கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: சித்தாந்த சைவநெறித் திறவுகோல்

Page 1
சித்தாந்த
சைவநெ
●一
曇 蠱 இல - 57 ஆம் ஒழிக்ஸ்
Ao -
| V, رویه ۳۱ نارا
-
ൂർ
ഭെ
 

3. 5. di T35 J. Tg T &#্যঞm &zu) •

Page 2

சிவமயம்
சித்தாந்த சைவநெறித் திறவுகோல்
சிவஞான போதச் சூத்திர உரைவிளக்கமும் சிவஞான சித்தியார், திருமுறைகள், நற்சிந்தனைகள் ஆகியவற்றிலிருந்து உதாரணங்களும் கொண்டது.
ஆசிரியர்:
ச. தியாகராசா. ஆசிரியர்: இலங்கையின் சமயங்களும் அவைதரும் இன்ப வாழ்க்கை நெறியும்; சமயங்களின் தாயனைய சிவநெறி.

Page 3
டே சிவபுரம்
函 ல் பெmமிடம் இந்நூ O)
அருளொளி நிலயம், 31/21, டோசன் வீதி, கொழும்பு-2.
விஜயலட்சுமி புத்தகசால, 248 காலி வீதி, வெள்ளவத்தை,
கொழும்பு-6.
வெல்கம் சாறி ஹவுஸ், ! 146 காலி வீதி, வெள்ளவத்தை
கொழும்பு-6.
சரஸ்வதி புத்தகசாலே, தபால் பெட்டி எண் 372, செட்டியார்
தெரு, கொழும்பு.
பூரீகாந்தா அச்சகம்-புத்தகசாலே, 213, காங்கேசன்துறை வீதி, யாழ்ப்பாணம்.
ரூபா 1-75 (தபாற் செலவு வேறு

விவமயம்
காங்கள் குருநாத வின்
購
属
|ETH
. ஒவயோக சுவாமிகள் -

Page 4
முதற்பதிப்பு-1971 பதிப்புரிமை ஆசிரியருக்கே.
லிவுப் பதிப்பு
'சூப்ா 1-75
கொழும்பு அருளொளி அச்சகம்,
31|21, டோசன் வீதி, கொழும்பு-2,

சிவமயம்
அருச்சனை
எம்போலியர் அறிதற்கரியவாய் இந்நூலிற் காணவரும் அரும்பொருள்களை எமக்கு உணர்த்தி நின்றருளுகின்ற கருணைக் கடலாகிய எங்கள் குரு நாதனது திருவடியில் அன்பு மலராய் இந்நூலை அருச்சித்து வணங்கி நிற்கின்றேம்.
ஆசிரியர்,

Page 5

முகவுரை ii
மதிப்புரை у
அணிந்துரை νii
வாழ்த்துரை ix
தோற்றுவாய்
பொது அதிகாரம்
பிரமான இயல் · 7
இலக்கண இயல் «t 21
உண்மையதிகாரம்
சாதனை இயல் *ы. 30
பயனியல் «wo 70
நிறைவுரை - are 85 ஓ பிழைதிருத்தம் 108
8 (நூலை வாசிக்கப் புகுமுன் இப்பிழைகளைத் திருத்தி அமைத் துக்கொள்வது நன்று. W

Page 6
vn ଘ}.
Shai Loui, மதுரைத் தமிழ்ப் பண்டிதரும் சைவப் புலவரும் சித்தாந்த பண்டிதருமாகிய ஆசிரியர் திரு. இ. செல்லத்துரை அவர்கள் எழுதிய
முகவுரை
" சிறிய வாடியிற் பெரியமால் வரைப்பொருள் செறிந்தாங் கறிவு நூல்களின் முடிபெலாம் அகத்தாக் கியதோர் நெறியின் நீடிய நிகழ்சிவ ஞானபோ தத்தைக் குறிய தீந்தமி ழாலுரை குரவனைப் பணிவாம். "'
மெய்கண்ட தேவநாயனர் தமிழிலே செய்தருளிய சிவ ஞான போதத்தின் அருமை பெருமைகளை நன்குணர்ந்த சைவச் சான்ருேர், அதனை மேல்வருமாறு போற்றித் துதிப்பர்.
‘'வேதம் பசுவதன்பால் மெய்யா கமம்நால்வர்
ஒதுந் தமிழதனின் உள்ளுறுநெய் - போதமிகு நெய்யின் உறுசுவையாம் நீள்வெண்ணெய் மெய்கண்டான்
செய்ததமிழ் நூலின் திறம்."
இந்நூற்பொருள் முழுமுதற் கடவுளாகிய பரமசிவனல் திருநந்தி தேவருக்கும் (அவர் வழி ஏனைச் சந்தான குரவர்களுக் கும்) மாணிக்கவாசக சுவாமிகளுக்கும் உபதேசித்தருளப் பெற்ற மையாலும் சைவ சித்தாந்த ஞானபாத உண்மைகள் முழுவதை யும் விளக்கும் முழு முதல் நூலாயமைந்து பிறநூலெதிலுமிம்லாத உண்மைகளைத் தன்னகத்தே அடக்கி நிற்றலிஞலும் ஒப்பற்ற பெரு மையுடையதாய், எச்சமய நூல்களுக்கும் அரசாய் விளங்குவது.
இந்நூலின் உண்மைகளெல்லாம், ஞானசாரியர் பாற் சார்ந்து கேட்டுச் சிந்தித்துத் தெளிந்து அநுபூதிமாத்திரையானே உணரவல்ல பக்குவர்க்கேயன்றி ஏனையோர்க்கு எளிதிற் புலணுகா.
இத்துணைப் பெருஞ் சிறப்புடைய இந்நூலின் பொருளை ஒரு வாறு உணர்தற்கு உபகார மாதற் பொருட்டுச் சிவஞான சுவாமிக ளாற் சிற்றுரை ஒன்றும் பேருரையாகிய மாபாடிய மொன்றும் ஆக் கப்பட்டன. அவ்வுரைகளின் திட்பநுட்பங்களெல்லாம் இலக் கணம் வல்லார்க்கே போதருமாதலால், கருவி நூலுணர்வு பெரு

iii
தோருட் பக்குவமுடையராயினோர்க்கும் இந் நூற்பொருள் எளி திற் புலணுதற்கோர் உரை விளக்கம் இயற்றுதல் இன்றியமையாத தாக, அந் நோக்கத்தை முற்றுவித் தற் பொருட்டு இந் நூலுரை விளக்கம் எழுந்தது.
இந் நூலுரையாசிரியர் சின்னஞ் சிறு பராயந் தொட்டே சைவ சித்தாந்த நூலுணர்வு வாய்க்கப் பெற்றவர். சைவ சித் தாந்த நெறியில் வழுவாதொழுகும் அநுபூதிமான். சிவயோக சுவா மிகள் பால் அயரா அன்புடையராய் அவர்களை அரனெனத் தொழுது அவர்களது திருவருணுேக்கத்தாற் கடைத்தேறும் வழி கண்ட ஒருவர். இப் பெரியார் தமது குருவருள் பற்றுக் கோடாக இந்நூற் சூத்திரங்களின் செம் பொருளை உள்ளவாறுணர்ந்து, எளி மையும் இனிமையும் சுருக்கமுந் தெளிவும் டொருந்த இந்நூலு ரையை இயற்றியுள்ளார். சூத்திரங்கள் கூறும் உண்மைகளை வலியு றுத்தற் பொருட்டு, சிவஞான சித்தியார், தேவாரத் திருமுறை சிவயோக சுவாமிகளது நற்சிந்தனை என்னும் நூல்களிலிருந்து, அவ்வுண்மைகள் பயின்று வரும் செய்யுள்களே உதாரணமாகத் தந் துள்ளார். உதாரணச் செய்யுள்களெல்லாம் எடுத்துக் கொண்ட பொருளுக்கு ஏற்புடையனவாயமைந்திருப்பதும் அவற்றுள் மிக இன்றியமையாதனவான சிவஞான சித்தியார்ச் செய்யுள்களுக்கு, அவ்வச் சூத்திரப் பொருளோடு உள்ள தொடர்பை நன்குனர வைக்கு முகமாகப் பொழிப்புரை தரப்பெற்றிருப்பதும் போற்று தற்குரியன.
மேலும் இந்நூலின் தலையாய பயன் சாதனவியலுட் கூறப் படுதலினுலும், சாதனையின்றி எந்நூலுணர்வாலும் பெறும் பயன் சிறிதுமின்ரு கலிலுைம், இந்நூலுரையாசிரியர் அச்சாதனவியலுள் வரும் குத்திரங்களை நன்கினிது விளக்கி உபகரித்தலே தமது முதல் நோக்கமாகக் கொண்டு அவற்றின் திறமுணர்த்துவனவாய உண்மை நெறி விளக்கச் செய்யுள்களையும் நற்சிந்தனைச் செய்யுள்க ளேயும் உதாரணமாக வைத்துப் பெரு விளக்கம் செய்துள்ளமை இந்நூல் கற்பார் யாவரானும் விதந்து போற்றுதற் குரியனவாம்.
நற்சிந்தனைச் செய்யுள்களுள் "நாம் அது எடி "எல்லாம் அவன்' "நாம் சிவமென நாடுதல்" என்றற்றெடக்கத்தனவாய் வரும் யோக சுவாமிகள் திருவாக்குகள் சில வேதாந்த சம்பந்த முடையனவோ எறுை சிலர் ஐயமுறலாம். சிவயோக சுவாமிக ளது யோக நிலையிலே - சிவோ கம்பாவனை செய்திருந்து தன்னுமங் கெட்டு ஆன்மாவென்று ஒரு பொருள் உண்டென்னுந் தற்போத

Page 7
1V
மொழிந்து எல்லாம் சிவமயமாய்க் காணும் பரவச நிலையிலே - அவ்வாக்குகள் எழுந்தனவாதலின் அவை "ஆன்மாவே கடவுள்" என்னும் பொருளுடையனவல்ல வாய் ஆன்மா இறைவனுடன் அத்துவிதமாகும் நிலையை விளக்குவனவாய் அமைந்தவா மென் பது தெளியப்படும். மேலும் 'உயிருக்குயிராகி உள் குவாருள் ளத்தே பயிலுந் திருவுருவை" என்றும் "மெய்ஞ்ஞானத் தெய்வம்" உயர் சித்தாந்தத் தெய்வம்" என்றும் 'சிவத்தினைவளர்க்கும் பாக் கியம் எமக்குச் சித்தித்ததினிமேலே தெய்வம் வேறே உண்டென எண்ணும் சிந்தையும் இறந்ததுவே" என்றும் , பிறவாறும் வரும் அவர்களின் திருவாக்குகள் சைவ சித்தாந்தக் கோட்பாட்டையே விளக்கு வன வாயமைந்திருத்தல் தெள்ளிதினுணரக் கிடத்தலின லும் அவை பற்றி எட்டுணையேனும் ஆசங்கை நிகழ்தற்கு இட மில்லை யென்பது புலனும் .
சிவஞான போத நூலின் எட்டாம் ஒன்பதாம் பத்தாம் சூத் திரங்கள் முறையே ஞானம் உணரும் முறையையும், ஆன்ம சுத்தி யையும், பாச நீக்கம் சிவயோக மென்பவற்றையும் விளக்குவன. இம் மூன்று குத்திரங்களுக்கும் இந்நூலுரை யாசிரியர் தெரிக்கும் உரை முந்தையோர் கண்ட உரைகளினின்றும் சற்றே வேறுபாடு டையதாய்ச் சொரூபலக்கணத்தை உணர்த்தும் நெறிக்குப் பெரி தும் பொருந்துவதாய் அமைந்துள்ளமை குறிப்பிடத் தக்கது. இவ் வுண்மை இச் சூத்திரங்களின் உரை விளக்கங்களைக் கற்பார்க்கு நன்கு புலனுகுமாதலின் ஈண்டு விரிக்கப்பட வில்லை.
சைவ சித்தாந்தப் பெருநிதி கொண்டு பேரின் பந் துய்க்க விரும்பும் சைவ நன் மக்களது கையகத்தே இந்நூலுரை விளக்கஞ் சிறந்ததொரு திறவுகோலாயமைந்து எக்காலத்தும் பயனளிப் பதாக .
வேதத்தி னரும்பொருளை விமலரு ணந்திக்குப் போதித்த சிவஞான போதத்தை குருமரபால் ஒதித்தேர்ந் தரியவுரை யொண்டமிழா னுணர்த்திமலஞ் சேதிக்கும் யோகரருள் சேருகநா னிலமெல்லாம்.
இ. செல்லத்துரை
வெள்ளவத்தை, கொழும்பு-6.

6.
சிவமயம்
மதிப்புரை கலாநிதி. யூனி. கோ. சுந்தரமூர்த்தி ஐயர் அவர்கள் 6 t p. 6J. Ph. D. விரிவுரையாளர் சமஸ்கிருதம் இந்துப் பண்பாடு இலங்கைப் பல்கலைக்கழகம் கொழும்பு.
உலக மக்களை உய்வித்து அருள வேண்டும் என்ற பெரு நோக்குடன் தவத்திரு. யோக சுவாமிகள் இலங்கை நாட்டில் உதித்தது நாம் பல கோடி பிறவிகளில் செய்த நற்ற வத்தின் பயன். யோக சுவாமிகள் தாமடைந்த சிவானுபவப் பேற்றை "நற்சிந் தனை” யின் மூலம் நமக்கு வடித்துத் தந்துள்ளார்கள். நற்சிந்தனைப் பாடல்கள் என்ற திருவிருட்சத்தின் ஆணிவேராக நிற்பன சைவ சித்தாந்தக் கருத்துக்கள். நற்சிந்தனைப் பாடல்களுக்கும் மெய் கண்ட சாத்திரங்களின் உட் கருத்துக்கும் இடையில் வேற்றுமை காண முடியாது. ஆனல் எங்கள் தெளிவின்மை காரணமாக நாங் கள் ஒருவேளை அப்படி நினைத்துக் கொள்ளக் கூடும். இப்படிப்பட்ட நினைவு நன்மை பயப்பதாகாது. சைவ சமய பரம்பரையிலும் சாத் திரங்களிலும் அநுட்டானத்திலும் ஆழமான நேரடித் தொடர்பு கொண்ட உரை ஆசிரியர் திரு. ச. தியாகராசா இந்நூலை எழுதித் தந்ததின் மூலம் சைவ சாத்திரங்களுக்கும் யோக சுவாமிகளின் நற்சிந்தனைப் பாடல்களுக்கும் உள்ள ஒற்றுமையை மிகத் தெளி வாகக் காட்டியுள்ளார்கள். மெய் கண்ட தேவர் அருளிய சாத்தி ரப் பொருள்தான் நற்சிந்தனைப் பாடல்களில் கவி வடிவம் எடுத் துத் தெளிவான தமிழ் ஊற்ருகப் பெருகுகிறது. இவ்விடயத்தை நம் நெஞ்சிற் படியும் அளவுக்கு நயம்பட உரைத்திருக்கும் இவ்வா சிரியரை பாராட்டாமல் இருக்க முடியாது. இது பெரும் இறை .16bbh_ן
இப்பெரும் பணியை ஒத்த மற்ருெரு பணியும் புரிந்திருக்கி ருர் இந் நூலாசிரியர். சிவஞானபோதச் சூத்திரங்கள் மெய்கண்ட தேவரின் அடிமனத்திலிருந்து திருவருளால் வெளிப்பட்டவை. ஒவ் வொரு குத்திரத்தின் ஒவ்வொரு சொல்லிலும் மெய்கண்ட தேவ ரின் திருநெஞ்சம் நிரம்பிக்கிடக்கிறது. சூத்திரத்தின் ஒரு சொல்லை.

Page 8
ᏙᎥ
தவருக விளக்கினுலும் விளங்கிக் கொண்டாலும் அது முறையற்ற செயல். சிவஞான போதத்திற்கு பல விரிவுரைகளும், தெளிவுரைக ளும், எளிய உரைகளும் வந்துள்ள போதும் இந்நூலைப் பயிலும் பொழுது ஒரு தனித் தன்மை வெளியாகிறது. மிக நுணுகிப் பார்த்தால் தான் இவ்வுண்மை புலப்படும். யோக சுவாமிகளிடம் அடைக்கலம் புகுந்து அவருடைய அருள் நோக்கிற்குப் பாத்திர மான இந்நூலாசிரியர் சிவஞான போதத்திற்குத் தனித்தன்மை வாய்ந்த உரையொன்று எழுதியது பரம்பொருளின் துணை. அது மெய்சிலிர்க்க வைப்பது.
ஆங்காங்கே எடுத்தாளப்பட்டுள்ள சைவத் திருமுறைப் பாடல்கள் நெஞ்சையள்ளுகின்றன.
பூத உடலை எம்மிடமிருந்து மறைத்துக் கொண்ட யோக சுவாமிகள் அருளுடம் பெடுத்து இப்படிப்பட்ட நூல்களை எழுதும் படி தூண்டுவது சைவ மக்கள் நோற்கும் நோன்பின் விளைவு.
குருவாக வந்து குறை தீர்த்தான் பாதத்தாமரைகள் போற்றி போற்றி.
கோ. சுந்தரமூர்த்தி
வெள்ளவத்தை, கொழும்பு-6.

V
இலங்கைப் பல்கலைக்கழகத் தமிழ்ப் பேராசிரியரும் வடமொழி இந்துப் பண்பாட்டுத் துறைகளின் தற்காலிக
அதிபருமாகிய கலாநிதி. திரு. ஆ. சதாசிவம் அவர்கள் எம்.ஏ. (இலங்கை) D.Phil. (oxoN) தமிழ்ப்பண்டிதர் (மதுரை)
எழுதிய அணிந்துரை
இந்திய தத்துவங்கள் ஒவ்வொன்றிலும் ஒவ்வொரு தனிச் சிறப்பு உண்டு. அத்தனிச் சிறப்புக்கள் அனைத்தையும் ஒருங்கே கொண்டு மிளிர்வது தென்னுட்டெழுந்த சைவ சித்தாந்த தத்து வம் என்பர். பன்னிரண்டாம் நூற்றண்டில் வாழ்ந்த மெய் கண்ட தேவர் அருளிய சிவஞான போதம் என்னும் நூலே சைவ சித் தாந்த முதனூலாகும். இது, இறைவன் ஆன்மா பாசம் என்னும் முப்பொருள்களின் உண்மையை வற்புறுத்துவது; பல்லவர் காலத் தில் வாழ்ந்து பத்தி மழை பொழிந்த சைவ நாயன்மாரின் மெய்ய னுபவ உணர்வுகளின் சாரமாய் அமைவது; ஏனைய தத்துவங்க ளிற் காணப்படுவதை விட ஆன்மாவின் அழிவின்மைக்கும் சாதனை யின் பயனுக்கும் தனிப் பெரு விளக்கம் காட்டுவது சைவ சித் தாந்த தத்துவமாகும்.
சைவ மக்களின் சித்தாந்த நூலாகிய சிவஞான போதத் திற்குச் சென்ற எண்ணுரறு ஆண்டுகளாக எழுந்த செய்யுள் விளக் கங்களும், சிற்றுரைகளும் பேருரைகளும் மிகப் பலவாகும். இவற் றுள் சிவஞான முனிவர் எழுதிய சிற்றுரையும் பாடியமும் மிகச் சிறந்தனவாகக் கருதப்படுகின்றன. இவை, இலக்கணம் தருக்கம் முதலியவற்றிற் பாண்டித்தியம் பெற்ருேருக்கே மிக்க பயனைத் தருவனவாகும்.
ஈழவள நாட்டைச் சோழர் பொலனறுவையைத் தலைநகர மாகக் கொண்டு ஆட்சி புரிந்த காலத்திலிருந்து சைவ சமயமும் சித்தாந்த சாத்திரமும் மரபு வழி பிறழாது அனுட்டிக்கப்பட்டு வருவது வரலாறு கண்ட உண்மையாகும். ஈழத்து மெய்யடியா ருள் தலை சிறந்த ஞானியாகக் கருதப்படுபவர் யோக சுவாமிகள்.

Page 9
அவர் உலகுக்களித்த "நற்சிந்தனை" என்னும் ஞான நூற் களஞ்சி யம் சைவ சித்தாந்த தத்துவத்தின் விளக்கமாக அமைவது 6T6iruri.
'சித்தாந்த சைவ நெறித் திறவுகோல்' என்னும் இந்நூல், சுவாமிகளின் மெய்யன்பர்களுள் ஒருவரும், அவரைத் தெய்வமா கக் கொண்டு வழிபடுபவருமாகிய அறிஞர் திரு. ச. தியாகராசா வால் ஆக்கப்பட்டதாகும். சைவ சித்தாந்த நூல்கள் பலவற்றை வெளியிட்டுச் சைவ உலகில் தமக்கென ஒரு இடத்தைப் பெற்றுக் கொண்ட இவ்வறிஞர் வகுத்த இச் சிவஞான போதப் புத்துரை மெய்யன்பர்களைச் சிவநெறிப் பாதையிற் புகுத்திப் பேரின்ப வழி காட்டும் ஆற்றுப் படையாக அமைவது எனலாம். சிவஞான சித்தி யார், தேவாரத் திருமுறைகள் காட்டி நற்சிந்தனையின் போதனை சைவ சித்தாந்தமே என்பதை அழுத்தந் திருத்தமாக அழதறக் காட்டுகிருர் அறிஞர்.
சைவ சித்தாந்த தத்துவத்தை யுணர்ந்து வீடுபேறு விழை யும் மெய்யடியார் மட்டுமன்றிப் பண்டித புலவர் தேர்வுகளுக்குத் தோற்றுவோரும் பல்கலைக்கழகங்களிற் சித்தாந்த சாத்திரம் பயில் வோரும் இந்நூலிற் புதிய கருத்துக்களைக் காண்பர் என்பது எமது நம்பிக்கை. இந்நூலைச் சைவ உலகம் உவந்தேற்றுப் பயனடையு மாறு எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கின்றேன்.
இங்ஙனம் ஆ. சதாசிவம்
இலங்கைப் பல்கலைக் கழகம், கொழும்பு. 1970 سے 7 ــــــــــ 2

சிவமயம்
நாவலர் மரபில் விளங்கும் நன்மணிகளின் நாயக மணியாய் விளங்கும் பண்டிதமணி திரு. சி. கணபதிப்பிள்ளை அவர்கள்
வழங்கியது.
“audu கோடிகளெல்லாம்
தந் தெய்வம் எந் தெய்வம் என்று
- எங்கும் தொடர்ந்தெதிர் வழக்கிடவும் நின்றது எது? SL LL LLS LLL LLLL L LL LSS LLL SSS LLLS L LLLL LLLL LL 0 LSLS LL கருத்துக் கிசைந்தது அது."
என்று திருவருள்விலாசப் பரசிவ வணக்கஞ் செய்கின்ருர் தாயு மான சுவாமிகள்.
இந்த வணக்கம் அதிமனிதர்களான யோகசித்தர்களுக்கும் பொருந்தும்.
ஒன்ருேடொன்று மாறுபடுகின்ற சமயத்தினர் பலரும் சித்த புருஷர்களைத் தத்தம் மதக் கோட்பாடுகளுக் கிழுக் கின்றியே தரி சித்து வணங்குவதைக் காணுகின்ருேம்.
உண்மைச் சமயம் தம்முள் மாறுபடுகின்ற எல்லாச் சமயத் தையும் ஒப்புக் கொண்டு, அதனலே அவ்வச் சமயங்களாகியும் அதே சமயத்தில் அச் சமயங்களுக்கு அப்பாற்பட்டுத் தனித்த தொரு சமயமாயு மிருக்கும். இக் கருத்தை ‘ஒது சமயங்கள்’ என்று தொடங்கும் சிவஞான சித்தி பாரிற் காணலாம். இதனை , 'செப்பரிய சமய மெல்லாம்' என்று தொடங்கும் தாயுமானவர், 'இப்பரிசாஞ் சமயமுமாய் அல்லவாகி’ என அநுவதிக்கின்றது.
அன்பர் திரு. ச. தியாகராசா அவர்கள் யோக சுவாமி அவர்க ளின் சீடர்களுள் ஒருவர். சைவ சித்தாந்தப் பயிற்சி மிக்கவர். சித் தாந்தம் அவர் உயிர்ப்பு. a
தம் குருவாகிய யோக சுவாமிகளைச் சுத்தாத்துவித சைவ சித்தாந்தக் கண்களால் தரிசித்துச் சமய அநுபவம் எய்தியவர் திரு. தியாகராசா. அவர் உதவிய இந் நூல் அதற்கு எடுத்துக் காட்டு.

Page 10
ஒப்புயர்வில்லாத சிவஞான போத சூத்திரங்களுக்கு உரை விளக்கந் தந்து, சிவஞான போதத்தின் வழிவந்த சிவஞான சித்தியால், சிவஞான போதம் சித்திக்க வழிகண்டு, யோக சுவாமிகளின் பாடல்களால் அநுபவங் காட்டி நடக்கின்றது நூல்.
உரை நடுவண் சாத்திரக் கருத்துக்களின் உயிர்ப்பாய்த் தே வாரம் திருவாசகம் முதலிய திருமுறைப்பாடல்கள் மிளிர்கின்றன.
சாதகர்களுக்குப் பயன்படும் வகையில் இந் நூலை உதவிய ஆசிரியருக்கு வணக்கத்தோடுகூடிய வாழ்த்துரையை வழங்கு வோமாக.
சி. கணபதிப்பிள்ளை கலாசாலை வீதி, திருநெல்வேலி,
யாழ்ப்பாணம்.
-rw

6tசிவமயம்
சித்தாந்த சைவநெறித் திறவுகோல்
காப்பு
'நற்குஞ் சரக்கன்று நண்ணிற் கலைஞானம்
கற்குஞ் சரக்கன்று காண். '
(திருவருட்பயன்) கடவுள் வணக்கம்
'மாசில் வீணையும் மாலை மதியமும்
வீசு தென்றலும் வீங்கிள வேனிலும் மூசு வண்டறை பொய்கையும் போன்றதே ஈசன் எந்தை இணையடி நீழலே."
(அப்பர்)
குரு வணக்கம்
தாய்ம்மையாம் பண்பு சேர்ந்த தனிநெறி தன்னிற் சேர்த்து மாயமா முலக வாழ்வில் மயங்குத லொழியு மாறு தாயுமாய்த் தந்தை யாகித் தனிப்பெரு முதலாய் நின்று தூயநல் லருள யீந்த சிவகுரு திருத்தாள் போற்றி.
தோற்றுவாய்
அகர உயிர் போல் அறிவாகி அண்டசராசரம் எங்கும் வியாபித்து நிறைந்து நிற்பது சிவம் என்னும் செம்பொருள். முழு முதற் கடவுளாகிய அது ‘புல் லாகிப் பூடாய்ப் புழுவாய் மரமா கிப் - பல்விருக மாகிப் பறவையாய்ப் பாம்பாகிக் - கல்லாய் மனிதராய்ப் பேயாய்க் கணங்களாய் - வல்ல சுர ராகி முனிவ ராய்த் தேவராய்ச் - செல்லாஅ நின்றவித் தாவர சங்கமத்துள்எல்லாப் பிறப்பும் பிறந்திளைத்தேன்: எம்பெருமான்" என்னும் மணிமொழியின்படி நால்வகைத் தோற்றம் எழுவகைப் பிறப்பு எண்பத்துநான்கு நூருயிரம் என்னும் யோனி பேதங்களையுடைய உயிர்களை அறிவுக்கறிவாய் நின்று பரிந்து வளர்த்தருளுகின்றது.

Page 11
இவ்வுயிரினங்களுள்ளே மானிடப் பிறவியானது முதன் மை வாய்ந்து விளங்குகின்றது. பிறவிப் பெரும் பயனையடைதற்கு இதுவே வேண்டப்படுவது. இதனலேயே பெறற்கரிதாகிய இப்பிற வியிலேயே அருளமுதத்தை யருந்தி ஆனந்த பரவசராகுமாறு அருள் செய்யும்படி,
'எண்ணரிய பிறவிதனின் மனிடப் பிறவிதா
னியாதினும் மரிதரிது காண் இப்பிறவி தப்பினு லெப்பிறவி வாய்க்குமோ
ஏதுவரு மோவறிகிலேன் கண்ணக னரிலத்துநா னுள்ளபொழு தேயருட்
ககனவட் டத்தினின்று காலூன்றி நின்றுபொழி யானந்த முகிலொடு
கலந்துமதி யவசமுறவே பண்ணுவது நன்மை இந்நிலைபதியு மட்டுமே
பதியா யிருந்ததேகப் பவுரிகுலே பாமலே கெளரிகுண் டலியாயி
பண்ணவித னருளினுலே விண்ணிலவு மதியமுத மொழியாது பொழியவே வேதாந்த சித்தாந்த சமரசநன் னிலைபெற்ற
வித்தகச் சித்தர்கணமே.”*
என்னும் அருட்பாவில் தாயுமான சுவாமிகள் இறைவனை இரந்தி ரந்து வேண்டிநிற்கின்ருர், சுவாமிகளின் வழித்தோன்றல்களாய்ப் பெறற்கரிய மானிடப் பிறவியைப் பெற்ற நாம் இப்பிறவியின் பரமப் பிரயோசனத்தை யடைய முயலுதலே மாண்புடைய தாகும்.
இந்நன் முயற்சிக்கு எம்மாட்டுச் சில சிறப்புக்கள் வேண்டப் படுகின்றன. சைவ சமயத்தில் வேத சிவாகமங்கள் பயிலப்படும் நாட்டில் தவஞ் செய்தற்குரியசாதியில் பிறத்தல் வேண்டும். பல பிறவிகளிற் செய்த பெரும் புண்ணியப் பயனுய் இந்நிலை  ைமயை எய்திய போதும், விழுமியவற்றுள் விழுமியதாகிய அருட் பேறு பெற விரும்புவோர், உலக வாழ்க்கையில் உயர்ந்தவையா கக் கருதப்படும் கல்விப்பேறு காணிபூமிப்பேறு பெரும்பதவிப் பேறு பிறபொருட்பேறு முதலியவற்றல் மயங்காதிருத்தல் வேண் டும்; வறுமையாம் சிறுமை வந்தடையாதிருத்தல் வேண்டும்.

