கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: தொலையும் பொக்கிஷங்கள்

Page 1
| ||||||
|
 

|
I | | ||||| | | | |
| |
|
|
|

Page 2

தொலையும் பொக்கிஷங்கள்
வதிரி இ. இராஜேஸ்கண்ணன்
மீரா பதிப்பகம் 79ஆவது வெளியீடு 291/6-5/3 A, எட்வேர்ட் அவெனியூ கொழும்பு - 06. தொ.பே : 2582539

Page 3
நூல் தலைப்பு
ஆசிரியர்
பதிப்பு விபரம்
உரிமை
ஆசிரியர் முகவரி:
பதிப்பு
அச்சிட்டோர்
; தொலையும் பொக்கிஷங்கள்
: சிறுகதை
: வதிரி இ. இராஜேஸ்கண்ணன்
: முதல் பதிப்பு - ஏப்ரல் 2009
: ஆசிரியருக்கே
"சாத்வீக பிரஸ்தம்’ இமையாணன் கிழக்கு, உடுப்பிட்டி
: மீரா பதிப்பகம்
79ஆவது வெளியீடு 291/6-5/3A, எட்வேர்ட் அவெனியூ, கொழும்பு 06. தொ.பே : 2582539
பேஜ் அன்ட் இமேஜ்
202/2B, றோயல் பேர்ல் கார்டின்ஸ், வத்தளை. ranjakumarGgmail.com
: ரூபா 200/-

நன்றியுடன்.
ஞானம், தினக்குரல் தாமரை, மல்லிகை சுடர்ஒளி, இடி
மீரா பதிப்பகம் புலோலியூர் ஆ. இரத்தினவேலோன்
ஞானம்' ஆசிரியர் எழுத்தாளர் தி. ஞானசேகரன்
ஒவியர் எஸ். நேசன்
சுனிதா

Page 4
உள்ளே.
பதிப்புரை
முன்னுரை தொலையும் பொக்கிஷங்கள் பூர்வீக பந்தம்
தூவானம் தொற்றாத உணர்வு குதறப்படும் இரவுகள் மானக்கேடு? சங்கார தரிசனம் இறுக்கம் ஒரு மாமனின் கதை துகிலுரிப்பு நூலாசிரியர் பற்றி.
vi
18
26
36
43
5
61
69
77
88

பதிப்புரை
முதுகொழாக சிறுகதைத் தொகுப்பு மூலமாகவும் தாலையும் பொக்கிஷங்கள் என்ற சிறுகதை வழியாகவும் ஈழத்து இலக்கிய உலகில் நன்கறியப்பட்ட இராஜேஸ் கண்ணன் கவிதை கட்டுரைகள் என்று எழுதி வந்தாலும் பிரதானமாக அவர் ஒரு சிறுகதை ஆசிரியர் தான். அதனை மீண்டும் ஒரு தடவை அவர் நிறுவியுள்ளார்.
அன்றாடம் சந்திக்கும் மக்களை ஆழ்ந்து புரிந்து அவர்களது வாழ்க்கைக் கோலங்களை தான் சார்ந்த வடமராட்சி மண்ணின் மொழியில் வடிவமைத்து அதில் வெற்றியும் பெற்றுள்ளார். அவர் கையாளும் மொழியே அவரது கதைகளை சாகாவரம் பெற்றவையாக திகழ வைத்துள்ளன என்று தாராளமாகவே கூறலாம்.
இத்தகு சிறப்பு மிக்க இவ்விளம் எழுத்தாளரது மூன்றாவது நூலினை மீரா பதிப்பகத்தின் 79ஆவது பிரசுர மாக அறுவடை செய்வதில் பெருமை கொள்கின்றோம்.
மீரா பதிப்பகம் ஆ. இரத்தினவேலோன் 291/6 - 5/3A,
எட்வேர்ட் அவெனியூ
கொழும்பு 06.
25-04-2009
T.P. 2582539

Page 5
முன்னுரை
ஈழத்துத் தமிழ் இலக்கியப் பரப்பில் வதிரி இ. இராஜேஸ் கண்ணன் என்ற இலக்கியப் படைப்பாளி தொலையும் பொக்கிஷங்கள்’ என்ற இச் சிறுகதைத் தொகுப்பின் மூலம் வெகு ஆழமாகத் தடம் பதித்துள்ளார். சிறுகதை, கவிதை, கட்டுரை, விமர்சனம் எனப் பல்வேறு துறைகளில் இவர் ஈடுபாடு காட்டிவந்த போதிலும் சிறுகதைத் துறையே இவருக்குக் கைவந்த கலையாகப் பரிணமித்திருக்கிறது.
எனது முதற் தொகுதியின் வரவுக்குப் பின்னர் என்னை வெளியுலகில் நிலைநிறுத்தியதில் ஞானத்தின் பங்குதான் முக்கியமானது. இதனால்தான்-தங்களின் மேலுள்ள அபி மானத்தினால்தான் முன்னுரையை தாங்கள் எழுத வேண்டு மென நினைக்கிறேன் - விரும்புகிறேன்’ என்ற குறிப்போடு இத்தொகுதியில் அடங்கியுள்ள பத்துச் சிறுகதைகளையும் இராஜேஸ்கண்ணன் எனக்கு அனுப்பியிருந்தார். முன்னுரை எழுதுவதற்காக இக்கதைகளை ஒன்றுசேர வாசித்தபோது அவரது படைப்பாக்கத் திறனின் பல்வேறு அம்சங்களை உய்த்துணர முடிந்தது.
எந்தவொரு சிறிய கருவையும் சிறந்த சிறுகதையாக்கி டக்கூடிய வல்லமை இராஜேஸ்கண்ணனுக்கு வாய்த்திருக் கிறது. இவரிடம் காணப்படும் சமூகம் சார்ந்த யதார்த்தப் பார்வை, கூரிய அவதானிப்பு, சித்திரிப்புத் திறன் என்பன இவர் எடுத்துக்கொண்ட கருவினைப் பலப்படுத்த உதவு கின்றன; ஒர் இலக்கியப் பெறுமானத்தைத் தருகின்றன.

யாழ்ப்பாணம் வதிரியில் 22-01-1973இல் பிறந்த இராஜேஸ்கண்ணன் தற்போது இமையாணன் கிழக்கில் வசித்து வருகிறார். தனது ஆரம்பக் கல்வியை கரவெட்டி தேவரையாளி இந்துக் கல்லூரியிலும் இடைநிலைக் கல்வியை விக்னேஸ்வராக் கல்லூரியிலும் பெற்ற இவர், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் சமூகவியல் பட்டதாரி ஆவார். பின்னர் காமராஜர் பல்கலைக்கழகத்தில் முதுமாணி பட்டம் பெற்று தற்போது டிப்ளோமா பட்டப்படிப்பினை யாழ் பல்கலைக்கழகத்தில் பயின்று வருகிறார்.
ஆரம்பத்தில் கரவெட்டி பிரதேச செயலகத்தில் எழுது னைஞராகக் கடமையாற்றிய இராஜேஸ்கண்ணன் 2001 முதல் மூன்று வருடங்கள் யாழ் பல்கலைக்கழகத்தில் சமூகவியல்துறை விரிவுரையாளராகவும் பின்னர் மன்னார் சித்திவிநாயகர் இந்துக் கல்லூரியில் பட்டதாரி ஆசிரியப் பயிற்சியாளராகவும் பணியாற்றினார். அதன் பின்னர் மூன்று ஆண்டுகளாக யா/வேம்படி பெண்கள் உயர்தரப் பாடசாலை யில் கல்வி கற்பித்தார். தற்போது நிரந்தரமாக யாழ் பல்கலைக்கழகத்தில் சமூகவியல் துறை விரிவுரையாளராகப் பணி புரிந்து வருகின்றார்.
இவரது முதலாவது சிறுகதைத் தொகுதியான முதுசொமாக 2002ல் வெளியாகியது. "போர்வைக்குள் வாழ்வு' என்ற கவிதைத் தொகுதியினை 2008ல் வெளியிட் டுள்ளார்.
இத்தொகுப்பின் மகுடக்கதையான ‘தொலையும் பொக்கிஷங்கள் ஞானம் சஞ்சிகையில் வெளியானபோது வாசகர்களின் பெரும் பாராட்டைப் பெற்றது.
தம்பித்துரை என்பவர் கனடாவுக்குச் சென்று தனது மகனின் குடும்பத்தோடு ஆறு வருடங்கள் இருந்துவிட்டு சொந்த ஊருக்குத் திரும்புகிறார். அவரது வீடு ஆமி காம்ப்' ஆக்கப்பட்டு சீரழிந்துவிட்டது. இப்போது எழில் குலைந்து,
wii

Page 6
சுடுகாடுபோல் கிடக்கிறது. நிலை, கதவுகள் இடிக்கப்பட்டு, மரங்கள் தறிக்கப்பட்டு, கிடங்குகள் தோண்டப்பட்டு, முள் வளையங்கள் போடப்பட்டு நெருஞ்சி முள் அப்பி.
அந்த வீடு இருக்கும் காணி அந்தக் காலத்தில் ஒரு பெரிய கட்டாந்தரையாக இருந்ததாம். அதிலிருந்து மூன்று பனைகள் மாத்திரம்தான் அந்த நிலத்திற்கு உயிர்ப்பு இருந்ததை உணர்த்தி நின்றன. ஒரு முக்கோணத்தின் மூன்று புள்ளிகளாய் நின்ற அந்தப் பனைகள்தான் அந்தக் காணி யிலே வாழ்ந்த எங்கள் பேரன் பேர்த்தியின் குடிசையைக் கோபுரமாக்கிய சூட்சுமங்கள். வருடாவருடம் பாத்திபோட்டு வரும் பனங் கிழங்கு, ஒடியல், புழுக்கொடியல், ஊமல், பனாட்டு, கங்கு மட்டை விற்ற சேமிப்பில் உருவானதுதான் அந்த வீடு. இந்தச் சுகங்களையெல்லாம் வாழ்க்கையாகத் தந்தவை அந்த மூன்று பனைகளும்தான். வாழ்வில் ஒவ்வொரு கணங்களும் கூடி வாழ்தல் கொடுத்து உண்ணு தல் போன்றவற்றின் வாளிப்புகள்-வசீகரங்களைத் தந்தவை இவை!’
அந்தப் பனைகள் தறிக்கப்பட்டுவிட்டன. போர்ச்சூழல் ஏற்படுத்திய அவலம் தம்பித்துரைக்கு மட்டுமல்ல ஆயிரம் ஆயிரம் யாழ்ப்பாண மக்களுக்கும் ஏற்பட்ட அவலம்.
"எல்லாம் அழிஞ்சு போச்சுதடா, வீடுஞ்சரி வாழ்க்கையும் சரி வாழ வேண்டிய குடிசையை விட்டு வெளிக்கிட்டது பிழையாய்ப் போச்சு. எங்கடை வாழ்க்கை குலைஞ்சது போல ஆற்றை வாழ்க்கை குலைஞ்சது?” தம்பித்துரையின் கதறல் எவ்வளது யதார்த்தமானது. இது தம்பித்துரையின் கதறல் மட்டுமல்ல, ஒவ்வொரு யாழ்ப்பாண மக்களின் கதறலு மாகும்.
"மூன்று பனைகளும் காய்த்துக் குலுங்கும் காலத்தில் வீடு களை கட்டும். அப்பிளுக்கு அவுஸ்திரேலியா என்றால் பனம்பழத்திற்கு யாழ்ப்பாணம்” - என கதையை வளர்த்துச்
viii

செல்லும் ஆசிரியர் பனாட்டுப் பிழிதல், ஒலைப் பாய் இழைத்தல், பனாட்டுக் காடி போடுதல், பனங்கழி உறிஞ்சிக் குடித்தல், பனங்கிழங்கு கிண்டி அவித்து உண்ணல், பூரான் தின்னுதல், புழுக்கொடியல் காயவிடுதல் எனப் பனையில் இருந்து பெறப்படும் பயன்களை விலாவாரியாக விபரிக்
ன்றார்.
"நாசமாய்ப் போவான்கள். என்ரை வீட்டை அம்மண மாக்கியிருக்கிறாங்கள் பறவாயில்லை. கட்டியாதல் போடலாம். அந்த மூண்டையும் அப்பு எவ்வளவு பக்குவமா வளர்த்து பொக்கிசமா எங்களுக்கு விட்டிட்டுப்போனவர். அதை எப்படி இனி.” என்று மனம் இடிந்து கூறுகிறார் தம்பித்துரை.
பனை யாழ்ப்பாண தீபகற்பகத்தின் கற்பகதரு. பங்கர்கள் கட்டவும் 'சென்றிகள் போடவும் என எத்தனை எத்தனை பனைகள் தறிக்கப்பட்டு விட்டன. எத்தனை எத்தனை பனைகள் தலையிழந்து முண்டமாய் நிற்கின்றன! “செல்லம் எங்கையாதல் நல்ல பனங்கொட்டை பார்க்கப் போறன். என்ரை விசா முடிஞ்சாலும் பறவாயில்லை. எத்தினை மாசமெண்டாலும் சரி. அந்த வளவு முழுக்க விதைக்கப் போறன்" உறுதியோடு கூறிக்கொண்டு எழுந்து தகிக்கும் வெய்யிலில் இறங்கி நடந்தார் - என கதை முடிகிறது.
ஒரு எழுத்தாளனின் வெற்றியானது தனது படைப்பின் மூலம் வாசகனின் சிந்தையில் ஊடுருவுவதிலேதான் பெரிதும் தங்கியுள்ளது. தொலையும் பொக்கிஷங்கள் என்ற இச் சிறுகதை மூலம் வாசகனின் சிந்தையிலே ஊடுருவி பெருவெற்றி கண்டுள்ளார் ஆசிரியர்.
இக்கதை ஞானம் சஞ்சிகை மித்ராவுடன் இணைந்து வெளியிட்ட "போர்க்காலக் கதைகள்” தொகுதியிலும் 2007ல் அறிமுகமான தரம் பத்திற்கான தமிழ்மொழிப்பாட ஆசிரிய
Χ

Page 7
அறிவுரைப்பு வழிகாட்டியிலும் இடம்பெற்றிருப்பது இக்கதை யின் உயர்தரத்திற்குச் சான்றாக அமைகிறது.
தமிழ் முஸ்லிம் உறவினைச் சித்தரிப்பது பூர்வீகபந்தம்' என்ற சிறுகதை. முஸ்லிம்கள் யாழ்ப்பாணத்தை விட்டு வெளி யேற நிர்ப்பந்திக்கப்பட்ட போதிலும் அவர்கள் தமிழர்களுடன் கொண்டிருந்த உறவு ஆழமானது. இன ஐக்கியம், சமூக உறவு என்பவை பேணப்படவேண்டியவை என்பதை இக்
கதை மூலம் வெளிப்படுத்துகிறார் ஆசிரியர்.
நவாஸ் என்ற இளைஞன் யாழ்ப்பாணத்தை விட்டு வெளியேற்றப்பட்டு பல ஆண்டுகளுக்குப் பின் தனது குடும்பத்தினருடன் நெருங்கி உறவாடிய தமிழ்க் குடும்பத் தினரைப் பார்க்க, உதவிசெய்ய யாழ்ப்பாணம் வருகிறான். ஆனால் போர்ச் சூழல் அவன் தேடிவந்த தமிழ்க் குடும்பத் தினரைச் சிதைத்துச் சீரழித்து விடுகிறது. அவன் தங்கையாக மதித்துப் போற்றிய தமிழ்க் குடும்பத்தைச் சேர்ந்த பெண் பைத்தியமாகிவிடுகிறாள். அவளது திருமணத்துக்கென அந்த முஸ்லிம் இளைஞன் நகைநட்டு புடவைகள் கொண்டு வந்திருக்கிறான்.
"நம்மட வாப்பா பழையகோட் வியாபாரம்தான் பண்ணி னாங்க. அவரை தன்னோட புகையிலை பிஸினசிலை சேத்து ரெளண்ல அலுமினியக் கடை ஒண்ணுபோட உதவி பண்ணி மொதலாளியாக்கிவிட்டவர். நம்மளை எழுப்பி திரத்தினப்போ என்ன பணி னுறதுன்னு தெரீ ைலணி னு வாப்பா சொன்னப்போ என்ரை தெமட்டகொட கடைய எடுத்து நடத்து பிறகு எல்லாம் யோசிக்கலாம்’ எண்ணு சொன்னாரு அவருக்கு என்னால ஒரு உதவிகூட செய்ய முடியாம ஆயிருச்சு.” என்று கலங்குகிறான் அந்த முஸ்லிம் இளைஞன்.
படைப்பாளிக்கு ஒரு சமூகச் சிரத்தை இருக்க வேண்டும். அவன் வெறுமனே கதை சொல்பவன் அல்லன்.
X

அதற்கு மேலாக சமூக ஐக்கியத்தை இன ஐக்கியத்தை கட்டிக் காப்பவனாக இருக்கவேண்டும். இதுவே இலக்கியத் தின் பண்பும் பயனுமாகும். இந்தப் பண்பினை 'பூர்வீக பந்தம்' என்ற இந்தக் கதையிலே பார்க்கிறோம்.
தூவானம், மானக்கேடு, துகிலுரிப்பு ஆகிய மூன்று கதைகளும் சிறுவர் உளவியலோடு சம்பந்தப்பட்டவை; ஒரு சேர நோக்கப்படவேண்டியவை. பிஞ்சு உள்ளங்களை நோகடிக்கும் சொற்களும் செயல்களும் அவர்களை எவ்வா றெல்லாம் பாதிக்கின்றன என்பதை இக்கதைகள் விபரிக் கின்றன. எனினும் இக்கதைகள் ஒவ்வொன்றினதும் நோக்கும் போக்கும் வேறானவை.
துகிலுரிப்பு' என்ற கதையில் விளையாட்டுப் போட்டிக் குத் தயாராகி யூனிபோமுடனும் ரையுடனும் தொப்பியுடனும் நின்ற ஏழைச் சிறுமியின் உடைகளைப் பலவந்தமாகக் கழற்றி வேறொரு பணக்காரப் பெண்ணுக்கு அணிவித்து ஏழைச் சிறுமியை விளையாட்டுப் போட்டியில் பங்குபற்ற விடாத கொடுமை இக்கதையில் விபரிக்கப்படுகிறது.
“உது உந்தக் கிழக்கு றோட்டிலை இருக்கிற பிள்ளை. இங்கத்தை ஆக்களில்லை. அவவின்ரை கிளாஸ் ரீச்சரின்ரை செல்லம் தாய் யூனிபோமுக்கு அரைவாசிக் காசுதான் தந்தவ. மிச்சம் பிறகாம் அதுகள் உப்பிடித்தான் ஆக்களைத் தெரியுந் தானே, உனக்கு. இதுகளுக்கு ஏன் இதெல்லாம்?. உவை வந்து இஞ்சை ஒண்டும் நியாயம் கேட்டுப் படைக்கப்போறது கிடையாது.”
எனத் தான் செய்த கொடுமைக்கு நியாயம் கற்பிக்கும் கல்யாணி ரீச்சரின் பேச்சு - அந்த மேட்டுக்குடிப் பேச்சு - சிறுமிக்கு இழைக்கப்பட்ட கொடுமை மட்டுமல்ல ஒரு சமூகத்துக்கு இழைக்கப்பட்ட கொடுமை என்பதை விளக்கு கிறது.
xi

Page 8
ஓர் ஏழைச் சிறுமிக்கு ஏற்பட்ட துன்பத்தை உணர்வு நிலை தொய்வடையாத வகையில் செறிவான சொற்களால் கட்டுக்கோப்புடன் கதையாக்கம் செய்யப்பட்ட சிறப்பினை இக்கதையில் காண்கிறோம்.
இச்சிறுகதை ஞானம் நடத்திய புலோலியூர் சதாசிவம் ஞாபகார்த்தச் சிறுகதைப் போட்டி 2008ல் இரண்டாம் பரிசு பெற்ற சிறப்பினைக் கொண்டது.
பிச்சை சம்பளம் எடுக்க மினிபஸ்ஸில் ஏறிவந்த மூதாட்டி அவள் இறங்கவேண்டிய இடத்தில் இறக்கி விடப்படாமல் மூன்று மைல்களுக்கு அப்பால் இறக் விடப்படுகிறாள். அவளால் நடக்கவும் முடியாது. கையில் பணமும் இல்லை. அவளுக்கு உதவுவதற்காக பதை பதைப்புடன் தானும் பஸ்ஸிலிருந்து இறங்கும் உள்ளத்தை "தொற்றாத உணர்வு' என்ற சிறுகதையில் பார்க்கிறோம்.
மனித நடத்தை வேறுபாடுகளை, மனிதநேயத்தை, ஆத்ம பலத்தோடு தானுணர்ந்த வலிகளை போக்கிக் கொள்ளும் தன்மையை சிறப்பாக இக்கதையிலே சித்திரித் துள்ளார் ஆசிரியர்.
பத்திரிகைச் செய்தியொன்றில் இறந்துகிடந்த ஒரு பெண்ணின் புகைப்படம் எவ்வாறெல்லாம் மனதை அலைக் களித்து அந்தகாரத்துக்கு இட்டுச் செல்கிறது என்பதை குதறப்படும் இரவுகள் சிறுகதையில் காண்கிறோம். ஆசிரியரின் சித்திரிப்புத் திறனுக்கு ஓர் எடுத்துக்காட்டாக விளங்கும் இக்கதையில் மனித இன்னல், மனித அவலம் நேரடியாகவும் குறியீடாகவும் பேசப்படுகிறது.
இரவு என்பது ஒரு அற்புதமான உற்பவிப்பின் ரகசியம் ஊழியம் இருள் கவிந்ததுதான். மனிதன் உயிராகும் கருவறை இருண்டது. கடவுள் உறையும் கருவறையும் கூட இருள் கவிந்தது தான். கதைகளில் கூறப்படும் அரக்கர்கள் இருள் நிறத்தினர். இரணியன், மகிடாசுரன், மாபலி என்று
χή

நீளும் பட்டியல் மட்டுமல்ல இராமன், கிருஷ்ணன் போன்ற ரகூழ்சகர்களும் இருண்டவர்களே. இராட்சதர்கள் மட்டுமல்ல ரகூர்சகர்களிலும் இருள் நிறத்தினர் அதிகம்பேர்.
இரவுகள் இனிமையான அற்புதங்கள் என்றால் அவை என்னை ஆதர்சயப் படுத்துவன.
இரவுகளைப் பாடாத கவிஞர்கள் இல்லை. நிலவு வழியும் இரவுகள் கற்பனைகளாய் நீளும். அம்புலி மாமா வா.அம்மா வெளியே வா அம்மா. என்றெல்லாம் இரவுகள் பாட வைத்தன.”
மேற்படி கவித்துவமான வர்ணனை இராஜேஸ் கண்ணனின் மொழி வளத்துக்கு ஓர் எடுத்துக்காட்டு. இந்த வர்ணனையுடன்தான் அந்தகாரமாக விடியும் குதறப்படும் இரவுகளுக்கு வாசகனை இட்டுச் செல்கிறார் ஆசிரியர். இது தேவையற்ற, வெறும் அலங்காரத்துக்கான வர்ணனை அல்ல. கதையின் கருவுக்கு உரம் சேர்க்கும் வர்ணனை என்பது கதையின் வளர்ச்சியிலே புலனாகிறது.
"பின்புறத்து களஞ்சிய அறையில் போடப்பட்டிருக்கும் தட்டுமுட்டுச் சாமான்களிடையே சந்ததியின் நீட்சிக்காகச் சல்லாபிக்கும் தத்துவெட்டியான்களின் கீதம். பிரசவிக்கக் காத்திருக்கும் சோடிக்கு நெல்மணி சேர்த்து முகட்டு வளையில் ஓடி வரும் எலியின் சிறுகால் ஒலி, தூரத்தில் எங்கோ ஓரிடத்தில் சோடிநத்தின் முனகல், புத்தக அறையின் பழைய பத்திரிகைக் கட்டுக்களிடையே கரப்பான்களின் குசுகுசுப்பு வீட்டின் பின்புறத்தே ஆட்டடியின் அசை மீட்டும் தாயாட்டின் நெறுமலும் மடியில் வாய் புதைத்த மிடறின் வழி பால் இறங்கும் ஒலியும், அடை வைத்துப் பொரித்த குஞ்சுகளை தன் சிறகுப் போர்வைக்குள் விரித்துக் கொள்ளும் கோழியின் பாசப்பிரிவின் ஒலி.” என நுண்புலக் காட்சி வர்ணனைகளால் கதைக் கருவுக்கு வளம் சேர்க்கிறார்
ஆசிரியர்.
xiii

Page 9
மனம் பத்திரிகைச் செய்தியையும் மாமியின் வார்த்தை களையும் தவிர எதிலும் லயிக்கவில்லை. திடீரென வீட்டின் பின்புறம் கோழிக்கூட்டில்தான் கூக்குரல். குஞ்சுகள் பத களித்துக் கீச்சிட்டன. விறாத்துக்குஞ்சுகள் செட்டைகளை அடித்து கீச்சிடும் சத்தம். இருளைக் கிழித்து வந்த அவல மான ஒலங்களாய்.
சூய்.சூ. ஒடிச் சென்றேன். குஞ்சுகள் என் செல்லம் போன்ற குஞ்சுகள் பதகளித்தன. தாய்க் கோழியைக் காணாது பரிதவித்தன. தாயின் சிறகுக் கணப்பு இழந்து அல்லோல கல்லோலப்பட்டன. வீட்டுக் கோடிப்புற மூலையில் பிய்த்து இழுத்துவரப்பட்ட தாய்ப்பேடு குதறப்பட்டுக் கிடந்தது. இரத்தம் தோய்ந்த இறகுகளோடு.
மரநாய் எண்டால் என்ன, கீரிதானெண்டால் என்ன அந்தக் குஞ்சுகள்? சடலமாக மீட்கப்பட்ட பெண் இரண்டு பிள்ளைகளின் தாயாவார் - 'பத்திரிகைச் செய்தி மீண்டும் என் மூளை அணுக்களில் விடாப்பிடியாய்ச் சுவறுகிறது.” உளவியல் ரீதியான விபரணங்களும் எளிமையான உணர்ச்சிக்கூறுகள் நிறைந்த மொழி நடையும் இக்கதையை இலக்கியத் தரம் மிக்கதாக ஆக்கியிருக்கிறது.
இக்கதை ஞானம் சஞ்சிகை நடத்திய அமரர் செம்பியன் செல்வன் ஆ. இராஜகோபால் ஞாபகார்த்தச் சிறுகதைப் போட்டி 2007ல் இரண்டாம் பரிசினைப் பெற்றது என்பதும் குறிப்பிடத்தக்கது.
இன்றைய இளம் எழுத்தாளர்களில் பலர் தாம் எழுதிய கதைகளை எழுதி முடிந்த வேகத்துடனேயே பத்திரிகை களுக்கு அனுப்பிவிடுகிறார்கள். இராஜேஸ்கண்ணனிடம் இக்குறைபாடு காணப்படாதது மகிழ்ச்சிக்குரியது. அவர் தனது கதைகளை ஊறப்போட்டு மீண்டும் மீண்டும் செதுக்கி செவ்வைப்படுத்தி சித்திரிப்புத் திறனை மிளிரவைத்த பின்னரே வெளிக்கொணர்கிறார் என்பதை அவரது எல்லாக்
xiw

