கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: கொழுந்து 1996.06-07

Page 1
க்க
丽 食 3 蛋 班 ? Ģ 翔
 


Page 2
ர் மலையக கலை இலக்கியப் \!
15வது ஆண்டு விழாவிற்கு நல்வாழ்த்துக்கள்
(0.6
2ష్ట్ర
ваNI GRINDING MILLS
219, MAINSTReeT MATAU 6-SR UANKA. Phone:06.6-94.95
WIJAYA GENERAL STORES : (Agro Service Centre) : --- Dealers:Agro Chemicals, Sprayers
Ε ertilizer & Ve getable Seeds. :
No.85, sRI RATNAJoTHY SARAVANAMUTTU MAWATHA
COLOMBO 13.T.P.:3270 ääginis.
 

சரித்திரம் படைத்த
சாதனை வீரன்
கரங்களின் கம்பீர பாஷை *கிரிக்கெட்" - முடியுமானால் தேசத்தின்
மொழியாகட்டும்! துப்பாக்கிகள்
விடுத்து துடுப்பெடுப்போம்!
இது முத்தையா முரளிதரன் சொல்லும் பாடம்.
கவிஞர். சு. முரளிதரன்

Page 3
தலைநகரில் தரமான தமிழ் நூல்களுக்கு
பூபாலசிங்கம் புத்தகசாலை
POOBALASINGHAMBOOKDEPOT
Book - Sellers, Stationers, Neus sagents, Publishers Importers & exporters
TRUST COMPLEX, 340 SEA STREET, (COLOMB(I) - || 1 TEL. 422321
/།
 
 
 
 
 
 
 
 

வெள்ளம் போல் கலைப் பெருக்கும் கவிப்பெருக்கும் மேவுமாயின் பள்ளத்தில் வீழ்ந்திருக்கும் குருடரெல்லாம் விழி பெற்று பதவி கொள்வார்
- பாரதி
ஆசிரியர் ܫ�ܲܧ
6&BTU 5ġ இதழ் எட்டுஅந்தனி ஜீவா
அன்புள்ளங்கொண்டவர்களே,
மீண்டும் " கொழுந்து” வெளிச்சத்திற்கு வருகிறது. முதல் இதழ் 1988ம் ஆண்டு ஜனவரியில் மலர்ந்த கொழுந்து ஏழு இதழ்களுடன் அதன் பயணத்தை நிறுத்திக் கொண்டது மீண்டும் புதிய ஜனனம்! மலையக இலக்கிய வளர்ச்சிக்காக தன் பணியினை தொடர்கிறது. மீண்டும் . புதிய விடியலை தேடி பயணம் தொடர்கிறது.
"கொழுந்தின்” பிரசன்னம் மிக அவசியமாக உணரப்படுகிறது. எனவே, மீண்டும் அக்கினிப்பரீட்சைக்கு எம்மை ஐக்கியப்படுத்துகிறோம்.
ťů). (2) జ్ఞ
Type setting By Color Graphic
Printed By Laxsu Graphic (Pvt) Ltd.
கொழுந்து

Page 4
கடவுளாக வேண்டும் ! தான்தோன்றிக் கவிராயர்
கடவுளாக வேண்டும் - நானோர் கடவுளாக வேண்டும் - சொல்லின் கடவுளாக வேண்டும்:
உலக மெங்குமுள மனித ரெல்லவரும் ஊழி காலமெனை உள மிருத்தவே, தலை சிறந்ததாய், நான் இனித்தசெந் தமிழிலே கவிதை தான் படைத்திடுங் கடவுளாக வேண்டும் - படைத்தற் கடவுளாக வேண்டும்: நல்லதென்றென துள்ளும் உள்ளுகிற நனிசிறந்த தமிழ் அறமெல்லாம், உலகில் வல்ல ஆயுளொடு வாழ, என்கவிதை வாக்கினால், அவைகள் காக்கு மாற்றலின்
கடவுளாக வேண்டும் - காத்தற் கடவுளாக வேண்டும்:
எங்கு செந்தமிழர் வாழ் விடர்ப்பிடியில் இட்டெவர் வரினும், எனது தீயுமிழும் அங்கதக் கவிதை விழியினால், அவர்கள் அற்று நீறுபட இற்றழித்திடுங் கடவுளாக வேண்டும் - அழித்தற் கடவுளாக வேண்டும்: கடவுளாக வேண்டும் . நானோர் கடவுளாக வேண்டும் சொல்லின் கடவுளாக வேண்டும்.
("தான்தோன்றிக் கவியராயர் என்ற புனைப்பெரில் அங்கதச் சுவை மிகுந்த பாடல்களை எழுதித் தனக்கென ஒரு பாதை வகுத்துக் கொண்டவர் சில்லையூர் செல்வராசன். அரசியல் தலைவர்களை அதே பாணியில் கவிதையில் அறிமுகஞ் செய்து வைத்து தன்னை மறக்காதபடி செய்துவிட்டார்: "நேற்று, இன்று, நாளை” என்ற தலைப்பில் பனையரசன் நாடகத்தை அவர் அரங்கேற்றினார். வானொலி நாடகங்களை எழுதியும் நடித்தும் வருபவர். கவி அரங்குகளுக்குத் தலைமை தாங்கிக் கவிஞர்களைத் தன் கவிதைப் பாணியிலேயே அறிமுகஞ் செய்வதிற் பேர் பெற்றவர்: இலங்கையில் குறிப்பிடத்தக்க விமர்சகர். அவரது இறவாத கவிதைகளில் இதுவும் ஒன்று. இவர் 14.10.1995 அன்று அமரரானார்.)
கொழுந்து 2
 

- அந்தனிஜீவா. “இலங்கை தமிழ் இலக்கியத்திற்கு மலையகம் புது ரத்தம் பாய்ச்சியது” என பேராசிரியர் கைலாசபதி பெருமையுடன் குறிப்பிட்டார். மலையக இலக்கிய வளர்ச்சிக்கு பெரும் பணியாற்றி முன்னோடியாக திகழ்ந்தவர் தேச பக்தன் கோ. நடேசய்யர். இவரது இலக்கிய தொழிற்சங்க பத்திரிகைப் பணிகளுக்கு பெரும் துணையாகவும் தூண்டுகோலாகவும் விளக்கியவர். அவரது துணைவியார் திருமதி. மீனாட்சி அம்மையார்.
இதே போல மலையகக்கவிதை துறைக்கு முன்னோடியாகத் திகழ்ந்தவர் அருள்வாக்கி அப்துல்காதர் புலவர் ஆவார்.
மலையக இலக்கியத்தின் தோற்றுவாயைப் பார்த்தால்நூற்றாண்டு பழம் பெறுமைமிக்க வாய்மொழி இலக்கியமான நாட்டார் பாடல்களுடன் தொடர்கிறது. 1824ல் தான் மலையக மக்களின் வருகை தொடங்குகிறது. இவர்கள் புலம் பெயர்ந்து வந்த ஒரு நூற்றாண்டுக்குப் பின்னர் தான் இவர்களின் ஆக்க இலக்கிய முயற்சிகள் மழை தூறல்கள் போல் ஆரம்பமாகின்றன.
இத்தகைய முயற்சிகள் மேடைப் பாடல்களாக, துண்டுப்பிரசுரங்களாக பொதுமக்கள் கூடி நிற்கும் இடங்களில் பாடி விற்பனை செய்யும் பாடல் புத்தகங்களாக, பத்திரிகைகளாக, துண்டுப்பிரசுரங்களாக பிரசுவிக்கப்பட்டன. 1930களில் இத்தகைய முயற்சிகளுக்கு முன்னோடியாகவும், முதல்வராகவும், பிதாமகனாகவும் திகழ்கிறார் கோ. நடேசய்யர். 1950களுக்குப் பின்னர் மலையக இலக்கியத்தில் புதிய வேகம் பிறக்கத் தொடங்கியது. இதற்கு முன்னோடியாகத் திகழ்ந்தவர் மலையக மக்கள் கவிமணி சி.வி. வேலுப்பிள்ளை.
1960களுக்குப் பின்னர் மலையக இலக்கியத்துறையில் புதிய பார்வையும், புதிய வீச்சும் உதயமாகியது. இங்கு வெளிவந்த தேசிய தினசரிகள் மலையக எழுத்தாளர்களின் படைப்புகளுக்கு முக்கியத்துவம் அளித்தன.
மலைநாட்டு நல்வாலிபர் சங்கம், மலையக இளைஞர் முன்னணி, மலைநாட்டு எழுத்தாளர் மன்றம், இலங்கைத் திராவிடர் முன்னேற்றக் கழகத்தின் செயற்பாடுகள். “மலைமுரசு’ போன்ற சஞ்சிகைகள் மலையக எழுத்தாளர்களுக்கு ஊக்கமும் உற்சாகமும் அளித்தன. மலையக எழுத்தாளர்களின் பணிகள் தொடர்ந்தன.
ஆனால், எழுபதுகளின் பிற்பகுதியில் ஒரு தேக்க நிலை ஏற்பட்டது,
கொழுந்து 8

Page 5
மலையக இலக்கிய வளர்ச்சிக்காக செயல்பட்ட பலர் மெளனமாகிவிட்டனர். மீண்டும் மலையக கலை இலக்கியத் துறையில் மறுமலர்ச்சியையும், மாற்றத்தையும் ஏற்படுத்த வேண்டும் ஆர்வம் நீண்ட நாட்களாக என் இதயத்தில் குடி கொண்டு இருந்தது.
அதே போல 1978ம் ஆண்டு தமிழ் நாட்டில் திருப்பூரில் நடைபெற்ற தமிழ்நாடு கலை இலக்கிய பெருமன்ற மாநாட்டில் இலங்கை பிரதிநிதியாகக் கலந்து கொண்டு திரும்பிய பின்னர் மலையத்திலும் இது போன்ற அமைப்பை உருவாக்க வேண்டும் என்ற எண்ணத்தை செயல்படுத்த ஆரம்பித்தேன்.
அப்பொழுது கொழும்பில் வாரத்திற்கு ஒரு தடவை நான் சந்தித்து உரையாடும் மக்கள் கவிமணி சி.வி.வேலுப்பிள்ளை பல அரிய ஆலோசனைகளை கூறி இலக்கிய அமைப்பை அமைக்க தூண்டு கோலாக விளங்கினார்.
மலையக இலக்கிய முன்னோடியான சு.ப.சிவம் கவிஞர் மலைத்தம்பி, ஏ.வி.வி. கோமஸ், மாணவாராக இருந்த முரளிதரன் ஆகியோர் கலந்து பேசி மலையக கலை இலக்கியப் பேரவை என்ற அமைப்பை உருவாக்கினோம். 1980ம் ஆண்டு டிசம்பர் இதன் அங்குரார்ப்பன விழா கண்டி “ரொச்டேல்" மண்டபத்தில் நடைபெற்றது.
மலையகத்தின் மூத்த கவிஞான சி.வி. வேலுப்பிள்ளை, “செய்தி” அதிபர் ரா.மு. நாகலிங்கம், டெயிலிமிரர் செய்தி ஆசிரியர் பொ. கிருஷ்ணசுவாமி, இலக்கிய ஆர்வலர் எம். ரெங்கநாதன் ஆகியோர் ஆலோசனையுடன் மலையக கலை இலக்கியப் பேரவை செயல்படத்தொடங்கியது.
பேரவையின் முதல் தலைவராக க.ப. சிவம், செயளாளராக அந்தனிஜிவா, பொருளாளராக எம். சுப்பிரமணியம் ஆகியோர் தெரிவு செய்யப்பட்டார்கள். மூன்றாண்டுகளுக்குப் பின்னர் திரு. ஏ.லி.பி. தோமஸ் தலைவராக தெரிவு செய்யப்பட்டார். அதன் பின்னர் 1986ம் ஆண்டு திரு சாரல் நாடன் தலைவராக தெரிவு செய்யப்பட்டார்.
மலையக கலை இலக்கியப் பேரவை இலக்கியச் சந்திப்பு, நூல் அறிமுகம், கருத்தரங்கு, எழுத்துப்பயிற்சி பட்டறை பேர்ன்ற நிகழ்ச்சிகளை கொழும்பு, கண்டி, கேகாலை, மாத்தறை, ஹட்டன், கொட்டகலை, தலவாக்க்லை, அக்கரபத்தினை, நுவரெலியா, அப்புத்தளை, பதுளை போன்ற பல இடங்களில் நடத்தியுள்ளது.
பேரவை அறுபதுகளில் எழுதிய தீவிரமாக எழுத்தாளர்களைத்
கொழுந்து 4

