கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: குருகவி ம. வே. மகாலிங்கசிவம் வரலாறும் ஆக்கங்களும்

Page 1
O. GEGOJ.
 

மகாலிங்கசிவம்

Page 2


Page 3

குருகவி ம. வே. மகாலிங்கசிவம்
வரலாறும் ஆக்கங்களும்
un. Dassaintifoofascip
Galafa G: பட்டப்படிப்புகள் கல்லூரி, ஸ்ரான்லி வீதி, யாழ்ப்பாணம்.
2007

Page 4
நூல்
ஆசிரியர்
உரிமை முதற்பதிப்பு அச்சுப்பதிப்பு
பக்கங்கள்
வெளியீடு
விலை
குருகவி. ம. வே. மகாலிங்கசிவம் வரலாறும் ஆக்கங்களும். பா. மகாலிங்கசிவம்
B.A(Hons), Dip. in. Edu. ஆசிரியருக்கு
2007, ஆவணி
பாரதி பதிப்பகம், காங்கேசந்துறை வீதி, யாழ்ப்பாணம்.
8艇 十 13 பட்டப்படிப்புகள் கல்லூரி, ஸ்ரான்லி விதி,
யாழ்ப்பாணம்.
150 fs=

அமரர் திருமதி பரமேஸ்வரி பார்வதிநாதசிவம்
பெற்று வளர்த்தெடுத்துப்
பேணி உணவூட்டி உற்றநோய் தீர்த்து
உளத்தை வளப்படுத்திச் சற்றுமெதிர் பாராச்
சமயத்திற் சென்றாயே! நற்றாயே, உன்தனது
பாதத்திற் காணிக்கை

Page 5

Go
பக்கம்
முன்னுரை. vii
அணிந்துரை. ix வாழ்த்துரை. xi குருகவி ம.வே. மகாலிங்கசிவம்
வாழ்வும் பணிகளும். O குருகவியின் ஆக்கங்கள்
1. கவிதைகள்
事 புன்னெறி விலக்கு. 17
பிள்ளைக்கவி என் பிதா. 1S
காஞ்சி காமாட்சி அன்னை. 18
* இந்துமத வயளத்தத் தொடர்பு. 2.
பொருளடக்கம்
k தொல்காப்பியம் சொல்லதிகாரம் கணேசையர்
பதிப்புக்கு வழங்கிய சிறப்புப்பாயிரம். 22 * தனிப்பாடல். 22
事 சேர் பொன். இராமநாதன். 23
* அருணந்திப் புலவர் வவுனியாவில்
பேச்சைப் பாராட்டி எழுதியது.
uupuh. 8

Page 6
சேர் வியான், இராமநாதனின் செந்தமிழ்
இலக்கண நூலிற்கு வழங்கப்பட்ட
இந்துசாதனப் பொன்விழா வாழ்த்து. ஈழகேசரி யுவ வருஷ வாழ்த்து.
2. சிறுகதை - அன்னை தயை. 3. கையெழுத்து.
குருகவி பற்றிய ஆக்கங்கள்
1. கருரைகள்
மகாலிங்கசிவத்தின் மலர்நிகர் மாட்சி.
கவிஞர் மஹாலிங்கசிவம்.
கல்லாது கவிவபாழிந்த வல்லாளர்.
மட்டுவில் தந்த தமிழறிஞர்கள் தருகவியும்
பண்டிதமணியும்.
மாமனும் மருகரும்.
பரீட்சை எடாத பண்டிதர்.
ஈழத்துத் தமிழ்ச்சொல் வல்லார்.
தனிவிளக் கனைந்தது.
துருகவி மகாலிங்கசிவம்.
11. கவிதைகள்
மகாலிங்கசிவ மர்ை.
மகாலிங்கசிவம்.
மகாலிங்கசிவக்காஞ்சி.
துன்பில் அரும்பிய அன்புமலர் மாலை.
Wi
28
39.
4.
连3
58
O
72
宣生
E.
EB

குருகவி ம. வே. மகாலிங்கசிவம்

Page 7

முன்னுரை
ஈழத்தறிஞர் திருக்கூட்டத்தில் விடுபட்டுப் போனவர்களைத் தேடியெடுத்து மீள நிலைநிறுத்தும் முயற்சிகள் ஈழத்தில் வாழ்வோ ராலும், புலம்பெயர்தேசத்து ஆர்வலர்களாலும் அதிகளவில் முன்னெ டுக்கப்பட்டு வருகின்றன. இவ்வகையில் எமது குடும்பத்தைச் சேர்ந்த வர்களின் ஆக்கங்களைத் தேடித் தொகுக்கும் வாய்ப்பு எனக்குக் கிடைத்ததைப் பெரும்பேறாகவே கருதுகின்றேன்.
இப்பயணத்தில் முதற்படியாக யாழ். பல்கலைக்கழகத்தில் தமிழ் சிறப்புக்கலை இறுதியாண்டுக் கற்கைநெறியின் போது (1995) ஆய்வுக் கட்டுரையொன்றைச் சமர்ப்பிக்கவேண்டி ஏற்பட்டது. அவ் வேளை எனது ஆய்வுக்கட்டுரைத் தலைப்பாகக் குருகவி ம. வே. மகாலிங்கசிவத்தின் மூத்த சகோதரரான பண்டிதர் ம.வே. திருஞான சம்பந்தபிள்ளையின் தமிழ்ப்பணியினை ஆராயமுயன்றேன். “பண்டிதர் ம.வே. திருஞானசம்பந்தபிள்ளை - ஓர் ஆய்வு நோக்கு” என்னும் தலைப்பில் அமைந்த அந்த ஆய்வுக் கட்டுரை தற்போது கொழும்பு தமிழ்ச் சங்கத்தினால் நூலாக வெளியிடப்பட உள்ளது.
எனது இரண்டாவது முயற்சியாக “குருகவி ம. வே. மகாலிங்க சிவம் - (வரலாறும் ஆக்கங்களும்)” என்னும் இத்தொகுப்பு நூலுருப் பெறுகிறது. எனக்குக் கிடைத்த தகவல்களை வைத்து அவரது
vii

Page 8
வரலாற்றை எழுதியதுடன் கிடைத்த அவரது கவிதைகள், சிறுகதை என்பவற்றையும் அவர் பற்றி எழுதப்பட்ட பல்வேறு தமிழறிஞர்களின் ஆக்கங்களையும் இந்நூலிலே தொகுத்துள்ளேன்.
குருகவியின் ஆக்கங்களைத் தொகுத்து வைத்திருந்த எனது மாமனாரான மயிலங்கூடலூர் பி.நடராசன் அவர்களுக்கும், மட்டுவில் கா. சிவபாலன் அவர்களுக்கும் எனது நன்றிகள். கா. சிவபாலன் அவர்கள் குருகவி பற்றிய இரண்டு கட்டுரைகளைப் பத்திரிகைகளில் எழுதியதோடு இந்நூலுக்கும் சிறந்ததோர் அணிந்துரையை வழங்கிய மையை நன்றியுடன் நினைவு கூருகிறேன். தெல்லிப்பழை துர்க்கா தேவி அம்மன் ஆலய ஆய்வு நூலகத்தில் இருந்தும் எனக்குப் பல தகவல்கள் கிடைத்தன.
எங்கும் தேடியும் கிடைக்காத “அன்னை தயை” என்னும் சிறு கதையை எனக்குத் தந்துதவியவர் யாழ்ப்பாணக் கல்லூரி நூலகரான கவிஞர் ஜெ.கி.ஜெயசீலன் அவர்கள். அவருக்கும் எனது மனமார்ந்த நன்றி.
மேலும் குருகவி பற்றிய தமது கட்டுரைகள் மூலம் அவ்வக் காலங்களில் அவரைத் தமிழர்கள் அறியும்படி செய்த, அமரர்களாகி விட்ட தமிழ்ப் பேரறிஞர்களான சுவாமி விபுலாநந்தர், பண்டிதமணி சி. கணபதிப்பிள்ளை, பிரமயூரீ தி.சதாசிவஐயர் ஆகியோரையும் இவ் வேளையில் நன்றியுடன் நினைவு கூரவேண்டிய தேவை உள்ளது.
ஏனைய கட்டுரைகளையும் கவிதைகளையும் எழுதிய புலவர் மணி பெரியதம்பிப்பிள்ளை, யாழ்ப்பாணன் முதலியோருக்கும், பின் அட்டையில் இடம் பெற்ற என்னைப் பற்றிய அறிமுகவுரையை உதவிய ஆசிரியமணி அ. பஞ்சாட்சரம் அவர்களுக்கும், வாழ்த்துரை வழங்கிய குருகவியின் மாணவர் கோவைகிழார் அவர்களுக்கும் எனது நன்றிகள்.
இந்நூலை அழகுற அச்சமைத்துத்தந்த பாரதி பதிப்பகத்தின ருக்கும், அதன் உரிமையாளரும் எமது குடும்ப நண்பருமாகிய திரு. இ. சங்கர் அவர்களுக்கும் எனது மனப்பூர்வமான நன்றிகள்.
"சிவபுரம்" ம.பா. மகாலிங்கசிவம்
இணுவில் மேற்கு, இணுவில்.
viii

அணிந்துரை
செய்தபிழை எல்லாம் சிவனே பொறுத்தருளி உய்யவருள் செய்யெனும்வாக் குள்ளுறையால் - பெய்தளித்தான் வெள்ளைக் கவியால் விதுமெளலிக் கொண்சதகம் பிள்ளைக் கவிஎன் பிதா.
ä്
இங்கு காணப்படுகின்ற வெண்பாவைப் பாடிய பெருமகன் குருகவி ம.க.வே. மஹாலிங்கசிவம் அவர்கள். மட்டுவிலுக்குப் பெரும் புகழைத் தேடித்தந்த உரையாசிரியர் ம.க. வேற்பிள்ளை அவர்கள் "ஈழமண்டலசதகம்” என்னும் சந்திரமெளலீசர் சதகம் இயற்றி உரையும் செய்தவர். தந்தையார் இயற்றிய சதகச் செய்யுளுக்கு அவரின் திருமக னார் வழங்கிய வெண்பாச் செய்யுளே இங்கு காணப்படுகிறது. இது பெருவியப்படையக்கூடிய பெருமையல்லவா?
உரையாசிரியர் குடும்பமும் பண்டிதமணி அவர்களும் உற வினர்கள், அயலவர்கள் ஆக இருந்தனர். "எங்கள் நாட்டு முதுபெரும் பேரறிஞர்" தமது “இலக்கியவழி நூலிற் பெரும்புலவர்களை எல்லாம் அறிமுகஞ்செய்து வைத்து இருக்கிறார். இதிற் கவிஞர் மஹாலிங்க சிவம் அவர்களுக்கு முக்கிய இடம் அளித்துள்ளார். நவாலியூர் சோம சுந்தரப்புலவர் போன்றவர்களை உலகுக்கு அறிமுகஞ் செய்து வைத்த பெருமை பண்டிதமணி அவர்களையே சாரும்.
மஹாலிங்கசிவத்துக்கு இலக்கிய இரசனை பிறவிச் சொத்து, *எவரையும் இனிக்க வைப்பவர் மஹாலிங்கசிவம்” என்பார் பண்டிதமணி
Χ

Page 9
அவர்கள். கவிஞர் மஹாலிங்கசிவம் அவர்களை, ‘குருகவி கவிஞர் மஹாலிங்கசிவம்” என்றே அழைப்பார்கள் பண்டிதமணி அவர்கள்.
சுன்னாகம் பிராசீன பாடசாலை அதிபர் முகாந்திரம் தி சதா சிவஐயர் அவர்கள் கவிஞர் மஹாலிங்கசிவம் அவர்களின் மறைவின் போது அன்னார் நினைவாக ‘தேவி மானச பூசை அந்தாதி” என்னும் நூலை வெளியிட்டுச் சமர்ப்பணம் செய்துள்ளார்கள்.
கவிஞர் மஹாலிங்கசிவம் அவர்களின் திருவுருவப்படத்தை வைத்து நீர்வேலி, சிற்சபேசன் இல்லத்தில் காலஞ் சென்ற திரு. இ. சிதம்பரப்பிள்ளை ஆசிரியர் தினமும் பூ வைத்து வழிபாடு செய்து வந்தார். கவிஞர்மீதுள்ள பக்தி மேம்பாட்டினால் அவர்களின் கவிதை களையெல்லாம் மணிமணியாக எழுதிப் பிரதிசெய்து வைத்திருந்தார். இவற்றைத் தம் வாழ்நாளில் எனக்குக் காண்பித்திருந்தார். நாட்டுயுத்த அழிவினால் இவற்றை மீளப்பெறமுடியவில்லை.
மாவை. தமிழருவி த. சண்முகசுந்தரம் அவர்கள் கவிஞர் மஹாலிங்கசிவம் அவர்களின் வரலாற்றைப் படிக்கிரமமாக எழுதி வைத்திருந்தார். அந்த வரலாறும் தவறிவிட்டமை கவலைதரும் செய்தி யாக இருக்கின்றது.
தெய்வத் திருவருள் துணையினால் மீண்டும் கவிஞர் குருகவி மஹாலிங்கசிவம் அவர்களின் வரலாற்றுச் செய்திகளையும் ஆக்கங் களையும் வெளியிடப் பேரனார் முன்வந்துள்ளமை மட்டுவிலிற் பிறந்த எம்போன்றோர்க்கு அளவிலா மகிழ்ச்சியைத் தருவதாகும்.
கவிஞர் மஹாலிங்கசிவம் அவர்களின் பெயரையே தாங்கி யுள்ள பேரனார் திரு.பா.மகாலிங்கசிவம் அவர்கள் வாழையடி வாழை யாக வந்த புலவர் பரம்பரையைச் சேர்ந்தவர். கந்தரோடை யா/ ஸ்கந்தவரோதயக் கல்லூரியில் ஆசிரியப்பணியை மேற்கொள்ளும் சிறப்புக் கலைமாணிப் பட்டதாரி தமது கற்பித்தல் தொண்டுடன் தம் குலவித்தையான கவிதை இயற்றுவதிலும் வல்லவராகக் காணப்படு கிறார். உரையாசிரியர் குடும்பத்தின் நிகழ்காலச் சின்னமாக விளங்கும் புலவர் ம. பார்வதிநாதசிவம் ஐயாவின் திருமகனார்.
தம்பெருமை தாம் அறியாத இப்புலவர் கூட்டத்துடன் உள்ள எம் தொடர்பு பூர்வ புண்ணியவசமானது. உரையாசிரியர் ம.க.வேற் பிள்ளை அவர்கள் ஸ்தாபித்த சந்திரமெளலிச வித்தியாசாலைக்குக் காணிநிலம் வழங்கியவர் எனது பாட்டனார் என்பதும் ஈண்டு கருதிக் கொள்ள இடமுண்டு. Y.
பண்டிதமணி போன்ற அறிஞர்களால் பரீட்சை எடாத பண்டிதர்" எனப் போற்றப்பட்ட கவிஞர் குருகவி மஹாலிங்கசிவம் அவர்கள் புகழ் என்றும் வாழும்.
மட்டுவில் கா. சிவபாலன்

வாழ்த்துரை
கோப்பாய் ஆசிரிய கலாசாலை 1923இல் ஆரம்பமானது. அப்பொழுது அருகில் நடைபெற்ற அரசினர் சாதனா பாடசாலையில் S. S. C. வகுப்புவரை படித்தேன். ஆசிரிய கலாசாலை கற்கை நெறி மாணவர் சாதனா பாடசாலைக்கு வருவதும் மேற்பார்வை யிடக் குறித்த பாடங்களுக்குரிய பேராசிரியர் சமுகமாயிருப்பதும் இடையிடை அதிபர் கண்காணிப்பதும் நடைபெறும். அப்பொழுது பண்டிதர் வே. மகாலிங்கசிவம் அவர்கள் மேற்பார்வை செய்ய வருவார். மற்றைய பேராசிரியர் போலல்லாது வெள்ளை வேட்டி, சால்வை, நஷனலுடன் வந்து மேற்பார்வை செய்வதும், கற்கை நெறியாளருக்குச் சில குறிப்புக்கள் கூறுவதும், இடையிடை அவர் கட்கு முன்மாதிரியாகக் குறித்த பாடத்தைத் தான் படிப்பித்துக் காட்டுதலும் நிகழும்.
அக்காலத்தில் கோப்பாய் ஆசிரிய கலாசாலையில் மல் லாகம் பொன்னையா அதிபராகவும், உபஅதிபராகக் கரவெட்டி எஸ். கே. இராசசிங்கம் அவர்களும், மற்றும் மோசெஸ் முருகேசு (உடுவில்), எஸ்.வைரமுத்து (மட்டக்களப்பு) முதலியோரும் கடமை யாற்றினர்.
X

Page 10
யான் குறித்த சாதனா பாடசாலையில் படித்து S. S. C. சித்தியடைந்து, தொடர்ந்து பிறிலிம் வகுப்பும் சித்தியடைந்து கோப்பாய் பவானந்த வித்தியாசாலை ஆசிரியராக ஒரு வருடம் சேவையாற்றிய பின் 1932 - 34 இல் குறித்த ஆசிரிய கலாசாலை யிற் பயிற்சி பெற்றேன். என்னுடன் 40 மாணவர் பயின்றனர். மகாலிங்கசிவம் ஐயா மொழி, இலக்கிய பாடங்களைக் கற்பிக்கும் முறைக்குரிய பேராசிரியராக இருந்தார். என்னுடன் பயின்றவர்களில் கந்தரோடை ஆறுமுகம் (இவர் கொழும்பு விவேகானந்த வித்தியா சாலைத் தலைமையாசிரியராகச் சேவையாற்றியவர்), மல்லாகம் S. தம்பிப்பிள்ளை (இவர் சுன்னாகம் திருஞானசம்பந்த வித்தியாலய ஸ்தாபகர்), M. M. S அப்துல்காதர் (முஸ்லிம் வித்தியாலய அதிப ராகச் சேவையாற்றியவர்) இவர்களும் அடங்குவர்.
தமிழ்நாடு மற்றும் தமிழர் பிரதேசங்களில் இருந்து யாழ். வரும் பேரறிஞர்கள் ஆசிரிய கலாசாலைக்கு வருவதும் குருமணி வே.மகாலிங்கசிவம் ஐயாவைத் தரிசித்து உரையாடுவதும் நிகழும். ஒரு போது தமிழகப் பேரறிஞர் திரு. வி.கல்யாணசுந்தர முதலியார் யாழ். வந்தபோது நடந்த வரவேற்புக் கூட்டத்திற்கு மகாலிங்கசிவம் ஐயாவும் சென்றிருந்தார். திரும்பும் போது குறித்த கூட்ட அழைப் பிதழும் கொண்டுவந்து என்னிடம் தந்து, முதலியார் சற்றுநேரத்தில் வருவார். நீர் வரவேற்புரை கூறும் என்றார். அவர் வந்ததும் யான் பண்டிதர் ஐயா தந்த அழைப்பிதழில் இருந்த குறிப்புக்களையும் சேர்த்து வரவேற்புரை கூறினேன். சபையில் ஆரவாரம் யான் இவ் விடம் வருவதென்பது எப்படி உமக்குத் தெரியும் என்று முதலியார் கேட்டு ஆசீர்வதித்தார். மகாலிங்கசிவம் ஐயாவின் தமிழ்ப் போதனா அறிவு எனக்கு அன்று பெருமையீட்டித்தந்தது.
இரண்டு வருடப் பயிற்சி முடிந்து வெளியேறும் நாள். பிரார்த்தனை மண்டபத்தில் அதிபர், பேராசிரியர்கள் நிரையாக ஆச னத்தில் சமுகமாயிருந்தனர். பயிற்சி முடித்து வெளியேறும் மாண வர்கள், அதிபர், ஆசிரியர்கட்குக் கைகூப்பி வணக்கம் செய்து விடைபெறுவர். சிலர் பாதம் தொட்டும் வணங்குவர். அவ்வாறு யான் வரும்போது வணக்கம் செய்து மகாலிங்கசிவம் ஐயாவை நிலத்தில் விழுந்து அஷ்டாங்க நமஸ்காரம் செய்து அவர் பாதம் தொட்டு வணங்கினேன். அப்பொழுது,
xii

உன்னை இறைவன் நன்கு படைத்தனன் தன்னைத் தொழுது தமிழ்செய்யு மாறே
என்று ஆசீர்வாதித்தார். அவரது ஆசீர்வாதம் எனது சேவைக் காலத்தில் S.S.C படிப்பித்துப் பல மாணவரைச் சித்தியடைய வைத்தும், கூட்டுறவு, ஆசிரிய சேவைகளிலே தலைவராகவும், செயலாளராகவும் சேவையாற்றவும், நல்வாழ்வு பெறவும் கோப்பாய் வரலாறு, கூட்டுறவு, யாழ். தமிழரும் இந்துமத வழிபாடும் முதலிய ஆறுநூல்களை வெளியிடவும் தற்போது எழுதியுள்ள முன்று நூல் களை வெளியிடவும் ஆசீர்வாதம் செய்கிறது.
காலத்துக்குக் காலம் விசேட தினங்களில் அவர் இருப் பிடம் சென்று ஆவன செய்து ஆசீர்வாதம் பெற்று வந்தமையே இன்னும் நீண்ட ஆயுளையும் எழுதிய நூல்கள் வெளியிடவும் ஆசீர் வதிக்கிறது.
என் குருநாதர் மகாலிங்கசிவம் ஐயாவின் புகழ் என்றும் நின்று நிலவும். அவர் பிள்ளைகள், சந்ததிகள் சகலசெல்வங்களும் பெற்று நல்வாழ்வு பெறவும் யான் தினமும் தியானிக்கும் முருகப் பெருமான் அருள் கிடைக்கப் பிரார்த்திக்கிறேன்.
க. இ. குமாரசாமி (கோவைகிழார்)

Page 11

குருகவி ம.வே. மகாலிங்கசிவம் வாழ்வும் பணிகளும்
திமிழிலக்கிய வளர்ச்சிக்குத் தமிழகம் மட்டுமன்றி ஈழமும் காலந்தோறும் பணியாற்றியே வந்துள்ளது. இவ்வகையில் ஈழத்துப் புலவர்களும், அறிஞர் பெருமக்களும் ஆற்றிய பணிகள் தமிழகத் தாராலும் மதிக்கப்படுவனவாகும். இத்தகு பேரறிஞர்களில் ஒருவர் தான் குருகவி என்றும் பரீட்சை எடாத பண்டிதர் என்றும் போற்றப் படும் ம.வே. மகாலிங்கசிவம். இவர் ம.க.வேற்பிள்ளை மகேஸ்வரி தம்பதிகளின் மூன்றாவது மகனாக 1891ஆம் ஆண்டு பிறந்தார்.
1. குரும்பப் பின்னணி
மகாலிங்கசிவத்தின் தந்தையார் ம.க.வேற்பிள்ளை சிறந்த கவிஞர். ஈழநாட்டின் பெருமைகூறும் ஈழமண்டல சதகம், புலோலி வயிரவக்கடவுள் தோத்திரம், புலோலி பர்வதபத்தினியம்மை தோத்திரம், ஆருயிர்க் கண்மணிமாலை என்னும் செய்யுள் இலக்கியங்களை இயற்றி யவர். இவற்றுட் சிறந்ததான ஈழமண்டல சதகம் 1923 ஆம் ஆண்டு தமிழகத்தில் அரங்கேற்றப்பட்டது. அப்போது சிதம்பரம் வையாக ரணிகர், முத்தையபட்டாரகர் முதலிய அறிஞர்களால் ம.க.வேற் பிள்ளைக்குப் 'பிள்ளைப் புலவர்” என்னும் பட்டம் அளிக்கப்பட்டது.
சிறந்த உரையாசிரியராகவும் விளங்கிய ம.க.வேற்பிள்ளை திருவாதவூரடிகள் புராணம், புலியூரந்தாதி, அபிராமியந்தாதி, கெவுளி நூல்
O

Page 12
என்பவற்றுக்கு உரை எழுதியுள்ளார். இவற்றுள்ளே திருவாதவூரடிகள் புராண உரைச் சிறப்புக் காரணமாக நாவலரின் மருகரான வித்துவ சிரோமணி பொன்னம்பலபிள்ளையால் "உரையாசிரியர்" என்னும் சிறப்புப் பட்டம் வழங்கிக் கெளரவிக்கப்பட்டவர்.
மகாலிங்கசிவத்தின் தாயான மகேஸ்வரி புலோவியிலே மிகச் சிறந்த கல்விக் குடும்பத்திற் பிறந்தவர். மகேஸ்வரியின் தந்தையார் சுப்பிரமணியபிள்ளைக்கு ஏழு சகோதரர்கள். அவர்களில் ஒருவரான கணபதிப்பிள்ளை திருவனந்தபுரம் மகாராஜாவின் சமஸ்தான வித்துவா னாக இருந்ததுடன் திருவனந்தபுரம் மகாராஜாக் கல்லூரியின் சமனப் கிருதப் பேராசிரியராகவும் நீண்டகாலம் பணியாற்றியவர். வடமொழி யிலுள்ள இரகுவம்சம், வில்ஹனியம் என்னும் நூல்களை மணிப் பிரவாள நடையில் மொழிபெயர்த்தவர்.
சுப்பிரமணியபிள்ளையின் இன்னொரு சகோதரரான வ.குமார சாமிப்புலவர் இலக்கிய இலக்கணங்களில் வல்லவராக விளங்கிய துடன், கதைக்கும்போதும் இலக்கண மரபுப்படி கதைத்ததால் "இலக்கணக் கொட்டர்" என்று போற்றப்பட்டவர்.
கப்பிரமணியபிள்ளையின் சகோதரிகளில் ஒருவரே பார்வதி அம்மையார். வான்மீகி இராமாயணத்தைச் சமஸ்கிருதத்தில் வாசித்துத் தமிழில் விளக்கம் சொல்வதிலும் தொல்காப்பியம் முதலிய இலக் கனங்களைக் கதை சொல்வதுபோற் கற்பிப்பதிலும் வல்லவர். தமது உறவினர்களான பண்டிதை வாலாம்பிகை, பண்டிதை பத்மாசினி ஆகிய இருவரையும் தமது கற்பித்தல் மூலம் மதுரைத் தமிழ்ப் பண்டிதைகளாக்கியவர் பார்வதி அம்மையாரே. இவர்களில் வாலாம் பிகை பண்டித பரீட்சையில் அதிக புள்ளிகள் பெற்றுத் தங்கப்பதக்கம் பெற்றமையும் குறிப்பிடத்தக்கதாகும்.
சுப்பிரமணியபிள்ளையின் மகன்களில் ஒருவரே சைவப் பெரியார் க.சிவபாதசுந்தரனார். சுழிபுரம் விக்ரோறியாக் கல்லூரி அதிபராக நீண்டகாலம் பணியாற்றியவர். ஆம், 2 ஆம், 3 ஆம் சைவபோதங்கள், சைவசமயசாரம், அகநூல், அளவை நால் முதலிய பதினைந்து தமிழ் நூல்களையும், The Shaiva Sch00 LLLL LLLaLLLLLLLS S LLLLLCL LLL LLLLtCtLLLH TTTTT TTTS TTTT நூல்களையும் எழுதியவர். இத்தகைய தாய், தந்தை ஆகிய இருவருமே சிறந்த கல்விப் பாரம்பரியம் கொண்ட ஒரு குடும்பத் திலேயே மகாலிங்கசிவம் பிறந்தார்.

