கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: உண்மை விளக்கம் (செல்லத்துரை, இ.)

Page 1

அகில இலங்கை சைவபுலவர் படிதாரிகள்
_ శ్రీ* வெளியிடு
s

Page 2


Page 3

டெ சிவமயம்
திருவதிகை - மனவாசகங் கடந்தார்
அருளிச் செய்த உண்மை விளக்கம்
மூலமும் உரையும்)
உரையாசிரியர் சைவப்புலவர்-சித்தாந்த பண்டிதர் திரு. இ. செல்லத்துரை அவர்கள் (யாழ்/தட்டாதெரு, இ. த. க. பாடசால்ைத் தமிழாசிரியர்)
வெளியிடுவோர்:
அகில இலங்கைச் சைவப்புலவர் பட்டதாரிகள் சங்கம், பூநிலபூரீ ஆறுமுககாவலர் சைவப்பிரகாச வித்தியாசாலை, வண்ணுர்பண்ணை, யாழ்ப்பாணம், இலங்கை,

Page 4
அ, இ, சை, பு, ப. சங்க வெளியீடு: த
முதற்பதிப்பு: 1963 சோ பகிருது - வைகாசி
பிரதிகள்: ஆயிரம் பதிப்புரிமை: உரையாசிரியர்க்கேயுரியது
விலே ரூபா 1-50
ஆனந்தா அச்சகம் 32 பீ, காங்கேசன்துறை வீதி, யாழ்ப்பாணம்,

- T
. . . . . உண்மை விளக்க உரை" диницалитio திருமணி தமிழெனுந் நீஞ்சுவைத் தேகுெடு பொருவில் கசவப் பெருமருந் த பூவித் துன் கரிய மயக்கத் தொன்கு பிரித்திடா வென்னிஃக் கிரங்கி பிந்திடு வள்ளல் புரையில் கேள்விப் பண்டித மணியித் தரைபுகழ் நான் தன் பண்பிக் காவலன், கைலாச பதிபொரு மெளன் தவமுரளி "கைவிரல் தைவ ரக்" காட்டிடு பொருளோப்ாம் ஆழ்ந்த சிந்தையி குராப்ந் தறிந்து சூழ்ந்தோ ரகாச் சிறப்பி துரைத் திடுஞ் சீர்பெறு சைவ சித்தாந்த சாகரம் நேர்மைசால் கண்டனம் நிகழ்ந்துநக் கீரன், கணபதிப் பிள்ளே, பென் கருத்தைவிட் டக வாக் குனநலக் குரவனின் கெசட்டம்பர்ச் சேவடிக் கன்புசெய் தான் ருேர் துருபர பசுவர் தென் சிற் றறிவுக் கேன்றிட வியற்றிய உண்மை விளக்க வரை தண்ன லருள் ஒன்ர்ப்பண் பாமே,
- இ. செல்வித்துரை
|

Page 5
6.
பதிப்புரை
நாவலர் ஐயா அவர்களது பெருமுயற்சியினல், சைவ சித்தாந் தச் செந்நெறி தெளிவுற்றுப் பிரகாசித்த நந்தமிழ் நாட்டில், இன்று அச்சமய அறிவும் ஒழுக்கமும் அடிதலை தடுமாறி, நிலைகுலைந்து கிடக் கின்றன
இந்த நிலையிலே, ஒரு கணக்குக்குப் பலவேறு விடைகளைக் காணும் மாணவர்கள் போல, சமய உண்மைகளுக்குப் பலவேறு வகையில் அர்த்தஞ் செய்து கொண்டு, அறம் புறமான அறிவிஞலே கீழ்நிலைப் படாமல் நாம் வாழ்வதற்குச், சைவ சித்தாந்த நூல்களே நம்மை வழிப்படுத்தத்தக்கவைகள் ஆகின்றன.
எனவே, சமயக்கல்வியின் இன்றியமையாமையை நோக்கி: அதனைக் கட்டாய பாடமாக்கிய இந்நாளில், சைவ மாணவர்க்கும் அவரை வழிப்படுத்தும் சைவாசிரியர்களுக்கும் சைவசித்தாந்தநூல் அறிவு தெளிவுற அமையவேண்டும் எனவும், அதற்குத் தேவையான நூல்களை அவர்கள் எளிதிற் பெற வசதியளிக்க வேண்டும் எனவும் எண்ணிக், கிடைத் தற்கரிய சித்தாந்த நூல்களுட் சிலவற்றை வெளி யிடுவதற்கு எமது சங்கம் தீர்மானித்தது.
அதன் பயனுய், "உண்மை விளக்கம்' என்னும் இந்நூல் முத லில் வெளியிடப்படுகின்றது. ஈழத் தி ல் சைவப்புலவர், சித்தாந்த பண்டிதர் தேர்வுகளுக்குத் தோற்றும் மாணவர்களுக்கு இவ்வெளி யீடு உடனே பயன்படுமென்பதை நினைக்குந்தோறும் நாம் பெரு மகிழ்ச்சியடைகின்ருேம்.
சைவ நன்மக்கன் அனைவரும் இந்நூலை விரைந்து வாங்குவதன் மூலம் ஏனைய நூல்களையும் வெளியிடுவதற்கு ஆதரவும் ஊக்கமும் அளிப்பார்களாக,
இந்நூல் உரையாசிரியர் சித்தாந்த பண்டிதர் சைவப்புலவர் திரு. இ. செல்லத்துரை (சிறுவைகிழார்') அவர்கள், சைவசித்தாந்த சாகரம் பண்டிதமணி சி. கணபதிப்பிள்ளை அவர்களிடம் மாணவரா யிருந்து மரபுதவருத கல்விஅறிவு ஒழுக்கங்களைப்பெற்றுக்கொண்ட சிறப்பின.உ  ைட யர்: அன்னர், தமது குருவின் ஆசியை முன் வைத்து, இந்நூலாசிரியரது கருத்தை யாவரும் எளிதில் தெரிந்து உணரும் வகையில் மிகத்தெளிவாகவும், தருக்க நியாயந்தவருமலும் இந்நூலுக்கு உரையெழுதித் தந்துள்ளார்கள், சமய வளர்ச்சியில்

שי
கொண்டுள்ள ஆர்வத்திகுலும் 'தன் கடன் பணிசெய்து கிடப்பதே" என்ற தன்னலமற்ற கருத்தினுலும் எ ங் க ள து வேண்டுகோளுக் கிணங்கி இவ்வுரையை எழுதித்தந்த அவர்களுக்கு நாம் எ ன் ன கைம்மாறு செய்ய வல்லோம்? உமையொருபாகத்துப் பெருமான், அவர்களுக்கு நீண்ட ஆயுளையும் சுகவாழ்வையும் கொடுத்து இம் மாதிரிப் பல நூல் உரைகள் வெளிவர அருள்புரிவாராக.
நமது பணியைத் தம்பணிபோல் ஏற்றுக் கொண்டு, அன்போ டும் ஆதரவோடும் இந்நூலை அழகுற விரைந்தச் சிட்டு உ த வி ய யாழ்ப்பாணம் ஆனந்தா அச்சகத்தாருக்கு எமது உளம் நிறைந்த நன்றி என்றும் உரித்தாகுக,
"மேன்மை கொள் சைவ நீதி விளங்குக
உலக மெல்லாம்"
பூநீலயூரீ ஆறுமுககாவலர் இங்ங்ணம்
வித்தியாசாக்ல, o o @。到 வண்ணுர்பண்ணே. அகில இலங்கைச் சைவப்புலவர்
ந0-வைகாசி-சோபகிருது பட்டதாரிகள் சங்கத்தார்.
I 13-6-1963 J

Page 6
6) - திருநெல்வேலிச் சைவாசிரிய கலாசாலை முன்னேநான் தமிழ்ப் பேராசிரியர் சைவசித்தாந்தசாகரம் பண்டிதமணி திரு. சி. கணபதிப்பிள்ளை அவர்கள் அளித்த
அணிந்துரை
இந்நூல் வினவும் விடையுமாய் அமைந்தது. வினக் களுள் 'ஆருறு தத்துவம் ஏது? என்ற வின முதன்மையா னது. தத்துவம் மாயாவிநோதம். மாயை விடிவாமளவும் விளக்கு அணையது. அது சொற்பிரபஞ்சமும் கருத்துப் பிரபஞ்சமுமாய் அறிவை விளக்கஞ்செய்வது. கருத்துப் பிரபஞ்சத்தைச் சேர்ந்தது தத்துவம். தத்-அது. துவம்நீ. முன்னிலைப்படாத அது, முன்னிலைப்படுதற்கு உபகா ரஞ்செய்வதால் இப்பெயர் எய்தியது போலும். “தத்து வம் அசி" என்கின்ற வேதாந்த மகா வாக்கியம் ஈண்டுச் சிந்தனை செய்யத்தக்கது.
தத்துவம் முப்பத்தாறு. அவை சிவதத்துவம் வித் தியா தத்துவம் ஆன்ம தத்துவம் என முத்திறப்படும். முறையே ஐந்து, ஏழு இருபத்து நான்கு எனத் தொகை கொள்ளப்படும் .
ஆன்ம தத்துவம் இருபத்துநான்குஞ் சுத்தமானல், ஆன்மா இந்த உடலின் வேரு ய்த் தன்னைக் காணும். ஆன்மா சார்ந்ததன் வண்ணமானதாதலின், அந்நிலையில் அது பிரமத்தைச் சார்ந்து பிரமத்தின் வண்ணமாய்த் தோன்றும். இப்பொழுது நீ யார் என்று விசாரித்தால் "நான் பிரமம்' என்று அது சொல்லும். ஒருநாள் உடலைச் சார்ந்து உடலின் பெயரைத் தனக்கு இட்டுக் கொண்டி ருந்த ஆன்மா, மற்ருெருநாள் பிரமத்தைச் சார்ந்து பிரமத்தின் பெயரைத் தனக்கு இட்டுக் கொள்ளும்."தான் பிரமம்” என்கின்ற இந்த உயர்நிலையை வருவிப்பதற்கு உபகாரமானது உபநிடதமாகிய வேதாந்தம் ,

vii
நாம் இந்த உடலாயிருந்து கொண்டே, ஆன்மா உட லின் வேறு என்று உணருகின்ருேம் . அவ்வாறே உயர் நிலையில் ஆன்மா பிரமமாயிருந்துகொண்டே பிரமத்தில் வேறுதான் என்பதைக்கோடிமடங்கு தெளிவாக உணரும். ஆயினும், பிர மத்தின் உண்மை இயல்பையும் அதன் அத்துவித உபகாரத்தையும் உணர்ந்து வீடுபெற்று அத னேடேக மாதற்கு இன்னமும் எத்தனையோ சாதகங்கள் சித்திக்கவேண்டும். அதற்குபகாரமானவை ஆன்மதத்து வத்துக்கு மேற்பட்ட தத்துவ விசாரங்கள்.
வித்தியா தத்துவங்கள் ஏழனையும் ஒன்ருக எண்ணி, சிவதத்துவம் ஐந்துடன் கூட்டி ஆறுவகை செய்து, அவற் றின் உண்ம்ை இயல்பை உணர்வது, 'நான் பிரமம்' என் கின்ற வேதாந்த நிலையில் தவறுண்ணுது நிலைத்து நின்று உய்தி கூ டு த நிற் கு உபகாரம் ஆகும். வித்தியாதத்துவ மும் மேலுள்ள ஐவகைச் சிவதத்துவமுமாகிய ஆறுவகை யும் உட்கருவியெனவும், உட்கருவிகள் ஆறனையும் பற்றி நிற்பவை அகச்சமயமாகிய ஆறு சமயங்கள் எனவுங் கூறுவர்.
அகச் சமயங்களாருவன மெய்தரு சைவமாதியிரு மூன்று’ என்கின்றது சித்தியார். ஆறனுள் ஒன்று சைவம். ஏனைய ஐந்தும் எவை என்பது விசாரத்துக் குரியது. பாடான வாதம் என்று தொடங்கி எண்ணப்படுபவை கள் பொருத்தம் ஆகா. அறுவகையுள் சைவம்' ஒன்ருயி னும், ஆறனையும் சைவம் என்று வழங்குவதுமுண்டு. "ஒன்ருே டொன்று சென்றுறு நிலையில் ஆறும் மாரு வீறு டைத்து' என்பது சங்கற்ப நிராகரணம்.
இந்த ஆறு சமயங்களும் வேதாந்தப் பொருளை விளக்கஞ்செய்ய எழுந்தவைகளேயாம். "வேதாந்தத்தீ தில் பொருள் கொண்டுரைக்கு நூல் சைவம்" என்பது சித்தியார்.
வேதாந்தப்பொருள் விளக்கமாகிய அறு சமயத்தின் முடிந்த முடிபு சித்தாந்தம். அது சைவ சித்தாந்தம் என வும்படும். அதனைப் போதிப்பது சிவஞானபோதம்.

Page 7
viii
அறுசமயம் வேதாந்தப் பொருள் விளக்கம். முடிந்த முடிபாகிய சைவ சித்தாந்தம் வேதாந்தத் தெளிவு. "வேதாந்தத் தெளிவாம் சைவ சித்தாந்தம் என்பது சிவப்பிரகாசம்.
வேதாந்தம் அறுசமயம் சித்தாந்தம் என்னும் இவற். றின் தொடர்பை விளங்குதற்கு உபகாரமானது ஈண்டு முதற்கனெடுத்துக் கொண்ட தத்துவவிசாரம் இவ்விசா ரம் ஏனைய வினக்களை விடுவித்தற்கும் இன்றியமையா தது. அங்கனமாதலை இந்நூலிலும் உரையிலுங் காண லாகும். இவ்வாற்ருல் சைவ சித்தாந்த உணர்ச்சிக்கு இந் நூல் வேண்டற் பாலதென்பது புலமாம்.
இந்நூலின் பழைய உரை சுருக்கமானது. அதனை விரித்தும் பதப்பொருள் தெரித்தும் வேண்டுமிடத்து விளக்கந்தந்தும் நடக்கின்றது இந்நூலுரை. நடை தெளி வானது. இவ்வுரையை எழுதி உதவியவர் பண்டிதரும் சைவப் புலவருமான திரு. இ. செல்லத்துரை அவர்கள். மனத் தூய்மையும் ஒழுக்கசீலமும் படைத்தவர் அவர். அவருடைய எழுத்துக்கள் சைவ மரபு பிறழாதவை; பேணிப்படிக்கத்தக்க வை.
திருநெல்வேலி, -சி. கணபதிப்பிள்ளே யாழ்ப்பாணம். உசு-வைகாசி-சோபகிருது.
9-6-19637

a.
பூரீலபூg ஆறுமுகநாவலர் சைவப்பிரகாச வித்தியாசாலைத் தலைமையாசிரியர்
சைவப்புலவர் பண்டிதர் வித்துவான் திரு. இ. திருநாவுக்கரசு
அவர்கள் அளித்த உரைச்சிறப்புப்பாயிரம்
பஃருெடைவெண்பா,
. சீர்மேவு கோகனகச் செம்போ துறையயனப்ப்
பார்மேவு தோற்றம் பல படைத்துப் நீர்சேர்
திகிரி வலங்கொண்ட செங்கண்மா லாகி
மகிதலத்து மன்னுயிர்பு ரந்தும் அகிலாண்டம்
. தான முமை பால்கொள் சங்கார ருத்திரனய்
ஆணு வவை துடைத்தும் ஆரருளால் - மோனத்
. தொடுக்கி மக்ேசுரனய் ஒங்குவலி சாயக்
கெடுத்த முக்கி மூலமலம் சாய்த்தும் - அடுத்தவுயிர்க்
. கின்பி லினிதாய் இலங்கு சதாசிவமாய்
நின்றருளு ஞான நிறை பொருளாய் - மன்றில்
. அநவரத தாண்டவத்துள் ஐந்தொழிலும் இன்ப
விநய நடம் வீழ்ந்தாட லைந்தும் புனிதமுற
1 0.
l.
பெருக்கநின் றின்பம் பெருக்கும் - திருத்தகு
12
நின்ருடும் ஆறும் நிகழ்த்து மதனலே
பஞ்சாக் கர வடிவம் பாலித்து - ஒன்ரு கி
. எட்டு மிரண்டும் உருவான லிங்கத்தே
நட்டம் பயின்றருளும் நாதனர் - மட்டாகி
. வாக்கு மனதீத மதி துரிய முங்கடந்த
தேக்குபர மானந்த தேசிகன் - மீக்கருணை
வேதாந்த சித்தாந்தம் விரி கலாந் தங்கடந்த நாதாந்த மூலம் நமசிவயம் போதத்
தருக்கனுெளி கண்ணுெளியி னத்துவித மாகிப்
முந்து சிவம் உண்மை விளக்கம் தனிலுரைத்த எந்தை மனவாச கங்கடந்தார் - பைந்தமிழால்

Page 8
13,
14.
I 5.
6.
Il 7.
8.
1 9.
ΣΚ.
சாற்றியவெண் பாவாடி தன்னூடு கண்டிறைவன் தோற்றம் உணரத் தொகுத்துரைத்தான் - நாற்கவியும் வல்ல தமிழ் முனிவன் மட்டுநகர் வாழ்வுகந்தோன் நல்லை நகர் ஆறுமுக நாவலர்சீர் - சொல்லுயர் சித்தாந்த சாகரம் சீர்பண் டிதமாணி நற்கணப திப்பிள்ளை நாவல்லோன் - பொற்பதமே சூடு குணச் செம்மல் சிறுவை கிழார் வாணியகம் கூடும் அறிஞன் குல நல்லோன் - பாடுபுகழ் தேக்கு புதுவை நகர்ச் சிவைதா சென்றநெறி ஊக்கி உழைத்துயர்ந்த உத்தமன் - ஆக்கியோன் செல்வன்சை 'வப்புலவன் செல்லத் துரையெனும் நல்லோன் புகழ்நின்றிந் நானிலத்து - மல்க (பேர் வாழிய சைவம் வளர்க சிவஞானம் ஊழிதோ றுாழி உயர்ந்து.
சுபம்,
ரீலழறி ஆறுகுதிக காவலர்
oosrat SpraffF 6,4Surgräbw Quadreptuallverw, aut d'Lurraewruh. இ. திருநாவுக்கரசு
உஅ-வைகாசி சோபகிருது
11-6-1J Ss

(A.
உரையாசிரியரின் முன்னுரை.
“கல்லால் நிழல் மலை
வில்லார் அருளிய பொல்லார் இணைமலர் நல்லார் புனேவரே.' (கி, போ, காப்பு)
உண்மைப் பொருளாகிய த ம்  ைம த் தெளிந்த அறிவிஞல் உணர்த்து கலந்து, ஆன்மா ஈடேறுவதற்கு இறைவஞல் அருளப் பட்ட நூல்கள் இரண்டு. ஒன்று வேதம்; மற்றது ஆகமம். ஒருவன் தன்ணைத்தான் காதலனுய் விலக்கியன ஒழித்து வையத்துள் வாழ் வாங்கு வாழும் முறைமையை விளக்குவது வேதம். அங்ங்னம் T_. வாழ்ந்து பக்குவமுடையகுயினன் இறைவழிப் ”ܐܚ பட்டு ஒழுகவேண்டிய தெறியைப் படிமுறையே
வைதிக சைவம் உரைப்பது ஆகமம், வேதவழிப்படுதலே வைதிகம் எனவும், ஆகம வழிப்படுதலைச் சைவம் எனவுங் கொண்டு எமது சமயத்தை *வைதிக சைவம்” எனப்பெரியோர் கூறுவர். வேதம் ஆகமம் என்னும் இரண் டும் முறை சிறந்து பயனடைவிக்கும் ஒழுங்கு பற்றி வேதத்தைப் பொதுநூலாகவும் ஆகமத்தைச் சிறப்புநூலாகவுங் கோள்ளுவது ւDծ ւկ.
வைதிக சைவத்தின் சிறப்புநூல்களாகக் கொள்ளப்பட்ட சிவாக மங்கள், வேதங்களின் இறுதியில் ஆறுதியிட்டுரைக்கப்பட்ட ஞான காண்டப் பொருளே உரைப்பன. இவ்வேதாத்தத்தின் உட்கிடை ) , L, L. Aாகிய கிவசகமங்களே விளக்க எழுத்த நூல் 6)6. சித்தாந்தம் கள் தமிழிலே பதிஞன்குள. "உக்தி, களிறு, உயர்போதம், சித்தியார்,
பித்திருபா, உண்மை, பிரகாசம், - வந்தவரூன், பண்புவின, போற்றி, கொடி, பாசமிலா தெஞ்சுவிடு, உண்மை நெறி, சங்கற்ப முற்று." என அந்நூல்கள் பதிஞன்கையும் இவ்வெண்பா குறிப்பிடுகின்றது,
இறைவன் ஒருவன் உளன் என்றும், அவன் சிவனே என்றும், அவனை அடைந்து இரண்டறக் கலந்து பேரின்பம் அநுபவிப்பதற் காய் உயிர்கள் எண்ணிறந்தன உள என்றும், அவ்வுயிர்கள் அங்ஙனம் நல்வாழ்வு பெறுவதற்காக இறைவனல் தோற்றுவிக்கப்பட்ட தநு கரண புவன போகங்கள் உள என்றும், ஆன்மாக்களை அநாதியே பற்றி நிற்கும் ஆணவ மயக்க நீக்கத்தின் பொருட்டு, தநுகரணம் முத லியவற்ருேடு திரோதான சத்தி ஆன்மா வைப்பொருத்தி, ‘விடிவாம் அளவும் விளக்கு" என நின்று, துணைபுரியும் எனவும். இவ்வுதவிகளை

Page 9
யெல்லாம் தமது ஒப்பற்ற சிற்சக்தியாகிய ) பேரருளினூலே வழங் கியருளுகின்ற இறைவனே நன்றியறிதலுடன் மனம் மொழி மெய் களிஞல் வழுத்திச் (சிவபுன்னியங்களாகிய)சரியை, கிரியை, யோசும், ஞானம் என்னும் படிகளிவே முறைதவருமல் நிற்றவினுல் அவ்வான் மாக்கள் தாடலே போல் அத்துவித முத்திபெற்றுய்யுமெனவும் இந் நூல்கள் முடிந்த முடிபாக அறுதியிட்டுரைக்கும். இங்ஙனமுரைக்கும் இந்நூல்களே "வேதாந்தத் தெளிவாம் சைவசித்தாந்தம்." என்ப.
சைவசித்தாங்த நூல்கள் பதினுன்கணுள் ஒன்று ய "உண்மை விளக்கம்" சைவ சமபி அறிய வேண்டிய உண்மைப் பொருள்களே
சைவ ಙ್ಗಣಿ படுத்தி வரை ய  ைற செய்து கொண்டு FI IiI ரகம (மிானுக்கலுடைய விணுவுக்கு ஆசிரியருரைக் கும் விடையாக அமைத்து) இயற்றப்பெற்றது. அதனுல் இந்நூல் "சைவசித்தாந்த சங்கிரகம்' எனக்கொள்ளத்தக்கது.
"ஆருறு தத்துவம் ரது ஆணவம் ஏது அன்றே தான்
மாரு வின்ே ஏது மற்று, இவற்றின்-வேறு ஆகா நான் ஏது? நீ ஏது? நாதன் நடம் (ஏது?) ஐந்து எழுத்துத் தான் ஏது திே சிசனே சாற்று." என்னும் ஏழு வினுக்களே மானுக்கின் விகுவுவதாக வைத்துக்கொண்டு, பாசம் பசு பதி ஆகிய முப்பொருள் உண்மையைக் காட்டுமுகத்தால், பாசங்களுள் ஒன்ரூ கிய (மாயையில் இருந்து உளவாகும்) முப்பத்தாறு தத்துவங்களேயும் மற்குென்றுகிய ஆன்வத்தையும் இன்னுென்ருகிய கன்மத்தையும் அநாதியே இப்பாசங்களாற் பிணிப்புண்ட (நான் ஆகிய) பசுவையும் அப்பசிவக்குப் பெத்தம் முத்தி என்னும் இருவேறு நிலேயிலும் துணை நின்று சிகஞ்செய்யும் (நீ ஆகிய) பதியையும், பசுவின் நன்மைகருதிப் பஞ்சாக்கரமே திருமேனியாகப் பசு படு (=நாதன்) நடாத்தும் ஐந் தொழிஃபிக் குறிக்கும் திருநடனத்தையும், வேத வேதாந்த சிவாக மங்களின் உட்கிடையாகிய திருவைந் தெழுத் துண்மையையும், அதன் முடித்த முடிபாகிய முத்திப் பயனேயும் ஆசிரியர் இந்நூலில் சுருங்கக் கூறி விளங்கவைக்குந் திறன் போற்றுதற்குரியது. (ஐந்தெ முத்துத் தானேது | L "ஐந்து எழுத்து ஏதுசீ தான் (ஆப் நிற் கும் முத்திநி)ே ஏது? எனப்பகுத்து இருவினுக்களாக்கிக் கொண்டு மொத்தமாக சட்டு வினுக்களுக்கு இந்நூலில் விடை கூறுவதாகவும் வைத்துக்கொள்ளலாம். இஃது அன்றி, "இறைவனின் பஞ்சாக்கர மாகிய திருமேரியும் அதுகொண்டு இயற்றப்பெறுவதாகிய பஞ்ச கிருத்தியத் திருநடனமும் அதனுல் வரக்கடவதாகிய முத்திப்பயனும் தம்முள் ஒன்றுக்கொன்று ஆதாரமாதலானும் பிரிந்திருத்தலின்மை யானும், இம்மூன்றும் ஒரே சமயத்திலேயே ஆன்மாவால் அநுபவிக் கப்படுதல்ாலும் ( இவ்வியல்புடைய ) இவற்றை விளக்குதற்காய் எடுத்துக்கொண்ட விகுதுவையும் (அவ்வியல்புக் கமையுமாறு) மூன்று

xiii
வினுக்கள் கலந்த ஒரேவினு நீர்மையதாய், "நாதன் நடம் ஐந் தெழுத்துத் தான் ஏது?" என ஆசிரியர் கூறிப்போந்தார்" என்பாரும் உளர் ஆதலால் இவர் கூற்றின்படி ஆறு வினுக்களுக்கே இந்நூல் விடையிறுக்கின்றது எனவும் கொள்ளலாம்.)
உண்மை விளக்கம் 55 செய்யுள்கள் கொண்டது. விநாயக வணக்க மாய் அமைந்த காப்புச்செய்யுள் தவிர்ந்த ஏனேய 54 செய்யுள்களில் 1 ஆம் 2 ஆம் செய்யுள்கள் மாணுக்கனது விண்ணப்பமும் (தொகுத் துக் கூறிய) வினுக்களும் அமைந்தவை. 3 ஆம் செய்யுள் விடைகூறும் .. ஆசிரியரின் முன்னுரையாய் அமைந்தது. a முதல் விஞவாகிய "ஆறுறுதத்துவம் ஏது" " என்பதற்கு தொடக்கம் 21 வரையுள்ள 18 செப்யுன்களாலும், இரண்டாம் வினுவாகிய "ஆணவம் எது? என்பதற்கும் மூன்ரும் வினுவாகிய "அன்றே தான் மாரு வினே ஏது? என்பதற்கும் 22 ஆம் செய்யுளாலும், நான் கீாம் விஞவாகிய (நான்) ஆன்மா ஏது?" என்பதற்கு 24 தொடக்கம் 28 வரையுள்ள 3 செய்யுள் களாலும், ஐந்தாம்வினுவாகிய (நீ பதி ஏது?" என்பதற்கு 27 தொடக் கம் 29 வரையுள்ள 3 செய்யுள்களாலும், ஆரும் வினுவாகிய நாதன் நடம் சது" என்பதற்கு 31 தொடக்கம் 38 வரையுள்ள 8 செய்யுள் களாலும், ஏழாம் விருவாகிய "ஐந்தெழுத்து ஏது?" என்பதற்கு 40 தொடக்கம் 44 வரையுள்ள 5 செய்யுள்களாலும், இறுதியில் விண் னப்பிக்கப்படும் (குறிப்பாயமைந்த) எட்டாம் விணுவாகிய "முத்தி பாவது யாது? (-தானேயாய் நிற்கும் முத்தியாது?) என்பதற்கு 15 தொடக்கம் 48 முடியவும் 50 தொடக்கம் 52 முடியவும் வருகின்ற 7 செய்யுள்களாலும் ஞானுசாரியர் விடை கூறியுள்ளார். இவை தவிர்ந்த 23 ஆம் 0 ஆம் 39 ஆம் செய்யுள்களால் மானுக்கண்து வினு வாயமைந்த வேண்டுகோள்கள் வகுத்துரைக்கப்பட்டன, 53ஆம் செய்யுள் உண் ைவிளங்கப்பெற்ற மாணுக்கன் ஞானுசாரியருக்குத் தன் நன்றியைத் தெரிவிப்பதாக அமைந்துள்ளது. இறுதிச்செய்யுள் தேவாரங்களின் பல டாப்புப் போல அமைந்தது. அச்செய்யுளால் நூல், நுவல்வோன் டெ முதலியன குறிப்பிடப்பட்டுள்.
சிவஞானபோதம் சிவஞான சித்தியார் சிவப்பிரகாசம் முதலிய நூல்களில் விரிவாகக் கூறப்பட்ட உண்மைகள் இந்நூலில் 'வித்தினுள் ஆல்' போல அடங்கியுள்ளன. வித்துடையார் அதனே வளர்த்துப் படிமுறையே விரிவாா றிவையும் பயனேயும் பெற்றுக்கொள்ளலா மாதலால் (வித்தனேயதாகிய) உண்மை சித்தாந்த அரிச்சுபடி விளக்கத்தைச் சைவ நன்மக்கள் சித்தாந்த அரிச்சுவடியாக - ஆதாரமுதல் நூல் (Primer of Saiya Siddhanta) ஆகக்கொண்டு முதற் கண் பயிலுவது முறைமையானது,

