைப்பதற்கே தேவையான ஆடையில்லாமல் இருக்கும்போது, தனக்கு மட்டும் ஏன் உடல் முழுக்க மூடத்தக்க ஆடையும், - மேல்ச்சட்டையும், தலைப்பாகையும் என்று எண்ணி, அவற்றைக் களைந்துவிட்டு, முழங்கால் வரை மாத்திரம் மறைக்கத் தக்கதாக நான்கு முழத்துணியை அரையில் கட்டிக்கொண்டு, ஏழை யைப் போல வாழ்நாள் முழுவதும் வாழ்ந்து காட்டிய பெருமகனார், காந்தியடிகள். அந்த அளவிற்குப் பெரிய தியாகங்களைச்செய்ய முடியாவிட்டாலும் தேவையற்ற வீண் ஆடம்பரச் செலவுகளைக் குறைத்து ஏனையோரையும் வாழ்வித்து, நலம் பெறுவோமாக.
21. பிறர்வதைபடுவதில் இன்பம் காணும் விசித்திரப் பிரகிருதிகள்
நாம் செய்யும் காரியங்கள் பிறருக்கு எந்த அளவிற்கு இடைஞ்சல்களையும் இன்னல்களையும் விளைவிக்கின்றன என்பதைச் சிறிது சிந்தித்துப் பார்ப்பவர்கள் நம்மில் எத்தனை பேர் இருக்கின்றனர்? சிலர் திட்டமிட்டு, மற்றையோருக்குத் துன்பங்களை ஏற்படுத்துவதற்காகவே செயல்புரிகின்றனர். இத்தகையோர் பிறர் துன்பப்படுவதில் இன்பம் அடைகின்றனர். இவர்களையும் மனிதர்களுக்குள் எப்படி அடக்குவது? மனிதரின் இயற்கை இயல்பு இரக்கம் ஆகும். ஈன, இரக்கம் இன்றி, பிற மனிதர்களுக்கு வேண்டுமென்றே இடையூறு செய்பவர்கள்; பிறரை வதைப்பவர்கள்; பல்வேறு துன்பங்கள், அநீதிகள், அநியாயங்கள் இழைப்பவர்கள் இன்று சமுதாயத்தில் பெருகிக் கொண்டே வருவதைப் பார்க்கும் போது கவலை கொள்ளாமல் இருக்க முடியவில்லை. மனித நாகரிகம் தொடங்கிய காலங் களிலும் பார்க்க, இன்று, மனித இனம் கூடிய அளவில் காட்டு மிராண்டித் தனத்தை அரவணைத்து ஆதரிப்பது ஏனோ என்பது பற்றிப் பேரறிஞர்கள் ஆய்வு நடத்த வேண்டிய அவசியமும் தேவையும் தற்பொழுது ஏற்பட்டுள்ளது.

Page 33
6O இ குமாரசாமி சோமசுந்தரம்
எத்தனைய்ோ ஆய்வுகள் இப்பொழுது நிகழ்த்தப் படுகின்றன. இவற்றில் அநேகமானவை ஆய்வு செய்தவர்களுக்குப் பட்டங்களைப் பெற்றுத் தருகின்றன என்பது உண்மைதான். ஆனால் இந்த ஆய்வுகளின் முடிவுகள், பெறுபேறுகள் என்பன எந்த அளவிற்கு மனித சமுதாயத்திற்குப் பயனுள்ளனவாக அமைகின்றன என்னும் வினாவும் எழத்தான் செய்கின்றது. மணல் சோற்றில் கல் ஆராய்வது போன்ற ஆய்வுகளாகவும் அவற்றுள் பல காணப்படுகின்றன. எவை எப்படியிருப்பினும், தற்கால மனிதர்கள், மனித இயல்புகளிலிருந்து பிறழ்ந்து, தமக்கும் பிறருக்கும் பிரச் சினைகளைத் தோற்றுவித்து சமுதாயத்தில் அமைதியைக் குலைத்து, சீரான வாழ்விற்குக் குந்தகமாக இருப்பது பற்றி விரைந்து சிந்தித்துச் செயல்படவேண்டியது மனித ஈடேற்றத்தில் சிரத்தை கொண்ட ஒவ்வொருவரினதும் கடமையும் பொறுப்பும் ஆகும்.
நேர்மையான வழியில் சென்று ஒரு அலுவலைப் பார்க்க முடியாத துர்ப்பாக்கிய நிலை தற்காலத்தில் ஏற்பட்டுவிட்டது. குறுக்குவழி தெரியாதவர்களுக்குக் கூட, ஆலோசனைகள் வழங்கு வதற்கு அமைப்புகள் தோன்றிவிட்டன. ஏதாவது கொடுக்காமல், எவரையாவது பிடிக்காமல் ஒரு காரியத்தை விரைவாக நிறைவேற்ற முடியாது என்ற எண்ணம், பாமரர்களிலிருந்து படித்தவர்கள் வரை ஏற்றுக் கொள்ளப்படுகிறது. ஏதாவது வாங்குபவர்களை மாத்திரம் குறை கூறிக் கொண்டும், குற்றம் சுமத்திக் கொண்டும் இருக்கின்றோமே தவிர, இவ்வாறு தயக்கம் இன்றி அள்ளிக் கொடுத்து, ஊழலை ஊக்குவிப்பவர்களும் குற்றத்தின் பங்குதாரர்கள்தான் என்ற உண்மை பற்றிச் சிந்திப்ப தாகத் தெரியவில்லை. இலஞ்சத்தைப் பெறுபவர்களைப் போன்றே, இன்னும் சொல்லப் போனால் அதிலும் கூடுதலாக, இலஞ்சம் கொடுப்பவர்கள், ஊக்குவிப்பவர்கள், உடந்தையாக இருப்பவர்கள் ஆகியோர் பெருங்குற்றத்தை, சமூகக் கொடுமை யைப் புரிந்தவர்கள் ஆவர். இலஞ்சம் பெற்றவர்களைப் போலவே இலஞ்சம் கொடுத்தவர்களும் தண்டனைக்குரியவர். பணம் உள்ளவர்கள், உடையவர்கள் இலஞ்சம் கொடுத்துத் தமது காரியங்களைச் சுலபமாக நிறைவேற்றிக் கொள்கின்றனர். கொடுப்

நல்வாழ்விற்குரிய நடைமுறைச் சிந்தனைகள் $ 61
பதற்குப் பணம் இல்லாதவர்களின் கதி என்ன? அவர்கள் எவ்வாறு தமது காரியங்களை நிறைவேற்றுவது? வாங்கிப் பழகியவர்கள், வாங்காமல் எந்தச் சிறிய காரியத்தையும் செய்ய விரும்புவ தில்லை; செய்தாலும் அருவெருப்போடும் காலம் தாழ்த்தியும் செய்கின்றனர். ஒரு முறைக்குப் பலமுறைகள், போய் வந்தால் தான் காரியம் நடக்கும். வீண் செலவும், வீண் அலைச்சலும் வீண் மன வேதனையும் இதனால் ஏற்படுகிறது. இவ்வாறு, படிகள் ஏறி இறங்கி அலைந்து துன்பப்படுவதைப் பார்த்து ஆனந்தங் கொள்வதில் தான் அங்குள்ளவர்க்கு எத்துணை அலாதி பிரியம். தாம் செய்யும் ஏமாற்று வித்தையால் எத்தனை உள்ளங்கள் நொந்து போகின்றன என்பதை அவர்கள் உணர்கின்றார்களா? அள்ளிக் கொடுத்து அலுவல் பார்த்து, இலஞ்சத்தை ஊக்குவிப்பவர்களுக்கு இது சமர்ப்பணம். இலஞ்சம் கொடுத்து, உங்கள் காரியங்களை மற்றவர்களுக்கு முந்திச் செய்வித்துப் போட்டோம் என்று கெட்டித்தனம் பேசலாம். ஆனால் அது உங்களுக்குப் பெருமை தரக் கூடிய விடயமன்று. கொடுமைக்குப் பெருமை ஏது? இலஞ்சம் பெறுவதற்குப் பயிற்சியளித்த சிறுமைதான் கிடைக்கும். மற்றையவர்கள் தம் கருமங்களைச் சரியான வழியில் சென்று செய்விக்க முடியாத நிலைக்கு யார் பொறுப்பாளி? தம் கடமையைச் சரியாகவும் முறையாகவும் செய்து கொண்டிருந்த ஒருவரை இலஞ்சம் பெறாமல் எதையும் செய்வதில்லை என்ற உறுதியான முடிவை எடுக்கக் கால்கோள் இட்டவர் யார்? எல்லாமே இலஞ்சம் கொடுப்பவர்கள் தான். இலஞ்சத்தை ஒழிப்பதற்கு ஒரே வழி இலஞ்சம் கொடுக்காதவர்களைக் கொண்ட சமுதாயத்தைக் கட்டியெழுப்புவது என்பதேயாகும். எல்லாக் கொடைகளும் எல்லோரும் அறியப் பகிரங்கமாகச் செய்யப் படுகின்றன. இலஞ்சக் கொடையானது இடக்கையால் கொடுப் பதை வலக்கை கூட அறிவதில்லை. அத்துணை அற்புதமாகக் கைமாற்றம் நிகழ்கிறது. அப்படியானால் தடுப்பது எப்படி? இலஞ்சம் கொடுப்பவர்கள் கையில் தான் உள்ளது, என்பதை
அறிந்துகொள்வோமாக.

Page 34
22. அதிருஷ்டத்தை நம்பினால் வாழ்வு என்னாகும்
இன்று, பொதுவாக, அதிர்ஷ்டத்தில் நம்பிக்கை வைத்து வாழ்க்கை நடத்துபவர்கள் அதிகமாகக் காணப்படுகின்றனர். ஆனால் தன்னில் நம்பிக்கை வைத்து, தன்னம்பிக்கையோடு வாழ் பவர்கள் சமுதாயத்தில் குறைவாகவேயுள்ளனர். இந்நிலைமை ஏற்படுதற்குரிய காரணங்கள் ஆராயப்படவேண்டியவை.
அதிர்ஷ்டம், சொல்லாமல் வருவது; எப்பொழுது நிகழும் என்று கொள்ளாமல் நிகழ்வது என்கின்றனர். அதிர்ஷ்ட எண், அதிர்ஷ்டப் பெண்; அதிர்ஷ்டநாள், அதிர்ஷ் டக்கோள் என்றெல்லாம் வகுத்து வைத்திருக்கின்றனர். மூன்றாவது பெண் பிறந்தபின்னர்தான், அதிர்ஷ்டம் என்னைத் தூக்கிவிட்டுள்ளது; இன்ன இலக்க வாகனம் வந்ததற்குப் பிறகு அல்லது இந்த வீட்டில் குடிபுகுந்த பிற்பாடுதான் எனக்கு அதிர்ஷ்டம் அடிக்கிறது என்று பலர் சொல்வதைக் கேட்டிருக்கிறோம். இன்னார் ஒரு காரியத் திற்குச் செல்லும் போது முன்னுக்கு முழு விசலமாக வந்தால் அந்தக் காரியம் கைகூடி விடும். குறித்த ஒரு வரை அழைத்து, காலையில் முதன்முதலாகப் பொருளொன்றை அவருக்கு விற்பனை செய்து , அவர் கையினால் பணம் பெற்று கைவிரல் களில் நெட்டி முறித்த அப்பணத்தைக் கண்களில் ஒற்றிப் பணப் பெட்டியில் வைத்துவிட்டு, வியாபாரத்தைத் தொடங்கினால் அதிர்ஷ்டம் தன்னோடுதான் இருந்து கொள்ளும் என நம்பு பவர்களும் இருக்கின்றனர்.
வியாபாரத்தில் மாத்திரமல்ல, மற்றும் பல்வேறு துறை களிலும், படித்தவர்களும் சரி, படியாதவர்களும் சரி, அதிர்ஷ்டம் என்று ஒன்று உண்டு; அதன்முழுமையான கிருபாக டாட்சம் கிடைத்தால்தான் வாழ்க்கையில் முன்னேறலாம், என்பதில் அசையாத நம்பிக்கை கொண்டு வாழ்ந்து வருகின்றனர். பதவி யிலமர்தல், பதவியுயர்வுபெறல், செல்வம் சேர்தல் பரீட்சையில்

நல்வாழ்விற்குரிய நடைமுறைச் சிந்தனைகள் ஒ 63
சித்தி பெறுதல், நல்ல குடும்பம் அமைதல், நன்மக்கட்பேறு, காரியசித்தி, தொழில் பலிதம், உலக சேமங்கள் அனைத்துமே அதிர்ஷ்ட தேவதையின் அருள் நோக்கினைப் பொறத்ததே என்று எண்ணுகின்றனர். தெய்வநம்பிக்கையற்றவர்களும் அதிர்ஷ்டத்தில் நம்பிக்கை கொண்டு விளங்குகின்றனர்.
கொடுக்கிற அதிர்ஷ்டம் கூரையைப் பிய்த்துக் கொண்டு வந்து கொடுக்கும் என்றொரு கூற்று நம்மிடையே புழக்கத்தில் இருக்கின்ற மையைப் பலர் அறிவர். இதன் அர்த்தம் என்ன? மனிதர்கள் அதிர்ஷ்டத்தைத் தேடிப் போகவேண்டியதில்லை. மனிதர்கள் இருக்குமிடத்தை நாடி அதிர்ஷ்டம் வந்து சேரும் என்பது தான், இக்கூற்றினது பொருள். தன்னைத் தேடி அதிர்ஷ்டம் வரும்வரை, எதிர்பார்த்து ஏங்கிய வண்ணம், காத்துக் கிடப்பது தான், மனிதனுக்குக் கதியாகிவிட்டது. மனிதன் அதிர்ஷ்டசாலி யாக இருப்பின் இக்கூற்றின் பிரகாரம் அதிர்ஷ்டம் தேடிவரக்கூடும், அன்றேல் கூற்றுவன் தேடி வரும்வரை காத்துக் கிடக்க வேண்டியது தான். என்னே, மனிதனின் மதியீனம். அறியாமையின் உச்சியில் மனிதன் வீடுகட்டி வாழ்கின்றானோ என எண்ணத்தோன்றுகிறது. அதிர்ஷ்டம் எங்ங்னம் ஒருவனுக்கு அருட்டம் ஆனது என்பதற்கு ஒரு கதையுண்டு.
ஓர் ஊரிலே, அதிர்ஷ்டத்தில் முற்றுமுழுதாக நம்பிக்கை கொண்ட அரசன் இருந்தான், அதிகாலையில், நித்திரை விட்டெழுந்ததும் கண்களைத் திறக்கும் போது முதலில் சோடிக் காகங்களில் விழித்தால் அதிர்ஷ்டம் உண்டாகும் என்று யாரோ அவ்வரசனுக்குச் சொல்லிவைக்கவே, அரசனும், யாராவது அதிகாலையில் சோடிக் காகங்களைக் காணநேர்ந்தால், உடனே தனக்கு அறியத் தரும்படியும், அவ்வாறு தெரியப்படுத்து பவர்களுக்கு ஆயிரம் பொற்காசு பரிசாகக் கொடுப்பதாகவும் பறை அறைவித்திருந்தான்.
ஒருநாள் அதிகாலையில், அரண்மனைக்கு அண்மையில் உள்ள மரம் ஒன்றின்கீழ் படுத்துறங்கிய பிச்சைக்காரன் ஒருவன், கண்விழித்தபோது எதிரே, மரக்கிளையொன்றில் இரண்டு காகங்கள் சோடியாக அமர்ந்திருப்பதைக் கண்ணுற்றான். மிக்க

Page 35
64 ஒ குமாரசாமி சோமசுந்தரம்
மகிழ்ச்சியுற்றவனாக, அதிர்ஷ்டம் தன்னை தேடிவந்து விட்டதாக எண்ணியவனாய், அச்செய்தியை அரசனிடம் சொல்வதற்கு ஓடோடிச்சென்றான். தூதுவர் மூலம் அரசனுக்குச் செய்தி அனுப்பினான்.
அந்த நல்ல செய்தியைக் கேள்வியுற்ற அரசன், கண்களை இறுகக் கைகளால் பொத்திக் கொண்டு, தூதுவர்களின் உதவியுடன் பிச்சைகாரனையும் அழைத்துக் கொண்டு, சோடிக் காகங்கள் அமர்ந்திருந்த மரத்தை நோக்கி விரைந்தான். அங்கு சென்றதும் கண்ட காட்சி பிச்சைக்காரனை மிரளவைத்தது; அரசனை வெகுள வைத்தது. அரசன் கண்களைத் திறந்து பார்த்தசமயம் சோடிக் காகங்களில் ஒன்று பறந்துவிட்டது, மற்றையதுதான் அங்கிருந்தது. பிச்சைக்காரன் பொய் சொல்லி ஏமாற்றிவிட்டான் என்று கடிந்த அரசன் குற்றவாளியைக் கழுவிலேற்றும்படி கட்டளையிட்டான். அதுகேட்டு, பிச்சைக்காரன் தான் குற்றமற்றவன் என்பதைக் கூறி, அரசனிடம் அனுமதிபெற்றுப் பின்வருமாறு கூறினான்.
‘அரசே, இன்று அதிகாலை கண்விழித்தபோது முதலில் எதிரே மரக் கொப்பில் இருந்த சோடிக்காகங்களைக் கண்டது உண்மை. சோடிக்காகங்களில் அதிகாலையில் முழித்தால் அதிர்ஷ்டம் உண்டாகும் என்ற மகாராசா பறைசாற்றுவித்தமை எனக்கு நினைவிற்கு வரவே ஓடோடிவந்தேன். நான் பெற்ற அதிர்ஷ்டம், மகாராசாவும் பெற வேண்டும் என்பதே என் நோக்கம். ஆயிரம் பொற்காசு பெறுவதல்ல. இப்பொழுதுதான் தெரிகிறது, சோடிக்காகங்களில் முழித்தபடியினால்தான் இந்தக்கதி எனக்கு ஏற்பட்டதென்று. எனக்கேற்பட்ட துர்அதிர்ஷ்டம் தங்களுக்கும் ஏற்படக்கூடாது என்பதே என் விருப்பம். இன்றுடன் அதிர்ஷ்டம் என்று கொள்வதை விட்டு விடுங்கள்’ என்றான். அரசனுக்கு இப்பொழுதுதான் அறிவு வந்தது. முயற்சி திருவினை யாக்கும்! ஊழையும் உப்பக்கம் காண்பர் முயற்சியுடையோர்; முயற்சிதன் மெய்வருந்தக் கூலிதரும். திட்டமிட்டு, இலக்குகளை அடைவது முயற்சியால்; திட்டமில்லாதது. அதிட்டம் எனவே, முயற்சியால் ஆகாததொன்றில்லை; விடாமுயற்சி வெற்றிதரும்; அதிட்டத்ததினால் ஆவது மிக அற்பம். முயற்சிக்கே முதலிடம் கொடுத்து வாழப்பழகிக் கொள்வோமாக.

23. அனுபவங்களைப் பெறுதலே கற்றல்
சமுதாயத்தில் மனிதர்கள் எல்லோரும் அதன் உறுப்பினர் கள். ஒவ்வோர் உறுப்பினருக்கும் ஆற்றவேண்டிய கடமைகள், பங்குகள், பணிகள் என்பனவும் உண்டு. பொறுப்புக்களும் உண்டு. அவற்றைத் தட்டிக்கழிக்கக் கூடாது. அவ்வாறு தட்டிக்கழிக்க நேர்ந்தால், அப்பணிகளை அவர்களுக்குப்பதில் வேறு எவரோ சுமக்கின்றார்கள், என்பதுதான் அர்த்தம். அத்தகைய பதில் வேலைகள் தமக்கென ஒதுக்கப்பட்ட பணிகளுடன் மேலதிக மாகவே செய்யப்படுகின்றன. அதனால் பலர் பாடுபட்டு உழைக்க நேரிடுகிறது; மிகச் சிலர் எவ்வித வேலைகளும் செய்யாமல் இருந்துகொண்டு, பிறர் உழைப்பில் இடாம்பீகமாக சொகுசு வாழ்க்கை வாழக்கூடியதாக உள்ளது. இது நியாயமற்ற ஒருநிலைப் பாடு. பாடுபட்டவன்தான் பட்டத்திற்கு இருக்க உரிமை பெற்றவன். ஆனால் பாடுபடாமலே பட்டத்திற்கு இருக்கின்றனர் சிலர். அதைப்பார்த்து ஆசைப்படுகின்றனர் பலர். இந்த நிலைமை மாறவேண்டும். அதுவே சமூகநீதி.
குடும்பம் ஒரு சமூகம். பெற்றோர், பிள்ளைகள் அதன் உறுப்பினர்கள். ஒவ்வொருவருக்கும் கடமைகள், பணிகள் என்பன உண்டு. தனியப் பெற்றோர் மாத்திரந்தான் பணிகளையும் வேலைகளையும் செய்யவேண்டும் என்பதல்ல. பிள்ளைகளும், வீட்டுப் பொறுப்புக்கள் சிலவற்றை ஏற்று நிறைவேற்றவேண்டும். ஒவ்வொரு வரும் ஏதோ ஒருவகையில் தமது உழைப்பினைக் குடும்பத்திற்கு நல்க வேண்டும். அத்தகைய உழைக்கும் மனப் பாங்கினைக் கொண்ட உறுப்பினர்களை உள்ளடக்கிய குடும்பந்தான் நல்ல குடும்பம்; சீரும் சிறப்பும் பெறும் குடும்பம். சிலர் இரவு பகலாக, மெய்வருத்தம் பாராமல், ஊண் இன்றி, உறக்கம் இன்றி உழைக்க; இன்னும் சிலர் அவர்களின் உழைப்பின் பயன்களை உரிமை கோரிப் பெற்று அனுபவிக்கின்றனர். இத்தகையோர் இருக்கும் குடும்பம், போற்றுதலுக்குரிய குடும்பம் அன்று.

Page 36
66 ஓ குமாரசாமி சோமசுந்தரம்
இன்று, பாடசாலைப் படிப்பையோ, வேறு உயர்கல்விப் படிப்பையோ மேற்கொண்டுள்ள பிள்ளைகள், பெற்றோருக்கு வீட்டு வேலைகளில் உதவுவது என்பது மிக அரிதாகவே உள்ளது. படிப்பை முடிக்கும்வரை, படிப்பைத்தவிர்ந்த ஏனைய வேலை களைச் செய்தல் ஓர் அருவருப்புக்குரிய விஷயமாகப் பல பிள்ளை கள் எண்ணுகின்றனர். ஒரு சிறிய வேலையைச் செய்வதற்குக் கூடக் கூலிக்காரர்களையும், வேலைக்காரர்களையும் அமர்த்தும் பழக்கம் நம்மிடையே ஏற்பட்டுவிட்டது.
'விடிஞ்சால், பொழுதுபட்டால், புத்தகங்களையும் தூக்கிக் கொண்டு படிப்பு, படிப்பு என்று அலைகிறார்கள். வீட்டு வேலைகளைச் செய்வதற்குப் பிள்ளைகளுக்கு எங்கே நேரம். உடுப்புக்களைக் கூட நான் தான் தோய்த்துக் கொடுக்கிறேன். இல்லையென்றால், ஊத்தை உடுப்பைத்தான் போட்டுக் கொண்டு போங்கள்’- இவ்வாறு பெற்றோர்கள் கூறிக்கொள்ளுகிறார்கள். பெற்றோரின் தியாகமனப்பாங்குதான் என்னே! வீட்டு வேலை களிற் பங்கேற்கச் சொன்னால் எங்கே பிள்ளைகளின் படிப்புப் பாதிக்கப்பட்டுவிடுமோ என்று பெற்றோர்கள் அஞ்சுகிறார்கள். அந்த அச்சத்தின் விளைவே பெற்றோரின் தியாக உணர்வு. பிள்ளைகளை நோகாமல், நொடியாமல் வளர்த்துப் போட வேண்டும் என்று பெற்றோர்கள் கஷ்டப்படுகிறார்கள். பிள்ளை களுக்கு வேண்டிய, வேண்டாத வசதிகளையெல்லாம் செய்து கொடுக்கிறார்கள். இரவில் வெகுநேரம் கழித்து வீடு திரும்பி னாலும் வரும் வரை காத்திருந்து, வந்த பின் இரண்டாம் கதை பேசாமல், அவர்களுக்கு உணவளித்து, படுக்கவைத்துவிட்டு, தாம் படுக்கைக்குப் போகும் பெற்றோர்கள் பலர் உள்ளனர்.
'சனி, ஞாயிறு, விடுமுறை நாட்களில் கூட, வீட்டிலே, குனிந்து ஒரு துரும்புதன்னிலும் எடுக்காதுகள், என்ரை பிள்ளைகள்' என்று பெருமையுடன் கூறும் பெற்றோரையும் பார்த்திருக்கின் றேன். உண்மையில் இவையெல்லாம், பிள்ளைகளுக்கோ, குடும்பத்திற்கோ பெருமைதரக்கூடிய விஷயங்கள் அல்ல. மாறாக, பிள்ளைகளைப் பாரதூரமாகப் பாதிக்கும் விஷயங்கள் என்பதை ஒவ்வொருவரும் உணர்ந்த கொள்ள வேண்டும்.

நல்வாழ்விற்குரிய நடைமுறைச் சிந்தனைகள் இ 67
தமது அளவற்ற அன்பும், நிகரற்ற தியாகமும் தம்பிள்ளைகளை விவரம் தெரியாதவர்களாக ஆக்கிவிடக்கூடாது. வீட்டிலே பல வாழ்க்கை அனுபவங்களைப் பெற்றுக்கொள்ள வேண்டியவர்களாகப் பிள்ளைகள் இருக்கின்றனர். அந்த அனுபவங்களை வீட்டில் பெற்றுக் கொள்வதற்குச் சந்தர்ப்பங் களை அளிக்கப் பெற்றோர் தவறக்கூடாது. அப்படித் தவறும் பெற்றோர்கள் தம் பிள்ளைகளுக்குத் தீங்கிழைத்த குற்றத்திற்கு ஆளாவர். பிள்ளைகள் வீட்டு வேலைகளில் பங்கு கொள்வதற்கு மறுப்பதில்லை. ஆனால் பெற்றோர் விடுகிறார்களில்லை என்பதே பொதுவான அபிப்பிராயம். பிள்ளைகளை வளர்ந்த பின்னர் வேலையில் பங்குகொள்ளச் சொன்னால் பஞ்சிப்படு கிறார்கள். வேலை செய்வது கெளரவக்குறைவு. என்னும் மனப் பாங்கு வளர்ந்துவிடுகிறது. வளர்ந்து சமூகத்துடன் இணையும் போது, கண்களைக்கட்டிக் காட்டில் விட்டுவிட்ட உணர்வினை அப்பிள்ளைகள் பெறுகின்றனர். அந்த நிலையில், தான் உழைக் காமல், வாழ்வதற்குப் பிறர் தய வினை எதிர்பார்த்து நிற்கும் நிலையில், பிறரின் வெறுப்புக்கு உள்ளாகின்றனர். அப்போதுதான் இளம்பராயத்தில் செய்த தவறுகளை உணர்கின்றனர். கண்கெட்ட பின் சூரியநமஸ்காரம் எதற்கு? என்ற நிலைப்பாடு ஆகிவிடுகிறது.
காலையில், பாடசாலைகளுக்குச் செல்வதற்கு முன்னர் வீடுகளில், கொஞ்சநேரத்திற்குத் தன்னிலும், சொற்ப வேலைகளை யாதல் செய்து அனுபவங்களைப் பெறுவதற்குப் பிள்ளைகளுக்கு வாய்ப்பினை வழங்க வேண்டும். மற்றும் நேரங்களிலும், விடுமுறை நாட்களிலும் இயன்ற அளவிற்குப் பிள்ளைகள் வீட்டு வேலைகளில் பங்கு கொள்வதற்குப் பெற்றோர் அனுமதிக்க வேண்டும். ஓரளவு வயது வந்தபிள்ளைகள் தங்களுடைய கருமங் களைத் தாமே ஆற்றவேண்டும். பெற்றோரே எல்லாவற்றையும் செய்துகொடுத்துப்பிள்ளைகள் பெறும் அனுபவங்களை, அவர்கள் பெற்றுக் கொள்ளாது தடுத்தல் ஆகாது. அனுபவங்களைப் பெறுதலும் கற்றலே ஆகும். வெறும் புத்தகப் பூச்சிகளாகப் பிள்ளைகளை மாற்றக்கூடாது. படிக்கும் காலத்தில் வீட்டிலும் வேலையா? என்ற உணர்வு அகற்றப்படுதல் அவசியம். எல் லோரும் ஏதோ விதத்தில் உழைத்து வாழ வேண்டும், வீணில் உண்டு களித்திருத்தல் தவறு எனும் பாடத்தை உளங்கொள்வோமாக.

