கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: ஆத்திசூடி அறநெறிக் கதைகள்

Page 1


Page 2


Page 3

ஆத்திசூடி அறநெறிக் கதைகள்
நா. மகேசன்
செ. தனபாலசிங்கன் நினைவு வெளியீடு
கிடைக்குமிடம்: 59, மூர் வீதி, கொழும்பு-6.
உரிமைப் பதிவு) (விலை ரூபா-3/50
1978

Page 4
சமர்ப்பணம்
உரும்பராயைப் பிறப்பிடமாகக் கொண்டவரும் கொழும்பில் உதவித் தொழில் ஆணையாளராகக் கடமையாற்றியவருமாகிய, எனதினிய நண்பர் அமரர் செ. தனபாலசிங்கன் அவர்கட்கு. கந்தன் திருவடியைக் கணமும் மறவாதே
காலமெலாஞ் செந்தமிழின் காதல் நினைவோடே சிந்தை சிவநெறிக்குஞ் செல்வந் தமிழுக்கும்
சீர்வரிசை செய்ததனுற் செம்மை நலமோர்ந்தே முந்தைப் பனுவலிடை மூழ்கிப் பொருளாய்ந்தே முத்தனைய நூல்பலவும் மூவாத் தமிழுக்கே தந்த பெருவளத்தான் தனபால சிங்கன்தாள்
தன்னிலிட்டேனர்ப்பணமாய் தய வா யிதுநூலே!
அச்சுப்பதிவு: குறி ஆத்மஜோதி. அச்சகம் - நாவலப்பிட்டி (இலங்கை)
 

பண்டிதர், சைவப் புலவர், சிவத்தமிழ்ச்செல்வி தங்கம்மா அப்பாக்குட்டிஅவர்கள் வழங்கிய
அணிந்துரை
இளமையிற் கல்வி சிலையில் எழுத்து என்பது யாவராலும் போற் றப்படும் வாசகம். இதற்கேற்ப இளம் உள்ளங்களில் சிறந்த கருத்துக் களைப் பதிய வைப்பது பெருமக்கள் கடனகும். ஒளவையின் வாக்கு அமுத வாக்கு என்பதை அகத்திற் சொண்ட திரு. நா. மகேசன் அவர்கள் சிறுகதைகள் மூலம் கருத்தைப் பதிக்கும் சக்தியுடையவர்: கதை கேட்பது என்ருல் பாலர் முதல் பாட்டி ஈருக எல்லோருக்கும் விருப்பமானதே. ஆனல் கதைகள் சருக்கரை போலவும், கருத்துக்கள் ஒளடதங்கள் போலவும் அமைய வேண்டும். இத்தகைய சிறப் புடனேயே புராணங்கள் வெளிவந்தன . உண்மைப் பொருள் நுட்ப மானது. அந்த நுட்பத்தை ம்னத்திலே பதிய வைக்கப் புனைந்துரை களான கதைகளே மிகச் சிறந்தன.
ஆத்திசூடி தந்த ஒளவையைத் தமிழுலகம் என்றும் நினைவு கூர்ந்து போற்றுகிறது. அந்த நினைவு இளம் உள்ளங்களிலும் என் றும் நிலே க்க வைத்து விட்டார் திரு. நா. மகேசன் அவர்கள். அருமை யான படைப்பு. சின்னஞ்சிறிய கதை. ஆனல் பென்னம்பெரிய உண்மை. இதுவே நவீன காலத்துக்கு ஏற்புடைத்தாகும். நம் நாட் டுக் கலாசாரம் குன்ருதபடி நல்ல கருத்துக்களுடன் அமைந்த இக் கற்பனையூற்றுகளைப் போற்றுவோம்.
இன்று ஆத்திசூடி, கொன்றை வேந்தன், நல்வழி நன்னெறி ஆகியவற்றை மனனம் செய்யும் பழக்கம் குன்றிவிட்டது. மனனம் செய்தவர்களும் அந்தக் காலத்தில் கருத்துணர்ந்து மனனம் செய்ய வில்லை. இக்குறைபாடுகளைப் போக்கக் கூடியதான ஒரு சிறந்த படைப்பு "ஆத்திசூடி அறநெறிக் கதைகள்' என்ருல் அ தி ல் மிகையொன்று மில்லை. இக் கதைகளின் மூலம் அறத்தின் பெருமையை யும், கொடை யின் மகிமையையும், முயற்சியின் வலிமையையும் சிறப்பாகப் பதிய வைக்கிருர் ஆசிரியர். பொதுவாகச் சொற் சுருக்கமும், கருத்தாழமும், பொருள் தெளிவும் மிக்க இப்படைப்பினை எல்லோரும் போற்றி ஏற்றுப் பயின்று நற்பயன் பெறுவார்களாக என்று வாழ்த்துகிறேன்.
துரிக்காதேவி ஆலயம் --செல்வி தங்கம்மா அப்பாக்குட்டி
தெல்லிப்பளை 4-0-78.

Page 5
முன்னுரை
ஈழவள நாட்டிலே, இன்று சிறுவர் இலக்கியங்களுக்கு உள்ள தட்டுப்பாட்டை நாம் அறிவோம். நாவலர் பெரு மானும், நவாலியூர் சோமசுந்தரப் புலவரும் சிறுவர் இலக்கியங்கள் படைத்துத் தந்த காலம் போய் விட்டது. தமிழ் நாட்டின் கவிமணி தேசிகவிநாயகம்பிள்ளை, குழந்தைக் கவிஞர் அழ. வள்ளியப்பா முதலிய பெரியோர் தமிழ்ச் சிருருக்குத் தந்த நூ ல் களு ம் நம் நாட்டிற் கிடைப்பது அரிதாகிவிட்டது.
இந்நிலையில் நம் நாட்டின் சிறுவர்களுக்கு இயன்ற அளவிற் தரமான நூல்களை ஆக்கித் தரவேண்டும் என்ற ஆவல் எனக்கு உண்டாயிற்று. எனவே இதுவரை சில சிறுவர். நூல்களை வெளியிட்டேன். இலாபம் என் நோக்க மல்ல. தனியொருவன் இவ்வகைப் பணியை மேற்கொள் வது சிரமத்திற் சிரமம்.
*ஆத்திசூடி அறநெறிக் கதைகள்' என்னும் இந்நூலை வெளியிட எனக்கு ஆக்கந் தருபவர்கள் அமரர் திரு. செ. தனபாலசிங்கன் ஞாபகார்த்தக் குழுவினர். இது அன்பர் தனபாலசிங்கனுடைய நினைவு வெளியீடாக உங்கள் முன் வருகிறது. சைவசமய நூல்கள் பலவற்றை எழுதித் தனி ஒருவராக நின்று வெளியிட்டுத் தமிழுக்கும் சைவத் துக்கும் பெருந் தொண்டாற்றியவர் அமரர் தனபால சிங்கன் அவர்கள்.
அன்னர் இவ்வுலகில் இல்லாத போதும் அவரது பெயரால் என்போன்ருர் ஊக்குவிக்கப்படுவது பெருந்

盐i
தொண்டேயாம். அவர் விட்டுச் சென்ற பணி தொடர் வதற்கு ஓர் அரிய வழியேயாம். இக்குழுவினருக்கு என் நன்றி உரித்தாகுக.
இந்நூலில் ஒளவையாரின் ஆத்திசூடி வாக்கியங்களை விளக்குகின்ற இருபத்தொரு கதைகள் உண்டு. இவற்றிற் பதினெரு கதைகள் வீரகேசரி வாரஇதழில் வெளி வந்தவை. இக்கதைகள் சிறுவரின் அறிவை வளர்ப்பதோடு தற் காலத்தில் அவர்கள் கண்களில் இலகுவிற் படாத ஆத்தி சூடியையும் அவர்களுக்கு அறிமுகப்படுத்தும் என்பது எனது நம்பிக்கை.
நூலுக்கான படங்களை வரைந்து தந்தவர் எனதரிய நண்பர் *செள’ அவர்கள். நூலை உருவாக்க உந்து சக்தியாயிருந்தவர் எனதினிய நண்பர் திரு. மு. சிவராசா அவர்கள். இவர்களுக்கு என் நன்றி. மேலும் நூலுக்கு அணிந்துரை வழங்கியுள்ள சிவத்தமிழ்ச் செல்வி தங்கம்மா அப்பாக்குட்டி அவர்களுக்கும், ம தி ப் புரை க ள் தந்து ஊக்குவித்த அருட்திரு. சா. ம. செல்வரட்னம் அடிகளா ருக்கும், கலாநிதி அல்ஹாஜ் எம். எம். உவைஸ் அவர்க ளுக்கும், என் முன்னும் பின்னும் திரிந்து இவ்வாக்கத்தை முடுக்கிவிட்ட நண்பர் திரு. ச. நவரத்தினம் அவர்கட்கும், வீரகேசரித் தாபனத்தாருக்கும், பூgஆத்மஜோதி அச்சகத் தாருக்கும் நன்றி தெரிவிக்கக் கடமைப் பட்டுள்ளேன்.
59, epitos, நா. மகேசன் கொழும்பு-6. 10-1-978,

Page 6
O
1.
I효.
3.
A.
15
1.
17
S.
19.
I}-
1.
ஒளவையார் அருளிச் செய்த ஆத்திசூடி
கடவுள் வாழ்த்து
ஆத்திசூடியமர்ந்த தேவனே ஏத்தி யேத்தித் தொழுவோ மியாமே
அறஞ்செய விரும்பு ஆறுவது சினம், இயல்வது கரவேல் ஈவது விலக்கேல், உடையது விளம்பேல் ஊக்கமது கைவிடேல், எண்ணெழுத் திகழேல், ஏற்ப திகழ்ச்சி. ஐயமிட்டுண் ஒப்புர வொழுகு ஒதுவ தொழியேல் ஒளவியம் பேசேல் அஃகஞ் சுருக்கேல்
கண்டொன்று சொல்லேல்.
IsIE GLIT si sukit. சனி நீராடு
ஞயம்பட அரை இடம்பட விடெடேல் இணக்கமறிந் தினங்கு தந்தைதாய் பேண் நன்றி மறவேல் பருவத்தே பயிர்செய்
நூல்
2.
)-
O
翡1。
42.
疆書』
மண்பறித் துண்னோல், இயல்பலா தனசெயேல்
GUILLICITLIGELIG.
இலவம்பஞ்சிற்றுயில்,
வஞ்சகம் பேசேல். அழிக்கிாதன செயேல், இளமையிற் கல், அறனே மறவேல், அனந்த லாடேல், கடிவது மற காப்பது விரதம் கிழமைப் படவாழ் கீழ்மை பகற்று குணமது கைவிடேல் சட்டிப் பிரியேல் கெடுப்ப தொழி, கேள்வி முயல், கைவினே கரவேல், கொள்ளே விரும்பேல் கோதாட்டொழி சக்கர நெறிநில், சான்ருே பினத்திரு.
 

45
46
47. 48. 49),
50.
51
52.
7.
1.
52,
63.
64.
55.
6.
67. 68. 69 , 70.
1.
-
73. 74.
75. 『F,
சித்திரம் பேசேல் சீர்மை மறவேல் சுளிக்கச் சொல்லேல் சூது விரும்பேல் செய்வன திருந்தச்செய் சேரிட மறிந்துசேர் சையெனத் திரியேல் சொற்சேர்வு படேல் சோம்பித் திரியேல் தக்கோ னெனத்திரி தானமது விரும்பு திருமாலுக் கடினமசெய் தீவினே யகற்று.
நுண்பத்திற் கிடங்கொடேல் துக்கி வினேசெய் தெய்வ மிகழேல் தேசத்தோ டொத்துவாழ்.
தையல்சொற் கேளேல்
தொன்மை மறவேல் தோற்பன தொடரேல் நன்மை கடைப்பிடி நாடொப்பன செய் நிலேயிற் பிரியேல். நீர்விளே யாடேல் நுண்மை நுகரேல், நூல்பல நெற்பயிர் விளே.
நேர்பட வெ ாழுகு
நைவினே நணுகேல் நொய்ய வுரையேல் நோய்க் கிடங் கொடேல் பழிப்பன பகரேல்
77. பாம்பொடு பழகேல் 78. பிழைபடச் சொல்லேல் 792 பிடு பெறநில் 80 புகழ்ந்தாரைப் போற்றிவாழ். 81. பூமி திருத்தியுண். 82. பெரியாரைத்துனேக்கொள் 83 பேதைமை யகற்று. 84 பையலோ டிணங்கேல் BE பொருள்தனப் போற்றிவாழ். 86. போர்த்தொழில் புரியேல் 87. மனந்தடுமாறேல் 88. மாற்ருனுக் கிடங்கொடேல் 89 மிகைபடச் சொல்லேல் 90 மீதூண் விரும்பேல், 91. முனமுகத்து நில்லேல் 92. மூர்க்கரோ டிணங்கேல் 93. மெல்லினல்லாள் தோள்சேர். 94. மேன்மக்கள் சொற்கேள் 95. மைவிழிபார்மனேயகல் 96. மொழிவ தறமொழி. 97. மோகத்தை முனி. 98. வல்லமை பேசேல். 99. வாதுமுற் கூறேல், 100 வித்தை விரும்பு 101. வீடு பெறநில் 102. உத்தம ஞயிரு. 103. ஊருடன் கூடிவாழ் 104. வெட்டெனப் பேசேல் 105. வேண்டி வினேசெயேல் 106. வைகறைத் துயிலெழு 107. ஒன்னுரைத் தேறேல், 108. ஒரஞ் சொல்லேல்
ஆத்திசூடி மூலம் முற்றிற்று.

Page 7
14.
21.
பொருளடக்கம்
கதை ஆத்திசூடி பக்கம்
சுமைதாங்கி அறஞ்செய விரும்பு ஒட்டு மாங்கன்று ஆறுவது சினம் 4. பறந்தது கோழி இயல்வது கரவேல் 7 பலாப்பழம் ஈவது விலக்கேல் O இசைக் கச்சேரி உடையது விளம்பேல் 13 வெகுமதி ஊக்கமது கைவிடேல் 16 நன்னுன்கு பதிஞறு நாலும் நாலும் எட்டு எண்ணெழுத் திகழேல் 20 புல்லுச் சத்தகம் ஏற்ப திகழ்ச்சி 24 நல்ல பாடம் ஐய மிட்டுண் 27 குண்டு வீச்சு ஒப்புர வொழுகு SO என் கதை ஒதுவ தொழியேல் 33 மாறட்டம் ஒளவியம் பேசேல் 36 விதை நெல் அஃகஞ் சுருக்கேல் 40 கிளிக் குஞ்சு கண்டொன்று சொல்லேல் 43 மக்கள் தொழிற்சாலை நுப்போல் வஜ 47 இயந்திரக் கலப்பை சனி நீராடு 49 . தீப்பெட்டி ஞயம்படி வுரை 52 வாடகைக்காரர் இடம்பட வீடெடேல் 56 தொலைந்த முதல் இணக்கமறிந் திணங்கு 59 கெட்ட குமாரன் தந்தைதாய் பேண் 63
முடிச்சு மாறிகள் நன்றி மறவேல் 66

சுமைதாங்கி
வில்லூர் என்பது ஒரு சிறு கிராமம். அங்குள்ள மக் கள் விவசாயஞ் செய்து தமது வாழ்க்கையை நடத்தினர். வில்லுரரில் உற்பத்தியாகும் விளைபொருட்களை அங்குள்ள மக்கள், கென்னுகம் என்னும் ஊரில் உள்ள பெரிய சந் தைக்குக் கொண்டு சென்று விற்பர். மென்ஞகம் வில்லு: சில் இருந்து ஆறு மைல் தொலைவில் இருந்தது. மென் மூகச் சந்தையில் பல வர்களிலும் இருந்து வியாபாரிகள் வந்து பொருட்களை வாங்குவர். மென்னுகிச் சந்தையைச் குழ்ந்த விரதேசம் ஒரு பட்டினம்போல் காட்சியளித்தது
வில்லூர் மக்கள் மென்ஞகம் சந்தைக்குப் பொருட் களே வண்டிகளிலும் தலைச் சுமையாகவும் கொண்டு சேல்வர். அநேகமான வறியவர்களிடம் மாட்டு வண்டி கள் கிடையாது. ஆகவே அவர்கள் தலைச் சுமையாகவே பொருட்களைச் சந்தைக்குக் கொண்டு செல்வர். அதிகாலை யில் எழுந்து மக்கள் தலைச் சுமைகளுடன் தெருவிலே நடந்து செல்வது அன்ருடம் காட்சியாக இருக்கும். பல ருக்கு ஆறு மைல்களையும் பா ர மா ன தலைச்சுமையுடன் நடந்து செல்வது பெரும் களேப்பாக இருக்கும். சந்தை கூடுமுன்பே போய்விட வேண்டும் என்பதற்காகப் பலர் ஓட்டமும் நடையுமாகச் செல்வர்.

Page 8
Z ஆத்திசூடி அறநெறிக் கதைகள்
இப்படிச் செல்லும் மக்கள் நடு வழியிலே களைத்து விட்டால் தமது சுமைகளே இறக்கிவைத்துச் சிறிது களே ஆறிப்போக விரும்புவர். ஆணுல் எல்லோரும் தச்ை சுமை களோடு போவதாலும், வேறு வழிப்போக்கர்கள் அதிகம் இல்லாமையாலும் தமது சுமைகளே இறக்கிவைக்க வசதி யில்லாமல் அவதிப்படுவர். இந்த அவதியைத் தீர்ப்பதற்காக அந்த வழியில், ஒர் இடத்தில் ஒரு சுமைதாங்கியைக் கட்ட வேண்டும் என்று வில்லுரர் மக்களிற் சிலர் தீர்மானித்தனர். சுமை தாங்கி தெரு ஓரத்தில் இருந்தால் அதன்மேல் தலைச் சுமைகளைப் பிறருடைய உதவி இல்லாமல் இறக்கிவைக்க லாம். பின்னர் களே ஆறிவிட்டுப் பிறருடைய உதவி இல் லாமலே ம்ெதுவாகத் தலையில் ஏற்றிக்கொண்டு செல்ல லாம். இந்த ஒழுங்கு எத்தனையோ மனிதருக்குப் பெரும் உதவியாகவும், ஆறுதலாகவும் இருக்கும்.
சுமை தாங்கி கட்டுவதற்குப் பணம் வேண்டுமே. வில்லூர் மக்கள் தமது கிராமத்தில் உள்ளவர்களிடம் பணம் திரட்டிஞர்கள். அதிகமாஞேர் தம்மால் இயன்ற உதவியைச் செய்தனர். அவ்வூரில் புண்ணியமூர்த்தி என்று ஒரு பணக்காரன் இருந்தான் அவன் வியாபாரஞ் செய்து வாழ்ந்தான். சுமைதாங்கி கட்டுவதற்கு மக்கள் அவனி டமும் பணம் கேட்டனர். அவஞே 'நான் உங்கள் சுமை தாங்கியை உபயோகிக்கப் போவதில்லே. எனக்கு எதற்குச் சுமைதாங்கி" என்று சிறிதும் தர்ம சிந்தையில்லாமல் மறுத்துவிட்டான். மக்கள் ஏதோ விதமாக வேண்டிய பணத்தைத் திரட்டிச் சுமைதாங்கியைக் கட்டி முடித்தனர். பலரும் அந்தச் சுமைதாங்கியை உபயோகித்துக் களைப் பாறிக் கொண்டனர்.
வருடங்கள் பல சென்றன. புண்ணியமூர்த்தியின் வியாபாரம் நட்டம் அடையலாயிற்று. அவனிடமிருந்த பணம், பொருள் எல்லாம் கடனுக்காக அறவிடப்பட்டன. புண்ணியமூர்த்தி எதற்கும் வழியில்லாத வறியவஞனுன்
 
 

கமைதாங்கி
தன்னுடைய சீவியத்தைக் கொண்டு செல்ல அவன் கூலி வேலே செய்யும் நிலையை அடைந்தான். ஒருநாள் அவன் கூவிக்குப் பொருள் சுமக்க வேண்டியிருந்தது. பெரிய ஒரு சுமையைத் தலையிலே சுமந்துகொண்டு மென்னுகம் சந்தையில் கொடுக்க வேண்டும். அப்படி அவன் சுமந்து செல்கையில் நன்முகக் களைத்து விட்டான். தலே நெரிவது போல் இருந்தது. சுமையை இறக்கிக் கீழே வைக்க ஒருவரும் வரமாட்டார்களா என்று ஏங்கினுன். அந்த வேளை தெருவிலே ஒருவரும் போகவில் லே. புண்ணிய மூர்த்தி செய்வது அறியாது தவித தான். அப்போது தெரு ஒரமாக இருந்த சுமைதாங்கி அவன் கண்களிலே பட்டது. மிகுந்த ஆவலோடு அதனருகே சென்று தன் தலைச் சுமையை மெதுவாக இறக்கிவைத் தான் புண்ணிய மூர்த்தி, "அப்பனே ஆண்டவா" என்று ஒரு பெருமூச்சு விட்டான். அவனுக்குப் பெரும் ஆறுதலாக இருந்தது.
புண்ணியமூர்த்தியின் கண்கள் சுமைதாங்கியிற் பொறிக்கப்பட்டிருந்த எழுத்துக்களைப் பார்த்தன. அதிலே
"அறஞ்செய விரும்பு' என்று எழுதப்பட்டிருந்தது. புண்ணியமூர்த்தியின் கண்கள் கலங்கின் 'இந்தச் சுமை தாங்கியைக் கட்டுவதற்கு என்னிடமும பணம் கேட்
டார்களே, நான் இது எனக்கு உதவாது எவறு மறுத்து விட்டேனே' எனக்கு இல்லாவிட்டாலு மற்றவர்களுக்கு உதவுமே என்ற நல்ல எண்ணம் இல்ல து இருந்தேனே, நான் பாவி, இனிமேலாவது நல்ல த பமான காரியங் களைச் செய்ய நான் பின்னிற்கக் கூடாது' என்று தனக் குள்ளே கூறிக்கொண்டான்.
" அறஞ்செய விரும்பு'

Page 9
ஒட்டு மாங்கன்று
கணபதி தன் வீட்டு வளவிலே எத்தனையோ ஒட்டு காங்கன்றுகளை நட்டுப் பார்த்தான். ஒன்றுகூடி தன்முக வளரவில்லை. எல்லாம் காய்ப்பதற்கு முன்பே பட்டும் போயின. கடைசியாக மிகவும் சிரமப்பட்டு, நல்ல கவ எாம் எடுத்து, ஒரு ஒட்டு மாங்கன்றை தட்டான். அது விகவும் செழித்து வளர்ந்தது. அதைப் பார்க்கும்போது கணபதிக்குப் பெரும் மகிழ்ச்சியாக இருந்தது. “இந்த காமரம் காய்த்தால் முதல் முறை காப்க்கும் பழங்கள் அத்தனையையும் விற்று, கிடைக்கும் பணத்திற் பாதியைக் கோயில் உண்டியலிலே சேர்த்துவிடுவேன்" என்று எண்ணி ஞன் கணபதி.
சில காலஞ் செல்ல, அந்த ஒட்டு மாமரம் பூத்தது. கணபதிக்கு ஒரே உற்சாகம். ஆனல் அத்தனை பூக்களும் காயாகவில்லை. இரண்டே இரண்டு பிஞ்சுகள் மட்டு ந் தான் தோன்றின. இருந்தாலும் கணபதிக்குத் தன் மாங் கன்று காய்த்து விட்டதே என்று பெரும் மகிழ்ச்சி நிலத்தில் நின்று கையால் எட்டிப் பிடுங்கக் கூடியதாக அந்த மாம்பிஞ்சுகள் தொங்கின. அந்த மாங்காய்களைத் தொடக்கூடாது என்று தன் மனைவி மக்களுக்குக் கட்டளை யிட்டிருந்தான் கணபதி. அவற்றை யாராவது பிடுங்கிக் கொண்டு போய்விடாதபடி கவனிக்கும்படிகம் சொல்லி, வைத்தான்.