உஆராசிரியர் த. வி. ஆேற்சிகர்rை (1848 - 1930)
"DF"LIDOF's Fir арбоочшошөorrй
அரசடிப்பிரியார் பண்ரதுர் சர். சிலுரிதரிந்து7ைர் டி. துே. திருதுரிrைசம்பந்தப்பின்னை
(1878 - 1953) (1885 - 1955)

Page 13

2. சகோதரர்கள்
ம.க.வேற்பிள்ளை, மகேஸ்வரி தம்பதியினருக்கு திருஞான சம்பந்தர், மாணிக்கவாசகர், மகாலிங்கசிவம், கந்தசாமி, நடராசா என ஐந்து ஆண் பிள்ளைகள்.
இவர்களிலே திருஞானசம்பந்தர் மதுரைத் தமிழ்ச்சங்கப் பண்டிதர். “பண்டிதர் ம.வே. திருஞானசம்பந்தப்பிள்ளை” என்னும் பெய ரால் ஈழத்துத் தமிழ் உலகில் அறியப்படுபவர். இந்து சாதனம் பத்திரிகையில் உதவி ஆசிரியராக எட்டு வருடங்களும், பிரதம பத்திரிகாசிரியராக 32 வருடங்களும் பணியாற்றியவர். இப்பத்திரிகை யில் ‘உலகம் பலவிதக் கதைகள்” என்னும் தலைப்பில் இவர் எழுதி வந்த கதைகள் அக்காலத்திற் புகழ் பெற்றவை. இத்தலைப்பில் இவர் எழுதிய தொடர் கதைகள் கோபாலநேசரத்தினம், காசிநாதன் நேசமலர், துரைரத்தினம் நேசமணி என்னும் நாவல்களாக வெளிவந்தன.
இதுமட்டுமன்றி நாடக வளர்ச்சிக்கென வண்ணார்பண்ணை யில் சரஸ்வதி விலாசசபையை மேலும் சிலருடன் சேர்ந்து ஆரம்பித் தார். இச்சபையினர் மேடையேற்றிய எட்டு நாடகங்களில் ஆறு நாடகங்களை இவரே எழுதினார். இவர் எழுதிய நாடகங்களில் உருக்கு மாங்கதன், சகுந்தலை, மார்க்கண்டேயர், ஆரணியகாண்டம் என்பவை குறிப்பிடத்தக்கவை. தான் உரை எழுதிய நூல்களும், தொகுப்பு நூல்களுமாக நாற்பதுக்கு மேற்பட்ட நூல்களைப் பதிப் பித்த சிறந்த பதிப்பாசிரியராகவும் சம்பந்தர் விளங்கினார்.
இரண்டாவது மகனான மாணிக்கவாசகர் சிறந்த சட்டத்தரணி யாக விளங்கியவர். இலண்டன் பல்கலைக்கழகத்தில் சமஸ்கிருதம், தமிழ் என்பவற்றிலே சிறப்புக் கலைமாணிப் பட்டங்களைப் பெற்ற துடன் சிறந்த சமயப்பேச்சாளராகவும் விளங்கிய பண்டிதை அமிர்தாம் பிகை இவரது மகள் என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.
மகாலிங்கசிவத்தின் இளைய சகோதரர்களில் ஒருவரான கந்தசாமி கலைப்பட்டதாரி கொம்பனித்தெரு அரசினர் கல்லூரித் தலைமை ஆசிரியராகப் பணியாற்றியவர். மற்றையவரான நடராசா விஞ்ஞானப் பட்டதாரி. இளவாலை சென். ஹென்றிஸ் பாடசாலையில் நீண்டகாலம் விஞ்ஞான ஆசிரியராகப் பணியாற்றியவர். பண்டிதமணி சி. கணபதிப்பிள்ளைக்கு கேத்திரகணிதம், அட்சரகணிதம் என்பவற் றைக் கற்பித்தவர்.
03,

Page 14
3. ආගී6)]]
மகாலிங்கசிவம் சிறுவயதிலேயே இலக்கிய, இலக்கணங் களைத் தந்தையாரிடம் ஐயந்திரிபறக் கற்றார். தந்தையார் சிதம்பரம் நாவலர் பாடசாலைக்குத் தலைமை ஆசிரியராகச் சென்றுவிட்ட பின்னர் மாமனாரான சைவப்பெரியாரின் வழிகாட்டலிற் பிள்ளைகள் ஐவரும் வளர்ந்தனர். புலோலியிலே தாயாரின் உறவினர் விட்டிலே தங்கியிருந்து வேலாயுதபிள்ளை என்பவராலே தொடங்கப்பட்ட பாட சாலையிற் கல்வி கற்றனர். அவ்வேளை மகாலிங்கசிவம் பாட்டியரான பார்வதிஅம்மையாரிடம் தமிழை முறைப்படி கற்றார். ஆத்திசூடி முதற் பழமலை அந்தாதி வரை இவராற் கற்பிக்கப்பட்டன. சாவகச்சேரி ஆங்கிலப் பாடசாலையிலும் கற்றுள்ளார். தந்தையாருடன் தமிழகத் திலே தங்கியிருந்தும் கற்றுள்ளார்.
இவரது பன்மொழி அறிவு பற்றி "பண்டிதர் மகாலிங்கசிவம் தமிழில் மிக்க பாண்டித்தியம் வாய்ந்தவர். வடமொழியிலும் நல்ல அறிவுடையவர். ஆங்கிலமும் கற்றவர். ஹிந்தி, உருது, ஹிந்துஸ்தானி முதலிய பாஷைகளையும் பயின்றவர். இங்ங்னம் பல பாஷா ஞானி யாக விளங்கியமையால் அவர் அறிவு மிகவிரிந்து சுடர்கான்று விளங்கிற்று" என இந்துசாதனத்தில் துணைப்பத்திரிகாசிரியர் கூறு கின்றார். (1941 - 02-24)
4. கற்பித்தற்பணி
கற்றல் நிறைவு பெற்றதும் மகாலிங்கசிவம் மட்டுவிலிலே தந்தையாரால் ஆரம்பிக்கப்பட்ட காவிய பாடசாலையிலே இலக்கிய, இலக்கணங்களைத் திறம்படக் கற்பித்து வந்தார். இவரிடம் இங்கு கல்வி கற்றவர்களில் முக்கியமான இருவர் பண்டிதமணி சி. கணபதிப் பிள்ளையும், புலவர்மணி ஆ.பெரியதம்பிப்பிள்ளையும் ஆவர். பின்னர்
பண்டிதமணி நாவலர் பாடசாலையிற் கல்விகற்க வழிகாட்டியவரும் இவரே.
இதேபோல மட்டக்களப்பு மண்டுரைச் சேர்ந்த புலவர்மணி ஆ. பெரியதம்பிப்பிள்ளை மட்டுவிலுக்கு வந்து தமது வீட்டிலே தங்கி யிருந்து கல்வி கற்கவும், பின்னர் நாவலர் காவிய பாடசாலையிற் கற்கவும் வழிகாட்டியவரும் மகாலிங்கசிவமே. இவரது வீட்டிலே கிடைத்த உபசாரம் பற்றி,
04

மட்டுவில் உபசாரத்தில் மயங்கிவிட்டேன். மகாலிங்கசிவத்தின் இனிய தமிழ் விருந்தில் மெய்ம்மறந்த போனேன். வானர வீரர் மதவனத்திற் பெற்ற அனுபவம் போன்ற அனுபவம் எனக்கும் கிடைத்தத. அது தேன் சுவை. இத தமிழ்த்தேன் சுவை” எனத் தமது உள்ளதும் நல்லதும்” என்ற நூலிற் புலவர்மணி கூறுகிறார்.
சைவச் சிறார்கள் கல்வி கற்பதற்கு ஊர்கள் தோறும் பாட சாலைகள் நிறுவப்படவேண்டும் என்ற சைவப்பெரியார் சு.சிவபாத சுந்தரனாரின் வேண்டுகோளுக்கு இணங்கக் கந்தையா உபாத்தி யாயர் என்பவர் மூளாய் சைவப்பிரகாசப் பாடசாலையைக் கட்டினார். அங்கு கற்பிப்பதற்கு ஆசிரியர்கள் தேவைப்பட்டபோது சைவப் பெரியார் மகாலிங்கசிவத்தை அங்கு அனுப்பிவைத்தார். இங்கு அவர் ஆசிரியத்தொழில் புரிந்து கொண்டிருந்த வேளையில் சேர் பொன். இராமநாதன் அவர்களின் தொடர்பினால் மகாலிங்கசிவத்துக்கு மருத னார்மடம் இராமநாதன் கல்லூரியிற் கற்பிக்கும் வாய்ப்பு ஏற்பட்டது. இங்கு அவர் மூன்று வருடங்கள் தமிழாசிரியராகக் கடமையாற்றினார்.
பின்னர் 1929 இலிருந்து தான் இறக்கும்வரை ஏறத்தாழ பதினேழு வருடங்கள் இவர் கோப்பாய் ஆசிரியர் கலாசாலையில் விரிவுரையாளராகப் பணியாற்றினார். இக்காலத்தில் இவரிடம் கற்ற வர்கள் கவிஞர் செ. கதிரேசர்பிள்ளை, கவிஞர் யாழ்ப்பாணன், பண்டித மணி சி.கணபதிப்பிள்ளை, பண்டிதர் சு.அருளம்பலவனார், பலாலி ஆசிரியர் பயிற்சிக் கலாசாலைத் தமிழ் விரிவுரையாளராக இருந்த பண்டிதர் பொன். கிருஷ்ணபிள்ளை முதலிய பலராவர். இவரிடம் கற்றமை பற்றி,
"கோவை நகரிற் குலவுதமிழ் ஆசானாய்ச் சேவை புரிந்த திருவாளர் - காவலிலே ஓராண்டு காலம் உவந்ததிரு முன்னிலையிற் பாராட்டும் பைந்தமிழைப் பற்றினேன் - சீரான செய்யுள் செயுந்திறனும் செந்தமிழின் நாணயமும் மெய்யுணர்வி னோங்க விரித்தரைத்தார்."
எனக் கவிஞர் செ. கதிரேசர்பிள்ளை நினைவு கொள்கிறார்.
05

Page 15
5. கவிதைப்பணி
நல்லூர் சின்னத்தம்பிப் புலவரைப் போலச் சிறுவயதில் இருந்தே கவிபாடும் ஆற்றலுடையவராக மகாலிங்கசிவம் விளங்கி னார். பன்னிரண்டாவது வயதிலே பழனிப்பதிகம் பாடியதால் குருகவி என்ற பட்டத்தைப் பெற்றுக் கொண்டவர். எனினும் இவரது பழனிப் பதிகம் உள்ளிட்ட ஆக்கங்கள் பல பேணுவார் இன்றித் தொலைந்து போயின. இன்று கிடைக்கும் காமாட்சி அன்னை, புன்னெறிவிலக்கு முதலிய சில தனிப்பாடல்களையும், நூல்களுக்கு எழுதப்பட்ட பாயி ரங்களையும் அடிப்படையாகக் கொண்டே அவரது கவிதைப் பணி பற்றி ஆராய வேண்டியுள்ளது.
மகாலிங்கசிவம் கவிதை எழுதுவதற்கென ஒரு குறித்த நேர மின்றி எந்நேரத்திலும் கவிதை பாடக்கூடியவராக இருந்தார். அவரது இத்திறமை பற்றிப் பண்டிதமணி சி. கணபதிப்பிள்ளை அவர்கள், "கவி சமயம் என்று ஒரு சமயம் சொல்லுவார்கள். அந்தச் சமயம் சைவ சமயம் முதலிய சமய வகைகளைச் சேராதது. கவிஞன் ஒருவன் ஓர் உணர்ச்சி கைவந்த பிறகு அதன் பரிபக்குவ பருவம் நோக்கி, நன்றாகக் கனிந்துவிட்டது என்று கண்டபொழுது ஏற்ற சந்தர்ப்பங்கள் பாத்திரங்கள் நாடி அதனை இன்னும் பொறாது, பொறுக்கமுடியாது கருவுயிர்த்தற்குச், சொல்லுருவத்திற் கண்டுகளித்தற்கு முகஞ் செய் கிறான். அம்முகத்திற்குக் கவிசமயம் என்று பெயர்வைத்துக் கொள் வோம். அப்படி ஒரு சமயம் மகாலிங்கசிவத்திற்கு இல்லை. எந்தச் சமயமும் அந்தக் கவிஞருக்குக் கவிசமயமே. இருடி கருப்பத்திற்கு இனி என்ற வார்த்தை இல்லை. மகாலிங்கசிவத்துக்குப் பிறகு என்ற பேச்சில்லை" எனக் குறிப்பிட்டுள்ளார்.
மகாலிங்கசிவத்தின் கவிதைகள் என புன்னெறிவிலக்கு, காஞ்சி காமாட்சி அன்னை, இந்துமத - பெளத்தத்தொடர்பு என்னும் முன்று தலைப்புக்களில் அமைந்த கவிதைகளும், தந்தையாரின் ஈழமண்டல சதகத்திற்குப் பாயிரமாக வழங்கப்பட்ட ஒரு வெண்பா வும், சி. கணேசையரின் தொல்காப்பிய சொல்லதிகாரப் பதிப்புக்கு வழங்கப்பட்ட ஒரு பாடலும், மங்கையிவள் செல்லும் வழியில்..' எனக் கண்ணுவமுனிவர் சகுந்தலையை ஆசீர்வதித்து அனுப்புவதாக அமைந்த ஒரு பாடலும், சேர் பொன். இராமநாதன் பற்றிய இரு பாடல்களும் எனப் பன்னிரு பாடல்களே இன்று கிடைக்கின்றன. தான் செல்லும் வழியிற் சிரங்கின் காரணமாகச் சொறிந்து கொண்டி ருந்த ஒருவரைப் பார்த்துப் பாடிய,
06

குரங்கே உனக்கு மரந்தடிதான் என்ன குத்தகையோ? சிரங்கே உனக்கு நெடுந்தொடைதான் என்ன சீதனமோ?
என்னும் பாடலின் ஈரடிகள் மட்டுமே இன்று கிடைக்கின்றன.
இக்கவிதைகளிற் புன்னெறிவிலக்கு என்னும் கவிதை சமூகச் சார்புடையதாக உள்ளது. இதில் மூன்று வெண்பாக்கள் உள்ளன. தமது தமிழினத்தையும், தமிழ்மொழியையும், தாய் நாட்டையும் சிலர் தாழ்த்திப் பேசுகின்றனர். இதற்கு முற்பிறப்பிலே வேசியராக மானத்தை விற்று வாழ்ந்த அவர்களின் பழக்கதோசமே காரணம்' என முதல் வெண்பா கூறுகிறது. இரண்டாவது வெண்பா,
நாட்டுப் பொருள்இருக்க நாடாமல் அந்நியர்தம் நாட்டுப் பொருள்அழகை நாடுவதேன் - வீட்டுக் கொழுநன் அழகிலனென் றந்நியர்தம் கோலம் விழைகுநரும் உண்டுபுவி மேல்.
என அமைகிறது.
இதில் எமது நாட்டு உற்பத்திப் பொருள்கள் இருக்க எதற் காக அந்நிய நாட்டுப் பொருள்களில் மோகங்கொண்டு அலைய வேண்டும்? என வினா எழுப்பி அதற்குத் தனது கணவன் அழகில்லை என்று கருதிப் பிற ஆடவரை நாடுகின்ற பெண்களும் உள்ளனர் எனப்பதில் கூறப்படுகிறது.
முன்றாவது வெண்பா, சிலர் தமது உடலை அலங்கரிப் பதிலேயே பொன்னான நேரத்தை வீணடிப்பது ஏன்? எனக்கேட்டு அதற்குப் பனையிலிருந்து கிடைக்கும் பதநீரை இனிப்பாகச் செய் யச் சீனி தேவையில்லை. ஆனால் தேநீருக்குத்தான் சீனி தேவை எனக் குறிப்பாக விடைகூறுகிறது. இப்பாடல்கள் முன்றையும் தொகுத்து நோக்கும்போது, ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் அந்நிய நாகரிகத்தில் நாட்டங்கொண்டு தமதுநாடு, மொழி, பண்பாடு 61ன்ப வற்றைப் புறக்கணிப்பவர்களைச் சீர்திருத்தும் நோக்கத்துடனேயே இவை பாடப்பட்டமையை அறியலாம். -
ஏறத்தாழ மகாலிங்கசிவத்தின் சமகாலத்தில் வாழ்ந்தவரான பாவலர் தெ. அ. துரையப்பாபிள்ளையும்,
07

Page 16
செந்தமிழ் சற்றும் அறியாத ஆங்கிலர் சீர்மை இருந்திங்கு வந்தவர்போல் நந்தமி ழர்சிலர் செந்தமிழ் பேசிட நாணுகி றாரடி சங்கமின்னே
எனப் பிறமொழி நாட்டம் பற்றியும்,
எண்ணெய்க்குப் பதிலாய்ப் போடுகிறார் - வஸ்லின் எதற்கும்அந் நியப்பொருள் நாடுகிறார் கண்ணைக் கண்ணாடியால் முடுகிறார் - மோடி
காட்டும் போலிப்பொருள் தேடுகிறார்
என ஆடம்பர வாழ்வு அந்நியப் பொருள் நாட்டம் பற்றியும் பல பாடல்கள் இயற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும் (சிந்தனைச் சோலை).
சக்தியையே வழிபடும் சக்தி உபாசகரான மகாலிங்கசிவத் தின் 'காஞ்சி காமாட்சி அன்னை" என்னும் கவிதை அவரது இறை பக்தியை வெளிப்படுத்துவதாக அமைந்துள்ளது. “அன்னை தயை” என்னும் அவரது சிறுகதையும் சக்தியின் பெருமை கூறிச் சக்தியை வழிபடத் தூண்டுவதாக எழுதப்பட்டதே என்பதும் இப்பகுதியிலுள்ள சில கவிதைகள், சிறுகதையிலும் இடம்பெற்றதும் குறிப்பிடத்தக்க தாகும். இக்கவிதைகளிற் பின்வரும் விடயங்களை அவதானிக்கக் கூடியதாக உள்ளது.
1. சக்தியின் தோற்றப்பொலிவை வருணித்தல் :
"பாலரவி பலகோடி செஞ்சுடர் விரித்தெனப் படர்ஒளிசெய் திருமேனியும்"
"கோலமுறு பவளவாயும் கொவ்வை இதழ்களும்
குறுநகையும் மலர்வதனமும்"
"மார்பின்முத் தாரமும் பதக்கமும் கைம்மலர்
மணிக்கடக மும்கிள்ளையும் "
08

2. சக்தியின் பலவகை நாமங்களைக் கூறித் துதிததல் :
"அன்னபூ ரணைவனிதை ராஜராஜேசுவரி
அமலைதிரி புரசுந்தரி
அற்பதை விசாலாட்சி சிற்பரை மகேசுவரி அபிராமி மனாட்சி. fy
3. தனது பக்தியையும், வேண்டுதல்களையும் புலப்படுத்தல்:
'மணமான தன்திவ்ய தேஜோம யானந்த
வடிவில்தி ளைத்தல் வேண்டும்
வாக்கான தனதமிர்த நாமசங் கீர்த்தனம்
மதரமொடு புரிதல் வேண்டும்
கனமான நின்றிசக்ர பூஜைகள் எனது
கண்இணைகள் காண வேண்டும்."
அவரது “இந்துமத - பெளத்தத் தொடர்பு” என்னும் கவிதை பெளத்த சமய எழுச்சியால் இந்துமதம் பாதிக்கப்படுமோ என்று அக் காலத்திலே கலங்கியவர்களுக்கு விடை கூறுவதாக அமைந்துள்ளது: ‘இந்துமதம் பலமதங்களையும் தன்னுள் அடக்கிய பெருஞ் சமுத்திரம் போன்றது. எந்த மதத்தாலும் இதுவரை வலிமை கெடாது வளர்ந்து வந்தது. பெளத்தமதம் இந்துமதத்திலிருந்தே தோன்றியது. எனவே மகளான பெளத்தம் தாயாகிய இந்துமத வளர்ச்சிக்குத் தடையாக அமையாது" என இக்கவிதையிற் கூறப்படுகிறது.
மகாலிங்கசிவத்தின் தனிப்பாடல்களில் ஒன்றாக அமைந்து, அவர் பற்றிப் பேசுபவர்களாலும், எழுதுபவர்களாலும் விதந்து குறிப் பிடப்படுவது,
மங்கையிவள் செலும்வழியில் நறுந்தருக்கள்
நிழல்செய்த மலிக, மற்றும் பொங்குமணல் தாமரையின் பொலந்தாது
போற்பொலிக, புனித வாவி எங்குமலர்ந் திலங்கிடுக. மந்தமா
ருதம்வீச, இனிய தோகை யும்குயிலும் தணையாக அறுதொடர்க்கண்
உகரம்போல் உறுக தாரம்
என்னும் பாடலாகும்.
09

Page 17
சகுந்தலை கணவனான துஷ்யந்தனிடம் செல்வதற்காகக் கண்ணுவமுனிவரிடம் விடைகேட்கிறாள். அப்போது கண்ணுவர் அவளை வாழ்த்தி வழியனுப்புவதாக இப்பாடல் அமைந்துள்ளது. "நீ செல்கின்ற இடங்களில் வாச மரங்கள் நிழல்செய்யட்டும். வெப்பமான மணலும் தாமரைப் பூவின் மகரந்தப் பொடிகள் போலக் குளிரட்டும். வாவிகள் எங்கும் இருக்கட்டும். மந்த மாருதம் வீசட்டும். மயிலும் குயிலும் துணையாக வரட்டும். நீ செல்லும் தூரம் குற்றியலுகரம் போல இருக்கட்டும்" என்பது இப்பாடலின் பொருள். இதன் உயிரும், சிறப்பும் "அறுதொடர்க்கண் உகரம்போல உறுக தூரம்" என்னும் அடியினுள்ளேதான் இருக்கிறது. சாதாரண உகரம் (உ) 1 மாத்திரை அளவுடையது. அது தனிக் குற்றெழுத்தல்லாத மற்றைய எழுத்துக் களின் பின் சொல்லின் இறுதியில் வல்லின மெய்யில் ஏறிவரும்போது குற்றியல் உகரம் ஆகும். அப்போது அது தனக்குரிய 1 மாத்திரை அளவிலிருந்து குறைந்து ஒலிக்கும். இக்குற்றியலுகரம் தனக்குரிய மாத்திரையில் இருந்து குறைந்து ஒலிப்பதைப் போல நீ செல்லும் இடமும் தனக்குரிய தூரத்திலிருந்து குறைந்து விளங்கட்டும் என்பது இவ்வாழ்த்தினுள் அடங்கியிருக்கின்ற சிறப்பு.
இச்சிறப்பினைப் பாராட்டிக் கூறும் பண்டிதமணி சி. கணபதிப் பிள்ளை அவர்கள்,
"ஆச்சிரமத்திலிருந்து கணவன் வீட்டுக்குச் செல்ல விடை வேண்டி நின்ற சகுந்தலையைக் கண்ணுவர் ஆசீர்வதித்து வழிய னுப்பு கின்றார். இச்சந்தர்ப்பம், சாகுந்தல நாடகத்தில் மிகப்பிரசித்தி யான காளிதாச மகாகவியின் காவியரசம் ஒழுகி வழியுமிடம், மங்கை யிவள் என்ற கவி சந்தர்ப்பத்தை மனத்தில் இருத்திக் கொண்டு இயற்றியது ; மொழிபெயர்ப்பன்று , ஆசுகவி பாட்டின் இறுதியிலே, 'அறுதொடர்க்கண் உகரம்போ லுறுக தூரம்' என்பது சொந்தக் கற்பனை.
கணவன் பிரிவினால் நீண்டு நடக்கிற வழியைச் சகுந் தலைக்குச் சோர்வு பிறவாத பிரகாரம் கண்ணுவர் மூலம் அழுகு செய்தமைக்கிறான் காளிதாச மகாகவி காளிதாசன் வழி அழகு செய்யும் போது, அஃது எத்துணை நீண்டவழியும் அளபெடையா காதே என்று சங்கநாதம் செய்கிறது மஹாலிங்கசிவத்தின் குற்றிய லுகரக் கற்பனை என்கிறார். (இலக்கியவழி பக் - 92)
தான் கூறவந்த விடயத்தை உவமை, உருவகம் முதலிய அணிகளைப் பயன்படுத்திக் கூறுவது மகாலிங்கசிவத்திடமுள்ள சிறப் பம்சங்களில் ஒன்றாகும்.
10

"பாலரவி பலகோடி செஞ்சுடர் விரித்தெனப்
படரொளிசெய் திருமேனி"
"கோலமுறு பவளவா யும்கொவ்வை இதழ்களும்
குறுநகையும் மலர்வதனமும்"
முதலிய பகுதிகளில் உவமை அணிகளைக் காணலாம்.
கவிதைகளை விடச் சிறுகதையிலேயே உவமைகள் ஒன்றன் பின் ஒன்றாகத் தொடர்ந்து வரும் சிறப்பினைக் காணலாம்.
"ஒருவன் கம்பீரமான தோற்றமும் சுந்தரவதனமும் தாமரை மலர் நெருப்புப் பொறிகக்குவது போல அனற்பொறிபறக்கும் கண்ணு முடையனாய் யமகிங்கரன்போல அதட்டிக் கொண்டு துரத்திச் செல்ல மற்றையவன் பருந்தைக் கண்டு அஞ்சியோடும் கோழிக்குஞ்சு போல வேகமாய்த் தப்பிப்பிழைக்க ஓடுகிறான்."
"பன்னாளாய்ப் பசியால் வாடிய வறியானொருவன் அன்னக்கொடை கேட்டு ஆத்திரப்பட்டுச் செல்வதுபோல.
என்னும் பகுதிகளில் உவமைச் சிறப்பினைக் காணலாம்.
இன்று கிடைக்கின்ற பாடல்கள் குறைவாக இருந்தாலும் அவற் றிற் பலவகையான யாப்புக்களைக் குருகவி பயன்படுத்தியுள்ளமை யைக் காணலாம். தொல்காப்பியம் சொல்லதிகாரம் கணேசையர் பதிப்புக்கு வழங்கப்பட்ட சிறப்புப்பாயிரம் 14 சீர் ஆசிரிய விருத்தமாக அமைந்துள்ளது. "காஞ்சி காமாட்சி அன்னை" முதல் நான்கு பாடல் களும் "இந்துமத பெளத்தத் தொடர்பு" பாடலும் பன்னிரு சீர் ஆசிரிய விருத்தங்களாக உள்ளன. அறுசீர் விருத்தம், கட்டளைக் கலித்துறை, வெண்பா ஆகிய யாப்புக்களும் இவராற் பயன்படுத்தப்பட்டுள்ளன. இவற்றுள் வெண்பா யாப்பே அவராற் சிறப்பாகக் கையாளப்பட் டுள்ளதெனலாம்.
தம்முடைய சாதியையும், தம்முடைய பாசையையும் தம்முடைய நாட்டினையும் தாழ்த்தரைப்பார் - புண்மைஎன்னே? வேசிராய் முற்பிறப்பில் மானத்தை விற்றுண்ட நீசசு பாவம் நினை. என்னும் வெண்பா அவரது இயல்பான கவிதை ஓட்டத்துக்குச் சான் றாக அமைகிறது.
11

Page 18
"சீலமுறம் அன்பர்தம் தஞ்சரஞ்சித கஞ்ச செஞ்சரண செல்வங்களும் செங்கமல வல்லியும் வெண்கமல மெல்லியும்
"காந்தர்தா மாட்சிநினை வாய்ந்தகா மாட்சிபுனை
காஞ்சிகா மாட்சி அனையே"
முதலிய பாடலடிகள் அவரது சந்தச் சிறப்புக்கும், சொற் பயன் பாட்டுக்கும் எடுத்துக்காட்டுக்களாக உள்ளன.
6. சிறுகதைப்படைப்பு
மகாலிங்கசிவத்தின் சிறுகதையாக அன்னை தயை என்னும் சிறுகதை ஒன்றே இன்று கிடைக்கிறது. இக்கதை 1939 ஆம் ஈழகேசரி ஆண்டு மலரில் வெளிவந்துள்ளது. இதனை ஒரு சிறுகதையாக முதன் முதலில் இனங்கண்டவர் மயிலங்கூடலூர் பி. நடராசனே. இது தொடர்
IIT65,
"தமிழகத்தில் டாக்டர் உ. வே. சாமிநாதையர் போன்ற பண்டி தர்கள், தாமும் சிறுகதை என்ற இலக்கிய வடிவத்திற் பங்கு கொண் டிருந்தனர். சாமிநாதையரின், "தருமம் தலைகாக்கும்" என்ற சிறுகதை விமர்சகர்கள் சிலரால் விதந்துரைக்கப்பட்டு வருகின்றது. அதேபோல் ஈழத்திலும் இலக்கிய கலாநிதி பண்டிதமணி சி. கணபதிப்பிள்ளை, குருகவி ம. வே. மகாலிங்கசிவம் ஆகியோர் சிறுகதைகளை எழுதியுள் ளனர் என்பது வியப்பிற்குரியது. பண்டிதமணி ஈழகேசரியில் 1938 ஆம் ஆண்டு நவபாரதம்" என்ற சிறுகதையை ஜ்யோதிர் மகிஷம் சாதேவ சாஸ்திரியார்' என்ற புனைபெயரில் எழுதியுள்ளார்.
ஆடலிறை மயிலங்கூடலூர் பி.நடராசன் என்பவர் ஈழகேசரி ஆண்டுமலர் 1939 இல் குருகவி ம.க.வே. மகாலிங்கசிவம் அவர்களால் எழுதப்பட்ட "அன்னை தயை" என்ற படைப்பினைத் தக்கதொரு சிறுகதையாக அடையாளங் கண்டுள்ளார். சமயச் சார்புக்கதை எனி னும் உருவமும் உள்ளடக்கமும் சமுகச் சார்பும் இதனைத் தக்க தொரு சிறுகதையாக்கி உள்ளன என்பது அவரின் கருத்தாகும்" எனச் செங்கைஆழியான் குறிப்பிடுகிறார் (ஈழத்து முன்னோடிச் சிறு கதைகள். பக் - XXi) ܗܝ
"அன்னை தயை" என்னும் இக்கதை,
12

"ஜெயபுரத்தின் கண்ணே நீண்டதோர் தெருவுள்ளது. நல் வினை, தீவினை பற்றிவரும் பல்வேறு வகைப்பட்ட சுக, துக்க நிலை யைக் கடந்து செல்லும் மக்கள் வாழ்க்கைபோல அத்தெருவும் குளிர்ந்த நிலம். உஷ்ண நிலம், செழிப்பு நிலம், வரண்ட நிலம் முதலிய பலவகை நிலங்களையும் கடந்து செல்வதாகும்" எனத் தொடங்குகிறது. இத்தெருவில் சுப்பமூர்த்தி என்னும் கொடியவன் கோபாலன் என்பவனைக் கூரிய கத்தியுடன் கலைத்துச் செல்கிறான். கோபாலன், "ஆவி அகத்ததோ புறத்ததோ என்பது மட்டுமல்ல தலை விழுந்ததோ இல்லையோ என்று கையால் தடவிப் பார்த்துக்கொண்டு" ஒடுகிறான். சுப்பமூர்த்தி கோபாலனின் மனைவியை அடைய முயன்ற மையே இப் பிரச்சினைக்குக் காரணமாகும். சுப்பமூர்த்தி கோபால னைப் பிடித்துக் கழுத்தை வெட்டமுயலும்போது அருகில் உள்ள நீர்நிலையில் உடை தோய்த்துக் கொண்டிருந்த பெண்கள் புவனேஸ் வரி, லலிதாம்பிகை, திரிபுரசுந்தரி முதலிய தமது பெயர்களை அழைத்து உரையாடுகின்றனர். இறைவியின் இப்பெயர்களைக் கேட்டதும் சுப்பமுர்த்தி பக்திப் பரவசத்தனாகுவதும், மனந்திருந்து வதுமே கதையின் முக்கிய சம்பவங்களாகும்.
இக்கதை சக்தியின் பெருமையைக் கூறுவதாகச் சமயக் கண் ணோட்டத்தில் அமைந்ததாகும். கதைத் தொடக்கம், கதை வளர்த்துச் செல்லும்முறை, முடிவு என்பவற்றை நோக்கும் போது தமிழின் ஆரம்ப காலச் சிறுகதைகளிற் காணப்பட்ட பல அம்சங்களை இக் கதையிலும் காணமுடிகிறது. எனவே இது ஒரு சிறுகதைதான் என்ற மயிலங்கூடலூர் பி.நடராசன் கருத்தை ஏற்றுக்கொள்ளலாம் போலவே தோன்றுகிறது. எனினும் 1935களிலிருந்து வெளிவரத் தொடங்கிய ஈழத்துச் சிறுகதை முன்னோடிகளான இலங்கையர்கோன், சம்பந்தர், சி. வைத்தியலிங்கம் போன்றோரின் சிறந்த கதைகளில் உள்ள தரத்தை இக்கதை எட்டவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.
7. (BLI&fifITGITITTö...
மகாலிங்கசிவம் நகைச்சுவையாகப் பேசவல்ல சிறந்த பேச்சாளராகவும் விளங்கினார்.
"காந்தியமா, சக்தி வழிபாடா, கம்பராமாயணமா, திருக்குறள் விளக்கமா, சொல்லாராய்ச்சியா எதுவானாலும் முன் ஆயத்தமெதுவு மின்றித் தொட்டனைத் தூறும் மணற்கேணி போலக் கற்பனைச் சுரங் கத்திலிருந்து அனாயாசமாக அள்ளி அள்ளித் தன் மேடைப் பேச்சு
13

