கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: மூலவேர்

Page 1


Page 2


Page 3

மூலவேர்
பண்டிதர் ம. ந. கடம்பேசுவரன்
வெளியீடு வட்டுக்கோட்டைத் தொகுதித் தமிழ்ச் சங்கம்
1993

Page 4
முதலாம் பதிப்பு: 1993 - 12- 27 பிரதிகள் : 600
மூலவேர் - வாழ்வியல் நூல் ஆக்கியோன் : பண்டிதர் ம. ந. கடம்பேசுவரன்
வெளியீடு : வட்டுக்கோட்டைத் தொகுதித்
உரிமை :
ஆக்கியோனுக்கே
அச்சுப் பதிவு: திருமகள் அழுத்தகம் சுன்னுகம்.
அட்டை அமைப்பு : ஞானம்ஆட்ஸ் அன் அட்வடைசிங் நிறுவல்
ඤඩ් : (5um 55 - 00

6. வெளியீட்டுரை
வட்டுக்கோட்டைத் தமிழ்ச்சங்கத்தின் ஐந்தா வது வெளியீடு இது.
புதிய புதிய ஆராய்ச்சிகள் வெளிவர வேண் டும் பழமையும் புதுமையும் இணைந்து தமிழ் மரபுக் கியைந்த வகையில் அறிஞர்கள் எழுது வனவற்றை வெளியிட வேண்டும் என்பனவும் எங்கள் தமிழ்ச்சங்க நோக்கங்களுட் சில.
சங்க ச் செயற்குழு உறுப்பினரும் யாழ். புனித பத்திரிசியார் கல்லூரி ஆசிரியருமாகிய பண்டிதர் ம. ந. கடம்பேசுவரன் அவர்களின் படைப்பாகிய மூலவேர் என்ற அரிய நூலை இப் போது வெளியிட்டு வைப்பதில் மகிழ்ச்சியடை கின்ருேம். −
பத்திரிகையாளராய், நூலக சேவை புரிந்தவ ராய், தொழில் நுட்ப உதவியாளராய் முன்பு சேவை செய்த காலங்களில் அவர் முரசொலி, ஈழநாடு, உதயன், தினகரன், வீரகேசரி முத லான இதழ்களிற் பல கட்டுரைகள் எழுதினர். ஈழநாடு வாரமலரில் வெளியிட்ட தொடர்கட்டு ரைகளில் என்றும் பொருந்தும் வகையில் அமைந் தவற்றை மாத்திரம் இப்போது தொகுத்துத் தந் jy 6m7607 itif.

Page 5
iv
இந்தத் தொகுதியிற் பதினன்கு கட்டுரைகள் உள்ளன. அன்பு, அறம், வீரம், அழகு, செய்ந் நன்றி பேணுதல், நட்பு, சான்ருண்மை என்னும் உயர்ந்த பண்புகளைக் கருவாகக் கொண்டவை e 9/6Ꮱ)6Ꭷ) .
அன்பு, அறம், ஈகை, இரக்கம், சால்பு பற்றிப் பேசுவதோடு, அவற்றைக் கடைப்பிடித்து வாழும் சான்ருேர் சிலராவது இருப்பதனலேயே அந்தரத் திற் சுழன்று கொண்டிருக்கும் இந்த உலகம்முட்டி மோதி அழிதலின்றி நிலைபெறுகின்றதென்று அறி ஞர் கூறுவர்.
உத்தம வாழ்க்கைக்கு உறுதுணையானவை எவையென்று தாம் உணர்ந்தாரோ அவற்றை இயன்றவரை கடைப்பிடித்து வாழுபவர் கடம் பேசுவரன். சொல்லும் செயலும் ஒத்த அந்த அறி ஞரின் கருத்துக்கள் உத்தம வாழ்க்கை வாழத்துடிக் கும் இளைஞர், பெரியோர் மத்தியில் வரவேற்புப் பெறும் என்பதற்கு ஐயம் ஏது?
நூலாசிரியர், நூல்கள் பல ஆக்கிச் சமுதாய மேம்பாட்டுக்கு உதவ வாழ்த்துகின்ருேம்.
பண்டிதர் அ. ஆறுமுகம்
தலைவர் வட்டுக்கோட்டைத் தொகுதித்
தமிழ்ச்சங்கம். 1993-10-24