கதைகளிலுமே காண முடிகிறது. சிறப்பாக தொலையும் பொக்கிஷங்கள், குதறப்படும் இரவுகள்', 'சங்கார தரிசனம் ஆகிய கதைகள் அவரால் பட்டை தீட்டப்பட்டிருப்பது துலாம்பரமாகத் தெரிகிறது.
பாதைமறிப்பு' எவ்வளவு தூரம் யாழ்ப்பாணத்து மக்களை ஆட்டிப் படைக்கிறது என்பதைத் திறம்படச் சித்தரிக்கிறது 'சங்கார தரிசனம்’ என்ற சிறுகதை, சுந்தரியார் செல்வச் சந்நிதியானின் சூரன் போர் பார்க்கப் புறப்பட்டு பாதை மறிப்பில் அகப்பட்டு சூரன் போர் பார்க்காமல் திரும்புவதுதான் கதை. ஆனால் இக்கதையினூடாக ஆசிரியர் சொல்லிச் செல்லும் சங்கதிகள் ஏராளம். சுந்தரி யார் பாத்திரத்தை அறிமுகப்படுத்தும்போது, 'பொயிலைச் சுந்தரி" தரகுச்சுந்தரி, சீட்டுச்சுந்தரி', 'கண்டுச்சுந்தரி என அவர் எடுக்கும் பாத்திர வேறுபாடுகளை விபரணங்களாகச் சித்திரிக்கும் பாங்கு நேர்த்தியானது. சுந்தரியாரின் மனத் திரையில் அவர் பார்த்த எத்தனையோ சூரன் போர்கள் பற்றிய விபரணங்கள் ஆவணப் பெறுமானம் வாய்ந்தவை.
“எங்களுக்குச் சூரனுமில்லை. கந்தனுமில்லை. இந்த தரித்திர வாழ்க்கைதான்.”
"கலியாண நாள்கூட இவையின்ரை வாகனங்கள் எப்ப போகும், எந்தநேரம் பாதை மறிப்பினம் எண்ட நேரமெல்லாம் பாத்துத்தான் எடுக்க வேணுமெண்ட நிலை வந்திட்டுது”
என கதையினூடே சலிப்புடன் வெளிவரும் வார்த்தை கள் கதையின் தாற்பரியத்தை விளங்கிக்கொள்ளப் போதுமா னவை. போர்ச் சூழல் எவ்வாறெல்லாம் நமது சமூகப் பெறுமானங்களின் தகர்வை ஏற்படுத்துகின்றது என்பதற்கு இக்கதை எடுத்துக்காட்டாக விளங்குகிறது. கதைக்கான களமும் சூழலும் தத்ரூபமாகச் சித்திரிக்கப்பட்டிருப்பது ஆசிரியரது தரிசனத் தனித்துவத்தைக் காட்டுவதாக அமைந்துள்ளது.
XV

Page 10
இன்றைய இளம் எழுத்தாளர்களிடம் காணப்படும் இன்னுமொரு குறைபாடு அவர்கள் வாசிப்பது மிகக்குறைவு ஆனால் இராஜேஸ்கண்ணன் நிறையவே வாசிக்கின்றார். தமிழில் வெளிவந்த சிறந்த சிறுகதை எழுத்தாளர்களின் கதைகளை வாசித்துப் பெற்ற அறிவு அவரது படைப்பியல் தொழிற்பாட்டுக்குப் பெரிதும் உதவுகிறது. ஒரு சிறுகதையை வளர்த்துச் செல்லும்போது அக்கதையின் கருவுக்கு வலுவூட்டக்கூடிய விடயங்களையே அவரது கதைகளில் காணமுடிகிறது. தேவையற்ற சொற்பிரயோகங்கள் எவையும் காணப்படுவதில்லை. இதன்காரணமாக அவரது கதைகளில் செறிவும் அமைவடக்கமும் சிறப்பாகக் காணப்படுகின்றன.
இராஜேஸ் கண்ணன் என்ற இளம் படைப்பாளி தொலையும் பொக்கிஷங்கள்’ என்ற இந்தச் சிறுகதைத் தொகுப்பின் மூலம் தான் பயிலும் இலக்கிய உலகில் தனது தரிசனத் தனித்துவ முத்திரையை ஆழமாகப் பதித்துள்ளார். இதுவரை அவர் எழுதிய சிறுகதைகளில் சிறந்த சிறுகதைகள் சில இத்தொகுப்பில் அடங்கியுள்ளன. இராஜேஸ்கண்ணன் இத்தகைய உணர்வுடனும் தெளிவுடனும் தொடர்ந்து பிரயாணத்தை மேற்கொள்ள வேண்டும். அவருக்கு மேலும் பல வெற்றிகள் காத்திருக்கின்றன.
3-பி. 46 ஆவது ஒழுங்கை, - தி. ஞானசேகரன் கொழும்பு - O6. ஞானம்' ஆசிரியர்
24-11-2008 T.P. 2586013

தொலையும் பொக்கிஷங்கள்
தன் மனதைப் போலவே உச்சிச் சூரியன் உமிழும் வெயில்
தகித்துக் கொண்டிருக்க, முகமெல்லாம் கருமை போர்த்தி,
மனம் சோர்ந்து விறாந்தையில் போடப்பட்ட சாய்மனைக்
கட்டிலில் வீழ்ந்தார் தம்பியண்ணை. மல்ரி பெரல்களாய்” இதயம் வெடிப்பது போன்ற உணர்வு. மனத்திலே
பல்லாயிரம் ஆணிகளால் அறைந்த தவிப்பு உள்ளத்துப் புழுக்கம் உடலெல்லாம் வியர்வையாகி சேட்டோடு ஒட்டி
உடல் நசநசத்து வர எல்லாமே வெறுத்தது போன்ற
உணர்வு அலுத்துக் கொண்டார்.
தொலையும் பொக்கிஷங்கள் 1 வதிரி இ. இராஜேஸ்கண்ணன்

Page 11
காலைச் சாப்பாட்டை முடித்துக் கொண்டு வெளிக் கிட்டவர். ஒரு மணியாகிவிட்டது - இப்போது தான் வருகின் றார். அவரது நிலைமையை என்னால் ஓரளவு உணர முடிந்தது.
“பிள்ளை மாமாவுக்கு குடிக்க எதாவது கொண்டு வாணை. நடு வெயிலுக்காலை வாறார். குளிர எதாவது குடெணை”
எனது மூத்தவளுக்கு கூறியவாறே தம்பியண்ணைக்கு முன்னிருந்த கதிரையிலே அமர்ந்து கொள்கிறேன்.
“என்ன தம்பியண்ணை கொஞ்சம் வேளைக்கு வரக் கூடாதே - வெயில் ஏறேக்கு முன்னம் - இந்த உச்சி வெயிலுக்காலை வாறியள்."
தம்பியண்ணையை வருடும் வகையில் ஏதாவது கேட்க வேண்டும் என்பதற்காக ஒப்புக்குக் கேட்டு வைத்தேன்.
அவர் தன்னை சுதாகரித்துக் கொள்கிறார். எனினும் உள்ளூர அவருக்கிருந்த பதகளிப்பு இன்னும் ஆறிய பாடில்லை.
தம்பித்துரை அண்ணை என்பது தான் தம்பியண்ணை யின்’ விரிந்த வடிவம் என்பது பலரும் அறியாத போதிலும் அவரை தம்பியண்ணை’ என்றே அழைப்பது வழக்கமா யிற்று.
தம்பியண்ணை என்னுடைய தந்தையின் மூத்த சகோதரி - பெரிய மாமியின் - மகன். அத்தான். வயதிலே மூத்த மைத்துனர்களை அத்தான் என்பதுதான் வழமை. எனக்கு நேரே இரு வயதுகள் மூத்தவர் என்பதனால் எமக்கிடையே வயதினால் உண்டான வேறுபாடுகள் எவை யும் இல்லை. அத்தான் என்றாலும் ஒரு வித நெருக்கம்
வதிரி இ.இராஜேஸ்கண்ணன் தொலையும் பொக்கிஷங்கள் 2

கருதி அண்ணை’ என்று சொல்லிவரும் பழக்கம் என்னிடம் சிறு வயதிலிருந்தே முறை வழுவமைதியாக வந்து சேர்ந்து விட்டது.
எங்களுடைய குடும்பத்தில் முதல் பிறந்தவர் என்பதால் எனக்கு இளைய சகோதரிகள் அவரை மூத்தத்தான்’ என்று தான் அழைப்பார்கள். என்னுடைய கடைசித் தங்கையின் உறவு முறை இன்னும் வித்தியாசமானது. அவள் அவரை தம்பியண்ணை அத்தான்’ என்றுதான் அழைத்து வருகிறாள்.
அந்தளவிற்கு எல்லோருக்கும் தம்பியண்ணை ஆகி விட்டார் அவர்.
நீண்ட காலம் தம்பியண்ணை’ ஊரிலே இல்லை. நேற்றுக் காலையில் தான் பயணத்தால் வந்திருந்தார்.
கனடாவிலே தன்னுடைய மகனின் குடும்பத்தோடு ஆறு வருடமாக இருந்துவிட்டு இப்போது தான் சொந்த ஊருக்கு வந்திருக்கிறார்.
“செல்லம், புதிதாக பிறந்த மாதிரிக் கிடக்கடா. எங்கடை ஊரிலை திரும்பியும் காலை வைப்பன் எண்டு கனவிலும் நினைக்கவே இல்லையடா. ஒரு மாசமெண்டாலும் நிண்டு தான் போகப் போகிறன். உன்ரை கடைசிப் பெடியன் கூட என்ரை தோளுக்கு மேலாலை வளர்ந்திட்டான். எல்லாரையும் நேரை பார்க்க எவ்வளவு சந்தோசமாகக் கிடக்குத் தெரியுமே?”
என்று தம்பியண்ணை நேற்று வந்தவுடன் ஆதங்கத் தோடு கூறிய வார்த்தைகள் இதயத்தை வருடி நின்றன.
செல்லத்துரை என்ற எனது பெயரை சுருக்கி செல்லம்' என்று அழைப்பதுதான் அவரின் வாலாயம்.
‘என்னண்ணை என்ன முகமெல்லாம் ஒரு மாதிரிக் கிடக்கு? பேயறஞ்சது மாதிரி என்ன வெக்கை தாங்க
தொலையும் பொக்கிஷங்கள் 3 வதிரி இ.இராஜேஸ்கண்ணன்

Page 12
முடியாமல் கிடக்கே..? என்ன ஒரே 'ரென்ஷனா இருக்கிற மாதிரிக் கிடக்கு. உங்கை உங்கட மருமேஸ் தேசிக்காய்த் தண்ணி வைச்சிருக்கிறாள். குடியுங்கோ, குடிச்சிட்டுப் பிறகு சாப்பிட்டிட்டு கொஞ்சம் றெஸ்ற் எடுங்கோ, கன காலத் துக்குப் பிறகு எங்கட வெயில் சுட்டுப் போச்சு."
என்று என் குரலோடு நளினம் சேர்த்து அவரை இயல்புக்குக் கொண்டு வர முனைந்தேன்.
“என்னத்தைக் குடிச்சென்ன சாப்பிட்டென்ன எல்லாம்.”
தம்பியண்ணையின் வார்த்தைகளில் வெளிப்படுவது ஏமாற்றமா? நம்பிக்கையீனமா? கழிவிரக்கமா? என்னால் பகுத்தறிய முடியவில்லை.
“என்னண்ணை.?” மொட்டையாகவே கேட்டேன்.
"எல்லாம் அழிஞ்சு போச்சுதடா. வீடும் சரி வாழ்க்கை யும் சரி வாழ வேண்டிய குடியை விட்டிட்டு வெளிக்கிட்டது பிழையாப் போச்சு. எங்கட வாழ்க்கை குலைஞ்சது போல ஆற்ரை வாழ்க்கை குலைஞ்சது..?”
தம்பியண்ணை எங்கள் வீட்டிலே தான் தங்கி நிற்கின் றார். அவருடைய வீடு சென்ற வாரம் வரை ஆமிக் காம்ப்'
லுள்ள நான்கு வீடுகளும் சேர்த்து இராணுவ முகாங்களா கப் பாவிக்கத் தொடங்கி இப்போது ஏறத்தாழ ஐந்து வருடங் களாகி விட்டன. முக்கியமான இரண்டு சாலைகள் குறுக் கிடும் நாற்சந்தியின் அருகே அமைந்த வீடு என்பதால் அதிலே இராணுவ முகாம் இடுமளவிற்கு முக்கியத்துவம் பெற்றிருந்தது.
இராணுவத்திற்கு மட்டுமல்ல, எங்கள் வாழ்விலும் கண் களும் பார்வையுமாக இணைந்துவிட்ட பெருமை அந்த வீட்டிற்கு உண்டு. எங்கள் குடும்பங்களின் தாய் வீடு அது.
வதிரி இ. இராஜேஸ்கண்ணன்/தொலையும் பொக்கிஷங்கள் 4

என்னுடைய தந்தையும், பெரிய மாமியும், சின்னமாமியும் பிறந்த இடம் அது எங்களுடைய பேரன் பேர்த்தி உயிரோடு இருந்த காலத்திலே எங்கள் மூன்று குடும்பங்களினதும் கருவறையாக அந்த வீடுதான் விளங்கியது. நானும் என் அடுத்த இரு சகோதரிகளும் அந்த வீட்டிலேதான் பிறந்தோம். சின்னவள்தான் நாம் இப்போது இருந்து வரும் அம்மாவின் சீதன வீட்டில் பிறந்தவள். எங்களைப் போலவே தம்பியண்ணையும், அவரது ஒரு சகோதரியும் அங்கு தான் பிறந்தார்கள். சின்ன மாமிக்குப் பிள்ளைகள் இல்லை. அப்பா அம்மாவின் வீட்டுக்கு சென்றது போல சின்ன மாமியும் சின்ன மாமாவின் வீட்டுக்குச் சென்று விட்டாள். தம்பி யண்ணையின் குடும்பமும், மச்சாள் குடும்பமும் இந்த நாட்டை விட்டு வெளியேறும் வரை அங்குதான் வாழ்ந்து வந்தனர். நான்கு தலைமுறைகள் நலமாக வாழ்ந்த அந்த நாற்சார் வீட்டிற்கு ஒரு வரலாறு உள்ளதை இந்த ஊரில் இன்று அறிந்தவர் சிலரே.
தம்பியண்ணை கனடாவில் நின்ற காலத்தில் எனக்கு எழுதும் கடிதங்களில் ஒன்றில் கூட அந்த வீட்டின் பெருமை யை உணர்த்தி அதனை விசாரிக்கத் தவறியதில்லை.
“செல்லம் எங்கட வீடு எங்கட பேரன் பேர்த்தி, அம்மா ஐயா, நாங்கள் எங்கட பொடி பெட்டை எல்லாம் சீவிச்சு ஒடியாடித் திரிஞ்ச இடம். எங்கட பேரப்பிள்ளையஞம் அந்த முற்றத்திலே மிதிக்க வேணுமெடா. எங்களைப்போல விளை யாட வேணுமடா கவனிச்சுக் கொண்டு இரு. ஒரு காலம் வரும்தானே. அவங்கள் எழும்பின உடனேயே வீட்டை பழைய மாதிரி ஆக்கிப் போடவேணும்." அந்த வீட்டைப் பற்றி தம்பியண்ணை எழுதும் வரிகளில் என் மனதில் நீரில் வீழ்ந்த குருணிக் கல்லாய் புதைந்து நிலைத்துள்ள வரிகளிவை,
தொலையும் பொக்கிஷங்கள் 5 1வதிரி இ.இராஜேஸ்கண்ணன்

Page 13
தம்பியண்ணை இப்படியெல்லாம் எழுதும் வேளை களில் என்னுடைய மனத்தினடியிலே ஆழப் புதைந்த அந்த நாட்களின் நினைவுகள் வந்து போகும்.
வழமைக்கு மாறாக வடக்கு நோக்கி அமைந்த முகப்பினை கொண்ட நாற்சார் வீடு. முகப்பு முற்றத்தில் இரண்டு அந்தலைகளிலும் இரண்டு பெரிய காய்த்துத் தள்ளும் பலா மரங்கள். இவற்றிடையே அம்பலவி, கறுத்தக் கொழும்பான் மாமரங்கள் இரண்டு. முகப்புவாயிலின் இரு புறமும் அளந்து வைக்கப்பட்ட பூஞ்செடிகளும் சாடிகளும், சுற்றிவரக் கழுத்துயர மதிற்கவர். பிரதான வெளிவாயிலில் இருந்து முகப்புவரை பொழியப்பட்ட சலவைக் கற்கள் கொண்டு ஆக்கப்பட்ட நடை பாதை என்பவற்றோடு கூடிய அந்த வீட்டின் அழகு வார்த்தைகளில் வசப்படாதவை.
அந்த வீடு தான் இப்போது எழில் குலைந்து சுடுகாடு போல கிடக்கிறது. நிலை கதவுகள் இடிக்கப்பட்டு, மரங்கள் தறிக்கப்பட்டு, கிடங்குகள் தோண்டப்பட்டு, முள் வளையங் கள் போடப்பட்டு, நெருஞ்சி முள் அப்பி.
அந்த வீடு இருக்கும் காணி அந்தக் காலத்தில் ஒரு பெரிய கட்டாந்தரையாக இருந்ததாம். அதிலிருந்த மூன்று பனைகள் மாத்திரம் தான் அந்த நிலத்திற்கும் உயிர்ப்பு இருந்ததை உணர்த்தி நின்றன. ஒரு முக்கோணத்தின் மூன்று புள்ளிகளாய் நின்ற அந்தப் பனைகள் தான் அந்தக் காணி யிலே வாழ்ந்த எங்கள் பேரன் பேர்த்தியின் குடிசையைக் கோபுரமாக்கிய சூட்சுமங்கள்.
வருடாவருடம் பாத்திபோட்டு வரும் பனங்கிழங்கு, ஒடியல், புழுக்கொடியல், ஊமல், பனாட்டு, கங்கு மட்டை விற்ற சேமிப்பில் உருவானது தான் அந்த வீடு என்பதை இன்று யாருமே நம்பிவிடப் போவதில்லை என்றாலும் உண்மை.
வதிரி இ.இராஜேஸ்கண்ணன்/தொலையும் பொக்கிஷங்கள் 8

“என்ன நீங்கள் உந்தப் பெரிய வீட்டைக் கட்டிப்போட்டு நடுக்காணியில் பனையளை விட்டிருக்கிறியள். மழை காத்துக்கு வீட்டுக்கு மேல சாஞ்சுதேயெண்டால்..?” என்று வீடு கட்டிய வேளையில் நரி முருகேசு வாத்தியார் அப்பு வைக் கேட்ட வேளையில்,
“எனக்கு மேல விழுந்து உயிர்போனாலும் பறவா யில்லை. அதுகள் தங்கபாட்டிலை நிக்கட்டும்.”
என்று உறுதிபடக் கூறிய பதில் இன்றும் என் செவி களில் நிறைந்துள்ளது.
நானும் தம்பியண்ணையும் சிறுவர்களாக இருந்த காலத்தில் மாமாவைக்கொண்டு இரண்டு பனைகளுக்கு குறுக்காக மரங்கட்டி ஊஞ்சல் கட்டுவித்து ஆடிய நினைவு கள் எம் மனதில் பசுமையாக உள்ளன. நாங்கள் அடிச்சுத் தொட்டு விளையாடும் போதிலெல்லாம் அந்த மூன்று பனைகளையும் சுற்றி ஆளையாள் துரத்திக்கொண்டு ஓடுவது விறுவிறுப்பைத் தந்தது.
மூன்று பனைகளும் காய்த்துக் குலுங்கும் காலத்தில் வீடு களை கட்டும். அப்பிளுக்கு அவுஸ்திரேலியா என்றால் பனம்பழத்துக்கு யாழ்ப்பாணம்.
நாங்கள் ஓரளவு பருவமறிந்த சிறுவர்களாக இருந்த காலத்தில் பனாட்டு பிணைவது அப்புவின் வீட்டில் ஒரு சடங்காகவே நடைபெறும். பனம்பழங்களை பவ்வியமாகச் சேர்த்து வைத்து பெரிய அண்டா போன்ற பாத்திரத்தில் ஆளும் பேருமாகச் சேர்ந்து 'பினாட்டு பிணைவதில்’ ஒவ்வொரு தடவையும் ஒவ்வொரு உயிர்ப்பு ஆச்சி தன்னுடைய பனையிலேயே சார்வோலை வெட்டுவித்து 'பெரும்பனை ஓலைப் பினாட்டுப் பாய் இழைப்பாள். பிணைந்த பனங்களியை பனாட்டுப் பாயிலே தடிப்பாக
தொலையும் பொக்கிஷங்கள் 7 வதிரி இ.இராஜேஸ்கண்ணன்

Page 14
வார்த்து வெயிலிலே காய வைத்து கண்டோஸ்’ போன்ற துண்டுகளாய் வெட்டி, மண்பானையில் 'கருப்பணி பாணி காய்ச்சி வார்த்து அரிசிப்பொரியோடு பனாட்டுத் துண்டு களைப் போட்டு, பல நாட்கள் ஊறவிட்டு பனாட்டு காடி’ போட்டு வைப்பார்கள். பாகிலே தோய்ந்த அந்தப் பனாட்டுத் துண்டுகளை வாயிலே போட்டு ரொபியாக உலிந்த காலம் - இப்போது யாரிதைச் செய்கிறார்கள்?.
பனாட்டு பிழிவதற்கு சேகரித்த பனம் பழங்களில் மிக உயர்ந்த தரமானவற்றைக் தெரிந்து கல்லடுப்பு மூட்டி, அடுப்பு வாயில் பனம் பழத்தை வைத்து தோல் கருகும் வரை எரித்து, சுட்ட பின்னர் மூன்று மூன்றாக 'கொட்டை களை பிரித்து வைத்து, தோலுரித்து பழப் புளியை களியாக கரைத்து பனம் பழத்தில் வார்த்து, கைகளினால் தும்பையும், களியையும் அழுத்தி பெரு விரலையும் ஆட் காட்டி விரலையும் வளையமாக ஒன்று சேர்த்து பிசைந்த பனங்களி, வளையமான விரலிடுக்கு வழியே பொங்கிவர வாயை வைத்து அந்தக் களியை உறிஞ்சிக் குடிப்பதில் உள்ள சுகம். 'சொத்தலிக் கொட்டையை தேர்ந்தெடுத்து முழுதாக வாயிலே தள்ளி பபிள்கம் சப்புவது போல நாள் முழுக்க வாய் குதப்பித் திரிந்த சுகம்.
பாத்தி கிண்டி படையல் வைத்தல், நெட்டி வெட்டி சீர் செய்து கிழங்கு அவித்தல், மொட்டு வெட்டி பூரான் தின்னுதல், புழுக்கொடியல் காய விட்டு காவல் காத்தல் - இந்த சுகங்களையெல்லாம் வாழ்க்கையாக தந்தவை அந்த மூன்று பனை மரங்களும்தான். வாழ்வில் ஒவ்வொரு கணங் களும் கூடி வாழ்தல், கொடுத்து உண்ணுதல் போன்றவற்றின் வாளிப்புகள் - வசீகரங்களைத் - தந்தவை இவை. இவை எல்லாம் மனக்கடலின் அடியிலிருந்து மிதப்பெடுக்கும் போது, இப்போதைய எங்கள் வாழ்வுகள் அர்த்தங்கள் பொய்த்து அந்தரிப்பது போன்ற ஓர் உணர்வு.
வதிரி இ.இராஜேஸ்கண்ணன் தொலையும் பொக்கிஷங்கள் 8

இந்தச் சுகங்களை எல்லாம் ஹாழ்க்கையாகத் தந்தவை அந்த மூன்று பனைமரங்களும் தான்.
"அடே அப்பு அவை, எங்களுக்கு மும்மூர்த்திகளும் இந்த மூண்டு பனையளுந்தானடா.” என்று எங்கள் பேரன் அப்பு’ அடிக்கடி சொல்வது இன்றும் நினைவிடை நிறைந்துள்ளது.
தம்பியண்ணை வாழ்வே தொலைந்து விட்டதாக உணர்வது என் இதயத்து துடிப்போடு சேர்ந்து அதிரும் இழப்பின் உணர்வுகளை விட மேலானது என்பதை அறிந்தும் என்னால் அவரை ஆறுதல் படுத்த முடியவில்லை.
"அண்ணை என்னண்ணை எங்களுக்கு மட்டுமே. எல்லாருக்கும் இஞ்சை உப்பிடி ஒவ்வொரு ஏக்கம்தான் வாழ்க்கையாகிப் போய்க் கிடக்குது. நேற்று நீங்கள் வீட்டைப் பார்க்கப் போகப் போறன் எண்டு சொல்லையுக்கையே சொல்ல வேணுமெண்டு தான் நினைச்சன் ஆனால்.”
“என்னடா பேக்கதை கதைக்கிறாய். கடிதத்திலை ஒரு சொல்லு எழுதியிருக்க கூடாதே. உதைப் பாக்கவே சந்தோஷமா ஓடி வந்தனான். மெய்யே சொல்லு."
அண்ணையின் எதிர்பார்ப்புகள் பொய்த்த மன உணர்வுகள் வெப்பிசாரமாக வெளிப்பட்டது.
"அண்ணை அவங்கள் அதுக்குள்ளை இருக்க நாங்கள் என்னண்ணை செய்யிறது. அறுவாங்கள் பங்கர் போடத் தானண்ணை தறிச்சிருப்பாங்கள்”
என் இதயம் உடைப்பெடுத்தது. என்னால் தம்பி யண்ணையைத் தேற்ற முடியாததை உணர்த்திற்று.
"நாசமாய் போவாங்கள் என்ரை வீட்டை அம்மணமாக் கியிருக்கிறாங்கள் பறவாயில்லை கட்டியாதல் போடலாம்.
தொலையும் பொக்கிஷங்கள் 9 வதிரி இ.இராஜேஸ்கண்ணன்

Page 15
அந்த மூண்டையும் அப்பு எவ்வளவு பக்குவமா வளர்த்து பொக்கிசமா எங்களுக்கு விட்டிட்டுப் போனவர். அதை எப்பிடி இனி.”
அண்ணையின் வார்த்தைகள் தொண்டைக் குழியோடு சிறைப்பட்டன. சற்று நேர மெளனத்தை குலைத்துக் கொண்டு எழுந்தார்.
“செல்லம். எங்கையாதல் நல்ல பனங்கொட்டை பார்க்கப் போறன் என்ரை விசா முடிஞ்சாலும் பறவாயில்லை எத்தினை மாசமெண்டாலும் சரி இந்த வளவு முழுக்க விதைக்கப் போறன்"
உறுதியோடு கூறிக்கொண்டு எழுந்து தகிக்கும் வெயிலில் இறங்கி நடந்தார். அவருக்காக வைத்திருந்த ‘தேசிக்காய் தண்ணி அப்படியே கிடந்தது.
- ஞானம்ஒக்டோபர் - 2002
வதிரி இ. இராஜேஸ்கண்ணன் தொலையும் பொக்கிஷங்கள் 10

贛
Y剂
í
: i
NV4
A
f
ka 2 //苓磁Y
S S. 2 娅八
リライ李会賞*
இருபத்தெட்டு வயது தாண்டியும் இதுவரை நான் யாழ்ப் பாணத்துக்கு வெளியே எதற்கும் போய் வந்தது கிடையாது. நவாஸுக்கும் என்னோட்டை வயது தான். பதினேழு வயதில் யாழ்ப்பாணத்தை விட்டுப் போனவன் இப்போது தான் திரும்பி வந்துள்ளான்.
நவாஸ் இப்போது பெரிய மனிதன் போல ஆகி விட்டான். வாட்ட சாட்டமான உடம்பு. கணுக்கால் தெரிய உயர்த்திக் கட்டப்பட்ட 'சாரம், நீண்ட பிஜாமா நஷனல்,
தொலையும் பொக்கிஷங்கள் 11 1வதிரி இ.இராஜேஸ்கண்ணன்

Page 16
மெல்லியதாக வளர்த்து சீர் செய்யப்பட்ட தாடி தலையில் குல்லா'
நானும், கணேஷ"ம், அவனும் பாடசாலை நாட்களில் செய்த விளையாட்டுக்கள், குறும்புகள். குழப்படிகள் எல்லாம் மனத்திரையில் விரிந்து மறைந்தன. மூவரும் சேர்ந்து பள்ளிக் கூடம் கட்’ அடித்து விட்டு பாசமலர்' பார்க்கப் போனது, பாத்திமா அன்ரியின் பின் வளவில் மாலைப்பட்ட நேரம் செவ்விளநீர் குலையிறக்கியது. சுப்பர் கடை சுடு சுடு தோசைக்காக காத்துக் கிடந்து சாப்பிட்டு விட்டு காசு கொடுக் காமல் ஓடி வீட்டில் அடி வாங்கியது. நல்லூரில் 'காவோலை அப்பம்' களவெடுத்தது என்று பழைய நினைவுகள் பல அவனைக் கண்டதும் அருக்கூட்டியது.
எனினும் எனக்கும் நவாஸைப் போலவே மனம் சஞ்சலித்துக் கொண்டிருந்தது. வைத்தியசாலைக்குப் போய் வந்ததில் இருந்து நவாஸ் பேயறைந்தவன் போல விறைத் துப் போயிருந்தான். நவாஸுக்கு இதயத்தை வரட்டியெடுத்த ஒரு அனுபவம் என்பதை நான் நன்றாக உணர்ந்த போதிலும் அவனுக்கு ஆறுதல் சொல்லும் பக்குவம் இல்லாது மெளன மாக இருந்தேன்.
“நவாஸ். எழும்பு. குளிச்சிட்டு சாப்பிடலாம். உப்பிடியே யோசிச்சுக் கொண்டே இருந்தால் என்ன மாதிரி உதுமட்டுமே உப்பிடி, எத்தினை நடந்திட்டுது. தாங்கிக் கொள்ளுறது கஸ்ரம் தான். என்ன செய்யிறது. எல்லாம் எங்கட கையிலேயே இருக்கு.?”
6 yy
வை. என்னடா மனிஷன்ர வாழ்க்கை. சற்று நேரம் எதுவித அதிர்வும் இல்லாதவன், "எல்லாம் வெறுத்திருச்சு. "வை” கணபதி அங்கிளிட
குடும்பத்துக்கு அப்படி நடந்திரிக்கு. அந்த மனுஷன் எப்படி
வதிரி இ. இராஜேஸ்கண்ணன்! தொலையும் பொக்கிஷங்கள் 12

