கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: சிவஞானசித்தித் தெளிவு

Page 1
சிவஞான
திருவிளங்க தேச்
| 5芝
அருணeர Sl— 1 PK2
உமுன்னாள் யாழ்ப்பாண ம
அமரர் பரீவரத
 
 
 

ரித்தித் தெளிவு
சிகர் பொழிப்புரைத் தொகுப்பு
/
ாவட்ட மருந்துகளின் பொறுப்பதிகாரி ராஜன் நினைவு வெளியீடு

Page 2


Page 3

சிவஞானசித்தித் தெளிவு
திருவிளங்க தேசிகர் பொழிப்புரைத் தொகுப்பு
முன்னாள் யாழ்ப்பாண மாவட்ட மருந்துகளின்பொறுப்பதிகாரி அமரர் பூநீவரதராஜன் நினைவு வெளியீடு 02.04. 2000

Page 4

“எந்தையே! எந்தையே! இவ்எழுதிரை வளாகத்து யார்க்கும் சிந்தையால் செய்கையால் ஒர் தீவினை செய்திலாதாய்” o
அமரர் பா. பூனிவரதராஜன் அவர்கள்
தோற்றம் ஏற்றம் 23. O1. 1942 15. O3. 1999
"வெகுதான்யப் பங்குனிமா தத்தபர வேளை மிகும்திர யோதசியில், மேலே - புகுந்தான் சிறீவரதராசன் சிவத்துள்ளே, நாமம் நிறீஇயிப் பூவுலகி லே"

Page 5

cupadjigo)/60/7 கம்பவாரிதி இ. ஜெயராஜ்,
கம்பன் கழகம்,
உலக உயிரினங்களின் தலைமை மானுடர்க்கே உரியதாம். மனம் எனும் சூக்குமக் கருவியின் முழுமையான இயக்கத்தைப் பெற்றதால் ஐம்புல அறிவையும் மீறி ஆறாவதான சிந்திக்கும் திறன் வாய்க்க அத்தலைமை மானுடர்க்கு ஆயிற்று. மனதின் இயக்கம் பெற்றதால் அவன் மனிதன் எனப்பட்டான். சிந்தனையும், சிந்தனையின் விளைவான தேடலும் மனிதனின் இயல்பாயிற்று.
அதனால்
அன்று தொட்டு இன்று வரை மற்றைய ஜீவராசிகள் ஒரே வகையினதாக மனிதன் மட்டும் அன்றாடம் மாற்றம் பெற்றான். அவரவர் தன்மை நோக்கி அம்மாற்றங்கள் உயர்ச்சியாகவும், தாழ்ச்சியாகவும் உருப்பெற்றன. அவ்வுயர்வு தாழ்வுகளையும் ஆராயும் திறன் பெற்றதால் மொத்தத்தில் வளர்ச்சி மனிதனின் இயல்பாயிற்று. அவ்வளர்ச்சியே வெற்றியாய் ஆணவம் வளர்க்க அவன் தேடல் வேகம் பெற்றது. புலன்களால் நோக்கவல்ல புறப்பொருள்களை தொடர்ந்து ஆராய ஆராய அவன் பெளதிக அறிவு விரியலாயிற்று. பஞ்சபூத காரியங்களான பெளதிகப் பொருள்கள் அப்பூதங்கள் போலவே எல்லையின்றி விரிந்தன. மானுடனின் தேடல் நுண்பூதமான ஆகாயம் வரை சென்றது. முடிவின்றி விரியும் ஆகாயம் அவன் அறிவை ஸ்தம்பிக்கச் செய்தாலும்
(Oi O

Page 6
அவன் சளைத்தான் இல்லை. தொடர்ந்து தேடத் தலைப்பட்டான். அத்தேடலில் அவனுக்கோர் உண்மை புலனாயிற்று. காலவரையறை கொண்ட வாழ்நாள், அனைத்தையும் ஒருங்கே அறியமுடியாத சிற்றறிவு, இவை கொண்டு எல்லையற்று விரியும் அறிவின் முடிவு காணலின் சாத்தியம் இன்மை உணர்ந்தான்.
ஆயினும், இயல்பாய் அமைந்த அவன் அறிவுத் தேடல் ஓர் ஆயுட்காலத்திற்குள்ளே அறிவின் முடிவு காண தொடர்ந்து அவனை உந்திற்று. அவன் அல்லலுற்றான்.
ஆயினும்,
அவன் தேடல் நின்றாபாடில்லை. முடிவென்பது எது?
மனதுட் கேள்வி பிறக்க
ஆழச் சிந்தித்தான் அவன். தொடர்ந்த அச் சிந்தனையின் பயனாய் அரியதோர் உண்மை அவனுக்குப் புலனாயிற்று. முடிவென்பது தொடக்கத்தின் முதல் நிலையே என உணர்ந்தான். ஒரு புள்ளியில் ஆரம்பிக்கும் கோடு எத்துணை தூரம் நீளினும் முடிவதில்லை. நீட்டப்பட்ட அக்கோடு, ஆரம்பித்த புள்ளியை எப்போது அடைகிறதோ அதுவே அக்கோட்டின் முடிவாம். இவ்வுண்மை புலனாக புறத்தேடலில் அறிவு நிறைவுறாது எனும் உண்மை உணர்ந்தான். உடன் அவன் அறிவு அறிவின் தொடக்கத்தைத் தேடலாயிற்று. அறியும் பொருள் எது?
அறிவெது?
எனும் கேள்விகள் பிறக்க அவன் அறிவுத் தேடல் உள்நோக்கிற்று.
பொறிகளால் தென்பட்டு
Cii D

பின் புலன்களாய் உணரப்பட்டு
மயக்கம் தந்தவை அறியப்பட்டவை அன்றி அவையே அறிவல்ல எனும் உண்மை உணர்ந்தான். அக்கருவிகளால் இதுவரை உணரப்பட்ட புறப்பொருள்கள் மாயையின் வடிவங்கள் என்பதறிந்தான். இதுவரையில் தன் முயற்சிகள் கானல் நீர் தேடிக் கழிந்ததறிந்து கவலையுற்றான். அவ்வுணர்வினால் புறத்தேடலில் ஆர்வம் அற அகத் தேடல் ஆழமாய்த் தொடங்கிற்று, அத்தேடலில் "நானார்? என் உள்ளமார்? ஞானங்கள் யார்? எனும் கேள்விகள் பிறக்க
பொறிகள் செயலிழக்க புலன்களின் நாட்டம் விடுபட்டுப் போயிற்று. மனம் மேலும் ஒடுங்கி ஒருநிலைப்பட அறிவும் தெளிவுற்று ஒருநிலைப்பட்டது.
அதனால் அசைவின்றி உள்நோக்கும் ஆற்றல் பெற்றான் அவன். மனம் ஒடுங்கி செயல் ஒடுங்கி பின் வாக்கும் உள்நோக்கி ஒடுங்கிற்று. தனு, கரண, புவன, போகம் எனும் அசுத்தமாயா காரியங்களில் ஆழ்ந்து கிடந்தவன் வாக்கு, மூலாதாரம் வரை சென்று சூக்குமையில் ஒடுங்க சுத்தமாயகாரியத் தொடர்பு பெற்றான். அத் தொடர்பு ஆத்மாவை அவனுக்கு உணர்த்திற்று. துரியாதீத நிலைபெற்றுத் தன்னைத்தான் தரிசித்தான். உலகியலால் விடுபட்ட ஆத்மா சார்ந்ததன் வண்ணமாகும் தன் இயல்பினால் இறையோடு கூடிற்று.
அவ்வுயர் நிலையில் தேடல், தேடுபவன், தேடுபொருள் எனும் பேதங்கள் அற பேரின்ப நிலை கூடிற்று. மனிதன் அறிவின் முடிவுணர்ந்தான். அவ்வறிவின் முடிவே சித்தாந்தமாம். (சித் - அறிவு, அந்தம் - முடிவு)
அவன் தேடலின் வெற்றி
= i >=ത്ത * M m r

Page 7
முன்னைய பெளதிக அறிவின் வெற்றிகள் போல் ஆணவம் தராமல் ஆனந்தம் தந்தது. இவ் ஆத்மீக அறிவின் வெற்றி மற்றவருக்கு அறிவிக்கவும், ஆரவாரிக்கவும் இடமளிக்காமல் அவனை “சொல் அற சும்மா' இருக்கக் செய்தது. மோனம் ஞானவரம் பாயிற்று. அறிவின் முடிவு கண்ட அம்மனிதன் தன்னுட்தான் அடங்கிப் போனான். அவ்வடக்கம் அவனை உலகியலில் இருந்து விடுவிக்க உலகத்தாருக்கு அவன் பித்தனானான். உலகத்தார் அவனுக்குப் பித்தரானார். "நாட்டார் நகைசெய்ய நாம் மேலை வீடெய்த” எனத் தெளிவுற்றான். அத்தெளிவு அல்லல் அறுத்து ஆனந்தமாக்கிற்று. அவன் பித்த நிலையே முத்தி நிலை எனும் பேர் உண்மை அவனைப் போலவே, ஆத்ம வளர்ச்சியால் அறிவுத் தேடலிற் புகுந்த ஒரிருவருக்குப் புரிந்து போயிற்று. முடிவு கண்ட அவன் மூலமாகத் தாம் முடிவறிய தொழுதும் தொடர்ந்தும் ஓயாது அந்த ஞானியைப் பற்றி நின்றனர். தெளிந்த ஞானியாகிய அச்சீவன் முத்தனோ தனிமை தேடி அவரைத் தவிர்த்தான். பசி மிகுந்த அச்சீடர்களின் தேடல், விடாது அந்த ஞானியைப் பற்ற இறைநிலையுற்ற அந்த ஞானியூடு இறைக்கருணை பொழியலாயிற்று. சூக்குமையில் ஒடுங்கி
உலகியலில் விடுபட்டு
இறைநிலையில் கலந்த
அம்முத்தர்தம் வாக்கு சிவவாக்காய் மீண்டும் கிளம்பிற்று. சில்வகை எழுத்திற் பல்வகைப் பொருளடக்கி சுருக்கமாய்,
சூத்திரமாய், அச்சிவவாக்கு இறைவன் தன் பெருங்கருணையால் உலகை உய்விக்க ஓங்காரத்தில் நின்றும் உதித்தது.

மனதாலும் வாக்காலும் அறியவொண்ணா, அச்சிவப்பொருள் அந்த ஞானியர் தம் வாக்கினும் பொதிந்து பசியோடு தேடுவார்க்குத் தன்னை அறிவிக்கும் குறிப்புத் தந்தது. அரும்பொருள் நிறைந்த அவ்வாக்கினை உணர்வொன்றும் திறன் வாய்த்தார் ஒருசிலர், உணரத் தலைப்பட்டனர். வெளிப்பட்ட அச்சிவவாக்குக்கு, தத்தம் ஆத்ம நிலைக்கேற்ப விளக்கம் கண்டனர். தத்துவ வழியில், தமக்குப்பின் தனித்து வருவோர்க்குக் கருணை செய்ய அவ்விளக்கங்களை விளக்குகளாய் அமைத்தனர். அவ்விளக்குகளே ஆத்ம தேடல் எனும் பாதையில் இன்றும் நம்மை வழிப்படுத்தும் சித்தாந்த நூல்களாம். ஆத்ம தேடலிற் புகுவார் தாம் செல்லும் பாதையின் தெளிவுணர இந்நூல்கள் துணை செய்யும் தூண்களாயின. அத்தூண்களில் ஒன்றே நம் சந்தனாசாரியர்களுள் ஒருவரான அருணந்தி சிவாசாரியரால் ஆக்கப்பட்ட 'சிவஞானசித்தியார் ” எனும் அமிர்தக்கடலாம். இக்கடலுள் புகுந்து கரைகாண முயன்றார் பலர். அங்ங்ணம் முயன்றாருள், தனித்துவமான பாணியில் தெளிந்த உரை செய்து நம் ஈழ மண்ணின் பெருமை உணர்த்தியவர் திருவிளங்கம் எனும் தெய்வப் பெரியார். அவர் உரையில், ஒவ்வொரு செய்யுட்கும் சுருக்கமாய்ச் செய்யப்பட்ட பொழிப்புரைகள் தனித்து நூலாவது நம் தவப் பயன்.
★责宽责责
இயல்பான ஆத்ம ஞானம் உற்றார்க்கன்றி தத்துவ ஞானம் வாய்க்காது. - உணர்வுந்தல் இன்றித் தனித்த அறிவினால் தத்துவத்துள் புகுவார்,

Page 8
அத்தேடலால், அறுக்கப்பட வேண்டிய ஆணவம் மேலும் வளர்ச்சியுற அன்பற்று அல்லல் உறுவர். பல பிறவிகளில் மூழ்கிப் பெற்ற அனுபவங்களால் ஆன்மா
ஆணவத்தின் வலிகெட ஒளிபெறுகிறது. அங்ங்னம் ஒளிபெற்ற ஆத்மாக்களே உண்மைத் தத்துவ விசாரத்திற்கு உட்படுமாம்.
எனவே, தாகத்தோடு தத்துவ நூல்களைக் கற்கப் புகுவார் முன்னைத்தவப்பயன் உடையார் என்பது தெளிவு. அவர்க்கன்றி தத்துவ ஞானம் வாய்க்காது. இறைவனின் அருளல் தொழில்
தெளிவுற நிகழ்வதால் அன்பாலும், அறிவாலும் முத்திநிலை அடைவார் என்றும் உளராம் விஞ்ஞான அறிவு விரிவு பெற்ற இன்றைய உலகிலும் இதுவே சாஸ்வதமாம்.
எனினும்
பொருளுலகையே இலட்சியமாய்க் கருதி பெளதிக ஞானத்தையே அறிவின் வெற்றியாய்க் கொள்ளும் இன்றைய உலகில் இத் தத்துவ ஞானம் தேடுவார் ஒரு சிலரே.
எனினும்
அவ் ஒரு சிலரே சீவன் முத்தநிலை எய்தி இவ்வுலகின் நிலைத்தற்கு காரணமாவர். எண்ணிக்கையாற் குறையினும், பெருமையால் நிறைந்த
அந்நீத்தாரை
அறிவு நிலையால் நெறிப்படுத்தி, அன்பு நிலைக்கு ஆளாக்கி உலகிற்கு ஈபவை இத் தத்துவ நூல்களாம். பொய்யிலிருந்து விடுவித்து, அறிவினால் மெய்யாகிய ஆண்டவனை உணர்விப்பதால் இவை மெய்நூல்கள் எனப்பட்டன. தமிழ் நூல்வரிசையில் இம்மெய்நூல்களே தலைமை நூல்களாம். கருவிநூல்களான, நிகண்டு, இலக்கணம், தர்க்கம், இலக்கியம்,
Cvi).

என்பவற்றைக் கற்பது, இம் மெய்நூல்களை உணர்வதற்கேயாம் என்பர் நம் தமிழ்ச் சான்றோர். இஃது உணர்ந்தே, "கற்றதனால் ஆய பயன் நற்றாள் தொழல்” என்கிறார் வள்ளுவரும். ஒரு சிலரால் மட்டுமே உணரப்படினும் நம் சந்ததியின் சொத்தான இவ் அரிய தத்துவ நூல்களை அடுத்த தலைமுறைக்குக் கடத்திக் கொடுத்தல் காலத்தின் தேவையும், கடனுமாம். இந்நூல்கள் அனைத்தும் உலகோருக்குப் பயன்தருமோ? எனின் தராது என்பதே பதிலாகும். அங்ங்னமாயின் இந்நூற்பதிப்பு எதற்கு? எனக் கேள்வி பிறக்கும். பயன்கொள்ளப் போகும் ஒருசிலரின் உயர்வுணர, அவ்வுயர்வால் இவ்வுலகடையும் பயன் உணர, இந்நூல்களைப் பதிப்பித்தலும் பாதுகாத்தலும் தவச் செயல் என்று தெளிய உணரப்படும். அத்தகு அரிய காரியத்தை இயற்றும் திருமதி பூரீவரதராஜன் குடுத்பத்தார், உலகத்தின் நன்றிக்குரியார்.
女★女宽责 இக்கைங்கர்யம், ஒரு ஆண்டுக்கு முன் அமரரான மதிப்புக்குரிய பாலச்சந்திரன் பூனிவரதராஜன் நினைவாக மேற்கொள்ளப்படுகின்றது. அவர் , யாழ்ப்பாணம், வவுனியா, மன்னார், முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலைகளுக்கான மருந்துகளின் பொறுப்பதிகாரியாக இருந்தவர். இனப்பிரச்சினையின் தழும்பாகத் தன்னுடலில் ஏற்பட்ட பாதிப்பையும் பொருட்படுத்தாது இக்கட்டான சூழ்நிலையிலும் ஒருமருந்தாளராய் மக்களுக்குத் தொண்டாற்றியவர். மும்மொழியிலும் பாண்டித்தியம் பெற்று விளங்கிய அவர் சோதிடத்துறையிலும் மிக்க ஆற்றல் பெற்றிருந்தார்.
Gvi)=

Page 9
தன்பிள்ளைகளை மூளைசிறக்க அறிவுத்துறையில் முன்னேற்றியது போலவே, மனது சிறக்கக் கலைத்துறையிலும் ஈடுபடுத்தியவர். இவையெல்லாவற்றுக்கும் மேலாகப் பழகுதற்கு இனிய பண்பாளராயும் விளங்கினார். நோயிற் கிடவாமலும், நொந்து மனம் வாடாமலும் அவர் வாழ்வு நிறைந்ததே அவர் தம் சீரிய குணத்திற்குச் சான்றாம்.
责女贪责资
என்மாணாக்கன் பிரசாந்தன், அமரரான வரதராஜனின் புதல்வன். அவன் குடும்பம் அன்பு வடிவானது. முதியோரோ! இளையோரோ! அக் குடும்ப உறுப்பினர் யாவரும் பண்பின் வடிவங்கள். அன்பு செய்தலும் , அரவணைத்தலுமே அவர்தம் வாழ்வின் இலக்கணம். யோகராஜன், பிரசாந்தன், யோகலக்ஷ்மி எனும் அமரர் வரதராஜனின் மூன்று குழந்தைகளும் என் அன்புக்குரியார். இக்காலத்தில் இளைய தலைமுறையினரிடம் காணற்கரிய அன்பும் பண்பும் அவர் அனைவர்க்கும் இயல்பாய் வாய்த்தன. பெற்றோரைத் தக்கோராய் இனம் காட்டும் எச்சங்கள். இவர்களால் இவ்வுலகம் பயன்கொள்ளும். தாயார் ஒரு தவமாது.
இவ்வன்புக்குடும்பம், தம் குடும்பத்தலைவர் நினைவாய் இவ்வறிவு நூலை உலகிற்கு உபகரிக்கின்றது. இத்தவக் காரியம்,
இவர் தம் சந்ததியை தவத்தோடு தழைக்கச் செய்யும். ஆடல் வல்லான் அருள் புரிவான். "இன்பமே எந்நாளும் துன்பம் இல்லை."
责女★资责
Gwii)

அணிந்துரை
பண்டிதர் மு. கந்தையா,
ஏழாலை.
தமிழிலுள்ள சைவசித்தாந்த சாஸ்திரங்கள் பதின்னான்கிற் சிவஞானபோதம், சிவஞானசித்தியார், சிவப்பிரகாசம் என்ற மூன்றும் மேலாந் தரத்தன. போதம், சித்தி, பிரகாசம் என்ற முறையில் ஞானம், அது கைவரப் பெறல், அதனால் நேரும் விளக்கம் என முறையே அமையும் ப்ொருளில் இவை தம்முள் ஒர் அந்தரங்கத் தொடர்புடையனவாய் இருத்தல் தோன்றும். இவற்றுள் சிவஞானசித்தியார், சிவப்பிரகாசம் என்ற இரு நூல்களுக்கும் மிகப் பிற்காலத்தில் இனிமை பயக்கும் எளிமை உரை இயற்றியவர் மானிப்பாய் திரு. மு. திருவிளங்கம் என்பவர். இவர் தமிழ், சைவம், ஆங்கிலம், தருக்கம் என்ற நான்கிலும் துறைபோய கல்விமானாய் ஆசிரியத் தொழில், நியாயவாதித் தொழில், நீதிபதித் தொழில்களிற் காலத்திற்குக் காலம் பிரசித்தி பெற்றவராய் இருந்ததுடன் ஆன்மீக விழிப்புற்று ஞானசாஸ்திரங்களை, விசேடமாக சிவஞானசித்தியார், சிவப்பிரகாசம் என்ற இரண்டையும் வாழ்க்கை நூல்களாகக் கொண்டு ஆராய்ந்து வந்தவர். அவை சார்ந்தமட்டில் மற்றெந்த உரைகாரருக்கும் வாய்க்காத அளவு தெளிவும் எளிமையும் இவருரையில் காணப்படுதல் இதற்கோர் ஆதாரமாகும். இவருக்கும் யாழ் யோகர் சுவாமிகளுக்கும் இடையிலிருந்த தொடர்பு பிரசித்தமானது. சுவாமிகள் உள்ளம் கலந்த நண்பனாகவும் இவர் விளங்கியிருந்தவாற்றால் 'அவன், சித்தியார், சித்தியாரென்று உணர்ந்துணர்ந்து சித்தியார் மயமாய்ப் போனான்’ என்று சுவாமிகள் இவரைக் குறித்துக் கூறியதாக ஆப்தர் வாயிற் கேட்கப்பட்டதுண்டு.
சிவஞான சித்தியாருக்கு ஏலவே அறுவர் உரைகள் வழக்கில் இருந்துள்ளன. அறுவர் உரையையும் ஆராய்கையில் அவ்வப்போது தெளிவின்மை தோன்றின் அவர் உடனடியாகச் சுவாமிகள் இருக்குமிடந் தேடிப் புறப்படுவார் என்றும் சிலவேளை இடைவழியில் சுவாமிகள் சந்திக்கப் பெறினும் சந்நிதி மாத்திரையானே சந்தேகந் தீர்த்துக் கொண்டு திரும்பி விடுவார் எனவும் அறியப்படுகிறது. அத்தகைய ஒரு பக்குவான்மா ஆதலுக்கு அநுகுணமான சைவாசார அனுட்டான சீலராகவும், சிவபூஜாதுரந்தரர் ஆகவும் விளங்கி அப்பண்புள்ளாருக்கே சைவசித்தாந்த அறிவுத்
=ങ്കis D-ത്ത

Page 10
தெளிவும் பலப்பேறும் உளவாம் என்னும் உண்மைக்கு மலை இலக்காய்த் திகழ்ந்தவர் திருவிளங்கத்தார். அவ்விசேடம் பற்றித் திருவிளங்கதேசிகர் என்று கெளரவமாக அழைக்கப் பெற்றவர்.
ஆள்தான் நூல், நூல்தான் ஆள், என்ற நியாயப்படி இவரில் விளங்கிய சைவத் தூய்மை விளக்கமே இவரின் உரை விளக்கப் பிரகாசம் எனல் தகும். சிவஞான சித்தியார்க்கு இவர் வரைந்த உரையில் ஒரு இடத்தை உதாரணத்திற்குத் தொட்டுப் பார்த்தல் தகும்.
சிவஞான சித்தியார் முதலாம் சூத்திரம் இரண்டாம் அதிகரணத்து 2-4 செய்யுள் பகுதி இங்கே தழுவப்படுகிறது. சிவன் உலகத்தைப் படைத்து அளித்து அழிப்பன் எனக் கூறப்படும் முதல் அதிகரணப் பொருட்குத் தொடர்பாம் வண்ணம் அவர் அதனை எவ்வண்ணம் நிறைவேற்றுவர் என்ற வினாவை எழுப்பி அதற்கு விடைகூறும் பாங்கிலமைகிறது இப்பகுதி. இரண்டாம் செய்யுள் அவ்வினாவை எழுப்ப மூன்றாம் நான்காம் செய்யுள் அதற்கு உவமை மூலம் விடைகூறும்.
பண்ணுவதெங்கே நின்றிங்கு? பண்ணுவது எங்ங்ணம் நின்று என்பது கேள்வி.
உலக காரியங்களைச் சொல்வது போல இதனைச் சொல்லிக் கொள்ள இயலாது. ஆனால் ஒருவகையாற் சொல்லலாம். (ஒருவகையால் என்றது ஒரு உவமைமூலமாக என்றபடி) “ஞாலம் ஏழினையும் தந்து நிறுத்திப்பின் நாசம் பண்ணும் காலமே போலக் கொள்நீநிலை செயல் கடவுட் கண்ணே" என்பது விடை கண்டதைக் கொண்டு காணாததை உணர்த்துதல் என்ற முறைப்படி காலம் என்ற தத்துவம் நின்று பிரபஞ்சத்தைத் தோற்றி நிலைநிறுத்திப் பின் அழித்தல் போல, இறைவனும் நின்று பிரபஞ்சகாரியம் பண்ணுதல் என்பது இதன் பொழிப்பு. இதன்கண்‘ நிலை செயல்' என்ற தொடர் முக்கியமானது. அது நிற்றல், செயலாற்றல் என்ற இரு அம்சங்கள் கொண்டது. அதன்படிக்கு, காலம் நிற்பது எப்படி, அப்படி இறைவன் நிற்பன், காலம் செயலாற்றுவது எப்படி, அப்படி இறைவன் செயலாற்றுவன் என்பதற்கான விளக்கம் இங்கே அவசியமாகின்றது. இவ்விரண்டம்சமும் இடம்பெறாத பட்சத்தில் உரைவிளக்கம் தெளிவானதாயிருக்க முடியாது. இந்நிலையில் பிரசித்தி பெற்ற உரையாசிரியராகிய சிவஞான முனிவர் இதற்குக் கூறிய உரை பின்வருமாறு.
காலம் உலகமெல்லாவற்றையும் தோற்றுவித்து நிறுத்திப் பின் அழித்துக் காரியப்படுத்துங்கால் எல்லாப் பொருட்கும் தான் ஆதாரமாய் தனக்கோர் ஆதாரமின்றி நிற்றல் போலச் சிவசக்தியும் நிராதாரமாய் நின்றே உலகத்தைக் காரியப்படுத்தும் முறைமையை நீ உணர்ந்து கொள்வாயாக என்பது உரை.
= xD=ങ്ക

இதைப்படிப்பவர்கள், மேல் அவசியமாக வேண்டப்பட்ட இரு அம்சங்களையும் தெளிவாகக் கண்டு கொள்ளும் வாய்ப்பு இல்லை. அத்துடன் நிராதாரமாய் நிற்கும் இயல்பு சிவம் ஒன்றுக்கே உரியதெனக் கூறும் சைவசித்தாந்தத்தில் காலம் நிராதாரமாய் நின்று செயலாற்றும், சிவசக்தி நிராதாரமாய் நின்று செயலாற்றும் என்ற கருத்துக்கள் பொருந்துமாறெங்ங்ணம்? என்ற மலைப்பு உண்டாதலும் தவிர்க்க முடியாததாகின்றது. இம்மலைப்புக்கு இடம் தோற்றாதபடி, பிரபஞ்சத்தை உண்டாக்கி நிலைபெறுவித்து அழிக்கும் காலம் போல, சிவனும் அரூபமாய் வியாபியுமாய் நின்று பண்ணுவன் எனச் சிவாக்கிரயோகிகள் உரைத்தாரேனும் மேல் அவசியமெனக் குறித்த இரண்டம்சங்களின் தெளிவை அவர் உரையும் காட்டியதில்லை.
மறைஞான தேசிகர், காலம் எப்படி வடிவற்றிருந்தும் எப்படிப் பலத்தைக் கொடுத்தது? அதுபோல, சிவனும் அமூர்த்தன் ஆயினும் அவனது இச்சாசக்தியாலே சகத்தைப் பண்ணுவன் என்றும், நிரம்ப அழகிய தேசிகர், சிருட்டித்தும், திதித்தும், சங்கரித்தும் செய்கைக்குக் கூடி நிற்கின்ற காலங்களின் உண்மை போல, கர்த்தாவினுடைய ஆக்கினையினது நிலைமையையும் அவனுடைய நிரதிசயங்களையும் புத்திபண்ணுவாயாக என்றும் எழுதியிருக்கிறார்கள். இருவருரையும் குறித்த உவமான உவமேயங்களை நிலை செயல்' என்ற செய்யுட் கூற்றோடு படுத்து நோக்கவில்லை என்பது இங்கு துலாம்பரமாகத் தெரிகிறது.
ஞானப்பிரகாசமுனிவர், சகல பிரபஞ்சத்தையும் தோற்றியளித்துப் போக்கும் அமூர்த்தமாய், அப்பிரதியக்ஷமாய், நிராதாரமாய் நிற்கும் காலம் போல, காரியம் பண்ணும் சிவனிடத்திலே நிராதாரமாய் நிற்கும் முறைமையும் சங்கற்ப மாத்திர சந்நிதானத்தால் கிருத்தியம் நிகழும் முறைமையும் காண்பாயாக என உரைத்த அளவில் நிலை செயல்’ என்ற பாகுபாடு தோன்ற உரைத்தாரேனும் காலம் நிராதாரமாய் நிற்றல் என்ற கருத்தை அனுவதித்திருத்தல் மலைப்புக்கு இடமாகின்றது.
தக்புருஷ தேசிகர் என்ற சித்தாந்த வல்லுநர் யாழ் நாவலர் வித்தியாசாலையில் முனிவர் உரை கொண்டு நடத்திய வகுப்பு ஒன்றில், காலம் நிராதாரமாய் நிற்பது என்பது எப்படி என்ற எனது ஆசங்கைக்கு குழப்படி பண்ணுகிறீர் போல இருக்கு என்று மட்டும் தெளிவு உரைத்தமை என் பசுமை நினைவில் இன்னும் உண்டு. ஞானப்பிரகாச முனிவர் உரை, முதலிற் குறித்த சிவஞான முனிவர் உரையோடு கால விஷயத்தில் ஒத்துள்ளதேனும் அவர் குறிப்பிட்டது போல சிவசக்தி நிராதாரமாய் நிற்கும் என்ற தவற்றுக்கு இடமாகவில்லை. அவர் 'கடவுட்கண்' என இங்கு வரும்
=ങ്കs>=ങ്ക

Page 11
பதத்திற்கு சிவனிடத்திலே என்று நேர் பொருள் கண்டமையால் தப்பிக் கொண்டார். சிவஞானமுனிவர் 'கடவுட்கண்' என்றதில் கண் - சக்தி எனக் கொண்டு சிவனின் சக்தி எனவுரைத்தமையால் தெளிவின்மை தோன்ற வைத்துள்ளார்.
இவ்வகையில் சித்தியார் உரைகள் சகலமுமே குறித்த செய்யுளில் அவசிய விளக்கம் வேண்டும் பகுதிக்குரிய உரை விளக்கம் தந்திருக்கவில்லை என்பது வெளிப்படை. இந்நிலையில் திரு. திருவிளங்க தேசிகர் இப்பகுதிக்குத் தந்துள்ள உரையை நோக்குவோம்.
ஞாலம் ஏழினையும் தந்து நிறுத்திப் பின் நாசம் பண்ணும் காலமே போல் - உலகமெல்லாவற்றையும் தோற்றுவித்து நிலைபெறுத்திப் பின்பு அழித்துக் காரியப்படுத்தும் காலம், தான் துணைக் காரணமாகவும், சிவசக்தி நிமித்த காரணமாகவும் தம்முள் பிரிவின்றி நின்று அவற்றைக் காரியப்படுத்துதல் போல, நிலை செயல் - முதல்வன் தன் சக்தியைப் பொருத்தி நிற்கும் நிலையையும், பிரபஞ்சத்தைக் காரியப்படுத்தும் முறைமையையும், கடவுட்கண் கொள் நீ - அம்முதல்வன் இடத்தும் வைத்து அறிவாயாக - என்பது தேசிகர் உரை.
இதன்கண், மேல் அவசியமெனக் கோரப்பட்ட இரண்டு அம்சத்துக்கும் உரிய விளக்கம் மிக எளிமையும் தெளிவுமாக இருத்தல் கண்கூடு. அதாவது காலம் எப்படி நின்று செயலாற்றும் எனில், அது தான் துணைக்காரணமும் சிவசக்தி நிமித்த காரணமுமாய்த் தம்முட் பிரிப்பின்றி நின்று செயலாற்றும், சிவன் எப்படி நின்று செயலாற்றுவன் எனில் அவன் தன் சக்தி துணைக் காரணமும், தான் நிமித்த காரணமுமாகத் தம்முட் பொருந்தி நின்று செயலாற்றுவன் என்ற விளக்கம் இதில் வெட்ட வெளிச்சமாய் அமைகிறது. அதேவேளை, காலமும் சிவசக்தியும், நிராதாரமாய் நிற்பன என சிவஞான முனிவர் உரை கொடுத்த மலைப்புக்கு இங்கே கிஞ்சித்தும் இடமில்லை. தம்முட் பிரிப்பின்றி என இங்குள்ள சொற்பிரயோகங்கள் முறையே காலத்துக்கு சிவசக்தி ஆதாரம், சிவசக்திக்கு சிவன் ஆதாரம் என்ற உண்மையைத் தோற்றி இவ்விரண்டும் நிராதாரமாய் நின்று செய்யும் என்ற முதல் முனிவர் கருத்தையும், காலம் நிராதாரமாய் நின்றதென்ற மறுமுனிவர் கருத்தையும் ஒரேயடியாக நிராகரித்திருக்கும் வெற்றியும் இங்கு கருதத்தகும். முதலிற் குறித்தபடி 2ம் செய்யுள் கிளப்பிய வினாவுக்கு 3ம் செய்யுள் தகுந்த விடை அளிக்குமாறு திருவிளங்க தேசிகருடைய உரையிற் கண்டோம். இனி 4ம் செய்யுள் அதற்கு உதாரணம் ஆகுமாறு காட்டுதலில் தேசிகர் உரைப் பொருத்தம் அமையுமாறு காண்பாம்.
=Ci)=