Page 37
24. பண்புப் பரிவர்த்தனை
- இன்றைய சமூகம் நல்லவர்கள், தீயவர்கள் ஆகிய இரு சாராரையும் கொண்டுதான் இருக்கிறது. இதுதவிர்க்க முடியாத நிலை, அமிர்தமும் நஞ்சும் ஒரே இடத்தில் தோன்றின என்று நூல்கள் கூறுகின்றன. நல்ல முத்தும், பவழமும் காணப்படுகின்ற அதே கடலில், யானையையும் விழுங்கும் கொடிய திமிங்கிலங் களும் உள்ளன. எனவே, பகுத்தறிவு கொண்ட மனிதன், தன் மேலான பிரித்துணரும் ஆற்றலைச் செவ்வையாகப் பயன்படுத்தி நல்லன எவை, தீயன எவை; சரி எது, பிழை எது? செய்யத் தகுந்தவை எவை, செய்யாது விலக்கப்பட வேண்டியவை யாவை என்பனவற்றை உணர்ந்து கொள்ளவேண்டும். அப்பொழுதுதான் மனிதன் மனிதனாகின்றான். மனிதனை மனிதனாக்கும் மகத்தான பணிகளை, முன்னைய காலங்களில், குடும்பமும், சுற்றமும், வழிபாட்டுத்தலங்களும், பாடசாலைகளும், கல்விநிலையங்களும் ஆற்றி வந்துள்ளன. தற்காலத்தில், அச்சமூக நிறுவனங்கள், அம்மேலான கைங்கரியங்களைச் சற்றுத் தளர்த்திவிட்டனவோ என எண்ணத் தோன்றுகிறது.
மனிதர்கள் எத்துணை அறிவு, ஆற்றல்களைக் கொண் டிருப்பினும், அவையாவும் உள்ளார்ந்த நிலையில் அடங்கிக் கிடப்பனவே. அவை பயன்படவேண்டுமென்றால், அவற்றை வெளிக் கொணரவேண்டும். கீழைத்தேய, மேலைத் தேயத்தத்துவ ஞானிகளும் கல்வியியலாளர்களும் இக்கருத்தையே வெளிப் படுத்தியுள்ளனர். இதிலிருந்து பிறக்கின்ற பேருண்மை என்ன வெனில், மனிதர்கள், அறிவித்தால் அறிந்து கொள்பவர்கள், தெரிவித்தால் தெரிந்து கொள்பவர்கள் என்பதாகும். அறியத் தரவோ, தெரியத்தரவோ எவரும் முன்வராதபட்சத்தில் மனிதர்கள் மனிதர்களாக வாய்ப்பில்லை. இதனை நாம் உணர்ந்துகொண்டு, குழந்தைகளும் பிள்ளைகளும் வளர்ந்தவர்களும் நல்வாழ்விற்கு அறிந்து கொள்ள வேண்டியவற்றையும், தெரிந்து கொள்ள

நல்வாழ்விற்குரிய நடைமுறைச் சிந்தனைகள் 3 69
வேண்டியவற்றையும், உணர்ந்து கொள்ள வேண்டியவற்றையும் பெற்றோர், பெரியோர், ஆசிரியர் என்போர் இளந்தலைமுறை யினருக்கு வழங்கவேண்டியது அவசியமாகும்.
மிகச்சிறந்த பேரறிஞரான, கிரேக்க நாட்டுத்தத்துவஞானி பிளேற்றோ, ஒருநாள் தெருவில் சென்றுகொண்டிருந்தார். போகும் வழியில் சிறுவன் ஒருவன் வம்புகள் செய்து கொண்டிருப்பதைச் கண்ணுற்றார். அதனால் அத்தெருவில் போவோர் வருவோர் பல்வேறு தொல்லைகளுக்குள்ளானார்கள். பிளேற்றோ உடனே நேராக சிறுவனின் தந்தையிடம் சென்றார். அங்கு நல்லவற்றை எடுத்துக் கூறித் தந்தையைத் திருத்தினார். தந்தையே குடும்பத் தலைவர். தந்தை திருத்தமாக நடப்பாரேயானால், குடும்பத்தவர் அனைவரும் நல்லவர்களாகவே ஒழுகுவர். தந்தை உள்ளிட்ட குடும்பத்தவரின் தன்மையே, குழந்தைகளின் நடத்தையையும் தீர்மானிக்கின்றது. வீட்டில் வாழுகின்ற வளர்ந்தவர்களின் அசமந்தப் போக்கு அல்லது அசட்டை அல்லது தவறான நடத்தையே, வளர்ந்து வருகின்ற சிறுவர்களைப் பிறழ்வான நடத்தைகளிலும் பிறருக்கு இடர்தரும் செயல்களிலும் அச்சமின்றி ஈடுபடச் செய்கின்றன. இதனை உணர்ந்த பிளேற்றோ குறும்புகள் செய்யும், சிறுவனை எதுவும் கூறாது, தந்தையைத் திருத்த முயன்றார். தந்தை திருத்தப்பட்டுவிட்டால், தனயன் தாமாகவே திருந்திவிடுவான் என்று நினைத்த தத்துவமேதை பிளேற்றோ அவ்வாறு செய்தார்.
பிற்காலங்களில், சமூகப் பெரியார்கள், பெற்றோர்கள், வளர்ந்தவர்கள் ஆகியோர் தவறிழைக்கும் பிள்ளைகளையும், இளைய சந்ததியினரையும் நேருக்கு நேர் சொல்லித் திருத்தி னார்கள். அவர்களின் சொற் கேட்டு, பழி பாவங்களுக்கு அஞ்சி நல்லவர்களாக வாழத் தலைப்பட்டனர் இளஞ்சிறார்கள். ஆனால் அண்மைக் காலங்களில், சமூகத்தில் வளர்ந்தவர்களும் பெரியவர் களும்; வயதிலும் அனுபவங்களிலும் குறைந்த இளையவர்களின் நடத்தை பற்றி எதுவுமே அவர்களுக்குக் கூறாமலும், அவர்களை வழி நடத்தாமலும் ஒதுங்கிக் கொண்டனர் போலத் தோன்றுகிறது. இதற்குப் பல காரணங்கள் இருக்கலாம். தாம் உண்டு, தம்

Page 38
70 ஐ குமாரசாமி சோமசுந்தரம்
வேலையுண்டு என இருந்துவிட்டால், தமக்குத் தொல்லைகள் இருக்காது என எண்ணக்கூடும். அது சமுதாயத்திற்கு நன்மை தராது. தங்களுடைய முதிர்ந்த வாழ்க்கை அனுபவங்களை அடுத்த சந்ததியினரிடம் பகிர்ந்து கொள்ளுதல் அவசியம். அப்பொழுது தான் ஒழுங்கான சமுதாயத்தைக் கட்டியெழுப்பமுடியும். மனிதர்கள் அறிவிக்க அறிந்து கொள்ளும் இயல்பினர் என்பதை முன்பு கூறினோம். அதேவேளை நல்லவற்றைச் சொல்பவர்கள் தம் வாழ்க்கையை ஒழுங்காக நடத்துபவர்களாக இருத்தல் வேண்டும். தம்மிடமுள்ள தீமைகளை அகற்றிவிடவேண்டும். அப்பொழுது தான் இளையவர்கள், முதியவர்களின் சொல்லைக் கேட்பர், என்பதையும் உணர்ந்து கொள்ள வேண்டும். பெரியவர் கள் தாமும் முறையாக வாழ்ந்து காட்டி, இளைய சமுதாயத் தினரையும் வழிப்படுத்துவார்களேயானால் நாளைய சமுதாயம் நலமாகவே மலரும் என்பதில் ஐயமில்லை.
25. திருப்தி இல்லாதவர் வாழ்வில் விரக்தி குடியிருக்கும்
'செல்வம் என்பது சிந்தையின் நிறைவே, ' இது ஆன்றோர் வாக்கு. சிந்தையின் நிறைவு என்பது மனத்திருப்தி. போதும் என்ற மனம் வாய்க்கப் பெறுதல் மிக அரிது. அது கிடைத்துவிட்டால் அதுவே நிறைந்த செல்வம். திருப்தி இல்லாதார் வாழ்வில் விரக்திதான் நிறைந்திருக்கும். விரக்தி உள்ள இடத்தில் மகிழ்ச்சி இருக்காது. எனவேதான், வாழ்வில் திருப்தி யிருத்தல் அவசியம். திருப்தி இருந்தால் மகிழ்ச்சி ததும்பும்.
திருப்தியைக் கெடுப்பது மனிதரிடம் காணப்படுகின்ற அங்கலாய்ப்பு ஆகும். ஆகாசக் கோட்டைகளைக் கட்டுவதில் மனிதர்கள் அசகாய சூரர்கள். பகற்கனவுகள் காண்பதிலும் வல்லவர்கள். தமக்கு மேல் இருப்பவர்கள் வாழுகின்ற ஆடம்பர வாழ்க்கையைப் பார்த்து அவர்களைப் போலச் சொகுசாக வாழமுடியவில்லையே என்று எப்போதும் ஏக்கப் பொருமூச்சு

நல்வாழ்விற்குரிய நடைமுறைச் சிந்தனைகள் இ 71.
விடுபவர்கள் வாழ்வில் எவ்வாறு நிம்மதியை அடையமுடியும்? தமக்குக்கீழே, பல்வேறு பற்றாக்குறைகளின் மத்தியில் வாழுகின்ற மக்களின் பரிதாப நிலையிலும் தம்முடைய வாழ்க்கை நிலை எவ்வளவோ மேலானது என்று எண்ணி, தமது வாழ்வில் திருப்தி காண்பவர்கள் எவரோ, அவர்கள் நிம்மதியும் மகிழ்ச்சியும் பெற்றுவாழ்கின்றனர்.
வாழ்க்கையில் அங்கலாய்ப்புக்கள் இருக்கக்கூடாது என்று சொல்லப்படுகின்றதே தவிர, வாழ்க்கைக் குறிக்கோள்கள் வேண்டாம் என்று கூறப்படவில்லை. குறிக்கோள்கள் வேறு; அங்கலாய்ப்புக்கள் வேறு. வாழ்க்கையில் குறிக்கோள்கள் இருந்தால்தான், மலர்ச்சி பெறும். குறிக்கோள்கள் அடையப்படக் கூடியன. அதுவும் நேர்வழியில்; நியாயமான முறையில். அங்கலாய்ப்புக்கள், பெரும்பாலும் அவ்வாறு அடையப்பட முடியாதன. மனநிம்மதியைக் கெடுப்பன. அடையப்படமுடியாத பட்சத்தில் விரக்தியை ஏற்படுத்துவன. வேண்டாத ஆசைகளே, மனிதனிடம் அங்கலாய்ப்பாக உருவெடுத்து, அவனின் உடலையும், உள்ளத்தையும் வேதனைக்கு உட்படுத்துகின்றன. சில வேளைகளில் பிசகான வழியில் அங்கலாய்ப்புக்கள் சில எய்தப் பெற்றாலும், மனித மனம் திருப்தியடையாத நிலையி லேயே இருக்கும். குற்றமுள்ள நெஞ்சு குறுகுறுக்கும். குற்ற உணர்வு எப்போதும் மனத்தில் நிம்மதியை ஏற்படுத்த அனுமதியாது. எவ்வளவு உயர உயரப்பறந்து மேலே போனாலும் வானம் தொட்டுவிடமுடியாததாகவே இருக்கும். அவ்வாறே ஆசையும், அதிலிருந்து பிறக்கின்ற அங்கலாய்ப்பும் எல்லை யற்றதாக, எட்டமுடியாததாகப் போய்க்கொண்டே இருக்கும். ஆசைக்கோர் அளவில்லை; அங்கலாய்ப்பிற்கு ஒர் எல்லையில்லை. அவற்றுள் சிக்கிவிட்டால் தவிக்கநேரிடும். அவற்றுள் சிக்காமல் தவிர்த்துக் கொள்வதுதான் விவேகம் ஆனசெயல்.
போதும் என்ற மனம் எப்பொழுதும் ஓர் குறிப்பிட்ட எல்லைக்குள் இருப்பது. அது ஒரு மாயைத் தோற்றத்தைத் தருவதில்லை. அங்கு உண்மையே உள்ளது. எனவே நிறைவானது. நிறைவான வாழ்வு எளிமையில் தான் தங்கியுள்ளது. போதும்

Page 39
72 ஓ குமாரசாமி சோமசுந்தரம்
என்ற மனம், எளிமையில் தான் இருக்கிறது. எளிமையில் தான் அமைதியும், நிம்மதியும் களிநடம்புரிகின்றன. 'போதும் என்ற மனமே பொன்செய்யும் மருந்து' என்ற முதுமொழி எத்துணை பொருள் பொதிந்தது என்பதை உணர்ந்து கொள்ளவேண்டும்.
திருப்தியுள்ள வாழ்வைப் பெற்றவன் சிரஞ்சீவியாக வாழ்கின்றான். எந்த நோயும் அவனை அணுகுவதில்லை. போது மென்ற மனம் எனும் அருமருந்து அவனிடம் திரண்டிருப்பதே காரணம். திருப்தியான வாழ்விற்குப், பொருள், பணம், பண்டம், புகழ், பதவி, அந்தஸ்து என்பவற்றைத் தேடி அடைவதால் அவை உதவமாட்டா. உண்மையில் அவற்றால் வாழ்வில் திருப்திக் குறைவும், நிம்மதியின்மையும்தான் உண்டாகின்றன. மனத்தை நாடி, மனத்தைத் திருப்தி கொள்ளச் செய்வதன் மூலம்தான், வாழ்க்கையில் திருப்தியும், நிம்மதியும் பேணமுடியும்.
வீணான மன அங்கலாய்ப்புக்களைப் பூர்த்தி செய்வது பெருஞ்சிரமமான காரியம். நிறைவேறாத ஆசைகள் அடிமனதில் புதைந்து கிடந்து கொண்டு மனிதனைப் படுத்தாத பாடு, படுத்து கின்றன. வாழ்நாட்கள், கவலையிலும் துயரங்களிலும் கழி கின்றன. உடற்பிணிகளும் ஏற்படுகின்றன. மருத்துவரிடம் சென்றால், பல்வேறு பரிசோதனைகளுக்குப் பின், 'உங்கள் உடம்புக்கு ஒன்றுமில்லை. வீணாக மனதை அலட்டிக் கொள்ள வேண்டாம். மூன்று நாட்களுக்கு ஓய்வு எடுத்தால், எல்லாம் சரியாய்விடும்' என்று கூறிவிடுகிறார். ஒய்வு என்றால் அர்த்தம் என்ன? உடலை மாத்திரம் ஆட்டி அசைக்காமல், கட்டிலில் படுத்திருத்தல் என்று பொதுவாகக் கொள்ளப்படுகின்றது. உண்மையில் அது ஓய்வு அன்று. மனத்தையும் ஆட்டி அசைத்து அலையவிடாமல் கவனித்துக் கொள்வதில்தான் ஒய்வு என்பதன் இரகசியம் இருக்கின்றது. அது எம்மால் முடிகின்றதா? அங்கலாய்ப்புக்கள் குறுக்கே வருகின்றனவே? சிந்தியுங்கள் அங்கலாய்ப்புக்களிலிருந்து விடுதலை பெறமுயலுங்கள்.

26. போதை தரும் முகஸ்துதி
சின்னஞ்சிறுவர்களிலிருந்து பென்னம் பெரியவர்கள் வரை புகழுக்கும், புகழுரைக்கும் மயங்கித் தம்வயம் இழப்பவர்கள் இன்று அநேகர் உளர். அதே போன்று, பிறரைப் புகழ்ந்தே தம் கருமங்களையும் அலுவல்களையும் இலகுவில் முடித்துக் கொள்ளும் ஆற்றல் உள்ளவர்களும் நம்மிடையே உள்ளனர். இவர்கள் பிழைக்கத் தெரிந்தவர்கள், ஆனால் அதேவேளை இவர்களின் புகழுரையைக் கேட்டு மயங்கி, அதனால் போதை ஏற்பட்டு செய்யத் தகாதனவற்றையெல்லாம் செய்துவிடுபவர்கள், தமது கடமையில் பிழைத்துவிடுகின்றனர்.
சாதாரணமாக இன்று நாம் பட்டியல்படுத்திக் கூறுகின்ற போதைப் பொருட்கள், போதைவஸ்துக்கள், போதைமருந்துகள் மாத்திரம் தான், அவற்றை உட்கொள்ளும் பழக்கமுள்ள மனிதர்களுக்குப் போதையைத் தருகின்றன; அவர்களின் மதியை மயக்குகின்றன; செய்யத்தகாதனவற்றைச் செய்யத்தூண்டுகின்றன என்று நினைத்துக் கொள்கிறோம். மனிதர்களைப் போதைப் பொருட்களின் கோரப்பிடியிலிருந்து மீட்கும் பணிகளில், மனிதநேயம் கொண்ட அனைவரும் ஈடுபட்டு வருகின்றனர். உண்மையில் மகிழ்ச்சிக்குரிய பணிகள்.
மனிதர்கள் மற்றொரு வகையிலும் போதைக்குள்ளா கின்றனர் என்பதையும் நாம் அறிந்துகொள்ள வேண்டும். அந்தப் போதைப் பொருள்தான், புகழுரை. முகஸ்துதி என்றும் இதனைக் கூறுவர். முகமன் கூறல் மூலம் பல காரியங்களைச் சாதித்துக் கொள்ளமுடிகின்றது. அப்படிப் பார்க்கும்போது புகழுரையோ, முகமன் கூறலோ ஒருவகையில் இலஞ்சம் என்றே கொள்ளப்பட வேண்டும். புகழுரையைக் கேட்டு இன்புறும் பலர் தமது மதியை இழந்துவிடுகின்றனர். புகழுரையால் போதையடைந்து, தமது நிலையிலிருந்து கீழிறங்கி; நேர்மை, நடுவுநிலைமை, உண்மை

Page 40
74 இ குமாரசாமி சோமசுந்தரம்
எனும் மனிதப் பண்புகளைப் புறக்கணித்துவிட்டு, செய்யத் தகாத செயல்களைச் செய்துவிடுகின்றனர். இந்த வகையில், புகழுரை களும் போதைப் பொருட்கள் வரிசையில் இடம் பெறுகின்றன எனலாம். புகழ் விரும்புதல், முகமன் கூறலைக்கேட்டு ஈர்க்கப் படுதல், ஒருவனின் புத்தியையும், மதியையும், ஒழுக்கத்தையும் பாதித்துவிடுகின்றன என்பதை நன்கு உணர்ந்து கொள்ளுதல் வேண்டும்.
மனிதர்களில் குறிப்பாகப் படித்தவர்கள், பதவியில் இருப்பவர்கள், பண்ம் படைத்தவர்கள், செல்வாக்குள்ளவர்கள் மத்தியில் பெரும்பாலும் புகழுரைக்கும், முகமனுக்கும் அடிமையாகிவிடுகின்ற பலவீனம் காணப்படுகிறது. இந்தப் பல வீனத்தைத் தமக்குச் சாதகமாகப் பயன்படுத்தும் வல்லுனர்களும் சமுதாயத்தில் உள்ளனர். பணம் கொடுத்தோ, பரிசுப் பொருட் களை அன்பளிப்பாக வழங்கியோ சாதித்துக் கொள்ள முடியாத காரியங்களை, நாலு வார்த்தைகளால் நாசூக்காகவும், நயமாகவும் முகமன் கூறியும், புகழ்பாடியும், மாலை மரியாதைகள் செய்தும் அந்தக் கடின காரியங்களை மிக எளிதாகச் செய்வித்து விடுகின்றனர். முகமனுக்கு எடுபட்டுவிடுகின்ற தன்மையால், நேர்வழியில் செய்து விடமுடியாத பல காரியங்கள் நேர்மையற்ற வழியில் திரைமறைவில் நடந்து முடிந்துவிடுகின்றன. மனிதர் களை நடுவு நிலைமையினின்றும் சரித்துவிடும் அபாரசக்தி முகமனுக்கும், புகழுரைக்கும் உண்டு என்பதை உணர்ந்து, அந்தகைய புகழுரைகளுக்கு இடமளியாது விலகி, தம்மைப் பாதுகாத்தக் கொள்வதே விவேகமான செயலாகும்.
உதவி என்பதற்குத் தற்காலத்தில்கூறப்படுகின்ற வரை விலக்கணம் சற்று வித்தியாசமாக உள்ளது. உதவி கோரி வருபவர் கள் பெரும்பாலும் கூறுவது என்னவென்றால், ஒரு காரியத்தைச் சட்டப்படியோ, உரியவழியிலோ, ஒழுங்குமுறையிலோ செய்ய முடியாமையினால் தான் உங்களை அதைச்செய்து தருமாறு உதவிகோரி வந்துள்ளோம் என்கின்றனர். அவர்களுக்கு வழி அல்ல முக்கியம், எந்த விதத்திலாவது ஒரு காரியத்தைச் செய்வித்து முடிக்கவேண்டும்மென்பதே அவர்கள் கருத்தாக உள்ளது. தவறான

நல்வாழ்விற்குரிய நடைமுறைச் சிந்தனைகள் இ 75
முறையில் உங்களுக்கு உதவி செய்ய முடியாது என்று கூறினால் பிறருக்கு உதவும் மனப்பாங்கு உங்களுக்கு இல்லை என்கின்றனர். அல்லது முகமனாகவோ, முகஸ்துதியாக வார்த்தைகளைக் கூறி எப்படியாவது தாங்கள் எடுத்த முயற்சியில் வெற்றி பெறப்பார்க் கின்றனர்.
"உதவி வரைத்தன்று உதவி உதவி
செயப்பட்டார் சால்பின் வரைத்து'
- என்ற திருக்குறளில் கூறப்பட்டுள்ள உதவி செய்யப்
பட்டவரின் சால்புக்கும், தற்காலநிலைக்கும் இடையிலுள்ள வேறுபாட்டினை உணர்ந்துகொள்ளுதல் நன்று.
இரட்டையர் எனும் புலவர்கள் இருவர் பாடிய பாடல்
ஒன்றைக் கூறுகின்றேன். பிறரைப் புகழ்ந்து பொய்யுரை கூறுவதாலும், முகஸ்துதி, நரஸ்துதி பாடுவதாலுமே; தங்களுக்கு வாழ்வில் விடிவு ஏற்படுவதில்லை என்னும் பொருள்படி அப்பாடல் அமைகின்றது.
"குன்றுங் குழியுங் குறுகி வழி நடப்ப
தென்று விடியுமெமக் கென்கோவே- ஒன்றும்
கொடாதானைக் கோவென்றும் கா வென்றும் கூறில்
இடாதோ நமக்கிவ் விடி,"
எம்முடைய கஷ்டங்களெல்லாம் எப்பொழுது ஒழிந்து விடிவு ஏற்படும் என ஒரு புலவர் கேட்க, மற்றைய புலவர், ஒன்றும் ஈயாத உலோபியை, காமதேனு என்றும் கற்பகச்சோலை என்றும் அவனின் இல்லாத வள்ளல்தன்மையைப் புகழ்ந்து பாடுகின்ற எங்களுக்கு விடிவு கிடைப்பது அரிதிலும் அரிது என்கிறார். கல்லாத மூடனைக் கற்றவன் என்றும், பொல்லாத முரடனைக் கருணா மூர்த்தியென்றும்; எதுவுமே ஈயாதவனைப் பெருவள்ளல் என்றும் புகழுரையும் முகமனும் கூறி, தங்கள் காரியத்தைப் பார்ப்பவர்களுக்கு ஈற்றில் அதனால் நன்மைகிட்டப் போவதில்லை. அதேவேளை புகழுரைக்குச் செவிசாய்ப்போர், எதைச் செய்யலாம் எதைச் செய்யக்கூடாது என்பதைத் தீர்மானிக்க முடியாமல் போய்விடுகின்றனர்.

Page 41
76 ஒ குமாரசாமி சோமசுந்தரம்
முகமன் எனும் மயக்க மாத்திரைக்கு உட்பட்டு, மயங்கிய நிலையில், தம் வயமிழந்து, தவறான காரியங்களைச் செய்துவிடுகின்றனர். ஒரு கண நேரத்தினுள் அத்தகைய புகழுரை, ஒருவரின் ஒழுக்கத்தைக் குறைத்துவிடுகிறது. காலம் காலமாகச் சேர்த்துவைத்திருந்த நற்பெயர், புகழுரையினால், ஒரு வினாடிக்குள் மறைந்து விடுகிறது. எனவே ஒவ்வொருவரும், பிறர் கூறும் புகழுரைக்கோ, முகஸ்துதிக்கோ செவிசாய்க்காது, தத்தமது நல்லொழுக்கத்தையும், நல்ல குணங்களையும் பேணிக் காத்துப்
பெருமை கொள்ளலே, உண்மையான உயர்வு ஆகும்.
27. சந்தேகம் சேர்ந்தாரைக் கொல்லி
சந்தேகம் கொள்வது மனிதனின் பலவீனம் ஆகும். இந்தப் பலவீனத்தினால் பல்வேறு சமூகப்பிரச்சினைகள் தோன்று கின்றன; வளர்கின்றன, வாழ்வின் அமைதியைக் கெடுக்கின்றன. 'இவர் ஒரு சந்தேகப்பேர்வழி. எதிலும் சந்தேகம் கொள்வதுதான் இவரது தொழில் ஆகிவிட்டது. எடுத்ததற்கெல்லாம் கேள்விமேல் கேள்வி கேட்டுக் கொண்டே இருப்பார். இவரைத் திருப்திப் படுத்தவே முடியாது, ' என்று ஒருவரை விமர்சிக்கின்றோம். இன்னொருவரைப் பற்றிக்கூறும் போது 'இவர் ஓர் அப்பாவி. கரவு, வஞ்சகம் இல்லாதவர். வெள்ளை உள்ளம் படைத்தவர். வெளுத்ததெல்லாம் பால் என்று எண்ணுபவர். எதையும் எளிதில் நம்பிவிடும் தன்மையர். அதனால் பலராலும் ஏமாற்றப்படுவர், ' என்கிறோம்.
அளவுக்கு அதிகமாகச் சந்தேகங்கொள்வதால் காரியங்கள் கைகூடாமல் போய்விடுகின்றன. ஐயுறவு, ஒருவனின் துணிச்சலைக் குறைக்கின்றது. எடுக்க வேண்டிய தீர்மானங்களை விரைவாக எடுக்கவிடாமல் தாமதப்படுத்துகின்றது. அதனால் வாழ்க்கை முன் னேற்றம் தடைப்படுகிறது.
சந்தேகம், மனிதனின் மனத்தை அலைக்கின்றது, உலைக்கின்றது. வேண்டாத கற்பனைகளால் மனம் தத்தளிக்

நல்வாழ்விற்குரிய நடைமுறைச் சிந்தனைகள் இ 77.
கின்றது. இப்படி இருக்கலாம்; இல்லை, இல்லை, அப்படியும் இருக்கலாம் என மனத்தை ஒரு விவாதமேடையாக்கி, அங்கு சதாகாலமும் முடிவில்லாத சொற்போர் ஒன்றினை நடத்துவது இந்தச் சந்தேகம்தான். போரும் சமாதானமும் உடன் போக் கானவையும் அன்று; உடன் உறைபவையும் அன்று. மனத்தில் போர் நடந்து கொண்டிருந்தால், சமாதானம் மனதில் ஏற்படுவது நடவாதகாரியம். போர் அல்லது சமாதானம்-இந்த இரண்டில் ஒன்று மட்டும்தான் ஒரே நேரத்தில் ஒரே இடத்தில் இருக்கக் கூடியது. ஒளி இருக்கும் வரை அந்த இடத்தில் இருள் இல்லை. ஒளி மறைந்துவுடன் அக்கணமே அந்த இடத்தை இருள் கைப்பற்றிவிடுகிறது. மனம் அமைதிப்பட வேண்டுமானால் சந்தேக நிவர்த்தி அவசியம்.
சந்தேகம் கொள்ளாமல், எதை, யார் சொன்னாலும் அப்படியே நம்பிவிடுகின்ற அப்பாவிப்பேர் வழிகள் எளிதில் பிறரால் ஏமாற்றப்பட்டு விடுகிறார்கள். அப்பாவித்தனம் கூட பலவீனம் ஆகிவிடுகிறது. வாழ்க்கையில் அவதானமும்,
கவனமும் தேவை என்பதை மறுக்கமுடியாது.
'ஆழந்தெரியாமல் காலை வைக்காதே’’; "கடப்பைக் கடக்க முன், இரண்டு முறைகள் சிந்தித்துச் செயற்படு' என் றெல்லாம் ஆன்றோர்கள் கூறியுள்ளனர். பாசிபிடித்த படிக்கட்டுக் களில் கால்களை வைத்தவர் வழுக்கி விழுந்து விடுகின்றனர். அவ்வாறே முன்பின் யோசனையின்றி, அவதானம் கெட்டு, கவனத்தையும் விட்டு, வாழ்க்கை நடத்துகின்ற எத்தனையோ பேர்கள் வாழ்வில் வழுக்கி விழுந்து விட்டதையும் காண் கின்றோம். குறிப்பாகப் பெண்பிள்ளைகள் தங்கள் விடயத்தில் கவனமாகவும் அவதானமாகவும் நடந்து கொள்ளவேண்டும். முட்களும் கற்களும்; முரட்டுச் சுறாக்களும்; வருடி அணைத்து உயிர் பறிக்கும் நீர்ச்சுழிகளும் ஆறுகளில் இருக்கத்தான் செய்யும். அவற்றில் அகப்படாது, அவற்றைத் தவிர்த்துக் கொள்ளுவதே விவேகம் ஆகும். சமூகத்திலும் இத்தகைய தீங்கினர்கள் உளர். இத்தீங்கினர்களின் கண்களில் படாமல் தம்மைத் தவிர்த்துக் கொள்ளலே மிகுந்த புத்திசாலித்தனம். அப்பாவித்தனம் அவலத்

Page 42
78 ஒ குமாரசாமி சோமசுந்தரம்
தைத் தரக்கூடிய வகையில் அமையக்கூடாது. அவதானமும், கவனமும், பின்வரும் காரியங்களை முன் கூட்டியே உணர்தலும் நல்வாழ்விற்கு இன்றியமையாதன.
'பின்புத்தி' என்பதற்குப் பொதுவாகக் கொடுக்கப் பட்டுள்ள கருத்துப் பொருத்தமற்றது. 'பின்புத்தி' என்பதன் சரியான கருத்தை ஆராயின், பின்வரும் காரியங்களை முன்னுக்கே உணர்த்தும் புத்தி என்பது புலப்படும். அந்தத் திறமை சிறப்பாக பெண்களுக்கு உண்டு. அதைப் பயன்படுத்தித் தம்மைக் காத்துக் கொள்ளுதல் அவசியம்.
சந்தேகம் என்று, குடும்பத்திலும் சரி, வேலைத்தலத் திலும் சரி, நண்பர்களுடனும் சரி, பொது வாழ்விலும் சரி, வந்துவிட்டால் உடனடியாகச் சந்தேகத்தைத் தீர்த்துக் கொள்ள வேண்டும். சந்தேகத்தை வளரவிட்டு வேடிக்கை பார்த்தால், அது வினையாகிவிடும். சந்தேகத்துடன் விளையாடினால் வாழ்க்கை யில் விபத்து தவிர்க்கமுடியாதது ஆகிவிடும். சந்தேகம் சேர்ந் தாரைக் கொல்லி. மிகச் சாவதானமாகவே அதனோடு பழக வேண்டும். சந்தேகத்தைத் தவிர்ப்பதற்கு நல்லவழி, சமூகத்தில் நேர்மை, நிதானம்; நம்பிக்கை, நாணயம்; உண்மை, நீதி; அவதானம், கவனம் ஆகிய மனிதப் பண்புகளை விருத்திசெய்து கொள்ளுதலேயாகும்.
குடும்பத்தில் கணவன், மனைவி, பிள்ளைகளிடையே நல்லுறவு நிலவும்போது, சந்தேகத்திற்கு அங்கு இடம் இல்லை. வேலைத்தலம், அலுவலகம், நிறுவனம் ஆகியவற்றில் உள்ள ஊழியர்கள், பணியாட்கள், உறுப்பினர்களிடையே நல்லெண்ண மும் நல்ல தொடர்பும் இருக்கும்போது எவராவது சந்தேகம் கொள்ளநியாயமில்லை. சந்தேகமற்ற இடமே அமைதி உறையும் இடம்; நிம்மதி நிறைந்த நிலப்பரப்பு: சாந்தி பூர்த்த பூஞ்சோலை
<鹦@LD·

28. இரகசியம் இடும்பை தரும்
சில நண்பர்கள், 'உங்களுக்கு மட்டும் தான் ஒரு விஷயம் சொல்லப்போகிறேன். அது பரம இரகசியம். நீங்கள், வேறு யாருக்கும் சொல்லமாட்டீர்கள் என்ற நம்பிக்கை எனக்கு உண்டு. ’’ என்ற பீடிகையுடன் பேச ஆரம்பிப்பார்கள். உடனே நான் என்ன சொல்வேன் தெரியுமா? "வேண்டாம். இரண்டாம் ஆளுக்குத் தெரியக்கூடாத எந்த விஷயத்தையும் எனக்குச் சொல்லவேண்டாம். அது பெரிய ஆபத்து ஆகிவிடும்' என்று சொல்லி அந்த இரகசியத்தை கேட்க மறுத்துவிடுவேன். இங்கு வேடிக்கை என்னவென்றால், இப்படியானவர்கள் குறைந்தது பத்துப் பேர்களுக்காவது 'உங்களுக்கு மட்டும்தான் சொல்லு கிறேன். வேறு யாருக்கும் சொல்லிவிடாதீர்கள். ' என்று சொல்லிச் சொல்லி அந்தப் பரம இரகசியத்தைச் சொல்லி விடுவார்கள்.
ஒருவரிடம் இருக்கும் வரையில்தான் இரகசியம். பலர் அறிந்தால் அது பரகசியம். அப்படி இரகசியம் வெளிப் பாடாகும் போது, முன்னர் சொன்ன நண்பர் வந்து, 'நான் உங்களுக்குச் சொன்ன இரகசியம் இப்போது வெளிக்கு வந்துவிட்டது. நீங்கள் தான் மற்றவர்களுக்குச் சொல்லிப் போட்டீர்கள்." என்று குறை கூறுவார். உண்மை. உண்மையாக அந்த இரகசியத்தைப் பிறருக்குச் சொல்லாமல் இருந்தாலும் கூட, வீண் பழி கேட்க வேண்டித்தான் வரும். அதனால்தான் இரகசியம், ஒழிப்பு மறைப்பு, உங்களுக்குமட்டும் தான், நான் சொல்லிறதை வேறு யாருக்கும் சொல்ல வேண்டாம் என்ற பீடிகையுடன் பேசவருபவர் களிடமிருந்து விலகியிருப்பது நல்லது என்று கூறுகின்றேன்.
சிலர் தங்களுடைய நேரத்தையும் வீணாக்கி மற்றைய வர்களின் நேரத்தையும் பாழாக்கி, இரகசியம் பேசுதல், அவ்வியம் பேசுதல், மொட்டந்தலைக்கும் முழந்தாளுக்கும் முடிச்சுப்

Page 43
80 ஐ குமாரசாமி சோமசுந்தரம்
போடுதல்; சிண்டு முடிதல், பிறரைப்பற்றி இல்லாததும் பொல்லாததும் பேசுதல் போன்ற கோளாறுகளில் ஈடுபாடு கொள்கின்றனர். இதனால் அவர்களுக்கு அற்ப சொற்ப இன்பம் கிடைக்கப் பெறலாம்; ஆனால் பிறருக்கு எத்துணை அவமானம், தொல்லைகள், தொந்தரவுகள், துன்பங்கள் ஏற்படுகின்றன என்பதை இந்தக் கோளாற்றுப் பேர்வழிகள் எண்ணிப்பார்ப்ப தில்லை. எத்தனையோ திருமணங்கள் குழப்பப்பட்டிருக்கின்றன; எத்தனையோ குடும்பங்கள் பிரிந்துபோய் உள்ளன; உறவினர்கள், உடன்பிறந்தவர்கள் ஒருவர் முகத்தை மற்றையவர் பார்க்கமுடியாத அளவிற்குப் பகைமை பூண்டுள்ளனர். நண்பர்கள் நட்பை இழந்துவிடுகின்றனர். அப்பப்பா, கோளாறுகளும் அழுக்காறு களும் பெருக்கெடுத்தால் காட்டாறுகளின் பெருக்கம் அவற்றுக்கு முன்னே ஒரு சிறு வெள்ளம் மாத்திரமே.
இரப்பவர்கள் இல்லாவிட்டால் கொடுப்பவர்கள் ஏது? இருக்கமாட்டார்கள். அவ்வாறே, இரகசியம் பேச வருபவர்கள்; இல்லாததும் பொல்லாததும் சொல்லி அண்டல் செய்ய வருபவர்கள், சிண்டு முடிபவர்கள்; கோள் சொல்பவர்கள் ஆகியோரை வரவேற்று, அவர்கள் கூறுபவற்றை ஆவலோடு நாம் செவிமடுப்பதினால் தான், அவர்களும் தமது கலையை வளர்த்துக் கொள்ள நேரிடுகிறது என்ற அரிய உண்மையை நாம் மறந்து விடலாகாது. நாம் அத்தகைய அடாத செயல்களில் ஈடுபடுவோர்களுக்கு வரவேற்புக் கொடுக்காது, அவர்களைப் புறக்கணித்துவிட்டால், அவர்கள் தங்கள் பாட்டில் இருந்து விடுவார்கள். நல்லவர்களாகவும் சமூகத்தில் வாழத் தலைப் படுவர். அண்டல்காரர்களை அண்டாமல் விடுவதே நல்ல நெறியாகும். விளக்கும், அடிக்கடி எண்ணெய் விடுவதாலும், அதன் திரியைத் தூண்டி விடுவதாலும் தான் தொடர்ந்து எரிகிறது. பிரகாசமான ஒளியைத் தருகிறது. அல்லது விளக்கு நூர்ந்துவிடுA. மனிதருடைய செயல்களும், நல்லதோ கெட்டதோ ஏA ன யோரால் தூண்டப்படும்போதும், ஊக்குவிக்கப்படும் டே/tதும் தான் அவற்றை மேலும் மேலும் செய்யவேண்டும் என்னும் 'ஆசை பிறக்கிறது. அது மனித இயல்பு. நல்லவற்றை, நற்காரியங்களை

