கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: குமரன் 1990.03.01

Page 1
-
محصےح^
9 அமெரிக்க
ஏற்றமும்
- போல் சுவீ!
Ο தெற்காசி பிரச்சனை
- குமாரி ஜெ
O GL6 Gr
- மாதவன்  ேஏகபோக பெண்கள்
கூலி உண - மான்விழி
O G356T6 p
 
 

LDFT siji 1990
5 ஏகாதிபத்தியத்தின்
வீழ்ச்சியும் - 2
à யப் பெண்கள்
பும் இடதுசாரிகளும் யவர்த்தணு
கிழக்கில் ல்லை 1 (நாவல் முன்னுரை)
3FL DIT ? த்துவமா ? ன் காக்கும்
ங்கங்களின் எழுச்சி
முதலாளித்துவமும் ரின் குறைந்த ழப்பும்
பதில் !
விலை: ரூ. 4/-

Page 2
அரிய நூல்கள் மீண்டும் கிடைக்கும்
1. சூரியன் கிழக்கில் உதிப்பதில்லை செ. கணேசலிங்கன் 33.00 2. பெண்ணடிமை தீர 48.00 3. குமரனுக்குக் கடிதங்கள் P 21.00 4. போர்க்கோலம் 14.25 2. மண்ணும் மக்களும் 10.50 3. அயலவர்கள் 9 p. 45.00 4. பொய்மையின் நிழலில் 37.50 5. அந்நிய மனிதர்கள் 13.50 6. வதையின் கதை p 15.75 7. கலையும் சமுதாயமும் y 9 1.25 8. குந்தவிக்குக் கடிதங்கள் 8.00 9. மான்விழிக்குக் கடிதங்கள் 16.50 10. சிறுவர்களுக்கான சிந்தனைக் கதைகள் 24。00 11. அபலையின் கடிதம் 3.75 12. சொந்தக்காரன் பெனடிக்ற் பாலன் 3.50 13. மக்கள் தொடர்பு சாதனமும் மகளிரும்
சந்திரிகா சோமசுந்தரம் 2.00 14. மதமாற்றம் - நாடகம் அ. ந. கந்தசாமி 30.00 15. கைலாசபதியும் நானும் கே. எஸ் சிவகுமாரன் 12.00 漸漸漸漸漸漸漸漸漸漸漸漸漸漸漸漸漸漸漸摔漸漸漸凝漸漸 16. மரணத்திற்குப் பின் பொ. சங்கரப்பிள்ளை 45.00 17. சைவசித்தாந்தம் ) 30.00
பொ. சங்கரப்பிள்ளை அவர்கள் 21.2.90 அன்று அமெ ரிக்காவில் மரணமடைந்த செய்தியை வருத்தத்துடன் தெரிவித்துக்கொள்ளுகிறேம். 幣廠搬攝漸漸漸漸漸漸漸漸漸漸漸漸漸漸漸漸漸漸漸漸捧摔 விற்பனையாளர்க்கு கழிவு உண்டு. வி. பி. பி. ஏற்கப்படும். முன்பணம் அனுப்புவோருக்கு பார்சல் செலவு இணும்.
குமரன் புத்தகசாலை
201, டாம் வீதி, கொழும்பு - 12 தொலைபேசி: 421388

சோஷலிசமா ? முதலாளித்துவமா P
உடல் நலம் காக்கும்.
خ- 5)B۱uum --
நாம் குடும்பத்தவர், நண்பர்கள் வேண்டியவர்களுக்கெல்லாம் கடிதம் எழுதும்போது ஆரம்பத்தில் நலம். அங்கு வேண்டுவதும் அதுவே" என்பதுபோல எழுதுகிறோம். பலர் இறை அருளைக் கூறி யும் உடல் நலத்தையே முதலில் வேண்டுவர். அதுமட்டுமல்ல நேரில் காணும்போதும் நலமெப்படி என்றே வினாவுகிறோம். நோயுற்ற வேளை மருத்துவமனை சென்று பார்த்தல் அல்லது வீடு திரும்பி யதும் விசாரித்தல் வழமையாக நடைபெறுகிறது. பிரசவம், குழத் தைகள் நோயுறும் போது பரபரப்புடன் நிலைமைகளை விசாரிக் கிறோம்
இவை இங் சல்ல. உலக மக்களின் பண்பாடாக உலகு எங்கும்
நிலவுகிறது.
சோஷலிசம் இலாப நோக்குக்கொண்ட அமைப்பல்ல. சந்தைப் பொருளாதாரத்தில் தங்கியதல்ல. முதலாளித்துவத்திலேயே இவை இரண்டும் முதன்மை பெற்றுள்ளன.
முதலாளித்துவம் மக்களின் உடல் நலனைக் கவனிப்பதையே மிகப் பெரிய வாணிபமாக்கியுள்ளது. முதலாளித்துவ நாடுகளிலுள்ள மருத்துவ மனைகளே இவற்றுக்கு நற்சான்ருகும். பணக்காரருக் காகவே ‘நர் ஸிங் ஹோம்" என்ற பெயரில் பல மருத்துவ மனைகள் உள்ளன.
நடுத்தர வகுப்பினரும் சில வேளைகளில் தவிர்க்க முடியாது இங்கு நுழைந்து கடன் சுமைக்குள் மூழ்கிவிட நேரிட்டுவிடுகிறது.
இது தவிர, நோய்களைத் தீர்க்கும் மருந்துகள், டொனிக்கு கள் எனக் கூறி பல்லாயிரக் கணக்கான மருந்துகளை உற்பத்தி செய்து விற்றுப் பணம் குவிக்கும் சர்வதேசக் கம்பனிகள் இன்று ஆதிக்கம் பெற்றுள்ளன. முதலாளித்துவ நாட்டு டாக்டர்களெல் லாம் இம் மருந்துகளை விற்கும் தரகர்களாக, ஏஜண்டுகளாக விளங்கு கின்றனர். உடல் நலனைப் பேணுவது எனக் கூறி உடல் நலனைக்
مسك أو نسبه

Page 3
கெடுப்பது மட்டுமல்ல ஆயுளைக் குறைப்பதற்கும் இம் மருந்துகள் பல பயன்படுகின்றன.
விளம்பரம் மூலம் தாய்ப்பாவிலும் பார்க்க பவுடர் பாலே சிறந்
தது என்ற தவறான கருத்தை உலகில் சர்வதேசக் கம்பணிகள் நிலை
நாட்டி விட்டன என ஐ. நா. சார்ந்த உலக சுகாதார அமைப்பு கவலைப்படுகிறது.
விளம்பரம் பல்வேறு பில்களையும் குளிசைகளையும் அனைவரை யும் வாங்கச் செய்து விடுகிறது. மருந்துகளை விட்டுவிட முடியாத நோயாளராக (ADICT) மக்கள் மாறி வருகின்றனர். சாதாரண
மக்களே இத்தகைய மருந்துகளை தம்மோடு காவித் திரிவதையும் காணலாம்.
சோஷலிச அமைப்பில் இத்தகைய கொடுமைகள் கிடையாது. அங்கு யாவும் திட்டமிட்டே செயலாற்றப்படுகிறது. தாய்மை, குழந்தை, மக்கள் உடல் நலம் அனைத்தும் இலாப நோக்கின்றி சமூ கத்தின் பொறுப்பாகின்றது.
முதலாளித்துவமா, சோஷலிசமா உடல் நலனைப் பேணுவதில் முதன்மை பெற்றது என்பதை கீழ்க்கண்ட புள்ளி விபரங்கள் மூலம் அறியலாம். முதலில் இந்தியாவையும் சீனுவையும் ஒப்பிடுவோம். (கல்வி அறிவும் தரப்பட்டுள்ளது.)
இந்தியா gsorn
சிசு மரணம் 1000க்கு 1945ai) a 203 30 I9856) w 105 36
சராசரி வாழ்வுக் காலம் 57 69 கல்வி அறிவு; ஆண்கள் a 57 82 பெண்கள் - - - 29 56
இலத்தீன் அமெரிக்க நாட்டுப் புள்ளி விபரங்களை சோஷலிச நாடான கியூபாவுடன் ஒப்பிட்டுப் பார்க்கலாம்.
வாழ்வு சிசு கல்வி அறிவு
காலம் upp ogrtb இன்மை அர்பன்டீனா 70 る。5 6 L9Gu G6) 63 71 25 ஜமெக்கா 70 28 12 மெக்சிக்கோ 59 82 17 வெனிசுலா 69 39 15 சிலி 71 24 9 கியூபா 74 夏3 4
جس 43 سس۔

A எதிர்காலச் சந்ததியினர் நீண்ட காலம் நலமாக வாழ வேண்
டும் என நீங்கள் வாழ்த்த விரும்புகிறீர்களா ?
A காண்பவரின் உடல் நலனை விசாரிப்பீர்களா ?
A கடிதம் எழுதும்போது நலம். அங்கும் நலமே வேண்டுகிறேன்ம்
என்று எழுதுவீர்களா ?
இச்சந்தர்ப்பங்களிலெல்லாம் முதலாளித்துவமா சோஷலிசமா ?
வேண்டும் என்பதையும் நீங்களே கேட்டுக்கொள்ளுங்கள்.
தம் உடலைக் கட்டுப்படுத்தும் உரிமை பெண்களுக்கே உரியது
சென்ற ஆண்டு ஏப்ரல் 9ல் அமெரிக்கப் பெண்களின் நிலை பற்றி வாஷிங்டன் நகரில் மாநாடு நடந்தது. அதன் பின்னர் வரலாற்றுப் புகழ்மிக்க விடுதலையை நோக்கிய ஊர்வலம் நடைபெற்றது. அது மிகப் பெரிய ஊர்வலம் மட்டுமல்ல, நினைவுகூரக்கூடிய பல குணம் சங்களையும் கொண்டிருந்தது.
குடித்தொகை கட்டுப்பாட்டையோ பொதுநலனைக் குறைப்பதோ நோக்காக கருச்சிதைவு உரிமை ஆர்ப்பாட்டத்தை அவர்கள் நடத்த வில்லை. தமது உடலைக் கட்டுப்படுத்தும் உரிமையையே நோக்காகக் கொண்டிருந்தது. இவ் உரிமையை ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக பெண்கள் இழந்திருந்தனர். இன்று அடிப்படை மனித சுதந்திரம் வேண்டி, விழிப்பு நிலையுடன் இப் புரட்சிகரமான கோரிக்கையில் ஈடு பட்டனர். கிறிஸ்தவ ஆலயம் அல்லது அரசின் ஆதிக்கக் கருத்திய லால் பெண்களது வாழ்வையும் தாய்மையையும் இனிமேல் கட்டுப்
படுத்த முடியாது.
இவ் ஆர்ப்பாட்டத்தில் கன்னிப் பெண்கள் உட்பட பல லட்சம் மகளிர் பங்குபற்றினர்; ஆண்களும் சேர்ந்து கொண்டது தனிச்சிறப் unt(5ub. (றுத் பேர்கன் )
- 3 -

