கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: குமரன் 1990.04.01

Page 1
9 கலை, இல - மாதவன்
இ அமெரிக்க
ஏற்றமும்
சுவிசி
 ேஎழுத்தறி
சீனுவும்
- மாதகல் கந்
IR NA - டாக்டர் புரு yo தென்யே 2 ܐ
- தியாகு"
O LDT6ofl 2 i
-
இ கலைமான்
- மாதவன்
O 9 DDT6a
- செ. க.
& 0 G356iT6A P
 
 
 
 

ஏப்ரல் 1990
க்கியத்தில் யதார்த்தம்
s ஏகாதிபத்தியத்தின் வீழ்ச்சியும் - 3
வின்மை ஒழிப்பும்
தசாமி
ன் இலக்கணங்கள் ணுே பிச்சி
மன் சோஷலிசக்குடிய ரசு
5p05 விற்பனைப்பண்ட--نه -
களின் கலக்கம்
பதில்

Page 2
எங்கும் விற்பனையாகிறது!
"தமிழவேள் எழுதிய
தமிழ் - ஆண்டு 9
ரூபா 14,00
தமிழ் - ஆண்டு 10
ரூபா 15.00
பயிற்சி விளக்கங்கள் விடைகளுடன் மாணவர்க்கும் ஆசிரியர்க்கும்
பயன்படத்தக்க அரிய நூல்கள்
கணேசர் - சிவபாலன் எழுதிய உயர்தர இரசாயனம்
ரூபா 90.00
A. L. வகுப்பு பாடிநூல்
விற்பனையாளர்க்கு கழிவு உண்டு குமரன் புத்தகசாலை 201, டாம் வீதி, கொழும்பு - 12.
Te: 4388

கம்யூனிசப் பாதை மிக நீண்டது
- செ. க -
சோவியத் யூனியனில் தேசீக இனப் பிரச்சனை எவ்வாறு எழ முடியும் என்ற வினு பலரிடை ஏற்படக் கூடும். ஏனெனில் முத லாளித்துவ சமூக அமைப்பின் வளர்ச்சிப் போக்கிலேயே தேசீய இனப் பிரச்சனே எழமுடியும் என்பதே கோட்பாடு.
சோவியத் யூனியன் சோஷலிசப் பாதையை நழுவவிட்டு வரு கிறது என்பதும் வெளிப்படையாகத் தெரிகிறது. அதனுலேயே பொரு ளாதார நெருக்கடியும் ஏற்பட்டு புதிய பல பிரச்சனைகள் தோன்றவும் வழிவகுத்துள்ளது.
கிழக்கு ஐரோப்பிய நாடுகளிலெல்லாம் "ஜனநாயகம்" என்ற பெயருடன் மத எழுச்சி வேறு எற்பட்டுள்ளது. "சோஷலிசத்திற்கு எதிராக ஏற்பட்ட கருத்தியல் வெற்றி அமெரிக்காவுக்கல்ல, போப் பாண்டவர் தஃலமையிலான கத்தோலிக்க திருச்சபைக்கே உரியது" என தயான் ஜெயத்திலகா கூறுகிருர்,
சோவியத்தில் ஏற்பட்டுள்ள தேசிய இனப் பிரச்சனையும் மத அடிப்படையிலேயே எழுந்துள்ளதைக் காணலாம்; வித்துவேனியா அஸாரிபாயன் தேசங்களேயே குறிப்பிடுகிறேன்.
புதிய சோஷலிசத்தைக் கட்டுவதாகப் புறப்பட்டு இன்று கிழக்கைரோப்பாவிலும் சோவியத் யூனியனிலும் ஏற்பட்டுள்ள பிரச் சஃனகளே முதலாளித்துவ உலகம் அத்துமீறிப் பிரச்சாரம் செய்கிறது என்பதும் உண்மையே.
இக் காலகட்ட குழப்ப நிலேயைக் கண்டு சோஷலிசம் அழிந்து விட்டது என்று கனவு காண்பவர்கள் வரலாறு அறியாதவர்களே,
1929ல் முதலாளித்துவ உலகில் ஏற்பட்ட பொருளாதார அமுக்கத்தைக் கண்டு "முதலாளித்துவம் ஒழிந்துவிட்டது" என்று முதலாளித்துவ பொருளாதார நிபுணர்களும் அரசியலாரும் எண் னினுர்கள். ஏனெனில் சோவியத் யூனியனே அவ்வமுக்கம் எவ்வித மும் பாதிக்கவில்லே. அதைக் கண்டு சோஷலிசம் உலகெங்கும் தோன்றிவிடும் என எண்ணியவரும் தோல்வி கண்டனர். ஜெர்மனி, இத்தாலியில் பாசிசம் தோன்றி பூஷ்வா ஜனநாயக உலகையே ஈடா டச் செய்தது. இரண்டாவது உலக யுத்தம் அத்தனே பயங்கர நிலையை ஏற்படுத்தியது.

Page 3
பாசிசத்தை ஒழிப்பதில் சோஷலிச அமைப்பு ஆற்றிய பங்கை "இன்று சோஷலிசம் தோற்றுவிட்டது' என தூற்றும் முதலாளித்துவ உலகம் மறந்துவிட முடியாது.
சோஷலிசத்தைக் கட்டுவதில், சோஷலிசம் என்று கூறும் நாடுகளி டையேயே பகைமை முரண்பாடுகள் கூட ஏற்பட்டதை அனைவரும் அறி வர். ரஷ்யா, சீனு, வியத்நாம், கம்பூச்சியா, ஹங்கேரி ஆகிய நாடுகளி டையே நடந்தவை, நடைபெற்றுக்கொண்டிருப்பதை எவரும் மறந்து விடமுடியாது.
நிலப்பிரபுத்துவத்திலும் பார்க்க முதலாளித்துவம் முன்னேறிய உற் பத்தி முறையைக் கொண்டது; சோஷலிசம் அதனிலும் சிறந்த உற் பத்தி உறவைக் கொண்டதென்பதே மார்க்கிசமாகும். நிலத்தோடு கட் டுப்பட்ட உற்பத்திமுறை, கூலி அடிமைமுறை, சுதந்திரமான கூட்டு உற் பத்திமுறை என மார்க்ஸ் வளர்ச்சிப்போக்கைக் காட்டினர்.
சந்தைப் பொருளாதாரத்தைத் துறந்த கூட்டு உற்பத்திமுறையை நடைமுறைப்படுத்துவதில் ஏற்பட்ட சிக்கலின் வெளிப்பாடுகளையே இன்று காண்கிருேம்.
கிழக்கு, மேற்கு ஜெர்மனி இணைந்துவிடுவதால் கிழக்கு முற்றக முதலாளித்துவத்திற்கு மாறிவிடப்போவதில்லை . மேற்கு ஜெர்மனி அமெ ரிக்கப் பிடியிலுள்ள நேட்டோ அணியிலிருந்து விடுபட நேரும் அமெ ரிக்கா தன் படைகளை அங்கிருந்து அகற்றநேரும். அதுமட்டுமல்ல. உலக நிதிச்சந்தையில் ஏற்பட்டுவரும் மீளமைப்புக்கு ஜெர்மனியே தலைமைதாங்கும் என்பதையும் பொருளாதார நிபுணர்கள் அறியா மலில்லை.
சோஷலிச நாடுகளிடையே தவருண கோட்பாடுகளைக் கடைப் பிடித்ததால் இன்று ஏற்பட்ட குழப்பநிலை விரைவில் தீர்ந்துவிடுவது உறுதி. சோவியத்யூனியனிலும், அமைதியாக உள்ள தொழிலாளர் ஒரு கட்டத்தில் சரியான வழியைக் கடைப்பிடித்து எழுச்சியடையும் நாள் வெகு தூரத்தில் இல்லை.
சோஷலிசத்தைக் கட்டி கம்யூனிசத்தை அடையும் பாதை மிக நீண் டது. அதற்குப் பல பத்து வருடங்கள் மட்டுமல்ல நூற்ருண்டுகளே செல்லலாமென்ற மாவோவின் கூற்றிலுள்ள முதிர்ச்சியான அரசியல் சித்தாந்தக் கோட்பாட்டின் சிறப்பை இன்று நாம் சீனவில் மட்டுமல்ல, பிற சோஷலிச நாடுகளென்று கூறிக்கொள்ளும் நாடுகளின் அனுபவத் திலிருந்தே நேரில் காண்கிருேம்.
= 2) അ

கலைமான்களின் கலக்கம்
- மாதவன் -
சிேல்லை, மருதம் என அடுத்தடுத்த இரண்டு காடுகள். மான் கூட்டங்களே அங்கு ஆட்சி செலுத்தி வந்தன.
இரண்டு காட்டு மான்களிடையேயும் குடிபெயர்ந்த காலத் தால் சிறிதளவு இனவேறுபாடிருந்தது.
முல்லைக் காட்டுக் கலைமான்கள் பிந்திக் குடிவந்த மான்களை குறைவாகக் கணித்து வந்தன. மருதக் காட்டையும் கைப்பற்றி அந்த மான்கள்மேல் ஆதிக்கம் செலுத்த முல்லைக் காட்டுக் கலைமான் கள் தீர்மானித்தன.
இதனல், தொடர்ந்து யுத்தம் நடைபெற்றது. கலைமான்களே பெரும்பாலும் கொல்லப்பட்டன. பெண் மான்களில் அத்தனை பாதிப்பு ஏற்படவில்லை.
யுத்தத்தைத் தொடர்ந்து நடத்த பெண் மான்கள் குட்டிகளைப் பெற்றுத்தரவேண்டும் என வலியுறுத்தப்பட்டது; கலைமான்களும் தொல்லதரத் தொடங்கின.
தொடர்ந்து கர்ப்பத்தைச் சுமந்து அநியாயமாகக் கொல்லப் படுவதற்காகக் குட்டிகளைப் பெற பெண் மான்கள் விரும்பவில்லை. அவை எதிர்த்தன; கலைமான்களின் அத்துமீறிய தொல்லையும் எரிச் சலை ஊட்டின.
"எமது உடல் எமக்குரியது. நாம் விரும்பினே கர்ப்பம்." பெண் மான்கள் ஒற்றுமைக் குரல் எழுப்பின. "உங்களுக்குக் கடவுள் கருப்பையைத் தந்துள்ளார், குட்டி பெறுவதற்குத்தானே."
'முடியாது. எமது கருப்பை, நாம் விரும்பினுல் மட்டுமே." "வற்புறுத்தித் தந்தால் என்ன செய்வீர்கள்?’ கலைமான்கள் அதிகாரம் பேசின. "அது கற்பழிப்பாக முடியும். நாமே நச்சுப் புல்லைச் சாப் பிட்டு கருவை அழித்துவிடுவோம்." r
"பெண் மான்கள் எச்சரித்தன." "அத்தனை துணிச்சலா?”
ஆணுதிக்க கலைமான்கள் ஆத்திரமடைந்தன. ஆயினும் பெண் மான்களின் ஒற்றுமையைக் கண்டு அஞ்சின. கலைமான்கள் நீதிமன்றத்திற்கு எடுத்துச் செல்லத் தீர்மானித்தன.
நீதிமன்றத்தில் ஐந்து கிழ மான்கள் விசாரணை நடத்தின. பெண் மான்களின் வற்புறுத்தலின் பேரில் இரண்டு பெண்கள் மட் டும் இருந்தனர்.