அச்செய்யுள் தரும் உதாரணம் கற்ற நூற் பொருளும் சொல்லும் ஆன்ம அறிவில் ஒடுங்கித் தோன்றல், சாக்கிரம் முதலிய அவத்தைகள் ஆன்மாவில் தோன்றி ஒடுங்குதல் என்ற இரு நிகழ்வுகளை உதாரணமாகக் காட்டுகிறது. காட்டி இவைகள் போலப்பற்றொடு பற்றதின்றிநின்றனன்' எனத் தெரிவிப்பது செய்யுட்பொருள்நிலை, மறைஞான தேசிகரும், நிரம்ப அழகிய தேசிகரும் அந்நிலையிற் பணியற நிற்பன், பாரமற நிற்பன்' என்று முறையே அத்தொடருக்குப் பொருள் கொண்டுள்ளனர். ஞானப்பிரகாச முனிவர் இறைவன் தன் சக்தியாகிய சொரூப காரணத்தினது சங்கற்பத் தொழிலாகிய சந்நிதிச் சொரூப சம்பந்தியாய் வியாபித்திருப்பன் என உரைத்துள்ளார். இம்மூவரும் ஒரு முகமாகவே பற்றொடு பற்றதின்றி என்பது ஒரே நிலையைச் சுட்டி நிற்பதாகவே கொண்டுள்ளனர். இதற்கு உரை கூறும் சிவாக்கிர யோகிகள் அத்தொடர் பற்றோடு நிற்றல், பற்றதின்றி நிற்றல் என இருமுகப்பட்டு நிற்பதாகக் கொண்டு உரைவகுக்கையில், பிரபஞ்சத் தோற்ற நிலை அழிவுகளின் போது இறைவன் பிரபஞ்சத்தில் தான் பற்றுதலின்றி அதிற் பற்றிய ஆன்மாவோடே தான் அநந்நியமாக நின்றனன் என உரை தந்துள்ளார். சிவஞானமுனிவர், குறித்த தொடரின் குறித்த இருதிறப்படுநிலையை ஏற்றுக் கொண்டு அதில் ஒவ்வொன்று அச்செய்யுள் காட்டும் உதாரணம் இரண்டுக்கும் தனித்தனி ஒவ்வொன்றாகப் பொருந்துமாறு காட்டி உரைக்கையில் உதாரண ஒழுங்கை எதிர் நிரல்நிரையாக்கி உரைத்துள்ளார். அவர் உரை அவ்வகையில்,
அவத்தைகள் ஆன்மாவில் ஒடுங்கித் தோன்றும் வழி ஆன்மா அவத்தைப்பட்டுத் துடக்குறுதல் போல இறைவன் எல்லாம் தன்பால் ஒடுங்கி உதிப்ப இலயம், போகம், அதிகாரம் என்னும் அவத்தைப்பட்டுத் துடக்குறுவோனாயினும் ஒருவன் கற்ற நூற் பொருளும் சொல்லும் வாதனாரூபமாய்ப் புத்தி தத்துவத்தை ஒட்டிப் போதத்தில் அடங்கி நின்று மீளத் தோன்றுமிடத்து அவ்வான்ம போதம் அவற்றால் துடக்குறாதவாறு பற்றதின்றி நின்றனன் - எனவரும்.
இதன்கண் வரும் உதாரணங்கள் இரண்டும் உவமைசார் உதாரணங்கள். இரண்டிலும் ஆன்மா சார்பான பகுதிகள் உவமானங்களாகவும், சிவன் சார்பான பகுதிகள் உவமேயங்களாகவும் அமைந்துள்ளன. இவ்விரு இரட்டைகளில் ஒவ்வொன்று பற்றொடு நிற்றலுக்கும் ஒவ்வொன்று பற்றதின்றி நிற்பதற்கும் இடையிலான வேறுபாடு எதில் தங்கியுள்ளதெனத் தெளிவாகத் தோன்றுமாறு செய்யுளியற்றிய ஆசிரியர், ஒன்று 'அடங்கித் தோன்றுதல் மற்றது ‘உதித் தொடுங்குதல்' என்று விளங்க உரைத்திருக்கவும் ஏனோ அறியோம், முனிவர் அடங்கித் தோன்றல் என்றதைக் கிடந்தவாறே கிடக்கவிடாது தோன்றி அடங்கல் என மாற்றிக் கூட்டி உரைத்ததன் மூலம் செய்யுள் தெரித்துக் காட்டிய வேறுபாட்டை மறைத்து ஈரிடத்திலும் ஒடுங்கித் தோன்றல் என்ற கருத்தே படுமாறு செய்துள்ளார். அது சரியானால், பற்றொடு நிற்றல் பற்றதின்றி நிற்றல் என்பவற்றுக்கிடையிலான
==-siD=

Page 12
வேறுபாடு கற்ற நூற் பொருளுஞ் சொல்லுங் கருத்தினில் தோன்றி ஒடுங்குதல் ‘சாக்கிராதி உயிரினில் உதித் தொடுங்கல்' என்ற நிகழ்ச்சிகளிலேயே தங்க வேண்டியாகும். இரு நிகழ்வுகளிலும் ஆன்மா பந்தமுறுதல் தவிர்க்க முடியாமையை ஆருமறிவர். ஆதலால் என்ன இந்த உரை? என்ற சலிப்பும் மலைப்பும் எழுதல் இயல்பே.
இதற்கெதிர், திருவிளக்க தேசிகர் இதற்குரைத்த உரையைக் காணில்,
ஒருவன் கற்றநூலின் பொருளும் அப்பொருளைக் குறிக்குஞ் சொல்லும் ஆன்ம அறிவின்கண் அடங்கித் தோன்றும் தன்மை போல, பொருளும் சொல்லுமாகிய பிரபஞ்சம் எல்லாம் தனது சத்தியிடமாக அடங்கித் தோன்ற முதல்வனும் பற்றொடு நின்றனன், சாக்கிராதி அவஸ்தைகள் ஆன்மாவில் உதித்தொடுங்குந்தன்மை போல பிரபஞ்சமெல்லாந் தன்னிடத்து உதித்தொடுங்க முதல்வனும் பற்றதின்றி நின்றனன் - என்றிருக்கும்.
இதில் செய்யுளியற்றியவர் விதித்தவாறே, அடங்கித் தோன்றல், உதித் தொடுங்கல்களில் குறித்த பற்றொடு நிற்றல், பற்றதின்றி நிற்றல்களின் வேறுபாடு தங்கியிருத்தல் துலாம்பரமாகத் தெரிகின்றது.
செய்யுட் சொற்றொடர்களை அநாவசியமாக மாற்றிக் கூட்டிச் செய்யுட் பொருளைச் சிக்கலுக்குள் மாட்டாமலும் நிரல் நிரையாயிருப்பதை வலிந்து எதிர் நிரல் நிரையாக்கிப் பொருள் விளக்கத்தில் மலைப்பை ஏற்படுத்தாமலும் தெளிவும், இனிமையுந்தளும்ப நேரியமுறையில் வெகு நிதானமாக விளக்கந்தரும், திருவிளங்க தேசிகளின் மேதா விலாசம் இதன்கண் நன்கு புலனாகின்றது.
இச்செய்யுள்களின் விஷயத்தில் தேசிகர் சிவஞான முனிவர் கருத்தை உண்மையில் மறுத்தே உரை செய்திருக்கிறார். ஆனால் தன்னை வெளிக்காட்டிக் கொள்ளாமல், அது அவர் விசேட மகிமை. இதுபோல் மேதா விலாசமும், மகிமையும் விளங்க உள்ள உரைப்பகுதிகள் பிறவும் உள. நமக்கு இதுவே போதுமென்றாய் விடுகிறது. ஆதலின் ஒழிகின்றோம்.
ggs goi6 Torra, 6th There is probably nothing original in his commentaries (his - Vilangam's) 6T6ôTOTT(Byp6TTít. Egypéfiù upės:65TLOå LoấŮLSG) செய்யும் பழக்கத்துக்கு இதுவோர் எடுத்துக் காட்டு.
தேசிகரது பிற நூல்களுள் கந்தரலங்கார உரையும், திருப்புகழ்த் திரட்டும் பிரபல்யம் பெற்றவை.
责资宽资责

பதிப்புரை
"நேற்றிருந்தார், இன்றில்லை" என்பதைப் பெருமையாகக் கொண்டுள்ள உலகின் நியதி மனிதர்களது அன்புணர்ச்சிக்குப் பெருத்த சவாலாக இருந்து கொண்டிருக்கின்றது.
இச்சவாலை முன்பும் பல தடவைகள் சந்தித்த அனுபவம் நம்மிடமெல்லாம் இருந்தபோதும், புதிது புதிதாய் ஏற்படும் ஒவ்வொரு இழப்பும் எங்களை ஒடித்துப் போட்டு விட்டு வெறுமையை உருவாக்கி விடுகின்றது.
அவற்றுள்ளும் இம்முறை ஏற்பட்ட வெறுமை பிற எவற்றாலும் நிரப்ப முடியாதது. பூக்கள் இழந்தும், கிளைகள் முறிந்தும் அனுபவப்பட்ட எங்கள் குடும்ப விருட்சத்தின் வேர் அறுபட்டுப் போயிற்று. ஆம்! எங்கள் குடும்பத்தலைவர் அமரராகி விட்டார்.
அவர், மனத்துக்கண் மாசிலராய் வையத்து வாழ்வாங்கு வாழ்ந்து, எம்மை வாழ்வித்தவர்.
எங்களுக்கு எல்லாமுமாய் இருந்த அவரது வாழ்க்கை நிறைவு ஏற்படுத்திய வேதனை ஆண்டொன்றாகியும் இன்னும் ஆறவில்லை. இனியும் ஆறாதுள்ன உணரமுடிகிறது.
இந்நிலையில், “உடல் முதலியவற்றாற் கட்டுண்டு நமக்கன்பு செய்தவர். அக்கட்டுக்களின் நின்றும் விடுபட்டநிலையில் இனிமேல் அருள் செய்வர்' என்னும் உண்மையே எம்மை ஒரளவு தேற்ற வல்லது,
இத்தகைய பல உண்மைகளைக் கூறும் தத்துவநூல்கள் உயர்நூல்களாய் உலகில் முக்கியம் பெறுகின்றன. அந்நூல்களுள் ஈழத்தவர்களாற் பெரும்பாலும் பின்பற்றப்படும் தத்துவநெறியாகிய சைவசித்தாந்தத்தைக் கூறும் நூல் ஒன்றை எமது குடும்பத் தலைவரின் முதலாம் ஆண்டு நினைவாக வெளியிட விரும்பினோம்.
செய்யுள்களாய் அமைந்த விரிநூலாகிய, அருநந்திசிவாசாரியாரின் சிவஞானசித்தியாரது பகுதியாகிய, சித்தாந்த உண்மைகளைத் தெளிவுபட விளக்கும் சுபக்கத்துக்கு, பின்னவரான மானிப்பாய் திருவிளங்க தேசிகர் எழுதிய பொழிப்புரைகளைத் தனியே தொகுத்து நூலாக வெளியிட்டால், செய்யுள்களால் ஏற்படும் மலைப்பு, கடின உரை கற்பதால் ஏற்படும் சிக்கல், பிறசமய கண்டனம் ஆகிய மற்றொன்று விரித்தலால் சித்தாந்தத்தைத் தொடர்ச்சியாக அறியமுடியாமல் ஏற்படும் சலிப்பு முதலியன இன்றி எல்லோரும் சித்தாந்ததத்துவத்தை எளிதாக அறியக்கூடியதாக இருக்குமெனப்பெரியோர்கள் பலரும் கூறினர்,
அவர்கள் கூறியதைச் செயற்படுத்தி உள்ளோம். குறைகள் இருந்தால் எங்களை மன்னிக்க வேண்டுகிறோம்.
இம்முயற்சிக்குப் பெரிதும் துணையாய் இருந்து முன்னுரை வழங்கிய எமது குடும்பப் போஷகர் கம்பவாரிதி இ.ஜெயராஜ் அவர்களுக்கும், அணிந்துரை வழங்கிய சித்தாந்த அறிஞர் பண்தர் மு.கந்தையா அவர்களுக்கும், இவ்வேளைகளில் மனதாலும், வாக்காலும், காயத்தாலும் எமக்கு உதவி செய்த அத்துணைப் பேருக்கும் எமது நன்றிகள்.
யோகர் சுவாமிகளின் திருவடிகள் பலமுறையும் தீண்டப் பெற்ற எமது வீட்டின் வெளியீடாய், சுவாமிகளின் அருள் நோக்கம் பெற்று உரை செய்ததிருவிளங்கதேசிகரின்நூல் வெளிவருதல் தெய்வ சித்தம் போலும்,
இந்நூலை, தெய்வமாகிய குடும்பத் தலைவர் திருவடிகளுக்குச் சமர்ப்பணம் செய்கின்றோம்.
திருமதி செல்லம்மா பாலச்சந்திரன். திருமதி யோகீஸ்வரி புனிவரதராஜன்.

Page 13
3 QSD QSD QSD QSD QSD QSD QSTÖ QSD QSD
நூற்சிறப்பு
“ஆறாறு தத்துவமும் ஆணவமும் வல்வினையும் நீறாக முத்திநிலை நிற்போர்க்குப் - பேறாகப் பார்விரித்த நூலெல்லாம் பார்த்தறியச் சித்தியிலே யோர்விருத்தப் பாதிபோதும்".
- சிவபோகசாரம்
உரைச்சிறப்பு
“பழையவுரைகளைக் கற்றற்கு இலக்கியவிலக்கணவளவை நூலுணர்வும் நுண்ணறிவும் வேண்டப்படலால் இந்நாட்களிற் பெரிதும் பயன்படாமை கண்டு எளிதான நடையுள்ள ஒருரை இன்றியமையாதெனவுணர்ந்த கொழும்பு நகர் திருவிளங்கதேசிகர் இவ்வுரையை எழுதத் தொடங்கினர். இவர் தமிழ் ஆங்கிலம் ஆகிய இரண்டும் நன்குகற்றுக் கட்டளைச் சட்ட அறிவிலும் தீரம் போனவர். சிவப்பற்றிலும் உள்ளத் தூய்மையிலும் பிறர்நல விருப்பிலும் சிறந்தவராய்ச் சமய நூல்கட்குரை யெழுதித் தருவதே தமது முழு முயற்சியாகவும் சிவதொண்டாகவும் பின்னாட்களில் மேற் கொண்டவர். திருப்புகழ்த்திரட்டுக்கும் கந்தரலங்காரத்துக்கும் சிவப்பிரகாசத்துக்கும் அரிய உரை இயற்றியவர்"
-சைவப்பெரியார் சு. சிவபாதசுந்தரம்
go godšo gogogogogogo

1.
2.
சிவஞானசித்தித் தெளிவு
சிவஞான சித்தியார்
சுபக்கம்
திருவிளங்க தேசிகர் பொழிப்புரைத் தொகுப்பு
பாயிரம்
விநாயக வணக்கம்.
விநாயகக் கடவுளுடைய திருவடிகள், பேரன்போடு தம்மை வணங்கி இடைவிடாது தியானிப்பவரது மலக்குற்றத்தை நீக்கிச் சிவத்தைத் தரும். (1) பரசிவ வணக்கம்.
அறுவகைச் சமயத்தோருக்கும் அவ்வவர் கொண்ட முதற்பொருளாயும், சித்தாந்த சைவருக்குச் சச்சிதானந்த சொரூபியாயும், பரஞானத்தால் அறிந்தது அனுபவிக்கப் படுவதாயும், உயிர்க்குயிராயும், உயிர்களுக்கு வியாபக அறிவைப் பயப்பிப்பதாயும், எங்கும் வியாபகமாய் இருக்கும் பரமசிவனது திருவடியைச் சிரத்தின்மேற் சூடிக்கொள்வாம். (2) நூலின்வழி, மெய்கண்டதேவர் அருளிச்செய்த சிவஞானபோதம் நூலை முதனுாலாகக் கொண்டு இச் சிவஞானசித்தியைக் கூறுகின்றாம். (3) நுதலிய பொருளும், கேட்போரும், பயனும். சிவபெருமானுடைய திருவடியை அடையும் முறைமையை வைநயிகராயினார்க்கு இந்நூலிற் கூறுகின்றாம். (4)

Page 14
சிவஞானசித்தித் தெளிவு
5.
அவையடக்கம். முதல்வனது இயல்பு கூறற்கு அரிதாயினும் எனது ஆசை மிகுதியினாலே அதனைக் கூறத்தொடங்கினேன். (5)
சிவாகமங்கள் வாயிலாகவும் பரஞானத்தாலும் சிவனை அறியலாம். (6)
அளவை இலக்கணம்
முவகை அளவை. அளவை, பிரத்தியட்சம், அநுமானம், ஆகமம் என மூவகைப்படும். (7)
முவகை அளவையின் இலக்கணம்.
ஒரு பொருளை சவிகற்பமாக நேரே அறியும் ஆன்மசிற்சத்தி காட்சிப் பிரமாணமாம். நேரே அறியப்படாது மறைந்து நின்ற பொருளை உடன் நிகழும் ஏதுவைக் கொண்டு அறியும் ஆன்மசிற்சத்தி அநுமானப்பிரமாணமாம். இவ்விரண்டு பிரமாணங்களாலும் அறியப்படாத பொருள்களை ஆப்த வாக்கியம் கொண்டு உணரும் ஆண் மசிற் சத்தி ஆகமப்பிரமாணமாம். (8) நிருவிகற்பம் முதலிய நால்வகைக் காட்சிகளின் இலக்கணம். ஒரு பொருளைப் பொதுவகையாகக் காணும் ஆன்ம சிற்சத்தி நிருவிகற்பக்காட்சியாம். அதனை இன்னதென்று துணியாது ஆராயும் ஆன்மசிற்சத்தி ஐயக் காட்சியாம். அதனை மற்றொன்றாகக் கருதும் ஆன்மசிற்சத்தி விபரீதக்காட்சியாம். பெயர் முதலிய வேறுபாடுகளோடு அறியும் ஆன்மசிற்சத்தி சவிகற்பக்காட்சியாம். (9) காட்சி முதலிய முவகைப் பிரமாணங்களின் பாகுபாடும், பிரமேயங்களின் பாகுபாடும்.
காட்சி, இந்திரியக்காட்சி, மானதக்காட்சி, தன்வேதனைக்காட்சி, யோகக்காட்சி என நான்குவகைப்படும். அநுமானம், தன் பொருட்டநுமானம், பிறர் பொருட்டநுமானம் என இருவகைப்படும். ஆகமம், தந்திரகலை, மந்திரகலை, உபதேசகலை என மூவகைப்படும். இப்பிரமாணங்களால் அறிப்படும் பொருள்கள் சிறப்பு, பொது என்னும் இருவகை இலக்கணங்களை உடையன. (10)
O2)

சிவஞானசித்தித் தெளிவு
சிறப்பியல்பு, பொதுவியல்புகளின் இலக்கணம். ஒரு பொருளுக்கு மாத்திரமே உரியதாய் நிற்கும் தன்மை சிறப்பியல்பாம். தன்சாதிப் பொருட்கு எல்லாம் ஒப்ப நிற்கும் தன்மை பொதுவியல்பாம். பிரமாணங்களாற் பிரமேயங்களை அறியும்போது அவைகள் இவ்விரண்டு இயல்புகளுள் ஒன்று பற்றி அறியப்படும். (11) இந்திரியக்காட்சி, மானதக்காட்சிகளின் இலக்கணம். ஞானேந்திரியம், பூதங்கள், தன்மாத்திரைகள் ஆகிய இவற்றைப் பொருந்தி சத்தாதிவிடயங்களை நிருவிகற்பமாய் அறியும் அறிவு இந்திரியக்காட்சியாம். சவிகற்பமாய் அறியும் அறிவு மாணதக்காட்சியாம். (12) தன்வேதனைக்காட்சி, யோகக்காட்சிகளின் இலக்கணம். இன்பத்துன்ப அநுபவங்களை அறியும் அறிவு தன் வேதனைக் காட்சியாம். மூவிடத்தும் முக்காலத்தும் உள்ள பொருள்கள் எல்லாவற்றையும் யோக சமாதியில் அறியும் அறிவு யோகக்காட்சியாம். (13) தன் பொருட்டதுமானம், பிறர் பொருட்டநுமானங்களின் இலக்கணம். மூன்று ஏதுக்களில் ஓர் ஏது உடைய பொருளைப் பக்கம் மூன்றிலும் வைத்து உணரும் உணர்ச்சி தன் பொருட்டநுமானமாம். அவ்வேது தலியவற்றாற் பிறர் அறியும்படி உரைக்கும் அறிவு பிற பொருட்டநுமானமாம். பிறர் அறியும்படி உரைக்கும் சொல் உடம்பாட்டுச்சொல, எதிர்மறைச்சொல் என இருவகைப்படும். (14) முவகைப் பக்கங்களின் இலக்கணம். பக்கம், சபக்கம், விபக்கம் எனப் பக்கம் மூன்றுவகைப்படும். அவற்றுள், கருத்தினாலே துணியப்படும் பொருள் இருக்குமிடம் பக்கம் எனப்படும். அதற்கு உதாரணமாய்க் காட்டப்படுவதாய்க் காட்சியினாலே துணிந்த பொருள் இருக்குமிடம் சபக்கம் எனப்படும். துணிந்த பொருள் இல்லாதவிடம் விபக்கம் எனப்படும். முன்னைய இரண்டும் பொருள் உண்மையைச் சாதிக்கும், பின்னையது ஒன்றும் அ.தில்லை என்று அறிதற்கு இடமாம். (15)

Page 15
சிவஞானசித்தித் தெளிவு 10.
11.
12.
13.
முவகை ஏதுக்களும், அவற்றின் இலக்கணமும், இயல்பேது, காரியவேது, அநுபலத்தியேது என ஏது மூன்றுவகைப்படும். மா என்னும் சொல்லில் இயல்பாயுள்ள ஆற்றல் மாமரமாகிய பொருளை உணர்த்துதல் இயல்பேதுவாம் புகையாகிய காரியம் நெருப்பாகிய காரணத்தை உணர்த்துதல் காரியவேதுவாம். குளிரின்மையாகிய காரியவின்மை பனியின்மையாகிய காரணவின்மையையும், பனியின்மையாகிய காரணவின்மை குளிர் வாராமையாகிய காரியவின்மையையும் உணர்த்துதல் அநுபலத்தியேதுவாம். (16) அந்துவய, வெதிரேகச் சொற்களின் இலக்கணம்.
அந்நுவயமாவது புகையுள்ள இடத்தில் அனலுண்டு, அடுக்களைபோல, எனச் சொல்லுதலாம் வெதிரேகச்சொல்லாவது நெருப்பில்லாதவிடத்துப் புகையில்லை, தடாகத்திற்போல, எனச் சொல்லுதலாம். இச் சொற்களைத் தார்க்கிகள் முதலியோர் பிரதிஞ்ஞையும் ஏதுவும், திருட்டாந்தமும், உபநயமும், நிகமனமும் என ஐந்து உறுப்புக்கள் கொண்டு தெளிவாகச் சொல்வர். (17) அநுமானத்தில் அடங்கும் பிற அளவைகளின் இலக்கணம். நாற்றமாகிய ஏதுவைக்கொண்டு பூவினை அறிவது போல்வது பூர்வக்காட்சிஅநுமானம். ஒருவன் சொல்லும் வார்த்தை கொண்டு அவன் அறிவின் அளவு உணர்தல்போல்வது கருதல்அநுமானம். இப்போது நிகழும் சுகதுக்கமோகங்கள் முற்பிறவியிற் செய்த கன்மங்களின் பயன் என்று ஆகமங்கள் சொல்லுதலால், இப்பிறவியிற் செய்யும் ஆகாமிய கன்மங்கள் காரணமாகச் சுகதுக்க மோகங்கள் மேலைக்கு வரும் என்று அநுமானித்தறிதல் போல்வது உரைஅநுமானமாம். (18) முவகை ஆகமப் பிரமாணங்களின் இலக்கணம்.
வேதாகமங்களின் கருமகாண்டத்திற் சொல்லப்படும் கிரியைகளை அநுட்டிக்கும் வகையைத் தெரிவது தந்திர உரை அளவையாம். உபாசனாகாண்டத்திற் சொல்லப்படும் கடவுள் வழிபாட்டைத் தெரிவது மந்திர உரை அளவையாம். ஞானகாண்டத்திற் சொல்லப்படும் பதி, பசு, பாசங்களின் இயல்பைத் தான் உணருமாறும் பிறர்க்கு உணர்த்துமாறும் தெரிவது உபதேச உரை அளவையாம். (19)
-C40

சிவஞானசித்தித் தெளிவு
14. அநுமானப்போலி.
அநுமான உறுப்பாகச் செறிந்த பக்கப்போலி நான்கு வகையாகும் ஏதுப் போலி மூவகைப்பட்டு விரியினால் இருபத்தொன்றாகும். ப்போலி பதினெட்டாகும் தோல்வித்தானம் இரு ப்பட்டு விரியினால் இருபத்திரண்டாகும். அளக்குமிடத்தில் அவைகள் எல்லாம் அறுபத்தைந்து ஆகும். (20) முதலாம் சூத்திரம் பதி உண்மையும் பதி இலக்கணமும் தொகுத்துக் கூறல் சேதன அசேதனப்பிரபஞ்சம் தோன்றி நின்று ஒடுங்குதலால், அதனைக் காரியப்படுத்தும் ஒரு கருத்தா வேண்டும். அக்கருத்தா நிமித்தகாரணனும் சங்காரகாரணனுமாய்ச், சத்தி வடிவம் பொருந்தி நின்று பிரபஞ்சத்தைக் காரியப்படுத்தும் இயல்புடையனாம். (21) முதலாம் அதிகரணம். பதிஉண்மை 1. உலோகாயதர் மதம் பற்றி ஆசங்கித்துச் சாதித்தமை.
(a). உலகம் தோற்ற நாசங்களை உடையது. தோன்றுதலும் அழிதலும் பிரத்தியட் சமாகக் காணப்படாமையால், உலகம் தோன்றி அழியும் என்பது பொருந்தாது என்பர் உலோகாயதர். பூதங்களும் இவற்றின்
காரியமான தேகாதிப் பிரபஞ்சமும் தோன்றி அழிதல் பிரத்தியசட்மாய்க் காணப்படுதலின், இப்பூதகாரியமான
உலகமும் தோற்ற நாசங்களை உடையதாம். (22) (b). தோற்ற நாசங்களைத்தரும் கருத்தா ஒருவன்
வேண்டப்படும்.
தோற்ற நாசங்கள் உலகிற்கு உண்டெனக் கொள்ளினும், அவை அவ்வுலகிற்கு இயல்பாய் உள்ளன என்னின், அத்தோற்ற நாசங்கள் விகாரமாதலின், அவற்றை இயல்பு என்றல் பொருந்தாது. பூதம் நான்கும் இயல்பாயுள்ளன. அவை தோற்றநாசங்களைச் செய்யும் என்னின், அவை செயப்படு பொருளாயும் சடப்பொருளாயும் இருத்தலால், அவற்றைத் தொழிற்படுத்தும் கருத்தா வேறுவேண்டப்படும். (23)

Page 16
சிவஞானசித்தித் தெளிவு
2.
பூதங்கள் நான்கும் வினைமுதற் பொருளாம். அவை பிரபஞ்சத்தைத் தோற்றுவித்து நிலை பெறுத்தி அழிக்கும். ஆதலால், இத்தோற்ற நாசங்களைச் செய்தற்கு இப்பூதங்களே அமையும். இவற்றின் வேறாய் ஒரு கருத்தா வேண்டுவதில்லை என்னின், இப்பூதங்கள் ஒவ்வொன்றும் தோன்றி நின்று அழிதலால், வினை முதற் பொருளாதல் கூடாது. ஆதலால், தோற்றநாசங்களைச் செய்யும் கருத்தா ஒருவன் இவற்றின் வேறாக வேண்டப்படும். (24) செளத்திராந்திகள் மதம் பற்றி ஆசங்கித்துச் சாதித்தமை. (a). இல்பொருள் தோன்றாது, உள்பொருள் தோன்றும். இல்பொருள் தோன்றாது. தூலருபமாய் வெளிப்பட்டு நிற்கும் பொருளுக்குத் தோற்றம் வேண்டுவதில்லை. ஆதலாற் சூக்குமரூபமாய் வெளிப்படாது அடங்கி இருக்கும் பொருளே தோன்றுவதாகும். (25) (b). உள்ளகாரியம் உள்ளகாரணத்தின் நின்றும் ஒரு
கருத்தாவினாலே தோன்றும். வெளிப்பட்டுத் தோன்றாது சத்திரூபமாய்த் தன்காரணத்தில் அடங்கி இருக்கும் காரியப்பொருள், பின்பு அக்காரணத்தின் நின்றும் சற் காரியமுறைப் படி ஒரு கருத்தாவால் வெளிப்பட்டுத்தோன்றும். (26) (c). ஒரு கருத்தா இன்றிக் காரியப்பொருள் தோன்றாது. காரியப்பொருள் காரணப்பொருள் போல உள் பொருளே அன்றி இல்பொருள் அன்று. ஒரு காரியப்பொருள் ஒரு கருத்தா இன்றித் தானே தோன்றித் தானே அழியும் என்னின், அங்ங்ணம் தோன்றுமாயின் அழியாது. அழியுமாயின் மீளத்தோன்றாது. ஆதலால் கருத்தா ஒருவன் வேண்டப்படும். இனி, காரியப்பொருள் அழியும், காரணம் அழியாதென்னின், காரணம் உள்பொருளாகவே அதனிடத்துச் சத்திருபமாய் அடங்கி இருக்கும் காரியமும் உள்பொருளாகும். (27)
மீமாஞ்சகர் மதம் பற்றி ஆசங்கித்துச் சாதித்தமை. (a). காயத்தைப்போல உலகமும் தோன்றி அழியும்.