பட்டவரு. எந்தப் பெரிய மனுஷன். எப்ப பார்த்தாலும் கோயில், சாமி, பூஜைன்னுகிட்டிருக்க மனுஷனை அல்லாஹ்' கை விட்டுட்டார். பாவம் நளா' அவடை வாழ்க்கை நாசமாயிடிச்சு."
என்று கூறியவாறு என்னை நிமிர்ந்து பார்த்த நவாஸின் கண்கள் கலங்கியிருந்தன. அவன் சுதாகரித்துக் கொண்டான்.
ść
606........ நான் என்னெல்லா நனச்சிட்டு வந்தே. இப்போ எல்லா உடைஞ்சிடிச்சு. நாம அனுபவிச்சிட்ட நஷ்டத்திலும் இங்கை மிச்சம் கூட நினைக்கும் போது மண்டை புளந்திடுதும் போலரிக்கு."
"வை. ஏண்ட வாப்பா மெளத்தாகும் முன்னால கணபதி அங்கிளப் பார்த்துப் பேசித் தான் போவெண்டாரு வாப்பா மொதலாலியாவுறத்துக்கு கணபதி அங்கிள் தான் காரணம் தெரியுமா..? அந்த நல்ல மனிசன்டை குடும்பம் நாசமாயிடிச்சுது."
நன்றி கலந்து உள்ளத்து உணர்வு குழைந்து வரும் நவாஸின் வார்த்தைகள் என் மனதை வருடின.
சாவகச்சேரிதான் மாமாவின் சொந்த இடம். தற்காலிக மாக யாழ்ப்பாணத்தில் வியாபாரத்துக்காக நகரத்தோடு அண்டி ஒரு வாடகை வீட்டில் குடும்பமாக இருந்தார். மாமாவின் வீட்டு மாடிப் பகுதி முழுவதும் ஹனிபா அங்கிளின் குடும்பத்தின் வீடு, கீழ்ப்பகுதி மாமாவின் பாவனையில் இருந்தது. ஹனிபா அங்கிள் குடும்பம் அங்கிருந்து வெளிக்கிடும் வரை ஏறத்தாழ பதினைந்து வருடங்கள் ஒன்றாகவே வாழ்ந்திருந்த குடும்பங்கள்.
என்னுடைய வீடு அவனுடைய வீட்டுக்கு அருகில் தான் இப்போதும் இருக்கிறது. நானும் கணபதிப்பிள்ளை மாமாவின் மூத்த மகன் கணேஷம், நவாஸும் ஒரே
தொலையும் பொக்கிஷங்கள் 13 ! வதிரி இ. இராஜேஸ்கண்ணன்

Page 17
பாடசாலையில் ஒரே வகுப்பில் தான் படித்தோம். சிறு வயதில் ஒன்றாக விளையாடி, பாடசாலை சென்று வந்து பதினேழு வயதில் பிரிந்து மீண்டும் இப்போது தான் நவாஸை கண்டு கொண்டேன்.
இதற்கிடையில் வாழ்வில் எத்தனை மாற்றங்கள். எத்தனையிழப்புக்கள்.
“நவா. உன்ரை அப்பாவுக்கு என்ன வருத்தமா? ஏன் செத்தார்? அம்மா. தங்கச்சி எப்படி இருக்கினம்? தங்கச்சி கலியாணம் முடிச்சிட்டாவா..? பிள்ளைகள் ஏதும்.?”
நவாஸை திசை திருப்புவதற்காகவே வார்த்தைகளைத் திசை திருப்ப முயன்றேன்.
"வாப்பாவுக்கு பிளட்-பிறஷர். ஹாட் அற்ராக்கிலை மெளத்தாகிட்டாரு. உம்மா சுகர்’ வியாதி மிச்சம் கூடி ‘பெட்டிலை இருந்து மெளத்தாகி நாலு மாசமாச்சு. தங்கச்சிக்கு ஒரு ஆம்பிளைப் புள்ளே சுகமாயிருக்காங்க. நா வாப்பாடை பிஸினசை பார்த்துக் கிட்டிருக்கேன். என்னதான் 'சல்லி இருந்து வசதியோட இருந்தாலும் மனம் பிற்' இல்லே. ஒரே கவலைதான். கணேஷஉடை மட்டும்தா அறிஞ்சே என்னால் தாங்க முடியாம போயிடிச்சு. புறவு கணபதி அங்கிளோடை தொடர்பில்லாமல் போயிடிச்சு. நமக்கு இங்கே நடந்தது ஒண்ணும் தெரியாம போயிடிச்சு”
நவாஸின் குடும்பம் வெளியேறிய பின்னர் ஒரு வருடம் தான் கணேஷ் என்னுடன் கூடிப் பாடசாலைக்கு வந்தான். ஹெலியிலிருந்து சுடப்பட்ட வேட்டு கணேஷின் தாயின் உயிரைக் காவு கொண்ட பின்னரெல்லாம் அவன் என்னை "காய் வெட்டத்” தொடங்கி எங்கெல்லாமோ போய் வந்தான். ஒரு நாள் எங்களோடு படித்த ஒருவனிடம் தனது சங்கிலி மோதிரம் எல்லாம் கழற்றிக் கொடுத்தனுப்பிவிட்டுப்
வதிரி இ.இராஜேஸ்கண்ணன்/தொலையும் பொக்கிஷங்கள் 14

போனவன் தான், ஆனையிறவுச் சண்டையில் வித்தானவர் களில் அவனும் ஒருவன் என்று அறிந்தோம்.
அடுத்தடுத்து மனைவியையும் மகனையும் இழந்து விட்ட கணபதிப்பிள்ளை மாமா மனம் ஒடிந்து போனார். மகள் நளாயினிக்காக அவளது மூச்சில் இவர் உயிர் வாழ்ந்தார். யாழ் நகரில் இருந்த புடவைக்கடையை யாருக்கோ விற்று விட்டுத் தனது சொந்த இடமான சாவகச்சேரியிலிருந்த கடையைப் பார்த்துக் கொண்டு அங்கேயே தங்கிவிட்டார்.
“ஏண்டா. வை. நளாவுக்கு ஒரு கலியாணம் முடிச்சிருக்க ஏலாதா கணபதி அங்கிளாலை, ஏங் கண்டும் காணாம இருந்தாரு.? இப்ப பாரு அவள் அனாதயா வுட்டுட்டு.”
“கணபதி அங்கிள் நமக்குச் செஞ்ச உதவிக்கு நாம அவங்களுக்கு ஒண்ணும் செய்ய முடியாமப் போச்சு. வாப்பா அடிக்கடி சொல்லுவாரு நளாடை கலியாணம் நம்மட செலவில தான் நடத்தனுண்ணு. ஆனா.”
நவாஸின் கண்கள் பனித்தன. அவனது வார்த்தைகள் வறுமைப்பட்டு மடிந்தன. உயிர் உருகி கண்வழிக்கரைந்தது.
சிறுவயதிலிருந்தே நளாயினி என்ற அவளது பெயரை நாங்களெல்லாம் நளா’ என்று தான் சுருக்கி அழைப்பது வழமை. நவாஸை நவா’ என்றும், வைகுந்தன் என்ற எனது பெயரை வை' என்றும் அழைப்பது தான் வழமை. கணேஷ் ஒருவனைத்தான் முழுதாகப் பெயர் சொல்லும் வழக்கம் இருந்தது. கணேஷ் வித்தாகி வீழும் போது தான் அவனது பெயர் தமிழழகன்' என்று மாற்றம் பெற்றிருந்தது.
சிறு வயதில் நவாஸை யாராவது,
தொலையும் பொக்கிஷங்கள் 15 வதிரி இ.இராஜேஸ்கண்ணன்

Page 18
"உனக்கு எத்தனை தம்பி தங்கச்சி.?” என்று கேட்டால்,
"தம்பி இல்லே. தங்கச்சி ரண்ணு. ஒண்ணு நளாயினி மற்றது தஸ்லிமா." என்று அவன் பதில் சொல்வது எனக்கு நன்றாக ஞாபகம் இருக்கின்றது.
இறுதியாக பன்னிரண்டு வயதில் பார்த்த நளாவை ஒரு கலியாண வயது நங்கையாகக் காண வேண்டிய பொழுதில் மன நேயாளியாகப் பார்க்கும் போது நவாஸின் மனம் என்ன பாடுபட்டிருக்கும்.
"வை. கணபதி அங்கிளோட சாவச்சேரி வூடு நளாவுக் கின்னே கட்டினது. அந்த வீடும் நளாவோட வாழ்க்கை மாதிரியே சிரஞ்சிருச்சு. மாமரம், தென்னை மரம் எல்லாம் எரிஞ்சு கெடக்கு, வை. வாப்பா மெளத்தாவுறத்துக்கு முதனாள் "ஹொஸ்பிட்டல்லை' என்ன கேட்டாரு தெரியுமா? கணபதி அங்கிளிடை வீட்டு கறுப்புக் கொழும்பு மாம்பழம் சாப்பிடணும் போலரிக்குண்ணு தான். ச்சே எல்லாம் போச்சு."
நெஞ்சு வலியில் படுத்தவர் தான் மாமா உயிரடங்கிப் போன பின் நளா தன்னைத் தனக்குள் ஒழித்துக் கொண்டாள்.
“நவா. நளாவை எப்படி யெல்லாமோ அறிவுரைகள், ஆறுதல்கள் சொல்லி தேற்றப் பாடுபட்டேன். ஆனால் அவள் மனசை விட்டிட்டாள். தாய். தமயன், தகப்பன், வீடு வாசல், கடை எல்லாம் இழந்த நளாவுக்கு ஆறுதல் சொல்ல எப்படி முடியும். அவள் நல்லா யோசிச்சுப் போட்டாள். அவளுக் கென்று இருந்த உறவுகள் அவளைப் பாதுகாக்க முடியாத நிலையில் தான் "ஹொஸ்பிட்டலுக்கு அனுப்பி வைச்சவை. என்ன செய்யிறது வேற வழியில்லை. அவளை அப்பிடியே விட்டிருந்தால் தெருத் தெருவாக அலையிற அளவுக்கு வந்திருப்பா. பிறகு அது எங்களுக்குத் தானே மனக் கஸ்ரம் அது தான்.”
வதிரி இ.இராஜேஸ்கண்ணன்! தொலையும் பொக்கிஷங்கள் 15

என்று நான் சொல்லி முடிக்கவும்,
"வை. நல்லவங்களை ஆண்டவன் ஒரே சோதிச்சுக் கிட்டுத் தானிருக்கான். நம்மட வாப்பா பழைய கோட் வியாபாரம் தான் பண்ணினாங்க. அவரை தன்னோடை புகையிலை பிஸினசிலை சேத்து ரெளண்ல' அலுமினியக் கடை ஒண்ணு போட உதவி பண்ணி மொதலாளியாக்கி விட்டவர். நம்மளை எழுப்பி திரத்தினப்போ என்ன பண்ணுறதுண்ணு தெரீலைண்ணு வாப்பா சொன்னப்போ "என்ரை தெமட்டகொட கடையை எடுத்து நடத்து. பிறகு எல்லாம் யோசிக்கலாம்.” எண்ணு சொன்னாரு. அவருக்கு என்னாலே ஒரு உதவி கூட செய்ய முடியாம ஆயிடிச்சு."
梦
என்று தன் கையில் கொண்டு வந்த பிறீவ் கேசை எடுத்து என் முன் திறந்து வைத்தான்.
விலையுயர்ந்த கலியாணக் கூறைப்பட்டு 'சாறிகள்' நான்கு, சங்கிலி, "நெக்கிளஸ், மார்புப் பதக்கம் என்று புதிய தங்க நகைகள்.
éé
நவா. ஆருக்கு இதெல்லாம்.?”
"எல்லாம். நளாடை கலியாணத்துக்கின்னு வாப்பா ஒண்ணொண்ணா வாங்கி வைச்சது. யாழ்ப்பாணம் திரும்பிறப்போ நளாட்டைக் கொடுக்கணுன்னு அடிக்கடி சொல்லும் அதுதான் கொண்டு வந்தென். ஆனா. நள."
நவாஸின் வார்த்தைகள் விம்மலுடன் புலம்பின. என்னையே சுதாகரித்து விட முடியாதிருந்தது. வார்த்தைகள் வரவில்லை. நானும் அவனும் மெளனத்துள் உறைந்து விட்டோம்
இடிஒக்டோபர் - 2002
தொலையும் பொக்கிஷங்கள் 171வதிரி இ.இராஜேஸ்கண்ணன்

Page 19
கிரிக்கெற் விளையாடுகின்ற ஸ்ரேடியம்' போன்ற ஒரு இடத்திலே "மேகத்தின் 'உச்சாரத்தில் இருந்து ஒரு பிளேன் தலை குத்தென இறங்கி வந்தது. நடு ஸ்ரேடியத்தில் ஒரு பனையளவு உயரத்திலிருந்து படிகளின் வழியாக பல "கிரிக்கெட்' வீரர்கள் - சச்சினைப் போலவும், ஜெய சூர்யா போலவும் பலர் இறங்கி வருகிறார்கள். கடைசியாக அப்பா. ஆ. அப்பாதான் பெரிய ஒரு சூட்கேசும்’ கிரிக்கெட் பற்றும் கொண்டு இறங்கி வருகிறார்.
வதிரி இ.இராஜேஸ்கண்ர்ணன்/தொலையும் பொக்கிஷங்கள் 18
 

அம்மாவோடு கிறிக்கட் பார்க்க வந்த நான் கையைப் பறித்துக் கொண்டு பாய்ந்தடித்து அப்பாவிடம் ஒடுகிறேன். “டேய். புடியடா. புடியடா..” என்றவாறு என்னை துரத்திக் கொண்டு ரம்யன் ஆமிக்காரன் போல உடுப்பு போட்டுக் கொண்டு ஓடி வருகிறான். அவனால் என்னை பிடிக்க முடியவில்லை. குனிந்து கல்லொன்றை எடுத்து எறிகின்றான். கல்லு அப்பாவின் தலையிலே பட்டு இரத்தம் குயீர்’ என பாய்ந்து அப்பா தொப்' என்று கீழே விழுகிறார். ஐயோ. அப்பாவைச் சுத்தி ரம்யனைப் போல் உடுப்புப் போட்ட பலர் வந்து நிக்கினம். சச்சின் போலை ஆமி, ஜெயசூர்யா வைப் போல ஆமி. அப்பாவுக்கு பக்கத்திலை பெரிய கிடங்கை வெட்டினம் தாழ்க்கப் போயினம் எண்டு சொல்லினம்.”
துடித்து விழித்தான் சஞ்சீவன். அவனுக்கு உட லெல்லாம் வியர்த்துக் கொட்டியது. மேல் மூச்சு, கீழ் மூச்சு வாங்கியது. அதிகாலைப் பாதித் தூக்கத்தில் வெடியோசை கேட்டு எழுந்தவன் போல படபடத்தான். அவனது மனம் நிலைகொள்ளாமல் உருக்குலைந்தது. "ஐயோ...' என்று அழுது விடலாமோ? என்று தோன்றியது. படுக்கையில் தன் முதுகின் கீழாக பல்லாயிரம் புழுக்கள் நெளிவது போன்ற உணர்வு கண்களை இறுக மூடிக் கொள்கிறான் முடியவில்லை. எழுந்து உட்கார்ந்தான். தன்னை நிதானித்துக் கொண்டு மீண்டும் மெதுவாக படுக்கையிலே சாய்ந்து சுவரிலே மாட்டப்பட்டிருந்த படத்தினை அண்ணாந்து பார்த் துக் கொண்டிருந்தான். அவன் கண்கள் உடைப்பெடுத்தன. உயிர் கரைந்து கண்களின் வழியே ஊத்துண்டது.
"அப்பா. எனக்கு பயமாகக் கிடக்குது. நீங்கள் வர மாட்டியளே?. அம்மாவும் நித்திரை. அம்மாவைக் கூட எனக்குப் பிடிக்கேல்லை. அம்மா பொய்தான் சொல்லுறா போலை கிடக்கு அம்மா என்னிலை சரியான பாசம் தான். ஆனால் எனக்கு பொய்தானே சொல்லுறா. நீங்கள் எனக்கு
தொலையும் பொக்கிஷங்கள் 19 வதிரி இ.இராஜேஸ்கண்ணன்

Page 20
கிரிக்கெட் பற்", "போல்’ எல்லாம் வாங்கி வருவியளாம். அம்மா சொல்லுறது உண்மையே அப்பா."
சஞ்சீவனின் மனம் அப்பாவோடு அழுதழுதே கதைத்துக் கொண்டது. கண் வழியே வழிந்த கண்ணிர் காதோரம் தலையணை வரை நனைத்துக் கொண்டிருந்தது.
"அப்பா. நீங்கள் எப்ப வருவியள். எல்லோரும் வெளிநாட்டாலை வருகினம். நீங்களும் வரலாம் தானே. ரம்மியன்ரை அப்பாவும் வந்திட்டார். பிரவீனாவின்ரை அப்பாவும் வாற கிழமை வாறாராம். நீங்களும் வரலாம் தானே. வரேக்கை எனக்கு நிறையச் சமான்கள் வாங்கி வருவியள் தானே. இல்லாட்டி ரம்மியன் சொன்ன மாதிரி. உங்களை?."
சஞ்சீவனுக்கு மனம் துடியாய் துடித்தது. கண்களை இறுக மூடிக் கொண்டான். ரம்யன் சொன்ன வார்த்தைகள் அவனை வரட்டி எடுத்தன. விரிய முனைந்த எண்ணங்களை மனத்தினுள் இறுகப் பூட்டிக் கொள்ள முனைந்தான் முடிய வில்லை. கண்களை விழித்து அப்பாவையே பார்த்துக் கொண்டிருக்க வேண்டும் போல ஒரு வித உந்தல்.
படமாகிச் சுவரில் தொங்கிய அப்பா அங்கிருந்த 'நைற் பல்ப்" கசிவிக்கும் மெல்லிய ஒளியிலும் அவனைப்பார்த்து சிரிப்பது தெரிகின்றது. அப்பா. நான் கனவுகண்டு பயப்பிடுகிறதை பார்த்து சிரிக்கிறார் போலை' தனக்குத் தானே சொல்லிக் கொண்டான்.
"சஞ்சி. என்னப்பா பயந்திட்டீங்களா?. கனவு தானே பயப்பிடக் கூடாது இஞ்சை பாருங்கோ. அப்பா இருக்கிறன் பயப்பிடக் கூடாது என்ன?.”
தன்னைப் பார்த்து அப்பா சொல்லுவதைப் போல ஒருபிரமை. ரம்மியன்ரை அப்பாவும் இப்படித்தானே
வதிரி இ.இராஜேஸ்கண்ணன்/தொலையும் பொக்கிஷங்கள் 20

வாங்கோ போங்கோ. எண்டு ரம்மியனோடை கதைக்கிறவர். என்ரை அப்பாவும் அப்படித்தான் கதைக்கிறார்.”
"சஞ்சி. உனக்கு தெரியுமா. எங்கடை அப்பா என்னை ஒரு நாளும் டேய் எண்டு கூப்பிடுறதே இல்லை. அம்மா என்னை டேய் எண்டு கூப்பிட்டாலும் அப்பாவுக்குப் பிடிக்காது. உடனேயே அம்மாவை ஏசுவார். தெரியுமா கோபம் வந்தால் கூட தம்பி ரம்யா' எண்டு தான் கூப்பிடு வார்.’
y
என்று ரம்யன் தன்னுடைய அப்பாவைப் பற்றிக் கூறிய வார்த்தைகளிலுள்ள இனிமையை மனத்தினால் குடித்தது போலவும், அப்பா தன்னுடன் கதைப்பதைப் போலவும் உணர்ந்தான் சஞ்சீவன்.
மின்குமிழ் உமிழ்ந்து கொண்டிருந்த சந்தனம் குழைத்த ஒளி அப்பாவின் முகத்தில் பட்டு பிரகாசித்தது. அப்பாவின் முகத்தின் சாந்தமும் தீட்சண்யமும் உள்ளுணர்வை நிறைத்தது. இப்போது கனவின் ஏக்கம் கரைந்து வடிந்தது. “டேய் சஞ்சி. என்ரை அப்பா நல்ல வடிவடா. அப்பான்ரை சொத்தையிலை தடவினா. பஞ்சுமாதிரி. நான் அப்பாவின்ரை மடியிலை ஏறி நிண்டு கொண்டு அவற்றை சொத்தையிலை 'உம்பா' கொஞ்சுவன். அப்பாவுக்கு அது பிடிக்கும். ரம்யா. அப்பாவுக்கு உம்பா தாறிங்களா?. எண்டு சில நேரம் அவரே கேட்பார்.”
என்று ரம்யன் சொன்ன வார்த்தைகள் அவனது மனத்தை உரசின.
என்ரை அப்பாவும் நல்ல வடிவுதானே. ரம்யன்ரை அப்பாவை விட என்ரை அப்பாதான் வடிவு. அப்பாவின் முகம் எந்தநேரமும் சிரிச்சபடிதான். அப்பாவின்ரை மீசை நல்ல வடிவான மீசை தொட்டுப் பார்க்க வேணும் போல
தொலையும் பொக்கிஷங்கள் 21 வதிரி இ. இராஜேஸ்கண்ணன்

Page 21
ஆசையா இருக்கும். ரம்யன்ரை அப்பாவுக்கு சாடையா மொட்டை விழுந்திட்டுது என்ர அப்பாவின்ரை தலைமயிர் அந்த மாதிரி”
அப்பாவின் அழகை பிறேமினுள் சிறைப்பிடித்த புகைப்படத்தில் அனுபவித்துக் கொண்டிருந்தான் சஞ்சீவன். கறுப்பு வெள்ளை புகைப்படம் அப்பாவின் நெற்றியிலே அம்மா ஒரு நாள் விரதமிருந்த வேளை அப்பாவை வணங்கி இட்டு வைத்த பொட்டு நல்ல வடிவான ஒரு மாலை போட்டு அப்பா எடுப்பான தோற்றத்தோடு இருந்தார்.
அப்பா கறுப்போ வெள்ளையோ? வளத்தியோ கட்டையோ? தெரியாது. அம்மா ஏன் அப்பாவைக் கும்பிடு கிறா? ஏன் பொட்டு வைச்சா? செத்தவயின்ரை படத்துக்குத் தானே பொட்டு, மாலை எல்லாம் போடுறது எண்டு நேசரியிலை ரீச்சர் ஒரு நாள் சொன்னவ, அப்ப அப்பா?. சீச்சி கடவுளின்ரை படத்துக்கும் பொட்டு மாலை எல்லாம் போடுறவைதானே.
அம்மாவுக்கும், எனக்கும் அப்பா கடவுள் மாதிரித் தானே. அது தான் அம்மா அப்பாவை பொட்டு வைச்சு மாலை போட்டு கும்பிட்டிருப்பா போலை. அல்லாட்டில் ரம்மியன் சொன்னது போல அப்பா..?
“எங்கடை பக்கத்து வீட்டு வினோதனின்ரை அப்பா வேறை இடத்துக்குப் வேலைக்குப் போட்டு வாறவர் தானே. அவர் அவனுக்கு சின்னக் கதைப் புத்தகமெல்லாம் வாங்கி யந்து குடுக்கிறவர். நல்ல நல்ல உடுப்புக்களெல்லாம் எடுத்து வந்து குடுப்பார். அவனை தன்ரை சயிக்கில்லை ஏத்திக் கொண்டு திரிகிறவர். அவனுக்கு இரவிலை படிப்பிச்சு கொடுக்கிறவர். சில நேரங்களில் சாப்பாடு கூட தீத்திறதை நான் ஆசைப்பட்டு பார்க்கிறனான். என்ரை அப்பாவும் வெளி நாட்டாலை வந்து என்னை மடியிலை இருத்தி கதை
வதிரி இ.இராஜேஸ்கண்ணன் தொலையும் பொக்கிஷங்கள் 22

சொல்லித் தருவாராம். சாப்பாடு தீத்தி விடுவாராம். வினோதனின்ரை அப்பா அவனை கோயிலுக்கு கூட்டிக் கொண்டு போறதைப் போலை என்ரை அப்பாவும் என்னை கூட்டிக் கொண்டு போவாராம். இப்படியெல்லாம் சொல்லி அம்மா ஏமாத்திப் போட்டா போலை”
அவனது மனம் மீண்டும் முகாரித்தது. படிப்படியாக பொழுதும் புலரத் தொடங்கியது. நேற்று ரம்யன் சொன்ன அந்தச் சுமையான வார்த்தைகளின் பழு இந்தக் கனவின் பின்னர் அப்பாவின் படத்தை பாக்கப் பாக்க சுவாசத்துளை
வழியே இறங்கியது.
அம்மாவை எழுப்பி கேட்டு விடலாம்' என்று எண்ணிய வாறு தாயை தட்டி எழுப்பினான்.
அழுத விழிகளின் அர்த்தங்கள் தன் மனதில் கேள்விக் குறியாகி நிற்க தாய் துடித்துப் போனாள்.
“என்னப்பா சஞ்சி. என்ன ராசா என்னத்துக்கு அழு கிறியள் சொல்லுங்கோ. ஏன்னப்பு கனவுகினவு கண்டு பயந்திட்டியளே?. ஏன் அம்மாவை எழுப்பவில்லை. உப்பிடி அழுது கிடக்கு. என்னப்பு.”
நம்பிக்கைகளின் சிதைவால் அவனது நெஞ்சை பிளந்து பீறிவரும் வார்த்தைகள் தொண்டைக் குழியோடு வலுவிழந்து விடவே பச்சாத்தாபத்துடன் தாயின் முகத்தைப் பார்த்தான். இதயத்தைப் பிழிந்து ரத்தத் துளிகள் கண்ணிராய் பனித்துக் கொட்டின. தாய் அந்தரித்தாள்.
"அம்மா என்ரை அப்பா எங்கையம்மா?. செத்துப் போனாரே?.”
தாய் இடிந்து போனாள். மெளனியானாள். "அம்மா நான் அப்பா எங்கை எண்டு கேட்ட
நேரமெல்லாம் அப்பா வருவார் எண்டு பொய் சொல்லி
தொலையும் பொக்கிஷங்கள் 23 1வதிரி இ.இராஜேஸ்கண்ணன்

Page 22
போட்டியள் என்னை ஏமாத்திப் போட்டியள் என்ன?. அம்மா என்ரை அப்பா வெளிநாட்டில் இல்லையாம். செத்துப் போனாராம்?.”
உயிர் உருக அழுத அவனை கட்டுப்படுத்த முடியாத தாயின் கண்களும் உடைப்பெடுத்தன.
"அம்மா. அப்பா பயணத்தாலை வருவார். அவரோடை நாங்கள் கோயிலுக்குப் போவம். அப்பா வந்து சயந்தனின்ரை தேப்பன் அவனுக்கு மடியிலை இருத்தி சாப்பாடு தீத்திவிடுகிற மாதிரி எனக்கும் தீத்திவிடுவார் எண்டு சொன்னியள். வினோதரன்ரை அப்பா அவனுக்கு கதை சொல்லுற மாதிரியும், புத்தகம் படிப்பிச்சுக் குடுக்கிற மாதிரியும் எங்கடை அப்பாவும் சொல்லித் தருவார் எண்டியள். அப்பா வரேக்கை எனக்குச் சின்னச் சின்ன விளையாட்டுச் சாமான்கள், பற், போல், எல்லாம் வாங்கி யருவாரெண்டியள். எல்லாம் பொய் தான்.”
"அழாதை ராசா. அப்பா வருவார்”
வார்த்தையாக வருவதற்கு அவளிடம் இதைத்தவிர வேறொன்றும் இல்லை.
“பார்த்தியளே அம்மா. பேந்தும் பொய்தானே சொல்லுறியள். என்ரை அப்பா செத்துப் போனாராம். எல்லாரும் கதைக்கினம். ரம்மியன் சொன்னவன். என்னை ரம்மியன் தன்ரை வீட்டை கூட்டிக் கொண்டு போனவன். அவன்ரை அப்பா வெளிநாட்டாலை இப்பதான் வந்தவர். என்னை ஆற்ரை மோன் எண்டு கேட்டவர். நான் அப்பான்ரை பேரைச் சொன்னன். பிறகு நேற்றுப் பள்ளிக்கூடத்தில் வைத்து ரம்யன் சொன்னவன் அவன்ரை அம்மா அவன்ரை அப்பாவுக்கு சொன்னவவாம் என்ரை அப்பாவை சுட்டுப் போட்டு எங்கையோ ஒரு வெளியிலை தாட்டுப் போட்டின
OO.
வதிரி இ.இராஜேஸ்கண்ணன்! தொலையும் பொக்கிஷங்கள் 24