ஒட்டு மாம்கன்று *ッフ s
கணபதியின் வீட்டுக்கு எதிர்த்தாற்போல் வேலுவின் விடு இருந்தது. வேலுவுக்குப் பாண்டி என்று ஒரு மகன் இருந்தான். பாண்டி துடியாட்டமான பையன். அவனுக் குக் கணபதியின் ஒட்டு மாங்காய்களிலே ஒரு கண். எப்படி பாவது அந்த மாங்காய்களை - யாரும் காணுமல் பிடுங்கித் தின்ன வேண்டும் என்பது அவன் ஆவல். ஒருநாள் யாரும் இல்லாத நேரம் பாண்டி பதுங்கிப், பதுங்கிக் கணபதியில் வளவுக்குள் நுளைந்தான். "லபக்" என்று இரண்டு மாங் காய்களையும் பறித்துக் கொண்டு ஓட்டம் பிடித்தான். பாண்டி ஓடுவதை, அடுக்களையில் இருந்து வெளியே வந்த கணபதியின் மனைவி கண்டுவிட்டாள். “ டேய் நில்லடா பாண்டி' என்று சத்தம் போட்டுக் கொண்டு துரத்திச் சென்ருள். பாண்டி பயத்தால் நடுங்கினன். மாங்கால் களைப்போட்டுவிட்டு ஓடி மறைந்துவிட்டான். ふ
எங்கோ சென்றிருந்த கணபதி வீட்டுக்கு வந்தான். நடந்த செய்தி அறிந்ததும்_பாண்டியையும், அவனுடைய பெற்றேரையும் திட்டிக் கொட்டினன். "பாண்டியின் காலை அடித்து முறிப்பேன்" என்று சத்தமிட்டான். வேறு விட்டுக்கு வெளியே வந்து “இரண்டு மாங்காய்ப் பிஞ்சுக ளுக்காக ஏன் இப்படித் திட்டித் தொலைக்கிருய்' என்ருள். கணபதிக்கு அடக்க முடியாத கோபம் வந்தது. டேய் உன் போக்கிரிப் பிள்ளையைச் சரியாகவள" என்று கத்தினன் 1 சரியாக வளர்க்கா விட்டால் என்னடா செய்வாய்"

Page 10
s ஆத்திசூடி அறநெறிக் கதைகள்
பொங்கிவந்த கோபத்தைக் கணபதியாற் கட்டுப்படுத்த் முடியவில்லை. ‘இதுதான் செய்வேனடா" என்று சொல் விக்கொண்டு கையிலே வைத்திருந்த பொல்லால் வேலு daar தலையிலே ஓங்கி அடித்தான். வேலு "ஐயோ" என்று அலறிக்கொண்டு கீழே விழுந்தான். மண்டிை. உடைந்து இரத்தம் பாய்ந்தது . கணபதிக்குக் கை கால் பதறின. வேலுவின் மனைவியும் குழந்தைகளும் "ஐயோ ஐயோ?” என்று அலறினர். சனம் கூடிவிட்டது. சிலர் வேலுவைத் தூக்கி மோட்டார் வண்டியிலே ஏற்றிக் கொண்டு வைத்தியசாலைக்கு விரைந்தனர்.
பொலிசார் வருவார்களே, தன்மேல் வழக்குத் தொடரி வார்களே, என்று கணபதி பயந்து நடுங்கினன். அற்ப விடயத்துக்கு வீணுகக் கோபித்துக் கொண்டேனே என்று ஏங்கினன். அவன் நினைத்தது போல் வழக்குத் தொடரப் பட்டது. வழக்கை விசாரித்த நீதிபதி நடந்தவற்றை நன்கு விசாரித்துத் தெரிந்து கொண்டார். கணபதி கோபத்தை அடக்காத படியால் ஏற்பட்டி விபரீதம் என்று உணர்ந் தார். கணபதியைப் பார்த்து "நீ ஆத்திசூடி படிக்க வில்லையா" என்று கேட்டார். கணபதி' இல்லைப் பிரபு' என்று தலை அசைத்தான். "ஆறுவது சினம்" அதாவது கோபத்தை அடக்கு, என்று ஒளவையார் கூறியிருக்கிருர், நீ அதைப் படிக்கவில்லை. ஆகையினல் கோபத்தை அடக்கா மல் வேலுவைக் காயப்படுத்தி விட்டாய். அது குற்றம். அந்தக் குற்றத்துக்கு நீ தண்டனை அனுபவிக்க வேண்டும். உனக்கு இரண்டு மாதம் சிறைவாசம் விதிக்கிறேன்" என்று அமைதியாகக் கூறினர் நீதிபதி.
கணபதி, கோபத்தை அடக்காத படியால் சிறைக்குப் போகவேண்டி வந்ததே என்று மனம் வருந்தினன்,
ஆறுவது சினம்"

பறந்தது கோழி
கண்ணனுக்கு மூன்று வயதுதான் இகுக்கும். அவன் தினமும் காலையில் எழுந்தவுடன் ஒரு கோப்பை unt 6) பருகுவான். பின்னர் மத்தியானம்வரை அவனுக்கு எந்தி விதமான சாப்பாடும் தேவை இல்லை. காலையிற் turrah). குடித்துவிட்டு அவன் தன்பாட்டிலே விளையாடிக் கொண் டிருப்பான். கண்ணன் வீட்டுக்குத் தினமும் ஒரு பாற்காரன் நல்ல பசுப் பாலைக் கொண்டுவந்து கொடுத்தான். அவன் வராமல் நின்ற நாளே கிடையாது.
அன்று ஒரு நாள் பாற்காரனுக்குப் பால் கொண்டுவர் முடியவில்லை. அவன் கண்ணனின் வீட்டுக்கு வந்து 'அம்மா இன்றைக்குக் கன்று பால் முழுவதையும் ஊட்டி விட்டது. பால் இல்லை" என்று சொல்லி விட்டுப் போய்விட்டான். கண்ணனின் அம்மா பூமணி, என்ன செய்யலாம் என்று யோசித்தாள். பால் இல்லாவிட்டால் கண்ணன் அழுவானே என்று ஏங்கினள். இதற்கிடையில் கண்ணனும் விழித்துக் கொண்டான். எழுந்து வந்து கண்களைக் கசக்கியபடி "அம்மா பால்" என்ருன். "இன்றைக்குப் பால்இல்லை ய.ா இராசா. பிள்ளைக்குக் கொத்தமல்லித் தண்ணிர் தருகிறேன் குடியடா என் செல்வம்" என்ருள் பூமணி. கண்ணன் பால்தான் வேண்டும் என்று அடிம் பிடித்து அழுதான். S.

Page 11
s ங்களின் ஆத்திசூடி அறநெறிக் கதைகள்
பூமணி வீட்டுக்குப் பக்கத்து வீட்டில் மனேன்மணி வசித்து வந்தாள். மஞேன்மணி வீட்டில் ஒரு பசுமாடு நின்றது. அது கன்று ஈன்றிருந்தபடியால் அதன் பாக்ை கறந்து மனேன்மணி தன் மக்களுக்குக் கொடுத்து வந் தாள். அன்றும் மஞேன்மணி தன் பசுவிம் பாலைக் கறந்து, காய்ச்சித் தன் மக்களுக்குக் கொடுத்துவிட்டு மீதி யாக இருந்த பாலை அடுக்களையில் மூடிவைத்திருந்தாள். மனுேன் மணியின் மூத்த மகன், அழகன். அவ்னுக்குப் பத்து வய திருக்கும். அவன் பால் அதிகம் விரும்பிக் குடிப்பதில்லை. அதனுற்தான் பால் மிஞ்சியிருந்தது.
சின்னக் கண்ணன் அழுவதைப் பொறுக்கமாட்டார பூமணி **மனேன்மணி அக்காவிடம் கொஞ்சப் பால் கேட்டுப் பார்ப்போம்” என்று சொல்லி, கையில் ஒரு கோப்பையை எடுத்துக் கொண்டு மனேன்மணி வீட்டுக்கு வந்தாள். மனேன்மணி, வீட்டு விருந்தையில் நின்முள். "அக்கா இன்றைக்குப் பாற்காரன் பால்கொண்டு வர வில்லை. கண்ணன் பால் வேண்டும் என்று அழுகிருன், ஒரு கோப்பை பால் இருந்தால் தாருங்கள் அக்கா" என்று மிகுந்த நயமாகக் கேட்டாள் பூமணி.
மனேன்மணிக்கு, முன்பே பூமணியில் பொழுமையாக இருந்தது. பூமணி ஒருகுறையும் இல்லாமல் வாழ்வது மனேன்மணிக்குப் பிடிக்கவில்லை. எனவே "இவளுக்கு ஏன் பால் கொடுக்கவேண்டும்" என்று தனக்குள்ளே எண்ணி குறள். "ஐயோ தங்கச்சி கொஞ்சம் முன்புதான் பாலைக் காய்ச்சிப் பிள்ளைகளுக்குக் கொடுத்தேன். இவன் அழகள் ஒரு சொட்டும் விடாமல் குடித்துவிட்டான். நீ கொஞ்சம் முந்தியே வந்திருக்கக் கூடாதா?’ என்று அன்பொழுகக் கூறினுள். . -
அப்போது அழகன் அங்கே வந்தான். தாய்சொல் லும் பொய் யை க் கேட்கும்போது அவ னு க்கு ஒரு மாதிரியாக இருந்தது. 'மாமி பால் நிறைய இருக்கு அம் மா பொய் சொல்கிரு’ என்று சொல்லிவிடலாமேர் என்று தோன்றியது. ஆனுல் ஏதோ நினைத்துப் பேசாமல்

பறந்தது கோழி m O
ருந்துவிட்டான். ፳፻፺፰፻፷ srsỡ m! Qơnréữaragầ கட்டபூமணி ஏமாற்றத்தோடு வீடு திரும்பிளுள்.
. பூமணி சென்றதும், மஞேன்மணி அடுக்களையை நோக்கி நடத்தாள். "மீதியாய் இருக்கும் பாலை வைத் திருக்கக் கூடாது. நானேகுடித்துவிடுவோம்’ என்று நினைத்துக்கொண்டு அடுக்களைக் கதவைத் திறந்தாள். அப் போது ஒரு கோழி அடுக்களைக்குள் நுளைந்தது.கோழி நுளை வதைக் கண்ட மனேன்மணி அதை வெளியே துரத்த முற் பட்டாள். அப்போது கோழி அங்கும் இங்கும் பறந்தடித் நது. அப்படிப் பறக்கும்போது சட்டியில் மூடி வைக்கம் பட்டிருந்த பாலைத்தட்டி ஊற்றிவிட்டு வெளியே சென்
து ዶD மனுேன்மணிக்குக் கோழிமேல் கோபங்கோபமாக வந் தது. ‘பறந்துபோன கோழி" என்று சொல் விக் கொண்டு கவிழ்ந்து கிடந்த பாற்சட்டியை எடுத்து நிமிர்த் தினுள். அப்போது, அழகன் அங்கே வந்தான். அவனுக் குச் சிரிப்புச் சிரிப்பாக வந்தது. "இயல்வது கரவேல். இயல்வது கரவேல்" என்று சொல்லிக்கொண்டு தன் கைகளைத் தட்டினன்கு
மனுேன்மணியின் உள்ளத்தில் ஊசியாற் குத்துவது போல் இருந்தது. "பாவம் குழந்தை கண்ணனுக்குப் பால் கொடுக்கக் கூடியதாக இருந்தும், அதைக் கொடுக்காமல் மறைத்தேன். இப்போது அந்தப் பால் ஒருவருக்கும் பிர யோசனப் படாமல் போய்விட்டது. செய்யக்கூடியதைச் செய்யாமல் விடுவது எவ்வளவு தவறு" என்று தனக் குள்ளே நினைத்துக்கொண்டாள்.
"இயல்வது கரவேல்??

Page 12
பலாப்பழம்
பொன்னம்பலம் தாராளமான குணம் உடையவர். அவர் வீட்டு முற்றத்தில் ஒரு பலாமரம் உயர்ந்து வளர்ந்து நின்றது. அந்த மரத்தில் பலமுற்றிய காய்கள் காணப்பட் உன. அந்த ஊரிலே நல்லதம்பி என்று ஒருவன் இருந் தான். அவன் பொன்னம்பலம் வீட்டுக்கு வந்து "ஐயா, அடுத்த வெள்ளிக்கிழமை அம்மன் கோயிலிலே ஒரு பொங் கல் செய்யப்போகிறேன். தயவு செய்து உங்கள் பலாக் காயில் ஒன்று தாருங்கள். இன்று அல்லது நாளை வெட்டிப் போட்டால் தான் வெள்ளிக்கிழமைக்குப் பழுக்கும். நீங்கள் கேட்கும் பணம் தருகிறேன்' என்ருள்.
அம்மன் கோயிற் பொங்கலுக்கு என்று கேட்கும்போது,
பழத்துக்குப் பணம் வாங்கக்கூடாது என்று தோன்றியது பொன்னம்பலத்துக்கு. அவர், "நல்ல தம்பி! நீ கோயிற் பொங்கலுக்கு என்று கேட்கும்போது நான் பணம் வாங்கு வது சரியல்ல. உனக்கு விருப்பமான காயை வெட்டி எடுத் துக்கொள். ஆனல் மரத்தில் ஏறும் போது முற்றியிருக்கிற மற்றக் காய்களையும் வெட்டி இறக்கிவிடு. அது போதும் எனக்கு” என்ருர்,
"ஐயா உங்களுக்குத் தங்கமான உள்ளம். இப்போது என்னல் மரத்தில் ஏற முடியாது. நாளைக் காலை ஒரு ஆளைக் கூட்டிவந்து முற்றிய காய்களை வெட்டி இறக்கிவிட்டு ரு காயை மட்டும் நான் எடுத்துக்கொள்கிறேன்" என்று கூறிவிட்டுச் சென் முன் நல்லதம்பி.

tvarů půb 1篡汉
நல்லதம்பியும், பொன்னம்பலமும் பேசியதைத் தெரு விலே சென்று கொண்டிருந்த ஆறுமுகம் கேட்டுவிட் டான். **அடே இவன் நல்லதம்பி பெரிய கெட்டிக்காரன். பணம் கொடுக்காமல் பலாப்பழம் பெற்றுவிட்டான். இவ னுக்குப் பலாப் பழம் கிடைக்காமற் செய்ய வேண்டும்" என்று தனக்குள்ளே யோசித்தான். உடனே பொன்னம் பலத்திடம் சென்றன். 'ஐயா இவன் நல்லதம்பியுடைய கதையில் எடுபட்டு விட்டீர்கள் போலிருக்கு" என்று இழுத்தான். பொன்னம்பலம், ‘விளக்கமாகச் சொல்” என்று கேட்டார். அதற்கு ஆறுமுகம் "ஐயா அவன் அம் மனுக்குப் பொங்கப் போகிறேன் என்றதெல்லாம் பொய். இந்த விதமாகப் பலரிடம் சொல்லி ஏமாற்றிப் பல பொருட்களைப் பெற்றிருக்கிருன். ஒருநாளும் பொங்கவும் இல்லை, பூசை செய்யவும் இல்லை.” என்று பெரிய பொய் யைச் சொன்னன்.
பொன்னம்பலம் தாம் ஏமாந்து விட்டதாக நினைத் தார். “நல்லதம்பி இப்படிப் பொய் சொல்வான் என்று நான் எதிர்பார்க்கவில்லை. நாளைக்கு அவன் வரட்டும்” என்று சிறிது ஆத்திரத்தோடு கூறினர்.

Page 13
2 ஆத்திசூடி அறநெறிக் கதைகள்
?ஐயா அவன் நாளைக்கு வரும் வ்ரைக்கும் பொறுக் கக்கூடாது. சில நேரம் இரவு வந்து களவாகக் காய்களே வெட்டப் பார்த்தாலும் பார்ப்பாள். நானே இப்போது முற்றிய காய்களை வெட்டி இறக்கித் தருகிறேன். ஒரு நீளமான கயிறு எடுத்து வாருங்கள்" என்று நயமாகக் கூறினன் ஆறுமுகம்.
பொன்னம்பலத்துக்கு, ஆறுமுகம் கூறுவது சரிபோற் பட்டது. ஒரு நீண்ட கயிற்றை எடுத்து வந்து அவனிடம் கொடுத்தார். ஆறுமுகம் கயிற்றையும் எடுத்துக்கொண்டு மரத்தில் ஏறிஞன். உச்சாணிக் கொப்புக்கு ஏறும்போது ஆறுமுகத்தின் கால் தடக்குப்பட்டது. கைப்பிடியுந் தளர்ந் நது. தட்டுத் தடுமாறி மரத்தில் இருந்து" "படார்" என்று கீழே வீழ்ந்தான். விழுந்த விழுக்காட்டில் அவனுடைய கால் முறிந்து போயிற்று. வலி தாங்க முடியாமல் அல றினன் ஆறுமுகம். பொன்னம்பலம் பரிதாபமாக அவனம் பார்த்தார். தூக்கி நிறுத்த முனைந்தார். ஆறுமுகத் தால் எழுந்து நிற்க முடியவில்லை.
அப்போது பொன்னம்பலத்தில் மனைவி தங்கம்மா அங்கே வந்தாள். ஆறுமுகத்தின் நிலையைப் பார்க்கும் போது அவளுக்கு ஒருபுறம் பரிதாபமாகவும் மறுபுறம் கோபமாகவும் இருந்தது. "ஈவது விலக்கேல்" என்ற ஒளவைப் பாட்டியின் ஆத்திசூடி உனக்குத் தெரியாதா ஆறுமுகம். நல்லதம்பிக்குப் பலாப்பழம் கிடைக்கப்போவது உனக்குப் பொருமையாக இருந்தது. அதுதானே நீ வந்து பொய்க் கதை கட்டினய். இப்போது உனக்கு நடந்ததைப் பார்த்தாயா? ஒருவர் மனமுவந்து கொடுப்பதைத் தடுக்கக் கூடாது. தடுத்தால் துன்பம்தான் வரும்" என்ருள்.
ஆறுமுகம் தன் பிழைக்கு மன்னிப்புக் கேட்டான். பொன்னம்பலம் அவனை வைத்தியரிடம் அழைத்துச் செல்ல வண்டி ஒழுங்கு செய்யப் புறப்பட்டார்;
* ஈவது விலக்கேல்?