நல்வாழ்விற்குரிய நடைமுறைச் சிந்தனைகள் & 81
நற்செய்கைகளை ஊக்குவிப்போம், தூண்டுவோம், உற்சாகப் படுத்துவோம். அதில் தவறில்லை; அவ்வாறு செய்யாவிட்டால் அது தவறு. ஆனால், கெட்டவற்றை ஊக்குவித்துக் கேடுகளை விளைவிப்பதற்கு நாம் ஏன் துணைபோக வேண்டும்? இது ஒவ்வொருவரும் தம்மைத் தாமே கேட்க வேண்டிய கேள்வி. இதற்குச் சரியான விடை, கேடுகளுக்குத் துணைபோகக் கூடாது
என்பதாகும்.
பலர் கூடியுள்ள இடத்தில் இருவர் இரகசியம் பேசுதல்; பிறர் கேட்காதவாறு காதோடு காதாக ஏதாவது சொல்லிவைத்தல்; புரியாத மொழியில் உரையாடுதல்; சைகை, குறியீடுகளால் இருவரிடையே தொடர்பாடல்; பிறரோடு சேர்ந்து சிரித்தல் என்பன சந்தேகங்களைத் தோற்றுவிக்கும் என்பதால் அவ்வாறு செய்யாது தவிர்த்தல் நல்ல பழக்கமும் பண்பும் ஆகும். சந்தேகம் தான் பிரச்சினைகளை உண்டாக்குபவை. எனவே சந்தேகத்தைத் தவிர்ப்போம், சந்தோஷமாக வாழ்வோம்.
29. தொட்டிற் பழக்கம்
'கல்வி, கொடுக்கக் கொடுக்கப் பெருகிக்கொண்டே செல்லும். அவ்வாறே, அன்பையும் பிறருக்கு வழங்கிப்பாருங்கள். நிச்சயம் பெருகும். பெருகுவது மாத்திரமல்ல, மேலும் மேலும் அன்பைக் கொடுக்க வேண்டும் என்ற ஆர்வமும் ஏற்படும். அன்பினால் உண்டாகின்ற ஆர்வந்தான், பிறர் மீது கரிசனையைத் தோன்றச் செய்கிறது. பிறர் மீது கரிசனை தோன்றும் போது அவர்களுக்கு ஏதோ ஒருவகையில் உதவவேண்டும் என எண்ணுவர். நலிந்தோர், வலதுகுறைந்தோர் ஆகியோருக்கு நாம் உதவவேண்டும். அத்தகைய மனப்பாங்கினை நாம் வளர்த்துக் கொள்ளவேண்டும். '- இவ்வாறு, அன்றைய பாட முடிவில் ஒரு குட்டிப் பிரசங்கத்தையே செய்துமுடித்தார் வகுப்பாசிரியர். அதன்பின்னர், மாணவர்களை நோக்கி 'அன்பைப் பற்றியோ, பிறர்மீது கரிசனை கொள்ளல் பற்றியோ, மணிக்கணக்கில் பேசுவதுடன் நிறுத்திக் கொள்வதால் ஒரு பிரயோசனமும்

Page 44
82 ஜி குமாரசாமி சோமசுந்தரம்
இல்லை. செயலிலும் காட்டவேண்டும். ஒன்றைப் பற்றி அறிவதோடு மாத்திரம் நில்லாது, நல்லதென அறிந்த சிலவற்றை யாவது, நடைமுறை வாழ்க்கையில் கடைப்பிடிக்க வேண்டும். இந்த முறை, பாடசாலைத்தினவிழா, வெள்ளி விழாவாகக் கொண்டாடப்படவுள்ளது. வழக்கம் போல பெரியோரின் உரை அரங்குகள், கலையரங்குகள், மலர் வெளியீடுகள், பல்சுவை நிகழ்ச்சிகள், விருது வழங்குதல் என மூன்று நாட்களுக்கு மிக விமரிசையாக நடைபெறவுள்ளன. நடைபெறட்டும். நாங்கள், ஐந்தாம் ஆண்டு மாணவர்கள், இம்முறை, வெள்ளி விழாவினை முன்னிட்டு, புதுமையான பயனுள்ள சில நிகழ்ச்சிகளை ஒழுங்கு செய்து நடத்துவோம். அந்நிகழ்ச்சிகளில் எல்லா மாணவர்களும் பங்குபற்ற முடியும்; மகிழ்ச்சிபெறவும் இயலும். ' என்று கூறிவிட்டு, ஆசிரியர் மாணவர்களின் முகங்களை நோக்கினார். அப்போது மாணவர்கள் ஒருமித்த குரலில், ' சொல்லுங்கள் ஐயா, நாங்கள் நிச்சயம் பங்குபற்றுகிறோம்’ என்றனர். ஆசிரியரும், தொடர்ந்தார்.
'முதல் நிகழ்ச்சியாக, எமது பாடசாலைக்கு அருகில் உள்ள சிறுவர் இல்லத்திற்குச் செல்வோம். 'அன்புச்சோலை" என்ற அருமையான பெயரை அதற்குச் சூட்டியுள்ளனர். உங்களோடு ஒத்த வயதுள்ள பிள்ளைகள்தான் அங்குமுள்ளனர். அவர்கள் தாய் தந்தையரின் ஆதரவு அற்றவர்கள். அன்றைய தினம் அவர்களை மகிழ் வித்து நாமும் அந்த மகிழ்ச்சியில் கலந்து கொள்ளுவோம். போகும் போது வெறுங்கையோடு போகக் கூடாதல்லவா? உங்கள் அப்பா, அம்மாவின் அனுமதியைப் பெற்று, உங்களிடமுள்ள விளையாட்டுப் பொம்மை அல்லது விளையாட்டுப் பொருள் ஒன்றினை கொண்டு வாருங்கள். அவற்றைக் கொண்டு அச்சிறார்களுக்குக் கொடுத்து மகிழலாம்.' என்று கூறிமுடித்தார்.
மாணவர்கள் வீடுகளுக்குச் சென்றனர். தத்தம் பெற்றோர் களிடம் ஆசிரியர் சொன்னவற்றை எடுத்துக் கூறினர். ஆசிரியரின் புதுமையான கருத்தை வரவேற்ற பெற்றோர்கள், அதற்கு அனுமதி யும் வழங்கினர்.

நல்வாழ்விற்குரிய நடைமுறைச் சிந்தனைகள் 3 83
அன்றிரவு, சரவணன் என்ற மாணவன் தன்னிடமுள்ள அத்தனை விளையாட்டுப் பொருட்களையும் கணக்கெடுப்புச் செய்துவிட்டான். ஒவ்வொன்றும் தனக்குப் பிடித்தமானதாகவே இருந்தது. அவற்றுள் எதைக் கொண்டுபோய்க் கொடுப்பது என்று தீர்மானிப்பதில் பெருஞ்சிரமம் ஏற்பட்டது. நீண்ட நேர மனப் போராட்டத்தின் பின் ஒரு விளையாட்டுப் பொம்மையைத் தேர்ந்தெடுத்தான். அதுவோ ஒரு பழைய கார் வண்டி. இயங்க மாட்டாதது. ஆனால் அதைத் திருத்தி இயங்க வைத்தான். அந்த ஏழைச் சிறுவர்களுக்கு இது போதும். சும்மா இருந்த அம்மை யாருக்கு அரைப்பணத்துத் தாலி போதாதா என்று யாரோ சொன்ன பழமொழியும் அப்போது சரவணனுக்கு ஞாபகம் வந்தது. சரவணன்.
மறுநாள் அந்தப் பழைய கார் விளையாட்டுப் பொருளை யும் புத்தகப் பையினுள் வைத்துக் கொண்டு பாடசாலைக்குச் சென்றான். அங்கு சில பாடங்கள் முடிவடைந்த பின்னர், வகுப்பாசிரியர், மாணவர்களைப் பார்த்து, 'அன்புச்சோலை’ சிறுவர்களுக்குக் கொடுப்பதற்கு யார், யார் விளையாட்டுப் பொருட்கள் கொண்டு வந்தனர் என்று கேட்டுக் கொண்டு வந்தவர்கள் கைகளை உயர்த்திக் காண்பிக்குமாறு கேட்டார். பலர் கைகளை உயர்த்திக் காண்பித்தனர். அவர்களுள் சரவணனும் ஒருவன். 'மகிழ்ச்சி என்று கூறிவிட்டு, ஒவ்வொருவராகக் கொண்டு வந்து தரும்படி கூறினார் ஆசிரியர். மாணவர்கள் கொண்டுவந்த அனைத்தும் புதியன போலக் காட்சியளித்தன. சரவணனுக்கு அவற்றைப் பார்க்க பார்க்க என்னவோமாதிரி இருந்தது. குற்ற உணர்வு போன்ற ஓர் உணர்வு அவனைப் பற்றிக் கொண்டது. தான் கொண்டு வந்தது, பழைய பொருள் என்பதாலும்; 'அன்புச்சோலைச் சிறுவர்கள் ஏழைகள் தானே பழைய பொருள் போதும் என்று தாழ்வாக எண்ணிய மையினா லும், சரவணனுக்கு அத்தகைய ஒரு நிலைமை ஏற்பட்டது. அதனால், தான் கொண்டு வந்த பழைய சாமானை அங்கு கொண்டு சென்று ஆசிரியரிடம் கொடுக்க விரும்பவில்லை. ஆசிரியர் சரவணனைக் கேட்டபோது, மறுநாள் கொண்டுவந்து தருவதாகக் கூறி ஒருவாறு நிலைமையைச் சமாளித்து விட்டான்.

Page 45
84 இ குமாரசாமி சோமசுந்தரம்
சரவணன் அன்றிரவு, தனக்கு மிகவும் பிடித்த விளையாட்டுப் பொருள் ஒன்றினை எடுத்து, பெற்றோரின் அனுமதியுடன் பொதி செய்து வைத்தான். அந்தப் பொருள் அவனின் பிறந்த நாள் பரிசாக வெளிநாட்டிலிருந்து அவனின் மாமாவினால் அனுப்பிவைக்கப்பட்டது. பல விளையாட்டுக் களை அதில் ஆடக்கூடிய அற்புதப் பொருள். சரவணனுக்கு மிக மிகப் பிடித்தமானது. சரவணன் ஒரு நல்ல பாடத்தையும் கற்றுக்கொண்டான். பிறருக்குக் கொடுக்கப்படும் எந்தப் பொருளும், கொடுப்பவருக்குப் பிடித்ததாக இருக்க வேண்டும். அப்பொழுதுதான் கொடுப்பவரும் வாங்குபவரும் மகிழ்ச்சி யடைவர். இந்த உண்மையை எல்லோரும் உணர்ந்து நல்ல வற்றையே பிறருடன் பகிர்ந்து நல்வாழ்வு வாழ்வோமாக.
30. மங்கல விழாக்களில் அமங்கலம் நுழைந்துவிடல் ஆகாது
சமூகங்கள் ஒவ்வொன்றிலும், பழக்க வழக்கங்கள், ! பண்பாடுகள், கலாசாரங்கள், பாரம்பரியங்கள், வாழ்க்கை நெறிமுறைகள் எனப் பண்டுதொட்டு இன்றுவரை பேணப்பட்டு வருவதை நாம் காண்கின்றோம். இவற்றைக் கொண்டுதான் ஒவ்வொரு சமூகமும் தத்தம் வரலாற்றுத் தொன்மையை, தனித்துவத்தை, பெருமையை, உயர்வினை நிலைநாட்ட முயற்சிக்கின்றது. காலந்தோறும் இவற்றுள் சில கழிந்தும் விடுகின்றன; புதிதாகச் சில வந்து புகுந்தும் விடுகின்றன. 'பழையன கழிதல், புதியன புகுதல் வழுவல' என்று விதியும் உள்ளது. அதே வேளை, புதியன எல்லாம் நல்லனவும் அல்ல பழையனயாவும் கூடாதனவும் அல்ல, என்றும் கொள்ளப்படு கிறது. இரண்டிலும் நல்ல அம்சங்களும் உண்டு, கெட்ட அம்சங்களும் உண்டு. நல்லவற்றை ஏற்று, கூடாதனவற்றைத் தவிர்த்து வாழுதல்தான் செம்மையான வாழ்வு ஆகும். அப் பொழுது பழமைவாதிகள், பிற்போக்காளர் என்றோ, புதுமை வாதிகள், முற்போக்காளர் என்றோ சமூகத்தில் கட்சிபேதங்கள்
இருக்கமாட்டா.

நல்வாழ்விற்குரிய நடைமுறைச் சிந்தனைகள் இ 85
வேற்று நாட்டு மக்களின் நாகரிகம், பழக்கவழக்கங்கள், கலாசாரங்கள் என்பன நம்மிடையே வந்து புகுந்து கொள்கின்றன. அவற்றிலும் மனித வாழ்க்கைக்குப் பொருத்தமானவற்றையும், வாழ்க்கையை மேம்படுத்துவனவற்றையும் ஏற்று அனுசரித்தலில் தவறில்லை. ஆனால் மேல்நாட்டு நாகரிகம் என்று சொல்லி, அதனைக் கண்மூடித்தனமாகப் பின்பற்றிக் கொண்டு, வாழும் சமூகத்திலிருந்து தம்மை அந்நியப்படுத்தி, தமக்கும் பிறருக்கும் இடைஞ்சல்களையும் விளைவித்துக் கொண்டு இருப்பவர்கள், தம்முடைய அர்த்தமற்ற செயல்முறைகளை, நாகரீக மோகத்தை யிட்டு மறுபரிசீலனை செய்தல் அவசியம். மேல் நாட்டுக் கலாசாரம் அத்தனையும் ஒட்டுமொத்தமாக நமக்கும் நல்லதுதான் என்று கொள்ளமுடியாது. நாம் செய்யும் ஒவ்வொரு செயலும் மேல் நாட்டுக் கலாசாரத்தின் ஒப்புதலையும், ஆமோதிப்பையும் பெற்றுக் கொள்ளுதல் வேண்டும் என எண்ணிக் கருமமாற்றுவோர் தொகை இன்று பெருகிக் கொண்டு வருகிறது. இது நம்மை நாமே இழிவு படுத்துகின்ற நடவடிக்கை. கனிகள் நிறைய இருக்கக் காய்களைக் கவர்ந்து உண்ணும் நிலைக்கு இது ஒப்பானது.
ஒருவர் தன் நண்பரைப் பார்த்து, 'மேல்நாட்டுப் பாணியில் நீங்கள் நடத்திய உங்கள் குழந்தையின் பிறந்தநாள் கொண்டாட்டம் வெகு பிரமாதம். ' என்று தன் மகிழ்ச்சியைத் தெரிவித்தார். இது ஒர் அங்கீகாரம். இதையே நம் சொந்தக் கலாசாரத்தை அனுசரித்து கொண்டாடியிருந்தால், இத்தகைய பாராட்டுதல்களும் அங்கீகாரமும் கிடைக்காமல் போய்இருக்கும். எதுசரி, எதுபிழை என்பது அல்ல முக்கியத்துவம். மேல்நாடு, என்பதே முக்கியத்துவம். வாழ்க்கையின் ஒவ்வொருஅம்சத்திலும் நமக்கு ஒவ்வாத கலாசாரப்பண்புகள் நம்மை ஆட்டிப்படைப்பதைக் கண்டும், அவற்றையே பின்பற்றுகின்ற அவலநிலையிலிருந்து மீளமுடியாதவர்களாக உள்ளோம். இதுவே, நமது இயலாமை யும், ஆற்றாமையும், அறியாமையும் ஆகின்றது.
பிறந்தநாள் விழா ஒரு மங்களகரமானகாரியம். குழந்தை யின் எதிர்கால வாழ்விற்கும் வளத்திற்கும் மனப்பூர்வமான வாழ்த்துக்களையும் நல்லாசிகளையும் பெரியோர்கள், பெற்றோர்,

Page 46
86 ஒ குமாரசாமி சோமசுந்தரம்
சுற்றத்தவர், அன்பர்கள், நண்பர்கள் ஆகியோர் வழங்குகின்ற ஆனந்தவிழா. எல்லோரும் மகிழ்ச்சியும், மலர்ச்சியும் அடையப் பெற்றுக் குழந்தையையும் மகிழ்ச்சியாக இருக்கச் செய்யும் மங்களகரமான விழா. இந்த நன்னாளில் குழந்தையின் கையில் கொடுக்கப்படும் முதல் பொருள் கூரியகத்தி. அடுத்து தீபங்கள் ஏற்றப்படுகின்றன. குழந்தையின் வாழ்வில் ஒளிபடர வேண்டும்; அந்த ஒளி என்றும் அணையாத சுடரொளியாக விளங்கவேண்டும் என்பதற்காக. ஆனால் அத்தீபங்களை அந்தக் கணமே, குழந்தையைக் கொண்டு வாயினால் ஊதி அணைப்பிப்பதன் மூலம் விழாத் தொடங்குகிறது. அடுத்து கத்தி கொண்டு, பல்வேறு உருவங்கள் பொருத்தப்பட்ட கேக் வெட்டப்படுகிறது. உருவங்கள் சிதைக்கப்படுகின்றன. கத்தி, வெட்டு, நூர், அணை, என்ற சொற்பிரயோகங்களுடனேயே பிறந்ததினவிழா ஆரம்பம். இந்த வாழ்த்துக்களே பலிக்கவும் செய்கின்றன. கத்தி தூக்குதல் துவக்குகலாசாரம், வன்செயல்கள், இருள்சூழ்ந்த வாழ்வு என்றெல்லாம் இன்று நாம் பதகளிக்கிறோம். எண்ணம் போல வாழ்வு அமைகிறது என்ற மனோதத்துவ ஆய்வாளர்களின் கருத்து, இங்கு நிதர்சனமாவதைக் காண்கிறோம்.
திருமணம், புதுமனைபுகுதல், பூப்பு நீராட்டுதல், கோயில் வழிபாடு முதலிய சமூக, சமய வைபவங்களில் கலந்துகொள்ளும் போதும்; மங்கள ஆராத்தி, திருவிளக்கேற்றுதல் நிகழ்த்தும் போதும், தலைவிரிகோலத்தில் சில பெண்கள் காட்சி தருகின்றனர். மங்களகரமான வைபவங்களில் அமங்கலமாக இருப்பான் ஏன்? என்று கேட்கின்றனர். சீதை அசோகவனத்தில் தலைவிரித்ததால் இராமாயணப் போரும், பாஞ்சாலி தலை விரித்ததால் மகாபாரதப்போரும் நடந்ததை அறிவோம். கண்ணகியின் தலைவிரிகோலம் மதுரையை எரித்தது. நாமும் இன்று அமங்கலத்தையே உபாசிப்பதனால் தான் இன்றைய யுத்தங்களும், கஷ்டங்களும் ஏற்பட்டதோ என எண்ணத் தோன்றுகிறது. எவ்வாறாயினும் நாம் எமது மங்களகரமான பழக்கவழக்கங்கள், கலாசாரங்களை அனுசரித்து வாழ்ந்து இன்பம் பெறுவோமாக.

31. மதிப்பு, மரியாதை, கணிப்பு, கொடுக்கல், வாங்கல்
பொதுவாக, சமூகத்தில் மதிப்பு, மரியாதை, கணிப்பு என்பவற்றைப் பிறரிடமிருந்து பெற்றுக் கொள்வதில் இருக்கின்ற ஆர்வமும் விருப்பும், அவற்றை தாம் பிறருக்குத் கொடுப்பதில் காட்டுவதாகத் தெரியவில்லை. மதிப்பு, மரியாதை, கணிப்பு என்பன பிறருக்கு ஈதலுக்கும் உரியன என்பதை அநேகம் பேர் இக்காலத்தில் மறந்து விடுகின்றனர்.
ஆனால் அவற்றின் மீது உரிமை கோரிப் பெற்றுக் கொள்வதிலும், அவற்றைப் பெற்று அனுப்பவிப்பதிலும் எந்தக் குறைச்சலும் இல்லை.
மதிப்பைக் கொடுத்துத்தான் மதிப்பைப் பெற்றுக் கொள்ளமுடியும்; மரியாதையை வழங்கித்தான் மரியாதையை எதிர்பார்க்க இயலும். எல்லாமே பரஸ்பரக் கொடுக்கல் வாங்கல் தான். எனினும் வியாபாரமாகக் கொள்ளல் ஆகாது. வியாபாரக் கொடுக்கல் வாங்கலில் இலாப நட்டங்கள் பார்க்கப்படும். கொடுத்தல் என்பது எவற்றையோ இழத்தல் என்றுதான் கருதப் படுகிறது. ஆனால் மதிப்பு, மரியாதை என்பவற்றைப் பிறருக்குக் கொடுக்குந்தோறும் வழங்குநர் எதையும் இழப்பது இல்லை. மாறாக அவற்றைக் கொடுப்போர்க்கு, மதிப்பும் மரியாதையும் பன்மடங்கு பெருகிக் கொண்டே செல்கின்றன. ஆகையால் மதிப்பையும் மரியாதையையும் பிறருக்கு வழங்கப் பின்னிற்கத் தேவையில்லை.
மதிப்பு, மரியாதை, கணிப்பு என்பவற்றைப் பிறரிட மிருந்து பெற்றுக் கொள்ள எதிர்பார்ப்பவர்கள், தாம் அவ்வாறு பெறுவதற்குத் தகுதியுள்ளவர் தானா? என்பதை நிச்சயப்படுத்திக் கொள்ளுதலும் அவசியம். தம்முடைய பதவி, அந்தஸ்து, சமூகநிலை, அதிகாரம், செல்வம் ஆகியவற்றைக் கொண்டு

Page 47
88 இ குமாரசாமி சோமசுந்தரம்
அவற்றிற்குரிய மதிப்பையும் மரியாதையையும் கெளரவத்தையும் எதிர்பார்ப்பவர்களாகப் பலர் உள்ளனர். ஆனால் பதவி, அந்தஸ்து, செல்வம் ஆகியவற்றிற்காகப் பிறர்காட்டும் மதிப்பும் மரியாதையும், அவை அம்மனிதனை விட்டுப்பிரிந்து சென்றவேளை, மதிப்பு மரியாதைகளும் வாபஸ் பெறப்பட்டுவிடுவதைக் காண்கின்றோம். ஆனால் ஒரு மனிதனுடைய நன்னடத்தை, நல்லொழுக்கம், நற்பண்பு, நற்செய்கை, நல்லறிவு, மனிதத்துவம் என்பவற்றிற்காக அளிக்கப்படுகின்ற மதிப்பு, மரியாதை கணிப்பு, கெளரவம் என்பன அவன் இவ்வுலகில் வாழுகின்ற கால எல்லை வரை மாத் திரமன்றி, அவனின் நினைவு நிலைத்திருக்கும் வரை அவனின் மதிப்பும் மரியாதையும் நிலைத்து நிற்கும் என்பது உறுதி.
மதிப்பு, மரியாதை என்பவற்றை மனிதநேயத்தினால் ஒரு மனிதன் மற்றைய மனிதர்களுக்குச் செலுத்துதல் என்பது மனிதக்கடமையாகும். அவனும் என்னைப் போன்ற ஒருமனிதன்; அதனால் அவனை மரியாதை செய்யவேண்டும் என எண்ணுவது தான் மனிதத்தன்மை. அந்த மனிதத்தன்மையின் உந்தலினால் தான், மரியாதையின் சின்னமாக, குறியீடாக ஒருவரையொருவர் சந்திக்கும் போது கைகூப்பி வணக்கம் சொல்கிறார்கள், கைகளைப் பற்றிக் குலுக்கி மகிழ்கிறார்கள்; சலாம் செய்கிறார்கள்; ஆரத் தழுவிக் கொள்கிறார்கள். இவற்றால் மனித உறவு வளர்கின்றது; பகைமை உணர்வு மறைகின்றது.
வீட்டுக்கு வருகின்ற விருந்தினர்களை எதிர்கொண்டு அழைத்து, ஆசனங்களில் அமர்த்தி, அவர்கள் அமர்ந்தபின், நாமும் அமர்ந்து, அன்பு மொழி பேசி, சுகம் விசாரித்து, விருந்து பரிமாறி மகிழ்ந்து, பின் அவர்கள் செல்லும்போது வாசல்வரை அவர்க ளுடன் சென்று நன்றி சொல்லி, வணக்கம் கூறி வழியனுப்பிவிட்டு வருகின்ற வழக்கம் நம்மிடையே இருந்துவருகிறது. இவ்வளவும் செய்தால் விருந்தினர்கள் தமக்கு நல்ல மதிப்பும் மரியாதையும் கிடைத்ததாகக் கூறுவார்கள். இவ்வாறு விருந்தினரை மதித்து மரியாதை செய்வது எமது கலாசாரம் ஆக உள்ளது.
வீட்டிலுள்ள பெரியோர்கள், பெற்றோர்கள், மூத்தவர் களை மரியாதை செய்வது, மதிப்புக் கொடுப்பது பிள்ளைகளின்

நல்வாழ்விற்குரிய நடைமுறைச் சிந்தனைகள் இ 39
நல்ல பண்பாகும். ஆசிரியர்கள், சமூகத்திலுள்ள பெரியவர்கள், தலைவர்கள், மூத்தோர்கள் யாவரையும் மரியாதை செய்யவேண் டும்; அவர்களுக்கு ஏற்றவகையில் மதிப்பு அளிக்க வேண்டும். பொதுவில் மனிதர்கள் எல்லோரையும் மதிக்கும் பண்பினை வளர்த்துக் கொள்வதால் பல்வேறு நன்மைகளும் கிட்டும்; எல்லாக் காரியங்களும் சித்தியாகும். பிறரை மதியாமல் நடந்து நாம் எதையும் சாதித்துவிட முடியாது. எல்லோரையும் மதித்து, மரியாதை செய்து நடந்து கொள்வதால் சாதிக்க முடியாதது என்று எதுவும் இருக்கமாட்டாது. சிறுவர்களாக இருந்தாலும் சரி, கீழ்ப்பணியாளர்களாக இருந்தாலும் சரி, நம்மிலும் எந்த விதத்திலும் குறைந்தவர்களாக இருந்தாலும் சரி அவர்களை மதிப்பதால், மரியாதை செய்வதால் நாம் எந்த வகையிலும் குறைந்துவிடப்போவதில்லை. மாறாக பல நன்மைகளை அடைய ஏதுவாகும். எனவே பெரியோர், சிறியோர் என்ற பேதமின்றி எல்லோரையும் மதிப்பு, மரியாதை செய்து வாழ்வதை ஒரு வாழ்க்கைப் பழக்கமாக்கிக் கொள்ளுதல் மிக நன்று ஆகும்.
32. கவலையைத் தருபவர் யார்?
‘என்ன, எப்படி இருந்த நீங்கள், இப்படி மெலிந்து போனீர்களே. உடனே நீங்கள் டாக்டரைப் பார்க்கவேண்டும்.'
'உங்கள் மகன் இந்த முறையும் பரீட்சையில் தேற வில்லையாமே. காலபலன் சரியில்லைப் போல இருக்கு."
'கனடா மாப்பிள்ளை வாறேன், வாறேன் என்று சொல்லிக் கடைசியில் உங்கள் மகளை ஏமாற்றிப் போட்டார் ஆக்கும். பிள்ளை பாவம்."
இந்த மாதிரிப் பேசுவது, கவலைப்படுவது மூலம் தாம் மற்றையோருக்கு ஆறுதல் கூறுவதாகப் பலர் நினைக்கின்றனர். கவலைப்படுவதால், பிறரின் கவலையில் தாமும் பங்குகொள்வ தாக அவர்களுக்கு ஒர் ஆதங்கம். கவலைப்படுவதால் தாம் பிறர்மீது அன்பு செலுத்துவதாக அவர்களுக்கு ஒரு நினைப்பு.

Page 48
9 O இ குமாரசாமி சோமசுந்தரம்
ஆனால் சந்திக்கும்போதெல்லாம் இவ்வாறு கவலையைக் கிளறிக் கிளறி விடுவதால், கவலையை அதிகரிக்கச் செய்கின்றார்களே தவிரக் குறைப்பதாக இல்லை.
பிறருக்காக கவலைப்படுவதால், அவர்களைச் சீண்டிவிடு கிெறோமேயன்றி, அவர்களுக்கு எந்த உதவியையும் செய்வதாகூகவில்லை. இவ்வாறு செய்வதால் நாம் அன்பு செய்யவில்லை. மாறாக வம்பு செய்கிறோம். ஏற்கனவே நொந்து டேபாய் இருப்ப வர்களை, மேலும் நொந்துபோகச் செய்வதான செயலாக இது இருக்கிறது. எரிகின்ற நெருப்பில் எண்ணெய் ஊற்றுவதற்கு இது ஒப்பாகும்.
இஇன்னும் ஆழ்ந்து பார்த்தால், பிறருக்காகக் கவலைப்படு வது என்பதுது ஒரு பாசாங்கு என்பதையும், போலிவாழ்க்கை முறை யாகவே ெெபரும்பாலும் அமைந்துவிட்டமையையும் உணர்ந்து கொள்ளலாலாம். எல்லாமே ஒரு பேச்சுக்குத்தான் என்பார்களே, அதுதான் இgது. உண்மையில், பிறருக்காகக் கவலைப்படுபவர்களில், அநேகர், அவ்வாறு செய்வதன் மூலம் தாமே மகிழ்ச்சியையும் திருப்தியைRபயும் அடைகின்றனர். இதுதவறு. 'பனையாலை விழுந்தவைைன மாடேறி மிதித்த’ நிலையாகி விடக்கூடாது.
ஒருவர் கஷ்டப்படும்போது அவர்மீது அன்பு செலுத்துவது என்பது அவரின் கஷ்டத்தைப் போக்குவதாக அமையவேண்டும்; அல்லது தணிப்பதாகவேனும் இருக்கவேண்டும். அதற்கு, வாய்ப் பேச்சிலும் பார்க்க வேறு ஏதாவது விதத்தில் உதவிபுரிதல் வேண்டும். 'உங்களுக்கு இந்த வேளையில், ஏதாவது உதவ முடியுமா எTான்று யோசிக்கிறேன். நீங்கள் சொன்னால் அதைச் செய்யக் காாத்திருக்கிறேன்’ என்று கேட்பதுதான் மனித தர்ம மாகவும், அன்பின் வெளிப்பாடாகவும் அமையும். அவ்வாறு, அவர்கள் தமaமது தேவை இன்னது என்று கூறுமிடத்து அதை உடனே செய்து உதவவேண்டும். அவர்கள் சொல்லாதவிடத்தும், அவர் களின் தேலைவயை உணர்ந்து உதவுதல் மேலான அறம் ஆகும்.
நமமேது அயல்வீட்டில் ஒருவர் நோய்வாய்ப்பட்டு இருக் கிறார். அவuரைப் பார்ப்பதற்கு அவரின் உறவினர், நண்பர்கள்

நல்வாழ்விற்குரிய நடைமுறைச் சிந்தனைகள் 3 91
என்று பலர் வந்து சுகம் விசாரித்துச் செல்வார்கள். நானும் ஒருநாள் அங்கு சென்றிருந்தேன். அப்பொழுது அங்கு வந்திருந்த உறவினர் ஒருவர் நோயாளியுடன் பேசிக்கொண்டிருந்தார். அவர் சொன்னார், "இந்த நோய் வந்தவர்கள் தப்புவது கஷ்டம். இது ஒரு கர்ம் நோய். எல்லாருக்கும் வராது. வந்தால் மீள ஏலாது. ஏதோ இருக்கிற அற்ப சொற்ப நாட்களுக்குள்ளே நல்லாய்ப்பாருங்கோ.” இவ்வாறு அவர் பேசிக்கொண்டே போனார். வருத்தம் பார்க்க வந்த மனுஷன், இப்படிப் பேசுகிறாரே என்று நினைத்தேன். உடனே நோயாளியின் முகத்தைப் பார்த்தேன். முகம் வாடியிருந்தது. வாட்டம் நோயினால் அன்று; இந்த மனுஷனின் பேச்சினால் என்பதைப் புரிந்து கொண்டேன். சற்று நேரத்தில், அந்த உறவினர் எழுந்து செல்லும் போது நோயாளியின் மனைவியைக் கூப்பிட்டு, இரகசியமாக, ஆனால் ஓரளவு மற்றையோரும் கேட்கக் கூடிய தொனியில், 'உந்த மனுஷன் இனி எழும்பி உழைச்சுத் தருவார் என்று நம்பியிராதையுங்கோ, கெதியாய்ப் போயிடுவார். சொல்லி யனுப்புங் கோ. வந்து செய்ய வேண்டியவற்றைச் செய்து விடு கிறேன். ' என்று சொல்லிவிட்டு அவர்போய்விட்டார். இதைக் கேட்ட மனைவிக்கு கையும் ஓடவில்லை, காலும் ஓடவில்லை. அப்படியே சிலையாய் அமர்ந்துவிட்டார்.
நோயாளி நண்பர் என்னை நோக்கினார், 'பார்த்தீர் களா. வருத்தம் பார்க்க வருகிறவர்கள் எங்களுக்குச் செய்யும் உதவி, உபகாரங்களை. இப்படித்தான், வருபவர்களில் அநேகம் பேர் எம்மை வலுவூட்டித் தைரியப்படுத்துவதற்குப் பதில் வெளிப்படையாகவும், இரகசியமாகவும் பலவீனர்கள் ஆக்கி விட்டுச் செல்வார்கள்’ என்றார். ஆமாம், அன்பு என்ற பெயரால் எத்தனை தொல்லைகள் எத்தனை வடிவங்களில் நடைபெறு கின்றன. மருத்துவ நிலையங்களில், 'நோயாளியைப் பார்க்க அனுமதி இல்லை' என்ற அறிவித்தல் அர்த்தமுள்ளதுதான். பிறருக்கு உதவிசெய்யாவிடினும் உபத்திரம் ஆதல் செய்யாது இருப்போமாக.