அவனுக்கு வார்த்தைகள் வர மறுத்தன. அழுகை பொத்துக் கொண்டு வந்தது. *
“எனக்கு கதை சொல்லித் தர அப்பா இல்லை. எனக்கு பாட்டுச் சொல்லித்தர அப்பா இல்லை. பள்ளிக்கூடத்துக்குச் சைக்கில்லை கொண்டு போகவும் அப்பா இல்லை. கோயிலுக்குக் கொண்டு போகவும் அப்பா இல்லை. அப்பா செத்துப்போனாராம்.”
வீரிட்டு அழத் தொடங்கினான் சஞ்சீவன். தாய் அவனை வாரியணைத்துக் கொண்டு தானும் அழுதாள். இந்த ஆறு வருடங்களும் பொய்யாகி விட்டதனை எண்ணிப் புலம்பினாள். அவனை இனியும் ஏமாற்ற முடியாததை உணர்ந்தாள். கணவனின் படத்தை அண்ணார்ந்து பார்த்தாள். அவளது கண்ணீர் பொலபொலவென சஞ்சீவனின் தலையை நனைத்தது. சஞ்சீவன் நிமிர்ந்து பார்த்தான். அம்மா அழு கிறாள்.
அழுகை பற்றி அவன் அறிந்த காலத்திலிருந்து அம்மா அழுததை காணாதவன் அவன். தன் பிஞ்சுக் கரங்களால் அம்மாவின் கண்களை துடைத்து விட்டான்.
-தாமரைசெப்டம்பர் -2004
தொலையும் பொக்கிஷங்கள் 25 /வதிரி இ.இராஜேஸ்கண்ணன்

Page 23
தொற்றாத உணர்வு
ஒரு நிறைமாதக் கர்ப்பிணியை போன்று நெல்லியடிச் சந்தியில் இருந்து அந்த 'மினிபஸ் புறப்பட்டது. "சீற்றுகள்' நிறைந்து நடுவிலே காற்று நுழையாதவாறு அடுக்கப்பட்ட சனக் கிழங்குகள். ட்றைவருக்கு ஓடிப் போக மனமில்லை. மெதுவாக உருண்டது 'மினிபஸ்' நெல்லியடி நகரைத் தாண்ட முன் இன்னும் யாராவது வருவர் ஏற்றி விடலாம் என்ற எண்ணம்.
அப்போது தான் நெல்லியடியில் ஏற்றிய சைக்கிள்கள், சாமான்களை மேலே கரியரில் சரியாக அடுக்கிக் கட்டிவிட்டு
வதிரி இ.இராஜேஸ்கண்ணன்/தொலையும் பொக்கிஷங்கள் 26
 

கொண்டக்ரர்" பொடியன் மிதிபலகைக்கு குரங்கினைப் போலத் தாவினான்.
"அண்ணை புட்போட்டிலை ஒருதரும் நிக்கேலாது, மேலை ஏறுங்கோ. பொலிஸ் நிக்கிறாங்கள். 'பைன் கட்ட வேண்டி வரும். ஏறுங்கோ. உள்ளுக்கை போங்கோ.”
மிதிபலகையில் நின்று பயணம் செய்த இரு இளைஞர் கள் அவனை முறைத்தபடி உள்ளே ஏறி நின்றனர். பொடியன்’ மிதிபலகையில் வாயிலுக்குக் குறுக்காக கைகளைப் பிடித்தபடி நின்றான்.
நெல்லியடி 'பெற்றோல் செட் கழியவும் "ட்றவைர் அண்ணை பாட்டுப் போடுங்கோவன்” அந்த இளைஞர்களில் ஒருவன் தான் கேட்டான்.
"சமரசம். உலாவும். இடமே.” சீர்காழி கோவிந்த ராசனின் குரல் மினிபஸ்ஸின் கூரை வழியே வழிந்தது.
“உதென்னண்ணை பாட்டுப் போடச் சொன்னால் ஏதோ ஒண்டை. உதை விட்டிட்டு நல்ல பாட்டாப் போடுங்கோ.” மற்றவன் உரத்த குரலில் நளினம் கலந்து சொன்னான். இப்போதெல்லாம் பழையவற்றை மதிக்கும் பண்பு நலிந்து விட்டது. பழையது என்றால் ஏதோ பழிப்புக்கு இடமானது என்பது போல இந்த இளைஞர்கள் நடந்து கொள்கிறார்கள் என்று எண்ணத் தூண்டியது.
“தம்பி. ட்ரைவர் தம்பி அது பாடட்டும் விடுங்கோ. உவங்கள் பொடியளுக்கு ரசனை தெரிஞ்சாலெல்லோ. எட பொடியள் சீர்காழியின்ரை பாட்டை போட்டால்.”
பெரியவர் முடிப்பதற்கு முன்னரே அவர்களில் ஒருவன்,
தொலையும் பொக்கிஷங்கள் 27 1வதிரி இ.இராஜேஸ்கண்ணன்

Page 24
"அண்ணை இந்தாங்கோ நல்ல புதிய பாட்டுக் கசற் போடுங்கோ. ஐயாவும் கேக்கட்டும்”
தன்னுடைய தோள்பையினுள் இருந்து எடுத்துக் கொடுக்கிறான். பையினுள் ஒரு சில கொப்பிகளும் புத்தகங் களும் இருந்தன. இந்த இளைஞர்கள் பல்கலைக்கழகம் அல்லது தொழில்நுட்பக் கல்லூரி மாணவர்களாத்தான் இருக்கலாம்,' என்று என்னுள் எண்ணிக் கொள்கிறேன்.
சீர்காழி மெளனமாகிவிட்டார். அந்தப் பெரியவருக்கு "ட்ரைவர் மீது வெறுப்பு வந்திருக்க வேண்டும். முகத்தை சுழித்துக் கொண்டார்.
"சும்மா சும்மா சும்மா."
இளைஞர்கள் கொடுத்த ஒலி நாடா குரலெடுத்துப் பாடியது. 'கொண்டக்ரர் பொடியன் இளைஞர்களுக்குப் பெரியவரைக் கண்களால் காட்டிச் சிமிட்டிச் சிரித்தான். பாட்டு வரிகளைத் தன் தொண்டைக்குழியோடு முணு முணுத்தவாறே மினிபஸ் கதவில் தாளம் போட்டான்.
“என்ன பாட்டுகள். சும்மா. சும்மா எண்டு எல்லாமே சும்மாவாகத்தான் உலகத்திலை போகப்போகுது. பொடி பெட்டை எல்லாம் சும்மா திரியிறதெண்டாலும் ஓம் தான்.”
பெரியவர் கொச்சையாகவே பேசினார். இளைஞர் களும் கொண்டக்டர் பொடியனும் குலுங்கிச் சிரித்தார்கள்.
ட்ரைவர் நடுத்தர வயது மதிக்கத்தக்க ஒருவர். கிட்டத் தட்ட எனது வயதுதான் இருக்கும். இந்தக் கதைகளைக் கேட்டு மெளனமாகச் சிரிப்பது கண்ணாடியில் விம்பமாய்த் தெரிந்தது.
பாட்டின் வேகமும், இசையின் உரப்பும் நெரிசலின் உஷ்ணத்தோடு குமைந்து வர மூத்த விநாயகர் கோயிலடி,
வதிரி இ.இராஜேஸ்கண்ணன் தொலையும் பொக்கிஷங்கள் 28

குஞ்சர் கடை, ஆலடி என இறங்குபவர்களே இல்லை ஏறுபவர்கள் தான். அடையப்பட வெயிலின் உஷ்ணமும் உயர்ந்து வர சேட் முதுகோடு ஒட்டி நசநசத்தது, வல்லை வெளி தாண்டும் முன்னரே பயணம் வெறுப்புத் தட்டியது. வல்லைவெளியில் ஒருமுறை எல்லோரும் இறங்கி ஏறினால் நல்லாக இருக்கும் என்று மனம் சொன்னது. இப்போது "செக் பொயின்றில் இறங்குவதில்லை. புரிந்துணர்வு ஒப்பந்தம் வந்தபின்னர் சோதனைச் சாவடியும், சோதிப்பவர்களும் இருந்தனரே ஒழிய, சோதனை இருப்ப தில்லை. யாரைச் சோதிப்பது.? எதைச் சோதிப்பது.?
நான் யாழ்ப்பாணம் செல்வதானால் தனியார் பஸ்" களில் பயணிப்பது குறைவு. பருவகால சீட்டு இருப்பதால் அரசாங்க பஸ்களில் தான் பயணம் செய்வது வழக்கம். இன்று இடையில் முத்திரைச் சந்தையில் இறங்கி அரியாலை வரை போக வேண்டும். அதற்காக சைக்கிள் கொண்டு வர வேண்டியதால் தனியார் பஸ்ஸில் ஏற வேண்டிய தாயிற்று.
அடையப்பட்ட சனங்களின் சுவாசம் அந்த 'மினி பஸ்ஸினுள் சிறைப்பட்டு, ‘என்ஜின் ஊதிவிடும் வெக்கை யோடு குமைந்து, வியர்வை குழைந்த உடல் நாற்றத்தோடு சேர்ந்து வயிற்றைக் குமட்டிக் கொண்டு வருவது போல இருந்தது.
ஆவரங்கால் சந்தி தரிப்பிடத்தில் 'மினிபஸ்’ நின்றது. அந்த இடத்திலும் இறங்குவதற்கு யாருமில்லை. ஒரு நடுத்தர வயதுப் பெண் ஒரு அறுபத்தைந்து எழுபது வயது மதிக்கத்தக்க மூதாட்டி இரண்டு பேரும் பஸ்ஸினுள் புதைக்கப்பட்டனர்.
"அக்கா கொஞ்சம் உள்ளை போங்கோ, பின்னாலை இடமிருக்கு அண்ணை உந்தக் கரையா நில்லுங்கோ, ஆச்சி
தொலையும் பொக்கிஷங்கள் 29 1வதிரி இ.இராஜேஸ்கண்ணன்

Page 25
இந்த இடையிலை வாங்கோ.” பொடியன் வெளியமைத்துக் கொள்ளும் முயற்சியில் இறங்கினான்.
அவனது கடினம்ான முயற்சியால் எங்கிருந்து வந்ததோ தெரியாது, இரண்டு மூன்று பேரை ஏற்றக்கூடிய ஒரு இடைவெளி உருவானது. அதே வேளை என் முன்னால் நின்ற ஒருவரால் நான் சப்பளிக்கப்பட்டேன்.
அந்த மூதாட்டி ஏன் அவசரப்பட்டு இதற்குள் ஏறினாள்? இதற்கு பின்னரும் எத்தனை பஸ்கள் வரப்போகின்றன. அவள் அந்தரித்தாள். மேலே இருக்கும் கைபிடிக்கும் கம்பி அவள் பிடிக்கு எட்டவில்லை. ஒரு சீற்றோடு ஒட்டிக் கொன்டாள்.
மினிபஸ்ஸின் குலுக்கலுக்குப் பயந்து மூதாட்டி இரண்டு கைகளாலும் அணைத்தபடி நின்ற சீற்றில் ஒரு முப்பது வயது மதிக்கத்தக்க பெண்பிள்ளை அதுவரை இல்லாது அப்போது தான் உண்டான கரிசனையோடு தன் கையிலிருந்த புத்தகமொன்றை விரித்து எழுத்தெண்ணத் தொடங்கினாள்.
"ஆச்சி. என்னெணை பல்லி மாதிரி சீற்றோடை ஒட்டிக்கொண்டு கிடக்கிறாய்.”
பாட்டுக் கேட்டுக் கொண்ட இளைஞர்களில் ஒருவன் தான் கேட்டான். ۔۔۔ ۔۔۔ محمحت
"ஒமெடி அப்பு" மூதாட்டி அவனது கேள்வியில் கரவு காணாமலேயே பதில் சொன்னாள்.
“என்னத்துக்கெணை உந்த வயசிலை உப்பிடித் திரியிறியள். அந்த நேரத்திலை சுழட்டிக்கொண்டு திரிஞ்சது. சும்மா வீட்டிலை இருக்கேலாதாம் - ஆச்சிக்கு."
இந்த இளைஞன் நையாண்டியாகப் பேசினான்.
வதிரி இ.இராஜேஸ்கண்ணன் தொலையும் பொக்கிஷங்கள் 30

"ஆச்சி ராஜா தியேட்டரிலை 'பாபா பார்க்கப் போறா போலை.”
மற்றவனும் மூதாட்டியோடு செல்லம் பொழிந்தான்.
“என்னடா சொல்லுறியள். உங்கடை கோத்தைமாரை யும் ஒரு காலத்திலை உப்படித்தான் கேப்பங்கள். மனிசர் இந்தக் கோதாரி வசுவுக்கை நிக்க முடியாமல் அந்தரிக்கிறம் அவைக்கு ஒரு நக்கல். உது தானே படிக்கிறியள்.”
மூதாட்டிக்கு மூக்கு நுனியில் கோபம் வந்தது. பொரிந்து தள்ளினாள் இளைஞர்கள் இருவரும் முகங்களை மறைத்துக் கொண்டு நசுங்கி நழுவினர்.
"ஆச்சி ஏனெணை கத்துகிறாய். சும்மா கத்தினியே என்டால் இதிலை இறக்கிப் போட்டுப் போடுவன். எங்கை போறாய் நீ சொல்லு.?”
என்றவாறே கொண்டக்ரர்’ பொடியன் காசுக்கு மூதாட்டியிடம் கையை நீட்டினான். சேலைத் தொங்கலிலே முடிந்து வைத்த ஒரு ஐந்து ரூபா குத்தியும், ஒரு இரண்டு ரூபா குத்தியும் - பவ்வியமாக அவிழ்த்தெடுத்து ஏழு ரூபாவை நீட்டினாள், மிகவும் சிரமப்பட்டு.
“கோப்பாய் தபால் கந்தோரிலை இறக்கி விடடா அப்பு"
“ணேய். இன்னும் ஒறுவா தா. எட்டுறுவா’ கொண்டக்ரர் தான்.
“எடே பொடியா. உன்னாணை ஒரு சதமும் இல்லை யடா. உதுதான் கிடக்கு. பிச்சைச் சம்பளம் எடுக்கத்தான் போறன். எடுத்துக் கொண்டு வரேக்கை உன்ரை வசுவிலை ஏறினால் தாறன். இப்ப உதை வைச்சிரடாப்பு. என்ரை அப்பு எண்ணுவன் என்னை கந்தோரடியிலை இறக்கி விடு
தொலையும் பொக்கிஷங்கள் 31 வதிரி இ.இராஜேஸ்கண்ணன்

Page 26
நான் பிறகு நடக்கவும் மாட்டன். இடத்தைப் பார்த்துப் பிடிக்கவும் மாட்டேன்."
மூதாட்டி வாஞ்சையோடு பொடியனை வேண்டினாள். அவனும் 'ஓம்' எனத் தலை அசைத்தான்.
பீஏஎம்ஏ ஆதரவற்ற வயோதிபர்களுக்கு அரசாங்கம் கொடுக்கும் மானியம். அதைத்தான் பிச்சைச் சம்பளம் என்றாள் மூதாட்டி அந்தச் சிறிய தொகை பணத்துக்குத் தான் இவ்வளவு சிரமப்பட்டு பயணம் செய்கிறாள் என்பதை எண்ணும் போது உணர்வு தொற்றி உயிர் எரிந்தது.
"ஆச்சி பிச்சைச் சம்பளம் ஏன் உன்ரை ஊர் போஸ்ட் ஓபீஸிலை எடுக்கேலாதே. ஏன் இவ்வளவு தூரம் அலை யிறாய்”
யாரோ ஒருவர் அவளிடம் நான் கேட்க நினைத்ததைக் கேட்கிறார். காதுகளை கூர்மையாக்கிக் கொண்டேன்.
"தம்பி. முந்தி கோப்பாயிலை தானப்பு இருந்தனான். இப்ப ஆவரங்காலிலை என்ரை மூத்தவளோடை இருக்கிறன். உதை மாத்தித் தரச் சொல்லிக் கேட்டும் ஒருதரும் மாத்தித் தராதுகளாம். என்ன செய்வம்..?”
இந்த நாட்டிலை மானியத்தைக் கூட மனிதர் வருந்தித் தான் பெறவேண்டும் என்ற நியதி - பாவம்.
நீர்வேலிச் சந்தியில் ட்ரைவரின் ஆசனத்துக்கு அருகிலே இருந்த ஒருவர் எழுந்தார்.
"ட்ரைவர்' என்னைப்பார்த்து, "அண்ணை இதிலை இருக்கலாம், இருங்கோ. நெல்லியடியிலை இருந்தே நிண்டு கொண்டு வாறியள். வாங்கோ.”
பொதுவாகச் சாரதியோடு அண்டிய இருக்கைகள் ஆண்களையே தாங்கி வைத்திருப்பதைக் காணலாம். நான்
வதிரி இ.இராஜேஸ்கண்ணன்/தொலையும் பொக்கிஷங்கள் 32

ஆசுவசமாக அமர்ந்து கொள்கிறேன். எனக்கு அருகிலே இடப்புறமாக இருந்தவர் ஏற்கனவே எனக்கு அறிமுக மானவர்.
"தம்பி. என்ன யாழ்ப்பாணமோ..?” என்று தொடங்கி யவர், புரிந்துணர்வு ஒப்பந்தம், பேச்சுவார்த்தை, தேர்தல், நாடாளுமன்றத் கலைப்பு, சந்திரிக்காவின் கைப்பை, தென்னிலங்கை வியாபாரிகளின் நகர பேமன்ற் வியாபாரம், வர்த்தகக் கண்காட்சி என்று ஒன்றும் விடாமல் பேசிக் கொண்டிருந்தார். எல்லாம் பத்திரிகைச் செய்திகளாய் பார்த் தவை தான். என்றாலும் நீர்வேலி தொடக்கம் இருபாலை வரை சென்ற தூரமே தெரியவில்லை. அவ்வளவு இதமாகப் பேசிக்கொண்டே வந்தார்.
"உதுதானே எங்கடை சனங்களுக்கு இவளவு அழிவு கள் - உலகத்திலை. அவர் செய்யிறதையும் செய்து போட்டு நியாயம் கதைக்கிறார்.”
மினிபஸ் இருபாலையில் தரித்துப் புறப்பட்ட வேளை அதன் பின்புறத்திலிருந்து வந்த ஒரு பெண்ணின் கோபா வேசக் குரல் கேட்டுத் திரும்பினோம்.
“என்னடா பொடியா. என்ன பிரச்சினை?” "ட்ரைவர்' தான் விசாரித்தார்.
“ஒண்டுமில்லை எடுங்கோ.” பதில் சொன்னான் பொடியன்.
“என்னடா தம்பி. ஒண்டுமில்லை எண்ணுகிறாய். நீ செய்தது சரியே. பாவம் அந்தக் கிழவி "போஸ்ட் ஒபீஸை" தேடி அலையவெல்லோ போகுது.”
அந்தப் பெண் அதட்டலாகவே சொன்னாள்.
தொலையும் பொக்கிஷங்கள் 33 வதிரி இ. இராஜேஸ்கண்ணன்

Page 27
"அதுக்கு நானென்ன செய்ய அவவெல்லோ இடத்தை கவனிச்சு இறங்க வேணும் ஆரார் எங்கை போயினமெண்டு எனக்குத் தெரியுமே..?”
'கொண்டக்ரர் பொடியன் அந்தப் பெண்ணின் நாவை அடக்க முனைந்தான்.
“என்னக்கா..? என்ன எனக்குச் சொல்லுங்கோ" - சாரதி சமாளிக்கும் தோரணையோடு கேட்டார்.
s
"அந்தக் கிழவி பாவம் கோப்பாய் போஸ்ட் ஒபீஸிலை இறக்கி விடு. நடக்கவும் மாட்டன் இடம் தேடிப் பிடிக்கவும் மாட்டன் எண்டு கேட்டுது. தாண்டி வந்தாப்போலை தம்பி என்ரை இடம் வந்திட்டுதே எண்டு கிழவி கேட்க, பொடியன் அந்த இடத்திலேயே இறக்கிப்போட்டு வாறான். கிட்டத்தட்ட ஒரு கட்டை தாண்டியிருக்கும். அது வழியிலை நிண்டு தடுமாறப் போகுது..?”
விலாவாரியாக விளக்கம் அளித்தாள் அந்தப் பெண். திரும்பிப் பார்த்தேன். ஆவரங்காலில் அந்த மூதாட்டி ஏறிய தரிப்பில் ஏறிவந்தவள் தான் அவள்.
"அக்கா கிழவி உன்ரை சொந்தமே..?”
ட்ரைவர் தான் கேட்டார்.
“என்ரை சொந்தமுமில்லை பந்தமுமில்லை. அதுக்காக உப்பிடியே.?”
“அவ்வளவு இரக்கமெண்டால் அதிலை இறங்கி கிழவிக்கு வழி காட்டாதயன், ஏன் கத்துறாய்?” ட்ரைவர் தான் சொன்னார்.
நான் கால் வலிக்க நின்றதை பார்த்து ஆசனம் தந்த அதே ட்ரைவர் தான். இருக்கை என்னை உறுத்தியது.
வதிரி இ.இராஜேஸ்கண்ணன்! தொலையும் பொக்கிஷங்கள் 34

ட்ரைவரின் சினந் தோய்ந்த முகம் முன்னிருந்த கண்ணாடி
யில் மீண்டும் விம்பமானது.
அவள் மெளனியானாள். என் மனதில் ஏதோ ஒன்று
ஈயக் குண்டாய் இறங்கிக் கனத்தது. இப்படியுமா..?
மினிபஸ் சங்கிலியன் சிலை ஒரம் தரித்தது. என்னு டைய சைக்கிள் இறக்கப்பட்ட வேகத்தை பார்க்கும் போது 'கொண்டக்ரர் பொடியன் நியாயம் கேட்ட அந்தப் பெண்மீது கொண்ட கோபத்தின் 'பொரிவு தெரிந்தது.
மனதில் ஒருவித அமுக்கமும் உறுத்தியது. இங்கிருந்து இருபாலை மூன்று கட்டைகள் தான் இருக்கும் அந்த மூதாட்டி ஏழு ரூபா கொடுத்து மீதி ஒரு ரூபாவுக்குக் கடன் சொன்ன சம்பவம் இதயத்தை அறைந்தது.
அரியாலை செல்ல வந்த நான் திரும்பி இருபாலை நோக்கி சைக்கிள் வலிக்கத் தொடங்கினேன்.
- ஞானம் -
G3ld 2003
தொலையும் பொக்கிஷங்கள் 35 வதிரி இ.இராஜேஸ்கண்ணன்

Page 28
குதறப்படும் இரவுகள்
இரவு என்பது ஒரு அற்புதமான உற்பவிப்பின் ரகசியம். ஊழியும் இருள் கவிந்ததுதான். மனிதன் உயிராகும் கரு வறை இருண்டது. கடவுள் உறையும் கருவறையும் கூட இருள் கவிந்ததுதான். கதைகளில் கூறப்படும் அரக்கர்கள் இருள் நிறத்தினர். இரணியன், மகிடாசுரன், மாபலி என்று நீளும் பட்டியல் மட்டுமல்ல இராமன், கிருஷ்ணன் போன்ற ரகூர்கர்களும் இருண்டவர்களே. இராட்சதர்கள் மட்டுமல்ல ரகூழ்சகர்களிலும் இருள் நிறத்தினர் அதிகம் பேர்.
வதிரி இ.இராஜேஸ்கண்ணன் தொலையும் பொக்கிஷங்கள் 36
 

இரவுகள் இனிமையான அற்புதங்கள் என்றால் அவை என்னை ஆதர்சயப்படுத்துவன.
இரவுகளைப் பாடாத கவிஞர்கள் இல்லை. நிலவு வழியும் இரவுகள் கற்பனைகளாய் நீளும். அம்புலி மாமா வா. அம்மா வெளியே வா அம்மா. என்றெல்லாம் இரவுகள் பாடவைத்தன.
வெண் மணல் பரப்பிய முற்றத்தில் சால்வைத் துண்டை விரித்தபடி அப்பா பள்ளி கொள்வார். அவரின் வயிற்றோடு நாரி சாத்தி அம்மா சோறு குழைத்த பாத்திரத்துடன். மணலில் கால்கள் புதைந்தபடி முன்னே நாங்கள் மூன்று பேரும். பூவரசம் இலையில் சிறிய சிறிய கவளங்களை அம்மா பிடித்து வைப்பாள். கவளங்களின் மேலே முள் அகற்றிய சிறு துண்டு தீயல் மீன், சில சமயம் நெருப்பில் வாட்டிய திரியாப் பாரைக் கருவாட்டுத் துண்டு நிலவு இல்லாவிட்டால் கண்ணாடி லாம்பு வெளிச்சம்.
நானும் தங்கச்சியும் பாட்டுக்குப் பாட்டு. அப்பா நடுவர் - அப்துல் ஹமீத் போல. சில சமயம் அம்மாவும் அப்பாவும் பாட்டுக்குப் பாட்டு நாங்கள் நடுவர்கள். விடுகதைகள் கூறி அவிழ்த்தலும்.
சுட்டிபுரம் கண்ணகை அம்மன் கோயிலில் சீர்காழியின் கச்சேரி கால் நடையாய் இரவைக் கிழித்து வயல் வரம்புகள் தரவைகள் தாண்டி கச்சேரிக்கு வல்வெட்டித்துறையின் இந்திரவிழா ஓர் இரவில். அகிற் புகை வாசம் கமகமக்க பித்துக்குளி முருகதாஸின் கச்சேரிக்காக கூடிய ஓர் இரவு
அந்த இரவுகள் அர்த்தம் பொதிந்திருந்தன. காதுகளை அடைக்கும் இருளின் வாளிப்பினை சமயம் வாய்க்கும் போதிலெல்லாம் அனுபவிப்பதில் அளவில்லாத பற்று எனக்கு. அந்தகாரம் கிழித்து வரும் பூச்சிகளின்
தொலையும் பொக்கிஷங்கள் 37 வதிரி இ.இராஜேஸ்கண்ணன்

Page 29
ரகசியங்களை ஒட்டுக் கேட்டு அனுபவிப்பதில் அலாதி சுகம். தென்னங் குருத்துகளைத் துளைக்கும் வண்டின் கிறீச்சிடும் ரீங்காரம். பின்புறத்து களஞ்சிய அறையில் போடப்பட்டிருக்கும் தட்டுமுட்டுச் சாமான்களிடையே சந்ததி யின் நீட்சிக்காக சல்லாபிக்கும் தத்துவட்டியன்களின் கீதம் பிரசவிக்கக் காத்திருக்கும் சோடிக்கு நெல்மணி சேர்த்து முகட்டு வளையில் ஓடி வரும் எலியின் சிறு கால் ஒலி தூரத்தில் எங்கோ ஓரிடத்தில் சோடிநத்தின் முனகல், புத்தக அறையின் பழைய பத்திரிகைக் கட்டுக்களிடையே கரப்பான்களின் குசுகுசுப்பு வீட்டின் பின்புறத்தே ஆட்டடியில் அசை மீட்கும் தாயாட்டின் நெறுமலும், மடியில் வாய் புதைத்த குட்டியின் மிடறின் - வழி பால் இறங்கும் ஒலியும். அடை வைத்து பொரித்த குஞ்சுகளை தன் சிறகுப் போர்வையுள் விரித்துக் கொள்ளும் கோழியின் பாசப் பரிவின் ஒலி இருளைக் கிழித்து நீளும் என் காதுகளின் புலன் இவற்றைக் பிரித்துப் பிரித்து தனித்து ரசித்துக் கொள்ளும்.
மூலையிலே தணித்து வைக்கப்பட்டிருக்கும் கண்ணாடி லாம்பின் மங்கிய ஒளியில் அவளின் முகம் எண்ணெய்த் தாளின் ஒளிக்கசிவுடன் கலைந்த கேசம் கன்னங்கள் வழியே பரவிக் கிடக்கும். நெற்றியில் அன்று பகல் முழுவதும் பவ்வியமாக இடப்பட்டிருந்த மருண்’ நிற குங்குமம் வியர்வைத் துளிகளோடு கரைந்து நெற்றிப் புருவம் வரை கசிந்திருக்கும். கழுத்தைச் சூழ்ந்த சங்கு வளைய தசை மடிப்புக்களிடையே நெளிந்து கிடக்கும் கட்டைச் சங்கிலி கால்களை மடித்து நாரித் தண்டை வளைத்து மார்பின் மென்மையான உஷ்ணத்தை ஒன்றரை வயதாகின்ற என் செல்லத்தின் கன்னங்களில் சுகம் தர வைத்துப் படுத்துக் கொண்டிருப்ப்ாள். ஆழ்ந்த உறக்கம்.
வதிரி இ. இராஜேஸ்கண்ணன் தொலையும் பொக்கிஷங்கள் 38