Page 19
மூலம் வாரிவழங்கியவர்தான் மகாலிங்கசிவமவர்கள்" என ஈழகேச வெள்ளிவிழா மலர் கூறுகிறது. அக்காலத்தில் நடைபெற்ற பல்வேறு இலக்கிய, சமய மாநாடுகள் தமிழ் அறிஞர்களைப் பாராட்டும் விழாக்கள் என்பவற்றிலும் இவர் உரையாற்றியுள்ளார். ஏனையவர்கள் பேசும்போது பல்வேறு வேலைகள் காரணமாக வெளியில் நிற்பவர் களும் மகாலிங்கசிவம் பேசுகிறார் என்றால் உள்ளே வந்துவிடுவார்கள் எனப் பண்டிதமணி சி.கணபதிப்பிள்ளை அடிக்கடி குறிப்பிடுவார்.
மகாலிங்கசிவத்தின் பேச்சுக்களிற் பலராலும் விதந்து குறிப் பிடப்படுவது அவர் சேர் பொன். இராமநாதன் அவர்களை வரவேற்றுப் பேசிய பேச்சாகும். இந்நிகழ்வினைப் பண்டிதமணி சி.கணபதிப் பிள்ளை அவர்கள், "1926 ஆம் ஆண்டு சந்திரமெளலீச வித்தியா சாலையில் ஒரு பெருவிழா. சேர் பொன். இராமநாதன்துரைக்கு வெகு சிறப்பானதொரு வரவேற்பு. விழாவின் கோலாகலம் சொல்லுந்தர மன்று. சட்டசபைப் பிரதிநிதிகள், சட்ட நிபுணர்கள், பாரிய பிரமுகர்கள் அத்தனை பேருஞ் சமுகமளித்தனர். சைவப்பெரியார் திரு. சு. சிவபாத சுந்தரம் அவர்கள் முதனாளே வந்துவிட்டார்கள். வரவேற்பு உபந் நியாசம் நிகழ்த்தியவர் மகாலிங்கசிவம். சர்க்கரைப் பந்தலில் தேன் மாரி பொழிவதாயிருந்தது அன்று அவர் நிகழ்த்திய பிரசங்கம். சேர் பொன். இராநாதன்துரை தர்மபத்தினியாரோடு எளிவந்த அருமை பெருமையை மகாலிங்கசிவம் எடுத்து வர்ணித்த போது, வருணனை வெள்ளத்துள் மூழ்கி விளையாடத் தொடங்கிவிட்டார் சேர்பொன். இராமநாதன்துரை. இடையிற் சிறிதுநேரம் மகாலிங்கசிவத்தை நிறுத்தி விட்டுச் சிவத்தின் புலமை விசித்திரத்தை வாயாரப் புகழ்ந்து வரு ணிக்கத் தொடங்கிவிட்டார் முதுபெருங் கிழவனார் இராமநாதன்துரை. அன்று நடந்த அந்தக் கூட்டத்தின் சிறப்பை இன்றுவரை நான் கண்ட தில்லை என மிகுந்த உணர்ச்சியோடு எழுதியுள்ளார். (பக்கம், 22 மட்டுவில் தந்த பண்டிதமணி சி.க - இ. சிதம்பரப்பிள்ளை)
அக்காலத்தில் யாழ்ப்பாணத்தில் இடம்பெறும் விழாக்களில் இவர் பெற்ற முக்கியத்துவத்தை,
"ஆரிய திராவிட பாஷாபிவிருத்திச் சங்க வருடாந்த விழா விலோ, இலங்கை இந்து மகாநாட்டிலோ, அகில இலங்கை இந்து மகாநாட்டிலோ, ரீராமகிருஷ்ண பரமஹம்சர் தினத்திலோ, பூரீ விவே கானந்தர் விழாவிலோ மற்றெந்தக் கூட்டத்திலோ அவர் பேசாது விட்டது கிடையாது. அவர்தம் விரிவுரைகளால் அணிசெயப் பெறாத அவைகள் யாழ்ப்பாணத்தில் இல்லையென்று சுருங்கச் சொல்லிவிட லாம். இந்தியாவிலிருந்து காலத்துக்குக் காலம் வந்து திரும்பிய
14

அறிஞர்களுடைய விரிவுரைகளையெல்லாம் பண்டிதர் மகாலிங்கசிவம் அவர்களது விரிவுரை விஞ்சி நின்றதை யாம் கண்டும் கேட்டும் மகிழ்ந்தோம்" என இந்துசாதனத்தில் துணையாசிரியர் எடுத்துக் காட்டுகிறார். (24.2.1941 - ப. 2)
நகைச்சுவையாகப் பேசுவதில் மட்டுமன்றி உரையாடுவதி லும் மகாலிங்கசிவம் வல்லவர். கூட்டமொன்றிலே பேசிக்கொண்டி ருந்த ஒருவர் பேச்சுவராமல் தடுமாறிக் கொண்டிருந்தார். அதைப் பார்த்த மகாலிங்சிவம் வெளியே செல்ல எழுந்தார். அப்போது ‘ஏன் வெளியே செல்கிறீர்கள்? எனக்கேட்ட பண்டிதமணிக்கு அவர் கூறிய பதில், ‘ஒருவன் தண்ணீருக்குள் விழுந்து தத்தளித்துக் கொண்டிருக் கிறான். அதைப் பார்த்துக்கொண்டிருக்க வேண்டுமா? என்பதாகும்.
இதைப்போலவே பண்டிதமணி அவர்கள் நாவலர் பாடசாலை யிற் பண்டித வகுப்பிற் படித்துக் கொண்டிருந்தார். அவ்வேளை அங்கு வந்த மகாலிங்கசிவம், “இந்தப் பண்டிதப் பட்டத்தோடு படிப்பிப்பதில் ஒரு சுகமும் இல்லை. அகத்தியர், தொல்காப்பியர் படிப்பிக்க வந்தாலும் இந்த இருபது ரூபாதான். இது ஒரு பிச்சைக்கார உத்தியோகம். நீ ஆசிரிய பயிற்சிக் கல்லூரிக்குப் போவதற்கு முயற்சிசெய்" என்று நகைச்சுவையா கக் கூறிப் பண்டிதமணி ஆசிரிய பயிற்சிக் கலாசாலைக்குச் செல்ல வழிகாட்டினார்.
8. புராண படனம்
புராணபடனம் செய்வதில் அக்காலத்தில் ம.க. வேற்பிள்ளை புகழ்பெற்றவராக இருந்தார். இன்றுவரை ஆலயங்களிலே திருவாத வூரடிகள் புராணம் படிப்பவர்கள் அவரது உரையையே பின்பற்றுவது வழக்கம். தந்தையின் புராணபடன மரபைப் பின்பற்றி மகாலிங்க சிவமும் ஆலயங்களிற் புராணபடனம் செய்துள்ளார். எனினும் புராண படனம் பற்றி ஆதாரபூர்வமாக ஒரு தகவல் மட்டுமே கிடைக்கிறது.
"மட்டுவில் அம்மன் கோயில் மடத்தில் புராணப்படிப்பு வருடா வருடம் நடைபெறும். உரையாசிரியர் ம.க. வே. அவர்கள் மாணவர் வந்து கூடுவார்கள். திருவாதவூரர்புராணம், கந்தபுராணம் என்பவை களுக்குப் பதவுரை, விசேடவுரை வியாக்கியானங்கள் நடைபெறும். இவைகளைக் கண்டுகளிக்க இரசிகர் கூட்டம் கூடிவிடும். பண்டிதர் மகாலிங்கசிவம் பயன் சொல்லுகிறார் என்றால் அயற்கிராமங்களி லிருந்தும் பயன்காரர் கேட்பதற்கு வந்துவிடுவார்கள். அவரது உரை புதுமை நிறைந்தது. ஒரு செய்யுளுக்கு மற்றவர்களிலும் மூன்று நாலு
5

Page 20
மடங்கு நேரம் அவருக்கு உரை விரிக்கத் தேவைப்படும். இவரது நயங்கனிந்த பயன் பண்டிதமணியின் மனசில் புல்லரித்துப் பேரெ ழுச்சியை உண்டுபண்ணும்" என இ.சிதம்பரப்பிள்ளை அவர்கள் நினைவு கூருகிறார். (மட்டுவில் தந்த பண்டிதமணி சி.க. பக். 7)
9. குரும்பவாழ்வு
மகாலிங்கசிவம் மாவிட்டபுரத்தைச் சேர்ந்த வயிரமுத்துவின் புதல்வி அருமைமுத்துவைத் திருமணம் செய்தார். இவர்களுக்கு உமா மகேஸ்வரி, கமலாதேவி, பிரபாவதி என்னும் மூன்று மகள்களும் பார்வதி நாதசிவம் என்னும் மகனும் பிறந்தனர்.
இவர்களில், அண்ணாமலைப் பல்கலைக்கழக M.A. பட்டதாரி யான பிரபாவதி கந்தரோடை, ஸ்கந்தவரோதயக் கல்லூரியிலும், மருதனார்மடம் இராமநாதன் கல்லூரியிலும் தமிழாசிரியராகக் கடமை யாற்றியவர். எனினும் தமது திறமைகள் வெளிப்படுமுன்னர் சிறு வயதிலேயே மரணமடைந்துவிட்டார்.
மகாலிங்கசிவத்தின் மகனான புலவர் ம. பார்வதிநாதசிவம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்திற் புலவர்பட்டம் பெற்றவர். இரண்டு வரம்வேண்டும், இருவேறு உலகம், இன்னும் ஒரு திங்கள், பசிப்பிணி மருத்துவன், மானம் காத்த மறக்குடி வேந்தன் ஆகிய ஐந்து கவிதைத் தொகுதிகளைத் தந்தவர். இவற்றில் இருவேறு உலகம் சாகித்திய மண்டலப் பரிசையும் இன்னும் ஒரு திங்கள் யாழ். இலக் கிய வட்டப் பரிசையும் பெற்றமை குறிப்பிடத்தக்கதாகும். ம.க.வேற் பிள்ளை பரம்பரையின் தொடர்ச்சியாக இன்றும் வாழ்ந்து கொண்டி ருப்பவர்.
மகாலிங்கசிவத்தின் குடும்பம் பற்றி,
*யாழ்ப்பாணத்திலே நான் ஆசிரியத் தொழில் நடத்திய காலத்திலும், அதற்கு முன்னும் பின்னும் மகாலிங்கசிவத்தின் உடன்பிறந்தாரையும் சுற்றத் தார் பலரையும் கண்டுபழகி உறவு பூண்டேன். ஆடவர், பெண்மக்கள் ஆகிய அனைவரும் சிறந்த தமிழ்ப் புலமை எய்தியிருப்பதை நோக்கி, மகாலிங்க சிவம் பிறந்த குடும்பமே புலவர் குடும்பம் எனத் தீர்ப்பிட்டேன்’ எனச் சுவாமி விபுலாநந்தர் அவர்கள் கூறியது இங்கு நினைவிற் கொள் ளத்தக்கதாகும்.
இத்தகைய சிறப்புக்கள்மிக்க குருகவி ம.வே. மகாலிங்கசிவம் 17.02.1941 இல் அமரரானார்.
16

குருகவியின் ஆக்கங்கள்
கவிதைகள்
1. புன்னெறி விலக்கு
திம்முடைய சாதியையும் தம்முடைய பாசையையும் தம்முடைய நாட்டினையுந் தாழ்த்தரைப்பார் - புன்மையென்னே வேசியராய் முற்பிறப்பில் மானத்தை விற்றுண்ட நீச சுபாவம் நினை.
நாட்டுப் பொருளிருக்க நாடாமல் அந்நியர்தம் நாட்டுப் பொருளழகை நாடுவதேன்? - வீட்டுக் கொழுநன் அழகிலனென் றன்னியர்தங் கோலம் விழைகுநரும் உண்டுபுவி மேல்.
அற்பகலா யாக்கைக் கலங்காரஞ் செய்வதினாற் பொற்பகலா நேரநிதி போக்குகின்றார் - சிற்சிலரேன் தீங்கில்பத நீருக்கேல் சீனிகைக்கும் தேநீர்க்கேல் ஆங்கமைவ தென்றே அறி.
17

Page 21
2. பிள்ளைக்கவி என் பிதா
செய்தபிழை யெல்லாஞ் சிவனே பொறுத்தருளி உய்யஅருள் செய்யெனும்வாக் குள்ளுறையால் - பெய்தளித்தார் வெள்ளைக் கவியாண் விதமெளலிக் கொண்சதகம் பிள்ளைக் கவிஎன் பிதா,
(தந்தையாரின் ஈழமண்டலச் சதகத்துக்கு வழங்கப்பட்ட சிறப்புப் பாயிரம்)
3. காஞ்சிகாமாட்சி அன்னை
பலரவி பலகோடி செஞ்சுடர் விரித்தெனப்
படர்ஒளிசெய் திருமேனியும் பரிவுடன் பெற்ற சீவர்க்கெலாம் பேர்அருள்
படைக்கும் கடைக்கண்களும் கோலமுற பவளவா யும்கொவ்வை இதழ்களும்
குறுநகையும் மலர்வதனமும் குலவுநாற் கையும்அக் கையினிற் பாசாங்
குசம்சிலை, மலர்கணைகளும் சீலமுறம் அன்பர்தம் தஞ்சரஞ் சிதகஞ்ச
செஞ்சரண செல்வங்களும் செங்கமல வல்லியும் வெண்கமல மெல்லியும்
சேவைசெய் பாராட்டும்எக் காலமுறும் சிறியனிரு கண்ணைவிட் டகலாத
காட்சிதந் தருள்புரிகுவாய் காந்தர்தாம் மாட்சிநினை வாய்ந்தகா மாட்சிபுனை
காஞ்சி மாட்சி அனையே!
米 米 米
18

மதிவதன சோபையும் முத்தமூக் குத்தியும் மகிழ்பவள வாய்முறவலும் மார்பின்முத் தாரமும் பதக்கமும் கைம்மலர் மணிக்கட மும்கிள்ளையும் ததிபெறும் காதினிற் சுடர்மணிக் குழைகளும் தய்யநண் இடைமின்னலும் சோதிமய மானபட் டாடையும் திசையெலாம்
சுடர்தங்க ஒட்யாணமும் பதமலரில் அசைகின்ற பாடகம் தண்டையும்
பாதவிரல் சேர்மோதிரப் பணியுமரு ணாதித்ய ரூபப்ர காசமும்
பாவியேன் உளமுழுவதம் கதவிநிர்அ திசயமாம் ஆனந்தம் மூழ்கவே
காட்சிநீ தருவதென்றோ? காந்தர்தாம் மாட்சிநினை வாய்ந்தகா மாட்சிபுனை
காஞ்சிகா மாட்சி அனையே!
冰 来 本
அன்னபூ ரணைவனிதை ராஜரா ஜேசுவரி
அமலைதிரி புரசுந்தரி அற்பதை விசாலாட்சி சிற்பரை மகேசுவரி
அபிராமி மீனாட்சிஎன் சென்னிஅணி மலரடிச் சிவகாம சுந்தரி
நீசக்ர ரதநாயகி சிந்தா மணிக்கிருஹ காமேசு வரிபரம
சிவமனோ ஹரைலட்சுமி மண்ணுசா முண்டிசண் டிகைதர்க்கை மாதங்கி
மந்தாசோ டசியம்பிகை வாமகுசங் ஹிதவி ணாவரதை சங்கீத
மாதருகை பார்வதியருட் கன்னிமுதல் நாமங்கள் சொற்றடிய னின்னைக்
கருத்திடை இருத்தவசமோ? காந்தர்தா மாட்சிநினை வாய்ந்தகா மாட்சிபுனை
காஞ்சிகா மாட்சி அனையே!
ck k sk
19

Page 22
மனமான தன்திவ்ய தேஜோம யானந்த
வடிவில்திளைத் தல்வேண்டும் வாக்கான தனதமிர்த நாமசங் கீர்த்தனம்
மதரமொடு புரிதல்வேண்டும் கனமான நின்றி சக்ரபூஜை கள்எனத
கண்இணைகள் காணவேண்டும் கரமான அம்பிகைநின் ஆலயத் தெதிர்சென்று
காதலிற் குவிதல்வேண்டும் தனமான நின்அருட் பஞ்சதசி மந்திரம்
தவறாமல் ஓதவேண்டும் சந்ததமும் அம்மனிதன் கிருபா கடாட்சமே
தஞ்சமென்றுணர் தல்வேண்டும் கனமான பந்தியைச் சிந்தியெம் புந்திவரு கந்தம்உந் தங்குந்தளக் காந்தர்கா மாட்சிநினை வாய்ந்தகா மாட்சிபுனை
காஞ்சிகா மாட்சி அனையே!
அதிசீ தளஅமிர் தப்பிர வாஹ அதல்யகங்கா நதிபாய்தல் கண்டும் வைந்தாக சந்தாப நலிவுறவோ விதிசேருங் காஞ்சியிற் காமாட்சி தேவி விளங்கிடவும் கதியா தெனச்சென்ம வெங்கோடை யால்என் கலங்குவதே?
:k k k sk
ஆயும் பலபல தெய்வங்கள் நோக்கி அவற்றையெல்லாம் பேயும் பிசாசும் எனவெறுத் தேன்பத்திப் பித்துடையோர் தோயுங் கருணைக் கடலே திரிபுர சுந்தரியே தாயும் பிறருஞ் சரியோ தனயரைத் தாங்குதற்கே?
· i vičo
米 来 米 米 率
20

புன்னெறிக் குருகிப் பாயும் புலைமதிக் கொளியைக்காட்டி நன்னெறி மெல்லச் செல்லத் தாய்மைநல் அருளைநல்கி என்னையும் அடியன் ஆக்கற் கெளிவரும் தருமச்செல்வி அன்னையாம் லலிதா தேவி அடியிணைக் கமலம்போற்றி.
米 水 米 米
ஒதரிய என்குற்றம் எல்லாம் ஒழித்தருளிப் பாதம் பணியப் பரிசருள்வாய் - பூதத்
திடைக்கலந் தாயே இடர்க்குடைந்தேன் ஏழை அடைக்கலம் தாயே அருள்.
4. இந்துமத - பெளத்தத் தொடர்பு
Dன்னிவளர் இந்தியா தேசமே இந்துமத
மாதேவி வாழுமிடமாம் மாசற்ற திவ்யதரி சனமுடைய கடவுளர்
வளர்த்தஅம் மதம்அந் (நி)யமென்று உன்னவரு பன்மத நதிக்குலங் களையுண்டு
வற்றாத பேராழியாம் ஒருமதத் தாலும்அது வலிகெடா தெனினும்இக்
காலத்தில் ஒழிகுடதிசைப் பின்னமுறு மார்க்கங்கள் இடர்புரிய நம்மதம்
பெற்றபெண் அரசியாகிப் பெயர்வுற்று இலங்கையைப் பான்சீனம் எழிலுடைப்
பிரமதேசஞ் சீயமென்று இன்னதே(ச)த் தடல்கொண்டு மிளிரும் பெளத்தமதம்
ஈன்றவளை நோகவிடுமோ? இறைவன்அரு ளாம்இவை இரண்டுமே நீடூழி
இருநிலக் கொளிசெய்யவே.
水 来 米 米
21

Page 23
5. தொல்காப்பியம் சொல்லதிகாறும் கணேசையரி பதிப்புக்கு வழங்கிய சிறப்புப்பாயிரம்
Dணிவளர் மிடற்றுக் கடவுள்பொன் அடியை
மறக்கலாக் காசிய முனிவன் வழிவரு புனிதச் சின்னைய சுகுணன்
வளர்தவத் தருள்புரி மறையோன் அணிவளர் தமிழ்நாற் பரப்பெலாம் குசைநண் மதியினால் ஆய்ந்ததுஅமிழ்த எனவே அருந்தமிழ்ப் புலவோர் விருந்தென நகர
அளவிலாப் பொருளுரை வரைந்தோன் நணிவளர் புலமை ஈழநாட் டறிஞர்
நமக்கொரு நாயகம் எனவே நயந்தினி தேத்தம் பருனித கணேச
ஞானசூரி யன்இலக் கணநால் தணிவளர் தருதொல் காப்பிய உரையிற்
தறுமுதஉண் பொருளிருள் அகன்று தலங்குற விளங்கிச் செம்மைசெய் தான்மொன்
பைனாம் தோன்றல் வேண்டிடவே.
6. Saff IITL6)
Dங்கையிவள் செலும்வழியில் நறுந்தெருக்கள்
நிழல்செய்த மலிகமற்றும் பொங்குமணல் தாமரையின் பொலந்தாதது
போற்பொலிக புனிதவாவி எங்குமலர்ந்து இலங்கிடுக மந்தமா
ருதம்வீச இனியதோகை யுங்குயிலும் தணையாக அறதொடர்க்கண் உகரம்போல் உறுகதாரம்.
(கண்ணுவ முனிவர் கணவன் விட்டுக்குச் செல்லும் சகுந்தலையை வாழ்த்து வதாகப் பாடப்பட்டது)
22

7. சேரி பொன். இறநாதன்
படைபல கூட்டிப் பிறதேசம் கவர்ந்து பலாத்கரித்தே அடையும் நிருபத் துவமோ? மனிதர் அகம்குழையும் படியல தேசத் தொன்டால்நீ பெறும்நி ருபத்தவமோ? நெடிய தென்போ மிராம நாத விதாமணியே
本 来 本 本
தரும நிலைநிறுத்தப் பாரத மிராமச் சந்திரனை தருமனைக் கண்ணனை வள்ளுவனைத் தந்த தன்மையெதிர் தரும நிலைநிறுத் தற்கிலங் காபுரி தானளித்த அருமை மகனல்ல வோரோம நாத விதாமணியே
(1926 இல் மட்டுவிலில் சேர் பொன். இராமநாதனுக்கு எடுக்கப்பட்ட வரவேற்பு விழாவிற் பாடப்பட்ட பாடல்களில் இரண்டு மட்டுமே கிடைக் கின்றன.)
8. அருணந்திப் புலவரி வவுனியாவில்
வள்ளி திருமணம் பரிறிப் பேசிய பேச்சைப் பாராட்டி எழுதியது
தங்கம் புரிந்த சுடர்வேற் குகன்வள்ளி தோள்மணந்த தங்கம் புரிந்த சரிதையின் உண்மை தகவிரித்துச் சிங்கம் புரிந்த அருணந்தி நாவலன் செய்தபிர சங்கம் புரிந்த தமிழ்அமிழ் தின்பம் ததம்பியதே.
k
தேங்கிய கல்வி யருணந்தி நாவலன் செந்தமிழின் ஓங்கிய சந்தக் கவிப்பிர சங்கத்தி லொன்றறியார் ஆங்கில மொன்றே அவன்வல்லன் என்பர்அருங் கங்கைநீர் பாங்குறு மாநிலம் ஒன்றோ விசும்பினும் பாய்தருமே?
23

Page 24
முன்னுயர் சீர்த்திதரும் ரங்கநாத முதலியுடன் பொன்னிகள் தாமோதரன் விபுலாநந்த புண்ணியன்என்(று) அன்னவர்போல் ஆங்கிலத்தினும் தாய்மொழிக் கண்புமிக்க மன்னிநர்சீர்த்தி அருணந்தி நாவலன் வாழியவே.
水 水 水 米
9. வித்துவான் ந. சுப்பையபிள்ளையின் குறிப்புரையுடன் கட்டிய தஞ்சைவாணன் கோவையுரைக்கு வழங்கப்பட்ட சிறப்புப்பாயிரம்
புள்ளிமயிற் பரியேறும் புலவனிரு செவிகுளிரப் புதத்தீம் பாடல் அள்ளியமிர் தெனவுற்றும் புலவர்பிரான் அகப்பொருள்நூற் கமைதி யாகக் கொள்ளவருள் செயுந்தஞ்சை வாணன்கோ வைப்பனுவல் குறைவி லாதெம் உள்ளமிசைப் படர்ந்தபயன் தரவிருத்தி உரைபுலங்கொண் டுதவி னானால்
பொய்யாத மொழிப்புலவன் குலமணியாய்த் தமிழ்நாடு பொலியத் தோன்றி எய்யாத விசைவளர்த்த சொக்கப்ப நாவலனே இனைய நாலைக் கையாத உரையதனைக் கற்போர்கண் டெளிதணர்ந்து களிக்கு மாறு நையாத வளந்தருதொல் காப்பியநாற் பொருளோடு நனியா ராய்ந்தம்
ஏனையகப் பொருள்நால்கள் இலக்கியநால் தறைகளுடன் இனிதா
ராய்ந்தம் வானையெதிர் தருதால கோசங்கள் கொண்டறிவின் வழாமை நாடி ஆனதொரு நிஜருபம் அறிந்துரையின் மலைவுகளும் மடையத் தேற்றி ஈனமற வேண்டுழிநண் பொருள்விரித்த வடமொழியின் இயைபு தந்தம்
தப்பாத சோதனஞ்செய் தச்சேற்றி நலம்பெருகத் தந்தான் றில்லைச் செப்பாரு முலைபாகன் நடராஜன் அடிமறவார் செம்ம லாய எப்பாவ மும்பயிலா நடராச பிள்ளைதவத் தினிதி னின்ற நற்பாலன் சைவநெறி மறவாத புனிதநிலை நணுகுங் சீலன்
24

மட்டுவிலென் றரைவழங்குஞ் சந்த்ரபுரத் தவரித்த மணியாய் முப்பாற் பட்டதமிழ்க் கடல்பருகிப் பன்னூலு முரையுமிசை பயில வாக்கி எட்டுருவின் இறையோனை இறைவியொடு மகலாமல் இதயத் தேத்தஞ் சிட்டர்புகழ் ஆசிரியன் எனையீன்ற வேற்பிள்ளைச் சீரி யோன்பால்
செந்தமிழ்நாற் றுறைமுற்றக் கற்றுணர்ந்தோன் வடமொழியில் திகழா நின்ற சுந்தரநாற் கடல்கடந்த வித்தவான் எனும்பட்டப் பெயருஞ் சூடி மைந்தர்பலர் கற்றுயர மகத்தவஞ்சால் குருமணியாய் மாண்பு சான்ற கந்தனடி மறவாத சுப்பைய பிள்ளைனனுங் கலைஞ ரேறே.
10. சேரி பொன் இராமநாதனின் செந்தமிழ் இலக்கண நூலிற்கு வழங்கப்பட்ட சிறப்புப்பாயிரம்
ஆனந்த மணிமன்றில் அம்பிகையார் கண்காண ஆனந்த நடநவிற்றும் நடராசர் அருள் கூட்ட ஆனந்த சிவயோகி அகத்தியனார் முதன்முனிவர் ஆனந்த மிகுதமிழ்நாற் கிலக்கணம்முந் தருளினரால்.
அகத்தியந்தொல் காப்பியமே அவிநயமென் றிவைமுதலா வகுத்தருளந் நால்கள்உணர் தற்கருமை மனத்தாய்ந்த சுகத்தனித கற்பார்க்குத் தரிசில்ப வணந்திமுதல் மகத்தவஞ்சா லறிஞர்சிற் றிலக்கணநூல் வாய்மலர்ந்தார்.
ஆங்கவையும் பாநடையில் அமைதலினாற் பிறபாஷை பாங்குபெறப் பயின்றுதமிழ்ப் பயிற்சிகுன்று மிந்நாளில் தேங்குதமிழ்ச் சிறாருணர்தற் கரிதாகச் சிலவறிஞர் ஈங்கிதனைக் கருதியிலக் கணமுரையா லெழுதினரால்.
அன்னவற்றிற் பலதப்பாம் அன்னவற்றிற் சிலஓப்பாம் என்னினுமற் றவைபயில்வா ரிடரின்றி யெளிதணரும் தன்மையவன் றிலக்கணத்தின் தனிநட்பங் கண்டிலவால் இன்னபல வுங்கருத்தி லெண்ணினானெம் பெருமானான்.
25

