கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: மதமும் அறிவியலும்

Page 1

கலl6 பதிப்பகு5

Page 2


Page 3

மதமும் அறிவியலும்
கலாநிதி எம்.ஏ.எம். சுக்ரி
அல்-கலம் வெளியீடு

Page 4
MATELAM UM AR VYA LUM
by Dr. M.A.M. SHUKRY
First Edition: 1994
(C) Copyright reserved
Printed by: Quick Graphics Print
5-1/20, Super Market, Kotahena, Colombo 13. Te: 432627
Published by: Al-Qalam Pathippaham 26/2, Yusuf Avenue, Beruwala. Phone. O34-76.795.

மதமும் அறிவியலும்
அறிவியலும தொழில்நுட்பமும் மாபெரும் வளர்ச்சியைக் கண்டு மனித வாழ்வில் அற்புதமான மாற்றங்களை ஏற்படுத்தியுள்ள இன்றைய காலகட்டம் அறிவியல் யுகம் என அழைக்கப்படுகின்றது. பகுத்தறிவுக்கும், சுதந்திரமான சிந்தனைக்கும் ஆய்வு முயற்சிகளுக்கும் அறிவியல் வளர்ச்சி களம் அமைத்துக்கொடுத்துள்ள நவீன காலப்பிரிவில் நம்பிக்கை, விசுவாசம் ஆகியவற்றின் அடிப்படையில் அமையப்பெற்ற மதத்தின் நிலைபற்றிய வினாக்கள் அவ்வப்போது எழுப்பப்படுவதைப் பார்க்கின்றோம். மனித வரலாற்றில் மத நம்பிக்கைகள் செல்வாக்குச் செலுத்திய காலம் மறைந்து , அறிவியல் ஆதிக்கம் செலுத்தும் புத்துலகம் தோன்றிவிட்டதாக ஒரு பிரமை தோற்றுவிக்கப்பட்டுள்ளது. மதத்தினதும், அறிவியலினதும் களங்களையும், பரிமாணங்களையும் தெளிவுபடுத்தி ஐரோப்பிய வரலாற்றில் மத்திய காலப்பிரிவில் மதத்திற்கும், அறிவியலுக்குமிடையில் நடைபெற்ற போராட்டத்தின் வரலாற்றுப்பின்னணியை விளக்கி, மதத்திற்கும் அறிவியலுக்கும் இடையில் உள்ள தொடர்பு பற்றிய இஸ்லாமிய நோக்கை இந்நூல் விளக்குகின்றது. சிந்தனைத்தெளிவை வேண்டி நிற்கின்ற ஒரு தொனிப்பொருள் பற்றிய இந்நூல் வாசகர்களின் அறிவுக்கு விருந்தாக அமையும் என்ற நோக்கில் இதனைச் சமர்ப்பிக்கின்றேன்.
இந்நூலை வெளியிட்டு வைப்பதில் ஆர்வத்துடன் ஈடுபட்ட அல்-கலம் பதிப்பகத்தாருக்கு எனது நன்றி உரித்தாகட்டும்.
தாருல் புஷ்ரா
60, ராகுல வீதி, மாத்தறை, கலாநிதி எம்ஏ.எம். சுக்ரி ஜமதுல் அவ்வல் 26, 1418
செப்டம்பர் 29, 1997

Page 5
பொருளடக்கம்
1. மதமும் அறிவியலும் .
2. அறிவியல்- அதன் பண்பும் வரம்புகளும் . 17
3. அல் குர்ஆனின் அறிவியல் பரிமாணம் . 28
4. இறைத்தூதின் அவசியம் . 37

1. மதமும் அறிவியலும்
மதமும் அறிவியலும் இரு வேறுபட்ட துறைகளைச் சார்ந்தவையெனவும், அவை பரஸ்பரம் முரணான அணுகலையும், கோட்பாடுகளையும் கொண்டுள்ளவையென்றும், எனவே மதத்திற்கும் அறிவியலுக்குமிடையில் நிலவும் மோதலும் முரண்பாடும் நித்தியமானவை எனவும் பொதுவாகக் கருதப்படுகின்றது. இந்தக் கருத்தை முன்வைப்போர் மதம் என்பது மூடக்கொள்கையினதும், அறியாமையினதும் அடிப்படையில் தோன்றி வளர்ந்த ஒரு சமுக நிறுவனமாக விளங்க, அறிவியலானது பகுத்தறிவு, சிந்தனை, ஆராய்ச்சி என்பனவற்றினடியாகத் தோன்றி வளர்ச்சியடைந்ததாக உள்ளது எனக் குறிப்பிடுகின்றனர். இவர்களது கருத்துப்படி மதம் என்பது பிற்போக்குத்தனம் படைத்தது ஆனால் அறிவியலோ முற்போக்குச் சிந்தனை கொண்டது. மதமானது மனிதனின் சிந்தனை வளர்ச்சியும் முதிர்ச்சியும், முன்னேற்றமும் அடையாத மனித வரலாற்றின் காலகட்டத்தில் தோன்றி அக்கால மனிதனின் சில
1

Page 6
உளத்தேவைகளைப் பூர்த்தி செய்ததென்றும் ஆனால் கால வளர்ச்சியில் மனிதனின் அறிவுக்கண்கள் அகல விரிவடைய அவனது சிந்தனையின் களம் பரந்துபட்டு, பகுத்தறிவு தீவிரமாகச் செயல்பட மனிதனின் சிந்தனையிலும், சமூக வாழ்விலும் மதத்தின் ஆதிக்கம் படிப்படியாகக் குறைந்து, பகுத்தறிவினதும் ஆராய்ச்சியினதும் யுகம் ஆரம்பமாகியது எனவும் இவர்கள் கருதுகின்றனர்.
பத்தொன்பதாம் நூற்றாண்டின் ஆரம்ப தசாப்தங்களில் வாழ்ந்த பிரெஞ்சுத் தத்துவஞானியான ஆகஸ்ட் கொம்ட் (August Comte) ( 1758 - 1857) மனிதனின் அறிவு வளர்ச்சியின் வரலாற்றை மூன்று முக்கிய படித்தரங்களாக வகுத்து நோக்குகின்றார்.
1. STAGE OF FETICHISM மனிதன் இயற்கையையும், ஆவிகளையும் தெய்வங்களாகப் பாவித்து, அவற்றை வணங்கியும், அவற்றிற்காக பலியிட்டும், பூஜைகள் மூலம் அத்தெய்வங்களைத் திருப்திப்படுத்தலிலும் ஈடுபட்டு வாழ்ந்த காலப்பிரிவு.
2. META PHYSICAL STAGE: arra-Ga GTT "r j flufociò, i nGlasg, sy graựiro, சிந்தனையும் முன்னேற்றமடைந்து, இயற்கையை வழிபட்ட நிலையிலிருந்து விடுபட்டு இப்பிரபஞ்சத்தை இயக்குவிக்கும் ஒரு சக்தியை மனிதன் விசுவாசித்த காலகட்டம். இக்கால கட்டத்திலேயே மதம் என்ற நிறுவனம் சமூகத்தில் தோற்றம் பெற்று வளர்ச்சியடைகின்றது.
3. STAGE OF POSITIWISM: இந்த மூன்றாவது படித்தரம், முன்னையவற்றைவிட வளர்ச்சியடைந்ததாக அமைந்தது. இக் கட்டத்தில் மனிதன் அன்றாட நிகழ்வுகளை "கடவுள்", "ஆத்மா" ஆகியவற்றின் அடிப்படையில் விளக்காது. அவனது அவதானம் (Observation) அளவு (Measurement)ஆகியவற்றின் அடிப்படையில் பெறப்பட்ட பொதுவான விதிகளின் அடிப்படையில் விளக்க முற்பட்டான். அவுனால் அறிவு வளர்ச்சியடையாத படித்தரங்களில், இயற்கைக்கு அப்பாற்பட்ட தெய்வீக சக்திகளின் செயல்களாக விளக்கப்பட்டவை இப்போது இயற்கை விதிகளின் அடிப்படையில் விளக்கப்பட்டது.

இவ்வாறு மதம் என்பது மனித நாகரிக வளர்ச்சியின் மிக ஆரம்பகட்டத்தில், மனிதனின் அறிவு வளர்ச்சியும், ஆராய்ச்சி உணர்வும் போதிய வளர்ச்சியைக் காணாத காலப்பிரிவில், அவனது சில உள, உணர்வுத் தேவைகளைப் பூர்த்தி செய்யத் தோன்றிய நிறுவனமாகும் என்ற கருத்தை ஆகஸ்ட் கொம்டும், அவர் வழிவந்த சமூக இயல் ஆய்வாளரும் கொண்டிருந்தனர்.
மனிதனின் அறியாமை, அச்சம், தனிமை உணர்வு ஆகியவற்றின் அடிப்படையில் தோன்றிய மதம் மனித அறிவின் வளர்ச்சியோடும், சிந்தனை முதிர்ச்சியோடும் சமூக வாழ்விலிருந்து ஒதுங்கி ஆராய்ச்சிக்கும், அறிவியலுக்கும் இடமளித்தது என்பது இவர்களது கருத்தாக அமைந்தது. இந்தக் கருத்தின் பின்னணியிலேயே, அறிவு வளர்ச்சியும் ஆராய்ச்சி உணர்வும், அவற்றினடியாக எழுந்த அறிவியலும் தொழில்நுட்ப நாகரிகமும் ஆதிக்கம் செலுத்தும் இன்றைய வளர்ச்சியடைந்த, பண்பட்ட சமூக அமைப்பில், அறிவும் சிந்தனையும் முதிர்ச்சியடையாத காலகட்டத்தில் தோன்றிய மதத்திற்கான தேவை என்ன? என்ற வினா எழுப்பப்பட்டது. அறியாமையினதும் மூட நம்பிக்கையினதும் அடிப்படையில் தோன்றிய மதமானது எப்பொழுதும் புதிய சிந்தனைகள், கருத்துக்கள். அணுகுமுறைகள், ஆய்வு முயற்சிகளுக்கு எதிராகவே செயல்பட்டு வந்துள்ளது. மனித அறிவின் சுதந்திரமான ஓட்டத்திற்கு தடைக்கல்லாகவே அது விளங்கியுள்ளது. எனவே அறிவியல் யுகத்தில் மதத்திற்கான எந்த ஒரு அவசியமும் இல்லை என மத நம்பிக்கைக்கு எதிராக குரல் எழுப்பும் இவர்கள் வாதிடுகின்றனர். மனிதனின் அனைத்து அறிவு, உனர்வுத் தேவைகளையும் பூர்த்தி செய்யும் ஆற்றலை அறிவியல் பெற்றுள்ளது அறிவியல் இயற்கை விதிகள் பற்றி விளக்க, அதனடியாக எழுந்த தொழில்நுட்பம் மனித வாழ்வினை வசதியும், வளமும் மிக்கதாக ஆக்கியுள்ள இன்றைய உலகில் மதத்திற்கு எந்த ஒரு பங்கும் இல்லை என இவர்கள் கருதுகின்றனர்.
அறிவியலும், மதமும் பரஸ்பரம் முரண்படும் தன்மை கொண்டவையா? அறிவியலுக்கும் மதத்திற்குமிடையிலான மேற்குறிப்பிட்ட சமூகவியல் ரீதியான விளக்கம் சரியானதா? அப்படியாயின் அறிவு பூர்வமாக சிந்திக்கும் ஒருவன். அதே

Page 7
நேரத்தில் மத நம்பிக்கையுள்ளவனாக வாழ முடியாதா? மதம் வரலாற்றின் எல்லா காலகட்டங்களிலும், அறிவியலுக்கு எதிராகச் செயல்பட்டுள்ளதா? என்பன போன்ற வினாக்களுக்கு தெளிவான, ஆராய் சி சி பூர்வமான வரிடை கண்டு மதத்திற்கும் . இஸ் லாத்திற்குமிடையிலான தொடர்பை இஸ் லாத்தின் கண்ணோட்டத்தில் விளக்குவதே எமது நோக்கமாகும்.
மதத் திற்கும் அறிவியலுக் குமிடையிலான போராட்டத்தின் ஆரம்பம்
மதம் என்பது அறிவியலுக்கு எதிரானது என்ற கருத்து எப்போது, ஏன் தோன்றியது என்ற வினாவிற்கான விடையை நாம் முதலில் கண்டறிதல் வேண்டும். மதம், அறிவியலுக்கு எதிரானது என்ற கருத்து ஐரோப்பிய வரலாற்றில் நடைபெற்ற சில நிகழ்வுகளை அடிப்படையாக வைத்து எழுந்த ஐரோப்பிய நோக்காகும். தங்களது ஏகாதிபத்தியவாத அமைப்பின் அடிப்படையில் கீழைத்தேய நாடுகளை அடிமைப்படுத்தி தங்களது ஆட்சியை இந் நாடுகளில் திணித்த ஐரோப்பியர், உலக வரலாற்றையும், அதன் நிகழ்வுகளையும் ஐரோப்பாவை மத்தியாக வைத்தே நோக்கினர். உலகம் முழுவதும் ஐரோப்பாவை அச்சானியாக வைத்தே சுற்றிச் சுழலுகின்றது என்ற மனப்பான்மையில் அவர்கள் செயல்பட்டனர். ஐரோப்பிய வரலாற்றின் நிகழ்வுகளின் அடிப்படையில் உலக வரலாற்றின் நிகழ்வுகளை நோக்குவதும், ஐரோப்பிய வரலாற்று அனுபவங்களை உலக வரலாற்று அனுபவங்களாகக் கொள்ளும் மனப்பிரமையும் இதனடியாகவே உருவாகியது. இவ்வாறு ஐரோப்பிய வரலாற்று அனுபவத்தினடியாகத் தோன்றிய ஒரு கருத்தே மதமும், அறிவியலும் பரஸ்பர எதிரிகள் என்ற கருத்தாகும். உலக நாடுகளில் மேற்குலகின் அரசியல் சிந்தனை ஆதிக்கம் காரணமாக இக்கருத்து இன்று ஒரு பொதுக் கருத்தாக மாறியுள்ளது.
ஆனால் உண்மையில் நோக்கும்போது மதத்திற்கும், அறிவியலுக்கும் இடையிலான போராட்டம் உலகில் வேறு எங்கும் நிகழவில்லை. அது ஐரோப்பாவிலேயே நிகழ்ந்தது. உலகில் மனித வரலாற்றில் மதம் அறிவு வளர்ச்சிக்குத் தடையாக எங்கும் அமைந்ததில்லை.
4.

அத்தகைய நிகழ்வு ஐரோப்பாவிலேயே நடைபெற்றது. இதனை உரிய முறையில் விளங்குவதற்கு நாம் மத்தியகால ஐரோப்பாவின் வரலாற்றுப் பின்னணி பற்றி ஒரளவு தெரிந்திருத்தல் வேண்டும்.
மத்தியகாலப் பிரிவில் ஐரோப்பாவில் கிறிஸ்தவக் கோயில் மிக சக்தியும், அதிகாரமும் படைத்த ஒரு நிறுவனமாக விளங்கியது. இக்காலப் பிரிவில் கிறிஸ்தவக் கோயிலின் அதிகாரத்தில் ஆட்சிமட்டுமன்றி அறிவு, கலாசார பண்பாட்டு முயற்சிகளும் கட்டுப் பட்டிருந்தது. சுதந்திர சிந்தனை, அறிவு வேட்கை ஆராய்ச்சிஉணர்வு போன்றவற்றிற்கு எதிராக கிறிஸ்தவக் கோயில் செயல்பட்டது. இக்கால கட்டத்தை ஐரோப்பிய வரலாற்றாசிரியர் பிஷர் (Fisher) தனது ஐரோப்பிய வரலாறு என்னும் நூலில் "அறிவியலானது நிலைபெற்று வளர்ச்சியடைவற்கு துணைபுரியும் சுதந்திரமான ஆய்வுக்கு எதிரான ஒரு சூழல்" (An atmosphere hostile to free inquiry in which science could live and mature - H.A Fisher, History Of Europe) எனக் குறிப்பிடுகின்றார். அறிவுச் சுதந்திரத்தையும், ஆராய்ச்சி உணர்வையும் கிறிஸ்தவக் கோயில் ஆதரிக்காத இச்சூழலில் ஐரோப்பா கல்வி, கலாசாரப் பண்பாட்டுத் துறைகளில் பின்னடைந்து தேக்க நிலை கண்டது.
ஆனால் ஐரோப்பா இருளில் ஆழ்ந்திருந்த இக்காலப் பிரிவில், இஸ்லாமிய உலகின் நிலை இதற்கு முற்றிலும் முரணாக அமைந்தது. இஸ்லாம் ஏற்றிவைத்த அறிவுத் தீபம் சுடர்விட்டுப் பிரகாசிக்க ஆரம்பித்தது. முஸ்லிம்கள் அறிவின் அனைத்து துறைகளுக்கும் அளப்பரிய பங்களிப்பைச் செய்த காலப்பிரிவாகவும், கலாநிலையங்கள், நூலகங்கள். ஆய்வு கூடங்கள், அவதான நிலையங்களைக் கட்டியெழுப்பிய ஒளிமிக்க காலப்பிரிவாக இது விளங்கியது. முஸ்லிம்கள் கலாசாரப் பண்பாட்டு வளர்ச்சியிலும், அறிவுப் பங்களிப்பிலும் ஸ்பெயின் மிக முக்கிய இடத்தை வகித்தது. மத்திய காலப்பிரிவில் ஸ்பெயின் அறிவுப் பங்களிப்பு குறித்து பேராசிரியர் ஹிட்டி பின்வருமாறு குறிப்பிடுகின்றார்.
"முஸ்லிம் ஸ்பெயின் மத்திய கால ஐரோப்பிய வரலாற்றில் மிக ஒளிமிக்க அத்தியாயங்களுள் ஒன்றை உருவாக்கியது. கி. பி. எட்டாம்

Page 8
நூற்றாண்டின் மத்திய பகுதிக்கும்,பதின்மூன்றாம் நூற்றாண்டின் ஆரம்பத்திற்கும் இடைப்பட்ட காலப்பிரிவில் உலகம் முழுவதும் அரபு பேசும் மக்களே கலாசாரத்தினதும், நாகரிகத்தினதும் ஒளியை ஏந்தி நின்றனர். அவர்கள் மூலமாகவே புராதன அறிவியலும், தத்துவமும் அழியாது பாதுகாக்கப்பட்டு, அவர்களது பங்களிப்புகளும் இணைந்து மேற்கு ஐரோப்பாவைச் சென்றடைந்தது. இதுவே ஐரோப்பிய மறுமலர்ச்சிக்குக் காரணமாக அமைந்தது". Hitti, History of Arabs, P557
"மேற்கத்திய உலகம் ஆழமான அறிவைப் பெற விரும்பியபோதும் புராதன சிந்தனையோடு அதன் உறவைப் புதுப்பித்துக்கொள்ள முற்பட்ட போதும், முதலில் அது கிரேக்க மூலாதாரங்களை நோக்கியன்றி, அரபு மூலாதாரங்களை நோக்கியே திரும்பியது"என TTJYTMTT S S S TTTTYS MYT TT SSLLLLLCCCCaa LLLLLLCLLLLSSTLKT SLCCTLTTTLTmCCCTTTT TE S SSLTLCLYCCTLES SSLLCLGGGGLLLLLLCCCCC L CCLCCS of Science) என்னும் நூலில் குறிப்பிடும் கருத்தும் இங்கு கவனிக்கத்தக்கது.
எனவே மத்திய காலப்பிரிவில் ஐரோப்பாவிலிருந்து அறிவுத்தாகமும், ஆராய்ச்சி உணர்வும் படைத்த பலர் அறிவு பெறுவதற்காக முஸ்லிம் ஸ்பெயினை நோக்கியே வந்தனர். இவர்கள் ஸ்பெயினிலிருந்து அறிவு நூல்களைப் பெற்றுச் சென்று அவற்றை ஐரோப்பிய மொழிகளில் மொழிபெயர்த்தனர். ஸ்பெயின் மருத்துவக் கல்லூரியில் கற்றுவிட்டு இங்கிலாந்துக்குத் திரும்பிய பெட்ரஸ் அல்பொன்னபி (Petrus Alfonsi) இங்கிலாந்து மன்னர் முதலாம் ஹென்றியின் மருத்துவராகப் பணிபுரிந்தார். அரபு மூலாதாரங்களைத் தழுவி அவர் எழுதிய வானவியல் நூல்கள் ஐரோப்பிய மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டன.
அவரைத் தொடர்ந்து அடெலாட் (Adeladotbah) ஸ்பெயினுக்கு வந்து டொல்டோ நகரில் தங்கிக் கல்வியைப் பெற்று ஐரோப்பா திரும்பினார். இவர்களைத் தொடர்ந்து மைகல் எப்கொட் (MichelScot) ரோஜர் பேகன் (Roger Bacon) ஆகியோர் எப்பெயினுக்கு வந்தனர். ரோஜர் பேகன், ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தில் அராபிய