இசைக் கச்சேரி
ஆனந்தா மண்டபம் மக்களால் நிரம்பி வழிந்து கொண்டிருந்தது. உலகப் புகழ்பெற்ற சங்கீத வித்துவான் Loomiseñ t-Q56àot-äu இன் விசைக் சச்சேரி ஆரம்பிக்க இன்னும் சிறிது நேரந்தான் இருந்தது. மணிகண்டர் கர்நாடக இசை, வட நாட்டு இசை, மேல் நாட்டு இசை முதலிய இசை முறைகளையெல்லாம் நன்கு கற்ற ஒரு மேதை. அவருடைய குரலின் இனிமையைச் சொல்லவே முடியாது. அவர் பாடுவதில் மட்டும் அல்லாது பல வகைப் பட்ட இசைக் கருவிகளையும் வாசிப்பதிலும் திறமையுடைய வராக இருந்தார்.
இதனுல் அவரது கச்சேரிகளுக்குப் பெருந்திரளாக மக்கள் கூடுவர். அதிகபணம் கொடுத்து அனுமதிச் சீட்டு கன் பெறவும் மக்கள் தயாராக இருந்தனர். தனக்குக்

Page 14
14 ஆத்திசூடி அறநெறிக் கதைகள்
கிடைத்திருக்கும் பெயரையும் புகழையும் கண்டு மணி கண்டன் மிகவும் பெருமை அடைந்தார். தன்னவெல்லக் கூடிய இசை மேதைகள் உலகிலேயே இல் ைஎன்று கர்வம் கொண்டிருந்தார்.
அன்று குறிப்பிட்ட நேரத்துக்குக் கச்சேரி ஆரம்ப மாகி மூன்று மணி நேரம் நீடித்தது. அவருடைய இன்னிசையைக் கேட்ட மக்கள் அவரைப் பாராட்டினுர் கள். புகழ்ந்து பூமாலை சூட்டினர்கள். பல பரிசில்களை வழங்கிஞர்கள். இதனுல் பெருமையடைந்த மணிகண்கூரி சபையில் எழுந்து பேசினர். "அன்பர்களே! உங்கள் பாராட்டை நான் மனமார ஏற்றுக்கொள்கிறேன். என்னு டைய திறமையை நீங்கள் முழுமையாகக் காணவில்லை. கல்லும் கனியும்வண்ணம் நான் இசை மாரி பொழி வேன். என்னேடு போட்டியிடவோ, எனக்கு நிகரானவரோ கிடையாது. இந்தச் சபையிலே என்னேடு போட்டியிடக் கூடியவர் யாராவது இருந்தால் எழுந்து வரலாம்" என்று ஓர் சவால் விட்டார்.
சபையிலே இருந்த பலருக்கு மணிகண்டரின் பேச்சு வெறுப்பைத் தந்தது. " என்னதான் திறமைசாலியாக இருந்தாலும் இவன் தன்னைத் தானே புகழ்ந்து கொள்வது அழகல்ல" என்று பலர் பேசிக்கொண்டனர். அங்கே ಕ್ಲಿಲ್ವಹ್ನಿ சுரபூபத என்னும் இளைஞனுக்கு மணிகண்டரின் பச்சுச் சிறிதும் பிடிக்கவில்லை. ** இவருடைய இறுமாப்பு இவருடைய திறமையையே மறைத்து விட்டது. இவரைச் சும்மாவிடக் கூடாது" என்று எண்ணியவாறு எழுந்து மேடைக்குச் சென்று அயை தியாகப் பேசினன். * திறமை மிக்க மணிகண்டரே! நீங்கள் இவ்வளவு இறுமாப்பாகப் பேசுவது அழகல்ல திறமை உள்ளவர்கள் அடக்கமாகவே இருக்க வேண்டும். அ ப் போது தா ன் அவர்களுடைய திறமை மேலும் புகழ் அடையும். உங்கள் சவாலை நான் ஏற்கிறேன். நாளை இதே மண்டபத்தில் எமது போட்டியை நடத்துவோம்.” எனறு, கூறிவிட்டு மேடையை விட்டு இறங்கித் தனது ஆசனத்தில் அமர்ந்தான். மக்கள் கைதட்டி ஆரவாரித்தனர்.

இசைக் கச்சேரி 15.
மறுநாள் ஆனந்தா மண்டபத்தில் மணிகண்டர் சுரபூபதி இசைப்போட்டி நடுவர்கள் முன்நிலையில் ஆரம்ப மாகியது. முதலில் மணிகண்டரே பாட ஆரம்பித்தார். சபையிலே ஒரே அதிர்ச்சி. "நேற்று, தேவகானம் போல் பாடிய அவருடைய குரலுக்கு என்ன நடந்து விட்டது" என்று ஒருவரை ஒருவர் கேட்டுக்கொண்டனர். அவ்வளவு தூரம் அவருடைய குரல் கர்ண கடூரமாக இருந்தது. கோழி கேருவது போல் ஒலித்தது.
முதல் நாட் கச்சேரியின் பின் மணிகண்டர் மிகவும் குழப்ப நிலையில் இருந்தார். தன்னை எதிர்க்க ஒருவன் வந்துவிட்டானே என்று பெரும் ஆத்திரம் அடைந்திருந் தார். இரவு முழுவதும் அவருக்குத் தூக்கமே வரவில்லை. குளிர் காற்றும் பணியும் அவர் தொண்டையை அடைக்கச் செய்துவிட்டன. இதனல் அவரால் ஒருபாட் டைக்கூடத் திறமையாகப் பாட முடியவில்லை. மக்கள் கைகொட்டிக் கேலி செய்து சிரித்தனர்.
அப்போது சுரபூபதி 'உடையது விளம்பேல்" என்று ஆரம்பிக்கும் ஒரு பாட்டைப் பாடினன். அவனுடைய குர லின் இனிமையையும் பாட்டின் கருத்தையும் உணர்ந்த மக் கள் கைதட்டி ஆரவாரித்தனர். சுரபூபதியின் பாட்டு முடிந்ததும் மணி கண்டர் எழுந்து “அன்பர்களே! என்னை மன்னித்து விடுங்கள். 'உடையது விளம்பேல்" என்ற ஆத்திசூடி வாக்கியத்தை நான் மறந்தேன். அதனல் அவமானமும் அடைந்துவிட்டேன். ஒளவைப் பாட்டியின் போதனையை மறந்த எனக்கு இது நல்ல தண்டனை. என் திறமையை நானே புகழ்ந்து பறைசாற்றியது தவறு. இந்த இளைஞன் உண்மையில் போற்றப்பட வேண் டியவன். என்னிலும் பார்க்க அவனே திறமைசாவி, மேலோன் என்பதை நான் ஒப்புக்கொள்கிறேன். என்னை மன்னியுங்கள்" என்று கூறி இரு கைகளையும் கூப்பி வணங்கினர். V
மக்கள் கைதட்டி ஆரவாரித்தனர்.
“உடையது விளம்பேல்”

Page 15
வெகுமதி
ஆழிமாறன் என்பவன் பெரிய வியாபாரி. அவனிடீம் பல மீன்பிடி வள்ளங்களும், வேகமாகப் போகும் இயந்திரப் படகுகளும் இருந்தன. வெளித்தோற்றத்துக்கு ஆழிமா றன் மீன்பிடித்தொழில் செய்யும் ஒரு பெரிய வியாபாரி யாகவே காணப்பட்டான். அவனிடம் ஏறக் குறைய நூறு பேருக்கு மேலாக வேலை பார்த்து வந்தனர். அவனுடைய வேமேயாட்கள் அனைவரும் நல் ைபயபக்தியாகத் தமது கடமைகளைச் செய்து வந்தனர். அனைவருக்கும் ஆழி மாறன் நல்ல சம்பளம் கொடுப்பதோடு பல வசதிகளும் சேய்து தந்தான்.
ஆழிமாறனுடைய நாட்டிலே கள்ளக் கடத்தல் பெரு மண்வில் நடைபெறுகின்றது என்று அரசாங்கம் அறிந்தது. பிற நாடுகளில் இருந்து சட்டவிரோதமாகப் பொருட் களைத் தோணிகளிலும், இயந்திரப் படகுகள் மூலமும் கொண்டு வந்து அந்த நாட்டில் அதிக பணத்துக்கு விற்று வருகிருர்கள் என்று செய்திகள் பரவின. இதைத் தடுப் பதற்காக அரசாங்கம் கடற் கரைகளிலும், துறைமுகம், ஆகாய விமான நிலையம் முதலிய இடங்களிலும் பலத்த காவல் நடவடிக்கைகள் மேற்கொள்ளலாயிற்று. கடற் படையினரின் இயந்திரப் படகுகள் கரையோரங்களில் காவல் புரிந்து கொண்டிருந்தன.

வெகுமதி 1穹
ஒரு நாள் கடற்படையைச் சேர்ந்த மூவர் தங்கள் இயந்திரப் படகில் ஏறிக் கரை யோரமாகச்சுற்றி வந்தனர். அம்மூவரில் க்ண்டது விடோன் என்னும் இளைஞனும் இருந் தான். அவன் மிகுந்த திறமைசாலி. நன்ருக நீந்தவும், நீரில் மூழ்கவும், இயந்திரப் படகை வேகமாக ஒட்டவும், பயிற்சி பெற்றிருந்தான். கடற்படையினர் இப்படிச் சுற்றி வரும் வேளை அவர்களுடைய கண்களுக்கு வேறுமோர் இயந் திரப் படகு தென்பட்டது. அந்தப்படகு அவர்களுக்குச் சந்தேகத்தை ஊட்டியது. உடனே அவர்கள் தமது படகை எதிரே தெரிந்த படகின் திசைக்குச் செலுத்தினர். கடற் படையினரின் பட்கு தம்மை நோக்கி வருவதைக் கண்ட மற்றப் படகு மறுபுறமாகத்திரும்பி வேகமாக ஒடத் தொடங்கியது. ح
கடற்படையினர் மிகுந்த வேகமாகத் தமது படகைச் செலுத்தினர். மற்றப் படகும் வெகு விரைவாகச் சென் றது. கடற்பட்ையினரின் படகு தமது படகை அண்டி வந்து விட்டது என்று அறிந்த மற்றப் படகினர் தடுமா றினர். படகை அங்கும் இங்குமாக வளைத்து வளைத்து ஒட் டினர். கடற்படையினரும் விட்டுக்கொடுக்கவில்ஆல. இதற் கிடையில் துரத்தப்பட்ட படகில் இருந்த ஒருவன் ஏதோ ஒரு பொதியைப் படகினின்றும் எடுத்து மெதுவாக

Page 16
18 ஆத்திசூடி அறநெறிக் கதைகள்
கடலிலே போட்டான். அது பாரமான பொதியாக இருந் தமையால் நீரில் மூழ்கி மறைந்தது. பொதியைக் கடலில் வீசியதைக் கண்டதுவிடோன் பார்த்துவிட்டான். அந்த இடத்தின் குறிப்பை மிகவும் அவதானமாக மனத்திற் பதித் துக்கொண்டான்.
கடற்படையினரில் ஒருவன் தனது கைத்துப்பாக்கியைப் எடுத்து மேல் நோக்கிச் சுட் டு ப் பயமுறுத்தினன். வடகை நிறுத்தும்படி கட்டளையிட்டான். தப்பிஓட முடி யாது என்று அறிந்த கடத்தற்காரர்கள் கடற்படையின ரிடம் சரண் புகுந்தனர். அகப்பட்டவர்கள் ஆழிமாற னின் ஆட்கள் என்று கடற்படையினர் தெரிந்துகொண் டனர். 'கடலிலே வீசிய பொதியில் என்ன இருந்தது’* என்று கண்டதுவிடோன் ஆழிமாறனின் ஆட்களைக் கேட்டான். அவர்கள் தாம் ஒன்றையும் வீ ச வி ல் லை என்று ஒரேயடியாக மறுத்தனர். க ன் டது விடோ னுக்கு அவர்கள் மேல் கோபங் கோபமாக வந்தது. கடத் தற் படகில் இருந்த இருவருக்கும் கைவிலங்கிட்டுக் கவன மாகப் பார்த்துக் கொள்ளும்படி தனது நண் பரி டம் சொன்னன் கண்டது விடோன். பின்னர் தனது படி கிலேயிருந்த நீச்சல் உடுப்பை அணிந்து கொண்டு பொதி வீசப்பட்ட குறிப்பிலே நீரில் மூழ்கினன். ஐந்து நிமிடங் கள் வரை நீரின் அடியிற் சென்று தேடினன். ஒன்று ம் அகப்படவில்லை. பின்னர் மேலே வந்து மூச்சு வாங்கிஞன். இப்படியாக அந்தப் பகுதியில் ஆறேழு முறை நீரில் மூழ் கிப் பொதியைத் தேடினன். ஆனல் பொதி அகப்பட
வில்லை.
அவனுடைய நண்பர்கள் அவனது முயற்சியைக் கைவிடும்படி வற்புறுத்தினர். ஆனல் கண்டதுவிடோன் அவர்களைப் பார்த்து 'ஊக்கமது கைவிடேல்" என்று ஒளவையார் சொல்லியிருப்பது உங்களுக்குத் தெரியாதா? இதோ இது எட்டாவது முறை. இம்முறை கட்டாயம் அகப்படும்' என்று கூறியவாறு நீரில் மூழ்கினன். இந்த முறை மறுமுறைகளிலும் பார்க்க அதிகநேர மெடுத்து

வெகுமதி 9
ஊக்கமாகத் தேடினன். அவன் முயற்சி வீண்போக வில்லை பொதி அகப்பட்டுவிட்டது. அதனைக் கொழுவி இழுத்துக்கொண்டு மேலே வந்தான். நண்பர்கள் ஆச்சரி யத்தில் மூழ்கினர்.
ஆழிமாறன்மேல் வழக்குத் தொடரப்பட்டது. அவனுக்கும் அவனுடைய ஆட்களுக்கும் பெரிய அபராதம் விதிக்கப்பட்டது. கடத்திவரப்பட்ட பொதி பறிமுதல் செய்யப்பட்டது. அந்தப் பொதியிலே பதினைந்து தங்கப் பாளங்கள் இருந்தன. அரசாங்கம் அவற்றின் பெறுமதியின் ஒரு பகுதியைக் கண்டதுவிடோனுக்கும், அவனுடைய நண்பர்களுக்கும் வெகு ம தி யா க வழங்கியது. கண்டது விடோனுடைய விடாமுயற்சியே தமக்கு வெகு மதி கிடைக்கச் செய்தது என்று மற்ற நண்பர்கள் அவனைப் பாராட்டினர். ஒளவையாரின் ** ஊக்கமது கைவிடேல் ?? என்ற அறிவுரையே தமக்கு வெகுமதி பெற்றுத் தந்தது என்று கண்டதுவிடோன் கூறி மகிழ்ந்தான்.
ஊக்கமது கைவிடேல்'

Page 17
நன்னுன்கு பதினுறு நாலும் நாலும் எட்டு
மின்னன்கு பதினறு, நன்னன்கு பதினறு, பதினறு நூறு, ஆயிரத்து அறுநூறு என்று மனப்பாடிஞ் செய்து கொண்டு வண்டியை ஒட்டினன் பரமகுரு. அவனுடைய வண்டியிலே நாலுமூடை வெங்காயம் இருந்தது. அந்த மூடைகள் ஒவ்வொன்றிலும் நாலு தூக்கு வெங்காயம் இருந்தது. ஆகவே அவன் பதினறு தூக்கு வெங்காயம் தன் வண்டியிலே வைத்திருக்கிருன். அந்த வண்டியில் உள்ள வெங்காயத்தைப் பட்டணத்தில் உள்ள ஒரு வியா பாரியிடம் கொடுத்துப் பணம் பெறச் செல்கிருன் பரம குரு ஒரு தூக்கு வெங்காயத்தின் விலை நூறு ரூபா. எனவே பதி னுறு தூக்கு வெங்காயத்துக்கும் அவனுக்கு ஆயிரத்து அறுநூறு ரூபா கிடைக்க வேண்டும்.
பரமகுரு எழுத, வாசிக்கப் படிக்கவில்லை. அவனுக் குக் கணக்குப் பார்க்கவும் தெரி யாது. பரமகுருவின் தந்தை குமாரசாமி ஒரு விவசாயி. அவர் ஒரளவு எழுது வாசிக்கப் படித் திருந்தார். ஆனல் தான் நிறையப் படிக்க வில்லையே என்று அவர் அடிக்கடி வருத்தப்படுவார்.
தன்னுடைய மகன் பரமகுருவை இளமையிலேயே படிக்கவைக்க வேண்டும் என்று பெரிதும் விரும்பினர் குமா ரசாமி. ஆனல் பரமகுரு பள்ளிக்கூடம் செல்ல மறுத்து விட்டான். தனக்குப் படிப்பே வேண்டாம் என்று அடம் பிடித்தான் . குமாரசாமிக்குப் பெரும் கவலை. இருந்தும்

நன்னன்கு பதினுறு நாலும் நாலும்எட்டு -م a1
மகனைப் படிக்கவைக்க அவருக்கு முடியவில்லை. அவர் கூறிய புத்திமதிகளைப் பரமகுரு தட்டிக்கழித்தான்.
பரமகுரு வளர்ந்து வாலிபனனதும் தந்தையோடு தோட்ட வேலையில் ஈடுபட்டான். மிகுந்த கஷ்டப்பட்டு விவசாயம் செய்தான். அவர்களுடைய முயற்சிக்குத் தக்க நல்ல பலன் கிடைத்தது. அப்போது பரமகுரு தகப்பனைப் பார்த்து, 'படிப்பு வேண்டும் படிப்பு வேண்டும் என்று என்னை வற்புறுத்தினிர்களே, படிக்காமலே நான் வாழ வில்லையா அப்பா" என்று கேட்டான். குமாரசாமி தனது மகனின் மடமையை நினைத்துக் கவலைப்பட்டார்.
*கல்வியின் மகிமையை என்ருவது ஒருநாள் நீ உணரு வாய்' என்று வருத்தத்தோடு கூறினர்.
தோட்டத்திலே விளைந்த வெங்காயத்தைப் பட்ட ணத்து வியாபாரிக்கு விற்பதற்கு ஒழுங்கு செய்தார் குமாரசாமி. ஆனல் எதிர்பாராத விதமாக அவரால் பட் டணம் போக முடியவில்லை. அவரது உடல்நிலை சரியாக இருக்கவில்லை. எனவே மகன் ལྔ་ や பரமகுருவிடம் அன்று வெங்கா או אי 氨 யத்தைக் கொடுத்து அனுப்பி ༈ འ༦, ஞர். அவன் கொண்டு செல்லும் வெங்காயத்தின் அளவையும் அதற்கான விலையையும், மொத் தமாக அவன் வாங்கி வர வேண் டிய பணத்தின் தொகையையும் விரிவாகச் சொல்லி அனுப்பி ဗွီ!; அதை மனப்பாடஞ் செய்து
காண்டுதான் பரமகுரு வண்டி
யைப் பட்டணத்துக்கு ஒட்டிக் கொண்டிருந்தான்.
பட்டணத்தை அடைந்ததும் குறிப்பிட்ட வியாபாரி யிடம் தான் கொண்டுவந்த வெங்காய மூடைகளைக் கொ டுத்தான். தந்தை சொல்லிவிட்ட படி மனப்பாடஞ் செய்த

Page 18
22 ஆத்திசூடி அறநெறிக் கதைகள்
கணக்கையுஞ் சொல்லி ஆயிரத்து அறுநூறு ரூபா தரும்படி கேட்டான். பரமகுரு எழுத்தும், கணக்கும் படியாதவன் என்பது வியாபாரிக்குத் தெரியும். ஆகவே பரமகுருவை மோ சஞ்செய்ய எண்ணினன். அவன் கொண்டு விந்த வெங் காயத்துக்கு எண்ணுாறு ரூபாதான் வருமதி என்று கூறி குறன். பரமகுரு தகப்பன் சொன்ன கணக்கை ஒப்புவித் தான். ܟ
வியாபாரி சிரித்துவிட்டு 'தம்பி உன் அப்பா போட்டி கணக்குப் பிழைத்துவிட்டது. இதோ நான் கணக்குப் போட்டுக் காட்டுகிறேன்" என்று கூறி எட்டுப் புளியங் கொட்டைகளை எடுத்தான். “இதோ பார், நீ கொண்டு வந்தது நாலு மூடைகள். அந்த நாலு மூடைகளும்தான் இந்த நாலு புளியங்கொட்டைகள். இதோ இதில் உள்ள மற்ற நாலு புளியங் கொட்டைகளுந்தான் ஒரு மூடையில் இருக்கின்ற நாலு தூக்குகள். ஆகவே நாலு மூடைகளி லும் உள்ள மொத்த நிறை நாலும் ஒன்றும் ஐந்து, ஐந் தும் ஒன்றும் ஆறு, ஆறும் ஒன்றும் ஏழு, ஏழும் ஒன்றும் எட்டுத் தூக்கு" என்று புளியங்கொட்டைகளைக் கூட்டிக் காட்டினன். எட்டு தூக்குக்கும் எண்ணுறு ரூபாதான் வருமதி என்று கணக்குக் காட்டினன்.
பரமகுருவுக்கு அவன் சொல்லும் கணக்குச் சரிபோல் இருந்தது. ஒரு வேளை தந்தை கணக்கிற் பிழை விட்டிருப் பாரோ? என்று யோசித்தான். அப்படி அவன் யோசிக் கும்போது வியாபாரி "தம்பி நீர் யோசிக்க வேண்டாம். நான் உமது தந்தைக்கு ஒரு கடிதம் எழுதித் தருகிறேன். அவர் அதை வாசித்துப் பார்த்தால் எல்லாம் விளங்கி விடும்' என்று நயமாகக் கூறினர். பரமகுருவும் வியா பாரியின் சொல்லை நம்பி எண்ணுாறு ரூபாவையும் கடிதத் தையும் பெற்றுக்கொண்டு வீடு திரும்பினன்.
குறிப்பு: தூக்கு எனக் குறிப்பிடப்படுவது தாளோடு கட்டப்படும் ஒரு வெங்காயக்கட்டு. இதன் நிறை ஏறக்குறைய 28 இருத்தல் இருக்கும்.