ஆசிரியர் இலக்கண வித்தகர் இ. நமசிவாய தேசிகர் அவர்களின்
புறவுரை
மும்மையும் தரும் முறையுடையது அறம். ஆத லால் அவ்வறம் எக்காலத்தும் தமிழர்களால் உயி ரெனப் போற்றிக் காக்கப்பட்டு வருகின்றது. மிகப் பழைய காலத்தில் தமிழில் அறம் என்ற பெயரிலேயே ஒரு நூல் இருந்தது என்று கருத இட முண் டு. *அறங்கரை நாவின் நான்மறை முற்றிய அதங் கோட்டாசான்’ என்ற தொல்காப்பியப் பாயிரத்து வந்த தொடரும், ‘அறங்கூறும் ஆக்கம் பலவும் தரும்’ என்ற திருவள்ளுவநாயனுர் கூற்றும் இவ்விடத்துச் சிந்திக்கத்தக்கன. திருக்குறள் நாலடியார் என்ற நூல்களும் அறநூல்களே. அவ்வற நூல்களிலுள்ள அறங்களாகிய வித்துக்களின் விளைவே தமிழிலுள்ள இலக்கியங்கள் என்று கூறலாம். அவ்வற நூல்களை ஒட்டிப் பிற்காலத்தில் சிறியனவும் பெரியனவுமாக, எழுந்த நூல்கள் பல. அவற்றுட் சில நீதிநூல்கள் எனவும் படும்.
அறநூலறிவு நல்வாழ்வுக்கு இன்றியமையாத தென்பதை விளங்கிய எம்முன்ஞேர் ஐந்து வயதி லிருந்தே பிள்ளைகளுக்கு அவற்றைக் கற்பித்தனர். ஆத்திசூடி கொன்றைவேந்தன் என்ற வரிசையில் வயதுக்கேற்ற நூல்கள் கற்பிக்கப்பட்டன. கருத்த றிந்தோ அறியாமலோ பிள்ளைகள் அவற்றை மன

Page 6
Vi
னஞ் செய்தனர். அம்மனனம் பிற்காலத்தில் பெரும் பயன் விளைத்ததை அநுபவமுள்ள பெரியோர் அறி வர். இக்கால மாணவருக்கு அறவிதைகள் மனதில் விதைக்கப்படுவதில்லை; அறுவடையுமில்லை.
இந்நிலையில், "வட்டுர்க்கடம்பன்’ என வழங்கப் படுகின்ற எனது மாணவரும், பண்டிதரும், எழுத் தாளரும், ஆசிரியருமாகிய வட்டுக்கோட்டை ம. ந. கடம்பேசுவரன் தாம் இளமையிற் கற்றுக் கொண்ட அறநூலறிவு தம் வாழ்வுக்கும், தம் மாணவர் வாழ் வுக்கும் வழிகாட்டிய வாற்றை, அநுபவ த் தி ல் வைத்து வல்லவாற்றல் விளக்கி எழுதிய மூலவேர் என்னும் நூல் வெளியீடு செய்யப்படுவது காலத்தி ஞற் செய்த நன்றியாகக் கருதப்படும்.
அந்நூல், கற்போர்க்கு, அறநூற் கல்வியின் இன்றியமையாமையை விளக்கி அதனை மீளத்தூண் டியும், தன்போல் பின்னும் பல நூல்கள் தோன்ற வழி செய்தும் பயன்தருவதாக. நூலாசிரியருக்கு எனது ஆசிகள்.