அரிஸ்டோட்டவிய தத்துவம்பற்றிய மிகச் சிறந்த விரிவுரையாளராகக் கருதப்பட்டார். அவர் எழுதிய "ptics" என்னும் நூல் முஸ்லிம் அறிவியலாளர் அல்-ஹசனின் நூல்களை அடிப்படையாக வைத்து எழுதப்பட்டது. ஐரோப்பாவில் அறிவியல் துறையில் பரிசோதனை முறையை (Experimental Method) அறிமுகப்படுத்தியவராக ரோஜர் பேகன் கருதப்படுகிறார். இவ்வாறு ஐரோப்பாவிலிருந்து பலர் ஸ்பெயினுக்கு வந்து இஸ்லாமிய கலாசாரங்களைக் கற்று அவற்றை லத்தீன் மொழியில் பெயர்த்து ஐரோப்பாவிற்கு வழங்கினர்.
முஸ்லிம்களின் அறிவுப்பாரம்பரியம் ஐரோப்பாவைச் சென்றடைய இன்னொரு முக்கிய காரணியாக அமைந்தவை சிலுவையுத்தங்களாகும். சிலுவையுத்தங்கள் கீழைத்தேய உலகின் அறிவுப் பாரம்பரியம் ஐரோப்பாவைச் சென்றடைய வழிவகுத்தன. இந்த யுத்தங்கள் முஸ்லிம்களுக்கும், மேற்கத்தியர்களுக்குமிடையில் நடைபெற்ற வெறும் போராக மட்டுமன்றி, கலாசாரப் பண்பாட்டுப் பரிவர்த்தனைக்கும் வழிவகுத்தன என்பது ஆச்சரியத்திற்குரியதாகும். ஐரோப்பாவிற்கும், கீழைத்தேய உலகிற்குமிடையில் வணிகத் தொடர்பு அதிகரித்து பல புதிய நகரங்கள் தோன்றவும் இவை காரணமாக அமைந்தன. இவ்வாறு முஸ்லிம்களின் அறிவு, கலாசாரப் பண்பாட்டுப் பாரம்பரியம் ஐரோப்பாவைச் சென்றடைந்து கி. பி. 12, 13ம் நூற்றாண்டில் ஐரோப்பாவில் சிந்தனைத் துறையிலும், அறிவுத் துறையிலும் ஒரு புத்துணர்ச்சியைத் தோற்றுவித்தது. இதுவே ஐரோப்பிய மறுமலர்ச்சியாகும்
இவ்வாறு முங் விம்களின் கலாசார, பண்பாட்டுச் செல்வாக்கினடியாக ஐரோப்பாவில் அறிவுத் துறையில் ஏற்பட்ட மறுமலர்ச்சியானது, ஒரு தலைப்பட்சமான வளர்ச்சியையும் சில பாதகமான விளைவுகளையும் தோற்றுவித்தது. இதற்கு ஓர் அடிப்படைக் காரணம் உண்டு. முஸ்லிம்களிடமிருந்து வெறுமனே அவர்களது அறிவு வேட்கை ஆராய்ச்சி உணர்வையும், அவர்கள் உருவாக்கிய அறிவியல் கலைகளையும், சுருங்கக் கூறின் அவர்களது நாகரிகத்தின் புறரீதியான, சடfதியான அம்சங்களை மட்டுமே ஐரோப்பியர்கள் பெற்றுக்கொண்டனரன்றி, இஸ்லாத்தின் விழுமிய போதனைகள், ஒழுக்கப் பண்பாடு, பிரபஞ்சம், வாழ்வு மனிதன் பற்றிய முழுமையான நோக்கு ஆகியவற்றைப் பெற்றுக்கொள்ளவில்லை.

Page 9
இந் நிலைக்கு முஸ்லிம்களும் காரணமாக அமைந்தனர். எப்பெயின் முஸ்லிம் ஆட்சியாளர்கள் அறிவு, கலாசாரப் பண்பாட்டுப் பணிகளில் காட்டிய ஆர்வத்தை இஸ்லாமிய பிரசாரப் பணியில் செலுத்தவில்ல்ை எனவே ஸ்பெயினை நோக்கி அறிவுத் தாகத்தோடு வந்த ஐரோப்பியர் அதன் சுனையிலிருந்து நீரருந்தி முஸ்லிம்களின் அறிவையும் ஆராய்ச்சி உணர்வையும் பெற்றனர். ஆனால் இஸ்லாமிய கொள்கைநெறி, வாழ்க்கைமுறை, ஒழுக்க ஆத்மீகப் பண்பாட்டோ அவர்கள் உறவுபூண்டு அதனைத் தம்மோடு இணைத்துக் கொள்வதற்கான வாய்ப்பு அங்கு காணப்படவில்லை. முஸ்லிம்கள் தங்களது அடிப்படைக்கடமையான "இஸ்லாமிய தஃவா" வி ஆர்வங்காட்டவில்லை. இந்த அடிப்படைக் கடமையில் தவறியதன் காரணமாக மனித இனமே மகத்தான இழப்பையும், நஷ்டத்தையும் எதிர்நோக்கும் நிலை ஏற்பட்டதோடு, அதன் பாதகமான, பாரதூரமான விளைவுகளை மனித இனம் இன்றும் அனுபவித்துக் கொண்டிருக்கிறது முஸ்லிம் ஸ்பெயினின் அறிவுப் பாரம்பரியத்தினடியாகத் தோன்றிய ஐரோப்பிய மறுமலர்ச்சி ஒரு தலைப்பட்சமான சடfதியான, லோகாயத வளர்ச்சியை மட்டுமே கண்டது. கி. பி. 14, 15ம் நூற்றாண்டுகளில் தோன்றிய ஐரோப்பிய மறுமலர்ச்சி, ஐரோப்பிய வரலாற்றில் மட்டுமன்றி தி லக வரலாற்றிலேயே மாபெரும் பாதிப்பை ஏற்படுத்தியது.
ஐரோப்பிய மறுமலர்ச்சியை, மேற்கத்திய வரலாற்றாசிரியர் "ஐரோப்பாவின் மறுபிறப்பு" என அழைப்பர். ஐாோப்பா நீண்ட துரக்கத்திலிருந்து விழித்தெழுந்தது. மனிதனின் அடிமைத் தளைகள் உடைத்தெறியப்பட்டன. அவன் சுதந்திரமாகச் சிந்திக்க ஆரம்பித்தான். அறிவினதும், சிந்தனையினதும் சக்தியையும், ஆற்றலையும் உணர்ந்தான். மனிதனின் ஆளுமை மகத்தானது. அனைத்துமே அவனின் ஆதிக்கத்திற்கு உட்பட்டது என்ற உணர்வு அவனில் தோன்றியது. அதன் விளைவாக "மனித அறிவு" "மனித சக்தி" "மனித ஆளுமை" ஆகியவற்றிற்கு மிக உயர்ந்த இடம் அளிக்கப்பட்டது. அனைத்தும் மனிதனை மையமாக வைத்தே இயங்குகின்றது என்ற உணர்வு தோன்றியது. அதனடியாக பிரபஞ்சத்தில் இறைவன் வகித்த மத்திய நிலையிலிருந்து அவன் அகற்றப்பட்டு, இறைவனின் அந்த இடத்தை மனிதன் ஆக்கிரமித்துக் கொண்டான். இங்குதான் (Eபாopean Humanism) என்னும் "ஐரோப்பிய மனித நேயக் கோட்பாடு" தோற்றமெடுக்க ஆரம்பிக்கின்றது.
8
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ஐரோப்பிய மறுமலர்ச்சியினடியாகத் தோற்றமெடுத்த "மனித ஆளுமை" பற்றிய கோட்பாட்டை எபிஸ்டின் கோயிலின் (SikiCharl) முகட்டில் வரையப்பட்டுள்ள புகழ் பெற்ற மறுமலர்ச்சி ஓவியர் மைக்கல் அஞ்சலோவின் (Michael Angel) "ஆதம்" என்ற ஓவியம் மிக தத்ரூபமாகச் சித்தரிக்கின்றது. இந்த ஓவியமானது மனிதன் அவன் முன்பு இருந்ததை விட மிகச் சிறப்பாக மீண்டும் படைக்கப்பட்டுள்ளதாகச் சித்தரிக்கின்றது. அவனது உடல் நிர்வாணமாக ஸ்ளது நோன்பு பிடித்துப் பலவீனமடையாத, சக்தியும், கம்பீரமும் படைத்த அழகிய வீர்யம் பொருந்திய உடலை அவன் பெற்றுள்ளான். அவனது வலிமைமிக்க கரங்கள் வாழ்வை நோக்கியும், ஒளியை நோக்கியும் நீட்டப்பட்ட நிலையில் உள்ளன. இந்த ஓவியமானது அடிமைத்தளையிலிருந்து விடுதலை பெற்றுள்ள மறுமலர்ச்சிபுக பனிதனையும், இறந்திருந்த அவனது சக்திகள், ஆற்றல்கள் மீண்டும் உயிர் பெற்றுள்ளதையும் சித்தரிக்கின்றன. (பார்க்க, Edith Schel, the RETI I , , : )
இந்த ஐரோப்பிய மறுமலர்ச்சியின் அலைகள் கி. பி 15, ப்ே நூற்றாண்டுகளில் இத்தாவி, ஜெர்மனி, பிரான்ஸ், இங்கிலாந்து ஆகிய நாடுகளின் ஆர்த்தெழுந்தன. அது ஒரு புதிய கண்ணோட்டத்தையும், நோக்கையும் கொண்ட ஒரு புத்துவகைத் தோற்றுவித்தது. அந்த உலகில் மனிதன் பிரபஞ்சத்தின் மத்திய நிலையைப் பெற்றான். இறை நம்பிக்கை ஆட்டங்கன்பது தத்தின் சிடி யிலிருந்து விடுபட்ட அறிவானது அதன் தனிப்பாதையில் தனது பயனத்தைத் தொடர்ந்தது.அந்தப் பயணத்தில் அறிவின் மகத்தான வளர்ச்சி காரணமாக மனித இனம் அடைந்த நன்மைகள் அளப்பரியன. ஆனால் ஆத்மீக ஒளியற்ற அந்த அறிவினால் மனித இனம் எதிர்நோக்கிய சோதனைகளும், இன்னல்களும், நஷ்டங்களும் அதுபோன்றே அளப்பரியன.
பதினைந்தாம். பதினாறாம் நூற்றாண்டில் அறிவுத்துறையில் ஏற்பட்ட இந்த விழிப்புணர்ச்சியே பதினேழாம் நூற்றாண்டில் நவீன அறிவியலுக்கான அத்திவாரத்தை இட்டது. இந்த நவீன அறிவியலின் ஆரம்பம் வானவியலோடு (ASI00ாy) ஆரம்பமாகியது. மத்திய கால கிறிஸ்தவ பிரபஞ்சவியல் (MediaWil CI00gy) பூமியை மத்தியாகக்

Page 10
கொண்டு அதன் கீழ் நரகமும், உயரே சுவர்க்கமும் இருப்பதாகவும், சூரியன், சந்திரன், நட்சத்திரங்கள் என்பன மேலே உள்ள சுவர்க்கத்தில் ஒளிவிட்டுப் பிரகாசிப்பவை எனவும் போதித்தது. ஐரோப்பாவில் மதத்திற்கும் அறிவியலுக்கும் இடையிலான போராட்டம, வானவியலோடு தொடர்புடைய பூமியின் இந்த மத்திய நிலைபற்றிய கோட்பாட்டுடனேயே ஆரம்பமாகியது.
(Solar System) என அழைக்கப்படும் கிரகங்களின் குடும்பத்தின் மத்தியாக சூரியன் விளங்குகின்றதா அல்லது பூமி விளங்குகின்றதா என்பது தொடர்பாகவே இந்தப் போராட்டம் ஆரம்பமாகியது. இவ்விடயத்தில் கிரேக்கப் புவியியலாளர் டொலமி (Ptolemy) யின் கோட்பாட்டையே மத்தியகால கிறிஸ்தவக் கோயில் அங்கீகரித்திருந்தது. பிரபஞ்சத்தின் மத்தியில் பூமி அமைந்திருக்க சூரியன், சந்திரன், கிரகங்கள். நட்சத்திரங்கள் என்பன பூமியைச் சுற்றிச் சுழலுகின்றன என்பதே இக் கோட்பாடாகும். இந்நிலையில் போலந்து நாட்டைச் சேர்ந்த கொபர்நிகஸ் (Copernicus 1473 - 1543) என்னும் வானவியலாளர், வானில் உள்ள கோளங்கள் சுற்றுவது பற்றி ஒரு TTTeOTT GGL TL LCLLLLLLL LTL TLLL LLLL TLTGGLLLLLLL TTTTTT TTTTTTe 1543ம் ஆண்டு வெளியிட்டார். இப்பூமியானது நிலையாக நிற்காது சுற்றிச் சுழலுகின்றது எனவும், அது ஒரு நாளைக்கு ஒரு முறை தன்னைத்தானே சுற்றுவதோடு சூரியனையும் சுற்றி வருவதாக இந்நூலில் அவர் குறிப்பிட்டார். ஆனால் இக்கோட்பாடு கிறிஸ்தவக் கோயிலின் போதனைக்கு மாற்றமாக உள்ளதால் கோயிலின் எதிர்ப்பை அது தோற்றுவிக்கும் என்ற பயத்தில் அந்நூவை அவர் வெளியிடவில்லை.
வானவியலைப் போன்றே மருத்துவக்கலையைப் பொறுத்தளவிலும் கிறிஸ்தவக் கோயில் அதன் வளர்ச்சிக்குத் தடையாக அமைந்தது. மத்திய காலப்பிரிவில் கிறிஸ்தவர்கள் நோய்களுக்கு நிவாரணம் காண்பதில் அறிவியல் ரீதியாக செயல்படாது, அறிவுக்குப் பொருந்தாத மூட நம்பிக்கைகளின் அடிப்படையில் செயல்பட்டனர். அக்காலப்பிரிவில் ஸ்பெயினில் முஸ்லிம்களால் நிறுவப்பட்ட மருத்துவக் கல்லூரிகளில் கல்விகற்ற யூதர்களே மருத்தவத்துறையில் ஈடுபட்டனர். இவ்வாறு மருத்துவத்துறையில் ஈடுபட்டோரை மந்திரவாதிகளாக கிறிஸ்தவர்கள்
()

கருதினர். உடல்சுறுக்கலை (Anatomy) மிக இழிவான கலையாகக்
கருதப்பட்டதுடன், மருத்துவ ஆய்விற்காக உடலை அறுத்துப் | பரிசோதனை செய்வதையும் கிறிஸ்தவக்கோயில் கண்டித்தது.
(இது பற்றிய விரிவான விளக்கத்திற்கு பார்க்க, Berund Russel Religia Ind Science மு 88- 95) இவ்வாறு மத்தியகாலப்பிரிவு முழுவதும் நோய்களுக்கான தடுப்பு முறையும், நிவாரணமும் பகுத்தறிவுக்குப் பொருந்தாத மூட நம்பிக்கைகளின் அடிப்படையிலேயே அமைந்திருந்தது.
தொற்று நோய்களுக்கான தடுப்பு மருந்து கண்டுபிடிக்கப்பட்டதைத் தொடர்ந்து, கிறிஸ்தவக் கோயில் அதற்கு எதிராகக் குரலெழுப்பியது. 1847ம் ஆண்டு எபிம்ப்ஸன் (Simpson) என்னும் மருத்துவர் குழந்தைப் பேற்றின்போது பிரசவ வேதனையைக் குறைக்க மயக்க மருந்தை சிபார்சு செய்தபோது கிறிஸ்தவ குருமார்கள் அதனை ஆட்சேபித்தனர். In Sorrow Shalt Thou Bring Forth Children Gen 111: 16 "துன்பத்திலும், வேதனையிலுமே நீங்கள் குழந்தைகளைப் பெற்றெடுப்பீர்கள்" என்ற பைபிளின் போதனைக்கு எதிராக இது அமைவதாக அவர்கள் வாதாடினர்.
இவ்வாறு அறிவுவளர்ச்சிக்கும், ஆராய்ச்சி முயற்சிகளுக்கும் எதிராகவும், அறிவியல் விளக்கங்கள், கண்டுபிடிப்புகளை மறுக்கும் வகையிலும், கிறிஸ்தவக் கோயிலும் அதனைப் பிரதிநிதித்துவப்படுத்திய மதகுருமார்களும் செயல்பட்டதானது. மதத்திற்கு எதிரான சிந்தனைப் போக்கை ஐரோப்பாவில் தோற்றுவித்தது. கிறிஸ்தவ மதத்திற்கு எதிராக, கோயிலின் இரும்புப் பிடியிலிருந்து விடுபடும்பொருட்டு சுதந்திரசிந்தனையை விரும்பியவர்களால் தொடுக்கப்பட்ட அறிவுப் போராட்டம் வரலாற்று ஓட்டத்தில் மதத்திற்கே எதிரான ஒரு போராட்டமாக மாற்றமடைந்தது.
நவீன அறிவியலின் தோற்றமும் அதன் இறைமறுப்புத் தன்மையும்
பதினேழாம் நூற்றாண்டில் கொபர்நிகஸின் கருத்துக்கள். புரூனோவின் அனுமானங்கள். கலீலியோவின் அவதானங்கள் ஆகியன
11

Page 11
பிரபஞ்சம் பற்றிய மரபுவழியான, நம்பிக்கைகள், கருத்துக்களைத் தகர்த்தெறிந்தன. கலீலியோ, கெப்லர், நியூட்டன் ஆகியோர்களது AST TTTTT TT TLYTTYS S TC LO TTTTTT S SSLLLLaLLLL LLLLLLLLS அடிப்படையில் இப் பிரபஞ்சம் பற்றிய நவீன அறிவியல் கோட்பாடு கட்டியெழுப்பப்பட்டது.
இயற்கை என்றால் என்ன? அது எவ்வாறு தொழிற்படுகின்றது? என்பன போன்ற வினாக்கள் எழுப்பப்பட்டு, பகுத்தறிவின் வெளிச்சத்தில், ஆராய்ச்சியின் அடிப்படையில் அவ்வினாக்களுக்கு விடை காணும் முயற்சிகள் இவர்களால் மேற்கொள்ளப்பட்டன. இந்த முயற்சியின் விளைவே நவீன அறிவியலாகும், பெளதிகவியலைப் (Physics)பொறுத்தளவில் ஐஸ்க் நியுட்டன் இந்த அறிவியல் புரட்சியின் முக்கிய பிரதிநிதியாக விளங்கினார்.
"இப் பிரபஞ்சமானது மாற்றத்திற்கு உட்படாத, நித்தியமான சில விதிகளால் பிணைக்கப்பட்டுள்ளது. எனவே வானத்தில் உள்ள கோள்கள் அனைத்தும் ஒரு குறிப்பிட்ட நியதிக்கு உட்பட்டே சுற்றிச் சுழலுகின்றன".
இதுவே நியுட்டன் இப்பிரபஞ்சம் பற்றி முன்வைத்த அடிப்படைக் கோட்பாடாகும். இக்கோட்பாடு இப் பிரபஞ்சத்தை ஓர் இயந்திரமாகக் கற்பனை செய்து விளக்கியது. எவ்வாறு ஓர் இயந்திரத்தின் ஒவ்வொரு பகுதியும், ஒழுங்காக அதில் பொருத்தப்பட்டு அது இயங்குவதற்குத் துணைபுரிகின்றதோ அது போன்று இப் பிரபஞ்சத்தின் ஒவ்வொரு பகுதியும் ஓர் ஒழுங்கு முறையில் இணைக்கப்பட்டு அதனடியாக இப்பிரபஞ்சம் இயங்குகின்றது என்பது பிரபஞ்சத்தின் அமைப்பு, இயக்கம் பற்றிய நியுட்டனின் இந்த விளக்கமாகும்.இக் TTCTTTTT LLTLTTCLL LLLLCCCCLEGLLLG TL LLL LLGLLL KTTJTTT பற்றிய இயந்திர ரீதியான விளக்கம்" என அழைக்கப்படுகின்றது.
இந்த விளக்கத்தின் வெளிச்சத்தில் நியுட்டன் புலன்களுக்குப் புலப்படுகின்ற இச்சடற லகானது (Material World) பல பொருட்களின் கூட்டமைப்பென்றும் இச்சடப் பொருட்களில் சில இயங்கி, அசையும் நிலையிலோ (Motion) அல்லது இயங்காமல், அசையாத நிலையிலோ (Rest) உள்ளன என்ற கோட்பாட்டை முன்வைத்தார்.
12