நன்ஞன்கு பதிஞறு நாலும் நாலும் எட்டு - 23
தந்தையிடம் கடிதத்தையும் பணத்தையும் கொடுத் தான். கடிதத்தைப் படித்துப் பார்த்த குமாரசாமி 'நீ வியாபாரியிடம் எத்தனை மூடைகள் கொடுத்தாய்" என்று பரமகுருவிடம் கேட்டார். "நான் நாலு மூடைகள் தானே கொண்டு சென்றேன். அவற்றை அ ப் படி யே அவனிடம் கொடுத்தேன்; என்றன். 'தன்னிடம் இரண்டு மூடைகள் மட்டுந்தான் நீ கொடுத்ததாகவும் அதற்கான எண்ணுாறு ரூபா அனுப்பி இருப்பதாயும், மீதி இரண்டு மூடைகளையும் வழியில் கள்வர் தட்டிக்கொண்டு போய் விட்டதாக நீ அவனிடம் கூறியதாகவும் எழுதி யிருக்கிருன்" என்ருர் குமாரசாமி.
பரமகுரு தன்னை வியாபாரி மோசஞ் செய்துவிட் டதை அப்போதுதான் உணர்ந்தான். பொய்க்கணக்குப் போட்டும், பொய்க் கடிதம் எழுதியும் தன் னை மடக்கி விட்டான் என்று ஆத்திரப்பட்டான். அப்போது குமார சாமி "மகனே எண்ணெழுத் திகழேல்" என்று ஒளவை சொன்னது பொய்க்கவில்லை. கணிதம் எழுத்து; முதலியன உனக்குத் தேவையில்லை என்று உதறித்தள்ளிய்ை. இப் போது அவற்றின் மகிமையை நீயே உணர்ந்துகொண் டாய்" என்றர்.
பரமகுரு தன் தவறை உணர்ந்து கொண்டு அன்றே எண்ணும்; எழுத்தும் கற்க முடிவு செய்து கொண்டான்.
'எண்ணெழுத் திகழேல்"

Page 19
புல்லுச் சத்தகம்
வள்ளிக் கிழவி திடீர் என்று இறந்துவிட்டதாகச் செய்தி ஊரெங்கும் பரவியது. 'பாவம் நல்ல கிழவி. அப்படி என்ன வந்தது’ என்று எல்லோரும் அனுதாபப் பட்டார்கள். வள்ளிக் கிழவிக்கு அந்த ஊரில் உ ற் ருர் உறவினர் யாருமே கிடையாது. நெடுங்காலமாக அவ ளும் அவளுடைய மகளும் அந்த ஊரிலேயே வாழ்ந்து வந்தார்கள் வறியவர்களான அவர்களுக்கு இருக்கக் கூட ஒரு குடிநில்ம் கிடையாது. யாரோ ஒரு பண்க்கார ருடைய நிலத்திலே ஒரு சிறிய கு டி ல் கட்டிக்கொண்டு சீவித்து வந்தார்கள்.
வள்ளி தன் மகளுக்கு விவா கம் பண்ணி வைத்தாள். அவர் `கள் எ ல் லோரும் கூலி வேலை செய்தும்; புல் வெட்டி விற் றும் சீவி ய த்தை நடத்தினர்கள். வள்ளியின் மகளுக்கு வட் டன் பிறந்தான். பே ர னை க் கண் ட வள்ளி பூரிப்படைந்தாள். ஆனல் அவளுடைய ம கி ழ் ச் சி நீடிக்க வில்லை. வட்ட ன் பிறந்ததும் அவனுடைய தந்தை அவர்களை விட்டுவிட்டு எங்கோ போய் விட் டான். கணவனின் பி ரி  ைவ த் தாங்காமல் வள்ளியின் மகளும்
 

புல்லுச் சத்தகம் メ 25
நோய் வாய்ப்பட்டுச் சீக்கிரமே இறந்து போனள். வள்ளி பெரும் துயரப்பட்டாள். தானும் தன் பேரன் வட்டனும் எப்படிச் சீவிக்க முடியும் என்று வருந்தினுள். அவளுக்கு வயது சென்ற நிலை . இருந்தாலும், அந்த ஊரிலே உள்ள வயல் வெளிகளில் புல் வெட்டி, அந்தப் புல்லை ஊரவர்களுக்கு விற்றுச் சீவியத்தை நடத்தினுள் தன்னுடைய பேரன் வட்டனை மிகவும் கவனமாக வளர்த்து வந்தாள்.
வட்டனுக்கு இப்போது வயது பன்னிரண்டு இருக்கும். அவன் வள்ளியின் பின்னே சென்று விஃாயா டுவான். அவள் புல் வெட்டும்போது இவன் வண்ணுத் திப் பூச்சிகளைப் பிடித்து விளையாடுவான். அன்று இருந் தாற்போல் வள்ளிக் கிழவி இறந்து விட்டாள். இரவு படுத்த கிழவி விடிந்ததும் எழுந்திருக்கவில்லை. வட்டன் கதறி அழுதான். "ஆச்சி ஆச்சி' என்று மண் மீது வீழ்ந்து புரண்டான். அவனை எவராலும் தேற்ற முடியவில்லை.
ஊரில் உள்ள நாலு பெரிய மனிதர் வள்ளியின் சட லத்தை அடக்கம் செய்ய ஒழுங்கு செய்தனர். கிழவி இறந்து ஒரு வாரம் வரை ஊரில் உள்ளவர்கள் வட்டனுக்கு உணவு கொடுத்து ஆறுதல் வார்த்தை சொன்னர்கள். பின்னர் அவனை ஒருவரும் கவனிக்காது விட்டுவிட்டனர். வட்டனுக்குப் பசிதாங்க முடியாமல் இருந்தது. எனவே வீடு வீடாகச் சென்று பிச்சை கேட்டு உண்டான். சிறிது காலஞ் செல்லப் பிச்சை கொடுப்பவர்களும் குறைந்து கொண்டு வந்தனர். வட்டன் பிச்சை கேட்டபோதெல்லாம் * 'இவனைப் பாருங்கள் வண்டுபோல இருக்கிழுன். விடிந் ததும் விடியாததுமாகப் பிச்சைக்கு வந்துவிடுகிருன். இவ னுடைய தாயை எடுத்துப் புதைத்தது இந்த ஊர்மக்கள். பின் னர் இவனுடைய பேத்திக் கிழவியின் பிணத்தை எடுத்துப் புதைத்தது நாங்கள். இப்போது இவனுக்கும் நாளாந்தம் சோறு போடவேண்டியிருக்கு. இவனுக்குப் பிச்சை எடுத்துத் தின்ன வெட்கமாக இல்லையா?" என்று கேவலமாகப்

Page 20
26 ஆத்திசூடி அறநெறிக் கதைகள்
பேசினர். இந்த வார்த்தைகளைக் கேட்டி ~வட்டனுக்குப் பெரும் வெட்கமும் துக்கமுமாக இருந்தது. பிச்சை எடுப்ப பது கேவலமான செயல் என்று அவனுக்குத் தெரிந்தது. இனிமேல் பிச்சை எடுப்பதில்லை என்று முடிவு செய்து கொண்டான்.
தன்னுடைய பாட்டியுடைய புல்லுச் சத்தகத்தை தேடி எடுத்தான். நேராக வயல் வெளிக்குச் சென்று புல் வெட்டத் தொடங்கினன். நாள் முழுவதும் தான் வெட்டிய புல்லைக் கட்டிக்கொண்டு வந்து சந்தையில் விற்றன். அதஞற் கிடைத்த பணத்தைக் கொண்டு ஊரில் உள்ள கடை யொன்றில் சாப்பிட்டான். இரவிலே தனது பேத்தியின் குடிலில் நித்திரை செய்தான்.
வட்டனின் இந்தச் செயலை ஊரில் இருந்த ஒரு பெரியார் கவனித்தார். **ஏற்ப திகழ்ச்சி' என்ற ஒளவையின் மொழியைப் படிக்காமலே இவன் பின்பற்று கிருன். இவன், பிச்சை எடுப்பது கேவலம் என்று தானுகவே உணர்ந்து விட்டான். இவனிடம் நல்ல திறமை உண்டு. இவனைப் படிப்பித்து நல்ல அறிவாளியாக்க வேண்டும்" என்று எண்ணினர். அவ்வாறே செய்ய ஒழுங்குகளும் செய்தார். வட்டன் மகிழ்ச்சியடைந்தான்.
*ஏற்பது இகழ்ச்சி'

நல்ல பாடம்
வணங்காமுடி என்பவன் நாsறிந்த ஒரு பெருந் திருடன். அவனையும் அவன் கூட்டத்தினரையும் பிடிக்க ஒருவராலும் முடியாது. அவன் மாறு வேடங்களில் ஊர்களில் உலாவுவான். ஏழை மக்கள் அவனை அறிந் திருந்தார்கள். அவன் ஏழைகளிடம் திருடமாட்டான். பெரிய பணக்காரர்களிடமும், கொள்ளை இலாபம் எடுக் கும் பெரிய வியாபாரிகளிடமுந்தான் திருடுவான். திரு. டிய சொத்தைத் தான்வைத்து அனுபவிக்க மாட்டான். ஏழைகளுக்கும், நல்லவர்களுக்கும் கொடுத்து விடுவான். இதனுல் நாட்டுமக்களிற் பெரும்பாலானேர் அவனைக் காட்டிக்கொடுக்க முன் வரவில்லை. வணங்காமுடி ஏழைக ளுக்கு நேருங் கஷ்டங்களையும் தீர்த்து வைத்தான்.
வணங்காமுடி வாழ்ந்துவந்த நாட்டிலே ஈயாப்புரம் என்று ஒரு சிற்றார் இருந்தது. அங்கே இரந்துண்ணி என்ற ஒரு பிச்சைக்காரக் கிழவன் இருந்தான். கிழவனுன அவ ஞல் வேலைசெய்து சீவிக்க முடியவில்லை. எனவே அவன் பிச்சை எடுத்துச் சீவித்தான். ஈயாப்புரத்தில் உள்ள மக் கள் தருமஞ் செய்ய மாட்டார்கள்.
அந்த ஊரில் உள்ள எந்த வீட்டில் போய் ' அம்மா பசிக்குது, தாயே பசிக்குது" என்று இரந்துண்ணி கேட் டாலும் எல்லோரும் ‘போ போ " என்றே விரட்டுவர். ஆனல் தருமையன் என்பவன் வீட்டில் மட்டும் அவனுக்கு ஏதாவது உணவு எந்நாளும் கிடைக்கும். தருமையன் தினமும் இரந்துண்ணிக்கு ஏதாவது உண்ணக் கொடுத்த

Page 21
B. ஆத்திசூடி அறநெறிக் கதைகள்
பின்பே தான் உண்பான். இரந்துண்ணி தருமையனிடம் மிகுந்த அன்பு வைத்திருந்தான். அவனைத் தெய்வம் எனப் போற்றினுன்
ஆனல் இரந்துண்ணிக்கு ஈயாப்புரத்தில் உள்ள மற்ற மக்களிடம் மிகுந்த வெறுப்பாக இருந்தது. அவர்களுக்கு எப்படியாவது ஒரு நல்ல பாடம் கற்பிக்க வேண்டும் என்று விரும்பினன் இரந் துண்ணி. ஒருநாள் அவன் வனங்கா முடியைச்சந்தித்து ஈயாப்புரத்தாரின் பிச்  ைச யி டா த் தன்மையைப் பற் றிச் சொன் ஞன். வன க் கா மு டி அதற்கு வேண்டி பது செய்வதாகக் கூறிஞன்.
பின்பு ஒரு நாள் ஈயாப்புரத்தில் உள்ள வீடுகளில்
எல்லாம், ஒரே இரவு திருட்டுப் போய்விட்டது. ஆணுல் தருமையனின் வீட்டில் மட்டும் எதுவித திருட்டும் நடக்க வில்.ே
அடுத்த நாள் காலை ஈயாப்புரமே பெரும் அமளியாக இருந்தது. அதிகாலேயில் எழுந்த மக்கள் தங்கள் வீடுகளில் திருடர் இரவு வந்து எதையாவது திருடிக்கொண்டு போய் விட்டதை ஒருவரோடு ஒருவர் பேசிக்கொண்டனர். தரு
மையன் வீட்டில் மட்டும் எதுவித திருட்டும் நடக்கவில்லே
என்று கதைத்தனர். அதுமட்டும் அல்லாமல் எல்லாருடைய
வீட்டுச் சுவர்களிலும் "ஜய மிட்டுண்' என்று எழுதியிருப்
பதாயும் தருமையன் வீட்டில் மட்டும் அப்படி எழுதப்பட வில்லை என்றும் பேசிக்கொண்டிருந்தனர். இந்த மர்மம் விளங்காமல் பலர் ஆச்சரியப்பட்டனர். அப்போது அங்கே
வந்த ஒரு கிழவர் "ஐய மிட்டுண்' என்பது ஆத்திசூடி
 
 
 
 
 

நல்ல பாடம் 2명.
வாக்கியம். பிச்சை கேட்பவர்களுக்கு உணவளித்த பின் உண்ண வேண்டும் என்பது அதன் பொருள். இந்த ஊரில் உள்ள நாம் இதைமறந்து பிச்சையிடாமல் வாழ்கிருேம்.
தருமையன் மட்டும் தினமும் பிச்சை இட்டு உண் கிருன். எமக்கு ஒரு பாடம் கற்பிக்கவே எங்கள் வீடுகளில் திருடியிருக்கிருர்கள். இது வணங்காமுடியின் வேலையாகத் தான் இருக்கும். தருமையனுக்கு "ஐயமிட்டுண்' என்பது நன்ருகத் தெரியும். அவன் அதன்படி நடக்கிருன், ஆகவே அவன் வீட்டில் திருடவும் இல்லே அந்த வாக்கியத்தை எழுதவும் இல்லை. மற்ற எல்லோரும் "ஐய மிட்டுண்' என்பதை மனத்திற் பதிக்க வேண்டும் என்பதற்காக அவர் கள் வீடுகளின் சுவரில் "ஐய மிட்டுண்" என்று எழுதிச் சென்றிருக்கிருர்கள்' என்று விளக்கிக் கூறிஞர்.
தங்கள் தவறையும், அறியாமையையும் உணர்ந்த ஈயாப்புரத்து மக்கள் அன்றிலிருந்து ஒளவையின் "ஐய மிட்டுண்' என்னும் அறிவுரையைக் கடைப்பிடித்து வாழ்ந்தார்கள் இரந்துண்ணி மிகவும் மகிழ்ச்சி அடைந் தான். பின்னர் ஒரு நாளும் அந்த ஊரில் திருட்டு நடக்கவில்லே.
""gul மிட்டுண்"

Page 22
குண்டு வீச்சு
அப்பொழுது, இரண்டாவது உலக மகாயுத்தம் நடந்து கொண்டிருந்தது. யப்பானிய விமானப்படை, ஆங்கிலே யருடைய ஆட்சிக்கு உட்பட்ட நாடுகளில் குண்டுமாரி பொழிந்து கொண்டிருந்த வேளை. எதிரிகளின் விமானங் கள் குறிப்பறிந்து குண்டு வீசுவதைத் தடுக்க, இரவு நேரங் களில் வீட்டுக்கு வெளியே வெளிச்சங்கள் கொண்டு செல்லக்கூடாது என்று ஆங்கிலேயர் தமது ஆட்சிக்குப் பட்ட நாடுகளில் உத்தரவிட்டிருந்தனர். வீடுகளிலும் வீதிகளிலும் உள்ள விளக்குகளின் கண்ணுடிகளுக்குக்கூடி நீல வர்ணம் பூசி ஒரு பக்கம் மட்டும் ஒளிவரக் கூடிய தாக விடப்பட்டிருக்க வேண்டும் என்று கட்டளை இடப் பட்டிருந்தது.
குண்டு வீச்சில் எத்தனையோ பேர் உயிரிழந்த னர். பொருட்களும் கட்டிடங்களும் சேதமடைந்தன. அது மக்களுக்குப் பெரும் பயங்கர
மான காலமாக இருந்தது. இந்தக்காலத்திலே ஆங்கி லேயர் ஆட்சிக்குட்பட்ட நாடொன்றில் அழுங்குப்பிடியன் என்று ஒருவன் இருந்தான். அவன் தான் நினைப்பதுதான் சரி என்று எண்ணுபவன். ஊர் மக்கள், நாட்டு மக்கள் எப்படி நடக்கிருர்கள் என்று அவன் கவனிப்பதில்லை. இந்த
 

குண்டு வீச்சு 3.
அழுங்குப்பிடியன் அதிகாரிகள் விதித்திருந்த சட்டத்தைப் பொருட்படுத்த வில்லை. அவனுடைய ஊரில் உள்ள மக்கள் எல்லோரும் இரவு வேளைகளில் விளக்குகளை அதிகம் உப யோகிக்காமலும் மூடி மறைத்தும் உபயோகித்து வந்தார் கள். இவன் மட்டும் விளக்குகளை அடிக்கடி வெளியே கொண்டு சென்றும், மூடி மறைக்காமலும் உபயோகித்
6. A5 இப்படி அழுங்குப்பிடியன் விளக்குகளை உபயோகிப்” பதன் கெடுதி அவனுக்கு விளங்கவில்லை. எதிரிகள் ஆகாய விமானங்களில் இரவிலே பறந்து செல்லும்போது இந்த வெளிச்சங்களைக் கண்டால் அவ்விடத்தில் மக்கள் வாழும் மனைகள் இருக்கின்றன என்று அறிந்துகொள்வார்கள். உடனே அவ்விடத்தில் குண்டுகளை வீசுவார்கள். இதைத் தடுப் பதற்காகவே மேற்கண்ட சட்டம் விதிக்கப்பட்டிருந்தது. அழுங்குப்பிடியனை ஊர்மக்கள் வெளிச்சங்களை வீட்டுக்கு வெளியே கொண்டு செல்லவேண்டாம் என்று பலமுறை சொல்லிப் பார்த்தனர்; அவன் கேட்கவில்லை. மக்கள், அதிகாரிகளிடமும் அறிவித்தனர். ஆனல் அதிகாரிகள் வரும்போது அழுங்குப்பிடியன் தனது வெளிச்சங்களை அணைத்துவிட்டு இருட்டில் இருப்பான். X
#
ஒருநாள் இரவு அழுங்குப்பிடியன் வெளிச்சத்தைக் கொண்டு வெளியே சென்றன். அப்போது மேலே பறந்து சென்ற எதிரிகளின் விமானத்திலுள்ளவர்கள் அதைக் கண்டு விட்டனர். உடனே அவ்விடத்தில் குண்டுகள் வீசப்பட்டன. அழுங்குப்பிடியனின் வீடும், அதை அடுத் துள்ள வீடுகளும் இடிந்து வீழ்ந்தன. அழுங்குப் பிடியனும் அவன் குடும்பமும் மற்றும் அந்தத் தெருவிற் குடியிருந்த பலரும் இறந்துபோயினர். அழுங்குப்பிடியனின் குழந்தை ஒன்று மட்டும் உயிர் பிழைத்தது. அந்தக் குழந்தை அனதையாக அழுதுகொண்டு தெருவில் வந்தது. அப்போது அங்கே வந்த ஒரு பெண், குழந்தையைத் தூக்கி ஆதரவு செய்தாள். அது அழுங்குப்பிடியனின் குழந்தை என்று அடையாளங்கண்டு கொண்டாள்.

Page 23
32 ஆத்திசூடி அறநெறிக் கதைகள்
*உன்னுடைய தகப்பன். “ஒப்புர வொழுகு” என் பதை மதியாமல் நடந்தான். உலகப் போக்கை அறிந்து அதற்குத் தக்கபடி நடப்பதைத்தான் ‘ஒப்புரவொழுகு" என்று ஒவையார் சொன்னர். உன் தந்தை ஊரவர்கள் நடப்பதைப் பார்த்து அதன் படி வெளிச்சத்தை வெளியில் கொண்டுசெல்லாமல் இருந்திருந்தால் இந்தக் கேடு உனக்கு வந்திருக்காது. நீ என்ன செய்வாய் பாவம். இவை உனக்கு விளங்காது. உன்னை இனி யார் காப்பாற் றுவார். நான்கூட உன்னை வளர்க்க வழியற்றவள். எங் காவது ஒரு அனதை விடுதியிற் தான் உன்னைச் சேர்க்க. வேண்டும்’ என்று கூறினள். குழந்தைக்கு ஒன்றும் புரியவில்லை. அது ‘ஓ’ என்று அழ ஆரம்பித்தது. அந்தப் பெண் குழந்தையைத் தூக்கிக் கொண்டு தன் வீடு நோக்கி நடந்தாள்.
"ஒப்புரவொழுகு' என்பதை உணராத அழுங்குப் பிடியனின் வாழ்வு பாழானது மட்டும் அல்லாமல்; அவன் தெருவில் இருந்த மக்களின் வாழ்வும் பாழாயிற்றே என்று அந்தப் பெண் மனங்கலங்கினள். ஒளவையின் வாக்கு எவ்வளவு உண்மையானது என்று ஆச்சரியப்பட்டாள்.
"ஒப்புரவொழுகு"

என் கதை
சத்தியமூர்த்தி என்பவர் புகழ்பெற்ற ஓர் எழுத்தாளர். அவர் எழுதுகின்ற சிறுகதைகளையும், நெடுங்கதைகளையும் மக்கள் பெரிதும் விரும்பிப் படித்தார்கள். புத்தக வெளி யீட்டு நிலையங்கள் அவருடைய கதைகளை நான், நீ என்று முந்திக்கொண்டு வெளியிட்டன. அதற்காக அவருக்குப் பெரும் தொகையான பணமும் வழங்கின. புகழ் பெற்ற இந்த அறிஞரின் வரலாற்றை அறியவேண்டும் என்று பல பத்திரிகைகள் ஆவலாயிருந்தன. சில பத்திரிகை நிருபர்கள் அவரிடம் சென்று "நீங்கள் இப்படித் திறமான பயன்தரக் கூடிய கதைகளை எழுத எப்படிக் கற்றுக் கொண்டீர்கள்’ என்று கேட்டனர்.
அவர்களைச் ச த்திய மூர்த் தி நோக்கி, ' கற்ப னைக்கதை எழுதும் ( என்னை இப்போது -O என் சொந்த க்ட் கதையையே கூறும் படி கேட்கிறீர்கள். எ ன் னு டை ய சொந்தக் கதை யும் மக்களுக்கு ஒரு படிப்பினை யாக இருக்கட்டும்.