Page 4
6 எம்மிடம் கருப்பை இருக்கிறது என்பதால் நாம் தொடர்ந்து குட்டிபெறவேண்டுமென்பதில்லை. அது எமது விருப்பம். பிறப்பு உரிமை. அவர்களுக்குக் கொம்பு இருப்பதால் மற்றவர்களைக் குத்திக் கொல்லும்படி நாம் வற்புறுத்தவில்லை.” -
பெண் மான்களின் பேச்சில் நியாயம் இருப்பதாக அனுபவம் மிக்க நீதிபதிகளில் பெரும்பான்மையினர் ஏற்றுக்கொண்டனர்.
ஆயினும் தீர்ப்பு வழங்குவதில் சிரமப்பட்டனர்.
பெண்களுக்காக வாதாடிய மான் புதிய பிரேரணை ஒன்றை முன்வைத்தது.
"எம்மிடம் கருப்பை இருப்பதே இவர்களுக்குச் சாட்டாக இருக்கிறது. அதை சத்திர சிகிச்சை மூலம் அறுத்து வீசிவிடுகிருேம். அல்லது வேண்டுமாயின் இவர்களுக்கே பொருத்தி விடலாம். வேண் டியபடி குட்டிகளைப் பெற்று போராட்டத்தை நடத்தட்டும்."
கருப்பையை வீசிவிடுவதை நீதிபதிகள் ஐவரும் எதிர்த்தனர். இரு பெண் நீதிபதிகளும் பகுத்தறிவு வாதியான தலைவரும் இரண் டாவது பிரேரணையை ஆமோதித்தனர்.
'இது நடைமுறைப்படுத்த முடியாத கோரிக்கை. கடவுள் பெண்களுக்குத் தந்த கருப்பையை எப்படி கலைமான்களுக்குப் பொருத்தமுடியும்."
இரண்டு கலைமான் நீதிபதிகள் நகைப்போடு கூறினர். 'சத்திர சிகிச்சை மூலம் தொடர்ந்து கர்ப்பம் ஏற்படத்தக்க தாக என்னல் பொருத்திவிட முடியும்.'
அறுவைச் சிகிச்சையில் புகழ்பெற்ற பெண் மான் முன்வந்து கூறியது.
மூன்று நீதிபதிகள் கருப்பையை கலைமான்களுக்குப் பொருத்தி விடும்படி தீர்ப்பளித்தன. கலைமான் நீதிபதிகள் இருவர் மட்டும் எதிர்த்தனர்.
நீதிபதிகளின் தீர்ப்பு கலைமான்களிடை கலக்கத்தையும் அச் சத்தையும் ஏற்படுத்தியது. w
கர்ப்பத்தைச் சுமந்து குட்டிபெற கலைமான்கள் தயாராயில்லை. கோழைகளாக அக் காட்டைவிட்டே கலைமான்கள் அனைத்தும் ஓடிவிட்டன. பெண் மான்களின் ஆட்சி ஏற்பட்டது. சில கலைமான் கள் மட்டும் பெண் மான்கள் விரும்பிய வேளை குட்டிபெறும் கோரிக்கையை ஏற்று அக் காட்டில் அடங்கி ஒடுங்கி வாழ்ந்தன. யுத்தமும் நின்றது. . . . . .

கலை, இலக்கியத்தில் யதார்த்த நெறி
- மாதவன் -
விாழ்க்கையைப் படம் பிடித்துக் காட்டுவது, உள்ளதை உள்ளவாறே கூறுவதே யதார்த்தவாதம் எனப் பல விமர்சகர்களே எண்ணிக்கொள்கின்றனர். இது முற்றும் தவருண நோக்காகும். ரிய லிசம் (Realism) என்ற ஆங்கில வார்த்தையை தவருகப் புரிந்து கொண்டதன் அநர்த்தமே இதுவாகும். இங்கு மட்டுமல்ல, தமிழ் நாட்டிலும் பெரும்பாலோரிடை இக் குழப்ப நிலை நிலவுகிறது. நாச் சுறலிசம் (Naturalism) என்ற ஆங்கிலவார்த்தை விமர்சகர்களிடை அத்தனை பிரபல்யமடையாததும் இத் தெளிவற்ற நிலைக்குக் காரண மாகும்.
தமிழிலக்கிய ஆய்வில் கலாநிதி கைலாசபதியே முதன் முதலில் இக் குளறுபடியை விளக்கி, இயற் பண்பு வாதத்திற்கும் யதார்த்தத் திற்குமுள்ள அகண்ட வேறுபாட்டை தன் ‘தமிழ் நாவல் இலக் கியம்" என்ற நூலில் தெளிவுபடுத்தியுள்ளார்.
இன்றுவரை கலை, இலக்கிய விமர்சனத்தில், பகுப்பாய்வில் அன்னரின் கோட்பாடே நிலைபெற்றுள்ளது. அதற்கு மேலான கூற்று எதுவும் இன்றுவரை வெளிவரவில்லை. . s
இயற் பண்புவாதத்தை முதலில் புரிந்து கொள்வதன் மூலமே அடுத்த கட்டமான யதார்த்தத்தை நாம் எட்டிப் பிடிக்க முடியும்.
கைலாசபதி அவர்கள் இயற்பண்பு வாதத்தை பின்வருமாறு தமது "தமிழ் நாவல் இலக்கியத்தில் விளக்குவார் :
"கீழ் தட்டு வாழ்க்கையைச் சித்தரிப்பதாக மார்தட்டும் பல கதைகள் "முற்போக்கு", "யதார்த்தம் முதலிய அடைகளைத் தமக் குத் தாமே சூட்டிக்கொள்ளும். இப் படைப்புகள், சமுதாயத்தில் மிகத் தாழ்ந்த (வர்க்க அடிப்படையிலன்று) சில உதிரியான மக்களை (உதாரணமாக விபசாரிகள், பிச்சைக்காரர், மிகு நோயாளர்) பாத் திரமாகக் கொண்டு அவர் தம் இன்னலையும் இடுக்கணையும் படம் பிடித்துக் காட்டுவன. தி. மு. க. எழுத்தாளர் பலரும், புதுமைப் பித்தன், விந்தன் போன்ற எழுத்தாளர் சிலரும், வெவ்வேறு வகை யிலும் அளவிலும் இப் பிரிவைச் சார்வர். சென்னை மவுண்ட் ரோட் டில், யாருமற்ற தன்னந்தனியணுய் பட்டணத்து 'மகாமசான'த்தில் துலுக்கப் பிச்சைக்காரன் சாவதைப் புதுமைப்பித்தன் சித்தரித்துள் ளாரே, அது போன்ற நுணுக்க விபரங்கள், படம் பார்ப்பது
سے کا ۔ت

Page 5
போன்ற நுணுக்க விபரங்கள், படம் பார்ப்பது போன்ற தத்ரூப மாக இருப்பினும், யதார்த்த இலக்கியத்தின் பாற்பட்ரி. உள்ளதை உள்ளவாறே காட்ட முயலும் இவ்வுத்தி அல்லது நோக்கு (Naturalism) எனப்படும் இயற் பண்பு வாதமாகும் "மேல்தட்டு வாழ்க்கையை வருணிக்கும் 'சொகுசு" எழுத்திற்கு நேரெதிராக இருப்பினும், சுற்று முற்றுமுள்ள சின்னஞ் சிறு விஷயங்களில் அமிழ்ந்துவிடும் தன்மை யினுல் கலைப் படைப்பிற்கு வேண்டிய குறைந்தபட்ச புறநோக்கு செயற்படாது போகிறது. இவ்வெழுத்தாளர் பலரது நெஞ்சில் சமூ கத்தின் தாழ் நிலையிலுள்ள மக்கள் படும்பாடு தர்மா வேசத்தைத் தோற்றுவிக்கிறது என்பது உண்மை. ஆயினும் இது தெளிவு காணுத வெறுப்பு மனேநிலையிற் தோன்றுவதாகும். அது மட்டுமன்று. 'கீழ்' உலகமும் "மேல் உலகமும் இயற்கை நியதி என்று ஏற்றுக்கொள்ளும் மனப் போக்கும் இதனுல் தொடர்ந்து நிலவுகிறது. இதனுல் கலை முழுமையடைய முடியாது இயற் பண்பு வாதம் பல வழிகளில் தன்னை வெளிப்படுத்திக் கொள்கிறது. ஆனல் இவ் வழிகள் எவற்றிலும் வர லாற்றுணர்வு தென்படுவதில்லை."
ஆரம்பத்தில் கூறிய கருத்தை க. கை அவர்களே அதே கட் டுரையில் பின்வருமாறு கூறுகிறர் :
* யதார்த்தத்தைப் பற்றியும் இயற் பண்பு வாதத்தையும் ஒன் ருகக் கொள்ளும் மயக்க நிலை எமது இலக்கிய உலகிற் பரவலாகக் காணப்படுகிறது. இயற்கையில் முக்கியமானதும் முக்கியமற்றதும், பயனுள்ளதும் பயனற்றதும், செத்ததும் உயிருள்ளதும் கலந்து விர விக் கிடக்கின்றன. இவற்றை நுணுக்கமாக வருணித்து விடுவதால் ஒரு பொருளின் உள்ளியல்பு தெளிவாகாது. தள்ளவேண்டியதைத் தள்ளி கொள்ளவேண்டியதைக் கொள்ள வேண்டும்.
இயற் பண்பு வாதம் வரலாற்றுணர்வு சாராதமையாலேயே எதிர்காலத்தைக் கருத்திற் கொள்ளாது போகிறது; முன்னேற்றம், வளர்ச்சி, விமோசனம் முதலியவற்றிற்கு அர்த்தமும் அவசியமும் அற்றுவிடுகிறது. புதுமைப்பித்தன் போன்ருேருக்குத் "துன்பம், நம் பிக்கை வரட்சி, முடிவுற்ற சோகம் ஆகியவையே வாழ்க்கையின் நியதியாகத் தோன்றுகின்றன. உலகம் இருந்தது போலவே என்று மிருக்கும் என்ற துன்ப இயற்கைக் கோட்பாட்டிற்கு இவர்கள் இரை யாகின்றனர். இயற் பண்புவாத இலக்கிய நெறியின் பிரதான குறைபாடு இதுதான்."
க. கை. அவர்களே இலக்கியத்தில் இயற் பண்புவாதத்தின் தோற்றத்தையும் வரலாற்று நோக்கில் விளக்கியுள்ளார்.
ـ 6 سبه