இந்தக் கோட்பாடு மத நம்பிக்கையில் மிக ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தியது. அனைத்து ஆற்றலும் பொதிந்த, அனைத்தையும் இயக்குவிக்கும் இறைவனைப் பற்றிய கோட்பாடு நியுட்டனின் பிரபஞ்சக் கோட்பாட்டின் பின்னணியில் அர்த்தமற்றதொன்றாக மாறியது. நியுட்டன் அவரது காலத்தில் வாழ்ந்த ஏனைய அறிவியலாளர்களைப் போன்றே இறைவனில் நம்பிக்கை கொண்டிருந்தார். ஆனால் இவர்களைப் பொறுத்தளவில் இறைவனை
இப்பிரபஞ்சம் என்னும் மிக நுட்பமான மாபெரும் இயந்திரத்தை ஆரம்பத்தில் இயக்குவித்தவனாக (Prime Mower) இவர்கள் கருதினர். ஒரு கைக்கடிகாரத்தைச் செய்தவன் அதன் இயந்திரத்தின் ஒவ்வொரு பகுதிளையும் இணைத்து, அதனை ஒரு கட்டுக்கோப்பில் அமைத்து அதனை இயக்குவிப்பதோடு அவனது பணிமுடிவடைந்து விடுகின்றது. அதன் பிறகு அது தானாகவே அதன் பணியைச் செய்யும், இதுபோன்றே இப்பிரபஞ்சத்தின் இயக்கத்தைப் பொறுத்தளவில் இறைவனின் பணியும் உள்ளது என்பது இவர்களது கருத்தாக அமைந்தது. வொல்டேர் (Woltaire) என்ற பிரெஞ்சு சிந்தனையாளரும் இதே கருத்தைக் கொண்டிருந்தார்.
நியுட்டனின் இக்கோட்பாட்டைத் தொடர்ந்து பிரபஞ்சத்தின் சிருஷ்டி, இயக்கம், பரிபாலனத்திலிருந்து இறைவன் படிப்படியாக பின்தள்ளப்படுவதை நாம் அவதானிக்க முடிகின்றது. இவ்வாறு பிரபஞ்சத்தை ஆரம்பத்தில் இயக்குவித்த பணியை மட்டும் செய்துவிட்டு ஒதுங்கிக்கொண்ட செயலற்ற, இயக்கமற்ற இறைவனால் எத்தகைய பயனுமில்லை என்ற இத்தர்க்கத்தை மேலும் முன்னெடுத்துச்சென்று. இறைவனை இப்பிரபஞ்சத்தின் இயக்கம், பரிபாலனத்திலிருந்து முற்றிலும் அகற்றிவிடும் முயற்சியை பிரெஞ்சுத் தத்துவஞானி டேவிட் ஹியும் (David Hume) மேற்கொண்டார். அவரது தர்க்கம் பின்வரும் வகையில் அமைந்தது.
"கடிகாரங்கள் செய்யப்படுவதை நாங்கள் கண்களால் கண்டுள்ளோம். ஆனால் இந்தப் பிரபஞ்சம் எவ்வாறு படைக்கப்பட்டது என்பதை நாம் காணவில்லை. எனவே அதனைப் படைத்த இறைவனை நம்புவது அறிவுக்குப் பொருத்தமானதன்று".

Page 12
ஜூலியன் ஹக்ஸ் லி ஐரோப்பாவின் மானிட நேயச் சிந்தனையாளர்களுள் முக்கியமான ஒருவர். ஒரு தார்மீக சமுக அமைப்புக்கு மதமோ, இறைநம்பிக்கையோ அவசியமற்றது என்ற கருத்துப்போக்குடைய ஹக்ஸ்லி "இறைதூதற்ற மதம்- Religion Wil0 Revelon என்னும் தனது நூலில் அறிவியல் யுகத்தில் இறைநம்பிக்கை அவசியமற்றது என்ற கருத்தை பின்வரும் வகையில் குறிப்பிடுகின்றார்.
"அறிவியல் வளர்ச்சியானது கடந்த காலப்பிரிவில், மனிதனின் அறிவினால் கிரகிக்க முடியாத பல உண்மைகளை அவன் பிரத்தியட்சமாக அறியும் வாய்ப்பினை அளித்துள்ளது. கடந்த காலப்பிரிவுகளில் சூரியனின் தோற்றமும், மறைவும் மனிதனில் ஆச்சரிய உணர்வையும், வியப்பையும் தோற்றுவித்தது. அதன் பின்னால் இறைவனின் மகத்தான ஆற்றலும், வல்லமையும் அடங்கியிருப்பதாக மனிதன் நம்பினான். ஆனால் இன்றோ சூரியனது. தோற்றமும் மறைவும் அதன் வட்டத்தில் சுழலுவதினாலேயே ஏற்படுகின்றது என்ற உண்மை அறியப்பட்டுள்ளது. இந்நிலையில் சூரியனை தோன்றவும், மறையவும் செய்கின்ற இறைவனில் நம்பிக்கை கொள்வதற்கான அவசியம் என்ன"P ஹக்ஸ்லி மேலும் தொடர்கிறார். "இதேபோன்று மனிதனின் அறிவு வளர்ச்சி குன்றிய காலப்பிரிவில் எல்லா விடயங்களும், புலன்களுக்கு அப்பாற்பட்ட ஒரு தெய்வீக சக்தியின் சித்தத்தினாலேயே நிகழ்கின்றது எனக் கருதப்பட்டது. ஆனால் இன்றோ அறிவியலானது அவை அனைத்தும் செயல்பாடு (Action அதன் எதிர்த்தாக்கம் (Reaction) ஆகியவற்றின் அடிப்படையிலேயே தோன்றுகின்றன என்பதை நிரூபித்துள்ளது. எனவே இந்த அறிவியல் உண்மைகள் கண்டுபிடிக்கப்பட்ட பின்னர் இறைவனை நம்புவதிலோ அல்லது இயற்கைக்கு அப்பாற்பட்ட சக்திகளை நம்புவதிலோ எத்தகைய பொருளும் கருத்தும் இருத்தல் முடியாது. தொற்று நோய்கள் கிருமிகளினால் பரவுகின்றன என்ற அறிவியல் உண்மை கண்டுபிடிக்கப்பட்ட பின்னர் நோய்களை எவ்வாறு தெய்வத்தினி கோபத்தின் பிரதிபலிப்பாக நாம் கொள்ள முடியும்? தாவரங்களும், மிருகங்களும் நீண்டகால பரிணாம வளர்ச்சியினடியாக படிப்படியாக வளர்ச்சியடைந்துள்ளன என அறிவியல் ஆய்வுகள் விளக்கும்போது இறைவனின் படைத்தல் பற்றிய கோட்பாட்டிற்கு அங்கு இடமில்லாலமல் போய்விடுகின்றது.
14

எனவே நிகழ்வுகள் அனைத்தும் இயற்கைக் காரணங்களின் அடிப்படையிலேயே தோற்றம் எடுக்கின்றன என்ற அறிவியல் உண்மையை நாம் ஏற்றுக்கொண்டால் அவை இயற்கைக்கு அப்பாற்பட்ட காரணங்களினால் நிகழ்வதில்லை என்பதே கருத்தாகும். அப்படியாயின் மனிதனில் இயற்கைக்கு அப்பாற்பட்ட சக்திகளிலும், இறைவனிலும், மதத்திலும் நம்பிக்கை ஏன்? எப்படித் தோன்றியது? ஹக்ஸ்லி இதனைப் பின்வருமாறு விளக்குகின்றார்.
"மனிதனில் ஒவ்வொரு பொருளிலும் மறைந்துள்ள புதைந்துள்ள கருத்து, தன்மை, நோக்கம் பற்றி அறியும் உணர்வும். ஆவலும் வேட்கையும் இயற்கையாகவே காணப்படுகிறது. ஆனால் அவற்றைப்பற்றி அறிந்துகொள்வதற்கான அறிவுமுதிர்ச்சி அவனில் க்ாணப்படவில்லை. எனவே மனிதன் அவை இயற்கைக்கு அப்பாற்பட்ட சில சக்திகளினால் தோற்றுவிக்கப்பட்டள்ளது எனக் காரணம் கற்பித்துக் கொண்டான். இவ்வாறுதான் இறைவன். தேவதூதர்கள். அற்புதங்கள் பற்றிய கோட்பாடு மனித வரலாற்றில் தோன்றி வளர ஆரம்பித்தது. எனவே இறைவன் என்பது பிரபஞ்சம் என்னும் திரையில் மனிதன் கற்பனை செய்து உருவாக்கிய ஓவியமாகும்"
God is Nothing but a projection of man on a cosmic screen-Julian Huxely, Relegion. Without Revelation P 18.19
இறைவனைப் பற்றிய நம்பிக்கை மட்டுமன்றி, மறு உலகம் பற்றிய நம்பிக்கையும் மானிட நேயவாதிகளினால் சடவாத நோக்கில் அணுகி விளக்கப்பட்டது. மனிதனின் உள்ளத்தில் எழும் ஆசைகள், வேட்கைகளுக்கு அவன் அளித்துள்ள அழகிய இலட்சிய வடிவமே (Beautiful Identification) மறுமைவாழ்வு பற்றிய நம்பிக்கையாகும் என்ற கருத்து முன்வைக்கப்பட்டது. மனிதனின் குழந்தைப் பருவத்தில், சுதந்திரமாக அவன் அவற்றை வெளியிட முடியாதவாறு ஒடுக்கப்பட்ட உணர்வுகளின் வெளிப்பாடே மறுமைவாழ்வு பற்றிய கனவு என விளக்கப்பட்டது.
விக்மன் புரொய்டும் (Freபd) அவர் வழிவந்த உளவியல் பகுப்பாய்வாளர்களும் மத நம்பிக்கை பற்றி உளவியல் ரீதியாக சடவாதக் கண்ணோட்டத்தில் விளக்கினர்.
15

Page 13
மேற்குலகில் கிறிஸ்தவ மதகுருமாருக்கும். அறிவியலாளர் களுக்குமிடையில் நிகழ்ந்த கருத்துப் போராட்டத்தின் தர்க்கரீதியான விளைவாக, மதம் அறிவியலுக்கு எதிரானது என்ற கருத்து தோன்றி வளர்ந்ததையும், அதனடியாக சடவாதக் கோட்பாடு தோற்றமெடுத்து, மத உணர்வுகளையும், ஆத்மீக அனுபவங்களையும் சடவாத நோக்கில் அணுகி விளக்கி, மதக்கருத்துக்களை மறுத்துரைக்கும் நிலை மேற்குலகில் தோன்றி படிப்படியாக வளர்ச்சியடைந்ததை நாம் இதுவரை விளங்கிக் கொண்டோம்.
அறிவியல் மதத்திற்கு எதிரானது என்ற கருத்து ஐரோப்பிய வரலாற்றின் அனுபவங்களினடியாக எழுந்த கருத்தேயன்றி. அது பொதுவான வரலாற்றுண்மையன்று என்ற உண்மையை வரலாற்று நிகழ்வுகளின் அடிப்படையில் நாம் இதுவரை நோக்கினோம். இந்த கருத்துப் பகைப்புலனில் நாம் மதத்தோடும்,அறிவியலோடும் தொடர்புடைய சில அடிப்படை வினாக்களுக்கு விடைகான முற்படுவோம்.
உண்மையில் மதத்திற்கும், அறிவியலுக்குமிடையிலான தொடர்பு யாது? அறிவியல் மதத்திற்கு முரணானதா? அறிவியல் உண்மைகள் மதக்கருத்துக்களைப் பொய்ப்பிக்கும் தன்மை படைத்தவையா? அப்படியாயின் நவீன அறிவியல் யுகத்தில் மதத்தின் நிலைப்பாடு என்ன? என்பன போன்ற வினாக்களுக்கு விடைகாணுதல் அவசியமாகின்றது. இதற்கு அடிப்படையாக "மதம்" "அறிவியல்" ஆகிய பதங்கள் உணர்த்தும் கருத்துக்கள் பற்றியும் மனித வாழ்வில் அவற்றிற்குரிய சரியான இடம் அவற்றின் களங்கள், வரம்புகள். எல்லைக் கோடுகள் பற்றியும் நாம் தெளிவாக விளக்குதல் வேண்டும். அப்போதுதான் மதம் அறிவியலோடு முரண்படுகின்றது என்ற வாதத்தின் போவித்தன்மையை உணரமுடியும்,

2. அறிவியல் . அதன் பண்பும் வரம்புகளும்
D ரிைதனின் புறச்சூழலில் உள்ள ஒவ்வொரு பொருளையும் பற்றிய உண்மையை யதார்த்தத்தைக் கண்டறியும் வேட்கை அவனில் உள்ளார்ந்து, இயற்கையாகவே அமைந்த ஒரு பண்பாக உள்ளது. பசியுணர்வு, பாலியல் உணர்வு போன்று அவனில் உள்ளார்ந்து அமைந்துள்ள ஒரு பண்பாக இந்த தேடுதல் வேட்கை காணப்படுகின்றது. மனிதனில் காணப்படும் இந்த தேடுதல் வேட்கை, விசாரணைத் தன்மையை ஆர்தர் கேஸ்வர் என்னும் சிந்தனையாளர் தேடுதலுக்கான உந்துதல் சக்தி அல்லது ஆய்வுக்கான தூண்டுதல் (Exploratory Drive) sisari, குறிப்பிடுகின்றார். மனிதனில் காணப்படும் இந்தப் பண்பே அவனது ஆய்வுகள், கண்டுபிடிப்புகள் அனைத்திற்கும் தூண்டுகோலாக உள்ளது.
"உண்மையை. யதார்த்தத்தை, எனது கையில் பிடித்து வைத்திருக்கும் பேறு கிடைத்தாலும், அந்த உண்மையைத் தேடுவதில் நான்அடையும்
17

Page 14
இன்பத்தை அனுபவிப்பதற்காக, அதனை அப்படியே எனது கையிலிருந்து நழுவவிட்டுவிடுவேன்" என எமர்ஸன் குறிப்பிடுகின்றார். ஒவ்வொரு பொருளிலும் மறைந்துள்ள உண்மையை,யதார்த்தத்தைத் தேடும் பணியானது மனிதனுக்கு எவ்வளவு இன்பத்தையும், மகிழ்வையும், அளிக்கின்றது என்பதனையே இது குறிக்கின்றது. மனிதனில் காணப்படும் உண்மையைக் கண்டறியும் வேட்கையும், தேடுதலுக்கான தூண்டுதலும் அவனைச் சூழ உள்ள பெளதிக உலகின் ரகசியங்கள், நுட்பங்கள், செயல்பாடுகளைக் கண்டறியும் ஆர்வத்தையும், அந்த இயற்கையை வெற்றிகொண்டு தனது ஆதிக்கத்திற்கு உட்படுத்துவதற்கான உந்துதல் சக்தியையும் அளிக்கின்றது. அறிவியல் வளர்ச்சியின் வரலாற்றை நாம் கூர்ந்து நோக்கின், இயற்கையின் நுட்பங்களையும், மர்மங்களையும், செயல்பாடுகளையும் அறிதல், அந்த அறிவின் அடிப்படையில், இயற்கையை மனிதனின் ஆதிக்கத்தின் கீழ் கொண்டுவருதல் ஆகிய இரண்டு பண்புகளும் மனிதனின் அறிவியல் வரலாற்றில் காணப்படும் ஒவ்வொரு அறிவியல் ஆராய்ச்சியிலும் காணப்படுவதை நாம் அறியமுடிகிறது.
மனிதன் அவனது புலன்கள் மூலம் அவனைச் சூழ உள்ள புற உலகுடன் தொடர்பு கொள்கிறான். அவன் தன்னைச் சுற்றிலும் உள்ள புற உலகை எட்டிப்பார்க்கத் துணைபுரியும் யன்னல்களாக அவனது ஐம்புலன்களும் விளங்குகின்றன. அவன் இவ்வுலகில் பிறக்கும்போது எத்தகைய அறிவும் இல்லாத நிலையில் பிறப்பதையும், படிப்படியாக அவனது புலனுணர்வுகள் செயல்பட ஆரம்பிக்க அவற்றின் ஊடாக அவனைச் சூழ உள்ள புற உலகைப் பற்றிய அறிவைப் பெறுவதையும் குர்ஆன் மிக அழகாக விளக்குகின்றது.
"ஒவ்வொன்றையும் நீங்கள் அறியாதவர்களாக இருந்த நிலையில் உங்களது தாய்மார்களின் வயிற்றிலிருந்து அல்லாஹ் உங்களை வெளிப்படுத்தினான். அன்றி உங்களுக்குச் செவிசனையும், சண்களையும், இதயத்தையும் கொடுத்தவன் அவனே. இதற்கு நீங்கள் அவனுக்கு ) நன்றி செலுத்துவீர்களாக"
எாரா அந் - நற்ல் 78
18

மனிதனின் புலன்களான காது, கண் போன்றவை அவனது புறஉலகு பற்றிய அறிவைப் பெறத் துணைபுரியும் முறையினை புகழ்பூத்த அறிவியலாளர் சேர். ஜேம்ஸ் ஜீன்ஸ் (Sir James Jeans) அவரது " பெளதிகமும், தத்துவமும், ( Physics Id Philosophy ) என்னும் நூலில் அளிக்கும் விளக்கமானது மேற்குறிப்பிட்ட குர்ஆனின் திருவசனத்திற்கு மிக உடன்பாடாக உள்ளது.
"We live our mental life in a prison house from which there is no escape. It is our body; and its only communication with the outer world is through our sence - organs - eyes - ears - etc. They the windows through which we can look out on to the outer world and acquire knowledge of it.
The sence - organs of a normal man receive stimuli-rays of light, waves of sound etc. from the outer world, and then produce electric charges which are propagated over his nerves to his brain. Here they produce further changes as a result of which after a series of processes we do not in the least underatand his mind acquires perception of the CoutečI WOTld.
Sir Tannes leans, Physics and Philosophy, Cann hridge 1942 P, 8
நாம் ஒவ்வொருவரும் எமது உளம் சார்ந்த வாழ்வை ஒரு சிறைக்கூடத்திலேயே வாழுகின்றோம். அதிலிருந்து நாம் தப்புதல் முடியாது. இந்த சிறைக்கூடமே எமது உடலாகும். புற உலகுடன் எமது உடலின் தொடர்பிற்கான ஒரே வழி கண், காது போன்ற புலன்களாகும். இந்தப் புலன்கள் மூலமாகவே நாங்கள் புற உலகை நோக்கி அது பற்றிய அறிவைப் பெற்றுக் கொள்கின்றோம். ஒரு சாதாரண மனிதனின் புலனிகள் ஒளி ரேகைகள், ஒலி அலைகள் மூலம் புற உலகிலிருந்து தூண்டுதலைப் பெற்று, அவனின் நரம்புகளிலிருந்து மூளைவரை பரந்து செல்லுமளவிற்கு மின்சார சக்தியை உருவாக்குகின்றன. அங்கு அது மீண்டும் ஒரு மின்சார சக்தியைத் தோற்றுவித்து, அதன் மூலம் அவன் புற உலகு பற்றிய
9