Page 4
மண்டோலாவின் விடுதலையும் மக்களின் எழுச்சியும். - மதி -
இந்நூற்றாண்டின் கடைசித் தசாப்தத்தின் ஆரம்பத்தில் நடை பெற்ற மிகப்பெரிய நிகழ்ச்சியை இன்று அனைவரும் அறிவர்,
ஆபிரிக்க தேசிய காங்கிரஸ் தலைவர் நெல்சன் மண்டோலா தென் ஆபிரிக்கச் சிறையிலிருந்து விடுதலை பெற்ருர், 27 ஆண்டுச் சிறையின் பின்னரும் சிறிதும் தளர்ச்சியடையாது தென் ஆபிரிக்க சிறுபான்மை வெள்ளையர் ஆட்சிக்கு எதிராக குரல் கொடுத்தார். 71 ஆண்டு வாழ்வில் 27 ஆண்டுகளைச் சிறையில் கழித்தும் அவர் மனம் தளரவில்லை.
மண்டோலாவிற்குப் பின்னால் இன்று உலகமே நிற்கிறது. உல கத்தின் குரலையே ஆட்சியாளர் இதுவரை காலமும் ஒதுக்கிவந்தனர். மேலும் ஒதுக்க முடியாத நிலையில் அடிபணிய நேரிட்டது. ஒரு தலைவரைச் சிறையில் வைத்திருப்பதே எத்தனை சிரமமானது என் பதை ஆயுதபலம் மிக்க அரசு இன்று உணர்ந்துள்ளது.
ஐ. நா. சபையின் தீர்மானத்தை ஒட்டி உலக நாடுகள் அனைத் தும் தென் ஆபிரிக்க அரசின்மேல் பொருளாதாரத் தடையை விதித் திருந்தன. இன்று மாண்டோலாவின் விடுதலை தவிர நாட்டு மக் களுக்குரிய உரிமைகள் எதுவும் வழங்கப்படவில்லை. இந்நிலையில் பிரிட்டன் மட்டுமே தன் பொருளாதாரத் தடையை அவசரப்பட்டு நீக்கியுள்ளது.
ஆபிரிக்க தேசிய காங்கிரசுக்கும் ஆட்சியாளர்களுக்குமிடையில் பேச்சுவார்த்தைகள் நடைபெற்று இணக்கம் ஏற்பட வேண்டும். அல் லது தேசிய விடுதலைப் போராட்டம் தொடர்ந்து நடைபெறும்.
ஆபிரிக்க மக்கள் பல்லாயிரம் ஆண்டுகளாக வாழ்ந்த நாட்டை முன்னேறிய ஆயுத பலம் கொண்டு வெள்ளையர் ஆக்கிரமித்தனர். அந்நாட்டின் இயற்கை வளங்களை கொள்ளையடித்து சுகபோக வாழ்வு நடத்தினர்.
இன்றைய தென் ஆபிரிக்காவின் 3.5 கோடி குடித்தொகையில் 68% கறுப்பின மக்களுக்கு வாக்குரிமையே கிடையாது. 18% வெள்ளை யரின் ஆயுதபல அரசியல் ஆட்சியே நடைபெறுகிறது. கலப்பின சிறு பான்மையினருக்கு மட்டும் சில உரிமைகள் வழங்கப்பட்டன. வாழும் இடம், பொது இடங்கள் அனைத்திலும் தீண்டத்தகாதவராக அந் நாட்டு மக்கள் தம் நாட்டிலேயே ஒதுக்கப்பட்டனர். உலகெங்கும இல்லாத இத்தகைய கொடுமை, அரசியல் பலத்துடன் தென் ஆதரிக் காவில் நிலவுகிறது.
இன்றைய உலகில் மக்களின் தேசிய உணர்வை, தேசிய விடு தலைப் போராட்டத்தை எவராலும் ஒடுக்கிவிட முடியாது.
மண்டோலாவின் தலைமையில் தென் ஆபிரிக்க மக்கள் மட்டு மல்ல, பிற ஆபிரிக்க, ஆசிய மக்கள், உலக மக்கள் அனைவரும் ஒன்று திரண்டு நிற்கின்றனர். இந்த எழுச்சியை எவராலும் தடுத்து விட முடியாது.
mur 94 sas--

அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் ஏற்றமும் வீழ்ச்சியும் - 2
போல் சுவீசி
ஆசியா, ஐரோப்பாவில் பல சம்பவங்கள் இரண்டாவது உலக யுத்தத்தின் பின்னர் நடைபெற்றன. அனைத்துத் தொல்லைகளுக்கும் பயமுறுத்தல்களுக்கும் ரஷ்யாவே, காரணம் என அமெரிக்கா சுட்டிக் காட்டத் தொடங்கியது.
உலக வல்லரசாக வரும் எண்ணம் ரஷ்யாவிற்கு இருக்கவில்லை; 1939 - 45 காலகட்ட இரத்தக்களரியின் பின் மீண்டும் ஆயுதமேந்தி யுத்தங்களையும் இரத்தப்பலிகளையும் நடத்தி உறுதியற்ற எதிர்காலத் தைத் தேடும் நோக்கே இருக்கவில்லை.
உலகில் அமெரிக்காவின் புதிய நோக்கு அமெரிக்க மக்களின் மனேபாவத்திலேயே தங்கியிருந்தது. ஆகவே இரண்டாவது உலக யுத்தத்தில் தோல்வியடையச் செய்த ஜேர்மனி, ஜப்பான் நாட்டின ரிலும் பார்க்க கம்யூனிசம் என்ற பயங்கர எதிரியை நாம் எதிர் கொள்ள நேரிட்டுள்ளது என மக்களைத் திசை திருப்பும் பணி அமெ ரிக்காவில் ஆரம்பமானது.
கம்யூனிசம் பல முகங்களைக் கொண்டது, எங்கும் கேடு விளைக்கக் கூடியது, சர்வதேச சதி முயற்சியுடையது, மிக்க பலமுள்ள இரா ணுவ யந்திரமுடையது, இதன் நரம்பு மையம் மாஸ்கோவில் உள் ளது என்ற போக்கான பிரச்சாரத்தில் அமெரிக்கா ஈடுபட்டது. கம் யூனிச எதிர்ப்பு அமெரிக்காவின் மதமாக, அனைத்து உள்நாட்டு வெளிநாட்டு கொள்கையின் வழிகாட்டுதலாக அமைந்தது.
இதே வேளை, அமெரிக்கா சா ர் ந் த நாடுகளிடை பிளவு ஏற் படும் நோய்க்குறி தெரிந்தது. ஐரோப்பிய ஆசிய நாடுகளில் உள் நாட்டுப் பிரச்சனைகள் எழுந்தன. அமெரிக்கா அந் நாடுகளைக் காப் பாற்ற மாஷல் திட்டம் முதலியவற்றை ஆரம்பித்து யுத்தத்தால் பாதிக்கப்பட்ட சர்வதேச முதலாளித்துவ அமைப்பை நல்ல நிலைக் குக் கொண்டுவர முயன்றது. கொரிய யுத்தத்தின் மூலமும் பெரு மளவில் இராணுவ திட்டம் மூலமும் சார்பு நாடுகளுக்கு வழங்கல்
- 5 -

Page 5
வாய்ப்புகளை அளித்து துரிதப்படுத்தியது. பொருளாதார வரலாற் ருசிரியர்கள் இதையே ஜேர்மன், ஜப்பான் "அதிசயங்கள்" என அடுத்த தசாப்தத்தை வர்ணித்தனர்.
1955 வரையில் புதிய அமெரிக்க ஏகாதிபத்தியம் நடைமுறை யில் முழுமையடைந்தது. உலகெங்கும் அமெரிக்க இராணுவத்தளங் கள் அமைக்கப்பட்டன. கம்யூனிச எதிர்ப்பு யுத்தத்தை அமெரிக்கர் அனைவரும் ஏற்றனர். ஏற்காத சிறுபான்மையினரும் மெளனம் சாதித் தனர். கொரிய யுத்தம் முடிந்தது. அமைதிக் காலத்தில் என்றுமில் லாதவாறு ஆயுத பலத்தைப் பெருக்க மக்களும் அனுமதியளித்னர். முதலாளித்துவ நாடுகளில் மூலதனக் குவிப்புக்கு வாய்ப்புக் கிட்டி யது. முதலாளித்துவத்தின் பொற்காலம் இவ்வாறு ஆரம்பித்தது.
ஆனல் இப் பொற்காலம் நீண்ட காலம் நீடிக்கவில்லை. 1959 வரையில் அமெரிக்காவிலேயே தொல்லைகள் ஆரம்பித்தன. தென் பகுதியில் சிவில் உரிமை இயக்கங்கள் வேகம் பெற்று அர சியல் அரங்கில் பாதிப்பு ஏற்படுத்தியது; ஆளும் வர்க்கம் கருத்தியல், அரசியல் ரீதியாக சிவில் உரிமைகளை ஏற்கவேண்டிய சூழல் உரு வாகியது. இதன் நற்சான்ருகக் கூறக்கூடியது, 1959ல் கியூபாவில் கஸ்ரோ தலைமையில் ஏற்பட்ட புரட்சியாகும்.
அடுத்த அடி வியத்நாம் யுத்தம். 2ஆவது உலக யுத்தத்திற்கு
முன்னைய காலனி ஆட்சியை பிரெஞ்சு நாடு இந்தோ - சீனவில் நிலைநாட்ட முயன்றதே இதன் அடித்தளமாகும். 1954ல் பிரெஞ்சு அந் நாட்டைக் கைவிட, அமெரிக்கா அங்கு நுழைந்தது. அங்கு
வீழ்ந்த பொம்மை ஆட்சிக்குப் பதிலாக நியோடின் டயமை சைகோ னில் இருத்தி அவனது எதிர்ப் புரட்சி இராணுவத்திற்கு அமெ ரிக்கா ஆயுதம் வழங்கியது. அதைத் தொடர்ந்து 10 ஆண்டுகள் யுத் தத்தை நடாத்திய பின்னர் அமெக்கா தன் விதியைத் தீர்மானிக்க வேண்டியிருந்தது. இந்தோ சீனவை சீனபோல விட்டுவிடுவதா? அல் லது யுத்தத்தை தானே தொடர்ந்து நடத்துவதா?
யுத்தத்தைத் தொடர்வதே முடிவு என்பதை நாம் அறிவோம். அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் ( 2வது உலக யுத்தத்தின் பின்னைய ) வரலாற்றில் ஒரு திருப்புமுனை ஏற்பட்டது. இந்த யுத்தத்தில் முழுமை யாக ஈடுபட முன்னரே சிவில் உரிமை இயக்கங்களும் கியூபா புரட்சி யும் வெள்ளைநிற இளைஞர்களிடை புதிய உணர்வுகளை ஏற்படுத்தத் தொடங்கிவிட்டது. அமெரிக்க இளைஞர்கள் வியத்நாம் யுத்தகளத்தி லிருந்து பிணமாகவும் உறுப்பிழந்தும் காயப்பட்டும் வருவது புதிய எழுச்சியை மேலும் பலமடையச் செய்தது.
- G --