"உயர்குடி மாந்தரையும் தேவரையும் பொருளாகக் கொண்டு பெரும்பாலும் இயற்கை முறைக்குள் அடங்காத வகையிற் படைக் கப்பெற்ற காப்பிய இலக்கிய மரபிற்கு எதிராக, சாதாரண மாந் தரைப் பொருளாகக் கொண்டு இயற்கை நியதிகளுக்குள் அடங்கும் வகையில் நிகழ்வுகளை விவரிக்கும் இலக்கியங்கள் தோன்றின. w−
மேற்கு நாடுகளிலே முதலாளித்துவ வர்க்கத்தின் பிறப்பைத் தொடர்ந்தும், இயற்கையின் ஆய்வான விஞ்ஞானத்தின் துரித வளர்ச் சியைத் தொடர்ந்தும் இவ்விலக்கியங்கள் தோன்றின. இக் காலப் பகுதியில் யதார்த்த நெறியும் இயற் பண்பு வாதமும் அதிகம் வேறு பாடின்றியே காணப்பட்டன.
ஆயினும் தொடக்கத்திலிருந்தே இயற்பண்புவாதம் தனது பெயருக்கியைய இயற்கை என்ற பொருளைப் பிரதானமாகக் கருதி வந்துள்ளது. இதன் தருக்க முறையிலான முடிவாக இயற் பண்பு நெறி இலக்கியங்களில் பாத்திரங்களின் சுற்ருடலைப் பற்றிய அதி நுணுக்க மான வருணனைகளும், பாத்திரங்களின் உணர்ச்சிகளும் சிறப்பிடம் பெற்றன. மனிதனது குணவியல்புகள் தலைமுறையாகத் தொடர்ந்து வருவன என்று நம்பிய பல எழுத்தாளர் மனித இயற்கையில் அதனை யும் அடக்கினர். மேற்கு நாடுகளில் இயற் பண்பு நெறிக்கு தத்துவ மதிப்பும் இலக்கிய விளக்கமும் கூறியவருள் பிரெஞ்சு நாவலாசிரியர் எமிலி ஜோலாவிற்குத் தனியிடமுண்டு.
இயற்கையிலுள்ள ஒரு பொருளை அதற்குரிய சூழ்நிலையில் வைத்துப் பற்றற்ற முறையில் விஞ்ஞானி ஆராய்வது போலவே, இலக்கியகர்த்தாவும் மனிதனை அவனது சுற்ருடலில் நிறுத்திப் பற் றற்ற வகையில் அவனது உடற்பண்புகள், உளப் பண்புகள், சமூகப் பண்புகள் முதலியவற்றை விவரித்தல் வேண்டும் எனக் கூறினர்.
இங்குதான் இயற்பண்பு நெறியின் குறைபாட்டையும் அக் குறைபாட்டின் அடிப்படைக் காரணத்தையும் தெளிந்து கொள்ளலாம். சுற்ருடலும் பரம்பரையுமே மனிதரது வாழ்க்கையை இயக்கி வழி நடத்துகின்றன என்ற முடிவிற்கு எழுத்தாளரை இழுத்துச் சென்று விடுகிறது. இது "நியதி” வாதமாகும். (அனைத்தும் தலைவிதி என்ரு கும்) இதிலென்ன வேடிக்கையென் ருல், தெய்வீக அருள் நிகழ்வுகளை யும் இயற்கை கடந்த நிலையையும் கூட இயற் பண்புவாதிகள் மறுத் துரைக்கலாம்.
சுற்ருடலின் அமுக்கத்தாலும் உணர்ச்சிகளின் அழுத்தத்தாலும் மனிதன் மாறத் துன் பத்தில் அமிழ்ந்து கிடக்கிருன்; அவனுக்கு விமோசனமேயில்லை என்ற இயற்கைக் கோட்டாட்டினல் மனிதனில் ஆக்கையிழந்துவிடுகிறது. ஒரு கதையிலே புதுமைப்பித்தன் எழுது
(й?п .

Page 6
*மனிதன் தெய்வ சிருஷ்டியின் சிகரம்" என்பது சாஸ்திரக் காரரும் விஞ்ஞானிகளும் ஏகோபித்துப் பாடும் முடிவு.
நான் கவனித்தவரை அந்த மாதிரிக் கேவலமான சிருஷ்டி யைப் படைத்த பிறகு, கடவுளுக்கு உணர்ச்சி ஏதாவது இருந்தால் வெட்கத்தினல் தூக்குப் போட்டுக்கொண்டிருக்க வேண்டும் என்று தான் கூறுவேன். என்ன மனிதன் சீ!"
இயற்பண்பு வாதத்தின் குரல் இதுதான். புதுமைப்பித்தன், விந்தன். தமிழ் ஒளி போன்ற திறமை மிக்க எழுத்தாளர் தமது சுற் ருடலைத் தத்ரூபமாக வருணித்தும், சமூகப் பாசாங்குகளைச் சாடியும், மனித யந்திரங்களை ஏக்கத்துடன் நோக்கியும் இலக்கியம் படைத் தனர் என்பதுண்மையே. சம்பிரதாய விக்கிரகங்களை உடைத்தெறிந் தனர். அவற்றுக்குப் பதில் என்ன வைக்கலாம் என்று அவர்களுக் குத் தெரியவில்லை. இயற்பண்பு நெறியின் நலிவை நோக்கும் பொழுதே யதார்த்த நெறியின் சிறப்பும் இன்றியமையாமையும் துலக்கமாகின்றன."
மேற் கூறிய க. கையின் இயற் பண்புவாத இலக்கணங்களை வைத்துப் பார்க்கும் பொழுதே பெரும்பாலான பிரபல தமிழ் நாட்டு எழுத்தாளர்களும் இலங்கை எழுத்தாளரும் யதார்த்த எழுத்தாள ரல்ல; இயற் பண்பு நெறியில் நின்று எழுதும் எழுத்தாளரே என் பதை அனைவரும் அறிந்துணர்ந்து கொள்வர். ஜெயகாந்தன் தொடக் கம் பாலகுமாரன் வரையில் இன்று இந் நிலப்பாட்டிலேயே எழுது இன்றனர் என்பது வெளிப்பாடு. இத்துறையில் மேலும் தெளிவுபெற யதார்த்தநெறியின் இலக்கண வரம்புக்களை ஆராய்வோம்.
(தொடரும்)
குமரன (இதழ் 72 இல் இருந்து)
தனிப்பிரதி ტენ 4/- 6 இதழ்கள் ரூ 24/- 12 இதழ்கள் ரூ 48/-
விற்பனையாளர்க்கு கழிவு உண்டு.
ஆங்காங்கே வரவழைத்து விநியோகிக்க விரும்புவோர் தொடர்பு கொள்க:
eig, Grfluri, குமரன், 201, டாம் வீதி, கொழும்பு - 12. தொலைபேசி: 421388
- 8 -

அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் ஏற்றமும் வீழ்ச்சியும்-3
- போல் சுவீசி -
இரண்டாவது உலக யுத்தத்திற்கு பின்னரே (முதலாளித்துவ) வரலாற்றில் 30 ஆண்டுகளுக்கு மேலாக தொடர்ந்து விரிவான முத லாளித்துவ வளர்ச்சி ஏற்பட்டது. இக் காலத்தில் சிறு சிறு தடை களும் வீழ்ச்சியுமே ஏற்பட்டன. அவற்றை-விரைவில் கடந்துவிட முடிந்தது. 1973 - 74ல் LDL@gg,-సో0 பின் குறிப்பிடத்தக்க வீழ்ச்சி ஏற்பட்டது என்று. சுற்லாம். . இது எல்லா முதலாளித்துவ நாடுகளையும் தாக்கியது s
யந்திர உற்பத்தியில் ஈடுபட்டிருந்த முதலாளித்துவ நாடுகளில் வேலையில்லாத் திண்டாட்டம் அதிகரித்தது. உள்நாட்டு வெளி நாட் டுக் கடன் பளு திடீரென' ஏற்ற்மடைந்தது. அமெரிக்காவில் பண வீக்கமும் யந்திர உற்பத்தியில் வீழ்ச்சியும் ஏற்படத் தொடங்கியது. உலகின் யந்திர உற்பத்தியின் உச்ஐஆதிக்க நி யை அமெரிக்கா இழக்க நேரிட்டது. リ. いヘ سمسم
இக் காலகட்டத்திலேயீே(1974-80) ஏகாதிபத்தியப் பிடியில் இருந்து எத்தியோப்பியா, அங்கோலா, மொசாம்பிக்கியு, கினிய பிசோ, கிரனடா, நிக்கருக்கா, ஈரான், சிம்பாவே ஆகிய நாடுகள் விடுபட்டன. அமெரிக்கா இந் நாடுகளிலெல்லாம் எதிர் புரட்சி நட வடிக்கையில் ஈடுபட்டபோதும் தன் படையை அனுப்ப முடியவில்லை. வியத்நாம் புகட்டிய பாடமே காரணமாகும். 70களின் இறுதியில் இரண்டு நிகழ்வுகள் அமெரிக்காவின் பலவீனத்தையும் வீழ்ச்சிப் போக்கையும் காட்டின. ஒன்று ஈரானின் தூதரக பணயக் கைதி கள். இரண்டாவது ஆப்கானிஸ்தானுள் சோவியத் படைகளின் நுழைவு.
1981 ஜனவரியில் றீகன் ஆட்சி ஏற்பட்டவேளை ஒன்றிணைந்த இரண்டு பிரச்சனைகளை எதிர்நோக்க நேரிட்டது.
1) உலக அரங்கில் அமெரிக்க ஆதிக்க வீழ்ச்சி. 2) 1979ல் இருந்து தொடர்ந்த பொருளாதார வீழ்ச்சி.
பொருளாதாரப் போக்கில் இரு கொள்கைகள் ரீகனல் கடைப்பிடிக்கப்பட்டன.

