கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: சைவசித்தாந்தம்

Page 1
(<_/
|5)
-参见$'Q· 公孙ƆƆSoos §),-') )}}
%、
sae∞ so : 拿©
《多
 


Page 2


Page 3
முதற்பதிப்பு: ஜூன் 1985.
விலை ரூ 10
sydrefi Glenrif :
தேவநேயன் அச்சகம் 351 திருவல்லிக்கேணி நெடுஞ்சாலை
சென்னை-600 005

முகவுரை
förrar uuntriř? மரணத்துக்குப் பின்பு வாழ்வுண்டா?
பண்டு தொட்டு இன்று வரையும் மக்கள் இக் கேள்விகளையும் பற்றிச் சிந்தித்து வருகின்றனர்.
இக்கேள்விகள் என்று எழுந்தன என்று கூறவியலாது.
நாம் வாழ்க்கையிற் காண்பவையும் அனுபவிப்பவை யும் எல்லாம் நிலையற்றவை, அநித்தியமானவை. தோற்ற மும் மாற்றமும் நாசமுமுடையவை.
இவற்றையெல்லாங் கடந்த நித்திய மெய்ப் பொரு ளுண்டா என்பதை அறிய மக்கள் ஆவற்படுகின்றனர். காலத்துக்குக் காலம் பற்பல மெஞ்ஞானிகளும் திருவடி யார்களும் தோன்றி இக்கேள்விகளுக்கு விடையளித்தனர். இவ்விடைகளைச் சாதாரண மக்கள் விளங்கிக் கொள்வது கடினமாகும். பல விடைகள் முரண்பட்டவை போலவும் எமது பகுத்தறிவுக்கு ஒவ்வாதன போலவும் தோன்று
கின்றன.
உலகிற் பல சமயங்களுள. இச்சமயங்களும் இக்கேள்வி களுக்கு விடையளிக்கின்றன.
சமய விடைகளுஞ் சில வேளைகளில் முரண்பட்டவை யாக இருக்கின்றன. எனினும் இக்கேள்விகளுக்கு விடைகள் முக்கியமானவை என்பதில் ஐயமில்லை. ஏனென்ருல், எமது வாழ்வும் வளமும், சீருஞ் சிறப்பும், நோக்கங்களும் இலட்சியங்களும், சிந்தனைகளும் செயல் களும்,பண்பாடும் நாகரிகமும், தர்மமும் அதர்மமும் நாம் இக்கேள்விகளுக்கு அளிக்கும் விடைகளைப் பொறுத்தன வாகும்.
ge() நாட் சொப்பன்கோவர் எனுஞ் சர்மன் தத்துவ,
ஞானி ஒரு பூங்காவில் நாடோடி போன்று அலைந்து கொண்டிருந்தார்.

Page 4
4
பூங்காக் காவலன் "நீ யார்?' என அவரைக்கேட்டான்.
"அதை அறியவே நானும் ஆவற்படுகிறேன்" எனச் சொப்பன்கோவர் கூறினர்.
இந்திய முனிவர்களையும் ஞானிகளையும் பற்றியும் இப்படிப்பட்ட கதைகளுள.
நீ யார்? நான் யார்? எனத் திருவடையார் பிருன்சிஸ் கேட்கிருர்.
'உன்னை நீ அறி" என்பது டெல்பி ஆலயத்திலுள்ள கல்வெட்டுக்களில் ஒன்ருகும்.
'நீயார்? உனது யாது? எங்கிருந்து நீ வந்தாய்? சகோதரனே இவற்றைப் பற்றி சிந்தி’ எனச் சங்கராச்சாரி யார் கூறுகிருர்,
கடவுள் ஒருவன் உளன் எனவும் ஆன்மாக்கள் பல உளவெனவும் ஆன்மாக்கள் இறைவனை உணர்ந்து அவனை அடைவதே முத்தி எனவும் ஆஸ்திக (Theistic) மதங்கள் கூறுகின்றன! இறைவனை உணருவதற்கும் தன்னையறிவது முதற்படியாகும்.
"மரணத்துக்குப் பின் வாழ்வுண்டெனச் சிலர் சுறு கின்றனர். இல்லையென வேறுசிலர் கூறுகின்றனர். இவற்றில் உண்மை யாது?’ இக்கேள்விக்கு விடையே நச்ச கேது எமராஜனிடங் கேட்ட மூன்ருவது வரமாகும். இது தேவருமறியா இரகசியம் என எமராஜன் இக்கேள்விக்கு விடையளிக்க மறுத்தான். வேறு வரங் கேட்குமாறு சொன்னன் நச்ச கேது. வேறு வரங் கேட்காது விடாது வற்புறுத்தவே எமராஜன் அவனுக்கு இப்பரம இரகசி யத்தை உபதேசித்தானென்பது உபநிடதக் கதை.
"பல கோடி மக்கள் இவ்வுலகில் இறந்த போதினும் அவர்களில் எவராது திரும்பி வந்து எமக்கு உண்மையைக் கூறவில்லை. ஆதலால் மரணத்துக்குப் பின் என்ன

s
என்பதை நாம் இறந்த பின்புதான் அறியலாம்" ஒமாக் காயாம். இவ்வாக்கியந்தானும் உண்மையானதா?
வாதத்தினலும் தர்க்கத்தினலும் உண்மையை அறிந்து விடலாமெனப் பலர் நம்புகின்றனர். வாதத்திறனையும் தர்க்கச் சீரையும் பகுத்தறிவுநூட்பத்தையும் மெச்சுகிருேம், வாதப் புரட்டல்களுக்கு (Sophistry பண்டைக் கிரேக்கர் களிடையில் மட்டுமன்றி இன்றும் எல்லா நாடுகளிலும் பெருமதிப்புண்டு. எனினும் வாதங்களுங் கொள்கைகளும் ஒரு பக்கச் சார்புடையவை. பூரண உண்மைக்கு வழி காட்டா.
(அ) வாதிப்போர் தமது முடிவுகளுக்கேற்ற வைத்துக் கோடல்களை மறுக்க முடியாத உண்மைகளாக எடுத்துக் கொள்ளுகின்றனர். இவ்வைத்துக் கோடல்களின் உண் மைகளை ஆராய்வதில்லை. வாதத்தின் ஒவ்வொரு படியி லும் மேலும் தமக்குச் சாதகமான வைத்துக் கோடல்களைச் சேர்த்துக் கொள்கின்றனர்.
(ஆ) காட்சி,காண் பொருளை மட்டுமன்றி ஒரளவுக்குக் காண்பவனையும் பொறுத்ததாகும். அது போன்று வாத முடிபுகளும் வாதிப்போன் அனுபவங்களையும் முற்சாய்வு களையும் பொறுத்தனவாகும். புதிய கருத்துக்களை விளங்கிக் கொள்வது கடினமன்று.ஆனல் எமது மனத்தில்வேரூன்றிய பழைய கருத்துக்களைக் களைவது கடினமாகும்.
(இ) 'எப்பொருள் யார்யார் வாய்க் கேட்பினும்
அப்பொருள் மெய்ப்பொருள் காண்ப தறிவு".
வாதங்களில் இந்த மனப்பான்மை இல்லை. முன்னரே நாம் கொண்ட கருத்துக்கள் முற்சாய்வுகளிலிருந்து வட்ட வட்டமாக வாதித்து மக்கள் தாம் முன்னரே நிச்சயித்த முடிவுகளுக்கு வருகின்றனர். வாதங்கள் பெரும்பாலும் பிரசாரங்களாகும். சர்வாதிகாரத்தைச் சனநாயகம் எனவும் முதலாளித்துவத்தை சோசலிசம் எனவும்:

Page 5
6
சுரண்டலையும் அநீதியையும் தர்மம் எனவும் இன, மதத் துவேஷத்தை மைத்திரியம் எனவும் வாதிக்கலாம். வாதத் தினல் உண்மையைக் கண்டவர் இல்லை, நிரூபித்தவரு மில்லை.
(ஈ) வாதிப்போர் சொற்களுக்கே தமக்கேற்ற கருத் துக்களைக் கொடுக்கின்றனர். உதாரணமாக இந்திய தரிச னங்களில் மெய்மை, மாயை, சூனியம், அத்துவைதம் முத. லிய சொற்கள் பல கருத்துக்களிற் பயன்படுத்தப்படுகின் றன.
(உ) எல்லா மக்களுக்கும் ஆண்வமும் நான் எனது என்ற அகங்காரமும் ஒரளவுக்காவதுண்டு. உண்மைக்கே சொத்துரிமை கோருகிருர்கள். உண்மையை அறிவதற்கு இந்த நான் பெருந்தடையாகும். சமயத் துறையிலும் பார்க்க அரசியற்பொருளாதாரத் துறைகளில் இந்த நான் போக்கு அதிகமாகவுண்டு.
சமய வாதங்களிலும் இந்த நானக் காணலாம். "எனது சமயமே உண்மையானது. எனது கடவுளே உண்மையானவர்' எனப் பல நான்கள் வாதிக்கின்றனர்;
(ஊ) உண்மையை உணருவதற்குக் கொள்கைகளுங் கோட்பாடுகளும் தடைகளாகும். பகுக்கப் பகுக்க நாம் உண்மையிலிருந்து மேலும் மேலும் விலகிச் செல்லலாம்: வரைந்த எல்லைகளுக்குள்ளும் வகுத்த இலக்கணத்தின் படி யும் நாம் சிந்தித்து முடிவு காண்பதைப் பகுத்தறிவு அல் லது பொதுவறிவு என்கிருேம். இப்பகுத்தறிவின் எல்லை களே உணருவதே சிறந்த பகுத்தறிவாகும். எமது பொது அறிவையும் பகுத்தறிவையும் முற்ருகப் புறக்கணிக்கவும் முடியாது. புறங்கணித்தால், சித்தித்து முடிவுகாணச் சாதாரண மக்களினல் இயலாது. எல்லாக் கொள்கைகளை யும் பற்றி விருப்பு வெறுப்பின்றிச் சிந்திக்க வேண்டும். பூரண உண்மையை அறிவதற்கு நூற்படிப்பும் பகுத்தறி வும் போதா.இவற்றுக்கு மேம்பட்ட உள்ளுணர்வு அல்லது' மெஞ்ஞானம் வேண்டும்.

7
(எ) விஞ்ஞானங்கள் பயன்படுத்தும் தர்க்கமுறைகள் சடவுலகைப் பற்றிய தராதர (relative)உண்மைகளை அறிய உதவுகின்றன.பூரண அல்லது பரம(absolute)உண்மையை அறிய உதவா, இவை தொடர்புகளைக் காட்டினும் மூல காரணத்தைக் காட்டா. விஞ்ஞான உண்மைகள் தவருன வைகளல்ல. ஆனற் பரிபூரணமானவைகளுமல்ல.
காண்டல் கருதல் உரை எனும் மூன்று பிரமாணங்க ளில் மேனட்டவர் முதலிரண்டையும் மட்டுமே ஒப்புக் கொள்ளுகின்றனர். சடவுலகைப் பொறுத்த மட்டில் இவை ஓரளவுக்குப் போதுமாக இருக்கலாம். சடங் கடந்த தத்துவங்கள் உண்டென்ருல், அவற்றைப் புலன் களினலும், அளவைகளினலும் பகுத்தறிவினலும் அறிய முடியாது. வேருேர் அறிவுக் கருவி வேண்டும். இதனை ஆழ் மட்ட உள்ளுணர்வு அல்லது மெஞ்ஞானம் அல்லது இறை யருள் எனவும் மனிதனுக்கு உள்ளார்த்தமாக இச்சக்தி உண்டெனவும் இச்சக்தியை வெளிப்படுத்தினுல் மறை பொருள்களை அறியலாம் எனவும் விஞ்ஞானிகள் கூறு கின்றனர். W
நான் யார்? மரணத்துக்குப் பின் வாழ்வுண்டா? என்ற வினக்களுக்குச் சைவசித்தாந்தம் கூறும் விளக்கங் களை இந்நூலில் ஆராய்ந்துள்ளேன்.
இதே வினக்களுக்குச் சடவாதம், பெளத்தம்,வேதாந் தம், மறைஞானம் கூறும் விளக்கங்களை வேருக எழுதியுள் ளேன். கீபுறு, கிறித்துவ மதங்கள், ஆவியியலாளர், பண்டை எகிப்தியர், சோகிரட்டீஸ், பிளேற்ருே போன்ற அறிஞர்கள், தற்கால மேனட்டு அறிஞர்கள் கூறியவற்றை மற்ருேர் நூலிலும் ஆராய்ந்துள்ளேன்.
விருப்பு, வெறுப்பற்ற சிந்தனை மூலம் நான் எனது என்ற எண்ணமற்ற சிந்தனைமூலம் உண்மையைத் தேடிக் காண முயலுங்கள்.
கலிபோனியா, U.S.A பொ. சங்கரப்பிள்ளை சூன் 1985

Page 6
பொருளடக்கம்
முகவுரை
1. சைவசமயம்
2. பதி
3. ஆன்மாக்கள்
கி. அத்துவைதம் 5. புறப்பிரபஞ்சமும் அகப்பிரபஞ்சமும் 6. ஆணவ மலம்
7. LDT60)u
கன்மமலம்-வினைப்பயன்
9. மரணத்திற்குப் பின் 10. மறுபிறப்பு ll. (pg53
12. முத்திக்கு மார்க்கங்கள் 13. திருவருள் 14. பக்தி
பக்கம்
20
40
49
55
64
69
74
85
96.
104
114 128
33

1. 6M&U &LOUIs
இந்து என்பது சிந்து நதிக்குக் கிழக்கே வாழ்ந்த மக்களுக்கு இருனியர் இட்ட பெயராகும். பிற்காலத்தில் நாடும் மக்களும் சமயங்களும் கலாசாரங்களும் இப் பெயரைப் பெற்றன. இந்துமதம் தாபன மதங்களில் ஒன்றன்று, இந்திய மக்களின் வழிபாடுகள் ஆசாரங்கள் அனுஷ்டானங்கள் தத்துவ ஞானக் கருத்துகள் எல்லாம் இந்து மதத்தில் அடங்கும். இவற்றுக்கிடையில் பெருமளவு ஒற்றுமையிருப்பினும், வேற்றுமைகளுமுள்ளன. உதாரண மாகச் சிவஞானசித்தியார் பரபக்கத்திற் பின்வரும் சமயங் கள் குறிப்பிடப்படுகின்றன; உலகாயதம், நால்வகைப் பெளத்தம், ஆருகதம் ' (நிகண்டவாதமும் உட்பட), வைபாடிகம், மீமாஞ்சை, ஆசிவகம், பட்டாச்சாரியன் மதம், பிரபாகரன் மதம், சத்தப் பிரம வாதி மதம், மாயாவாதம், பாற்கரியன் மதம், பாஞ்சராத்திரி மதம்.
சைவம, வைஷ்ணவம், சாக்தம், முதலிய ஆகம சமயங் கள் வேதகாலத்துக்கு முற்பட்ட பண்டை இந்தியமக்களின் சமயங்களாகும். என்று தோன்றியவை எனக் கூற முடி யாது. இன்றும் பெரும்பாலான இந்துக்கள் சைவர் அல்லது வைஷ்ணவர் அல்லது சாக்தராவர். வேதசமயம் பண்டைக்காலத்தில் வைதீகம் அல்லது சனதன தர்மம் எனப்பட்டது. உபநிடத காலம், ஐரோப்பிய அறிவு மறு மலர்ச்சிக் காலத்தை ஒத்ததாகும். இக்காலத்திற் பற்பல முரண்பட்ட தத்துவ ஞானங்கள் தோன்றின. வாதங் களும் எதிர் வாதங்களும் எழுந்தன. புத்தம் சமணம்

Page 7
10
முதலிய புறப்புறச் சமயங்கள் தோன்றின. வைதிக சமயமும் ஆகம சமயங்களும் உபநிடத கருத்துக்களினற் படிப்படியாக மாற்றம் அடைந்தன. பின்பு வைதிக சமயமும் ஆகம சமயங்களும் ஒன்றுடன் ஒன்று கலந்து சமரசங் கண்டு தற்கால இந்துமதம் தோன்றிற்று. இக் கலப்பை வைதீக சைவம் என்ற பெயரே காட்டுகிறது. சைவ சமயத்தில் வைதிகப் பகுதிகளைப் பிரித்துக்காட்டுவது கடினமன்று; சாதிக்கட்டுப்பாடு, வருணுச்சிரம தர்மங்கள், குலத்தின் அடிப்படையில் நீதி, போலி ஆச்சாரங்கள், அணுவசியமான சடங்குகள், வடமொழி மந்திரங்கள், பூசைகள், கோயில்களில் வியாபாரங்கள் முதலியவை வைதிகப் பகுதிகளாகும். வீட்டுக்கு நெறியே சமயம். சமயம் பெரும்பாலும் மறை பொருட்களைப் பற்றியதுமறைஞானமாகும். ஆஸ்திக சமயங்கள் மறைஞானி களின் இறையனுபவத்திலிருந்து எழுத்தவையாகும்.
சைவமே பண்டுதொட்டுத் தமிழ் மக்களின் சமய
மாகும். பண்டைக்காலத்தில் இந்தியா முழுவதிலும் மத்திய ரேகைக்கு இருமருங்கிலுமுள்ள நாடுகளிலும் சிவ வழிபாடும் சூரிய வழிபாடும் பரவியிருந்தன. பலவிடங் களில் அகழ்ந்தெடுக்கப்பட்ட சின்னங்கள் இதற்குச் சான்ருகும். ஒரு காலத்தில் சைவ சமயம் ஐந்து கண்டங் களிலும் பரவியிருந்ததெனத் திருமூலர் கூறுகிருர், வட மொழியில் சிவாகமங்கள் இருபத்தெட்டாகும். உபாக மங்கள் இருநூற்றேழாகும். தமிழில் பன்னிரண்டு திரு முறைகளும் பதினன்கு மெய்கண்ட சாத்திரங்களும் பிரமாண நூல்களாகும். இவற்றைவிடப் பலநூறு புராணங்களும், பிரபந்தங்களும், சார்பு நூல்களும், உரை நூல்களுமுள.
திருமுறைகள்
பன்னிரண்டு திருமுறைகளாவன.
1, 2, 3. திருஞான சம்பந்தர் தேவாரங்கள். 4, 5, 6. திருநாவுக்கரசர் தேவாரங்கள்.

10.
ll.
12.
சுந்தரமூர்த்திநாயனர் தேவாரங்கள். மாணிக்க வாசகரின் திருவாசகமும் திருக் கோவையும். திருவிசைப்பா, திருப்பல்லாண்டு - ஒன்பது அடி யார்களின் பிரபந்தங்கள்.
திருமூலரின் திருமந்திரங்கள். w பத்து அடியார்களின் நாற்பது பிரபந்தங்கள். பட்டினத்தார், சேரமான் பத்திர கிரியார் பாடல் கள் இதிலடங்கும். சேக்கிழாரின் பெரியபுராணம்-பெரியபுராணம் அறுபத்து மூன்று சிவனடியார்கள் அல்லது நாயன்மார்களின் வரலாறுகளைக் கூறுகிறது.
பதினன்கு மெய்கண்ட சாத்திரங்களாவன :
உந்தி களிறு உயர்போதஞ் சித்தியார் பிந்திருபா உண்மை பிரகாசம்-வந்த அருட் பண்புவின போற்றி கொடி பாசமிலா நெஞ்சுவிடு உண்மைநெறி சங்கற்ப முற்று.
i.
2.
3
4.
5
6
7
திருவுந்தியார்-திருவியலூர் உய்யவந்த தேவனர்.
திருக்களிற்றுப் பாடியார்-தென்கடவூர் உய்ய வந்த தேவனர்.
சிவஞான போதம்-மெய்கண்ட தேவர். சிவஞான சித்தியார்-அருணந்தி சிவாச்சாரியார். இருபா இருபஃது-அருணந்தி சிவாச்சாரியார்.
உண்மை விளக்கம்-திருவதிகை கடந்தார்.
மனவாசகங்
சிவப்பிரகாசம்-உமாபதி சிவாச்சாரியார். திருவருட்பயன்-உமாபதி சிவாச்சாரியார்.
போற்றிப் பஃருெடை-உமாபதி சிவாச்சாரியார்.

Page 8
2
10. கொடிக்கவி-உமாபதி சிவாச்சாரியார். 11. வினை வெண்பா-உமாபதி சிவாச்சாரியார். 12. நெஞ்சு விடுதூது-உமாபதி சிவாச்சாரியார்.
13. உண்மை நெறி விளக்கம்-உமாபதி சிவாச்சாரி
ιιμ Γι πί.
14. சங்கற்ப நிராகரணம்-உமாபதி சிவாச்சரியார்.
மெய்கண்ட சாத்திரங்கள் திருமுறைகளின் கருத்துக் களை வகுத்துக் கூறுகின்றன; சைவ சமயத்துக்கு அடிப் படை அடியார்களின் இறை அனுபவத்திலிருந்து எழுந்த திருப்பாடல்களாகும். ஆதலால் இவற்றை மறைஞானத் தின் (Mysticism) அடிப்படையில் விளங்கிக் கொள்ள வேண்டும்.
சைவ சித்தாந்தக் கருத்துகளைத் தொல்காப்பியம், முதலிய சங்க நூல்களிலும் காணலாம். தமிழர் மறை யாகிய,திருக்குறள் பலவற்றை விளக்குகிறது. நம்பியாண் டார் நம்பி திருமுறைகளை வகுத்த பின்னரும் பல சிவனடி யார்களும் மறைஞானிகளும் இருந்தனர். தாயுமானவர், அருணகிரிநாதர், இராமலிங்க சுவாமிகள், யாழ்ப்பாண யோகசுவாமிகள் ஆகியோரை விசேடமாகக் குறிப்பிட லாம். கச்சியப்பர் இயற்றிய கந்த புராணம் சைவ சித்தாந்தக் கருத்துக்களின் களஞ்சியமாகும் 609s சித்தாந்தப் புலவர், மரபொன்று ஈழநாட்டில் நெடுங் காலம் இருந்து வந்தது. இன்று இதுவும் மறைந்து போ சிறது. தமிழ் தெரியாத் தமிழர் போல இன்று நாம் சைவம் தெரியாச் சைவராகி விட்டோம்; பொருளும் பயனுமற்ற வைதிகச் சடங்குகளிலும் ஆசாரங்களிலும் கட்டுப்பாடுகளிலுஞ் சிக்கித் தவிக்கிறோம். இவ்வதி காரத்திற் கொடுக்கப்படும் திருமுறைப் பாடல்களுக்கு விளக்கங்கள் அளிக்கப்படா. இவை மறைஞானத் திருமந்திரங்களானபடியினல் இவற்றைப் பக்தியுடன் ஒதி ஓதி உணர வேண்டும். எமது இரு கேள்விகளுடனும்

13
தொடர்புடைய சைவ சித்தாந்தக் கொள்கைகளே இந் நூலில் இடம் பெறுகின்றன. எனினும் சைவமே மிகப் பெரும்பாலான தமிழ் மக்களின் சமயமாதலால் சற்று விரிவாகக் கூறுகிறேன்.
சைவ சித்தாந்த சாரம்
சைவ சித்தாந்தத்தின் சாரம் பின் வருவதாகும். (அ) இறைவன் ஒருவன் உளன். அவன் தத்துவங்களைக் கடந்தும் தத்துவங்களில் கலந்தும் நிற்கிருன். ஒன்ருகி வேருகி உடனகி நிற்கிருன். இவை பேத அபேத பேதாபேத நிலை கள் எனப்படும். இறைவன் மனம்வாக்குக்கு எட்டாதவன் நிர்மலன். நிர்க்குணன். எனினும் எங்கும் நிறைந்தவன். உலகங்கள் தோறும் உயிர்கள் தோறும் பரந்தவன். உயிர் களுக்கு உயிராய் நிற்கிருன். அவன் அருளின்றி அணுவும் அசையாது. சச்சிதானந்தன். சுத்த சித்தா வான். அவன் அவள் அது உளன் இலன்; உருவம் அருவம் முதலிய வரை யறைகளினல் இறைவனை விளக்க முடியாது. எனினும் பக்திவலையிற் படுவோன் காண்க.
(ஆ) உயிர்கள் பல கோடி. எண்ணிலாதவை. துரல சித்துக்கள். அநாதியானவை. அழிவில்லாதவை, சித்துப் பொருள்களாயினும், பூரண அறிவு இல்லாதவை. அறி விக்க அறிபவை.தாமாக அறியும் ஆற்றலற்றவை. சார்ந்த தின் வண்ணமாக நிற்பவை. ஆன்மா ச்டத்தைச் சாரின் சடமாகும். சிவத்தைச் சாரின் சிவமாகும்.
(இ) அதிையே தொட்டு உயிர்கள் ஆணவமலத்தில் கட்டுண்டு கிடக்கின்றன. இது சகசமலம் எனப்படும். உயிர்களின் அறிவு விளக்கத்தை இம்மலம் தடை செய் கிறது. இக்காரணம் பற்றியே உயிர்கள் அணுக்கள் எனப் படும். r
(ஈ) உலகமும் உள்பொருள். அகப்பிரபஞ்சமும் புறப்பிரபஞ்சமும் ஐம்பூதங்களின் சேர்க்கைகளாகும்.

Page 9
14
தாலம் சூக்குமம் எனும் இருநிலைகளிலும் சடப்பொருட் களுள், சடத்துக்கு மூலகாரணி அருருவாகிய மாயை. மாயை சுத்தமாயை அசுத்தமாயையென இருவகைப் படும். காரண நிலையிலும் காரிய நிலையிலும் மாயை உள் பொருளாகும். மாயையை அருட்டித்துத் தோற்று வித்துத் தொழிற்படுத்துவது இறைவன் சக்தி அல்லது திருவருளாகும்.
(உ) அறியாமை வயப்பட்டு ஆணவ மலத்தில் அழுந்திக் கண்ணிலாக் குழவியைப் போல அசைவும் அறிவுஞ் செயலு மற்றுக் கிடக்கும் ஆருயிர்கள் படிப் படியாக அறிவு விளக்கம் பெற்று முன்னேறும் பொருட்டு இறைவனின் திருவருள் தனுகரணபுவன போகங்களைத் தோற்றுவித்து அவற்றை உயிர்களோடு பொருத்துகிறது. ஆருயிர்களுடன் அணுவுக்குள் அணுவாக உயிருக்கு உயிராக உறுதுணையாக நிற்கிறது. சிவசக்தி மாயையில் தோய்ந்து நிற்கும் போது திரோதான சக்தி எனப்படும். மலங்களுடன் கலந்து நின்று அருட் செய்வதினல் மலங் களில் ஒன்ருகக் கருதப்படும.
(ஊ) மாயா காரியங்களுடன், அறிவு பொருந்திய ஆன்மா பொறிபுலன்கள் மூலம் ஓரளவு விளக்கம் பெறு கிறது. வினைகள் செய்து வினைப்பயன்களாகிய இன்ப துன்பங்களை அனுபவித்து இந்த அனுபவங்களினலும் ஓரளவுக்கு உண்மையை உணருகிறது. இதனல் மேலும் அறிவு விளக்கமடைகிறது. அதே வேளையில் மாயா காரியங்களின் உண்மை இயல்பை அறியாதும் மயங்கு கிறது. பொய்மைகளை மெய்மைகளென நம்புகிறது. உலக இன்பங்களை நித்தியமானவை எனவும், உடம்பைத் தானெனவும் நினைக்கிறது. தன்னையும் தமியனையும அறி யாது அல்லற்படுகிறது. பிறந்தும் இறந்தும் இவ்வுலகிலும் மறுவுலகெங்கிலும் வாழ்ந்தும் உழல்கிறது.
(எ) ஆன்மா மாயாகாரியங்களோடு சேர்ந்து இயங்கும் போது வினைகள் செய்கிறது. இவ்வினைகளின்

15
பயன்களை இவ்வுலகிலும் மறுவுலகங்களிலும் அனுபவிக் கிறது. வினைகள் உடம்புக்கும் உடம்பு வினைகளுக்கும் காலாகும். மாயையும் கன்மமும் இறைவனினல் ஆன்மா வோடு இடையில் சேர்க்கப்பட்டவையான படியினல், ஆகந்துக மலங்கள் எனப்படும்.
(ஏ) ஆன்மா பரிபக்குவம் அடைய தன்னையும் இறை வனையும் அறிகிறது. தன்னை மறந்து எல்லாம் இறைவன் செயலெனச் செயற்பட இருவினையொப்பு உண்டாகிறது. வினைப்பயன் ஆன்மாவைப் பாதிக்காது. அறிவுவிளக்கம் பெற மலங்கள் தேய்ந்து அற்றுப் போகின்றன. இது மல பரிபாகம் எனப்படும். உயிருக்கு உயிராக நின்ற திருவருள் தோன்றி வீடு பேறளிக்கும். இது சத்தி நிபாதம் எனப் படும். திருவருளினல் ஆன்மா மும்மலங்களையும் அறுத்துச் சிவமாகிச் சிவனடி சேர்த்தல் முத்தியெனப்படும்.
(ஐ) சமயம் கொள்கையன்று. கோட்பாடன்று. வாழ்க்கை நெறியே சமயம். மக்கள் இறையுணர்வோடு வாழவேண்டும்; செயற்படவேண்டும். அவ்வாறு செய்யின் ஈற்றில் ஆன்மா இறைவைேடு ஒன்றித்துவிடும். அதன்பின் பிறப்பிறப்பில்லை. இன்பதுன்பங்களில்லை. சாதனவியலே சைவ சித்தாந்தத்தின் முக்கிய பகுதியாகும். அன்பும் பக்தியுமே முத்திக்கு வழிகளாகும்.
அன்பு சிவம்இரண் டென்பர் அறிவிலார் அன்பே சிவமாவதாரும் அறிகிலார் அன்பே சிவமாவதாரும அறிந்தபின் அன்பே சிவமாய் அமர்ந்திருந் தா1ே.
(திருமந்திரம்) அன்பின் வழியது உயிர்நிலை அஃதிலார்க்கு என்புதோல் போர்த்த உடமட (திருக்குறள்)
ஒவ்வொருவனும் தனது ஆத்மா பரிபக்குவம் அடைவ தற்கும் தனக்குக் கிடைத்த பெறுதற்கரிய மானிடப்

Page 10
6
பிறவியைப் பயன்படுத்த வேண்டும். நாளைக்கென இருக்க வேண்டாம். இப்பிறவி தப்பினுல் எப்பிறவி கிடைக்குமோ அறியோம். சைவ சித்தாந்தத்தில் திருவருளும் பக்தியும் முத்திக்கு வழிகளாகும். சரியை கிரியை யோக ஞானத் தினல் பக்தியை வலுப்படுத்த வேண்டும். ஞானம் பக்திக்கு வழியாகும். முற்றிய பக்தியே ஞானம். அன்பின்றி அருளில்லை. அருளின்றி வீடில்லை. பக்தியில்லாத போகத் தினல் பயனில்லை. பக்தியில்லாது செய்யும் கர்மங்கள் வினைப்பயன்களுக்குக் கர்லாகும். ஆன்மா பரிபக்குவ மடையத் திருவருள் தானக வந்து எம்மை ஆட் கொள்ளும்.
பதியும் பசுவொடு பாசமும் மேலைக் கதியும் பசுபாச நீக்கமுங் காட்டி மதிதந்த வானந்த மாநந்தி காணுந் துதிதந்து வைத்தனன் சுத்தசை வத்தே.
பசுப்பல கோடி பிரமன் முதலாய்ப் பசுக்களைக் கட்டிய பாசமூன்றுண்டு பசுத்தன்மை நீங்கியப் பாசம் அறுத்தாற் பசுக்கள் தலைவனைப் பற்றி விடாவே.
மூன்றுள குற்றம் முழுதும் நலிவன மான்றிருள் தூங்கி மயங்கிக் கிடந்தன மூன்றினை நீங்கினர் நீங்கினர் நீங்காதார் மூன்றினுட் பட்டு முடிகின்ற வாறே.
(திருமந்திரங்கள்)
பாச முடலாய் பசுவதுவுந் தானுயிராய் நேசமுட னிபொருளாய் நின்றனயே பூரணமே,
நானே நீ நீயேநான யிரண்டு மொன்ருனுற் றேனின் ருசியதுபோற் றெவிட்டாய் நீ பூரணமே (பட்டினத்தார்)

17
உடல் பாசமாகும். உயிர் ஆன்மாவாகும். பதியாகிய நீ ஆன்மாக்கள் அடையும் மெய்ப்பொருளாவாய். உனது திருவருள் ஆன்மாக்களோடு உடனுக, நிற்கிறது, சீவனும் சிவனும் ஒன்றனல் பேரின் பமாகிய முத்தியாகும்.
சடவாதிகள் சடமொன்றே மெய்ப்பொருள் என்பர். பெளத்தர் எல்லாம் சூனியம் என்பர். கேவல அத்துவைத வாதிகள் நிர்க்குண பிரமம் ஒன்றே மெய்ப்பொருளென்பர் சைவசித்தாந்திகள் முப்பொருட்களும்-பதி, பசு, பாசம் எனும் மூன்றும் மெய்ப் பொருட்கள் என்கின்றனர். இக் காரணம் பற்றிச் சைவ சித்தாந்தம் 'முப்பொருள் உண்மை விளக்கம்" எனப்படும். ஆன்மா பாசங்களி லிருந்து நீங்கிப் பதியை அடையும் மார்க்கத்தைச் சைவ சித்தாந்தம கூறுகிறது. "ஏக னனேக விருள்கரும மாயை யிரண் டாகவிவை யணுதியில்" (திருவருட்பயன்) ஒருவனுகிய இறைவனும் பலவாகிய உயிர்களும் இருளாகிய ஆணவ மலமும் கன்மலமும் சுத்த அசுத்த மாயைகளும், இவை ஆறும் அநாதியானவை,
சான்றவர் ஆய்ந்திடத் தக்கவாம் பொருள் மூன்றுள மறையெல்லாம் மொழிய நின்றன ஆன்றதோர் தொல்பதி ஆருயிர்த் தொகை வான்றிகழ் தளையென வகுப்பர் அன்னவே
(கந்தபுராணம்) பதிபசு பாசம் எனப்பகர் மூன்றில் பதியினைப் போல் பசுபாசம் அனுதி பதியினைச் சென்றணு காப்பசு பாசம் பதியணு கிற்பசு பாசம் நிலாவே அறிவறி வென்ற அறிவு மனதி அறிவுக் கறிவாம் பதியு மனதி அறிவினைக் கட்டிய பாச மனதி
அறிவு பதியிற் பிறப்பறுத் தானே. «a erro «e»
(திருமந்திரம்)

Page 11
8
அறிவிக்க அறிபவையாகிய சீவன்களும், அறிவுக்கறிவாகிய சிவனும் அறிவைத் தடை செய்யும் ஆணவமலமும் அணுதி யானவை. திருவருள் சீவன்கண் பதியச் சீவன் பிறுப்பிறப் பிலிருந்து விடுதலையடையும்.
சைவ சித்தாந்தத்தின் செம் பொருளைச் "சிவயநம" எனும் ஐந்தெழுத்தும் விளக்குகின்றன. "சி" என்பது சிவத்தையும் 'வ” என்பது திருவருட் சக்தியையும் 'ய' என்பது உயிரையும் 'ந' என்பது திரோதான சக்தியை யும் "ம" என்பது ஆணவம் கன்மம் மாயை எனும் மும்மலங்களையும் குறிக்கின்றன. சகலத்தில் ஆன்மா மும்மலங்களையும் சார்ந்து நிற்கிறது. திரோதான சக்தியும் உடன் நிற்கிறது. இச்சக்தியின்றி உயிர்களேயன்றி மலங் களும் தொழிற்படா. ஆன்மா சியையும் வவையும் உணராது. ஆன்மா மும்மலங்களையும் அறுத்து வவைச் சாரத் திருவருள் ஆன்மாவைச் சிவத்தோடு சேர்க்கும். சிவயநம, சியவ ஆகும்.
ஆனவஞ் செழுத்துளே யண்டமு மகண்டமும் ஆனவஞ் செழுத்துளே யாதியான மூவரும் ஆனவஞ் செழுததுளே யகரமு மகரமும்
ஆனவஞ் செழுத்துளே யடங்கலா லுற்றதே.
(சிவவாக்கியர்)
ஐந்தெழுத்துள்ளே யனைத்தையுங் கண்டேன்
சஞ்சலந் தீர்ந்தேன் தனிமை பெற்றேனே
ஐந்தெழுத்தை நெஞ்சகத்தில் துஞ்சாமல்
சொல்லு மவர்
துரியத்தில் வாழ்வா ரெடி
(யோக சுவாமிகள்)

19
காதலாகிக் கசிந்து கண்ணிர் மல்கி ஒதுவார் தமை நன்னெறிக் குய்ப்பது வேத நான்கிலும் மெய்ப் பொருளாவது நாதன் நாம நமச் சிவாயவே
(திருஞான சம்பந்தர்)
அண்ணல் முதலா அழகார் எழுத்தைந்தும் எண்ணில் இராப்பகலற் றின் பத்தே-நண்ணி அருளானது சிவத்தே ஆக்கும் அணுவை இருளா னது தீர இன்று
அஞ்செழுத்தே ஆகமமும் அண்ணல் அருமறையும் அஞ்செழுத்தே ஆதிபுராணம் அனைத்தும்
அஞ்செழுத்தே ஆனந்த தாண்ட வமும் ஆருறுக் கப்பாலும் மோனந்த மாமுத்தி யும்
(உண்மை விளக்கம்)
சி முதலாக ஐந்தெழுத்தை ஓதி உணரின் திருவருள் வெளிப்பட்டு உயிரைச் சிவத்தோடு சேர்க்கு. உயிர் மலங்களிலிருந்து நீங்கிப் பேரின்பத்தை அனுபவிக்கும். ஐந்தெழுத்தே வேதங்கள் ஆகமங்கள் புராணங்கள் முதலியனவற்றின் பொருளாகும். இறைவன் திருவருளை யும் முப்பத்தாறு தத்துவங்களுக்கும் அப்பாற்பட்ட பர முத்தி நிலையையும் ஐந்தெழுத்துக்களும் குறிக்கின்றன.