இலக்கணப் பெரும்புலவர் பண்டிதர் ச. பொன்னுத்துரை அவர்களின் ஆசியுரை
வட்டுக்கோட்டை, பண்டிதர் ம. ந. கடம் பேசுவரன் அவர்களுடன் எனது மாணவராக இருந்து படித்த சில ஆண்டுகள் அணுகிப் பழகி யுள்ளேன். அவரது நுண்மாண் நுழைபுலத்தினை அவரோடு பழகியோர் அறியாதிரார். பல்வேறு பிரசுரங்களில் அவரது செயற்றிறனைக் காண்போர் அவரது மதிநுட்பத்தினைப் பாராட்டுவர். நூலிலும் அவரது ஆய்வுத்திறன் மிளிர்வதைக் காணலாம். தாம் எடுத்துக் கொண்ட விடயத்தை நடுநின்று ஆராயுந்திறனும் அவற்றிற்கான ஆதாரங்களைத் தாம் பல நூற்பகுதிகளிலிருந்து இயைபு பொருந்த எடுத்துக் காட்டுந்திறனும் கற்றவர்கள் மனத்தைக் கவரக்கூடியன. ஓருயர்ந்த கல்லூரியில் அவர் ஆசி ரியராகப் பணியாற்றும் வாய்ப்புக் கிடைத்தமை குறிப்பிட்ட மாணவர்களின் அதிஷ்டம் எனவே கூறலாம்.
கல்வியில் பலதுறைத் தொடர்புகளையும் அவர் பயன்படுத்தத் தவறுவதில்லை. ஆங்காங்கு தம் ஒத்துழைப்பினையும் பங்களிப்பினையும் செய்து மனநிறைவு காணும் இயல்பூக்கம் உடை
!_/6).JP7.

Page 7
viii
தமது இளமைக் காலத்திலேயே தமிழில் இவர் காட்டும் திறமையும் தொடர்புகளும் எதிர் காலத்தில் தமிழ்மாணவருக்கும் தமிழுக்கும் பெருந் தொண்டாற்றுவாரென்பதை நினைவுகூர வைக்கின் றன. படிக்குங் காலத்தில் படிக்கும் விடயங்களில், இவரது ஆழ்ந்த சிந்தனைத் திறனைக்கண்டு பலகால் மகிழ்ச்சியடைந்துள்ளேன்.
இவரது பணி மேன்மேலும் தொடர்ந்து சிறக்கவும், தமிழுலகம் நற்பயன் காணவும் என் னுடைய நல்லாதரவினையும் ஆசியையும் மனமார வழங்கி நிற்கின்றேன்.
மட்டுவில் தெற்கு, ச. பொன்னுத்துரை சாவகச்சேரி.
1993 - 10 - 0 ]

மூலவேர் தான்!
சகல பண்பாடுக ளு ஸ் ஞ ந் தமிழ்ப் பண் பாட்டை விதந்தெடுத்துக் காட்டி நிற்பது அதன் ஊடும் பாவுமாய் நின்ருெளிரும் அறக்கோட் பாடே! பொருள், இன்பம், வீடு என்னும் அதனி னத்து மற்றும் வாழ்விலக்குக்களும் அறம் என்ற அது இல்லாமலில்லை என்ற நிலைப்பாடு தமிழ்ப் பண்பாட்டின் தனித்துவப் பண்பைத் துலக்கும் அகல் விளக்காம். இந்நிலைப்பாட்டு நோக்கில் இந்த அறம் என்பது சிந்தனையாளர் எண்ணக் கருக் களிற் பல்வேறு வார்ப்புக்களாக வெளிவருத லுண்டு. இந்நூலாசிரியர் எண்ணக்கருவில் அது மூலவேர் என்னும் வார்ப்புருவம் பெற்று வெளி வந்திருத்தல் சிலாக்கியமானதே !
பொறுப்புணர்ச்சியுள்ள ஒரு ஆசிரியர் என்ற முறையில் இந்நூலாசிரியர், தாம் சதா சந்திக் கும் மாணவர் நிலையை அநுதாபக் கண்கொண்டு நோக்குகிருர். அவர்கள் கற்கும் பருவத்திலேயே தம் பண்பாடாகிய அறக்கோட்பாட் டறிவுணர்வு களிலும் தகுமளவு விளக்கத் தேர்ச்சி பெற்றி ருக்க வைத்தல் மூலம், சந்தர்ப்ப வசத்தினலோ சார்ச்சி வசத்தினுலோ தவிர்க்க முடியா வகை யில் நேரக் கூடும் ஒழுக்கத் தவறுகளின் நீங்கி, ஸ்திரமானதும் ஒளிமய முள்ளதுமான எதிர்கால வாழ்விலே திகழ வைத்தலைப் பெரிதும் விரும்பு கின்ருர்.
11