சிவபெருமானையும் சிவனடியாரையும் அன்போடு வணங்கும் பண்பினராயிருத்தல் வேண்டும். இச்சிறப்புக்களுடையவராய் அருந் தவம் செய்வோர் சிவஞானப் பேறு பெற்று அச்சிவ ஞானத்தாலே சிவபிரானைப் போற்றி வழிபடுவோராகிப் பேரின்பப் பெரு வாழ்வு பெறுவர். இவ்வுண்மை,
** நரர்பயி றேயந் தன்னி னுன்மறை பயிலா நாட்டில்
விரவுத லொழிந்து தோன்றன் மிக்கபுண் ணியத்தா னுகும் தரையினிற் கீழை விட்டுத் தவஞ்செய்சா தியினில் வந்து பரசம யங்கட் செல்லாப் பாக்கியம பண்ணுெ ணுதே.
வாழ்வெணு மையல் விட்டு வறுமையாஞ் சிறுமை தப்பித் தாழ்வெனுந் தன்மை யோடுஞ் சைவமாஞ் சமயஞ் சாரும் ஊழ்பெற லரிது சால வுயர்சிவ ஞானத் தாலே போழிள மதியி னுனைப் போற்றுவா ரருள்பெற்றரே.'
ான வரும் சிவஞானதித்திச் செய்யுள்களிற் காணக்கிடக்கின்றது.
இங்கே 'தவஞ் செய்சாதி” என்பது 'ஒழுக்கமுடமை குடி மை' என்றபடி திருத்தொண்டர் புராணச் சரித்திரங்களால் விளக்கப் பெறுவது என்க.
தவம் செய்தற்குரிய நெறிகள் இரண்டுள. அவை, அன்பு நெறி அறிவுநெறி என்பன. சமயாசாரிய மூர்த்திகள் அன்புநெறி யை விளக்கியருளினர்கள். சந்தானுசாரிய மூர்த்திகள் அறிவுநெறி யை விளக்கியருளினர்கள். இவை முறையே தேவார திருவாசகங் கள் முதலிய சைவத் திருமுறைகளிலும், சிவஞான போதம், சிவ ஞான சித்தியார் முதலிய சித்தாந்த சாத்திரங்களிலும் காணக் கிடக்கின்றன. இவை வேறு வேருனவையல்ல. ஒன்றே டொன்று பிணைந்து இணைபிரியாது விளங்குபவை. இவ்வுண்மையை, «
' ஞானத் தால்தொழு வார்சில ஞானிகள்
ஞானத் தால்தொழு வேனுனே நானலேன் ஞானத் தால்தொழு வார்கள் தொழக்கண்டு ஞானத் தாய்உனை நானுந் தொழுவனே."
எனும் அப்பர் அருண் மொழியிலும்
'காணும் கண்ணுக்குக் காட்டும் உளம்போல் காணஉள் ளத்தைக் கண்டு காட்டலின் அயரா அன்பின் அரன்கழல் செலுமே.”*

Page 12
என்னும் சிவஞானபோதச் சூத்திரத்திலும் நன்கு காணலாம். திருமுறைகள் இலக்கியமாகவும் சாத்திரங்கள் அவற்றின் இலக்கணமாகவும் கருதப்படும். வேத சிவாகமப் பொருள்கள் திரு முறைகளிற் பரந்து கிடக்கின்றன. சாத்திரங்களில் அவை படி முறையாய் வரையறுத்து விளக்கப் பெற்றுள்ளன. ஆகவே இலக்கி யமாகிய திருமுறைப் பொருள்களை உள்ளவாறுணர்தற்கு இலக்க ணமாகிய சாத்திர அறிவு இன்றியமையாது வேண்டப்படு கின்றது.
திருந்திய சாத்திர அறிவு இல்லாமையாலேயே, திருமுறை கள் பிழையாகப் படிக்கப்படுவதும் சிவபுராணப் பொருள்கள் பிழையாகச் சொல்லப்படுவதும் நிகழ்கின்றன என்பது இவ்விடத் திற் குறிப்பிட வேண்டிய தொன்று.
இவை இங்ங்ணமிருப்ப, சாத்திரங்களைப் பயிலுந் துறையி லுமே இடர்கள் சில காண வருகின்றன. சாத்திரங்களைப் படிப் போருக்கு உதவுமாறெழுந்த உரைகளில் இவை காணவருகின்றன. இவற்றைக் கண்டு வருந்தும் நாம் செயற்பால தென்னேவென்று திருவருள் வழி சிந்திக்க வேண்டியதாயிற்று. அச் சிந்தனையின் பய ஞய் எங்கள் குருநாதன் சிவயோக சுவாமிகள் எமக்கு உண்மை உணர்த்தியருளிய முறையில் 'சித்தாந்த சைவநெறித் திறவு கோல்’ என்னும் இச்சிறு நூல் திருவருள் வழியில் உருவாகின்றது.
சாத்திரங்களைப் பயிலுந் துறையிற் காணவந்த இடர்களை நீக்குதற்கு உறுதுணையாய்ச் சித்தாந்த சாத்திர முதல் நூலாகிய சிவஞான போதம் இங்கே முதற்கண் இடம் பெறுகின்றது. சூத்திர உருவத்திற் பார்க்கும்போது மிகச்சுருங்கிய நூலாயிருப்பதனுலும், அச்சூத்திரங்களின் பொருள்களை உள்ளவாறுணர்ந்தால் சந்தேக விபரீதங்கள் உண்டாக மாட்டா வாகையாலும், அச்சூத்திரங்கள் முதலிடம் பெறுகின்றன. அவற்றின் பொருள்களை விரித்துரைக்கும் சிவஞான சித்திச் செய்யுள்கள் அவற்றின் கீழ் வருகின்றன. இன்றி யமையாது வேண்டப்படுவனவாய்த் ான்றிய வேறு சில சிவ ஞான சித்திச் செய்யுள்களும் பிற "சாத்திரச் செய்யுள்களும், தேவார திருவாசகங்கள் முதலிய திருமுறைச் செய்யுள்களும், சிவ யோக சுவாமிகள் அருளிய நற்சிந்தனைகளும், அவற்றின் கீழ் முறையே வருகின்றன.
சிவஞானபோதச் சூத்திரங்களுக்குப் பதவுரை, விளக்க

5
வுரை பொழிப்புரை ஆகியவை தரப்பெற்றுள்ளன. இச்சூத்தி ரப் பொருள்கள் தெளிவாகவே இச்சூத்திரப் பொருள்க%ள விரித் துரைக்கும் சிவஞான சித்திச் செய்யுட் பொருளை விளங்குதல் எளி தாகுமாகலின் அச்சிவஞான சித்திச் செய்யுள்களுக்குப் பொழிப் புரை மாத்திரம் தரப்பெற்றுள்ளது. சாதகர்களுக்குப் பெருந் துணையாகத் தோன்றியமையால் வேறு சில” என்று மேலே குறிப் பிட்ட சிவஞான சித்திச் செய்யுள்களுக்கும் பொழிப்புரை தரப் பெற்றுள்ளது. திருமுறைகளில் குறித்த சூத்திரப் பொருளைத் தெரிக்குமிடங்கள் வேறுபடுத்திக் காட்டப் பெற்றுள்ளன. இறுதி யில் நிற்கும் நற்சிந்தனைகள் மிக எளிதாய் விளங்கக் கூடியவையாய் இருப்பதனுல் அவற்றுக்கு முன் விளக்கப்பெற்ற பொருள்களை அவை மேலும் தெளிவுபடுத்தி உதவுகின்றன. இவ்வாறு சிவஞான போதம் முதல் நற்சிந்தனை ஈருக அமைந்தவை எல்லாம் ஒருபொரு ளனவாய் விளங்குதலைக் காணலாம். இவற்றைக் கற்றுத் தெளி வோர்க்குப் பதினன்கு சித்தாந்த சாத்திரங்களையும் பன்னிரு திரு முறைகளையும் கற்றுத் தெளிதல் இலகுவாகுமென்பது திண்ணம்.
ஆகவே, இது ஒரு சித்தாந்த சைவநெறித் திறவுகோலாயமைதல் காண்க,
இது இவ்வாறு உருவாகுமாறு அருள் க்ரந்த எங்கள் குரு நாதன் சிவயோக சுவாமிகள் சித்தாந்த சைவ நெறியினராய்த் தோன்றி, வேதாந்த சித்தாந்த சமரச நன்னிலை யடைந்து, சீவன் முத்தி யெய்தி, சாதி சமய வேறுபாடின்றி எல்லோர்க்கும் அருள் வழங்கும் அருள் வள்ளலாஞர்கள் என்பது இங்கே காணவந்த நற் சிந்தனைகளாலும், பிறபல நற்சிந்தனைகளாலும் தெளிவாகக் காணக்கிடக்கவும், வேதாந்தச் சார்புடையோர் சிலர் சுவாமிகளை வேதாந்த நெறியினராக நினைப்பதும், அன்னவரைப்போலவே சித்தாந்த நெறியினர் சிலர் சுவாமிகளைச் சித்தாந்த நெறிச் சிறப் புக்குப்பொருந்தாத வகையில் வேதாந்தநெறியினராக நினைப்பதும் அருள்வழியை விட்டு விலகிப் பிறவழிச் செல்வதஞலேயாம். அந் நினைவுகள் தொடர்ந்து நிலைபெருமல், உண்மை யுணர்ந்து இன்புறுதற்கும் இவ் வெளியீடு துணைபுரியுமென்பது சொல்லாம லேயமையும்.
இத்தன்மையதாயுருவாகுமாறு அருள் சுரந்த குருநாதனு டைய திருவடியில் இத்திறவுகோல் ஒர் அன்பு மலராய் அருள் வழி யில் அருச்சித்து நிற்கின்ருேம். அவ்வாறு அருச்சித்து வழிபட்டுச் சகோதரத்துவம் பொருந்திய மக்கட் பிறவியினர் முன்னிலையில்

Page 13
போதுவாகவும் சைவ தன் மக்கள் முன்னிலேயிற் சிறப்பாகவும் அன்புடன் சமர்ப்பித்து நிற்கின்றுேம்.
இஃது இவ்வாறு உருவாகி வெளிவருமாறு அருள் வழியில் உதவிய அறிஞர் எல்லோருக்கும் சிவபரம்பொருளின் திருவருட் பேறு உரியதாயிற்று.
- நூல் -
சிவஞானபோதம்
இந்நிலவுலகில் வாழும் உயிரினங்களுள்ளே பகுத்தறிவு என்னும் ஆரும் அறிவையுடைய மக்களாய்ப் பிறந்து, இப்பிறவி பின் நோக்க மென்ன, இதன் உண்மைத் தன்மை என்ன என்று அறிந்து, இன்புற்று வாழ விரும்பும் தவப்பேறுடையோருக்கு, அருள் நெறி காட்டுமாறெழுந்த விதி தாந்த சாத்திரங்களுள்ளே முதல்நூலாயமைவது சிவஞான போதம். இது பொது அதிகாரம், உண்மை அதிகாரம் என்னும் இரு பெரும் பிரிவுகளேயுடையது. பொது அதிகாரம் பொதுவான ஆரம்ப அறிவைத் தருவது. உண்மை அதிகாரம் உண்மையான நிஃபேறுடைய பொருள் எது என்றும், அதை அடையும் வழி எது என்றும் காட்டுவது. இற்ை றுள்ளே பொது அதிகாரம் பிரமாண இயல் இலக்கண இயல் என் ணும் இரு பிரிவுகளேயுடையது. உண்மை அதிகாரம் சாதனே இயல் பயன் இயல் என்னும் இரு பிரிவுகண்புடையது.
வேத சிவாகமங்கள் விளம்புகின்ற பதி, பசு, பாசம் என் னும் மூன்றும் உள் பொருள்கள் என்று அநுமானப் பிரமானத் தாங் நிரூபிப்பது பிரமான இயல். அப்பொருள்களின் இலக்கணம் கூறுவது இலக்கண இயல். இவற்றின் அறிவைப் பெற்ற ஆன்மா செய்யும் சாதனையை விளக்குவது சாதன இயல். இச் சாதஃனயால் அடையும் பயன் எது என்று கூறுவது பயன் இயல், ஒவ்வொரு இயலும் மூன்று மூன்று குத்திரங்களேயுடையதாய் இந்நூல் பன்னி ாண்டு சூத்திரங்களே புடையதாயிற்று.
air---

பொது அதிகாரம்
பிரமான இயல்
முதலாம் சூத்திரம்
அவன் அவள் அதுவெனும் அவை மூ வினோமையில் தோற்றிய திதியே ஒடுங்கிமலத் துளதாம் அந்தம் ஆதி என்மனுர் புலவர்
இ-ன் :- அவள் அவள் அது எனும் - அவன் அவள் அது என்று சுட்டியறியப் படுகின்ற, அவை- சொல்லும் பொருளுமாகிய உலகம் (எல்லாம்) மூவிஃனமையின் - தோன்றி நின்று அழிதலாகிய முத்தொழிற்படு த வால் தோற்றிய- ஒருவரால் தோற்றுவிக்கப்பட்ட திநியே- (காக்கப்பட்டு திலேபெறும் உள்பொருளேயாம் , ஒடுங்கி - (அந்த உலகம்) சங்கார காலத்திலே (ஒடுங்குதற்கிட மாகிய கடவுளிடத்தில்) ஒடுங்கி, மசித்து - (பரிபாகப்படாத) லேம் காரணமாய் உளது ஆம்- (ஒடுங்கிய இடமாகிய கடவுளிடத்தினின்று) மீண் ம்ே தோ: றுதுெ ஆகும். அந்தம்- அந்தத்தை (அல்:து சங்காரத்தை அல்லது ஒடுக்கத் மனத)ச் செய்யும் கடவுளே, ஆதி- உலகத்திற்கு (என்தும்) முதற் கடவுள், மான் மனுர் புலவர்- என்று கூறுவர் அறிஞர்.
விளக்கம்:- (1) நிதி - நிஃபேறு (காக்கப்பட்டு நிஃபெறும் பொருள் அல்லது உள் போருள் எனப் போருள் தருவது ) ஒடுங்கி - ஒடுங்குதற்கு இடப்ாகிய) கடவுளால் ஒடுக்கப் பெற்று, ஆதி - ஒடுக்கத்தைச் செய்யும் கடன்/ளே தோற்றுவிக்கும் முதற் #_ ಪೌಷ್ರ',

Page 14
(2) சற்காரியவாதம்:- உள்ளதிலிருந்தே உள்ளது தோன்றும் என்பது சற்காரியவாதம். காணக்கிடக்கும் காரியமாகிய உலகிற்கு நாம் காண வராத காரணம் உண்டு என்று இவ்வாதத்தால் நிரூபிக் கப்படுகின்றது. இதன்படி இவ்வுலகிற்கு நிமித்த காரணம் ஒன்று உண்டு என்பது இங்கே நிரூபிக்கப் பெற்றது.
(3)(அ) அவன் அவள் அது எனக் காண வருபவை சிற்சில தோன்றி நின்று அழிகின்றதைக் காண்கின்ருேம் ; ஆணுல் எல்லாம் ஒருங்கே அழியக் காணவில்லையே என்று சிலர் ஆசங்கிப்பர்.
சில உயிர்களும் உலகின் சில பகுதிகளும் அழிதல், நித்திய பஞ்ச கிருத்தியத்தில் நிகழும் அழித்தற்ருெழிலின் பாற்பட்டது. எல்லாம் ஒருங்கே அழிதல் மகாசங்கார காலத்தில் நிகழும்.
உதாரணமாய் இந்நாட்டில் நிலையியற் பொருளாகிய காளான் முதலியவையும் இயங்கியற் பொருளாகிய ஈசல் முதலிய வையும் மாரிக்காலத்தில் தோன்றி நின்று பின்பு ஒருங்கே அழி தலைக் காண்கின்ருேம். இவை போன்றே உயிர்கள் முழுதும் உலகம் முழுதும் ஒரு காலத்தில் ஒருங்கே அழியும் என்று கொள்ளுதல் பொருந்தும்.
(ஆ) தோன்றி நின்று அழிதல் இயல்பு. அவை நிகழ்தற்கு ஒரு கருத்தா வேண்டியதில்லை என்பர் மற்ருெரு சாரார்.
ஒரே தன்மைத்தாயிருப்பதே இயல்பு எனப்படும். வேறுபடு தலை விகாரம் என்ற சொல் குறிக்கும். ஒவ்வொரு சொல்லும் ஒவ் வோர் உண்மையைக் குறிக்கும் என்பதஞலேயே இயல்பு என்றல்
பொருந்தாமை காண்க.
(இ) உலகு உயிர் என்பன தோன்றி நின்று அழிகின்றன என் பது அவித்தையால் அல்லது அஞ்ஞானத்தால் உண்டாகின்றது; கனவிற் காண வந்தவை நனவிற் காணவராமை போல் என்பர் மற்ருெரு சாரார்.
உலகிலுள்ளோர் எல்லோரும் காணும் பொருள்கள் கனவிற் கண்ட பொருள்கள் போல் இல் பொருள்கள் என்ருல், அவ்வாறு சொல்லும் அவரைக் காணும் காட்சியும் அவர் சொல்லும் சொற் களும் பொய்யாகின்றனவன்றே?
'நில்லாத வற்றை நிலையின வென்றுணரும்
புல்லறி வாண்மை கடை."
என்ற பொய்யா மொழிப்படி, நாம் காண வருவன சடப்

9
பொருள்கள், ஆகையால் அவை அழிவன என்று கொள்ளுதலே விவேகமானதும் அனுபவத்திற் கொத்ததுமாகும் என்க.
(F) நான் பிரமம் நீ பிரமம் எல்லாம் பிரமம் என்பர் மற் ருெரு சாரார்.
ஆன்மா பரமான்மா அல்லது ஆன்மா கடவுள் என்பது போல் பிரமம் பரப்பிரமம் என்பதாயின் அவர் கூற்றுப் பொருந் தும், ஏகம் என்ற பொருளில் அது பொருந்தாது. நான் பிரமம் நீ பிரமம் என்னும் போதே நான் என்பது வேறு நீ என்பது வேறு பிர மம் என்பது வேறு என்று பெறப்படுதல் காண்க, ‘சர்வம் பிரமம யம்' என்பது நான் நீ இது அது என்ற வேறுபாடில்லாத அத்து விதக் காட்சியைக் குறிக்கும். 'அது நான்’ என்பது இந்நிலையை அடையச் செய்யும் சிவோகம் பாவனே யைக் குறிக்கும். ஆகவே நான் பிரமம் என்று மற்றெருவருக்குச் சொல்லுபவரின் சொல் மயக்கம் காரணமாயெழுந்த தென்பது தெளிவு.
‘நாம் பிரம மென்ற னடுவேயொன் றுண்டாமா றேம்பியெல்லா மொன்றாய்த் திகழுநா ளெந்நாளோ." என்று தாயுமான சுவாமிகள் அருளியது இவ்விடத்தில் சிந் திக்கத்தக்கது,
பொழிப்பு: - அவன் அவள் அது என்று சுட்டியறியப்படுகின்ற சொல்லும் பொருளுமாகிய உலகம் தோன்றுதல், நிலைபெறுதல், அழிதல் ஆகிய முத்தொழில்களையுடையது. ஆகையால் அது ஒரு வரால் தோற்றுவிக்கப்பட்ட உள்பொருளேயாம். அது, சங்காரகா லத்திலே சங்காரத்தை அல்லது அழித்தலைச் செய்யும் கடவுளிடத் தில் ஒடுங்கும். அவ்வாறெடுங்கி (ஆன்மாவின்) மலம் முழுதாய்ப் * பரிபாகப் படாமையால் மீண்டும் தோன்றும். சங்காரத்தைச் செய்
யும் கடவுளே மீண்டும் தோற்றுவிப்பர். ஒருவனுே டொருத்தி யொன்றென் றுரைத்திடு முலக வருமுறை வந்து நின்று போவது மாத லாலே (மெல்லாம் தருபவ னுெருவன் வேண்டுந் தான்முத லீறு மாகி மருவிடு மநாதி முத்த சித்துரு மன்னி நின்றே. (சி சி.) (ஒருவன் ஒருத்தி ஒன்று என்று சுட்டியறியப்படும் (அறிவுள்ள அறிவில்லாத) உலகப் பொருள்கள் எல்லாம் தோற்ற வேண்டிய முறையிலே தோன்றி நின்று அழிதலால் அவற்றைத் தோற்று வித்து நிலைபெறச் செய்து அழிக்கும் ஒரு முதல்வன் வேண்டப்ப

Page 15
O
டும். அனுதியே நின் மலராகிய சிவபிரான் தமது சத்தியே திருமே னியாகக் கொண்டு நின்று அம் முத் தொழில்களையும் செய்தரு ளுவர்.) முன்னுயிர்த் தோற்றமும் இறுதியுமாகி
முடியுடை யமரர்கள் அடிபணிந் தேத்தப் பின்னியசடை மிசைப் பிறைநிறை வித்த
பேரருளாளனுர் பேணிய கோயில் பொன்னியல் நறுமலர் புனலொடுதூபஞ்
சாந்தமும் ஏந்திய கையினராகிக் கன்னியர் நாடொறும் வேடமேபரவுங்
கழுமலம் நினயநம் வினைகரிசறுமே. (சம்பந்தர்)
அந்தமும் ஆதியு மாகிநின் றிரண்டம் எண்திசைக்கும் பந்தமும் வீடும் பரப்புகின் றிர்பசு வேற்றுகந்தீர் வெந்தழல் ஒம்பு மிழலையுள் ளீரென்னைத் தென்திசைக்கே உந்திடும் போது மறக்கினும் என்னைக் குறிக்கொண்மினே.
மூத்தவனுய் உலகுக்கு முந்தி னுனே
முறைமையால் எல்லாம் படைக்கின் ருனே ஏத்தவனுய் ஏழுலகு மாயி ஞனே
இன்பனுய்த் துன்பங் களைகின் ருனே காத்தவனுய் எல்லாந்தான் காண்கின் ருனே
கடுவினையேன் தீவினையைக் கண்டு போகத் தீர்த்தவனே திருச்சோற்றுத் துறையு ளானே
திகழொளியே சிவனேயுன் னபயம் நானே.
(otius )
‘*. ஆக்குவாய் காப்பாய் அழிப்பாய் அருள்தருவாய்.”* (திருவாசகம்) இறைவனே எவ்வுயிருந் தோற்றுவிப்பான் தோற்றி இறைவனே ஈண்டிறக்கஞ் செய்வான் -இறைவனே எந்தா யெனவிரங்கும் எங்கள்மேல் வெந்துயரம் வந்தா லது மாற்று வான். (அற்புதத்திருவந்தாதி)

Il II
ஒருவனு மேஉல கேழும் படைத்தான் ஒருவனு மே உல கேழும் அளித்தான் ஒருவனு மேஉல கேழும் துடைத்தான் ஒருவனு மேஉல கோடுயிர் தானே. (திருமந்திரம்) ஒருவ ஞலே உலகம் உதித்ததே ஒருவ ஞலே உலகம் நிலைத்ததே ஒருவ ஞலே உலகம் ஒடுங்கிற்றே ஒருவ னேயென் னுறுதி சிவாயவே. (நற்சிந்தனை) ஆதியும் அந்தமும் இல்லா ஒருவன் ஆதியும் அந்தமு மாய்வரு காரணம் ஆதிதன் அருள்கொண் டறிவதே யன்றி ஒதி யறிந்தவர் ஒருவரும் இலரே . (நற்சிந்தனை)
-Sesav -
இரண்டாம் சூத்திரம்
(க Tணக் கிடக்கும் எந்த ஒரு காரியத்திற்கும் காரணம் உண்டு. காரணம், முதற் காரணம் துணைக்காரணம் நிமித்த கார ணம் என மூன்று வகைப்படும். ஒரு குடத்திற்கு முதற் காரணம் மண். துணைக் காரணம் திரிகை. நிமித்தகாரணம் குயவன். அந்த வகையில் இந்த உலகு உயிர் ஆகிய எல்லாவற்றுக்கும் மூன்று கார ணங்கள் உண்டு.
அவற்றுள் நிமித்த காரணமாகிய பதி ஒன்று உண்டு என்று முதலாம் குத்திரத்தில் நிரூபிக்கப் பெற்றது. (பதி உண்மை நிரூ பிக்கப்படும் போது அவன் அவள் அது என்றமையால் பசு பாச உண்மையும் ஒருவாறு பெறப்படுவதாயிற்று. மலத்துளதாம் என் றமையால் மலம் உண்மையும் குறிப்பாகக் காண வந்தது.)
இவ்விரண்டாம் சூத்திரம் முதற் காரணம் துணைக்காரனம் ஆகியவற்றின் உண்மை நிரூபிக்க எழுந்துள்ளது.)

Page 16
அவையே தானே பாயிரு வினோயிற் போக்கு வரவு புரிய ஆணேயின் நீக்கம் இன்றி நிற்கும் அன்றே.
இ-ன் :- அவையேயாய் - (இறைவன் உடலில் உயிர்போல் பிரித் தறிதற்கிடமின்றி கலப்பினுல் ஒன்றேயென்னு மாறு) உயிர்களே
T தானேயாய் - (உயிரிககோ யென்னுமாறு ஒன்று ய் நிற்பினும் கண் ணுெனியும் அருக்கனுெளியும் போல்) பொருட்டன்மையில் வேருய்,
அவையேதானே பாப் - (உயிர்க்குயிராய் உடன் நின்று உயிர் களேச் செலுத்துத் தன்மையில் கண்ணுெளியும் ஆன்ம போதமும் போல்) உயிர்களே தாளுய், ஆஃணயின் - தனது சத்தியின் வழியில் (நிகழ்கின்ற), இரு வினேயின் - நல்வினே தீவினேயாகிய இருவினேயின் (பயனுக் குத் தக்க படி)
போக்கு வரவு புரிய - இறந்து பிறத்து உழவு நீக்கம் இன்றி - (தனது சத்தியை விட்டுப் பிரியாது, நிற்கும் - (என்றென்றும் நின்றருளும்.
விளக்கம். (1) உயிர்கள் நல்வினே தீவிண்களேச் செய்து அவற்றின் பயணுக்குத் தக்கபடி பிறந்து இறந்து "உழலும். அப்படி தல்விஃன, நீவிண்களேச் செய்தலும், அவற்றின் பயனுக்குத் தக்கபடி பிறந்தி றந்துழலுதலும், இறைவன் சத்திகளுள் ஒன்றுகிய திரோதான சத்தி மேலே காணவத்தவாறு ஒன்று யும் வேறுயும் உடனுமபும் நின்றே நிகழும். அச் சத்தியை விட்டுப் பிரியாது இறைவன் என் றும் ஒரே தன்மையாய் நிற்கும்.
சத்தியோடு என்றும் பிரிப்பின்றி நிற்கும் இறைவன் அச்சத் தியின் வழியில் உயிர்கள் இரு விசினசுஃா ஈட்டி அவற்றின் பயனுக் குத் தக்கவாறு பிறந்திறந்துழலும் போது அவ்வுயிர்களோடும் ( rail it, என வந்தவாறு பிரிப்பின்றி தின் றருளும்,
பொருட்டன்மையால் கண்ணுெளியும் அருக்கனுெளியும் போல் வேருகிய அது, உடலும் உயிரும் போல் பிரித்தறிய முடி பாது ஒன்ரு யும், கண்ணுெகரியும் ஆன்ம போதமும் போல் உடனு யும் நின்றருளும்.

காணும் தன்மை கண்ணுக்கு இயல்பாய் உண்டேயெனினும் ஆன்ம போதம் இல்லாத விடத்து அது காண்பதில்லை. உயிர் நீங் கிய உடலிலுள்ள கண் காண்பதில்ஃவ என்பது கண்கூடு.
அவையே தானேயாய் என்பது அவையேயாய் (ஒன்ருய்) தானேயாய் (வேருப்) அவையேதானே யாய் (உடனுய்) என்று பிரிக்கப்பட்டது.
ஆஃணயின் என்பது ஆஃணயின் இருளினேயின் என்றும் ஆண் பின் நீக்கமின்றி என்றும் கொண்டு பொருள் கொள்ளப்பட்டது.
(8) முதலாம் சூத்திரத்தில் நிமித்த காரணத்தின் உண்மை நிரூபிக்கப்பட்டுத் துஃணக்காரணம், முதற்காரணம் ஆகியவற்றின் உண்மை இங்கே நிரூபிக்கப்பட்டது. இருவினேயிற் போக்கு வரவு புரிதல் ஆணேயின் வழியிலாகலின் ஆனே துண்ணக்காரணமாகின்றது.
ஆஃணயின் வழி இருவினே நிகழ்தற்கும் போக்குவரவு புரிதற்
கும் இடமாகிய மாயை முதற் காரணமாயுள்ளது.
(3) ஆன்மாவுக்கும் இறைவனுக்குமிடையேயுள்ள அத்துவித சம்பந்தம் இச் சூத்திரத்தில் விளக்கப் பெற்றுள்ளது. பதிஞெராம் குத்திரத்தில் இது மேலும் வலியுறுத்தப்படுகின்றது.
பொழிப்பு:- ஆன்மாக்கள் சிவசத்தியின் வழி நின்று இருவினே களேச் செய்து அவற்றின் பயனுக்குத் தக்கவாறு பிறந்திறந்துழ லும் போது இறைவன் ஆன்மாக்களோடு ஒன்று யும் வேரு யும் உட ஆயும் நின்றருளும், ஆன்மாக்களோடு ஒன்று யும் வேரு யும் உடனு யும் நிற்றல் சிவசத்தியோடு பிரிப்பின்றி நின்றே யாகும்.
உலகெலா மாகி வேரு யுடனுமா யொளியா யோங்கி அலகிலா வுயிர்கள் கன்மத் தாணேயினமர்ந்து செல்லத் கலேவணு யிவற்றின்றன்மை தனக்கெய்த வின்றித் தானே நிலவுசீ ரமல ஞகி னின்றன fைங்கா தெங்கும். (சி சி.)
(மேலே கூறிய சிவபிரான் தமது வியாபகத்தன்மையால் உலகு உயிர் ஆகிய எல்லாமாகியும் (ஒன்முய்) பொருட்டன்மையால் அவற்றிலிருந்து வேருகியும் (வேgய்) அவற்றை உடன் நின்று செலுத்துந் தன்மையில் உடனுயும் (உடனுப்) நின்றருளும், எண் ஒாறுக்கடங்காத உயிர்கள் (சிவசத்தியின் வழியில்) செய்யும் நல்வினே விேனேப் பயன்களுக்குத் தக்கவாறு(சிவசத்தி செலுத்த) மாயா காரி பங்களாகிய தநு கரண புவன போகங்கஃனப் பொருந்திப் பிறந்து

Page 17
14
இறந்து உழலும் போது அச்சத்தியே திருமேனியாகக் கொண்டு இறைவன் நின்றருளும். இவற்றை இவ்வாறு செய்து நின்றபோ தும் உலகு உயிர் மலம் ஆகிய இவற்றின் தன்மை இறைவனைப் பொருந்தாது அநாதியே நின்மலராய் நின்றபடியே நின்றருளும். (ஒளியாய் - சத்தியாய்) தன்னிலைமை மன்னுயிர்கள் சாரத் தருஞ்சத்தி பின்னமிலா னெங்கள் பிரான். (திருவருட்பயன்) ஒருரு வாயினை மானுங் காரத் திரியல் பாயொரு விண்முதல் பூதலம் ஒன்றிய இருசுடர் உம்பர்கள் பிறவும் படைத்தளித் தழிப்பமும் மூர்த்திக ளாயின. அனைய தன்மையை யாதலின் நின்னை நினைய வல்லவ ரில்லை நீள்நிலத்தே. ஈறய்முதல் ஒன்றயிரு பெண்ணுண்குண மூன்றாய் மாருமறை நான்காய்வரு பூதம் அவை ஐந்தாய் ஆரு?ர்சுவை ஏழோசையொ டெட்டுத்திசை தானுய் வேறய்உடன் ஆணுன் இடம் வீழிம்மிழ லையே.
(சம்பந்தர்) முந்திய வல்வினைகள் தீர்ப்பான் தன்னை மூவாத
மேனிமுக் கண்ணி னனைச் சந்திரனும் வெங்கதிரு மாயி னனைச் சங்கரனைச்
சங்கக் குழையான் தன்னை மந்திரமும் மறைப்பொருளு மானன் தன்னை மறுமையும்
இம்மைபு மாஞன் தன்னை அந்தரனை ஆரூரி லம்மான் தன்னை யறியா
தடிநாயே னயர்த்த வாறே. (அப்பர்) விள்ளத்தா னென்று மாட்டேன் விருப்பெனும்
(வேட்கை யாலே வள்ளத்தேன் போல நுன்னை வாய்மடுத் துண்டி டாமே உள்ளத்தே நிற்றி யேனும் உயிர்ப்புளே வருதியேனுங் கள்ளத்தே நிற்றி யம்மா எங்ங்னங் காணு மாறே. (அப்பர்)

விறகிற் றியினன் பாலிற் படுநெய்போல்\ மறைய நின்றுளன் மாமணிச் சோதியான் உறவு கோல்நட் டுணர்வு கயிற்றினல்
முறுக வாங்கிக் கடையமுன் நிற்குமே. (súLñ)
உடையாள் உன்தன் நடுவிருக்கும்
உடையாள் நடுவுள் நீயிருத்தி அடியேன் நடுவுள் இருவீரும்
இருப்ப தானுல் அடியேன்உன் அடியார் நடுவுளிருக்கும் அருளைப்
புரியாய் பொன்னம் பலத்தெம் முடியா முதலே என்கருத்து
முடியும் வண்ணம் முன்னின்றே.
(திருவாசகம்) அருளே யுலகெலாம் ஆள்விப்பதீசன் அருளே பிறப்பறுப்ப தானுல் - அருளாலே மெய்ப்பொருளை நோக்கும் விதியுடையேன் எஞ்ஞான்றும் எப்பொருளு மாவ தெனக்கு.
(அற்புதத்திருவந்தாதி
உயிரெல்லா மாகியு மாகாத வுன்பெருமை பயிலப் படும்விதமோ பாரளந்தோன் காணரிய உயிருண் சுடர்மணியே உம்பர்பணி மெய்ப்பொருளே மயில்குயில் பயிலிலங்கை மாமணியே நாணபயம்.
ஏக னநேகஞ யுற்றவெம் மீசனத் தேகம்போ முன்னர்த் தொழு.
எள்ளு மெண்ணெயும் போன்ற இறையவன் கள்ளு லாவுங் கடிமலர்க் கொன்றையான் உள்ளு வார்தங்கள் உள்ளத்தி லுள்ளவன் நள்ளு வார்தமை நாடுஞ் சிவாயவே.
(நற்சிந்தனே)

Page 18
I 6
அகர மாம் எழுத்துப்போல அனைத்தினுங் கலந்து நின்றே இகபரம் இரண்டுமீந்த எழிற்குரு திருத்தாள் வாழ்க.
ஏக னனேகனென்று மியமலை வாசனென்றும் மோகமார் தக்கனைமுன் முடித்த முதல்வனென்றும் போகமார் பூண்முலையாள் பொருந்திய பாகனென்றும் யோகநாதன் பணியிலங்கை நாதா உனக்கபயம்,
ஏக னனேக ரிைறைவனடி வாழ்கவெனும் ஆகமத்தி னுட்பொருளே யையனே கண்வளராய்.
(நற்சிந்தன)
مسیحہ سرسہ^مھمہ (نڑ) م^xسمجھ^مہ ہی۔ --~--
மூன்றம் சூத்திரம்
(முதலாம் இரண்டாம் சூத்திரங்களில் உலகத்திற்கு முதற்
காரணம் துணைக்காரணம் நிமித்த காரணமாயுள்ள பதி பாச உண்மை நிரூபிக்கப் பெற்று இங்கே பசுவுண்மை நிரூபிக்கப்படு கின்றது.)
உளதில தென்றலி னெனதுட லென்றலி
னைம்புல னெடுக்க மறிதலிற் கண்படி
லுண்டிவினை யின்மையி னுணர்த்த வுணர்தலின்
மாயா வியந்திர தனுவினு ளான் மா. இ-ள் :-(1) இலது என்றலின் (ஆன்மா) உளது-ஆன்மா என்பது ஒன்று இல்லை என்று சொல்வதஞல் (அப்படிச் சொல்வது பிறிது எதுவுமன்ரு கலின் இலது என்று சொல்லும்) ஆன்மா உளது. (2) எனது உடல் என்றலின் (ஆன்மா) உளது-எனது உடல் என் பதஞல் (எனது மாடு எனது வீடு என்பதுபோல்) உடலின் வேருய் ஆன்மா உளது. 籌

7
(3) ஐம்புலன் அறிதலின் (ஆன்மா) உளது - (மெய் வாய் சண் காது மூக்கு ஆகிய ஐம்பொறிகள் ஒன்றை ஒன்று அறிவதில்லை. ஒவ்வொரு பொறியும் ஒவ்வொரு புலனையே அறிவதன்றிப் பிறி தொன்றை அறிவதில்லை. ஐம்பொறிகளையும் கொண்டு ஐம்புலன்க ளையும் ஒருமித்தும் தனித்தும் அறிவது ஒன்றுண்டு. அது ஆன்மா என்று துணியப்படும். எனவே) ஐம்பொறிகளையும் கொண்டு ஐம் புலன்களை !!ம் அறியும் ஆன்மா உளது.
(4) ஒடுக்கம் அறிதலின் (ஆன்மா) உளது - ஐம்பொறிகள் செய லற்று ஒடுங்கியிருக்கும் கனவு நிலையிலும் (நனவு, நிலயிற்டோல்) இன்ப துன்ப நிகழ்ச்சிகள் நிகழ்கின்றன. ஐம்பொறிகள் ஒடுங் கிபி ருக்கும் இந்நி%லமையிலும் இன்ப துன்ப நிகழ்ச்சிகள் நிகழ்வதால் அவ்வின்ப துன்ப நிகழ்ச்சிகளே நுகர்வது ஐம்பொறிகளின் வேருய் ஒன்றுண்டு. எனவே, ஐம்பொறிகளின் ஒடுக்கத்தின் போதும் அறி வதாகிய ஆன்மா (ஐம்பொறிகளின் வேருய்) உளது.
ஐம்பொறிகள் ஒடுங்கிய போதும் குக்கும தேகம் தொழிற் படுவதால் சூக்கும தேகம் அறியுமோ என்ருல் அறியமாட்டாது. நனவிற் கண்ட காட்சி கனவில் மாறுபடக் காண வருகின்றது. அவ் வாறே கனவிற் கண்ட காட்சி நனவில் உண்மையல்லாத தாய் மாறுபடுகின்றது. கனவில் தொழிற்படும் இருபத்தைந்து கருவிக ளும் நனவிலும் தொழிற்படுதலால் குறித்த இருபத்தைந்து கருவி களையுமுடைய குக்கும தேகம் அறியும் என்பது பொருந்தாது. எனவே குக்கும தேகத்திலும் வோ?ய் நின்று அறியும் ஆன்மா a 677951.
(5) கண்படில் உண்டி வினை இன்மையின் (ஆன்மா) உளது - (சொப்பணுவத்தைக்கு மேல் வருவதாகிய சுழுத்தி நிலையில் பிரா ண ன் புருடன் சித்தம் என்னும் மூன்று கருவிகள் மாத்திரம் தொழிற்படும். ஞானேந்திரிய கன்மேந்திரியங்கள் மாத்திரமன்றி சத்தாதி வசனதி ஆதியவையும் அப்போது தொழிற்படாமையால் வினே செய்யாமையோடு கிருவிகளால் வரும் இன்ப துன்ப அனுப வமும் இல்லையாகின்றது. 'கண்படில் உண்டிவினையின்மையின்" என்றது இந்த நிலைமையைக் குறிக்கும். எனவே) உறக்கம் விழிப்பு ஆகிய இருநிலைமைகளிலும் பிராணவாயு ஒரே தன்மையாய் இயங் கிக் கொண்டிருப்பினும் விழிப்பு நிலையிலுள்ளவையாகிய இன்ப துன்ப நுகர்ச்சியும் வினை செய்தலும் உறக்கத்தில் இல்லாமையினல் பிராணவாயுவின் வேருய் ஆன்மா உளது.