1960களில் பல்வேறு சக்திகள் ஒன்ருேடொன்று மோதும் நிலை ஏற்பட்டது. மாட்டின் லூதர் கிங், மல்கம் எக்ஸ் ஆகிய கறுப்பினத் தலைவர்கள் கொலைசெய்யப்பட்டனர். இதைத் தொடர்ந்து பல நக ரங்களில் கிளர்ச்சிகள் ஏற்பட்டன. வியத்நாம் யுத்த எதிர்ப்புகள் வாஷிங்டன் உட்பட பல்வேறு நகரங்களில் பெருமளவில் நடைபெற் றன. ஜோன்சனல் இரண்டாவது தடவை தேர்தலில் போட்டியிட முடியாத நிலை ஏற்பட்டது. நிக்சன் ஜனதிபதியாகி 1975ல் யுத் தத்தை, பிரெஞ்சு 1954ல் கைவிட்டதுபோல, பின்வாங்கிக் கைவிட நேரிட்டது.
வியத்நாம் யுத்தம் முடியு முன்னரே அமெரிக்க மக்கள் ஏகாதி பத்திய நலனுக்காக இனிமேல் எவ்வித யுத்தத்திலும் ஈடுபடுவதில்லை என்பதைத் தீர்மானித்துவிட்டனர். வல்லரசுகளின் முடிவு உலக வர லாற்றில் இவ்வாறே ஏற்படுகிறது. அமெரிக்காவைப் பொறுத்தள வில் "வியத்நாம் நோய்க்குறி” எனக் கூறப்பட்டது. எமது வரலாற்றில் இது முக்கியமான நிகழ்வே. -
சிமெரிக்கா உட்பட உலக முதலாளித்துவ நாடுகளின் பொருளாதாரத் தேக்கம் பற்றி நாம் கவனிக்கவேண்டும்.
1960 வரையில் கென்னடியின் நிர்வாகக் கொள்கையினல் அமெ ரிக்க பொருளாதாரம் ஓரளவு உந்து சக்தி பெற்றது உண்மையே. அதைத் தொட்டு வியத்நாம் யுத்தம் மேலதிகமாக விரிவாக்கியது. 60ன் கடைசியில் ஏற்படவேண்டிய வட்டச் சுற்றின் வீழ்ச்சி 70கள் வரை நீடித்தது. இறுதியில் 1973 - 74ல் மோசமான வீழ்ச்சி ஏற்பட்
டது.
அமெரிக்கப் பொருளாதாரம் வியத்நாம் யுத்தம் Srtproof Lorrs, மட்டும் வீழ்ச்சிபெறவில்ல; பிற முதலாளித்துவநாடுகளில், 2வது உலக யுத்தத்தின் பின் ஏற்பட்ட தாக்கத்தின் பின், ஏற்பட்ட துரித வளர்ச்சி யும் காரணமாகும். அமெரிக்கா தன் கொடுப்பனவுகளில் பலமிழந்த தால் டாலரின் வீழ்ச்சியும் தங்கத்தின் வெளியேற்றமும் ஏற்பட்டது. டாலருக்கு செலாவணிச் சந்தைப்படி மாறுதலடையும் விலை அமு லுக்கு வந்தது. மற்றைய நாட்டு பணங்களுக்கு ஏற்படும் நிலை டால ருக்கும் ஏற்பட்டது.
1975ல் வியத்நாம் யுத்த முடிவில் அமெரிக்க ஏகாதிபத்தியம் மோசமாக பலமிழக்கும் நிலைக்கு வந்தது. யுத்தம் காரணமாகவும், பிற போட்டியிட்ட முதலாளித்துவ நாடுகளின் வளர்ச்சியாலுமே பொருளாதார வீழ்ச்சி ஏற்பட்டது என்றே கூறவேண்டும்.
- 7 -

Page 6
W^Armes/^^WWW^W^
தெற்காசியப் பெண்கள் பிரச்சனையும் இடதுசாரிகளும் - சில சிந்தனைகள்
- குமாரி ஜெயவர்த்தணு -
தென்னசியாவில் இடதுசாரிகள் தமது போராட்டங்களில் பெண் தொழிலாளர்கள், விவசாயிகள், குட்டி முதலாளித்துவ பெண் களையும் அணிதிரட்டுகின்றனர். சுதந்திரப் போராட்டம், தொழிற் சங்க நடவடிக்கைகள், விவசாயிகளின் ஆர்ப்பாட்டங்கள், மாணவர் இயக்கங்கள் விலைவாசி ஏற்றத்தை எதிர்க்கும் குடும்ப மனைவியர், கட் சிகளின் தேர்தல் பிரச்சாரங்கள் ஆகியவற்றிலெல்லாம் பெண்களை ஈடு படுத்துகின்றனர்.
உதாரணமாக இந்தியாவில் 20ம் நூற்ருண்டு வரலாற்றில் பொறிக் கக்கூடிய போராட்டங்களிலெல்லாம் கம்யூனிஸ்டு கட்சியால் தலைமை தாங்கப்பட்ட அனைத்திலும் பெண்கள் முக்கிய பங்காற் றினர். தேசிய விடுதலைப்போராட்டத்தில் வன்முறையானவற்றிலும் அகிம்சை ஆர்ப்பாட்டங்களிலும் செயற்பட்டனர். 1951 இல் நடை பெற்ற தெலுங்கான எழுச்சி, 1946ல் நடைபெற்ற கோயம்புத்தூர் மில் தொழிலாளர் வேலை நிறுத்தம் 1943-44 வங்கப் பஞ்ச துயர் துடைப்புப் பணிகள்,இரண்டாவது உலக யுத்த காலத்தில் பாசிச எதிர்ப்பு போரா ட்டங்கள், அண்மைய கால வர்க்க வன்முறைப் போராட்டங்களிலும் பெண்கள் முக்கிய பங்கு வகித்தனர்.
இவ்வர்க்கப் போராட்டம் வெற்றி பெறும் போது தானகவே பெண் விடுதலையும் ஏற்படும் என்றனர். வர்க்க விடுதலை மூலமே பெண் களும் விடுதலை பெற முடியும் என்ற கூற்றே இடதுசாரி இயக்கங்களின் நடைமுறைக் குறைபாடாக தெற்காசியாவில் நிகழ்ந்தது.
பெண்களியக்கங்கள் சோஷலிசத்திற்கு குரல் கொடுக்கும் இடது சாரி இயக்கங்களுடன் இணைந்த போதும் காலப் போக்கில் முரண்பாடு கள் ஏற்படும் நிலையே ஏற்பட்டது. 1947இல் இலங்கையில் கம்யூனிஸ்டு ரொக்சைட் கட்சிகள் பிற சோஷலிச மகளிர் இயக்கங்களையும் ஐக்கிய மகளிர் முன்னணி என அமைத்து பெண்களின் பொருளாதார, சமூக உரிமைகளுக்காக போரிட்டனர். இவ்வமைப்பு சில வெற்றிகளையும் பிரச்சாரங்களையும் பெற்ற போதும் ஒரிரு ஆண்டுகளில் ஆண் தலைமையி லுள்ள இம்முன்னணி கட்சிகளிடை ஏற்பட்ட வேறு முரண்பாடுகளால்
- 9 -

மகளிர் முன்னணி அமைப்பைக் கலைக்க நேரிட்டது. மேற்கு வங்கத்தி லும் கம்யூனிஸ்டு கட்சியில் 1964ல் ஏற்பட்ட பிரிவினையின் பின்னரும் பெண்கள் இயக்கம் ஒன்ருக நீடித்த போதும் 1971ல் பிரியும் நிலையே ஏற்பட்டது.
அண்மைக்காலத்தில் பெண்கள் உரிமைகள் பாதிக்கப்படும் பல சம் பவங்கள் நடைபெற்றன. பாகிஸ்தானில் 1974ல் கொண்டு வரப்பட்ட சோரம்போவதற்கு கசையடி, கல்லா லடித்து கொல்லும் குடுட் சட்டம் , இந்தியாவில் கணவன் இறந்ததும் மனைவியை உடன்கட்டை ஏறச்செய் யும் சதி,சீதனம் குறைவாகக் கொண்டு வரும் பெண்கள் எரித்துக்கொலை செய்யப்படுதல்- இவற்றுக்கு எதிராக பெண் குழுக்களுடன் இணைந்து இடதுசாரிகளால் தலைமை தாங்கி போராட்டம் நடத்த முடியவில்லை. இன்று தெற்காசியாவில் இடதுசாரிகளுக்கும் பெண்களியக்கங்களுக்கு மிடையில் நல்ல உறவு உள்ளது என்று கூறுவதற்கில்லை.
வரலாறு பற்றிய ஒரு கண்ணுேட்டம்
பெண் நிலைவாதம் இந்தியாவில் 19ஆம் நூற்ருண்டிலிருந்தே எடுக் கப்பட்டது என்பது சுவையான செய்தியே. சட்டமூலம் சமூகக் குறை பாடுகள் ஒழிப்பது பற்றி ஆலோசிக்கப்பட்டது. பிரிட்டிஷ் அதிகாரிகள் இந்திய சமூக சீர்திருத்த வாதிகள், தேசிய வாதிகள், கிறிஸ்தவ மிஷ னரிமார் யாவரும் சதி என்னும் உடன் கட்டை ஏறும் வழக்கம், பால்ய விவாகம், விதவைத் திருமணத்தடை ஆகியவற்றை எதிர்த்தனர்; அத் தோடு பெண் கல்வி, சொத்துரிமை, அரசியலில் பங்குபற்றுவதை ஆத ரித்தனர்.
இவ்வியக்கத்தின் முக்கிய நோக்கம் மேல் நாட்டவர் போன்று பெண்கள் விடுதலையடைவதுடன் நவீன நாகரிகமடைவதற்கும் அல்லது. கிறிஸ்தவ மதத்தில் இணைப்பதுமாகும். இந்தியப் பெண்களும் இவ்வியக் கங்களில் ஈடுபட்டனர். இவர்கட்கு ஐரோப்பிய மகளிரியக்கம் சார்ந்த, வர், மத சித்தாந்திகள் உட்பட தெற்காசிய சோஷலிச வாதிகளும் ஆத ரவு வழங்கினர்.
சட்டம், வாக்குரிமை, சொத்துரிமை, கல்வி ஆகிய ஜனநாயக உரிமை ஆகியனவற்றுக்கு இந்திய தேசியவாதிகளும் ஆதரவு தந்தனர். தேசிய இயக்கம் வளர்ச்சியடைய பரந்து பட்ட பெண்களையும் வீடுகள்: லிருந்து தெருக்களுக்கு ஈர்ப்பதிலுள்ள வாய்ப்புகளை தேசிய வாதி கள் உணர்ந்தனர். பெண்ணுரிமை பற்றிய கருத்தியல்களை காந்தி,நேரு போன்ற தலைவர்களும் முன்னெடுத்துக் கொண்டனர்.
- 9 -