Page 12
2. பதி
சைவ சித்தாந்திகள் இறைவனை 'இறை,கடவுள், பதி, பரமசிவன், ஈசன், பேருயிர், பரமாத்மா' எனப்பல நாமங்களினல் குறிப்பிடுகின்றனர். ஒரு நாமம் ஒருருவம் இல்லானுக்குப் பல நாமங்கள் பல உருவங்கள் கொடுத்து வணங்குகின்றனர். அறுவகைச் சமயத்தோர்க்கும் அவர வர் பொருளாய் இறைவன் இருக்கிருன். சமய பேதங் களும் வாதங்களும் கடந்தவன்.
அவர் அவர் தமதமது அறிவு அறிவகைவகை அவர் அவர் இறையவர் எனஅடி அடைவர்கள் அவர் அவர் இறையவர் குறைவுஇலர்; இறையவர் அவர் அவர் விதிவழி அடைய நின்றனரே.
(நாலாயிரப் பிரபந்தம்)
எந்நாமத்தினல் அன்பொடு வழிபட்டாலும் அருள் புரிவான். மாயா காரியங்களுக்கும் முப்பத்தாறு தத்துவங் களுக்கும் அப்பாற்பட்டவன். எனினும் இவற்ளுேடு கலந்தும் நிற்கிருன். காட்சி முதலிய அளவைகளினலும் சுட்டறிவினலும் அறிய முடியாதவன். மனம் வாக்குக்கு எட்டாதவன். நிர்க்குணன். நிர்மலன்.
மறையினன் அயனன் மாலான் மனத்தினுன்வாக்கான் மற்றுங்
குறைவிலா அளவினலுங் கூருெணு தாகி நின்ற
(சிவஞான சித்தியார்)

21
எனினும் இறைவன் உயிருக்கு உயிராக உறுதுணையாக இருக்கிருன். எங்குமிருக்கிருன். எமக்குள் இருக்கிருன். அன்போடுருகி உள்ளத்தே நோக்குவார் உத்தமனைக் காண்பர். பக்தி வலையிற்படுவோன் காண்க.
உளன் கண்டாய் நன்னெஞ்சே உத்தமன் என்றும் உளன் கண்டாய் உள்ளுவாருள்ளத்தே உளன்
‹56öört ... የፕti፡ வெள்ளத்தினுள்ளாதும் வெங்கடந்து மேயானும் உள்ளத்தினுள்ளான் என்று ஒர்.
(நாலாயிரப் பிரபந்தம்) அருளினல் ஆகமத்தே அறியலாம் அளவினலுந் தெருளலாஞ் சிவனை ஞானச் செய்தியாற் சிந்தை
V. யுள்ளே மருளெலயம் நீங்கக் கண்டு வாழலாம் பிறவி மாயா இருளெலாம் இரிக்க லாகும் அடியரோடு இருக்கலாமே (சிவஞான சித்தியார்) அகளமாய் யாரும் அறிவரிதப்பொருள் சகளமாய் வந்ததென் றுந்தீ பற நானகத் தந்ததென் றுந்தீ பற • AYANA -- — *
(திருவுந்தியார்)
ஏனேர் பெருமையன் ஆகிலும் எம்இறை ஊனே சிறுமையுள் உட்கலந் தங்குனன் வானேர் அறியும் அளவல்லன் மாதேவன் தானே அறியும் தவத்தின் அளவே.
(திருமந்திரம்)
அவையே தானே ஆயிரு வினையின் போக்கு வரவு புரிய ஆணையின் நீக்கம் இன்றி நிற்கும் அன்றே
(சிவஞானபோதம்)

Page 13
22
இறைவன் அவையாக-உலகங்களும் உயிர்களுமாக நிற்கிருன். இஃது ஒன்ருன அல்லது அபேத நிலை எனப் படும். இறைவன் தானக நிற்கிருன். இது வேருண அல்லது பேத நிலை எனப்படும். இறைவன் அவையே தானக நிற்கிருன். இஃது உடனன அல்லது பேதா பேத நிலை எனப்படும். சைவசித்தாந்திகள் இறைவனை இம்மூன்று நிலைகளிலும் காண்கின்றனர்.
ஈருய்முதல் ஒன்ருய் இரு பெண் ஆண்குணம் மூன்ருய் மாருமறை நான்காய்வரு பூதமவை ஐந்தாய் ஆருர்சுவை ஏழோசையோ டெட்டுத்திசை தானப் வேருய்உடன் ஆனன் இடம் வீழிம்மிழலையே."
(சம்பந்தர்) இத்தேவாரம் இறைவனின் ஒன்றன வேருன உடனன மூன்று நிலைகளையுங் காட்டுகிறது. இவற்றை ஒட்டிய, ஒட்டாத ஒட்டியும் ஒட்டாமலுமான நிலைகள் என்பர்.
பூதங்கள் தோறும்நின் ருய்எனின் அல்லால்
போக்கிலன் வரவிலன் எனநினைப் புலவோர் கீதங்கள் பாடுதல் ஆடுதல் அல்லால்
கேட்டறியோம்உனைக் கண்டறிவாரைச் சீதங்கொள் வயல்திருப் பெருந்துறை மன்னு
சிந்தனைக் கும் அரி யாய்எங்கள் முன்வந்து ஏதங்கள் அறுத்தெம்மை ஆண்டருள் புரியும்
எம்பெரு மான்பள்ளி எழுந்தருளாயே. சொற்பதங் கடந்த தொல்லோன் காண்க சித்தமுஞ் செல்லாச் சேட்சியன் காண்க பத்தி வலையிற் படுவோன் 'காண்க
நூலுணர் வுணரா நுண்ணியோன் காண்க மேலொடு கீழாய் விரிந்தோன் காண்க

23
அந்தமும் ஆதியும் அகன்ருேன் காண்க பந்தமும் வீடும் படைப்போன் காண்க
தேவரும் அறியாச் சிவனே காண்க பெண் ஆண் அலியெனும் பெற்றியன் காண்க கண்ணுல் யானும் கண்டேன் காண்க உய்ய என் உள்ளத்துள் ஓங்கார மாய்நின்ற மெய்யா விமலா விடைப்பாகா வேதங்கள் ஐயா என ஓங்கி ஆழ்ந்தகன்ற நுண்ணியனே மெய்யாய் தனியாய் இயமான ஞம் விமலா பொய்யாயின எல்லாம் போயகல வந்தருளி மெய்ஞான மாகி மிளிர்கின்ற மெய்ச்சுடரே எஞ்ஞானம் இல்லாதேன் இன்பப் பெருமானே அஞ்ஞானம் தன்னை அகல்விக்கும் நல்லறிவே ஆக்கம் அளவிறுதி இல்லாய் அனைத்துலகும் ஆக்குவாய் காப்பாய் அழிப்பாய் அருள்தருவாய்
போக்குவாய் என்னைப் புகுவிப்பாய் நின்றொழும்பின்
நாற்றத்தின் நேரியாய் சேயாய் நனியானே மாற்ற மனங்கழிய நின்ற மறையோனே
கறந்தபால் கன்னலொடு நெய்கலந்தாற் போலச் சிறந்தடியார் சிநதனையுள் தே நூறி நின்று பிறந்த பிறப்பறுக்கும் எங்கள் பெருமான்.
(மாணிக்கவாசகர்)
இங்கண் இருந்ததென் றெவ்வண்ணம் சொல்லுகேன்
அங்கண் இருந்ததென் றுந்தீ பற
அறியும் அறிவதன் றுந்தீ பற (திருவுந்தியார்)
அவனருளே கண்ணுகக் காணினல்லால் இப்படியன் இந்நிறத் தன் இவ்வண்ணத்தன் இவனிறைவன் என்றெழுதிக் காட்டொனதே

Page 14
24
குறிகளுமடை யாளமுங் கோயிலும் நெறிகளுமவர் நின்றதோர் நேர்மையும் அறிய ஆயிரணம் ஆரணம் ஒதினும் பொறியி லீர்மன மென்கொல் புகாததே
(அப்பர்) அருவமொரு நான்காகி உருவமொரு நான் காகி
、架GUDGM யிரண்டும் மருவியுளஉருவருவம் ஒன்றுகி முத்திறமும்
வழுத்த வொண்ணுப் பெருவெளிக்கும் அப்பாலாய் உள்ளபொருள்
ஈதெனவே பெரிதும் சேயோன் ஒருவளையே புகழ்ந்த அருள் அருணகிரி சேவடிப்போது
உள்ளத்துள் வைப்பாம்.
(தகராலய ரகசியம்) உரையற்ற தொன்றை உரைசெய்யும் ஊமர்காள் கரையற்ற தொன்றைக் கரைகாண லாகுமோ திரையற்ற நீர்போல் சிந்தைதெளிவார்க்குப் புரையற் றிருந்தான் புனர்சடை யோனே
(திருமந்திரம்) உலகில் வாழ்ந்த பல்லாயிரம் மறை ஞானிகளும் அருளாளர்களும் திருத்தொண்டர்களும் இறைவனை அனுபவத்தில் கண்டு தாம் பெற்ற இன்பத்தைக் கூறு இன்றனர். இறைவனை எவ்வாறு அடையலாம் எனவும் சொல்லுகின்றனர். மனம் வாக்குக்கு எட்டாத இறைவன் முப்பத்தாறு தத்துவங்களுக்கும் அப்பாற்பட்ட ஈசன் எங்கும் பரந்தும் கலந்தும் நிற்கிருன். உயிருக்கு உயிராக நிற்கிருன். அணுவுக்குள் அணுவாக நிற்கிருன். உய்ய எம் ஒந்தையுள் ஓங்காரமாக நிற்கிருன். சிவன் அவன் எம் ஒந்தையுள் நிற்கிருன். அடியார்க்கு அடியன். அன்பருக்கு

25.
அன்பன். நண்ணினர்க்கு நல்லன். இக்கருத்தையே திரு. முறைகள் கூறுகின்றன. இதுவே அடியார்களின் அனுபவ ஞானமுமாகும்.
நலமில னண்ணுர்க்கு நண்ணினர்க்கு நல்லன் சலமிலன் பேர் சங்கரன் (திருவருட் பயன்)
நான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம் வான்பற்றி நின்ற மறைபொருள் சொல்லிடின் ஊன் பற்றி நின்ற உணர்வுறு மந்திரம் தான்பற்றப் பற்றத் தலைப்படுத் தானே
(திருமந்திரம்) காகம் உறவு கலந்துண்ணக் கண்டீர்
அகண் டாகார சிவ போக மென்னும்பே ரின்ப வெள்ளம் பொங்கித் ததும்பிப் பூரணமாய் ஏக வுருவாய்க் கிடக்கு தையோ
இன்புற் றிட நாம இனியெடுத்த தேகம் விழுமுன் புசிப்பதற்குச்
சேரவாருஞ் சகத்தீரே (தாயுமானவர்)
எப்பொருட்கும் எவ்வுயிர்க்கும் உள்ளகத்தும் புறத்தும் இயலுண்மை அறிவின்ப வடிவாகி நடிக்கும் மெய்ப்பொருளாம் சிவம்ஒன்றே என்றறிந்தேன் உனக்கும் விளம்புகின்றேன் மடவாய்நீ கிளம்புகின்ருய் மீண்டும் இப்பொருள்அப் பொருள் என்றே இசைப்பதென்னே
பொதுவில் இறைவர் செய்யும் நிரதிசய இன்பநடந் தனநீ பையறவே காணுதியேல் அத்தருணத் தெல்லாம் பட்டநடுப் பகல்போல வெட்டவெளி யாமே
(இராமலிங்க சுவாமிகள்)
சைவ-2

Page 15
26
சொல்லிலும் சொல்லின் முடிவிலும் வேதச்சுருதியிலும் அல்லிலு மாசற்ற வாகாயந் தன்னிலும் ஆய்ந்துவிட்டோர் இல்லிலுமன்ப ரிடத்திலும் ஈசனிருப்பதல்லால் கல்லினுஞ் செம்பினு மோவிருப்பா னெங்கள்கண்ணுதலே
(பட்டினத்தடிகள்)
மாசில் வீணையும் மாலை மதியமும் வீசு தென்றலும் வீங்கிள வேனிலும் மூசு வண்டறை பொய்கையும் போன்றதே ஈச னெந்தை யிணையடி நீழலே (அப்பர்)
இறைவன் சான்றேர் அனுபவ உண்மையாவான்
பணிந்துநின் றேன்பர மாதி பதியைத் துணிந்துநின் றேன் இனி மற்ருென்றும் வேண்டேன் அணிந்துநின் றேனுடல் ஆதிப் பிரானைத் தணிந்துநின் றேன் சிவன் நன்மைகள் கண்டேனே
சாத்திரங்கள் ஒதுஞ் சதுர்களை விட்டுநீர் மாத்திரைப் போது மதித்துள்ளே நோக்குமின் பார்த்தவப் பார்வை பசுமரத் தானிபோல் ஆர்த்த பிறவி அகலவிட் டோடுமே
(திருமூலர்) என்னிலே இருந்த ஒன்றையான் அறிந்தது இல்லையே என்னிலே இருந்த ஒன்றையான் அறிந்து
கொண்டபின் என்னிலே இருந்த ஒன்றை யாவர் காண வல்லரோ என்னிலே இருந்திருந்து யான் உணர்ந்து கொண்டீரே தூரம் தூரம் தூரமென்று சொல்லுவார்கள்
t சோம்பர்கள் பாரும் விண்ணும் எங்குமாய்ப் பரந்த அப் பராபரம் ஊரும் நாடும் காடுமோ டி உழன்றுதேடும் ஊமைகாள் நேரதாக உம்முளே அறிந்துணர்ந்து நில்லுமே
(சிவவாக்கியர்)

27
பதியை உணர்தல்
பதியை உணருவதற்கு ஏட்டுப் படிப்பும் புலனறிவு களும் பகுத்தறிவும் உதவா. பகுக்க முடியாத ஒன்றை எவ்வாறு பகுத்துச் சுட்டி அறியலாம்? வாதங்களினலும் தர்க்கங்களினலும் பயனில்லை. வாதித்து வாதித்து வட்ட மாக வாதித்து மயக்கமே அடைகிருேம். வாதிக்க வாதிக்க ஆணவமே மேலோங்குகிறது. இஃது உண்மையை மறைக் கிறது.
விரத மேபரமாகவே தியரும் சரதம் ஆகவே சாத்திரம் காட்டினர் சமய வாதிகள் தத்தம் மதங்களே அமைவதாக அரற்றி மலைந்தனர் மிண்டிய மாயா வாதம் என்னும் சண்ட மாருதம் சுழித்தடித் தார்த்து உலகாயதன் எனும் ஒண்டிறல் பாம்பின் கலாபே தத்த கடுவிட ம் எய்தி அதிற்பெரு மாயை எனப்பல சூழவும்
(மாணிக்கவாசகர்)
இறைவனை உணருவதற்கு அன்புவேண்டும். பக்தி வேண்டும். வைராக்கியம் வேண்டும். காதலாகிக் கசிந்துருக வேண்டும். இறைவன் பால் அன்பு எல்லா உயிர்களின் பாலும் அன்பாகப் பரவ வேண்டும். வஞ்சனை, சூது,வாது, கள்ளங்கபட மற்ற மனம் வேண்டும்: இதனைச் சிறுபிள்ளை மனமென்பர்.தன்னுணர்வற்ற பொது நல நோக்கம் வேண்டும். சுய நலமெனுஞ் சிறுமையி லிருந்து நீங்கவேண்டும். இறைவன் அருள் வேண்டும்.
அருளா லெவையும்பா ரென்ருன்-அத்தை யறியாதே சுட்டியென் னறிவாலே பார்த்தேன் இருளான பொருள் கண்டதல்லாற்-கண்ட வென்னையுங் கண்டில னென்னடி தோழி.
(தாயுமானவர்)

Page 16
28
உள்ளம் உருகில் உடனுவர் அல்லது தெள்ள அறியரென் றுந்தீ பற சிற்பரச் செல்வரென் றுந்தீ பற.
(திருவுந்தியார்)
பதி ஞானத்தினலன்றிப் பசுபாச ஞானங்களினல் இறைவனை அறிய முடியாது. இது மெஞ்ஞானம் எனப் படும். நூலறிவுணரா நுண்ணியோன் காண்க.
அறியாமை அறிவகற்றில் அறிவினுள்ளே அறிவுதனை அருளினல் அறியாது அறிந்து குறியாதே குறித்தந்தக் கரணங்க ளோடுங் கூடாதே வாடதே குழைந்திருப்பை யாயிற் பிறியாத சிவன்தானே பிரிந்து தோன்றிப் பிரபஞ்ச பேதம்எல்லாந் தானுய்த் தோன்றி நெறியாலே இவையெல்லாம் அல்ல வாகி நின்றென்றுந் தோன்றிடுவன் நிராதரனயே.
(சிவஞான சித்தியார்)
அறிவு அறியாமை எனும் இரண்டும் பாசங்களாகும். இவ்விரண்டையும் அகற்றவேண்டும். எமது அறிவினுள்ளே இறைவன் இருக்கிருன். அவனைச் சுட்டியறியாது திருவரு ளினல் அறிய வேண்டும். அந்தக் கரணங்களுடன் சேராது அவற்றை அடக்கி அன்பாக நிற்க வேண்டும். இவ்வாறு செய்யின் எக்காலத்திலும் எம்மை விட்டுப் பிரியாதிருக் கின்ற இறைவன் எம்மிலிருந்து பிரிந்து வேருகத் தோன்று வான். பேதப் பட்ட பிரபஞ்சம் எல்லாம் தானகத் தோன்றுவான், இவையெல்லாம் அல்லவாகவும் தோன்று வான். எல்லாவற்றிலும் தோன்றுவான். ஒன்றிலும் பற்றிலனுய்த் தோன்றுவான்.
இறைவன் அன்பர்க்கு அன்பன். தனது அடியார்க்கு அடியன். இவர்களுடையகாட்சிக்கு எளியன், இறைவனின்

29
திருவருள் எல்லையில்லாதது. ஆன்மா பரிபக்குவம் அடை யும் போது இறைவன் தானே வந்து ஆட்கொள்வான். அவ்வாரு யின் ஏன் சாதாரண மக்களினல் அவனைக் காண முடியாது எனக் கேட்கலாம்.
எங்குந்தான் நிறைந்து சிவன்நின் ருனகில் எல்லோருங் காணவே வேண்டுந்தா னென்னில் இங்குந்தான் அந்தகருக் கிரவியிரு ளாகும் ஈசனருட் கண்ணில்லார்க் கொளியாயே இருளாம் பங்கந்தான் எழும்பதுமம் பக்குவத்தை யடையப் பரிதியலர்த் திடுவது போற் பருவஞ்சேர் உயிர்க்குத் துங்கசுரன் ஞானக்கண் கொடுத்தருளி ஞலே சோதிக்குட் சோதியாய்த் தோன்றிடுவன் காணே
(சிவஞான சித்தியார்)
சூரியன் பிரகாசிப்பினுங் குருடனுக்கு எங்கும் இருளே. ஈசன் ஒளி போலிருப்பினும் அவனருட் கண்ணில்லாதவர் அவனைக் காண மாட்டார். தாமரை மலர் பக்குவமடையச் சூரியன் அதை அலர்த்துவதுபோலப் பக்குவமடைந்த ஆன்மாவுக்கு இறைவன் ஞானக் கண்ணைக் கொடுக்கிருன். இத்திருவருளினல் ஆன்மாக்கள் அறிவுக்கறிவாய் நிற்கும் இறைவனைக் காண்கின்றன.
ஐய மறுத்தவனை யாராய்வா ருண்டானல் வையகத்தே வந்து மலர்ப்பாதம் வைத்திடுவான்,
(பட்டினத்தடிகள்)
ஐயுணர் வெய்தியக் கண்ணும் பயனின்றே மெய்யுணர் வில்லாத வர்க்கு, (திருக்குறள்)
ஏனைய மதவாதிகள் போன்று சைவ சித்தாந்திகளும் இறைவனின் உண்மையை நிரூபிக்க எத்தனிக்கின்றனர்.

Page 17
30
அறிந்த உலகிலிருந்து அறியாத இறைவனை அனுமானித்து அறிகின்றனர். இது சற்காரிய வாதம் எனப்படும்.
அவனவள் அது வெனும் அவைமூ வின்மையின் தோன்றிய நிதியே ஒடுங்கி மலத்துளதாம்
அந்தம் ஆதி என்மனர் புலவர்.
(சிவஞான போதம்)
ஒருவனே டொருத்தி ஒன்றென்று உரைத்திடும் உலகம் எல்லாம் வருமுறை வந்து நின்று
போவதும் ஆத லாலே தருபவன் ஒருவன் வேண்டும்
தான்முதல் ஈறும் ஆகி மருவிடும் அநாதி முத்த
சித்திரு மன்னி நின்றே,
(சிவஞான சித்தியார்)
அவன் அவள் அது என்னும் பிரபஞ்ச மெல்லாம் தோன்றி நின்று அழிவது கண்கூடு. இவற்றைத் தோற்று விப்பான் ஒருவன் வேண்டும். உலகம் ஒடுங்கும் சங்கார காரணனே உலகம் ஒடுங்கிய பின்பும் நிலை பெற்றிருக்கிருன். அவனே உலகை மறுபடியும் தோற்று விக்கிருன். அவனே இறைவன்.
இறைவன் தத்துவங்களுக்கும் புலன்களுக்கும் மனது களுக்கும் அப்பாற்பட்டவன். குணங்குறிகள் இல்லாதவன். உருவன்று அருவன்று. அருளுமன்று, இஃது இறைவனின் கடந்த (Transcendant) நிலையாகும். சொரூப இலக்கணம்.
சிவனரு வுருவுமல்லன் சித்தினே டசித்துமல்லன் பதமுவற் ருெழில்களொன்றும் பண்ணிடுவாறு
மல்லன்

31
நவமுதல் யோகபோகந் தரிப்பவ னல்லன் ருனே
இவைபெற வியைந்து மொன்றும் இயைந்திடா
வியல்பினனே. (சிவஞான சித்தியார்)
பல்கலை ஆகமம்வேதம் யாவையினும் கருத்துப் பதிபசுபா சந்தெரித்தல் பதிபரமே அதுதான் நிலவும்அரு உருவின்றிக் குணம்குறிகளின்றி நின் மலமாய் ஏகமாய் நித்த மாகி அலகிலுயிர்க் குணர்வாகி அசல மாகி அகண்டிதமாய் ஆனந்த உருவா யன்றிச் செலவரிதாய்ச் செல்கதியாய்ச் சிறிதாகிப் பெரிதாய்த் திகழ்வது நற்சிவமென்பர் தெளிந்து ளோரே.
(சிவப்பிரகாசம்)
ஊரி லான்குணங் குறியிலான் செயலிலா னுரைக்கும் பேரி லானெரு முன்னிலான் பின்னிலான பிறிதோர் சாரி லான் வரல் போக்கிலான் மேலிலான் றனக்கு நேரி லானுயிர்க் கடவுளா யென்னுளே நின்றனே. (கந்தபுராணம்)
நித்தியமாய் நிர்மலமாய் நிட்களமாய் நிராமயமாய்
நிறைவாய் நீங்காச் சுத்தமுமாய்த் துரமுமாய்ச் சமீபமுமாய்த் துரியநிறை
சுடராய் எல்லாம் வைத்திருந்த தாரகமாய் ஆனந்த மயமாகி
மனவாக் கெட்டாச் சித்துருவாய் நின்றவொன்றைச் சுகாரம்பப்
பெருவெளியைச் சிந்தை செய்வாம்.
(தாயுமானவர்)
மனம் வாக்குக்கு எட்டாத முப்பத்தாறு தத்துவங் களையும் கடந்த குணங்குறிகளில்லாத பரம்பொருள்

Page 18
32
உலகங்கள் தோறும் உயிர்கள்தோறும் அத்துவைதமாக இருக்கிறது. எங்கும் நீக்கமற நிற்கிறது. இஃது இறைவனின் உள்ளார்த்த-உடனன் (Immanent) நிலை யாகும். நடாத்த இலக்கணம்.
அவையே தானே யாயிரு வினையிற் போக்கு வரவு புரிய ஆணையின் நீக்கம் இன்றி நிற்கும் அன்றே.
(சிவஞான போதம்)
உலகெலா மாகி வேருய் உடனுமா யொளியா யோங்கி அலகிலா வுயிர்கள் கன்மத் தாணை யினமர்ந்து செல்ல தலைவனுய் இவற்றின் தன்மை தனக்கெய்த வின்றித்
தானே நிலவுசீ ரமல ஞகி நின்றனன் நீங்கா தெங்கும்
(சிவஞான சித்தியார்)
எங்கு மெவையும் மெரியுறுநீர் போலேகந் தங்கு மவன் தானே தனி அகர வுயிர்போ லறிவாதி யெங்கும் நிகரி லிறை நிற்கும் நிறைந்து.
(திருவருடபயன்)
இறைவனின் உடனன நிலை சக்தி அல்லது திருவருள் எனப்படும். எங்குந் திருவருள் சக்தியும் சிவமும் ஒன்றே.
அகர முதல எழுத்தெல்லாம் ஆதி பகவன் முதற்றே உலகு. (திருக்குறள்)
அக்காரம் எழுத்துக்கள் எல்லாவற்றுக்கும் முதலானது மட்டுமன்றி அக்கார ஓசை எல்லா எழுத்தோசைகளிலுஞ் சூக்குமாயக் கலந்தும் இருக்கிறது. அது போல இறைவன் உலகங்களுக்கும் உயிர்களுக்கும் மூலமேயன்றி அவற்ருேடு மலரும் மணமும் நீரும் வெப்பமும் போன்று கலந்தும் இருக்கிருன்.

33
நீடுபரா சத்திநிகழ் இச்சா ஞானம் நிறைகிரியை தர அதனை நிமலன் மேவி நாடறிய கருணைதிரு உருவ மாகி நவின்று பல கலைநாத விந்து வாகி கூடுமொளி வளர்குடிலே மாயை மேவிக் கொடுவினைகொள் தனுகரண பவன போகம் பீடுபெற நிறுவிஅவை ஒடுக்கு மேனி பிறங்கியநிட் களசகளப் பெற்றி யாமே.
(சிவப்பிரகாசம்)
மறை ஞானிகளும் அடியார்களும் இறைவனைக் கண்ட -னர். இறையுணர்வாக அவனுேடு ஒன்றித்துத் தாமில்லை, இறைவனே இருக்கிருன் என வாழ்ந்தனர். தாம் கண்ட காட்சியையும பெற்ற அனுபவத்தையுங் கூறுகிறர்கள்.
எங்குந் திருமேனி எங்குஞ் சிவசக்தி எங்குஞ் சிதம்பரம் எங்குத் திருநட்டம் எங்குஞ் சிவமா யிருத்தலால் எங்கெங்கும் தங்குஞ் சிவனருட் டன் விளை யாட்டே.
சத்தி சிவன்றன் விளையாட்டுந் தாரணி சத்தி சிவமுமாஞ் சிவன் சத் தியுமாகுஞ் சத்தி சிவமன்றித் தாபரம் வேறில்லை சத்திதான் ஒன்றுஞ் சமைந்துரு வ.ாகுமே.
அணுவுள் அவனும் அவனுள் அணுவும் கணுவற நின்ற கலப்ப துணரார் இணையிலி யீச னவனெங்கு மாகித் தணிவற நின்றன் சராசரந் தானே.
நீரும் நிலனும் விசும்பங்கி மாத ந் தூரும் உடம்புறு சோதியு மாயுளன் பேரும் பராபரன் பிஞ்ஞகன் எம்மிறை ஊருஞ் சகலன் உலப்பிலி தானன்றே.
(திருமூலர்)

Page 19
... 34
இருநிலனய்த் தீயாகி நீரு மாகி இயமான னயெறியுங் காற்று மாகி அருநிலைய திங்களாய் ஞாயி ருகி ஆகாச மாயட்ட மூர்த்தி ஆகிப் பெருநலமுங் குற்றமும் பெண்ணு மானும் பிறருருவுந் தம்முருவுந் தாமே யாகி நிமிர்புன் சடையடிகள் நின்ற வாறே.
(திருநாவுகரசர்)
வானகி மண்ணுகி வளியாகி ஒளியாகி ஊணுகி உயிராகி உண்மையுமாய் இன்மையுமாய் கோனகி யான் எனதென்றவரவரைக் கூத்தாட்டு வானகி நின்ருயை என்சொல்லி வாழ்த்துவனே.
பாரிடை ஐந்தாய்ப் பரந்தாய் போற்றி நீரிடை நான்காய் நிகழ்ந்தாய் போற்றி தீயிடை மூன்ருய் திகழ்ந்தாய் போற்றி வளியிடை இரண்டாய் மகிழ்ந்தாய் போற்றி வெளியிடை ஒன்ருய் விளைந்தாய் போற்றி.
(மாணிக்கவாசகர்)
அறிவானும் தானே அறிவிப்பான் தானே அறிவாய் அறிகின்ருன் தானே-அறிகின்ற மெய்ப்பொருளும் தானே விரிசுடர்பார் ஆகாசம் அப்பொருளும் தானே அவன்.
அவனே யிருசுடர்நீ யாகாச மாவான் அவனே புலிபுனல்காற் ருவான்-அவனே இயமான னயட்ட மூர்த்தியுமாய் ஞான
மயனுகி நின்ருரும் வந்து.
(காரைக்காலம்மையார்)
இருளென் பதுவுமன்றி ஒளியென் பதுவுமன்றி எவையுந் தனுளடங்க-ஒருமுத லாகும் உளதென் பதுவுமன்றி இலதென் பதுவுமன்றி உலகந் தொழ இருந்த, (தாயுமானவர் வணக்கம்)

35
இல்லதும் உள்ளதும்யாவையுந் தானகி இல்லது உள்ளது மாய்ன்ரும் அண்ணலைச் சொல்லது சொல்லிடில் தூர்ாதி தூரமென் ருெல்லை யுணர்ந்தால் உயிர்க்கு யிராமே.
(திருமூலர்)
அங்கு இங்கு எனத்ப்டி எங்கும் பிரகாசமாய்
ஆனந்த பூர்த்தியாகி அருளொடு நிறைந்தது எது நன்னருள் வெளிக்குளே
அகிலாண்ட கோடியெல்லாம் தங்கும் ப்டிக்கிச்சை வைத்துயிர்க் குயிராய்
தழைத்ததெது மனவாக்கினில் தட்டாமல் நின்றதெது சமய்கோ டிகளெலாந்
தந்தெய்வம் எந்தெய்வமென்று எங்குந் தொடர்ந்தெதிர் வழக்கிடவும் நின்றதெது
எங்கணும் பெருவழக்காய் யாதிதும் வல்லவொரு சித்தாகி இன்பமாய்
என்றைக்கு முள்ளதெதுமேல் கங்குல்பக லறநின்ற எல்லையுள தெது.அது
கருத்திற் கிசைந்ததுவே கண்டன வெலாமோன வுருவெளய தாகவுங்
கருதி அஞ் சலிசெய்குவாம்.
(தாயுமானவர்)
எண் குணங்கள்
குணங்குறிகளில்லாத இறைவன் குணங்குறிகளுடைய
வணுகவும் இருக்கிருன். சைவசித்தாந்திகள் இறைவனை எண் குணற்றன் என்பர்.
கோளில் பொறியில் குணமிலவே எண்குணத்தான் தாளை வணங்காத் தலை. (திருக்குறள்)
எண் குணங்களாவன :
(அ) தன்வயத்தனதல் :- இறைவன் சர்வ சுதந்திரி. எல்லாவற்றையும் தாங்கி நிற்பினும் தான்

Page 20
36
எவற்றிலும் தங்காதவன். ஆன்மாக்கள் ஆள வந்ததை அல்லது சிவத்தைச் சார்ந்து நிற்பதி னல் சார்பிகள் எனப்படும்.
(ஆ) தூயவுடம்பினுதல் :-ஆன்மாக்களின் உடம்பு. கள் அசுத்த மாயா காரியங்களாகும். ஞானமே வடிவான இறைவனுக்கு உடம்பில்லை.
(இ) இயற்கை அறிவுடையணுதல் : - ஆன்மாக்கள் சித்துப் பொருட்களாயினும், மலங்களிற் கட்டுண்டு கிடப்பதினல் அவற்றின் அறிவு விளக்கமற்றதாகும். தாமே அறியும் ஆற்றல் அற்றவை. திருவருள் அறிவிக்க அறிபவை. இறைவன் சுத்த சித்தாவான். பரிபூரண அறி வுடையவன். ஞானமே அவன் வடிவம். எல்லாம் அறிந்தவன்.
(ஈ) இயல்பாகவே பாசங்களிலிருந்து நீங்கியவன்.
பாசங்கள் இறைவனைப் பற்ரு.
(உ) முற்றும் உணர்ந்தவன். முக்காலத்தையும்
அறிந்தவன்.
(ஊ) பேரருள் உடையவன். அவன் அருளின்றி அணு
வும் அசையாது.
(எ) பேராற்றல் உடையவன். எல்லாம் வல்லவன்.
(ஏ) முடிவிலா ஆனந்தம் உடையவன் - சச்சிதானந் தன். ஆன்மாக்களுக்குப் பேரானந்தத்தை வழங்குபவன் இறைவனவான்.
இறைவனுக்கும் உலகங்களுக்கும் இறைவனுக்கும் உயிர்களுக்கும் உள்ள தொடர்பென்ன? அத்வைதம்

37
எனச் சுருக்கமாகக் கூறலாம். ஒன்ருகி வேருகி உடனகி நிற்கிருன்.
பதி, பசு, பாசம் எனும் மூன்றும் அநாதி. இவை எக்காலத்திலாவது தோன்றியவை எனக் கூற முடியாது. உயிர்கள் கேவலத்தில் ஆணவ மலத்தில் கட்டுண்டு கிடந்தன. சடத்தின் முதற்காரணம் மாயை. சுத்த மாயையிலிருந்து அசுத்த மாயை தோன்றிற்று.
பெருங்கடல் மூடிப் பிரளயங் கொண்டு பிரமனும்
போய், இருங்கடல் மூடி இறக்கும் இறந்தான்களே பரமும் கருங்கடல் வண்ணன்களே பரமும் கொண்டுகங்
காளராய் வருங்கடல் மீளநின்று எம்மிறை நல்வீணை வாசிக்குமே (திருநாவுக்கரசர்)
உயிர்களும் சுத்தமாயையும் இறைவனில் ஒடுங்கிக் கிடந்தன, குணங்குறியில்லை. அசைவில்லை, மாற்றமில்லை ஒளியில்லை. இருளில்லை. சப்தமில்லை.
ஒருவன் என்றும் ஒருவன் காண்க விரிபொழில் முழுதாய் விரிந்தோன் காண்க.
(மாணிக்கவாசகர்):
உயிர்கள் அறிவு விளக்கம் பெற்று ஈடேறும் பொருட்டு இறைவன் மாயையை அருட்டித்து அதிற் கலந்து நின்று உலகங்களைத் தோற்றுவித்தான். இஃது அருட்சக்தி எனப் படும். தூய மாயை அசைவும் இயக்கமும் அற்றது தன்னைத்தானே தோற்றுவிக்கும் ஆற்றல் அற்றது. அதற்கு இயல்போ குணங்குறிகளோ இல்லை. நாம் கானும் உலகங்களும் பொருட்களும் இறைசக்தி மாயையிற் கலந்த தோற்றப்பாடுகளாகும். அண்டங்கள் எல்வாறு தோன் றின? மாயையிற் சக்தி கலக்கச் சடுதியாக உண்டான

Page 21
38
வெடிப்பிலிருந்து தோன்றின. தோன்றிய காலந் தொட்டு அண்டங்கள் விரிந்து செல்கின்றன. ஒரு காலத்தில் இவை ஒடுங்கி இறை சக்தியில் மறையலாம்.
காரிட்ட ஆணவக் கருவறையில் அறிவற்ற
கண்ணிலாக் குழவியைப் போல்
கண்டுண் டிருந்த எமை வெளியில் விட்டு,
(தாயுமானவர்)
உயிர்களை உலகத்தோடு பொருத்தியது திருவருளாகும்.
பொருத்தியது மட்டுமன்றி உயிருக்குஉயிராக அணுவுக்குள்
அணுவாகத் திருவருள் நிற்கிறது. இறைசக்தியில்லா விட்டால் உயிரினல் அறியவும் இயங்கவும் முடியாது.
சடத்தத்துவம் உயிர்த்தத்துவம் இறைத்தத்துவம் எனத் தத்துவங்கள் மூவகைப்படும். உலகங்களிலும் பொருட்களிலும் சடத்தத்துவமும் இறைத்தத்துவமும் கலந்திருக்கின்றன. உயிரினங்களிற் சடத்தத்துவமும் உயிர்த்தத்துவமும் இறைத்தத்துவமுங் கலந்துள. மனிதன் ஆன்மீக வளர்ச்சியடையச் சடத்தத்துவம் குறைந்து குறைந்து ஈற்றில் அற்றுப் போகிறது. முத்தியில் உயிர்த் தத்துவமும் சிவத்தத்துவத்தில் மறைந்து விடுகிறது. ஆதலால் இறைவன் உலகங்களும் உயிர்களும் தோன்று வதற்கு முன்னும் இருந்தான். உலகங்கள் அழித்தபின்பும் உயிர்கள் ஒடுங்கிய பின்பும் இருப்பான். எல்லாம் அவனே. மெய்ப்பொருள் அவனே.
உயிர்களும் அநாதி, படைக்கப்பட்டவைகளல்ல. அழியாதவை இறைவனை அடையும் வரை உலகங்களிற் சஞ்சரிக்கின்றன. உலகங்களின் தோற்றத்தைப் பற்றிய சைவசித்தாந்தக்கொள்கை திடீர் பேரொலிக்(Great Bang) கொள்கையாகும். இந்த உலகம் தோன்றும் முன்பும் உயிர்கள் இருந்தன. வேறு உலகங்களிலிருந்து இவ்வுலகுக்கு

39
வந்தன. இத்தூல உலகில் தூல உடம்பெடுக்கின்றன.
சூக்கும உலகங்களில் குக்கும உடம்புகள் எடுக்கின்றன:
மனே உலகங்களில் மனே உடம்புகள் எடுக்கின்றன. ஆவி' உலகங்களில் ஆவி உடம்புகள் எடுக்கின்றன. முத்தியில்
சிவசக்தியே ஆன்மாவுக்கு உடம்பாகும். இறைவனில்லா
உலகங்களில்லை. உயிர்கள் இல்லா உலகங்களில்லை.
ஆனல் இவை எமது புலன்களுக்கும் கருவிகளுக்கும் தென்
படாதபடியினல் இல்லையென முடியாது.

