கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: வாழ்வுச் சுவடுகள்

Page 1


Page 2

வாழ்வுச் சுவடுகள்
அகிலம் வெளியீடு
யாழ்ப்பாணம்
2006
சிதம்பரப்பிள்ளை இராசரத்தினம் (இறைமணி)

Page 3
Title of the Book : Vaalvu Suvadugal (Autobiography)
Author : Dr. Sithamparapillai Rajaratnam J.P. (Retired Principal)
Address : Velanai East, Velanai – 02, Sri Lanka.
121, Second Cross Street, Jaffna, Sri Lanka.
Edition : 2006.
Copyright : The Author
Size : 1/8
Pages : 172
Publisher : "Akilam" Publishers. 07,
Ratnam Lane, K.K.S.Road, Jaffna.
Printers : Harihanan printers, Jaffna.
Prize:
நூல் வாழ்வுச் சுவடுகள். (சுயசரிதம்)
ஆசிரியர் வைத்தியக் கலாநிதி சிதம்பரப்பிள்ளை இராசரத்தினம்
ஜே.பி. இளைப்பாறிய அதிபர்)
முகவரி வேலணை கிழக்கு, வேலணை -02,இலங்கை,
121, இரண்டாம் குறுக்குத் தெரு, யாழ்ப்பாணம், இலங்கை.
பதிப்பு 2006. பதிப்புரிமை ஆசிரியருக்கு அளவு : 1/8
பக்கம் 172
வெளியீடு : "அகிலம்" வெளியீடு 07, இரத்தினம் ஒழுங்கை,
கே.கே.எஸ் வீதி, யாழ்ப்பாணம்.
அச்சுப்பதிப்பு:கரிகணன் பிறிண்டேர்ஸ்
விலை

உள்ளடக்கம்
பக்கம்
அணிந்துரை என்னுரை
ஏடுதொடக்கல்
விளையாட்டு
பனம் பிரயோசனம்
சவாரி
பட்டாணி
அரசியல் பிரவேசம்
வேலணை கிராமச் சங்கம் தில்லுமுல்லு மத்திய மகா வித்தியாலம் கூட்டுறவு
1. கல்மடுக் கமம்
1
O
12. சனசமூக நிலையங்களின் சமாசம் .
13. கோவில் பரிபாலன சபை
14. பலநோக்குக் கூட்டுறவுச் சங்கம் . 15. பிரசைகள் குழு
16. வைத்தியம் 17. மாந்திரீகம் 18. விவசாயம்
19. ஆன்மீகம் 20.ச்மாதான நீதவான் 21. கவிதை
22.கால்நடைகள்
25.பயணங்கள்
24.அவலங்கள்
25.இடப்பெயர்வுகள்
26. மீளக் குடியமர்வு
O1
O6
14
18
21
25
29
33
36
41
45
50
53
60
64
68
74.
79
85
96
99
112
119
139
150
158

Page 4

அணிந்துரை
வேலணையூர் சிதம்பரப்பிள்ளை இராசரத்தினம் அவர்களின் "வாழ்வுச் சுவடுகள்" என்ற புனைகதை சாரா ஆக்கத்தைப் படித்து முடித்த போது என் மனதில் எஞ்சி நிற்கும் உணர்ச்சியை விபரிப்பதற்கு வார்த்தைகள் போதாதுள்ளன. படித்து முடித்ததும் எண்பது ஆண்டு கால யாழ்ப்பாணத்தை அதன் பலத்தோடும் பலவீனத்தோடும் தரிசித்த உணர்வும், தமிழ் மக்களின் கலாசார அடையாளங்களை இனங்கண்ட பெருமிதமும் ஒருங்கே ஏற்படுகின்றன. உண்மையில் இந்நூலாசிரியர் காலத்திற்கேற்ற ஆக்கப்பணியொன்றினைச் செய்துள்ளார்.
புகழ் பெற்ற வைத்திய கலாநிதி, சமாதான நீதிவான், ஆசிரியப் பெருந்தகை, கவிஞர், கமக்காரர்,அரசியல்வாதி,தர்மகர்த்தா, கூட்டுறவுச் சங்க உறுப்பினர் எனப்பல சமூகப் பரிமானங்களைக் கொண்டவர் இந் நூலாசிரியர். எண்பது அகவைகளை நிறைவு செய்துள்ள நிலையில் தனது அனுபவங்களின் திரட்டாக இப்புனை கதை சாரா ஆக்கத்தைத் தந்துள்ளார். யாழ்ப்பாணச் சமூகத்தின் பண்பாட்டுக் கூறுகளை மிக இயல்பாகச் சித்திரித்துள்ளமை இந்நூலின் சிறப்பு நுணுக்கமான அவதானிப்பினை இவரது நூலில் எங்கும் காண முடிகின்றது. வார் ஒடுதல், காசு எறிதல், கிட்டிப்புள், நாட்டு வைத்தியம், மாந்திரீகம், பனாட்டு வேலை. எனப் பல பண்பாட்டுக் கூறுகள் இந்நூலில் விபரிக்கப்பட்டுள்ளன. நாம் இழந்து கொண்டிருக்கின்ற எமது பாரம்பரியத்தினதும் கலாசாரத்தினதும் பண்பாட்டுக் கூறுகளின் தனித்துவத்தை அறியும் போது நமது முன்னோரை நினைத்துப் பெருமிதமும், அவற்றினை நாம் கைக்கொள்ளாது விதேசிய கலாசாரச் சுழியுள் அமிழ்வதை நினைத்துக் கழிவிரக்கமும் ஏற்படுகின்றன. திரு. இராசரத்தினம் அவர்கள் இந்த நாட்டின் சமூக அமைப்பை மானிடவியலாளருக்கு இந் நூலின் மூலம் இனங்காட்டியுள்ளார். எனில் அதில் இரு கருத்துக்களில்லை.

Page 5
இந்த நூலில் நாம் மறந்து போன, ஆனால் மறக்கக் கூடாத பல சம்பவங்கள் சுவைபடச் சித்திரிக்கப்பட்டுள்ளளன. சமூக பழக்க வழக்கங்களைச் சம்பவங்களோடு இணைத்து இரசனையோடு விபரிக்கும் பாங்கும், தொழில்சார் நுட்பங்கள், அரசியல் தில்லுமுல்லு போன்றவை சம்பவங்களோடு சித்திரிக்கப்பட்டிருக்கும் முறையும் ஆக்கவிலக்கிய கர்த்தாக்களுக்கேயுரிய திறன்கள் இந்நூலாசிரி யருக்குக் கைவந்த கலையாகவுள்ளது. அவரோடு வாழ்ந்த, வாழ்ந்து கொண்டிருக்கும் சமூக மாந்தரை நிறைய விபரித்துள்ளார். மானிடத்தின் நல்ல இயல்புகளை அவர் அவர்கள் மூலம் சுட்டிக்காட்டியுள்ளார்.
"வாழ்வுச் சுவடுகள்" தமிழுக்குக் கிடைத்த அரிய படைப்பாகும். நாம் வந்த பாதையைத் திரும்பிப் பார்ப்பதற்கு இந் நூல் உதவுகின்றது. நமது பண்பாட்டுக் கூறுகளை அறிவதற்கும் நாம் மறந்து போன பழக்க வழக்கங்களைத் தெரிந்து கொள்வதற்கும் கைகொடுக்கும் நூல் இது என்பேன். இந்த நூலிலிருந்து ஒரு "சொற்களஞ்சியம் தயாரிக்க முடியும். சமூக மட்டத்தில் பழகிய வார்த்தைகள் / சொற்கள் இந்த நூலில் விரவிக்
கிடக்கின்றன.
"வாழ்வுச் சுவடு" நூலிற்கு ஓர் அணிந்துரை எழுதுகின்ற வாய்ப்பு எனக்குக் கிடைத்தமைக்காகப் பெருமைப்படுகின்றேன். நான் பிறந்த போது அவர் இருபத்தைந்து வயது இளைஞனாக விளங்கியவர். எமக்கு வழிகாட்டி போன்ற ஒரு பெரியவர் தனது நூலிற்கு அணிந்துரை வரைய அனுமதித்தமைக்கு தாழ்மையான நன்றிகள்.
க. குணராசா
(செங்கைஆழியன்)
vi

என்னுரை
யாழ்ப்பாணத்திலிருந்து கடந்த கால் நூற்றாண்டாக வெளிவரும் இலக்கியச் சஞ்சிகையான மல்லிகை இதழின் ஆசிரியர் டொமினிக் ஜீவாவோடு வெகுகாலம் பழக்கமுண்டு. 1991ஆம் ஆண்டு ஏப்பிரல் மாதக் கடைசியில் போர் நடவடிக்கை காரணமாக வேலணையிலிருந்து புலம் பெயர்ந்த நாங்கள் யாழ்ப்பாணத்தில் வசித்தோம். அவ்வேளை மல்லிகை ஆசிரியரோடு மிக நெருக்கமாகப் பழகும் வாய்ப்புக் கிடைத்தது. அவரும் என்னை வீட்டிற்கு வந்து சந்திப்பதுண்டு. எனது சமூக சேவைகள் பற்றியும் எனது எழுத்துப்பணி பற்றியும் நன்கு தெரிந்திருந்தார். சற்றேறக்குறைய ஒரு நூற்றாண்டு வாழ்ந்து பல சாதனைகள் புரிந்திருக்கிறீர்கள். அவற்றை எழுத்தில் பதித்தால் வரும் சந்ததியினர் சில வரலாறுகளைச் சிக்கலின்றி அறிய உதவும். ஆதலால் உங்கள் வாழ்க்கை வரலாறுகளை ஒரு நூலாக எழுதுங்கள் எனக் கேட்டுக் கொண்டார். மென்மேலும் நினைவூட்டிக் கேட்டபோது அது ஒரு நல்ல கருத்து என்பதைப் புரிந்து கொண்டேனாயினம், எழுதலாம் ஆனால் எழுதியதை அச்சிட்டு வெளியிடுவது வெகு சிரமமல்லவா என்றேன். நீங்கள் எழுதுங்கள் உங்களுக்கு எந்தச் சிரமமுமில்லாமல் அச்சிட்டு மல்லிகைப் பந்தல் வெளியீடாக நான் வெளியிடுகிறேன் என்று அந்தப் பொறுப்பை அவர் ஏற்றுக் கொண்டார்.1995ஆம் ஆண்டு எழுதத் தொடங்கினேன். வெவ்வேறு தலையங்கங்களில் நாலுவயதில் எனக்கு ஏடு தொடக்கியதில் ஆரம்பித்து நினைவில் நின்ற சம்பவங்களையும் அத்தோடு தொடர்புபட்டவர்களையும் அக்காலத்து ஊர் நடப்புகளையும் பின்னிப் பிணைத்து நாட்டில் நான் புரிந்த பொது நலப் பணிகளையும் சாதனைகளையும் உள்ளடக்கி ஒரு நூலாக எழுதினேன். ஓரளவு எழுதி முடித்தும் முடியாமலும் இருந்த வேளை வலிகாமத்து மக்கள் அனைவரும் போர் நடவடிக்கையால் இடம் பெயர்ந்தனர். நாங்களும் இடம் பெயர்ந்து தென்மராட்சி சென்றோம். ஜீவா கொழும்பு சென்றார்.
1996 ஏப்பிரல் மாதம் யாழ் நகரில் மீளக் குடியமர்ந்தோம். கொழும்பு சென்ற ஜீவா திரும்பவில்லை. எழுதியதெல்லாம் கிடப்பில்
vii

Page 6
போடப்பட்டது. வலிகாமத்திலும், யாழ் நகரிலும் மீளக்குடியமர்வு நிகழும் போது ஏற்கனவே புலப் பெயர்வு நிகழ்ந்த தீவுப் பகுதியிலும் மீளக்குடியமர்வு சாத்தியமோவென எனது மகனும் நானும் பல தடவைகள் வேலணைக்குப் போய்வந்தோம். ஐந்து ஆண்டுகளாக மக்கள் புலம்பெயர்ந்த கிராமம் காடாகக் காட்சியளித்தது. பாதைகள் ஒழுங்கைகள் பற்றை மண்டிக்கிடந்தன. எருக்கலையும் இடைக்கிடை முட்பற்றைகளும் உயர வளர்ந்து வீட்டு வளவு காணிகளை மூடிமறைத்து நாட்டைக் காடாக்கியிருந்தன. கட்டிடங்கள் உடைந்தும் தகர்ந்தும் கிடந்தன. காரியாலயங்கள், பாடசாலைகள் பாவனைக்குதவக் கூடியனவாயில்லை. தூரதேசம் இடம் பெயர்ந்த மக்கள் விரைவில் வந்து குடியமர முடியாது. எவ்வாறாயினும் பழைய பொலிவோடு அக்கிராமம் புனரமைக்கப்பட ஒன்று அல்லது இரண்டு தசாப்தங்கள் கூடத் தேவைப் படலாம். அல்லது அது சாத்தியமாகாமலும் போகலாம் என்பதே கசப்பான உண்மை நிலையாகும். வாழ்வுக்கேற்ற சகல வசதிகளையும் வளமாக அமைத்து செழிப்புடன் வாழ்ந்த கிராமம் முற்றுமுழுதாகச் சீரிழந்து போன கவலை இன்றுவரை தாங்க முடியாதுள்ளது. எனது கிராமத்தின் இந்த வீழ்ச்சி நிலையைக் கண்ட போது அப்பிரதேசம் எழுச்சி பெற்றிருந்த வரலாறு கட்டாயம் எழுத்திற் பொறிக்கப்பட வேண்டியது அவசியம் என்று உணர்ந்தேன். ஆகவே இச்சந்தர்ப்பத்தில் எவ்வாறாயினும் எழுதி நூலாக வெளியிடுவதென்று முடிவு செய்தேன். அக்கிராமத்தின் எழுச்சி பற்றி நான் ஏற்கனவே எழுதியது ஒரு தீர்க்க தரிசனமான செயல் என்றே கருதுகிறேன். --
எழுச்சியும் வீழ்ச்சியும் பெற்ற ஒரு கிராமத்தின் கதையை வரலாற்றை அந்தக் கிராமத்தின் எழுச்சி முதல் வீழ்ச்சிவரை தன்னை அர்ப்பணித்து வாழ்ந்தவரின் சுய் சரிதையோடு இணைந்து வெளிவருவது காலத்தின் தேவையெனக்கருதி அறிஞர் சமுதாயம் அங்கீகரிக்குமென மனதார நம்புகிறேன். மேலும் அதிபராக, ஆசிரியராக, சமூக சேவையாளராக, கூட்டுறவாளராக, அரசியல் வாதியாக, விவசாயியாக, வைத்தியராக, சங்கீதாசிரியராக, சோதிடராக, கவிஞராக, அறங்காவலராக, ஆன்மீக வாதியாக பரோபகாரியாக எல்லாம் விளங்கி அந்தந்ததுறை சார்ந்த நிபுணர்களோடு பழகி
viii

அவர்களுள் ஒருவராக நின்ற நான் பிறந்த ஊருக்குப் பெருமை தேடிக் கொடுத்திருக்கிறேன் என்பதை எதிர்காலச் சந்ததியினர் அறிந்து மனம் பூரிக்கவும் அவ்வாறே தம்மை அர்ப்பணித்து நாட்டைப் பெருமைப் படுத்தவும் இந்நூல் ஊக்கமளிக்குமெனக் கருதி மகிழ்ச்சியடைகிறேன்.
"அகிலம்" வெளியீட்டினர் கூறுவதுபோல ஒரு நூற்றாண்டு கால வாழ்வியல் தரிசனத்தை முன்வைக்கும் இந்நூல் எதிர்கால சந்ததியினருக்கு ஒரு வழிகாட்டியாகவும், வரலாற்று ஆவணமாகவும் விளங்குமென நம்புகின்றேன். மேலும் எனது அனுபவங்கள், கருத்துகள், சிந்தனைகள், அறிவுரைகள், விமர்சனப் பார்வை என்பன உங்கள் வாழ்வை வளமாக்கவல்ல வாழ்வியல் தரிசனத்தை தருமாயின் நான் பெரிதும் மகிழ்வேன்.
இந்நூலின் ஆக்கத்திற்கும் வெளியீட்டிற்கும் பலவழிகளிலும் பலர் உதவியுள்ளார்கள். அவர்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றி. பெயர் குறித்துச் சிலர் நன்றி கூறப்பட வேண்டியவர்கள், இந்நூலை எழுத ஊக்குவித்த திரு. டொமினிக் ஜீவா, பிரதிகளைப் பார்வையிட்ட திரு. ஈ.ஆர். திருச்செல்வம், அணிந்துரை வழங்கிய திரு. செங்கை ஆழியான். தட்டச்சில் பதிப்பித்த செல்வி தர்மினி அச்சுப்பணியாற்றிய திரு.சந்திரசேகரம், இலங்கையன் பதிப்பபகத்தினர் ஆகியோருக்கு என் அன்பான நன்றிகள். வாசகர்களிடமிருந்து இந்நூல் பற்றிய விமர்சனங்களை அன்புடனும் நன்றியுடனும் எதிர்பார்க்கிறேன்.
வேலணை கிழக்கு, சி.இராசரத்தினம் GSGJa)60600T -01
இலங்கை,
121, இரண்டாம் குறுக்குத்தெரு,
யாழ்ப்பாணம்,
இலங்கை,
தொ.பே. 0212222459
ix

Page 7
blijf
ஏடு தொடங்கல்
1916 யூலை 6ஆம் திகதி பிறந்த எனக்கு1920ஆம் ஆண்டு ஆவணி மாதம் ஏடு தொடக்கப்பட்டது. வேலணை பெருங்குளம் முத்துமாரி அம்மன் கோவில் குளத்தின் தெற்குக் கரையில் உள்ளது எங்கள் வீடும் வளவும். அந்தக் கோவிலுக்கு நேரே குளத்தின் வடக்குக்
 

கரையில் இருந்தது. வீடு ஒலையால் வேயப் பெற்றது. மண்சுவர், பெரிய வீடு, வீட்டு வளையிலே ஊஞ்சல் கட்டி நண்பர்களுடன் மாறிமாறி ஆடி விளையாடுவேன். ஏடு தொடக்க நாளன்று வீட்டின் முன் பந்தல் போட்டு வீடும் பந்தலும் வெள்ளைகட்டி, தோரணம் கட்டிச் சோடித்திருந்தது. எனது மைத்துனர் மு. இராமலிங்கம், எனது அண்ணண்மார் ம.சின்னத்துரை, ம.பெரியதம்பி நான் தனிப்பிள்ளை, பெரியப்பாவின் மக்கள்) மச்சான் செல்லத்துரை, மாமன்மார் த.கதிரவேலு.த.கனகரத்தினப் மற்றும் அயலவர்களும் சேர்ந்து 23 நாட்களாக பந்தல் சோடனை வேலைகளைத் தொடர்ந்து செய்து கொண்டிருந்தனர்.
ஏடு தொடக்கும் அன்று அதிகாலையில் மேளக்கச்சேரி தொடங்கி விட்டது. வேலணையில் இருந்த கதிர்காமர்செற்தான் கோயிலுக்கும் வைபவங்களுக்கும் கச்சேரி நிகழ்த்துவார்கள். அவரோடு சேர்ந்து சில வேலைகளில் ஏறுபடி மேளங்களும் யாழ்நகரிலிருந்து வருவதுண்டு. என்னை அலங்கரித்து மேளவாத்தியத்துடன் கோயிலுக்குக் கூட்டிச் சென்றார்கள். எனது அம்மாவின் பெயர் சின்னம்மா. அவரை எல்லாரும் அம்மக்கா என்று சொல்வார்கள். அப்பாவின் பெயர் சிதம்பரப்பிள்ளை. அவர் வைத்தியரென்பதால் அவரைப் பரியாரியார் என்றுதான் அழைப்பார்கள். அதனால் இளமையில் பரியாரிமகன் என்றும் அழைக்கப் பெற்றேன். கோயிலுக்கு அம்மாவும் அப்பாவும் தூக்கிப் போனார்கள். கோவில் வாசலில் நின்று அம்மன் கோவில் பூசகர் நாகலிங்கம் ஐயர் வரவேற்றார். பிறகு பூசை நைவேத்தியங்கள் அர்ச்சனை நிகழ்ந்தது. பூசகர் நாகலிங்கம் ஐயர் வெகுகாலமாக கோவிலருகில் ஒரு வீட்டில் வசித்துவந்தார். அந்தக் காணிக்குப் பிராமண வளவு என்று பெயர். இப்போது வேலணை கிழக்கு மகாவித்தியாலயம் அந்தக் காணியிற்றான் கட்டப்பட்டிருக்கின்றது. ஐயரின் சந்ததியினர் இன்றும் தீவுப்பகுதியில் பல கோவில்களில் அர்ச்சகர்களாக இருக்கின்றார்கள். எனது தகப்பனார் ஐயரின் குடும்ப வைத்தியர். நெருங்கிய நண்பர். பூசை நிகழும் வேளை வேலணை மிஷன் பாடசாலைத் தலைமை ஆசிரியர் நா.இளையதம்பி அவர்கள்

Page 8
analy
கோவிலுக்கு வந்து சேர்ந்து பூசையில் பங்குபற்றினார். கிறிஸ்தவராயினும் சைவசமயத்திலும் பற்றுடையவர். பிற்காலத்தில் அம்மன் கோவில் பரிபாலன சபையில் உறுப்பினராகவும் பதவி வகித்தவர். அப்பு தான் அவரின் குடும்ப வைத்தியர் நெருங்கிய நண்பர். அவரை பெரிய சட்டம்பியார் என்றுதான் எல்லோரும் அழைப்பார்கள்.
ஐயரும் சட்டம்பியாரும் கூடிவர மேளக்கச்சேரியோடு வீட்டக்கு வந்தேன். வீட்டிலேயும் ஐயர் கும்பம் வைத்து பூசை செய்தார். தாம்பாளத்தில் பச்சை அரிசி பரப்பி வைக்கப்பட்டிருந்தது. கும்பத்தின் பக்கத்தில் அமர்ந்த தலைமை ஆசிரியர் என்னை அருகில் இருத்தி விரலால் அரிசியில் "அ" எழுதுவித்தார். மூன்று முறை எழுதிய பின் ஏட்டைத்தந்து அதிலுள்ள அ, ஆ எழுத்துக்களைச் சொல்லித் தந்தார். இப்போது போல ஆனா, ஆவன்னா என்று சொல்லவில்லை. நான் படித்தவேளை அ என்றும் குறுக்கியும் 'ஆ' என்று நீட்டியும் சொல்ல வேண்டும்.
சில நாட்களின் பின் பாடசாலைக்கு அப்பு தூக்கிக் கொண்டு போவார். பொன்னப்பா உபாத்தியார் படிப்பித்த 1ஆம் வகுப்பில் சேர்ந்து மண் தரையில் இருந்தேன். மாணவர்கள் மண்ணில் அ, ஆ எழுதிக் கொண்டிருந்தார்கள். அந்தப் பாடசாலையில் பல வகுப்புகள் இருந்தன. பொன்னப்பா, கந்தையா, செல்லம்மா, இராசையா வேறும் சில ஆசிரியர்கள் கற்பித்தார்கள். எனக்குப் பக்கத்தில் இருந்த அசின்னராசா என்ற மாணவன் எனது கையைப் பிடித்து எழுதிப் பழக்கினார். அவர் தொடர்ந்து பல வகுப்புக்களில் என்னோடு படித்தவர். நெருங்கிய நண்பராக இருந்தார். தலைமை ஆசிரியர் என்னை அடிக்கடி வந்து பார்த்துக் கவனித்துக் கொள்வார். அவர் ஒரு பயிற்சி பெற்ற ஆசிரியர். 1906ஆம் ஆண்டிலிருந்து அப்பாடசாலையில் தலைமை ஆசிரியராக கடமை செய்கிறார். அவருடைய தந்தையார் பெயர் நாகலிங்கம் சுளகு சுண்டிச் சட்டம்பியார் என்று பட்டம். 1855ஆம் ஆண்டு முதல் அந்தப் பாடசாலையை திறமையாக நடாத்தியவர். அவருக்குப் பின் மகன் பொறுப்பேற்றிருந்தார்.
- 03 -

l".
6ஆம் வகுப்பில் தலைமை ஆசிரியர் தான் வகுப்பாசிரியர்.
இலக்கியப் பாடத்துக்கு நீதிவெண்பா ஒரு பாடப் புத்தகம், பாட்டும் கருத்தும் பாடமாக இருக்க வேண்டும். ஒரு நாளைக்கு ஒரு பாட்டு. கேள்வி கேட்கும் போது கருத்துச் சொல்லத் தெரியாத மாணவருக்கு தெரிந்து சொல்லும் மாணவர் குட்டி முந்துவார். வைகாசி மாதம் நாரந்தனைக் கந்தசுவாமி கோவிலில் இரவு விசேடமான திருவிழா பார்க்கப் போனதால் படிக்கவில்லை. பாட்டுப் பாடம். கருத்துத் தெரியாது. பாட்டைச் சொல்லிவிட்டு தலையைச் சுற்றுவதாகக் கூறி வாங்கிலிருந்து மேசையில் படுத்துக் கொண்டேன். வாங்கும் மேசையும் இணைந்து 5, 6 அடி நீளமானதுதான் மாணவர் இருக்கும் ஆசனம். பரியாரி மகனுக்குச் சுகமில்லை என்று மாணவர்கள் சொன்னதும் உபாத்தியாரே என்னை வீட்டுக்கு கூட்டி வந்தார். ?პ8
மேல் வகுப்பில் படித்தவேளை பாடசாலைக்கு அருகிலே சேர்ச் வேதக் கோவில் இருக்கிறது. முன்னாலே மிஷன் வீடு. மிஷன் பாடசாலை தமிழ் ஆங்கிலப் பாடசாலையாகத் தரமுயர்த்தப்பட்டு பிறவூரிலிருந்து ஆங்கிலம் கற்பித்தற்கும், உயர் தமிழ் வகுப்புக் கற்பித்தற்கும் ஆசிரியர்கள் வந்தார்கள். நாகலிங்கம், இராசரத்தினம் என இரு ஆங்கில ஆசிரியரும் பண்டிதர் வைத்திலிங்கம், நல்லையா என இரு தமிழ் ஆசிரியர்களும் அந்த மிஷன் வீட்டிலே தங்கியிருந்து படிப்பித்தார்கள். இரவில் எங்களுக்கு ரியூசன் சொல்லித் தந்தார்கள். மாலையில் தாச்சி, கைப்பந்து, வார் ஒட்டம் ஆகிய விளையாட்டுக்களை ஆசிரியரும் மாணவரும் சேர்ந்து விளையாடுவோம். ஒரு நாள் தாச்சி விளையாடியபோது விழுந்து எனது இடது முழங்கை முறிந்து விட்டது. உடனே வீட்டுக்குப் போகாமல் ரியூசனை முடித்துக் கொண்டு போய் மேசையில் அடிபட்டுக் கை நோகிறதெனப் பொய் சொன்னேன். மறு நாள் ஒட்டகப்புலத்திற்கு அப்பு சிகிச்சைக்காக கூட்டிப் போனார். 2, 3 நாள் தங்கி சிகிச்சை பெற்று வந்தேன். இரண்டு மாதங்களின் பின்பு தான்
சுகப்பட்டது.
H 04

Page 9
ninging
மிஷன் வீட்டில் (வேதக்கோவில்) சேர்ச்சைப் பரிபாலிக்கும் உபதேசியான ஜெபநேசன் ஆசிரியர்களோடு இருந்தார். அவர் எங்களோடு மிக நெருங்கிப் பழகுவார். அவருக்கு ஆர்மோனியம் வாசிக்கத் தெரியும். வேலணை மேற்கு சிற்பனை முருகமூர்த்தி கோவில் பூசகராக இருந்தவர் சர்மா என்று ஒருவர் சங்கீத வித்துவான். வி.எஸ். எல்.சி.18ஆம் வகுப்பு) சித்தியடைந்த பின் அவரிடம் சங்கீதம் பயின்ற நான் ஆர்மோனியம் வாசிக்கவும் கற்றேன். உபதேசியாரிலும் திறமையாக வாசிப்பேன். அவரும் நானும் பல கச்சேரிகளிலும் நாட்டுக் கூத்துக்களிலும் ஆர்மோனியம் வாசிப்போம். அல்லைப்பிட்டியில் ஒரு கூத்து. பிரபல பபூன் செல்லையாவும் நடிக்க வந்தார் அதற்கு நான் தான் ஆர்மோனியம் வாசித்தேன். முடிவில் பொதுமக்கள். நடிகர்கள் எல்லோரும் என்னைக் கெளரவித்தனர். கரம்பன் காளி கோவிலடி யிலும் ஒரு நாடகத்திற்கு ஆர்மோனியம் வாசித்து இளவயதில் பாராட்டுப் பெற்றேன். திருமண வைபவங்களிலும் கலை நிகழ்ச்சி களிலும் பாடசாலை மாணவரின் பாட்டு நடனம் எனப்பல நிகழ்ச்சி களிலும் ஆர்மோனியம் வாசித்துச் சிறப்பித்தேன். பலருக்கு சங்கீதம் கற்பித்திருக்கிறேன். இந்தியாவிலிருந்து வந்த நாதஸ்வர வித்துவான் சுப்பையா அவரது தவில்காரர் இரங்கசாமி வேலணையில் இருந்து தொழில் செய்தவர்கள். சங்கீதத்தில் பல கீர்த்தனைகளை நாதசுரக் கலைஞர் சுப்பையாவிடம் கற்றுத் தேர்ந்தேன். அப்பொழுது நான் எஸ். எஸ்.சி.படிக்கிறேன். இவர் மிருதங்க வித்துவானும் கூட, ஆனைக் கோட்டையில் பிறகு இருந்தவர். பலருக்கு மிருதங்கம் வாசிக்கத் கற்றுக் கொடுத்திருக்கிறார். அவர் எங்கிருந்தாலும் என்னை வந்து சந்திப்பார். சங்கீதக் கலை சார்பாக தேவை ஏற்படும் போது அவர் உதவுவார். இந்தியாவிலிருந்து தொழிலுக்காக வந்தவர் வேலணையிலே திருமணம் செய்து பிள்ளைகளுடன் ஆனைக்கோட்டையில் வசித்து வந்தார்.
H 05

nīgā
விளையாட்டு
பனைகள் பழுத்து பனங்காய் விழுங்காலம் ஆடி, ஆவணி, புரட்டாதி மாதங்கள். வேலணையில் பனந்தோட்டங்களை அடைப்ப தில்லை. பனைவளவுகளில் சிறிய காவல்கொட்டில் போட்டு இரவு பகல்
காவலிாங்க பனங்காய்களைச் சேகரிப்பார்கள். காவல் இல்லாவிடில்
կգ
- 06 -

Page 10
ஆடு, மாடுகள் பனங்காய்களை பிய்த்துச் சாப்பிடும் வழிப்போக்கரும் எடுத்துக் கொண்டு போய்விடுவார்கள். ஆடி மாதத்தில் வேலணை பெருங்குளம் முத்துமாரி அம்மன் கோவிலும் கொடியேறி திரு விழாக்கள் நிகழும். வைகாசி, ஆனி மாதங்களில் புளியங்கூடல் மாரி யம்மன்கோவில், நாரந்தனை கந்தசுவாமி கோவில்களில் விழாக்கள் நிகழும். ஏறுபடி மேளங்கள், சின்னமேளம் எனும் சதுர்க்கச்சேரி, சப்பறம், வாணவேடிக்கைகள் நிகழும். இவற்றைப் பார்த்து மகிழும் சிறுவர்கள் கூடி பக்கத்துப் பனைவளவுகளிலுள்ள கொட்டில்களைக் கோவிலாகப் பாவித்து பொருத்தமான கற்களை சுவாமிபோலச் சோடித்து மாலை போட்டு தகரங்களை மேளமாகவும் ஒலைகளில் குழல் செய்து நாதசுரம் போலவும் ஊதி தகடுகளில் தாளம் போட்டு விளை யாடுவார்கள். பெண்பிள்ளைகள், தாங்கள் பார்த்து ரசித்தபடி சதுராடு வார்கள். நன்றாகப் பாடுகிறவர்களை றலி ரூசீற்றர், பன்குருட்டி, உருக்கு மணி என்று பிரபலமான நடிகைகளின் பெயரிட்டு குதூகலமாகப் பெயர் சூட்டி விளையாடுவோம். சுவாமி கொட்டிலைச் சுற்றி வருவதோடு அருகேயுள்ள மறு கொட்டில்களுக்கும் எழுந்தருளச் செய்து விழாக்கள் தொடரும். நான் பூநூல் போட்டு பூசை செய்யும் குருக்களாக விளையாடுவேன்.
வருடப்பிறப்பு தைப்பொங்கல் தினங்களை அடுத்துவரும் காலங் களில் பாக்குக் கட்டி விளையாடுவோம். கட்டுப் பாக்காக சிறிய பாக்கு களை வாங்கி வைத்திருப்போம். ஒரு இடத்தில் சிறிய குழி அமைத்து குழிக்குச் சற்றுத் தூரத்தில் நின்று குழியை நோக்கி பாக்குகளை உச்சு வோம். குழிக்குக் கிட்ட விழும் பாக்குக்குரியவர் முதலும் தூரத்துக்குத் தக்கபடி ஏனையோருமென்று முறையாக முதலும் தூரத்துக்குத் தக்கபடி ஏனையோருமென்று முறையாக பாக்குக் கட்டுவோம். 4, 5 பேர் கூடி விளையாடும் இந்த விளையாட்டில் பாக்குக் கட்டுபவர் உச்சிய பாக்கு களைப் பொறுக்கிப் போய் உச்சநின்றதுரத்தில் நின்று குழியை நோக்கிப் பாக்குகளை வீசுவார். வீசும் போது எதாவது பாக்கு குழியில் விழுந்தால் அது கட்டுபவருக்குச் சேரும். ஏனைய சிதறிக் கிடக்கும் பாக்குகளில்

எறியச் சற்று சிக்கலான பாக்குக்கு எறியும் படி மற்றவர்கள் கீறிக்காட்டுவர். எறிவதற்காகத் தயாரிக்கப்பட்ட வட்டமான அழுத்த மான சிறிய கற்துண்டால் பாக்குக் கட்டுகிறது ஏறிவார் குறித்த பாக்கில் கல்பட்டால் கட்டுகிறவருக்கு பாக்குகள் எல்லாம் சேரும். எறியத் தவறினால் அடுத்தவர் பாக்கு கட்டுவார். இபபடி விளையாட்டுத் தொடரும். எறியும் போது குறித்த பாக்கில் படாமல் தவறி வேறு பாக்கில் பட்டால் கட்டுபவர் மேலும் ஒரு பாக்கு குட்டி போட்டு மீளவும்
கட்டுவார்.
வேலணையூர் பண்டிதர் க.பொ. இரத்தினமும் இளமையில் எங்களோடு சேர்ந்து பாக்குக் கட்டவார். பெரும்பாலும் வேலணை வங்களா வடியில் பழைய கிராமச் சங்கம் இருந்த இடத்தில் ஒலையால் வேயப்பெற்ற ஒல்லாந்தர் காலத்து கொட்டில் ஒன்றில்தான் விளையாட்டு நிகழ்ந்தது. பிற்காலத்தில் க.பொ.இ. அவர்களது தேர்தல் பிரசாரக் கூட்டங்களில் கூட இதனை நினைவுபடுத்திப் பேசிய போது மக்கள் கைதட்டி ஆர்ப்பரித்து ஆனந்தக் கூத்தாடி மகிழ்ந்தனர். பல்லாயிரக் கணக்கான வாக்குகள் பெரும்பான்மை பெற்று பலகாலம் பாராளுமன்ற உறுப்பினரானார். வேலணை அமெரிக்க மிஷன் பாடசாலையில் படித்தவர். ஆசிரியராகவும் சேவை செய்தவர். தீவுப்பகுதி மக்களின் குடியேற்றத் தொகுதியான கிளிநொச்சியிலும் தீவுத் தொகுதியில் இரு முறையும் பாராளுமன்ற உறுப்பினராய் இருந்தார்.1971 முதல் 1985வரை தீவுப்பகுதி அவரின் சேவையால் போக்குவரத்து. மின்சாரம், குடிநீர் விநியோகம், விவசாயம், சுகாதாரம் எனப் பல துறையிலும் துரித முன்னேற்றமடைந்தது.
கட்டும் விளையாட்டும் பாக்குக் கட்டுவது போன்றதே. பாக்குக்குப் பதில் ஒரு சத செப்பு நாணயக் குற்றியும் எறியாலுக்கு பழைய பெரிய வட்டமான 5சத செப்பு நாணயக் குற்றியும் பயன்படுத்தப்பட்டன. 8, 10 வயதுச் சிறுவர்கள் கிட்டி அடித்து விளையாடுவோம். ஒரு இடத்தில் அடையாளமாக (சிறிய தடி) குச்சி
-- 08 =

Page 11
built
நடப்படும். ஒரு முழத்துக்கு சற்றுக் கூடிய தடியொன்று கிட்டியாகப் பாவிக்கப்படும். ஒரு சானுக்கு சற்றுக் குறைவான சிறு தடித்துண்டு புள்ளு எனப்படும். கிட்டி அடிப்பவர்கள் குச்சியடியில் நின்று கிட்டியின் நுனிக்குக் கிட்ட புள்ளை வைத்து உச்சுவார். உச்சியவரின் ஆற்றலுக்கேற்ப புள்ளு தூரப்போய் விழும். புள்ளுப் பறந்து போகும் போது மற்ற ஆட்டக்காரர் யாரேனும் புள்ளை பிடித்து விட்டால் உச்சியவர் வெளியேற்றப்பட மற்றவர் உச்சி விளையாட வருவார். புள்ளு நிலத்தில் விழுந்தால் ஆட்டக்காரரில் யாரேனும் எடுத்து குச்சியை நோக்கி வீசுவார். புள்ளுப் பட்டு குச்சி விழுந்தாலும் உச்சியவர் (அவுட்) வெளியே. உச்சியவர் குச்சியில் விழாமல் தடுத்து அடிப்பார். அடிபட்டால் புள்ளுப் பறக்கும். உச்சியவரோ அல்லது ஆட்டக்காரரோ போய் தொட வேண்டும். உச்சியவர் தொட்டால் குச்சியடியில் இருந்து கிட்டியால் அளப்பார் ஆட்டக்காரர் யாரும் தொட்டால் மீண்டும் அதில் நின்று புள்ளை வீசுவார். அளவு 12345 ஆட்டம் சிங்கம் என அளக்கப்படும். சிங்கத்தை கணக்கில் வைத்துக் கொண்டு எஞ்சிய பகுதி அளக்கப்பட்டு அதற்கேற்ப அடிக்கப்படும். கூடிய சிங்கம் எடுப்பவர்களுக்குத்தான் வெற்றி, புள்ளு குச்சிக்கு கிட்ட கிட்டியின் அளவுக்குக் குறைவாக எறியும் போது விழுந்தாலும் கிட்டி அடிப்பவர் (அவுட்) வெளியே. ஒவ்வொரு அளவுக்கும் அடிக்கும் முறை வித்தியாசம். நாலு அளந்தால் ஒருவகையில் புள்ளை விரலால் பிடித்துக் கொண்டு மறுகைக் கிட்டியால் அடிக்க வேண்டும். 3க்கு மற்றப் புறங்கையில் புள்ளை வைத்து வீசி கிட்டியால் அடிக்க வேண்டும். 2க்கு மற்றக் கைவிரல் இரண்டின் மேல் புள்ளை வைத்து வீசி கிட்டியால் அடிக்க வேண்டும். 1 க்கு புள்ளைப் புறங்காலில் வைத்து வீசி அடிக்க வேண்டும். 5க்கு கிட்டியின் அடியை பக்கவாட்டில் கையால் பொத்திப் பிடித்துக் கொண்டு பொத்திய கையின் மேல் புள்ளை வைத்து வீசி அடிக்க வேண்டும். ஆட்டத்திற்கு புள்ளை இரண்டு விரலால் பிடித்துக் கொண்டு கிட்டியால் சுழருமாறு தட்டி பின் சுழரும் புள்ளை அடிக்க வேண்டும்.
H 09.

நான் பிறந்த, சிறுவனாயிருந்த வீடிடை எனது தப்பனார் தமக்கையின் மகன் மு.இராமலிங்கத்துக்கு நன்கொடையாய் எழுதிக் கொடுத்துவிட்டார். பிறகு நாங்கள் ஒரு வளவு தள்ளி ஒழுங்கைக் கரையில் உள்ள காணியில் ஒட்டு வீடு கட்டிக் கொண்டு வசித்தோம். இராமலிங்கம் சட்டத்தரணி நா.த.சிவஞானத்தின் மாமியாரை திருமணம் செய்து நாரந்தனைக்குப் போய் விட்டதால் அவரது தாய், அதாவது எனது மூத்த மாமிதான் தனியே அந்த வீட்டில் இருப்பார். நானும் எனது மச்சான் வி.பொன்னுத்துரை (வேலணை சேர் வைத்தியலிங்கம் துரைசுவாமி மத்திய மகாவித்தியாசாலையில் அதிபராய் இருந்து ஓய்வு பெற்றவர்) வேறு நண்பர்களும் அந்த வீட்டில் கடதாசி விளையாடு வோம். எங்களுக்கு மூத்தவர்கள் மச்சான் வி.செல்லத்துரை , மாமா த. கனகரத்தினம், க.இரத்தினம் மற்றும் அவர்களின் நண்பர்கள் வேறு சிலரும் அந்த வீட்டில் கடதாசி விளையாடுவார்கள். அவர்கள் இல்லாத வேளை நாங்கள் போய் விளையாடுவோம். பல்வேறு விளை யாட்டுக்கள் 304, 108, பரிசேர், தனித்தல் (துரும்பு சொல்லல் கழுதை சுமத்தல், கப்பம் கட்டல் எனப் பல்வேறு விளையாட்டுக்கள். எத்தனை ஆட்டக்காரர் கூடுகின்றார்களோ அதற்கேற்ப விளையாட்டுக் கள் அமையும். காட்ஸ் அல்லது சீட்டு விளையாட்டில் ஆறுபேர் சேர்ந்தால் பரிசேர்,நாலுபேர் 304.இரண்டு பேர் 108 விளையாடுவோம். ஏனைய சில விளையாட்டுக்களும் உண்டு. ஒரு சீட்டுப் பெட்டியில் 48 சீட்டுக்கள் உண்டு. அவை முறையே ஆசு, ஏர், புறோ, வீறு பத்து, ஒன்பது என இரண்டுவரை இனத்துக்குப் பன்னிரண்டாக நாலு இனங்களில் மொத்தம் 48 இருக்கும். கறுப்பு நிறத்தில் இரு இனங்களும், சிவப்பு நிறத்தில் இரு இனங்களும் உண்டு. அவை முறையே இசுகோப்பன், கலாவரை, ஆடத்தன், உறித்தன் எனப்படும். பரிசேர் விளையாட 48 சீட்டுக்களும் தேவை. அவற்றின் மதிப்பு முறை ஆசு தொடங்கி 2 வரை மேற்சொன்னபடியே கொள்ளப்படும். ஆளுக்கு நான்கு சீட்டாக இரு சுற்றில் ஒவ்வொருவருக்கும் 8 சீட்டுக்கள் பகிர்ந்தளிக்கப்படும். சீட்டை பசாரித்து ஒருவர் வைக்க இடதுபுறமிருப்பவர் ஒரு பகுதியை வெட்டி எடுத்து ஒரு புறம் வைக்க மிகுதியுள்ளதை முதலும் வெட்டி வைத்தததை
- 10 H

Page 12
līgā
பிறகும் பகிர்ந்து கொடுக்கப்படும். பிரித்தவருக்கு வலது புறமிருப்பவர் முதலும் பிறகு முறையே மற்றவர்களுமாக விளையாடும் ஒழுங்கு நிகழும். வெற்றி பெற ஐந்து பிடி எடுக்க வேண்டும். வல்லமை இருந்தால் முதலாம் ஆள் துரும்பு என இனத்தின் பெயரைச் சொல்வி விளையாட தொடங்குவார். வசதி இல்லையென அவர் விடின் அடுத்தடுத்தவர்கள் துரும்பு என ஒரு இனத்தின் பெயரைச் சொல்லி முதலாமாளே முதலில் இறக்கத் தொடங்கி விளையாட்டுத் தொடரும் இனத்துக்கு இனம் போட வேண்டும். அந்த இனம் இல்லாவிடில் துரும்பினத்தில் எதனாலும் வெடடி எடுக்கலாம். விளையாட்டில் இனத்துக்கினம் போட்டால் பெரிது போட்டவருக்குத்தான் பிடி சேரும். தனிக்க யாரும் இல்லாவிட்டால் மூன்று பிடி எடுக்க வசதியுள்ளவர் கேள்வி என்று சொல்ல இரண்டு ஆசு வைத்திருப்பவர் உதவி எனச் சொல்லி சேர்ந்து விளையாடலாம். இருவரும் சேர்ந்து ஐந்து பிடி எடுக்க வேண்டும். நாலு பிடி எடுத்தால் இறப்போர். இருபகுதியும் சமன் என்பதால் அடுத்த விளையாட்டில் வெல்லுகிறவருக்குத்தான் இந்த இறப்போர் வெற்றியும் சேரும். 3 பிடி எடுத்தால் தோல்வி, குயில் என்பர்.
நான்குபேர் விளையாட்டு 304. ஆளுக்கு எட்டாகவும்.இனத்துக்கு 8ஆகவும் 32 சீட்டுக்கள் தேவை. அவற்றின் மதிப்பும் பெறுமதியும் வீறு முப்பது மணலெனப்படும் 9க்கு 20, ஆசுக்கு 1110க்கு 10தான், 8க்கும், ஏழுக்கும் பெறுமதியில்லை. சீட்டைப் பசாரித்து வைக்க இடது பக்கமுள்ளவர் வெட்டிவைக்க எஞ்சியதையும் பிறகு வைத்ததையும் சேர்த்து ஆளுக்கு நாலாக இரு தடவைகளில் எட்டு சீட்டுப் போடப்படும். எதிராகவுள்ள இருவரும் இந்த விளையாட்டில் ஒன்றுகூடி விளையாடுவதால் இருபகுதி விளையாட்டாகவே நிகழும். பிரித்தவரின் வலது கைப் பக்கமிருப்பவர் கேள்வி கேட்பார். 160 திலிருந்து பத்துப்பத்தாகக் கேள்வி உயரும். கேட்பவர் தனக்கு முடியாதென்றால் எதிரேயுள்ள தன்னாளுக்கு "மேலே" என்று கூறிப் பாரப்படுத்தலாம். வசதியென்றால் அவர் கேட்பார். இல்லையேல் கேட்டவருக்கே விடுவார். அவர் துரும்பு கவிழ்த்து வைக்க இறக்குதற்குரியவர்
- 11 -

Un añGGIH
விளையாடத் தொடங்குவார். இனத்துக்கு இனம் போட வேண்டும். இல்லையேல் துருப்பென்ன வென்று கேட்டு வெட்டலாம். இனம் போட்டால் பெறுமதி கூடியவருக்கு வெட்டினால் வெட்டியவருக்குச் சேரும். விளையாட்டின் முடிவில் பெறுமதிப்படி எண்ணி வெற்றி தோல்வி நிச்சயிக்கப்படும். எல்லாப் பிடிகளும் ஒரு கட்சிக்குச் சேர்ந்தால் கம்மாரிசு. இருபங்கு வெற்றி என அர்த்தம். ஒருவர் தனித்து 8 பிடியும் எடுக்க முடியுமானால் தனது சகபாடியை "மடக்கு" என்று விளையாடாமல் தவிர்த்துவிட்டு தான் விளையாடலாம். வெற்றி பெற்றால் 8 பங்கு வெற்றி, தோல்வி என்றால் எதிர்க்கட்சிக்கு அதேயளவு வெற்றி எனக் கருதப்படும்.
இரண்டு பேர் விளையாட்டு 108. இதில் பெரிதும் பெறுமதியும் ஆசுக்கு 11 அடுத்து பத்குக்கு 10 ஏர், 2டறோ 2 வீறு 2 எட்டு ஏழுக்குப் பெறமதி இல்லை.இனத்துக்கு எட்டாக மொத்தம் 32 சீட்டுக்கள். சீட்டைப் பசாரித்து வெட்டி ஆளுக்கு மூன்றாக இருதடவை 6 சீட்டுகள் முதலில் போட்டு அடுத்தசீட்டை துரும்பென புரட்டிப் போட்டவிட்டு எஞ்சிய சீட்டுக்களை எல்லாம் பக்கத்தில் அடுக்கி வைத்தவிட்டு விளையாடத் தொடங்கலாம். எதிரே உள்ளவர் இறக்க மற்றவர் எதையும் போடலம், அதே இனத்தில் பெரிது போட்டவருக்குத்தான் பிடி பிடி எடுத்தவர்" அடுக்கி வைத்த சீட்டுக்களில் ஒன்றை முதல் எடுக்க மற்றவர் பிறகு எடுத்து பின் விளையாடுவார். வைத்த சீட்டுகள் முடிந்த பின் இனத்துக்கினம் போட வேண்டும். ஒரு இனத்தைச் சேர்ந்த ஏரும் புறோவும் ஒருவரிடம் வந்தால் சோடி சொல்லலாம். அதற்கு 20டள்ளி. துரும்புச் சோடியானால் 40 புள்ளி கடைசிப்பிடி எடுப்பவருக்கு 10 புள்ளி விசேடமாகக் கொடுக்கப்படும். இந்தப் புள்ளிகளோடு எடுத்த பிடிகளால் வந்த புள்ளிகளையும் எண்ணிச் சேர்க்க 108 வந்தால் வெற்றி, இல்லையேல் சொச்சத்துக்கு மறு ஆட்டத்தில் 108 புள்ளியளவு தொகையை முதலில் எடுக்கிறவருக்கு வெற்றி.
கடதாசி விளையாட்டுக்களில் இவை போன்ற விளையாட்டுக்கள் சூது அல்ல. பொழுது போக்கோடு விவேகத்தையும் வளர்க்கும்
- 12 He

Page 13
l ñibilucht
ஆற்றலுமுண்டு. சீட்டுக்கள் விழுந்த பிடிகளை அடுக்கி வைக்கும் பாவனைகளை நுணுக்கமாக அவதானித்து அதற்கேற்ப தனக்கு அல்லது தனது துணைக்கு உதவ முடியும். யாரிடம் எந்த இனம் கூட இருக்கிறது.எந்த இனம் இருக்காது என்பதைக் கூட யூகிக்க முடியும். எங்கள் ஊரில் ஆசிரியர் இ. மருதையினார் இதில் விண்ணர் நானும் மச்சான் பொன்னுத்துரையும் நுணுக்கமாக விளையாடிப் பழக்கமுண்டு. மூத்தோர் கூட எம்முடன் விளையாடத் தயங்குவர்.
நான் யூ.எஸ்.எல்.சி.படித்தவேளை வங்களாவடியில் கைப் பந்தாட்டம் ஆடுவோம். தபால் அதிபர் நா. சரவணமுத்து அவர்கள் மிஷன் பாடசாலை ஆசிரியர், மாணவர், சைவவித்தியாசாலை மாணவர் ஆசிரியர் தினமும் மாலையில் கூடி விளையாடுவோம். சிலகாலம் தொடர்ந்த விளையாட்டை ஊக்கப்படுத்தியும் பிழை சரிகளைத் தீர்த்தும் போஸ்ற்மாஸ்ரர் அவர்களே முன்னின்று நிகழ்த்தினார். இந்த விளையாட்டில் பங்குபற்ற நான் தவறுவதில்லை. வெவ்வேறு விளையாட்டு அணிகளோடும் போட்டிக்கு விளையாடி வெற்றி
ஈட்டியுள்ளோம்.
- 13 -

una abunión
பனம் பிரயோசனம்
வசதி படைத்தோர் வசதி குறைந்தோர் என்கிற பாகுபாடின்றி அக்காலத்தில் எல்லோரும் பனம் பழங்களைப் பொறுக்கிச் சேர்த்து பனாட்டுச் செய்வார்கள். அது சிறந்த காலை உணவாகவும், ஒடியற்
கூழுடன் மாலைச் சிற்றுண்டியாகவும் பயன்படுத்தப்பட்டது.
- 14 ത

Page 14
hlIHF
பனாட்டைத் தயிரில் தொட்டு காலையில் சாப்பிட்டால் அப்பத்தை விட ருசியான சாப்பாடு. எட்டுப்பத்து ஒலைகளை அடுக்கி அதன் மேல் ஒரு தட்டையான கல்லை வைத்து நன்கு பழுத்த பனம் பளங்களை அந்தப் பாரோலைக் கல்லில் தட்டுப்பொல்லால் அடித்துச் சிதைத்து தோலுரித்துக் கடகத்திலிட்டு தண்ணீரூற்றிப் பிசைந்து தும்பு எடுத்து துணியில் வடித்துப் பிழிந்தெடுத்த சுத்தமான பனங்களியை 12 அல்லது 14 முழம் நீளமான ஓலைப் பாயில் தினமும் ஊற்றிப் பரவிக் காயவிட்டு கணக்கான தடிப்பு வந்ததும் நீளமாகவும் குறுக்காகவும் கோடு கீறி வடிவான சதுரத் துண்டுகளாக அரிவாள் போன்ற ஆயுதங்களின் புறப்பக்கத்தால் அல்லது தகடுகளால் புரட்டி எடுத்து புறப்பக்கமாகவும் காயவைத்து எடுப்பது தான் பனாட்டு. பனாட்டுத் தட்டுகள் காயப் போடும் பாய்களை தென்னோலை பரவி சிலர் நிலத்திலும் பெரும்பாலானவர் பந்தல் போட்டு மேலே தென்னோலை பரவிய பந்தலிலும் விரித்துக் காயவிடுவார்கள். இரவு வேளை தூசு பிடியாமல் பாயை மடித்து விடுவர்.
எடுத்த பனாட்டுத் தட்டுகளை வடிவாக மடித்து கூடைகளில் அடுக்கி வீட்டில் அடுப்பு எரிக்கும் இடத்தின் மேல் இதற்கென ஏற்கனவே வகுத்த பரன்களில் தினமும் புகைபிடித்துப் பனாட்டு பழுதடையாதிருப்பதற்காக அவற்றை அடுக்கி வைப்பர். ஆடி ஆவணி புரட்டாதி வரை தொடரும்பனாட்டு வேலை முடிய பாரோலை அவியல் நிகழும் சோறு, பிட்டு கறிவகை, பழவகை, பலகாரங்கள், பனங்காய்ப் பணியாரம், இளநீர், சுருட்டு, வெற்றிலை பாக்கு என மனிதர் சாப்பிடும் அனைத்துப் பொருட்களும் பட்ைத்து கற்பூரம் கொழுத்தப்படும். எல்லோரும் சுற்றி நின்று வணக்கம் செலுத்தியபின் சற்றுத் தூரத்தில் ஆவிகள் வந்து ஆகுதி பெறுவதற்காக மறைந்து நின்றபின் மடைகளைக் குலைப்பர். அதன் பின் நண்பர்கள், உறவினர்கள், அயலவர்களுக்கு விருந்தளிக்கப்படும். பனை நாட்டிவைத்த மூதாதையருக்குச் செய்யும் மதிப்பும் நன்றிக்கடனுமென இது கணிக்கப்பெறுகிறது.
- 15

பனங்காய் பிசைந்து களி எடுத்தபின் பாரோலைக்கப்பால் குவிக்கப்பட்டிருக்கும் பனங்கொட்டைகள் புரட்டாதி மாதம் மழை பெய்ததும் சற்று உயரமான நிலத்தில் பாத்தி வெட்டி அடுக்கி மூடப்படும். பின் தை, மாசி மாதங்களில் கிழங்குகள் பிடுங்கி ஒடியல் சீவல் சீவிக் காயப்போட்டு சேமித்து வைக்கப்படும். ஒடியல் மாவிடித்துப் பிட்டு அவித்தும் கூழ்காய்ச்சியும் உணவாகப் பாவிக்கப்படும். எங்கள் தையல் முத்துமாமி பனம் பழங்கள் கொடுத்து அயலிலே செட்டிபுலத்திலுள்ள மீனவர் பகுதியில் மீன் வாங்கி வருவார். சின்னமாமி வள்ளியம்மை பெரிய அண்டாச் சட்டியில் மீன், இலைக்கறி, உழுந்து, அரிசி, போட்டு கூழ் காய்ச்சுவார். அயலிலுள்ளவர்களையும் கூப்பிட்டு உறவினரும் சேர்ந்து மாலை 4 மணிக்குத் தினமும் இந்தச் சத்துணவுத்திட்டம் எங்கள் குடும்பத்தினரால் பேணப்பட்டு வந்தது.
அக்காலம் வயல் நிலங்கள் அதிகம், தோட்டங்கள் குறைவு. எல்லோரும் அவரவர் காணியில் சிறிதோ பெரிதோ தவறாமல் நெல் விதைப்பார்கள். கூலித்தொழில் செய்வோரும் நெல்லும் ஒடியலும்தான். கூலிக்குப் பெறுவார்கள். குரக்கன், உழுந்து, பயறு உயர் நிலத்திலும் பனந்தோட்டங்களிலும் விதைக்கப்படும். எல்லார் வீடுகளிலும் நெல், ஒடியல், உழுந்து மற்றும் சிறுதானியங்கள் செய்கை பண்ணியும் கூலியாகப் பெற்றும் இருப்பில் இருக்கும். இதனால் நாட்டில் உணவுப் பஞ்சம் என்பதே இல்லாத நிறை உணவுப் பங்கீடு இயற்கையாகவே அமைந்திருந்தது.
சிறிது காலம் செல்ல புகையிலைச் செய்கை அறிமுகமானது. புகையிலையை வாங்கி தென்னிலங்கையில் விற்கும் வர்த்தகரும் அறிமுகமாயினர். பிறவூரிலிருந்து வந்த வர்த்தகரிடம் புகையிலை தீர்த்துக் கொடுக்கும் தரகரும், புகையிலை தீர்த்து விற்கவும் பழகிக் கொண்டனர். புகையிலை வியாபாரத்தின் மூலம் ரொக்கப் பணம் கிடைத்ததால் காசுப் பயிரான புகையிலைச் செய்கை விருத்தியடையத்
தொடங்கியது. சரவணை, வேலணைப் புகையிலைக்கு நல்ல கிராக்கியும்
- 16 -

Page 15
மவுசும் தென்னிலங்கையில் இருந்தபடியால் வெகு தீவிரமாகவே நெல் முதலிய தானியச் செய்கை வீழ்ச்சியடைய புகையிலைச் செய்கையில் பலரும் ஈடுபடத் தொடங்கினர். இதனால் பொருளாதாரச் சமநிலை வீழ்ச்சி அடைய ஏற்றத்தாழ்வுகள் உதயமாயின. ஒலை வீடுகள் ஒட்டு வீடுகளாயின. இதே வேளையில் கல்வி வளர்ச்சியால் ஆசிரியத் தொழில் எனும் உத்யோகவாய்ப்பு சில குடும்பத்தினர் பெறவே செல்வச் செழிப்பும் பதவிகளும் மக்களிடையே பெரும் இடை வெளியைத் தோற்றுவித்தது. ஏழை, பணக்காரன், உத்தியோகம், மத்திய வகுப்பு, கூலியாள் என்று பாகுபாடு உருவாகி இப்பொழுதும் தொடர்கின்றது.