சிவஞானசித்தித் தெளிவு
4.
மீமாஞ்சகள் காயமே தோன்றி அழியும் உலகம் தோன்றி அழியாது என்பர். உலகிற்கு முதற்காரணம் பஞ்சபூதங்கள் ஆதலானும், அப்பூதங்கள் தோன்றி அழிதலானும், உலகமும் காயம்போலத்தோன்றிநின்று அழியும் என்பது தானேபோதரும் (28) (b). ஒருகாலத்திலே தோன்றும் உலகம்,
பின்னொருகாலத்திலே முழுவதும் அழியும்.
உலகம் ஒருங்கே அழிவதில்லை. ஒருபக்கம் அழியினும் ஒருபக்கம் அழியாது நிற்கும் என்பது பொருந்தாது. கார்காலத்திலே தோன்றும் முளைகள் எல்லாம் வேனிற்காலத்திலே ஒருங்கே அழியும் தன்மைபோல, உலகமும் ஒருகாலத்திலே தோன்றிப் பின்னொருகாலத்திலே ஒருங்கே அழியும். (29). (c). தோற்ற நாசங்களுக்குக் காலம் துணைக்காரணம்.
நிமித்தகாரணன் வேறு வேண்டப்படும்.
உலகத்தோற்ற நாசங்களுக்குக் காலம் துணைக்காரணமாய் இருப்பினும், அது சடமாதலாலே தோற்றி ஒடுக்கும் நிமித்தகாரணன் வேறு வேண்டப்படும். (30) தார்க்கிகள் மதம் பற்றி ஆசங்கித்துச் சாதித்தமை. (a). அணுக்கள் உலகிற்கு முதற்காரணமாகா.
தார்க்கிகள் நித்தமாகிய அணுக்கள், கன்மம் காரணமாகப், பிரபஞ்சமாய்த் தோன்றி நின்று அழியும் என்பர். அவை இரண்டும் சடப்பொருள்கள் ஆதலாலும், பிரபஞ்சம் ஒடுங்கும்பொழுது அணுக்களும் ஒடுங்கும் ஆதலாலும் அவ்வணுக்கள் பிரபஞ்சமாய்த் தோன்றி நின்று அழிதல் கூடாதாம். (31) (b). மாயை உலகிற்கு முதற்காரணம்.
அணுக்கள் அழியிற் காரியமாகிய பிரபஞ்சம் இல்லையாய் முடியும் என்னின், மாயை காரணமாய் இருத்தலால், பிரபஞ்சம் இல் லையாக மாட்டாது. அணுவே காரணமாயப் க் காணப்படுவதன்றி மாயை முதற்காரணமாய்க் காணப்படுவது இல் லை எனின், அணுக் களிற் காரியத் தன்மை காணப்படுதலால், அவை காரணமாகமாட்டா. மாயையே காரணமாகும் என்பது அறியப்படும். (32)
-C7)-

Page 17
சிவஞானசித்தித் தெளிவு
(c). அணுக்கள் காரியப் பொருள்கள் ஆதலான்
முதற்காரணமாகா. அணுக்கள் அவயவம் உடைமையாற் காரியப் பொருளாம். காரியப்பொருள் அழியும் தன்மை உடையது ஆதலாற் காரணமாகாது. ஆதலால், அவயவம் உடைமையும் அழிவும் இல்லாத மாயையே முதற்காரணமாய்ப் பிரபஞ்சத்தைத் தோற்றுவிக்கும். (33) (d). மாயை முதற்காரணம் என்பதற்குப் பிரமாணம். உலகிற்கு முதற்காரணம் மாயை என்பதற்கு ஆகம அநுமானப் பிரமாணங்களும் சான்றாகும். (34) (e). முதற்காரணமாகிய மாயையில் இருந்து காரியமாகிய பிரபஞ்சம் சற்காரிய முறைப்படி தோன்றி ஒடுங்கும். மாயையின் நின்று பிரபஞ்சம் சற்காரிய முறைப்படி தோன்றி ஒடுங்கும். அது உதிர்ந்த இலைகள் சத்திருபமாய்ப் பூமியிற் கிடந்து பின் இலை முதலியனவாய் வருதல்போலாம். (35) (f). பிரபஞ்சம் நித்தப்பொருள். காரியமாகிய பிரபஞ்சமும் அதன் காரணமாகிய மாயையைப்போல உள்பொருளாய் இருத்தலின், அது நித்தப்பொருளேயாம். தோன்றி ஒடுங்கும் வேறுபாடுபற்றி அது அநித்தம் என்று சொல்லப்படினும், உண்மையிலே நித்தப்பொருளாம். (36) (g). பிரபஞ்சத்தின் தோற்ற ஒடுக்கங்கள் கருத்தாவினால்
ஆகும்.
பிரபஞ்சம் ஒரு சேதனனாற் செய்யப்படும் காரியமாய் இருத்தலாலும், புருடன் மாயாகாரியமான தனு கரணங்களைப் பெற்றாலன்றி அறியமாட்டான் ஆதலாலும், மாயை அறிவில்லாத சடப்பொருளாய் இருத்தலாலும், இவ்விரண்டிற்கும் வேறாய்ப் பிரபஞ்சத்தைத் தோற்றுவித்து நிலைபெறுத்தி ஒடுக்கும் கருத்தா ஒருவன் வேண்டப்படுவன். (37)

சிவஞானசித்தித் தெளிவு
(i)
3.
இரண்டாம் அதிகரணம். பதி பிரபஞ்சத்தைக் காரியப்பருத்தும் முறைமை. "தான் முதலாகி அநாதி முத்த சித்துரு மன்னிநின்று மருவிடும்" பிரபஞ்சத்தோற்றத்துக்குச் சிவபெருமான் நிமித்தகாரணன். பிரபஞ்சமாகிய காரியத்துக்கு வேண்டப்படும் காரணங்கள் முதற்காரணம, துணைக்காரணம், நிமித்தகாரணம் என மூன்றாம். அவற்றுள்ளே மாயை முதற்காரணமாம். சிவசத்தி துணைக்காரணமாம். சிவபெருமான் நிமித்தகாரணனாம்.(38) சிவபெருமான் பிரபஞ்சத்தைத் தோற்றுவிக்கும் முறைமை. பரமசிவனது அருளாலே சுத்தமாயையில் இருந்து சூக்குமைவாக்கு முதலிய சுத்தப் பிரபஞ்சமும் அசுத்தமாயையில் இருந்து அராகமாதி சுத்தா சுத்தப்பிரபஞ்சமும், பிரகிருதி மாயையில் இருந்து குணதத்துவம் முதலிய அசுத்தப் பிரபஞ்சமும் தோன்றும் (39) சுத்தப்பிரபஞ்சமாகிய வாக்குக்களும் அவற்றின் இயல்பும். (a). வைகரி வாக்கின் இலக்கணம்.
வைகரி வாக்கு மத்திமைத் தானத்திற் பிரிந்து தோன்றிய அக்கரங்கள் பிராண வாயுவினால் உந்தப்பட்டு எழுந்து புறத்திலே அடைவதாயும், சொல்லுவோன் தான் நினைத்த பொருளைச் சொல்லும் சொல்லாயும், தன்செவிக்கும் பிறர் செவிக்கும் கேட்கப்படுவதாயும், சவிகற்ப உணர்வு உண்டாதற்கு ஏதுவாயும் உள்ள இலக்கணங்களை உடையதாகும். (40) (b). மத்திமை வாக்கின் இலக்கணம். சூக்கும ரூபமாய்ப் பிரிந்து விளங்கும் அக்கரங்கள் ஆகியும், சொல்லுவான் தன்னுள்ளே உணர்வதாயும் தனக்குக் கேட்பதாயும் பிறர் செவிக்குக் கேட்கப்படாததாயும் கண்டத்திலே விளங்குவது மத்திமை வாக்காகும். (41) (c). பைசந்தி வாக்கின் இலக்கணம். பைசந்தி வாக்காவது, எழுத்துக்கள் பிரிந்து தோன்றாது மிகவும் சூக்கும ரூபமாய்ச் சிந்தையின்கண் நிற்கும் இயல்பினை உடையதாம். (42)
==C9E-ത്ത

Page 18
சிவஞானசித்தித் தெளிவு
(d), சூக்குமை வாக்கின் இலக்கணம். சூக்குமை வாக்கானது பரசரீரத்தின் உள்ளே ஞானவடிவாய் விளங்குதலும் ஆன்ம ஞானத்தை விளக்குதலுமாகிய இரண்டு இலக்கணங்களையும் உடையதாம். இவ்வாக்கின் தொழில் கெட்டு, ஆன்மா வாக்குக்கள் நான்கினுக்கும் வேறாகத் தன்னைக் காணுமாயின், அவ்வான்மாவுக்குப் பேரறிவும், ஆநந்தமும், சுதந்திரமும், நித்தியத்துவமும் உண்டாம். (43) (e). வாக்குக்கள் விருத்திப்படும் முறைமை.
வைகரி முதலிய நான்கு வாக்குக்களும் பஞ்ச கலைகளையும் பற்றுக்கோடாகச் சார்ந்து ஐவகையாக விருத்திப்படும். இவ்வாக்குக்கள் பிரமம் அன்று, சுத்தமாயாகாரியமாம்.(44)
(f). அபரமுத்தருக்கு வேண்டப்படும் சுத் தாத்து
வாக்களுக்கு வயிந்தவம் முதற்காரணம். வயிந்தவம் அபரமுத்தருக்கு வேண்டப்படும் சுத்தாத்துவாக்கள் எவற்றினுக்கும் முதற் காரணமாய் இருக்கும். (45) (g). வாக்குக்களால் உயிர்களுக்கு அறிவு உண்டாகும்.
சூக் குமை முதலிய நான்கு வாக்குக் களாலும் விஞ்ஞானாகலர் முதலிய மூவகை உயிர்களுக்கும் விடய ஞானம் உண்டாகும். இந்த ஞானம் நீங்க மெய்ஞ்ஞானம் வரின் முத்தி உண்டாகும். (46) 4. சுத்தாசுத்த அசுத்தப் பிரபஞ்சத்தின் இயல்பு.
அசுத்தமாயையின் நின்றும் தோன்றும் காரியப் பிரபஞ்சமெல்லாம் ஒன்றுக்கொன்று தூலமாய்த் தோன்றியும், ஒடுங்கியும் பரிணமித்துவரும். தோன்றிவருதலை நோக்குமிடத்து மாயைக்கும் அதன் காரியத்துக்கும் உள்ள சம்பந்தம் பேதாபேதமாம். ஒடுங்குதலை நோக்குமிடத்து அபேதமாம். பரமசிவன் அவற்றைக்காரியப்படுத்தும் பொழுது அபேதமாயும், பேதமாயும், பேதாபேதமாயும் நிற்பன். (47) அசுத்த மாயையின் நின்றும் பிரபஞ்சம் தோன்றாது என்னும் மதமும் மறுப்பும்.
மாயாவாதிகள் அருவமாகிய மாயை உருவமாகிய பிரபஞ்சத்தைத் தோற்றுவியாது எனவும், விகாரமில்லாத
—10-ത്തു

(ii)
சிவஞானசித்தித் தெளிவு
மாயையில் இருந்து விகாரமாகிய பிரபஞ்சம் தோன்றாது எனவும் ஆட்சேபிப்பர். அவர், அருவமும் அவிகாரியும் ஆகிய ஆகாயத்தில் இருந்து உருவமும் விகாரியும் ஆகிய வாயு முதலிய பூதங்களும் முகில்களும் முகிலிற் பல விகாரங்களும் பல ஓசைகளும் பிறவும் தோன்றும் என்பர் ஆகலால், இவ்வாறு கூறுதல் அவர் மதத்துக்கே விரோதமாய் முடியும் என்க. (48)
முதல்வன் சித்துரு மன்னிநின்று மருவிடும் முறைமையும், அதுபற்றித் தொடக்குறும் முறைமையும். تبر குயவன் திரிகையைப் பற்றிநின்று கடாதிகளைச் செய்வன். முதல்வன் சத்தியைப் பொருந்தி நின்று பிரபஞ்சத்தைத் தோற்றுவிப்பது எவ்வாறு? (49)
சிவசத்தி நிமித்தகாரணமும் காலம் துணைக் காரணமுமாகத் தம் முட் பிரிவினர் றி நின்று பிரபஞ்சத்தைக் காரியப்படுத்துதல்போல, முதல்வனும் தனது சத்தியும் ஆகிய இரண்டும் பிரிவின்றி நின்று அதனைக் காரியப்படுத்தும்.(50)
முதல்வன் சத்தி வடிவினனாய் நின்று பிரபஞ்சத்தைக் காரியப்படுத்தும் அவதரத்திலே தொடக்குறு வோன்ஆகியும், சத்தி வடிவம்பொருந்தாது சுத்த சிவமாய் இருக்கும் அவதரத்திலே தொடக்குறுதல் இலனாகியும் நிற்பன். (51)
"தான் ஈறுமாகி அநாதி முத்த சித்துரு மன்னி நின்று மருவிடும்" ஒடுங்கிய பிரபஞ்சத்தைச் சங்காரக்கடவுளே தோற்றுவிப்பன்.
உயிர்கள் சங்கார காரணன் இடத்திலே ஒடுங்கி மீளவும் தோன்றுதற்குக் காரணம் ஆணவமலமாம், அவை ஒடுங்கும் இடத்து அவற்றோடு கூடிய தனுவாதி காரியங்கள் அவற்றின் காரணமாகிய மாயையிலே ஒடுங்கும். முதல்வன் அவற்றை மீளவும் தோற்றுவிப்பன். (52)
முத்தொழிலும் செய்தல் பற்றி முதல்வன் விகாரி ஆகான்.
சூரியனது சந்நிதானத்திற் சூரியகாந்தக் கல்லில் இருந்து நெருப்புத்தோன்றலும், தாமரை மலர்தலும், நீர் வற்றலும் ஆகிய முத்தொழிலும் நடைபெறினும், அவற்றாற் சூரியன் விகாரம் எய்தாது நிற்றல்போல, முதல்வனது சந்நிதானத்திலே தோற்றம், நிலை, இறுதி என்னும் முத்தொழிலும் நடைபெறினும் அவற்றான் முதல்வன் விகாரம் எய்தாது நிற்பன். (53)

Page 19
சிவஞானசித்தித் தெளிவு 3.
முத்தொழிலும் செய்யும் உரிமை சங்காரகாரணனுக்கே 9-60Ludl.
பெளராணிகள் முதலியோர் முத்தொழில்களும் அயன், மால், அரன் என்னும் மூவருக்கும் உரியனவாய் இருக்க அரனுக்கே உரியன என வரைந்தெடுத்துச் சொல்வது எப்படி? என ஆசங்கிப்பர். அயன், மால் இருவரும் முன்செய்த புண்ணிய விசேடத்தால் அரனது அதிகாரசத்தியைப் பெற்றுத் தத்தம் தொழில் செய்பவரன்றி அத்தொழிற்கு அவர் சுதந்தரர் அல்லர். முத்தொழிலும் செய்யும் சுதந்தரம் அரனுக்கே உரியதாம். (54) சங்கார காலத்திலே சிவபெருமான் ஒருவரேயன்றி மற்றைய இருவரும் ஒடுங்காது தத்தம் ஆற்றலோடு நிலைபெறுவர் என்று சொல்லின், அது சங்காரம் ஆகாது. அவர் ஒடுங்குவர் ஆயின் பின் உலகம் தோன்றுதற்கும் நிலைபெறுதற்கும் வழியில்லை எனின், ஒடுக்கிய சங்காரக் கடவுளே ஆதாரமாய்நின்று பின்னும் உலகத்தைத் தோற்றுவித்து நிலைபெறச்செய்வர். (55) முத்தொழிலும் செய்தற்குக் காரணம். சங்காரக்கடவுள் இடத்திலே சிருட்டி முதலிய தொழில்கள் தோன்றற்குக் காரணம் உயிர்களுக்குப் போக முத்திகளைக் கொடுத்தலும், அவைகளை மலங்களில் நின்று நீக்குதலும் ஆகும். (56) ஐந்தொழிலும் அருட்செயல். ዷ அநுக்கிரகம் ஒழிந்த மற்றைய நான்கு தொழில்களும் துன்பம் கொடுப்பன ஆதலால், அவை மறத்தொழில்களாய் முடியும்போலும் எனின், ஒடுக்கம் இளைப்பாற்றலும், தோற்றம் மலபரிபாகம் வரச்செய்தலும், நிலை கன்மத்தை நுகள்வித்துக் கழிப்பித்தலும், மறைப்பு இருவினைஒப்புவருவித்தலும், அருள்முத்தி கொடுத்தலும் ஆகிய பயனை உடையன ஆதலால், ஐந்தொழிலும் அருட்செயலேயாம். (57)
=12>=

சிவஞானசித்தித் தெளிவு
(i)
பதி இலக்கணம் 'தான்" எனச் சுட்டிய முதல்வனது பொது இலக்கணம்.
முதல்வனது தடத்தவடிவம். (அருவம், அருவுருவம், உருவம்)
அருவம், அருவுருவம், உருவம் என்னும் மூன்றுவடிவங்களும் முதல்வனுக்குத் தடத்த வடிவங்களாம். (58) முதல்வனது உருவத்திருமேனியின் இயல்பும், உண்மையும். (a). உருவத்திருமேனி மாயாகாரிய வடிவம் அன்று,
அருள்வடிவம். A முதல்வனுக்கு உருவம் உண்டு என்னின், அவ்வுருவத்தை உண்டாக்க வேறொரு கடவுள் வேண்டும். தான் நினைந்த உருவம் கொள்வன் என்னின், நம்மனோரும் அப்படியே கொள்ளல்வேண்டும். அப்படியன்று; நாம் நினைந்த வடிவம் கொள்ளல் இயலாது. முதல்வன் யோகசித்தரைப்போலத் தான் நினைந்த உருவத்தை எடுத்துக் கொள்வன். (59) யோகசித்தர் விரும்பிய வடிவம்கொள்வதுபோல முதல்வனும் கொள்வன் ஆயின் முதல்வன் அந்த யோக சித்தரில் ஒருவனாய் முடிவன் எனின், அந்த யோகசித்தர் விரும்பிய வடிவம் கொள்வது முதல்வனது அருளாலேயாம், அன்றி அவ்வடிவங்களும் மாயா காரியங்களாம். (60) மாயாகாரிய வடிவங்களுக்குக் காரணம் ஆணவமலம் அது சிற்றறிவையும் சிறுதொழிலையும் உண்டாக்கும். உயிர்கள் ஆணவமலமும் சிற்றறிவும் சிறுதொழிலும் உடையன. ஆதலால் உயிர்களுக்கே மாயாகாரிய வடிவங்கள் பொருத்தம் உடையன. முதல்வன் நின்மலன். முற்றறிவும், முற்றுத்தொழிலும், முற்றுமுதன்மையும் உடையவன். ஆதலால், மலமில்லாத முதல்வனுக்கு மலம் காரணமான மாயாகாரியவடிவம் பொருந்தாது சத்திகாரியமான வடிவமே அவனுக்கு வடிவமாம் (61)
(b). உருவத்திருமேனி பற்றிவரும் ஆசங்கையைப்
பரிகரித்தல்.
ങ്ക13>ങ്ക

Page 20
சிவஞானசித்தித் தெளிவு
முதல்வனுக்குச் சத்தியே வடிவம் எனின் வடிவப்பொருள்கள் பரிணமித்து அழிவடைவன. ஆதலால், முதல்வனது வடிவம் உருவம் என்றல் கூடாது, அருவம் என்றலே பொருத்தம் உடையது எனின், பரிணமித்து அழிவெய்தல் ஆறு அத்துவாக்கள் உட்பட்ட பொருள்களின் இயல்பாம். முதல்வன் ஆறு அத்துவாக்களையும் கடந்த பொருள். ஆதலால் அக்குற்றம் அவனிடத்திற் செல்லாது. (62) உலகத்துப் பொருள்களுள் உருவமும், அருவமுமாய் இருக்கும். ஒன்று மற்றொன்றின் இயல்புடையது ஆகமாட்டாது. ஆதலால் முதல் வண் அருவப் பொருளே என்னின், அருவுருவமும் உருவமும் ஆகிய இயல்புடையவனாக மாட்டான் எனப்பட்டு உலகத்துப்பொருள்களுள் ஒருவனாய் முடிவன். (63) முதல்வன் பிரபஞ்சப் பொருள்களின் இயல்புடையன் அல்லன் ஆதலாலும், தோற்ற நாசங்கள் இலன் ஆதலாலும், அளந்தறியப்படாதவன் ஆதலாலும், இன்னவடிவினன் என்றும், இன்ன வடிவத்தைக் கொள்ளுவன் என்றும், இன்ன வடிவத்தைக் கொள்ளமாட்டான் என்றும் கூறுதல் அரிதாம். ஆதலால் முதல்வனது வடிவம் உருவம் அன்று, அருவமே என்றல் பொருந்தாது. (64) முதல்வன் அளவிலாற்றலும், முற்றறிவு முற்றுத்தொழில்களும், இயல்பாகவே பாசத்தின் நீங்கிய தன்மையும் உடையன் ஆதலால், தான் நினைந்ததொரு திருமேனியை எடுத்துக் கொள்ளும் இயல்புடையன். ஆதலால் அவனது திருமேனி உருவம் அன்று, அருவமே என்றல் பொருந்தாது. (65)
முதல்வன் உருவத்திருமேனி கொண்டு வேதாகமங்களை உபதேசித்திலனாயின், உயிர்கள் வீடுபேறு அடைதல் கூடாதாகும். அன்றியும் குரு பரம்பரையாக அவை உபதேசிக்கப்பட்டுவருதலும் இல்லையாகும். ஆதலால் முதல்வனது திருமேனி அருவமே என்றல் பொருந்தாது
ஆகும. (66) (c). உருவத்திருமேனியிலே தோன்றுவன யாவும்
அருள்வடிவம்.
C140

சிவஞானசித்தித் தெளிவு முதல்வனது திருவுரு அருள்வடிவம் ஆதலால், அவ்வுருவிலே தோன்றும் குணங்கள் கரணங்கள் தொழில்கள் பிரத்தியங்கசாங்கஉபாங்கங்கள் யாவும் அருள்வடிவேயாம். இவை எல்லாம் தன் பொருட்டாகாது, உயிர்களின்
பொருட்டாக முதல்வன் கொண்டனன். (67) (d). முதல்வன் உருவத்திருமேனிபற்றிச் சிந்திதன் ஆயினும்
அசிந்திதனே.
முதல்வன் சிந்திதனாயினும் அசிந்திதனே என்பதற்கு, வேதத்துள் விசுவாதிகன் என்றும், விசுவகாரணன் என்றும், விசுவாந்தரியாமி என்றும், விசுவரூபி என்றும் கூறப்படும் வாக்கியங்களே சான்றாகும். இ.தறியாதார் அம்முதல்வனை உலகத்தாருள் ஒருவன் என்பர். (68) முதல்வன் சிந்திதன் ஆயினும் அசிந்திதனே என்பதற்குப், பிரமா முதலிய மும் மூர்த்திகளாயப் நிற்பன் என்றும் , அர்த்தநாரீச்சுரவடிவம் கொள்ளுவன் என்றும், அயன், மால் அறிய ஒண்ணா அழல் வடிவானான் என்றும் , இலிங்கத்திருமேனியின் நின்றும் சகல பிரபஞ்சமும் தோன்றும் என்றும் கூறும் புராண வசனங்களே சான்றாம் இட்து அறியாதார் அம்முதல்வனை மும்மூர்த்திகளில் ஒருவன் என்பர். (69) (e). முதல்வன் உருவத்திருமேனி கொள்ளுதற்குக் காரணம்.
முதல்வன் கொண்ட திருமேனிகளிற் சில திருமேனி போக வடிவமும், சில திருமேனி கோர வடிவமும், சில திருமேனி யோக வடிவமுமாகக் கொண்டது முறையே உயிர்களுக்குப் போகம் புரிதற்பொருட்டும், வினையினைக் கெடுத்தற்பொருட்டும், யோகமுத்தி உதவுதற் பொருட்டுமாம். (70) முதல்வன் உருவடிவம் கொள்ளுதல் உயிர்களுக்கு அநுக்கிரகம் செய்யும்பொருட்டாம். அவ்வடிவங்கள் தம்முள்ளே மாறுபட்ட வடிவங்களாய் இருத்தலால் அவன் அசிந்திதன் என்பதும் பெறப்படும். (71)
(t). முதல்வன் உருவத்திருமேனி கொள்ளுதல் அருள்புரிதல்
காரணம் என்பதனை விளக்கல்.
உமாதேவியார் பரமசிவனது திருக்கண்களைப் புதைத்தபோது
உலகமெங்கும் இருள் மூடியது என்றும், நெற்றிக்கண்ணைக்

Page 21
சிவஞானசித்தித் தெளிவு
கொண்டு உலகிற்கு ஒளி கொடுத்தார் என்றும் கூறும் புராணவசனம், முதல்வன் வடிவங்கொள்ளுதல் உயிர்களுக்கு அருள் புரிதற் பொருட்டாம் என்பதை விளக்கும். (72)
முதல்வன் யோக வடிவினனாய் இருந்தபொழுது தேவர்கள் முதலாயினோர் காமவேட்கை இன்றித் துன்புற்றார் என்றும், பின்பு உமாதேவியாரைக் கலந்து போக வடிவினனாய் அவர்கள் துன்பத்தை நீக்கினான் என்றும் கூறப்படும் புராணவசனம், முதல்வன் வடிவம் கொள்ளுதல் அருள் புரிதல் காரணமாக என்பதை விளக்கும். (73) (g). உருவத்திருமேனி இன்றியமையாதது.
படைப்பு முதலிய பஞ்சகிருத்தியங்கள் செய்தற்பொருட்டும், பத்தர் தியானபாவனை செய்தற்பொருட்டும், வேதாகமங்களின் பொருளை உணர்த்தற்பொருட்டும், ஆன்மாக்களுக்குப் போகத்தைக் கொடுத்துப் பாசத்தைக் கெடுத்து முத்தியை அளித்தற் பொருட்டும், முதல்வன் உருவத்திருமேனி கொள்ள வேண்டியது இன்றியமையாததாம். (74)
முதல்வனது அருவத்திருமேனி, அருவுருவத் திருமேனிகளின் உண்மையும், இயல்பும். உருவத்திருமேனி உளதாகவே, அருவத்திருமேனியும் அருவுருவத்திருமேனியும் உண்டென்பதும், அவையும் அருள்வடிவே என்பதும் அறியப்படும். (75) முதல்வனது உபசாரத்திருமேனி
(a). egg,6JT 6, 196Jch. வேதாகமங்களிலே அத்துவாக்கள் ஆறும் முதல்வனுக்கு வடிவம் என்றது என்னை எனின் அவனுடைய திரோதானசத்தி அவற்றோடு கலந்து எல்லாம் ஆகியும், பொருட்டன்மையால் வேறாகியும், செலுத்துதலால் உடன் ஆகியும் நிற்றலால் அச்சத்திக்கு அவற்றோடு உள்ள சம்பந்தம் நோக்கி உபசாரமாகக் கூறப்படுவதாம். (76) (b). மந்திர வடிவம். சிவசத்தி சேர்ந்து நிற்கும் சுத்த மாயையிலே தோன்றிய காரணத்தாலும், சிவசத்தியால் அதிட்டிக்கப்பட்டுச் சாதகருக்குப் போக மோசஷங்கள் கொடுத்தலாலும், மந்திரங்கள் முதல்வனுக்கு வடிவம் என்று வேதாகமங்கள் கூறும்.(77, 78)
C10- a i

(ii)
சிவஞானசித்தித் தெளிவு (c). பஞ்சப்பிரம மந்திர வடிவம். ஈசானம் முதலிய பஞ்ச மந்திரங்களும் ஏனைய மந்திரங்களுக்கு எல்லாம் முன்னர்த் தோன்றின ஆதலாலும், அவற்றிற்குக் காரணமாய் இருத்தலாலும், அவை முதல்வனுக்கு வடிவமாகக் கூறப்பட்டன. (79) (d). பிரமன் முதலிய மும்மூர்த்திகளின் வடிவங்களை
முதல்வனது வடிவங்கள் என்பது உபசாரம்.
பிரம விட்டுணு உருத்திரர்கள் இடத்து முதல்வனது சத்திகள் பதிந்து நின்று செலுத்துதலால் அவர் உருவங்கள் முதல்வன் உருவோடு ஒப்பவைத்துக் கூறப்படும். அவ்வாறு சத்திகளாற் செலுத்தப்படாது பிரமன் முதலியோரே படைப்பாதி தொழில்களைச் செய்வர் என்று சொல்லின், முதல்வன் வேண்டுவதில்லை. ஆதலால் முதல்வனே ஐந்தொழிலும் செய்வன். அவனது சத்திகளால் அதிட்டிக்கப்பட்டுப் பிரமன் முதலியோர் ஒவ்வொரு தொழிலைச் செய்வர். (80) அநாதி முத்த சித்தாகிய சத்தியினது இலக்கணம். சத்தி ஒன்று, தொழில் வேறுபாட்டாற் பல. அரசன் சத்தி ஒன்றே மந்திரி முதலாயினோர் இடத்து நின்று செயப் யும் தொழில் வேறுபாட்டாற் LU 6M) வேறுவகைப்பட்டாற்போல, சிவசத்தி ஒன்றே அயன் முதலாயினோர் இடத்து நின்று செய்யும் தொழில் வேறுபாட்டாற், செநநி முதலியனவாய்ப் பல வேறுவகைப்படும். அச்சத்தி முதல்வனோடு பிரிவின்றி நின்று அம்முதல்வன் நினைந்தபடி போக மோட்சங்களைக் கொடுக்கும். (81)
சத்தியின் வடிவம்.
சிவசத்தியின் சொரூபம் சுத்தஞானமாம். அதுவே பராசத்தி எனப்படும். அச்சத்தியே கிரியாசத்தி முதலிய சத்திகள் அனைத்தையும் காரியப்படுத்தும். (82)
சத்தி பேதங்களும், அவற்றின் தொழிலும்.
பராசத்தியானது பொதுவகையால் ஒன்றாய், இச்சை, ஞானம், கிரியை என்னும் வியாபார பேதத்தால் மூவகைப்படும். உயிர் களுக்கு மலத்தை நீக்கிச் சிவத்தை அளிக்கும்பொருட்டுப் பரமசிவன் கொண்ட கருணை
- 17

Page 22
சிவஞானசித்தித் தெளிவு
இச்சாசத்தியும், அதற்குச் செய்யவேண்டிய உபாயங்களை அறியும் அறிவு ஞானசத்தியும். அவ்வுபாயங்களைச் சங்கற்பித்துச் செய்யும் சங்கற்பம் கிரியாசத்தியுமாம். (83)
சிவசமவாதிகள் ஆசங்கையும், மறுப்பும்.
இச்சாஞானக்கிரியைகள் முதல்வனுக்கு இருத்தல்போல உயிர்களுக்கும் இருத்தலால், உயிர்களும் முதல்வனுக்குச் சமமா வர் போலும் எனின், உயிர்கள் உடைய இச்சாஞானக்கிரியைகள் கேவலத்திலே மூலமலத்தாலே மறைக்கப்படுதற்குரிய தன்மையும், சகலத்திற் கன்மத்துக்கேற்ப அவை ஏகதேசமாய் விளங்கப்பெற்றுக் கன்மப்பயனை ஏகதேசமாய் அறிந்து அநுபவிக்கும் தன்மையும், சுத்தத்திலே வியாபக அறிவைப்பெற்று முத்திப்பயனை அனுபவிக்குந் தன்மையும் உடையன ஆதலால், இத்தன்மைகள் இல்லாத முதல்வனது இச்சாஞானக்கிரியைகளோடு இவற்றுக்கு வேற்றுமை பெரிதாம். ஆதலால் உயிர்கள் சிவனுக்குச் &LDLDITELDITILT. (84)
(ii) சித்துருவாகிய சத்தி வடிவத்தின் இலக்கணமும், அதனால்
1.
Siim Jus)b.
முதல்வனது சத்திகாரியவடிவங்கள் இலயம், போகம், அதிகாரம்.
சங்காரகாரணன் ஆகிய முதல்வன் சத்தி வியாபாரத்தாற் சிவன், சத்தி, சதாசிவன், மகேசுவரன், சுத்தவித்தை என ஐவகைப்பட்டு இலயம், போகம், அதிகாரம் என்னும் அவத்தைகளையும், அவ்வவத்தைகளுக்கு ஆதாரமாகச் சுத்ததத்துவங்களையும் உடையவன் ஆவன். (85) முதல்வனுக்குச் சுத்ததத்துவங்கள் சுதந்திரவடிவம்.
சுத்ததத்துவங்கள் ஐந்தும் முதல்வனுக்குச் சுதந்திரவடிவமாம். அவை அநாதியாய் அழிவற்று நிற்பனவாம். காலதத்துவத்தைக் கடந்து நிற்பன ஆதலால், அவை தோன்றும் முறைமை கூறப்படுவது அன்றாயினும், முன்பின்னாக நிகழும் சத்திகளின் வியாபாரபேதம்பற்றி அவற்றிற்குத் தோற்றம் கூறப்படும். (86) முதல்வன் பேதவடிவங்கள் எய்துதல்பற்றி விகாரி ஆகான். முதல்வனாற்கொள்ளப்படும் பேதவடிவெல்லாம் சத்தியிற் காணப்படும். அதுபற்றி அம்முதல்வன் விகாரி ஆகான்.(87)