தேடிப்பிடித்து எழுதத்துாண்டியது. இதன் விளைவு பத்தாண்டுகளாக எழுத்துலகிலிருந்து விடுபட்டு "வனவாசம்” செய்த சாரல் நாடன் மீண்டும் புதிய உற்சாகத்துடன் எழுதத்தொடங்கினார். சாகித்திய மண்டல விருதினையும் பெற்றார். கவிஞர் குறிஞ்சி தென்னவன், பண்ணாமத்து கவிராயர் போன்றவர்கள் புதிய உற்சாகத்துடன் எழுதினார்கள். இப்படி பழைய் புதியவர்களை ஊக்குவிப்பதில் பேரவை முன் நின்று செயல்பட்டது.
மலையக இலக்கிய முன்னோடியும் மூத்த எழுத்தாளருமான சி.வி. வேலுப்பிள்ளை ஐம்பதாண்டு எழுத்துலக நிறைவை கெளரவிக்குமுகமாக மலையக கலை இலக்கியப் பேரவை 1981ம் ஆண்டு கொழும்பு மா நகரில் தமிழ்ச்சங்க மண்டபத்தில் தினகரன் பிரதம ஆசிரியர் திரு. ஆர். சிவகுருநாதன் தலைமையில் விழா எடுத்து கெளரவித்தது. இவ்விழாவின் போது பேராசிரியர் கைலாசபதி அவர்களைக் கொண்டு சி.வி. யைப்பற்றிய ஆய்வுரை ஒன்றை நிகழ்த்த வைத்து "மக்கள் கவிமணி” பட்டத்தை வழங்கி கெளரவித்தது.
மக்கள் கவி மணி ஆய்வரங்கு
மலையக மக்கள் கவிமணி சி.வி வேலுப்பிள்ளை அவர்களை வாழும் பொழுதே கெளரவித்து பெருமைப்படுத்திய மலையக கலை இலக்கியப் பேரவை அவர் மறைந்த பின்னரும் உரிய முறையில் அஞ்சலி செலுத்தியதுடன் சி.வி வேலுப்பிள்ளையை உருவப்படத்துடன் மரணச் செய்தியை தொலைக்காட்சியில் ஒளிபரப்புவதற்கும், இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தில் மும்மொழிச் சேவையிலும் மரணச் செய்தியை ஒலிபரப்புவதற்கும் விஷேட அஞ்சலி நிகழ்ச்சி ஒன்றினை உடனடியாக ஒலிபரப்புவதற்கு காரணியாக இருந்தது. சி.வி.யின் முதலாவது நினைவு தினத்தை நினைவு கூறும் முகமாக “சி.வி. ஆய்வரங்கு” ஒன்றை அட்டன் நகர மண்டபத்தில் 01.12.1985 அன்று நடத்தியது. இந்த ஆய்வரங்கில் திரு. சாரல்நாடன் நிகழ்த்திய கருத்துரையே பின்னர் நூலுருவில் வந்தது.
ஐந்தாவது ஆண்டு விழா
மலையக கலை இலக்கிய பேரவையின் ஏற்பாட்டில் ஐந்தாண்டு நிறைவாக மலையக எழுத்தாளர் மகாநாட்டை 1986ஆம் ஆண்டில் டிசம்பர் மாதம் முழுநாள் விழாவாக மலையக இலக்கிய முன்னோடி திரு. தமிழோவியன் தலைமையில் நடத்தியது. மகாநாட்டை மூதறிஞரும், திருக்குறளை சிங்களத்தில் மொழிப்பெயர்த்தவருமான பெரியார் பூரி சார்ள்ஸ் சில்வா தொடக்கி வைத்தார். வண. பிதா போல் கெஸ்பர்ஸ் சிறப்புரையாற்றினார். இவ்விழாவின்போது திரு. காரல்நாடன் எழுதிய “சி.வி. சில சிந்தனைகள்” சு. முரளிதரனின் மலையகத்தின்
கொழுந்து 5

Page 6
முதல் புதுக் கவிதைத் தொகுதியான "தியாகயந்திரங்கள” வெளியிடப்பட்டன. குறிஞ்சி தென்னவன் தலைமையில் கவியரங்கு, க.ப சிவத்தின் தலைமையில் கலந்துரையாடல் நீடைபெற்றது. மாலையில் மலையக இலக்கிய முன்னோடிகள் ஏழு போருக்கு பிரதேச அபிவிருத்தி அமைச்சர் திரு. செல்லையா இராசதுரை பொன்னாடை போர்த்தி கெளரவித்தார். பின்னர் அவர்கள்ை அமைச்சின் மூலம் கெளரவித்து பொற்கிழியும் வழங்கினார்.
தேச பக்தன் கோ நடேசய்யர்
இலங்கையின் தமிழ் தினசரியின் முன்னோடிகளில் ஒருவரும் மலையக தொழிற்சங்க பிதாவும், படைப்பிலக்கிய முன்னோடியான மறைக்கவும், மறக்கப்பட்டிருந்த கோ. நடேசய்யர் அவர்களின் பணியினையும், தொண்டினையும் நாடறியும் வண்ணம் கட்டுரைகள் எழுதியும் கருத்தரங்கு நடத்தியும் மீண்டும் நடேசய்யரின் பெயரை மக்களுக்கு அறிமுகப்படுத்தியது.
மலையக கலை இலக்கியப் பேரவையின் பத்தாவது ஆண்டு விழா (10.12.89) தலைவர் சாரல் நாடன் தலைமை சத்தியோதய மண்டபத்தில் நடைபெற்றது. "மலையக இலக்கிய வளர்ச்சி” என்ற தலைப்பில் பேராதனை பல்கலைக்கழக சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி அருணாசலம் ஆய்வுரை நிகழ்த்தினார். பின்னர் க.ப சிவம் தலைமையில் கலந்துரையாடல் இடம்
பெற்றது.
மலையக கலை இலக்கியப் பேரவையின் செய்ற்பாடுகள் அனைத்தும் காற்றோடு காற்றாக கலந்து விடாடலிருக்க அதன் சகோதர நிறுவனமாக மலையக “வெளியீட்டகத்தை" நிறுவினோம். 1986ம் ஆண்டு அமைக்கப்பட்ட அதே நிறுவனம் கடந்த பத்தாண்டுகளில் 15 வெளியீடுகளை பிரசுவித்துள்ளது. அதன் பிரசுரங்கள்
சி.வி. சில சிந்தனைகள்
-சாரல் நாடன்- 17.50 தியாக யந்திரங்கள்
-சு. முரளிதரன்- 1.00 குறிஞசி தென்னவன் கவிதைகள்
-குறிஞ்சி தென்னவன். 12.00
கொழுந்து - 6

யெளவனம்
-தேவதாசன் ஜெயசிங். 25.00 கூடைக்குள் தேசம் -சு. முரளிதரன். 0.00.
தேசபக்தன் கோ. நடேசய்யர் (இலங்கை சாகித்திய மண்டல பரிசு ப்ெற்றது)
-சாரல் நாடன்- 75.00 ஒவியம் -சி.ஏ. எலியாசன். 0.00 லாவண்யம் -தேவதாசன் ஜெயசிங்- 25.00 மேகமலைகளின் ராகங்கள் -மொழிவரதன்- 19.50 காந்தி நடேசையர் -அந்தனி ஜீவா- 10.00 லயத்துச் சிறைகள் -தி.ஞானசேகரன் 50.00 THE HILL COUNTRY IN SRI LANKAN TAM LITERATURE 25.00 -ANTHONYJEEVAமலையகமும் இலக்கியமும் -அந்தனிஜிவா 65.00 காற்றின் மெளனம் - பண்ணாமத்து கவிராயர் 50.00 கவ்வாத்து
- தி.ஞானசேகரன் 50.00
பயணம் தொடர்கிறது
மலையக கலை இலக்கியப் பேரவையும் அதன் சகோதர் வெளியீட்டு நிறுவனமான மலையக வெளியீட்டகமும் மலையக கலை இலக்கிய வளர்ச்சிக்கு தொடர்ந்து தனது பங்களிப்பை செய்யும்.
இனி, வரும் காலங்களில் நாம் புதிய வரலாறு படைப்போம் என்ற நம்பிக்கை உமக்குண்டு. பாதை தெரிகிறது ! பயணம் தொடர்கிறது.
கொழுந்து 7

Page 7
மலையக கலைஇலக்கியப் பேரவையின் 5வது ஆண்டு விழாவில் கெளரவிக்கப்பட்டவர்கள்
1. பூணீ. சார்ள்ஸ் த. சில்வா
(திருக்குறளை சிங்கமொழியாக்கம் செய்தவர்)
2. திரு. என்.எஸ்.எம். ராமையர்
(மலையக சிறுகதை முன்னோடி)
3. திரு. க.ப. சிவம்
(மலையக பத்திரிக்கைத்துறை முன்னோடி)
4. திரு. சாரல் நாடன்
(மலையக இலக்கிய முன்னோடி)
5. திரு. பண்ணாமத்து கவிராயர்
(D606)u 85 கவிதை முன்னோடி)
6. திரு. குறிஞ்சி தென்னவன்
(மலையக கவிதை முன்னோடி)
7. திருமதி. நயிமா ஏ.சித்திக்
(மலையக பெண் படைப்பாளி)
/
CENTRAL ESSENCE SUPPLIERS
(Suppliers to Confectioners & Bakers)
င္ငံမ္ဘီ၊ སྤྱི་ སྤྱི་
76/ B, King Street, KondŲ - Sri Lanko T. Phone O8-94.87
三ク ܠܐ
கொழுந்து 8