Page 15
அறிவைப் பெறுகின்றான். இதை அவன் எவ்வாறு பெறுகின்றான் என்பது பற்றிய எமது அறிவு மிகக் குறைவாகவே உள்ளது.
சேர் ஜேம்ஸ் ஜீன்ஸ், பெளதீகமும் - தத்துவமும் பக்கம் 6
புலன்கள் மூலமாகவே நாங்கள் புற உலகு பற்றியும் அறிவைப் பெறுகின்றோம் என்பதையும், புலன்கள் எதுவுமில்லாத ஒருவன் புற உலகு பற்றிய எந்த அறிவையும் பெறல் முடியாது என்பதையும் மேற்குறிப்பிட்ட உண்மை மூலம் நாம் அறிய முடிகின்றது. ஒரு சாதாரண மனிதனின் புலன்கள் புற உலகிலிருந்து அவற்றை அடையும் ஒளிக்கிரனங்கள். ஒலி அலைகள் மூலம் ஒரு தூண்டுதலையும், கிளர்ச்சியையும், பெறுவதையும் அந்தக் கிளர்ச்சியானது அவனில் ஒரு மின்சார அலைபோன்று தொழில்பட்டு அது அவனது நரம்புமண்டலத்தின் மூலம் மூளையைச் சென்றடைவதையும் அந்த உணர்வுகள் அவனது மூளையில் தொழிற்படுவதன் மூலம், அவனில் ஏற்படும் தொடர்ச்சியான உணர்வலைகள் அவனில் புறஉலகு பற்றிய மன உணர்வைத் தோற்றுவிப்பதையும் சேர். ஜேம்ஸ் ஜீன்ஸின் மேற்குறிப்பிட்ட கருத்து மிகச் சிறப்பாக விளக்குகின்றது. மனிதனின் மனம் இரண்டு முக்கிய வளர்ச்சிப் படிவங்களை உள்ளடக்கியுள்ளது.
1. மனிதன் பிறக்கும் போது அவனில் அமைந்துள்ள குர்ஆன் எUரா அந்நஹ்வில் குறிப்பிடும், "ஒன்றும் அறியாத நிலையில் உள்ள Lrgoth"
2. மனிதனின் புலன்கள் மூலம் மேலே விளக்கப்பட்டவகையில், அவனில் புற உலகு பற்றிய அறிவைத் தோற்றுவிக்கும் மனம் (Perception)
இந்த இரண்டு முக்கிய படிவங்களிலிருந்து, அவனது மனத்தின் மூன்றாவது வளர்ச்சிக் கட்டம் உருவாகிறது. அதாவது மனிதன் தனது புலன்கள் மூலம் பெற்ற தகவல்களைப் பாகுபாடு செய்து (Analysis) அவனது சிந்தனையையும், பகுத்தறிவையும் பயன்படுத்திப் பெறும் அறிவின்மூலம் அவனது மனத்தின் மூன்றாவது வளர்ச்சிக்கட்டம் உருவாகின்றது. இந்தநிலையில்தான் மனிதனின் மனதில், உள்ளத்தில் கருத்துக்கள் தோற்றமெடுக்கின்றன. புலன்களினால் பெற்ற தகவல்களை
2C)

(I'T'Ti)ா ) சிந்தனையினடியாகப் பாகுபாடு செய்து விளங்குவதன் விளைவே கருத்துக்களாகும். ( Conception )
இந்த வகையில் மனிதனின் மனமானது பார்வையோடு தொடர்புடைய கருத்துக்கள் ( Wisual ideas) செவிப்புவனோடு தொடர்புடைய கருத்துக்கள் ( Hபditory ideas) ஒன்றை தொட்டு அறியும் ஸ்பரிவு
| ணர்வோடு தொடர்புடைய (tal ideas) கருத்துக்கள் போன்ற
கருத்துக்களைப் பெற்றுக்கொள்கின்றது.
மனிதனின் பார்வையை "பளபர்" எனவும் செவிப்புவனை "ளபம்தி " எனவும், இந்தப் புலன்களினால் பெறும் புற உலகு பற்றிய அறிவை ஒரு கட்டுக்கோப்பில் இணைக்கும் உள்ளத்தை "பு:ஆத்" எனவும் குர்ஆன் குறிப்பிடுகின்றது.
"அவன் தான் உங்களுக்கு செவி (ஸம்உ பார்வை பளர் இருதயம் (பு:ஆத்) முதலியவைகளைச் சிருஷ்டித்தவன். இவ்வாறிருந்தும் அவனுக்கு மிக சொற்பமாகவே நீங்கள் நன்றி செலுத்துகின்றீர்கள்"
அல் - முஃமினுசன் 78
"தமியே நீர்கூறும் அவன்தான் உங்களைப் படைத்து உங்களுக்குச் செவிகளையும், கண்களையும் இருதயங்களையும் கொடுத்தவன். அவ்வாறிருத்தும் அவனுக்கு நீங்கள் நன்றி செலுத்துவது வெகு சொற்பம்
அல் - முல்க் சீர்
மனிதன் அவனது புலனுணர்வுகளைப் பயன்படுத்தி அவனது புற உலகுபற்றிய அறிவைப் பெறும் முறையினைப் பற்றிய இந்தப் டரின் னணியில் அவனது அ நரிவியல் அறிவு எவ்வாறு தோற்றமெடுக்கின்றது என்பதனை நோக்குவோம்.
மனிதனின் மன, உள வளர்ச்சிக்கு ஏற்ப அவன் பெறும் உண்மைகள் (facts) தகவல்கள்(informations)அதிகரிக்கின்றன. அவனது உளவளர்ச்சியின் பிரமானத்திற்கேற்ப புதிய அறிவுகளைப் பெறும் ஆற்றலை அவன் அடைகின்றான். இவ்வாறு மனிதன் அவனது புலன்கள் மூலமாகவும், பகுத்தறிவு, சிந்தனையைப்
2

Page 16
பயன்படுத்தியும் பெறும் உண்மைகள், தகவல்களை நாம் ஒரு சிற்குவியலுக்கு ஒப்பிடலாம். ஒரு கற்குவியல் எப்படி ஒரு வீடாக ஆகமுடியாதோ, அவ்வாறே இந்த வெறும் உண்மைகள். தகவல்கள் மட்டும் "அறிவியல்" (Science) ஆக முடியாது. கற்குவியலிலுள்ள கீற்கள். ஒரு கட்டடத்தைக் கட்டுவதற்கான ஏவி நிரபு மூலப்பொருட்களோடு ஒரு அமைப்பிலும், கட்டுக்கோப்பிலும் இணையும்போதுதான் வீடு என்ற கட்டடம் உருவாகிறது. இது போன்றே மனிதன் அவனது புலன்களையும் பகுத்தறிவைப் பயன்படுத்திச் செய்த பகுப்பாய்வின் மூலமும் பெற்றுக்கொண்ட அவனது சுற்றாடல், புற உலகுபற்றிய உண்மைகள். தகவல்கள் ஒரு கட்டுக்கோப்பில் இணைத்து பகுப்பாய்வு நோக்கில் அதனை அ3ணுகும் போதுதான் "அறிவியல் தோற்றமெடுக்கின்றது.
ஒருவன் புலன்கள் மூலமும், பகுத்தறிவு. சிந்தனை மூலமாகவும் ஒன்றுக்கொன்று தொடர்பற்ற, எண்ணற்ற பல உண்மைகள் தகவல்களைப் பெறுகின்றான். இந்த உண்மைகளை JMI I LIGEJLLIT: வைத்து அந்த உண்மைகள், தகவல்களின் எண்ணிக்கையிலும் மிகக் குறைந்த அளவிலான பொதுவிதிகள் பெறப்படுகின்றன. இது நாம் எற்கனவே விளக்கிய கற்குவியலிலுள்ள கற்களை ஒரு கட்டுக்கோப்பல் இணைத்து ஒரே கட்டடத்தைக் கட்டுவது போன்றதாகும். இதுவே அறிவியல் விதிகள், பிரமாணங்கள் பெறப்படும் முறையாகும்.
அறிவியலானது அதன் முடிவுகளைப் பெறும் இந்த முறை மதத்தின் உண்மைகள் நிறுவப்படும் முறையிலிருந்து முற்றிலும் வித்தியாசமானது. மதம் சிவ சில அடிப்படையான நம்பிக்கை கோட்பாடுகளின் அடித்தளத்தில் அதன் கருத்துக்கள், கோட்பாடுகள் சித்தாந்தங்கள், நியதிகள் பிரமானங்கள் விதிகளைக் கீட்டியெழுப்புகின்றது. இம் (UP DL Tears (deductive method) என அழைக்கப்படுகின்றது. அதாவது ஏற்கனவே சில அடிப்படை விதிகளை ஏற்படுத்திக் கொண்டு அதன் அடிப்படையில் வேறுபல உண்மைகளைக் கண்டறிய முற்படுவதாகும். ஆனால் அறிவியலானது அது சார்ந்த உண்மைகளைக் கண்டறியக் கெயாளும் முறை இத முற்றிலும் முரணானது.
22

அறிவியலானது நம்பிக்கைகள் , அனுமானங்களின் அடிப்படையிலன்றி அவதானம் (Observation) பரிசோதனை (experiment) மூலம் பெறப்பட்ட குறிப்பிட்ட உண்மைகளை அடிப்படையாகக் கொண்ட அதன் தேடுதலை ஆரம்பிக்கின்றது. இவ்வாறு அவதானம், பரிசோதனை மூலம் கண்டறியப்பட்ட பல உண்மைகளின் அடிப் படையில் ஒரு பொது விதி உருவாக்கப்படுகின்றது. இம்முறை (inductive method) என அழைக்கப்படுகின்றது. ஆனால் இந்தப் பொது விதி கூட ஆரம்பத்தில் முழுமையாக ஏற்றுக் கொள்ளப்படமாட்டாது. அறிவியல் ரீதியான செயல்பாட்டிற்கான ஓர் அனுமானமாகவே (working hypothesis) இது கருதப்படும். இந்த அனுமானத்தின் அடிப்படையில் மேலும் பல பரிசோதனைகள், ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு, அவை இந்த அனுமானத்தை உறுதிப்படுத்தும் வகையில் காணப்பட்டால், இந்த அனுமானம் ஒரு (Theory) கருதுகோளாக, சித்தாந்தமாக ஏற்றுக்கொள்ளப்பட்டு அங்கீகாரம் பெறுகின்றது. ஆனால் இதுவும் இறுதியான முடிவு எனக் கொள்ளப்படமாட்டாது. மனித அறிவு வளர்ச்சியடைந்து, மேலும் பல புதிய உண்மைகள் கண்டுபிடிக்கப்பட்டு அவை இச்சித்தாந்தங்கள் எழுப்பப்பட்டுள்ள விதிகளுக்கு முரணாக அமைந்தால், சித்தாந்தம் கைவிடப்பட்டு, அப்புதிய உண்மைகளின் அடிப்படையில் பெறப்படும் விதிகளின் துணைகொண்டு புதிய சித்தாந்தங்கள் நிறுவப்படும்.
அறிவியலும், மதமும் இவ்வாறு வித்தியாசமாகச் செயல்படும் தன்மையை பிரபல தத்துவ ஞானியான பேட்ரன்ட் ரஸ்பைல் தனது "மதமும் அறிவியலும்" என்னும் நூலில் பின்வருமாறு விளக்குகிறார்:
A religious creed differs from a scientific theory claiming to embody eternal and absolutely certain truth, where as science is always tentative expecting that modifications in it's present theories will sooner or later to be found necessary and aware that its method is one which is logically incapable of arriving at complete and final de III O Instration.
Bell TLIrnd Russel. Religion απd Science p. 14

Page 17
மத நம்பிக்கையானது அறிவியலிலிருந்து வித்தியாசமானது மதம் முற்றிலும் அது உண்மை எனக் கருதுகின்ற மாற்றத்திற்கு உ ட்படாத நித்திய உண்மைகளைக் கொண்டுள்ளதாக கருதப்படுகின்றது. ஆனா அறிவியல் உண்மைகளோ தற்காலிகமானவை. விரைவிலோ அல்ல சற்று காலம் கடந்தோ கண்டுபிடிக்கப்படும் புதிய உண்மைகளி அடிப்படையில், எற்கனவே உள்ள உண்மைகள் முற்றிலு மாற்றத்திற்குட்பட்டு, அவற்றிற்கு முற்றிலும் முரணான புதி சித்தாந்தங்கள் தோன்றும் சாத்தியம் அறிவியலில் உண்டு. எனே தர்க்கரீதியாக நோக்குமிடத்து அறிவியல் முறையில் சம்பூரணமான இறுதிமுடிவு என்ற கருத்திற்கு இடமில்லை.
பேட்ரன்ட் ரஸ்ளபல் மதமும் அறிவியலும் பக்
மத நம்பிக்கையற்ற தத்துவஞானியான பேட்ரன்ட் ரஸ்ஸல் குறிப்பிடும் மதத்திற்கும் அறிவியலுக்கும் இடையில் காணப்படு வித்தியாசமான அணுகுமுறையை மத நம்பிக்கையுள்ள தத்துவஞானியான பேராசிரியர் ராதாகிருஷ்ணன் பின்வருமா உறுதிப்படுத்துகின்றார்.
Our Scientific theories are temporary resting places in the searc for truth and there is nothing absolute among them. Religion i absolute.
Radakrishnan.The Idealist view of life p. 13
அறிவியல் சித்தாந்தங்கள் என்பன உண்மையைக் கண்டறியு பயணத்தில் தற்காலிக தங்குமிடங்களேயாகும். அவற்றில் முற்றிலு முழுமையான இறுதியான முடிவு என ஒன்று இல்லை. ஆனா மதம் சார்ந்த உண்மைகளும் முடிவுகளும் இறுதியானவை (p(psi)LDALI TEMIRT) alır.
ராதாகிருஷ்ணன்
மனித வாழ்வில் அறிவியல் வகிக்கும் இடத்தை நாம் உரிய முறையில் அறிவதற்கு அது சட உலகைப் பற்றிய அறிவைப் பெற கையாளும் முறைகள் உத்திகள் பற்றிய தெளிவு எமக் அவசியமாகின்றது. அது கையாளும் முறைகள், உத்திகள் பற் மேலே குறிப்பிடப்பட்டுள்ள உண்மைகள், அறிவியலானது மனி
24

வாழ்வின் மிகக் குறுகிய ஒரு வட்டம் பற்றிய அறிவை அதாவது பிரபஞ்சம் மனிதன், வாழ்வு, ஆகியவற்றோடு தொடர்புடைய சடப்பொருள்கள் பற்றிய அறிவைப் பெறுவதில் மட்டுமே கவனம் செலுத்துகின்றன என்ற அடிப்படை உண்மையை எமக்குத் தெளிவுபடுத்துகின்றன. ஒரு வெள்ளைத் தாளில் கறுப்பு மையின் துணைகொண்டு, இயற்கைக் காட்சி பற்றிய ஓவியத்தைத் தீட்டும் ஒர் ஓவியனிடம் அந்த இயற்கைக் காட்சியில் பல்வேறு வித்தியாசமான தோற்றங்களைப் பல்வேறு நிறங்களில் சித்தரித்துக் காட்டுதவி எப்படி எதிர்பார்க்க முடியாதோ அதே போன்று வெறும் சடப்பொருட்கள் பற்றிய அம்சங்களை மட்டும் தனது ஆய்வின் தளமாகக் கொண்டுள்ள அறிவியல் எமக்குப் பிரபஞ்சம், மனிதன். வாழ்வு பற்றிய பல்வேறு துறைகள் சார்ந்த அறிவை வழங்கும் என எதிர்பார்த்தல் முடியாது. அறிவியலாளர்கள் அவர்களது தி பகரணங்களின் துணைகொண்டு இப்பிரபஞ்சம் பற்றிப் பெறும் தகவல்களில் கூட அளவை (measurement) Bryatin (Weight) எண்ணிக்கை (number ) ஆகியவற்றிற்கு உட்பட்ட அம்சங்கின்ள மட்டுமே தேர்ந்தெடுக்கின்றனர். அளவை பரிமாணம், கணிப்பீட்டுப் பாகுபாடு (Statistical Inlysis)ஆகியவற்றிற்கு அப்பால் எதனையும் அறிவியல் அதன் ஆய்வுக்கு உட்படுத்துவதில்லை. அது கலைகளையும், பதங்களையும் புறக்கணித்து அதன் அனுமானம், அவதானம் பரிசோதனையின் அடிப்படையில் இச் சடதி வகைப் பல்வேறு பாகுபாடு செய்து அந்த ஒவ்வொரு பகுதி பற்றியும் ஆராய்கிறது. எனவே இப்பிரபஞ்சம் பற்றிய அறிவியலின் விளக்கம் அதன் அமைப்பு, தோற்றம் பற்றிய அம்சங்களோடு மட்டுமே கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. அதாவது இப்பிரபஞ்சம் எப்படிக் தோன்றியது என்ற வினாவிற்கு விடை பகரவில்லை. இவ்வினா அறிவியலின் ஆய்வின் வட்டத்திற்கு உட்பட்டதன்று என அறிவியலாளர் புறக்கணித்துவிடுகின்றனர். ஆனால் ஏன்? என்ற இந்த வினாவிற்கான விடையே மனித வாழ்விற்கு பொருளையும் கருத்தையும் நோக்கத்தையும் இலட்சியத்தையும் அளிக்கின்றது. எப்படிப் பயணம் செய்கின்றோம் என்ற வினாவிற்கு விடையே ஒரு பயணத்தில் மிக முக்கியமானதாகும், அதுவும் ஒருவனின் வாழ்க்கைப் பயனத்தை கருத்தும் பொருளும், நோக்கமும், இலட்சியமும் உடையதாக ஆக்கிக்கொள்வதற்கு இந்த வினாவிற்கான விடை மிக அடிப்படையானதாக உள்ளது. ஆனால்
5

Page 18
இந்த வினாவிற்கான விடை அறிவியலின் ஆய்வுக்களத்திற்கு அப்பால் பட்டதாக உள்ளது. ஒவ்வொரு பொருளினதும் யதார்த்தத்தன்மையை அறிவதே தங்களது நோக்கமன்றி.அவற்றின் நோக்கத்தை அறிவதன்று என அறிவியலாளர் கூறுகின்றார். ஆனால், இவ்வாறு கூறுவதன் மூலம் வாழ்க்கைக்கு மிக அடிப்படையான வினாவினை அவர்கள் புறக்கணித்தல் முடியாது. ஏனெனில் இந்த வினாவிற்கான விடையே அறிவியலுக்கு ஓர் ஆத்மீகப் பரிமாணத்தை வழங்க முடியும். இந்த வினாவிற்கான விடையை அறிவியல் புறக்கணித்ததே அதனை ஓர் ஆக்க சக்தியாகவன்றி அழிவுச் சக்தியாக மாறக் காரணமாக அமைந்தது.
இப்பிரபஞ்சம் ஏன் தோன்றியது? மனித சிருஷ்டியின் நோக்கம் யாது? அவனது வாழ்வின் இறுதி இலட்சியம் என்ன? அவனது வாழ்க்கைப் பயணத்தின் முடிவு எங்கே உள்ளது? இவை மனித வாழ்வோடு தொடர்புடைய அடிப்படை வினாக்களாகும். அறிவியலினால் இவ்வினாக்களுக்கு விடை பகருதல் முடியாது. ஏனெனில் பொருள்களின் நோக்கம் பற்றி அறிவியலாளர் கரிசனை செலுத்துவதில்லை. அறிவியலாளர் பிரபஞ்சத்தின் நோக்கம் பற்றிய விடயத்தில் கரிசனை செலுத்தாததால் இம்மாபெரும் பிரபஞ்சமும், அதில் வாழும் மனிதனும், அவனது வாழ்வும் நோக்கமோ, குறிக்கோளோ அற்றவை என்பது கருத்தன்று.
உண்மையில் நோக்கும்போது அறிவியலுக்கும், மதத்திற்குமிடையில் எத்தகைய முரண்பாடோ மோதலோ இருத்தல் முடியாது. இத்தகைய முரண்பாடு தோன்றுவதற்கான எத்தகைய காரணமும் இல்லை. ஏனெனில் இவை இரண்டினதும் ஆய்வு வட்டங்கள், அணுகுமுறைகள் பரஸ்பரம் வித்தியாசமானவை. எனவே அறிவியலுக்கும். மதத்திற்குமிடையில் மோதல் நிகழ்வது கடலில் பயணம் செய்யும் கப்பலும், தண்டவாளத்தில் பயணம் செய்யும் புகையிரதமும் ஒன்றுக்கொன்று மோதிக்கொள்வது போன்றதாகும். இது எவ்வகையிலும் சாத்திமன்று.
ஆனால் சடப்பொருளை தனது ஆய்வின் களமாகக் கொண்ட அறிவியலின் பிரமாணங்கள். அணுகுமுறை, ஆய்வுமுறைகளை,
26
 