சிவஞானசித்தித் தெளிவு
4. முதல்வன் பேதவடிவங்கள் எய்துதல் பற்றி விகாரி ஆகான்
என்பதனை உவமைமுகத்தால் விளக்கல்.
பளிங்கானது பொன்மை நீலம் முதலிய நிறங்களைப் பொருந்திய இடத்து அவ்வந் நிறங்களின் தன்மையாய்த் தோன்றினும் தான்வேற்றுமை இன்றி நிற்பது போல, முதல்வனும் சத்தியின் உடைய பேதங்கள் எல்லாவற்றையும் பொருந்திய இடத்து அவ்வச்சத்தியின் தன்மையாய்த் தோன்றினும் தான் வேற்றுமை இன்றியே நிற்பன். அப்போதமெல்லாம் அருட்சத்தியின் இடமாகத் தோன்றுவனவே அன்றி முதல்வன் இடத்துத் தோன்றுவன அன்று. (88) 5. முதல்வன் சத்திவடிவம் எய்துதலால் உண்டாய பயன்.
சத்தி சிவம் என இருதன்மையால் இருத்தலால் அன்றே உலகம் முழுவதும் ஆண் பெண் என இருவகையாயும் குணம் குணிப் பொருள்களாயும் விளங்கவைத்தனன். இங்கே சொல்லிய வாழ்வுகள் எல்லாம் சிவசத்தியால் வந்தனவேயாம். சிவமும் சத்தியும் கொண்டருளிய பீட லிங்க வடிவமே அவ்வாறு இருவகையாய் இருப்பது என்பதற்குப் பிரதியட்சமான சாட்சியாம். (89)
(iv) 'தான்" எனச் சுட்டிய முதல்வனது சிறப்பிலக்கணம்.
முதல்வனது சிறப்பிலக்கணம். முதல்வன் மேற்கூறிய தடத்த இலக்கணங்களை உடையன்
ஆயினும், இவை ஒன்றும் இல்லாத சுத்த சைதன்னிய சொரூப இலக்கணத்தை உடையனாம். (90)
இரண்டாம் சூத்திரம்
முதல்வன் பசு, பாசங்களோடு அத்துவிதமாய்க் கலந்து நின்று அவற்றை நடத்தும் முறைமை தொகுத்துக்கூறல். முதல்வன் உலகு உயிர்களோடு கலப்பினால் ஒன்றாயும், பொருட்டன்மையால் அவற்றின் வேறாயும், செலுத்தும் தன்மையால் அவற்றோடு உடனாயும் நிற்பன். எவ்வாறு எனின் சத்தி வடிவாய் வியாபரித்துச் சேதனப் பிரபஞ்சமாகிய உயிர்களோடு ஒன்றாயும் உடனாயும் நின்று அவரவர் கண்மத்துக்கேற்பத் தனு கரணாதிகளைக் கொடுத்து
C19)-

Page 23
சிவஞானசித்தித் தெளிவு
வினைப்பயனை நுகர்வித்தும், அசேதனப் பிரபஞ்சமாகிய தனு கரணாதிகளோடு அத்துவிதமாய்க் கலந்து பிரிவின்றியும் நிற்பன். இவ்வாறாயினும், இவற்றிற்கு வேறுமாய்த் தோய்வின்றி நிற்கும் நின்மலனாம். (91)
முதலாம் அதிகரணம்.
முதல்வன் உலகுயிர்களோடு ஒன்றாயும், வேறாயும், உடனாயும் நிற்கும் முறைமையை உவமை முகத்தால் விளக்கல். பதி ஒன்று. ஆன்மாக்கள் பல. அகர உயிர் உயிரெழுத்து மெய்யெழுத்துக்களோடு நிற்றல்போல, முதல்வனும் இவ் வான்மாக்களாகிய சேதனப் பிரபஞ்சத்தோடும் அசேதனப்பிரபஞ்சத்தோடும் ஒன்றாயும் வேறாயும் உடனாயும் நிற்பன். (92) முதல்வன் உயிர்களோடு ஒன்றாயும், வேறாயும், உடனாயும் (அபேதமாயும், பேதமாயும், பேதாபேதமாயும்) நிற்கும் முறைமையை உவமை முகத்தால் விளக்கல். முதல்வன் உயிரும் உடலும்போல உயிர்களோடு ஒன்றாயும் வேறாயும் உடனாயும் நின்று அவற்றைச் செலுத்துவன். (93)
இரண்டாம் அதிகரணம்.
இருவினைப் பயனை உயிர்கள் நுகரும் முறைமை தொகுத்துக் கூறல்.
முற்பிறவிகளிற் செய்யப்பட்டுக் கிடந்த புண்ணிய பாவங்களின் பயனாகிய இன்பத்துன்பங்களை நுகரும் பொருட்டு மேற்கூறப்பட்ட உயிர்கள் இப்பூமியிற் பிறந்து இறந்து மீண்டும் பூமிக்கு வருதலும் சுவர்க்க நரகங்களுக்குச் செல்லுதலும் உடையவாய் இருக்கும். அவ்வாறு நிலைபெற்றுள்ள புண்ணிய பாவங்களின் பயன்களை மருத்துவனும் அரசனும் போல முதல்வன் தனது ஆணையாற் கூட்டுவன். இவ்வாறு அன்றி புண்ணிய பாவங்களின் பயனும் அதனை அனுபவித்தற்கு வேண்டப்படும் உடலும் தாமாக மறுபிறவிகளில் வந்து உயிர்களைப் பொருந்தா. (94)

சிவஞானசித்தித் தெளிவு
(i) 1@56Īoor diMoD.
1.
(ii)
1.
இன்பத்துன்பங்கள் இயல்பாகா, அவற்றிற்குக் காரணம் இருவினை.
உலோகாயதர் நீரின் இடத்துப் பூவுந் தீயும் பொருந்துதலால் வாசனையும் சூடும் இயல்பாய் உண்டாவதுபோல, உடலுக்கு இன்பத்துன்பங்கள் இயல்பாய் உள்ளன. அவற்றிற்குக் காரணம் இருவினை அன்று என்பர். பூவுந் தீயும் பொருந்துதல் காரணமாக வாசமும் சூடும் நீரைப் பெருந்துதல்போல, புண்ணிய பாவங்களாகிய இருவினை பொருந்துதல் காரணமாக இன்பத்துன்பங்கள் உயிரைப் பொருந்தும். ஆதலால் அவர்கூற்றுப் பொருந்தாது. (95, 96) இன்பத்துன்பங்களுக்குக் காரணம் இருவினை, முயற்சி அன்று. உலோகாயதர், இன்பத்துன்பங்களுக்குக் காரணம் இருவினை அன்று, முயற்சியாம். முயற்சி உள்ளவர் பொருள் சம்பாதித்து இன்பம் அநுபவிப்பர். முயற்சி இல்லாதவர் பொருள் சம்பாதித்தலுமின்றித் துன்பத்தை அனுபவிப்பர். இருவினை காரணமாயின் முயற்சி இன்றியும் பொருள்வந்து சேரவேண்டும் என்பர். மறுப்பு இம்மையிலே பொருளை ஈட்டி இன்பத்தை அனுபவிக்க விரும்பி இடையறாது முயற்சி செய்யும் பொழுது தளர்வுண்டாகின்றது. தளர்வின்றி முயற்சி செய்யும் பொழுதும் பொருள் வராமற் போகின்றது. அதனாலே துன்பமும் வருகின்றது. ஒரு முயற்சி இன்றியும் செல்வராதல் காணப்படுகின்றது. இங்ங்னம் முயற்சி காரணம் என்பது மாறுபடலால், மாறுபடாத காரணம் வேறு உண்டென்பது பெறப்படும். அதுவே இருவினையாம். (97, 98) இருவினைப் பயனை உயிர்கள் நுகரும் முறைமை.
இன்பத்துன்பத்து இவ்வுயிர் பிறந்துஇறந்து வருவதாகும். (a). உயிர்கள் வினைப்பயனை அநுபவிப்பதற்குப் பிறந்து
இறந்துவரும்.
பேறு இழவு முதலிய ஆறும் பிறக்குமுன் கருவிலே அமைக்கப்பட்டு பிறந்தபின் அநுபவத்துக்கு வரும். இவற்றிற்குக் காரணம் முற்பிறவியிற் செய்தவினையாம். இப்பிறப்பிற் செய்யும்வினை மறுபிறப்பை உண்டாக்கிப் பேறு இழவு முதலிய பயனைத்தரும். (99)

Page 24
சிவஞானசித்தித் தெளிவு
(b). உடலும் கன்மமும் பிரவாகாநாதி.
உடலும் வினையும், வித்தும் மரமும் போலக் காரணகாரிமாய்த் தொன்றுதொட்டுப் பிரவாகாநாதியாய் வரும். (100) (c). இருவினை விளையும் முறைமை. இப்பிறவியிற் செய்யப்படும் இருவினைகள் மறுபிறப்பில் அவற்றின் பயனைத்தருவதாயும், அப்பயனை அனுபவிக்கும் இடத்துச் செய்யப்படும் நல்வினை தீவினைகளாயும் விளையும். (101) (d). இருவினை விளையும் முறைமையை உவமை முகத்தால்
விளக்கல்.
உணவின் பொருட்டு விளைந்த தானியம் முதலியவை பின்பு உணவுமாய் வித்துமாய் பிரயோசனப் படுதல்போல, நாம் என்னும் முனைட்போடு செய்யப்படும் இதமகிதங்கள், புண்ணிய பாவங்களாய் விளைந்து பின்னர் இன்பத்துன்பப்பயன்களைத்தருவதாயும், அவற்றை அனுபவிக்கும் இடத்து உண்டாகும் is a காரணமாயும் இருக்கும் (102) மன்னிய வினைப் பயன்கள் அரன் தரும். வடிவும் கன்மப்பலன்களும் மறுமைக்கண் தாமே மருவிடா. (a). வினைப்பயனை முதல்வனே தருவன்.
* இரு வினைகளையும் ஏற்றுப் பயன்கொடுப்பவன் முதல்வனே. உயிர்களுக்கு நன்மை செய்தல் இதம் தீமை செய்தல் அகிதம் அவ்விரண்டினையும் அறியவல்ல முதல்வனே அவற்றிற்கேற்ப இன்பத்துன்பங்களாகிய பயனைத் தருவன். (103) * இருவினைகளையும் ஏற்றற்குக் காரணம் கருணை. அவற்றின்
பயன் அநுக்கிரக நிக்கிரகங்கள். முதல்வன் இதமகிதங்களை ஏற்றுக் கொள்ளுதற்குக் காரணம் உயிர்கள் முத்தியடைதற்பொருட்டு அவர்கள்மேல்வைத்த கருணையாம. இதம் செய்வோருக்கு அநுக்கிரகத்தையும் அகிதம் செய்வோருக்கு நிக்கிரகத்தையும் செய்வன். (104)
* அநுக்கிரக நிக்கிரகங்கள் இரண்டும் கருணையே. அகிதம் செய்தாரைக் கண்டித்தல் நல்வழிப்படுத்தற்பொருட்டே ஆகலின், அதுவும் முதல்வனது கருணையேயாம். (105)
-C22)

சிவஞானசித்தித் தெளிவு
* நிக்கிரகமும் கருணை என்பதை உவமை முகத்தால் விளக்கல். தந்தை தாயர் தம்சொல்லின்வழி ஒழுகாத புதல்வரைக் கண்டித்தல் போல, முதல்வன் நிக்கிரகம் செய்தல் செயல் வகையால் வெகுளிபோலத் தோன்றினும் கருத்துவகையால் அருளேயாம். (106)
女 வினையே பயன் தரும் என்பதை மறுத்தல்.
மீமாஞ்சகள் வினைகளே தத்தம் பயனைத் தரவல்லன. அதற்கு முதல்வன் வேண்டியதில்லை என்பர். செய்தவினை அப்பொழுதே கெட்டொழிதலால் பின்நின்று பயன் தரும் என்பது பொருந்தாது. இன்னும் அவர் வயலில் இட்ட தழைகள் கெட்டுப் பின் பயன் தருமாறு போல, அவ்வினைகளும் கெட்டே பயன்தரும் என்பர். (107) வினை, கெட்டுப் பயன் தரும் என்பதை மறுத்தல். ஒருவனுக்கு இட்ட அன்னம் உண்டவன் வயிற்றிலே அழியப்பெற்றால், அதனால் அன்னம் உண்டவனுக்கே அன்றி இட்டவனுக்கு ஒரு பயனும் இன்மையால், வினை கெட்டுப்பயன் தரும் என்பது, எவ்விடத்தும் பொருந்தாது. (108) * வினை, கெட்டு மறுமையிற் பயன்தரும் என்பதை மறுத்தல். நீரில் இட்ட திலதானம் முதலியன இம்மையிலே கெட்டொழிதலால், வினை கெட்டு மறுமையிலே தானாகப் பயன்தரும் என்பது பொருந்தாது. (109) * வினை, செய்தவர் புத்தியிலே கிடந்து பயன் தரும் என்பதை
மறுத்தல்.
வினைக்குப் பயனாவன சுவர்க்கம், நரகம், பூமி என்பவற்றில் உள்ள பல வேறுவகைப் போகங்களாம். இவை எல்லாம் புத்தியிற் கிடந்து தோன்றுமென்றல் சொன்மாத்திரமாய் முடியும் அன்றிப் பொருளாக மாட்டாது. (110) * வினைப்பயன் தருபவன் முதல்வனே என்பதை வலியுறுத்தல். தானம் செய்யப்படும் பொருள்களும் அப்பொருள்களை ஏற்பவரும் அத்தானத்தைச் செய்பவரும், தானமாகிய அந்த நற்கருமமும் பின்னர் அழிந்து போகக்காணப்படுதலின், அங்ங்ணம் அழிவின்றி Tன்று இவற்றின் பயனை அளிக்கும் ஒரு முதல்வன்

Page 25
சிவஞானசித்தித் தெளிவு
வேண்டப்படும். தானம் முதலிய கருமங்கள் முதல்வனால் விதிக்கப்பட்ட விதிகளாம். இவற்றை நாம் செய்யும் இடத்து அவற்றாலாய புண்ணிய பாவங்களை அறிந்து அப்புண்ணிய பாவங்களின் பயனை முதல்வனே தருவன். (111)
(b). வினைப்பயன்களையும், தனுகரனாதிகளையும் முதல்வன்
தனது ஆணையால் உயிர்களுக்கு அணைப்பன்.
வினைப்பயன்களையும், தனுகரனாதிகளையும் முதல்வன்
தனது ஆணையால் உயிர்களுக்குக் கூட்டுவன். (112)
(c). ஈனமில் செய்தி ஈசனிடும் பணியாமாறும், இவை நாம் செய்தால் நூனங்களதிகம் நோக்கி நுகர்விக்கு மாறும்.
* இயமநியமங்கள் புண்ணிய கருமம். அவற்றின் பயன்
முதல்வனே தருவன்.
ஒழுக்கம் முதலிய நன்மைகளை ஒருவன் அநுட்டித்துவரின் முதல்வன் அவற்றைத் தன் பணியாக ஏற்றுப் பயன் அளிப்பன். (113)
* இச்சித்த தெய்வ வழிபாடு புண்ணியகருமம். அதன் பயன்
முதல்வனே தருவன். பாவத்தை ஒழித்துப் புண்ணியத்தைச் செய்யும் ஒருவன் தான் விரும்பிய ஒரு தெய்வத்தை வழிபட்டு வாழும் செயலை உடையவன் ஆயின், சிவபெருமான் அத்தெய்வத்தின் இடமாக நின்று அச்செயலை ஏற்றுப் பயன் அளிப்பன். (114) * எத்தெய்வத்தை வழிபடினும் முதல்வனே பயன் கொடுப்பன்
என்பதற்கு ஏது. ஏனைத் தேவர்கள் வினை வயப்பட்டுப் பிறந்துஇறக்கும் உயிர் இயல்புடையோர். அவர் உயிர்கள் செய்யும் வழிபாட்டை ஏற்றுப் பயன் அளிக்க வல்லவர் ஆகார். சிவபெருமான் ஒருவரே வினைவயத்தர் ஆதலின்றி அவ்வத் தேவர்கள் இடமாக நின்று உயிர்கள் செய்யும் வழிபாட்டை ஏற்றுப் பயனளிக்க வல்லவர் ஆவர். (115)
* எத்தெய்வத்தை வழிபடினும் முதல்வனே பயன் கொடுப்பன் என்பதனை உவமை முகத்தால் விளக்கி வலியுறுத்தல்.
-G20

சிவஞானசித்தித் தெளிவு
தெய்வங்கள் எல்லாம் சிவபெருமானது சத்தியால் அதிட்டிக்கப்பட்டு நிற்பவர் ஆதலால், அவைகள் இடத்து நாம் செய்யும் வழிபாடுகளுக்குச் சிவபெருமானே தனது சத்திவழியாகப் பயன் கொடுப்பன். (116)
★ சிவனை வழிபடல் மேலான புண்ணியம்.
மற்றைக்கடவுளர் இடத்துச் செய்யும் வழிபாடுகளையும் ஏற்றுப் பயன் அளிப்பவர் சிவபெருமானே ஆதலால், அவரை வழிபடுதலே விசேட புண்ணியமாம். ஆதலால் அவர் திருவடிப் பூசையே செய்யத்தக்கதாம், (117)
* சிவனை வழிபடும் முறைமை,
முதல்வன் புறத்தே சிவலிங்கமாகிய திருமேனியும் சிவனடியாரும் ஆதாரமாகக் கொண்டு நின்றும், அகத்தே உயிரிடமாகக் கொண்டு நின்றும் இங்குள்ளவர் செய்யும் பூசை கொணர் டு அருளுவன் ஆதலால் , அவனை அவ்விடங்களில் வழிபடுக. (118)
* சிவனடிக்கு அன்பு செய்கை மாண்பு அறம் என்பதனை
உவமைமுகத்தால் விளக்கல்.
புண்ணிய பாவங்கள் பயன் தருவது செய்பவர் அல்லது செய்த வினைகளின் வன்மை மென்மை பற்றி அன்று. கொள்பவரது வன்மை மென்மை பற்றியேயாம். அதற்குத் தக்கனும் சண்டீசநாயனாருமே சான்றாவர். ஆதலால், சிவபிரானுடைய திருவடிப் பூசையே அன் போடும் செய்யற்பாலது. (119) தரணியொடு தராபதி போலத் தரும். (a) முதல்வன் வினைப்பயனைத் தராபதிபோலத் தருவன். * உயிர்கள் யாவுக்கும் இன்பத்துன்பங்கள் முதல்வன்
ஆணையால் அணையும்.
வேதாகமங்கள் முதல்வன் அருளிய வாக்குக்கள். அவ்வாக்குக்களின்படி ஒழுகாதார் தண்டிக்கப்படும் சிறைச்சாலைகள் நரகங்களாம். அவற்றின்படி ஒழுகுவோர் சுகம் பெற்று வாழ்கின்ற இடம் சுவர்க்கம் முதலிய மேல் உலகங்களாம். இச்சுவர்க்க நரகவாசிகளுக்கே அன்றி எல்லா
=625)=

Page 26
சிவஞானசித்தித் தெளிவு
உயிர்களுக்கும் இன்பத்துன்பங்கள் முதல்வன் ஆணையாற் பொருந்துவனவாம். (120)
* உயிர்கள் யாவுக்கும் இன்பத்துன்பங்கள் முதல்வன் ஆணையால் அணையும் என்பதனை உவமை முகத்தால் விளக்கல்.
கட்டளைப்படி நடவாதவரை அரசன் தனது அதிகார சத்தியினாலே தண்டிப்பன் கட்டளைப்படி நடப்போரை அவ்வதிகாரசத்தியினாலே வாழ்விப்பன். இராட்சியம் எங்கும் இவ்வதிகாரசத்தியினால் யாவரையும் வாழ்வித்தலும் தண்டித்தலும் செய்வன் முதல்வனும் அதுபோலவே செய்வன். (121) * அரசன் செயலும் முதல்வன் ஆணைவழிப்பட்டது.
இப்பூமிலே செய்யும் பெரிய பாவங்கள் அரசதண்டனையினால் ஒழிதலாலும், பின்பு அப்பாவங்களுக்கு நரகதண்டனை இல்லாமையாலும், நரகதண்டனையும் அரசதண்டனையைப் போன்று இருத்தலாலும் அரசன் செய்யும் தண்டனையும் முதல்வன் அருள்வழி நின்று செய்வதாம். (122)
(b). முதல்வன் வினைப்பயனைத் தரணிபோலத் தருவன்.
* முதல்வன் தரணிபோல இன்பத்துன்பங்களை நுகர்வித்து
இருவினையைப் போக்குவன். பாவம்செய்யின் முதல்வன் துன்பத்தைக் கொடுத்து அப்பாவத்தை ஒழிப்பன். புண்ணியம் செய்யின் இன்பத்தைக் கொடுத் து அப் புணர் னியத் தைத் தரீர் ப் பணி . இவ்வின்பத்துன்பங்கள் வினைநோய்க்கு மருந்தாகும். முதல்வன் வைத்தியன் ஆவன். (123) * முதல்வன் தரணிபோலத் துன்பத்தை நுகள்வித்துப் பாவத்தைப்
போக்கும் முறைமையை விளக்கல். வாகட நூலின்வழி ஒழுகும் இடத்துப் பிணிகள் உண்டாகா. அந்நூலின்வழி ஒழுகாத இடத்துப் பிணிகள் உண்டாகித் துன்பத்தை வருவிக்கும். அப்பிணிகளை வைத்தியன் மருந்து கொடுத்து மாற்றுவன். ஒரு மருந்தும் கொடாது சாந்தி முதலியவற்றைச் செய்வித்தும் மாற்றுவன். அதுபோல, வேதாகம விதிப்படி ஒழுகும் இடத்துப் பாவ கன்மங்கள் வந்து பொருந்தா, அங்ங்ணம் ஒழுகாத இடத்துப் பாவ
=-2D=ങ്ക

4.
சிவஞானசித்தித் தெளிவு கன்மங்கள் பொருந்தித் துன்பத்தை வருவிக்கும். முதல்வன் அப்பாவகன்மங்களால் வருந்துன்பத்தை அநுபவிக்கச் செய்து அவற்றை ஒழிப்பன். துன்பத்தை அநுபவிக்கவிடாது சாந்தி முதலியவற்றாலும் அப்பாவகன்மங்களை நீக்குவன். (124) * முதல்வன் தரணிபோல இன்பத்துன்பங்களை நுகர்வித்துப்
புண்ணிய பாவங்களைப் போக்கும் முறைமையை விளக்கல். வைத்தியன் சில நோய்களை அறுத்துக்கீறியும், சில நோய்களைச் சர்க்கரையும் பாலும் மருந்தோடு கலந்து கொடுத்தும் தீர்ப்பன் . அதுபோல முதல் வனும் இன்பத்துன்பங்களாகிய மருந்தைக் கொடுத்து இருவினை நோயை மாற்றுவன். (125)
இன்பத்துன்பத்து இவ்வுயிர் பிறந்துஇறந்து போவதாகும். (a). உயிர்கள் சுவர்க்க நரகங்களில் இன்பத்துன்பங்கள்
நுகரும் முறைமை.
இத்துால உடம்பு நீங்கிய இடத்துச் சூக்கும உடம்பின நின்றும்
பூதசார உடம்பு பூதஉடம்புகள் உண்டாம். உயிர்கள் அவ்வுடம்புகளோடு முதல்வன் ஆணை செலுத்தச் சென்று சுவர்க்க நரகங்களில் இன்பத் துன்பங்களை அநுபவித்து அவற்றைவிட்டு மீளவும் சூக்கும உடம்போடு பூமியை
அடைந்து பிறக்கும். (126) (b). பூதனாசரீரம்போனால் உயிர்கள் சரீரங்களை எடுக்கும்
முறைமை.
இத்து லஉடம்பு நீங்கிய உடனே, வினைக்கேற்ப யாதனாசரீரத்தை எடாது, மற்றுமோர் தூலஉடம்மை எடுத்தலுமுண்டு. யாதனாசரீரம் நீங்கிய உடனே அதுபோல மற்றொரு யாதனாசரீரத்தை எடுத்தலும் உண்டு. இவை எல்லாம் இடைவிடாது நிகழ்தலும் உண்டு, இடைவிட்டு நிகழ்தலும் உண்டு. (127) (c). சுவர்க்க நரகங்களுக்குச் செல்லும் உயிர்களின்
நிலைமையை உவமை முகத்தால் விளக்கல். முன்னைய தோலாகிய உடலைவிட்டு மற்றொரு தோலாகிய உடலினைப் பற்றும் பாம்பு போலவும், முட்டையாகிய முன்னைய இடத்தினைவிட்டுச் சென்று மற்றோர் இடத்தினைப்

Page 27
சிவஞானசித்தித் தெளிவு
பற்றும் பறவைகள் போலவும், முன்னை அச்சினை விட்டு மற்றோர் அச்சினைப் பற்றும் பரகாயப் பிரவேசிகள் போலவும் உயிர் தான் வேறாகாது தூலஉடலாகிய முன்னை உடலை விட்டு மற்றோர் உடம்போடு சென்று சுவர்க்க நரகங்களை அடையும். நனவின்கண் கண்டவற்றைக் கனாக் காணும் காலத்து மறந்து அறிவு வேறுபட்டாற்போல, முன்னே நிகழ்ந்தவற்றை எல்லாம் மறந்து இச்சுவர்க்க நரகங்களில் அறிவு வேறுபட்டிருக்கும். (128)
(i) இருவினை இலக்கணம்.
இருவினை இலக்கணம்.
கன்மம் நல்வினை தீவினைகளாகச் செய்யப்பட்டுப், புண்ணிய பாவங்களாகி, இன்பத்துன்பங்களைத் தருவதாய், நன்மை தீமைகள் நிகழும் பொழுதும் இன் பத்துன்பங்களை அனுபவிக்கும்பொழுதும் அநுமித்து அறியப்படுவதாய், மும்மலங்களுள் ஒன்றாய் எண்ணப்பட்டுத், தனக்கு முதற்காரணம் ஒன்று உண்டு என்று காட்டிக் காமியமலம் எனப்பட்டு நிற்பதொன்றாகும். (129)
இருவினை எனப்படுவது உற்பத்தியும் நாசமும் உடையதாய்த் தொன்று தொட்டு வருதலின், பிரவாகாநாதியாம். அது திருவருளாற் செலுத்தப்பட்டு மலத்தோடு கூடிச் சூக்கும வடிவாய் நின்று உயிர்களுக்குப் பலவேறுவகைப்பட்ட யோநிகளைத் தோற்றுவிக்கும். (130)
(iv) தனுக்களின் இயல்பு
1.
8.
=28D=
வினைக்கு ஈடாகப் பலவகைத் தூல உடம்புகள் தோன்றும் முறைமை
(a). உயிர்கள் அச்சுமாறாது என்னும் கொள்கையும், மறுப்பும்.
உயிர்களின் வினைக்கு ஈடாகப் பிறவிகள்தோறும் சரீரங்கள் மாறும் அன்றி அச்சுமாறாது எனின், புண்ணிய பாவங்களின் பயனை அநுபவிப்பது எப்படி? (131)
புண்ணியப்பயனைச், சுவர்க்கத்திலே தேவர்களாய் இருந்தே அநுபவிக்க வேண்டுதலாலும், இவ்வுலகத்திலே மனிதராய் இருந்து அநுபவிக்க வேண்டுதலாலும், அச்சுமாறுதல் உண்டு என்பது இனிது விளங்கும். (132)

சிவஞானசித்தித் தெளிவு
(b), உயிர்கள் அச்சுமாறும் என்பதற்கு உதாரணம். உயிர்களின் கன்மத்துக்கு ஏற்ப அச்சுமாறும். (133) (c). யோநியும் அச்சும்மாறும் என்பதற்கு உதாரணம். உயிர்கள் யோநியும் அச்சும் மாறிப்பிறக்கும் என்பதற்கு அகலியை கல்லானதும், விட்டுணு பல பிறவிகளை அடைந்ததும், சிலந்திப்பூச்சி அரசன் ஆனதும், எலி மகாவலிச்சக்கரவர்த்தி ஆனதும் சான்றுகளாம். (134) (d). யோநியும் அச்சும் முதல்வன் விதிப்படி மாறும். யோநி அச்சுக்கள் எக்காரணத்தால் மாறினும், அவை முதல்வன் விதிப்படி வருவனவாம். (135) மாயையையும் கன்மத்தையும் காரியப்படுத்தி அக்காரியங்களை உயிர்களுக்குச் சேர்ப்பவன் முதல் வனே என்பது பெறப்படுதலின், முதல்வன் செய்த எவ்வகைச் சரீரங்களையும் அம்முதல்வனே மாற்றுவன். (136) தூலஉடம்புகள் தோன்றி ஒடுங்கும் முறைமையும், அவற்றின் முலகாரணமும். (a) பல தூலஉடம்புகள் ஒரு சூக்கும உடம்பின் நின்று
தோன்றும். ஒரு பொன், ஆரம் வீரசங்கிலி முதலிய பலவகை ஆபரணங்கள் தோன்றுதற்குக் காரணமாய் இருத்தல் போல, ஒரு சூக்குமஉடம்பு பலவகைத் தூல உடம்புகள் தோன்றுதற்குக் காரணமாய் இருக்கும். (137) (b). தூலஉடம்புகள் சூக்குமஉடம்பிலே சத்திருபமாய்
இருந்து தோன்றும். வெட்டப்பட்ட மரத்தின் வேரிலே மற்றொரு மரம் சத்தி ரூபமாய் இருந்து தோன்றுதல் போல, சூக்குமஉடம்பிலே தூலஉடம்புகள் சத்தி ரூபமாய் இருந்து தோன்றும். (138) (c). சூக்கும உடம்பிலே தூல உடம்புகள் தோன்றி ஒடுங்கும்
முறைமையை உவமை முகத்தால் விளக்கல். சந்திரகலைகள் பதினாறில் காரணமாகிய ஒரு கலை அழியாது நிற்க, மற்றக் கலைகள் தோன்றுதலும்
=ങ്ക് 29-ത്തതു