Page 25
தருமஉரு வாய்அறிஞர் தமக்கெல்லாம் நாயகமாய்ப் பிரபுசிகா மணியாகிப் பிறையணிந்த பெருமானார் அருள்பரவு சிவானந்த அனுபூதிப் பெருவாழ்வாய்த் தருமருவு தமிழ்நாட்டார் தவஞ்செய்த தவமானோன்.
பொன்னேர்பல் கலைக்கழகம் பொருந்தசிவா லயமுதலாம் தன்னேரி லறப்பணியான் தரணியர்க்கே வாழ்பெரியோன் எந்நாடும் எந்நகரும் எவ்வனமுஞ் செவிகளிக்குந் தன்னாம மறியாரைத் தானறியாப் புகழ்கொண்டான்.
தரைராம நாதனருள் தோய்தருபல் லிலக்கணநாற் பொருளாய்ந்து முறைவகுத்துப் பொருளெல்லாம் பகல்செய்தே அரியதமிழ் மொழித்தொண்மை யதிசயிப்ப நனிவிளக்கி உரைநடையா லிலக்கணமிவ் வுலகுவப்ப அருளினனே.
11. இந்துசாதனப் பொன்விழா வாழ்த்து
66.16dio LIT
தெய்வத் தமிழ்மடந்தை செங்கையில்வைத் தேத்தவதம் சைவத் தலைவி தனதமடி - மெய்வைத்த முத்த மிடுவதம் முட்டில்இந்த சாதனம்அஃ தத்தனனி வாழ்கவருள் வான்.
கட்டளைக் கலித்துறை
ஆறறி யாத மலைப்பார்க் கிருளிடை யஃதணர்த்தித் தேறிடச் செய்திடும் மின்னலி னன்னர் சிறந்தயர்ந்த சீரிய சைவர்க் கறியாமை யோட்டி விளக்கஞ்செய்தே ஏறிய சீர்இந்து சாதனம் வாழ்க இளமைபெற்றே.
26

கட்டளைக் கலிப்பா
ஆறு மாமுக நாவல மேதகை ஆக்க வெண்ணிய கீரிமலைச்சிவன் வீறு மாலயம் கேதீச்சுராலயம் விரும்பு சைவச்சிறாராங்கிலம்பயில் பேறு நல்குகல்லூரி சிவமணம் பெருக்கும் பத்திர மாமிவை நாள்களுள் ஈற தாகி யிறுதியில் லாதொளிர் இந்து சாதனம் வாழிய என்றுமே
(1939)
12. ஈழகேசரி யுவவருஷ வாழ்த்து
புலம்பூத்த சீரீழ கேசரியே நேசரிதம் புணர வாய்ந்த நலம்பூத்த தமிழ்க்கொடியே நந்தேச சந்தேச ஞான பானு நிலம்பூத்த கற்பகமே நீநிலவி யுவவருட நிறைவழித் தென்னப் பலம்பூத்த யுவவருடப் பல்லாண்டு நினக்கெவரும் பாடு வாரே.
மாணிக்க மணியென்கோ மயிலென்கோ குயிலேன்கோ
மகவான் எண்கோ ஆணிப்பொன் னவிர்கங்கை நதியென்கோ மதியென்கோ
அமுதே யென்கோ பூணுற்ற வினஞ்சிறந்தாட் டயர்ந்துசெவி குளிர்வித்தெப்
பொருளு நாடிப் பாணிக்க ணமர்ந்தவிடாய் தணித்தருள்சீர்த் தெமை
வளர்க்கும் பரிசா னின்னே.
பொருந்தியசுன் னாகநிகர் சுன்னாகப் பொன்னைய னேர்பொன்
@6恋T延J பெருந்தகைநல் லீழகே சரியைநினை தரத்தொடரும் பெற்றி
வாய்ந்த மருந்தநிகள் தருமீழ கேசரியே யாசிரியர் வழியை நோக்கு விருந்தவிருந் தெனவெதிர விசையுமுடன் வரையெதிர் வினோத
வாழ்வே.
(ஈழகேசரி 1935 ஆம் ஆண்டு மலர்)
来来来 米来米
27

Page 26
குருகவி மகாலிங்கசிவம் சிறுகதை
அன்னை தயை
ஜெயந்திபுரத்தின் கண்ணே நீண்டதோர் தெருவுள்ளது. நல்வினை தீவினை பற்றிவரும் பல்வேறு வகைப்பட்ட சுகதுக்க நிலையைக் கடந்து செல்லும் மக்கள் வாழ்க்கைபோல, அத்தெருவும் குளிர்ந்தநிலம், உஷ்ணநிலம், செழிப்புநிலம், வரட்சிநிலம் முதலிய பலவகை நிலங்களையுங் கடந்து செல்வதாகும்.
அத்தெருவானது பெற்றுக்கொண்ட திருவடி தீகூைடிக்கோ கணக்கில்லை. அத்திகூைடியும் முகூர்த்த வரையறையின்றி எந்த நேரமும் நடைபெறும். பங்குனி மாதம் 10 ஆம் திகதி சூரியன் ஆகாய மத்தியினின்றும் திரும்பி நான்குமணிப் பொழுதாகிய நேரத்தில் இருவர் அத்தெரு மார்க்கமாக ஓடுகின்றனர். ஒருவன் கம்பீரமான தோற்றமும் சுந்தரவதனமும் தாமரைமலர் நெருப்புக் கக்குவதுபோல அனற்பொறி பறக்கும் கண்ணுமுடையவனாய் யமகிங்கரன் போல அதட்டிக்கொண்டு துரத்திச்செல்ல மற்றையவன் பருந்தைக் கண்டு அஞ்சியோடும் கோழிக்குஞ்சு போல வேகமாய்த் தப்பிப்பிழைக்க ஓடுகின்றான்.
அஞ்சியோடும் மெல்லியவன் ஐயோ தெய்வமே என்று கத்திக் கொண்டு துரிதமாக ஓடுகின்றான். பின்னே வருகின்ற கொடியோனது
28

கையிலே பளிர், பளிர் என்று மின்னா நின்ற கூரிய கத்திக்குத் தன் கழுத்து ஆண்பனைப் பாளையாகிவிடுமே என்னும் ஏக்கத்தோடும் தன் உயிரைக் காப்பதற்காக அந்த ஏழை ஜன்மம் பறக்கும் காட்சி பரிதாப கரமாகவிருந்தது. ஆவி அகத்ததோ புறத்ததோ என்பது மட்டுமல்ல, தலை விழுந்ததோ இல்லையோ என்று கையாற்றடவிப் பார்த்துக் கொண்டு விரைவாக ஓடினான் அம்மெல்லியவன்.
வலியவனும் கண்ணிற் சினப் பொறிபறக்க பறநாகம் பாய்வது போலக் கடுகிச்சென்று செய்தவினைப்பயன் திருகிப் பிடிப்பதுபோல மெலியானது குடுமியை இறுகப் பிடித்து இருமுறை குலுக்கி "நில்லடா" என அவன் முகத்தைத் தன்புறமாகத் திருப்பினான். திருப்பி வலியவன், "கோபா, என் கையிலுள்ள கத்தியைப்பார்; அடுத்த நிமிஷம் நீ இருப்பது இயமலோகத்தில். உன் உயிரைப் போக்குவது இக்கத்தியன்று, என்னை நீ புறம் பழித்துரைத்த நிந்தை மொழியே."
கோபாலன், "அடைக்கலம் அண்ணை, சுப்பமூர்த்தித் தரும ராஜாவே, யான் தங்களைப் பழித்துரைத்ததென்பதில்லை; என் தந்தையைப் பழிப்பேன்; என் நாட்டைப் பழிப்பேன்; என் பாஷையைப் பழிப்பேன் ; என் சமயத்தையும் பழிப்பேன்; என் தெய்வத்தையும் பழிப்பேன் ; ஆனால் தங்களையும் பழித்துரைக்க நினைவேனோ! நினைத்தாலே என் தலை ஆயிரம் சுக்கலாக வெடியாதா? என் மனைவியை அவமானப்படுத்திய - தருமதேவதையின் மானத்தைக் கெடுத்த முத்தண்ணனை மனம்நொந்து திட்டியதுண்டு; தங்களையா? தங்களுக்கு வழியடிமையன்றோ அடியேன்" என்றான்.
சுப்பு, "கோபா, ஊரிலுள்ள திவ்விய வஸ்துக்களெல்லாம் காத்தவராயனுக்கு, ஊரிலுள்ள உத்தியோகங்களெல்லாம் அங்காந்த ராயருக்கு, என்பதுபோல ஊரிலுள்ள சுந்தரிகளெல்லாம் எனக்குரிய ரன்றோ? என்பொருட்டே முத்தண்ணன் நினது மனைவியைக் கவர்ந் தான். இசையாமையாலன்றோ மானபங்க முற்றனள். நின் மனைவி முத்தண்ணனை வைதது, என்னை வைததேயாம்" என்று இடிபோலக் கர்ஜித்தான்.
கோபாலன் அபிமானம் மிகுந்து "செல்வத்திமிர் பிடித்த துஷ்டா என்னை நாயென்று எண்ணினையா? உன்போலும் அதிகார வெறிபிடித்தோர்க்கெல்லாம் எனது மனைவியின் கற்பும் எங்கள் மானமும் உதைபந்தா? மயிர் நீப்பின் வாழாக் கவரிமானென எங்களை அறிகுதி. எம்மவர் நும்மவர்க்கு நிகராவரோ? யாமெல்லாம் நுமக்கு
29

Page 27
அடிமையே என்று வழித்தொண்டுபேசி வயிற்றுக்கு வீங்கித்திரியும் பேடியென என்னை மதியாதே; எங்கட்கு அவமானம் விளைத்தவன் முத்தண்ணன் ஆகிலென், நீயாகிலென், கையாலாகாதெனினும் காறியு மிழ்ந்துயிர் விடுத்து எம் மானங் காப்பேன்" என்று கண்ணகிபோலக் கனன்று சீறினான்.
அது கேட்ட சுப்பமுர்த்தி " கோபாலா, நீ எலி ; நான் மத யானை" என்று கூறிக்கொண்டு கோபாவேசங்கொண்டு கோபாலனது குடுமியைத் திருகிப் பிடித்து இன்னேயமலோகஞ் செல்லடா' என்று அவனை இருதுணி படுக்குமாறு வலக்கையினாற் கூரிய கத்தியை ஓங்கினான்.
"புவனேஸ்வரி பொறு" என்றாள். பாங்கருள்ளதோர் நறுமலர்ப் பொய்கையிற் சேலை தோய்த்துக்கொண்டு நின்ற மாதராளொருத்தி, "லலிதாம்பிகையக்கா, திரிபுரசுந்தரி என்னை எதிர்பார்த்துக்கொண்டு நிற்பளே இன்னும் ஹாலகரணம் செய்யலாமா?" என்றாள்.
ஓங்கிய கத்தியை கீழே வீசிச் சுப்பமூர்த்தி ஸ்தம்பித்து நின்று "புவனேஸ்வரி லலிதாம்பிகே திரிபுரசுந்தரீ" என்று பன்முறை உச் சரித்தான். பண்டை நிலைமுற்றும் மனமாறிக் கண்ணிர்வாரக் கை குவித்துப் பூமியில் விழுந்தான். ஈதென்ன மாயம் என்றான். "என் பிழை யனைத்தும் பொறுத்தருள்வா" யென்று கோபாலனது கால்களிலே தொட்டு வணங்கினான். எழுந்து "புவனேஸ்வரி, திரிபுரசுந்தரி, லலிதாம்பிகே" என்று பித்தனைப் போல கத்திக்கொண்டே இடங்குறி யாமல் நடந்து செல்கின்றான். இவற்றை நோக்கிய கோபாலனும் பிரமித்து நின்றனன்.
"காதற்ற ஊசியும் வராதுகாணும் கடை வழிக்கே" யென்னும் திருவாக்கை நோக்கிய துணையானே இந்திரச்செல்வத்தை இமைப் பொழுதிற் றுறந்துசென்ற மெய்ஞ்ஞானச் செழுஞ்சுடராகிய பட்டணத் துப் பிள்ளையார் போலாயினான் சுப்பமூர்த்தி அவன் சுப்ப முர்த்தியோ அறியேம்.
இப்புனித நாமங்கள் - புவனேஸ்வரி, லலிதாம்பிகை, திரிபுர சுந்தரீ - யான் பிறந்த நாட்டொடங்கி இந்நாள்காறும் கேளாதனவே , ஆனால் இத்திருநாமங்களை என்றோ கேட்டதாக நினைவு வருகின் றதே, இந்நாமங்களோடு எனக்கோர் இன்பவுறவு தோன்றுகின்றதே, இவற்றைக் கேட்ட தெஞ்ஞான்று! இப்பிறப்பிலில்லை பூர்வ ஜன்மத் திலாகுமா இந்நாமங்கள் - இந்த ஜீவாதார அமிர்தப்பிரவாகம் - என் மனோமோகன திவ்விய அருள் நாதம் - என்னுள்ளம் கரைத்துக்
30

கரைத்து இன்பைப் பெருக்கும் ஆனந்தத்தேறல் - என்மனவிருள் கெடுத்த மாணிக்க தீபம் - என்மனநோயறுத்த மணி மந்திர ஒளஷதம் - என்மனோ வியாகுலப் புழுக்கம் தணித்து சாந்தித் தட்பம் தந்த மந்த மாருதம் - என் சித்தங் கவர்ந்த வித்தகக் காந்தம் - என்னைத் தன்வசம் ஆக்கிவிட்டனவே. இந்நாDங்கள் யாவை? இவற்றின் பொருளென்ன? புவனேஸ்வரி, லலிதா, தரிபுரசுந்தரீ" என்றே உச்சரித்துக்கொண்டு செல்கின்றான் சுப்பமுர்த்தி
செல்லும் வழியிலே குங்கும திலகமிட்டுக் கோமளாகாரமா கத் திகழும் சிறுவனொருவன்,
வாழும் படியொன்று கண்டுகொண் டேன்மனத் தேலுருவர் வீழும் படியன்று விள்ளும் படியன்று வேலைநிலம் ஏழும் பருவரை யெட்டு மட்டாமல் இரவுபகற் சூழும் சுடர்க்கு நடுவே கிடந்த சுடர்கின்றதே.
- அரிராமி அந்தாதி
என்று, சிந்தாமணிப் பாடலினும் தேவகானத்தினும் எத்தனையோ மடங்கு தித்திக்க ஆரா அமிர்தத்தை அள்ளிச் செவியிற் சொரிந்தாற் போலச் குழலிசையும், யாழிசையும், குயிலிசையும், பின்னிடைய அதியற்புத அதிமதுரமாகப் பைரவி இராகத்திற் பாடினான்.
அப்பாடலை உடலுருக, உளமுருக, உணர்வுருக, உயிருரு கக் கேட்டான் சுப்பமுர்த்தி அவ்வானந்தத்திற்றிளைத்து அதன் பரசுக உணர்ச்சியைத் தாங்கமாட்டானாய், பெருங்காயச்சுமை பொறுக்க லாற்றாத சிறுகொடியைப்போலத் துவண்டு துவண்டு சென்று சிறு வனை அணுகினான். என்றுமறியா இன்ப நிலையை அன்று வுணர்த்திய திருநாமங்களுக்கும், அத்தீஞ்சுவைப் பாடற்கும் யாதும் இயைபுளது கொல்லோ என எண்ணிச் சிறுவனை நோக்கித் 'தம்பி - இல்லை சாமி நீ அருமந்த மதுரமாகப் பாடிய தெய்வப் பாடலிற் சுடர்கின்ற தெனச் சுட்டிய பொருள் யாது?" என்றான்.
சிறுவன் "என்ன ஐயா! சிங்களம் பேசுகின்றீர்; சுட்டபொருளா? சுடுவதற்கு அப்பமும் தோசையுமிங்கில்லை; என்பாட்டிருக்கட்டும்; உம்மபாட்டிற்குப்போம் " என்றான்.
சுப்பமுர்த்தி அச்சிறுவனை நமஸ்கரித்துவிட்டு அந்நாமங்க ளோடு இவ்வின்பப் பாடலையும் மாறிமாறிக் கூறிக்கொண்டு அப்பாற் சென்றான்.
31

Page 28
செல்லும் வழியில் பைத்தியங்கொண்ட நாயொன்று அவனை நோக்கிச் சீற்றத்தோடு வந்தது. அதனை நோக்கிச் சுப்பமூர்த்தி செய்யாத பாவமெல்லாம் செய்தேன்றன்முன் னாயே, ஐயா நீ இவ் வாறு அழந்து வருவதென்னே இனம் இனத்தை நாடுவதுபோல என்னை நாடி வந்தனையோ, நீ புழுத்த நாய். நான் அதினினும் கடைப்பட்ட நாய். நானோ சாதுக்களைக் கண்டு குலைத்த நாய் - சத்ஜனர்களைக் கடித்த நாய் - எச்சிலுக்காக இச்சகம் பேசிய நாய் - வயிற்றுப் பிழைப்புக்காக மானம் விற்றநாய் - அடிமைத் துறத்துள் அதிகாரம் விளைந்த தடிநாய் - அறத்துடன் வாராப் பொய்ம்மை யின்பப் புன் மலம் விழுங்கிய புழுத்த நாய் , ஆதலால் நீ என்னிடம் வருவது மிகவும் பொருத்தமே" என்று புன்னகை பூத்து நின்றான். உடனே அந்த நாய் அஞ்சி அகன்றது.
சுப்பமூர்த்தி பசி, தாகம், பனி, வெயில் இளைப்பு, துயி லின்மை முதலியவற்றை நோக்காது தன்னந்தனியே நாமோச் சாரண மும் செய்யுள் ('வாழும்படியொன்று) படனமுஞ் செய்து கொண்டே பல காததுாரம் கடந்து சென்றானாக, ஒரு சிவாலயம் புலப்பட்டது. அது சற்றே அவன் மனத்தைக் கவரச் சந்நிதியை அணுகி அறிந்த அந்நாமங்களையும் அப்பாடலையும் சொல்லித் தோத்திரஞ் செய்தான். அந்நாமங்களில் குறிக்கும் பொருள் யாது? என்னும் ஐயங்கள் அவனுளத்தை விட்டகன்றில்.
அக்கோயிலர்ச்சகர் பூஜை முடித்துக் கதவுதாழிட்டு அயல் நின்றாளோர் ஆலயப் பணிப் பெண்ணிற்கு நிவேதனங்களைக் கையுற நல்கக்கொண்டு செல்பவர், இவனை நோக்கிக் கடுகடுத்துச் சீறி வெளியே செல்லென, அதட்டித் துரத்தினர். அயனும், திருமாலும் அறிதற்கரிய பரம்பொருள் இவனுக்கு வெளிவந்து இவன் நாடிய பொருளைத் தெளிவித்து உய்தி தந்தாரல்லர். காதலி களிப்பக், கற்பகமலர் கொய்வான் விண்ணுலகஞ் செல்லும் காதற் பித்தனைப் போல இன்னதென்று அறியப்படாது உள்ளங்கவர்ந்த தொன்றினை அறியும் ஆசை வசத்தனாய் சற்றுஞ் சலியாத சித்தத்துடனே சுப்ப மூர்த்தி சில நாழிகை தூரஞ் சென்றான்.
வானுயர் பொழிலும் அதன் நடுவே மது மலர்த்தடமும் ஓர்
ஆலயமுந் தோன்றக் கண்டு அவ்விடம் சேர்ந்தான். தடாகத்தினருகே
கலியுகவரதனாகிய ஷண்முகப்பெருமான் எம்மை ஆட்கொண்ட
அன்னையர் இருவரோடும் லோகரகூடிணார்த்தமாக வீற்றிருக்கும்
ஆலயத்தைச் சேர்ந்து "புவனேஸ்வரி, லலிதாம்பிகே, திரிபுரசுந்தரீ"
என்னும் நாமங்களை அகங் குழைந்துருகி ஆனந்த அருவி விழி 32

கொழியக் கைத்தலன் கூப்பி ஆராமையோடும் உச்சரித்துக்கொண்டு நின்றான். இடையிடையே "வாழும்படி யொன்று கண்டு கொண்டேன்" என்னும் பாசுரத்தையும் மீண்டும் மீண்டும் ஒதினான்.
"குழைவிரவு வடிகாதா கோயிலுளாயோ" என்று சுந்தரர் வினா வியருள உள்ளிருந்து "உளோம் போகீர்" என்று திருவாய் மலர்ந் தருளி அந்நாயனாரை ஆதரியாதகற்றிய பரமசிவனது ஆலயத்திலே முன்னர்ச் சுப்பமூர்த்தி அவ்விறைவன் அருளைப்பெறாது செய்வகை யற்றுச் சென்றதுபோல முருக வேளாலயத்தும் தேறுதல்பெறாது கலங்கினானல்லன்.
பிரிந்துசென்ற தாய்ப்பசுவைத் தேடித்திரிந்து வருந்தும் இளங் கன்றின் நிலையினனாகிய சுப்பமூர்த்திக்குச் சுப்பிரமணியமூர்த்தியின் இன்னருள் சுரந்தது. ஆலயத்தினொருபால் நின்ற கடப்ப விருட்சத் தடி யினின்றும் ஓரொலி கேட்டது. "இவ்வூருக்குத் தெற்கே முக்காலத்தி லுள்ள புண்ணிய நதியைச்சார்ந்து நீராடுங் கால் தெளிவாகும்" என ஒலித்தது.
அவ்வொலி என்னைக் குறித்தெழுந்ததாமெனச் சுப்பமுர்த்தி கருதி அளவிலா விம்மிதமும், ஆனந்தமுமெய்தித் துள்ளிக்குதித்து பன்னாளாகப் பசியால்வாடிய வறியானொருவன் அன்னக் கொடை கேட்டு ஆத்திரப்பட்டுச் செல்வதுபோலச் சென்றான். செல்லும் வழி யிலே புண்ணிய புருஷரொருவர் திவ்வியமானதோர் சமஸ்கிருத சுலோகத்தைப் பாடிக்கொண்டு சென்றனர். அச்சுலோகப்பொருள்:
அன்னை முத்தொழில் புரிபவள் மேலாம்
அணங்கு மிக்குயர்ந் தொளிர்தரு நிறத்தான் மன்னு காயத்ரி பிரணவ அமுத
சார பூரணி வழிபடற் குரியாள் தன்னை நேரிலோங் காரி தாழ்விதை
தணயற் காத்தவள் தைத்தியற் செகுப்பாள் சின்ம யீயருட் பகவதி திருவார்
தேவி ராஜரா ஜேஸ்வரி பரையே.
(பிரமருதி. சதாசிவஐயர், மொழிபெயர்ப்பு)
இச்செய்யுளால் சுப்பமூர்த்தி முன்னர்க்கேட்ட செய்யுளிற் போந்த சுடரும் பொருளிதுவென ஒருவாறு அறியலாமென்று இறும்பூ தெய்திச் சுட்டிய புண்ணிய நதியைக் கண்டு அதிவேகமாக ஓடிச் 33

Page 29
சென்று மலையினின்றுருண்டு விழும் கருங்கற் பாறைபோலே அதனுள்ளே பொத்தெனவிழுந்து புனலாடினான்.
புனலுள் மூழ்கி புவனேஸ்வரி முதலிய திருநாமங்களை உச் சரித்துக்கொண்டு தன்னையறியாது வந்து நிறைந்த மனச்சாந்தி யோடும் தடாகத்தின் கரையை நோக்கினான் சுப்பமுர்த்தி
அயலிலுள்ள புவனேஸ்வரி ஆலய அர்ச்சகரும் அப்பர தேவதையை அல்லும் பகலும் மறவாது தியானித்துத் துணையும் தொழுந் தெய்வமும் பெற்ற தாயுமாகக்கொண்டு உபாசிப் பவரு மாகிய அந்தண சிரேஷ்டரொருவர் கையிலே அம்பாளுக்குச் சாத்திய புஷ்பம் முதலிய பிரசாதங்களைத் தாங்கியவராய் தேவிதோத்திர மாகிய சமஸ்கிருத சுலோகங்களைப் பட்டமரமும் தளிர்த்துப் புஷ்பிக் கும் இன்னோசையினாற் பவளவாய் திறந்து பாடிக்கொண்டு நின்றார். அப்பொருளமைந்த பாடல் வருமாறு:
பாலரவி பலகோடி செஞ்சுடர் விரித்தெனப்
படரொளிசெய் திருமேனியும் பரிவுடன் பெற்றசீ வர்க்கெலாம் பேரருள்
படைக்குங் கடைக்கண்களும் கோலமுற பவளவா யுங்கொவ்வை யிதழ்களுங்
குறுநகையு மலர்வதனமும் குலவுநாற் கையுமக் கையினிற் பாசாங்
குசஞ்சிலை மலர்கணைகளுஞ் சீலமுறு மன்பர்தந் தஞ்சரஞ் சிதகஞ்சச்
செஞ்சரண செல்வங்களும் செங்கமல வல்லியும் வெண்கமல மெல்லியுஞ்
சேவைசெய் பாராட்டுமெக் காலமுறுஞ் சிறியனிரு கண்ணைவிட் டகலாத
காட்சிதந் தருள்புரிகுவாய் காந்தர்தா மாட்சிநினை வாய்ந்தகா மாட்சிபுனை
காஞ்சிகா மாட்சியனையே.
ஜகன் மாதாவாகிய பராசக்தியாரது - கிருபாசமுத்திரமாகிய எங்கள் குலதெய்வத்தினது - ஆனந்த அமிர்த பூரணஞானசுந்தரப் பேறாகிய எங்கள் அம்மையாரது - கண்ணினும், கண்மணியினும், மணியிற்பாவையினும், ஆருயிரினுமரிய எங்கள் பிராட்டியாரது - ஐந்து
34

முர்த்திகளையும் ஆணையின்நிறுவி ஐந்தொழினடாத்தும் அகிலாண்ட நாயகியாரது - இளங்கன்றிற்கிரங்கி உளங்குழைந்துருகும் பசுவைப் போல, அடியார் இடர்நோக்கி உள்ளசகியாது எளிதில் வெளிவந்து அஞ்சன்மின் என்று அபயங்கொடுக்கும் பக்தவத்சல நாச்சியாரது - அற்புத மகிமைகளைத் தெரிவிக்கும் ஆனந்தவிலாச சுலோகங்களைச் செவிகுளிரக் கேட்டான் நமது சுப்பமூர்த்தி
அந்த கார படலந்திணிந்த அர்த்தயாமத்திலே அஷடகுலா சலங்களையும் பெயர்த்தெறியவல்ல பிரசண்டமாருதம் வீசாநிற்ப அலைகளெல்லாம் மலைபோற் கிளர்ந்து வானை முட்டி மோதி ஆர்ப் பரிக்கும் அவலப்பொழுதிலே இன்ன செய்வதென்றறியாது மனமறுகி இறுதிக்கஞ்சி மரக்கல முரும் தன்னந்தனியனாய ஒருவன், கலங்கரை விளக்கமும் கரையுந் தோன்ற ஆனந்த பரவச நிலையடைந்தது போலச் சுப்பமூர்த்தியும் அவ்விப்பிரசிரேஷ்டரின் பாடல்களைச் செவி மடுத்து மனதிற்றுாங்கிய ஐயவிருளகன்று பொருணிலை தெளிந்து சாந்தியெய்தி அயர்ந்து நின்றான்.
ஐயர் அவனது சென்னியிற் கையை வைத்து ஆசீர்வதித்து. குங்குமதிலகம் நெற்றியிலிட்டுத் தெய்வமலர்களையும் அவன் சிரசிற் சூட்டினார். அவனும் அடியற்ற மரம்போல அவருடைய பாதங்களில் வீழ்ந்து வணங்கினான்.
அப்பொழுது, தூயதெய்வச் சீரெழில் வெள்ளம் சொரியச் சொரிய, சோதிமுகத்திற் பேரருள்நிலவு விரிய விரிய, மண்ணை மயக்கிய மாயாஜாலம் மறைய மறைய, வடிவுறுபவள வாயிற் குறு நகை அவிழ அவிழ, திருவளர் கண்ணிற்பெருகிய அன்பு பொழியப் பொழிய, தெய்வக் கனகவல்லியின் மெல்லிடை துவளத் துவள, அழகிய அடியொடு பழகுசிலம்புகள் அரற்ற அரற்ற, கண்டுகளிப்பவர் பாவச் சிந்தனை கழலக் கழல, தாயிவள் தாயிவள் போயடை மின்களெனும் தனிநினைவெய்த, பிராமணச் சிறு நங்கையொருத்தி அவ்விருவர் முன்னிலையிற் றோன்றியருளினாள். அவள் அருமைத் திருக்கரத்தில் ஓர் தெய்வநூற் சுவடி விளங்கிற்று.
அத்தெய்வப் புதுமைச் சீரிளங்கன்னியைத் தரிசித்த மாத் திரத்தே சுப்பமூர்த்தியும் அந்தணரும் தம் வசமிழந்து திருவருள் வசத்தராய் என்றுமறியாத மனத்துய்மை வாய்ந்தவராய்ச் செங்கை கூப்பிநின்றனர்.
தெய்வக்கன்னியும் செம்பவளவாய்திறந்து செஞ்சொற் பைந் தேன் சொரிகின்றாள். ஐயரே சுப்பமூர்த்தி" (ஆந்த அற்புத மனோகர
35