Page 8
பண்டிதப் பட்டப் பின் படிப்பாக மேற் கொண்ட உறுதி நூற் படிப்பறிவாரய்ச்சிப் பிரிய ஞய்த் திகழும் இவ்வாசிரியர், தம் விருப்பம் பூர்த்தியாதற் பொருட்டு மாணவர்க்கும் அவர் விருத்தியிற் பாத்தியதை உடையோராகிய பெற் ருர் ஆசிரியர்க்கும் எடுத்துரைக்கத் தக்கவான அறநூற் கருத்துக்களைத் தேடித் தொகுத்து நிரல் செய்து படைக்கும் அறிவியல் இலக்கிய மாக நிலவுகின்றது இந்நூல்.
அறியா  ைம யாற் கெட்டவர் ஆயிரத்திற்
கொருவருமிலர். கண் டது ங் காதல்
கொண்டதும் உறவா? என்ற புணியிற் கருத்துருவிலுங் கடாவுருவிலும் காணும் இந்நூற் கூற்றுக்கள், நற்சேர்க்கையும் அறிவறிந்து ஆய்ந்து மேற்கொள்ளும் நண்பும், மாணவர் நலனுக்கு இ ன் றி ய ைம யாத ன எனும் ஆசிரியர் கருத்தின் அடிநாதமாக ஒலிக் கின்றன. அது. தன்விரிவில் யாரைச் சேர்வது யாரைத் தவிர்வது?, நல்லோரையே சேர்வது, தீயோரைத் தவிர்வதெனில், நல்லோர் யார்? தீயோர் யார்? சான் முண்மையுளோரே நல் லோர். திருவிலார் தீயோர் எனிற் சான்ருண்மை எத்தகையது? திரு எத்தகையது ? திருவென மயங்க வைக்குந் திருவிலித்தனம் எத்தகையது ? திருவுளார் மேம் பண்புகள் யாவை ? திருவிலார் கயமையியல்பியாது? - என்றிங் நனம் அலசியா ராய்ந்து செல்கின்றது.

хі
திருக்குறள் நாலடியார் முதலிய அறநூல் மேற்கோள்களும் இத்தொடர்பில் அலசியாரா யப்படுகின்றன. ஆராய்ச்சிச் சுவையூடே நியா யித்தற் சுவை, இலக்கியச் சுவைகளும் ஆங் காங்கு விரவி இதம்பயக்கின்றன. வெறுமனே சான்ருேர் சினம் என்னுது, "சீரொழுகு சான் ருேர் சினம்’’ என விசேடித்ததன் சிறப்பு, உலக மென்பது உயர்ந்தோர் மாட்டே என்பதன் பொருந்துமாறு, உயர்ந்தோர் சொல்லை ஏற்றே யாக வேண்டும் என்ற வற்புறை, மனனஞ் செய் யப்பட்டவை உள்ளூற்ருயிருந்தெழுந்து மனச் சாட்சியை உஷார் நிலையில் வைத்துக் கொண்டி ருக்குமாகலின் மனனப் பழக்கம் அவசியம் என்ற பரிந்துரை.
இத்தியாதி அபூர்வ அழுத்தங்கள் நூலுக்கு வள மூட்டுகின்றன. . . . . .
இந்நூலில் இடம்பெறும் நல்லோர்ப் பேணல், நன்னட்புத் தழுவல், தீ நட்பொருவல், தோற்ற மட்டிலெடுபடாது யதார்த்தத்தில் நன்மையை இனங்காணல், நன்றி பாராட்டுதலின் அவசியம், நன்றியைப் பேணும் முறை என்ற கருத்தம்சங்கள் ஒன்ருெழியாமல் ஒட்டுமொத்தமாகவே அறத்தின் கொழுமை, செழுமைகளுக்கு உபகரிப்பவை; அங்கி யாகிய அறத்துக்கு அங்கங்களாகயுள்ளவை. ஆகக் கடைசி, இவற்றின் அசு கையாவது புலப்படத் தோன்ருவிடத்தில் அறத்துக்குவாழ்வில்லை. எனவே இவற்றின் அநுசரணை இடம்பெரு வாழ்வுக்கு ஸ்திரத் தன்மை இல்லையாதல் வெளிப்படை. அனைத்துவகையாலும் அறம் என்ற மூலத்