சவாரி
வைகாசி மாதம் ஆண்டு தோறும் புளியங்கூடல் மாரியம்மன் கோவில் திருவிழா நிகழும். பொதுவாக ஏறுபடி மேளம், சின்ன மேளம் , சப்பறம், சங்கீதம் என்று விழாக்கள் சிறப்பாக நிகழும். புதுமையான தெய்வம் என்று காட்சிக்கு மட்டுமன்றி பக்தசிரத்தையோடு பிறவூர் மக்களும்
- 18

Page 16
blIhlf
தொகையாக வருவார்கள். தேர்த்திருவிழாவிற்கு அளவு கடந்த சனக்கூட்டம் வேலணையிலிருந்து கோவில் இரண்டுமைல் தூரம். மச்சான் இராமலிங்கம் வண்டிச் சாரதி நாங்களெல்லோரும் வண்டியிலே போவோம். வண்டி நிறுத்துமிடங்கள் புறம்பாக ஒதுக்கப்பட்டிருக்கும். அதிலே வண்டியை நிறுத்தி உருளாதிருக்கச் சில்லுகளுக்குக் கல்லுக் கட்டி மாடுகளை அவிழ்த்து சில்லிலே கட்டி வைக்கோல் போட்டுத்தான் மச்சான் வருவார்.நான் சின்னத்துரை அண்ணரோடு முன்னரே இறங்கிப் போய்விடுவேன். நண்பர்களைக் கண்டால் அண்ணருக்கு "டிமிக்கி" விட்டு நண்பருடன் கூடித் திரிவேன். காட்சிகளைக் காண்பதிலும் பார்க்க கூடித்திரிந்து குழப்படி செய்வதுதான் சிறுவர்களின் வேலை.
இறுதிநாள் தேர்த்திருவிழா. திருவிழாவிற்கு ஏராளமான வண்டிகள் வரும். வேலணை தீவுப் பகுதிகளில் பெரும்பாலும் வாகனம் வண்டிதான், கார், பஸ் பிந்தி வந்தவை. வந்த வண்டிகளிடையே சவாரிப் போட்டிகளும் தவறாது நிகழும். வீடு திரும்பும் போது எங்கள் வண்டியை பிந்தித்தான் பூட்டுவோம். பிந்திப் பூட்டினாலும் எல்லா வண்டிகளையும் முந்தி எங்கள் வண்டி வந்துவிடும். இதனால் எங்கள் எருதுகளுக்கு உலகப் புகழ். பரியாரி சிதப்பரப்பிள்ளையின்
மாடுகள்தான் தீவுப் பகுதியில் பேர் போன சவாரி மாடுகள் என்று கதை.
கேள்விப்பட்டு யாழ்ப்பாணம் மணிக்கூட்டடியில் இருக்கிற வராம், நல்ல மாடுகள் விலைக்கு வாங்க வண்டியில் வந்தார். எங்கள் எருதுகளையும் சவாரி செய்து பார்க்க வந்தார். சவாரி செய்து பார்ப்பதென்று தீர்மானிக்கப்பட்டது. எங்களுக்கு சலவைத் தொழில் செய்கிறவர் சின்னத்தம்பி கந்தையா அயலில்தான் இருக்கிறவர். கமத்தொழிலும் செய்தார். வண்டில் மாடுகளும் வைத்திருக்கிறார். அப்பிவை சின்னண்ணை என்றுதான் கூப்பிடுவரீர். அப்புவின் தம்பியார். வி.நடராசப்பிள்ளை சின்னண்ணை என்று கூப்பிடுவது வழக்கம். அது போலத்தான் அவரும் கூப்பிடுவார். வண்டி செலுத்துவதில் திறமையானவர்.

annibust
வண்டியில் போக்குவரத்திற்குப் போட்டிருந்த கூடாரம் கழற்றப்பட்டது. கிராதி இருபக்கம் தட்டிபோலப் போடச் செய்திருக்கும் அமைப்பு போடப்பட்டது. சவாரிக்கு ஆயத்தம். கந்தையாதான் சாரதி. வண்டி பூட்டப்பட்டது நானும் வருவதாக அடம்பிடித்தேன். அப்பு தடுத்தும் கேட்கவில்லை. அழுதேன். சரி என்று சொல்லக் கூடப் போனேன். வந்தவர் வண்டி முன் போக எங்கள் வண்டி பின்னாலே போய் சறு வேளையில் வயல் வெளியில் இறங்கி விலத்திக்கொண்டு போனது. வண்டி போன வேகத்தில் நான் வழுக்கி விழுந்துவிட்டேன். வயல்வெளி மணல்பாங்கானதாய் இருந்ததால் நோகவில்லை. வண்டியின் பின்னால் எழுந்த ஒடிப்போனேன். நான் விழுந்ததை சவாரிப் பராக்கில் அப்பு காணவில்லை. எங்கள் வண்டி முன்போன வண்டியை முந்திய பிறகுதான் என்னைத் தேடியிருக்கிற்ார். அலறிப்புடைத்துக் கொண்டு திரும்பி என்னைத் தேடி வந்தவர் நான் சிரித்துக்கொண்டே ஓடிப்போக என்னைத் தூக்கித் தோளில் வைத்துக் கொண்டு சொன்னால் கேளாத பிள்ளையால் ஏங்கிப் போனேன் என்று பேசினார். மாட்டுக்கு விலை பேசினார்கள். எந்த விலை கொடுத்தும் வாங்கவும் அவர்கள் சம்மதம். விற்பதற்கு எனக்கு விருப்பமில்லை. கந்தையாவும் விற்றால் அவற்றைப்போல் மாடு வாங்க முடியாது. சிரமம் பிள்ளையும் அழுகுது என்று தடுத்துப்போட்டார்.
- 20 ത്ത

Page 17
filmislyi
பட்டாணி
வைகாசி மாதம் நாரந்தனைக் கந்தாமி கோவில் கொடியேறி அன்று விசேடமான திருவிழா சதுர்க்கச்சேரி, ஏறுபடி மேளம், பலர் போவதைக் கண்டேன். நானும் போக வேண்டுமென அடம்பிடித்தேன்.
வண்டிவிட ஆளில்லை. மச்சான் இராமலிங்கம் எங்கேயோ போனவர்
- 21
 

வரவில்லை. அச்சமயம் கடுமையான வயிற்றுக்குற்றும் வாந்தியுமாக
ஒரு நோயாளியை வண்டியில் வீட்டிற்குக் கொண்டுவந்தார்கள். அப்பு வைத்தியம் பார்த்து சற்று வேளையில் வாந்தியில்லை. குத்தும் குறைந்துவிட்டது. சற்றுப் பொறுத்துத்தான் போக வேண்டுமென்று அப்பு சொன்னார். கேட்டுக் கொண்டிருந்த அண்ணர் சின்னத்துரைத் தம்பி அழுகிறான் வந்த வண்டியில் கூட்டிப் போகலாமா என்று கேட்டார். நோயாளி வந்த வண்டிக்காரனும் உடன்படப் புறப்பட்டோம். வங்களாவடிச் சந்தியி லிருந்து வடக்கே அராலி றோட்டால் வந்து ஊர்காவற்றுறை பண்ணை றோட்டால் ஊர்காவற்றுறை பக்கம் திரும்பி
நாரந்தனையை நோக்கிப் போனோம்.
அராலிச் சந்தியில் வண்டி திரும்பியதும் சற்று வேளையில் வண்டிக்கு நேரே சமாந்தரமாக வடக்குக் கடற்கரைப் புறத்திலிருந்த பல நிறங்களைக் கொண்ட வர்ண வெளிச்சம் தெரிந்தது. அது சக்கரை வானம் போலவும் சுழன்றது. அவுட்டுப்போல மேலே கிழம்பியும் போனது. வண்டியில் காசியமாகப் பேசிக்கொண்டு வந்தவர்கள் தொடங்கியிருக்கும் விளையாட்டு எனக் கூறி மெளனமானார்கள். வண்டி மேலும் சற்றுவேகமாகப் போனது. எனக்குக் காரணம் தெரியாத பீதி, பல கேள்விகள் கேட்கிறேன். எவரும் பதில் கூறவில்லை. அண்ணாவும் பேசாமல் என்னை மடியில் வைத்துக்கொண்டிருந்தார். நான் அவரோடு ஒட்டிக்கொண்டிருந்தேன். வண்டி சரவணைச் சந்தி கழிந்து சற்றுத் தூரத்தில். நாரந்தனைக் கோவிலை நோக்கி கல்லுப் பரவாத கல்லு றோட்டால் திரும்பியது. அதன் பிறகுதான் எல்லோரும் வாய்திறந்து பேசினார்கள். நான் என்னவென்று கேட்டும் சொல்ல வில்லை. திருவிழா முடிந்து வரும் போது சரவணை றோட்டில் புளியங்கூடல் சந்திக்கு வந்து ஊர்காவற்றுறை - வங்களாவடிறோட்டால் வீடு திரும்பினோம். வீட்டுக்கு வந்த பின்புதான் பண்டாணிக் கதையைச் சொன்னார்கள். பண்ணை றோட்டில் மூன்றாம் கட்டையடியிலிருந்து கரையோரமாக நாரந்தனை கடற்கரைவரையும் பட்டாணி வரும் என்று வாற வழியில் அராலிச் சந்தி றோட்டுக்கு வந்து போகும் என்றும்
- 22 m

Page 18
சொன்னார்கள். உதாரணத்திற்கு சரவணை விநாசித்தம்பி நொத்தாரிசும் அராலிச் சந்தியில் அதன் தாக்கத்தால் முடமான தாகவும் கூறி முடித்தார்கள். ஊரிலும் எல்லாரும் இக்கதையை உண்மையென்றே நம்பினார்கள். அப்பு தன்னைக் கட்டு மந்திரம் எழுதித் தந்தார். அதைப் பாடமாக்கிச் செபித்தேன். அன்றிலிருந்து மாந்திரிகம் படித்தேன். மந்திரத்தால் சாதனை புரிந்த வரலாறுகளும் உண்டு. பிறகு வரும்.
மார்கழி மாதம் பண்ணை றோட்டருகே அமைந்துள்ளே மண்கும்பான் பிள்ளையார் கோவில் திருவிழா, நண்பர்களோடு கூடியாடிக் கொண்டு அராலி றோட்டால் போய் பண்ணை றோட்டால் திரும்பி மண்கும்பான் போவது வழக்கம். ஒரு முறை இவ்வாறு போகுது போகும் போது அராலிச் சந்திக்குச் சற்றுக் கிட்டப் போனதும் சந்தியில் சீறிப்பாயும் வெளிச்சம் தெரிந்தது. எல்லோரும் பாட்டை நிறுத்தி பயந்து நின்றோம். வெளிச்சம் இடைக்கிடை தெரிந்துகொண்டே நின்றது. மந்திரத்தின் வலிமையால் துணிவு வரவேசுட வந்தவரில் ஒருவரான மச்சான் பொன்னுத்துரையையும் கூட்டிக்கொண்டு சந்தியை நெருங்கிப் போனபோது அதனைக் கண்டுவிட்டோம். எங்களோடு கடதாசி விளையாடும், எங்களுக்கு மூத்தவரான க.கனகரத்தினம் அவருக்கு ஒரு கால் வழங்காது. அதனால் சொத்தி இரத்தினம் என்பதுண்டு வாயில் மண்ணெண்ணெய் விட்டு நெருப்புக் குச்சியை தட்டிப் பிடித்துக் கொண்டு கொப்பளிக்க அது வெளிச்சமாய்ப் பிரகாசிக்க பட்டாணி
என்று நாங்கள் பயப்படுவோம் என்று அவர் செய்த குறும்பு
குடிசனமற்ற பெரிய வெளியிலே யாழ் நகருக்குப் போகும் பாதையான பண்ணை றோட்டிலே அமைந்திருப்பதால் மண்கும்பான் பிள்ளையார் அற்புதமாகப் போற்றப்படுகின்றார். நான் அறியாத காலமிருந்தே போக்குவரத்துச் செய்யும் வாகனங்கள் கோவிலடியில் தரித்துநின்று பூசித்த பின்புதான் போகும். வண்ணைச் சிவன் கோவிலில் பிரதிட்டை செய்வதற்காக இந்தியாவில் இருந்து எடுத்து வரப்பட்ட விநாயகர் சிலையை ஊர்காவற்றுறையில் கப்பலில் இருந்து இறங்கி தரை
- 23 -

|bl| | b |trthlith hill
மார்க்கமாக பண்ணைத்துறைக்கு எடுத்துவரும் போது சிலையை வைத்துவிட்டு அயலில் நின்ற அரச மர நிழலில் களைப்பாறினார்கள். என்றும் பின்பு வைத்த சிலை எடுக்க முடியாது போய்விட்டதால் அந்த அற்புத நிலையால் கோவில் எழுப்பப் பட்டதாகவும் சிலை மேற்கு நோக்கி இருந்தபடியால் கோவில் மேற்கு வாசலாக அமைந்ததென்றும் பேசப்படுகின்றது. பட்டாணிக்குப் பயந்த பாதையில் கோவில் அமைந்தது மக்களுக்குத் தென்பூட்டும் வகையில் உள்ளது. பெரும்பாலும் வேலணை, சரவணை, நாரந்தனை, சுருவில் மக்கள் புதுமணம் நிகழ்ந்தால் மண்கும்பான் பிள்ளையாருக்கு மோதக பூசை
செய்து வழிபடுவதை முதற்கடமையாகக் கொள்வார்கள்.
தீவுப் பகுதிக்கும் யாழ் நகருக்கும் தரைவழிப் போக்கு வரத்துக்கு அராலிக்கடலினுடாகவோ அன்றிப் பண்ணைக் கடலூடாகவோ தாம்போதி அமைப்பதென்று தீவுப் பகுதி மணியகாரர் சோமசுந்தரம் அவர்கள் முன்பாக மக்கள் கூடியபோது, மண்கும்பான் பிள்ளையாரைக் கேட்டு அதாவது பூக்கட்டி வைத்துப் பார்த்து முடிவு செய்வதென்று தீர்மானித்தபடியே பண்ணைத் தாம்போதி வேலை ஆரம்பிக்கப்பட்டுநிறைவேற்றியதாகவும் வரலாறுண்டு.
- 24

Page 19
அரசியல் பிரவேசம்
1944ஆம் ஆண்டு வேலணை கிராமசங்க இரண்டாம் வட்டார வேட்பாளராகப் போட்டிக்கு நிக்கின்றேன். போட்டி பல வட்டாரங்க ளிலும் பழமைவாதிகளுக்கும் ஓரளவு சீர்திருத்தவாதிகளுக்கிமிடையில் நிகழ்ந்ததாகக் கருதப்படுகின்றது. கூட்டுறவுச் சங்கம் சனசமூக நிலையம்
 

Allshlf firbu[Eftir
கிராம முன்னேற்றச் சங்கங்களின் தலைவரகவும் செயலாளராகவும் பதவி வகித்துப் பொதுத் தொண்டு, சமூக சீர்திருத்தம், போக்குவரத்து வசதி, குளக்கட்டு, வடிகால் வாய்க்கால் தேவை. நன்னீர் வழங்கல் என்பவற்றின் திருத்தங்களுக்கும் ஆக்கத்திற்கும் முயற்சித்த காரணங்களினால் மக்கள் மத்தியில் செல்வாக்கிருந்தது. ஏற்கனவே உறுப்பினராய் இருந்தவரின் சேவை மக்களுக்கு திருப்தி அளிக்க வில்லை. உயர்வு தாழ்வுகளும் சமூக அமைப்பில் வேலணையில் பேணப்பட்டது. காலத்திற்கேற்ப மாறுதலடையாத புறக்கணிப்புை வெகுவாக கண்டித்ததோடு பல சீர்திருத்த நடவடிக்கைகளையும் மேற்கொண்டேன். புறக்கணிக்கப்பட்டவர்களின் அரசியற் பிரவேசத் துக்கும் ஆதரவளித்தேன். வேலணைக் கிராமச் சங்கத்தின் இரண்டாம் வட்டாரத்துக்கு கடற்றொழிலாளரான ஆசெல்லத்துரையும் ஆறாம் வட்டாரத்தில் சீவல் தொழிலாளியான முத்தன் ஆறுமுகமும் அங்கத்தவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டமைக்கு உறுதுணையாக இருந்தேன். எனது தந்தையார் வைத்தியர் சிதம்பரப்பிள்ளை நீண்டகாலம் கிராமசபை உறுப்பினராக இருந்து சமூகச் சச்சரவுகளைத் தவிர்த்தும் பிணக்குகளைப் பக்கம் சாராமலும் தீர்த்தும் வந்தால் அவரின் சேவைக்கு மக்கள் மத்தியிலும் சிறப்பாகப் புறக்கணிக்கப்பட்ட மக்களிடத்திலும் மதிப்பு இருந்தது. இவற்றால் கிடைத்த செல்வாக்குத்தான் நான் அரசியலில் பிரவேசிக்கக் காரணமாயின. பொதுவாக எனது கிராமத்தில் மரமேறுவோர், பறையடிப்போர், சலவைத் தொழிலாளர், சவரத்தொழிலாளர், மீன்பிடிக்கும் தொழிலாளர், தச்சுத்வேலை, கொல்லவேலை, செய்வோருங்கூட சில உரிமைகளை அனுபவிக்க மறுக்கப்பட்டிருந்தனர். உயர்சாதியினர் பாவிக்கும் கிணறு குளங்களைப் பாவிக்கக்கூடாது உயர் சாதியினருக்கு சமையக் கிரியை செய்யும் பிராமணர் அவர்களுக்குச் செய்யக் கூடாது. பறைய கிணறு, தச்சுகேணி, முக்குவர் கேணி, செட்டிப்புலக்கிணறு, பள்ளர்கிணறு, துறையூர் செட்டிபுலம் பறையர் குடியிருப்பு எனக் கிணறு குளம் குடியிருப்புக்கள் காணப்பட்டமையே இதற்குச் சான்றாகும். தேனீர்க் கடைகளில் புறம்பான பேணிகளில் அல்லது போத்தலிற்தான் தேனீர் கொடுப்பார்கள். சாப்பாட்டுக் கடைகளிலும் ஒதுக்குப்புறம், சலூன், லோன்டறி களிலும் கூட புறம்பு காட்டல் அனுசரிக்கப்பட்டது.
- 26 -

Page 20
Gltiláj
கட்டுப்பாட்டை மீறினால் வன்செயலாலும் அடக்கியாளும் முறை
திணிக்கப்படும். சமூகச் சண்டைகள் நிகழ்ந்த வரலாறுகளும் உண்டு. ஆலயப் பிரவேசம் நிகழும் அளவிற்கு முன்னேற்றம் காணப்பட்ட நிலையிலும் சில அலுவல்களில் மட்டுப்படுத்தப்பட்ட விட்டுக் கொடுப்புகளைத்தான் காணமுடிகிறது.
சீர்திருத்த நடைமுறைகளால் எனக்கு ஆதரவு பெருகினாலும் சிலரின் சீற்றமும் எதிர்ப்பும் எரிச்சலும் எனக்குச் சிரமம் விளைவித்தன. மேலும் சில கடமைகளை நிறைவேற்ற அரசியல் செல்வாக்குத் தேவைப்பட்டதால் நான் கிராமசபைத் தேர்தலில் அபேட்சகராகப் போட்டியிட்டேன். வெற்றி நிச்சயம் என்ற நிலையிலே சதி முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. சைவ வித்தியாவிருத்திச் சங்க முகாமை யாளராகவிருந்த இந்துபோட் இராசரத்தினமையாவிடம் தேர்தலில் போட்டியிடாமல் என்னைத் தடுக்குமாறு செல்வாக்குப் பிரயோகிக் கப்பட்டது. அவரின் முகாமையின் கீழுள்ள வேலணை சரஸ்வதி வித்தியாசாலையில் ஆசிரியராய் இருந்தபடியால் அவரது உத்தரவை மீற முடியாது. மீறினால் பதவி இல்லை. அவர் என்னைத் தடுத்துவிட்டார். தேர்தல் வேலைகளில் நான் ஈடுபடவில்லை.நான் விட்டாலும் சட்டப்படி வாக்களிப்பு நிகழ்ந்தது. ஆதரவாளர்கள் வாக்களித்தார்கள். மூன்று வாக்குகளால் தோல்வி. ஆனால் அடுத்தடுத்துத்து போட்டியில்லாமலே என்னை மக்கள் தேர்ந்தெடுக்க இது வழிவகுத்தது.
கிராமசபை உறுப்பினராகவிருந்து நெறிப்படுத்திய காலத்தில் சாட்டி சுடலைமடம், மண்கும்பான் - வேலணை வீதி, வேலணை மத்திய சனசமூக நிலைய நூல்நிலையம், சாட்டி நன்னீர்க்கிணறு, இலந்தைக் காட்டு ஒழுங்கை, உப்புக் குளி ஒழுங்கை, பெருங்குளத்தில் பல கிணறுகள், அம்மன் கோவில் சாட்டிவீதி இணைப்பு, வேலணைக் கிராம சங்கம், நாரந்தனை வேலணை கிராமசங்கங்களாகப் பிரிக்கப்பட்டமை எனக் குறிப்பிடத்தக்க பல கருமங்கள் நிறைவேறின.
ஒதுக்கப்பட்டுப் பழகிய காரணத்தால் சில ஆசாரங்களை
வழக்கமாகக் கொண்டவர்கள் அவற்றைக் கைவிட மறுப்பதுங்கூட
- 27 -

சீர்திருத்த நடைமுறைகளை வெகுவாகப் பாதித்தன. எனது நண்பர்கள் சிலர் சம உரிமை பேண இணங்கிக் கொண்டாலும் ஏதோ வற்புறுத்தலின் காரணமாக அந்நடவடிக்கையைக் கையாள்வது போல காட்டிக்
கொள்ளவும் விரும்பினார்கள்.
இரு மாணவர்களை தேநீர் எடுத்து வருமாறு அனுப்பினேன். அதில் ஒருவன் சலவைத் தொழிலாளியின் மகன். தேனீர் கடைக்காரன் எனது நண்பர் நமசிவாயம். நீண்ட காலமாக வங்களாவடியில் கடை உரிமையாளராகத் தொழில் செய்கிறார். ஒரு தேநீரைப் பேணியிலும் மறு தேநீரைப் போத்தலிலும் அனுப்பி இருந்தார். காரணத்தை உணர்ந்து கொண்டேன். சலவைத் தொழிலாளியின் மகன் என்று தெரிந்துதான் போத்தலில் கொடுத்துதிருக்கிறார். அன்றிலிருந்து தேனீர்க்கடைகளில் பாகுபாடு காட்டினால் கிராமசபை லைசென்ஸ் வழங்கப்படமாட்டாது என்று தேநீர்க் கடைக்காரருக்கு அறிவித்தல் கொடுத்து நடைமுறை மேற்கொள்ளப்பட்டது.
வேலணை அம்மன் கோவில் பரிபாலன சபைத் தலைவரா யிருந்த போது வீதியிலே பிரதிட்டை செய்த அடியாரை உள்வீதியில் பிரதிட்டை செய்ய அனுமதித்தேன். அவர்மறுத்து விட்டார். வற்புறுத்தலின் பேரிலேயே நிகழ்ந்தது. இது ஆலயப் பிரவேசத்துக்கு முந்திய
நடவடிக்கை.
என்னைச் சந்திக்க வருகின்றவர்களை நான் ஆசனத்தில் அமருமாறு கூறியபோதும் பலர் அமர மறுத்து விடுவார்கள். நிலத்திலே அமர்வார்கள். பாடசாலை வாங்கு போன்ற ஒன்றிலேனும் அமருமாறு வற்புறுத்தி பழக்கித்தான் ஆசனத்தில் அமரப் பழக்கினேன்.
ஒடுக்கு முறையால் வந்தது தாழ்வு மனப்பான்மை, ஒடுக்கு முறையை அகற்றினாலும் அதை ஏற்கக் கூசுகிறது. அடக்கு முறையில் பயின்றவர்களைப் பார்க்க மனம் நோகிறது. இந்நிலை மாற இன்னும் சில காலமாகம்.
- 28

Page 21
ouling
வேலணை கிராம சங்கம்
வேலணை கிராம சங்கம் மண்கும்பான், வேலணை கிழக்கு, வேலணை மேற்கு, சரவணை நாரந்தனை, கரம்பன் என்னும் கிராமங்களைச் சேர்ந்த 18 வட்டாரங்களைக் கொண்டதாக ஆரம்பத்தில்
அமைந்திருந்தது. ஊர்காவற்றுறை நகரசபை தவிர்ந்த வேலணைத்
- 29
 

தீவுகள், அல்லைப்பிட்டி தவிர்ந்த கிராமங்களின் அபிவிருத்தியைப் பேணும் ஒரு சபையாக இது விளங்கியது.
1932ஆம் ஆண்டிலே வேலணை கிராமசபை வளவிலே வட்டாரம் வட்டாரமாகக் கயிறு அடித்துப் பிரிக்கப்பட்ட கூறுகளிலே மக்கள் இருக்கவிடப்பட்டு பேர் குறித்துப் பிரேரிக்கப்பட்ட அபேட்சகர்களை, கையுயர்த்துவதன் மூலம் குறித்த வட்டாரத்தின் பிரதிநிதியாக தெரிவு செய்தார்கள். இது பகிரங்க வாக்கெடுப்பாகவே நிகழ்ந்தது. எனது தகப்பனார் இரண்டாம் வட்டார அங்கத்தவராகப் போட்டியின்றித் தெரிவு செய்யப்பெற்றார். சில வாரங்களின் பின் நிகழ்ந்த தலைவர் தேர்தலில் திரு.வை.விஜயரத்தினம் அவர்கள் தலைவராகத் தேர்வு பெற்றார். கிராமத்தில் போக்குவரத்துப் பாதைகள், வடிகால் வாய்க்கால், மதகுகள், றோட்டுக்கள் பொருத்தமாகவும் என்றும் பயனுள்ளவை யாகவும் அமைக்கப்பெற்றன. வேலணை இரண்டாம் வட்டாரத்தில் எல்லையால் போகும் மண்கும்பான் சாட்டி வீதி அக்காலத்தில் மணலாய் இருந்தது. பின் மக்கி போட்டு திருத்தி அமைக்கப்பட்டது.1974இல் நான் அங்கத்தவராக வந்த வேளை மேலும் நன்கொடை மூலம் கல்லுப்பரவி தார் றோட்ராக அமைக்கப்பட்டது. றோட்டைத் தொடக்கி வைத்த நினைவுக்காக விஜயரத்தினம் வீதி என அவ்வீதிக்குப் பெயர் சூட்டினோம். இன்றுவரை அப்பெயர் வழக்கிலுள்ளது.
முதலில் கை உயர்த்தித் தெரிவதாய் இருந்த வாக்களிப்புமுறை பின்பு புள்ளடி இட்டு ஒவ்வொரு அபேட்சகருக்கும் ஒதுக்கப்பட்ட சிகப்பு, மஞ்சள் , பச்சைப் பெட்டிகளில் போடும் முறையாக மாற்றமடைந்தது. இதன் பிறகுதான் அபட்சகரின் பெயருக்கு எதிரே புள்ளடி இடும் வாக்களிக்கும் முறை நடைமுறைக்கு வந்தது.
18 வட்டாரங்களைக் கொண்ட கிராம சபை வட்டார ரீதியாகவோ அல்லது கிராமத்துக்கொன்றாகவோ கூட அபிவிருத்தி வேலைகளை நிறைவேற்றக் கூடிய பண நிலை இருக்கவில்லை. கிடைக்கும் பணமும்

Page 22
Ganu Griff ei blu Gofidil
நிர்வாகச் செலவுகளுக்கே போதாமிலிருந்தது. கேணிகள், வழிப்பாதைகள், ஒழுங்கைகள், கிணறுகள் பரிபாலிக்க நிதி பற்றாக்குறை மக்கட் பெருக்கத்திற்கேற்ப வசதிகளைப் பெருக்க கிராம சபையைப் பிரிப்பதும், சந்தை மீன் விற்பனை வரிகளை நடை முறைப்படுத்துவதும் இன்றியமையாததாக கணிக்கப்பெற்றதால் கிராம சபையை இரண்டாகப் பிரித்து பெரிய வட்டாடரங்களையும் குறுக்கிப் பிரித்து பிரதிநிதிகளைக் கூட்டுவதென்று தீர்மானித்தோம்.
தீர்மானத்தை செற்பபடுத்த நடவடிக்கை எடுத்து அமைச்சர் மட்டத்தில் அங்கீகாரமும் பெறப்பட்ட நிலையில் பிரிப்பதற்கு எதிர்ப்புக் கிளம்பியது. ஏற்கனவே கிராமசபையில் எடுக்கப்பட்ட தீர்மானத்தை மீண்டும் ஒரு முறை பரிசீலனை செய்யுமாறு அரசியல் செல்வாக்குப் பயன்படுத்தப்பட்டது. இந்த வேளை கிராம சபையின் மறு தேர்வு நெருங்கி விட்டதால் தேர்விலும் குறித்த பிரச்சினை எதிரொலித்தது. நான் போட்டியின்றித் தேர்தெடுக்கப்பட்டாலும் ஏனைய வட்டாரங்கள் சிலவற்றில் இதே அடிப்படையில் போட்டி நிகழ்ந்தது. பிரிவுக்கு ஆதாரவானவர்கள் வெற்றிபெற்றதால் மீண்டும் தீர்மானம் நிறைவேறியது. இதன் பயனாக 1953 ஆம் ஆண்டின் பின்னர் கிராமசபை வேலணை, நாரந்தனை என இரு கூறாகப் பிரிக்கப்பட்டே
தேர்தல் நிகழ்ந்தது.இது அபிவிருத்திக்கும் பாராட்டுக்குமுரிய சாதனை.
1947 - 1953 ஆகிய காலப்பகுதியில் கிராம சபைக்குப் புதிய காரியாலயம் கட்டப்பட்டது. வேலணை மத்திய வாசிகசாலை, நூல்நிலையங்களுக்கு பழைய கிராம சங்கக் காரியாலயம் திருத்தி அமைத்துக் கொடுக்கப்பட்டது. வேலணை மேற்கு சிற்பனை வீதி திறப்பதற்குத் தடையாய் இருந்த காணிகள் பெறப்பட்டு அரசினர் நன்கொடை மூலம் சுருவில் றோட்டு விஸ்தரிக்கப்பட்டது. மண்கும்பான் சாட்டி வீதியும் பண்ணை றோட்டுடன் இணையக் கூடியதாக விஸ்தரிக்கப்பட்டது. சாட்டி சுடலைமடம் கட்டப்பட்டது. செட்டிப் புலத்திலும் வேலணைத் துறையிலும் மீன் சந்தைகட்டடம் அமைக்கப்

Gulag
பட்டு மீன் சந்தைச் செயற்பாடு முறையாக கிராமசபையால் செற்பபடுத்தப்பட்டது. சாட்டிப் பகுதியில் இரண்டு நன்னீர் கிணறுகள், பெருங்குளத்தில் பெரிய கேணியடிக் கிணறு, ஆலடிக் கிணறு என்பன புதிதாக வெட்டிக்கட்டப்பட்டன. பறைய தாழ்வுக் கிணறு திருத்திக்கட்டப்பட்டது. வெட்டுக் குளத்திலும் குடிநீர்க் கிணறு வெட்டிக் கட்டப்பட்டது. அம்மன்கோவில் றோட் மேலும் விஸ்தரிக்கப்பட்டு சாட்டி மண்கும்பான்றோட்டுடன் இணைக்கப்பெற்றது இவையெல்லாம் குறுகிய காலகட்டத்தில் துரிதமாக நிறைவேற்றிய சாதனைக்கு இன்றும்
சான்றாகவுள்ளன.
1967-1953 வரையான காலப்பகுதியில் நான் நிறைவேற்றிய குறித்த சாதனைகளை வியந்து பின்னர் வந்த கிராமசபையினர் சமாதான நீதவானாக என்னை நியமிக்க வேண்டுமென ஏகமனதாகத் தீர்மானம் நிறைவேற்றினர். அத்துடன் தீவகத்திலுள்ள சனசமூக நிலையங்கள் மற்றும் பொது நிறுவனங்களும் சிபார்சு செய்ததன் பயனாக 1978ஆம் ஆண்டில் அரசாங்கம் எனக்கு சமாதான நீதிவான் பதவியளித்துக் கெளரவித்தது.
ത്. 32 =

Page 23
தில்லுமுல்லு
பிரிக்கப்பட்டவேலணைக் கிராமச்சங்கத் தேர்வுகள் ஆரப்பத்தில் சுமுகமாய் நிகழ்ந்த போதும் தலைவர் தேர்தலில் போட்டியிருந்ததால் ஆள் கடத்தல் நடவடிக்கைகள் நிகழ்ந்தன. தலைவர் தேர்தல் நெருங்கி வரும்வேளை தெரிவு செய்யப்பெற்ற கிராமசபை உறுப்பினர் ஆதர
س= 33 -
 

ning
வாளரின் நெருக்குதலால் தடம்புரளத் தொடங்கினர். இதைத் தவிர்க்கும் முகமாகவே தேர்தலுக்கு சில நாட்களின் முன்பாக, உறப்பினர் கிராமத்தைவிட்டு வெளியேறி தேர்தல்வரை தலைமறைவாக இருக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. இந்த வகையில் நிகழ்ந்த சுவையான நிகழ்ச்சிகள் சில இங்கு விபரிக்கப்படுகின்றன.
8ஆம் வட்டாரக் கிராமசபை உறுப்பினராகத் தெரிவு செய்யப் பெற்றவர் ப.கந்தசாமி. தலைவர் தேர்தலுக்குப் போட்டியிட்டவர் இவரை தலைவர் தேர்தலுக்கு முன் கடத்திச் சென்று தலைமறைவாக வைத்துக் கொண்டார். அவரை எதிர்த்துப் போட்டியிட்டவர் வேறு வழியின்றி கந்தசாமியின் நெருங்கிய நண்பரின் உதவியுடன் கந்தசாமியின் மனைவியின் மூலம் ஒரு இரகசியச் செய்தியை அனுப்பி வைத்தார். தேர்தல் அன்று தான் கந்தசாமியை தலைவராகப் பிரேரிப்பதாகவும். அதை மீளப் பெறக் கூடாததென்பதும் தான் அச்செய்தி, அதன்படியே தேர்தலன்று அனைத்து உறுப்பினரும் சமூகமளித்த வேளை அவரின் பெயர் பிரேரித்து அனுமதிக்கப்பட்டது. அவரே போட்டியின்றித் தலைவரானார். இதற்கு முன்னரும் ஒரு தேர்தலில் வட்டார அங்கத்தவர்கள் தலைவர் போட்டியில் அமைதி இழக்க நேர்ந்தது. வட்டார வாக்காளர் சிலரும் நண்பர்களும் செல்வாக்கை மாறிமாறிப் பிரயோகித்த வண்ணமிருந்தனர். இதனால் இடஞ்சற்பட்டவர்கள் என்னுடன் ஆலோசனை கலந்த பின் ஊரில் இல்லாமலே வட்டக் கச்சி பயணமானார்கள். நண்பர் வ. கதிரவேலுவுக்கு வட்டக்கச்சி குடியேற்றத் திட்டத்தில் காணி, வீடு இருந்தது. அவரிடம் குறைந்தது ஒருவாரம் தங்கி இருந்தபின் தேர்தலன்று வந்து போட்டியின்றி தலைவரைத் தேர்ந் தெடுத்தனர். எதிர்த்துப் போட்டியிட்டவர் சபைக்கு வரவேயில்லை.
இன்னுமொரு சம்பவத்தில் ஏற்கனவே தலைவராகப் பதவி வகித்தவர் எனது நண்பர் ஓய்வு பெற்ற கிராம சேவையாளர் பு:சுப்பிரமணியம். அசியற் பிரச்சினையால் அவருக்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டுவர முன்னறிவித்தல் கொடுக்கப் பட்டது. அப்பொழுது உள்ளூராட்சி உதவி ஆணையாளராக இருந்தவர்
- 34

Page 24
Garagāji مح۔
பின் அரசாங்க அதிபராயிருந்து ஓய்வுபெற்ற ஏ.ஏ. சூயாசேவ் அவர்கள். தீர்மானத்தின் தாக்கம் பற்றி அவரோடு கலந்து பேசிய பின் தீர்மானம் நிறைவேறினால் பதவி இழப்பு தவிர்க்க முடியாததென்பதை நிச்சயப்படுத்திக் கொண்டேன். கதிரவேலு என்பவர் 1ஆம் வட்டாரக் கிராமசபை உறுப்பினர். அவர் 2ஆம் வட்டாரத் தேர்தலில் போட்டியிட்ட
போது அவருக்கு சகல வழிகளிலும் ஆதரவளித்து வெற்றியீட்டிக் கொடுத்திருக்கிறேன். அவரின் ஆதரவோடுதான் நம்பிக்கை இல்லாத தீர்மானம் நிறைவேறும். எனவே அவரை அழைத்துப் பேசி கூட்டத்துக்கு வராமல் போய்விடுமாறு கேட்டுக் கொண்டேன். அவரெனது மைத்துனர் ஆசிரியர் மு.கிருஷ்ணசிங்கம் அவருடன் முல்லைத்தீவு பயணமானார். கூட்டத்துக்கு அவர் வரவில்லை. தீர்மானம் குழம்பியது நிறைவேறவில்லை.
வேறொரு தேர்தலில் இளைப்பாறிய என்சினியர் க.சதாசிவம் அவர்கள் தலைவராகப் போட்டியிட்டார், அவருக்கு எதிராகவும் போட்டியிட முயற்சி மேற்கொள்ளப்பட்டது. அவ்வேளை கிராமசபை உறுப்பினராக இருந்த இருவர் எமக்கு ஆதரவாக வாக்களிப்பதாக உறுதியளித்த போதிலும் சமயத்தில் தடம்புரளக் கூடுமெனச் சந்தேகம் வலுத்ததால் அவர்களுடன் ஏனையோரையும் சேர்த்து ஒரு வாரம் முன்னதாகவே வவுனியாவுக்கு அனுப்பி விட்டோம். எனது அயலவரும் நண்பருமான கிளாக்கர் சிவபாதலிங்கம் என்பவருக்கு வவுனியாவிலே வீடும் நெற்கமமும் ஏக்கர் கணக்கில் இருந்தன. அங்கு ஒருவாரம் ஆனந்தமாகப் பொழுது போக்கி தேர்தல் நேரத்துக்கு வந்து சேர்ந்தனர். போட்டியின்றி சதாசிவம் தலைவரானார்.
இவை அனைத்துமே தில்லுமுல்லு என்றோ, தேவையற்ற போட்டி மனப்பான்மையால் நிகழ்ந்தவை என்றோ சொல்லமுடியாது. குறித்த கிராமச் சங்கத்தில் அபிவிருத்தி நடவடிக்கைகளைத் தக்கவாறு வல்லவர்களைக் கொண்டு செயற்படுத்தவும் அவர்களின் சேவை கிராமத்துக்குக் கிடைக்கவும் புரிந்த சாதனைகள் என்பது பெறுபேறு களால் உய்த்துணரத்தக்கவையாக உள. இதில் அறிமுகப்படுத்தப்பட்ட வர்களின் வரலாறுகளும் சாதனைகளும் இதற்குச் சான்று பகரும்.

Brad 44 yr.
ise, as ask
மத்திய மகா வித்தியாலயம்
உயர்திரு கன்னங்கரா அவர்கள் கல்வி அமைச்சராக இருந்த வேளை தொகுதிகள் தோறும் மத்திய பாடசாலைகள் அமைக்கும் திட்டம் ஆரம்பமானது. தீவுப்பகுதிக்கு ஒரு மத்திய மகாவித்தியாலயம், தீவுப்பகுதி மக்களின் போக்குவரத்துக்கு மையமாகவிருக்கும்
-- 36 -ـــــــــــــــــــــــــــــــ

Page 25
burial
வேலணையில் அதுவும் புங்குடுதீவு - யாழ்ப்பாணம், ஊர்காவற்றுறை - மண்டைதீவு போக்குவரவுப் பாதைகள் ஒன்றாகச் சந்திக்கும் வங்களா வடிச் சந்தியிலே அமைவது பொருத்தமாகக் கருதப்பட்டது. தீவுப் பகுதி பாராளுமன்ற உறுப்பினராக இருந்த சேர்.வைத்தியலிங்கம் துரை சுவாமி அவர்கள் பாராளுமன்றத்தில் ஸ்பீக்கராகவும் இருந்தார். அவரது ஆலோசனைப்படி கல்வி அமைச்சர் கன்னங்கரா அவர்களும் சைவ வித்தியாவிருத்திச் சங்க முகாமையாளர் திரு.சு.இராசரத்தினம் அவர்களும் வேலணை சரஸ்வதி வித்தியாசாலையை மத்திய மகா வித்தியாலயமாக மாற்றி அமைக்க எடுத்த முடிவை அறிவிப்பதற்காக வேலணை சரஸ்வதி வித்தியாசாலையில் கூடும்படி மக்களுக்கு அறிவித்தார்கள் வித்தியாசாலை அதிபர் அ.செல்லையா அவர்களும், உதவியாசிரியர்களும், மக்களும் தலைவர் களை வரவேற்க பாடசாலை யில் கூடினோம். வித்தியாசாலையை மத்திய மகாவித்தியாலயமாக மாற்றுவதற்கான ஒழுங்குகள் ஆராயப் பெற்று வேலணை மணியகாரர் வீட்டில் விடுதி வசதியும் அமைவதென்று முடிவானது.
குறித்த நடைமுறைகளைக் கையாளுவதற்கான அமைப் பொன்றும் நிறுவப்பட்டது. வேலணை மகாஜன சபை என்ற பெயரில் அமைந்த சபைக்கு வேலணை தபாலதிபர் நா.சரவணமுத்து தலைவரா கவும் நான் செயலாளராகவும் பிரபல வியாபாரி மு.சி.சிற்றம்பலம் தனாதிகாரியாகவும் தேர்ந்தெடுக்கப்பட்டோம், கிராம ரீதியாக நிருவாக சபை உறுப்பினரும் தெரிவாயினர். ஆரம்ப நடவடிக்கைகள் மேற் கொள்ளப்படும் வேளை நாரந்தனை, சரவணை புளியங்கூடல் மக்கள் மத்தியில், அப்போதைய கிராமச் சங்கத் தலைவர் இமருதையினார் ஆசிரியர் தலைமையில் சரவணை, புளியங்கூடற் சந்தியில் பாடசாலை அமைய வேண்டுமென்னும் கோரிக்கை தோன்றியது. பாராளுமன்ற உறுப்பினருக்கு இம்முறையீடு எடுத்துச் சொல்லப்பட்டதால் ஏற்பட்ட இழுபறி நிலையைச் சமாளிக்க வேலணை வங்களாவடிச் சந்திக்கும் சரவணைச் சந்திக்கும் இடையே நடுவில் அமைந்துள்ள வேலணை மேற்கு சைவப்பிரகாச வித்தியாசாலையில் அமைப்பதென்று முடிவு
سے 37 ســـــــــــــــــــــــــــــــ

hungblg:
செய்யப்பெற்றது. அதன்படி சைவப்பிரகாச வித்தியாலசாலை வளவில் கட்டிடம் அமைத்தும் அதன் அயலில் உள்ள காணியை வாங்கி கொட்டகை போட்டும் மத்திய மகாவித்தியாலயம் ஆரம்பிக்கப் பெற்றது. மேலும் அயலில் உள்ள காணிகள் சுவீகரிக்கப் பெற்று நிரந்தரக் கட்டிடம், விளையாட்டு மைதானம் அமைப்பதென்றும் முடிவாகியது. மாணவர் தொகையும் அதற்கேற்ப ஆசிரியர் தொகையும் அதிகரிக்கவே மேலும் தற்காலிகமாகக் கொட்டகைகள் அமைத்து ஆசிரியருக்கும் மாணவர்களுக்குமான விடுதி வசதிகளும் செய்யப் பெற்றன.
பிறகு நிரந்தரக் கட்டிடம் அமைக்கும் வேலை தொடங்கவிருந்த போது சரவணைச் சந்தியில் கட்டுவதென முடிவாகியிருப்பதாகத் தெரிய வந்ததால் மீண்டும் எதிர்ப்புகள் தலைதூக்கின. மகாஜன சபைச் செயலாளர் கடமைகளைச் செயற்படுத்துவது என் கடமையாக இருந்த படியால் சபையைக் கூட்டி எடுக்கவேண்டிய நடவடிக்கைகளைத் தீர்மானித்தோம். பாராளுமன்ற உறப்பினரும் கிராமசபைத் தலைவரும் வாக்குறுதியைக் காப்பாற்றத் தவறிவிட்டதாகப் பத்திரிகையில் (இந்து சாதனம்) செய்தி வெளியிட்டதோடு நேரில் கண்டும் உரையாடினோம். பலனளிக்காததால் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டியதாயிற்று. தலைவர், காரியதரிசி, தனாதிகாரி மற்றும் உபதலைவர், தலைமை ஆசிரியர் அ.செல்லையா, உபசெயல்ாளர், குத்தொகைக்காரர் பேரம்பலம் ஆகியோர் கொழும்பு சென்று பல அரசியல் தலைவர்களைச் சந்தித்தோம். கொழும்பு தீவக சமாசத் தலைவராக இருந்து பின் பாராளுமன்ற உறுப்பினரான வ. நவரத்தினம் அவர்களையும் சந்தித்தோம். அவர் உதவ மறுத்ததோடும் எதிராக அறிக்கையும் வெளியிட்டு பிரதியையும் எமக்கு அனுப்பி வைத்தார். பிறகு கொழும்பில் உயர்பதவி வகித்த, பிற்கால தீவுப்பகுதி எம்பிக் களான பண்டிதர் க.பொ.இரத்தினம், அப்புக்காத்து வி.ஏ.கந்தையா ஆகியோர் எங்களுக்கு உதவினார்கள். தீவுப்பகுதி மக்களின் பெரும்
سست 38 ==

Page 26
பான்மை பலமும் எங்களுக்கு கிடைத்தது. மக்கள் தலைவர்களதும் மக்களதும் வேண்டுகோளுடனான விண்ணப்பங்களும் எங்களுக்கு உதவின. சந்தியில் நிரந்தரக் கட்டிடம் அமைக்கும் அனுமதியும் கிடைத் திருந்த வேளை எங்கள் பிரதிநிதிகள் திருவாளர் கிளாக் பாலசிங்கம் (முன்னர் வேலணை கிராமச் சங்கத் தலைவர்) அவர்களை அழைத்துக் கொண்டு கொழும்பு சென்று கல்வி அமைச்சின் நிரந்தரக் காரியதரிசி யோடு நேரில் நிலைமைகளைத் தெளிவுபடுத்தியதன் பேரில் அனுமதி மீளப் பெறப்பட்டு எமது கோரிக்கை ஏற்றுக் கொள்ளப்பட்டது. அப்போதைய கல்வி அமைச்சரும் நேரில் வந்து பார்வையிட்டுச் சென்றிருந்தார்.
வேலணை மத்திய மகாவித்தியாலயத்தினை ஆரம்ப காலப் பகுதியில் அதிபராகக் கடமையாற்றி பாடசாலையின் துரித வளர்ச்சிக்கு உதவியவர் வட்டுக்கோட்டையைச் சேர்ந்த காபன் கந்தையா அவர்கள். அவருக்குப் பின் நினைவு கூரத்தக்க வகையில் சேவையாற்றியவர் மாவிட்டபுரத்தைச் சேர்ந்த அதிபர் தம்பு அவர்கள். வேலணையிலே இவர்களிடம் படித்த மாணவர்கள் பின் பட்டதாரிகள், எஞ்சினியர்கள், டாக்டர்கள், அதிபர்கள், ஆசிரியர்கள், கல்வி அதிகாரிகள் எனப் பதவி
வகிக்கிறார்கள்.
கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த நல்லையா, அமைச்சராக இருந்த வேளை அதிபர் தம்புவுக்கு மட்டக்களப்புக்கு மாற்றம் வந்தது. அப்போது ஏ.எல்தம்பிஐயா ஊர்காவற்றுறை எம்பியாக இருந்தார். மாற்றத்தைத் தடுக்க எடுத்த முயற்சிகள் பலியாது போகவே சரவணைணைச் சேர்ந்த ஆசிரியர் நா.நடராசா வேலணை மேற்கு சபாரத்தினம் இன்னுமொருவர் வேலணை மகாசபைச் செயலாளர் என்ற வகையில் நானும் பாராளுமன்ற உறுப்பினரைச் சந்தித்துப் பாடசாலை நன்மை கருதி மாற்றத்தை தடுக்குமாறு கேட்டுக் கொண்டோம்.
- 39

அமைச்சர் குறுக்கே நின்றதால் அது சிரமமாக இருந்தது. எம்பியுடன் நெருங்கிப் பழகிய நட்புரிமையால் மாற்றம் எப்படியாவது நிறுத்தப் பட்டாலன்றி நான் திரும்பப் போவதில்லையென அடம் பிடித்ததால் அப்பொழுது பிரதமராயிருந்த டட்லி சேனநாயக்காவிடம் என்னையும் கூட்டிப் போனார். நான் விண்ணப்பத்தை எழுத்திலும் கொடுத்து நேரில் விளக்கிக் கூறினேன்.
கல்வி நிலையில் உயர்கல்விக்கான வசதியின்றி பின்தங்கிய நிலையில் உள்ள கிராமத்தில் உயர்கல்வி வளர்ச்சிக்கு தம்பு அவர்கள் ஆற்றிய சேவைகளை நான் எடுத்துக் கூறியதும் எனது விண்ணப்பத்தை ஏற்று உடன் நடவடிக்கைக்கு பிரதம அமைச்சர் சிபாரிசு செய்யவே கையோடு மாற்ற நிறுத்தத்துக்கான கடிதத்துடன் திரும்பினோம். எம்பி ஏ.எல்.தம்பிஐயாவுக்கும் எனக்கும் அரசியல் உறவு மேலும் நெருக்கமாய் இருந்தமைக்கு இதுவுமொரு சான்று. மேலும் அவரின் உதவியால் வேலணையில் பலருக்கு காகோ போட்டிலும் வேறு பல நிறுவனங்களிலும் வேலைவாய்ப்பும் பெற்றுக் கொடுத்திருக்கிறேன். வேலணையூர் கந்தையா, தவராசா காகோ கோட்டில் சேர்ந்து சுப்பிரிண்டன் ஆக பதவி உயர்வு பெற்றதாலும் மேலும் பலருக்கு அங்கு வேலை வாய்ப்பளிக்க வசதியாகவும் இருந்தது.
பண்ணைத் தாம்போதி வேலை பூரணமடைய தொங்குப் பாலம் போடும் வேலைகள் கடற்றொழில் செய்வோரின் எதிர்ப்பால் தடைப்பட்ட வேளை சாதுரியமாக அந்த வேலையை எதிர்ப்புக்களைச்
சமாளித்துநிறைவேற்றியவரும் எம்.பி.ஏ.எல் தம்பிஐயா அவர்களே.