பாவம் அவள். பகல் முழுவதும் சக்கரத்தை கால்
களிலே கட்டியபடி சுழன்றடிப்பாள். அதிகாலையில் நான்கரை மணிக்காக அலாரம் வைத்து விட்டு படுக்கைக்குப் போவாள். செல்லம் அருளுவதற்கு முன்னர் காலைச் சாப்பாட்டுக்கு உரியவற்றையும், மதியத்துக்கு இன்னொன் றையும் தயார் செய்து விட்டு எனக்குரிய பார்சலை” என் பையினுள் திணித்து விட்டு இரவு முழுவதும், முதனாளும் செல்லம் நனைத்துத் தள்ளிய துணிகளைப் பொறுக்கி எடுத்துக் கொண்டு சென்று மீளவும் மணி ஏழாகிவிடும். தன்னுடைய புத்தகப்பைகளை ஒழுங்குபடுத்தி பாடக் குறிப்புகள், அடையாள அட்டைகள், மோட்டார் சைக்கிள் பாஸ்" என்பவற்றைச் சரி பார்த்துக் கொள்ளவும் செல்லம் கண் விழிக்கவும் சரியாகவிருக்கும். மெல்லிய சுடுநீர் வைத்துச் செல்லத்தைத் துடைத்து 'பெளடர்' போட்டு பால் கொடுத்து தாய் வீட்டில் ஒப்படைத்துவிட்டு அவள் பள்ளிக் கூடம் புறப்படும்போது நான் அரைவாசித் தூரத்தைக் கடந்து பயணித்துக் கொண்டிருப்பேன்.
பாடசாலை முடிந்து வந்ததும் செல்லத்துக்கு பால் கொடுத்தல், குளிப்பாட்டுதல், காயப் போட்ட உடுப்புகளை எடுத்து வைத்தல், வீடு வாசல் கூட்டுதல், இரவுச் சாப்பாட்டுக் குத் தயார்ப்படுத்துதல், அதிகாலை சாப்பாடு தயாரிக்க ஆயத்தம் செய்து வைத்தல், அடுத்த நாள் பாடக் குறிப்பு களை ஆயத்தம் செய்தல், வேண்டும் போதெல்லாம் இரவில் செல்லத்துக்குப் பால் கொடுத்தல் என்று தொடரும் பம்பர வாழ்க்கை அவளுக்கு.
இவ்வளவு வேலைகளையும் வரித்துப் போட்டுச் செய்து கொண்டு தன் கபில நிற விழியால் என்னைப் பார்த்து புன்னகை செய்யவும் எப்படி முடிகிறது?.
அவளின் கன்னத்தில் சிதைந்திருந்த மயிர்களை ஒதுக்கி காதோரம் விட்டுக்கொண்டு மிருதுவாக அவளின்
தொலையும் பொக்கிஷங்கள் 39 வதிரி இ.இராஜேஸ்கண்ணன்

Page 30
நாரியை தடவிக் கொடுப்பேன். ஏதோ ஒன்றைத் தவற விட்டவளாய் திரும்பி என் மார்போரம் முகம் புதைப்பாள். அவளை நெஞ்சோடு அணைத்துக் கொள்வேன்.
இன்றும் அப்படித்தான். காதுகளை அடைக்கும் அந்த கார இருள்.
காலையில் பரபரப்புக்களிடையே அவளின் கண்களில் தெரிந்த ஏக்கம் என் மனதின் ஆழம் வரை கிறக்கம் தந்தது. மூன்று நாட்களின் பின் முதல் நாள் முழுகிய தலை. அருகில் அவள் நடக்கும் போது காற்றில் கலக்கும் வியர்வை வாசனை. பாதங்களின் மேலே உருளும் பாத சரத்தின் சின்னச் சிணுங்கல். “பின்னேரம் வரேக்கை ரீயோடை சாப்பிட ஏதேனும் வாங்கி வாங்கோ” என்ற வார்த்தைகளில் வெளிப்பட்ட நளினம். அன்றைய பகல் பல மடங்குகளாய் நீண்டு கழிந்தது எனக்கு.
இரவின் நிசப்தம் முற்றத்தில் நான் வளர்த்த மரங்கள் கூட மெளன பூதங்களாய் நின்றன. பயனற்றுத் தூங்கி வழியும் நிலா. பிள்ளையை அணைத்தபடி அவள். முதுகுப் புறம் நான். காலையில் பார்த்த பத்திரிகைச் செய்தி படிமமாய் மனதில் விடாப்பிடியாய்.
எங்கோ ஒரு திசையில் நாயொன்றின் ஊளை ஒலி வீழும் போது ஒலையைத் தட்டும் பனம்பழத்தின் ஒசையில் பதகளிக்கும் அணிலின் கூக்குரல். எங்கோ ஒரு தொலைவில் ஏதோ ஒரு இயந்திர உறுமல். காதுகளைக் கூர்மையாக்கிக் கொண்டேன். -
"முந்தநாள் இரவும் பரமநாதன் வீட்டிலை மரநாய் வந்து பேடு ஒண்டைக் கொண்டு போட்டுதாம். எங்கடை பக்கம் வலுத்த சாரையஞம் அடிக்கடி வந்து போகுதுகள். குஞ்சுகளும் கவனம். கீரியள் பெரிசா இரவிலை வராது.
வதிரி இ.இராஜேஸ்கண்ணன் தொலையும் பொக்கிஷங்கள் 40

எண்டாலும் சொல்லிக் கொண்டிே இரவிலை அடிக்கடி காதைக் குடுத்து சத்தஞ் சந்தடியை கேளுங்கோ” என்று பக்கத்து வீட்டு மாமி காலையில் கூறியது ஞாபகம் வந்தது.
வாங்கிவிட்டு ஒருவாரங்கூட ஆகாத விறாத்துக் குஞ்சுகள் நான்கும், ஏற்கனவே பொரிச்ச குஞ்சுகள் ஐந்தும் தனித்தனியான கூடுகளில் அடைக்கப்பட்டிருந்தன. 感
அவள் இன்னும் பூரணமாக நித்திரையாகி விட வில்லை. பிள்ளை மார்பை உறிஞ்சிக் கொண்டிருந்தது. அவளை ரசிக்கும் நிலையில் என் மனம் இல்லை. பத்திரிகைச் செய்தியின் கீழே போடப்பட்டிருந்த இறந்து கிடக்கும் அந்த பெண்ணின் புகைப்படம் மனத்திரையில் அப்பியபடி மனதெல்லாம் ஒருவித வெறுமை உணர்வு ஆட்கொண்டிருந்தது.
என்னுடைய செல்லத்தைப் போன்ற அந்தக் கோழிக் குஞ்சுகள் தாயின் இறக்கை அணைப்பில் இதமாகப் படுத்திருக்கும்.
பக்கத்து வீட்டு மாமி கூறியது மீண்டும். அவள் திரும்பிப் படுத்துக் கொண்டு என் மார்பில் தன் மூச்சுக் காற்றினால் ஸ்பரிசித்தாள்.
மனம் பத்திரிகைச் செய்தியையும், மாமியின் வார்த்தைகளையும் தவிர எதிலும் லயிக்கவில்லை. என் மனக்குழியில் ஆயிரம் புழுக்கள் நெளிந்து கொண்டிருந்தன. திடீரென வீட்டின் பின்புறம் கோழிக்கூட்டில் தான் கூக்குரல். குஞ்சுகள் பதகளித்துக் கீச்சிட்டன. விறாத்துக் குஞ்சுகள் செட்டைகளை அடித்துக் கீச்சிடும் சத்தம். இருளைக் கிழித்து வந்த அவலமான ஒலங்களாய்.
சூய். சூய். சூய்.” ஓடிச் சென்றேன்.
தொலையும் பொக்கிஷங்கள் 41 வதிரி இ.இராஜேஸ்கண்ணன்

Page 31
குஞ்சுகள் என் செல்லம் போன்ற குஞ்சுகள் பத களித்தன. தாய்க் கோழியைக் காணாது பரிதவித்தன. தாயின் சிறகுக் கணப்பு இழந்து அல்லோல கல்லோலப் பட்டன.
வீட்டுக் கோடிப்புற மூலையில் கூடு பிய்த்து இழுத்து வரப்பட்ட தாய்ப்பேடு குதறப்பட்டுக் கிடந்தது. இரத்தம் தோய்ந்த இறகுகளோடு.
"தம்பி உது மரநாய் அல்லது கீரியாகத் தான் இருக்கு மப்பு.’
சத்தம் கேட்டு எட்டிப் பார்த்த மாமியின் ஊகம் இது. மரநாய் எண்டால் என்ன?. கீரிதான் எண்டால் என்ன?. இந்தக் குஞ்சுகள்?. சடலமாக மீட்கப்பட்ட பெண் இரண்டு பிள்ளைகளின் தாய் ஆவார். பத்திரிகைச் செய்தி மீண்டும் என் மூளை அணுக்களில் விடாப்பிடியாய் சுவறுகின்றது.
அம்மாவின் கவளச் சோறு. காதை அடைக்கும் இருளில் பூச்சிகளின் ரகசியம். என்னவளின் பாதசரச் சிணுங்கல். எல்லாம் பொய் யாக இருள் என்னை அப்பிப் பிடித்துப் பிய்த்துத் தின்றது. என் செல்லத்தை அணைத்தபடி அவள். தலை மாட்டிலே அதிகாலை நான்கரைக்காக அலாரம் வைத்த மணிக்கூடு இயந்திர இயக்கத்துடன், அந்தகார இருள் மட்டும் அப்படியே.
- ஞானம் - uDmê 2OO8
செம்பியன் செல்வன் ஞாபகார்த்த 2" பரிசு
வதிரி இ.இராஜேஸ்கண்ணன் தொலையும் பொக்கிஷங்கள் 42

மானக்கேடு?
எங்கள் பாடசாலையின் ஒரு ஒதுக்கான இடம் அது. இடிந்து போய் கிடக்கும் அந்தக் கட்டடத்தின் பின்புறம் இருந்த புதர் மண்டிப்போன பழைய கழிப்பறையின் ஒரமாக ஒதுங்கி நின்று தன் உள்ளத்து ஏமாற்றங்கள் யாவும் கண்வழியே கொட்டித்தீர அழுது கொண்டிருக்கும் அவளை வேடிக்கை பார்க்க முனையும் மூன்றாம் வகுப்புப் பிள்ளை களை விரட்டிக் கொண்டிருக்கும் போதே,
"அவவுக்கு கடைசியிலை கொஞ்சம் லெவல் வந்திட்டுது ரீச்சர். அதுதான் கோட்டை விட்டிட்டா. அவ
தொலையும் லடாக்கிஷங்கள் 43 வதிரி இ.இராஜேஸ்கண்ணன்

Page 32
வகுப்பு ரீச்சரின்ரை செல்லமுந்தான் காரணம் எல்லாருஞ் சேர்ந்து அவளைக் கெட்டிக்காரி, கெட்டிக்காரி எண்டு சொல்லி.”
என்று மங்களம் ரீச்சர் தேவிகா ரீச்சருக்கு சொல்லி கொண்டு போவது எனது காதுகளில் மாத்திரம் தான் விழுந்திருக்க வேண்டும். அந்தப் பிள்ளையின் காதுகள் அதைக் கேட்டதாகத் தெரியவில்லை.
பிஞ்சு மனதின் சஞ்சலத்தை உணராத மங்களம் போன்ற எத்தனை பேர் இருக்கிறார்கள். முதலாம் வகுப்புப் பிள்ளை ஒன்று சூரிய உதயம் பற்றி பத்து வாக்கியங்கள் சொல்ல வில்லை என்பதற்காக அந்தப் பிள்ளைக்கு அடி போட்டு நீண்ட நேரம் முட்டி போட்டு இருக்க வைத்த அந்த மங்களம் ரீச்சருக்கு இந்தப் பிஞ்சுப் பிள்ளைகளின் உள்ளத்தை விளங்கிக் கொள்ள முடியுமா என்ன? நீண்ட விடுமுறைக்காகவும், சம்பளத்துக்காகவும் வந்தவள் அவள். கற்பூர வாசனை பற்றி கழுதைக்கென்ன?.
பாவனா, அந்த அழகிய பெயர் என்னை என்றும் ஆதர்சயப்படுத்தும். அவளுக்கு நான் வகுப்பாசிரியராக வந்து இரண்டு வருடங்களாகின்றது. ஐந்து தவணைகள் முழுவதாக என் ஆன்மாவில் லயித்துவிட்ட பிள்ளைகளில் அவள்தான் முதல் தரத்தில் இருப்பது போல ஒரு உணர்வு அவளைக் காணும் போதிலெல்லாம் பிள்ளைகளே இல்லாத் என்னுடைய நெஞ்சக்குளியை தாய்மை உணர்வொன்று நிறைத்துப் பிரவகிக்கும். அவர் கூட ஒரு நாள் காலையிலே,
"ஏனப்பா. உன்ரை வகுப்பிலை பாவனா எண்டு ஆரோ படிக்குது போலை, ராத்திரி ஏதோ கனவு கண்டு பாவனா கவனம். பாவனா கவனம். எண்டு வாய் புசத்தினனி.” என்று சொன்னார்.
வதிரி இ.இராஜேஸ்கண்ணன்! தொலையும் பொக்கிஷங்கள் 44

சில சமயங்களில் நான் தனிமையிலே ஓய்வாக இருக்கும் வேளைகளில் எனது வகுப்புப் பிள்ளைகளின் குறும்புத்தனத்தை மீள நினைத்து இன்புறுவதும் உண்டு. அவ்வேளைகளில் கூட அந்த இருபது பிள்ளைகளைக் கொண்ட வகுப்பில் முகிழ்ந்து மிதப்பது பாவனாவின் நினைவுகள் தான். உள்ளூர எனக்குள் இது ஒருவித சந்தோசத்தை தந்தாலும் நான் அன்பு காட்டுவதில் கூட பாரபட்சமாக நடந்து கொள்கின்றேனா என்ற ஒருவித ஏக்கமும் மனதில் எழுவதுண்டு என்னை நான் சுதாகரித்துக் கொள்வேன்.
இதுவரை இவர்களைப்போல ஆறு வகுப்புகள் என்னிடம் வந்து போயிருக்கின்றன. அந்தப் பிள்ளைகளோடு பழகிய நாட்களும் பசுமையானவைதான். எனினும் பாவனா வைப் போல வேறு யாரும் என் மனதின் ஆழம்வரை
வேர் இறக்கியதில்லை.
உறவாடும் உள்ளங்களில் உதட்டோடு முடிபவை சில. கண்களோடு கரைபவை பல உள்ளத்தோடு லயிப்பவை இன்னும் சில. இதயத்துள் இறங்குபவை ஒன்றுரண்டு தான். பாவனா அந்த ஒன்றுரண்டு என்ற வகைக்குள் எனக்குள்.
ஒவ்வொரு பிள்ளையும் ஒவ்வொரு விதத்தில் எம் மனதில் தம்மைப் பதிய வைத்து விடும். பாவனா எனக் குள்ளே நெருக்கமாக காரணமான சம்பவம் இன்றும் என் மனதில் பசுமையாக உள்ளது.
அவள் சென்ற வருடம் நவராத்திரி கால மனனப் போட்டியில் ஆத்திசூடி ஒப்புவிப்பதற்காக அவளின் சொற் சுத்தத்தைப் பரிசீலித்த போது மூச்சு விடாமால் பெரிய மனுசித் தோரணையுடன் முதல் முப்பது வரிகளையும், ஒப்புவித்த அழகு. ‘ஏற்பது இகழ்ச்சி என்பதை 'ஏற்பது நிகழ்ச்சி என்றும் 'ங்ப்போல் வளை' என்பதை ஞப்போல்
தொலையும் பொக்கிஷங்கள் 45 வதிரி இ.இராஜேஸ்கண்ணன்

Page 33
வளை’ என்றும் தவறாக உச்சரித்த அவளின் மழலையை திருத்த நான் படாதபாடு பட்ட பரிதாபத்தை பார்த்து,
"ரீச்சர். நான் வீட்டிலை வடிவாகச் சொல்லிப் பழகிப் போட்டியிலை சரியாகச் சொல்லி பரிசு வாங்குவன்.' என்று கூறிய வார்த்தைகளும் அதன் பின் பழகிப் போட்டியிலை கலந்து முதலாமிடம் பெற்று வந்து, ரீச்சர் எனக்கு முதல் பரிசு ஆத்திசூடி மனனத்தில் என்று கூறிச் சிரித்து சற்றுத் தாமதித்து "உனக்கு நாக்கு பிரளுதில்லை. நாக்கு வழிக்கிற தில்லை. நாளைக்கு நாக்கை வழிச்சிட்டு வா." என்று நான் அவளின் தவறுகளைத் திருத்திய போது கோபத்தின் உந்தலால் பேசிய வார்த்தைகளை என்னைப் போலவே பாவனை செய்து பேசிக் காட்டிச் சிரித்தபடி ஓடி மறைந்தாள்.
அந்தச் சம்பவம் என் மனதில் மிதந்து வரும் வேளை களில் நானும் பலமுறை வெள்ளையாகச் சிரித்துக் கொள்வேன். பிள்ளைகள் மாதிரி
பிள்ளைகளோடு உறவாடுவதில் உள்ள சுகம் அற்புதமானது. அவர்களின் கபடமற்ற உரையாடல்கள் வெள்ளைச் சிரிப்பு இதயம் நிறைக்கும் அன்பு அவை ஆத்மாவின் சுரங்கள்.
இதுவும் சென்ற வருடம் தான். ஆசிரியர் தினத்தன்று நடந்தது. எங்கள் பள்ளிக்கூடம் ஆசிரியர் தினத்தை இந்திர விழாவாகக் கொண்டாடி மதியம் வரை கலை நிகழ்ச்சி பார்த்து, புரியாணி சாப்பிட்டுப் புகைப்படங்கள் எடுக்கும் வசதி படைத்தல்ல. சுனாமி சிதைத்த வாழ்வின் எச்ச சொச்சங்களுடன் தகரக் கொட்டகையினுள்ளும் மர நிழலிலும் கோயில் மடத்திலுமாக இயங்கும் பாடசாலை தான். என்றாலும் உயிர்த் துடிப்பான அந்த ஒரு மணி நேர ஆசிரியர் தின நிகழ்வின் முடிவில் வெண்ணிறப்
பட்டாம் பூச்சியாய் என்னிடத்தில் ஓடி வந்த பாவனா "ரீச்சர்
வதிரி இ.இராஜேஸ்கண்ணன்/தொலையும் பொக்கிஷங்கள் 46

குனியுங்கோ” என்று கூறி வாஞ்சையுடன் என் கன்னத்தில் முத்தமிட்டு என் கையுள் ஏதோ ஒரு மிகச் சிறிய பொருளைத் திணித்துவிட்டு ஓடிய காட்சி ஒரு அழகான சிலைட்'
இன்றும் பின்னல் போடும் போது பாவனா தந்த அந்த சிலைட்டைத்தான் போடுவேன். இவருக்கும் அது, நன்றாகப் பிடிக்கும்.
"ரீச்சர் . பாவனா தந்த சிலைட் வடிவா?. அவ ரீச்சர். அவவின்ரை அம்மா கொடுக்கிற காசிலை. ரண்டு ரண்டு ரூபா சேர்த்து வைச்சு நாப்பது ரூபாவுக்கு அதை வாங்கினவா?” என்று இன்னொரு பிள்ளை கூறிய வார்த்தை கள் அந்தப் பிஞ்சுக்குள் பொதிந்து கிடக்கும் உயிர்த் துடிப்பான அன்பை உணர்த்தியது.
உண்மையில் ஆசிரியத் தொழிலின் மகத்துவத்தினை எனக்குள் எடுத்துக் காட்டியது அந்தப் பிஞ்சின் அன்பு. என்னைத் தன்னுள் உள்வாங்கி தன்னை என்னுள் விதைத்து விட்ட அந்தப் பிள்ளை என் நாடித் துடிப்புக்களோடு ஒன்றித்து விட்டாள்.
அவள் படிப்பிலும் மிகுந்த கெட்டிக்காரி வகுப்பிலே செய்யும் புதிர்க் கணக்குகள் அவளுக்கு மிகவும் பிடித்த மானவை. பஞ்சதந்திரக் கதைகள் அடங்கிய கதைத் தொகுதி களை ஒவ்வொரு நாளும் பாடசாலை நூலகத்திலிருந்து கடன் வாங்கிச் செல்வதைக் கண்டிருக்கின்றேன். இறுதியாக நடந்த திருக்குறள் மனனப் போட்டியில் முதல் பத்து அதிகாரங்களையும் பொருளோடு ஒப்புவித்ததைப் பார்த்து விட்டு எங்கள் அதிபர் என்னைப் பாராட்டிச் சென்றார். பிள்ளை களின் திறமைகள் தானே ஆசிரியர்களின் இருப்புக்கும் வாழ்வுக்கும் அர்த்தம் கொடுக்கின்றன.
என்னுள் நிறைந்த பாவனா அழுது கரைந்து போகின்றாள். அவளின் உள்ளத்திலிருந்து வெளிப்பட்ட
தொலையும் பொக்கிஷங்கள் 47 வதிரி இ.இராஜேஸ்கண்ணன்

Page 34
குமுறல்களை நெஞ்சுக் கூட்டினுள் அடக்கி வைத்து விம்மிப் பொருமி அழுது கொண்டேயிருந்தாள். என்னால் ஆறுதல் கூறி அவளின் அழுகையினை நிறுத்திவிட முடியவில்லை.
"அம்மா. அழாதையடா. ரீச்சர் இவளவு சொல்லி யும் அழுகிறியள். எல்லாப் பிள்ளையஞம் பார்க்கப் போகினமெல்லே. அழக்கூடாதடா.”
அவள் என்னுடைய வார்த்தைகளைப் பொருட்படுத் தாமல் அழுது கொண்டேயிருந்தாள். "இப்ப என்னத்துக்கடா அழுகிறியள்?. எங்கடை பள்ளிக்கூடத்திலை மட்டுமே இப்படி? எல்லா இடமுந்தானே. நீங்கள் நல்ல 'மாக்ஸ்’ தானே எடுத்திருக்கிறியள். அது போதாதா உப்பிடித்தான் போன வருஷமும் ஒரு பிள்ளை கெட்டிக்காரி ஆனால் கட்டவுட் கூட எண்டதால பாஸ் பண்ண முடியேல்லை. உந்த மாக்ஸ் ஒரு பிள்ளைக்கு வடிவாக் காணுமடா. அழக் கூடாதடா. ரீச்சர் சொல்லுறனெல்லே.”
என் மனவிருப்பை மறைத்து வைத்துக் கொண்டு பிள்ளையை தேற்ற முற்படுகின்றேன். பாவனாவின் அழுகை அதிகரித்ததே ஒழிய அவள் தேறுவதாகத் தெரியவில்லை. “செல்லமெல்லே. என்னடா அழக்கூடாதடா. நீங்கள் ரீச்சரோடை வாங்கோ. வீட்டை கொண்டு போய் விடுறன். இனியும் நீங்கள் அழுதால் ரீச்சரும் அழுதிடுவன்.”
இந்த வார்த்தைகளின் பின்னால் என்னிட்ம் நிறைந் திருந்த மெளன இடைவெளி ஒன்றில் அவளின் அழுகை சிணுங்கலாகச் சிதைந்து கொண்டிருந்தது.
"நான் வீட்டை போக மாட்டன் ரீச்சர்” மிக உறுதியுடன்
66 sy
66ir?....
“வீட்டை போனால் அம்மா." மீண்டும் அழுகிறாள்.
வதிரி இ.இராஜேஸ்கண்ணன்! தொலையும் பொக்கிஷங்கள் 48

"மாக்ஸ்’ போதாது எண்டு அம்மா ஏசுவாவா?. அப்பிடி ஏசமாட்டா. ஏன் அம்மா பிள்ளையோடை வரயில்லை?.”
梦频
“என்னடா சொல்லுங்கோவன். அவளின் உள்ள த்தைக் கிளறி காரணத்தை அறிந்து விட வேண்டும் என்ற எண்ணத்தில்
"ரீச்சர். அம்மா மருந்து குடிச்சுச் செத்துப் போவா."
நான் மெளனியாகச் சிலைத்துவிட்டேன்.
"ரீச்சர். நேற்று எங்கடை பக்கத்து வீட்டுச் சிந்து வின்ரை மாக்ஸ் பாத்து அவைக்குத் தெரியும். சிந்து பாஸ். அப்பவே அம்மா சொன்னவா சிந்துவை விட நீதான் கெட்டிக் காரி. உன்னைப் பெரிய பள்ளிக்கூடத்திலை சேர்த்து படிப்பிக்கிறனெண்டு கொப்பா சொன்னவர். நீ பாஸ் பண்ணா விட்டால் மானக்கேடு. நான் மருந்து குடிச்சுச் சாவன். நீ பாஸ் பண்ணாவிட்டால் கொப்பாவும் வெளிநாட்டிலை இருந்து வரவும் மாட்டார். உன்னோடை கதைக்கவும் மாட்டார். இங்கை நானும் செத்துப் போவன். பிறகு உன்னை ஆர் பாக்கிறது எண்டு சொன்னவா.”
அவளது வார்த்தைகள் விக்கலாகி வெளிவந்தது. நெஞ்சம் பொருமியபடி மீண்டும் அழத்தொடங்கினாள்.
நீர்த் திரை ஒன்று என் கண்களை மறைப்பது போலிருந்தது.
அந்தக் குழந்தை மனத்தின் ஏக்கம் அறியாத பெற்றாரா அவர்கள்? ஒரு பிள்ளையின் மனத்தைச் சிதைக்கின்ற இவர் களுக்கு என்ன கெளரவம்?
தொலையும் வபாக்கிஷங்கள் 49 வதிரி இ.இராஜேஸ்கண்ணன்

Page 35
மங்களம் ரீச்சரின் வார்த்தைகளால் என்னுள் எழுந்த எரிமலை அடங்கி மெளனித்தது.
அந்த வெள்ளை மனதில் ஏக்கத்தை விதைத்து விட்டு. எதிர்பார்ப்புக்களை சுமக்க வைத்துவிட்டு. உணர்வுகள் எந்திரமாகிப்போய் விட. கெளரவம் பற்றிய கனவுகள் இவர்களுக்கு,
"வாடா. நானும் வாறன் உங்கடை வீட்டை அம்மா வோடை ரீச்சர் கதைக்க வேணும்.” என்று கூறியதும் அவளின் முகத்தில் திடீரென ஒரு வித மலர்வு.
நான் "ஷோட் லீவுக்காக அதிபரின் அலுவலகம் நோக்கி நடக்கின்றேன். கண்களை துடைத்தபடி அவளும் என்னைத் தொடர்ந்தாள்.
பாடசாலையின் எந்திரத்தனமான இயக்கத்தினை உறுதிப்படுத்தும் வகையில் அடுத்த பாடத் தொடக்கத் துக்கான மணி ஓசை சர்வசாதாரணமாய் ஒலித்தது.
- மல்லிகை - செப்ரம்பர் - 2008
வதிரி இ.இராஜேஸ்கண்ணன்! தொலையும் பொக்கிஷங்கள் 50

சங்காரதரிசனம்
சுந்தரியார் வல்லை முனியப்பர் முன்னே மும்முறை தலையில் குட்டி, தோப்புக் கரணம் போட்டுத் திரும்பவும் விசில் ஊதப்படவும் சரியாக இருந்தது.
விசில் ஊதப்பட்டால் அவர்களின் வாகனத் தொடரணி செல்வதற்காகப் பாதையில் செல்ல ஏனையவர்களுக்குத் தடை என்பது தான் அர்த்தம்.
வீதியில் வந்தவர்கள் ஒரு புறத்துத் தரவையில் இறக்கி விடப்படுகின்றார்கள்.
தொலையும் பொக்கிஷங்கள் 51 வதிரி இ.இராஜேஸ்கண்ணன்