Page 49
33. அலட்சிய மனப்பாங்கு வாழ்க்கைக்குத் தடை போடும்
சமூக வாழ்வில் இலட்சியங்கள் இருக்க வேண்டியது அவசியம். இந்த இலட்சியங்கள் செயல் வடிவம் பெறும்போது தான் பயன்கள் ஆக மாறுகின்றன. பயன்தராத இலட்சியங்கள் வெறும் பகற்கனவுகள் தான். நல்ல இலட்சியங்களுக்குப் பதிலாக, தற்காலத்தில் நாம் காணக் கூடியவை அலட்சியங்கள் ஆகவே பெரும்பாலும் உள்ளன. சிறுவர்களிலிருந்து பெரியவர்கள் வரை அலட்சிய மனப்பாங்குள்ளவர்களாகவே அதிகமான சந்தர்ப்பங் களில் காட்டிக் கொள்கிறார்கள். அலட்சியங்கள் நல்ல வாழ் விற்குத் தடையாக அமைகின்றன என்பதை நாம் ஒவ்வொருவரும் கருத்திற்கொள்ளவேண்டும்.
பாடசாலைகளில் ஆசிரியர்கள் பாடங்களைச் சொல்லிக் கொடுக்கும்போது மாண்வர்கள் அலட்சியம் செய்கிறார்கள். பாடங்களை அலட்சியம் செய்வதால் கல்வியில் முன்னேறமுடிவ தில்லை. சமூகத்தில் மூத்தோர்களை இளைய சந்ததியினர் அலட்சியம் செய்வதால், வாழ்க்கை அனுபவங்களையும், நல்ல வாழ்வியல் ஆலோசனைகளையும், நல்லாசிகளையும் அவர்களிட மிருந்து பெற்றுக் கொள்ள முடியாதுள்ளனர். அதனால் தரமான மனிதவாழ்க்கையில் அவர்கள் முன்னேறமுடிவதில்லை. குடும்பத் தில் கணவனை மனைவி அலட்சியம் செய்தலும், மனைவியைக் கணவன் அலட்சியம் செய்வதும், பெற்றோரைப் பிள்ளைகள் அலட்சியம் செய்வதும் சர்வசாதாரணம் ஆகிவிட்டது. இத்தகைய அலட்சிய மனப்பாங்குகள் குடும்பத்தவரிடையே இருக்கவேண்டிய சுமுகமான மனித உறவுகளைப் பாதிப்படையச்செய்கின்றன. வேலைத்தலங்களிலும் அலுவலகங்களிலும் மேலதிகாரிகள், பணியாளர்களையும்; பணியாளர்கள் மேலதிகாரிகளையும் அலட்சியம் செய்கின்றனர். அதனால் வினைத்திறன்கள் பாதிக்கப்பட, வேலைகளிலோ, வெளியீடுகளிலோ எவ்வித முன்னேற்றங்களும் இல்லாமற்போய்விடுகின்றன. −

நல்வாழ்விற்குரிய நடைமுறைச் சிந்தனைகள் இ 93
வீடுகளிலும், ஹோட்டல்களிலும், பொது இடங்களிலும் காதார விதிகள் அலட்சியப் படுத்தப்படுகின்றன. மனிதர்களின் ஆரோக்கிய வாழ்வுக்குப் பாதிப்பு ஏற்படுகின்றது. வீதிகளில் போக்குவரத்தது விதிகள் அலட்சியப்படுத்தப்படுகின்றன. வீதி விபத்துக்கள் பெருகுகின்றன. சமூகத்தில் சட்ட விதிகள், ஒழுங்கு விதிகள், ஒழுக்க விதிகள், நடத்தைவிதிகள் என்பன அலட்சியத்திற் குள்ளாகுகின்றன. சமூகத்தில் சீர்கேடுகள், சீரழிவுகள் மலிந்துள்ள மைக்கு இத்தகைய அலட்சியங்களே காரணமாகின்றன.
பொருளாதார பலம், அதிகார பலம், செல்வாக்குப் பலம், சமூக அந்தஸ்துப் பலம் கொண்டோர் அத்தகைய பலங்களைப் பெற்றுக் கொள்ளாத மெலிந்தவர்களை, நலிந்தவர்களை அலட்சியம் செய்வதில் இன்பம் காண்கின்றனர். அதனால் சமூக ஏற்றத்தாழ்வுகள் வரம்புமீறிக் காணப்படுகின்றன. மனித உறவுகள் பலவீனமடைகின்றன. எத்தனையோ நல்ல உள்ளங்கள், அத்தகைய பலங்களைக் கொண்டிருக்காமையாலும், பலங்கொண்ட வல்லாளர்களைப் பிடிக்கும் கலையைப் பயிலாதிருப்பதாலும் மீண்டும் மீண்டும் அலட்சியத்திற்கு உள்ளாகின்றனர். அலட்சியத் தோடு இசைந்துபோவதே பிழைக்கும் வழி என்று ஆறுதல் கொள் வோரும் உளர்.
ஒரு சிலர் உணவில் அலட்சியம்; உடையில் அலட்சியம்; நடை, பாவனைகளில் அலட்சியம்; உடலைப் பேணுவதில் அலட்சியம், பழமையில் அலட்சியம், பண்பாட்டுப் பாரம்பரியங் களில் அலட்சியம். இவ்வாறு பார்க்கப்போனால், அலட்சியம் என்பது ஒரு வாழ்க்கைக் தத்துவமாக, வாழ்க்கைமுறையாக, நாகரிகமாக இடம் பெற்று வருவதை உணரக் கூடியதாக உள்ளது. இது, எங்கே கொண்டு போய் மனிதசமூகத்தை விடப்போகிறது என்பதுதான் இன்றைய புரியாத புதிர்.
அலட்சியம் எங்கு உள்ளதோ, அங்கு மனிதத்துவம் மனிதாபிமானம், மனித உறவுகள் என்பன மறைந்துவிடுகின்றன. அலட்சிய பாவம் மிக ஆபத்தான விளைவுகளை ஏற்படுத்துவன. அகந்தை கர்வம், செருக்கு, ஏனோதானோ என்ற போக்கு என்ப வற்றின் உந்தலே பிறரை அலட்சியம் செய்யுமாறு தூண்டுபவை.

Page 50
94 இ குமாரசாமி சோமசுந்தரம்
வேறு ஏதாவது ஒன்றில் தீவிர கருத்துச்செலுத்துபவர்களும், அந்த ஒன்றைத்தவிர, ஏனையவற்றில் அலட்சியப் பாங்குள்ளவர்களாக உள்ளனர். இது வேண்டுமென்று செய்யப்படும் அலட்சியங்கள் அல்ல. வேண்டுமென்று, பிறரைப் புண்படுத்துவதற்கென்றே செய்யப்படும் அலட்சியங்கள் பல சந்தர்ப்பங்களில் நிகழ்கின்றன. அவற்றின் தீமைகளை உணர்ந்த அத்தகைய அலட்சியங்களைத் தவிர்த்துக் கொள்ளல் மேலான அறம் ஆகின்றது.
ஒருவர் தமது பிரச்சினைகளையோ, மனவேதனை களையோ, எடுத்துக் கூறுவதற்குச் சந்தர்ப்பம் அளித்து அவற்றை உன்னிப்பாகக் கேட்ட மாத்திரமே, அவரின் அரைவாசிப் பிரச்சினைகள் தீர்ந்துவிட்ட உணர்வும், மனச் சுமைகளில் பாதிக்கு மேல் எங்கோ பறந்துவிட்ட சுகமும் அவருக்கு ஏற்பட்டுவிடு கிறது. அவரை நாம் அலட்சியம் செய்யாமையும், அவருக்கு நாம் கொடுத்த மதிப்பும், அவர்மீது காட்டிய கரிசனையுமே அவருக்கு அந்தச் சுகத்தையும் திருப்தியையும் கொடுத்தன. இந்த மாதிரி நல்ல இனிய மனித உறவுகளை, மேலோர் கீழோர்; நம்மவர் வேற்றவர்; வேண்டியவர் வேண்டாதவர் என்ற பேதமின்றி ஏற்படுத்துவதற்கு, அலட்சிய மனப்போக்கினைக் கைவிட்டு, பிறர்மீது ஆர்வம் கரிசனை என்பவற்றை வளர்ப்போமாக.
34. சமூகத்திற்குக் கடப்பாடுடையோம் பயப்பாடுடையோம்.
சிலர், எப்பொழுதுமே பிறரில் குறைகளை மாத்திரம் கண்டுபிடித்து அக்குறைகளைப் பற்றியே பேசிக்கொண்டிருப் பார்கள். அக்குறைகள் உள்ளவர்களிடம் குறைந்தபட்சம் ஓரிரு நல்ல பண்புகள் தன்னிலும் இருக்கலாம் தானே என்று எண்ணி, அந்த நல்ல குணங்களை எடுத்துக் கூறிப் பாராட்டுவதற்குப் பெரிதும் தயங்குவார்கள். பிறரிடம் வலிந்து குறைகாண்பதும், அவற்றை விமர்சிப்பதும், தூற்றுவதும் ஒரு பொழுதுபோக்காகவே கொண்டுவிட்ட மனிதர்கள் பலரைக் காண்கின்றோம். இதனால்

நல்வாழ்விற்குரிய நடைமுறைச் சிந்தனைகள் :) 95
ஒரு நல்ல பயனும் இல்லை; ஆனால் தீய பயன்கள் பல உண்டு. : எத்தனையோ பிரச்சினைகளுக்கும்; எத்தனையோ மனித உறவுகள் பாதிப்படைந்து, முறிவு ஏற்படுவதற்கும் இந்த வம் புதும்புகள் வழிவகுக்கின்றன என்பதை அவர்கள் உணர்வதில்லை. நமக்கு வாய் இருப்பது வாழ்த்தவும், நல்லவற்றைப் போற்றவுமே தவிர பிறரைத் தூற்றவோ, நையாண்டி செய்து பேசவோ அல்ல என்பதை அறிந்துகொள்ளுதல் நன்று.
'ஒருவரின் நற்பண்புகளையும் நற்செயல்களையும் போற்றுவதானால், அதனைப் பலர் முன்னிலையில் பகிரங்கமாகச் செய்யவேண்டும். ஒருவரின் தீய நடத்தைகளையும் தீய குணங் களையும் கண்டித்துத் திருத்த முற்படுவதானால், அவரை ஒரு தனியிடத்தில் வைத்து யாரும் அறியாதபடி புத்திமதிகள் கூறித் திருத்த வேண்டும்’ என்ற ஆலோசனை பெறுமதி வாய்ந்தது.
ஒருவரின் நிறைவுகள் நற்கருமங்கள் மற்றையோரால் கணிக்கப் பெற்று, பாராட்டப்படும்போது, நிறைவுகள் மேலும் நிறைவுபெறவும், மேலும் நல்ல கருமங்களில் ஈடுபாடு கொள்ள வும், கணிப்பும் பாராட்டும் வழி செய்கின்றன. கணிப்பு ஒர் உளவியல் தேவை. மனிதனின் உளவியல் தேவைகள் பூர்த்தி செய்யப்படவேண்டும். ஒருவர், தன் செயல்களும், தானும் மற்றையோரின் கவனத்தில் கொள்ளப்படுகின்றன என்பதையும்; மற்றையோரால் கணிக்கப் பெற்றும் மதிக்கப் பெற்றும் வருகின்றன என்பதையம் உணரும் போது, நிச்சயம் அவர் நல்லவராகவும், நல்ல பண்புடையராகவும் வாழ்வர். சந்தர்ப்பம் சூழ்நிலையால் ஒரு தவறான காரியத்தைச்செய்ய முயல முன், அவர் உள்ளத்தில், 'இதைச் செய்தால் என் நற்பெயர், மதிப்பு, கெளரவம் ஆகியவற்றிற்கு என்னவாகும்?' என்ற வினா கட்டாயம் எழும். அப்பொழுது மனச்சாட்சி அதற்குரிய பதிலைக் கூறும். உடனே அந்தக் கெட்டகாரியத்தில் ஈடுபடுவதை நிறுத்திக் கொள்வார். நல்லகாரியங்களையே தேடிச் செய்வார். இந்தநிலை ஏற்பட்டமைக்குக் காரணம் அவரின் கணிப்புத் தேவையைச் சமூகம் பூர்த்தி செய்தமையேயாகும். சமூகம் எவ்வாறு அவரின் கணிப்புத் தேவையை நிறைவு செய்தது? அவரின் நற்பண்புகளை

Page 51
96 ஐ குமாரசாமி சோமசுந்தரம்
யும் நற்கருமங்களையும், நன்னடத்தையையும் சமூகம் கணித்து, மதித்துப் பாராட்டியமையின் மூலம் அவரின் கணிப்புத்தேவை பூர்த்தி செய்யப்பட்டது. அதற்காக சமூகத்தின் கணிப்பை பெற்றுவிட்ட அந்த மனிதர், சமூகத்திற்குக் கடப்பாடுடைய வராகவும், பயப்பாடு உடையவராகவும் இருக்கவேண்டிய நிலையில் உள்ளார். அவர் என்றுமே நல்லவராக இருப்பதே அந்தக் கடப்பாடு. தன் கெளரவத்திற்கும், மதிப்பிற்கும் ஒரு சிறுகளங்கம் தன்னிலும் ஏற்படுத்தக்கூடிய தீய காரியங்களைச் செய்வதற்கு அஞ்சுதலே அந்தப் பயப்பாடு.
ஒரு மனிதன் தீயகுணங்களைக் கொண்டிருத்தலும் கெட்ட செயல்களையே தொடர்ந்து செய்துகொண்டிருத்தலும், ஏன் என ஆராய்ந்து பார்த்தால், சமூகத்திடம் அவன் கடப்பாடு கொண்டிராமையும், பயப்பாடு கொண்டிராமையும் புலனாகும். சமூகத்தவர், அம்மனிதனைச் சதாகாலமும் தூற்றிக் கொண்டும், குறைகளையே கண்டனம் செய்து கொண்டும் இருப்பதால், அதுவும் பகிரங்கமாகவே அவற்றைச் செய்வதால், அதேவேளை அவனின் பிழைகளை தனிப்பட்ட முறையில் உணர்ச்சிவசப்படா மல் எடுத்துரைத்து அவனைத்திருத்தும் முயற்சிகளில் ஈடுபடாத தால் அவனை எவ்விதத்திலாவது கணித்து, அவனின் கணிப்புத் தேவையைப் பூர்த்தி செய்யாது சமூகம் புறக்கணித்து வருவதால், சமூகத்திற்கு அவன் கடப்பாடுடையவனாக இல்லை. 'அற நனைந்தவனுக்கு குளிர் என்ன கூதிர் என்ன?’ என்றபடி சமூகத் தால் ஓரங்கட்டப்பட்ட ஒருவன் சமூகத்திற்குப் பயப்பாடு உடையவனாக இருக்கவேண்டிய நிலையிலும் இல்லை. எனவே, சமூகத்திற்குக் கடமைப் படாத ஒருவன், சமூகத்திற்குப் பயப் படாத ஒருவன் குற்றச் செயல்களைத் தொடர்ந்து புரிவதில் ஆச்சரியம் ஒன்றும் இல்லை. அவன் குற்றச் செயல்களைப் புரியாமல் செய்வதற்கு, அவனைச் சமூகத்திற்குக் கடப்பாடு உடையவன் ஆக்கவேண்டும். அவனைத் தூற்றுவதைத்தவிர்த்து, கண்டிப்பதைக் குறைத்து, அவனிடம் காணக்கூடிய ஓரிரு நல்ல அம்சங்களை கணித்து அதற்குரிய மதிப்பைக் கொடுக்கவேண்டும். சமூகம் தன்னையும் கணிக்கின்றது என்னும் எண்ணம் ஏற்படும்

நல்வாழ்விற்குரிய நடைமுறைச் சிந்தனைகள் இ 97
போது, சமூகத்திற்குக் கடப்பாடு உடையவனாகின்றான். குற்றச் செயல்களைப்புரிய, சமூகத்திற்கு பயப்படுகின்றான். படிப் படியாகக் குற்றம் புரிதல் குறைகின்றது. திருந்துகின்றான். நல்லவன் ஆகின்றான். சமூகத்திடம் அவனுக்குக் கடப்பாடும் பயப்பாடும் இருப்பதால்தான் அவன் நல்லவன் ஆனான். குடும்பமும் ஒரு சமூகம். குடும்பமும் உறுப்பினரையும் ஒதுக்காது குடும்பத்திற்குக் கடப்பாடு உடையவராக்குவதால் குடும்பம் நலம்பெறும்.
35. நம்பிக்கையும் நாணயமும்
நம்பிக்கை, நாணயம் எனும் சொற்களை நாம் அடிக்கடி பயன்படுத்துகிறோம். நாம் மனிதர்களை முதன் முதலில் சந்திக்கும்போது, சந்தேகத்துடனேதான் நோக்குகிறோம். அது மனித இயல்பாகிவிட்டது. இந்த மனிதர் நாணயமானவரா? இவரை நம்பலாமா; இவருடன் நட்புறவு கொள்ளலாமா? என்று பல கேள்விகளைத் தொடுத்து விடைகாண முயல்கிறோம். இந்தக் காலத்தில் யாரை நம்புவது, யாரை நம்பாமல் விடுவது என்பதைக் கண்டுபிடிப்பதுதான் மிகச்சிரமமான காரியம் என்கின்றனர் பலர். நாணயமுள்ளவர்களைக் காண்பது அத்தி பூத்தாப் போல அரிதான நிகழ்வாகவே உள்ளது என்றும் கூறுகின்றனர். இந்த நிலைமை மாற்றப்பட வேண்டியது அவசியம். நம்பிக்கையும், நாணயமும் மனித இனத்தின் மதிப்பு வாய்ந்த உடமைகள். அவற்றைப் பேணுவதுதான் சிறப்பும் செல்வமும். மனிதகுல மாட்சியையும் மாண்பினையும் துலங்கவைப்பவை மனிதரிடம் காணப்படுகின்ற நம்பிக்கையும் நாணயமுமே என்பதை ஒவ்வொரு மனிதனும் நினைவில் வைத்துக் கொள்ளவேண்டும்.
மனித வாழ்வில் அடையப்படுகின்ற வெற்றிகளுக்கும், முன்னேற்றங்களுக்கும், உயர்வுகளுக்கும், மனிதரிடம் காணப் படுகின்ற, கட்டியெழுப்பப்படுகின்ற நம்பிக்கையும், நாணயமும் அடிப்படைகள் ஆகின்றன. உண்மை, நேர்மை, நிதானம் ஆகிய பண்புகள் நம்பிக்கையை வளர்க்கின்றன. மனம் கோடாமை,

Page 52
98 ஒ குமாரசாமி சோமசுந்தரம்
சொல் கோடாமை, செயல் கோடாமை என்பன நாணயத்தை ஏற்படுத்துகின்றன. நம்பிக்கையும் நாணயமும் மனிதனைச் சான்றோன் நிலைக்கு உயர்த்துபவை.
பிறரது நம்பிக்கைக்குப்பாத்திரமாதல் என்பது ஒருவரின் நாணயத்தைப் பொறுத்தது எனலாம். அதனால் தான் நாணயம் மனிதனுக்கு அவசியம் என்கின்றனர். மனிதரிடையே நல்லுறவு கள், நட்புகள்,' என்பன ஏற்படுவதற்கு ஒருவர்மீது மற்றவருக்கு ஏற்படுகின்ற நம்பிக்கையே காரணமாகின்றது. அவ்வாறே ஒருவருடன் ஒருவர் பகைமை கொள்வதற்கும் அவர்களிடையே ஏற்படுகின்ற நம்பிக்கையீனம் நம்பிக்கைத்துரோகம், சொன்ன சொல் தவறுதல் என்பனவே காரணமாகின்றன. வாக்குறுதிகளை யும், உறுதிமொழிகளையும் காற்றில் பறக்கவிடுபவர்களிடமிருந்து அவர்களின் நம்பகத்தன்மையும், நாணயமும் தூர விலகிவிடு கின்றன. வாழ்வில் மனிதனானவன் ஒரேயொரு தடவை தன்னி லும், தன்னுடைய நம்பகத்தன்மையையோ நாணயத்தையோ இழந்தவன், மீண்டும் அவற்றைப் பெற்றுக் கொள்வது பெருஞ் சிரமமான காரியம். ஒரு வேளை முயன்று மீண்டும் நம்பிக்கையை யும் நாணயத்தையும் சம்பாதித்துக் கொண்டாலும் அவை போலியா, அசலா என்று உரைத்துப்பார்த்துக் கொண்டே சமூகம் இருக்கும். அதனாலேதான் நம்பிக்கையையும் நாணயத்தையும் எந்த ஒரு இக்கட்டான நிலையிலும் எம்மிலிருந்து தளரவிடாது எம்முடனேயே தங்க வைத்திருத்தல் அவசியமாகின்றது.
கணவன் மனைவியிடையே; பெற்றோர் பிள்ளை களிடையே; ஆசிரியர் மாணவர்களிடையே; மேலதிகாரிகள் பணியாளர்களிடையே; தொழில்தருபவர் தொழில்புரிவோரிடையே; தலைவர்கள் தொண்டர்களிடையே பரஸ்பரம் நம்பிக்கை, நாணயம், நல்லெண்ணம் என்பன இடையீடின்றித் தொடர்ந்து காணப்படும் நிலையிலேயே அவர்களிடையே சுபீட்சமான நல்ல மனித உறவுகள் நிலைகொள்கின்றன. மனித உறவுகள் நம்பிக்கையில்தான் ஆரம்பிக்கின்றன; நம்பிக்கையில்தான் வளர்கின்றன. நம்பிக்கைதான் மனித உறவுகள் ஓங்கி வளரப் போஷிக்கின்றது. மனித உறவு என்ற பயிரைப் பாதுகாக்கும் வேலியாக அமைவது நாணயம்.

நல்வாழ்விற்குரிய நடைமுறைச் சிந்தனைகள் ே 99
நம்பிக்கைக்கு இரண்டகம் செய்தல் நம்பிக்கைத் துரோகம் என்பன பாரதூரமான பாதகங்கள். பிறரை ஏமாற்றுதல், வஞ்சித்தல், பொய்வழக்குப் பேசுதல் என்பன வாழ்க்கையில் தவிர்க்கப்பட வேண்டிய பாவங்கள். நம்பிக்கையும், நாணயமும் மனிதர்களை வாழ் விக்கும்; மனித உறவுகளை உறுதியாக வைத்திருக்கும். நம்பிக்கையும் நாணயமும் பிழைப்பட்டால், மனிதனின் மானம், மரியாதை, யோக்கியம், கெளரவம் யாவுமே அவனை விட்டுப் போய்விடும். மனித வாழ்க்கை தாழ்நிலையை எய்திவிடும்.
வியாபாரம் என்பதே கொடுக்கல் வாங்கல். கொடுக்கல் வாங்கலில் நாணயம், நம்பிக்கை இருக்கும் வரை வியாபாரம் செழிக்கும். பணத்திற்கு நாணயம் என்றும் பெயர். பணத்தைக் கை யாளுதலில் நாணயம் தேவை. அல்லது பணத்தைக் கையாடுதல் ஆகிவிடும். மனிதவாழ்க்கையும் ஒரு வகைக் கொடுக்கல் வாங்கல்தான். பண்டங்கள், பணம் மாத்திரமல்ல, நல்ல பண்பு களும், அறிவுகளும் பரிமாற்றம் செய்யப்படுகின்றன. இங்கெல்லாம் நாணயம் தேவை. அன்பைப் பிறருக்குக் கொடுக்கிறோம், வாங்குகிறோம்; கல்வியையும் கொடுக்கிறோம், வாங்குகிறோம்; மனிதப் பண்புகளைக் கொடுக்கிறோம் பிறரிடமிருந்து பெறு கிறோம். இத்தகைய அன்புப் பரிவர்த்தனை, அறிவுப் பரிவர்த்தனை, பண்புப் பரிவர்த்தனை, பணம் பண்டப்பரிவர்த்தனை யாவும் நம்பிக்கை, நாணயம் என்பவற்றின் அடிப்படையிலேயே நிகழ்கின்றன என்பதை உணர்ந்து நம்பிக்கை, நாணயத்தைப் பொன்போல் பேணி வாழ்வில் உயர்வோமாக.
36. நல்ல குடும்பம் பல்கலைக்கழகம்
சமூகம், மகிழ்ச்சியும் மலர்ச்சியும் பெற்றுத் திகழ்வதற்கு முக்கியகாரணம், சமூக உறுப்பினர்களிடையே நிலவுகின்ற நல்லுறவுதான். நமது குடும்பம் ஒரு சமூகம்; நாம் வாழுகின்ற பிரதேசம் ஒரு சமூகம்; பாடசாலை ஒரு சமூகம்; நாம் பணியாற்று கின்ற நிறுவனம் ஒரு சமூகம்; வேலைத்தலம் ஒரு சமூகம்; இவ்வாறு பெரிதும் சிறிதுமாகப் பல சமூகங்களை இனங்கண்டு

Page 53
100 ஐ குமாரசாமி சோமசுந்தரம்
கொள்ளலாம். சமூகங்கள் அனைத்திலும் உறுப்பினர்களாக மனிதர்களே இருக்கின்றனர். சமூகங்களின் நிலைபேற்றிற்கும், சீர்கேட்டிற்கும்; ஒழுங்கிற்கும் ஒழுங்கீனத்துக்கும்; பலத்திற்கும் பலவீனத்திற்கும் வளர்ச்சிக்கும் வீழ்ச்சிக்கும் சமூக உறுப்பினர் களிடையே காணப்படுகின்ற மனித உறவின் தன்மையே பொறுப் பாக உள்ளது.
முதலில் குடும்பம் எனும் சமூகத்தை எண்ணிப்பார்ப் போம். பெற்றோர், கணவன், மனைவி, பிள்ளைகள், மருமக்கள் எனும் உறவு முறைகளோடு, குடும்ப உறுப்பினர்கள் உள்ளனர். அவர்களிடையே பரஸ்பர நல்லுறவு பேணப்படும் போதுதான். அக்குடும்பம் செழிப்படையும். அன்பு, புரிந்துணர்வு, ஐக்கியம் நம்பிக்கை, தியாகம், விட்டுக்கொடுத்தல், அர்ப்பணம், பாராட்டு தல் ஆகிய பண்புகளின் அடிப்படையில்தான் நல்லுறவு தழைத்து ஓங்குகின்றது. குடும்ப உறுப்பினர்களாக, வயதிலும் அனுபவங் களிலும் முதிர்ந்தவர்கள் தொடக்கம் சிறு குழந்தைகள் வரை உள்ளனர். வேறுபட்ட சிந்தனைகள், எண்ணங்கள் அறிவுகள், அனுபவங்கள், உணர்வுகள், கொள்கைகள், குறிக்கோள்கள் என்பன அவரவர்களின் வயது, இயல்பு, பருவம், கல்வி, வாழும் சூழல் என்பவற்றிற்கேற்ப இருக்கலாம். சந்ததி இடைவெளி காரணமாக வேறுபாடுகள் இருக்கலாம். இத்துணை வேறுபாடுகளுக்கிடையேயும் குடும்ப உறுப்பினர்கள் குடும்பம் என்ற சமூகத்தைக் கட்டுக்கோப்பாகவும், உறுதியாகவும், ஒற்றுமையாகவும் வைத்திருக்க வேண்டும் என்பதில் ஒத்த கருத்துள்ளவர்களாக இருக்கவேண்டும். வேற்றுமையில் ஒற்றுமை காண்பது தான் விவேகம், அறிவு, கெட்டித்தனம் என்று கொள்ள வேண்டும். தனிப்பட்டவரின் நலனிலும் பார்க்கக் குடும்பநலன் முக்கியமானது என்பதைக் கருத்தில் கொள்ளும் போது குடும்ப உறுப்பினர் களிடையே நிச்சயம் நல்லுறவு பேணப்படும் நிலை உருவாகும்.
கணவன், மனைவியின் நலனுக்காக; மனைவி கண வனின் நலனுக்காக; பெற்றோர் பிள்ளைகளின் நலனுக்காக, பிள்ளைகள் பெற்றோரின் மகிழ்ச்சிக்காக; சகோதரர்கள் மற்றைய

நல்வாழ்விற்குரிய நடைமுறைச் சிந்தனைகள் இ 101
சகோதரர்களின் வாழ்வுக்காக; ஈற்றில் எல்லோரும் எல்லோரின் சுகத்துக்காக மனம், மொழி, மெய் தூய்மையோடு பாடுபடுவார்களே யானால், குடும்பப் பிரச்சினை என்பதற்கே இடமில்லாமற்போய் விடும். குடும்பம் ஓர் அன்புப் பூங்காவாக, அழகுச்சோலையாக, இன்பபுரியாக அமைந்துவிடும்.
ஒரு குடும்ப வாழ்க்கையின் வெற்றிக்குப் பல காரணங் கள் உண்டு. இனிய, இசைவான மனித உறவுகளைப் பேணுதல் அவற்றுள் மிகமுக்கியமானது. மனைவி சுவையான உணவுகள், பதார்த்தங்களை அருமையாகச் செய்து கணவனுக்கும், பிள்ளை களுக்கும் அன்போடு பரிமாறுகிறாள். அத்தனைக்கும் அவள் எதிர்பார்ப்பது, "ஆகா, இன்று சாப்பாடு பிரமாதம், எல்லாமே நல்ல சுவையான உணவுகள்' என்று கணவனும், பிள்ளைகளும் உதிர்க்கும் நாலு நல்ல வார்த்தைகள் தரும் இன்பத்தைத் தான். ஆனால் மூக்குமுட்டச் சாப்பிட்டுவிட்டு, ஒரு நல்ல வார்த்தை கூடக் கூறாமல் எழுந்து சென்றுவிடுகின்ற கணவன், பிள்ளைகளும் உண்டு. மாறாக உப்பில்லை, புளியில்லை, காரம் அதிகம், இனிப்பே இல்லை என்று குறை கூறியே பழக்கப்பட்டவர்களும் உண்டு. மனைவியின் உள்ளத் தவிப்பைக் கணவன் புரிந்து கொள்வதில்லை; தாயின் ஏக்கப் பெருமூச்சைப் பிள்ளைகள் தெரிந்து கொள்வதில்லை. இந்த நிலையில் நல்ல உறவுகள் இக்குடும்பத்த வரிடையே எவ்வாறு வளரும்? நாலே நாலு வார்த்தைகள், நயமாகவும் இனிமையாகவும்; சாப்பிட்ட உணவைப் பற்றி பாராட்டிச் சொல்வதனால் அவர்களுக்கு என்ன குறைந்து விடப் போகிறது. மாறாக, பாராட்டுதல்கள் தெரிவிக்கப் படுமாயின், அந்த மனைவி, அந்தத் தாய் பூரிப்பும் பேருவகையும் அடைகின்றாள். அதனால் அவளின் உள்ளமும் உடலும் உற்சாகம் பெறுகின்றன. மேலும் பல தியாகங்களைப் புரிவதற்கு அவள் உந்து சக்தியைப் பெறுகிறாள். கணவன், மனைவி, பிள்ளை களிடையே நல்ல மனித உறவுகளைக் கட்டியெழுப்புவதற்கு, ஒருவர் செயலை மற்றவர் மனம்விட்டுப் பாராட்டுதல் என்பது பெருந்துணையாக அமைகின்றது.
மனித உறவுகள் நன்றாக அமைவதற்கு, மனித உணர்வு கள் மதிக்கப்பட வேண்டும். குடும்பத்தினரிடையே நல்லுறவு