Page 10
Σιν
இந்நூலாசிரியர் பெயர் மனவாசகங் கடந்தார் என்பதும் அவர் திருவதிகையில் வாழ்ந்தார் என்பதும், புலச்சந்தானுசாரியர் நால் வருள் முதலாமவராகிய திருவெண்ணெய் மெய்கண்டதேவநாய ஞர் மனவாசகங் கடந்தாருக்குக் குருவாயிருந்து பயனடைவித்தா ரென்பதும் இந்நூலில் வரும் சில செய்யுள்களால் அறியற்பாலன: . . 54 ஆம் செய்யுளில் வரும் "மன்னதிகை வாழும் மனவாசகங் கடந்தான். உண்மை விளக்கஞ் செய்தான் உற்று" என்னுந் தொடரால் இந்நூற்பெயரும் நூலாசிரி யர் பெயரும் அவர் வாழ்ந்த பதியும் கூறப்பட்டன. 1 ஆம் செய்யு எளில் வரும் "மெய்கண்டாய் . திருவெண்ணெய் வித்த கா" என்னுத் தொடராலும், 3 ஆம் செய்யுளில் வரும் "வெண்ணெய்ச்சுவேத வன மெய்கண்டநாதனே" என்னுந் தொடராலும் 54 ஆம் செய்யு ளில் வரும் 'மின்னனேயார் வாழ்விலுரு மெய்கண்டான்" என்னுந் தொடராலும் இந்நூலாசிரியரது குருவின் பெயர் குறிப்பிடப்பட் டுளது. மனவாசகங் கடந்தாரது (விரிவான) வரலாற்றுக் குறிப்புக் கள் கிடைத்தில,
சித்தாந்த நூல்களே ப்பயில விரும்பும் சைவசமயிகள் அந்நூல்களே ஈழத்திற் பெறுதற் கியலாமையினுலும் தாய் நாட்டிலிருந்து வர | இந்நூலுக்குரை வழைத்தற்கும் பல தடைகள் குறுக்கே நிற் றலினுலும் வருந்துவது கண்டு அவர் குறை நீக்கவேண்டியும், சைவப்புலவர் சித்தாந்த பண்டிதர் தேர்வுகளுக்குத் தோற்றும் மா ன வ ர் க் கு உதவும் பொருட்டும் அ, இ, சை, பு, பட்டதாரிகள் சங்கத்தின் சைவப் பணியை விருத்திசெய்யும் நிமித் தமும் இந்நூலுக்கு உரை எழுதி வெளியிட நேர்ந்தது.
எழுதக் காரணம்
இந்நூலுக்குப் பழைய உரை ஒன்று உளது. அதனேப் பற்றுக் கோடாகக் கொண்டு, எனது (மயக்க) உணர்வுக்கு எட்டிய அளவில் "கொண்டுபிடட்டு', பதவுரை, பொழிப்பு என்பனவும் இன்றியமை பாத இடங்களில் சற்றே விரிந்தவிளக்கமும் எழுதியுள்ளேன். நூல் இந்நூலுரை ಙ್ உரை ஆங்கை விளக்கம் நடேசர் حالة விளக்கம், தத்துவவிளக்க அட்டவனே என்பன அநுபந்தமாகச் சேர்க்கப்பட்டுள. எனினும் இவற்ருல் பரிபூரண உண்மை விளக்கமாம் என்பதற்கில்லே. 'அரிய கற்று ஆசு அற்றுர் கண் ணும் தெரியுங்கால் இன்னம அரிதே வெளிறு" என்பவாதலால், அரிய வத்தனேயும் கற்றறிந்து கில்லா என்னுரையிற் பிழைபலவுளவாம் என்பதை மறுக்கமுடியாது. ஆகவே, அடியேனிடத்தும், இந்நூலேக் கற்போரிடத்தும், சைவசமய பெப்ப்பொருள்களிடத்தும் அன்பும்
 

Y
அபிமானமும் உள்ள சான்றேர்கள் இந்நூலில் வரும் குற்றங்குறை கண் அறியத் தருவார்களாயின் அவை நன்றியறிதலோடு ஏற்றுக் கொள்ளப்படும்,
இந்நூலுக்கு உரையெழுதித் தருமாறு அன்புக்கட்டளையிட்டு, (இந்நூலே) வெளியிட்ட எமது அ. இ. சை. பு, ப. சங்கத் தலைவர்
சைவப்புலவர் வித் துவ ர ன் திரு. வ. செல்லேயா,
கெளரவ பொது ச் செயலாளர் சைவப்புலவர்
வித்துவான் திரு. ச. சச்சிதானந்தம், செயற்குழுவினர் ஆகியோர்க்கும், இத் துறையில் துணிவும் ஊக்கமுந் தந்து செயற்படுத்திய வண்ண நாவலர் பாடசாலேத் தஃவமையாசிரியர் சைவப்புலவர் வித்துவான் பண்டிதர் திரு இ. திருநாவுக்கரசு அவர்களுக்கும், அவ்வப்போது அழகுந் திருத்தமும் பொருந்தக் கையெழுத்த்ப் பிரதி செய்துதவிய இளஞ்சைவப்புலவர் செல்வி சி. சின்னத்தம்பு அவர்களுக்கும், யாவரும் அறிந்து பயனுறவும் அறிஞரால் என துரை இழுக்கின்றித் திருத்த முறவுத் தக்க தாய் இந்துசாதனத்திற் பிரசுரித்து உதவிய பெரியார் (பத்திராதிபர்) திரு நம, சிவப்பிரகாசம் அவர்களுக்கும் எனது நன்றி உரியதாகுக!
நான் விரும்பிச் செய்யும் சைவ நற்பணிகளேச் சிறப்பிப்பதற்கு ஆரும் அறியாவினகயில் என்றும் எனக்கொரு புரவலனும் அமைந்து ஊக் சுந்தரும் உடனுசிரிய நண்பர் கைதடியூர் திரு. இ. வேலாயுதர் அவர்க ஞக்கு என்ன என்றி என்றுமுரித்து,
"மாடக்குச் சித்திரமும் மாநகர்க்குக் கோபுரமும்' போல இந்நூலுரைக்கு இன்றியமையாதனவாகிய அணிந்துரை பாயிரம் என்பவற்றை மனமுவந்து அளித்த பெரியார் இருவருனர். அவருள் அணிந்துரை உதவிபவர் எனது ஆசிரியப் பெருந்தகை சைவ சித்தாந்த சாகரம் பண் வணக்கம் டிதமணி திரு. கி. கணபதிப்பிள்ளேயவர்கள் பாயிரம் ட அளித்தவர் முறிலழறி ஆறுமுகநாவலர் சைவப்பிரகாச வித்தியாசாலேத் தலமையாசிரியர் சைவப்புலவா பண்டிதர் வித்துவான் திரு. இ. திருநாவுக்கரசு அவர்கள். இப்பெரியார்களுக்கு எனது நன்றிகலந்த வணக்கங்கள் உரியன
"வானவியகம்"
சிறுப்பிட்டி, -இ செல்லத்துரை உசு - வைகாசி-சோபகிருது 12-6-1963)

Page 11
xvi
டே
சிவமயம்
உண்மை விளக்கம்
பொருளடக்கம்
பொருள் பக்கம் 1 : காப்பு-விநாயக வணக்கம் Lu ITFd:
2. ஆருறுதத்துவம் to 5-22 3. ஆணவம் 22ー23 4. வல்வினை (கன்மம்) •r• . 22-23
L“
5. (நான் ஆகிய) ஆன்மா . . . . O 24-27
பதி:
6. (நீ ஆகிய) பதி a sys a s 27-31 7. நாதன் நடமும் திருவைந்தெழுத்தும் 32-36 8. நாதன் நடம் to O P. 36-40 9. திருவைந்தெழுத்து s 41 - 48 10. (' அவனே தானே? யாகிய) முத்தி . 48-65
அநுபந்தம்:
உரைச் சந்தேகப் பிரச்சினை W. P. ைெடி பிரச்சினை விளக்கவுரை . II-III நடேசர் படவிளக்கம் . IV
தத்துவவிளக்க அட்டவணை V

உ சிவமயம். திருவதிகை-மனவாசகங் கடந்தார் அரு விச் செய்த
உண்மை விளக்கம்
மூலமும் உரையும்
காப்பு வண்மைதரும் ஆகம நூல் வைத்த பொருள்வழுவா உண்மை விளக்கம் உரைசெய்யத்-திண்மதஞ்சேர் அந்திகிறத் தந்திமுகத் தொந்திவயிற் றைங்கானைப் பந்தமறப் புந்தியுள்வைப் பாம். கொண்டு கூட்டு: (நாம்) வண்மை தரும் ஆகம நூல் வைத்த பொருள் உண்மை வழுவா விளக்கம் உரை செய்ய, (எமது) பந்தம் அற. திண்மதம் அந்தி நிறம் தந்தி முகம் தொந்தி வயிறு சேர் ஐங்கரனை புந்தியுள் வைப்பாம்.
பதவுரை: வண்மை தரும் ஆகம நூல்- பேரின்ப மாய உண்மைச் செல்வத்தைத் தருகின்ற ஆகம நூலிலே, வைத்த - ஆன்மாக்கள் உய்யும் பொருட்டு இறைவன் அருளிச் செய்து வைத்த, பொருள்-பதி பசு பாசம் என்னும் முப்பொருள்களினதும், உண்மை வழு வா விளக்கம் - உண்மை(யானது) சற்றேனும் தவருமல்
1 -- ۶ سهم

Page 12
2 DaireaDuo Gifferäksih
காட்டும் தெளிவினை, உரை செய்ய - (இவ்வுண்மை விளக் கம் என்னும் நூலில்) சொல்லுவதற்கும், பந்தம் அறமலபந்தம் ஒழியும்பொருட்டும், திண்மதம் அந்திநிறம் தந்திமுகம் தொந்தி வயிறு சேர் ஜங்கரனை - (ஞான சத்தி கிரியாசத்தி ஆகிய இரண்டு) வலிய மதங்களும், செவ்வானத்தை யொத்துப் பிரகாசிக்கின்ற நிறமும், (பிரணவக் குறியாகிய) யானை முகமும், பெரிய வயிறும் பொருந்திய ஐந்து திருக்கரங்களையுடைய விநாயகக் கடவுளை, புந்தியுள் வைப்பாம் - நாம் எமது சித்தத் துள் இருத்தித் தியானிப்பாம்.
மதம் மூன்ருகவும் அவற்றுள் இரண்டையே எடுத் துக்கொண்டு அவற்றுக்குக் கிரியாசத்தி ஞானசத்தி யெனப் பொருளுரைத்த மைக்குரிய விளக்கத்தை அநுபந் தத்துட் காண்க.
பொழிப்பு: பதி பசு பாச உண்மையைத் தெளிவு படவுரைக்கவும் பாசமறுத்து வீடெய்தவும் விநாயகக் கடவுளைத் தியானிப்போமாக.
நூல்
மாணுக்கனின் வின விண்ணப்பம்
1. பொய்காட்டிப் பொய்யகற்றிப் போதானக் தப்பொருளாம்
மெய்காட்டும் மெய்கண்டாய் விண்ணப்பம் - பொய்காட்டா மெய்யா திருவெண்ணெய் வித்தகா சுத்தவினு வையாமீ தான்கேட் டருள்.
கொ-கூ: (பக் குவான்மாவுக்குப்) பொய் காட்டி, பொய் அகற்றி, போத ஆனந்தப் பொருளாம் மெய் காட்டும் மெய்கண்டாய், அபக்குவான்மாவுக்கு) பொய் காட்டா மெய்யா, திருவெண்ணெய் வித்தகா, ஐயா, நீதான் சுத்த வின விண்ணப்பம் கேட்ட்ருள்.
ப-ரை: பொய்காட்டி-பக் குவான்மாவுக்குத் தநு கரண புவன போகங்கள் பொய் எனக் காட்டி, பொய்
அகற்றி - அப் பொய் அனுபவங்களை ஆன்மா பெற்றுக்

ஆணறு தத்துவம்
கொள்ளுவதினின்றும் நீக்கி, போத ஆனந்தப் பொரு ளாம் மெய்காட்டும் - (அங்ங்ணம் நீங்கச் செய்தவிடத் துப் பரிசுத்தமாய் நின்ற) ஆன்மாவின் அறிவிலே பேரா னந்தம் தந்தருளுகின்ற இறைவனின் உண்மை இயல் பினை விளக்கியருளுகின்ற, மெய்கண்டாய் - (சுவேத வனப் பெருமாள் என்னும் இயற்பெயரையுடைய மெய் கண்ட நாதனே, பொய்காட்டா மெய்யா (அபக்குவான் மாவுக்குப்) பொய்ய்ை விளக்கிக் காட்டாத சத்தியத்தை உடையவனே, திருவெண்ணெய் வித்தகா - திருவெண் ணெய் நல்லூரிலே எழுந்தருளியிருக்கின்ற ஞானதே சிகனே, ஐயா - தலைவனே, சுத்த வின விண்ணப்பம் நீதான் கேட்டருள் - எனது பரிசுத்தமான வினமுறை யில் அமைந்த வேண்டுகோளை நீ திருச்செவி சாய்த்து அருளவேண்டும்.
பொழிப்பு: பக்குவர்களுக்குப் பொய்யகற்றி மெய் அருளுகின்ற திருவெண்ணெய் மெய்கண்ட தேசிகனே நீ அடியேனது வினவாயமைந்த விண்ணப்பத்தைக் கேட் டருளுவாயாக ,
மாணுக்கனின் விஞக்கள்:
2. ஆருறு தத்துவமே காணவமே தன்றேதான்
மாரு வினையேது மற்றிவற்றின் - வேருகா கானேது நீயேது 5ாதன் கடம் அஞ்செழுத்துத் தானேது தேசிகனே சாற்று.
கொ-கூ: தேசிக்னே, ஆறு ஆறு தத்துவம் ஏது? அன்றே (உளதாய் இன்று வரையும்) தான் மாரு ஆண வம் ஏது? வினை ஏது? (மற்று) இவற்றின் வேறு ஆகா நான் (ஆன்மா) ஏது? நீ (பதி) ஏது? நாதன் நடம் ஏது? அஞ்சு எழுத்துத் தான் ஏது? நீ) சாற்று.
ப-ரை: தேசிகனே - எனது ஞான சிரியனே, ஆறு ஆறு தத்துவம் ஏது - முப்பத்தாறு தத்து வங்கள் எனச் சொல்லப்படுபவை யாவை? அன்றே தான் மாரு ஆண வம் ஏது - அநாதியே ஆன்மாவோடு உளதாய் இன்று

Page 13
4 உண்மை விணக்கம்
வரை விட்டு நீங்காத ஆணவமலம் யாது? வினை ஏதுவினை என்று சொல்லப்படுவது யாது? (மற்று) இவற்றின் வேறு ஆகா நான் ஏது? - இம் மும்மலங்களேப் பற்றி நின்றவிடத்து இவற்றின் வேருகாமல் இவையேயாய் நின்ற எனது சொரூப இலக்கணம் யாது? நீ ஏது-இறை வனது சொரூப இலக்கணம் யாது? நாதன் நடம் ஏது-ஆன்ம நாதனுகிய இறைவனது திருநடனம் யாது? அஞ்செழுத்துத் தான் ஏது - திருவைந்தெழுத்தின் உண் மைப் பொருள் யாது? (நீ) சாற்று - (இவ்வினுக்களுக் குரிய விடைகளை நீ) சொல்லியருளுவாயாக.
"நாதன் நடம் அஞ்செழுத்துத் தானேது?’ என்பதனை "நாதன் நடம் ஏது? “அஞ்செழுத்து ஏது?’ "தான் ஏது?" என மூன்று வினக்களாக வகுத்துக்கொண்டு அவற் றுள் "தான் ஏது?’ என்பதற்கு இறைவன் தானே யாய் நிற்கும் அத்துவித முத்தியின் இலக்கணம் யாது?’ என வும் பொருள் கொள்ளலாம்.
பொழிப்பு: ஆரு று தத்துவம், ஆணவம், வினை, ஆன்மா, பதி, திருநடனம், திருவைந்தெழுத்து என்பன யாவை? ஞானுசிரியனே கூறுவாயாக.
தேசிகனின் முன்னுரை:
3. உள்ளபடி இத்தை உரைக்கக்கேள் உன்றனக்கு
வள்ளலரு ளாலன்று வாய்மலர்ந்து - தெள்ளியசிர் ஆகமங்கள் சொன்ன அடைவிலே ஆனந்த யோகம் நிகழ்புதல்வா உற்று.
கொ-கூ: ஆனந்த யோகம் நிகழ்புதல்வா, உன்ற னக்கு, வள்ளல் அருளால் அன்று வாய் மலர்ந்து சொன்ன சீர் ஆகமங்கள் உள் ள படி, அடைவிலே தெளிய, இத்தை உரைக்க உற்றுக்கேள்.
ப-ரை: ஆனந்த யோகம் நிகழ் புதல்வா - பேரா னந்த நிலையைப் பொருந்தி இருப்பதற்குப் பக்குவமான மானுக்கனே, உன்றனக்கு-உனக்கு, வள்ளல் அருளால்ை பரோபகாரியான் இறைவன் தம்மிடம் இயல்பாகவே

ஆருறு தத்துவம் 6
பொருந்தியிருக்கும் பேரருளினலே, அன்று வாய் மலர்ந்து சொன்ன - அநாதியே திருவாய் மலர்ந்தருளிய, சீர் ஆகமங்கள் உள்ளபடி அடைவிலே தெளிய - சிறப் புப் பொருந்திய சிவாகமங்களில் உள்ள உண்மை இருந்த படி முறைமையாகத் தெளியும் பொருட்டு, இத்தை உரைக்க உற்றுக்கேள் - இதனை (நீ கேட்டவினக்களுக்கு உரிய வி  ைட களை) யான் சொல்லப் புலவொடுக்கத் தோடு கேட்பாயாக.
பொழிப்பு: மாணக்கனே, இறைவன் அருளிய ஆக மங்களில் உள்ளபடி இதனை யான் தெளிவாகச் சொல்ல நீ கேட்பாயாக.
ஐம்பூத வடிவும் அவற்ருலாம் உடம்பும்
4. காற்கோணம் பூமிபுனல் கண்ணுமதி யின் பாதி
ஏற்குமனல் முக்கோணம் எப்போதும் - ஆர்க்கும் அறுகோணங் கால்வட்டம் ஆகாயம் ஆன்மா உறுகாயம் ஆமிவற்ருல் உற்று.
கொ- கூ! பூமி நாற்கோணம்(நண்ணும்), புனல் மதி யின் பாதி நண்ணும், அனல் முக்கோணம் ஏற்கும், கால் எப்போதும் அறுகோணம் ஆர்க்கும், ஆகாயம் வட் டம் (ஆர்க்கும்), ஆன்மா உற்று உறுகாயம் இவற்ருல் ஆம்.
ப-ரை: பூமி நாற்கோணம் (நண்ணும்)-நிலம் நாற் கோணமாய் இருக்கும், புனல் மதியின் பாதி நண்ணும் -நீர் பாதிச் சந்திரனைப் போன்றதாய் (நிலத்தில்)அமைந் திருக்கும்; அனல் முக்கோணம் ஏற்கும் - தீ முக்கோண வடிவினைப் பொருந்தி நிற்கும்; கால் எப்போதும் அறு கோணம் ஆர்க்கும் - காற்று எக்காலமும் ஆறுகோண மாக இருக்கும்; ஆகாயம் வட்டம் (ஆர்க்கும்) - ஆகா யம் வட்ட வடிவத்தைப் பொருந்தும்; ஆன்மா உற்று உறுகாயம் இவற்ருல் ஆம்- ஆன்மாவானது வேறுபடப் பொருந்தி நிற்கும் உடம்பு இந்த ஐம்பூதங்களினல் உண் டாகும்.

Page 14
6 உண்மை விளக்கம்
பொழிப்பு: நாற்கோணம் பாதிமதி முக்கோணம்
அறுகோணம் வட்டம் என்னும் வடிவங்களை முறையே
பொருந்தின நிலம் நீர் தீ காற்று ஆகாயம் என்னும் தூல பஞ்ச பூதங்களினல் உடம்பு ஆயது.
ஐம்பூத நிறமும் எழுத்தும் 5. பொன் பார் புனல் வெண்மை பொங்கு மனல்சிவப்பு வன்கால் கருமைவளர் வான்றுரமம் - என்பார் எழுத்து லவரயவப் பாராதிக் கென்றும் அழுத்தமாய் கிற்கு மது.
கொ-கூ: பார் பொன், புனல் வெண்மை, பொங் கும் அனல் சிவ ப் பு, வன்கால் கருமை, வளர்வான் தூமம் என்பார்; பார் ஆதிக்கு எழுத்து லவரய அ; அது என்றும் அழுத்தமாய் நிற்கும்.
ப-ரை: பார் பொன் = நிலம் பொன்நிறமானது, புனல் வெண்மை-நீர் வெண்மை நிறமானது. பொங்கும் அனல் சிவப்பு - மேல் எழுந்து எரிகின்ற தீ சிவப்பு நிற மானது, வன்கால் கருமை - வலிமை பொருந்திய காற்று கருமையானது, வளர் வான் தூமம் - மே ன் மே லு ம் விரிந்து செல்வதாய்க் காணப்படும் ஆகாயம் புகை நிற மானது. என்பார் என்று பெரியோர் கூறுவார்கள், பார் ஆதிக்கு எழுத்து லவரய அ-நிலத்துக்கு லகரமும் நீருக்கு வகரமும் தீயுக்கு ரகரமும் காற்றுக்கு யகரமும் ஆகாயத் துக்கு அகரமும் பொருந்திய எழுத்துக்களாம். அது என் றும் அழுத்தமாய் நிற்கும் . அவ்வெழுத்துக்கள் எப்போ தும் அவற்றை உறுதியாகப் பொருந்தி நிற்பனவாம்.
பொழிப்பு: நிலம் நீர் தீ காற்று ஆகாயம் ஆகிய ஐம்பூதங்களுக்கும் முறையே பொன், வெண்மை, சிவப்பு கருமை, தூமம் ஐந்தும் உரிய நிறங்களாம்; லவரயஅ ஐந்தும் அழுத்தமாய்ப் பொருந்திய எழுத்துக்களாம்.
ஐம்பூத அடையாளம் 6. குறிகுலிசங் கோககதங் கொள்சுவத்தி குன்ரு
அறுபுள்ளி யாரமுத விந்துப் - பிறிவின்றி மண் புனல் தீக் கால்வானம் மன்னும் அடைவேயென் மூெண்புதல்வா வாகமமோ தும்.

ஆகுறு தித்துவம் 7
கொ - கூ: ஒண்புதல்வா, ம ண் பு ன ல் தீ கால் வானம் (என்பவற்றின்) குறி அடைவே, குலிசம், கோக நதம், கொள் சுவத்தி, குன்ரு அறுபுள்ளி, ஆர் அமுத விந்து (இவை) பிறிவு இன்றி மன்னும் என்று ஆகமம் ஒதும்,
ப-ரை: ஒண் புதல்வா - நல்ல மாணவனே, மண் புனல் தீ கால் வானம் (என்பவற்றின்) குறி. நிலம் நீர் தீ காற்று ஆகாயம் என்பவற்றின் அடையாளம், அடைவேமுறையே, குலிசம் - வச்சிரமும், கோகநதம் - தாமரை ம ல ரு ம். கொள்சுவத்தி - பொருந்திய சுவத்திகமும், குன்று அறுபுள்ளி - குறைவுபடாத ஆறுபுள்ளியும், ஆர் அமுத விந்து - பொருந்திய அமுதத் துளியும் ஆகும்; (இவை) பிறிவு இன்றி மன்னும் என்று ஆகமம் ஒதும் - இவை வேறுபடுதலின் றிப் பொருந்தி நிலைபெற்றிருக்கும் என்று ஆகமம் உரைக்கும்:
சுவத்திகம்-ஒர் அடையாளம், அது நான்கு விரலும் தம்முள் ஒட்டி நிமிர்ப்பெருவிரல் குந்த நிறுத்தி நிற்கும் பதாகைக் கை இரண்டினையும் மணிக்கட்டில் ஏற்றிவைக்கும் ஒரு வகை இணைப்புக் குறியாம்.
பொழிப்பு: நிலம் நீர் தீ கர்ற்று ஆகாயம் ஆகிய ஐம் பூதங்களுக்கும் மு  ைற யே வச் சிரம், தாமரை மலர், சுவத்திகம், அறுபுள்ளி அமுதத் துளி என்பன அடையா ளங்களாய்ப் பொருந்தி நிலைபெற்றிருக்கும்.
ஐம்பூதத்துக்கும் அதிதெய்வமுந் தொழிலும் 7. பாராதி ஐந்துக்கும் பன்னுமதி தெய்வங்கள்
ஆரா ரயணுதி யைவராம் - ஒரோர் தொழிலவர்க்குச் சொல்லுங்கால் தோற்றமுத லேந்தும் பழுதறவே பண்ணுவர்காண் பார். கொ-கூ" (மாணுக்கனே பன்னும் பார் ஆதி ஐந் துக்கும் அதி தெய்வங்கள் ஆர் ஆர்? எனில், அவர்) அயன் ஆதி ஐவராம்; அவர்க்கு ஓர் ஓர் தொழில் சொல் லுங்கால் (அவை தோற்றம் முதல் ஐந்தும் (ஆம்); (அவை களை அவர்கள்) பழுது அறவே பண்ணுவர் காண் (-பார்) ப-ரை: பன்னும் பார் ஆதி ஐந்துக்கும் அதி தெய் வங்கள் ஆர் ஆர்.சொல்லப்படுகின்ற நிலம் நீர் தீ காற்று ஆகாயம் என்னும் ஐம்பூதங்களுக்கும் மேலான தெய் வங்கள் யாவரெனில், அயன் ஆதி ஐவராக் - அவர்கள்

Page 15
8 உண்மை விளக்கம்
முறையே பிரமா விஷ்ணு உருத்திரன் மகேசுரன் சதா சிவன் என்போராவர்; அவர்க்கு ஒர் ஒர் தொழில் சொல் லுங்கால் தோற்றம் முதல் ஐந்தும் ஆம் - அவர்களுக் குப் பொருந்திய ஒவ்வொரு தொழில் சொல்லுமிடத்து, அவை முறைய்ே படைத்தல், காத்தல், அழித் த ல், மறைத்தல், அருளல் என்னும் ஐந்துமாம் பழுது அறவே பண்ணுவர் காண்பார் - அவர்கள் தத்தம் தொழில்க ளைப் பிழையறச் செய்வார்கள் என்று அறிவாயாக.
பொழிப்பு: நிலம் நீர் தீ காற்று ஆகாயம் ஆகிய ஐம்பூதங்களுக்கும் அதி தெய்வங்கள் முறையே பிரமா விஷ்ணு உருத்திரன் மகேசுரன் சதாசிவன் என்போ ராவர். அவர்கள் படைத்தல் முதலிய ஐந்தொழில்க ளுள் ஒவ்வொரு தொழிலைப் பொருந்துவர். S.
இதுவுமது
8. படைப்ப னயனளிப்பன் பங்கயக்கண் மாயன்
துடைப்ப னுருத்திரனுஞ் சொல்லில் - திடப்பெறவே என்றுக் திரோபவிப்ப ரீசர் சதாசிவரும் அன்றே யனுக்கிரக ராம்.
கொ - கூ: சொல்லில், அயன் படைப்பன் பங்க யக் கண் மாயன் அளிப்ப்ன் உருத்திரன் (+உம்) துடைப் பன் ஈசர் என்றும் திடம் பெறவே திரோபவிப்பர்; சதாசிவர் (+உம்) அன்றே அனுக்கிரகர் ஆம்.
ப-ரை: சொல்லில் - ஒவ்வொருவருக்கும் அவ்வ வர் தொழிலைப் பொருந்தச் சொல்லுமிடத்து; அயன் படைப்பன் - பிரமா படைத்தலைச் செய்வர்; பங்கயக் கண் மாயன் அளிப்பன் - செந்தாமரை மலர்போலும் கண்களையுடைய விஷ்ணு காத்தலைச் செய்வர்; உருத் திரன் துடைப்பன் - உருத்திர மூர்த்தி அழித்தலைச் செய் வர்; ஈசர் என்றும் திடம் பெறவே திரோபவிப்பர்-மகே சுவர மூர்த்தி எக்காலமும் நிச்சயமாகவே மறைத்தலைச் செய்வர் சதாசிவர் அன்றே அனுக்கிரகராம்-சதாசிவ மூர்த்தி அநாதியாகவே அருளலைச் செய்பவராம்.