இலங்கை மலையகத்தில் - தோட்டப்புற மக்களின் இருள் நிரம்பிய வாழ்க்கையில் விடியலுக்காக உழைத்தவர்கள் என ஒரு தம்பதியினர் கோ. நடேசய்யரும் அவரது மனைவி மீனாட்சியம்மாளும் ஒரளவுக்கேனும் இன்று அறியப்பட்டுள்ளனர். Yሩ
இதே வரிசையில் வைத்து பேசப்பட வேண்டிய இன்னொரு தம்பதியினருமுண்டு. இத்தம்பதியினரும் நடேசய்யர் காலத்தில் இலங்கையில் வாழ்ந்தவர்களே, கே. சத்யவாகீஸ்வரய்யரும் அவருடைய மனைவி நல்லம்மாளும் இந்த சிறப்புக்குரியவர்கள்.
சத்யவாகீஸ்வரர், சென்னையில் பயின்றவர். பீ.ஏ.பட்டதாரி. கொழும்பில் அட்வகேட்டாக பணியாற்றியவர். அவரது மனைவி நல்லம்மாள் மருத்துவம் பயின்றவர், டாக்டர் தொழில் புரிந்தவர், இலண்டன் எடின்பரோவிலும்டப்ளினினும் படித்து L.R.C.S பட்டமும் LM, பட்டமும் பெற்றவர். சுன்னாகம் இணுவிலில் அமைந்திருந்த மெக்லியட் மருத்துவமனையில் சிறிது காலம் பணியாற்றியவர், இந்த மருத்துவனை 1898ல் ஆரம்பிக்கப்பட்டு, தமிழ் மக்களுக்கு அளப்பறிய பணியாற்றியுள்ளது.
இத்தம்பதியினரின் வீடு கொழும்பில் அமைந்திருந்தது. இருவருமே எழுதவும், கூட்டங்களில் பேசவும் திறமைப் பெற்றிருந்தனர். சத்யாவாகீஸ்வர அய்யர் தோட்டமக்களின் விடுதலைக்குழைப்பதில் தமது சட்ட அறிவைப் பயன்படுத்தினார். அவர்களுக்காக, எவ்விதபணமும் பெற்றுக்கொள்ளாது வழக்காடினார்.
"இரத்னபுரி பகுதியில் - மூத்தண்ணன் கொலை வழக்கில் முதன்முதலாக ஆஜரானேன்.” அதுவே அம்மக்களோடு எனக்குண்டான முதல் தொடர்பு என்று கண்டி நகர சபை மண்டபத்தில் நடந்த கூட்டம் ஒன்றில் (28.10.1931) பேசியுள்ளார்.
இந்திய மக்கிளின் அவலத்தைக் துடைப்பது மாத்திரமல்ல அவர்களுக்குக் கெதிராக வீசப்படும் அவதூறையும் சத்யாவாகேஸ்வரர் வெறுத்தார். "நம்மை அடிமை என்றும் படிப்பறிவில்லாதவர்களென்றும் கூறுகிறார்களே. இதை மாற்றியமைக்க நமக்கு பத்திரிகை அவசியம்” என்று
கொழுந்து 9

Page 8
இன்னொரு கூட்டத்தில் (4.11.1928) நாவலப்பிட்டி கதிரேசன் மண்டபம் வலியுறுத்துகின்றார்.
தனது இந்தக்கருத்தை அவரே செயல்படுத்தவும் செய்தார். "இலங்கை இந்தியன்” என்ற பெயரில் "இந்தியர்களும் மனுஷர்கள்தான் என்று காண்பிக்கும் பொருட்டு தமிழிலும் இங்கிலீசிலும் பத்திரிகைகள் நடாத்த வேண்டும்” என்று தான் கூட்டத்தில் கூறியதற்கினங்க ஆங்கிலத்திலும் தமிழிலும் பத்திரிகைகளை ஆரம்பித்து நடாத்தினார்.
“இலங்கை இந்தியரின் நலவுரிமைக்காக உழைத்துவரும் ஓர் சிறந்த தமிழ்வாரப்பத்திரிகை” என்ற குறிப்பு அதன் தமிழ்ப்பதிப்பில் காணக்கிடக்கிறது. புதன்கிழமை தோறும் வெளியான அந்தப்பத்திரிகை சிறிது காலமே வெளிவந்தபோதும், வெளிவந்த காலப்பகுதியில் மிகச்சிறந்த பணியாற்றியுள்ளது. இந்தியதேசிய எழுச்சிக்குறித்தும், பெண்களின் வாக்குரிமைப் பற்றியும் தொடராக கட்டுரைகள் வெளியாகியுள்ளன.
சத்யவாகேஸ்வரர் ஆரம்பத்தில் நடேசய்யருக்கெதிரான கருத்துக்களை கொண்டவராகவே இருந்துவந்துள்ளார். நடேசய்யரின் தீவிரக் கொள்கைகளில் அவருக்கு நம்பிக்கையிருக்கவில்லை. கவியரசர் ரவீந்தரநாத்தாகூர் இலங்கைக்கு வந்தபோது அவருடன் ஆண்ட்ரூஸ் அவர்களும் வந்திருந்தார். இந்தியமக்கள் பெளத்தத்தைக் கற்று சிங்களவர்களுடன் ஒன்றாக வாழவேண்டும் என்ற அவர்களின் கருத்தை "ஆண்ட்ருஸின் பேருரை” என்று தலைப்பிட்டு வெளிடவும் செய்தார். (1928) மத்தியமாகாண இந்தியர்சங்கம், காந்தி சங்கம்(1922) என்ற அமைப்புக்களிலெல்லாமிருந்து செயற்பட்ட இவர் 1930க்குப் பின்னர் நடேசய்யருடன் இணைந்தார். அவரின் அரசியல் சகாவானார்: அவருக்காக வழக்காடுபவரானார்: அரசியல் கூட்டு நடவடிக்கைகளின் போது நடேசய்யரைப் பிரிதிநிதித்துவம் பண்ணினார்.
தோட்டமக்களின் பொருட்டு சத்யாவாகேஸ்வரர் தோன்றிய வழக்குகளில் குறிப்பிடவேண்டிய ஒன்று "முத்துசாமி வழக்கு” ஆகும். "முத்துசாமி வழக்கு” என்று தலைப்பிட்டு இலங்கை, இந்தியன் பத்திரிகையில் ஆசிரியர் தலையங்கம் எழுதப்படும் அளவுக்கு அந்த வழக்கு பரபரப்பான ஒன்றாக அன்று கருதப்பட்டது.
மாத்தளைப்பகுதியைச் சேர்ந்த தோட்டம். அங்கு தொழிலாளியாக வேலை செய்தவன் முத்துசாமி. தோட்டத்துரை, இங்கில்ஸ் என்ற வெள்ளைக்காரர். வேலைத்தகராரில் முத்துசாமிக்கு நோட்டீஸ் கொடுத்து விட்டார். அக்கால நடைமுறைப் படி முத்துசாமி அதற்குபின்னால் அத்தோட்டத்தில் குடியிருக்கமுடியாதது மட்டுமல்ல, அந்த எல்லைக்குள்ளும் கால் வைக்கவும் முடியாது. ஆனால் முத்துசாமியின் உடன்பிறந்த சகோதரி அதே தோட்டத்தில்தான் இருந்தாள். அவளைப்பார்க்க வந்த முத்துசாமியைப் பொலிஸில் பாரம்
கொழுந்து 10

கொடுத்தார் தோட்டத்துரை. வழக்கை விசாரித்தவர் டெனிசர் என்ற வெள்ளைக்காரர், மாத்தளை நீதவானாக அப்போது கடமையாற்றியவர். தீர்ப்பு பத்துவருட கடுங்காவல் தண்டனை. பத்தொன்பதாம் நூற்றாண்டில் தோட்டப்பகுதிகளில் இதைவிட பயங்கரம் நிலவியுள்ளது - அதர்மம் தலைவிரித்தாடியுள்ளது, கொடுங்கோல் தர்பார் நடந்திருக்கிறது. எனினும் தோட்டப்பகுதி மக்களிடையே 1920களின் பின்னர் ஒருவித விழிப்பு ஏற்பட்டருந்தது. பத்திரிகை வாசிக்கும் பழக்கம் மக்களிடையே ஆரம்பமாகியிருந்தது: அவர்களுக்கென பத்திரிகைகள் சில நடைபெற்றுக்கொண்டிருந்தன. நடேசய்யரும் அவரது மனைவியும் தோட்ட மக்களிடையே நம்பிக்கை விருட்சத்தை வளர்த்தெடுத்துக்கொண்டிருந்தனர். எல்லாவற்றுக்கும் மேலாக மனிதகுலத்தை நேசிக்கவந்த மகாத்மாகாந்தி 1927ம் ஆண்டு இலங்கை வந்து போனபின்னர் இம்மக்களுக்கு வாழ்க்கையில் ஒரு பிடிப்பு ஏற்பட ஆரம்பித்திருந்தது. இப்படியான நிலைமையில் 1928ம் ஆண்டு, தோட்டத்துக்குள் சென்று சொந்த சகோதரியைப் பார்க்க முனைந்த ஓர் ஏழை உழைப்பாளிக்குப் பத்து வருட கடுங்காவலா? இதைப்பார்த்துக் கொண்டுவாழா விருப்பதா? இந்திய கவர்மெண்ட் ஏஜண்டாக இருந்த எம்.எஸ்.ஏ ஹைதாரித்தலையிட்டார். வழக்கு சுப்ரீம் கோர்ட்டுக்கு விசாரணைக் கொடுக்கப்பட்டது.நூறு ரூபாய் தண்டனை என மறுதீர்ப்பானது. இந்த வழக்கில் முத்துசாமிக்காக வாதிட்டுப் பெருமைத்தேடிக் கொண்டவர் நமது சத்யவாகேஸ்வரர்தான்.
இதே விதத்தில் கொழும்பு, தெஹிவளையில் சில்லறைக் கடை வைத்திருந்தார் துரைசாமி நாடார். லியான் என்ற பெயருடைய சிங்களவன், துரைசாமி நாடாரின் கடையைத் தாக்கிச் சேதப்படுத்தினான். கொழும்பில் வழக்குப்பதிவாகி விசாரணைக்கு வந்தபோது இந்தியவம்சவளியினரின் வழக்குகள் கிராமக்கோர்ட்டுகளில் மாத்திரமே விசாரணை செய்யப்படலாம் என்று கூறப்பட்டு மாஸிஸ்ட்ரேட் கோர்ட்டில் விசாரிக்கப்பட முடியாதென்று தள்ளுபடி செய்யப்பட்டது. இந்த வழக்கில் தோன்றிவாதிட்ட சத்யவாகேஸ்வரர் இந்தியவம்சாவளியினர் இலங்கைத்தீவில் அநுபவிக்கும் மனிதாபிமானமற்ற கொடுமைகளை வெளிக் கொண்டுவந்தார். மிகுந்த சிரமங்களுக்கு மத்தியில் மேற்கொள்ளப்பட்ட இதுபோன்ற முயற்சிகள் தான் இரண்டுதலைமுறைகளுக்குப் பின்னராவது இத்தகு கொடுமை அழிவதற்து வழிபிறந்துள்ளது. இவரது மனைவி - டாக்டர் நல்லம்மாள் சாந்த சொரூபி நோயளிகளிடம் அன்பும் அக்கறையும் மிக அவர்களைக் கவனிப்பார். சிந்தனையிலும் செயலிலும் நோய்பரவுவதை அவர் அநுமதித்ததில்லை.
ஆட்சியாரால் இலங்கையிலிந்து மணிலால் நாடுகடத்தப்பட்ட போது காலிமுகத்திடலில் நடந்த பொதுக்கூட்டத்தில் அவரது முழக்கத்தை இந்த நாடு கண்டது. அரசியலில் அரிவையர் ஆற்றிடும் பங்கினை விவரித்தார்.
கொழுந்து