Page 24
34 ஆத்திசூடி அறநெறிக் கதைகள்
எனக்குப் பன்னிரண்டு வயதாய் இருக்கும்போது என் தந்தை இறந்து விட்டார். நானும் என் அம்மாவும் உற் ரூர் உறவினர்களால் ஒதுக்கப்பட்டோம். நாளாந்தம் எமது சீவியம் போவதே பெரும் கஷ்டமாக இருந்தது. என் அம்மா அக்கம் பக்கத்து வீடுகளில் வேலை செய்து கிடைத்த வருவாயில் எங்கள் வாழ்க்கை ஒடிக்கொண்டி ருந்தது. அப்போது நான் ஏழாம் வகுப்பிற் படித்துக் கொண் டிருந்தேன். பள்ளிக்கூடம் சென்று படிப்பதென்றல் எனக்கு மிகுந்த ஆசை. ஆஞல் என் ஆசை நிறைவேற வில்லை. எதிர்பாராத விதமாக இருந்தாற்போல் ஒருநாள் என் அம்மாவின் கண்கள் இரண்டும் குருடாகிவிட்டன. அம்மா துடித்துப் பதறினுள். நான் அழுது புரண்டேன். வைத்தியர்கள் இனிமேல் அம்மாவின் கண்கள் பார்வை பெற மாட்டா என்று கூறிவிட்டனர்.
எமது நாளாந்தச் சீவியம் போவதற்கே வழியில்லா மற் போய்விட்டது. சும்மா இருந்தால் சோறு கிடைக் குமா? அம்மா பிச்சை எடுக்கப்போகிறேன் என்றர். நான் உயிர்தான் போனலும் அதற்கு இடம் தரேன் என்று மறுத்து விட்டேன். அப்போது நம்மிடம் இருந்த சிறிது பணத்தை எடுத்துக்கொண்டு பழைய புத்தகங்கள் வாங்கி விற்கும் முயற்சியில் ஈடுபட்டேன். காலை தொடக்கம் மாலை வரை ஊரூராக அலைந்து பழைய புத்தகங்களைச் சகாயவிலைக்கு வாங்குவேன். பின்னர் அவற்றைப் பட்ட ணத்தில் உள்ள புத்தகக் கடை ஒன்றில் சிறிது இலாபம் வைத்து விற்பேன். இதஞல் நானும் என் அம்மாவும் சீவிப் பதற்கு ஓரளவு வருவாய் கிடைத்தது.
இரவு நேரங்களிலும், ஒய்வான காலங்களிலும் முதல்நாள் வாங்கி வந்த பழைய புத்தகங்களில் உள்ள சுவையான- விடயங்களைப் படிப்பேன். ஒரு நாளாவது நான் புத்தகங்களைப் படியாதது கிடையாது. புத்தகக் கடைக்கு விற்பதற்கு முன், என்னிடம் வரும் புத்தகங்களை ஒன்றும் விடாமல் படித்து முடிக்கும் வழக்கத்தை ஏற் படுத்திக்கொண்டேன். சில நூல்களை என் அம்மாவுக்கும்

என் கதை 35
படித்துக் காட்டுவேன். அம்மா மிகுந்த ஆர்வத்தோடு கேட்டுக் கொண்டிருப்பார். இவ்வாறு ஓயாமல் நான் நூல் களைப் படிப்பதைக் கண்ட என் அம் மா, "மகனே நீ *"ஒதுவ தொழியேல்’’ என்ற ஒளவையின் வாக்குப்படி நடக்கிருய். உனக்கு நிச்சயம் இதனுல் நன்மை கிடைக்கும்” என்று சொல்லி என்னை ஊக்குவித்தார். நானும் இsை விடாது பல நூல்களையும் படித்து வந்தேன்.
சில காலஞ்செல்ல எனக்கும் மற்றவர்களைப் போல எழுதவேண்டும் என்ற ஆசை பிறந்தது. ஆகவே சின்னச் சின்னக் கட்டுரைகளையும் கதைகளையும் எழுத ஆ ர ம் பித்தேன். ஆரம்பத்தில் அவை தேடுவார் அற்றுக் கிடந் தன. பின்னர் சிறுகச் சிறுகப் பத்திரிகைகள் என் கதை களைப் பிரசுரித்தன. அதைத் தொடர்ந்து புத்தக வெளி யீட்டு நிலையங்களும் என் கதைகளைப் புத்தகங்களாக்கி எனக்குப் பணமும் தந்தன. நான் பழைய புத்தகங்களை வாங்கி விற்கும் வேலையை நிறுத்திவிட்டுப் புதுப் புத்த கங்கள் எழுதும் வேலையில் முழுநேரத்தையும் செலவு செய்து வருகிறேன். என் அம்மா கூறியது போல் ஒளவை யாரின் “ஒதுவ தொழியேல்" என்ற வாக்கின் நன்மை" என் வாழ்க்கையில் தெட்டத் தெளிவா கி விட்டது. நானும் என் அம்மாவும் தற்போது எதுவித குறையும் இல்லாமல் வாழ்கிருேம். இதுவே என் சொந்தக் கதை" என்று கூறி முடித்தார் பிரபல எழுத்தாளர் சத்திய மூர்த்தி.
'ஒதுவ தொழியேல்"

Page 25
மாறட்டம்
கமலாவும், விமலாவும் ஒரே பாடசாலையில் படிக்கும் ஒரே வகுப்பு மாணவிகள். இருவரும் வசதியான குடும் பத்தில் பிறந்தவர்கள். ஆனல் இருவரும் ஒருவரில் ஒரு வர் பொருமையாக இருந்தார்கள். கமலா நல்ல உடை அணிந்தால், விமலாவுக்குப் பிடிக்காது. விமலா அதிக புள்ளிகள் எடுத்துவிட்டால் கமலாவுக்குப் பிடிக்காது. ஒரு வரை ஒருவர் கிண்டலாகப் பேசி அடிக்கடி சண்டிை. யிட்டுக் கொள்வார்கள். இவர்கள். தத்தமக்கு இருக்கும் வீடு, மோட்டார் வண்டி, ஆடை அலங்காரம் முதலிய வற்றை ஒப்பிட்டு ஒருவரோடு ஒருவர் பொருமையான வர்த்தைகளைப் பேசி வெறுப்பை வளர்த்துக் கொண் டார்கள். கல்வியில் அதிகம் அக்கறை காட்டுவதில்லை.
இவர்களுடைய வகுப்பில் செல்வி என்று ஒரு மாணவி படித்து வந்தாள். செல்வி வறிய குடும்பத்திற் பிறந்தவள். தான் எப்படியாவது படித்து முன்னேறித் தனது குடும் பத்தை நல்ல நிலைக்குக் கொண்டு வரவேண்டும் என்று அவள் ஆசைப்பட்டாள். ஆசிரியர் சொல்லித் தருகின்ற பாடங்களைச் செல்வி அதிக கவனத்தோடு படிப்பாள். அதனல் அவளே வகுப்பில் அதிக திறமைசாலியாக இருந் தாள். அவளுடைய திறமையைக் கண்ட மற்ற மாணவி சள் அவளோடு மிகுந்த அன்பாகப் பழகினர்கள். எல் லோரும் செல்வியைத் தங்கள் சிநேகிதியாக்கிக் கொள்ள

சாருட்டம் 37
வேண்டும் என்று ஆவலாய் இருந்தார்கள். செல்வியோ எல்லோருடனும் அன்பாகவும், பண்பாகவும் பழகி வந் தாள். தனிப்பட்ட எவரும் அவளுக்கு நெருங்கிய சிநே கிதி என்று சொல்வதற்கில்லாமல் நடந்துகொண்டாள்
கம்லா வும் விமலாவும் செல்வியைத் தங்கள் சிநேகி தியாக்கிக் கொள்ளப் பெரும் முயற்சிகள் எடுத்தனர். ஒவ் வொருவரும் செல்வியைத் தனியே சந்திக்கும் போதெல் லாம், அவளோடு மிகுந்த அன்பாகப் பேசுவார்கள். செல் விக்கு 'சொக்கிலேற்" இனிப்பு முதலிய பொருட்களையும் கொடுக்க முன்வருவார்கள். இடையிடையே ஒரு வரைப் பற்றி ஒருவர் பொருமையான வார்த்தைகளையும் பேசு வார்கள். அந்த வேளைகளில் செல்வி மிகுந்த அமைதியாக இருந்துகொள்வாள். அவர்கள் கொடுக்கும் பொருட்களையும் வாங்க மறுத்து விடுவாள். 'ஒளவியம் பேசேல்" என்ற ஆத்திசூடி வசனம் உங்களுக்குத் தெரியாதா? ஒருவரைப் பற்றி ஒருவர் பொருமையாகப் பேசிக்கொள்வது தவறு. அதஞலேதான் ஒளவையார் பொருமையான வார்த்தை களைப் பேசாதீர்கள் என்று சொல்லியிருக்கிறர். நீங்கள் இருவரும் ஒருவரை ஒருவர் பொருமையாகப் பேசுவதை நிறுத்திக் கொண்டால்தான் நான் உங்களோடு சிநேக மாக இருப்பேன்" என்று புத்திமதி சொல்வர் ள் செல்வி.
செல்வியின் இந்தப் போக்கு, கமலாவுக்கும் விமலா வுக்கும் பெரும் எரிச்சலை உண்டு பண்ணியது. செல்வியை ஏதேனும் சிக்கலில் மாட்டிவிடவேண்டும் எ ன் று தமக் குள்ளே எண் ணி க் கொண்டனர். ஒரு நாள் கமலா விமலாவுடைய ஊற்றுப் பேணுவை அவளுக்குத் தெரியா மல் எடுத்துச் செல்வியின் புத்தகப் பெட்டியில் வைத்து விட்டாள். அதேநாள் விமலா, கமலாவின் கத்தரிக் கோலைக் கமலாவுக்குத் தெரியாமல் எடுத்துச் செல்வியின் புத்தகப் பெட்டியில் வைத்துவிட்டாள் இருவரும் ஒரு வருக்கொருவர் தெரியாமல் செல்வியில் திருட்டுப்பட் டம் கட்டவே இப்படிச் செய்தனர். இது செல்விக்குத் தெரியாது.

Page 26
38. ஆத்திசூடி அறநெறிக் கதைகள்
பாடசாலை முடிவடைவதற்குச் சற்று முன்பு கமலர் தன்னுடைய ஊற்றுப் பேனவை யாரோ எடுத்துவிட் டதை உணர்ந்தாள். அவ்வாறே விமலாவும் தன்னுடைய கத்தரிக்கோல் காணுமற் போய் விட்டதை அறிந்தாள். உடனே இருவரும் எழுந்து தங்கள் பொருட்கள் காணு மற் போய்விட்ட செய்தியை ஆசிரியருக்கு அறிவித்தனர். அப்போது ஆசிரியர் அவர்களைப் பார்த்து ‘நீங்கள் இரு வரும் எப்போதும் ஏதாவது ஒரு குழப்பம் செய்யாமல் இருக்கமாட்டீர்கள். ஒருவருடைய பொருளை ஒருவர் திருடிக்கொண்டு சண்டை பிடிப்பீர்கள். எங்கே உங்கள் புத்தகப் பெட்டிகளைக் கொண்டு வாருங்கள் பார்ப்போம்" என்று கூறி அவர்களுடைய பெட்டிகளை நன்கு பார்வை யிட்டார். அங்கே காண மற்போன பொருட்கள் இருக்க
வில்லை.
இதற்கிடையில் செ ல் வி எழுந்து ‘ரீச்சர் இந்தப் பேனவும் கத்தரிக்கோலும் என்னுடைய புத்தகப்பெட்டி யில் இருக்கின்றன. இவை எப்படி என் பெட்டிக் குள் வந்தன என்று எனக்குத் தெரியாது. நான் இவற்றை அவர்களுடைய பெட்டிகளில் இருந்து எடுக்கவில்லை’ என்று பதறிப்போய்க் கூறினுள், கமலாவின் முகமும் விமலாவின் முகமும் வியர்க்க ஆரம்பித்துவிட்டன.
ஆசிரியருக்குச் செல்வியின் குணம் நன்ருகத் தெரி யும். பொய் களவு முதலிய பழக்கங்கள் இல்லாதவள் செல்வி என்பது பாடசாலை முழுதும் அறிந்த உண்மை. எனவே இந்த ஒளித்து விளையாடும் சூழ்ச்சியைக் கமலா வும் விமலாவும்தான் செய்திருக்க வேண்டும் என்று ஆசி ரியர் ஊகித்தார். அவர்கள் இருவரையும் தனித்தனியே கூப்பிட்டுக் கடுமையாக விசாரித்தார். அப்போது கமலா வும் விமலாவும் தாங்கள் செய்ததை ஒப்புக்கொண்டார்
956T.
* 'இருவருடைய பொருமையான போக்கும், பேச்சும் அப்பாவியான இன்னும் ஒரு வரையும் பாதிப்பதைப் பார்த் தீர்களா. இதனற்தான் ஒளவையார் 'ஒளவியம் பேசேல்" என்று கூறிஞர். நீங்கள் இனிமேல் பொருமை

LD TO lib - - 39
வார்த்தைகள் பேசி ஒருவருடன் ஒருவர் வெறுப்பாக இருக்கக் கூடாது. இப்போதே போய் செல்வியிடம் மன் னிப்புக் கேட்டுக் கொள்ளுங்கள்' என்று புத்திமதி கூறி ஞர் ஆசிரியர். - ܗܝ
கமலாவையும், விமலா வையும் வகுப்பு மாணவிகள் அனைவரும் வெறுப்போடு பார்த்தனர். வெட்கத்தால் அவர்கள் முகங்கள் வாடிச் சோர்ந்தன. செல்வியிடம் அவர்கள் இருவரும் மன்னிப்புக் கேட்க வந்தபோது அவள், **கவலைப்படாதீர்கள், இனி 17 வது ஒருவரோடு ஒருவர் அன்பாய் இருங்கள். அப்போதுதான் நான் உங்களுடைய உற்ற சிநேகிதியாய் இருப்பேன்’ என்ருள். -
. 'ஒளவியம் பேசேல்’

Page 27
விதை நெல்
வித்தூர் என்னும் ஊரிலே கூலவாணன் என்னும்
ஒரு வியாபாரி இருந்தான். தானியங்களை வாங்கி விற்பது
தான் அவன் தொழில். வித்தூரிலே தானியங்கள் விளைந்து
அறுவடை நடக்கும் , காலங்களில் மக்கள் தங்கள் அறு
வடையைக் கூலவாணனிடம் விற்பார்கள். அவன்
அவற்றை நன்முக அளந்து, மூடைகளாகக் கட்டிச்
சேகரித்து வைப்பான். பின்னர் தானியங்களுக்குத் தட்டுப்
பாடு ஏற்படும் காலங்களில் அவற்றை மக்களுக்கு அதிக விலைக்கு விற்பான். அதிக விலைக்கு விற்பது மட்டும் அல்லா மல் தானியங்களின் அளவையும் குறைத்தே விற்பான்.
தானியங்களின் அளவைக் குறைப்பது தவறன செயல். அது தண்டனைக்குரிய குற்றமுமாகும், வியாபாரிகள் தானி யங்களின் அளவையும், பொருட்களின் நிறையையும் குறைக்காமல் இருக்கவேண்டும் என்று வித்தூரின் அர சாங்கம் பல நடவடிக்கைகள் எடுத்திருந்தது. வியாபாரி கள் உபயோகிக்கும் அளவுகளும், நிறைகளும் சரியான வையா என்று பரிசோதித்து அவற்றில் அரசாங்க முத்தி ரையைப் பொறிப்பது வழக்கம். இப்படி அரசாங்க முத் திரை பொறிக்கப்பட்ட அளவுகளாலேயே வியாபாரிகள் பொருட்களை அளந்து விற்கவேண்டும்.
கூல வாணனிடமும் இப்படி அரசாங்க முத்திரைகள் பொறிக்கப்பட்ட அளவைகள் இருந்தன. ஆனல் அவன்

விதை நெல் 41
அவற்றைத் தானியங்கள் விற்கும்போது உபயோகிப்ப தில்லை. தான் தானியங்களை வாங்கும் போது மட்டுமே அவற்றை உபயோகிப்பான். இதனுல் அவன் வாங்குகின்ற தானியங்களின் அளவு சரியாக இருக்கும். ஆனல் தான் தானியங்களை மக்களுக்கு விற்கும்போது, அளவிற் குறைந்த வேறு அளவைகளை உபயோகிப்பான். அளவைக் குறைத்து விற்று அதிக இலாபம் பெறுவதே அவனுடைய நோக்கம்.
ஒருமுறை வித்தூரிலே விதை நெல்லுக்குத் தட்டுப் பாடு ஏற்பட்டது. அப்போது கூல வாணனிடம் நிறைய விதைக்குத் தகுந்த நெல் இருந்தது. எனவே மக்கள் அவ னிடம் விதை நெல்லுக்கு ஓடி வந்தார்கள். கூலவாணன் தன்னிடம் வந்தவர்களிடம் அதிக Sea விலையும் பெற்றுக்கொண்டு அள r வையும் குறைத்து அளந்து நெல்லை :) இது �) விற்ருன். இப்படி விதை நெல்லே வாங்கியவர்கள் தமது நிலங்களில் அந்த நெல்லை விதைத்தனர். தங்களுடைய நிலங்களின் பரப் புக்கு ஏற்ற அளவு நெல்லையே அவர்கள் கூலவாணனிடம் விலைக்கு வாங்கினர். ஆனல் கூலவாணன் அளவைக் குறைத்து விட்டபடியால் விதை நிலங்களுக்கு விதைக்கப்பட்ட நெல் போதாமல் இருந்தது. இதனல் அந்தப் போகத்து அறுவடை மிகவும் குறைந்து போயிற்று . அறுவடை குறைந்ததைக் கண்ட மக்கள் கூல வாணன் தங்களுக்கு விதை நெல்லை அளவு குறைத்தே தந்திருக்கிறன் ள்ன்று ஊகித்துக்கொண்டனர்.
பலர் ஒன்று சேர்ந்து ‘இவனுடைய துரோகச் செயலை அம்பலப்படுத்த வேண்டும்' என்று தீர்மானித் தனர், இரகசியமாக அரசாங்க அதிகாரிகளிடம் சென்று முறை பிட்டனர். அரசாங்க அதிகாரிகள் கூலவாண னுடைய வீட்டையும், வியாபார நிலையத்தையும் திடீர்ப்

Page 28
42 ஆத்திசூடி அறநெறிக் கதைகள்
பரிசோதனை செய்தனர். அப்போது அங்கே அரசாங்க முத்திரை இடப்படாத, அளவு குறைந்த அளவுகள் பல கண்டெடுக்கப்பட்டன. இந்தத் திடீர்ப் பரிசோதனையைக் கூலவாணன் சற்றும் எதிர்பார்க்கவில்லை.
தானியங்களை அள்வு குறைத்து விற்றதாகக் கூலவா -ணன் மேல் வழக்குத் தொடரப்பட்டது. நீதி மன்றத் தில் கூலவாணனிடம் இருந்து கைப்பற்றப்பட்ட அளவிற் குறைந்த சுண்டு, கொத்து, பறை போன்ற அளவைகள் சாட்சியமாகச் சமர்ப்பிக்கப்பட்டன. மேலும் வித்தூரின் மக்களிற் பலரும் சாட்சியம் அளித்தனர்.
நீதிபதி வழக்கை விசாரித்து கூல வாணன் குற்றவாளி எனக் கண்டு கொண்டார். அவனுக்குப் பெரிய அபரா தம் விதித்ததோடு, இனிமேல் அவன் தானியங்கள் விற் கும் வியாபாரஞ்செய்யக்கூடாது என்றும் உத்தரவிட்டார்.
'அஃகஞ் சுருக்கேல்" என்று ஒளவையார் அன்று கூறிய அறிவுரையை மதித்து நடவாத கூலவாணன் தனது தொழிலையும் இழந்து அவமானமும் அடைந்தான். அஃ 5ம் என்பது தானியங்கள். தானியங்களின் அளவைக் குறைத்து விற்பது பெருந் தவறு. ۔۔۔۔
*" அஃகஞ் சுருக்கேல் '

கிளிக் குஞ்சு
பாஞ்சாலன் பாடசாலையில் இருந்து வீடு திரும் பிக்கொண் டிருந்தான். அப்போது தெரு ஒரமாக நின்ற ஒரு பட்டதென்னைமரத்தில் அவனுடைய பார்வை சென்றது. அந்தத்
தென்னையின் உச்சிக் - குக் , கிட்டவாக ஒரு பொந்து இருந்தது. பட்ட மரங்க ளின் பெரந்துகளிலே, கிளி, மயின போன்ற பற வைகள் முட்டையிட் டுக் குஞ்சு பொரிக்கும் என்பது பாஞ்சாலனுக் குத் தெரியும். --ஆகவே தான் பட்ட தென்னை -. iపేజీ மரத்தைக் கண்டதும் அதிலே பொந்து இருக்கிறதா, பறவைக் குஞ்சுகள் இருக்கின்றனவா என்று அண்ணுந்து பார்த்தான்.
s:. "స్ని' ܐ ܊܂ܝ̄ܪ "
*-ళ'షష్టి
و نقش منتقل شد. بیبیسی
பாஞ்சாலன் அப்படிப் பார்த்துக் கொண்டு நின்ற போது அந்த மரத்திலே ஒரு பாம்பு வளைந்து வளைந்து ஏறிக்கொண்டிருந்தது. பாம்பு ஏறுவதைக் கண்ட பாஞ் சாலன் வியப்போடு பாம்பைக் கவனித்த வண்ணம் நின் முன், பாம்பு மெதுவாக மரத்தில் ஏறி மேலே இருந்த
பொந்துக்குள் நுழைந்தது. பாம்பு மெதுவாகப் பொந்தில்