ஆகுறு தத்துவங்கள் 9
பொழிப்பு:பிரமன் படைத்தலையும், விஷ்ணு காத் தலையும், உருத்திரன் அழித்தலையும், மகேசுவரர் மறைத் தலையும், சதாசிவர் அருளலையும் செய்வர்.
ஐம்பூத இயல்பு 9. மண்கடின மாய்த்திரிக்கும் வாரிகுளிர்க் தேபதமாம்
ஒண்கனல்சுட் டொன்றுவிக்கும் ஒவாமல் - வண்கால் பரந்துசலித் துத்திரட்டும் பார்க்கிலா காயம் கிரந்தரமாய் நிற்கும் நிறைந்து. கொ-கூ! பார்க்கில், மண் கடினமாய்த் திரிக்கும்; வாரி குளிர்ந்து (+ஏ) பதமாம்; ஒண் கனல் கட்டு ஒன்று விக்கும்; வண் கால் ஒவ்ாமல் பரந்து சலித்துத் திரட் டும்; ஆகாயம் நிரந்தரமாய் நிறைந்து நிற்கும்.
ப-ரை: பார்க்கில் ஐம்பூதங்களின் இ யல் பை ஆராய்ந்து பார்க்குமிடத்து, மண்கடினமாய்த் திரிக்கும்நிலம் பொருள்களிடத்துக் கடினமான குணத்தைக் கொடுத்து நிற் கு ம் (இயல்பினையுடையதாம்). வாரி குளிர்ந்து (+ ஏ) பத்மாம் நீர் விடயங்களிற் குளிர்ச்சி யுடையதாய் நெகிழ்வு பொருந்தி நிற்கும் (இயல்பினை யுடையதாம்); ஒண் கனல் சுட்டு ஒன்றுவிக்கும் - ஒளி பொருந்திய தீ விடயங்களில் சுடுதலைச் செய்து அவை களைச் சேரச் செய்து நிற்கும் (இயல்பினையுடையதாம்); வண்கால் ஒவாமல் பரந்து சலித்துத் திரட்டும் - வளப் பம் பொருந்திய காற்று நீங்குதலின்றி எங்கும் பரந்து அசைந்து ஒலித்து விடயங்களைத் திரட்டி நிற்கும் (இயல் பினையுடையதாம்); ஆகாயம் நிரந்தரமாய் நிறைந்து நிற்கும் - ஆகாயம் எப்பொழுதும் எவ்விடயங்களும் நடைபெறுதற்கு இடங்கொடுத்து(அதனுல் நிறைவுடை யதாய் நிற்கும் (இயல்பினையுடையதாம்)
பொழிப்பு: நிலம் கடின குணத்தையும் நீர் விர்ச்சி பொருந்திய நெகிழ்ச்சியையும், தீ சுட்டு ஒன்றுவித் தலையும், காற்று எங்கும் பரந்து விடயங்களைத் திரட்டு தலையும், ஆகாயம் எல்லா விடயங்களும் நடைபெறு
2ܐܰ-7ܘ ܕܚܧ

Page 16
10 உண்மை விளக்கம்
தற்கு இடமாய் நிறைந்து நிற்றலையும் இயல்பாகப் பொருந்தியுள்ளன.
ஐம்புலன்
10. உள்ளபடி மாபூதம் ஒதினுேம் உன்றனக்குக்
கள்ளமிகும் ஐம்புலனுங் கட்டுரைக்கில் - மெள்ளவே ஓசை பரிசம் உருவம் சுவைகாற்றம் ஆசை தரும் ஐம்புலனே யாம்.
கொ-கூ உன்றனக்கு மா பூதம் உள்ளபடி ஒதினுேம்; (இனி) கள்ளம் மிகும் ஐம்புலனும் மெள்ள ( + ஏ) கட்டு ரைக்கில், ஓசை பரிசம் உருவம் சுவை நாற்றம் ( ஆம் இவை) ஆசை தரும் ஐம்புலன் (+ ஏ) ஆம்.
ப-ரை: உன்றனக்கு மாபூதம் உள்ளபடி ஓதினுேம் (மாணவ கனே) இதுவரை உனக்குப் பஞ்ச பூதங்களையும் அவற்றின் உண்மை இயல்புகளையும் அவை பொருந்தியி ருந்த படி உரைத்தோம்; (இனி) கள்ளம் மிகும் ஐம்புல னும் மெள்ள ( + ஏ ) கட்டுரைக்கில் - இனி நேரிய நெறி யிற் செல்லாமல் இழிந்த கள்ள வழியிலே ஆன்மாவை இட்டுச் சென்று தீமை விளைக்கின்ற ஐந்து புலன்களைச் சொல்லுமிடத்து, ஓசை பரிசம் உருவம் சுவை நாற்றம் ஆம் (இவை) - ஒசையும் ஊறும் ஒளியும் சுவையும் நாற்ற மும் ஆகிய இவை, ஆசை தரும் ஐம்புலன் ( + ஏ ) ஆம் - ஆன்மாவுக்கு நிலையற்ற உலக விடயங்களில் ஆசையை உண்டாக்குகின்ற ஐம்புலன்களாம்.
பொழிப்பு: சத்தம் பரிசம் உருவம் இரசம் கந்தம் (ஓசை, ஊறு, ஒளி, சுவை, நாற்றம்) என்பன ஐந்தும் ஐம்புலன்களாம். இவை ஆன்மாவுக்கு உலக விடயங்களில் ஆசையை விளைவிப்பன.
ஐம்பொறிகள்
11. ஞானேந் திரியங்கள் நன்ற வுரைக்கக்கேள்
ஊன மிகுபூதம் உற்றிடமா - ஈனமாம் சத்தா தியையறியுங் தானஞ் செவிதோல்கண் அத்தாலு மூக்கென் றறி.

ஆருறு தத்துவம் - 11
கொ-கூ: ( மாணுக்கனே ) ஞான இந்திரியங்கள் நன்ரு (க) உரைக்கக் கேள்; ( அவை) ஊனம் மிகு பூதம் இடமா உற்று, ஈ ன ம் ஆம் சத்தம் ஆதியை அறியும் தானம் (ஆகிய) செவி தோல் கண் அத்தாலு மூக்கு என்று அறி.
ப-ரை: ஞான இந்திரியங்கள் நன்ரு (க) உரைக்க கேள். மானுக்கனே (ஐம்புலன்களைச் சொன்னுேம் இனி) ஐம்பொறிகளை நன்ருகச் சொல்லுகிருேம் கேட்பாயாக \ அவை ) ஊனம் மிகு பூதம் இடமா உற்று - அவ்வைம் பொறிகளும் ஆன்மாவுக்குத் துன்பத்தை மிகுதியாகச் செய்கின்ற பஞ்ச பூதங்கள் இடமாகப் பொருந்தி நின்று, ஈனம் ஆம் சத்தம் ஆதியை அறியும் - இழிவு உடைய சத்தம் முதலிய புலன்களை அறிகின்ற, தானம் (ஆகிய) செவி தோல் கண் அத்தாலு மூக்கு என்று அறி - இடங் களாகிய காதும் தோலும் கண்ணும் நாக்கும் மூக்கும் என்று அறிவாயாக.
பொழிப்பு: ஐம்பொறிகள்: பஞ்ச பூதங்களிடமாகப் பொருந்தி நின்று சத்தம் முதலிய புலன்களை அறிகின்ற இடங்களாகிய காது தோல் கண் நாக்கு மூக்கு என்னும் ஐந்துமாம். >
ஐம்பொறிகளின் புலன்களும் அவை பஞ்சபூதங்களில் தொடர்புறுமாறும்
12. வானிடமா நின்றுசெவி மன்னும் ஒலியதனே
ஈன மிகுந் தோல்கால் இடமாக - ஊனப் பரிசக் தனையறியும் பார்வையிற்கண் அங்கி விரவியுரு வங்காணு மே.
கொ-கூ: செவி வான் இடமா(க) நின்று மன்னும் ஒலி அதனை அறியும்; ஈனம் மிகும் தோல் கால் இடமாக) (நின்று) ஊனப்பரிசம்தனை அறியும் பார்வையில் கண் அங்கி விரவி (நின்று) உருவம் காணும் (+ஏ).
ப-ரை: செவி வான் இடமா (க) நின்று மன்னும் ஒலி அ த னை அ றி யு 1ம் - செவியானது ஆகாயத்தைப்

Page 17
12 asiv aolo 6ílatšsáb
பொருந்தி நின்று விளங்குகின்ற சத்தத்தை அறியும்; ஈனம் மிகும் தோல் கால் இடமா(க) (நின்று) ஊனப்பரி சம்தனே அறியும் - இழிந்த தன்மையை அதிகமாகவுடைய தோலானது காற்றைப் பொருந்தி நின்று குறைவுபாடு டைய பரிசத்தை அறியும் பார்வையில் கண் அங்கி விரவி (நின்று) உருவம் காணும் (+ஏ) - பார்க்கும் சக்தி யுடையதாகிய கண் ( நெருப்பின் ) ஒளியைப் பொருந்தி உருவத்தை அறியும். ܖ
பொழிப்பு: செவி ஆகாயத்தின் தொடர்பால் சத்தத் தையும், தோல் காற்றின் தொடர்பால் பரிசத்தையும், கண் ஒளியின் தொடர்பால் உருவத்தையும் அறியும்.
இதுவுமது
13. நன்ருக நீரிடமா காவிரதக் தானறியும்
பொன்ரு மணம்முக்குப் பூவிடமா - கின்றறியும் என்ருேது மன்றே யிறையா கமமிதனை வென்ருர்சென் றரின்ப வீடு,
கொ-கூ நா (தான்) நீர் இடமா(க) நின்று இரதம் நன்முக அறியும்; மூக்கு பூ இடமா(க) நின்று பொன்ரு மணம் அறியும்; என்று இறை ஆகமம் அன்றே ஒதும்; இதனை வென்ருர் இன்ப வீடு சென்ருர்,
ப-ரை: நா (தான்) நீர் இடமா(க) நின்று இரதம் நன்முக அறியும்-நாக்கு நீரைப் பொருந்தி நின்று இர தத்தை நன்கு அறியும் மூக்கு பூ இடமா(க) நின்று பொன்ற மணம் அறியும்-மூக்கு நிலத்தைப் பொருந்தி நின்று கெடாத கந்தத்தை அறியும் என்று இறை ஆக மம் அன்றே ஒதும்-என்று இவ்வாறு சிவாகமங்கள் அநாதியே உரைக்கும்; இதனை வென்றர் இன்ப வீடு சென்ருர்-இப் பஞ்சப் புலன்களின் வழிச் செல்ல்ாமல் அவற்றை வென்று நின்றவர்கள் பேரானந்தப் பேறுத வும் மூத்தியைப் பெற்ருேராவர்.
(**புலன் அடக்கித் தம் முதற்கண் புக் குறுவார் போதார், தலம் நடக்கும் ஆமை தக" என்னும் திருவ

ஆளுறு தத்துவம் 13
ருட் பயனுசிரியர் கூற்றும், ‘உரனென்னுந் தோட்டி
யான் ஒரைந்துங் காப்பான், வரன் என்னும் வைப்பிற்
கோர் வித்து." என்னும் வள்ளுவர் வாய்மொழியும் ஈண்
டுப் பொருத்தி உணரத் தக்கன, புலன் வென்றர் தப்பா மலே வீட்டின்பந் துய்ப்பார் என்னுந் தெளிவுபற்றிவந்த
துணிவு காட்டச் சென்ருர்’ என இறந்த காலத்தாற்
கூறினர் - ( மலர்மிசை ஏகினன்' என் புழிப்போல.)
பொழிப்பு: தாக்கு நீரின் தொடர்பால் இரத்தத் தையும், மூக்கு நிலத்தின் தொடர்பால் கந்தத்தையும் அறியும். இவ்வைம்புலன்களையும் வென்றவர்கள் பேரின் Lu LD60 L 6u ri.
கன்மேந்திரியங்களும் அவற்றின் இயல்பும்
14. கண்ணுதல்நூ. லோதியிடுங் கன்மேக் திரியங்கள்
எண்ணும் வசனுதிக் கிடமாக - கண்ணியிடும் வாக்குப்பா தம்பாணி மன்னுகுதம் உபத்த மாக்கருது காளு மது.
கொ-கூ! மன்னும் வாக்கு பாதம் பாணி குதம் உபத்தமா(க) நாளும் கருதும் கன்ம இந்திரியங்கள் (அது) - நர்ளும் எண்ணும் வசனம் ஆதிக்கு இடம் ஆக நண்ணியிடும், (என்று) கண்ணுதல் நூல் ஒதியிடும்.
ப-ரை மன்னும் வாக்கு பாதம் பாணி குதம் உபத்தமா(க) நாளும் கருதும் கன்ம இந்திரியங்கள் (அது)-பொருந்திய வாக்கும் பாதமும் கையும் மலவா யிலும் (ஆண் பெண் ) குறியும் என் எப்போதும் மதிக்கப் படுகின்ற கன்மேந்திரியங்களாகிய அவை ஐந்தும், எண் ணும் வசனம் ஆதிக்கு இடம் ஆக நண்ணியிடும் - நினைக் கப்படுகின்ற வசனித்தல் நடத்தல் தானஞ் செய்தல் கழித்தல் இன்புறுதல் ஆகிய ஐந்தினுக்கும் இடமாகப் பொருந்தி நிற்கும் (என்று) கண்ணுதல் நூல் ஓதியிடும் என்று இங்ங்னம் இறைவனருளிய ஆகம நூல்கள் சொல்
68OI LA0 8

Page 18
14 உண்மை விளக்கம்
(அது - ஒருமைப் பன்மை மயக்கம், வாக்கு - ஆகு பெயராய் வாயைக் குறித்து நின்றது. பாணி - கை. குதம் - மலவாயில் உபத்தம் - ஆண் பெண் குறி. கழித் தல் என்றது மல (சல) நீக்கம் செய்தல் என்றபடி.1
பொழிப்பு: வாக்கு பாதம் பாணி பாயு உபத்தம் ஆகிய ஐந்து கன்மேந்திரியங்களும் முறைய்ே வசனம் நடை தானம் கழிவு ஆனந்தம் என்பவற்றுக்கு இட மாக நிற்கும்.
கன்மேந்திரியங்கள் தூல பஞ்சபூதங்களைப் பொருந்தி இயங்குமாறு 15. வாக்காகா யம் இடமா வந்துவச னிக்குங்கால்
போக்காருங் காற்றிடமாப் புல்கியனல் - ஏற்கும் இடுங்கை குதநீரிடமா மலாதி விடும்பா ரிடமுபத்தம் விந்து. கொ-கூ வாக்கு ஆகாயம் இடமா(க) வந்து வச னிக்கும்; கால் காற்று இடமாக)ப் போக்கு ஆரும்: கை அனல் புல்கி ஏற்கும், இடும்; குதம் நீர் இடமா(க) மலம் ஆதி விடும்; உபத்தம் பார் இடம் விந்து (விடும்), ப-ரை: வாக்கு ஆகாயம் இடமாக) வந்து வச னிக்கும்-வாய் ஆகாயம் இடமாகப் பொருந்தி நின்று வார்த்தை பேசும் கால் காற்று இடமா(க)ப் போக்கு ஆரும் பாதம் காற்றினிடமாகப் பொருத்தி நின்று நடத்தல் செய்யும் கை அனல் புல்கி ஏற்கும், இடும்கை தீயின் இடமாகப் பொருந்தி நின்று ஏற்றலும் ஈத லும் செய்யும்; குதம் நீர் இடமா(க) மலம் ஆதி விடும். மலவாயில் நீரைப் பொருந்தி நின்று மலம் (சலம்) கழிக் கும்; உபத்தம் பார் இடம் விந்து (விடும்) - (ஆண் பெண்) குறி நிலத்தினிடமாகப் பொருந்தி நின்று தாதினை விட்டு இன்பமடையும்
பொழிப்பு: வாக்கு ஆகாயத்தையும், கால் காற்றை யும், கை அனலையும், குதம் நீரையும் உபத்தம் நிலத் தையும் பொருந்திநின்று முறையே பேசுதலையும் நடத் தலையும் ஈதலேற்றலையும் மலசல விமோசனத்தையும் விந்து விடுதலையும் செய்யும்.

ஆளுறு தத்துவம் I5 ° அந்தக் கரணங்களும் அவற்றினியல்பும் 16. அந்தக் கரண மடைவே யுரைக்கக்கேள்
அந்தமனம் புத்தியுட னுங்காரம் - சிந்தையிவை பற்றியது நிச்சயித்துப் பல்கா லெழுந்திருந்தங் குற்றதுசிக் திக்கு முணர்.
கொ-கூ: (மாணவகனே) அந்தக் கரணம் அடைவே உரைக்கக் கேள், அந்த மனம் புத்தி ஆங்காரம் உடன் சிந்தை இவை (அந்தக் கரணமாம்); இவற்றுள்) (மனம்) பற்றியது (புத்தி) நிச்சயித்து (ஆங்காரம்) ப ல் கா ல் எழுந்து இருந்து (ஊக்குவிக்க) (சித்தம்) அங்கு உற்றது சிந்திக்கும் (என்று நீ) உணர்,
ப-ரை : அந்தக்கரணம் அடைவே உரைக்கக் கேள் - மா ன வ கனே, (கன்மேந்திரியங்களைப் பற்றிச் சொன்னேம் இனி) அந்தக் கரணங்களைப் பற்றி முறையே சொல்லுகிருேம் கேட்பாயாக ; அந்த மனம் புத்தி ஆங் காரம் உட்ன் சிந்தை இவை (அந்தக் கர ண மாம்) அந்த மனம் புத்தி அகங்காரம் என்பவற்றுடன் சித்தமும் சேர இந்நான்கும் அந்தக் கரணங்களாகும்; (இவற்றுள் மனம்) பற்றியது - இந் நான்கினுள் மனமானது விரும் பிச் சேர்த்துக்கொண்ட விடயத்தை,(புத் தி நிச்சயித்துபுத்தி ஆராய்ந்து வரையறை செய்து உறுதியாய் நிற்க, (ஆங்காரம்) பல்கால் எழுந்து இருந்து அகங்காரம்,இத னைச் செய்வேன் எனப் பலமுறையும் எழுந்திருந்து ஊக்குவிக்க, (சித்தம்) அங்கு உற்றது சிந்திக்கும் t என்று நீ) உணர் - சித்தம் அதன் பயனப் அங்கே நிகழ்ந்த விட யத்தைச் சிந்தித்து முடிந்த முடிபாக ஏற்றுக் கொள் ளும் என்று நீ உணர்வாயாக.
ஆன்ம தத்துவங்கள் இருபத்துநான்கு
17. ஒதியிடும் காலாறு முற்ருன்ம தத்துவமென்
ருதி யருணுால் அறையுங்காண் - தீதறவே வித்தியா தத்துவங்கள் தன்மை விளம்பக்கேள் உத்தமனே கன்ரு வுனக்கு,

Page 19
உண்மை விளக்கம்
கொ-கூ உத்தமனே, (முன்) ஒதியிடும் நாலா றும் உற்று ஆன்ம தத்துவம் என்று ஆதி அருள் நூல் அறையும்காண்; இனி) வித்தியா தத்துவங்கள் (அவற் நின்) தன்மை தீது அறவே உனக்கு விளம்ப (நீ) நன்ரு (க) உற்றுக்கேள்.
ப-ரை: உத்தமனே - சிறந்த மாணவகனே, ஒதி பிடும் - முன்னே சொல்லப்பட்ட, நாலாறும் உ ற் று - இருபத்துநான்கு தத்துவங்களும் பொருந்தி; ஆன்மதத் துவம் என்று ஆதி அருள் நூல் அறையும் காண் - ஆன்ம தத்துவம் ஆகிய பெயரைப் பெறும் என்று முதல்வன் ஆகிய இறைவன் அருளிய ஆகம நூல்கள் உரைக்கும் என நீ அறிவாயாக வித்தியாதத்துவங்கள் தன்மை"இனி வித்தியா தத்துவங்களேயும் அவற்றின் இயல்புகளையும், தீது அறவே உனக்கு விளம்ப-குற்றமில்லாதபடி உனக்கு நான்) சொல்ல, நன்கு(க) உற்றுக் கேள் - நீ நன்கு கவ னித்துக் கேட்பாயாக,
நிலம் நீர் காற்று ஆகாயம் ஆகிய பூதங்கள் ஐந்தும்;
ஓசை பரிசம் உருவம் சுவை நாற்றம் என்னும் புலன்களேந் தும்; செவி, தோல், கண், நாக்கு, பாதம், பாணி, பாயு, உபத்தம் ஆகிய கன்மேந்திரியங்கள் ஐந்தும்; மனம், புத்தி அகங்காரம் சித்தம் ஆகிய அந்தக்கரணங்கள் நான்கும் ஆக ஆன்மதத்துவங்கள் இருபத்துநான்காம். இ  ைவ ஆன்மாவோடு சம்பந்தமாயிருத்தல் பற்றி ஆன்மதத்து வம் எனவும் அனுபவிக்கப்படும் பொருள்களாயிருத்தல் பற்றி போக்கிய காண்டம் எனவும், ஆன்மாவுக்கு இராச தம் தாமதம் சாத்து வீகம் ஆகிய முக்குணங்களினுலே சுகதுக்க மோகங்களே உணடாக்குதல் பற்றி அசுத்த தத் துவம் எனவும், வழங்கப்பெறும் (போக்கியம்- அநுபவிக் கப்படும் பொருள், காண்டம் கூட்டம், திரள்).
பொழிப்பு: முற் கூற ப் பட்ட இருபத்துநான்கும் ஆன்ம தத்துவங்களாம். இனி வித்தியா தத்துவங்கள் கூறுவோம்.
 
 
 

ஆமுறு தத்துவம் 7
வித்தியா தத்துவங்கள் ஏழு
18. காலம் நியதி கருதுங் கலேவித்தை
ஏலவிரா கம்புருட னே மாயை - மாலறவே சொன்னுே மடைவாகச் சொன்னவிவை தம்முண்மை உன்னி உரைக்கும்ார முற்று.
கொ-சு: காலம் நியதி கருதும் கலேவித்தை இரா கம் புருடன் (H-ஏ மாயை (என்னும் தத்துவங்கள் ஏழை பும்) மால் அற (+ஒர) அடைவாக ஏலச் சொன்னுேம்: (இங்ங்னம்) நாம் சொன்ன இவை தம் உண்மை (யை இனி) உற்று உன்னி (அடைவாக) உரைக்கும்.
ப-ரை: காலம் நியதி கருதும் கலைவித்தை இரா கம் புருடனே மாயை - காலமும் நியதியும் கருதப்படு கின்ற கலேயும் வித்தையும் இராகமும் புருடனும் மாயை யும் ஆகிய வித்தியாதத்துவங்கள் ஏழையும், மால் அறவே அடைவாக ஏலச் சொன்னுேம் - (உனது) மயக் கம் அகலும்படி முறையே பொருந்துமாறு கூறினுேம்: நாம் சொன்ன இவை தம் உண்மை உற்று உன்னி (அடைவாக) உரைக்கும் இனி, நாம் இங்ஙனம் கூறிய இவைகளின் உண்மை இயல்பு க ஃள ப் பொருந்த வாராய்ந்து நோக்கி அவ்வியல்புகளை) முறையாகச் சொல்லுவோம்.
"ஏ" இரண்டும் அசை
பொழிப்பு: வித்தியா தத்துவங்கள், காலம், நியதி, கலே, வித்தை இராகம், புருடன், மாயை என்பனவாம். இவற்றின் உண்மை இயல்புகளே இனிக் கூறுவோம்.
வித்தியா தத்துவங்களின் இயல்புகள்,
19. எல்லே பலம் புதுமை எப்போதும் நிச்சயித்தல் அல்லல் தருங்கிரியை ஆன்மாவுக்(கு) - ஒல்லே அறிவாசை ஜம்புலனும் ஆரவருங் காலம் குறியா மயக்கென்று கொள் L. G-3

Page 20
S உண்மை விளக்கம்
கொ-கூ! ஆன்மாவுக்கு எல்லே பல ம் புதுமை (என்பவற்றைக் காலதத்துவம் வரையறை செய்யும் எனவும்), (நியதி தத்துவம்) எப்போதும் நிச்சயித்தல் (செய்யும் எனவும்), (கலாதத்துவம் அல்லல் தரும் கிரியை (யை எழுப்பும் எனவும்), (வித்தியாதத்துவம் - வித்தை) ஒல்லே அறிவு (விளக்கும் எனவும், (இராக தத்துவம்) ஆசை (தரும் எனவும்), ஐம்புலனும் ஆர வரும் காலம் (அது புருட தத்துவ மாம் எனவும்), ( மாயை) குறியா மயக்கு (செய்யும் என்றும் கொள்.
ப-ரை: ஆன்மாவுக்கு எல்லே பலம் புதுமை - ஆன் மாவுக்கு இறந்த காலத் தெல்லே யையும் நிகழ் காலத்துப் பலத்தையும் எதிர் காலத்துப் புதுமையையும் கால தத் துவம் வரையறை செய்து நிற்கும் எனவும், எப்போதும் நிச்சயித்தல் நியதிதத்துவம் (அவ்வான்மா முன்னே செய்த) கன்மங்களே அநுபவிக்கும் படி எக்காலமும் நிச்ச யம் பண்ணி நிறுத்தும் எனவும் அல்லல் தரும் கிரியை - காலதத்துவம் ஆணவத்தைச் சிறிதே நீக்கி விடயங்க ஃளப் பொருந்தும் படி அவ்வான் மாவின் கிரிபா சத்தியை எழுப்பி நிற்கும் எனவும், ஒல்லே அறிவு - வித்தியாதத்து வம் விடயங்களே ப் பொருந்துவதற்குரிய அறிவை ஆன்மாவிடத்தில் விளக்கிநிற்கும் எனவும், ஆசை-இராக தத்துவம் (கன் மத்துக்கீடாகப் பெற்ற போகங்களில் அநுபவித்தவற்றைச் கிறிதெனக்காட்டி, அநுபவியாதன வற்றைப் பெரிதாக்கி அவற்றிலே) ஆசையை மிகுவிக்கும் எனவும், ஐம்புலனும் ஆரவருங்காலம் - தன்னிடத்துப் பொருந்துகின்ற வினேப்போகங்களே) ஐம்புல உணர்வால் ஆன்மா பொருந்தி அனுபவிக்கக் கருதும் காலத்திலே அது புருடதத்துவமாம் எனவும், குறியாம பக்கு எனறு கொள் - மாயா தத்துவம் ஒன்றை நினைக்கவொட்டாமல் மயக்கத்தைச் செய்யும் எனவும் அறிந்துகொள்வாயாக.
இந்தத் தத்துவங்களின் இயல்புகள் இங்கினமாதலேச் சிவப் பிரகாசம் 39, 40, 41-ம் செய்யுள்களானும் அறிச, இவை ஆன்மாவுக்குச் சற்றே அறிவு விளக்கம் செய்தல் பற்றி வித்தியா தத்துவம் எனவும், போ க த்  ைத க்
 
 
 
 
 
 