Page 54
102 ஐ குமாரசாமி சோமசுந்தரம்
பேணப்படுவதற்கு ஒருவர் செயலை மற்றையவர், மதித்தல், பாராட்டுதல் என்பன அவசியமாக இருத்தல் போன்று, அவர்களுடைய உணர்வுகளையும் ஒவ்வொருவரும் புரிந்து கொள்ளலும், சந்தர்ப்பங்களுக்கேற்றபடி, விட்டுக் கொடுத்தும், சகித்தும், நடந்து கொள்ளலும் முக்கியம். விட்டுக் கொடுத்தலோ, சகித்துக் கொள்ளலோ பலவீனம் என்று எந்த ஆணோ அல்லது பெண்ணோ கருதிவிடக்கூடாது. ஆண்களும் சரி, பெண்களுஞ் சரி, உணர்ச்சிகளால் ஆளப்படுபவர்கள் தான். எவராயினும் சரி, உணர்ச்சிவயப்பட்டிருப்பவர்களுக்கு, உணர்ச்சி வயப்படாதிருப் போர் விட்டுக் கொடுத்து அவர்களைச் சாந்தப்படுத்துவதால் எவரும், எதிலும் குறைந்து விடுபவர்கள் அல்ல. மாறாக குடும்பத்தில் மாண்பினையும் மகிழ்ச்சியையும் ஏற்படுத்தியவர் ஆவர். மனித உறவுகளைப் பேணி குடும்பத்தில் மகிழ்ச்சி பெற்று நல்வாழ்வு வாழ்வோமாக.
37. பிறரை மட்டந்தட்டுதல், பரிகசித்தல் ஆகாது
சகல மனிதர்களிடமும் பல்வேறுபட்ட திறன்கள் ஒளிந்து உள்ளன. அவற்றுள் ஒன்றோ, சிலவோதான் வெளிப்பாடா கின்றன. வெளிப்படாமலே பயனற்றும் விடுகின்றன. எந்த ஒரு மனிதனிடமும், திறமைகள் ஏதும் இல்லை என்று சொல்ல முடியாது. அப்படியிருந்தும், பிறரைக் குறைத்து எடைபோடுவது; தாழ்த்தி மதிப்பிடுவது; மட்டந்தட்டிப் பரிகசிப்பது என்பன சிலரால் மேற்கொள்ளப்பட்டுவருகின்றன. அவ்வாறு செய்வதால் பிறர் கண்களுக்குத் தாம் உயர்ந்தவர், கெட்டிக்காரர், மேதாவி என்ற தோற்றத்தை ஏற்படுத்திவிடலாம் என்று எண்ணுகின்றனர் போலும். மனிதர்கள் வெறும் ஜடங்கள் அல்ல; உணர்வுகளும், உணர்ச்சிகளும் கொண்டவர்கள் எனும் உண்மையை அந்த மேதாவிலாசங்கள் சிறிதேனும் உணர்கின்றார்களில்லை. நாலு பேர் மத்தியில் ஒரு மனிதனை மட்டந்தட்டிப் பேசும்போது, அந்த மனிதன் எந்த அளவிற்குக் கூனிக்குறுகிப்போகின்றான்; உணர்ச்சிக்

நல்வாழ்விற்குரிய நடைமுறைச் சிந்தனைகள் 3 103
கொந்தளிப்பால் உள்ளத் தவிப்புக்கு உள்ளாகின்றான் என்று அந்தப் 'பெரிய" மனிதர்களுக்குத் தெரிவதில்லை.
மனிதரை மட்டந்தட்டுதல், பரிகாசஞ் செய்தல், கீழ்மைப் படுத்துதல் என்பன மனிதாபிமானம் அற்ற செயல்கள். இவற்றினால் எவர்க்கும் நன்மையில்லை. ஒருவேளை, அவை தற்காலிகமாகச் சொற்ப சுகத்தை ஒரு சாராருக்குத் தருகின்றபோதிலும், பிறரின் தவிப்பில் பெறுகின்ற சுகம், முடிவில் ஒருபோதும் சுகத்தைத் தரமாட்டாது என்பது நிச்சயம். உடல்வதை, உளவதை என்று வதை இரண்டு வகைப்படும். உடல் வதையால் ஏற்பட்ட புண், விரைவில் குணமடைந்து விடலாம். ஆனால் வதைப்பிற்குள்ளான உள்ளத்தில் ஏற்படும் புண் இலகுவில் மாறாது; அது புரையோடிய நிலையில் அதிக காலம் நிலைத்திருக்கும். அடிக்கடி உள்ளத்தை உறுத்தும், நெருடும், நீறுபூத்த நெருப்புப்போல, வெளிக்காட்டாது விட்டாலும் உள்ளே அணையாது, அவியாது காணப்படும்.
மனிதனை மட்டந்தட்டுதல், பரிகசித்தல், கீழ்மைப் படுத்துதல் ஆகியன உளவதையினுள் அடங்குபவை. அவற்றினால் உளரீதியாக மனிதர்கள் துன்புறுத்தப்படுகின்றனர். ஒருவனின் தன்மானத்தைத் தகர்க்கின்ற செயல்களாக அவை உள்ளன. தனக்குத் தனக்கு மானம் பெரிது என்று கருதுபவர்கள், பிறர்க்கும் மானம் பெரிது தான் என்று கொள்ளத் தயங்குகிறார் கள். இத்தகைய உள ரீதியான வதைகள் கற்றவர்கள் மட்டத்திலும், உயர்கல்வி நிலைய மட்டத்திலும் காணப்படுதல்தான் விசனத்தைத் தருகிறது. இவையெல்லாம் பகிடிக்குத்தானே என்று சமாதானம் சொல்லலாம். எந்தப் பகிடியும் உளவதையாக மாறாமல் இருக்கும் வரைதான் அது பகிடியும் நகைச்சுவையும், என்பது உணர்தற்பாலது.
குடும்ப வாழ்க்கையிலும் சரி, பொது வாழ்விலும் சரி, ஒருவரை ஒருவர் மட்டம் தட்டுதல், கீழ்மைப்படுத்துதல் என்பன அடிக்கடி நிகழும் பட்சத்தில் மனித நல்லுறவுகள் பாதிப்படைய நேரிடும். ஒருவரிடம் மற்றவர்களுக்குள்ள பிணைப்பு, பந்த பாசம், விசுவாசம், மதிப்பு, மரியாதை என்பவை குறைவடையும் ஈற்றில் மன வெந்திப்புகளும், நடத்தைப் பிறழ்வுகளும், உறவு முறிவுகளும் தான் மிஞ்சும்.

Page 55
104 இ குமாரசாமி சோமசுந்தரம்
இந்த உலகத்தில் மனிதர்களாகப் பிறந்தவர்கள் மனிதத் தன்மைகளைப் பேணக் கடமைப்பட்டவர்கள். எந்த விதத்திலும் உடல் ரீதியாகவோ, உளரீதியாகவோ எவரையேனும் இம்சிப்பது மனிதத் தன்மையல்ல. அஹிம்சை எனும் மனிதப் பண்பு உடலுக்குத் தீங்கு செய்யாமை மட்டும் அன்று; உயிருக்கும் உறுகண் விளைவிக்காமை; மனித உள்ளங்களையும் வருத்தாமை என்பதையும் தெரிந்து கொள்ளவேண்டும். மனவருத்தம் உடல் வருத்தத்தை விடக் கொடியது. அது உடல் வருத்தத்திற்கும் காரணமாகின்றது. எனவே, பிறருக்கு மனவருத்தத்தை ஏற்படுத் தும் செயல்களில் ஈடுபடாமல் இருத்தல் மனிதத் தன்மையைப் பேணுவதாகும். இந்த வகையில் பிறரை மட்டந்தட்டுதல், பரிகாசம் செய்தல், நையாண்டி செய்தல் என்பன உளச்சிக்கல்
களையும் உண்டாக்க வல்லன.
ஒரு நிறுவனத்தின் நிர்வாகி, ஓர் அலுவலக நிர்வாகி என்போரும்; குடும்பத் தலைவர், சமூகத் தலைவர் என்போரும் தாம் சார்ந்த நிறுவனங்கள் முன்னேற்றம், வளர்ச்சி காணவேண்டும் என விரும்பினால், தம்முடன் பணிபுரிகின்ற மனிதர்களை மனிதாபிமானத்துடன் நோக்கவேண்டும். அவர்களும் மனிதர்கள் தான் என்ற உணர்வுடன் அவர்கள் யாவரையும் மதிக்கத் தெரிய வேண்டும். எல்லோரிலும் திறமைகள் உண்டு என்பதை ஒத்துக் கொள்ளவேண்டும். மனித உள்ளங்களைப் புண்படுத்துவதற்குப் பதிலாக, உத்வேகப்படுத்த வேண்டும். உத்வேகமும், உற்சாகமும் ஏற்படும் போது எத்தகைய தியாகங்களையும் செய்ய முன்வருவர். மனிதனுக்கும் மனிதனுக்குமிடையில் நல்ல மனித உறவு வளர்வது ஒருவரை ஒருவர் மதிக்கும் போதும், பாஸ்பரம் அன்பு தழுவிய அக்கறை கொள்ளும் போதும் தான்; மட்டந்தட்டிக் கீழ்மைப்படுத்தும் போது அல்ல என்பதை நன்கு உணர்ந்து கொண்டு வாழ்வோமானால், வாழ்வில் சுபீட்சத்தையும், முன்னேற்றத்தையும் காண்பது உறுதியாகிவிடும்.

38. பிஞ்சில் பழுப்பது வெம்பல்
சுவையான மாம்பழம் என்கிறோம். அது நன்கு முற்றிப் பழுத்தபடியால் தேன்போன்று இனிமையாக இருக்கிறது. அதனைப் பிஞ்சிலே பழுக்க வைத்திருந்தால், அதற்குப் பெயர் வெம்பல். கனிந்த மாம்பழத்தைப் போன்று, வெம்பல் மாழ்பழம் இனிய சுவையைத் தராது. மாறாக, அது புளிக்கும். மாம்பழம் புளிக்கின்ற தென்றால், அது பிஞ்சிலே பழுத்துவிட்டது என்று யாரும் சொல்லிவிடுகிறார்கள். ஒரு முறை கடித்துச் சுவை பார்த்த "கையோடு அதனைத் தூர வீசி எறிந்தும் விடுகிறார்கள். அது மட்டுமா, யாரிடம் அந்தப் பழத்தை விலைக்கு வாங்கினார்களோ, அந்த வியாபாரியைச் சபித்தும் விடுகிறார்கள். பின் அத்தகைய வியாபாரியிடம் நம்பிக்கை வைக்கவும் மாட்டார்கள். பருவம் தப்பிப் பிஞ்சிலே பழுத்த மாழ்பழத்தினால் எத்தனை பேருக்கு, எத்துணை தொல்லைகள் நேருகின்றன. மாம்பழமும் அதன் சுவையை இழந்தமையினால் அதற்கு வாழ்த்துக்கள் இல்லை, வைவுகள் தான் கிடைக்கின்றன; பாராட்டு இல்லை, பழிச்சொல் தான் மிச்சம். ஈக்களும் இலையான்களும் மொய்க்கக் குப்பைத் தொட்டிக்குள் குடங்கிக் கிடக்கிறது.
பிஞ்சிலே வெம்பிப் பழுத்த மாழ் பழத்திற்கு இந்தக் கதியென்றால்; மனிதர்கள் பிஞ்சிலே, இளம்பராயத்திலே பருவம் தப்பிய நடத்தை முறைகளால், அருமையான இளமையையும் வீரியத்தையும் வீணாக்கி, விரைவில் வயோதிபக் கோலத்தை அடைந்து விடுகிறார்களே, அத்தகைய மனிதர்களின் கதியும் நிலையும் எவ்வாறு இருக்கும் என்பதை எண்ணிப் பார்க்க வேண்டும். சமூகத்தின் புறக்கணிப்புக்கும், ஏளனத்துக்கும் மத்தியில் இழிவான வாழ்க்கையையே, மன உளைச்சலோடும், மனவிரக்தியோடும் வாழ்ந்து, எஞ்சிய காலத்தைக் கழிக்க வேண்டி வரும் என்பதைச் சற்று நிதானத்துடன் சிந்தித்துப் பார்ப்பார்களே யானால், பிஞ்சிலே பழுக்கும் அவலநிலைக்கு ஒருங்கிசைவாக நிச்சயம் நடந்து கொள்ளவே மாட்டார்கள்.

Page 56
106 ஐ குமாரசாமி சோமசுந்தரம்
வாழ்க்கை வாழ்வதற்கே என்பார்கள். முழுமையான நல்வாழ்வு வாழ்வதற்கு ஆயத்தம் செய்கின்ற பருவமும், கல்வி கற்கின்ற காலமும் இந்த இளமைப் பருவம் இதனை இளையோர் பருவம் என்றும் கூறலாம். இந்த இளையோர் பருவம் எவ்வாறு கழிக்கப்படுகின்றதோ, அதற்கு ஏற்றவாறே அவர்களின் மிகுதி வாழ்க்கை அமையும். எனவே தான் இளையோர் பருவத்தை உதாசீனஞ் செய்யக் கூடாது; கூடாத, ஒவ்வாத நடத்தைகளில் இப்பருவத்தை விரயமாக்கக் கூடாது என்று பெரியவர்கள் அடிக்கடி அறிவுரை கூறிவருகின்றார்கள். கேட்டு நடப்பவர்கள் வாழ்க்கையில் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள். கேளாதவர்கள் பின்னர் அல்லல்படுகிறார்கள்.
இன்று பொதுவாக, அதுவும் குறிப்பாகப் பாடசாலை செல்லும் மாணவர்கள் சிலர் எதிர்ப்பால் கவர்ச்சி என்ற ஒன்றினால் ஈர்க்கப்பட்டு பெரிதும் அலைந்து, உலைந்து ஈற்றில் உருக்குலைந்து போகின்றார்கள். இது ஒரு பெரும் பிரச்சினையாக உள்ளது. மனிதனை மிருகமாக்கிக் கொண்டு, இந்தப் பாலுணர்ச்சி என்கின்ற விடயம், மனிதனுக்குப் பலவகையிலும் தொந்தரவு கொடுக்கிறது. படிக்க வேண்டிய காலத்தில் பிள்ளைகளின் படிப்பைக் கெடுக்கிறது. நல்ல பண்புகளை வளர்க்க வேண்டிய காலத்தில், அப்பண்புகளை வளரவிடாமல் தடுக்கிறது. சதா அதே சிந்தனையில் இருப்பதால், சகல விதமான விருத்திகளும் தடைப்பட்டு விடுகின்றன. மானம், குலம், கல்வி, வண்மை; அறிவுடைமை முதலிய நல்லன பலவும் காமப்பசி வந்திடப் பறந்து போய்விடுகின்றன. புதுப்புது உத்திகளைக் கையாண்டு காம உணர்ச்சிகளைத் திருப்திப்படுத்திக் கொள்வதில் நேரம், பணம், சக்தி யாவும் வீணாக்கப்பட்டு விடுகின்றன. இவ்வாறு பிஞ்சிலே பழுத்து வெதும்புகின்றவர்களைப் பார்க்கும் போது, பரிதாபமே தோன்றுகின்றது. வாழும் வளரும் பிள்ளைகள் தேவையற்ற உணர்ச்சிகளுக்கு இடம் கொடுத்து, இளமையிலேயே வாழ்க்கையை அலட்சியம் பண்ணிக் கொள்கிறார்களே என்பதைக் காணும்போது, கவலைகொள்ளாமல் இருக்கமுடியாது.
அவர்களைப் பார்த்துச் சில புத்திமதிகள் கூற விரும்பு கிறேன். 'என் அன்புக்குரியவர்களே, பள்ளிப் பருவம் மிக

நல்வாழ்விற்குரிய நடைமுறைச் சிந்தனைகள் இ 107
அருமையான பருவம், வாழ்வில் இப்பருவம் மீண்டும் வராது. பள்ளிப் பருவத்தைப் பராணிப்பாய் விட்டுவிட்டு, பின்பு படிக்கவில்லையே என்று ஏங்கி நிற்பவர்களைப் பார்த்திருக்கின றோம். இப்பொழுது நன்றாகப் படியுங்கள். வாழ்க்கைக்குத் தேவையான அதியுயர்ந்த தகைமைகளையும் தகுதிகளையும் பெற்றுக் கொள்ள எல்லாவித முயற்சிகளையும் ஆர்வத்தோடு மேற்கொள்ளுங்கள் வருங்காலம் வளமாக அமைய வேண்டுமா னால் அதற்குரிய அடித்தளங்களை இந்த இளையோர் பருவத் திலேயே அமைத்துக் கொள்ள வேண்டும். இந்தக் காலத்தில், நாலாப்பக்கத்திலிருந்தும் உங்களைக் குழப்பப் பல காரணிகளும், சந்தர்ப்பம் சூழ்நிலைகளும் கங்கணங்கட்டிக் கொண்டு முன் வரும். அவற்றிற்கு இடங்கொடுக்காதீர்கள். அவற்றில் ஒன்று தான் இந்தப் பாலுணர்வு. அந்த உணர்வு மிகக் கொடுமையானது. அந்த நேரம், உங்கள் அக்கா, தங்கைகளை நினையுங்கள். அவர்கள் யாரிடமாவது, எவனோ ஒருவன் காம எண்ணங்கொண்டு சென்றால்; அவர்களைப் பின்தொடர்ந்து தொல்லைகள் கொடுத்தால் நீங்கள் சகித்துக் கொள்வீர்களா? சகிக்கமாட்டீர்கள். நீங்களும், பெண் பிள்ளை களுக்குத் தொல்லை கொடுக்காதீர்கள். பெண்களைச் சகோதரி களாக எண்ணுங்கள். தீய உணர்ச்சிகள் எல்லாம் தீய்ந்துவிடும்".
ஆமாம் அரும்பு, மலர், காய், கனி எனும் நிலைகளைப் படிப்படியாகக் கடந்து பழுக்கின்ற மாங்கனியே தித்திப்புச் சுவையைத் தரும். பருவம் தப்பினால் புளிக்கத் தான் செய்யும். மனித வாழ்க்கையிலும் பருவம் தப்பி நடைபெறுகின்ற செயல் களினால் பழிப்பு ஏற்படாமல், பருவங்களைப் பக்குவமாகக் கடந்து சென்று வாழ்க்கையை மகிழ்ச்சி நிறைந்ததாக அமைத்துக் கொள்வோம்.

Page 57
39. ஞாபகமும் மறதியும் வேண்டற் பாலனவே.
ஞாபகம், மறதி ஆகிய இரண்டும் மனிதனுக்கு கிடைத்த நன்கொடைகள். ஆம், இவ்விரண்டும் மனித வாழ்விற்குத் தேவை யானவை. மனித வாழ்வினைச் சிறப்பிப்பவை; மேம்படுத்து பவை. ஆனால், ஞாபகத்தில் வைத்துக் கொள்ள வேண்டிய வற்றை, மறந்து விடுவதோ, மறக்க வேண்டியவற்றை ஞாபகத்தில் வைத்திருப்பதோ நல்லதல்ல. அதனால் தீமைகளே ஏற்படுகின்றன. அவ்வாறு அடி தலைமாறிச் செய்வதால், மனிதன் தன் நிலையில் தாழ்ந்து விடுகின்றான்.
ஒருவர் செய்த நன்றியை நாம் ஒருபோதும் மறத்தல் ஆகாது. நன்றியில், பெரிது சிறிது கிடையாது. பெரிதாகச் செய்த நன்றியை நினைவில் வைத்திருப்பதும், சிறிதாகச் செய்த நன்றியை மறந்து போவதும் என்ற நிலைப்பாட்டிற்கு, நன்றியைப் பொறுத் தளவில் இடம் இல்லை. நன்றியை யார் செய்தாலும், எந்த அளவில் செய்தாலும், எந்தச் சூழ்நிலையில் செய்தாலும், நன்றி நன்றிதான் அதனை மறத்தல் ஆகாது.
'நன்றி மறப்பது நன்றன்று' என்று இடித்துரைக்கும் வள்ளுவப் பெருந்தகை, நாம் நிச்சயம் மறந்துவிட வேண்டிய ஒன்றையும் வலியுறுத்திக் கூறுகிறார். பிறர் நமக்குச் செய்த தீமையை நாம் உடனேயே மறந்து விடவேண்டும் என்பது வள்ளு வர் வாய்மொழி. நன்றல்லது, அன்றே மறப்பது நன்று என்கிறார் வள்ளுவர். இவ்வாறு உலகத்தில் மறக்கப்பட வேண்டியன பல் உள்ளன. அவற்றை மறவாமல் உள்ளத்தில் பதுக்கி வைத்திருப்ப தனால், நாமும் பிறருக்குத் தீங்கு செய்ய நேரிடுகின்றது. பழிக்குப் பழி, இரத்தத்துக்கு இரத்தம் என்று பிறர்மீது பாய்வதும், பழிவாங்க முற்படுவதும், இவ்வாறு மறக்கவேண்டியவற்றை மறக்காமல் மனதிற்குள் புதைத்து வைத்து அவற்றை ஆராதனை

நல்வாழ்விற்குரிய நடைமுறைச் சிந்தனைகள் இ 10g
செய்து வருவதால்தான். இந்த உலகில் பகைமையை விரட்டு வதற்கு ஒரே வழி, பகைமையை மறப்பதுதான். சுருங்கக் கூறின் அமைதி, சாந்தி, சமாதானம் என்பவற்றை நிலைநாட்ட வேண்டு மானால், பகைமை உணர்வு, பழிவாங்கும் எண்ணம் அகல வேண்டும். அவற்றை அகற்றுவதற்கு ஒரே வழி அவற்றை ஒரேயடியாக மறந்து விடுவதேயாகும். மறப்போம், மன்னிப்போம் என்று கூறுகிறார்களே, அதுவே மனிதத்துவம். அதைவிட்டு மறக்கமாட்டோம், பழிக்குப்பழி வாங்கியே தீருவோம் என்று வஞ்சினம் கூறுதல் மனிதத்துவம் அன்று. வேண்டுமானால் மிருகதத்துவம் எனலாம். மனிதன் மனிதனாக வாழ்ந்து மனித நேயத்தையும் மனித தர்மத்தையும் நிலைபெறச் செய்ய வேண்டுமே தவிர, மிருக உணர்வுகளுக்கு அடிமையாகி தான் ஒரு மனிதன் அன்று என்று நிரூபிக்கக் கூடாது. பிறர் தமக்குச் செய்யும் தீமைகளை, அக்கணமே மறத்தல் மூலம், அவன் மனிதன் ஆகி விடுகின்றான்.
மறக்க வேண்டியவை இன்னும் பல உண்டு கோபங் கொள்ளல், பொய்பேசுதல், களவெடுத்தல், மதுபானம் அருந்து தல், பொறாமை கொள்ளல், செருக்கு அடைதல், இம்சித்தல், தீயோர் நட்பு, தகாதவற்றில் ஈடுபடுதல் முதலிய மனிதாபிமான மற்ற செயல்களை மனத்தினால் கூட நினைக்க மாட்டாத அளவிற்கு மறந்துவிடுதல் மேலான அறம் ஆகும்.
சிலர் வரவர மறதி அதிகரிக்கிறதே என்று கூறிக் கவலைப் படுவார்கள். முதலில், அத்தகைய கவலையை அவர்கள் மறக்க வேண்டும். கவலைகள், துன்பங்கள் நிறைய உள்ளன என்று கவலை கொள்பவர்கள், அமைதியும், நிம்மதியும் பெறவேண்டு மானால், கவலைகள், துன்பங்கள், துயர்களை மறப்பதற்கு வழிதேடவேண்டும். கவலைகளை அகற்றுவதற்குச் சிறந்த வழி அவற்றை மறந்து விடுவதுதான்.
மறதி, ஒரு விதத்தில், நாம் மகிழச்சியாக வாழ்வதற்கு
இன்றியமையாதது தான். அந்த வகையில் மறதியும் நற்பேறே. துன்ப அனுபவங்கள், நம்மை வருத்தாமல் விடுவதற்கு அவற்றை

Page 58
110 ஐ குமாரசாமி சோமசுந்தரம்
நாம் மறத்தலே காரணம். நடந்தவற்றை எண்ணி எண்ணி ஏங்கு வதால், நமக்கு நிம்மதிக்குறைவும், மன உளைச்சல்களுமே கிடைக்கின்றன. அவற்றை மறந்த விடுவதால் நாம் ஆரோக்கிய மாக வாழ முடிகின்றது. எவ்வளவோ செய்திகளையும், தகவல் களையும் நாம் அன்றாடம் பெற்றுக் கொண்டே இருக்கின்றோம். அவற்றுள் முக்கியமானவையும் உண்டு; தேவையற்றவையும் உண்டு; நன்மையானவையும் இருக்கின்றன; தீமையானவையும் இருக்கின்றன. சாரமும் உண்டு சக்கையும் உண்டு. அவற்றை யெல்லாம் ஆராய்ந்து நல்லனவற்றையும், முக்கியமானவற்றை யும் நினைவில் நிறுத்திக் கொண்டு, கூடாதனவற்றையும் தீமையானவற்றையும் மறந்துவிடுவதே மனிதத் தன்மையாகும். எனவே, மனித முன்னேற்றத்திற்கு, ஞாபகமும் தேவை மறதியும் வேண்டும் என்பதை உணர்ந்து உரிய வகையில் அவற்றை பயன்படுத்தி நல்ல பயன் பெறுவோமாக.
40. தூய்மையான வாழ்விற்கு தாய்மையே ஆதாரம்
வாழ்க்கையில் நல்லொழுக்கம், கட்டுப்பாடு, பணிவு, கீழ்ப்படிவு என்பன இருக்கவேண்டியது மிக அவசியம். அவையே மனிதவாழ்க்கைக்கு அழகைத் தருவன; நல்ல அணிகலன்கள் ஆக விளங்குவன. இப்பண்புகள் சிறுபராயத்திலிருந்தே, படிப்படியாக வளர்க்கப்பட்டு வரவேண்டும். திடீரென வந்து சேர்ந்து விடுவன அல்ல. 'விளையும் பயிரை முளையிலே தெரியும்' என்பார்கள். சிறுவயதிலே நற்பண்புகளைக் கொண்டு வளர்ந்து வருபவர்களே, பெரியவர்களான பின்னர் சமூகத்தில் நல்லொழுக்கமுள்ள குடிமகன்களாக வாழ்க்கை நடத்துவர்.
சிறிய குழந்தைகளாக இருக்கும் போதே பாலூட்டி, அவர்களுடைய உடலையும், சீர் ஊட்டி, அவர்களுடைய உளப் பண்புகளையும் ஓங்க வளர்ப்பவள் தாய். பால் நினைந்து ஊட்டும் தாய்; அவ்வாறே சீர் நினைந்து ஊட்டுபவளும் தாய். சீர் என்பது

நல்வாழ்விற்குரிய நடைமுறைச் சிந்தனைகள் 3; 111
வாழ்க்கையைச் சீர்படுத்தும் செவ்வையான நற்பண்புகள். நற்பண்புகள், நல்லொழுக்கத்தின் மூலமும், நன்னடைத்தையின் மூலமும் வெளிப்பாடாகின்றன. இந்த வகையிலேதான் 'ஈன்று புறந்தருதல் என் தலைக் கடனே’’, என்பதற்கிணங்க, குழந்தை களைப் பெற்றெடுத்தலும், அவர்களை முறையாக வளர்த்து தருதலும் தாய்க்குலத்தின் தலையாய கடமை யாக உள்ளது. முறையாக வளர்த்தல் என்பதில், குழந்தைகளின் உடல் போஷிப்பும், உளப் போஷிப்பும், அடங்குகின்றன. இவற்றில் ஒன்றின் வளர்ச்சி குன்றினும் குழந்தை குறைபாடுடைய குழந்தையாகிவிடும். எல்லாக் குழந்தைகளும் இம்மண்ணில் பிறகும்போது நல்ல குழந்தைகளாகவே பிறக்கின்றன. ஆயினும் அக்குழந்தைகள் நல்லவர்கள் ஆவதும், கெட்டவர்கள் ஆவதும் அன்னை வளர்ப்பினிலேயே தங்கியுள்ளது என்று கவிஞர் ஒருவர் கூறுகின்றார். இயற்கையினால் தாய்க்குலத்திடம் ஒப்படைக்கப் பட்டுள்ள இம்மாபெரும் பொறுப்பு, மகத்தானதும் தனித்துவ மானதும் என்பதை உணர்ந்து கொள்ள வேண்டும். தாய்க் குலத்தின் இப்பொறுப்பும் கடமையும் தட்டிக் கழிக்க முடியாதது என்பதும் உணர்தற்பாலது. அவற்றிற்கு மாற்றீடோ, பதிலீடோ கிடையாது என்பதும் கவனத்திற்குரியது. இதனாலேயே, பெருந் தத்துவஞானி வள்ளுவப் பெருந்தகையும் 'பெண்ணிற் பெருந்தக்க யாவுள?’ என்ற வினாவையெழுப்பி, பெண்ணிற் பெருந்தக்கது வேறொன்றில்லை எனும் விடையையும் அதனுள் பொதித்து வைத்துப் பெண்ணின் பெருமையை மிக அழகாகப் பேசுகிறார்.
நாளைய சமூகம் நல்லலொழுக்கமுள்ள சமுதாயமாக மலர்ச்சி பெறுவதற்குத் தாய்க்குலத்தின் பங்களிப்பு இன்றியமை யாதது. தாயின் கடமைகளைப் பிறிதொருவரிடம் ஒப்படைப்பது என்பது இயலாத காரியம். அதனால் ஏற்படக்கூடிய விளைவுகள் விபரீதமானவையாகவே இருக்கும். குழந்தை வளர்ப்பில் தாய்க்கு ஈடு, இணை தாயேதான். எங்கெங்கே, குழந்தைகள் வளர்ந்து வரும் பருவத்தில் தாயின் அன்பு, பாசம், நேயம், உணவூட்டல், பண்புகள் ஊட்டல், அரவணைப்பு என்பன குழந்தைகளினால் பெற்றுக் கொள்ளமுடியாமல் இருக்கிறதோ, அங்கெல்லாம்

Page 59
112 ஓ குமாரசாமி சோமசுந்தரம்
அக்குழந்தைகள் குறைபாடுகள், ஒழுக்கப் பிறழ்வுகள், உளப் பாதிப்புகள் உள்ளவர்களாக வளர்ந்து வருவதை அவதானிக்க முடிகிறது. பின்னர் அவர்கள் அச்சமுதாயத்திற்குத் தொல்லை தருபவர் களாகவே காணப்படுவர். சமூகத்தினரைப் பழிவாங்கும் உணர்ச்சிப் போக்கு உடையவர்களாகவே இருப்பர். எவருக்கும் அடங்காதவர்களாக ஒழுக்கம், கட்டுப்பாடு, கீழ்ப் படிவு அற்றவர்களாக; சமூகத்தின் பழிப்புக்கு அஞ்சாதவர்களாக, எந்தத் தீய செயல்களையும் செய்யப்பின் வாங்காதவர்களாக, சட்டம் ஒழுங்கினை மதியாதவர்களாகச் சமுதாயத்தில் காணப்படும் இத்தகையவர்களின் சீர்கெட்ட இயல்புகளுக்குரிய அத்திபாரம் குழந்தைகளாக வளர்ந்து வருகின்ற இளம்பராயத்திலேயே இடப்பட்டு விடுகின்றது. எனவேதான், உளவியலாளர்களும், சமூகவியலாளர்களும், குழந்தைப் பருவத்தில், குழந்தைகளைப் பேணுவதிலும், வளர்ப்பதிலும் மிகுந்த கவனமும் சிரத்தையும் எடுக்கப்படவேண்டும் என்று வலியுறுத்தி வருகிறார்கள். நமது மரபும், கலாசாரமும் இதையே வற்புறுத்தியுள்ளன.
'ஈன்ற பொழுதில் பெரிதுவக்கும் தன் மகனைச் சான்றோன் எனக் கேட்ட தாய்’ என்பது பொய்யாமொழி. குழந் தையைப் பெற்றெடுத்து, குழந்தைப் பருவத்திலும், பிள்ளைப் பருவத்திலும் பேணிவளர்த்து, ஒழுக்கப்பண்புகள் எனும் விதைகளை விதைத்து, அப்பண்புகள் வளர்ந்து பயன்களை ஈயும் போது தாயானவள் பேருவகை எய்துகிறாள். அவ்வாறு பெறுகின்ற அந்த நற்பயன்தான் என்ன என்றால், தன்மகன் சமூகத்தினரால் சான்றோன் என அழைக்கப்படுவதுதான். 'சான்றோன்’ என்ற இனிய கணிதான், இளமையில் தாயினால் தன் குழந்தையின் உள்ளத்தில் விதைக்கப்பட்ட நற்பண்புகள் எனும் விதைகள், முளைகொண்டு, வளர்ந்து பெறுபேறாக, அறுவடையாகப் பெறப்பட்டது. நல்லதொரு அறுவடையைப் பெற்ற தாய் அந்த நேரத்தில் பெறும் பேருவகை சொல்லுந்தரமன்று. இத்தகைய பேருவகையை வேறெந்த வகையிலும் பெற்றுக் கொள்ள இயலாது என்பதை உணர்ந்து கொள்ளுதல் வேண்டும்.