Page 36
“ச்சே. இதிலை இறங்காமல் போயிருந்தால் இதைத் தாண்டிப் போயிருப்பன் போலை. இனி எவ்வளவு நேரமோ. சந்நிதியானே.” என்று அலுத்துக் கொண்டார் சுந்தரியார்.
“என்ன சுந்தரம் ஐயா . நீங்களும் பாதை மறிப்பிலை மாட்டுப்பட்டுப் போனியள் போலை. இது துலையாத நித்திய சீவியமாப் போச்சு மனிசருக்கு.”
என்று கூறிக் கொண்டே தனது மோட்டார் சைக்கிளை நிறுத்தி விட்டு முனியப்பர் கோயில் அருகில் அடர்த்தியாக வளர்ந்த பற்றை மறைப்புத் தேடி ஒரு நடுத்தர வயதுக்காரன் அவதியுடன் போய் மறைந்தான்.
“பொயிலைச் சுந்தரி” என்றால் யாழ்ப்பாணத் திலிருக்கும் பிரபலமான சந்தைகளில் இப்போதும் தெரியாத வர்கள் யாரும் இருக்க முடியாது. சுன்னாகம், கல்வியங் காடு, கொடிகாமம், அச்சுவேலி, பருத்தித்துறைச் சந்தைக ளையெல்லாம் ஒரு காலத்தில் ஒரு கலக்குக் கலக்கிய மனுசன் அவர். பொயிலைச் சுந்தரி என்று பொதுவாக எல்லோரும் அறிந்த போதிலும் தருணங்கள் தோறும் அவர் எடுக்கும் பாத்திர வேறுபாடுகளில் பொதிந்திருந்த உள் நோக்கங்கள் கருதி தரகுச் சுந்தரி, சீட்டுச் சுந்தரி, கண்டுச் சுந்தரி என்று வெவ்வேறு பெயர்களால் சந்தைகளில் அழைக்கப்பட்டு வந்தார்.
இந்தப் பெயர்கள் எல்லாம் காரணப்பெயர்கள் தான். சுன்னாகம் சந்தை தான் அவரின் பிரதான மையமாக இருந்தது. அங்கே சிறிய அளவில் ஒரு வெற்றிலைக் கடை உரிமையாளர் அவர் ஊர் வெற்றிலை, கொழும்பு வெற்றிலை, நாறல் பாக்கு, கைச்சீவல், மெசின் சீவல், சுண்ணாம்பு, பாணிப் புகையிலை, பாணி போடாத புகை யிலை என்று சுந்தரியாரின் அயிற்றங்கள் பல.
வதிரி இ.இராஜேஸ்கண்ணன்! தொலையும் பொக்கிஷங்கள் 52

எத்தனை வகையறாக்கள் அவரிடம் இருந்தாலும் அவரின் புகையிலைக்கு இருந்த கிராக்கி வேறு யாருக்கும் இல்லாதது.
சுந்தரியாரின் புகையிலைக்காகவென்றே தேடி வந்து வாங்கும் வாடிக்கைகாரர் பலர். மொத்தமாகவும், சில்லறை யாகவும், துண்டுகளாகவும் தரப்படுத்தி தேவைக்கேற்ப வியாபாரம் செய்யும் நுட்பம் அவருக்கே உரிய தனித்திறன்.
புகையிலையை தரம் பிரித்து வெவ்வேறு சாக்கு களிலே அடியும் தலைப்பும் வெளியே தெரியவிட்டுப் பவ்வியமாகச் சுற்றி வைத்து காரம் போகாது பாதுகாத்து வைத்துக் கொள்வார்.
அது வெறுமனே சந்தையில் புகையிலை விற்றதால் வந்த பெயர் என்று நினைத்துவிடக் கூடாது. அந்த நாளில் கேகாலை, கம்பளை போன்ற இடங்களில் கடைகளை வைத்திருந்த முதலாளிமார் புகையிலை வாங்குவதற்கு லொறிகளுடன் வரும் போது சுந்தரியார் காட்டில் நல்ல மழை பெய்யும் தனது மனைவியை சந்தை வியாபாரத்தைப் பார்க்க விட்டுவிட்டு அவர்களுடன் லொறியில் ஏறி காரை நகர் தொடக்கம் பருத்தித்துறை வரை ஒரு சுற்றுச் சுற்றி வருவார்.
பருத்தித்துறைப் பக்கம் போனால் செல்வச்சந்நிதி முருகன் கோயில் வாசலுக்கு எப்படியாவது லொறிகாரனை திருப்பி ஓடி ஒடி என்றாலும் சந்நிதியானை ஒரு வட்டம் அடித்துத்தான் திரும்புவார்.
திரும்பி வரும் போது மடி கனக்கும். கையில் உள்ள தோற் பையினுள் கட்டாயம் ஒரு போத்தலும் பருத்தித்துறை வடையும் இருக்கும். இன்னொரு உரப்பையில் கடைசார் புகையிலை எடுத்து வருவார், தனக்குச் சுருட்டுச் சுற்று வதற்காக.
தொலையும்ஸ்பாக்கிஷங்கள் 53 வதிரி இ.இராஜேஸ்கண்ணன்

Page 37
அது மட்டுமல்ல புகையிலை நடவு காலம் வந்தாலும் சுந்தரியாருக்கு நல்ல கிராக்கி நல்ல இன புகையிலை நாற்றுக்காக வடமராட்சியின் தொண்டமானாறு, பொலிகண்டி, அத்தாய் பகுதிகளுக்குச் சென்று புகையிலை நாற்றுக்களை தட்டோடு தீர்த்து தன்னுடைய தரகு இலாபத்தையும் பெற்றுக் கொண்டு வருவார். அப்படி அவசரமாகப் போகும் போது கூட சந்நிதி முருகனுக்கு ஒரு சலாம் போடத்தானும் மறந்த தில்லை. அவ்வளவு பற்று சந்நிதியானில்,
மாரி காலம் தொடங்கிவிட்டால் இரண்டொரு நாட் களுக்குச் சுந்தரியாரை சந்தையில் காணக் கிடையாது. வீட்டில் பதியம் வைத்த கமுகு நாற்றுக்கள், தேசிக் கன்று களை ஒரு லாண்ட்மாஸ்ரட் பிடித்துக் ஏற்றிக் கொண்டு கரவெட்டிப் பகுதியில் இருந்த புகையிலை வியாபாரத் தொடர்பால் கிடைத்த நண்பர் ஒருவர் வீட்டுக்கு வெள்ளிக் கிழமை நாள் பார்த்து புறப்படுவார். அந்த நண்பர் சுந்தரியாரின் கன்றுகளுக்கு ஒரு குட்டி முகவராக இருந்தது மட்டுமல்ல சந்நிதி முருகனை தரிசிப்பதற்கு துணையாகவும் விளங்கினார். சந்நிதியானை தரிசித்து வந்து நண்பரின் வீட்டில் நல்லதொரு படையல் சாப்பாடும் முடித்து ஆரச் சோர இருந்துவிட்டு பொழுது சாயும் போதுதான் புறப்பட்டுச் செல்வார்.
கொடுக்கல் வாங்கல்களில் சுந்தரியாரின் நேர்மையை எல்லா மட்டத்து வியாபாரிகளும் அறிந்து வைத்திருந்தனர். சிறு வியாபாரிகள் தமக்குள் போடும் ஒரு ஏலச் சீட்டுக்கு ஒரு பத்துப் பதினைந்து வருடங்களாக சுந்தரியார் தான் தாய்ச்சி ஒவ்வொருவருக்கும் விழுந்த சீட்டுத் தொகையைத் திரட்டிக் கொடுக்கும் போதும், "சந்நிதியானே. இவனுக்கு இந்த முதல் நல்ல படியா பெருக வேணும்” என்று முருகனைப் பகிரங்கமாக வேண்டுதல் செய்து கொண்டே கொடுப்பார்.
வதிரி இ.இராஜேஸ்கண்ணன் தொலையும் பொக்கிஷங்கள் 54

இப்போது சுந்தரியார் கொஞ்சம் தளர்ந்து போனார். வெற்றிலைக் கடையைத் தவிர மேலதிகமான வேலைகளைச் செய்ய அவரது உடல் மட்டுமல்ல, நாட்டுச் சூழ்நிலையும் பொருந்தி அமையவில்லை.
சந்நிதி முருகனை அடிக்கடி போய் தரிசிக்கக்கூட சந்தர்ப்பங்கள் வாய்ப்பதில்லை என்பது அவரின் நித்திய கவலையாகி விட்டது.
இவ்வளவு காலமும் ஒரு வருடம்கூட தவறவிடாது கந்தசஷ்டி விரதம் இருந்து வருபவர். கந்தசஷ்டி காலத்தில் ஆறு நாட்களும் தவறாது முருக தரிசனம் செய்த காலங்கள் பல. ஆகக் குறைந்தது சூரன் போர் அன்றிலாவது என்ன வேலை இருந்தாலும் ஒரு பக்கமாகப் போட்டுவிட்டு சென்று விடுவார். ۔۔
கடந்த வருடம் நாட்டு நெருக்குவாரங்களால் அவரால் சந்நிதி முருகனின் சூரன் போரைக் கூட காணமுடியவில்லை என்ற கவலை இப்போதும் அவரின் மனத்தை அரித்துக் கொண்டே இருந்தது.
தன்னை ஆசுவாசப்படுத்திக் கொண்டு திரும்பிய அந்த நடுத்தர வயதுக்காரன் "சுந்தரம் ஐயா. சந்நிதிக்குப் போறியள் போலை இண்டைக்கு சூரன் போராக்கும். இப்ப இங்காலை கரவெட்டிப் பக்கம் கண்டுகள் கொண்டு வாறத்தில்லை போலை.”
தனக்குத் தெரியாத ஒருவன் தன்னை இப்படி யெல்லாம் விசாரணை செய்வது சுந்தரியாருக்கு எரிச்சலாக இருந்தாலும், வல்லை வெளியில் தனது பழைய வியாபாரத் தைக் விசாரிக்க ஒரு உறவு இருந்ததை எண்ணும் போது உள்ளூர மகிழ்ச்சி ஏற்பட்டது.
"வயக வரவர கஸ்டம் தானே ராசா. இப்ப அதெல் லாம் விட்டாச்சு. பிரச்சினையளும் மோசம். வழி தெரு
தொலையும் பொக்கிஷங்கள் 55 வதிரி இ.இராஜேஸ்கண்ணன்

Page 38
விலை போய் வர ஏலாமக் கிடக்கு, ரண்டு வரியமாச்சு உந்தச் சந்நிதியானெட்டை போய்க் கூட இண்டைக்காய்ச்சும் போவமென்டால்.”
சுந்தரியார் அலுத்துக் கொண்டார். "இல்லை ஐயா விட்டிடுவாங்கள்”
மனம் அறிந்த பதில். “எவ்வளவு நேரம் அப்பு மறிப்பினம்?.
99
"அது சொல்லேலாது அவையின்ரை வாகனமெல்லாம் போய் முடியவேணும். சில நாளிலை பொழுதுபட்டு சட்டம் போடுற நேரமும் வந்திடும். இண்டைக்கு சூரன் எண்ட படியால விடுவினம் எண்டு நினைக்கிறன்.” என்று கூறிக் கொண்டே பின்னே வந்து தரவையுள் திரண்டிருந்த மோட்டர் சைக்கிள்காரர்களில் ஒருவனைப் பார்த்து சிரித்தவாறு நடந்தான் அவன்.
கதைக்கக் கிடைத்த ஒரு துணையும் நழுவிப் போனது.
இதற்கிடையில் தனியார் மினிபஸ், லொறிகள், போக்கு வரத்துச் சபை பஸ்கள் என்று ஒன்றன் பின் ஒன்றாக வீதி ஒரத்தில் அடுக்கப்பட்ட வாகனங்கள் பயணிகள் பலர் ஆங்காங்கே கூட்டம் கூட்டமாக ஏதேதோ கதைத்து நேரத்தைக் கழித்துக் கொண்டு இருக்கிறார்கள். சிலர் முனியப்பருக்கு அருகே கச்சான் விற்பவரிடம் கச்சான் வாங்கிக் கொறித்துக் கொண்டனர். வேறு சிலர் பாதை மறிப்பு நேரம் பார்த்தே நிறுத்தி வைக்கப்படும் ஐஸ்கிறீம் வானில் தமக்கு விரும்பியதை வாங்கிச் சுவைக்கின்றனர். அவர்களில் பலருக்கு பசியும் எடுத்திருக்கலாம். சிலர் வெறும் வாயை மென்று கொண்டிருந்தனர்.
வதிரி இ.இராஜேஸ்கண்ணன்! தொலையும் பொக்கிஷங்கள் 56

"நேரத்துக்குப் போய் சேர்ந்தால் ஒருக்கால் சந்நிதிக்குப் போய் சூரன் பார்க்கலாம் எண்டு நினைச்சன் இனிச் சரி வராது போலை” ஒருவர் வேதனைப்பட்டார்.
“எங்களுக்கு சூரனுமில்லை கந்தனுமில்லை. இந்தத் தரித்திர வாழ்க்கை தான்” பதிலுக்கு இன்னொருவர் ஏதோ அர்த்தம் பொதித்துக் கூறுவதான தோரணையுடன்.
“கலியாண நாள் நேரங்கள்கூட இவையின்ரை வாகனங்கள் எப்ப போகும் எந்த நேரம் பாதையை மறிப் பினம் எண்ட நேரமெல்லாம் பார்த்துத்தான் எடுக்க வேணு மெண்ட நிலை வந்திட்டுது” இது வேறொருவர்.
சுந்தரியாருக்கு எரிச்சல் மனதில் குமுறிக்கொண்டு இருந்தது. பின்னே அடிக்கடி திரும்பிப் பார்த்தார். நிறுத்தி வைக்கப்பட்ட வாகனங்கள் ஒரு நீண்ட புகையிரதமாக. அந்த வாகனங்களுக்கிடையே தோளில் காவடியுடன் ஒருவனும் அவனுடன் கூடி வந்த கூட்டத்தினரும்.
"நேர்த்திக்கு காவடி எடுத்தவன் கூட காவல் நிற்கின் றான். பாவம். சந்நிதியானே.” என்று தனக்குள் தானே நொந்து கொண்டார்.
அவரின் மனத்திரையில் தான் பார்த்த எத்தனையோ சூரன் போர்கள் வரிசையாக. அடித்து ஊற்றிய மழை வெள்ளத்தினுள் ஆறு நாட்கள் மிளகு தண்ணீர் குடித்து விரதமிருந்தவன்கூட எடுப்பாக நின்று ரசிக்குமாறு எத்தனை சூரன் போர்கள். தென்பகுதிகளிலிருந்து லொறிகளிலே வந்து குவியும் இளநீர் மலை மலையாக, மதர்த்து இனிப்பேறிய கரும்புகளின் குவியல்கள். எண்ணுக் கணக்கற்ற காவடிகள், கரகங்கள். கற்பூர வாசனை கலந்த புகை மழை நீரோடு கரைந்து உடலில் வழிய பக்திப் பரவசம் பொங்கும். அரோகரா ஒலி விண்ணைப் பிளக்கும். பறை முழக்கம்,
தொலையும் பொக்கிஷங்கள் 57 வதிரி இ.இராஜேஸ்கண்ணன்

Page 39
தவில் முழக்கம், நாதஸ்வர கானங்கள் கோயிலின் மணி களுடன் குழைந்து ஆர்ப்பரிக்கும். நீள விரித்திருக்கும் வல்லைவெளிப் பரப்பின் வகிர்த்துவிட்ட உச்சியான வீதியில் எத்தனை தூக்குக் காவடிகள், துலாக் காவடிகள், வீதியில் அவசர அவசரமாக மக்களை சுமந்து செல்லும் தட்டி வான்கள், லொறிகள். கசகச ஒலியெழுப்பும் பட்டுச்சேலை வேட்டிகள்.
திரண்ட புயங்களில் சூரனைத் தாங்கி எறிந்து, ஏந்தி சூரன் ஆட்டும் இளைஞர்களின் கோரஸ் ஒலி ஒவ்வொரு மாயத் தோற்றங்களின் போதும் சூரன் ஆடும் நளினமான ஆட்டம். தலை கொய்த பின் விசிறப்படும் தீர்த்த நீர். சிறு பிள்ளைகளைத் தோளில் சுமந்து சூரன் காட்டும் அப்பாக்கள்
பொழுது பட்ட பின்னர் சுற்று வீதியில் ஒளிரும் "பொற்றோமக்ஸ்’ விளக்குகள். அந்த ஒளியில் மணிக் கடைகள், தோசைக் கடைகள், பாய் பெட்டி பாத்திரக் கடைகள்.
திருமணம் செய்து முதன் முதலில் மனைவியோடு வந்து, சூரன் போர் பார்த்து, மழையில் நனைந்து. கடையில் சுடச்சுடத் தோசை சாப்பிட்டு இரவு பத்து மணியாகியும் போக மனமில்லாமல் மனைவியை றலி சைக்கிளில் ஏற்றிக் கொண்டு வல்லை வெளியின் தனிமையை சுவைத்தவாறு திரும்பிப் போன இனிய நினைவுகள் சுந்தரியாரின் மனத்தில் முகிழ்த்து மடிந்தன.
அன்றைய வல்லை வெளியின் நிஷப்த இருளில் கூட ஒரு சுகம் வளர்பிறைக்கால வல்லை வெளியின் காற்றில் நிலவை உரசிய ஒளிச் சிதறல்கள் பரவி வரும். எந்த வித கட்டுபாடுகளுமின்றி சுதந்திரமாய் வீசி வரும் காற்று இருபுறத்திலும் விரிந்து கிடக்கும் கடல்நீர்த் தொடுவை. உயிர் நிறைக்கும் கூதலில் கொடுகிடும் மனம்.
வதிரி இ.இராஜேஸ்கண்ணன்! தொலையும் பொக்கிஷங்கள் 58

சாமப் பொழுதுகூட சந்தோஷம், தந்து நின்ற நாளை எண்ணிப் பெருமூச்சு எறிந்து கொண்டார்.
“நேரம் அஞ்சரையாகுது. இண்டைக்கு ஆறு மணிக்குத்தான் போலை விடப்போயினம்.” பின்னே நின்ற தனது மோட்டார் சைக்கிளை உருட்டிச் சென்று முன்னே நிறுத்திக் கொண்டே கூறினார் ஒருவர்.
சுந்தரியாருக்கு மனம் பதைபதைத்தது.
“இவ்வளவு தூரம் வந்தும். சூரன் பார்க்க ஏலாது போலை கிடக்கு அஞ்சு மணிக்குச் சூரன் எண்டு பேப்பரி லை கிடந்தது. ஆறு மணியுமாகப் போகுது. சந்நிதி
யானே.”
என்று சொல்லிக் கொண்டு பனங்கூடலுக்கு மேலாக மேற்கு மூலையில் தொலைவில் தெரிந்த சந்நிதி முருகன் தேர் முட்டிக் கூரையைப் பார்த்து ஒரு பெருமூச்செறிந்தார்.
நேரம் ஆறு மணி ஆறு பத்து, ஆறு பதினைந்து. என்று நிமிடங்களாய் செத்தொழிந்து கொண்டிருந்தது.
"சந்நிதியானே இனி ஊரடங்குச் சட்டம் போடுற நேரம் வந்திடும். இந்த வருஷமும் உன்ரை சூரன் போர் பார்க்க எனக்கு குடுப்பினை இல்லை. உதிலை கூப்பிடு தூரத்தில இருக்கிற உன்னைப் பார்க்க. எத்தினையைத் தாண்ட வேண்டிக் கிடக்கு. அப்பனே அடுத்த வரியம் எண்டாலும் என்னைக் கூப்பிடு.”
தலையில் கை கூப்பியபடி தேர்முட்டிக் கூரையைப் பார்த்து பழியை முருகன் மீது போட்டுக் கொண்டு சைக்கிளைத் திருப்பினார் சுந்தரியார்.
நிறுத்தப்பட்டிருக்கும் ஒவ்வொரு வாகனங்களையும்
தாண்டி அவரின் பழைய றலி சைக்கிள் திரும்பிச் சென்று கொண்டிருக்கின்றது.
தொலையும் பொக்கிஷங்கள் 59 வதிரி இ.இராஜேஸ்கண்ணன்

Page 40
மனைவி எதிர்பாத்துக் காத்திருக்கும் சந்நிதியான் திருநீறு?
அயல் வீட்டார் சொல்லிவிட்ட தீர்த்த நீர்?.
வினாக்களாய் மனதில் மிதக்க,
காவடி ஏந்தி நேர்த்தி கழிக்கப் போனவர்கள் காத்துக் கொண்டே நிற்கிறார்கள். அவர்களைத் தாண்டிச் செல்லும் போது,
“முருகா. சந்நிதியானே.” என்று பெருமூச்செறிந்து
வாய் விட்டு உரத்துக் கூறிக்கொண்டே தோளில் இருந்த
சால்வைத் துண்டினால் தன் கடைக்கண்களைத் துடைத்துக் கொண்டார்.
மனைவி எதற்காகவோ நேர்த்திவைத்து முடிந்து வைத்து கொடுத்துவிட்ட காசு இப்போதும் அவர் மடியில் பத்திரமாய் கிடந்தது.
- ஞானம்
செப்டம்பர் 2008 அல்வையூர் கவிஞர் மு. செல்லையா ஞாபகார்த்த 3ஆவது பரிசு சிறுகதை-2008
வதிரி இ.இராஜேஸ்கண்ணன் தொலையும் பொக்கிஷங்கள் 60

A
ܐܠܡܝܵܬܵܐ 7 ( ༼ リーー=庁
--- /کیڑے k ༄། يل 激二上 ー論、下エ三
வழமைக்கு மாறாக மோட்டார் சைக்கிளை பிரதான வாயிலுக்கு அருகிலுள்ள நிழல் பரப்பிய பெரிய மரத்தின் கீழ் நிறுத்தவில்லை. பெரிய வாயிலிலிருந்து சிறிது தூரத்தில் இருந்த சிறிய வாயிலுக்கு அருகே தகிக்கும் வெயிலில் நிறுத்தி வைத்துக் கொண்டே அவளை எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருந்தேன்.
பாடசாலைப் பிள்ளைகள் கூட்டமாக வெளியேறிக் கொண்டு இருந்தார்கள். திரண்டு நடக்கும் அவர்களின் காலடிகளிலிருந்து கிளம்பி வரும் உஷ்ணமான புழுதி
தொலையும் பொக்கிஷங்கள் 81 வதிரி இ.இராஜேஸ்கண்ணன்

Page 41
எரிச்சலைத் தந்து கொண்டிருந்தது. தலையில் சுடும் உச்சி வெயில் உதிரத்தில் கொதியேற்றிக் கொண்டிருந்தது. மனம் நமைச்சல் பட்டுக் கொண்டிருந்தது.
வழமையாக அந்தப் பெரிய மரநிழலில் என்னைப் பார்த்துச் சிரித்து விட்டுப் போகும் காஞ்சனாவின் ஆறாம் வகுப்பு மொனிட்டர் பிள்ளையின் குறுகுறுத்த பார்வை யையும் இரட்டைக் குஞ்சங்களையும் ரசித்துப் பார்க்க முடிய வில்லை.
"ரீச்சர் வாரா. இந்தாங்க பாக்..” என்று அந்தப் பிள்ளை என்னிடம் திணித்துவிட்டுப் போன காஞ்சனாவின் ஹாண்ட் பாக்கினை கைபிடியில் தொங்க விட்டுக் கொண்டு பிருஷ்டத்தை தகிக்க வைத்த "சீற்ரில் அமர்ந்து கொண்டு எரிச்சலை ஒன்று கூட்டி உதைந்து 'ஸ்ராட் செய்து கொண்டு பின்னே வந்து அமர்ந்த அவளின் முகத்தை, எப்போதும் அவளின் முகத்தை பார்ப்பதற்கென்றே குறி வைத்துச் சரித்து விடப்பட்ட இடதுபுற கண்ணாடியினுள் ஊடுவிருப் பார்த்தேன்.
சர்வசாதாரணமாய், எல்லாவித வாளிப்புகளையும் இழந்து இருண்டு போயிருந்தது அவளின் முகம். சிரிப்புச் செத்துப்போன அவளின் முகத்தைப் பார்த்தவுடன் இதய அறையினுள் ஏதோ வெடித்துச் சிதறி உடலெல்லாம் சன்ன மாய்ப் பரவுவது போல.
"இஞ்சருங்கோ. ஏன் தொப்பி போடயில்லை. தலை அனலாக் கொதிக்குது.”
"வெயில் சுட்டு முகம் இருண்டு போய்கிடக்கு ஏன்?" “கன நேரமே வந்து. காவல் நிக்க வச்சிட்டன் போலை.”
"கையெழுத்துப் போட்டிட்டு வெளிக்கிடவும் பார்வதி ரீச்சர் ஒரு கதை கேட்கச் சொன்னா. அதுதான் பிந்திப் போச்சு.”
வதிரி இ.இராஜேஸ்கண்ணன்! தொலையும் பொக்கிஷங்கள் 82

என மிக அக்கறை உள்ளவளாய் இப்படி ஒரு சமாதானத்தை சொல்லிக் கொண்டே எனது வலதுபுறத் தோளினை இறுகப் பற்றிக் கொண்டு பின்னே ஸ்பரிசம் தந்து அமர்ந்து கொள்பவள். இடதுபுறக் கண்ணாடியில் என் முகத்தைப் பார்த்தவாறே இடது புறக் காதோரம் சரிந்து அன்றைய நாளின் பாடசாலை புதினங்களை நளினமாக கதைத்துக் கொண்டு வருபவள் இன்று இறுகிப் போய்.
நான் அவள் முகத்தையும், அவள் என் முகத்தையும் பார்க்க சரித்து விடப்பட்ட கண்ணாடியில் இன்று நான் மட்டுமே அவளை அடிக்கடி பார்த்துக் கொண்டு வருகின்றேன்.
"இந்த மூஞ்சையோடை தான் இண்டு முழுக்க பாட சாலையில் நிண்டாளாக்கும். இன்னும் கோபம் குறை யேல்லைப் போலை. சரியான பிடிவாதக்காரி.”
காஞ்சனாவின் மெளனம் மனதை அரித்து, எனக்குள் என்னைப் பிய்த்துத் தின்று கொண்டிருந்தது.
"கண்ணாடி வேறை. இடைநடுவிலை. அவளின்ரை முகத்தைப் பார்க்காமல் அதைத் திருப்பி விட்டால் என்ன?. வேண்டாம். பிறகு அதுவும் பிரளயமாகி."
என் முதுகோரத்து ஸ்பரிஷத்துக்கே தடை விதிக்கும் அளவுக்கு வெளிப்பட்ட அவளின் கோபத்தைக் கடந்துவிட்ட இரண்டு வருடங்களில் இன்றுதான் முழுமையாக நான் அறிந்திருக்கின்றேன்.
இப்போதுவரை, அவள் என்முகத்தை நேரே பார்க்காது விட்டு இருபத்து நான்கு மணித்தியாலங்கள் நத்தையாய் நகர்ந்து சென்றுவிட்டன.
திருமணத்தின் பின்னர் தான் அவளுக்கு வேலை கிடைத்தது. அவளை பஸ் ஏறி இறங்கி அலையவிட எனக்கு
தொலையும் பொக்கிஷங்கள் 63 வதிரி இ.இராஜேஸ்கண்ணன்

Page 42
விருப்பமில்லை. அவளுக்காக நானும் மாற்றம் எடுத்துக் கொண்டு அவளோடு வந்து ஒரு வாடகை வீட்டில் குடியிருக்கிறோம்.
எங்களுக்கு கலியாணமாகி இரண்டு வருடங்களும் இரண்டு மாதமும் ஆகிவிட்டது. ஒரு நாட்கூட நான் அவளோடு அப்படிக் கதைத்தது கிடையாது.
வழமையாக அதிகாலையில் எழுந்து சாப்பாடு தயாரித்து எடுத்து, இருவருக்கும் இரண்டு பார்ஷல்கள் கட்டிவைத்து, முதனாள் போட்ட தன்னுடையதும் என்னுடை யதுமான உடைகளை துவைத்து, உலரப்போட்டு பாடசாலை க்குப் புறப்படுவதில் அவளுக்கு அலாதி திருப்தி
நான் படுக்கையிலிருந்து எழுந்து வரும்போது முகம் கழுவி, தலைவாரி, நெற்றியில் விபூதிப் பூச்சு ஜொலிக்க குங்குமப் பொட்டுடன் பிரகாசிக்கும் அவளின் தேஜஸ் என்னுள் அந்த நாளின் இயக்கத்துக்கான சக்தியாக ஊற்றெடுக்கும்.
இன்று காலையில் அவள் எதையும் செய்யவில்லை. அவ்வளவு வெப்பிராசம் அவளுக்கு. பாடசாலைக்குப் போகும் வழியில் ஆளுக்கு மூன்று தோசைகளை பார்ஷல்' கட்டி எடுத்துக் அவளின் ஹாண்ட் பாக்கில் நிர்ப்பந்தமாக ஒரு பார்ஷலை திணித்து விட்டேன்.
'வழிப் பூட்டப்படாத இடைவெளி ஊடாக பிரித்தே பார்க்காது திருப்பிக் கொண்டு வரும் அந்தப் பார்ஷல்' என் கண்ணில் படுகின்றது.
"அவ்வளவு நடப்பு அவவுக்கு. முப்பது ரூபா குடுத்து வாங்கின சாப்பாடு. தானும் செய்ய மாட்டா. வாங்கிக் குடுத்ததையும் கோபத்திலை தின்னாமல் திருப்பி கொண்டு வாறா. கொழுப்புக் கூடிப் போச்சு.”
என் மனதில் சினம் எழுந்து வர எனக்குள் நானே கறுவிக் கொண்டேன். வதிரி இ.இராஜேஸ்கண்ணன்! தொலையும் பொக்கிஷங்கள் 64