Page 19
18
(6) உணர்த்த உணர்தலின் (ஆன்மா) உளது - (கருவிகளைப் பொருந்தாது நிற்கும் கேவலாவத்தையில் ஆன்மா அறிய வருவது ஒ&7றுமில்லை. கருவிகளைப் பொருந்திய போதும் மறந்து மறந்து அறிதலும் மாறி மாறி அறிதலும் நிகழ்கின்றது. அறிவு நிகழ்கின்ற அந்த நிலைமையிலும் குறித்த கருவிகளின் வேருகிய தனது சொரூ பத்தை ஆன்மா அறிவதில்லையாசலின் மற்ருென்று அறிவிக்க அறி வதாகிய ஆன்மா உளது என்பது பெறப்படுகின்றது. எனவே) முற் றறிவுடையதாய் உணர்த்தி நிற்கும் பதியின் வேரு ய் உணர்த்த உணரும் ஆன்மா உளது. (பதி என்பது பிரமம் எனவும் படும்.)
(7) மாயா இயந்திர தனுவினுள் (ஆன்மா) உளது - ஐம்பொறி கள் ஐம்புலன்கள் முதலியனவையாய் வரும் மாயா காரியங்களால் ஆக்கப்பட்டு இயந்திரம் போன்று நின்று இயங்குகின்ற உடலினுள் அதை இயக்குகின்றதாகிய ஆன்மா இவற்றின் வேருய் உளது.
விளக்கம்:- ஆன்மா என்பது ஒன்று இல்லை, தேகமே ஆன்மா, இந் திரியங்களே ஆன்மா, சூக்கும தேகமே ஆன்மா, பிராணனே ஆன்மா, பிரமமே ஆன்மா, பொறிபுலன் முதலியவை எல்லாம் சேர்ந்த சேர்க் கையே ஆன்மா, என்ற ஏழு கொள்கைகள் மறுத்து ரைக்கப்பட்டு ‘ஆன்மா உளது" என்பது இச் சூத்திரத்தால் நிரூ பிக்கப் பெற்றது.
'உளது’ என்று சூத்திரத் தொடக்கத்தில் நிற்கும் சொல் லும் 'ஆன்மா' என்று இறுதியில் நிற்கும் சொல்லும் மேலே குறித்த ஏழு கொள்கைகளையும் மறுத்து ஆன்மா உளது என்று நிருபிக்கும் ஒவ்வொரு முறையும் எடுத்தாளப்பட்டன. ஒடுக்கம் - ஐம்பொறிகளின் ஒடுக்கம் அல்லது சொப்பணுவத்தை, கண்படுதல் - உறங்குதல்; இங்கே சுழுத்தி நிலை. உண்டி - இன்ப துன்ப நுகர்ச்சி. வினை - நல்வினை தீவினே செய்தல்.
பொழிப்பு:- இல்லை என்று சொல்வக்னல் இல்லை என்று சொல் வது ஒன்று (ஆன்மா) உண்டு, எனது உடல் என்பதஞல் உடலின் வேழுய் ஒன்று (ஆன்மா) உண்டு, ஐம்பொறிகள் ஐம்புலன்களைக் கொண்டு அறிவது ஒன்று (ஆன்மா) அவற்றின் வேரு யுண்டு, குக் கும தேகத்தின் வேரு ய் ஆன்மா உண்டு, கண்படுதல் எனப்படும் சுழுத்தி நிலையில் சாக்கிரத்திற் போல் பிராணன் இயங்குதலின் பிராணனின் வேருய் ஆன்மா உண்டு, கருவிகரணங்களோடு கூடி

9
நின்றபோதும் உணர்த்திய போதே உணர்தலின் முற்றறிவுடைய கடவுளின் வேருய் ஆன்மா உண்டு, பொறிபுலன் முதலியவாயுள்ள கருவிகள் சேர்ந்த மாயா காரிய இயந்திரமாகிய உடம்பின் வேரு ய் அதை இயக்குகின்ற ஆன்மா உண்டு.
உயிரெனப் படுவதிந்த வுடலின்வே றுளதா யுற்றுச் செயிருறு மிச்சா ஞானச் செய்திகளுடைய தாகிப் பயில்வுறு மின்பத் துன்பப் பலன்களு நுகரும் பார்க்கின் துயிலொடு மஞ்ச வத்தைப் படுமுண்மை துரியா தீதம்.
(சி.சி.)
(உயிரெனப்படுவது இந்த உடலின் வேரு யுள்ளது. குற்றம் பொருந்திய இச்சை ஞானம் கிரியை ஆகிய சத்திகளை யுடையதாய் அது உடலைப் பொருந்தி நல்வினை தீவினைகளைச் செய்து இன்ப துன் பங்களை அனுபவிக்கும். சாக்கிராவத்தையில் இலாடத் தானத்தில் நின்று ஐந்தவத்தைப் படுதல் மாத்திர மன்றித், துயிலுதலாகிய கீழாலவத்தையைப் பொருந்தியும் ஐந்தவத்தைப்படும். கருவிக ளில்லாத துரியாதீத நிலை அதன் உண்மையான நிலையாகும்.)
தோற்பாவைக் கூத்தும் தொல்லை மரப்பாவை யியக்க
(முஞ்சீர்த் தேர்ப்பாரிற் செலவும் வேரு ய்ச் செலுத்துவார் செய்தி
தானும் பார்ப்பாய வேடங் கட்டி யாடுவோர் பரிசும் போலும் ஆர்ப்பாய காயந் தன்னை யான்மாநின் முட்டு மாறே.
(சி.சி.)
(பந்தமாகிய பஞ்சகோசங்களையும் பொருந்தி நின்று ஆன்மா அவற்றை ஆட்டுந் தன்மை, தோற்பாவை மரப் பாவைகளை ஆட் டுவோரும் தேரைச் செலுத்துவோரும் அவற்றின் வேருயிருந்து ஆட்டுதலும் செலுத்துதலும் போன்றும், பல வேடம் போட்டு ஆடுவோர் அது அது வாய் நின்று ஆடுதலும் போன்றுமுள்ளது.) பொக்கமாய் நின்ற பொல்லாப் புழுமிடை முடைகொள்
(ஆக்கை தொக்கிநின் றைவர் தொண்ணுாற் றறுவருந் துயக்க
(மெய்த

Page 20
20
மிக்குநின்றிவர்கள் செய்யும் வேதனைக் கலந்து போனேன் செக்கரே திகழும் மேனித் திருக்கொண்டிச் சரத்து
[ளானே.
(அப்பர்)
வானகி மண்ணுகி வளியாகி ஒளியாகி ஊணுகி உயிராகி உண்மையுமாய் இன்மையுமாய்க் கோணுகி யான் எனதென்(று) அவர் அவரைக் கூத்தாட்டு வாணுகி நின்றயை என்சொல்லி வாழ்த்துவனே.
(திருவாசகம்) ஊதூது சங்கே ஊதூது பஞ்சவாயு நாமல்லவென் றுதுாது. ஊதுாது சங்கே ஊதூது தசநாடி நாமல்லவென் றுதுது.
(நற்சிந்தனை)
நீ உடம்பன்று மனமன்று புத்தியன்று சித்தமன்று நீ ஆத்மா. ஆத்மா ஒருநாளும் அழியாது. இது மகான்களு டைய அனுபவ சித்தாந்தம். இந்த உண்மை உனது உள் ளத்தில் நன்ருய்ப் பதியக் கடவது. ஆனல் நீ கவனிக்க வேண்டியது ஒன்றுண்டு. அதாவது தரும நெறியிற் பிச காதே. எவ்வுயிரும் பெருமான் திருமுன்னிலை என்று சாதனை செய். கடவுள் உள்ளும் புறம்பும் உள்ளவர்.
(நற்சிந்தனை)

21
இலக்கண இயல்
நாலாம் சூத்திரம்
(முதல் மூன்று சூத்திரங்களால் பதி பசு பாசம் ஆகிய முப் ப்ொருள்களும் உள் பொருள்கள் என்பது பிரமாண முகத்தால் நிரூபிக்கப் பெற்றது. இந்நான்காம் சூத்திரம் முதலிய மூன்று குத் திரங்களால் அவற்றின் இலக்கணம் கூறப்படுகின்றது. அவற்றுள் உள்பொருள் என்று மூன்ரும் குத்திரத்தில் நிரூபிக்கப் பெற்ற ஆன்மாவின் இலக்கணம் இச் சூத்திரத்திற் கூறப்படுகின்றது. )
அந்தக் கரண மவற்றினுென் றன்றவை சந்தித்த தான்மாச் சகசமலத் துணரா தமைச்சர சேய்ப்பநின் றஞ்சவத் தைத்தே.
இ-ள்:- அந்தக்கரண மவற்றி னென்றன்று (ஆன்மா) -ஆன்மா (மனம் புத்தி சித்தம் அகங்காரம் என்னும்) அந்தக்கரணங்களில் எது ஒன்று மன்று, அவை சத்தித்தது ஆன்மா - அவற்றைப் பொருந்தி நிற்பது eg, 67 tonT,
சகசமலத்து உணராது. (ஆன்மா) - ஆன்மா அனுதியே (செம்பிற் களிம்பு போன்று) ஆணவ மலத்தால் பீடிக்கப்பட்டுள்ளது (ஆகை யால்) எது ஒன்றையும் அது தானுய் அறிய மாட்டாது, அமைச்சர சேய்ப்ப நின்றஞ்சவத்தைத்து (ஆன்மா) - அமைச்ச ரும் அரசனும் கூடி நிற்பதுபோல் அந்தக்கரணங்களைப் பொருந்தி நின்று ஐந்து அவத்தைப் படுவது ஆன்மா. (ஐந்தவத்தை - சாக்கிரம் சொப்பனம் சுழுத்தி துரியம் துரியா தீதம்)
விளக்கம்:- ஆன்மா என்ற சொல் நான்கு இடங்களில் பொருள் கொள்ளுமாறமைந்துள்ளது.
பொழிப்பு:- ஆன்மா அந்தக்கரணங்கள் நான்கில் எது ஒன்று மன்று, அவை கூடிய கூட்டமுமன்று. அமைச்சரும் அரசனும்

Page 21
2 g
போல் அந்தக்கரணங்களோடு கூடி நின்று ஐந்தவத்தைப் பட்டு அது அறிவது. சக சமலத்தையுடையது; அதனுல் எதையும் தாணுய் அறியமாட்டாது.
(சகசமலம் உடையது, அறிவிக்க அறிவது, ஐந்தவத்தைப் பட்டு அறிவது என்பது அதன் இலக்கணம்.)
உணர்வன கரண மென்னி ஞென்றையொன் றுணரா
| வெவ்வே றஃணதருஞ் செயல்களுன்கு மறிந்தவையடக்கி யாக்கிப் புணருமுட் கருவி யாக்கிப் புறக்கரு வியிலும் போக்கி இஃணதரு மிவற்றின் வேரு யானென தென்ப தான்மா.
(፵ ፪ . )
(அந்தக்கரணங்களே அறியும் (இவற்றின் வேறுப் நின்று அறியும் ஆன்மா என்பது ஒன்று இல்ஃ) என்னில் அவை ஒன்றை ஒன்று அறிவதில்ஃப், ஒன்று செய்யும் தொழிலே மற்றது செய்ய மாட்டாது. ஒவ்வொன்றும் அது அதற்குரியதாகிய ஒவ்வொரு தொழிஃயே செய்யும் அந்தக்கரணங்கள் நாள்கையும் அறிந்து, அவற்றையடக்கி உட்கருவியாக்கியும், அவற்றை விருத்தி செய்து புறக்கருவிகளிற் செலுத்தியும் (ஆன்மா) அவற்றை இஃணந்து நிற் கும். இவ்வாறு இஃணந்து நின்றும் இவற்றின் வேருய் டான் எனது என்று சொல்விநிற்பது ஆன்மா. (புறக்கருவிகள் - இந்திரியங்கள்)
மனமெனுந் தோணி பற்றி மதியெனுங் கோலே யூன்றிச் சினமெனுஞ் சரக்கை ஏற்றிச் செறிகட லோடும் போது மதனெனும் பாறை தாக்கி மறியும்போதறிய வொண்ணு துணையுனும் உணர்வை நல்காய் ஒற்றியூருடைய கோவே.
(அப்பர்)
-
நீ ஆத்மா ஆத்மா ஒருநாளும் அழியாது.
நீ உடம்பன்று மன மன்று புத்தியன்று சித்தமன்று
ஐம்பூதம் நீவிரல்லீர் பாங்கிமாரே ஐம்பொறியும் நீவிரல்லீர் பாங்கிமாரே ஐம்புலனும் நீவிரல்லீர் பாங்கிமாரே
அந்தக்கரணம் நீவிரல்வீர் பாங்கிமாரே. (நற்சிந்தனே)

ஐந்தாம் ருத்திரம்
(இரண்டாம் சூத்திரத்தில் நிரூபிக்கப் பெற்ற ஆஃணக்காா னெம் முதற் காரணம் ஆகியவற்றின் இலக்கணம் இன்ளைந்தாம்
சூத்திரத்திற் கூறப்படுகின்றது.)
விளம்பிப உள்ளத்து rெய்வாய் கண்மூக்(கு) அளந்தறிந் தறியா. ஆங்கவை போலத் தாம்தம் உர்ை வின் தமியருள் காந்தங் கண்ட பசாசத் தவையே.
இ-ன் - விளம்பிய உள்ளத்து - மேலே மூன்றும் நாவTம் சூத்தி ாங்கிளிற் கூறப்பெற்ற ஆன்மாவின் உபரி ரத்தால், மெய் வாய் கண் முக்கு அளந்து அறிந்து - பெப் எ பப் அண் மூக்கு (செவி) என்பன தத்தம் விடயங்களே வேண்டியவாறு வரையறுத்து அறிந்து, அறியா - தம்மையும் தரிச்கு உபகரித்து நிற்கும் .ஆன் பாவையும்
நரிவதில் ஃப
ஆங்கு அரிை போல - அங்கே அள்:Tது உபகரிக்கப்பட்டு நிற்
நன்ற ஐம்பொறிகள் போல,
தாம் தம் உணர்வின் தமியருள் (அளந்து அறிந்து அறியா) ஆன் பாக்கள் தங்கள் உணர்விற்கு முதலாகிய இறைவனது திரு: ருளின் உபகாரத்த ல், பக்கு உரியன யொகிய வினேப்பயன் கஃா நிச்சயித்தறிந்து அனுபவித்து நின்றும் தம்:ையும் தமக்கு (Wறிந்து அலுபவித்தற்கு உபகரித்து திங்கும் திருவருஃபும் அறி
பதில்ஃ1, "ாந்தங் கண்ட பசாசத்தனையே - (தம்பையும் அறியாது தமக்கு பகரித்து நிற்கும் திருஎருளே பும் அறியாது நிர்ஸ் எம்பர நிகழ் கென்றதென்னில் காந்தத்தின் முன் நிற்கும் இரும்பு எவ்வாறு தொழிற்படுகின்றதோ அவ்வாறே யாம்,
விளக்கம்:- தமி, தனி:ை ஒப்பின்மை என்னும் பொருள் தகுவது,
இங்கே ஒட்பில்லா இறைவனேக் குறிக்கின்றது. அருள் இங்கே
'கான சத்தினி மக் குறிக்கின்றது. பசாரம் - இருப்பு.

Page 22
出
காந்தத்தின் முன் இரும்பு என்ற உவமானத்தால் இரண்டு உண்Pைகள் அறிவுறுத்தப் பெற்றன.
(1) காந்தம் இரும்பை இழுத்தல் குறிப்பிடத்தக்க எந்த ஒரு பூநயற்சியும் செய் நன்று. அதன் ஆற்றல் இழுக்குந் தொழிலேச் செய்கின்றது. அவ்வாறே இறைவனும் அருட் செயல்களேச் செய் தல் கட்டறிவு கொண்டன்று. வியாபகமான அதன் ஃ அதன் அருளாற்றலால் அவை நிகழ்கின்றன. ஆகவே, அச் சொல் ஈம்ாால் அது விகாரமடைவதில்ஃவ ,
(2) ஆன்மாக்கள் செய்வன எல்லாம் சத்தியின் வழியிலேயே செய்யப்படுகின்றன.
(3) சத்தி என்பது திரோதான சத்தியாகவின் திரோதான சத்தியின் இலக்கனம் கூறப்பட்டது. நிரோதான சத்தி துஃனைக் காரEாம்,
நிரோதான சத்தியின் வழியில் ஆன் பாக்கள் தொழிற்படு தற்கு இடம் மானப. ஆகவே மாயை முதற் காரணமாகின்றது.
இதனுல் பாச இலக்கணம் ஒருவாறு கூறுவதாயிற்று.
பொழிப்பு: - ஐம்பொறிகள் ஆன்மாவின் வழியில் இயங்குகின் ான, அாவ தம்மை அறிவதில்லே, இயக்குகின்ற ஆன்மாவையும் அறிவதில்லே.
அப்படியே ஆன்மாக்களும் இறைவன் திருவருள் விழியிற் செயலாற்றுகின்றன. ஆயினும் தங்கள் தன்மையை அறிவது பிஸ்ஃத் தங்களுக்குத் துணேயாய் நிற்கும் இறைவன் திருவருளே அறிவதுமில்ஃ. திருவருளின் வழியில் ஆன்மாக்கள் செயலாற்றுதல் ாாந்தத்தின் முன் இரும்பு தொழிற்படுதல் போலாகும்.
பொறிபுலன் கரன மெல்லாம் புருடனு லறிந்தான்
(மாவை அறிதரா வவையே போல வான்மாக்க விளனேத்து
மெங்குஞ் செறிதருஞ் சிவன்ற னுலே யறிந்திடுஞ் சிவனேக் காணு அறிதருஞ் சிவனே யெல்லா மறிந்தறி வித்து நிற்பன்.
r邱.负。)
(ஐம்பொறிகள் ஐம்புலன் சுன் அந்தக்கரணங்கள் ஆகிய எல் பாம் ஆன்மாவின் உபகாரத்தால் அறியும், ஆயினும் உபகரித்து

翌5
நிற்கும் ஆன்மாவை அறிய ". அவையே போல் ஆன்மாக்கள் எவ் பாம் எங்கும் வியாபித்து நிற்கும் சிவபிரானது உபகாரத்தால் அறிந்தும் சிவபிரான அறிவதிக்ஃப. எல்லாவற்றையும் அறியும் சிவபிரானே ஆன்மாக்களுக்கு அறிவித்தறித்து நிற்கும். துரண்டு சுடரனேய சோதி கண்டாய்
தொல்லமரர் குளா மனிதா ன் கண்டாப் காண் டற் கரிய கடவுள் கண்டா ப்
கருதுவார்க் காற்ற எளியான் கண்டா ப் வேண்டுவார் வேண்டுவதே ஈவான் கண்டாய்
மெய்ந்நெறி கண்டாய் விரத மெல்லாம் Tண்ட மனத்தார் மனத்தான் கண்டாப்
மறைக்காட் டுறையும் மணு என் தானே.
பூப்பர் தன்னுரிற் பூட்டிய சூத்திரப் பாவைதன் னுர்தப்பினுல் தன்னுலு மாடிச் சவித்திடு போவந்தத் தன்மையைப்
(போல் உன்னுலி யானுந் திரிவதன் லான் மற் றுனேப் பிரிந்தால் என்னுலிங் காவதுண் டோவிறை வாகச்சி பேகம்பனே.
(பட்டினத்தடிகள் அனேத் துஞ் சிவன்செயலென் றறிந்த பெரியோர்க்கு
ானத்துயர் வந்திடுமோ - குதம்பாப் 23ாத்துயர் வந்திடுமோ.
(நற்சிந்தனே! ாதும் சிவன்செயலென் றெண்ணும் பெரியோர்க்குத் துேதான் ஆவதுண்டோ - குதம்பாய் துேதான் ஆவதுண்டோ.
(நற்சிந்தன) அறிவுக் கறிவாகி நின்றம் அறிஞர் பிறிவறவுன் னுள்நிற்பர் பெம்மான் - நெறியறியேன் பொல்லாப் புஃநாயேன் போற்றும் வகைபறியேன் சொல்லாய் எனக்கேற்ற சொல்.
(நற்சிந்தன)

Page 23
空齿
ஆக்கையே கோயிலாக வகஞ்சிவ லிங்கமாக நீக்கமற் றெங்கும்நிற்கும் நிமலனே நமச்சிவாய.
ஈசனே யெம்மைநீங்கா இறைவனேயிமையோர் போற்றும் வாசமார் கமலபாதா வள்ளலே நமச்சிவாய.
எண்ணுவார் எண்ணந்தோன்று மிடமெனப் பெரியோ
Iருன்னேத் திண்ணமாய்ச் சொல்லும் நல்ல தெய்வமே நமச்சிவாய.
(நற்சிந்தனே)
シキー尋ーニ*
ஆரும் சூத்திரம்
உணருரு அசத்தெனி னுணரா தின்மையி னிருதிற னல்லது சிவசத் தாமென விரண்டு வகையி னிசைக்குமன் உலகே.
இ-ள்:- உணருகு எனின் தசத்து-( கருவி அரணங்களால்) உன ரப்படும் பொருளாளுல் அது அழியுந்தன்மையுடைய அசத்தாகும், உணராது (எனின்) இன்மையின் - எவ்வாற்ருனும் உனர முடி யாத பொருளானுல் அது இல்லாததொன்ருகும், ஆகவே, இருதிறன் அல்லது - இவ்விரு தன்மைகளும் இல்லாததாய், இரண்டு வகையின் - பாச ஞானத்தாலும் பசு ஞானத்தாலும் அறியப்படாமையும் (பதிஞானத்தால் அல்லது) சிவஞானத்தால் அறியப்படுதலும் ஆகிய இரண்டு வகையினே யுடையதாகிய, சிவசத்து ஆம் என - சிவம் சத்து அல்லது சித்து சத்து ஆம் என்று, மன்னுலகு இசைக்கும் - மெய்யுணர்வு நிலைபெற்ற பெரியோர் சொல்லுவர்.
விளக்கம்:- அசத்து - அழியுந் தன்மையுடையது. சத்து-நில், பேறுடையது. சிவம் - மங்களகரமான அறிவுப் பொருள்

7
சிந்து - அறிவுப் பொருள். மன் - ரிஃபேறு. உலகு - மெய்ஞ் ஞானியர்.
பொழிப்பு:- கருவி சுரணங்களால் அறியப்படும் பொருள் என்ருல் அது அழியுந் தன்மையது எவ்வாற்றுனும் அறிய முடி யாத பொருள் என்ருல் இல் பொருளாகும். பாச ஞானம் பசு ஞானங்களால் அறிய முடியாததும் பதி ஞானத் தாங் (சிவஞா ாேத்தால் அறியக் கூடியதுமாகிய இரண்டு தன்பையுமுடையது பதி என்று மெய்யுணர்வுடையோர் கூறுவர்.
(கருவி கரணங்களால் அறியும் ஞானம் பாச ஞானம், நான் பிரமம் என்னும் ஞானம் பசு ஞானம், திருவருனேயே கண் குறுகக் கொண்டு பார்ப்பது சிவஞானம் அல்லது பதி SysTaT | h வனப்படும்.)
இது பதியின் சொரூப இலக்கணம்
அறிவுறும் பொருளோ வீச னறிவுரு தவனே வென்னில் அறிபொரு ளசித்த சத்தா மறியாத தின்ரு மெங்குஞ் செறிசிவ மிரண்டு மின்றிச் சித்தொடு சத்தாய் நிற்கும் நெறிதரு சத்தின் முன்ன ரசத்தெலா நின்றி டாவே.
(q,命.)
இறைவன் ஆன்ாரி அறிவு கொண்டு அறியப்படும் பொரு ாா அறியப்படாத பொருளோ என்றுல் ஆன்ம அறிவு கொண்டு அறியப்படும் பொருள் அறிவில்லாது அழிபந்தன்மையுடைய ாடப்பொருளாகும். எள்ாைற்ருனும் அறியப்படாத தென்ருல் பொருளாகும். எங்கும் வியாபித்து நிற்கின்ற சிவபரம் பொருளோ ஆன்ம அறிவு கொண்டு அறியப்படுதல் எவ்வாற்ரு ஏறும் அறியப்படாமை ஆகிய இரண்டு தன்மைகளுமில்லாது சிவ வானத்தால் அறிய வரும் சித்தாயும் சத்தாயும் நிற்கும். வீட்டு நெறியை அருளுகின்ற சத்தின் முன் சுட்டி யறியப்படும் சடப் பொருள்கள் முனேத்து நிற்பதிவ்லே.)
நெறிதரு சத்தின் முன்னர் அசத்தெலாம் நின்றிடாவே என் து ராம் சூத்திரத்திற்குத் தோற்றுவாயாய் அமைகின்றது.

Page 24
பலகலே ஆ கமவேதம் யாவையினுங் கருத்துப் பதிபசுபா
சந்தெரித்தல் பதிபரமே அதுதான் நிலவும் அரு உருவின்றிக் குணம் குறிகளின்றி நின்மவமாய்
ரகமாய் நித்த மாகி அலகிலுயிர்க் குனர்வாகி அசல மாகி அகண்டிதமாய்
ஆனந்த உருவா யன்றிச் செலவரிதாய்ச் செல்கதியாய்ச் சிறிதாகிப் பெரிதாய்த்
சிவமென்பர் தெளிந்து ளோரே திகழ்வதுதற் (சிவப்) பாரார் பரவும் பழனத் தானேப் பருப்பதத்
தானேப் பைஞ்ஞவி பாஃனச் சீரார் செழும்பவளக் குன் ருெப் பாஃனத் திகழும்
திருமுடிமேல் திங்கள் சூடிப் பேரா யிரமுடைய பெம்மான் தன்னேப் பிறர் தன்னக்
காட்சிக் கரியான் தன்னக் காரார் கடல்புடைசூழ் அந்தண் நாகைக் காரோனத்
தெஞ்ஞான்றுங் காை
(அப்பர்) தூண்டு சுடரனேய சோதி கண்டாய் தொல்லமரர்
சூளா மணிதான் கண்டாய் காண்டற் கரிய கடவுள் கண்டாய் கருதுவார்க் காற்ற எளியான் கண்டாய் வேண்டுவார் வேண்டுவதே ஈவான் கண்டாய் மெய்ந்நெறி
கண்டாய் விரத மெல்லாம் மாண்ட மனத்தார் மனத்தான் கண்டாய் மறைக்காட்
டுறையும் மஞளன் தானே.
(sa 'Liri ) சிலந்திக் கருள்முன்னஞ் செய்தான் கண்டாப் திரிபுரங்கள்
தீவாய்ப் படுத்தான் கண்டாய் நிலந்துக்க நீர்வளிதீ யானுன் கண்டாய் நிரூபியாய்
ரூபியுமாய் நின்முன் கண்டாம் சலந்துக்க சென்னிச் சடைான் கண்டாய் தாமரையான்

.g)
செங்கண்மால் தானே கண்டாய் மலந்துக்க மால்விடையொன் நூர்ந்தான் கண்டாய்
டுறையும் மணுளன் தானே. (மறைக்காட் 'அப்பர்)
ஆதியும் அந்தமும் இல்லா ஒருவன் ஆதியும் அந்தமு மாப்வரு காரணம் ஆதிதன் அருள்கொண் டறிவதே பன்றி ஒதி யுணர்ந்தவர் ஒருவரும் இலரே.
(நற்சிந்தனே) வாக்கால் மனத்தால் தொடர்வரி தானவன் வாக்கால் திடம்பெற்றேன் அன்னே யென்னும் வாக்கால் திடம்பெற்றேன் வாளு னாசையைத் தீக்கிரை யாக்கினன் அன்னே யென்னும்
(நற்பிந்தனோ) ஆதியந்தம் இல்லேயென்று கூவுகுயிலே அளந்தறிய ஒண்னுதென்று கூவுகுயிலே,
(நற்சிந்தன) ஒருநாமம் ஒருருவம் ஒன்றுமிலான் நல்லூர்க் குருவாக வந்து குறைதீர்த்தான் - வருவாரை வையாமல் வைது வரந்தருவான் நாமெல்லாம் உய்யாமல் உய்வோம் உவந்து.
(நற்சிந்தனே)
- n

Page 25
உண்1ை8 அதிகாரம்
— ir ", " " " " " " " ..
சாதன இயல்
ஏழாம் சூத்திரம்
(பதி பசு பாரம் என்பன உள்பொருள்கள் என்பது முதல் மூன்று சூத்திரங்களால் நிரூபிக்கப் பெற்று அடுத்த மூன்று குத்தி ரங்களால் அவற்றின் இலக்கணம் கூறப் பெற்றது. இவற்:ற அறிந்து அடுத் தாற் போல் வரும் சாதஃனயைச் செய்தற்கும் அச் சாதனேயால் வரும் பயனே யடைதற்கும் அதிகாரம் ஆன்ாவுக்கு உண்டாகின்றது என்னும் உண்மையை உணர்த்துவதாயமைகின் றது இவ்வேழாம் குத்திரம். அதனுல் சாதன இயவில் இது முத வாவதாய் வருகின்றது.)
யாவையும் சூனியம் சத்து எதிர் ஆகவின்
சத்தே பறியா(து) அசத(து)இல(து) அறியா(து) இருதிறன் அறிவுள(து) இரண்டலா ஆன் ம1.
இ-ன்:- சத்து எதிர் பாவையும் சூரியம் ஆகலின் - சத்தாகிய சிவத்தின் முன் அசத்தாகிய உலகப் பொருள்கள் எல்லாம் இல் பொருள்கள் ஆகின்றன. ஆகவே, சத்து அறியாது - சத்தாகிய சினம் அவற்றை அறியாது (அறியா தாகவே அனுபவிக்கவும் மாட்டாது.).
அசத்து - சட மாகிய உலகப் பொருள்கள். இலது ஆகலின் - அறிவு இல்:ாதவை ஆகையால்,
அறியாது - சினம் ஆன்மா ஆகிய இரண்டையும் அறியா,fஆகவே அவற்றை அனுபவிக்கவும் மாட்டா. )
இரண்டலா ஆன்மா இருதிறன் அறிவுளது- சத்து அசத்து ஆகிய இரண்டுமல்லாது சதசத்தா புள்ள ஆன்மா, சத்து அசத்து ஆகிய இரண்டையும் அறியும் அறிவுடையது (அறியும் அறிவுடையதா கவே அறிந்து அனுபவித்த இம் ஆகின்றது.)