Page 27
եեllլtiնեն
ELECTo
* 氰 2. 蠶 | HTE t TS
s., FAJARANTINA AMES Joe PEREşşa RÍÏÂÌ“ili
PCs. VELANAth9. TANUARY. g.g.
கூட்டுறவு
கூட்டுறவுச் சங்கங்களின் ஆணையாளராக இருந்து இளைப் பாறிய ஆர்.சி.எஸ்.குக், இரசந்திரசேகரா கூட்டுறவுப் பரிசோதகர் களாகவும் யாழ்ப்பானக் கூட்டுறவு உதவி ஆணையாளர்களாகவும்
இ . ." - (Ea ն
Ibģi, 4#, ITALI: தீவுப்பகுதி. & -2:|Togg]] - D குறிப்பாக Kajkl) &3 &:ůTLI'll -) LKL)
- 4 -
 
 
 
 

ஐக்கிய நாணய சங்கங்கள் நிறுவப்பட்டன.இச்சங்கங்கள் மட்டுப்படுத்தப் பட்ாத உத்தரவாதமானவை. ஒருவர் பட்ட கடனுக்கு சங்க உறுப்பினர் அனைவரும் பொறுப்பு என்பதே மட்டுப்படுத்தப்படாத உத்தரவாத மென்பது இதை நன்கறிந்தே செயற்பட வேண்டுமென்பற்காக சங்க உப விதிகளை நன்கு விளக்கமாக சகலரும் அறிந்திருக்கிறார்களா என்பதை பரிசீலித்துப் பரீட்சித்துப் பார்த்துத்தான் நாணய சங்கம் பதிவு செய்யப்படும், காணிச் செய்கைக்கான பசனை, உழவு பண்படுத்தல், அறு வடைக்கு தனிப்பட்டவர்களிடம் கூடிய வட்டிக்கு கடன்பட்டு விவ சாயம் செய்தவர்களுக்கு ஐக்கிய நாணய சங்கங்கள் பேருதவியாய் இருந்தன. வேலணை மத்தி, ஆலம்பும், தேவிகோட்டம், சந்திரா எனும் ஐக்கிய நாணய சங்கங்கள் யாழ்ப்பாணம் பிரதான வீதியில் அமைந்துள்ள வடமாகாணக் கூட்டுறவு வங்கியில் கடன் பெற்று விவசாயிகளுக்குக் கடன் கொடுத்துஅறுவடைக்குப்பின் அறவிட்டுசெலுத்திவந்தன.
முதல் தேவிகோட்ட ஐக்கிய நாணயசங்கத்தில் சேர்ந்திருந்த நான் பின்பு சந்திரா ஐக்கிய நாணய சங்கத்தின் தலைவராக கூட்டுறவுச் சேவையில் இணைந்து கொண்டேன். 2ஆவது உலக யுத்த காலத்தில் பங்கீட்டு முறையில் உணவுப் பொருள் விநியோகித்தலுக்காக ஐக்கிய பண்டகசாலைச் சங்கங்கள் அமைந்தபோது வேலனை சந்திரா ஐக்கிய பண்டகசாலைச் சங்கத்தில் தலைவரானேன். ஐக்கிய சங்கங்கள் மறு சீரமைக்கப் பெற்று பலநோக்குக் கூட்டுறவுச் சங்கக் கிளைகளாகச் செயற்படும் போதும், தொடர்ந்தும் அக்கிளையின் தலைவராகக் கடமையாற்றினேன்.
1938ஆம் ஆண்டு கோண்டாவில் பரஞ்சோதி வித்தியா trແຫ້ແມ່ນມີແມ່ ஆசிரியராகக் கடமையேற்ற போது விவசாயிகளின் தேவைகளை அவதானித்து ஐக்கிய நாணய சங்கத்தின் தேவைகளை விளக்கி அங்கு கோண்டாவில் குமரகோட்டம் ஐக்கிய நாணய சங்கத்தை நிறுவ உதவினேன், ஏற்கனவே கூட்டுறவுத்துறை சார்ந்த உத்தி யோகத்தரின் அறிமுகமிருந்ததால் துரிதகதியில் நிறுவிக் கொடுத்துதவ
H 42

Page 28
sunny
முடிந்தது. நாட்டுப்புறங்களிலும் பார்க்க தீவுப்பகுதியில் கூட்டுறவு நேரகாலத்துக்கு துரிதவளர்ச்சியடைந்திருந்ததை அவதானிக்கலாம்.
1941ஆம் ஆண்டளவில் விளைபொருள் உற்பத்தி விற்பனவுச் சங்கங்கள் உருவான காலத்தில் வேலணை மண்டைதீவு விளைபொருள் உற்பத்திக் கூட்டுறவுச் சங்கத்தின் செயலாளராகப் பணிபுரிந்த போது யாழ் மாவட்ட விவசாய உறுப்பினராகவும் செயற்பட்டேன். அப்போது சட்டத்தரணி நா.த. சிவஞானம் அதன் தலைவராயிருந்தார். வெங்காயம், மிளகாய், தக்காளி உற்பத்திக்கான விதைபொருள்கள், உரங்களைக் கடனுக்கு வழங்கி அறுவடையின் போது அவற்றைக் கொள்வனவு செய்து சந்தைப்படுத்த சமாசம் உதவியது. அதுவே பின்பு மாக்பெற் நிறுவனமாகியது.
விவசாயத்தை அபிவிருத்தி செய்யவும் காணிகளை பதிவு செய்து சொந்தக்காரரைக் கண்டறியவும், காணிப் பிணக்குகளை தீர்க்கவும், பயிர்ச் செய்கைக் குழுக்கள் அமைக்கவும் தொடர்ந்து கமத்தொழில் அபிவிருத்தி கொள்வனவு விற்பனைச் சங்கங்கள் விவசாயத் திணைக்கள நிருவாகத்தின் கீழ் நடைமுறைக்கு வந்த போது அவற்றில் பங்குகொண்டு காணி வாங்கிக் கட்டிடம் நிறுவும் பணிகளையும் தொடர்ந்து நிறைவேற்றியதோடு விவசாய சேவை நிலையத்தில் இலங்கை வங்கிக்கிளை நிறுவிக் கணக்கு வைக்கவும் கடன் வழங்கவும் வசதிகளும் மேற்கொள்ளப்பட்டன. விரும்பியும் விரும்பாமலும் அமைச்சர் குமாரசூரியருக்கு மிளகாய் மாலையும், நெல்மணிமாலையும் அணிந்து வரவேற்று உபசரித்து இலங்கை வங்கிக்கிளை வேலணை வங்காளவடியில் நிறுவப்பட்டது. ஊர்காவற்றுறையில் எங்கோ மறைபொருளாகச் செயற்பட்டுவந்த கால்நடை வைத்திய நிலையம், விவசாய சேவை சங்கத்தில் உறுப்பினராக இருந்தபோது சபையில் விளக்கிக் கூறி எடுத்த தீர்மானத் துக்கு அமைய வேலணைக்கு மாற்றப்பட்டு காரியாலயமும் அமைக்கப்பெற்றது யாவரும் அறிந்ததே.
- 43 =

GUGraf
பண்ணைப் போக்குவரவுச் சபையில் நீண்டகால உறுப்பினராக இருந்த காலத்தில் தனி நபர்கள் குத்தகைக்கு எடுத்த பண்ணைப் படகுச் சேவையை ஏனோதானோவென்று அசிரத்தையால் நிருவகித்த நிலையை மாற்றி சங்கம் குத்தொகைக்கு எடுத்து படகுசேவையை ஒழுங்காக நிகழச் செய்த நடைமுறைக்கும் குறித்த கடற்பாதையை மூடி தாம்போதி அமைக்கும் வேலையை நிறைவேற்றவும் எடுத்த சகல முயற்சிகளுக்கும் நிருவாகத்தில் பொறுப்பாகவிருந்து செயற்படுத்திய தோடு பண்ணை - மண்டைதீவு பஸ் சேவையையும் கூட சங்கம் மேற் கொண்டு நடைமுறைப்படுத்த உதவி இருக்கிறேன். தாம்போதி பூர்த்தி யாகி பாலம் போட எத்தனித்த வேளை அதற்கு நேர்ந்த தடையை அகற்றுவதற்கு மண்டைதீவு கிராமசபைத் தலைவராகவும் பண்ணைச் சங்க செயலாளராகவும் இருந்த கைலாயபிள்ளை அவர்களும் நானும் பாராளுமன்ற உறுப்பினர் ஏ.எல்தம்பியையா மூலம் தீவிர முயற்சி மேற் கொண்ட பிறகே நிறைவேற்ற முடிந்தாலும் மூடு பாலமாக அமைக்கவிருந்த பாலம் எதிர்ப்புக் காரணமாகவே தொங்குபாலமாக
மாற்றி அமைக்கப் பெற்றது.

Page 29
īgā
கல்மடுக் கமம்
1953இல் கல்மடு மத்தியதர வகுப்பு குடியேற்றத் திட்டத்தில் பாசனவசதியுடன் கூடிய 10 ஏக்கர் நெற் காணியும் 5ஏக்கர் மேட்டுநிலம் குடியிருப்புக்கும் மேட்டு நிலம் பயிர்ச் செய்கைக்கும் எனக் கிடைத்தது. 45பேர் இந்தப் பங்கீட்டைப் பெற்றனர். காட்டுமரங்களைத் தறித்து
= 45 =
 

எரித்து, காடழித்து கமம் செய்ய வேண்டும். வேலணையில் காட்டு மரங்களைத் தறிப்பதில் மிகுந்த திறமைசாலிகள் பலர் இருந்தனர். விறகுகாலைக்காக காடுகளை அரசாங்கத்தில் உத்தரவு பெற்று தறிப்பிக்கும் விறகுகாலைச் சொந்தக்காரர் வேலணையில் இருந்த படியால் காடுகளில் மாதக் கணக்கில் தங்கி நின்று மரங்களைத் தறித்து துண்டு போட்டு காட்டினூடே வழிப்பாதைகளும் அமைத்து மரங்களை ஏற்றி இறக்கவும் வசதி செய்யும் தொழிலை நன்கு பழகியிருந்தனர் இவர்கள் காடுகளில் வேலை செய்யப் போவதானால் கூட்டிப் போகிறவரிடம் முற்பணம் பெற்று தங்கள் குடும்பத்தினரின் செலவுக்காகக் கொடுத்துவிட்டு தங்களுக்குத் தேவையான பொருட்களையும் உபகரணங்களையும் வாங்கி கொண்டு புறப்படு வதுதான் வழக்கம். இவர்களுள்ளே கூடிய திறமையும் அனுபவமும் உள்ள முதியவர் வேலணை முதலாம் வட்டாரத்தைச் சேர்ந்த சின்னர் (மாடன்) என்பவர். அவரின் தலைமையிற் பல தொழிலாளர்களையும் அழைத்துக் கொண்டு, எனது காணிக்கு அயற்காணியை பங்கீடாகப் பெற்ற தென்னிலங்கைப் பிரபல வர்த்தகர் வேலணை 5ஆம் வட்டாரத்தைச் சேர்ந்த இ. கயிலாயபிள்ளை என்பவரோடு கிளிநொச்சிவரை பஸ்சில் போய் கிளிநொச்சிச் சந்தையில் காய்கறி சாப்பாட்டுச் சாமான்கள் தங்கியிருக்க தற்காலிக கொட்டகை போடுவதற்கான கிடுகு, ஈர்க்கு, கயிறு, பாய் கடகம், பானை, சட்டி, பேணி, செம்பு, காட்டுக் கத்திகள், கோடாலிகள், அலவாங்கு, மண்வெட்டி எனத் தேவைப்படும் சகல பொருட்களையும் வாங்கிக் கொண்டு வான் பிடித்து இரணைமடுக் குளக்கட்டின் மேலாகக் கல்மடுக்குள நீர்ப்பாசனத் திட்டம்வரை போனோம். அதற்கப்பால் வான் போகப் பாதையில்லை. கால்நடையாகப் பொருட்களை எல்லாம் இறக்கிச் சுமந்து கொண்டு சுருக்கமான நடைபாதையால் ஏறக்குறைய ஒரு மைல் தூரம் நடந்து எங்கள் கமத்துக்குச் சற்றுக் கிட்டவுள்ள புல்லுக்குளம் என்ற குளக்கரையை அடைந்தோம். குளக்கரையோரம் மரம் பற்றைகளற்ற வெளியாக இருந்தது. அதில் வசதியான இடத்தில் சாமான்களை வைத்துவிட்டு கொட்டில் போடும் வேலை ஆரம்பிக்கப்பட்டது. இரவு
- 46 -

Page 30
Injaga amb Genfīr வேளை நெருப்புக் கொழுத்த சிலர் பட்ட கட்டைகளைச் சேர்த்து அடுக்கினார்கள். காட்டில் கட்டையைப் போட்டு எரிப்பதால் வெளிச்சம் மட்டுமல்ல காட்டு மிருகங்களும் வெளிச்சத்தைக் கண்டால் பயந்து வரமாட்டாது என்ற நம்பிக்கையும் உண்டு. நெருப்பு எரிந்து கெண்டிருக்க சமையல் வேலையும் கொட்டில் வேலையும் தொடர்ந்தன கொண்டுபோன பாய்களை விரித்து நாங்கள் இடைக்கிடை தூங்கினோம். இரவிலே கொட்டில் வேலைகள். முடிந்து விட்டன. காலைச் சாப்பாட்டையும் முடித்துக் கொண்டு ஏழுமணிபோல் காட்டுக்கத்தி போன்ற தளவாடங்களுடன் காடு வெட்டக் கமத்திற்குப் போனோம். எல்லைக் கற்களைப் பார்த்து காணியின் எல்லையைத் தெரிந்து கொண்டதும் சிலர் காட்டுக் கத்தியால் பற்றைகளை வெட்டிக்கொண்டு போக ஏனையோர் பாரிய காட்டு மரங்களைத் தறித்தனர். இரு நாட்கள் நானும் கூட நின்று வேலைகளை அவதானித்தபின் மறுநாள் காலை வீடு திரும்பினேன்.
என்னோடு துணையாக வந்தவர் சா.சுந்தரம்பிள்ளை அண்ணர். வட்டக்கச்சிவரை வான் ஏற்றுவதற்கு வந்தார். 3/4 மைல் தூரம் அடர்ந்த காட்டில் ஒற்றையடிப் பாதையால் நடந்து கல்மடு குடியேற்றத் திட்டத்திற்காக காடு அழித்து கட்டடங்கள் போடும் வெட்டவெளியான குடியேற்றத் திட்ட பகுதியியூடாக 2மைல் தூரம் நடந்து வந்து வட்டக்கச்சி எல்லையில் தரித்து நின்ற வானில் என்னையேற்றிவிட்டு அவர் தொடரும் வேலைகளை மேற்பார்வை செய்த கமத்திற்கு திரும்பினர். நான் இல்லாத வேளைகளில் அவர்தான் வேலைகளைக் கவனிப்பார். எனக்கு அவர் உடன் பிறந்த சகோதரர் போல பற்றும் பாசமுமாக இருந்தார். கிராம சபையின் அங்கத்தவராகவும் இருந்த சா.சுந்தரம்பிள்ளை சிறந்த விவசாயி. அவரை அறியாதவர்கள் இல்லை. பிறருக்கு உதவும் புண்ணியவான் விவசாய வேலைகளின் நுணுக்கங்களை அவரிடம் பயின்றேன். காடுகள் வெட்டித் தறித்து முடித்தபின் சில நாட்கள் மரங்களை காயவிட வேண்டும் பதமாகக் காய்ந்ததும் கொழுத்த வேண்டும். எரியாது எஞ்சியவற்றை கொத்தி

Gunnië
அடுக்கிக் கொழுத்த வேண்டும் இந்த வேலைகளை சின்னர் தலையாளாகவிருந்து நேரம் தவறாமல் முடித்து விட்டார். மாரி மழை பெய்ததும் வரம்பு கட்டி வாய்க்கால் போட்டு மண்வெட்டியால் கொத்தி விதைக்கவேண்டும். குருநாகலைச் சேர்ந்த சிங்களத் தொழிலாளர் களைக் கொண்டு வேலைகள் தொடர்ந்தன. அந்த வேலையில் அவர்களுக்கு நல்ல பயிற்சி உண்டு நெல்விதைப்பு நிறைவேறிய பின் நெற்காணியில் கொட்டில் வீடு கட்டி காவற்காரக் குடும்பமும் நியமித்து முடிந்தது. குருநாகல் தொழிலாளரின் சம்பளபாக்கிகள் கணக்குப் பார்த்து தீர்த்த பின் அவர்களும் கொட்டிலில் தங்கி மறுநாள் ஊர்திரும்ப ஆயத்தமானார்கள் அன்று காலை நான் நித்திரையால் எழுந்திருக்கும் போது வெற்றிலையில் காசு வைத்து என்னை நமஸ்கரித்து விடை பெற்றுச் சென்றார்கள். தமிழ்த் தொழிலாளர் செய்யாத புதுமையை அவர்களில் கண்டேன் அந்த வருடம் நல்ல விளைச்சல், செலவிறகு மிஞ்சிய வருமானம் ஒரு ஆண்டு கால போகச் செய்கையிலே கிடைத்தது. மற்றவருடம் சிங்களத் தொழிலாளரும், ஊர்த்தொழி லாளரும் கட்டைபிடுங்கி தண்ணீர் விட்டு சேறாக்கி வயல்களை மட்டப்படுத்தி சேற்றில் நெல்லை முளைகட்டி விதை விதைத்தோம். இதன் பின்பே மேட்டு நிலம் காடழித்துத் திருத்தி வான் பயிர் செய்கை தொடர்ந்தது. தற்காலிக வீடும் கட்டப்பட்டது.
மத்திய தர வகுப்பினர் தங்கள் தேவைகளுக்காக ஒன்று கூடி கல்மடு நகர் பலநோக்கு கூட்டுறவுச் சங்கம் அமைத்தனர். அதன் கெளரவ செயலாளராக நான் தெரிவு செய்யப் பெற்றேன். அவ்வேளை நிர்வாகக் கடமைகளை சங்கச் செயலாளரே நெறிப்படுத்த வேண்டிய முக்கிய பொறுப்பு, சங்கத்திற்கு நிரந்தரக் கட்டிடம் நிறுவ பாவனைப் பொருள் வியாபாரக் கடையும் ஆரம்பித்து விளைபொருள், நெல் கொள்வனவு செய்து விற்பதும் பசளை, கமத்தொழில் தளபாடங்கள், கிருமிநாசினிகள், அவற்றை விசிறும் திறமையுள்ள தொழிலாளர்களை இடைக்கிடை வேலைக்கமர்த்தி தொழிற்படுத்துவதும் விளைவின் பின் விளைந்த நெல்லை கொள்வனவுசெய்தலும் விற்றலும் இன்றியமையாத
س- 48 ==

Page 31
Gangsa
செயற்பாடுகள் சங்கத்துக்கு முகாமையாளர், விற்பனை யாவர், பாதுகாவலர்கள் நியமனம் பெற்று கட்டடத் திறப்பு விழா இடம்பெற்றது. நிர்வாக சபை கூட்டங்களும், ஆண்டுப் பொதுக் கூட்டங்களுக்கும் தவறாது நிகழ்ந்தன. பொதுக் கூட்டங்களும் விழாக்களுக்கும் அப்போதிருந்த அரசாங்க அதிபர் பூரீகாந்தா அவர்கள் கிளிநொச்சி கூட்டுறவு ஆணையாளர்களாக இருந்த திரு.கனகசபை, திரு.பொன்னையா என்போரும் அழைக்கப்பட்டு சிறப்பிக்கப் பட்டார்கள். சங்கம் நன்கு வளர்ச்சியடைந்ததோடு உறுப்பினர்களது தேவைகளையும் நல்ல முறையில் நிறைவேற்றியது. ஆண்டு தோறும் ஆண்டறிக்கைகளும் வெளியிடப்பட்டன. பரந்தன், முல்லைத்தீவு றோட்டிலிருந்து கல்மடுக் கமத்திற்கு போக்குவரவு ஏற்றுமதி வசதிக்காக தர்மபுரம் குடியேற்ற திட்டக்குடியிருப்பிலிருந்து (குறித்த குடியேற்றத் திட்டம் அப்போதில்லை. புதிய தெருப்பாதையும் திறக்கப்பட்டது. 1958ஆம் ஆண்டில் இனக்கலவரத்தால் பாதிப்புற்று இடம்பெயர்ந்த இந்தியத் தொழிலாளர்களுக்காக பரந்தன், முல்லைத்தீவு றோட்டில் தர்மபுரம் குடியேற்றத் திட்டம் ஆரம்பிக்கப்பட்ட வேளை சங்கத்தால் இயன்ற உதவிகள் செய்யப் பெற்றன. குறித்த குடியேற்றவாசிகளுக்கு கமங்களில் தொழில் வசதிகளும் வழங்கப்பட்டன. கூட்டுறவுப் பரிசோதகர்கள் உதவி ஆணையாளர்கள், அரசாங்க அதிபர்கள் வேலணையில் சங்கங்களோடு தொடர்பு கொண்ட வகையில் அறிமுகமாயிருந்ததால் அபிவிருத்திப் பணிகளில் அவர்களின் பங்கைப் பெறுவதில் எந்தச் சிரமமும் இருக்கவில்லை. சங்க நிர்வாக சபையின் கூட்ட உறுப்பினர் ஒரு சிலரைத் தவிர ஏனையோர் யாழ்ப்பாணத்திலிருந்து காரில் சென்று கல்மடுவில் கூட்டங்கள் நிகழும். டாக்டர்கள், இஞ்சீனியர்கள், பிரபல நகை வியாபாரிகள், வர்த்தகர்கள், சிவில் உத்தியோகத்தர், ஆசிரியர்கள், அதிபர்கள் என பலதரப்பட்ட மத்திய தரப்பினர் கமக்காரர் என்பதலால் கண்ணியமான ஒரு சங்கத்தை நிர்வகித்த பயிற்சியைப் பெற முடிந்தது. வேலணைப் பலநோக்குச் சங்கத் தலைவராக பதவி வகித்த போது இப்பயிற்சி எனக்குப் பெரிதும் உதவியது.
- 49

GUAf
i
சனசமூக நிலையங்களின் சமாசம்
வேலணை கிழக்கு வங்களாவடியிலிருந்த மத்திய சனசமூக நிலையத்திற்கு நீண்டகாலம் தலைவராக இருந்தேன். வேலணைக் கிராமச்சங்க பழையகட்டிடத்தைத் திருத்தி ஆரம்பத்தில் நூல் நிலையமும் வாசிகசாலையும் நிறுவப்பட்டன. அதன் பாதுகாவலராக

Page 32
போ.சபாரத்தினம் என்னும் பெரியார் இலவசமாக தனது சேவையினை ஆற்றிவந்தார். கைமாறு கருதாது வெகுகாலம் செய்த சேவைக்காகப் போற்றப்பட வேண்டியவர். அரசாங்க நன்கொடை மூலம் விளையாட்டு நிலமும் சங்கத்தால் கொள்வனவு செய்யப்பட்டு கைப்பந்து, தாச்சி, பார் ஒட்டம் போன்ற விளையாட்டுகளிலும் பயிற்சியளிக்கப்பெற்றது. வாரந்தோறும் நிலையத்தில் பிரசங்கம், சமயச்சொற்பொழிவு, விவாத அரங்கம், பாட்டு, பேச்சுபோட்டிகள், புராணபடனம், சங்கீதக்கச்சேரி
எனப் பல்வேறு நிகழ்ச்சிகளும் மாறிமாறி இடம்பெற்று வந்தன.
அரசாங்க சமூக சேவைப்பகுதிக்கூடாக சிரேஷ்ட சனசமூக நிலையங்களில் தேர்ந்து எடுக்கப்பட்ட நிலையமாகக் கணித்து இலவசமாக வானொலி வழங்கி இயக்குதற்கான பற்றறிகளையும் 14 நாட்களுக்கொருமுறை சார்ஜ் செய்து மாறி மாறி வழங்கி வந்தார்கள், வானொலிக்காக ஏரியலும் இலவசமாக நிறுவித் தந்ததனால் மாலை 5.00 மணி முதல் இரவு 9.30 மணிவரை பொது மக்கள் கூடி ரேடியோ நிகழ்ச்சிகளைக் கேட்டு மகிழும் வாய்ப்பும் கிடைத்தது.
சகல சனசமூக நிலையங்களும் இணைந்த சமாசம் யாழ்ப்பாணத்தில் நிறுவப்பட்டது. தொகுதி தோறும் சனசமூக நிலையங்களுக்காக சமாசங்களை உருவாக்கி அவற்றின் மூலம் சிறந்தனவாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட கலை, விளையாட்டு, கட்டுரைப் போட்டி எனும் நிகழ்ச்சிகளைக் கொண்ட விழாவை ஆண்டுதோறும் யாழ்ப்பாண சனசமூக நிலையங்களின் சமாசம் நிகழ்த்தி வந்தது. மானிப்பாய் நகரசபைத் தலைவராக இருந்த இராசவாசல் முதலியார் சமூகயோதி தி.தியாகராசாவை தலைவராகவும், த.துரைசிங்கம் ஆசிரியரை (அதிபர் கோட்ட கல்வி அதிகாரி) செயலாளராகவும் என்னைத் தனஅதிகாரியாகவும் கொண்ட 24 பேர் அடங்கிய நிர்வாக சபை இக்கருமத்தை ஆற்றியது வெளிநாட்டுத் தூதுவர்கள், சிலவேளைகளில் அமைச்சர்களும் விழாவில் பங்கு பற்ற அழைக்கப்
பட்டார்கள். வெளிநாட்டு தூதரகங்கள் வழங்கிய நன்கொடைகளாலும்
= 51 =

Galla
உள்ளூராட்சி அமைப்புக்கள் அமைச்சின் அங்கீகாரத்தோடு வழங்கிய நிதி உதவியாலும் பல சமூக நலத்திட்டங்களையும் சமாசம் அமுலாக்க முடிந்ததோடு யாழ் மாவட்டத்திற்கு சர்வதேச அரங்கில் அதனால் மதிப்பும் இருந்தது.
பாராளுமன்ற தொகுதிகள் தோறும் அமைக்கப்பட்ட சனசமூக சமாச அமைப்புக்கள் தொகுதிதோறும் கலை கலாச்சார நிகழ்ச்சிகள், விளையாட்டு போட்டிகள் மற்றும் தேவையான சமூகநலப் பணிகளையும் ஆற்றி மதிப்புப்பெற்றன. தீவுப்பகுதிக்கென அமைக்கப் பட்ட இவ்வாறான சமாசத்தின் தலைவராகவும் செயலாற்றினேன். புங்குடுதீவு கிராம சபைத் தலைவர் வீவநல்லதம்பி, இதன் செயலாளர், வேலணை சரஸ்வதி வித்தியாசாலையில் சமாசவிழாக்கள் நிகழ்ந்தன. பக்கத்தில் அமைந்திருந்த விளையாட்டு மைதானத்தில் விளையாட்டு போட்டிகள் நிகழ்ந்தன கயிறு இழுத்தல் போட்டியில் உணர்ச்சி வசமாக பங்குபற்றியவர்கள் ஏசிப்பேசிக் கொண்டதால் ஏற்பட்ட தகராறை தவிர்க்க ஏற்கனவே பொலிஸாரின் உதவியை நாடவேண்டிய நிலை ஒரு சந்தர்ப்பத்தில் ஏற்பட்டதும் கூட நினைவிருக்கிறது. எவ்வாறாயினும் மக்களிடையே ஊக்கம், உற்சாகம், உணர்ச்சி, மகிழ்ச்சி, திறமை, பயிற்சி என்பவற்றை அக்காலத்து சனசமூக நிலையங்கள் வளர்த்தன என்பதை நிதர்சனமாகக் காணக்கூடியதாய் இருந்தபடியால் எமது முயற்சிகள் பயனுடையதாகவே அமைந்திருந்தன. 1961ஆம் ஆண்டு முதல் 1964 வரை ஆண்டுதோறும் விழாக்கள் தொடர்ந்தன.
ത്ത് 52 =

Page 33
கோவில் பரிபாலன சபை
வேலணை பெருங்குளம் முத்துமாரி அம்மன் கோவிலுக்கு அக்காலத்தில் அரசாங்கத்தில் சேவையாற்றிய இராமலிங்க உடையார் முகாமையாளராகவிருந்தார். முதலாம் திருவிழா கொடியேற்றம் தவிர்ந்த ஏனைய திருவிழாக்களை அக்கிராமத்தைச் சேர்ந்த ஒவ்வொரு
- 53 -
 

சமூகங்களும் பொறுப்பேற்றுச் செய்து வந்தனர். உடையாருக்குச் சந்ததி
இல்லாத காரணத்தால் தனக்குப்பின் கோவில் நிருவாகத்தை நிகழ்த்துவதற்குத் திருவிழாக்காரருட் சிலரை இணைத்துத் தனது தலைமையில் பரிபாலன சபை போன்ற அமைப் பினை நியமித்தார். அந்த அமைப்பில் 6ஆம், 8ஆம், 9ஆம், 10ஆம் திருவிழாக்காரரின் பிரதிநிதிகள் மட்டுமே இடம்பெற்றனர். ஏனைய திருவிழாக்காரர் இந்த முகாமை அமைப்பில் இடம்பெறவில்லை.
அவர் காலஞ்சென்றபின் இந்த அமைப்பிலுள்ள நான்கு திருவிழாக்காரரும் ஆண்டுக்கொருவர் முகாமையாளராகக் கடமையாற்றுவதென்று முடிவு செய்தனர். 10ஆம். 9ஆம், 8ஆம் திருவிழாக்காரரின் முகாமைக்காலம் முடிய 6ஆம் திருவிழாக்காரரின் முகாமைக்குரிய வேளை வந்தது. அவர்கள் செட்டிபுலம் மீன்பிடிச் சமூதாயத்தைச் சேர்ந்தவர்கள். அதனால் அவர்களுக்குச் சந்தர்ப்பம் மறுக்கப்பட்டது. சமூக ஏற்றத்தாழ்வு கருதிய இச்செயலினால் விரக்தியடைந்த சமூகத்தினர் 6ஆம் திருவிழாச் செய்ய மறுத்துவிட்டனர். இச்சந்தர்ப்பத்தை பயன்படுத்தி தனிப்பட்ட ஒருவர் திருவிழாச் செய்ய அனுமதிக்கப்பட்டார். செட்டிபுலத்தார் வேலணை அம்மன் கோயிலுக்கு உடையாரின் நிர்வாக காலத்திலிருந்தே தங்கள் தொழிலில் இருந்து பெறப்படும் வருவாயில் 1/10 பங்கு குத்தகைக்கு விற்று அதிலிருந்து சேமித்த பணத்தைக் கொண்டு நிர்வாகம், திருப்பணி என கோயில் செலவுகளுக்கும் பணத்தின் பங்கைப் பொறுத்து நிறைவேறியதோடு 6ஆம் திருவிழாவும் செய்து வந்தவார்கள். குறித்த குத்தகைக்கு 1/10 பங்கு அச் சமூதாயத்தைச் சேர்ந்தவர்கள் யாவரும் செலுத்தத் தவறினால் அவர்களை சமூகம் புறக்கணித்து நன்மை தீமை கொண்டாட்டங்களிற் பங்குபற்றாது வற்புறுத்தியாவது பணம் அறவிடுவது வழமை. குத்தொகை விற்பனையில் கொள்வனவு செய்யும் குத்தொகைக்காரருக்கு 1/10 பங்கைத் தீர்வையாக வழங்கும் தொழிலாளருக்குமிடையில் பிணக்குகள் நேரும் போதும், தீர்வைக்
கொடுக்க மறுத்த தொழிலாளரால் மறுக்கப்பட்ட தீர்வைக்கான கணக்கை

Page 34
விசாரித்துத் தீர்ப்பளித்து குத்தகைக்காரனின் வருமதியிலிருந்து கழிப்பதற்கும் நன்மை, தீமைகள் குறிப்பிட்ட வருமதியால்ஏற்படும் பிணக்குகளைத் தீர்ப்பதற்கும் என்னை மத்தியட்சகராக நியமித்தி ருந்தார்கள். இவர்கள் மட்டுமல்ல வேலணைத் துறையூர் மக்களும் வேலணை மேற்கு கொட்டிலைச் சேர்ந்தவர்களும் இவ்வாறு நாளாந்தம் தீர்வையாகச் சேர்த்து சமுதாய சம்பந்தமான பொதுச் செலவுகளுக்கும் கோவில்களின் பரிபாலனத்துக் குமாக பயன்படுத்துவதை வழக்கமாகக் கொண்டிருந்தார்கள். அவர்கள் மத்தியிலும் சிக்கல் நேர்ந்தால் தீர்ப்பதற்கு என்னை அழைப்பார்கள். வேலணைத் துறையூர் மக்களின் பிள்ளைகள் படிக்க குறைந்தது ஒரு மைல் நடந்து செல்ல வேண்டியிருந்ததால் அவர்களின் கல்வித்தரம் வெகுவாகப் பாதிக்கப்பட்டிருந்தது. இக்குறையைப் போக்க வேலணைத் துறை ஐயனார் பாடசாலை அமைக்க எனது மனைவியின் காணியை நன்கொடையாகக் கொடுத்து அவரின் ஆசிரிய சேவையை ஆரம்பத்தில் இலவசமாகச் செய்தும் பாடசாலை நிருமாணப் பணிகளில் பங்குகொண்டிருந்தோம். அரசாங்கத்தின் உதவியோடும் பாடசாலைக்கு அண்மையில் பாலருக்கான பாலுணவு நிலையமும் நிறுவி வேலணைத் துறை நிலையத்திற்கு என் மனைவியும் செட்டிபுலம் நிலையத்திற்கு நானும் நிர்வாகப் பொறுப்பாளர்களாகவும் கடமையாற்றினோம்.
6ஆம் திருவிழாவிலிருந்து அவர்கள் விலக எடுத்த முடிவு ஓர் ஆட்சேபனைக்குரியது என்பதால் மேலும் ஆராய்ந்து தீர்மானிக்கும் முன்பே பூர்வீகமாகவே கோவிலில் பங்குரித்துடன் திருவிழாச் செய்து வந்தவர்களை திடீரென்று நிறுத்திவிட்டு இன்னொருவரிடம் திருவிழாவைக் கையளித்த செயலானது வகுப்புவாத நோக்கில் அமைந்ததென்பதாலும் என் அனுதாபம் அவர்கள் பால் ஈர்க்கப்பட்டது. தெய்வ சந்நிதானத்தில் அவர்களைப் போலவே ஏனைய சில உபயகாரரும் உரிமைகள் மறுக்கப்படுவதால் கிலேசப்படுவது எனக்குப் புரிந்ததால் சகல சமூகத் தலைவர்களோடும் கலந்து பேசி ஆவன செய்ய முயன்றேன். மக்கள் ஆதரவு எனது முயற்சிக்கு ஊக்க
سيد 55 صد

Galla
மளித்ததால் 6ஆம் திருவிழா மீளப் பெறப்பட்டு பழைய உபயகாரரிடம் கையளிக்கப்பட்டது. மறுக்கப்பட்ட சில உரிமைகளை ஏனைய உபயகாரரும் பெற்றனராயினும் விட்டுக் கொடுப்புக்கள் பூரணமாக அமுல்படுத்தப்படவில்லை. எனவேதான் கோயில் நிர்வாக அமைப்பில் மாற்றம் கொண்டு வரும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. குறித்த திருவிழாக்காரரின் நிர்வாக முறை மாற்றப்பட்டு வழிபடுவோரின் பிரதிநிதிகளைக் கொண்ட நிர்வாக அமைப்பு முறையை உருவாக்கும் புரட்சிகள் தொடர்ந்தன.
இச்சந்தர்ப்பத்தில் அம்பாளின் திருவருளால் கோவிலுக்கு நன்கொடையாக வழங்கப்பெற்ற காணிகள் தொடர்பாக கோட்டில் வழக்கு தொடரப்பட்டிருந்து. குறித்த வழக்கில் வேலணை 5ஆம் வட்டாரத்தைச் சேர்ந்த திரு.கா.தர்மலிங்கம் என்பவரும் பிறரும் எதிரிகளாகவும் கோயில் நிர்வாகம் வழக்காளியாகவும் வழக்குத் தொடரப்பட்டது. அதன் பயனாக நிர்வாகம் பரவலாக புனரமைக்கப்பட
வேண்டுமென தீர்ப்புக் கிடைத்தது.
தீர்ப்புக்கு அமைய வழிபடுவோர் சபை கூட்டப்பெற்று அதில் 8ஆம், 9ஆம்,10ஆம் திருவிழாக்காரருக்கு தனித்தனி நான்கு பிரதிநிதிகளும் ஏனைய திருவிழாக்காரருக்கு தனித்தனி ஒரு பிரதிநிதியும் திருவிழாக்காரர் அல்லாத வழிபடுவோருக்கு ஐந்து பிரதிநிதிகளுமாக 25 பேரைக் கொண்ட பரிபாலனசபை தெரிவு செய்யப் பெற்றது. குறித்த நிர்வாக சபையின் இரு பகுதியினரும் ஏற்றுக் கொள்ளக் கூடியவரான என்னைத் தலைவராகத் தெரிவு செய்ய முன் வந்தபோது சற்றுத் தயங்கினேன். ஆனால் அன்றிரவு கண்ட கனவின் பயனாக பதவியை ஏற்க மறுநாள் ஒப்புக்கொண்டேன். கனவு இதுதான் யாழ்ப்பாணத்திலிருந்து வேலணைக்குக் காரில் வந்து கொண்டிருக்கும் போது ஒலை ஏற்றும் துறையொன்று பண்ணை றோட்டில் 2ஆம் கட்டையடிக்குக் கிட்ட உள்ள இடத்தில் வழியில் நின்ற பிரகாசமான
சிவந்த மேனியும், சிவப்பான உதடுகளும், வெண் தலைமுடியும்

Page 35
fuit
கொண்டு தூய வெண்நிறமான சரிகைக் குறிபோட்ட சேலையுடுத்திக் கொண்டு நின்ற ஒரு முதியபெண் காரை மறித்துத் தானும் வேலணைக்கு வருவதாக கூறி காரில் ஏறிக்கொண்டார். அவ்வாறு ஏறிவந்தவர் அம்மன் கோவிலடியில் தன்னை இறக்கி விடும்படி கேட்டதால் கோவிலடியில் இறக்கிவிட்ட வேளை அவர் என்னை முத்தமிட்டு அடிக்கடி வந்து போகும்படி கேட்டுக் கொண்டபோது அவர் அக்கோவிலின் அர்ச்சகரின் உறவினரென எண்ணிக்கொண்டேன். விழித்து எழுந்து மறுநாள் கண்ட கனவில் அம்பாளின் அனுமதியும் பெற்றதாகக் கருதிப் பதவியை ஏற்றுக் கொண்டேன்.
இயன்றவரை அதிகாரப் பரவலாக்கலை நடைமுறைப்படுத்தி னேன். தேங்காய் உடைத்தல், உள்வீதியில் சாமி தூக்குதல், சங்கற்பம் செய்தல் என்பனவற்றிலிருந்த பாகுபாடுகள் தீர்க்கப்பெற்றன. இந்த அமைப்பில் 1964 ஆம் ஆண்டு முதல் 1969 ஆம் ஆண்டு வரை கடமையாற்றினேன். திருவிழாக்காரருக்கு மறுக்கப்பட்ட பல உரிமைகள் கிடைத்த போதிலும் சில திருவிழாவுக்கு 4 பிரதிநிதிகளும் மற்ற விழாக்களுக்கு ஒருவரும் என்ற விதியால் குழுப்பம் நிலவியது. தலைவராக இருந்து சாதிப்பது சாத்தியமாகாது போகவே பரிபாலசனபயிலிருந்தும் விலகி குறித்த வழக்கை மீண்டும் தொடர்ந்து சமபலப் பிரதி நிதித்துவைத்திற்கான அங்கீகாரம் பெறப்பட்டது. மீளத் தொடங்கிய வழக்கிற்கு திருவாளர்கள் வே.பி.கந்தையா, எட்வேட் அமிர்தலிங்கம், வீசபாபதி என்போர் உதவினார்கள்.
இந்தவேள்ை ஆரம்பத்திலிருந்தே என்னுடன் பரிபாலனசபை உறுப்பினராக இருந்து தமது சேவையை அம்பாளுக்கு அர்ப்பணித்து வந்த எனது நண்கர்கள் திருவாளர்கள் க.தில்லையம்பலம், வ.க.கதிரவேலு, சி.கதிரவேலு, க.சண்முகம்பிள்ளை, ஆ.முத்தையா, நா.செல்லையா, வீ.சபாபதி, ச.கைலாசபிள்ளை, வ.கந்தையா, க.கந்தவனம், ஆ.சண்முகம், க.விநாயமூர்த்தி (சின்னத்துரை), க.ஆறுமுகம், ஐ.ஆசைப்பிள்ளை, சுப்பையா, நா.கந்தையா,
- 57

இ.ஐயம்பிள்ளை, நா.செல்லர், க.இராமலிங்கம், சோ.சந்தையா, அ.பொன்னுத்துரை என்போரில் பலர் காலஞ்சென்றமையாலும் சிலர் விலகிக் கொண்டதாலும் ஏற்பட்ட விரக்தியால் நான் விலகிக் கொண்டேன். மேலும் சில பிரச்சனைகள் தொடர்வதாலும் திருவிழாக்காரர் மத்தியில் பதவிப் போட்டிகளும் தங்கள் பவுசுக்கான சில திருப்பணிகளால் கோவில் பணம் வீணாவதும் நன்கு திட்டமிடாது சில திருப்பணி வேலைகள் தொடக்கத்திலேயே நிறைவேற்றமுடியாது போனமையும் அதிகாரப் பரவராக்ககலின் எதிர் விளைவு என்று சிலர் பேசிக் கொள்கின்றார்கள், மேலும் வழிபடுவோர் சபையால் தெரிவு செய்யபெற்ற திருவிழாக்காரர் அல்லாத பிரதிநிதிகளின் உரிமை மறுக்கப்படுவதாகவும் சமத்துவம் பேணப்படவில்லை என்றும் அறிய முடிகின்றது. ஒடுக்குமுறை அற்பமாய் இருந்தாலும் புரட்சி நிச்சயம் வெடிக்கும என்பதை இந்த அனுபவங்களின் மூலம் தெரிந்து கொண்டு சபையை வழிநடத்திச் செல்வது தற்போது பதவியில் உள்ளவர்களின்
கடமையாகும்.
1969 ஆம் ஆண்டில் தீண்டத்தகாதவர் ஆலயப் பிரவேசம் நிகழ நான் நடவடிக்கை எடுத்தபோது எல்லாவற்றையும் நீங்களே நிகழ்த்தவேண்டுமென்று நினையாமல் இளைஞர்களுக்கும் சில காரியங்களை நிகழ்த்த சந்தர்ப்பம் கொடுங்கள் எனக் கேட்டு இளைஞர் சிலர், தாம் முன்னின்று நிகழ்த்தப் போவதாக அறிவித்ததால் அவர்களுக்கும் சந்தர்ப்பம் அளித்தேன். தீண்டத்தகாதோர் உள்வீதியில் பிரதட்சணம் செய்ய ஏற்கனவே அனுமதி அளித்தேன் இளைஞர்களின் முயற்சி 1971 ஆம் ஆண்டிற்குப் பின்பே பண்டிதர் க.பொ.இரத்தினம் அவர்கள் தீவுப்பகுதி பாராளுமன்ற உறுப்பினராய் இருந்தபோது அவர்கள் தலைமையில் நிறைவேறியது. நானும் அதில் பங்குபற்றி சந்தோசமாகவே வரவேற்றேன்.

Page 36
huqhöf tirblu Geffekti
நான் தலைவராக இருந்தபோது தீவுப்பகுதி காரியதிகாரியாக இருந்த திரு.விநாயகலிங்கம் தலைமையில் தேர்த்திருப்பணிச்சபை அமைக்கப்பட்டது. பரிபாலனசபைத் தலைவர் என்ற வகையில் அதில் நான் உபதலைவராக இருந்தேன். ஆரம்பச் செலவுக்கு பணமொதுக்கி பொதுமக்களின் நன்கொடையோடு தேர்த்திருப்பணி வேலைகள் தொடர்ந்தன. பரிபாலனசபைத் தெரிவில் ஏற்பட்ட முரண்ப்பாட்டால் மீண்டும் கோவில் வழக்குத் தொடர்ந்து சிலவருடங்களின் பின்பே அதிகாரப் பரவராக்கல் நிறைவெய்தியது.
- 59

பலநோக்குக் கூட்டுறவுச் சங்கம்
பலநோக்குக் கூட்டுறவுச் சங்கங்கள் அரசாங்கத்தால் நடை முறைப்படுத்திய ஆரம்பகாலம், பெரும்பாலான பண்டகசாலைகளும், முன்பு நடைமுறையில் இருந்த பலநோக்குச் சங்கங்களும், புதிய உப விதிகளுக்கமைய மறுசீரமைக்கப்பட்ட போது 1974ஆம் ஆண்டு
- 60

Page 37
வேலணை பலநோக்குக் கூட்டுறவுச் சங்கம் வேலணையில் நிறுவப்பட்டது. ஆரம்ப இயக்குனர் சபை உறுப்பினர்களாக சிரேஷ்ட அரச உத்தியோகத்தர் சிலரும் கூட்டுறவுப் பரிசோதகரும் தொகுதி அமைப்பாளராலும் பாராளுமன்ற உறுப்பினர்களாக நியமிக்கப்பட்ட உறுப்பினர் சிலரும் பதவி ஏற்றார்கள். அவர்களுள் ஒருவராக நானும் நியமனம் பெற்றேன். அவ்வேளை பாராளுமன்ற உறுப்பினர் பண்டிதர் கா.பொ.இரத்தினம் அவர்கள் அரசாங்கத்தின் தீவுப்பகுதி அமைப்பாளர் புங்குடுதீவைச் சேர்ந்த சட்டத்தரணி திரு.ப.கதிரவேலு, ஆரம்பத்தில் தீவுப்பகுதி கமத்தொழில் உத்தியோகத்தர் திரு.இராசரத்தினம் பலநோக்குச் சங்கத் தலைவராக நியமனம் பெற்றார். சங்கத்திற்கு காரியாலயம், மொத்தவியாபார நிலையங்கள் அமைப்பதற்கான வசதிகள் வேலணை வங்களாவடியில் குறைவாக இருந்தன. பொறுப்பு என்னிடம் ஒப்படைக்கப்பட்டதால் சில்லறைக் கடைகளாக பாவனையி லிருந்த சிலவற்றை வாடகைக்குப் பெற்று உரிய வசதிகளை ஏற்றவகையில் ஓரளவு நிறைவேற்ற உதவினேன். சங்கத் தொழிலா ளர்களாயிருந்தவர்களோ மேலும் சில தொழிலாளர்களுக்கு எமது ஆலோசனைக்கமைய இயக்குநர்சபை நியமனம் வழங்கி சங்கம் தொழிற்படத் தொடங்கியது. மண்டைதீவு, அல்லைப்பிட்டி, வேலணைகிழக்கு, மேற்கு, சரவணைக் கிராமங்களுக்கான 15 விற்பனைக்கிளைகள் திறக்கப்பட்டன. பலசரக்கு வியாபாரத்து க்காகவும் புடவை வியாபாரத்துக்காகவும் இரு மொத்த வியாபாரக் கிளைகள் திறக்கப்பட்டன. மண்டைதீவைச் சேர்ந்த கூட்டுறவுப் பரிசோதகர் யேசுதாசன் பொது முகாமையாளராக நியமனம் பெற்றார். வியாபாரப் பணிகளோடு சில பொதுநலத் திட்டங்களையும் செயற்படுத்தி சங்கம் வளர்ச்சியடையும் வேளை அரசியற்குழப்பத்தால் 1976 இல் சங்கத்தின் பதிவு அழிக்கப்பட்டது. இதனால் சங்கக் கிளைகள் எல்லாமே ஊர்காவற்றுறை சமாசத்தில் கொள்வனவு செய்ய வேண்டும் என்ற நிலை தோன்றியது. இதனால் பாவனையாளர் மத்தியில் கிளர்ச்சிகள் தொடங்கின எதிர்ப்புகள் பலமாகக் கிளம்பியதால் மீண்டும் பதிவழிக்கப்பட்ட சங்கம் 1978 இல் மீளத் தொடங்கிய போது நான் தலைவராக நியமனம் பெற்றேன்.
- 61 =

Gallið
புங்குடுதீவைச் சேர்ந்த திரு.வே.செல்லையா பி.ஏ. பொது முகாமையாளராக இருந்தார். சங்கத்திற்கு தேவைப்பட்ட வாகனங்கள் கொள்வனவு செய்யப்பெற்றன. புதிய சங்கக் காரியாலயம் அமைப்பற்காக 4 துண்டுக் காணிகள் கொள்வனவு செய்து காரியாலய வேலைகள் தொடர்ந்தன. தனியார் வசமிருந்த எரிபொருள் நிலையத்தைச் சங்கம் பொறுப்பேற்றது. மண்டைதீவிலும் எரிபொருள் நிலையம், உப்பு விநியோக நிலையம் என்பன திறக்கப்பட்டன. கிராமங்கள் தோறும் பீடிக் கைத்தொழில் நிலையங்கள் திறந்து கைத்தொழில் பயிற்சிபெற வசதி செய்ததோடு பயிற்சியாளருக்கு வருமானமும் கிடைத்தது. தொழில் அபிவிருத்தி அடையவே சங்க எல்லைப் பரப்புக்கப்பால் நாரந்தனை, கரம்பன், புங்குடுதீவுப் பகுதிகளிலும் பீடிக் கைத்தொழில் நிலையங்கள் நிறுவப்பட்டன. பீடி வியாபாரத்திற்குப் பொறுப்பாக திறமையான பயிற்சி பெற்ற முகாமையாளரும் நியமிக்கப்பெற்றார். காரியாலயக் கட்டிட வேலை தொடர்ந்து கொண்டிருந்த வேளை சங்கக் காணியில் தற்காலிகக் கட்டிடம் அமைத்துக் காரியாலயம் செயற்பட்டது வாகனங்களுக்கான வாகன சாலையும் நிறுவப்பெற்றது. அரசாங்க ஒப்பந்த வேலைகளைப் பொறுப்பேற்று செய்வதற்கான அங்கீகாரம் பெற்ற ஒப்பந்த வேலைக்குப் பொறுப்பாளராக இளைப்பாறிய என்சினியரும் இயக்குனரில் ஒருவருமான திரு.க.சதாசிவம் நியமிக்கப்பெற்றார். பன்முகப்படுத்தப் பட்ட வரவு செலவுத் திட்டத்தின் கீழ் சங்கப் பகுதியின் நிதி ஒதுக்கீடு செய்யப்பெற்ற வேலைகளைப் பொறுப்பேற்று நிறைவேற்றினோம். ஒப்பந்த வேலைகளை வேலை நிகழும்போது கண்பகாணிப்பதற்காக மேற்பார்வையாளர் ஒருவரும் நியமனம் பெற்றார். வேலனைத் துரைசாமி மத்திய மகாவித்தியாலய விஞ்ஞான கூட மேல்மாடி கீழ் தள கட்டிடங்கள், வேலணை மிருகவைத்திய சாலைக் காரியாலயம், கிராமசபை நூல்நிலைய விஸ்தரிப்பு, வேலணை பிரசவ விடுதியருகே ஆண், பெண் நோயாளருக்கான தனித்தனி வார்ட்டுக்கள், சாட்டிச்சுடலை, மடச் சுற்றுமதில், சுருவில் துறைமுகப் பாதைக்கான பாலம், சங்கக்கட்டிட வேலைகள் போன்றன துரிதகெதியிலும் நல்ல

Page 38
hluI[hljöf frhuGffis
"முறையிலும் நிறைவேறி இன்னும் எமது சேவையின் சின்னங்களாகத் திகழ்கின்றன. ஒவ்வொன்றையும் நிறைவேற்றி திறப்புவிழாக்களில் இயக்குநர், தலைவர், சங்க உத்தியோகத்தர் கெளரவிக்கப்பட்டனர்.
சங்கம் கிராமிய வங்கியையும் ஆரபத்திலிருந்தே நிறுவி சேமிப்புத் திட்டங்களுடன் சங்க உறுப்பினர்களுக்கு விவசாயக் கடன்களையும் முறையாக வழங்கி அறவிட்டு வந்ததோடு சேமிப்பு பணக்கொடுக்கல் வாங்கல்களையும் தொடர்ந்தது. அதற்கென வங்கி
முகாமையாளரும் உதவியாளரும் பணியில் அமர்த்தப்பட்டனர்.
கட்டிடப் பொருட்களான சீமெந்துப் பைக்கற்றுகள். இரும்புக் கம்பிகள், இரும்புச் சட்டங்கள், தளபாடங்கள், இரும்புச் சட்டிகள், வெண்கலப் பாத்திரங்கள் விற்கும் கிளைகளையும் சங்கம் நிறுவியிருந்தது.
மேலும் ஆண்டு தோறும் சங்கப் பகுதியிலுள்ள பாடசாலைகள், சனசமூக நிலையங்களின் பங்களிப்புடன் கலைவிழா, விளையாட்டுப் போட்டிகளையும் நடத்தி பரிசில்களையும் வழங்கிவந்தது.
இத்தனை பரந்த சேவைகளை நிறைவேற்ற பொது முகாமையாளர் திரு.வே. செல்லத்துரையின் ஊக்கம், உற்சாகம், திறமை, அணுகுமுறை, தொழிலாளரைக் குழப்பமின்றி பேணும் சாதுரியம், சகல செயற்பாடுகளையும் சோர்வின்றிக் கண்காணிக்கும் தன்மை என்பன காரணமாயின. விசுவாசமும் நேர்மையும் போற்றத்தகுந்தவை, இந்த மறக்கமுடியாத சேவைகள் சாசனத்திலும் பெறிக்கப் பெற்றுள்ளன. 1996 இல் நிகழ்ந்த கூட்டுறவுத் தினவிழாவிலும் குறித்த சங்க முகாமை என்னைக் கெளரவித்துப் பாராட்டி விருதும் வழங்கிக் கெளரவித்தது.
H 63 H.

ouflonga
பிரசைகள் குழு
1983ஆம் ஆண்டு யூலை மாதம் தமிழர் விடுதலைக் கூட்டணியின் பொதுச்சபைக் கூட்டம் மன்னாரிலே நிகழ்ந்தது தீவுப்பகுதி பொதுச்சபை உறுப்பினரில் ஒருவராக நானும் பண்டிதர் கா.பொ.இரத்தினம் எம்.பியும் மேலும் சிலரும் மன்னாருக்குப்
- 64 aHum

Page 39
Glumio fibuВњfi
பயணமானோம், பொதுச்சபைக் கூட்டம் 1ஆம் நாள் அமர்வில் பங்குபற்றி விட்டு அன்றிரவு திருக்கேதீஸ்வரர் ஆலயத்தில் எமக்காக ஒழுங்கு செய்யப்பட்ட விடுதியில் தங்கி இருந்தேன். விடிய எழுந்து கோவில் வீதியிலே உள்ள தேனீர்க்கடையடிக்குப் போன போதுவானில் வந்த சிலர் யாழ்ப்பாணத்தில் பிரச்சினை, ஊரடங்குச் சட்டம் அமுலில் இருக்கிறது என்றார்கள் கேள்விப்பட்டதும் மறுநாள் கூட்டத்திற்குப் போகாமலே அங்கிருந்து புறப்பட்ட பஸ்சில் யாழ்ப்பாணம் திரும்பினேன். யாழ் நகர் வந்தபோது நகரில் சன நடமாட்டமில்லை வேலணைக்குப் போக பஸ்சும் இல்லை. கராஜ் ஒன்றில் திருத்த வேலைக்காக விட்டிருந்த எனது காரில் வேலணைக்குப் போனேன். இரவு விடுதலை இயக்கத்தினரின் தாக்குதலால் பல பொலீசார் உயிரிழந்ததாகவும் அவர்களுடைய சடலங்கள் தென்னிலங்கைக்கு எடுத்துச் செல்லப்பட்டதும் தென்னிலங்கையில் தமிழருக்கெதிரான வன்செயல் நிகழ்வதாகவும் தமிழரின் கடைகள், வீடுகள் கொழுத்தப்பட்டு பரவலாகத் தமிழர் கொலை செய்யப்படுவதாகவும் அறிந்தோம். தென்னிலங்கையிலுள்ள உறவினர் பற்றிய தகவல் அறிய மக்கள் பதைத்தனர், வேலணை மக்கள் பாராளுமன்ற உறுப்பினரின் தொலைபேசி மூலம் செய்தியறியத் திரண்டனர். அவரில்லாத போதும் தொலைபேசியை உபயோகிக்க வசதியளிக்கப்பட்டது. ஏராளமான தமிழர் கொலை செய்யப்பட்டனர். சொத்துக்கள் அழிக்கப்பட்டன. பலர் இழப்புகளோடு திரும்பினர். இந்த அனர்த்தத்தினால் பாதிக்கப் பட்டவர்களுக்கும் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கும் நிவாரண உதவிகளைப் பெற்றுக் கொடுப்பதற்காக வேலணை தெற்கு அரசாங்க அதிபர் பகுதிக்கான பிரசைகள் குழுவொன்று அமைக்கப் பெற்றது. ஒவ்வொரு கிராம சேவகர் பிரிவுக்கும் ஒருவராக நயினாதீவு, புங்குடுதீவு, வேலணை, சரவணை, மண்கும்பான், அல்லைப்பிட்டி, மண்டைதீவு ஆகிய கிராமங்களின் பிரதிநிதிகள், பங்காற்றினர். அதன் தலைவராக நான் பங்கேற்றேன். உயிரிழப்புகள் இழப்பீடுகள் பற்றிய தகவல்கள் துரிதகெதியில் தொகுக்கப்பட்டு பல்வேறு பொது நல ஸ்தாபனங்களோடும் அரசாங்கதோடும் தொடர்பு கொண்டு
- 65