Page 28
சிவஞானசித்தித் தெளிவு
(v)
ஒடுங்குதலும்போல மூலமாகிய சூக்குமஉடம்பு அழியாது நிற்க அதின் நின்று தூலஉடம்புகள் தோன்றி ஒடுங்கும். (139) (d). தூலஉடம்புகளுக்கு முதற்காரணம் மாயை. தூல உடம்புகள் மாயா காரியம். சிவன் இம்மாயா காரியங்களுக்கும் இவற்றின் காரணமான மாயைக்கும் அதீதனாய் நின்று இவற்றைக் காரியப்படுத்துவோனாம். (140) கரணங்களின் இயல்பு. முதல்வன் தனுகரணாதிகளைக் கொடுத்தல் உயிர்களின் மலத்தை நீக்குதற்பொருட்டு. உயிர்களைப் பொருந்திய மலகன்மங்கள் நீங்குதற்பொருட்டு முதல்வன் தனுகரணாதிகளைக் கொடுப்பன். அம் மலகன்மங்கள் நீங்கிய இடத்து பரஞானத்தை விளக்கி முத்தியைக் கொடுப்பன். (141) முதல்வன் தனுகரணாதிகளைக் கொடுத்தல் உயிர்களின் மலத்தை நீக்குதற் பொருட்டு என்பதனை உவமைமுகத்தால் விளக்குதல்
s s 豫 க்கம் ட்போல, அழு 8 டு அழு ಹಿ கும லே நீர் 5L (142)
அசுத்தமாயையின் இலக்கணம். உலகிற்கு முதற்காரணம் எனப்படும் மாயை நித்தமாதல் முதலிய இலக்கணங்களை உடையதாம். (143)
அசுத்தமாயையின் காரியம்.
(a). காலதத்துவம் தோன்றும் முறைமையும், அதன்
தொழிலும். அசுத்த மாயையின் நின்று காலம் முதலிய தத்துவங்கள் உளவாம். அவற்றுள், காலமானது இறந்தகாலம், நிகழ்காலம், எதிர்காலம் என முத்திறப்பட்டுத் தனக்குக் கீழுள்ள பிரபஞ்சம் அனைத்தையும் தோற்றுவித்து நிறுத்தி ஒடுக்கியும், உடல்உயிர்களுக்குக் காலவரையறை செய்தும், முதல்வன் ஆணையினாலே அதிட்டிக்கப்பட்டு, இங்ங்ணம் பிரபஞ்சம் அனைத்தையும் செலுத்தாநிற்கும். (144)
=C30=

சிவஞானசித்தித் தெளிவு (b). நியதி கலை வித்தைகள் தோன்றும் முறைமையும்,
அவற்றின் தொழிலும். அசுத்தமாயையின் நின்று காலதத்துவம் தோன்றியபின், அம்மாயையின் நின்றும் நியதிதத்துவம் தோன்றி, அவரவர் செய்த கன்மம் அவரவரே நுகரும்படி நியமிக்கும். அதன்பின், அவ்வசுத்தமாயையின் நின்று கலை தோன்றி ஆணவமலத்தைச் சிறிதே நீக்கி ஆன்மாவின் கிரியா சத்தியை விளக்கி விடயங்களைப் பொருந்தச் செய்யும். அக்கலையின் நின்றும் வித்தை தோன்றி ஆன்மாவின் ஞான சத்தியை விளக்கி விடயங்களை அறியச்செய்யும். (145)
(c), அராகதத்துவம் தோன்றும் முறைமையும், அதன்
தொழிலும், புருட தத்துவமும், அதன் இயல்பும். வித்தையின் நின்றும் அராகதத்துவம் தோன்றி ஆன்மாவின் இச்சாசத்தியை விளக்கிப் போகங்களில் இச்சையை உண்டாக்கும். இங்ங்ணம் கலையாதிதத்துவங்களினால் இச்சாஞானக்கிரியைகள் விளங்கப்பெற்றுப், போகங்களில் உன்முகமாயும் அவற்றை அறியத்தக்க வல்லமை உடையதாய் இருக்கும் ஆன்மா, புருட தத்துவம் எனப்
பெயர் பெறும், (146) (d). மூலப்பிரகிருதி தோன்றும் முறைமையும், அதன் இயல்பும்,
தொழிலும்.
மூலப்பிரகிருதி கலையிலே தோன்றும். அது அவ்வியத்த குணவடிவாய் உள்ளது. முக்குணங்களைத் தோற்றுவிக்கும். இக்குணங்கள் ஒவ்வொன்றும் மூவகையாய் ஒன்பதாகும். அது பெரிய குணவடிவாகி நின்று ஆன்மாக்களையும் தத்துவங்களையும் போக்கியப் பொருள்களையும் பந்திக்கும். (147) (e). மூலப்பிரகிருதியின் தொழிலும், புத்திதத்துவம் தோன்றும்
முறைமையும், அதன் தொழிலும்.
மூலப்பிரகிருதி சித்த ரூபமாய் நின்று புருடனுக்குப் போக
க் தனையையும் உண்டாக்கும். புத்திதத்துவம் பிரகிருதியிலே தோன்றி, உயிர்கள் செய்த புண்ணிய பாவங்களுக்கு ஈடாக விடயங்களை நிச்சயித்து அவற்றிலே மயங்கி, அவை ஆன்மாவின் அறிவு தொழில்களுக்கு விடயமாம்படி செய்யும். (148)
=ത്ത-3Dങ്കത്ത

Page 29
சிவஞானசித்தித் தெளிவு
(f). அகங்காரதத்துவம் தோன்றும் முறைமையும், அதன்
தொழிலும் பிரிவும். புத்திதத்துவத்தில் அகங்காரதத்துவம் தோன்றும் . அ.து ஆன்மாவோடு வேற்றுமை இன்றி நின்று செருக்கு உறுதலையும் அபிமானித்தலையும் செய்யும். அதுவும் பூதாதிஅகங்காரம், வைகாரிக அகங்காரம், தைசத அகங்காரம் என முத்திறப்படும். (149)
(g). மனமும், அதன் தொழிலும், ஞானேந்திரிய
கன்மேந்திரியங்கள் தோன்றும் முறைமையும்.
தைசத அகங்காரத்தின் நின்று மனம் தோன்றும். அ.து எதிர்ப்பட்ட ஒரு பொருளை இட்து யாதோ என்று சித்தரூபமாய் நின்று சிந்தித்தும், பின் அதன்கண் துணிவு பெறாமல் அதுவோ இதுவோ என்று ஐயுற்றும் நிற்கும். அவ்வகங்காரத்தின் நின்று பின் ஞானேந்திரியங்கள் தோன்றும். வைகாரிக அகங்காரத்தின் நின்றும் கன்மேந்திரியங்கள் தோன்றும். (150)
(h). ஞானேந்திரியங்களும், அவற்றின் தொழிலும். சுரோத்திரம் முதலிய ஐந்தும் ஞானேந்திரியங்கள் எனப்படும். சத்தம் முதலிய ஐந்தும் இவற்றிற்கு விடயங்களாம். (151) (). கன்மேந்திரியங்களும், அவற்றின் தொழிலும். வாக்கு, பாதமி, பாணி, பாயு, உபத்தம் என்னும் ஐந்தும் கன்மேந்திரியங்களாம். வசனம, கமனம், தானம், விசர்க்கம, ஆநந்தம் என்னும் ஐந்தும் முறையே அவற்றின் தொழில்களாம். (152) (). ஆன்மாவைப் பந்திக்கும் கருவிகளின் வகை.
கன்மேந்திரிய ஞானேந்திரியங்கள் உடம்பின் புறத்தே நின்று தொழிற்படும் புறக் கருவிகளாம். மனம் முதலிய அந்தக் கரணங்கள் இந்திரியங்களாலே தரப்பட்ட விடயங்களை உடம்பின் அகத்தே நின்று விடயிக்கும் உட்கருவிகளாம். அராகாதிகள் அவ்வாறு விடயிக்கப்பட்டு வந்த பயனை ஆன்மாவின் அறிவிற் பொருத்தும் உள் அந்தக்கரணங்களாம். இம்முத்திறக்கருவிகளாலும் உயிர் பந்திக்கப்பட்டு நிற்கும். (153)

சிவஞானசித்தித் தெளிவு
(k). தன்மாத்திரைகள் தோன்றும் முறைமையும், அவற்றின்
தொழிலும், புரியட்டக உடம்பும்.
பூதாதி அகங்காரத்தின் நின்று சத்தம், பரிசம், உருவம், இரதம், கந்தம் என்னும் தன்மாத்திரைகள் ஐந்தும் தோன்றும். அவை இந்திரியங்கள் விடயங்களை விடயிக்கும்படி ஊக்கம் செய் வித்து அவற்றோடு உடன் நிற்கும். இத்தன்மாத்திரைகள் ஐந்தும் அந்தக்கரணம் மூன்றும் ஆகிய எட்டும் கூடியது புரியட்டக உடம்பாம். (154) (). பஞ்ச பூதங்கள் தோன்றும் முறைமையும், அவற்றின்
குணங்களும.
சத்தம் முதலிய தன்மாத்திரைகளின் நின்று முறையே ஆகாயம் முதலிய சூக்கும பஞ்சபூதங்கள் தோன்றும். அவை ஒன்றற்கொன்று ஏற்றமாகிய சத்தம் முதலிய குணங்களைப் பொருந்தி இருக்கும். அகப்புறப்பூதங்களும் புறப்பூதங்களும் இக்குணங்களை மிகவும் தூலமாய்ப் பொருந்தி அவற்றோடு பிரிப்பின்றி நிற்கும். (155) (m). புறப்பூதங்களின் தொழிலும், குணமும். புறப்பூதங்களுள் ஆகாயத்துக்குக் குணம் வெளியாய் இருத்தல், தொழில் இடம் கொடுத்தல். வாயுவுக்குக் குணம் சலித்தல், தொழில் பரந்தவற்றைத் திரட்டுதல். தேயுவுக்குக் குணம் சுடுதல், தொழில் ஒன்றுவித்தல். அப்புவுக்குக் குணம் குளிர்தல், தொழில் பதம்செய்தல், பிருதிவிக்குக் குணம் கடினமாதல், தொழில் தரித்தல். (156) (n). புறப்புதங்களின் வடிவும், நிறமும், பீசாக்கரங்களும். பிருதிவிக்கு வடிவு நாற்கோணம், நிறம் பொன்மை, பீசாக்கரம் லசாரம். அப்புவுக்கு வடிவு இருகோணம், நிறம் வெண்மை, பீசாக்கரம் வகாரம். தேயுவுக்கு வடிவு முக்கோணம், நிறம் செம்மை, பீசாக்கரம் ரகாரம், வாயுவுக்கு வடிவு அறுகோணம், நிறம் கருமை, பீசாக்கரம் யகாரம், ஆகாயத்துக்கு வடிவு வட்டம், நிறம் புகைமை, பீசாக்கரம் ஹகாரம். (157)
(0). புறப்பூதங்களின் குறியும், அதிதெய்வமும். பிருதிவிக்கு அடையாளம் வச்சிரம், அதிதெய்வம் பிரமா. அப்புவுக்கு அடையாளம் தாமரைப்பூ, அதிதெய்வம் விட்டுணு,
633)- s

Page 30
சிவஞானசித்தித் தெளிவு
தேயுவுக்கு அடையாளம் சுவத்திகம், அதிதெய்வம் உருத்திரன், வாயுவுக்கு அடையாளம் அறுபுள்ளி, அதிதெய்வம் மகேசுவரன். ஆகாயத்துக்கு அடையாளம் அமிர்தவிந்து, அதிதெய்வம் சதாசிவம். நிவிர்த்தி முதலிய பஞ்சகலைகளுக்கும் முறையே பிரமா முதலியோர் அதிதெய்வங்களாம். (158) தத்துவங்களின் தொகையும், அவற்றின் இயல்பும். சுத்ததத்துவங்கள் ஐந்தும் அசுத்ததத்துவங்கள் முப்பத்தொன்றும் சேர்ந்து தத்துவங்கள் முப்பத்தாறாம். இவற்றுள், சுத்ததத்துவங்கள் சித்து எனப்படும். புருடதத்துவம் சித்தசித்து எனப்படும். மற்றைய முப்பதும் அசித்து எனப்படும். (159) தத்துவங்களின் வகை. சுத்ததத்துவங்கள் ஐந்தும் சுத்தம் மாயை முதற் புருட தத்துவம் ஈறாக உள்ளன மிச்சிரம். பிரகிருதி முதற் பிருதிவி ஈறாக உள்ளன அசுத்தம். இவை முறையே பிரேரககாண்டம், போசயித்திருகாண்டம், போக்கிய காண்டம் எனவும்படும். (160) பிரபஞ்சம் அனைத்தும் தத்துவசொரூபம். காரியப் பிரபஞ்சம் அனைத்தும் தத்துவவடிவேயாம். இத்தத்துவங்கள் முப்பத்தாறும் தூலம், சூக்குமம், அதிசூக்குமம் எனத் தனித்தனி மூவகைப்படும். இத்தத்துவங்களைப் பொருந்தும் உயிர்களும் அவ்வத்தத்துவங்களின் பெயர்பெறும். ஆதலால் பிரபஞ்சம் அனைத்தும் தத்துவ சொரூபமாம். (161) பிரபஞ்சம் அனைத்தும் ஒடுங்கும்முறை. (a). தத்துவங்கள் ஒடுங்கும் முறை. சங்கார காலத்திலே ஆன்மதத்துவங்கள் இருபத்து நான்கும் சீகண்டருத்திரரால் ஒடுங்கும். அராகம் முதலிய ஆறும் அநந்தரால் ஒடுங்கும். சுத்தவித்தை முதலிய மூன்றும் இலயசிவனால் ஒடுங்கும். சத்தி, சிவம் இரண்டும் சுத்தசிவனால் ஒடுங்கும். தோற்றமும் இவ்வாறாகும். (162) (b), உயிர்கள் ஒடுங்கும் முறை. புறப்புறம், புறம், அகப்புறம் என்னும் முக்கூற்றுச் சமயத்தவர் பூதம் முதல் அசுத்தமாயாதத்துவம் வரையிலுள்ள தத்துவங்கள்
-G340

சிவஞானசித்தித் தெளிவு
(i)
ஒவ்வொன்றில் நிலைபெறுவர். அகச்சமயத்தவர் அறுவரும் சுத்தவித்தை முதலிய தத்துவங்களை அடைவர். சித்தாந்தத் தெய்வமாகிய சுத்தசிவம் முப்பத்தாறு தத்துவங்களையும் கடந்து நிற்கும். (163) முன்றாம் அதிகரணம். ஒளியாய் ஓங்கி எங்கும் நீங்காது நின்றனன். இவற்றின் தன்மை எய்தலின்றி நின்றனன்.
சிவபேதங்கள். ஒன்றுமின்றி ஏகனாய் நிற்கும் பரமசிவனே சிவம், சத்தி, நாதம், விந்து, சதாசிவன், மகேசுவரன், உருத்திரன், மால், அயன் என்னும் ஒன்பது பேதவடிவங்களையும் பொருந்தி நின்று பஞ்சகிருத்தியங்களையும் செய்வன். (164) சத்திபேதங்கள்.
சிவபேதம் ஒன்பதுக்கும் உரிய சத்திே ம் ஒன்பது வகைப்படும் அவை சிவம், சத்தி, நாதம், விந்து, மனோன்மனி, மகேசை, உமை, இலக்குமி, சரஸ்வதி என்பனவாம். இப்பேதமெல்லாம் பராசத்தி ஒன்றால் ஆவதாம். முதல்வன் எத்திறமாகி நிற்பனோ அப்பராசத்தியும் அத்திறமாகவே நிற்பள். (165) பிரபஞ்சம் அனைத்தும் சத்திசிவமயம்.
பராசத்தி நாதம் முதற் பிருதிவி ஈறான தத்துவங்களோடு இயைந்து நிற்கும். பரமசிவனும் அந்தச் சத்தி முதலியவற்றை அதிட்டித்து அவற்றோடு இயைந்து நிற்பர். ஆதலாற் சத்தியாற் சிருட்டிக்கப்பட்ட வடிவங்கள் எல்லாம் சத்திமயமும் சிவமயமுமாய் இருக்கும். பரமசிவன் சங்கற்பித்தவற்றை எல்லாம் அச்சத்தியே உண்டாக்கும். (166) சிவமும் சத்தியும் பிரபஞ்சம் அனைத்தோடும் தோய்வின்றி நிற்கும். பரமசிவனும் பராசத்தியும் பிரபஞ்சம் அனைத்தையும் தோற்றுவித்துப் பஞ்சகிருத்தியங்களும் செய்வர் எனினும், அவற்றின் தன்மை சிறிதும் எய்தாது நிற்பர். (167)

Page 31
சிவஞானசித்தித் தெளிவு
5.
(ii)
1.
தத்துவ உணர்ச்சி இன்றியமையாதது.
அசுத்தமாயாகாரியங்கள் தனு, கரண, புவன, போகங்களாம். இவை ஆன்மாக்களைப் பந்திப்பனவாம். சுத்ததத்துவங்கள் ஐந்தும் சுத்தமாயாகாரியங்கள். இவை அபரமுத்தித்தானங்களம் இத்தத்துவங்கள் எல்லாம் ஆன்மாக்களின் கன்மநுகர்ச்சிக்கு வேண்டப்படுவனவாய் அவ்வான்மாக்களைப் பொருந்தி இருக்கும் இவற்றின் இயல்பை உள்ளபடி அறிந்து, இவற்றின் நீங்கிச் சிவத்தை அறிந்தவன் தத்துவஞானியாம். (168) தத்துவங்கள் உயிர்களைப் பொருந்துதற்குக் காரணம்.
தனுவாதிகள் ஆன்மாக்களை அடைதற்குக் காரணம் யாது எனின், அவ்வான்மாக்களின் கன்மங்களை அநுபவவாயிலாலும் தீக்கையாலும் நீக்குதற்கும், அவ்வான்மாக்களோடு சகசமாய் உள்ள ஆணவமலத்தைப் போக்குதற்குமாம். (169)
ஆணவமலத்தின் இலக்கணமும், உண்மையும், உயிர்கள் மலங்களாற் பந்திக்கப்பட்டுப் பிறப்பு:இறப்பிற்படும் முறைமையும், அம்மலங்களைப் போக்கி வீடு அடைதற்கு வாயிலும், உபாயமும்.
ஆணவமலத்தின் இலக்கணமும், உண்மையும். (a). ஆணவமலத்தின் இலக்கணம்.
ஆணவ மலம் ஒன்றே. அ."து எண்ணில்லாத சத்திகளை உடையதாய், உயிர்களோடு சகசமாய் அநாதியே உள்ளதாய், கேவலத்தில் அவ்வுயிர்களின் அறிவு தொழில்கள் விளங்காமல் முழுதும் மறைத்துச் சகலத்தில் ஏகதேசமாக விளங்கியஅறிவை விபரீத அறிவாக்கி அவ்வுயிர்களோடு விரவிநின்று கேவலம் சகலம் இரண்டிலும் அஞ்ஞானத்தை உண்டாக்கும். (170)
(b). ஆன்மாவின் இச் சாஞானக் கிரியைகளை மறைப்பது
மாயாகாரியமன்று, ஆணவமலம்.
மலம் என ஒன்றில்லை. மறைப்பது மாயாகாரியம் என்னின், மாயை உயிர்களுக்கு வேறாக நின்று அவற்றின் இச்சாஞானக்கிரியைகளை விளக்கும். ஆணவமலம் உயிர்களோடு ஒன்றித்து நின்று அவ்விச்சாஞானக்கிரியைகளை மறைக்கும். இவை இரண்டுக்கும் உள்ள வேற்றுமை அறியாது
C360

சிவஞானசித்தித் தெளிவு
உலகு உடல் காரணமாயப் நிற்கும் மாயையே மறைத்தற்றொழிலைச் செய்யும் என்பது போலியாம். (11)
சூரியனது ஒளியை மேகம் மறைத்தாற் போல, மாயை உலகு உடல் கரணமாயப் நின்று ஆண் மாவின் இச்சாஞானக்கிரியைகளை மறைக்கும் என்றும், மேகம் நீங்கச் சூரியனது ஒளி வெளிப்பட்டுத் தோன்றுமாறுபோலக் காயமாகிய மாயை நீங்க அவ்விச்சாஞானக்கிரியைகள் பிரகாசமாம் என்றும் , சொல்லின் சூரியனை மேகம் மறைக்க ஒளி மறைந்தது போல, ஆன்மாவை மாயை மறைக்க அதன் இச்சாஞானக்கிரியைகள் நிகழாதிருக்க வேண்டும். அங்ங்ணம் இன்றி ஆன்மா உடம்பைப் பெற்ற இடத்து இச்சாஞானக்கிரியைகள் விளங்குதலும், உடம்பைப் பெறாத இடத்து அவை மறைதலும் காணப்படுதலால், அக்கூற்றுப் பொருந்தாது. (172, 173) ஆன்மாவின் இச்சாஞானக்கிரியைகளை மறைப்பது ஆணவமலமேயாம். அ.து ஆன்மாவோடு இயைந்து நிற்றலால், அவ்வான்மாவின் குணம்போன்ற ஒன்றதாகச் சொல்லலாம். ஆயினும் ஆணவஇருள் நீங்கும்படி மாயாகாரியங்கள் தோன்றுவன ஆதலால், ஆணவமும் மாயையும் ஆகிய இரண்டும் இருளும் ஒளியும்போல வேற்றுமை பெரிது உடையனவாம். (174) (c). ஆணவமலம் உயிரின் குணமன்று.
பாடாணவாதிகள் ஆணவமலம் உயிரின் குணம் என்பர். அங்ங்ணமாயின், ஆன்மா சடம் எனப்பட்டு வழுவாம். அன்றியும், கண்ணொளியை மறைக்கும் படலம் கண்ணின் குணம் ஆகாதவாறுபோல, ஆன்மஅறிவை மறைக்கும் மலம் ஆன்மாவின் குணம் ஆகாது. மலம் சடப்பொருள். அறியாமை அதன் குணம் உயிர் சித்துப்பொருள். அறிவு அதன்குணம். (175) உயிர்கள் மலங்களாற் பந்திக்கப்பட்டுப் பிறப்புஇறப்பிற்படும் முறைமை.
(a). மும்மலங்களும் உயிரைப் பந்திக்கும் முறைமை.
மும்மலங்களும் உயிரை மயக்கி அதன் சொரூபத்தை அறிய ஒட்டாது செய்யும். அன்றியும் பொய்ப்போகத்தையும் பந்தத்தையும் போத்திருத்து வத்தையும் உண்டாக்கும். (176)
C37) =

Page 32
சிவஞானசித்தித் தெளிவு
(b). மாயேயம், திரோதாயி என்னும் இருமலங்களின் இயல்பு.
அசுத்தமாயா காரியம் மாயேயமலம் எனப்படும் . மும்மலங்களையும் தொழிற்படுத்திப் பாகம் வருவிக்கும் சிவசத்தி திரோதாயி எனப்படும். இவ்வைந்து மலங்களும் உயிர்களைப் பொருந்தி இருக்கும். (177)
(c). உயிர் பஞ்சமலங்களாற் பந்திக்கப்பட்டு பிறந்துஇறந்து
உழலும். உயிர் பஞ்சமலங்களையும் பொருந்திப் பிறப்பு இறப்பிற்பட்டுக் கொள்ளிவட்டமும் காற்றாடியும்போல மூவுலகங்களிலும் சுழன்று சிவாஞ்ஞைப்படி திரியும். (178)
மலங்களைப் போக்கி வீடு அடைதற்கு வாயிலும், உபாயமும்,
(a). மாநுடப்பிறப்பு எய்தல் அரிது. நால்வகைத் தோற்றத்து எழுவகைப்பிறப்பில் எண்பத்து நான்குநூறாயிரயோநி பேதங்கள் உள்ளே மாநுடப்பிறவியில் வந்து பிறத்தல் மிக்க அருமையாம். அது பெரிய சமுத்திரத்தைக் கையினாலே நீந்திக் கரை ஏறினவன் செயல்போன்றதாம். (179)
(b), உத்தம தேசத்திலே பிறத்தல் அரிது. உத்தம சாதியிற்
பிறந்து புறச்சமயம் சாராது நிற்றல் அதனினும் அரிது. மாநுடப்பிறவி எய்தினும் வேதாகமங்கள் ஒதப்படும் உத்தம தேசத்திற் பிறத்தல் மிகுந்த புண்ணியத்தால் உண்டாம். உத்தம சாதியிலே பிறந்தும் புறச்சமயங்களிற் செல்லாது நிற்கும் பேற்றினைப் பெறுதல் அதனினும் அரிதாம். (180)
(c). சைவ சித்தாந்த நெறியை அடைதல் மிகவும் அரிது. மலங்களைப் போக்கி வீடுஅடைதற்குச் சித்தாந்த நெறி வாயில், சிவனை வழிபடல் உபாயம்.
செல்வம் முதலியவற்றால் வரும் செருக்கும் வறுமையால் வரும் சிறுமையும் நீங்கி, அடிமைத்திறத்தோடும் சைவ சித்தாந்த நெறியை அடையும் பாக்கியம் பெறுதல் மிகவும் அரிதாம். அந்நெறியிலே நின்று சிவனருளாலே சிவனை வணங்கும் பேறு உண்டாயின், அவை மலங்களைப் போக்கி வீடு அடைதற்கு வாயிலும் உபாயமுமாம். (181)

சிவஞானசித்தித் தெளிவு
(d). சிவபெருமானை வழிபடுதற்காகவே மாநுடப்பிறவி
கொடுக்கப்பட்டது. மனம் வாக்குக் காயங்களினாலே சிவபெருமானை வழிபடுதற் பொருட்டே மாநுடப்பிறவி வகுக்கப்பட்டது. மேல் உலகத்துள்ள விட்டுணு முதலிய தேவரும் இப்பூமியிலே வந்து சிவபிரானை வணங்குவர். இச்சரீரத்தைப்பெற்றும் இங்ங்ணம் வழிபாடு செய்யாதார் அறிவில்லாதவர் ஆவர். (182) (e). தேகம் அநித்தியம். அஃதுள்ளபோதே சிவபெருமானை
வழிபடவேண்டும். இச்சரீரம் எவ்வளவு காலம் நிற்குமென அறியப்படாமையின், இது நிற்கும்பொழுதே சிவபெருமானை வழிபட்டு வீடுபெற முயலல் வேண்டும். (183) (t). விடயபோகம் அநித்தியம்.
ஒருவிடயத்தை நாம் அநுபவிக்கும் பொழுது, வேறுவிடயம் அநுபவத்திற்கு வராது. அவ்விடய அநுபவமும் இன்பமும் துன்பமுமாக மாறிமாறி வரும். கேவலநிலையில் இவ்வநுபவங்கள் யாதுமில்லை. இங்ங்ணம் உள்ளதும் இல்லதுமாய்த் துன்பத்தோடும் கூடியதுமாய் வரும் விடயசுகம் தோன்றிய உடனே அழிவதும் சிறிதுகாலம்தங்கி அழிவதுமாய இயல்பு உடைத்தாம். (184)
விடயபோகங்களிலே மயங்கி அவற்றில் அழுந்துவோர் பிணத்துக்கு ஒப்பாவர். (185) (g). பொருட்செல்வம் அநித்தியம், அருட்செல்வம் நித்தியம். செல்வச் செருக்குடையார் பின்சென்று அநித்தியமான பொருட்செல்வம் ஈட்டுதலை விட்டுச் சிவபெருமானை வணங்குவீராயின், அவர் என்றும் அழியாத அருட்செல்வத்தை உமக்கு அளிப்பர். (186)
மூன்றாம் சூத்திரம், நான்காம் சூத்திரம் பசு உண்மையும் பசு இலக்கணமும் தொகுத்துக்கூறல்.
உயிர் இந்த உடம்பிற்கு வேறாய் உள்ளது. உடல்களைப் பொருந்தி நின்று அதன் இச்சாஞானக்கிரியைகள் ஏகதேசமாய் விளங்கப்பெறும். புண்ணிய பாவங்களைச் செய்யும்.

Page 33
சிவஞானசித்தித் தெளிவு
(i)
அப்புண்ணிய பாவங்களின் பயனை அநுபவிக்கும். சாக்கிரம் முதலிய ஐந்து அவத்தையும்படும். துரியாதீதம் அதன் கேவலநிலையாம். (187)
முதலாம் அதிகரணம்.
uõr e ao apuD. "உயிர் எனப்படுவது இந்த உடலின் வேறு உளதாய்." உயிர் உடம்பின் வேறாய் உள்ளது. தேகான்மவாதிகள் உடம்பே அறியும், அவ்வுடம்பின் வேறாய்நின்று அறியும் உயிர் என்பது ஒன்றில்லை என்பர். பிணக்கிடையிலும் உறக்கத்திலும் அறிவு நிகழக்காணாமையால், உடம்பு அறியும் என்பது பொருந்தாது. (188) உயிர் ஐம்பொறிகளினும் வேறாய் உள்ளது. இந்திரியான்மவாதிகள் ஐம்பொறிகளே விடயங்களை அறியும் என்பர். அவை உறக்கத்தில் விடயங்களை அறியாது இருத்தலினாலும், நனவின்கண் தத்தம் விடயத்தை அறியும் இடத்து ஒன்றையொன்று அறியாது இருத்தலினாலும், அவர் கூற்றுப் பொருந்தாது. இவ்வைம்பொறிகளையும் கொண்டு அறியும் பொருளே ஆன்மாவாம். ஐம்பொறிகளும் தாமாக அறியும் சத்தி உடையன ஆகா. (189) உயிர் பிராணவாயுவினும் வேறாய் உள்ளது. பிராணவாயு இயங்கும் இடத்து, அது ஐம்பொறிகளையும் கொண்டு விடயங்களை அறியும் என்பர் பிராணான்மவாதிகள். உடம்பு உறங்கும் இடத்து பிராணவாயு இயங்கினும் அது விடயங்களை அறியாது ஆதலால், அவர் கூற்றும் பொருந்தாது. பின்னும் அவர், அவ்வறியாமைக்குக் காரணம் ஐம்பொறிகள் தொழிற்படாமை என்பர். பிராணவாயுவே அறியுந்தன்மை உடைய கருத்தா ஆயின் உறக்கத்தில் அது தொழிற்பட்டு நிற்கவும், கருவிகள் தொழிற்படாது நிற்றல் கூடாவாம். ஆதலாற் பிராணவாயுவை அடக்கியும் விட்டும் அதற்கு வேறாய் உள்ள ஆன்மாவே விடயங்களை அறிவதாகும். (190)
GO

சிவஞானசித்தித் தெளிவு
உயிர் அந்தக்கரணங்களினும் வேறாய் உள்ளது.
அந்தக்கரணங்களே அறியும் என்னின், அவை ஒன்றை ஒன்று அறியா. அன்றியும் அவற்றுள் ஒன்று அறிந்தவற்றை மற்றொன்று அறியாது வெவ்வேறு தொழில்களைப் பொருந்தி இருக்கும் ஆதலால் அவை அறியும் என்பது பொருந்தாது. அந்தக்கரணங்கள் நான்கினையும் அறிந்து அவற்றை விடயங்களில் செல்ல ஒட்டாது தடுத்தும், விடயங்களிற் செலுத்தியும், அவற்றின் வேறாய் யான் என்றும் எனது என்றும்
நிற்பது ஆன்மாவாம். (191) (a). ஆன்ம அறிவு நிகழ்தற்கு அந்தக் கரணங்கள்
துணைக்கருவிகள்.
அந்தக்கரணங்கள் ஆன்மாவைப் பொருந்தி அவையே ஆன்மா என்னும்படி அவ்வான்மாவோடு ஒன்றித்து நிற்கும். கண்ணுக்கு விளக்குப்போல, அவை ஆன்மா விடயங்களை அறிதற்குத் துணைக்கருவிகளாம் என்பதை அறிந்து, அவற்றை விட்டு ஆன்ம இயல்பை அறிபவர் தமது இயல்பை அறிந்தோராவர். இங்ங்ணம் அறிதல் பசுஞானமாம். சிவஞானம் இதற்கு மேலானதாம். (192) (b). ஆன்ம அறிவு நிகழும் முறைமை.
அகரம் முதலிய அக்கரங்கள் அகங்காரம் முதலிய அந்தக்கரணங்களைச் செலுத்துதலினால், ஆன்மாவுக்கு விடயஞானம் உண்டாகும். இந்த ஞானமும் கணந்தோறும் புதிதுபுதிதாய்த் தோன்றுவதும் ஒடுங்குவதுமாய் இருக்கும். (193) அகரம் முதலிய அக்கரங்கள் ஐந்தையும் அயன் முதலிய ஐவரும் அதிதெய்வங்களாய் நின்று அதிட்டிப்பர். இவ்வாறு அக்கரங்களாலும் தெய்வங்களாலும் செலுத்தப்படும் கரணங்களோடு ஆன்மாகூடிய இடத்து விடயங்களை அறியும், இவை ஆராயும் இடத்துச் சடப்பொருளாம். இவ்வியல்பு யோகப்பயிற்சி உடையார்க்கு இனிது விளங்கும். (194)
உயிர் பலபொருட்கூட்டம் அன்று.
அந்தக்கரணங்கள் முதலிய பலபொருட்கூட்டமே ஆன்ம சொரூபம் என்று சமுதாயவாதிகள் கூறின், பலபொருள்களின் கூட்டம் ஒருபொருள் ஆகாமையால், அது பொருந்தாது.
=G40