ஆருறு தத்துவம்
கொடுத்து அனுபவிக்கச் செய்வது பற்றிப் போக காண் டம் எனவும், அங்ங்ணம் செய்யும் உதவி பற்றி ப் போசயித்திருகாண்டம் எனவும், சிற்றறிவு சிறுதொழில் களே விளக்குவதற்குச் சாதனமாயமைந்து சுத்தமாயும் சூக்கும தேகத்தின் வழிக் குனரூபமாய்ச் சுக துக்க மோகங்களே உண்டாக்கி நின்று அசுத்தமாயும் அமைதல் பற்றிச் சுத்தாசுத்த தத்துவம் எனவும், அங்ங்ணம் சுத்த மும் அசுத்தமும் கலந்து நின்றமை பற்றி மிச்சிராத்துவா எனவும் வழங்கப்படும் (போசயித்திரு – அநுபவிப்பிப் பது, புசிப்பிப்பது; மிச்சிரம் - கலப்பு; அத்துவா - வழி; அது ஆன்மாவுக்குக் கன்மமேற்றுவதற்கும் பரகதி அடை வதற்கும் ஆய வழி என்றபடி.)
பொழிப்பு: கால தத்துவம் எல்லே, பலம், புதுமை என்பவற்றை வரையறை செய்யும். நியதி தத்துவம் கன்மத்தை நிச்சயித்து நிறுத்தும். கலாதத்துவம் ஆன வத்தைச் சிறிது நீக்கிக் கிரியை சயை எழுப்பும். வித்தியா தத்துவம் அறிவை எழுப்பி விளக்கி நிற்கும், இராகதத் துவம் அநுபவியாத விடயத்தில் ஆசையை எழுப்பும், புருடதத்துவம் விடயத்தில் அழுந்துதலைச் செய்யும். மாயாதத்துவம் மயக்கஞ்செய்து நிற்கும்.
சிவதத்துவங்கள் ஐந்து (சுத்த தத்துவங்கள்)
20. வித்தியா தத்துவங்கள் ஏழும் விளம்பினுேம்
சுத்தமாங் தத்துவங்கள் சொல்லக்கேள்-நித்தமாம் சுத்தவித்தை ஈசுரம்பின் சொல்லும் சதாசிவம் நற் சத்திசிவங் காண வைகள் தான்.
கொ கூ வித்தியா தத்துவங்கள் ஏழும் விளம்பி னுேம் (இனி) சுத்தமாம் தத்துவங்கள் சொல்லக் கேள்: அவைகள் (தான்) நித்த மாம் சுத்தவித்தை, ஈசுரம், பின் சொல்லும் சதாசிவம், நல் சத்தி, சிவம் காண்.
ப-ரை வித்தியா தத்துவங்கள் ஏழும் விளம்பி ளுேம் - சுத்தா சுத்த தத்துவங்களாகிய வித்தியா தத்து

Page 21
30 உண்மை, விணக்கம்
வங்கள் ஏழையும் முன்பு சொன்னுேம், சுத்தமாம் தத்து வங்கள் சொல்லக்கேள் - இனி சுத்தமாகிய (சிவ) தத்து வங்களைச் சொல்லுகிருேம் கேட்பாயாக அவைகள் (தான்) நித்தமாம் சுத்தவித்தை-அவைகளாவன நித்திய மாய் இருங்கின்ற சுத்தவித்தையும், ஈசுரம்- மகேசுரமும், பின் சொல்லும் சதாசிவம் பின்னே கூறப்படும் சாதாக் கியமும், நல்சத்தி சிவம்காண் - நல்ல சத்தியம் (-விந்து வும்), சிவமும் (-நாதமும்) ஆகிய ஐந்துமாகும் என்று அறிவாயாக்.
தான்-அசை
பொழிப்பு: சுத்த தத்துவங்களாகிய சிவதத்துவங் கள் சுத்தவித்தை, மகேசுரம்,சாதாக்கியம் ,சத்தி, சிவம் என்னும் ஐந்துமாம்.
சிவ தத்துவங்களின் இயல்புகள்.
21. சுத்தவித்தை ஞானமிகுந் தொன்மையா மீசுரந்தான்
அத்தன் தொழிலதிக மாக்கியிடும்-ஒத்தவிவை சாதாக் கியமென்றுஞ் சத்தி சிவங்கிரியை ஆதார ஞானவுரு வாம்.
கொ-கூ சுத்தவித்தை ஞானம் மிகும், தொன் மையாம் ஈசுரம் (தான்) அத்தன் தொழில் அதிகம் ஆக்கி யிடும் சதாசிவம் இவை ஒத்தலாம்; சத்தி என்றும் கிரியை (ஆம்); சிவம் ஆதார ஞான உருவாம்.
ப-ரை சுத்தவித்தை ஞானம் மிகும் - சுத்தவித் தையானது கிரியை குறைந்து ஞானம் கூடியதாய் அமைந்திருக்கும்; தொன்மை யாம் ஈசுரம்தான் அத் தன் தொழில் அதிகம் ஆக்கியிடும் - பழைமையதாகிய ஈசுர (மகேசுர) தத்துவம் ஞானம் குறைந்து கிரியை அதிகரித்ததாய் இருக்கும்; சாதாக்கியம் இவை ஒத்தல் ஆம் சாதாக்கிய (சதாசிவ) தத்துவம் ஞானமும் கிரியை யும் ஒத்த அளவில் பொருந்தியிருப்பதாம்; சத்தி என் றும் கிரியை (ஆம்) - சத்தி (- விந்து) தத்துவம் எப்போ தும் கிரியை உடையதாய் இருக்கும்; சிவம் ஆதார ஞான

ஆகுறு தத்துவம் 21
உருவாம் - சிவ (நாத) தத்துவம் (யாவும் நடைபெறுவ தற்கு ஆதாரமான ஞான உருவமாக இருக்கும்.
தான்-அசை
இந்தத் தத்துவங்களின் இயல்புகள் இங்ங்னமாத லைச் சிவஞான சித்தியாரில் “ஞானமேயான போது” (சு பக்; சூத், 1 செய்; 65.) 'வித்தையோ டீசர் ' (சு பக்; சூத் 1 செய்: 66) என்னும் தொடக்கத்துச் செய்யுள்க ளாலுமறிக. --
சுத்த தத்துவங்கள் ஐந்தும் அவற்றிலமைந்த ஆன் மாக்களுக்கு எல்லாவற்றையும் அறியும் தன்மையையும், எல்லாவற்றையும் செய்பவனது தன்மையையும் தருதல் பற்றிச் சுத்த தத்துவம் எனவும், சுத் தீாத்து வா எனவும், அசுத்த தத்துவங்களைச் செலுத்துதல் பற்றிப் பிரேர கா காண்டம் எனவும் கூறப்படும். இவை ஐந்தும் சடமாயி னும் சிற்சத்திக்குச் சுதந்திர வடிவங்களாதலால் சைதன் னியம் எனவும், ஏனைய முப்பத்தொன்றனுள் புருடதத் துவம் சார்ந்ததன் வண்ணமாதல் பற்றிச் சிதசித்து என வும், அஃதொழிந்த முப்பதும் அசித்தெனவும் படும். (சித்தி: சூத், 2, செய்: 69 பார்க்க; பிரே ரகம் - செலுத் துதல் காண்டம் - கூட்டம் : சைதன்னியம் - அறிவு டைமை; சித்து - அறிவுடையது; சித்து+அசித்து= சித சித்து - அறிவுள்ளதும் இல்லதுமானது; அசித்து - அறி வற்றது.)
இதுவரை கூறப்பட்ட முப்பத்தாறு தத்துவங்க
ளோடும் ஆன்மா கூடி மயங்கிப் பெருந்துன்பத்தை அநுபவித்தும், தூல சரீரம் அழியுங் காலத்துக் கலை முத லிய தத்துவங்களாலாகிய சூக்கும சரீரத்தைப் பொருந் திச் சென்று சுவர்க்கம் நரகம் முதலிய இடங்களில் பூதாசாரம் பூதம் முதலிய சரீரங்களை எடுத்து வினைப் பயன்களை அநுபவித்துக் கழித்தும், மேலும் இப் பூமி யில் வந்து பிறக்கும். இவ்வுண்மையைச் சிவப்பிரகாசம் 46 ம் செய்யுளானறிக.

Page 22
உண்மை விளக்கம்
பொழிப்பு: சுத்தவித்தை ஞானமேறிக் கிரியை குறைந்தும், ஈசுரம் கிரியை ஏறி ஞானம் குறைந்தும், சாதாக்கியம் ஞானம் கிரியை இரண்டும் ஒத்த அளவிற் பொருந்தியும் இருக்கும் இயல்பின. சத்தி என்றும் கிரியையை உடையதாயிருப்பது. சிவம் ஞானவுருவாம் இயல்பினது.
ஆணவமும் கன்மமும்
ஆகுறு தத்துவமுஞ் சொன்னுே மடைவாக மாறு மலமிரண்டும் வாசொல்லக் - கூறில் அறியாமை ஆணவம்நீ யானசுக துக்கம் குறியா வினேயென்று கொள்.
கொ- கூ: ஆருறு தத்துவமும் அடைவாகச் சொன் னுேம் (இனி) மாரு மலமிரண்டும் சொல்ல, வா (அவற் றைக்) கூறில், அறியாமை ஆணவம் (எனவும்), சுகம் துக் கம் குறியா நீ ஆன வினே என்றும் கொள்
ப-ரை ஆருறு தத்துவமும் அடை வாகச் சொன் னுேம் - மும்மலங்களுள் மாயையிலிருந்து உளவாகும்) முப்பத்தாறு தத்துவங்களேயும் முறையாக உரைத் தோம் : மாரு மலமிரண்டும் சொல்ல, வா - (இனி) விட்டு நீங்காமல் இருக்கின்ற (ஏனேய ) இரண்டு மலங்களே பும் சொல்லுகிருேம், வந்து கேட்பாயாக கூறில் அம் மலங் களேக் கூறுமிடத்து, அறியாமை ஆணவம் - ஆன்மாவி னிடத்து அநாதியே அறியாமையைச் செய்து நிற்பது ஆணவமலம் எனவும், சுகம் துக்கம் குறியா நீ ஆன வினே என்று கொள் - இன்பம் துன்பம் ஒன்றையும் ( உன்னின் வேரு ய்) நினே யாமல் (அவ்வின்ப துன்ப உருவமே) நீயாய் (அவற்றின் செயலே உன் செயலாய்ப்) பொருந்தி இருப்பதுதான் கன்ம மலம் எனவும் அறிந்து கொள்
J. T. L. T.
சிவப் பிரகாசத்தில் 'இருள் ஒளிர இருண்ட மோக
மாய் அறிவு முழுதினேயும் மறைக்கும்' செய், 20) எனவும் திருவருட்ப யனில் "பன்மொழிகள் என்னுண

அன்றே தான்மாரு ஆணவமும் வினேயும் 2.
ரும் பான்மை தெரியாத தன்மை இருளார் தந்தது.' (இருண்மல. செய். 6. எனவும் ஆனவவியல்புரைத்தமை காண்க. கன்மம் புத்தி தத்துவம் பற்றுக்கோடாய்க் கலந்து, ஆன்மாவைத் தன்மயமாக்கி அதனே விட்டு நீங் காததாய், மனம் வாக்குக் காயங்களினுல் செய்யப்படு வதாய், இன்பதுன்பமாகிய பயனேத் தரும் புண்ணிய பாவ வடிவாய மையும் என்பதை "நண்ணியிடும் உருவ தனுக் கேதுவாக . . .' செய். 28.) என்னும் சிவப்பிர காசச் செய்யுளானறியத்தக்கது.
பொழிப்பு: மும்மலங்களுள் (மாயையை) முப்பத் தாறு தத்துவங்களையும் முன் சொன்னுேம். ஏனைய இரண்டு மலங்களாவன ஆணவம் கன்மம் என்பனவாம்.
மாணவகன் வேண்டுகோள்
23. ஆருறு தத்துவமும் ஆணவமும் வல்வினேயும் மாரு அருளால் வகுத்துரைத்திச் - வேருகா என்னே எனக்கறியக் காட்டி ரிவைகண்டேன் உன்னரிய தேசிகரே புற்று,
கொ-கூ! உன்ன அரிய தேசிகரே, ஆருறு தத்து வமும் ஆணவமும் வல்வினேயும் மாரு அருளால் வகுத்து
உரைத் தீர்; இவை உற்றுக் கண்டேன்; (இனி இவற்றின்)
வேறு ஆகா என்னே (நான் ) அறிய எனக்குக் காட்டிர்.
ப-ரை உன்ன அரிய தேசிகரே - அபக் குவிகளால் நினைத்தற்கு அரிய ஞானுசாரியரே, ஆருறு தத்துவமும்முப்பத்தாறு தத்துவங்களேயும், ஆணவமும் - ஆணவ மலத்தையும், வல்வினையும் - வவிய கன்ம மலத்தையும், மாரு அருளால் வகுத்து உரைத்திர் - என்றும் விட்டு நீங்காத பெருங்கருனேயினுலே வகைப்படுத்திச் சொல்லி யருளினர். இவை உற்றுக் கண்டேன் - இந்த மும்மலங் களே யும் பொருந்தி அறிந்துகொண்டேன்; வேறு ஆகா என்னே அறிய எனக்குக் காட்டீர் - இனி, (இம்மலங்க

Page 23
34 உண்மை விளக்கம்
ளைப் பற்றியதால்) இவற்றிற்கு வேறு ஆகாமல் (இவைக ளேயாய்) ஒன்றுபட்டு இருக்கின்ற என்னுடைய சொரூப இலக்கணத்தை நான் அறியும் படி எனக்குக் காட்டியரு ளுவீராக. −
இதுவரை ஆருறு தத்துவமும், அன்றே தான் மாரு ஆணவமும், வினையும் கூறுமுகத்தால் மாணவகனுக்குப் பாச தரிசனம் காட்டிய ஆசிரியர் இனி, மேல் வரும் மூன்று செய்யுள்களால் ஆன்மதரிசனம் பண்ணுவிக் கின்ருர்,
பொழிப்பு: தேசிகரே, நீர் இதுபரியந்தம் மும்ம லங்களைப் பற்றிக் கூறக் கேட்டறிந்துகொண்டேன்; இனி "நான் ஆகிய ஆன்மாவின் சொரூப இலக்கணத்தைக் கூறியருளுவீராக. -
சார்ந்ததன் வண்ணமாம் ஆன்மா சதசத்து
24. கன்ரு உரைக்கக் கேள் நல்லசித்தின் முன்னசித்திங்(கு)
ஒன்ருது சித்தசித்தை ஓராது - கின்றிவற்றை அன்றே பகுத்தறிவ தான்மாவே என்றுமறை குன்ருமல் ஒதும் குறித்து.
கொ - கூ: நன்ற உரைக்கக் கேள்; நல்ல சித்தின் முன் அசித்து இங்கு ஒன்ருது; சித்து அசித் தை ஒராது; இவற்றை அன்றே நின்று பகுத்து அறிவது ஆன்மாவே; என்று மறை குன்ரு மல் குறித்து ஒதும்.
ப -ரை: நன்ரு உரைக்கக் கேள் - (மாணவகனே நீ விணுவிய ஆன்ம தரிசனத்தை ) நன்ருகச் சொல்லுகிருேம் கேட் பாயாக நல்ல சித்தின் முன் அசித்து இங்கு ஒன் ருது - சிறந்த அறிவுடைப் பொருளாகிய சிவத்தின் முன் அறிவில் பொருளாகிய பாசம் கூடி நில்லாது; சித்து அசித் தை ஓராது- (அச்) சிவம் பாசத்தைச் சுட்டி அறிய வேண்டியதில்லை; இவற்றை அன்றே நின்று பகுத்து அறி வது ஆன்மாவே - சித்தாகிய சிவத்தையும் அசித்தா

(கான் ஆகிய) ஆன்மா 25
கிய பாசத்தையும் அநாதியாகவே பொருந்தி நின்று (சார்ந்ததன் வண்ணமாய் அவ்வவற்றை) விசாரித்து அறியுந் தன்மையுடையது ஆன்மாவேயாகும்; என்று மறை குன்ரு மல் குறித்து ஒதும் - என வேதங்கள் (அவற் றைக்) குறைவுபாடின்றிச் சுட்டியுரைக்கும்.
வேதாந்தத் தெளிவே சைவ சித்தாந்தம் ஆதலால் "மறை. ஒதும்" என்ருர், இறைவன் எவ்விடத்திலும் எப் பொருளிலும் நீக்கமற வியாபித்துள்ளவன்; அவனை அகன்று எங்கும் எவையும் இன்று; எனவே, ஆணவம் முதலிய பாசங்களும் அவனை அகன்று இல்லை. அங்ங்னம் வியாபித்துள்ள அவன் அவற்றை அவற்றிற்குப் புறம்பே நின்று சுட்டி அறியவேண்டியதில்லை. ஆதலால் "சித்து அசித் தை ஒராது" என்ருர், சித்து ஆகிய சிவம் ஒளி போன்றது; அசித்து ஆகிய பாசம் இருள் போன்றது. ஒளிமு ன் இருள் கூடிக் கலந்து நிற்பதில்லை; ஒளியை அறிவதுமில்லை. அங்ங்னமே சித்தின் முன் அசித்தும் ஒன்றது; சித்தை அறியவும் மாட்டாது என்க.
இதனைச் "சத்த சத்தைச் சாராது அசத்து அறியா தங்க ண் இவை உற்ற சதசத்தா முயிர்' (திருவருட்பயன். உயி. செய் 7. ) எனவும், 'யாவையும் சூனியம் . . . . இருதிறன் அறிவுள திரண்டலா ஆன்மா' (சிவிஞானபோ, சூத், 7) எனவும் வருவனவற்ருலு மறிக.
பொழிப்பு:- சித்து அசித் தை அறிந்து அநுபவி யாது; அசித்து சித் தை அறியவும் அநுபவிக்கவும் மாட் டாது; ஆகவே இவ்விரண்டினையும் அறிந்து அநுபவிக் கும் இயல்புடையது ஒன்று உளது. அது சார்ந்ததன் வண்ணமாகும் இயல்புடைய ஆன்மாவேயாம்.
தத்துவங்கள் ஆன்மாவன்று
23. தத்துவங்க ளருறுந் தம்மைத்தா மென்றறியா
எத்தன்மை யென்னி லியம்பக்கேள் - சுத்தமாம் ஆறு சுவையு மறியாது தன்ஃனத்தான் கூறி லவையிவைபோற் கொள்.
a - s67-----

Page 24
' A Hit Hill GTör láth
கொ-சு: ஆருறு தத்துவங்களும் தம்மைத் தாம் என்று அறியா; (இது) எத்தன்மை' என்னில் இயம்ப் (நீ) கேள்; கூறில், சுத்தமாம் ஆறு சுவையும் தன்னைத்தான் அறியாது; இவைபோல் அவை கொள்.
ப-ரை: ஆருறு தத்துவங்களும் தம்மைத் தாம் என்று அறியா முப்பத்தாறு த த் துவங்களும் அறி வில் பொருள்களாதலால் அவை தம்முடைய் சொரூ. பத்தை (எக்காலத்திலும் எவ்வகையாலும்) அறிய மாட்டா எத்தன்மை யென்னில் இது எந்த முறைமை போன்றது என வினுவில், இயம்பக்கேள்-சொல்லுகி ருேம் கேட்பாயாக கூறில் 'அம்முறைமையைக் கூறு மிடத்து சுத்தமாம் ஆறு சுன்வயும் தன்னைத்தான் அறி பாது - தூய்மையாய் இருக்கின்ற அறுவகைச்'சுவைக ளும் தாம் இன்ன் இன்ன சுவையுடையோம்'எனத் தம்மை அறியமாட்டா, இவைபோல் அவைகொள் இவ் வியல்புடைய சுவைகளைப் போலத் தத்துவங்களும் தம் முடைய சொரூபத்தை அறியமாட்டா என நீ உனர்ந்து கொள்ளுவாயாக' * 。
'தத் துவங்கள் தம்மையேனும் பிறவற்றையேனும் அறிவித்துக்காலும் அறியமாட்ட்ாமையால், அவை அறி
விக்க அறியும் தன்மையுடைய ஆன்மாவன்று' என்பது இச்செய்யுளால் வலியுறுத்தப்பட்டது. A.
'பொழிப்பு:- தம்மியல்புணராது நின்ற அறுவகைச் சுவைகளே ஒத்தனவே, அசத்தாகிய தத்துவங்களென அறிவாயாக.
தத்துவங்களுக்கு வேருய் ஆன்மா உண்டு
28 ஆறு சுவையு மருந்தியவைதம்மை
வேருெருவன் கூறியிடும் மேன்மைபோல் - ஆகுறும்
ஒன்றென்ரு நாடியுணர்க் தோதிலதி லுற்றறிவாய் கின்றபொருள் தானே காண்ரீ
கொ-கூ: (ஆன்மா எது என்பதை) ஓதில், (ஆறு வகைச் சுவைக்கும்) வேறு ஆகிய) ஒருவன் ஆறு சுவை யும் (ஒன்று ஒன்முய்) அருந்தி (நாடி உணர்த்து) அவை தம்மைக் கூறியிடும் மேன்மைபோல், ஆறு ஆறும் ஒன்று ஒன்ருய்நாடி உணர்ந்து, அதில் உற்று அறிவாய் நின்ற பொருள் தானே நீ(என்று) காண்.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

WHERE TRYBOWN WYLIADWY
(நீ ஆசிய) La I
ப-ரை: ஓதில்-ஆன்மா சாது என்பதை உரைக்கு மிபத்து, வேறு ஒருவன்.(ஆறுவகைப்பட்ட சுவைகளுக் கும்) வேறுபட்டு நின்ற ஒருவன், ஆறு சுவையும் அருந்தி -(அவ்) ஆறு சுவைகளையும் (ஒன்று ஒன்ருகப்) புசித்து, கூறியிடும் மேன்மைபோல் (ஆராய்ந்து அறிந்து) இது கைக்கிறது; இது கார்க்கிறது; இது கூர்க்கிறது.இது துவர்க்கிறது; இது புளிக்கிறது; இது இனிக்கிறது எனச் சொல்லுந்தன்மை போல, ஆறு ஆறும் முப்பத்தாறு தத்துவங்களேயும் ஒன்று'ஒன்ரு நாடி உணர்ந்து - ஒவ் வொன்ருக விசாரித்து அறிந்து, அதில் உற்று - அவ்வது பவத்தில் பொருந்தி, அறிவாய் நின்ற பொருள் தானே நீகாண் அறியும் இயல்பினதாய் நின்ற பொருள்தான் நீ ஆகிய ஆன்மாவாம்.
பொழிப்பு' ஒருவன் ஆறு சுவைகளையும் ஒவ்வொன் முகப் புசித்து அவற்றின் இயல்புகளைக் கறுந்தன்மை போல, முப்பத்தாறு தத்துவங்களேயும் விசாரித்தறியும் இயல்பினதாய் நின்ற பொருளே ஆன்மாவாம்.
” அறிவுக்கு அறிவாய் நின்று அறிவிப்பது பதி'
குன்ரு வருளாலே கூறினீரென்வடிவு பொன்ருத நும்முருவம் போதியீர் - கின்றருக்கன் கண்ணுக்குக் காட்டுமாப் போலே யுனதறிவின்
கண்ணியறிவித்திடுவோம் காம்
2
கொடிசு 'தேவரீர் குன்ரு அருளாலே என் வடிவு கூறினீர் (இனி) பொன்ருத நும் உருவம் போதியிர்' (என் மாணவகன் விஞரவியதற்கு ஞானுசிரியர்)'அருக் கன் நின்று (பொருள்களேக்) கண்ணுக்குக் காட்டுமா போலே, நாம் உனது அறிவில் நண்ணி 'அறிவித்திடு வோம்' (என்ருர்)
ப-ரை: குன்ரு அருனாலே Marağı வடிவு கூறினீர்
தேவரீர் என்றும் குறைவுபடுதலில்லாத பேரருளிஞலே அடியேனுடைய சொரூபத்தை அருளிச்செய்தீர்; போன்,

Page 25
28 உண்மை விணக்கம்
ருத நும் உருவம் போதியீர் - இனி, கெடாத தேவரீ ருடைய சொரூபம் எப்படிப்பட்டதென்பதை அடியே னுக்கு அருளிச் செய்யவேண்டும்; (என மாணவகன் வின வினணுக ஆசிரியர்: ) அருக்கன் நின்று கண்ணுக்குக் காட் டுமா போலே - சூரியனது ஒளி நிலைபெற்று நின்று இருளை நீக்கிக் கண்ணுெளியையும் பிற பொருள்களையும் காட்டு வது போல, நாம் உனது அறிவில் நண்ணி அறிவித்திடு வோம் - நாம் உனது அறிவிலே (அறிவுக்கறிவாய்ப்) பொருந்தி நின்று பாசம் பசுபதி ஆகியவற்றின் உண்மை இயல்புகளை அறிவித்து வருவோம் (என்றர்).
சு ய் ஒளி இருந்தும் தானே காணும் இயல்பற்ற கண் ணுக்குச் சூரியனது பிரகாசம் துணை செய்கின்றது. அது உலகப் பொருள்களை விளக்கி இவை இத்தகையவென வும், பிரகாசமாகிய தன்னை வேறறக் கலந்துள்ள சூரி யனை விளக்கி அச் சூரியன் இத்தகையதெனவும் கண்ணுக் குக் காட்டும். அங்ங்னமே இறைவன் தன்னின் வேறற நின்ற திருவருளால், தன்னறிவு கொண்டு தானே எதை யும் அறியமாட்டாத ஆன்மாவுக்கு மும் மலவியல்புகளை யும் தன்னியல்புகளையும் விளக்கியருளுவ னென்க. இத னைக் 'கண்டொல்லை காணுநெறி கண்ணுயிர் நாப்ப ணுெளி உண்டில்லையல்லா தொளி' என்னுந் திருவருட் பயனலும் உணர்க.
பொழிப்பு:* மாணவகன் "தேவரீர் என் வடிவாகிய ஆன்மவியல்பினை உரைத்தருளினீர்கள்; இனிநுஞ் சொரூ பமாகிய பதியியல்பினை அருளிச் செய்வீர்களாக" என்ரு ஞக, ஞானசாரியர்: " சூரியன் கண்ணுக்கு உதவுமாப் போலப் பதி ஆன்மாவுக்கு அறிவிக்கும் இயல்பினது' எனருா.
இறைவன் அறிவுக்கறிவாய் நிற்றல்.
28. அன்றியுங்கே னான்மாவா லாய்ந்தறியு மைம்பொறிக
ளின்றி யறியா விவையென்ன - கின்றதுபோல் ஒவாம லுன்னே யுணர்த்துவோ முன்னறிவில் மேவாமல் மேவிகா மே.

(நீ ஆகிய) பதி 99
கொ-கூ: (அஃது) அன்றியும் வேறும் உள) கேள்: ஆன்மாவால் ஆய்ந்து அறியும் ஐம்பொறிகள் (ஆன்மா) இன்றி அறியா; இவை என்ன நின்றதுபோல், நாமே உன் அறிவில் மேவாமல் மேவி, உன்னை ஒவாமல் (உனக்கு) உணர்த்துவோம்.
ப-ரை: அன்றியும் கேள் - முன்கூறிய அஃதேயல் லாமல் வேறும் உள; அவைகளைச் சொல்லுகிருேம் கேட் பாயாக ஆன்மாவால் ஆய்ந்து அறியும் ஐம்பொறிகள் இன்றி அறியா - ஆனமாவின் துணையினல் விடயங்களை அறிந்து காரியப்பட்டு வருகின்ற பஞ்சேந்திரியங்கள் **ஆன்மாவின் துணையினலேயே நாம்) அங்ங்னம் காரி யப்பட்டு வருகின் ருேம்' என உணர மாட்டா; இவை என்ன நின்றதுபோல் - இங்ங்ணம் நின்ற இப் பஞ்சேந் திரியங்கள் ( ஆன்மாவை அறியாமல் காரியப்பட்டமை) போல, நாமே உன் அறிவில் மேவாமல் மேவி (உனது இயக்கத்துக்கு உறுதுணையாய் நின்ற எம்மை நீ உணரா திருக்கும் நிலையில்) நாம் உனது அறிவிலே (அறிவுக்கறி வாய்) பொருந்தாமல் பொருந்தி, உன்னை ஒவாமல் - உன்னை விட்டு நீங்காமல் நின்று, உணர்த்துவோம்உனக்கு அறிவித்து வருவோம் (அதனை நீ அறிவா ய்)
ஐம்பொறிகள் ச ட மா ன  ைவ. அங்ங்னமாகவும், 'கண்கண்டது; காதுகேட்டது' என்பதெல்லாம் உப சார மாத்திரையே. காண்டல் கேட்டல் முதலியவற்றை இப்பொறிகள் மூலம் ஆன்மாவே உணர்கின்றது; பொறி கள் உணர்வதில்லை. மேலும் ஆன்மாவின் துணையால் வாழ்ந்து காரியப்படும் பொறிகள் ஆன்மாவையும் உணர் வதில்லை. இவை தமக்குத் துணையான ஆன்மாவை உணராமைபோல ஆன்மாவும் தனது உணர்வுக்கு இறை வன் இன்றியமையாதவன் என்பதை உணர்வதில்லை, இக் கருத்தே பற்றி “ஊன் உயிரால் வாழும் ஒருமைத்தே ஊனெடுயிர் - தானுணர்வோ டொன் ருந் தரம்' எனத் திருவருட்பயன் வலியுறுத்துவதுங் காண்க.