GUAf
இழப்பீடுகளுக்கான நிவாரணமும், மீண்டும் தொழில் தொடங்கு வதற்கான கடன்வசதிகளும் பிரசைகள் குழுவின் முயற்சியால்
நிறைவேற்றப்பட்டன. மேலும் ஈழப்போராட்டம் தொடர்ந்து கொண்டிருந்த போதும் அவ்வப்போது நிகழும் வன்செயல்களால் பாதிப்புற்றோருக்கும் ஆவன செய்தோம். 1987 இல் இந்திய அமைதிப்படை ஆக்கிரமிப்புச் செய்த போது அட்டகாசங்கள் வெகுவாக நிகழாமல் தடுத்தோம். தடுத்து வைக்கப்பட்டவர்கள் உடனுக்குடன் விடுவிக்கப்பட்டனர். அயற் பிரதேசங்களோடு ஒப்பிட்டுப்பார்க்கும் போது தீவுப்பகுதியில் பிரச்சினைகள் மிகமிகக் குறைவு. யாழ் நகரிலிருந்தும் படையினருக்கு அஞ்சி மக்கள் தீவுப் குதிக்கு இடம்பெயர்ந்தனர். மண்டைதீவு வழியாக வன்னியிலிருந்து உணவுப்பொருட்களும் மற்றும் அத்தியாவசியப் பொருட்களும் தருவிக்கப்பட்டு மக்களுக்கும் இடம் பெயர்ந்
தோருக்கும் வழங்கப்பட்டன.
அரசாங்க காரியாலயங்கள் இயங்காத நிலையில், அடையாள அட்டைகளைப் பலர் இழந்துவிட்ட நிலையில் பிரசைகள் குழு மூலம் தற்காலிக அடையாள அட்டைகள் வழங்கி இராணுவம் அதை அங்கீகரிக்கச் செய்தோம்.
தடைப்பட்டிருந்த பண்ணையூடான யாழ்நகரப் போக்குவரவுச் சேவையை நடைமுறைப்படுத்தும் ஒழுங்கை அரச அதிபர் மூலம் மேற்கொள்வதற்காக பிரசகைள் குழு உறுப்பினரடங்கிய குழு யாழ் கச்சேரிக்கு மண்டைதீவூடாக ஏறி வந்து பேசி ஆகவேண்டிய ஒழுங்குகளைச் செய்து அன்றே யாழ் நகரில் இருந்து திரும்பும் போது பண்ணையூடாகச் சென்றோம். அன்று முதல் பிரசைகள் குழுவின் அங்கீகாரத்துடன் பிரயாணிகளுக்கான பஸ் சேவை தொடங்கியது. மின்சாரம் பெற படையினர் விதித்திருத்த தடையும் நிவர்த்தி செய்யப்பெற்றது. மேலும் திலீபன் நினைவு தினக் கூட்டங்கள் ஒலிபெருக்கி உபயோகித்து தீவுப் பகுதி எங்கும் நிகழ ஒழுங்கு
- 66 -

Page 40
வாழ்வுச் சுவடுகள்
செய்தோம். சில இடங்களில் இந்தியப் படையினர் குழப்பம் செய்த
போதிலும் முறையீடு கிடைத்த இடங்களுக்குச் சென்று குழப்பம் தவிர்க்கப்பட்டது. இவையெல்லாம் படை அதிகாரிகளுக்கு
எரிச்சலூட்டிய போதும் மக்களாதரவு பெற்ற இயக்கமாக செயற்பட்டதால் குறுக்கீடுகளைத் தவிர்த்துக் கொண்டனர். மேலும் வெளிநாடுகளில் வேலை வாய்ப்புகள் பெறவும் சிபாரிசுகள் செய்தும் வெளிநாட்டுத் தூதரங்கங்களோடு தொடர்பு கொண்டும் ஆவன செய்தும் வேலைவாய்ப்புக்கள் பெற உதவினோம் மனித உரிமைமீறல் நடவடிக்கைகள் பற்றியும் அதன் தலைமையகத்துடன் தொடர்பு கொண்டு நடவடிக்கை எடுத்தோம்.
ஊர்காவற்றுறை பகுதியுடாக மண்டைதீவுக்கு வந்தபோது பூநீலங்கப் படையினர் மேற்கொண்ட பாராதுரமான வன்செயல்களைக் கண்டித்து ஆவன செய்த தோடு பாதிக்கப்பட்டவர்கள் உடனடிநிவாரணம் பெறவும், தொடர்ந்து நஷ்டஈடுபெறவும் ஆவன செய்தோம். உள்ளூரில் இடம்பெயர்ந்த மக்களுக்கு சமூகசேவை ஸ்தாபனங்களின் உதவியுடன் உடனடி நிவாரண உதவிகளும் வழங்கப் பெற்றன. வெளிநாடுகளில் எமது பிரதேச மக்களுக்கு நிரந்தர வதிவிட வசதி அளிக்கவும் அவர்களைத் திரும்பி அனுப்பாமற் தடுக்கவும் உரிய தாபனங்களுடாக இன்று வரை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்
படுகின்றன.

alIblf frbuBööfl
வைத்தியம்
ஏழாம் வகுப்பில் படித்துக்கொண்டிருந்த காலம் அப்பு நோயாளர்ரைப் பார்க்கப்போய்விட்டார். ஆச்சி அம்மன் கோவிலுக்குப் போய்விட்டார். வீட்டில் நான் மச்சான் பொன்னுத்துரையுடன்
விளையாடிக்கொண்டு இருந்தேன். மூன்று வயதுக் குழந்தைக்கு வலிப்பு

Page 41
tìI[]ngã
நோய் தோளில் தூக்கிப் போட்டுக்கொண்டு ஆண்களும், பெண்களுமாக பத்துப்பேர் வரை அழுது குழறிக்கொண்டு வருகிறார்கள். இப்படிப் பலர் இரவு பகலாக வருவது பழகிப்போனதால் துணிச்சலாக மருந்து கொடுத்தேன். மருந்த கொடுத்த சில நிமிடங்களில் நோய் குணம் எனக்கு வெற்றிக் களிப்பு வந்தவர்களில் ஒருவர் எனக்கு நன்கு தெரிந்தவர், பழகியவர் அடிக்கடி அப்புவை மச்சான் என்று முறைசொல்லிக் கூப்பிடுவார். ஓயாது தனது பிள்ளைகளுக்கு மருந்து எடுத்து போவார் பெயர் குமாரவேலு அம்மன் கோவிலடியில் இருப்பவர். கோவிலுக்குப் போன ஆச்சி முதலில் வந்தா அப்புவும் சற்றுநேரத்தில் வந்தார். மச்சான் மகன் சரியான வீரன் என்று குமாரவேலு. அப்புவுக்குச் சொன்னார் பிறகும் கைபார்த்துவிட்டுக் கொடுக்க வேண்டிய மருந்தை நானே எடுத்துக் கொடுத்து விட்டேன் அப்புவுக்கு மகனை சான்றோன் எனக்கேட்ட மகிழ்ச்சி ஆச்சிக்கும் அப்படித்தான் அப்புசொல்லும் மருந்துகளை எடுத்து கொடுத்துக் கொண்டிருந்த எனக்கு அன்றிலிருந்து வைத்தியம் கற்கும் எழுச்சியும் ஏற்பட்டது. ஏனைய படிப்புகளோடு வைத்தியமும் பயின்றேன்.
கார்த்திகை மாதம் கடும் மழை பெய்து குழம் நிரம்பி ஓடுகிறது. வயல்வாய்க்கால் நிறைய வெள்ளம் கெழுத்தி மீன்கள் நீரை எதிர்த்தோ வாய்க்காலூடே குளத்தை நோக்கிப் படைஎடுக்கும் வேளை பார்த்து பக்கத்தில் உள்ள மக்கள் கெழுத்தி மீன்கள் ஓடும் போது குறிபார்த்து புறக்கத்தியால் தாக்கி தேவையான அளவில் பிடிப்பார்கள். இப்படிப் போய்ச்சேரும் கெழுத்தி மீன்கள் வேலணை பெருங்குளத்தில் அதிகம் குளம் வற்றும் வேளையில் சித்திரை, வைசாசி மாதங்களில் குளத்தில் உள்ள கேணிகளில் சனங்கள் கூடி கலக்கி கரப்புகளால் குத்தி அடைத்து துளாவிப் பிடித்தும், சிலர் சீலையில் நீரோடு அள்ளி வடித்தும் கெழுத்தி மற்றும் உள்ள சிறிய மீன்களைப் பிடிப்பார்கள். ஆண்டுதோறும் நிகழும் இக்காட்சியை வேலணை பெருங்குளத்துக் கேணியில் காணலாம். ஆனால் அது பெருங்குளத்தில் வடக்குக் கரைக்குக் கிட்ட சிறு நான் கேணி என்று ஒரு கேணி இருக்கிறது. அதனை மக்கள் குளிக்கப்
- 69

ngaya nolai
பயன்படுத்துவார்கள. அந்தக் கேணியில் ஒரு கெழுத்தி மீன்கூட இருக்காது. குளத்து வெள்ளத்தோடு இணைந்திருந்த வயல்களில்கூட கெழுத்தி மீன் இருக்கும். குளத்து நீரோடு பல காலம் பரவி இணைந்திருக்கும் இந்தச் சிறு நான் கேணியில் மட்டும் ஒரு கெழுத்து மீன் கூட இல்லை. இது ஒரு அற்புதம் குளிக்கும் குளத்தில் முள்ளுக்குத்தும் மீன் இருக்கக் கூடாது என்பதற்காக மாந்திரிகம் செய்து கட்டுப்படுத்தியதாக பழம் கதை உண்டு அதுவும் எனது தகப்பனாரின் தாய் மாமனும் வைத்தியருமான கூழ தோட்டத்து சுப்பர் என்னும் சுப்பிரமணியம் தங்கள் குடும்பத்தினர் குளிக்க அக்கேணியை பாவிப்பதற்காகச் செய்தவராம். பெரும்பாலும் எங்கள் குடும்பத்தினர் தான் அதைப் பயன்படுத்தி வந்தார்கள். நானும் எனது மச்சான்மார் எல்லாருமே அந்தக்கேணியில் தான் குளிப்போம் அதைப் பரியாரியார் கேணி என்று பலரும் சொல்வதையும் கேட்டு இருக்கிறேன். வைத்தியர்களை பரியாரியர் என்றுதான் மக்கள் கெளரவித்துக்
கூப்பிடுவார்கள்.
மழைபெய்து பெருக்கெடுத்து வெள்ளம் ஒடும் கார்த்திகை மாதம் யாருக்கோ பிரசவவேதனை என்று அப்புவை சிகிச்சைக்கு அழைத்துப் போக வேலணை மேற்கு 6ஆம் வட்டாரத்தைச் சேர்ந்த கறுவல் தம்பி என்பவர் வந்தார். நடுநிசி வேளை குளத்து வாய்க்கால் எங்கள் வீட்டுக்காணியின் மேற்கு எல்லையில் தான் உள்ளது. வாய்க்காலை குறுக்கே தாண்டும் வேளை அப்புவின் காலில் கெழுத்தி மீன் மிதிபட்டு உள்ளங்காலில் முள்ஏறி முறிந்து விட்டது. அரம்போல் உள்ள ஒன்று அல்லது 1 1/2 இஞ்சி நீளமான முள் இலகுவாக ஏறும். ஆனால் இழுத்து எடுக்கவராது இதனால் காயமும் கடுப்பும் என்பதால் அப்பு போக இயலாது போய்விட்டது. அவர் என்னைக் கூட்டிப் போனார். நான் போய்ச் சேர்ந்த போது வேறு வைத்தியரும் இருந்தார். ஆனால் பிரசவம் ஆகவில்லை வைத்தியரோடு பேசி விட்டு மருத்துவிச்சியாரைக் கூப்பிட்டு நோ இருக்கிறதா என்று கேட்டேன். குறிபடவில்லை என்றார். கொண்டு போன மருந்தை குங்குமப்பூ

Page 42
GIUG
அவித்த குடிநீரில் கொடுத்தேன். கொடுத்த பத்து நிமிடத்தில் குறிபடத் தொடங்கியது. கேட்டறிந்த பின் வேறு மருந்து கொடுத்தேன். வேப்பங்காம்பும், மஞ்சளும் அவித்த குடிநீரில் கொடுக்க பிள்ளை பிறந்து விட்டது. நஞ்சுக்கொடியும் விழுந்தது. நோயாளியின் சோர்வுக்காக வெற்றிலைச் சாற்றில் கொடுக்குமாறு ஒரு மருந்தைக் கொடுத்து விட்டு திரும்பினேன். அங்கிருந்த வைத்தியர் அப்புவிடம் வைத்தியம் கற்ற முருகேசு வைத்தியர்தான் அவ்வைத்தியரும் சேர்ந்து பலரும் எனது துணிச்சலைப் பாராட்டினார்கள்.
இப்போது போல அக்காலத்தில் கிராமம் தோறும் அரசாங்க சுகாதார மருத்துவமாதர் கிடையாது. பரம்பரையாக பிள்ளை பெறுவித்து மருத்துவம் பார்க்கும் குடும்பப் பெண்கள்தான் மருத்துவிச்சிமாராக பணி செய்தார்கள். அவர்கள் தான் பிள்ளை பெறுவிக்க அழைக்கப்படுவார்கள். அவர்கள் பிள்ளை பெற்ற பின்பு பல கிரியைகளும் செய்வார்கள். அவை கொத்தி, எரிப்பு, கழிப்பு என வழங்கப்படும். பிள்ளை பேற்றுக்கென வீடுகளில் குச்சு எனத் தனியிடம் அமைத்து அதற்குள் வைத்துத்தான் பிரசவம் நிகழும். நிகழ்ந்த பின் நச்சுக் கொடியை பாயால் சுற்றி பால் மரங்களில் கட்டித் தொங்கவிடுவார்கள். போகும் போது கொத்திப் பேயை அகற்றுவதாக கத்திக் குழறிப் போவார்கள். இவைகளெல்லாம் மருந்துவிச்சிமாரின் கடமையாகும். மேலும் பிள்ளை பெற்றவர்களுக்கான மருந்து நீர் தயாரித்தல்,நீராட்டல் என்பனவும் கூட அவர்கள் மேற்பார்வையில் தான்
நிகழும்.
இடைக்கிடை இவ்வாறு நோய்களுக்குச் சிகிச்சை அளிப்பதும் அப்பு வீட்டில் இல்லாத வேளை மருந்து கொடுப்பதும் அப்பு இருக்கும் போது கூட அவர் குறிப்பிட்ட மருந்துகளை எடுத்துக் கொடுப்பதும். எனக்கு நோய்களை ஓரளவு நிர்ணயித்து ஏற்ற மருந்துகளைக் கொடுத்து குணப்படுத்தக் ಆLIqu பயிற்சியைத் தந்தது. மேலும் அதைப் பயிலும் ஊக்கத்தையும் ஊட்டியதால் தகப்பனாரிடமும் சிறிய தகப்பனார்
H 71 H

விநடராசப்பிள்ளை அவர்களிடமும் நாடி சாஸ்திரங்களையும் மருந்து செய்யும் முறைகளையும் கற்றுத் தேறினேன். வைத்திய நூல்களையும் இந்தியாவில் இருந்து தருவித்தும் ஆராய்ந்தும் கற்றுக் கொண்டேன். அவர்களோடிணைந்து தொழிலையும் செய்தேன். 23.06.1944இல் அக்கால மருந்துவைத்தியர் பதிவுச் சட்டத்தின் கீழ் வைத்தியனாகப் பதிவு பெற்றேன். 1984இல் சித்தவைத்திய கலாநிதியாகவும் பதிவு பெற்றேன். யாழ்ப்பாணம் அகில இலங்கை சித்த ஆயுள்வேத வைத்திய
சங்கத்தில் நிர்வாக சபை உறுப்பினராகவும் "வைத்தியன்" பத்திரிகை ஆசிரியராகவும் தொடர்ந்து பதவி வகித்து வந்தேன். தீவுப் பகுதி வைத்தியர் சங்கத்தில் தலைவராகவும் சேவை செய்து வைத்தியர்கள் மத்தியில் தகவல் பரிமாற்றங்கள் மூலம் சுகாதார வைத்திய சேவைகளை இயன்றவரை ஊக்கம் எடுக்க பிரசாரக் கூட்டங்களையும் நிகழ்த்தி, சுகாதாரப் பழக்க வழக்கங்களைக் குறிப்பாக கொதித்தாறிய நீரைப் பாவித்தல், கண்ட இடங்களில் மலங்கழித்தலை தவிர்த்தல் போன்ற நடைமுறைகளையும் பழக்கத்தில் கொண்டுவரும் முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டன. அரசாங்க சுகாதார பரிசோதகர் சேவையையும் கிராமத்தில் தொழிற்பட ஊக்கம் எடுத்தோம்.
எனது இளமைக் காலத்திலிருந்தே குளக்கரை நீர்நிலைகளில் கரையை அண்டிய பற்றைகளின் மறைவில் கக்கூசுக்கிருந்து குளிக்கப் பாவிக்கும் கேணிகளில் அடிக்கழுவும் பழக்கமிருந்தது. மழைகாலத்தில் குளத்தின் நீர் நிரம்பி வழியும் போது குடியிருக்கும் வளவுகள், கிணறுகளையும் கூட மேவி வெள்ளம் கரை புரண்டு ஓடும். வேலணையில் பெருங்குளம் மிக நீண்டதும் விசாலமானதும் சூழ நெருக்கமான குடியிருப்புகளையும் கொண்ட பிரதேசமாகும். வெள்ளப் பெருக்கால் அசுத்தமான கிணற்றுநீரால் கோதாரிக்கழிச்சல் எனும் நோய் ஆண்டுதோறும் மக்களை வதைத்து வந்தது. எனவே தான் பழைய பழக்க வழக்கங்களை மாற்றியும் கொதித்தாறிய நீரையே கண்டிப்பாக மாரிகாலங்களிலேனும் அருந்தும் படி செய்யும் சுகாதார விதிகள்
தேவைப்பட்டன. தொடர்ந்து கக்கூசுக்கள் கட்டுவதற்கும் சகாய
- 72 m

Page 43
உதவிகள் வழங்கப்பட்டன. இவற்றால் முற்காலமிருந்த நோய்த் தாக்கங்கள் மிகவிரைவாக குறைக்கப்பட்டன. இலங்கை சித்த வைத்தியத் தலைவராக வட்டுக்கோட்டையைச் சேர்ந்த வைத்தியர் குமாரசாமியும் செயலாளராக வைத்தியர் ஏ.சி.இராசையாவும் வைத்தியர் சுந்தரமும் பதவிவகித்த காலத்தில் மக்கள் சுகாதாரத்திற்கும் கிராம வைத்தியத் திற்கும் சித்த வைத்தியத்தின் வளர்ச்சிக்கும் ஆற்றிய பணிகள் மகத்தானவை. அவர்களோடு இணைந்து செயலாற்றிய வகையில் எனக்கு வைத்தியர்கள் மத்தியில் உறவும், பரிச்சயமும், நன்மதிப்பும் மேலோங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
- 73 -

sanhi
1937ஆம் ஆண்டு கரம்பன் சிவகுருநாத வித்தியசாலையிற் படிப்பிக்கின்றேன். பாடசாலைக்கு அயலிலே முத்துக்குமாரு என்பவர் வீட்டில் இரவு பகலாக பேய் வீட்டுக்குக் கல் எறிகிறது. அந்தப் பாடசாலைக்குத் தலைமை ஆசிரியர் மண்டைதீவைச் சேர்ந்த

Page 44
இ.கனகசுந்தரம், அவரும் நானும் அவரது மனைவியுந்தான் அப்பாடசாலை ஆசிரியர்கள். எனக்கு மாந்திரீகம் தெரியுமென்பது அவ்வூரில் எல்லோருக்கும் தெரியும். கனகசுந்தரம் குடும்பத்தோடு பாடசாலை வளவிலேயே குடியிருந்தார். அவர் மூலம் என்னோடு தொடர்யு கொண்டு ஆலோசனை செய்தார்கள். பேய் பார்த்த போது வீட்டில் சிலருக்கு பிசாசு பீடை இருந்ததை அவதானித்தேன். பார்வை பார்த்து பேயாட்டிக் கழித்து தகடு பூசை செய்து கட்டி வளவையும் காவல் பண்ணினேன். அதன் பிறகு எல்லோருக்கும் நல்ல சுகம். பிசாசு, பீடைச்சேட்டை, கல்லெறிதல் எதுவுமே இல்லை.
1938இல் நானும் மனைவியும் அன்னுங்கை பரஞ்சோதி வித்தியாசாலைக்கு ஆசிரியர்களாக மாறிச் சென்றோம். இரு பெண் குழந்தைகளோடு பாடசாலைக்கு அண்மையில் கோண்டாவில் அரசடிப் பிள்ளையார் கோவிலடியிலே ஒரு வீட்டில் குடியிருந்து பாடசாலைக்குச் சென்று வந்தோம். எனது மனைவியின் தம்பி மு.இரத்தினகோபால் எங்களுக்கு உதவியாக இருந்தார். வேலணையைச் சேர்ந்த பெண்பிள்ளையும் வீட்டு வேலைக்கு இருந்தாள். அயலில் உள்ளவர்களோடு பழகி உறவினர் போலக் கொண்டாடி வந்தோம். கோண்டாவில் புதியாரி எனும் பகுதியில் அப்புத்துரை என்பவர் பிரபலமான சுருட்டுத் தொழில் முதலாளி. அவருடைய மாமன் முறையான ஆறுமுகம் வீட்டில் நாங்கள் இருந்தோம். பெரிய நாற்சார் வீடு. ஆறுமுகம் வண்டியில் கடைக்காரருக்குரிய பொருட்களை யாழ் நகரிலிருந்து ஏற்றிவந்து வழங்குவார். அவரும் மனைவியும் மகன் கந்தையாவும் அவ்வீட்டில் ஒரு புறத்தில் வசித்தார்கள். அதுவும் எங்களுக்கு உதவியாய் இருந்தது. அந்தக் கிராமத்தில் வைத்தியம் செய்வதற்கு திருநெல்வேலியில் இருந்து வைத்திலிங்கம் என்பவர் வருவதுண்டு. நானும் வைத்தியம், மாந்திரீகம் தெரிந்தவர் என்பதால் எனக்கும் நன்கு அறிமுகமானார். 1939ஆம் ஆண்டு யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியில் காணிவல் (பொருட்காட்சி நிகழ்ந்தது. ஓர் இரவு அதைப் பார்ப்பதற்காக சில நண்பர்களுடன் வந்துவிட்டேன். குறித்த
H 75 -

வைத்தியர் வைத்திலிங்கம் என்பவரின் சகோதரி திருமணமானவர். அவருக்கு பிசாசுப் பீடை மயக்கம் என்று என்னைத் தேடி வீடுபோய் பிறகு பொருட்காட்சி நடந்த இந்துக் கல்லூரிக்கு வந்து என்னை கூட்டிப் போனார்கள். ஆண்டுதோறும் இவ்வாறு வருவதுண்டு என்றும் திருநெல்வேலி சிவன்கோவில் குருக்கள் ஐயா பார்வை பார்த்து நூல் கட்டினால் சுகம் வருமென்றும், தற்போது ஐயர் இல்லை என்றும் சொன்னார்கள். ஆள் மயக்க நிலையில் படுத்திருந்தார். கும்பம் வைத்து முறைப்படி பூசை செய்த பின் திருநீறு ஓதிக் கொடுத்து அவர்மேல் தூவச் சொன்னேன். தூவியதும் எழுந்த வந்து என்முன் வகுத்த இடத்திலிருந்து ஆடத் தொடங்கினார். பார்வை பார்த்து உடுக்கு அடித்து ஆட்டிக் கழித்த போது வீட்டில் பலி எடுப்பேன் நான் போறேன் என்று சொன்னதும் பாவையில் இறக்கி மாந்திரீக் முறைப்படி கழிப்புச் செய்த பின்பு பார்வை பார்த்தும் அவருக்கும் மற்றும் அனைவருக்கும் நூல்கட்டினேன். அவருடைய கணவர் இல்லாத படியால் அவருக்கு நூல் கட்டவில்லை. பிறகு வருவேன் என்று சொன்ன பிசாசு வரக்கூடாதென்பதற்காக வளவுக் காவலும் செய்தேன். அடுத்த ஆண்டு அதே நாளில் அவருடைய கணவர் அவர்களது படலையடியில் றோட்டில் வந்த வான் ஒன்றுமோதி இறந்து விட்ார். வளவு காவல் செய்ததால் உள்ளே புகமுடியாத பிசாசு படலையில் நின்று பலி எடுத்துவிட்டதாகவும், அவர் நூல் கட்டத் தவறியதும் மரணத்தின் காரணமெனப் பலரும்
மரணச்சடங்கின்போது விவாதித்தார்கள்.
கோண்டாவில் அன்னுங்கை சூளையடியைச் சேர்ந்த குடும்பப் பெண் மூன்று நாட்களாக அன்னம் தண்ணீர் கொள்ளாமல் மயங்கிக் கிடப்பதாக வந்தார்கள். போய்ப் பார்த்து விசாரித்த போது அவரின் தாலிக் கொடி காணாமற் போய்விட்டதால் யாரோ ஒரு மந்திரவாதியைக் கூட்டிவந்து கள்ளஞ் செய்கை செய்வித்ததாகவும் அன்றுமுதல் தான் அவர் நினைவிழந்திருப்பதாகவும் கூறினார்கள். பேயாட்டிய போது கொடி களவு போக வில்லையென்றும், அவரே உறியில் போட்டிருப்பதாகவும் சொல்லக் கேட்டு உறியிலிருந்த சட்டி

Page 45
bangaya ibuGir
பானையைத் திறந்து பார்க்கக் கொடி கிடைத்தது. தம்மனம் பண்ணி பார்வை பார்த்ததும் சுகம். தண்ணீர் குடித்தார் அப்புறம் உணவும் எடுத்தார்.
புங்குடுதீவில் பெரியவர் ஒருவருக்கு ஓயாத நோய். பிதற்றிக் கொண்டிருந்தார். மனநோய் போலவிருந்தது. தனக்கு சூனியம் மருந்து வேண்டாமென்றார். அப்படியென்றால் சூனியம் எடுப்போமென்று மறுநாள் அநுமான் கலையாடும் ஒருவரை அழைத்து வந்து உருவேற்றி சூனியம் எடுக்கக் கட்டளையிடவே, ஓரிடத்தைக் காட்ட அதைக் கிண்டிப் பார்த்தபோது உக்கிய தகடுகளும் மரத் துண்டுகளும் இருந்தன. அதற்கான சாந்தி செய்து நூல் கையில் கட்டிய பின் அவருக்கு நல்ல சுகம். புங்குடுதீவு கிழக்கு மக்கந்து என்ற பகுதியில் உள்ளவர் பெயர் நினைவில்லை.
கோண்டாவில் கிழக்கு வைரவர் கோவிலடியில் உள்ள குடும்பப் பெண் ஒருவருக்கு குழந்தையில்லை. பேயாட்டம் ஆடுவதாக வேலணைக்குத் தேடி வந்தார்கள். பேயாட்டிக் கேட்ட போது வெளிப்பட்ட கதை விசித்திரமாயிருந்தது. அவருடைய மச்சாளுக்கு பிசாசுப் பீடை, கைதடியில் உள்ள மந்திரவாதியிடம் போய் சுகப்படுத்தி வந்தார்களாம். போகும் போது இவரின் கால்சங்கிலியை மாறிப் போட்டுக் கொண்டு போனதாகவும் திரும்பி வந்ததும் இரவல் வாங்கிய காற்சங்கிலியைத் திருப்பிக் கொடுத்து அணிந்ததிலிருந்து பேய் அவரைப் பிடித்துக் கொண்டதாகவும் தகவல் கிடைத்தது. கைதடியில் ஆட்டிக் கழித்த பேய் காற்சங்கிலியில் ஒட்டிவந்து இவரைப் பீடித்திருக்கிறது. அதன் வேண்டுகோளின்படி ஆட்டிக்கழித்து காற்சங்கிலியோடு அதைக் கீரிமலைக் கடற்கரையில் கழித்தோம்.
இப்படிப் பேய் பிசாசுப் பீடை சம்பந்தமான கதைகள் பலவுண்டு. இவை பின்வரும் ஒளவையார் பாடலுக்க மைய ஏற்கப்பட
வேண்டியனவே
ー77ー

bijīgā
மந்திரமும் தேoqம் மருந்துள்திருவருளுந் தந்திரமும் ஞானந்தருமுறையும் -யந்திரமும் மெய்யென்னில் மெய்யாய் விளங்குமே மேதினியிற் பொய் யென்னிற் பொய்யாகிப்போம்.
பட்டாணிப் பேய் வரலாறு தந்த ஊக்கத்தால் மாந்திரீகம் கற்கத் தொடங்கிப் பின் அப்புவிடம் கற்றது போக மேலும் யாழ் சோனக தெருவைச் சேர்ந்த இரத்தினம் என்ற பட்டப் பெயரில் வேலணைப் பகுதியில் மந்திரம் பார்த்தவரிடம் கிரியை முறையினையும், தியானம், செபம், பார்வை, அர்ச்சனை ஆகிய பூசா மந்திரங்களை, வேலணை அம்மன் கோவில் அர்ச்சகராயிருந்த கறுவல் ஐயர் எனும் சோமசுந்தர ஐயரிடமும், வேலணை பள்ளிவாசலுக்குக் கிட்ட வாழ்ந்த சீனிக்காக்கா எனும் சிறந்த மந்திரவாதியிடமும் கற்றுத் தேர்ந்தேன். வைத்தியத்திற்கும் மாந்திரீகம் பலவகையிலும் உதவியாக இருந்தது. இருக்கிறது.
- 78 -

Page 46
Gallintal
விவசாயம்
9, 10 வயதுச் சிறவனாக இருந்தபோது ஆவரந்துலா, விளாப்புலம் கெம்மில், உமிக்கொட்டுவான் போன்ற நெற்காணிகள் வேலணை 5ஆம் வட்டாரத்தில் வயல் வெளிகள் நிறைந்த சூழலில் எமக்குச் சொந்தமாக இருந்தன. அந்த வட்டாரத்தின் நடுவில் கேணிகளும் வயல் வெளி
 

Ulf fífillGañá
களும் சூழக் குடியிருப்புகளும் அமைந்திருந்தன. நாவலடிப்புலம், சோழாவத்தை, பள்ளப்புலம், பள்ளிக் குடியிருப்பு, சங்கத்தார் கேணியடி, சிலுந்தாக் குளக்கரை, இலந்தைக்காடு எனும் குறிச்சிகள் சூழ அமைந்திருந்தன.
எனது தாயாரின் தாய் - பெத்தாச்சி - பள்ளம்புலம் எனும் குறிச்சியைச் சேர்ந்தவர். சி.கா.சோமசுந்தரம் காலி பிரபல வர்த்தகரும், காலிச் சிவன்கோவில் பரிபாலன சபைத் தலைவருமாய் இருந்தவரின் சகோதரி வேலாச்சிப்பிள்ளையே எனது பெத்தாச்சி. வேலணை கிழக்கு பிரபல வைத்தியர் சுப்பிரமணியரின் மகன் தம்பிப்பிள்ளையை (எனது பெத்தப்பாவை) அவர் திருமணம் செய்தார். தம்பிப்பிள்ளையார் வேலணை பெருங்குளம் முத்துமாரி அம்மன் கோவிலில் கந்தபுராணப் படிப்புக்கு பயன் சொல்பவர், கந்தபுராணப் படிப்பு ஆண்டுதோறும் சில மாதங்கள் தொடர்ந்து நிகழும். நான் அவருடன் கோவிலுக்கு போவேன் பெத்தப்பாவுக்குப் பக்கத்தில் இருப்பேன். அது எனக்கு ஒரு கெளரவமாக இருந்தது. அவரிடம் கந்தபுராணம் படிக்கவும் பயன் சொல்லவும் பலர் பழகுவார்கள். அதனால் அவரை ஊரில் எல்லாரும் உபாத்தியார் என்று அழைப்பார்கள்.
பெத்தாச்சியின் சீதனக் காணிகள்தான் ஆச்சிக்கு சீதனம் கொடுபட்டவை. அந்தக் காணிகள்தான் நாங்கள் பயிர் செய்த வயல் காணிகள். மாரிகாலம் மழை பெய்ததும் புரட்டாதி ஐப்பசி மாதங்களில் நெல்வயல் வேலைகள் ஆரம்பமாகும். எரு, குப்பைகள் ஏற்றிப் பறித்தல், வரம்பு கட்டுதல், பசளைகளைப் பரப்பி உழுதல், விதைத்தல் வேலைகளை வேலையாட்களைக் கொண்டு அப்பு செய்விப்பார். அப்பு வயலுக்குப் போகும் போதெல்லாம் நானும் போவேன். விதைப்பன்று ஆச்சியும் வருவா. வண்டிலில் விதைநெல், சுளகு, விதைப்பெட்டி, மண்வெட்டி, கலப்பைகள் கொண்டு போவோம். எருதுகள் பல சோடி உழுவதற்கு வரும். விதை நெல்லை வயல்களுக்கு கணக்காக விதைப் பெட்டியால் அளந்து ஆச்சி கொடுப்பார். அப்புதான் முதலில்
H 80 -

Page 47
ULF (DLG
விதைப்பார். விதைக்கத் தொடங்கும் போது சாணியில் பிள்ளையார் பிடித்து வைத்து, வெற்றிலை, பாக்கு, வாழைப்பழம் படைத்து, கர்ப்பூரம் கொழுத்தி, தேங்காய் உடைத்துத் தான் தொடங்கும். விதைப்பு வேலையை பெரும்பாலும் அப்புதான் செய்வார். விதைப்பு அவருக்குக் கைவந்த கலை என்று பிறர் பாராட்டக் கேட்டிருக்கிறேன். விதைப்பு மிக விரைவாக இடம்பெறும். அதே நேரம் விதை பரவல் சரியாகவும் நிதானமாகவும் இருக்கும். விதைத்த வயல்களை உழுவார்கள். வயலில் மூலைகள், குடாக்கரைகள் உழுபடாது. அதை ஒருவர் மண்வெட்டியால் கொத்திப் பரவுவார். இவ்வாறாக எல்லாக் காணிகளும் விதைத்து முடிய சில நாட்கள் செல்லும். விதைத்த வயல்களை 3ஆவது நாள் மறுத்து உழவேண்டும். சிலவேளை உடனேயும் மறுத்து உழுது விடுவதும் உண்டு. இனி கார்த்திகை, மார்கழி மாதங்களில் களை (புல்லு பிடுங்குவார்கள். வயலில் வெள்ளம் இருக்கும் போது தான் புல் பிடுங்குவார்கள். பெரும்பாலும் பெண் தொழிலாளர் தான் புல் பிடுங்குவார்கள். பலர் கூடி வரிசையாய் இருந்து புல் பிடுங்குவார்கள். புல் பிடுங்கும் காலம் வண்டியை வயல்களுக்கு கிட்டக் கொண்டு போக முடியாது. வயல் எல்லாம் பயிராக இருப்பதால் குடியிருப்புகளுக்கு அண்மையில் வண்டிகள் நிறுத்தப்படும். வயல்களிலிருந்த புல்லை சுமந்து வந்துதான் ஏற்ற வேண்டும்.
தை, மாசி மாதங்களில் அறுவடை நிகழும். அரிவாள் கொண்டு ஆண்களும் பெண்களும் அருவி வெட்டுவார்கள். வெட்டியவற்றைப் பிடி பிடியாய் வைப்பார்கள். வெட்டி முடிய பிடிகளைக் கட்டி ஒன்று சேர்த்து வரம்புகள் சந்திக்கும் உயரமான இடத்தில் சூடு வைப்பதற்காக எடுத்து வருவார்கள். அடியில் சூடு அகலமாகவும் நுனி படிப்படியாக குவிந்தும் போகும் வகையிலும் சூடு வைப்பார்கள். இந்தக் குவிப்பு முறை மழை நீர் சூட்டுக்குள் புகுந்து நனையாது உக்காதிருக்கப் பாதுகாப்பானது. சகலரது வயல்களிலும் சூடுகள் அடுக்கடுக்காய் சிறிய மலைக்குன்றுகள் போல் தொடர்ச்சியாய் இருப்பதைப் பார்க்கப்
பரவசமாய் இருக்கும்.
- 81 -

Hilfertill Shtil
இரட்டைப்பட வார்ந்து தடிப்பான குருத்தோலையினால் 20முழம் வரை நீளமாக இழைக்கப்பட்ட பாய்கள் களப்பாய்கள் எனப்படும். அவ்வாறான களப்பாய்களை தேவையான அளவு பரப்புக்கு விரித்து அதன் மேல் சூடுகளை குழப்பி பரவி 7, 8 எருதுகளை கந்து போட்டு பிணைத்து. பரப்பிய சூட்டின் மத்தியிலிருந்து கரைச் சூடுவதை நிரையாய் மாடுகளை நிறுத்தி வட்மாகச் சுற்றிவரத் தூரத்தி சூடு மிதிக்கப்படும். பரப்பிய சூட்டின் மத்தியில் நிற்கும் மாடு பொலி நடையன் இடையில் நிற்கும் மாடுகள் நடையன்கள், கடைசியாக நிற்கும் மாடு சாடுவாயன் என்று பரிபாஷைகளால் அழைக்கப்படும். மேலும் நெல்லை பொலி என்றும், சூடு மிதிக்கும் மாடுகள் போடும் சாணத்தை போர் என்றும் பாவிக்கும் சுளகை முறம் என்றும் பரிபாஷைசையில் தான் கூறுவார்கள். நெல் மிதிக்கும் இடம் களம். களத்தில் போடப்பட்டது களப்பாய். சூடு மிதித்தல் வேலைகள் மாலையில்தான் தொடங்கும். இரவு தான் சூடு மிதிக்க ஏற்ற காலம். சூடு மிதிக்கும் மாடுகளை துரத்தும் வேலைக்கென தனிய ஒருவர் நிறுத்தப்படுவார். நடையன்கள் சுற்றிச் சழன்று பலமுறைகள் சூடு மிதிபடும். சூடு மிதிபட்டபின் நடையன்களை வெளியில் விட்டு சூட்டைக் கிளற வேண்டும். இப்படிப் பல முறை படிப்படியாகக் கிளறிவிட நெல்மணிகள் (பொலி) கொட்டுப்படும். அதன் மேல் வைக்கோலை பாய்க்கு வெளியே கடத்திவிட்டு நெற்பொலியை முறங்களால் தூற்றிக் காற்றில் தூசுகளைப் பறக்கவிட்டு சுத்தம் செய்து சாக்குகளில் சேர்ப்பார்கள். வைக்கோலைக் கட்டி அல்லது சொரியலாக வண்டியில் ஏற்றி எல்லாவற்றையும் வீட்டுக்குக் கொண்டு செல்வோம். வீட்டில் நெல்லை காயவைத்த கூடைகளில் போட்டு வைப்போம். வைக்கோல் வளவில் குவித்து வைக்கப்பட்டு மாடுகளின் உணவாக வருடம் முழுவதும் பயன்படுத்தப்படும். இவற்றை எல்லாம் அப்புவோடு கூடத்திரிந்து பயின்று அனுபவப்பட்டேன். இப்போது போல இரசாயன உரங்கள் கிருமி நாசினிகள், உழவு இயந்திரங்கள் அப்போதில்லை. இயற்கைப் பசளையும் எருதுகளுமே பயன்பட்டன. விவசாய முறைகள்
இயற்கை விவசாய முறைகளாகவே அமைந்திருந்தன.
- 82

Page 48
GIUG
அப்புவுடன் திரிந்தது பயின்ற அனுபவத்தைக் கொண்டு 1942இலிருந்து கமம் செய்யத் தொடங்கினேன். கமம் நவீன முறையாகவும் செய்ய முடிந்தது. 2ஆம் உலக மகாயுத்தம் நிகழ்ந்ததால் விவசாயத்திற்கும் மதிப்பு வந்தது.1943 இலிருந்து பங்கீட்டுத் திட்டங்கள் அமுலாகியதும் விவசாயம் கைதுக்கி விட்டது. அதன் பிறகு 1955 இல் கிளிநொச்சிக் குடியேற்றத் திட்டப் பகுதிகளில் கமம் செய்ய விரும்பி கல்மடு 10ஏக்கர் திட்டத்தின் கீழ் காணிப் பங்கீடு பெற்றதால் தொடர்ந்து விவசாயம் செய்து வர முடிந்தது. வேலணையிலும் 1956இல் இருந்து தோட்டப் பயிர்ச் செய்கை, புகையிலை, மிளகாய், வெங்காயம் பயிரிடத் தொடங்கினேன். அதற்கு வசதியாக அப்பு மருமகன் இராமலிங்கத்துக்கு எழுதிக் கொடுத்த காணியை நான்சிறு வயதில் வீடு வளவை அவரின் தாயார் இறந்ததும் இராமலிங்கத்தார் எனக்கு விலையாகத் தந்தார். அதைத் தோட்டமாக்கிப் பயிர் செய்து பயன் பெருகவே மேலும் அயலில் உள்ள காணிகளையும் வாங்கி தோட்டச் செய்கையை விரிவுபடுத்தினேன். 196667ஆம் ஆண்டுகளில் மிளகாய்ச் செய்கை எனக்கு மட்டுமல்ல வேலணையில் அனைத்து விவசாயிகளுக்கும்
கூடிய வருமானத்தைத் தந்தது.
இதற்கிடையே எனது அப்பு மாமியின் மகனுக்கும் எனக்கும் தோட்டக் காணியில் ஒரு எல்லை வேலித் தகராறு முளைத்தது. தானாக முயன்று பகையை வளர்த்து நான் தன்னை அடிக்கப் போனதாக பொய் வழக்கும் சோடித்தார். ஊர்காவற்றுறை நீதிவான் கோட்டில் காணிக்கு எதிராக நிகழ்ந்த கிரிமினல் வழக்கில் அவரின் சாட்சிகளை விசாரித்த முடிவிலேயே வழக்கு நிரூபிக்கப்படவில்லை என்ற வார்த்தையை நீதிவான் கூறி 2008.1968இல் தள்ளுபடி செய்தார். அதன்பின் 1981ஏப்ரல் வரை பிரச்சனை இன்றி நிகழ்ந்த விவசாய சேவையால் பலருக்கும் வேலைவாய்ப்புக்களும் வழங்க முடிந்தது. அப்பால் தாயக மீட்புப் போரின் தாக்கத்தால் 1991 இல்பொருள் பண்டம், வீடு, காணி, கால்நடைகள், வருமானம் தந்த தொழில் எல்லாம் இழந்து யாழ் நகரில் வசிக்க நேர்ந்தது.
H 83 -

1982ஆம் ஆண்டில் யாழ்ப்பாணம் 121, 2 ஆம் குறுக்கு வீதியில் காணி வாங்கி பிள்ளைகள் குடியிருக்கவும், பேரப்பிள்ளைகள் படிக்கவும் வசதியாக ஒரு மேல்மாடி வீடு அமைத்து 1983இல் குடிபுகுந்தோம். அதுவும் தமிழீழப் போரால் செல்லடிகளால் பாதிக்கப்பட்டிருந்தது மட்டுமன்றி தளபாடங்களும் ஏற்கனவே கோட்டைப் போரால் 1987இல் இடம் பெயர்ந்த வேளை இழக்கப்பட்டன. தற்போது தஞ்சமடைந்திருப்பதற்கு அந்த வீடு உதவுகிறது. பல்வேறு திருத்தங்கள் பல லட்சம் ரூபா செலவு செய்து நிறைவேற்ற வேண்டியுள்ளது.

Page 49
finfiltribuGefiù
ஆன்மீகம்
வேலணை பெருங்குளம் முத்துமாரி அம்மன் கோவிலிலே கந்தபுராணத்துக்கு பயன் சொல்பவர் எனது பெத்தப்பா தாயாரின் தகப்பனார்). சு. தம்பிப்பிள்ளை, எனது பெற்றாருக்கு நான் ஒரேயொரு பிள்ளை. பெற்றார் என்னை வெகுவாக நேசிப்பதால் பெத்தப்பா,
 

பெத்தாச்சி, அப்பாச்சி, ஆச்சியின் சகோதரிகளான குஞ்சியம்மாக்கள், பெரியம்மா, மாமாமார், அப்புவின் சகோதரர் குஞ்சி ஐயா, மாமிமார் எல்லாருக்குமே நான் செல்லப்பிள்ளைதான். பெத்தப்பாவிற்கு பல பேரப் பிள்ளைகள் இருந்தனர் என்றாலும் எனது தாயார் தான் அவரை நன்றாகக் கவனிப்பவர். அதனால் தானோ என்னவோ என்னிலே தான் மிகவும் பற்று. நான் செய்யும் குழப்படிகளையெல்லாம் ஏற்றுக் கொள்வார். எனது தகப்பனாருக்கு அவர் தாய் மாமன் என்பதால் என்னில் பாசமும் பற்றாயும் இருக்கத்தக்க இறுக்கமான உறவு உண்டு. எனது வயதுப் பிள்ளைகளோடு கூடி பெத்தப்ப்ா வீட்டில் நிதமும் போய் விளையாடுவேன். பெத்தாச்சியின் பெயர் வேலாசிப்பிள்ளை. என்னை இடுப்பில் தூக்கிக் கொண்டு திரிவார். அவர் பிறந்த இடம் வேலணையில் பள்ளம்புலம் என்ற குறிச்சி பெத்தாச்சி பிரபல வைத்தியர் சி.கா.சோமசுந்தரம் கரம்பன் ஊர் காவற்றுறையில் வசித்த சி.கா.குலசேகரம் (அக்காலத்தில் வித்தியா கந்தோரில் வேலை பார்த்த முதலியார் குல சபாநாதனின் தகப்பனார்) ஆகியோருடன் கூடப்பிறந்த சகோதரி.
பெத்தப்பா கோவிலுக்குப் பயன் சொல்லப் போனால் நானும் அவரோடு கூடிப் போவேன். ஆண்கள் பெண்கள் ஆசாரமாக விரதமிருந்து கந்த புராண படிப்புக்கேட்கக் கோவிலில் கூடி நிற்பார்கள். முதலில் பூசை நிகழும். அதன் பிறகு படிப்புத் தொடரும். கந்தபுராணப் புத்தகத்திலுள்ள பாட்டை ஒருவர் வாசிப்பார். வாசித்து முடிய ஒவ்வொரு வரியாகப் பயன் சொல்லத் தக்கதாக பிரித்துக் கூறுவார். பெத்தப்பா அதற்கு விளக்கமாக கருத்துரை (பயன்) கூறுவார். இப்படியே வாசித்துப் பயன் கூறுவது முடியும் போது கோவில் சுவாமிக்கு பூசை நிகழும். திருநீறு சந்தனம் பிரசாதம் வழங்குவார்கள். இவ்வாறான நிகழ்ச்சிகள் சில மாதங்கள் தொடர்ந்து நிகழும் சிறுவர்களோடு விளையாடுவது பெத்தப்பா வுக்கு பக்கத்தில் போய் இருப்பது எனது பொழுது போக்கு பெத்தப்பாவை எல்லாரும் உபாத்தியார் என்றே அழைப் பார்கள்.
அவரிடம் கந்தபுராணம் வாசிக்கவும் பயன் சொல்லவும், பலர் கற்ற
- 86

Page 50
வாழ்வுச் சுவடுகள்
படியால் அந்தப் பெயர் பிரபலமாயிற்று. கோவில்கள் பக்தியோடு கல்வியறிவையும் இணைத்து ஊட்டி வந்தமைக்கு அந்தப் படிப்பும் பயனும் படிப்பித்தலும் விளக்க உரை கூறுதலும் தக்க சான்றுகளாக உள.
பயன் சொல்லிப் பழகப் பலர் அவருடைய வீட்டிற்கு வருவார்கள்.
எங்களுடைய வீடு கோவிலுக்கு நேரே பெருங்குளத்தில் வடக்குக் கரையில் இருந்தது. கோவிலுக்கும் வீட்டிற்கும் இடையே குளத்து வெளியைத் தவிர எந்த மறைப்புமில்லை. வீட்டில் நின்று பார்க்க கோவிலில் நிகழும் நிகழ்ச்சிகள் அனைத்தும் தெரிவதோடு ஒலிகளும் தெளிவாகக் கேட்கும். பூசை, மந்திரம், மேளதாளம், மணியோசை, பாட்டு, தேவாரம் எல்லாம் தினமும் கேட்கும் போது வீட்டிலிருந்தபடி தினமும் பிரார்த்திப்போம். தினமும் மூன்று வேளையும், அதற்கு மேலும் கூட நிகழும் பூசைகளால் தினமும் பலமுறை வணக்கம் செலுத்துவதும் பழக்கமாகியும் விட்டது. குளம் வற்றியிருக்கும் காலத்தில் கோவிலுக்குப் போய்வருவது இலகு. ஆச்சி (எனது தாயார்) பல விரதங்கள் அனுட்டிப்பார். தினமும் கோவிலுக்குப் போய்வருவார். நானும் சிலவேளை அவருடன் போவதுண்டு. இத்தகைய நெருங்கிய தொடர்புகளால் பெருங்குள முத்துமாரி தான் எனது குல தெய்வம். எதற்கெடுத்தாலும் அம்பாளின் பெயராலேதான் எனது கருமங்கள் நிகழும். பிற்காலத்தில் அம்மன் கோவில் பரிபாலன சபை உறுப்பினராகவும் தலைவராகவும் இருந்து அவள் தொண்டு செய்யும் வாய்ப்பு கிடைத்தமை கூட அவளின் திருவருட் செயலென்றே கருதுகின்றேன்.
பக்தியுள்ள குடும்பத்தில் பிறந்தமையால் இளமையிலேயே எனக்கு ஆன்மீக சிந்தனை உருவானது. வீட்டில் பிள்ளையார், அம்மன், சரஸ்வதி, முருகன் படங்களை வைத்து விளக்கைக் கொழுத்தி தினமும் காலை மாலை பிரார்த்திப்பேன். சுப்பிரமணியர் இயந்திரத்திற்கு அபிசேகம் செய்து தொடர்ந்து மந்திர செபம் செய்து பழகினேன்.
காயத்திரி மந்திரம், விநாயகரகவல், சகலகலாவல்லிமாலை எல்லாம்
- 87 m

ang ng tribusti
மனப்பாடம் செய்து ஓதி வந்தேன். இவையெல்லாம் இயல்பாக கைகூடி வந்த ஆன்மீக சிந்தனையின் அடையாளங்கள் தான். அம்மன் கோவில் நிர்வாகத்தைப் பெரும்பாலும் திருவிழாக்காரரே நிகழ்த்தி வந்தனர். எங்கள் குடும்பம் எந்தத் திருவிழாவிலும் பங்குபற்றாத காரணத்தால் எங்களுக்கு நிர்வாகத்தில் பங்கு இல்லை. என்றாலும் என்னைப் பொறுத்தவரையில் நெருங்கிய நண்பர்களின் பக்கபலம் இருந்தமை யால் நிர்வாகத்தில் தலையிட்டு சில சீர்திருத்தங்களைச் செய்யக் கூடியிதாயிருந்தது.
இவ்வாறான பக்தி நெறிகளைப் பேணிவந்த வேளை இந்தியாவைச் சேர்ந்த திருநெல்வேலி மனோவசிய உண்மைச் சங்கம் என்ற அமைப்புப் பற்றிய பத்திரிகைச் செய்தியைக் கண்டு அவர்களுடன் தொடர்பு கொண்டேன். அவர்களிடமிருந்து கிடைத்த பதில் ஒரு குறிப்பிட்ட தொகை கட்டணம் செலுத்தினால் ஒரு புத்தகம் அனுப்புவதாகவும் அந்தப் புத்தகத்தில் உள்ளபடி பயிற்சி நெறிகளை மேற்கொள்ளும் போது மேலும் தகவல் தேவையானால் கடிதம் மூலம் விளக்கந்தரலாமென்றும் பதில் கிடைத்தது. அதன்படி பணம் அனுப்பினேன் புத்தகம் அனுப்பினார்கள். அதிலுள்ள சில பயிற்சி நெறிகளைப் படிப்ப்டியாக பயிற்சி செய்யுமாறு எழுதியிருந்தார்கள். மனோ சக்தியை வளர்க்கவும் பிறரை வசியப்படுத்தவும் எடுத்த கருமத்தை எதிர்ப்புகளிருந்தாலும் விடாப்பிடியாய் நிறைவேற்றத்தக்க மன உறுதியையும் அத்துடன் மெஸ்மெரிசம் ஹப்னாடிசம் போன்ற துறைகளிற் தேர்ச்சி பெறவும் உதவக் கூடியனவாக இருந்ததால் நானும் எனது மச்சான் பொன்னுத்துரையும் சேர்ந்து பயிற்சி செய்து பழகினோம். வேலணை சேர்வைத்தியலிங்கம் துரைசுவாமிமத்திய மகாவித்தியாலய
அதிபராய் இருந்து இளைப்பாறியவர்தான்குறிப்பிட்டவிபொன்னுத்துரை)
கோழியை அசையாமல் நிற்கச் செய்யவும். சில நிமிடங்கள் பீடித்துக் கொண்டிருந்த பல்லியை ஓடாமற் தூங்க வைக்கவும் ஒருவரின் பிடரியை உற்றுநோக்கி அவர் எம்மைத் திரும்பிப் பார்க்கச் செய்யவும்,
v- 88 --

Page 51
Galling
புருவ மத்தியை உற்றுநோக்கிப்பிறரை வசீகரிக்கவும்,நாட் நினைத்ததை எதிரே உள்ளவர் செய்ய அல்லது சொல்லச் செய்யவும், கூண்டில் இருக்கும் கிளியை தூங்கி விழச் செய்யவும், ஒருவரை தூங்கச் செய்யவும் இந்தப் பயிற்சி நெறிகளைப் பயன்படுத்தினோம். குறிப்பிடத்தக்க அளவு வெற்றியும் சித்தியும் கிடைத்தன. ஒரு கோழியைப் பிடித்து அதன் கழுத்தை மடித்துக் கொண்டு நிலத்தில் பொருந்தக் கூடியவாறு பிடித்துக் கொண்டு நேரே சோக்கினால் ஒரு கோடு கீறிய பின் சிறிது நேரம் பிடித்திருந்து விட்டால் கோழி ஓடாமல் அப்படியே நிற்கும். சத்தம் போட்டு விரட்டினால் தான் ஓடும். பல்லியைப் பிடித்து மல்லாக்க வைத்து அதன் முன்னங் கால்களால் முகத்தை தடவி விடாமல் சிறிது நேரம் பிடித்துக் கொண்டிருந்த பின் விட்டால் அது உறங்கிக் கிடக்கும், ஓடாது. புரட்டி விட்டாற் தான்
போகும். பல்லியைப் பிடித்துப் புரட்டும் போதுவாலில் பிடிக்கக் கூடாது. பிடித்தால் வாலைக் கழற்றிவிடும். கூண்டில் இருக்கும் கிளியைக் கண்ணெதிரே கிட்ட நின்று கொண்டு எமது கைவிரல்களை அது உற்றுப் பார்க்கும் வகையில் அசைத்துக் கொண்டிருந்தால் சிறிது நேரத்தில் தூங்கி விழும். இவற்றை விட நாம் ஒரு இலக்கத்தை 10க்குள் எழுதி வைத்துக் கொண்டு எதிரே உள்ள ஒருவரை நாம் எழுதிய பென்சிலைப் பார்க்கும்படி சொல்லி பென்சிலை அவர் கண் எதிரே அசைத்துக் கொண்டு ஒன்றிலிருந்து பத்துவரையான எண்களை எழுதி அவற்றில் ஒன்றை வெட்டும்படி கூற அவர் நாம் எழுதி வைத்த இலக்கத்தையே வெட்டுவார். பிடரியை அல்லது புருவத்தை கண் இமையாமல் பார்த்துக் கொண்டு குறித்த நபர் எம்மைத் திரும்பிப் பார்க்க வேண்டும். அல்லது கிட்ட வரவேண்டுமென உறுதியாகச் சிந்திக்க அவர் எம்மிடம் வருவார். ஒருவரைப் படுக்க வைத்து அவர் கண் எதிரே எமது கை விரல்களை அசைத்துக் கொண்டிருக்க அவர் கண்களை மூடுவார். அவ்வேளை விரல் நுனிகளை மடக்கிக் கொண்டு மேலிருந்து கீழாக 5முதல் 10 நிமிடங்கள் பொடுக்க அவர் தூங்கி விடுவார். தூக்கத்தில் கேட்கும் கேள்விகளுக்கு சிலரிடமிருந்து பதிலையும் பெறலாம். இவ்வாறான பயிற்சிகளை மேல் படிப்புக்காக இருவரும் பிரிந்து சென்றுவிட்டதால்

blunaffithuCistill
பயிற்சி செய்தல் கைவிடப்பட்டாலும் பல சந்தர்ப்பங்களில் அவை இன்றும் பலனளிக்கின்றன. வளர்த்தெடுக்கப்பட்ட மன உறுதியும் தன்னம்பிக்கையும் ஆன்மீக நெறிக்குத் துணை புரிகின்றன.
ஆலய வழிபாட்டிற்கும் அதனால் ஆன்மீகத்தை வளர்ப்பதற்கும் கோவில்களின் நிர்வாக முறையில் சீர்திருத்தம் தேவை. உரிமை மீறல். அடக்குமுறை, சாதி வேறுபாடுகள் கண்டிப்பாகப் பேணப்படுதல் என்பவற்றுக்கு ஒரு தீர்வு காணும் வரை ஆலய வழிபாட்டால் ஆன்மீக வளர்ச்சி கிடைக்கப் போவதில்லை என்பதை உணர்ந்தேன். பூசித்த தெய்வத்தைப் போற்றி வந்தாலும் ஆலய வழிபாட்டை அறவே வெறுத்தேன். குருவருளின்றித் திருவருளில்லை என்ற கற்ற, கேட்ட படிப்புகளும் நினைவுவரவே சிக்கலான ஆலய வழிபாட்டைக் குறைத்துக் கொண்டு குருவைத் தேடும் முயற்சி மனதை ஆட்கொள்ளத் தொடங்கியது. மேல் வகுப்புகளிற் படித்துத் தேறி ஆங்கிலம் படிப்பதற்காக சித்தங்கேணி சைவ ஆங்கில பாடசாலையில் சேர்ந்தேன். வேலணை மேற்கைப் பிறப்பிடமாகக் கொண்ட சாமி.மு.மயில்வாகனம் அதன் அதிபராக இருந்தார். தெய்வபக்தி உள்ளவர். நானும் தெய்வபக்தி உள்ளவன் என்பதை அறிந்து என்னில் பற்றுடையவராய் இருந்தார். அவரோடு தான் விடுதியில் தங்கியிருந்தேன். விடுதியில் என்னுடன் பல மாணவர்கள் இருந்தார்கள். வேலணையிலிருந்தும் பலர் வந்து விடுதியில் தங்கி இருந்து படித்தார்கள். அதிபர் மயில்வாகனம் யோகர் சுவாமிகளின் நெருங்கிய பக்தரானபடியால் அவரைத் தேடி யோகர் சுவாமிகள் விடுதிக்கு வருவார்கள். நான் விடுதியில் இருக்கும் போது அடிக்கடி என்னைப் பார்க்க வரும் எனது தகப்பனார் வாழைப்பழம், முந்திரிகைப்பழம். மாம்பழங்கள் வாங்கி வந்து தருவார். யோகர் சுவாமிகள் பல தடவைகள் விடுதிக்கு வந்துபோனதாலும் அவர் மேல் எனக்கு ஏற்பட்ட மதிப்பாலும் பக்தியாலும் அந்தப் பழவகைகளை யோகர் சுவாமிகள் வந்ததும் காணிக்கையாகக் கொடுத்து வணங்குவேன். அவரின் அருளாசியும் வாழ்த்தும் கிடைத்தது. விடுதியிலும் பாடசாலையிலும் எனக்கு தனி மதிப்பு. அதிபர் மயில்வாகனம் என்னில் மிகுந்த பற்றுடையவராக இருந்தார்.