Page 7
அதே வேளை தேசிய சீர்திருத்த வாதிகள், தேசிய பண்பாடுகளைக் காப்பாற்றுவதோடு மேல் நாட்டு பண்பாடு நுழைவதையும் எதிர்க்க வும் முற்பட்டனர்.
மேல் நாட்டு நாகரிகத்தில் இந்தியப் பெண்கள் வீழ்ந்து விடாது பேண வேண்டும் எனவும் கருதினர். நவீன கல்வியால் ஏற்படும் பண் பாட்டு மாற்றம் பெண் வீட்டுக்குரியவள் என்பதை உடைத்து விடப் படாது எனக் கூறினர்.
கருத்தியல் ரீதியாக பெண்களின் கூலியற்ற உழைப்பையும் பிற வாய்ப்புகளைப் பெறுவதோடு அன்னரின் வாழ்வில் ஆதிக்கம் செலுத்து வதற்கும் பெண் வீட்டுக்குரியவள் என்ற கூற்று ஆணுதிக்கத்திற்கு நல னைதே. வீடே பெண்களின் ஒடுக்குமுறைக்கும் சுரண்டலுக்கும் ஆரம்ப நிலையாக உள்ளது. இந்நிலையை மாற்ற ஒரு சில ஆண்களே உடன்பட்டு வரலாம்.
பிரிட்டிஷ் ஆட்சியை எதிர்த்த தீவிரவாதிகளின் தலைவர் திலகர், 1908ல் தேசத் துரோகக் குற்றச்சாட்டின் பேரில் சிறைப்பட்ட போது பம்பாய் மில் தொழிலாளப் பெண்களும் முன்னணியில் நின்று வேலை நிறுத்தம் செய்தனர். திலகர் அரசியலில் தீவிரவாதியான போதும் சமூக மாற்றத்தை விரும்பவில்லை. காலனி ஆதிக்க வாதிகள் பெண்க ளைப் பாதிக்கும் சமூகப் பிரச்சினைகளில் மாற்றம் கொண்டு வருவது தேவையற்றது என்ருர்.
1891ல் பெண்களின் திருமண வயதை 10ல் இருந்து 12ஆக உயர்த் துவதை எதிர்த்த பிற்போக்காளர்களுடன் அவர் சேர்ந்திருந்தார்.
இலங்கையில் பெண்களுக்கு கல்வி, வேலை வாய்ப்பில் அதிக உரிமை கள் ஐரோப்பியர் போல வழங்கப்பட்ட போதும் பெளத்த, இந்து எழுச்சியாளர் மேல்நாட்டுப்போக்குகளை எதிர்த்தனர். பெண்கள் கற்புக் காக்க வேண்டியவர், வீட்டுக்குரியவர்கள் என்றனர். உதாரணமாக பெளத்த மத தீவிரவாதத் தலைவரான அனக்காரிய தர்மபாலா (18691933) சிங்களப் பெண்கள் மேல்நாட்டுப் பழக்க வழக்கங்களையும் பாஷன்களையும் பின்பற்றுவதைக் கண்டித்தார்.
தெற்காசியாவில் இடதுசாரிகள் அனைத்து மக்களது தேசிய விடுதலை யையும் உள்நாட்டிலும் வெளிநாடுகளிலும் தொழிலாள விவசாயிக ளின் ஜனநாயக உரிமைகளை வென்றெடுக்கும் போராட்டங்களில் அணி திரண்ட போதும் பெண் விடுதலை பற்றிக் குரல் கொடுக்கத் தயக்கம் காட்டினர். அந்நிய ஆதிக்க எதிர்ப்பே முதன்மையானது எனக் கார ணம் கூறினர்.
- 10 -

காலனி ஆதிக்கத்தின் போதும் சில பகுத்தறிவுவாதிகள் சாதி ஒடு க்கு முறையை எதிர்க்கும் போது பெண்கள் மேலுள்ள அடக்கு முறை யையும் கண்டித்தனர். மகாராஷ்டிரத்தில் ஒடுக்கப்பட்ட சாதியினரான ஜோதிராவ் பூலே (1827-90) பிரா மணியத்தை எதிர்த்த போது பால்ய விவாகம், பலதார மணங்களையும் எதிர்த்தார்.
இவர் "எல்லா ஆண்களும் சமம்" என்ற கூற்றை "ஒவ்வொரு பெண் ணும் ஆணும் சமம்" என மாற்றிக் கூறினர்.
வட இந்தியர், பிர்ாமணியர் ஆதிக்கத்தை எதிர்த்து திராவிடர் கழக இயக்கத்தை பெரியார் இராமசாமி (1879-1974) இந்துக்களின் மூட நம்பிக்கைகள், பார்ப்பணச் சுரண்டல், கடவுள் நம்பிக்கை, மதச் சடங்குகள் ஆகியவற்றை எதிர்த்தது மட்டுமல்ல பெண்ணடிமைத் தன த்தையும் தமிழ் சமூகப் பழக்க வழக்கங்களையும் கண்டித்துப் போராடி ஞர். பெண்களை இழிவுபடுத்தும் பண்டைய நூல்களை எதிர்த்ததோடு கற்பு எனக்கூறிப்பெண்களுக்கு மட்டும் கட்டுப்பாடுகளிடுவதையும் கண் டித்தார். மதச் சடங்கற்ற சுய மரியாதைத் திருமணங்களை நடத்தி விவாகரத்து, மறுமணத்தை ஆதரித்தார். பாலுறவில் ஆண்கள் போல பெண்களுக்கும் உரிமை வேண்டும் எனவும் கூறி கலப்புத் திருமணத்தை வரவேற்ருர் . பெண்கள் கர்ப்பத்தை நிறுத்த வேண்டும்; பெண்களே தமது இயக்கத்தை நடாத்த வேண்டும்; ஆண்களுக்கு தமது இயக்கத் தில் உரிமை வழங்குவது பிராமணரை எதிர்க்கும் திராவிட இயக்கத் திற்கு பிராமணரைத் தலைமை தாங்க விடுவது போன்றது என்ருர்,
ஆயினும் பெரியார் ஆரம்பித்த திராவிட இயக்கம் தற்போது தமி ழர் அரசியலில் முதன்மை வகித்த போதும் பெண்கள் பற்றிய பெரியா ரது புரட்சிகர கருத்து பற்றி இன்று அதிகம் கேட்க முடியவில்லை. இது ஒரு நழுவல் போக்கே.
(M. R. வெளியீட்டு கட்டுரைத்தொகுதியிலிருந்து)
பாப்பாண்டவரும் கொபச்சேவும் ஒரு விஷயத்தில் ஒன்று பிடுகின்றனர்; பெண்களின் முதற்பணி தாய்மை, குடும்பத் திலும் சேர்ந்திணைவது தொடரவேண்டும் என்பதாகும்! இப் பாலியல் சார்ந்த சமூகக் கொள்கை கொபச்சேவின் பிரஸ் ரொய்க்காவை அறிமுகப்படுத்துவதில் கூறப்பட்டுள்ளது. உச்சத் தில் ஆணாதிக்க அமைப்பு: அடிப்பக்கத்தில் பெரும்பான்மை யான பெண்கள்மேல் திணிக்கப்படுகிறது.
h− -றுத் பேர்மன்

Page 8
கேள்வி ? பதில்
* வேல்
கே: இலங்கையில் பெரு நிலப் பிரபுக்கள் தோன்ருததற்குக் காரணம்
என்ன?
தீ. சுந்தரலிங்கம் மட்டக்களப்பு.
ப; அது ஒரு வேதனைமிக்க, சுவையான கதை. இன்று இலங்கையின் மொதத நிலப் பரப்பான 160 லட்சம் ஏக்கரில் (குடித் தொகை 160 லட்சம், பரப்பில் தலைக்கு 1 ஏக். நிலம்?) 82% முடிக்குரிய (அரசுக்குரிய) நிலம். தனியார் நிலம் 18% மட்டுமே.
போர்த்துக்கீசர், டச்சுக்காரர் 300 ஆண்டுகள் கரையோரப பகுதிகளை ஆண்டவேளை கிராமிய உற்பத்தி முறையே நீடித்தது. 1796 ல் பிரிட்டிசார் இப்பகுதிசளைக் சைப்பற்றி, நாயக்கர் பரம் பரை ஆட்சியில் 1739 ல் இருந்த கண்டி ராச்சியத்தை 1815ல் ஆக்கிரமித்தனர், பின் சிங்கள விவசாயிகள் அரசுக்கெதிராக புரட்சி செய்தார்கள் என்ற போர்வையில் சண்டிய விவசாயி களின் நிலங்களை அரசு பறித்தெடுத்தது. ஆங்கிலேயக் கம்பனிகள் கோப்பி பயிரிட ஏக்கர் 5 சிலிங்படிக்கு (4 ஏக்கர் = 8 1) அரசு விற்றது.
1839 ல் கரையோர காவிப் பகுதியில் தனியாரின் ஆட்சியி லிருந்த காணி ஒன்றை முடிக்குரிய காணி என அரசு உரிமை கோரி வ்ழக்கு நடத்தியது. வெள்ளைக்கார நீதிபதி அக்காணி முடிக்குரிய காணி என்பதை அரசு நிரூபிக்க வேண்டும், தனியா ரல்ல என தீர்ப்பளித்தார். அது எளிதல்ல. இலங்கையில் வெள் ளையர் நலன் பாதிக்கப்படுவதாக அன்றிருந்த கவர்ணர் கவலைப் பட்டார். அவர் லண்டன் சென்று, காலனி ஆட்சியே இத்தீர்ப் பால் நடத்தமுடியாது போய்விடும் என காலணி செயலாள ரிடம் முறைப்பட்டு 1840ல் புதிய சட்டம் ஒன்றைப் பிரகடனப் படுத்திஞர். அதன்படி இலங்கையிலுள்ள நிலம் அனைத்துமே முடிக்குரியது; தனியாருக்கு உரிமையாயின் அவர்களே உரி மையை நிலைநாட்ட வேண்டும்.
இச் சட்டப்படி இலங்கையின் 90% நிலமும் அரசின் உரிமை யானது. பெரு நிலப் பிரபுக்கள் இங்கு ஏற்பட முடியாதமைக்கு
--۔۔۔۔۔۔ 12