Page 9
Χii
தையே அலங்கரிக்கும் க ரு த் தம் சங்க இள க் கொண்ட இந்நூல் மூல வேர் எனப் பெயர் தாங்கியிருத்தலில் அழுத்தம் நிரம்பவுள்ளதாம்.
காலவசத்தால் அறவுணர்வு விளக்கமில்லா மலே பெரும்பாலும் வாழ்வியல் உருளும் இந் நாளிற்பிரசுரமாகும் இந்நூல், காலத்தின் தேவை கருதியதென வேபடும். பண் டி தர் கடம்பேசுவரன் அதற்குபகரித்த பெருமைக்குரியவ ராகின்ருர்,
வாழ்க அவர் பரோபகாரம் !
"சத்தி முற்றம்" மு. கந்தையா
ஏழாலை 1 99 3 - 10 - 8 0

ஓய்வுபெற்ற அதிபரும் நூலுரை ஆசிரியரும் ஆகிய பண்டிதர் க. மயில்வாகனனுர் (மதுரை, யாழ்ப்பாணம்)
வழங்கிய சாற்றுக் கவி
செந்தமிழுஞ் சிவநெறியும் திகழ்ந்தோங்கும்
வட்டுரில் வந்த செம்மல் நந்துபுகழ் நவரத்ன நல்லாசான்
நயந்தளித்த நம்பி யாவோன் பைந்தமிழின் கடல்படிந்து பண்டிதப்பேர்
பயில்வரிசை பரிக்கும் நேயன் கந்தனடி தொழுதேத்துங் கடம்பேசு
வரனென்னும் கலைஞன் இந்நாள்,
சீருயரும் மாணியரும் பிறருமெல்லாம்
சிந்தைமகிழ்ந் துவந்தே யோதிப் பேருயரும் அடக்கமொடும் ஒழுக்கமெனும்
பெட்பனைத்தும் பேணி நிற்பக் காரிருளின் அஞ்ஞானங் கடிதகன்
காசினியோர் இன்பம் மேவு ஏருயரும் நூலொன்றை இரும்புலமைத் திறனதஞல் எழுதி யீந்தான்;
பன்னுளும் தான் பெற்றி அநுபவத்தைப்
படிசெய்து பழுத>கற்றி
முன்னுய சான்றேர்கள் முழுதாய்ந்து
திறந்தேர்ந்து வாழ்த்தி சைப்ப

Page 10
xiv
மின்னரும் மாணிக்கம் வயிரங்கள்
விதிவழுவா வகைகு யிற்றிப்
பொன்னுரந் தமிழ்த்தாய்க்குப் பூட்டினணுல்
கடம்பேசன் புதுமைதி தம்மா!
பொன்னினெடுங் கிரிதனிலே போந்தொளிரும்
ஞாயிற்றின் பொற்க ரங்கள் மன்னுலகின் மிகப்பரந்தே பூதவிருள்
மம்மருள அகற்று மன்றே துன்னிவரு மூலவேர்ச் சுடரொளியும்
தொலைதூரஞ் சுற்றி யேகி உன்னுமகத் திருளகற்றி உளம்புதுக்கி
உயர்நலங்கள் உதவு மாலோ.
வேறு கெடவுருந் துப்பிற் ருய
கல்வியாந் திருவார் மேய அடன் மலி கடம்பே சப்பேர்
அறிஞரீ மேலும் மேலும் திடணுெடு பலநூல் செய்தே
சிந்தனைச் சிற்பி யாகிப் படவரா பரிக்கும் பூவிற்
பல்லாண்டு வாழ்தி மாதோ.