Page 22
3. ஆன்மாக்கள்
சடவாதிகளும் பெளத்தரும் ஆன்மா என ஒன்றில்லை என்கின்றனர். கேவல அத்துவைத வாதிகள் பரமாத் மாவே ஜீவாத்மா என்கின்றனர். ஆத்திக மதங்களும் சைவ சித்தாந்திகளும் ஆன்மாக்கள் உள எனவும் முத்தியே எமது வாழ்க்கையின் இலட்சியம் எனவும் அதை அடை வதற்கு எமது வாழ்க்கையைப் பயன்படுத்த வேண்டும் எனவும் கூறுகின்றனர். றில்லிஜ்ஜன் (Religion) என்ற ஆங்கிலச் சொல்லின் பொருள் ஒன்ருதல் அல்லது ஒன்று கட்டுதல் என்பதாகும். இறைவனும உயிரும் ஒன்ருகும் மார்க்கம் றில்லிஜ்ஜனகும். இறைவனையும் உயிரையும் ஒப்புக் கொள்ளாதவர் தத்துவங்களையே ஆராய்கின்றனர். இவ்வாராய்ச்சிகள் தத்துவ ஞானங்களேயன்றிச் சமயங்
56TIT SHT .
சைவ சித்தாந்திகள் உயிர்களைப் பசுக்கள் ஆன்மாக்கள் சீவன்கள் ஆருயிர்கள் ஜீவாத்மாக்கள் அணுக்கள் எனக் குறிப்பிடுகின்றனர்.
உளதில தென்றலின் எனதுடல் என்றலின் ஐம்புலன் ஒடுக்கம் அறிதலின் கண்படின் உண்டிவினை இன்மையின் உணர்த்த உணர்தலின் மாயா இயந்திர தணுவுள் ஆன்மா.

4上
யாவையும் சூனியம் சந்தெதிர் ஆகலின் சத்தே அறியாது அசத்திலது அறியாது இருதிறன் அறிவுளது இரண்ட லா ஆன்மா.
அந்கக் கரணம் அவற்றினென்று அன்றவை சந்தித்தது ஆன்மாச் சகசமலத்து உணராது அமைச்சரசு ஏய்ப்பநின்று அஞ்சவத் தைத்தே.
(சிவஞான போதம்)
உயிரெனப் படுவதிந்த வுடலின்வே றுளதாயுற்றுச் செயிருறும் இச்சா ஞானச் செய்திகள் உடையதாகிப் பயில்வுறும் இன்பத் துன்பப் பலங்களும் நுகரும்
பார்க்கில் துயிலொடும் அஞ்சலத்தைப்படும்உண்மைதுரியா கீதம் (சிவஞான சித்தியார்)
எண்ணரிதாய் நித்தமாய் இருள் மலத்தில் அழுந்தி இருவினையின் தன்மைகளுக்கீடான யாக்கை அண்ணலரு ளால் நுண்ணி அவை அவரா யதனல் அலகில் நிகழ் போகங்கள் அருந்தும் ஆற்றல் புண்ணியபா வம்புரிந்து போக்குவர வுடைத்தாய்ப் புணரும் இருள் மலபாகம் பொருந்தியக்கால அருளால் உளநிலவும் ஒளியதனல் இருளகற்றிப் பாதம் உற்றிடும் நற் பசு வருக்கம் என உரைப்பர்உணர்ந்தோர்
(சிவப்பிரகாசம்). நன்ற உரைக்கக்கேள் நல்ல சித்தின் முன் அசித்திங் கொன்ருது சித்த சித்தை ஓராது-நின்றிவற்றை அன்றே பகுத்தறிவது ஆன்மாவே என்றுமறை குன்றமல் ஒதும் குறித்து. − தத்துவங்கள் ஆருறும் தம்மைத்தாம் என்றறியா. எத்தன்மை எண்ணில் இயம்பக் கேள்-சுத்தமாம் ஆறு சுவையும் அறி பாவே தம்மைத்தாம் கூறில் அவையிவை போற் கொள் சைவ 3

Page 23
42
ஆறு சுவையும் அருந்தி அவைதம்மை V. வேருெருவன் கூறியிடும் மேன்மைபோல்-ஆருறும் ஒன்ருென்ரு நாடியுணர்ந் தோதில் அதில்
உற்றறிவாய் நின்றபொருள் தானேகான் நீ
(உண்மை விளக்கம்)
ஐம்பூதம் நீவிரல்லீர் பாங்கிமாரே ஐம்பொறியும் நீவிரல்லீர் பாங்கிமாரே ஐம்புலனும் நீவிரல்லீர் பாங்கிமாரே அந்தக்கரணம் நீவிரல்லீர் பாங்கிமாரே
ஊதூது சங்கே ஊதுTது பஞ்சவாயு நாமல்லவென் றுTதூது ஊதூது சங்கே ஊதூது தசநாடி நாமல்லவென் றுாதுாது
w (யோக சுவாமிகள்
செம்புறு களிம்பென அநாதிமலம் மூழ்கியிருள்
சேரும் அலர்விழி என்னவே தெளிவற்ற கேவலத் தசைவற் றிருந்துமல
சேட்டையாற் குழவி குருடர் தம்பிணியினல் உற்ற பால்கோலை நோக்கஅவை
தமை அளிப்பார் என்ன நான் சார்கன்ம மாயையை விரும்பிநீ தந்திடச்
சகலனய்ச் சுழல் கறங்கு பம்பரம தென்ன நீள்பிறவிச் சுழிக்குளே
பட்டுழல் பெரும் பாவியேன் பாழான மலமற்று வினையற்று மாயையின்
பற்றுவிட் டுனையறிந் துன் அம்பொனடி நீழல் சேர்ந் தானந்தம் உண்டுநான்
அதுவாய் இருப்ப தென்ருே? அருள்ஞான வாரியே! ராசைமே வியசெல்வ
அகிலாண்டம் என்னும் அரசே
(தாயுமானவர்)

43
ஆன்மா உளது. அது சூனியமன்று. உடம்பு தோறும் காணப்படும் ஒழுங்குபட்ட அறிவு. சிந்தனைக்கும் செயல் களுக்கும் மூலமாய் யான் எனது எனும் உணர்வு வடிவாய் விளங்குவது. அனுபவ உண்மையாகும். ஆன்மா இல்லை யெனக் கூறுவதும் ஓர் அறிவே. எனதுடல் என்பதும் ஓர் அறிவே. இந்த அறிவே ஆன்மா அல்லது உயிர். ஆன்மா சடமன்று. உடம்பன்று. ஐமபுலன்களில் ஒன்றன்று. ஐம் புலன்கள் ஒன்று அறிவதை மற்றது அறியாது. ஐம்புலன் களையுங் கொண்டு ஒருங்கறிவதும் அவற்றிலிருந்து வேருனதுமான ஆன்மா ஒன்றிருக்க வேண்டும். ஆன்மா மனம் புத்தி சித்தம் அகங்காரம் எனும் அந்தக்கரணங் களில் ஒன்றன்று. பிராணவாயுவுமன்று. இவை யாவற்றுக் கும் வேருய் இந்த மாயா காரியமான உடம்புக்குள் ஒர் ஆன்மாவுண்டு. சத்தாகிய சிவத்தின் முன் அசத்தாகிய பொருட்கள் எல்லாம் சூனிய மாதலால் சத்து அசத்தை அறியாது. அசத்துச்கு அறியும் ஆற்றலில்லை. சத்தையும் அசத்தையும் அறிவது சதசத்தாகிய ஆன்மாவே. இவ் வாறு ஒவ்வொன்றையும் உற்று நோக்கினல், நான் அது வன்று என்பதும் ஆன்மாவுண்டு என்பதும் புலகுைம்.
உயிர்கள் எண்ணிலாதவை.
பிறந்த நாண் மேலும் பிறக்குநாள் போலும் துறந்தோர் துறப்போர் தொகை
(திருவருட்பயன்)
முத்தியடைந்த ஆன்மாக்களின் தொகை சென்ற நாட்கள் போலும். முத்தியடையா ஆன்மாக்களின் தொகை வர விருக்கும் நாட்கள் போலும் எண்ணிலாதவை. உயிர்கள் என்றும் அழியாதவை. அனுதியே தொட்டு ஆணவமலத் தில் அழுததிக்கிடக்கின்றன. ஆன்மாவின் அறிவை விளக்கி ஆணவ மலத்தை நீக்கும் பொருட்டு இறைவன் மாயா காரியங்களான தனுகரண போகபுவனங்களைத் தோற்று வித்து உயிரை அவற் ருேடு பொருத்துகிருன். காரிட்ட ஆணவக் கருவறைக்குள் கட்டுண்டு கிடந்த உயிரை

Page 24
44
இறைவன் வெளியே விடுவிக்கிறன். மாயாகாரியங்களோடு பொருந்திய ஆன்மா இச்சாஞானக் கிரியைகளாற்று வினைகள் செய்து வினைப்பயன்களாகிய இன்பதுன்பங்களை நுகருகிறது. வினைக்கேற்ற உடம்பெடுக்கிறது. வினைப் பயன்களே ஆன்மாவோடு கூட்டிவைப்பதும் திருவருளே. வினைகளின் பயனக ஆன்மா பிறந்தும் இறந்தும் உழல் கிறது. சுவர்க்க நரகங்கள் போகிறது மறுபடியும் இவ் வுலகில் பிறக்கிறது. இந்த அனுபவங்களினல் ஆன்மா அறிவு விளக்கம் பெற்றுப் பரிபக்குவமடைந்து மலங்களை அறுத்துத் திருவருளினல் இறைவனடி சேரும்.
ஆன்மாவின் அவத்தைகள் (நிலைகள்) கேவலம் சகலம் சுத்தமென மூன்ருகும்.
கேவல சகல சுத்தம் என்று மூன் றவத்தை ஆன்மா மேவுவன் கேவலந்தன் உண்மைமெய் பொறிகள்
% எலலாம காவலன் கொடுத்த போது சகலனும் மலங்கள்
6. Tol; 6) ГТLD. ஒவின போது சுத்தம் உடையன் உற் பவந்து டைத்தே அறிவிலன் அமூர்த்தன் நித்தன் அராகாதி குணங்க
ளோடுங் செறிவிலன் கலாதி யோடுஞ் சேர்விலன் செயல்கள்
இல்லான் குறியிலன் கருத்தா அவ்வன் போகத்திற் கொள்கை
இல்லான் பிறிவிலன் மலத்தி ைேடும் வியாபிகே வலத்தில்
ஆன்மா (சிவஞான சித்தியார்)
கேவலத்தில் ஆன்மா அறிவில்லாதும் உடம்பில்லாதும் தோற்றக் கேடுகள் இல்லாதும், புத்திகுணம் எட்டினையும். பொருந்தாதும் கலாதியறிவோடு சேராதும் செயல்கள் இல்லாதும் இச்சாஞானக் கிரியைகள் இல்லாதும், இன்ப

宝5
துன்ப நாட்டமில்லாதும் தன்மாத்திரையாக ஆணல் மலத்திற்கட்டுண்டு அதனேடு அத்து வைதமாக இருக்கும். உருவினைக் கொண்டுபோக போக்கியத் துன்னல்
செப்பல் வருசெயன் மருவிச் சத்தம் ஆதியாம் விடயந்
தன்னில் புரிவதுஞ் செய்திங்கு எல்லா போனியும் பூக்குழன்று திரிதருஞ் சகல மான அவத்தையில் சீவன் சென்றே
(சிவஞான சித்தியார்
சகலத்தில் ஆன்மா இறைவன் திருவருளினல் மாயா காரியங்களோடு பொருத்தி உடம் பெடுத்துக் கலாதி யோடுஞ் செறிந்து, இச்சையுற்றுத் தொழில்கள் செய்து, வினைப்பயன்களை அனுபவித்து, பிறப்பு இறப்புற்று, நரகங்கள் சுவர்க்கங்கள் அடைந்து மறுபிறப்புக்கள் எடுத்து நிற்கிறது.
இருவினைச் செயல்கள் ஒப்பின் ஈசன்தன் சத்திதோயக் குருஅருள் பெற்றுஞான யோகத்தைக் குறுகி
முன்னைத் திரிமலம் அறுத்துப் பண்டைச் சிற்றறிவு ஒழிந்து
ஞானம பெருகிநாயகன் தன் பாதம் பெறுவது சுத்த மாமே
(சிவஞான சித்தியார்)
ஆன்மா இருவினையொப்படையக் கன்ம மலம் நீங்கும். திருவருட்சக்தி ஆன்மா வில் படிகிறது. இறைவன் குருவாக வந்து ஆட்கொள்வான். ஆன்மா ஞானத்தினலும் யோகத்தினலும் இறைவனை அர்ச்சித்து நிற்க மும் மலங் களும் நீங்கும். சகலத்திலிருந்த சிற்றறிவு (பகுத்தறிவும் சுட்டறிவும்) ஒழியும். எல்லாம் ஞானமயமாகும் ஞான வடிவாகிய இறைவனை ஆன்மா அடையும். இந்த இறை வனேடு அணைத்த நிலை சுத்தம் எனப்படும்.

Page 25
46
மூவகை
ஆன்மாக்கள் மூவகைப்படும்.
திரிமலத்தா ரொன்றதனிந் சென்ருர்களன்றி யொருமலதா ராயு முளர்
(திருவருட்பயன்)
ஆணவம், கன்மம், மாயை எனும் மும்முலங்களு முடையவர் சகலர் எனப்படுவர். மாயை நீக்கிக் கன்ம மலமும் ஆணவ மலமுமுடையவர் பிரளயாகலர் எனப் படுவர். மாயையும் கன்மமும் நீங்கி ஆணவ மலம் மட்டுமே உடையவர் விஞ்ஞாகலர் எனப்படுவர், பிரளயாகலர் விஞ்ஞாகலர்களுக்குப் பிறப்பு இறப்பில்லை. சகலர் யாவரும் ஒரு படித்தானவர்களல்லர். ஆன்மாவின் பக்குவ நிலைக்கேற்ப மலங்களின் செறிவு வித்தியாசப்படும்.
எனவகையான் தேறியக் கண்ணும் வினவகையான் வேருகும் மாந்தர் பலர் o 0.
(திருக்குறள்)
மக்கள் உருவில் தோன்றினும் பலர் மிருக நிலையிலிருந்து அற்பமே உயர்ந்தவராவர். சிலர் மிருகங்களைப் பார்க் கினுங் கெட்டவராவர். சிலர் மனித நிலையில் இருக் கின்றனர். சிலர் தேவர் நிலைக்குக் கிட்டியவராவர். மிக மிகச் சிலர் இறைவனுக்குச் சமனுவர் (சீவன் முத்தர்)
தாவர சங்கமங்களுக்கும் உயிருண்டு என்பது சைவ சித்தாந்திகளின் கொள்கையாகும். ஆனல் இவ்வுயிர்கள் குறை வளர்ச்சி நிலையில் இருக்கின்றன. ஒவ்வோர் உயிர்க்கும் அதன் வளர்ச்சி நிலைக்கேற்ற உடம்பையும் அந்தக் கரணங்களையும் இறைவன் அளிக்கிறன். ஒவ்வோர் உயிரும் கேவல நிலையிலிருந்து சகல நிலையடைந்து சுத்த நிலையடைகிறது: இக்கால எல்லைக்குள்

4?
பலபிறப்புக்கள் எடுக்கிறது. பலவுலகங்களில் வாழுகிறது. எண்ணரிய பிறப்புக்களில் மானிடப் பிறப்பே சிறந்தது என்பது சான்ருேர் வாக்கு.
அரிது அரிது மானிடராதல் அரிது
(ஒளவையார்)
அண்ட கஞ் சுவேத சங்கள் உறிபிச் சஞ் சராயு
சத்தோடு எண்தரு நாலெண் பத்து நான்குநூ ருயி ரத்தாய் உண்டுபல் யோனி யெல்லாம் ஒழித்துமானுடந்
துதித்தல் கண்டிடிற் கடலைக் கையால் நீந்தினன் காரி யங்காண் (சிவஞான சித்தியார்)
சகலராகிய உயிர்கள் தமது பிரயாணத்தின் பலபடி களிலும் இடங்களிலும் இருக்கின்றன.
ஒன்றறிவதுவே உற்றறிவதுவே இரண்டறி வதுவே அதனெடு நாவே மூன்றறிவதுவே அவற்ருெடு மூக்கே நான்கறி வதுவே அவற்ருெடு கண்ணே ஐந்தறிவதுவே அவற்ருெடு செவியே ஆறறிவதுவே அவற்றெடு மனனே நேரிதி னுணர்த்தோர் நெறிப் படித்தினரே
(தொல்காப்பியம்
புல்லாகிப் பூடாய் புழுவாய் மரமாகிப் பல்விருக மாகிப் பறவையாய்ப் பாம்பாகிக் கல்லாய் மனிதராய்ப் பேயாய்க் கணங்களாய் வல்லசுர ராகி முனிவராய்த் தேவராய்ச் செல்லா நின்ற இத் தாவர சங்கமத்துள் எல்லாப் பிறப்பும் பிறந்திழைத்தேன் எம்பெருமான் மெய்யேஉன் பொன்னடிகள் கண்டின்று வீடுற்றேன் (மாணிக்கவாசகர்)

Page 26
48
56ör uurri?
சடவாதிகள்-சடமே நீ சடமன்றி வேறொன்று மில்லை
கேவல அத்துவைதவாதிகள்-தத்துவம் அசி. அதுவே நீ. நிர்க்குண பிரமமன்றி வேறொன்றுமில்லை.
சைவ சித்தாந்திகள்-பதி, பசு, பாசம் எனும் மூன்றும் மெய்ப்பொருட்களாகும். மனிதன் பதி, பசு, பாசம் (இறைவன் உயிர் சடம்) எனும் மூன்றுஞ் சேர்ந்த தோற்றப் பாடாவான். இதிற் குறிப்பிடப்படும் உயிர் அல்லது ஆன்மாவே நீ.

4. அத்துவைதம்
இந்து மதத்தில் துவைதமும் அத்துவைதமே ஆனல் அத்துவைதத்துக்குப் பல வியாக்கியானங்களுள சைவ சித்தாந்த அத்துவைதத்தைச் சுருக்கமாகப் பார்ப்போம்,
பொய்கண்டார் காணுப்புனிதம் எனும் அத்துவித மெய்கண்ட நாதன் அருள் மேவுநாள் எந்நாளோ
(தாயுமானவர்)
கேவல அத்துவைதவாதிகள் அத்துவைதம் என்ற சொல் லுக்கு ஏகம் எனவும் தத்துவம் அசி என்ற மகா வாக்கியத் துக்கு, அதுவே நீ எனவும் பொருள் காண்கின்றனர் சைவ சித்தாந்திகள் இவற்றுக்கு "இரண்டுமல்ல ஒன்று மல்ல" எனவும் “நீ அதுவாக வேண்டும்" எனவும் பொருள் காண்கின்றனர். துவம் தத் அசியே தத்துவம் அசியாயிற்று. அத்துவைதம் என்ற சொல் ஆன்மாவுக்கும் இறைவனுக்கும் உள்ள தொடர்பைக் காட்டுகிறது. இறைவன் ஒன்ருகியும் வேருகியும் உடனகியும் நிற்கிருன், திருவருளும் இறையனுபவமுமின்றி இத்தொடர்பின் தன்மையை உணரமுடியாது.
அவையே தானே யாயிரு வினையில் போக்கு வரவு புதிய ஆணையின் நீக்கம் இன்றி நிற்கும் அன்றே (சிவஞானபோதம்)

Page 27
50
ஒன்றென்றது ஒன்றேதான் ஒன்றே பதிபசுவாம் ஒன்றென்ற நீபாகத் தோனைடுகாண்-ஒன்றின்ருல் அக்கரங்கள் இன்ரும் அகர உயிரின்றேல் இக்கிரமத் தென்றும் இருக்கு. (சிவஞானபோதம்}
இறைவன் ஒருவனே. இருவரல்ல. இதுவே ஒன் றென்றதன் கருத்து. பதியும் பசுவும் ஒன்றென்ற நீ பாசத்திற் கட்டுண்ட பசு, வேதங்கள் ஒன்றென்றதின் கருத்து அகரவுயிரில்லையாயின் அக்கரங்களில்லை என்பதை ஒத்ததாகும்.
பண்ணையும் ஒசையும் போலப் பழமதுவும் எண்ணுஞ் சுவையும்போல் எங்குமாம்
அண்ணல்தாள் அத்துவிதம் ஆதல் அருமறைகள் ஒன்றென்ன தத்துவிதம் என்றறையும் ஆங்கு. (சிவஞானபோதம்)
பண்ணும் ஓசையும் போலவும் பழமுஞ் சுவையும் போலவும் இறைவன் எங்கும் கலந்திருக்கிறன். இத் தன்மையை மறைகள் ஒன்றுமல்ல இரண்டுமல்ல அத்துவி தம் என்கின்றன. சிவஞான சித்தியாரில் இக்கருத்து மிகவும் தெளிவாகக் கூறப்படுகிறது.
ஒன்றென மறைக ளெல்லாம் உரைத்திட உயிர்கள்
நின்றனன் என்று பன்மை நிகழ்த்துள தென்னை
(o)ulu air Goflair அன்றவை பதிதான் ஒன்றென்றறையும் அக்கரங்கள் ጎነ - தோறுஞ் சென்றிடும் அகரம்போல நின்றனன் சிவனுஞ்
\சேர்ந்தே
உருவொடு கருவியெலலாம் உயிர்கொடு நின்று
வேருய்
வருவதுபோல ஈசன் உயிர்களின் மருவி வாழ்வன்

5I
தரும் உயிர் அவனை யாகா உயிரவை தாதும் ஆகான் வருபவை வைதானயும் வேறுமாய் மன்னி நின்றே ,
敏 (சிவஞானசித்தியார்)
வேதங்கள்
வேதங்கள் எல்லாம் ஆன்மா ஒன்றேயென உரைக்கும் போது, இறைவன உயிர்களோடு ஒன்றி நின்றனன் எனப் பன்மையில் கூறுவது. முரண்பாடல்லவா? இல்லை. ஏனென்ருல் வேதங்கள் ஒன்றெனக் கூறுவது இறைவன் ஒருவனே என்பதையாகும். ஒன்ருகிய அகரவோசை பல எழுத்தோசைகளிலும் விரவி நிற்பதுபோல ஒன்ருகிய இறைவன் உலகங்கள் தோறும் உயிர்கள்தோறும் பிறப் பின்றி விரவி நிற்கிருன், இதுவே அத்துவைதம்.
உயிர் உடம்போடும் உறுப்புகளோடும் பிரிப்பின்றி விரவி நிற்கிறது. உடனுக நிற்பினும், உயிர் வேறு; உடம்பு வேருகும். அதுபோல இறைவன் உயிர்களோடு அபேதமாய் நிற்கிருன். எனினும் உயிர் இறைவனகாது; இறைவன் உயிராகான். இறைவன் உயிருடன் ஒன்ருகி யும், வேருகியும், உடனுகியும் நிற்கிருன்.
கண்ட இவை யல்லேன் தான் என்றகன்று காணுக் கழிபரமும் நானல்லேன் எனக்கருதிக் கசிந்த தொண்டினெடும் உளத்தவன்தான் நின்றகலப் பாலே சோகமெனப் பாவிக்கத் தோன்றுவனவே றின்றி விண்டகலும் மலங்களெல்லாங் கருடதியா னத்தால் விடமொழியும் அதுபோல விமலதையும் அடையும் பண்டைமறை களும்நான் அஃது ஆனான் என்று பாவிக்கச் சொல்லுவதிப் பாவகத்தைக் காணே
கண்ட உடம்பு நானல்லேன் காணுத இறைவனும் நானல்லேன் . இவை இரண்டிலிருந்தும் வேரு ன ஆன்மா நான். கண்ணெளியும் கதிரவன் ஒளியும்போல இறைவன்

Page 28
52
என்னேடு கலந்திருக்கிருன். இவற்றை உணர்ந்து இறை வனுக்கு அன்போடு தொண்டு செய்து அவனைத்
தியான ஞ் செய்தால் மந்திரிகள் கருடதியானஞ் செய்யும் போது எவ்வாறு பாம்பின் விஷம் நீங்குகிறதோ அவ்வாறு சிவன் வேருதலின்றி அத்துவிதமாயத் தோன்றுவான். தோன்றி மலங்களை நீக்கி முத்தியளிப்பான். பண்டை
மறைகள் "நான் அஃது ஆனேன்" எனக் கூறுவது இச் சிவோகம் பாவனையையே
விறகிற் றீயினன் பாலிற்படுநெய் போல மறைய நின்றுளன் மாமணிச் சோதியான் உறவு கோல்நட் டுணர்வுக் கயிற்றினல் முறுக வாங்கிக் கடைமுன் நிற்குமே
(திருநாவுக்கரசர்)
அன்னம் மிரண்டுள ஆற்றங் கரையினில் துன்னி யிரண்டுந் துணைபிரியாதன்னந் நன்னிலை யன்னந் தனியொன் யென்றற்கால் யின்னை மடவன்னம் பேறணு காதன்றே (திருமூலர்)
சிவன் சீவனென இரண்டு அன்னங்களுள. சீவனுடன் சிவன் என்றும் இணைபிரியா திருக்கிருன். இதை உணராது சீவன் தான் வேறு, சிவன்தான் வேறு என்று எண்ணும் வரையும் சிவனையடையாது.
ஒதரிய துவிதமே அத்துவித ஞானத்தை
யுண்டுபணு ஞானமாகும்" (தாயுமானவர்)
துவைதத்தில் ஆன்மா தன்னையும் இறைவனையும் தனக்கும் இறைவனுக்குமுள்ள தொடர்பையும் அறிந்த பின்னரே அத்துவைதமடையும்.
எட்டாம் மந்திரத்தில் திருமூலர் 'தத்துவம் அசி என்பதைத் தொந்தத்தசி" என விளக்குகிருர்.

53.
ஆருறகன்ற அணுத் தொம்பதஞ் சுத்தம ஈருன நற்பதம் எய்துஞ் சாந்தத்துப் பேருகிய சீவன் நீங்கியபிர சாதத்து விருகிய தொந்தத் தசிதத்துவ மசியே.
மாயையிலிருந்து நீங்கிப் பற்றுக்களை அறுத்து நான் எனது என்ற அகந்தையை விட்டுத் திருவருளைப் பெற்ற சீவன் சிவனேயாம். அந்நிலையில் ஆன்மா அதுவாகிறது. நீ அதுவாகவேண்டும் என்பதே தத்துவம். அசி என்பதின் பொருளாகும்.
துவந்தத் தசியே தொந்தத் தசியும் அவைமன்ன வந்து வயத்தேக மான நலமுறு தத்துவ மசிவே தாந்த சிவமா மதுஞ்சித தாந்தவே தாந்தமே
துவம் தத் அசி, தத்துவம் அசி என்பனவற்றின் கருத் துக்கள் ஒன்றே. தத்துவம் அசி என்ற வேதாந்த விளக்க மும் சிவயநம என்ற சித்தாந்த விளக்கமும் ஒன்றே. தொம்பதந் தற்பதஞ் சொல்லும் அசிபதந் நம்பிய முத்துரி யத்துமே னடவே யும்பத முப்பத மாகும் உயிர் டரன் செம்பொருளான சிவமென லாகுமே. தொம்பதம் தற்பதஞ் சுட்டும். அசிபதம் சீவதுரியம் பரதுரியம் சிவதுரியம் எனும் முப்பதங்களுமாகும். சிறப் பாகச் சீவன் சிவனுக நிற்கும் நிலைமை குறிக்கும்.
தானென் றவனென் றிரண்டாகுந் தத்துவம் தானென் றவனென் றிரண்டுந் தனிற்கண்டு தானென்ற பூவை யவனடி சாத்தினல் தானென் றவனென்கை நல்லதொன் றன்றே.
இறைவன் ஆன்மாவென இரு மெய்ப்பொருள்களுள் ஆன்மாவையும் இறைவனையும் உள்ளே கண்டு ஆன்மா

Page 29
54
இறைவனைச் சார்ந்தால் நான் அவன் என்ற பேதம்அற்று விடும். தத்துவம் அசி என்பது சிவோகம் பாவனை. துரிய அல்லது முத்தி நிலையில் ஆன்மாவின் நிலையைக் காட்டுகிறது.
கந்தரலங்காரத்தில் அருணகிரிநாதர் அத்துவிதத்தைப் பின்வருமாறு விளக்குகிருர்,
நீயானஞான வினே தந் தனையென்று நீயருள்வாய் சேயான வேற்கந்த னேசெந்தி லாய்சித்ர மாதரல்குற் ருேயா வுருகிப் பருகிப் பெருகித் துவஞமிந்த மாயா வினேத மனுேதுக்க மானது மாய்வதற்கே.
கான் யோவதே அத்துவிதம்
முத்தி நிலையில் ஆன்மா சிவத்தியானத்தாற் சிவமாகித் தன்னுணர்வற்றுச் சிவத்தில் மறைந்து விடும். இந் நிலையில் தானும் சீவனும் சிவனும் ஒன்றெனக் கூற முடியாது.
தாடலைபோற் கூடியவை தானிகழா வேற்றின்பக்
கூடலைநீ யேகமெனக் கொள்.
ஒன்ருலு மொன்ரு றிரண்டாலு மோசையெழா தொன்ருலொன் றன்றிரண்டு மில்,
ஐந்தொழிலுங்காரணர்களாந்தொழிலும் போகநுகர் வெந்தொழிலு மேவார் மிக.
(திருவருட்பயன்)
தாழ் தலை எனும் இரண்டு சொற்களும் புணரும் போது தாடலை எனும் ஒரு சொல்லாவது போல முத்தியிற் சிவனுஞ் சீவனும் ஒன்ருகின்றன. இப்பிரிக்கபபடாத பேரின்பக் கலப்பே அத்துவிதம். கடவுளும் ஆன்மாவும் ஒரு பொருளாயின் அவை ஒன்ருக வேண்டியதில்லை. அவை இரண்டாக நிற்பின் முத்தியாகிய பேரின்பம் உண்டா

காது. அவை ஒன்றுமல்ல*இரண்டுமீல் , அத் ம். முத்தியில் ஆன்மாக்கள் ‘இறைவன் "டோன்று படைத்தில் காத்தல் முதலியி ஐந்தொழில்களும் செய்வதில்லை. சகலர் போன்று வினைகள் செய்வதிலலை வினைப்புயன் களாகிய போகங்களை அனுபவிப்பதிலலை. பசுத்தண்மை நீங்கிய ஆன்மாசிவனேடு கலந்து பேரின் பத்தை அனுபவிக் கினும் சிவனகாது.
சிவன்சீவன் என்றிாண்டுஞ்*சித்தொன்ரும் என்னிற் சிவன் அருட்சித் திலன் அருளைச் சேருஞ்சித்தவன்தான் பவங்கேடு புத்திமுத்தி பண்ணுஞ்சித் தவற்றிற் படியுஞ்சித் தறிவிக்கப் படுஞ்சித்தும் இவன் தான் அவன் தானே யறியுஞ்சித் தாதலினல் இரண்டும் அணைந்தாலும் ஒன்ருகா தநந்நிய மா யிருக்கும் இவன் தானும் புத்தியுஞ்சித் திவனமோ புத்தி யிது அசித்தென் றிடில் அவனுக் கிவனுமஅசித் தாமே.
(சிவஞான சித்தியார்
சிவனும் சீவனும் சித்துப் பொருகளாயினும் ஒன்றல்ல. சிவன் அருள்புரியுஞ் சித்து. சீவன் அருளைப் பெறும் சித்து. சிவன் பாசங்கள் அணுகாச் சித்து. சீவன் பாசங்களில் கட்டுண்ட சித்து. சிவன் பிறப்பிறப்பைக் கெடுத்து முத்தி யளிக்கும் சித்து. சீவன் பிறப்பிறப்பில் அழுந்தும் சித்து. சிவன் பூரண அறிவாகிய சித்து. சீவன், அறிவிக்க அறியும் சித்து இரண்டும் அணையும்போது அதந்நியமாக நிற்பினும் ஒன்றெனக் கூறமுடியாது. புத்தித் தத்துவமும் உயிரும் ஒன்றெனக் கூறப்படினும் புத்தித்தத்துவம் உயிராவதில்லை. ஏனைய தத்துவங்களை நோக்க உயிர் சித்தாயினும் சிவத்தை நோக்க உயிர் அசித்தாகும்.
எவ்விடத்தும் இறையடியை யின்றியமைந் தொன்றை யறிந்தியற்றி யிடாஉயிர்கள் ஈசன் தானுஞ் செவ்விதினில் உளம்புகுந்து செய்தி யெலாம் உணர்ந்து சேட்டிப்பித் தெங்குமாய்ச் செறிந்து நிற்பன்

Page 30
56
இவ்வுயிர்கள் தோற்றும்போ தவனையின்றித் தோற்ரு இவற்றினுக்கும் முதலெழுத்துக் கெல்லாமாய் நிற்கும் அவ்வுயிர்போல் நின்றிடுவன் ஆத லான் நாம் அரனடியை யகன்றுநிற்ப தெங்கே யாமே. x .
(சிவஞானசித்தியார்)
பெத்தத்திலும் முத்தியிலும் என்றும் இறைவன் ஆன்மாவுடன் நிற்கிருன். அவனருளின்றி ஆன்மா அறியவும் செயற்படவும இயலாது. எழுத்துக்களை இயக்கு வதற்கு அவற்றேடு கலந்து நிற்கும் அகரம் போல இறைவன் உயிரோடு கலந்து நிற்பன். ஆணவ மலத்தில் கட்டுண்டு கிடந்த உயிரை வெளியிட்டவன் அவனே. அன்று தொட்டு ஆன்மாவோடு உயிருக்கு உயிராய் நிற்ப வன் இறைவனே. ஆதலால் ஆன்மா இறைவனை விட்டுத் தனித்து நிற்றல் பெத்தத்திலுமில்லை; முத்தியிலுமில்லை.
அவனிவ ஞனது அவனருளா லல்லது இவனவ ஞகானென் றுந்தீபற என்றும் இவனே யென் றுந்தீபற. (திருவுந்தியார்)
அத்துவித வியாக்கியான முரண்பாடுகளை இந்துக்கள்
கவனிப்ப்தில்லை. இறைவனைத் தியானித்து வணங்கி அவனடி சேருவதே முத்தி. அருளாளர் அடியார்கள் மறைஞானிகள் முதலியோரின் மறைபொருள் வாக்கியங்களை வாசிக்கும் போது இறைவன் ஒருவனே .மெய்ப்பொருள் ஆன்மாவில்லை யென்ற கருத்தையும காணலாம். இக்கருத்துக்கு ஆதார மர்கத் திருமூலர், தாயுமானவர், இராமலிங்கர், ரமண மகரிஷி, யாழ்ப்பாண யோக சுவாமிகள் ஆகியோரின் பல பாடல்களையும் வாக்கியங்களையும் காட்டலாம்.
உதாரணமாகப் பின்வரும் திருமந்திரத்தைப் பாருங்கள்.

57
நானென்றும் தானென்றும் நாடினேன் நாடலும் நானென்று தானேன்று இரண்டில்லை என்பது நானென்ற ஞான முதல்வனே நல்கினன் நானென்று நானும் நினைப் பொழிந்தேனே.
இதற்கு ஒரு காரணமுண்டு. இவர்கள் சீவன் முத்தர் கள். சிவானுபூதிமான்கள்.தமது அனுபவத்தைக் கூறுகிருர் கள். சீவன் முத்தர்களுக்குச் சீவன்களும் உலகங்களுமில்லை. நானில்லை, நீயில்லை. எங்கும் சிவம் எல்லாம் சிவம். எல்லாம் அவன் செயல், அவனன்றி வேறென்றுமில்லை.
எல்லா மறியு மறிவுறினு மீங்கவரொன் றல்லா தறியா ரற. (திருவருட் பயன்)
சீவன் முத்தர் எல்லாவற்றையும் அறியும் ஞானத்திற்
கலந்திருப்பினும் சிவன் ஒன்றையேயன்றி வேறென்றை
யுங் காணர். மதபண்டிதர்களின் நிலைவேறு. சீவன் முத்தர் நிலை வேறு.
சைவம4

Page 31
5. புறப்பிரபஞ்சமும் அகப்பிரபஞ்சமும்
அண்டப் பகுதியின் உண்டைப் பிறக்கம் அளப்பருந் தன்மை வளப்பெருங் காட்சி ஒன்றனுக் கொன்று நின்றனNல் பகரின் நூற்ருெரு கோடியின் மேற்பட விரிந்தன இல்நுழை கதிரின் நுண்அணுப் புரையச் சிறிய வாகப் பெரியோன் தெரியின் வேதியன் தொகையொடு மாலவன் மிகுதியும் தோற்றமும் சிறப்பும் ஈற்ருெடு புணரிய மாப்பே ரூழியும் நீக்கமும் நிலையும் சூக்கமொடு தூலத்து சூறைமா ருதத்து எறியது வளியில் கொட்கப் பெயர்க்கும் குழகன் முழுவதும் படைப்போற் படைக்கும் பழையோன் படைத்தவை காப்போற் காக்கும் கடவுள் காப்பவை கரப்போன் கரப்பவை கருதாக் கருத்துடைக் கடவுள் திருத்தகும் அறுவகைச் சமயத் தறுவகை யோர்க்கும் வீடுபே ருய்நின்ற விண்ணுேர் பகுதி கீடம் புரையும் கிழவோன் நாடொறும் அருக்கனிற் சோதி அமைத்தோன் திருத்தகு

56
மதியில் தண்மை வைத்தோன் திண்டிறல் தீயில் வெம்மை செய்தோன் பொய்தீர் வானிற் கலப்பு வைத்தோன் மேதகு காலின் ஊக்கம் கண்டோன் நிழல் திகழ் நீரி லின்சுவை நிகழ்ந்தோன் வெளிப்பட மண்ணில் திண்மை வைத்தோன் என்றென்று எனப்பல கோடி எனப்பல பிறவும் அனைத்தனைத் தவ்வயின் அடைந்தோன்.
(திருவண்டப்பகுதி, மாணிக்கவாசகர்)
புறப் பிரபஞ்சம் ஐம்பூதங்களின் சேர்க்கையாகும்.
நிலம் தீ நீர்வளி விசுபோ டைந்தும் கலந்த மயக்கம் உலகம் ஆதலின். (தொல்காப்பியம்)
பூதங்கள் தூலம் சூக்குமம் அதிசூக்குமம் எனும் மூன்று நிலைகளிலும் இருக்கின்றன, பூதங்களுக்கு மூலப்பொருள் மாயையாகும். இஃது அதிகுக்குமமான அருவமான மூலப் பொருளாகும் காரண நிலையிலும் காரிய நிலையிலும் மாயை உள்பொருளாகும். எனினும் மாயைக்கு இயக்கமும் தோற்றமுமில்லை. தன்னைத்தானே தோற்றுவிக்கும் ஆற்ற லில்லை. உலகங்கள் தோன்றமுன் மாயை இறைவனில் ஒடுங்கி இருந்தது. பிரளய காலத்தில் மறுபடியும் இறை வனில் ஒடுங்கும். இறைவனின் சக்தியே மாயையை அருட்டித்துத் தோற்றுவித்து அதில் கோய்ந்து நின்று உலகங்களை இயக்குகிறது. இறைவன் சக்தியின்றி உலகங் களில்லை உலகங்களின் தோற்றத்துக்கும் ஒடுக்கத்துக்கும் இறைவனே ஆதாரம். அவன் சக்தியின்றி உலகங்கள் இயங்கா. நாம் காணும் உலகம் மாயையும் (சடமூலகமும) இறை சக்தியுங்கலந்த தோற்றப்பாடாகும். உலகங்களுக்கு நிமித்த காரணம் இறைவன். முதற் காரணம் மாயை. துணைக் காரணஞ் சக்தி. இதை உணருவதே ஞானம், இதை உணராமையே மாயை.