"
விளக்கம்:- சத்து என்பது சிவம். அது வியாபக அறிவுடை Iது. ஆகையால் அது என தம் சுட்டியறிவதில்லே. அசத்து ஆகிய உலகப் பொருள்கள் சுட்டியரிடப்படுவன. அவை வியாபகமாகிய சிவத்தின் முன் முஃனத்து நில்லா. ஆகையால் அவை இல்பொருள் H, GTrit fiait psit.
அசத்தாகிய உலகப் பொருள்கள் அறிவில்லாதவையாEக பால் சிவத்தையோ ஆன்மாவையோ அறிவதில்லே. அறிவதில்ஃப் பெனவே அறிந்து அனுபவித்தலும் இல்ஃ ஆகின்றது.
சதசத்தாகிய ஆன்மா சத்து அசத்து ஆகிய இரண்டையும் அறிந்து அனுபவிக்கிறது.
பாவையும் -- உலகப்பொருள்கள் எல்லாம். சூனியம் - இன்ன 0.
குளியம் ஆகலின், இலது ஆசுவின் என்று, ஆகளின் என்னும் சொல் இரண்டு இடங்களிலும் கொள்ளப்பட்டது.
பொழிப்பு:- சிவம் எதையும் சுட்டியறிவதில்ஃவயாகலின் உல ரீப் பொருள்கள் எல்லாம் வியாபக அறிவுடைய சிவத்தின் முன் இல்பொருள்கனாகின்றன. உலகப் பொருள்கள் அறிவில்லாதவை பாசையால் எதையும் அறிவதில்ஃல. சத்து அசத்து ஆகிய இரண் டயும் அறியுந் தன்மையது ஆன்மா, ஆகையால், அது இரண் டயும் அறிந்து அனுபவிக்கும். (சகல நிலயில் சுட்டறிவுடைய காய் உலகப் பொருள் கஃா அறியும் ஆன்மா சுத்த நிஃயில் வியா பக அறிவுடையதாய் சிவத்தை அறியும் என்பது இங்கே பெறப் படுகின்றது.)
அனேத்துஞ்சத் தென்னி னுென்றை
பறிந்திடா தசத்தா லென்னில் முனேத்திடா தசத்துச் சத்தின்
முன்னிரு எளிரவி முன்போல் நினைப்பதிங் கசத்தே யென்னிற்
சத்தின்முன் னிலாமை பானுந் தனேக்கொடொன் றுணர்த லானுந் தானசத் துனரா தன்றே.
(፵. (ስ. )

Page 26
32
(எல்லாப் பொருள்களும் சத்து என்பதானல் வியாபக அறி வுடையதாய் எல்லாப் பொருள்களையும் வியாபித்து நிற்கும் சத்து அல்லது சிவம் எந்த ஒரு பொருளையும் பிரித்தறிய மாட்டாது. அசத்தைப் பொருந்தி அறியும் என்ருல், சூரியன் முன் இருள் எவ் வாறு முனைத்து நிற்க மாட்டாதோ அவ்வாறு சிவத்தின் முன் அசத்து முனைத்து நில்லாது. ஆகையால் சத்தாகிய சிவம் அசத்தா கிய உலகப் பொருள்களை அறிவதில்லை. (எனவே அனுபவிப்பது மில்லை.) அசத்தே அறியும் என்று சொல்வதானுல், சத்தின் முன் அது முனைத்து நில்லாமையாலும் தன்னைக் கருவியாகக் கொண்டு மற்றென்ருகிய ஆன்மா அறிதலாலும் அசத்துச் சத்தை அறியும் என்பதும் பொருந்தாது.)
சத்தசத் தறிவ தான்மாத் தான்சத்து மசத்து மன்று நித்தணுய்ச் சதசத் தாகி நின்றிடு மிரண்டன் பாலும் ஒத்துடனுதித்து நில்லா துதியாது நின்றி டாது வைத்திடும் தோற்ற நாற்ற மலரினில் வருதல் போலும்
(6). .)
(சத்தாகிய சிவத்தையும் அசத்தாகிய உலகப் பொருள்களை யும் அறிவது ஆன்மா. அது சத்து மன்று அசத்து மன்று. அது நித் தியமானதாய் சதசத்தர்ய் சத்து அசத்து ஆகிய இரண்டினிடத் தும் சத்தோடு சத்தாயும் அசத்தோடு அசத்தாயும் பொருந்தி நிற் கும். அவ்வாறு பொருந்தி நிற்கும் என்பது சிவத்தைப் போன்ற தாய்ச் சிவத்தோடு பொருந்தி நிற்பதுமன்று சடத்தைப் போன்ற தாய்ச் சடத்தைப் பொருந்தி நிற்பது மன்று. பூவின்கண் மணம் போல் அது நிற்பதாகும். அது, அது அதைப் பொருந்தி, அது அது வாய் நின்று, அது அதை அறிந்து அனுபவிக்கும்.)
இருளில் இருளாகி எல்லிடத்தி லெல்லாம் பொருள்கள் இலதோ புவி.
(திருவருட்பயன்) நன்ரு உரைக்கக்கேள் நல்லசித்தின் முன் அசித்திங்(கு) ஒன்றது சித்தசித்தை ஓராது - நின்றிவற்றை அன்றே பகுத்தறிவ தான்மாவே என்றுமறை குன்றமல் ஒதுங் குறித்து.
(உண்மை விளக்கம்)

冯9“
மிறைபடுமிவ் வுடல்வாழ்வை மெய்யென் றெண்ணி
கிடந்தழுந்தி வியவேல் நெஞ்சே (வினையிலே குறைவுடையார் மனத்துளான் குமரன் தாதை கூத்தாடுங்
குணமுடையான் கொலே வேற் கையான் அறைகழலுந் திருவடி மேற் சிலம்பும் ஆர்ப்ப அவனிதலம்
பெயரவரு நட்டம் நின்ற நிறைவுடையா னிடமாம்நெய்த் தான மென்று நினையுமா
நினைந்தக்கா லுய்ய லாமே.
(அப்பர்)
தந்தையார் தாயார் உடன் பிறந்தார் தாரமார் புத்திரரார் தாந்தா மாரே வந்தவா றேங்ங்னே போமா றேதோ மாயமா
மிதற்கேதும் மகிழ வேண்டாம் * சிந்தையீ ருமக்கொன்று சொல்லக் கேண்மின் திகழ்
வாளரவும் திளேக்குஞ் சென்னி (மதியும் எந்தையார் திருநாமம் நமச்சிவாய என்றெழுவார்க்
கிருவிசும்பி லிருக்க லாமே.
(அப்ப்ர்) காருறு கண்ணியர் ஐம்புலன் ஆற்றங் கரை மரமாய் வேருறு வேனை விடுதிகண் டாய் விளங் குந்திருவா ரூருறை வாய்மன்னும் உத்தர கோசமங் கைக்கரசே வாருறு பூண்முலை யாள்பங்க என்னை வளர்ப்பவனே.
(திருவாசகம்) புலன்கள் திகைப்பிக்க யானுந் திகைத்திங்கொர்
(பொய்ந்நெறிக்கே விலங்குகின் றேனே விடுதிகண்டாய் விண்ணும் மண்ணு
[(o Losis sa) Tib கலங்கமுந் நீர்நஞ் சமுதுசெய் தாய்கரு ணுகரனே துலங்குகின் றேன்.அடி யேன் உடை யாயென்
(தொழுகுலமே. (திருவாசகம்)

Page 27
34
வைத்த நிதிபெண்டிர் மக்கள் குலங்கல்வி என்னும் பித்த உலகிற் பிறப்போ டிறப்பென்னுஞ் சித்த விகாரக் கலக்கந் தெளிவித்த வித்தகத் தேவர்க்கே சென்றுாதாய் கோத்தும்பீ.
(திருவாசகம்) தொண்டர் நாங்களே -சிவ தொண்டர் நாங்களே. அண்டத்திற் பிண்டத்தில் ஆண்டவனைக் காணும். (தொண்டர் நாங்களே)
ஆடுபாம்புே பணிந்தாடு பாம்பே ஆன்மாநித் தியமென்று ஆடுபாம்பே.
மாடும்க்கள் சுற்றமெல்லாம் மயக்க மென்றே மாதவர்தம் இயக்கத்தை, மகிழ்ந்து கொண்டே தோடுடைய செவியனைத் தோத்திரம் செய்தே சும்மா விருந்து கண்ணத் திறந்து கொண்டே
(ஆடுபாம்பே)
வீடு நமக்கென்றும் சொந்த மென்றே வீணுசைப் படுவதெல்லாம் பந்த மென்றே தேடும்பொரு ளெல்லாம்சிவ தொண்டுக் கென்றே தேசமெங்கும் சென்றுண்மை பேசிக் கொண்டே.
(ஆடுபாம்பே)
பாடு படும்போதும் ஆதிபதம் நினைந்தே பாடிப் பாடித் திருவருளைப் புகழ்ந்துகொண்டே ஒடும் இருநிதியும் ஒன்றகக் கண்டே உண்மை முழுதுமென மன்ருடிக் கொண்டே.
(ஆடுபாம்பே) (நற்சிந்தன)

எட்டாம் சூத்திரம்
(நிலையற்ற சடப்பொருள்களாகிய உலகப் பொருள்களை அறிந்து அனுபவிப்பதோடு நிலையான சித்துப் பொருளாகிய சிவத் தையும் அறிந்து அனுபவிக்கும் தகுதி எமக்கு உண்டு என்னும் பேருண்மையை ஏழாம் சூத்திரத்தில் அறிந்தோம். சிற்றின்பப் பொருள்கள் துன்பந்தருவன நிலையற்ற சடப்பொருள்களாயுள் ளன என்று கண்டு எந்நாளும் துன்பமில்லாத நிலையான இன் பந் தரும் சித்துப் பொருளாகிய சிவத்தை அடைதல் எவ்வாறு கைகூடு கின்றது என்பது இவ்வெட்டாஞ் சூத்திரத்தில் அறியவருகின்றது.)
ஐம்புல வேடரின் அயர்ந்தனை வளர்ந்தெனத் தம்முதல் குருவுமாய்த் தவத்தினில் உணர்த்தவிட்டு) அன்னியம் இன்மையின் அரன்கழல் செலுமே,
இ-ள்:- தம்முதல் - (தமது உயிருக்கு உயிராகியும் ஆன்ம நாயக ராகியுமுள்ள) தமது முதல்வன், தவத்தினில் - ஆன்மாக்கள் (இதுவரையிற்) செய்த தவத்தின் பய ஞய்,
குருவுமாய் - (இதுவரையில் உயிருக்குயிராய் நின்று உணர்த்திய தோடு அமையாது புறத்தே ஆன்மாக்கள் முன்னிலையில் மானிடச் சட்டை சாத்திக்) குரு மூர்த்தியாயும் எழுந்தருளி வந்து, ஐம்புல வேடரின் வளர்ந்து அயர்ந்தனை என உணர்த்த - ஐம்பு லன்களாகிய வேடரின் சூழலில் அகப்பட்டு அவற்றேடுள்ள ஒரு பொருளாய் உன்னை நினைத்து வளர்ந்து நீ சித்துப் பொருள் என்ற உண்மையை மறந்தாய், என்று உணர்த்தியருள,
விட்டு - (குருமூர்த்தி உணர்த்திய உண்மையை உணர்ந்த ஆன்மா) ஐம்புலன்களோடு ஒன்றித்து நின்று வாழ்ந்த மயக்க வாழ்வை விட்டு,
அன்னியம் இன்மையின் அரன் கழல் செலும் - தமக்கும் குரு மூர்த்திக்கும் வேறுபாடு இல்லாமையால் குரு மூர்த்தியா யெழுந் தருளி வந்த சிவபரம் பொருளின் திருவடியை அடையும்.

Page 28
36
விளக்கம்:- ஐம்புல வேடர் - வேடர் எனப்படுவோர் ஏனைய உலக மக்களின் வாழ்க்கை முறைக்கு வேருண வாழ்க்கை முறையை யுடையவர்களாகையாலும் ஐம்பொறிகள் ஐம்புலன்கள் ஆன்மா வைச் சித்துப் பொருளோடு இயைந்து நிற்கவிடாது சடப்பொருள் கள் பால் இழுத்தலாலும் வேடர் எனப்பட்டன.
அயர்ந்து வளர்தல் - தாம் சித்துப் பொருள் என்ற அறிவில்லாது சடப் பொருளோடு ஒன்றித்து மயங்கி நிற்றல். தம்முதல் - தமது உயிருக்குயிராய் என்றும் எங்கும் ஆன்மாக்களு டன் நின்று அருள் செய்யும் ஆன்ம நாயகராகிய இறைவன்.
குருவுமாய் - ஆன்மாக்கள் அறியாதவாறு உள் நின்று உணர்த்து வதோடு ஆன்மாக்கள் அறியுமாறு குரு மூர்த்தியாயும் முன் வருதல். தவத்தினில் உணர்த்தல் - தவம் செய்து வருதலும் மலவலி குறை யும் மலவலி குறையவே ஆன்மாவில் அருட் சத்திபதியும், அந்த அவ தரத்தில் இறைவன் குருமூர்த்தியாய் நின்று உணர்த்துதல். தவப்ப யனயே இது நிகழுமாகலின்' தவத்தினில்" எனப்பட்டது. அன்னியம் இன்மை - ஆன்மாவும் சித்துப் பொருள் இறைவனும் சித்துப் பொருள் என்ற முறையில் வேறுபாடின்மையோடு ஆன்மாவும் இறைவனும் என்றும் அத்துவிதமாய் நிற்றல். அரன் கழல் - சிவபிரானது திருவடி (திருவருள்).
திருவடியடைத்ல் - நான் எனது என்ற ஆன்ம அறிவு இல்லாது திருவருளே தாரகமாய் திருவருளே கண்ணுசக் கண்டு திருவருளின் செயலாயே எல்லாச் செயல்களையும் செய்திருத்தல்.
பொழிப்பு:- (உயிர்க்குயிராய் இதுகாறும் உள் நின்றுணர்த் திய) தமது முதல்வராகிய இறைவன், தாம் இதுகாறும் செய்து வந்த தவப்பயணுய்க் குரு மூர்த்தங் கொண்டெழுந்தருளி முன் வந்து, ஐம்புலன்களாகிய வேடரிடத்தில் (சடப் பொருள்களிடத் தில்) சிக்கி வளர்ந்து (சடப்பொருளென்று உன்னை நினைத்து) உனது உண்மைத் தன்மையை மறந்தாய். நீ சடப்பொருளல்லை நீ சித்துப் பொருள் என்று உணர்த்தியருள, தமக்கும் குருவுக்கும் (தாமும் சித்துப் பொருள் குருவும் சித்துப் பொருள் என்ற முறை யில் என்றும் அத்து விதமாய் நிற்றலின்) வேறுபாடின்மையால் ஆன்மா ஐம்புலன்களின் தொடர்பைவிட்டு இறைவன் திருவடியை அடையும்.

7
மன்னவன்றன் மகன்வேட ரிடத்தே தங்கி வளர்ந்தவனை
யறியாது மயங்கி நிற்பப் பின்னவனு மென்மகனி யென்றவரிற் பிரித்துப் பெருமை தானுக்கிப் பேணு மாபோற் (யொடுந் றுன்னியவைம் புலவேடர் சுழலிற் பட்டுத் துணைவனையு
மறியாது துயருறுந்தொல் லுயிரை மன்னுமருட் குருவாகி வந்தவரினிக்கி மலமகற்றித்
தானுக்கி மலரடிக்கீழ் வைப்பன்.
(சி. சி.)
(தன்னைத்தான் அறியாத பிள்ளைமைப் பருவத்தில், அரச குமாரன் ஒருவன் வேடரிடத்திற் சிக்குண்டு வேடருள் ஒருவனுய்த் தன்னை நினைத்து அந்த மயக்கத்துடன் வாழ்ந்தான். அப்படி வாழ்ந்து சில காலம் செல்ல, ஒருநாள் தந்தையாகிய அரசன் கண்டு, நீ வேடனல்லன், நீ எனது மகன் என்று அறிவுறுத்தி, வேட ரிடத்திலிருந்து நீக்கி, பெருமை பொருந்தத் தானுக்கி (அரச ஞக்கி)ப் பேணுதல் போல, நெருங்கி நின்று பொய்யுணர்வைக் கொடுத்து வருத்துகின்ற ஐம்புலன்களாகிய வேடரின் சூழலிற் சிக் குண்டு தன் தன்மையை அறியாததோடு தனது உயிர்த் துணைவனு கிய இறைவனையுமறியாது மயங்கித் துன்புற்று நிற்கின்ற ஆன் மாவை, அவ்வான்மா செய்த தவப்பேருய்க் குருமூர்த்தியாயெழுந் தருளி வந்து, ஐம்புலன்களிலிருந்து நீக்கித் தீக்கையால் மலவலி யைக் கெடுத்துச் சிவமாக்கி என்றென்றுந் தனது திருவடிக் கீழி ருந்து அந்த ஆன்மா இன்புறுமாறு சிவபரம் பொருள் அருள் செய்யும்.)
நாடியசத் திநிபாத நாலு பாத நண்ணும்வகை
யெண்ணரிய ஞான பாதம் கூடுமவர் தமக்குணர்வாய் நின்ற ஞானக் கூத்தணுெ
மூர்த்திகொடு குறுகி மோக நீடியகே வலசகல நிகழா வாறு நிறுத்திமல
மறுக்குமிது நிலையார் சுத்தங் கேடில்புகழ் தருஞ்சரியை கிரியா யோகக் கேண்மையரே
லிவையுணர்த்தக் கிளக்கு நூலே,
(சிவப்பிரகாசம்)

Page 29
38
குருமூர்த்தி மலமகற்றித் தானுக்கி மலரடிக்கீழ் வைக்கும் முறை.
பலவிதமா சான்பாச மோசனந்தான் பண்ணும் படி
தருள்பரிசம் வாசகமா னதமும் (நயனத் அலகில்சாத் திரம்யோக மவுத்தி ராதி யநேகமுள
வவற்றினவுத் திரியிரண்டு திறனும் இலகுஞா னங்கிரியை யெனஞான மனத்தா லியற்றுவது
கிரியையெழிற் குண்டமண்ட லாதி நிலவுவித்துச் செய்தல் கிரி யாவதிதா னின்னு நிர்ப்பீசஞ்
சபீசமென விரணடாகி நிகழும்.
(9.9.)
(குருமூர்த்தி செய்யும் தீக்கை பல திறப்படும். அவை நயன தீக்கை பரிச தீக்கை வாசக தீக்கை மானத தீக்கை சாத்திர தீக்கை யோக தீக்கை அவுத்திரி தீக்கை என்பன. அவற்றுள் அவுத்திரி தீக்கை ஞானவதி கிரியாவதி என இரண்டு வகையாகி நிர்ப்பீச தீக்கை சபீச தீக்கை என மேலும் இரண்டு வகையாகும். புறத்தில் குண்ட மண்டலங்கள் அமைத்துச் செய்வது கிரியாவதி, அவற்றை மனத்திற் கற்பித்து அகத்திற் செய்வது ஞானவதி, சபீசம் பீசத் தோடு செய்வது நிர்ப்பீசம் பீசம் இன்றிச் செய்வது. பித்தாபிறை சூடீபெரு மானேயரு ளாளா எத்தான்மறவாதேநினைக் கின்றேன்மனத் துன்னை வைத்தாய்பெண்ணைத் தென்பால்வெண்ணெய்
[நல்லூரருட்டு றையில் அத்தாவுனக் காளாயினி அல்லேனென லாமே.
(சுந்தரமூர்த்தி சுவாமிகள்)
நம்பனே அன்று வெண்ணெய்நல் லூரில் நாயினேன்
தன்னைஆட் கொண்ட சம்புவே உம்ப ரால் தொழு தேத்துந் தடங்கடல்
நஞ்சுண்ட கண்டா
செம்பொன்மா விரிகைசூழ் திருமுல்லை 'வாயில் தேடியான்

39
திரிதர்வேன் கண்ட பைம்பொனே அடியேன் படுதுயர்க ளையாய் பாசுப
தாபரஞ் சுடரே.
(சுந்தரமூர்த்தி சுவாமிகள்
இரும்புதரு மனத்தேனை ஈர்த்தீர்த்தென் என்புருக்கிக் கரும்புதரு சுவை எனக்குக் காட்டினைஉன் கழலிணைகள் ஒருங்குதிரை உலவுசடை உடையானே நரிகளெல்லாம் பெருங்குதிரை ஆக்கியவா றன்றேஉன் பேரருளே.
(திருவாசகம்)
மூத்தானே முவாத முதலானே முடிவில்லா ஒத்தானே பொருளானே உண்மையுமாய் இன்மையுமாய் பூத்தானே புகுந்திங்குப் புரள்வேனக் கருணையினுல் பேர்த்தேநீ ஆண்டவாறன்றேனம் பெருமானே.
(திருவாசகம்)
இந்திரிய வயம்மயங்கி இறப்பதற்கே காரணமாய் அந்தரமே திரிந்துபோய் அருநரகில் வீழ்வேற்குச் சிந்தைதனைத் தெளிவித்துச் சிவமாக்கி எனயாண்ட அந்தமிலா ஆனந்தம் அணிகொள்தில்லை கண்டேனே.
(திருவாசகம்) நந்தி அருளாலே நாதனும் பேர்பெற்றேம் நந்தி அருளாலே மூலனே நாடினுேம் நந்தி அருளாவ தென்செய்யும் நாட்டினில் நந்தி வழிகாட்ட நானிருந் தேனே,
(திருமந்திரம்)
அருவமு முருவமு மாகிய வமலன் குருவாய் வந்தே குறித்தென யாண்டான் இருபதும் நாலு மில்லா விடத்தில் கருவாகி நின்றன் காரணன் ருனே.
(நற்சிந்தனை)

Page 30
40
இருவினையின் கட்டழித்து எல்லாஞ் சிவன்செயலாய் கருதும் படிவைத்த கருணைநிறை ஆசான்றன் திருவடியைப் பாடிநாம் சிந்தித்துச் சிந்தித்து உருகி யுருகி யுணருவோ மம்மானப்.
(நற்சிந்தனை) அன்பு நெறியு மருணெறியு மறியாதேனை நயந்து வந்தே இன்ப நெறியிற் புகுத்திவிட்ட எந்தாய் நல்லைப் பதிக்கரசே துன்ப மறியேன் சுகமறியேன் தொல்லை வினையும்
(யானறியேன் முன்பு மறியேன் பின்பறியேன் முழுது முண்மை
(யெனுமுனியே. (நற்சிந்தனை)
முத்தி நெறி பயக்கும் சாதனைகள்
(9 வரவர் மலபரிபாகத்திற்குத் தக்கபடி தீக்கைகள் செய் யப்படும். பெற்ற தீக்கைகளுக் கேற்ப முத்தி நெறியிற் செய்யப் பெறும் சாதனைகள் வரும் செய்யுளிற் கூறப்படுகின்றன.)
சன்மார்க்கஞ் சகமார்க்கஞ் சற்புத்திர மார்க்கந்
தாதமார்க் கம்மென்னுஞ் சங்கரனை யடையும் நன்மார்க்க நாலவைதாம் ஞான யோக
நற்கிரியா சரியையென நவிற்றுவதுஞ் செய்வர் சன்மார்க்க முத்திகள்சா லோக்கியசா மீப்பிய
சாரூப்பிய சாயுச்சிய மென்றுசதுர் விதமாம் முன்மார்க்க ஞானத்தா லெய்து முத்தி
முடிவென்பர் மூன்றினுக்கு முத்திபத மென்பர்.
(伊.9.)
(சிவபிரானுடைய திருவடிகளை யடைதற்குரிய சாதனை நெறிகள் சன்மார்க்கம் சகமார்க்கம் சற்புத்திர மார்க்கம் தாத மார்க்கம் என நான்குள. அவற்றின் பயன் முறையே சாயுச்சியம் சாரூபம் சாமீபம் சாலோகம் என்பன. சாயுச்சிய முத்தியே எல்லா வற்றிலும் மேலானது. ஏனையவை பதமுத்திகளாகும்.)

41
சரியாசாதனையும் பயனும்
தாதமார்க் கஞ்சாற்றிற் சங்கரன்றன் கோயிற்
றலமலகிட் டிலகுதிரு மெழுக்குஞ் சாத்திப் போதுகளுங் கொய்துபூந்தார் மாலை கண்ணி
புனிதற்குப் பலசமைத்துப் புகழ்ந்து பாடித் தீதிறிரு விளக்கிட்டுத் திருநந்த வனமுஞ்
செய்துதிரு வேடங்கண் டாலடியேன் செய்வ தியாதுபணி யீரென்று பணிந்தவர்தம் பணியு
மியற்றுவதிச் சரியைசெய்வோ ரீசனுல கிருப்பர்.
(சி. சி. (சரியையாவது திருக்கோயில் அலகிடுதல் மெழுகுதல் பூ மாலை தொடுத்தல் அருட் பாடல்கள் பாடுதல் தீபமிடுதல் நந்தவ னம் அமைத்தல் சிவனடியாருக்குச் சேவை செய்தல் என்பன. இவற்றின் பயன் சாலோக முத்தி )
நிலைபெறுமா றெண்ணுதியேல் நெஞ்சே நீவா
நித்தலுமெம் பிரானுடைய கோயில் புக்குப் புலர்வதன்முன் அலகிட்டு மெழுக்கு மிட்டுப் பூமாலை புனேந்தேத்திப் புகழ்ந்து பாடித் தலையாரக் கும்பிட்டுக் கூத்து மாடிச்
சங்கரா சயபோற்றி போற்றி யென்றும் அலேபுனல்சேர் செஞ்சடையெம் ஆதீ யென்றும்
ஆரூரா என்றென்றே அலரு நில்லே.
(-эчtнлії) காலை யெழுந்திருந்து கைகால் முகங்கழுவி கோல மலரெடுத்துக் - கிளியே குருபதத்தைக் கும்பிடுவோம் கோடிங்காம மோகமாகிய கூடாதகட்டங் கூடதே நாடாதேயென்றுந் தேடாதே
நாமதுவெடி நாமதுவெடி.
(நற்சிந்தன)

Page 31
42
கிரியாசாதனையும் பயனும்
புத்திரமார்க் கம்புகலிற் புதியவிரைப் போது
புகையொளிமஞ் சனமமுது முதல்கொண் டைந்து சுத்திசெய்தா சனமூர்த்தி மூர்த்தி மானஞ்
சோதியையும் பாவித்தா வாகித்துச் சுத்த பத்தியின லருச்சித்துப் பரவிப் போற்றிப்
பரிவினெடு மெரியில்வரு காரியமும் பண்ணி நித்தலுமிக் கிரியையினை யியற்று வோர்க
னின்மலன்ற னருகிப்பர் நினையுங் காலே.
d (கி. சி.) V, (கிரியையாவது அன்றலர்ந்த வாசனையுடைய மலர் தூபம் தீபம் திருமஞ்சனம் திருவமுது முதலியவற்றை அமைத்துக் கொண்டு பூத சுத்தி தான சுத்தி திரவிய சுத்தி மந்திர சுத்தி இலிங் கசுத்தி ஆகிய ஐந்து சுத்திகளைச் செய்து ஆசனமிட்டு மூர்த்தியை எழுந்தருளச் செய்து அம்மூர்த்தியிலெழுந்தருளியிருக்கும் மூர்த்தி மானுகிய பரம்பொருளைப் பாவனை செய்து ஆவாகித்து மெய்யன் போடு அருச்சித்து வழிபட்டுப் போற்றி விருப்பத்தோடு அக்கினி காரியமுஞ் செய்து இக்கிரியாசாதனையைச் செய்வோர் சாமீப முத்தியடைவர்.) சலம்பூவொடு தூபம் மறந்தறியேன் தமிழோடிசை பாடல் (மறந்தறியேன் நலந்தீங்கிலு முன்னை மறந்தறியேன் உன்னமம் என்னுவில் (மறந்தறியேன் உலந்தார்தலை யிற்பலி கொண்டுழல்வாய் உடலுள்ளுறு
(சூலை தவிர்த்தருளாய் அலந்தேனடி யேனதி கைக்கெடில வீரட்டா னத்துறை
Iulio LoTG6or. (அப்பர்) நறைமலி தருமள றெடுமுகை நகுமலர் புகைமிகு
(வளரொளி நிறைபுனல் கொடுதனை நினைவொடு நியதமும் வழிபடும்
(அடியவர்

43
குறைவில பதம்அணை தர அருள் குணமுடை யிறையுறை
| வனபதி சிறைபுனலமர்சிவ புரமது நினைபவர் செயமகள் தலைவரே (சம்பந்தர்) விண்ணுணம் பேசியன்றே
வீண்காலம் போக்குகின்றேம் பொன்னுன மேனியனைக் - கிளியே பூவெடுத்துப் பூசைசெய்வோம்.
பூவையேநீ புகலக்கேளாய் சேவைசெய்தவர் சீவன்முத்தர் நாவைநீ காத்துக்கொள்ளெடி நானெனுமாணவ நீக்கிக் கொள்ளெடி நாமதுவெடி நாமதுவெடி நாமதுவெடி நாமதுவெடி.
(நற்சிந்தனே)
யோகசாதனையும் பயனும்
சகமார்க்கம் புலனெடுக்கித் தடுத்துவளி யிரண்டுஞ் சலிப்பற்று முச்சதுர மூலாதா ரங்கள் அகமார்க்க மறிந்தவற்றி னரும்பொருள்க ளுணர்ந்தங்
கணைந்துபோய் மேலேறி யலர் மதிமண் டலத்தின் முகமார்க்க வமுதுடல முட்டத் தேக்கி
முழுச்சோதி நினைந்திருத்தன் முதலாக வினைகள் உகமார்க்க வட்டாங்க யோக முற்று
முழத்தலுழந் தவர் சிவன்ற னுருவத்தைப் பெறுவர். (சி. சி.)
(யோக சாதனையாவது புலன்களை யொடுக்கி சுவாசத்தைத் தடுத்துக் கும்பித்து மூன்று கோண வடிவுடைய மூலாதாரம் நாலு கோண வடிவுடைய சுவாதிட்டானம் முதலிய ஆறு ஆதாரவழியை யறிந்து மூலாதாரம் தொடக்கம் அந்தந்த ஆதாரத்திலுள்ள

Page 32
44
மூர்த்தியை வழிபட்டு மேலே சென்று கண்டத்தானத்திற்கு மேலே புள்ள சந்திர மண்டலத்திலுள்ள பிரமரந்திரத் தாமரை மலரின் முகமாகிய முகை அமுதத்தை பூட்ட அதைத் தேகம் முழுதும் நிரப்பி பூரண சோதி வடிவாகிய பரம்பொருளேத் தியானித்துச் சமாதி கூடியிருப்பதாகிய யோக சாதனையைச் செய்து வருவோர் சாரூபமுத்தியடைவர்.)
காபமே கோபி லாகக் கடிமணம் அடிமை யாக வாய்மையே தூய்மை யாக மனமணி விங்க மாக நேயமே நெய்யும் பாலா நிறையநீ ரமைய ஆட்டிப் பூசனே ஈச ஞர்க்குப் போற்றவிக் காட்டி னுேமே.
(அப்பர்)
உடம்பெனும் மனேய கத்துள் உள்ளமே தகளி யாக மடம்படும் உணர்நெய் யட்டி உயிரெனுந் திரிம பக்கி இடம்படு ஞானத் தீயால் எரிகொள இருந்து நோக்கில் கடம்பமர் காஃள தாதை கழலடி காண லாமே.
(அப்பர்)
ஊனிலுயிர்ப்பை ஒடுக்கி ஒண்சுடர் ஞானவி ளக்கினே யேற்றி நன்புலத் தேனைவ Nதிறந் தேத்து வார்க்கிடர் ஆனகெ டுப்பன அஞ்செ முத்துமே.
(சம்பந்தர்)
தேடுவன் தேடுவன் செம்மலர்ப் பாதங்கள் நாடொறும் நாடுவன் நாடுவன் நாபிக்கு மேலேயோர் நால்விரல் மாடுவன் மாடுவன் வன்கை பிடித்து மகிழ்ந்துளே ஆடுவன் ஆடுவன் ஆமாத் தூரெம் மடிகட்கே.
(சுந்தரர்) மற்றுப்பற்றெனக் கின்றிநின்திருப் பாதமே மனம்
(பாவித்தேன் பெற்றலும்பிறத் தேன்இனிப்பிற வாததன்மைவந்
(தெய்தினேன்
 
 

கற்றவர்தொழு தேத்துஞ்சீர்க்கறை யூரிற்பாண் டிக்
கொ டுமுடி
நற்றவாவுனே நான்மறக்கினுஞ் சொ ல்லுநாநமச்சிவாயவே
இடைபிங் கல்என்னும் இருவாசல் அடைத்துவிட்டுக்
(சுந்தரர்
கடையிற் சுழுமுனையைக் கபாலம் திறந்துகொண்டே -
காசிதேசம் போவோம் வாராய்.
நாசி நுனியிலே நாட்டத்தை வைத்துவிட்டு வாசிக் குதிரை யேறித் - தங்கமே மாறிமாறிச் சிமிட்டாக்கொடு.
ஆசுகவி மதுரகவி அழகான சித்ரகவி பேசுந்திறம் உண்டாகும் - தங்கமே பிராணுயாமம் செய்திடெடி.
எட்டுத்தரம் உஸ்வாசித்து எண்ணெட்டுத் தரம்நிறுத்தி எண்ணிரண்டு நிஸ்வாசஞ்செய்-தங்கமே இஃதோர்வகைப் பிராணுயாமம்.
பாலும் பழமுந்தின்று பகல்நித்தி ரையைத்தள்ளு பாலனைப்போல் தேசுண்டாகும்-தங்கமே பரமனநீ பத்திசெய்வாய்.
இரவுபக வில்லாத ஏகாந்த வீட்டினிலே பரவிப் பணிந்திடெடி - தங்கமே பாரும்விண்ணும் உன்கைவசம்.
(தங்கமே