Page 30
திவ்விய மதுரமொழியமிாதம் செவியிற் சிந்திய அளவில் ஆகா! ஆகா' எனறு அவ்விருவரும் ஆனந்தமும், அதிசயமும் அடைந்து அதீத இன்ப உணர்ச்சியைச் சகிக்கலாற்றாராய்த் துவண்டு சோர்ந் தனர்.) "சாந்திபெறுமின் சாந்திபெறுமின்' காடும் கரையும் மனக் குரங்கு கால்விட்டோட, அதன்பிறகே ஓடியிளைத்த அவலக்கவலை உங்கட்கினியில்லை. அகண்டாகார சிவபோக மெனும் பேரின்ப வெள்ளம் பொங்கித் ததும்பிப் பூரணமாய் ஏக உருவாய்க் கிடக்கின்ற தனை இன்புற்றிட வாரிப்பருகுங் காலம் வந்துவிட்டது. சுப்பமுர்த்தி ! நீ செய்த பாவங்களைப் பார்" (கொடிய புலிக் கூட்டங்களைக் கண்ட சிறுவன்போலச் சுப்பமூர்த்தி தன் பாவச் செயல்களை நோக்கிப் பயந்து அலறியலறி நடுங்குகின்றான்) அக்குமாரி, 'அஞ்சாதே! நடுங்காதே! வருந்தாதே" அவ்வல்வினைகள் தாம் நீ விரும்பி ஈட்டிய மலக்குவியல்கள். அத்திச்செயல்கள் தாம் நீ சந்தன பாளித குங்கும நரந்தசுகந்தக் கலவையென மதித்துத் தேகத்தினும் மனத்தினும் அள்ளியள்ளி அப்பிய அசுத்தச்சேறு, அக்கொடு வினைகள் தாம் உன்னை அடிமையாக்கி உள்ளக்கவலை பெருக்கிச் சுமையாளாக் கிய மாயக்குப்பைகள், தேவியின் பரிசுத்த நாமங்களென்னும் யாகாக்கினியினாலே அக்குப்பை இருந்தவிடந் தெரியாது எரிந் தொழிந்தன. தேவியின் நாமங்களே உற்றுளித் துணையாக வந்து உன்னை இரட்சித்தன. பூர்வ ஜென்மத்தில் உனது தாய் இறக்கும் பொழுது உச்சரித்த வழி அந்நாமங்கள் உனக்கு உபதேசமாகக் கிடைத்தன. இந்த ஜன்மத்தில் வெகுகாலமாக அத்திரு நாமங்கள் உனக்கு வாய்த்தில. குளத்தில் நீராடிய பார்ப்பன மகளிர் வாயில் அவைதோன்ற, பண்டை நினைவுதிக்கப்பெற்று அவற்றின் வசமாய் விட்டனை. அந்நாமங்களே நீ செய்யத் தொடங்கிய உயிர்க் கொலை யாகிய மகாபாதகத்தைத் தடுத்தன. உய்ந்தனை உய்ந்தனை' நல்லறிவுச்சுடர் பெற்றனை பெற்றனை" அந்நாமங்களாற் சுட்டிய பொருள் யாதெனத் தேடியலைந்தனை அப்பொருளினைக் காணுங் காட்சியும் பெற்றனை' இவ்வேடு யாதென நோக்குவா" யென்று தன் கையிலுள்ள ஏட்டைப் பிராமண குமாரி சுப்பமூர்த்தியின் கையிற் கொடுத்தாள். அவ்வற்புதச் சிறுமியை நமஸ்கரித்து அதனை வாங்கி "லலிதா சகஸ்ரநாமம்" என்று வாசித்து முத்தமிட்டுக் கண்களி லொற்றித் தலையில் வைத்து ஆனந்தக் கூத்தாடினான் கப்ப மூர்த்தி
அப்பெண்மணி, பின்னர் அவ்வேட்டை வாங்கி "ஐயரே' புவனேஸ்வரியாகிய காமாட்சி தேவிக்குச் சாயங்காலப் பூஜை செய் யும் சமயமாகின்றது. இவனையும் அழைத்துக்கொண்டு சென்று
?RA6

தேவி தரிசனம் செய்விப்பாய். மூலஸ்தானத்தில் அம்மையாரது பாதார விந்தத்தின் கீழே கிடக்கும் ஏட்டையெடுத்து இவன் கையிற் கொடுப்பா" யென்று கட்டளையிட்டுச் சுப்பமூர்த்திக்கு ரீதிரிபுர சுந்தரிதேவியின் மூலமந்திரமாகிய ரீஸோடாசீ மகா மந்திரத்தை உபதேசம் செய்து விட்டு அக்குமாரி மறைந்தனள். சுப்பமூர்த்தி வருணிக்கமுடியாத ஆனந்தபரவச நிலையடைந்து ஐயரோடு காஞ்சி காமாட்சி ஆலயத்தையடைந்து தேவிதரிசனம் செய்தான்.
தேவியின் பீடத்தின் கீழிருந்த ஏடு பிராமணச்சிறுமி தடாகக் கரையிற் காட்டிய அதே ஏடாக இருத்தலைக் கண்டு அளவிலா அதிசயத்தோடும் அதனைப் பெற்றனன், பெற்று உவகை மேலிட்டால் தெய்வஅன்னை காட்டிய தயையை நினைந்துருகிப்
புன்னெறிக் குருகிப் பாயும் புலைமதிக் கொளியைக் காட்டி நன்னெறி மெல்லச் செல்லத் தாய்மைநல் லருளை நல்கி எண்ணையு மடிய னாக்கற் கெளிவருந் தருமச் செல்வி அன்னையாம் லலிதா தேவி அடியினைக் கமலம் போற்றி.
என்று பாடிப் பாடிப் பலவாறு துதித்தான்.
米米米 来米米
37

Page 31
குருகவியின் கையெழுத்து
2- . مکھ مہم صحہ ہے (ترکی۔ ہم و رچیچک سر ہے جو "تھ مربہ نے ”ترہی ? گھر ré,ဓါ ၊ مہوری7 سچہ / بہ c7حمG / شکست - 1 as بخصی z تحت رها , یا 3حه 2 الحی
--ട്. -- ജിം ومع2ء ، ریوی یعہ سے خہ چکر த'உத> برطئیے دیکھیجےمحے 2 کھهQ3^ سختی یے (سمہ سر ترہ فہمہ ”کص محہ وہ حس محل محتر” کی سرور دہمه طے مجھ رہسبخی Zകം? പ്രഭ –് صحیح بھی و بے حدہ سےs'میر که 2/ه تری (مچھر : چھ رکھیمر (چیے محہ سمتیے دس جبر - تصعه مو معرکہ مجھے حتیِ صلاصے کے محربہ سر۔ تر eیے സ r് ശ് സ്കിമ ربی صوتیےrwرجمہ عویے2معہ 622 عر<-سم 7 مجھ لیجیسبسے کچھ وء فمہ لح
4al M7 نویسہ -گہ وہ محمحہ ކޯރي هىچ/ همیت میت * سہمے (بکھر بیچہ ---- ”عورت محہ میریحی مربع “・マ ‘ سی چھG ”جوY چھپی) رح یہ مروت “سمجھ میح سے یہ سمر ص محو نثر عی> 1کہ ہم چودہ گر رہ ھی۔ ع ھ سو۔>' حصہ 2 کحہ رہی۔ ح ?y 'ബ്~ نے بحے (جیے کہ حمعہ وہ جو
(് → ഉപ്പു , - - )~ : ہی رہی تح؟ راA2) وہ صحکمہ نے محو مح> حص۔ سے صبر سے وہ رصے sھے , 'ص محی مروجہ آص جس مہم خڑ۔ جب سہ صوبے کرتے حس۔ LA AAAAASAAAA AMS MJ LAhhhSA S 0huS MShA YMALS S S MLJL0ee0 MA qAL M euA = '്' (ze് -> പ് ? <-ഭൂഷി (c. به روی به دسته -- ۶ سایه 2) یکی ۔ کئی سر ہے کہ مصیب وسرمGP صوبھ خچمگے۔ --محۓ : 零gる。 al زسر C2وتے? سمرطe منہمکہ وہ , سہی صے ?ގ މީ7- sهކ ع2//ލސިى
نحہ محمد سمسم چسے بحیہ محہ “۔ سے صرعےی۔ . صچھینک جبکہ سنیےے حت2 * سے مجkحمه محہ ء بھی سر محہ ح
 

or a 7 "باص" on Ury ތއި**..................-'e> &sيحح ره ,كمގ( --Ze T2 e 2/74—-G2a ”مبر سہیلتھ دھیم میری zیحت سر ۔ عا لاعهـ ^ ستھر ک2چھے ترجمہ سہی لی ، رعسکی ہوئے محمد ص 78 مسس ، e9” حه س77 > تصہ یمی 7 بھیے
محصہ رہبرص کے عري <2) صل بیح دے کحہ مسعو دگمبر حر وی برای ?ಬ್ಲ يއީ އ ފG ۔ ۔ بخ^ھ ‘ بھی) مہ) موت اللہٴ محCلاحی <جم) ۱ھ) خیرے خیۓ کہ یہ مجھے قوم مجപേ ത e 2%ކީ> · بقوالله بمه ہے' ہی اہمی ترجمہ ص محمد تھے۔ وہ رعc دہر چی وی چیعیجہ 7 دسمی دفCورہ بر و دھ رہی کی لعہ دہرہ شمالیہ )سcتے ھی , وتمحیح ع� ۔‘مع G3 نہ کہ» بستہ ہ) -cއهم به - 2ކޯ >ദ ീ سمع یہ صورتح>3ھی؟ 4 ܦܼܢܢ ܢܢJܲܝ ܡܘ رح>Z ہوئے حیہ ”سانح محصہے۔ جG ’ہم تر ھ4 ہ حه بحیح ہے کہ مح7ہ Ap_J OY^2o uy /-° /7= ക o۔ مچھ> دہ کیمہ , فرح ح
తిrd 12سرہندسہ مرہ (وحیے عربی سے محمجع متع -حه محده ؟ نعم (سمم یہ محمد ص 4 , یحیع نہ؟
2.9, (, 3 s .ގނޏާ، ޔ ي، 6%2
米米米 - 米米米
39

Page 32
குருகவி பற்றிய ஆக்கங்கள்
1. கட்டுரைகள்

1. மகாலிங்கசிவத்தின் மலர்நிகர் மாட்சி
ற்ண்பர் மகாலிங்கசிவம் மணிபல்லவமாகிய யாழ்ப்பாணம் என்னும் நந்தவனத்தின் நடுவிலே, மட்டுவில் என்னும் தேனார் பூங் கொடியிலே அலர்ந்து, "மங்கலமாகி இன்றியமையாது யாவரும் மகிழ்ந்து மேற்கொளும்" மென்னிர்மை யெய்தி, நாடெங்கும் நன்மணங் கஞற்றிச் செஞ்சொல்லாகிய இன்மதுப் பொழிந்த ஒரு செல்வ நறு. மலர். இவரது பிரிவு, துறவியாகிய எனது உள்ளத்திற்கே துயர் விளைக்குமாயின், ஏனைய நண்பரும் மாணவரும் சுற்றத்தாரும் எத்துணை மனத்துயர் எய்தி நிற்பார் என்பதை யான் எடுத்துக் கூற வேண்டியதில்லை.
மட்டுவில் வேற்பிள்ளையாசிரியர் அவர்களை யான் பலமுறை சிதம்பரத்திற் சந்தித்ததுண்டு. ஒருங்கு வதிந்த நாட்களிலெல்லாம் அவர்களோடு உடன் சென்று கோயில் தரிசனஞ் செய்தேன். தில்லை வாழந்தணர் முதலாக அனைவரும் அவர்கள்பாற் செலுத்திய நன்மதிப் பினைக் கண்டு, நிரம்பிய கல்வியைப் போலவே அவர்களிடத்து நிரம்பிய தெய்வ பக்தியும் உண்டு எனக் கண்டேன்.
கொழும்பு அரசினர் ஆசிரிய கல்லூரியிலே நான் கல்வி பயின்ற காலத்திலே, உடன் சாலைமாணவரும், அரிய நண்பரும், இப் பொழுது கொக்குவில் ஆங்கில பாடசாலைத் தலைமையாசிரியராயி ருப்பவருமாகிய திரு.கார்த்திகேசரது நட்புரிமையினாலே, பருத்தித்
41

Page 33
துறையிலே சில வாரந் தங்கியிருந்தேன். அப்பொழுது திரு. வ. குமார சுவாமிப் புலவரவர்களோடு கலந்து உரையாடினேன். திரு. கார்த்தி கேசர்க்குச் சகோதரிமுறை பூண்டவருடைய திருமனைக்கு யான் சென்ற போது, அந்த அம்மையார் விருந்தினனாகிய எனக்கு இன் னுரையாக "முன்ன மேதுயின் றருளிய முதுபயோ ததியோ, பன்ன காதிபப்பாயலோ பச்சையாலிலையோ, சொன்ன மெய்த்தவச் சுருதியோ கருதிநீ யெய்தற், கென்ன மாதவஞ் செய்ததிச் சிறுகுடில்" என்னும் பாரதச் செய்யுளைக் கூறியது இன்றும் என் நினைவிலிருக் கிறது. யாழ்ப்பாணத்திலே நான் ஆசிரியத் தொழில் நடாத்திய காலத்திலும் அதற்கு முன்னும் பின்னும் மகாலிங்கசிவத்தின் உடன் பிறந்தாரையும் சுற்றத்தார் பலரையுங் கண்டு பழகி உறவு பூண்டேன். ஆடவர், பெண் மக்களாகிய அனைவரும் சிறந்த தமிழ்ப்புலமை யெய்தியிருப்பதை நோக்கி, மகாலிங்கசிவம் பிறந்த குடும்பமே புலவர் குடும்பம் எனத் தீர்ப்பிட்டேன். இவர் மட்டுவிற் பூங்கொடியிலே தனித்து அலர்ந்த மலரல்ல, பல மலர்களிடையே தோன்றிய சிறந்த மலரென அறிந்தேன்.
களங்கமற்ற நட்பும், இன்மொழியும், நல்லொழுக்கமும், அழுக் காறின்மை, அவாவின்மை என்னும் அருங் குணங்களும் மகாலிங்க சிவத்திற்கு அணிகலன்களாகத் திகழ்ந்தன. 'வலம்புரி முத்திற் குலம் புரி பிறப்பும், வான்யாறன்ன தூய்மையும், வான்யாறு நிலம்படர்ந் தன்ன நலம்படர் ஒழுக்கமும், திங்களன்ன கல்வியுந் திங்களொடு, ஞாயிறன்ன வாய்மையும் யாவதும், அஃகா அன்பும் வெஃகாவுள்ள மும், துலைநாவன்ன சமனிலையுளப்பட' எனத் தொல்லாசிரியர் நல்லாசிரியருக்குக் கூறிய இலக்கணங்கள் இவரிடம் நிரம்பியிருந் தமை இவரிடம் கல்வி பயின்ற மாணவர் பெரும்பயனெய்துதற்கேது வாயிற்று.
- விபுலானந்த அடிகள், இந்துசாதனம், வச்சிர விழாமலர்.
42

2. கவிஞர் மஹாலிங்கசிவம்
க்விசமயம் என்று ஒரு சமயஞ் சொல்லுவார்கள். அந்தச் சமயம் சைவசமயம் முதலிய சமய வகைகளைச் சேராதது. கவிஞன் ஒருவன் ஓர் உணர்ச்சி கைவந்த பிறகு அதன் பரிபக்குவ பருவம் நோக்கி நன்றாகக் கனிந்துவிட்டது என்று கண்டபொழுது, ஏற்ற சந்தர்ப்பங்கள் பாத்திரங்களை நாடி, அதனை இன்னும் இன்னும் பொறாது, பொறுக்க முடியாது, கருவுயிர்த்தற்கு - சொல்லுருவத்திற் கண்டு களித்தற்கு - முகஞ் செய்கின்றான். அம் முகத்திற்குக் கவி சமயம் என்று பெயர் வைத்துக்கொள்வோம். அப்படி ஒரு சமயம் மஹாலிங்கசிவத்துக்கு இல்லை. எந்தச் சமயமும் அந்தக் கவிஞருக் குக் கவிசமயமே. இருடிகருப்பத்துக்கு ‘இனி என்ற வார்த்தை இல்லை. மஹாலிங்கசிவத்துக்கும் பிறகு” என்ற பேச்சில்லை.
கோவித்துவான் கணேசையர் அவர்களின் சஷ்டியப்த பூர்த்தி விழா வெகு விமரிசையாக வண்ணை வைத்தியேசுவர வித்தியாலய மண்டபத்தில் நடைபெறுகின்றது. பெரிய பெரிய பிரமுகர்கள் பேச்சுக்கு வந்திருகிறார்கள். பாரிய கூட்டம் அது மஹாலிங்கசிவமும் மேடையில் ஒருபுறத்தில் ஒருவித ஆடம்பரமுமின்றி ஒதுங்கியிருக்கின்றார். சங்கங்கள், சபைகள், மகாநாடுகள் தத்தம் மரியாதையையும் நன்றியையும் தெரிவிக்கு முகமாகப் பணமுடிப்புக்களையும், கோலாகலமான உப சார பத்திரங்களையும் அனுப்பியிருக்கின்றன. பத்திரங்களிலே கவிதைகளில் அமைந்தவை பல, வசனநடையில் வந்தவை சில.
43

Page 34
ஆரிய திராவிட பாஷாபிவிருத்திச் சங்கம் தனது நன்றியைக் கவிதை நடையில் அமைத்து, வேண்டிய வெளி அழகுகள் செய்து ஒப்பிக்கும் பொறுப்பைப் பல வாரங்களுக்கு முந்தியே மஹாலிங்க சிவத்திடம் ஒப்பித்திருந்தது. ஒப்பிக்கும் போதே “இது கட்டாயம் நடக்குந்தான்; நடக்கக்கூடியது தான்” என்று என் மனசுக்குட் சிரித்துக் கொண்டேன். கூடிச் சிரிக்கிறதற்கு அப்பொழுது அச்சங்கத்திற் பொருத்தமான ஆள் இல்லை. எழுதுகோலுங் காகிதமும் எடுத்துக் கொண்டுபோய் “சொல்லுங்கள் எழுதுகிறோம்” என்றால், கவிசொல்லு கிற ஒருவர், கவிபாடி அதன்மேற் செய்ய வேண்டியன செய்து, குறிப் பிட்ட விழாவுக்குக் கொண்டுவந்து ஒப்பிக்கிற வேலையை ஏற்றுக் கொண்டால், “அவர் ஏற்றுக்கொண்டார்” என்று அந்தச் சங்கம் நம்பிக் கொண்டால், அதனைப் பார்த்துச் சிரியாமல் வேறு என்ன செய்ய முடியும் மஹாலிங்கசிவம் அப்பொழுது ஆரிய திராவிட பாஷாபி விருத்திச் சங்கத்துக்கு உபகாரியதரிசியாயுமிருந்தார். அவரைத் தூண்டுவார், தீண்டுவார் யாருமில்லை. பிரதம வித்தியாதரிசியாயிருந்த பிரம்ம பூgதி. சதாசிவ ஐயர் அவர்கள் மஹாலிங்கசிவம் எந்த உலகத்திற்குச் சஞ்சாரஞ் செய்கின்றவர் என்பதை நன்கு அநுபவித்தறிந்தவர்கள். அவர் களும் அப்பொழுது சங்கத்தில் இல்லை. அடுத்த நாளே, மஹாலிங்க சிவம், அன்று அச்சங்கத்தில் நடந்த நடைமுறைகள் அத்தனையும் மறந்துபோனார். சஷ்டியப்த பூர்த்தி விழாவுக்கு மாத்திரம் எப்படியோ வந்து சேர்ந்துவிட்டார். அங்கே நடப்பவைகளை வெகு நிம்மதியாகப் பார்த்து அநுபவித்துக்கொண்டிருந்தார்.
ஆரிய திராவிட பாஷாபிவிருத்திச் சங்கக் காரியதரிசியும் பிற ரும் மேற்படி சங்கஞ் சமர்ப்பிக்கும் உபசார பத்திரத்தைத் தேடு கிறார்கள். 'வந்திருக்குமே” என்று விசாரிக்கின்றார்கள். மஹாலிங்க சிவம் கொண்டுவந்திருப்பார்; வைத்திருப்பார்” என்ற பேச்சும் நடக்கின் றது. ‘இனியும் சகிப்பது சரியன்று’ என்று எனக்குத் தோன்றியது.
மஹாலிங்கசிவத்துக்குப் பக்கத்தே மெல்லப் போய், “ஏதும் பாட்டுக் கொண்டுவந்திருக்கிறீர்களா? சங்கச் சார்பில் உபசார பத்திரப் பொறுப்பை நீங்கள் ஏற்றுக்கொண்டீர்களே” என்று ஞாபகஞ் செய்தேன். அவர் அப்படியா' என்று விழித்துத் தலையை மெல்லத் தடவிக் கொண்டு ஒருமுறை கொட்டாவிவிட்டார். ‘எழுதுகோலும் காகிதமும் கொண்டு வரவா” என்று கேட்டேன். அவர் அதற்குடன்பட்டுக் கொண்டு வித்தியாலயக் கட்டிடத்துக்குப் பின்புறமாக வடக்குப் பக்கத்தில் உள்ள தமிழ்ப் பள்ளிக்கூடத்துக்குச் சென்று சேர்ந்தார். எழுதுகோலை
44

யும் காகிதத்தையும் அவர் முன்னிலையில் வைத்தேன். ஒரு சில நிமிஷங்களிற் சில பாட்டுக்கள் எழுதி முடித்தார். முடித்தபிறகு எழுதிய காகிதத்தைப் பலமுறை மடித்தார். மடித்ததன் மேல் அந்த மடிப்பைத் தமது மடியுள் வைத்துக்கொண்டார். பழையபடி மேடைக்கு வந்து விட்டார்.
பல உபசாரப் பத்திரங்கள், பல்வேறு வர்ணங்களிற் கொடி செடி வேலை செய்யப்பட்டவைகள், பலவேறு சங்கங்களின் சார்பிற் படிக்கக் கூடியவர்களாற் படிக்கப்பட்டுத் தலைவர் அவர்கள் மூலம் மகாவித்துவான் ஐயரவர்களிடம் சமர்ப்பிக்கப்படுகின்றன. அவற்றை யெல்லாம் உற்றுப் பார்த்துக் கொண்டிருக்கிறார் மஹாலிங்கசிவம்.
ஆரிய திராவிட பாஷாபிவிருத்திச் சங்கத்தின் முறை வந்தது. மஹாலிங்கசிவம் எழுந்தார். எழுந்து தமது போர்வையை மெல்ல நீக்கி, மடியைப் பரீசீலனை செய்து, பல மடிப்புக்களோடு கூடிய காகிதத்தைக் கண்டுபிடித்து, வெளியிலே எடுத்து ஆறுதலாக மடிப்புக்களை விரிக்கத் தொடங்கினார். புதியதொரு குதூகலஞ் சபையிலே திரையெறிந்தது.
மஹாலிங்கசிவம் சபையை நோக்கினார். இச்சபையிலே அறிஞர்களாற் பாடப்பட்ட விருத்தப்பாக்களின் விருத்தத்தையும் அக வற்பாக்களின் அகலத்தையும் கண்டு என் பாக்கள் வெள்ளைப் பாக்களாய் வெண்பாக்களாகிவிட்டன. மற்றைப் பாக்களின் முன் என் பாடற்கு அச்சே இல்லாமற் போய்விட்டது. (வெள்ளை - வெண்மைஅறிவின்மை), (அச்சு - உயிர் : அச்சுவாகனம்) என்று சொல்லிவிட்டுப் பாடல்களைப் படிக்கத் தொடங்கினார். நிசப்தம் குடிகொண்டது. பாடல்களைப் படித்துப் படித்து வியாக்கியானமுஞ் செய்தார். கண்கள் எல்லாம் அவரையே நோக்கின. காதுகளெல்லாம் அவர் வாயிலிருந்து வரும் ஒவ்வோர் எழுத்துக்கும் பாத்திரமாயின. முந்திய பாத்திரங்கள் அழகிய ஆணித்தரமான வேலைப்பாடுகள் நிறைந்தவைகள், மறவி யில் மறைந்து போயின. ‘அழகினுக் கழகு செய்வார் யாவரே" என்ற முடிபுக்கு யாவரும் வந்தார்கள் விழா நிறை வெய்தியது. பரிபூரண LDIT60ig51.
சம்பிரதாயத்துக்கு மாறாகப் பத்திரத்தைச் சமர்ப்பிக்க வேண்டிய
இடத்திற் சமர்ப்பிக்காமற் பழையபடி மடித்துத் தமது மடிக்குள்ளேயே
பத்திரப்படுத்திக்கொண்டார் மஹாலிங்கசிவம். மாதிரிகைக்காக, அப்
பத்திரத்திலுள்ள பாடல்களில் - எத்தனையோபேரை வசீகரித்த அந்தக்
கவிதைகளில் - ஒன்று சொல்லும்படி ஒருவர் கேட்டால், இன்றைக்கும் 45

Page 35
அந்த மஹாலிங்கசிவத்தின் மடியை நினைந்து விழிவிழிக்க வேண்டியிருக் கின்றது
அந்தக் கவிதைகளை அந்த மடியோடு மடியும்படி விட்ட என் மடியைப்பற்றி என்ன நினைக்கிறீர்கள்! இது நிற்க. இதற்கொரு கழுவாயாக மற்றொரு சிறு சந்தர்ப்பத்தை நோக்குவோம்.
மஹாலிங்கசிவம் கோப்பாய் ஆசிரியர் பயிற்சிக் கலாசாலை யிற் படிப்பித்தபோது ஆசிரிய மாணவரொருவர் படிப்பித்தற் பரீட்சை யிற் படிப்பித்து வெற்றி எய்தும் பொருட்டு, இதுவரை அங்கே படிப்பியாததும் புதியதுமான இலக்கியச் செய்யுள் ஒன்று சொல் லும்படி கேட்டார். உடனே மஹாலிங்கசிவம் தாமே இயற்றி ஒரு செய்யுள் சொன்னார். அச்செய்யுள் இது :
மங்கையிவள் செலும்வழியில் நறுந்தருக்கள் நிழல்செய்த மலிக மற்றும் பொங்குமணல் தாமரையின் பொலந்தாத
போற்பொலிக புனித வாவி எங்குமலர்ந் திலங்கிடுக மந்தமா
ருதம்வீச இனிய தோகை யுங்குயிலுந் தணையாக அறுதொடர்க்கண்
உகரம்போல் உறுக தாரம்.
ஆச்சிரமத்திலிருந்து கணவன் வீட்டுக்குச் செல்ல விடை வேண்டி நின்ற சகுந்தலையைக் கண்ணுவர் ஆசீர்வதித்து வழி யனுப்புகின்றார். இச்சந்தர்ப்பம், சாகுந்தல நாடகத்தில் மிகப் பிரசித்தி யான காளிதாச மகாகவியின் காவியரசம் ஒழுகி வழியுமிடம்.
* மங்கையிவள்” என்ற கவி, சந்தர்ப்பத்தை மனத்தில் இருத்திக் கொண்டு இயற்றியது, மொழிபெயர்ப்பன்று ஆசுகவி பாட்டின் இறுதி யிலே, அறுதொடர்க்கண் உகரம்போ லுறுக தூரம்' என்பது சொந்தக் கற்பனை.
கணவன் பிரிவினால் நீண்டு நடக்கிறவழியைச் சகுந்தலைக் குச் சோர்வு பிறவாதபிரகாரம் கண்ணுவர் முலம் அழகு செய்தமைக் கின்றான் காளிதாச மகாகவி காளிதாசன் வழி அழகு செய்யும் போது, அஃது எத்துணை நீண்டவழியும் அளபெடையாகாதே என்று சங்க நாதஞ் செய்கின்றது மஹாலிங்கசிவத்தின் குற்றியலுகரக் கற்பனை.
- பண்டிதமணி சி.கணபதிப்பிள்ளை இலக்கியவழி 46

3. கல்லாது கவிபொழிந்த வல்லாளர்,
இராமநாதனை வசீகரித்த குருகவி மகாலிங்கசிவம்
பண்டிதமணி கணபதிப்பிள்ளை அவர்களின் முன்னோர் களுள் மட்டுவில் ஊரில் ஒரு கணபதிப்பிள்ளை வாழ்ந்தார். அவரின் மைந்தன் வேற்பிள்ளை என்பார் உரையாசிரியர் எனப் புகழ்பெற்ற வர். ஆறுமுகநாவலர் அவர்களின் மாணாக்கனாய் அறிவு விருத்தி செய்தவர். வேற்பிள்ளை அவர்கள் சிதம்பரம் நாவலர் சைவப்பிரகாச வித்தியாலத்தில் தலைமையாசிரியராயிருந்து பெரியவர் பலரை உரு வாக்கியவர், ஈழமண்டல சதகம் பாடியவர்.
பாண்டவரில் பாரித்திபன்.
வேற்பிள்ளை அவர்கள் புலத்துறை முற்றிய புலவர்கள். வாழ் பதியாய புலோலியில் சைவப்பெரியார் சிவபாதசுந்தரம் அவர்களின் தமக்கையாரை மணந்தவர். பஞ்சபாண்டவர்களைப் போல மைந்தர் ஐவரைப் பெற்றவர். மைந்தர்களுள் பார்த்திபன் போல நடுவிற் பிறந் தவர் மகாலிங்கசிவம். திருஞானசம்பந்தர், மாணிக்கவாசகர் அண் ணன்மார். கந்தசுவாமி, நடராசா தம்பிமார்.
தம் பிள்ளைகள் எக்காரணங் கொண்டும் ஆங்கிலம் படித்த லாகாது என்பது வேற்பிள்ளை அவர்களின் உத்தரவு. ஆங்கிலம் மிலேச்ச பாஷை என்பது அவர் எண்ணம். தமையன்மாரும் தம்பி
47