கே.
இதுவும் ஒரு காரணமாகும். (இந்தியாவில் மன்னர்கள், ஜமீன் தார், சுல்தான், நிலப் பிரபுக்கள் யாவரையும் நில உரிமையான ராக வைத்துக் கொண்டே வெள்ளையர் ஆட்சி செய்தனர்)
மேலும், 1897 ல் தரிசு நிலச் சட்டத்தைக் கொண்டுவந்து பயிடப்படாத தனியார் நிலங்களையும் அரசு அபகரித்துக் கொண்டது.
1948ல் சுதந்திரம் கிட்டிய பின்னர் குடியேற்றத் திட்டங் கள் மூலம் நிலப்பிரச்சினையைத் தீர்க்க பேரினவாத அரசு முயன்று பெரிய பூதத்தையே கிளப்பிவிட்டது. நாட்டின் மேம் பாடு பல பத்து வருடங்கள் பின்னுேக்கும் நிலை ஏற்பட்டு விட்டது. ஆயினும் இடதுசாரிகள் சார்ந்த ஐக்கிய முன்னணி அரசு 1972, 1975ல் கொண்டுவந்த நிலச் சீர்த்திருத்த சட்டத் தின் மூலம் தேயிலை, றப்பர் பெருந்தோட்ட நிலங்களில் அந்நி யர், இலங்கையர் கொண்டிருந்த ஆதிக்கத்தை உடைத்து தேசிய மயப்படுத்தியது. இதுவும் இறுதியில் அதிகாரத்துவ முதலாளித்து வத்திற்கே நாட்டை இட்டுச் சென்றுள்ளது.
அரசியலில் விரைவில் புகழ் பெறுவதற்கு வழி கூறுவீரா?
சிற்சபேசன் - நூரளை.
முதலாளித்துவ அரசியலில் வெகுசனத் தொடர்பு சாதனங்களை பரபரப்பூட்டும் வகையில் பயன்படுத்தத் திறமையுள்ளவர்கள் விரைவில் புகழ் பெற்று முன்னேறலாம். இலங்கையில் உள்நாட்டு பாதுகாப்பு:அமைச்சின் பெ7று பை ஏற்பவர் விரைவில் செய்தியில் முன்னணியை அடைகின்றனர். முன்னர் ஒரு கட்டத்தில் அத்துலத் முதலி புகழ் பெற்ருர், அவரை இன்று ரஞ்சன் முந்திவிட்டார். ஒரிரு நாட்கள் முதன்மை பெறத்தக்க செய்தி வெடி குண்டுகளைத் தயக்கமின்றிக் கூறுவதில் அவர் விண்ணன். ஐ. நா. சபை தொடக் கம் உலக நாடுகள் அனைத்தும் மதிப்பளிக்கும் சர்வதேச மன்னிப்புக் கழகத்தை "பயங்கரவாத இயக்கம்" என்ருர். தற்போது அக்கழ கத்தின் குற்றச்சாட்டுகளுக்கு மதிப்பளித்து பதிலளிக்க அரசின் சார்பில் அட்டனி ஜெனரலையே அனுப்பியுள்ளனர். "இந்திய அதி காரிகளுடன் பேசமாட்டேன் அமைச்சருடனேயே பேசுவேன்" என்ருர். பெரிய செய்தி, பின் நடைமுறைப்படுத்தவில்லை; பெரு மாளைக் கைது செய்வோம் 500 ரூபா கள்ளநோட்டு, ஜே. வி. பி. ஒழிந்துவிட்டது, என்னைக் கொல்ல முயன்ற சதியை முறியடித்
- 13 -

Page 9
தோம், இந்தியஉளவுரோ" கொழும்பில் குழப்பம் விளைவிக்க முயன்றது என்பதெல்லாம் அன்னரது செய்திக் குண்டுகளாக பத் திரிகை சளில் தலைப்புச் செய்திகளாக வெளிவந்தன. அரசியலில் இவ்வாறன செய்திக் குண்டுகள் புகழீட்டுகின்றன. மச்களெல்லாம் மறதிமிக்கவர்கள் என்பதே அரசியலாரின் தாரக மந்திரம்"
முதலாளித்துவ நாடுகளுக்கு எங்கள் நாட்டவர் குடி பெயர்
வதால் எங்கள் நாட்டுக்கா, குடிபெயர்ந்துசெல்லும் நாட்டுக்கா நஸ்டம் அதிகம் ? த. முகுந்தன், யாழ்.
எமது நாட்டுக்கு நஷ்டம். அதற்கு அரசே பொறுப்பேற்க வேண்டும். அவர்களது உழைப்பை நாட்டின் மேம்பாட்டிற்கு பயன் படுத்த முடியாத பிற்போக்கான நிலையில் அரசு உள்ளது. இங்கு பிறந்து, வளர்ந்து, கல்வியூட்டிய செலவில் பெரும் பங்கு அரசுக்கும் உரியது. அப்பயனை நாடு பெற முடியவில்லை. அந் நிய நாட்டிற்கு கிடைக்கிறது. உதாரணமாக கனடாவிற்கு குடிபெயர்வதால் அந்நாடே பயன் பெறுகிறது. அண்மையில் கலாநிதி அக்பாரி என்ற பொருளாதார நிருபர் கண்டாவில் குடியேறியவராக 95,000 குடும்பங்கள் பற்றி ஆய்வு செய்து தன் அறிக்கையை வெளியிட்டார். அதன்படி கனடிய அரசு குடி யேறுபவர்களுக்கு வரிப்பணத்தில் அதிக செலவு செய்கிறது என்ற கூற்று தவருனது என்று நிரூபித்தார். அங்கு குடியேறியவர் பெற்றுக்கொள்ளும் அரசு மானியத்திலும் பார்க்க அதிகமாக வரி செலுத்துகிருர்கள் எனவும் கனடா பரந்த நிலப்பரப்பும் மிகக் குறைந்த குடித்தொகையுமுள்ள நாடு; குடிபெயர்ந்து வரு பவர் நாட்டிற்கு அதிக வாய்ப்பான மூலதனம் எனவும் கூறி யுள்ளார்.
. யு. என். பி. அரசின் அண்மைய சாதனை முயற்சிகளில் குறிப்
பிடத்தக்கவை எது ? (1Ք. Ամ)60մ, աուք,
கிராமிய மட்டத்தில் பொலிஸ், இராணுவம், பாடசாலை முதல் வர்கள், மதகுருமாரை இணைத்துச் செயற்படுவது: இலங்கையி லுள்ள வங்கிகளில் இரகசியக் கணக்குகள் வைக்க வாய்ப்பளிப் பது; தனியார் பஸ் கட்டணத்தை ஒருவார அவகாசத்தில் -/50 சதத்தால் உயர்த்தியது; மற்றும் பாண், பால், விலைகளை உயர்த்து வது ஆகியவற்றைக் கூறலாம். வேடிக்கை என்னவெனில் பிற அரசியல் கட்சிகளோ, தொழிற் சங்கங்களோ, பத்திரிகைகளோ மக்களோ எவ்வித எதிர்ப்பும் கூருது அரசின் உத்தரவுகளை ஏற் றுக் கொண்டு கீழ்ப்படிவதே.

பெண் விடுதலை
சூரியன் கிழக்கில் உதிப்பதில்லை (நாவல் முன்னுரையிலிருந்து) - செ. கணேசலிங்கன் -
குரியன் கிழக்கில் உதிக்கிறது; மேற்கில் மறைகிறது. இவை சிறு வயதிலிருந்தே நமக்குக் கற்பிக்கப்படுகிறது. பரம்பரையாக வந்த கருத்து. நாமும் அனுபவத்தில் காண்கிறோம். நினைவிலி மனதில் படிந்துள்ளது; உடனே ஏற்றுக் கொள்கிறோம்.
'சூரியன் கிழக்கில் உதிப்பதில்லை" என்றதும் உடனே ஏற்றுக் கொள்வது சிரமமாகிறது. சிறிது நேர சிந்தனையின் பின்னரேயே ஒப்புக் கொள்கிறோம். இதுவே உண்மை; விஞ்ஞான அறிவியல் உண்மை, சூரியன் எரிந்துகொண்டிருக்க, பூமியே தன்னைத் தான் சுற்றி வருகிறது. 24 மணி நேரத்திற்கு ஒரு தடவை சுற்றுகிறது. தன்னைச் சுற்றும்போது சூரியனையும் சுற்றுகிறது. அதற்கு 365 நாட் களாகின்றன. இவ்வாறு பள்ளியில் கற்றவர்க்கும் இத்தலைப்பு ஒரு கணம் அதிர்ச்சியே தருகிறது.
இவ் விஞ்ஞான உண்மை மூலம் பரம்பரைக் கருத்தும் நாள் தோறும் அனுபவத்தின் மூலம் காண்பதும் அடிபட்டுப் போகின்றன.
இவ்வாறு பல்வேறு தவறான கருத்துகள் எமது சிந்தனையைக் கவர்ந்துள்ளன. அவை கருத்தியலாக நமது சிந்தனை ஆற்றலையே தடுக்கின்றன. இதனால் மனிதன் என்ற உயர்வு நிலைக்குரிய உணர்வு நிலை அல்லது விழிப்பு நிலையும் பாதிக்கப்படுகிறது.
மனித இனத்தின் பாதி மக்கள் பெண்கள். பரம்பரை பரம் பரையாக உலகில் ஆணாதிக்கம் நிலை பெற்று விட்டது. அத்தோடு பெண்ணினம் பற்றிய பல்வேறு தவறான கருத்துகளும் ஆண்களின் சிந்த&ாயில் மட்டுமல்ல பெண்களின் ஆழ் மனதிலும் பதிந்துவிட்டன. அவை வெறும் பரம்பரை கருத்துகள். ஆணாதிக்கத்தால் பலவகை யில் பெண்ணினத்தை அடிமைப் படுத்துவதற்காக நிலை நாட்டப் பட்ட கருத்தியல்கள். அவை விஞ்ஞான பூர்வமற்றவை.
இக் கருத்தியல்களால் பெண்கள் படும் துன்பம் அளப்பரியது. அவற்றில் சிலவற்றை எடுத்துக் காட்டுவதும் இந் நாவலின் நோக்க Lorejub.
ہے . 14 مسس۔