Page 33
46
பன்னிரண்டு காற்புரவி பக்குவமாய் நீயேறி உன்னிரண்டு காற்கீழே - தங்கமே உறுதியாய் அடக்கிவிடு. ஆறு படிதாண்டு அப்பாலே வெள்ளிப்படி அதுவும் நீ தாண்டிவிட்டால் - தங்கமே ஆருணக்கு நிகராவார்.
(நற்சிந்தனை) மூல நிலத்தின் முட்டிய வங்கியால் மேலை நிலத்தில் வெண்ணை உருகிற்று மூல மலத்தின் முதன்மை கெட்டது சீல மனைத்துந் தெரிந்துகொண் டேனே,
கருத்தி லிருக்கும் கதிர்கா மத் தோன வருத்தமுற் றேன்தேடு கின்ருய் - திருத்தியுன் சித்தமிசை நித்தம் திகழொளியைக் கண்டுருகி முத்தனென வாழ முயல்.
(நற்சிந்தனை)
ஞான சாதனையும் பயனும்
சன்மார்க்கஞ் சகலகலை புராண வேத சாத்திரங்கள்
சமயங்க டாம்பலவு முணர்ந்து பன்மார்க்கப் பொருள்பலவுங் கீழாக மேலாம் பதிபசுபா
சந்தெரித்துப் பரசிவனைக் காட்டு ای நன்மார்க்க ஞானத்தை நாடி ஞான ஞேயமொடு
ஞாதிருவு நாடா வண்ணம் பின்மார்க்கச் சிவனுடனும் பெற்றி ஞானப் பெருமை
யோர்சிவனைப் பெறுவர் காணே. | պ60ւ

7
(ஞான சாதனையாகிய சன்மார்க்கமாவது கலைஞானங்கள் எல்லாம் புராணங்கள் வேதங்கள் சாத்திரங்கள் பிறசமய நூல்கள் ஆகிய எல்லாம் கற்றுணர்ந்து பல சமய நூல்கள் சொல்லும் பொருள்கள் பூர்வபக்கத்திலுள்ளவையாகக் கண்டு, அவை எல்லா வற்றுக்கும் மேலானதாய் உள்ள பதி பசு பாசம் என்னும் முப்பொ ருள்களின் உண்மையைத் தெரிந்து, அவற்றுள்ளே பசு எனப்படும் ஆன்மாவானது பாசம் என்னும் பந்தத்தை அறுத்து, பதி எனப்ப டும் சிவபரம் பொருளை அடையச் செய்வதாகிய நல்ல மார்க்கத்தி லுள்ள சிவஞானத்தின் இயல்பை ஆராய்ந்தறிந்து, அந்த ஆராய்ச் சியறிவின் பயனுய்,காண்பான், காட்சி காட்சிப் பொருள் என்னும் வேறுபாடு தோன்முதவாறு சிவபிரானுடன் அத்துவிதமாய்க் கலந்து நிற்கும் நிலையைத் தருவதாகிய சிவஞானத்தைப் பெற்ற பெருமையுடையோர் சிவசாயுச்சிய முத்தியடைவர்.)
மூலநோய் தீர்க்கும் முதல்வன் கண்டாய் முத்தமிழும்
நான் மறையும் ஆணுன் கண்டாய் ஆலின்கீழ் நால்வர்க் கறத்தான் கண்டாய் ஆதியு
மந்தமு மானுன் கண்டாய் பால விருத்தனு மானன் கண்டாய் பவளத்
தடவரையே போல்வான் கண்டாய் மாலைசேர் கொன்றை மலிந்தான் கண்டாய் மறைக்காட்
டுறையும் மணுளன் தானே.
(அப்பர்)
நற்பதத்தார் நற்பதமே ஞானமூர்த்தீ நலஞ்சுடரே
நால்வேதத் தப்பால் நின்ற சொற்பதத்தார் சொற்பதமுங் கடந்து நின்ற சொலற்கரிய
சூழலாய் இதுவுன் தன்மை - நிற்பதொத்து நிலையிலா நெஞ்சந் தன்னுள் நிலா வாத
புலாலுடம்பே புகுந்து நின்ற கற்பகமே யானுன்னை விடுவே னல்லேன் கனகமா
மணிநிறத் தெங் கடவு ளானே.
(அப்பர்)

Page 34
48
எல்லாஞ் சிவனென்ன நின்றப் போற்றி எரிசுடராய்
நின்ற இறைவா போற்றி கொல்லார் மழுவாட் படையாய் போற்றி கொல்லுங்கூற் ருென்றை யுதைத்தாய் போற்றி கல்லாதார் காட்சிக் கரியாய் போற்றி கற்ரு
ரிடும்பை களைவாய் போற்றி வில்லால் வியனரண மெய்தாய் போற்றி வீரட்டங்
காதல் விமலா போற்றி.
(9üL)
இன்று நன்று நாளநன் றென்றுநின்ற இச்சையால் பொன்றுகின்ற வாழ்க்கையைப் போகவிட்டுப் போதுமின் மின்தயங்கு சோதியான் வெண்மதி விரிபுனல் கொன்றைதுன்று சென்னியான் கோடிகாவு சேர்மினே.
(சம்பந்தர்)
மற்றிவாழ்க்கை மெய்யெனும் மனத்தினைத் தவிர்ந்துநீர் பற்றிவாழ்மின் சேவடி பணிந்துவந் தெழுமினுே வெற்றிகொள் தசமுகன் விறல் கெட இருந்ததோர் குற்றமில் வரையினுன் கோடிகாவு சேர்மினே.
(சம்பந்தர்)
அகனமர்ந்த அன்பினராய் அறுபகைசெற் றைம்புலனும்
Y (அடக்கிஞானம் புகலுடையோர் தம்முள்ளப் புண்டரிகத் துள்ளிருக்கும்
(புராணர் கோயில் தகவுடைநீர் மணித்தலத்துச் சங்குளவர்க் கந்திகழச்
(சலசத்தீயுள் மிகவுடைய புன்குமலர்ப் பொரியட்ட மணஞ்செய்யும்
(மிழலையாமே. (சம்பந்தர்)

49
பாவ மேபுரிந்து அகலிடம் தன்னிற் பலப கர்ந்(து)அல
(மந்துஉயிர் வாழ்க்கைக்கு ஆவ மென்றுழந் தயர்ந்துவீ ழாதே அண்ணல் தன்திறம்
(அறிவினுற் கருதி மாவின் ஈருரி உடைபுனைந் தானை மணியை மைந்தனை
(வானவர்க் கமுதைத் தேவ தேவணைத் திருத்தினை நகருட் சிவக்கொழுந்தினைச்
(சென்றடை மனனே. (சுந்தரர்) பதியுஞ்சுற்றமும் பெற்றமக்களும் பண்டையரல்லர்
(பெண்டிரும் நிதியிலிம்மனை வாழும்வாழ்க்கையும் நினைப்பொழிமட
(நெஞ்சமே மதியஞ்சேர்சடைக் கங்கையானிடம் மகிழும்மல்லிகை
IGOF GMT Lussub புதியயூமலர்ந் தெல்லிநாறும் புறம்பயந்தொழப்
]போதுமே. (சுந்தரர்) ஆக்கும் அழிவும் அமைவும்நீ என்பன்நான் சொல்லுவார்
சொற்பொருளவைநீ யென் பன்நான் நாக்கும் செவியும் கண்ணும்நீ என்பன்நான் நலனே
இனிநா னுனைநன் குணர்ந்தேன் நோக்கும் நிதியம் பலவெத் தனையுங் கலத்திற்
புகப்பெய்து கொண்டுஏற நுந்தி ஆர்க்குங் கடலங் கரைமேல் மகோதை அணியார்
பொழிலஞ் சைக்களத் தப்பனே.
(சுந்தரர்) ஆற்ற கில்லேன் அடியேன் அரசே அவனிதலத்துஐம்
(புலனுயி சேற்றி லழுந்தாச் சிந்தை செய்து சிவனெம் பெருமா
(னென்றேத்தி

Page 35
50
ஊற்று மணற்போல் நெக்குநெக் குள்ளே உருகி ஒல
(மிட்டுப் போற்றி நிற்ப தென்று கொல்லோஎன் பொல்லா
மணியைப் புணர்ந்தே. (திருவாசகம்)
மைய லாய்இந்த மண்ணிடை வாழ்வெனும் ஆழியுளகப்
(பட்டுத் தைய லாரெனுஞ் சுழித்தலைப் பட்டுநான் தலைதடு
− (மாருமே பொய்யெ லாம்விடத் திருவருள் தந்துதன் பொன்னடி
(யிணைகாட்டி மெய்ய ஞய்வெளி காட்டிமுன் நின்றதோர் அற்புதம்
(விளம்பேனே. (திருவாசகம்)
மாய வாழ்க்கையை மெய்யென் றெண்ணி மதித்திடா வகை (நல்கினுன் வேய தோளுமை பங்கன் எங்கள் திருப்பெருந் துறை
(மேவிஞன் காயத் துள்அமு தூற ஊற நீகண்டு கொள்ளென்று
[35mr ut qui சேய மாமலர்ச் சேவடிக் கண்நம் சென்னி மன்னித்
(திகழுமே. (திருவாசகம்)
அண்ட சராசரம் அவன்றிரு மேனி அண்ட சராசரம் அவன்றிரு ஆடல் அண்ட சராசரம் அவனே யாகும் அண்ட சராசரம் முழுதும் அதிசயம்.
(நற்சிந்தன)

5 Ꮧ .
அஞ்செழுத் தாலே அனைத்தும் ஆயின அஞ்செழுத் தாலே அனைத்தும் உதித்தன அஞ்செழுத் தாலே அனைத்தும் நிலைத்தன அஞ்செழுத் ததிசயம் ஆரறி வாரே.
(நற்சிந்தனை) அன்பே கடவுள் அன்பே உலகம் அன்பே உயிர்கள் அன்பே அனைத்தும் அன்பே ஆவதும் அழிவதும் போலாம் அன்பின் அதிசயம் ஆரறி வாரே.
(நற்சிந்தனை) ஆதியும் அந்தமும் இல்லா ஒருவன் ஆதியும் அந்தமு மாய்வரு காரணம் ஆதிதன் அருள்கொண் டறிவதே யன்றி ஒதி யறிந்தவர் ஒருவரும் இலரே.
(நற்சிந்தனை)
ஞான பூசை
(மேலே சொல்லிய ஞானசாதனையில் அத்திபாரமாயுள்ளது ஞான பூசை. அதன் இயல்பு வரும் செய்யுளிற் கூறப்படுகின்றது. ஞானநூ றண்யோத லோது வித்த னற்பொருளைக்
கேட்பித்த ருன்கேட்ட னன்ற வீனமிலாப் பொருளதனைச் சிந்தித்த லைந்து மிறைவனடி
யடைவிக்கு மெழின்ஞான பூசை ஊனமிலாக் கன்மங்க டபஞ்செபங்க டியான மொன்றுக்
றுயருமிவை யூட்டுவது போகம் (கொன் ஆனமையான் மேலான ஞானத்தா லரனை யருச்சிப்பர்
வீடெய்த வறிந்தோ ரெல்லாம்.
(a。9.) (ஞான நூல்களைப் படித்தல் மற்றவர்களுக்குப் படிப்பித் தல் அவற்றிலுள்ள சிறந்த பொருள்பற்றி ஆசாரியரைக் கேட்டுச்

Page 36
52
சந்தேக நிவிர்த்தி செய்தல், தான் படிப்பிப்பவர்களேயும் கேட்கச் செய்து சந்தேக நிளிர்த்தி செய்தல். அப்பொருள்கள் பற்றி நன்கு சிந்தித்தல் ஆகிய ஐந்தும் இறைவன் திருவடியை படைவிக்கும் மேலான ஞான பூசையாகும்.
குற்றமில்லாத சிவபூசை அக்கினிாரியம் முதலிய கன்மயா கம், விரதானுட்டானங்கள் முதலிய தவயாகம், மந்திரங்கள் செபித்தல் ஆகிய செப யாகம் இறைவனே அகத்தில் தியானம் செய்தலாகிய தியான யாகம் ஆகியவை ஒன்றுக்கொன்று பேஸ்ான பயனேத் தரும். இவற்றுவடையும் பயன் போகம்.
ஆகையிஞலே முத்திகாமிகளாரூேர் இவற்றுக்கு மேலான தாகிய ஞான பூசையைச் செய்வர்.)
ான சாகனேகளின் வகையும் பயனும் கு
(ஞான சாதனையும் பயனும் சொல்லி ஞான சாதஃனயிங்
ஞான பூசை பற்றிச் சொல்லி, வரும் செய்யுளில் ஞான சாதனே
ளின் வகையும் பயனும் சொல்லப்படுகின்றது.
கேட்டிலுடன் சிந்தித்த றெளித னிட்டை கிளத்தலென
. வீரிரண்டாங் கிளக்கின் ஞானம் வீட்டையடைந் திடுவர் நிட்டை மேவி னுேர்கள் மேவாது
தப்பினவர் மேலாய பதங்கட் கீட்டியபுண் ணியநாத ராகி யின்ப மினிதுதுகர்ந் தரனருளா லிந்தப் பார்மேல் நாட்டியநற் குலத்தினில்வந் தவதரித்துக் குருவான் ஞான யடைந்தடைவர் நாதன் ருளே. Irill 60L - (P. s.)
கேட்டல் சிந்தித்தல் தெளிதல் திட்டைகூடுதல் என ஞான சாதனைகள் நான்காகும். நிட்டை கூடிஞேர் முத்தியடைவர். முத் தியடையாது தப்பினவர்கள் அவரவர் புண்ணியத்திற்கேற்ப மேலான புவனங்களில் கனநாதராகி இன்பம் அனுபவித்து பின்பு சிவபிரானது திருவருளால் இந்தப் பூமியில் நல்ல குவத்திற் பிறந்து ஞான குருவின் அருளால் ஞான நிட்டை கூடி முத்தியடைவர்

வீடு பேற்றுச் சாதனேக்கு ஒருபுறனடை
(மேலே கூறப்பெற்ற சரியை கிரியை யோகம் ஞானம் ஆகிய சாதனேகளைச் சாதித்து வீடடைதல் பொது விதி. அதற் குப் புறனடை ஒன்று வரும் செய்யுளிற் கூறப்படுகின்றது.) சிவஞானச் செயலுடையோர் கையிற் றனந் திலமளவே
செய்திடினு நிலமலேபோற் றிகழ்ந்து பவமாயக் கடவினழுந்தாதவகை யெடுத்துப் பரபோகந்
துய்ப்பித்துப் பாசத்தை யறுக்கத் தவமாரும் பிறப்பொன்றிற் சாரப் பண்ணிச் சரியைகிரி
யாயோகந் தன்னினுஞ்சா ராமே நவமTருந் தத்துவஞானத்தை நல்கி நாதனடிக்
கமலங்க ணணுகுவிக்குத் தானே.
(@,9,儿
(சிவஞானியர் திருக்கையில் எள்ளுப் போன்ற சிறுத்தானத் தைத் தானும் செய்யும் பேறு ஒருவர் பெறுவரானுல் அது நிலம் போடி அகன்றும் மலேபோல உயர்ந்தும் பெருகி, பிறவிக் கடலுள் விழுந்தழுந்தாதவாறு கரையேற்றி சாலோகம் முதலிய பதங்க எளில் இன்பம் அனுபவிக்கச் செய்து பாசக்கட்டை அறுக்குமாறு தவவிசேடம் பொருந்திய ஒரு பிறவியை யெடுக்கச் செய்து சரியை கிரியை யோகம் ஆகிய சாதனைகள் பொது விதிப்படி செய்யாது அருட் பிரகாசம் பொருந்திய தத்துவ ஞானத்தைக் கொடுத்து சிவபிரானுடைய செந்தாமரைத் திருவடிகளே யடையச் செய் யும்.)
முத்தியைக் கொடுப்பது சிவஞானமே
ரூானத்தால் வீடென்றே நான்மறைகள் புராண
நல்லவா கமஞ்சொல்ல வல்லவா மென்னும்
ஊனத்தா ரென்கடவ ரஞ்ஞா னத்தா
லுறுவதுதான் பந்தமுயர் மெஞ்ஞா னந்தான்
ஆணத்தா லதுபோவ தலர் கதிர்முன் னிருள்போ

Page 37
aj !
ஞானம் விடப்பந்த மறுமுத்தி யாகும் ஈலத்தார் ஞானங்க ளல்ல ஞான
மிறைவனடி ஞானமே ஞான மென்பர்,
லஞ்
'சி, சி.)
|எந்த நெறியில் நின்று சாதனே செய்தாலும் சிவஞானம் பெற்ற பின்பே முக்தி சித்திக்கும் என்று நான்கு சேபதங்கள் புரா னங்கள் ரிவாக புங்கள் எல்லாம் சொல்லவும் அங்ஙன :ன்று பிற எாறு பெறுதல் ஆகும் என்று சொல்லுர் அறிவினர் என்ன நிஃ) ாையை எப்துலாரோ? அஞ்ஞானத்தால் வருவது பந்தபோாகும். உயர்வாகிய சிவஞானம் உதிக்குமாகுல் சூரியனேக் கண்ட இருள் போல் அஞ்ஞானம் அகலும். அஞ்ஞானம் அகலப் பாச பந்தம் அறும். முத்தி சித்திக்கும். ஞானம் என்று அறிவீனர் கொள்ளும் ஞானங்கள் உண்மையான ஞானங்கள 'ல. திருவடி ஞான மொன்றே இறைவன் திருவடிஈய அடையச் செய்யும் உண்:ை யான ஞான மென்று பெரியோர் சொல்லுவர்.)
சிவன் முத்தர்
-
(சிவஞானப் பேறு பெற்றுேர் முத்தியடைவர் என்பது மேலே காணஇந்தது. அது இம்மையிலும் அடையப்படுவது. இம் மையில் அடையப்படுவது சீன் முரத்தி எனப்படும். பார் சிவன் மூத்தராவர், சீனன் முத்தர் இயல்பு என்ன கன்பது விரும் செய்யு விற் கூறப்படுகின்றது.)
மிக்கதொரு பக்குவத்தின் மிகுசத்தி நிடாத மேவுதலு
ஞானம்விளேந் தோர் குருவி னருளாற் புக்கனுட்டித் தேநிட்டை புரிந்து ளோர்கள் பூத லத்திற்
புகழ்சீவன் முத்த ராகித் தக்கபிசி யாப்பிரிய மின்றி போட்டிற் றபனியத்திற்
சமபுத்தி பண்ணிச்சங் கணுே டொக்கவுறைந் திவரவனே யவனரை விடாதே புடந்
சிவன்றுே ற்ற மொன்றுமே காண்பர்.  ைரூபாய்ச்
(கேட்டல் சிந்தித்தல் என்பனவாய் வரும் சாதனேகள் செய்து மலம் மிகவும் பரிபாகப்பட்டு அதிதீவிர சத்திநிபாதம்
Σλοις
 

55
பொருந்துதலும், அசனுல் சிவஞான முதிர்ச்சி பெற்றவர்கள் ஞான குருவின் அருளால் அவர் உபதேசித்தவாது அனுட்டித்து திஷ்டா பரராய்ச் சீவன் முத்தராகின்றனர். அன்னவர் இவ்வுலகிற் போற் றப் பெறும் சீவன் முத்த ராப் விருப்பு வேதுப்பின்றி ஓட்டையும் பொன்னேயும் ஒக்க மதித்து, சிவபிராளுேடு அத்து விதமாகி, இவர் சிவபிரானேயும் சிவபிரான் இவரை பு:ம் விடாது 6:கயில் ஒத்து நின்று எந்த நேரமும் சிவத்தையே பார்த்திருப்பர் - பரமே பார்த்திருப்பர். பதார்த்தங்கள் பாரார்.
சிவதரிசனம் பெறுதற்குரிய சாதன
("கேட்டலுடன் சிந்தித்த றெளித னிட்டை கிளத்தல்" எனப்படும் சாதனேகள் செய்து ". மிகு ரத்திநி) ஆம் மேவுதி லும் .சிவன் ருெற்றறொன்றுமே காண்பர்" என்பது போதுவா கக் கூறப் பெற்றது. அவ்வழியில் சிவதரிசனம் பெறுதற்கு விழை வோர் செய்தற்குரிய சாத&ன வருஞ் செய்யுளிற் சிறப்பாகக் கூறப் படுகின்றது.
அறியாமை யறிவகற்றி யறிவினுள்ளே அறிவுதஃன
யருளினு னறியாதே யறிந்து குறியாதே குறித்தந்தக் கரணங்க ளோடுங் கூடாதே
வாடாதே குழைந்திருப்பை யாயிற் பிறியாத சிவன்ருனே பிரிந்து தோன்றிப் பிரபஞ்ச
பேதமெலாந் தாணுய்த் தோன்றி நெறியாலே யிவையெல்லா மல்ல வாகி தின் றென் தோன்றிடுவ னிராதார ஞயே. 1றுந்
【命。g.)
(ாதையும் அறிய முடியாத (அறியாமை) கேலைாவத்தை யோடு ஆன்மபோதங் கொண்டு சுட்டி யறிகின்ற (அறிவு) சகலT வத்தை ஆகிய இரண்டையும் நீக்கி, அறிவு சொரூபியாகிய ஆள் மாவிடத்து பேரறிவு சொரூபியாகிய அந்தரான்மாவை ஆன்ம போதங் கொண்டு அறிய முற்படாது திருவருள் அறிவிக்க அறிந்து தான் மேற்கொள்ளப் போகும் தியான பாவனேயை ஆன்மபோ தங் கொண்டு நிச்சயிக்க முற்படாது திருவருள் காட்டக் கண்டு அவ்வழியில் நிச்சயித்து அந்தக்கரணங்களோடு கூடும் சகலாவத் தையையும் அனல எல்லாவற்றையும் விட்டு நிற்கின்ற சுேல்'லாவத்

Page 38
ታ፥፩
தையையும் மீண்டும் பொருந்தாது அருள் வழியில் நிச்சயித்தபடி அருள் வழியில் தியானம் செய்து நிட்டை கூடி நிட்டையில் நிவேத் திருப்பாயானுல், அத்துவிதமாய் நின்ற போதும் இதுவரையில் அறிய முடியாத சிவம் அறியக் கூடியவாறு காட்சி தந்தருளி. தணு கரன புவன போகங்களாய்ப் பல்வேறு வகைப்பட்டுள்ள பிரபஞ் சப் பொருள்கள் எல்லாம் தானுயிருப்பதைக் காட்டி தனது உண் மைத் தன்மையில் இவை எல்லாவற்றிலுமிருந்து வேறு யுமிருந்து, ஆன்மாக்களுக்கு வேண்டப்படும் ஆதாரம்போன்று எதுவும் வேண் டாது தானே தானுய் என்றும் நின்றருளும்.
ஓராதே ஒன்றையும் உற் றுன்னுதே நீழுந்திப் பாராதே பார்த்ததஃனப் பார்.
(திருவருட்பபன்)
பழக்கந் தவிரப் பழகுவதன்றி உழப்புவ தென்பெனே புந்தீபற ஒருபொரு ளாலேயென் றுந்தீபற.
(திருவுந்தியார்) ஆதாரத் தாலே நிராதாரத் தேசென்று மீதானத் தேசெல்க வுந்தீபற விமலற் கிடமதென் றுந்தீபற.
(திருவுந்தியார்)
எவ்வடிவுகளும் தானும் எழிற்பரை வடிவ தாகிக் கவ்விய மலத்தான் மாவைக் கருதியே ஒடுக்கி ஆக்கிப் பவ்வமீண் டகலப் பண்ணிப் பாரிப்பான் ஒருவ னென்றே செவ்வையே உயிருட் காண்டல் சிவரூபமாகு மன்றே.
(உண்மைநெறி விளக்கம்)
பரை உயிரில் யானெனதொன் றறநின்ற தடியாம் பார்ப் குஞ்சிவமாய்த் தோன்றலது முகமாம் பிடமெங் உரையிறந்த சுகமதுவே முடியாகும் என்றங் குண்மையினே மிகத்தெளிந்து பொருள்வேருென் றின்றித் தரைமுதலிற் போகாது நிலைமையினில் நில்லாது தற்
(பரையி

னின்றழுந்தா தற்புதத்தி னுகுந் தெரிவரிய பரமானந் தத்திற் சேர்தல் சிவனுண்மைத்
தெரிசனமாய்ச் செப்பு நூலே,
(உண்மைநெறி விளக்கம்
சிவதரிசனம் பெறுதற்கு மற்றுெரு சாதன
ஞான குரவனது திருக்கண்ணுேக்கத்திற்குட்பட்டுத் தீக்கை செய்யப் பெற்ற பக்குவ ஆன்மா குரு உபதேசப்படி மேலே கூறப்" பெற்ற சாதனே செய்துவரும்போது நிட்டை கூடிச் கீவன் முத்த ராய்ச் சிவதரிசனம் பெற்றிருக்கும். அந்த நிலை எய்தப் பெருதோ ருக்கு வருஞ் செய்யுளில் மற்ருெரு சாதனை கூறப்படுகின்றது.)
இந்நிலைதா னில்&லயே லெல்லா மீச னிடத்தினு
மீசனெல்லா விடத்தினு நின்ற அந்நிலையை யறிந்தந்தக் கரணங்க ளடக்கி அறிவதொரு
குறிகுருவி னருளிஞ லறிந்து மன்னுசிவன் றனையடைந்து நின்றவன்ற ஞலே மருவுபசு
கரணங்கள் சிவகரண மாகத் துன்னியசாக் கிரமதனிற் றுரியா தீதந் தோன்றமுயல் சிவாநுபவஞ் சுவாதுபூ திகமாம்.
(剑。剑.J
(மேலே கூறப் பெற்றவாறு நிட்டை கூடிச் சிவதரிசனம் பெற்றிருக்க முடியவில்லையானுல் உலகம் உயிர் ஆகிய எல்லாம் இறைவனுக்குள் வியாப்பிய பாயும் இறைவன் இவை எல்லாவற் ருேடும் அத்துவிதமாய்க் கலந்து வியாபகமாயும் நின்று எல்லாவற் றையும் தொழிற்படுத்தும் நிலயை (மேலே போந்தவற்ருலும் இரண்டாம் ஐந்த்ாம் சூத்திரங்களிற் காண வந்தவையாலும்) அறிந்து அந்தக்கரணங்களோடு அவற்றின் வழியிலுள்ள பொறி புலன்களேயுமடக்கி அறிய வேண்டிய ஒரு பாவனே முறையைக் குருவருளாலறிந்து அப்பாவனேச் சாதனையால் சிவபிரானே யடைந்து பசுகரணங்கள் சிவகரணங்களாகி, கருவிகரணங்களோடு கூடி நிற்கின்ற சாக்கிராவத்தையிலே, சுத்த துரியாதீத நிலே

Page 39
8
g
அடைய முயலுக. அம்முயற்சி சித்தியடையும் போது சிவாநூபவம் தனக்கு உரியதாய்விடும்.1
எப்பொருள்வந் துற்றிடினும் அப்பொருளைப் பார்த்திங்
கெய்தும்உயிர் தனக்கண்டிவ் வுயிர்க்கு மேலாம் ஒப்பில் அருள் கண்டுசிவத் துண்மை கண்டு
உற்றதெல்லாம் அதனலே பற்றி நோக்கித் தப்பினைச்செய் வதும்.அதுவே நினைப்பும்அது தானே தரும்உணர்வும் பொசிப்பும் அது தானே யாகும் எப்பொருளும் அசைவில்லை யெனஅந்தப் பொருளோ
டியைவதுவே சிவயோகம் எனும்இறைவன் மொழியே. (உண்மைநெறி விளக்கம்)
*கண்டத்தைக் கொண்டு கரும முடித்தவர் பிண்டத்தில் வாரா ரென் றுந்தீபற பிறப்பிறப் பில்லையென் றுந்தீபற. ஆதாரத் தாலே நிராதாரத் தேசென்று மீதானத் தேசெல்க வுந்தீபற விமலற் கிடமதென் றுந்தீபற.
சித்தமும் தீய கரணமும் சித்திலே ஒத்ததே ஒத்ததென் றுந்தீபற ஒவ்வாத தொவ்வாதென் றுந்தீபற. உள்ளும் புறம்பும் நினைப்பறின் நின்னுள்ளே மொள்ளR அமுதாமென் றுந்தீபற முளையாது பந்தமென் றுந்தீபற.”
(திருவுந்தியார்) 'அகர உயிர்போல் அறிவாகி எங்கும் நிகரில்இறை நிற்கும் நிறைந்து.
புன்செயலினேடும் புலன்செயல்போல் நின்செயலை மன்செயல தாக மதி.