Page 36
மாரும் ஆங்கிலம் பயிலத் துணிந்தார்கள், பயின்றார்கள். மகாலிங்க சிவம் பள்ளிக்கே போகவில்லை; படிப்பு வீடுதேடி - அவர் நெஞ்சுதேடி - வந்து பணிந்தது - குவிந்தது.
வீட்டில் பார்பதி என்னும் முதிய பாட்டியார் இருந்தார். அவர் திருமணஞ் செய்யாமல் ஒளவையர் போல வாழ்ந்தார். அவர் ஒளவை யாரைப் போல தானும் இரு பெண் குழந்தைகளைக் கல்வி கற்பித்து மதுரைத் தமிழ்ப் பண்டிதைகளாக்கினார். அந்த வாயாலே பேரன் மகாலிங்கசிவத்துக்கும் பாடம் சொன்னார். ஆத்திசூடி முதலாகப் பழமலை அந்தாதி ஈறாக மகாலிங்கசிவம் சிறுவனாயிருந்த போதே நெஞ்சிற்கொண்டார்.
கவிதை தானாக வந்தது
வயல் வரம்புகளில் தாவியோடும்போது அவருக்குப் பாட்டுப் பாடவும் வந்தது. அவர் பாடியவற்றை அவரும் எழுதிவைக்கவில்லை. கூடி விளையாடிய நண்பர்களும் எழுதி வைக்கவில்லை.
ஒருநாள் அவர் ஒரு வழியால் போனபோது அங்கே கொன்றை மரநிழலில் வாட்ட சாட்டமான ஒரு கிழவன் நெடிய தொடைகளைச் சொறிந்தவாறு காலை நீட்டி இருந்தார். மகாலிங்கசிவம் தம் வழியே மீண்டபோதும் அந்தக் கிழவன் சொறிந்த வண்ணம் இருந்தான். சிவத் துக்குச் சிரிப்புவந்தது. சிரிப்பைத் தள்ளிக்கொண்டு பாட்டும் வந்தது. பாட்டுப் பெரிய பாட்டு.
*குரங்கே உனக்கு மரந்தடி தானென்ன குத்தகையோ சிரங்கே உனக்கு நெடுந்தொடை தானென்ன சீதனமோ”
இக் கருத்திலமைந்த பாடலை முற்றாக எவரும் அறியவில்லை.
பிரசங்க ஆற்றல்.
மட்டுவில் செல்லப்பா என்பவர் சட்டத்தரணிகளை வென்ற நிபுணர். 'லோ. செல்லப்பா" என்பது பெயர். அவர் ஒரு சமயம் சேர் இராமநாதன் அவர்களை மட்டுவிற் கிராமத்துக்கு அழைத்து ஒரு பரிசளிப்பு விழாக் கொண்டாடினார். பண்டிதமணி கணபதிப்பிள்ளை அவர்கள் நாவலர் வழியிற் காவியப் பாடசாலை நடத்தி ஆண்டு விழாவின்போது தரமான பிள்ளைகளுக்கு சேர் இராமநாதனின் கை யால் பரிசு. பெரியவிழா அதில் வரவேற்புரை மகாலிங்கசிவம். மஞ்சள் தேறு நிகர்த்த மகாலிங்கசிவம் அடக்க ஒடுக்கமாகக் கூட்டுக் காலில் 48

நின்று ஆடாமல் அசையாமல் மேடை மீது பாரியார் சமேதரராய் வீற்றி ருந்த இராமநாத வள்ளலுக்கு வாய்நிறைந்த வாய்மை மொழிகளால் ஒரு வரவேற்பு.
கோப்பாயில் விரிவுரை
திருக்கைலாய மலையிலே பார்பதி பரமேஸ்வரன் போல எழுந் தருளியுள்ள ...” என்று தொடங்கிப் பேசியமை இராமநாதன் அவர் களை வெகுவாக உருக்கிவிட்டது. அடுத்தகிழமை மகாலிங்சிவம் இராமநாதன் கல்லூரியில் ஆசிரியர். அதன் பின் கோப்பாயிலே விரிவுரையாளர்.
இத்தனை பெறுபேறுகளுக்கும் மகாலிங்கசிவத்தாருக்கு எவ் வித பரீட்சைச் சான்றிதழ்களோ நற்சாட்சிப் பத்திரங்களோ உதவி செய்யவில்லை. கோப்பாய் ஆசிரியப் பயிற்சிக் கலாசாலையில் ஆயிரக்கணக்கான ஆசிரியர்களை இலக்கிய இலக்கண இரசிகர் களாக்கிய விடாமுயற்சி மகாலிங்கசிவத்தையே சாரும்.
பண்டிதமணி அவர்களுக்கு ஆத்திசூடி, பழமலையந்தாதி பாடம்பண்ணியவரும் மகாலிங்கசிவமே. நாவலர் பாடசாலையின் காவிய பாடங்களில் ஆற்றுப்படுத்தியவரும் அவரே.
மகாலிங்கசிவத்தின் ஆற்றல் மிக்க பேச்சுக்கள் நகைச் சுவை ததும்பப் பெருகுவன. எவ்வித ஆயத்தமும் இல்லாமல் அவர் பேசி யவை ஆரிய திராவிட பாஷாபிவிருத்திச் சங்கத்தையும், கலாநிலை யத்தையும் அக்காலத்திற் தூக்கிவிட்டன. காளிதாச மகாகவியின் சாகுந்தலத்தில் ஈடுபாடுகொண்ட அவரின் புதல்வி ஒருத்தி கலாநிதி நடேசபிள்ளை அவர்கள் செய்த சகுந்தலை வெண்பாவைப் பார்வை யிடும் பாக்கியம் செய்தவளாயினாள் என்றால் மகாலிங்கசிவத்தின் தமிழ் ஊறல் எங்கே. சிவத்தின் மைந்தன் பார்வதிநாதசிவத்தின் பாடல்களைப் பண்டிதமணி அருமையாக விமர்சனம் செய்துள்ளார். படித்துப் பார்த்துப் பழைய ஊறலை உணரலாம்.
பல்கலைப் புலவர் க.சி.குலரத்தினம் (ஈழநாடு 15.07.1985)
米米米 --一 米米米
49

Page 37
4. மட்டுவில் தந்த தமிழ் அறிஞர்கள்
குருகவியும் பண்டிதமணியும்
யாழ்ப்பாணத்து மட்டுவிலுக்குப் புராதனமாக அமைந்த பெயர் ‘சந்திரபுரம்” என்பதாகும். திருக்கேதாரத்திலே மன்மதனால் பூசிக்கப்பட்ட “சிவலிங்கம்” யாழ்ப்பாண நல்லூரிலே கைலாசநாதர் சிவன் கோவிலிலே பிரதிட்டை செய்யப்பட்டது. யாழ்ப்பாணத்துக் கோயில்களுக்குப் பறங்கியர் ஆட்சிக் காலத்தில் பேரழிவு ஏற்பட்டது. இதனால் கைலாசநாதர் சிவன் கோயில் சிவலிங்கம் இரவோடு இர வாக மட்டுவிலில் உள்ள "கல்வம்" என்னும் திடரில் உள்ள சிதில மடைந்து இருந்த சிவன் கோயிலுக்குத் தருவிக்கப்பட்டது. இங்கு இச்சிவாலயத்தில் சிவலிங்கப் பிரதிட்டை செய்து மகா கும்பாபி ஷேகத்தின் போது இறைவன் பெயர் ‘சிவசந்திர மெளலிசர்", இறைவி பெயர் ‘சாந்த நாயகி அம்மை" என நாமம் சூட்டப்பட்டது. இதனால் மட்டுவில் “சந்திரபுரம்" என்றும் சிறப்புப் பெயர் பெறுகின்றது. இதற்கு நீண்டதொரு வரலாறு "ஈழமண்டல சதகத்தில் இடம்பெற்றுள்ளது. மேலும் அம்பாள் வழிபாட்டில் முக்கியத்துவம் பெற்றது பன்றித் தலைச்சி கண்ணகி அம்பாள் கோயிலாகும். அடியவர் ஒருவரின் வேண்டுதலுக்கு இரங்கி மாட்டுத் தலையை நீதி ஸ்தலத்திப் பன்றித் தலையாக மாற்றி அற்புதம் காட்டிய அற்புத தெய்வம். இவ்வாறான ஆலயங்களின் பெருமைகளைத் தன்னகத்தே கொண்டுள்ளது. இத னால் இங்கு வாழும் மக்களும் தம்மை ஆலய வழிபாடுகள், தொண்டு களில் ஈடுபடுத்திச் சிறந்து விளங்குகின்றனர்.
50

இத்துணை பெருமை வாய்ந்த மட்டுவிற்பதி தமிழ் அறிஞர் களையும் தமிழ் கூறும் நல்லுலகுக்குத் தந்துள்ளது. அவ்வறிஞர் வரிசையில் உரையாசிரியர் ம.க.வேற்பிள்ளை, பண்டிதர், குருகவி மகாலிங்கசிவம், பண்டிதமணி சி. கணபதிப்பிள்ளை போன்றோரை இவ்வாறாகக் குறிப்பிடலாம். இவர்களில் ஒருவர் குருகவி மகாலிங்க சிவம் அவர்கள். மற்றையவர் தமிழ் முதறிஞர் பண்டிதமணி சி. கணபதிப் பிள்ளை அவர்கள். இவர்கள் இருவரினதும் ஜன்மபூமி மட்டுவிலே ஆகும்.
நல்லவர்கள் உதயமாவதற்குத் தவ விசேடம் வேண்டும். எத் தனையோ கோடி ஆன்மாக்களின் தவ விசேடங்களின் பெறுபேறாக அவதரித்தவர் திருநெல்வேலி சுவாமி ஞானப்பிரகாசர் என்ற மகான். பசுக்கொலைக்கு அஞ்சி இரவோடு இரவாக இந்தியாவுக்குச் சென்ற வர். நல்லூர் தவப் பெருந்திரு பூரீலழறி ஆறுமுகநாவலர் பெருமானும் அவ்வகையினரே. 19 ஆம் நூற்றாண்டில் சைவமும், தமிழும் நிலை பெற அரும்பெரும் பாடுபட்டவர்.
அதேபோன்று நம் நாட்டிலும் தவ விசேடத்தின் பெறுபேறாகக் குருகவியும் பண்டிதமணியும் அவதரித்தவர்கள் என்று கூறின் மிகை யொன்றுமில்லை.
கவிஞர் மகாலிங்கசிவம் பிரபல உரையாசிரியரும், சிதம்பரம் நாவலர் சைவப்பிரகாச வித்தியாசாலை அறிஞருமான உரையாசிரியர் ம.க.வேற்பிள்ளை அவர்களின் மைந்தர். உரையாசிரியர் திருவாத ஆரடிகள் புராணத்துக்கு உரை செய்தவர். இதனால் நாவலரின் மருமகரும், மாணவருமான வித்துவசிரோமணி பொன்னம்பலபிள்ளை அவர்களால் 'பிள்ளைப் புலவர்” என்னும் பட்டம் பெற்றவர். மேலும் பாராட்டும் பெற்றவர்.
உரையாசிரியருக்குப் பிள்ளைகள் ஐவர். கவிஞர் மகாலிங்க சிவம் அவர்கள் நடுநாயகமாக விளங்கியவர். மூத்த சகோதரர் “இந்து சாதனம்’ பத்திராதிபர். யாழ். இந்துக் கல்லூரியில் ஆசிரியப் பணியாற் றியவர். இளைய சகோதரர் நடராசா அவர்கள் பட்டதாரி ஆசிரியர். இவர் காரைநகர் இந்துக் கல்லூரியில் கல்விப்பணி ஆற்றியவர்.
கவிஞர் மகாலிங்கசிவம் அவர்கள் ‘பரீட்சை எடாத பண்டிதர்? எனப் பலராலும் பாராட்டுப் பெற்றவர். இளவயதிலேயே கவி இயற் றும் ஆற்றல் உடையவர். இவர் சிறந்த அம்பாள் உபாசகர். 1891 ஆம் ஆண்டு கர வருடம் பிறந்தவர் மகாலிங்கலசிவம் அவர்கள். சிதம்பரம்
51

Page 38
நாவலர் பாடசாலையில் உரையாசிரியர் அதிபராக இருந்த காலத்தில் கல்வி கற்றவர். நல்லூர் சின்னத்தம்பிப் புலவர் போன்று இளவயதிலே கவி இயற்றுவதில் ஆர்வம் பெற்றுவிட்டார். தமது 12 ஆம் வயதில் கவி இயற்றும் ஆற்றல் படைத்தவராகக் காணப்பட்டார். பழனிப்பதிகம் பாடியவர். பண்டிதமணி அவர்களுக்கு ‘ஆத்திசூடி" முதலாம் நீதி நூல் களைக் கற்பித்தவர்கள். தமது வாழ்வில் சதாகாலமும் ‘கவிதை உலகில்" சஞ்சாரம் செய்பவர்கள். மகாலிங்கசிவம் அவர்களின் பல நிகழ்ச்சிச் சம்பவங்கள் உண்டு.
இவற்றை எல்லாம் பண்டிதமணி அவர்கள் பல்வேறு இடங் களில் கையாண்டுள்ளார். இதனைப் பரக்கக் காணலாம். மேலும் தமிழ் மூதறிஞர் பண்டிதமணி அவர்களின் ‘இலக்கிய வழி நூலிலும் இடம்பெற்றுள்ளது. இந்நூலில் ஒரு கட்டுரை “கவிஞர் மகாலிங்கசிவம்” என்ற தலைப்பில் உள்ளது. கவிஞருக்கு ஒருதனி இடம் அளித்து முக்கியத்துவம் கொடுத்துள்ளார்.
அம்பாள் உபாசகரான கவிஞர் மகாலிங்கசிவம் இனிமையான கோயில் பிரசாதங்களில் மிகவும் விருப்பம் உடையவர்கள். இதனால் மட்டுவில் பூரீமுத்துமாரி அம்மன் ஆலயத்துக்கு வெள்ளிக்கிழமை தோறும் மாலைப் பொழுதில் வழிபாட்டுக்குச் செல்வாராம். அங்கு அம்பாளின் பிரசாதமாக வழங்கும் ‘பாற் கொழுக்கட்டை"யைப் பெற்று மகிழ்ச்சி அடைவாராம். தமிழ் முதறிஞர் பண்டிதமணி அவர்கள் இவ்வாறாக ஒருநாள் எனக்குக் கூறக் கேட்டுக் கொண்டேன்.
கவி இயற்றுவதில் தமக்கென ஒரு பாணியை மேற்கொண்ட வர் கவிஞர் மகாலிங்கசிவம். மருதனாமடம் இராமநாதன் கல்லூரியில் தமிழ்ப் பணி ஆற்றியவர். கோப்பாய் இருபாலை ஆசிரியர் பயிற்சிக் கலாசாலையில் தமிழ் விரிவுரையாளராகப் பணிபுரிந்தவர். அங்கு மாணவர்களுக்குக் கல்வி கற்பித்தல் நெறி கற்பிக்கும்போது பாடிய பாடல் ஒன்றை நினைவு கொள்வோம்:
மங்கையிவள் செலும்வழியில் நறுந்தருக்கள் நிழல்செய்த மலிக மற்றும் பொங்குமணல் தாமரையின் பொலந்தாத
போற்பொலிக புனித வாவி, எங்குமலர்ந் திலங்கிடுக மந்தமா
ருதம்வீச இனிய தோகை யுங்குயிலும் தணையாக அறுதொடர்க்கண்
உகரம்போல் உறுக தாரம்
52

இச்செய்யுளை இலக்கிய வழியில் பண்டிமணி அவர்கள் கை யாண்டுள்ளார்கள். அண்மைக் காலத்தில் இதனைக் குருகவி அவர் களின் மைந்தர் புலவர் ம. பார்வதிநாதசிவம் அவர்கள் தந்தையின் பெருமையைக் கூறி நினைவு கூர்ந்தார்கள்.
பண்டிதமணி அவர்கள் உரையாசிரியர் மரபில் வந்த உற வினர் ஆவார். 1899 ஆம் ஆண்டு விகாரி வருடம், ஆனி மாதம் 27 ஆம் திகதி சதய நட்சத்திரத்தில் பிறந்தவர். மட்டுவில் சட்டநாதர் சின்னத்தம்பி அவர்கள் குடும்பத்தின் ஏகபுத்திரன் இவர். தாயாரின் ஜன்மபூமி தளங்கிளப்பு. இவர் தமது ஆரம்பக் கல்வியை உரை யாசிரியர் ம. க. வேற்பிள்ளை அவர்களால் ஸ்தாபிக்கப்பட்ட மட்டுவில் சந்திரமெளலிச வித்தியாசாலையில் கற்றுக்கொண்டவர். 19 ஆம் வயதில் நாவலர் பாடசாலையைச் சந்திக்க வைத்தவர் கவிஞர் சகோ தரர் நடராசா உபாத்தியாயர். இளவயதிலேயே பெற்ற தாயாரை இழந் தவர் பண்டிதமணி அவர்கள். மகாலிங்கசிவத்தின் தாயார் மகேஸ்வரி அம்மையாரால் அரவணைக்கப்பட்டவர். சைவப்பெரியார் சிவபாத சுந்தரத்தின் சகோதரியே மகேஸ்வரி அம்மையார். இதனால் பண்டித மணி அவர்களுக்குக் கவிஞர் மகாலிங்கசிவத்தின் தொடர்பு 11 ஆம் வயதில் ஏற்பட்டது. அவரிடம் கல்வி கற்கவும் அரிய வாய்ப்புக் கிடைத்தது. இத்தகைய பல்வேறு தொடர்புகளினால் பண்டிதமணி அவர்கள் மகாலிங்கசிவம் அவர்களை ‘குருகவி மகாலிங்கசிவம்” என்றே அழைப்பார்கள். மட்டுவில் மு. தம்பையா உபாத்தியாயரும் அடிக்கடி இவ்வாறு சொல்லுவார். எங்கள் குஞ்சி அவர்கள் கவிஞர் மகா லிங்கசிவம் அவர்களை ‘குருகவி மகாலிங்கசிவம்” என்றே அழைப் பார்கள் என நினைவுபடுத்துவார். (‘குஞ்சி” என்பது சிறிய தந்தைய ரான பண்டிதமணி அவர்களைக் குறிக்கும்)
பண்டிதமணி அவர்கள் நுண்மாண் நுழைபுலம் வாய்க்கப் பெற்றவர்கள். தம் வாழ்நாள் முழுவதும் சைவத்துக்கும் தமிழுக்கும் அருந்தொண்டு ஆற்றியவர். நாவலரையும், நாவலர் தருமத்தையும் உயிரென நேசித்தவர். நாவலர் பெருமான், சி.வை. தாமோதரம் பிள்ளை போன்றவர்களின் பெருமைகளை எல்லாம் எடுத்துப் பேசி யவர். இவர்கள் ஆற்றிய பணிகள் பலராலும் பாராட்டுப் பெற்றன. பண்டிதமணி அவர்களை தினகரன்" கெளரவித்து “பண்டிதமணி பட்டம் வழங்கியது. இலங்கைப் பல்கலைக்கழகம் ‘கலாநிதி" பட்டம் வழங்கி *இலக்கிய கலாநிதி " ஆக்கியது. இவர்கள் உலகுக்கு அளித்த ஒப்புயர் வற்ற நூல்கள் சிறந்த பொக்கிஷங்களாகும்.
53

Page 39
மட்டுவில் பன்றித் தலைச்சி கண்ணகி அம்மன் தோத்திரத்தில் ஆரம்பித்து அத்தேவ சிந்தனையில் பூர்த்தி பெறுகின்றது. இவர்கள் இயற்றிய இலக்கியவழி, சிந்தனைக் களஞ்சியம், கம்பராமாயணக் காட்சிகள், நாவலர், ஆறுமுகநாவலர், கந்தபுராண போதனை, கந்தபுரான கலாசாரம், சைவநற்சிந்தனை, கந்தபுராண தட்சகாண்ட உரை போன்ற நூல்கள் குறிப்பிடத்தக்கன. இவைகள் அனைத்தும் சைவ, தமிழ் இலக்கிய ஆர்வலர்களுக்குப் பெருவிருந்தாகும்.
கந்தபுராண தட்சகாண்ட உரை பண்டிதமணி அவர்கள் தமக்கு ஏற்பட்ட நோய் நீக்கம் பெறும் பொருட்டாக விநாயகப் பெருமானை வழிபாடுசெய்து விரதம் அநுட்டித்து எழுதிய உரையாகும்.
இவ்வாறாகப் பண்டிதமணியும், குருகவியும் சைவத்துக்கும் தமிழுக்கும் ஆற்றிய பங்களிப்பு அனைவராலும் கருதத்தக்கதாகும்.
மட்டுவில் கா. சிவபாலன் (05.04.1994 தினகரன்)
米米米 - 米水水
54

5. மாமனும் மருகரும்
0ெசிவப்பெரியாருக்கு மனோன்மணி, மகேசுவரி, இராஜேசு வரி என்னும் சகோதரிமார் முவர்களுண்டு. மனோன்மணியின் பெயர்த்தியே தங்கப்பதக்கம் பெற்ற மதுரைத் தமிழ்ச் சங்கப் பண்டிதை பாலாம்பிகையாகும். சகோதரி மகேசுவரிக்கு, பாண்டவர் களைப்போல ஐந்து ஆண்பிள்ளைகளுண்டு. பண்டிதர் சம்பந்தர், சட்டத்தரணி மாணிக்கவாசகர், பண்டிதர் மகாலிங்கசிவம், ஆசிரியர் கந்தசுவாமி, ஆசிரியர் நடராசா என்பவர்களே அவர்கள். இவர்களு டைய தகப்பனார் மட்டுவில் உரையாசிரியர் ம.க.வேற்பிள்ளைய வர்கள், சிதம்பரத்திலுள்ள நாவலர் பாடசாலைக்குத் தலைமையா சிரியராகப் பதவியேற்றுப் புறநாடு சென்றுவிட்டார். இந்நிலையில் மருமகரை மேற்பார்வையிடும் பொறுப்பு சைவப்பெரியாரை அடைந் தது. மருமக்கள் உறவினர் வீட்டில் தங்கிப் புலோலி வேலாயுத பிள்ளையால் தொடக்கப்பெற்ற பாடசாலையிற் கல்வி பயின்று வந் தனர். இவர்களுடைய தாய் மகேசுவரி மட்டுவிலில் தங்கி வயல்புலங் களைப் பார்த்து வந்தார். தாயன்பு இழுக்க, மருகர் பள்ளிக்கு முழுக்குப் போட்டுவிட்டு கால்நடையில் மட்டுவிலுக்கு வந்துவிடு வார்கள். தாயும் பாண்டவர்களை அணைத்துப் புத்தி சொல்லிப் பார்ப்பார். ஆனால் பயனில்லை. இரண்டு நாட்கள் செல்ல மட்டுவில் வீட்டுப் படலையில் திருக்கல் வண்டியின் சதங்கைச் சத்தம் கேட்கும். மருகரெல்லோரும் பெரிய வளவிலுள்ள பற்றை மறைவில் ஒளிந்து விடுவார்கள்.
55

Page 40
இளமையிற் கல்வியில்லாமல் வாழ்வு பாழாய்ப் போமே என்ற கவலை மீதுாரப் பொல்லாத மாமனார் பள்ளிக்குக் கள்ளேடுபோடும் மருமக்களை நாடி உருத்திர மூர்த்தங்கொண்டு வந்துவிடுவார். மாட்டை அவிழ்த்துத் தென்னையோடு கட்டிவிட்டு உள்ளே புகுந்தால் மகாலிங்கம் மட்டும் எதிர்கொள்வார். மகாலிங்கத்திற்கு ஆங்கிலம் படிப்பதில் அக்கறையேயில்லை. "உந்த மிலேச்ச பாஷையைப் படி யாதே" அப்பனாராகிய உரையாசிரியர் மகவுக்குக் கூற, தந்தை சொல்லை மந்திரமாக மதித்தமையால் மாமனாரின் இரும்புப் பிடி யிலிருந்து தப்பிக்கொண்டார். "தேரடிக் கணக்கப்பிள்ளை எங்கே?" என்று உரப்பினார் மாமனார். "நானொன்றும் அறியேன்" என்று பய பத்தியோடு விடை கூறினார் மருகர். அயற்கோவிலில் தேர்த்திருப்பணி வேலை நடைபெற்றுக் கொண்டிருந்தது. அங்கே நிலையாகத் திட்டை கட்டி அவ்வேலைகளைக் கடைக்கண் பாலித்துவந்த சண்டேசுரரான ம.வே. திருஞானசம்பந்தபிள்ளைக்கு மாமனார் உவந்தளித்த சிறப்புப் பெயரே 'தேரடிக் கணக்கப்பிள்ளை'யாகும். மாமனாரும் மட்டுவிலில் முகாமிட்டுவிட்டார். நாளுக்கு ஒரு வேளையாவது உணவிற்கு வரு வார்கள் மருகரென்று காத்திருந்தார் சிவபாதத்தார். ஆனால் ஒருவரா வது வீடு திரும்பவில்லை; என்றாலும் பானையிலும் சட்டிகளிலும் சமைக்கப்பெற்ற சோறும் கறிகளும் நாடோறும் மறைந்து கொண்டே வந்தன. உருத்திராக்கப் பூனையாகிய மகாலிங்கத்தை உற்றுப் பார்த்துவிட்டு சிவபாதவம்மான் பேசாதிருந்துவிட்டார்.
தாயாரும் அம்மானும் கோவில் வழிபாட்டிற்கு மாலையிற் செல்ல வடலியோலையில் தட்டுவங் கோலி, திருட்டு விழியுடனும், பதறுங் கைகளோடும் அதற்குள் சமைத்த உணவை நிரப்பி முன்னும் பின்னும் பார்த்து, ஓட்டமாகச் சென்று அஞ்ஞாத வாசத்திலிருந்த சகோதரர்களுக்கு அன்னம்பாலிக்கும் தில்லையம்பலவனாகத் திகழ்ந் தார் மகாலிங்கம். "மகாலிங்கம், எல்லாரையும் புலோலிக்கு வரச் சொல்லு" என்று கூறி, திருக்கலில் மாட்டைப் பூட்டினார். மாட்டின் சதங்கைச் சத்தம் முடக்கைத் தாண்டி அப்பால் ஒலிக்கத் தொடங்கி யது. புத்திரனிறந்த சோகத்தால் சூரியன் மறைய முன்பு தன் மகனின் உயிரைப் பறித்தவனை யமலோகம் அனுப்பாவிட்டால் தான் யம லோகம் செல்வதென வஞ்சினம் பூண்டார் பாண்டவர்களிலொருவர். கண்ணனின் மாயையால் அக்காலத்திற்றோன்றிய மாலையை மெய் யென நம்பி கொக்கரித்துக் கொண்டெழுந்த கெளரவ பக்கத்தாரைப் போல மருகரெல்லாம் ஆனந்தங் கரைபுரண்டோட பற்றைக் கோட்டை
56

யைக் கைவிட்டு ஆரவாரித்தெழுந்தனர். மழலைச் செல்வங்களைப் பெற்றெடுத்த தாயாரும் சிந்தனையில் ஆழ்ந்தார். படலைக் கயிற்றை அவிழ்த்துக்கொண்டு உள்ளே புகுந்து தரிசனங் கொடுத்தார் சிவ பாதத்தார். கொம்மாளங்களெல்லாம் கூக்குரல்களாக மாறின ஐந் தாறு கொய்யாத்தடிகள் தூள்தூளாகப் பறந்தன. அழுதடங்கிய மருகர் சகிதமாக, முடக்கில் வேலிக் கதிகாலில் கட்டப்பட்ட மாட்டின் கயிற்றை அவிழ்த்து வண்டிலில் பூட்டிக் கொண்டு கடமையுணர்வுடன் புலோலிக்குத் திரும்பினார்.
* இச்சம்பவத்தைச் சட்டத்தரணியும், அண்மையில் சிவபத மடைந்த என்னருமைத் தகப்பனாருமாகிய வே. மாணிக்கவாசகர் பன்முறை கூறக் கேட்டிருக்கிறேன். அவர் சொல்லிய சம்பவத்தையே அச்சொட்டாக நயம்பட எழுத முயன்ற இக்கட்டுரையை என் பாட்ட னாரும் ஞானகுருவுமாகிய சிவபாதசுந்தரனாரின் பாதாரவிந்தங்களுக் குச் சமர்ப்பிக்கிறேன்.
பணி டிதை ச. அமிர்தாம்பிகை B. A. (Hons) (சைவப்பெரியார் க. சிவபாதசுந்தரனார் நூற்றாண்டு விழா மலர்)
kk:k m-HuH ze ziek
57

Page 41
6. பரீட்சை எடாத பண்டிதர்
Dஹாலிங்கசிவத்தின் தந்தையார் உரையாசிரியர் ம.க. வேற் பிள்ளை அவர்கள். (வழங்குகிற பெயர் மட்டுவில் வேலுப்பிள்ளை உபாத்தியாயர்). இவர்கள், பூரீலழறி ஆறுமுகநாவலர் அவர்கள், வித்துவ சிரோமணி பொன்னம்பலபிள்ளை, கார்த்திகேய உபாத்தி யாயர் . இந்த மூவர்களிடத்தும் முறையாகப் பாடங்கேட்டவர்கள் ; இலக்கிய நயங்களை எடுத்துக் காட்டுவதில், பொன்னம்பல பிள்ளைக்கு அடுத்தபடியில் வைத்து எண்ணப்படுபவர்கள் ; சிறந்த நூலுரைகள் செய்தவர்கள்; நீண்ட காலமாக தமது அந்தியகாலம் வரை தரிசிக்க முத்திதரும் திவ்ய சேஷத்திரமாகிய சிதம்பரத்திலே தல வாசஞ் செய்துகொண்டு, ரீலறி ஆறுமுகநாவலர் அவர்கள் தாபித்த சிதம்பரம் சைவப்பிரகாச வித்தியாசாலையில் தலைமைப் போதகா சிரியராய் இருந்தவர்கள். அந்தக் காலத்திலே இடையிடையே தாம் பிறந்த ஊராகிய மட்டுவிலுக்கு வந்து போவார்கள்.
முப்பது வருஷங்களுக்கு முன் ஒருநாள் பின்னேரம், தென் மராட்சியிலே படித்தவர்கள் என்றுள்ளவர்கள் பலர், தோடம்பழம், மாம்பழம் முதலிய கையுறைகளோடு வேலுப்பிள்ளை உபாத்தியாயர் வீட்டுக்குப் போகின்றார்கள். என்னுடைய தகப்பனாரும் போனார்கள். நானுங் கூடப்போனேன்.
கிழக்குப்புற வெளிவிறாந்தையிலே ஒரு உயரமான பெரிய திண்ணை ; சாணத்தினால் மெழுகப்பட்டிருக்கின்றது. அதற்கு முகப்
58