Page 10
காதல் என்ற அழகான, இனிய சொல்லின் பின்னால் மறைந் திருக்கும் பரம்பரையாக வந்த பாலுறவுக் கட்டுப்பாடுகள் பெண் னினத்தை அடிமைப் படுத்துகின்றன, சிறைப்படுத்துகின்றன என் பது மட்டுமல்ல; உற்பத்தியில் பெண்ணினம் ஆற்றும் பெரும் பங்கு, அவர்களால் மட்டுமே செயற்படும் மனித7இனத்தின் மறு உற்பத்தி, ஆண்கள் மட்டுமே பெண்களை உற்றுப் பார்த்தல், பாலுறவிலும் பெண்ணினத்தின் பலம், ஆணினத்தின் பலவீனங்கள் ஆகியவற்றைப் பெண்களும் புரிந்துகொள்ள வேண்டும்.
பத்மாசுரனுடன் சிவபெருமானால் போரிட முடியாதபோது விஷ்ணு மோகினி வடிவம் எடுத்து வென்றதாகக் கூறப்படும் புரா ணக் கதை தொடக்கம் இன்று பண்ட விற்பனைக்குப் பயன் படுத் தப்படும் கவர்ச்சி விளம பரம, பண்ட விற்பனையிலும் பெண்களை ஈடுபடுத்தல் ஈறாகவுள்ளவற்றின் பின்புறத்தில் மறைந்திருக்கும் உண்மைகளைப் பற்றி எவரும் சிந்தித்துப் பார்ப்பதில்லை. பெண் ணினத்தின் உயர்வையும், சிறப்பையும் காண்பதில்லை. இக்கதைகள், கவர்ச்சி விளம்பரங்களின் பின்னால் பெண்ணினத்தின் ஆபாசத்தை ஏன் காணவேண்டும்; அவர்களின் உன்னத, உயர்ந்த நிலையைக் காணலாமே.
தமது நல் வாழ்விற்காக தமது உன்னத நிலையை பெண்ணினம் எவ்வாறு கையாளலாம் என்பதையும் இந்நாவலில் சுட்டிக்காட்ட முயன்றுள்ளேன்.
கற்பு என்ற வார்த்தை தமிழில் தரும் அர்த்தம் போல வேறு எந்த மொழியிலும் காணமுடியாது. ஆங்கிலத்தில் (Chastity) என் பதுகூட அத்தனை ஆழமானதல்ல. அங்கு கண்ணகி, நளாயினி, அகலிகை போன்ற கதைகளோ , "தெய்வம் தொழாள் கணவற் தொழுதெழுவாள்' போன்ற குறள்களோ கிடையாது.
பெரியார், கற்புப்பற்றிய பொய்மைப் பிரசாரத்தை ஆழமாகச் & Irig.60tmrt. கண்ணகிமட்டுந்தான் கற்பானவள் எனின் எங்கள் தாயார், மனைவி, பிள்ளைகள், தங்கையர் கற்பு இல்லாதவர்களா? என்று கேட்டார்.
ஆண்கள் அனைவரும் கற்பு இல்லாதவராயின் அடிமைப் படுத் தப்பட்ட பெண்கள் மட்டும் எவ்வாறு கற்பைப் பேண முடியும் என் பதைக்கூட எவரும் எண்ணிப் பார்ப்பதில்லை. கன்னி கழிவது என் பது எந்தப் பெண்ணுக்கும் எவ்வேளையும் விபத்தாகவே, ஒடியாடி வேலை செய்யும் போதே நடைபெறலாம் என்பது டாக்டர்கள் கூற்று: இந்த நடைமுறை உண்மையைக்கூட பெரும்பாலான ஆண்கள் அறிவ
- I () -

தில்லை. விதவைகள், விவாக ரத்து செய்த பெண்களின் மறுமணம் கூட கற்பு என்ற பொய்மைக் கருத்தியல்களாலேயே பாதிக்கப்படு கின்றன.
உற்பத்தியே சமூக உறவுகளில் முதன்மையானது. சமூக உற்பத்தி பாதிக்கப்படும்போது சமூக உறவுகளிலும் கட்டுப்பாடு, மாற்றம் ஏற்படுகிறது. கட்டுப்பாடற்ற பாலுறவால் புராதன சமூகத்தின் உற்பத்தி பாதிக்கப்பட்ட கால கட்டத்தில் கணக்குழுத் தலைவர் களே பாலு ற லில் கட்டுப்பாடுகளைக் கொண்டுவந்தனர். அடிமைச் சமூகத்தில் அடிமைகளைப் பெருக்கும் நோக்குடன் பாலுறவு பயன்படுத்தப்பட்டது. உரோமாபுரியில் மிருகப் பண்ணை களைப் பெருக்கப் பயன்படுத்துவது போல பாலுறவு பயன்படுத்தப்பட்டது. நிலப்பிரபுத்துவத்தில் தனிச் சொத்துரிமையை நிலைநாட்டும் போக் கில் குடும்பத்துள் பெண்ணின் பாலுறவு கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.
முதலாளித்துவம் யந்திர உற்பத்தி மூலம் பண்ட உற்பத்தியைத் துரிதமாகவும் பரவலாகவும் பெருக்கியது. கட்டுப்பாடற்ற பாலுற வால் உற்பத்தி பாதிக்கும் நிலையில்லை. அத்தோடு தொழிலாளி வர்க்கம் தன் உழைப்புச் சக்தியின் திறனை உணர்ந்து அதனை விற்கும் நேரங்களையும் கட்டுப்படுத்தியது. இவற்றுல் முதலாளித்துவ நாடுகளில் பாலுறவுக் கட்டுப்பாடுகளிலும் தளர்ச்சி ஏற்பட்டுள்ள தைக் காண்கிறோம். விவாகரத்து, மறுமணம், திருமணத்தின் முன்னைய பாலுறவு ஆகியவை சமூக மதிப்பும் பெற்றுவிட்டுள்ளன.
பாலுறவு பற்றிப் பல எழுத்தாளர்களும் அறிஞர்களும் தமது கருத்துகளை ஆங்காங்கே கூறியுள்ளனர். பாலுறவு தணியாத தாகம், கெடு என்று பர்னாட்ஷா கூறினார். அது பரபரப்பான உணர்ச்சி மட்டுமே. அது மட்டுமே இன்பவாழ்வல்ல என்றார் மராத் திய எழுத்தாளர் காண்டேகர். மனிதர்கள் எதிர்பாலாரைத் துன் புறுத்துவதன் மூலம் இன்பமும் அடைய முயல்கிறார்கள் என்றார் பிரெஞ்சு அறிஞர் ஜீன் போல் சாத்ரே.
கிராமங்களில் அடங்கி ஒடுங்கிக்கிடந்த இளம்பெண்களெல்லாம் கட்டாய இலவசக் கல்வியாலும் குடும்ப, நுகர் பண்டத் தேவை களாலும் நகர கூலிச்சந்தைக்கு இழுத்துவரப்பட்டுள்ளனர். இவற் றாலும் பாலியல் உட்பட முன்னிருந்த பழைய சமூக மதிப்புகளிலும் பாதிப்பு ஏற்பட்டு வருகிறது.
பெண் விடுதலை என்பது நீண்டகாலப் பயணம் ஆகலாம். ஆயினும் இன்று நிலவும் தவறான கருத்துகளுக்குப் பின்னால் தர்க்க ரீதியான, பகுத்தறிவான விஞ்ஞானக் கருத்துக்களை முதலில் அனைவரும் அறிந்துகொள்ள வேண்டும். தவறான கருத்துகளை நேர்மையோடு ஒப்புக் கொள்ளவேண்டும், எதிர்க்கவேண்டும்.
- 17 -

Page 11
அஸ்தமிக்காத சூரியன்
- சாருமதி --
அஸ்தமனங்கள்
அஸ்தமனங்களல்ல
அவை
வெற்றியின் தொடக்கங்கள் அரசியல் ஏமாற்று அடக்கி ஒடுக்கப்படும் உண்மைகள். அரண்மனையாளர் கெச்களிப்பு.
உலகில்
இவையொன்றும் அதிசய மானவையல்ல
ஆயின்
56 அந்தப்புரத்து அடிமைகளும் ஆகார் அவர்சளின்
முஷ்டிகள் உயரும் பொழுது மலை முகடுகளும் சிதறும் திரும்பத் திரும்பக் கேட்கின் சொல்வதற்கு ஒன்றுதான் உண்டு வர்க்கப் போரின் வழியை மறிக்கலாம்
ஆயின்
அதன் வரவை சிதைக்க முடியாது ஏனெனில் அது அஸ்தமிக்காத சூரியன்.
சோவியத்தில் அந்நிய கூட்டுக் கம்பெனிசுள்
இன்று சோவியத் யூனியனில் 330 கோடி ரூபிள் மூல தனத்துடன் 1274 அந்நிய கூட்டுக் கம்பெனிகள் உற்பத்தியில் ஈடுபட்டுள்ளன. மேற்கு ஜெர்மனி 191, பின்லாந்து 146, அமெரிக்கா 143, பிரிட்டன் 84, ஒஸ்ரியா 90, இத்தாலி 83, மற்றவை பிற முதலாளித்துவ நாடுகள் சார்ந்தவை.
நுகர்பண்ட உற்பத்தியில் 122, ஆராய்ச்சி மேம்பாட்டுத் திட்டங்களில் 341, எஞ்சினியரிங் 62, விவசாயம் 98, கம்பியூட் டர் 166, பிற ஒட்டல், சினிமா, வீடியோ, போக்குவரத்து முதலியன.
w- 8 -

சோஷலிசமும் சுற்றடலும் - 3
-போல் சுவீசி
முதலாளித்துவத்துக்கு ஏற்பட்டுள்ள நெருக்கடி பயங்கரமானது. நாசரிகம் தோன்றிய காலம் மனித வரலாற்றில் குறுகிய காலம் என்று கொள்ளும்போதும் அது நீடித்து நிலைக்கப் போவதில்லை. சோஷலிசம் இம்முதல் தரத்தில் தோல்வியடையுமாயின் இரண்டா வது சந்தர்ப்பம் கிட்டாது போகலாம். சோஷலிச நாடுகள் என்று கூறப்படுபவை முதலாளித்துவம் அல்லாத வேறு அமைப்பை ஏற் படித்தினும் மனிதஇனம் முதலாளித்துவப் பிடியிலிருந்து நம்பிக் கொள்வதற்கு ஒரு சந்தர்ப்பம் கிட்டலாம்.
கட்டுப்பாடற்ற மூலதனக் குவியலே முதலாளித்துவத்தின் இயல் பான குறைபாடாகும். அவ்வமைப்பு இடையிடை பொருளாதார வீழ்ச்சியடைவதே அதன் உள்ளார்ந்த அமைப்பின் குணாம்சம். குறு கிய கால லாபமே அதன் நோக்கமாகும்; தக்க கட்டுப்பாடான சுற்றாடலை நடைமுறைப்படுத்தும் நீண்டகாலத் திட்டம் எதுவும் அதனிடம் கிடையாது. சுருங்கக்கூறின் முதலாளித்துவத்திலிருந்து சோஷலிசம் முற்றாக வேறுபடுவது இங்கே தான்.
ஐ. நா. சபையும் அதன் பிரிவுகளும் உலக சமூக பொருளாதார அமைப்புகளை இரு பெரும் பிரிவுகளில் அடக்கியே திட்டமிடல் பற்றி நோக்குகின்றன. ஒன்று சந்தைப் பொருளாதாரம், மற்றது மையத் திட்டமிடல் பொருளாதாரம். இன்று உலகில் நடைபெறும் விவாதங் கள் முதலாளித்துவத்தினதும் சோஷலிசத்தின் சிறப்புப்பற்றியல்ல. சோஷலிசத்தில் திட்டமிடப்படுகிறதா? என்பதே, அதன் வெற்றியை முதலாளித்துவத்தின் சந்தைப் போக்குடன் ஒப்பிட்டுப்பார்க்கின் μυουτ π.
வெற்றி என்பதில் சுற்றாடலைப் பாதுகாத்துப் பேணுவதே முதலிடம் பெற்வேண்டும். முன்கூறிய விவாதங்களில் சுற்றாடல் பற்றிய பேச்சேகிடையாது. முதலாளித்துவப் பார்வையில் இதைப் புரிந்து கொள்ள முடிகிறது. சுற்றாடல் நிலை மிகமோசமாவதால் கெட்டித்தனமாக அவ்விடயப் பேச்சை முதலாளித்துவம் சிறிதும் எடுப்பதேயில்லை. இம்மெளனம் பேசுவது யாதெனில் சோஷலிசப் பகுதியினரும் தமது நலன் நோக்கி எவ்வாறும் சுற்றாடலை மாசு படுத்தலாம் என்பதேயாகும்.
சோஷலிசம் அபிவிருத்தியடையாத நாடுகளிலேயே ஏற்பட்டது; பொருளாதாரத்தில் முன்னேறிய முதலாளித்துவ நாடுகளுடன் அந்
- 19 -