 
 
 
 
 
 
 
 

புலன்களின் அனுபவத்திற்கு அப்பாற்பட்ட, சடத்திலிருந்து வித்தியாசமாக உள்ள, இறைவன், ஆத்மா. மறைவான ஆத்மீக உலகு பற்றிய உண்மைகளை அறியப் பயன்படுத்தும் தவறான அணுகுமுறை காரணமாகவே அறிவியலிற்கும், மதத்திற்கும் இடையில் ஒரு மோதல் உருவாக்கப்படுகின்றது. இறைவன். மனித ஆத்மா, மறைவான உலகின் மர்மங்கள், மறுமை வாழ்வின் நிகழ்வுகள் பற்றிய அறிவைப் பெற அறிவியல் முறையினைப் பயன்படுத்துவதானது ஒரு பொருளை அளப்பதற்கு, நிறுப்பதற்குப் பயன்படுத்தும் தராசை உபயோகிப்பது போன்றதாகும். ஒன்றை அளப்பதற்கு அளவு உபகரணங்களும் நிறுப்பதற்கு நிறுவை உபகரணங்களும் பயன்படுத்தலே அறிவுபூர்வமான செயலாகும். இது போன்றே பெளதிக விதிகளைக் கண்டறிய அறிவியலோடு தொடர்புடைய பகுத்தறிவும், புலன்களுக்கு அப்பாற்பட்ட ஆத்மீக உண்மைகளைக் கண்டறிய இறைதூதும் பயன்படுத்தப்படல் வேண்டும்.
அறிவியல் பற்றியும், மதம் பற்றியும் அவற்றின் வித்தியாசமான அணுகுமுறைகள், வட்டங்கள், வரையறைகள் பற்றியும் ஒரு தெளிவைப் பெற்ற நாம் புலனுணர்வின் அடியாகப் பெறப்படும் அனுபவங்களும், அவற் றரினடியாக வளர்சி சியடையும் பகுதி தறிவும் , புலனனுபவங்களையும், பகுத்தறிவையும் அடிப்படையாகக் கொண்டுள்ள அறிவியலும் பிரபஞ்சம்.அதில் மனிதனின் நிலை, மனித வாழ்வின் இலட்சியம் பற்றிய அடிப்படை வினாக்களுக்கு விடை பகரும் சக்தியற்றவை என்பதை மிகத் தெளிவாகப் புரிந்து கொண்டோம். எனவே மனிதனின் புலனனுபவங்கள், பகுத்தறிவு ஆகியவற்றிற்கு அப்பாற்பட்ட ஒரு மூலத்திலிருந்தே மனிதன் இதற்கான விடையைப் பெற்றுக்கொள்ளுதல் வேண்டும் என்ற உண்மை பெறப்படுகிறது. எனவே, மனிதனுக்கு அவனது சிருஷ்டியின் நோக்கம், பிரபஞ்சம், அதில் அவனது நிலை, அவனது வாழ்வோடு தொடர்புடைய ஒழுக்க மாண்புகள், அறக்கட்டளைகள், வாழ்வின் இறுதிக் குறிக்கோள் ஆகியன பற்றிய அறிவை இறைவன் அவன் புறத்திலிருந்து அவனது தேர்ந்தெடுக்கப்பட்ட இறைத்தூதர்கள் மூலம் வழங்கியுள்ளான். இதுவே "இறைதூது" என அழைக்கப்படும் "வஹீ" ஆகும்.
34449

Page 19
3. அல் குர்ஆனின் அறிவியல் பரிமாணம்
மனித சிந்தனையின் படிமுறையான வளர்ச்சியை நாம் நோக்கும்போது ஒவ்வொரு காலப்பிரிவிலும், அதனை நெறிப் படுத்துவதில் அவ்வக்காலப்பிரிவில் ஆதிக்கம் வெலுத்திய தத்துவங்கள், கருத்துக்கள். அறிவு மரபுகள் முக்கிய பங்கை வகித்திருப்பதை அவதானிக்க முடிகின்றது. இந்த வகையில், எமது சமகாலப்பிரிவில் அறிவியலின் தாக்கம் மனிதனின் சிந்தனையிலும், உளப்பாங்கிலும், கண்ணோட்டத்திலும், சுருங்கக்கூறின் வாழ்வின் எல்லாத் துறைகளிலும் மிக ஆழமான பாதிப்பையும் தாக்கத்தினையும் ஏற்படுத்தியுள்ளதை நாம் உணரமுடிகின்றது. இதன் காரணமாக குர்ஆனை நவீன அறிவியல் நோக்கில் ஆராயும் மரபு இன்று தோற்றமெடுத்துள்ளது. குர்ஆனின் கருத்துக்கள் நவீன அறிவியல் உண்மைகளோடு இணைந்து காணப்படுவதையும், இன்றைய பல நவீன அறிவியல் கண்டு பிடிப்புகளை அல்குர்ஆன் பல நூற்றாண்டுகளுக்கு முன்னரே முன்னறிவிப்புச் செய்துள்ளதையும் குர்ஆனின் பல கருத்துக்களை
28
 

நவீன அறிவியல் உண்மைகளை உறுதிப்படுத்துவதையும் விளக்கும் பல முயற்சிகள் இன்று மேற்கொள்ளப்படுவதை நாம் காணமுடிகிறது. இத்துறையில் விசேட கவனம் செலுத்தும் ஆய்வாளர் பலர் இன்று காணப்படுகின்றனர். பேராசிரியர் மொரிஸ் புகைல் (MoயiceBபiேle) வுெய்கு எபிந்தானி போன்றோர் இத்துறையில் முக்கியமானவர்களாவர். மக்காவிலுள்ள ராபிதத்துல் ஆலமுல் இஸ்லாமி நிறுவனம் குர்ஆனின் அறிவியல் அற்புதங்கள் (இஃஜாளரால் இல்மீ) பற்றி ஆராய்வதற்கென்றே ஒரு தனித்துறையை அமைத்து ஷெய்கு சிந்தானி அவர்களை அதன் பணிப்பாளராக நியமித்துள்ளது. ராபிதத்துல் ஆலமுல் இஸ்லாமீ. இஸ்லாமாபாத்திலுள்ள சர்வதேசிய இஸ்லாமிய பல்கலைக்கழகத்தோடு இணைந்து இஸ்லாமாபாத்தில் "குர்ஆனின் அறிவியல் அற்புதங்கள்" ELLLLLLL LLLLL LLL GLaC CHH TLTTTTT TTTTTTT TTTTTTT 0LLLSY ஆண்டு ஒரு சர்வ தேசிய மகாநாட்டையே நடாத்தியது. இன்று இஸ்லாமிய உலகில் வெளிவரும் சஞ்சிகைகளில் குர்ஆனின் அறிவியல் விளக்கங்கள் பற்றிய பல ஆய்வுக்கட்டுரைகள் வெளியிடப்படுகின்றன. இந்தியாவில் அலிகாரிலிருந்து வெளியிடப்படும் (Mass Jord of Islamic Science) (இஸ்லாமிய அறிவியலுக்கான சஞ்சிகை) என்ற வெளியீடு அறிவியலை இஸ்லாமிய நோக்கில் அணுகி ஆராயும் கட்டுரைகளையே முழுக்க முழுக்க உள்ளடக்கியதாக உள்ளது. நவீன சிந்தனையின் ஒரு முக்கிய அங்கமான அறிவியல் சிந்தனையின் அறைகூவல்களைச் சமாளித்து குர்ஆனின் தெய்வீகத் தன்மையை விளக்கும் வகையில், அதன் கருத்துக்கள் எவ்வாறு இணைந்து செல்கின்றது என்ற உண்மையினை விளக்கும் முயற்சிகளாகவே இவை அமைகின்றன.
மனித வரலாற்றில் மிகச் சிறப்பான அறிவியல் பாரம்பரியத்தைப் பெற்ற முஸ்லிம்கள் நவீன அறிவியல் யுகத்தில் இத்தகைய காத்திரமான ஒரு முயற்சியில் ஈடுபடுதல் வரவேற்கத்தக்கதேயாகும். ஆனால் இம்முயற்சி மிக அவதானத்துடனும், நுட்பமாகவும் மேற்கொள்ளப்பட வேண்டிய ஒரு முயற்சியாகும். குர்ஆனின் திருவசனங்களில் பொதிந்துள்ள அறிவியல்சார்ந்த விளக்கங்களை ஆராயும் நோக்கோடு மேற்கொள்ளப்படும் இம்முயற்சி, அது அருளப்பட்டதன் அடிப்படை நோக்கிலிருந்து, மனிதனின் கவனத்தையும், அவதானத்தையும் திசை திருப்பிவிடும் ஒரு முயற்சியாக அமைதல் கூடாது. ஆனால் அதே
29

Page 20
நேரத்தில் குர்ஆனின் அடிப்படை நோக்கத்திற்கு வலுவூட்டும் ஒரு முயற்சியாக இது மேற்கொள்ளப்படுமாயின், இது இஸ்லாமிய சிந்தனையின் வளர்ச்சிக்கும், உறுதிக்கும் எமது சமகாலத்தில் மேற்கொள்ளப்பட்ட ஒரு மகத்தான பங்களிப்பாகவே அமையும்.
குர்ஆன் அனைத்து அறிவுரைகளினதும் மூலமாக உள்ளது என்ற கருத்து அண்மைக் காலத்தில் தோன்றியதன்று. இஸ்லாமிய அறிஞர்கள் பலர் மிக ஆரம்ப காலத்திலிருந்தே இக்கருத்தைக் கொண்டிருந்தனர். இமாம் கஸ்ஸாலி (ரஹற்) அவர்கள் தங்களது "இஹ்யா உலுமுத்தீன்" என்னும் பெருநூலில் "முன்னைய சந்ததிகளினதும் பின்னைய சந்ததிகளினதும் அறிவைப் பெற விரும்புவோர் குர்ஆனைப் பற்றிச் சிந்திக்கட்டும்" என்ற இப்னு மஸ்ஊத் (ரலி) அவர்கள் குறிப்பிடும் அழகிய கருத்துக்கள் பற்றி விளக்கும் இமாம் கஸ்ஸாலி (ரஹ்) அவர்கள் குர்ஆனுடன் தொடர்புடைய கண்ணியமும், மகத்துவமும் மிக்க கலைகள் அனைத்தும் அல்லாஹ்வின் "அஸ்மா" என்னும் திருநாமங்கள்"ஸிபாத்" என்னும் அவனது பண்புகளில் அடங்கியுள்ளன எனக் குறிப்பிடுகின்றார்கள். இஹ்யா உலுமுத்தீனைத் தொடர்ந்து அவர்கள் எழுதிய "ஜவாஹருல் குர்ஆன்" என்னும் நூலில் குர்ஆனிலிருந்து சன்மார்க்க் கலைகளான (உலுமுத்தீனிய்யா) தப்ஸிர், பிக்ஹ், தளபவ்வுப், கலாம், போன்ற கலைகள் ஏனைய கலைகள் (ண்பா இருல் உலூம்) என அவர்கள் அழைக்கும் மருத்துவம், வானவியல் போன்ற கலைக்கும் எவ்வாறு பெறப்படுகின்றது என்பதனை மிகச் சிறப்பாக விளக்கியுள்ளார்கள்.
(விளக்கத்திற்குப் பார்க்க இவற்யா உலு முத்தீன் பாகம் 1, 285-29 ஜவாஹருல் குர்ஆன் 20-40)
சன்மார்க்கக் கலைகள், ஏனைய கலைகளின் அடிப்படைகள் அனைத்தும் இறைவனின் சமுத்திரங்களில் ஒன்றான "அவனது செயல்கள்" (அப் ஆல்) என்னும் சமுதீதிரத்திலிருந்து பெறப்பட்டவையாகும். குர்ஆனி என்பது கரை காண முடியாத ஒரு சமுத்திரம் போன்றது. இறைவனின் செயல்கள் என்ற சமுத்திரத்தின் ஓர் அம்சமே நோய்களும், அதன் நிவாரணமுமாகும் எனக் குறிப்பிடும் இமாம் கஸ்ஸாலி (ரஹ்) அவர்கள் நோயைக் குணப்படுத்தும்
3C)
 
 
 
 
 
 

இறைவனின் செயல் எவ்வாறு மருத்துவக் கலைக்கு ஆதாரமாக அமைகின்றது என்பதைப் பின்வருமாறு விளக்குகின்றார்கள்.
"நான் நோயுற்றிருந்தால் அவனே என்னை சி சகப்படுத்துகின்றான்"ளராரா அஷ்-ஷ"ஆரா80) என்ற இப்ராஹிம் (அலை) அவர்களின் வார்த்தைகளை அல்லாஹ் குர்ஆனில் குறிப்பிடுகின்றான். மருத்துவக்கலையைப் பூரணமாகக் கற்ற ஒருவனினாலேயே நோயைப் பற்றியும், அதனை இறைவன் குணப்படுத்தும் இறைவனின் செயல்பற்றியும் அறிய முடியும். ஏனெனில் மருத்துவம் என்பது நோயின் அறிகுறிகள், அதனைச் சுகப்படுத்தும் முறைகள் வழிகள் ஆகிய அனைத்து அம்சங்களையும் உள்ளடக்கிய ஒரு கலையாகும். இங்கு இறைவனின் ஒரு செயல்பாட்டின் அடியாக மருத்துவக்கலை தோற்றம் பெறுகின்றது.
இது போன்றே சூரியனும், சந்திரனும் ஒரு வரையறைக்குட்பட்டு இயங்குதல், இவற்றின் பல்வேறு மாற்றப்படிவங்களை நிர்ணயித்தல் என்பன இறைவனின் செயல்பாட்டின் அடிப்படையிலேயே நடைபெறுகின்றது என்பதை குர்ஆன் குறிப்பிடுகின்றது. சூரியன், சந்திரனின் இயக்கமும், சுழற்சியும், அவற்றின் கிரகணங்கள், இரவும் பகலும் மாறி மாறி வரும் இயற்கையின் நிகழ்வு ஆகியன பற்றிய யதார்த்த பூர்வமான அறிவை வானம், பூமி ஆகியவற்றின் அமைப்பு, இயக்கம் பற்றி அறிந்த ஒருவராலேயே புரிந்து கொள்ள முடியும்.
இந்த அடிப்படையிலேயே வானவியல் கலை தோற்ற மெடுக்கின்றது என இமாம் கஸ்ஸாலி (ரஹம்) அவர்கள் கூறுகின்றார்கள். இதனைத் தொடர்ந்து தங்களது ஜவாஹிருல் குர்ஆனில் அவர்கள் பின்வருமாறு குறிப்பிடுகின்றார்கள்.
"எனவே குர்ஆனைப்பற்றிச் சிந்திப்பாயாக. அதன் அற்புதமான கருத்துக்களைத் தேடிப்படிப்பாயாக, அப்போது நீ அதில் முன்னைய சந்ததிகளினதும் , பிந்திய சந்ததிகளினதும் அறிவுகள் பொதிந்திருப்பதையும், அக்கலைகளின் தோற்றத்தினையும் நீ அதில் காணமுடியும்."
31

Page 21
இமாம் ஜலாலுத்தீன் ஸ"யூதி (மரணம் ஹி. 917) அவர்கள் தங்களது "இத்கான் பீ உலூமில் குர்ஆன்" என்னும் நூலில் குர்ஆன் அனைத்து கலைகளையும் உள்ளடக்கியுள்ளது என்ற கருத்தை முன்வைக்கின்றார்கள்.
இந்த மரபினடியாகத் தோன்றிய சிந்தனைப்பாங்கு இஸ்லாமிய வரலாற்றின் தொடர்ந்து வந்த காலப்பிரிவு முழுவதிலும் காணப்படுகின்றது. இதன் தர்க்கரீதியான ஒரு வளர்ச்சியாகவே குர்ஆனின் அறிவியல் பரிமானம் பற்றிய ஆய்வு அமைகின்றது. குர்ஆனின் அறிவியல்பரிமானம் பற்றி அப்துர்ரஹ்மான் அல்கவாகிபீ (மரணம் 1902) அவரது நூலான "தபஉல் இஸ்திப் ஆத்" என்னும் நூலில் கூறும் கருத்து கவனத்தில் கொள்ளத்தக்கதாகும். அவர் கூறுகின்றார்:
"சமீப நூற்றாண்டுகளில் அறிவியலானது பல உண்மைகளைக் கண்டுபிடித்துள்ளது. ஆனால் இக் கண்டுபிடிப்புகள் அவற்றைக் கண்டுபிடித்த அமெரிக்க, ஐரோப்பிய அறிவியல் அறிஞர்களின் சாதனைகளாகவே கொள்ளப்படுகின்றன. ஆனால் அல்-குர்ஆனை மிக அவதானத்துடன் ஆராய்வோர் இந்த அறிவியல் உண்மைகள் அனைத்தும்,தெளிவாகவோ அல்லது மறைமுகமாகவோ பதின்மூன்று நூற்றாண்டுகளுக்கு முன்னரேயே குர்ஆனில் குறிப்பிடப்பட்டிருப்பதைக் கண்டுகொள்வர். எனவே இந்த அறிவியல் கண்டுபிடிப்புகள் குர்ஆனின் அற்புதத்தன்மையையும், இது மறைவான அறிவுகள் அனைத்தையும் பொதிந்த மகத்தான இறைவனின் வார்த்தைகள் என்பதனையும் உணர்த்துகின்றன."
ஆரம்பகால இஸ்லாமிய அறிஞர்கள், குர்ஆனில் அனைத்துக் கலைகளினதும் அடிப்படைகள் காணப்படுகின்றன என நிறுவ முற்பட்டதானது குர்ஆனின் திருவசனங்ளின் அனைத்து அறிவையும் பொதிந்த வியாபகத்தன்மையையும், பூரணத்துவத்தையும் விளக்குவதற்கேயாகும். ஆனால் நவீன அறிஞர்கள் குர்ஆனின் அறிவியல் சார்ந்த விளக்கங்களுக்கே அழுத்தம் கொடுக்கின்றனர். உதாரணமாக ஷெய்கு தந்தாவி அவர்கள் தங்களது திருக்குர்ஆன் விரிவுரையில், இயற்கை விஞ்ஞானத்தின் பெளதிக உலகம் சார்ந்த
32

கண்டுபிடிப்புகள், கருத்துக்களை குர்ஆனின் வெளிச்சத்தில் விளக்க முற்படுகின்றார். அப்துர்ரஸ்ளாக் நவ்பல் என்னும் அறிஞர் "அல்குர்ஆன் வல் இல்முல் ஹதீஸ்" (அல்-குர்ஆனும் நவீன அறிவியலும்) என்னும் நூலில் இதே அனுகு முறையைக் கடைப்பிடித்துள்ளார். இத்துறையில் அண்மைக் காலப்பிரிவில் மேற்கொள்ளப்பட்ட காத்திரமான ஒரு முயற்சியாக மொரிஸ் புகைல் அவர்களின் "பைபிளும் குர்ஆனும், அறிவியலும்" என்னும் நூல் கருதப்படுகின்றது.
"இதுவரை விளக்க முடியாதிருந்த குர்ஆனின் சில திருவசனங்களை விளக்குவதற்கு நவீன அறிவியல் துணைபுரிகின்றது" என புகீைல் குறிப்பிடுகின்றார்.
Modern scientific knowledge allows us to understand certain
verses of the Quran which until now , it has been impossible to interpret.
M. Bucaille, The Bible, The qurari arid science p, 251.
இத்துறையில் கலாநிதி கீத் முரீன் (Quran and Embryology) என்னும் நூலும் குறிப்பிடத்தக்கது. ஒரு பெண்ணின் கர்ப்பப்பையில் விந்தானது பல்வேறு படித்தரங்களில் மாற்றமும், வளர்ச்சியுமடைந்து ஒரு பூரணவளர்ச்சியடைந்த குழந்தையின் அமைப்பைப் பெறுவதைக் குர்ஆன் எராரா அல் முஃமினூனின் 12 - 16ம் திருவசனங்களில் குறிப்பிடுகின்றது.
"மனிதனை நாம் களிமண்ணின் சத்திலிருந்து படைத்தோம். மின்னர் அவனை ஒரு பாதுகாப்பான இடத்தில் செலுத்தப்பட்ட வித்தாக (துத்ப் ஆக்கினோம். பிறகு அந்த வித்தினை இரத்தக்கட்டியின் அரவக் வடிவில் அமைத்தோம். திண்ரைர் அந்த இரத்தக்கட்டியைச் சதைக்கட்டியாய் முள்க் ஆக்சினோம். பிறகு அவ்வெலும்புகளைச் சதையால் போர்த்தினோம். பிறகு அதனை முற்றிலும் வேறொரு படைப்பாக வளரச் செய்தோம். பெரும் அருட்பேறுடைய அல்லாஹ் படைப்பாளர்களிலெல்லாம் மிக அழகான படைப்பாளன்.
அல்முமிேனுசன் - 8
33