Page 52
tsunny
அந்தப்படிப்பு முடிய வேறு பாடசாலைகளுக்குப் படிக்கச் சென்றேன். யோகர் சுவாமிகளை வழிப்போக்கில் சந்திப்பேன். ஆனால் அவரோடு தொடர்பு வைக்கவில்லை. வயது வந்து படித்துத் தேறி ஆசிரியராகப் பதவி பெற்றபின் மேலும் குருவைத்தேடும் ஆசை பிறந்தது. அவ்வேளை யோகர் சுவாமிகள் சமாதியடைந்து விட்டார். யோகர்சுவாமிகளின் சீடர்களோடு தொடர்பு கொண்டு சிவதொண்டன் நிலையத்துக்குச் சென்று அந்த வழிபாட்டு முறைகளைச் சில காலந் தொடர்ந்தேன். அவை நான் நினைத்தபடி ஆன்மீக உணர்வைத் தரவில்லை. குருவும் இல்லையென்பதால் அதை நிறுத்திவிட்டு சாயிபாபா பக்தர்களோடு தொடர்பு கொண்டேன். தொழுகை நிகழும் இடங்களுக்குப் போய் வந்தேன். திருநீறு, சந்தணம் படங்களிலிருந்து கொட்டப்படுதல், விளக்கில் வைத்த பூ சுழலுதல், சாமி அப்பம் தண்ணீர் அல்லது தேநீர் ஊற்றி வைத்தால் குட்டிபோடுதல், குட்டிபோட்டதை பொங்கி பூசித்து பின்பு கடலில் சேர்த்தல் போன்ற புதுமைகள் சாயியின் அற்புதங்களெனப் பக்தர்கள் பெருமைப்பட்டார்கள், பேசிக் கொண் டார்கள். இந்த அற்புதக் கதைகள் எனக்குக் கவர்ச்சிக்குரியனவாகக் காணப்படவில்லை. தெய்வ சக்தியால் இயல்பாக நிகழக் கூடியவை இவை. மேலும் புட்டபர்த்தி சென்று தரிசனம் பெறவும் அங்கு தங்கி இருக்கவும் எனது பருவமும் குடும்பப் பொறுப்பும் ஏற்றதாக இல்லையென்பதால் ஊக்கமெடுக்கவில்லை. சாயிபாபா ஒரு நடமாடும் தெய்வம் என்பதையும் அதிசயிக்கத்தக்க அற்புதங்கள் புரிகிறார் என்பதையும் அவரின் தீர்க்க தரிசனங்கள் பலித்திருக்கின்றன என்பதையும்அறிவேன். அவரைப்பற்றிப் பாடியும் இருக்கிறேன். அவற்றிலொரு பாட்டு
கண்ணனுக்கீதை சொன்ன
கடவுள்தான் ராம காதை மண்ணிலே வரலாறுண்டு
மறைப்பதற் கியாரு மில்லை பண்ணுமற் புதங்களாலே பகவனாம் சாயிபாபா அண்மையிலவ்வாறேதான்
அவதரித்தருளும் தெய்வம்
H 91 H

இந்தியாவிற்கு சுற்றுலா மேற்கொள்ள வசதியாக யாழ்ப்பாணத்தில் ரூறிஸ்ட் கொம்பனிகள் இருந்தன. அவற்றில் முற்பணம் செலுத்திப் பதிவு செய்யும் யாத்திரீகர்கள் பாதுகாப்பாக அழைத்துச் செல்லப்படு வார்கள். செல்லுமிடங்களில் தங்குமிட வசதிகளும் செய்வார்கள். பஸ் மூலம் பல இடங்களைச் சுற்றிப் பார்க்கலாம். கோவில்களைத் தரிசித்து தீர்த்தமாடியும் வரலாமென அறிந்தேன். எனக்கு மண் ஏற்றிப் பறிப்பித்துத் தோட்டம் இணக்கும் வேலை இருந்ததால் நான் போகவில்லை. எனது மனைவியிடம் பேர்த்தி வளர்மதியும் (கனடாவில் வாழ்கின்றார்) மகள் பூஷ்பராசவதியும் சுற்றுலா போய்வர ஒழுங்கு செய்தேன். வசதியென்றால் பங்களூர் சென்று சத்திய சாயிபாபாவையும் தரிசித்து வருமாறு கூறினேன். சுற்றுலா சென்றவர்கள் சரித்திரப் பிரதிசித்தி பெற்ற இடங்களையும் தேவாலயங்களையும் புனித தீர்த்தங்களையும் பார்த்தும் தரிசித்தும் தீர்த்தமாடி மகிழ்ந்தும் மனநிறைவோடு வீடு வந்து சேர்ந்தார்கள். ஆனால் பாபாவின் தரிசனம் நினைத்தபடி கிட்டவில்லை. குற்றாலம் அருவியிற் தீர்த்தமாடியதை மிக வியந்து கூறினார்கள். சந்தர்ப்பம் கிடையாமையால் பாபாவின் மார்க்கத்தில் செல்லுதல் கைகூடவில்லை. ஆனால் குருவைத்தேடும் படலம் தொடர்ந்து கொண்டிருந்தது. 1983ஆம் ஆண்டளவில் எனது நண்பர், ஆசிரியர், அதிபர் க.காங்கேசு மற்றும் அனலைதீவைச் சேர்ந்த ஆசிரியர் இராமசாமி ஆகியோரைச் சந்தித்தேன். அவர்கள் குருமகாராசி என்கிற குருவிடம் ஞானம் பெற்றவர்கள். தாங்கள் நம்பிக்கை வைத்து ஞானம் பெற்ற வரலாற்றை எடுத்துக் கூறினர். குரு மகாராசி என்ற குருவை நேரில் இங்கு வரவழைத்துச் சந்திக்கலாமென்றும், யாழ்ப்பாணத்தில் அவரின் பிரதிநிதிகள் மகாத்து மாக்கள் என்றழைக்கப்படுவோர் இருக்கிறார்களென்றும் அவர்களை வீட்டிற்கு அழைத்து வந்து அவர்களது பேச்சை (சற்சங்கத்தைக் கேட்டுப் பார்த்து உங்களுக்குப் பிடித்தால் அந்த வழியைப் பின்பற்றலாமெனக் கூறினார்கள். குருவைத் தேடிக் கொண்டிருந்த நான் இதையும் ஒருமுறை முயன்று பார்ப்போமே என்று முடிவுசெய்தேன்.

Page 53
அவர்களோடு உடனே காரில் புறப்பட்டு யாப்பாணத்தில் ஸ்ரான்லி வீதியில் அப்போது தங்கியிருந்த மகாத்துமாவைச் சந்தித்தேன். இறைவனை ஒசையாக, ஒளியாக, அமிர்தமாக அனுபவிக்கலாமென்றும் அதற்கான பக்குவ நிலையை அடைவதற்கான வழிமுறைகளையும் மகாத்தமாவிடம் கேட்டறிந்தேன். மகாத்துமாவை வீட்டிற்கு அழைத்து வந்து அவரது சற்சங்கம்' எனப்படும் அறிவுரைகளைக் கேட்டோம். அயலவர்களையும் நண்பர்களையும் அறிவுரைக் கூட்டத்திற்கு அழைத்தேன். அனைவரும் அந்த வழியைப் பின்பற்றத் தொடங்கினர். கிழமையில் இரண்டு நாட்கள் எங்கள் வீட்டில் சற்சங்கம் நிகழும். ஞானம் ஏற்கனவே பெற்றவர்கள் கூட்டத்திற்கு வந்து தங்கள் அனுபவங்களை எடுத்துக் கூறுவார்கள். இடைக்கிடை மகாத்துமாக்களும் வந்து சற்சங்கம் செய்வார்கள். வேலணையில் எங்கள் நிலையத்தில் சற்சங்கம்
பெற்றவர்களில் தகுதியானவர்களுக்கு ஞானம் வழங்கப்பட்டது.
யாழ்ப்பாணம் ஸ்ரான்லி வீதியிலுள்ள ஒரு வீட்டில் மகாத்துமா இருந்தார். எங்களைப் போல தகுதியானவர்கள் வேறு பிற இடங்களி லிருந்தும் ஞானம் பெற வந்திருந்தனர். அன்று அந்த நிலையத்தில் குறைந்தது 50 பேருக்கு ஞானம் வழங்கப் பெற்றது. என்னுடன் எனது மனைவி, மகள் புஷ்பராசவதி, திருமதி செ. கனகம்மா, செல்வி செநாமகள், திருமதி பிரணவசொரூபன், திருமதி பா. புவனேஸ்வரி, கரம்பன் பண்டிதர் குமரேசையா, சரவனையபூர் ஆசிரியர் சுப்பிரமணியம், வேலணை நா.நாகலிங்கம், திரு.கா.செல்லத்துரை என்போர் ஞானம் பெற்றார்கள். ஞானம் பெறும் போது சில விதிமுறைகளில் பயிற்சியளிக்கப்பட்டது. கண்களை மூடிக்கொண்டு பேரொளி போன்ற காட்சியைக் காணவும், செவிகளை விரலாற் காட்டித் தந்த முறைப்படி அமைத்துக்கொண்டு பெருஞ் சத்தமான ஒலியை, இரைச்சலைக் கேட்கவும், நாக்கின் நுனியால் அண்ணத்தை அழுத்திக் கொண்டிருக்க ஊற்றாகும் அமிர்தத்தைச் சுவைக்கவும் அதன் பின் சில நிமிடங்கள் எந்தவொரு சிந்தனையுமின்றித் தியானம் இருக்கவும் பயின்றோம். சிலருக்கு இவை சற்றுச் சிரமமாக இருந்தாலும் எனக்கு மிக இலகுவாய் இருந்தன.
س- 93 =س-

alUshlf eftbu[Biffill
ஞானம் பெற்ற பின்னும் வீட்டிலிருந்து சற்சங்கம் தொடர்ந்தது. புதிதாக ஞானம் பெற விரும்பியவர்கள் கூட்டத்திற்கு வருவார்கள். வேறு ஊரிலிருந்தும் ஞானம் பெற்ற பக்தர்கள் வந்து உரையாற்றுவர். நாங்களும் வேறு ஊர்களுக்குப் போய் உரையாற்றுவோம். சகல ஊர் மக்களும் ஒன்று சேரும் கூட்டம் யாழ். வீரசிங்கம் மண்டபத்திலும் சட்டநாதர் கோவில் மண்டபத்திலும் பொதுவான வேறு இடங்களிலும் நிகழும். வழமையான மகாத்துமாக்களை விட வேறு மகாத்துமாக்களும் பெரிய கூட்டங்களில் உரையாற்றுவார்கள். குருமகாராசியின் அருள் உரைகளை ரீவியிலும் றேடியோவிலும் பார்க்கலாம், கேட்கலாம். இவ்வாறாக யாழ்ப்பாணத்தில் பல ஊர்களையும் சேர்ந்த பக்தர் தொக்ை அதிகரித்தது மட்டுமன்றி கொழும்பிலும் மற்றும் வெவ்வேறு இடங்களிலும் பக்தர்கள் தொகையாய் இருந்ததால் குருமகராசி இலங்கைக்கு விஜயம் செய்யப்போவதாக அறிவித்தார்.
கொழும்பிலே வருகைக்கான ஆயத்தங்கள் நிகழ்ந்தன. பக்தர்கள் தங்குவதற்கு உணவுடன் தங்கமிட வசதிகள் குருமகாராசியின் அருளுரையைக் கேட்பதற்காக அருகிலே விசாலமான மண்டபமும் குருமகாராசியை சகல பக்தர்களும் தனித்தனியே நேரில் சென்று தரிசித்து வணக்கஞ் செலுத்தி அவரின் ஆசியைப் பெற வசதியான திறந்தவெளி அரங்குகளும் அமைக்கப்பட்டிருப்பதாக பக்தர்களுக்கு அறிவிக்கப்பட்டு தரிசனத்திற்கு வருமாறு அழைப்புகள் கிடைத்தன. நாங்கள் எல்லோரும் கொழும்புக்குப் புறப்பட்டோம். ஆண்களுக்கும் பெண்களுக்கும் பிரத்தியேகமான விடுதிகள் இருந்தன. மூன்று. நாலு நாட்கள் தங்கி இருந்தோம். குருமகாராசி வரும் வரை எல்லோருக்கும் பொதுவான மண்டபத்தில் சற்சங்கம் நிகழ்ந்தது. விடுதிகளில் தங்கி இருப்போர் சிலர் ஒன்று கூடி சற்சங்கம் செய்வார்கள். இடையிற் சிலர் காட்ஸ் விளையாடுவார்கள். நான் அங்கு சென்றிருந்த வேளை கொழும்பு களனி பல்கலைக் கழகத்தில்விரிவுரையாளராகவிருந்த எனது மகன் இரா.சிவச்சந்திரனும், பேர்த்தி யாழினியும் எங்களைத் தினமும் வந்து சந்திப்பார்கள். அப்பொழுது அவர் குடும்பமாக கொழும்பிலே இருந்தார்.
m 94 m

Page 54
வாழ்வுச் சுவடுகள்
குருமகராசி வந்து சேர்ந்தார். மண்டபத்தில் உரையாற்றினார்.
பெருந்திரளான பக்தர்கள் ஆவலுடன் திரண்டு நின்று பக்திப் பரவசத்துடன் கேட்டார்கள். மறுநாள் பாத தரிசனத்துக்காக எங்களை
பஸ்சில் அழைத்துச் சொன்றார்கள். தனித்தனியே ஒவ்வொருவராக வரிசையாகச் சென்று திரை மறைவிலிருந்த குருமகாராசியைத் தரிசித்து ஆசீர்வாதம் பெற்றோம். மகிழ்ச்சியுடன் மறுநாள் ஊர்திரும்பினோம்.
இதற்குப் பிறகு மக்கள் விருப்பத்திற்கும் வேண்டு கோளுக்கும் இணங்கி எங்கள் வீட்டில் மட்டுமன்றி அயல் வட்டாரங்களிலும் சற்சங்கக் கூட்டங்கள் நிகழ்ந்தன. பக்தர்கள் தொகையும் அதிகரித்து மேலும் பலர் ஞானம் பெற்றார்கள். இவ்வாறு வளர்ச்சி கண்டது. யாழ்ப்பாணத்திலிருந்து மகாத்துமாக்கள் சென்ற பிறகு மூத்த பக்தர்கள் சிலரிடம் பொறுப்புகள் ஒப்படைக்கப்பட்டன. கிராமங்கள் தோறும் நிகழ்ந்து வந்த சற்சங்கக் கூட்டங்கள் கைவிடப்பட்டு யாழ் நகரிலுருள்ள கன்னாதிட்டியிலும், சட்டநாதர் கோவிலடி மண்டபத்திலும் கூட்டங்கள் கொண்டாட்டங்கள் நிகழத் தொடங்கின. பக்தர்கள் சற்சங்கம் செய்வதும் தவிர்க்கப்பட்டு குருமகராசியின் அருளுரைகள் மட்டும்தான் தொலைக்காட்சி யிலும் றேடியோவிலும் போடப்பட்டது. பக்தர்கள் கூடியிருந்து அவற்றைத்தான் பார்க்கவும் கேட்கவும் வேண்டும். இதனைப் பின்பற்றுவது தூரத்துக் கிராமவாசிகளுக்கு சிரமமாய் இருந்தது. இடைக்கிடை நானும் போய் வந்தேன். பிறகு முற்றாகவே தவிர்த்துக் கொண்டேன். ஆயினும் ஆன்மீக வளர்ச்சிக்கு பயன்பெறத்தக்க பயிற்சிகள் தொடர்கின்றன. எங்களோடு ஞானம் பெற்று இந்தப் பக்தி நெறியை மேற்கொண்டவர்கள் இன்றும் அந்த மார்க்கத்தைப் பின்பற்றி வருகிறார்கள். இவர்களில் சிலர் இந்தியாவிற்குச் சென்று குருமகாராசியைத் தரிசித்து வந்துள்ளார்கள். இவர்களில் செல்வி செநாமகள், திருமதி பா. புவனேஸ்வரி என்போர் குறிப்பிடத்தக்கவர்கள்.
- 95 H.

inning
சமாதான நீதவான்
சமாதான நீதவானாக நியமனம் பெற்றிருப்பதாகக் கடிதமும் அதைத் தொடர்ந்து அரசாங்க வர்த்தமானிப் பிரதியும் கிடைக்கும் வரை யார் விண்ணப்பித்தது. எவ்வாறு எனக்குப் பதவி வந்தது என்ற விபரங்கள் எதுவும் எனக்குத் தெரியாது. மறுநாள் வேலணைக்

Page 55
arely
கிராமசபை உறுப்பினரும் உப தலைவர் சி.இராமலிங்கம் (செட்டியார்) வர்த்தகமானிப் பிரதிநிதியுடன் பாராட்டுத் தெரிவிக்க வந்தபோது தான் விபரம் அறிந்தேன்.
வேலணை கிராமச் சங்கம், பல நோக்குக் கூட்டுறவுச் சங்கம், விளைபெருக்கக் குழு, சனசமூக நிலையங்கள் சமாசங்கள் மற்றும் பொதுசன அமைப்புக்களில் உயர் பதவி வகித்து திறம்பட நிர்வகித்த திறமையும், ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைகளைப் பேணிப் பாதுகாத்தமைக்கும், மக்களின் ஏகோபித்த மதிப்பு உரித்தான நன்நடத்தைக்கும்ஆசிரியராய் அதிபராய் சமூக சேவையாளராய் கவிஞராய் பலதுறைகளில் மக்களுக்குப் பணியாற்றியமைக்காக பாராட்டுத் தெரிவித்தே வேலணை கிராமச் சங்கத்தில் ஏக மனதாக தீர்மானமியற்றி எனக்கு சமாதான நீதவான் பட்டம் வழங்குமாறு பாராளுமன்ற உறுப்பினர் திரு.கா.பொ. இரத்தினம் ஊடாக விண்ணப்பித் திருக்கிறார்கள். அவர்களின் சிபார்சை அங்கீகரித்துத்தான்நீதி அமைச்சு பட்டம் வழங்கியது. இதனை அறிந்த நண்பர்கள் மற்றும் உறுப்பினர்கள் வந்து பாராட்டினார்கள். ஊரில் உள்ள பொதுநல அமைப்புக்களின் பிரதிநிதிகளும் பாராட்டினார்கள். நீதி அமைச்சுக்கும் எம்பிக்கும் பாராட்டுத் தெரிவித்தார்கள்.
பெரும் எடுப்பில் எல்லோருமாக பாராட்டு விழா நடத்த முயன்ற போது நான் தடுத்து சத்தியப் பிரமாண வைபத்தின் போது நானே எல்லோரையும் அழைத்து விருந்தளிக்கப் போவதாகவும் அனைவரும் பங்குபற்றி, ஆசி தெரிவிக்கலாமென்றும் விடுத்த வேண்டுகோளை ஏற்றுக் கொண்டனர்.
23.06.1978இல் யாழ்ப்பாணம் பெரிய கோட்டில் நீதி அரசர் திரு.கணநவரத்தினம் அவர்கள் முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்தேன். எனது இளையமகள் இராசமலரின் கணவர் சட்டத்தரணி க.சற்குணநாதன் (தற்போது அவுஸ்திரேலியாவில் குடும்பத்துடன்
H 97.

வாழும் அவர், அங்கு சுட்பிறீம் கோட் அட்வக்கேற்றாகக் கடமை ஆற்றுகிறார்) முன்னின்று நிகழ்ச்சிகளை ஒழுங்கு செய்தார். வேலணை மற்றும் தீவுப் பகுதிகளிலிருந்து ஏராளமான பொதுமக்கள் நண்பர்கள் வந்து கூடியிருந்தார்கள். செய்தி நிருபர்கள், வழக்கறிஞர்கள் சமூகமளித்திருந்தனர். சத்தியப்பிரமாணம் ஒப்பமிட்டு பிரகடனப் படுத்தி முடிந்ததும் பாராட்டுக்களும் பூமாலை அணிவித்தல், படம் எடுத்தல் போன்ற நிகழ்ச்சிகளும் நிகழ்ந்தன. செய்தி நிருபர்களும் படம்பிடித்தனர். மறுநாள் செய்தித்தாளில் அவை பிரசுரமாயின.
கோட்டில் நிகழ்ச்சிகள் நிறைவேறியதும் இத்தனை மதிப்பும் மரியாதையுமான சத்தியப் பிரமாண வைபவத்தை காண்பதரிது எனப் பலரும் பாராட்டினார்கள். பெரும்பாலும் எல்லோரையும் வாகனங்களில் வீட்டுக்கு அழைத்து வந்தோம். பெரிய அளவில் விருந்து வைபவம் ஏற்பாடாகி இருந்தது. ஆர்வலர்கள் பலர் முறையாக செயற்படுத்த ஆயத்தமாகக் காத்திருந்தனர். பலரும் பாராட்டுரை வழங்கி மதிப்பும் மரியாதையும் செலுத்தி விருந்து வைபவத்தில் கலந்து சிறப்பித்து விடைபெற்றுச் சென்றார்கள்.
மேலும் திக்குத்திக்காக பல இடங்களிலும் பாராட்டுக் கூட்டங்கள் பல நாட்கள் தொடர்ந்தன. பட்டத்தைவிட மக்கள் அளித்த மரியாதையும் காட்டிய பேராதரவும் இன்னும் என் மனதில் நிலைத்திருக்கின்றது. எனது சமூக நலச் சேவையால் மக்களின் இதயத்தில் இடம் பெற்றிருக்கிறேன் என்ற நிம்மதி என்றும் எனக்குண்டு. இன்றுவரை அப்பதவியால் அனைவருக்கும் சேவை செய்ய முடிகிறது. ஆவணங்களைச் சரிபார்த்துத் தவறிருந்தாற் திருத்தி தேவைப்பட்டால் சத்தியக் கடதாசி எழுதிக் கொடுத்து விண்ணப்பங்களை நிரப்பிக் கொடுத்து உத்தியோகம், பரீட்சைகள் என வருவோர்க்கு அவர்களது ஒப்பங்களை நேரில் பெற்று உறுதி சிபாரிசு செய்து கொடுக்கின்றேன். இடம் பெயர்ந்த வேளையிலும் என்னோடு இடம் பெயர்ந்த ஊர் மக்களுக்கும் நான் தங்கியிருந்த ஊர் மக்களுக்கும் இச்சேவை பயன்பட்டிருக்கிறது. பயன்படுகின்றது.
- 98 m

Page 56
līgā
கவிதை
வேலணை சரஸ்வதி வித்தியாசாலையில் உயர்வகுப்பில் படித்த போது வித்துவான் சுப்பையாபிள்ளை அவர்களிடம் பயிலும் வாய்ப்புக் கிடைத்தது. அவரிடம் யாப்பில்க்கணம், அணி இலக்கணம் பயின்று செய்யுள் இயற்றப் பழகினேன். அக்காலத்தில் நாகேந்திரம்பிள்ளையும்
H 99 H.
 
 
 

hInis
என்னுடன் ஒரே வகுப்பில் பயின்றார். இருவரும் புனைபெயரில் கவிதைகள் பாடினோம். ஈழகேசரி, சோதிட பரிபாலினி, இந்துசாதனம், வீரகேசரி போன்ற பத்திரிகைகளில் எங்கள் கவிதைகள் வெளிவந்தன, அவரது புனைபெயர் பணிவேந்தன். எனது புனைபெயர் இறைமணி. சிலகாலம் நாகேந்தரம்பிள்ளை வேலணை கிழக்கில் எங்கள் வீட்டுக்கு அண்மையில் உள்ள அவரது மாமன் வீட்டில் பெற்றாருடன் வசித்துவந்தார். தினமும் இருவரும் கூடித்திரிவோம். போட்டியாகவும் கவிதைகள் புனைவோம்.
1932 ஆம் ஆண்டளவில் யாழ்ப்பாணம் சேணியர் தெரு சன்மார்க்க போதனா வித்தியாசாலையில் ஏறக்குறைய ஓராண்டு படித்தேன். அங்கும் வித்துவான் சுப்பையாபிள்ளை அவர்களிடம் மீண்டும் படிக்கும் வாய்ப்புக் கிடைத்தது. உடுப்பிட்டியைச் சேர்ந்த ஆசிரியமணி வைத்திலிங்கம், வேலணை மிஷன் பாடசாலையில் என்னைப் படிப்பித்தவர். அவரும் அப்பாடசாலையில் ஆசிரியராக அதிபரா இருந்தார். எனக்கு நன்கு தெரிந்த வைத்தியர் இராசையா அவர்களும் அப்போது அங்கு கற்பித்தார். ஆசிரியர் பலரும் ஏற்கனவே பழகியவர்கள் என்பதால் எதிலும் எனக்கு முன்னுரிமை
கிடைத்தது.
கந்தர்மடம் பழம்றோட்டு பிள்ளையார் கோவிலுக்கு அருகாமை யிலிருந்த எனது மாமா முறையான ஆசிரியர், அதிபர் சதாசிவம்பிள்ளை அவர்களின் வீட்டிலிருந்து நடந்து வந்த படித்தேன். அதன் பிறகு யாழ் நகரசபைக்கு எதிரே முன்வீதியில் (புறண்ட் றோட்) இருந்த சைவ வித்தியாவிருத்திச் சங்கக் காரியாலயத்தில் சன்மார்க்க போதனாவித்தி யாசாலை ஆசிரியர்களும் மாணவர்களுமாக விடுதி தொடங்கி அங்கேயிருந்தோம். வேலணையைச் சேர்ந்த மாணவர்கள் பலர் விடுதியில் இருந்தனர். அதிபர் வைத்திலிங்கம் விடுதிக்குப் பொறுப்பு அவர் சில வேளைகளில்தான் இருப்பார். அவர் இல்லாத வேளைகளில் விடுதிக் கட்டுப்பாடு குறைவு அலுப்பாந்திக் கடற்கரை,
100 ــــــــــــــــــــــــــــــ

Page 57
burial
பண்ணைத்துறை, முற்றவெளி, முனியப்பர் கோவில், பெரியகடை எனப் பல இடங்களிலும் மாலை வேளைகளில் உலாவுக்குப் போவோம் தகரப் கொட்டகை எனப்பட்ட தற்போதைய வின்சர் தியேட்டரில் கூத்துக்கள் நிகழும். அவற்றைப் பார்க்கவும் போவோம். சலனப் படங்கள் பார்த்த நினைவும் இருக்கிறது. பேசும் படம் அக்காலத்தில் இல்லை. கோட்டையில் இருக்கும் கைதிகள் முற்றவெளியில் உள்ள கிணறுகளில் தண்ணீர் எடுக்க காவற்காரருடன் வருவார்கள். அவர்களுக்கு சுருட்டு, சிகரெட் வாங்கிக் கொடுப்போம். நாங்கள் கொடுத்தாற் காவலர் தடுக்க மாட்டார்கள். பீச்றோட்டில் ஒரு சவக்காலை இருந்தது. நடுநிசி வேளையில் அதில் ஆவிகள் நடமாடுவதாக வதந்தி. இதைக் கேட்டுப் பல நாட்கள் விழித்திருந்து பார்த்தோம். பலனில்லை. பாங்சால் வீதிப் பக்கம் களஞ்சிய சாலைகள் இருந்தன. அங்கு சங்கு வியாபாரிகள், செட்டிகள் இருந்தார்கள். அவர்களோடு உரையாடி அவர்கள் இந்தியாவில் இருந்து வந்த வரலாறுகள், தேவைகள், தொழில்கள் பற்றியும் அவ்வூர் புதினங்களையும் ஆவலாகக் கேட்டு அளவாளா வுவோம். தென்னிந்தியாவிலுள்ள கீழ்க்கரை,தூத்துக்குடி, நாகபட்டினம், பாண்டிச்சேரி என்ற ஊர்களிலிருந்து வந்தவர்கள் இங்கு பொருட்களை கொள்வனவு செய்து ஏற்றுமதி செய்தல் மற்றும் மட்பாண்டங்கள் இறக்குமதி செய்தல் போன்ற தொழில்களில் ஈடுபட்டிருந்தனர். சங்கு வியாபார நோக்கமாக வந்து பாங்சால் வீதிப் பக்கம் இருந்தவர்கள் யாழ்ப்பாணம் தீவுப் பகுதிகளிலுள்ள மீன்பிடித் தொழிலாளருக்கு முற்பணம் கொடுத்து சங்கு குளித்து எடுக்கும் தொழிலுக்கு ஊக்கமளித்து சிலாபம், புத்தளம், பூநகரி, கல்முனைப் பகுதிகளில் எடுக்கும் சங்குகளை மொத்தமாக வாங்கி ஏற்றுமதி செய்வார்கள். இவர்களில் சிலரோடு நெருங்கிப் பழகியதால் பிற்காலத்தில் எங்களூர் மீனவர்களுக்கு அவர்கள் மூலம் பயனுள்ள உதவிகளைப் பெற்றுக் கொடுக்கும் வாய்ப்புக் கிடைத்தது. அடைவு பிடிக்கும் செட்டிமாரும் புதுக்கோட்டையிலிருந்து வந்து தொழில் செய்தனர். பறங்கித் தெருவில் சட்டத்தரணிகள் பலர் இருந்தார்கள். கோடுகள் நிகழும். அவர்களோடு பழகும் வாய்ப்புகளும் கிடைத்தன. எங்களூரைச் சேர்ந்த சட்டத்
- 101.

anging
தரணிகளும் இருந்தார்கள் கட்சிக்காரருக்கு சட்டத்தரணிகளை அறிமுகம் செய்யவும், சட்டத்தரணிகளுக்கு கட்சிக்காரரை சேர்த்துக் கொடுக்கவும் இந்தப் பழக்கம் பயன்பட்டது. இப்பொழுது வேலணையிலிருந்து இடம் பெயர்ந்து பறங்கித்தெரு 2ஆம் குறுக்குத் தெருவில் குடியிருக்கிறேன். அப்போதிருந்த சூழலையும் குடிமக்களை யும் காணவில்லை. இப்போ அழிந்து ஒழிந்து ஒடிந்து போனவற்றைத் தான் காண்கின்றேன். நான் கண்ட வளமான காலம் இனிவருமா என்று நினைக்க மனக்கிலேசமாய் இருக்கிறது. அப்போது ஆங்கிலேயர் ஆட்சிக் காலம். அந்நியராட்சியில் தமிழர் ஆடம்பரமாக சகல வளங்களும் பதவியும் செல்வமும் பெற்று வாழ்ந்த காலம்.
விடுதியில் தங்கியிருந்து பாடசாலையில் வித்துவான் சுப்பையா பிள்ளை அவர்களிடம் இலக்கணம், இலக்கியம் கற்று வந்த எனக்கு இலக்கண இலக்கியம் செய்யுள் இயற்றித் திறமைசாலி என்ற செருக்கு வித்துவான் வகுப்பில் தாமரை பற்றிக் கட்டுரை எழுதி வருமாறு பணித்தார். நான் எழுதவில்லை. இப்படி பல சந்தர்ப்பங்களிலும் நான் எழுதா விடினும் அவர் பொருட்படுத்தவில்லை. எழுதுவேன் என்பதும் அவருக்குத் தெரியும். ஆனால் அன்றுபாட நேரம் முடியும் வரை எழுதாததற்கு தண்டனையாக எழுந்து நிற்குமாறு பணித்துவிட்டார். எனக்கு தாங்கமுடியாத விரக்கி. 80 பக்கக் கொப்பி ஒன்று வாங்கி இரவு முழுவதும் விழித்திருந்து தாமரை பற்றிய கட்டுரை எழுதி கொப்பியை நிறைவு செய்து விட்டேன். கட்டுரையில் இடைக்கிடை பல கவிதைகளும் எடுத்துக் காட்டுக்களாக மட்டுமன்றி நானாக ஆக்கம் செய்தும் எழுதினேன். மறுநாள் கொடுத்தபோது சிறிது வாசித்துப் பார்த்து விட்டு எடுத்துச் சென்றவர் மறுநாள் வகுப்பில் கட்டுரையின் நயங்களை மாணவர் மத்தியில் விளக்கி பாட்டின் பொருளையும் அதில் பொதிந்து கிடக்கும் அற்புதமான கருத்துக்களையும் எடுத்துச் சொல்லிப் புகழ்ந்தார். ஆசிரியர்களுக்கும் எடுத்துக் கூறி வியந்தார். பாடசாலைக்கு இவ்வாறு கட்டுரை எழுதக் கூடாது என்றும் சுட்டிக் காட்டத்
தவறவில்லை.அந்தக் கட்டுரையில் வந்த கவிதைகளிற் சில
- 102

Page 58
அள்ளலென் மாயை தோன்றி
அறிவெனம் நீரில் மேவித் தெள்ளரிசோதி கண்டு
தெளிவுற விவ்வாறென்று விள்ளுமுன் சொல்லே என்னை
விரும்பிட வைத்த துன்னைக் கள்ளுமிழ் சோலை வாவிக்
கமலமென் தோழிமானே.
மங்கையர் முகத்துக் கொத்த
மலர்விழியாக வண்டு தங்கலாலெழிலுண்டாகுந்
தகுதியை வியந்து கூறிப் பொங்குதாமரையே யுன்னைப் புலவர்கள் போற்றுகின்றார் கங்கைநேர் புனித வாவிக்
கமலமென் தோழிமானே.
பூவிலே தேனை மாந்திப்
போதையால் வண்டு பாடத் தாவியே தத்தித்தத்தித்
தவளைகள் தாளம் போட வாவிநீரலையிலாடும்
வனப்புறுநடனத்தாலே காவியம் படைத்துவிட்டாய்
கமலமென் தோழிமானே.
சேற்றினிற் பிறந்தா யேனுஞ்
சிறுமையிற்சிக்கிடாதுன்
ஆற்றலால் மிதந்து நீர்மேல்
ஆதவன் தேவியானாய்
- 103

பேற்றுதற் கரியதாமோர்
புரட்சியைத் தோற்றுவித்த காற்றுமிழ் சோலை வாவிக்
கமலமென் தோழி மானே.
தண்டுநீரளவுநீருந்
தாமரை போலத்தானே நுண்ணறிவொருவர் கற்ற
நூலனவாகுமென்று பண்டுளதியல்பு கண்டு பாவலர் பகரத்தக்க கண்ணியம் பெற்ற விட்டாய்
கமலமென் தோழிமானே. அன்று சக மாணவர்கள் தங்களுக்கு விருந்து தருமாறு கேட்டுக் கொண்டதால் மத்தியான இடைவேளையில் பெருமாள் கோவிலடியிலிருந்த தேநீர் கடையில் விருந்தளித்தேன். அந்தத் தேநீர்க் கடையில்தான் இடைவேளையின்போதெல்லாம் மாணவர்கள் கூடித் தேநீர் அருந்துவோம். அன்று மாலை பெருமாள் கோவிலில் அர்ச்சனை, தொடர்ந்து பக்கத்திலுள்ள பிள்ளையார் கோவிலிலும் அர்ச்சனை செய்தேன். இந்த வணக்கங்கள் அன்று மட்டுமல்ல பெரும்பாலும் படித்த காலத்தில் தொடர்ந்து செய்வது வழக்கம். சித்தங்கேணியிற் படித்த காலத்தில் சித்தங்கேணி சிவன் கோவில், சந்திப் பிள்ளையார் கோவில் களுக்கு தினமும் சென்று வணங்குவேன். நான் கேட்டவற்றையெல்லாம் தெய்வந் தருவதுபோல் ஒரு நினைப்பு.
பெருமாள் கோவிலடியிற் படித்துக் கொண்டு யாழ்ப்பாணத்தில் வசித்துக் கொண்டு எங்கும் சுற்றித் திரிந்த அந்தக் காலகட்டத்தில் யாழ்ப்பாணத்தில் சண்டித்தனங் களுக்கும் குறைவில்லை. கோணாந்தோட்டக் கணேசு, அழுக்கடைச் சண்முகம், தெய்வேந்திரம், வேலணையைச் சேர்ந்த காத்தி, தியாகு. கடையப்பான் எனப் பலரின்
ബ് 104ത്ത

Page 59
GHLIG
பெயர்கள் பிரபலமலாயிருந்தன. என்னுடன் படித்த நெருங்கிய நண்பர்கள் சிலரும் இந்த அணியில் பழக்கமாயிருந்ததால் எனக்கும் அந்த அறிமுகங்கள் ஓரளவு இருந்தன. இதைவிட வேலணையில் கொட்டைக்காட்டு முத்தையா, பணக்காரச் செல்லையா, கதிரேசு, வைத்தியலிங்கம் எனச் சிலரின் உதவிகளுமிருந்தன. இந்தப் பழக்கங்களும் நட்பும் என்னைச் சண்டியனாக்க வில்லை. துணிச்சலைத் தந்தன. அதனால் அச்சமின்றி எக்கருமத்தையும் முன்னெடுத்துச் செல்வது சாத்தியமாயிற்று.
ஆசிரியர், அதிபர் சேவையிலிருந்து 1972இல் இளைப்பாறியபோது கிராமசபை திறந்த வெளியரங்கில் பழைய மாணவர்கள் பொதுமக்கள் பெற்றோர்கள் சார்பில் பிரியாவிடையளிக்கும் வைபவம் நிகழ்ந்தது. இளைப்பாறிய அதிபரும் மூதறிஞரும் கோவிற் புராணபடனங்களில் பயன் சொல்லபவரும் பயன் சொல்லக் கற்றுக் கொடுக்கவல்லவருமான திரு.ஐ.பொன்னையா அவாகள் தலைமை வகித்தார்கள். ஊர்காவற்றுறை பொலீஸ் பொறுப்பதிகாரி, காரியாதிகாரி, வித்தியாரிகாரி ஜனாப் பஞ்சூர். கிராம சபைத் தலைவர்கள், பல்வேறு பிரிவு கிராம சேவையாளர்கள், படித்தவர்கள், ஆசிரியர்கள், கூட்டுறவுத் துறை சார்ந்த உத்தியோகத் தர்கள் பொதுமக்கள் எனப் பிரமாண்டமான கூட்டம். வீட்டிலிருந்து மக்கள் திரண்டு ஊர்வலமாக அழைத்துச் சென்றனர். போகும் வழி எங்கும் தோரணங்கள், பூச்சரங்களால் சோடிக்கப்பட்டிருந்தது. வீட்டு வாசல் தோறும் பூரணகும்பம் வைத்து மாலை சூட்டி மக்கள் வரவேற்றனர். அந்தக் கூட்டத்தில் வைத்து தலைவர் திரு.ஐபொன்னையா அவர்கள் எனது கவிதைகள் சிலவற்றை எடுத்துக் கூறி அதில் பொதிந்துள்ள நயங்களையும் விபரித்துக் கூறி மக்கள் சார்பாக ஏகோபித்த வரவேற்புடன் 'கற்கண்டுப் புலவர் என்னும் பட்டமும் விருதும் வழங்கிக் கெளரவித்தார். இதனைத் திருமண வாழ்த்து, வரவேற்புப்பா, சரம கவிதை, நினைவாஞ்சலிகள் எனப் பொது மக்கள் வேண்டுகோளுக்காகவும் பொது நிகழ்ச்சிகளைச் சிறப்பித்தற்காகவும் நான் பாடிக் குவித்த கவிதைகளின் சார்பில் கிடைத்த கெளரவம் எனலாம்.
- 105

Galīgā
வேலணை பெருங்குளம் முத்துமாரி அம்மன் கோவில் பரிபாலன சபைக்குத் தலைவராக நான் கோட்டாரால் நியமிக்கப் பெற்ற போது அப்பதவியை ஏற்கச் சற்றுத் தயங்கினேன். அவ்வேளை அம்பாளைக் கனவிலே கண்டபின்பு தான் தயக்கம் தீர்ந்தது. கனவில் கண்ட தோற்றத்தை நினைவுகூர்ந்த பாடல் இது:
வெண்துகில் சிவந்தமேனி
வெளிர் மடிபவளச் செவ்வாய் விண்மதிமுகத்தினோடு
வேலணை முத்து மாரி கண்ணிலே கனவாய்த் தோன்றிக் காதலித் தென்னையாண்ட வண்ணமோடோடி வந்து
வாழ்வளித்தருளுவாயே.
மாடு ஒன்றைக் காணவில்லை. பல நாட்கள் தேடியலைந்தும் கிடைக்கவில்லை. என் வீட்டக்கு அயலிலே மண்சிவந்தான் வயிரவர் கோவில் என்ற பெயரில் ஒரு சிறு கோவில் இருக்கின்றது. வெகுகாலமாக வயிரவர் வழிபாடு அங்கு நிகழ்ந்து வருகின்றது. ஆரம்ப காலத்தில் நான் இளமையாய் இருந்த காலத்திலிருந்தே அரசமரத்தின் கீழ் ஓர் சிறு ஒலைக் கொட்டிலில் சூலம் வைத்து பொங்கல், வருடப்பிறப்பு, சித்திர பூரணைத் தினங்களில் வழிபாடு நிகழ்ந்து கொண்டு வந்தது. அந்த வயிரவருக்கு நேர்த்தி வைத்தால் களவு செய்வதவர்கள் காட்டித் தரப்படுவார்கள். களவு போன பொருட்கள் கிடைத்து விடும் என்ற நம்பிக்கை மக்கள் மத்தியில் நிலவி வந்தது. பலர் கூறிய அநுபவக் கதைகளையும் கேட்டிருக்கிறேன். அந்தக் கோவிலை சேது என்பவர் பராமரித்து விளக்கு வைத்து வந்தார். அவர் இறந்த பின் அவர் மகன் கண்ணையா வயிரவரை ஆதரித்து வந்தார். பதுளையிலே முன்னேற்றமான வியாபாரி வேலுப்பிள்ளை என்பவர் வேலணை முதலாம் வட்டாரத்தில் வசித்தவர். நேர்த்திக்கடனை நிறைவேற்றுவதாக ஆகம முறைப்படி கல்லால் ஒரு சிறு கோயில் கட்டிக் கும்பாபிஷேகம்
- 106

Page 60
Glushif sibuGhijf
செய்து பிராமண குருக்களை ஒரு நேரப் பூசைக்கும் அமர்த்தி இருந்தார். அவருக்கு உதவியாக கோவில் திருப்பணி வேலைகளை திருவாளர் நா.நாகலிங்கம் (றக்ரர் நாகலிங்கம் என்பார்கள்) மேற்பார்வை செய்து நிறைவேற்றினார். கண்ணையா தான் கோவிலின் தர்மகர்த்தா.
அந்த வயிரவரில் எனக்கும் பக்தியுண்டு. தினமும் போக்குவரவு செய்யும் வேளைகளில் வயிரவர் கோவிலடியாற் போவதால் உண்டியலில் காசு போட்டு வணக்கம் செலுத்துவது வழக்கம். எனது பேரப் பிள்ளைகள் மதி, அருள், சிவம், சூட்டி, இராஜ் அனுஷா, கவிதா, நர்மதா, விஜிதா என்போரை காரில் பாடசாலைக்கு கூட்டிச் செல்லும் போது உண்டியலில் காசு போட்டுக் கும்பிடுவார்கள். எனது மக்கள் புஷ்பா, பேபி, வவா, சந்திரன், சோதி, மலர், பாலன் , ஜெயம் என்போர் கூட பாடசாலை போறவேளை வழியிலுள்ள வயிரவரை வணங்கிததான் போவார்கள். எனது மாடொன்றைக் காணவில்லை. வெகுநாள் தேடித் திரிந்தும் கண்டு கொள்ள முடியாமையால் நினைவு வந்ததும் வயிரவருக்கு நேர்த்தி செய்தேன். நேர்த்தி செய்துவிட்டு மாடு தேடிய களைப்போடு வீடு திரும்பி வரும்போது சொற்ப தூரத்தில் என்னைக் கண்ட ஒருவர் இதில் நிற்கிறது உங்கள் மாடுதானே என்றார். திரும்பிப் பார்த்தேன். என்ன அதிசயம் அது. எனது மாடுதான். வீட்டிற்குத் துரத்திச் சென்றேன்.இதை நினைவுகூர்ந்து பாடிய பாடல் இது.
வீணாகத் தேடி யெங்கும்
வேதனைப்பட்ட பின்பே காணாமற் போன மாட்டைக்
காட்டெனத்துதித்த போது வாணாலிற் புதுமை செய்த
வயிரவன் மண்சிவந்தான் கோணாத கிருபையாலே
கொணர்த்ததோ பாரென்றானே.
-107

Galunyâ
LTட்டைக் கண்ட LO 36) , மச்சாள் نTاہ۔ ت b. துமே எனது னவி, மச்சா ன:பூரணம
பிள்ளைகளுக்கும் சந்தோஷம். அடுத்த நாள் வெள்ளிக் கிழமை வயிரவருக்குப் பலகாரஞ் செய்து பொங்கி படைத்து பூசை செய்து மகிழ்ந்தோம்.
வேலணையிலே சரமகவி பாடுகிறவர்களுக்கு மதிப்பு, ஊதியம் பெறாது முகமனுக்குப் பாடிக் கொடுக்க வேண்டும். அதுவும் குறைந்தது ஒரு நாளில் 3, 4 பேருக்குப் பாடவேண்டி இருக்கும். பாடிக் கொடுக்கக் கூடியவர்களும் குறைவுதான். பிற்காலத்தில் எனக்கும் பண்டிதர் பொன்னுத்துரை, சிவசாமி என்கிற தில்லைச்சிவன், பண்டிதர் மாமாணிக்கம், ஆசிரியர் பொஜகந்நாதன் என்போருக்கே இதில் பெரும் பங்குண்டு. அதிலும் தற்போது பண்டிதர் பொன்னுத்துரை, விதானையார் மகாலிங்கம் (காலமாகிவிட்டார்) மற்றவர்களும் பிறவூர் என்பதால் இந்த வரிசையில் நானும் சிவசாமியுந்தான் பெரும்பாலும் பங்குபற்றுகின்றோம். இந்த வகையிலே பெருந் தொகையான பாடல்கள் பாடிக் கொடுக்க வேண்டியிருக்கிறது. எங்கள் காலத்துக்கு முன் தில்லைநாதப் புலவர் போ. கனகரத்தினம், ஆசிரியர் இ. மருதையினார் எனச் சிலர் இவ்வகையில் பாடி இருக்கிறார்கள்.
வேலணையில் பெருங்குள முத்துமாரி அம்மன், நயினாதீவு நாகம்மாள், வங்களாவடி முருகன், இலந்தைவனம் சித்தி விநாயகர், மண்கும்பான் பிள்ளையார், மருதடி விநாயகர் பேரில் பல பதிகங்களும் தனிப் பாக்களும் பாடி இருக்கிறேன். சாயிபாபாவைத் தேடித்திரிந்த வேளை அவரைப் பற்றிப்பாடியது.
பொறுப்பென தென்று கூறிப் புரந்திடுமபயக் கையும் முறுவலித்துவகை பூத்த
முகத்தொளி வீசும் கண்கள் உறுசடாமுடியினோடு
உலகிலே வாழுகின்ற பெறுமதி மிக்க தெய்வப்
பிறவிதான் சாயிபாபா
- 108

Page 61
blaf Clibu Giti
கண்ணனுக்கீதை சொன்ன
கடவுள்தான் இராம காதை மண்ணிலே வரலாறுண்டு
மறுப்பதற்கியாருமில்லை பண்ணுமற் புதங்கள் ளாலே
பகவனாஞ்சாயிபாபா அண்மையில் அவ்வாறோதான்
அவதரித்தருளுந் தெய்வம். வேலணையிலிருந்து இடம் பெயர்ந்து யாழ்ப்பாணம் வந்த நிலையில் மனமுடைந்து பல கவிதைகள் பாடியிருக்கிறேன். போர்க் காலச் சூழ்நிலையில் அழிவுகள் பற்றிய சோகமான சிந்தனைகள் அவற்றில் சிலவற்றையேனும் எழுத மனமில்லை. ஆனால் அமைதிக்காக 1992 இல் நல்லூர் முருகன் பேரில் 45 வெண்பாப் பாடல்கள் கொண்ட "பற்றால் மலர்ந்த பூக்கள்" என்ற பெயரில் ஒரு நூலைப் பாடினேன். அதை எனது மகன் இரா.சிவச்சந்திரன் தனது செலவில் அச்சேற்றி இலவசமாக வெளியிட்டிருக்கிறார். அதில் 4ஆம் பாட்டில்:
தண்டாயுதங்கை தரித்து தோன் வகைத்தார்.
கொண்ட கொடிசேவல் குலவுமயில தண்டா
மரையின் சிவந்த மலர்முக நல்லூரா
விரைவாருள்வாய் விருது.
என்று பாடி முடித்திருக்கிறேன். அதன்படி அடுத்த ஆண்டளவில் வேலணை பலநோக்குச் சங்கம் நிகழ்த்திய கூட்டுறவுத் தினவிழாவில் ஒரு கூட்டுறவாளரும் அதன் ஆரம்பகாலத் தலைவரும் என்ற வகையில் கெளரவித்து விருந்தளித்துப் பாராட்டினார்கள். எல்லாம் இறைவன் செயல்.
1988இல் வீட்டுக்குக் குழாய் மூலம் நீர் எடுக்கவும் தோட்டங்களுக்கு நீர் பாய்ச்சவும் என தோட்டக் காணி கிணற்றடியில்
ـــــــــــــــــــ109 =ــــــــــــــــــــــــــــــــ