Page 12
நாடுகளை ஒப்பிடமுடியாது. சோஷலிசதிட்டம் அதன் நிலைப்பாட் டிற்கு இரு முடிவுகளைக் கொண்டதாக இருக்க வேண்டும். ஒன்று முதலாளித்துவத்துவ நிலையை எட்டிப்பிடித்தல்; மற்றது தற்காப்பு. இப்போக்கில் ஆரம்பகாலகட்ட அபிவிருத்தியின் போது முதலாளித் துவத்தின் மட்டமான பல தீமைபயக்கும் போக்குகளையும் கைக் கொண்டது; சுற்றாடலைப்பற்றிக் கவனியாது விட்டதும் ஒன்றா (95LD.
இவ் அனுபவம் சுற்றாடலைத் திட்டமிடும் தேவையையும் ஏற் படுத்தியுள்ளது. எவ்வாறாயினும் முதலாளித்துவத்தின் மோசமான போக்கில் சோஷலிச நாடுகள் இன்று இல்லை. சோஷலிச நாடு தன் அத்தியாவசிய தேவைகளை ஒழுங்குபடுத்தும்போது சூழலைப் பாது காப்பதும் பேணுவதும் தவிர்க்க முடியாதது. இதுவே வாழ்வா, சாவா என்ற நிலைக்கு வேகமாக இன்று இட்டு வந்துள்ளது. மாறிவந் துள்ள புதிய நிலைக்கேற்ப திட்டமிட வேண்டிய நிலையும் வந்துள் ளது.
இன்று நடைமுறையிலுள்ள சோஷலிசம் அதன் பிரச்சனையி லிருந்து விடுபட வேண்டுவது முக்கியமானது என்பதற்கு இதுவே காரணமாகும். அதற்கு வசதியில்லை. ஆனால் முதலாளித்துவத்தி டம் இல்லாத அடித்தளம் சோஷலிச அமைப்பில் உள்ளது. நடை முறையில் சோஷலிசம் விளங்கும் அனைத்து நாடுகளும் இன்றைய நிலையில் முதலாளித்துவ பாதையைக் கடைப்பிடிப்பின் நாகரிக மடைந்த மனித இனம் தன் மீட்சிக்கு தேவையான காலத்தைக் கடந்தும் விடலாம். (M.R.)
குமரன (இதழ் 72 இல் இருந்து)
தனிப்பிரதி ரூ 41
6 இதழ்கள் ரூ 24/-
12 இதழ்கள் eit 48/-
விற்பனையாளர்க்கு கழிவு உண்டு.
ஆங்காங்கே வரவழைத்து விநியோகிக்க
விரும்புவோர் தொடர்பு கொள்க:
ஆசிரியர், குமரன், 201, டாம் வீதி, கொழும்பு - 12. தொலைபேசி: 421388
- 2 -

ஏகபோக முதலாளித்துவமும் பெண்களின் குறைந்த கூலி உழைப்பும்
- மான்விழி -
சிமெரிக்காவில் இன்று பெண்களும் குழந்தைகளும் சமூக உற்பத்தியிலும் உழைப்பிலும் ஈடுபடுத்தப்படுகின்றனர். காரணம் அவர்களது உழைப்பு மலிவானது. வீடுகளில் சமையல், துணி துவைத் தல், தைத்தல், வீட்டைப் பார்த்தல், குழந்தைகளை வளர்த்தல் ஆகிய சேவைகளுக்கு கூலி தரப்படுவதில்லை. வெளியே உழைப்பின் "ஏதாவது கூலி கிடைக்கிறதே" என்பதற்காக அவர்கள் உழைக்கத் தயாராகின்றனர்.
முதலாளித்துவம் என்றும் மலிந்த கூலியையே கொடுத்து லாபத்தை அதிகரிக்கவுமே முயலும்.
மேலும், இன்று உற்பத்தி, விநியோகம், பரிமாற்றத்தில் முகா மைத்துவ ( Management) நுட்பங்கள் மிக வளர்ச்சியடைந்துள் ளன. சிறுபான்மையினர் இத் துறையில் நிபுணத்துவம் பெற்று நிர் வகிக்க, கீழ்மட்டத்திலுள்ளவரது வேலைகள் யாவும் எளிதாக்கப்பட்டு விட்டன. இதற்காக அதிக கல்வியோ, விவேகமோ, பயிற்சியோ அனுபவமோ வேண்டியதில்லை. பெண்கள், குழந்தைகளாலேயே இச் சேவைகள் அனைத்தையும் கவனிக்கமுடியும்.
குமாஸ்தா வேலைகளை பெரும்பாலும் பெண்களே கவனித்துக் கொள்ளுகின்றனர். கம்பியூட்டர் கருவிகள் வேலைகளை எளிதாக்கி விடுகின்றன. உலகில் இவற்றின் விலைகளே இன்று இறங்கிக்கொண் டிருக்கின்றன. காரணம் கம்பியூட்டருக்கு பயன்படுத்தப்படும் சிப்ஸ் (Chips) மண்ணிலிருந்தே தயாரிக்கப்படுகிறது. உலகில் இதற்குப் பஞ்சமேயில்லை.
குமாஸ்தா வேலையில் ஈடுபடுவோரின் தொழிற்சங்கங்கள் பல மிழந்து வருவதற்கு இரண்டு காரணங்கள் கூறப்படுகின்றன. ( 1 ) பலரது உழைப்பை உறிஞ்சக்கூடிய கம்பியூட்டர்கள். (2) பெண் கள், குழந்தைகளின் மலிந்த உழைப்பு.
தற்காலிக வேலை வழங்கல் முதலாளிகளுக்கு வாய்ப்பானதே. தொடர்ந்து ஆண்டுதோறும் கூலியை உயர்த்தவேண்டியதில்லை.
- 21

Page 13
பெண்களும் குழந்தைகளும் பல காரணங்களால் இடையிடை தொடர்ந்து ஒரே இடத்தில் சேவை செய்யாதும் விலகி விடலாம்.
உழைப்பை வேண்டிய வேளை மட்டும் வாங்கிவிட்டு வேலையில் இருந்து நீக்கிவிடுவதற்கு ஒதுக்கிய கூலியாக ( Reserved Labour ) வும் முதலாளித்துவத்திற்கு உழைப்பாளர் வேண்டும். இதற்கு பெரிய படையாக பெண்கள் உள்ளனர். வீட்டுப் பணிகளையும் சமாளித்து விட்டு குறைந்த கூலியில் உழைப்பதற்கு வெளியே வரவும் அவர்கள் தயாராக உள்ளனர்.
தாய்மை, வீட்டு மனைவி என்ற நினைவுடன் வளந்த பெண்கள் இன்று ஏகபோக முதலாளித்துவத்தின் வளர்ச்சியினல் கூலிச் சந் தைக்கு ஈர்க்கப்படுகின்றனர். அமெரிக்கப் பெண்கள் இன்று புதிய சமூக நிலைமைகளுக்கு மாற்றப்பட்டுள்ளது ஒரு வரலாற்று நிகழ்வே. இளம் பெண்கள் பெரும்பாலும் கூலிச் சந்தைக்குள் பிரவேசித்து விடுகின்றனர்; 45% உழைப்பாளர் பெண்களே; 25 - 54 வயது வரம்புள் 70% பெண்கள் வெளி வேலையிலும் ஈடுபட்டுள்ளனர்.
இந்நிலை பெண்கள் தம் காலில் தாமே நிற்கமுடியும் என்ற தன்னம்பிக்கையையும் அவர்களின் பொருளாதார பலத்தையும் வளர்த்துள்ளது உண்மையே. ஆயினும் குடும்பப் பொறுப்பு, சமை யல் கட்டிலிருந்து இன்னும் அவள் விடுத்லை பெற முடியா நிலை யிலேயே உள்ளாள். வெளியே குறைந்த கூலி, வீட்டில் குழந்தை வளர்க்க வேண்டிய பொறுப்பு - இவற்றில் உள்ள முரண்பாட்டைப் பற்றி சமூகவியலாளர் கவனிப்பதேயில்லை. அரசியலாரும் சலசலப்பு ஏற்படுத்தலாம். நிலமை மாறப்போவதில்லை. முதலாளிகளின் இலாப நோக்கிலும் பார்க்க மனித நலன் உயர்வானது என்ற கோட்பாடு ஏற்றுக்கொள்ளப்படும்வரை நிலமை உலகில் எங்கும் மாறப்போவ தில்லை.
புதிய கற்கால கட்டத்தில் ( கி. மு. 4000 - 3500 ) சிறு நகரங் கள் ஏற்பட்டு மன்னர், நிருவாகிகள், மேற்பார்வையாளர், மத குருமார் சமூகத்தின் பல மட்டங்களில் கட்டுப்பாடுகளை ஏற்படுத்தி நிலை பெற்றனர். யுத்தங்கள் அடிக்கடி நிகழ்ந்தன. வென்றவர் எதிரி களின் பெண்களைக் கவர்ந்து சென்று நெசவு, வீட்டுப் பணிகளைச் செய்வித்தனர். தேர்ந்து ஒரு பகுதியினரை பாலுறவிற்குப் பயன் படுத்தினர். இவ்வாறு பெண்களே முதல் அடிமையாயினர். அடக்கி ஒடுக்கப்பட்ட இம் மூன்று அடிமைத்தனத்திலுமிருந்து விடுபடவே இன்றும் பெண்கள் போராடவேண்டியுள்ளது. - றுத் பர்மன்.