Page 29
臺壘 ஆத்திசூடி அறநெறிக் கதைகள்
நுழைவது பார்க்க வேடிக்கையாக இருந்தது. பாம்பின் வால் பொந்திற் சென்று மறையும்வரை பாஞ்சாலன் பார்த்தவாறு நின்றன். பின்னர் 'அடடே இந்த மரப் பொந்தில் பறவைகள் இல்லை, பாம்புதான் இருக்கிறது" என்று தனக்குள்ளே சொல்லியவாறு வீடு சென்ருன்.
வீட்டுக்கு வந்ததும் வீட்டு முற்றத்தில் பாஞ்சால னுடைய தம்பி பரமுவும் பக்கத்து வீட்டு அரிய மும் விளேயாடிக் கொண்டிருப்பதைக் கண்டான். பாஞ்சால னுக்கு அரியனைப் பிடிக்காது. எந்த விளையாட்டிலும் அரி யன் வெற்றிபெற்றுவிடுவான். அந்த தள ரில் உள்ள பட்ட மரங்களில் உள்ள பொந்துகளே எல்லாந் தடவிக் குருவிக் குஞ்சுகளேயும், கிளிக் குஞ்சுகளையும் பிடித்து விடு வான். இதனுல் பாஞ்சாலன் அரியனே வெறுத்தான்
விளையாடிக் கொண்டிருந்த அரியனைக் கண்ட பாஞ் சாலன் "அடே அரியா, செட்டி தோட்டத்திலே தெரு ஒரமாக ஒரு பட்ட தென்னே மரம் நிற்கிறது. அதிலே உள்ள பொந்திலே கிளிக்குஞ்சுகள் இருக்கின்றன. சிறகு மு ஃள க் கா தி குஞ்சுகள். தாய் இரை கொ டு க் கு ம் போது பார்த்தேன். அந்தக் குஞ்சுகளே நான்தான் பிடிப் பேன். நீ பிடிக்கக் கூடாது" என்ருன்.
'யார் முதலில் மரத்தில் ஏறிக் குஞ்சுகளைப் பிடிக் கிருர்களோ அவர்களுக்குத்தான் குஞ்சுகள் சொந்தம்" என்று சொல்லியவாறு ஒட்டம் பிடித்தான் அரியம். அவனத் தொடர்ந்து பரமுவும் ஒடிஞன். பட்டதென்னே மரத்தை அடைந்ததும் அரியம் மரத்தில் ஏற ஆயத்த மாஞன். அப்போது பரமு "அரியா நீ எவ்வளவோ கிளிகள் பிடித்திருக்கிருப். எங்கள் விட்டில் ஒரு கிளிகூட இல்லை. நானே ஏறிக் குஞ்சுகளைப் பிடிக்கிறேன். எல்லாக் குஞ்சுகளையும் நீ எடுத்துக்கொள் ஆஞல் எனக்கு ஒ குஞ்சை மட்டும் தா' என்று இரந்து கேட்டான். அரியம் பரமுவின் விருப்பத்துக்கு இணங்கிஞன்.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

கிளிக் குஞ்சு
4、
பரமு மெதுவாக மரத்தில் ஏறிஞன். மரம் காற்றிலே அசைந்தது. பரமுவுக்குப் பயமாக இருந்தது. "பயப் பிடாமல் ஏறடா' என்று கீழே நின்று சத்தமிட்டான் அரியம். பரமு மெதுவாக மேலே ஏறிப் பொந்துக்குள்ளே கையைவிட்டான். பொந்திலே இருந்த பாம்பு சீறி அவன் கையிற் கடித்தது. கையிலே ஏதோ கடிப்பதை உணர்ந்த பரமு "விறுக்' என்று கையைப் பொந்துக்கு வெளியே எடுத்தான். கையிலிருந்து இரத்த ம் வடிந்தது. உடனே மெதுவாகக் கீழே இறங்கிஞன்.
பரமு இறங்குவதைப் பார்த்த அரியம் 'என்னடா குஞ்சுகள் இல்லையா? அல்லது கிளி கொத்தும் என்று பயந்து இறங்குகிருயா' என்று கேட்டான். பரமு எதுவும் பேசாமல் மரத்திலிருந்து இறங்கிக்கொண்டிருந்தான்.
கீழே வந்ததும் அரியத்திடம் கையைக் காட்டினுன் "ஐயையோ ஏதோ கடித்து விட்டதே' என்று கத்தி ஞன் அரியம். பர்முவுக்குத் தலே சுற்றியது. கால்கள் நடுங்கின. மெதுவாக நிலத்தில் படுத்துக் கொண்டான். அவன் கண்கள் இருண்டன. 'பரமு! வாடா மெதுவாக விட்டுக்குப் போவோம்' என்ருன் அரியம். பரமு வாய் பேசாது மயங்கிய நிலையில் இருந்தான்.
அரியம் "ஐயோ ஒடிவாருங்கோ - ஓடிவாருங்கோ ஆபத்து' என்று கத்தினுன் அக்கம்பக்கத்தில் நின்றவர் கள் ஓடிவந்தார்கள். நடந்ததை அறிந்ததும், பரமுவுக்குப் பாம்பு தான் கடித்திருக்க வேண்டும் என்று ஊகித்துக் கொண்டு, அவனே விஷகடி வைத்தியரிடம் கொண்டோ டிஞர்கள். இந்தச் செய்தியை அறிந்த பரமுவின் பெற் ருேரும், பாஞ்சாலனும் அழுது புலம்பிய வண்ணம் விவு கடி வைத்தியர் வீட்டுக்கு ஒடிஞர்கள்.
மயங்கிய நிலையிற் கிடந்த பரமுவைக் கண்டதும்
பாஞ்சாலனுக்குத் துக்கம் பீறிட்டுக்கொண்டு வந்தது. தனது தம்பி இறக்கப் போகிருனே என்று ஏங்கினன்.

Page 30
ஆத்திசூடி அறநெறிக் கதைகள்
ஐயோ நான்தான் பாவி என்னுடைய கெடுபுத்தி தான் என் தம்பிக்கு இந்த நி3லயைக் கொண்டு வந்தது. தென்னம் பொந்திலே பாம்பு நுழைந்ததை என் இரு கண்களாலும் கண்டேன். ஆஇல் அரியனுக்கு ஒரு பாடம் படிப்பிக்க வேண்டும் என்று நினைத்துப் பொந்தில் கிளிக் குஞ்சுகள் இருப்பதைக் கண்டேன் என்று பொய் சொன் னேன். கடவுளே என்னைத் தண்டித்துவிட்டார்' என்று நிலத்தில் வீழ்ந்து அழுதான். அங்கே நின்ற அனைவருக்கும் பெரும் பரிதாபமாக இருந்தது.
பரமுவின் விஷகடிக்கு வேண்டிய வைத்தியத்தைச் செய்து கொண்டிருந்த வைத்தியர் பாஞ்சாலனைப் பார்த்து 4:தம்பி கண்டொன்று சொல்லேல் என்று ஒளவைப்பாட்டி இதற்காகத்தான் சொல்லிவைத்திருக்கிருர், கண்ணுற் கண்டதை விட்டு, வேறு திரித்துச் சொல்பவர்கள் நிச்ச யம் துன்பப்படுவர். நீ இப்போது அழாதே. உன்தம் பிக்கு ஒரு வித மோசமும் வராது. இன்னும் சிறிது நேரத்தில் அவன் விழித்து எழுந்து விடுவான். அதற் வேண்டிய மருந்து நான் கொடுத்திருக்கிறேன். ஆனூல் இனிமேல் ஒருபோதும் கண்டொன்று சொல்லேல்" என்ற வாக்கியத்தை மறவாதே" என்று அன்போடு கூறிஞர்.
" கண்டொன்று சொல்லேல்"
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

மக்கள் தொழிற்சாலை
நகர்புரி என்பது ஒரு பெரிய பட்டினம். அந்தப் பட்டி னத்தில் நல்ல ஒரு துறைமுகம் இருந்தது. எனவே அங்கே இறக்குமதி ஏற்றுமதி வியாபாரம் நன்கு நடை பெற்றது. அப்பட்டினத்தில் பல தொழிற்சாலைகளும் இருந்தன. மக்கள் தொழிற்சாலே என்பது அங்கு இருந்த ஒரு பெரிய தொழிற்சாலை. இந்தத் தொழிற்சாலையில் பலவிதமான-தொழில்களும் நடைபெற்றன. இரும்பு உருக்கு வேலே, மோட்டார் வண்டிகளின் பகுதிகள் தயா ரிக்கும் வேலே, தளபாடங்கள் செய்யும் வேலே போன்ற பல வேலைகளும் அங்கு நடைபெற்று வந்தன. அந்தத் தொழிற்சாலையில் ஆயிரக் கணக்கான தொழிலாளிகள் வேலே பார்த்து வந்தனர்.
நல்லதம்பி என்பவர்தான் மக்கள் தொழிற்சாலேயின் சொந்தக்காரர். சிறியதோர் இரும்புக்கடை வியாபாரம் ஆரம்பித்த நல்லதம்பி நாளடைவில் பெரிய தொழிற் சாலேயின் சொந்தக்காரர் ஆகிவிட்டார் எல்லாம் அவரு டைய விடாமுயற்சியால் வந்தவைதான். நல்லதம்பி காட்டூர் என்னும் கிராமத்தில் பிறந்தவர். சிறுவயதில் பண்பாளன் என்னும் ஆசிரியருடைய உதவியோடு கல்வி கற்றுவிட்டுப் பட்டனத்துக்கு வந்து வியாபாரத்தில் ஈடு பட்டார். இப்போது நல்லதம்பி பெரிய பணக்காரணுகி விட்டாலும், தனது ஊரையும் தனக்கு உதவிய ஆசிரியர் பண்பாளனயும் மறந்து விடவில்லை. வயதான நிலையில் இருக்கும் பண்பாளன் நன்கு வாழச் சகல வசதிகளும் செய்து கொடுத்தார் நல்லதம்பி.

Page 31
48 ஆத்திசூடி அறநெறிக் கதைகள்
தன்னுடைய இனத்தவர்களையும், தனது ஊரிலே வேலையில்லாமல் இருக்கும் இளைஞர்களையும் பட்டணத் துக்கு அழைத்துவந்து தனது தொழிற்சாலையிலே சேர்த்து ஏதாவது ஒரு வேலை பழக்கி 'அவர்களும் நல்ல முறையில் வாழ ஒழுங்குகள் செய்தார். இதனுல் காட்டூர் மக்கள் நல்லதம்பியைத் தெய்வமென மதித்தார்கள்.
ஆசிரியர் பண்பாளனும் தன்னுடைய பழைய மாண வனின் பண்பை எண்ணி மகிழ்ந்தார். ஒரு நாள் நல்ல தம்பி காட்டூருக்குச் சென்றபோது தனது ஆசிரியருடைய வீட்டுக்குச் சென்று அவருடைய சுகம் விசாரித்தார். அப்போது ஆசிரியர் நல்லதம்பியை மெச்சிப் பேசினர். **நல்லதம்பி நீ ‘ங்’ போன்றவன்' என்ருர், நல்லதம் பிக்கு இது விளங்கவில்லை. அதை உணர்ந்த ஆசிரியர் **நல்லதம்பி ‘ங்’ என்ற எழுத்து ஒரு விசித்திரமான எழுத்து. அது வரும் சொற்கள் மிகவும் குறைவு. இங் ங்ணம், அங்ங்ணம், எங்ங்னம் போன்ற சொற்களில் மட் டுமே வரும். ஆனல் அதனுடைய இனத்த எழுத்துகள் நுா, B, B, B, யூ என்ற எழுத்துகள் எந்தச் சொல்லி லும் வருவதில்லை. இருந்தாலும் ‘ங்’ என்ற எழுத்தின் தேவையைக் கருதி அரிச் சுவடியிலே ‘ங்’ வோடு சேர்த்து மற்றப் பிரயோசனமில்லாத அதன் இனத்த எழுத்துக் களை எல்லாம் எழுதி வைத்திருக்கிறர்கள். இந்த ‘ங்’ தான் மட்டும் பிரயோசனமாக இருந்து கொண்டு மற்ற இனத்த எழுத்துக்களை எல்லாம் சேர்த்துக் கொண்டு பெருமைப் படுத்துகிறது. அதஞற்தான் நானும் உன்னை "ங்" போன்றவன் என்றேன்" என்று விளக்கிக் கூறினர்.
நல்லதம்பிக்கு இதைக் கேட்கும்போது பெரிய மகிழ்ச் சியாக இருந்தது. தான் தன்னுடைய இனத்தவரையும் ஊரவரையும் அணைத்து நடப்பதனுற்தான் ஆசிரியர் இப் படிச் சொன்னர் என்று அறிந்துகொண்டார்.
மேலும் ஆசிரியர் நல்லதம்பியைப் பார்த்து ' என் அன்புள்ள மாணவனே இதைத் தான் ஒளவையார் "நப் போல் வளை' என்று கூறிஞர். இந்த வாக்கியத்துக்கு எடுத்துக் காட்டாக நீ இருப்பது எனக்குப் பெருமையும் ஆசியும் தருகிறது. நீ நீடூழி வாழ்க" என்று வாழ்த்
ஞர்.
துப்போல் வளை"

இயந்திரக் கலப்பை
வயலூர் என்னும் கிராமத்தில் வேலுப்பிள்ளை என்ற ஒரு குடியானவன் இருந்தான். அவனிடம் சொந்த மான நிலபுலங்கள் இருக்கவில்லை. ஓரிணை மாடும், ஒரு கலப்பையும் மட்டுமே அவனிடம் இருந்தன. எனவே வேலுப்பிள்ளை தனது மாடுகளின் உதவியால் வயலூரில் உள்ளவர்களுடைய காணிகளை உழுது அதற்கான கூலியைப் பெற்றுத் தனது சீவியத்தை நடத்தி வந்தான்.
இவ்விதம் கூலிக்கு உழவுத் தொழில் செய்த வேலும் பிள்ளை மிகவும் சிக்கனமாக வாழ்ந்து சிறுகச் சிறுகப் பணத் தைச் சேர்த்து வந்தான். சில காலஞ்செல்ல அவன், தான் சேர்த்த பணத்தைக் கொண்டு ஒரு இயந்திரக் கலப்பை வாங்கிஞன். இயந்திரக் கலப்பை வயலூருக்குப் புதிதாக இருந்தபடியால், வயலூர் மக்கள் தங்கள் வயல்களை இயந் திரக்கலப்பையால் உழுவிக்கப் பெரிதும் விரும்பினர். இதனுல் வேலுப்பிள்ளையின் இயந்திரக் கலப்பைக்கு ஒய்வில்லாத வேலையாக இருந்தது. ஓயாமல் வேலை செய் தால் தனது இயந்திரக் கலப்பை விரைவிற் பழுதாகிவிடும் என்று வேலுப்பிள்ளை அஞ்சினன்.
எனவே கிழமையில் ஒரு நாளைக்காவது இயந்திரக் கலப்பைக்கு ஓய்வு கொடுக்க வேண்டும் என்று தீர்மானித் தான். சனிக்கிழமைகள் தோறும் இயந்திரக் கலப்பையை வேலையில் ஈடுபடுத்தாமல் அதைத் துடைத்து, நன்முக

Page 32
마 ஆத்திசூடி அறநெறிக் கதைகள்
எண்ணெய் இட்டு வெய்யிற்படாத இடத்தில் நிறுத்தி வைப்பான். இவ்வளவு நாளும் ஒய்வு இல்லாமல் உழைத்த வேலுப்பிள்ளேயின் இச் செயல் வயலூர் மக்களுக்குப் பெரும் வியப்பைத் தந்தது.
ஒரு நாள் வேலுப்பிள்ளே தன்னுடைய இயந்திரக் கலப்பையைக் கழுவித் துடைத்து, எண்ணெய் இட்டுக் கொண்டிருக்கும்போது அவ்வழியே ஒரு முதியவர் வந்தார். அந்த முதியவர் வேலுப்பிள்ளேயை நோக்கி ' என்ன வேலுப்பிள்ளே இயந்திரக் கலப்பைக்கு நீராட்டுகிருயா?" என்று கேட்டார். அதற்கு வேலுப்பிள்ளே 'ஐயா இயந் திரத்துக்கும் ஒய்வு வேண்டும் தானே. எண்ணெயிட்டுத் துடைத்துப் பேணிஞற்தானே பழுதுபடாமல் நெடு நாளேக்கு உழைக்கும்’ என்று சொன்னுன்
முதியவர் உரத்துச் சிரித்தார். வேலுப்பிள்ளை ஆச் சரியத்தோடு " ஏன் சி ரி க் கி றிர்கள் ஐயா" என்று கேட்டான். ' தம்பி நானும் உன்னேப் பல நாட்களாக அவதானித்து வருகிறேன். நீ உன் சீவியத்தில் ஒரு நாளாவது ஒய்வு எடுத்ததை நான் காணவில்லே, தினமும் ஒய்வு ஒழிவு இல்லாமல் உழைத்து வருகிருப். உனது உடலுக்கு ஒய்வு வேண்டாமா? இரும்பாற் செய்யப்பட்ட இயந்திரத்துக்கு ஒய்வு கொடுத்து நீராட்டி எண்ணெயிடும்
 
 

இயந்திரக் கலப்பை 51
நீ உன் உடலாகிய அருமையான இயந்திரத்துக்கும் ஒப்வு கொடுக்க வேண்டாமா?' என்று கேட்டார்.
இப்போதுதான் வேலுப்பிள்ளக்குத் தன் பிழை விளங்கியது. சிலவேளைகளில் அடிக்கடி தனக்குத் தலையிடி வருவதும், உடம்பு நோவதும், ஒய்வில்லாத காரணத் தாற்ருன் என்று உணர்ந்தான். இந்தச் சிறு சிறு தொல் இலகளைத் தான் பொருட்படுத்தாது ஒய்வில்லாமல் உழைத்தது தவறு என்று எண்ணிஞன். முதியவருக்கு என்ன பதில் சொல்வதென்று தெரியாமல் மெளனமாக இருந்தான்.
வேலுப்பிள்ளையின் மெளனத்தைக் கண்ட முதியவர் 'தம்பி மனிதர்களுக்கும் வாரத்தில் ஒரு நாளேக்காவது ஒய்வு வேண்டும். அவர்களுடைய உடம்பு ஆரோக்கியமாக இருக்கவேண்டும் என்பதற்காகத்தான் ஒளவையார் * சனி நீராடு' என்று சொல்வியிருக்கிருர் சனிக்கிழ மைகள் தோறும் எண்ணெய் தேய்த்து நீரில் முழ்கி எழுந்தால் உடலுக்கு உறுதியும், தேக சுகமும் கிடைக்கும் இதை நீ அறியவில்லேயே' என்ருர்,
உடனே வேலுப்பிள்ளே 'ஐயா உங்கள் புத்திமதிக்கு என் நன்றி. இனிமேல்,எனது இயந்திரக் கலப்பைக்கு ஒப்வு கொடுக்கும் சனிக்கிழமைகளிலே நானும் எண்ணெய் தேய்த்து நீராடுவேன்" என்று அன்புடன் சொன்ஞன். முதியவர் "இன்றும் சனிக்கிழமைதான், சனி நீராடு" என்று சொல்லிக் கொண்டு தன் வழியே சென்ருர்,
" சனி நீராடு '

Page 33
தீப்பெட்டி
தீப்பெட்டிக்குத் தட்டுப்பாடான காலம். கட்டுப்பாட்டு விலைக்குத் தீப்பெட்டி கிடைப்பது பெரும் அருமை. தீப் பெட்டித் தொழிற்சாலைகள் சில வேலைநிறுத்தம் செய்தமை யால் தீப்பெட்டிக்குத் தட்டுப்பாடு ஏற்பட்டது. இருந் தாலும் சங்கக் கடைகளிலும், வேறு தனிப்பட்ட கடிை களிலும் விற்பனைக்குத் தீப் பெ ட் டி க ள் இருந்தன. சங்கக் கடைகளில் ஒரு கூப்பன் அட்டைக்கு இத்தனை தீப்பெட்டிகள் என்ற முறையில் வழங்கப்பட்டன. தனிப் பட்ட கடைக்காரர்கள் தங்களுடைய வாடிக்கைக்காரர் களுக்கு இரண்டு மூன்று என்ற முறையில் விற்றர்கள்.
அன்று தங்கம்மா வீட்டில் ஒரு தீப்பெட்டிகூட இல்லை. கூப்பன் அட்டைக்கு வாங்கிய தீப்பெட்டிகளும் முடிந்து விட்டன. நாளைக்கு அடுப்பு மூட்டுவதற்குக் கூடி ஒரு நெருப்புக்குச்சிதானும் இல்லை. "ஐயையோ நேரத்தோடு கவனிக்காமல் விட்டுவிட்டேனே' என்று வருத்தப்பட் டாள் தங்கம்மா. மூத்த மகன் சுந்தரத்தைக் கூப்பிட்டு , **வல்லிபுரம் கடைக் குப் போய் இரண்டு தீப்பெட்டிகள் வாங்கிவா. தீப்பெட்டிகள் இப்போ கிடைப்பது அரிது, நான் சொன்னேன் என்று சொல்லிக் கட்டாயம் வாங்கி வா" என்று கூறிப் பணத்தைக் கொடுத்தாள். சுந்தரம் ஒரு துடுக்குப் பையன். எதற்கெடுத்தாலும் “வெடு, வெடு’ என்று பேசுவான். பிறரோடு இனிமையாகப் பேசமாட் டான். " காசைக் கொடுத்தால் தீப்பெட்டி தருவதற்கு