பலமான அறைகட்டிப் பூட்டியிருந்த மோட்டார் ஒரு பூரணை நிலாவன்று உடைத்துக் களவாடப்பட்டிருந்தது. ஊரெங்கும் தகவல் கொடுத்து மோட்டாரைத் தேடினேன். எனது இளையமகள் திருமதி இராசமலர் சற்குணநாதன் (சோதி, விவசாய ஆசிரியை பாடசாலை போகும் போது மண்சிவந்தான் வயிரவருக்கு நேர்த்தி செய்த விட்டுப் போகும் வழியில் வங்களாவடியில் சந்தித்த ஒருவர் உங்கள் மோட்டாரை பெயர்குறித்து இன்னாரும் மகனுந்தான் களவாடி னவர்களெனத் தகவல் கொடுத்தார். இதைவிட எனது மச்சாள் முறையான அயல்வீட்டு திருமதி செல்லத்துரை கனகம்மா, செட்டிபுலத்துச் சோமு (மெக்கானிக்) யாரோ பாவித்த மோட்டாரை விற்கப் போவதாகவும் விற்றுத் தருமாறு தன்னைக் கேட்டதாவும், இராசரத்தினம் உபாத்தியாரின் மோட்டார் காணாமற் போனதாக கேள்வி, சிலவேளை அதுவாயுமிருக்கலாம், அவருக்கு அறிவியுங்கள் எனச் சொன்னதாக எனக்குச் சொன்னார். இரண்டு தகவல்களும் கிடைத்ததால் குறித்த நபர் வீட்டுக்குப் போய் விசாரித்தேன். முறையான தகவல் கிடைத்திருக்கிறது. நடவடிக்கை எடுக்கமுன் திருப்பித் தந்துவிடுங்கள் எனச் சொல்லிவிட்டு வந்தேன். மறுநாள் அயலில் உள்ள சேது கண்ணை யாவையும் (அவர்தான் கோவிலின் அறங்காவலர்) கூட்டிப் போய் தகவல் தந்தவர்களை விசாரித்து அவர்களையும் கூட்டிக் கொண்டு வீட்டுக்குப் போனோம். தகப்பன் மறைந்துவிட மகன் எடுத்ததை ஒப்புக் கொண்டு திருப்பித் தருவதாகக் கூறினார். மறுநாள் மோட்டாரைக் கண்ணையாவிடம் அவர்கள் ஒப்படைக்க அவர் எங்களிடம் தந்தார். மோட்டார் கிடைத்ததும் இணைப்புக்கள் சேதமானதால் ஏற்பட்ட நட்டத்தோடு வீட்டுக்கும் பயிர்களுக்குமான நீர் விநியோகம் சில நாட்கள் முடங்கிப் போனது. வயிரவருக்கு எனது மக்கள் பொங்கிப் படைத்துப் பூசித்து மகிழ்ந்து வழிபட்டனர். அதன் நினைவாகப் பாடிய கவிதை.
மோட்டரைக் காண வில்லை
முறையிட மகளுனக்குக்
கேட்டதுஞ் சற்றுத் செல்லக்
கிடைத்தது தகவலென்றால்
- 110ത്ത

Page 62
üllblf frblIGbbs
வாட்டமுந் தீர்க்க வல்ல
வயிரவா மண்சி வந்தான் கோட்டமே கோயில் கொண்டு
குறைகளைத் தீர்க்கின்றாரே.
என்னவோ நிகழ்ந்தது அற்புதந்தான்.
வாழ்த்துப்பாக்கள், சரமகவிகள் பாடும் போது சிலருக்கு பாடிக் கொடுத்த கவிதைகள் நயமிக்கவைகளாக அமைந்துவிடும். அமைகள் அரங்கேறும் போது அவ்வப்போது உரியவர்கள் என்னைப் பாராட்டி இருக்கிறார்கள். திரு.க.பொ.இரத்தினம் பாராளுமன்ற உறுப்பினராக வெற்றியீட்டிய பாராட்டுக் கூட்டங்களில் பாடிய கவிதைகளைப் பாராட்டி நயம் எடுத்தோதி வியந்துள்ளார்கள். கவிதைகள் இடப் பெயர்வால் வேலணையில் விடப்பட்டு விட்டன.நினைவு வராமையால் அவற்றை எழுத முடியவில்லை.
மானிப்பாயூரைச் சேர்ந்த முதலியார் தியாகராசா அவர்களின் மனைவி கொழும்பில் காலமாகிய போது அவரின் இறுதி கிரியைக்கு முதலியார் அழைத்திருந்தார். போகும் போது ஓர் நினைவஞ்சலி பாடிக் கொண்டு போய்க் கொடுத்தேன். அதை படித்தவேளை அங்கு கூடியிருந்த அறிஞர் பலருள் முன்னாள் உபவேந்தர் வித்தியானந்தனும் ஒருவர். அதில் மானிப்பாய் ஊரின் சிறப்புப் பற்றிய பாடலைப் பலரும் வெகுவாகப் பாராட்டினார். அப்பா வருமாறு:
தாலமோடிணைந்தோங்கி வளரும் தெங்கு தனிச்சுவைசேர்மாபலா கமுகு வாழை காலங்கண்டுயர்மதில்கள் மனைகள் மாடம்
கலையுணர்வுச் சித்திரங்கள் கருத்து மிக்க ஆலயங்கள் அழகுநிலா முகத்து மாதர்
அரசாங்கம் மதிக்கின்ற பெரியா ரோடு சாலவே முதலியார் சமூகம் வாழுஞ்
சரித்திரத்திற்குரித்தானமானிப் பாயூர்.
- 111

ഖ്യ്രമുഖളി
கால்நடைகள்
எனது இளமைக் காலத்தில் உழவுக்கும் வண்டிக்கும் எருத்து மாடுகளும், பாலுக்குத் தேர்ந்தெடுத்த உள்ளூர்ப் பசுமாடுகளும் வேறு சில பட்டி மாடுகள் எருவுக்காகவும் வளர்த்தோம். பட்டி மாடுகள் புல்வெளிகளிலும், வற்றிப்போன குளங்களிலும் அருவி வெட்டிய பின்
-l 12

Page 63
வயல்களிலும் போய் மேயும். மாலையில் எல்லாம் வீடு வந்து வழமையாய் வளவில் படுக்கும். எருத்து மாடுகளும் பால் பசுக்களும் அடைப்பான காணிகளில் புல் மேயும். புல்லுக்காகப் பிறருடைய காணிகளிையும் குத்தகைக்கு வாங்கி மேய்ப்பதுண்டு. நெல் வயல்களில் அறுவடை முடிந்ததும் வைக்கோலை வீட்டிற்கு ஏற்றி வந்து மாடுகளின் தீனிக்காகக் குவித்து வைத்திருப்போம். வைக்கோல் ஆண்டு முழுவதும் மாடுகளின் தேவைக்குப் போதாவிடில் விலைக்கு வாங்கிக் குவித்து வைப்போம். மாடுகளுக்கென்று குடியிருக்கும் வளவிற்குள் மாட்டுமால் இரண்டு மூன்று இருக்கும். மழை இல்லாதபோது வெளியில் படுக்கும்
மாடுகள் மழை வந்தால் மாட்டுமால்களில் படுக்கும்.
எருதுகளுக்கு தீனி போடுவதற்கு தொட்டிலுண்டு. மாட்டு மாலில் தொட்டிலிற்தான் வைக்கோல், கிழித்த பனையோலை ஆகிய உணவுகளைப் போட்டு எருதுகளை இரு பக்கத்திலும் எதிர் எதிராகக் கட்டிவிட்டால் தொட்டிலிற் போட்ட தீவனங்களை ஒன்றையொன்று இடியாமல் தின்ன வசதியாயிருக்கும். பசுமாடுகளுக்கு வேறாக மாட்டுமாலுண்டு அதற்குள் அடக்கிக் கட்டி செருக்கிய புல், வைக்கோல் எருதுகள் கழித்த , கிழித்த பச்சைப் பனையோலைகளையும் சேர்த்துப் போடுவோம். பட்டி மாடுகள் வளவிற்குள் படுக்கும். எருதுகளுக்கும் பாற் பசுக்களுக்கும், அரிசிக் கஞ்சி, தவிடு, புண்ணாக்கு என்பனவும் உணவாகக் கொடுப்பதுண்டு. வீட்டில் தயிரும் மோரும் குறையாதிருக்கும். வருகிற விருந்தினரும் அயலவரும் பருகுவதற்கு மோர் கொடுப்பது வழக்கம். பெரிய மண்ணாலான பெரிய குண்டாஞ் சட்டியில் மோர் மூடியிருக்கும். என்னுடன் விளையாட வரும் சிறுவர்களுக்கும் தேவைப்பட்டபோதெல்லாம் மோர் கொடுப்பேன். தாயார் (ஆச்சி காலை நன்கு விடியுமுன் ஐந்து மணிக்கு எழுந்து தயிர் கடைந்து வெண்ணெய் எடுப்பார். தயிர் கடையும் போது சலசலவென்று சத்தம் கேட்கும் கேட்டதும் நானும் எழும்பிவிடுவேன். மத்தாற் கடையும் போது வெண்ணெய் திரண்டு மிதக்கும். மத்திலும் ஒட்டிக் கொண்டிருக்கும். அக்காலத்தில் தயிர் கடைவதற்கு மத்தைத்தான் பாவித்தார்கள். அழுத்தமாக சீவிய தடியின் அடியில் பல பற்கள் போன்ற அமைப்பில் உருவாகியதுதான் மத்து. மத்தால் கடையவரும்
سس-113--

GlIIGlői
வெண்ணெய்யைத் திரட்டி எடுத்து வேறு சட்டியிற் போடுவார் சில நாட்கள் வெண்ணெய் சேர்ந்தபின் உருக்கி போத்தலில் நெய்யாக விட்டு வைக்கப்படும். நெய் சோற்றுக்கும் மருந்துக்கும் ஏனைய உணவு வகைகளுக்கும் பயன்படும். தேவைப்படும்போது அயலவருக்கும் கொடுப்போம்.
மாடுகள் சகலதும் போடும் சாணம் தினமும் அள்ளிக் குவிக்கப்படும். அவ்வாறே சேரும் குப்பைகளும் ஓரிடத்தில் குவித்து சேமிக்கப்படும். பின் எல்லாம் வண்டியில் ஏற்றி வயல்களுக்குக் கொண்டுபோகப்படும். கோடை உழவு உழுது வைத்த வயல்களில் எருக்கள், குப்பைகள் பறிக்கப்பட்டு மழை காலம் வந்ததும் அவற்றைப் பரப்பி நெல் விதைத்துத்தான் உழுவோம். நான் மனைவி மக்களோடும் எனது பெற்றாரோடும் சேர்ந்து வாழ்ந்ததால் அப்புவோடு சேர்ந்தே விவசாயத்தைச் செய்து வந்தேன். எனது காலத்தில் விவசாயம் கால் நடை வளர்ப்பு காலத்துக்கேற்றவடி நவீனமாகத் தொடர்ந்தது. உள்ளூர் பாற்பசுக்கள் செயற்கைச் சினைப்படுத்தல் மூலம் நல்லினக் கன்றுகளை ஈன்றன. கேப்பை, ஜேர்சி, தபக்கார் இனப்பசுக்களை பாலுக்காக வாங்கியும் வளர்த்தோம். நெற்பயிர்செய்கை ஊரில் மட்டுமன்றி கிளிநொச்சி, பரந்தன் கல்மடு பிரதேசங்களில் பங்கீட்டுத் திட்டங்களைப் பெற்றும் குத்தகைக்கு எடுத்தும் செய்தோம், 1956ஆம் ஆண்டுக்குச் சற்று முன் பின்னாக தீவுப் பகுதியில் காசுப் பயிர்களான புகையிலை, மிளகாய், வெங்காயத் தோட்டப் பயிர்ச் செய்கைகள் புரட்சிகரமாக முன்னேறத் தொடங்கின. இதனால் மண் வயல்கள் மண் போட்டு உயர்த்தி தோட்டங்களாக்கப் பட்டன. பனை வளவுகள் பனைகளைனத் தறித்து அடிக்குற்றிகளை அகற்றி மட்டப்படுத்தப்பெற்று தோட்டங்க ளாகின. மக்களின் பொருளாதாரம் விருத்தியடைந்தது. சில சமயங்களில் புகையிலை செய்கையிலும், மிளகாய் செய்கையால் கூடிய வருமானம் பெற முடிந்தது. எருதுகளால் உழவு செய்யும் முறை மாறி டிறக்ரர்கள் மினிடிறக்கரர்களால் உழுதும் கொத்தியும் நிலம் பண்படுத்தப்பட்டது. எருக்குப்பைகளை மட்டும் பசளைக்கு பயன் படுத்திய நிலையும் மாற்றமடைந்து அவற்றோடு இரசாயன உரங்களும் பாவனைக்கு வந்தன. கால்நடை வளர்ப்பில் எருது மாடுகளின் தேவை குறையத் தொடங்கின. ஆனால் பால்பசு மாடுகளின் தேவைகள்
- 1 14

Page 64
dul
அதிகரித்தன. நாங்களும் எருதுமாடு வளர்த்தலைக் கைவிட்டோம். பாலுக்காக நல்லினப் பசுக்களை வளர்த்தோம். கால்நடை வளர்ப்பில் எருதுகளின் முக்கியத்துவம் குறைய பசு மாடுகளின் வளர்ப்பிலே தான் மக்கள் அக்கறை கொண்டனர்.
எனது மகள் இராசமலர் விவசாயடிப்ளோமா பட்டம் பெற்றவர். விவசாய ஆசிரியராகவும், ஆலோசக ஆசிரியராகவும் பணியாற்றினார். நல்லினக் கால்நடைகளை விருத்தி செய்வதிலும் நுணுக்கமான பயனுள்ள பயிர்ச் செய்கைகளை ஊக்குவிப்பதிலும் மாணவர்களுக்கும் பொதுவாக கிராம மக்களுக்கும் ஊக்கமும் அறிவுரையும் வழங்குவார். தாவரங்களை ஒட்டுதல் மூலம் பயனுள்ள இனவிருத்தியை பெறவும் ஒரு தாவரத்திலே பல நிறப்பூக்களை புஷ்பிக்கும் இனங்களை ஒட்டி அத்தாவரம் பல நிறமான பூக்களைப் பூக்கச் செய்வார். வெவ்வேறு இனத் தாவரங்களை ஒரே மரத்தில் ஒட்டி பல இன மரங்களின் காய், கனிகளை ஒரு மரத்தில் பெறத்தக்க நவீன முறைகளிலும் பயிற்சி பெற்றிருந்தார். இதனால் எங்கள் குடிவளவு பூஞ்சோலையாகவும் நவீன தாவரங்களின் காட்சிக் கூடமாகவுமிருந்தது. கால்நடை வளர்ப்பிலும் பல இனப் பசுக்களை வளர்த்தோம்.
எங்கள் கிராமம் கால்நடை வளர்க்க வசதியானது. கோடை காலத்தில் குளங்கள் வற்றி புல் முளைத்திருக்கும். அறுவடைக்குப் பின் வயல்வெளிகளிலும் கால்நடைகள் புல்மேயும். இவற்றை விட அல்லைப்பிட்டியிலிருந்து நாரந்தனை வரை பண்ணை ஊர்காவற்றுறை றோட்டிற்கு வடக்கிலும் சில இடங்களில் வடக்கிலும் தெற்கிலும் அரைமைல் முதல் மூன்று மைல் வரை அகலமும் எட்டு மைல் நீளமுமான பெரிய வெளி என்ற புல்தரையுண்டு. மாரி கோடையாகிய இருபருவ காலங்களிலும் பெருந்தொகையான கால் நடைகள் அங்குமிங்குமாக நின்று புல் மேய்வதைக் காணலாம்.
வேலணையில் புரட்டாதி, ஐப்பசி மாதங்களில் நெல்விதைப்புகள் ஆரம்பமாகும். பயிர்களை அழிவு செய்யாது பாதுகாக்க கால்நடைகளை அவிழ்த்து விடுவது கட்டுப்படுத்தப்படும். ஆரம்ப காலத்தில்

வேலணை, சரவணை, நாரந்தனை, கரம்பன் என்ற கிராமங்கள் அனைத்துக்குமான கிராமச் சங்கம் வேலணை வங்களாவடியில் தான் இருந்தது. எனது தந்தையாரும் அதில் அங்கத்தவராக இருந்தார். விதைப்புத் தொடங்கியதும் பிரசித்தம் செய்வதன மூலம் கிராம மக்களுக்கு ஆடு மாடுகளைக் கட்டி வளர்க்கும் படியும் கட்டாக்காலி களாக எவற்றையும் விடக்கூடாதென்றும் அறிவிக்கப்படும். கிராமச் சங்க வட்டாரத்துக்கு ஒருவராக பிடிகாரர் நியமிக்கப்படுவார்கள். பயிரழிவு செய்யும் கால் நடைகளைப் பிடித்துக் கட்டுவார்கள். கிராமச் சங்கம் அவர்களுக்கு கால் நடைச் சொந்தக்காரரிடமிருந்து அறவிடும் குற்றப் பணத்தின் ஒரு பகுதியை சம்பளமாகக் கொடுக்கும். தேடுவாரற்ற கால்நடைகள் கட்டப்பட்ட சில நாட்களின் பின் பிரசித்தம் செய்து கிராமம் முழுவதும் அறிவித்தல் கொடுத்து அவை ஏலத்தில் விற்கப்படும். இம் முறைகளை அமுல் செய்வதில் நடைமுறைச் சிக்கல் ஏற்பட்டால் கிராமசபைத் தலைவரும் அங்கத்தவரும் கூடி சமரசம் செய்வார்கள். இவ்வாறான நடைமுறைகள் சிலகாலம் தொடர்ந்தது. 1951ஆம் ஆண்டு முதல் நானும் கிராமசபை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டபோதும் இதே நடைமுறைதான் பின்பற்றப்பட்டது. பிறகு பயிர்ச் செய்கைக் குழுக்கள் விவசாய அபிவிருத்திக்காக ஏற்படுத்தப்பட்டன. தெரிவு செய்யப் பெற்ற உறுப்பினர்கள் பதவி வகித்தார்கள். விதை, உரம் விநியோகித்தல் , காணி இடாப்புக்கள் தயாரித்தல் பயிரழிவுகளுக்கு நஸ்டஈடு பெறுதல் என்கிற பணிகளோடு பயிரழிவுகளைக் கட்டுப்படுத்தும் நடைமுறைகளும் கையாளப்பட்டன. மேலும் விவசாய விரிவாக்க உத்தியோகத்தர்கள். விவசாயப் பரிசோதகர்கள் என்ற பதவிநிலை உத்தியோகத்தரும் அவற்றைத் தொடர்ந்து பிரிவுக்கொன்றாக விவசாய சேவை நிலையங்கள் உருவாகின. தெரிவு செய்யப்பெற்ற பிரதிநிதிகளையும் தலைவரையும் கொண்ட இந்த அமைப்புக்கு உதவவும் கண்காணிக்கவும் மேற்குறித்த பதவிநிலை உத்தியோகத்தரோடு மேலும் உயர்நிலை உத்தியோத்தரும் உத்தியோகக் காரியாலயங்களும் அமைந்தன. விதைநெல் கொள்வனவு, விற்பனவு, ஏனைய விளைபொருள் கொள்வனவு விற்பனவு விவசாயக் கடன்களுக்கு சிபார்சு செய்தல், பயிர்ச் செய்கைக்கான உரங்கள் கிருமிநாசினிகள் வழங்குதல் பயிர் பாதுகாப்புக்கான ஆலோசனைகள்
-116=

Page 65
வழங்குதல் காணி இடாப்புக்களை முறையாகப் பேணுதல். கால நிலைச் சீர்கேடுகளால் ஏற்படும் பயிர் நட்டங்களுக்கு நஷ்டஈடு வழங்குதல் போன்ற கடமைகள் விவசாய நிலையங்கள் மூலம் நடைமுறைப்படுத்தப்பட்டன. பயிர் பாதுகாப்பு விதிகளின் கீழ் கால் நடை கட்டுப்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டன. மேலும் கால் நடைகளைத் தடுத்து வைத்தும், பொது அறிவித்தல் கொடுத்து ஏலத்தில் விற்றல் போன்ற நடவடிக்கைகள் தொடர்ந்தன. கிராமத்துக்கொரு பயிர்ச் செய்கை உத்தியோகத்தரும் விவசாய சேவைநிலையத்தோடு தொடர்பான கடமைகளை செய்தார். மேலதிகாரிகள். டிஓ, கமத்தொழில் பெரும்பாக உத்தியோகத்தர், கமத்தொழில் உதவி ஆணையாளர், கமத்தொழில் ஆணையாளர் எனும் பதவி நிலை உத்தியோகத்தரும் தெரிவு செய்யப்பெற்ற பிரதிநிதிகளோடிணைந்து செயலாற்றுவர்.
1990ஆம் ஆண்டளவில் கிராமத்தில் நெல் அறுவடைகள் பூர்த்தியாகி வயல்களில் வைக்கப்பட்டிருந்த சூடுகளும் அடித்து முடிந்த பின் வழமைபோல கால்நடைகளை அவிழ்த்துவிட்டேன். சில நாட்கள் புல் மேய்ந்து திரும்பி வந்தன. ஒரு நாள் அவற்றில் இரண்டு பால் மாடுகள் வரவில்லை. மறுநாள் எங்குதேடியும் காணமுடியவில்லை. பலரையும் பல திசைகள்ால் தேடிவர அனுப்பிவைத்தேன். சகல விவசாயசேவை நிலையத்தில் மாடுகள் ஏலத்தில் விற்பனை செய்தமைக்கான அறிவித்தல் உண்டா எனப் பார்த்தேன், இல்லை. பொறுப்பான உத்தியோகத்தரை கேட்டேன். அவரும் அப்படி யொன்றும் கிடைக்கவில்லை என்றார். சில நாட்களின் பின் சரவணையில் எனது மாடுகள் கட்டியிருப்பதாகத் தகவல் கிடைத்தது. சென்று விசாரித்த போது கட்டியிருந்தவர் மாடுகளை ஏலத்தில் ரூபா400க்கு கொடுத்து வாங்கியதாக சொன்னார். அதன் பிறகுதான் விவசாய சேவை நிலையத்துக்கு ஏலத்தில் விற்கப் போவதாகச் செய்த அறிவித்தலும் பணமும் கிடைத்திருந்தன.
இவற்றைத் தெளிவாகக் கேட்டறிந்த எனது நண்பரும் ஆசிரியரும், அதிபருமான திரு.சு.சீவரத்தினமும், திரு.அருந்தவம் எனும் சமூக சேவையாளரும் ரூபா 400% த்தையும் பெற்றுக் கொண்டு
- 117

மாடுகளைத் திருப்பிக் கொடுக்குமாறு கேட்டனர். உடன்படாத நிலையில்
சட்ட நடவடிக்கை எடுப்பதைத் தவிர எனக்கு வேறு வழியில்லை. என்பதால் அதியுயர் மேலதிகாரிக்கு முறையிட்டேன். அப்பொழுது விவசாய சேவை நிலையத்தின் தலைவராகவிருந்த பண்டிதர் அதிபர் திரு.அ.பொன்னுத்துரை ஆசிரியருக்கும் தெரிவித்தேன்.முறையீட்டை டி.ஓ.வாக விருந்த திரு.நா. குழந்தைவேலு மேலதிகாரிகளின் அனுமதியோடு விசாரணை நடத்தி பணத்தைக் கொடுத்து மாடுகளை மீளப் பெறும்படியும் விவசாய சேவை நிலையத்துக்குச் செலுத்தப்பட்ட பணம் எனக்கு மீளத்தரப்படுமெனவும் தீர்ப்பளித்தார். இது சட்ட நடவடிக்கையால் ஏற்படும் தாக்கங்களைத் தவிர்க்க டிஒதிருகுழந்தைவேலு மேற்கொண்ட சாதுரியமான ஒரு சமரச முயற்றியாகும்.
- 1 18

Page 66
பயணங்கள்
1945ஆம் ஆண்டு இரண்டாவது உலக மகாயுத்தம் முடிந்த வேளையிலும் இந்தியா, இலங்கைப் பயணங்கள் வியாபார நோக்கில் அதிகரித்துக் காணப்பட்டன. இலங்கையிலிருந்து கறுவா, கராம்பு, சாதிக்காய் போன்ற வாசனைத் திரவியங்களும் சவுக்காரவகைகளும்,
س-119--
 

ījagā
தேயிலை மற்றும் புடவை வகைகளில் ஜோர்ச் செற், நைலோன் வோயில்', 'யப்பான் சில்க் பொலித்தீன் போன்ற பொருட்கள் இந்தியாவுக்குக் கொண்டு போய் கூடிய விலைக்கு விற்றும் அங்கிருந்து காஸ்மீர், பெனாரிஸ் சேலம் சாரிகள், பட்டு வேட்டிகள், சில்வர் பாத்திரங்கள் என்பனவற்றை வாங்கிவந்து இங்கு விற்று வருவாயும் பெருலாபமும் பெறும் வாய்ப்புகள் இருந்தன. இதனாற் பலரும் இலங்கை - இந்தியப் பயணங்களைத் தொடர்ந்து மேற்கொண்டு, அதனை ஒரு பொருளிட்டும் தொழிலாகச் செய்து வந்தனர்.
இவ்வாறான தொழிலில் எனது நண்பர்கள் பலர் ஈடுபட்டிருந்த மையால் நானும் அவர்களோடு சேர்ந்து சிதம்பர தரிசனம் செய்யவும் அவர்களைப் போல பொருட்களை வாங்கிச் சென்றுவிட்டு அங்கிருந்து தேவையானவற்றை வாங்கி வரலாமென்றும் கருதி மார்கழி மாத ஆரூத்தரா தரிசனம் பார்க்கும் ஆசையால் புறப்படத் தயாரானேன். அம்மைப்பால் குத்தி, காலரா ஊசி போட்டு இந்தியா போய் வரப் பாஸ்போட் எடுத்துக் கொண்டு அவர்களோடு பயணமானேன். யாழ்ப்பாணத்திலிருந்து மதவாச்சி போய்த் தரித்து நின்று அங்கிருந்து தலைமன்னார் போகும் இரயில் வண்டியில் தலைமன்னாரை அடைந்தேன். தலைமன்னாரில் கஸ்ரம்ஸ் சோதனைகள் நிகழ்ந்தன. பழக்கமானவர்களுடன் போனதால் சோதனையில் பிரச்சினை இல்லை. அதிகாலை சோதனைகள் முடிந்ததும் கொண்டு போன பொருட்களுடன் கப்பல் ஏறினோம். கப்பலில் பயணிகள் கீழ்த்தளத் திலும் டெக் என்று சொல்லப்படும் மேற்தளத்திலும் ஏறினார்கள். கீழ்த்தளத்திற்குப் பிரயாணக்கட்டணம் குறைவு. மேற்தளத்திற்கு பிரயாணக்கட்டணம் அதிகம். கப்பல் பிரயாணச் சீட்டும் சேர்த்துத்தான் யாழ் புகையிரத நிலையத்தில் வாங்கியிருந்தோம். போகும் போது கப்பல் ஆட்டம் கொடுத்தது. அதுதான் கப்பலில் எனது முதல் பயணம் என்பதால் எனக்குச் சற்று சிரமமாக இருந்தது. எழுந்தால் விழுத்தி விடும் போல் இருந்தது. அதனால் ஆசனத்தை கெட்டியாகப் பிடித்துக் கொண்டிருந்தேன். பழக்கமானவர்கள் டெக்கில் அங்குமிங்கும் உலாவித் திரிந்தனர். ஆனால் எனக்கு அது சாத்தியப்படவில்லை. முதலில் கப்பல் பிரயாணம் செய்தவர்களுக்கு சீசிக் வரும் என்று
- 120

Page 67
īgā
ஆங்கிலத்தில் சொல்வார்கள். எனக்கும் அவ்வேளை ஒருவாறு சீசிக்
தான் பிடித்திருந்தது. என்றாலும் சமாளித்துக் கொண்டேன். டெக்குக்கு கீழ் உள்ள பகுதியில் தான் தொகையான பயணிகள் இருந்தார்கள். அவர்களில் சிலர் சிரமப்பட்டதையும் வாந்தி எடுத்ததையும் அவதானித்தேன்.
கப்பல் தூத்துக்குடித் துறைமுகம் சென்றடைந்ததும் பொருட்கள் இறக்கப்பட்டன. நாங்களும் இறங்கினோம். அங்கும் கஸ்ரமஸ் சோதனை நிகழ்ந்தது. பொருட்களும் சோதிக்கப்பட்டன. அதன்பின் இந்திய ரெயிலில் ஏறிச் செல்ல அனுமதி கிடைத்தது. அந்த இந்திய மண்ணிலே இலங்கைக்கு சொந்தமான இலங்கை மண்டப முகாம் இருந்தது. அதில் இளைப்பாறிப் பின் சிதம்பரத்துக்கான பிரயாணத்தைத் தொடர்ந்தோம்.
இலங்கைப் புகையிரதங்களிலும் பார்க்க இந்தியப் புகையிரதத் தின் வேகம் கூடுதலாக இருந்தது. அன்று பின் இரவு சிதம்பர புகையிரதம் தரிப்பிடத்தில் இறங்கினோம். நேரே கோவிலுக்குப் போய் அங்கே இலங்கையர் தங்குவதற்கான பிரத்தியேகமான மடம் ஒன்றில் தங்கினோம். அந்த மடத்திற்கு அயலிலே ஒரு குளம் இருந்தது. அது தெளிவற்ற கலங்கல் நீரைக் கொண்டிருந்தது. அதில் சிலர் குளித்தார்கள். கேணியிலே இடைக்கிடை சிறு பற்றைகள் இருந்தன. வெளியான நிலப்பரப்பு உண்டு. அதிலேதான் தரையில் குந்தியிருந்து எல்லோரும் மலம் களிப்பார்கள். தொகையான யாத்திரீகர்கள் மலம் கழிப்பதால் வெளி இடங்களிலும் மலம் அடுக்கடுக்காக இருந்தது. அதை அவதானித்த நான் மலம் கழிக்கவில்லை. பக்கத்தில் நின்ற ஒருவர் சற்றுப் பொறுங்கள் எல்லாம் துப்பரவு செய்யப்பட்ட பின் கக்கூசு இருக்கலாம். என்று சொன்னார். பெருந்தொகையான பெண்கள் தகடுகள் கடகங்களோடு வந்து மலங்களைக் தகட்டால் வழித்து கடகங்களில் போட்டுச் சென்றார்கள். இடங்கள் சுத்தமாக இருந்தன. துப்பரவு தொழிலாளர் மனிதக் கழிவுகளை கைகளால் அள்ளிச் சேர்த்து கடகங்களில் சுமந்து சென்று துப்பரவு செய்யும் நிகழ்ச்சியை அன்றுதான் கண்டேன். அப்படிச் செய்வது அங்கு சகஜம் என்றார்கள். அந்த
-121 =

வழக்கம் இன்னும் கூட முற்றாகத் தவிர்க்கப்படவில்லை என இந்தியச் செய்திகள் மூலம் அறியக் கிடக்கிறது. கக்கூசுக்கிருந்தவர்கள் மலங் கழுவுவதற்கும் குளிக்கும் அந்தக் கேணியைப் பயன்படுத்தியதைக் கண்டதால் அந்தத் தண்ணீரில் குளிப்பதற்கு எனக்கு மனம் வரவில்லை.
மடத்தை விட்டு வேறு இடத்திற்கு சென்று ஒரு விடுதியில் பொருட்களை வைத்து விட்டு காலை உணவையும் முடித்துக் கொண்டு கோவிலிற்கு சென்றோம். சரித்திரத்தில் இடம்பெற்ற காட்சிகளைக் கண்டோம். சந்நிதானத்தை மறைத்த எருது விலகியிருக்கிறது பொற்றாமரை வாவி இருக்கிறது. வீதிகளைச் சுற்றி வந்தோம். பக்தர்கள் கோடிக்கணக்கில் பிரகாரங்களில் ஆங்காங்கே வணக்கம் செலுத்தப் போய் வந்து கொண்டிருந்தார்கள். இவற்றின் மத்தியில் அசிங்கமான செயல்களையும் அவதானிக்க முடிந்தது. அதன் பின் விடுதியில் வசதியாக இளைப்பாறி மறுநாள் அதிகாலை ஆருத்திரா தரிசனத்தைக் கண்டு களித்தேன். சிதம்பர இரகசியம் காட்டப்பட்டது. நடராசப் பெருமானை தரிசித்தேன். பொற்றாமரை திருக்குளத்தில் பால்.பழம், இளநீர், எண்ணெய் போன்ற அபிஷேகப் பொருட்கள் கலந்ததால் தீர்த்தம் தடிப்பாக இருந்தது.
மறுநாள் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்திற்கு சென்றோம். அங்கு கற்கை நெறிகளை மேற்கொள்ளும் இலங்கை மாணவர்கள் எம்மைக் குதூகலமாக வரவேற்றார்கள். எங்களூர் மாணவர்கள் பலரோடும் கலந்து பேசி மகிழ்ந்தேன். திரும்பி வந்து மதுரைக்கு பயணமானோம்.
தெப்பைக் குளம் லொட்ஜ் என்னும் விடுதியில் தங்கினோம். கூடிவந்தவர்கள். தங்கள் தேவைகளைப் பொறுத்து பிரிந்து விட்டனர். நானும் எனக்கு உதவியாக வந்த வேலணையைச் சேர்ந்த விநாசித் தம்பியின் லொட்ஜில் சில நாட்கள் தங்கினோம். மதுரை மீனாட்சி அம்மன் கோவிலை ஒருமுறை அல்ல பலமுறை சென்று பார்த்தோம். பூசித்தோம். சொக்கநாதர் கோயில் தெப்பக் குளம், திருமலை நாயக்கர் அரண்மனை மகால் மற்றும் கடைகள் தெருக்கள் என ஊரைச் சுற்றிப்
-122

Page 68
பார்த்து தேவையான பொருட்களையும் வாங்கினேன். திருப்பத்
தூரிலுள்ள கண்டாக்டரிடம் போய் கண் பரிசோதனை செய்து. கண்ணுக்கு பொருத்தமான கண்ணாடி வாங்கினேன். வாங்கி வைத்த பொருட்களை வீட்டுக்கு கொண்டு வர சென்னை சென்று (பெமிற்) உத்தரவுப் பத்திரம் பெறவேண்டியிருந்ததால் போய் உத்தரவு பெற்று வந்து அதன் பின் வீடு திரும்பினேன். என்னுடன் வந்தவர்கள் அங்கு நிற்க என்னுடன் விடுதியில் இருந்தவரும் நானும்தான் வீடு வந்து சேர்ந்தோம். இந்தியாவில் எங்கு சென்றாலும் காப்பிதான் குடித்தேன். தேநீர் இல்லை. தலை மன்னாரில் தான் ரீ குடிக்க முடிந்தது. ஆனால் அங்கு குடித்த காப்பிப் பழக்கத்தால் ரீ பிடிக்கவில்லை. இங்கு ரீ போல் அங்கு காப்பி.
இலங்கையும் இந்தியாவும் சுகந்திரம் அடைய முன்பு நிகழ்ந்த பயணம். அக்காலத்தில் தமிழர் என்று சொன்னாலும் இலங்கையிலும் இந்தியாவிலும் நல்ல மதிப்பு மரியாதை இருந்தது. தமிழரின் பொருளாதார நிலையும் உயர்வாகவே இருந்தது. இலங்கையின் தென்பகுதியிலும் அரசாங்கக் காரியாலயங்கள் கூட்டுத்தாபனங்கள், வியாபார நிலையங்கள், மொத்த விற்பனை தாபனங்கள் என்பனவற்றில் பெரும்பாலும் யாழ்ப்பாணத் தமிழரே உயர் பதவிகளை வகித்தார்கள். அவர்களே மேலதிகாரிகளாகவும் உரிமையாளர்களாகவும் இருந்தார்கள்.
பயணம் 2
1957ஆம் ஆண்டு வேலணைக் கிராம சங்க அங்கத்தவராக இரண்டாம் முறையும் போட்டியின்றித் தெரிவு செய்யப் பெற்ற வேளை சில வட்டாரங்களில் எனது கட்சி வேட்பாளர் போட்டியிடுகிறார்கள். அவர்களுக்கு ஆதரவாக உதவி செய்து கொண்டிருக்கிறேன். அதே வேளை தவிர்க்க முடியாத உதவி ஒன்றும் செய்ய வேண்டியதாயிற்று.
சென்னையிலே பூந்தமல்லிறோட்டில் டாக்டர் பண்டாசாலை ஒரு பிரபலமான மருத்துவமனை நடத்துகிறார். இந்தியாவிலுள்ள பிரபல சத்திரசிகிச்சை நிபுணர்களை அமைத்து ஆலோசனை செய்து அங்கு
-123

Gaya mbunī சிகிச்சை பெற்று குணமடைந்த வரலாறுகளும் உண்டு. பிரபல வழக்கறிஞர் நா.த.சிவஞானம் அவர்கள் நெஞ்சுக் குழாயில் ஏற்பட்ட சுருக்கம் காரணமாக இலங்கையில் சத்திர சிகிச்சை பெற்றும் குணமடையாமல் அங்கு சென்று சத்திர சிகிச்சை பெற்று குணமடைந்திருக்கிறார்.
வேலணை கிழக்கு திரு.க.சிவசிதம்பரம் (அழகுப் பெருமாள்) எனக்கு மிக உதவியானவர். அரசியல் மற்றும் சமூக சேவைகளில் எனக்கு ஆதரவும் உதவியும் செய்வார். எடுத்த கருமத்தை நிறைவேற்றுவதிலும் மிக வல்லவர். நாட்டாண்மை வல்லுனரும் கூட எங்கள் ൈഥ தீமைகளிற் தவறாது பங்குபற்றியவர். அவருக்கு தக்க சமயத்தில் உதவி செய்ய வேண்டிய கடமை எனக்குண்டு. யாழ்ப்பாணம் பெரியாஸ்பத்திரியில் இரண்டு முறை அவருக்கு வயிற்றில் ஒரு சத்திர சிகிச்சை நிகழ்ந்தும் நோய் குணமடையவில்லை. சிவஞானம் சுகமடைந்த வரலாற்றை அறிந்து சென்னை சென்று சிகிச்சை பெற விரும்பினார். அவரது குடும்பத்தினர் ஆலோசித்து அவரைக் கூட்டிச் சென்று சிகிச்சைஅளித்து வரவல்லவர் நான் என்று கருதினர். நான் அதற்கு உடன்பட்டேன். தேர்தல் பொறுப்புக்களை எனது ஆதரவாளர்கள் தாங்கள் கவனித்துக் கொள்வதாக ஒப்புக் கொண்டு விடை தந்தனர்.
பயணத்திற்கு வேண்டிய சகல ஆயத்தங்களும் மின்னல் வேகத்தில் நிறைவேறின. எல்லா வசதிகளும் விமான சேவை வசதியுற்பட யாழ்ப்பாணத்தில் செய்ய முடியும். இரண்டு மூன்று தினங்களில் புறப்பட்டோம். காலையில் உறவினர்கள், நண்பர்கள் பலாவி வரை கூட்டி வந்து விமானத்தில் இருவரையும் வழி அனுப்பி வைத்தனர். நானும் அவரும் சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் நண்பகலுக்கு முன்பே சென்று சேர்ந்தோம். சத்திர சிகிச்சை நிபுணர் பாண்டாலைச் சந்திக்க அவர்களின் மருத்துவமனைக்குக் காரில் சென்றோம். நோயாளியை வாட்டில் தங்கவைத்து அயலில் கோட்டலில் தங்கினேன். கண்காணிப்பதற்கு பகலுக்கும் இரவுக்குமென இருவர் நியமிக்கப்பட்டனர். அன்றே தொலைபேசியில் தொடர்பு கொண்டு சத்திர சிகிச்சை நிபுணர்கள் அழைக்கப்பட்டு ஆலோசனை செய்தபின்
سے 124 ســــــــــســــــــ

Page 69
மறுநாள் காலை பத்து மணிக்கு ஆப்பரேசன் தொடங்கியது. இரண்டு
மணிவரை நிகழ்ந்த சிகிச்சை வெற்றிகரமாக நிறைவேறியிருப்பதாக டாக்டர் அறிவித்தார். ஊருக்குச் செய்தி அறிவித்து விட்டு இரண்டு வாரங்கள் சிகிச்சை பூரணமாக முடியும் வரை அங்கேயே தங்கியிருந்தேன்.
மச்சான் வி.பொன்னுத்துரை எம்பில் பட்டப் பின் படிப்பு ஆய்வுக்காக சென்னைப் பல்கலைக்கழகத்தில் இருந்தார். நான் சென்னை வந்திருப்பதை அறிந்ததும் வந்து சந்தித்தார். இருவரும் பல்கலைக் கழத்திற்கு போய் அங்கு பல விரிவுரையாளர்களையும் கண்டு பழகினேன். 'கல்கி பத்திரிகைக் காரியாலயத்திற்கும் போய் அவர்களுக்கும் அறிமுகமானேன். ஒரு முதலியார் வீட்டில் திருமணம். என்னுடன் மிக நெருங்கிப் பழகிய அறிஞர் அதற்குப்போகப் புறப்பட்ட போது என்னையும் அழைத்துப் போனார். திருமணத் தம்பதிகளைப் பாராட்டும் வாய்ப்புக் கிடைத்தது. யாழ்ப்பாணத் தமிழில் நான் பாராட்டியதைக் கேட்டு பலரும் பரவசம் அடைந்தார்கள்.
சிகிச்சை முடிந்து வீடு திரும்பினோம். சிகிச்சைக் கணக்கால் மருத்துவ மனைக்கு செலுத்த வேண்டிய பாக்கிப் பணம் நிலுவை யாழ்ப்பாணம் சென்றதும் பொமிட் எடுத்து அனுப்புவதாக டாக்டரிடம் கூறி வந்தேன். அவ்வேளை இலங்கையில் இருந்து இந்தியாவிற்கு பணம் அனுப்புவதற்கு தடை இருந்தது. காரணம் கூறி பெமிற் எடுத்துத் தான் அனுப்ப வேண்டும். இலங்கையில் கூப்பன் முறை அமுலில் இருந்தது. பங்கீட்டு முத்திரைக்கு தான் உணவுப் பொருட்கள், புடவைகள் வழங்கப்படும். இந்தியாவிற்கு பணம் அனுப்புவதாயின் ஒரு கூப்பனுக்கு 50ரூபாய் தான் பொமிட் இல்லாமல் மணி ஒடரில் அனுப்பலாம். பொமிட் உரிய காலத்தில் கிடைக்கத் தாமதமாவதால் பங்கீட்டுப் புத்தகம் மூலமே முழுப் பணத்தையும் 50 ரூபாய் மணி ஒடர்களாக அனுப்பினேன். வெகு சிரமமான வேலை என்றாலும் வேலணைத் தபாலதிபர் திரு.நா.சரவணமுத்து தனது சிரமத்தைப் பாராமல் அனுப்ப உதவினார்.
H125-me

ug:As&að ஆண்டு மனைவி உருக்குமணிக்கு சுகவீனம் வைத்திய பு:இங்ான்நவிநாதித்தம்ஜி அந்த விழில் பிழி:ஒன்ா ရှိရေဗျိုင္ငံမ္ဟုပ္ရန္ ಬಣ್ಣಗ್ಯ 蠱型 #ಣ್ಣೆತ್ಲಿ. குழநதைகள் இலலுை. 蠶點
நி3:இந்திர்ேஃகிஜில்ஜ்ேஜிஜிதுேறு மண்கள்இந்து அழிறகும் பூங்ஜீரிேந்த்வரிக்இதிலிருர்சியனிஃபர் சிெரிபூதிசுந்தடில் கிருத்துவுSEண்ழில்வஸ்ஜரிெ;-இருந்த&#Rழ்டறிவிக்ரிச சிற்ெறுநேசிதNல்லோ ஒவரதுவிருத்துவரூ86தரிக்வும்தலிசின்னிக்கிய பண்கத்ாகாமையுமற்றித்துஒருனதைவில் சிஅனுமதித்துான்கிச்இைருக்கும் உதீகர்கனுக்கு கேட்டடின் ர்பநருண்கண்வத்திறன். எனுநதர்ல் ந்ேசன்ாளியின்ர் நிஇென்னஅதொனித்தவிடாதுளஅகித்திரிக்கில் நேந்திததுதெரிந்ததுடி ஆஇல்ாசஜ்ஜிஎடுத்துக்றதொன்gsபோதுஸ்இறந்தாலும்ஆந்தித்தரில் இ9ர்சேதித்துரிஜேங்ஆேரிஜ்ஆர்சிக்ரீதுத்துத்தேபூரித்து கொத்தியின்றவிஜிபிஐன்ஜர்ஆன்ச்ஜின்றேல் அத்ர் L'ရှီးမှူ!!!!!!!မ္ဘ၈ရ) ಕ್ಲಿಕ್ಗಿ ಆಣ್ಣಲೂಕ್ಷ್ லழ்ேந் நோயாளியை ಕ್ಲಿಕ್ಗಿ Iல் அனுமதித்து பல நிபுண்ர்க்
站眾器器P瀏 მნწმსu9]მს tပုဂွါ်)စ္ဆန္တိနှီပြီ 蠱*醬澀H器" 蠶 தீவித்தின்த்லஜித்தியூஇதயத்லிகன்ஜிஞ்ர்கிழகள்ைபிரள்கில் குஜteல்டுத்தwகாஜெர்சிடு திட்டுள் தெர்டிங்கோளுத்து விசுபprக் பில்ாஜ்என்ஜதாரேசன் நிகழ்ந்தது. நிகழும் போது ஆப்பரேசன் வாட்டில் நான் வெளியே ஏக்கத்தோடு அவலப்பட்டக் கொண்டு நின்திரும்புகிதிஞ்ாயிருந்துரிதகுதி வேந்ததோஷ்க்கிரிசியில் தெளர்ச்சி
இேர்த்திருப்தெருக்கும்ஏநிமர்த்தல் உ1விரசீற்துதுகுவரவணம்ம்எலிகிலுத்தினக்ல்ர் ஸ்னெக்ஸ் நிாைனம்மலிடலஇழென்றும்ததொன்னார்ள்ேண்டுப்புக் கென்தேடுன் ஆேம்:கேக்கூடிநித்தஐஸ்தேத்க்குறுந்ததன்தியதிரீற்றுத்ததியில் தருடுத்துககிரிடுதழி சிக்கெல்ஜிழானத்திற்குள் ஆசீட்டுகிருஜிஜேத்ம் முருஜில்ீன்துசீந்இந்தrறதற்கிக்ன்ஷித்*ஒரீேஜிலே “ဗုင့ူနို)၊ ဗီးနှီစံfင့၊ 器〔 தாககூறி
தங்களால 6 飄疊薔 ਨੂੰ lfÔ6QQILD . [j6) ானழ ஒழுங்கு செபூததால அன்று ழாலையுறடிபL- இரவு ZZLeZTTesyyyyySyyeSLMMSsTTSTMyOy SZMMk ஓர்கேடுவித்தின் இநீத்சிம்பிற்கு கிரிண்ர்ேதீன்பீெரூரி (புஷ்ப்ராசவதி'யுடன் எல்லா ஆயத்தங்களும் செய்து மெடிக்கல்
=5=

Page 70
Galla ñ6GFħ6ī
றிப்போட்டுக்களுடன் சென்னையில் இருந்த மகன் சிவச்சந்திரனையும் கூட்டிக் கொண்டு வேலூருக்கு போகுமாறு அனுப்பி வைத்தேன். சென்னை சென்றவர்கள் மகன் வீட்டில் தங்கி நின்றார்கள். மகனின் மனைவி சரோசாவும் 1983 கலவரம் காரணமாக (கொழும்பு இலங்கை மன்றக் கல்லூரி விரிவுரையாளராய் இருந்தவர்) சென்னை சென்றிருந்த வேளை அது. எல்லோரும் வேலூர் மருத்துவமனைக்குச் சென்று சில நாள் தங்கி தீவிரமருத்துவ பரிசோதனைகள் செய்த பின் இங்கு சத்திரசிகிச்சை செய்த காரணத்தால் சத்திரசிகிச்சைக்கு உட்படுத்தினால் அபாயம் எனக் கூறி பல்வேறு மருத்துகளைச் சிபார்சு செய்து கொடுத்தார்கள். வேலூரிலிருந்த அவர்கள் சென்னை திரும்பிய அன்றுதான் (30.10.1984) திருமதி இந்திராகாந்தியின் படுகொலையும் நிகழ்ந்தது. அதனால் பயணத்தின் போதும் சிரமப்பட்டு சென்னை வந்தவர்கள் சில நாட்களின் பின் வந்து சேர்ந்தனர். இனி மரணந்தான் என்று நிச்சயமாகத் தெரிந்த பின் பிள்ளைகளும் நானும் சுற்றத்தவர்களும் எம்மாலியன்ற பணிவிடைகள், சிகிச்சைகள் உணவூட்டுதல் குளுக்கோஸ் ஏற்றுதலாகிய கடமைகளை நிறைவாகச் செய்தோம். எம்மால் முடிந்தவரை முயன்றும் மீட்டெடுக்க முடியாதவர் 1985, மே மாதம் 2ஆம் திகதி காலமானார். மகன் சந்திரன், மனைவி, பிள்ளைகள் மற்றும் சகலரும் கூடிநின்று மனங்கலங்கி நிற்க எனது மடியிலிருந்தே ஆவி பிரிந்தது.
6. 1988ஆம் ஆண்டு ஜனவரி மாதம் தைப்பொங்கல் தினத்திற்கு இரண்டு மூன்று நாட்களுக்கு முன் வீட்டுக்கு நீர் வழங்கும் பைப்பில் தண்ணீர் வரவில்லை. குடியிருக்கும் காணிக்கு அயலிலே உள்ள எங்கள் காணியில் கட்டியிருந்த ராங் கிணற்றிலிந்துதான் தண்ணீர் பெறுவோம். அதற்காக மோட்டாரை இயக்கி தண்ணீர் ராங்கியை நிரப்பப் போனேன் மோட்டார் இயங்க மறுத்ததால் அதைத் திருத்த முயன்ற போது மோட்டார் அமைந்திருந்த கட்டிடச் சுவர் முழங்காலில் இடித்து விழுந்துவிட்டது. நோவைச் சகித்துக் கொண்டு மோட்டாரைத் திருத்தி ராங்கிற்கு நீர் ஏற்றிவிட்டு வந்தபோது நோ குறைவாக இருந்ததாற்
-147

ilunagai
பயணம் 3 ܐ
மண்கும்பான் விநாசித் தம்பி அந்த ஊரில் பிரபலமானவர். விவசாயி. கூடுதலான விளை நிலங்கள் உள்ளவர். அவருக்கு குழந்தைகள் இல்லை. தனவந்தர், அவருக்குப் புற்றுநோய். யாழ்ப்பாணத்திலோ கொழும்பிலோ சிகிச்சை பெற ஏற்ற மருத்துவ மனைகள் இல்லை. அவரும் அவரைச் சார்ந்தவர்களும். அரசியலைப் பொறுத்த மட்டில் எனக்கு வேண்டியவர்களாக இருந்தனர். உறவினர் சிலர் நோயாளியோடு உதவிக்கு வருவதாகவும் சென்னை பண்டாசாலை மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சை பெற உதவுமாறும் கேட்டனர். நான் வைத்தியன் என்பதால் நோயாளியின் நிலையை அவதானித்த போது அசாத்தியமான நோயாக தெரிந்தது. அதைப் பற்றி எடுத்துச் சொன்ன போதும் இறந்தாலும் வருந்தாமல் இறக்கட்டும். ஏதோ உதவுமாறு வற்புறுத்திக் கேட்டதால் நோயாளிக்கு நெருங்கிய உறவினரோடு சென்னைக்கு கூட்டிச் சென்றேன். டாக்டர் பண்டாசாலை முந்தியே பழக்கமானவர் கண்ணியமாக வரவேற்றார். நோயாளியை மருத்துவமனையில் அனுமதித்து பல நிபுணர்களின் ஆலோசனை பெறப்பட்டது. நோய் குணப்படுத்த இயலாதது என்றும் 'திரபி' என்ற வைத்திய முறை மூலம் உபாதைகளை ஓரளவு குணப்படுத்தலாம். இரண்டு நாட்கள் திரபி கொடுத்த பின் ஊர் திரும்பலாம் என்றார்.
திரும்புவதற்கு விமான ரிக்கற் பெற தொலைபேசியில் தொடர்பு கொண்ட போது சீற்புக்கிங் முடிந்து விட்டதாகவும் மேலும் சிலர் கேட்டிருப்பதாகவும் மொத்தம் 15 சீற்றுக்கு பணம் செலுத்தினால் ஸ்பெசல் விமானம் விடலாமென்றும் சொன்னார்கள். ஒப்புக் கொண்டு மேலும் சேரக்கூடியவர்களை சேர்க்குமாறும் எஞ்சிய சீற்றுக்கு காசு தருவதாகவும் கூறி ஸ்பெசல் விமானத்திற்கு புக் பண்ணினேன். முடிவில் நான்கு சீற் இருந்தது. 3 சீற்றை நாம் பயன்படுத்த ஒரு சீற்றுக்கே கூடுதல் பணம் கட்ட நேர்ந்தது. துணிந்தே பணம் கட்டுவதாக கூறி விமானம் ஒழுங்கு செய்ததால் அன்று மாலை புறப்பட்டு இரவு 11-15க்கு நோயாளியை அவருடைய வீட்டில் சேர்த்தேன். இரண்டு வாரங்கள் ஓரளவு குணத்துடன் இருந்தார். பிறகு மரணமானார். தனியொரு
- 126

Page 71
ang mga tribuGai
விமானம் புக் பண்ணிய துணிவினாற்தான் அதிக செலவுமின்றி
நோயாளியை அன்றிரவே கொண்டு வந்து சேர்த்த சாதனையைப் புரிய முடிந்தது.
шишель — 4
எனது முதல் மகள் புஷ்பதிலகவதி என்பரை மதுரை லேடி டோக் கல்லூரியில் விஞ்ஞான பட்டப் படிப்புக்கு சேர்ப்பதற்காக அழைத்துச் சென்றேன். அவருடன் படித்த வேறு பிள்ளைகளும் பெற்றாரும் கூடவே எங்களிடம் வந்தார்கள்.
வேலணை சரஸ்வதி வித்தியாசாலையில் 5ஆம் வகுப்பு வரை கற்று பரீட்சையில் சகல பாடங்களிலும் விசேட சித்தி பெற்றதால் கொலர்சிப்பும் கிடைத்தது. வேலணை மத்திய மகாவித்தியாலயத்தில் கனிஷ்ட பரீட்சையில் தேறியரை சிரேஷ்ட வகுப்பிற் படிக்கச் சுண்டுக்குளிமகளிர் கல்லூரியிற் சேர்ந்தேன். அப்போது அப்பாடசாலை அதிபராக இருந்தவர் மிஸ்தில்லையம்பலம். விஞ்ஞான கலாநிதிப் பட்டம் பெற்றவர். சுறாமீன் பற்றி விரிவான விஞ்ஞானப் புத்தகம் எழுதி வெளியிட்டிருக்கிறார். வேலணை ஊரைச் சேர்ந்த அல்லைப் பிட்டியைப் பிறப்பிடமாகக் கொண்ட அவருக்கு நெருங்கிய உறவினர் அல்லைப்பிட்டியில் உண்டு. செல்வி தில்லையம்பலம் அதிபராக இருந்த போது சுண்டுக்குளிமகளிர் கல்லூரி விடுதி வசதிகளோடு கற்கை நெறியிலும் முன்னேற்றம் அடைந்திருந்தது. அவருடைய திறமையை மதித்து வேலணை கரம்பன் சரவணை ஊர்களைச் சேர்ந்த மாணவிகளும் கல்லூரியிற் சேர்ந்தனர். சுண்டுக்குளிமகளிர் கல்லூரியிற் படித்த எனது மகள் சிரேஷ்ட தராதரப் பரீட்சையில் விசேட திறமைச் சித்தியுடன் முதலாம் பிரிவில் தேறினார். இந்த வேளை மிஸ். தில்லையம்பலம் மதுரை லேடி டொக்கொலிஞ் என்னும் உயர்நிலைப் பள்ளிக்கு மாற்றலாகிச் சென்றார். சுண்டுக்குளிக் கல்லூரியிற் தன்னிடம் கற்ற விவேகமான மாணவர்களையும் மாற்றலாகச் சென்ற உயர் நிலைப் பள்ளியில் பட்டதாரிப் படிப்பை மேற்கொள்வதற்காக அழைத்திருந்தார். திறமையானவர்களுக்கு புலமைப் பரிசிலும் வழங்கினார். பிள்ளை அங்கு சென்று படிக்க விரும்பியதால் நான் பிள்ளையைக் கூட்டிப்
- 127