Page 7
1) அரச செலவினங்களை விரிவுபடுத்தல்.
2) அரச வருமான அதிகரிப்பை கட்டுப்படுத்தல். இப்போக்கு களால் முன்னென்றுமில்லாதபடியாக பட்ஜெட் பற்ருக்குறை ஏற் பட்டு நீகன் காலத்தின் பின்னரும் தொடர்ந்தது.
இந் நிலைகளால் அமெரிக்க கொடுப்பனவு நிலைகள் தொடர்ந்து மோசமடைந்து வந்தன. அமெரிக்க உற்பத்தியாளரும் நுகர்வோரும் வெளிநாட்டுப் பண்டங்களை, குறிப்பாக யப்பானியப் பொருட்களில் நாட்டம் கொண்டனர். இவற்ருல் அமெரிக்க ஏற்றுமதி உலக அரங் கில் வீழ்ச்சி பெறத் தொடங்கியது. இதனல் ஏற்றுமதி உபரியுள்ள நாடுகளிலிருந்து அமெரிக்கா கடன்பட நேரிட்டது. உலக நாடுகளுக் கெல்லாம் கடன் வழங்கிய நாடு றிகன் வெளியேறியபோது பிற நாடுகளுக்குக் கடனளியாக்கி விட்டுச் சென்ருர். 1980ல் 10,630 கோடி டாலர் வெளிநாட்டு நிலுவையாக நின்றபோது 1987ல் 36,820 கோடி டாலர் கடனளியாக மாற நேரிட்டது.
இவ் வீழ்ச்சிக்கு இராணுவ கெய்னிசீயனிக் கோட்பாட்டைக் கடைப்பிடித்ததும் முக்கிய காரணமாகும். 1970ல் தேசீய பாதுகாப் பிற்காக 88,700 கோடி செலவழிக்கப்பட்டபோது 1980ல் 220% உயர்வாக 284,500 கோடி டாலர் ஒதுக்கப்பட்டது. இதற்கு முக் கிய காரணம் அமெரிக்க வலதுசாரிகள் உலக அரங்கில் அமெரிக்க ஆதிக்கம் வீழ்ச்சியடைகிறது என்று தொடர்ந்து கூக்குரலிட்டு வந்த தாகும்.
இப் பொய்மையைக் கண்டு வியப்படைகிருேம். ரீகன் 1983ல் கிரனடாவின் புரட்சிகர ஆட்சியை வீழ்த்தி தன் பொம்மை ஆதிக் கத்தை நிலை நிறுத்தினன். உலகின் இரணவ பலம் மிக்க ஆட்சி 115,000 குடித தொகை கொண்ட சிறிய தீவை கைப்பற்றியது உண்மையில் மாபெரும் வெற்றியே! நிக்கராகுவா ஆட்சியை வீழ்த்த பலமுறை முயன்றும் வியத்நாமில் பட்ட சூட்டின் நினைவு தடுத்தது.
நீகன் 1989 ஜனவரி 21ல் வெள்ளைமாளிகையை விட்டு வெளி யேறியபோது, 8 ஆண்டுகளின் முயற்சியும், அமெரிக்காவின் வீழ்ச்சியை தடுக்க முடியவில்லை.
g ஆதிக்கத்திலிருந்து அமெரிக்கா கீழ் நோக்குவதால்ره-22 அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் முடிவு ஏற்பட்டுவிட்டது என்று கரு தக்கூடாது. ஐரோப்பிய சமூகங்களுடன் சேர்ந்த மேற்கு ஜெர்மனி மேற்குப் புறத்திலும் ஜப்பான் கிழக்குப் பகுதியிலும் அமெரிக்க ஆதிக்கத்திலிருந்து விடுபட்டு உலக அரங்கில் அரசியல், பொருள! தார ரீதியில் பலம்பெற்றுவிட்டன. தனிப் பிரமிட்டாக இருந்த நிலை
--سے 10 -سہ

மாறி உலகில் மூன்று பிரமிட்டுகளாக தலை நிமிர்ந்துவிட்டன. எதிர் காலத்தில் இந்நிலை மாற்றமடையலாம். ஒன்றின் வீழ்ச்சி மற்றதன் வளர்ச்சியாகலாம். சோவியத் யூனியனுடன் சீனுவும் இணைந்தோ தனித்தோ நாலாவது பிரமிட்டும் ஆகலாம்.
முதலாளித்துவம் முதிர்ச்சி பெறும் காலகட்டத்தில் பிரதான முரண்பாடு எழலாம். காலஞ்சென்ற ஜோன் ரொபின்சன் பின்வரு மாறு எழுதினர். "பூரண அபிவிருத்தியடைந்த முதலாளித்துவ அமைப்பில் வளமான வாழ்வு இயல்பாக அமைவதில்லை. மூலதன குவியல் ஒருபுறம் செல்வத்தை உயர்த்தி சேமிப்பை உயர்த்தும் போது மறுபுறத்தில் வளமான வாழ்வு ஏற்படுவதை கடினமாக்கி விடும்.”
இதன் தர்க்கீகம் எளிமையானது. முழுமையாக மூலதனம் குவியும்போது பொருளாதார அமைப்பு செழிப்பாகத் தோன்றும் அதே வேளை கேள்வி முழுமையடைய வளர்ச்சி பின்னுேக்கி தேக்க மடையும். இரண்டாவது உலக யுத்தத்தின் பின் அழிந்த உற்பத் திச் சாதனங்கள் மீள அமைக்கப்பட்டு, மூலதனக் குவிப்பு ஏற்பட் டது. பின்னர் கொரிய யுத்தமும் ஆயுத குவிப்பு மூலம் பொருளா தார வளத்தைக் காட்டியது. 60, 70 களில் வீழ்ச்சியடையத் தொடங்கிய போக்கு 1973 - 74ல் மோசமான பொருளாதார வீழ்ச் சியை நோக்கியது. 80களில் தனியார், பொதுக் கடன்கள் அதிகரித் தன. அமெரிக்கக் கடன்கள் மேற்கு ஐரோப்பிய நாடுகள், ஜப்பான், *நான்கு புலிகள்" என்று கூறப்படும் கிழக்கு நாடுகளான் தென் கொரியா, தைவான், ஹொங்கொங், சிங்கப்பூர் ஆகியவற்றின் உபரியால் நிரப்பப்படுகின்றன.
இன்றைய எதிரிடையான ஆதிக்கம் செலுத்தும் தாடுகளை இரண்டு குழுக்களாகப் பார்க்கலாம். பிரிட்டன், பிரான்ஸ், அமெ ரிக்கா தற்காப்பு நிலையில் உள்ளன. ஜெர்மனி, இத்தாலி, ஜப்பான் ஆக்கிரமிப்பு நிலைக்கு வளர்ந்துள்ளன. 1929ன் பொருளாதார அமுக் கத்தின் பின் ஏற்பட்ட நிலை மீண்டும் வந்துள்ளது.
மேற்கூறிய நிலை முன்போன்று வன்முறை வடிவம் எடுக்கும் வாய்ப்பில்லை. ஏனெனில் ஆக்கிரமிபபு, பொருளாதார நிலையில் மட் டுமே உள்ளது. இந்நாடுகள் இராணுவ பலத்தைப் பெருக்க முய லின் பலம் குன்றவே செய்யும். அமெரிக்காவின் இராணுவ மேலா திக்கம்ே அதன் பொருளாதாரக் கழுத்தை நெருக்கிக்கொண்டிருக் கிறது. அது தன் நிலையை, இன்றைய புதிய ஏகாதிபத்திய காலகட் டத்தில், இராணுவ பலத்தை குறைப்பதன் மூலமே காப்பாற்ற முடி யும். பாரிய யுத்தங்கள் இனிமேல் நடைபெறப் போவதில்லை. அதற்கு அணு ஆயுதங்களை தயாரிப்பது மட்டுமே ஒரே காரணமல்ல. (MR)
- 11 -

Page 8
எழுத்தறிவின்மை ஒழிப்பும், சீனுவும்
- மாதகல் கந்தசாமி -
ஐக்கிய நாடுகள் சபை 1990-ம் ஆண்டை எழுத்தறிவின்மை ஒழிப்பு ஆண்டாக பிரகடனம் செய்துள்ளது. இதிலிருந்து ஒரு ஒரு உண்மை புலப்படுகின்றது. அதாவது உலகில் இன்னும் எழுத வாசிக்கத் தெரியாத மக்கள் பெருமளவில் இருக்கின்றனர். இந்த நிலைமைக்கு இயன்றளவு தீர்வு காணும் நோக்கத்துடனேயே ஐ. நா. இவ்வாண்டில் எழுத்தறிவின்மை ஒழிப்பு வேலையை சுறுசுறுப்பாகச் செய்யும்படி வேண்டுகோள் விடுத்துள்ளது.
உலக குடித்தொகையில் சுமார் 100 கோடி மக்கள் - அதாவது 25 வீதம் பேர் - இன்னும் எழுத்தறிவு இல்லாதவர்களாக உள்ளனர். இவர்களில் 90 வீதம் பேர் மூன்முவது உலக நாடுகளில் வாழ்கின் றனர். காரணம் : வறுமை, அபிவிருத்தியின்மை, பின்தங்கிய கல்வி, போதன அமைப்பு முறை என்று ஐ. நா. கல்வி விஞ்ஞான, பண் பாட்டு நிறுவனத்தின் அறிக்கை தெரிவிக்கின்றது.
உலகின் கல்வி அறிவு இல்லாது, எழுத வாசிக்கத் தெரியாத மக்களில் அரைவாசிக்கு மேற்பட்டோர் - அதாவது 55 வீதத்தினர் - ஆபிரிக்க மக்களே ஆவர். அவர்களிலும் பெரும்பாலோர் பெண் களே.
இனி சீனவை எடுத்துக்கொண்டால், உலக ஜனத்தொகையில் 22 வீதம் மக்களைக் கொண்ட வளரும் நாடு அது. அங்கு சுமார் 22 கோடி மக்கள் இன்னும் கல்வி அறிவு இல்லாதவர்களாக உள்ள னர் என்று புள்ளிவிவரங்கள் கூறுகின்றன. இது எழுத்து வாசனை அற்ற உலக மக்கள் தொகையில் கிட்டத்தட்ட கால்வாசியாகும்.
நாற்பது ஆண்டு காலம் சோஷலிசப் பாதையில் சொகுசு நடை போட்ட ஒரு நாட்டில், இத்துணை அளவு மக்கள் எழுத்தறி வின்மை உடையவர்களாக இருக்கின்றனர் என்பதை நம்புவது சற்று கஷ்டம்தான். என்ருலும் யதார்த்த நிலைமை ஈவிரக்கம் அற்றதாகும். இதர வளரும் நாடுகளைப் போலவே, சீனுவிலும் எழுத்தறிவற்ற மக் கள் கூட்டம் உள்ளது.
1949-ல் சீன விடுதலை பெற்று நவ சீன மக்கள் குடியரசு நிறு வப்பட்டபோது, அங்கு வாழ்ந்த சுமார் 58 கோடி மக்களில் 80 வீதத் தினர் எழுத்தறிவற்றவர்கள். அன்று முதல் எழுத்தறிவின்மையை ஒழிப்பதற்கு சீன அரசு எடுத்த விடாப்பிடியான முயற்சிகளின் விளை வாக 1988ல் எழுத வாசிக்க தெரிந்தவர்கள் எண்ணிக்கை 80 வீத மாக உயர்ந்துள்ளது. இன்னும் 20 வீதம் மக்கள் - சுமார் 22 கோடி பேர் - எழுத்தறிவற்றவர்களாக உள்ளனர்.
مسلسد H2