Page 32
60
உலகமே உருவ மாகயோனிகள் உறுப்பதாக இலகுபேர் இச்சா ஞானக்கிரியையும் கரணமாக அலகிலா உயிர்ப்பு லன்கட்கு அறிவினை ஆக்கிஐந்து நலமிகு தொழில்களோடும் நாடகம் நடிப்பன்நாதன் (சிவஞான சித்தியார்)
எமது இரு கேள்விகளையும் பொறுத்தமட்டில் அகப் பிரபஞ்சமே முக்கியமானது. இதனைச் சைவ சித்தாந்திகள் முப்பத்தாறு தத்துவங்களாக வகுக்கின்றனர். ஆன்ம தத்துவங்கள் இருபத்து நான்கு. வித்தியா தத்துவங்கள் ஏழு, சிவ தத்துவங்கள் ஐந்து. ஆன்ம தத்துவங்களாவன :
பூதங்கள் 5-பிருதிவி, அப்பு, தேயு, வாயு, ஆகாயம்;
ஞானேந்திரியங்கள் 5-மெய், வாய், மூக்கு, கண், செவி எனும் அறிவுக்கருவிகள்
கன்மேந்திரியங்கள் 5-வாய் (வாக்கு), கை, கால், அபாணம், குறி எனும் தொழிற் கருவிகள்.
தன்மாத்திரைகள் 5-ஓசை, ஊறு ஒளி, சுவை, நாற்றம். ஒவ்வொரு ஞானேந்திரியத்துக்குஞ் சூக்கும மாகத்தன் மாத்திரை ஒன்றுண்டு.
அந்தக்கரணங்கள் 4-மனம், புத்தி, சித்தம், அகங் காரம்.
ஆன்ம தத்துவங்கள் இருபத்து நான்கும் அசுத்த மாயா காரியங்களாகும். இவை நுகர்ச்சியைப் பயப்பன வாக அமைதலின் போக்கிய காண்டம் எனப்படும். இவற்றிற் பூதங்கள் ஐந்தும் கன்மேந்திரியங்கள் ஐந்தும் ஞானேந்திரியங்கள் ஐந்தும் தூல சரீரமாகும். தன் மாத் தரைகள் ஐந்தும் மனம், புத்தி, சித்தம் எனும் அந்தக் கரணங்கள் மூன்றும் குக்கும சரீரமாகும். எட்டுத் தத்து வங்களின் சேர்க்கையாதலாற் சூக்கும சரிரம் புரியட்ட

6.
சரீரம் எனப்படும். வித்தியா தத்துவங்கள் காலம், நியதி, கலை, வித்தை, அராகம், புருடன், மாயை என ஏழாகும். வித்தியா தத்துவங்கள் ஆன்மாவை போகத்தில் நாட்ட முடையவனகச் செய்யுங் கருவிகளாகும். ஆணவ மலத்தின் அறிவைத் தடுக்கும் ஆற்றலைச் சிறிது நீக்கி ஆன்மாவுக்கு முயற்சியைக் கிளர்ச்சி செய்வது கலைத் தத்துவமாகும். இங்கனம், செயல் விளக்கம்பெற்ற உயிர்க்க அறிவாற்றலை விளக்குவது கலை பினின்றும் தோன்றும் வித்தைத் தத்துவ மாகும். இவ்வித்தை பொறிகள் வாயிலாக வரும் புலனுண்ர்வையும் மனம், ஆங்காரம், புத்தி, சித்தம் என்பனவற்றின் தொழிற்பாடாகிய சங்கற்பம், விகற்பம், அபிமானம், துணிவு, நினைவு முதலிய உணர்வுகளையும் தன் வேதனை உணர்வையும் தருவதாகும்.
வித்தையினின்று தோன்றிய அராகம் ஆன்மாவுக்குப் போகத்தில் விழைவை உணடு பண்ணும். ஆன்மா யோகத்தை நுகரும்போது காலவரையறைக் குட்படுத்து வது காலத் தத்துவமாகும். போகத்தை வினைக்கீடாக நியமித்து நடத்துவது நியதித் தத்துவமாகும். கலை, வித்தை, அராகம், காலம், நியதி என்றும் ஐந்து தத்துவங் களும் ஆன்மாவுக்குச் சட்டை போன்று இருந்து, அதனை நுகர்ச்சியின் கண் நோக்குடையதாகச் செய்தலின் பஞ்ச கஞ்சுகம் எனப்படும். இவ்வைந்து தத்துவங்களையும் பொருந்தி ஆன்மா வினைகள் செய்து வினைப்பயன்களை அநுபவிக்கும்போது புருடன் எனப்படும். ஆன்மாவுக்கு மயக்கத்தைத் தருவது மாயைத் தத்துவமாகும். திருவருள் சுத்த மாயையில் தோன்றி ஆன்மாவுக்கு அருள்புரியுந் தத்துவங்கள் ஐந்தாகும் :-நாதம், விந்து, சதாக்கியம், மகேஸ்வரன், சுத்தமாயை. இவற்றைச் சிவன், சக்தி, சதாசிவன், ஈஸ்வரன், சுத்தமாயை எனவுங் கூறுவர், இத் தத்துவங்களையும் இவற்றின் தொழில்களையும் விரிவாக விளக்க இங்கு இடமில்லை. இவற்றைச் சைவ சித்தாந்த நூல்களில் காணலாம்.

Page 33
62.
தத்துவங்கள்
இம் முப்பத்தாறு தத்துவங்களும் மனிதனில் உள. இஃது அகப் பிரபஞ்சமாகும். இத் தத்துவங்களை நான்கு பகுதிகளாக வகுக்கலாம் :-(1) தூல சரிரம்-இதில் 15 தத்துவங்கள் அடங்கும். (2) சூக்கும சரீரம்-இதில் மன மும் உட்பட எட்டு தத்துவங்கள் அடங்கும். (3) ஆன்மா. ஆன்மா இத் தத்துவங்களோடும் ஆணவ மாயை கன்ம மலங்களோடும் நிற்கிறது. (4) சிவதத்துவங்கள்-இறை வன் உயிரோடு உடகை நிற்கிருன்.அணுவுக்குள் அணுவாக நிற்கிருன். உயிருக்கு உயிராக நிற்கிருன், அபேதமாய் நிற்கிருன். இச் சேர்க்கையில் நான் யார்? கேவல அத்து வைத வாதிகள் இச்சேர்க்கையிலுள்ள இறைச் சக்தியை நானுகக் காண்கின்றனர். தத்துவம் அசி. இச் சக்தியே எல்லாவற்றுக்கும் மூலமும், முதலும் ஈறுமாகும் என்பதில் ஐயமில்லை. சைவ சித்தாந்திகள் இச்சேர்க்கையிலுள்ள புருடன் அல்லது ஆன்மாவை நானகக் காண்கின்றனர். சடவாதிகள் இச் சேர்க்கையிலுள்ள தூல சரீரத்தை நானகக் காண்கின்றனர். உளவாதிகள் (Psychologists) இச் சேர்க்கையிலுள்ள மனத்தை நானுகக் காண்கின்றனர். இவர்கள் ஆன்மாவைச் சைக்கிக் (Psychic) என்கின்றனர். தற்காலத்தில் உளவாதிகள் மனத்தை ஆழம் ஆழமாகத் தோண்டி ஆராய்கின்றனர். உடனுகவும் வேருகவும் நிற்கும் ஆன்மாவை இவர்கள் காண்பதில்லை. அதுபோல ஆன்மாவோடு உடனகவும வேருகவும் நிற்கும் இறைவ னையுங் காண்பதில்லை. நான் யார் என்பதை ஒவ்வொரு வரும் தமது பரிபக்குவ நிலைக்கு ஏற்றவாறு உணரு கிருர்கள்.
சைவ சித்தாந்திகள் பதி, பசு, பாசம் எனும் முப் பொருட்களும் உள் பொருட்கள் என்கின்றனர். இவற்றை, வேருகவும் உடனுகவும் காண்கின்றனர். இச்சேர்ககையி லுள்ள உயிர் அலலது ஆன்மாவே நான் என்கின்றனர். ஆனல் இந்த நான் பிறப்பிறப்பின்றி நித்தமாய் பேரின் ப.

63
மாய் வாழவேண்டுமானல் நான் என்ற உணர்வு அழிய வேண்டும். இந்த நான் என்ற உணர்வு இருக்கும் வரைக்கும் மலங்களையும் பிறப்பிறப்பையும் துன்பத்தை, யும் தவிர்க்க முடியாது; நானுண்டு, ஆனல் அந்த நான் சிவத்துடன் கலந்து மறைந்தாலன்றி முத்தியில்லை. எல்லாப் பிரச்சினைகளும் துன்பங்களும் நான் என்ற உணர்ச்சியிலிருந்து தோன்றுகின்றன. அதுவே நான் என நினைத்து தியானித்தாற் பிரச்சினைகளில்லை; துன்பங்களில்லை.

Page 34
6. ஆணவ மலம்
மோகமிக உயிர்கள்தொறும் உடனய் நிற்கும் மூலஆ ணவம்ஒன்று முயங்கி நின்று பாகமிக உதவுதிரோ தாயி ஒன்று பகர்மாயை ஒன்றுபடர் கன்ம மொன்று தேகமுறு கரணமொடு புவன போகச் செயலாகும் மாமாயைத் திரட்சி ஒன்றென்று ஆகமலம் ஐந்தென்பர் ஐந்தும் மாருது அருளென்ப தரிதென்பர் அறிந்து ளோரே
(சிவப்பிரகாசம்)
ஆணவங் கன்மம் மாயை என்பன மலங்களாகும். இவற் ருேடு கூடிய திரோதன சக்தியையும் தூய மாயையும் மலத்திற் சேர்க்கிருர்கள்.
ஆருறு தத்துவமும் சொன்னேம் அடைவாக மாரு மலமிரண்டும் வாசொல்லக்-கூறில் அறியாமை ஆணவம்நீ யானசுக துக்கம் குறியா வினையென்று கொள். (உண்மை விளக்கம்)
அறியாமையை விளைவிப்பது ஆணவ மலம், இன்ப துன்பங்களை விளைவிப்பது கன்மமலம்.
ஒன்றதாய் அநேக சக்தி யுடையதாய் உடனுய் ஆதி அன்றதாய் ஆன்மா வின்றன் அறிவொடு தொழிலை ஆர்த்து

65
நின்றுபோத் திருத்து வத்தை நிகழ்த்திச் செம்பினிற்
களிம்பேய்ந்து என்றும் அஞ்ஞானங்காட்டும் ஆணவம் இயைந்து
நின்றே (சிவஞானசித்தியார்)
ஆணவ மலம் ஒன்ருயினும் பல உயிர்களோடும் செம்பிற் களிம்புபோலக் கலந்திருக்கிறது. உயிர் என் றுண்டோ அன்று தொட்டு ஆணவ மலமும் அதனேடு பரவியிருக்கிறது. இடைவந்து ஏறியதன்று. கேவலத்தில் ஆன்மாவின் அறிலைச் சிறிதும் விளங்கவொட்டாது தடுக்கிறது. சகலத்தில் ஆன்மாவின் அஞ்ஞானத்துக்கும் நான் எனது என்ற அகங்காரத்துக்கும் இதுவே கால். வினைகளுக்கும் போக நுகர்ச்சிகளுக்கும் இதுவே காரணம். உயிர்களின் வியாபகத் தன்மையை ஒடுக்கி அவற்றை அணுவாக்குவது இம் மலமே. இக் காரணம் பற்றியே உயிர்கள் அணுக்கள் எனப்படும். இது தொன்று தொட் டிருப்பதினற் சகச மலம் எனப்படும். இம்மலம் மிகுந்த சக்தியுடையவை. மிகக் கொடியது.
ஏகமாய் நம்கால எல்லைகளின் மீளும் எண்ணரிய சத்தியால் இருளொளிர இருண்ட மோகமாய் செம்பினுறு களிம்பேய்ந்து நித்த மூலமல மாய்அறிவு முழுதினையும் மறைக்கும் பாகமாம் வகைநின்று திரோதாயி சத்தி பண்ணுதலான் மல்மெனவும் பகர்வர் அது பரிந்து நாகம்மா நதிமதியம் பொறிசடையான் அடிகள் நணுகும்வகை கருணைமிக நயக்குந் தானே.
(சிவப்பிரகாசம்) ஆணவ மலம்
ஆணவ மலம் எல்லா உயிர்களோடும் அவற்றவற்றின்
பரிபக்குவத்துக்கு ஏற்றவாறு கூடி நிற்பதும் ஒன்றே, பல வன்று. மிகவும் வலிமையுடையது. இருளைப் பார்க்கிலும்

Page 35
66
இருண்டது. செம்பிற்களிம்பு போல உயிரை அனுதி தொட்டுப் பந்தித்திருக்கிறது. உயிரின் அறிவு முழுவதை யும் மறைக்கிறது இறைவனின் அருட்சக்தியும் உயிரோடு நிற்கிறது. ஆணவ மலத்தைப் பரிபாகஞ் செய்கிறது. இது திரோதாயி எனப்படும். இத்திருவருள் ஈறறில்
ஆன்மாவைச் சிவத்தோடு கூட்டி வைக்கும்.
ஒரு பொருளுங் காட்டா திருளுருவங் காட்டு மிருபொருளுங் காட்டா திது. அன்றளவி யுள்ளொளியோ டாவி யிடையடங்கி யின்றளவு நின்ற திருள். இருளின் நேற்றுன்பே னுயிரியல்பேற் போக்கும் பொருளுண்டே லொன்ரு கப் போம். − ஆசாதி யேலணைவ காரணமென முத்திநிலை பேசா தகவும பிணி (திருவருட்பயன்)
இருள் ஏனைய பொருட்களைக் காட்டாதாயினும் தன்னைக் காட்டுகிறது. நாம் அதை இருளென்று அறிந்து எச்சரிக்கையாக இருக்கலாம். ஆணவ மலம் ஏனைய வற்றையுங் காட்டாது; தன்னையுங் காட்டாது. ஆதலால் ஆணவ மலம் இருளைப் பார்க்கினும் கொடியது. ஆணவம் அனுதி தொட்டு உயிரோடு இருந்து வருகிறது, ஆன்மா முத்தியடையும் வரையும் நீங்காது. ஆணவ மலம் இல்லை யாயின் ஆன்மாக்களுக்குத் துன்பமேயில்லை. ஆணவம் உயிரின் இயல்பான குணமன்று. இயல்பான குணமாயின் ஆணவமலம் அழியும் போது உயிருங் கெட வேண்டும். உயிர் என்றும் அழியாதது. முத்தியில் ஆணவமலமில்லை. ஆணவமலம் அநாதி, உயிரை இடையிற் சேர்ந்ததன்று, இடையிற் சோக் காரணமில்லை. இடையிற் சேர்ந்ததானல் முத்தி நிலையிலும் ஆன்மாவைப் பிடிக்குமல்லவா?
ஆணவாம் மலம் உயிரை அனுதியாக அகத்துள்மணி அரவுசெம் பிடை அமருங் களிம்பும் பேணுநீர் உப்புடனே நெருப்படங்கும் விறகும் w பெருகுநெல்லில் தவிடும் பிறங்குகண்ணில் இருளும்

67
காணுமது போலென்றும் ஒன்ருகி அனேகம் கலைகள் சத்தி யாய்க்காலந் தோறுங்குறைதல் செய்து கோணுநல்ஒன் றின்றியே ஏனுயிரை மறைத்துக் குறித்திடலாம் வகைநிற்கும் நிறுத்துமறு கேனே.
(தத்துவப் பிரகாசம்)
ஆன்மா உண்மையையும் தன்னையும் இறைவனையும் அறியாதிருக்கும். மயக்கம் ஆணவமலத்தினலுண்டான தாகும். ஆணவமலத்தின் குணங்கள் "மோகம், மதம், ராகம், விஷாதம், சோஷம், வைசித்திரியம், அரிசம்" என ஏழு வகைப்படும். மோகம் நல்லறிவை மயக்குகிறது. மதம் நிலையற்ற உலகவின்பங்களை மேலாக மதிக்கச் செய்கிறது. ராகம் உலகவின் பங்களில் ஆசையை உண்டாக்குகிறது. விஷாதம் அனுபவித்த இன்பம் பின்பு கிடைக்காத போது வருத்துகிறது. சோஷம் பந்துக்களை விட்டு நீங்க வேண்டிய காலத்தில் வருந்தி மெலியச் செய்கிறது. வைசித்திரியம் தன் பெருமைகளை வியந்து மெச்சச் செய்கிறது. அரிசம் ஆன்மா உலக இன்பங்களை அனுபவிக்கும் போது தனக்கொரு குறையுமில்லையென எண்ணச் செய்கிறது.
கூறிய மூன்று மலத்தின் குணங்குறி வேறு கிளப்பின் விகற்பங் கற்பகங் குரோதம் மோகங் கொலையனர் மத நகை விராயெண் குணனுமா ணவமென விளம்பினை அஞ்ஞா னம் பொய் அயர்வே மோகம் பைசபல சூநியம் மாச்சரி யம்பயம் ஆவேழி குணனும் மாயைக் கருளினை கிருத்தலுங் கிடத்தலும் குருவினை யிரற்றலும் விருத்தலும் பரநித்தை மேவவென் றெடுத்த அறுவகைக் குணனுங் கருமத் தருளினை.
(இருபா விருபது)

Page 36
68
ஆணவமலத்தின் எட்டுக் குணங்கள்-பிடித்தது விடாமை, மோகம்,கோபம், அறியாமை, கொலை, வருந்து தல், யான் என்ற அகங்காரம், மற்றவை மாயையின் ஏழு குணங்கள்-பல கலைகற்றும் அறியாமை, கனவு, கண்டது, மறுத்தல், அறிந்தது மறுத்தல், ஈயாமை, மாச்சரியம், அழுக்காறு. கன்மத்தின் ஆறுகுணங்கள்-மடிவந்திருத்தல் பொசிப்பற்றுக் கிடக்கை. புண்ணியஞ் செய்தல், பாவஞ் செய்தல் தொழில் செய்யாது விடுதல், பரநிந்தன.
ஆணவமலம் அதிை தொட்டு முத்தி வரைக்கும் ஆன்மாவோடு கூடிநிற்கும். பிரளயாகலருக்கும் விஞ்ஞா கலருக்கும் ஆணவமலமுண்டு. ஆணவ மலத்தை அறுப்பது திருவருளே. ஆன்மா திருவருளேப் பெறவேண்டும். இறைவன் ஆணவமலத்தை மாயை மலத்தினுல் நீக்குகிருன்

7. LOTSDL)
சைவசித்தாந்தத்தில் மாைையப் பற்றிய பகுதி மிகவும் நுணுக்கமாகக் கூறப்படுகிறது. மாயை என்றசொல் வடமொழியிலும் தமிழிலும் இருப்பினும் கருத்துக்கள் வித்தியாசப்பட்டவையாகும். ஒன்றை மற்ருென்ருக மயங்குவது வடமொழியில் மாயா எனப்படும். இச் சொல்லை நாம் தமிழிலும் பெரும்பாலும் இக்கருத்திற் பயன்படுத்தினும் சைவசித்தாந்தக் கருத்து வித்தியாசப் பட்டதாகும். மாயா = மா+யா மா என்பது ஒடுக்கத்தை யும் யா என்பது விரிதலையும் குறிக்கின்றன, எம்மூலப் பொருளிலிருந்து உலகங்களும் பொருட்களும் தோன்று கின்றனவோ எம்மூலப் பொருளில் ஈற்றில் ஒடுங்குகின்ற ேைவா அம்மூலப் பொருள் மாயை எனப்படும். இம்மூலப் பொருள் வெறுமையன்று. சூனியமன்று. உள்பொருளா கும். மேலே குறிப்பிட்ட 36 தத்துவங்களிற் சிவதத்துவம் ஐந்தும் ஆன்மாவுந்தவிர்த்த ஏனைய 30 தத்துவங்களும் மாயாகாரியங்களாகும்.
தமிழில் நாம் சடம் எனும் போது சடப்பொருட் களுக்கு மூலகாரணியான மாயை அல்லது மூலப் பிரகிருதி யைக் கருதுகிருேம். (சடம் சடப் பொருட்கள்) மாயை உருவற்றது. அசைவற்றது. இயக்கமற்றது. மாயையை அருட்டித்து இயக்குவது சிவசக்தியாகும். சிவசக்தி உலகம் முழுவதும் வியாபித்திருக்கிறது, பிரபஞ்சத்துக்கு முதற் காரணம் மாயை.துணைக்காரணம் சக்தி.நிமித்த காரணம் இறைவன்.

Page 37
70
காரிய காரணங்கள் முதல்துணை நிமித்தம் கண்டாம் பாரின் மண்திரிகைபண்ணு மவன்முதல்துணை நிமித்தம் தேரின் மண் மாயையாகத் திரிகைதன் சித்தியாக ஆரியன் குலால ய்ைநின்று ஆக்குவன் அகில மெல்லாம்: (சிவஞானசித்தியார்)
மட்பாண்டத்துக்கு மண்போல உலகுக்கு மாயை. மட் பாண்டத்துக்குத் திரிகைபோல உலகுக்குச்சக்தி. மட்பாண் டத்துக்குக் குயவன் போல உலகுக்கு இறைவன்.
விந்துவின் மாயையாகி மாயையின் அவ்வியத்தம் வந்திடும் விந்துத் தன் பால் வைகரி யாதிமாயை முந்திடும் அராகம்ஆதி முக்கணம் ஆதி மூலந் தந்திடுஞ்சிவன வன்றன் சந்நிதி தன்னின்றினறே.
(சிவஞானசித்தியார்)
மலங்கள் மலங்களோடு விரவாது முதற்காரணமாய் நிற்பது சுத்தமாயை. சுத்தமாயையினின்று அசுத்தமாயை தோன்றிற்று.அவ்வசுத்த மாயையின் தூலப்பரிணுமமாய்ப் பிரகிருதி மாயை தோன்றிற்று. வைகிரி முதலான நான்கு வாக்குஞ் சுத்த மாயையினினறு தோன்றின. ஆராகம் முதலான ஐந்து காரணத் தத்துவங்களும் அசுத்தமாயையி னின்று தோன்றின. மூலப் பிரகிருதியினின்று முக்குணங் களும் 24 யோக்கியத் தத்துவங்களும தோன்றின. இவை யாவையுந் தோற்றுவித்துத் தொழிற்படுத்துவது சிவசக்தி யாகும். மாயையின் மேலும் விரிவுகளைச் சைவசித்தாந்த நூல்களிற் காணலாம்.
மாயையும் சிவசக்தியும்
நாம் காணும் உணரும் சடவுலகங்களும் பொருட் களும் மாயையுஞ் சிவசிக்தியும் கலந்த தோற்றப்பாடு களாகும். உலகில் எங்கும் எல்லாவற்றிலுஞ் சிவசக்கியும் மாயையும் கலந்திருப்பதினல் அவை இரண்டும் ஒன்றென

71
நாம் மயங்கலாம். சுத்தமாயை புத்தியும் அசைவும் மாற்றமும் அற்றது. சக்தியோடு அது சேரும்போது அதாவது சக்தி அதனை அருட்டித்துத் தொழிற்படுத்தும் போது-மாயா காரியங்கள் அசைவும் இயக்கமும் அடை 'கின்றன. சங்கார காலத்தில் மாயா காரியங்கள் மாயை யில் ஒடுங்கும். மாயை இறைவனில் ஒடுங்கும். சடவாதி கள் சடமொன்றே உளதெனவும் மாற்றமும், இயக்கமும் பிரதிவிம்பத்தலும், உயிர்ப்பும், தன்னுணர்வும், சிந்தித தலும் பகுத்தறிதலும் அதன் இயல்பான குணங்களென வும் எடுத்துக் கொள்ளுகின்றனர். இரு பொருட்கள் என்றும், எங்கும் பிரிக்கமுடியாது ஒன்ரு க இருப்பதினுல் அவையிரண்டையும் ஒன்றெனவோ அல்லது ஒன்றை மற்றதின் குணமெனவோ எடுத்துக்கொள்ள முடியாது. சடவாதிகளின் கொள்கை வைத்துக் கோடலேயன்றி நிரூபிக்கப்பட்ட உண்மையன்று. இதுவே வடமொழியிற் கூறப்படும் மாயையாகும். மயக்கமாகும்.
நித்தமாய், அருவாய் ஏகநிலையதாய் உலகத்திற்கோர் வித்துமாய் அசித்தாய் எங்கும் வியாபியாய் விமல
னுக்கோர் சத்தியாய் புவனபோகமும் தனுகரணமும் உயிர்க்காய் வைத்ததோர் மலமாய் மாயை மயககமுஞ்
செய்யுமன்றே (சிவஞான சித்தியார்)
உலகுக்கு முதல் காரணமான மாயை நித்தியமானது. அருவமானது. தனிப்பட்ட பல கோடி ஆன்மாக்களுடன் பொருந்தி நிற்பினும் மாயை ஒன்றே. மாயை அசித்துப் பொருள். எங்கும் வியாபகமாய் நிற்கிறது. இறைவனுக் குப் பரிக்கிரக சத்தியாகும். உலகங் ஞம் உடம்புகளும் அந்தக் கரணங்களும் மாயா காரியங்களாகும். ஆன்மா ஈடேறுவதறகாகத் திருவருள் மாயா காரியங்களை ஆன்மா வோடு பொருத்துகிறது. மாயா காரியங்களுடன் பொருந்

Page 38
72
திய ஆன்மா சிறிது அறிவு விளக்கம் பெறுகிறது. வினைகள் செய்தும் வினைப் பயன்களை அனுப வித்தும் ஒரள வுக்கு உண்மையை உணருகிறது. எனினும், மாயை மயக்கத்தையும் உண்டு பண்ணலாம். இந்த மயக்கத் தினல் ஆன்மா தன்னை உடம்பாகவும், உலக போகங்களை நித்தியமானவையாகவும் எண்ணுகிறது. ஆதலால், மாயையும் மலங்களில் ஒன்ருகும்.
இறைவன் ஆன்மாவோடு மாயா காரியங்களைப் பொருத்தியது, ஆன்மாவின் ஆணவ மலத்தை நீக்கும் பொருட்டாகும். மலத்தை மலத்தாற் கழுவுவான்.
எழுமுடல் கரணம் ஆதியிவைமலம் மலம்ம லத்தால் கழுவுவன் என்று சொன்ன காரணம் என்னை
யென்னின் செழுநவை அறுவை சாணி உவர்செறி விந் நழுக்கை முழுவதுங் கழிப்பன் மாயை கொடுமலம் ஒழிப்டன்
முன்னேன் (சிவஞானசித்தியார்)
இறைவன் மாயையாகிய மலத்தினை மருந்தாகக்
கொண்டு ஆணவ மலத்தை நீக்குவது வண்ணுன் சாணி
உவர்மண் முதலிய அழுக்குகளை கொண்டு ஆடையின் அழுக்கைக் கழுவுவதை ஒத்ததாகும்.
விடிவா மளவும் விளக்கனைய மாயை வடிவாதி கன்மத்து வந்து (திருவருட்பயன்)
மாயையினலுண்டான தனுடபுவன கரண போகங்களை ஆன்மா தான் செய்த புண்ணிய பாவங்களுக்கு ஏற்றவாறு அனுபவிக்கும். இந்த அனுபவம் ஆணவ மலத்தைச் சிறிது சிறிதாக நீக்கத்தக்க அறிவு விளக்கத்தை உண்டாககும. ஆன்மா இறைவனை அடையும்போதுதான் ஆன்மா பூரண

73 அறிவைப் பெறும். அதுவரையும் சகலத்தில் ஆன்மாவுக்கு விடியுமளவும் விளக்கைப் போன்று மாயை ஓரளவு அறிவு விளக்கத்தைக் கொடுக்கிறது.
மாயையைத் தாயாக மாமாயை யீன்றிட ஆய பரசிவன் தந்தையாய் நிற்கவே ஏயும் உயிர்கே வலசகலத் தெய்தி ஆய்தகு சுத்தமுந் தான்வந் தடையுமே (திருமூலர்) வாழ்க்கை
வாழ்க்கை மாயமன்று. சூனியமன்று. இறைவன் திருவருளே மாயா காரியங்களை ஆன்மாவோடு பொருத்து கிறது. இறைவன் திருவருளே வினைப்பயன்களை ஆன்மா வோடு கூட்டி வைக்கிறது. ஆதலால், வாழ்க்கை துன்பக் கடலன்று. ஆன்மா முன்னேறி முத்தியடைவதற்கு வாழ்க் கையைச் சாதனமாகப் பயன்படுத்த வேண்டும். இறை வனே மெய்ப்பொருள். ஆன்மா இறைவனை அடைய வேண்டும். இல் வாழ்க்கையே கன்மபூமி. இறையுணர்ச்சி யுடன் வாழவேண்டும். தன்னுணர்வை முற்ருக அகற்ற முடியாவிட்டாலும், பெருமளவுக்குக் குறைக்க வேண்டும். வாழ்ககையில் அன்பு வேண்டும. அறம் வேண்டும். இன்பதுன்பங்களைச் சமமாக மதிக்கவேண்டும். சிலவற்றை இன்பங்களாகவும் சிலவற்றைத் துன்பங்களாகவும் கருது வதற்குக் காரணம் மாயையே. பற்றுகளுக்கும் மோகங் களுக்கும் காரணம் மாயையே. தன்னை இறைவனுக்கு அர்ப்பணித்து, தன்னுணர்வற்று இறையுணர்வாய் எல்லாம் அவன் செயல், என நினைந்து அன்பொடு பணிகள் செய்யும்போது வினைப் பயனில்லை. ஆசை மோகங்களில்லை. மாயையில்லை. ஈற்றில் ஆணவ மலம் அற்றுப்போகிறது. திருவருள் தோன்றி ஆன்மாவை ஆட்கொள்ளும்.
உடம்பினை முன்னம் இழுக்கென் றிருந்தேன் உடம்பினுக்குள்ளே யுறுபொருள் கண்டேன் உடம்புளே உத்தமன் கோயில்கொண் டான்என் றுடம்பினை யானிருந் தோம்புகின் றேனே
(திருமந்திரம்)
சைவ-5

Page 39
8. கன்மமலம்-வினைப்பயன்
வள்ளுவர் கன்மத்தை ஊழ்வின்கிருர்.
ஊழிற் பெருவலி யாவுள மற்றென்று சூழினும் தான் முந் துறும் (திருக்குறள்)
முதிர்தரு தவமுடை முனிவ ராயினும் பொதுவது திருவொடு பொலிவ ராயினும் மதியின ராயினும் மன்ன ராயினும் விதியினை யாவரே வெல்லும் நீர்மையார்
(கந்தபுராணம)
ஆகாயத்திலோ கடலிலோ மலைக் குகையிலோ எங்கா வது கன் மத்திலிருந்து தப்புவதற்கு இடமில்லை.
(தம்மபாத)
கேவலத்தில் ஆன்மா ஆணவ மலத்திற் கட்டுண்டு அறிவு விளக்கஞ் சிறிதேனுமின்றிக் கண்ணிலாக் குழவி போலக் கிடக்கிறது. மாயா காரியங்களான தனுகரண புவன போகங்களைத் திருவருள் தோற்றுவித்து அவற்றை ஆன்மாக்களோடு பொருத்தி ஆன்மாக்களைப் படிப் படியாக அறிவு விளக்கம் பெறச் செய்கிறது. மாயா காரியங்களோடு பொருந்திய ஆன்மா இயக்கமுற்று வினைகள் செய்து வினைப்பயன்களை அனுபவிக்கிறது நாம் வாழ்க்கையில் அனுபவிக்கும் இன்ப துன்பங்கள் நாம் முன் செய்த வினைகளின் பயன்களாகும். வினை செய்தவனை வினைப்பயன் வந்தடைவது நியதித் தத்துவமாகும்.

7.
தன்மமோடு அதன்மமாகித் தானிரு பயனுந் தந்து நன்மைதீ மையினும் இன்பத் துன்பினு நாடிக் காண முன்னமே ஆன்மா வின் தன் மும்மலத் தொன்றதாகிக் கன்மமும் மூலங் காட்டிக் காமிய மலமாய் நிற்கும்
இருவினை அநாதிஆதி இயற்றலால் நுகர்வால் அந்தம் வருமலஞ் சார்ந்துமாயா உருவுகள் மருவி ஆர்த்துத் தருசெயல் முறைமை யாலே தான் பல பேதங் காட்டி அருவதாய் நின்ற ரன் தன் ஆணையின் அமர்ந்து
செல்லும் (சிவஞானசித்தியார்)
ஆன்மா செய்யுங் கன்மங்கள் அறம் பாவம் என இரு வகைப்படும். இவை இன்ப துன்பங்களுக்குக் காரண மாகும். கன்மம் மும் மலங்களுள் ஒன்ரு கும். கன்மமலம், ஆணவம் மாயை மலங்களோடு சேர்ந்து ஆன்மாவைப் பந்திக்கும். வினைப்பயன் ஆன்மாவோடு சூக்குமமாய் நிற்கிறது. வினைப்பயன் பல்வேறு யோனி பேதங்களுக்குக் காலாகும.
இறைவனே வினைப்பயனை ஆன்மாவோடு கூட்டி வைக்கிருன். இது திருவருட் செயல்களில் ஒன்ரு கும்.
உள்ளாறே தோற்ற உயிரனையும் அவ்வுடலின்
உள்ளதாம் முற்செய்வினை உள்ளடைவே வள்ளலவன் செய்பவர் செய்திப் பயன் விளைக்குஞ் செய்யேபோல் செய்வன் செயலணையா சென்று. (சிவஞான போதம்)
இருவினை இன்பத்துன்பத் திவ்வுயிர் பிறந்திறந்து வருவது போவதாகு மன்னிய வினைப்ப லன்கள் தருமரன் தரணி யோடு தராபதி போலத் தாமே மருவிடா வடிவுங் கன்ம பயன்களும் மறுமைக்கண்ணே

Page 40
76.
பேறிழவின்ப*மோடு பிணிமூப்புச் சாக்காடென்னும் ஆறுமுன் கருவுட் பட்ட தவ்விதி யனுபவத்தால் ஏறிடும் முன்பு செய்த கன்மம்இங்கிவற்றிற்கேது தேறுநீ யினிச்செய் கன்மம் மேலுடற்சேரு மென்றே.
மேலைக்கு வித்துமாகி விளைந்த்வை உணவுமாகி ஞாலத்து வருமாபோல நாஞ்செயும் வினைகளெல்லாம். ஏலத்தான் பலமாச்செய்யும்இதம்அகிதங்கட்கெல்லாம் மூலத்த தாகியென்றும் வந்திடும் முறைமையோடே. (சிவஞானசித்தியார்)
உயிர்கள் இருவினைகளினதும் பயனுக இவ்வுலகில் இன்பதுன்பங்களை அனுபவிக்கின்றன. பிறந்தும் இறந்தும் உழல்கின்றன. சுவர்க்கம் நரகம் போகின்றன. வினைப் பயன்கள் அனுபவித்துக் கழியாவிடின், சூக்கும உடம் போடு நிலைபெற்று நிற்கின்றன. இறைவனே வினைப் பயனைச் சூக்கும உடம்போடு கூட்டுகிறான். சூக்கும உடம் புங் கன்ம மலமும் அசித்துகளானபடியினல் அவை தாமே ஒன்ருேடொன்று சேரா.
வாழ்க்கையில் நாம் அனுபவிக்கும் இன்பதுன்பங்கள் மூப்புச்சாக்காடு பிணி முதலியவை முற்பிறவிகளிற் செய்த வினைகளின் விளைவுகளாகும். இவற்றை அனுபவிக் கும்போது மேலும் வினைகள் செய்கிருேம். இவ்வினைகள் மேலும் வினைப்பயன்களை விளைவிக்கின்றன. ஒரு பிறவி யிற் செய்த வினைகள் குக்கும உடம்பில் வித்தாகக் கிடந்து மறுபிறப்பிற் பயிராகின்றன. இப்பிறப்பிற் செய்யும் வினைகள் மறுபிறப்புகளிற் பயனை அளிக்கலாம்,
உலகில் விளைந்த கனி உணவானது மட்டுமன்றி வித்து மாகிறது. அதுபோல எமது வினைகளும் இம்மையிலும் மறுமையிலும் பயனை அளிக்கும். மேலும் வினைகளுக்குக் காலாகும். ஆன்மாவை எங்கும் தொடரும். வினைகள் உடம்புக்கும் உடம்பு வினைகளுக்குங் காலாகின்றன.