Gunungā
Lugib 3 م"
மண்கும்பான் விநாசித் தம்பி அந்த ஊரில் பிரபலமானவர். விவசாயி. கூடுதலான விளை நிலங்கள் உள்ளவர். அவருக்கு குழந்தைகள் இல்லை. தனவந்தர், அவருக்குப் புற்றுநோய். யாழ்ப்பாணத்திலோ கொழும்பிலோ சிகிச்சை பெற ஏற்ற மருத்துவ மனைகள் இல்லை. அவரும் அவரைச் சார்ந்தவர்களும். அரசியலைப் பொறுத்த மட்டில் எனக்கு வேண்டியவர்களாக இருந்தனர். உறவினர் சிலர் நோயாளியோடு உதவிக்கு வருவதாகவும் சென்னை பண்டாசாலை மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சை பெற உதவுமாறும் கேட்டனர். நான் வைத்தியன் ஸ்ன்பதால் நோயாளியின் நிலையை அவதானித்த போது அசாத்தியமான நோயாக தெரிந்தது. அதைப் பற்றி எடுத்துச் சொன்ன போதும் இறந்தாலும் வருந்தாமல் இறக்கட்டும். ஏதோ உதவுமாறு வற்புறுத்திக் கேட்டதால் நோயாளிக்கு நெருங்கிய உறவினரோடு சென்னைக்கு கூட்டிச் சென்றேன். டாக்டர் பண்டாசாலை முந்தியே பழக்கமானவர். கண்ணியமாக வரவேற்றார். நோயாளியை மருத்துவமனையில் அனுமதித்து பல நிபுணர்களின் ஆலோசனை பெறப்பட்டது. நோய் குணப்படுத்த இயலாதது என்றும் 'திரபி' என்ற வைத்திய முறை மூலம் உபாதைகளை ஓரளவு குணப்படுத்தலாம். இரண்டு நாட்கள் திரபி கொடுத்த பின் ஊர் திரும்பலாம் என்றார்.
திரும்புவதற்கு விமான ரிக்கற் பெற தொலைபேசியில் தொடர்பு கொண்ட போது சீற்புக்கிங் முடிந்து விட்டதாகவும் மேலும் சிலர் கேட்டிருப்பதாகவும் மொத்தம் 15 சீற்றுக்கு பணம் செலுத்தினால் ஸ்பெசல் விமானம் விடலாமென்றும் சொன்னார்கள். ஒப்புக் கொண்டு மேலும் சேரக்கூடியவர்களை சேர்க்குமாறும் எஞ்சிய சீற்றுக்கு காசு தருவதாகவும் கூறி ஸ்பெசல் விமானத்திற்கு புக் பண்ணினேன். முடிவில் நான்கு சீற் இருந்தது. 3 சீற்றை நாம் பயன்படுத்த ஒரு சீற்றுக்கே கூடுதல் பணம் கட்ட நேர்ந்தது. துணிந்தே பணம் கட்டுவதாக கூறி விமானம் ஒழுங்கு செய்ததால் அன்று மாலை புறப்பட்டு இரவு 11-15க்கு நோயாளியை அவருடைய வீட்டில் சேர்த்தேன். இரண்டு வாரங்கள் ஓரளவு குணத்துடன் இருந்தார். பிறகு மரணமானார். தனியொரு
-126

Page 72
bunaga
விமானம் புக் பண்ணிய துணிவினாற்தான் அதிக செலவுமின்றி நோயாளியை அன்றிரவே கொண்டு வந்து சேர்த்த சாதனையைப் புரிய முடிந்தது.
பயணம் - 4
எனது முதல் மகள் புஷ்பதிலகவதி என்பரை மதுரை லேடி டோக் கல்லூரியில் விஞ்ஞான பட்டப் படிப்புக்கு சேர்ப்பதற்காக அழைத்துச் சென்றேன். அவருடன் படித்த வேறு பிள்ளைகளும் பெற்றாரும் கூடவே எங்களிடம் வந்தார்கள்.
வேலணை சரஸ்வதி வித்தியாசாலையில் 5ஆம் வகுப்பு வரை கற்று பரீட்சையில் சகல பாடங்களிலும் விசேட சித்தி பெற்றதால் கொலர்சிப்பும் கிடைத்தது. வேலணை மத்திய மகாவித்தியாலயத்தில் கனிஷ்ட பரீட்சையில் தேறியரை சிரேஷ்ட வகுப்பிற் படிக்கச் சுண்டுக்குளிமகளிர் கல்லூரியிற் சேர்ந்தேன். அப்போது அப்பாடசாலை அதிபராக இருந்தவர் மிஸ்தில்லையம்பலம். விஞ்ஞான கலாநிதிப் பட்டம் பெற்றவர். சுறாமீன் பற்றி விரிவான விஞ்ஞானப் புத்தகம் எழுதி வெளியிட்டிருக்கிறார். வேலணை ஊரைச் சேர்ந்த அல்லைப் பிட்டியைப் பிறப்பிடமாகக் கொண்ட அவருக்கு நெருங்கிய உறவினர் அல்லைப்பிட்டியில் உண்டு. செல்வி தில்லையம்பலம் அதிபராக இருந்த போது சுண்டுக்குளி மகளிர் கல்லூரி விடுதி வசதிகளோடு கற்கை நெறியிலும் முன்னேற்றம் அடைந்திருந்தது. அவருடைய திறமையை மதித்து வேலணை கரம்பன் சரவணை ஊர்களைச் சேர்ந்த மாணவிகளும் கல்லூரியிற் சேர்ந்தனர். சுண்டுக்குளி மகளிர் கல்லூரியிற் படித்த எனது மகள் சிரேஷ்ட தராதரப் பரீட்சையில் விசேட திறமைச் சித்தியுடன் முதலாம் பிரிவில் தேறினார். இந்த வேளை மிஸ். தில்லையம்பலம் மதுரை லேடி டொக்கொலிஞ் என்னும் உயர்நிலைப் பள்ளிக்கு மாற்றலாகிச் சென்றார். சுண்டுக்குளிக் கல்லூரியிற் தன்னிடம் கற்ற விவேகமான மாணவர்களையும் மாற்றலாகச் சென்ற உயர் நிலைப் பள்ளியில் பட்டதாரிப் படிப்பை மேற்கொள்வதற்காக அழைத்திருந்தார். திறமையானவர்களுக்கு புலமைப் பரிசிலும் வழங்கினார். பிள்ளை அங்கு சென்று படிக்க விரும்பியதால் நான் பிள்ளையைக் கூட்டிப்
H 127

போய் அக்கல்லூரியிற் சேர்த்தேன். உடன் படித்த பிள்ளைகளிற் சிலரும் அவர்களின் பெற்றோருடன் கூடவே எங்களுடன் வந்தனர். அங்கு முதல் மாணவியாகக் கற்று பி.எஸ்.சி. முதல் வகுப்பில் தேறியவர் ஊர் திருமபியதும் சைவ வித்தியாவிருத்திச் சங்க முகாமையாளராக இருந்த திரு.சு.இராசரத்தினம் அவர்கள் செங்குந்தா இந்துக் கல்லூரியில் விஞ்ஞான ஆசிரியராகச் சேர்ந்தார். அங்கு கற்பிக்கும் போதே திருமணமாகிய திருமதி.புஷ்பா கணேசலிங்கம் அங்கிருந்து மாற்றலாகி முதுமாணிப் பரீட்சையிலும் தேறி பின் ஆசிரியராய், அதிபராய், கல்வி அதிகாரியாய், பிரதிக்கல்விப் பணிப்பாளராய் பதவி வகித்து இளைப்பாறினார்.
மூத்த மகளைத் தொடர்ந்து அவளுக்கு இளைய புஷ்பராசாவதியும் அடுத்த வருடம் சிரேட்ட தராதராப் பரீட்சையில் சிறப்புச் சித்தியுடன் சுண்டுக்குளி மகளிர் கல்லூரியில் தமக்கையோடு படித்தவர். தானும் அக்காவும் மதுரையில் படிக்க விரும்பியதால் மற்ற ஆண்டு அவரையும் கூட்டிச் சென்று சேர்த்தேன். புஷ்பராசாவதியுடன் படித்த மனோகரி என்ற பிள்ளையும் அவரது தந்தை யோசப்மாஸ்டரும் உடன் கூட வந்தனர். பிள்ளைகளைப் பாடசாலையில் சேர்த்து விட்டு சில நாட்கள் மதுரையில் விடுதியில் தங்கி நின்று பிள்ளைகளின் தேவைக்காக வசதிகளை எல்லாம் செய்து விட்டு திரும்பும் போது சென்னைக்கு வந்து சில அலுவல்களை முடித்துக் கொண்டு ஊர் திரும்பினேன்.
புஷ்பராசாவதியின் லேடிடோக் கல்லூரியில் படித்து பி.எஸ்.சி. யில் சிறப்புச் சித்தி பெற்றார். விளையாட்டுத் துறையிலும் இவர் பிரபலமானவர். முதலில் மாத்தளை கொன்வென்றிலும் பிறகு பகோகாலைக் கொன்வென்றிலும் விஞ்ஞான ஆசிரியராய் சேவையாற்றி அங்கிருந்து மாற்றலாகி காரைநகர் தியாகராசா மகாவித்தி யாலயத்திலும் கடமையாற்றிய பின் வேலணை மகாவித்தியாலயத்தில் நீண்ட காலம் விஞ்ஞான ஆசிரியராக சேவையாற்றினார். அங்கு சேவையாற்றிபோது திருமணமாகி திருமதி.புஷ்பராசவதி சின்னையா முதுமாணிப் பரீட்சையிலும் வெற்றி பெற்றார். தொடர்ந்தும் சில காலம்
س= 128 -ـــــــــــــــــ

Page 73
sung
அங்கு கடமையாற்றிய பின் அதிபராய் பதிவியுயர்வு பெற்று உப அதிபராக யாழ் வைத்தீஸ்வரா வித்தியாலயத்தில் சேர்ந்தார். பின்னர் நல்லூர் விக்னேஸ்வரா வித்தியாலயத்தில் அதிபராக சேவையாற்று "கிறார். அத்துடன் பட்டதாரி ஆசிரியர்களுக்கென தேசிய கல்வி நிறுவனம் வழங்கும் டிப்ளோமா இன் எடியூகேசன் வகுப்புக்களில் விரிவுரையாளர்களாகவும் பணிபுரிகிறார்.
பயணம்-5
எனது மகன் இரா.சிவசந்திரன் பேராதனைப் பல்கலைக் கழத்தில் படித்து பீ.ஏ.சிறப்புத் தேர்வில் தேறி களனிப் பல்கலைக்கழக விரிவுரையாளராகவும் கொழும்பில் தங்கியிருந்து கடமையாற்றும் போது தமிழர் விடுதலைக் கூட்டணி பாராளுமன்ற உறுப்பினர்கள் சட்டமறுப்பு நடவடிக்கையில் ஈடுபட்டமைக்காக கொழும்பில் 5ஆம் மாடி எனும் சிறப்புச் சிறைச்சாலையில் வைக்கப்பட்டிருந்தனர். சிறையில் இருப்பவர்களை பார்க்க கொழும்பு போன போது மகன் இருந்த விடுதியில் தங்கி நின்று மகனையும் கூட்டிக் கொண்டு போய் சந்தித்தேன். பண்டிதர் கா.பொ.இரத்தினம், எம்.பி.சாவகச்சேரி நவரத்தினம் எம்.பி வட்டுக்கோட்டை எம்.பி ஆகியோரைச் சந்தித்து உரையாடினேன். நாங்கள் சிறையில் வந்து சந்திதித்த விபரங்களை பண்டிதர் கா.பொ.இரத்தினம் எம்.பி தாம் எழுதிய சிறைவாரம் பற்றிய நூலில் குறுப்பிட்டிருந்தார்.
பிறகு அங்கிருந்து பேராதனை சென்றேன். எனது மகன் ஜெயச்சந்திரன் பட்டப்படிப்புப் படித்துக் கொண்டிருந்தான், அவனுடன் தங்கியிருந்து மேலும் அங்கு பொறியியல் படித்த எனது மருமகன் கி.இரவி என்பவரையும் பார்த்து அவர்கள் தேவைகளுக்கு பணம் கொடுத்து விட்டு விரிவுரையாளராகவிருந்த பொ.பாலசுந்தரம் பிள்ளையையும் சந்தித்தேன். ஜோர்ச் தம்பையா அவர்களையும் சந்தித்துவிட்டு வீடு திரும்பினேன். பேராசிரியர் தம்பையா மாணவர் களோடு யாழ்ப்பாணம் தீவகச் சுற்றுலா வந்த போது எங்கள் வீட்டில் வரவேற்று விருந்தளித்து கெளரவித்தோம். மகன் முதுமாணிப் பட்டம் பெற்ற பின் கலாநிதிப் பட்டப்படிப்பிற்காக சென்னைப் பல்கலைக்
- 129

கழகத்திற்குப் படிக்கப் போனார். அவர் படிக்க போன போது அவரது குடும்பத்தினர் கொழும்பில் இருந்தனர். 1983ஆம் ஆண்டு கலவரம் கொழும்பில் வசித்த தமிழருக்கு எதிராய் நிகழ்ந்ததால் குடும்பத்தினர் பயந்து அகதி முகாம்களில் இருந்து பின்னர் சென்னை சென்றார்கள். இவ்வாறான கலவர நிலைகளாலும் அவர் தேர்ந்தெடுத்த மலையகப் பிரதேசத்தில் ஆய்வுகளை மேற்கொள்ள முடியாமற் போனதாலும், தாயாரின் சுகவீனம் காரணமாகவும் அவர் 1986இல் படிப்பை முடிக்காமலே திரும்ப நேர்ந்தது.
Lugob - 6
அயலில் பலர் கதிர்காமம் போகிறார்கள். நாமும் போகலாமே என்று மனைவி நினைவூட்டினார். கதிர்காமக் கந்தன் அழைத்தால்தான் போக வேண்டும் என்கிறார்கள், நம்மை அழைக்கவில்லையே என்றேன். மேலும் செலவுக்குப் பணம் வேண்டுமே ஆனபடியால் எதிர்பாராத பண வருவாய் கிடைத்தால் போகலாம் என்று அசட்டையாகச் ச்ொல்லி விட்டு வீட்டிலிருந்து அயலில் உள்ள தோட்டத்திற்கு போகப் புறப்பட்டேன். வளவுக் கேற்றைத் திறந்து வெளியே போகிற சமயம் யாரோ தேடுவதாக மனைவி கூப்பிட்டார். திரும்பி வந்த போது கல்மடு கமத்தோடு தொடர்புடைய எனது நண்பர் என்னைத் தேடி வந்திருந்தார். அவரை வரவேற்று குசலம் விசாரித்து உபசரித்த பின்பு புறப்படும் போது எனக்கு வருமதியிருந்தாலும் வரும் என்று எதிர்பாராத ஒரு தொகைப் பணத்தையும் திருப்பித் தந்துவிட்டுப் போனார். நான் சொன்னபடியே தேவையான பணம் கிடைத்து விட்டது. முருகன் செயல்தான் என்று பயணத்துக்கு ஆயத்தமானேன்.
பெரும்பாலும் வருடந்தோறும் கதிர்காமம் போகும் எனது நண்பர் வேலணைக் கிழக்கு திரு கதில்லையம்பலம் எமக்கு உதவியாகக் கூட்டிப்போய் வர இணங்கியதால் அவருடன் சேர்ந்து புறப்பட்டோம். வேலணை அம்மன் கோவிலுக்குப் புறப்பட்டோம். வேலணை அம்மன் கோவிலுக்குப் போய் அர்ச்சனை செய்து வழிப்பட்டுக் கொண்டு கதிர்காமப் பயணத்தை ஆரம்பித்தோம். மேலும் சில பக்தர்களும் கூடவே எம்முடன் வந்திருந்தனர். மோட்டார் காரில் யாழ் புகையிரத
H130

Page 74
musicalf fibuDefibi
நின்லயத்திற்கும் அங்கிருந்து புகையிரதத்தில் கொழும்புக்கப்பால் காலி சென்றோம். காலியில் கதிர்காம யாத்திரீகர் தங்கி இளைப்பாறிப் போவதற்கு ஒரு யாத்திரீகர் மடமுண்டு. அங்கு தங்கியிருந்த போது இலவசமாக உபசரணைகளும் நிகழ்ந்தன. எமக்கு நன்கு அறிமுகமான எங்களூர் தென்னிலங்கை வர்த்தகர்களையும் சந்தித்து உரையாடி னோம். அவர்களின் பண்பான உபசரணைகளுக்கும் உதவிக்கும் நன்றி தெரிவித்து விட்டு மீண்டும் மாத்தறை அம்பாந்தோட்டை தங்காலை யூடாகப் புகையிரத்தில் திசமகாராம சேர்ந்தோம். அதன்பின் புகையிரதத்தை விட்டிறங்கி பஸ்சில் கதிர்காமம் போனோம். மாலை நேரம் பஸ்ஸால் இறங்கி மணற் பாங்கான பாதையால் கோயிலை அடைந்தோம். முருகனை வழிபட்டுவிட்டுத் தங்குவதற்கு ஒரு மடத்திற்குப் போனோம். அறைகளிலும் விறாந்தைகளிலும் யாத்திரீகர் பலர் தங்கியிருந்தார்கள். தில்லையம்பலம் எல்லாம் தெரிந்தவரா கையால் நாங்கள் தங்குவதற்கு வசதியான அறையும் கிடைத்தது. சாப்பாட்டு வசதிகளும் மடத்திலுண்டு. நன்கு இளைப்பாறி உண்டு உடுத்து பொருட்களையும் அறையில் வைத்து பக்குவமாகப் பூட்டி விட்டு இரவு தெய்வானை அம்மன் கோவிலுக்கும் கதிர்காம முருகன் கோவிலுக்கும் சென்றோம். தெய்வானை அம்மன் கோவில் ஆகம முறைப்படி அமைந்திருந்தது. பஜனை நிகழ்ந்து கொண்டிருந்தது. முறைப்படி பூசை அர்ச்சனைகளும் நிகழ்ந்தன. முருகன் சந்நிதானத்தில் கற்பூரச் சட்டிகள் தீபங்கள் எரிந்து கொண்டிருந்தன. பக்தர்கள் கூட்டம் கூட்டமாக வந்து போய்க் கொண்டிருந்தனர். கோவில் முகப்பில் அழகான பெரிய முருகன் படம் எழுதிய திரைச்சீலை தொங்கிக் கொண்டிருந்தது. கோவில் ஓர் மடாலாயம் போலவே இருந்தது.
மறுநாள் பொங்கலுக்கான ஆயத்தங்களுடன் மாணிக்கப்பிள்ளை யாரை தரிசிக்கப் புறப்பட்டோம். சில மைல் தூரம் நடந்து போனோம். மணற்பாங்கான அகலமான பாதை அருகே சிறு பற்றைகள். அவற்றுக்கு அப்பால் பெரிய மரக்காடுகள். கோவில் மாணிக்க கங்கைக் கரையில்தான் இருந்தது. கங்கை நீர் அதிக பிரவாகமாக ஓடவில்லை. ஆழமும் குறைவு ஆற்றில் குறுக்கே இடைக்கிடை சில மணற்பிட்டிகள்
- 131

அவற்றைச் சூழ்ந்துதான் நீர் ஓடியது. கோவிலுக்கு சற்றுத் தள்ளி ஆழமான இடம் இருந்தது. அதிலிறங்கி நீராடினோம். பொங்கிப் படைத்து பிள்ளையாரை வழிபட்டோம். நீராடிய போது உடுத்திருந்த சால்வையை கங்கைக் கரைக்கு சற்றுத் தூரத்திலிருந்த பற்றையில் காயப் போட்டிருந்தேன். புறப்படும் போது அதை எடுத்தேன். சால்வை நிறைய குள அட்டைகள் ஒரு பக்கம் கூரான மறுபக்கம் கட்டையான ஒன்று ஒன்றரை அங்குல நீளமானவை. மனிதரின் தோலைத் துளைத்து இரத்தம் குடிப்பவை. இரத்தம் குடித்துப் பொருமினால் அல்லது புகையிலை சப்பித் துப்பினால் விழும் என்பார்கள். சுண்ணாம்பு பட்டாலும் அவை கலையுமாம். சால்வை எறிந்து விட்டேன். பக்கத்தில் பார்த்துக் கொண்டிருந்த அடியார் ஒருவர் தந்திரமாக அதை உதறிக் கொட்டிவிட்டு சால்வையைத் தந்தார். புல்லுப் பற்றைகள் உள்ள இடத்தில் குள அட்டைகள் இருக்கும். அவதானமாக இருக்க வேண்டும் என்று சொன்னார்கள். கண்டி மாத்தறை மற்றும் மலை நாடுகளில் குள அட்டைகள் இருக்கும் சங்கதி எனக்குத் தெரியும். ஆனால் தென் மாகாணத்தில் சமவெளியில் புழுதி பறக்கும் மணற்பரப்புகளில் குள அட்டைகள் இருக்கும் என நான் நினைக்கவில்லை. அதன் பின் பிறருக்கும் எனது மனைவிக்கும் சொல்லி எச்சரிக்கையாகவே புழங்கினோம்.
வழிபாடு முடிந்த பின் வந்த வழியே கந்தன் கோவிலுக்கு வந்தோம். வெயிலுக்கு மணற்சூடு, புற்றரையால் நடக்க குளவட்டைப் பயம். எவ்வாறோ வியர்க்க, களைக்க, நடந்து வந்தோம். வழி நெடுக பக்த்தர் கூட்டம் போவதும் வருவதுமாக இருந்தது. எல்லோரும் அந்தச் சிரமங்களை அனுபவித்தாலும் அந்தக் குறுநடைப் பயம் இறைவனருளால் போலும் மனதிற்கு நிம்மதியாகவும் மகிழ்ச்சியாகவும் இருந்தது.
கதிர்காமக் கந்தன் கோவிலுக்கு முன் கடைகளில் ஓலைத் தட்டில் அர்ச்சனைச் சாமான் வைத்து விற்கிறார்கள். அதைத்தான் பலரும் வாங்கிப் போய் அர்ச்சனை செய்கிறார்கள். நாங்களும் அவ்வாறே செய்தோம். அர்ச்சனைத் தட்டுக்களை வரிசையாக வைத்தால் எடுத்துப்
-132

Page 75
போய் திரைக்குப் பின் அர்ச்சனை செய்து விட்டுத் தருவார்கள். புத்தபிக்குமார்களும் ஆசனத்தில் அமர்ந்திருந்தார்கள்.
அன்று மாலை 6மணிக்கு கோவிலுக்குப் போனோம். பலர் மாவிளக்கு ஏற்றிக் கொண்டிருந்தார்கள். எனது மனைவியும் அவர்களோடு சேர்ந்து மாவிளக்கு ஏற்றிக் கொண்டிருந்தார். நான் அவரைப் பார்த்துக் கொண்டு கோவில் வாசலிலிருந்த உயரமான ஒரு கல்லில் இருந்தேன். அப்போது மழை தூறியது. கோவிலுக்குள் போய் நிற்க இடமில்லை. கோவிலுக்குச் சற்று தள்ளியிருந்த ஒரு வீட்டில் போய் நின்றேன். அவர் ஒரு சிங்களவர் என்பது பேச்சில் தெரிந்தது. தமிழோடு ஆங்கிலமும் கலந்து பேசினார். ஊர் தொழில் பற்றிய விசாரணை களோடு உரையாடல் தொடர்ந்தது. ஒரு பெண் மழையில் நனைந்தபடி தலையில் சீலையைப் போர்த்திக் கொண்டு அங்கு வந்தார். நேர்த்திக் கடனுக்கு மணி செய்து கொண்டு வந்திருப்பதாகவும் அதைக் கோயிலில் கட்ட அனுமதிக்குமாறும் கேட்டார். ஓரிடத்தைக் குறித்து அங்கு கட்டுமாறு அனுமதி கொடுத்த போதுதான் அவர் கோவில் கப்புறாளைகளில் ஒருவராக இருக்கலாம் என்று கருதினேன். பேச்சுக்கள் தொடர்ந்தாலும் அவர் தனது பங்குப் பணிகள் பற்றிச் சொல்லவும் இல்லை.நான் கேட்கவும் இல்லை.
மேலும் பேச்சுக்கள் தொடர்ந்தது. இந்துக் கோயில்களெல்லாம் ஆகம முறைப்படி உயர்ந்த பல கோபுரங்களோடு அமைந்திருக் கின்றன. ஆனால் கதிர்காமக்கந்தன் மடாலாயத்தில் தான் இருக்கிறார். நல்லூர் முருகன் கோவில் சந்நிதிக் கோவில்கள் யாழ்ப்பாணத்தில் மடாலாயங்களாக இருந்த போதும் அவற்றை உள்ளடக்கி கோபுரங்கள் எழுப்பப்பட்டன. மூலஸ்தானத்திலும் சொரூபத்திலுள்ள வேலுக்குத் தான் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருக்கிறது. கதிர்காமத்தில் என்ன இருக்கிறது என்று யாருக்கும் தெரியாது. இயந்திரமாகப் பேழையில் முருகன் இருப்பதாகவும் பேழையும் துணியால் மூடித்தான் உலா வரும் என்றும் கூறுவர். பேழையும் தெரியாது. இயந்திரமும் தெரியாது. எல்லாம் மூடு மந்திரமாக இருக்கிறது. இப்படித்தான் தென்னிந்தியா விலே சிதம்பரம் என்னும் சிவஸ்தலத்திலே ஒரு வெளிப்பான அறையை திரை
-133

போட்டு மூடியிருக்கிறார்கள். திரைச் சீலையை விலக்கிப் பார்த்தால்
அங்கு ஒன்றுமில்லை. அது தான் சிதம்பர இரகசியம், இங்கே கதிர்காமத்திலும் திரைபோட்டு மூடியிருக்கிறார்கள். ஏழு திரைகள் என்று கேள்வி. உள்ளே எவரும் போகக் கூடாது என்றால் அங்கேயும் ஒன்றுமில்லை என்பது தான் உண்மை என்று எனது அபிப்பிராயத்தைக் கூறி முடிக்கும் வரை மவுனமாகக் கேட்டுக் கொண்டிருந்தார். மழையும் விடவே விடை பெற்றேன். ஊர் திரும்பும் போது வந்து சந்திக்குமாறு கூறி மரியாதையாக எழுந்து நின்று விடை தந்தார்.
மறுபடியும் ஈரமாய் இருந்த கல்லைத் துடைத்து விட்டு கோவில் வாசலில் அமர்ந்தேன். சிறிது நேரத்தால் மாவிளக்கு எரித்து முடிந்ததும் மனைவியும் நானும் அறைக்குப் போய்விட்டு கோவிற் சூழலைச் சுற்றிப் பார்த்தோம். அங்கிருந்த முஸ்லீம்களின் பள்ளிவாசல், இராமகிருஷ்ண மடம் மற்றும் மடங்கள் கடைகளை எல்லாம் பார்த்து விட்டு விழாத் தொடங்கியதும் கோவிலுக்குப் போனோம். விழா நிகழ்ந்து கொண்டிருந்தது. யானை வந்து நின்றது. நிலவும் நல்ல வெளிச்சமும் இருந்தது. பலரும் கற்பூரச் சட்டிகளை ஏந்தி நின்றனர். ஏதோ முழவும் ஒலித்தது. பலர் பன்னீர் போத்தலுடன் நின்றார்கள். நாங்களும் அதைப் பார்த்து வாங்கி வைத்திருந்தோம். நான் ஏற்கனவே சந்தித்துப் பேசியவர் தான் மூடிமறைத்த பெட்டியுடன் முக்காடு போட்டுக் கொண்டு யானையில் ஏறி அமர்ந்தார். வீதி வலம் ஆரம்பமாகவே பன்னீர் போத்தலில் இருந்த பன்னீரை பக்தர்கள் அவர் மேலும் பெட்டி மேலும் யானைக்கு மேலும் வீசினார்கள். நாங்களும் பன்னீரை வீசித் தெளித்த வண்ணம் வீதி வலமாக வந்தோம். வீதி வலம் ஏனைய கோயில்களைப் போல கோவிலைச் சுற்றி நிகழாமல் கோவில் முன்புறமாகவுள்ள பாட்டை (தெரு வழியே சென்றது. பக்தர்களின் ஆரவாரம், அரோகராக் கோஷங்களோடு வீதி வலம் நிகழ்ந்தாலும் சாதாரணமாக கோவில்களில் நிகழும் உற்சவம் போலவே இருந்தது.
மறுநாள் காலை கதிரமலைக்குப் புறப்பட்டோம். பூசனைக்குரிய அவல், தேங்காய், பழம், பாக்கு, வெற்றிலையும் கொண்டு போனோம். கோவிலிருந்து சிறிது தூரம் சமதரையில் நடந்து சென்றோம்.
9 سس134-ــــــــــــــــسے

Page 76
மலையடிவாரத்தில் இருந்த விநாயகர் கோவிலில் தேங்காயுடைத்து வழிபட்ட பின்பு மலையேறவும் தொடங்கினோம். ஆரம்பத்தில் இலகுவாய் படிப்படியாக உயர்ந்து போகும் பாதையால் நடந்து போன பின் செங்குத்தாக ஏறவேண்டிய இடங்களில் சற்று சிரமமாக இருந்தது. சில இடங்களில் வளர்ந்திருந்த மரங்களைப் பிடித்துக் கொண்டும் ஏறினோம். மிகச் சில இடங்கள் அதிக செங்குத்தானவை. அவ்விடங்களில் ஏறுவதற்கு வசதியாக படிகள் கட்டப்பட்டிருந்தன. கூட்டங் கூட்டமாகப் பக்தர்கள் எங்களுக்கு முன்னும். பின்னுமாக ஏறிக் கொண்டிருந்தார்கள். சிலர் எங்களை விலத்திக் கொண்டும் போனார்கள். நான் மெதுவாகவும் சில இடங்களில் தரித்து நின்று இளைப்பாறிய பின்னும் ஏறிச் சென்றேன். தில்லையம்பலம் துரிதமாக ஏறினார். எனக்காக சில இடங்களில் தரித்து நின்று கூட்டிப் போனார். மேலே சென்று பார்த்தபோது மலை உச்சியில் வேல் இருந்தது. அவல் செய்து படைத்து கர்ப்பூரம் கொழுத்தி தேங்காயுடைத்து வணங்கினோம். பலரும் அவ்வாறே வணக்கம் செலுத்திக் கொண்டிருந்தனர். மலை உச்சியில் சற்றுத் தூரத்தில்புத்தர் கோவில் இருந்தது. சிறிய கூடாரம் போன்ற அமைப்பு புத்தகுருமார் இருந்தார்கள். அவர்களோடு போயிருந்து சிறிது நேரம் கலந்துரையாடினேன். எங்களைப் போல வேறெவரும் அவர்களுடன் ன்கலந்துரையாடியதைக் காணவில்லை. சிலர் புத்தர் கோவில் அதிலிருப்பதை வெறுத்தனர். தரிசனம் முடிய சற்று ஒய்வாக இருந்து இறங்கத் தொடங்கினோம். தில்லையம்பபலம் எங்களை வந்தவழியால் திரும்பிப் போகுமாறு கூறிவிட்டு வேறு கடினமான பாதைவழியாகத்தான். திரும்பி வருவதாகச் சொல்லிப் பிரிந்து போனார். நானும் மனைவியும் வந்த வழியே பல அடியார்களோடும் அவர்களின் உதவியோடும் இறங்கி வந்தோம். தண்ணீர்ப்பந்தல், கோப்பி, தேநீர் அருந்தும் வசதிகள் ஏறி இறங்கும் பாதையில் அமைந்திருந்தன. தாகத்துக்கு அருந்தினோம். என்னைப் பொறுத்தவரை மலை ஏறியதிலும் பார்க்க இறங்கியது சிரமமாயிருந்தது. ஏறியது போலவே மரங்களைப் பிடித்துக் கொண்டு நிதானமாக இறங்கினோம். நேரே சமதரையில் நடந்து வந்து சாலையை அடைந்தோம். உண்டு களைப்பாறிய பின் மாலை கோவிலுக்குப் போனோம். மறநாள் தீர்த்தமென்பதால் பக்தர்கள் கூட்டம் கூட்டமாக
س-135-س-

ana
கோவிலுக்கு வந்து கொண்டிருந்தார்கள். மாவிளக்கு பூசை முடிய திருவிழாவும் தொடங்கியது. மேலும் பஜனை, செடில் குத்திய
காவடியாட்டம், பிரதட்டை செய்தபடி காவடியாட்டம், செடில் செவ்விள நீர்களைத் தொங்க விட்டபடி காவடியாட்டம், தொங்குகாவடி என நேர்த்திக்காக தங்கள் உடலை வருத்தி ஆட்டம் பாட்டு, மேளக்கச் சேரிகளுடன் பக்தர்களைக் காணும் போது என்னையறியாமலே பக்திப் பரவசமானேன். அவற்றைப் பார்த்தபடியே இரவு சுற்றித் திரிந்தேன். தன்னை மறந்த பக்திப் பாரவச நிலையிலிருந்தேன். மனைவியும் என்னைத் தேடிக் காணாமல் பரிதவித்துக் கொண்டிருந்தார். தில்லையம்பலமும் தேடிக்களைத்துப் போயிருந்த வேளை விடுதிக்கு வந்து சேர்ந்தேன்.
விடியக்காலையாகியது. தீர்த்தத்துக்கான ஆயத்தங்களும் நிகழ சனத்திரளும் சமுத்திரம் போலத் திரள ஆட்டங்கள், பாட்டுகள், கூத்துகள், வாத்தியங்கள், முரசொலிகள் அலறி தீர்த்தவிழா நிகழ்ந்தது. மாணிக்ககங்கையில் கோவிலுக்குப் பக்கத்தில் தண்ணீர் ஓடிக் கொண்டிருந்தாலும் அதிக பிரவாகமில்லை. என்றாலும் சகலரும் தீர்த்தமாடினார்கள்.
இனி வீடு திரும்ப வேண்டும். கடைகளில் பொருட்கள் சில வாங்கினோம். போகும் போது சந்திக்கச் சொன்னவரையும் போய்க் கண்டேன். எப்படி தரிசனம் என்றவருக்கு, முருகன் கோவிலில் இல்லை, பக்தகோடிகளின் உள்ளங்களில் குடிகொண்டிருக்கிறார். நான் இங்கு கண்ட சமயப் போட்டிகள் தேவையற்றவை, சமய வாதத்திற்கு அப்பாற்பட்ட முருகன் நாட்டையும் மக்களையும் காப்பாற்றுவான் என்று கூறினேன். அவர் மகிழ்ச்சியுடன் முருகனின் படத்தையும் உருத்திராட்ச மாலையும் தந்தார். அடையாளமாக மாலையைத் தரித்துக் கொண்டு வீடு திரும்பினேன். அதன் பிறகு கதிர்காமப்பயணம் எனக்குக் கைகூட வில்லை. மனைவி திருமதி.உஇராசரத்தினம் மீண்டுமொருமுறை போய்வந்தார். நான் வராமல் போன பிரயாணம் தனக்கு அலுப்பும், சலிப்புமாக இருந்ததென்று வந்து சொன்னார்.
-136

Page 77
allshlöf dibu[Böbbli
LuuleoLib -7
முருகர் திரு.சோ.கணேசலிங்கம் தென்னிலங்கையில் தர்க்காடவுண் அல்காராம முஸ்லீம் மாகவித்தியாலயத்தில் கற்பித்துக் கொண்டி ருந்தார். எனது மகள் புஷ்பலதிகவதியை திருமணஞ் செய்தபின் அவருக்கு யாழ்ப்பாணத்துக்கு மாற்றமெடுக்க வேண்டியிருந்தது. மகளும் அடிக்கடி பரிந்து பேசிக் கொண்டிருந்தாள். அவ்வத்தொகுதிப் பாராளுமன்ற உறுப்பினர் மூலம் முயற்சி எடுத்தாற்தான் ஆசிரியர் மாற்றங்கள் நிகழும் என்பதால் அவரின் தந்தையார் சோமசுந்தரம் என்பவரும் தானுமாக சாவகச்சேரி பாராளுமன்ற உறுப்பினர். திரு.வீ.என்.நவரத்தினம் அவர்களைச் சந்தித்து உதவி கோரினோம். கட்சி ரீதியான நவரத்தினத்தோடு நன்கு பழகியிருந்தேன். முயன்று பார்ப்போமென்றும் தான் போகும்போது கொழும்புக்கு வருமாறும் சொன்னார். அவ்வாறு முதல் முறை சென்று வித்தியாதிபதியைச் சந்தித்து விபரங்களை நேரிற் சொல்லி விண்ணப்பமும் செய்து வந்தேன். ஒருமாதம் கடந்ததும் கருமம் நிறைவேறாமையால் மீண்டும் பாராளுமன்ற உறுப்பினரைக் கண்டு பேசியபோது நான் பாராளுமன்றக் கூட்டத்திற்குப் போகும் வேளை கொழும்பில் வந்து சந்திக்குமாறு
கூறினார். -
கொழும்பு சென்று பாராளுமன்ற உறுப்பினர் ஓய்விடத்தில் சந்தித்தேன். இருவரும் பேசிக் கொண்டிருந்தபோது ஊர்காவற்றுறைப் பாராளுமன்ற உறுப்பினர். திரு.வீ.ஏ.கந்தையாவும் வந்தார். என்னைக் கண்டதும் நவரத்தினத்தோடும் என்னோடும் பேசி நான் வந்த காரியத்தைப் புரிந்து கொண்டு தான் எனக்காக அதை நிறைவேற்று வதாகவும் கூறினார். அவருக்குத் தேர்தலில் நான் எதிர்க்கட்சியில் நின்றதால் அவர் பேச்சில் நம்பிக்கையில்லை. என்றாலும் நவரத்தினம் இருக்கும் போது எனது நம்பிக்கையினத்தை வெளிக்காட்டவில்லை. என்னுடன் வித்தியா கந்தோருக்கு வந்த கந்தையா எல்லாம் சரி மாற்றம் வரும் என்று சொல்லிப் போனார். என்னைக் கூட்டிப்போய் பேசாமல்
தனியாகச் சென்று சந்தித்து வந்ததால் ஏற்பட்ட சந்தேகத்தால் அவருக்கு
-137

நன்றி கூறி அனுப்பிவிட்டு வித்தியாகந்தோருக்குச் சென்றேன். அங்கு உதவி வித்தாயாதிகாரியாக இருந்த திரு.சந்திரசேகரம் நான் பல முறை கொழும்பு வித்தியா கந்தோருக்குப் போய்வந்த காரணத்தால் என்னை அறிந்திருந்தார். அவரிடம் மாற்றம் பற்றி விசாரித்தபோது கற்பிக்கும் பாடசாலை இருக்கும் மாகாணக் கல்வி அதிகாரி விடுப்பு வழங்கிச் சிபார்சு செய்தாற்தான் நிகழுமென்றார். இதற்கென்ன செய்வதென்று சிந்தித்துக் கொண்டு வந்த போது என்னுடன் ஒரு பாடசாலையிற் கற்பித்த ஆசிரியரும் நண்பரும் வித்தியாகந்தோர் பரீட்சைப் பகுதியில் பிரதான கணக்காளருமான திரு. குணநாயகம் என்பவரை வழியில் அவரின் காரியாலயத்துக்கு முன்பாகச் சந்திக்க நேர்ந்தது. என்னைக் கண்டதும் தனது காரியாலயத்துக்கு கூட்டிப்போய் உபசரித்து வந்த விடயத்தையும் கேட்டறிந்தார். தாம் உடனடியாக நிறைவேற்றித் தருவதாகக் கூறி என்னுடன் கூடவே வித்தியாதிபதி திருதுரைசிங்கம் என்பவரோடு பேசி மாற்றத்துக்கான விடுப்பும் கிடைக்க ஆவன செய்தார். போன காரியம் கைகூடியது. விடுப்புக் கிடைத்தது. மருமகன் கொடிகாமம் மகாவித்தியாலயத்திற்கு மாற்றமாகி வந்தார்.
செங்குந்தா இந்துக்கல்லூரியில் கற்பித்துக் கொண்டிருந்த எனது மகள் திருநெல்வேலி சைவ ஆசிரியப் பயிற்சிக் கல்லூரி விரிவுரையாளராக அல்லது கற்பித்த பாடசாலை அதிபராக உயர்வு பெற இருந்தவேளை மருகளின் மாற்றத்தால் சாவகச்சேரி இந்து மகளிர் பாடசாலைக்கு மாற்றம் பெற நேர்ந்தது. கையோடு கிடைக்கவிருந்த பதவி உயர்வு த டைப்பட்டாலும் பின் அதிபராகவும் வித்தியாதிகாரியாகவும் கோட்டக் கல்வி அதிகாரியாகவும் பதவி உயர்வு பெற்றார்.
سے l38-ـــــــــــــــــــــــ

Page 78
līgā irbu Gabī
அவலங்கள்
போர் நடவடிக்கைகளாலும், குண்டு வெடிப்புகளாலும் மக்கள் இடப்பெயர்வுகள், உயிரிழப்புகள், காயப்படுதல் போன்ற அவலங்களைச் சந்திக்கிறார்கள், இனவாத வன்செயல்கள், சமூகப்
புரட்சிகள், சமயப் புரட்சிகளாலும் அவலங்கள் தொடர்ந்த
ســـ-139۔ــــــــــــــ
 

only
வண்ணமிருக்கின்றன. சிறுபான்மையினர் என ஒதுக்கப்பட்டவர்கள் தங்களின் உரிமைகளுக்காக விடுதலைக்காக புரட்சிகளை மேற்கொள்வதன் காரணமாகவும் அவலங்களைச் சந்திக்கிறார்கள். புயல், வெள்ளம், பூமி அதிர்ச்சி போன்ற இயற்கை அனர்த்தங்களும் காலத்திற்குக் காலம் அவலப்படுத்துகின்றன. குடும்பச் சண்டை, காணித் தகராறு, சொத்துப் பங்கீடுகள் கூட அவலத்தை ஏற்படுத்துகின்றன. இவற்றைவிட வியாதிகள், விபத்துக்கள், பாசமுள்ளவர்கள் பிரிவுகள், மரணங்கள் என்பனவும் தனித்தனி மனித வாழ்வில் அவலப்படச் செல்கின்றன. இவற்றுள் தனி மனித வாழ்வில் வரும் அவலங்கள் தவிர்ந்த ஏனையவை ஏதாவதொரு வகையில் வராலாறுகளில் இடம் பெறும் சந்தர்ப்பங்களைப் பெறுகின்றன. தனிமனித அவலங்கள் அவ்வாறு இடம் பெறுதல் அரிதிலுமரிது. அவற்றை அவர்கள் சொல்லித்தான் பிறர் அறிய முடிகிறது. எனவே தான் வாழ்வில் நான் பெற்ற என்னுடன் நெருங்கிய உறவினர் பெற்ற அவலங்கள் சிலவற்றையேனும் விபரிக்க விரும்பி அவற்றை எழுத்தில் வடிக்கிறேன். இவற்றில் எனது உறவினர் நண்பர்கள், அயலவர்கள், ஊரவர்கள் கூட தொடர்புறுவது இயல்பேயாகும்.
1. 1936 ஆம் ஆண்டளவில் எனது தாயார் சின்னம்மா திடீரென ஒருவகை நோயாற் பாதிக்கப்பட்டார். நான் பரீட்சைகளிற்தேறி ஆசிரியராக வேலை பார்க்க ஆரம்பிக்கிறேன். அக்காலம் ஆசிரியர் பதவி பெறுவதானால் பாடசாலை முகாமையாளரின் தயவில் சில மாதங்கள் சிலவேளை சில ஆண்டுகள்கூட இலவசமாய் அல்லது தகுதிக்கேற்ற வேதனமின்றி மிகக் குறைந்த வேதனத்தில் சேவையாற்ற வேண்டும். அவ்வாறான ஆசிரிய சேவையில்தான் கடமையாற்றிக் கொண்டிருந்தேன். அந்நோய் காரணமாக தாயாருக்கு தண்ணீரோ, உணவோ, மருந்தோ உட்செல்லமுடியாத நிலை. மருந்து கொடுக்க இயலாதிருந்ததால் மானிப்பாயிலிருந்த கிறீன் மெமோறியல் ஆஸ்பத்திரிக்கு எடுத்துப் போனோம். அங்கு குளுக்கோஸ் ஏற்ற முடிந்தததே தவிர வாயால் எதுவும் கொடுக்க முடியவில்லை. ஒருவார
س-140--

Page 79
வாழ்வுச் சுவடுகள்
சிகிச்சையின் பின் சர்த்தியப்படாதென்ற நிலையில் வீட்டுக்குக்
கொண்டுவர நேர்ந்தது. சிகிச்சை செய்ய முடியாத அவலமான நோயாக வந்ததே என்ற கவலையோடு வீடு திரும்பிக் கொண்டிருந்த சமயம் திடீரென எனது தந்தையார் கொக்குவில் நடராசா வைத்தியரோட யோசித்துவிட்டு போவோமென்று அவரிடம் போகச் சொன்னார். வைத்தியர் நடராசா தெய்வபக்தி உள்ளவர். பிரபல வைத்தியராகவும் பெயர்பெற்றிருந்தார். தந்தையாரும் (வேலணை வைத்தியர் சிதம்பரம்பிள்ளை) தீவுப்பகுதியில் பிரபல வைத்திரென்பதால் இருவரும் ஒருவர்க்கொருவர் அறிமுகமானவர்கள். நண்பர்கள் ஒரு மணித்தியாலம் வரை யோசித்துவிட்டு இருவரும் காரில் இருந்த படியே நோயாளியைப் பரீட்சித்துவிட்டு அக்கினிகுமாரி செந்தூரத்தை நாவில் தடவிப் பார்ப்போமென்று ஒரு யோசனை செய்தனர். தகப்பனாரும் அதற்கிணங்கவே அக்கினிகுமாரி செந்தூரத்தை நாவில் தடவினார்கள். சற்று நேரத்தால் எரிவு தாங்க முடியவில்லையென்று குளறிக் கொண்டு நோயாளி தண்ணீர் கேட்டார். கொடுத்தும் ஒரு செம்பு நிறைந்த தண்ணீர் குடித்து விட்டார். இறந்தவர் உயிர்பிழைத்தெழுந்த மகிழ்ச்சி வீடு திரும்பினோம் அதன் பிறகு ஆச்சி சற்று அமைதிக் குறைவாக இருந்தாலும் தேகசுகத்துடன் வீட்டு வேலைகளைக் கவனித்து எனது குழந்தைகளையும் பாசமாக வளர்த்து அவர்களின் பற்றுக்குரியவராக
வாழ்ந்து 1960ஆம் ஆண்டிற் காலமானார்.
2. என்னைப் பெற்ற தாய் தந்தையருக்கு ஒரேயொரு மகனாய் பிறந்த காரணத்தாலும் பெற்றாரும் முதுமையடைந்த நிலையில் இருந்தமையாலும் பெற்றாரைப் பேணும் பெரும் பொறுப்பு எனக்கே உரியதானதால் மனைவி மக்களோடு பெற்றாரோடு ஒரே வீட்டில் குடியிருந்தோம். தந்தையார் கட்டிய வீடுதான் இடவசதி போதவில்லை என்பதால் அக்கால வழக்கபடி வீட்டிற்கு முன் தலைவாசல் அமைத்து பக்கத்தில் குசினியும் அமைத்து வாழ்ந்தோம். பிள்ளைகள் மேற்படிப்பை மேற்கொள்ள 9ஆம் வகுப்பிற்கு மேல் யாழ்ப்பாணத் திலுள்ள வேம்படி மகளிர் கல்லூரி, சுண்டிக்குளி மகளிர் கல்லூரி,
-l41 =

allibly
வைத்தீஸ்வர வித்தியாலயம் போன்ற பாடசாலைகளில் சேர்த்தேன். நகர்ப்புறப் பாடசாலைகளிற் படிக்கத்தொடங்கியதும் நவீனமாக வீடுகட்டித் தாங்கள் வாழவேண்டும். நண்பர்கள், ஆசிரியர்கள் வரப்போக இடவசதி இருந்தாலும் நவீனமான வீடாய் இல்லை எனக் கூறத்தொடங்கினார்கள். பிள்ளைகளின் கருத்தை அறிந்ததும் நாங்கள் இருந்த வீட்டிற்கு அருகே வங்களாவடி மண்கும்பான் வீதிக்கருகே அவர்கள் விரும்பியவாறே வீடமைத்து தளபாடங்கள் மற்றும் உபகரணங்கள் குழாய் நீர், மின்சார விநியோகம் போன்ற வசதிகளோடு வீடுகட்டி வாழ்ந்தோம்.
அக்காலத்தில் நான் வேலணைக் கிராமச்சங்க அங்கத்தவர கவும் உபதலைவராகவும் இருந்தேன். எமது கிராமத்தைச் சேர்ந்த செட்டிபுலம் என்ற குறிச்சியில் வாழ்ந்த கடற்தொழில் செய்யும் மக்கள் தங்கள் தொழில் வருவாயில் கால்பங்கை குத்தொகை என்ற பேரில் விற்பனை செய்து அப்பணத்தைக் கொண்டு தருமகாரியங்களையும் தங்களுக்கு வேண்டிய பொது நிறுவனங்களையும் கோவில்களையும் பராமரித்து வந்தார்கள். இந்தக் குத்தொகை அமைப்பில் 1ஆம் பகுதியாக தொழிலாளர்களும் 2ஆம் பகுதியாக குத்தொகைக்காரரும் இணைந்து ஒரு பொருத்தம் எழுதிக் கொள்வார்கள். தொழிலாளர் சிலர் நிபந்தனைப்படி தங்கள் வருவாயில் 1/10 பங்காக தீர்வையைக் கொடுக்காது குழப்பினால் ஒரு சாராருக்கு மிடையிலும், குழப்பிய வருக்குமிடையிலும் பிரச்சினைகள் உண்டாகும். அவ்வாறு ஏற்படும் 3 தரப்புகளின் பிரச்சினைகளையும் குத்தொகைக்காரன், தொழிலாளர் சார்பில் நியமிக்கப்பட்ட மனேஜர் என்போரை இணக்கத்திற்குக் கொண்டுவர இரு மத்தியட்சகர் தேவை. அவ்வாறான மத்தியட்சர் சமுதாயத்துக்கு வெளியே உள்ளவராக சகல சமூகத்தினராலும் ஏற்றுக் கொள்ளக்கூடியவராக இருத்தல் வேண்டும். தொழிலாளர் வாழும் வட்டாரத்துக்கான கிராமசபை உறுப்பினரென்றவகையிலும், ஏனைய சமூகத்தவராலும் தேர்ந்து எடுக்கப்பட்ட உறுப்பினர் என்ற வகையிலும் என்னைத் தங்கள் குத்தொகைக்கு மத்தியட்சராக நியமித்தார்கள். நான்
i-42

Page 80
குறித்த நிருவாகத்துக்கு தலைமை தாங்கி பிணக்குகளை ஆராய்ந்து தீர்த்து வைப்பேன். இந்த விவகாரங்கள், விளக்கங்கள், தீர்ப்புகள் எல்லாம் எனக்கு வசதியாக பெரும்பாலும் எனது வீட்டிலேயே நிகழ்ந்து வந்தன. பெரும்பாலும் இந்த விவகாரங்கள் மாலை 5 மணிமுதல் 9 மணிவரை சிலவேளை பத்துப் பதினொரு மணிவரையும் தொடரும். இவ்வாறான சமயங்களில் எனது தந்தையாரும் வந்திருந்து அவதானிப்பதுண்டு. சிக்கலான பிரச்சினைகளுக்கு ஆலோசனையும் வழங்குவார்.
ஒரு நாள் அவ்வாறு வந்திருந்தவர் ஆறு மணிபோல் திரும்பிப் போகும் போது எனது வீட்டுத் தெற்கு வாசற் படியில் கால் தவறி வீழ்ந்து விட்டார். தொடை எழும்பு முறிந்து விட்டது. சத்தம் கேட்டு ஓடிப்போன நானும் உடனிருந்தவர்களும், முதியவர்களுக்கு தொடை எலும்பு முறிந்தால் மாற்றுவது கஷ்டம் என்று அழுதுகுழறி குரல் எழுப்பினோம். சத்தம் கேட்டு அயலவர்கள் இனத்தவர்கள் வந்தார்கள். எனது மச்சான் ஆசிரியர், அதிபர் செல்லத்துரை மாமனாரில் மிகுந்த பாசமுடையவர். அவரும் ஓடி வந்ததும் எல்லோருமாக காரில் யாழ்ப்பாணம் மானிப்பாய் ஆஸ்ப்த்திரிக்குக் கொண்டு போனோம். தீவிர சிகிச்சையளித்து காலைப் பொருத்தவைத்து பன்டேஜ் போட்டார்கள். ஒரு மாதச் சிகிச்சையின் பின் வீடு திரும்பினோம். நடக்க இயலாது. பன்டேஜ்சும் வெட்டவில்லை. வவுனியாவைச் சேர்ந்த மண்டுக் கோட்டை என்ற குறிச்சியில் ஒரு முறிவு சிகிச்சை நிபுணர் இருப்ப தாகவும் அவரிடம் இவ்வாறான நோயாளர் சிகிச்சை பெற்று பூரண குணமடைந்திருப்பதாகவும் பலர் சொல்லக் கேட்டு அங்கு சென்றோம். ஒரு மாதமளவில் அங்கு தங்கியிருந்து சிகிச்சை பெற்றபின் கமக்கட்டுப் பொல்லுடன் ஊசாட முடிந்தது. அங்கு வைத்திருந்த காலத்தில் மச்சான் செல்லத்துரையும் அண்ணர் (பெரிய தகப்பனார் மகன்) சின்னத்துரையும் வந்து நின்று உதவுவார்கள். சில வேளைகளில் நான் வீடு திரும்பி வந்து போகும் வரையும் என்பணியைத் தாங்களும் பொறுப்பேற்றுச் செய்வார்கள். ஊருக்குத் திரும்பிய பின் குடியிருப்புக் காணிக்குள்
-143

filmjelé
உலாவவும் அயல்வளவுகளுக்குப் போய் வரoqம் முடிந்தது. வைத்தியத் தொழிலையும் செய்து கொண்டிருந்தவர். 1968ஆம் ஆண்டு காலமானார்.
3. 1971ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் முதலாந் திகதி 1ஆம் தர அதிபராக தரம் உயர்த்தப்பட்டு வேலணை ஆத்திகுடியில் பதவி ஏற்குமாறு வந்த வித்தியாதிபதியின் பணிப்புரைக்கமையச் சென்று கடமையேற்றேன். அன்று எனது இளையமகள் இராசமலர் (சோதி வேலணை மத்திய மகாவித்தியாலயத்துக்கு (தற்போது சேர். துரைசுவாமி மத்திய மகாவித்தியாலயம்) விவசாய ஆசிரியராக, அவர் முதலில் பதிவியேற்ற நெல்லியடி மத்திய மகாவித்தியாலயத்திலிருந்து மாற்றலாகி வந்து பொறுப்பேற்க வேண்டியிருந்தது. இந்த இரண்டு பதவி ஏற்புகளும் சுமுகமாய் நிறைவேறிய மறுநாள் நான் பாடசாலைக்குப் புறப்படும் வேளை எனது இரண்டாவது மகள் பேபி (புஷ்பராசவதி) யாழ் ஆஸ்பத்திரியில் 1ஆம் திகதி சாமம் கழிந்த 2ஆம் திகதி அதிகாலையில் ஒரு பெண் குழந்தையைப் பிரசவித்திருக்கிறார் என தொலைபேசி அழைப்புக் கிடைத்தது. அன்றிரவு சிறிய தாயாருடன் மானிப்பாயில் நின்ற பிள்ளை ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சுகப்பிரசவம் என அறிவிக்கப்பட்டாலும் பார்க்கப் போக வேண்டுமென்ற அவசரத்தில் முதல் நாள் கடமை ஏற்ற பாடசாலைக்குப் போனேன். அங்கு சென்ற போது முதல் நாள் பொறுப்பேற்ற பாடசாலையை விட்டு வேறு பாடசாலைக்குக்கு அதிபராகப் போகுமாறு மாற்றக் கடிதம் வந்திருந்தது. குறித்த மாற்றக் கடிதம் பற்றிய செய்தியை பாராளுமன்ற உறுப்பினர் திரு.கா.பொ.இரத்தினம் அவர்களுக்கு அறிவித்துவிட்டு, யாழ்ப்பாணம் போய் பிள்ளையையும் ஆஸ்பத்திரியில் பார்த்துவிட்டு வேலணை கிராமசபைத் தலைவராக இருந்த திரு.க.சதாசிவம் (பென்சனியர், யாழ்ப்பாணம் சப்பல் வீதியில் வசித்தவர்) அவர்களது வீடு சென்று விடயத்தைக் கூறி அவரையும் அழைத்துக் கொண்டு வித்தியாதி காரியைச் சந்தித்தோம். விருப்பமில்லை என்று பாடசாலைப் பெற்றார்
சங்கம் அறிவித்ததால் மாற்றம் செய்ததாகக் கூறியவர். எங்களின்
-144