Page 26
B உண்மை'விளக்கம்
பொழிப்பு: தமது காரியப்பாட்டுக்கு உறுதுணே யாய் நின்ற ஆன்மாவை அறியாத ஐம்பொறிகள்போல, நீ(ஆன்மா) உனது காரியப்பாட்டுக்கு உறுதுணையாய்
எம்மை (இறைவன்) அறியாது நிற்க, நாம் உனது அறி வில்'பொருந்தி விட்டுநீங்குதலின்றி அறிவித்து வரு வோம், *
இறைவன் உயிர்க்குயிராய் நிற்றல் W、 அக்கரங்கட் கெல்லா மகரவுயிர்கின்ருற்போல் மிக்கவுயிர்க்குயிராய் மேவினுேம் எக்கண்ணும் கில்லா விட்த்துயிர்க்கு நில்லா தறிவென்று நல்லா கமமோதும் நாடு.
கொட்சு: அகர உயிர் அக்கரங்கட்கு எல்லாம்(அக் கரமாய்) நின்ருற்போல்; (நாம்) மிக்க உயிர்க்கு உயிராய் மேவினுேம்; சட்சித்துக்கள்) எக்கண்ணும்'(இறைவன்) 'நில்லா இடத்து உயிர்க்கு அறிவு நில்லாது என்று'நல் 'ஆகமம் ஒதும்; நாடு.
படிரை: அகர உயிர் அக்கரங்கட்கு எல்லாம்'(அக் கரம்ாப்)நின்ருற்போல் 'அ'என்னும் 'உயிர் எழுத்தா னது ஏனைய உயிர் எழுத்துக்களுக்கெல்லாம் உயிராய் நின்று இயக்குமாறுபோல, மிக்க உயிர்க்கு உயிராய் மேவினுேம் நாம் எண்ணிறந்த ஆன்மாக்களிடத்தும் அவைகளே இயக்கும் உயிராகப் பொருந்தி நின்ருேம்: எக் கண்ணும் நில்லா இடத்து உயிர்க்கு அறிவு நில்லாது என்று-கட்சித்துக்கள் எல்லாவற்றிலும் இறைவன் பொருந்திநின்று அறிவியாதவிடத்து உயிர் ஒன்றையும் அறிய்ம்ர்ட்டாது என் நல்ஆகமம் ஒதும் நல்ல சிவாக 'மங்கள்'அறுதியிட்டுரைக்கும்; நாடு-நீ இந்த உண்மை
யை விசாரித்து அறிவாயாக
அங்காத்தவின்றி எவ்வெழுத்துக்களுக்கும் இயக்க மில்லை. அங்காத்தலே அகர்த்தின் பிறப்பு. எனவே, ஏனைய ஆமுதல்'ஒள'இறுதியாய உயிர்கள் அகரமின்றி
。
■ ■ ■ A)
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

இாதன் கடமும் ஐந்தெழுத்தும் 。 si.
இயங்காதாக அகரம் உயிர்க்குயிராயது. அங்ஙனமே இறைவனும் ஆன்ம இயக்கத்துக்குக் காரணஞய் உயிர்க் குயிராயினன். 'அகரவுயிரின்றேல் அக்கரங்களின்ரும்' 'அகர வுயிர்போல் அறிவாகியெங்கும் நிகரிலிறைநிற்கும் நிறைந்து'அகர முதல் வெழுத்தெல்லா மாதி பகவன் முதற்றே யுலகு"முதலிய ஆன்ருேர் வாக்குக்கள் ஈண்டு உய்த்துனரத்தக்கன்
பொழிப்பு: 'அ' என்னும் உயிர் ஏனைய உயிர்களுக்கு உயிராயினுற்போல: நாம் உயிர்க்கு உயிராய்ப் பொருந் தினுேம்:(இக்கருத்தே பற்றி)'சட்சித்துக்கள் யாவற்றி லும் (நாமே4) இறைவனே நிறைந்துநின்று அறிவித்தா லன்றி ஆன்மா ஒன்றையும் அறியமாட்டாது' எனச் சிவாகமங்கள் கூறும் உண்மையை விசாரித்து' அறி
TT
மாணவகனது வேண்டுகோள்
30 நற்றவத்தோர் தாங்காணநாதர்ந்தத் தஞ்செழுத்தால்
உற்றுருவாய்கின்ருடில் உள்ளபடி - பெற்றியநான் * 'விண்ணுர் பொழில்வெண்ணெய் மெய்கண்டி நாதனே'
கொ-சு:விண் ஆர் பொழில் வெண்ணெய் மெய் கண்டநாதனே, நல் தவத்தோர் தாம் காண நாத அந் தத்து அஞ்சு எழுத்தால் உருவாய் உற்று நின்று ஆடல் நான் உள்ளபடி பெற்றிட (நீ உனது)தண் ஆர் அரு
ளாலேசாற்று
ப-ரை:விண் ஆர்பொழில் வெண்ணெய் மெய் கண்டநாதனே'ஆகாயத்தை அளாவும்படி வள்ர்ந்த சோலைகளால் குழப்பெற்ற திருவெண்ணெய் நல்லூரில் எழுந்தருளியிருக்கின்ற மெய்கண்ட் தேவரே, நல் தவத் தோர் தாம் காண முன்னத்தவ விசேடமுடைய நல் லான்மாக்கள் தரிசிக்கும்படி நாத அந்தத்து அஞ்சு எழுத்தால் உருவாய் உற்று நின்று ஆடல் நாதத்தின்

Page 27
52 உண்மை விளக்கம்
முடிவிலே இறைவன் திருவைந் தெழுத்தே திருமேனி யாகக் கொண்டு நின்று திருநடனம் செய்யும் முறை மையை, நான் உள்ளபடி பெற்றிடம் அடியேன் உண் மையாகத் தரிசிக்கும் படி, தண் ஆர் அருளாலே சாற்றுநீ உனது குளிர்ந்த கிருபையினலே சொல்லியருள்வா
5
பொழிப்பு: மெய்கண்ட நாதனே, (முன்னைத் தவ விசேட முடையோர் காணும் படி) நாதாந்தத்தில் இறை வன் திருவைந்தெழுத்தே திருமேனியாகக் கொண்டு திரு நடனம் செய்யும் முறைமையை அடியேன் தரிசிக்கும் படி கூறியருளுவீராக.
நடனத் திருமேனியும் நடன நோக்கமும்
31. எட்டு மிரண்டு முருவான லிங்கத்தே
கட்டம் புதல்வா நவிலக்கேள் - சிட்டன் சிவாயநம வென்னுந் திருவெழுத்தஞ் சாலே அவாயமற கின்ருடு வான்.
கொ-கூ: புதல்வா, (சிட்டன்)நட்டம் நவிலக்கேள், சிட்டன் சிவாயநம என்னும் திரு எழுத்து அஞ்சால், (+ஏ) எட்டும் இரண்டும் உரு ஆன இலிங்கத்து (+ ஏ) அவாயம் அற நின்று ஆடுவான்.
ப-ரை: புதல் வா-மாணவகனே, நட்டம் நவிலக் கேள் - சிவபெருமானது திருநடனத்தைச் சொல்லுகி ருேம் கேட்பாயாக சிட்டன் - (அச்) சிவபெருமான், சிவாய ந ம என்னும் திரு எழுத்து அஞ்சாலே - சிகாரம் ஆதியாகவுடைய பூரீ பஞ்சாக்கரத்தையே திருமேனியா கக் கொண்டு, எட்டும் இரண்டும் உரு ஆன இலிங்கத்தே அவாயம் அற நின்று ஆடுவான் - அகரம் உகரம் இரண் டும் சேர்ந்த உருவமாயிருக்கின்ற யகரமாகிய ஆன்மா விடத்திலே (அவ்வான்மாவினது) பிறவித் துன்பம் நீங் கும்படி நின்று நிருத்தம் செய்தருளுவான்,
‘ஏ’ இரண்டும் அசைகள்.

காதன் கடமும் ஐக்தெழுத்தும் 岛5
எட்டு - "அ" என்னும் எழுத்தையும், இரண்டு - "உ" என்னும் எழுத்தையும் உணர்த்தி நின்ற குறிப்பு மொழி களாம். எட்டு ஆகிய 'அ'வும் இரண்டு ஆகிய 'உ'வும் சேரப் பத்து ஆகிய "0" உளதாம். இந்த ‘பி’ என்னும் குறி 'ய்' என்னும் எழுத்தைக் குறிப்பதாய் ஆன்மாவை உணர்த்திற்று. எனவே, இங்ங்னம்) உய்த்துணர வைக் கும் உத்திபற்றி ஆன்மாவை "எட்டும் இரண்டும் உரு வான லிங்கம்’ என ஆசிரியர் குறிப்பிட்டார் என்ப.
பொழிப்பு: சிவபெருன் பூரீ பஞ்சாக்கரத்தைத் திரு மேனியாகக் கொண்டு யகரமாகிய ஆன்மாவிடத்திலே (அவ்வான்மாவினது) பிறவியொழியும் படி திருநட்னம் செய்தருளுவான்.
இதுவுமது
நகராதி பஞ்சாக்கரத் திருமேனி ജxര படிகேள்கல் லம்பலத்தான் ஐயனே நாடும் திருவடியி லேநகரம் கூடும் மகரம் உதரம் வளர்தோள் சிகரம் பகருமுகம் வாமூடியப் பார்.
கொ-கூ: ஐயனே, நல் அம்பலத்தான் ஆடும் படி கேள்; நாடும் திரு அடியிலே நகரம் (ஆகவும்), கூடும் உதரம் மகரம் (ஆகவும்), வளர்தோள் சிகரம் (ஆகவும்), பகரும் முகம் வா (ஆகவும்). முடிய (ஆகவும் கொண்டு அவன் நிருத்தம் செய்வான் என்பதை விசாரித்துப்) பார்.
ப-ரை: ஐயனே-மாணுக்கனே, நல் அம்பலத்தான் ஆடும்படி கேள்- நல்ல கனகசபையிலே எழுந்ருளியிருக் கின்ற சிவபெருமான் திருநடனம் செய்கின்ற முறை யைச் சொல்லுகிருேம் கேட்பாயாக நாடும் திரு அடி யிலே நகரம் - நாடா நின்ற திருவடியிலே நகாரமாகவும், கூடும் உதரம் மகரம் - பொருந்திய திருவுந்தியிலே மகா ரமாகவும், வளர் தோள் சிகரம் - வளரா நின்ற திருத்
உ. வி-5

Page 28
|
E፳፰ a liter for கம்
ー。
தோஷிலே சிகாரமாகவும், பகரும்,வா-சொல்லப்பட்ட திருமுகத்திலே வகாரமாகவும், முடிய" - திருமுடியிலே ய காரமாகவும் (கொண்டு அவன் திருநடனம் செய்தரு ளுவான் என்பதைப்) பார் - (நீ விசாரித்து அறிந்துகொள்
TT
இதனுல் லயாங்கமெனக் கூறப்படும் நகாராதி பஞ் சாக்கர அமைப்பும் திருநடனமும் உரைக்கப்பட்டன.
பொழிப்பு: கனகசபையில் எழுந்தருளிய இறை வன், திருவடியிலே நகாரமும், திருவுந்தியிலே மகார மும், திருத்தோளிலே சிகாரமும், திருமுகத்திலே வகார மும், திருமுடியிலே யகாரமும் பொருந்த ( நின்ற திரு மேனிகொண்டு) திருநடனம் செய்தருளுவான்.
இதுவுமத
சிகாாாதி பஞ்சாக்கரத் திருமேனி
32. சேர்க்குக் துடிசிகரஞ் சிக்கனவா வீசுகரம்
ஆர்க்கும் யகரம் அபயகரம் - பார்க்கிவிறைக்(கு) அங்கி நகரம் அடிக்கீழ் முயலகனுர் தங்கும் மகிரமது தான்.
இகா-க: பார்க்கில், இறைக்கு ஆர்க்கும் துடி சேர்க்கும் (கரம்) சிகரம் ஆகவும்), சிக்கன வீசுகரம் வா ( ஆகவும் ), அபயகரம் (ஆகவும் ). அங்கி நகரம் (ஆக வும்), முயலகனுர் தங்கும் அடிக்கீழ் மகரம் (அது) (ஆ வும்) பொருந்த அவ்விறைவன் திருநடனம் செய்தரு வன் என அறிவாயாக.)
ப-ரை! பார்க்கில் - ஆராய்ந்து பார்க்குமிடத்து இறைக்கு - சிவபெருமானுக்கு, ஆர்க்கும் துடிசேர்க்கும் (கரம் சிகரம் - ஒலிக்கின்ற டமருகம் ஏந்திய திருக்கரத் திலே சிகாரமாகவும்,சிக்கன வீசு கரம் வா-நன்ருக வீசிய திருக்கரத்திலே வகாரமாகவும், அபயகரம் யகரம்-அஞ் சல் என அமைத்த திருக்கரத்திலே யகாரமாகவும், அங்கி நகரம் - அக்கினி ஏந்திய திருக்கரத்திலே நகாரமாகவும், முயலகனுர் தங்கும் அடிக்கீழ் மகரம் அது (தான்) முயல
 
 
 
 

நாதன் கடமும் துக்தெழுத்தும் 蔷
கனுர் பொருந்தியிருக்கும் (மிதித்த) திருவடியிலே மகார மாகவும் பொருந்த அவ்விறைவன் திருநடனம் செய்தரு ளுவன் என அறிவாயாக.
இதனுல் போகாங்கமென்னும் சிகாராதி பஞ்சாக்கர அமைப்பு ந் திருநடனமும் உரைக்கப்பட்டன. 'அது' பகுதிப் பொருள் விகுதி: "தான்-அசை.
பொழிப்பு: இறைவன் டமருகமேந்திய திருக்கக யில் சிகாரமும், வீசிய திருக்கையில் வகாரமும், அபய கரத்தில் யகாரமும், அக்கினியேந்திய திருக்கையில் நகா ரமும் ஊன்றிய திருவடியில் மகரமும் பொருந்த ( ப் பஞ்ச கிருத்திய) த் திருநடனம் செய்தருளுவான்.
இதுவுமத ருபாசி-ஒங்காரமும், பஞ்சாக்கர நடன தரிசனத்துர்ஆ 西 ஞ் 西 点 * அதிகாரிகளும், பயனும்
34. ஒங்கார மேல்ே கிருவாசி உற்றதனில்
நீங்கா வெழுத்தே நிறைசடராம் - ஆங்காரம் அற்ரு ரறிவரணி யம்பலத்தா டைவிது பெற்ருர் பிறப்பற்ருர் பின்,
கொ-கூ! தங்காரமே நல் தி ருவா சி; அதனில் உற்று நீங்கா எழுத்தே நிறைகடராம் (இவற்றை) ஆங் காரம் அற்ருர் அறிவர் அணி அம்பலத்தான் ஆடல் இது
பெற்ருர் பின் பிறப்பு அற்ருர் .
ப-ரை: ஓங்காரமே நல் திருவாசி - ஒம் என்னும் பிரணவ மந்திரமே நல்ல திருவாசியாகும்; அதனில் உற்று நீங்கா எழுத்தே நிறை சுடராம் - அப் பிரசனவத் தைப் பொருந்தி அதனைவிட்டு நீங்காத பஞ்சாக்கரமே திருவா சியில் சுடராயமைந்து நிறைந்து நின்ற (உள்) ஒளியாகும். ஆங்காரம் அற்ருர் அறிவர் - இவை இங் என மாதலே யான் எனது என்னும் செருக்கறுத்த பக்கு வான்மாக்கள் அறிவார்கள் அணி அம்பலத்தான் ஆடல் இது பெற்ருர் பின் பிறப்பு அற்ருர்-அழகிய பொன்னம்

Page 29
56 உண்மை விளக்கம்
பலமுடையான் செய்கின்ற திருநடனத்தைத் தரிசிக்கப் பெற்றவர்களே பின்பு பிறப்பு இல்லாதவராவர்.
இதனல் சூக்கும பஞ்சாக்கர அமைப்பும், திருநடன
தரிசனத்துக்கு அதிகாரியாவாரியல்பும், தரிசனப் பய
னும் கூறப்பட்டன. ஆங்காரம் ஆணவமயக்கத்தான் உளதாகிய செருக்கு அது தான் அல்லாத உடம்பை 'யான்” என்றலும், தனதல்லாத - தன்னேடு சம்பந்த மில்லாத பொருளை "எனது' என்றலுமாம். திருவாசியி லுள்ள சுடர்கள் ஐம்பத்தோரக் கரங்களென்ப பிரண வத்துள் பஞ்சாக்கரம் உற்று நீங்காதிருக்கும் என்ற மைக்கு “இறை சத்தி பாசம் எழின்மாயை ஆவி, உற நிற்கும் ஓங்காரத்துள்' (திரு அ. பய. அதி. 9. செய். 1) என்ப்து சான்றதல் உணர்க.
பொழிப்பு: பிரணவமே திருவாசியாதலையும், பிர ணவத்துள் அடக்கமான பஞ்சாக்கரமே திருவாசியில் நிறைந்த சுடராதலையும், ஆணவ முனைப் பகன் ருர் அறி வர். (இங்கனம் உட்பொருள் உணர்ந்து) இறைவனின் திருநடனத்தைத் தரிசித்தவர்களே (இனிப்) பிறவியற் ருேராவர்.
இதுவுமது
பஞ்ச கிருத்திய நடனம்
33. தோற்றந் துடியதனில் தோயுந் திதியமைப்பிற்
சாற்றியிடும் அங்கியிலே சங்காரம் - ஊற்றமா ஊன்று மலர்ப்பதத்தி லுற்றதிரோ தம்முத்தி கான்ற மலர்ப்பதத்தே நாடு.
கொ-கூ: (இறைவன்) துடி அதனில் தோற்றம் (ஆகவும்), அமைப்பில் தோயும் திதி (ஆகவும்). சாற்றியி டும் அங்கியில் (+ஏ) சங்காரம் (ஆகவும்), ஊற்றம் ஆ(க) ஊன்றும் மலர்ப்பதத்தில் உற்ற திரோதம் ( ஆகவும் ), நான்ற மலர்ப்பதத்து (+ஏ) முத்தி (ஆகவும் திருநடனம் செய்வான் என்பதை நீ) நாடு.

சாதன் கடம் 7
ப-ரை: துடி அதனில் தோற்றம் - இறைவன் டம ருகம் ஏந்திய திருக்கரத்திலே படைத்தலாகவும், அமைப் பில் தோயும் திதி-அபய கரத்திலே ஆன்மா பொருந்து கின்ற காத்தலாகவும், சாற்றியிடும் அங்கியில் (+ஏ) சங் காரம் - சொல்லப்பட்ட அக்கினி ஏந்திய திருக்கரத்திலே (மலம் நீக்கிச் சுகம் செய்தலாகிய) அழித்தலாகவும், ஊற் றம் ஆ(க) ஊன்றும் மலர்ப்பதத்தில் உற்ற திரோதம் - உறுதிபெற ஊன்றி நின்ற திருவடியிலே பிரபஞ்சத்தை மறைத்தலாகவுக், நான்ற மலர்ப்பதத்து (+ ஏ ) முத்தி நாடு - தூக்கிய மலர்போலுந் திருவடியிலே முத்தியளித் தலாகிய அணுக்கிரகமாகவும் தி ரு ந ட ன ம் செய்வா னென்பதை நீ விசாரித்து அறிவாயாக.
"ஏ" இரண்டும் அசைகள்.
பொழிப்பு: இறைவன் டமருகமேந்திய திருக்கரத் திலே படைத்தலாகவும், அபயகரத்திலே காத்தலாக வும், அக்கினியேந்திய திருக்கரத்திலே அழித்தலாகவும், ஊன்றிய திருவடியிலே மறைத்தலாகவும், தூக்கிய திரு வடியிலே முத்தி அனுக்கிரகமாகவும் பஞ்ச கிருத்திய
நடனம் செய்வான். இவ்வுண்மையை நீ ஆராய்ந்தறி GosT LITT 55
மும்மலம் நீக்கி முத்தியளிக்குந் திரு நடனம் 36. மாயை தனையுதறி வல்வினையைச் சுட்டுமலஞ்
சாய அமுக்கியருள் தானெடுத்து - நேயத்தால் ஆனந்த வாரிதியில் ஆன்மாவைத் தானழுத்தல் தானெக்தை யார்பரதக் தான்.
கொ-கூ: எந்தையார் பரதம் (செய்யும் திருநடன முறைமை தான்) மாயைதனை உ த நி, வல்வினையைச் சுட்டு, மலம் சாய அமுக்கி, அருள் (தான்) எடுத்து, நேய த்தால் ஆனந்த வாரியில் ஆன்மாவை (தான்) அழுத்தல் தரன.
ப - ரை: எந்தை யார் பரதம் (தான்) - எமது தந் தையாகிய பரமேஸ்வரனது திருநடன முறைமையா வது, மாயைதனை உதறி-டமருகம் ஏந்திய திருக்கரத்தி ணுலே மாயையை நீக்கி, வல்வினையைச் சுட்டு-அக்கினி ஏந்திய திருக்கரத்தினலே கன்மத்தை அழித்து, மலம் சாய அமுக்கி - ஊன்றிய திருவடியினலே ஆணவ மலம் மேலிடாமல் அழுத்தி, அருள் tதான்) எடுத்து தூக்கிய திருவடியினலே திருவருளே உடம்பாக நிறுத்தி, நேயத்

Page 30
38. உண்மை விளக்கம்
தால் ஆனந்த வாரிதியில் ஆன்மாவைத்(தர்ன்) அளுத்தல் தான்-பெருங்கருணை கொண்டு அஞ்சலென அமைத்த திருக்கரத்தினலே பேரானந்த சாகரத்தில் ஆன்மாவை மூழ்குவித்தலேயாம்.
முதல் மூன்று 'தான்'களும் அசை பொழிப்பு: பரமேசுவரனது திருநடன முறைமை யாவது:- மாயையை நீக்கி, கன்மத்தை அழித்து, ஆணவ மலம் மேலிடாமல் அழுத்தி, திருவருளை உடம்பாக நிறுத்தி, தமது பெருங் கருணையினலே ஆன்மாவைப் பேரானந்தத்தில் மூழ்குவித்தலேயாம். * அம்பலத்தான் கூத்தின் பயன் அந்தமிலின்பமாம் 37. மோனந்த மாமுனிவர் மும்மலத்தை மோசித்துத்
தானந்த மானிடத்தே தங்கியிடும் - ஆனந்தம் மொண்டருந்தி கின்ருடல் காணுமருள் மூர்த்தியாக் கொண்டதிரு வம்பலத்தான் கூத்து. கொ-கூ; அந்த(ம்) மோனமாமுனிவர் மும்மலத்தை மோசித்து, 'தான்' அந்தம் ஆன இடத்து {+ஏ) தங்கியிடும் ஆனந்தம் மொண்டு அருந்திநின்று, ஆடல் காணும் (அது தான்) அருள் மூர்த்தியா (க) க் கொண்ட திரு அம்பலத் தான் கூத்து (முறைமையாம்).
ப-ரை : அந்தம் மோன மா முனிவர் மும்மலத்தை மோசித்து - முடிவான மெளன த வ மு  ைட ய சிறந்த ஞானிகள் அவனருளாலே மும்மலங்களையும் நீக்கி, 'தான்’ அந்தம் ஆன இடத்தே தங்கியிடும் - "நான் பிரமம்' என் னும் ஆன்ம போதம் முடிவடைந்த காலத்திலே தோன்றி நிலைத்து நிற்கின்ற, ஆனந்தம் மொண்டு அருந்தி நின்று ஆடல் காணும் (அதுதான்) - ஆனந்த வெள்ளத்தை முகந்துகொண்டு அதனை அநுபவித்திருத்தலே பயனகத் திருநடனத்தைத் தரிசிப்பதுதான், அருள் மூர்த்தியா (க)க் கொண்ட திரு அம்பலத்தான் கூத்து- எல்லா ஆன் மாக்களும் ஈடேறவேண்டும் என இயல்பாக எழுகின்ற கருணையே திருமேனியாகக் கொண்ட திருவம் பல முடை யானது திருநடன முறைமையாகும்.
‘ஏ’ அசை,

காதன் கடம் 39
இதஞல் அவனருளே பற்றுக்கோடாக மும்மலம் நீங்கி ஆன்மபோதமுமகன்ற நிலையிலேயே ஆன்மா பக்கு வியாகுமென்பதும், அப்பக்குவ நிலையிலே உளதாகும் பதிஞான்த்தினுலேயே ஆனந்தம் மொண்டருந்தலாகிய பயன் பெறற்பால தென்பதும் வலியுறுத்தப்பெற்றன.
பொழிப்பு: மெளன விரதமுடைய முனிவர்கள் மும்மலங்களையும் நீக்கி, ஆன்மபோதம் அதன்ற நிலையில் நிலைத்து நிற்பதாகிய பேரானந்தத்தை முகந்து அநுப வித்து இருத்தலே பயனகத் திருநடனத்தைத் தரிசிப் பதுதான், கருணையே உருவமான திருவம் பலமுடையா னின் திருநடன முறைமையாகும்.
பிரான் நடனம் பேணுவார்க்குப் பிறப்பில்லை.
38. பரையிடமா கின்றுமிகு பஞ்சாக் கரத்தால்
உரையுணர்வுக் கெட்டா வொருவன்-வரைமகள்தான் காணும்படியே கருணையுருக் கொண்டாடல் பேணுமவர்க் குண்டோ பிறப்பு.
கொ-கூ; உரை உணர்வுக்கு எட்டா ஒருவன், மிகு பஞ்சாக்கரத்தால் கருணை உருகொண்டு, பரை இடமா(க) நின்று, வரை மகள்" தான்" காணும்படி (+ ஏ) ஆடல் (செய்வதைப்) பேணும் அவர்க்குப் பிறப்பு உண் டோ? (இல்லை).
ப-ரை உரை உணர்வுக்கு எட்டி ஒருவன் - வாக்கு மஞதிதனுகிய ஒப்பற்ற இறைவன், மிகு பஞ்சாக்கரத் தால் கருணை உருகொண்டு - மேன்மைமிக்க பூரீபஞ்சாக் கரத்தினலே கருணையே திருமேனியாகக் கொண்டு, பரை இடமாக நின்று - பராசத்தியாகிய பொன்னம்பலமே இடமாக நின்று, வரை மகள் காணும்படி (+ ஏ) - மலை யரையன் மகளாகிய உமையம்மை காணும்படி, ஆடல் - திருநடனஞ்செய்தருளுவதை, பேணும் அவர்க்குப்பிறப்பு உண்டோ - விரும்பி(த்தரிசித்து) வாழுகின்றவர்களுக்குத் தொடர்ந்து வருவதாகிய பிறவித் துன்பம் இல்லையாம்.