41. சுத்தம் பேணுவோம்
"சுத்தம் சுகம் தரும்’ என்பர். 'எச்சில் இரக்க வைக்கும்’ என்றும் சொல்லப்பட்டுள்ளது. நாங்கள் எம்மையும் வாழுகின்ற சுற்றாடல், சூழலையும் சுத்தமாக வைத்திருப்பதால் நன்மைகள் பல நமக்கு ஏற்படுகின்றன. நோய், நொடிகள், எம்மை அணுகாமல் நாம் வாழக்கூடியதாக உள்ளது. இந்த வகையில், சுத்தம் எமக்குச் சுகத்தையும், ஆரோக்கியத்தையும் தருகிறது. தூய காற்று, தூய நீர், தூய உணவு, தூய இருப்பிடம், தூய சூழல் ஆகியவற்றுடன், எமது உடலையும், நாம் அணிகின்ற ஆடைகளையும், பயன்படுத்து கின்ற பொருட்களையும் தூய்மையாக வைத்திருக்கும் பட்சத்தில், நாம் ஆரோக்கியமான நல்வாழ்வினை வாழ முடிகின்றது. 'நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்’ என்ற பொன்மொழி எத்துணை பொருள் பொதிந்தது என்பதை எண்ணிப் பாருங்கள். செல்வத்துள் எல்லாம் தலையாய செல்வம் நோயற்ற வாழ் வினைப் பெறுதல். அத்தகைய நோயற்ற வாழ்வினைத் தரவல்லது சுத்தம் பேணல் என்பதை நினைவிற் கொள்ள வேண்டும்.
தற்காலத்தில் படித்தவர்கள் கூட, சுத்தம் பேணலை அனுசரிப்பதாகத் தோன்றவில்லை. சனப் பெருக்கம், இடவசதி யின்மை, கால அவகாசமின்மை, பிறவசதிக் குறைவுகள் எனப் பல காரணங்களைக் காட்டி சுத்தம் பேண முடியாமைக்கு நியாயம் கற்பிக்கின்றனர். தன்னுடைய நலனிலோ, பிறருடைய நலனிலோ அக்கறையோ, ஆர்வமோ காட்டாதவர்களாகத் திரிகின்றனர். முதியவர்களைப் பார்த்து இளையவர்களும் அவ்வாறே பொறுப் பற்ற முறையில் நடக்க முயல்கின்றனர்.
'புறந்தூய்மை நீரால் அமையும்' என்கிறார் வள்ளுவப் பெருந்த்கை. 'கந்தையானாலும் கசக்கிச் கட்டு' 'கூழாயினும் குளித்துக் குடி', 'சனி நீராடு’ என்ற மகா வாக்கியங்கள் சுத்தம் பேணல் பற்றி எழுந்தனவே. நீரும், நெருப்பும் மிகச் சிறந்த சுத்திகரிப்புச் சாதனங்களாகக் கொள்ளப்பட்டு வருபவை.

Page 60
114 ஐ குமாரசாமி சோமசுந்தரம்
வறுமையோ, பிற பற்றாக்குறைகளோ, சன நெருக்கமோ, சுத்தம் பேண முடியாமைக்குக் காரணங்களாகக் கற்பிக்கப்படுவது அவ்வளவு பொருத்தமாக இல்லை. மனமுண்டானால் இடம் உண்டு என்று சொல்வார்கள். மனம் தான் யாவற்றையும் இயக்கு கிறது. மனதில் விருப்பமும், உறுதியும், ஆர்வமும் ஏற்படும் போது ஆற்றமுடியாத செயல் என்று ஒன்று இருக்கமாட்டாது. எனவே, சுத்தம் பேணலைப் பொறுத்தமட்டிலும், மனம் விருப்பமே தேவைப்படுகிறது. 'மனத்துக்கண் மாசிலன் ஆதல்' வேண்டும் என்கிறது வள்ளுவம். உள்ளம் ஒழுங்காகவிருந்தால், உலகில் எல்லாம் ஒழுங்காகிவிடும் என்கின்றனர். நம் உடலையும், உடைகளையும், உடைமைகளையும், வாழும் சூழலையும் தூய்மையாகவும், ஒழுங்காகவும் வைத்துக் கொள்ள வேண்டும் என்று நம்முடைய மனம் விருப்பமும், ஆர்வமும் கொள்ள வேண்டும். அப்பொழுதுதான் அது சாத்தியமாகும்.
நமது உடல் இழுக்கன்று. அது ஓம்பப்படவேண்டியது. அதில் அழுக்குப்படியாதபடி அதனைப் பேண வேண்டும். எனவே, உடல் சுத்தம் அவசியம். அதற்குத் தினமும் நீராட வேண்டும். ஆடைகளைத் தோய்த்துச் சுத்தம் செய்து அணியவேண்டும். தலையை ஒழுங்காக வாரி விட வேண்டும். அவிழ்த்த கூந்தல், அமங்கலமானது மட்டுமல்ல. பிறருக்கு இடைஞ்சலும் தரக் கூடியது. 'நகத்தைப் பற்களால் கடிக்காதே’ என்பது ஆன்றோர் வாக்கு. தினமும் காலையில் பல் துலக்க வேண்டும். பல்துலக்கி வாய்கொப்புளிக்காமலே, காலையில் கோப்பி குடிப்பவர்களும், காலை உணவு அருந்துபவர்களும் இருக்கின்றனர். படித்த குடும்பங் களிலும் இந்நிலையைக் காணமுடிகிறது. சாப்பிடுவதற்கு முன்னர் கைய லம்பும் பழக்கமும், சாப்பிட்ட பின்னர் வாயையும் கையையும் கழுவும் பழக்கமும் தற்பொழுது அருகி வருகின்றது. நாகரீகம் என்ற போர்வையில் நமக்கு ஒவ்வாத பல பழக்க வழக்கங்கள் நம்மிடம் வந்து சேர்ந்து விட்டன. அவை, உள்ளத்தையம், உடலையும் பெரிதும் பாதித்து வருகின்றன என்பதைப் பலர் உணர்வதில்லை. உடைப்பழக்கம், உணவுப் பழக்கம், நடைப்பழக்கம் என்பனவும் ஒழுங்கற்று, தூய்மையற்று நம்மில் பலரிடம் காணப்படுகின்றன.

நல்வாழ்விற்குரிய நடைமுறைச் சிந்தனைகள் இ 115
நாம் வாழுகின்ற சூழல் அசுத்தம் அடைந்து கொண்டே இருக்கிறது. சுகாதாரம், சுத்தம் பேணல் ஆகியவற்றிற்குப் பொறுப்பானவர்களும் தடுத்து நிறுத்தக் கூடிய நிலையில் இல்லை. கண்ட இடங்களிலும் குப்பை, கூழங்கள் வீசப்படுவதைத் தவிர்க்க வேண்டும். எச்சில் உமிழ்தல், துப்புதல், சர்வ சாதாரணம். முன்னர் துப்புவதற்கு என்று இடம் ஒதுக்கப்பட்டு, 'இங்கே துப்புக' என்று எழுதப்பட்ட அறிவித்த லும் அங்கு தொங்கவிடப்பட்டு இருந்தது. சொல்லிச் செய்விப்பது சிறுமை, என்றபடியாலோ என்னவோ, சொல்லுவதை நிறுத்திக் கொண்டனர். படிப்பறிவு உயர்வு பெற்ற நிலையில், சொல்லா மலே பெரியவர் ஒழுகுவர் என்று எதிர்பார்ப்பதும் இயல்புதான். ஆம், இன்றைய அதிகாலை வேளையில், தூய்மையைப் பேணு வோம், சுத்தத்தை ஆராதிப்போம், நம்மையும், சூழலையும் பாதுகாப்போம் என்று உறுதி செய்வோமாக. மீறுவோருக்குத் தேவையை உணர்த்தி அவர்களையும் நல்வழிப்படுத்த வேண்டும். சுத்தம் சுகம் தரும், நலம் தரும், பலம் தரும் என்பதை உணர்ந்தும், உணர்த்தியும் நல்வாழ்வு வாழ்வோமாக.
42. யாரை யார் திருத்துவது?
செல்வங்கள் நிறைய இருப்பினும்; உயர் பதவிகள் வகிப்பினும்; புகழும் அந்தஸ்தும், பட்டங்களும் விருதுகளும் பெற்றிருப்பினும், பழுதற்ற நல்லொழுக்கம் அவர்களிடம் அருந்தலாகிவிட்டால் எல்லாவகைத் தேட்டங்களும், பெருஞ்செல் வங்களும் வழங்கும் அனுகூலங்கள் கணப்பொழுதில் கரைந்துவிடும்.
இந்த உண்மையை நன்கு உணர்ந்து கொள்பவர்கள் வாழ்வு வளமும் அழகும் பொலிய விளங்கும். அலட்சியம் பண்ணுபவர்களின் வாழ்க்கை இருள் சூழ்ந்ததாகிவிடும். இராவணன், சூரபத்மன், கம்சன், துரியோதனன் ஆகியோரின் வரலாறு காட்டும் பாடமும் படிப்பினையும் இதுவாகும்.
நற்பண்புகள் இல்லாத மனிதன் விலங்கிற்கு நிகரான வான். விலங்குகளிலும் கொடிய காட்டு விலங்கிற்கு ஒப்பாகி

Page 61
116 குமாரசாமி சோமசுந்தரம்
விடுகிறான். காட்டு விலங்குகள் சிற் சில வேளைகளில் சில கட்டுப்பாடுகளைப் பேணக் கூடும். ஆனால் ஒழுக்கம் தவறிய மனிதன் தொடர்ந்து ஒழுக்கந்தவறியபடியே வாழ்கிறான். 'நக்கத் துணிந்த நாய்க்குச் செக்கு என்ன, சிவலிங்கம் என்ன?’ என்றொரு பழமொழி உள்ளது. நக்கிற நாய்க்குச் செக்குக்கும் சிவலிங்கத் திற்கும் வித்தியாசம் தெரிவதில்லை போல, சில மனிதர்களுக்குத் தம்மனைவிமார்களுக்கும், பிறமகளிர்களுக்கும் பேதம் புரியாமல் பெரும் பிழை செய்கின்றனர்.
நல்லொழுக்கத்தைப் பேணுவதாலேயே மனிதன் பெறுமானம் உள்ளவன் ஆகின்றான். மாற்றுக் குறையாதவனாக விளங்குகின்றான். எனவே, மனிதன் நல்லொழுக்கத்தை வாழ்க் கையில் உபாசிக்க, வளர்க்கப், பெருக்க, பரிமாற்றம் செய்ய முயலல் வேண்டும்.
இன்று பத்திரிகைகளில் வெளிவரும் செய்திகளை வாசிக்கும்போது, மனித ஒழுக்கம் எந்த அளவிற்குத் தாழ்ந்த நிலையை அடைந்து விட்டது என்பது தெட்டத் தெளிவாகத் தெரிகிறது. சமூகத்தில் நல்வர்கள், பொறுப்புள்ளவர்கள், பாது காவலர்கள், வழிகாட்டிகள் ஆக வேடங்கள் தாங்கிக் கொண்டு, கூடாவொழுக்கங்களில் ஈடுபடுபவர்கள் பற்றிய செய்திகள் அன்றாடம் செய்தித் தாள்களில் வெளிப்படுத்தப்பட்டு வருகின்றன.
"வானுயர் தோற்றம் எவன் செய்யும் தன்நெஞ்சம் தானறி குற்றப்படின்' என்கிறார் வள்ளுவப் பெருமான் இன்று மறைந் தொழுகும் மாந்தர் பலராகிவிட்டனர். படிற்றொழுக்கம் சர்வ சாதாரணமாகிவிட்டது. பார்வைக்குப் பெரிய மனிதர் போன்ற தோற்றம், ஆனால் நடத்தையோ அருவருப்புக்குரியது. இத்தகைய பொய்யான நடத்தைகளையும், மறைவான தீயொழுக்கங்களையும் மேற்கொண்டு சமூகத்தை வஞ்சித்து வாழ்பவரினும் கொடியவர்கள் > வேறு எவருமே இலர் கற்றவர்களும், வயதில் முதிர்ந்தவர்களும் கூட இத்தகைய மறைந்தொழுகும் மாந்தர்கள் வரிசையில் இடம் பிடித்துக் கொண்டமையை நோக்கும் போது மனித அநாகரிகம் எந்த அளவிற்குப் போய்விட்டது என்பது தெளிவாகிறது.

நல்வாழ்விற்குரிய நடைமுறைச் சிந்தனைகள் 3 117
ஒழுக்கம், வாழ்க்கையாகப் பரிணமிக்கும்போது, அந்த வாழ்வு சிறப்புப்பெறும். ஒழுக்கம் இல்லாத வாழ்க்கை வரண்ட வாழ்வு ஆகிவிடுகின்றது. நமது பண்பாடு, சமயம், கலாசாரம் யாவும் மனித ஒழுக்கத்திற்கு மிக உயர்ந்த முக்கியத்துவம் அளித்து வந்துள்ளது. கொலை, களவு, மது அருந்துதல், காமம், பொய் என்பன பஞ்சமாபாதகங்கள். இவற்றில் ஒன்றில் தன்னிலும் மனிதர்கள் ஈடுபாடு கொள்ளுதல் பெருங்குற்றமாகும். கூடா ஒழுக்கம் புரிபவர்களே இப்பாதகங்களுடன் தொடர்பு கொள்வர். முன்பு அவர்களைச் சமூகம் இனங்கண்டு திருத்தியது. அவ்வாறு திருந்தாதவர்களைச் சமூகம் விலக்கி வைத்தது.
ஆனால் இன்று யாரை, யார் திருத்துவது அல்லது விலக்கி வைப்பது என்பது தெரியாத நிலையில் குழப்பமாக உள்ளது. தனிப்பட்டவர்களின் ஒழுக்கக் குறைபாடுகள், கண்டிக்கப்படும் நிலை சமுதாயத்தில் வழக்கில் இல்லாது போய்விட்டது. அந்த அளவிற்குச் சமுதாயம் நெகிழ்ச்சியுடையதாகிவிட்டது. விபசாரம், தன்னினச் சேர்க்கை, ஆணும் ஆணும், பெண்ணும் பெண்ணும் சேர்ந்து வாழத் திருமண-அந்தஸ்தைப் பெறுதல் ஆகியவற்றிற்குச் சட்டவலு கோரும் அளவிற்கு மனித சமுதாயத் தில் அதிசயங்கள் நிகழும் காலம், இக்காலம். இதை நாகரிகம் என்பதா, அநாகரிகம் என்பதா என்பது புரிந்து கொள்ள முடியாத புதிராக உள்ளது.
மேலும், இன்று, வாழ்க்கை கொண்டதே கோலமாகி வருகின்றது. இயற்கைக்கு விரோதமாக நடை, உடை, பாவனை களில் தம்மைக்காட்டிக் கொள்பவர்களையோ, ஒழுக்கமற்றவர் களையோ பிறழ்வான நடத்தையை மேற்கொள்பவர்களையோ, உயர்நிலையில் இருந்து கொண்டு ஒழுக்கயினம் புரிபவர்களையோ இன்றைய சமூகத்தினர் மன்னித்து விடுகிறார்கள். அதனைப் பெருந்தன்மையென்று எண்ணுகிறார்கள் போலும். மன்னிப்பு என்பது ஒரு சிறந்த பண்பு என்பதில் மறுப்பு இல்லை. ஆனால் மன்னிப்பைத் துஷ்பிரயோகம் செய்யக் கூடாது.
ஒரு முறை மன்னித்தால் அதன் பின் அக்குற்றத்தை மீளவும் செய்யாமை உறுதிப்படுத்தப்படவேண்டும். ஆனால் அவ்வாறு இன்று பெரும்பாலும் இல்லை. அதனால் இன்றைய

Page 62
118 ஒ குமாரசாமி சோமசுந்தரம்
சமூகத்தில் பல பிரச்சினைகள் காணப்படுகின்றன. ஒழுக்கமும் நடத்தையும் சீர்கெட்டு விட்டன. ஒழுக்கமற்றவரையும், நடத்தை கெட்டவரையும் கடிந்துரைப்பார் யாருமில்லை. அதனால் மேலும் மேலும் துர்நடத்தைகள் பெருகுகின்றன.
சென்ற காலங்களில் குற்றமற்ற ஒழுக்கம் உள்ளவர்கள் வாழ்ந்தார்கள். ஏனையோருக்கு முன்மாதிரியாக வாழ்ந்து காட்டி னார்கள். வாழும் வழி சொன்னார்கள். சரி பிழை சொன்னார்கள். நடுவு நிலைமையினின்றும் சரியமாட்டார்கள். தனக்கும் தன்னைச் சார்ந்தோர்க்கும் ஒரு நீதி, பிறர்க்கு ஒரு நீதி என்ற பாகுபாடு அவர்களிடம் இருந்ததில்லை. சிறந்த ஒழுக்க முள்ளவர்களால் வகுக்கப்படும் இலட்சியங்கள், வாழ்வியல் முறைகள், சட்டதிட்டங்கள் என்பன மனித இனத்தின் பெருஞ் செல்வங்கள். அவை மனித குலத்தை வாழ்விப்பன.
43. மக்களின் மூன்று வகையினர்.
"சொல்லாமலே செய்வர் பெரியர்; சொல்லிச் செய்வர் சிறியர்; சொல்லியும் செய்யார் கயவர்' மக்களில் பெரியர், சிறியர், கயவர் என மூன்று வகையினர் உளர். பெரியர், பலாவைப் போன்றவர்கள், சிறியர் மா மரத்தை ஒத்தவர்கள். கயவர், பாதிரி மரத்துக்கு இணையானவர்கள். பலாமரம் பூத்துச் சிலிர்ப்ப தில்லை; காய்த்துக்கனிகள் பலவற்றை ஈயும் தன்மையன. ஓர் உதவியைச் செய்வதாக முன்கூட்டியே சொல்லிப் பகிரங்கப்படுத் தாமல் தேவையும் காலமும் உணர்ந்து தக்க தருணத்தில் செய்வது மேலானது. பெரியவர்கள் இப்படிப்பட்டவர்கள். அவர்கள் சொல்லாமல் செய்பவர்கள். வலது கை கொடுப்பதை இடது கைக்குத் தெரியாமல் கொடுப்பதே பெருந்தன்மை. அதுவே பெரியோர் செயல். பெரியோர் செயலில், விளம்பரம் இருக்காது. பிரசித்தம் இருக்காது. எதிர்பார்ப்புகள் எதுவும் கிடையாது. மரம் பூப்பது என்பது பின்னர் கனிகள் கொடுப்பதை முன்னர் அறிவிப்பது போல அமைகிறது.

நல்வாழ்விற்குரிய நடைமுறைச் சித்தனைகள் டு 119
பலா மரமோ, பிறர் கவனத்தை ஈர்க்கக் கூடிய அளவிற்குப் பூத்துச் சிலிர்ப்பதில்லை. பூவாது காய்த்தல் என்பது சொல்லாமல் செய்தல் போன்றது. எனவே பலர்வினை ஒத்தவராகப் பெரியவர்கள் குறிப்பிடப்படுகின்றனர். சொல்லாமல் செய்பவர்களே
பெரியவர்கள்.
சொல்லிச் செய்பவர்கள் சிறியர். இத்தகைய மனிதர்கள், தாம் செய்யப் போகின்ற உதவிகள் பற்றி எல்லோரும் அறியும்படி பகிரங்கப்படுத்துவர். இவர்கள் விளம்பரப் பிரியர்கள். மாமரம், நன்றாகப் பூத்துச் சிலிர்ப்பதை நாம் காண்கின்றோம். அவ்வாறு பூத்துக் குலுங்கும் மாமரம், பழங்களைப் பின்னர் தரப்போவதை முன்னதாக எடுத்துக்கூறுவதாக உள்ளது போன்ற செயலாகும். மாமரத்தை ஒத்த மனிதர்களும் உள்ளனர். அவர்கள் நாலு பேர் அறிய, நாடறிய, உலகறிய, தாம் நல்கப் போகின்ற உதவிகள், கொடைகள் போன்றவற்றையும், செய்யப்போகின்ற நல்ல காரியங்கள், கருமங்கள் முதலியவற்றையும் அவை சிறியனவாக இருப்பினும் சரி, பெரியனவாக இருப்பினும் சரி, சொல்லிப் பறைசாற்றி, விளம்பரப்படுத்திவிட்டே அவற்றை ஆற்றுவர். இவ்வாறு சொல்லிச் செய்வது சிறுமைத்தனம் ஆகும். அத்தோடு ஏதோ ஒரு வகையில் கைம்மாறு எதிர்பார்க்கப்படுகிறது. எனவேதான், சொல்லிச் செய்பவர்கள், பிரதிபலனை எதிர் பார்த்துச் செய்பவர்கள், சிறியர் எனப்படுகின்றனர்.
மனிதர்களுள் இன்னொரு தரப்பினர், பெரிதாகத் தாம் செய்யப்போகின்றவற்றை சொல்லித்திரிவார்கள். பல அறிவிப்பு கள் விடுவார்கள். உறுதி மொழிகள் தருவார்கள். ஆனால் இறுதியில் எதையும் செய்யாது விட்டுவிடுவார்கள். அறிவிப்புகள், உறுதிமொழிகள், வாக்குகள் யாவும் காற்றோடு காற்றாகி மறைந்து விடும். சிலுசிலிர்ப்பு இருக்கும், காரியம் நடவாது. இத்தகையவர்கள் ஏமாற்றுப் பேர்வழிகள். எனவேதான். சொல்லியும் செய்யாதவர்கள் கயவர் என்கின்றனர். இதற்கு எடுத்துக்காட்டாகப் பாதிரி மரத்தைப் கூறுவர். பாதிரி மரம் நன்றாகப் பூக்கும். ஆனால் காய்க்காது. கனிகள் தராது. அழகாகவும் கொத்துக் கொத்தாகவும் மலர்ந்து மணம் வீசும்.

Page 63
120 ஒ குமாரசாமி சோமசுந்தரம்
பாதிரி மலர்களைக் கண்ணுற்றவர்கள், அவை நல்ல காய்களையும், கனிகளையும் தரப்போகின்றன என எண்ணுவார்கள். ஆனால் ஈற்றில் அவர்கள் ஏமாற்றமடைவார்கள். எனவேதான், ஒன்றைச் சொல்லியும் செய்யாத மனிதர்களைக் கயவர் என்றும் அவர்கள் பாதிரி மரத்தை ஒத்தவர்கள் என்றும் கூறப்படுகிறது.
இத்தகைய கயவர்களின் வார்த்தை ஜாலங்களையும், அலங்காரப் பேச்சுக்களையும், போலி உறுதி மொழிகளையும் நம்பி ஏமாந்தவர்கள் பலர் உள்ளனர். பணம், பொருள், நேரம் ஆகிய வற்றை இழந்தவர்கள் ஏராளம். கயவர்கள் சமூகத்திற்குத் துரோகம் இழைப்பவர்கள். மனித விழுமியங்களுக்கு மதிப்பு அளிக்காத வர்கள். இவர்கள் பொய்மையாளர்கள், துட்டர்கள். இவர்களின் கண்ணிற் படாமல், நீங்குவதே நல்ல நெறியாகும். தீங்கினர் தம் கண்ணுக்குத் தெரியாத தூரத்தில் நீங்குவதே நல்ல நெறி' என்ற பழந்தமிழ்ப்பாடல் அடி, ஈண்டு உளங்கொள்ளற்பாலது.
மனிதர்கள், மனிதத்தன்மை பெற்று வாழ வேண்டும். பிறரை ஏமாற்றியோ வஞ்சித்தோ வாழ்வது மனித வாழ்வு அன்று. ஒவ்வொருவரும் செய்ய வேண்டியவற்றைச் சொல்லாமலே செய்து மனிதராக, பெரியராக வாழ முயற்சிக்க வேண்டும்.
பயனற்ற சொற்களைப் பல முறைகள் சொல்பவர்கள் மனிதர்களே அல்லர். அவர்கள் மக்களுள் பதர் என்று உயர்ந்தோர் கூறுவர். இன்று பயனில்லாத வார்த்தைகளை அலங்காரமாகவும் வசீகரமாகவும் பேச வல்லவர்கள் சமூகத்தில் மலிந்து காணப்படு கின்றனர். அவர்களின் பேச்சுக்கவர்ச்சியால் ஈர்க்கப் பெற்று இறுதியில் ஏமாற்றப்பட்டுக் கண்ணிரும் கம்பலையுமாகப் பைத்தி யம் பிடித்தவர்கள் போல் ஆகிவிட்டவர்கள் எத்தனையோ பேர் உள்ளனர். விளக்குச் சுடரை அழகிய மலர் என்று நினைத்து அதனால் கவரப்பட்டு அந்நெருப்புச் சுடரில் வீழ்ந்து மடியும் விட்டில் பூச்சிகள் போல ஆறறிவு படைத்த மனிதர்கள் இருக்கலாமா?
கவர்ச்சியானவற்றைக் காணும்போது ஒருமுறையல்ல, பலமுறைகள் சிந்தித்துத் தெளிய வேண்டும். நல்லன அல்ல வென்றால் கவர்ச்சி மிகுந்திருப்பினும் அவற்றை ஒதுக்கிவிட

நல்வாழ்விற்குரிய நடைமுறைச் சிந்தனைகள் 3; 121
வேண்டும். அதுவே விவேகமான செயல் 'வரமுன் காக்க' என்பதற்கிணங்க, நடந்து கொள்ள வேண்டும். கயவர் விரித்த வலையிற் சிக்காமல் தம்மைப் பாதுகாத்துக் கொள்ளல் அவசியம். குறிப்பாக இளம் பராயத்தினர் கவர்ச்சியினால் ஏமாறாது. புத்தி சாலித்தனமாக வாழக்கற்றுக் கொள்ள வேண்டும். பெற்றோர்கள் இவ்விடயங்களில் தம் பிள்ளைகளைக் கண்காணித்து, நல்ல வழி காட்ட வேண்டும்.
சமுதாயத்தில் நல்லவையும் உண்டு. தீங்கானவையும் உண்டு. பாலையும் நீரையும் கலந்து வைத்தால் நீரை விட்டு விட்டு, பாலை மாத்திரம் பருகக் கூடிய ஆற்றல் அன்னப் பட்சிக்கு உண்டு என்றுகூறுவர். உத்தமமான மாணாக்கர் அன்னப் பட்சியைப் போன்றவர்கள். அவ்வாறே சமுதாயத்திலுள்ள தீயனவற்றை விலக்கிக் கொள்ளவும் நல்லவற்றை மாத்திரம் தம் மோடு அணைத்துக் கொள்ளவும் நமக்குத் தெரிந்து கொள்வது அவசியம். இதற்கு சிறு வயதிலிருந்தே விழுமியங்கள் சார்ந்த கல்வியைப் பிள்ளைகள் பெற்றுக் கொள்ள வாய்ப்புக்கள் நல்க வேண்டும். மனிதர்கள் என்றாலே பிரித்தறியும் தன்மை உடையவர்கள் என்பது தரன் பொருள். இயல்பாகக் கிடைத்துள்ள இந்தத் திறனை விருத்தி செய்து சமுதாயத்தில் காணப்படுகின்ற நல்லவை, தீயவைகளைப் பிரித்து அறிய மக்கள் முயற்சிக்க வேண்டும். மக்களில் பதர்களாக உள்ள கயவர்களை இனங்கண்டு, அவர்களின் கவர்ச்சிகளிலிருந்து தப்பித்துக் கொள்ள இந்தப் பிரித்தறியும் திறன் நம்மில் வளர்க்கப் படவேண்டியது அவசியமாகும்.
44. வாழ்க்கையை நரகமாக ஆக்கிக் கொள்வோர் யார்?
'சூதும் வாதும் வேதனை செய்யும்’ என்பது பொருள் நிறைந்த பொன்மொழி. வாழ்க்கை அனுபவங்களிலிருந்து வடித் தெடுக்கப் பெற்ற சாரம். விழுமியக் கருத்து. அதனை உணர்ந்து வாழ்வில் மேற்கொள்வோருக்கு இல்லை வாழ்க்கைப் பாரம். வாழ்க்கையைப் பாரமாகவோ, நரகமாகவோ ஆக்கிக் கொள்பவர்கள் யார்?

Page 64
122 இ குமாரசாமி சோமசுந்தரம்
சமூகத்தில் முறையாகவும், ஒழுங்காகவும் வாழப்பழகிக் கொள் ளாதவர்கள், தம்முடைய வாழ்க்கையை மட்டுமல்ல, பிறருடைய வாழ்க்கையையும் பாழ் படுத்தி விடுகிறார்கள்; பாரம் ஆக்கிப் பார்க்கிறார்கள். வாழ்க்கைப் பாரம், வாழ்க்கைச் சுமை, வாழ்க்கைக் கஷ்டம் என்பன யாவும் மனிதர்கள் தத்தம் ஒழுங்கீனங்களினாலும், முறைகேடுகளினாலும் தேடிப் பெற்றுக் கொள்ளப்பட்டவையே
யாகும.
பிறர் வாழ்க்கையில் குறுக்கிட்டு, ஆசைகாட்டி, மோசம் செய்து, வாழ்வைக் கெடுத்து அவ்வாறு பாதிக்கப்பட்டவர்கள் வேதனையுறும் காட்சியைக் கண்ணாரக் கண்டு களிப்படையும் கயமைத்தன்மை படைத்த கூட்டத்தினர் இன்று மலிந்துள்ளனர். சூது தான் இத்தகைய ஈனச் செயல்களுக்குக் கருவியாக உள்ளது. சூது வாது தெரியாதவர்களே அகப்பட்டுக் கொள்கிறார்கள்; அல்லல் படுகிறார்கள்.
சூது, சூழ்ச்சியைத் தழுவியதாக உள்ளது. சதியோடு சம்பந்தப்பட்டும் விளங்குகிறது. சூதில் வெற்றி பெறுவதற்கு நேர்வழி, நீதி வழி என்பன பயன்படுத்தப்படுவதில்லை. குறுக்கு வழியும் சூழ்ச்சியுமே துணை நிற்கின்றன. சிலவேளைகளில், அதிருஷ்டம் அடித்தாலும், அந்த அதிருஷ்டம், உழைப்பின் பயன் ஆகாது என்பதையும் மனதில் கொள்ள வேண்டும். நீதி, நேர்மை, உழைப்பு, முயற்சி ஆகியவற்றின் மூலம் பெறுப்படுகின்ற வெற்றியும் வளர்ச்சியும் தான் உண்மையானவை; நிரந்தர மானவை; சரிந்து விழுந்துவிடாதவை. மாறாக, சூது, சூழ்ச்சி, சதி ஆகியவற்றின் மூலம் கிடைக்கின்ற வெற்றியோ, மகிழ்ச்சியோ, முன்னேற்றமோ, ஆரம்பத்தில் நன்மை பயப்பனபோலத் தோன்றி னாலும் இறுதியில் சம்பந்தப்பட்டவர்களை அழித்தே தீரும்.
இந்தப் பூமியில் மனிதர்களாகப் பிறதவர்கள் அறிவு, ஆற்றல், வல்லபங்கள் என்பன நிறையப் பெற்றவர்கள். அத்தகைய அறிவையும் ஆற்றல்களையும் திறன்களையும் ஆக்கத்திற்கும் பயன்படுத்தலாம்; அழிவை உண்டாக்கவும் உபயோகிக்கலாம். அறிவையும் ஆற்றலையும் சூதுக்குப் பயன்படுத்தும் போது, அவை எவ்வாறு "அற்றங்காக்கும் கருவிகள்’ ஆகும்.

நல்வாழ்விற்குரிய நடைமுறைச் சிந்தனைகள் இ 123
'அறிவு அற்றம் காக்கும் கருவி' என்பது வள்ளுவர் வாய்மொழி. அது உண்மை. எப்போது என்றால், அந்த அறிவு, தூய்மையின் அடிப்படையில் வளர்ந்து வரும் போது ஆகும். அத்தகைய தூய்மையும் வாய்மையும் விரவிய அறிவு மனிதனின் மனத்தை அது சென்ற இடங்களெல்லாம் செல்லவிடாது; சூது, சூழ்ச்சி, சதி போன்ற தீய செயல்களிலிருந்து விலக்கி, நன்மை தருகின்ற நற்கருமங்களிலே மாத்திரம் செல்ல விடுகின்றது. மெய்ப் பொருள் காண்பதற்கும், நுண்பொருள் காண்பதற்கும் அறிவு உதவவேண்டுமே தவிர, பொய்யிற்கும் புரளிக்கும், சூதுக்கும் வாதுக்கும் அறிவு ஒதுபோதும் துணை போகக்கூடாது.
ஆனால் உலகில் நடப்பது, நடந்து கொண்டிருப்பது என்ன? இக்காலத்தில் அறிவு விவேகத்தையும் பல்வேறு திறன் களையும் வளர்க்கின்ற அதே வேளை, மனிதனின் நல்ல மனிதப் பண்புகளை விருத்தியாக்கத் தவறிவிட்டது. மனிதனுக்கு மனிதத் தன்மையை அளியாத அறிவு பயனற்றது. மனித சமுதாயத்தின் அமைதிக்கும் சாந்திக்கும் மகிழ்ச்சிக்கும் பாதுகாப்புக்கும் வழி வகுக்காத அறிவினால் ஆகுவது யாதொன்றுமில்லை. மனிதனுக்கு சூதும் வாதும் பெற்றுத்தரும் அறிவு அழிவுக்கே இட்டுச் செல்கின்றது. கற்ற சமூகத்தினரின் நடத்தைகள் எந்த அளவிற்கு மனித நலனுக்கு உதவுகின்றன என்பது விமர்சனம் செய்யப்பட வேண்டியதாக உள்ளது. கற்றவர்களிலும், கல்லாதார் நல்லவர்கள் என்று கூறுங்காலம் வந்துவிட்டது போலத் தோன்றுகிறது.
குற்றங்களையும், தவறுகளையும் செய்துவிட்டு அவற்றை நியாயப்படுத்துவற்கு இக்காலத்தில் அறிவு பயன் படுமளவிற்கு அக்குற்றங்களையும் தவறுகளையும் பிழைதான் என்று ஒப்புக் கொள்ளவோ; அதற்காக மனம் வருந்தி மன்னிப்புக் கோரவோ மீண்டும் அத்தகைய குறிறங்களைச் செய்யாமல் தவிர்க்கவோ அந்த அறிவு பயன்படுவதில்லையே. காரணம், ஆனது அறிவு, விழுமியம் சார்ந்ததாக இல்லாமையேயாகும். மனிதனைச் சேவிக்க வைப்பது; மனித நேயத்தை வளர்ப்பது; மனித மேம்பாட்டிற்காக உழைப்பது என்பனவெல்லாம் மனித விழுமியம் சார்ந்த அறிவின் பயன்கள். மனித விழுமியம் சாராத அறிவு, எதிர்மறை விளைவுகளையே உண்டு பண்ணும் என்பது நோக்கற்பாலது.