Page 9
மாதர்கள் அடிமை நிலையிலிருப்பதை அறவே வெறுத்த அவர் தனது எழுத்தாற்றலால் அவர்களின் அடிமை நிலைமையில் மாற்றம் காண விரும்பினார். பெண்கள் விடுதலை அவரது பிரதான நோக்காக இருந்தது. மாதர் முன்னேற்றம், மகளிர் வாக்குரிமை, இந்திய வாழ்க்கை என்ற தலைப்புகளில் அவர் எழுதிய தொடர் கட்டுரைகள் படிப்பறிவு மிகுந்த தமிழர்களிடையே ஒரு கிளர்ச்சியை ஏற்படுத்தியது. மருத்துவ மாது ஒருத்தி மானுடவிடிவுக்கு இவ்விதம் செயற்பட்டது நம்மை பொறுத்த வரையில் ஒரு புதுமைதான்.
அரசியல் அந்தகாரத்தில் அனாதரவாக விடப்பட்ட மக்களை ஒன்று திரட்டி அணி அமைப்பதற்கு நடேசய்யரும் மீனாட்சியம்மையும் பாடுபட்டார்கள் என்பது வெளிச்சமாகிவிட்டது.
சட்ட இருட்டறையில் சதிராடி நின்ற மக்களை தாம் தூக்கிப்பிடித்த ஒளிவிளக்கின் மூலம் வெளிக் கொணரமுயன்றவர்கள் சத்யவாகேஸ்வரரும் நல்லம்மாவும் என்பது வெளிச்சத்துக்கு வந்து கொண்டிருக்கின்றது.
மனித மேம்பாட்டுக்குத் தம்மை முழமையாக அர்ப்பணித்துக் கொண்ட இத்தம்பதியினரை நமது வணக்கத்துக்குரியவர்கள்.
இதயம் நிறைந் நல் வாழ்த்தக்கள்!
COLLAR CAAP
Dealers in Dayes, laboratory Chemicals & €ouipments
41, BANKSHALL STREET, COLOMBO
TIEL 448818, 449127, RES: 595019 FAX: 94 - - 445559) ATTN : )AMAN DERCK
கொழுந்து 2

இதர எழுத்தாளர் சமாச்சாரம்
திருப்பூர் கிருஷ்ணன்
உலகப் புகழ்பெற்ற வெளிதேச எழுத்தாளர்கள் பலரின் உணவுப் பழக்கவழக்கங்கள் பற்றியும் நமக்கு நிறையச் செய்திகள் கிடைக்கின்றன. ஆனால், தரமான தமிழ் எழுத்தாளர்கள் பற்றி இத்தகைய செய்தி எதுவும் கிடைப்பதில்லை. அதிக பட்சம் நமக்குக் கிடைப்பதெல்லாம் வெறும் "பயோ
டேட்டா” மட்டுமே. எழுத்தாளர்களின் பிறந்த தேதியைச் சேகரிப்பதற்குக் கூடப்
பெரும் சிரமம் எடுத்துக் கொள்ள வேண்டியிருக்கிறது.
ஆனால், நடிக நடிகையரின் மச்ச எண்ணிக்கை பற்றியும் மிச்சமுள்ள விஷயங்கள் பற்றியும் பெருந்தன் மையோடும் தாராள மனப்பான்மை யோடும் எடுக்கப்பட்ட புகைப்படங்களும் தகவல்களும் ஏராளமாக நமக்குக் கிடைத்துக் கொண்டே இருக்கின்றன. என்னே தமிழர்கள் பெற்ற பாக்கியம்!
பெருந்தலைவர் காமராஜ் ஓர் எழுத்தாளரைப் பார்த்து "நீங்கள் என்ன செய்து கொண்டிருக்கறிர்கள்? எனக் கேட்டாராம். "நான் எழுத்தாளராக இருக்கிறேன்” என்று பெருமிதத்தோடு சொன்னாராம் அவர். “அது சரி சாப் பாட்டுக்கு எண் ன செய்து கொண்டிருக்கிறீர்கள்?” என்று மறுபடியும் விசாரித்தாராம் காமராஜ்!.
காமராஜ் பள்ளியில் படிக்காதவர். ஆனாலி , காமராஜ போன்ற உலகியலறிவு நிறைந்தவர்களை விரல்விட்டு எண்ணிவிடலாம். அவர்
காலத் து நிலை மைதானி எழுத்தாளர்களைப் பொறுத்தவரை இன்றளவும் தொடர்கிறது.
எழுத்தாளர்கள் சாப்பாட்டுக்கு எனி ன செய்தார் கள் என பது ஒருபுறமிருக்க அவர்களின் "சாப்பாடு” பற்றிய தகவல களே மிகவும் “ருசிகரமானவை” சாப்பாட்டுக்கு "முன்” வெற்றிலை போடுகிறவர்கள் இல்லை. சாப்பாட்டுக்கு “பிறகு” வெற்றிலை போடுபவர்கள் நிறைய உண்டு. ஆனால், தி.ஜானகிராமன் சாப்பாட்டுக்குப் "பதிலாக” வெற்றிலை போட்டவர்! அவர் கும்பகோணத்துக்காரர். கும்பகோணத் துக்காரர்களுக்கு வெற்றிலை ஓர் உடன்பிறப்பு. தோளில் ஜோல்னாப் பையும், வாயில் வெற்றிலையுமாகத் தான் தி.ஜா. எங்கும் தென்படுவார். அவரைச் சுற்றி வெற்றிலையின் நறுமணம் கமகமவென்று எப்போதும் கமழ்ந்து கொண்டே இருக்கும். வெற்றிலைக்கு நோகாமல் அதன் காம் பைக் கிள்ளிக் களைநிது, வெற்றிலையின் முதுகை ஆதரவோடு தடவிக்கொடுத்து, பிறகு அதற்கு சுண்ணாம்பால் மேக்அப் செய்து
வெற்றிலையைத் தி.ஜா. வாயிலிடும்
அழகே அழகு. தி.ஜா.வே தன்னைப் பற்றிச் சொல் வார். “வெற்றிலை போடுபவர்கள் உண்டு. வெற்றிலை மேயப்பவர்களும் உண்டு. நான் இரண்டாவது ரகம்!"
க.நா.சு ஒரு சாப்பாட்டுப் பிரியர்.
கொழுந்து
3

Page 10
அதிகம் சாப்பிடமாட்ட்ார். ஆனால், ருசியறிந்து சாப் பிடுவார் . ஹோட்டல்களை நிறைய ஆதரித்த தமிழ் எழுத்தாளர் க.நா.சு.வாகத்தான் இருப்பார். அவர் சென்னையில் மயிலாப்பூரில் இருந்த காலங்களில் அவரும் அவர் மனைவியுமாக அடிக்கடி ஹோட்டல்களில் ஒன்றாகச் சாப்பிட்டு மகிழ்ந்ததுண்டு. தில்லி, சென்னை போன்ற இடங்களில்,எந்தெந்த உணவு விடுதிகளில் என்னென்ன நன்றாக இருக்கும் என்பது பற்றி க.நா.சு.வின் விரல் நுனியில் தயாராகப் பல புள்ளிவிவரங்கள் இருந்தன. அவரது இலக்கிய விமர்சனம் குறித்து அபிப்ராய பேதம் கொள்பவர்கள் ஒருசிலர் இருக்கக்கூடும்; ஆனால், அவரது “ஹோட்டல் கணிப்பு” குறித்து அபிப்ராய பேதம் கொண்டவர்கள் யாருமே இருக்கமாட்டார்கள். புதுவைப் பல்கலை முன்னாள் துணைவேந்தர் கி. வேங்கடசுப்ரமணியன் மூலம், புதுவைப் பல்கலையில், க.நா.சு.வின் தள்ளாத வயதில் அவருக்கு ஒரு வேலை கிடைத்தது. அதை ஒப்புக்கொண்டு அங்குபோய் தன் கடைசிக் காலங்களில் தன்னந்தனிக் குடித்தனம் நடத்திக் கொண்டிருந்தார் க.நா.சு. அந்த வேலை கிடைத்த ஒரு வாரத்தில் புதுவையில்,
அவரைப்போய் சந்தித்துப் பேசிக் கொணி டிருந்தபோது, அதற்குள் சுவையிறீந்து, பாண்டிச்சேரியில்
எந்தெந்த ஹோட்டல்களில் என்னென்ன நன்றாக இருக்கும் என்பது பற்றி ஒரு பட்டியல் தந்தார் அந்தப் பட்டியலாளர்! பிறகு, புதுவையில் வேலைக்குப் போய்ச்
சேர்ந்த இந்திராபார்த்தசாரதிக்கும் ஹோட்டல்களைப் பொறுத்தவரை
க.நா.சு.வே வழிகாட்டி.
தீபம் பார்த்தசாரதி சாப்பாட்டை ஒரு கலையாகப் பயின்றவர் அவர் சாப்பிடுவதைப் பார்ப்பவர்களுக்கு பார்ப்பவர்களுக்கு, பெரிதாய் வளர்ந்த ஒரு சமர்த்துக்குழந்தை, சிந்தாமல் சிதறாமல் அள்ளி அள்ளி அழகாய்ச் சாப்பிடுவதைப் பார்ப்பது போன்ற உணர்வுதான் ஏற்படும், நா.பா. சாப்பிட்ட இலையில் ஒரு பருக்கைகூட மிச்சமிராது. எதையும் வீண் செய்யக்கூடாது என்பதில் நா.பா.ரொம்பக் கண்டிப்பு. சாப்பிட்ட இலை புதிதாய்த் துடைத்துப் போட்ட இலை மாதிரிப் பளபளக்கும் . கறிவேப்பிலை குரலுக்கு நல்லது என்று அருகில் இருப்பவர்களுக்கு அறிவுரை சொல்லியவாறே அதையும் மென்று சாப்பிடுவார். (தினமணிகதிர் ஒவியர் காலஞ்சென்ற ஜெயராமன் வீட்டுக் கல யாணத்தில b T. . L. T. சாப்பிடும்பொழுது, அவர் சாப்பிடும் அழகை ஒரு புகைப்படமும் சாப்பிட்டபின், சாப்பிட்ட இலையின் அழகை இன்னொரு புகைப்படமும் என்று தனித்தனியே எடுத்துக் கொண்டார்கள்.) நா.பா.வுக்குப் பரிமாறுபவர்களுக்குப் பரம சந்தோஷம் ஏற்படும். அவரிடம் சாப்பாட்டு விஷயத்தில் கூச்சமே கிடையாது. "இன்னும் கொஞசம் போடுங்கள்” என்று கேட்டு வாங்கிச் சாப்பிடுவார். பரிமாறுபவர்கள் உற்சாகமாக ஒடிஓடி அவருகி குப் பரிமாறுவார்கள் . நா.பா.வைச் சாப்பாட்டுக்கு அழைத்த வீட்டுப் பெண்மணிகளுக்கு, தாங்கள்
கொழுந்து
4