Page 34
சிவஞானசித்தித் தெளிவு
(i)
1.
கூடி நிற்பனவாய பல பொருள்களே ஆன்மசொரூபம் என்னின், அப்பொருள்கள் வேறாயும் அப்பொருள்களை அறியும் ஆன்மா வேறாயும் இருத்தலின், அதுவும் பொருந்தாது. ஆதலால் ஆன்மா பலபொருட்கூட்டமன்று. (195)
இரண்டாம் அதிகரணம்.
பசு இலக்கணம் "உற்றுச் செயிருறும் இச்சாவூானச் செய்திகள் உடையதாகிப் பயில்வுறும். இன்பத்துன்ப பலன்களும் நுகரும் ". பரமதத்தவர் கூறும் ஆன்ம இலக்கணங்களும், அவற்றின் மறுப்பும். (a). பரிணாமவாதிகள் கூறும் ஆன்ம இலக்கணமும், மறுப்பும். பிரமம் சீவர்களும் சடப்பொருள்களுமாகப் பரிணமித்து அவற்றோடு அபேதமும் பேதமுமாய் நிற்கும் என்னின், அச்சீவர்கள் பொறிக்கரணங்களை இன்றி அறியமாட்டாமைக்குக் காரணம் யாது? ஆதலால் அது பொருந்துவது அன்றாம். (196) (b). சாங்கியர் கூறும் ஆன்ம இலக்கணமும், மறுப்பும்.
குணகுணித்தன்மை இன்றிக் கேவலம் அறிவு மாத்திரமாய் நிற்பது உயிர் இயல்பு என்பர் சாங்கியர். அறிவு மாத்திரம் அன்றி அறிவுஇச்சைசெயல்கள் மூன்றும் உடலிலே நிகழக் காணி டலால் அதுவும் பொருந்தாதென மறுக்க, அவ்வறிவிச்சைசெயல்கள் ஆன்மசந்நிதியில் உடலின்கண் நிகழும் என்பர். உடல் சவமானபோதும் உறக்கத்திலும் அவை நிகழக்காணாமையால் அதுவும் பொருந்தாதென மறுக்க. பிணத்தும் உறக்கத்தும் கரணங்கள் தொழிற்படாமையால் இவைகளும் நிகழாதிருந்தன என்பர். கரணங்கள் தொழிற்படுதலால் இவை நிகழுமாயின், ஆன்மசந்நிதியில் இவை நிகழும் என்பது இல்லையாய்முடியும். (197)
சந்நிதி என்பது உயிரின் முன் உடம்பு தொழிற்படுதற்கு ஏதுவாய் அவ்வுயிருக்கு உளதாய் இருக்கும் ஒரு விசேட குணமாம். அது காந்தத்தின் முன் இரும் பு தொழிற்படுதற்கு ஏதுவாய் அக்காந்தத்துக்கு உளதாய் இருக்கும் சத்தி போன்றதாம் என்னின், காந்தத்துக்கு இரும்பை
=2>=

சிவஞானசித்தித் தெளிவு இழுக்கும் சத்தி அன்றி அகற்றலாகிய மாறுபட்ட சத்தி இன்று. உயிர் அவ்வாறு இன்றி மாறுபட்ட தொழில்களைச் செய்யும் ஆதலால் அதுவும் பொருந்தாது. (198) (c). பவுராணிகள் கூறும் ஆன்ம இலக்கணமும், மறுப்பும். பவுராணிகள் உயிர் உருவப்பொருள் என்பர். அப்படியாயின், உருவம் ஆகிய இவ்வுடம்பு காணப்படுதல் போல, இவ்வுடம்பினுள் உயிர் வடிவமும் காணப்படவேண்டும். அன்றியும் அது அழிவெய்தும் பூதப்பொருள்களுள் ஒன்றாகும். கருப்பை உள்ளே நுழைதலையும் காட்ட வேண்டும். அ.து உருவடிவாயினும், கண்ணுக்குப் புலப்படாது எனின், அ.து உருவப்பொருள் அன்று என்றலே பொருத்தமாம். (199) ஆன்மா சூக்குமஉரு என்னின், அச்சூக்குமஉரு தூலஉருக்கள் தோன்றுதற்குக் காரணமாய் இருக்கும் ஆதலாலும், மனாதிகளால் ஆக்கப்பட்ட புரியட்டக உடம்பாயும் சடமாயும் இருத்தலாலும், அதுவும் பெருந்தாது. ஆன்மா அதிசூக்குமஉரு என்னின், அது கலையாதிகளால் ஆக்கப்பட்ட பரசரீரமாயப் இருத்தலாலும் ஆக்கப்படும் உருவங்கள் எல்லாம் சடமாய் அழிவு எய்தலாலும், அதுவும் பொருந்தாது. (200) (d). கவுள் கூறும் ஆன்ம இலக்கணமும், மறுப்பும்.
கவுளர் ஆன்மா அருவுருவப் பொருள் என்பர். அருவப்பொருள் உருவப்பொருள் ஆகாது. உருவப்பொருள் அருவப்பொருள் ஆகாது. அன்றியும் ஒரு பொருளிலே மாறுபட்ட இரண்டு தன்மை இருத்தல்கூடாது. விறகின்கண் அக்கினி உருவப்பொருளாயும் அருவப்பொருளாயும் இருத்தல்போல, ஆன்மாவும் அருவும் உருவுமாய் இருதன்மை உற்றிருத்தல் கூடுமெனின் அக்கினியின் உருவம் காணப்படுமாறு போல, ஆன்மாவின் உருவமும் காணப்படவேண்டும். காணப்படுமாயின் அது நித்தியப்பொருள் என்பது போய் அழிபொருளாகும். (201)
சந்திரன் அருவுருவாய் இருத்தல் போல உயிரும் அருவுருவாம் என்னின், சந்திரன் அமாவாசையிலே அருவாய் நின்று பின் தூலஉருவாய்த் தோன்றுதல் போல, உயிரும் தூலஉருவமாய்த் தோன்றல் வேண்டும். ஆதலால் அதுவும் பொருந்தாது. சந்திரன் அமாவாசையில் அருவாய் நின்று பின் வளர்ந்து வளர்ந்து பூரணையிலே தூலஉருவமாய்

Page 35
சிவஞானசித்தித் தெளிவு
விளங்குவதுபோல, உயிரும் காணப்படாது அருவாய் நின்று கருவுட் புகுந்து வளர்ந்து வளர்ந்து இந்த உடம்பு உருவாய்த் தோன்றும் என்னின், சித்தாய் நித்தியமாய்ப் பந்தத்திற் பட்டு நீங்கும் உயிர் அசித்தாய் பூதகாரியமாய் பந்தமாவதாகிய உடம்பு உருவாதல் கூடாதாம். ஆதலால் உயிர் அருவுருவப்பொருள் என்பது பொருந்தாது. (202) (e). பாதஞ்சலர் கூறும் ஆன்ம இலக்கணமும், மறுப்பும்.
பாதஞ்சலர், உயிர் அருவாய் அவிகாரியாய் இருக்கும் என்பர். அப்படியாயின் உடம்பிற் பொருந்தி அதனைப் பிணித்தல் நடிப்பித்தல் முதலிய பல விகாரங்களைச் செய்தல் அப்பொருளுக்கு ஏலாமையால், அவர் கொள்கையும்
பொருந்தாது. (203) (t). வைசேடிகள் முதலியோர் கூறும் ஆன்ம இலக்கணமும்,
மறுப்பும்.
உயிர் சடப்பொருள் என்றும் அது மனத்தோடு கூடிச் சித்தாய் அறியும் என்றும் கூறுகின்ற வைசேடிகள் மதமும், சித்தசித்து என்னும் சைவரில் ஒருசாரார் கூற்றும், கருவிகளின் துணை இன்றி அறியும் சித்துப்பொருள் என்னும் பட்டாசாரியர் கூற்றும் பொருந்தா. (204) (g) பாஞ்சராத்திரிகள் கூறும் ஆன்ம இலக்கணமும், மறுப்பும். உடம்பின் உள்ளே பரமாணு அளவாய் நிற்பது உயிர் என்று
ஒரு துவாரத்தால் ஓடிப்போம். உடம்பிற் கட்டுண்டற்கும் பாரந்தாங்குதற்கும் அது உடம்படாது. பூத அணுக்களில் ஒன்றாய் அவயவம் உடையதாய் அழிந்துபோவதாயும் இருக்கும் ஆதலால் அவர் மதமும் அடாது. (205) உயிர் உடம்பின்கண் இருதயத்தானத்திலே ஏகதேசமாய் நிற்கும் என்பர் பாஞ்சராத்திரிகள். அவ்வாறாயின் உயிர் உருவப்பொருள் எனப்பட்டு அழிவதாகும். அன்றியும் எங்கும் வியாபித்து அறியும் அறிவும் இல்லதாகும். ஆகையால் அது பொருந்தாது. அப்படி அன்று விளக்கு ஓரிடத்து இருக்க அதன் ஒளி எங்கும் பிரகாசித்துப் பொருளை விளக்குதல் போல, உயிரும் உடம்பின் ஓரிடத்தில் இருப்ப அதன் அறிவு வியாபித்து விடய உணர்ச்சியை நிகழ்த்தும் என்னின்,
=+>=

சிவஞானசித்தித் தெளிவு
விளக்குப்போல உயிரும் தானிருந்த இடத்தில் தன்னோடு மறைப்பாகிய இடையீடு இன்றித் தொடர்ந்து நிற்பனவற்றையே உணர்த்தல் வேண்டும். அவ்வாறு இன்றி இடையீடாக உடம்பு முதலிய கருவிகள் நிற்பவும் விடய அறிவு நிகழ்தலாலும், அவ்வாறு நிகழ்தல் கூடுமெனக் கொள்ளினும் , விளக்குப்போலத் தன்னோடு நெருங்கிய விடயங்கள் யாவற்றினும் ஒரேகாலத்தில் உணர்ச்சி நிகழ்த்தாமையாலும், அதுவும் பொருந்தாது. (206) (h). சமணர் கூறும் ஆன்ம இலக்கணமும், மறுப்பும்.
ஆன்மா சரீரம் எங்கும் நிறைந்து நின்று அறியும் என்பர் சமணர். அப்படியாயின் உறக்கம் வரமாட்டாது. ஐம்பொறியிலும் ஏககாலத்தில் அறிவு நிகழவேண்டும். உடம்பளவுக்கு தக்க அறிவாதலும்வேண்டும். உறுப்புக்களைக் குறைக்க உயிரும் குறைந்து, உடம்பு அழியுமிடத்து உயிரும் அழியவேண்டும். ஆதலால் அவர் மதமும் அடாது. (207) (). பட்டாசாரியர் கூறும் ஆன்ம இலக்கணமும், மறுப்பும்.
ஆன்மா எங்கும் வியாபியாய் நின்று உடலைப்பொருந்தி இந்திரியங்கள் வாயிலாக விடயங்களை அறியும் என்பர் பட்டாசாரியர். அவ்வாறு அறியும் ஆன்மாவுக்குச் சுழுத்தி முதலிய அவத்தைகளிலே அறிவு நிகழாது இருத்தலாலும், சாக்கிர அவத்தையிலே விடயங்களை ஒவ்வொன்றாய் அறியும் அறிவே அன்றி ஒருங்கே அறியும் அறிவு இன்மையாலும் அவர் கூற்றும் பொருந்தாது. அன்றியும் அவ்வான்மா வினைப்பயனை நுகர்தற்குச் சுவர்க்க நரகங்களுக்குப் போவது எற்றுக்கு? உடல் முதலியவற்றைப் பொருந்தி நிற்றலே வியாபியாய் நிற்றல் எனின், உடல் முதலிய யாவும் அழிந்த சங்கார காலத்திலே அவ்வான்மா நிற்பதற்கு இடம் இன்மையால் அதுவும் பொருந்தாது. (208) . (). ஐக்கியவாதிகள் கூறும் ஆன்ம இலக்கணமும், மறுப்பும். ஆன்மா அநாதியே சுத்தமான அறிவாய் உள்ளது. மாயாமலமாகிய உடம்பு இடையே வந்து பொருந்தி அதன் அறிவை மயக்கும் என்பர் ஐக்கியவாதிகள். உடம்போடுகூடிய இந்திரியங்கள் வாயிலாகவும் அந்தக்கரணங்கள் வாயிலாகவும் ஆன்மாவுக்கு அறிவு நிகழக் காண்டலின், உடம்பு அறிவை
m=Cs)=m

Page 36
சிவஞானசித்தித் தெளிவு
மறைக்கும் என்பது பொருந்தாது. அம்மலம் இடையே வந்து பொருந்தியதாயின் அது நீங்கப்பெறினும் பின்னும் வந்து ஆன்மாவைப் பொருந்தும் ஆதலின் முத்தியும் கூடாதாம் ஆன்மா அநாதியே சுத்தன் ஆயின் என்றும் முத்தனாயே இருப்பன் அன்றி உடலைப்பொருந்திப் பந்தம் உறமாட்டான். (209) சித்தாந்திகள் கூறும் ஆன்ம இலக்கணம்.
ஆன்மா அருவத்தன்மை, வியாபகத்தன்மை, நித்தியத்தன்மை, பசுத்துவம் என்னும் இலக்கணங்களை உடையதாம். (210)
உயிர் உடல்களைப் பொருந்தி அறிவு இச்சை செயல்கள் விளங்கப்பெறும் முறைமையும் உயிருடல்களுக்குள்ள சம்பந்தமும், அசுத்த மாயையிலே கேவலப்பட்டு நின்ற ஆன்மா அம்மாயையிலே தோன்றிய காரண சரீரத்தைப் பொருந்தும், அதனால் அறிவுஇச்சைசெயல்கள் பொதுவகையால் விளங்கப்பெறும். பின் கஞ்சுகசரீரத்தைப் பொருந்தும். அதனால் அறிவுஇச்சைசெயல்கள் சிறப்புவகையால் விளங்கப்பெறும் பின் குணசரீரத்தைப்பொருந்தும் அதன்பின் சூக்கும துல சரீரங்களைப் பொருந்தும். இச்சரீரங்கள் ஆன்மாவைப்பந்திக்கும். ஆன்மா இவற்றோடு பிரிவின்றி நின்று இவற்றைச் செலுத்தும். (211) உயிர் உடல்களைப் பொருந்திப் புண்ணிய பாவங்களைச் செய்து இன்பத்துன்பங்கள் நுகரும் முறைமை. ஆன்மா தூலதேகத்தைப்பொருந்தி ஐந்து அவத்தைகளுக்கு உட்பட்டு யாண்டும் போக்கு வரவு முதலாய வினைகளை விரும்பிப் பயின்று சூக்குமமும் தூலம் ஆகிய புண்ணிய பாவங்களைச் செய்து அவற்றின் பயன் ஆகிய இன்பத்துன்பங்களை அனுபவிக்கும். (212) (a). உடல்கள் பஞ்சகோசங்கள். உயிர் அவற்றோடு ஒன்றாயும்
வேறாயும் நிற்கும்.
மேற்கூறிய காரணசரீரம் முதலிய ஐந்தும் முறையே ஆநந்தமயகோசம், விஞ்ஞானமயகோசம், மனோமயகோசம், பிராணமயகோசம், அன்னமயகோசம் எனப்பெயர் பெறும் இவை மாயையின் நின்று ஒன்றுக்கொன்று தூாலமாய்த் தோன்றுவனவாம். ஆன்மா இவ்வைந்து கோசங்களினாலும்
=ങ്ക>ങ്ക

சிவஞானசித்தித் தெளிவு
பந்திக்கப்பட்டு அவற்றோடு ஒன்றாயும் வேறாயும் நின்று அவற்றைச் செலுத்தும். (213) (b), உடல்கள் பஞ்சகோசங்கள். உயிர் அவற்றோடு ஒன்றாயும் வேறாயும் நிற்கும் என்பதனை உவமை முகத்தால் விளக்கல். ஆன்மாவானது ஐங்கோசங்களின் வேறாயும், அவற்றோடு அதுவதுவாயும் நின்று அவற்றைச்செலுத்தும் முறைமை, தோற்பாவை, மரப்பாவை ஆட்டுவோரும் தேரைச் செலுத்துவோரும் அவற்றிற்கு வேறாய்நின்று ஆட்டிச் செலுத்தும்தன்மையும், பலவேடம் கட்டி ஆடுவோன் அதுவதுவாய் நின்று ஆடும்தன்மையும் போலுமாம். (214) (c). உயிர் பஞ்சகோசங்களின் வேறாதலை விளக்கல். مهرميم
மனைவி வீடு முதலியன ஆன்மாவுக்கு வேறாய் இருத்தல் போலப் பஞ்சகோசங்களும் அதற்கு வேறாகும். (215)
ஆபரணம் முதலியவற்றை அணிந்திருக்கும் பொழுது என் ஆபரணம் என்றும் அவை யான் என்றும் அபேதமாய் நினைந்திருந்தாய். அவை உன்னை நீங்கிய பொழுது நீ அல்லவாயினாற்போல, உடல் பொறி முதலியன எல்லாம் உனக்கு வேறாகும். ஆதலால், நீ உண்மையை அறிந்து இவற்றை நீங்கி நின்று பார்ப்பாயாக. (216)
விஞ்ஞானமய ஆநந்தமயகோசங்களை எனது என்றல் வழக்காயினும் அவையும் ஏனைக்கோசங்கள் போல ஆன்மாவின் வேறாம். ஆன்மாவை எனது என்றல், அதன் உண்மை தெரியாதார் கூறும் கூற்றாம். (217) என்றன் ஆன்மா என்னும் வழக்கில் ஆன்மா தன்னோடு இயைபு உடைய பிறிதொரு பொருளைக் குறிக்கும். (218) (d). உயிர் பஞ்சகோசங்களின் வேறாதலை வலியுறுத்தல்.
ஐங்கோசங்களையும் ஆன்மா பொருந்துதல் பற்றி அவற்றையும் ஆன்மா என உபநிடதங்கள் கூறும். அவை எல்லாவற்றின்கண்ணும் அபேதமாய்ப் பிரிவின்றி நின்று அறிவதாகிய ஆன்மா அவற்றின் வேறாம். (219)
அன்னமயகோசத்தோடுகூடிய சாக்கிர அவத்தையிலே ஆன்மா விடயங்களை அறிதலாலும் ஏனைக் கோசங்களோடு கூடிய
w-G7)==m

Page 37
சிவஞானசித்தித் தெளிவு
. (ii)
1.
ஏனை அவத்தைகளிலே அவ்வாறு இன்மையாலும் ஆன்மா கோசங்கள் ஆகாது. அன்றியும் கோசங்கள் ஆகிய பொறிகரணங்கள் முதலியவற்றின் சகாயத்தால் ஆன்மா அறிதலின், ஆன்மா அவற்றின் வேறாம். (220) (e). உயிர் பஞ்சகோசங்களோடு ஒன்றாய் நிற்கும் முறைமையை
விளக்கல்.
ஆன்மா தானாக அறியாது. தனுகரணாதிகளோடு கூடிநின்று விடயங்களை அறியும். அது அரசன் மந்திரிகளோடு கூடிநின்று அரசு செய்தல் போலவாம். (221) 'துயிலொடும் அதிசு அவத்தைப்படும் உண்மை துரியாதீதம்'. கிழாலவத்தை. ஆன்மா இலலாடம், கண்டம், இருதயம், நாபி, மூலாதாரம் என்னும் இடங்களிலே முறையே சாக்கிரம், சொப்பனம், சுழுத்தி, துரியம், துரியாதீதம் என்னும் ஐந்து அவத்தையும் உறும், (222) கீழாலவத்தையிலே தொழிற்படும் கருவிகள்.
சாக் கிர அவத்தை உறும் இலலாடத்தானத்தில் முப்பத்தைந்து கருவிகளும், சொப்பனாவத்தை உறும் கண்டத்தானத்தில் இருபத்தைந்து கருவிகளும், சுழுத்தி அவத்தை உறும் இதயத்தானத்தில் மூன்று கருவிகளும், துரிய அவத்தை உறும் நாபித்தானதில் இரண்டு கருவிகளும், துரியாதீதஅவத்தை உறும் மூலாதாரத்தில் ஒரு கருவியும் தொழிற்படும். (223)
மத்தியாலவத்தையும், நின்மலாவத்தையும்.
சாக்கிரஅவத்தை உறும் இலலாடத்தானத்திலே சாக்கிர சாக்கிரம் முதலிய ஐந்து அவத்தை உளவாம். அவை கருவிகளால் விடயங்களை அறியும் இடத்து அதிநுட்பமாய் இடைவிடாது நிகழுதல் நுண்உணர்வால் அறியப்படும் திருவருளைப
பெற்றோரும் அக்கருவிகள் மீண்டும் தம்மைத் தாக்காது முத்தி
அடைதற்பொருட்டு, இவ்விலலாடத்தானத்திலே சாக்கிரம் முதலிய நின்மலாவத்தை ஐந்தினையும் பொருந்துவர். (224)
=(180=

சிவஞானசித்தித் தெளிவு
சுத்ததத்துவங்கள் கலாதிகளைச் செலுத்தும் முறைமை. மத்தியாலவத்தையிலே நிகழும் சாக்கிராதியவத்தைகள்
தொழிற்படும் அவ்வவ்விடங்களில் சிவதத்துவங்கள் முறையே
ஐந்தும் நான்கும் மூன்றும் இரண்டும் ஒன்றுமாகக் கலாதிகளைச் செலுத்தி நிற்கும். (225) மத்ததியாலவத் தை, நரின் மலாவத்தை, G3 un a5 அவத்தைகளின் இயல்பு. மத்தியாலவத்தை பிறவியைக் கொடுக்கும். நின்மலாவத்தை பிறவியை அறுத் தற்கு ஏதுவாய் உள்ளது. யோகஅவத்தையும் பிறவியைக் கொடுப்பதாம். (226) காரணாவத்தைகளும், அவற்றின் இயல்பும். கேவலம், சகலம், சுத்தம் எனக் காரணாவத்கைள் மூன்றாம். அவற்றுட் கேவலமாவது இச்சாஞானக்கிரியைகள் சிறிதும் விளக்கமுறாது ஆன்மா ஆணவ மலத்தோடு மாத்திரம் கூடிநிற்கும் நிலையாம். சகலமாவது தனு கரணாதிகளைப் பெற்று இச்சாஞானக் கிரியைகள் ஏகதேச விளக்க முற்றிருக்கும் நிலையாம். சுத்தமாவது பஞ்ச மலங்களும் பிறவியும் ஒழிந்து இச்சாஞானக்கிரியைகள் வியாபகம் எய்தியிருக்கும் நிலையாம். (227) காரணகேவலத்தில் ஆன்மாவின் இயல்பு. ஆன்மா கேவலநிலையில் அறிவுவிளக்கம் முதலியன இன்றி ஆணவமலத்தோடு மாத்திரம் கூடி அதனோடு சமவியாபகம் உற்றிருக்கும். (228) காரணசகலத்தில் ஆன்மாவின் இயல்பு. சகலாவத்தையிலே ஆன்மா உடம்பைப் பொருந்தி மனம் வாக்குக்காயங்களால் நல்வினை தீவினைகளைச் செய்து அதனாற் பல பிறவிகளிற்பட்டு உழலும். (229) காரணசுத்தத்தில் ஆன்மாவின் இயல்பு. திருவருள் பெற்று ஞானயோகத்தைப்பொருந்தி வியாபக
அறிவெய்தி முதல் வனது திருவடியைப் பெறுதல் சுத்தாவத்தையில் ஆன்மாவின் இயல்பாம். (230)
G49)-

Page 38
சிவஞானசித்தித் தெளிவு
1.
ஐந்தாம் சூத்திரம்.
பதி உயிர்களுக்கு உபகரிக்கும் முறைமை தொகுத்துக் கூறல். பொறி, புலன், கரணங்கள் ஆகிய யாவும் ஆன்மாவினது உயகாரத்தால் விடயங்களை அறியினும் ஆன்மாவைத்தாம் அறியா. அதுபோல, ஆன்மாக்கள் விடயங்களை முதல்வனது உபகாரத்தால் அறியினும் அம்முதல்வனைத் தாம் அறியா. அங்ங்ணம் அறியச் செய்யும் முதல்வனே எல்லாவற்றையும் அறிந்து ஆன்மாக்களுக்கு அறிவித்து உடன் நிற்பன். (231) முதலாம் அதிகரணம்.
முதல்வன் கன்மத்துக்கீடாக ஆன்மாக்களுக்கு அறிவைக் கொடுப்பன்.
விளைநிலம் அவரவர் செய்கைக்குத் தக்க பயனைத் தருமாறு போலும், ஆதித்தன் பக்குவமான தாமரை முகைகளை அலர்வித்தல்போலும் முதல்வனும் அவரவர் கன்மத்துக்கேற்ப ஏற்றத் தாழ்வான அறிவுகளையும் , பக்குவமான ஆன்மாக்களுக்கு வியாபக அறிவையும் கொடுப்பன். (232) ஆன்மா சிவன் அறிவிக்க அறியும் இயல்புடையது.
ஆன்மா ஒவ்வொரு விடயத்தையும் ஒவ்வொரு இந்திரியத்தால் அறிதலாலும், அங்ங்ணம் அறிந்தவற்றை மீள மறத்தலாலும், ஒருவன் அறிவிக்க அறிதலாலும் அறிகின்ற தன்னையும் தான் அறியாமையாலும், அது தானாக அறியும் இயல்புடையது அன்று. சிவன் அறிவிக்க அறியும் இயல்புடையதாம். (233)
இரண்டாம் அதிகரணம். சிவன் ஆன்மாக்களுக்கு உணர்த்தும் முறைமை, (a). சிவன் ஆன்மாக்களுக்கு மாயாகாரியங்களைக் கொண்டு
உணர்த்துவன். ஆன்மர் சகலநிலையிலே ஐம்பொறி முதலியனவற்றால் அறிவிக்கப்பட்டு அறிதலாலும், கேவல நிலையிலே ஒன்றும் அறியாது நிற்றலாலும் இவ்விரு நிலைகளையும்அறியவல்ல
G50

சிவஞானசித்தித் தெளிவு முதல்வனே கருணை கூர்ந்து அப்பொறி முதலியன வற்றைக்கொண்டு ஆன்மாக்களுக்கு அறிவிப்பன். (234) (b). சிவன் ஆன்மாக்களுக்கு உயிருக்குயிராய் நின்று
உணர்த்துவன்.
உலகுயிர்கள் யாவையும் அறியவல்ல முதல்வன் உயிர்க்குயிராய் நின்று உயிர்களுக்கு உணர்த்துவன்.(235)
24 மாயாகாரியங்கள் கொண்டு உணர்த்துதல் பற்றி முதல்வன்
விகாரியாகான்.
முதல்வன் மாயாகாரியங்களைக் கொண்டு உயிர்களுக்கு உணர்த்துவன் என்பதற்கு அநுமானப் பிரமாணமே அன்றி ஆகமப்பிரமாணமும் சான்றாகும். அவ்வுணர்வு அவன் சந்நிதிக்கண் உண்டாகும் ஆதலால் அவன் விகாரம் எய்தான். (236) 3. யிர்க்குயிராய் நின்று உணர்த்துதல் பற்றி முதல்வன்
காரியாகான்.
தவல்வன் தனக்கு இருநூற்றுஇருபத்துநான்கு புவனமும் ருமேனியாகவும் , எண் பத்துநாண் குநுாறாயிரம் யாநிபேதங்களும் அவயவங்களாயும் மிக்க விளக்கம் டைய இச்சாஞானக்கிரியைகள் உட்கரணமாகவும் கொண்டு *ணிறந்த உயிர்களுக்கும் விடய அறிவை உண்டாக்கி ர்மை மிகுந்த அதிசூக்கும ஐந்தொழில்களையும் ற்கொண்டு நாடகமாகச் செய்தருளுவன். (237)
4. உணர்த்துதலால் வரும் பயன்.
தேச அறிவும் அதனால் விடயபோகமும் கன்ம ஒப்பில்
နှိုးနှီး உணர்த்துதலால் உயிர்களுக்கு உண்டாகும் பயன் யாபகஅறிவும் அதனால் பரபோகமுமாம். (238)
5. பயன்தரும் முறைமை.
லசத்தியைப் போக்கி உயிர்களுக்கு முத்தியைக் காடுப்பன். (239)
=$1>
தனக்கபின்னமாய் உற்ற திருவருட்சத்தியினால்

Page 39
சிவஞானசித்தித் தெளிவு
ஆறாம் கத்திரம், ஏழாம் கத்திரம். உபகரிக்கும் நிலையில் பதி பசு இரண்டனது இலக்கணமும் தொகுத்துக் கூறல். சுட்டி அறியப்படுவன யாவும் சடமாய் அழிவெய்தும் ஒருவாற்றானும் அறியப்படாதனவும் பயன் இலவாய் இல்பொருளாம். ஆதலால் உயிருக்கு உபகரிக்கும் சிவ இவ்விருதன் ம் இன்றிச் சித்துப்ெ ம் சக்கப்ெ நிற்கும் இயல்புடையதாம். இவ்வியல்புடைய சிவத்தின் முன்ன்ர் அசத்தாகிய ஒன்றும் முனைத்துநில்லாது. (240) முதலாம் அதிகரணம். சுட்டி உணரப்படும் காரியப்பிரபஞ்சம் அசித்து.
ஆன்மபோதம் தோற்றநாசம் அடைவதாய் நிலைபே நிகழ்தலாலும், அவ்வான்ம போதத்தாற் சுட்டிய அறியப்படும் பொருள்கள் தாமே தனு கரண புவன போகங்களாய்ப் பலவகைப்படுதலாலும், சகல நிலையில் மலங்களாய் ஆன்மாவைப்பொருந்திச் சுத்தநிலையிலே அதனைவிட்டு நீங்குதலாலும், சுட்டி உணரப்படும் காரியப்பிரபஞ்சம் அசித்தாம். (241) சுட்டி உணரப்படும் காரியப்பிரபஞ்சம் அசத்து. சுட்டி உணரப்படும் காரியப்பிரபஞ்சம் நெடுங்காலம் நிலைபெறுவது போலத்தோன்றி, இந்திரசாலம், கனாக்காட்சி, பேய்த்தேர்போல விரைவில் மறைந்து போகும் இயல்பு பற்றி அசத்து எனவும்படும். (242) ஒருவாற்றானும் அறியப்படாப்பொருள் பயனும் இஸ்தாய் இல்பொருளாகும். ஒருவாற்றானும் அறியப்படாப்பொருள் உள்பொருள்ாதல் கூடும் என்னில், அது தானாக எம்மைச் சேருதலும் இன்றி, நாமாக அதைச்சேருதலும் இன்றி எமக்கு ஒரு பயனும் தருவதும் இன்றிச் செயலற்று நிற்றலின் இல்பொருளாகவே ஒழியும். (243)
-C52)
 
 
 
 
 

சிவஞானசித்தித் தெளிவு
இரண்டாம் அதிகரணம்.
சிவம் சத்துச் சித்து. சிவம் சத்துச்சித்தாகிய இயல்புடையது. மனம்வாக்குக் காயங்களால் அறியப்படாதது. (244) சிவம் பதிஞானத்தால் அறியப்படுவது. சிவம் பதிஞானத்தால் அறியப்படுவதாம். அ.து அவ்வறிவேயாய் வேறுமாய் உடனுமாய் ஆன்மாவோடு அத்துவிதமாய் நிற்கும் இயல்புடையதாம். (245) சிவம் பாசஞானத்தால் அறியப்படாது. பாசஞானமாகிய பாவனைகளால் சிவம் அறியப்படாது. திருவருளால் பதிஞானம் கைவந்தபோது அறியப்படும். (246) சிவம் பசுஞானத்தால் அறியப்படாது. முதல்வன் பகுத்தறிய வராது, ஆன்மாவோடு வேறறவும், அறிவுக்கறிவாகவும், உள்நின்றும் உணர்த்துதலாலும், அவ்வாறு உணர்த்தவே ஆன்மா பகுத்து உணர்தலாலும், பகுத்து உணரும் மயக்கஅறிவோடு கூடிய பசுஞானத்தாற் சிவம் அறியப்படாது. (247) சிவம் தன்னை அறியுமாறறியும் ஆன்மாவோடு அத்துவிதமாய் நிற்கும். சிவன் ஆன்மாவிற்கு வேறாய் நின்று அறியப்படுதலுமே அன்றி, அதனோடு கலந்து உடனாயும் பிரிவின்றி ஒற்றித்தும் அத்துவிதமாய் நிற்பன். (248)
முன்றாம் அதிகரணம். சத்து அசத்தை அறியாது, அசத்துச் சத்தை அறியாது.
சத்துப் பிரித்தொன்றை அறியாது ஆதலாலும் தன்முன் முனைத்துநிற்காத அசத்தோடு கூடி அறியாது ஆதலாலும் அறியும் பொருள் சத்தாகும் என்றல் பொருந்தாது. அசத்துச்சத்தின்முன் நில்லாததாலும் அசத்தோடு கூடி அறிவது ஒன்று வேறு வேண்டப்படுதலாலும் அசத்தே அறியும் என்றலும் பொருந்தாது. (249)
Css)= .