St. Patrick's College, Jaffna (Sri Lankoa) 22 December 1993
Benediction from the Rector, St. Patrick's College, Jaffna
The displacement of Our people caused by the storm of war is symptomatic of a threat of a more 'radical sense of rootlessness: the whole Tamil cultural edifice seems to be tottering, if not already crumbling. Lest we should become victims of this menace, we need to go back to our roots. We need to rediscover those ethico-spiritual values that have shaped us over centuries into a people of refined culture and have served as a rich soil where we can remain firmly rooted.
I am delighted and edified to find that Mr. Kadampeswaran's creation Moola. Ver " takes the reader on a subterranean, trip to visit these roots of values lying deep in our ancient literature.
One might disagree with certain aspects: of the author's interpretations or reflections. But they powerfully impel us to rediscover our ethical roots.
May God crown his toil with success
Rev. Fr A. I. Bernard L, Ph., L. Th. (Poona) Dip-in-Edu, & EH. Rts. (London) M. A. (Ed) (London)

Page 11
கெஞ்சின் மிக்கது.
களப்பிரர் புகுந்தனர். மக்களின் அமைதி அழிந்தது; அராஜகம் வளர்ந்தது. பொருள் இன்பங்களைப் பாடும் வாய்ப்பே புலவருக்கு இல்லாமற் போய்விட்டது. நீதியை எடுத்துரைக்க வேண்டிய தேவையேற்பட் டது. சங்கமருவிய காலத்தேவையதுவானல் இன்றும் அப்படித்தான்! நிலைமையைச் சீராக்க உதவுங் கருத் துக்களை மக்கள் மத்தியில் உலவவிட வேண்டாமா ?
சிறுவர்களின் ஆளுமையை வளர்க்க உதவும் அமைப் பொன்றை உருவாக்கினேன். முதலாம் ஆண்டிலி ருந்து பதினுெராம் ஆண்டுவரை ஐவர் சிறுவர் என் கல்வி முறையையும் வழிகாட்டலையும் பெற் றனர்; உருவாதீகினர். அப்போது எழுந்த சிந்தனை களையும் வாய்த்த அநுபவங்களையும் குறித்துவைத் தேன். ஈழநாடு இதழில் எழுத வாய்த்தபோது அவற்றை விரித்து எழுதினேன்.
கடலில் எண்ணற்ற அலைகள்; எண்ணக் கடலிலும் எண்ணில்லா அலைகள்; இலக்கியக் கடலிலுந்தான் எத்துணை அலைகள், இலக்கியக் கடலில் மூழ்குகையில், எண்ணக் கடலில் எழும் அலைகளால், இங்கு மனக்கோலமிடு கின்ருர் கட்டுரையாளர்.

xvii
என ஈழநாடு வார இதழின் அன்றைய ஆசிரியர் சசிபாரதி மகுடமிட்டு வெளியிட்டார்; ஊக்கினுர் 1985 - 1986 காலப்பகுதியிற் கட்டுரைகள் வெளிவந் தன.
அன்று ஐவர் சிறுவருக்கு நான் ஊட்டிய நீதி நூல் அறிவு, சிறுவர்களின் தமிழறிவை வளர்த்ததோடு அமையாது ஆளுமையையும் வளர்த்திருப்பதை, அரு பவபூர்வமாக இன்று நான் காண்கின்றேன், களிக்கி றேன். எனவேதான், அன்று நான் எழுதிய கட்டுரை களுட் சில மூல வேர் என்ற தலைப்பில் நூலுருப் பெற்றுள்ளன.
நூலுருவில் இக் கட்டுரைகள் வெளிவரத் தூண்டிய ஆர்வலர் பலர். மெய்ப்பொருள் ஆராய்ச்சியில் முதன்மை பெற்றிலங்கும் ஏழாலைச் சைவத் தமிழ்ப் பேரறிஞர் பண்டிதர் மு. கந்தையா B. A. அவர்கள் அவருள் எல்லாம் முதன்மை வாய்ந்தவர்கள். பய னுள்ள குறிப்புக்கள் நூல் செம்மை பெறக் கூறிய வர்கள். நூலின் செழுமைக்கு அவர் உதவியிருக்கும் அணிந்துரை ஒன்று போதுமே!
இலக்கண வித்தகர் இ.நமசிவாய தேசிகர் அவர் கள் நூலைப் படித்தார்கள். அவர்களின் பரவசம் புறவுரையாக இலங்குகிறது. ஆசிரியர் இருவரின் வாழ்த்து இப்படி வந்து வாய்த்திருப்பது என் பேறே!
கல்வியைத் தொடர முடியாது இன்னல் பல இடை யிடை எழுந்த போதெல்லாம் என்சோர்வகற்றி, என்னையோர் பண்டிதனுய்ப் பார்த்தே விடுவ