சமைத்த சாப்பாட்டை ஆஜானுபாகுவான ஒர் ஆள் வந்து அமர்ந்து ரசனையோடு ருசித்துச் சாப்பிடுகிறார் என்பதில் அளவற்ற ஆனந்தம் ஏற்படும்.
இலக்கிய வீதி இனியவன் மதுராந்தகத்தில் ஏற்பாடு செய்த கூட்டத்தில், பேச்சாளர்களுக்கென்று ஏராளமான செவ்விளநீர்களை வாங்கிக் குவித் திருந்தார் . ஒவ்வொரு செவ்விளநீரும் யாழ்ப்பாணத்துத் தேங்காய் மாதிரி, நாலு இளநீர் அளவு பெரியது. ராஜம் கிருஷ்ணன் ஒரே ஓர் இளநீரைக் முழுவதும் சாப் பிட முடியாமல் ஒதுங் கிகி கொண்டுவிட்டார். இளநீர் தேனாய்த் தித்தித்தது. ரகசியமாக யாரும் அறியாமல் இயற்கையே இளநீரில் சர்க்கரையைக் கலந்துவிட்ட மாதிரி பிரமை ஏற்பட்டது. நா.பா. இனிய(வன்) உபசாரத்தில் மயங்கி மூன்று இளநீர் சாப்பிடும் காட்சியைப் படமெடுக்க விரும்பியதால், நான்காம் இளநீர் சாப்பிடும் பணி இனியவனால் நா.பாவுக்கு அன்புடன் தரப்பட்டது. அந்தப் பணியையும் தாமே விருமி பி மேற்கொண்டு மனப்பூர்வமாய்ச் செய்து முடித்தார் நா.பா. "நன்றி நா.பா” என்று சொல்லி இனியவன் நா.பா.வின் கையைப்பிடித்துக் குலுக்கியபோது, வாழ்க்கையில் பெரும் பேறு பெற்ற நிறைவு இனியவன் முகத்தில் தோன்றியது. உபசிப்பவர்களை மகிழச் செய்வது எப்படி என்ற ரகசியம் நா.பா.வுக்கு அத்துபடி,
ராஜாஜி, கைபொறுக்காத சூடுள்ள காப்பி டம்ளரைத் துண்டால்
சுற்றிப்பிடித்தபடி, கடகடவென வாயில் ஊற்றிக் கொள் வார் எனச் சொல்வதுண்டு. ஏறக்குறைய நா.பா.வும் அப்படித்தான். தி.க.சி. வல்லிக்கண்ணன்
போன்ற நா.பா.வின் உற் ற தோழர்களுக்கு அடிக்கடி ஒரு பிரச்சனை ஏற்படும். கொதிக்கக் கொதிக்கக்
காப்பியைக் கடகடவென வாயில் ஊற்றிக் கொண்டு, “இன்னுமா நீங்கள் காப்பி சாப்பிடவில்லை?” எனப் பறந்து கொண்டிப்பார் நா.பா. தி.க.சி.யும், வல்லிக்கண்ணனும் அப்போதுதான் ஆற அமர ஆற்றி ஆற்றிக் காப்பி சாப்பிட்டுக்
கொண்டிருப்பார்கள.
சி.சு.செல்லப்பா ஒருவகையில்
வித்தியாசமானவர். அவர் மற்ற
எழுதி தாளர் களைப் போல ,
சாப்பாட்டுக்காக, ஹோட்டல்களையோ தன் மனைவியையோ கூடச் சார்ந்து இருப்பவரில்லை. இப்போது பெங்களுரில் இருக்கும் செல்லப்பா, சென்னை திருவல்லிக்கேணி திருவட்டீஸ்வரன் பேட்டையில் இருந்த காலங்களில், தானே சமைத்துச் சாப்பிட்டு, கம்பீரமாகக் காலம் கழித்து வந்தார். ஜீவனாம்சம், வாடிவர்சல் என்றெல்லாம் அவர் படைத்த
இலக்கியவிருந்தும் கூடச் சரியான புக்குவத்தில்தான் இருக்கும்.
லா.ச.ரா.விடம் ஒரு
விசேஷப்பழக்கம் உண்டு. யார் தம்மை விருந்துக்கு அழைத்தாலும், விருந்து சாப்பிடும்போத அன்றைய ஸ்பெஷல் என்ன என்பதை அனுபவித்துச் சொல்வார். அந்த ரசத்தைச் செல்வார். அந்த ரசத்தைச்செய்தவர் யார்,” மாமியாரா, மாட்டுப் பொண்ணா என்பதை
கொழுந்து
5

Page 11
விசாரிப்பார். அவர்களை வரச் சொல்வார். அந்த ரசத்தின் பக்குவம் என்ன, அதைச் செய்வது எப்படி என்ற சமையல் குறிப்பைக் கேட்டு மனதில் வாங்கிக் கொள்வார். லா.ச.ரா. புறப்பட்டுச்சென்ற பிறது, அந்த வீட்டுப் பெண்கள் தங்கள் கணவரிடம், "சாப்பிட்டால் லா.ச.ரா.போல் அல்லவா சாப்பிட வேண்டும்! நீங்களும் இருக்கிறீர்களே!” என்று இடித்துரைப்பது வழக்கம்.
வல்லிக்கணிணன்
கி.ராஜநாராயணனின் மனைவி "அடிசிற்கினியாள்". கொழுக்கட்டைகள் செய்யும் ஆற்றல் படைத்தவர். தம் வீட்டுக்கு வருபவர்களுக்கெல்லாம் விதவிதமாக விருந்துபசாரம் செய்வதன் மூலம், தாம் டி.கே.சி. பரம்பரையில் வந்த அவரது நெருங்கிய நண்பர் என்பதை இப்போதும் நரூபித்துக் கொண்டிக்கிறார் கி.ரா.
சிட்டி, சிவபாதசுந்தரம் இருவருமே சாப்பாட்டில் அதிக ஆர்வமில்லாதவர்கள. ஏதோ சாப்பிடுவார்கள் அவ்வளவுதான்.
அவர்
அதிலும், சிட்டி மிகக்குறைவாகவே உணவு உண்பார்.
இவர்கள் நிலை இப்படி என்றால், வல்லிக்கண்ணன் சங்கதியே வேறு. எப்போதாவது, ஏதாவது சாப்பிடுகிறாரா என்பதே கேள்வி. வல்லிக்கண்ணனை முதல் முறையாகப் பார்த்த அவரது ரசிகை ஒருத்தி, ”உங்களை வலி லிக் கணிணனி என்றல்லவா நினைத்தேன். நீங்கள் இவ்வளவு ஒலி லிக் கணினனாக இருக்கிறீர்களே? ஏதாவது நன்றாகச் சாப்பிட்டு உடம்பைத் தேற்றக்கூடாதா?” என்று அன்புடன் அங்கலாய்த்தாள். தொடந்து “கனமான” இலக்கியங்களைப் படைப்பது, தொடர்ந்து "ஒல்லியாகவே” இருப்பது என்ற இரு முரண்பட்ட நிலைகளில் எப்போதும் ஒரு சீராகவே இருந்து வருகிறார். வல்லிக்கண்ணன்.
ராஜம் கிருஷ்ணன், சமைக்காத இயற் கை உணவு போனி ற விஷயங்களில், தன் உடல் நலத்தின் பொருட்டாக, பரிசோனை நடத்தி வருபவர் . சுவை உணர்வுக்கு மயங்குபவர் அல்ல.
ஓர் எழுத்தாளரிடம், “நீங்கள் எப்படிச் சாப்பிடுகிறீர்கள்? சாப்பாட்டு விஷயத்தில் உங்களுக்கு ஏதாவது பிரச்சினை உண்டா?” என்று ஒரு ரசிகர் கேட்டதற்கு அவர் தந்த பதில்: "எல்லோரையும் போலவே வாயால்தான் ஐயா சாப்பிடுகிறேன்! எனக்குச் சாப்பாடு அல்ல பிரச்சனை, சில அரைவேக்காட்டு ரசிகர்கள் வந்து என் நேரத்தைச் சாப்பிடுகிறார்களே அது தான் பிரச்சனை!”.
கொழுந்து
16
 

மலையக இலக்கிய பேரவையின் 15வது ஆண்டு விழாவிற்கு
வாழ்த்துக்கள்
BROWNSON INDUSTRES
BROWNSON MARKETING SERVICES
139, BANKSHALL STREET, COLOMBO - 11 T.P.: 3271.97

Page 12
:::::::::::::: ※ ------
கொழுந்து
 

கொழுந்த ஏழு இதழ்கள் ஒரு பார்வை
இலங்கை சிறு சஞ்சிகைத் துறையைப் பொறுத்தவரை, தமிழக சஞ்சிகைப் போக்குளிலும் மாறுபட்ட ஒரு போக்கினை அவதானிக்கக் கூடியதாக இருக்கிறது. தமிழக சஞ்சிகைகளைப் பொறுத்வரை சிறுசிறு குழுக்களாகப் பிரிந்து நின்று, அவர் தம் கொள்கைக்கும் தத்து நோக்குக்கும் ஏற்ப சிறுசஞ்சிகைகள் வெளிவருகின்றன. இலங்கையில் சிறு சஞ்சிகைகள் பிரதேச ரீதியாக வெளி வருவதைக் காணக் கூடியதாக இருக்கிறது.
இதற்கு இலங்கைத் தமிழ் இலக்கியப் போக்குகளில் பிரதேச பண்பு தனியான ஓர் அடையாளமாகக் காணப் பெறுவதை ஒரு காரணமாகக் கொள்ளலாம் என எண்ணுகிறேன்.
அந்த வகையில் மலையகப் பிரதேசத்தைப் பிரதி நிதித்துவப்படுத்தும் பல சஞ்சிகைகள் தோன்றி, மலையகக் கலை இலக்கிய சமூகவியல் கருத்துக்களின் வளர்ச்சிக்கு உதவி வந்துள்ளன. அந்த வகையில் மலைமுரசு, செய்தி, அஞ்சலி, தீர்த்தக்கரை, குன்றின்குரல் என பல சஞ்சிகைகளைக் குறிப்பிடலாம்.
அந்த வரிசையில் அந்தனி ஜீவாவை ஆசிரியராகக் கொண்டு வெளி வந்துள்ள கொழுந்து ” பற்றிய சில கருத்துக்களை முன் வைக்கலாம் என எண்ணுகிறேன்.
நான் ஏலவே கூறியது போல் தமிழக சிறு சஞ்சிகைகளைப் போன்று அந்தந்த துறைக்கான தனியான சிறு சஞ்சிகை இலங்கையில் பரவலாகத் தோன்றியதாகத் தெரியவில்லை. (கவிதைக்கென சில சஞ்சிகைகள் மட்டுமே வெளிவந்துள்ளன.) அதிலும் பிரதேச ரீதியாக வெளிவரும் சிறுசஞ்சிகைகள் கூட வெறுமனே இலக்கிய ஆக்கங்களோடு மட்டுமல்லாது, அவ்வப்பிரதேச சமூக, பொருளாதார கலாசாரப் பிரச்சினைகள் மீதான தமது கவனத்தையும் செலுத்தி வருகின்றன.
இதற்கோர் அடிப்படைக் காரணமாக இலங்கையில் வெளிவரும் சிறு சஞ்சிகைகளும் சரி, அதில் எழுதும் படைப்பாளிகளாக அங்கீகரிக்கப்பட்டவர்களும் சரி, இலக்கியத்தைத தனியாக ஓர் இயக்கமாகக் நோக்காது, சமூக, பொருளாதார, அரசியல் பிரச்சினைகளைச் சார்ந்த ஓர் அம்சமாக நோக்குவதைக் கூறலாம். அவர்தம் சிறு சஞ்சிகைகள் வெறுமனே கலை இலக்கிய வட்டத்துள் நின்றுவிடாது. வெவ்வேறு பிரச்சினைகளை சார்ந்த நோக்குகளையும் உள்ளடக்கியதாக இருக்கின்றன.
இக்கருத்துக்களை மனதில் வைத்துக்கொண்டுதான் இதுவரை வெளி வந்த
கொழுந்து 9