கண்டபடி யேகண்டு காணுமை காணுமல் கொண்டபடி யேகொண் டிரு.”
(திருவருட்யன்) பார்பார் பரமனை எங்கும் பதையாதேசுகம் இதயத்தில் தங்கும் ஆர்தான் உணக்குநிகர் ஆவார் ஐயப்படாதேதெய்வம் உன்னிடம் உண்டு.
(நற்சிந்தனை)
ஒன்பதாம் சூத்திரம்
(எட்டாம் சூத்திரத்திற் கூறியவாறு மலம் பரிபாகப்பட்டு பக்குவம் முதிர்ந்தோர் குருவால் தீக்கை செய்யப்பெற்று குரு உபதேசப்படி சாதனை செய்து இறைவன் திருவடியை யடைந்து என்றும் நீங்காது திருவடிக்கீழ் இன்புற்றிருப்பர். அவ்வாறு இராது ஒரோவழி உலக வாழ்க்கையிற் கருத்துச் செல்லுமாயின், அதனல் அங்குமிங்கும் ஊசலாடிக் கொண்டிருப்போர், ஊசலாடுந் தன் மையை நீக்கித் திருவடிக்கீழ் அசைவற்றிருப்பதற்குரிய சாதனை இச் சூத்திரத்திற் கூறப்படுகின்றது.1 - ஊனக்கண் பாசம் உணராப் பதியை ஞானக் கண்ணினிற் சிந்தை நாடி உராத்துனைத் தேர்த்தெனப் பாசம் ஒருவத் தண்ணிழலாம் பதிவிதி எண்ணும்அஞ் செழுத்தே.
இ-ள்:- ஊனக்கண் - பசுஞானத்தாலும் பாசம் - பாசஞானத்தாலும் உணராப் பதியை - உணர முடியாத பதியை ஞானக்கண்ணினில் - சிவஞானமே கண்ணுகக் கொண்டு சிந்தை நாடி - சிந்தையில் ஆராய்ந்து பாசம் - நிலம் முதல் நாதம் ஈருகிய சடப்பொருள்கள் உராத்துனைத் தேர்த்தென - ஊராது விரைந்து செல்கின்ற தேர் போன்றன என்று (கண்டு)

Page 40
| || ||
(
ஒருவ - அவற்றை விட்டு நீங்க
பதி - பதிப்பொருளானது தண் நிழல் ஆம் - குளிர்ந்த நிழலாய் நின்று அருளும், அஞ்செழுத்து விதி எண்ணும் - (அந்த நிலைமை நிலைபெறும் பொருட்டு) திருவைத் தெழுத்து விதிப்படி ஒதப் பெறும்.
விளக்கம்:- ஊனக்கண் - குறைபாடுடைய கண் (பசுஞா னம்) உரா - ஜனராத, துரே - வினாவு. ஊராது விரைந்து செல்கின்ற தேர் - பேய்த்தேர் அல்லது கானல் நீர், அஞ்செழுத்து - திருவைந்தெழுத்து. தூலம் குக்குமம் காரணம் மகாகாரணம் மகாமனு எனத் திருவைந்தெழுத்து ஐந்து வகைப்ப டும். மகாமலு - பேசாத எழுத்து ஊமை எழுத்து நாயோட்டு மந்தி ரம் என்றும் சொல்லப்படும்.
இவற்றின் விபரம் திருவருட்பயன் உண்மை விளக்கம் முத லிய சித்தாந்த சாத்திரங்களிலும் திருமந்திரத்திலும் காணலாம். "சமயங்களின் தாய8னய சிவநெறி" என்னும் வெளியீட்டில் இவை எடுத்துக் காட்டப் பெற்றதோடு ஐந்தெழுத்து ஒரெழுத்தா வதும் விளக்கப் பெற்றுள்ளது. விதி எண்ணும் அஞ்செழுத்தே - அஞ்செழுத்தா லான்மாவை பரனுடைய பரிசும், (சி. சி.) என திருவைந்தெழுத்துத் தியானம் பற்றி வருகின்ற செய்யுளின் கீழ் வரும் விளக்கத்திற் காணலாம்.
பொழிப்பு:- பசு ஞானத்தாலும் பாச ஞானத்தாலும் உணர முடியாத பதியை சிவஞானக் கண்கொண்டு ஆராய்ந்து பார்க்கும் போது நிலம் முதல் நாதம் ஈறுகிய சடப்பொருள்கள் எல்லாம் பேய்த்தேர் போன்றவையாய்க் காணவரும். அப்போது பாச பந்தம் அறும், இறைவன் திருவடி நீழலில் அமர்தல் அமையும், அந்நிலேமை நிலேபெறும் பொருட்டுத் திருவைந்தெழுத்து விதிப் படி ஒதப்படும்.
பாசஞா னத்தாலும் பசுஞானத் தாலும் பார்ப்பரிய பரம்பரனப் பதிஞானத் தாலே
நேசமொடு முள்ளத்தே நாடிப் பாத நீழற்கீழ் நில்லாதே நீங்கிப் போதின்
 
 
 
 
 
 
 
 
 
 

ஆசைதரு முலகமெலா மலகைத்தே ராமென் றறிந்த கல
வந்நிலையே யாகும் பின்னும்
ஒசைதரு மஞ்செழுத்தை விதிப்படியுச் சரிக்க வுள்ளத்தே
புகுந்தளிப்ப னுரனமெலா மோட.
(சி. சி.)
(பாச ஞானத்தாலும் பசு ஞானத்தாலும் ஆராய்ந்து அறி தற்கரிய சிவபிராஃனச் சிவஞானத்தால் அன்போடு தனதறிவின் கண் ஆராய்ந்திருக்க சிவபிரானது திருவடி நீழலில் அமர்தலாகிய நிட்டை கை கூடும். பக்குவக் குறைவால் அந்நிலை குலேயுமானுல், நிலே குலேதற்கு ஏதுவாய் ஆசையை உண்டாக்கி நிற்கும் உலகப் பொருள் எல்லாம் பேய்த்தேராயுள்ளன என்று கண்டு அவற்றி லுள்ள ஆசை அற்று அவற்றை விட்டு நீங்க மீண்டும் நிட்டே கை கூடும். அப்போது திருவைந்தெழுத்தை விதிப்படி உச்சரிக்கா ஆசைக்கேதுவாகிய வாசகு மலங்களும் நீங்கு மாறு சிவபிரான் அறிவில் தோன்றி அருள் செய்து நிற்பர்.)
ஆட்டுவித்தால் ஆரொருவ ராடா தாரே அடக்குவித்
ஆரொருவ ரடங்கா தாரே (தால் ஒட்டுவித்தால் ஆரொருவ ரோடா தாரே புருகுவித்
ஆரொருவ ருருகா தாரே (தால் பாட்டுவித்தால் ஆரொருவர் பாடா தாரே பணிவித்
ஆரொருவர் பணியா தாரே (தால்
காட்டுவித்தால் ஆரொருவர் காணு தாரே காண்பாரார்
கண்ணுதலாய்க் காட்டாக் காலே.
(அப்பர்) மாற்றேன் எழுத்தஞ்சும் என்றன் நாவின் மறவேன்
திருவருள்கள் வஞ்ச நெஞ்சின் ஏற்றேன் பிறதெய்வம் எண்ணு நாயேன் எம்பெருமான்
திருவடியே எண்ணி னல்லால் மேற்ருன்நீ செய்வனகள் செய்யக் கண்டு வேதனேக்கே
யிடங்கொடுத்து நாளும் நாளும் ஆற்றேன் அடியேனே அஞ்சே லென்னுய் ஆவடுதண்
டுறையுறையும் அமர ரேறே.
(அப்பர்)

Page 41
齿盟
கருவாய்க் கிடந்துன் கழலே நி?னயுங் கருத்துடையேன் உருவாய்த் தெரிந்துன்றன் நாமம் பயின்றேன் உண்தரு
|ளால் திருவாய் பொலியச் சிவாய நமவென்று நீறணிந்தேன் தருவாய் சிவகதி நீபா திரிப்புலி பூர் அரனே.
(அப்பர்)
நானேயோ தவஞ்செய்தேன் சிவாயநம எனப்பெற்றேன் தேனுய்இன் அமுதமுமாய்த் இத்திக்குஞ் சிவபெருமான் தாணேவந் தெனதுள்ளம் புகுந்தடியேற் கருள் செய்தான் ஊனுரும் உயிர்வாழ்க்கை ஒறுத்தன்றே வெறுத்திடவே,
(திருவாசகம்)
எளிய வாதுசெய் வாரெங்கள் FET ஒளியை யுன்னி யுருகு மனத்தராய்த் தெளிய வோதிச் சிவாய நமவென்னுங் குளிகை யிட்டுப்பொன் னுக்குவன் சள் ட்டையே.
(திருமந்திரம்)
சிவசிவ என்கிலர் தீவிஃன யாளர் சிவசிவ என்றிடத் திவினே மாளுஞ் சிவசிவ என்றிடத் தேவரு மாவர் சிவசிவ என்னச் சிவகதி யாமே.
(திருமந்திரம்)
ஐந்தெழுத் துள்ளே யனத்தையுங் கண்டேன் சஞ்சலந் தீர்ந்தேன் தனிமைபெற் றேனே.
ஐந்தெழுத்தை நெஞ்சகத்தில் துஞ்சாமல் சொல்லுமவர் - துரியத்தில் வாழ்வாரெடி, (தங்கமே
சிவாய நமவென்று சிந்திக்கச் சொல்லியென் அபாய மறுத்தனர் அன்னே யென்னும் அபாய மறுத்தென்னே யாண்டுகொண் ட тгт Gurf உபாயத்தாற் காணுெணுர் அன்னே யென்னும்
 

சிவசிவ வென்றெந்த வேளையுஞ் சொல்லிச்
சீவன் சிவனென்று சித்தத்திற் கொள்ளும்.
(தொண்டர் நாங்களே) (நற்சிந்தனே)
பாசஞானம் பசுஞானம்
'பாச ஞானத்தாலும் பசு ஞானத்தாலும் பார்ப்பரிய பரம்பரஃனப் பதி ரோரித்தாலே .நாடி.." என்று மேலே குறிப் பிட்ட மூன்று திற தோனங்களுள் பாச ஞானம் பசு ஞானம் என் 'வை பற்றிய விளக்கம் வரும் செய்யுளிலும் பதி ஞானம் பற்றிய விளக்கம் அடுத்த செய்யுளிலும் தரப்படுகின்றன .)
வேதசாத் திர மிருதி புராணகலே ஞானம் விரும் பசபை
வைகரியா தித்திறங்கண் மேலா
நாதமுடி வானவெல்லாம் பாச ஞான நணுகியான்
மாவிவைகீழ் நாட லாலே
காதவிஞ ணுன்பிரம மென்னு ஞானங் கருதுபசு ஞானமிவ னுடலிற் கட்டுண்
டோதியுணர்ந் தொன்றென்ற வுணர்ந்திடலாற் பசுவா
சிவனியல்பினுணர்ந்திவன் காணே (மெ. என்ருச்
(n. B.)
(வேதி சாத்திர முதலியவாசு வருபவற்ருற் பெறும் ஞானம், அசபா மந்திரம் வைகரி முதலிய வாக்குக்கள் நிலம் முதன் நாதம் மீருகவுள்ள தத்துவங்கள் ஆகியவற்ருல் வரும் ஞானம் ஆகிய 'எல் லாவற்றிலும் ஆன்மா பிறப்பிறப்புக்குட்படுதலால் இவை பாச ஞானம் எனப்படும். ஆன்மா இத்தத் துவங்கள் முதலியவை அன்று என்று காண்பதனுல் "நான் பிரமம்" என்று செருக்குற்று நிற்கும் ஞானம் பசு ஞானம் எனப்படும். தூலம் சூக்குமம் முதலிய உடல் களிற் கட்டுண்டு நின்று வேத சாத்திர முதலியவற்றைப் படித்து ஒவ்வொன்ரு ய்ச் சுட்டி அறிதலால் ஆன்மா பசு எனப்படும். பதி ஆகிய சிவபிரான் ஆன்மாவைப் போல் அறிவிக்க அறிதல் சுட்டி அறிதல் இன்றி. வியாபகமாய் நின்று எல்லாவற்றையும் ஒன்றுள்த் திாணுய் அறியும். (பாசத்தால் பந்திக்கப் பட்டிருப்பதால் பக என் றும் ஆணவத்தால் அணுவாந்தன்மை வருவதால் அணு என்றும் ஆன்மா சொல்லப்படும்.)

Page 42
64
பதி ஞானம்
கண்டிடுங்கண் டஃனக்காணு கரணங் காணு கரணங்க
டமைக்காணு வுயிருங் காணு உண்டியம ருயிர்தானுந் தன்னைக் காணு துயிர்க்குயிரா
மொருவனேயுங் காணு தாகுங் கண்டசிவன் றனக்காட்டி யுயிருங் காட்டிக் கண்ணுகிக்
கரணங்கள் காணும ணிற்பன் கொண்டரஃன புளத்திற்கண் டடிகூடிற் பாசங் கூடாது கூடிடினுங் குறித்தடியி னிறுத்தே.
(հ. g.)
சாண்கின்ற கண் தன்ஃனக் காணுது, தன்ஃனத் தூண்டுகின்ற அந்தக்கரணங்கஃனயும் காணுது. அந்தக்கரணங்கள் தம்மைக் காணு, தம்மைத் தூண்டுகின்ற உயிரையுங் காணு. விடயங்களிற் பொருந்துகின்ற உயிரும் கண்ணேப் போலவும் அந்தக்கரணங்களைப் போலவும் தன்னேக் காணுது, உயிர்க்குயிராப் உள்நின்றியக்கும் இறைவனேயும் காணுது, காட்டிக் கண்டு நிற்கும் சிவபிரான் தன் இயல்பையும் உயிரின் இயல்பையும் அவ்வுயிருக்குக் காட்டி, இவற்றை உயிர் உணரச் செய்யும் கண்ணுகிய பதிஞானமாகி, கர னங்களால் அறியப்படாது நிற்கும். உயீரானது பதிஞானம் துனே யாப் ஆன்மாவுக்கு அந்தரான்மாவாப் இறைவன் நிற்பதைக் சுண்டு இறைவன் திருவடியை யடைந்து நின்ருல் பாசம் அகலும். ஒருகாற் பாசம் பின்பும் பொருந்துமாயின் குரு உணர்த்திய முறை யிற் சாதித்து (சிவோகம் பாவஃr செய்து) இறைவன் திருவடி நீழ லில் இருக்கப் பெறுக,
விவோகம் பாவன
(பதிஞானம் பெற்று இறைவன் நிருவடி நீழலயடைந்த ஆன்மா மீண்டும் பாசத்தைப் பொருந்துமாயின் அது திருவடி நீழ லில் நில பெற்றிருப்பதற்குச் சிவோசும் பாவனே உதவும். அச்சி வோகம் பாவனே செய்யும் முறையும் அதன் பயனும் வரும் செய்யு ஒளிற் கூறப்படுகின்றன.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

கண்டவிவை யல்லேணு னென்றகன்று காணுக் கழிபரமு
நாணல்லே னெனக்கருதிக் கசிந்த தொண்டினெடு முளத்தவன்று ரிைன்றகலப் பாலே சோ
பாவிக்கத் தோன்றுவன்வே றின்றி (மெனப் விண்டகலு மலங்களெலாங் கருடதியா னத்தால் விட
மதுபோல விமலதையு மடையும் (மொழிபு பண்டைமறை களுமதுநானுனே னென்று பாவிக்கச் சொல்லுவதிப் பாவகத்தைக் கானே.
(6). 5.)
(ஆன்ம அறிவாற் சுண்ட உடல் முதலிய எல்லாம் நானல்ல என்று அறிந்து அவற்றை விட்டு நீங்கி ஆன்ம அறிவாற் காண வ ராத பரம் பொருளும் நானல் R என்று சிந்தையிற் கொண்டு ஆன் மாவுக்கு அந்தரான்மாவாப் அத்துவிதமாகி இறைவன் நிற்கின்ற மையால், அன்பு கனிந்த சிந்தையோடு கூடிய அடிமைத் திறத்து டன் சிவோகம் பாவனே செய்யச் சிவபிரான் பிரிப்பின்றி நிற்கும் தன்மையைக் காணத் தந்தருளும், கருட தியானத்தால் விஷம் நீங்குவது போல மலங்கள் நீங்கும். அப்போது மலமற்று ஆன்ம சுத்தி உண்டாகும்.
"அது நான் ஆனேன்" என்று பாவனே செய்யுமாறு பழைய வேதாந்தம் சொல்லுவதும் இச்சிவோசும் பாலனேயையே என்று காண்க.
rrder

Page 43
tj
is C LTLT LLLLLLLLL LLM LL LLLLaLMETTS LLLLLLLLseeLLLLLLLLTLLLLLLL L LLLLHHL LLTTL
சிவயோக சுவாமிகள் அருளிய
விவோகம் பாவனே
SLSSLSS S SSS S LLS SLS SLS S S S S S S S S
தெய்வத்தை நம்பு முழுமனத்தோடு நம்பு, உலகில் உனக்கினிய தெனத் தோன்றும் எவற்றிலும் இனியதாக நின. அளிதவிட வேறில்ல என்று நின. இருக்கும் போதும் நிற்கும் போதும் நடக்கும் போதும் கிடக்கும் போதும் நினே. உனது நரம் பிலும் தசையிலும் இரத்தத்திலும் தெய்வமென்னும் நினேவே நிறைவதாக. நானில்லே கடவுளே இருக்கிருரென எண்ணு. கட
នានា ។
ம்பிடுதலே வாழ்வின் இலக்காக வைத்துக்கொள் காவன் எதை நினக்கிருணுே அன்ை அதுவாகிறன். கடவுளே உனது உள்ளத்தில் வைத்து வளர்ப்பாயாக. எல்லாம் அவருடைய செயலாகுக. ஈற்றில் எல்லாம் அவனுகவே காணப்படும்.
சிவபெருமான் அத்துவிதமாக இருக்கிருர், அடிமோன் அவரே எனத் தியானிக்கும் மகிமை எனக்குண்டு. ஒருவன் எப் படிப் பாவனே செய்கிருணுே அவன் அப்படி ஆகிறான்.
ஆகையால், "நான் அவனே' என்று தியானம் செப். அப்போது உன் செய்கைகள் அனேத்தும் அவன் செய்கையேயா கும். அவனத் தவிர வேறு பொருள் இல்லே. அவனே அனோத் தும். அப்படியான அவனே தன்னப் பல கோலங்களாக்கி விளே பாடுகிருன்.
அவனுக்குப் பிறப்பிறப்பில்லே. ஆதியந்தமில்லே. ஒரு மாறுதலுமில்லே. முழுதுமுண்மை.
ni E F ஓம் சாந்தி.
(நற்சிந்தஃr)
LL LLTLLLLLL TT aLLLLLLL0LLLLLLL LLL LLLLLLLLL L00LLL00LLaGLL TTLTTLLTTLT LL TTLTLLLLLL TTTTTLL LLL 0L
 
 

திருவைந்தெழுத்துத் தியானம்
சிவோசும் பாவனை நிலைபெறுதற்கு திருவைந்தெழுத்தை விதிப்படி ஒதித் தியான ஞ் செய்தல் சிறந்த உதவியாகும். விகுந் செய்யுளிலும் அதன் கீழ் வரும் விளக்கங்களிலும் இத்தொடர்ல்ே வேண்டப்படும் தெளிவு கான வருகின்றது.
அஞ்செழுத்தா லான்மாவை பர ġgi G37 - li u பரிசு மரணுருவ
மஞ்செழுத்தா லமைந்தமையு மறிந்திட் டஞ்செழுத்தா லங்ககர நியாசம் பண்ணி ஆன்மாவி
னஞ்செழுத்தா விதயத் தர்ச்சித் தஞ்செழுத்தாற் குண்டவியி னனஃ போம்பி ஆஃனவரிய
கோதண்ட மடைந்தருளின் வழிநின் றஞ்செழுத்தை விதிப்படியுச் சரிக்கமதி யருக்க னஃனய போற்ருேன்று மான்மாவிலரனே. (ரவம் (G,*.川
(சிவபிரான்உடையான் ஆன்மா உடைமை என்ற உண்பை யைத் திருவைந்தெழுத்தின் மூலம் அறிந்து சிவபிரானது திருவுரு வம் திருவைந்தெழு க்தால் அமைந்திருத்தஃபயும் அறிந்து திரு வைந்தெழுத்தோதி அங்கநியாசம் சுரநியாசங்கள் செய்து இவற் றைச் செய்த ஆன்மா தனது இதயத்தில் எழுந்தருளியிருக்கும் சிவ பிராஃனத் திருவைந்தெழுத் தோதி அருச்சிந்து திருவைந்தெழுத் தோதிக் குண்டலினிசத்தியை எழுப்புதலாகிய அக்கினி கரிமஞ் செய்து மேலே சென்று புருவத்தியையடைந்து அருள் வழியில் திரு வைந்தெழுத்தோதித் தியானித்திருக்க, கிரன காலத்தில் சத்திர சூரியர்களில் இராகுகேதுக்கள் தோன்றுதல் போல் ஆன்மாவில் சிவம் தோன்றியருளும். (அங்கதியாசம் சுரநியாசம் செய்தல்-சக வீகரனஞ் செய்தல் அல்லது சிவரூபமாக்குதல் , })
விளக்கம்:-
(1) ஆன்மாவை அரனுடைய பரிசு:-
ஊன நடன மொருபா லொருபாலா ஞானநடந் தாண்டுவே நாடு.
(திருவருட்பயன்)

Page 44
என்பதனுல் அறியலாம். (பரிசு - தன்மை)
(2) அரணுருவம் ஐந்தெழுத்தாலமைந்தமை:-
தூல பஞ்சாக்கர உருவம்
---
ஆடும் படிகேள்நல் லம்பலத்தான் ஐயனே
நாடுந் திருவடியிலேநகரம் - கூடும்
மகரம் உதரம் வளர்தோள் சிகரம் பகருமுகம் வாமுடிபப் பார்.
(உண்மை விளக்கம்} (திருமுடியிலே நரகம் திருவுந்தியில் மகரம் திருத்தோளில் சிகரம் திருமுகத்தில் வகரம் திருவடியில் யகரம்.)
சூக்கும பஞ்சாக்கர உருவம்
துேர்க்கும் துடிசிகரம் சிக்கனவா வீசுகரம் ஆர்க்கும் யகரம் அபயகரம் - பார்க்கிலிறைக்கு ஆங்கி நகரம் அடிக்கீழ் முயலகனூர் தங்கும் மகர மது தான்.
(உண்மை விணக்கம்) (உடுக்கை ஏந்திய திருக்கரத்தில் சிகரம் வீசிய திருக்கரத்தில்
வகரம் அபய திருக்கரத்தில் யகரம் அக்கினி ஏத்திய திருக்கரத்தில் நகரம் முயலகனே மிதித்த திருவடியில் மகரம்.)
திருநிருத்தத்தில் நிகழும் பஞ்சகிருத்தியம்
தோற்றம் துடியதனில் தோயும் திதிஅமைப்பில் சாற்றியிடும் அங்கியிலே சங்காரம் - ஊற்றமா ஊன்று மலர்ப்பதத்தில் உற்ற திரோதம்முத்தி நான்ற மலர்ப்பதத்தே நாடு.
(உண்மை விளக்கம்) உடுக்கையில் படைத்தல் அமைத்த திருக்கரத்தில் காத்தல் அக்கினியில் அழித்தல் ஊன்றிய திருவடியில் மறைத்தல் தூக்கிய நிருவடியில் அருளல்,
 

பஞ்சவிருத்திய திருநிருத்தப் பயன்
மாயை தனேஉதறி வல்வினையைச் சுட்டுமலம் சாய அமுக்கிஅருள் தானெடுத்து - நேயத்தால் ஆனந்த வாரிதியில் ஆன்மாவைத் தானழுத்தல் தாணெந்தை யார்பாதம் தான்.
'உண்மை விளக்கம்)
திரோதான சத்தியின் தொழிலால் மாயைப் பொருள்சு மயங்குதலொழிந்து, விருப்பு வெறுப்பின்மையால் இருவினே யொப்புண்டாகி, ஆணவமலவலி சுெட்டு, ஆன்மா சுத்தணுகவே அவ்வான்மாப் பேரின் பப் பெருவாழ்வு அடையுமாறு தாயாகிய அருட்சத்தி எங்கள் பரம பிதாவாகிய சிவபிரானுடன் சேர்க்கின்
T} = }
குறிப்பு:- திருவைந்தெழுத்து விளக்கம் ஐந்தெழுத்து ஒரே (ழத்தாகும் முறை ஆகியவை '"சமயங்களின் தாயனேய சிவநெறி" என்னும் நூனிஸ் கானலாம்.
விளக்கம்:- (1) அரன் உருவம் அஞ்செழுத்தால் அமைந்த ரனானிம், "ஆடும்படி கேள்" "சேர்க்கும் துடிசிகரம்" என்று தொடங்கும் செய்யுள்களில் மேலே கான வந்தது. இவை முறையே துவ சூக்குப் பஞ்சாக்கர வடிவங்களாகும்.
துரலபஞ்சாக்கரம் உலக வாழ்வில் வேட்கையுடையோருக்கு ரியது. சூக்குப பஞ்சாக்கரம் முத்திகாமிகளுக்குரியது. முந்தியது பிரவிருத்திமுறை. பிந்தியது நிவிர்த்தி முறை எனப்படும்.
குக்கும பஞ்சாக்கரத்தில் மகாரமாகிய பலத்தை நகாரமா கிய திரோதானசத்தி பசிபாகஞ் செய்ய மலனானி குன்றி இருவிணே யொப்புண்டாகவே பகாரமாகிய ஆன்மா வகாரமாகிய அருட் சத் நியின் வழியில் நிற்கின்றது. (இது சத்திநிபாதம் எனப்படும்.) இப் போது அருட்சத்தி ஆன்மாவைச் சிகாரமாகிய சித்துடன் சேர்க் கின்றது. இது திருவடிப்பேறு எனப்படும் சீவன் முத்திறிலேயாகும். தே#ாந்தத்தில் சீவன் முத்தர் பரமுத்தியடைவர்.
"தோற்றம் துடியதனில்" என்றபடி தனுசுரணம் முதலிய
வற்றின் படைப்பு துடியில் நிகழ்கின்றது. தோன்றிய இடத்தி லேயே ஒடுக்கமும் நிகழும். ஆகவே "சேர்க்கும் துடிசிகரம்" என்

Page 45
帝0
றமையால் வகாரம் முதலிய எல்லாம் இச்சிகாரத்தில் ஒடுங்குகின் றன என்பது தெளிவு.
இவ்வுண்மைகளே புள்ளவாறுணர்ந்து ஐந்தெழுத்தோதுவர் முத்திகாமிகள். இவ்வாறு ஒதுவதால் வரும் பயன் "மாயைதனே உதறி" என்று தொடங்கும் செய்யுளிற் காண வந்துள்ளது.
(2) ஒதும் முறை" சிவமுதலே யாமாறு சேருமேற் றீரும் பவமிதுநீ யோதும் படி,
(திருவருட்பயன்
சிவனருள் ஆவி திரோதமலம் ஐந்தும் அவனெழுத் தஞ்சின் அடைவாம் - இவனின்று நம்முதலா வோதிலருள் நாடாது நாடு மருள்
சிம்முதலா வோது நீ சென்று.
(உண்மை விளக்கம்) என்பவற்ருல் முத்திகாமிகள் சிகார பஞ்சாக்கரம் ஓதுவர் என்பது தெளிவு
சூக்கும பஞ்சாங்கரத்தின் பின காரணம் மகா காரணம் மகாமனு என்பவை வரும். இவை ஒவ்வொன்றும் அவரவர் பக்குவ நிலேமைகளுக்குத் தக்கவாறமையும்.
iussui 5 டிா
பத்தாம் சூத்திரம்
('பிறந்த நாள் மேலும் பிறக்கு நாள் போலுந் - துறந் தோர் துறப்போர் தொகை" என்றபடி ஆன்மாக்கள் எண்ணில்லா தன. பிறந்தோர் பிறப்போரி துறந்தோர் துறப்போர் தொகைக குளும் அவ்வாறே எண்ணில்லாதன. ஆகவே ஆன்மாக்களின் பக்குவ நிலைகளும் அளவில்லாதன என்பது பெறப்படுகின்றது. எனவே குருமூர்த்தியால் தீக்கை செய்யப் பெற்றுத் திருவடியை படைந்தி ஆன்மாக்களுள் சில ஆன்மாக்களுக்கு உலகப்பற்றுண்டாகித் திரு வடி நீழலில் நிற்கும் நில குலதலும் ஆகின்றது. நி3 குஃவதற்கேது வாகிய வாசஞமலம் நீங்கி மீண்டும் அந்நிலையைப் பெறுதற்கும்
 
 
 
 
 
 
 
 
 
 
 

7
அந்நிலமை நிெேபறுதற்ரும் செய்ய வேண்டிய சாதனே ஒன்ட தாம் சூத்திரத்திற் கூறப்பெற்றது. அந்நி: ഞ്ഥ எள்:ற்ஜூனும் நீங்கு மாறின்றி ஆன்மா பரிசுக் களுதல் என்வாறு நிகழ்கின்றது என்பது இப்பத் தாம் சூத்திரத்திற் கூறப்பெறுகின்றது.)
அவனே தானே ஆகிய அந்நெறி 5ரகன் ஆகி இறைபணி நிற்க மலமாயை தன்னுெடு வல்வினே இன்றே.
இ-கள்:- தான் அவனே ஆகிய அந்நெறி - (தான் அவன் என்று இரண்டாய்ப் பிரித்தறிந்து நின்ற பெத்தரீலேபிவிருத்து நீங்கி தான் என்பது வேழு ப்த் தோன் ருது) தான் அவனே பாப் (அத்து விதமாய் ) நிற்குள் அந்த நெறியில், ஏகன் ஆகி இறைபணி நிற்க - (தொடர்ந்து அந்து விதமாய்ப் பிரிப்பின்றி) அவனேயாய் நின்று செய்வதெல்லாம் அவன் செயலாகச் செய்து வரும் போது, 11ம் மாயை தன் ஜெடு வல்வினே இன்றே - ஆனலாமலம் மாயை கன்மம் ஆகியன (எவ்வித ாைசஃனயுமின்றி) ஒழிந்து போகும்.
விளக்கம்:- (1) தானே என்பதன் ஏகாரம் அசையாகக் கொள்ளப்படுகின்றது. அவ்வாறு கொள்ளும் போது ஆன்1 சுக்கி படிப்படி பாப் உயர்ந்து சென்று அதி உன்னத நிஃலயை அனடம் காட்சி, நனிடமிகத் தெளிவாகக் காணலாம். அநுபூதிவாயிலாப் மாத்திரமே இத்தெளிவைக் காணலாம். எம்மை ஆண்டருளுமாறு திருமேனி கொண்டருளிய எங்கள் குருநாதன் அருளிய நற்சித்தனே சுள் இத்தொடர்பிலும் எ க்கு உறுதி தந்து விளங்குகின்றன. "அவனேநா னென்று சொ ல்வித் தியாவஞ்செய்
வாய் தினமும்.'
'நான் அவனே என்று தியானம் செய்.' "அவனே தானென ஆறிபென் மனசே."
என்பன்வாய் அருளொளி பரப்பி விளங்கும் 1ரிைவாசகங் கள் அருள் நெறியில் நிற்பார்க்கு இத்தொடர்பிலும் உறுதி பயத் தல் காண்க.
(2) அவனே தானே ஆகிய நந்நெறி என்றது எட்டாம் ஒன் பதாம் குத்திரங்களில் உபதேசிக்கப் பெற்றவாறு சாதனே செய்து,

Page 46
72
நின்மலனுகி இறைவனுடன் அத்துவிதமாய் நின்ற நெறி என்று பொருள் கொள்ளப் பெற்றது. 'அந்நெறி' என்ற பண்டறிசுட்டு அவ்வாறு கொள்ளுதற்கு வழிவகுத்திருத்தல் காண்க. அச்சுட்டு, பெத்த நிலேலயக் குறிக்கு மென்பது பொருந்தாது.
இவனுலகி விதமகிதஞ் செய்த வெல்லா மிதமசித
மிவனுக்குச் செய்தார்பா விசையும் அவனிவனுய் நின்றமுறை யேக ஞகி அரண்பணியி
னின்றிடவு மகலுங் குற்றம் சிவனுமிவன் செய்தியெலா மென்செய்தி யென்றும்
கிவனுக்குச் செய்த தென்றும் (செய்ததெனக் பவம கல வுடனுகி நின்றுகொள்வன் பரிவாற் பாதகத்
செய்திடினும் பணியாக்கி விடுமே. (தைச்
(σ. 4. )
(திருமூலர் புறத்தோற்றத்தில் மூலன் என்னுமாறு நின் முற்போல்) அகத்தில் ஆன்மாவை இறைவன் கவனிகரித்துப் புறத் திற் குறிப்பிட்ட ஊர் பேர் முதலியவையுடைய ஆன்மாவே - ஒரு மனிதனே-என்னுமாறு நின்ற முறைமையால், சீவன் முத்தன் செய் யும் நல்விஃன தீவிஃனகளின் பயன்கள் எல்லாம் அச்சிவன்முத்த ணுக்கு நல்வினே தீவிஃன செய்தவர்கள் பால் சிவநல்வினே சிவதிவி மீனப் பயன்களாய் அடையும்.
வாசனுடலம் சிறிதளவேனும் சீவன் முத்தர்பால் இருக்குமேயானுல் அன்னவர் முன்பு கூறப்பெற்றவாறு இறைவ ணுேடு பிரிப்பின்றி நிற்கும் அத்துவித சாதனே செய்து, அதனுல் தாம் செய்வதெல்லாம் சிவச் செயலாகச் செய்துவர மலக் குற்றம் முழுதாய் நீங்கும்.
சிவபிரானும் பூரண சீவன் முத்தியடைந்த ஒருவருடைய செயல்களேத் தன் செயல்களாகவும் அவருக்குச் செய்தவற்றைத் த3 க்குச் செய்தவையாகவும் கொண்டு இச்சீவரது பிறவிநோய் நீங்குாேறு அத்துவிதமாய் நின்றருளும். (சண்டேசுர நாயஞர் செய்ததுபோல்) இச்சீவன் முத்தன் ஒருபாதகத்தைச் செய்தாலும் அப்பாதகத்தைச் சிவப்பணியாக்கிவிடும்.)
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

மலக்குற்றம் முழுதாய் நீங்குதல்
(மலக்குற்றம் முழுதாய் நீங்குதல் எவ்வாறு நிகழ்கின்ற தென்பது பின் வரும் இரு செய்யுள்களாற் கூறப்படுகின்றது.) யான்செய்தேன் பிறர்செய்தா ரென்னதியா னென்னு மிக்கோன ஞானவெரி யால்வெதுப்பி நிமிர்த்துத் தான்செவ்வே நின்றிடவத் தத்துவன்ரு னேரே
தண்யளித்து முன்னிற்கும் வினையொளித்திட் டோடும் நான்செய்தே னெனுமவர்க்குத் தானங் கின்றி
நண்ணுவிக்கும் போகத்தைப் பண்ணுவிக்கும் கன்மம் ஊன்செய்யா ஞானந்தா ணுதிப்பி னல்லா
லொருவருக்கும் யானெனதிங் கொழியா வன்றே.
(5。回。) நான் செப்தேன் பிறர் செய்தார் எனது நான் என்று அபி 19ானித்து நிற்கின்ற குறைவை ஞான எரியல் எரித்து நீக்கித் தான் அத்துவித நிஃபயிற் பொருத்திச் செவ்வையாய்நிற்கச் சிவபி ரான் நேரே தோன்றித் தானுக்கித் தாளுயே நிற்கும். அப்போது வினே விளைவு உண்டாகாது.
நான் செய்தேன் என்று அபிமானித்து நிற்போருடன் அவ் வாறு நில்லாது. அதனுல் விண்ணப்போகமும் மேல் வினே விளைவும் அவர்களுக்கு உண்டாகும்.
மலக்குற்றம் சிறிதுமில்லாத சிவஞானம் உதித்தாலன்றி நான் எனது என்னும் அகங்கார மமகாரங்கள் எவருக்கும் ஒழிவ தில்லே.)
இந்திரிய மெனப்பற்றி நின்றேயென் வசத்தி
னிசையாதே தன்வசத்தே யெனபீர்ப்ப திவற்றைத் தந்தவன்ற னுணைவழி நின்றிடலா லென்றுந்
தானறிந்திட் டிவற்றினெடுந்தனையுடையான் தாள்கள் வந்தனசெய் திவற்றின் வலி யருளினல் வாட்டி
வாட்டமின்றி யிருந்திடவும் வருஞ்செயல்களுண்டேன் முந்தனுடைச் செயலென்று முடித்தொழுக வினைகள்
மூளாவங் காளாகி மீளா வன்றே,
「宇 G.)