Page 22
இந்தத் திருவசனத்தில் குறிப்பிடப்படும் ஒரு குழந்தை தாயின் கர்ப்பத்தில் அடையும் படிமுறையான வளர்ச்சி பற்றிய விளக்கம் மருத்துவக்கலையின் ஒரு பகுதியான EImbryology யின் நவீன கருத்துக்களுக்கு முற்றிலும் இணைந்து காணப்படுவதாக கலாநிதி கீத்மூர் குறிப்பிடுகின்றார். நவீன அறிவியலானது. மிக துல்லியமான உபகரணங்களின் துணைகொண்டு கண்டுபிடித்த தாயின் கருவறைக்குள் நிகழும் இந்த அற்புத வளர்ச்சிப் படிவங்களை பதினான்கு நூற்றாண்டுகளுக்கு முன்னர் இவ்வளவு நுட்பமாக விளக்கியிருக்கும் பான்மையானது அது மனித சிந்தனையின் விளைவன்றி ஒரு தெய்வீக வெளிப்பாடே என்பதை சந்தேகமின்றி நிறுவுவதாக கலாநிதி கீத்மூர் குறிப்பிடுகின்றார்.
இவ்வாறு நவீன அறிவியல் கண்டுபிடித்துள்ள உண்மைகளின் வெளிச்சத்தில் குர்ஆனை நோக்கி விளக்கவும் முனைகின்ற இம்முயற்சிகளை இஃஜாளUால்குர்ஆன் என்னும் குர்ஆனின் அற்புதம் பற்றி விளக்கும் பாரம்பரிய குர்ஆனியக் கலையின் நவீன வளர்ச்சியாகவே கொள்ளப்படல் வேண்டும். இஸ்லாமிய வரலாற்றில் ஆரம்ப காலக்கட்டங்களிலும், அதனைத் தொடர்ந்து குர்ஆனின் அற்புதத்தை அதன் மொழிநடை சொற்பிரயோகங்கள் இலக்கிய வளம் ஆகியவற்றின் அடிப்படையில் விளக்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. இம்முயற்சியினடியாகவே இஃஜாளால் குர்ஆன் என்னும் கலை தோன்றியது. குர்ஆனில் முன்னறிவிப்பு செய்யப்பட்ட நிகழ்வுகள் பிற்காலத்தில் வரலாற்று நிகழ்வுகளால் உண்மையாக்கப்பட்டதை அடிப்படையாக வைத்தும் குர்ஆனின் அற்புதத்தன்மை விளக்கப்பட்டது. ரோமர்களின் தோல்வி பற்றிய குர்ஆன் குறிப்பிடும் முன்னறிவிப்பு பிர்அவ்னின் உடலைப் பாதுகாப்பதாக அது குறிப்பிடும் கருத்து என்பன பிற்கால வரலாற்று நிகழ்வுகளால் உறுதிப்படுத்தப்பட்டது. இத்தகைய ஒரு முயற்சியே அறிவியல் வளர்ச்சியடைந்த காலப்பிரிவில் மேற்கொள்ளப்படும் குர்ஆனின் திருவசனங்கள் சிலவற்றை அறிவியல் நோக்கில் அணுகி ஆராயும் முயற்சியாகும். இஃஜாளUால் குர்ஆனின் தர்க்கரீதியான ஒரு வளர்ச்சியாக இதனை நாம் கொள்ளலாம்.
ஆனால் இது குர்ஆனின் அடிப்படை நோக்கிலிருந்து மக்களின் கவனத்தை திசைதிருப்பும் ஒரு முயற்சியாக அமையாத வகையில்
34
 
 
 
 
 
 
 

மேற்கொள்ளப்படல் வேண்டும். குர்ஆன் ஓர் அறிவியல்கலைக் களஞ்சியமன்று. அது மனித சமுதாயத்துக்கு அல்லாஹ்வின் இறுதி வழிகாட்டுதலைப் பொதிந்துள்ள மாமறையாகும். எனவே மனித அறிவு, சிந்தனையின் வளர்ச்சிக்கு ஏற்ப மாற்றமடையும் அறிவியலின் கோட்பாடுகள், கருதுகோள்களுக்கு ஏற்ப குர்ஆனை ஆராயும் இம்முயற்சி மிக நிதானத்துடனும் , எச்சரிக்கையுடனும் மேற்கொள்ளப்படல் வேண்டும்.
குர்ஆன் இயற்கை பற்றியும், அதன் அற்புதங்கள் அதில் காணப்படும் ஒழுங்கு, சீரமைப்பு பற்றியும் பல திருவசனங்களில் குறிப்பிடுகின்றது. இவ்வாறு குர்ஆன் இயற்கையின் படைப்புகள் பற்றிக் குறிப்பிடுவதன் நோக்கம் மக்களுக்கு அறிவியல் உண்மைகளைப் போதிப்பதன்று. இறைவனின் மகத்துவம், மாட்சிமை பற்றி மக்களுக்கு உணர்த்துவதே அதன் அடிப்படை நோக்கமாகும். இந்த வகையில் மனிதனின் சிந்தனையின் பிரயோகம், பகுப்பாய்பு அவதானம், பரிசீலனை, பரிசோதனையினடியாகக் கண்டுபிடிக்கப்படும் அறிவியல் உண்மைகள், குர்ஆனின் திருவசனங்களில் பொதிந்துள்ள கருத்துக்கள். முன்னறிவிப்புகளை உறுதிப்படுத்தி பிரபஞ்சத்தில் பரந்து காணப்படும் அல்லாஹ்வின் மகத்தான அத்தாட்சிகளை உணரச் செய்து அவனது மாட்சிமை, வல்லமை, அறிவுஞானத்தை உணரச் செய்கின்றன. அறிவியலுக்கும், குர்ஆனுக்கும் இடையில் காணப்படும் தொடர்பினை அல் - அஸ்மராகி அவர்கள் பின்வருமாறு விளக்குகின்றார்கள்.
" இந்த புனித வேதநூலானது அறிவியல் பற்றிய பாட நூலில் காணப்படுவது போன்று எல்லா அறிவியல்கலைகளையும் பற்றிய விரிவான அல்லது சுருக்கமான விளக்கங்களைக் கொண்டுள்ளது என நான் கூறமாட்டேன். ஆனால் கூறவிரும்புவதெல்லாம் மனிதனின் பெளதிக, ஆத்மீக வளர்ச்சிக்கு அவசியமான எந்த அம்சங்கள் பற்றி, எந்த அளவிற்கு அறிவதற்கான அவசியம் அவனுக்கு உள்ளதோ அந்த அளவிற்கு அவனுக்குத் துணைபுரியக்கூடிய பொதுவான அடிப்படைகளை இந்நூல் தன்னகத்தே பொதிந்துள்ளது என்பதாகும். எனவே அறிவியலோடு தொடர்புடைய பல்வேறு கலைகளில் ஈடுபட்டுள்ள அறிஞர்கள் அவர்களது காலப்பிரிவில் அறியப்பட்டுள்ள அறிவியல் உண்மைகளை மக்களுக்குத் தெரியப்படுத்துதல் அவர்களது
35

Page 23
கடமையாகும். ஆனால் அறிவியல் உண்மைகளின் வெளிச்சத்தில் குர்ஆனின் திருவசனங்களுக்கு விளக்கம் கொடுக்க முனையும்போது வலிந்து பொருள்கொள்ள முயற்சித்தல் கூடாது. குர்ஆனின் திருவசனம் ஒன்றின் வெளிப்படையான கருத்து உறுதியாக நிலைநாட்டப்பபட்ட ஓர் அறிவியல் உண்மைக்கு இணங்கியதாகக் காணப்பட்டால் அந்த திருவசனத்தை குறிப்பிட்ட அறிவியல் உண்மையின் அடிப்படையில் விளக்க முற்படுவதே பொருத்தமாகும்.
முஹம்மத் அம்மாரா, இஸ்லாம் வல் - களாயல் அஸ்ர் பக்கம் 25)
எனவே குர்ஆன் ஓர் அறிவியல் நூலன்று ஆனால் இயற்கையின் படைப்பினங்களில் அல்லாஹ்வின் மாட்சிமையும், மகத்துவமும், படைப்பற்புதமும், சிருஷ்டி ஆற்றலும் பிரதிபலிக்கும் தன்மை பற்றிக் குறிப்பிடும் திருவசனங்களில் மனித இனத்திற்கு மகத்தான படிப்பினைகள் உள்ளன. அதன் தாத்பரியத்தை அறிவியல் வளர்ச்சியின் வெளிச்சத்தில் விளக்குவதே குர்ஆனை அறிவியல் நோக்கில் அணுகி ஆராய்வதன் அடிப்படை நோக்கமாக அமைதல் வேண்டும். இவ்வாறு மனிதன் அவனது அறிவின் வெளிச்சத்தில், அறிவியல் வளர்ச்சியின் ஒளியில் குர்ஆனின் திருவசனங்களின் பின்னணியில் இயற்கையின் சிருஷ்டி அற்புதங்களையும், சீரமைப்பையும் விளக்க முற்படும் இம்முயற்சியானது. இப்பிரமாண்டமான, எல்லையற்றுப் பரந்திருக்கின்ற பிரபஞ்சத்திலும், அதில் புதைந்துள்ள இயற்கையின் இரகசியங்களிலும் ஒரு மகத்தான நோக்கமும், இலட்சியமும் உள்ளது என்ற உணர்வை அவனில் தோற்றுவிக்கும்.
நிச்சயமாக வானங்களையும் பூமியையும் படைத்திருப்பதிலும், இரவும் பகலும் மாறி மாறி வருவதிலும் அறிவுடையோருக்கு பல அத்தாட்சிகள் இருக்கின்றன. அவர்கள் எத்தகையோரென்றால், நின்ற நிலையிலும், இருப்பிலும், தங்கள் விலாப்புறங்களில் படுத்த நிலையிலும் அல்லாஹ்வை நினைத்து வானங்கள், பூமியின் படைப்பைப் பற்றிச் சிந்தித்து எங்கள் இரட்சகனே நீ இவற்றை வீனுக்காகப் படைக்கவில்லை; நீ மிகத் துரயவன் . நரக நெருப்பின் வேதனையை விட்டும் எங்களை நீ இரட்சிப்பாயாக எனக் கூறுவார்கள்
ஆவ இம்ரான் W ? (? - Wo !
35

4. இறைத்தூதின் அவசியம்
மனிதன் அவனது வாழ்விற்கு ஆதாரமாக விளங்கும் இப்பூமியில் இரண்டு வகையான வினாக்களுக்கு, அல்லது பிரச்சினைகளுக்குத் தீர்வுகாண வேண்டியுள்ளது. அவற்றை அவன் எதிர்நோக்கும் உடனடிப் பிரச்சினைகள் (immediate problems) எனவும் வாழ்க்கை நித்திய வினாக்களோடு தொடர்புடைய முடிவும், முக்கியமுமான பிரச்சினைகள் (பlimate problems) எனவும் நாங்கள்குறிப்படலாம்.
மனிதனின் அன்றாட உலக வாழ்க்கையுடன் தொடர்புடைய உணவு, உடை, உறையுள் போன்ற வாழ்க்கையின் அடிப்படைத் தேவைகளைப் பெற்றுக் கொள்ளவதே அவன் எதிர்நோக்கும் உடனடிப் பிரச்சினையாகும். மனித வாழ்வின் நிலைபேற்றிற்கு அவசியமான இத்தேவைகளைப் பொறுத்தளவில் அவன் எதிர்கொள்ளும் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு அவனது புலன்களின் மூலம் பெறும், அறிவும், பகுத்தறிவும் துணைபுரிகின்றன. இந்த
37

Page 24
பகுத்தறிவின் அடிப்படையில் அறிவியல் தோற்றம் பெறும் பாண்ட பற்றி முந்திய அத்தியாயத்தில் விரிவாக விளக்கப்பட்டது.
"அவன்தான் உங்களைப் பூமியிலிருந்து வெளிப்படுத்தினான். அதில் உங்களை உயிர்வாழச் செய்தான் (பிஸ்தமேரகும் எனக் குர்ஆன் ஸுரா ஹாதின் 51ம் திருவசனத்தில் குறிப்பிடுவது இது தொடர்பான ஒரு முக்கிய உண்மையை விளக்குகின்றது. இந்தத் திருவசனத்தில் "இஸ்தஃமர" என்ற பதம் மிக விரிவான கருத்தில் பயன்படுத்தப் பட்டுள்ளது. அதாவது பூமியில் உள்ள வளங்களைப் பயன்படுத்தி, அதில் தனது வாழ்க்கை வசதிகளைப் பெருக்கி இப்பூமியை மேலும் வளம்பெறச் செய்வதையே இப்பதம் குறிக்கின்றது. இக்கருத்தை ஷுரா அல்- புர்கானில் 74ம் திரு வசனம் மேலும் தெளிவுபடுத்துகின்றது. எமூத் சமுகத்தவர்களுக்கு அல்லாஹ் அருளிச் செய்த பாக்கியங்களை குர்ஆன் இந்த பைராவில் பின்வருமாறு குறிப்பிடுகின்றது:
"அன்றி "ஆதி" என்னும் மக்களுக்குப் பின்னர் பூமியில் உங்களைக் குடியேறச் செய்து அதற்கு உங்களை அதிபதியாக்கி வைத்ததை நீங்கள் நினைத்துப் பாருங்கள். நீங்கள் அதன் சமவெளிகளில் மாளிகைகளைக் கட்டிரம் மலைகளைக் குடைத்தும் வீடுகளை அமைத்துக் கொள்கின்றீர்கள்"
இங்கு குர்ஆன் ஸ்மூத் சமுகத்தவர்களைப்பற்றிக் குறிப்பிடும் உண்மை முழு மனித இனத்தையும் பொதிந்த பொது உண்மையாகும். அல்லாஹ் மனிதனைச் சிருஷ்டித்து, பூமியில் குடியமர்த்தி அவனது தேவைகளைப் பூர்த்தி செய்யும் வகையில் அதன் வளங்களை அவன் பயன்படுத்துவதற்குத் துணைபுரியும் பகுத்தறிவையும் வழங்கியுள்ளான். இந்தப் பகுத்தறிவே அவனுக்கு அவனது உலக வாழ்வின் அடிப்படைத் தேவைகளைப் பெற்றுக்கொள்ளவும், பெளதிக உலகைப் பினைத்துள்ள இயற்கை விதிகளைக் கண்டறியவும் துணைபுரிகின்றது. இவ்வாறு இயற்கை விதிகளைக் கண்டறிவதே அறிவியல் பணியாக அமைகின்றது. இவ்வாறு அவன் புலனனுபவத்தினாலும்,பகுத்தறிவின் துணைகொண்டும் கண்டுபிடித்த இயற்கை விதிகளை அவனது பெளதிக சூழலில் பிரயோகிக்கும்போது தொழில்நுட்பம் (Technology) P_{5arréflsûr D5).
38

ஆனால் மனித வாழ்வு அவனது சட உலகோடும். பெளதிகச் சூழலோடும் தொடர்புடைய அறிவியலோடும், தொழில் நுட்பத்தோடும் மட்டும் கட்டுப்பட்ட வாழ்வன்று. உலக வாழ்வின் பெளதிக தேவைகளைப் பூர்த்தி செய்து விடுவதால் மட்டும் மனிதனின் அனைத்துத் தேவைகளும் பூர்த்தியாகிவிடுவதில்லை. எல்லாப் பிரச்சினைகளும் தீர்ந்துவிடுவதில்லை. அனைத்து வினாக்களுக்கும் விடை கிடைத்து விடுவதில்லை. நாம் ஏற்கனவே விளக்கியவாறு மனித வாழ்வில் அடிப்படையான வினாக்கள் உள்ளன. நான் யார்? இப்பிரபஞ்சம் யாது? எனக்கும் இப்பிரபஞ்சத்திற்குமிடையிலான தொடர்பு யாது வாழ்வின் இலட்சியம், குறிக்கோள் என்ன? வாழ்க்கைப் பயணத்தின் இறுதி முடிவு யாது? மனித வாழ்விற்குப் பொருளையும் கருத்தையும், குறிக்கோளையும், இலட்சியத்தையும் வழங்கும் இந்த அடிப்படை வினாக்களுக்கு விடை பகரும் ஆற்றல் பகுத்தறிவிற்கோ, அதன் பிரயோகத்தினடியாக எழுந்த அறிவியலுக்கே" இல்லை என்ற உண்மை ஏற்கனவே விளக்கப்பட்டது.
மனிதனின் பகுத்தறிவின் வெளிச்சத்தில் இந்த அடிப்படை வினாக்களுக்கு விடைகாணும் முயற்சியில் ஈடுபட்ட உலகின் புகழ்பெற்ற சிந்தனையாளர்கள் தத்துவஞானிகளில் பலர் அதில் தோல்வியடைந்ததையும், அதனடியாக அவர்களது வாழ்வு பொருளும், கருத்துமற்ற வெறுங்கதையாக மாறி அவர்கள் தங்களது வாழ்க்கையை பெரும் மனப்போராட்டத்திலும், விரக்தியிலும், வெறுமை உணர்விலும் (feeling eIllpliness) கழித்ததையும் அவர்களது வாழ்க்கை வரலாறுகளிலிருந்து நாம் அறிய முடிகின்றது. பகுத்தறிவாளராக விளங்கிய உலகப் புகழ்பெற்ற தத்துவஞானி பேட்ரன்ட் ரஸ்ளின் வாழ்க்கையில் ஏமாற்றமும், விரக்தியும் அடைந்து பல தடவைகள் தான் தற்கொலை புரிய எண்ணியதாக அவரது சுயசரிதையில் குறிப்பிடுகின்றார். ஆற்றலும், திறமையும் மிக்க அவரது வாழ்வு பெரும் மனப்போராட்டத்தில் கழிந்ததை அவரது வாழ்க்கை வரலாற்றைப் படிக்கும் எவரும் உணர்வர். புகழ்பெற்ற மேற்கத்திய சிந்தனையாளர் ஆர்தர் கேஸ்வர். பிரிட்டிஷ் நாவலாசிரியை வெர்ஜினிய வுல்ப் அமெரிக்க நாவலாசிரியர் ஏர்னஸ்ட் ஹெமிங்வே ஆகிய மானிடநேயக்கோட்பாட்டை வரித்துக்கொண்டோரின் வாழ்வு தற்கொவையில் முடிவடைந்தது. மானிட நேயக் கோட்பாட்டினோல்
3)