உலகில் கல்வியறிவு பெற்றவர்கள் கூடுதலாக உள்ள நாடுகள் வரிசையில் இலங்கையும் ஒன்று. இங்கு 85 வீதம் மக்கள் எழுத வாசிக்கத் தெரிந்தவர்கள். மறுபுறம் 15 வீதம் பேர் எழுத்தறிவில் லாதவர்கள் என்பதையும் நாம் மறந்துவிடக்கூடாது. இந்த வகை யில் இந்தியாவில் சுமார் 55 வீதம் பேர் எழுத்துவாசனையற்றவர்கள் என்றும் சொல்லப்படுகின்றது.
இந்த நூற்றண்டு முடிவதற்குள் நாட்டின் எழுத்தறிவின்மைக்கு ஒரு முற்றுப்புள்ளிவைக்க சீன கங்கணம் கட்டி நிற்கின்றது.
சீனவில் எழுத்தறிவற்ற மக்களில் ஏகப் பெரும்பான்மையினர் தொலைதுார மலைப் பிரதேசங்களிலும், இதர பின்தங்கிய பகுதி களிலும் வாழ்கின்றனர். வேறு வகையாகச் சொன்னல், எழுத்தறி வற்றவர்களில் 92 வீதம் பேர் கிராமப் பிரதேசங்களில் வாழ்கின்ற னர். அவர்களில் 70 வீதம் பெண்களாவர்.
இத்தகைய பின்தங்கிய நிலைமைக்குப் பிரதான காரணம் அள வுக்கு அதிகமான ஜனத்தொகை, பின்தங்கிய பொருளாதார நிலை, வளர்ச்சி குறைந்த பண்பாட்டு நிலை என்று சொல்லப்படுகின்றது. அத்துடன் சில பகுதிகளின் பின்தங்கிய நிலைமைக்கு, நிதிவளப் பற் ருக்குறை, பிரதேச அதிகாரிகளின் பாராமுகப் போக்கு இரண்டையும் எடுத்துக்காட்டுபவர்களும் இல்லாமல் இல்லை.
இன்று சீன கைத்தொழில், விவசாயம், விஞ்ஞான தொழில் நுட் பம், பாதுகாப்பு என்ற நான்கு துறைகளின் நவீன மயமாக்கப் பாதையில் காலடி எடுத்து வைத்துள்ளதால், எழுத்தறிவின்மை அதற்கு ஒரு முட்டுக்கட்டையாக விளங்கும் என்பது புரிந்துகொள்ளக் கூடியதே. ஆகவே நவ சீனுவின் நான்கு நவீன மயமாக்கலும் நன்கு நடைபெறுவதற்கு, எழுத்தறிவின்மையை ஒழித்துக்கட்டுவது ஒரு பூர் வாங்க நிபந்தனையாக கருதப்படுகின்றது.
எழுத்தறிவின்மையை ஒழித்துக்கட்ட சீனு பின்பற்றும் முறை யும் தனித்துவம் வாய்ந்த ஒனருகும். சாதாரணமாக பள்ளிக்கூடங் கள், பாடசாலைகளை கூடுதலாக கட்டி, கல்விப் போதனுசிரியர்களை போதியளவு பயிற்றுவதுடன் இக் கடமையை நிறைவேற்றி விடலாம் என்பதுடன் சீன திருப்தியடைந்துவிடவில்லை. கல்வி அறிவுடையவர் கள் அனைவரும் கற்பிக்க வேண்டும், கல்வியறிவற்றவர்கள் அனைவரும் கற்க வேண்டும் என்ற வெகுஜன மார்க்கத்தை சீனு இவ் விஷயத்தில் பின்பற்றுகின்றது.
எழுத்தறிவின்மை எவ்வளவு விரைவில் ஒழிக்கப்படுகின்றதோ, அவ்வளவு விரைவில் சீனவின் சமூக பொருளாதாரம் வளர்ச்சி அடை யும், அத்தனை விரைவில் சீன பற்றிய பிம்பம் உலகில் மாற்றமை யும் என்றும் சீன கருதுகின்றது. w
-- 13 -س۔

Page 9
கே:
G3s:
கே:
கேள்வி ? பதில்
* வேல்"
பெண்கள் ஆண்களிலும் உயர்ந்தவர்கள் என்றவிதமாக குமரன் எழுதி வருகிறதே, அதற்கு தக்க ஆதாரங்கள் என்ன?
பி. நடராசன், யாழ்ப்பாணம்.
குமரன் இதழ் 74ல் (பக். 16) பல ஆதாரங்கள் கூறப்பட்டுள் ளன. ஆண்களெல்லாம் பெண்களின் இரத்த ஊட்டத்தில், கருப் பையிலேயே வளர்ந்து அன்னர் முலைப்பாலருந்தி மனிதரானவர் என்ற ஒரு உண்மையே போதாதா? வளர்ந்தபின் தாமே உயர்ந் தவர்கள் என்று பேசிப் பெண்களை அடிமைப்படுத்துவதே உல கின் மிகப் பெரிய முரண்பாடானதும் வேடிக்கையான, வேதனை தரும் செய்தியுமாகும்.
கலை, இலக்கியத்தில் அனுபவ வாதம் என்பது என்ன?
செ. இராமநாதன், கொழும்பு.
மேலெழுந்தவாரியாகக் கூறுவதானல் கலை, இலக்கியம் என்பது மனித அநுபவங்களின் தொகுப்பு என்று கூறுபவர்களது கோட் பாடே இதுவாகும். அனுபவ உணர்வால் (Empirical) பெறு வது மட்டுமே அறிவு என இவர்கள் கொள்வர். கலை இலக் கியத்தில் இப் போக்கு இயற்பண்பு வாதத்திற்கே இட்டுச் செல் லும். அனுபவங்கள் பெரும்பாலும் கருத்தியல் ஆதிக்கத்திலேயே இருப்பதைக் காணலாம். உதாரணமாக சூரியன் மாலையில் மேற் கில் மறைவதாகவே அனுபவமூலம் நாம் காண்கிருேம். விஞ் ஞான உண்மை அவ்வாறல்ல. சூரியன் நிலையாக எரிந்துகொண் டிருக்கிறது பூமி தன்னைத் தானே சுற்றுகிறது. யதார்த்த கலை,
இலக்கியம் அனுபவ வாதத்திற்கு மேலாக, விஞ்ஞான உண்மை
களை வெளிப்படுத்தவேண்டும். அதுவே கலை, இலக்கியத்தின் உயர்ந்த நிலையாகும்.
பாசிசம் என்ருல் என்ன?
கு. சிவதாசன், கண்டி3
இத்தாலியில் 1922 - 43 காலகட்டத்தில் ஏற்பட்ட தேசீய எழுச்சியும் கம்யூனிச எதிர்ப்பும் கொண்ட சர்வாதிகார அர
- 14 -

கே:
கே:
Lid
சியல் சமூக அமைப்பையே முதலில் பாசிசம் என்று கூறினர். யூதர் எதிர்ப்பும் கொண்ட முதலாவது பாசிச அமைப்பை ஏற் படுத்திய பெருமை முசோலினியைச் சாரும். பின்னர் கிட்லர் ஜெர்மனியில் இக்கோட்பாட்டரசியலைக் கைப்பிடித்தான். இரு வரும் ஒன்றிணைந்து இரண்டாவது உலக யுத்தத்தின்போது ஐரோப்பாவையும் உலகையும் ஏப்பம் விட முயன்று தோல்வி கண்டது இந் நூற்ருண்டின் இரத்தக்கறை படிந்த வரலாருகும். உலக வரலாற்றிலேயே இத்தகைய பேரழிவும் உயிர்ச் சேதமும் ஐந்து ஆண்டுகள் நீடித்த ஒரு யுத்தத்தில் ஏற்பட்டதில்லை. இன்று தீவிர வலதுசாரி சர்வதிகார ஆட்சிகளையும் இப் பெயரால் அழைக்கின்றனர். (பாசிசத்தின் இலக்கணங்கள் என்ற கட் டுரையையும் பார்க்க ஆ + ர்).
கிழக்கு ஜெர்மனியும் மேற்கும் ஒன்றிணையின் அரசியல், பொரு ளாதார, சமூக நிலையில் மேற்கு ஜெர்மனியின் ஆதிக்கமே நிலைக் கும் என்றே கூறுவேன்.
த. சிவபாக்கியம், கொழும்பு
அப்படிக் கூறிவிட முடியாது. எந் நிலையிலும் கிழக்கு ஜெர்மனி யின் சமூக அமைப்பு முற்ருக மாறிவிடப் போவதில்லை. அதே போலவே பிற கிழக்கு ஐரோப்பிய நாடுகளின் நிலையுமாகும். முற்று முழுதான முதலாளித்துவ அமைப்பாக இந் நாடுகள் மாறிவிடப் போவதில்லை. ஈற்றில் தொழிலாளி வர்க்கமே தமது பொருளாதார அரசியல் சமூக நிலையை தீர்மானிக்கும்; தீர் மானிக்கவேண்டும். ۔۔۔۔۔۔
பெண்கள் ஆனதிக்கத்திலிருந்து விடுதலை பெற உடனடி வழி ஏதாவது கூறுவீரா? V
தி. செல்வமணி, கல்முனை.
பெண்கள் தமது சரிபாதி அரசியலுரிமையைப் பெறப் போராடு வது ஒரு வழியாகும். பாராளுமன்றம் உட்பட அனைத்து அர சியல், சட்டவாக்க, நீதித்துறை, நிர்வாக நிலையங்களிலும் பாதிப் பங்கைப் பெறவேண்டும். பாராளுமன்றத்தில் பால் ரீதியாக பாதி இடங்களைப் பெறின் அமைச்சரவை பிற நிலையங்களிலும் பெற்றுவிடலாம். ஒவ்வொரு தொகுதியிலிருந்தும் ஒரு ஆணையும் பெண்ணையும் கட்டாயமாக இரு பாலாரும் வாக்களித்து சட்ட சபைக்கு ஏன் அனுப்பப்படாது? உலக அரசுகளெல்லாம் ஆணு திக்க அரசாகவே உள்ளன. வாய்ப் பேச்சில் மட்டுமே பெண் களுக்கும் சம பங்கு என்று பேசுவர். செயலில் அல்ல.
- I -