தீப்பெட்டி SSLLS SSSLSLS SS LSS SSSS 53
என்னவாம். கடைக்காரன் தராமல் விடமுடியுமா?" என்று சொல் லிக்கொண்டு கடையை நோக்கி நடந்தான்
சுந்தரம்.
அப்போது கடிையிலே, வல்லிபுரம் இருக்கவில்லை. கடையிற் பொருட்கள் எடுத்துக் கொடுக்கும் பையன் காளிமுத்துதான் இருந்தான். காளிமுத்துவைக் கண்டி சுந்தரம் 'sேய் காளி இரண்டு நெருப்புப் பெட்டி எடுகு நல்ல பெட்டியாய் பார்த்தெடு, நனைந்த பெட்டி கிட்டி தந்து விடாதே" என்றன். காளிமுத்துவுக்குச் சுந்தரம் பேசிய விதம் பிடிக்கவில்லை. மேலும், "வந்து கேட்கும் எல்லோருக்கும் தீப்பெட்டியை விற்று விடாதே. வழக்க மாக வரும் ஆட்களுக்கு மட்டுந்தான் ஆளுக்கு ஒரு பெட்டி கொடு" என்று முதலாளி அவனிடம் சொல்லியிருந்தார். எனவே காளிமுத்து'தீப்பெட்டி இல்லைத் தம்பி’ என்ருன்,
? டேய், ஏண்டா பொய் சொல்கிருய். உங்களிடம் தீப்பெட்டியில்லாமல் வேறு யாரிடம் தீப்பெட்டி இருக் கும். தீப்பெட்டியை என்ன சும்மாவா கொடுக்கப்போ கிருய், காசுக்குத்தானே விற்கப்போகிருய். எடிடிா இரண்டு தீப்பெட்டி அல்லா விட்டால் என்ன நடக்கும் தெரியுமா?* என்று வெடு வெடென்று பேசினன் சுந்தரம். அப்போது முதலாளி வல்லிபுரம் அங்கே வந்தார். "தீப்பெட்டி கொடுக்காவிட்டால் என்ன செய்வாய் தம்பி’ சுந்தரத் தைக் கேட்டார். ** பொலிசைக் கூட்டிவருவேன். தீப் பெட்டிகளைப் பதுக்கி வைத்திருப்பதாக முறைப்பாடு செய் வேன். உன்னைப் பிடித்துக்கொடுப்பேன்" என்று ஆத்தி ரத்தோடு சொன்ஞன் சுந்தரம்.
“ஓ அப்படியா? மெத்த நல்லது. போய் அப்படியே செய். தீப்பெட்டி தரமுடியாது' என்று கடுமையான குரலிற் சொன்னர் வல்லிபுரம். சுந்தரம் நின்று பார்த் தான். தீப்பெட்டி, தீப்பெட்டி என்று மீண்டும், மீண்டும் கத்திப்பார்த்தான். வல்லிபுரம் அசையவில்லை, நின்று

Page 34
占邨 ஆத்திசூடி அறநெறிக் கதைகள்
அலுத்துப்போன சுந்தரம் வீடு நோக்கி நடந்தான். விட் டுக்கு வந்ததும், 'அவங்கள் தீப்பெட்டி இல்லையாம்" என்றவாறு தாயிடம் பணத்தை நீட்டினன். 'நீ என்ன விதமாகக் கேட்டாயோ ஆருக்குத் தெரியும் நயமாகக் கேட்டால் வல்லிபுரம் ஒரு தீப்பெட்டி என்ருலும் தராமல் விடமாட்டார்' என்று சொல்லி, இளேயமகன் குமாரைக் கூப்பிட்டு 'வல்லிபுரம் கடைக்குப் போப் ஒரு தீப்பெட்டி என்ருலும் தரும்படி கேட்டு வாங்கி வா' என்று பணத் தைக் கொடுத்து அனுப்பினுள் தங்கம்மா.
குமார் புரம் க  ைடக் கு வந்தபோது அங்கே வல்லிபுரம் இருந் து தார். " மாமா இ தோபிக்க Géolygirit ! டாமாம், நாளேக்கு அடுப்பு மூட்ட W ஒரு நெருப்பு குச்சிகூட வீட்டில் இல்லையாம், தயவுசெய்து அம்மா ஒரு தீப்பெட்டி என்ருலும் வாங்கி வரட்டாம்" என்று மிகவும் பணிவாக நயம் படக் கூறிஞன். அவனு டைய பேச்சைக் கேட்ட வல்லிபுரத்துக்கு ஒரே ஆனந்தம். "ஒரு தாய் பெற்ற இரண்டு பிள்ளைகள். மூத்தவன் எப்ப டிப் பேசினன், இந்த இளையவன் எப்படிப் பேசுகிருன். இவன் அல்லவோ பிள்ளை' என்று தனக்குள்ளே நினைத் துக் கொண்டார். மெதுவாக எழுந்து மறைவாக இருந்த தீப்பெட்டிகளிலே மூன்று பெட்டிகளே எடுத்து ' தம்பி இப்போது நெருப்புப் பெட்டிக்குத் தட்டுப்பாடு. இருந்தா லும் உனக்காக மூன்று பெட்டிகள் தருகிறேன் கொண்டு போய் அம்மாவிடம் கொடு. அத்தோடு இந்தத் துண் டையும் அம்மாவிடம் கொடு என்று சொல்லி மூன்று தீப்பெட்டிகளுக்கான கட்டுப்பாட்டு விலையைப் பெற்றுக் கொண்டு தீப்பெட்டிகளேயும் ஏதோ எழுதப்பட்ட ஒரு கடதாசித் துண்டையும் கொடுத்தார்.
 
 

தீப்பெட்டி 5.
தீப்பெட்டிகளைப் பெற்ற குமார் த்ெதப் பெரிய உபகாரம் மாமா' என்று கூறிக்கொண்டு விட்டுக்கு விரைந் தான்குமார் தீப்பெட்டிகளேயும் கடதாசித் துண்டையும் பெற்ற தங்கம்மா துண்டில் எழுதியிருப்பதைப் படித்துப் பார்த்தாள். அதிலே "குயம்படவுரை' என்று எழுதப் பட்டிருந்தது.
தங்கம்மாவுக்கு எல்லாம் விளங்கிவிட்டது. மூத்தமகன் சுந்தரம் நயமாக, இனிமையாகப் பேசவில்லே. அதனல் வல்லிபுரம் தீப்பெட்டிகளைக் கொடுக்கவில்லை. மிகுந்த இனிமையாகப் பேசியிருக்கிருன் இளேயமகன் குமார். அதனுல் அவனுக்கு ஒன்றுக்குப் பதில் மூன்று தீப் பெட்டி களைக் கொடுத்திருக்கிருர் வல்லிபுரம் என்று அ நிந்து கொண்டாள். உடனே சுந்தரத்தைக் கூப்பிட்டு இதோ பார்த்தாயா ஒளவைப் பாட்டியின் "ஞயம்பட வுரை" என்ற புத்திமதியை உனக்கு அனுப்பியிருக்கி ஓர் வல்வி புரம். இனிமேலாவது பிறருக்கு இனிமையுஸ் - கும்படி பேசக் கற்றுக்கொள்" என்ருள்.
'ஞயம்பட வுரை'

Page 35
வர்டகைக்காரர்
நாகலிங்கம் பெரிய உத்தியோகத்தர். பட்டணத்திலே குடும்பத்தோடு வாழ்ந்து வந்தார். பட்டணத்தில் வாடி கைக்கு ஒரு பெரிய வீட்டை எடுத்துக் கொண்டு அந்த வீட்டில் தனது மனைவி மக்களோடு சீவித்தார். அவரு டைய சொந்த ஊர் கோட்டூர். அங்கே அவருடைய வயதான தந்தையும் தாயும் வாழ்ந்து வந் தா ர் க ள். அவர்கள் ஆரம்பத்தில் வறியவர்களாக இருந்தபடியால் ஒருமண் வீட்டிலேயே வாழ்ந்து வந்தார்கள்.
தன்னுடைய பெற்றேருக்கு ஒரு பெரிய கல்வீடு கட்டிக் கொடுக்க வேண்டும் என்று நாகலிங்கம் விரும்பி ஞர். அத்தோடு தான் ஒய்வு பெற்று ஊருக்குப் போகும் போது தனது குடும்பமும் வசதியாக இருக்க அந்த வீடு அமைய வேண்டும் என்று நினைத்தார். எனவே தனது சொந்த ஊரான கோட்டூரிலே பெரியதொரு கல் வீட்டைக்கட்ட ஒழுங்குகள் செய்தார் நாகலிங்கம்.
இரண்டு மாடிகள் கொண்ட அந்த வீட்டில் எட்டுப் பத்து அறைகளும் சமையலறை, மலசல கூடங்கள் குளிக்கும் அறைகள் முதலிய பல வசதிகளும் அமைந் திருந்தன. கிணற்றிலிருந்து நீரைக் குழாய் மூலம் பெறு தற்கான அமைப்புகளும் வைக் க ப் பட் டன. இந்தப்

வாடகைக்காரர் -- ,57
பெரிய வீட்டைக் கட்ட ஆயத்தங்கள் செய்யும் போது நாகலிங்கத்தின் தந்தையார் மகனுக்குச் சில ஆலோசனை கள் கூறிஞர் 'மகனே! இடம்படி. வீடிெடேல்" என்று ஒளவையார் கூறியிருக்கிருர், தேவைக்கு அதிக மான அளவில் வீட்டிைக் கட்டாதே என்பதுதான் அதன் பொருள். இரண்டுபேர் இருப்பதற்கு வேண்டிய ஒரு வீட்டுக்கு இத்தனை அறைகளும் தேவை இல்லை. அதுவும் போக இந்தப் பெரிய வீட்டைக் கூட்டித் துப்புரவு செய்து, விளக்கேற்றிப் பராமரிப்பதற்குக் குறைந்ததுமூன்றுகு நான்கு வேலையா ட்கள் வேண்டும். வயதுபோன எங்க ளால் இந்தப் பெரிய வீட்டைப் பராமரிக்க முடியாது. ஆகவே ஒரு சிறிய வீடு நமக்குப் போதும். இப்போது நாம் வசிக்கும் மண்வீடே போதுமானது" என்று கூறினர்.
தந்தையின் இந்தப் புத்திமதியை நாகலிங்கம் கேட்க வில்லை. "எல்லா அறைகளையும் பூட்டி வைத்துவிட்டு இரண்டொரு அறைகளில் நீங்கள் வசிக்கலாம்" என்று கூறி அந்தப் பெரிய வீட்டைக் கட்டுவித்தார். அவருடைய பெற்றேரும் மறுக்க முடியாமல் அங்கு குடிபுகுந்து, கீழ் மாடியில் உள்ள இரண்டு மூன்று அறைகளை உபயோகித்து வந்தனர். சில காலஞ் சென்றபின் வீட்டின் பல பகுதி களிலும் தூசு பிடிக்கத் தொடங்கியது. மூடப்பட்டிருந்த அறைகளிலே வெளவால்களும், எலிகளும் குடிகொண்டன. இரவிலே வெள 1 37 ܐܘ . . வால்கள் கடிபட் l60 a மரநாய் கள் அறைகளிற் குதித்துக் குதித்து ஓடின. இது நாக லிங்கத்தின் பெ ருே ர்களுக்கு ப் பெரும் தெ7 ல் 8a) u Tas இருந் திதி வ ய து

Page 36
58 ஆத்திசூடி அறநெறிக் கதைகள்
போன் அவர்களால், அறைகளைத் திறந்து கூட்டவோ, விளக்கேற்றவோ முடியவில்லை.
இன்னுஞ் சிறிது காலஞ்செல்ல, எலிகளும், வெளவால் களும் நாகலிங்கத்தின் பெற்றேர் வசித்து வந்த அறை களுக்கே வந்து விட்டன. ஒருநாள் இரவு எலி ஒன்று நாகலிங்கத்தின் தாயின் காலிற் கடித்தும் விட்டது. இப்படியான தொல்லையைத் தாங்க முடியாத அவர்கள் அந்தப் பெரிய வீட்டை விட்டு வெளியேறினர். தமது பழைய மண் வீட்டுக்குச் சென்று அதைக் கூட்டிப் பெருக்கி ஒழுங்கு செய்து கொண்டு அதிலே வாழ்ந்து வரலாயினர்.
நகரத்தில் வாழ்ந்து வந்த நாகலிங்கத்துக்கு அன்று ஒரு கடிதம் வந்தது. கடிதத்தைப் பிரித்துப் பார்த்தார் நாகலிங்கம்;
அன்புள்ள மகனுக்கு ஆசீர்வாதம்,
**இடம்பட வீடெடேல்' என்ற ஒளவைப்பிராட்டி
யின் புத்திமதியை நீ கேட்கவில்லை. எம்மை உனது பெரிய வீட்டிலே வசிக்கச் செய்தாய். நகரத்தில் என்ருல் அந்த வீட்டை வாடகைக்காவது கொடுக்கலாம். இந்தக் கிராமத்தில் யார் வாடகை தரப்போகிறர்கள். ஆனல் எலிகளும், மரநாய்களும், வெளவால்களும் உனது வீட்டில் எங்களோடு குடிபுகுந்து விட்டன. இந்த வாடகைக்காரர் `கள் எம்மை வீட்டில் இருந்தே விரட்டி விட்டார்கள். நாம்
எமது மண் வீட்டுக்கு வந்து விட்டோம்.
வாடகைக்காரரிடம் இருந்து உன்வீட்டை மீட்பதற்கு வேண்டிய ஒழுங்கைச்செய்.
இப்படிக்கு, 2 607 gli LfT .
கடிதத்தைப் படித்த் நாகலிங்கம் தன் பிழையை
உணர்ந்து கொண்டார். w
"இடம்பட விடெடேல்"

தொலைந்த முதல்
இரத்தினசிங்கன் பெரியதோர் இரத்தின வியாபாரி. மகேந்திரபுரியின் பிரதான வீதி ஒன்றில் அவனுடைய வியாபார நிலையம் இருந்தது. அவனிடம் பல விலை மதிக்க முடியாத இரத்தினங்கள் இரு ந் தன. அவன் மிகுந்த நேர்மை உள்ளவன். அதிக இலாபம் கருதாமல் நீதியான முறையில் வியாபாரஞ் செய்தான். இதனுல் அவனுடைய புகழ் பிறதேசங்களிலும் பரவி வந்தது. பல பிற நாட்டு வியாபா ரி க ள் இரத்தினசிங்கனுடன் தொடர்பு கொண்டு பெரும் அளவில் வியா பா ரஞ் செய்தனர்.
மகேந்திரபுரியின் அயல் நாடு உலுத்தர்புரி. உலுத்தர் புரியிலே சோரசிங்கன் என்னும் வேறு ஒரு இரத்தின வியாபாரி இருந்தான், அவன் இரத்தின சிங்கனுடைய

Page 37
GO ஆத்திசூடி அறநெறிக் கதைகள்
புகழைக் கேள்வியுற்றன். எப்படியாவது இரத்தினசிங்க னுடன் சிநேகிதம் பண்ணிக் கொண்டு அவனேடு வியாபா ரஞ் செய்து பெரும் இலாபம் பெறவேண்டும் என்று நினைத்தான். எனவே மகேந்திரபுரிக்கு வந்து இரத்தின சிங்கனேடு தொடர்புகளை ஏற்படுத்தலானன்.
இரத்தினசிங்கன் இயல்பாகவே நல்ல குணம் படிைத் தவன். எவரையும் ஆதரித்து நட்புக் கொண்டாடுபவன். அயல்நாட்டு வியாபாரியான சோரசிங்கனையும் மிகுந்த அன்போடு வரவேற்று, வியாபார கருமங்களைப் பேசிஞன். சோரசிங்கன் பேசுகின்ற விதத்தையும், அவன் நடை உடை, பாவனே முதலியவற்றையும் பார்த்து இரத்தின சிங்கன் மயங்கிவிட்டான். அவன் ஒரு பெரிய உண்மை புள்ள வியாபாரி என்று எண்ணிஞன். ஆகவே சோர சிங்கன் நட்புக் கொள்வதற்குத் தகுந்தவன்தான என்று விசாரித்து அறியாமலே அவனுடன் மிகுந்த நட்புப் பாராட்டினன். சோரசிங்கனுக்குக் கடன் முறையில் இரத் தினங்களே விற்றும் வந்தான். இரண்டு, மூன்று தடவை களில் சோரசிங்கன் சொன்னபடியே இரத்தினங்களைத் தன் நாட்டில் விற்றுப் பணத்தை உரிய காலத்தில் இரத் தின சிங்கனிடம் சேர்ப்பித்தான். இதனுல் இரத்தின சிங்கனுக்குச் சோரசிங்கனிடம் பெரும் நம்பிக்கை ஏற்பட் டது. அவன் நல்ல நண்பன் என்று திடமாக எண் ணி இணுவி"
ஆஞல் இரத்தினசிங்கனிட்ம் நெடுங்காலமாக வேலே பார்த்து வந்த கணக்கப்பிள்ளே கந்தையாவுக்குச் சோர சிங்கன் மேல் நம்பிக்கை ஏற்படவில்லை. அவனுடைய நட்புத் தனது முதலாளிக்கு உகந்தது அல்ல என்று கருதிஞன். வயதில் மூத்த வஞன கந்தையா இரத்தினசிங்கனேடு மிகுந்த உரிமையோடு பேசிப் பழகுவது வழக்கம். ஒரு நாள் கணக்கப்பிள்ளே இரத்தினசிங்கனே நோக்கி "முத லாளி எனக்கென்னவோ உங்கள் புதிய நட்புப் பிடிக்க வில்லை. "இணக்கமறிந் திணங்கு" என்று தமிழ் மூதாட்டி

தொலேந்த முதல்
ஒளவையார் கூறியிருக்கிருர் ஒருவரோடு நட்புக் கொள் ளூம் போது அவருடைய நற்குண, நற்செயல்களை ஆராய்ந்து அறிந்த பின்தான் நட்புக்கொள்ள வேண்டும் என்பது ஒளவையின் வாக்கு. இந்தச் சோரசிங்கனுடைய குணுதிசயங்கள் நமக்கு ஒன்றும் தெரியாது. நீங்கள் அவ ளுேடு மிகுந்த நட்பாக இருக்கிறீர்கள். அதுவுமல்லாமல் கடன் முறையில் வியாபாரமும் செய்கிறீர்கள். இது எப் படியாகுமோ எனக்குத் தெரியாது. நமது முதல் தொலே யாமல் இருக்கும்படி பார்த்துக் கொள்ளுங்கள்' என்று மிகவும் நயமாகக் கூறிஞன்.
இரத்தினசிங்கன், கணக்கப்பிள்ளையைப் பார்த்துச் சிரித்தான். 'உமக்கு எல்லோரிடமும் அவநம்பிக்கைதான். சோரசிங்கன் நல்லவன். நீர் சென்று உமது வேலேகளைக் கவனியும்" என்ருன். இதன் பின்னர் கண க்கப்பிள்ளை இதுபற்றி எதுவுமே பேசவில்லை. சிலகால ஞ் சென்றது. இரத்தினசிங்கன் - சோரசிங்கன் வியாபாரமும் நன்கு நடந்து வந்தது.
திடீர் என்று ஒரு நாள் சோரசிங்கன் இரத்தினசிங் கனிடம் வந்தான். "நண்பா எனது நாட்டிலே பெரிய பணக்காரர் ஒருவர் இருக்கிருர், அவருடைய மகளுக்கு விரைவிற் திருமணம் நடக்கப் போகிறது. அதற்காக அவர் விலையுயர்ந்த இரத்தினங்களே வாங்க விரும்புகிருர், உன்னிடம் உள்ள அதிவிலேஉயர்ந்த இரத்தினங்களைத் தந்தால், நான் அந்தத் தனவந்தனிடம் அவற்றைக் காட்டி அவன் விரும்பியவற்றை விற்றுவிட்டுப் பணத்தையும் மீதியாக உள்ள இரத்தினங்களையும் திருப்பி இரண்டு நாட்களில் கொண்டு வந்து தருகிறேன்.' என்ருன்.
இரத்தினசிங்கனுக்கு நண்பன் கூறுவது உண்மை என்று தோன்றியது. அதுவுமல்லாமல் பெரிய வியாபாரமும் நடை பெறுகிறதே என்றும் எண்ணினுள். எனவே தன்னிட முள்ள அதிக விலே உயர்ந்த இரத்தினங்கள் பலவற்றை

Page 38
ஆத்திருடி அறநெறிக் கதைகள்
@安厅芷üLü கொடுத்தனுப்பினு ன். சோரசிங்கன் இரத்தினங்களைப் பெற்றுக் கொண்டு சென்று இரு வாரங் களாகியும் அவன் திரும்பி மகேந்திரபுரிக்கு வரவில்லே. இது இரத்தினசிங்கனுக்குப் பெரும் ஏமாற்றத்தை அளித் தது. உடனே அவன் கணக்கப்பிள்ளே கந்தையாவை அழைத்து உலுத்தர்புரிக்குச் சென்று சோரசிங்கனேச் சந்தித்து வரும்படி அனுப்பினுன்.
கணக்கப்பிள்ளே உலுத்தர் புரிக்குச் சென்று விசாரித்த போது சோரசிங்கன், நாணயம் இல்லாதவன் என்றும் அவன் இப்போது அந்த நாட்டில் இல்லே என்றும் அறிந் தான். சோரசிங்கன் எங்கு சென்ருன் என்பதை அறிய முடியாத கணக்கப்பிள்ளே மகேந்திரபுரிக்குத் திரும்பினுன் கணக்கப்பிள்ளே கொண்டுவந்த செய்தியை அறிந்த இரத் தினசிங்கன், "இணக்கம் அறிந்து இணங்கு' என்னும் ஒளவைப் பாட்டியின் அறிவுரையை மதியாமல் நடந்த தற்கு, நல்ல தண்டனை பெற்று விட்டதாகக் கூறி மனம் வருந்திஞன்.
"இணக்கமறிந் தினங்கு"
 

கெட்ட குமாரன்
சின்னத்தம்பிக்கும் சீதேவிப்பிள்ளேக்கும் இரண்டு மக்
கள் இருந்தனர். மூத்தவன் பெயர் மதுபாலன், இளேய வன் பெயர் குணபாலன், சின்னத்தம்பி தனக்குச் சொந்த மான நிலத்தில் விவசாயஞ் செய்து குடும்பத்தை நடத் திஞர். எப்படியாவது தனது மக்கள் இருவரையும் படிக்க வைத்து ஏதாவது உத்தியோகத்தில் அமர்த்தி விடவேண் டும் என்பதே சின்னத்தம்பியின் ஆசை. ஆணுல் மக்கள் இருவரையும் படிக்க வைக்க அவரிடம் பணம் இருக்கவில்லே. ஆகவே தனது மூத்த மகன் மதுபாலனே மட்டும் மேற் படிப்புக்கு அனுப்பி வைத்தார். இளைய மகன் குணபாலனே ஒரளவு படிக்க வைத்துவிட்டுப் பின் நிறுத்திக் கொண் டார். குணபாலன் தகப்பனுேடுவிவசாயத்தைக் கவனித்து வந்தான்.
மதுபாலன் படித்துப் பட்டம் பெற்ருன், அவனுக்குப் பட்டனத்தில் ஒர் அரசாங்க உத்தியோகமும் கிடைத்தது. உத்தியோகம் பார்க்கப் பட்டனம் சென்ற மதுபாலன் கூடா நண்பர்களுடன் சேர்ந்து கெட்டுப் போஞன். குடிப்பழக்கம் பழகிப் பலரும் வெறுக்கக்கூடிய நிலேயை அடைந்தான். தனது பெற்ருேரையும், தம்பியையும் மறந் தான். அவர்கள் இருக்கிருர்களா, அல்லது இறந்து விட் டார்களா என்றுகூட நினேப்பதில்லே. வயதான சின்னத் தம்பியும், சீதேவிப்பிள்ளேயும் மூத்த மகனின் இந்த நிலை யைக் கேள்விப்பட்டுப் பெரிதும் வருந்தினர். அவர்கள் 蠶° கடிதங்களுக்கு மதுபாலன் பதிலே போடுவ
U.