Page 12
xviii
தென்ற பரிவுடன் என்னை ஊக்கி, உருவாக்கி மகி ழும் என் ஆசிரியப்பிரான், மகாவித்துவான் பிரம பூநீ சி. கணேசையர் அவர்களின் மாண் பு மிகு மாணவர் இலக்கணப் பெரும் புலவர் பண்டிதர் ச. பொன்னுத்துரை அவர்களுக்கு இந்த நூலைக் காணிக்கை ஆக்காது வேறெவருக்கு த் தான் காணிக்கை ஆக்குவது! அப்பணிதலைநிற்க வாய்த்த தென் மற்ருெரு பேறு அவர்களின் ஆசீர்வாதம் ஆசியுரையாக நூலில் மிளிர்வதென் பிறிதொரு பேறு !
புனித பத்திரிசியார் கல்லூரி அதிபராகிய அருட் தந்தை A. 1. Bernard அவர்கள் அருளாசி வழங்கி இருக்கிருர், அருளுக்கு நன்றி கூறுவதாவது; அது மரபல்லவே! அவ்வாசி பெற வாய்த்ததுவும் என் பேறே!
கலாநிதி க. ந. வேலன் அவர்கள் ஈழநாடு இதழிற் கட்டுரைகள் வெளிவந்த போது எழுதிய கடிதம் புலவர் நா. சிவபாதசுந்தரஞர் எழுதிய அறிமுக வுரை பண்டிதர் செந்தமிழ்ச் செல்வர் க. மயில்வா கனனுர் மனமுவந்து வழங்கிய சாற்றுக்கவி அருட் புலவர் பண்டிதர் அ. ஆறுமுகம் அவர்கள் வட்டுக் கோட்டைத் தொகுதித் தமிழ்ச் சங்கச் சார்பில் உதவிய வெளியீட்டுரை என்பன பெறக் கொடுத்து வைத்ததும் என்பேறே!
திருத்தமான அச்சுவேலைக்குப் பெயர்போன நிறுவ னம் சுன்னுகம் திருமகள் அழுத்தகம். மிகக்குறு கிய காலத்தில் விரைந்து திருத்தமாக அச்சிட்டு வழங்கிய முகாமையாளர், அழுத்தக ஊழியர் என் றும் என் நினைவுக்குரியவர்கள்.

அ ரு  ைம யான அட் டை அமைப் புக் கா க ச், ச ங் கா னை ஞானம் ஆட்ஸ் அன் அட்வடை சிங் நிறுவ னத்தை எத்
xix
1993 - 12 - 27
ஞான சேகரம்
(ஞானம்) அவர்
களை வாழ்த்தி அமையாது.
வட்டுக்கோட் டைத் தொகு
தித் தமிழ்ச் சங்
கம் தானுக மு ன் வந்து மூலவேர் நூலை வெளியிடுகி றது; அது
காலத்தினுற் செய்த நன்றி!

Page 13
சமர்ப்பணம்
蠶屬噬
என்னைத் தமிழால் இனிதே துலக்கிய நற் பொன்னுத் துரையவர்சீர் போற்றுகின்றேன்-தொன்மை இலக்கணநூல் அத்தனையும் என்னிதயத் தேற்றப் புலத்துயர்ந்தோன் தாடலேயிற் பூண்டு.
சிந்தைக் கினிபநற் செவ்விய நூலெல்லாம் முந்தை வினேப்பயனுல் முற்றுறவே - விந்தையாய் என்புங் குளிர எமக்குரைத்தீர் அன்புடனென் துன்ப மனேத்துந் துடைத்து.
மூலவேர் என்னும் முதலென் தமிழ்நூலுன் காவிலே வைத்தேன் கனிந்து.
வாழ்கநி பல்லாண்டு வாழியவென் றென்றென்றும் வாழ்த்துவேன் நின்தாள் வணங்கி.
 