Page 40
சிவஞானசித்தித் தெளிவு
2.
சத்தையும் அசத்தையும் அறிவது சதசத்தாகிய ஆன்மா. சத்து அசத்து என்னும் இரண்டனையும் அறிவது ஆன்மாவாம். அது அவ்விரண்டிற்கும் வேறாய் இரண்டின்பாலும் மலரின்கண் நாற்றம்போல அதுவதுவாய்த் தோன்றி நிற்றலாற் சதசத்து எனப்படும். (250) சதசத்தாகிய ஆன்மா அநாதியே அசத்தின் வண்ணமாய் உள்ளது.
உப்பு கடலைப்பற்றாது நீரையே பற்றி இருத்தல் போல அசத்தாகிய பாசமும் சத்தாகிய சிவத்தைப் பந்தியாது சதசத்தாகிய உயிரையே அநாதியாகப் பந்தித்திருக்கும். ஆதலால், ஆன்மா அநாதியே அசத்தின் வண்ணமாய் உள்ளது. (251)
சதசத்தாகிய ஆன்மா அருளாற் சத்தின் வண்ணமாம் தன்மை உடையது.
ஆன்மா மலசம்பந்தத்தால் அறிவிக்க அறிதலாலும் நித்தியமாய் இருத்தலாலும் தூலசித்துச்சத்து எனவும்படும். அதிசூக்குமசித்தாகிய பதியின் அருளால் மலநீக்கம் பெறும். ஆகையால் சித்துச் சத்தின் வண்ணமாம் தன்மை Փ-60ւ-եւ 15l. (252) எட்டாம் கத்திரம்.
முதல்வன் பக்குவ ஆன்மாக்களுக்கு ஞானம் வருவித்துத் திருவடி அடைவிக்கும் முறைமை தொகுத்துக் கூறல், ஐம்பொறி முதலிய தத்துவங்களின் வசத்ததாகித் தன்னையும் தனது தலைவனையும் அறியாது வருந்தும் உயிருக்கு, முதல்வன் அது பக்குவம் எய்திய இடத்துத் திருவருளே திருமேனியாகக் கொண்டு எழுந்தருளி வந்து உபதேசித்துத் தத்துவநீக்கம் செய்து ஆணவமலவலிமையைக் கெடுத்து ஞானம் உதிப்பித்துப் பரமுத்தியைக்கொடுப்பன். (253) முதலாம் அதிகரணம். உயிர்வர்க்கமும், அவ்வுயிர்களுக்கு முதல்வன் பாசத்தை நீக்கும் முறைமையும், சகலருக்குக் குருவடிவாய் வந்து மலம்
அகற்றுவன்.
OsO

சிவஞானசித்தித் தெளிவு
3.
உயிர்வர்க்கம் விஞ்ஞானகலர், பிரளயாகலர், சகலர் என மூவகைப்படும். விஞ்ஞானகலர் ஆணவம் என்னும் ஒருமலம் உடையவர். பிரளயாகலர் ஆணவம், கன்மம் என்னும் இருமலம் உடையவர். சகலர் ஆணவம், கன்மம், மாயை என்னும் மும்மலம் உடையவர். விஞ்ஞானகலர் முதலிய இருவருக்கும் தீவிரம் முதலிய இருவகைச் சத்திநிபாதம் நோக்கி முதல்வன் தாமே உண்மை ஞானத்தை விளக்கி மலங்களை ஒழிப்பன். சகலருக்கு மந்தரம் முதலிய நால்வகைச் சத்திநிபாதம் நோக்கி ஒரு குருமூர்த்தியை அதிட்டித்து நின்று தீக்கை செய்து மலத்தை ஒழிப்பன். (254) பாசம் நீக்குதற் பொருட்டுச் சகலருக்குச் செய்யப்படும் தீக்கைகளின் வகை.
சகலருக்கு தீக்கை செய்து பாசத்தைக் கெடுக்கும் முறை திருநோக்கம், பரிசம், வாக்கு, பாவனை, நூல் உபதேசம், யோகம், அவுத்திரி முதலாகப்பலவிதமாம். அவற்றுள் அவுத்திரிதீக்கை ஞானவதி, கிரியாவதி என இருவகைப்படும். ஞானவதியாவது குண்ட மண்டலாதிகளை மனத்தாற் கற்பித்துக்கொண்டு அகத்தே ஆகுதி முதலிய கிரியை செய்து சீடனது பாசத்தைக் கெடுத்தலாம். கிரியாவதியாவது குண்ட மண்டலங்களைப் புறத்தே இட்டு விதிப்படி புறம்பே ஆகுதி முதலிய கிரியை செய்து சீடனது மலத்தைக் குன்றும்படி செய்யும் தீக்கையாம். அவுத்திரி மேலும் நிர்ப்பீசதீக்கை சபீசதீக்கை என இரண்டாய் விளங்கும். (255) நிர்ப்பீசதிக்கையின் இலக்கணம். பாலர் அறிவினர் முதலியோருக்குச் செய்யப்படும் தீக்கை நிர்ப்பீசதீக்கை எனப்படும். இதிற் சமயாசாரசுத்தி செய்து ஆசாரியன் சமயி புத்திரராகிய இருவகைச் சீடருக்கும் நித்திய கர்மங்களைமாத்திரம் இயன்றளவுக்கு அநுட்டிக்கும் அதிகாரம் கொடுத்தலினால் இது நிரதிகாரதீக்கை எனவும் படும். இது சமயவிசேடம் என்னும் அங்கங்களோடு கூடிய நிருவான தீக்கையாகி மேல் சத்தியோநிருவாணம், அசத்தியோநிருவாணம் என இரு வகைப்படும். (256) சபீசதிக்கையின் இலக்கணம்.
சிவாகமங்களை ஓதி உணர்ந்து அவை விதித்த படி ஒழுகும் உத்தமர்களுக்குச் செய்யும் தீக்கை சபீசம் எனப்படும்.
=(ss)-

Page 41
சிவஞானசித்தித் தெளிவு
இத்தீக்கை பெற்றோர் சாதகரும் ஆசாரியருமென இருவகைப்பட்டு, நித்திய, நைமித்திக, காமிய கன்மங்களைச் செய்வதற்குப் பேரதிகாரம் உடையோராவர். இதனால் இத்தீக்கை அதிகாரதீக்கை எனப்படும். இத்தீக்கை உலோகதருமிணி, சிவதருமிணி என இருவகைப்பட்டுச் சமயம், விசேடம், நிருவாணம், ஆசாரியாபிடேகம் என்னும் நான்கனையும் தன்னுள் அடக்கி நிற்கும். (257) ஆசாரியன் அத்துவசுத்திசெய்யும் முறைமை. முதல்வன் குருமூர்த்தியை அதிட்டித்து நின்று கிரியாவதி, ஞானாவதி, சாம்பவி என்னும் தீக்கைகளுள் ஒன்றினால் அவ்வத்திக்கைகள் பெறுதற்கு உரியோருக்கு அத்துவசுத்தி செய்து மலத்தை ஒழித்துச் சிவம்பிரகாசித்தற்கு ஏதுவாகிய ஞானத்தைத் தெரிசிப்பித்துப் பிறப்பை அறுப்பன். அத்துவசுத்தி செய்தலாவது, மந்திரம் முதலிய ஆறு அத்துவாக்களையும் ஒன்றினொன்று அடக்கி முடிவில் நின்ற கலையை திரோதான சத்தியிலும், அச்சத்தியைச் சிவத்திலும் அடக்குதலாம். (258) அத்துவசுத்தியில் நிவிர்த்தி பிரதிட்டா கலைகளில் அடங்கும் அத்துவாக்கள். நிவிர்த்தி கலையில் இரண்டு மந்திரமும், இருபத்தெட்டுப் பதமும், ஒரு அக்கரமும், நூற்றெட்டுப் புவனமும், ஒரு தத்துவமும் ஒன்றின் ஒன்றாக அடங்கும். அதற்குப் பிரமன் அதிதேவதையாம். இரண்டு மந்திரமும், இருபத்தொரு பதமும், இருபத்து நான்கு அக்கரமும், ஐம்பத்தாறு புவனமும், இருபத்து மூன்று தத்துவமும் பிரதிட்டா கலையிலே அடங்கும். அதற்குத் திருமால் அதிதேவதையாம். (259) அத்துவசுத்தியில் வித்தியாகலை, சாந்திகலைகளில் அடங்கும் அத்துவாக்கள். வித்தியா கலையில் இரண்டு மந்திரமும், இருபது பதமும், ஏழு அக்கரமும், இருபத்தேழு புவனமும், ஏழு தத்துவமும் அடங்கும் . அதற்கு அதிதேவதை உருத்திரன். சாந்திகலையிலே இரண்டு மந்திரமும், பதினொரு பதமும், மூன்று அக்கரமும், பதினெட்டுப் புவனமும், மூன்று தத்துவமும் அடங்கும். அதற்கு அதிதேவதை மகேசுவரனாம். (260)
450

சிவஞானசித்தித் தெளிவு
8. அத்துவசுத்தியில் சாந்தியதிதகலையில் அடங்கும்
அத்துவாக்கள். சாந்தியாதீதகலையிலே மூன்று மந்திரமும், ஒரு பதமும், பதினாறு அக்கரங்களும், பதினைந்து புவனமும், இரண்டு தத்துவமும் அடங்கும். அதற்கு அதிதேவதை சதா சிவமூர்த்தியாம். மேற்கூறிவந்தமுறையிலே மந்திரங்கள் பதினொன்று, பதங்கள் எண்பத்தொன்று, வன்னங்கள் ஐம்பத்தொன்று, புவனங்கள் இருநூற்றுஇருபத்துநான்கு, தத்துவங்கள் முப்பத்தாறு, கலை ஐந்து. (261)
9. முதல்வன் குருவாகிவந்து அத்துவசுத்திசெய்து மலம்
அகற்றும் முறைமை. ஆன்மாக்கள் பக்குவம் எய்திய இடத்து முதல்வன் குருவடிவாய் எழுந்தருளி வந்து அத்துவ சுத்தியினால் அவ்வான்மாக்களின் சஞ்சித வினையையும் ஞானத்தால் ஆகாமிய வினையையும் ஆணவமலத்தையும் ஒழிப்பன்: பிராரத்தவினை அநுபவத்தால் ஒழியும். (262) இரண்டாம் அதிகரணம். துணைவனையும் அறியாது துயருறும் தொல்லுயிர்க்குச் சைவத்திறமும், அதனாற் சிவஞானமும், அதனாற் சிவனடிப் பேறாகிய முத்தியும், சித்திக்கு முறைமை தொகுத்துக்கூறல், உயிர்கள் புறச்சமய அகச்சமயங்களிலே நின்று ஒழுகியும் மிருதிவழி, ஆச்சிரமநெறி, தவநெறிகளில் ஒழுகியும், புராணங்கள் வேதவேதாங்கங்கள் உணர்ந்தும், இவ்வாறு பல பிறவிகளிலே படிப்படியாய் உயர்ந்து சிவாகம சைவசித்தாந்த நெறியை அடைந்து அதிற் சரியை கிரியை யோகங்களைச் சாதித்து முடித்தபின் ஞானத்தைப் பெற்று முத்தி அடையும். (263)
1. சைவத்திறமே முத்திசித்தித்தற்குரிய நெறி .
(a). முத்தி இலக்கணம்.
ஏனைச் சமயத்தவர் கூறும் முத்திகள் பிருதிவிமுதல் நாதம் ஈறாக உள்ள முப் பத் தாறு தத் துவங்கள் ஒவ்வொன்றிற்படுவனவாய், மாதர் போகம் நுகருதல் முதலிய
=(57)=

Page 42
சிவஞானசித்தித் தெளிவு
பேறுகளாய் இருக்கும். சைவசித்தாந்திகள் கூறும் முத்தி முப்பத்தாறு தத்துவங்களுக்கும் அப்பாற்பட்ட சிவனடியை அடையும் முத்தியாம். (264) (b). வேதசிவாகமங்களே முத்திநெறியை அறிவிப்பன.
சமயங்களும் சமய நூல்களும் ஒன்றோடொன்று மாறுபட்டனவாயும் பலவாயும் இருத்தலின், அவற்றுள் உண்மைச் சமயம் யாது, அச்சமயப்பொருளை உணர்த்தும் நூல் யாது, என்னின், எல்லாச்சமயத்தார் கூறும் பொருள் இயல்புகளும் தனித்தனி ஒவ்வோரிடத்தே அமைய அவற்றை ஒருங்கு சேர்த்துக்காண நின்ற சமயம் எதுவோ, அதுவே உண்மைச் சமயமாகவேண்டும். அச்சமயப்பொருளை உணர்த்தும் நூலே உண்மை நூலாகவும் வேண்டும். இச்சமயங்களும் அவை கூறும் பொருள் இயல்புகளும் வேதாகமங்களிலே அடங்கி இருக்கக் காணப்படுதலாலும் வேதாகமங்கள் சிவனடியிலே அடங்குதல் அறியப்படுதலாலும் சிவனடியை அடைவிக்கும் சைவசித்தாந்தமே உண்மைச் சமயமாம். அச்சமயப்பொருளை விளக்கும் வேதாகமங்களே மெய்ந்நூல்களும் ஆகும். (265) (c), வேதசிவாகமங்களின் பெருமை.
வேதாகமங்கள் முதனுலாகும். மிருதி, புராணம், உபாகமம் முதலியன வழி நூலாகும், ஆகமாங்கங்கள், வேதாங்கங்கள் சார்புநூலாகும் ஏனைய நூல்கள் புருவபக்க நூல்களாகும் (26) (d). சிவாகமங்கள் வேதாந்தசித்தாந்தமாகும்.
வேதம் சிவாகமம் என நூல்கள் இரண்டாம். ஏனைய நூல்கள் எல்லாம் இவை இரண்டின் நின்றும் விரிந்த நூல்களாம். வேதாகமங்கள் முதனுாலாயினும், வேதம் பொதுநூலும் சிவாகமம் சிறப்புநூலுமாம். வேதம் உலகருக்கும், சிவாகமம் சத்திநிபாதர்க்குமாக அருளப்பட்டன. சிவாகமம் வேதத்திற் கூறாது ஒழிந்த பொருளையும் உபநிடதத் து உண்மைப்பொருளையும் இனிது விளக்குதலின் சித்தாந்தமாகும். இவ்வாகமங்களுக்கு மாறுபட வேதவேதாந்தப் பொருளைச் சொல்லும் ஏனைய நூல்கள் எல்லாம் பூருவபக்க நூல்களாம். (267)
=ങ്കs8D=

சிவஞானசித்தித் தெளிவு (e). சித்தாந்தநெறியே திருவடிப்பேறு அளிப்பது. முதல்வன் பக்குவ ஆன்மாக்களுக்கு ஒரு பிறவியில் தானே திருநோக்கம் முதலிய தீக்கைசெய்து மும்மலங்களை நீக்கி அருள்வடிவாக்கிப் பேராநந்தம் அநுபவிக்கச் செய்து சீவன் முத்தராக வாழ்வித்துத் தேகநீக்கத்திலே பரமுத்தியாகிய திருவடிக்கீழ் வைப்பன் என்று சித்தாந்த நூல் சொல்லி இருக்கவும், உலகத்தார் இதனை அறியாது பிதற்றுவது என்ன LDuisastb (268) (f). சிவனே மலம் அகற்றி முத்தி அளிப்பவன்.
பரமசிவன் அருளிய வேதாகமங்களின் பெருமையால் அவன் முற்றறிவுடையன் என்பதும், அவ்வேதாகமங்களின்வழி ஒழுகுவோர்க்கும் ஒழுகாதோர்க்கும் முறைமைப்படி இன்பத்தையும் துன்பத்தையும் கொடுத்தலினால் முடிவில் ஆற்றலுடையன் என்பதும், அவ்வின் பத்துன்பங்களை நுகரச்செய்து வினை ஒழித்தலாற் பேரருள்உடையன் என்பதும் பெறப்படுதலின், அவனே முழுமுதற் கடவுளாய் முத்தி அளிப்பவனாம். (269) சைவசாதனைகளே முத்திபயப்பன. (a). சைவ சாதனைகளின் வகையும், பயனும்.
சிவனடியைச் சேர்தற்குரிய நெறிகள் தாதமார்க்கம் முதலாக நான்கு வகைப்படும். அவை சரியை, கிரியை, யோகம், ஞான்ம் என்றும் சொல்லப்படும். இவற்றின் பயன் முறையே சாலோக, சாமீப, சாரூப, சாயுச்சிய முத்திகளாம். முன்னைய மூன்றும் பத முத்திகள். பின்னையது பரமுத்தியாம். (270) (b).சரியாசாதனையின் இயல்பும், பயனும்.
சிவசரியை ஆவது திருக்கோவில் அலகிடல், மெழுகுதல், பூமாலை தொடுத்தல், சிவபெருமானைப் புகழ்ந்து பாடல், தீபமிடுதல், நந்தவனம் உண்டுபண்ணுதல், சிவனடியாருக்குப் பணிவிடை செய்தல் முதலியன. சரியை அனுட்டிப்போர் சாலோகபதத்தை அடைவர். (271)
(c). கிரியாசாதனையின் இயல்பும், பயனும். சிவகிரியை ஆவது புதிய மலர்களி, தூபம், தீபம், திருமஞ்சனம், ருவமுது முதலிய அமைத்துப் பஞ்ச சுத்திகளும் செய்து
=sே)=ா

Page 43
சிவஞானசித்தித் தெளிவு
ஆசனமிட்டு மூர்த்தியை எழுந்தருளச்செய்து மூர்த்திமானாகிய பரஞ்சோதியைப் பாவனைபண்ணி ஆவாகித்து மெய்யன்போடும் அருச்சித்துத் துதித்து வழிபட்டு அக்கினி காரியமும் செய்தலாம். கிரியை அநுட்டிப்போர் சிவசாமிபபதத்தை அடைவர். (272)
(d). யோக சாதனையின் இயல்பும், பயனும். சிவயோகம் ஆவது ஐம்பொறிகளையும் ஒடுக்கி சுவாசத்தை நிலையில் நிறுத்தி மனத்தை ஒருவழிப்படுத்தி உடம்பினுள் ஆறு ஆதாரங்களையும் தரிசித்து, ஆன்மாவானது அவ்வாறு ஆதாரங்களுக்கும் மேலே சென்று பிரமரந்திரத்தில் ஒழுகும். அமிர்ததாரை ஒழுக்கால் உடம்புநிலைத்திருப்பத் தான் பூரணப்பிரகாசமாகிய சிவசோதியைக் கண்டு இவ்வாறு நியமமாதி அட்டாங்கங்களோடு கூடிய சமாதி நிலையை அடைந்து ஆநந்தித்து இருத்தலாம். இவ்வியோகநெறியைச் சாதித்தோர் சிவசாரூபத்தை அடைவர். (273) (e). ஞான சாதனையின் இயல்பும், பயனும்.
சிவஞானம் ஆவது கலைஞானம் முதலிய யாவற்றையும் கற்றறிந்து மற்றும் சமயநூற்பொருள்கள் யாவும் பூர்வ பக்கமாகக் கண்டு, பதிபாச இலக்கணம்கூறும் சிவாகம நெறியே சித்தாந்தம் எனத்தெளிந்து காண்பான் காட்சி காட்சிப்பொருள் எனப் பிரித்தறியும் அறிவு ஒழிய அத்துவிதமுறையிற் சிவனுடன் கலந்துநிற்றலாம். இஞ்ஞானநெறியை அநுட்டித்தோர் சிவசாயுச்சியம் பெறுவர். (274) (f). ஞான பூசனையே முத்திக்கு நேர்வழி சிவபெருமானை வழிபடும் முறைகள் கன்மயாகம் முதலிய ஐந்துமாம். இவற்றுள் கன்மயாகம் முதலிய நான்கும் ஒன்றுக்கொன்று ஏற்றமாயும் போகப் பயனைத்தருவதாயும் இருக்கும். ஞானயாகம் இவை நான்கிற்கும் மேலாய் முத்தியைப் பயப்பிக்கும். (275) 3. சிவஞானத்திறமே சிவனடி சேர்விக்கும். (a). ஞானத்தின் வகையும், பயனும். ஞானம், கேட்டல், சிந்தித்தல், தெளிதல், நிட்டை என நான்கு
வகைப்படும். இவற்றுள், நிட்டை கைவரப்பெற்றோர் பரமுத்தி அடைவர். நிட்டை கைவரப் பெறாதார் மேலான
=0>ങ്ക

சிவஞானசித்தித் தெளிவு
1.
புவனங்களுக்கு அதிபராயப் வைகி ஆணி டு போகங்களைப்புசித்து மீண்டு இப்பூமியிற் பிறந்து குருவருளால் நிட்டை கைவரப்பெற்றுத் திருவடி அடைவர். (276) (b). ஞானப்பேறே மற்றைய சாதனைகளின் முடிவு.
தானம் முதலிய பசு புண்ணியங்களைச் செய்வோர் சுவர்க்க இன்பங்களை அநுபவித்து மீளப்பிறப்பர். சரியை, கிரியை, யோகங்கள் ஆகிய சிவபுண்ணியங்களை அநுட்டித்தோர் பதமுத்தி அடைவர். அவர் சர்வசங்காரகாலத்தில் முதல்வன் அநுக்கிரகம் செய்யாவிடின் மீண்டும் பிறந்து குருவருளால் ஞானம் பெற்றுச் சிவனடி சேர்வர். அநுக்கிரகம் பெறின் மீளப்பிறவாதே முத்திபெறுவர். (277)
(c). மெய்ஞ்ஞானப்பேறு புண்ணியச் செயல்களாலும் ஆகும்.
சிவஞானியர்க்குச் செய்யும் தானம் முதலிய அறங்கள் சிறியவே ஆயினும் மிகப்பெருகிப் பரபோகத்தைக் கொடுப்பதே அன்றி வரும்பிறப்பில் நேரே ஞானத்தை அடைவித்து
முத்திப்பேறும் அளிக்கும். (278)
(d). மெய்ஞ்ஞானத்தின் இயல்பு.
முத்தி சித் திப்பது ஞானத்தாலே என்பது வேதசிவாகமத்துணிபாம். ஞானமின்றி முத்தியாகும் என்று கூறுவார் மதியினர்களாம். அத்தகை அஞ்ஞானத்தால் உற்றபந்தம் மெய்ஞ்ஞானத்தால் அற முத்தியாகும். எனவே முத்தி நெறிகாட்டும் ஞானம் மெய்ஞ்ஞானமாம். (279) (e). மெய்ஞ்ஞானத்தின் பயன். ஞானாசாரியரது சந்நிதிமாத்திரையால் பக்குவ ஆன்மாவுக்குச் சிவஞானம் உதிக்கும். அதனாற் பதி, பசு, பாசங்களின் இயல்பும் பதி சடசித்துக்களோடு அத்துவிதமாய்க் கலந்துநிற்கும் முறைமையும் ஆன்ம அறிவிலே விளங்கித்தோன்றும். (280) முன்றாம் அதிகரணம்.
ஞான நிட்டையாளர் இயல்பு.
(a). ஞானநிட்டையாளர் இகத்தே சீவன்முத்தராய்ச்
சிவதரிசனமே பெற்றிருப்பர்.
ങ്കD=ത്ത

Page 44
சிவஞானசித்தித் தெளிவு
குருவருள் பெற்று, மலமுதிர்ச்சியும் சத்திநிபாதமும் காரணமாக ஞானம்விளைந்து நிட்டைகூடினோர்கள் சீவன் முத்தராய் ஒன்றிலும் விருப்பு வெறுப்பின்றிச் சிவனோடு பிரிவின்றி நின்று சிவம் ஒன்றையுமே காண்பர். (281)
(b). சிவதரிசனம் கூடும்முறையும், அதன் இயல்பும். கேவல சகலங்களை விடுத்து அவற்றைப் பின்பொருந்தாமலும், தற்போதமுனைப்பு அற்று நின்று விட்டதைப்பின் அடையாமலும் ஆன்மாவின்கண் சிவத்தைப் பிரித்தறியாது அருளோடு அவ்வருளேயாய் நிற்கப்பெறின் சிவதரிசனம் உண்டாம். (282) (c). ஞானநிட்டையாளர் இருவினைஒப்புஉடையோராய்த்
தேகாந்தத்துப் பரமுத்தராவர். சரியை, கிரியை, யோகங்களின் பயனாய் விளங்கும் சிவஞானம் உதித்த இடத்து இருவினைப்பயனாகிய இன்ப துன்பங்களை நுகர்தற்கு எடுக்கப்படும் பிறவிகளின் நீங்கி இப்பூமியிலே விருப்பு வெறுப்புக்கள் அற்றவராயப் நேயத்தழுந்திக் காயம் நீங்கிய இடத்து எங்கும் வியாபியாய் முதல்வனோடு அத்துவிதமான பரமுத்தி அடைவர் ஞான நிட்டையாளர். (283)
(d). ஞானநிட்டையாளர்க்கு விதிவிலக்கும் வினையும்
இல்லை. இவ்வுலகத்திலே ஞானநிட்டைகூடினோர் நன்மை தீமை முதலியவற்றிற் பற்று அற்றவராய் பாலர், உன்மத்தர், பேய்பிடியுண்டவர் என்னும் இவர்களைப்போல வினை இயற்றுபவராய்ப் பாடல், ஆடல் முதலிய ஆநந்தக்குறியாந் தொழில்களைச் செய்யினும் செய்திருப்பர். (284) (e). இருவினைஒப்பின் இயல்பு. ஞானநிட்டை கூடினோர்க் குத் தேசம் முதலிய உபகரணங்களோடு நிற்றல், இருத்தல் முதலிய இருவகைத்தாம் வினைகள் யாவற்றிலும் ஒத்த அநுபவமே இருக்கும். அவர் எவ்வினை செய்யினும் அரனடியை அகன்றிரார். (285) (f). ஞானநிட்டை முடியாதோருக்கு உபாய நிட்டை. ஞானநிட்டை கைவரப்பெறாதாயின் சடசித்துக்கள் யாவும் சிவமயமாகவும்,சீவச்செயல்கள்யாவும் சிவச்செயல்களாகவும்
=2>=ങ്ക

சிவஞானசித்தித் தெளிவு கணிடு உணர்ந்து குருவருளான் அருளப் பட்ட உபாசனையைக் கைக்கொண்டு சாக்கிரத்தில் துரியாதீதம் பெற முயற்சித்துவரின், சிவபோதம் தமக்கென உரித்தாய அநுபவமாக இருக்கும். (286) (g), உபாயநிட்டையினால் சாக்கிராதீதம் கூடினோர் இயல்பு.
சாக்கிரத்தில் நின்மலதுரியாதீதத்தைப் பொருந்தினவர்கள் இப்பூமியின்கண்ணே புறப்பற்றும் அகப்பற்றும் ஆகிய பற்றுக்கள் யாவையும் ஒழித்துச், சிவத்துடன் கலந்து சிவமேயாவர். புறப்பற்று நீங்கி அகப்பற்று உடையோர் பிறப்பிற்படுவர்.(287)
2. ஞானநிட்டையாளர் அநுபவமாகிய அத்துவித இரகசிய
இன்பத்து இயல்பு.
கருவிகள் இல்லாதும் தொழிலற்றும் கழிந்தபோதும் காணுந்தன்மை இல்லாது இருக்கும் அருள்ஒளி இல்லார் ஒன்றுபட்டு நிற்கும் முத்தி இன்பத்தைக் காணும்தகையர் அல்லர். அது காமஇன்பம் கன்னிக்குத் தெரியாததுபோலவும், சேர்க்கை இன்பம் மணவாதார்க்குத் தெரியாததுபோலவுமாம். உடம்பிற் செறிந்தியங்கும் உயிரையே உணர்ந்தறிய மாட்டாத அருளுணர்வு இல்லார். உயிர்க்குயிராய் நிற்கும் சிவத்தைத் தம்முணர்வால் உணர்தல் கூடும் என்பது கற்பனை மொழியேயாம். திருவருளாற் பாசபசுஞானங்கள் அகல மெய்யறிவாற் சிவனையும், சீவனையும் அறிபவர்க்கு அன்றி ஏனையோர்க்குப் பிறவியும் மலமாசும் நீங்கா. (288)
3. ஞான நிட்டையாளர் பேறாம் அத்துவிதப்பரமுத்தி இயல்பு.
ஆன்மா தன்னை அடுத்தகருவிகளின் இயல்பே தனது இயல்பாகக்காட்டிநிற்கும் தன்மையை அறிந்து இக்கருவி இயல்புகள் தனது சொரூப இயல்பன்று என்றும், இவை தனக்கு அந்நியம் என்றும் , பொயப்ப்பொருளாயப் அழிந்துபோவன என்றும் திருவருளால் இவற்றினது உண்மையை அறிந்தவன் சிவனை அடைவன். அடைந்து பின் மீளான். (289)
நான்காம் அதிகரணம். 1. மலரடிக்கிழ் வைப்பினியல்பு. --
எங்கும் வியாபியாகிய சிவத்தை யாம் சென்றடைவது என்னையோ, அவன் வியாபியாய் இன்றி எம்மின்வேறாய்
=63)=m,

Page 45
சிவஞானசித்தித் தெளிவு
இருப்பன் அன்றோ அடையலாகும் என்னில், அவனது வியாபகம் உடலிற் செறிந்திருக்கும் உயிர் போல்வதாம். உயிர்தான் உடலெங்கும் செறிந்திருந்தும் கண் கொண்டறிவதுபோல் பிற அவயவங்களைக் கொண்டு விரித்தறிவது இல்லாததுபோல, உயிரும் பதிதன்னில் யாண்டும் செறிந்திருந்தும் அவனருளாகிய ஒளிகொண்டு, நிட்டையின் நிகழும் கண்ணொளியும் பெற்றே தனது இயல்பையும் இறைவனது இயல்பையும் தெளிந்தறியும். அப்போது இறைவன் கண்ணிற் கண்ணொளிபோல ஆன்மாவிற் பரமான்மாவாகத் தோன்றி நிற்பன். (290)
மலரடிக்கிழ் அணைந்து நிற்போர் வகையும், நிலையும்.
தடாகத்தில் உள்ள பாசியானது கல்லினை மேலும் மேலும் எறியும் பொழுது எறிபட்ட இடத்து நீங்கி, கல்லெறியாது விடும்இடத்து வந்து நீரை மூடிக்கொள்வதுபோல, மலமாயை கன்மங்களாகிய பாசமும் முதல்வனது திருவடியைத் தியானிக்கும்போது நீங்கி விடுத்த இடத்து ஆன்மாவைப் பொருந்தும். நேயத்தழுந்தி அரன்மலரடிக்கீழ் நீங்காத நிட்டையாளர்க்கு ஒருபோதும் அதுவந்தடையாது. ஆயின் அவ்வாறு அன்றி அரன் மாட்டும் கருவிகள் மாட்டும் விருப்புற்றுச் சுழலுவோர் அப்பாசத்தை நீக்கிக்கொள்ளும் உபாயம் உபதேசமுறைப்படி பின்னர்க்கூறப்படும். (291) ஒன்பதாம் கத்திரம். ஞானநிட்டை கைவராதார்க்கு உபாயநிட்டை எய்து முறைமை தொகுத்துக்கூறல், பாசஞானம் பசுஞானங்களால் அறியப்படாத பரன், பதிஞானத்தால் அறியப்பட்டும் கன்மவசத்தாற் பிரபஞ்சப்பற்று உதித்து நிட்டை கைவராதாயின், பற்றுக்கிடமாய பிரபஞ்சம் நிலையற்றது எனக்கண்டு திருவஞ்செழுத்தை முறையே செபித்துவரின் உண்மைநிட்டை நிலையாவுறும். (292)
முதலாம் அதிகரணம். W பாசஞான பசுஞானங்களின் இலக்கணம்.
சொற் பிரபஞ சமும் பொருட் பிரபஞ்சமுமாகிய இருவகைப்பிரபஞ்சங்களின் வாயிலாக ஆன்மாவின் கண் நிகழும் ஏகதேச அறிவு பாசஞானமாம். நான் என்னும்
= !=