Page 13
"கொழுந்து " சஞ்சிகையின் 7 இதழ்கள் பற்றிய நமது அவதானத்தை முன்வைக்க வேண்டியவர்களாக இருக்கிறோம்.
" கொழுந்து " முதலாவது இதழ் ஜனவரி. பெப்ரவரி. மார்ச் 1988ம் ஆண்டு என்று வெளிவர: இரண்டாவது இதழ் 1989 ஜனவரியில் வெளிவந்துள்ளது. மூன்றாவது இதழ் 1989 மார்ச்சில் வெளிவர: நான்காவது இதழ மே.ஜூன் 1989 என வெளிவந்துள்ளது. ஐந்தாவது இதழ் ஜூலை.. ஒகஸ்ட் 1989 என வெளிவர: ஆறாவது இதழ் செப்டெம்பர். ஒக்டோபர் 1990ம் ஆண்டு வெளிவந்துள்ளது. அதனை அடுத்து ஏழாவது இதழ் வந்துள்ளது.
மேற்குறித்த கொழுந்து வெளிவந்த காலகட்டத்தை நோக்கும் போது இடைவெளி விட்டு அது வெளி வந்திருப்பது தெரிகிறது. இவ்வாறு இடைவெளி விட்டு வெளிவருவதென்பது தமிழ்ச் சிறு சஞ்சிகைகளின் ஒரு பண்பாக ஆகிவிட்டதெனலாம்.
இனி கொழுந்து ஏழு இதழ்களினதும் படைப்புகள் பற்றி நோக்குவோம். கொழுந்து ஏழு இதழ்களின் ஆசிரியத் தலையங்கங்களை நோக்குமிடத்து அச்சஞ்சிகை மலையகப் பிரதேசத்தைப பின்னணியாகக் கொண்டு வெளிவருவதன் காரணமாக அச்சஞ்சிகையின் ஆசிரியத் தலையங்கங்கள் மலையகத்தின் சமூக, அரசியல், பொருளாதார, கல்வி மற்றும் கலை இலக்கியம் சார்ந்த கருத்துக்களின் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளன. அக்கருத்துக்களின் ஊடாக " கொழுந்து ” கொண்டிருக்கும் சமூக நோக்கு எமக்கப் புலப்படக் கூடியதாக இருக்கிறது. அத்தோடு மலையகத்தின் முன்னேற்றத்துக்காக உழைத்த நடேசையர் அவர்களின் பெயரில் நினைவாலயம் ஒன்று கட்டப்பட வேண்டுமென்ற கருத்தோடு, தமிழ் அறிஞர் தனிநாயகம் அடிகளார் அவர்களையும் நினைவு கூறும் நினைவாலயம் ஒன்று எழுப்பப்படவேண்டும் என்ற கருத்தையும் ஆசிரிய தலையங்கத்துனுடாகக் "கொழுந்து " முன் வைத்திருப்பது, பாராட்டக் கூடிய ஒரம்சம்மாகும்.
கொழுந்து ஏழு இதழ்களில் வெளி வந்துள்ள கவிதைகளைப் பற்றிக் கூறுவதானால். குறிஞ்சித் தென்னவன், ப.க.லிங்கதாசன், தமிழோவியன் ஆகியோர், தாம் சார்ந்த சூழ்நிலையினூடாக உள் வாங்கிய அனுபவத்தை தமக்கு வாய்த்த மரபுக் கவிதைகளில் கூறி இருந்தாலும், அக்கவிதைகள் அவர்களின் பழைய கவிதைகளை மீண்டும் நினைவு கூறுவதாகவே அமைந்துள்ளன. இளைய கவிஞராக முரளிதரனின் கவிதைகள் கவனத்தைக் கவர்கின்றன. கடந்த கால முரளிதரனின் கவிதைகளிலிருந்து சற்று வித்தியாசப்பட்ட பரிமானத்தில் கொழுந்து ஏழு இதழ்களில் அவர் எழுதியுள்ள கவிதைகள் அமைந்துள்ளன. அதேபோன்று இன்னுமொரு மலையக இளைய கவிஞரான வெளிமடை ர.பீக்கின் "இரத்தமொழி பெயர்ப்புகள் ” என்னும் ஒரேயொரு கவிதை கொழுந்து 7வது இதழில் வெளிவந்துள்ளது. அதன் உள்ளடக்கம் மலையகமாக இருப்பதன் காரணமாக வரவேற்கும் அதே வேளை ர.பீக்கின் பிற்காலக் கவிதைகளில் காணப்படும் வீச்சு இக்கவிதையில் இல்லையெனலாம். கண்டியூர் எம். நாமதேவன், வி.க. விஜேந்திரன், என் சுட்றுணியம் Y−
கொழுந்து 20

கொழுந்து 7 இதழில் "அரசியல் பிழைத்தோருக்கு என்ற தலைப்பிலான மாத்தளை வடிவேலனின் கவிதையைப் பொறுத்தவரை உரை நடைத்தன்மை மேலோங்கி நின்று அக்கவிதையின் உள்ளடக்கத்தின் சிறப்புத் தன்மையை பின்னடையச் செய்துவிடுகின்றது. அ.ந. கந்தசாமியின் கவிதையொன்றும் மறுபிரசுரம் செய்யப்பட்டிருப்பது வரவேற்கத்தக்கது.
மொழி பெயர்ப்புக் கவிதைகளென கு. ராமச்சந்திரனால் மொழி பெயர்ககப்பட்டுள்ள பங்களாதேஷ், ஹிந்தி, பஞ்சாப் கவிதைகள் ஆழமான உணர்வலைகளை எடுத்துச் சொல்கின்றன. அக்கவிதைகளின் குரல் இன்றைய கவிதைகளின் குரலை அடையாளங்காட்டி நிற்கின்றன.
" கொழுந்தின் ஏழு இதழ்களின் அட்டைகளைப் பொறுத்தவரை, இலக்கியத்தினுடாக மலையகத்துக்குப் பணியாற்றிய மறைந்த என்.எஸ். எம். ராமையா மற்றும் கே. கணேஷ், சக்தி ஆ. பாலையா, தொழிற்சங்க ரீதியாகப் பணியாற்றிய கோ. நடேசையர் அவர்களின் உருவப்பட ஓவியம், தொழிலாளர் வர்க்க சிந்தனையுடன் பணியாற்றி கொல்லின் ஆர். டி சில்வா ஆகியோரின் உருவப்படங்களும் ராஜசேகரன் போன்றோரின் ஓவியமும் வெளியிட்டதன் மூலம் சிறு சஞ்சிகைக்கான பண்பை வெளிப்படுத்தியுள்ளது. M
கட்டுரைகளைப் பொறுத்தவரையில் மலையகத்தின் முன்னேற்றத்துக் குழைத்த நடேச ஐயரை இன்றைய தலைமுறையினர் சரியாக இனம் காணும் வகையில் எழுதப்பட்டுள்ள கட்டுரைகள் சிறப்பாக இருக்கின்றன.
மலேசியத் தமிழ்க் கவிதைப் பற்றிய ஒரு கட்டுரை மீள் பிரசுரம் செய்யப்பட்டு அத்தோடு என். எஸ். எம். ராமையாவின் " திரும்பிப் பார்க்கிறேன் " கட்டுரை 7வது இதழில் இடம் பெற்றுயிருக்கிறது. வாசிப்பு பழக்கத்துடனான தனது அனுபவத்தையும் அக்கட்டுரையில் எழுதி இருக்கிறார் ஆசிரியர் கே. எஸ்.சிவகுமாரனின் “ மலைகளிடையே மூட்டம் கலைகிறது” கட்டுரை மலையக இலக்கியப் பங்களிப்பை எடுத்துச் சொல்லுகிறது.
" கொழுந்து ” இதழ்களில் இடம் பிடித்து க.ப. லிங்கதாசனின் காத்தமுத்துக் கங்காணி " நடைச் சித்திரமும் குறிப்பிடத்தக்க ஒரு படைப்பாகும்.மேலும் திருமதி மீனாட்சி அம்மையார் அவர்களைப் பற்றிய குறிப்பும் நமக்குத் தேவையான ஒரு குறிப்பாக " கொழுந்து ஏழாவது இதழில் இடம் பிடித்து இருக்கிறது. மலேசிய கவிஞர் ஒருவனின் கவிதையும் இடம் பெற்றுள்ளமை பயன்தரக் கூடியதாக இருக்கிறது.
கொழுந்துபோன்ற சிறு சஞ்சிகைகள் வெளிவருவதில் இடைவெளி வருவதென்பது தவிர்க்க முடியாத ஓர் அம்சம் என்பதனால், தொடர் கட்டுரை பிரசுரப்படுத்தி வாசகரின் நினைவு நிறுத்தலுக்கு கஷ்டத்தைக் கொடுக்கும் ஒரு வேலையாக இருக்கிறது. அந்த வகையில் க. அருணாசலம் அவர்களின் “மலையக மக்கள் வரலாற்றுக் கட்டுரையைத் தொடர் கட்டுரையாக வெளியிடாமல் தனியொரு பிரசுரமாக வெளியிட்டிருக்கலாம். ۔۔۔۔
மற்றும் " கொழுந்து ” இதழ்களில் வெளியிடப்பட்டிருக்கும் சாரல் நாடனின் கட்டுரைகளும் பயனுள்ள தகவல்களை நமக்குத் தருகின்றன.
கொழுந்து 2

Page 14
கொழுந்து இதழ்களில் இடம்பெற்றுள்ள மொழி வரதன், கங்குலன், மாத்தளை சோமு, மாத்தளை வடிவேலன், மலரன்பன், மல்லிகை சி. குமார் ஆகியோரின் சிறுகதைகள் மலையகத்தின் ஆத்மாவை அவர்களின் எழுத்தினூடாக நமக்குப் படம் பிடித்துக் காட்டுகின்றன. அத்தோடு நமது சிங்கள சகோதர எழுத்தாளர் கருணா பெரேரா எழுதி "இருண்டவானம்" சிறப்புச் சிறுகதையாக முதலாவது இதழில் இடம் பெற்றிருப்பது பாராட்டுக்குரியது. மொத்தத்தில் மலையக சிறு சஞ்சிகை வரலாற்றில் அந்தந்த கால கட்டத்திலே வெளிவந்து மலையகக் கலை இலக்கியத்துக்கு சிறப்பாகப் பணியாற்றிய சிறு சஞ்சிகைகள் வரிசையில் கொழுந்துக்கும் ஒரு நிரந்தர இடம் உண்டு.
எல்லாம் வல்ல மாத்தளை நீருமுத்துமாரி ད།༽
அம்மன் அருளால் விழா சிறப்புற வாழ்த்தகிறோம்
த. மாரிமுத்துச் செட்டியார் .P இரா. தங்கவேல் செட்டியார் & சன்ஸ்
338, பிரதான வீதி, மாத்தளை. 2437 : தொலைபேசி ܐܸܠ
கொழுந்து 22