Page 10
பாசிசத்தின் இலக்கணங்கள்
- டாக்டர் புருனுே பிச்சி -
கீழ்க் கண்ட விபரங்கள் அரசியல் ரீதியாக, பாசிசத்திற் குரிய பதினெரு இலக்கணங்களை வரலாற்று அனுபவ அடிப்படையில் வரையறுக்கும். ஐரோப்பாவில் சென்ற 60 ஆண்டுகளுள் இத்தாலி, ஜெர்மனி, ஸ்பெயின் நாடுகளில் பாசிசம் எடுத்த வடிவங்களின் குணம்சங்களை முன்வைத்தே இங்கு ஆராயப்படுகிறது. டாக்டர் புருனே பிச்சி என்பவரின் ஆய்வின் முடிவுகளே இவை :
1) ஒரு புரட்சி முயற்சியின் பின்னரே பாசிசம் ஆரம்ப மாகிறது. பாட்டாளிகளும் நடுத்தர வகுப்பு குட்டி முதலாளிகளுமே இப் புரட்சியில் ஈடுபடுகின்றனர். இவர்களால் சமுக பொருளாதார மாற்றங்களை ஏற்படுத்த முடியாத வேளை பாசிசம் தலைதூக்குகிறது.
2) பாட்டாளியும் முதலாளியும் போராடும் வேளை ஏற்படும் ஈடாட்டத்தின்போது முதலாளி வர்க்கம் தன் படைகளின் பலத் தைக் கொண்டு தன் பக்கமாக ஆதிக்கத்தை நிலைநாட்டிவிடின் பாசிச மாக ஆட்சி மாறுதல் அடையும்.
3) பாட்டாளியின் சர்வதேச கோட்பாட்டிற்கு எதிராக தேசிய இனவாதக் கருத்தியலை முதலாளிகள் வைக்கின்றனர். (புரட்சிக்கு முந்திய) தேசியம் என்ற இடைப்பட்ட நிலை பாசிசத் தினுல் உறுதியாக்கப்படுகிறது.
4) மத்திய தர வர்க்கம் பொருளாதார ரீதியில் பாதிக்கப் படுவதைத் தொடர்ந்து பாசிசம் தோன்றும். முன்னர் குட்டி முத லாளிகளாக இருந்த விவசாயிகள், சிறு கைத்தொழிலாளர், சிறு கடை வியாபாரிகள் பாட்டாளிகளாயினர். பாசிச பிரச்சாரம் குட்டி முதலாளிகளை முதலாளித்துவத்திற்கும் சோஷலிசத்திற்குமிடையில் வைத்துக்கொள்ளும்.
5) பாசிசம் பாட்டாளி வர்க்கத்தை பொருளாதார அரசியல் ரீதியில் அடக்கி ஒடுக்கும்.
6) மையப்படுத்தப்பட்ட கட்டுப்பாடு, கூலியில் தலையீடு, இராணுவத்தில் தொழில் வாய்ப்பு என முன்பிருந்த பொருளாதார நெருக்கடியை பாசிசம் நீக்க முயலும். இராணுவத்தை பரவலாக்கி கூலியைக் கட்டுப்படுத்தும்.
- 16 -

7) பாசிசம் புதிய சந்தைகளையும் மூலப் பொருட்களையும் பெற முயலும். பாராளுமன்றக் கட்டுப்பாடுகளை, சர்வதேச விதிகளை மீறும் இராணுவ ஆதிக்கத்தை வலுப்படுத்தும்.
8) முழுச் சமுகத்தையும் ஒரு தலைவனின் கீழ் கட்டுப்படுத் தும். இராணுவம், பொலிஸ் ஆதிக்கத்தின் கீழ் அனைத்தும் செயற் படும்.
9) சுதந்திரம், மனிதாபிமானம், சமுதாய உணர்வுகளை எதிர்க் கும் அரசியல் கோட்பாடு கொண்டதே பாசிசம்; இனவாதம், சோஷலிச எதிர்ப்புக் கொள்கைகளைக் கொண்டிருக்கும். சிறுபான்மை இனத்தை நசுக்கும் நடவடிக்கையில் ஈடுபடும்.
10) பாசிசம் சர்வாதிகார அமைப்பானது, சமுகத்தின் அத்தி வாரத்தை அடக்குமுறை மூலம் கட்டியடக்கிவிடும். ஒரு சிலரின் ஆதிக்கத்தில் அரசியலாதிக்கம் நிலவும். "புரட்சிகரமான' பிரச்சார முறை ஆட்சிக்கு அணிகலனக விளங்கும்.
11) பாசிசத்தின் கீழ் வியாபகமாக, நடைமுறையாக கட் டப்படும் பயங்கரவாதம் சமுக வாழ்வை ஊடுருவி நிற்கும்.
A கலையில் அழகு என்பது முதலாவதாக சிந்தனையூட்டும்
உள்ளடக்கத்தின் அழகேயாகும்.
பூரண அழகியல் என்பது சமூக ரீதியாகத் தீர்மானிக்கப் பட வேண்டும்.
A கலை ய ழ கும் யதார்த்தமாக நாம் காணும் அழகும்
ஒன்றல்ல.
கலையழகு என்டது குறிப்பிட்ட கலைவடிவத்தில் யதார்த் தத்தை ஒன்றிணைத்து மறு உற்பத்தி செய்வது.
A முதலாளித்துவ கலை முதலாளித்துவ சமூகத்தை நீதிப் படுத்தி முதலாளித்துவ பண்பாடு ஒழுக்க முறைகளை கற் பிப்பது. முற்போக்கு இலக்கியம் முதலாளித்துவத்தில் உள்ள வர்க்க முரண்பாடுகளையும் வெளிப்படுத்த வேண்டும்.
- 7 -

Page 11
மத்திய கிழக்கில் ஒரு சோஷலிச நாடு
தென் யேமன் குடியரசு
вне தியாகு mww
இந்து சமுத்திரம் வழியாக மத்தியதரைக் கடலில் நுழையும் வேளை கப்பல்கள் முதலில் தரிக்கும் துறைமுகம் ஏடன் ஆகும். இது 3 லட்சத்திற்கு மேற்பட்ட குடித்தொகை கொண்ட தென் யேமன் மக்கள் ஜனநாயகக் குடியரசின் தலைநகர். வடயேமன், சவுதி அரே பியா அயல் நாடுகளாக உள்ளபோதும் பல வகையில் தென் யேமன் வேறுபட்டுள்ளது.
தென் யேமன் குடியரசு பிரிட்டனின் ஆதிக்கத்திலிருந்து 1967ல் விடுதலை பெற்றது. அரேபிய நாடுகளில் தனித்துவ சோஷ லிச நாடாக விளங்குகிறது. சீன, சோவியத் ஆதரவு மிக்க நாடு. இலங்கையிலும் பார்க்க 14 மடங்கு பெரியது. குடித்தொகை 23 லட் சம் மட்டுமே.
பருத்தி, கோப்பி, புகையிலை, பழங்கள், காய்கறி பயிரிடப்படு கின்றன. எண்ணெய், மீன்பிடித்தல், துறைமுக வருமானமும் பொருளாதாரத்திற்குத் துணையாக உள்ளன. தென் யேமன் மற் றைய அரபு நாடுகளுடன் ஒப்பிடும்போது கல்வியறிவில் முன் நிற் கிறது, மாக்சியம் - லெனினிசம் கட்டாய பாடமாகக் கற்பிக்கப்படு கிறது. பாடசாலைகள் கல்லூரிகள் யாவும் மற்றைய இஸ்லாமிய நாடுகள் பேர்லல்லாது இருபாலாரும் ஒருங்கே கற்கின்றனர். பெண் கள் முட்டாக்குப் போடவேண்டியதில்லை. அரபு நாடுகளில் முன் னேறிய பெண்கள் இங்கேயே உள்ளனர். அவர்கள் நீதிமன்றங்களில் வாதிடுவது, ஆர்ப்பாட்டங்களில் ஈடுபடுவதைக் காணலாம். ஒரு தார மணமுறை நிலவுகிறது.
மதுபானத் தடை இங்கு இல்லாததால் வார இறுதி நாட் களில் வட யேமனியர் எல்லைகளைக் கடந்தும் இங்கு வருகின்றனர் எனக் கூறப்படுகிறது.
குற்றங்களுக்கு அங்கவீனம் செய்தல், சோரம் போதலுக்கு கல் லடித்துக் கொலை செய்தல் போன்று சில அரபு நாடுகளில் நிலவும் கடும் போக்கு தண்டனைகள் "மனிதாபிமானமற்றவை" என இங்கு விலக்கப்பட்டுள்ளன.
“சகோதரர், சகோதரியர்" என பரவலாகி ஒருவரை ஒருவர் அழைத்துக் கொள்கின்றனர்.
அண்மையில் வடயேமனை தென் யேமனுடன் இணைக்கும் முயற்சிகளும் இஸ்லாமிய எழுச்சிக்கு வழிவிடும் போக்குகளும் காணப் படுகின்றன. கிழக்கு ஐரோப்பிய, சோவியத்தில் ஏற்பட்டு வரும் ஜனநாயகப் போக்கின் தாக்கங்கள் இங்கும் ஏற்பட்டு வருகிறது போலும். ஆதாரம்: கம்பஸ் நியூஸ், இந்து.
- 18 -