Page 47
74
(இந்திரியங்கள் என் வசமாய் நில்லாது என்னைப் பொருந்தி நின்று தம்வசமாக்கி, விடயங்களின் பால் என்னை இழுப்பதும் இவற்றை எனக்குத் தந்தருளிய இறைவன் திருவருள் வழியிலேயே என்று அறிந்து இவற்றையும் தன்னையும் உடையானகிய இறைவன் திருவடிகளை வணங்கி, இறைவன் திருவருளால் இந்திரியங்களின் வலியை நீக்கி, இறைவனை வழிபட்டு நிற்கவும் வினைகள் மேலும் உண்டாகுமானல், இவையெல்லாம் இறைவன் திருவிளையாட் டென்று திடமாகக் கொண்டு வாழ, அதன் மேல் வினைகள் உண் டாக மாட்டா. அதனல் இறைவன் திருவடிகளில் மீளா ஆளாய் அமர்தல் ஆகின்றது.1
ஞானத் தால்தொழு வார் சில ஞானிகள் ஞானத் தால்தொழு வேனுனை நானலேன் ஞானத் தால்தொழு வார்கள் தொழக்கண்டு ஞானத் தாய்உனை நானுந் தொழுவனே.
(e)
கங்கை யாடிலென் காவிரி யாடிலென் கொங்கு தண்கும ரித்துறை யாடிலென் ஓங்கு மாகடல் ஒதநீ ராடிலென் எங்கும் ஈசனெ ஞதவர்க் கில்லையே.
(Քյնւսft)
வேதம் ஒதிலென் வேள்விகள் செய்கிலென் நீதி நூல்பல நித்தல் பயிற்றிலென் ஒதி யங்கமோ ராறு முணரிலென் ஈச னையுள்கு வார்க்கன்றி யில்லையே.
(அப்பர்)
கான நாடு கலந்து திரியிலென் ஈன மின்றி யிருந்தவஞ் செய்யிலென் ஊனை யுண்டல் ஒழிந்துவான் நோக்கிலென் ஞான னென்பவர்க் கன்றிநன் கில்லையே.
(Քյնւմ)

நன்று நோற்கிலென் பட்டினி யாகிலென் குன்ற மேறி இருந்தவஞ் செய்யிலென் சென்று நீரிற் குளித்துத் திரியிலென் என்றும் ஈசனென் பார்க்கன்றி யில்லையே.
(-Գյն IM)
உடையாள் உன்தன் நடுவிருக்கும் உடையாள்
நடுவுள் நீயிருத்தி அடியேன் நடுவுள் இருவீரும் இருப்ப தானுல் அடியேன் உன் அடியார் நடுவுளிருக்கும் அருளைப் புரியாய்
பொன்னம் பலத்தெம் முடியா முதலே என்கருத்து முடியும்
வண்ணம் முன்நின்றே.
(திருவாசகம்)
முழுமுத லேஐம் புலனுக்கும் மூவர்க்கும் என்தனக்கும் வழிமுத லேநின் பழவடி யார்திரள் வான்குழுமிக் கெழுமுத லேயருள் தந்திருக்க இரங்குங் கொல்லோஎன் றழுமது வேயன்றி மற்றென்செய்கேன் பொன்னம்பத்
(தெம் மரசே, (திருவாசகம்)
இன்றெனக் கருளி இருள்கடிந்துள்ளத் தெழுகின்ற
(ஞாயிறே போன்று நின்றநின் தன்மை நினைப்பற நினைந்தேன் நீயலாற்
(பிறிதுமற் றின்மை சென்றுசென் றணுவாய்த் தேய்ந்து தேய்ந்தொன்ருந்
(திருப்பெருந் துறையுறை சிவனே ஒன்றும் நீயல்லை'அன்றியொன் றில்லை யாருன்னை
(அறியகிற் பாரே. (திருவாசகம்)

Page 48
76
தந்ததுன் தன்னைக் கொண்டதென் தன்னைச் சங்கரா
ஆர்கொலோ சதுரர் அந்தமொன் றில்லா ஆனந்தம் பெற்றேன் யாதுநீ
பெற்றதொன் றென்பால்
சிந்தையே கோயில் கொண்டளம் பெருமான் திருப்பெருந்
துறையுறை சிவனே எந்தையே ஈசா உடலிடங் கொண்டாய் யான்இதற்
கிலன்ஒர்கைம் மாறே.
(திருவாசகம்)
இந்திரிய வயம்மயங்கி இறப்பதற்கே காரணமாய் அந்தரமே திரிந்துபோய் அருநரகில் வீழ்வேற்குச் சிந்தைதனைத் தெளிவித்துச் சிவமாக்கி எனையாண்ட அந்தமிலா ஆனந்தம் அணிகொள்தில்லை கண்டேனே.
(திருவாசகம்)
தெய்வம் எல்லோர் சித்தத்தினு முண்டு உய்யும் மார்க்கம் உணர்ந்தோர்க் குண்டு பொய்யும் பொருமையும் புன்மையோர்க் குண்டு ஐயன் அடியிணை அன்பர்கட் குண்டே.
(நற்சிந்தனை)
எல்லா மவனேயா மெல்லா மவன்செயலே கல்லாய் மனிதா கவலையேன் - நில்லாயோ நீள நினையாய் நினைந்து நினைந்துருகி வாழ நினையாய் மதி.
(நற்சிந்தனை)
மதிக்கு மதியீ மதிசூடு வானை மதிக்கு முனக்கு மரணம் உதிக்குமோ மார்க்கண்ட லுக்காய் மறலிபட்ட பாட்டினைப் பார்க்கிலுனக் கென்ன பயம்.
(நற்சிந்தனை)

அவனேநா னென்று சொல்லித் தியானஞ்செய்
(வாய்தினமும் ஆசையெல் லாமொழியும் ஈசன் அருள் பொழியும்.
(நற்சிந்தனை)
பதினுெராம் சூத்திரம்
(ப Tசநீக்கம் பூர்த்தியாகி அவனே தாஞய் ஏகஞகி இன்புறும் ஆன்மா இறைவன் திருவருள் செய்யும் உபகாரத்தை யுணர்ந்து, இடையருத அன்பு பெருகிச் சிவபோகற் துய்த்துத் திருவடிக் கீழி ருக்குந் தன்மை இப்பதினுெராம் சூத்திரத்திற் கூறப்படுகின்றது. 1
காணும் கண்ணுக்குக் காட்டும் உளம்போற் காணஉள் ளத்தைக் கண்டு காட்டலின் அயரா அன்பின் அரன்கழல் செலுமே.
இ-ள்:- காணும் கண்ணுக்கு - (காட்டினல்) காணும் தன்மையு டைய கண்ணுக்கு, காட்டும் உளம்போல் - காட்டுகின்ற (காட்டிக் காண்கின்ற)ஆன் மாவைப் போல், காண உள்ளத்தைக் கண்டு காட்டலின் - ஆன்மா காணுமாறு (இறைவன்) ஆன்மாவுக்குக் காட்டிக் கண்டு (அத்துவிதமாய்) நிற் பதஞல், அயரா அன்பின் அரன்கழல் செலுமே. (ஆன் மா) அவ்வுபகாரத்தை யுணர்ந்து இடையருத அன்பு பெருகி இறைவன் திருவடிகளை அடைந்திருக்கும்.
விளக்கம்:- காணும் கண் - காண்கின்ற தன்மையுடைய சுண். அது ஆன்மாக் காட்டினலன்றித் தானாய்க் காண்பதில்லை. ஆகவே காட்டினல் காணும் தன்மையுடைய கண் எனப்பட்டது. காண உள்ளத்தைக் கண்டு காட்டலின் - காணுந்தன்மை யுடைய சுண் ஆன்மாக்காட்டினல் மாத்திரம் காண்பது போலவே, காணும் சக்தியுடைய ஆன்மா இறைவன் காட்டும் போதே எதை

Page 49
፳ Š
பும் காணும். காட்டுவது இறைவனது முதல் உபகாரம், காட்டுவ தோடு அத்துவிதாய்க் கண்டு நிற்பது அடுத்த உபகாரம். ஆகவே இறைவன் ஆன்மாவுக்குக் காட்டிக் கண்டு அத்துவிதமாய் நிற்பத குறுங், எனப்பட்டது.
பொழிப்பு:- காண்கின்ற தன்மை புடைய கண்ணுக்குக் காட் ரக் கண்டு நிற்கும் ஆன்மாவைப் போல், காணும் சக்தியுடைய ஆன்ாவுக்கு இறைவன் அத்துவிதாய் நின்று காட்டிக் காண் கின்ற கருனேயையுணர்ந்து, இடைபழுத அன்பு பெருகி (ஆன்மா) இறைவன் திருவடிகளே அடைந்திருக்கும்.
ܝܨܝܠܐ காயமொழிந் தாற்சுத்த ஞகி பான் மாக் காட்டக்கண்
டிடுந்தன்மை புடைய கண்ணுக் கேபுமுயிர் காட்டிக்கண் டிடுமா போல ஈசனுயிர்க் குக்காட்டிக் கண்டிடுவ னித்தை ஆயுமறி வுடையவனு யன்பு செய்ய அந்திலேமை
இந்நிலேயி னடைந்த முறை பாலே மாயமெலா நீங்கியரன் மலரடிக்கீ பூமிருப்பன் ம7ருத சிவானுடவ மருவிக் கொண்டே
(ն), հ.) காட்டக் காண்கின்ற தன்னாப்புடைய கண்ணுக்கு ஆன்மா காட்டிக் கண்டு நிற்கின்ற தன் ை போல, நானும் சக்தியுடைய ஆன்மாவுக்கு இன ரவன் காட்டிக் கண்டு நிற் ன். இந்திக் கரு ஃண43 ப உணர்ந்து அன்பு மேலிட்டு நிற்க முத்தி (சிவன்முத்தி) இம்  ைtயிலே எய்தப்பேற்ற ஆன் பா, டி டவ் நீங்கும் போது பயக்க மெல்லாம் நீங்கிப் ப கந்தணுகி, இறைவன் திருவடி நிழவில் இடை கருத சிவபோகம் துய்த்துக் கொண்டிருக்கும்.)
முன்னம் அவனுடைய நாமங் கேட்டாள் மூர்த்தி
யவனிருக்கும் வண்னங் கேட்டாள் பின்னே யவனுடைய ஆரூர் கேட்டாள் பெயர்த்தும்
அவனுக்கே பிச்சி பாருள் அன்னேயையும் அத்தனேயும் அன்றே நீத்தாள் அகன்முள்
அகலிடத்தார் ஆசா ரத்தைத் தன்னே மறந்தாள் தன்னுமங் கெட்டாள் தலேப்பட்டாள்
நங்கை தஃவன் நாளே.
(அப்பர்)
 
 
 
 
 

7.
ஆட்டுவித்தால் ஆரொருவ ராடா தாரே அடக்குவித்
ஆரொருவ ரடங்கா தாரே Iதால் ஒட்டுவித்தால் ஆரொருவ ரோடா தாரே புருகுவித்தால்
ஆரொருவ ருருகா தாரே பாட்டுவித்தால் ஆரொருவர் பாடா தாரே பணிவித்தால்
ஆரொருவர் பணியா தாரே காட்டுவித்தால் ஆரொருவர் காணு தாரே காண்டாரார்
கண்ணுதலாய்க் காட்டாக் கா.ே
)அப்பர்( ܩ.
ஊணுகி உயிராகியதனுள் நின்ற உணர்வாகிப்
பிறவனைத்தும் நீயாய் நின்றுப் நானேதும் அறியாமே யென்னுள் வந்து நல்லனவுந்
தீயனவுங் காட்டா நின்றும் தேனுருங் கொன்றையனே நின்றி பூராய் திருவாஃனக்
காவிலுறை சிவனே ஞானம் ஆணுயுன் பொற்பாதம் அடையப் பெற்ருல் அல்லகண்
கொண்டடியேன் என்செய் கேனே. (டங் (.ծլմilli)
அன்பினுல் அடியேன் ஆவியோ டாக்கை ஆனந்த
மாய்க்கசிந் துருக
என்பரம் அல்லா இன்னருள் தந்தாய் யானிதற் கிலனுெர் கைம்மாறு
முன்புமாய்ப் பின்பு முழுதுமாய்ப் பரந்த முத்தனே
முடிவிலா முதவே
தென்பெருந் துறைபாப் சிவபெரு மானே சீருடைச்
சிவபுரத் தரைசே,
(திருவாசகம்)
குறைவிலா நிறைவே கோதிலா அமுதே ஈறிலாக் கொழுஞ்சுடர்க் குன்றே
மறைபமாய் மறையின் பொருளுமாய் வந்தென் மனத்
மன்னிய மன்னே (திடை

Page 50
80
சிறைபெரு நீர்போல் சிந்தைவாய்ப் பாயுந் திருப்பெருந்
துறையுறை சிவனே இறைவனே நீயென் உடலிடங் கொண்டாய் இனியுன்னை
யென்னிரக் கேனே.
(திருவாசகம்) அன்பும் சிவமும் இரண்டென்பர் அறிவிலார் அன்பே சிவமாவதாரும் அறிகிலார் அன்பே சிவ மாவ தாரும் அறிந்தபின் அன்பே சிவமாய் அமர்ந்திருந் தாரே.
(திருமந்திரம்) என்பே விறகா இறைச்சி அறுத்திட்டுப் பொன்போற் கனலிற் பொரிய வறுப்பினும் அன்போ டுருகி அகங்குழை வார்க்கன்றி என்போல் மணியினை எய்தவொண் ணுதே.
(திருமந்திரம்) அன்பு சிவமெனல் அறிஞர்க் குண்டு பொன்புரை மேனி புனிதர்க் குண்டு தன்போற் பிறரெனல் தக்கோர்க் குண்டு விண்போல் விரிவு மேலோர்க் குண்டே.
(நற்சிந்தனை) “காணுங் கண்ணிற் கலந்து நிற்பது
கடவுள் கண்டீரோ ஆணும் பெண்ணும் அலியு மானது அதுநீர் அறியீரோ பாரும் விண்ணும் ஆகி நிற்பது
அதுநீர் பn ரீரோ சீரும் திருவும் ஆகி நிற்பது - அதுநீர் தெரியீரோ தாயுந் தந்தையும் ஆகி நிற்பது
தானு வறியீரோ நீயும் நானும் ஆகி நிற்பது

9
நினைந்து பாரீரோ காயும் கனியும் ஆகி நிற்பது
கண்டு களியீரோ மாயும் மனிதரை மாயாது வைக்கும்
மருந்தை யுண்ணிரோ பேயொடு காட்டி லாடும் பிரானைய
பேதமாய்ப் பாரீரோ.'
(நற்சிந்தனை)
பன்னிரண்டாம் சூத்திரம்
(இம்மையிலே சீவன் முத்தராய் விளங்கி உடல் நீங்கும் போது பரமுத்தி அடைவர் என்று பதினெராம் சூத்திரத்தில் எடுத் தோதப் பெற்ற சீவன் முத்தரின் தன்மை இம்மையில் எப்படியி ருக்கு மென்று இப்பன்னிரண்டாம் சூத்திரம் கூறுகின்றது.1
செம்மலர் நோன்தாள் சேரல் ஒட்டா அம்மலம் கழிஇ அன்பரொடு மரீஇ மாலற நேயம் மலிந்தவர் வேடமும் ஆலயம் தானும் அரன் எனத் தொழுமே.
இ-ள்:- செம்மலர் நோன் தாள் - அடியார்களைத் தாங்குகின்ற செந்தாமரைத் திருவடிகளை, சேரல் ஒட்டா - சேர்தலைத் தடுத்து நிற்கின்ற,
அம்மலம் கழிஇ - அத்தன்மையுடைய ஆணவம், கன்மம், மாயை ஆகிய மலங்களை (ஞான நீரால்) கழுவி, அன்பரொடு மரீஇ - (மெய்ஞ்ஞானிகளாகிய) சிவபக்தரோடு கூடிக் கலந்து, மால் அற, நேயம் மலிந்தவர் வேடமும் ஆலயந்தானும் - மயக் கம் அற்றுப் போவதால், சிவபக்தி மிகுந்தவர்களாகிய அவ்வடி யார்களின் சிவவேடத்தையும் திருக்கோயிலையும்,

Page 51
82
அரன் எனத் தொழும் - சிவபிரானே எனக்கண்டு தொழுது நிற் llu fi,
விளக்கம்:- நோன்மை என்பது வலி என்றும் பெருமை என் றும் பொருள் கொள்ளப்படுதலினலும், நோன்றல் என்பது பொறுத்தல் என்று பொருள் கொள்ளப்படுதலிஞலும் நோன் தாள் என்பது அடியார்களைத் தாங்குகின்ற திருவடி என்று பொருள் கொள்ளப்பட்டது. "w
பொழிப்பு:- சிவபிரானது செந்தாமரைத் திருவடியை அடைய விடாது தடுத்து நிற்கின்ற ஆணவம் கன்மம் மாயை ஆகிய மலங்களை ஞான நீராற் கழுவிய மெய்ஞ்ஞானியராகிய சீவன் முத்தர் மெய்ஞ்ஞானியராகிய சிவபக்தரோடு கூடிக் கலந்து மயக்கம் நீங்கிச் சிவபத்திமான்களாகிய அவர்களின் சிவவேடத் தையும் திருக்கோயிலையும் சிவபெருமானே எனக்கண்டு தொழுது f5 föl. Itt.
செங்கமலத் தாளிணைகள் சேர லொட்டாத் திரிம்லங்க ளறுத்தீச னேசரொடுஞ் செறிந்திட்
டங்கவர்தந்திருவேட மாலயங்களெல்லாம் அரனெனவே
தொழுதிறைஞ்சி யாடிப் பாடி
எங்குமியா மொருவருக்கு மெளியோ மல்லோ மியா
மேலாணுே மென்றிறுமாப் பெய்தித் (வர்க்கு
திங்கள்முடி யாரடியா ரடியோ மென்று திரிந்திடுவர் சிவஞானச் செய்தியுடை யோரே.
(சி. சி.)
(சிவபிரானுடைய திருவடிகளை யடையவொட்டாது தடுத்து நிற்கின்ற மும்மலங்களையும் களைந்து சிவபத்திமான்க ளோடு கூடிக் கலந்து அன்னவீருடைய சிவவேடத்தையும் திருக் கோயிலையும் பணிந்து வணங்கி ஆனந்தக் களிப்புற்று ஆடுதல் பாடு தல் செய்து, மலபந்தம் நீங்காதவர்களாய் உலகெங்குமுள்ள எவ ருக்கும் எளியரல்லோம் அன்னவர் யாவர்க்கும் மேலானுேம் என்று பேரின் பப் பெருமிதங் கொண்டு பிறைச் சந்திரனேச் சடாமுடியில னிந்த சிவபிரானுடைய அடியார்க்கடியராயுள்ளோம் நாம் என்று உலகில் உலாவுவர் திருவடி ஞானம் பெற்று இம்மையிலே முத்திய டைந்தவர்களாகிய சீவன் முத்தர்.1

{
சங்கநிதி பதுமநிதி யிரண்டுந் தந்து தரணியொடு
வானளத் தருவ ரேனும் மங்குவார் அவர் செல்வம் மதிப்போ மல்லோம் பாதே
கேகாந்த ரல்ல ராகில் (வர்க் அங்கமெலாங் குறைந்தழுகு தொழுநோ யராய் ஆவு
தின்றுழலும் புலைய ரேனுங் (ரித்துத் கங்கைவார் சடைக்கரந்தார்க் கன்ப ராகில் அவர்கண்
நாம் வணங்கும் கடவு ளாரே. [ւo ri (அப்பர்)
நாமார்க்குங் குடியல்லோம் நமன யஞ்சோம் நரகத்தி
லிடர்ப்படோம் நடலை யில்லோம் ஏமாப்போம் பிணியறியோம் பணிவோ மல்லோம் இன்
யெந்நாளுந் துன்ப மில்லை (பமே தாமார்க்குங் குடியல்லாத் தன்மை யான சங்கரன் நற்
சங்கவெண் குழையோர் காதிற் கோமாற்கே நாமென்றும் மீளா ஆளாய்க் கொய்ம்ம
வடியிணையே குறுகி னேமே. (லர்ச்சே (Jos) Lust)
பத்திமையும் பரிசுமிலாப் பசுபாசம் அறுத்தருளிப் பித்தனிவன் எனஎன்னை ஆக்குவித்துப் பேராமே சித்தமெனுந் திண்கயிற்ருல் திருப்பாதங் கட்டுவித்த வித்தகஞர் விளையாடல் விளங்குதில்லை கண்டேனே.
(திருவாசகம்)
கண்க ளிரண்டும் அவன்கழல் கண்டு களிப்பன ஆகாதே காரிகை யார்கள்தம் வாழ்விலென் வாழ்வு கடைப்
(படும் ஆகாதே மண்களில் வந்து பிறந்திடு மாறு மறந்திடும் ஆகாதே மாலறியாமலர்ப் பாதம் இரண்டும் வணங்குதும்
(ஆகாதே பண்களி கூர்தரு பாடலொ டாடல் பயின்றிடு மாகாதே

Page 52
&4
பாண்டிநன் னடுடை யான்படை யாட்சிகள் பாடுது
(மாகாதே விண்களி கூர்வதோர் வேதகம் வந்து வெளிப்படு
(மாகாதே மீன்வலை வீசிய கானவன் வந்து வெளிப்படு
(மாயிடினே.
(திருவாசகம்)
இரவுபகலற்ற ஏகாந்த வீட்டிலெனப் பரவிப் பணியவைத்த பரமன் குருவாகிச் சரண கமல மலர் தலைதனிலே வைத்தவனைக் குரவு மலர்குறையாக் குளிர்நல்லை கண்டேனே.
(நற்சிந்தனை)
ஒன்றென இரண்டென எண்ணவும் மாட்டேன் நன்றெனத் தீதென நண்ணவும் மாட்டேன் அன்றென இன்றென அறையவும் மாட்டேன் சென்றன வருவன தெரிந்திட மாட்டேன்.
(நற்சிந்தனை)

8 Ꮼ
6.
சிவமயம்
நிறைவுரை
தோற்றுவாய் தொடக்கம் இதுவரையிற் கூறிய எல்லாம் சித்தாந்த சைவ நெறியின் பாற்பட்டவையாய் அவற்றுக்குப் புத்துயிர் கொடுக்குமாறு தோன்றியருளிய எங்சள் குருநாதன் சிவ யோகசுவாமிகளின் திருவுள்ளப் பாங்குக்கு ஒத்தவையாயுமுள் ளன என்பது வேண்டிய வேண்டிய இடங்களிலெல்லாம் சைவ நூற் பாடல்களும் சுவாமிகள் அருளிய நற் சிந்தனைகளும் எடுத்துக்காட் டப் பெற்றமையால் தெளிவாக்கப் பெற்றுள்ளது. ஆகவே,
சுவாமிகள் காலத்தவராகிய நாமும் எமக்குப் பின் தோன்று வோரும் இம்மையிலும் மறுமையிலும் இன்புற்றிருத்தற்கு உதவும் வாழ்க்கை நெறி எது எது எவர் எவருக்குப் பொருந்துகின்றது என்று சைவ நூற் கருத்துக்களுடன் சுவாமிகளின் திருவாக்குகளிற் காணக்கிடக்கும் பொருள்களை ஆதாரமாகக் கொண்டு நாம் சிந் தித்தல் இவ்விடத்திற் பொருந்துவதாகத் தோன்றுகின்றது. சிந் 6 Gunr ub.
நாங்கள், நீராடுதல் தோய்த்துலர்ந்த உடைகளை அணிதல் முதலிய முறைகளால் எங்கள் உடல்களைச் சுத்தமாய் வைத்திருக்க முயல்கிருேம். அப்படியே நாங்கள் வசிக்கும் வீடு வாயில்களைத் துடைத்துக் கழுவுகிருேம். ஏன் இப்படிச் செய்கிருேம்? இன்பந் தரும் சுகவாழ்வுக்கு இவை வேண்டப்படுவன என்பது நாம் எல் லோரும் ஒப்புக்கொண்டுள்ள முடிபு. புறத்தில் அமையும் உடல் வாழ்வில் இன்பமடைதற்கு இவை வேண்டப்படுவது போலவே, அகத்தில் அமையும் உயிர் வாழ்வில் வேண்டப்படுவதும் உண்டு. அது 'ஒழுக்கம்" என்ற சொல்லாற் குறிப்பிடப்படுகின்றது. இன்ப வாழ்வு பெறுதற்கு ஒழுக்கம் இன்றியமையாதென்பது முன்பு காண வந்த சைவத்திருமுறைகள் சித்த Tந்த சாத்திரங்கள் முதலிய வற்றை அருளிய சைவ நாயன்மார்களுக்கும் பிற அருட் செல்வர் கள் எல்லோருக்கும் ஒத்த முடிபு. அந்த முடிபே எங்கள் குருநாதன் எமக்கு அருளிய முடிபுமாகும். ஆகவே இன்ப வாழ்வு வேண்டும் ஒவ்வொருவரும் அந்த முடிபுகளைச் சிரமேற் கொண்டு டொழுகு

Page 53
86
வர் என்பது சொல்லாமலேயமையும். எனவே, பொருத்தமான சைவ்நூற் கருத்துக்களுடன் எங்கள் குருநாதன் இதுபற்றி அருளிய திருவுள்ளக் குறிப்பையும் இப்போது காண்போம்.
ஒழுக்கம்
ஒழுக்கத்தின் முதற்படியாயுள்ளது பஞ்சமாபாதகங்களை நீக்குதல் . பஞ்சமாபாதகங்கள் என்பன கொலை பொய் களவு கள் காமம் என்னும் ஐந்துமாகும். இவற்றை நீக்காது இன்பவாழ்வு பெற முயலுதல் ஆகாசக் கோட்டை கட்டி அதனுள் இன்புற்று வாழ முயலுதலை ஒக்கும். இவற்றை நீக்கி ஒழுக்க நெறியை மேற் கொள்வோர் தாம் வேண்டிய எல்லாம் பெறுதற்கு உரிய அத்திபா ரம் இடுகின்றனர் என்பதனல் பஞ்சமாபாதகம் பற்றியது முதற் கண்வருகின்றது.
ஒழுக்கம் விழுப்பந் தரலா னெழுக்க முயிரினு மோம்பப் படும்.
(திருக்குறள்)
ஒழுக்கத்தி னெய்துவர் மேன்மை யிழுக்கத்தி னெய்துவ ரெய்தாப் பழி.
(திருக்குறள்) கொல்லிடு குத்தென்று கூறிய மாக்களை வல்லடிக் காரர் வலிக்கயிற்ருற் கட்டிச் செல்லிடு நில்லென்று தீவாய் நரகிடை நில்லிடும் என்று நிறுத்துவர் தாமே.
(திருமந்திரம்)
கொலையே களவுகட் காமம்பொய் கூறல் மலைவான பாதகமாம்அவை நீக்கித் தலையாஞ் சிவனடி சார்ந்தின்பஞ் சார்ந்தோர்க்கு இலையாம் இவைஞான னந்தத் திருத்தலே.
(திருமந்திரம்)
நெஞ்சகம் நின்று நினைக்கும் பொருளைப் பஞ்சமா பாதகர் பாரினில் அறியார்.
(நற்சிந்தனை)

87
'ஒழுக்கம் உயிரினுஞ் சிறந்தது. ஒழுக்கமுடையார் எல் லாமுடையார். ஒழுக்கங்களாவன கொல்லாமை கள் ளாமை பிறர்வசை யுரையாமை, பிறர் பொருள் கவ ராமை, தாழ்மை, பொய்யுரை யாமை முதலியனவாம்." (நற்சிந்தனை) ஒழுக்க முயிரினு மோம்பப் படுமென வழுத்திய பெரியவன் மறைமொழி தன்னை அழுத்த அழுத்த ஆனந்த ஈஸ்வரன் வழுத்தொணு மலரடி வாழ்த்திவாழ் வோமே.
(நற்சிந்தனை) கொல்லாமை பெரிதென்று சொல்லு சிவமே கூசாமல் எவர்முன்னுஞ் செல்லு சிவமே.
(நற்சிந்தனை)
காமமுத லாறுங் கடிந்து கடிகமழுஞ் சேமந் தருந்திவ்ய பாதத்தை - ஆமளவும் போற்றிப் புகழுவீர் பொன்னிலங்கை நன்னுட்டீர் மாற்றிப் பிறக்க மருந்து.
(நற்சிந்தனை) பயமுண்டோ பஞ்சப் பொறிவழிபோ கார்க்கு நயமுண்டோ நாட்டமுண்டோ நாடில்- அயலுண்டோ என்ன குறைதானுண் டெங்கெழிலென் ஞாயிறுதான் சொன்னே னதுவே சுகம்.
(நற்சிந்தனை)
ஒழுக்கம் விழுப்பந்தரும் தம்பிமாரே ஓம்என்று சிந்தைசெய்வீர் தம்பிமாரே அழுக்கா றவாவெகுளி தம்பிமாரே ஆன்மாவைப் பந்திக்கும் தம்பிமாரே வழுக்கி விழுந்தாலும் தம்பிமாரே மலரடியைச் சிந்தைசெய்வீர் தம்பிமாரே பழுத்த வடியருடன் தம்பிமாரே

Page 54
88
பாடிப் பணியவேண்டும் தம்பிமாரே மூப்புவந் தடையமுன்னே தம்பிமாரே முழுதும் அறியவேண்டுந் தம்பிமாரே நாப்பிளக்கப் பொய்யுரைத்துத் தம்பிமாரே நாட்டிற்பொருள் தேடவேண்டாம் தம்பிமாரே ஆதியந்தம் நமக்கில்லைத் தம்பிமாரே ஆன்மாவே நாங்கள்காணும் தம்பிமாரே ஒதி யுணரவேண்டுந் தம்பிமாரே உய்யவழி யதுகானுந் தம்பிமாரே சாதி சமயபேதம் தம்பிமாரே சங்கற்ப மென்றறிவீர் தம்பிமாரே வாழிவாழி சிவன்நாமம் தம்பிமாரே மனசாரச் சொல்லுங்கள் தம்பிமாரே வாழிசிவ னடியார்கள் தம்பிமாரே மன்னவனுஞ் செங்கோலுந் தம்பிமாரே.
(நற்சிந்தனை)
சமயதீக்கையும் சைவசாதனங்களும்
மேலே காணவந்த உண்மைகளை யுணர்ந்து அத்தன்மைய வாய ஒழுக்க முறைகளை மேற்கொள்ளுவோருக்கு ஒப்பற்ற துணை யாயுள்ளவை சமயதிக்கையும் அதனேடியைந்த விபூதி உருத்திராக் கம் பஞ்சாக்கரம் ஆகியவையும் என்பது சைவ நூல்களின் முடிபு. அம்முடிபுடன் இயைந்ததாய் எங்கள் குருநாதன் அருளியிருப்பதை யும் இங்கே பார்ப்போம்.
சமய தீக்கையைப் பெற்றுப்பின் சற்குரு அமையு மப்பா லவன்வழி செல்விரால் தமையுணருமறிவு தலைப்படு மிலங்கையான் சுவைதருஞ் சொல்லைக் கேட்பது தக்கதே.
(நற்சிந்தனை)

89
கங்காளன் பூசுங் கவசத் திருநீற்றை மங்காமற் பூசி மகிழ்வரே யாமா கில் தங்கா வினைகளுஞ் சாருஞ் சிவகதி சிங்கார மான திருவடி சேர்வரே.
(திருமந்திரம்)
அஞ்செழுத்தே ஆகமமும் அண்ணல் அருமறையும் அஞ்செழுத்தே ஆதிபுராணம் அனைத்தும்- அஞ்செழுத்ே ஆனந்த தாண்டவமும் யாவைக்கு மப்பாலாம் மோனந்த மாமுத்தி யும்.
(உண்மை விளக்கம்)
சொற்றுணை வேதியன் சோதி வானவன் பொற்றுணைத் திருந்தடி பொருந்தக் கைதொழக் கற்றுணைப் பூட்டியோர் கடலிற் பாய்ச்சினும் நற்றுணே யாவது நமச்சி வாயவே.
(அப்பர்) ஐயுந் தொடர்ந்து விழியுஞ் செருகி யறிவழிந்து மெய்யும் பொய்யாகி விடுகின்ற போதொன்று வேண்டு
(வன்யான் செய்யுந் திருவொற்றி யூருடை யீர்திரு நீறுமிட்டுக் கையுந் தொழப்பண்ணி யைந்தெழுத் தோதவுங் கற்
(பியுமே.
(பட்டினத்தடிகள்) திருநீறும் ஐந்தெழுத்தும் வேண்டும் - வேல்வேல் சீவனே சிவனென்று தெரிந்துகொள்ள வேண்டும் -
(வேல்வேல். (நற்சிந்தனை) அக்குமணிதனைக் கட்டடி ஆசைமூன்றும் நீக்கடி.
(நற்சிந்தனை)

Page 55
纷台
எவ்வுயிருந் தன்னுயிர்போல் எண்ணிக் கொண்டே இரந்திரந் தைந்தெழுத்தைப் பன்னிக் கொண்டே ஒளவியம்பொ முமைகோபம் அகற்றிக் கொண்டே ஆண்டவனக் கண்டுதெளிந் தாடுமயிலே (ஆடுமயிலே) ஆண்டவனைக் கண்டுதெளிந் தாடுமயிலே.
(நற்சிந்தனை)
மேல்வரும் சாதனைகள்
மேலே காண வந்த வாறு ஒழுக்கசீலராய்ச் சமய தீக்கை பெற்று விபூதி உருத்திராக்கம் பஞ்சாக்கரம்- ஆகிய சாதனங்களு டன் செய்யவேண்டிய சாதனைகள் எட்டாம் ஒன்பதாம் சூத்திரங் களிற் காணவந்தன. அவை சரியை கிரியை யோகம் ஞானம் என் l.I GOT .
அவை ஒவ்வொன்றும் சரியையிற் சரியை கிரியை யோகம் ஞானம், கிரியையிற் சரியை கிரியை யோகம் ஞானம், யோகத்திற் சரியை கிரியை யோகம் ஞானம், ஞானத்திற் சரியை கிரியை யோகம் ஞானம் என்பனவாய் விரிந்து பதினறு வகைப்படும். எவர் எவருக்கு எவ்வளவுக்கு மல வலிகுன்றி அருட்பேறு சித்திக் கின்றதோ அவ்வளவுக்கு இச்சாதனைப் படிகள் வந்து பொருந் ğ5I Lf0.
இவ்வாறு சாதனை செய்யும் பேறு பெறுவோர், அற வாழ்க்கை, திருவருட் சிறப்புணர்வு, யாக்கை முதலியவை நிலை யாமையுணர்வு, இறைவனுக்கு ஒப்புக்கொடுத்தல், அகவழிபாடு, புறவழிபாடு,அன்பு, குருபக்தி,ஒற்றுமை ஆகிய தலைப்புக்களின் கீழ் வரும் பொருள்களைச் சிந்தையிற் பதித்துத் தங்கள் உலக வாழ்க் கையை அவற்றுக்குத் தக்கவாறமைத்து அருள்வழியில் நின்றல் அன்னவரின் வாழ்க்கை மேலான இன்பமயமாதல் திண்ணம் என் பது சொல்லாமலே அமையும்.