Page 31
, 49 lairaud விளக்கம்
தான்,' "ஏ" அசைகள் s
*உரையுணர்வுக் கெட்டா வொருவன் மிகு பஞ்சாக் கரத்தால் வரை மகள் தான்பாதி பரையிடமாக் க்ாணும் படியே” என்பதும் பாடம். ஆயின், "உரை உணர்வுக்கு எட்டா ஒருவன், மிகு பஞ்சாக்கரத்தால் வரை மகள் பாதி, தான் பாதி (ஆகக்) கருணை உருக்கொண்டு, ப்ரை இடமாக நின்று, (அவ்வரை மகள் காணும்படியே ஆடல் செய்வதைப் பேணும் அவர்க்குப் பிறப்பு உண்டோ? எனக் கொண்டு கூட்டிப் பொருள் உரைக்க
பொழிப்பு: இறைவன் பூரீ பஞ்சாக் கரத்தினலே கருணையே திருமேனியாகக் கொண்டு, பொன்னம்பலமே இடமாக நின்று உமையம்மை காணும் படி திருநடனஞ் செய்தருளுவான், அத் திருநடனத்தை விரும்பித் தரி சித்து வாழுகின்றவர்களுக்குப் பிறவித்துன்பம் இல்லை.
மாணுக்கனின் வேண்டுகோள்
39. நாதாந்த நாடகத்தை நன்ரு யருள்செய்தீர்
ஒதீ ரெழுத்தஞ்சு முள்ள படி-தீதறவே அஞ்செழுத்தீ தாகி லழியுமெழுத் தாய்விடுமோ தஞ்ச வருட்குருவே சாற்று.
கொ-கூ: தஞ்ச அருட்குருவே, நாத அந்த நாட கத்தை நன்ற்ய் அருள் செய்தீர்; அஞ்சு எழுத்து ஈது (எழுத்து) ஆகில், அழியும் எழுத்தாய் விடுமோ?, ஒதீர்; தீது அற (+ஏ) எழுத்து அஞ்சும் உள்ளபடி சாற்று.
ப-ரை: தஞ்ச அருட்குருவே - எனக்குப் புகலிட மாயிருக்கின்ற பெருங்கருணையுடைய ஞானதேசிகரே, நாத அந்த நாடகத்தை நன்ரு ய் அருள் செய்தீர் - நாத முடிவாய் இருக்கின்ற திருநடன முறைமையை அடியே னுக்கு நன்ருக அருளிச் செய்தீர்கள்; அஞ்செழுத்து ஈது (எழுத்து) ஆகில் - இறைவன் திருமேனியாகக் கொண்ட ருளுகின்ற பஞ்சாக்கரம் எழுத்துக்களிலே ஒன்ருயிருக்கு மாயின், அழியும் எழுத்தாய் விடுமோ?-அழியும் தன்மை யுடைய எழுத்தாகுமோ?, ஒதிர் - செல்லுவீராக; தீது

திருவைக் தெழுத்து 41
எழுத்து அஞ்சும் உள்ளபடி சாற்று -(மேலும் அடியேனது மயக்கமாகிய குற்றம் நீங்கும்படிக்குப்) பஞ்சாக்கரத்தின் உண்மை இருந் த ப டி எது வென்பதனை அருளிச் செய்வீராக.
பொழிப்பு: ஞானதேசிகரே, தி ரு நட ன முறை மையை அருளிச் செய்தீர்; பூரீ பஞ்சாக்கரம் எழுத்துக் களில் ஒன்ருயிருக்குமானல் அவ்வெழுத்துக்களே போல அழியும் எழுத்தாய்விடுமோ? மேலும் (எனது மயக்கம் அகலும் படிக்கு) திருவைந்தெழுத்துண்மை இருந்த முறைமையை அருளிச் செய்வீராக.
பொருள் அழியாப் பஞ்சாக்கரத்தின் உட்பொருள் 40. உற்ற குறியழியு மோதுங்காற் பாடைகளிற்
சற்றும் பொருள்தான் சலியாது-மற்றதுகேள்
ஈசனரு ளாவி யெழிலார் திரோதமலம்
ஆசிலெழுத் தஞ்சினடை வாம்.
கொ-கூ ஒதுங்கால், பாடைகளில் உற்ற(எழுத்துக் களின்) குறி அழியும்; பொருள்(தான்)சற்றும் சலியாது; (மற்று).அது கேtள், ஈசன் அருள் ஆவி எழில் ஆர் திரோதம் மலம் ஐந்தும் ஆசு இல் எழுத்து அஞ்சின் அடைவு ஆம். ப-ரை ஒதுங்கால் - பஞ்சாக்கரத்தின் உண்மை
யைச் சொல்லுமிடத்து, பாடைகளில் உற்ற குறி அழியும் -பல்வேறு மொழிகளிலும் பொருந்திய எழுத்துக்களின் குறிகள் தாம் அழியும் இயல்பினை உடையனவாம்; பொருள்(தான்) சற்றும் சலியாது - (ஆனல்) அவற்ருல் அறியக் கிடந்த பொருள் சற்றேனும் அழியாது; (மற்று) அது கேள் - (ஆதல்ால்) அப்பஞ்சாக்கரத்தின் உண்மைப் பொருளியல்பை உரைக்கின்ருேம் கேட்பாயாக, ஈசன் அருள் ஆவி எழில் ஆர் திரோதம் மலம் - சிவன், அருள் (சத்தி), ஆன்மா, அழகு(நன்மை) பொருந்திய திரோதான சத்தி, (ஆணவம் கன்மம் மாயையாகிய மும்) மலம் என் னும் ஐந்தும், ஆசு இல் அஞ்சு எழுத்தின் அடைவு ஆம்-குற்
றமற்ற பூரீ பஞ்சாக்கரத்தின் பொருண்முறைமையாம்.
உ, வி-8

Page 32
42 உண்மை விளக்கம்
*தான்" மற்று' என்பன அசைகள்.
சிகாராதி பஞ்சாக்கரத்தில் 'சி' - சிவத்தையும், வ'. அருட்சத்தியையும், 'ய' - ஆன்மாவையும், 'ந' - திரோ தான சத்தியையும், "ம" - மும் மலங்களையும் குறிப்பன. இப்பஞ்சாக்கர அமைப்பில், 'ய' ஆகிய ஆன்மாவைப் பெத்த நிலைப்படுத்தும் 'த' 'ம' - என்பன ஒரு புறமாக நின்று ஊன நடனத்தையும், முத்திநிலைப் படுத்துவனவா கிய ‘சி’ ‘வ'- என்பன மற்ருெரு புறமாக நின்று ஞான நடனத்தையும் விளக்கும். எழுத்தஞ்சின் அடைவு இங் ங்னமாதலைத் திருவருட்பயணுசிரியர் 'ஊன நடனம் ஒரு பால் ஒருபாலாம் - ஞான நடம் தானடுவே நாடு’ என்ப.
பொழிப்பு: மொழிகளிலுள்ள எழுத்துக்களின் குறி அழியுமேயன்றிப் பொருள் அழியாது, அங்ங்ணம் பொருள் சற்றேனும் அழியாது நின்ற பூரீ பஞ்சாக்கரத்தின் உட் பொருள் சிவம் அருட்சத்தி ஆன்மா திரோதான சத்தி மலம் என்னும் ஐந்துமாம்.
சிகாராதி நகாராதி பஞ்சாக்கரவியல்பு
41. சிவனரு ளாவி திரோதமல மைந்தும்
அவனெழுத் தஞ்சி னடைவாம்-இவனின்று நம்முதலா வோதிலருள் நாடாது நாடுமருள் சிம்முதலா வோதுநீ சென்று. கொ - கூ! சிவன் அருள் ஆவி திரோதம் மலம் ஐந் தும் அவன் அஞ்சு எழுத்தின் அடைவு ஆம் (ஆயினும்) இவன் நின்று 'ந' முதலாக) ஒதில் அருள் நாடாது; (ஆத லால்) நீ சென்று (பொருந்தி) "சி" முதலாக) ஒது; (அதனல்) அருள் நாடும்.
ப-ரை: சிவன் அருள் ஆவி திரோதம் மலப் ஐந்தும்சிவன் திருவருட்சத்தி ஆன்மா திரோதான சத்தி மும் மலம் என்னும் ஐந்தும், அவன் அஞ்சு எழுத்தின் அடைவு ஆம். அவ் இறைவனது பஞ்சாக்கரத்தின் உண்மைப் பொருண் முறைமை யாம்; ஆயினும், இவன் நின்று-பக்கு வமடைந்த இவ் ஆன்மா பொருந்தி நின்று, 'ந' முதலா

திருவைக் தெழுத்து 45
ஓதில் - திரோதான சத்தியாகிய நகாரம் முதலாக உச்ச ரித்தால், அருள் நாடாது - திருவருள் வந்து அணையாது; ஆதலால், நீ சென்று "சி" முதலாக ஒது - நீ சிக்ாரம் ஆகிய சிவம் முதலாக நின்ற ப ஞ் சா க் க ரத் தை ப் பொருந்தி உச்சரிப்பாயாக; அருள் நாடும் - அங்ங்னம் உச்சரிப்பதனல் திருவருள் உன்னிடம் வந்து பொருந்தும்.
பெத்த நிலைப்படுத்துவதாகிய மலம் திரோதம் இரண்டும் பின் நிற்க, அவற்றினின்றும் நீங்கி, ஞான ஒளி யாகிய அருளை முன்னிட்டு, அதன் வழிப்படுதலினலேயே ஆன்மா இறைவனை அடைய முடியும் என்பார், 'ந' முத லாக ஓதில் அருள் நாடாது என்றும் ‘சி’ முதலாக ஒது (அதனல்) அருள் நாடும் என்றும் குறிப்பிட்டார். பக்குவ மடைந்த ஆன்மாவாகிய உண்மை மார்க்கத்து மாண வகனுக்குச் 'சி காராதி பஞ்சாக்கரமே யோதுக' எனத் தேசிகர் பணித்தமையான், ஏனைப் பக்குவமில்லாத உபாய மார்க்கத்தார் தம் உலக இன்ப அநுபவ நிமித் தம் நகாரா தி பஞ்சாக்கரம் ஒதுதற்குரியர் என்ப்தும். குறிப்பானுணர வைக்கப்பட்டது. சிகராதி பஞ்சா க் கரத்தைச் சூக்கும பஞ்சாக்கரம் அல்லது முத்தி பஞ்சாக் கரம் எனவும், நகாரா தி பஞ்சாக்கரத்தைத் தூலபஞ் சாக்கரம் எனவும் கூறுப. இவையன்றி, காரணம், மகா காரணம், மகா மனு என மேலும் மூவகைப் பஞ்சாக்கர முமுள. அவற்றுள் காரண பஞ்சாக்கரமாவது யகார மாகிய ஆன்மாவுக்கு முன்னும் பின்னும் எதிர் நிர னிறை யாகச் சிகார வகாரங்கள் நிற்க அமைவதாம். இதற்கு அதிசூக் குதி பஞ்சாக்கரம் , முத்தி பஞ்சாக்கரம், இருதலை மாணிக்கம், இருதலைக் கொள்ளி என்பன மறு பெயர்கள், மகாகாரண பஞ்சாக்கரமாவது, யகாரமாகிய ஆன்மா வகாரமாகிய அருள்வயப்பட்டு அதனேடு சேர்ந்துவிட (ஆன்மாவென வேறென்றின்றிச்) சிகார வகாரமாகிய இரண்டெழுத்து மாத்திரையாய் நிற்பதாம். மகாமனு வாவது, மகாகாரண பஞ்சாக்கரமாய் நின்ற சிகார வகாரங்களிரண்டினுள் வகாரம், சிகாரமாகிய சிவத்தி

Page 33
44 உண்மை விளக்கம்
னுள் அடங்கிச் சிகாரமாகிய ஒரெழுத்து மாத்திரையாய் நிற்பதாம். இதனை நாயோட்டுமந்திரம் எனவும், இறை யெழுத்து எனவும், பெருவெழுத்தெனவும் கூறுப, இங்கே கூறப்பட்ட ஐவகைப் பஞ்சாக்கரமும் ஆன்மாவின் பக் குவ தாரதம்மியத்தின்படி சாதனை செய்வதற்குரியன.
பொழிப்பு: சிவன் முதலான ஐந்தும் திருவைந் தெழுத்தின் பொருள் முறைமை யாம். பக்குவமுடைய ஆன்மா நமசிவய என ஒதினல் அருள்பொருந்தாது;ஆத லால் (உண்மை மார்க்கத்துக் குரிய) நீ சிவயநம என உச்சரிப்பாயாக.
(சிகாராதி பஞ்சாக்கர) ஒதற்பயன்
42. அண்ணல் முதலா வழகா ரெழுத்தைந்தும்
எண்ணி லிராப்பகலற் றின் பத்தே - தண்ணி அருளானது சிவத்தே யாக்கு மணுவை இருளா னது தீர வின்று.
கொ-கூ! அண்ணல் முதல் ஆ(க) அழகு ஆர் ஐந்து எழுத்தும் எண்ணில், இன்று, இருள் ஆனது தீர, அருள் ஆனது அணுவை நண்ணி, இரா பகல் அற்ற இன்பத்து (+ஏ) சிவத்து (+ ஏ) ஆக்கும்.
ப-ரை: அண்ணல் முதலா - சிவனைக் குறிக்கும் சிகாரம் முதலாகவுள்ள, அழகு ஆர் ஐந்து எழுத்தும்உண்மை அழகு பொருந்திய திருவைந்தெழுத்தையும், எண்ணில் - இடையீடின்றித் தியானித்தல் செய்யின், இன்று - ( தியானிக்கும் ) இப்பொழுதே, இருள் ஆனது தீர - ஆணவ மல மயக்கமானது முற்றக அகலும் படிக்கு, அருள் ஆனது அணுவை நண்ணி - திருவருளா னது ஆன்மாவைத் தானே பொருந்தி, இரா பகல் அற்ற இன்பத்து(+ ஏ) சிவத்து(+ ஏ) ஆக்கும் - கேவலம் சகலம் என்னும் பெத்த நிலைகளினின்றும் நீங்கிய (சுத்தநிலையிற் பெறுதற்குரிய) பேரின் பத்தையுடைய சிவத்தினிடம் சேர்க்கும்.

திருவைக் கெழுத்து 45
'சிவமுதலே யாமாறு சேருமேல் தீரும்
பவம்; இதுநீ யோதும் படி’
(அதி, 9. செய், 7)
எனத் திருவருட்பயனுரைப்பதுங் காண்க . அணு என் றது ஆணவ மயக்கமுடைய ஆன்மா வை. அணு சிறிய தன்மையுடையது; ஆணவத்தால் ஆன்மா சிறிய தன்மை யதாக்கப்படுதலின் அவ்வியல் படைந்த ஆன்மாவை அணு என்ருர், "அற்ற இன்பம்" எனற்பாலது "அற்றின் பம்" என நின்றது.
*ஏ* இரண்டும் அசைகள்.
பொழிப்பு: சிகாரம் முதலாகவுள்ள திரு  ைவந் தெழுத்தையும் இடையீடின்றித் தியானித்தால், ஆணவ மயக்கம் மு ற் ரு க அகலும் படிக்குத் திருவருளானது பொருந்திக், கேவல சகல நிலைகளில் நீங்கிய சுத்த நிலை யில் பெறுதற்குரிய பேரின்பத்தையுடைய சிவத்தினிடம் சேர்க்கும்,
இதுவுமது 43. ஆதி மலமிரண்டு மாதியா யோதிற்ை
சேதியா மும்மலமுந் தீர்வாக - போதம் மதிப்பரிதா மின்பத்தே வாழலாம் 19ாறி விதிப்படியோ தஞ்செழுத்து மே.
கொ-கூ: ஆதி மலம் இரண்டும் ஆதியாய் ஒதி ஞல், சேதியா(த) மும்மலமும் தீர்வு ஆகா (ஆதலால்) அஞ்சு எழுத்தும் (+ஏ) (இம்முறைமை மாறி விதிப்படி ஒது ( அங்ங்னம் ஓதுவதனல், ஆன்ம ) போதம் மதிப்பு அரிது ஆம் இன் பத்து (+ ஏ) வாழலாம்.
ப-ரை:- ஆதி மலம் இரண்டும் - திரோதான சத் தியாகிய நகாரம் மலம் ஆகிய மகாரம் எ ன் னு ம் இரண்டு எழுத்துக்களும், ஆதியாய் ஒதினுல் - முதலா கப் பொருந்தும்படி உச்சரித்தால், சேதியா மும் மலமும் தீர்வு ஆகா - இன்றுவரை நீக்கப்படாத மூன்று மலங்க ளும் அகன்று பேரின் பப் பெரு வாழ்வு கைகூடாது ஆத

Page 34
46 உண்மை விளக்கம்
லால், அஞ்சு எழுத்தும் மாறி விதிப்படி ஒது-திருவைந் தெழுத்தையும் நகார மகாரங்கள் முதலாக ஒதும் முறைமை மாறி (ச் சிகார வகாரங்களை முன்னுக வைத்து) விதிப்படி உச்சரிப்பாயாக போ தம் மதிப்பு அரிது ஆம் இன் பத்து வாழலாம் - அங்ங்னம் ஓதுவதனல் ஆன்ம போ த ங் கொண்டு அளவிட்டறிதற் கியலாத பேரின்பத்தை எய்தி வாழலாம்.
*ஏ* இரண்டும் அசைகள்,
‘விரியமரு மேவியவ்வை மீளவிடா சித்தம்
பெரியவினை தீரப் பெறும்." எனவும், “மாலார் திரோதம் மலமுதலா மாறுமோ
மேலாசு மீளா விடின்” எனவும், "ஆராதி யாதார மந்தோ வதுமீண்டு
பாராது நீயேர்தும் பற்று” எனவும் வரும் திருவருட் பயன் (அதி, 9. 4-ம், 5-ம் , 6-ம்) செய்யுள்களானும் இத னுண்மை தெளிக.
பொழிப்பு: நகாரம் மகாரமாகிய இரண்டும் முத லாக வைத்துத் திருவைந்தெழுத்தை ஓதினல் மும்மலங் கள் நீங்கா (பேரின்ப வாழ்வு கைகூடாது;) ஆதலால் இவ்வாறு ஒதும் முறைமை மாறிச் சிகார வகாரங்களே முன்னக வைத்து, (விதிமுறை தவருமல் ) உச்சரிப்பா யாக; அதனல், ஆன்மபோதங் கொண்டறிய முடியாத பேரின் பத்தை அடைந்து வாழலாம்.
வேதம் ஆகமம் புராணப தாண்டவம் முத்தியாவும் ஐந்தெழுத்துள் அடக்கம்
44. அஞ்செழுத்தே யாகமமு மண்ண லருமறையும்
அஞ்செழுத்தே யாதிபுரா ணம்மனத்தும்'- அஞ்செழுத்தே ஆனந்தத் தாண்ட வழு மாமுறுக் கப்பாலாம்
மோனந்த மாமுத்தி யும். கொ-கூ: அண்ணல் (அருளிய) அருமறையும் ஆக மமும் அஞ்சு எழுத்தே (அண்ணலின் அருள் வழிப்பட்ட சான்றேர் அருளிய) ஆதி புராணம் அனைத்தும் அஞ்சு

திருவைக் தெழுத்து 47
எழுத்தே; (அண்ணலின்) ஆனந்தத் தாண்டவமும் அஞ்சு எழுத்தே ஆறு ஆறுக்கு அப்பாலாம் மோன அந்த மா முத்தியும் அஞ்சு எழுத்தே.
ப- ரை: அண்ணல் அருமறையும் ஆகமமும் அஞ்சு எழுத்தே - இறைவன் ஆன்மாக்கள் உய்யும் பொருட்டு அருளிச் செய்த வேதங்கள் நான்கும் ஆகமங்கள் இரு பத்தெட்டும் திருவைந்தெழுத்தின் உட்பொருள் விளக்க மேயாம்; ஆதி புராணம் அனைத்தும் அஞ்சு எழுத்தே(அவனருள் வழிப்பட்டு நின்ற சான்றேரால் அருளிச் செய்யப்பட்ட) முதன்மையான புராணங்கள் பதினெட் டும் திருவைந்தெழுத்தின் உட்பொருள் விளக்கமே, ஆனந்தத் தாண்டவமும் அஞ்சு எழுத்தே - பேரானந் தத்தைக் குறிக்கும் இறைவனின் திருநடனமும் , திரு வைந்தெழுத்தின் பயனே; ஆறு ஆறுக்கு அப்பால் ஆம் மோன அந்த மாமுத்தியும் - முப்பத்தாறு தத்துவங்க ளையும் கடந்து நின்ற மெளன நிலையில் விளைவதாகிய பரமுத்தியும்; அஞ்சு எழுத்தே - திருவைந்தெழுத்தின் பிரயோசனமே யாம்.
*ஆருறுக்கப்பாலாம்" என்ற பாடத்துக்குப் பதிலாக 'யாவைக்கு மப்பாலாம் எ ன க் - கொள்வாருமுளர். * யாவைக்கும்" என்பதற்கு ‘எல்லாத் தத்துவங்களுக்கும்’ என்றே அவர்கள் பொருளுரைத் தமைந்தார்களாதலா னும், அங்ங்னம வர்களுரைத்த எல்லாத் தத் துவங்களும் *ஆருறு" (-முப்பத்தாறு எனக் குறிப்பிட்டவற்று)க்குள் அடங்குமாதலானும் 2-ம் செய்யுளில் "ஆரு று தத்துவ மேது?’ என மாணுக்கன் வினவியதாக எடுத்துக்கொண்ட சொல்லாட்சியையே (மயங்க வை யாமைப் பொருட்டுப்) பிருண்டும் வைத்து வலியுறுத்துவது முறைமையாதலா னும், ( அச்சொல்லாட்சியானே மோனைத் தொடையி யைந்து அழகு செய்தலானும்)ஈண்டு ஆருறுக்கப்பாலாம் என்னும் பாடமே பொருத்தமுடைத்தாதல் உணர்க,

Page 35
48 உண்மை விளக்கம்
இறைவன் அநாதியானவன். ஆன்மாக்களும் அநாதி யானவை. அநாதியான ஆன்மாக்களின் நன்மைகருதி அநாதியான இறைவனருளிய அருமறை ஆகமங்களும் அநாதியானவையே. ஆனல், அவை தவிர்ந்த புராணங் களோ அவ்விறைவனின் அருள் வழிப்பட்ட சான்றேரால் "இடையில்' அருளப்பட்டவை -"ஆதி" ஆனவை. (ஆதி - தொடக்கம்) ஆதலின், "ஆதிபுராணம்’ என்ருர் எனக் கொண்டு அத்தொடருக்கு 'இடைக்காலத்து. அருளப் பட்ட பதினெண் புராணங்கள்' எனப் பொருளுரைப் பினுமமையும்,
இச்செய்யுள் கூறும் உண்மையை' அருணுாலு மா? ணமு மல்லாது ம்ைந்தின்-பொருணுரல் தெரியப் புகும்' அதி, 9. செய். i ) என்னுந் திருவரூட் பயனலுமுணர்க . (வேதம் ஆகமம் புராணம் என்பவற்றைப் பற்றிய விரி வான விளக்கங்களைத் "திருவருட்ப யன் விஞவிடையிற் காண்க. ஈண்டுரைப்பிற் பெருகும்
பொழிப்பு: இறைவன் அருளிய வேதம் ஆ க ம ம் என்பனவும் அவனருள் வழிப்பட்ட மெய்யடியார்கள் அரு விரி ய புராணங்களும் திருவைந்தெழுத்தின் உட் பொருள் விளக்க மாம்; அவ்விறைவனது திருநடனமும் தத்துவாதீதமான" பரமுத்தியும் அத் திருவைந்தெழுத் தின் பயனே யாம்.
அத்துவித முத்திக்கு உதாரணம்
45 முத்தி தனையடைக்தோர் முந்துபழம் போதங்கி வித்தகமாம் வீணை யிவையிற்றி--னுெத்த விரதமணம் வெம்மை யெழினுதம் போல விரவுவரென் ருேதும் விதி.
கொ-சு. முந்து பழம் போது அங்கி வித்தகம் ஆம் வீணை (ஆகிய) இவையிற்றின் ஒத்த இர தம் மணம் வெம்மை எழில் நாதம் போல, முத்திதனை அடைந்தோர் (சிவத்தில் அத்துவிதமாய்) விர வுவர்; என்று விதி'ஓதும்,

('அவனே தானே"யாகிய) மூத்தி 49 بری۔
ப-ரை: முந்து பழம்-முற்றிக் "கனிந்த பழமும், போது- மலரும், அங்கி - அக்கினியும்,வித்தகம் ஆம் வீணை. அற்புதமான வீணையும் ஆகிய, இவையிற்றின் ஒத்த - இப் பொருள்களிடம் முறையே பொருந்தி இருக்கின்ற இரதம் - சுவையும், மணம் - வாசமும், வெம்மை-சூடும், எழில் நாதம் போல - இனிய ஓசையும் போல, முத்தி தன அடைந்தோர் விரவுவர் - பரமுத்தியைப் பெற்ற வர்கள் சிவனிடத்து அத்துவிதமாய்க் கலந்திருப்பர்; என்று விதி ஒதும் - என இவ்வாறு சிவாகமங்கள் அறுதி யிட்டுரைக்கும்.
பழம் குணி, அதன் சுவை குணம். பழமும் சுவையும் குணிகுண சம்பந்தமுடையவை. சிவமும் ஆன்மாவும் பழ மும் சுவையும் போலக் குணி குண சம்பந்தமுடையன வாயின், சிவம் குணியாகவும் ஆன்மா அதன் குணமாக வும் இருத்தல் வேண் டு ம். ஆனல், சத்தாகிய சிவம் வேறு; சதசத்தாகிய ஆன்மா வேறு; அவை இரண்டும் வெவ்வேறு குணிகளாம். அங்ங்ணமாயின்இருவேறு குணி களின் சம்பந்தத்துக்கு, : ஒரு குணிக்கும் அதன் குணத் துக்கும் உள்ள தொடர்பைத் திருட்டாந்தமாகக் காட்டி யமை பொருத்தமுடையதாகுமா? எனின், அது ‘கலந் திருக்குந் தன்மை" ஒன்றினுக்கே ( ஒரு புடை யொப் பாகக்) காட்டப்பட்டது எனக் கொள்க. இனி, வருஞ் செய்யுளால் அத்துவித ழுத்திக்கு இருவேறு குணிகளின் சல்பந்தம் திருட்டாந்தமாக உரைக்கப்படுவதுங் காண்க.
பொழிப்பு: பழமும் சுவையும், மலரும் மணமும், அக்கினியும் சூடும், வீணையும் நாதமும் போல்ப் பரமுத்தி யடைந்த ஆன்மாக்கள் சிவனிடத்து அத்துவிதமாகக் கலந் திருப்பர் என்று சிவாகமங்கள் உரைக்கும் ,
இதுவுமது
46. தத்துவங்க ளெல்லாஞ் சகசமா யான்மாவிற்
பெத்தத்தில் நிற்கின்ற பெற்றிபோல்-முத்திதனிற் சித்தமல மற்றச் செறிந்திடுவர் என்றுமறை சத்தியமா வோதியிடுக் தான். உ.வி-7

Page 36
56 உண்மை விளக்கம்
கொ-கூ: (ஆன்மா) பெத்தத்தில் (இருக்கும்போது) தத்துவங்கள் எல்லாம் (அவ்) ஆன்மாவில் சகசம் ஆய் நிற்கின்ற பெற்றிபோல், சித்தமலம் அற்ருர் முத்திதனில் (அத்துவிதமாய்ச்) செறிந்திடுவர்; என்று மறை சத்திய மா(க) ஒதியிடும் (தான்).
ப-ரை: பெத்தத்தில் - ஆன்மா மலங்களினல் பந் திக்கப் பட்டிருக்கும் காலத்தில், தத்துவங்கள் எல்லாம்முப்பத்தாறு தத்துவங்களும், ஆன்மாவில் சகசம் ஆய் நிற்கின்ற பெற்றிபோல் - அந்த ஆன்ம்ாவிடத்திலே தாம் வேறு ஆன்மா வேறு என்ற முறைமையின்றி இரண்டறக் கலந்து (தாமே ஆன்மா எனும் படி) நிற்கின்ற தன்மை போல, சித்தமலம் அற்ருர்-(ச கச மலம் எனப்படும்) ஆண வச் சார்பு அகன்ற்வர்கள், முத்திதனில் செறிந்திடுவர் - பரமுத்தி (நிலை)யில் தாம் வேறு சிவம் வேறு எனதபடி இரண்டறக் கலந்து நிற்பர்; என்று மறை சத்தியமா (க) ஓதியிடும் - என (இவ்வாறு) வேதாந்த சிவாகமங்கள் உண்மையாக உரைக்கும் .
தான் - அசை, வேதத்தின் ஞானகாண்டமாயிருக்கும் வேதாந்தத்தையும், அதனை வகுத்துரைக்கும் சிவாக மங் களேயும் போருட்டொடர்பு பற்றி ஈண்டுமறை என்ருர்,
தத் துவங்கள் கருவி கரணங்களாகிய குணிகள். இவை வேறு; ஆன்மாவாகிய குணியும் வேறு. இந்த இருவேறு குணிகளும் பெத்த நிலையில் இரண்டறக் கலந்து நிற்கும் தன்மை அத்துவித முத்திக் குத் திருட்டாந்தமாக ஈண்டு உணர்த்தப்பட்டது. இது சகலநிலை உவமை எனவும் படும். இஃதன்றி, அப்பெத்த நிலையில் ஆன்மா ஆண வ சம்பந்தமுற்று நிற்பதைத் திருட்டாந்த மாக்கி, 'ஒன்றி நின்று உணரும் உண்மைக்கு உவமை ஆணவத் தொ டொன்றே" எனச் சிவப்பிரகாசம் உரைப் பதுங்காண்க இது கேவல நிலையுவமை யெனப்படும்.
பொழிப்பு: பெத்த நிலையில் (கருவி கரணங்களாகிய)
தத்துவங்கள் ஆன்மாவோடு அத்துவிதமாய்க் கலந்து தாமே உனவெனும்படி நிற்றல்போல, ஆணவத் தொடர்