"நூலே கரகம் முக்கோல் மணையே
ஆயுங் காலை அந்தணர்க்குரிய,
என்ற தொல்காப்பிய இலக்கணத்திலும், " எறித்தரு கதிர் தாங்கி ஏந்திய குடை நீழல் உறித்தாழ்ந்த “கரகமும்” உரைசான்ற முக்கோலும்.”
என்று கலித்தொகயிலும் “கரமகம் என்ற சொல்லினைக் காண முடிகிறது. கரகம் என்பதற்குக் “குண்டிகை” என்று பொருள் குறிப்பர் பேராசிரியர். அந்தணர் கைப் பொருள்களில் ஒன்றாகக் "கரகம்” என்ற ஒரு பாத்திரம் இருந்துள்ளது. இக்கலத்தில் புனித நீர் இருக்கும். ஆடவர் பக்தியுடன் முளைப்பாரி விழாவுக்கு இச்செம்பினை
எடுத்துச் செல்வோரை “கரகச் செம்பு’ எடுத்துச் செல்வோர் அல்லது "கரகக்காரர்”
என்றழைப்பார்கள். முளை ஒடுகள்” எடுத்து வரும் பெண்களுக்கு முன்னே கரகம் எடுத்து ஆடவர் வருவர். இக்கரகத்திலும் புனித நீர் இருக்கும். சக்திக்கரகம்
"ஒண்ணாங்கரகம் ரெண்டாங்கரகம்” என்று ஒன்பது கரகம் வரையிலும் சிறப்புற வரிசையாக எடுத்துச் செல்வர். பரம்பரையாகக் கரகம் எடுப்பவராகவும், பக்தியில் ஆழ்ந்தவராகவும் இருப்பவர்க்குத் தனிச் சிறப்பும் முன்னரிமையும் வாய்க்கின்றன. இவ்வகைக் கரகம் எடுத்துச் செல்லும் பக்தர்கள் ஆண்களாகவே உள்ளனர். இது “ சக்திக்கரகம்” எனப்படும்.
கரக வடிவமைப்பு
அடிப்பகுதியில் குழிவு இல்லாமல் அரைக் கோள வடிவமாகச் செம்பு இருக்கும். பயிற்சிக் கரகத்தின் அடிப்பகுதி தட்டையாக இருக்கும். தலையில் சரியாக இருக்கும்படி அடிப்பகுதியை அளவுடன் குழித்து வைத்து இருப்பர். இன்று ஆடக் கூடிய கலைஞர்களில் பெரும்பாலோர் அடிப்பகுதி குழித்து வைத்திருக்கும் கரகத்தினையே வைத்துள்ளனர். பொதுவாகக் கரகச்செம்பு ” என்று சொல்லக் கூடியது 4 கிலோவிலிருந்து 10 கிலோ வரை எடையுள்ளதாக இருக்கும்.
“ டோப்பு ” என்று சொல்லக் கூடிய மலர்களால் அழகு செய்யப்பட்ட கூண்டு ஒன்று கரகத்தின்வாயில் கவிழ்த்து வைத்துப் பொருத்தப்பட்டு இருக்கும். செம்பின் வளைவுப் பகுதி வரை அக்கூண்டு அமைந்திருக்கும். கூம்பு வடிவத்தில் அது காட்சி
G6
கொழுந்து 23

Page 15
தரும். செம்பின் வாயின் நடுவில் நீண்டகுச்சி ஒன்று இணைக்கப்பட்டிருக்கும். அக்குச்சியின் உச்சியை பொய்க்கிளி ஒன்று இணைக்கப்பட்டிருக்கும். அக்குச்சியின் உச்சியை பொய்க்கிளி ஒன்று அழகு செய்யும்.
கரகாட்டம் ஆடும்போது அக்கிளியும் சுழன்று கொண்டே இருக்கும். அப்போது பார்வையாளர்களுக்கு கிளி பறந்து கொண்டிருப்பது போல் தோன்றும். அம்மனுக்கு எடுத்துச் செல்லப்படும் முளை ஓடுகளிலும் பொய்க்கிளி செய்யப்பட்டுப் பொருத்தப்பட்டிருக்கும். அந்தச்சாயலில் ஆடுகரகத்திலும் “கிளி" இருக்கிறது. கரகச் செம்பினுள் முக்கால் அளவுக்கு அதாவது செம்பின் வளைவுப் பகுதியைத்தொடுமளவுக்கு நொய்மணல் இடப்பட்டிருப்பதால் பொய்க்கிளி சுழன்றாட ஏதுவாகிறது.
ஆட்டக் கூறுகள்
கரகாட்டமாடும் கலைஞர்கள் அனைவரும் தம் கால்களில் மணிக்கச்சங்கள் கட்டியிருப்பர். கரகாட்டம் ஆடிக்கொண்டிருக்கும் போது அடிவைப்பு மாற்றி ஆடுவதுண்டு. இம்மாற்றத்தினையே “களம்” என்கின்றனர். கரகாட்டத்தில் ஒன்பதுக்கும் மேற்பட்ட களக்கணக்குகள் ஒள. "இக்களம்” கரகாட்டத்தில் நையாண்டி மேள நடையோடு தொடர்பு கொண்டுள்ளது. ஒன்னாங்களம், ரெண்டாங்களம் என்று களக் கணக்கினை மனதில் வைத்துக் கொண்டே ஆடுகின்றனர். இருபெண்கள் இணைந்து ஆடுகின்றனர். இருவருக்கு மேலும் ஆடுவதுண்டு. இதனைத் தலைமைக்கரகம் என்றும் துணைக்கரகம் என்றும் வகைப்படுத்துகின்றனர்.
கரகாட்டத்தில் செம்பைத் தலையில் வைத்துக் கொண்டு கீழே விழுந்திடாமல் கவனமாக ஆடுவது எல்லோராலும் இயலாத ஒன்றாகும். அதற்காக "பக்தி” கொண்டவர் மட்டுமே ஆட இயலும் என்பதும் தவறான கருத்தாகும். இறைபக்தியின்றி “புவியீர்ப்புத்தான” முறையினைப் புரிந்து ஆடப்பழகிக் கொண்ட அனைவரும் கலைஞர்களேயாவர். வட்டமாக நிற்கும் மேளவாத்தியக்காரர்களது உட்பரப்பே ஆடரங்கம் ஆகும். இந்த அரங்கின் எல்லைக்குள்ளேயே குதித்தும், குனிந்தும், உட்கார்ந்தும் “ஓடியும்" தாவியும், அசைந்தும் ஆடவேண்டும்.
கழுத்துக்கு மேலே அசைவு கொடாது, தலையில் உள்ள செம்பு கீழே விழுந்து விடாமல், எச்சரிக்கையுடன், அதே சமயத்தில் தாளக்கணக்கு மாறிவிடாமல் தோள்களை அசைத்து, இடையே வெட்டி காலடி - வைத்தாட வேண்டும். தவறான நடை கலைஞர்களிடம் விழுந்தால் அவர்களது கால்களில் கட்டியிருக்கக்கூடிய மணிக்கச்சங்கள்"தவறு தவறு" என்று சுட்டிக் காட்டிவிடும். கைகளை ஒய்யாரமாக வீசியும் கால்களைக் கலைநயத்தோடு எடுத்து வைத்தும் ஆடுவர் இவ்வாட்டம் ஆடுவது கடினம். ஆனால் ஆடும் போது தாம் மிகவும் கடினப்பட்டு ஆடுவதாகப் பார்வையாளருக்குக் காட்டிக்கொள்ளாமல் அதிவேகமாகச் சுழன்றாட வேண்டும். ஆட்டத்தில் முதிர்ச்சியடைந்தவர்களுக்கு இவ்வாட்டம் ஆட அலுப்பிருக்காது: கடினமாகவும் இருக்காது.
கொழுந்து 24

முவகை நிலை
கரகாட்டத்தில் மூவகை நிலைகள் உள. இம்மூவகை நிலையும் நையாண்டி இசை, நையாண்டி மேளம், கலைஞர்கள் ஆட்டம் ஆகிய இவைகளோடு தொடர்பு கொண்டுள்ளது.
1 தொடக்க நிலை 2 வேக நிலை 3 அதிவேக நிலை
தொடக்க நிலை
தொடக்க நிலையில், நையாண்டி இசை தாள நடை இல்லாமல் சுதிமாறாமல் ஆனால் அதே சமயம் ஒலிவாசிப்பில் பேதமிராமல் சமநிலையில் இருக்கும். அதாவதுபாடலின் இசையைப் பாடுவதற்கு முன் தாளம் சேராமல் தொகையறாபாடுவது போல அமைந்திருக்கும். இந்நிலையில் தாளவாத்தியக்காரர்கள் வாசிக்கத்தயாராவர். இசையோடு தத்தம் தாளக்கருவி ஓசை இணைந்துள்ளதா எனச் சோதித்தும் கொள்வர். ஒரு சிலர் மெல்ல நடை வாசித்தும் கொள்வதுண்டு.
வேக நிலை
தாளச் சுதிக்கும் வாசிக்கும் ஒலி இசைக்கும் வேறுபாடு இராது ஒரு தனிக்காட்டில் ஒருவன் தன்னை மறந்து தனியே வாய்விட்டுச் சுதந்திரமாய்ப் பாடிக் கொண்டு போவதுபோல தாமே ரசித்துத்தலையை ஆட்டித் தாளத்தை மனதில் வாங்கிக் கொண்டு இசை கூட்டி வாசிப்பர். இதுவே வேகநிலை அல்லது சமநிலை ஆகும்.
இவ்வேக நிலை கிடைத்ததும் ஆட்டக்கலைஞர்கள் தாம் பயின்ற ஆட்டத்தினை முறையோடு பார்வையாளர்க்குத் திறம்பட வெளிப்படுத்துவர். வேகநிலையில் இசைக் கருவி வாசிப்போர் சற்று ஓய்வெடுக்கும் பொருட்டு நிறுத்தினாலும், தாளங்கள் அதே சுதியில் அதே வேகத்தில் ஒலித்துக் கொண்டே இருக்கும். ஆட்டக் கலைஞர்கள் இங்கு தான் தம் நிலையை மறந்து ஒன்றி ஆடுவர்.
அதிவேக நிலை
" ஆடும் பாம்பின் ” சீற்றத்தைப் போல் சுதிமுறியாமல், தாளம் முறியாமல் இருந்த நிலையிலிருந்து மெல்லமெல்ல ( பசயனரயட ஞரீநநன ) வேகப்படுத்துவர். ஆடுவோரும், வாத்தியக்காரர்களும் சுழழும் பம்பர வேகத்தில் இருப்பர். இப்போது தம்மையும் மறந்து தலையை ஆட்டச் செய்யும் வகையில் பார்வையாளர்களுணர்வு
கொழுந்து - 25