77
நண்ணியிடும் உருவதினுக் துேவாகி நானபோ கங்களாய் நாதோரீபத்தி பண்ணிவரும் ஆதிவுல் அஞ்தி யாகிப் பலவாகி அணுக்கள்தெழுதும் பீர்வதாகி
புண் ணியமாய்ப் புலர் காலை மான்ேெமவிப் பொருந்துமிது கன்மமலம் புகலு மா$ழு,
(சிவிஷ்யூபிரகர்சம்)
ஆன்மாக்கள் உடம்பெடுத்தலுக்கும் பிறத்தலுக்கும், இறத்தலுக்கும் இன்பதுன்பங்களுக்கும் வினைப்பயனே காரணம்.கன்மம் தொன்றுதொட்டுண்டு. அதன் பயன்கள் பலவகைப் பட்டவை. மனம் வாக்குக் காயச் செயல்கள் எல்லாம் வினைப் பயனுக்குக் காலாகும். ஓர் ஆன்மா செய்த வினைப்பயன் அந்த ஆன்மாவைத் தவருது சென்று பிடிக்கும். அதாவது பிறவிகள் தோறும் தொடரும். அறச் செயல்கள் இன்பத்துக்கும் பாவச் செயல்கள் துன்பத்துக் கும் காலாகும்.
அனுபவித்துக் கழிக்கும் வரைக்கும் வினைப்பயன் ஆன்மாவை விடாது தொடரும்.
என பகையுற்ருரு முய்வர் வினைப்பகை வீயாது பின்சென்றடும். (திருக்குறள்)
அத்தமும் வாழ்வு மகத்துமட் டேவிழி யம்பொழுக மெத்திய மாதரும் வீதிமட் டேவிம்மி விம்மியிரு கைத்தல மேல்வைத் தழுமைந் தருஞ்சுடு காடுமட்டே பற்றித் தொடரு மிருவினைப் புண்ணிய பாவமே.
(பட்டினத்தார்)
வினையாற்றும் போது அதனலுண்டாகும் பயன் ஆகாமியம் எனப்படும். மக்களின் ஒவ்வொரு செயலும்

Page 41
78
வாக்குஞ் சிந்தனையும் ஆகாமியத்துக்குக் காலாகும். ஆகாமியம் திருட்டம், அதிருட்டம், திருட்டா திருட்டம் என மூவகைப்படும். செய்த பிறவியிற் பயனைக் கொடுப் பது திருட்டம் எனப்படும். செய்த பிறவியிற் பயனைக் கொடாது மறுபிறவிகளிற் பயனைக் கொடுப்பது அதிருட் டம் எனப்படும். வினைப்பயனில் ஒரு பங்கைச் செய்த பிறவியிலும் எஞ்சியதை மறுபிறவிகளிலும் கொடுப்பது திருட்டா திருட்டம் எனப்படும். வினைப்பயன் வினைகளின் காலக்கிரம முறைப்படி நிகழ்வதில்லை. ஒரு பிறப்பிற் செய்த வினை பல பிறப்புக்களுக்குப் பின்பு பயனை அளிக் கலாம். முன் செய்த வினைப்பயன்களில் அனுபவித்துக் கழிக்காத பகுதி சஞ்சிதம் எனப்படும். குறித்த பிறவியில் அனுபவிக்கப்படும் வினைப்பயன்களின் தொகுதி பிராரப் தம் எனப்படும். இது சஞ்சிதத்தின் ஒரு பகுதியும் ஆகா மியத்தின் திருட்டப் பகுதியுமாகும். பிறக்கும்போது சஞ்சித மூட்டையுடன் பிறக்கிருேம். இறக்கும்போது சஞ்சித மூட்டையைக் கட்டிக் கொண்டு செல்லுகிருேம்.
எனினும் இந்துக்களைத் தைவாதீனவாதிகள்(Fatalists) எனக் கருதுவது தவருகும்.
(அ) சஞ்சிதத்தை எம்மால் மாற்ற முடியாவிடினும், ஆகாமியம் எமது கையிலிருக்கிறது. ஆதலால் தனதுவருங்காலத்தை ஆன்மாவேநிச்சயிக்கிறது.
(ஆ) இன்பதுன்பங்களை அனுபவிப்பது வாழ்க்கையின் நோக்கமன்று. ஆன்மா பரிபக்குவமடைந்து, பிறவா இறவா முத்தியடைய வேண்டும். ஆன்மா இப்பாதையில் எவ்வளவுக்கு முன்னேறு கிறது என்பதே முக்கியமானது, இன்பதுன்ப அனுபவங்கள் இரண்டுஞ் சமமாக ஆன்மாவின் முன்னேற்றத்துக்கு உதவுகின்றன. துன்பத்தை கொடுக்குஞ் சனிக்கிரகமே முத்தியையும் அளிக் கிறது எனச் சோதிடர் கூறுவர்.

79
(இ) துன்பத்தைக் கண்டு கலங்க வேண்டியதில்லை. இன்பத்தைப் பற்றிப் பெருமிதப்பட வேண்டிய தில்லை. இன்பங்களும் துன்பங்களும் கலந்ததே வாழ்க்கை. இவை நான் எனது என்ற உணர்ச்சி யிலிருந்தும் பற்றுக்களிலிருந்தும் எழுகின்றன. இப்பற்றுக்கள் அறுத்தால் இன்பங்களில்லை. துன்பங்களில்லை.இன்பங்களையும் துன்பங்களையும் பெரிதாகப் பொருட்படுத்துவது ஆணவ மலத் தின் குணங்களில் ஒன்ருகும். இறை உணர் வாளருக்கும் அடியார்களுக்கும் எல்லாம் நல்லவை நல்லவையே.
(ஈ) முடிந்தன முடிந்து விட்டன. அவற்றைப் பற்றி கவலைப்படுவது ஆணவமலத்தின் குணமாகும். அனுபவத்திலிருந்து உண்மையை உணர்ந்து, எம்மை இறைவனுக்கு அர்ப்பணித்து எல்லா வற்றையும் அவன் செயலாகக் கருதவேண்டும். ஆணவம் நீங்க எல்லாஞ் சுகமாகும்.
மதிநுதல் மங்கையோடு வடபால் இருந்து
மறையோதும் எங்கள் பரமன் நதியொடு கொன்றைமாலை முடிமேல் அணிந்தென்
உளமே புகுந்த அதனுல் கொதுயுறு காலன் அங்கு நமனேடு தூதர்
கொடு நோய்கள் ஆன பலவும் அதிகுண நல்லநல்ல அவைநல்ல நல்ல
அடியா ரவர்க்கு மிகவே (திருஞானசம்பந்தர்)
வினைப்பயனை ஆன்மாவோடு கூட்டி வைப்பது இறை வன் திருவருளே. தீவினைகள் செய்த ஆன்மாவைத் துன்பத்துக்குட்படுத்துவது திருவருளாகுமா எனச் சிலர் கேட்கலாம். இது பரிவுச் செயலேயன்றித் தண்டனை

Page 42
80
யன்று: வினைப்பயனை ஆன்மாவோடு கூட்டி வைப்பது ஆன்மா உண்மையை உணர்ந்து முன்னேறுவதற்காகும்.
தந்தைதாய் பெற்ற தத்தம் புதல்வர்கள் நஞ்சொல்
ஆற்றின் வந்திடா விடின் உறுக்கி வாளரினல் அடித்துத் தீய பந்தமும் இருவர் எல்லாம் பார்த்திடில் பரிவே யாகும் இந்த நீர் முறைமை யன்ருே ஈசனர் முனிவும் என்றும் அருளினுல் உரைத்தநூலின் வழிவரா ததன் மஞ்
செய்யின் இருளுலா நிரயத் துன்பத்து இட்டிரும் பாவந்
தீர்ப்பன் பொருளுலாஞ் சுவர்க்கம் ஆதி போகத்தால்
புண்ணியந் தீர்ப்பன் மருளுவாய் மலங்கள் தீர்க்கும் மருந்திவை
வயித்தியநாதன் (சிவஞானசித்தியார்)
பெற்ற பிள்ளைகள் குற்றஞ் செய்யும்போது தாய் தந்தையர் அவர்களேத் தண்டிப்பது அவர்களைத் திருத்தி நல்வழிப்படுத்துவதற்காகும். இஃது உண்மையில் பிள்ளை கள் மேலுள்ள அன்பினுற் செய்யுஞ் செயலாகும். தீவினை செய்த ஆன்மாவோடு இறைவன் துன்பத்தைப் பொருத்து வதும் இத்தன்மையானதாகும். இறைவன் பாவஞ் செய்த ஆன்மாவை நரகத்திலிட்டுத் துன்பத்தை நுகரச் செய்து, அப்பாவத்தை ஒழிப்பன். புண்ணியஞ் செய்த ஆன்மாவைச் சுவர்க்கத்திலிட்டு இன்பத்தை நுகர்வித்து அப்புண்ணியத்தை ஒழிப்பன். இன்பங்களும் துன்பங் களும் அநித்யமானவை. துன்பமும் இன்பமும் நோயைக் குணப்படுத்தும் மருந்துகளாகும். இறைவன் ஆன்மாவைக் குணப்படுத்தும் மருத்துவஞவான்.
கன்ம விதியை இக்காலத்திற் பலர் ஏற்றுக்கொள்வ தில்லை. இஃது அனுபவத்திற்கு ஒவ்வாத விதியென்கின்

8.
றனர். கெட்டவர்கள், கள்ளர், காடையர், சுரண்டுவோர் இவ்வுலகில் இன்பமாக வாழ்வதையும் நல்லவர்கள், பாடு பட்டுத் தொழில்கள் செய்வோர், ஏழைகள் துன்பப்படுவ தையும் உதாரணமாகக் காட்டுகின்றனர். ஆன்மாவுண்டு. அல்து இவ்வுலகிலும் மறுவுலகங்களிலும் வாழுகிறது. பல பிறப்புக்கள் எடுக்கிறது, குறித்த வினைப்பயனை எப்போது அனுபவிக்கும் என்பதைக் கூறமுடியாது. ஒரு பிறப்பில் அனுபவிக்கும் இன்ப துன்பங்கள் அப்பிறப்பிற் செய்யும் வனைகளை ஒத்தனவாக இருக்கவேண்டியதில்லை ஆன்மா முற்பிறப்புக்களிற் செய்த பாவ புண்ணியங்களை அறி யோம். வரும் பிறப்புக்களில் அனுபவிக்கப்போகும இன்ப துன்பங்களே அறியோம். குறித்த பிறப்பின் ஆகாமி யத்தின் திருட்டப்பகுதி மட்டுமே அப்பிறப்பிற் பயனைக் கொடுக்கிறது.
மேலும் இன்ப துன்பங்கள் முக்கியமானவைகளல்ல. அவற்றை ஞானி பொருட்படுத்தமாட்டான். இன்பங் களுக்காக புண்ணியஞ் செய்வது வியாபாரமாகும். செய்த வினைகளின் பயனை நாம் அனுபவிக்க வேண்டும். இந்த அனுபவத்திலிருந்து ஆன்மா உண்மையை உணர்ந்து இரு வினையொப்பு மலபரிபாகம் உண்டாகி, ஆணவ மலம் நீங்கித் திருவருளைச் சார்ந்து திருவடி சேரவேண்டும். இன்பதுன்பங்களை அனுபவிக்கும் போது மேலும் வினைகள் செய்கிருேம். இவையே முக்கியமானவை. ஏனென் ருல் இவையே வருங்காலத்திற் பயன்களை அளிக்கப்போ கின்றன. எனினும், பலவேளைகளில் வினைப்பயன் விரை வில் அனுபவிக்கப் படுவதையுங் காண்கிருேம். இஃது ஆகாமியத்தின் திருட்டப் பகுதியாகும். மேலும் கன்ம விதியை ஏற்றுக்கொள்வோரும் அதை நமயுவதில்லை. நம் பினுல் இன்று நாம் உலகிற் காணும் பகை, பொருமை, துவேஷங்களும் சர்வாதிகாரங்களும் அடக்குமுறைகளும் கொலைகளவுகளும் சுரணடல்களும நடைபெரு.

Page 43
82
இறைவனை வணங்கினல் அவன் பாவங்களை மன்னித்து விடுவான் எனச் சிலர் எண்ணுகின்றனர். மன்னிப்புக் கேட்டுவிட்டு அதே பாவங்களைத் திரும்பத் திரும்பச் செய்கிருர்கள், கொள்ளையடித்த களவெடுத்த காசில் ஒரு பங்கைக் கொடுத்தால் பாவம் மன்னிக்கப்படும் என்று சிலர் எண்ணுகிருர்கள். இக்காசிற் கோயில் கட்டுகிருர் கள் குளங்கள் வெட்டுகிருர்கள். பூசைகள் செய்விக்கிருர் கள். புண்ணிய ஸ்தலங்களுக்கு யாத்திரை யோகிருர்கள். பூசாரிகளுக்குங் கோவில்களுக்குங் காசு கொடுத்து புண்ணியத்தை வாங்கலாம் எனச் சிலர் எண்ணுகிருர்கள். போரில் தமக்கு வெற்றியளிக்குமாறு இறைவனை வேண்டு கிருர்கள். களவெடுக்கப் போகு முன் காளிக்குப் பூசை செய்கிருர்கள். சமயத்தின் பேரில் துவேஷங்களைப் பரப்பு கிருர்கள் கொலை செய்கிருர்கள். சிலர் பாவமன்னிப்புக் கொடுப்பதற்கு இவ்வுலகில் தம்மைத்தாமே இறைவனின் பிரதிநிதிகளாக நியமித்து விட்டனர். இவை யாவும் மோகங்களினல் உண்டான பேதை உணர்ச்சிகளாகும்.
தாபன மதங்கள் இவற்றைப்பயன்படுத்திவியாபாரஞ் செய்கின்றன. எனினும் இறைவன் பாவங்களை மன்னிப் பான் என்பதிலும் ஒரளவு உண்மை உண்டு. எவன் தனது பாவங்களை உணர்ந்து தன்னை இறைவனுக்குஅர்ப்பணித்து இறையுணர்ச்சியுடனும் அன்புடனுஞ் செயற்படுகின்றனே அவனுக்கு வினைப்பயனில்லை. இன்பதுன்பங்களில்லை. மன் னிப்புக் கேட்பதினல் இந்நிலை உண்டானல் மன்னிப்புக் கேட்பது தவறன்று. நாவொன்று சொல்ல மனமொன்று நினைக்கின் இவ்வெளி ஆசாரத்தினற் பயனில்லை. அடியார் களின் தேவார திருவாசங்களை படியுங்கள்.இவர்கள் தமது எளிமையை நினைந்து நினைந்து உருகுகிருர்கள்.இறைவனின் பெருமையை நினைந்து நினைந்து பேரின்பம் அடைகிருர்கள். தமது மலங்களை அறுத்து முத்தியளிக்குமாறு இறைவனை வேண்டுகின்றனர்.

83
நான் எனது என்ற ஆணவ முனைப்பின்றிச் சுயநல நோக்கமின்றி விருப்பு வெறுப்பின்றி அன்பே அடிப்படை யாக எல்லாம் இறைவன் செயலென நினைந்து செயலாற் றின் வினைப்பயன் செய்தவனைச் சேராது; ஆகாம்ய வினைப்பயன் இல்லை எஞ்சிய சஞ்சிதத்தை அனுபவித்துக் கழிந்த பின்பு ஆன்மாவுக்குப் பிறப்பிறப்பில்லை. இந்த உண்மையைக் கிருஷ்ண பகவான் பகவத்கீதையில் அருச் சுனனுக்குக் கூறுகிருரர். "அர்ச்சுன! செயலாற்ற நீ கடமைப்பட்டுள்ளாய். உனது கடமையைச் செய். செயலின் பயனில் உனக்கு உரிமையில்லை. அதை எனக்கு ஒப்படைத்துவிடு. இதை உணர்ந்து நீ செயலாற்றின் வினைப்பயன் உன்னைச் சேராது."
யான் செய்தேன்பிறர்செய்தார் என்னதியான்என்னும் இக்கோனை ஞானனரி யால்வெதுப்பி நிமிர்த்துத் தான் செவ்வே கின்றிடஅத் தத்துவன்தான் நேரே தனையணித்து முன்னிற்கும் வினையொளித்திட்டோடும்
நான் செய்தேன் எனும் அவர்க்குத் தான் அங்கின்றி நண்ணுவிக்கும் போகத்தைப் பண்ணுவிக்குங் கன்மம் ஊன்செய்யா ஞானந்தான் உதிப்பின் அல்லால் ஒருவருக்கும் யான் எனதிங் கொழியா தன்றே.
யான் எனது என்னும் ஆணவ மலத்தை ஞானத்தினல் எரித்து இறையுணர்ச்சியுடன் நிற்க இறைவன் தானகத் தோன்றி வந்தருள்வான். வினைப்பயன்கள் இல்லாது போகும். யான் எனது என்னுமவர்க்கு இறைவன் தோன் முன் ஆகாமிய வினைப்பயனை ஆன்மாவோடு சேர்ப்பான்; சிற்றறிவு நீங்கிப் பதிஞானத்தைப் பெற்ருலன்றி நான் எனது எனும் அகங்காரம் நீங்காது.

Page 44
84
நஞ்செயல் அன்றிந்த நாமற்றபின் நாதன் தன்செயல் தானேயென் றுந்தீபற தன்னையே தந்தான்என் றுந்தீபற.
கண்டத்தைக் கொண்டு கருமம் முடித்தவர் பிண்டத்தில் வாராரென் றுந்தீபற பிறப்பிறப் பில்லையென் றுந்தீபற.
(திருவுந்தியார்) பற்றின்றிக் கருமத்தைச் செய்வதே யோகம் அதுவே சன்னியாசமுமாகும். (யோகசுவாமிகள்)

9. மரணத்துக்குப்பின்
ஆன்மா என்றும்அழியாதது. பிறக்கமுன்னும் இருந்தது. இறந்த பின்பும் இருக்கும். உயிர்த்தத்துவம் வேறு சடத் தத்துவம் வேறு. ஆன்மாவுக்கு இரு சரீரங்களுள-துரல சரீரம்,சூக்கும சரீரம்.இறைவன் சக்தியும் ஆன்மாவோடும் இரண்டறக் கலந்து நிற்கிறது. இறக்கும் போது ஆன்மா வுக்குத் தூல சரீரத்துக்கு முள்ள தொடர்பு முற்ருக அற்று விடுகிறது. சூக்கும சரீரத்துடனும் (கன்மமும் உட்பட) இறை சக்தியுடனும் ஆன்மா தூால சரீரத்திலிருந்து வெளியேறுகிறது. கன்வின் போது ஆன்மா தூால சரீரத்தி லிருந்து வெளியேறுகின்ற போதினும் ஆன்மாவை யுந்துரல சரீரத்தையுந் தொடுக்கும் இழை அறுந்து போவதில்லை. மரணத்தின் போது இந்த இழை அறுந்து விடுகிறது. இறந்துவுடன் ஆன்மாவின் நிலை அன்னைவயிற்றில் உதிக்கும் போது அதன் நிலையை ஒத்ததாகும்.
உறங்குவது போலுஞ் சாக்காடு உறங்கி விழிப்பது போலும் பிறப்பு. (திருக்குறள்)
பூதன சரீரம் போனல் புரியட்ட ரூபந் தானே யாதனு சரீர மாகி இன்பதுன்பங்க ளெல்லாம் நாதனர் ஆணையுய்க நரகொடு சுவர்க்கந் துய்த்துத் தீதிலா அணுவாய் யோனி சேர்ந்திடுஞ்சீவன் எல்லாம். (சிவஞான சித்தியார்)

Page 45
86
தூல சரீரத்தை விட்டு நீங்கியவுடன் ஆன்மா சூக்கும சரீரத்தில் நிற்கிறது. இச்சரீரம் அருவானது. சூக்கும சரீரம் அநாதியே. ஆன்மா கேவலத்திலிருந்து வெளிவந்த போது அதற்கு இறைவனல் அளிக்கப்பட்டதாகும். இச் சரீரம் முத்தி அல்லது சங்கார காலம் வரையும் ஆன்மா வோடிருக்கும். இச்சூக்கும சரீரத்திற் கன்மம் செய்யவும் இன்பதுன்பங்களை அனுபவிக்கவும் இயலாது. நல்வினை களின் பயனுக ஆன்மா சுவர்க்கங்களுக்கு இன்பங்களை அனுபவிக்கப் போகும்போது பூதசாரச் சரீரம் எடுக்கிறது. துன்பங்களை அனுபவிக்க நரகம் போகும் போது யாதன சரீரம் எடுக்கிறது. இவ்வுலக வாழ்க்கையுடன் ஒப்பிடும் போது ஆன்மாவின் மறுவுலக வாழ்க்கை பன்ம்டங்கு நீடித்ததாக இருக்கலாம்.
ஒரு பிறப்புக்கும் அடுத்த பிறப்புக்கும் இடைப்பட்ட காலத்தவணையை அமெரிக்க மெய்ஞானி கெயிசு பலவா யிரம் ஆண்டுகளாகக் கணிக்கிருர். தமக்கு ஒரு வருடம் மறு உலகத்தவருக்கு ஒரு நாளாகும். சில வேளைகளில் ஆன்மாக்கள் விரைவில் மறு பிறப்பு எடுப்பதுமுண்டு. உலக ஆசைகளும் மோகங்களும் நீங்காத ஆன்மாக்கள் இவ்வுலக மாயா காரியங்களினுல் ஈர்க்கப்பட்டு மறுபடியும் பிறக்கின்றன. குக்கும உடம்போடு திரும்பி வந்து தூல வுடம்பு எடுக்கின்றன. எடுக்கும் தூலவுடம்பு சூக்கும உடம்பின் பிரதி போன்றதாகும். செய்த கன்மத்துக்கு ஈடானதாகவும் இருக்கும். அனுபவித்துக் கழிக்கப்படாத வரையும் கன்மம் சூக்கும உடம்பில் வித்துப்போல இருக்கும் கன்மம் உடம்புக்கும் உடம்பு கன்மத்துக்குங் காலாகும். w
உடல்விடா யோனிபற்றிஉதிப்பினும்உதிக்கும்ஒன்றில் படர்வுரு றுறும்பா வத்தாற் பாடணம் போற்கிடந்து கடனதாங் காலஞ் சென்ருல் கடுநரகதனில்வீழ்ந்தங்கு இடருறும் உருவம் கன்மத்து அளவினில் எடுக்கும்
அன்றே. (சிவஞான சித்தியார்)

87
பூதன சரீரத்திலிருந்து நீங்கும் போது சில ஆன்மாக் கள் யாதன சரீரம் எடுத்து நரகங்களுக்குப் போகாது உடனே மறுபிறப்பு எடுத்தலுமுண்டு. ஒரு யாதன சரீரத் திலிருந்து நீங்கும் போது பூதன சரீரம் எடுக்காது வேருெரு யாதன சரீரம் எடுத்தலுமுண்டு (அதாவது கடும் பாவஞ்\ செய்த ஆன்மாக்கள் மறுபிறப்பு எடுப்பதற்கு முன் பல யாதன சரீரங்கள் எடுத்துப் பல நரகங்களுக்குப் போவது முண்டு) பெரும்பாவங்கள் செய்த ஆன்மாக்கள் யாதனு சரீரம் எடுத்து நரகத்துக்குப் போகமுன், பன்னெடுகாலம் இவ்வுலகிலே பாடாணம் போலக் கிடக்கின்றன. பின்பே நரகத்துக்குச் செல்லுகின்றன. கடுநரகிலே பெருந்துன்பங் களை அனுபவித்தபின்பு, இவ்வுலகிலே மறுபடியும் பிறக் கின்றன அப்போது அவை எடுக்கும் உடமட இவ்வுலகிலே அவை செய்த கன்மங்களுக்கு ஈடானதாக இருக்கும்.
பன்னகம்அண்ட சங்கன் பரகாயந்தன்னிற்பாய்வோர் துன்னுதோல் முட்டையாக்கை துறந்துசெல் வதுவே
போல உன்னிய உயிர்கள் தூல உடல்விட்டு வானின் ஊடு மன்னிடும் நனவு மாறிக்கனவினை மருவு மாபோல்.
- (சிவஞான சித்தியார்)
பழைய தோலை விட்டுப் புதிய தோலைப் பற்றும் பாம்பு போலவும் முட்டையை விட்டு வெளியேறும் பறவை போலவும் ஒருடம்பிலிருந்து வேருேர் உடம்புக்குட் புகும் பரகாயப் பிரவேசிகன் போலவும மரணத்தின் போது உயிர்கள் தூல உடம்பை விட்டு நீங்கி வானில் மிதந்து செலனுகின்றன. பின்பு மற்ருேர் உடம்பை அடைகின்றன: இது நனவு நிலை மாறிக் கனவு நிலை அடைதலை ஒத்ததாகும்
இந்நிரையின் ஐந்துசுத்தம் ஏழ்சுத்தா சுத்தம் எண்மூன்றும் அசுத்தமெனும் இவைமுப்பத் தாரும் மன்னியதத் துவங்களிடை மயங்கிநெடுந் துயர்தாம் மருவும்உரு நிலையழிய வரும்பொழுது வரியார்

Page 46
88
பன்னகம்அண் டசம்கனவு படர்வகையே முன்னம் பகரவரும் கலாதிநிலை பரவியகுக் குமமாம் தன் உருவில் அணைந்துபயன் அருந்திஅரன் அருளால் தரையினிடை வருமென்று சாற்றும் நூலே.
(சிவப்பிரகாசம்)
ஆன்மா தூல சரீரத்தில் முப்பத்தாறு தத்துவங்க ளோடும் பொருந்தி நின்று தன்னையும் தலைவனையும அறி யாது மயங்கித் துயரடைகிறது. இத்தூல சரீரம் அழியும் போது சூக்கும சரீரத்தில் நிற்கிறது. பூதகார சரீரம் யாதன சரீரம் முதலியவற்றைப் பொருந்திச் சுவர்க்க நரகங்களில் இன்பதுன்பங்களை அனுபவிக்கிறது. பின்பு தூல சரீரம் எடுத்து இவ்வுலகிற் பிறக்கிறது.
தேவர்களை வணங்குவோர்தேவர் உலகஞ்செல்வர். பிதிர்களை வணங்குவோர் பிதிர்கள் உலகஞ் செல்வர். ஆசைகள் மோகங்களினல் உந்தப்பட்டோர் காம உலகஞ் செலவர். என்னை வணங்குவோர் பரிபூரண நிறைவெய்தி என்னை வந்தடைவர். (பகவத்கீதை )
இச் சட வுலகம் ஒன்றேயுளதென நாம் சாதாரணமாக எண்ணுகிருேம். வேறு பல உலகங்களுமுள. தூல உலகமே யன்றி சூக்கும அதிசூக்கும உலகங்களுமுள. இவற்றுக் கிடையில் இடைவெளியில்லை. ஒன்றையொன்று ஊடுருவி யுஞ் செல்லலாம். இயல்பிலுந் தன்மையிலும் பரிமாணங் களிலும் இவை வித்தியாசப்பட்டவைகளாகும். மேனட்டு ஆவியியலாளர் இவற்றைச்சடவுலகங்கள், ஒளிஉலகங்கள், மின் உலகங்கள், காந்த உலகங்கள், மின்ம (electronic) உலகங்கள் என்கின்றனர். எமது நூல்கள் இவற்றைக்கீழ் உலகங்கள் மேல் உலகங்கள் எனவும், சுவர்க்கங்கள் நரகங்கள் எனவும், எமன் உலகங்கள், பிதிர் உலகங்கள், பிசாசுகள் உலகங்கள், காந்தர்வர் உலகங்கள், தேவர், உலகங்கள், பிரமன் உலகங்கள் எனவுங்குறிப்பிடுகின்றன.

89
பரமசிவன் எல்லா உலகங்களையுங் கடந்து நிற்கிருன். அண்டமும் அணுவும் அளவில் வித்தியாசப்படினும் நன்மை யில் ஒன்றே.
அதுபோல அகவுலகும் புறவுலகும் ஒத்தவையாகும். ஆகவே இறைவன் எமக்கு உள்ளேயும் இருக்கிருன். தூல உலகில் தூல உடம்பில் வாழும் எமக்குச் சூக்குமம் நம்ப முடியாததாக இருக்கலாம். மறைஞானிகள் தூலத்தை யுஞ் சூக்குமத்தையும் ஒருங்கு காண்கின்றனர். இவற்றில் அதிசூக்குமமாக எங்கும் பரந்தும் கலந்துமிருக்கும் இறை. வனையுங் காண்கின்றனர். இறக்கும் போது ஆன்மாதுரல. உடம்பையும் தூலவுலகையும் விட்டுச் சூக்கும உடம்புடன் சூக்கும உலகங்களுக்குச் செல்லுகிறது என்றும் எம்மைப் பிரியாதிருக்கும் இறைசக்தியுங் கூட வருகிறது. ஆன்மா வின் மும்மலங்களும் வருகின்றன. ஆன்மா சூக்கும சரீரத்திற் செல்லுகிறது. போகும் இடங்களுக்கேற்ற உடம்பெடுக்கிறது. பிறக்கும் போது வேறேர் உலகி லிருந்து இவ்வுலகுக்குச் சூக்கும உடம்புடன் வருகிறது. மாதா வயிற்றிற் புகுந்து தூலவுடம்பு எடுக்கிறது. ஒரு வகையிற் பார்க்கும் போது பிறப்பு இறப்பாகும். இறப்புப் பிறப்பாகும்.
சைவசித்தாந்தச் சாத்திர நூல்கள் முப்பொருட்களின் உண்மைகளையும் ஆன்மாக்கள் ஆணவங் கன்மம் மாயை எனும் மும்மலங்களிலுமிருந்தும் நீங்கி முத்தியடையும் மார்க்கங்களையும் விசேடமாகக் கூறுகின்றன. ஆன்மாக். களின் மறுவுலக வாழ்க்கையைப் பற்றி விவரமாகக் கூறுவ தில்லை, இவை பற்றிய விவரங்களைப் புராணங்கள் கூறுகின்றன. புராணங்கள் ஆப்த வாக்கியங்களல்ல, மிகைப்படுத்திக் கூறுவது புராண மரபாகும். எனினும் இவற்றிலிருந்தும் ஓரளவு உண்மையை உணரலாம். ஆன்மாவின் மறுவுலக வாழ்க்கையைப் பற்றிய பல தமிழ் நூல்களை எனது இளமையிற் படித்திருக்கிறேன். இன்று
சைவ-6

Page 47
90
இந்நூல்கள் மறைந்துவிட்டன. இந்நூல்களின் சாரத்தை இங்கு சுருக்கமாகக் கூறுகிறேன். அதற்குமுன் இறக்கும் போது ஆன்மாவின் நிலையை மறுபடியும் சுருக்கமாகப்
பார்ப்போம்.
மரணங் கிட்டக்கிட்ட உடற்சக்திகள் வலுவிழக் கின்றன. புலனறிவுகள் நின்றுவிடுகின்றன. மயக்கமும் மங்கலுமுண்டாகின்றன, தேகம் முழுவதும் பரந்திருந்த ஆன்மா படிப்படியாக ஒடுங்குகிற்து. ஆனற் சிலவேளை களிற் சூக்கும மனமும் சூக்குமக் கருவிகளும் அதி விழிப் பாகத் தொழிற்படுகின்றன. இறப்போன் தொலைவிலுள்ள காட்சிகளைக் காண்கிருன். தொலைவிலுள்ளவர்களுடன் தொடர்பு கொள்ளுகிருன். படிப்படியாக நனவு நிலை கனவுநிலையாகிறது. இறக்கப் போவோன் தனது வாழ்க்கை முழுவதையும் படக்காட்சிபோலக் காண்கிருன், இறந்த உற்ருர் உறவினர் நண்பர்களைக் காண்கிருன். இவர்களுடைய ஆவிகள் இறக்கப் போவோனின் ஆவியைக் கூட்டிச் செல்ல வருவதாகக் கூறுகின்றனர்; எமதூதர் வந்து ஆன்மாவை எடுத்துச் செல்லுவதாக வேறு சிலர் கூறுகின்றனர்.
எவ்வாறு நோக்கினும் இறப்புப் புரட்சிகரமான மாற்றமாகும். இது வரையும் ஆன்மா உடம்பையும் புறவுலகையும் நம்பியிருந்தது. இப்போது புறவுலகத் தொடர்புகள் அற்று விட்டன. உடம்பிலிருந்து வெளி யேறுந் தருணம் வந்து விட்டது. பட்டம் பதவி பணம் பண்டம் செல்வம் கீர்த்தி புகழ் பெண்டிர் பிள்ளைகள் உற்ருர் உறவினர் நண்பர் இனம் மொழி. மதம்-நான் எனது என்றிருந்த யாவும் தவிடு பொடியாகி விட்டன. ஆன்மா மயங்குகிறது திகைப்படைகிறது. ஆதாரமற்றுத் தயங்குகிறது. இப்போது ஆன்மாவுக்கு ஆதாரமாக நிற்பவன் இறைவன் ஒருவனே. இறைவன் நாமத்தை நினை அவனில் உனது மனத்தைப் பதியவை. அவனுணர்வாக

; : 9
அவனே ஆதாரமாகவிரு. இறந்தபின் தேவார திருவாசகம் படிப்பதைப் பார்க்கினும் இறக்கும் போது இவற்றைப்
படிப்பது நன்ருகும். வாழ்க்கையில் ஒவ்வொரு நாளும் படிப்பது மேலும் நன்ருகும்
வைதிகங்கள் தேவார திருவாசங்களைப் படிப்பதற்கும் காலநேர இடவரையறைகள் வகுக்கின்றன. சுத்தம் அசுத் தம் பேசுகின்றன. இவர்களுடைய மனமே அசுத்தமன்றி வேறு அசுத்தமில்லை. வெளி ஆசாரங்களினலும் வாய்ச் சுலோகங்களினலும் மன அசுத்தத்தைக் கழுவ முடியாது.
கார்மாமிசை காலன் வரிற் கலயத் தேர்மாமிசை வந்தெதிர்ப் படுவாய் தார்மார்ப வலாரிதலாரி யெனும் சூர்மா மடியத் தொடு வேலவனே.
சாகா தெனையே சரணங்களிலே காகா நமஞர் கலகஞ் செய்நாள் வாகா முருகா மயில் வாகனனே யோகா சிவஞானுெப தேசிகனே.
(கந்தரனுபூதி)
புலன் ஐந்தும் பொறிகலங்கி நெறிமயங்கி
அறிவழிந்திட் டைம்மேல் உந்தி
அலமந்த போதாக அஞ்சேலென் றருள்செய்வான்.
(திருஞானசம்பந்தர்)
நமன்வரின் ஞானவாள் கொண்டே எறிவன் சிவன்வரின் நானுடன் போவது திண்ணமே பவம் வரும் வல்வினை பண்டே யறுத்தேன் தவம்வரும் சிந்தைக்குத் தான் எதிராரே.
(திருமந்திரம்)

Page 48
92
வெட்டுங் கடாமிசைத் தோன்றும் வெங்கூற்றன்
விடுங்கயிற்ருற் கட்டும் பொழுது விடுவிக்க வேண்டுங் கராசலங்கள் எட்டுங் குலகிரி யெட்டும்விட்டோட வெட்டாதவெளி மட்டும் புதைய விரிக்குங் கலாய மயூரத்தனே.
(கந்தரலங்காரம்)
இறக்கப் போவோன்முன் இறைவன் படங்களை வைப்பதும் இறுதியிற் பசுதானஞ் செய்வதும் எமது வழக்கமாகும், (ஆன்மாவை இறைவனுக்கு ஒப்படைப் பதே பசுதானம்), இறக்குத் தறுவாயில் இருப்பவன் தனது முழு மனத்தினுலும் இறைவனைத் தியானித்து உலக பாசங் களையும் மோகங்களையுந் துறந்து அவனுணர்ாைக நிற்க வேண்டும். இவ்வாறு செய்யின் ஆன்மா சுலபமாகத் தூலவுடம்பிலிருந்து வெளியேறும். இல்லாவிட்டால் மரணம் பெரும் போராட்டமாக இருக்கும். இறக்கும் போது ஆன்மா நனவு நிலையிலிருந்து கனவு நிலைக்குப் போகிறது. 'உறங்குவது போலுஞ் சாக்காடு’. பிறக்கும் போது ஆன்மா கனவு நிலையில் இருந்து நனவு நிலைக்கு வருகிறது.
இறக்கும் போது ஆன்மா உடம்பின் பல பாகங்களி லிருந்து தன்னை ஒரு மையத்துக்கு ஒடுக்கிச் சூக்கும உடம் புடன் வெளியேறுகிறது. வெளியேறுங் காட்சியைச் சிலர் காண்கின்றனர். இக்காட்சி ஒருவகைப்பட்ட சூக்குமப் புகைப்படலம் போன்றதாகும். மேனுட்டவர் சிலர் இதை நுண்ணிய கருவிகளினற் படம் பிடித்துக் காட்டுகின்றனர். ஆன்மா தூலவுடம்பிலிருந்து பிரித்தவுடன் அதன் புலன் அறிவுகள் மங்குகின்றன. துயில்நிலையில் வானிற் சூக்கும சரீரத்தில் மிதந்து செல்லுகிறது. கீழுலகங்களைக் கடந்து ஆன்மா எமலோகஞ் சென்றடைய ஒருவருடகாலஞ் செல்லும். ஆறுகளையும் மலைகளையுங் காடுகளையும் வனந் தரங்களையும் ஆன்மா கடந்து, செல்லுகிறது. பாதையில்