('அவனே தானே"யாகிய) முத்தி
பற்றவர்கள் பரமுத்தி நிலையில் அத்துவிதமாய்க் கலந்து சிவமேயுளதெனும் படி நிற்பர் என்று வேதாந்த சிவாக மங்கள் உரைக்கும் .
இதுவுமது
47. ஆதவன்றன் சந்நிதியி லம்புலியி னுர்சோதி
பேதமற நிற்கின்ற பெற்றிபோல்-5ாதாந்தத்
தண்ண றிருவடியி லான்மா வனந்தின்பக் கண்ணி லழுந்தியிடுங் காண்.
கொ-கூ அம்புலியின் ஆர் சோதி ஆதவன் தன் சந்நிதியில் பேதம் அற நிற்கின்ற பெற்றிபோல், ஆன்மா (வா ன து) நாத அந்தத்து அண்ணல் திரு அடியில் அணைந்து, இன்பக் கண்ணில் அழுந்தியிடும்; நீ) காண்.
ப-ரை: அம்புலியின் ஆர் சோதி - சந்திரனிடத் தில் நிறைந்து பிரகாசிக்கும் ஒளியானது, ஆதவன் தன் சந்நிதியில் பேதம் அற நிற்கின்ற பெற்றிபோல் - சூரிய னது ஒளியின் முன்னிலையில் வேறுபாடின்றி இரண்டறக் கலந்தொன்றி நிற்குந் தன்மைபோல, ஆன்மா - ஆன்மா வானது. நாத அந்தத்து - நாத தத்துவ முடிவில் அறியக் கூடியதாய் இருக்கிற, அண்ணல் திரு அடியில் அணைந்து - முதல்வனகிய சிவனது திருவடி (யாகிய திருவருள் முன் னிலை)யிலே பொருந்தி, இன்பக் கண்ணில் அழுந்தியிடும்பேரின் ப(மாகிய சிறப்பு மிக்க அநுபவ)த்தில் இரண்ட றக் கலந்திருக்கும் (என்பதை), காண் - நீ அறிவாயாக.
இன் பக்க ண் - பேரின்பம். கண் - பெருமை, சீறப்பு. ஆதவன் அண்ணலுக்கும், ஆதவனின் (ஒளிச்) சந்நிதி அண்ணலின் (திருவருள்ஞானமாகிய) திருவடிக்கும், அம் புலி ஆன்மாவுக்கும், (அர வால் விழுங்கப்பட்ட அம்புலி ஆணவ மறைப்புண்ட ஆன்மாவுக்கும், அரா உமிழ விளங் கும்) அம்புலியின் ஆர் சோதி ஆணவத் தொடர்பற விளங்கும் ஆன்மாவின் சிவபோதத்துக்கும் உவமையா யின. அம்புலியின் ஆர்சோதி ஆதவன் சந்நிதியில் பேத

Page 37
69 a.awiranouo adlawdas Ab
மற அடங்கிக்கிடத்தல், ஆன்மா அண்ணல் திருவடியில் அணைந்து ஆன்மபோத மடங்கிச்) சிவபோதமுற்றிருத்த லுக்கு உவமையாயிற்று. இனி, அச் சிவபோதத்தால் **ஆன்மா இன்பக் கண்ணில் அழுந்தியிடும்' என்றது மேல் வருஞ் செய்யுளில் 'ஆதித்தன் அந்தன் விழிக்குற்ற மற நின்றதுபோற் கொள்" எனவந்த திருட்டாந்தத் தானுணரப்படும்.
பொழிப்பு: சந்திரப் பிரகாசம் சூரியப் பிரகாசத் தோடு அத்துவிதமாகி(ச் சூரியப் பிரகாசமே உளதெனும் படி) நிற்றல் போல, ஆன்மா இறைவன் திருவடியில் அணைந்து, புர் முத்தி இன் பத்தில் அழுந்தி(ச் சிவமே உளதெனும் படி) இரண்டற நிற்கும் என நீ அறிவாயாக.
அத்துவிதக் கலப்பும் அது அநாதியா மாறும்.
48. சென்றிவன்ரு ைென்றிற் சிவபூ ரணஞ்சிதையு
மன்றவன்ரு ஞென்றுமெனி லங்கியமாம் -இன்றிரண்டும் அற்றநிலை யேதென்னி லாதித்த னந்தன்விழிக் குற்றமற நின்றதுபோற் கொள்,
கொ-கூ: அன்று இவன் (தான்) சென்று ஒன்றில் சிவபூரணம் சிதையும் இன்று அவன் (தான் வந்து) ஒன் றும் எனில் அந்நியம் ஆம் (ஆயின், இவை) இரண்டும் அற்றநிலை ஏது? என்னில், (அது) அந்த ன் விழிக்குற்றம் அற ஆதித்தன் நின்றதுபோல் (ஆகும் எனக்) கெள்.
ப-ரை: அன்று - (இறைவன், பெத்தம் முத்தி ஆகிய இரு வேறு நிலையிலும் ஆன்மாவுடன் அத்துவிதமாகக் கலந்து உபகரிப்பானுக, அவ்விரு நிலைகளுள்) பெத்த நிலைப்பட்டிருக்குங் காலத்திலே, இவன்சென்று ஒன்றில்ஆன்மா தனது அறிவால் சிவனிடம் சென்று அடைந்து அவனேடு இரண்டறக் கலக்கும் எனக் கொண்டால், சிவ பூராணம் சிதையும் - (அதனுல் அப்பெத்த நிலையில் ஆன்மா இறைவனுக்கு வெளியே இருந்தது எனக் கொள் ளக் கிடத்தலின் ) சிவனது வியாபகத்தன்மை கெட்டுப்

("அவனே தானே'யாகிய) முத்தி 68
போகும் இன்று அவன் ஒன்றும் எனில் அந்நியம் ஆம் - முத்தி நிலையிலே இறைவன் ஆன்மாவிடம் வந்தடைந்து கலந்து நிற்பான் எனக் கொள்ளின், அதற்கு முந்திய பெத்தநிலையில்ே அவன் ஆன்மாவுக்கு எவ்வித உபகார முஞ்செய்யாமல் வேருயிருந்த வனவன்; இரண்டும் அற்ற நிலை ஏது? என்னில் - (ஆன்மா சென்று கலத்தல் இறை வன் வந்து ஒன்றல் ஆகிய) இரண்டு முறைமையும் இல் லாமல் ஆன்மாவும் இறைவனும் இருவேறு நிலைகளிலும் கலந்துநின்ற முறை மைதான் யாது? என்ருல், அந்தன் விழிக் குற்றம் அற ஆதித்தன் நின்றது போல் கொள் - (அது) குருடனது கண்ணிடத்துப் பொருந்திய தெரி யாமையாகிய (படலக்) குற்றம் நீங்க அவனது கண்ணின் ஒளியும் சூரியனின் ஒளியும் இரண்டறக் கலந்து (உளதா கும் பயனை ஆன்மா அநுபவித்து) நின்ற தன்மைபோலும் எனக் கொள்வாயாக. w
"தான் இரண்டும் அசைகள்.
இங்குக் காட்டிய திருட்டாந்தத்தில் அந்தன் விழிக் குற்றமற நின்றமை ஆன்மாவின் நிலைக்கும், ஆதித்தன் விழிக்கு உபகாரியாய் நின்றமை இறைவனின் நிலைக்கும் உவமையாயின. இனி, ‘அந்தன் விழி(யில்) ஆதித்தன் நின்றதுபோல்’’ எனவும் '(அவ்) விழிக் குற்றம் அற ஆதித் தன் நின்றதுபோல்" என வும் அத் திரு ட் டா ந் தம் இரண்டுபட வகுக்கக் கூடியதாய் முறையே ஆன்மாவின் பெத்த நிலைக்கும் முத்தி நிலைக்கும் சென்று பொருந்து வதுங் காண்க. குருடனது விழி படல மறைப்புக் காரண மாகச் சூரியனது ஒளியை உணராத காலத்தும், அச் சூரி யனது ஒளி அக்கண்ணுடனே கூடிக் கிடந்தது. கண்பட லம் நீங்கி அறியுஞ் சத்தி பெறுங் காலத்து, அதனேடு என்றுங் கூடிக்கிடந்த சூரியனது ஒளி புலணுகும். இது போல, பெத்தம்முத்தியாகிய இருவேறு நிலையிலும் எக்கா லத்தும் எவ்விடத்தும் ஒரு தன்மையனேயாய் இறைவன் நீக்க மறக் கலந்து நிற்பன் எனவும், அதனல் ஆன்மா சென்றடைதலும் அவன் வந்து ஒன்றுதலுமாகிய புடை

Page 38
54 Dravour eardis
பெயர்ச்சிகள் வேண்டியதில்லையெனவும், என்றும் உட னிருந்து உயிர்க் குயிராய்க் கலந்து வாழ்வித்துவரும் அவ னைத், தன்னிடம் பொருந்திய குற்றமாகிய ஆணவ மறைப்பு அகலுங்கால் ஆன்மா அறியவும் அநுபவிக்கவுங் கூடிய தன்மையைப் பெறும் எனவுங் கொண்டு, அத்து வித சம்பந்தம் இடையில் வருவதன்று; அநாதியானதே யெனத் தெளிக.
இறைவன் ஒருவனே, ஒரே சமயத்திலேயே, ஒன்ருய் உடனுய் வேரு ய் நிற்றலாகிய மூன்று உபகாரங்களினு லும் ஆன்மாவுக்கு அத்துவித முத்தியின்பம் அளித்து நிற் பன். 'காணுங் கண்ணுக்குக் காட்டும் உளம் போற் - காண உள்ளத்தைக் கண்டு காட்டலின்’ (சூத்.11) எனச் சிவஞான போதமும், ** காட்டக் கண்டி டுந் தன்மையு டைய கண்ணுக் - கேயுமுயிர் காட்டிக் கண்டிடுமாபோல ஈசனுயிர்க்குக் காட்டிக் கண்டிடுவன்.' (குத், 11. க) என்ச் சிவஞான சித்தியாரும், ‘அறிவொளிபோற் பிறிவரும் அத்துவிதமாகும்’ (பாயிரம் 7) எனச் சிவப்பிரகாச மும் அம்மூவகை யுபகார முந் தோன்றச் சிறப்புமிக்க திருட் டாந்தங்காட்டிச் செ ல் வது உணரத்தக்கது. இவை யொப்ப, இச்செய்யுளிடத்தும் *1 ஆதித்தன் அந்தன் விழிக் குற்றமற நின்றதுபோல்’’ என வந்த திருட்டாந் தமும் மூவகை உபகாரமும் பொருந்திய அத்துவித முத்திநிலையை விளக்கி நிற்பது உய்த்துணர ற்பாலது. விரிப்பிற் பெருகும்.
பொழிப்பு: (பெத்தம் முத்தி ஆகிய இருவேறு நிலை களிலும் இறைவனையின்றி இயங்காத) ஆன்மா, பெத்தத் தில் இறைவனிடம் தானே சென்று அணைந்து நின்றது எனின் இறைவனது வியாபகத் தன்மைக்குக் குற்றமுண் டாகும் எனவும், முத்தியில் இறைவன் ஆன்மாவிடம் வந்து சேருவன் எனில், அதற்கு முன் அவன் ஆன்மாவுக்கு உபகாரஞ்செய்யாமல் வேரு ய் இருந்த வனவன் எனவும் கொள்ளக் கிடத்தலின், இந்த இரண்டு முரண்பட்ட முறைகளுமின்றிக், குருடனது கண்ணின் இருவேறு நிலை

("அவனே தானே"யாகிய) முத்தி 55
களிலும் சூரியனது ஒளி பொருந்தி நின்ற முறைமை போல, ஆன்மாவின் இருவேறு நிலைகளிலும் இறைவன் உபகாரஞ் செய்து நிற்பன்: எனக் கொள்வாயாக.
மாணுக்கனது வேண்டுகோள்.
49. வாக்கு மனமிறந்த வான்கருணை யாளனுருத்
தாக்கறவே கிற்குக் தனிமுதல்வா -நீக்காப் பதியினைப்போல் கித்தம் பசுபாச மென்ருய் கதியிடத்து மூன்றினையுங் காட்டு. கொ-கூ: வாக்கு மனம் இறந்த வான் கருணையா ளன் உரு (கொண்டு) தாக்கு அற (+ஏ) நிற்கும் தனி முதல்வா, நீங்காப் பதியினைப் போல், பசு பாசம் (என்ப வைகளும்) நித்தம் என்ரு ய்; (அங்ங்னமாயின்) கதி இடத் தும் (அம்) மூன்றினையும் காட்டு.
ப-ரை: வாக்கு மனம் இறந்த உபாச ஞானம் பசு ஞானங்களால் அறிதற் கரியணுய் அப்பாற்பட்டு நின்ற வான் கருணையாளன் உரு (கொண்டு) - எல்லையில்லாத ( பரிசுத்தமான ) பேரருளையுடைய இறைவனேயாய்த் திருமேனிகொண்டு, தாக்கு அற நிற்கும் தனி முதல்வா - பாசங்களினுலே பற்றப்படுதலின்றி எழுந்தருளியிருக்கும் ஞானுசாரிய சிரேட்டரே. நீங்காப் பதியினைப்போல் - யாவற்றிலும் எக்காலத்திலும் விட்டு நீங்காமல் (வியா பகமாய்) இருக்கும் இறைவனைப்போல, பசு பாசம் நித் தம் - என்ரு ய் - ஆன்மாவும் மலமும் அழியா இயல்பின என்று அருளிச் செய்தீர், கதி இடத்தும் மூன்றினையும் காட்டு - (அங்ங்னமாயின்) முத்தி நிலையிலும் (பதி பசு பாசம் ஆகிய) அம்மூன்று பொருள்களும் அழியாமல் நிற் கின்ற முறைமையை அடியேனுக்கு விளக்கியருளுவீராக.
"நீங்கா’ எனுஞ்சொல் எதுகைத்தொடை நோக்கி "நீக்கா’ எனும் வலித்தல் விகாரமாய் நின்றது. ‘ஏ’-அசை. பதி பசு பாசம் மூன்றும் எக்காலத்தும் (அழியாமல்) உள்ள பொருள்கள் என்பது சைவசித்தாந்தத் துணிவு, அங்ங்னமாயின் முத்திநிலையிலும் அவை மூன்றும் உளவா

Page 39
56 a–sårædld alearkastå
தல் வேண்டும். ஆனல்,"அந்தன் விழிக் குற்றம் அற ஆதித் தன் நின்றதுபோற் கொள்” என ஆசிரியர் கூறினராக, அத்திருட்டாந்தத்தில் விழிக் குற்றம் அறுதல்போல ஆன் மாவின் ஆணவக் குற்றமும் முத்திநிலையில் அறும் என்றே அறியக்கிடத்தலின், அவ் ஆணவமாகிய பாசம்அற,ஏனைய பசுவும் பதியுமாகிய இரண்டு பொருள்களே உளவாமல் லது, முப்பொருளும் உளவாதல் எங்ங்னம்? என மாணவ கனுக்கு ஐயம் எழுந்தது. எழவே, "கதியிடத்து மூன்றி னையுங் காட்டு’ என்று விண்ணப்பித்தானென்க. இதற்கு விடை மேல்வருஞ்செய்யுளிற் காண்க,
பொழிப்பு: ஏகதேச ஞானங்களுக்கு அப்பாற்பட்டு நின்ற அருளுருவின் இறைவனேயாய்த் தி ரு மே னி கொண்டு பாசத்தாற் பற்றப்படாது நின்ற ஞானுசாரிய சிரேட்டரே, யாவற்றிலும் எக்காலத்திலும் நிறைந்தி ருக்கும் பதியைப் போலப் பசுபாசமிரண்டும் அழியா வியல் பினவென்றீர்; அங்ங்ணமாயின், பதி பசு பாசம் மூன்றும் முத் தி நிலையிலும் அழியாதிருக்கும் முறை மையை விளக்கியருளுவீராக.
50. முத்திதனில் மூன்று முதலு மொழியக்கேள்
சுத்தவநு போகத்தைத் துய்த்தலணு - மெத்தவே யின் பங் கொடுத்தலிறை யித்தைவிளை வித்தன்மல மன்புடனே கண்டுகொளப் பா.
கொ-கூ: அப்பா, முத்திதனில் மூன்று முத்லும் (யாம்) மொழிய (நீ)கேள், சுத்த அநுபோகத்தைத் துய்த் தல் அணு மெத்த ( + ஏ ) இன்பம் கொடுத்தல் இறை: இத்தை விளைவித்தல் மலம்; (இவ்வுண்மைகள் இங்ங்ன மாதலை) அன்புடன் (+ஏ (நீ) கண்டுகொள்
ப-ரை : அப்பா மாணுக்கனே, முத்திதனில் - ஆன் மாவுக்கு முத்திநிலை வந்தெய்துங் காலத்திலே, மூன்று முதலும் மொழிய கேள் - பதி பசு பாசம் ஆகிய மூன்று பொருள்களும் (அழிவின்றி நித்தமாய் நிற்கும் தன்மை யைச் சொல்லுகிருேம் கேட்பாயாக, சுத்த அநுபோகத்

("அவனே தானே"யாகிய) முத்தி 57
தைத் துய்த்தல் அணு - தூய பரமுத்தி இன்பத்தை அநுப வித்திருப்பது ஆன்மாவாம்; மெத்த இன்பம் கொடுத்தல் இறை-இடையீடின்றி(அநுபவிக்குந் தோறும் புதியதாய், தெவிட்டாததாய்) அப்பேரின் பத்தைக் கொடுத்து நிற் பது சிவமாம்; இத்தை விளைவித்தல் மலம் - இப்பேரின் பத்தை ஆன்மா நுகரும்படி அடைவித்து நிற்பது மல மாம்; அன்புடனே கண்டுகொள்க(இவ்வுண்மைகள் இங்ங் னமாதலை)அயரா அன்பினலே அறிந்துஅநுபவிப்பாயாக.
*பதியினைப்போல் பசு பாசம் நித்தம் என்ரு ய்; கதி யிடத்து மூன்றினையும் காட்டு’ என மாணவகன் வேண் டினனுக, இப்பாடலினல் அம்மூன்று முதலும் முத்திக் காலத்தும் உளவாதலை ஆசிரியர் கூறியருளுகின்ருர்,
முத்திக் காலத்தில் உளவாகிய மூன்று முதல்களுள் பதி பசு ஆகிய இரண்டினதும் அழிவற்ற தன்மைகளைக் கூறுமுகத்தால், பேரின் பத்தைக் கொடுத்து நிற்பது பதி எனவும் அப் பேரின் பத்தை அநுபவித்து நிற்பது பசு எனவும் காட்டிய ஆசிரியர், பாசமும் உளதாம் என்பதை விளக்கும்போது 'இத்தை விளைவித்தல் மலம்' என் கின்றர். -‹ሩ ”
இன்பத்தைக் கொடுத்து நிற்பவனகிய ப தி யும், அதனை அநுபவித்து நிற்பதாகிய பசுவும் அழிவின்றி உள வாம் என்பது வெளிப்படை. ஆணுல், முத்தியடைதற்கு "ஆணவம் இல்லையாதல் வேண்டும் எனவும் , * மும்மல மும் தீர்வாக வேண்டும் எனவும் கூறப்படும் இடங்கள் இந் நூலுட் பலவுள. 'இருளானது தீர அருளானது சிவத்தே அணுவை ஆக்கும்** எனவும், "சித்த மலம் அற் ருர் முத்திதனில் செறிந்திடுவர்" எனவும், அந்தன் விழிக் குற்றமற ஆதித்தன் நின்றது போல் (ஆன்மாவிடம் பொருந்திய ஆணவக் குற்றமறப்) பதி பொருந்தி நிற் கும் ' எனவும் முன்வந்த செய்யுள்களால் முத்தியில் ஆணவமில்லையாதல் கூறப்பட்டது. அன்றி, ‘ மகரம்
உ, வி-8

Page 40
* *、 உதரம்" என்றும்,'அடிக்கீழ் முயலகனர் தங்கும் மகரம்' என்றும், ஊற்றமா ஊன்று மலர்ப்பதத்தே உற்ற திரோதம்' என்றும், 'மலம் சாய் அமுக்கி' என்றும் 'மும்மலத்தை மோசித்து' என்றும் வரும்பகுதிகள் மும் மலநாசத்தையுமே குறிப்பிட்டன. இங்ங்னம் ஆணவம் மாத்திரமன்று, மும்மலமுமே முத்தியடைந்த காலத்து இல்லையாம் எனக்கூறிய ஆசிரியர், மலமும் உளவாய்ப் பேரின்பத்தையும் விளேவித்து நிற்கும் என்னும் கருத்தில் இத்தை விளைவித்தல் மலம்' என உரைத்தமை பொருந் மிதுமா? முன்னுக்குப்பின் முரணுதா? என்ற ஐயப்பாடுகளே 'வருவிக்கும். அவை சிந்தித்து உணர்த்தக்கவை'
பதிபசு பாசம் மூன்றும் நித்தம் என்பது சைவ சித் 'தாந்தம். அதுபற்றி, 'முத்திதனில் மூன்று முதலும் மொழியக்கேள்' என்றவர், பாசமும் உளது என்றே கொண்டார். எனவே 'இத்தை விளைவித்தல் pany dibo" 'என்றதில்'மலம்' பாசத்தையே குறித்து நின்றது; அப் போசம் ஆணவம் மாத்திரம் அன்று; அது, ஆணவம்'கன் மம்மாரை என்னும் மூன்றுமேயாம்'ஆதலின் முத்தி நிலையிலும் மும்மலமும் உளவாதல் வேண்டும். இவற்றுள் ஆணவம் உளவாதலே முதலில் ஆராய்வாம்.
“ சூரியன் உதிக்குமுன் இருந்த இருள் அது உதித்த 'வுடன் விட்டுநீங்கி வேறெங்கும் செல்வதில்லை.மேலும், சூரியன் இல்லாதபோது காணப்படும் அவ்விருள் வேறெங்கிருந்தும் அங்கு வந்துசேர்வதில்லை. எனவே அவ்விருள் அவ்விடத்திலேயே ஒளியினுள் சத்திகெட்டு அடங்கியும், ஒளியில்லாத காலத்தில் தோன்றியும் அழி வற்று நின்றது. அவ்விருளேபோல, ஆணவமும் பெத்த நிலையில் மேலிட்டுத் தோன்றியும் முத்திநிலையில் (இருந் தும் இல்லையெனும்படி) தன்சத்தி கெட்டு அட்ங்கியும் அழிவின்றி உளதாம் என்க.
'ஒன்று மேவிடில் ஒன்று ஒளிக்கும்'(கொடிக்கவி) எனவும்,' ,
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

苗9
。 'சேணுர் இருள்வடிவு செங்கதிரோன் பால்கிற்கக்
காணு தொழியுங்கணக்கேபோல்-ஆணவத்தின் ஆதிகுறையாமல் என்பால் அணுகாமல் நீதி கிறுத்தும் நிலபோற்றி. '(போற்றிப்பஃருெடை)
எனவும் வருவன இங்குக் காட்டி'ய'உண்மைக்குச் சான்ரும்.
மேலும், முத்திதனில்' என்றதற்கு "முத்தியடைந்த காலத்தில்' என்றே பொருள் கொள்ளப்படுதலின், முத் தான்மாவில் வலி கெட்டுநின்ற ஆணவத்தை ஆண்டில்லே யென்றே கொள்ளினும், அதேகாலத்தில் தனது பல்வேறு சத்திகளால் பெத்தான்மாக்களிடத்தில் தன்னியல் பு குறையாமல் அழிவின்றி உளதாய் நிற்கும் ஆதவின், அவ் வானவம் நித்தியமென்பது துணியப்படும்.
A.
。 இனி, இங்ங்னம் நின்ற ஆணவமே போல கன்மம் மாயை என்பனவும் ஆன்மா முத்தியடைந்த அக்காலத்தில் ஏனைப்பெத்தரிடத்துக் காணப்படுதலால், பாசம் மூன்றும் நித்தம் என்க.
பாசங்கள் மூன்றும் ஆன்மாவை அகன்று நித்தமாய்' நின்றன என்று கண்டோம். அங்ங்னம் அகன்று நின்ற அவை (இத்தை விளைவித்தல்-) ப்ேரின் பத்தை ஆன்மாவி பத்தில் உளதாக்கி அநுபவிப்பித்தல் எங்கனம் என்பது இங்கு ஆராயத்தக்கது. பிறர் நமக்குத் துன்பஞ் செய் 'யாமையால் நாம் சற்றே சுகித்திருக்க முடிகிறது. அவரது
துன்பஞ் செய்யாமையாகிய உதவி நமது சுகவாழ்வுக்குக்காரணம் နိါုံးမ္ဘဓါ ஒருதலை, ஆகவே அவர் நம்மை வாழ்விப்பவர் ஆவர். இவரே போலப் பாசங்களும் ஆன்மாவை அகன்று நிற்ற லாலும், அங்ங்ணம் நிற்றலினுல் மயக்கஞ் செய்யாமை யாகிய உதவி புரிதலினுலும், ஆன்மாவினிடத்துப் பேரின் இபத்தை விளைவிக்கின்றனவென்க. இந்நுணுக்கத்தை உள்ளிடு 'பொருள்ாயடக்கி 'மலம் தானே செய்யவில்லை; செய்

Page 41
60 உண்மை விளக்கம்
விக்கின்றது என்னும் பொருள்பட' ( விளைத்தல் மிலம் என்னமல்) 'விளைவித்தல் மலம்' எனப் பிறவினை வாய் பாட்டான் உரைத்த நயம் போற்றுதற்குரியது.
இங்குக் காட்டியவற்ருல் மும்மலங்களும் முத்தான் மா வைவிட்டு நீங்குமென்பதும், அங்ங்ணம் நீங்குமாயி னும் அவை அழிவின்றி உளவாம் என்பதும் விளக்கப்பட் டன. எனவே, முத்திதனில் மூன்று முதலும்” என்றதற்கு 'ஆன்மா முத்தியடைத்த காலத்தில் பதி பசு பாசங்கள் அழிவின்றி உள என்றும், அவற்றுள் பாசம் ஆகிய மும் மல மும் ஆன்மாவை விட்டு நீங்கிய நிலையிலே உள என்றும் பொருள் கொண்டு, “இத்தை விளைவித்தல் மலம்' என் றதை 'அம் மும்ம்லமும் நீங்கி நிற்றலினல் ஆன்மாவுக் குப் பேரின் பத்தை விளைவித்து நிற்கும்" எனக் கருதி
G60) ) {
பொழிப்பு: ஆன்மா முத்திப்படையுங் காலத்திலே பதிமுதலிய மூன்று பொருள்களும் அழிவின்றி நிற்குந் தன்மையைச் சொல்லுங்கால், ஆன்மா பேரின் பத்தை அநுபவித்தலினலும், வதி ஆன்மாவுக்கு அவ்வின் பத் தைக் கொடுத்து வருதலினலும், மலம் ஆன்மாவினி டத்து அவ்வின் பத்தை விளைவித்து வருதலினலும் அவை மூன்றும் நித்த மாம். (என்பது தெளியப்படும்.) இவ் வுண்மையை நீ கண்டுணர்வாயாக.
மூத்திக்கு வழி குருவிங்க சங்கம வழிபாடு
51. அப்பாவிம் முத்திக் கழியாத காரணத்தான் செப்பா யருளாலே செப்பக்கே-ளொப்பில் குருலிங்க வேடமெனக் கூறிலிவை கொண்டார் திருவொன்றி கில்லார்கள் காண்.
கொ-கூ: ** அப்பா இம் முத்திக்கு அழியாத கார ண (தான்) அருளால் (--ஏ) செப்பாய்." (என மான வகன் வேண்டினனுக, ஞானசாரியர் :) "செப்பக்கேள்,

{"அவனே தானே"யாகிய) முத்தி 6.
(அக்காரணந்தான்) ஒப்பு இல் குரு லிங்கம் வேடம் என (ஆகமங்கள்) கூறில் இவை கொண்டார், கரு ஒன்றி நில்லார்கள்; (என்ற உண்மையை நீ) காண் (என்ரு Aர்.)
ப-ரை: அப்பா - ஞானசாரிய முதல்வரே, இடம் முத் திக்கு அழியாத காரணம் அருளால் செப்பாய் - இப்பர முத்தியை அடைந்து வாழ்தற்கு நிலையான வா யி லை (-வழியினை)க் கருணை கொண்டு சொல்லி யருளுவீராக; ( என்று மாணவகன் வேண்டினனுக, ஞானசாரியர்; ) செப்பக் கேள் - அதனைச் சொல்லுகிருேம் கேட்பா யாக, ஒப்பு இல் லிங்கம் வேடம் என கூறில் - (அவ்வாயில்) நிக ரில்லாத ஞானசாரியர் சிவலிங்கம் மெய்யடியார் என் னும் மூவிடத்தும் வழிபாடியற்றலேயாம் எனச் சிவாக மங்கள் கூறுமாயின், இவை கொண்டார் - இந்த மூவிடத் தும் வழிபாடியற்றலை விரதமாகக் கொண்டவர்கள், கரு ஒன்றி நில்லார்கள் - கருப்பத்திலே பொருந்திப் பிறந்து இறந்து உழலமாட்டார்கள் என்ற உண்மையை நீ உணர் வாயாக (என்ருர்).
*தான்' ‘ஏ’ என்பன அசைகள். வேடம், சங்கமம், மெய்யடியார் என்பன ஒரு பொருள் குறித்த சொற்கள்.
மெய்ஞ்ஞானத்தாற் சீவன் முத்திநிலையடைந்தவர் களுக்கும் மாயா காரியமான உடம்பு இருக்கும் வரைக் கும் பிராரத்த வினை அவ்வுடம்பை ஒட்டிநிற்கும். அதனை அநுபவிக்குங்கால் விருப்பு வெறுப்பு உளவாம். அவை உளவாகவே அவற்றல் மாயாத த் துவக் காட்சியும் ஏக தேச உணர்வாகிய பாசஞான பசுஞானங்களும் மறித் தும் உளவாகிப் பிறவித்துன்பத்துக்கு ஏதுவாம். ஆகவே, இங்ங்ணம் கீழ்நிலைப் படுத்தும் அம்மலங்களைப் பற்றற நீக்குதற்கு வழிகூறுவார் ‘ஒப்பு இல் குரு லிங்கம் வேடம் எனக் கூறில் இவை க்ொண்டார் கரு ஒன்றி நில்லார்கள்’ என்ற ரென்க. '
பொழிப்பு: மாணவகன் பரமுத்தி நிலைத்தற்குரிய வாயில் யாதென வேண்ட, ஞானசாரியர்; சிவாகமங்கள்

Page 42
69 உண்மை விளக்கம்
உரைக்கும் குரு லிங்க சங்கம வழிபாடியற்றலே வாயில் எனவும், அதுகொண்டார் பிறவியின்றிப் பரமுத்தியில் நிலைத்திருப்பரெனவும் கூநினர்.
குருலிங்க சங்கம வழிபாட்டு முறை.
52. கற்ரு மனம்போற் கசிந்துகசிக் தேயுளுகி
யுற்ஞசான் லிங்க முயர்வேடம் - பற்ருக முத்தித் தல்வர் முழுமலத்தை மோசிக்கும் பத்திதனி னின்றிடுவர் பார்.
கொ-கூ: முத்தித் தலைவர், ஆசான் லிங்கம் உயர் வேடம் பற்று ஆக, கன்று ஆ மனம் போல கசிந்து கசிந்து (+ ஏ) உருகி உற்று, முழு மலத்தை மோசிக்கும் பத்தி தனில் நின்றிடுவர்; (ஆதலால் நீயும் இவ் வழிபாட்டு முறையைப்) பார்.
ப-ரை: முத்தித் தலைவர் - சீவன் முத்தரானேர், ஆசான் லிங்கம் உயர் வேடம் பற்று ஆக = ஞானுசாரிய னையும் சிவலிங்கப் பெருமானையும் பக்குவத்தாலுயர்ந்த மெய்யடியார்களையும் பற்றுக் கோடாகக் கொண்டு, கன்று ஆ மனம் போல கசிந்து கசிந்து உருகி உற்று - தன் கன்றை நினைந்து அன்பு சுரக்கும் பசுவினது உள்ளத் தைப்போல (அம் மூவிடத்தும்) அயரா அன்பு மீக் கூர மனம் தெக்கு நெக் குரு கிப் பொருந்தி, முழு மலத்தை மோ சிக்கும் பத்திதனில் நின்றிடுவர்; பார் - (சீவன் முத்திநிலையில் நிற்குமளவும் வந்து பொருந்தும்) மல வா சனை முழுவதும் நீங்குதற்குரிய பத்தி நெறியிலே ஒழுகு வர்; ஆதலால், நீயும் அவ்வழிபாட்டு முறையை மேற் கொள்வாயாக. ( - நோக்கி இயற்றுவாயாக).
‘ஏ’ அசை. ஞானமார்க்கத்தாரது மலவாசனை முற்ரு யொழிதற்கும் அது காரணமாக முத்திப்பேறு முதிர்ந்து விளைதற்கும் குருலிங்க சங்கம வழிபாடு இன்றியமையாத தாயிற்று. ஆகவே,அவ்வழிபாட்டுமுறை சிறப்புறவேண்டு மென்பார் ‘கற்ருமணம் போலக் கசிந்து கசிந்துருகி நிற் கும் பத்தி வேண்டும் என்ருர்.