Page 25
கவரப்பட்ட வாழ்க்கையின் அடிப்படை வினாக்களுக்கு பகுத்தறிவின் வெளிச்சத்தில் விடைகாண முனைந்த இவர்கள் தங்களது வாழ்வில் செல்வம், புகழ், அந்தஸ்து ஆகிய அனைத்தையும் பெற்றிருந்தும் ஏதோ ஒரு வெறுமையும், சூன்யமும் தங்களைச் சூழ்திருப்பதாக உணர்ந்தனர். அந்த ஆத்மீக வெறுமையை அறிவியலாலோ பகுத்தறிவாலோ நிரப்பமுடியவில்லை.
மனிதனது அறிவின் வட்டம் மிகக் குறுகியது என்பதனையும், அவனுக்கு மிக சொற்ப அறிவே வழங்கப்பட்டுள்ளது என்பதனையும் குர்ஆன் மிகத் தெளிவுபடுத்துகின்றது.
"G) av3. Ĝ7 F Mr Agj Lv ஞான மேயன்றி உங்களுக்கு கொடுக்கப்படவில்லை" பனுச இஸ்ராயில் 85
எனவே சந்தேகமற்ற, உறுதியான, தெளிவான அறிவு இல்லாத நிலையில் மனிதன் வெறுமனே ஊகங்கள். அனுமானங்களின் அடிப்படையிலேயே செயல்படுகின்றான்.
"அவர்களில் பெரும்பாலோர் உள்ளத்தின் வீண் பிரமைகளையே பின்பற்றுகின்றனர். இந்த உறுதியற்ற வெறும் பிரமைகளும், ஊகங்களும் உண்மையை அறிவதற்குச் சிறிதும் பயனளிக்காது உண்மைக்குப் பகரமாகவும் அது அமையமுடியாது" ஆனுசஸ்பீசி
குர்ஆனி இங்கு மனிதனின் உணர்வுகள், அனுமானங்களின் அடிப்படையில் தோன்றும் கருத்துக்களையே "என்" - "உள்ளத்தின் வீண் பிரமைகள்" எனக் குறிப்பிடுகின்றது. இது என்றும் "ஹக்" என்னும் சத்தியத்திற்கும், யதார்த்தத்திற்கும் பகரமாக அமைதல் முடியாது. சத்தியத்தின் அடிப்படையிலும், எத்தகைய சந்தேகமற்ற அறிவின் அத்திவாரத்திலும் எழுப்பப் பட்டதே இறைவன் புறத்தால் "வஹி" என்னும் இறைத்தூது மூலம் நபிமார்களுக்கு வழங்கப்படும் அறிவாகும்.
இந்த "ளன்" என்னும் மனிதனின் உள்ளத்தில் எழும் அனுமானங்கள், யூகங்கள் அடிப்டையில் தோற்றுவிக்கப்படும் ஒழுக்கக் கோட்பாடுகள்.
4()

கொள்கை நெறிகள் மனிதனது சிந்தனையைத் தடுமாறச்செய்து அவனை குழப்பத்தில் ஆழ்த்தவதை குர்ஆன் பின்வருமாறு அழகாகச் சித்தரிக்கின்றது.
STT LT TTT S STT CLC CLCCCL LCLCL LC C T T CTMMCS LL LCT T LTC CL அவர்களுடைய செயல்கள் பாலைவனத்தில் தோன்றும் காணல் நீரைப்போன்றதுதாகித்தவன் தண்ணீர் என எண்ணிக்கொண்டு அதன் சமீபமாக வரும் பொது ஒன்றையுமே அவன் காண்பதில்லை. எனினும் அல்லாஹ்வையே அங்கு காண்கின்றான் அல்லது அவர்களுடைய செயல் சமுத்திரத்தின் ஆழத்தில் உள்ள இருளுக்கு PALF ALF TAL, உள்ளது. As of (ARO gan y Tenji AY" ARP ahur முடிக்கொண்டிருக்கின்றது. அதன்மேல் மேகங்கள் அவைபோல் அதனை மேலும் முடிக்கொண்டிருக்கின்றது. ஒன்றன்மேல் ஒன்றாக சாரிகுள் அலைமேல் அவைபோல் சுவிந்துள்ளது. அவன் தனது கையை நீட்டிய போதிலும் அதனைக் காண முடியாத அளவிற்கு விகுள் முடிவுள்ளது. அல்லாஹ் எவனுக்கு ஒளியை வழங்கவில்லையோ அவனுக்கு எத்தகைய ஒளியும் இல்லை."
அத்துசர் பீ9- சிெ
இஸ்லாம் எதிலும் தெளிவையும் உறுதியையும், ஆதாரத்தையும், அத்தாட்சியையும் வேண்டி நிற்கின்றது.
"தீங்கள் உண்மை பேசுபவர்சனாக இருந்தால் உங்கள் ஆதாரங்களைக் கொண்டு வாருங்கள்"
Bya – Lasyfr FFF"
குர்ஆன் இத்திருவசனத்தில் குறிப்பிடும் "புர்ஹான்" என்னும் சந்தேகமற்ற உறுதியான ஆதாரத்தை மனிதனின் பகுத்தறிவு அவனுக்கு வழங்குதல் முடியாது. இந்த வகையில் மேலே குறிப்பிட்ட திருவசனம் "வஹீ" என்னும் இறைதூது "அக்ல்" என்னும் பகுத்தறிவிற்கு அறைகூவல் விடுக்கும் வகையில் அமைந்துள்ளது.
மனிதனின் செயல்பாடுகள் அனைத்தும் காலம் (Time) இடம் (space)ஆகியவற்றின் கட்டுப்பாட்டுக்கு உட்பட்டே உள்ளன. அதனை
41

Page 26
மீறிச் செயல்படும் ஆற்றலோ சக்தியோ அவனுக்கு இல்லை, அவனது பகுத்தறிவும் இந்த வரம்புகளுக்கும், எல்லைகளுக்கும் உட்பட்டே செயல்படுகின்றது. மனிதனது பகுத்தறிவு உருவாக்கிய பல்வேறு கலைகள் மகத்தான, வியப்படையத்தக்க வளர்ச்சியைக் கண்டும் அக்கலைகளினால் மனிதனுக்கு அவனைப் பற்றிய தெளிவான உறுதியான அறிவை வழங்க முடியவில்லை. எனவே மனிதன் அவனது அறிவு இவ்வளவு வளர்ச்சியடைந்த நிலையிலும் அவனைப் பற்றிய சரியான தெளிவான அறிவைப் பெற்றுக் கொள்ளவில்லை, அவன் இன்னும் தன்னைப் பற்றிய அறியாமையிலேயே உள்ளான். மேற்கத்திய சிந்தனையாளரான அலெக்ஸ் கரெவ் அவரது அறியப்படாது மனிதன் (Mr le kW) என்னும் நூலில் இந்த உண்மையை
மிக அழகாக விளக்கியுள்ளார்.
எனவே மனிதன் அவனைப்பற்றியும், அவனைச் சூழவுள்ள அவனது வாழ்க்கையின் களமான இப்பிரபஞ்சம் பற்றியும் வாழ்க்கையின் நோக்கம், குறிக்கோள், இலட்சியம் பற்றியும் சரியானதும், தெளிவானதும், சந்தேகத்திற்கு இடமற்றதுமான அறிவைப் பெறுவதற்கு "வஹீ" என்னும் இறைதூதே ஒரே வழியாக உள்ளது.
மனிதன் அவனது அறிவை இரண்டு வரிகளில் பெற்றுக்கொள்கிறான். அவனது சிந்தனை, அவதானம், ஆராய்ச்சியின் மூலம் அவன் இப்பிரபஞ்சத்தின் அமைப்பு, சட உலகம், அது பற்றிய உண்மைகள் சார்ந்த அறிவை அவன் பெறுகின்றான். அவனது அறிவியல் அறிவு இந்த வகையைச் சார்ந்ததாக உள்ளது. இன்னும் ஒரு அறிவு மனிதனின் எத்தகைய முயற்சியுமின்றி. இறைவனின் புறத்தால் அவனது அருளாக அவனுக்கு வழங்கப்படுகின்றது. மனித சிருஷ்டியின் நோக்கம், வாழ்க்கையின் நோக்கம் பற்றிய இந்த அறிவு, இறைதூதர்கள்மூலம் "வஹீ யின் அடிப்டையில் அவனுக்கு வழங்கப்படுகின்றது. இதனை நாம் பிரபஞ்சத்திலும், அண்டவெளியிலும் நிகழும் ஒரு நிகழ்விற்கு ஒப்பிடலாம். மனிதன் புறக்கண்ணால் அவதானித்தும் தொலைநோக்கி போன்ற கருவிகளைப் பயன்படுத்தியும் வானில் உள்ள கோள்கள்,நட்சத்திரங்கள் பற்றிய அறிவைப் பெற்றுக்கொள்கின்றான். இன்னும் சில நட்சத்திரங்கள் அவனது எத்தகைய தேடுதல்
42

முயற்சியுமின்றியே திடீரென பால்வெளிப்பிரதேசத்தில் அவனது கண்களுக்குப் புலப்பட ஆரம்பிக்கின்றன. இது போன்றதே அவனது முயற்சியினால் பெறப்படும் இறைதூதுக்கும் அறிவிற்குமிடையிலான வித்தியாசமாகும்.
மனிதன் அறிவைச் சுற்றி வியாபித்துப் பரந்துள்ள இப்பிரபஞ்சத்தை நோக்கி அவனது பார்வையைச் செலுத்தினால் பூமியில் அவனது நிலைபேற்றிற்கு அவசியமான அத்தனை தேவைகளும் பூர்த்தி செய்யப்பட்டிருப்பதை அவன் காண்பான். இதனைக் குர்ஆன் பின்வருமாறு குறிப்படுகின்றது.
"உங்களுக்குப் பூமியில் சகல வசதிகளையும் அளித்து அதில் உங்களுக்கு வாழ்க்கை வசதிகளை ஏற்படுத்தினோம்."
அல்- அரக்ரோப்பி
இப்பிரபஞ்சத்தின் ஒவ்வொரு அங்கமும் மனிதனின் வாழ்க்கையை வசதியானதாகவும், வளமானதாகவும் ஆக்குவதற்கு அவற்றின் பணியை ஆற்றிக்கொண்டிருக்கின்றன. கிழக்கில் சூரியன் உதிக்கின்றது. அதன் உதயத்தோடு மனிதனும் அமைதியான உறக்கத்திலிருந்து விழித்தெழுகின்றான். பகல்பொழுது அவனது உழைப்பிற்குப் பொருத்தமான வகையில் வெளிச்சத்தையும், உஷ்ணத்தையும், சுறு சுறுப்பையும் வழங்குகின்றது. பகல்முழுவதும் ஒடி அலைந்து உழைப்பினால் களைப்படைந்த மனிதன் ஒய்வுபெறும் சூழலை உருவாக்குவதற்காக இருளின் போர்வையை விரிப்பதற்காக சூரியன் மேற்குத் திசையில் மறைகின்றது. இரவின் காரிருள் அவனுக்குப் போர்வையாக அமைய மனிதன் ஆயாசமும் களைப்புந் தீர உறங்கி அமைதியும், ஓய்வும் பெறுகின்றான்.
நீங்கள் சகம் பெறுவதற்காக இரவையும், நீங்கள் யாவற்றையும் தெளிவாகப் பார்ப்பதற்காகப் பசலையும் உங்களுக்கு அவனே
அமைத்துத் தந்தான்"
அல்- புர்கான் சீ7
43

Page 27
"இரவும் இவர்களுக்கோர் அத்தாட்சியாகும். அதிலிருந்தே பகலை நாம் வெளிப்படுத்துகின்றோம். இன்றேல் இவர்கள் இருளில் மூழ்கிவிடுவார்கள்."
Efroir J7
நபியே! நீர் கூறும் இரவை மதுமைதாள் வரையில் நீண்டிருக்கும்படி அல்லாஹ் உங்களுக்குச் செய்துவிட்டால் உங்களுக்குப் பகலின் வெளிச்சத்தைக் கொண்டு வரக்கடியவன் யார்? அல்லாஹற்வைத் தவிர வனச்சத்துக்குரியவன் இருக்கின்றானா என்பதை நீங்கள் சித்தித்துப் பார்க்கவில்லையா? நபியே தீர் கூறும் பசலை இறுதி தாள்வரை நீண்டிருக்கும்படி அல்லாஹ் செய்துவிட்டால் நீங்கள் இனைப்பாறக்கடிய இரவை உங்களுக்குக் கொண்டுவரக்கடியவன் அல்லாஹ்வேயன்றி வனச்சத்துக்குரியவன் இருக்கின்றானா என்பதை நீங்கள் கவனிக்க வேண்டாமா? இதனை நீங்கள் சிந்தித்துப் பார்க்க வேண்டாமா? அவ்வாறின்றி இரவைரம் பசவைரம் தீங்கள் இளைப்பாறுவதற்கும். நீங்கள் அவனுடைய அருளைத் தேடிச் கொள்வதற்கும் உங்களுக்கு அவன் ஏற்படுத்தியிருப்பதற்கு அவன் கிருபைதான் காரணம்.இதற்கு தீங்கள் அவனுக்கு நன்றி Alfšsdavai LTFTP
அல்- கிஷன் 7- 73
இதுபோன்றே மனித வாழ்வின் நிலைபேற்றிற்கு அவசியமான நீரை வானம் வருவித்துப் பொழிகின்றது. அதன் காரணமாக இறந்திருந்த பூமி உயிர் பெற்று எழுகின்றது. பசுமையான மரங்கள். அவற்றில் கண்ணைக் கவரும் மலர்கள், சுவையும், பயனும் நல்கும் பல்வகைக் கணிகள் அவற்றில் காய்த்துப் பயனளிக்கின்றன. கால்நடை மிருகங்கள் பாலையும், இறைச்சியையும் மனிதனுக்கு வழங்குகின்றன. பூமியில் புதைந்துள்ள கணிப்பொருட்கள் அவனது வாழ்க்கையின் வசதிகளைப் பெருக்கிக்கொள்ள வகை செய்கின்றன. இவ்வாறு மனிதனின் வாழ்க்கையில் புறத் தேவைகள் எவ்வளவு சிறப்பாக பூர்த்திசெய்யப்பட்டுள்ளன என்பதைக் குர்ஆன் அதற்கே உரிய அழகு நடையில் உணர்ச்சிச் சித்திரமாக விளக்குகின்றது.
44

"அவன் வானங்களையும், பூமியையும் படைத்திருப்பதிலும், இரவும் பகலும் மாறி மாறி வருவதிலும், மனிதர்களுக்குப் பயன்தருவதை ஏற்றிக்கொண்டு சமுத்திரத்தில் செல்லும் கப்பலிலும் வரண்டு இறந்த பூமியை உயிர்ப்பித்து செழிப்பாக்கி வைக்க வானத்திலிருந்து அல்லாஹ் பொழிவிக்கச் செய்யும் மழையிலும், எல்லாவிதமான கால்நடைகளையும் பூமியில் பரவவிட்டிகுப்பதிலும் காற்றை (பல கோணங்களில் திருப்பி விடுவதிலும், வானத்திற்கும், பூமிக்குமிடையில் கட்டுப்படுத்தப்பட்டிருக்கும் கரு மேகத்திலும் சித்திக்கும் மக்களுக்கு நிச்சயமாக அத்தாட்சிகள் உள்ளன"
-gyü -ura TIT Főf
மனிதன் வெறுமனே உடலை மட்டும் கொண்ட ஒரு சடப்பொருளன்று. அவன் உடல், உள்ளம், ஆத்மா ஆகிய மூன்றும் அமையப்பெற்ற பூரண ஆளுமையை உடையவன். எனவே அவனது உடலுடனும் உள்ளத்துடனும் தொடர்புடைய புறத்தேவைகள் பூர்த்திசெய்யப்பட்டுள்ளது போன்றே ஆத்மாவின் தேவைகளும் நிச்சயம் பூர்த்தி செய்யப்பட்டிருத்தல் வேண்டும். இறை துரதின் அடிப்படையிலேயே இந்தத் தேவை பூர்த்தி செய்யப்படுகின்றது. மனிதனை மிக அழகிய, பூரண அமைப்பில் சிருஷ்டித்து, அவனது தோற்றத்தை ஒழுங்காகவும், சீராகவும் அமைத்து, நேரான பாதையையும் இறைவன் அருளிச் செய்ததைக் குர்ஆன் குறிப்பிடுகின்றது.
நபியே உயர்வான உம் இறைவனுடைய திருப்பெயரைத் துதிப்பீராக. அவன் எத்தகையவன்எளில் அவன்தான் படைத்தான். பொருத்தமாகவும் அமைத்தான். மேலும் விதியை நிர்ணயித்தான். பிறகு நேரான வழியைக் காட்டினான்.
அல்- அகவோ - 3
"அவனுக்கு தாம் இரு கண்களையும், ஒரு நாவையும், இகு உதடுகளையும் அளிக்கவில்லையா? மேலும் நன்மை, தீமையின்)
தெளிவான இரு வழிகளை அவனுக்கு தாம் காட்டினோம்.
அல்-பலத் 5- 8
45

Page 28
மனிதன் உடலும், ஆத்மாவும் கலந்த ஒரு கூட்டுக்கலவையயா உள்ளான் என்ற கருத்தைக் குர்ஆன் மிகத் தெளிவாக விளக்குகின்றது
"உமதிறைவன் மலக்குகளை நோக்கி தான் மனிதனைக் களிமண்ணால் சிருஷ்டிக்கப் போகின்றேன் எனக் கூறிய சந்தர்ப்பத்தில்தான் அவரைச் செப்பனிட்டு அவருக்குள் எனது ஆத்மாவைப் புகுத்தினால் அவருக்கு நீங்கள் சிரம் பணியுங்கள்(என்றும் கூறினான்) அது சமயம் மலக்குகள் யாவரும் சிரம் பணித்தார்கள்"
Evтј. 7, 73.
சடமும், ஆத்மாவும் கலந்த கூட்டுக்கலவையான மனிதனில் இந்தச் சம நிலையைப் பேண இறைதூது துணைபுரிகின்றது. இறைவனின் வழி காட்டுதலைப் புறக்கணித்துவிட்டு மனிதனின் புலனுணர்வினால் பெறப்படும் அறிவினதும் பகுத்தறிவினதும் அடிப்படையில் உருவாக்கப்பட்ட கொள்கைகள், தத்துவங்கள், சித்தாந்தங்கள் அனைத்தும் மனித ஆளுமையில் காணப்படும் இந்த இரண்டு அம்சங்களில் (உடல், ஆத்மா) ஒன்றைப் புறக்கணித்து மற்றதுக்கு அழுத்தம் கொடுத்து இந்த சம நிலையைச் சீர்குலைத்திருப்பதை மனித சிந்தனையின் வரலாறு நமக்கு உணர்த்துகின்றது. மனிதனின் உடலில் தேவைகள் புறக்கணிக்கப்பட்டு ஆத்மாவிற்கு மட்டும் முக்கியத்துவம் அளிக்கப்பட்ட காலப்பிரிவுகளில் துறவறக்கோட்பாடும் (asticism) ஆத்மாவினி தேவைகள் புறக்கணிக்கப்பட்டு உடலின் சட ரீதியிலான தேவைகள் மட்டும் கருத்தில் கொள்ளப்பட்ட காலகட்டங்களில் சட வாதக் கோட்பாடும் (materialism) தோன்றி மனித வாழ்வின் சம நிலையை சீர்குலைத்துள்ளன. இறைதூது ஒன்றே மனிதனின் உடல், உள்ளம், ஆத்மாவின் தேவைகளைப் பூர்த்திசெய்யும் தகுதி படைத்ததாக உள்ளது. ஏனெனில் அது இப்பிரபஞ்சத்தை ஒன்றுமில்லாத நிலையிலிருந்து சிருஷ்டித்த அனைத்தையும் பொதிந்த அறிவு ஞானம் மிக்க இறைவனின் புறத்திலிருந்து மனிதனுக்கு வழங்கப்படும் அறிவாகும்.
இறைவனைப் பற்றிய உள்ளுணர்வு மனிதனில் இயற்கையாகவே உள்ளது. அவனின் இயற்கைத் தன்மையோடு இணைந்ததாக
4()