Page 39
临曹 ஆத்திசூடி அறநெறிக் கதைகள்
இளையமகன் குணபாலன் தனிமையாக விவசாயஞ் செய்து தனது தந்தையையும் தாயையும் பேணிக் காப் பாற்றி வந்தான். அவர்களுக்கு ஒருவித குறையும் வைக் காது கவனித்து வந்தான். ஆஞல் அவனுக்கு விவசாயத் திற் கிடைத்த வருமானம் பற்ருக் குறையாக இருந்தது. அதிக நிலம் இல்லாதபடியால் குணபாலன் நாளாந்த சீவி பத்துக்குக் கஷ்டப்பட்டான். அவனுடைய கஷ்டத்தைப் பார்த்த சின்னத்தம்பி 'மகனே நானும் உன்னுேடுகrட உழ்ைக்க முடியாத நிலைக்கு வந்துவிட்டேன். நீயோ தனிமையாகப் பாடுபட்டு என்னேயும் உன் அம்மாவையும் காப்பாற்றுகிருப். "தந்தைதாய் பேண்' என்ற ஒளவை யின் ஆத்திசூடி வாக்கியத்துக்கு ஏற்ப நடக்கிருய். உன் அண்ணனுே நாம் செய்த நன்றியை எல்லாம் மறந்து எங்களேக் கவனிக்காமல் இருக்கிருன். அவனுக்கு எப் போதுதான் புத்தி வருமோ நான் அறியேன்" என்று மனவருத்தத்துடன் கூறிஞர்.
தந்தையின் சொற்களைக் கேட்ட குணபாலன் 'அப்பா ஒருவ்ன் தன்னுடைய தந்தையையும், தாயையும் பேணிக் காப்பாற்றுவது அவனுடைய கடமை. அதைத்தான் நான் செய்கிறேன். அண்ணு தனது கடமையை மறந்து வாழ் கிருர், அவர் என்றைக்காவது திருந்தி நம்மிடம் வரு வார். நீங்கள் கலங்க வேண்டாம்' என்று ஆறுதல் கூறிஞன்.
தன்னுடைய இளைய மகனின் நெருக்கடி நிலைமை நீங்கவேண்டும் என்று சின்னத்தம்பி ஆசைப்பட்டார். அதற்காக அவர் தன்கைக்கு வரும் பணத்தில் மிச்சம்பிடித்து அடிக்கடி தேசிய லொத்தர்ச் சீட்டு வாங்குவார். ஒரு நாள் அவ்ருடைய சீட்டுக்கு முதற்பரிசு கிடைத்தது. சின்னத் தம்பியும் சீதேவிப்பிள்ளையும் ஆனந்தக் கூத்தாடிஞர்கள். பரிசுத் தொகையை எடுத்து இளேயமகன் குணபாலனுக்கு வேண்டிய வசதிகளேச் செய்ய ஒழுங்குகள் செய்தார்கள்.
சின்னத்தம்பிக்கு முதற் பரிசு கிடைத்த செய்தியைத் தினசரிப் பத்திரிகையிற் பார்த்தான் மதுபாலன் தந்தை பிடம் போய் தனக்கு உதவி செய்யும்படி கேட்க எண்ணி ஞன். ஆஞல் அவ னு டைய மனச்சாட்சி குத்தியது. நல்லாய் இருக்கும்போது தந்தை தாயைக் கவனியாமல்

தொலேந்த முதல் 65
இருந்து விட்டு இப்போது உத்தியோகமும் இல்லாமல் தெருத்தெருவாய் அலேயும் நேரத்திற் தானு பெற்ருரை நினே க்கிருய்' என்று அவன் மனம் அவனுேடு பேசியது.
இருந்தாலும் மனத்தைத் திடப்படுத்திக் கொண்டு மதுபாலன் தந்தையிடம் சென்ருன் மதுபாலனேக் கண்ட சீதேவிப்பிள்ளேயும், தம்பி குண பா ல னு ம் பெரிதும் வருத்தப்பட்டார்கள். அழுக்குப் படிந்த மேனியும், கந்தல் உடையோடும் வந்த அவனுடைய தோற்றம் அவர்களே நெகிழ வைத்துவிட்டது. ஆணுல் சின்னத்தம்பியோ மிகுந்த வைராக்கியத்தோடு இருந்தார். ""Lחנה6 חשוש3ם எனக்குப்பணம் வந்துவிட்டதை அறிந்து, இப்போது உறவு கொண்டாட வருகிருய். உனக்குத் தந்தை, தாய், சகோ தரன் பெரிதா அல்லது பணம் பெரிதா? நீ கெட்டவன், உனக்கு நான் ஒரு சதங்கூடத் தரமாட்டேன்' என்று கண்டிப்பாகக் கூறிஞர்.
"அப்பா நான் கெட்டவன், துரோகி, "தந்தை தாய் பேண்' என்ற வாக்கை மறந்தவன். ஆனுல் இப்போது திருந்தி விட்டேன். எனக்கு உத்தியோகம் இல்லை. உண்ண உணவில்லை, பிச்சைக்காரணுக அஃலகிறேன். என்னே மன்னி யுங்கள். நான் இனிமேல் உங்கள் காலடியிலே கிடக் கிறேன். நீங்கள் சொல்லுகிறபடி கேட்டு நடக்கிறேன்" என்று அழுதான்.
சின்னத்தம்பி மெளனமாக இருந்தார். சீதேவிப் பிள்ளை செய்வதறியாது கண்கலங்கி நின்ருள். அப்போது குணபாலன் "அப்பா எனக்காக அண்ணுவை மன்னித்து விடுங்கள். அவர் திருந்திவிட்டேன் என்றபின் அவரைத் தண்டிக்கக் கூடாது' என்று இரந்தான். தாங்கள் பண மில்லாது இருந்தபோதும், தம்மைப் பேணிக் காப்பாற் றிய அன்பு மகன் குணபாலன் சொன்னதைத் தட்டி நடக்கச் சின்னத்தம்பிக்கு மனம் வரவில்லே. “சரி சரி, உன் விருப்பம். ஆணுல் உணவும், உடையும் அன்றி வேறெதுவும் அவனுக்குக் கிடையாது என்பதை மறந்து விடாதீர்கள்" என்று கண்டிப்பாகக் கூறினர் சின்னத்தம்பி.
"தந்தைதாய் பேண்'

Page 40
முடிச்சு மாறிகள்
(UPருகேசுச் சட்டம்பியார் அன்றுதான் முதன் முத லாகப் பட்டணத்துக்கு வந்தார். ஒய்வு பெற்ற அவர் பட்டணத்தில் வசிக்கும் தனது மகளின் குடும்பத்தைப் பார்த்துப் போவதற்காக வந்திருந்தார். பட்டணத்தின் பிரதான புகையிரத நிலையத்திற் சந்திக்கும்படி அவர் மக ளுக்கு அனுப்பிய கடிதம் அவளுக்குக் கிடைக்கவில்லை. அதிகாலை பிரதான புகையிரத நிலையத்தில் வந்து இறங்கிய முருகேசுச் சட்டம்பியார் அங்கும் இங்கும் பார்த்தார். சனக் கூட்டம் அதிகமாக இருந்தது. அங்கே தனது மகளையோ, மருமகனையோ கண்டுகொள்ள முடியவில்லை.
புகையிரதத்தில் வந்தவர்கள் அனைவரும் நிலையத்தை விட்டு வெளியேறி விட்டனர். முருகேசுச் சட்டம்பியாரும் அங்குமிங்கும் பார்த்துப் பார்த்து, நிலையத்துக்கு வெளியே வந்தார். வெகுநேரமாகியும் அவரைக் கூட்டிப்போக எவரும் வரவில்லை. அவருக்கு மகள் இருக்கும் வீட்டுக்குப் போகும் வழி தெரியாது. மகளுடைய வீடு பத்துப் பதி னைந்து மைல் தொலைவில் இருந்தது. முருகேசுச் சட்டம்பி யாருடைய கைகளிலே “சூட்கேசும் வேறு பல பொருட் களும் இருந்தன. அவரைப் பார்க்கும் போது எங்கோ நாட்டுப்புறத்து மனிதர் முதன் முதலாகப் பட்டணத் துக்கு வந்திருக்கிறர் என்று தெரிந்து கொள்ளலாம். சட்டம்பியார் தனது சட்டைப் பையில் இருந்த மகளின் விலாசம் எழுதப்பட்ட துண்டை எடுத்துக் கையில் வைத்

முடிச்சு மாறிகள் 67
துக் கொண்டார். அங்கே நின்ற ஒருவரிடம் அத்துண் டைக் காட்டி அந்த இடத்துக்குப் போகும் பஸ் வண்டி எது என்று கேட்டார். அந்த மனிதன் சொன்ன இலக்க பஸ் வண்டி நிற்பாட்டும் பஸ் நிலையத்துக்கு மெதுவாக நடந்து சென்று பஸ்வண்டியிலே ஏறுவதற்கு முயற்சி செய் தார். பஸ் வண்டிகள் மிகுந்த நெருக்கமாக ஆட்களை ஏற்றி வந்தன. மேலும் அவற்றில் ஏறிக்கொள்ள மக்கள் முட்டி மோதினர்.
சனக் கூட்டத்திலே இருகைகளிலும் பொருட்களையுங் கொண்டு பஸ் வண்டியில் ஏறுவதற்கு மூன்று, நான்கு முறை எத்தனித்தார் சட்டம்பியார். ஆஞல் அவரால் முடிய வில்லை. சற்று விலகிநின்று தான் கையில் வைத்திருந்த பொருட்களை நிலத்தில் வைத்து விட்டுத் தன் சட்டைப் பையைத் தட்டிப்பார்த்தார். பாவம்! அவருடைய ‘மணி பேர்சைக் காணவில்லை. சட்டம்பியார் திகைத்தார். அவரிடம் வேறுபணமோ கிடையாது. அப்பொழுதுதான் அவருக்குப் பட்டணத்தில் முடிச்சு மாறிகள் அதிகம் என்பது நினைவுக்கு வந்தது. இப்போது என்ன செய்வ தென்று அவருக்குப் புரியவில்லை. யாரைப் பார்த்தாலும் வேற்று முகமாக இருந்தது.
*" என்னுடைய ‘மணிப் பேர்சைத் தட்டிக் கொண்டு போய்விட்டார்கள். எனக்குப் பஸ்சுக்குப் பணம் தாருங் கள்" என்று பிறரிடம் கேட்க அவருக்கு வெட்கமாக இருந் தது. எனவே செய்வதறியாது வீதியின் ஒருபுறமாக நின்று தயங்கினுர் சட்டம்பியார். அப்போது ஒரு பெரிய மோட் டார் வண்டி அவர்முன் வந்து நின்றது. அதிலிருந்து, கோட்டும் சூட்டும் அணிந்த ஒரு மனிதர் இறங்கினர். *" எங்கே போகிறீர்கள் சேர், வாருங்கள் என் காரில் கொண்டு போய் விடுகிறேன்" என்ருர் அவர், சட்டம். பியாருக்கு பெரும் வியப்பாக இருந்தது. முன் பின் தெரியாத இவர் யார் என்று எண்ணினர். அப்போது "என்ன சேர், யோசிக்கிறீர்கள் என்னைத் தெரியவில்லையா?

Page 41
68 ஆத்திசூடி அறநெறிக் கதைகள்
நான் உங்கள் பழைய மாணவன் பாலசிங்கம். எனக்குக் கணக்குப் பாடம் சரியாக வருவதில்லை என்று பாடசாலை
முடிந்தபின் தனிமையாக வைத்துச் சொல்லித் தருவீர்களே
அந்தப் பாலசிங்கந்தான்' என்ருர் அந்த மனிதர்.
'அடடே எங்கள் பாலசிங்கமா? ஆளே மாறிவிட்டாய் அடையாளமே கண்டு கொள்ள முடியவில்லை' என்று ஆரம்பித்துத் தன் கதையைக் கூறிமுடித்தார் சட்டம்பி யார். பாலசிங்கம் சட்டம்பியாரைத் தனது மோட்டார் வண்டியில் ஏற்றிக்கொண்டு அவருடைய மகளுடைய வீட்டு விலாசத்தை தேடிப் புறப்பட்டார். செல்லும் வழியிலே தனது ஒரே மகன் வீட்டை விட்டு ஓடிவிட்ட தாயும், தான் தேடி அலைவதாயும் சொன்னர். சட்டம் பியார் வருத்தப்பட்டார். பாலசிங்கம் சட்டம்பியாருடைய மகளுடைய வீட்டு வாசலில் மோட்டார் வண்டியை நிறுத்தினர். வீடு பூட்டி இருந்தது. அக்கம் பக்கத்தில் விசாரித்தபோது அவர்கள் இருபத்தைந்துமைல் தொலை வில் உள்ள ஒரு கோ வி லு க் குச் சென்று விட்டதாக அறிவித்தனர். திரும்புவதற்கு மாலையாகும் என்றும் கூறினர்கள்.
பாலசிங்கத்துக்குச் சட்டம்பியாரை அங்குவிட்டுச் செல்ல மனமில்லை. மோட்டாரை அந்தக் கோவிலை நோக்கி ஒட்டினர். அவருடைய பெருந்தன்மையை உணர்ந்த சட்டம்பியார் 'தம்பி! நீ எனக்காக எவ்வளவு கஷ்டப்படுகிருய். உன் மகனையும் தேடாமல் என்னை என் மகளிடம் சேர்க்கப் பாடு படுகிருய்' என்ருர், *" சேர் நீங்கள் எனக்குச் செய்த நன்றியை நான் மறக்க முடியுமா? நீங்கள் தானே நன்றி மறவேல் என்று ஆத்தி சூடி படிப்பித்துத் தந்திருக்கிறீர்கள்’’ என்று சிரித்த வண் ணம் சொன்னுர் பாலசிங்கம்.
கோவிலை வந்தடைந்ததும், பாலசிங்கமும் சட்டம்பி யாரும் தேடிப் பார்த்தார்கள். அங்கே ஒரு மரநிழலில்

முடிச்சு மாறிகள் 69
சட்டம்பியாரின் மகளும் குடும்பமும் அமர்ந்திருப்பதைக் கண்டார்கள். கிட் டச்சென்று பார்த்தார்கள். என்னே ஆச்சரியம். பாலசிங்கத்துடைய மகன் ஈசனும் அவர்க ளோடு இருந்து கடலை கொறித்துக் கொண்டிருந்தான்.
எல்லோருக்கும் ஒரே வியப்பாக இருந்தது. ஒருவரை ஒருவர் எதிர்பார்க்கவில்லை. எங்கோ அலைந்து திரிந்த ஈசன் கடைசியாகக் கோவிலுக்கு வந்திருக்கிருன். அப் போது சட்டம்பியாருடைய மகளின் குடும்பத்தினரைச் சந் தித்திருக்கிருன். அவர்கள் அவனுக்குப் புத்திமதி கூறிவீட்டுக் குப் போகும்படி சொல்லிக் கொண்டிருக்கிருர்கள் என்று பாலசிங்கம் அவர்களிடமிருந்து தெரிந்து கொண்டார். சட்டம்பியார் ஈசனைப் பார்த்து °தம்பி! அம்மா, அப்பா உன்னைக் கண்டிப்பது உனது நன்மைக் காகத் தான். அவர் கள் உனக்குச் செய்யும் நன்றியை மறந்து நீர் அவர்களை விட்டு ஒடக் கூடாது. இதோ பார் உனது அப்பா நான் செய்த நன்றியை மறவாமல் எனக்கு உதவினர். அதன் பயணுகக் காணுமற் போன உன்னையும் கண்டுபிடித்துவிட் டார். ஆகவே நாம் எல்லோரும் 'நன்றி மற வேல்" என்ற வாக்குப்படி வாழவேண்டும்" என்று கூறிஞர்.
பின்னர் அனைவரும் சுவாமி தரிசனம் செய்துகொண்டு மோட்டார் வண்டியில் வீடு திரும்பினர்.
'நன்றி மறவேல்"

Page 42
AZAZNA AZAZNA ZA ZAV*
ஆசிரியரின் பிறநூல்கள்
வெளிவந்தவை
* குறளும் கதையும் 1973
(சிறுகதைத் தொகுதி)
** பாட்டும் கதையும் 1974
(கதைப்பாடல்கள்)
*** முனியன் முரளிகானன் 1977
(குறுநாவல்)
வெளிவர உள்ளவை
* உடைந்த உள்ளம் (அச்சில்) (நாவல்) - நட்சத்திரமாமா தொகுதிப் பிரசுரம்.
** திருவிழா
(நாவல்)
**ன் வள்ளுவர் சொன்னவை
(திருக்குறள் விளக்கச் சித்திரம்)
குறிப்பு:- இந்நூலாசிரியரின் நூல்கள் அனைத்தும் சிறுவர்களுக்கு
உரியனவே.


Page 43


Page 44
இந்நூலைப்பற்றி.
 ேஒளவைப் பிராட்டியின் வர்களே புரிந்து கொள்வார்களே தினச் சுருக்கமாக ஒளவைப் பா பதாம் நூற்ருண்டுச் சிறுவர்களுக்கு ஒரு சாதனைதான். இப்பெருஞ் சாத நண்பர் நா. மகேசன் அவர்கள், ! முறையில் நவீன கதைகளைச் சொ ஆத்திசூடியை அழகுற இழையோ
*அருட்திரு.
அதன் ஒவ்வொரு வாக்கியமும் பொக்கிஷங்களேப் பலரும் நெருங்கி இலகுவான வழியைக் காட்டுகிரு தனது கற்பனைத் திறத்தால் ஒவ்வெ சிறந்த, அதிஉன்னதம்ான தற்க கருக்களை உருவாக்கி சிறுவர் முத புறவும், பயன்பெறவும் தக்கமு.ை
ஆசிரியர். இந்த அரிய நூலைத் த
தோடு வரவேற்று ஆதரவளிக்கக் க
as 366)
 ேஆத்திசூடி தந்த ஒளவை கூர்ந்து போற்றுகிறது. அந்த நினை6 நிலைக்க வைத்துவிட்டார் திரு. நா. படைப்பு. சின்னஞ்சிறிய கதை, ஆ இதுவே நவீன காலத்துக்கு ஏற்பு சாரம் குன்ருதபடி நல்ல கருத்துக் யூற்றுகளைப் போற்றுவோம்,
சிைவத்தமிழ்
அச்சுப் பதிவு பரீ ஆத்மஜே

ஆத்திசூடியை இன்றைய பெரிய ா என்பது சந்தேகந்தான். இரத் ட்டி பாடிய ஆத்திசூடியை இரு விளங்கப்படுத்திப் புரியவைப்பது னயைச் சிறப்பாகச் செய்துள்ளார் இன்றைய சிறுவர்களுக்கு ஏற்ற ல்லி, அவற்றினூடே ஒளவையின் ட விட்டுள்ளார் ஆசிரியர்,
சா. ம. செல்வரட்னம், அ. ம.தி. (கரவையூர்ச் செல்வம்)
ஆத்திசூடி ஒர் அறிவுச் சுரங்கம், அறநெறிப் பொக்கிஷம். அந்தப் அனுபவித்துப் பயன் பெறுவதற்கு ரர் திரு. நா. மகேசன் அவர்கள். ாரு ஆத்திசூடி வாக்கியத்துக்கும், காலத்துக்கு ஒவ்வக்கூடிய கதைக் நல் முதியோர் வரை படித்து இன் றயில் இந்நூலை எழுதி உள்ளார் தமிழ் கூறும் நல்லுலகம் ஆர்வத் டமைப் பட்டுள்ளது.
நிதி அல்ஹாஜ் எம், எம். உவைஸ்.
யைத் தமிழுலகம் என்றும் நினைவு
வு இளம் உள்ள்ங்களிலும் என்றும்
மகேசன் அவர்கள். அருமையான
ல்ை பென்னம் பெரிய உண்மை,
ட்ைத்தாகும். நம் ஆர்ட்டுக்கலாச்
க்களுடன் அமைந்த் இக்கற்பை
ܠܣܛܢ
ச் செல்வி தங்கம்மா அப்பாக்குட்டி
ஜாதி அச்சகம் - நாவலப்பிட்டி,
¬¬ - ܥ - ܦ - ܨ - ܝ