பிலுள்ள முற்றத்தில் தெற்கு வடக்காக ஒரு கிடுகுக் கொட்டகை ; வெள்ளை மணல் பரப்பப்பட்டிருக்கின்றது. திண்ணையிலும் முற்றத் திலும் பலர் குழுமியிருக்கின்றார்கள். தெற்குப்புறத்தில் உயர்ந்து படர்ந்த ஒரு பெரிய நாவல்மரம். அதன் கிளைகளை உளர்ந்து கொண்டு இளந்தென்றல் சுகம் பேசுகின்றது.
திண்ணைக்கு மத்தியிலே ஒரு மான்றோல் ஆசனத்தில் ஒரு முதியவர் சப்பனங் கூட்டிக் கிழக்கு முகமாக வீற்றிருக்கின்றார்கள். வயசுக்கேற்ற உயரம் பருமன் தோற்றம் உள்ளவர்கள், வசீகரமான முறுவலிக்கின்ற முகம்; அழகான செல்லவண்டி, உத்தூளனமும் திரிபுண்டரமுமான விபூதிப் பூச்சு, விசாலமான சந்தனப்பொட்டு; காதுகளிலே கடுக்கன், கழுத்திலே பருத்த உருத்திராக்க மணி மாலை, இவைகள் அவர்களைப்பற்றி நினைப்பில் வைக்கத்தக்க வைகள். அவர்கள்தான் வேலுப்பிள்ளை உபாத்தியாயர் அவர்கள். கதை சொல்லிக் கொண்டிருக்கின்றார்கள்.
அங்கே வருகிறவர்கள் வணக்கஞ் செய்து, சிதம்பரத்து விபூதி வாங்கித் தரித்துக்கொண்டிருக்கின்றார்கள். எனது தகப்பனார் நமஸ் காரஞ் செய்து விபூதி வாங்கித் தரித்தார்கள். நானும் வாங்கிப் பூசிக்கொண்டு ஒருபுறத்தில் இருந்தேன். எங்கும் நிசப்தம் நிலவியது. 'சித்திரப் பாவையின் அத்தகவு அடங்கி" என்று சொல்லுகிற அடக்க மாயிருந்தது அந்த அடக்கம். கதை நடக்கின்றது. இரண்டு மூன்று வாரம் தொடர்ந்து நடந்தது.
புராணக் கதைகள் - சிதம்பரம் காசி முதலிய தல விசே ஷங்கள் - சிலப்பதிகாரம் முதலிய காவிய நயங்கள் - கம்பருடைய பிரத்தியேகமான போக்கு - வித்துவ சிரோன்மணி பொன்னம்பல பிள்ளையின் உரைவிருந்து - நாவலர் பெருமானின் பிரபாவம் - ஆதீன சம்பிரதாயங்கள் - புலவர் சரித்திரங்கள் - தனிப்பாடல்கள் - அங்கே நடந்தவைகள்.
ஒவ்வொரு விஷயமும் அது அதற்கேற்ற நடையில் சொல்லப் பட்டது. கர்ண கடூரமான இலக்கணநடை - செய்யுளும் வசனமும் கலந்த ஏற்ற இறக்க நடை - கிராமியம் என்கிற குப்பை நடை - நாய்கள் குரைக்கிறதுபோன்ற வடதேசத்துப் பிராகிருத நடை - என்ற இந்த நடைகள், அவர்களின் பாஷை நடைக்கு வெகுதூரம் புறம் பானவைகள். “செந்தமிழ் ஆகித் திரியாது யார்க்கும் - தம்பொருள் விளக்குகின்ற நடைக்கு, ஒரு எடுத்துக் காட்டாக இறுதியில் இருந்தது
59

Page 42
அவர்களுடைய பாஷை நடையாகலாம். அளவான குரல் - தளுக் கான உச்சரிப்பு - ஒவ்வொரு எழுத்தும் ஒவ்வொரு சொல்லும் தனித் தனி புலப்பட்டுத் தோன்றுகின்ற ஒரு தூய்மை - இடையீடுபடாத ஆற்றொழுக்கம் - இடையிடையே பெரிய பிரவாகம் - அப்பொழுதும் நல்ல தெளிவு கேட்குந்தோறுந் தெவிட்டாத இனிமை - பொளுக்கேற்ற கெளரவம் - ஆன்றோர் மரபு - சம்பிரதாயம் - என்னும் இவைகள், அவர்களுடைய பேச்சுநடையிலே இயல்பாக அமைந்தவைகள்.
சந்திரபோஸ் என்கின்ற தாவரசாஸ்திர நிபுணர் தாவரங்களின் உயிர்த்துடிப்பை, நுண்ணிய ஊசியின் நுதியினாலே தொட்டுத் தொட்டுக் காட்டுவதுபோல, உபாத்தியாயர் அவர்கள் இலக்கியங் களின் உயிர்நிலையை, தமது முதிர்ந்த நுண்ணுணர்விலே பழுத்த மிருதுவான தெளிந்த சொற்களினாலே, எடுத்து எடுத்துக் காட்டு வார்கள். அவர்களைப்போல இன்ன சொல்லிலே இன்ன எழுத்திலே இந்தப் பிரகாரம் இருக்கின்றன என்று இலக்கிய நயங்களை எடுத்துக் காட்டுகிறவர்கள் - ஒரு பொருளை எடுத்துக்கொண்டு நவரசங்கள் ஒழுக ஒழுக வருணிக்கிறவர்கள் - வேறு யாரையும் என் வாழ்நாளில் யான் கண்டதும் கேட்டதும் இல்லை.
இரண்டு மூன்று வாரங்களின் பின்பு- உபாத்தியாயர் அவர்கள் தம்முடைய புதல்வர்களில் ஒருவருடைய விவாகத்துக்கு என்று வந்தவர்கள் - அது நிறைவேறியதன் மேல், பழையபடி சிதம்பரத் துக்குப் போய்விட்டார்கள்.
"உபாத்தியாயர் அவர்கள் சிதம்பரம் சைவப்பிரகாச வித்தியா சாலைக்குத் தலைமைப் போதகாசிரியராய்ப் போதற்கு முன் தமது வீட்டையே வித்தியாசாலையாக வைத்து வகுப்புக்கள் நடத்தி வந் தார்கள். முன் குறிப்பிட்ட திண்ணையிலும், முற்றத்திலும், இவை களுக்கு வடக்கே, இப்பொழுது மாடு கட்டுகிற ஒரு மண்டபம் - அது அப்பொழுது பட்டிமண்டபம் - அதிலும் மரங்களின் கீழும் வகுப்புக்கள் நடந்தன. ஒரு புறத்தில் புராணங்களுக்கு அர்த்தம் , மற்றொரு புறத்தில் கம்பராமாயண வியாக்கியானம் ; வேறொரு பக்கத்தில் தொல்காப்பியம் முதலிய இலக்கண பாடம் ; மரங்களின் கீழே மாண வர்களின் பாட ஆயத்தம் ; பின்னேரங்களில், அங்கே வருகிறவர் களையும் சேர்த்து வழக்கமான கதைகள் சம்பாஷனைகள். இவைகள் நாள்தோறும் இடையீடின்றி நடைபெறும்" என்று எனது தகப்பனாரும் பிறருஞ் சொன்னார்கள். எனது தகப்பனார் தாம் இருந்து படித்த இடத்தைச் சுட்டிக்காட்டி, மத்தியான போசனம்
60

உபாத்தியாயர் அவர்கள் வீட்டிலே தானே, படிக்க வருகிற நாட்களில் தமக்கு நடந்தது" என்றுஞ் சொன்னார்கள்.
உபாத்தியாயர் அவர்கள் கதை சொல்லுவதையும், பலர் குழுமியிருந்து கேட்பதையும் நினைக்குந் தோறும், "மறுநாட் காலை யில் - கேளும், ஜனமேஜய மஹராசாவே' என்று வைசம்பாயனர் சொல்லத் தொடங்கினார்" - என்ற மஹாபாரதவசனமும், - "கேளுங்கள் நைமிசாரணிய வாசிகளே என்று சூதமகாமுனிவர் வியாசபகவானு டைய பாதங்களைத் தியானஞ் செய்து கொண்டு சொல்லுவாராயி னார்" - என்ற புராண வசனமும், பழைய பாரத புராண வசன புத்தகங்களில் உள்ள படங்களும் நினைவுக்கு வருகின்றன.
தென்மராட்சியிலே உள்ளவர்களுக் கெல்லாம் அந்தக் காலத் திலே உபாத்தியாயர் அவர்களின் வீடு ஒரு சாந்தி நிகேதனமாய் - சிறந்த கலாபவனமாய் இருந்தது.
இப்படிப்பட்ட சூழலிலேதான், கண்ணுவ இருவரியின் ஆசிரமத்திலே காளிதாச மகாகவி வர்ணிக்கின்ற இளம் மான்கன்று போலே, மகாலிங்கசிவம் என்கின்ற - பச்சை - இளம் - கலை - மான்கன்று துள்ளிக் குதித்து விளையாடி வளரா நின்றது.
மகாலிங்கசிவத்தின் தாயார் பெயர் மகேசுவரி ; புலோலியில் உள்ளவர்கள். பூரீமத் சு. சிவபாதசுந்தரம், B. A அவர்களின் உடன் பிறந்த சகோதரி. மகேசுவரியின் தந்தையார் சுப்பிரமணியரை உபாசிக்கிறவர். அவருக்குப் பெயரும் சுப்பிரமணியர். கல்வி அறிவு ஒழுக்கங்களிற் சிறந்த பெரியவர்களிடம் - சாதுக்களிடம் நல்ல மதிப் புள்ளவர். அவருக்கு ஒரு பெண் சகோதரியும், இரு ஆண் சகோதரர் களும் ஆக முவர் சகோதரர்கள். சகோதரர்களில் முத்தவருக்குப் பெயர் கணபதிப்பிள்ளை. இவர் சமஸ்கிருதத்திலே மகாபண்டிதர், திருவனந்தபுரம் மஹாராசாவின் கல்லூரியிலே சமஸ்கிருத, ஆசிரியரா யிருந்தவர், மணிப்பிரவாள நடையிலே கெம்பீரமான வசன கிரந்தங்கள் பல செய்திருக்கிறார். அடுத்த சகோதரர் குமாரசாமிப் புலவர் ; (வழங்குகிற பெயர் கோவிந்தபிள்ளை) ; டாக்டர் சிவப்பிரகா சத்தின் தந்தையார், இவர் ஒரு இலக்கணப்புலி யாராவது இலக்கணப் பிழையாகப் பேசினால் அந்தத் தமிழ்த் துரோகியை மரணபரியந்தம்
61 -

Page 43
தலை நிமிர்ந்து பார்க்கமாட்டார். இலக்கண இலக்கிய உரைகள் செய் திருக்கிறார். சகோதரியின் பெயர் பார்ப்பதி அம்மையார், (வழங் குகிற பெயர் பாறாய்ச்சி). இப்பெண்மணியார் சமஸ்கிருதத்திலும் தமிழிலும் மகாமேதை; மரணபரியந்தம் நைஷ்டிகப் பிரமசாரிணி யாயிருந்தவர். கவிஞர் திலகமாகிய உடுப்பிட்டிச் சிவசம்புப் புலவர் அவர்கள், இவர்களுடைய குடும்பத்திலே ஒரு குடும்ப சம்பத்தா யிருந்து, ஆண்பாலார் பெண்பாலார் ஆகிய இரு பாலார்க்கும் பாடஞ் சொல்லி வைத்தார்கள். இது இவர்கள் குடும்பத்திலே ஒரு விஷேசம். இருபது வருடங்களுக்கு முன்னே, இவர்கள் குடும்பத்தில் இரண்டு இளஞ்சிறுமிகள் - பதினைந்து பதினாறு வயசுள்ளவர்கள் - யாழ்ப் பாணத்திலே ஆனாய்ப் பிறந்தவர்கள், பண்டித பரீகூைடி என்ற ஒரு பரீகூைடியைப் பற்றிக்கேள்விப்படுமுன்னமே, மதுரைப் பண்டித பரீகூைgயிலே சித்தியெய்தியிருக்கின்றார்கள். இப்பெண்மணிகள் பார்ப்பதி அம்மையாரிடம் பாடங் கேட்டவர்கள். யாழ்ப்பாணத்திலே கலைமகளும் திருமகளும் கலகமின்றிக் கலந்து வாழ்ந்த - வாழு கின்ற குடும்பம் அந்தக் குடும்பம்.
மகேசுவரி, பார்ப்பதி அம்மையாரிடம் நேரே பாடங்கேட்ட வர்கள். மகாபாரத, ராமாயணக் கதைகள் அவர்களுக்குத் தலை கீழ்ப்பாடம். வில்லி பாரதத்திலும் நல்லாப்பிள்ளை பாரதத்திலும் அநேக பாடல்களை வாய்ப்பாடமாகச் சொல்லுவார்கள்.
விக்கிரமாதித்தனும் பட்டிமந்திரியும் நாடாறுமாதம் காடாறு மாதம் வாழ்ந்து வந்தவர்கள் என்று கதை. மகாலிங்கசிவமும் தாயாரும் ஒரு வாரத்திலே ஒரு பாதி மட்டுவிலிலும், மற்றொரு பாதி புலோலியிலுமாகக் காலங்கழித்தவர்கள்.
மகாலிங்கசிவம் புலோலியிலே தங்குகிற காலங்களிலே, பார்ப்பதி அம்மையாரின் மடியிலே இருந்து, சம்ஸ்கிருத மகா பண்டித ராகிய கணபதிப்பிள்ளை அவர்களின் இருதயத்திலேநடந்து, குமார சாமிப்புலவர் அவர்களோடு மழலைமொழி பயின்று, எல்லாருடைய உள்ளங்களையும் கவர்ந்து வளர்ந்து வந்தார்.
பொருப்பிலே பிறந்த தென்னன் புகழிலே கிடந்து சங்கத் திருப்பிலே யிருந்த வைகை ஏட்டிலே தவழ்ந்த பேதை நெருப்பிலே நின்று கற்றோர் நினைவிலே நடந்தோ ரேன மருப்பிலே பயின்ற பாவை மருங்கிலே வளரு கின்றாள் 62

'என்ற பாட்டை மாற்றியமைக்க வல்ல கவிஞர்கள், மகாலிங்கசிவம் இவ்வாறு வளருகின்றார்" என்று மாற்றியமைக்கலாம்.
இங்கும் அங்கும் - மட்டுவிலிலும் புலோலியிலுமாக மகாலிங்கசிவம் வளர்ந்த இடங்கள் எப்பொழுதும் கலைமகளின் ஆலயங்களாகவே இருந்தன.
புலோலியிலே மேலே குறிப்பிட்ட குடும்பத்திலே உள்ள பெண்டுகள் பெரிய பெயர்பெற்ற சண்டைக்காரர்கள். அவர்களுடைய சண்டைகள் உப்புப் புளி மிளகாய் சம்பந்தமான சண்டைகளல்ல ; பெரிய - இராமாயண மகாபாரதச் சண்டைகள். "வியாசமுனிவரின் கதாநாயகரான பூரீகிருஷ்ணபகவானா? வான்மீகியின் கதாநாயகரான பூரீராமபிரானா? ஆர் பெரியவர்?" என்று சண்டையிடுவார்கள். சண்டைகள் முற்றி பார்ப்பதி அம்மையாரிடம் தீர்ப்புக்குப் போகும் அம்மையார் "பூரீகிருஷ்ணனும் இராமனும் ஒன்றுதான்" என்று சமா தானஞ் செய்து வைப்பார்கள். என்றாலும், உள்ளுற பூரீகிருஷ்ணன் பக்கத்திலே தான் அம்மையாருக்கு மிக்க வாரம் உண்டு என்று கேள்வி. பெண்கள் சண்டையிடும்போதும், தீர்ப்பு நடைபெறும் போதும் அவர்களுக்கு மத்தியிலே, கோபிகாஸ்திரீகளின் மத்தியிலே பூரீகிருஸ்ணன் போல, ஒரு குழந்தையும் பங்குபற்றிச் சல்லாபஞ் செய்கிறதுண்டு. அந்தக் குழந்தை வேறுயாரும் இல்லை; மகா லிங்கசிவந்தான்.
" ஒரு சமயம் படித்தவர்கள் பலர் குழுமியிருந்து, ஏதோ ஒரு விஷயத்தைப் பற்றி வாதஞ் செய்தார்கள். ஒரு புறத்தில் கேட்டுக் கொண்டிருந்த மகாலிங்கசிவம் என்ற குழந்தை, தானும் அந்த வாதத்திலே பங்குபற்றி ஏதோ ஒன்று சொன்னது. அப்பொழுது மகாபண்டிதராகிய கணபதிப்பிள்ளை அவர்கள் மகாலிங்கசிவத்தைத் கட்டித்தழுவி, மடியிலிருத்தி, உச்சிமோந்து, நீ வான்மீகியடா’ என்று பாராட்டினார்கள்" என்று மகாலிங்கசிவத்தின் தாயார் சொல்ல நான் கேட்டிருக்கின்றேன்.
மகாலிங்கசிவத்தின் படிப்பு விஷயத்தில் தந்தையாருக்கும் தாயாருக்கும் பெரிய அபிப்பிராய பேதம் இருந்தது. இந்தக் காலத்துக்கு இசைய அரசாங்க பாஷையும் கற்கவேண்டும்' என்ற கொள்கையுள்ளவர்கள் தாயார். அந்தப் பாஷை மிலேச்சபாகூைடி.
63

Page 44
அதைத் தீண்டவுங் கூடாது. தமிழ் சமஸ்கிருத பாஷைகளையே கற்க வேண்டும்' என்ற கொள்கையுடையவர்கள் தந்தையார்.
ஆண் சகோதரர்கள் ஐவர்கள். ஜவர்களில் அருச்சுனன் மாதிரி மத்தியில் உள்ளவர்கள் மகாலிங்கசிவம். முத்தவர்களும் இளைய வர்களுமான நான்கு சகோதரர்களும் பெரும்பாலும் தாயார் பக்கத்தைச் சார்ந்து ஆங்கிலம் கற்பதில் ஈடுபட்டுவிட்டார்கள். நடுவில் உள்ள மகாலிங்கசிவம் தந்தையார் கொள்கைக்கும் தாயார் கொள்கைக்கும் நடுநின்று, சிறிது ஆங்கிலமும் தமிழ் சமஸ்கிருதங் களும் பயின்றார்.
“கல்லாமற்பாதி குலவித்தை” என்ற பழமொழியைத்தான் மகா லிங்கசிவத்தின் படிப்புக்குச் சொல்லலாம். மகாலிங்கசிவம், ஆத்திசூடி தொடக்கம், முறையாக - இரு என இருந்து - சொல் எனச் சொல்லி - ஏடு - அவிழென அவிழ்த்து - ஒழுங்காய்ப் பாடங்கேட்டவர் என்று சொல்ல முடியாது. யாராவது மாணவர்களுக்குத் தந்தையார் அவர்கள் பாடஞ் சொல்லிக்கொண்டேயிருப்பார்கள். அது, தாழ்வாரத்திலே மண் சோறுகறி விளையாடுகிற மகாலிங்கசிவத்தின் செவிகளிலும் விழலாம். இதுதான் மகாலிங்கசிவம் பாடங்கேட்ட வரலாறு.
ஒருமுறை மாணவர் சிலருக்கு யாப்பிலக்கணபாடம் நடந்தது. மகாலிங்கசிவம் கெளட்பீனதாரியாய், தூரத்திலே நின்று, அந்தப் பாடத்தைக் கேட்டதுண்டு. தந்தையார் இல்லாத சமயங்களிலே, முறையாகப் பாடங்கேட்ட அந்த மாணவர்களுக்கு, யாப்பிலே கருக லான இடங்களை, மகாலிங்கசிவம் கெளடபீனதாரியாயிருந்து கொண்டே, விளையாட்டு முறையில் விளங்க வைப்பார் என்று கேள்வி
யாப்பு விதிகளை அறிவதற்கு முன்னமே மகாலிங்கசிவத்துக் குப் பாட்டு வந்துவிட்டது. அங்கே வருகிறவர்கள் - வழி தெருக்களில் சந்திக்கிறவர்கள். - அந்த மரத்துக்குப் பாடு - இந்தப் பறவைக்குப் பாடு - அயலிலேயுள்ள தாமரைக்குளத்துக்குப் பாடு' என்று மகாலிங்க சிவத்தைக் கேட்பார்கள். மகாலிங்கசிவம் தங்கு தடையின்றிப் பாடத் தொடங்கிவிடுவார். அவருக்கு ஒருவரோடு சம்பாஷணை செய்வதும், பாடுவதும் ஒன்று. பத்துப் பதினொரு வயசிலே தானே, பாட்டுத்தானே வரத்தொடங்கிவிட்டது.
6

ஒரு நாள் ஒரு மனிதன், வழி தெருவிலே வருகிறவர்கள் போகிறவர்களையும் பாராமல், தானுந் தன் சிரங்குமாய், தான் உடுத்திருந்த வேட்டியைச் சுருக்கிக்கொண்டு, இரண்டு தொடை களிலும் நிரம்பியிருந்த சிரங்குப் பருக்களைச் சொறிவதிலேயே காலம் போக்கினான். அந்த வழியிலே வந்த மகாலிங்கசிவம் - அப்பொழுது வெறுங்குழந்தை - அந்தக் காட்சியைக் கண்டது. கண்டது தாமதம் பாட்டு வந்துவிட்டது.
*குரங்கே உனக்கென்ன மரந்தடி தானென்ன குத்தகையோ" என்று தொடங்கி,
*சிரங்கே உனக்கென்ன பெருந்தொடை தானென்ன சீதனமோ”
என்று முடிந்தது.
அறுதியோ' 'வாரமோ' என்று முடிகிற, இடையிலுள்ள இரண்டு அடிகளும் எனக்கு ஞாபகம் இல்லை.
பாட்டுப் பாடுகிறது போலவே, கற்பனைக் கதைகள் புனைவ திலும், மற்றவர்களோடு மாறுபட்டு வாதஞ் செய்வதிலும் மகாலிங்க சிவத்துக்குக் குழந்தைப் பருவத்திலேதானே மிக்க சாமர்த்தியம் இருந்தது.
ஒருநாள் விடியற்காலையிலே பாட்டியாராகிய பார்ப்பதி அம்மையார் மட்டுவிலுக்கு வந்தார்கள். அப்பொழுது வெளிக்குப் போயிருந்த மகாலிங்கசிவம், வருகிறபோது ஒரு ஆத்திசூடி புஸ்தகத்துடன் வந்தார். அம்மையார் "ஏது ஆத்திசூடி" என்றார்கள். 'பாறாய்ச்சி கேள்' என்று மகாலிங்கசிவம் கதைபண்ணத் தொடங்கி
60IITIT.
'இராத்திரி நல்ல நிலவு. நான் ஒளவையார்க் கிழவியை அண்ணாந்து பார்த்து, ஒளவையார்க் கிழவி ! ஒளவையார்க் கிழவி நீ கணக்க ஆத்திசூடிப் புஸ்தகங்கள் வைத்திருக்கிறாயாம்; எனக்கு ஒன்று ஒளவையார் கிழவி' என்று கேட்டேன். இப்பொழுது நான் வெளிக்குப்போன இடத்திலே, ஒரு கொய்யாப் பற்றைக்கு மேலே, இந்த ஆத்திசூடி போட்டிருந்தது. நான் எடுத்து வருகிறேன். ஒளவை யார்க் கிழவி நல்ல கிழவி என்ன பாறாய்ச்சி" என்று கதை நடந்தது.
65

Page 45
அம்மையார் அடேயப்பா! நீ அந்தரப் புளுகனையும் வெல்லு வாயடா’ என்று மகாலிங்கசிவத்தின் கற்பனையைப் பாராட்டினார்கள்.
பார்ப்பதி அம்மையார் நாள்தோறும் சிவாலயத்துக்கு போய்ச் சிவலிங்க தரிசனஞ் செய்த பிறகுதான் போசனஞ் செய்வது வழக்கம். ஒரு நாளைக்கு ஒரு முறைதான் போசனஞ் செய்வார்கள். உச்சிப் பொழுது கழிந்துவிட்டால் அதுவுஞ் செய்யார்கள். மட்டுவிலில் உள்ள சிவன் கோவிலுக்குச் சந்திரமெளலீசர் ஆலயம் என்று பெயர். இது மிகவும் புராதனமானது. சந்திர மெளலீசர் மீது உபாத்தியாயர் அவர்கள் 'சந்திர மெளலீசர் சதகம்” என்று ஒரு செய்யுள் நூல் செய் திருக்கிறார்கள். அதற்கு 'ஈழமண்டல சதகம்” என்றும் பெயர். சந்திர மெளலீசர் ஆலயத்துக்கு உபாத்தியாயர் அவர்கள் வீட்டிலிருந்து ஒரு மைலுக்கு மேல் நடந்துபோகவேண்டும். பொல்லாத மணல் ஒழுங்கைகள், காலையிலே ஆலயத்துக்குப் போகும்போது சந்தோஷ மாகப் போகலாம். மத்தியானத்திலே திரும்பி வரும்போது ஒழுங்கைகள் கொதிக்கும். கால்வைக்க முடியாது. துடித்துப் பதைத்து வீட்டுக்கு வந்துசேர வேண்டும். அம்மையார் மட்டுவிலிலே தங்குகிற காலங்களிலே, ஒவ்வொருநாளும் காலை நேரங்களிலே சந்திர மெளலீசர் ஆலயத்துக்குப் போய் வருவார்கள். மகாலிங்கசிவம் அம்மையார் ஆலயத்துக்குப் போகும்போது கூடப் போவார்; வரும் போது கூடி வருவார். போகும்போது அம்மையாருடன் பேசிக்கொண்டு போவதில் அவருக்குப் பெரிய சந்தோஷம். வரும்போது பசிக்களை, தாகம்; வெய்யில்; வெப்பம்; பெரிய சங்கடமாயிருந்தது.
ஒரு நாள் இராத்திரி, படுத்திருக்கும்போது, பார்ப்பதி அம்மை யாரோடு மகாலிங்கசிவம் ஒருவாதந் தொடுத்தார். 'சிவபெருமான் பெரியவரா, பிள்ளையார் பெரியவரா, ஆர் பெரியவர்?" என்கின்றது அந்த வாதம். அம்மையார் எழுந்திருந்து, "இருவரும் ஒருவரே, ஒருவரில் மற்றவர் குறைவு என்று சொல்லக்கூடாது" என்று முடிவு செய்தார்கள். மகாலிங்கசிவம் மேலும் தொடர்ந்து, "பிள்ளையாரைக் குறைவு என்று சொன்னாலென்ன?" என்றார். அப்படிச் சொல்லுவது பெரிய பாவம்' என்று நியாயங்களை அடுக்கினார்கள். மகாலிங்க சிவம் அந்த முடிபை ஏற்றுப் பெலப்படுத்திக் கொண்டார். பிறகு எல்லாரும் நித்திரை போய் விட்டார்கள்.
66

விடிகிற சமயம் - சிவன் கோயிலுக்குப் போகிறதற்கு, மகா லிங்கசிவத்தை அம்மையார் எழுப்பினார்கள். மகாலிங்கசிவம் படுக்கையில் படுத்திருந்தபடி "பாறாய்ச்சி இன்னும் சிறிதுநேரம் படுத்திருப்போம் ; விடிந்த பிறகு, சமீபத்திலே மருதடியிற்பிள்ளை யார் கோயில் இருக்கிறது - பிள்ளையாரும் சிவபெருமானும் சரி தானே - குறைவு என்று நினைக்கிறது பெரிய பாவம் - இன்றைக்குப் பிள்ளையார் கோயிலுக்குப் போய்க் கும்பிடுவோம்; படுத்திரு பாறாய்ச்சி" என்று அன்றிரவு முடிந்த முடிப்பை அவிழ்க்கத் தொடங்கி னார். அம்மையார் திகைத்துப் போனார்கள். 'சுடுபழம் வேண்டுமோ? சுடாப்பழம் வேண்டுமோ? என்ற வாதத்தில், முருகக் கடவுளுக்குத் தோல்வியடைந்த ஒளவையார்,
"காரெருமை மேய்க்கின்ற காளைக்கு நான்தோற்ற(த) ஈரிரவு தஞ்சாதென் கண்"
என்று பாடிய பாடலை ஞாபகங் செய்தார்களோ அன்றி, "இருக் கட்டும் வாரும்" என்று ஒருவகை வெருட்டுச் செய்தார்களோ இந்த முறைகளை விட்டு, மகாலிங்கசிவத்தைக் கட்டியணைத்து, உச்சி மோந்து, முதுகுதைவந்தார்களோ மகாபண்டிதையாகிய பார்ப்பதி அம்மையார் என்ன செய்தார்களோ தெரியவில்லை.
மகாலிங்கசிவம் என்றால் 'ஒரு பாட்டுப் பாடுகிறவர்' என்ற எண்ணந்தான், அக்காலத்தில் என்போன்ற இளைஞர்களின் மனசில் குடிகொண்டிருந்தது. நான் முதன்முதல் மகாலிங்கசிவத்தை எப் பொழுது கண்டேனோ, அப்பொழுது - எடுத்ததற்கெல்லாம் பாட்டுப் பாடுகிறவர் - பாட்டாலே கதைக்கத்தக்கவர் - எங்களிலும் வித்தியாச மானவர் - என்ற எண்ணத்துடன் கண்டேனேயன்றி - பக்கத்து வீட்டில் உள்ளவர் - இன்னாருடைய மகன் - அயலிலே உள்ள குளத்திலே அடிக்கடி குதித்து நீந்துகிறவர் - அதனாலே தாயை அழவைக்கிறவர் - என்ற எண்ணத்தோடு கண்ட ஞாபகம் எனக்கு இல்லை.
மகாலிங்கசிவம், மிக்க இளமைப் பருவத்திலே - சாவகச் சேரியிலே ஆங்கிலப் பள்ளிக்கூடத்தில், ஆங்கிலம் படிக்கிற கால மாயிருக்கலாம் - பழனியில் எழுந்தருளியிருக்கும் முருகக் கடவுள் மீது ஒரு பதிகம் இயற்றிக் கையெழுத்துப் பிரதியைப் படிக்கிற புஸ்தகத் துக்குள் வைத்திருந்தார். மூத்த தமையனார் - திருஞானசம்பந்தர் -
67