Page 65
124 ஒ குமாரசாமி சோமசுந்தரம்
சூது என்று ஒன்று தோன்றிவிட்டால், அங்கு வாதும் வந்துவிடுகின்றது. வாதம் செய்வது ஒரு கலைதான். ஆனால் பொய்யை உண்மையென நிறுவுவதற்கும்; உண்மையைப் பொய்யாக்குவதற்கும் இந்த வாதம் வந்து விடுவது தான் கவலை அளிக்கிறது. வாது, சூதுக்குத் துணை போகிறது; தர்மம், நீதி, நடுவுநிலைமை ஆகியவற்றில் நின்றும் விலகிவிடுகிறது. பிறருக்குத் துன்பம் செய்தலையே, அதுவும் விரைவாகச் செய்தலையே, வாது அதன் இலக்கு ஆகக் கொள்கின்றது. அதனால் சூதோடு சேர்ந்து வாதும் பிறருக்கு வேதனையைத் தருகின்றது.
மனிதர்கள் பெரும்பாலும் தாம் வாழ்வதற்காகச் சிந்தித்துச் செயலாற்றுவதில் செலவிடும் நேரம், சக்தி என்பவற்றிலும் பார்க்க, பன்மடங்கு அதிகமான நேரத்தையும் சக்தியையும் பிறர்வாழ் வைக் கெடுப்பதற்குச் சூழ்ச்சி செய்வதிலும், குழி தோண்டுவதிலும் செலவு செய்வதைக் காணக்கூடியதாக உள்ளது.
இந்த இடத்தில் மனிதனுக்குப் பெருமை தருவதாகக் கூறப்படுகின்ற பகுத்தறிவு எங்கே போய்விட்டது என்று எண்ணத் தோன்றுகின்றது.
மகா பாரதத்தையும், நளமகாராஜனின் கதையையும் பலர் அறிந்திருக்கின்றனர். சூதாட்டத்தினால் ஏற்பட்ட கெடுதி களையும் கேடுகளையும் நமக்கு அவை விளக்குகின்றன.
45. மனிதருள் எத்தனை வேறுபாடுகள்.
இவ்வுலகில் மதிப்பு உள்ளவைகள், பெறுமானம் கொண்டவைகள், பெறுமதிவாய்ந்தவைகள் எனப் பலவற்றைக் குறிப்பிடுகிறார்கள். மாறாக, மதிப்பு, பெறுமானம், பெறுமதி அற்றவைகள் என்றும் பலவற்றைக் கூறுகிறார்கள்.
இவ்வாறு குறிப்பிடப்படுபவைகளுள், பொருள்கள், பண்டங்கள், குண இயல்புகள், செயற்பாடுகள், வாழ்க்தைத் தத்துவங்கள், நடைமுறைகள் மற்றும் உயிரினங்கள், உயிரற்றவைகள்

நல்வாழ்விற்குரிய நடைமுறைச் சிந்தனைகள் இ 125
யாவும் அடங்குகின்றன. அவற்றை வகைப்படுத்தும் போது ஓர் அளவுகோல் அல்லது அடிப்படை கைக்கொள்ளப்பட்டிருக்கும்.
எவ்வாறாயினும், அவற்றின் பெறுமானம் அல்லது மதிப்புத் தொடர்பான தீர்மானத்தை எடுப்பவன் மனிதனே. மனிதர்களுக்கு அவற்றின் தேவைகள், அவை கிடைக்கப்பெறும் அளவு அல்லது தொகை, அவை நல்கும் பயன்கள் ஆகியவற்றைக் கருத்திற்கொண் டும்; தீர்மானிக்கும் மனிதர்களின் அறிவு நிலை, மனப்பாங்கு, வாழும் சூழல் ஆகியவற்றிற்கு இயைபாகவும், மதிப்பு அல்லது பெறுமானம் பற்றி தீர்மானம் எடுக்கப்படுகின்றது.
வைரம், தங்கம், இரத்தினம் என்பவை பெரிதும் பெறு மானம் வாய்ந்த பொருள்கள் என்றும், அதனால் அவை விலையு யர்ந்தன வென்றும் மதிக்கப்படுகின்றன. ஆயினும், ஞானிகளுக்கும் துறவிகளுக்கும் ஓடும் பொன்னும் சமமான மதிப்பைக் கொண் டனவாகவே தோன்றுகின்றன. வைரக் கற்களுக்கும் சாதாரண கற்களுக்கும் இடையே அவர்கள் பெறுமதியில் வேறுபாட்டைக் காண்பதில்லை. ஆகவே ஒன்றன் பெறுமதி பற்றி தீர்மானம் எடுப்பதில் மனிதர்களுக்கிடையிலேயே வித்தியாசம் இருக்கிறது.
மனிதர்கள் பெறுமானம் மிக்கவர்கள் என்று கூறப்படு கின்றது. ஏனைய படைப்புக்களுடன் ஒப்பிட்டுப் பார்க்கையில் அக்கூற்றுச் சரியானதே. 'பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்" என்கிறார் வள்ளுவப் பெருந்த கை, பிறப்பினால், மனிதர் களிடையே பேதங்களோ, வேற்றுமைகளோ இல்லை. எல்லோரும் சமம் என்ற கருத்து ஏற்றுக் கொள்ளப்பட வேண்டியதே. ஆயினும் எல்லா மனிதர்களும் நடை முறையில் ஒரே பெறுமானமுடைய வர்களாகக் கணிக்கப்படுவதில்லை. ஒருவரின் பதவி, அந்தஸ்து, குணம், சமூகநிலை, புகழ், கீர்த்தி, பொருள் நிலை, அறிவு நிலை, ஒழுக்கம் போன்றவற்றைப் பொறுத்து மனிதர்களின் மதிப்பும் பெறுமானமும் ஆளுக்காள் வேறுபடுகின்றன. உடல் தோற்றம், உளநிலை உணர்வு நிலை, விவேகம் என்பனவற்றில் தனியாள் வேறு பாடுகள் உண்டு. அதனாலும், மனிதர்களின் மதிப்பு ஒரே விதமாக அமையமுடிவதில்லை. பெயர்களின் முன்னால் இடப்படுகின்ற

Page 66
126 & குமாரசாமி சோமசுந்தரம்
சொல்லடைகள் பல விதம். கெளரவ, திரு. உயர்திரு., தவத்திரு., வணக்கத்திற்குரிய, அதிமேதகு, மேதகு, மாண்புமிகு, மாட்சிமை தாங்கிய, கனந்தங்கிய, மேன்மைதங்கிய போன்ற சொற்கள் மனிதர்களின் வேறுபட்ட பெறுமானங்களைச் சுட்டி நிற்கின்றன. வரிசையறிந்து தான் அதற்கேற்ப அச்சொற்கள் பிரயோகிக்கப் படுகின்றன.
பண்டைய காலங்களில் பெறுமானங்கள் என்று கொள்ளப் பட்டவை சில தற்காலத்தில் பெறுமதிகளை இழந்துள்ளன. காலந்தோறும் ஏற்படும் பல்வேறு மாற்றங்களே அதற்கும் காரணம். 'பழையன கழிதலும், புதியன புகுதலும் வழுவல" என்ற மேற்கோளைக் காட்டி அதனை நியாயப்படுத்துகின்றனர். புதிதாகப் பல பெறுமானமுள்ளவை நம்மிடையே புகுந்துமுள்ளன. பழையன என்பதால் அவை கூடாதனவுமல்ல, புதியன என்பதால் அவை நிச்சயமாக நல்லனவாகவே இருக்கும் என்று கூறுவதற்கு மில்லை. கால, தேச, வர்த்தமானங்களைக் கடந்து, அன்று முதல் இன்று வரை தொடர்ந்து பெறுமானம் வாய்ந்தவைகளாக விளங்குவனவற்றையும் காணக்கூடியதாக உள்ளது.
இதுவரை கூறிய கருத்துக்களின் பின்னணியில், பார்க் கும் போது, நிரந்தரமாகப் பெறுமானங்கள் உள்ளவை, தற்காலிக மாகப் பெறுமீானங்கள் வாய்ந்தவை, என பொருள்களை இரண்டாக வகுத்துப் பார்க்க முடிகின்றது. அத்தோடு சில பெறு மானங்கள் பற்றி ஆளுக்காள், சமூகத்திற்குச் சமூகம், நாட்டுக்கு நாடு வேறுபட்டதும், முரண்பட்டதுமான கருத்துக்களும் உண்டு. சிலர் ஏற்பர், சிலர் ஏற்காத நிலையுமுண்டு. அதே வேளை, எல்லோராலும் கருத்தொருமித்த நிலையில் ஏற்றுக் கொள்ளப்படுகின்ற பெறு மானங்களும் உண்டு. அத்தகையனவே பெருமதிப்பு வாய்ந்தவை. சுருங்கக் கூறின் எவையெல்லாம் மனிதர்களுக்கு நன்மை பயக்கின்றனவோ; மகிழ்ச்சியும் திருப்தியும் அளிக்கின்றனவோ; மனிதர்களால் விரும்பி ஏற்கப்படுகின்றனவோ; மனிதர்களுக்கு அருமையும் பெருமையுமானவையோ; உயர்வையும் உய்வையும் கொடுக்க வல்லனவோ, அவை யெல்லாம் பெறுமானங்கள், பெறுமதிகள், மதிப்புக்கள் எனலாம்.

நல்வாழ்விற்குரிய நடைமுறைச் சிந்தனைகள் : 127
சமூகப் பெறுமானங்கள், அரசியல் பெறுமானங்கள், பொருளாதாரப் பெறுமானங்கள், ஒழுக்கப் பெறுமானங்கள், அறிவுப் பெறுமானங்கள், ஆத்மிகப் பெறுமானங்கள், கலை கலாசாரப் பெறுமானங்கள், பண்புப் பெறுமானங்கள் எனப்பல வாறான பெறுமானங்கள் காணப்படுகின்றன.
மக்களுட் சிலர், பொருட் பலத்தாலும் பணப்பலத்தாலும் தமது பெறுமானத்தை அதிகரித்துக் கொள்கின்றனர். இன்னுஞ் சிலர் அரசியல் பலத்தாலும், சமூகப் பலத்தாலும் தமக்குப் பெறுமதியைச் சேர்த்துக் கொள்கின்றனர். மேலும் சிலர் ஒழுக்கம், நற்பண்புகள் நிறைந்து காணப்படுவதால் பெரிதும் மதிக்கப்படு கின்றனர். மற்றும் சிலர் சமய, ஆத்மிகப் பெறுமானங்களைப் பெற்றுத் திகழ்கின்றனர்.
இன்னொருவகையில் கண்ணோட்டத்தைச் செலுத்தும் போது, பெறுமானங்கள் என்று கொள்ளப்படுபவை உலகியல் சம்பந்தமானவையாகவும், மனிதப்பண்புகள் சார்ந்தவையாகவும் உள்ளன. பொருள், பணம், அதிகாரம், அந்தஸ்து, பதவி, புகழ் ஆகியவற்றினால் மனிதர்களுக்குக் கிடைக்கின்ற பெறுமானம் உலகியல் சார்ந்தவை. நல்லொழுக்கம், நற்பண்பு, நற்குணம், நற்செய்கை, நீதி, தூய்மை, உண்மை, அஹிம்சை, ஆகியவற்றி னால் மனிதர்கள் பெறுகின்ற பெறுமானம், மனிதப் பண்புகள்
சார்ந்தவை ஆகும்.
46. பரஸ்பரம் நம்பிக்கை விசுவாசம் குறைந்து வரும் இன்றைய உலகம்!
சமூகம் என்பது மனிதர்களை உறுப்பினர்களாகக் கொண்ட ஓர் அமைப்பு. இந்த அமைப்பில் அங்கத்துவம் பெறுவதற்கு ஒரேயொரு நிபந்தனையே உண்டு. மனித இனத்தைச் சார்ந்தவராக இருத்தல் வேண்டும் என்பதே அந்த நிபந்தனை. மனித இனம், இவ்வுலகின் கண் உள்ள எல்லா உயிரினங்களிலும் வளர்ச்சியால்
மேம்பட்டது. அறிவால் உயர்ந்தது. நாகரிகம், பண்பாடு கலாசாரம்

Page 67
128 ஐ குமாரசாமி சோமசுந்தரம்
எனும் முது சொத்துக்களையுடையது. விஞ்ஞானம், தொழில் நுட்பம் துறைகளில் முன்னேறிக் கொண்டிருக்கின்றது.
மக்கள் அனைவரும் ஒரே மனித இனத்தினைச் சேர்ந்தவர் கள் என்ற வகையில் பிறப்பினால் அனைவரும் சமத்துவம் உடையவர்கள். மனித உரிமைகளில் சமமான உரித்துடையவர்கள். உயர்திணையினர். ஆண், பெண் என இரு பாலாராக இருப்பினும், மனித இனத்தினால் ஒன்றுபட்டவர்கள். எனவே, அவர்களிடையே ஏற்றத்தாழ்வுகள் இல்லை; சமத்துவம் உண்டு 'அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம்' என்று கொள்ளப்பட்டு வருவதி லிருந்து பெண்ணையும், ஆணையும், சமூக மட்டத்திலிருந்து தெய்வீக நிலை வரை, சமத்துவம் உள்ளவர்களாக மதிக்கப் படுந்தன்மை தெளிவாகிறது.
உரிமைகளைக் கோருவதிலும், அனுபவித்தலிலும் சமத்துவம், சமசந்தர்ப்பம், சமவாய்ப்பு என்பன சமூக உறுப்பினர் ஒவ்வொருவருக்கும் உண்டு. எனினும் கடமைகள், பணிகள், பொறுப்புக்கள் என்பவற்றைப் பொறுத்த வரையில் சமூக உறுப்பினர்கள் தத்தம் சமூகங்களில் தாம் வகிக்கும் நிலை என்ன என்பதை முன்னிட்டே அவை அமைகின்றன.
ஒவ்வொருவரும் ஏற்றுக்கொண்ட கடமைகள் பொறுப்புகள், பணிகள் ஆகியவற்றைச் சரிவர நிறைவேற்று வதனாலேயே சமூகத்தின் கட்டுக்கோப்பு, உறுதி, ஒருமைப்பாடு என்பன பேணப்படுகிறது. சமூகத்தின் பலமும், பலவீனமும், வளர்ச்சியும் தேய்வும்; பாதுகாப்பும்; பாதுகாப்பின்மையும்; ஒருமைப்பாடும் ஒற்றுமைக்குலைவும், அச்சமூக உறுப்பினர்கள் எந்த அளவிற்கு தத்தம் சமூகக் கடமைகள் பொறுப்புகள், பணிகள் ஆகியவற்றை முட்டின்றி நிறைவேற்றுகிறார்கள் அல்லது நிறைவேற்றவில்லை என்பதைப் பொறுத்தே அமையும்.
மனித விழுமியங்களை உணர்வதாலும், வாழ்க்கையில் கடைப்பிடிப்பதாலும்; சமூகத்தின் உறுதிப்பாட்டையும், ஒருமைப்பாட்டையும் நல்லுறவையும் பேணமுடிகிறது. சார்ந் துள்ள சமூகத்தில் உறுதியும் கட்டுக்கோப்பும் இருக்கும் போது

நல்வாழ்விற்குரிய நடைமுறைச் சிந்தனைகள் 3; 129
அமைதி நிலவுகிறது. உறுப்பினர்கள் பாதுகாப்புப் பெறுகின்றனர். வாழ்க்கையில் பிடிப்பு ஏற்படுகிறது. முரண்பாடுகள் மறைந்த நிலையில் வாழ்க்கை இன்பமயமாக விளங்குகின்றது.
குடும்பம் ஒரு சமூகம் ஆகும். தந்தை, தாய், பிள்ளைகள் அதன் பிரதான உறுப்பினர். ஒவ்வொருவருக்கும் எனக் கடமைகள், பொறுப்புகள், பணிகள் உண்டு. அவற்றைச் சிரத்தையுடன் நிறைவேற்றும் பட்சத்திலேயே குடும்பம் மகிழ்ச்சியுடனும் திருப்தியுடனும் விளங்கும். அவ்வாறு நடைபெறாத நிலையில் குடும்பத்தில் புயல் வீசுவது தடுக்க முடியாததாகிவிடுகின்றது. குடும்பத்தில் புரிந்துணர்வு என்பன அவர்களின் கடமைகளை உணர்வதிலும் அவற்றை புரிவதிலுமே தங்கியுள்ளது. புரிந்துணர்வு குடும்பத்தினரிடையே ஏற்படும்போது குடும்பத்தில் ஐக்கியம், ஒருமைப்பாடு, அமைதி என்பன நிலவுகின்றன.
ஒருவனுக்கு ஒருத்தி, ஒருத்திக்கு ஒருவன் எனும் வாழ்க்கை விழுமியம், குடும்ப வாழ்க்கையைச் சீராகவும் செழிப்பாகவும்; ஒழுங்காகவும் கெளரவமாகவும் நடத்துவதற்குப் பேருதவியாக இருந்து வந்துள்ளது. கற்பு என்பது பெண்ணுக்கு மட்டுமல்ல ஆணுக்கும் உரியது என்பது மிகச்சிறந்த விழுமியம் ஆகக் கொள்ளப்பட்டு வந்தது. இக்கருத்துக்கள் ஆணுக்கு பெண் அடிமையென்றோ பெண்ணுக்கு ஆண் அடிமை யென்றோ எவ்விதத்திலும் குறிப்பிடுவனவாக இல்லை.
இக்காலத்தில் குடும்பங்களில் அல்லல்களும் தொல்லை களும் மலிந்துள்ளமைக்குப் பல காரணங்களைக் கூறலாம். குடும்ப உறுப்பினர்களிடையே பரஸ்பரம் விசுவாசம் நேர்மை, நம்பிக்கை, குறைந்து கொண்டே வருகின்றன. கணவன் மனைவி யையும்; மனைவி கணவனையும்; பிள்ளைகள் பெற்றோரையும்; பெற்றோர் பிள்ளைகளையும் ஏமாற்றும் வித்தைகள் பரவலாக நிகழ்கின்றன.
எல்லோருமே காலையில் தொழில் நிமித்தமாகவோ, படிப்பு நிமித்தமாகவோ வெளியே சென்று மாலையில் வீடு திரும்புபவர்கள். சிலர் நேரம் கழித்து வீடு திரும்புபவர்கள் ஆக

Page 68
130 இ குமாரசாமி சோமசுந்தரம்
உள்ளனர். ஒருவரை ஒருவர் கண்காணிக்கவோ; ஆலோசனைகள், புத்திமதிகளைப் பரிமாறிக் கொள்ளவோ அவகாசம் இல்லை.
பிள்ளைகள், புத்தகங்களுடன் பாடசாலைகளுக்கும், ரியூட்டரிகளுக்கும் படிப்பதற்கென்று செல்லுகிறார்கள். அவர்கள் உண்மையில் பாடசாலகளுக்குத்தான் செல்லுகிறார்களா, அல்லது வேறெங்காவது சென்று பொழுதைக் கழிக்கிறார்களா? என்பது அவர்களுக்குத் தான் வெளிச்சம். நிலைமை முற்றிப் பிரச்சினை யாக வரும் போதுதான், பெற்றோருக்குத் தெரியவருகிறது. பெற்றோர் முழிக்கிறார்கள், வேதனைப்படுகிறார்கள். கண்கெட்ட பின் சூரிய நமஸ்காரமா? என்ற நிலை ஏற்படுகிறது.
எவர் ஒருவர் துர்நடத்தையில் ஈடுபடுகின்றாரோ அவர் தன்னைத்தானே ஏமாற்றிக் கொள்கின்றார் என்பதை உணர வேண்டும்.
'ஏமாறாதே, ஏமாற்றாதே' என்பதன் பொருளுணர்ந்து, குடும்பக்கடமைகளையும் பொறுப்புக்களையும் அறிந்து செவ்வை யாக ஆற்றிவரும் உறுப்பினர்களைக் கொண்ட குடும்பம், ஒரு பல்கலைக்கழகம் என்பது உறுதி.
47. குடும்பச் சீர்குலைவுகள் எதனால் ஏற்படுகின்றன?
இவ்வுலகமும், அங்கு வாழுகின்ற மக்களும் சேமமுற வேண்டும், மேன்மை பெறவேண்டும், சுகமாக வாழவேண்டும் என்று எம்மில் எத்தனைபேர் உளவிசுவாசத்துடன் சிந்திக்கிறோம், என்பதைச் சற்றுப் பொறுமையுடன் எண்ணிப் பார்க்க வேண்டும்.
நாம், நாம் வாழ்ந்தால் போதும்; மற்றையோர் ள்ப்பாடு பட்டாலென்ன? எக்கேடு கெட்டாலென்ன? என்ற நிலைப்பாடு, இன்று வேகமாக வளர்ந்து வருவதை அவதானிக்கக் கூடியதாக உள்ளது.
இது நல்ல அறிகுறி அன்று. மனித சமுதாய அழிவை ஏற்படுத்தக் கூடிய வலிமை இதற்கு உண்டு. அணுகுண்டை விட

நல்வாழ்விற்குரிய நடைமுறைச் சிந்தனைகள் இ 131
ஆபத்தானது எனினும், இந்தச் சுயநல நிலைப்பாட்டினைத் தடுத்து, நிறுத்த, அவர்களை இனங்கண்டு ஆலோசனை கூற, ஆலோசனைகளை ஏற்றுக் கொள்ளாத விடத்து, பல்வேறு தடைகளையும் விதிக்க, ஆற்றல் படைத்த எந்தவொரு நிறுவனமோ, சர்வதேச மன்றமோ இதுவரை முன்வந்தமை அறியப்படவில்லை.
சமூகம் ஒரு குடும்பம், உலக ஒரு குடும்பம் என்ற எண்ணமும், உணர்வும், எல்லோரிடமும் இருத்தல் வேண்டும் என்று கூறி வந்தோம்; தற்பொழுதும் கூறி வருகிறோம். குடும்பம் என்றால் அங்கு ஒற்றுமை, புரிந்துணர்வு, நல்லுறவு, அன்பு, பற்று, கரிசனை, தியாகம், அர்ப்பணம் போன்ற நல்லனவெல்லாம் குடும்ப உறுப்பினர்களிடையே பூத்துக்குலுங்கும் என்ற ஒரு ஐதீகமும் நம்பிக்கையும் நெடுங்காலமாக மக்களின் உள்ளங்களில் இடம் பெற்று வளர்ந்து வந்துள்ளன. அந்த அடிப்படையிலே தான் சமூகம் ஒரு குடும்பம், உலகம் ஒரு குடும்பம் எனும் எண்ணக்கரு வும், சித்தாந்தமும் அமைக்கப்பட்டிருந்தல் வேண்டும்.
இன்றைய நிலையில், எத்தனை குடும்பங்கள் சொல்லப் பட்ட இலட்சணங்களுடன் கூடி இருக்கின்றன என்பது சிந்தித்து ஆராயற்பாலது. குடும்ப உறுப்பினர்கள் இடையே உறவில், உடைவுகள், சிதைவுகள், வெடிப்புகள் உள்ளன. இடையிடையே ஒட்டல்கள், பொத்தல்கள் போட்டுச் சரிக்கட்டிக் கொண்டாலும், மீண்டும் மீண்டும் முறிவுகள் வந்துவிடுகின்றன. அதனால் குடும்ப உறுப்பினர்களிடையே விசுவாசம், நம்பகத்தன்மை, பரஸ்பர மதிப்பு, மரியாதை என்பன வேகமாகக் குறைந்து கொண்டே செல்கின்றன.
மக்கள், மாக்களாகி வருகின்றனர்; மனித விழுமியங்கள் மறைந்து வருகின்றன. குடும்பத்தில் மிக முக்கியமாகப் பின்பற்றப்பட வேண்டிய குடும்ப விழுமியங்கள் உதாசீனத்திற்கு உரியவையாகிவிட்டன. அவ்வாறு செய்வது நாகரிகம் என்றும் சிலர் கருதுகிறார்கள். குடும்ப விழுமியங்களை அனுசரிக்குமாறு கேட்பது, 'உரிமை மீறல்" என்றும் கொள்ளப்படுகிறது.
புதுமை, நவீனத்துவம், விழிப்புணர்வு என்னும் காரணங் கள் கற்பிக்கப்பட்டு இக்கருத்துக்கள் எல்லாம் நியாயப்படுத்தப்

Page 69
132 ཚེ குமாரசாமி சோமசுந்தரம்
படுகின்றன. ஆனால் இறுதி விளைவு என்னவாக இருக்கும் ? குடும்பச் சிதைவு, சீரழிவு, மனமுறிவுகள், பிறழ்வான நடத்தைகள், மனநோய்கள், அழிவுகள் என்பவற்றில்தான் போய் முடியும். உரிமைகள் வேண்டும் தான். ஆனால் அதற்காக அவரவர்
கடமைகள் புறக்கணிக்கப்படல் ஆகாது.
இன்று குடும்பங்களில் உரிமைக் குரல்கள் ஓங்கி ஒலிக் கின்றன. ஆனால் கடமைகள், பொறுப்புகள் அசட்டை செய்யப் படுகின்றன. இதனால் குடும்பச் சீர்குலைவு தடுக்க முடியாததாகி விடுகிறது.
குடும்பத்தில் உள்ள பெரியவர்கள், மூத்தவர்கள் ஆகியோர் மிக்க மரியாதை, மதிப்புடன் பேணப்பட்டு வந்த காலம் முன்னர் இருந்தது. குடும்பத்தின் ஒவ்வொரு செயற்பாட்டிற்கும் அவர் களின் அனுபவபூர்வமான ஆலோசனைகளும், வழி நடத்தல்களும் பெற்றுக் கொள்ளப்பட்டன. கருமங்களின் வெற்றிக்குப் பெரியோர் களின் நல் வாழ்த்துகளும், நல் லாசிகளும் தேவைப்பட்டன. பிற்காலத்தில், முதுமையெய்தியபோதிலும், தாமும் குடும்பத்திற்குப் பயனுள்ளவராகவும், குடும்பத்தவரின் கணிப்பையும் கெளர வத்தையும் பெற்றுக் கொள்ள முடிபவராகவும் விளங்குவார் என்னும் திடமான மன நம்பிக்கை இருந்தது.
அதனால் வயோதிபத்தை வரவேற்க அவர்கள் அஞ்ஞான்று தயங்கியதுமில்லை; பயந்ததுமில்லை. முதுமை, வாழ்க்கையில் பதவி உயர்வாகவும், அந்தஸ்து அதிகரிப்பாகவும் கொள்ளப்பட்ட காலம் ஒன்றிருந்தது. வயோதிபம் வளமாகக் கழிந்தது. ஆனால் இன்றைய நிலை வேறு.
குடும்பத்தில் கடமையிலும் பார்க்க உரிமைக்கு முக்கியத் துவம்கோரும் போது அங்கு அன்பு அகன்றுவிடும். வன்பும் வம்பும் புகுந்துவிடும். குடும்பம் சீர்குலைந்துவிடும். 'அன்பு அகத்தில்லா உயிர் வாழ்க்கை வன்பாற் கண் வற்றல் மரம் தளிர்த்தற்று' என்பது வள்ளுவர் வாய் மொழி. குடும்பத்தில் அன்பு இல்லாமல் வாழும் உயிர் வாழ்க்கை, வெம்மை சூழ்ந்த பாலைவனத்தில், பட்டமரம் மீண்டும் தளிர்த்தல் போன்றது என்பது இதன் பொருள்.

நல்வாழ்விற்குரிய நடைமுறைச் சிந்தனைகள் இ 133
பாலை நிலத்தில் பட்டமரம் மீண்டும் தளிர்விட்டு உயிர்க்கப் போவது மில்லை. குடும்ப அன்பு, குடும்ப பாசம், குடும்ப பிணைப்பு என்பவை குடும்பத்தை விட்டு விலகிய பின்னர் அக்குடும்பம் ஒரு போதும் தழைத்து செழிக்கப் போவதுமில்லை. இவ்வரிய உண்மையை உணர்ந்து, உரிமைப் போராட்டம் என்னும் பெயரில் குடும்பத்தில் புயலை உற்பத்தி செய்யாமல், அவரவர் கடமைகளை முட்டின்றி ஆற்றி, அன்பு, பாசம், பிணைப்பு என்பவற்றால் அமைதியை உற்பத்தி செய்து வாழ்வதால் குடும்ப வாழ்வு எத்துணை இன்பந்தருவதாக இருக்கும் என்பதை எண்ணிப்பார்க்கும் போதே இனிப்பாக உள்ளது. செயற்படுத்தினால் மேலும் தித்திக்கும் என்பது உறுதி.
உரிமை, பொதுவாகச் சுயநல அடிப்படையில் அமை கின்றது. ஆனால் கடமை பொதுநலம் பொதிந்தது. கடமையை ஆற்றுபவரும் நிறைவுகொள்கிறார்; அவ்வாறு கடமைகள் சரியாகச் செய்யப்படுவதால் பிறரும் நன்மை பெறுகிறார்கள்.
ஒருவரின் நல்லவார்த்தைகளை மற்றவர்கேட்டு நடப்பது ஒரு தாழ்வான விடயமன்று. அதை அடிமைத்தனம் என்று எண்ணு வது அறிவுடைமையும் அன்று. அந்த நல்ல வார்த்தைகள் கணவரிடம் இருந்து வரலாம்; மனைவியிடம் இருந்தும் வரலாம். மனைவியிடமிருந்து வந்த வார்த்தைகள், மனைவியின் சொற்களை நான் என்ன கேட்பது என்று அலட்சியம் செய்யும் கணவன், ஓர் அறிவாளியாக இருக்கமாட்டான்.
கணவனிடமிருந்து வருகின்ற வார்த்தைகள் எப்போது ஆதிக்கப் பாங்கானவை என்று கொண்டு, கொதிப்படைந்து அவற்றை உதாசீனம் செய்யும் மனைவி ஒரு குடும்ப விளக்காக அமையமாட்டாள். ஒரு குடும்பத்தில் வார்த்தைகள் எங்கிருந்து .. வருகின்றன; யாருடைய வாயிலிருந்து உதிர்கின்றன என்பதல்ல முக்கியம். வார்த்தைகளின் நல்ல பண்பும், வாழ்விக்கும் தன்மையும் தான் முக்கியம். நல்ல வார்த்தைகளை, கணவன், மனைவி, மூத்தோர், இளையோர் ஆகியோரில் யார் கூறினாலும், பேதம் காட்டாது ஏற்று நடக்கும் பண்புள்ள உறுப்பினர்களைக் கொண்ட குடும்பம், ஒரு நல்ல குடும்பம், புனிதமான குடும்பம், முற் போக்குக் குடும்பம் ஆகும்.

Page 70
48. போர் மனித உள்ளங்களில் தோன்றுகின்றது!
சாந்தி, சமாதானம் என்றெல்லாம் கூறப்பட்டு வருகிறது. சாந்தி நிலவவேண்டும் என்கின்றனர். சமாதானம் ஓங்கவேண்டும் என்கின்றனர். இவ்வாறு மனித வரலாறு தோன்றிய காலந்தொட்டுச் சொல்லப்பட்டு வருகின்றதே தவிர, சாந்தியும் சமாதானமும் எந்த அளவிற்கு மனித இனம் செயல் வடிவில் கண்டுள்ளது என்பது எவராலும் கூறமுடியாத தொன்றாக உள்ளது.
போர், பகைமை, கலவரங்கள், அநர்த்தங்கள், அட்டூழியங் கள், சண்டை சச்சரவுகள், நிறைந்த காலமே மனித வரலாற்றின் மிகப் பெரிய காலப்பகுதியாக இருந்து வந்துள்ளது. சாந்தி, சமாதானம், அமைதி என்பன இடையிடையே தலைகாட்டி உடனே மறைந்து விடுவதாகவே உள்ளன. போர் அதனைத் தொடர்ந்து அதன் முடிவில் ஏற்படுவது சமாதானம் என்ற அளவிற்குத்தான் சமாதானம் பற்றிய அறிவு, மனிதர்களிடம் காணப்படுகிறது.
சமாதானம் என்பது அதனை அனுபவித்து அறியப்பட வேண்டியதே தவிர, ஏட்டில் படித்து அறியக்கூடியது அன்று. ஒரு பொருளை அனுபவித்து உணர்வதற்கு அப்பொருள் கிடைக்கக் கூடியதாக இருக்க வேண்டும். சமாதானம், சாந்தி என்பன கிடைக்காத பண்டங்களாக இருக்கும் பட்சத்தில் அவற்றை அனு பவித்து உணருவது எவ்வாறு என்று பலரும் அங்கலாய்க்கின்றனர். போர், முடிவில் அமைதி, மறுபடியும் போர். இது தான் மனிதநாகரிக வரலாறு. உலகில் போர், ஒரு பரந்த பெரிய சமுத்திரம் என்றால் அமைதி ஒரு துளி பால் போன்றதாகும். ஒரு துளி பால், பெரிய சமுத்தித்தினுள் விடப்படும் போது பால் அதன் தன்மையை இழந்து விடுகிறது. அவ்வாறே, மனித நாகரிக வரலாற்றில் அமைதி, சாந்தி, சமாதானம், என்பன அத்தி பூத்தாற்போல் எப்போதாவது ஏற்பட்டாலும் அவை தொடர்ந்து நிலைப்பதில்லை. அவற்றின் தன்மை உணரப்படுவதும் இல்லை.