("அவனே தானே"யாகிய) முத்தி 63
சொரூப சிவம், தடத்த சிவம், பரஞானத்தையுடை யோர், நாயன்மார்கள் முதலியோர் சிவபேதமாய் நின்ற குருமூர்த்தமேயாம் எனத் தெளிந்து, குருவை வழிபடு தல் வேண்டும். அதனல், சிவன் அக் குருவை அதிட்டித்து நின்று, தீட்சைக் கிரமங்களிஞலே மலம் நீக்கித் தன் வண்ணமாக்குவன். ஆதலின், குருவழிபாடு இன்றியமை யாததாயிற்று.
ஆலயத்துள் இருக்கும் (சிவ)லிங்கம் சிவமே எனக் கண்டு வழிபாடியற்றும் சரியாவான்களுக்கு இறைவன் வெளிப்படாது நின்றருளுவன்; கிரியாவான்களுக்கும் யோகியர்க்கும் கடைந்த வழித் தோன்றும் எ ரி யு ம் கறந்த வழித் தோன்றும் பாலும் போல அவர் விரும் பிய வடிவாய் அப்போதப்போது தோன்றியருள் செய். வன். ஆனல், ஞானமார்க்கத்தாருக்கு கன்றையெண் னிய பசுவின் முலை பால் சொரிவதுபோலக் கருணை மிகக் கொண்டு எப்போதும் வெளிப்பட்டு நின்று அருள் புரி வன் ஆதலின், லிங்கவழிபாடு இன்றியமையாததாயிற்று.
மெய்யடியார்கள் அகமும் புறமுந் தூயவராய் இறை வனது வேடமாகிய திருநீறு கண்டிகை முதலிய வடிவத் தைப் பொருந்தியவராவர். காமக் கிழத்தியரது ஒழுக் கமும் அவர் அணியும் ஆடை சந்தனம் முதலியனவும் காமுகரை ஈர்த்து இன் பஞ்செய்தல் போல, அம்மெய்ய டியாரது ஒழுக்கமும் அணிகளும் ஞானியரை வசீகரித்து அவர் நெறியில் வழுவாது நிறுத்தி இன் பஞ்செய்யு மாத லானும், குறியிறந்து நின்ற இறைவன் அவர்களிடத்துத் தயிரின் கண் நெய்போல விளங்கிம் தோன்றுவணுதலா னும் மெய்யடியார் வழிபாடு (மிகவும்) இன்றி யமையாத தாயிற்று.
பொழிப்பு: சீவன் முத்தர்கள், குரு லிங்க ச ங் க மங்களைப் பற்றுக்கோடாகக் கொண்டு, கன்றையுடைய பசு வைப்போல அம்மூவிடத்தும் இடையீடுபடாத அன்

Page 43
64! உண்மை விளக்கம்
பினல் மனம் நெக்கு நெக் குருகிப் பொருந்தி, மலம் முற் ருக நீங்குதற்குரிய பத்தி வழிப்படுவர் நீயும் அவ்வழி நோக்கி ஒழுகுவாயாக.
53. வாழ்ந்தே னருட்கடலே வற்ருப் பவக்கடலில்
வீழ்ந்தே யலேயாமல் மேதினியில்-சூழ்ந்துவிடா வெண்ணெய்ச் சுவேத வன மெய்கண்ட காதனே புண்மைத் தவப்பயனே யுற்று.
கொ-கூ: தரிசித்த மெய்யடியார்கள் ) சூழ்ந்து விடா வெண்ணெய்ச் சுவேத வன மெய்கண்ட நாதனே, உண்மைத் தவப் பயனே, அருட்கடலே, (அடியேன்) வற் முப் பவக் கடலில் வீழ்ந்து (+ஏ) மேதினியில் அலையாமல் (முத்தியளிக்கும் உமது திருவடியை) உற்று வாழ்ந்தேன்.
ப-ரை: சூழ்ந்து விடா வெண்ணெய்ச் சுவேதவன மெய்கண்ட நாதனே-தரிசித்த மெய்யடியார்கள் சூழ்ந்து (பின்ன்ர்)விட்டு நீங்காதபடி திருவெண்ணெய் நல்லூரில் எழுந்தருளியிருக்கும் சுவேத வனப் பெருமாள் என்னும் பிள்ளைத் திருநாமமுடைய மெய்கண்ட நாதனே, உண் மைத் தவப் பயனே - மெய்த்தவம் உடையவர் தம் தவத் தின் பயனப் அடைதற்கு உரியவனே, அருட்கடலே - கிருபா சமுத்திரமே, வற்றப் பவக் கடலில் வீழ்ந்து (+ஏ) மேதினியில் அலையாமல் உற்றுவாழ்ந்தேன் - அடியேன் குறைவுபடாத பிறவியாகிய சமுத்திரத்தில் அழுந்தி உலக வாழ்வில் (மயங்கிச்) சீரழிந்து துன்புரு மல், தேவரீ ரது திருவடியை (அடைந்து) பற்றிநின்று பேரின்ப வாழ் வெய்தினேன்.
ஏ-அசை. இந்நூலுட் காட்டிய உண்மைகளை மெய் கண்ட தேவ நாயனர் உபதேசித்தருளினராக, அதனைத் தந்தவப் பயனய்க் கேட்டு உய்ந்த திருவதிகை மனவாச கங்கடந்தார் ஆனந்த டார வசத்தராய் இங்ங்னம் நன்றி யறிதலோடு துதித்தனரென்க. உண்மைச் சரியை கிரியை யோகம் ஆகிய சிவ புண்ணியங்களே ‘மெய்த்தவம்’ என்ப தும், அத்தவவிசேடங் காரணமாக ஞாகுசாரியரது தரி

("அவனே தானே"யாகிய) முத்தி 65
சனம் உளதாகும் என்பதும், அவ் ஆசாரியாரது அதுக் கிரகத்தாலே - அவரது தீட்சைக் கிரமங்களினலே பதி ஞானம் பெறற்பாலதென்பதும், அங்ங்ணம் பெற்ற பதி ஞானத்தாலேயே பரமுத்தியாகிய பேரின் பவாழ் வெய் தலா மென்பதும் (ஆசாரிய வணக்கங் கூறும்) இச்செய்யு ளானறியக் கிடந்தமையுணர்க.
பொழிப்பு: தரிசித்த மெய்யடியார்கள் சூழ்ந்து விட்டு நீங்காதபடி திருவெண்ணெய் நல்லூரில் எழுந் தருளிய சுவேத வனப் பெருமாளென்னும் மெய்கண்ட தேவரே, தவத்தின் பயனப் அடைதற்குரியவரே, கிருபா சமுத்திரமே, நான் பிறவிக்கடலில் அழுந்தி உலக வாழ் வில் மயங்கித் துன்புரு மல் தேவரீரது திருவடியைப் பற்றி நின்று பேரின்ப வாழ் வெய்தினேன். 54. மன்னதிகை வாழும் மனவா சகங்கடந்தான்
மின்னனேயார் வாழ்விலுரு மெய்கண் டான்-பன்மறைகள் வண்மைதரும் ஆகம நூல் வைத்த பொருள்வழுவா வுண் மைவிளக் கஞ்செய்தா னுற்று. கொ-கூ: * மன் அதிகை வாழும் மனவாசகம் கடந் தான், மின் அனையார் வாழ்வில் உரு மெய்கண்டான் (திருவடிகளை) உற்று, பன்(னும்) மறைகள் வண்மை தரும் ஆகம நூல் வைத்த பொருள் வழுவா(+த) உண்மை விளக் கம் செய்தான்.
ப-ரை: மன் அதிகை வாழும் மனவாசகம் கடந் தான் - (பல வளங்களாலும்) தலைமைப்பாடுடைய திரு வதிகை என்னும் பதியில் எழுந்தருளிய மனவாசகம் கடந்த தேவநாயனர், மின் அனையார் வாழ்வில் உரு மெய்கண்டான் உற்று - மின்னலை யொப்பப் பிறந்தும் இறந்தும் உழலும் பெத்தான்மாக்களது உலக வாழ்வில் பொருந்தி நில்லாத மெய்கண்ட தேவநாயனரது திரு வடிகளை (மனம் மொழி மெய்களினல் துதித்து)ச் சேர்ந்து நின்று, பன் மறைகள் வண்மைதரும் ஆகம நூல் வைத்த பொருள் வழுவா - சிறப்பித்துக் கூறுகின்ற வேதாந்த
உ. வி.-9

Page 44
66 உண்மை விளக்கம்
(- ஞானகாண்டத்து) வளத்தைவகுத்து உரைப்பனவாகிய சிவாகமங்களிலே உள்ள பொருளியல்புகளுக்கு மாறு படாத, உண்மை விளக்கம் செய்தான் - இவ்) உண்மை விளக்கம்' என்னும் மெய்கண்ட சாத்திர நூலை அருளிச் செய்தார்.
காப்புச் செய்யுளில் "" வண்மைதரும் ஆக ம நூல் வைத்த பொருள் வழுவா உண்மை விளக்கம்’ எனத் தொடங்கிய ஆசிரியர் நூலை முடிக்கும் இவ்விடத்தும் அங்ங்ணமே 'வண்மைதரும் ஆகம நூல் வைத்த பொருள் வழுவா உண்மை விளக்கம் ' எனக் கூறு முகத்தால், இந் நூலுட் கூறப்பட்டன எல்லாம் சிவாக மங்களுட் காணப் பட்ட உண்மைகளே என வலியுறுத்தினரென்க.
திருஞானசம்பந்த நாயனுர வர்கள் தமது தேவாரத் திருமுறையிலே ( பதிக இறுதி தோறும் ) வரும் திருக் கடைகாப்பில் தமது பெயரைக் குறிப்பிட்டுள்ளார். அங் நுனமே இச்செய்யுளும் அமைதலின் இஃது இந்நூலுக் கொரு கடைகாப்பாகக் கொள்ளத்தக்கது.
பொழிப்பு: திரு வதிகை ம ன வாசகங் கடந்த தேவ நாயனர் (பெத்தநிலைப்படும் உலகத் தாரது வாழ்விற் பொருந்தாத ) மெய்கண்ட தேவநாயனரது திருவடி களைப் பற்றி நின்று வேதாந்த சிவாக மங்களிலே சொல் லப்பட்ட உ ண்  ைம க ரூ க் கு மாறுபாடில்லாத (இவ்) "உண்மை விளக்கம்' என்னும் சித்தாந்த நூலை அருளிச் செய்தார். ”
உண்மை விளக்கம்
புத்துரை முற்றிற்று திருவதிகை மனவாசகங் கடந்த தேவநாயனுர்
திருவடி வாழ்க திருவெண்ணெய் கல்லூர் மெய்கண்டதேவநாயனுர்
திருவடி வாழ்க திருச்சிற்றம்பலம்

அநுபந்தம்
உண்மை விளக்கக்காப்புச் செய்யுளில் வரும் திண்மதம்”
என்பதன்) உரை பற்றிப் புலவர் சி. சின்னையா அவர்கள்
14-12-62ல் வெளியாய இந்துசாதன இதழில் எழுப்பிய (சந்தேகப்) பிரச்சினை.
"7-19-62ம் தேதி இந்து சாதன இதழில் சித்தாந்த பண்டிதர், சைவப்புலவர், திரு. இ. செல்லத்துரை அவர்கள் சைவசித்தாந்த சாத்திரங்களுள் ஒன்றன "உண்மை விளக்கம்" இதற்கு உரை எழுதியிருந்தார்.
அதில் காப்புச் செய்யுளாகிய வெண்பாவில் வருகின்ற, 'திண் மதம்" என்பதற்கு ("ஞான சத்தி, கிரியா சத்தி ஆகிய இரண்டு) வலிய மதங்களும்" என்று காணப்பெறுகின்றது.
யானைக்கு, கரம், கன்னம், கோசம் ஆகிய மூன்றிடங்களினின் றும் மதம் வருவதாதலின் யானை வடிவத்தையுடைய விகாயகப் பெருமானுக்கு மும்மதம் பொழியும் முர்த்தி எனக் கூறிவருவது աՄւկ.
"அறிவிச்சை தொழிலென் ருேதும், மதம் பூத்த விநாயகன் என்று காவலர் ஐயா அவர்கள் விகாயக வணக்கம் சொல்லியிருக் é66ăi auríf.
"ஒருகொம் பிருசெவி மும்மதம் என்று நாவலர் ஐயா அவர் களால் உரையெழுதப் பெற்றுள்ள மருதூரக்தாதி” நூலாசிரியர் அவர்கள் காப்புச் செய்யுளில் கூறுகின்றர்.
ys
இன்னும் மும்மதம் எனக் கூறியிருப்பவைகளை உதாரணமாக எழுதுகில் நூற்றுக்கணக்கில் எழுதலாம். தேவையில்லை.
இக்துசாதன இதழ் மூலமாக சைவப்புலவர் திரு. செல்லத்துரை அவர்கள் தயவுசெய்து "இரண்டு மதங்கள்" என்று எழுதியதற்கு ஆதாரங்களே எழுதிச் சைவ நன்மக்களைத் தி ரு ப் தி பெற ச் 6ց մնայւ6-b” " .
வணக்கம். séřsFrů. சி, சின்னையா
10-12-62 ஆசிரியர்

Page 45
புலவரவர்களது (சந்தேகப் பிரச்சினையை உவந்தேற்று, 21-12-82-ல் வெளியாய இந்துசாதன இதழிற் பிரசுரித்த விளக்கவுரை
'14-12-89ல் வெளியிடப்பெற்ற இந்துசாதனத்தின் மூலம் 'உண்மை விளக்கம் உரைபற்றி விளக்கம்" என்னுந் தலேப்பில் ஆசிரியர் திரு. சி. சின்னேயா அவர்கள் எழுப்பிய பிரச்சினே யை உவக்தேற்று என் சிற்றறிவுக் கெட்டிய வரையில் இவ்விளக்கத்தை எழுதுகிறேன்; பெரியோர் குணங்கொள்வாராக.
உண்மை விளக்கக் காப்புச்செய்யுளில் விநாயகர் தந்திமுகன்' எனக் குறிப்பிடப்பட்டுள்ளார். அதனுல் யானேயின் முகம்மாத்திரமே விசாயகர் உருவில் ஒப்ப அமைந்துள்ளதென்பதும், அதுபற்றி அம் மூகத்தினின்றும் பில்குவனவாகிய கன்னமதம் கபோலமதம் ஆகிய இரண்டுமே கொள்ளப்படுவன வல்லது ஏனேக்கோச மதத்தையும் சேர்த்து முன்முகக் கணித்தல் பொருந்தாதென்பதும், உய்த்துணரத் தக்கன. எனவே மதம் என்பதற்குச் சத்தி எனப் பொருள்கொண்டு, பிரணவப் பொருளாய் அதுவே உருவாய் அமைந்த விநாயகப்பெரு மானுக்கு அங்ங்னம் அமைதற்கியைந்து நின்ற கிரியை ஞானம் என்ப வற்றைக் குறிப்பிடுமாற்ருல் திண்மதம்" என்பதற்குக் * (கிரியா சத்தி ஞானுசத்தி ஆகிய இரண்டு) வலிய மதங்களும் " என உரையெழுத நேர்ந்தது. (அங்ஙனம் என் மதம் நாட்டி எழுதுமிடத்தும், சிவகுமார மூர்த்தமாய், அறிவு இச்சை தொழில் மூன்றும் உடையராய்ப், பரி பூரணராகிய விகாயகக் கடவுளுக்குக் குறைவுபாடு உரைத்ததாய் அமைந்துவிடக் கூடாதே என அஞ்சி, சிறப்பித்துரைத்த அவ்விரு மதங்களேயும் நீக்கி வாசித்தற்குரியனவாய் அடைப்புக் குறிகளுக்கு உட்படுத்திப், பின் "வலிய மதங்கள்" எனப் பொதுவாயுரைத்தமை புணரத்தக்கது. எனவே, நாவலர் ஐயா அவர்களது உரையுடனும் ஏனேப் பெரியோரது கருத்துக்களுடனும் ஈண்டு முரணிக்கிடந்த தொன்றில்லே யென்க.)
இங்கே கூறியவற்றுக்கு ஆதாரம் (அ) சிவப்பிரகாசக் காப்புச் செய்யுளுக்குத் திரு. மு. திருவிளங்கம் அவர்கள் எழுதிய உரையின் குறிப்பு 1ல் "தானம் - மதம்; ஞானசத்தி கிரியாசத்திகளேக் குறிக் கும் யானே உறுப்பு கழுத்தின் கீழ் இன்மையால், முகத்திலுள்ள இருமதமுமே ஞானசத்தி கிரியாசத்தி எனக் கொள்ளப்பட்டன விநாயகக் கடவுளது வடிவம் ஞான சத்தி கிரியாசத்திகளாலாய வடிவ மாதலின் அச்சத்திகளே இரும தமுமாம்" எனத் தெள்ளத் தெளிய விளக்கப்பட்டுள்ளமை காண்க,

iii
(ஆ) விநாயகருக்குச் சந்திகள் கிரியாசத்தி ஞானு சத்தி என இரண்டுளவாதல் வைதிக சைவசிகாமணி ச. குமாரசாமிக்குருக்கள் எழுதிய விநாயக பரத்துவம் என்னும் நூலிலுள்ள சித்தி புத்தி திருமண மூர்த்தி என்னும் பாடத்தில் காணத்தக்கது.
குறிப்பு: சைவசித்தாந்த நூல்கள் கூறும் முடிந்த முடிபான பொருள்களும் அவற்றின் நுணுக்கங்களும் எமது மயக்க அறிவால் அள்ந்தறிதற் கரியவை ஆணவ முனேப்பகன்ருருக்கே வெட்ட வெளிச்சமானவை. அங்ஙனமாகவும் இளஞ்சைவப்புலவர் தேர்வுக் குத் தோற்றும் மாணவரது தன்மைகருதி, எழுதாமல் இருக்க முடி யாமல், பெரியோரது பழைய உரைகளே அடியொற்றி இவ்வுண்மை விளக்கவுரை எழுத வேண்டியதாயிற்று. ஆதலால், ஆசிரியர் திரு. சி. சின்னேயா அவர்களேப் போன்ற நேயர்களும் கல்லறிவாளர்களு மான பெரியோர்கள் எனது உரை இழுக்கின்றி அமைகற் பொருட்டு எனது ஐயக் தீர்த்தும் தீர்ப்பித்தும் உதவுவார்களாக."
சிறுப்பிட் டி. இ. செல்லத்துரை IS - 3-f
ܫܒ - ܓ -- -- ܕܡܝ ܒܝ ܚܨ-- -- ܝ
பி கு:- SqSqSqTMS qMSTSMS S S SMS SMSSqSqSqSTSSMSSSMSSSSMSqqSqSqSqSMSqSMSMSTSqSS
இனி,
"சத்திதன் வடிவே தென்னில்
தடையிலா ஞான மாகும் உய்த்திடும் இச்சை செய்தி
இவை ஞானத் துளவோ என்னின் எத்திறம் ஞான முள்ள
தத்திறம் இச்சை செய்தி வைத்தலான் மறைப்பின் ஞானன்
மருவிடும் கிரியை யெல்லாம்."
என வரும் சிவஞான சித் தியார் சுபக்கச் செய்யுளால் ஞானு சத்தி யினின்றே ஏனேய சக்திகள் உளவாம் என்பதும், அச்சத்திகளெல் லாம் ஞானுசக்தியினுள் அடக்கமாம் என்பதும், அதனுல் ஞானுசக்தி ஒன்றைமாத்திரம் இறைவன் உடையன் எனக் கூறுங்காலும் இறை வனுக்குக் குறைவு பாடுரைத்த மை யாகாதென்பதும் காணக் கிடக் தலால், விநாயகருக்கு மதமாவன ஞானம் கிரியை இரண்டுமே என்று கொள்ளுதலால் வரக்கடவதாகிய இழுக்கும் குறைவுபாடும் இல்லேயாம். அவையில்ஃப்யாகவே, மும்மதமெனக் கொள்வாரோடு இரும தமெனக் கொள்வாரும் அன்றி (ஞானமாகிய) ஒரு மதமெனக் கொள்வாருங்கூட முரணிக்கிடந்தாரில்லேயாமெனத் தெளிக.

Page 46
அட்டைப்படம்
நடராசர் நடன விளக்கம்
(செய்யுள் 32-36)
பஞ்சாக்கரத் திருமேனி
தூலபஞ்சாக்கரம் சூக்குமபஞ்சாக்கரம்: ந-திருவடி சி-உடுக்கேந்திய திருக்கரம் ம-திருவயிறு வ-வீசியதிருக்கரம் சி-திருத்தோள் ய-அஞ்சலென அமைத்த திருக்கர வ-திருமுகம் ந- அக்கினியேந்தியதிருக்கரம் ய-திருமுடி 1 ம-முயலகனை அழுத்தியதிருப்பாத
"ஓம்’-திருவாசி பஞ்சாக்கரம்-திருவாசியின் உள்ளொளி
ஊனநடனம் படைத்தல் - உடுக்கு ஏந்திய திருக்கரம் காத்தல் - அஞ்சலென அமைத்த திருக்கரம் அழித்தல் - அக்கினி ஏந்திய திருக்கரம் மறைத்தல் - ஊன்றிய திருவடி அருளல் - தூக்கிய திருவடி
ஞானநடனம் பக் குவான்மாவுக்கு;
மாயாமலம் நீக்குதல் - உடுக்கு ஏந்திய திருக்கரம் கன்மமலம் நீக்குதல் - அக் கினியேந்திய திருக் கரப் ஆணவமலம் நீக்குதல் - ஊன்றிய திருவடி அருளேதநுவாக நிறுத்தல் - தூக்கிய திருவடி பேரின்பமளித்து அழுத்துதல் - அஞ்சலென
அமைத்த திருக்கரப்

uporą russ@gặgắ fűÎugšgắnsı fı)

Page 47
முப்பத்தா
(செய்யுள்:4
ஒ- ஆன்ம தத்துவங்கள் இருபத்துநான்கு
I பூதங்கள் ஐந்து: நிலம்
:* நாற்கோனம் மதியின் 1. .. .. .. .. .. .. .._1 -- ܕ ---------------- ---------- அவற்றின் | , , دي :" பொன் வெண்ை அவற்றின் )له | "ה Kif Lidge - - - - . ** வச்சிரம் ETLD. T அவற்றின் . . ம்ே பிரமன் விஷ்ணு
$ରି ப்தங் : "-a" காத்தல்
- I......... பஞ்சபூதி 'ili மாய்த் குளிர்ந்து இயல்புகள் திரித்தல் பதமாதல் 11 புலன்கள் ஐந்து: Lisa I
11 ஞானேந்திரியங்கள் ஐந்து
தோ அண்ெைபாருங் |
བརྒྱ་ཆ་༩པའི་ சாகச அவைபற்றியறி Liña 2. ந்த புலன்கள் " " TW கன்மேந்திரியங்கள் ஐந்து:-
வாக்கு LIT அவைபொருந்திய பூதங்கள் - ஆகாயம் |" அவைகளேப் பொருந்தி இயற் வசவித்தல் நடத்தல் தும் தொழில்கள் W-அந்தக் கரணங்கள் நான்கு
LITLD
விடயங்கள்ே விரும் 1. அவற்றிவியல்பு பிப்பற்றி நிற்றல் 岛手、
ஓட வித்தியா தத்துவங்கள் ஏழு :-
Erlijiosofo நிபதி
| 고, பலும் எதிர் கன்மத்தை அவற்றினியல்பு காலப்புது ச்ேசயிக்கி :
பொருத்து | का புவித்தல்
. ר רדר רדר ஒ= சிவதத்துவங்கள் ஐந்து :-
சுத்தவிததை
ஞானம் ஏறிக் கிரியை
அவற்றினியல்பு கிரியை ଶ୍ରେଲିବା *ಆಲ್ಪ್
நிற்பது சிற்ப
 

று தத்துவங்கள்
தொடக்கம் 21 வரை)
நீர் 鲇 காற்று ஆகாயம்
பாதி முக்கோனம் அறுகோணம் வட்டம்
|சிவப்பு கருமை
T அ
சுவத்திகம் அறுபுள்ளி அமுதவிக் து
உருத்திரன் i njITIGT சதாசிவன்
- - - 彗。一日 ______| அழித்தல் மறிைத்தல் அருளில்
பரந்து சவித்துத் கிரந்தமாய் - ஒன்று வித்தல் சிரட்டல் கிறைந்துசிற்றல்
உருவம் | நாற்றம்
t T) ... If I உபந்தம்
É |高品 நிலம்
மனம் (சவம்)
ஈதல் ஏந்தல் விந்து விடுதல்
கழித்தல்
அகங்காரம் சித்தம் oż |ಾಷ್ಟ್ರೇ Fi
து அபிமTத்ெது 周芷 நீக்குதல் ಬ್ರಿಸಿ' ம
வித்தை இராகம் புருடன் DITTILLET
நிது அறிவை |
*ՑեյIf: சதாக்கியம் சத்தி இவற்
ஞானமுங்கிரியை திரியையை றைந்துயும் ஒத்தஅளவிற் உடையதாய் 醫 பொருந்தி சிற்பது இருப்பது
ஞான உருவாய் இருப்பது

Page 48


Page 49


Page 50