93
தடைகளையும் இடர்களையும் சந்திக்கிறது. கெட்ட பிசாசு கள் ஆன்மாவைத் தொல்லை செய்கின்றன, காலத்துக்குக் காலஞ் சிலவிடங்களில் தங்கி இளைப்பாறிய பின்பு பிரயாணத்தைத் தொடருகிறது. ஆன்மாக்கள் பற்பல விடங்களிற் சந்தித்துக் கூட்டங் கூட்டமாகச் செல்லு கின்றன. எமது வழக்கங்கள் பலவற்றுக்கு இந்த நம்பிக் கையே காரணமாகும். இறந்தவர் பேரில் அந்தியட்டி செய்கிருேம். ஒருவருட காலம் மாதா மாதம் மாளயங் கொடுக்கிருேம். தான தர்மங்கள் செய்கிருேம். எமது நல்லெண்ணங்களும் தான தருமங்களினல் உண்டாகும் புண்ணியங்களும் இறந்தவனின் ஆன்மா எங்கிருக்கினும் அங்கு அதைச் சேருமெனவும் அந்த ஆன்மாவுக்குச் சாந்தி யளிக்கும் எனவும் தடைகளை நீக்கிப் பிரயாணத்தைச் சுலபமாக்கும் எனவும் நம்புகிருேம்.
இந்த நம்பிக்கையை மூடநம்பிக்கை என நாம் தள்ளி விடமுடியாது. சூக்கும உலகைப் பற்றிய அறிவு எமக் கில்லாதபடியினல் முடிவு கூற முடியாது. அதே வேளையில் இந்நம்பிக்கையைப் பயன்படுத்திக் காவிகளும் பூசாரிகளும் வைதிகங்களும் மக்களை ஏமாற்றிச் சுரண்டுஞ சாத்தியத் தையும் ஒப்புக் கொள்ள வேண்டும்.
ஒரு வருடகால முடிவில் இறந்தவன் ஆன்மா எடி லோகத்தை வந்தடையும். எமதுரதரே அதை அங்கு கொண்டு செல்லுகிருர்கள் எனச் சிலர் கூறுகின்றனர். இவ்வுலகில் ஆன்மாசெய்த புண்ணியபாவங்கள்எமராஜன் கோர்ட்டில் விசாரணை செய்யப்படுகின்றன. நாம் செய் யும் புண்ணிய பாவங்களைச் சித்திரபுத்திரனர் தவருது எழுதி லைக்கிருர் எனவும் எழுதியவற்றைக் கோர்ட்டில் வாசிக்கிருர் எனவும் எமது புராணங்கள் கூறுகின்றன. இஃது எழுதாத எழுத்து, தவருத கணக்கு. சாட்சியின்மை யினல் பொய்ச்சாட்சியினுல் சட்ட நுணுக்கத்தினுல் வாதத் திறனினல் தப்பமுடியாது. தராசு தவறது. இக்காரணம்

Page 49
94
பற்றியே எமராஜனைத் தர்மராஜன் என்கிருேம். ஒளிக். காதும் மறைக்காதுஞ் செத்தவனின் மனசாட்சியே. உண்மையைக் கூறும் என்கின்றனர். இக்கோர்ட்டு தீர்ப் பளிக்கிறது. தண்டனை விதிக்கிறது.
இவ்வுலகிற் பாவங்கள் செய்தவர் அப்பாவங்களுக் கீடான துன்பங்களை நரகங்களில் அனுபவிப்பர். புண்ணி யங்கள் செய்தவர் சுவர்க்கங்களில் இன்பங்களை அனுபவிப் பர். இரண்டுஞ் செய்தவர் சுவர்க்கங்களுக்கும் நரகங்களுக் கும் போவர். புண்ணியமோ பாவமோ ஒன்றையொன்று ஈடுசெய்யாது. நரகத்துக்குப்போகும் போது ஆன்மாஇருள் மயமான யாதன சரீரத்தை எடுக்கிறது. சுவர்க்கத்துக்குப் போகும் போது ஒளிமயமான பூதசார சரீரத்தை எடுக்கிறது.
பண்டை எகிப்தியரும் பிளேற்ருே முதலிய பண்டைக் கிரேக்கரும் எமது புராணக்காரரும் நரகவேதனைகளை உருவகப்படுத்தி மிகைப்படுத்திக் கூறுகின்றனர். பல வேளைகளிற் புராண வருணனைகள் சமயக் கொள்கை. களுக்கு முரண்பட்டவையாகவும் இருக்கின்றன. உண்மை. யில் எமது ஆசைகளும் மோகங்களும் காமங்களும் குரோ தங்களும் துவேஷங்களுமே இறந்த பின்பும் எம்மைத் தொடருகின்றன. இராட்சதராகவும் பிசாசுகளாகவும் தோன்றுகின்றன. நாம் செய்த வினைகளே எம்மை வந்துறுத்துகின்றன. இவையே எமது நரகங்கள். இவ் வுலகிற் கொடுமைகள் பல செய்தும் மக்களைச் சுரண்டியும் பணத்தையுஞ் சொத்துகளையுந்திரட்டியவர் நரகங்களிலும் இவற்றைத் திரட்ட எத்தனிப்பர், பணப் பிசாசுகளாக அலைந்து திரிவர். காவி போட்டு விபூதி பூசிப் போலி நாடகம் நடித்தவர் அங்கும் நடிப்பர். இனமதத் துவேஷி கள் அங்கும் இனமதத் துவேஷம் பேசுவர். சர்வாதிகாரி கள் நரகங்களிலும் சர்வாதிகாரம் நடத்த எத்தனிப்பர். சோஷலிசம் சனநாயகம் தர்மம் பேசி மக்களை ஏமாற்றிய

95
அரசியல் வாதிகள் நரகங்களிலும் ஏனைய பிசாசுகளை ஏமாற்ற எத்தனிப்பர்.
தொழிலாளரையும் நுகர்வோரையுஞ் சுரண்டி வாழ்ந்த முதலாளிகள் நரகங்களிலுஞ் சுரண்ட எத்தனிப் பர். அட்டூழியங்கள் செய்த பொலிசு இராணுவக்காரர் அங்கும்போலிஇராணுவக்காரராகி அட்டூழியங்கள்செய்ய எத்தனிப்பர். காடையர் நரகங்களிலுங் காடை யரே. இவர்களுடைய எண்ணங்களே இவர்களை வருத்துகின்றன. கொலை செய்தோர் கொலை செய்யப்படுவர். களவெடுத் தோர் களவெடுக்கப்படுவர். மற்றவர்களைத் துன்புறுத்தி யவர் அதே துன்பங்களை அனுபவிப்பர். அதிகாரிகள் அடிமைகளாவர். தன் வினைகளின் பயன்கள் தன்னை வந் தடைகின்றன. தன்வினை தன்னைச் சுடும். நரகங்தளிலும் சுவர்க்கங்களிலும் ஆன்மா தான் செய்த கன்மங்களின் பயனை ஓரளவுக்கு அனுபவிக்கிறது பாசங்களும் மோகங் களும் நீங்கவில்லை. இவற்றையே ஆன்மா நினைத்துக் கொண்டிருக்கிறது. பூவுலகில் மறுபடியும் பிறக்க ஆசைப் படுகிறது; ஆசை மோகங்களுக்கும் எஞ்சிய கன்ம மூட்டைக்கும் ஈடான உடம்பை ஆன்மா எடுக்கிறது. மறுபடியும் பிறக்கிறது. இறக்கும்போது நாம் கொண்டு சென்றது வினைப்பயன்மூட்டை, பிறக்கும்போது கொண்டு சென்றது வினைப்பயன்மூட்டை. பிறக்கும்போது கொண்டு வருவதும் வினைப்பயன் மூட்டை. ஆன்மா குக்கும உடம் புடன் வந்து கருப்பைக்குட் புகுந்து தூலவுடம்பெடுக்கிறது தன்னுணர்வும், இவ்வுலக வாழ்க்கையிற் பாசங்களும் மோகங்களுங் கவர்ச்சியும் இருக்கும் வரையும் ஆன்மா பிறந்தும் இறந்தும் உழல்கிறது.

Page 50
10. Որ]] մIյնւ
கன்மமும் மறுபிறப்பும் இந்து மதத்தின் அடிப்படைக் கொள்கைகளாகும், இறைவனையும் ஆன்மாவையும் ஒப்புக் கொள்ளாத இந்திய தரிசனங்களும் கன்மத்தையும் மறு பிறப்பையும் ஒப்புக் கொள்ளுகின்றன. பண்டைக் காலத்தில் இந்திய மக்களேயன்றி எகிப்திய இந்திய கிரேக்க மக்களும் ஏனைய பல நாட்டவரும் இறக்கும் போது உயிர் அழிவதில்லை எனவும் அது மறுபிறப்பெடுக் கிறது எனவும் நம்பினர். பைதோகிறஸ் (Pythogiras) எம்போடொக்கிளஸ் (Empodocles) பிளேற்ருே (Plato) வேர்ஜில் (Virgi) ஒவிட் (Ovid) முதலிய பண்டைக் கிரேக்க தத்துவஞானிகள் மறுபிறப்பின் உண்மையை வற்புறுத்தினர். பபிலோனியாவிற் சிறைவாசத்துக்குப் பின்பு யூதரும் இக்கொளகையை ஏற்றனர். பழைய புதிய விவிலிய வேதங்களில் மறுபிறப்புக் கொள்கைக்கு ஆதாரங் களைக் காணலாம். கி.பி 533 வரையுங் கிறித்தவர்களும் மறுபிறப்புக் கொள்கையை ஏற்றனர். கி.பி. 583 இற் சக்கரவர்த்தி யஸ்ரினன் இதனைச் சமய முரண் கருத்தாகத் தடை செய்தான். எனினும பல்லாயிரம் மேனுட்டு அறிஞர்கள் மறுபிறப்புக் கொள்கையைநம்பினர். இன்றும் நம்புகின்றனர். பல கிறித்துவ ஞானிகள் மறுபிறப்பை ஏற்றுக் கொள்கின்றனர்.
காலத்துக்குக் காலஞ் சிலர் நமது மறுபிறப்பைப் பற்றிய உணர்வுகளுடன் பிறக்கின்றனர். இச் சந்தர்ப் பங்கள் பலவற்றை அறிஞர்கள் ஆராய்ந்து தமது முடிபு

97
க்ளை வெளியிட்டிருக்கின்றனர். பழைய பிறப்புக்களைப் பற்றியநினைவுகள் எமது அடித்தளமனத்தில் இருக்கின்றன. சிலருக்கு இவற்றை மேற்றள மனத்துக்குக் கொண்டுவரும் அசாதாரண சக்தியுண்டு. இச் சூக்கும மனம் முத்தி வரையும் ஆன்மாவை விட்டு நீங்காத அந்தக் கரணங்களில் ஒன்ருகும். தூல சரீரத்தின் மூளையிலிருந்து வித்தியாசப் பட்டது. ஒருவரை வசியப்படுத்தி (Hypnotise) ஆழ்துயில் (Trance) நிலையில் இருத்தினல் அவருடைய சூக்கும மனத்தி, லுள்ள நினைவுகளை மேற்றள மனத்துக்குக் கொண்டு வரலாம். அவருடைய மனத்தைப் பின்னேக்கிச் செல்லச் செய்து (Mental Regression) முற்பிறப்புக்களையும் அவற்றில் நடந்தனவற்றையும் நினைவுறுத்தலாம். இன்று புலன் கடந்த உளவியல் (Para-Psychology) ஆராய்ச்சிகள் நடைபெறுகின்றன.
இந்தியா அமெரிக்கா இங்கிலாந்து உருசியா முதலிய நாடுகளில் இவ் உளவியல் ஆராய்ச்சிக் கழகங்களுள இக் கழகங்களின் அறிக்கைகள் மறுபிறப்பை நிரூபிக்கின்றன.
“அர்ச்சுன நீயும் நானும் இதற்கு முன்புபல பிறவி கள் எடுத்து விட்டோம் எனது பிறவிகளை எனக்குத் தெரியும். உனது பிறவிகளை நீ மறந்து விட்டாய்."
“இவ்வுடம்பு குழந்தைப் பருவம், இளமை,
மூப்பு முதலிய நிலைகளை எவ்வாறு அடைகிறதோ
அவ்வாறு இவ்வுடம்பில் உறையும் ஆன்மா பல்வேறு உடம்புகளை அடைகிறது."
*மனிதன் எவ்வாறு பழைய உடைகளைக் களைந்து விட்டுப் புதிய உடைகளை அணிகின்ருனே அவ்வாறு ஆன்மா பழைய சரீரங்களை விட்டுப் புதிய சரீரங்களை அடைகிறது."

Page 51
98
'பிறந்தவனுக்குச் சாவு எவ்வாறு நிச்சயமோ அவ்வாறு இறந்தவனுக்குப் பிறப்பும் நிச்சயமாகும்." (பகவத்கீதை)
அன்னை எத்தனை எத்தனை அன்னையோ? அப்பன் எத்தனை எத்தனை அப்பனே? பின்னை எத்தனை எத்தனை பெண்டீரோ? பின்னை எத்தனை எத்தனை பிள்ளையோ? முன்னை எத்தனை எத்தனை சன்மமோ? மூடனயடி யேனும் அறிந்தி லேன் இன்னம் எததனை எத்தனை சன்மமோ? என் செய்வேன்? கச்சியேகம்ப நாதனே.
(பட்டினத்தார்)
புல்லாகிப் பூடாய் புழுவாய் மரமாகிப் பல்விருத மாகிப் பறவையாய்ப் பாம்பாகிக் கல்லாய் மனிதராய்ப் பேயாய்க் கணங்களாய் வல்லசுர ராகி முனிவராய்த் தேவராய்ச் செல்லாஅ நின்றஇத் தாவா சங்கமத்துள் எல்லாப் பிறப்பும் பிறந்திழைத்தேன் எம்பெருமான் மெய்யேஉன் பொன்னடிகள் கண்டின்று வீடுற்றேன் (மாணிக்கவாசகர்)
எண்ணரிய பிறவிதனில் மானிடப் பிறவிதான்
யாதினும் அரிதரிதுகாண் இப்பிறவி தப்பின லெப்பிறவி வாய்க்குமோ
எதுவருமோ அறிகிலேன்.
(தாயுமானவர்}
கணிப் பொருளாக இருந்திறந்து தாவர மாகினேன் தாவர மாக இருந் திறந்து மிருக மாகினேன் மிருக மாக இருந் திறந்து மனித ஞகினேன் இறப் புக்கு என்றும் அஞ்ச வேண்டிய தில்லை

99
இறப் பினல் என்ருவது நான் இழந்த தில்லை மறு படியும் மனிதனுக இருந்து இறக்கப் போகிறேன் இங்கிருந்துஞ் செல்வேன் தேவதூதருடன் வாழ்வேன் இறைவன் தவிர்த்தவை எல்லாம் அழிவது திண்ணம் எனது தெய்வீக ஆன்மாவைத் தியாகஞ் செய்தவுடன் விளக்க முடியாத பரம பதத்தை நான் அடைவேன் நான் என்ற உணர்வு அழிய அவனை அடைவேன்.
V (சூபி. ஜெலாருடீன் ரூமி)
ரூமியின் இவ்வாக்கியம்மறைஞானமாகும. இதைச் சைவசித்தாந்த மறைஞானக் கருத்துடன் ஒப்பிடுக.
இப்பிறப்புப் பல பிறப்புக்களின் எச்சமாகும். இதற்கு முன்பு நான் பலமுறை பிறந்திருக்கிறேன். இறந்திருக்கிறேன். (வால்ற் விற்மன்)
கேவலத்தில் ஆன்மா ஆணவ மலத்திற் கட்டுண்டு அசைவும் அறிவு விளக்கமுமின்றிக் கண்ணில்லாக் குழவி போலக் கிடக்கிறது. ஆன்மாக்கள் ஈடேறுவதற்காக இறைவன் மாயா காரியங்களைத் தோற்றுவித்து அவற்றை ஆன்மாக்களோடு பொருத்துகிருன். மாயா காரியங் களோடு பொருந்திய ஆன்மா இச்சா ஞானக் கிரியை களும்று வினைகள் செய்து வினைப்பயன்களை அனுபவிக்கிறது இவ்வுலகிலும் மறுவுலகங்களிலும் வாழுகிறது, இவ்வுலகில் திரும்பத் திரும்பப் பிறந்தும் இறந்தும் உழல்கிறது. வினை களுக்கேற்ற உடம்பெடுக்கிறது.
அவா வென்ப எல்லா உயிர்க்குமெஞ்ஞான்றும் தவாஅப் பிறப்பீனும் வித்து: (திருக்குறள்) பூமரங்க ளாய்ப்பிறந்து புண்ணியனுக் காணுமையாற் போமரத்தி னர்.பிறவி போம். புண்ணியதீர்த் தத்துட் புழுவாய்ப் பிறந்தமையால் கண்ணும் புழுப்பிறப்புக் காண்.

Page 52
100,
ஆறுருவ நீங்குதலுமளவுசிவ புண்ணியத்தால்
மானிடா யிங்ங்ண் வரும். எல்லா வுருவு மெடுத்தெடுத்து நல்வினையால் நல்லா வுருவாகு நாடு.
(சித்தாந்த தரிசனம்-பசுவியல்)
இந்த அனுபவங்களினல் அறிவு விளக்கம் பெற்ற ஆன்மா ஈற்றில் இருவினை யொப்புமல பரிபாகமடைந்து இறைவன் திருவருளினல் இறைவனடி சேரும்.
மானிட உடம்பெடுத்த ஆன்மா செய்த தீவினைகளின் பயனக மிருக அல்லது த வர உடம்பெடுக்குமா? இது சாத்தியம் என்பது சான்றேரின் வாக்காகும். இப்பிரச் சனையை நேராகக் குறிப்பிட்ட காலஞ் சென்ற சைவப் பெரியார் சிவபாத சுந்தரஞரும் நவநீத கிருஷ்ண பாரதி யாரும் அக்கருத்தை வற்புறுத்துகின்றனர். எவ்வாறு உயிர்கள் நல்வினைகளின் பயணுக அறிவு விளக்கம் பெற்று உயர்படிப் பிறப்புக்கள் எடுக்கின்றனவோ அவ்வாறு தீவினைகளின் பயனக அறிவு விளக்கந் தேய்ந்து கீழ்ப்படிப் பிறப்புகளும் எடுக்கலாம். வினைகளுக்கீடாக ஆன்மாக்கள் ஏறியும் இறங்கியும் மாறியும் பிறக்கும். "நித்திய வாழ்வு' எனும் நூலை எழுதிய வென்டல்வென்ஸ்எனும் மேனட்டறி ஞரும் இக்கருத்தை ஆதரிக்கிருரர். தொடர்ந்துந் தீவினை கள் செய்யும் ஆன்மா ஈற்றிற் கல் அல்லது கணிப் பொரு ளாகலாம் என்கிருர். அதாவது மறுபடியுங் கேவலநிலை அடையலாம்.
இருவினை அநாதி ஆதி இயற்றலால் நுகர்வால் அந்தம் வருமலஞ் சார்ந்து மாயா உருவுகள் மருவி ஆர்த்துத் தருசெயல் முறைமையாலே தாள் பல பேதங் காட்டி அருவதாய் நின்ற ரன்தன் ஆணையின் அமர்ந்து
செல்லும். (சிவஞான சித்தியார்)

0.
இருவினைகளும் மாயை ஆணவ மலங்களோடு சேர்ந்து பல பேதப்பட்டு பல்வேறு யோனிகளைத் தோற்றுவிக்கும். வினைப்பயன்கள் சூக்குமமாய் நிற்கும், இறைவனே வினைப் ப்யனை ஆன்மாவோடு பொருத்துகிருன்.
வண்டுகளாகி மாறும் மயிர்க்குட்டி மற்றேர் செத்துப்
பண்டைய உருவந் தானே வேட்டுவ னய்ப்பி றக்குங்
கண்டுகொள் யோனியெல்லாங் கன் மத்தான் மாறும்
என்றே கொண்டன சமயம் எல்லாம் இச்சொல்நீ கொண்ட
தெங்கே.
(சிவஞான சித்தியார்)
மயிர்க்குட்டி வண்டாக அச்சுமாறுகிறது. புழு வேட்டு வனகிறது. இவை கண்கூடு. கன்மம் யோனி மாற்றத்துக்கு. ஏதுவாகுமெனச் சமயங்கள் கூறுகின்றன.
அகலிகை கல்லதானள் அரிபல பிறவி ஆனன் பகலவன் குலத்தில் தோன்றிப் பாரெலாம் முழுதும்
நிகரிலா அரசனுகுஞ் சிலந்திநீ டுலகம் போற்றச் சகமதில் எலிதான் அன்ருே மாவலி ஆய்த்துத்தானே. (சிவஞான சித்தியார்)
அகலியை கல்லானுள். அரி பல பிறவிகள் எடுத்தான். சிலந்தி அரசனயிற்று எலி மகாபலிச் சக்கரவர்த்தி யாகிற்று. இவ்வாறு கன்மத்திற் கேற்ப ஏறியும் இறங்கியும் பிறப்பது இயல்பாகும் (அகலியை கல்லானது சாபத்தினலன்றி வினைப்பயனல் அன்று எனின் சாபமும் வினைப்பயனே).

Page 53
102
அவ்வவ் யோனி தோறும் அவ்வவ் வுலகந்தோறும் செவ்விதின் அறிந்து கன்மஞ் சேர்ந்திடா சீவன்சேரா இவ்வகை தம்மிற் சேரவும் இறைசெயலாஞற் செய்த எவ்வுருவுந்தங் கன்மான்மாற்றுவன் இறைவன்தானே (சிவஞான சித்தியார்)
கன்மம் சடமாதலாற் சீவனைச் சென்று சேராது. சீவன் சித்தாயினும் அறிவிக்கஅறிவதினல் தானக வினைப்பயனைச் சென்று சேராது, இரண்டையுஞ் சேர்த்து வைப்பவன் இறைவனே. உருவங்களுக்கெல்லாங் காரணனன இறைவ னினுற் கன்மத்துக்கு ஏற்றவாறு யோனியை மாற்ற இயலும்.
எனினும இதுபற்றி வேருெரு கருத்துமுண்டு என்பதை குறிப்பிட வேண்டும். உயிர்களுக்கு ஏறு முறையேயன்றி இறங்குமுறையில்லை என்பாரும் உளர். சூபிறுாமி இறப் பினல் தான் நன்மையடைந்ததேயன்றி இழந்ததில்லை என்கிருர்,
(அ) பரிணும வளர்ச்சியிற் குரங்கு மனிதனுகலாம். மனிதன் குரங்காவதில்லை. ஆறு மறுபக்கந்திரும்பி ஒடுவதில்லை. தீவினைகள் செய்யும் ஆன்மாக்களின் ஆன்மீக வளர்ச்சி (பிரயாணம்) தடைப்படலாம். அவை பிழையான வழிகளிற் சென்ருற் சரியான வழிக்கு வரப் பன்னெடுங் காலஞ் செல்லலாம். தொடர்ந்தும் பாவங்கள் செய்யும் ஆன்மாக் களும் பிறந்தும் இறந்தும் பெருந்துன்பங்களை அனுபவித்திருந்தும் முன்பு பல கீழ்நிலைப் பிறவிகள் எடுத்த உயிர் அனுபவத்தினல் ஓரளவு அறிவு விளக்கம் பெறுகிறது. அதற்கேற்ற மானிட உடம்பு எடுக்கிறது. தீவினைகள் துன்பங் களுக்குக் காரணமாயினும், அடைந்த அறிவு

103
விளக்கம் அழியக் காரணமில்லை; அகலியை சாபத்தினற் கல்லானுள். வினைப்பயன்களினுற். கல்லாகவிலலை.
(ஆ) தீவினைகள் செய்த ஆன்மா அவற்றிற் கேற்ற துன்பங்களை இவ்வுலகிலும் மறுவுலகங்களிலும் அனுபவிக்கும் என்பதே கன்ம விதி. தாவர சங்கமங்களாகப் பிறந்தால் துன்பங்களை அனுப வித்து உணரும் ஆற்றல் அதிகரிப்பதில்லை. "வினைக்கீடான உடம்பு" என்பதற்குச் செய்த வினைகளின் பயனை அனுபவித்தற்கு ஏற்ற உடம்பு என விளக்கங் கொடுக்கலாம். தீவினை செய்தோர் செவிடர் குருடர் சப்பாணிகளாகப் பிறக்கலாம். வேறு அங்கங் குறைந்தவராகப் பிறக்கலாம். தீரா நோய்களினுல் வருந்தலாம்.
(இ) கேவலத்திற் கிடந்த ஆன்மாவை மனிதப் பிறவி வரைக்குங் கொண்டு வந்த திருவருள் தன்செயலை அழிக்கப்போவதில்லை வினைப்பயன்களைஆன்மா வோடு பொருத்துவதுந் திருவருளே. இது பரிவே யன்றித் தண்டனையன்று:
எனினும் மறைஞானத்துக்குப்பிரமாணம் மறைஞானி களின் ஆப்த வாக்கியங்களேயன்றி எமது வாதங்களுந் தர்க்கங்களுமல்ல என்பதை உணர வேண்டும், ஆதலாற் சைவசித்தாந்தக் கருத்தே சரியானது என எடுத்துக் கொள்ள வேண்டும்.

Page 54
11. முத்தி
முத்தி நிலையைச் சொற்களில் விளக்க முடியாது. பல மதத்தவரும் முத்தியைப் பலவாறு காண்கின்றனர். ஒன்று நேர் (Positive) நிலை-பேரின் பநிலை. மற்றது எதிர் (Negative) நிலை-துன்பமில்லாத நிலை, சைவசித்தாந்திகள் காணும் முத்தி பேரின்ப் நிலையாகும்,
அரிவையரின் புறுமுத்தி கந்த மைந்தும் அறுமுத்தி திரிகுணமும் அடங்கு முத்தி விரிவுவினை கெடும் முத்தி மலம்போம் முத்தி விக்கிரக நித்தமுத்தி விவேக முத்தி
பரவுமுயிர் கெடுமுத்தி சித்தி முத்தி பாடான முத்திஇவை பழிசேர் முத்தி திரிமலமும் அகலஉயிர் அருள்சேர் முத்தி திகழ்முத்தி யிறுமுத்தித் திறத்த தாமே.
(சிவப்பிரகாசம்)
உலகாயதர் இவ்வுலகில் இளம் மங்கையருடன் கூடி இன்புறுதல் முத்தியென்பர். பெளத்தர் உருவம் வேதனை குறிப்பு பாவனை விஞ்ஞானம் எனும் ஐந்து கந்தங்களுங் கெடுவது முத்தியென்பர். நிகண்டவாதிகள் முக்குணங் களும் அடங்குவதே முத்தியென்பர். பிரபாகரர் எல்லாக் கன்ம வினைப்பயன்களும் அற்றுப் போவது முத்தி என்பர்.

105
கர்ம யோகிகள் சுத்த மாயா சரீரம் அழியாது நித்திய மாக விருத்தல் முத்தியென்பர் மாயா வாதிகள் நான் பிரமம் என்பதை விவேகத்தினல் அறிவது முத்தியென்பர். பாற்காரியர் ஆன்மா கெடுவதே முத்தியென்பர். சித்தர் காயகல்பம் முதலிய அட்டமா சித்திகளைப் பெறுவதுமுத்தி யென்பர். பாடாண வாதிகள் ஆன்மா ஒன்றையுமறியாது பாடாணம் போலக் கிடப்பது முத்தியென்பர். சைவ சித்தாந்திகள் ஆன்மா மும்மலங்களிலிருந்து நீங்கித், திருவருளினல் இறைவனடி சேருவதே முத்தியென்பர்.
ஆன்மாவின் அவத்தைகள் கேவலம் சகலம் சுத்தம் எனக் குறிப்பிட்டோம். சுத்தாவத்தையே முத்திநிலை, யாகும். இது துரியநிலை என வுங் குறிப்பிடப்படும்.
இணையபல பிறவிகளின் இறந்துபிறந் தருளால் இருவினைகள் புரிந்தருந்தும் இதுசகலம் அகலா முனம் மருவும் இருபயனும் ஒருகாலத் தருந்த முற்றுறுக ருந்துபயன் அந்தமுற வந்த வினையும்எதிர் வினையும்முடி வினை உறவு பயனல் நேராக நேராதல் மேவுங் காலமுற் சினமருவு திரோதாயி கருணை யாகித் திருந்தியசத் திநிபா ந் திகழுமன்றே.
(சிவப்பிரகாசம்)
பல பிறவிகளிற் பிறந்தும் இறந்தும் இருவினைகள்' புரிந்தும் அவற்றின் பயன்களே நுகருவது சகலம் எனப் படும். ஒரு சனனத்திலே வினைப்பயன்கள் யாவும் புசித் தொழிய திரோதாயி கருணையாகிச் சத்தி நிபா தந் தோன் றும். ஆன்மா வினைகள் செய்து அவற்றுக்கீடான இன்ப துன்பங்களை நுகர்ந்து இவற்றின் நிலையாமையை உணர்ந்து சலிப்படையும். இன்பம் எங்குண்டோ அங்கு
சைவ-7

Page 55
106
துன்பமும் உண்டு என்பதை உணரும். இன்பத்தைக் கண்டு பூரிப்படையாதும், துன்பத்தைக் கண்டுகலங்காதும் இரண்டையுஞ் சமமாக மதிக்கும். இஃது இருவினையொப்பு எனப்படும். பின்பு ஆன்மா இன்ப துன்பங்களுக்குக் காரணத்தைத் திருவருளினல் உணருகிறது. அறியாமையும் ஆணவ மலமும், கன்மமுமே இவற்றுக்குக் காரணம் என்பதை அறிகிறது. தன்னை இறைவனுக்கு ஒப்படைக் கிறது. தன்னுணர்வற்று அவனுணர்வாக நிற்கிறது. எல்லாம் அவன் செயலே என நினைந்து செயற்படுகிறது. ஆகாமியமில்லை. எஞ்சிய சஞ்சித கன்மத்தை அனுபவித்துக் கழிக்கக் கன்மமலமில்லை. தன்னையும் இறைவனையும் உணர மாயை நீங்குகிறது. இப்போது திருவருள் தோன்றி ஆணவ மலத்தை எரித்து ஆன்மாவை இறைவனேடு சேர்க்கிறது. திருவருளினல் ஆன்மா மும் மலங்களையும் அறுத்து இறைவனடி சேருகிறது.
இருவினைச் செயல்கள் ஒப்பின் ஈசன் தன் சத்திதோபக் குருஅருள் பெற்றுஞான யோகத்தைக் குறுகிமுன்னைத் திரிமலம் அறுத்துப் பண்டைச் சிற்றறிவு ஒழிந்து
ஞானம
பெருகிநாயகன்தன் பாதம் பெறுவது சுத்தமா மே.
(சிவஞானசித்தியார்)
இருவினை ஒப்படைத்து சந்நிதி பாதம் உண்டாகி இறைவன் அருளைப் பெற்று ஞானமடைந்து மும்மலங்களை யும் அறுத்து சிற்றறிவு நீங்கிப் பேரறிவைப் பெற்று ஆன்மா இறைவன் பாதத்தை அடைவது சுத்தநிலையாகும்.
நாடியசத் திநிபாதம் நாலு பாதம் நண்ணும் வகை எண்ணரிய ஞானபாதம் கூடுமவர் தமக்குணர்வாய் நின்ற ஞானக்
கூத்தன் ஒரு மூர்த்திகொடு குறுகி மோகம்

0.
நீடியகே வலசகலம் நிகழா வாறு நிறுத்திமலம் அறுக்கும் இது நிலையார் சுத்தம் கேடில்புகழ் தரும்சரியை கிரியா யோகக் கேண்மையரேல் இவை உணர்த்தக் கிளக்கும்நூலே.
(சிவப்பிரகாசம்)
சத்தி நிபாதம் நாலு பாதமாகும். ஆன்மா உயர்ந்த ஞானபாதமடைய உணர்வுக்கு உணர்வாக நின்ற இறைவன் குருவாக வந்தருளிக் கேவல சகல நிலைகள் இனிமேல் தோன்ருதவாறு தடுத்து மலங்களை அறுப்பான்; இதுவே சுத்தநிலை.
சூரியகாந் தக்கல்லி னிடற்றே செய்ய சுடர்தோன்றி யிடச்சோதி தோன்றுமா போல் ஆரியனும் ஆசான்வந் தருளால் தோன்ற அடிஞானம் ஆன்மாவில் தோன்றுந் தோன்றத் தூரியனுஞ் சிவன்தோன்றுந் தானுந் தோன்றுந் தொல்லுலகம் எல்லாந்தன் னுள்ளே தோன்றும் நேரியணுயப் பரியனுமாய் உயிர்க்குயிராய் எங்கும் நின்றநிலை யெல்லாமுன் நிகழ்ந்து தோன்றும்.
(சிவஞான சித்தியார்) ஞாயிற்றின் முன்னிலையில் சூரிய காந்தக் கல்லின்கண் நெருப்புத் தோன்றுவது போல திருவருள் தோன்ற ஆன்ம ஞானம் தோன்றும். இந்த ஞானம் தோன்ற ஆன்மா தன்னையும் இறைவனையுங் காணும். ஆன்மா மாயா உலகத்தின் உண்மை இயல்பை அறியும், இறைவன் உயிருக் குயிராய் எங்கும் நிறைந்து நிற்கும் நிலையையும் உணரும். இரும்பைக்காந் தம்வலித்தாற் போல்இயைந்தங்
குயிரை எரியிரும்பைச் செய்வதுபோல் இவனைத்தானுக்கி அரும்பித்திந்தனத்தையனல்அழிப்பது போன் மலத்தை அறுத்தமலன் அப்பணைந்த உப்பேபோல அணைந்து

Page 56
108
விரும்பிப்பொன் னினைக்குளிகை யொளிப்பதுபோ
லடக்கி மேனித்துத் தான் எல்லாம் வேதிப்பா னதிக் கரும்பைத்தே னைப்பாலைக் கணியமுதைக் கண்டைக் கட்டியை யொத் திருப்பன் அந்த முத்தியினிற்கலந்தே (சிவஞானசித்தியார்)
காந்தம் இரும்பை இழுத்துச் சேர்வது போல முத்தியில் இறைவன் ஆன்மாவைத் தன்வயப்படுத்தி நிற்பன் அனல் இரும்பின் கறையை நீக்குவது போல் இறைவன் உயிரைத்தானுக்கி மும்மலங்களையும் அறுப்பன்: உப்பையும் நீரையும் போல இறைவன் ஆன்மாவோடு இணைந்து நிற்பன். இரதகுளிகைசெம்பையுருக்கி தன்னேடு கூட்டி வேதித்துப் பொன்னகச் செய்து பொன்னியல்பைக் காட்டாது தன்னுளடக்கி நிற்பது போல, இறைவன் ஆன்மாவைத் தனது வியாபகத்துளடக்கி, ஆன்மாவின் இயல்பு தோன்ருது நிற்பன். இம்முத்தி பேரானந்தமாகும்.
தீங்குறு மாயை சேரா வகைவினை நிரவி தந்தால் நீங்கிட நீங்காமூல நிறைஇருள் இரிய நேயத்து ஓங்குனர் வகத்த டக்கி உளத்துளின் பொடுங்க நேரே தூங்குவர் தாங்கி ஏகத் தொன்மையில் துகளிலோரே, (சிவப்பிரகாசம்)
ஆன்மா தன்னையும்இறைவனையும் அறிய கன்மமலமும் மாயா மலமும் நீங்கும். இனி மேற் பிறப்பிறப்பில்லை. அனுதியான ஆணவ மலம் எரிந்து விடும். ஆன்மா இறைவனுள் அடங்கித் தன்னுணர்வற்று இறையுணர் வாகிப் பேரின் பத்தில் தூங்கும்.
முத்தியடைவதற்கு மரணம் வரையுங் காத்திருக்க வேண்டியதில்லை. இவ்வுலகிலே இவ்வுடலோடு இருக்கும்

109
போதே முத்தியடையலாம். இவ்வாறு முத்தியடைந்தவர் சீவன் முத்தர் எனப்படுவர். சீவன் முத்தர் நிலை ஆரும் அதிகாரத்தில் விளக்கப்பட்டது. சீவன் முத்தர் வேறு. இறைவன் வேறல்ல. இதுவே ஒன்ருன் நிலை.
சீவன் முத்தரும் தங்கருணையினல் மக்களை இரட்சிப் பதற்காகப்.பிறப்பதுமுண்டு. இவர்கள் பிறக்கும் போதே சீவன் முத்தர்களானபடினுல் இவர்களுக்கு மும்மலங்களு மில்லை. உடலில் இருப்பினும் இறைவனேடுஒன்றியிருப்பர் அவர்களுடைய வாக்கு இறைவன் வாக்காகும். செயல்கள் இறைவன் செயலாகும்.
முத்தி நால்வகைப் பட்டதெனச் சைவசித்தாந்திகள் கூறுகின்றனர்.-சாலோக்கியம், சாமீப்பியம்,சாரூப்பியம், சாயுச்சியம். சாலோக்கியத்தில் ஆன்மா இறையுலகில் இருக்கும். சாமீப்பியத்தில் ஆன்மா இறைவனருகில் இருக்கும். சாரூப்பியத்தில் இறைவன் உருவத்தில்இருக்கும். இவை மூன்றையும் பதமுத்தி அல்லது அபர முத்தி என்பர்: சாயுச்சியத்தில் இறைவனேடு இரண்டறக் கலந்திருக்கும். இது பரமுத்தி எனப்படும்.
தத்துவங்க ளெல்லாம் சகசமா ஆன்மாவிற் பெத்தத்தில் நிற்கின்ற பெற்றிபோல-முத்திதனிற் சித்திமல மற்ருர் செறிந்திடுவர் என்றுமறை சத்தியமா ஒதியிடுந்தான். ஆதவன் சந்நிதியில் அம்புலியின் ஆர்சோதி பேதமற நின்கின்ற பெற்றிபோல்-நாதாந்தத்து அண்ணல் திருவடியில் ஆன்மா அணைந்தின்பக் கண்ணில் அழுந்தியிடுங் காண்.
முத்திதனின் மூன்று முதலும் மொழியக்கேள் சுத்தஅறு போகத்தைத் துய்த்தல் அணு-மேத்தலே இன்பங் கொடுத்தல்இறைஇனத்தை விளைவித்தல்மலம் அன்புடன் கண்டுகொள் அப்பா.
(உண்மை விளக்கம்}

Page 57
10
பெத்தத்திலே தத்துவங்கள் எல்லாம் ஆன்மாவோடு நிற்பது போல முத்தியிலே ஆன்மா இறைவனேடு இரண்டறக் கலந்துநிற்கும். சூரியன் பிரகாசத்திற்சந்திரன் பிரகாசம இரண்டற நிற்பது போல முத்தியில் ஆன்மா இறைவன் திருவடியை இரண்டறச் சேர்ந்துபேரின் பத்தில் இருக்கும். முத்தியிலும் பதி, பசு, பாசம் மூன்றுமிருக்கும். பேரின் பத்தை அனுபவிப்பது ஆன்மா. கொடுப்பது இறைவன். வினவிப்பது மலம்.
வரையற் றவுணர் சிரமற்று வாரதிவற்றச் செற்ற புரையற்ற வேலவன் போதித் தவாபஞ்ச பூதமுமற் றுரையற் றுணர்வற்றுடலற் றுயிரற் றுபாயமற்றுக் கரையற் றிருளற் றெனதற் றிருக்குமக் காட்சியதே.
(கந்தரலங்காரம்)
முத்தியில் ஆன்மா பஞ்சபூதங்களற்று வாக்கற்று, சிந்தனையற்று உடலற்று செயலற்று தன் உணர்வற்று நான் எனது எனும் அகங்காரமற்று ஆணவம் முதலிய மலங்களற்று எல்லையில்லாது எங்கும் வியாபமாய் இருக்கும்.
ஆன அமுதே! அயில்வேல் அரசே ஞான கரனே! நவிலத் தகுமோ யானகிய என்னை விழுங்கி வெறுந் தானுய் நிலை நின்றது தற்பரமே. தன்னந் தனிநின்றதுதான் அறிய இன்னம் ஒருவர்க் கிசைவிப் பதுவோ.
(கந்தரனுபூதி)
இறைவன் உடனுகவும் முப்பத்தாறு தத்துவங்களையும் கடந்தும் நிற்கிருன்.சீவன் சிவனையடையும் போது சீவனும் முப்பத்தாறு தத்துவங்களையுங் கடந்து செல்லுகிறது.