நல்வாழ்விற்குரிய நடைமுறைச் சிந்தனைகள் 3 135
போர் நிலைமை கொண்ட உலகில் அமைதி கரைந்துறை கின்றது. வெளிப்படுவதில்லை. போர் நிலைமை பல வகைப் பட்டது. நாடுகளுக்கிடையே ஆயுதங்களின் பாவனையுடன் நடைபெறுவதுதான் போர் என்பதல்ல. தனிமனிதன் தன்னுடன் போர்புரிந்த வண்ணம் இருக்கின்றான். குடும் பத்தில் அதன் உறுப்பினருக்கிடையே போர் நடைபெறுகின்றது. சமூகத்தில் பல்வேறு குழப்பங்கள், வன்செயல்கள், அடாவடித்தனங்கள் நிகழ்கின்றன. இவையாவுமே போர்மூட்டங்கள்தான். அமைதியை குழப்புவன, சாந்தியைக் கெடுப்பன, சமாதானத்தை குலைப்பன, எல்லாமே ஒரு வகையில் போர் எனக் குறிப்பிடலாம்.
புற உலகில் நடைபெறுகின்ற போர்களைவிட மனிதரின் உள்ளரங்கில் நடைபெறுகின்ற போர்களே கூடுதலான, கொடுமை யான தீமைகளையும் அழிவு சிதைவுகளையும் ஏற்படுத்துகின்றன என்பதை உணர்ந்து கொள்ளுதல் அவசியம். புற அரங்கப்போர்கள் கண்களுக்குப் புலப்படக் கூடிய அழிவுகளை ஏற்படுத்துகின்றன. அதனால் அப்போர்கள் மனிதர்களுக்குப் பெரிதாகத் தோன்றக் கூடும். அப்போர்களை நிறுத்துவதற்காக பல்வேறு முயற்சி களிலும் ஈடுபடுகின்றனர்.
மனிதர் ஒவ்வொருவரினதும் உள்ளரங்குகளில் அதாவது அவர்களின் உள்ளங்களில் இடையறாது சதா நிகழ்ந்து கொண்டிருக் கின்ற போர்கள், சலனங்கள், குழப்பங்கள் என்பன பற்றிச் சிந்திப் பவர்கள் எத்தனை பேர்.
இன்றைய அவசியமும் அவசரமுமான தேவை யாதெனில், மனிதரின் உள்ளரங்கப்போர்களை உடனடியாக நிறுத்தும் முயற்சிகளில் இறங்குவதேயாகும். போர்கள் மனித உள்ளங்களில் தோன்றுகின்றன. பின்னர் புற உலகிற்குப் பரவுகின்றன என்கின்றனர் அறிஞர்கள். ஒரு படரும் கொடியைப் படப் பண்ண வேண்டுமா னால் அதன் மூல வேரைப் பிடுங்கிவிடவேண்டும். மூலவேர் அக்கொடி முளைத்த இடத்தில் உள்ளது; அது படர்ந்த இடத்தில் அல்ல. அவ்வாறுதான் புற உலகில் நிகழுகின்ற போர், பூசல்களை நிறுத்த வேண்டுமானால் அவற்றின் மூலகாரணத்தை அறிந்து கொள்ளுதல் அவசியம். ” ༣

Page 71
136 & குமாரசாமி சோமசுந்தரம்
மூலகாரணம், அவை தோன்றிய இடம்தான். அதாவது மனித உள்ளங்கள். எனவே மனித உள்ளங்களாகிய உள்ளரங்கத்தில் நிகழும் போராட்டங்கள் களையப்படவேண்டும். உள்ளத்தில் அமைதி, சாந்தி, சமாதானம் தோன்ற வேண்டும். ஒவ்வொருவரின் உள்ளத்திலும் சாந்தி நிலவுமேயானால் நிச்சயம் உலகில் சாந்தி நிலவும். உள்ளத்தில் உண்மை ஒளி உண்டாகில் வாக்கில் செயலில், குடும்பத்தில், சமூகத்தில், நாட்டில், ஈற்றில் உலகம் முழுவதிலும் சாந்தியும் சமாதானமும் ஒளிவிட்டுப் பிரகாசிக்கும் என்பது நிச்சயம்.
உன்னைத் திருத்திவிடு, உலகம் திருந்திவிடும். உலகத்தைத் திருத்துவதற்கு முன்னர் நீ திருந்திக் கொள் போன்ற மகாவாக்கியங் கள், மனிதனின் உள்ளரங்கைச் சீராக்கத்தையே பெரிதும் வலி யுறுத்துகின்றன. புண்ணுக்குள் காணப்படுகின்ற அசுத்தப் படலங் களை அப்படியே வைத்துக் கொண்டு அதன் மேல் எத்தகைய சிறந்த மருந்தைப் பூசினாலும் புண் ஆறப்போவதில்லை.
அவ்வாறே, உள்ளத்தில் அழுக்குகளை நிறைத்துக் கொண்டு சாந்திக்காகப் பிரார்த்தனை செய்தாலும் சாந்தி கிடைக்கப் போவதில்லை. புண்ணுக்குள் படிந்துள்ள அழுக்குச் சவ்வினை அகற்றிவிட்டு மருந்து போட்டால் புண் விரைவில் குணமாகி விடும். உள்ளரங்கத்திலுள்ள அழுக்குகள் - போராட்டங்கள் அகலும் போது உள்ளந்தூய்மை பெறுகிறது. தூய உள்ளத்தில் தோன்றுவதுதான் சாந்தி. எனவே சாந்தியை புறத்திலே தேடி அடைய முடியாது. நமது உள்ளரங்கச் சீராக்கத்தின் மூலமே நம் முள்ளே சாந்தியை கண்டுகொள்ள முடியும். உலக சமாதானத்துக்கு முன்னோடியாக மனிதர்கள் ஒவ்வொருவரின் மனங்களிலும் சமாதானம் ஏற்படவேண்டும்.
நாம் ஒய்வு எடுத்துக் கொள்கிறோம் என்று கூறுகிறோம். இது எத்தகைய ஓய்வு என்பதை நாம் உணரவேண்டும். எவ்வித கருமங்களிலோ செயல்களிலோ நம்முடைய உடம்பின்ை ஈடுபடுத்தாது சும்மா இருத்தலைதான் ஒய்வு என்று பொதுவாக கொள்கின்றோம். மருத்துவர்கள் நோயாளிகளை ஒய்வு எடுக்கச் சொல்கிறார்கள். உடலை ஆட்டாது, அசைக்காது வைத்தக் கொண்டு படுக்கையில் படுத்திருந்தால்த்ான் ஒய்வு என்கின்றனர்.

நல்வாழ்விற்குரிய நடைமுறைச் சிந்தனைகள் இ 137
உடலுக்கு ஆறுதல் கொடுத்தால் நோய் குணப்பட்டுவிடும் என நம்புகின்றனர். உடல் ஒய்வாக இருக்கும் அதேவேளையில், நமது மனம் மற்றும் கருவிகரணங்கள் நமக்குள்ளே தொழிற்பட்டுக் கொண்டே இருக்கின்றன என்பதை நாம் உணரத்தவறிவிடுகிறோம். நமது மனங்களுக்கு ஒய்வு கொடுப்பதில்லை. சிலவேளைகளில் மருத்துவர்கள் மருந்து கொடுத்துப் புலன்களில் உணர்வுகளை மயக்கிவிடுகிறார்கள். அந்நேரத்திலும் அடிமனம் செயற்பட்டுக் கொண்டுதான் இருக்கிறது. உறக்கத்தில் மனத்திற்கு ஒய்வு இல்லை.
சும்மா இருத்தல் என்பது மிகச் சிறந்த சாதனை எத்தனையோ செயற்கரிய செயல்களைச் செய்பவர்களாலும் சும்மா இருக்கின்ற சாதனையைப் புரியமுடிவதில்லை. சிந்தையை யடக்கியே சும்மா இருக்கின்ற திறனைப் பெறுவது மிக அரிது. எனவே சும்மா இருத்தல் என்பது உடலுக்கும் உள்ளத்துக்கும் அகப் புறக்கருவி கரணங்களுக்கும் ஓய்வு அளித்தல் என்பதாகும். உடலுக்கு மட்டும் ஆறுதல் கொடுத்துக் கொண்டு மனத்தை --9Ꭵ ᎧᎼᏡᎶᏓ)ᏓᎥ 1 விட்டுக் கொண்டிருந்தால் அது பயனுள்ள ஆறுதல் ஆக அமையாது.
49. நேரம் தவறாமல் கருமம்
W ‘'நீ உனது நேரத்தை எவ்வாறு செலவிடுகிறாய் என்று கூறு, நீ எப்படிப்பட்ட மனிதன் என்பதைக் கூறிவிடுகிறேன்' என்கிறார் ஓர் அறிஞர். இக்கருத்து சிந்திக்கற்பாலது.
சூரிய வெளிச்சம் காற்று, நீர் என்பன எமக்கு இலவசமாகக் கிடைப்பதனால் அவற்றை எப்படி வேண்டுமானாலும் செலவு செய்யலாம்; ஊதாரித்தனம் செய்யலாம்; அல்லது விரயம் செய்ய லாம் என எண்ணிவிடலாகாது. நேரமும் அப்படித்தான். நேரம் பொன்னானது. அருமையானது, மிகுந்த பெறுமதி வாய்ந்தது. எனவே வகையறிந்து, வரிசையறிந்து, நேரத்தைப் பயன்படுத்த வேண்டும்.
நேரத்தை வீண்விரயம் செய்தலோ, அதற்கு மதிப்புக் கொடுக்காது விடுதலோ உதாசீனங் செய்தலோ தவறான செயல்கள் ஆகும். எனவே, வாழ்க்கையில் முன்னேறுவதற்கு நேர உணர்வு,

Page 72
138 ஐ குமாரசாமி சோமசுந்தரம்
நேரத்தை முகாமை செய்யும் திறன், நேரத்தை மதிக்கும் பண்பு இருக்க வேண்டியது மிக அவசியம். நேரத்தைத் திட்டமிட்டுக் கையாளுதல் என்பதே நேரத்தை முகாமை செய்வதாகும்.
ஒரு நாள், இருபத்து நான்கு மணித்தியாலங்கள் தான் என்றில்லாமல் நாற்பத்தெட்டு மணித்தியாலங்களாக இருக்கக் கூடாதா எனப் பலர் ஏங்குகின்றனர். அவர்கள், 'நேரம் போதாது, நேரம் பறக்கின்றது, நேற்றுத்தான் இந்த வருடம் பிறந்தது போல இருக்கின்றது; அதற்குள் ஒரு வருடம் போய்விட்டதே' என்றெல் லாம் கவலைப்படுகின்றனர்.
இன்னொரு சாரார், 'இந்த நேரம் போகுதில்லையே. எப்படி நேரத்தைக் கழிப்பது என்று தெரியாமல் இருக்கிறதே' என்று விசனப்படுகிறார்கள். இவ்விரு சாராரும் நேரத்தைச் செவ்வையாகத் திட்டமிட்டு முகாமை செய்யாதவர்களே ஆவர்.
குறித்த நேரத்தில், குறித்த வேலையைச் செய்தல்; ஒரு நேரத்தைக் குறிப்பிட்டு, அந்த நேரத்தில் ஒருவரைச் சந்திப்பதாகக் கூறின், அக்குறித்த நேரத்திலேயே தவறாது அவரைச் சென்று சந்தித்தல், ஒரு கருமத்தைக் குறித்த நேரத்திற்கு ஆரம்பித்தல், நிறைவு செய்தல், பாடசாலை, அலுவலகம், வேலைத்தலம் ஆகியவற்றிற்கு உரிய நேரத்திற்குச் சமுகமளித்தல் என்பனவற்றை வாழ்க்கைப் பழக்கமாக நாம் கொள்ளுதல் அவசியம்.
ஒரு வைபவம் அல்லது கூட்டம் எட்டு மணிக்கு ஆரம்ப மாகும் என அறிவித்தலில் குறிப்பிட்டு விட்டு, அரை மணி நேரமோ, ஒரு மணிநேரமோ பிந்தித் தொடங்குகின்ற வழக்கத்தை நாம் காண்கின்றோம். பிந்தியமைக்காகச் சபையோரிடம், பலரும் பலதடவைகள் மன்னிப்புக் கேட்கும் தோரணையையும் பார்க்கின் றோம். அதனால், மேலும் பல நிமிடங்கள் செலவு செய்யப்படு கின்றன.
மன்னிப்புக் கோருபவர்கள், அடுத்த தடவைகளிலாவது திருந்தி உரிய நேரத்துக்குச் சமுகமளிக்கின்றார்களா என்றால், அதுவுமில்லை. இவ்வாறு நேரத்தை உதாசீனஞ் செய்கின்றோ மென்று தெரிந்து கொண்டே மேலும் மேலும் தவறு செய்பவர்கள் அதிகமாக உள்ளனர். •

நல்வாழ்விற்குரிய நடைமுறைச் சிந்தனைகள் இ 139
கூட்டம் எட்டு மணிக்கு ஆரம்பமாகும் என்றும், எட்டு மணியளவில் ஆரம்பமாகும் என்றும் இரண்டு விதமாக அறிவித்தலில் நேரத்தைக் குறிப்பிடும் முறையினையும் காணமுடி கின்றது. எட்டு மணியளவில் என்றால் திட்டவட்டமாக நேரம் குறிப்பிடப்படவில்லை என்பது தான் பொருள். நேர உணர்வு உள்ளவர்களாக நாம் மாறவேண்டும். அதற்கு, இத்தனை மணிக்கு என்று குறிப்பிட்டு, குறித்த நேரத்தில் தொடங்கவேண்டும். இதனால் எல்லோருக்கும் நன்மையே கிட்டுகின்றது.
'உலகத்திலேயே, சிறப்பாக வாழ்வதற்கு மிகவும் உவப்பான இடம் எது?’ என வினா எழுப்புபவர்களுக்கு கூறக் கூடிய விடை:- 'எங்கே நேரத்திற்கு மதிப்புக் கொடுக்கப்படு கின்றதோ, எங்கே நேரம் உரிய முறையில் முகாமை செய்யப் படுகின்றதோ, அந்த இடம் தான் வசிப்பதற்கு நேர்த்தியான இடம்’ என்று துணிந்து விடை கூறலாம்.
நேரத்துக்கு விழித்தெழுதல், நேரத்துக்குக் காலைக் கடன்களை முடித்தல், நேரத்துக்கு உடற்பயிற்சி செய்தல். நேரத்திற்கு உணவு உண்ணுதல், நேரத்துக்குத் தொழிலுக்கோ வேறுகருமங்களுக்கோ செல்லுதல், நேரத்துக்கு வீடு திரும்புதல், நேரத்துக்கு மாலைக்கடன்களைச் செய்தல், நேரத்துக்கு நித்திரைக்குச் சென்று உறங்குதல் என்று ஓர் ஒழுங்கினை வாழ்க்கையில் மேற்கொண்டுவரின் ஒருவரின் சுபீட்ச வாழ்வு நிச்சயமாகிவிடு கின்றது. நோய்கள், பிணிகள், துன்பங்கள், நெருங்கமாட்டா. மகிழ்ச்சியும், இன்பமும், நிம்மதியும் எஞ்ஞான்றும் அத்தகை யோரின் வாழ்வில் நிறைந்திருக்கும்.
நேரத்தை மதிப்பவர்கள் நேர்த்தியாக வாழ்வர். நாமும் நேரத்தை அனுசரித்து, செவ்வையாக நேரத்தை முகாமை செய்து நல்வாழ்வு பெறுவோமாக.

Page 73
50. உண்மையே வெல்லும்
உண்மையை உணர்ந்து கொள்ளவும், உண்மையின் அடிப்படையில் வாழ்க்கையை அமைத்துக் கொள்ளவும் மனிதர்களுக்கு மட்டுமே இயலும். மற்றைய உயிரினங்களின் ஆற்றலுக்கு அது அப்பாற்பட்டது. அந்த வகையில் மனிதர்கள் ஆற்றல் மிகுந்து விளங்குகின்றனர். ஆனால் இயல்பாகத் தம்மிடம் உள்ள அதி அற்புத ஆற்றலை வாழ்க்கையில் மனிதர்கள் பயன்படுத்துவதாகத் தெரியவில்லை. உண்மைக்கு மதிப்பளித்து, வாழ்க்கையில் அதனை உபாசிக்கும் போதுதான், உலகில் நீதி நிலைபெறுகிறது; நேர்மை உரம் பெறுகிறது. மனித வாழ்க்கையில் சாந்தி நிலவுகிறது.
“உண்மையே அழகு, அழகே உண்மை அழகே செம்மை, செம்மையே அழகு உண்மையே செம்மை, செம்மையே உண்மை’
இக்கூற்றுக்கள் பண்டைய கிரேக்க தத்துவ ஞானிகளுக்கும், இந்திய தத்துவ ஞானிகளுக்கும் உடன் பாடானவை. மனித வாழ்க்கையில் உண்மை, அழகு, நன்மை எனும் பண்புகள் மிளிர வேண்டும் என்பதில் மேலைத்தேய அறிஞர்களும், கீழைத்தேய அறிஞர்களும் பண்டு தொட்டு இன்றுவரை உறுதியாக இருந்து வருவதிலிருந்து, அப்பண்புகளின் முக்கியத்துவம் தெளிவாகின்றது.
சத்தியம் எனும் வடசொல், தமிழில் உண்மை, வாய்மை, மெய்ம்மை என்ற சொற்களால் உணர்த்தப்படுகிறது. தெய்வப்புலவர் திருவள்ளுவர், பொய்யாமை என்று குறிப்பிடுகிறார். உள்ளத்தால் பொய்யாமை உண்மை எனவும்; வாய்மொழியால் பொய்யாமை வாய்மை எனவும்; உடல் ஆற்றும் செயலினால் பொய்யாமை மெய்ம்மை எனவும் வேறுபடுத்தி விளக்கம் தரப்படுகிறது. மனம், மொழி, மெய்யினால் பொய்யாமையே சத்தியம் ஆகும்.
பொய்யாமை, மனித விழுமியங்களுள் தலையாயது: அறங்கள் யாவற்றினும் முதன்மையானது.

நல்வாழ்விற்குரிய நடைமுறைச் சிந்தனைகள் ஐ 141
"பொய்யாமை பொய்யாமை யாற்றில் அறம் பிற
செய்யாமை, செய்யாமை நன்று' எனவும்
“எல்லா விளக்கும் விளக்கல்ல சான்றோர்க்குப்
பொய்யா விளக்கே விளக்கு"
எனவும் வள்ளுவர் கூறுகின்றார்.
சமூகத்திலோ, குடும்பத்திலோ, அதன் உறுப்பினர் களிடையே நல்ல சுமுகமான மனித உறவுகளைக் கட்டியெழுப்பு வதற்கு அத்தி வாரமாக விளங்குவது பொய்யாமை. பரஸ்பர நம்பிக்கை, விசுவாசம், அன்புப் பிணைப்பு என்பன மனித உறவுகளைப் பலப்படுத்துபவை. உண்மை உள்ள இடத்திலேயே இச்சீரிய பண்புகள் வாழ்கின்றன. இப் பண்புகள் வாழுகின்ற இடங்களிலேயே மகிழ்ச்சியும், அமைதியும் பிரவாகிக்கின்றன. மாறாக, பொய்ம்மையும், புரளியும், புரட்டும் மனிதர்களிடையே காணும்போது, அத்தகையோர் அங்கம் வகிக்கும் சமூகத்திலோ குடும்பத்திலோ, மனித உறவுகள் பலவீனப்பட்டு விடுவதால், ஆங்கு மகிழ்ச்சியோ, சாந்தி சமாதானமோ காண்பது அரிதாகி விடுகின்றது. உண்மையாளர்கள் உலகத்திலுள்ளவர்களின் உள்ளங்களில் நீங்காத இடம் பெற்று விடுகின்றனர். யாவரினதும் அன்புக்கும் நட்புக்கும் உரித்தாகிவிடுகின்றனர். ஆனால் பொய்ம்மையாளர்கள் அனைவரினதும் பொறுப்புக்கும், வேதனைக்கும் இலக்காகிவிடுகின்றனர். அவர்கள் துன்பப்படும் போது அவர்களுக்காகச் சிறிதளவேனும் அனுதாபம் காட்ட ஒருவர் கூடக் கிடைக்காது போய்விடுகின்றது.
உண்மை வெல்லும், பொய் தோற்கும் என்ற விடயம் எல்லோர்க்கும் தெரிந்தது தான். 'பொய் சொன்ன வாய்க்குப் போசனம் கிடையாது’ என்ற முதுமொழியும் யாவர்க்கும் மனப்பாடம்தான். உண்மையின், உயர்வு, வாய்மையின் வெற்றி பற்றி மேடைகளில் மணிக்கணக்கில் பேச வல்லார் பலர் உள்ளனர். ஆயினும் நடைமுறை வாழ்க்கையில் உண்மை பேசுவதற்குப் பயப்படும் நிலையைத் தான் மனிதர்களிடையே காண்கிறோம். உண்மையைப் பேச, செயலில் கர்ட்ட ஏன் அஞ்ச வேண்டும்? எனத்தயங்க வேண்டும் உண்மையைச் சொன்னால் கேட்பவர் களுக்கு ஏன் உடம் பெல்லாம் நோக வேண்டும்? இது புரியாத

Page 74
142 & குமாரசாமி சோமசுந்தரம்
புதிராகத் தோன்றினாலும், சிறிது அவதானத்துடன் ஆராயின் ஒரளவு உண்மை புலப்படும்.
சிலர் பொய்யையே பேசிப் பேசிப் பழக்கப் பட்டுவிட்ட தால், பொய் பேசும் பழக்கம் அவர்களுக்கு வழக்கமாகிவிட்டது. மீளுவது சிரமம் தான் என்றாலும், சிரத்தை யெடுத்தால் மீண்டுவிடலாம். தண்டனைக்குப் பயந்து பொய் சொல்பவர்களே மிகப்பலராக உள்ளனர். சிறுவர்களிடையே மட்டுமல்ல, வளர்ந்த பெரியவர்களிடமும் இந்நிலை காணப்படுகிறது. குற்றத்தையோ, தவறான நடத்தையையோ மறைப்பதற்குப் பிள்ளைகள் பெற்றோரிடம் பொய் சொல்லுகின்றனர். அதனால் பெற்றோரின் கோபத்திற்கோ, தண்டனைக்கோ உள்ளாகாமல் தப்பித்துக் கொள்கின்றனர். பிள்ளை உண்மையைச் சொல்லிக் குற்றத்தை ஒப்புக் கொள்ளும் பட்சத்தில் அநேகமான பெற்றோர்அதற்குரிய தண்டனையை வழங்கிவிடுகின்றனர். உண்மை பேசித் தண்டனை பெறுவதிலும், பொய் பேசித் தப்பித்துக் கொள்ளப் பார்க்கிறார்கள் பிள்ளைகள். எனவே, பெற்றோர்கள் இது விடயத்தில் கவனம் செலுத்தி, உண்மை கூறித் தவறுகளை ஏற்றுக் கொள்ளும் பிள்ளை களை மன்னித்து, நல்லபுத்திமதிகள் கூறி, அவர்களைத் திருத்துவதே மேலான செயல். உண்மை பேசினால் தண்டனை கிடைக்காது என்ற உறுதியை ஏற்படுத்த வேண்டும். அதேவேளை பெரியவர் களும் உண்மை பேசி, நேர்மையாக வாழும் போதுதான் மற்றை யோரைத் திருத்தும் உரிமை உண்டு என்பதையும் உணர்ந்து கொள்ள வேண்டும்.
51. ஒன்றே குலம், ஒருவனே தேவன், நன்றே நினைமின்
இவ்வுலகில், மனித வாழ்வு செம்மையாக நடைபெறு வதற்கு, மிகப்பழைய காலத்திலேயே நடைமுறை வாழ்க்கைத் தத்துவங்களை அமைத்துக் கொண்ட ஒரு சில மனித இனங்களுள் தமிழ் மக்களும் குறிப்பிடத் தக்கவர்கள். அதனால் தமிழ் மக்கள் பண்டைக் காலத்திலிருந்தே நாகரிகம், பண்பாடு, கலாசாரம் பெற்ற மனிதர்களாக வளர்ச்சி பெற்றுவந்தனர்.

நல்வாழ்விற்குரிய நடைமுறைச் சிந்தனைகள் இ 143
“ஒன்றே குலம், ஒருவனே தேவன், நன்றே நினைமின்’ “யான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்’ "யாவர்க்குமாம் உண்ணும் போதொரு கைப்பிடு
யாவர்க்குமாம் பிறர்க் கின்னுரை தானே’ "அன்பும் இறைவனும் ஒன்றே" "என்னை நன்றாக இறைவன் படைத்தனன்
தன்னை நன்றாகத் தமிழ் செய்யுமாறே" இக்கூற்றுகள் யாவும், மக்கள் வாழ்வு வளம் பெறுவதற்கும் செம்மை பெறுவதற்கும்; ஒழுங்கு, சீர் பெறுவதற்கும் ஏற்ற வகையில் அமைந்த மகுட வாசகங்கள், மூலமந்திரங்கள், வேத வாக்குகள் ஆகும். இவை இன்று, நேற்றுக் கூறப்பட்டவையல்ல. மனித நாகரிக வரலாற்றின் உற்பத்தியுகத்தில் மொழியப்பட்டவை.
“ஒன்றே குலம், ஒருவனே தேவன், நன்றே நினைமின்’ ஆகிய இம்மூன்றின் பொருளையும் உணர்ந்து, வாழும் பட்சத்தில், எவ்வித பிரச்சினைகளுக்கும் இவ்வுலகில் இடம் இருக்காது என்பது உறுதி.
மனித வாழ்வில், பல்வேறு பிரச்சினைகள் சிறியனவும், பெரியனவுமாய் இருக்கத்தான். செய்கின்றன.
இப்பிரச்சினைகளை அணுகுவதற்கு இரண்டு வழிகளைக் கூறுகின்றனர். ஒன்று, பிரச்சினைகளே உருவாகாமல் முன் கூட்டியே தடுக்கும் முறை அல்லது தவிர்க்கும் முறை; மற்றையது பிரச்சினைகள் வந்தபின் தீர்க்கும் முறை. இவற்றைப் Preventive Method, Curative Method (up 60 p 6T607 g. iSG) is gai Jingp16) Tid,6ir. இவ்விரண்டினுள்ளும் பிரச்சினைகள் தோன்றாமல் தவிர்க்கும் (p60) p63u Spig3 2,651b. "Prevention is better than Cure" GTg9/lib ஆங்கில வாசகம் இக்கருத்தை வலியுறுத்துகின்றது. 'வருமுன் காக்க, ' 'வெள்ளம் வருமுன் அணைகட்டுக’ என்னும் நமது ஆன்றோர், சான்றோர் வாக்குகளும் அதே கருத்தினையே வற்புறுத்துகின்றன. திருமூலர் கூறும் வழியும், வரமுன் காக்கவும், வந்தபின் நீக்கவும் உதவுகின்ற அருமையான வழிதான்.

Page 75
144 ஐ குமாரசாமி சோமசுந்தரம்
"ஒன்றே குலம்’ எனும் போது, இவ்வுலகில் வாழுகின்ற அத்தனை கோடி மக்களும், ஒரே குலம், அதாவது மனித இனத்தைச் சேர்ந்தவர்கள் எனும் விழுமிய உண்மையை ஏற்கும் போது, சாதியின் பெயரால், இனத்தின் பெயரால், குலம் கோத்திரங்களின் பெயரால், நிறத்தின் அடிப்படையில், சமய அடிப்படையில் ஏற்படுகின்ற பேதங்கள், கற்பிக்கப்படுகின்ற ஏற்றத்தாழ்வுகள், முரண்பாடுகள் அனைத்தும் ஏற்படக் காரணங்களோ நியாயங்களோ இல்லாமல் போய்விடுகின்றன. ஒருவனே தேவன், அந்த ஒரே இறைவ்ன் அன்பு தான். அன்பினை அனைவரும் ஆராதிக்கும் போது, அந்த அன்பினால் எல்லோர் நலனிலும் எவ்வித பேதமும் இன்றி கரிசனையும், ஆர்வமும் கொள்ளும் போது, எல்லோரிடையேயும் சகோதர உறவு இழையோடும் போது, இவ்வுலகில் மகிழ்ச்சியையும், இன்பத்தை யும் தவிர வேறு பூசல்களையோ, பிரச்சினைகளையோ கண்டு கொள்ளவே முடியாமல் போய்விடுமே. அடுத்து 'நன்றே நினைமின்' என்கிறார் திருமூலர். எல்லோரும் நல்லவற்றை மாத்திரமே சிந்தித்து, யாவருடனும் இனிய பண்பான வார்த்தைகள் பேசி, நற்கருமங்கள், நற்செயல்கள் எனப்படுகின்ற சேவைகளைப் பயன் கருதாது ஆற்றி வந்தால், மனித வாழ்க்கை, பிரச்சினைகள் இன்றிச் சுபிட்சமாக அமைந்து விடுமல்லவா? 'யான் பெற்ற இன்பம், பெறுக இவ்வையகம்' எனும் திருமூலர் திருவாக்கு எத்துணை அமிர்தவாசகம். மானிடப் பிறவியின் நோக்கம், 'நன்றாகத் தமிழ் செய்தல்' என்கிறார் திருமூலர். தமிழ் என்ற சொல்லுக்கு அன்பு, இனிமை, அமிர்தம் என்ற பொருள் உண்டு. தமிழ் நுதலியது அன்பு. எனவே நன்றாகத் தமிழ் செய்தல் என்றால் நன்றாக அன்பு செய்தல் என்பதே பொருள். எனவே, நாமும் அன்பு செய்து, வேற்றுமைகளை நீக்கி, ஒற்றுமை கண்டு நல்வாழ்வு வாழ்வோமாக. 'யாதும் ஊரே, யாவரும் கேளிர்’ என்னும் தாரக மந்திரத்தை ஒலித்தால் மட்டும் போதாது. நடை முறை வாழ்க்கையிலும் அதனை அனுசரித்து வாழ வேண்டும் என்பதையும் புரிந்து கொள்வோமாக.
★ 食 ★


Page 76


Page 77
சைவசமயம், தமிழ்ப்பண்பாடு, வாழ்க்கைத் தத்துவம் என்பவற்றை பத்திரிகைகள், சஞ்சிகைகளில் எழு நிகழ்ச்சிகளிலும் பங்கு கொள்கிறார்
"நல்லைநகர் நாவலன்" நாடகநூல் (1994) "மனித விழுமியங்கள்" (199
மனித விழுமியங்கள் பற்றியே வளர்ப்பதே வாழ்வின் குறிக்கோள்
"எனது முன்னோரைக் காட்டிலு முடிந்தமைக்குக் காரணம், அவர் பார்த்ததே" - இது விஞ்ஞான ே "முன்னோர்களின் தோள்" என்று நமது சமூக பண்பாட்டு மரபினைக் குறி
சமூக, பண்பாட்டு அடித்தளத்தி அனுபவங்களை "நல்வாழ்விற்குரிய நூலாசிரியர் வழங்குகிறார். வாழ்க்ை ஆகும். தத்துவம், செயற்பாடாகும்
4CK
 

குமாரசாமி சோமசுந்தரம் ஆசிரியராகத் தம் கல்விப் பணியை ஆரம்பித்து பிரதம கல்வியதிகாரி, கல்விப்பணிப்பாளர். தேசியகல்வி நிறுவகத் தமிழ்த்துறைப் பணிப்பாளர் ஆகிய பதவிகளை வகித்தவர். தேசிய கல்வி நிறுவகத்தின் தமிழ்க் கல்வித்துறை ஆலோசகராகக் கடமையாற்றுகின்றார்.
சென்னை, இலண்டன் பல்கலைக் கழகங்களின் பட்டதாரியான இவர், யாழ்ப்பாணம் பல்கலைக் கழகத்தின் எம்.ஏ. (கல்வியியல் பட்டத்தையும் பெற்றவர்.
மனித விழுமியங்கள், நடைமுறை ஆராய்ந்து எழுதியும் பேசியும் வருபவர். ழதுபவர். வானொலி, தொலைக்காட்சி r.
- 1978); "சைவ மரபும் தமிழர் வாழ்வும்" 5) என்பன அவரது நூல்கள்.
அவரின் பேச்சும் மூச்சும் அவற்றை
என்கிறார்.
ம் என்னால் அதிக தொலைவு காண களின் தோள்களின்மீது நின்று நான் மேதை நியூட்டன் வழங்கிய கருத்து. மனிதகுலம் இதுவரை கட்டியெழுப்பிய ப்பிட்டுள்ளார்.
னின்று கால உணர்வோடு, வாழ்க்கை ப நடைமுறைச் சிந்தனைகள்" ஆக கயை வளம்படுத்துதலே குறிக்கோள்
போது வாழ்வு மலர்ச்சி பெறுகிறது.
KC