Page 46
அந்தப் பாடல்களைக் கண்டு எடுத்து, ஒரு சிறிய புத்தகமாக அச்சிட்டார். புத்தகத்தின் பெயர் பழனிப் பதிகம்; விலை சதம் மூன்று.
திருஞானசம்பந்தர், தமது தந்தையாராலே தாபிக்கப்பட்டதும், தந்தையார் அவர்கள் சிதம்பரத்துக்குப் போனபிறகு, இடையிலே கிறிஸ்தவர்கள் வசப்பட்டிருந்ததும், சைவ வித்தியா விருத்திச் சங்கத் தாராலே, பழையபடி சைவப்பள்ளிக்கூடம் ஆக்கப்பட்டு சந்திர மெளலீச வித்தியாசாலை என்ற பெயருடன் இப்பொழுது நடைபெறு வதும் ஆகிய பாடசாலையிலே படிப்பித்தவர் ; 1907 ஆம், 1908 ஆம் ஆண்டுகளில் நான் அந்தப் பாடசாலையிலே படித்தபோது, என்னிட மும் ஏனைய மாணவர்களிடமும் பழனிப் பதிகப் புத்தகங்களைத் தந்து, பன்றித்தலைச்சி அம்மன் கோயிலிலே, பங்குனித் திங்கள் தோறும் விற்றுவரும்படி சொல்லுவார். எங்கள் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு புத்தகம் இனாம்
பதிகத் தொடக்கத்தில் ஒரு நேரிசை வெண்பா, அது விநாயகர் துதி. அடுத்த, பதினொரு பெரிய ஆசிரிய விருத்தங்கள். முதல் விருத்தம்,
சீர்மன்னு பல்கோடி சூரியர் மலிந்தெனத்
திகழ்கின்ற திருமேனியும் செப்பரிய மாணிக்க மகுடம் பொலிந்தெழில சிறக்கும் சிரத்த நிரையும்
என்று தொடங்குகின்றது. இது ஒரு அடி. ஒவ்வொரு விருத்தத்தின் இறுதியும்,
"பாலநீ ஓடி வருவாய்
பச்சைப் பசுந்தோகை யேறிவிளை யாடல்புரி பழனிக் குமார குருவே"
என்று முடிகிறது.
68

இந்தப் பதிகத்தை மகாலிங்கசிவத்தின் புத்தகங்களுக்குள்ளே யிருந்து, பகிரங்கம் பண்ணிய காலத்திலே, அந்தப் பாடங்களைக் கண்ட உபாத்தியாயர் அவர்களின் மாணவர்களும், பிறரும் மகாலிங்க சிவத்தைப் பாராட்டி, அவருக்குக் குருகவி என்ற பட்டத்தைச் சூட்டினார்கள். பழனிப் பதிக முகப்பில்,
*குருகவி ம. வே. மகாலிங்கசிவம் இயற்றியது"
என்று அச்சிடப்பட்டிருந்தது.
- பண்டிதமணி சி. கணபதிப்பிள்ளை
(கலாநிதி. ஆரியதிராவிட பாஷாபிவிருத்திச் சங்க மும்மாத வெளியீடு. சித்திரை 1942)
米米米
米率来
69

Page 47
7. ஈழத்துத் தமிழ்ச்சொல் வல்லார்
புதிய கருத்துக்கள், ஒரே விஷயம் பலமுறை பேசப்பட நேர்ந்தாலும் ஒவ்வொரு முறையிலும் புதிய புதிய கருத்துக்கள், புதிய கருத்துக்களைக் கற்றார்க்கும் மற்றார்க்கும் எளிதிலுணர்த்தத்தக்க - பிறரால் எச்சிலாக்கப்படாத - எவரும் நன்கறிந்த - நயமான உவமைகள். இவையும் பாலோடு தேன் கலந்தாற்போல ஹாஸ்யச் சுவையோடு விரவியவை. இவையன்றித் தமிழில் என்ன உண்டு” என்னுங் கருத்தோடு ஆங்கிலக் கலாசாலைகளிற் கல்வி பயிலும் தமிழ் மாணவரும், ஆங்கிலம் மாத்திரமறிந்த "தமிழ்ச் சான்றோரும்" ஒருமுறை கேட்டதும் "தமிழில் இல்லாத தொன்றுமில்லை; இவ்விதஞ் சுவைக்கத்தக்கதாக எங்கள் ஆசிரியர்கள் படிப்பித்தார்களில்லையே. நாங்கள் தமிழறியாதிருப்பது எங்கள் குற்றமல்ல. எங்கள் ஆசிரி யர்கள் குற்றமே" என்றெல்லாம் கழிந்ததிற் கிரங்கச்செய்து தமிழறிய முயல்விக்கும் ஆற்றல் வாய்ந்த பேச்சு. "நாமெல்லாம் படித்தோம். ஒரு முறையல்ல, இதனைப் பலமுறை படித்தோம், பாடமுமாக்கி னோம். இக்கருத்துக்கள் இதனுட் பொதிந்திருந்ததைச் சிறிதும் சிந்தித் தோமில்லை. கண்டோமில்லை" என்று கல்வியறிவு மிக்காரும் பிரமிக் கத் தகுந்த ஆற்றல் வாய்ந்த பேச்சு, பல வேறு வகைகளிலும் உயர்ந்த சிறப்புக்கள் வாய்ந்த பேச்சு.
70

"இம்மென்றால் எழுநூறும் அம்மென்றால் ஆயிரமும்" பாட வல்லார் என்று புத்தகங்களிற் படித்தோம். அறிஞர் சொல்லக் கேட் டோம். அதனை மெய்ப்பிக்க வல்ல, நேரே கண்ணாரக் காணக் கிடைத்த, கற்பனை நயத்தோடு கூடிய கவித்துவம்.
பாடங்கேட்ட மா ைஎவர் கலாசாலைப் படிப்பு முடிந்த பின்னரும் - சாந்துணையும் - தமிழ்நூற் சுவையை நுகர்ந்து நுகர்ந்து இன்புறு தற்கு ஆற்றுப்படுத்தும் படிப்பித்தல். தமக்கே தனியுரிமையாக்கிக் கொண்ட இயற்கை விவேகம். இவையெல்லாம் வாய்ந்த ஒரேயொரு வர் பண்டிதர் ரீமத் மஹாலிங்கசிவம். படிப்பித்தல், கவித்துவம், பேச்சு இவை ஒரு புறமாக, நெருங்கிப் பழகினோரும் நுனித்துரைக்கத் தக்க இவர்தம் விசாலமான நோக்கமும், உயர்ந்த கொள்கையின் வழிப்பட்ட தூய எளிய வாழ்க்கையும் மிக மேலானவை.
இக்காலத்தில் யாழ்ப்பாண நாட்டில் பண்டிதர் மிகப் பலர். ஆ. தி. பா. வி. சங்கத்தாற் பட்டமளிக்கப்பெற்றவர் பலர். மதுரைத் தமிழ்ச் சங்கத்தால் கெளரவிக்கப்பெற்றவர் சிலர். தமக்குத்தாமே பட்டஞ் சூட்டி வழங்கிவருவாருமில்லாமலில்லை. பண்டிதர் சிவத்தின் இடத்தை நிரப்புதற்கு மாத்திரம் ஒருவருமில்லை. பண்டிதர் சி.கணபதிப்பிள்ளை பல வழிகளில் பண்டிதரைப் பின்பற்றியவர் ஒரு ரவர். அவருடைய தேக நிலைமை சிவத்தின் இடத்தை நிரப்பத்தக்க வகையில் இல்லாதது யாழ்ப்பாணத்தவரால் இச்சந்தர்ப்பத்தில் பெரிதும் சிந்திக்கத்தக்கது.
ஈழத் தமிழாசிரியர் குழுவுள் விளங்கிய தண்மதி மறைந்தது. பிரசங்க மேடைகள் பொலிவழிந்தன. தமிழுலகின் ஒரு சுடர்ஒளி அவிந்தது. பண்டிதரின் வாழ்க்கை வரலாறு - தமிழுலகிற்கு - யாழ்ப்பாணத்திற்கு மிக இன்றியமையாதது. நூல் வடிவில் அவர்தம் வரலாற்றைத் தந்தையார் உரையாசிரியர் வேற்பிள்ளை அவர்களின் வரலாறும் இடம் பெறத்தக்கதாக வெளிவரச்செய்தல் தமிழறிஞரதும் அபிமானி களதும் அவர்தம் மாணவரதும் கடனாமென்பது எமது அபிப்பிராயம்.
- வேலணை கி. மருதயினார். (ஈழகேசரி 23.02.1941)
来本率 米率水
71

Page 48
8. தனிவிளக் கணைந்தது
பள்ளிப் பராயத்திலிருந்தே துள்ளிக் குதித்துக் கற்றோர் அவையேறிப் பிரசங்கமாரி பொழியும் ஒரு மேகம் மறைந் தொழிந்தது. மட்டுவில் வேற்பிள்ளையின் மதிப்பை மாறாது காத்த மக்களில் தலை யாய புலவர் மடிந்துவிட்டார். 'மகனே ? நீ பேச்சிற்கெனவே பிறந்தாய்" எனத் தந்தையிடம் ஆசிபெற்று அவையேறி அகங்கவர்ந்து சொல் லாற்றும் அறிஞர் அகன்றுவிட்டார். பன்னூற்றுக் கணக்கான மாணவர் களினுள்ளத்தில் ஞான விளக்கேற்றி இருள் துடைத்த ஞான சூரியன் மறைந்துவிட்டார். கற்றார் அவையும் மற்றோர் சபையும் களிகொண்டு குலுங்கக் குலுங்க நகைக்கூட்டம் செய்யுமாறு பிரசங்கம் செய்யும் நகைச்சுவைச் செல்வன் நடந்துவிட்டார். இருந்தது இருந்தாற் போலி ருந்து எண்ணற்ற கற்பனைகளை அள்ளிக் கொட்டி மக்கள் உள் ளத்தை மகிழ்விப்பதில் துறைமங்கலம் சிவப்பிரகாச சுவாமிகளை வென்ற கற்பனைக் களஞ்சியம் காலன் கைப்பட்டார்.
புன்முறுவல் தவழும் வதனம். நெற்றியிற் குங்குமப் பொட்டு. அருளொழுகும் பார்வை. வாய் நிறைந்த தாம்பூலம். தங்கப்பவுண் மேனி அரையிற் கதர் வேஷ்டி, தோளில் ஓர் கதர்த்துண்டு. கை யினிற் புத்தகமும் குடையும். கால்களில் ஜோடு. அந்தோ! இவ்வாறு எங்கள் பண்டிதர் அவையேறும் காட்சியை இனியும் காணமுடியுமா? அறிவு, அன்பு, இரக்கம் ஆகிய இவற்றைத் தாங்கித் தமிழுலகுக்
72

குழைத்த உத்தமரிவரைப்போலெங்குளர்? நேர்மை, வாய்மை, தூய்மை ஆகிய இலட்சணங்கள் அரணாகத் தம்முள்ளம் சரியென ஒர்ந்ததை எச்சபையிலும் வெளிச்சமாய்க் கூறிநிலைநிறுத்தும் எங்கள் பண்டிதரை - தமிழோடணைந்து ஆரியத்தோடுறவாடிச் சைவமுந் தமிழுந் தழைக்கவந்த பெரும்பேரறிஞனை - இயற்கைப் புலவனை - பண்டிதர் மகாலிங்கசிவத்தை இன்னும் சின்னாள் யாழ்ப்பாணம் தன் பெரும் புதல்வனாய் வைத்திருக்கத் தவம் செய்ய வில்லை. ஈழ நாட்டின் தனி விளக்கணைந்தது.
- புங்குடுதீவு கே.வி. செல்வத்துரை ஈழகேசரி (23.02.1941).
米米来 米米事
73

Page 49
9. குருகவி மகாலிங்கசிவம்
சிம்ந்தியமா, சக்திவழிபாடா, கம்பராமாயணமா, திருக்குறள் விளக்கமா, சொல்லாராய்ச்சியா எதுவானாலும் முன் ஆயத்தமெதுவு மின்றித் தொட்டனைத்தூறும் மணற்கேணி,” போலக் கற்பனைச் சுரங்கத்திலிருந்து அனாயாசமாக அள்ளி அள்ளித் தன் மேடைப் பேச்சுமூலம் வாரி வழங்கியவர்தான் மகாலிங்கசிவமவர்கள்.
பிரபல உரையாசிரியர் மட்டுவில், திரு.க. வேற்பிள்ளையின் புத்திரனாகப் பிறந்து, மண்சோறு ஆக்கி விளையாடும் போதே கற்பனைமிக்க கவியெனப் பெயர்பெற்று, பழனிக் குமரன்மீது கவி யாத்து, குருகவியெனப் பிரசித்தமாகிக் கற்பனா சக்தியின் கடைசி முச்சாகத் திகழ்ந்தவர் அவர்.
*குரங்கே உனக்கு மரந்தடி தானென்ன குத்தகையோ? சிரங்கே
உனக்குப் பெருந்தொடை தானென்ன சீதனமோ? என்ற கவிதையும்,
கண்ணுவ மகரிஷி சகுந்தலையை வாழ்த்தி வழியனுப்பும் மங்கை
யிவள் செலும்வழியில்” என்ற பாடலும் அவரை நினைவில் வைத்திருக்
கப் போதுமானவை. அரசியல் மேடைகளிலும், இலக்கிய அரங்கங்
களிலும் இப்போது பலர் சொற்பலத்தாற் கர்ச்சிக்கிறார்கள், இதயம்
74

வெடிக்கக் குமுறுகிறார்கள். இவர்களைப் பார்க்கும்போதும் இவர் களின் சொற்பொழிவுகளைக் கேட்கும்போதும் "ஐயோ! அவரில்லாது போய்விட்டாரே" என்ற ஏக்கம் வரத்தான் செய்கிறது. அந்த அவர், கற்பனைச் செல்வர் மகாலிங்கசிவந்தான். அவரோடு அந்தக் கலை யும் மங்கி மடிந்துவிட்டது உண்மை.
ஈழகேசரி, வெள்ளி விழா மலர். (பக். 112)
Y CLL Y S LSSSMSLSLS LL LSSSMSSLLLSLSSL YY Y
75

Page 50
II. கவிதைகள்

1. மகாலிங்கசிவ மலர்
(புலவர்மணி ஆ. பெரியதம்பிப்பிள்ளை காவிய பாடசாலை யிற் சேர்ந்து கற்கக் காரணமாயிருந்தவருள் ஒருவரான பாவலர் வே. மகாலிங்கசிவத்தின் மறைவின்போது பாடப்பட்ட பதினைந்து பாடல்களில் நான்கு பாடல்களே கிடைத்துள்ளன.)
I. மட்டுவிலாம் பூங்கொடியில் மலர்ந்தமலர்
சாதிமலர் மலர்கள் தாழ மட்டவிழ்ந்த மணங்கமழ்ந்த வயங்குமலர்
மாணவராம் வண்டு சூழ்ந்த தொட்டருந்து மினியமலர் மகாலிங்க சிவமலர்தன் தொடர்பாம் பாசக் கட்டறந்த கருணைமலர் சிவபெருமான்
கழல்மலர்க்கீழ்க் கலந்த தன்றே.
2. தண்முகஞ்சேர்ந் தொழுகிவிளை புலம்நிரம்பச்
சமத்தவமாய்ச் சார்வோர் கொள்ள உண்முகஞ்சேர் அகம்புறமாம் ஒண்பொருளின்
வளம்பெருக்கும் உபகா ரத்தால்
77

Page 51
米
மண்முகஞ்சேர் மகாவலிகங் கைக்கிணையாம்
மகாலிங்க சிவனா ரின்று
விண்முகஞ்சேர்ந் திடுதயரம் தமிழுலகம் தாங்கிடுமோ விதியி தாமோ.
பட்டுடையு மிலையாடம் பரநடையு
மில்லைவெளிப் பகட்டு மில்லை பொட்டுமிலை புனைவிரலிற் பொன்கணையா
ழியுமில்லைப் போலி வேடக் கட்டுமிலை செருக்குமிலை கலைத்தொண்டே
நிலைத்தொண்டாய்க் கருத்தட் கொண்டாய் சிட்டர்புகழ் மகாலிங்க சிவமேநின் சிறப்பியல்பு தெரிவார் யாரே.
திறந்தமனம் நிறைந்தகுணம் தெளிந்தமொழி
சிறந்தநடை திருந்து நீதான் இறந்தனையென் றறைந்தஉரை இலங்கைமுழு
வதும்வெதரப்பி இமயம் சார்ந்த தறந்தமனத் தொழுந்தகையும் சோகமுழந்
திடச்சென்று சுட்ட தானால் மறந்தென்ன ஆற்றிடுவோம் நின்பிரிவை
மகாலிங்க சிவப்பேர் வள்ளால்.
(துறந்தமனத் தொழுந்தகை - அடிகளார் விபுலாநந்தர்)
புலவர்மணி ஆ. பெரியதம்பிப்பிள்ளை (புலவர்மணி கவிதைகள். புலவர்மணி பெரியதம்பிப்பிள்ளை நினைவுப்பணிமன்ற வெளியீடு - 1980)
水来米
冲米冰
78

2. மகாலிங்கசிவம்
ஆசானாய் நல்ல தேர்ச்சி அளித்திடு கழகந் தன்னில் ஆசானாய்ப் பயில வேண்டி அடியனும் சென்ற காலை ஆசானாய் நிலவி யாங்கே அருங்கலை வளர்க்கும் பெம்மான் ஆசாரம் நிறைந்த வள்ளல் அன்பினைப் பெருக்கி நின்றான்.
பாரினில் பரவிக் காணும் பண்டிதர் பலரி னுள்ளே பாருயர் பரீட்சை தோற்றாப் பண்டிதன் தானே யாகிப் பார்புகழ் பட்டம் பெற்ற பண்டிதர் சிரமே தாழ்த்தப் பாரினில் மேம்பா டுற்ற பண்டித மணியு மாவான்.
ஆரியம் தமிழில் காணும் ஆன்றநல் நால்கள் தேர்ந்தே வாரியை நிகர்த்தப் பொங்கும் வளம்படு கலைக ளார்ந்த பாரினில் வளரும் பானு பயன்விழை சீட ருள்ளம் பேரொளி கான்று நின்றே பெட்புற விளக்கந் தந்தான்.
கலைமகள் விழைந்தே வாழும் களங்கமி லுளத்தான் செம்மை கலைபல பயின்ற நாவால் காசினி குளிர்மை கூட்டும் கலைமழை பொழிந்தே நாளும் காரென உதவி வந்தான் கலைமிகப் பயின்ற சீடர் கண்ணென மதித்து வந்தார்.
79

Page 52
பித்தனே போலுந் தோற்றம் பெருமைசேர் சிவனாம் நாமம் சித்தனே காட்டு மாற்றல் செம்மைசேர் கலையின் தேக்கம் அத்தனே இவனென் றேத்தம் அன்பினர் சேர்ந்த கூட்டம் நித்தியம் நிறைவு காட்ட நீணிலம் நிலவ நிற்பான்.
உள்ளங்கி தானு மின்றி ஒருபுடை தன்னில் தொங்கும் வெள்ளங்கி மேனி மூட விரைந்துயர் மேடை தோற்றி உள்ளங்கை நெல்லி போல ஓதியே நிற்பான் நாளும் குள்ளஞ்சேர் முனியே போலும் குரைகடற்கல்வி யுண்டான்.
விரிவுரைச் சிங்க மாவான் வேற்பிள்ளை மகவே யாவான் பரிவுடன் விழைந்தே கேட்கப் பண்டைநால் விளக்கும் வல்லோன் நரைதிரை காணா முன்னர் நம்மையே விடுத்தச் சென்றான் கரையிலாக் கல்வி தந்தோன் கழலடி போற்று கின்றேன்.
யாழ்ப்பாணன் (தமிழ்மணி 2007.1950)
*k >ksk Hum-H kkk
80

5. மகாலிங்கசிவக் காஞ்சி
நெஞ்சந் துடிக்குமால் நெஞ்சத் துடிக்குமால் செஞ்சொற் புலவர் தஞ்சிய தணர்தலின் தழல்முகம் உற்ற மெழுகத போல நெஞ்சந் தடிக்குமால் நெஞ்சந் தடிக்குமால்' புகை முகம் உற்ற அனிச்சம் போல உள்ளம் வாடுமால் உள்ளம் வாடுமால் நறுமணம் கஞற்றி நாறும் தளசிபோல மறுஅறு நண்மை கருவயிற் பெறீகித் தருப்பை வைந்நதி கடுப்பக் கூர்த்த மதிவளம் படைத்த மாண்புசால் பெரும! தேனும் பாலும் வெல்லமும் அளைஇ ஆனாச் சுவைய அருங்கனிச் சாற்றோ(டு) அமிழ்தம் பெய்த பாகர் மான செவிப்புலன் கதவி மன்இடைப் போந்து நினைதொறும் நினைதொறும் நெஞ்சங் குளிர்த்தி கற்பனை உலகில் அற்புதம் நிறைஇக் கன்றிய இன்பம் கனிய அவைதொறும்
81

Page 53
விழுமிய செஞ்சொல் விரிக்குவை மன்னே! வடமொழிப் பரவையில் வளஞ்சால் பாமணி குடைந்த மீஎடீகிக் கொழி தமிழ்ப்படுத்தி நாஅம் உவப்ப நல்குவை மன்னே! வள்ளுவன் கண்ட வடிதமிழ்ப் பனுவல் தெள்ளிய பொருளும் உள்ளமுந் தெளிந்த மற்றுஅந் நாலின் ஒற்றைக் குறளுக்(கு) அடுத்து ஏழ்நாள்வரை அமுதகண்டு அன்ன நகைச்சுவை விராஅய பொருட்சுவை மாணி உள்ளம் மலிய விள்ளுவை மன்னே! இல்லம் புகின் எனக் கிண்முகம் காட்டி தொல்இயல் வழாஅத் தறையில் ஏற்று நறுவிய மோரும் நல்குவை மன்னே! அடைக்காய் உண்பை அதன்பின் எனக்கு *மாவை வெற்றிலை மாண்பு காண்” என்று நின்கைச் சீவல் தருகுவை மன்னே! மாவை வெற்றிலையும் கோவைச்சோறும் முதனிலைப் பொருளில், ஒன்றென இரண்டென ஒதுவை மன்னே! நவாலி ஊரிற் குடபாற் செல்லும் வழிக்கால் யாற்று மாண்பும் பயனும் மாவைச் செல்வர் நெஞ்சம் மானும் என்(று) அணிபட நகையோ(டு) அறைகுவை மன்னே! உள்ளம் பிரியாக் குரவி' யாமே ஐந்தரு நீங்கிய இந்திரன் உலகும் செந்திரு நீங்கிய தாமரை மலரும் அன்பு நீங்கிய அகமும் போலப் பொலிவும் பயனும் குன்றினோம் ஒலிகடல் உலகில் நிலவுவ யாவே.
பண்டிதர் சோ. இளமுருகனார் ஈழகேசரி 23.02.1941
82

4. துன்பில் அரும்பிய அன்புமலர் மாலை
கட்டளைக் கலித்துறை
I. பிள்ளைப் புலவன் உரையா சிரியன் எனப் பெறுவேற்
பிள்ளைப் புலவன் தரவந்த பாலன் பெருத்ததமிழ்க் கொள்ளைப் புலவர் குலத்திலு தித்த கொழுந்துகவி வெள்ளப் புலவன் மகாலிங்கம் ஆசிவம் மேவினனே.
2. தமிழைந் திலக்கணம் தந்தைதன் பாற்கற்றுத் தாரணியில்
அமிழ்தென் கவிகள் அவனும் வியப்புற ஆக்கவல்லோய் அமிழ்தஞ் சுவையில தென்றுண் கவியை அமருலகத் தமிழ்தொன் றுகண்ட அவர்மாந்த வோவங் கணுகினையே
3. அன்னை பராசக்தி யையேத்தன் பத்தி யதைவியக்கோ என்னவந் தாலுமஞ் சாதமெய் பேசுன் இயல்வியக்கோ நன்னய மார்கவி யார்க்கும் உண்சொல் நயம்வியக்கோ உன்னைஎவ் வாறுணர்ந் தண்பெருந் தன்மையை ஒதுவனே.
83

Page 54
கலித்துறை
தொன்மை யானவை முழுமையும் தாயன புதமைத் தன்மை யானவை முழுமையும் தகவில எனலும் வண்மை யால்இதன் மாறாத வருந்தலும் இன்றி நன்மை நாடுபு சமரச நவிலு நாவலன்நீ.
பொற்புறு செந்தமிழ்க் கவிதை புனைத்துறைசைச் சிவப்பிரகா சற்புகழ்ந்து கவிதையின்பந் தனில்மூழ்கி அவன்கவிபோல் கற்பனையும் பிறநலனும் கவின்நவம் பாடுவைசொற் சிற்பகலா மதிவல்லாய் சென்றனைஎம் தவக்குறைவே?
666õLIIT
மண்ணிற் புலவனென மன்னிணைபின் மண்விட்டு விண்ணிற் புலவனென மேவினையால் - அண்ணலே கெட்டாலும் மேன்மக்கள் மேன்மக்க ளேயன்றோ? விட்டாலும் எம்மை வெறுத்தது.
g5spoir 666coILIT
பொங்குதமிழ் ஆரியமும் போற்றி வளர்த்தமகா லிங்கசிவம் ஆனான் சிவம்.
பிரமறி. தி. சதாசிவஐயம்
இந்துசாதனம் (27-02-1942) (குருகவி நினைவுப்பதிப்பாக 1950 ஆம் ஆண்டில் தேவிமானச பூசை அந்தாதி என்னும் நூலையும் இவர் வெளியிட்டுள்ளார்)
米米米
米米米
84


Page 55


Page 56
பிரசித்தி வா
" மனர் ம. க. வேற் பெறுகிறது, கோயி திலே நாவலர் பெரு வித்தியா சாலையின் தலைமை ஆ புலவர் அவர்களினால் இயற்றி வெ கவிதைநூல் மட்டுவிலை அணிசெ
புலவரவர்களின் பிள்ளை பெற்றவர் குருகவி. வே. மகாலிங் விரிவுரையாளர் மகாலிங்கசிவம் பண்டிதமணி அவர்கள் இனிக்க இன்
குருகவி வே. மகாலிங்க புலவம் ம. பர்வதிநாதசிவம் அவ புயினிறு புலுவர் பட்டத்தினைப் ! களை எழுதி வெளியிட்ட திபருமை
கவிதை உலகிற் பேரும் லிங்கசிவம் அவர்கள், கட்டுரைக் இயற்றியும் கல்வியாளர்களிடை பரிசில்கள் பலு பெற்றவர்
யாழ்ப்பாரைப் பல்கலைக் பயின்று சிறப்பு நிலையிற் சித்தி அவர்கள் தமது அருமைப் பேரண் வரலாற்றையும், அவரது ஆக்கங் தொகுத்து நூலாக வெளியீடு செ அவரது பீட்டனர், பேரணி, தந்தை ஆகலாம்.
ஆசிரியர் பா. மகாலிங்க வதற்குப் பரின்நின்று உழைப்பவ. அறிஞருமான மயிலங்கூடலூர் விசேடமாகக் குறிப்பிடத்தக்கது.
திரு. பா. மகாலிங்கசிவம் விளங்க அருள்புரியும் வண்ணம் இ
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ய்ந்த தென்மராட்சிப் பரிவிலே மட்டுவில் பிள்ளைப் புலவர் அவர்களினாற் சிறப்புப் ல் எனினும் சிறப்புக்குரிய சிதம்பர தலத் நமானால் எய்தாடரிக்கப்பட்ட சைவப்பிரகாச ஆசிரியராகப் பணி புரிந்த வேற்பிள்ளைப் எளியிடப்பட்ட ஈழமண்டல சதகம் எனிகின்ற ப்கின்றது.
களில் கவித்துவ சக்தியை இயற்கையாகப் கசிவம் அவர்கள். ஆசிரியகலாசாலை அவர்களது கவிதாசாமர்த்தியத்தை வியந்து ரிக்க எழுதியுள்ளார். பேசியும் உள்ளார்.
சிவம் அவர்களின் சிரேஷ்ட புத்திரரான f&&f! அண்ணாமலைப் பல்கலைக்கழகத்திற் பெற்றவர். அருமையான செய்யுள் நூல்
அவருக்கு உண்டு. 轟
புகழும் பெற்றவர் பர்வுதிநாதசிவம் ஜகா :ள், சிறுகதைகள்ை எழுதியும் கவிதைகளை யே பெருஞ்சிறப்புப் பெற்றவர் இவர்,
கழகத்திலே தமிழைச் சிறப்புப் பாடமாகப் யெய்தியவரான திரு. பா. தேர்விங்கதிலும் ஈரான குருகவி மகாலிங்கசிவம் அவர்களது கள் குறித்த சுவையான செய்திகளையும் ப்கின்றார். அவருக்குரிய கல்வி ஆற்றல் வழியிற் கிடைத்த அரும்பெரும் முதுசொம்
சிவம் அவர்கள் பலதுறையிலும் முனினேறு ர் அவரது தாய் மாமனாரும் பல்கலை பி. நடராசன் அவர்கள் என்பது ஈண்டு
அவர்களது கலைமுயற்சிகள் மேலும் சிறந்து றைவனைப் பிரார்த்தித்து வாழ்த்து கிறேனர்.
ஆசிரிழினி ஆ. பஞ்சாட்திரம்
ginia, காங்கேசத்துறை வீதி,ார்ானம்