மானிட உடல் ஒரு விற்பனைப் பண்டம் - மதி --
சிேதலாளித்துவம் தோன்றி மனித உழைப்புச் சக்தியை பண்ட மாக்கியது. மார்க்ஸ் என்ற சமூக விஞ்ஞானியே முதன் முதலில் இதை நிரூபித்துக் காட்டினார். மூலப் பொருளுக்கு விலை கொடுப் பதுபோல தொழிலாளியின் உழைப்புச் சக்திக்கும் கூலி கொடுத்து முதலாளி பண்டமாக்குகிறான். பின்னர் வசதிபோல மாதம், வருடம் கழித்தே சந்தையில் விற்கிறான். தொழிலாளி உற்பத்தியின்போது இழப்பது உழைப்புச் சக்தி. அதுவே மூலப்பொருளைப் பணடமாக் கியது. ஆகவே ஒவ்வொரு பண்ட்த்துள்ளும் பண்டமாக்கப்பட்ட உழைப்புச சக்தி மறைந்து உள்ளது. (அதில் உபரி உழைப்பும் சேர்ந்துள்ளது.)
இன்றைய முதலாளித்துவ உலகில் மனித உடற்கூறுகள், இரத் தம் அனைத்திற்கும் உலகச் சந்தையில் விலை உண்டு.
நிலப்பிரபுத்துவ காலகட்டத்தில் மானிட உடல்கள் பலவகை யாகப் பயன்பட்டன.
*நரபலி. நரமாமிசம். பிள்ளைக்கனி அமுது" என்ற வார்த்தை கள் தமிழில் வழக்காக இருப்பது மட்டுமல்ல. இன்று ஆழமான அநாகரிக அர்த்தம் கொண்டவையாகவும் உள்ளன.
திருத்தொண்டர் புராணம் ‘பிள்ளைக் கனி அமுதுக்கு" இன்றும் சிறப்பாக பிரசங்கியாரால் பேசப்படுகிறது; அதற்கு அவர்கள் புது விளக்கம் தரலாம். கடவுளே நரமாமிசம் கேட்டார் என்பது வெறும் கற்பனை என்றுமட்டும் கூறிவிட முடியாது. அரிதான வழக்கமாக
உணவாக இருந்திருக்கலாம்.
எதிரியின் இரத்தத்தைக் குடித்தல், தலை மயிரில் பூசுதல், குடலை மாலையாகப் போடுதல் ஆகியன புராண இதிகாசங்களில் மட்டுமல்ல இன்னும் பேசப்பட்டு வருகிறது.
பிரசவத்தின் பின் உயர்சாதிப் பெண்ணால் குழந்தைக்கு பால் வழங்க முடியாது போயின் தாழ்ந்த சமூகப் பெண்களை வீட்டில் வைத்து பாலூட்டச் செய்வது இலங்கை உட்பட பல நாடுகளில் வழக்கத்திலிருந்தது. டானியலின் நாவல்களில் யாழ்ப்பாண வழக் கத்தைக் காணலாம்.
- 19 -

Page 12
உயர் சாதியினரின் மாறா இருமலுக்கு மனித இரத்தம் நல்ல மருந்து என்ற கருத்து சீனாவில் உண்டு. நிலப்பிரபு வீட்டுக்காரரின் இருமலுக்கு அடிமை விவசாயியின் இரத்தம் பெறுவதை லூ சனின் சிறுகதை ஒன்றில் காணலாம்.
இரண்டாவது உலக யுத்தத்தின்போது பல லட்சம் யூதர்கள் எரிவாயு அறைக்குள்ளால் (Gas Chamber) அனுப்பப்பட்டு உயி ரோடு எரிக்கப்பட்டது அண்மைய வரலாறு. அன்னாரின் எலும்பு கள் சேகரிக்கப்பட்டு பலவகையில் பயன்படுத்தப்பட்டன. இறந்த வரின் தோல்கள் கூட உரிக்கப்பட்டு பிரயோசனப்படுத்தப்பட்டது.
Dனித மயிர் உலகச் சந்தையில் விற்பனையாவதைப் பலர் அறிந்திருப்பர். திருப்பதி கோவிலுக்குச் சென்று நாள்தோறும் பெண்கள் உட்பட பல்லாயிரம்பேர் மொட்டையடிப்பதை யாவரும் அறிவர், இந்த மயிர்களை ஏலத்தில் வாங்கி யப்பான், ஜேர்மனி உட்பட பல நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன. இதை மயிர்தானே என்று விட்டு விடலாம். இரத்தம் விற்பனையாவதை யும் அனைவரும் அறிவர். நீரகப்பை (Kidney) உலகில் மலிவாகக் கிடைக்கும் நாடு இந்தியாவாகும். நீரகப்பை நபருக்கு இரண்டு உண்டு. ஒன்றுடனேயே உயிர் வாழலாம். இரண்டும் பழுதடைந்த வர்கள் பணத்திற்குத் தர தயாரானவர்களிடமிருந்து ஒன்றை சத் திர சிகிச்சை மூலம் அகற்றி விலை கொடுப்பவருக்குப் பொருத்திவிட லாம். இவ் விற்பனையில் இந்தியாவில் பல தரகர்களே உள்ளனர். இச்சத்திர சிகிச்சையில் சிறுநீரகப் பை பொருத்தப் படுபவரிலும் பார்க்க அதை வழங்குபவரே அதிக துன்பத்திற்கு ஆளாகிருர், as மின்றி கண்தானம் வழங்குவதில் இலங்கை முதன்மை பெறுகிறது. அதற்கு விலை பேசும் நாடுகளுமுண்டு.
அமெரிக்காவில் ஆராய்ச்சிக்காக பல வகையில் மனித இரத்தம் உறுப்புகள் சந்தையில் விற்கப்படுகின்றன.
கர்ப்பத்தில் வளரும் சிசுக்களே விலை பேசி விற்கப்படுகின்றன. சிசு வின் மாத வளர்ச்சியை ஆராய்வதற்காக பல பெண்கள் கருச்சிதைவுக் குத் தயாராக விலை பேசுகின்றனர்.
இத்தகைய விற்பனைகளுக்கு சட்ட அனுமதி உண்டா என்ற விறை எழுந்து வந்தது.இரத்தம், உறுப்பு வழங்குபவருக்கு விலைபெறும் உரிமை தனிச் சிறப்புரிமை, (PATENT) உண்டா என்ற பிரச்சினை இருந்து வந் ჭნჭვნl •
·一 20一

1988இல் முதன் முதலாக கலிபோர்னியாவில் (அமெரிக்கா) உள்ள நீதிமன்றம் புதிய தீர்ப்பை வழங்கியது. இதன்படி மனித இரத்தம், உறுப்புக்கள் வழங்கப்பட்ட போதும் அது வழங்கியவருக்கே உரியது என்றவாறு முடிவு கூறியது. மூர் (MOORE) என்பவருக்கு 1976இல் விசித்திரமான இரத்தப் புற்றுநோய் ஏற்பட்டிருந்தது. அவரது இரத் தத்தில் விசித்திர இரசாயனத் தன்மை இருப்பதை டாக்டர்கள் கண்டு ஆராய்ச்சி செய்தனர். அன்னரின் இரத்தம், எலும்புத்தோல், புறத் தோல், விந்து யாவும் ஆய்வுக்கு எங்கும் பயன்படுத்தப்பட்டன. மூர் 1988 இல் அச்சொத்துக்கள் தமக்கு உரியன, வருமானத்தில் பங்கு தர வேண்டும் என நீதிமன்றத்தை வேண்டினர். நீதிமன்றம் ஏற்றுக்கொண்
ة الأسنا
இந்த முடிவு முதலாளித்துவ வளர்ச்சியின் முடிவாகும். உலக நாடு களிளெல்லாம் இம் முடிவுதாக்கம் ஏற்படுத்தத்தொடங்கியுள்ளது.மனித இரத்தம், தமது அவய்வங்களுக்கெல்லாம் சட்ட ரீதியாக விலை பேசும் நிலைக்கு இன்று உலகம் வளர்ந்து வந்துள்ளது.
சோவியத் யூனியனிலும் கிழக்கு ஐரோப்பாவிலும் ஏற் பட்டு வரும் தேசீயம், இன ரீதியான விழிப்பு நிலை, இனக் கிளர்ச்சி ஆகியவற்றின் புதிய எழுச்சி எமது நாட்டிற்கு மிக்க * உறுதியாக ஒன்றைக் கூறுகிறது. தேசீயம் அல்லது ஆதி காலத்து உணர்வு நிலைகள் தவிர்க்கமுடியாதது அல்லது ஒரு காலகட்டத்தில் ஏற்பட்டுக் கழிந்துசெல்வது என்பதே.
நாம் அளவு மீறி பின்னுேக்கிப் பார்க்கக்கூடாது. சுருக்க மாகக் கூறின் சோஷலிசத்தில் ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலையி
லிருந்தே கோட்பாட்டுப்பாய்ச்சல் ஏற்படுகிறது.
- தயான் ஜெயத்திலகா
- 21 -

Page 13
அம்மாவின் பிள்ளை
- செ. கணேசலிங்கன் -
“ஆனந்தன், நீ யாருடைய பிள்ளை? அப்பா தனிமையில் G5 LIT ri :
"அப்பாவின் பிள்ளை."
அம்மா நிலா காட்டி சோறுாட்டும் போது கேட்டாள் :
* அம்மாவின் பிள்ளை."
அம்மாவும் அப்பாவும் ஆனந்தனேடு விளையாடும்போது அப்பா கேட்டார் :
'நான் அம்மா பிள்ளை; அப்பா பிள்னை."
ஆனந்தனுக்கு இப்போது நாலு வயது. அவன் ஒரு பூனைக் குட்டியை வளர்த்து வந்தான். அது இரு தடவைகள் குட்டி போட்டன.
பூனை குட்டிகளைச் சுமந்த வயிற்றேடு அது விளையாட மறுத்தது. அப்பாவையும் அம்மாவையும் அவன் பூனையைப் பற்றிக் கேள்விகள் கேட்டுக்கொண்டே இருந்தான்.
அவ்வேளை அம்மாவின் வயிறும் உப்பி இருந்தது. "விளையாட ஒரு தம்பி வரப்போகிருன்." அப்பா கூறி வந்தார். ஆனந்தன் எப்போது என்று கேட்டுக்கொண்டே இருந்தான்.
* "பூனையின் அப்பா எங்கே?’ அடிக்கடி கேட்டான்.
"கள்ளப் பூனை ஓடிவிட்டது. பதில் அவனுக்கு திருப்தியாக இல்லை.
குட்டிகளைச் சுமந்த வயிற்ருேடு பூனை அவன் பிடியிலிருந்து பாய்ந்தது; தவறிக் கீழே விழுந்தது; துடித்தது.
ஆனந்தன் தன் பாலை பூனைக்குக் கொடுத்தான். இரவு அது குட்டிபோடும் துன்பத்தைப் பார்த்தான். நாலு குட்டியில் இரண்டு இறந்துவிட்டது.
ஆனந்தன் அழுதுகொண்டே படுத்தான்.
ஆனந்தனுக்கு ஒரு தங்கச்சி கிடைத்துவிட்டாள். அம்மா ஆசு பத்திரியில் அழுவதைப் பார்த்தான்; மறுநாள் படுத்திருந்தபடி சிரிப் பதையும் கவனித்தான். அம்மா இரவு தூங்காது குழந்தை அழும் போது பால் கொடுப்பதையும் கண்டான்.
- 22 a