இறைவனைப் பற்றிய விசுவாசமுள்ளது. இந்த விசுவாச உணர்வுடனேயே மனிதன் உலகில் பிறக்கின்றான். ஏனெனில் மனித இனத்தின் தோற்றத்திற்கு முன்னர் ஆத்மீக உலகில் அனைத்து ஆத்மாக்களும் அல்லாஹ்வை தங்களது இரட்சகனாக ஏற்றுக்கொண்டு சாட்சி பகர்ந்ததைக் குர்ஆன் பின்வருமாறு குறிப்பிடுகின்றது.
"மேலும் நினைவூட்டுவீராக! உமது இறைவன் ஆதம் உடைய மக்களின் முதுகுகளிலிருந்து அவர்களுடைய வழித்தோன்றல்களை வெளிப்படுத்தி அவர்களையே அவர்களுக்கு சாட்சியாக்கி நான் உங்கள் இறைவனல்லவா? என்று கேட்டான். "ஆம்" நிச்சயமாக நீ தான் எங்கள் இறைவன். இதற்கு தாங்கள் சாட்சியாக இருக்கிறோம்" என்று கூறினார்கள்.
அல்- அரோப் 178
நவீன சமூகவியலாளர்கள் மனிதனைப் பற்றிக் குறிப்பிடும்போது அவன் ஒரு சமூகப் பிராணி (Social animal) எனக் குறிப்பிடுகின்றனர். ஆனால் அடிப்படையில் அவன் வணங்கும் பிராணி (Worshipping பiபl) யாகவே உள்ளான். வணங்கி வழிபடல் வேண்டும் என்ற உணர்வு அவனில் இயற்கையாகவே காணப்படுகின்றது. எனவேதான் மனித இனத்தின் வரலாற்றினை ஆராய்ந்த மானிடவியலாளர் (anthropologists) GgTGù GLT si giar76II (67 (archeologists) மனித இனத்தின் வரலாற்றில் இறைவனைப்பற்றிய நம்பிக்கை ஏதாவதொரு அமைப்பில், எல்லாக் கால கட்டங்களிலும் காணப்படுகின்றது எனவும் இலக்கியம், ஓவியம் போன்றவற்றைக் கொண்டிராத சமூகமொன்றை நாம் கற்பனை பண்ணினாலும், இறைவனைப் பற்றிய நம்பிக்கை ஏதாவதொரு அமைப்பில் காணப்படாத சமூகமொன்றை கற்பனை செய்யவும் முடியாதுள்ளது எனக் கூறுகின்றனர். மனிதனில் இறை நம்பிக்கை இயற்கையாகவே உள்ளார்ந்து அமைந்துள்ளதைக் குர்ஆன் பின் வருமாறு மிக அழகாகக் குறிப்பிடுகின்றது.
நபியே! பூமியும் அதிலுள்ளவையும் யாருக்குரியன என நீங்கள் அறிந்திருந்தால் கூறுங்கள் எனக் கேளும், அதற்கவர்கள்,
அல்லாஹ்வுக்குரியது எனக் கூறுவார்கள். அவ்வாறாயின்
-

Page 29
அதனைக் கொண்டு நீங்கள் நல்லுணர்ச்சி பெற மாட்டீர்களா? எனக்கறும். அன்றி ஏழு வானங்களுக்கு இறைவனும், மகத்தான அர்ஷுக்கு இறைவனும் யார்? எனக்கேட்பீராக. அதற்சவர்கள், யாவும் அல்லாஹ்வுக்குடயனவே எனக் கூறுவார்கள். அவ்வாறாயின்) நீங்கள் அவனுக்குப் பயப்பட வேண்டாமா? எனக்கூறும், அன்றி சகல பொருள்களின் அதிகாரம் யார் கையில் இருக்கின்றது? யாராலும் இரட்சிக்கப்படாத ஆனால் எல்லோரையும் இரட்சிக்கக் கூடியவன் யார்? நீங்கள் அறிந்திருத்தால் கூறுங்கள் எனக்கதும். அதற்சவர்கள் சகல அதிகாரமும் அல்லாஹ்வுக்குடையதுதான் என்று கூறுவார்கள்) அவ்வாறாயின் நீங்கள் உங்கள் அறிவை எங்கு இழந்து" விட்ர்ேகள்? என்று கூறும்"
அல்- முஃமினுசன் சீசீ-89
மனிதனில் இறைவனின் இருப்பையும, நிலைப்பாட்டையும் உணர்ந்து அறியும் தன்மை உள்ளார்ந்து அவனது இயற்கைப் பண்பாக அமைந்திருப்பதையும், ஆனால் அவனது மனோ இச்சையின் தூண்டுதலுக்கு ஆளாகி அவனது அறிவை இழப்பதினால், மதிமயக்கத்தினால் இந்த இயற்கைப் பண்பு அவனில் சிதைக்கப்படுவதையும் மேல் குறிப்பிட்ட அல்குர்ஆனின் திருவசனம் மிகச் சிறப்பாக விளக்குகின்றது. இந்த நிலையிலேயே மனிதன் இறைவனுக்குப் பதிலாக மனோ இச்சையை வணக்கத்துக்குரிய தெய்வமாக ஆக்கிக்கொள்கின்றான். மனிதன்"வணங்கும் பிராணி" என்ற வகையில் ஏதாவதொன்றை வணங்கியே ஆகுதல் வேண்டும். எனவே இறைவனை அவன் வனங்காதபோது மனோ இச்சையை அவனது தெய்வமாக அவன் ஆக்கிக் கொள்கின்றான். இதனைக் குர்ஆன் பினவருமாறு மிகத் தத்ரூபமாக விளக்குகின்றது.
நபியே தன் மனோ இச்சையை தன்னுடைய தெய்வமாக எவன் எடுத்துக்கொண்டானோ அவனை நீர் பார்த்திரா? நீர்
அவனுக்கு பாதுகாப்பாளராக இருப்பிரா"
"அவர்களில் பெரும்பாலோர் உம்முடைய வார்த்தைகளைக் காதால் கேட்கின்றார்கள் என்றோ அரல்லது அதனைச்
48

சித்திக்கின்றார்கள் என்றோ நீர் எண்ணிக் கொண்ரோ? அவர்கள் மிருகங்களைப் போன்றவர்களேயன்றி வேறில்லை. பின்னும் (மிருகங்களைவிட மிகவும் வழிகெட்டவர்களாகவும் இருக்கின்றனர்.
அரஷ்புர்கான் சி- சிசி
இவ்வாறு மனிதன் மனோ இச்சையை வணக்கத்துக்குரிய தெய்வமாக ஆக்கிக்கொண்ட நிலையிலேயே அவனது மதிமயக்கத்தினால் இயற்கைச் சிருஷ்டிகளை வணங்க ஆரம்பிக்கின்றான். இறைவனின் பண்புகளுக்கு உருவம் கற்பித்து அவற்றை வணங்க ஆரம்பிக்கின்றான். நவீன இயந்திர நாகரிக மனிதன் பணம், ஆட்சி, அதிகாரம், அந்தஸ்து, அறிவு ஆகிய்வற்றைப் பூஜிக்க ஆரம்பிக்கின்றான்.
எனவே மனிதன் அவனின் தோற்றத்தின் ஆரம்ப காலத்திலிருந்தே இறைவனை அறிந்திருந்தான். அவனை வழிபட்டான். ஆனால் அவன் பல்வேறு காலகட்டங்களில் அவனது மனோ இச்சையின் தூண்டுதலுக்கு ஆளாகி, இயற்கைத் தன்மை பிறழ்ந்த நிலையில் தடுமாற்றத்திற்கு ஆளானான். அப்போது இறைவனை எந்த முறையில் அவன் அறிதல் வேண்டுமோ அதற்கேற்ப அவன் அறியவில்லை. அவனை எந்த முறையில் வணங்குதல் வேண்டுமோ, அதற்கேற்ப அவனை வணங்கவில்லை.
இங்குதான் இறைவனின் தூது-வழிகாட்டுதல் அவனுக்கு இந்த வழிகேட்டிலிருந்து மீட்சியளிக்கின்றது. மனிதன் நேரான வழியிலிருந்து பிறழ்ந்த காலகட்டங்களில் எல்லாம் அவனுக்கு நேரான பாதையைக் காட்டுவதற்காக இறைதூதைச் சுமந்த இறைதூதர்களை அல்லாஹ் அனுப்பி வைத்ததை குர்ஆனி மிகத் தெளிவாகப் பல்வேறு சந்தர்ப்பங்களில் குறிப்பிடுகின்றது.
"நபியே உமக்கு முன்னர் நாம் அனுப்பிய துரதிர்களுக்கெல்லாம் திச்சயமாக என்னைத் தவிர வேறு நாகரனில்லை. எனவே என்னையே நீங்கள் வணங்குங்கள் என்றேயன்றி தான் வஹீ அறிவிக்கவில்லை."
அல்- அரன்மியா மிக
)

Page 30
அல்லாஹ் மனித சமுதாயத்தின் தோற்றம் முதல் காலத்திற்குக் காலம் மனித இனம் அறிவு தடுமாற்றத்தால் நேர் வழி பிறழ்ந்த போதெல்லாம், நேரான பாதையைக் காட்ட இறைதூதின் அடிப்படையில் அருளிய வழிகாட்டுதலின் முற்றுப்பேறாக அமைந்த இறைதூதே அல் குர் ஆனாகும்.
"இவர் ஆவர் எவதர் றிவர் அபிப் பரிராய பேதம் கொண்டிருத்தார்களோ அவற்றின் உண்மை நிலையை நீர் இவர்களுக்குத் தெளிவாக்கி விட வேண்டும் என்பதற்காகத்தான் இவ் வேதத்ததை உம்மீது அருளிச்செய்தோம்".
தத் தவிர்ப் சிசி
திச்சயமாக அல்லாஹர்ரவிடமிருந்து பேரொளியும், தெளிவு முள்ள ஒரு வேதம் இப்போது உங்கனிடம் வத்திகு க்கின்றது."
-gwych! - Enw'r ffigwr 15
"தமிழிே ! இது வேத தால், இதனை தாமே அருளிச் செய்தோம். பிதன்முலம் மனிதர்களை, அவர்களுடைய இறைவனின் கட்டளைப் பிரகாரம், இருள்களிலிருந்து பிரகாசத் தின்பால் நீர் கொண்டு வகு வீராக. அப்பிரகாரமே மிக்க புகழுக்குரிய யாவரையும் மிகைத்தவனின் நேரான வழியாகும்."
இப்ராஹிம்
இறைதூது என்ற இப் பேரொளி அரபுத் தீபகற்பத்திலிருந்து ஒளிவிட்டுப் பிரகாசித்து பல நூற்றாண்டுகள் மனித சமுதாயத்தை நேர் வழியில் நெறிப்படுத்தியது. அராபியர், பாரசீகர், எகிப்திய இபுதியர், வட ஆபிரிக்க பெர்பர். மத்திய ஆசிய மங்கோவியர் அனைவரும் அந்தப் பேரொளிச் சுடரால் ஆகர்ஷிக்கப்பட்டனர் மாபெரும் சாம்ராச்சியங்கள் அப்பேரொளிச் சுடரை ஏந்திய சமுகத்தின் முன் சரிந்து விழுந்தது. அந்தப் பேரோளியின் செல்வாக்கிற்கு ஆளாகி அதன் இலட்சிய தாகத்தால் இயக்குவிக்கப்பட்ட ஒரு முஸ்லிம் தனிமனிதர் பாரசீக மன்னனின் ஆடம்பரக் கம்பளங்கள்
Հ| }

விரிக்கப்பட்ட மாளிகைக்குள், கிழிந்த ஆடையுடன், ஏழ்மைக் கோலத்தில் பரவேசிக்கின்றார். இஸ்லாத்தின் இறைதூதின் நோக்கம் பற்றி அவரிடம் வினவப்படுகின்றது. இதோ ஈமானின் பேரோளியால் போஷிக்கப்பட்ட அந்த மனிதரின் நா பேச ஆரம்பிக்கின்றது.
"மனிதனை மனிதனின் அடிமைத்தனத்திலிருந்து விடுதலை செய்வதற்கும், குறுகிய, ஒடுக்கமான வாழ்விலிருந்து, விசாலமான மறுமை வாழ்வின்பால் அழைத்துச் செல்வதற்கும், மதங்களின் அநியாயங்கள், கொடுமைகளிலிருந்து இஸ்லாத்தின் நீதியின் பக்கம் அழைத்துச் செல்வதற்கும் அல்லாஹ் எங்களை அனுப்பியுள்ளான்"
இதுவே முஸ்லிம் இலட்சியக் குரலாக பல நூற்றாண்டுகள் WElமந்தன இறைதூதின் வெளிச்சத்தில் வீரப் பயனத்தை மேற்கொண்ட முளப்லிம்கள் இஸ்லாத்தின் உயர்ந்த விழுமிய பண்பாடுகளை உலகெங்கும் சுமந்து சென்றனர். அநியாயமும், அக்கிரமும் ஒழிக்கப்பட்டு நீதி நிலைக்க அவர்கள் போராடினார்கள் மனிதனைப் பிடித்திருந்த அடிமைத்தனங்கள் அறுத்தெறியப்பட்டன இஸ்லாமிய ஆட்சியில் மனிதன் சுதந்திரக் காற்றை சுவாசிக்க ஆரம்பித்தான். அறியாமையின் இருள் கலைக்கப்பட்டு முஸ்லிம்களால் அறிவு தீபம் ஏற்றிவைக்கப்பட்டது. பல்கலைக் கழகங்கள், அவதால் நிலையங்கள், ஆய்வு கூடங்கள். நூலகங்கள் ஆயிரமாயிரம் தோன்றின. இறுதித் துரதான இறைதூதின் வெளிச்சத்தில் மனித இனம் புது வாழ்வைப் பெற்றது
கால ஓட்டத்தில் அந்த ஒளியின் பிரகாசத்தில் வீரப் பயனத்தை மேற்கொண்ட முஸ்லிம்கள் அந்த வெளிச்சம் தங்களைச் சூழ்ந்திருந்த நிலையிலேயே நீண்ட தூக்கத்தில் ஆழ்ந்து விட்டனர். இப்போது அந்த ஒளியை பிறருக்கு வளங்குவது யார்? அப்பேரொளியின் ஐட்டமைக்காரர்களே, அதனை மறந்து அயர்ந்து விட்டனர்.
ஒளியைப் பெற்ற முஸ்லிம் உலகைச் சூழ இன்னொரு உலகம் இருந்தது. அது இறைதூதின் ஒளியற்று இருளில் ஆழ்ந்திருந்த உலகம், இறைதூதின் வெளிச்சத்திலேயே, அதனால் பயன்பெறாது ஸ்லிம்கள் ஆழ்ந்த உறக்கத்தில் மூழ்கியிருந்த அதே வேளையில்
୩ |

Page 31
இருட்டில் ஆழ்ந்திருந்த அந்த உலகம் விழித்துக்கொண்டது. எங்கும் கவிந்து, குவிந்த காரிருள், பிரபஞ்சம் யாது? மனிதன் யார்? அவனது வாழ்க்கையின் குறிக்கோள் யாது? இந்த வினாக்களுக்கு விடைகாணும் ஒளிவிளக்கை- அறிவு தீபத்தை இழந்திருந்த இருட்டில் அந்த உலகம் இப்போது தட்டுத்தடுமாறியது. அந்த இருளில் அவர்களிடம் காணப்பட்ட பகுத்தறிவு என்ற சிறு வெளிச்சத்தில் இப்பிரபஞ்சத்தில் பயணம் செய்ய அது முற்பட்டது. இறைதூதின் பேரொளியை இழந்திருந்த இருளில் ஆழ்ந்திருந்தமேற்கத்திய உலகம்அதன் சிறுவிளக்கான, பகுத்தறிவின் வெளிச்சத்தில் கண்டறிந்த உண்மைகளின் அடிப்படையில் “நவீன அறிவியல்" என்ற கருத்தோட்டத்தை உருவாக்கிக் கொண்டது. இச் சிறுவிளக்கு விரிந்து பரந்த பிரபஞ்சத்தையும், மனிதனையும், ஆழ்ந்திருந்த இருளில் பயணம் செய்ய போதுமாக இருக்கவில்லை. எனவே பகுத்தறிவு என்ற சிறுவிளக்கை ஏந்தியிருந்த நவீன மேற்கத்திய மனிதன் அங்கும், இங்கும் முட்டி மோதி, இருளில் தடுமாறினான். இறைதூதின் பேரொளிப் பிழம்பன்றி, பகுத்தறிவினி சிறு வெளிச்சத்தின் துணைகொண்டு இப் பிரபஞ்சத்தையும், மனித வாழ்வையும் பொதிந்திருந்த விடுகதையைத் தீர்க்க முயற்சித்த நவீன மனிதனின் முயற்சிகளே டார்வினின் பரிணாமவாதமும், மார்க்ளியின் பொதுவுடமைக்கோட்பாடும், ஸ்பிக்மன் புரொய்டின் உளப்பாகுபாட்டு ஆய்வு (psychoanalysis) ஜோன் போல் ஸாதரின் இருப்புக்கொள்கை, (Existentialism) ஹக்ஸலியின் மானிட நேயம் (Humanism) போன்ற கோட்பாடுகளாகும்.
பகுத்தறிவின் வெளிச்சத்தில் பிரபஞ்சம், அதில் மனிதனின் நிலை, வாழ்வின் குறிக்கோள் பற்றி விடைகாண முனைந்த புகழ்பெற்ற ஐரோப்பிய உளவியலாளர் கார்ல் ஜூன்ங் எதிர்நோக்கிய தடுமாற்ற நிலை, விரக்தி, நிராசை, வெறுமை உணர்வு ஆகியவற்றை அவரே தனது நினைவுகள், கனவுகள், சிந்தனைகள், என்னும் சுயசரிதை நூலில்பின்வருமாறு குறிப்பிடுகின்றார்.
I am incapable of determining ultimate worth or worthlessness. I have no judgment of myself or my life. There is nothing I am sure about. I have not definiteconviction not about anything reality. Iknow only that I was born and exist and it seems to me that I have been
52

carried along. I exist on the foundation of something I don't know
Carl Jung, Memories, Dreams and Reflections, p. 60
இறுதியில் பெறுமதிமிக்கது எதுபெறுமதியற்றது எது என தீர்மானிக்க என்னால் முடியவில்லை. என்னைப் பற்றியோ அல்லது எனது வாழ்வைப் பற்றியோ எனக்கு எத்தகைய உறுதியான தீர்மானமோ, முடிவோ இல்லை. எனக்கு எதைப்பற்றியும் ஓர் உறுதி இல்லை. எதைப் பற்றியும் உறுதியான நம்பிக்கையும் எனக்கில்லை. நான் பிறந்தேன். உயிர் வாழுகின்றேன் என்பது மட்டும் எனக்குத் தெரியும். ஏதோ ஒன்றால் நான் சுமந்து வெல்லப்படுவதாக உணர்கின்றேன். எனக்குத் தெரியாத ஒன்றின் அடித்தளத்திலேயே நான்உயிர் வாழ்கின்றேன்.
(கார் ஜூன்க, நினைவுகளும் கனவுகளும், சிந்தனைகளும் பக் 60)
"அல்லாஹ் எவனுக்குப் பிரகாசத்தைக் கொடுக்கவில்லையோ அவனுக்கு (எங்கிருந்தும் யாதொரு பிரகாசமும் கிடையாது."
அந்- நூர் 40
என்ற குர்ஆனின் வார்த்தைகள் கார்ல் ஜுன்ங்கைப் போன்றவர்களைப் பொறுத்தளவில் எவ்வளவு உண்மையானவை.
இறைவழிகாட்டுதலின் துணையற்ற - இறைத்ாதிலிருந்து துண்டிக்கப்பட்ட சடவாதக் கோட்பாட்டின் அடிப்படையில் எழுப்பப்பட்ட அறிவியலின் பயங்கரமான விளைவுகள் மனித வாழ்வையே சீர் குலைத்துக்கொண்டிருக்கும் இன்றைய காலகட்டத்தில் மனித இனம் குர்ஆன் சித்தரிக்கும் மறுமையில் நரகவாசிகளின் நிலையில் உள்ளது. மறுமையில் நரகில் வேதனையுறும் நரகவாசிகள், சுவர்க்கத்தின் இன்பங்களை அனுபவிக்கும் சுவனவாசிகளை நோக்கி
"எங்களின் மீது சிறிது நீரைக் கொட்டுங்கள். அல்லது இறைவன் உங்களுக்குப் பு/சிக்க அளித்திருப்பவற்றில் ஒரு சிறிதேனும் எங்களுக்குத் தாருங்கள் எனக் கெஞ்சிக் கேட்பார்கள்" என லாரா அல்- அவிரோயின் 49ம் திரு வசனம் குறிப்பிடுகின்றது.
53

Page 32
இதே நிலையில் இருளில் விழித்துக்கொண்ட நவீன உலக ஒளியின் பிரகாசத்தில் வாழும் முஸ்லிம்களிடம் இஸ்லாமிய நெறிக்கா இறைதூதிற்காக இரந்து நிற்கின்றது. பேரொளியில் சூழப்பட் ஆழ்ந்த உறக்கத்திலிருக்கும் முஸ்லிம்கள் விழித்தெழுவார்கள அறிவியலையும், இறைதூதையும் இணைத்த ஒரு புத்துலை படைக்க முன்வருவார்களா?
54


Page 33