111
பூதமுங் கரணமும் பொறிகளைம் புலனும் பொருந்திய குணங்களோர் மூன்றும் நாதமுங் கடந்த வெளியிலே நீயும் நானுமாய் நிற்கு நாள் உளதோ,
(பட்டினத்தடிகள்) இரவுபகலில்லா இன்பவெளி யூடே விரவி விரவிநின் றுந்தீபற விரைய விரையநின் றுந்தீபற. (திருவுந்தியார்) முத்தி நிலையைப் பின்வரும் ஐந்து திருமந்திரங்
களுஞ் சுட்டிக் காட்டுகின்றன.
மலமில்லை மாசில்லை மானபி மானங் குலமில்லை கொள்ளுங் குணங்களு மில்லை நலமில்லை நந்தியை ஞானத்தினலே பலமன்னியன் பிற் பதிந்துவைப் போர்க்கே. பேச்சற்ற இன்பத்துப் பேரானந் தத்திலே மாச்சற்ற என்னைச் சிவமாக்கி மாள் வித்துக் காச்சற்ற சோதி கடன்மூன்றுங் கைக்கொண்டு வாச்ச புகழ்மாளத் தான் தந்து மன்றுமே. நீங்காத சிவானந்த ஞேயத்தை நின்றிடப் பாங்கான பாசம் படரா படரினும் ஆங்கார நீங்கி யதனிலை நிற்கவே நீங்காத அமுத நிலைபெற லாமே. காணுத கண்ணுடன் கேளாத கேள்வியுங் கோணத போகமுங் கூடாத கூட்டமும் நானுத ஞானமும் நாதாந்த பேதமுங் காணு யென வந்து காட்டினன் நந்தியே. முகத்திற் கண்கொண்டு காண்கின்ற மூடர்காள் அகத்திற் கண்கொண்டு காண்பதே ஆனந்தம் மகட்டுத் தாய்தன் மணுளனே டாடிய சுகத்தைச் சொல்லென்ருற் சொல்லுமா றெங்கனே.
(திருமூலர்}

Page 58
112
அடியார்கள் தாம் பெற்ற இன்பத்தைக் கூறுகிருர்கள். புகுந்துநின்றன் எங்கள் புண்ணிய மூர்த்தி புகுந்துநின் முன்னங்கள் போதறி வாளன் புகுந்துநின் ருன் அடி யார்தங்கள் நெஞ்சம் புகுந்துநின் ருரனையே போற்றுகின் றேனே
(திருமந்திரம்)
பேரின்பம் என்கிருர்கள் அதைச் சொற்களில் விளக்க முடியாது. மனத்தினற் சிந்திக்க முடியாது.
சொல்லற் கரியானைச் சொல்லித் திருவடிக்கீழ்ச் சொல்லிய பாட்டின் பொருளுணர்ந்து சொல்லுவார் செல்வர் சிவபுரத்தின் உள்ளார் சிவன் அடிக்கீழ்ப் பல்லோரும் ஏத்தப் பணிந்து.
பெருமாள் பேரா னந்தத்துப் பிரியா திருக்க பெற்றீர்காள் அருமால் உற்றுப் பின்னைநீர் அம்மா அழுங்கி அரற்ருதே திருமா மணிசேர் திருக்கதவம் திறந்த போதே சிவபுரத்துத் திருமால் அறியாத் திருப்புயங்கன் திருத்தாள் சென்று சேர்வோமே.
(மாணிக்கவாசகர்)
எங்கண் இருந்ததென் றெல்வண்ணம் சொல்லுகேன் அங்கண் இருந்ததென் றுந்தீபற அறியு மறிவதென் றுந்தீபற. (S(5øsögurrfi)
சொல்லாத வார்த்தையை அவன் சொன்னண்டிதோழி சொன்ன சொல் ஏதென்று சொல்லுகேன்-என்னைச் சூதாய் தனிக்கவே சும்மா இருத்தி முன்னிலை ஏது மில்லாதே-சுக

3
முற்றத்தே எனப் பற்றிக் கொண்டாண்டி பற்றிய பற்றற உள்ளே-தன்னைப் பற்றச் சொன்னன் பற்றிப் பார்த்த இடத்தே பெற்றதை ஏதென்று சொல்வேன்-சற்றும் பேசாத காரியம் பேசினன் தோழி.
உள்ளதும் இல்லது மாய்முன்-உற்ற உணர்வது வாய்உன் உளங்கண்ட தெல்லாம் தன்னெனச் சொல்லி என் ஐயண்-என்னைத் தானக்கிக் கொண்ட சமர்த்தைப்பார் தோழி.
(தாயுமானவர்)
முத்தி நிலையும் பெத்த நிலையும் திருவைந் தெழுத்தி லடங்கும் (சிவயநம) பெத்தத்தில் ஆன்மா மலங்களையும் (ம) திரோதாயினயும் (ந) சார்ந்து நிற்கும். மலங்கள் நீங்க அவற்ருேடு தோய்ந்து நின்று அவற்றைப் பரிபாகப் படுத்திய திரோதனச் சக்தியும் நீங்கும்-அதாவது திரோ தானத் தொழிலைச் செய்யாது நிற்கும். ஆன்மா திருவருட் சக்தியை (வ) சாரும். திருவருட்சக்தி ஆன்மாவைச் சிவத் துடன் சேர்க்கும். முத்தியில் திருவருட் சக்தியே ஆன்மா வுக்குத் திருமேனியாகும். மெத்தத்திற் சிவயநந முத்தியிற் சியவ ஆகும்.

Page 59
12. முத்திக்கு மார்க்கங்கள்
ஆன்மா முத்தியடைவதற்குச் சைவசித்தாந்திகள் நான்கு மார்க்கங்களைக் குறிப்பிடுகின்றனர். இவை சரியை கிரியை யோகம் ஞானம் எனப்படும். எனினும் இவை தனிப்பட்ட வெவ்வேறு மார்க்கங்களல்ல. ஒன்றுக்கு ஒன்று ஆதாரமாகும். இவற்றை வடமொழியிற் கூறப் படும் கர்மம், பக்தி, யோகம்,ஞானம் முதலியனவற்றுடன் ஒப்பிடல் தவருகும். பக்தியே முத்திக்கு வழி எல்லா மார்க்கங்களும பக்தியில் முடிவடைகின்றன. பக்திக்கு வழிகளாகும்.
விரும்பும் சரியைமுதன் மெஞ்ஞான நான்கும் அரும்புமலர் காய்கனிபோல் அன்ருே பராபரமே.
(தாயுமானவர்)
நல்லசிவ தன் மத்தால் நல்லசிவ யோகத்தால் நல்லசிவ ஞானத்தால் நானழிய-வல்லதினல் ஆரேறும் அன்புசெயின் அங்கே தலைப்படுங்காண் ஆரேறுங் கான அரன்.
(திருக்களிற்றுப்பாடியார்)
இங்கு குறிப்பிடப்படுவன: சிவகன்மம் சிவயோகம் சிவ அல்லது பதிஞானம் என்பனவாகும். இறைவன் அருளின்றிப் பதி ஞானம் தோன்ருது. பக்தியில்லாது அருளில்லை. அருளில்லாது முத்தியில்லை. ஒவ்வொரு மஈர்க்கத்திலும் நான்கு பாதங்களுள் (1) சரியையிற்

15
சரியை சரியையிற் கிரியை சரியையில் யோகம் சரியையில் ஞானம், (2) கிரியையிற் சரியை, கிரியையிற் கிரியை, கிரியை யில் யோகம், கிரியையில் ஞானம் (3) யோகத்திற் சரியை, யோகத்திற் கிரியை, யோகத்தில் யோகம், யோகத்தில் ஞானம் (4) ஞானத்திற் சரியை, ஞானத்திற் கிரியை, ஞானத்தில் யோகம், ஞானத்தில் ஞானம். ஒவ்வொரு பாதமும் உபாயநிலை, உண்மைநிலை என இருவகைப்படும். உபாயநிலை பக்தியிற் குறைந்தது. உண்மைநிலை பக்தியிற். கூடியது.
அவனே நினைந்து அவன்தாள் வணங்கி அவனருளால் தன்னுணர்வற்று அவனுணர்வாகி எல்லாம் அவன் என உணர்ந்து மும்மலங்களையும் அறுத்து ஆன்மா முத்தியடை கிறது. இறைவணக்கம் இறையுணர்ச்சி பக்தி அன்பு இறையருள் என்பனவே மும்மலங்களையும் அறுக்கும். இறைவன் என்றும் ஆன்மாவோடு அத்துவிதமாக நிற்கிருன். ஆன்மா இதை உணர்ந்து அன்பினுற் பக்தி, யினுல் அவனை அர்ச்சித்து நிற்கத் திருவருள் தோன்றும். சரியை கிரியை யோகம் ஞானம் முதலியவை இறைவனுக்கு அர்ச்சனைகளாகும்.
கூட வேடத்த ராகிக் குழுவிலென் வாடி யூனை வருத்தியி திரித்லென் ஆடல் வேடத்த னம்பலக் கூத்தனைப் பாட லாளர்க்கல் லாற்பய னில்லையே. பக்தியினல் இறைவனை மறவாது உணர்ந்தார்க்கு இறைவன் பாசத்தை நீக்கி முத்தியளிப்பான்.
செம்மலர் நோன்தாள் சேரல் ஒட்டா அம்மலங் கழிஇ அன்பரொடு மரீஇ மாலற நேயம் மலிந்தவர் வேடமும் ஆலயம் தானும் அரன் எனத் தொழுமே, , . (சிவஞானபோதம்)

Page 60
llib
இப்போது சரியை கிரியை யோகம் ஞானம் எனும் நான்கு மார்க்கங்களையுஞ் சுருக்கமாகப் பார்ப்போம்.
சன்மார்க்கஞ் சகமார்க்கஞ் சற்புத்திர மார்க்கந் தாதமார்க் கம்என்றுஞ் சங்கரனை யடையும் நன்மார்க்கம் நால் அவைதாம் ஞான யோக நற்கிரியா சரியையென நவிற்றுவதுஞ் செய்வர் சன்மார்க்க முத்திகள் சா லோக்கியசா மீப்பிய சாரூப்பிய சாயுச்சியம் என்று சதுர் விதமாம் முன்மார்க்க ஞானத்தால் எயது முத்தி முடிவென்பர் மூன்றினுக்கும் முத்திபதம் என்பர்.
இறைவனை அடையும் மார்க்கங்கள் ஞானம், யோகம், கிரியை, சரியை என நான்காகும். சரியையினலடையும் முத்தி சாலோக்கியம். கிரியையினலடையும் முத்திசாமீப் பியம். யோகத்தினயடையும் முத்தி சாரூப்பியம். ஞானத்தினலடையும் முத்தி சாயுச்சியம். முதல் மூன்றும் பத அல்லது அபர் முத்திகள் எனப்படும். ஞானத்தால் அடையும் முத்தி பரமுத்தி எனப்படும்.
தாநமார்க் கஞ்சாற்றிற் சங்கரன்தன் கோயில் நலம் அலகிட் டிலகுதிரு மெழுக்குஞ் சாத்திய போதுகளுங் கொய்துபூந் தார்மாலை கண்ணி பூனிதற்குப் பலசமைத்துப் புகழ்ந்து பாடித் தீதில்திரு விளக்கிட்டுத் திருநந்த வனமுஞ் செய்திரு வேடங்கண் டால் அடியேன் செய்வ தியாதுபணி யீர்என்று பணிந்தவர்தம் பணியும் இயற்றுவதிச் சரியைசெய்வோர் ஈசன் உலகிருப்பர்.
ஆலய வணக்கம், ஆலயத்தைக் கூட்டுதல், மெழுகுதல், தீவர்த்தி பிடித்தல் முதலிய திருப்பணிகளும் சிவன் அடியார்களுக்குச் செய்யுந் தொண்டுகளும் சரியையிற் சரியை. இறைவனுடைய உருவத்திருமேனிகளில் ஒன்றைப் பூசிப்பது சரியையிற் கிரியை, இறைவனைத் தியானித்தல்

17
சரியையில் யோகம். அத்தியானந்தாற் பெறும் அனுபவ: உணர்வு சரியையில் ஞானம். சரியை புறத் தொழில்களா கும். சரியையினல் அடையும் முத்தி சாலோக்கியம் எனப்படும். இவர்கள் சிவலோகத்தில் இருப்பர்.
நிலைபெறுமா றெண்ணுதியேல் நெஞ்சே நீவா நித்தலுமெம் பிரானுடைய கோயில் புக்குப் புலர்வதன்முன் அலகிட்டு மெழுக்குமுட்டுப் பூமாலை புனைந்தேத்திப் புகழ்ந்து பாடித் தலையாரக கும்பிட்டுக் கூத்து மாடிச் சங்கரா சயபோற்றி போற்றி யென்றும் அலைபுனல்சேர் செஞ்சடையெம ஆதீயென்றும்
ஆரூரா என்றென்றே அலருறில்லே. (-9յւնւյrք}
சிந்தனை செய்ய மனமமைத் தேன்செப்பநா
வமைத்தேன்; வந்தனை செய்யத் தலையமைத் தேன்கை தொழ
வமைத்தேன் பந்தனை செய்வதற் கன்பமைத் தேன்மெய் யரும்ப
வைத்தேன் வெந்தவெண்ணிறனி ஈசற் கிவையான் விதித்தனவே. (சேரமான்)
வாழ்த்த வாயும் நினைக்க மடநெஞ்சும் தாழ்த்தச் சென்னியுந் தந்த தலைவனைச் சூழ்த்த மாமலர் தூவித் துதியாதே வீழ்த்த வாவினை யேன்நெடுங் காலமே,
(சேரமான்),
அரகர என்ன அரிய தொன்றில்லை அரகர் என்ன அறிகிலர் மாந்தர் அரகர என்ன அமரரும் ஆவர் அரகர என்ன அறும்பிறப் பன்றே.
(திருமந்திரம்)

Page 61
18
பஜ கோவிந்தம் பஜ கோவிந்தம் பஜ கோவிந்தம் மூடனே பிறவிக் கடலைக் கடப்பதற்கு இறைவன் திருநாமமே வழியாகும்.
(சங்கராச்சாரியார்)
அஞ்செழுத்தே ஆகமும் அண்ணல் அருமறையும் அஞ்செழுத்தே ஆதிபுராணம் அனைததும் அஞ்
செழுத்தே ஆனந்தத் தாண்டவமும் ஆருதுக் கப்பாலும் மோனந்த மாமுத்தியும். (உண்மை விளக்கம்)
புத்திரமார்க் கம்புகலிற் புதியவிரைப் போது புகையொளிமஞ் சனம் அமுது முதல்கொண்டைந்து சுத்திசெய்தா சனம்மூர்த்தி மூர்த்தி மானஞ் சோதியையும் பாவித்தா லகித்துச் சுத்த பத்தியினல் அருச்சித்துப் பரவிப் போற்றிப் பரிவினெடும் எரியில்வரு காரியமும் பண்ணி நித்தலும் இக் கிரியை யினை இய்ற்றுவோர்கள் நின்மலன் தன் அருகிருப்பர் நினையுங் காலே;
வாசனைத் திரவியம் தூபம், தீபம், தீர்த்தம், புட்பம் பஞ்ச கவ்வியம், பஞ்சாமிர்தம் முதலிய பூசைக்குரிய, பொருட்களைக் கொண்டு பஞ்சசுத்தி செய்து உட்பூசை புறப்பூசை முதலியனவற்றை முறைப்படி செய்தல் கிரியை எனப்படும். இது புறத் தொழில் அகத் தொழில் இரண்டி னலும் அருவுருவத் திருமேனியை நோக்கிச் செய்யும் வழிபாடாகும். இவை கிரியையிற் சரியை. சிவாகம் விதிப்படி சிவலிங்க பூசனை கிரியையிற் கிரியை. மானத பூசை கிரியையில் யோகம், மான த பூசை அனுபவத்தால் நிகழும உணர்வு கிரியையில் ஞானம். கிரியை நெறிநிற் போர் இறைவனருகில் இருப்பர். (சாமீப்பிய முத்தி)

S.
நறைமலி தருமள ருெடுமிகை நடுமலர் புகைமிகு
- வளரொளி நிறைபுனல் கொடுதனை நினைவொடு நிதமும் வழிபடும் அடியவர் குறைவில் பதம் அணை தரஅருள்குணமுடையிறையுறை வனபதி
சிறைபுண வமர்சிவ புரமது நினைபவர் செயமகன்
தலைவரே. (சம்பநதர்)
சேவை செய்தவர் சீவன்முத்தர் நாவைநீ காத்துக் கொள்ளெடி நானெனுமாணவ நீக்கிக் கொள்ளெடி.
(யோக சுவாமிகள்)
சகமார்க்கம் புலனெடுக்கித் தடுத்துவளி யிரண்டுஞ் சரிப்பற்று முச்சதுர முதல் ஆதா ரங்கள் அகமார்க்கம் அறிந்தவற்றின் அரும்பொருள்கள்
உணர்ந்தங்
கணைந்துபோய் மேலேறி யலர்மதிமண் டலத்தின் முகமார்க்க அமுதுடலம் முட்டத் தேக்கி முழுச்சோதி நினைந்திருந்தன் முதலாக வினைகள் உகமார்க்க அட்டாங்க போக முற்றும் உழத்தல் உழந் தவர்சிவன்தன் உருவத்தை பெறுவர்.
- (சிவஞான சித்தியார்)
பிராணவாயுவைச் சலனமற நிறுத்தி ஜமபுலன் களையும் அடக்கி மூலவாயுவை எழுப்புகின்ற இடைப்பிங் கலை என்னும் நாடிகளை அடைத்துச் சுழிமுனை வழியைத் திறந்து அருளைத்தரும் புறவெளியிலே புகுந்து அழுந்தி யிருத்தல் யோகமாகும். இஃது இயமம், நியமம், ஆசனம், பிராணுயாமம், பிரத்தியாகாரம, தாரனை, தியானம், சமாதியென எட்டு அங்கங்களுடையது. அகிம்சை,

Page 62
20
வாய்மை, திருடாமை, பிரமச்சாரியம், அன்பு, வஞ்சனை யின்மை, பொறுமை, தைரியம், ஆசாரம், சுத்தி எனும் பத்தும் இயமமாகும். தபசு, சந்தோஷம், தேவசிந்தனை, தானம், ஈசுரபூசை, ஞான சாத்திரங்கள் கேட்டல், பழிக் கஞ்சுதல்,பக்தி,செபம்,விரதம் எனும் பத்தும் நியமமாகும். சுவாசத்தை அடக்கி ஆளுதல் பிராணயாமமாகும், மனத்தைப் பிறவிடயங்களிற் செல்லாது தடுத்தல் பிரத்தி யாகாரமாகும். மனத்தை ஒரு வழியில் நிறுத்தல் தாரணையாகும். இறைவனின் அருவத் திருமேனியை தியானித்தல் தியானமாகும். இத்தியானத்தில் நிலைபெறல் சமாதியாகும். இயமம், நியமம், ஆசனம, பிராணுயாமம் எனும் நான்கும் யோகத்திற் சரியை பிரத்தியாகாரமும் தாரணையும் யோகத்திற் கிரியை. தியானம் யோகத்தில் யோகம், சமாதி யோகத்தில் ஞானம்.
யோகத்தினுல் இறைவனை அர்ச்சிப்பதே யோகமார்க்கம். அவனை வணங்கி அவன் உணர்வாக நிற்பதே யோகம். இன்று யோகப் பயற்சிகள் பல நோக்கங்களுக்குப் பயன் படுத்தப்படுகின்றன. ஆத்ம சுத்தியும் தியானமுமில்லை. யோகிகள் பன்னெடு காலம் வாழ்ந்தனர் எனவும் சமாதி யில் ஆழ்ந்திருந்தனர் எனவும் எமது புராணங்கள் கூறு கின்றன. யோகத்தினுல் அடைவது சாரூப்பிய முத்தி சிவமாகிச் சிவனேடிருத்தலாகும்.
சன்மாக்கஞ் சகலகலை புராண வேத சாத்திரங்கள் சமயங்கள் தாம்பலவும் உணர்ந்து பன்மார்க்கப் பொருள்பலவுங் கீழாக மேலாம் பதிபசுபா சந்தெரித்துப் பரசிவனைக் காட்டும் நன்மார்க்க ஞானத்தை நாடிஞான நேயபுெழாடு ஞாதிருவும் நாடா வண்ணம் பின்மார்க்கச் சிவனுடனம் பெற்றி ஞானப் பெருமையுடை யோர்சிவனைப் பெறுவர் காணே
(சிவஞான சித்தியார்)

121
சமய நூல்கள் பலவற்றையும் ஆராய்ந்து பதி, பசு, பாசம் எனும் மூன்றையும் தெளிந்து இறைவனைக் காட்டும் பதிஞானத்தை உணர்ந்து சிற்றறிவு நீங்கிப் பேரறிவு தோன்றி, அகத் தொழில் புறத் தொழில்களின்றி அறிவுத் தொழிலாலேயே (ஞானத்தினுல்) அத்துவிதமாக நிற்கும் இறைவனுக்குச் செய்யும் வழிபாடு ஞானமார்க்கமாகும். ஞான மார்க்கத்தில் நிற்போர் இறைவனுடன் இரண்டறக் கலப்பர். இது சாயுச்சிய (பர) முத்தியெனப்படும். ஞான சாத்திரங்களே ஆசிரியனிடமிருந்து கேட்டறிதல் ஞானத்திற் சரியை. கேட்டவற்றை ஆராய்ந்து சிந்தித்தல் ஞானத்திற் கிரியை. தெளிதல் ஞானத்தில் யோகம். தெளிந்து நிட்டை கூடல் ஞானத்தில் ஞானம்.
தானமியா கந்தீர்த்தம் ஆச்சிரமங்கள் தவங்கள் சாந்திவிர தங்கன்ம யோகங்கள் சரித்தோர் ஈனமிலாச் சுவர்க்கம்பெற் றிமைப்பளவின் மீள்வர் ஈசனியோ கக்கிரியா சரியையின் நின்ருேர்
ஊனமிலா முத்திபதம் பெற்றுலக மெல்லாம் ஒடுங்கும்போ தரன்முனிவா தொழியின் உற்ப வித்து ஞானநெறி யடைந்தடைவர் சிவனை யங்கு நாதனே முன்னிற்கின் நனுகுவார்நற் ருளே.
(சிவஞான சித்தியார்)
தானங்கள் யாகங்கள் புண்ணிய தீர்த்தங்கள் ஆச்சிரம தர்மங்கள் தவங்கள் பிரயாயச் சித்தங்கள் விரதங்கள் கன்மங்கள் முதலியவற்றினல் ஆன்மாக்கள் அடைவது சுவர்க்கங்களே, புண்ணியங்களைச் சுவர்க்கங்களிற் புசித்த பின்பு இவ்வான்மாக்கள் மீளவும் பிறக்கின்றன. சரியை கிரியை யோகங்களில் நின்ற ஆன்மாக்கள் அடைவது பத முத்தியாகும். சங்கார காலத்தில் இவ் வான்மாக்கள் இறைவன் அருளினுற் பரமுத்தியடையும். இவ்வருளைப் பெரு விடின் பதமுத்தி பெற்ற ஆன்மாக்களும்
சைவ-8

Page 63
卫22
மறுபடியும் பிறந்து இறைவன் அருளினiற் பரமுத்தி யடையும். (சைவ சித்தாந்திகளின்படி இறைவனும் பரமுத்தியடைந்த ஆன்மாக்களும் உலகிற் பிறப்பதில்லை. பதமுத்தியடைந்த ஆன்மாக்கள் பிறக்கலாம். இவை ஒரு பிறவிலேயே திருவருள் பெற்றுப் பரமுத்தியடைகின்றன).
கடவுள் ஒருவர் உளர். நாம் அவரின் உடைமைகளான ஆன்மாக்கள். எம்மைப் பிடித்திருப்பது மலம், அம்மலத்தி லிருந்து நீங்கி நாம் பேரின்பம் பேரானந்த நிலை அடைய வேண்டும். அவனடி சேரின் எல்லாத் துன்பங்களும் அற்று விடும். பிறந்து இறந்து உழல வேண்டியதில்லை. பிறவாத இறவாத நிலை எய்துவோம். பாசங்களையும் மோகங் களையும் விடுததுச் சிற்றறிவும் நுண்ணுணர்வும் நீக்கிப் பதியுணர்வாகி அவனடி சேர வேண்டும். என்றும் எமக்கு உறுதுணை இறைவனே. அவன் திருவருள் யாவருக்குமுண்டு.
அப்பன் நீ அம்மைநீ ஐயனும்நீ அன்புடைய மாமனும் மாமியும்நீ ஒப்புடை மாதரும ஒண்பொருளும்நீ ஒருகுலமும் சுற்றமும் ஓர் ஊரும்நீ P துயப்பனவும் உய்ப்பனவுத் தோற்று வாய்நீ துணையாயென் நெஞ்சந் துறப்பிப் பாய்நீ இப்பொன்நீ இம்மணிநீ இம்முத் தும்நீ இறைவன் நீ ஏது ஊர்ந்த செல்வன் நீயே.
(அப்பர்) அன்பருக் கன்பான் மெய்யன்-ஐயன் ஆனந்த மோனன் அருட்குரு நாதன் தன்பாதஞ் சென்னியில் வைத்தான்.என்னைத் தானறிந் தேன் மனந் தானிறந் தேனே.
(திருமந்திரம்) பேரானந்தப் பேரருளாகிய இறைவனை நாம் அன் போடு வணங்குவதே தன்னுணர்வும் மும்மலங்களும் அறுவதற்கும் அவனடி சேருவதற்கும் வழியாகும்.

123
தனக்குவமை யில்லாதான் தாள்சேர்ந்தார்க் கல்லால் மனக்கவலை மாற்ற லரிது. (திருக்குறள்)
மாயநட் போரையும் மாயாமலமெனும் மாதரையும் வீயவிட் டோட்டிவெளியே புறப்பட்டு மெய்யருளாந் தாயுடன் சென்று பின்ருதையைக் கூடிப்பின்றயை
மறந் தேயும் தேறிட்டையென்ரு னெழிற்கச்சி யேகம்பனே. (பட்டினத்தார்) மாயையையும் மலங்களையும் அவற்றினலுண்டாகும் பாசங்களையும் மோகங்களையும் அகந்தைகளையும் விட்ட கன்று திருவருளைச் சாரத் திருவருள் ஆன்மாவைச் சிவத் துடன் சேர்க்கும். பின்பு ஆன்மா எல்லாவற்றையும் மறநது சிவத்துடன் நிட்டை கூடிப் பேரின்பத்தை அனுபவிக்கும்.
எண்ணுயிரத்தாண்( யோக மிருக்கினும் கண்ணு ரமுதனைக் எடறி வாரிலை உள்நாடி யுள்ளே ரிபெற நோக்கிடில் கண்ணுடி போலச் லந்திருந் தானே.
(திருமூலர்)
மெய்மையாம் உழவைச் செய்து விருப்பெனும் வித்தை வித்திப் பொய்மையாங் களையை வாங்கி பொறையெனும்
நீரைப் பாய்ச்சித் தம்மையும் நோக்கிக் கண்டு தகவெனும் வேலிஇட்டுச் செம்மையுள் நிற்பராகிற் சிவகதி விளையு மன்றே.
(அப்பர்)
மிகப் பெரும்பாலான மக்கள் இல்வாழ்வோராவர். சமய நெறிகளுக்கும் இல்வாழ்க்கைக்குந் தொடர்பில்லை எனவும் துறவிகளே சமய நெறிகளைப் பின்பற்றலாம்

Page 64
丑24
எனவும் எண்ணுவது தவருகும். சைவ சமயம் இல்லறத் துக்கும் துறவறத்துக்கும் உரிய நெறிகளை வகுக்கிறது. இல்லறத்திலிருந்தே இறைவனடி சேர்ந்தார் பலர், இரு அறங்களுக்கும் அன்பும் இறையுணர்வும அடிப்படை களாகும். உலக வாழ்க்கையில் அன்புடனும் அறத்துட னும் செயலாற்றின் ஆன்மா தனது பாதையில் முன் னேறும். திருவருள் கிடைக்கும்.
வையத்து வாழ்வாங்கு வாழ்பவன் வானுறையும் தெய்வத்துள் வைக்கப்படும்.
அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை பண்பும் பயனும் அது. (திருக்குறள்)
இல்வாழ்வோர்க்குரிய அறங்களைச் சிவஞான சித்தி யார் தொகுத்துக் கூறுகிறது.
ஒழுக்கம்அன் பருள் ஆ சாரம் உபசாரம் உறவுசீலம்
வழுக்கிலாத் தவந்தா னங்கள் வந்தித்தல் வணங்கல்
6T)): அழுக்கிலாத் துறவடக்கம் அறிவொடர்ச் சித்த லாதி இழுக்கிலா அறங்களானல் இரங்குவான்பணிஅறங்கன் (சிவஞான சித்தியார்)
ஒழுக்கம், அன்பு, கருணை, அனுட்டானங்கள், பெரி யோரை உபசரித்தல், உறவு, நற்குணங்கள், குற்றமற்ற தவங்கள், தானங்கள், வழிபாடு, நேர்மை, பிறர் மனை விழையாமை, தன்னடக்கம்,தக்கன இவை தகாதன இவை எனப் பகுத்தறிதல், இறைவனையும் பெரியோர்களையும் அர்ச்சித்தல் முதலிய குணங்கள் உடையவனின் செயல்கள் அறங்களாகும்.

125
மனமது நினைய வாக்கு வழுத்தமந் திரங்கள் சொல்ல இனமலர் கையிற் கொண்டங்கு இச்சித்த தெய்வம்
போற்றிச் சினமுதல் அகற்றி வாழுஞ் செயலறம் ஆனல்யார்க்கும் முனம்ஒரு தெய்வம் எங்குஞ் செயற்குமுன் நிலையாம்
அன்றே. (சிவஞான சித்தியார்)
ஒருவன் அறத்தின் வழிநின்று இறைவனை மனத்தால்' தினைந்து வாக்கால் துதித்து மலர் கொண்டு அருச்சித்து வழிபட்டு வாழ்வானகில் அவன் செயல்கள் யாவும் இறைவனுக்குப் பணிகளாகும்.
யான் எனது என்னும் செருக்கறுப்பான் வானுேர்க்கு உயர்ந்த உலகம் புகும். (திருக்குறள்)
நான் செத்தால் நீநல்லாயிருப்பாய்."
(யோகசுவாமிகள்)
யான் செய்தேன் பிறர்செய்தார்என்னதியான் என்னும் இக்கோணை ஞான் எரியால் வெதுப்பி நிமிர்த்துத்
தான் செவ்வே நின்றிட அத் தத்துவன்தான் நேரே தனையளித்து முன்னிற்கும் வினையொளித்திட்டோடும்
நான் செய்தேன் எனும் அவர்க்குத் தான் அங்கின்றி நண்ணுவிக்கும் போகத்தைப் பண்ணுவிக்குங் கன்மம் ஊன்செய்யா ஞானந்தான் உதிப்பின் அல்லால் ஒருவருக்கும் யான் எனதிங் கொழியா தன்றே.
- (சிவஞான சித்தியார்)
நான் என்து என்ற ஆணவ மலத்தை இறைஞானத் தால் மட்டுமே அறுக்கலாம். இம்மலமே பாசங்களுக்கும் மோகங்களுக்கும் துன்பங்களுக்குங் காரணம். இம்மலத்தை

Page 65
126
அறுத்து இறைவன் வழித்தாக நிற்க இதுவரையும் உடனக நின்ற இறைவன் வெளிப்பட்டுத்தோன்று வான். தோன்றக் கன்ம மலம் அற்றுவிடும். யான் எனது எனும் அகங்கார முடையவர்களின் செயல்கள் ஆகாமிய வினைக்குக் காலா கும்.சிற்றறிவுகளினின்று நீங்கிப் பதி ஞானத்தைப் பெற்ரு லன்றி யான் எனது எனும் அகங்காரம் நீங்காது.
இப்போது படிப்படியாக ஆன்மா அடையும் நிலைகளை சுருக்கமாகப் பார்ப்போம்.
(அ) நான் எனது எனும் அகங்காரத்தினலும் பாசங்
(ஆ)
களினலும் பலர் அதர்மங்கள் செய்கின்றனர். பலர் கபட நாடகங்கள் ஆடுகின்றனர். பலர் மக்களை ஏமாற்றிச் சுரண்டுகின்றனர். இவர்கள் இவ்வுலகிலும் மறுவுலகங்களிலும் துன்பங்களை அனுபவிப்பர். அனுபவித்துத் திருந்துவர். ஆன்மா இறைவனின் உடைமை. எமக்குத் தந்தையும் சுற்றமும் அவனே. அவன் கருணை எல்லாவுயிர்களுக்குமுண்டு.
பலர் புண்ணியங்கள் செய்கின்றனர். எனினும் நான் எனது எனும் தன்னுணர்வு நீங்கவில்லை. தாம் முத்தியடைய வேண்டுமென அங்கலாய்க் கின்றனர். புண்ணியத்தை வாங்கலாம் என எண்ணுகின்றனர். இவர்கள் இவ்வுலகிலும் மறுவுலகங்களிலுஞ் செய்த புண்ணியங்களுக் கேற்ற இன்பங்களை அனுபவிப்பர். இது முதலாவது நிலையிலுஞ் சிறந்தது என்பதில் ஐயமில்லை. ஆனல் இந்த நானிருக்கும் வரைக்கும் திருவருளும் பதிஞானமுங் கிடைக்கா.

፭ 27
(இ) ஆன்மா தன்னை மறந்து தன்னுணர்வற்று இறை யுணர்வாகி அவனை நினைந்து வணங்கி, அன்புருகி நிற்பின் அதன் சிந்தனைகளுஞ் சொற்களுஞ் செயல்களும் இறைவன் சிந்தனைகள் சொற்கள் செயல்கள் ஆகின்றன. புண்ணியபாவங்களில்லை. மும்மலங்களில்லை. ஆன்மா இறைவைேடு ஒன்றித்து இறை மயமாகிறது.