சிவஞானசித்தித் தெளிவு
முனைப்பால் ஆன்மாவின்கண் நிகழும் அறிவு பசுஞானமாம். இவை இரண்டினாலும் முதல்வனை அறிதல் கூடாது. (293) பாசஞான பசுஞானங்களின் சிறுமை. கருவிகளோடுகூடிக் கீழ்நாடுதல் இன்றி அவை விரிந்தும் அடங்கியும் தொழிற்படாது இருப்பதே முத்தியாம் என்னில் சினையாதிய நிலைகளினும் மரணாவத்தை முதலிய அவதிகளினும் உயிர்களுக்கு முத்தி சித்தித்ததாக வேண்டும். அ.தின்மையாலும் சமாதியே முத்தியாகும் என்னில் அ.து கூடிப் பின் ஒழியும் இடத்து கருவிகள் தொழிற்படும் ஆதலானும் இந்நிலைகளில் மலம் அறமாட்டாது. பதிஞானம் ஒன்றனாலே திருவடிப்பேறாகி மலம் அகலும், (294) பதிஞானத்து இலக்கணம். மனம்வாக்குக்காயங்கள் வாயிலாக நிகழும் பாசஞானத்தினாற் சிவனை ஒருகாலும் அறிய முடியாது ஆதலாலும், ஏகதேச அறிவுடைய ஆன்மா திருவருள் அறிவித்தாலன்றி அறிய இயலாது இருத்தலாலும் சிவஞானத்தாற் சிவனை அறியவேண்டும் எனக் கூறியதாம். (295) பதிஞானத்தின் பெருமை. விடயங்களைக் காண்கின்ற கண்தன்னையும் தனக்கு முதலாகிய அந்தக்கரணங்களையும் அறியமாட்டாது இருத்தல் போலவும் அந்தக்கரணங்கள் தம்மையும் தமக்கு முதலாகிய உயிரையும் அறியமாட்டாது இருத்தல் போலவும் உயிரும் தன்னையும் தனது முதலாகிய சிவனையும் அறியாது இருக்கும். இவையாவையும் ஒருங்கேஅறிந்து நிற்கும் சிவன் தனது இயல்பையும் ஆன்ம இயல்பையும் அவ்வான்மாவுக்கு விளக்கித் தான் கரணங்களால் அறியப்படாது நிற்பன். ஆதலால் திருவருளைத் துணையாகக் கொண்டு சிவனை ஆன்ம அறிவிற் கண்டு அவ்வருளோடு கூடிநிற்கப் பெறின், பாசம்விட்டுநீங்கும். நீங்கியது ஒருக்கால்வந்து கூடினும் சிவபாவனையை விடாது செய்யின் திருவருளே தாரகமாக நிற்றலும் ஆகும். (296)
5>=

Page 46
சிவஞானசித்தித் தெளிவு
இரண்டாம் அதிகரணம்.
1. பிரபஞ்ச வெறுப்பு நிகழத் திருவடி அன்பு தலைப்படுமுறைமை,
சிவத்தில் விருப்பும் பிரபஞ்சத்தில் வெறுப்பும் உண்டாய இடத்துச் சிவன் ஆன்மா இடத்துப் பிரகாசித்து நின்று அன்பைப்பெருக்க அவ்வன்பின் வழியாக ஆன்ம அறிவின்கண் புகுந்துநின்று பேரின்பத்தைக் கொடுப்பன். (297)
2. சிவோஹம்பாவனை இயல்பும், பயனும்,
பாசமும் நானன்று, பதியும் நானன்று என்று கண்டு, பாசத்தை விட்டு நீங்கிச் சிவோஹம்பாவனை செய்யின், சிவன் இவனில் வேறற நின்று மலங்கள் முழுவதையும் போக்கிச் சுத்தனாகச் செய்வன். (298)
முன்றாம் அதிகரணம். 1. திருவஞ்செழுத்து வேள்வியின் இயல்பும், பயனும்.
திருவஞ்செழுத்தினாலே சிவான்மாவை உடையான் என்பதையும், திருவஞ்செழுத்தினாற் சிவனது உருவ அருவ அருவுருவத்திருமேனிகள் அமைந்ததென்பதையும் முறையான் அறிந்து, திருவஞ்செழுத்தால் சகளிகரணம் செய்து தனது உடலைச் சிவசொரூபமாக்கித் திருவஞ்செழுத்தால் இருதயக் கமலத்துச் சகள நிஷ்களசகள மூர்த்திகளை ஆவாகித்துப் பூசித்துத் திருவஞ்செழுத்தாற் பிராணாயாமம் செய்து குண்டலியில் வேள்வியால் திருவருட் சத்தியைப் பிரகாசிக்கச் செய்து மேல்எழுப்பிப் புருவநடுவாகிய விந்துத்தானத்து நிறுத்தித் திருவஞ்செழுத்தை விதிமுறையாற் செபிக்க முதல்வன் ஆன்மாவின்கண் விளங்கித் தோன்றுவன். (299) 2. அந்தரியாகம் செய்யும் முறைமை.
பூசனைத்தானமாகக் கூறிய இருதயமும் உந்தியிற் பிரகிருதியாகிய கிழங் கினி நின்று எழுந்து ஆன்மதத்துவங்களாகிய எட்டங்குல நாளத்தை உடையதாய் அசுத்தமாயையாகிய முடிச்சோடுகூடி வித்தியாதத்துவங்கள் ஏழும் சுத்தவித்யுைம் ஆகிய எட்டுப்புறஇதழ்களையும் வித்தியேசுரர்களாகிய அகஇதழ்களையும் உடைய கமலாசனமாம். இக்கமலத்தின்மேல் ஈசுவரம் சதாசிவம் ஆகிய
G66)-

சிவஞானசித்தித் தெளிவு
இருதத்துவங்களும் கேசரமாய் மூர்த்தியாக அமைந்திருக்கும். அதனுள்சத்திதத்துவமாகிய பொகுட்டிற் பீசமாய் விளங்கும். சிவன் மூர்த்திமானாக நிற்பன். இவ்வாறு அறிந்து பூசித்தலே அந்தரியாகம் செய்யுமுறைமையாம். (300)
3. அந்தரியாக பூசனையின் இயல்பும், பயனும்.
ஆன்மாவிற் சிவனை அர்ச்சித்தலும் அருள்வழி நின்று சிவனைத் தியானித்தலும் ஆகிய அகப்பூசனையாற் சிவம் விளங்க மலம் நீங்கி ஆன்மசுத்தி அடைதலால் அவ்வகப்பூசனையும் முத்திசாதனமாம். (301) 4. உபாயப் புறப்பூசனையின் இயல்பும், பயனும்.
அந்தரியாகப் பூசனை செய்வோர் புறப்பூசனையும் செய்யவேண்டின் பூமரத்தின் கீழ் உதிர்ந்த பூக்கள் முதலிய திரவியங்களைக் கொண்டு தம் அந்தரியாகத்து இலிங்கம் போலவே இறைவனது திருவுருவங்களையும் பேதமறக்கண்டு பூசித்துத்தியானித்து முனைப்பின்றித் தம்மை வந்துறும் புண்ணியபாவங்கட்குத்தாம் பாத்தியர் அல்லர் எனத் தெளிந்து இறைவன் உருவங்களை எதிருற்ற இடத்தெல்லாம் வழிபட்டு நிற்றலும் முறையாம். இதுசிறந்த மெய்யடியார் செயலாகும். (302) 5. சிவோஹம் பாவனையோடு கூடிய அகப் பூசனையால்
முத்தியாமாறு.
முதல்வன் சராசரங்கள் எங்கும் வியாபித்து நிற்றலால் எங்கும் சிவமயமாகக் கண்டு வழிபட அவரவர் பக்குவத்துக்கேற்ப வெளித்தோன்றி அருள்செய்வன். ஆயினும் மலவாசனையை நீக்க விரும்புவோர் மேற்கூறியவாறு சிவோஹம் பாவனையோடுகூடிய தியான பூசனைகளைச் செய்யின் முதல்வன் ஆன்மாவின்கண் விறகில்தீ பாலில்நெய் பழத்திரதம் எள்ளின்எண்ணெய் போல விளங்கித் தோன்றி மலநீக்கம் செய்து தன் வண்ணமாக்கித்தனது சொரூப இலக்கணங்களையும் ஈந்து ஆன்மாவினுள் கலந்து திருவருள் சத்தி பதித்துப் பரமுத்தி இன்பம் துய்ப்பிப்பன். (303)
瞿蛋滥 (67) T

Page 47
W சிவஞானசித்தித் தெளிவு
பத்தாம் சூத்திரம்.
சிவஞானிக்கு வினைப்பயன் நுகர்ச்சியும் வினைவிளைவும் இலவாக மலக்குற்றம் நீங்கினமையின் பிறவி இன்றென்பது.
சிவஞானி இறைவனோடும் பிரிப்பின்றி அவனேயாய் நிற்றலின், அவன் உலகியலிற் செய்த வினையாவும் அவனுக்கு வினை புரிந்தார்மாட்டுப் பொருந்தும். அவன் தன்செயலற்று இறைபணியிலே நிற்றலின், அஞ்ஞானத்தா உறும் ஆகாமியம் அறும். ஆகவே இவன்செயல் இறைவன் செயலாகவும் இவனுக்குச் செய்தன இறைவற்குச் செய்தன ஆகவும் பயன்பட இவனுக்குப்பிறவியே இலதாகிப் பரமுத்தி சித்திக்கும். இவன் சிவநேயத்து அழுந்தி நின்று ஒருக்காற் பாதகம் எனற்பால செய்யினும், அவை அரன் பணி அறமாகவே பயன்தரும். (304) முதலாம் அதிகரணம்.
1. சிவஞானியர்க்குக் கன்மதுகர்ச்சி இல்லை.
யான் செய்தேன் பிறர் செய்தார் என்றும், என்னது யான் என்றும் அபிமானிக்கும் ஆணவமலத்தோடு கூடிய அறிவைச் சிவஞானத்தால் எரித்து ஒழித்து, அவனே தானாகி நிற்கப்பெறின், இறைவனே நேரின் நின்று வினைப்பயன்களும் வினைகளும் அணையாது ஒட்டெடுக்கச் செய்வன். மேற்கூறிய மாயாவாதனையோடு வினைசெய்வார்க்கு இறைவன் பிரிந்து நின்று அவ்வினைகளாலே போக நுகர்ச்சியையும் ஆகாமிய விளைவையும் முன்னுறச் செய்வன். ஆகவே பிறவி அறுக்கும் பெருஞானம் எய்தினாலே அன்றி ஆணவம் யாவர்க்கும் அகலாது. (305) இரண்டாம் அதிகரணம்.
1. சிவஞானியர் தம்செயல் அற்றிருக்கும் தன்மை,
இந்திரியங்கள் எம்வசமின்றி எம்மைத் தம்வசம் இழுப்பது இறைவன் ஆணையாலேயாம். ஆகையால் அவ்விறைவன் ஆணையை நாமே தலைக்கொண்டு ஒழுக, இந்திரியங்களது வலிகெடும். கெடவே ஆகாமியமும் ஏறாது வினையும் தோற்றாது ஒருக்கால் வாசனாமலவலியால் வினை

சிவஞானசித்தித் தெளிவு
தோற்றிடினும், அது இறைவன் செயலே எனக்காணவே, வினை விளைவின்றி இறைவன் மலரடிப்பேறு சேர்வதாகும். (306) சிவஞானியர்க்கு ஆகாமியம் ஏறாது அகலுந்தன்மை.
இறைவன் தாம் விகாரமேதும் அடைதல் இன்றித் தம்மோடு ஏகப்பட்டுத் தமது பணியின் நிற்கும் சிவஞானியரது வினைகளை அவர்க்கு நன்மை தீமைகள் செய்யும் பிறர் மாட்டுக் கருணையோடே செறிவித்து ஊட்டி ஒழிப்பன். ஆகையால் உலகியலில் தாம் செய்வன எல்லாம் தலைவன் பணியே என்றும் அவையாவும் அவனே தம்மின் உடனாயும் பிரிந்தும் ஒற்றித்தும் நின்று செய்யும் திருவிளையாடலாம் எனவும் கண்டு கருதுவாரை வினைகள் வந்தடையா. (307)
சிவஞானியர்க்கு பிறவி அகலுந்தன்மை,
சிவஞானப்பேறு இல்லாதார் யாத்திரை, துறவு, யோகம், தவம், சித்து முதலிய சாதனைகளைச் செய்துவந்தாலும் பிறப்பிற்படுவர். சிவஞானியரோ மங்கையர் போகம் முதலியவற்றுள் திளைத்திருப்பினும் பிறவியிற் படாது வீடுபேறு எய்துவர். (308) சிவஞானியர்க்கு ஆகாமியம் ஏறாமையை உவமை முகத்தால் விளக்கல்.
அக்கினித்தம்பனை வல்லார்க்கு அக்கினி சுடாதவாறு போலவும், மருந்து மந்திரம் உடையானுக்கு விடம் ஏறாதவாறு போலவும் சிவஞானியர்க்கு ஆகாமியம் வந்தணையா. முற்செய்வினைகளும் ஆகாமிய விளைவைத்தராதே தேகம் உள்ளவும் பெருங்காயம் இருந்த பாண்டத்து மணமும் வனைதல் ஒழிந்த குயவன் திகிரிச் சுழல்வும் போல் இயங்கி நின்று தேகம் அழியும்போது மற்றெல்லா மலங்களுடன் சேர அழிந்து ஒழியும். (309)
பதினொராம் சூத்திரம்.
சீவன்முத்தர்க்கு உடம்பு அழியப் பரமுத்தி ஆமாறும், பரமுத்தி அத்துவிதப் பேரின்ப இயல்பும் தொகுத்துக்கூறல். மெய்ஞ்ஞானம் பெற்று நிட்டை கைவந்த சீவன் முத்தர் உடல் அழிந்துபட, மும்மலமும் பற்றறத் திருவடிப்பேறாகும் அத்துவிதப் பரமுத்தி இன்பம் துய்த்திருப்பர். முதல்வன் அந்நிலையில் உயிரோடு லீலை மாத்திரையானே வேறாயும் உடனாயும் ஒற்றித்தும் நின்று சிவாநுபவ நிகழ்த்துவன். (310)
=(9)

Page 48
சிவஞானசித்தித் தெளிவு
முதலாம் அதிகரணம். 1. பரஞானத்து இயல்பும், பயனும்.
பொறிகளைக் கொண்டு அளவையான் அறியும் அறிவும், நுால களைக் கேட்டலாண் எயப் தும் அறிவும் , அனுபவத்துத் தெளிவதாகிய அறிவும் முறையே பலவிகற்பமாயும், மயக்கம்தருவதாயும், சங்கற்ப பூர்வமாயும் இருத்தலினால் அவை அபரஞானமாகும். பரஞானமோ இவற்றினுக்கு எல்லாம் மேலாய் இறைவனடி ஞானமாகித் திருவருள் அத்துவிதம்கண்ட ஞானமாகும். ஆதலாற் பரஞானம் பெற்ற சீவன் முத்தர் சிவமொன்றையே காண்பாராய்ச் சிவாநுபூதியில் திளைத்திருப்பர். (311)
2. சிவாதுபூதிச் சிறப்பு.
(a). சிவாநுபூதியில் மாயாமலம் சேட்டிக்காமை.
அநாதிகன்மத்துக்கு ஏற்ப உயிர்க்குத் தொடர்ந்துவரும் உடல்களும் அநாதியாய் அந்தமடையாது ஆதலின், முத்திநிலை நித்தியமாகிய சரீரம் பெற்றிருத்தலேயாம் என்னில் இத்தகை நிலையும் பெறுதற்குரிய பதமுத்தியாகி வீட்டின்பநிலை ஆகாது ஆகையாலும் கன்மமாயை ஆணவங்களோடு கூடிய பந்தத் துன் பத் தையே கொண்டுள்ளதாய் வீட்டின்பம் ஆகாது ஆகையானும் அது பொருந்தாது. அநாதியான கன்ம நோயை ஒழிக்க உற்ற மருந்தாகிய தேகமும் கன்ம நோய் ஒழியத் தானும் வேண்டப்படாது ஒழியும். (312) (b). சிவாநுபூதியிற் கன்ம மலம்சேட்டிக்காமை.
மெய்ஞ்ஞானம் உதித்த போதே சிவம்பிரகாசிக்கச் சீவன்முத்தனாகிய உயிர்க்குக் கன்மமலம் ஒருவாற்றானும் செயல் இலதாய் தன் சத்திகுன்றி உடல் உள்ளவும் நின்று இயங்கி மேலைப்பிறவிக்கு இடமின்றாகத் தேய்ந்து அருகும். அதனாற் காயம் அழிந்த பின் பரமுத்தியிற் கன்மமலம் சிறிதும் சேட்டிப்பது இன்றாம். (313) (c). சிவாநுபூதியில் ஆணவமலம் சேட்டிக்காமை.
ஆணவமலமானது உயிர்களோடு அநாதியே கூடி உள்ளது ஆதலின் அட்து அழியுமாறு இல்லை அழிவதாயின் உயிரும்
670- ۔۔۔۔۔

சிவஞானசித்தித் தெளிவு
அழிந்ததாகுமே எனின் அன்று. இரதகுளிகை இட்ட செம்பிற் களிம்பின் செயலற்று இருப்பினும் செம்புரு நிற்பது போல், ஆணவ மலசத்தி குன்ற உயிர் சுத்த நிலையில் இருக்கும். மேலும் சிவஞானம் கைவர மலமுமே கழிந்து சுத்தனாய் நிற்பதுவே போதும். அரனடியை அடைய வேண்டுவது எற்றுக்கெனின், அருக்கன் ஒளியால் இருள் நீங்குவதாயினும், அவ்வொளி கண்ணொளியோடு கலந்திருப்பினே ஒளி பிரகாசமாவதுபோல, இறைவனோடு இரண்டறக் கலந்திருப்பினே முத்தி இன்பமாகும். ஆதலாற் சிவாநுபூதியில்
ஆணவமலம் இன்றாம். (314) (d). சிவாநூபுதியில் மும்மலமும் சேட்டிக்காமையை உவமை
முகத்தால் விளக்கல்.
நெல்லினுக்கு தவிடு உமிகள் அநாதியாய் இருந்தும் அரிசியில் அவை அறவே நீங்கி இருத்தல் போலச் சிவமுத்தி நிலையிலும் மலமாயைகன்மங்கள் ஆன்மாவை விட்டே நீங்கி நிற்கும். அவ்வாறாயினும் பெத்தான்மாக்கள் அநந்தமாய் இருத்தலின் அவற்றைப் பொருந்தி இருக்கும் மலமும் அநாதியேயாம். (315)
இரண்டாம் அதிகரணம்.
அத்துவிதப் பரமுத்தி இயல்பு.
உயிர்கள் பெத்த நிலையில் இறைவன் அருளால் விடயத்தைப் பற்றி அறிந்து அனுபவித்தலானும், முத்திநிலையில் இறைவனோடே அத்துவிதமாகக் கலந்து அவனே தம்மை அதிட்டித்துப் பற்றியறிந்து அனுபநிகழ்த்த நின்றமையானும், எழுத்துக்கள் எங்கும் செறிந்து நின்று இயங்கும் அகர உயிர் போல் முதல்வன் நின்று இயக்க அவன் திருவடியை இருநிலையினும் அகலாதே நிற்கும். (316)
அத்துவிதப் பரமுத்தி உண்மை.
பெத்த முத்தி இரண்டினும் அத்துவிதம் உண்மையாம் ஆயின் உயிர்கள் எல்லாம் ஒரேகாலத்து முத்தர் ஆகாதது என்னை எனின் முதல்வன் பக்குவநோக்கித் தாமரையை அலர்த்தும் அருக்கனே போலக் காணும் கண்ணுள்ளார்க்கே காட்டி நிற்று அருளுவன். அதனால் அத்துவித உண்மைக்கு இழுக்கின்றாம். (317)
G70. s. E Pa

Page 49
சிவஞானசித்தித் தெளிவு
3.
அவிகாரவாதி, பரிணாமவாதி, ஐக்கியவாதிகள் கூறும் அத்துவித முத்திநிலை மறுப்பு. முதல்வன் மரநிழல் போல் விகாரமின்றி நிற்ப உயிர் அவனைச் சென்றணைந்து இன்புறுவதே முத்தி என்பார் கூற்றும் உயிர் கெட்டு முதல்வனை அணைவதும் கெட்டணைந்து நிற்பதும் அணைந்து கெடுவதும் முத்தி என் பார் கூற்றும் , நீருடன் நீர் கலக்குமாபோல ஐக்கியமாதலே முத்தி என்பார் கூற்றும்பொருந்தா. (318) பேதவாதி, சிவசமவாதி கூறும் அத்துவித முத்திநிலை மறுப்பு. செம்பானது களிம்பு நீங்கிய இடத்துப் பொன்னே ஆகிச் செம்பொன்னோடு ஒத்திருக்குமாப்போல் மலநீங்கிய இடத்து உயிர்முதல்வனோடு ஒத்துச் சேர்ந்திருத்தலே முத்தி என்பார் கூற்றும் பொருந்தாது. (319) அருவ சிவசமவாதி கூறும் அத்துவித முத்திநிலை மறுப்பு. சிவனும் சீவனும் சித்துப்பொருளேயாம் ஆதலின் ஒன்றாதல் கூடுமெனக் கொண்டு இரண்டும் தம்முள் ஒத்து ஒன்றாதலே முத்தி என்பார் கூற்றும் பொருந்தாது. (320) சுத்தாத்துவிதப் பரமுத்தி நிலை. (சித்தாந்தம்) இரும்பை இழுத்து நிற்கும் காந்தம்போல் விகாரமின்றி உடனாயும், இரும்பைத்தீயாம் வண்ணம் செய்யும் நெருப்புப் போற்றன்குணம்ஈந்து உயிரைக் கெடுக்காது பிரிந்து நின்றும், விறகினுக்கு விறகாம் தன் மை யை நீக்கித் தீயாம்தன்மையைத்தரும் நெருப்பேபோல் மலத்தை நீக்கி ஒன்றாய் நின்றும், நீரொடு சேர்ந்த உப்பேபோல ஒன்றுவித்து தன்வியாபகத்துட்படுத்தி நின்றும், பொன்னாய் வந்த செம்பினது செம்பின் தன்மையை மறைத்து நிற்கும் இரத குளிகைபோல் உடனாய் மறைது நின்றும் ஒரு லோகத்தை மற்றொன்றாய் மாற்றும் இரசவாதியே போன்று பிரிந்து நின்றும், கரும்பு, தேன், பால், கனிரசம், கற்கண்டு, சர்க்கரை முதலியவற்றின் சுவைபோன்ற சிவாநுபவப்பேரின்பத்தை ஈந்தும் இறைவன் நிற்ப அவனோடு கலந்து நிற்பதுவே சித்தாந்தமாகக் கண்ட சுத்தாத்துவித முத்திநிலையாம். (321)
G72) -யை

சிவஞானசித்தித் தெளிவு
1.
பன்னிரண்டாம் சூத்திரம். சிவஞானியர் வாதனாமலம் தாக் காவண் ணம் சாதிக்கற்பாலவாய சாதனைகளைத் தொகுத்துக் கூறல்,
சிவஞானியர் வாதனாமலம் தம்மைத் தாக்குறாவண்ணம் தம் பேற்றை உன்னிப் பெருமிதம் உற்றோராய் மெய்யன்பர் கூட்டத்துப் பயின்று பேரின்பத்து அழுந்திச் சங்கம இலிங்க குருசேவைகளைச் சாதித்துச் சிவனடியார் பணிதல் உடையோராய் உடம்பு உள்ளளவும் உலகிற் பற்றின்றி வாழ்வர். (322)
முதலாம் அதிகரணம். சிவனடியார்ப் பேணார் இழிதகவும், பேணுவார் பெருந்தகவும்.
சிவனடியார்க்கு அன்பில்லாதார் சிவனுக்கு அன்பில்லாதவரே ஆவர். அவர் உயிர்கள் மாட்டு அன்பிலராய்த் தம் உயிரையும் கதியிற் சேர்ப்பார் அல்லர். அத்தகையர் நடைப்பிணமேபோன்று தம்மை அண்டினாரைப் பிறப்பிற்படுத்துவார் ஆதலின் அவரது இணக்கம் விலக்கற்பாலது. மெய்ஞ்ஞானியர் சிவனடியாரோடும் மெய்யன்பிற்கலந்து அவர் பணியில் வழுவாது ஒழுகி அருள்வழி நின்று இகழ்வாழ்வில் யாண்டும் இன்பம் ஒன்றனையே கண்டிருப்பர். (323) இரண்டாம் அதிகரணம். சங்கம சேவையின் பெருமையும், பயனும்,
பாசபசுஞானங்களால் அறியப்படாது நிற்கும் முதல்வன் தம்மை ஆன்மாக்கள் அறிந்து உயப் தற்பொருட்டு உருவத்தானும் பாவனையானும் செயலானும் இவையாவுமற்ற சுத்தநிலையானும் சிவனடியார் மாட்டு நிறைந்து விளங்கி அத்துவிதப்பட்டு நிற்றலால் வாதனாமலம் தாக்குறா வண்ணம் யாவரும் மெய்யடியாரைத் தொழுது ஒழுக வேண்டும். (324) இலிங்க சேவையின் பெருமையும், பயனும். (திருக்கோயிற் சிறப்பு)
புறம், அகப்புறம், அகம், அறிவு என்ற மாத்திரையானே முறையே வணங்கும் சரியை, கிரியை, யோகம், ஞானம் ஆகிய நெறிகளின் ஒழுகும் யாவர்க்கும் முறையே தூலம்,
ങ്ക73D=1ത്ത

Page 50
சிவஞானசித்தித் தெளிவு
2.
3.
சூக்குமம், அதிசூக்குமம், அருள் என்னும் வடிவங்களாகத் திருக்கோயில் உள் நின்று இறைவன் திருவருள் செய்யும்மாற்றானே, யாவரும் இலிங்க சேவனை செய்து ஒழுக வேண்டும். (325)
முன்றாம் அதிகரணம்.
குருவிலக்கணம்.
ஞானம், யோகம், சரியை, கிரியை என்னும் நான்கும் இறைவனது திருவடிப்பணிகளாக இவற்றைப் பூண்போர் சிவனடியரே ஆவர். இவருள் ஞானி நால்வகைச் சாதனைக்கும் உரித்துடையான். ஏனையோர் தத்தம்படிக்குக் கீழ் உள்ளவற்றிற்கு உரியர். ஆகையால் முத்திவிழையும் யாவர்க்கும் ஞானகுருவே வேண்டப்படுதலால் சிவஞானியை உள்ளிட்ட யாவரும் தத்தம் ஞானகுருவை முதல்வனாகக்கண்டு வழிபடற்பாலர். (326)
குருசேவைப்பெருமை. (குருவினது இன்றியமையாமை)
மந்திரமாதி அவற்றான் வேதஅறிவு முதலிய பெறலாம். திருவடி ஞானமோ குருவருளாலேயே பெறற்பாலது. அவனருளால் மற்றைய அறிவுமே வருமாதலின் குரு யாவர்க்கும் இன்றி அமையாது வேண்டப்படும். (327) குருசேவைப்பயன். (அத்துவிப் பேரின்பப்பேறு)
சொரூபம், சுத்தம், இலயம, போகம், அதிகாரம் என்னும் ஐவகையானும் அறியக்கிடந்த முதல்வனே குருமூர்த்தமாம் எனக் கொண்டு ஞானகுருவை வழிபட்டொழுக, முதல்வனே அக்குருமூர்த்தியை அதிட்டித்து நின்று பரிசம், மானசம, நயனமாதிய தீக்கையால் மலம் அகற்றித் தானாம் வண்ணம் செய்து அத்துவிதப்பரமுத்தி இன்பம் துய்ப்பிப்பன். (328)

gi boabourno)
ŲJR90ų98 urno)
டியேiமுழ + Ųrtotų998)IITÍ /\ ImŲsŲusஇயகிஐழே 十十
ரயமுடியவிெĮguloĝojo
M /\
டிர்ேமயபடுவிலி + Ựrtoo oog)ul முயனஜெரgs
결nu90un的)
/\ Lumqoluso + qumụ009ưısąşırįso |
ĻĢIJĀíŲuntso
•••'on
டி9திர்பகியிரு "
| ış9ã3110&sorte sĩ Unsouffourmo)ựsoutono ++ 1991apoosjeıştısınıfığĵo
M之
ரவி விருரு சார9டு
N
Isusulast990 ဇွk@းခံခွဇun --~~~~
••••••

Page 51
அமரர் பூரீவரதராஜன் அவர்கள் முப்பதாண்டாய்ப் பணிமுடித்த இடங்கள்
1961 - 1967
1967 - 1971
1971 - 1974
1974 - 1979
1979一世980
1980 - 1980
1980 - 1981
1981 - 1990
அரச வைத்தியசாலை, கொழும்பு.
அரச வைத்தியசாலை, இரத்தினபுரி.
மார்பு சிகிச்சை நிலையம், அநுராதபுரம்.
அரச வைத்தியசாலை, யாழ்ப்பாணம்.
மருத்துவப் பொறியியற் பகுதி, கொழும்பு.
அரச வைத்தியசாலை, யாழ்ப்பாணம்.
பிராந்திய சுகாதார சேவைகள் அலுவலகம்,
யாழ்ப்பாணம்.
பிராந்திய சுகாதார சேவைகள் அலுவலகம்,
வவுனியா.


Page 52


Page 53
'இச்சித்தியார் ഇ ഞU க( இல்லாதவர்களும் படித்துப் பயன் புதியதொரு முறையில் அமைந்த
பதப் பொருளின் கீழ் வ சொன்முட்டறுத்துக் கருத்துக் செய்வன.
பொழிப்புரை செய்யுட் பொருை
பொழிப்புரை முழுவதையும் ( ஒரு புத்தகம் ஆக்கலாம்.
அது சைவசித்தாந்தக் கருத்து செய்து தெளிவிப்பதாய் இருக்கு
எடுத்துக் கொண்ட விஷயங்க வகுத்தும் விரித்தும் தலையங்க உரையின் மற்றொரு விசேடம்.
வருங்கால உரையாசிரியர்க தக்கதொரு வழிகாட்டி"
- பண்டிதமணி சி. கணபதிப்பி
Printed

ருவி நூலுணர்ச்சி அடைதற்கு உரியது; l
ருங் குறிப்புக்கள் களுக்கு விளக்கஞ்
ளத் திரட்டித்தருவது.
சேர்த்துப் புறம்பாக
க்களைத் தொடர்பு ம்.
ளைத் தொகுத்தும் 5ங்கள் தந்திருப்பது
ளுக்கு இவ்வுரை
ள்ளை -
By: Unie Arts (Pvt) Ltd.