9
அறவாழ்க்கை
அறத்தினூஉங் காக்கமு மில்லை யதனை மறத்தலினூங்கில்லை கேடு.
(திருக்குறள்)
திறந்தரு முத்தியுஞ் செல்வமும் வேண்டின் மறந்தும் அறநெறி யேஆற்றல் வேண்டும் சிறந்தநீர் ஞாலஞ் செய்தொழில் யாவையும் அறைந்திடில் வேந்தனுக் காறிலொன் ருமே.
(திருமந்திரம்)
கசடு தீர்த்தறங் கற்றிட வேண்டுமே
கல்வியாற்பயன் பெற்றிட வேண்டுமே அசடர் நட்பை அகற்றிட வேண்டுமே
அந்தி சந்தி அடிதொழ வேண்டுமே நிசசொ ரூபம றிந்திட வேண்டுமே
நீங்கா தென்று மிருந்திட வேண்டும்ே அசலு னக்கில்லை யென்ற குருபர
ஆண்மை விஞ்சிடும் அற்புதச் சிங்கமே.
(நற்சிந்தனை)
வேத சாத்திரங் கற்றிடல் இன்பமே வீணர் நட்பினை விட்டிடல் இன்பமே மாதம் மும்மழை பெய்திடல் இன்பமே மாத ராசையை நீக்கிடல் இன்பமே நாதன் நாமத்தை ஒதுதல் இன்பமே நாம்சி வமென நாடுதல் இன்பமே பேதம் யாவையும் நீங்கு பெரியவ பெருமை சேர்குரு புங்கவ சிங்கமே.
(நற்சிந்தனை)

Page 56
92
எல்லா வுலகமு மானுய் நீயே யேகம்பம் மேவி யிருந்தாய் நீயே -ر
நல்லாரை நன்மை யறிவாய் நீயே ஞானச்
சுடர்விளக்காய் நின்ருய் நீயே பொல்லா வினைக ளறுப்பாய் நீயே புகழ்ச்சே வடியென் மேல் வைத்தாய் நீயே செல்வாய செல்வந் தருவாய் நீயே திருவையா றகலாத செம்பொற் சோதீ.
(அப்பர்)
அப்பன்நீ அம்மைநீ ஐய னும்நீ அன்புடைய மாமனும்
மாமியும்நீ ஒப்புடைய மாதரும் ஒண்பொருளும்நீ ஒருகுலமுஞ்
சுற்றமும் ஒரூ ரும்நீ துய்ப்பனவும் உய்ப்பனவும் தோற்று வாய்நீ
துணையாயென் நெஞ்சந் துறப்பிப் பாய்நீ இப்பொன்நீ இம்மணிநீ இம்முத் தும்நீ யிறைவன்நீ
ஏறுார்ந்த செல்வன் நீயே (g list)
நின்ஞவார் பிறரன்றி நீயே யானய் நினைப்பார்கள்
மனத்துக்கோர் வித்து மானுய் மன்னுணுய் மன்னவர்க்கோ ரமுத மானுய் மறைநான்கு
மாஞய்ஆ றங்க மானுய் பொன்னணுய் மணியானப் போக மானுய் பூமிமேல்
புகழ்தக்க பொருளே யுன்னே என்னணுய் என்னணுய் என்னி னல்லால் ஏழையேன்
என்சொல்லி யேத்து கேனே.
( οι άuή)

அந்தம் ஆதியும் இல்லான் அடியரை எந்த நேரமும் நீங்கா இறையவன் கந்த மாமலர்ப் பாதத்தைக் கைதொழ வந்த வல்வினை மாளுஞ் சிவாயவே.
(நற்சிந்தனை) உலகம் யாவையுந் தந்திடு முத்தமன் அலகி லாவிளை யாட்டயர் தத்துவன் பலக லையெலாம் பாலிக்கும் வித்தகன் சிலக ணமேனும் பிரியான் சிவாயவே.
(நற்சிந்தனை
அப்பனும் அம்மையும் நீயே அரிய சகோதரர் நீயே ஒப்பில் மனைவியும் நீயே ஒதரும் மைந்தரும் நீயே செப்பில் அரசரும் நீயே தேவாதி தேவரும் நீயே இப்புவி யெல்லாம் நீயே என்னை யாண்டதும் நீயே.
(நற்சிந்தனை)
சூரியன் வருவது யாராலே தூமதி தவழ்வது யாராலே விண்மீன் மிளிர்வது யாராலே வெய்யி லெறிப்பது
யாராலே கண்ணிப்ண காண்பது யாராலே காற்று மடிப்பது
யாராலே தண்ணிர் பெருகுதல் யாராலே தக்கோர் புகழ்வது
யாராலே பூமி சுழல்வது யாராலே பூக்கள் மலர்வது யாராலே கால்க ணடப்பது யாராலே கைக ளெடுப்பது யாராலே எண்ணிப் பார்நீ யறிவாயே எல்லாஞ் சிவன்செயல்
குறியாயே ܫ சொல்லு சுதந்திரம் பெறுவாயே சுவாமி வாக்கிது
தெரிவாயே
(நற்சிந்தனை)

Page 57
S 4
காணுங் கண்ணிற் கலந்து நிற்பது
கடவுள் கண்டீரோ ஆணும் பெண்ணும் அலியு மானது
அதுநீர் குறியீரோ பாரும் விண்ணும் ஆகி நிற்பது
அதுநீர் பாரீரோ சீரும் திருவும் ஆகி நிற்பது
அதுநீர் தெரியீரோ தாயும் தந்தையும்-ஆகி நிற்பது
தானு வறியீரோ நீயும் நானும் ஆகி நிற்பது
நினைந்து பாரீரோ.
(நற்சிந்தனை)
அனைவருக்குந் தெய்வம் ஒன்றே-அதை அறிந்துலகில் வாழ்வது தொண்டே
முனைந்துநிற்கும் காமக்குரோதம் போக்கி-பின்பு மூவரையும் தேவரையும் ஏவலாக்கு
நெஞ்சுருகும் அடியார்கள் கூட்டம்-இந்த நீணிலத்தில் நன்மையெல்லாம் கூட்டும்
வினைப்பகையை வெல்வதற்கு மார்க்கம்-குரு வேந்தன் தந்ததிரு வாக்கு
தினத்தனைப் போதும்மறவாமல்-சிவத் தியானத்தில் தினந்தினம் மூழ்கு.
மனத்துயரை நீக்கநல்ல மருந்து-குரு வாக்கியமொரு பொல்லாப்பு மில்லை.
(நற்சிந்தனை

95
யாக்கை முதலியவை நிலையாமை உணர்வு
ஒன்ற லாவுயிர் வாழ்க்கையை நினைந்திட்டு)
உடல்த ளர்ந்தரு மாநிதியியற்றி என்றும் வாழலா மெமக்கெனப் பேசும்
இதுவும் பொய்யென வேநினை யுளமே குன்று லாவிய புயமுடை யானைக்
கூத்தனைக்குலா விக்குவலயத்தோர் சென்றெலாம்பயில் திருத்தனை நகருட்
சிவக்கொ முந்தினைச் சென்றடை மனனே.
(சுந்தரர்)
வேந்த ராய்உல காண்(டு) அறம் புரிந்து
வீற்றிருந்தஇவ் வுடல்இது தன்ணைத் தேய்ந்(து)இறந்துவெந் துயருழந் திடுமிப்
பொக்க வாழ்வினை விட்டிடு நெஞ்சே பாந்தள் அங்கையி லா ட்டுகந் தானைப்
பரம னைக்கடற் சூர்தடிந் திட்ட சேந்தர் தாதையைத் திருத்தினை நகருட்
சிவக்கொழுந்தி னைச் சென்றடை மனனே.
(சுந்தரர்)
பரிந்த சுற்றமும் மற்றுவன் துணையும்
பலருங் கண்டு)அழு தெழவுயி ருடலைப் பிரிந்து போமிது நிச்சயம் அறிந்தாற்
பேதை வாழ்வெனும் பிணக்கினைத் தவிர்ந்து கருந்த டங்கண்ணி பங்கனை உயிரைக்
கால காலனைக் கடவுளை விரும்பிச் செருந்தி பொன்மலர் திருத்தினை நகருட்
சிவக்கொழுந்தினைச் சென்றடை மனனே.
(சுந்தரர்)

Page 58
96
புன்னுனிமேல் நீர்போல் நிலையாத பொய்யுடலை என்னினிநீர் எண்ணி வருந்துவீர்-மண்ணுலகில் ஆறுமுகன் பாதத்தை யன்பா யிலங்கையீர் கூறு மதுவே குணம்.
- (நற்சிந்தனை) தாமரையில் நீர்போற் சகத்திலே தம்பிநீ சேமமுடன் வாழ்வாய் சிவனை நினை-ஆமளவும் நன்மையையே செய்வாய்நீ நல்லோரைப் பேணிநட தன்னை யறியலாந் தான்.
(நற்சிந்தனை) தந்தைதாய் மற்றுந் தமர்தார மெல்லாருஞ் சந்தையிற் கூட்டமிது தப்பாது-எந்தைபால் எப்போது மன்புவை எல்லா மவன்செயலே இப்போ சமய மிணங்கு.
(நற்சிந்தனை)
இறைவனுக்கு ஒப்புக்கொடுத்தல்
அந்த ஞளனுன் அடைக்கலம் புகுத
அவனைக் காப்பது காரணமாக வந்த காலந்தன் ஆருயிரதனை
வவ்வினய்க்(கு) உன்தன் வண்மைகண் டடியேன் எந்தை நீஎன நமன்தமர் நலியில்
இவன்மற் றென்னடி யானென விலக்குஞ் சிந்தையால் வன்துன் திருவடி யடைந்தேன்
செழும் பொழில்திருப் புன்கூ ருளானே.
(சுந்தரர்)
அன்றே என்தன் ஆவியும் உடலும்
உடமை எல்லாமுங் குன்றே அனையாய் என்னை ஆட் கொண்ட
போதே கொண்டிலையோ இன்றேர் இடையூ றெனக்குண்டோ எண்தோள்

முக்கண் எம்மானே நன்றே செய்வாய் பிழைசெய்வாய் நானே
இதற்கு நாயகமே.
(திருவாசகம்)
உடல்பொருள் ஆவியுன் னடைக்கல மென்றே திடமுட னெப்புக் கொடுப்பார் தமக்கு நடராஜ வள்ளல் நளினபொற் பதத்தை உடனே கொடுக்கு முண்மை யிதுவே.
(நற்சிந்தனை) ஒடவும் வேண்டா உலரவும் வேண்டா பாடவும் வேண்டா பணியவும் வேண்டா தேடவும் வேண்டா சிந்திக்க வேண்டா ஆடகப் பொன்னடி சூடிய காலை
(நற்சிந்தனை)
அகவழிபாடு புறவழிபாடு
காயமே கோயி லாகக் கடிமணம் அடிமை யாக வாய்மையே தூய்மை யாக மனமணி இலிங்க மாக நேயமே நெய்யும் பாலா நிறையநீரமைய ஆட்டிப் பூசனை ஈச ஞர்க்குப் போற்றவிக் காட்டி னுேமே.
(அப்பர்)
இருநிலனுய்த் தீயாகி நீரு மாகி இயமான னயெறியுங்
காற்று மாகி அருநிலைய திங்களாய் ஞாயி ருகி ஆகாச மாயட்ட
மூர்த்தி யாகிப் பெருநலமுங் குற்றமும் பெண்ணும் ஆணும் பிறருருவுந் தம்முருவுந் தாமே யாகி
நெருநலையாய் இன்முகி நாளை யாகி நிமிர்புன்
சடையடிகள் நின்ற வாறே. (அப்பர்)

Page 59
9 8
கருத்தி லிருக்கும் கதிர்காமத் தோன வருத்தமுற் றேன்தேடு கின்ருய்-திருத்தியுன் சித்தமிசை நித்தம் திகழொளியைக் கண்டுருகி முத்தனென வாழ முயல்.
(நற்சிந்தனை)
ஆழித் துரும்பெனவே அங்குமிங்கு மாயலைந்து பாரில் தவியாதே-சின்னத்தங்கம் பார்த்து மகிழ்ந்திடடி.
. . . . (நற்சிந்தனை)
அங்குமிங்கு மெங்குமந்த ஆண்டவன் தானிருக்க அங்குமிங்கு மலையாதே ஆடிப்பாடி மகிழ்ந்திடடி.
(நற்சிந்தனை)
அன்பு
அன்போ டியைந்த வழக்கென்ப வாருயிர்க் கென்போ டியைந்த தொடர்பு.
(திருக்குறள்)
அன்பின் வழிய துயிர்நிலை யஃதிலார்க் கென்புதோல் போர்த்த வுடம்பு.
(திருக்குறள்)
அன்பும் சிவமும் இரண்டென்பர் அறிவிலார் அன்பே சிவமாவதாரும் அறிகிலார் அன்பே சிவமாவதாரும் அறிந்தபின் அன்பே சிவமாய் அமர்ந்திருந் தாரே.
(திருமந்திரம்

99
என்பே விறகா இறைச்சி அறுத்திட்டுப் பொன்போற் கனலிற் பொரிய வறுப்பினும் அன்போ டுருகி அகங்குழை வார்க்கன்றி என்போல் மணியினை எய்தவொண் ணுதே.
- (திருமந்திரம்)
ஆர்வம் உடையவர் காண்பர் அரன்தன்னை ஈரம் உடையவர் காண்பார் இணையடி பாரம் உடையவர் காண்பார் பவந்தன்னைக் கோர நெருக்கொடு கோங்குபுக் காரே.
(திருமந்திரம்)
அன்பேசிவம் அறிந்திடடா அதுவே நாமெனத் தெரிந்திடடா என்புருகப் பாடிடடா எல்லாம்சிவ ரூபமடா.
(நற்சிந்தனை)
குருபக்தி
சுத்த சிவன்குரு வாய்வந்து தூய்மைசெய்து அத்தனை நல்கருள் காணு அதிமூடர் பொய்த்தகு கண்ணுன் நமரேன்பர் புண்ணியர் அத்தன் இவனென் றடிபணி வாரே.
(திருமந்திரம்)
குருபக்தி யேபெரும் பேறு கொண்டாடிக் கொண்டாடி ஆறு.
(நற்சிந்தனை)
தரும நிலையிலே ஏறு சங்கர சிவனேயென்று கூறு.
(நற்சிந்தனை)

Page 60
I 00
ஒற்றுமை
சிங்களவர் தமிழரைக் காண மாட்டேன் சின்னம் ஒன்றும் போட மாட்டேன் தங்கப் பொம்மை போல இருப்பேன் சாம்ப சிவசிவ என்று சொல்வேன்.
ஒற்றுமை யிருந்த ஊரிடை ஓங்குக மற்றும் நற்குணம் முற்றும் ஆகுக கற்றும் கேட்டும் கழலடி போற்றுக நற்றவம் இந்த நாட்டில் விளங்குக.
(நற்சிதனை)
முறைப்படி சாதனை செய்ய முடியாதவர்கள் செய்யத்த க்
மேலேபோந்தவை சைவ நூல்களிற் கூறியவாறு சரியை யாதி சாதனை செய்யும் பேறுடைய எல்லோருக்கும் பொது வானவை. அவ்வாறு அனுட்டிக்க முடியாத நிலைமைகளில் பலர் இன்று வாழுகின்றனராக லின் அன்னவர் என்ன செய்யலாம் என்ற ஒரு கேள்விக்கு இடமுண்டு. அன்னவருக்கும் பொருத்த மான வழி உண்டு என்பது இங்கே காணவருகின்றது.
* அகர உயிர்போல் அறிவாகி எங்கும்
நிகரில்இறை நிற்கும் நிறைந்து.
என்றபடி இறைவன் எங்கும் நிறைந்தபொருள். "அவனன்றி ஓரணுவும் அசையாது’ என்பது ஆப் த வாக்கியம். இவ்வுண் மைகளே மனத்திற் பதித்து எலர்எவருக்கு எது எது பொருந்து கின்றதோ அவர் அவரும் அதை அதை அறநெறி வழுவாது முழு மனத்தோடு செய்து வந்தால் அவ்வளவும் வேண்டிய உறுதி பயக்கும் என்பது திண்ணம். இக்கருத்தைத் தெளிவுபடுத்தும் மூன்று உதாரணங்கள் இங்கே காண வருகின்றன.

1 ()
1. வேதாந்த ஞானகுரியணுகிய பூரீமத் சுவாமி விவேகா னந்தா அவர்கள் மக்கள் எல்லோருக்கும் பொதுவாய் நான்கு வழிகளை விளக்கியுள்ளார்கள். கர்மயோகம் பக்தியோகம் இராச யோகம் ஞானயோகம் என்னும் அவை பெருமளவில் சைவ சாதனைப்படிகளாகிய சரியை கிரியை யோகம் ஞானம் என்ப வற்றை முறையே ஒத்திருக்கின்றன. அவற்றுள்,
கர்மயோகம்: "கருமயோகமாவது கரும த்தைத் துணைக் கொண்டு மனத்தைத் துர யதாக்குதல்" என்றும்,
பக்தியோகம்: 'பத்தியோ பூசையோ ஏதேனும் ஒரு வழியில் அன்பு செய்தலோ மனிதனுக்கு மிக எளிய மிக இனிய அனைத் தினும் மிக இயல்பான முறையாகும்" என்றும்,
இராசயோகம்: "இந்தயோகம் மற்றயோகங்களுள் ஒவ் வொன்றேடும் பொருந்துவதாகும் இதன் முக்கிய பகுதிகளா வன பிராணுயாமம் மன ஒடுக்கம் தியானம் என்பன" என்றும் ஞானயோகம்: "இதில் மூன்று பகுதிகள் உள்ளன. முதலா வது, உண்மையைக் கேட்டல்-அதாவது ஆன்மா ஒன்றே மெய்ப்பொருள் மற்றவை யாவும் மாயை (வியவகாரியம்) என்ப தைக் கேட்டறிதல், இரண்டாவது, எல்லா வகையாலும் இந்தத் தத்துவத்தை நியாய முறைப்படி ஆராய்வது, மூன்றுவது, பின்னர் வழக்காடுவதை முற்றிலும் நிறுத்திவிட்டு உண்மையை அனுபூதியிற் பெறுவது" என்றும், விளக்கியுள்ளார்கள். (சுவாமி விவேகானந்தரின் ஞானதீபம் சுடர் 3. பக்கம் 445.)
2. சித்தாந்த சைவ நாயன்மார் அறுபத்து மூவருள் ஒரு வராகிய சாக்கிய நாயனரின் சரித்திரத்தைச் சேக்கிழார் சுவாமி கள் சொல்லும்போது,
எந்நிலையில் நின்றலும் எக்கோலங் கொண்டாலும் மன்னியசீர்ச் சங்கரன்தாள் மறவாமை பொருள்
என்றே துன்னியவே டந்தன்னைத் துறவாதே தூய சிவந் தன்னைமிகும் அன்பினுல் மறவாமை தலைநிற்பார். நாடோறும் சிவலிங்கம் கண்டுண்ணு மதுநயந்து மாடோர் வெள்ளிடைமன்னுஞ் சிவலிங்கம் கண்டு
மனம்

Page 61
1 O2
நீடோடு களியுவகை நிலைமைவரச் செயலறியார் பாடோர்கல் கண்டதனைப் பதைப்போடும் எடுத்
தெறிந்தார்.
அகநிறைந்த பேருவகை அடங்காத ஆதரவால்
மகவுமதிழ்ந் துவப்பார்கள் வன்மைபுரி செயலினுல் இகழ்வனவே செய்தாலும் இளம்புதல்வர்க் கின்பமே நிகழுமது போதற்கு நீள்சடையார் தாமகிழ்வார்.
என்று பாடியருளிஞர்கள். கல் எறிதலே சிவபூசையாகி அதன் பய ஞய் முத்தியடைந்தார் சாக்கியநாயனார். எந்த நிலைமையிலிருந்தா லும் பூசை எவ்விதமாய்ச் செய்யப்பெற்ருலும் அன்பாகிய பண்பு சிறந்து விளங்குமானுல் அதனல் பெரும்பயன் அடையலாம் என் பது இதஞல் தெளிவாகின்றது.
அப்பனை நந்தியை ஆரா அமுதினை ஒப்பிலி வள்ளலை ஊழி முதல்வனை எப்பரி சாயினும் ஏத்துமின் ஏத்தினல் அப்பரி சீசன் அருள்பெற லாமே.
என்று திருமூலநாங்ணுர் அருளிய உறுதிமொழி இவ்வுண்மையை வலியுறுத்துதல் காண்க.
3. இக்காலத்தவருக்கு வேண்டியவாறு வேதாந்த சித் தாந்த வாழ்க்கை நெறிகளுக்குப் புத்துயிர் கொடுத்து எல்லோருக் கும் அருள்நெறி காட்டுமாறு தோன்றியருளிய எங்கள் குருநாதன் சிவயோக சுவாமிகள் நற்சிந்தனை அருளும்போது,
நாங்கள் சிவனடியார் : நாங்கள் சிவனடியார்
நாங்கள் சிவனடியார், நாங்கள் சிவனடியார்;
இது சரியை, இது கிரியை, இது யோகம்;
இது ஞானம்;
இது மந்திரம்; இது தந்திரம்; இது மருந்து.
இந்தத் தியானத்தில் நிலைத்தலே நிஷ்டை, இந்த நிஷ் டையுடையோருக்குச் சீலமில்லை; தவமில்லை; விரதமில்லை; ஆச் சிரமச் செயலில்லை.

103
இவர்கள் தாம் விரும்பிய வண்ணம் மண்ணில் வாழ்ந் தார்கள்; வாழுகிமூர்கள். வாழ்வார்கள். இவர் பெருமை யாவருமறியார் கற்கண்டின் இனிமை கற்கண்டை உமிபவர்க்கே தெரியும்.
ஒரு பொல்லாப்புமில்லை. எப்பவோ முடிந்தகாரியம். நாமறியோம். முழுதும் உண்மை.
என்று அருளியிருக்கின்றர்கள்.
அருள் வழிநின்று ஆராய்ந்து பார்த்தால் நாம் உய்தியடை தற்கு உறுதுணையாய் விளங்கும் விழுமிய பல புதைபொருள்களை இவற்றில் காணலாம். பேரின்ப வாழ்வுக்குரிய அறிவுமுதிர்ச்சி யும் அன்புப் பெருக்கமும் இச்சாதனையின் அத்திபாரமாயுள்ள தென்பதை அருள் வழிநிற்பார் எவரும் எளிதிற்காண்பர். சிவ ஞானபோதம் சிவஞான சித்தியார் ஆகிய அருள் நூல்களின் எட்டாம் ஒன்பதாம் சூத்திரங்களிற் கூறப்பெற்றுள்ள சாதனை களின் சாரமாய் இது அமைந்திருக்கின்றதென்று கூறுதல் மிகை யாகாது. எனவே, வழிபாட்டுமுறை எப்படி அமைந்தாலும் அது உண்மையான அன்பு பொருந்தியதாய் இருக்குமேயானல் நாம் பெரும்பயன் அடையலாம் என்பது இங்கே காணவந்த மூன்று உதாரணங்களாலும் பெறப்படுகின்றது. விரிக்கிற் பெருகும்.
அரசியல் பொருளாதாரம் முதலியவையாய் வருபவற்றை மாத்திரம் நினைத்து அவற்றுக்கு ஏதுவாயுள்ள திருவருட்கருணைத் திறம் பற்றி நினையாது அறம்புறமாய் வாழ்வதனலேயே சீர் கேடான நிலைமையை இன்று எய்தி நிற்கிருேம்.
இன்று எங்கள் மத்தியில் நாம் காணும் நிலைமை அன்றே கந்தபுராணத்திற் சித்திரித்துக்காட்டப்பெற்றுள்ளது. தேவர்கள் சூரபன் மனம் சிறையிலிடப்பட்டுப் பல் வேறு துன்பமனுபவிக்க வேண்டியவர்களானர்கள். பின்பு, தேவர்களின் பிரார்த்தனைக் கிரங்கிக் குமாரக்கடவுள் தோன்றுமாறு சிவபெருமான் கருணை கூர்ந்தருளினர். அக்கருணைத்திறத்தின் வழி குமாரக்கடவுள் தேவர்களைச் சிறையிலிருந்து மீட்டு விண் குடியேற்றம் செய்தரு ளினர்.

Page 62
104
தேவர்கள் சிறையிலிடப்பட்டதேன்? மறுமொழி பின் வரும் இரு செய்யுள்களிற் காணக்கிடக்கின்றது.
முந்தொரு காலத்தில் மூவுல கந்தன்னில் வந்திடு முயிர்செய்த வல்வினை யதனலே அந்தமில் மறையெல்லாம் அடிதலை தடுமாறிச் சிந்திட முனிவோருந் தேவரும் மருளுற்ருர். ஆனதொர் பொழுதின்கண் அமரரும் முனிவோரும் மாநில மிசை வைகும் மக்களும் இறையுள்ளம் ஞானம திலராகி நவில்மறை நெறிமாற்றித் தீநெறி பலவாற்றிப் பனுவல்கள் சிலசெய்தார்.
(கந்தபுராணம்) முன்னெரு காலத்தில் உயிர்கள் செய்த வினைகளின் பயணுய் ஞான நூற்பொருள் அடிதலைதடுமாறியது. அதனுல் மயக்க முண் டாயிற்று. அம்மயக்கத்தின் பேருய்த் தீய நெறியைப் புகட்டும் வெளியீடுகள் மிகுந்த்ன. அவற்றின் பயனப் வந்தது சிறைவாசம். இதேபோலத்தான் இன்று எங்கள் மத்தியில் உண்மை ஞானம் தரும் கல்விஅறிவு குன்றிப் பிற துறைக் கல்வி பெருகியது. இதன் பயனப் மக்கள் வாழ்க்கை மயக்கநெறியிற் சென்று சீர் கேட்டை விளைவித்தது.
இச்சீர்கேடு நீங்கி நாம் சிறந்து வாழவேண்டுமானல் எமக்குப் பிறப்புரிமையாகிய பெரு நெறி பிடித்தொழுகி உண்மை நூற் கல்விபெறவேண்டும். அதற்குத்தக அருள்வழியில் வாழ்ந்து அன்பு என்னும் பண்பு பரவவேண்டும். அதனுல் ஒற்றுமை ஓங்க வேண்டும். இவை உண்டாகவே அரசியல் பொருளாதாரம் முதலிய எல்லாத்துறைகளிலும் சீருஞ் சிறப்பும் எளிதில் வந்தடை யும் என்பது சொல்லாமலேயமையும்.
இப்பெருநெறியை எமக்கு அருளுமாறு பின்வரும் முறையை மேற்கொண்டு திருமுறைப் பாராயணஞ் செய்து சிவ பிரானை வழிபட்டு நற்சிந்தனையுடன் மங்களம் பாடி அருள்வழியில் இன்றும் என்றும் நின்று இன்புறுவோமாக. குற்றம்நீ குணங்கள் நீ கூடல் ஆல வாயிலாய் சுற்றம்நீ பிரானும்நீ தொடர்ந்திலங்கு சோதிநீ கற்றநூற் கருத்தும்நீ அருத்தமின்ப மென்றிவை முற்றும்நீ புகழ்ந்துமுன் உரைப்பதென்மு கம்மனே.
(சம்பந்தர்)

05
பல்லடி யார்பணிக் குப்பரி வானைப்
பாடியா டும்பத்தர்க்(கு)அன்புடை யானைச் செல்லடி யேநெருக் கித்திறம் பாது
சேர்ந்தவர்க் கேசித்தி முத்திசெய் வானை நல்லடி யார்மனத்(து) எய்ப்பினில் வைப்பை நானுறு குறையறிந் தருள்புரி வா னை வல்லடி யார் மனத் திச்சையு ளான
வலிவ லந்தனில் வந்துகண் டேனே.
(சுந்தரர்) பொன்னும் மெய்ப்பொருளுந்தரு வானைப்
போக முந்திரு வும்புணர்ப் பானைப் பின்னை என்பிழை யைப்பொறுப் பானைப்
பிழையெ லாந்தவி ரப்பணிப் பானை இன்ன தன்மைய னென்றறி யொண்ணு
எம்மா னையெளி வந்த பிரான அன்னம் வைகும் வயற்பழ னத்தணி
ஆரூரானை மறக்கலு மாமே.
(சுந்தரர்) முழுமுத லேஐம் புலனுக்கும் மூவர்க்கும் என்தனக்கும் வழிமுத லேநின் பழவடி யார்திரள் வான்குழுமிக் கெழுமுத லேயருள் தந்திருக்க இரங்குங் கொல்லோஎன் றழுமது வேயன்றி மற்றென்செய்கேன் பொன்னம்
பலத் தரைசே, (திருவாசகம்) ஒளிவளர் விளக்கே யுலப்பிலா வொன்றே
உணர்வுசூழ் கடந்ததோ ருணர்வே தெளிவளர் பளிங்கின் றிரண்மணிக் குன்றே சித்தத்துட் டித்திக்குந் தேனே அளிவள ருள்ளத் தானந்தக் கனியே
அம்பலம் ஆடரங்காக . வெளிவளர் தெய்வக் கூத்துகந் தாயைத்
தொண்டனேன் விளம்புமா விளம்பே.
(திருவிசைப்பா)

Page 63
106
மிண்டு மனத்தவர் போமின்கண் மெய்யடி யார்கள்
விரைந்து வம்மின் கொண்டுங் கொடுத்துங் குடிகுடி யீசற்காட்
செய்மின் குழாம்புகுந் தண்டங் கடந்த பொருளள வில்லதோ
ரானந்த வெள்ளப்பொருள் பண்டு மின்றுமென்று முள்ளபொரு ளென்றே
பல்லாண்டு கூறுதுமே.
(திருப்பல்லாண்டு) ஆதியாய் நடுவும் ஆகி அளவிலா அளவும் ஆகிச் சோதியாய் உணர்வும் ஆகித் தோன்றிய பொருளும்
ஆகிப் பேதியா ஏகம் ஆகிப் பெண்ணுமாய் ஆணும் ஆகிப் போதியா நிற்கும் தில்லைப் பொதுநடம் போற்றி
போற்றி, (திருத்தொண்டர்புராணம்) இறவாமற் பிறவாமல் எனையாள் சற்குருவாகிப் பிறவாகித் திரமான பெருவாழ்வைத் தருவாயே குறமாதைப் புணர்வோனே குகனேசொற் குமரேசா கறையானைக் கிளையோனே கதிர்காமப் பெருமாளே.
(திருப்புகழ்) எல்லா மவனேயா மெல்லா மவன்செயலே கல்லாய் மனிதா கவலையேன்-நில்லாயோ நீள நினையாய் நினைந்து நினைந்துருகி வாழ நினையாய் மதி.
(நற்சிந்தனை)
நொந்தவர் தம்மை நொடியிற் காக்கும் பைந்தொடி யுமையாள் பங்கன் துங்கன் கந்துக மதகரிப் போர்வையவன் கறைசேர் கண்டனண் டத்தவர் காணுக் கடவுளே.
(நற்சிந்தனை)

IUፃ`
அந்தியுஞ் சந்தியும் அன்பினி லவனைச் சிந்தையி னினையைச் சிறப்புடையவராய் பந்தம் யாவும் பற்ருது ஒழித்து நந்தா வின்ப நாடடை வாரே.
(நற்சிந்தனை) ஒருபொல்லாப்புமில்லை எப்பவோ முடிந்தகாரியம் நாமறியோம் முழுதும் உண்மை.
(நற்சிந்தனை)
மங்களம்
அப்பனுக்கும் அம்மைக்கும் மங்களம் அத்துவித வஸ்துவுக்கு மங்களம் ஒப்பில்குரு நாதனுக்கு மங்களம் உத்தம பத்தருக்கு மங்களம் முப்பொழுதும் தொழுவார்க்கு மங்களம் மூவாசை வென்றவர்க்கு மங்களம் முப்பத்து முக்கோடி தேவர்க்கும் மங்களம முனிவர்க்கும் இருடிகட்கும் மங்களம் தன்னைத்தன்ன லறிந்தவர்க்கு மங்களம் ஐயமிட் டுண்பவர்க்கு மங்களம் ஐயமில்லாச் சாதுக்கட்கு மங்களம் ஆதியந்த மில்லாத ஆன்மாவுக்கு மங்களம் சீர்காழித் தேவருக்கு மங்களம் திருநாவுக் கரசருக்கு மங்களம் சீர்பெருகு சுந்தரர்க்கு மங்களம் திவ்விய மாணிக்கர்க்கு மங்களம் எங்குந்தங்கும் உயிர்களுக்கு மங்களம்.
மங்களம் ஜெய மங்களம்
மங்களம் ஜெய மங்களம்.
(நற்சிந்தனை)

Page 64
பிழை திருத்தம்
பக்கம் வரி பிழை திருத்தம்
19 14一15 விகளில்லாத கருவிகளில்லாத
23 24 எம்படி எப்படி
24 8 விகாரமடைவதில்னை விகாரமடைவதில்லை
35 22 உண்மையை மறந்தாய் உண்மையை உணர்ந்தி
6)ru
37 20 ஐம்புலன்களிலிருந்து ஐம்புலன்களிலிருந்து
(நீங்கித் (நீங்குமாறு
38 22 டுறையில் டுறையுள்
63 19-20 நாதம் மீறக நாத மீறக
65 11 நானல்ல நானல்லன்
7. 1. நிலைபெறுதற்ரும் நிலைபெறுதற்கும்
85 29 கொண்டு டொழுகு கொண்டொழுகு 88 19 சமயதிக்கையும் சமயதீக்கையும்
99 6 நமரேன்பர் நமரென்பர்
100 10 செய்யத்தக் செய்யத்தக்கது
107 26 உவிர்களுக்கு உயிர்களுக்கு


Page 65