பெண் சிங்கங்களின் எழுச்சி
- மாதவன் -
ஆரணியம் தாரணியம் என இருகாடுகள் அருகருகே இருந் தன. காட்டு ராஜாவாக இருவேறு சிங்கங்களின் ஆட்சி நடைபெற்று வந்தது.
காடுகளின் எல்லைப் பிரதேசத்தில் முரண்பாடு ஏற்பட்டது. அதை ஒட்டி ஆக்கிரமிப்பு நடவடிக்கைகள் ஏற்பட்டன. அழிவு யுத்தம் தொடர்ந்தது. கொலைகள், கொள்ளைகள் தொடர்ந்து நடைபெற்றன. காடுகளில் அடிமைப்பட்ட பிறஉயிரினங்களும் பாதிக்கப்பட்டன.
ஆண் சிங்கங்களே தலைமைதாங்கி போரை நடத்தின. கன்னி யான சில பெண் சிங்கங்களும் போரில் ஈடுபட்டன.
தமது ஆண் சிங்க மன்னனின் காட்டு எல்லைகளைக் காப்பதற் காக போராடி மரிப்பது வீரத்தியாகம், மோட்ச சாம்ராச்சியம் கிட் டும் என பிரச்சாரங்கள் செய்யப்பட்டன.
வாலிப ஆண் சிங்கங்கள் கொல்லப்பட்டு காட்டில் சிங்கக் குடித் தொகையே குறையத்தொடங்கியது.
பெண்சிங்கங்கள் தங்கள் இளம் பிள்ளைகளும் கணவன்மாரும் தொடர்ந்து கொல்லப்படுவதைக் கண்டு கலங்கின.
எதிர் காலத்தை எண்ணி ஏங்கின.
ஆண் சிங்கங்களின் சிந்தனையற்ற உயிர்க்கொலைகளை நிறுத்து வதற்கு பெண் சிங்கங்களில் சில இருகாட்டிலும் சிந்திக்கத்தொடங் கின.
ஆரணிய காட்டுப் பெண் சிங்கங்கள் ஒன்று கூடிக் கூட்ட ம் போட்டன. யுத்தத்திற்குப் போகமுடியாதபோதும் போரைப் பற்றி வீரம் பேசிக் கர்ச்சித்த ஆண் சிங்கங்களில் ஒரு சில மட்டும் கூட்டத் தின் பின் புறத்தில் இருந்தன. பெண்களின் பின்புத்திப் பேச்சைக் கேட்போம், என்பதே அவரின் நோக்கம். உடனே போரை நிறுத்தி உயிர்க்கொலைகளைத் தடுப்பதற்கேற்ற வழிகள் ஆராயப்பட்டன.
"வீரப் போரை ஏன் நிறுத்தவேண்டும்? நீங்கள் கோழைப் பெண்
கள்; நாங்கள் எமது காட்டைக் காக்க வீரப் போர் புரிந்து உயி ബ தியாகம் செய்யத் தயாராக உள்ளோம்."
۔۔۔۔ 328 --سی.........۔

Page 14
ஓர் இளம் சிங்கம் பின்புறத்திலிருந்து கர்ச்சித்தது. தலைமை வகித்த பெண் சிங்கம் எழுந்து கர்ச்சித்தது.
‘ஆரடா கோழை. உன்னை வயிற்றில் சுமந்து திரிந்து இரத்தம் சிந்திப் பெற்றவள் ஆரடா? அவள் நாதாளிப் பழத்தைத் தின்று கர்ப்பத்தைக் கலைக்காது நினைவுபூர்வமாக இரத்தஞ் சிந்திப் பெற் ருள். நீங்க உங்க இனத்தையே கொலை செய்யப்போய், கொல்லப் பட்டுச் சாவதை வீரத் தியாகம் என்று வீம்பு பேசுறிங்கள். இன்று ஆணுதிக்க அரசியலாட்சி நடைபெறுகிறது. இந்த ஆண் மிருகங்களுக்கு உயிரின் அருமையே தெரியாது. நாங்கள் தான் தியாகம் செய்து பெற்ற பிள்ளைகளை வீரப்போர், வீரத் தியாகம் என்று பொய்ப் பிரச் சாரம்செய்து கொல்லுகிருர்கள். மேலும் தொடர்ந்து விட்டால் ஆன திக்க வெறியால் உயிரினமே அழிந்து போகப் போகிறது. இனிமேலும் நாம் பொறுக்க முடியாது. முதலில் இந்த ஆணுதிக்க வெறியர்களிட மிருந்து ஆட்சியைக் கைப்பற்றவேண்டும்.
இனிமேலும் கொல்லப்படுவதற்காக நாம் சிங்கக் குட்டிகளைப் பெற்றுக்கொண்டிருக்கப் போவதில்லை. நாம் பட்ட துன்பம், தியாக மெல்லாம் இனிமேலும் வீணுகப்போவதில்லை.
உழைத்து சிறப்பாக வாழும் நேரமெல்லாவற்றையும் யுத்தத் திலும் கொலை, கொள்ளையிலும் செலவிடமுடியாது.
தாரண்யக் காட்டுப் பெண் சிங்கங்களுக்கும் உண்மை நிலைமையை விளக்கி ஒரு தூதுக்குழு அனுப்பி போரை நிறுத்துவோம். ஆண் ஆதிக் கத்தை ஒழிப்பதன் மூலம் எம் இனத்தையே காப்போம். உழைப்பிற் கும் இன விருத்திக்கும் அவர்களை எமது ஆதிக்கத்தில் வைத்திருப் GBuntb.
உயிர்களைப் பெற்றெடுக்கத்தக் கவர் ஆட்சியிலேயே உலக அரசி யலதிகாரம் நிலைக்கவேண்டும். அவ்வாறு நிலவின் ஒருபோதும் யுத்தமே ஏற்படமாட்டாது. ஒரு உயிரைப் படைக்கத் தெரியாத, உயிரின் அரு மையை அறியாத ஆண்களின் ஆதிக்கத்தில் உலகம் அகப்பட்ட தாலேயே இத்தனை காலமும் யுத்த அழிவு ஏற்பட்டது. உலகெங்கும் இரத்தம் சிந்தப்பட்டது.
இத்தகைய உயிர்களை அழிக்கும் யுத்தத்திற்கு நாம் உடனே முடிவு கட்டவேண்டும். நாம் பெற்ற பிள்ளைகளை அழிக்க இவர்களுக்கு என்ன உரிமையிருக்கிறது. இத்தனை காலம் நாம் துரங்கியிருந்துவிட் டோம். இனிமேலும் நாம் துரங்கிவிடப்போவதில்லை."
சிங்கங்கள் யாவும் புத்துணர்வு பெற்று கர்ச்சித்தன. அக்கர்ச் சனையிலேயே ஆண் சிங்கங்களின் குரல்கள் யாவும் அடங்கிவிட்டன.
- 4 -

எங்கும் விற்பனையாகிறது! ‘தமிழவேள்” எழுதிய
தமிழ் - ஆண்டு 9
ரூபா 14,00
தமிழ் - ஆண்டு 10
ரூபா 15.00
பயிற்சி விளக்கங்கள் விடைகளுடன் மாணவர்க்கும் ஆசிரியர்க்கும்
பயன்படத்தக்க அரிய நூல்கள்
கணேசர் - சிவபாலன் எழுதிய உயர்தர இரசாயனம்
ebum 90.00
A. L. வகுப்பு பாடிநூல்
விற்பனையாளர்க்கு கழிவு உண்டு
குமரன் புத்தகசாலை
201, டாம் வீதி, கொழும்பு - 12.
Tel: 42 || 388

Page 15
KUMARAN-74 01-03-1
குமரன்
உலகத் தொழிலாளர் வர்க்க உலகப் பெண் விடுதலைக்கு மார்ச் ஒரு காலகட்டத்தில் விடுதலை நா6 குமரனின் இவ்விதழ் பெண் வி அமைகிறது,
பெண்ணின் விடுதலை, உரிமை களையும் போராட்டங்களில் இணைக் கடி ஏற்படும் போது எவ்வாறு ை சில சிந்தனைகள் என்ற கட்டுரையி உதாரணங்களுடன் நிரூபிக்க முயன் அமெரிக்காவில் வளர்ந்து வரு மலிவு விலையில் பெண்களின் உழை யில் ஈடுபட்டுள்ளதை தனிக்கட்டுை
பெண்ணுதிக்கம் ஏற்படும் என மாதவன் தன் உருவகக் கை பெற்றெடுத்த உயிர்களின் அருபை றதை அழிக்கவிட மாட்டாள் என்கி உடல் நலம் பற்றி கடித மூலம் கண்டதும் கூறுவது உலக மக்களி காணலாம். முதலாளித்துவம் ச நாட்டிலும் வாழும் மக்களின் உட மூலம் நீங்கள் எப்பக்கம் சார்ந்து தீர்மானிக்கலாம். தியாகுவின் கட் வியத்நாம் யுத்தத் தோல்வியுட பொருளாதார வீழ்ச்சி தொடர்கி யின் கட்டுரையில் காணலாம், 90 தின் சிதைவையும் புதிய உலகப் அவர் எதிர்பார்க்கிருர்,
இலங்கையின் நிலப் பிரச்சினை கேள்வி? பதில் பதியில் வேல்" டிக் காட்டுகிருர்
அச்சு : குமரன் அச்சகம் ஆசிரியர் : செ. கணேசலிங்க

201, DAM STREET,
990) COLOMBO-12.
குரல்
விடுதலைக்கு மே முதல் நாள் போல 3 புனித நாளாகும். இந்தாளும் ாாகும்.
டுதலையை நினைவூட்டும் இதழாக
களுக்காகப் போராடுவதாக அவர் கும் இடதுசாரி இயக்கங்கள் நெருக் கவிட்டு விடுகின்றன என்பதையும் ல் துணிச்சலோடு, வரலாற்று எறுள்ளார், குமாரி ஜெயவர்த்தஞ. ரும் ஏகபோக முதலாளித்துவம் ப்பை பரவலாக சுரண்டும் பணி ரை விளக்குகிறது.
உலகில் யுத்தமே ஏற்படாது தயில் கூறுகிருர், இரத்தம் சிந்திப் மயை பெண்ணே அறிவாள். பெற் napit.
மட்டுமல்ல நேரில் அறிந்தவரைக் ன் பண்பாடாக நிலவுவதைக் ார்ந்த அமைப்பிலும் சோஷலிச -ல் நலனை ஒப்பிட்டுப் பார்ப்பதன் நிற்கப் போகிறீர்கள் என்பதைத் டுரை படிக்க. -ன் 70 களில் ஆரம்பித்த அமெரிக்க றது என்ற கூற்றை போல் சுவீசி களில் அமெரிக்க ஏகாதிபத்தியத் பொருளாதார அமைப்பையும்
யைப் பற்றி அறியாதோர் பலர். சில வரலாற்று உண்மைகளைச் சுட்
- ஆசிரியர்
201, டாம் வீதி, கொழும்பு-12. ன்