சிறுநீர் கழித்து பீச்சியடிப்பதையும் அவனுல் மறக்கமுடிய வில்லை. அம்மா வீட்டு வேலைகளோடு குழந்தையையும் தன்னையும் கவனிப்பதையும் நாள் தோறும் பார்த்தான்.
அன்று அப்பா கேட்டார்.
'நீ ஆருடைய பிள்ளை?”
ஆனந்தன் உடன் பதில் கூறவில்லை. அப்பா ஆச்சரியத்தோடு பார்த்தார்.
'என்ன பார்க்கிருய்? சொல்லு."
"உண்மை சொல்லுறதா? பொய் சொல்லுறதா?"
ஆனந்தன் கேட்டான்.
"ஒருபோதும் பொய் பேசப்படாது. உண்மையைச் சொல்லு."
"நான் அம்மா பிள்ளை."
சிரித்துக்கொண்டே சொன்னன். அப்பா வியப்படைந்தார். அவரது முகம் சோர்வதைக் கண்டான்.
"அப்படியானல் நான் உன்ஞேடு கோபம்."
அப்பா சொன்னர். "நீங்கள் பொய் பேசவேண்டாம் என்று சொன்னீர்களே." ஆனந்தன் கூறினன். 'ஏன், அம்மா பிள்ளை என்று இப்போது சொல்லுகிருய்?”
அப்பா கேட்டார்.
**அம்மாதானே என்ன வயிற்றில் சுமந்தவர். தங்கச்சி வயிற் றில் இருக்கும்போது சத்தி எடுத்தார். சாப்பிடாமல் கிடந்தார். நடக்க முடியாது கஷ்டப்பட்டார். தங்கச்சி பிறக்கும்போது ஆசு பத்திரியில் அம்மா வயிற்று நோவால் துடித்து அழுவதைப் பார்த் தேன்.""
ஆனந்தன் போசுவதை இடைநிறுத்தி அப்பா சொன்னர் : "இப்பொழுது அம்மா குழந்தையைக் கொஞ்சிச் சிரிப்பதை நீ பார்க்கவில்லையா?" •

Page 14
"இப்போதும் அம்மாதான் பால் கொடுக்கிருர். இரவெல் லாம் தூங்குவதில்லை. மூத்திரத் துணியை மாற்றுகிறர். தோய்க் கிருர். 'சீ'யை அள்ளுகிருர், குளிக்கவார்க்கிருர். இப்படித்தானே என்னையும் வளர்த்தார். அப்பா இல்லாமலே என் பூனை குட்டிகளை வளர்க்கிறது. அம்மா இல்லை என்ருல் நான் பிறந்திருக்க முடியாது. வளர்ந்திருக்கவும் முடியாது. அப்போது எப்படி உங்கள் பிள்ளையாக முடியும்?"
"நான்தானே எல்லாப் பொருளும் வாங்குவதற்குப் பணம் உழைத்துக் கொடுக்கிறேன்.” அப்பா கூறினர். *அம்மாவும் உழைக்கிருர்தானே, உங்களுக்கு சோறு ஆக்கிப் போடுகிறது, ஆர்? இரவும் பகலுமாக எல்லா நாளும் அம்மா வேலை செய்கிருர். நீங்கள் பகலில் மட்டுந்தானே ஆபீசுக்குப் போகிறீர்கள். சனி, ஞாயிற்றுக்கிழமை லீவு. அம்மாவுக்கு அதுவும் கிடையாது."
ஆனந்தன் பதிலளித்தான். "உனக்கு ஆரெடிா இதெல்லாம் சொல்லித்தந்தது?" அப்பா கோபத்தோடு கேட்டார். "நான்தானே எல்லாவற்றையும் நேரில் பார்க்கிறேனே. அந்த் உண்மையைத்தான் சொல்லுகிறேன்.”
ஆனந்தன் சிறிதும் தயக்கமின்றிக் கூறினன்.
**நான் பணம் கொடுக்காவிட்டால் நீ பட்டினிதான் கிடப் பாய். அம்மா உனக்கு எப்படிச் சோறு போடுவாள்?"
அப்பா சிறுவன் வாயை அடக்கிவிட்டதுபோல் கூறினர்.
*" என்னையும் தங்கச்சியையும் அம்மாதானே வயிற்றில் சுமந்து பெற்ருர். தன் பாலைத் தந்துதானே வளர்த்தார். என்னுடைய பூனை அப்பா இல்லாமலே குட்டிகளைப் பெற்று வளர்க்கவில்லையா? அதே போல அம்மாவும் நான் பெரியவனகும்வரை வளர்த்துவிடுவார்தானே. பிறகு நான் அம்மாவுக்கு உழைத்துக் கொடுப்பேன். அந்தப் பூனைக் குட்டிகளைப் பாருங்கள். அம்மாவுக்குப் பின்னாலேதானே ஒடுகின்றன. குட்டிகள் அம்மாவின் பிள்ளைகள்?"
ஆனந்தன் உறுதியாகக் கூறினன். தோல்வியடைந்த அப்பா வால் எதுவும் பேசமுடியவில்லை.
(சிறுவர்க்கான சிந்தனைக் கதைகளில் இருந்து)
- 24 -

அரிய நூல்கள் மீண்டும் கிடைக்கும்
1. சூரியன் கிழக்கில் உதிப்பதில்லை செ. கணேசலிங்கன் 33.00 2. பெண்ணடிமை தீர 48.00 3. குமரனுக்குக் கடிதங்கள் Pop 21.00 4. போர்க்கோலம் - A9 14.25 . மண்ணும் மக்களும் P. p. 10.50 6. அயலவர்கள் 45.00 7. பொய்மையின் நிழலில் 9 37.50 8. அந்நிய மனிதர்கள் V U 13.50 9. வதையின் கதை I5、75 10. கலையும் சமுதாயமும் P 11.25 11. குந்தவிக்குக் கடிதங்கள் 9 18.00 12. மான்விழிக்குக் கடிதங்கள் P 16.50 13. சிறுவர்களுக்கான சிந்தனைக் கதைகள் a 24。00 14. அபலையின் கடிதம் 鼻 鲈 3.75 15. சொந்தக்காரன் பெனடிக்ற் பாலன் 13.50
16. மக்கள் தொடர்பு சாதனமும் மகளிரும்
சந்திரிகா சோமசுந்தரம் 21.00
17. மதமாற்றம் - நாடகம் அ. ந. கந்தசாமி 30.00 18. கைலாசபதியும் நானும் கே. எஸ் சிவகுமாரன் 12.00
19. மரணத்திற்குப் பின் பொ. சங்கரப்பிள்ளை 45、00 20. சைவசித்தாந்தம் 30.00
பொ. சங்கரப்பிள்ளை அவர்கள் 21.2.90 அன்று அமெ ரிக்காவில் மரணமடைந்த செய்தியை வருத்தத்துடன் தெரிவித்துக்கொள்ளுகிறேம்.
விற்பனையாளர்க்கு கழிவு உண்டு. வி. பி. பி. ஏற்கப்படும். முன்பணம் அனுப்புவோருக்கு பார்சல் செலவு இனும், குமரன் புத்தகசாலை
201, டாம் வீதி, கொழும்பு - 12 தொலைபேசி 421388

Page 15
KUMARAN-75 (01-04-1
குமரன்
கலை, இலக்கியத்தில் யதார்த்த6 இரு பிரிவுகளிடை அகண்ட வேறுபா ஒன்ருகக் கொள்ளும் மயக்க நிலை தட காணப்படுகிறது. கலாநிதி கைலாசL ஆதாரங்காட்டி இயற்பண்பு வாதத் GTITri ,
பாசிசம் என்ற சொல் அனைவ இலக்கணங்களை பலரும் அறியார். ட றைப் படிக்கவும்.
முதலாளித்துவத்தில் மானிட உ சட்டரீதியாக விலைபோகும் காலம் ெ
ஜப்பான், ஜெர்மனி பொருளாத நிலையில் இன்று வளர்ந்து வருவத போதும் அமெரிக்கா இராணுவச் .ெ இதனல் 1990 களில் அமெரிக்க வீழ் சுவீசியின் கட்டுரைத்தொடர் முடிகி
உலகப் பெண்கள் தினத்தையெ பெற்றதைப் பலர் பாராட்டி எழுதி களை ஆங்காங்கே காணலாம்.
குமரன் 75வது இதழ் சலசலப்பி
கிறது. இதுவரை காலம் இதழ்களை, கூருகிறேன்.
அச்சு : குமரன் அச்சகம், ஆசிரியர் : செ. கணேசலிங்க

201, DAM STREET,
990 ) COLOMBO-12,
குரல்
வாதம், இயற்பண்புவாதம் என்ற ாடுகள் உள. இவற்றை நன்கறியாது மிழ் இலக்கிய உலகில் பரவலாகக் பதியின் தெளிவான கூற்றுகளை 1தை மாதவன் விளக்க முயன்றுள்
ராலும் பேசப்பட்டபோதும் அதன் மார்க்சிய அறிஞர் ஒருவரின் கூற்
டற்கூறுகள், இரத்தம் முதலியன பந்துள்ளதை 'மதி கூறுகிருர்,
தார நிலையில் மட்டுமே ஆக்கிரமிப்பு ாலும், யுத்தவாய்ப்பு இல்லாத சலவைக் குறைக்கத் தயாரில்லை. ச்சி தவிர்க்கமுடியாததென போல் றது. ༤.
ாட்டி குமரன் 74 இதழ் சிறப்புப் னர். இவ்விதழிலும் தொடர்ச்சி
ன்றி எளிமையாகவே வெளிவரு த் தேடிப் படித்தவர்களை நினைவு
- ஆசிரியர்
201, டாம் வீதி, கொழும்பு-12, ër