"பாவம். எவ்வளவு கலைத்துப் போயிருப்பாள். காலையில் தேத்தண்ணி கூட குடிக்காமல் போனவள்.”
காலையில் அவள் அவசர அவசரமாக தேனிர் வைத்து ஒரு குவளை தேனிரை என்முன் தொப்' என்று வைத்துவிட்டு விசுக்கெனத் திரும்பிய வேகம். அவளும் தேனீர் குடிக்கி றாளா என்பதை அவள் அறியாமலே நோட்டமிட்டேன். அவள் குடிக்கவேயில்லை. என் முன்னே அவள் வைத்து விட்டுப்போன தேனீரிலிருந்து பறந்து கொண்டிருந்த ஆவி அவளின் மனக் கொதிப்பின் வடிவமாகி.
அனேகமான காலைகளில் மேசை மீது தேனீரை வைத்துவிட்டு, நான் தேனீர் பருக தானும் பருகிக் கொண்டே தான் படித்த ஏதாவது ஒரு புதுக்கவிதையின் அற்புதத்தை ரசனையோடு அவள் கூறக் கேட்பதில் ஒரு இனிய சுகம். "ச்சே. எவ்வளவு பெரிய பிழையை விட்டிட்டன் காலையிலை அவளை வில்லங்கமாகத் தன்னும் ரீ குடிக்க வைச்சிருக்கலாம்.”
கண்ணாடியில் அவளைப் பார்க்கின்றேன். அப்படியே இறுகிப்போனபடிதான். எப்படி அவளால் இவ்வளவு நேரமும் தொடர்ந்து முகத்தை அப்படியே வைத்திருக்க முடிகிறது. வைராக்கியம் என்பதன் வடிவங்களில் இதுவும் ஒன்றாகத் தான் இருக்க வேண்டும்.
அவளின் வைராக்கியத்தில் நியாயம் இருப்பது போலத்தான் தெரிகிறது. நானும் ஒரு அவசரக் குடுக்கையன். எதுக்கெடுத்தாலும் அவசரப்பட்டு வார்த்தைகளை விட்டு விட்டு பின்னர் அவஸ்தைப்படும் பேர்வழிகளில் நானும் ஒருவன்.
உண்மையில் காஞ்சனா நேற்று வாங்கிவந்த சாறிகள் இரண்டும் அழகாகத்தான் இருந்தன. நான்காயிரம் ரூபா கொடுத்தாலும் அவை இரண்டும் தரத்தில் உயர்ந்தவைதான்.
தொலையும் பொக்கிஷங்கள் 65 வதிரி இ.இராஜேஸ்கண்ணன்

Page 43
ஆனால் நான் கூறிய வார்த்தைகள் காற்றடைத்த பலூனில் ஊசி பாய்ந்தது போல அவளிடமிருந்த உயிர்ப்பை உறிஞ்சி எடுத்து அவளைச் சப்பளித்துவிட்டன. நான் சரியான சுய நலக்காரன் என்னுடைய நோக்கம் நிறைவேறாததற்காக அவளின் மனதை ரணப்படுத்திவிட்டேன்.
"இப்ப என்னத்துக்கு உந்தச் சாறி?. உது உதவாத சாறியாக் கிடக்கு. உதுக்குப் போய் நாலாயிரம் குடுத்திட்டு வாறா. சம்பளம் எடுத்தால் காசை வீட்டுக்கு கொண்டு வாறதை விட்டிட்டு சும்மா அளவுக்கு மிஞ்சின வேலை பாக்கிறது”
என்னுடைய இந்த வார்த்தைகள் போல கொடிய வார்த்தைகளை இந்த இரண்டு வருடங்களில் அவள் கேட்ட தில்லை.
எதிர்பார்ப்புக்கள் பொய்க்கும் போது ஏமாற்றங்கள் உருக்கொள்வது வழமைதானே.
“பள்ளிக்கூடத்திலை ஒரு ரீச்சர் இந்தியா போய் வந்தவ. அவ என்னை நினைச்சுக் கொண்டு வந்தா. நான் என்ன செய்யிறது வாங்கினால் தானே மரியாதை.” அவளின் சிணுங்கிய வார்த்தைகளை இப்போது எண்ணும் போதும் எனக்குள் கழிவிரக்கம் பெருகியது.
"நான் உன்ரை சம்பளத்திலை கொஞ்சம் காசு வாங்கி என்ரை சம்பளத்தோடை சேர்த்துச் செய்ய நினைச்சது. எல்லாம் வீண். வீண் வேலை பாக்கிறது தான் உனக்கு வேலை”
நான் தான் கொதித்த வார்த்தைகளை அவள் மீது சிந்தினேன். அவள் துடித்துப் போனாள் என்பதைக் கண்கள் பனித்துக் காட்டின.
“என்ன செய்ய நினைச்சியள்?”
வதிரி இ.இராஜேஸ்கண்ணன் தொலையும் பொக்கிஷங்கள் 66

அவளின் வார்த்தைகள் பதுங்கின.
"உனக்கென்னத்துக்கு அது?. ஊதாரித்தனம் பண்ணிப் போட்டு. முட்டைக் கண்ணிர் வேறை.”
அப்போது இறுகிப் போனவள் தான் இதுவரை என் முகத்தைத் தானும் பார்க்கவேயில்லை.
அன்பு, அக்கறை, அரவணைப்பு இவை பேரம் பேசலுக்கு அப்பாற்பட்டவை என்பதை புரியாதவனா?. நான் அவளுடன் இப்படி நடந்து அவளைப் புண்படுத்தி விட்டேனே.
முன்னே வீதியை திடீரெனக் கடந்த ஒரு பாதசாரியைக் கண்டு 'பிரேக்' போட்டேன். அந்தரித்துப் போய் என் தோளினை இறுகப் பிடித்துக் கொண்டாள். கண்ணாடியில் அவள் முகத்தில் ஒரு மெல்லிய அதிர்வு கவனம்' என்று எனக்குக் கூறுவது போல. அனாயசமாக தோளினைப் பற்றிய கையை எடுத்துக் கொண்டாள்.
வீட்டினுள் நுழைந்ததும் ஹாண்ட் பாக்கின் உள்ளே யிருந்த பார்ஷலை எடுத்து நான் பார்க்கும்படியாக மேசை யில் வைத்து விட்டு உடைகளை களைவதற்காக அறை யினுள் சென்றவள் எதற்காகவோ வெளியே வருவதை தாமதப்படுத்திக் கொண்டிருந்தாள்.
என் உண்மையான அன்பை அவளிடம் காட்டுவதற்கு ஏற்ற சந்தர்ப்பத்தைத் தர மறுத்துவிடுவாளோ என்ற ஏக்கம் என்னுள்.
அறையினுள் நுழைந்து வெகுஇயல்பாக அவளின் கைகளைப் பற்றி அதுவரை என் காற்சட்டை பையிலிருந்த அந்தச் சிறிய பெட்டியை கையில் திணித்துவிட்டு சட்டென்று வெளியே வந்து மேசையின் முன் அமர்கின்றேன். மனம் என் புத்தியிலும் வேகமாக பறப்பது போல.
தொலையும் பொக்கிஷங்கள் 67 வதிரி இ. இராஜேஸ்கண்ணன்

Page 44
அவள் வைத்த பார்ஷலை அவிழ்த்துப் பார்க்கின்றேன். அதனுள் நான் எப்போதும் விரும்பிச் சாப்பிடும் கடலை மா போளி ஒன்று. அவளின் பாடசாலை கன்ரீனில் வாங்கி யிருப்பாள். கொண்டு போன தோசையை அவள் சாப்பிட்டி ருக்கிறாள் என்ற வகையில் என்னுள் ஒரு திருப்தி
இது எனக்காக. போளியை பிய்த்து வாயினுள் திணித்தக் கொண்டிரு ந்தேன். M
என் பின்புறத்தே முதுகோரம் அவளின் ஸ்பரிசம். எனது கையைப் பற்றி அந்தச் சிறு பெட்டியைத் தந்து "நீங்களே போட்டு விடுங்கோ." என்றாள்.
அந்த எண்கோண வடிவச் சிறிய நகைப் பெட்டி யிலிருந்த சங்கிலியை எடுத்து வாஞ்சையோடு அவளின் கழுத்தில் சூட்டி விடுகின்றேன். நான் எதிர்பார்த்த பிரமாணத் தில் அவளின் கழுத்தோரத்தில் அது பளபளத்து உருண்டது. "இதைத்தான் செய்ய நினைச்சியளாக்கும்.” அணிவித்து விட்ட என் கைகளில் ஒன்றை பூவால் நுள்ளியது போலக் கிள்ளினாள்.
அவள் சிணுங்கிச் சிரிக்கும் போது கண்களிலிருந்து ஓரிரு மணிகளும் உதிர்ந்தன.
- மல்லிகை
groso - 2008
வதிரி இ.இராஜேஸ்கண்ணன்! தொலையும் பொக்கிஷங்கள் 68

ஒரு மாமனின் கதை
என்ரை மனக் கவலையை வேறை ஆரெட்டைச் சொல்லி ஆற முடியும். உங்களெட்டைத் தானே. நீங்கள் சரியாக விளங்கிக் கொள்ளுவியள் எண்ட நம்பிக்கையோடை நான் இதை உங்களெட்டைச் சொல்லுறன்.
என்ரை மனசிலை இருக்கிறது தனிய கவலை மட்டுந் தான் எண்டு நினைச்சுப் போடாதையுங்கோ. கடுங் கோபமும் தான். நெருப்பு மாதிரி
எல்லாரையும் கோவிச்சு என்ன பலன்?. மாற மாட்டன் எண்டும், சாகிறன் பந்தயம் பிடி எண்டும் நிக்கிறதுகளெட்டை
தொலையும் பொக்கிஷங்கள் 69 வதிரி இ.இராஜேஸ்கண்ணன்

Page 45
சொல்லிப் பிரியோசனமில்லை. அதாலை தான் ஒண்டுரண்டு பேரெண்டாலும் விளங்கிக்கொண்டு, புரிஞ்சுகொண்டு நடக்கக் கூடியவையெட்டைச் சொன்னாலாதல் போது மெண்டு நினைச்சுத்தான் சொல்லுறன்.
அந்தக் கலியாணத்திலை சிவத்தானுக்கு நடந்தது அநியாயம்.
சிவத்தான் பாவம். அந்த இடத்திலேயே சின்னாபின்ன மாய் சிதைஞ்சு போனான். அவன்ரை முகத்தைப் பார்த்து கண்டு பிடிச்சிட்டன். அதுக்குப் பிறகு அவனை முன்னடிக்கே காணயில்லை. நான் எழும்பி வரேக்கை மண்டபத்தின்ரை பின்புறத்திலை சமையல் பாட்டியுடன் ஏதோ கதைப்பது மாதிரி பாசாங்கு பண்ணிக்கொண்டு நிண்டவனைத் தனி யாகக் கூப்பிட்டுக் கையில் பிடித்து ஆறுதல் சொல்லத் தொடங்கிய போது அவன்ரை கண்ணிலை நீர் நிறைஞ்சு வந்ததைக் கண்டு என்ரை மனம் எவ்வளவு கவலைப்பட்டது தெரியுமே?.
சிவத்தானுக்கும் எனக்கும் ஒரே வயசு, சின்ன முதல் வகுப்பிலிருந்து ஒண்டாப் படிச்சனாங்கள். அவன்ரை டாப்புப் பெயர்’ சிவஞானராசா தான். அது பிறகு 'சிவத்தான் எண்டு சுருங்கிப் போச்சு.
எனக்கு இப்ப வயசு நாற்பத்திமூன்று ஆகுது. அவன் ஒரு மாசத்தாலை எனக்கு மூத்தவன். எனக்கு ரண்டு பொம்பிளைப் பிள்ளையஞம் ஒரு பொடியனுமாக மூன்று பிள்ளையளாச்சு. சாடையாக கன்னத்திலை கொஞ்சம் நரை மயிரும் வந்திட்டுது. சிவத்தானுக்கும் அப்பிடித்தான். ஆனால், அவன் ஒண்டிக் கட்டை தனியன்.
இப்பவும் பள்ளிக்கூடக் காலத்திலை இருந்த மாதிரித் தான். எல்லாத்திலும் சரியான சுறுசுறுப்பு ஆர் என்ன உதவி கேட்டாலும் மறுப்பில்லை. எல்லாத்தையும் யோசிச்சு திட்டம்
வதிரி இ.இராஜேஸ்கண்ணன் தொலையும் வாக்கிஷங்கள் 70

போட்டு கச்சிதமாய் செய்ய வேணுமெண்டு நிற்பான். சரி யான நெஞ்சுறுதியானவன். செய்ய நினைச்சது சரியெண்டு கண்டால் தலை போனாலும் விடமாட்டான். தன்னோடை பட்சமாகப் பழகிற ஆக்களின்ரை சுகதுக்கத்திலை தானும் ஒராளா வந்து நிற்பான்.
அப்பிடிப்பட்டவன். மனமுடைஞ்சுபோய். வேதனைப் பட்டுத் தனக்குள்ளை தன்னை ஒடுக்கிக் கொண்டு நத்தை மாதிரி ஆகிப் போனான். அந்தக் குடும்பத்துக்காக அவன் பட்ட பாடெல்லாம். இந்தக் கலியாணத்தோட கழுவித் துடைச்சு எறிஞ்சாச்சு.
அந்த இடத்திலை நானெண்டால் கையைக் காலை நீட்டியிருப்பன். சிவத்தான் தன்ரை பொறுமையைக் காட்டிப் போட்டான்.
இதுவரைக்கும் அந்த வீட்டிலை மூண்டு கலியா ணத்தை முழுப் பொறுப்போடை நடத்தி முடிச்சிருக்கிறான். இது நாலாவது கலியாணம் ஒவ்வொண்டாச் செய்து வைச்சு செய்து வைத்து அவன் பட்ட சந்தோசத்தை முழுசாக் கண்டவன் நான் தான்.
எனக்குக் கூட, அரிச்சுனனுக்கு கிருஷ்ணன் மாதிரி சிவத்தான் தான்.
“டேய். மச்சான். என்ரை மருமோள் பெட்டையின்ரை கலியாணமும் முடிஞ்சால் நாலு கலியாணத்தை நடத்தி முடிச்ச ஆள் நான் என்ரை சகோதரிமாரிலை நடுவிலாளை வெளிநாட்டுக்கு அனுப்பி வைச்சன். மூத்தவளுக்கு வீடு கட்டிக் குடுத்தன். இளையவளைப் படிப்பிச்சு கச்சேரியிலை உத்தியோகமாக்கிப் போட்டன். கலியாணமும் அவளின்ரை விருப்பப்படி கட்டியாச்சு. மருமோள் பெட்டைக்கும் மாப்பிளை வெளிநாட்டிலை தானே. அவளுகள் ராசாத்தி மாதிரி வாழுவாளஸ். எனக்கினி என்னடா கவலை என்னை ராசா மாதிரி வைச்சிருப்பாளுவள்.”
தொலையும் பொக்கிஷங்கள் 71 வதிரி இ.இராஜேஸ்கண்ணன்

Page 46
அந்தக் கலியாணத்துக்கு ஏற்பாடுகள் செய்து கொண்டு திரிஞ்ச காலத்திலை ஒருநாள் அவன் இப்பிடிச் சொன்னது இண்டைக்கும் எனக்கு காதுக்கை கேட்டுக் கொண்டிருக்குது. சிவத்தான் படிச்ச காலத்திலை படிப்பிலை கொஞ்சம் அப்பிடி இப்பிடித்தான். ஆனால் கெட்டிக்காரன். சுழியன் ஓ.எல் படிச்ச காலத்திலை பஞ்சாட்சரம் கிளாக்கரின்ரை மகள் ரஞ்சித மலரை சுத்திக்கொண்டு திரிஞ்சவன். ஒருக்கால் ரண்டொருதரம் ரஞ்சிதம் மடிச்சபடி தந்த காயிதத்துண்டைக் கொண்டு போய் சிவத்தானிட்டை குடுத்துமிருக்கிறன்.
சிவத்தான்ரை தகப்பன் செத்ததோடை அவன் படிப்பை விட்டிட்டான். தகப்பன் செய்த தோட்டத்துக்குள்ளை கொத்தி முறிஞ்சு மாடுபோலை உழைச்சவன். பொயிலைக் கண்டு, வெங்காயம் எண்டு போகத்துக்குப் போகம் மாறிமாறிச் செய்வான்.
மூத்த தங்கைக்காரியின்ரை கலியாணத்துக்கு முன்னம் கல்வீடு கட்டி குடி புகுந்திட்டான். வீடு குடி புகுந்த அண்டை க்கு, "மச்சான். எப்பிடி வீடு சின்னன்தான் எண்டாலும் எடுப்பாயிருக்கு என்ன?. டேய். இது பொயிலை வித்துக் கட்டின வீடடா!. என்ரை தனி உழைப்படா!. என்ரை மூத்த தங்கச்சிக்கு."
எண்டு தன்ரை உழைப்பின்ரை கெட்டித்தனத்தை உரிமையோடை எனக்குச் சொல்லி பெருமையடிச்சான்.
மூத்த சகோதரியின்ரை கலியாணம் முடிஞ்சு ஒரு மாதத்துக்குப் பிறகு ஒருநாள் அவசர அவசரமாக என் னெட்டை வீடு தேடி வந்தான். சரியாகப் பதட்டப்பட்டான். அதுவரைக்கும் அவன் எதுக்காகவும் அப்பிடிக் குழம்பிப் போனதை நான் காணேல்லை."மச்சான் எனக்கு இந்த உதவியைச் செய்தியேண்டால் நான் உனக்கு காலடியுக்கை கிடப்பன்ரா. ரஞ்சிதம் தன்னைக் காவிக்கொண்டு போ' எண்டு நிக்கிறாளடா. நான் என்னடா செய்ய. இப்பதானே
வதிரி இ. இராஜேஸ்கண்ணன்/தொலையும் பொக்கிஷங்கள் 72

மூத்தவளின்ரை பொறுப்பு முடிஞ்சுது இன்னும் ரண்டு பேரெல்லே. இளையவளின்ரை படிப்பையும் நான் பார்க்க வேணும். இவள் ரஞ்சிதம் அவசரப்படுகிறாள். நீதான் மச்சான் அவளுக்குப் புத்திமதி சொல்லவேணும்.”
என்ரை சிநேகிதனுக்காக ரஞ்சிதத்துக்குப் புத்திமதி சொல்லிச் சரியாக மூன்றாம் மாதம் முடிய அவளுக்கு ஒரு 'கிளாக்கர்’ பொடியனைப் பார்த்து பஞ்சாட்சரத்தார் கலியாணம் முடிச்சு வைச்சிட்டார். நானும் கலியாணத்துக்குப் போய் வந்தனான் தான்.
அதுக்குப் பிறகு இண்டை வரைக்கும் ஒருநாள் தன்னும் சிவத்தான் ரஞ்சிதம் பற்றிக் கதைத்ததாகவோ, கவலைப்பட்டதாகவோ எனக்குத் தெரியவில்லை.
நடுவிலாளை வெளிநாட்டிலிருந்த ஒரு மாப்பிள்ளைக் குக் கட்டிக் கொடுத்து முடிய ஒரு முறை நானும் என்ரை மனிசியுமாக அவன்ரை வீட்டை போனம். அவனோடை தனியாக் கதைச்சம். அப்ப எனக்கு மூத்தபிள்ளை பிறந்து விட்டாள். ஒண்டா விளையாடின காலத்திலை இருந்து இப்ப வரைக்கும் அவன்தான் என்ரை சுகதுக்கங்களிலை முன்னுக்கு நிக்கிறவன். அவனை அப்பிடியே விட எனக்கு எப்பிடி மனம் வரும்?. பின்னடிக்கு அவன் தனிச்சுப் போடுவான். எண்ட ஏக்கம் என்னெட்டை இருந்து கொண்டே வருது.
"மச்சான். நீ உப்பிடியே இருக்கேலாது இப்ப என் னெட்டை ஒரு ஒழுங்கு இருக்கு. நல்ல குடும்பம். பெட்டை பரவாயில்லை. உன்ரை நிலமையும் அவைக்குச் சொல்லி யாச்சு. அவை அதுக்கெல்லாம் உதவியாக இருப்பினம். நீ ஒமெண்டால் சரி” எண்டு கதைச்சுப் பார்த்தன். அந்த நேரம் சிவத்தான்ரை மூத்த சகோதரிக்கு இப்ப கலியாணம் கட்டின மூத்த மருமோள் பிறந்திட்டாள்.
தொலையும் பொக்கிஷங்கள் 73 7வதிரி இ. இராஜேஸ்கண்ணன்

Page 47
“டேய். எனக்கு இனி இது என்னத்துக்கடா? காலம் போட்டுது. மூத்தவளுக்கும் பொம்பிளைப் பிள்ளை பிறந் திருக்கு, அவளின்ரை பிரியனும் வெளிநாடு போக ஒழுங்கு பண்ணுறார். அதுகளுக்கும் துணையாக நான்தானே நிக்க வேணும். இனி உந்தப் பேச்சை விடு”
எண்டு மொட்டையாகப் பேசி தட்டிக் கழிச்சுப் போட்டான். எனக்கெண்டால் கோபம் கொதிப்பாய் வந்தது. தன்னைப் பற்றி யோசிக்காத மோடனாக் கிடக்கெண்டு.
"அப்ப நீ உப்பிடியே இருந்து சகோதரியள், மருமக்கள் எண்டு பார்த்துக் கொண்டேயிரு உன்னை ஆர் பாக்கிறது. பேயா.” எனக்கு வந்த கோபத்திலை புழுத்தபாட்டாய் பேசத் தொடங்கினேன்.
"ஏன்டா. கோவிக்கிறாய். பொறுப்புகளைச் செய்து முடிக்கிறது தானே வாழ்க்கையின்ரை அர்த்தம்.”
சிரித்துக் கொண்டே தத்துவம் பேசி என்ரை கதையை அத்தோடை கட்' பண்ணிப் போட்டான்.
என்ரை வயதோட்டைக்காரன் சிவத்தான். நான், மனிசி மூண்டு பிள்ளையளோடை சந்தோசமாயிருக்க, உவ்வளவு செய்து போட்டும் ஓரமாக நிக்கிற நிலை வந்திட்டுது அவனு க்கு. நினைக்க எவ்வளவு வேதனையாக் கிடக்கு. ஒரு பக்கத்திலை கொதியாவுங் கிடக்கு.
அவர் பெரிய தியாகி?. மடையன். ஒத்தை மரம் மாதிரி ஒரு ஓரத்திலை நிக்கிற நிலைக்கு வைச்சிடாங்கள். இதுக்கு முந்தி உந்தச் சம்பிரதாயங்களெல்லாம் பார்த்த வங்களே?. அவன் தானே தனி மனிசனா நிண்டு சகோதரி மார் மூண்டு பேருக்கும் பேச்சுக்கால் தொட்டு பிள்ளைப் பெத்துவரைக்கும் எல்லாம் செய்து வைச்சவன். இப்ப மட்டும் என்ன சம்பிரதாயம். எங்கை இருந்து குதிச்சது?.
வதிரி இ.இராஜேஸ்கண்ணன் தொலையும் பொக்கிஷங்கள் 74

எனக்கு வாற கோபத்துக்கு வாயிலை வந்திடப் போகுது. நாகரிகமில்லாமல்,
புதிசாக் காசுபணம் வந்தவுடனை வாய்பாத்த சம்பிர தாயங்கள் அவைக்கு.
சரி மாப்பிள்ளை வீட்டுக்காரருக்கு பிடிக்காவிட்டாலும் சிவத்தான்ரை மூத்த மச்சான் அவர் புதிய வெளிநாட்டுப் பணக்காரனுக்கு என்ன மதி?. அவை சொல்லச் சொன்னால் அவரும் சொல்லிப் போடுறதே?. அவற்றை கலியாணத்து க்கும் சிவத்தான் தானே முன்னுக்கு நிண்டு எல்லாம் செய்தவன். அப்ப எங்கை போனது சம்பிரதாயம்?
பாவம் சிவத்தான் துடிச்சுப் போனான் மற்றவைக்குக் காட்டிக் குடுக்காமல் சமாளிச்சுப் போட்டான்.
பாவம் அவன். ஆசையோடை பட்டுச் சால்வை யாலை தலைப்பா கட்டிக் கொண்டு தாலி கூறைத் தட்டைக் காவிக் கொண்டு மண்டபத்திலை இறங்கி ஆசிர்வாதம் வேண்டிக் கொண்டு வரயுக்கை சரி மாமன் தானேயெண்டு அவனை அப்பிடியே விட்டிருக்கலாந்தானே. அதுக்கை அர்த்தம் நோண்டிப் பாக்கிறாங்கள்.
அவன்ரை மூண்டு சகோதரிக்கும் அவன் தானே அதைச் செய்தவன். வேறை ஆரும் செய்யேல்லை. மறிக்கவுமில்லை.
அவர் மாப்பிள்ளையின்ரை அப்பர் பெரிய சம்பிரதாயக் காரன் மாதிரி, சம்மந்தியெட்டை காதுக்குள்ளை குசுகுசுக்க அவரும் தன்ரை மச்சான்காரனைப் பற்றி ஒண்டையும் யோசிக்காமல் ஓடிப்போய் சிவத்தான்ரை காதுக்குள்ளை ஏதோ சொல்லிப்போட்டு தாலி கூறைத் தட்டை வாங்கிறார். என்ன மனிசர். அவன் தலைப்பா கட்டியிருந்த பட்டுச் சால்வையை அவனைக் கொண்டு அவிழ்ப்பித்து வேறை ஒராளெட்டை வாங்கிக் குடுக்கிறார்.
தொலையும் வபாக்கிஷங்கள் 75 வதிரி இ.இராஜேஸ்கண்ணன்

Page 48
சிவத்தான்ரை முகம் அப்பிடியே இருண்டு போச்சு. மெதுவாக அந்த இடத்தை விட்டு நழுவினான். பிறகு ஏதோ வேலை இருக்கிறதைப் போலை நடிச்சுக்கொண்டு அவசர மாகச் சமையல் கட்டுப் பக்கம் போனான். திரும்பி வரயில்லை எண்டு தான் நான் எழும்பித் தேடிப் போனனான். “என்னடா. நான் தாலி கூறைத் தட்டுக் காவக் கூடா தாம் சம்மந்த வழியிலை சொல்லினமாம். ஆரும் கலியாணங் கட்டிப் பிள்ளைப் பொத்தவையளை விடட்டுமாம். அத்தான் சொல்லுறார். கண்டிருப்பாய் தானே.”
என்று சொன்னவனின் குரல் தளதளத்தது. எனக்கு வந்த கோபம் அடங்கவேயில்லை.
நான் திரும்பி வந்து மண்டபவாசலில் கழற்றிவிட்ட செருப்பை காலிலே மாட்டிக் கொண்டு நிக்க
"மாமா. எங்கை பிள்ளை "போட்டோ’ எடுக்கேல்லை ஆளைக் காணேல்லை.”
சிவத்தானை படம் பிடிக்கிறதுக்காக தேடி ஆரவாரப் படுகினம்.
அவனைப் படம் பிடிச்சு வைச்சு என்ன செய்யப் போயினம்?.
அவனை உயிரோடை சாகடிச்சுப்போட்டு படம்பிடிக்கத் தேடித்திரியினம்.
சம்பிரதாயம் பாக்கிறவை வெளியிலை வாசலிலை வைச்ச குத்துவிளக்கு நூந்துபோய் கிடக்கு உள்ளுக்கு படம் பிடிச்சுக் கொண்டு நிக்கீனம்
கோபம் வராதே பின்னை. நீங்கள் சொல்லுங்கோ பார்ப்போம்.
- சுடர் ஒளி ஒகஸ்ட் 2008
வதிரி இ.இராஜேஸ்கண்ணன் தொலையும் பொக்கிஷங்கள் 78