Page 66
13. திருவருள்
எங்குந் திருவருள். எல்லாம் திருவருள். காரிட்ட ஆணவக் கருவையிற் கண்டுண்டிருந்த ஆன்மாவை வெளி யிட்டது திருவருள். தனுகரண புவன போகங்களைத் தோற்றுவித்து ஆன்மாவோடு பொருத்தியது திருவருள். வினைப்பயன்களை ஆன்மாவோடு கூட்டுவித்து இன்ப துன்பங்களை நுகரச் செய்வது திருவருள். பதிஞானத்தை அளிப்பது திருவருள். மாயையை நீக்குவது திருவருள். ஆணவ மலத்தை அறுப்பது திருவருள். ஆன்மாவைத் தானுக்கியாள்வது திருவருள். முத்தியளிப்பது திருவருள். இறப்பிலும் பிறப்பிலும் உலகிலும் மறுவுலகிலும் இணை பிரியாது அணுவுக்குள் அணுவாக உயிருக்கு உயிராக நிற்பது திருவருள்.
பாசத்தி லிட்டதகுள் அந்தப் பாசத்தின் நேசத்தை விட்ட தருள் அந்த நேசத்தில் கூசற்ற முத்தியருள் அந்தக் கூட்டத்தின் நேசத்துத் தோன்ரு நிலையரு ளாமே.
w (திருமந்திரம்)
பந்தமும் வீடும் படைப்போன் காண்க.
(மாணிக்கவாசகர்)

129
தன்னிலைமை மன்னுயிர்கள் சாரத் தருஞ் சத்தி. அருளிற் பெரிய தகிலத்து வேண்டும் பொருளிற் றலையிலது போல். பெருக்க நுகர்வினை பேரொளியா யெங்கும் அருக்கனென நிற்கு மருள். அறியாமை யுண்ணின் தனித்ததே காணும் குறியாகி நீங்காத கோ. அகத்துறு நோய்க் குள்ளின ரன்றி யதனைச் சகத்தவரும் காண்பரோ தான்.
அகலத் தருமருளே யாக்கும் வினைநீக்குஞ் சகலர்க்கு வந்தருளுந் தான்.
(திருவருட்பயன்) எல்லாவற்றிலும் மேலானது திருவருள். அதற்கு ஒப்பானது வேறு யாதுமில்லை. திருவருள் கர்மங்களை வளர்க்கிறது. ஆன்மா இன்பதுன்பங்களே நுகரச் செய் கிறது. ஞான ஒளியாய் ஆணவ மலத்தைக் கெடுக்கிறது. ஆன்மாக்களுக்குத் தெரியாமல் அவற்றின் உள்ளே நின்று படைத்தல், காத்தல், அழித்தல், மறைத்தல், அளித்தல் எனும் ஐந்தொழிலையுஞ் செய்கிறது. அருள் ஒன்றே ஆணவ மலத்தை அறுக்க வல்லது. மும்மலத்தவருக்கும் முத்தியளிப்பது திருவருளே. விஞ்ஞானகலருக்கு இறைவன் அவர்களுடைய அறிவிலே நின்று அருள் செய்வார். பிரளயாகலருக்கு அவர்களைப் போல முன்னிலையினின்று அருள் செய்வார். சகலருககுக் குருவடியாய் வந்து அருள் செய்வார்.
படைத்தல், காத்தல், அழித்தல், மறைத்தல், அருளல் எனும் ஐந்தொழிலும் திருவருளே.
ஆட்டுவித்தால் ஆர்ஒருவர் ஆடா தாரே அடக்குவித்தால் ஆர் ஒருவர் அடங்கா தாரே ஒட்டுவித்தால் ஆர் ஒருவர் ஓடா தாரே உருகுவித்தால் ஆர் ஒருவர் உருகா தாரே

Page 67
30
பாட்டுவித்தால் ஆர் ஒருவர் பாடா தாரே பணிவித்தால் ஆர் ஒருவர் பணியா தாரே காட்டுவித்தால் ஆர் ஒருவர் காணு தாரே காண்பார் ஆர் கண்ணுதலாய்க் காட்டாக் காலே.
(அப்பர்)
ஐந்தொழில்களும் பஞ்சகிருத்தியம் எனப்படும். இவை இறைவனின் திருநடனங்களாகும். ஐந்தொழில்களும் ஊன நடனங்கள் எனப்படும்.
தோற்றம் துடியதனில் தோயும் திதியமைப்பில் சாற்றியிடும அங்கியிலே சங்காரம்-உற்றமா ஊன்று மலர்பதத்தில் உற்றதிரோ தம்முத்தி நானற மலாப்பதத்தே நாடு.
துடியை இயக்கும் திருக்கை படைத்தலையும் அமைத்த திருக்கை காத்தலையும் அங்கி ஏந்திய திருக்கை அழித்தலை யும் முயல்கள் மீது உறுதியாக ஊன்றும் திருவடி மறைத் தலையும் அத்திருவடியின் கிருத்தியம் அருளலையுங் குறிக்கின்றன.
மாயை தனையுதறி வல்வினையைச் சுட்டுமலம் சாய அமுக்கிஅருள் தானெடுத்து-நேயத்தால் ஆருந்த வாரிதியில் ஆன்மாவைத் தானழுத்தல் தானெந்தை யார்பரதம் தான்.
துடியை அசைத்தல் பக்குவம் எய்திய ஆன்மாவின் உணர்விலிருந்து மாயையை உதறிவிலக்குவதைக்குறிக்கும். ஓம் அம்பிகையை ஏந்தியுள்ள கை ஆன்மாவின் வினைகளை முனையா வண்ணம் தடுக்கும். ஊன்றுந் திருவடி ஆன்மா வைக் கேவல சகலத்திலிருந்து காப்பாற்றி அருளின் கண் நிறுத்தும். எடுத்த திருவடியின் குஞ்சித்த நிலையும் அதற்கு

13
ஒப்பப் பாதத்தைக் காட்டும் திருக்கையும் நில் என அமைந்த திருக்கையும் ஆன்மாவைத் துரியா தீத ஆனந்த
நிலையில் அழுத்துவதைக் குறிக்கும். இஃது இறைவனின் ஞான நடனமாகும்.
மோனந்த மாமுனிவர் மும்மலத்தை மோசித்துத் தானந்த மானிடத்தே தங்கியிடும்-ஆநந்தம் மொண்டருத்த நின்ருடல் காணிமருள் மூர்த்தியாகக் கொண்டதிரு அம்பலத்தான் கூத்து.
மாமுனிவர்களே மும்மல வாதனைகளையும் நீங்கித் தன்னுணர்வற்று சிவானந்தத்தைப் பருகுவதற்குத் திருவருள் புலப்பட நின்று அருள் புரிவது ஆனந்தக் கூத்தாகும். இது முத்தியில் இன்பத்தை அளிக்குஞ் செயலாகும்.
முத்தியடைவதற்கு ஆன்மா பரிபக்குவமடைய வேண்டும். இதற்கும் உதவுவது திருவருளே. பரிபக்குவ மடைந்த ஆன்மா முத்தியடைவதற்கும் திருவருள் வேண்டுமா? வட இந்தியாவில் 130 வருடங்கள் வாழ்ந்து சிவனடி சேர்ந்த சிவபுரி பாவாவிடம் மேனுட்டவர் சிலர் இக்கேள்வியைக் கேட்டனர். திருவருளும் வேண்டுமென அவர் விடையளித்தனர். இதுவே சைவசித்தாந்த விடையுமாகும். ஆன்மா சதசத்து. பூரண அறிவுடைய தன்று. அறிவிக்க அறிவது. ஆதலால் ஆன்மா இறைவனைச் சரணடைய வேண்டும்.
கண்டவற்றை நாளுங் கனவிற் கலங்கியிருந் திண்டிறலுக் கென்ருே செயல்.
பொறியின்றி யொன்றும் புணராத புத்திக் கறிவென்ற பேர்நன் றற.

Page 68
132
ஊமக்கண் போல வொளியு மிகவிருளே யாமக்கண் காணு தவை.
ஊன்றியா தென்று முயிரறியா தொன்றுமிது தானறியா தாரறிவார் தான். ܫ
(திருவருட்பயன்) நனவிலே தான் கண்டவற்றைக் கனவிலே மாறிக் காணும் ஆன்மா வலிமையற்றது. ஐம்பொறிகளில் ஏதாவது ஒன்றில்லாவிடின் ஆன்மாவினல் அறியமுடியாது. கூகையின் கண்களுக்குச் சூரியன் ஒளி தோன்ருதவாறு அருள் ஞானமில்லாத ஆன்மாக்கள் இறைவனைக் காணு, உடல் சடமாதலால் ஒன்றையும் அறியாது. ஆன்மா ஆணவத்தினற் பீடிக்கப்பட்டிருப்பதினல் ஒன்றையுந் தானக அறிய மாட்டாது. திருவருளின்றி ஞானத்தை பெற முடியாது.
அலன் இவன் ஆனது அவனருளால் அல்லது இவன் அவன் ஆகான் என் றுந்தீபற என்றும் இவனே என் றுந்தீபற.
(திருவுந்தியார்) மன்னவன் தன் மகன்வேடர் இடத்தே தங்கி வளர்ந்தவனை யறியாது மயங்கி நிற்பப் பின்னவனும் என்மகன் நீ யென்றவரிற் பிரித்துப் பெருமையொடுந் தானுக்கிப் பேணு மாபோல துன்னியஐம் புலவேடர் சுழலிற் பட்டுத் துணைவனையும் அறியாது துயருறுந்தொல் லுயிரை மன்னுமஅருட் குருவாகி வந்தவரின் நீக்கி மலம் அகற்றித் தானுக்கி மலரடிக்கீழ் வைப்பன்.
(சிவஞான சித்தியார்) ஆகமங்கள் எங்கே அறுசமயம் தானெங்கே யோகங்கள் எங்கே உணர்வெங்கே பாகத்து அருள்வடிவும் தானுமாய் ஆண்டிலனேல் அந்தப் பெருவடிவை யாரறிவார் பேசு.
(திருக்களிற்றுப் பாடியார்)

14. பக்தி
முத்திநெறி அறியாத மூர்க்கரொடு முயல்வேனப் பத்திநெறி அறிவித்துப் பழவினைகள்பாறும் வண்ணம் சித்தமலம் அறுவித்துச் சிவமாக்கி என ஆண்ட அத்தன் எனக்கு அருளியவாறு ஆர்பெறுவார்
அச்சோவே;
வைஷ்ணவம் கிறித்தவம் போன்று சைவமும் பக்த மார்க்க சமயங்களில் ஒன்ருகும். ஆஸ்திக சமயங்கள் பெரும்பாலும் பக்தியையும் திருவருளேயும் வற்புறுத்து கின்றன. சரியை கிரியை யோகம் ஞானங்கள் எல்லாம் பக்திக்கு வழிகளாகும். முதிர்ந்த பக்தியே ஞானம் எமது ஏட்டுப் படிப்புக்களும் பட்டங்களும் பகுத்தறிவும் தர்க்கங் களும் வாதங்களும் ஞானமாகா.
இறைவன் ஒருவன் உளன். நாம் அவரின் உடைமை களாகிய ஆன்மாக்கள். எம்மைப் பீடித்திருப்பது மலம். இம்மலத்தினின்று நீங்கி நாம் அவனடி சேர்ந்து நித்திய பேரானந்த வாழ்வடைய வேண்டும். இறைவனுக்கும் எமக்கும் தொடர்புண்டு. அவனே எமக்கு எல்லாம். அவனுடைய திருவருள் எமக்கு என்றும் உறுதுணையாக இருக்கிறது. இவ்வுண்மையை உணருவதே ஞானம். இதை உணர்ந்து நாம் இறைவன் பாற் பேரன்பு பூண வேண்டும். அன்பு கனிந்து பக்தியாக வேண்டும்.

Page 69
34
அன்பின் வழியது உயிர்நிலை அஃதிலார்க்கு என்புதோல் போர்த்த உடம்பு. (திருக்குறள்)
இறைவன் பாலன்பு எல்லா உயிர்கள் பாலும் அன்பாக விரிய வேண்டும். எமது சிறுமைக்குக் காரணம் நான் எனது என்ற அகங்காரமும் சுயநல நோக்கமும் ஆகும். அன்பின் வழி செயற்பட வேண்டும். சிந்தனையில் அன்பு. செயல்களில் அன்பு. இதற்கு அவன் தாளைப் பற்று வதே வழியாகும்.
பற்றுக பற்றற்ருன் பற்றினை அப்பற்றைப் பற்றுக பற்று விடற்கு. (திருக்குறள்)
பல சமயங்கள் போதிக்கும் பக்தி நெறியைப் பற்றிப் பல நூல்கள் உள. அற்ப வித்தியாசங்களிருப்பினும் இப்பத்தி நெறி எல்லா ஆஸ்திக சமயங்களுக்கும் பொது வானவாகும். ஆதியும் அந்தமும் தோற்றமும் ஈறும் இல்லாதவனும் ஆதாரமும் உறுதுணையுமாகிய இறைவன் பால் எமக்கு எழும் கவர்ச்சியே பக்தியாகும். அன்டையோ பக்தியையோ விளக்க முடியாது. வரையறை செய்ய முடியாது, இறை பக்தியில் எம்மை மறந்து விடுகிருேம். மோகங்கள் பாசங்களை மறந்து விடுகிருேம். எங்கும் அவன். எல்லாம் அவன் செயல். இறைவனின் குணத்தைப் போற்றுவது, உரூபத்தைத் தியானிப்பது, அவனை இடை விடாது, நினைப்பது, அவனுக்குச் சேவை செய்வது. (மனத் தினல், வாக்கினல், செயலினல்) அவனுக்குப் பூசை செய்வது அவனுடன் நட்புறவு கொள்வது, காதலாகிக் கசிந்து நேசிப்பது, பிரிவாற்ருமை, அவனுக்குத் தன்னை அர்ப்பணிப்பது, இறையுணர்வாக இறைமயமாக நிற்பது முதலிய பதினெரு வடிவாகப் பக்தி பரிணமிக்குமென நாரதா பக்தி சாத்திரங் கூறுகிறது.
பக்தியின் முதிர்ச்சியினுற் பிரபத்தி நிலை உண்டாகும் போது பக்தன் தன்னுணர்வற்றுத் தனக்கென ஒன்றையுங்

35
கோராது இறையுணர்வாகிருன். பக்தியிற் பலவகை
களும் பல படிகளுமுள. பக்திச் சாதனைகளில் ஏழுபடிகள்
குறிப்பிடப்படுகின்றன-சிரத்தை அடியாரோடும் நல்லா
ரோடுங் கூடி வாழ்தல், ஞான சாதனங்களைப் பழகி அவ் வழியாக மனத்தின் அழுக்குகளைப் படிப்படியாகப் போக்கல், மனத்திலிருந்து உலக ஆசைகளையும் பாசங்
களையும் அகற்றல், ஞான சாதனங்களை முறையாகப் பழகி
வருதல், நன்னம்பிக்கை, பக்தியிற் பேரவா பக்தியில் தாச
மார்க்கம் புத்திர மார்க்கம் சகமார்க்கம் சன்மார்க்க
வகைகள் குறிப்பிடப்படுகின்றன. இறைவனை ஆண்டா ஞகவும் எம்மை அடிமையாகவுங் கருதி வழிபடுதல் தாச
மார்க்கம் எனப்படும். உதாரணம் திருநாவுக்கரசர்.
இறைவனைத் தந்தையாகவும் எம்மை மைந்தணுகவுங் கருதி
வழிபடுதல் சற்புத்திர மார்க்கம் எனப்படும். உதாரணம்
திருஞானசம்பந்தர். இறைவனை எமது தோழகைக் கருதி
வழிபடுதல் சகமார்க்கம் எனப்படும். உதாரணம் சுந்தரர். இறைவனை எமது ஆன்மாவுக்கு உயிராகக் கருதி
வழிப்படல் சன்மார்க்கம் எனப்படும். உதாரணம்
மாணிக்கவாசகர்.
அன்பு போன்று பக்தியும் உள்ளெழும் ஓர் அனுபவ மாகும். இந்த உணர்ச்சியை இதுவெனச் சுட்டவோ விளக்கவோ முடியாது. அனுபவத்தில் உணர வேண்டும். பக்தியைப் பற்றிப் பல நூல்களைப் படிப்பதினற் பக்தி உண்டாகப் போவதிலலை. இக்காலத்தில் எமது கல்வி பகுத்தறிவுக் கல்வி. பகுத்துப் பகுத்து வாழ்க்கையிற் சலித்துப் போகிருேம். பக்தியைக் காட்டுவதற்கு அடியார்களின் பாடல்கள் சிலவற்றை இங்குக் கொடுக் கிறேன்.
அச்சம் இலர் பாவம்இலர் கேடும்இலர் அடியார் நிச்சம்உறு நோயுமிலர் தாமுற்றின்றி யூரில் நச்சம்விட நுடையார் நறுங் கொன்றைநயந் தாளும் பச்சம்உடை அடிகள் திருப் பாதம்பணி வாரே,

Page 70
136
புலன் ஐந்தும் பொறிகலங்கி நெறிமயங்கி அறிவு அழிந்திட்டு ஐம்மேல் உந்தி அலமந்த போதாக அஞ்சேல் என்று அருள்செய்வான் அமருங் கோயில் வலம்வந்த மடவார்கள் நடம்ஆட முழவுஅதிர மழைஎன்று அஞ்சிச் சிலமந்தி அலமந்து மரம்ஏறி முகில் பார்க்கும் திருஜ யாறே.
தாயுநீயே தந்தைநீயே சங்கரனே அடியேன் ஆயுநின்பால் அன்பு செய்வான் ஆதரிக்கின்றதுள்ளம் ஆயமாய காயந்தன்று ளேவர் நின்றுஒன்றலொட்டார் மாயமேயென் றஞ்சுகின்றேன் வலிவல மேயவனே.
சிறையாரு மடக்கிளியே இங்கேவா தேனெடுபால் முறையாயே உணத்தருவன் மொய்பவளத்
தொடுதாளந் துறையாருங் கடல்தோணி புரத்தீசன் துளங்குமிளம் பிறையாளன் திருநாமம் எனக்கொருகாற் பேசாயே சித்தம் கெளிiர்கள்ள் அத்தன் ஆருரைப் பத்தி மலர்தூவ முத்தி ஆகுமே பிறவி அறுப்பீர்காள் அறவன் ஆரூரை மறவா தேத்துமின் துறவி ஆகுமே துன்பந் துடைப்பீர்காள் அன்பன் அணிஆரூர் நன்பொன் மலர்தூவ இன்பம் ஆகுமே. நீநாளும் நன்நெஞ்சே நினைகண்டாய் யார் அறிவார் சாநாளும் வாழ்நாளும்சாய்க்காட்டெம் பெருமாற்கே பூநாளும் தலைசுமப்பப் புகழ்நாமம் செவிகேட்ப நாநாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே.
காதலாகிக் கசிந்துகண் ணிர்மல்கி ஒதுவார்தமை நன்னெறிக்கு உய்ப்பது வேத நான்கினும் மெய்ப் பொருளாவது நாதன் நாம நமச்சி வாயவே.

13ፃ
வேயுறு தோளிபங்கன் விடமுண்ட கண்டன்
மிகநல்ல வீணை தடவி
மாசறு திங்கள்கங்கை முடிமேல் அணிந்தென்
உளமே புகுந்த அதனல்
ஞாயிறு திங்கள் செவ்வாய் புதன் வியாழன் வெள்ளி சனிபாம் பிரண்டுமுடனே
ஆசறு நல்ல நல்ல அவைநல்ல நல்ல அடியார்
அவர்க்கு மிகவே.
மருந்தவை மந்திர மறுமைநன்
னெறியவை மற்று மெல்லாம் அருந்துயர் கெடுமலர் நாமமே
சிந்தைசெய் நன்னெஞ்சமே பொருந்துதன் புறவினிற் கொன்றைபொன்
சொரிதரத் துன்றுபைம்பூஞ் செருந்தி செம் பொ ன் மலர் திருநெல்வே
லியுறை செல்வர் தாமே.
(திருஞான சம்பந்தர்) சலம்பூவொடு தூபம் மறந்தறியேன்
தமிழோடு இசை பாடல் மறந்தறியேன் நலம்நீங்கினும் உன்னை மறந்தறியேன்
உன் நாமம் என் நாவில் மறந்தறியேன் உலந்தார்தலை யிற்பலி கொண்டு ழல்வாய்
உடல் உள்ளுறு சூலை தவிர்த்து அருளாய் அலந்தேன் அடி யேன் அதி கைக்கெடில
வீரட்டா னத்துறை அம்மானே.
பெரும்புலர் காலை மூழ்கிப் பித்தர்க்குப் பத்தராகி அரும்பொடு மலர்கள் கொண்டு ஆங்கு ஆர்வத்தை
உள்ளே வை து விரும்புநல் விளக்குத் துபம் விதியினல் இடவல்ல க்கு, கரும்பினிற் கட்டிபோல்வார் கடவூர்வீ ரட்ட ரே.
சைவ-9

Page 71
38
மனமெனுந்தோணி பற்றி மதியெனுங்கோலைஉஊன்றிச் சினமெனும் சரக்கை ஏற்றிச் செறி கடல் ஓடும்போது மறனெனும் பாறை தாக்கி மறியும்போது அறிய
வொண்ணுது உனையுனும் உணர்வை நல்காய் ஒற்றியூர்உடைய
கோவே.
காயமே கோயிலாகக் கடிமணம் அடிமையாக வாய்மையே தூய்மையாக மனமணி இலிங்கமாக நேயமே நெய்யும் பாலா நிறையநீரமைய ஆட்டிப் பூசனை ஈசனர்க்குப் போற்றவிக் காட்டினுேமே. புழுவாய்ப் பிறக்கினும் புண்ணியா உன் அடி
என்மனத்தே
வழுவாது இருக்க வரந்தர வேண்டும் இவ்வையகத்தே தொழுவார்க்கு இரங்கியிருந்தருள் செய்பாதிரிப்புலியூர் செழுநீர்ப் புனற்கங்கை செஞ்சடை மேல்வைத்த
தீவண்ணனே. நங்க டம்பனைப் பெற்றவள் பங்கினன் தென்க டம்பைத் திருக்கரக் கோயிலான் தன்க டன் அடி யேனையும் தாங்குதல் என்க டன்பணி செய்து கிடப்பதே.
வாழ்த்த வாயும் நினைக்க படநெஞ்சும் தாழ்த்த சென்னியும் தந்த தலைவனைச் சூழ்த்த மாமலர் தூவித் துதியாதே வீழ்த்த வாவினை யேனெடுங் காலமே. புலவர்தன்முன் திருவலகு பணிமாறிப் புனிறகன்ற நல்மலிஆன் சாணத்தால் நன்கு திரு மெழுக்கிட்டு மலர்கொய்து கொடுவந்து மாலைகளும் தொடுத்
தமைத்துப் பலர்புகழும் பண்பினல் திருப்பணிகள் பல செய்தார். தலையே நீவணங்காய்-தலைமாலை தலைக்கணிந்து தலையாலேபலி றேருந்தலைவனைத்தலையே நீவணங்காய்

139
வாயே வாழ்த்துகண்டாய்-மதயானை உரிபோர்த்துப் பேய்வாழ் காட்டகத்து ஆடும் பிரான் தன்னை வாயே வாழ்த்துகண்டாய்.
நெஞ்சே நீநினையாய்-நிமிர் புன்சடை நின்மலனை மஞ்சா டும்மலை மணுளன-நெஞ்சே நீநினையாய்
கண்காள் காண்மின்களோ - கடல் நஞ்சுண்ட கண்டன் தன்னை கண்காள் காண்மின்களோ
கால்களாற் பயனென்-கறைகண்டனுறை கோயில்: கோலக் கோபுரம் கோசரணஞ் சூழாக் கால்களாற் பயனென். முன்ன மவனுடைய நாமங் கேட்டாள் மூர்த்தி யவனிருக்கும் வண்ணங் கேட்டாள் பின்னை யவனுடைய வாரூர் கேட்டாள் பெயர்த்து மவனுக்கே பிச்சி யானள்
அன்னையு மத்தனையு மன்றே நீத்தாள் அகன்ருள் அகவிடத்தார் ஆசா ரத்தைத் தன்னை மறந்தாள் தன்னமங் கெட்டாள் தலைப் பட்டாள் நங்கை தலைவன் தாளே.
(திருநாவுககரசர்) மற்றுப் பற்றெனக் கின்றி நின்றிருப் பாத மேமனம் பாவித்தேன் பெற்றலும் பிறந்தேன் இனிப்பிற
வாத்தன்மை வந்தெய்தினேன் கற்றவர் தொழு தேத்தும் சீர்கறை யூரிற் பாண்டிக் கொடுமுடி நற்ற வாஉனை நான் யறுக்கினும்
சொல் லும்நா நமச்சிவாயவே.
கற்ப கத்தினைக் கனகமால் வரையைக் காம கேயனைக் கண்ணுத லானைச்

Page 72
40 சொற்ப தப்பொருள் இருள் அறுத்து அருளுந் துரய சோதியை வெண்ணெய்நல் லூரில் அற்பு தப்பழ ஆவணங் காட்டி அடியரு வென்னை ஆளது கொண்ட நற்பதத்தை நள்ளா றனை அமுதை நாயினேன் மறந்து என் நினைக் கேனே. பந்தராய்ப் பணிவார்கள் எல்லார்க்கும் அடியேன் பரமனையே பாடுவார் எல்லார்க்கும் அடியேன் சித்தத்தைச் சிவன்பாலே வைத்தார்க்கும் அடியேன் திருவாரூர் பிறந்தார்கள் எல்லார்க்கும் அடியேன் முப்பொழுதும் திருமேனி தீண்டுவார்க் கடியேன் முழுநீறு பூசிய முனிவர்க்கு மடியேன் יא அப்பாலு மடிசார்ந்த வடியார்க்கும் அடியேன் ஆரூரன் ஆரூரில் அம்மானுக் காளே.
(சுந்தரமூர்த்திநாயனர்) உடல்குழைய என்பெலாம் நெக்குருக விழிநீர்கள்
ஊற்றென வெதும்பியூற்ற ஊசிகாந் தத்தினைக் கண்டணுகல் போலவே
ஒருறவும் உன்னியுன்னிப் படபடென நெஞ்சம் பதைத்துள் நடுக்குறப்
பாடியா டிக்குதித்துப் பனிமதி முகத்திலே நிலவனைய புன்னகை
பரப்பியார்த் தார்த் தெழுந்து மடலவிழ மலரனைய கைவிரித் துக்கூப்பி வானேயவ் வாணிலின்ப மழையே மழைத்தாரை வெள்ளமே நீடூழி
வாழியென வாழ்த்தியேத்துங் கடல்மடை திறந்தனைய அன்பரன் புக்கெளியை கன்னெஞ்ச னுக்கெளியையோ கருதரிய சிற்சபையி லானந்த நிர்த்தமிடு
கருணு கரக் கடவுளே.
(தாயுமானவர்)

14
சிவசிவ என்கிலார் தீவினையாளர் சிவசிவ என்றிடத் தீவினைமாளும் சிவசிவ என்றிடத் தேவருமாவர் சிவசிவ என்னச் சிவகதிதாமே. சூரிய காந்தமும் சூழ்பஞ்சும் போலவே சூரிய காந்த மசூழ் பஞ்சைச் சுட மாட்டா சூரியன் சந்நிதி யிற்சுடு மாறுபோல் ஆரியன் தோற்றமுன் அற்ற மலங்களே. அப்பினிற் கூர்மை ஆதித்தன் வெம்மையால் உப்பெனப் பேர்பெற்று உருச் செய்தது-அவ்வுரு அப்பினிற் கூடியது ஒன்று ஆகு மாறுபோல் செப்பின் இச் சீவன் சிவத்துள் அடங்குமே. புளிக்கண்டவர்க்குப் புனல் ஊறு மாபோல் களிக்கும் திருக்கூத்துக் கண்டவர்க் கெல்லாம் அளிக்கும் அருட்கண்ணிர் சோர்நெஞ்சு உருக்கும் ஒளிக்கும் ஆனந்தத்து அமுதுஊறும் உள்ளத்தே.
என்பே விறகா இறைச்சி அறுத்திட்டுப் பொன்போற் கனலிற் பொரிய வறுப்பினும் அன்போடுருகி அகங் குழைவார்க்கன்றி என்போன் மணியினை எயதவொண் ணுதே.
(திருமூலர்)
அன்பேயென் அன்பேயென்றன்பால் அழுதரற்றி அன்பே அன்பாக அறிவழியும்-அன்பின்றித் தீர்த்தற் தியான ஞ் சிவார்ச்சனைகள் செய்யுமவை சாற்றும் பழமன்றே தான்.
* (திருக்களிற்றுப் பாடியார்)
ஒதவன் நாமம் உரையவன் பல்குணம் உன்னை
விட்டேன்
போதவன் பின்னே பொருந்தவன் வாழ்க்கை
திருந்தச் சென்று.

Page 73
42
மாதவ மாகிடுமாதவ மாவளர் புன்சடையான் யாதவன் சொன்னன் அதுகொண் டொழியினி
ஆரணங்கே.
கூறுமினிசனைச்செய்மின்குற்றேவல்குளிர்மின்கண்காள் தேறுமின்சித்தந்தெளிமின் சிவனைச் செறுமின்செற்றம் ஆறு மின் வேட்கையறுமின் அவலமிவை நெறியா ஏறுமின் வானத்திருமின் விருந்தா யிமையவர்க்கே:
(சேரமான்) ஒளிவளர் விளக்கே உலப்பிலா ஒன்றே! உணர்வுசூழ் கடந்ததோர் உணர்வே தெளிவளர் பளிங்கின் திரள்மணிக் குன்றே சித்தத்துள் தித்திக்கும் தேனே அளிவளர் உள்ளத்து ஆனந்தக் கனியே அம்பலம் ஆடரங்காக வெளிவளர் தெய்வக் கூத்து உகந் தாயைத் தொண்டனேன் விளம்புமா விளம்பே
(திருமாளிகைத் தேவர்)
மன்னுகதில்லை! வளர்கநம் பத்தர்கள்!
வஞ்சகர் போய் அகல! பொன்னின்செய் மண்டபத் துள்ளே புகுந்து
புவனிஎல் லாம்விளங்க அன்ன நடைமட வாள் உமை கோன்அடி
யோமுக்கு அருள்புரிந்து பின்னைப் பிறவி அறுக்க நெறிதந்த
பித்தற்குப் பல்லாண்டு கூறுதுமே.
(சேந்தனர்-திருப்பல்லாண்டு)
வந்திப்பேன் அனுதினமும் வாழ்ந்திடுவேன்
உனது திரு வடியை நாளும்
சிந்திப்பேன் முப்பொழுதுஞ் சேவிப்பேன்
செஞ்சூட்டுச் சேவலே! கேள்

143
பந்திப்பேன் எனது வலிபார் என்னும்
ஆணவமணம் பகை விண்டோடக் கொந்திற்றேன் பொழிசாரல் தணிகைவரை
யான் வரநி கூவுவாயே.
(தணிகைச் சந்நிதிமுறை) நினைமின் மனனே! நினைமின் மனனே! சிவபெருமானைச் செம்பொனம் பலவனை நினைமின் மனனே! நினைமின் மனனே! எனதற நினைவற இருவினை மலமற வரவொடு செலவற மருளற விருளற இரவொடு பகலற விகபர மறவொரு முதல்வனைத் தில்லையுண் முளைத்தெழுஞ் சோதியை அம்பலத் தரசனை யானந்தக் கூத்தனை நெருப் பிணி லரக்கென நெக்குநெக் குருகித் திருச்சிற் றம்பலத் தொளிருஞ் சிவனை நினைமின் மனனே! நினைமின் மனனே
(பட்டினத்தடிகள்) திருவாசகத்துக்கு உருகார் ஒரு வாசகத்துக்கும் உருகார். பின்வருவன மாணிக்கவாசகரின் திருவாசகப் பாடல்களாகும்.
பிறிவினை அறியா நிழலது போல முன்பின் ஆகி முனியாது அத்திசை என்பு நைந்து உருகி நெக்குநெக்கு ஏங்கி அன்பு எனும் ஆறு கரையது புரள நண்புலன் ஒன்றி நாத என்று அரற்றி உரைதடு மாறி உரோமம் சிலிர்ப்பக் கரமலர் மொட்டித்து இருதயம் மலரக் கண்களி கூர நுண்துளி அரும்பச் சாயா அன்பினை நாள்தொறும் தழைப்பவர் தாயே ஆகி வளர்த்தனை போற்றி மெய்தரு வேதியன் ஆகி வினைகெடக் கைதரவல்ல கடவுள் போற்றி
(போற்றித்திருவகவல்)

Page 74
丑4套
மெய்தான் அரும்பி விதிர் விதிர்த்து உன்விரை ஆர்கழற்கு என். கைதான் தலைவைத்துக் கண்ணிர்
ததும்பி வெதும்பி உள்ளம் பொய்தான் தவிர்த்து உன்னைப் போற்றி
சயசய போற்றி என்னும் கைதான் நெகிழ விடேன் உடை
யாய் என்னைக் கண்டு கொள்ளே பரந்துபல் ஆய்மலர் இட்டுமுட்டாது அடியே இறைஞ்சி இரந்தஎல்லாம் எமக்கேபெறலாம் என்னும் அன்பர் உள்ளம் கரந்துநில் லாக்கள்வ னேநின்தன் வார் “ழற்கு அன்பு எனக்கு நிரந்தர மாய்அரு ளாய்நின்னை ஏத்த முழுவதும்ே நான் யார்? நான் ஒர் ஆன்மா. “சிற்றுயிர்". மலங்களிற் கட்டுண்டு பிறந்தும் இறந்தும் உழல்கின்றேன். எனினும் நான் இறைவனின் உடமை. எனக்குத் தோற்றமும் ஈறும் அவனே. ஆதாரமும் அருந்துணையும் அவனே. என்றும் என்னேடு இணைபிரியாது இருக்கிருன்.எனக்குத் தந்தையும் தாயுஞ் சுற்றமும் அவனே. மும்மலங்களையும் அறுத்து என்னை மறந்து அவனை வழிபட்டு அவனுணர்வாகி அவனை அடைவதே எனது நோக்கம். ஆன்மா நித்திய மானது. என்றும் அழியாதது. மரணத்தின் போது ஒருல கிலிருந்தும் ஒருட்ம்பிலிருந்தும் வேருேருலகதிற்கும் வேருே ருடம்பிற்கும போகிறது. மறுபடியும இவ்வுலகிற்கு வரு கிறது. எனது ஆன்மாவுக்கு மரணமில்லை. மரணத்தைப் பற்றி அஞ்சவேண்டியதில்லை. அஞ்சுவதற் கொனறுமில்லை. இறைவன் எனக்கருகில் நிற்கிருன். அவனை நினை. அவனிற் சரணடை
வேலாயுதன்சங்கு சக்ரா யுதன் விரிஞ் சன்னறியாச் சூலாயுதன்றந்த கந்த சுவாமி சுடர்க்குடுமிக் காலா யுதங்கொடி யோனருள்ாய கவசமுண்டென் பாலா யுதம்வரு மோயமனேடு பகைக்கினுமே
(கந்தரலங்காரம்

šs 6.vif
&
6
91
24
26
26
30
3
32
33
34
35
お5
36
4.
41
4
27
13
17
2
13
22
22
22
19
.
10
பிழை திருத்தம்
பிழை
கேள்விகளையும் திருவடையார் நாம்
சத்தப் போகத்தினால் நானாகத் ஒருவளையே நன்மைகள் கொண்டீரே அருளுமன்று நவமுதல் நடாத்த
66
புலி
நன்னருள் உருவெளய ஆளவந்ததை சந்தெதிர் செயிறாறும் அஞ்கலத்தை
திருத்தம்
கேள்விகளைப் திருவடியார் g5Tlb
சுத்தப் யோகத்தினால்
தானாகத்
ஒருவனையே தன்மைகள் கொண்டேனே அருருவன்று தவமுதல் தடாத்த
புவன
புவி தன்னருள் உருவெளிய ஆணவத்தை சத்தெதிர் செயிருறும் அஞ்சவத்தை

Page 75
uašasth ouf
4 O
4 13
4卫 22
43 27
44 2
44 19
45 6
4. 24
47 5
47 5
... 7 7
49 8
δυ 2 50 4.
5
5. 2
51 9
5 23
5】 24
52 3
52 5
2 9
55 9
61 6
64 9
பிழை
துரியா கீதம் நுண்ணி எண்ணில்
அழுத்தி கிரியைசளாற்று அவ்வன் போனியும் பூக்
குழன்று ஒன்றதனிந் அண்டகஞ் உறி மானிடந் புதிய தோனைடு தென்றும் தாதும்
வருபவை
வைதானாயும்
பிறப்பின்றி ஆனான் காணே மந்திரிகன் நன்னிலை சிவன்தான் திலன்
யோகத்தை
ஆணவங்
திருத்தம்
துரியாதீதம் நண்ணி என்னில் அழுந்தி கிரியைகளும்று அல்லன் யோனியும் புக்
குழன்று
ஒன்றதனிற் அண்ட சஞ் உற் மானிடத் புரிய தோடுளை
தென்னும்
தானும் வருபவனி
வைதானாயும்
பிரிப்பின்றி
ஆனேன்
தானே மாந்திரிகன் தன்னிலை சிவன் திவன் போகத்தை ஆண வங்

பக்கம் வரி
65
65
65
65
66
7 O
70
72
76
80
8O
80
83
86
88
92
96
98
99
00
102
104
105
106
7 06
106
15
| 6
17
27
29
ll
3
25
16
6
22
15
25
26
24
13
20
16
20
20
iii
பிழை
g.6ð)t-tL16ð Gaf
நம்
சத்தியால் நிற்பதும் ஆணவாம் சித்தியாக தன்னின்றினறே விந்நழுக்கை
உணவானது நஞ்சொல் வாளரினால் இருவர் தனையணித்து தமக்கு
பூதக ர கராசலங்கள்
நமது
தாவா காணாமையாற் தாள்
அனுபவித்
திருந்தும்
யிறுமுத்தித் நிபாந்
தோபக் சந்நிதிபாதம் ஒப்படைத்து
திருத்தம்
உடையது தம் சத்தியாய் நிற்பினுய ஆணவமாம் சத்தியாக தன்னின்றே வித்தழுக்கை
உணவாவது தஞ்சொல் வளாரினால் இடுவர் தனையளித்து நமக்கு
பூதசார சராசரங்கள்
தமது
தாவர காளாமையாற்
தான அனுபவித்துந்
திருந்தும் யிதுமுத்தித் நிபா தந் தோயக் சத்தி நிபாதம் ஒப்படைந்து

Page 76
魏
பக்கம் வரி பிழை திருத்தம்
09 28 மேத்தலே மெத்தவே
109 29 இனத்தை இன்பத்தை
10 8 வினைவிப்பது விளைவிப்பது
3 18 மெத்தத்தில் பெத்தத்தில்
3 18 சிவயநந சிவயநம
14 12 தன்மத்தால் கன்மத்தால்
15 21 வருத்தியிதிரித் வருத்தித் திரியி
லென் லென்
16 16 அபர் s-9l_l UT
16 18 தாத நாத
6 19 சாத்திய சாத்திப்
116 21 பூனி புனி
17 1 தியானந்தாற் தியானத்தாற்
8 7 ஆறாதுக் ஆறாறுக்
19 7 வமர் லமர்
Ι. 2 E 18 முனிவா முனிலா
21 20 நனுகுவார் நணுகுவர்
25 15 ஞான் ஞான
130 19 ஆருந்த ஆனந்த
3. 24 கலங்கியிருந் சலங்கியிடுந்
133 6 பக்த பக்தி
136 11 தசன்று தன்னு
136 18 கெளி தெளி
38 5 உனையுனும் உனையுறும்
1 40 7 பந்தராய் பக்தராய்
42 24 வாழ்ந்திடுவேன் வாழ்த்திடுவேன்


Page 77


Page 78
தோல் frt
"மரணத்திற்கு பின்
*gsruð வாழ்க்கையி விப்பவையும் எல்லாம் மானவைe இவற்றைெ மெய்ப் பொருளுண்டா?
இனிதரிகள் சிந்திக் லிருந்து இன்றுவரை இ6
உலகிற்தோன்றிய வினகிகளுக்கு விடையவி
சமயங்கள் கூறும் களில் முரண்பட்டவைய களேசி சாதாரண மக்க சிரமமானதாகும். எல விடைகள் மிகு முக்கியம
ஏனெனில், எமது சிறப்பும், நோக்கங்களும் களும் செயல்களும், பவு மும் அதிரிமமும், இல் விஞ விடைஇ&ரப் பொறுத்தன
சைவ சித்தாந்தம் g விளக்கம் தருகிறது என்ப
 

*பு வாழ்வு உண்டா?
ல் காண்பவையும் அணுப நியேற்றவை அறிந்திய பல்லாம் கடந்த நிதிதிய
999
திே தொடங்கிய காலத்தி விளுக்களுக்கு விடைதேடி
சில சமயங்களும் கூட இவ் சிக முயன்றுள்ளன.
விடைகளும் கி ைவேஐ ாக இருக்கின்றன. விடை ள் புரிந்து கொள்வதும் சீனும், இவ்வினுக்கவில் } si SfS)6SA7
வாழ்வும் வளமும், இரும் இலட்சியகிகளும், கிறிதஐ பாடும், நாகரிகமும் தரீம அசிகளுக்கு நாம் அளிக்கும் வாைகும்.
இவ் வினுக்களுக்கு எவ்வாறு தை இந்நூல் ஆராய்கிறது.