Page 81
வேண்டுகோளை ஏற்று ரத்துச் செய்தார். அவ்வேளை எம்பியும் மாற்றத்தை ரத்துச் செய்யுமாறு வித்தியாபதியைக் கேட்டிருந்தார். மாற்றம் நிறுத்தப்பட்டதால் மறுநாள் ஆத்திக்குடி வித்தியாசாலைக்கே போனேன். அந்தக் குழப்பத்துக்குக் காரணமாயிருந்தவர்கள் எனது மிக நெருங்கிய நண்பர்கள் திரு. நா.நடராசா ஆசிரியரும், தில்லைச்சிவன் என்கிற திரு.சிவசாமியும் என்பதை பின் அறிந்தேன். தனிப்பட்ட ஒருவரின் வேண்டு கோளால் இந்த இக்கட்டு ஏற்பட்டிருக்கலாம் என்பதை அறிந்து கொண்ட நான் நண்பர்கள் இருவரையும் பிறகு சந்தித்து உரையாடி இணக்கமாக இருந்தோம். இவ்வளவு இணக்கமான நண்பர்கள் அவ்வாறு ஏன் செயற்பட்டார்கள், யார் செயற்பட வைத்தார்கள் என்பதெல்லாம் இன்றுவரையென்ன, என்றும் விடுவிக்கப்படாத புதிராகவே உள்ளது.
4. 1978 வேலணை பலநோக்குக் கூட்டுறவுச் சங்கத் தலைவராக இருந்தேன். அவ்வேளை கொழும்பு களனிப் பல்கலைக்கழக விரிவுரையாளரா இருந்த எனது மகன் இரா.சிவச்சந்திரன் கொழும்பிலே மேல்மாடியிலிருந்து விழந்து கையில் முறிவு ஏற்பட்டிருப்பதாகத் தகவல் வந்தது. அவசர அவசரமாக எனது பொறுப்புக்களை அப்போது சங்கப் பொது முகாமையாளராக இருந்த எனது நம்பிக்கைக்குகந்த வரான திரு. செல்லத்துரையிடம் ஒப்படைத்து விட்டு வீட்டுக்கு வந்து தாய்க்கும் இனத்தவர்களுக்கும் செய்தியை அறிவித்துவிட்டு எல்லோருமாக கொழும்புக்கு விரைந்தோம். மகனை நேரில் சென்று பார்க்கும் வரை சுய அறிவு இல்லாமலே பிரயாணஞ் செய்தேன். ஆளைச் சந்தித்து மெடிக்கல் றிப்போட்டை பார்த்த பின்புதான் மனக்கிலேசமும் அவலமும் தீர்ந்தது. முன்கையில் ஓர் எலும்பில் முறிவு முறையான சிகிச்சை செய்து பன்டேஜ் போடப்பட்டிருந்தது. எக்ஸ்றேயும் பார்த்தேன். சிம்பிள் பிறாக்சர்தான் சில நாட்கள் எல்லோரும் கொழும்பில் தங்கி நின்று திரும்பினோம். ஓரிரு மாதங்களில் சுகமாகி மேலுமங்கு விரிவுரையாளராகக் கடமையாற்றி
பின் யாழ்ப்பாண பல்கலைக்கழகத்துக்கு மாற்றலாகி வந்துவிட்டார்.
-145

Gallinna förbuGañáī
5. 1984ஆம் ஆண்டு மனைவி உருக்குமணிக்கு சுகவீனம், வைத்திய நிபுணர்களால் நோய் இனங் காணப்படவில்லை. யாழ் போதனா வைத்தியசாலை பிரபல டாக்டர் சிவகுமாரனிடம் சிகிச்சை பெற்றார். நாளுக்கு நாள் உடல் மெலிவு, உணவில் வெறுப்பு, வயிற்றுக் கோளாறு தொடர்ந்திருந்தது. பிறகு யாழ் கே.கே.எஸ் வீதியிலிருந்த டாக்டர் சிவபாதசுந்தரம் மருத்துவமனையில் அவரிடம் சிலகாலம் சிகிச்சை பெற்றும் சுகமில்லை. அவரது மருத்துவமனையில் உதவி வைத்திய ராகக் கடமையாற்றிய ஒருவர் தான் சிலவேளை கான்சராய் இருக்கும் சேர்சனுக்கு காட்டிப் பாருங்கள் என்றார். மறுநாள் சேர்சன் டாக்டர் பொன்னம்பலம் அவர்களை கிளினிக்கில் சந்தித்துக் காட்டி ஆலோசனை பெற்றோம். அவர் ஆஸ்பத்திரியில் அனுமதித்தால் பரிசோதித்து ஆவன செய்யலாமென்றார். அனுமதித்தோம். ஆராய்ந்து பார்த்த பின்பு பன்கிறியாசில் ஏதோ வளர்ச்சி இருப்பதால் அறுவை சிகிச்சை செய்ய வேண்டுமென்றர். அதைக் கேட்டு மேலும் பதற்றமடைந்த நிலையில் மகன் சிவச்சந்திரன் சென்னை பல்கலைக் கழகத்தில் கலாநிதி ஆய்வு செய்யச் சென்றிருக்கிறார். உயிராபத்தில் லாமல் செய்யலாமென்றால் மட்டும் செய்யுங்கள் என்று விநயமாகக் கேட்டேன். ஆப்ரேசன் நிகழ்ந்தது. நிகழும் போது ஆப்பரேசன் வாட்டில் நான் வெளியே ஏக்கத்தோடு அவலப்பட்டக் கொண்டு நின்றேன். உள்ளேயிருந்து தாதி வந்தார். பக்கிரியாசில் வளர்ச்சி இருக்கின்றது. சுரண்டித்தான் எடுக்க வேண்டும். சுரண்டும் வேளை இரத்தப் பெருக்கு ஏற்பட்டால் உயிராபத்து வரலாம் என்கிறார் டாக்டர் எனக்கூறினார். மகன் இங்கில்லாதபடியால் வேண்டாம் என்றேன். ஆப்பரேசன் முடிந்தது. ஆஸ்பத்திரியில் அதற்கான திரபி முறையில் மருந்து கொடுத்து சிகிச்சையளித்து வந்தார்கள். வீட்டுக்குச் சென்றும் மாதமொரு முறை குறித்த சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு வந்தது. சில மாதங்களால் அதுவும் சாத்தியப்படாது போகவே மேலும் பல நிபுணர்களிடம் ஆலோசனை பெற்றேன். இந்தியாவிலுள்ள வேலூர் மருத்துவமனைக்கு செல்லுமாறு கூறினார்கள். மகள் பேபி
(புஷ்பராசவதி) யுடன் எல்லா ஆயத்தங்களும் செய்து மெடிக்கல்
46 amb

Page 82
றிப்போட்டுக்களுடன் சென்னையில் இருந்த மகன் சிவச்சந்திரனையும் கூட்டிக் கொண்டு வேலூருக்கு போகுமாறு அனுப்பி வைத்தேன். சென்னை சென்றவர்கள் மகன் வீட்டில் தங்கி நின்றார்கள். மகனின் மனைவி சரோசாவும் 1983 கலவரம் காரணமாக (கொழும்பு இலங்கை மன்றக் கல்லூரி விரிவுரையாளராய் இருந்தவர்) சென்னை சென்றிருந்த வேளை அது. எல்லோரும் வேலூர் மருத்துவமனைக்குச் சென்று சில நாள் தங்கி தீவிரமருத்துவ பரிசோதனைகள் செய்த பின் இங்கு சத்திரசிகிச்சை செய்த காரணத்தால் சத்திரசிகிச்சைக்கு உட்படுத்தினால் அபாயம் எனக் கூறி பல்வேறு மருத்துகளைச் சிபார்சு செய்து கொடுத்தார்கள். வேலூரிலிருந்த அவர்கள் சென்னை திரும்பிய அன்றுதான் (30.10.1984) திருமதி இந்திராகாந்தியின் படுகொலையும் நிகழ்ந்தது. அதனால் பயணத்தின் போதும் சிரமப்பட்டு சென்னை வந்தவர்கள் சில நாட்களின் பின் வந்து சேர்ந்தனர். இனி மரணந்தான் என்று நிச்சயமாகத் தெரிந்த பின் பிள்ளைகளும் நானும் சுற்றத்தவர்களும் எம்மாலியன்ற பணிவிடைகள், சிகிச்சைகள் உணவூட்டுதல் குளுக்கோஸ் ஏற்றுதலாகிய கடமைகளை நிறைவாகச் செய்தோம். எம்மால் முடிந்தவரை முயன்றும் மீட்டெடுக்க முடியாதவர் 1985, மே மாதம் 2ஆம் திகதி காலமானார். மகன் சந்திரன், மனைவி, பிள்ளைகள் மற்றும் சகலரும் கூடிநின்று மனங்கலங்கி நிற்க எனது மடியிலிருந்தே ஆவி பிரிந்தது.
6. 1988ஆம் ஆண்டு ஜனவரி மாதம் தைப்பொங்கல் தினத்திற்கு இரண்டு மூன்று நாட்களுக்கு முன் வீட்டுக்கு நீர் வழங்கும் பைப்பில் தண்ணீர் வரவில்லை. குடியிருக்கும் காணிக்கு அயலிலே உள்ள எங்கள் காணியில் கட்டியிருந்த ராங் கிணற்றிலிந்துதான் தண்ணீர் பெறுவோம். அதற்காக மோட்டாரை இயக்கி தண்ணீர் ராங்கியை நிரப்பப் போனேன் மோட்டார் இயங்க மறுத்ததால் அதைத் திருத்த முயன்ற போது மோட்டார் அமைந்திருந்த கட்டிடச் சுவர் முழங்காலில் இடித்து விழுந்துவிட்டது. நோவைச் சகித்துக் கொண்டு மோட்டாரைத் திருத்தி ராங்கிற்கு நீர் ஏற்றிவிட்டு வந்தபோது நோ குறைவாக இருந்ததாற்
ー147ー

பொருட்படுத்தவில்லை. இரு நாட்களின்பிறகு பொங்கல். முதல் நாள் இரவு முழங்கால் கொதிக்கத் தொடங்கியது. தாங்க முடியவில்லை. எந்த மருந்துக்கும் குறைவதாயில்லை. விடிய பொங்கலை முடித்துக் கொண்டு யாழ்ப்பாணத்தில் சிகிச்சை பெற காரில் வந்தேன். பொங்கல் விடுமுறை என்பதால் பிரதான சிகிச்சைநிலையங்கள் எல்லாம் மூடியிருந்தன. பிறகு பாசையூரிலிருந்த மருத்துவமனையில் மருந்தெடுத்தேன். மேலும் கடினமாகவே மறுநாள் ஆனைப்பந்தி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டேன். ஒரு வாரத்துக்கு மேலாக சிகிச்சை பெற்றும் சுகப்படாமையால் சத்திர சிகிச்சை நிபுணர் டாக்டர் பொன்னம்பலத்தை எனது மகன் சிவச்சந்திரன் ஆனைப்பந்தி வைத்தியசாலைக்கு அழைத்து வந்து காட்டினார். உடன் சத்திரசிகிச்சைக்கு உட்படுத்தப் படல் வேண்டுமென டாக்டர் கூறியதால் அந்தவுடனே யாழ் ஆஸ்பத் திரிக்கு கூட்டிச் செல்லப்பட்டு சத்திர சிகிச்சைக்குட்படுத்தப்பட்டேன். சிகிச்சைக்குப் பின் உபத்திரவங்கள் குறைந்தது. இரண்டு வாரங்களின் பின் வீடு வந்தாலும் எழுந்து நடக்க முடியாத நிலை. படுக்கையில் வைத்தே பணிவிடை செய்ய வேண்டிய நிலை. இந்த நிலையில் என்னோடு வீட்டில் இருந்த சோதியும் இராசமலர்), வவாவும் (புஷ்பரத்தினவதி தான் இரவு பகலாக நித்திரை விழித்துக் கவனித்து வந்தார்கள். மகன் யாழ் நகரில் இருந்தவர். யாழ்ப்பாணத்திலிருந்து தேவையான உபகரணங்களை வாங்கிவந்து கொடுத்து பார்த்துப் போவார். சகோதரிகளின் சிரமத்தை அவதானித்தவர் எவ்வாறோ முயன்று ஒரு வேலைக்காரப் பையனை உதவிக்கு தேடிவந்துவிட்டார். அவன் சில காலம் 23 வருடங்கள் எங்களுக்கு உதவியாக நின்ற பின் தகப்பன் வந்து கூட்டிப் போனார். நான் நோயாற்பட்ட அவலத்தை விட என்னைப் பராமரிக்க மகன் சிவச்சந்திரன் ஆஸ்பத்திரியிலும், பெண்பிள்ளைகள் வீட்டிலும் பட்ட சிரமங்கள் மிகவும் அதிகம். ஏறக்குறைய 2 மாதங்களின் பின்பே நடக்க முடிந்தது. திறமான சத்திர சிகிச்சை என்பதாலும் பிள்ளைகளின் முறையான பராமரிப்பினாலும் சுகப்பட்டபின் நடக்க, இருக்க, குந்தியிருக்க எந்தவிதச் சிரமமும் இருக்கவில்லை.
-148

Page 83
fluIElä
7. 1989 ஏப்பிரல், வேலணை கிழக்கு 21 வேம்படி எனும் குறிச்சி யைச் சேர்ந்த பறைசாற்றும் சமூகத்தவரிடையே அவர்களுக்கென அவர்களின் குடியிருப்பின் அருகே நிறுவி அவர்களாலேயே நித்திய நைவேத்தியங்கள் செய்து பூசிக்கப்பட்டு வந்த கோவில் சம்பந்தமான பிணக்கினால் இரு கோஷ்டிகளாகப் பிரிந்து நின்றவர்கள் தங்கள் பிணக்குகளைத் தீர்த்துக் கொள்வதற்காக ஒரு மத்தியட்சகர் சபைபைக் கூட்டினார்கள். ஊர்ப் பெரியவர்கள் சிலர் கூடி இருப்பதாகவும் அதற்கு தலைமை தாங்க வருமாறும் என்னைக் கேட்டுக் கொண்டதால் நான் நடந்துவருவது சாத்தியமில்லை ஏதாவது வாகனம் கொண்டு வந்து அழைத்துச் செல்லுமாறு கூறினேன். அதில் ஒரு கோஷ்டியைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் என்னை அழைத்துப் போக மோட்டார் சைக்கிளை கொண்டு வந்தார்.நான் மோட்டார் சைக்கிளில் போக மறுத்து சையிக்கிள் கொண்டு வந்தாற் போதுமென்றேன். பலர் கூடிவிட்டார்கள் ஆனபடியால் விரைவாக பக்குவமாகக் கொண்டு போகிறேன் என்றார். மனமில்லாமலும் அழைப்பைப் புறக்கணிக்கக் கூடாதென்பதாலும் மோட்டார் சயிக்கிளின் பின் ஆசனத்தில் ஏறியிருந்தேன். அவர் வாகனத்தை ஸ்ராட் செய்து எடுத்த போது வாகனம் சரிந்து விழுந்ததால் நானும் விழுந்தேன். அதனால் இடது பக்க தோள் முன் எலும்பு முறிந்துவிட்டது. கையசைக்கவே முடியவில்லை. அப்போது அயலில் வேலை செய்து கொண்டிருந்த ஒருவர் ஓடிவந்து என்னை எனது வீட்டுக்குத் தூக்கிச் சென்று ஆஸ்பத்திரிக்குப் போக காரும் பிடித்துவந்தார். ஆஸ்பத்திரியில் எக்ஸ்றே எடுத்து சிகிச்சை அளித்தார்கள். தோள்மூட்டு முன் எலும்புமுறிந்திருப்பதாகக் கூறி சிகிச்சையளித்து, கையசையாமல் சிலகாலம் இருக்க வேண்டுமென கைத்தூக்கும் போட்டு விட்டார்கள். இரண்டொரு நாட்கள் ஆஸ்பத் திரியிலிருந்து வீடு சென்றேன். ஒரு மாத காலம் கைத் தூக்கோடுதான் தொழிலைக் கவனித்துக் கொண்டு ஊசாடினேன். இலகுவாகக் குணப்பட்டுவிட்டது. இந்த விபத்துப் பற்றிய செய்தி பத்திரிகையிலும் வந்ததாகக் கேள்விப்பட்டேன். இந்தியன் ஆமியின் கட்டுப்பாட்டின் கீழ் ஈ.பி.ஆர். எல். எவ். நிருவாகம் நிகழ்ந்து கொண்டிருந்த காலம் அது. வேலணையில் மரணச் சடங்குகளிற் பறைசாற்றி வந்தவர்கள் தாங்கள் கடமைகளை முற்றாகத் தவிர்த்துக் கொண்டகாலமுமதுவே.
-149

Galīgā
இடம்பெயர்வுகள்
இலங்கை ஜனாதிபதி ஜே. ஆர். ஜெயவர்த்தனாவிற்கும் இந்தியப் பிரதமர் இந்திராகாந்திக்கும் மற்றும் இலங்கைத் தமிழர் விடுதலைக் கூட்டணித் தலைவர்களுக்குமிடையில் இலங்கை இனப்பிரச்சினைக்கு ஒரு சமாதானத் தீர்வு காணப் பல சுற்றுப் பேச்சுவார்த்தைகள் நிகழ்ந்தும்
ــــــــــــ-150 سسـ

Page 84
finā
முடியாதிருந்த வேளை இந்திராகாந்தியின் மறைவுக்குப் பின் பிரதமரான அவர் மகன் ராஜீவ்காந்தி குறித்த இனப்பிரச்சினை பற்றித் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி இனங்கண்டு 1987இல் ஒரு உடன்படிக்கை யிலும் கைச்சாத்திட்டனர்.
தமிழீழ விடுதலைப் புலிகளோடு பேசி ஆயுதங்களை ஒப்படைக்கச் செய்வது, வடக்குக் கிழக்கு மாகாணங்களுக்கு இந்தியாவிலிருந்து ஓர் அமைதிப்படையை அனுப்புவது, வடக்குக் கிழக்கு மாகாணங்கள் இணைந்த ஒரு சிவில் நிர்வாகத்தை ஏற்படு த்துவது அதன் பின் முறையாகத் தேர்தல் நடத்தித் தேர்த்தெடுக் கப்படும் விடுதலை அமைப்பிடம் நிர்வாகத்தை ஒப்படைத்தல் என்பவை கைச் சாத்திடப்பட்ட ஒப்பந்தத்தில் குறிப்பிட்டுள்ள அம்சங்களாகும். அதன்படி விடுதலைப்புலிகளோடு பேசி ஆயுதங்கள் (சிறுதொகை ஒப்படைக்கப்பட்டன. இந்திய அரசாங்கத்தின் அமைதிப்படையிடம் இரு மாகாணங்களின் நிர்வாகமும் ஒப்படைக்கப்பட்டது. இலங்கை அரசின் படைகளும் பொலிசாரும் குறித்த மாகாணங்களை விட்டு வெளியேறினர்.
சில நாட்கள் மட்டுமே நீடித்த உடன்பாட்டை விடுதலைப்புலிகள் தன்னிச்சையாக விலக்கிக் கொண்டதால் அமைதிப்படைக்கும் புலிகளுக்குமிடையில் போர் மூண்டது. யாழ் நகரில் நிகழ்ந்த போரின் தீவிரத்தால் விமானக் குண்டு வீச்சுக்கும், செல்லடிக்கும் துப்பாக்கி வேட்டுக்கும் பயந்த மக்கள் இடம் பெயர்ந்தனர். அடுத்துள்ள தீவுப் பகுதிக்கு இடம் பெயர்ந்து வந்த மக்கள் மண்கும்பான், வேலணை, சரவணை, புங்குடுதீவுப் பகுதிகளில் அவரவர் உறவினர், நண்பர் வீடுகளிலும் பாடசாலைகள், சனசமூக நிலையங்கள், இந்து ஆலயங்கள். பள்ளிவாசல், சாட்டிமாதா கோவில் எனப் பல இடங்களிலும் தங்கியிருந்தனர். யாழ்ப்பாண நகரில் வசித்த முஸ்லீம் மக்களும் மண்கும்பான் பள்ளிவாசலை அடுத்துள்ள பகுதிகளில் வந்து குடியேறினர். கிராமத்துக்கொரு உறுப்பினர் என்ற வகையில் நியமனம் பெற்ற தீவுப்பகுதி பிரசைகள் குழு சார்பில் இடம் பெயர்ந்து வந்த மக்களின் சுத்தம், சுகாதாரம், உணவு விநியோகம் இருப்பிட வசதிகள்
-151 =

burn
மற்றும் அத்தியாவசியத் தேவைகளுக்கான உதவிகள் செய்து வந்தோம். மக்களின் தேவைகளுக்கான காய்கறிச் சந்தைகள், மீன் சந்தைகள் வர்த்தக நிலையங்கள், சாப்பாடு தேநீர்க் கடைகள் கிராமங்களில் ஆங்காங்கே நிறுவப்பட்டன. உணவுப் பற்றாக்குறையைத் தவிர்க்க பூநகரி, காரைநகர் பகுதிகளிலிருந்து அரிசி, நெல், கோதுமை மா, சீனி, ஆகியன போதுமான அளவு வாகனங்கள் மூலம் கொண்டு வந்து வழங்கப்பட்டன. தனிப்பட்ட கடைச் சொந்தக்காரரோடு கூட்டுறவுச் சங்கமும் இணைந்து செயற்பட்டு வந்ததால் பொருட்களின் விலை உயராமற் தவிர்க்கப்பட்டன. வடக்குக் கிழக்கு மாகாணங்களை இந்தியப்படை தனது பூரணக் கட்டுப்பாட்டுக்கு கொண்டு வரும் வரை இந்நிலை தொடர்ந்தது. அதன் பிறகு மக்கள் தாங்கள் சொந்த இடங்களுக்குச் சென்று மீளக் குறியேறினர்.
பெரும் போர் நடவடிக்கைகள் முடிந்தபின் இடம்பெயர்ந்து வந்திருந்த மக்களில் பெரும்பாலானவர்கள் மீளச் சென்று விட்ட பின்புதான்1988இல் இந்திய அமைதிப்படைதீவுப் பகுதிக்கு வந்தது.
ஒரு நாள் வீட்டிற்கு அயலிலே உள்ள எங்கள் கிணற்றடியில் வேலி அடைப்பித்துக் கொண்டு நிற்கும் போது மாலை 5.30 மணி போல் இந்தியன் ஆமி தேடுவதாக பிள்ளைகள் வந்து சொன்னார்கள். நான் சென்று பார்த்த போது ஒரு மேஜரும் ஆறு, ஏழு ஆமிக்காரரும் துப்பாக்கிகள் சகிதம் முற்றத்தில் நின்றார்கள். மேஜரை அழைத்து விறாந்தையில் அமரச் சொல்லி பேச்சைத் தொடங்கினோம். பிரசைகள் குழுத் தலைவர் என்ற வகையில் என்னைச் சந்திக்க வந்ததாகவும், ஒரு சிலரைக் கைது செய்திருப்பதாகவும் வீடு வீடாகச் சோதனை செய்யப் போவதாகவும் கூறினார். போரின் உக்கிரமம் தணிந்துவிட்டது. புலிகளும் தலைமறைவானதால் மக்களைச் சிரமப்படுத்தாமல் நடந்து கொள்ளுமாறும் சிவில் நிர்வாகம் முற்றாகச் சீர்குலைந்திருப்பதால் எங்களோடிணைந்து மக்கள் நலனுக்காக பாடுபடுமாறும் கேட்டுக் கொண்டேன். கூடவே சென்று வேலணை கிராமச் சங்கக் காரியாலயத்தில் படையினரால் தடுத்து வைக்கப்பட்டிருந்தவர்கள் அனைவரையும் விடுவித்தேன். சிவில் நிர்வாகம் தடைப்பட்டிருந்தால்
سسسس-152--

Page 85
GRUGG
பலர் அடையாள அட்டைகளின்றி படையினரின் சோதனைக்குப் பயந்தனர். அது பற்றி படையதிகாரிகளுடன் பேசி பிரசைகள் குழுவால் வழங்கப்படும் அடையாள அட்டைகளைச் செல்லுபடியானதாக அங்கீகரிக்கச் செய்து சகலருக்கும் அடையாள அட்டை வழங்கினோம். மக்களை சிரமத்துக்குள்ளாக்கும் எந்தச் சம்பவங்களும் நிகழாமல் துணிச்சலுடன் விவாதித்துத் தவிர்க்கப்பட்டன. புங்குடுதீவிலும், புளியங்கூடலிலும் நிகழ்ந்த துப்பாக்கிச் சூட்டுக் சம்பவங்கள் தவிர வேறெந்த சம்பவமும் நிகழவில்லை. எமது விழிப்புணர்வால் மக்கள் எதிர்நோக்கியதுன்பங்கள் குறைக்கப்பட்டன.
1989இல் இந்தியப்படையின் நிர்வாகத்தின் கீழ் மாககாண சபைத் தேர்தலும், பாராளுமன்றத் தேர்தலும் நிகழ்ந்தன. மாகாண சபைத் தேர்தலில் ஈ.பி.ஆர்.எல்.எவ்வைச் சேர்ந்த திரு.வரதராஜப்பெருமாள் முதல் அமைச்சரானார். பாராளுமன்றத் தேர்தல், ஜனாதிபதித் தேர்தல்களும் நிகழ்ந்தன. ஜெயவர்த்தனாவிலக பிரேமரதாசா ஜனாதிபதியானார். ஏற்கனவே இந்தியப் பிரதமருக்கும் இலங்கை ஜனாதிபதிக்குமிடையிலான ஒப்பந்தத்தில் மாறுபட்ட கருத்துடைய புதிய ஜனாதிபதி இந்தியப்படையை வெளியேறுமாறு குரல் கொடுத்தார். விடுதலைப் புலிகளோடும் சமாதானப் பேச்சுவார்த்தை களைத் தொடங்கினர். இந்தியப்படை வெளியேற வேண்டுமென்பதில் ஒத்த கருத்து நிலவியதால் புலிகள் இயக்கமும் சமாதானப் பேச்சிலும் பங்கு பற்றி இந்தியப்படை வெளியேறுவதற்கு தங்களாலான பங்களிப்பையும் வழங்கினர். இதேவேளை இந்தியப் பிரதமர் பதவியிலிருந்த ராஜீவ்காந்தியும் பிரதமராக நீடிக்கவில்லை. அவருடன் மாறுபட்ட கரத்துடைய வி.பி.சிங் என்பவரே பிரதமராயிருந்ததால் இந்தியப்படை துரிதமாக வெளியேற வேண்டியதாயிற்று,
படிப்படியாக அவர்கள் வெளியேறவே விடுதலைப் புலிகளும் இலங்கைப்படையும் விடுவிக்கும் பகுதிகளைக் கூட்டாகக் கைப்பற்றி வந்தனர். 1990 இல் இந்தியப்படைகள் முற்றாக வெளியேறிய சில நாட்களில் இலங்கை அரசுக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையிலான பேச்சுவார்த்தை முறிவடைந்து இரண்டாவது ஈழப்போர்
== 153-س-

ஆரம்பமாaது-இருபகுதியினருமாகச் சேர்ந்து மீட்டெடுத்த பகுதியில்
அகப்பட்ட இலங்கைப் படையினர் ஆங்காங்கே கைதுசெய்து காவலில்
வைக்கப்பட்டனர். விடுதலைப்புலிகளே வடக்கு கிழக்கு மாகாணங் களை மீண்டும் கைப்பற்றிக் கொண்டனா, யாழ் கோட்டைக்குள் சிக்கிய படையினர் உள்ளே பாதுகாப்பாக இருந்து கொண்டு விடுதலைப்புலிகளைத் தாக்கினர். அவர்களுக்கு உதவியாக விமானங்கள் ஆயுதங்கள், உணவுப் பொதிகள் மற்றும் உபகரணங்களை வழங்கியதோடு யாழ் நகரிற் சுற்றிவரக் குண்டு வீச்சும் நடத்தினர். உள்ளிருந்து படையினரால் நகர்ப் பகுதியை நோக்கி செல்வீச்சும் இடம் பெற்றது. இதனால் அச்சமுற்ற யாழ் நகர் மக்கள் அயற் கிராமங்களிலுள்ள உறவினர் வீடுகளுக்கு இடம்பெயர்ந்து சென்றனர். இவ்வாறு இடம் பெயர்ந்து எங்கள் உறவினர் பிள்ளைகள் வேலணைக்கு வந்தனர்.
பண்ணைப்பாலமும் போக்குவரத்துப் பாதையும் துண்டிக்கப் பட்டன. மக்களின் போக்குவரவுக்கான அராலிறோட்டும் துறைமுகமும் செப்பனிடப் பெற்றுச் செயற்படத் தொடங்கின. நிர்வாச் செலவுகளுக் காக ஆயக்காசும் போக்குவரத்துவரி) அறவிடப்பட்டது.
கோட்டையில் சிக்கிய படையினரை மீட்பதற்காகக் காரைநகர் இராணுவத் தளத்தில் இலங்கை இராணுவம் குவிக்கப்பட்டு 1991ஆம் ஆண்டு ஆவணி 15ஆம் திகதி மண்டைதீவை நோக்கில் பலத்த செல்வீச்சுகளோடும் விமானத் தாக்குதலோடும் படையினர் நகர்ந்தனர். நகர்வின் போது நாரந்தனை, சரவணை, வேலணை வடக்கு, மண்கும்பான், அல்லைப்பிட்டி, மண்டைதீவு மக்கள் பேரழிவுகளையும் உயிரிழப்புக்களையும் சந்தித்தனர். மண்டைதீவிலிருந்து கொண்டு எவ்வாறாயினும் கோட்டையைப் பிடிக்க முயன்றும் முடியாமல் மண்டைதீவிலிருந்து போன வழியால் படையினர் ஊர்காவற்றறை நோக்கித் திரும்பி வருவதையறிந்த வேலணை, சரவணை, மண்கும்பான், அல்லைப்பிட்டி, நாரந்தனை மக்கள் தங்கள் வசிப்பிடங்களைவிட்டு புங்குடுதீவுக்கு இடம் பெயர்ந்தனர். நாங்களும் இடம் பெயர்ந்து புங்குடுதீவில் தங்கியிருந்து மறுநாள் வீடு
س-154 س

Page 86
Glf fibu|Gañ6
திரும்பினோம். ஊர்காவற்றுறை, நாரந்தனை, கரம்பன், சரவணையின் வடபகுதி என்பனவற்றில் படையினரின் நடமாட்டம் தொடர்ந்ததால் அவ்வூர் மக்கள் வீடு திரும்பாமல் வேலணை கிழக்கு, வேலணை மேற்கு, புளியங்கூடல், பள்ளம்புலம் ஆகிய பகுதிகளில் உறவினரோடு தங்கி இருந்தனர்.
முன்னரிலும் பலமான படை செப்ரம்பர் மாதம் மீண்டும் மண்டைதீவை நோக்கி நகர்ந்து சென்று கோட்டையில் இருந்தவர்களை மீட்டுக் கொண்டு ஊர்காவற்றுறை திரும்பிய வேளையிலும் முன்போலவே குறித்த பாதையிலுள்ள கிராம மக்கள் இடம் பெயர்ந்து மீண்டனர்.
இதன்பிறகு 1991 ஏப்பிரல் வரை ஓரளவு அமைதி, ஒய்ந்திருந்த பாடசாலைகள் இயக்கத் தொடங்கின. பண்ணைப் போக்குவரவு மீண்டும் ஆரம்பமானது. அரசாங்க நிறுவனங்கள் இயங்கின. ஏப்பிரல் 27ஆம் திகதி தீவுப்பகுதியைக் கைப்பற்றும் நோக்குடன் மீண்டும் படை நகரத் தொடங்கவே வேலணை, புங்குடுதீவு, மண்கும்பான், மண்டைதீவு மக்கள் முற்றாக இடம் பெயர்ந்தனர். பாடசாலைகள், பலநோக்குக் கூட்டறவுச் சங்கங்கள், அரசாங்க அதிபர் காரியாலயங்கள், கிராமசேவையாளர்கள் என இடம் பெயர்ந்து மக்களின் அனைத்து அமைப்புகளும் யாழ் நகரில் இடம் பெயர்ந்து தனித்துவமாக இயங்கின. கைப்பற்ற முயன்ற படைகள் தரித்து நிற்காமல் மீண்டும் திரும்பிவிட்டதால் மக்கள் ஊர்திரும்பினர். ஏற்கெனவே மக்களுடன் நகர்ந்த அமைப்புகளும் பாடசாலைகளும் கூட மீளத் திரும்பின. மேலும் அக்டோபரில் படையினர் தீவுப் பகுதியை கைப்பற்ற மீண்டும் முனைந்த போது போனவாறே அன்ைவரும் மீள யாழ் நகருக்கு இடம் பெயர்ந்தனர்.
யாழ் நகரில் விமானக் குண்டு வீச்சும், செல்லடியும் இடைக்கிடை நிகழ்ந்தாலும் அந்த அவலங்களைத் தாங்கிக் கொண்டு 1995 யூலை மாதம் வரை வாழ்ந்தோம். 1995 யூலையில் யாழ் நகரைக் கைப்பற்றவதற்கான படை நகர்வு தொடங்கி நவாலி, மானிப்பாய்,
== 155 س

வட்டுக்கோட்டை, மூளாய்ப் பகுதிகளுக்குப் படையினர் வரவே வலிகாமத்து மக்கள் தென்மராட்சி, வடமராட்சி நோக்கி இடம்பெயர நேர்ந்தது. யாழ் நகரில் இருந்த நாங்கள் தென்மராட்சி மீசாலைக்கு இடம் பெயர்ந்தோம். 10.07.1995இல் இடம் பெயர்ந்த யாம் ப6டயிளர் திடீரெனப் பிடித்த இடங்களைவிட்டு பின் வாங்க நேர்ந்ததால் 16.07.1995இல் யாழ் நகரிலுள்ள வீட்டிற்குத் திரும்பினோம். தொடர்ந்தும் யாழ் நகரைக் கைப்பற்றும் எண்ணத்துடன் படிப்படியாக படையினர் முன்னேறி வரவே மக்களும் இடம் பெயர்ந்தனர். 30.10.1995இல் நாங்களும் யாழ் நகரை விட்டு மீசாலை போனோம். பொருட்களை எடுத்துப் போக வாகன வசதி முறையாகக் கிடையாமல் விலை உயர்ந்த மற்றும் இன்றியமையாத பாவனைப் பொருட்களைக் கூட கைவிட்டு மிகச் சிலவற்றையே கொண்டு போனோம். 05.12.1995இல் வலிகாமம் முழுவதையும் கைப்பற்றிய படையினர் யாழ் நகரில் கொடியேற்றிக் கொண்டாடினர்.
19.04.1996 இல் வலிகாமத்திலிருந்து யாழ் குடாநாட்டின் எனைய பகுதிகளான தென்மராட்சி, வடமராட்சிப் பகுதிகளைக் கைப்பற்றும் படை நகர்வு தொடங்கியது. எதிர்ப்பும் இன்மையால் மறுநாளே வலிகாமத்திலிருந்து புத்தூர் றோட்டால் விரைந்த படையினர் மீசாலைப் புத்தூர்ச் சந்தியை அடைந்து மீசாலையின் வடக்கு எல்லைக்குட்பட்ட தென்மராட்சிப் பகுதியில் சகல கிராமங்களையும் தங்கள் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்தனர். காலை 10 மணிக்கு நாங்கள் மீசாலையில் தங்கியிருந்த வீட்டிற்கு வந்த படையினர் எங்களைச் சோதித்து தொடர்ந்து பல இடங்களுக்கும் சென்றதோடு தங்கி இருக்க பாதுகாப்பு அரண்களையும் அமைத்துக் கொண்டனர். ஏனைய படையெடுப்புப் போலன்றி இப்படை நகர்வு மக்களின் உயிரிழப்பு பெருமளவு ஏற்படாது நிதானமாகவே மேற்கொள்ளப்பட்டமை குறிப்பிடத்தக்கது. இடம் பெயர்ந்து வாழ்ந்த வலிகாமத்து மக்கள் 20.04.1996 இல் வலிகாமத்துக்கு மீளத் தொடங்கினர். நாங்களும் மறுநாள் வானில் வந்தோம். வீட்டுக் கதவுகள் எல்லாம் உடைத்து திறக்கப்பட்டு வீட்டிலிருந்த தளபாடங்கள், உடுப்புகள் அனைத்தும் வெளியே வீசப்பட்டும் காணாமற் போயுமிருந்தன. கொண்டு வந்த
-156

Page 87
பாத்திரங்களைத் தவிர வீட்டில்எதுவும் இல்லை கேற்றும் கூடச் சென்றிக்கு எடுத்துச் செல்லப்பட்டிருந்தது. ஏறக்குறைய ஒரு வாரத்தில் அதைக் கேட்டுப் பெற்றுக் கொண்டேன். மொத்த இழப்பீட்டின் பெறுமதி ரூபா 390000 மூன்று லட்சத்து தொண்ணுறாயிரம் என மதிப்பிட்டு பொலிசில் முறைப்பாடு செய்தேன்.
எங்களோடும் எங்களுரோடுந் தொடர்பான இடப் பெயர்வுகள் பற்றியே எழுதியிருக்கிறேன். இவ்வாறான இடப் பெயர்வுகள் உயிரிழப்புகள் பொருளிழப்புகள் போர் நிகழும் பிரதேசமெங்கும் அவ்வப் போதுநிகழ்ந்து கொண்டு தான் இருந்தன. இருக்கின்றன. இனப்பிரச்சினைக்கு நியாயமான தீர்வு காணும் வரை இலங்கை மக்கள் அனைவரையும் இது பாதிக்கத்தான் செய்யும். ஆரம்பத்தில் சமஷ்டி ஆட்சிகோரி நிகழ்ந்த சத்தியாக்கிரகப் போராட்டம் இப்போது தனிநாடு கோரும் ஆயுதப் போராட்டமாகத்தொடர்கிறது.
-157

Gana
மீளக் குடியமர்வு
வேலணையிலிருந்து இடம் பெயர்ந்து யாழ் நகரில் இல 121, 2ஆம் குறுக்குத் தெருவில் இளைய மகள் இராசமலர் சற்குணநாதனின் வீட்டில் குடியமர்ந்திருந்த நாங்கள் 1995 யூலையில் யாழ்ப்பாணத்தை அரச படைகள் கைப்பற்றத் தொடுத்த உக்கிரமமான போர் நடவடிக்கையால் 30.10.1995 இல் இடம் பெயர்ந்து தென்மராட்சியைச் சேர்ந்து
--l58 ==

Page 88
Gangs
மீசாலையூரில் எனது மூத்த மகள் புஷ்பா கணேசலிங்கம் வீட்டிற் குடியமர்ந்தோம்.
19.04.1996இல் குடாநாட்டின் ஏனைய பகுதிகளான வடமராட்சி தென்மராட்சி பிரிவுகளை நோக்கி புத்தூர் வீதி வழியாக குறித்த பகுதிகளை ஊடறுத்து முன்னேறிய படையினர் 20.04.1996இல் நாங்கள் குடியமர்ந்திருந்த மீசாலை ஊரிற் புத்தூர்ச் சந்தியை அடைந்து முகாமிட்டனர். இதையறிந்த மக்கள் பீதியினால் இடம்பெயர முயன்ற போது கிளாலிக் கடலேரிப் போக்குவரவுதுண்டிக்கப்பட்டிருந்த படியால் போக முடியாத நிலை. அஞ்சிப் பயந்தவர்கள் ஆங்காங்கே ஆலயங்களிலும் பொது நிறுவனங்களிலும் தங்கியிருந்தனர். நாங்கள் குடியிருந்த வீடும் வைத்தியசாலையென விளம்பரப் பலகை போட்டிருந்ததால் அயலிலுள்ளவர்கள் வந்து கூடியிருந்தனர். குறிப்பிடத்தக்க அசம்பாவிதங்கள் எதுவும் இன்றி படைநகர்வுகள் அமைதியாக நிறைவேறின.
23.04.1996 முதல் இடம்பெயர்ந்து போயிருந்த வலிகாமத்து மக்கள் மீளக் குடியமர யாழ் நோக்கி நகரத் தொடங்கினர். நாங்களும் மறுநாள் 24.04.1996 இல் புறப்பட்டோம். பொருட்களை ஏற்றிவரப் போதிய வாகனங்கள் கிடைப்பது சிரமமாய் இருந்ததால், அனைவரும் ஒரு வானில் ஏற்றக்கூடியவற்றை ஏற்றிக் கொண்டுவீடு திரும்பினோம். எனது மகன் இரா.சிவச்சந்திரன் மட்டும் ஏனைய பொருட்களை வான் பிடித்து ஏற்றி வருவதற்காக அங்கு தங்கியிருந்தார். அவரும் இரண்டு வான்களில் அவற்றை ஏற்றிக் கொண்டு வீடு திரும்பினார்.
வீடு திரும்பிய பயணம் மிக நெருக்கடியாயிருந்தது. வண்டி வாகனங்கள் வழியைத் தடைசெய்யாமலும் முட்டி மோதிக் கொள்ளாமலும் ஒரு தொகுதிப் படையினர் போக்குவரவு ஒழுங்குகளை கவனித்ததால் பிரயாணம் சுணங்கினாலும் சுகமாயிருந்தது. காலை 5 மணிக்கு புறப்பட்ட நாம் மாலை 4 மணிக்கு யாழ் நகர் வீட்டிற்கு வந்து சேர்ந்தோம். வீட்டின் முன் கேற்றுகள் இரண்டும் இல்லை. வீட்டிலிருந்த பாவனைப் பொருட்கள், மின்சார, விசிறிகள், றேடியோக்கள், வாத்தியக்
- 159

Gana
கருவிகள், மோட்டார்கள், கட்டில், வாங்கு, கதிரை, மேசை, அலுமாரிகள், காணாமற் போயிருந்தன. சமையல் பாத்திரங்கள் புடவைகள், அலுமினிய சட்டிகள், அம்மி, குளவி, உரல், உலக்கை, புத்தகங்கள், பயில்கள், தண்ணீர் குழாய்கள் முறிந்தும் தகர்ந்தும் உடைந்தும் உக்கியும் வெளியே வீசப்பட்டு கிடந்தன. பூட்டிய கதவுகள் உடைத்துத் திறக்கப்பட்டதால் அனைத்துக் கதவுகளும் சேதமுற்றிருந்தன. கூரைச் சீற்றுகள், உள்ளே அடித்திருந்த சீற்றுக்கள், வயறிங்குகள் சிதைந்தும் உடைந்தும் இருந்தன. இரண்டு மூன்று நாட்கள் கழித்து சென்றிருந்த கேற்றுக்களை மிகச் சிரமத்தின் பேரில் பிரிகேடியரிடம் முறையிட்டுத்தான் பெறமுடிந்தது.
மீளக் குடியிமர்ந்த மக்களுக்கு உணவுப் பொருட்கள், மண்ணெண்ணை மற்றும் பாண், பால்மா வகைகளை இலவசமாகவும் விலைக்கும் கிடைக்க வேண்டிய வழிவகைகளை படையினர் மேற் கொண்டார்கள். யாழ்ப்பாணத் தபாற் கந்தோருக்கு முன்பாக ஒரு தபாற்கந்தோர் இயங்கியது. அங்கு சிங்களவர் ஒருவர் தபாலதிபராக இருந்தார். வெளியூரிலும் கொழும்பிலும் இருந்த பிள்ளைகளுக்கு நிகழ்வுகளை அறிவிப்பதற்காக வந்த மறுநாளே அங்கு சென்று தபால் போட்டேன். சில நாட்களின் பின்பு பெரிய தபால் கந்தோர் திறக்கப் பட்டது. அந்த இடைக்காலத்தில் சிவில் நிர்வாக உத்தியோகத்தர் மூலம் கடிதங்களை அனுப்ப முடிந்தது.
3ஆம் குறுக்குத் தெருவில் ஆஸ்பத்திரி வீதிக்கண்மையில் சிவில் நிர்வாக அலுவகமிருந்தது. மக்களின் முறைப்பாடுகள் போக்குவரவு மற்றும் செய்தித் தொடர்புகளுக்கும் உதவிகள் கிடைத்தன. விமானப் போக்குவரவு, கப்பல் போக்குவரவுகளுக்கு மக்கள் சிவில் நிர்வாக அலுவலகத்தில் பதிவு செய்து போக்குவரவுகளை ஆரம்பித்தார்கள். இன்றுவரை அப்பணி மேலும் விரிவாகச் செயற்படுவதைக் காணலாம்.
மீளக் குடியமர்தவர்கள் தங்களுக்கு ஏற்பட்ட இழப்புக்களைப் பற்றியும் அவற்றின் பெறுமதியையும் வெளிப்படுத்தி யாழ் பொலிஸ்
: ســـــــــــ160-ــــــــــــــــــــــــــــ

Page 89
Ugā ībutī
நிலையத்தில் பதிவு செய்யுமாறும் அதைப் பொறுத்தே அதற்கான இழப்பீடுகளை அரசு வழங்குமெனவும் அறிவிக்கப்பட்டதால் எல்லோரும் கியூவில் நின்று சில நாட்கள் தொடர்ந்து பதிவு செய்தார்கள். நானும் எனக்கேற்பட்ட ரூபா 390,000/- நட்டத்திற்கும் பதிவு செய்தேன். ஆண்டு ஒன்றுக்கு மேலாகியும் அதற்கான இழப்பீடுகள் எதுவும் கிடைக்கவில்லை.
உணவுப் பங்கீடு, மண்ணெண்ணை, மற்றும் பாவனைப் பொருட்கள், சங்கங்கள் மூலமும் வர்த்தகர் தாராளமாகக் கிடைக் கின்றன. மின்சாரம் இரவுக்கு மட்டும் நகரப்புற வீடுகளுக்களுக்கு வழங்கப்படுகிறது. போக்குவரத்துத் தடைகளும் சுற்றிவளைப்புக்களும் ஆரம்பத்தில் இறுக்கமாயிருந் தாலும் தற்போது நடைமுறைச் சிக்கல் ஓரளவு தளர்த்தப்பட்டிருக் கின்றன. தொலைபேசியில் கொழும்புடன் தொடர்பு கொள்ளக்கூடிய வசதியும் உண்டு. தந்திச் சேவைகள் இல்லை. உள்ளூரில் தொலைபேசித் தொடர்புகள் ஓரளவு வழங்கப்படுகின்றன. மேலும் விஸ்தரிக்க நடவடிக்கை எடுக்கப்படுகிறது.
யாழ் நகரிலிருந்து அயற் கிராமங்களுக்கான பஸ் சேவைகள் நிகழ்கின்றன. மேலும் அவை விஸ்தரிக்கப்படுகின்றன. பாடசாலைகள், கல்லூரிகள், வங்கிகள், அரச அலுவலகங்கள் எல்லாம் படிப்படியாக விஸ்தரிக்கப்பட்டு வருகின்றன. யுத்த நடவடிக்கைகளால் மோசமாகப் பாதிக்கப்பட்ட பகுதிகளிற் சில, மக்கள் மீளக் குடியமர்வுக்காக சீரமைக்கப்படுகின்றன. எவ்வாறாயினும் இன்னமுந்தான் மக்கள் முழுப்பேரும் தங்கள் சொந்தக் கிராமங்களுக்குச் சென்று தங்கள் சொந்த வீடுகளில் குடியேறவில்லை. அவ்வாறான சூழ்நிலைக்கு மேலும் சில காலம் தேவை.
யாழ்ப்பாணத்தில் மீளக்குடியமர்ந்து இரண்டு மாதங்களின் பின் நானும் மகனும் வேலணைக்குப் போனோம். அங்கு மரங்களும் எருக்குகளும் வளர்ந்து கட்டிடங்களை மூடி மறைத்துவிட்டன. போக்குவரவுப் பாதைகள் பிரதான வீதிகள் கூட பற்றைகள் வளர்ந்து ஒடுங்கிப்போய் போக்குவரத்துக்கு இடஞ்சலாய் இருக்கின்றன. பிரதேச
-161

செயலகம், வேலணை பலநோக்குச் சங்கம், தபாற்கந்தோர் கிராமசேவையாளர் அலுவலகங்கள், தேநீர்க் கடைகள், சில்லறை விற்பனை நிலையங்கள் தொழிற்படுகின்றன. பாடசாலைகள் சில இயங்கினாலும் ஆசிரியர்கள் யாழ்ப்பாணத்திலிருந்துதான் போய் வருகிறார்கள். ஆங்காங்கே சிறு குழுக்களாய் சில குடும்பங்கள் இருந்தாலும் கிராமம் பார்க்க பற்றையும் குப்பையுமாக பயங்கரமாய் இருக்கின்றது. அவற்றை அகற்றி சுத்தம் செய்வதற்கான உபகரணங்கள் தற்சமயம் அங்கு இல்லை. பிற இடங்களிலிருந்து கொண்டு செல்வதும் சாத்தியப்படக் கூடியதல்ல. குடிநீர் வசதி செய்யப்பட வேண்டும். மின்சார வசதியும் மிக முக்கியம். பனைகள், தென்னைகள் காய்த்துக் கொட்டினாலும் கொப்பறாவும் கோளையும் ஒலைகளும் குப்பைக் குவியலாகத்தான் இருக்கிறது. மேலும் சோடைபற்றிய தென்னை, பனை பயன்தரும் நிலையிலும் இல்லை. கிணறுகள் அசுத்தமடைத்திருப்பதால் குடிநீர் வசதியும் இல்லை. தற்போது குழாய் நீர் வசதி செய்யப்பட்டி ருப்பதாக அறிகிறோம். வசதிக்குறைவால் மக்கள் குடியேறச் சில காலம் செல்லத்தான் போகிறது. அதற்கிடையில் குடியேறும் சிலர் குடியேறாத வர்களின் சொத்தக்களை சூறையாடத் தொடங்கிவிட்டார்கள். கண்டிப்புகள் பத்திரிகை வாயிலாகப் பிரசுரிக்கப்பட்டாலும் மனித சுபாவத்தை மாற்றுவது கடினம். கண்டிப்பான சட்டதிட்டங்கள், பாதுகாப்புகள் பேணப்பட வேண்டும், வீடுகள் முற்றாகச் சூறையாடப் பட்டால் ஓடுகள் கதவுகள் மரங்கள் ஜன்னல்கள் இல்லாமல் குடியேற்றம் நிகழ முடியாது. அவலம்தான் மிஞ்சப் போகிறது. அரசும் பொது ஸ்தாபனங்களும் கூட்டாக நடவடிக்கை எடுக்க வேண்டும், எச்சரிக்க வேண்டும்.நிகழுமா என்பது சந்தேகந்தான்.
இடப்பெயர்வுகளால் இடர்பட்டவர்கள் சொந்த ஊர்களுக்கு மீண்டு வந்ததும் தங்கள் குல தெய்வங்களைப் பூசித்து குடமுழுக்கு கும்பாபிஷேகங்கள் பூசை விழாக்கள் எடுக்கிறார்கள். அண்மைக் காலமாக எங்கும் விமரிசையாக விழாக்கள் நிகழ்வதைக் காண்கிறோம். இந்துக் கோவில், கிறிஸ்தவ ஆலயங்களில் முன்போல முறையான விழாக்கள் பூசைகள் நிகழ்கின்றன. நாங்கள் போன வருடப்பிறப்புக்கு வேலணை அம்மன் கோவிலுக்குச் சென்று பொங்கிப் படைத்து
سے 162 ســـــــــــــــــ

Page 90
Ganīgā
அர்ச் சனை செய்து பூசித்துட்ட பகிர்ந்துண்டு வந்தோம். மீளக்குடியமர்வுக்கு இவை அனைத்தும் மக்களைத் தூண்டுதற்கான உந்து சக்திகள்தான். குளங்கள் நீர்நிலைகளும் அவற்றின் அருகே வழிபாட்டுத் தலங்களும் அவற்றைச் சூழக் குடியிருப்புகளும் அமைந்துதான் ஆதியில் கிராமங்கள் உருவாயின. அந்த நிகழ்வைத்தான் தற்போதைய நடைமுறைகளும் பிரதிபலிக்கின்றன. புங்குடுதீடு, வேலணை, சரவணை, நாரந்தனை, கரம்பன், ஊர்காவற்றுறைப் பகுதியில் குடியேறிய மக்களில் சிலர் தங்கள் வீடுகள் தூரத்திலிருப்பதால் கிட்டவுள்ள குடியேறாத வீடுகளில் குடியிருக்க வேண்டியிருக்கிறது. எவ்வாறாயினும் குடியேறி ஒருவர் சொத்தை மற்றவர் பாவித்தாலும் பாதுகாத்துக் கொண்டால் இயல்பாக மேலும் குடியேறும் போக்கு விருத்தி அடையுமென்பதில் ஐயமில்லை.
நாங்கள் 1996 ஆனி மாதம் போய்ப் பார்த்த போது வீட்டுத் தளபரடங்கள் சில உக்கிப் போனதைத் தவிர எல்லாம் இருந்தன. வீட்டுக் கூரை, யன்னல், கதவுகள், பூட்டுகள் பழுதாகவில்லை. பிறகு போய் வந்த போது இருந்தவை படிப்படியாக களவுபோயிருந்தன. அலுமாரிகள். சோக்கேசுகள், விறாக்கிகள், மேசைகள், பூச்சாடிகள் இல்லை. முகட்டு ஒடுகள் கூட சிதைக்கப்பட்டிருந்தன. வீட்டுக்குள் மாட்டை விட்டு அடைத்துப் பிடித்ததால் ஜன்னல் கண்ணாடிகள் நொருங்கிப் போயின. பாதுகாவலுக்கு யாரையும் அமர்த்தலாமென்றாலும் தனித்திருக்க அஞ்சுகிறார்கள். இவ்வாறன சிக்கல்கள் எமதுரில் மட்டுமல்ல ஏனைய பல கிராமங்களிலும் உண்டு. வேலணையில் வேலி அடைத்து கதவுகளைப் பூட்டி கேற்றைச் சாத்தி வைத்தாலும் அவை பிரிக்கப்படுகின்றன. திறக்கப்படுகின்றன. இடைக்கிடை போய் செப்பனிட்டு பார்த்து வருகிறோம். எவ்வாறாயினும் பின் தங்கிய கிராமங்களில் மீளக் குடியமர்வுகள் பூரணமடைய மேலும் சில காலம் செல்லும்.
H163


Page 91