பள்ளிக்கூடத்துக்குக் கிட்ட போகப் போக எனக்குச் சரியான சந்தோசமாக் கிடந்தது. தூரத்திலேயே "ஸ்பீக்கர்’ பாடுற சத்தம் கேட்டுது. உடம்பெல்லாம் பாரம் குறைஞ்சு பறக்கிறது போலை கிடந்தது. கெதியாப் போகவேணும்.
அப்பாவின்ரை சைக்கிள் பழைய சைக்கிள். ஒட்டைச் சைக்கிள். 'வீச்சா ஒடுங்கோ’ எண்டு சொல்லச் சொல்ல ஒடுறாரில்லை. அவசரம் தெரியாது அப்பாவுக்கு சோம்பல். எப்ப பார்த்தாலும் 'சிலோக் கோச்சி மாதிரித்தான். அப்பா
தொலையும் பொக்கிஷங்கள் 77 வதிரி இ.இராஜேஸ்கண்ணன்

Page 49
வின்ரை சைக்கிள் ஊந்து ஊந்து தான் போகும். நத்தை மாதிரி
தன்ரை சைக்கிளின்ரை திறத்திலை சாட்டு வேறை சொல்லுவார்.
"பிள்ளை. அவதிப்படாதையடா. இன்னும் அரை மணித்தியாலத்துக்கு மேல கிடக்கு விளையாட்டு துவங்க."
திரும்பத் திரும்ப இதைத்தான் எத்தினை தரம் சொல்லிப் போட்டார். அவருக்கு ஒண்டுந் தெரியாது.
"ரீச்சர் எங்களை அரை மணித்தியாலத்துக்கு முன்னமே வந்திடவேணும் எண்டு சொன்னவ. அப்பதானாம் வெளிக் கிடுத்தலாம். நேரத்துக்கு வராவிட்டால் வேறை ஆளைத் தானாம் விடுவினம்.”
எண்டு ரீச்சர் சொன்னதைச் சொன்னாலும் அப்பா வீச்சா' ஒடுறாரில்லை.
இவ்வளவுக்கு தனுஷிகாவின்ரை அப்பா அவளைக் கூட்டிவந்து விட்டிருப்பார். லாவண்ணியாவும் வந்திருப்பாள். அவையின்ரை அப்பாமார் மோட்டார் சைக்கிள் வைச்சிருக் கினம். பின்னை நேரத்துக்கு வருவினம். தனுஷி எப்பிடி வருவாள்?. அவள் புதுச் சப்பாத்து வாங்கியிருப்பாள். என்ரை சப்பாத்தும் கிட்டடியிலை தான் வாங்கினது புதுசு மாதிரித் தான்.
சட்டையிலை 'றோஸ் குத்தி வந்திருப்பாள். அவளி ன்ரை வீட்டிலை 'றோஸ் செடியள் பத்தையா நிக்குது. நானும் குத்திக் கொண்டுதான் போறன். அப்பா ஆற்ரையோ வீட்டிலை பத்து ரூபா குடுத்து வாங்கினவராம்.
வதிரி இ.இராஜேஸ்கண்ணன்! தொலையும் பொக்கிஷங்கள் 78

லாவண்ணியும் அப்பிடித்தான் நல்ல வடிவா வெளிக்கிட்டு வருவாள்.
எல்லாரும் வந்து வெளிக்கிடத் தொடங்கியிருக்குங்கள் போலை.
போன வருஷம் நான் விளையாட்டிலை சேரயில்லை. அப்பா டொனேசன் கட்டப் பிந்திப் போச்சுது. முதலாந் தவணை முடியிற நேரந்தான் நான் பள்ளிக்கூடம் போன னான். விளையாட்டுப் போட்டி எல்லாம் முடிஞ்சு போச்சு. எனக்குச் சரியான கவலை. என்ரை வகுப்பிலை மற்றப் பிள்ளையளெல்லாம் விளையாடினவையளாம். நான்தான் இல்லை. இப்ப நினைச்சாலும் அழுகை அழுகையா வருகுது.
இந்த முறை நான்தானாம் நல்லாகச் செய்யிறன் எண்டு எங்கடை ரீச்சர் சொன்னவ. மற்றவைக்கு முன்னாலை சொல்லையுக்கை எனக்கு கொஞ்சம் 'கொலர் அப்' தான்.
எங்கடை நிகழ்ச்சிதானாம் முதலிலை. எங்கடை ரீச்சர் சொன்னவா.
"ஏன் பிள்ளை அவதிப்படுகிறாய்?. உன்ரை நிகழ்ச்சி - அது எல்லா இடமும் போலை இடைவேளைக்குத் தானே நடக்கும்”
அப்பா இப்பிடியே ஏதோ சொல்லிக் கொண்டுதான் வாறார். இவர் தான் எங்கடை பள்ளிக்கூடப் பிறிஞ்சிப்பல்” மாதிரி
அப்பா இப்பிடித்தான். எல்லாத்துக்கும் விளக்கம் சொல்லிக் கொண்டேதான் இருப்பார். அம்மா எண்டா எனக்கு நல்லாப் பிடிக்கும். எங்கடை நிகழ்ச்சிக்கு 'யூனிபோம் தைக்க பள்ளிக்கூடத்திலை ஆயிரம் ரூபா கேட்டவை. நான் அம்மாவெட்டை கேட்டன். அம்மா, தான் உண்டியல் போட்டு
தொலையும் பொக்கிஷங்கள் 79 வதிரி இ.இராஜேஸ்கண்ணன்

Page 50
சேத்து வைச்ச ஐம்பது ரூபா, நூறு ரூபா தாள் காசுகளை எண்ணிக் கொண்டு பள்ளிக்கூடம் போனவா. ரீச்சரெட்டைத் தானே குடுக்கிறனெண்டு. நான் தான் வகுப்பிலையே முதல் யூனிபோம் காசு குடுத்திருப்பன் போலை, லாவண்ணி யின்ரை அப்பா பாங்க் மனேச்சர் அவள் கூட எனக்குப் பிறகு தான் குடுத்தவளாக்கும்.
அப்பாவின்ரை 'சிலோக் கோச்சி ஒரு மாதிரி பள்ளிக் கூட வாசலிலை வந்து நிண்டுது.
என்ன வடிவாச் சோடிச்சுக் கிடக்குது. எங்கடை நிகழ்ச்சிக்குத் தைச்ச 'யூனிபோம் நிறத்திலை 'டிசைனாக வாசலைச் சோடிச்சிருக்கினம். எங்கடை பள்ளிக்கூட 'ரை'யின்ரை நிறத்திலை தான். வாசலிலை இருந்து விளையாட்டு நடக்கிற வெட்டை வரைக்கும் மாலையள் கட்டிச் சோடிச்சுக் கிடக்கு.
எங்கடை பள்ளிக்கூட வாசலிலை ரண்டு பக்கமும் நிக்கிற உச்சாரத்துக்கு வளர்ந்திருக்கிற பெரிய மரங் களுக்குக் கீழை அப்பா சைக்கிள் விட்டிட்டு வரப் போறார்.
அப்பாவைப் பார்த்துக் காத்துக் கொண்டு நிக்க மனம் வரயில்லை. மனம் என்னை ஒடச் சொல்லிச் சொல்லுது. ஐஸ்கிறீம் வானும் நிக்குது. பிறகும் வாங்கலாந் தானே. நான் துள்ளிக் குதிச்சு ஓடினன். ஒரு ஓட்டத்திலை 'ஹவுஸ்" கொட்டிலுக்கே ஓடிவிட்டன்.
ரீச்சர் என்னைக் கண்டிட்டு சிரிச்சா. "கெட்டிக்காரி நேரத்துக்கு வந்திட்டா. நில்லங்கோ கொஞ்சநேரம் போனாப் பிறகு வெளிக்கிடுவம். இன்ரவலுக்குத் தானே நிகழ்ச்சி” அப்பா சொன்னது சரிதான். எங்கடை நிகழ்ச்சி இன்ரோவலுக்கு தானாம். இப்பதான் ரீச்சர் உண்மையைச் சொல்லுறா.
வதிரி இ.இராஜேஸ்கண்ணன்/தொலையும் பொக்கிஷங்கள் 80

ச்சே. எவ்வளவு வடிவான 'யூனிபோம்' எப்பதான் ரீச்சர் போட்டு வெளிக்கிடுத்தி விடுவாவோ, அந்தரமாக் கிடக்கு.
நான் 'யூனிபோமை போட்டுக் கொண்டு வெட்டை யிலை ஆடியாடிப் போக தூரத்திலை நிக்கிற அப்பாவுக்கு கண்ணுக்குத் தெரியுமோ தெரியாது. ஆரெண்டு யோசிப்பார். குறைக்கு முகமெல்லாம் 'றோஸ் பவுடரும் பூசி விடுவினம். அப்பா என்னை மட்டுக்கட்டமாட்டார் எண்டு தான் நினைக் கிறன்.
வெட்டையிலை' பெரிய அக்காமாரின்ரை ஓட்டங்கள் நடக்குது எல்லாரும் கத்துகினம் ஒடுறவையளோடை சேர்ந்து தாங்களும் ஒடப் பாக்கினம். ஹவுஸ்களின்ரை பேரையும், நிறங்களையும் சொல்லிக் கத்துகினம்.
எனக்கு அதைப் பார்க்க விருப்பமில்லை. நெஞ்செல் லாம் படபடத்துத் துடிக்குது.
ரீச்சரும் முன்னுக்குப் போய் நிண்டு துள்ளித் துள்ளிக் கத்துறா. எங்களை வெளிக்கிடுத்தி விடாமல்.
தரணி, லாவண்ணி, ஹம்ஷா, தனுஷி எண்டு எல்லாரும் ஆயத்தமாகத் தான் நிக்கிறம்.
உப்பிடி வெளிக்கிடுத்தாமல் நிண்டால் என்னமாதிரி?. தீடீரெண்டு கூப்பிட்டுவிட்டால் என்னெண்டு போறது?.
அம்மாவை வரச் சொல்லிக் கேட்டனான். அம்மா வரையில்லை. எங்கை வரச்சொன்னாலும் வெட்கப்படுவா. 'காதிலை கழுத்திலை ஒண்டும் இல்லாமல்’ எண்டு ஏதோ அப்பாவுக்குச் சொல்லுவா, உப்பிடித்தான் போன மாதம் எங்கடை ஊர்க் கோயில் திருவிழாவுக்குக் கூட வரமாட்டன் எண்டிட்டா.
தொலையும் பொக்கிஷங்கள் 81 வதிரி இ.இரால்ேஸ்கண்ணன்

Page 51
தரணியின்ரை அம்மாவும் வரவில்லைத்தான். ஆனால் ஹம்சாவின்ரை அம்மா வந்தவ அவளை வெளிக்கிடுத்தவாம் எனக்கெனன்ன எங்கடை ரீச்சர் இருக்கிறா தானே. அவவும் அம்மா மாதிரித்தானே. என்னிலை நல்ல பட்சம்.
முட்டைக்கண்ணி மகிஷாவும் தாயோடை வந்து நிக்கிறாள். அவள் ஒரு நாலைஞ்சு நாள் எங்களோடை பயிற்சி எடுத்தவள். பிறகு சரியாகச் செய்யிறா இல்லை எண்டு எங்கடை ரீச்சர் நிற்பாட்டிப் போட்டா. அது கலியாணி ரீச்சருக்கு பிடிக்கயில்லை. முட்டைக் கண்ணியை மட்டு மில்லை வேறையும் மூண்டு பேரையும் தான் நிற்பாட்டியாச்சு முட்டைக்கண்ணிக்கு பெரிய லெவல் எங்களோடை எல்லாம் சேரமாட்டா. நடப்புக் காட்டுவா. தகப்பன் டொக்ரராம். அவ
பெரிய இவ.
"ஏய். முட்டைக்கண்ணியின்ரை தாய் அங்கை பாரன். "பீ வகுப்பு கலியாணி ரீச்சரோடை பின்னாலையும் முன்னா லையும் இழுபடுறா" லாவண்ணிதான் எனக்கும் சொன்னாள். முட்டைக்கண்ணி மகிஷா பீ வகுப்பு நாங்கள் ‘ஏ’ வகுப்பு இரண்டு வகுப்பையும் கலந்துதான் எங்கடை நிகழ்ச்சி
"இஞ்சை. ஏய். அங்கை பாரன் முட்டைக் கண்ணி யின்ரை தாயும் கலியாணி ரீச்சரும் எங்கடை ரீச்சரை தனியாக் கூட்டிக் கொண்டுபோய் ஏதோ குசுகுசுக்கினம். பின்னாலை வாத்து முட்டைக் கண்ணியும் நிக்கிறாள்.”
லாவண்ணியும் எங்களோடை சேர்ந்து கொண்டு சொல்லுறாள்.
66
ஏய். முட்டைக் கண்ணியின்ரை அம்மாவும் ரீச்சர் வேலை தான் வேறை எங்கையோ படிப்பிக்கிறா. கலியாணி ரீச்சர், எங்கடை ரீச்சர் எல்லாரையும் தெரிஞ்சிருக்கும். அதுதான் கதைக்கினம் போலை.”
வதிரி இ.இராஜேஸ்கண்ணன் தொலையும் வாக்கிஷங்கள் 82

நான் அவையின்ரை கதையளை மறிச்சு சொன்னன்.
சரியெண்டு தலை ஆட்டுகினம்.
லாவண்ணியின்ரை அப்பா பாங்க் மனேச்சர்" தரணி யின்ரை அப்பா மாஸ்டர் ஹம்சாவின்ரை அப்பா கிளாக்கர் தனுஷியின்ரை அப்பா எங்கடை பள்ளிக் கூடத்திலை பெரிய அக்காமாருக்கு படிப்பிக்கிற 'சேர்' எல்லாரும் வந்திருப் பினம்.
எட்டிப் பார்த்தன். அங்காலை வெளியாக்கள் நிக்கிற பக்கமாக அப்பா நிக்கிறார். ஆசையா என்ரை நிகழ்ச்சியை பார்க்க முன்னுக்கு வந்து நிக்கிறார். அடிக்கடி என்ரை ஹவுஸ்" இருக்கிற பக்கமும் பார்க்கிறார். நான் நிக்கிறது தெரியேல்லைப் போலை கிடக்கு தூரந்தானே.
"இன்ரோவல்’ நிகழ்ச்சியிலை நல்ல வடிவா ஆட வேணும். அது பாட்டுக்கு டாண்ஸ்’ தானே. இடைக்கிடை பரத நாட்டியம் மாதிரியும் சொல்லித் தந்தவை. எனக்கு நல்ல விருப்பமான ஆட்டம் அதுதான்.
அப்பா ஆக்களுக்குள்ளாலை எட்டி எட்டிப் பார்க்கிறார். என்னைத் தான் போலை,
என்ரை நிகழ்ச்சி முடிய அப்பாட்டை ஓடிப் போவம். என்ரை யூனிபோமையும், வெளிக்கிட்ட வடிவையும் பாத்திட்டுச் சந்தோசப்படுவார். உடனை ஆளைக் கொண்டு ஒரு ‘கோண் ஐஸ்கிறீம் வாங்கி யூனிபோமிலை ஊத்திப் போடாமல் குடிக்க வேணும்.
66
ஏய். ரீச்சர் எல்லாரையும் கூப்பிடுறா. வெளிக்கிட வரட்டாம். வாங்கோ. நேரம் கிட்ட வந்திட்டுதாம்.”
தரணிதான் கூப்பிட்டாள். எல்லாரும் போறம், ஐயோ. நேரம் வந்திட்டுது. எனக்கு உடம்பெல்லாம் சூடேறுது
தொலையும் வபாக்கிஷங்கள் 83 வதிரி இ.இராஜேஸ்கண்ணன்

Page 52
மாதிரிக் கிடக்கு, மேகத்திலை பறக்கிற மாதிரிக் கிடக்கு. சப்பாத்துப் போட்டாச்சு. தலை வடிவாக் கட்டிக் கொண்டு தான் வந்தனான். குழம்பினாலும் தொப்பிபோட மறைக்குந் தானே. இனி என்ன நிகழ்ச்சிக்கெண்டு தைச்சு, முதல் போட்டுப் பார்த்த “யூனிபோம்"தானே போடக் கிடக்கு. அது எனக்கு நல்ல அளவு, வடிவு. அதைப் போட்டால் சரி பிறகு கை ரண்டிலும் கலர் கலரா குஞ்சங் கட்டுறது. அவ்வளவு தான்.
வெளிக்கிடுற இடத்திலை முட்டைக் கண்ணியின்ரை தாய் நிக்கிறா. பிறகும் ஏதோ கலியாணி ரீச்சரோடை குசுகுசுக்கிறா.
எங்கடை ரீச்சர் எனக்கு 'யூனிபோம்’ போட்டு விடுறா. என்னைப் பார்த்து ஏதோ கதைக்கினம். எனக்கு 'யூனிபோம் வடிவாக் கிடக்குப் போலை. அதைத்தான் கதைக்கின மாக்கும்.
எட்டிப் பாக்கிறன் அப்பாவை சின்னனாத் தெரியுது. இப்பிடியே பார்த்தால் அப்பா என்னைத் தூக்கிக் கொஞ்சு வார். முடிஞ்சாப் பிறகு போறது தானே.
எங்கடை ரீச்சர் தனியாத்தான் எல்லாஞ் செய்யுறா. பாவம். கலியாணி ரீச்சர் உதவி செய்யிறா இல்லை. அவ அவையோடை கதைச்சுக் கொண்டே நிக்கிறா. முட்டைக் கண்ணி மகிஷா என்னைத் தான் பாக்கிற மாதிரிக் கிடக்கு சிரிக்கிறா இல்லை.
“எல்லாரும் உப்பிடியே குழப்பாமல் நிக்க வேணும் ரீச்சர் முன்னுக்கு நிப்பன். "லைன்' பண்ணி நில்லுங்கோ. நான் விசில் ஊதிப்போட்டு கையைக் காட்டுவன். நீங்கள் துள்ளித்துள்ளி ஒடி கிறவுண்ட்’க்குள்ளை போக வேணும் என்ன?.”
வதிரி'இ. இராஜேஸ்கண்ணன் /தொலையும் வாக்கிஷங்கள் 84

ரீச்சர் தான் சொல்லிப்பொட்டு வெளியிலை போட்டா. நாங்கள் எல்லாரும் வண்ணாத்திப் பூச்சியள் மாதிரி கை யிலை கட்டின குஞ்சங்களை அசைச்சுப் பாத்துக் கொண்டு நிக்கிறம்.
ரீச்சர் வெளியிலை இருந்து கையைக் காட்டுறதை எதிர்பார்த்துக் கொண்டு நிக்கிறம். எல்லாரும் "றெடியா'
க்கினம்.
திடீரெண்டு என்னை ஆரோ பிடிச்சு இழுக்கினம். கலியாணி ரீச்சர் தான். மறைவிலை கொண்டு போய் மளமளவெண்டு என்ரை தொப்பியையும், யூனிபோமையும் கழட்டுறா. முட்டைக்கண்ணிக்கு அதைப் போடுகினம். அவளின்ரை தாயும் சேர்ந்து தான். எனக்கு எங்கடை ரீச்சரைக் கூப்பிட வேணும் போலை கிடக்கு. ஆனால் முடியேல்லை. குரல் வருதில்லை மகிஷாவுக்கு முக மெல்லாம் 'றோஸ் பவுடர் அப்புகினம். முட்டைக்கண்ணி சிரிக்கிறாள்.
எனக்கு அழுகை வரூது. உள்ளுக்கை போடுற பெற்றிக் கோட்டோடை நிக்கிறன் எல்லாப் பிள்ளையஞம் பாக்கிற மாதிரிக் கிடக்கு. வெக்கமாக் கிடக்கு.
"உது உந்தக் கிழக்கு றோட்டிலை இருக்கிற பிள்ளை. இங்கத்தை ஆக்களில்லை. அவவின்ரை கிளாஸ் ரீச்சரின்ரை செல்லம். தாய் யூனிபோமுக்கு அரைவாசிக் காசுதான் தந்தவ. மிச்சம் பிறகாம் அதுகள் உப்பிடித்தான். ஆக்களைத் தெரியுந்தானே உனக்கு. இதுகளுக்கு ஏன் இதெல்லாம்?. உவை வந்து இஞ்சை ஒண்டும் நியாயம் கேட்டுப் படைக்கப் போறது கிடையாது”
முட்டைக் கண்ணியின்ரை தாய்க்குச் சொல்லிக் கொண்டே முட்டைக்கண்ணியை 'லைனிலை இடையிலை
செருகி விடுறா கலியாணி ரிச்சர்.
தொலையும் பொக்கிஷங்கள் 85 வதிரி இ.இராஜேஸ்கண்ணன்

Page 53
தனுஷி, தரணி, லாவண்ணி எல்லாரும் என்னைக் கவலையோட பாக்குதுகள்.
எனக்கு அழுகை வந்தது. கண்ணை கண்ணிர் மறைச்சுக் கொண்டு நிறைஞ்சு வந்தது.
ரீச்சர் விசில் ஊதுறது அடைச்ச காதுக்குள்ளை கேக்கிறது மாதிரிக் கேக்குது. தலையெல்லாம் சுத்திற மாதிரிக் கிடக்கு.
எல்லாரோடையும் சேர்ந்து முட்டைக்கண்ணியும் துள்ளிக் கொண்டு ஒடுகிறாள். ரீச்சரும் கவனிக்கேல்லைப் போலை.
நான் அழுகிறன். கண்ணீர் வருது என்ர வடிவான யூனிபோமை மாத்திப் போட்டிட்டினம். எங்கடை ரீச்சருக்கு சொல்லி அழ வேணும் போலை கிடக்கு வெளியிலை போக வெட்கமாக் கிடக்கு. "பெற்றிக்கோட்டுக்குள்ளாலை நிக்கர்’ தெரியுது. சப்பாத்தோடையும் பெற்றிக் கோட்டோ டையும் எப்பிடி வெளியிலை போறது. வெள்ளைச் சட்டை யையும் ரீச்சர் வாங்கி உள்ளுக்கை வைச்சிட்டா.
“ஸ்பீக்கரிலை’ எங்கடை "இன்ரோவல்’ நிகழ்ச்சிப் பாட்டுக் கேக்குது. அப்பா என்னை தேடித் தேடிப் பார்ப்பார்.
நானும் எட்டி எட்டிப் பாக்கிறன். அப்பாவை இப்ப தெரியேல்லை. எல்லாரும் இன்ரோவல் நிகழ்ச்சி பாக்கிற துக்கு முன்னுக்கு திரண்டு குவிஞ்சு கொண்டு நிக்கினம்.
என்னைக் கவனிக்கினமில்லை.
நான் அழுது கொண்டே நிற்கிறன். பாட்டு கேட்க கேட்க இன்னும் நல்லாத் தலை சுத்துற மாதிரிக் கிடக்கு.
கண்ணுக்குள்ளை நிண்ட கண்ணிருக்குள்ளாலை அப்பா கலங்கலாத் தெரியிறார். அப்பா தான். என்னைத்
வதிரி இ.இராஜேஸ்கண்ணன் தொலையும்வபாக்கிஷங்கள் 86

தேடி வந்திட்டார். என்னைக் கண்டவுடனை அவருக்கு கண் கலங்கியது.
என்ன நடந்ததெண்டு கேட்கிறார். நானும் அழுதழுது சொல்லுறன்.
என்னைத் தூக்கி தோளிலை போட்டார். "வாடா செல்லத்துக்கு ஐஸ்கிறீம் வாங்கித் தாறன்” எண்டு என்ரை மனசை மாத்தப் பாக்கிறார். எனக்கு ஒண்டும் தேவையில்லை எண்டு சொல்லி அழுறன்.
அப்பா என்னை வெளியிலை கொண்டு போறார். வெளியிலை சோடிச்சுக் கிடக்கிற தெல்லாம் என்ரை கண்ணிருக்கை கரையிற மாதிரிக் கிடக்கு வாசலிலை ரண்டு பக்கமும் நிக்கிற பெரிய மரங்கள் என்ரை தலையிலை விழுற மாதிரிக் கிடக்குது.
இருத்திறார்.
கைதட்டிக் கேக்குது இன்ரோவல் நிகழ்ச்சி முடிஞ்சுது போலை.
அப்பா சைக்கிளிலை ஏறி உழக்கத் தொடங்கிறார். எங்கடை ரீச்சர் வாசல் வரைக்கும் ஓடி வாறா. என்ரை பேரைச் சொல்லிக் கூப்பிடிற மாதிரிக் கிடக்குது.
அப்பா திரும்பிப் பார்க்கமாமல் ஓடிக் கொண்டு போறார். பாவம். ரீச்சர் என்னோடை கதைக்கத்தான் வந்திருப்பா போலை,
Q856mo - 2008 அமரர் கலாபூஷணம் புலோலியூர் க. சதாசிவம் ஞாபகார்த்த சிறுகதைப் போட்டியில் 2ஆவது பரிசு பெற்ற கதை
தொலையும் பொக்கிஷங்கள் 87 வதிரி இ.இராஜேஸ்கண்ணன்

Page 54
நூலாசிரியர் பற்றி.
பெயர்
பிறந்த திகதி
முகவரி
தொழில்
கல்வித்தகைமை :
ஆக்கம் பிரசுரமான பத்திரிகைகள்
ஆர்வத்துறைகள் :
வெளிவந்த நூல்கள்
: வதிரி இ. இராஜேஸ்கண்ணன்
: 1973-01-22
: 'சாத்வீக பிரஸ்தம்"
இமையாணன் கிழக்கு, உடுப்பிட்டி
; விரிவுரையாளர், சமூகவியல்துறை,
யாழ் பல்கலைக்கழகம்.
B.A (Hons) - sypat56úluu6ö M.A - Feypas65u6)
: உதயன் - சஞ்சீவி, தினக்குரல்,
வலம்புரி, சுடர் ஒளி, இடி, தாமரை, தூண்டி, மல்லிகை, ஞானம்.
சிறுகதை, கவிதை, சமூகவியல்
கட்டுரை, விமர்சனம்
: முதுசொமாக - 2002
(சிறுகதைத் தொகுதி) போர்வைக்குள் வாழ்வு - 2008 (கவிதைத் தொகுப்பு)
88

0 பரிசுகள்
0 பதிவுகள்
: (1) அல்வையூர் கவிஞர்
மு. செல்லையா ஞாபகார்த்த பரிசு - 2008 - சங்கார தரிசனம்
(i) செம்பியன் செல்வன்
ஞாபகார்த்த பரிசு - 2007 - குதறப்படும் இரவுகள்
(i) அமரர் கலாபூஷணம்
புலோலியூர் க. சதாசிவம் ஞாபகார்த்த பரிசு - 2008 - துகிலுரிப்பு
: (1) 2007இல் அறிமுகமான தமிழ்
மொழியும் இலக்கியமும் 10ஆம் வகுப்புக்கான புதிய பாடத்திட்டத்துக்கான ஆசிரியர் அறிவுரைப்பு வழிகாட்டியில் 'தொலையும் பொக்கிஷங்கள்' கதை இடம்பெற்றுள்ளது.
(i) முதல் தொகுதி முதுசொமாக" என்பதிலுள்ள 'லீவு போம்" சிங்களத்தில் மொழிபெயர்க்கப் பட்டு பிரசுரமானது.
89

Page 55


Page 56
எந்தவொரு சிறிய கருவையும் கூடிய வல்லமை வதிரி இ ! திருக்கிறது. இவரிடம் காணப்ப பார்வை, கூரிய அவதானிப்பு d எடுத்துக் கொண்ட கருவினைப் இலக்கியப் பெறுமானத்தைத் த
அன்றாடம் சந்திக்கும் மக்க6ை வாழ்க்கைக் கோலங்களைத் தா மொழியில் வடிவமைத்து அதி யும் பெற்றுள்ளார். அவர் கைய களை சாகாவரம் பெற்றவைகள் தாராளமாகவே கூறலாம்.
- புலோலி
 
 

சிறந்த சிறுகதையாக்கிவிடக் இராஜேஸ்கண்ணனுக்கு வாய்த் டும் சமூகம் சார்ந்த யதார்த்தப் த்ெதிரிப்புத் திறன் என்பன இவர் பலப்படுத்த உதவுகின்றன. ஓர்
ருகின்றன.
- தி. ஞானசேகரன் ஆசிரியர் - ஞானம்)
ா ஆழ்ந்து புரிந்து அவர்களது ன் சார்ந்த வடமராட்சி மண்ணின் ல் இராஜேஸ்கண்ணன் வெற்றி ாளும் மொழியே அவரது கதை ாக திகழ வைத்துள்ளன என்று
யூர் ஆ. இரத்தினவேலோன்