Page 16
ஆட்டத்தோடு - தாளத்தோடு ஒன்றியிருக்கும். “கர கரகர " என வலப்புறமாகச் சுழன்று சுழன்றாடுவர். இந்த அதிவேக ஆட்ட நிலையின் போது முகமா, முதுகா எனக் குறித்துப் பார்க்க இயலாதவாறு சுழற்சியின் விரைவு அமைந்திருக்கும். இந்த அதிவேக நிலை ஆட்டமே கரகாட்டத்தின் உச்சக்கட்ட நிலை ஆட்டம் ஆகும்.
ஒருவர் ஒரு பாடலை பாடினாலோ, ஓர் இசையை வாத்தியத்தில் வாசித்தாலோ, ஆட்டக்கலைஞர்கள் ஆடுவர். ஆட்டக்கலைஞர்கள் ஆடும் போது மேற்கூறிய மூவகை நிலைகளும் உள்ளடங்கியிருக்கும். இம்மூவகை நிலை ஆட்டமும் கொண்ட ஓர் ஆட்டம் முடிந்ததும் கலைஞர்கள் ஒய்வு எடுத்துக் கொள்ள வேண்டி கோமாளி பேசத்தொடங்குவான். கோமாளி இம்மூவகை நிலை ஆட்டத்தில் கலந்து கொண்டு ஆடுவது போல் நடிப்பான். வட்டமான அந்த அரங்கில் சுழன்று சுழன்றாடும் போது ஒருவரை ஒருவர் எக்காரணம் கொண்டும் இடித்துக்கொள்ளாமலும் ஆடுவர்.
உச்சகட்ட நிலை ஆட்டத்தின் போது கோமாளி நின்று கொள்வான். அடுத்து இவனது நிகழ்ச்சிக்கு ஆயத்தம் ஆவான். இருப்பினும் ஆடிக்கொண்டிருக்கும் அவர்களைக் கோமாளி ஆட்டுவிப்பது போல ஆணையிடுவது போல நடித்துக் கொண்டுமிருப்பான். அவர்களோடு தொடர்ந்து ஆட இயலாமல் நின்று பார்வையளர்களிடம் இயலவில்லை என்று நடித்துக் காட்டி அங்கு மிங்கும் தானாகக் குரங்குபோல ஆடிக்குதித்துக்கொண்டுமிருப்பான்.
சிறிது நேர ஓய்வுக்குப் பின்னர், கலைஞர்கள் தம்கையில் பளபளக்கும் கத்தியுடன் கரகாட்டம் ஆடுவர். இவ்வாட்டம் சற்று நேரத்திற்குள் முடிந்துவிடும். பின்னர், தம் தலையிலுள்ள கரகச் செம்பினைக் கீழிறக்கி விட்டு நையாண்டி மேளத்திற்கேற்ப ஆடுவர். இப்போது ஆடிக்கொண்டே சிலர் பாடுவதுமுண்டு. பக்கவாத்தியக்காரர்கள், கோமாளிகள் ஆகியோர் துணைநிற்க அப்போது தம்மனத்தில் எழும் ஏதாவதோர் உரையாடலைச் சிறிது நேரம் செய்து கொள்வதும வழக்கமாகும். மீண்டும தலையில் கரகச் செம்பினை வைத்து ஆடுவர். தம்குறும்புத்தனம் கூட்டி ஆடிக்கொண்டே மேளதாள வாத்தியக்காரர்களை மெல்ல இடித்துக் கொள்வதுண்டு. லர் வட்டமாக நிற்கும் தம இடத்திலிருந்து விலகி அரங்கிற்குள் தம் வாத்தியத்தோடு பந்து வாசித்துக் கொண்டே ஆட்டக்கலைஞரோடு சேர்ந்து ஆடிவிட்டுத் தம் இடம் நோக்கிச் செல்வதும் உண்டு. r
கரகாட்டக் கலைஞரும், கோமாளியும் சேர்ந்து பாடிக்கொண்டிருக்கும் போது அப்பாடலை வாத்தியக்காரர்கள் “வாங்கி வாசிப்பது ” வழக்கம். இப்பாடலின் போக்கு * ஒருவர் பாட்டுக்கு எதிர்பாட்டு ” என்ற முறையில் அமைந்திருக்கும். ஒவ்வொருவர் பாடிய பாடலின் இடை வெளியிலும் வாத்தியக்காரர்கள் இடம் பிடித்துக் கொள்வர். இவர்கள் கலைஞர்கள் பாடிய பாடலையே தம் வாத்தியத்திலும் வாசிப்பர். பெரும்பாலும் ஒவ்வொரு “ பத்தி"க்கும் இடையிடையே இவர்களது பங்கு இடம்பெறும். பாடும்போது ஆடாத கலைஞர்கள் வாத்தியத்தில் தம பாட்டின் மெட்டினை வாசிக்கும்போது மனப் பான்மையோடு ஆடுவார்கள்.
இக்கரகாட்டம், வெவ்வேறு இடங்களில் வெவ்வேறு பெயர்களில் வழங்கப்பட்டு வருகிறது. கிழக்கு இராமநாதபுரம், தஞ்சாவூர் ஆகிய இடங்களில் “கரகச்செம்பு" ஆட்டம் என்கின்றனர். இராமநாதபுரம் மாவட்ட மேற்குப்பகுதியிலுள்ளோரும், திருநெல்வேலி மக்களும் "கரகக்குடம்” என்பர். மதுரை அதன் சுற்று வட்டாரங்களில் “கரகாட்டம் ”
கொழுந்து 26

என்று கூறுவர். கன்னியாகுமரி, நாகர்கோவில் பகுதிகளில் “ குட்டத்து ஆட்டம்"
என்றும் “ கும்ப ஆட்டம்” என்றும் சொல்லுவார்கள்.
ஆனால் கரகாட்டம் ஆடக்கூடிய கலைஞர் அனைவரும் " கரகாட்டம் ” என்றே இதனைக் கூறுகின்றர். தமிழக மக்களும் " கரகாட்டம் ” என்றே பொதுவாக
அழைக்கின்றனர். தமிழகக் கிராமிய நடனங்களுள் கரகாட்டம் பழமையான சிறப்புடையதாகும்.
நம்மவர் இருவர்
கொழுந்து அட்டைபடத்தில் இடம் பெற்றிருக்கும் மலையகத்தின் மூத்த கவிஞர்களான பண்ணாமத்துக் கவிராயர், குறிஞ்சி தென்னவன் ஆகியவர்களே அண்மையில் அரசு சிவசேசனுக்கு " கலாபூஷணம் ” விருது வழங்கி கெளரவித்தது. கவிஞர் குறிஞ்சி தென்னவனின் கவிதைகள் குறிஞ்சி தென்னவன் கவிதைகள் என்ற தலைப்பில் நூலுருவம் பெற்றுள்ளது. பண்ணாமத்து கவிராயரின் மொழிப்பெயர்ப்பு
கவிதைகள் " காற்றின் மெளனம் ” என்ற தலைப்பில் வெளிவந்துள்ளது. இந்த இரு கவிஞர்களுக்கும் எமது வாழ்த்துகள்.
வாழ்த்துக்கள் O
米米米米 米米米 米米 米
ஆழ்வாப்பிள்ளை கந்தசாமி கொழும்பு
கொழுந்து 27

Page 17
இனிய இலக்கிய இதயங்களே!
நீண்ட நாட்களுக்கு பின்னர் " கொழுந்து " சஞ்சிகையின் மூலம் உங்களோடு உறவாட கிடைத்ததை எண்ணி மகிழ்ச்சி அடைகிறேன்.
மலையக கலை இலக்கியப் பேரவையின் பதினைந்தாவது ஆண்டு விழா இன்று (7.7.1996) கண்டியில் டி.எஸ். சேனநாயக்கா அரங்கில் நடைபெறுகிறது.
இந்த விழாவில் தமிழகத்திலிருந்து வருகை தந்திரக்கும் மூத்த எழுத்தாளர் வல்லிக்கண்ணன், தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றத்தின் செயலாளரும் நாவலாசிரியருமான பொன்னிலம் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொள்கின்றனர். -
கலாசால அமைச்சர் மாண்புமிகு லக்ஷ்மன் ஜெயகொடி அவர்கள் விழாவிற்கு வருகை தந்து மலையக கலை இலக்கிய முன்னோடிகளை கெளரவிக்க உள்ளார். மலையக கலை இலக்கியப் பேரவையின் பதினைந்து ஆண்டுகள் ஆற்றிய பணி வரலாற்றில் பதிவு செய்யப்படும். இன்றைய இளைய தலை முறையினர்க்கு வழிகாட்ட வேண்டிய பெரும் பொறுப்பு பேரவையைச் சார்ந்தது.
கடந்த காலங்களில் எமது பணிகள் காற்றோடு காற்றாக கலந்து விடாமலிருக்க பேரவையின் சகோதர நிறுவனமான மலையக வெளியீட்டகம் பதினைந்து நூல்களை வெளியிட்டுள்ளது.
மலையக எழுத்தாளர்களின் படைப்புகள் அவர்களின் ஆற்றலையும். அருமையையும் வெளிச்சத்திற்கு கொண்டு வருவதே தலையாய கடமையாகும்.
இனி கொழுந்து சஞ்சிகை தொடர்ந்து வெளிவர உங்களின் ஆதரவு தேவை.
அந்தனி ஜீவா.
மலையக கலை இலக்கியப்பேரவையின் ஏற்பாட்டில் * செய்தி ” ராமு நாகலிங்கம் அவர்களின் ஆதரவுடன் கண்டி திருத்துவக்கல்லூரியில் நடைபெற்ற பாரதி நூற்றாண்டு விழாவில் எழுத்தாளர் ராமகிருஷ்ணன் உரையாற்றுகிறார். மேடையில் பேரவையின் செயலாளர் அந்தனிஜீவா, ராமு நாகலிங்கம், எ. பி. வி. கோமஸ் எம். சுப்பிரமணியம் ஆகியோர் அமர்ந்திருக்கின்றனர்.
கொழுந்து 28
 

இலக்கியவாதிகளுக்கு விருதபெறும் வாழ்த்தக்கள்
மலையக ஆன்மீகக்கலை
34, சொய்சாகல நாவலப்பிட்டி
கொழுந்து

Page 18
作
மலையக இலக்கிய பேரவையின் 15வது ஆண்டு விழாவிற்கு வாழ்த்தக்கள்
SøSøSøSøSø SSSS S. SS S)
ല്ല് ദ് ല്ല് റ്റ് ദൃ
(Royas Offset (TPrivatc) 9ņnited
190, Colombo Street, Kondy, Sri LOnko Te: O8-22233
PRINTERS- PUBLISHERS- STATIONERS-PAPER CONVERTORS
S
கொழுந்து

"தினைந்து ஆண்டுகளாக மலையகத்தில்
இலக்கிய பணியாற்றிவரும் மலையக கலை இலக்கிய பேரவைக்கு
எமது மனம் நிறைந்த நல்வாழ்த்துக்கள்
() ()
s
#ಇಸ್ಲ:
LANKA POLYTHENE INDUSTRIES (Private) Ltd
32, A-K.Cyril C. Perera Mawatha
Colombo 13. h – أ

Page 19
!r OGAGOuais RG) a
15வது ஆண்டு 6 DLlug Gill
|LICKylÁV
MAWCIFA)
NATHARA KUNDA
TPHONE:O8-24
 

Idħelu LINJCCDGiulair t: tilgIT gfgpĊILITAS ழ்த்துக்கள்
0 BISCurl CfI33S
NPOTHA ASALE
1217 - 32574 f