மூல வேர்
முன்னுரை
பெற்ருேர் தமது பிள்ளைகளே இளமைக்காலத் திலேயே பண்பாடுள்ளவர்களாக-ஆளுமை நிறைந்த வர்களாக - வளர்ப்பதன் மூலம் மிக உயர்ந்த நிலேக்காட்படுத்தலாம். ஐந்து வயதுக்குட்பட்ட காலத்திலேயே இப்பழக்கத்தை ஏற்படுத்த முடியும், இதற்காகப் பெற்ருேர் சிந்தனே, சொல், செயல் மூன்றையும் ஒருங்கினேத்து அவதானத்துடன் செயற்படுத்துதல் அவசியம், பெற்ருேர் அவதான மாக இருந்தாலும் சூழலாலே தவறுகள் ஏற்பட வாய்ப்புண்டு. குழந்தை பண்புடனும் அழகுணர் வுடனும் வளர்ந்து பாடசாலை செல்லும் பேறுகிடைத் தால், ஆசிரியர் மனதில் இலகுவாக இடம்பிடித்து விடும். ஆசிரியரும் இத்தகைய குழந்தையிடம் நன் மதிப்புக்கொண்டு மிகுந்த அக்கறையோடு கண்கா ணிக்க அதன் வளர்ச்சி மிக எளிதாகிவிடுகின்றது.
பாடசாலை சென்றதும் மாணவன் பல திறப் பட்ட மாணவர்களேச் சந்திப்பான். அதனுல் அவன் கருத்துக்கள் உணர்வுகள் வேறுபடும். காலவோட் டத்துக்கு ஏற்பத் தம்மை இயைபுபடுத்தும் தன்மை யுடையவை உயிரினங்கள். மாணவனும் அத்தகைய வனே. பண்புடன் வளர்ந்தாலும் சிறிய திருப் பங்கள் அவனிற் பெரிய மாறுதல்களே ஏற்படுத்தி விடும். எனவே, பெற்ற பண்புகள் நிலைத்திருக்க

Page 14
2 O மூலவேர்
நீதியுணர்வுகளைப் பொருளுணராப் பருவத்தினனெ னத் தயங்காது அவன் உள்ளத்திலே தங்கும்படி செய்தல் நல்லது. இல்லையெனின் அவ்வப்போது ஏற்படும் பேரிடிகளினுலும் கடுங் காற்றினுலும் கலக்கமடைந்து த விக்கும் மாலுமிபோலாகிவிடும் அவன் நிலை. கலக்கமடையாமல் உறுதியாக இருக்க வும் நிலை தளர்ந்து கலங்கும்போது உள்ளங்கலங் காது இன்னல்களைத் தாங்கவும் உதவுவன நீதிநூற் பாடல்களே. இவற்றின் இன்றியமையாமை மரபுக் கல்வி போற்றப்பட்ட ஒரு காலத்தில் உணரப்பட் டது. அந்தக் காலகட்டத்தின் மனிதப் பண்பாடுகள் காலத்தின் வளர்ச்சியுடன் பொருந்தக் காணப்பட் டன. சந்ததி இடை வெளி (Generation gap)யைக் கவனத்திற்கொண்டு இன்றைய இளைஞர்களை ஒப்பிட் டுப் பார்க்கும்போது, அநுசரித்துப்போகாததன்மை உணரக்கூடியதாக இருக்கின்றது. மனிதன் தவறே செய்ய மாட்டான் என்று நினைக்கின்ற உணர்வு, ஏன் தாங்கள் செய்கின்ற அனைத்தும் சரியென்று வாதிடும் தன்மை, ஏனைய பொருந்தாத பிற இயல் புகள் என்றிவை பெரும்பாலான இளைஞர் க ளிடையே இருப்பதை உணரமுடியும். எம்மாற் கார ணம் உணர்த்த முடியாத மரபுக்கொள்கைகள் பல கடைப்பிடிக்கப்படுகின்றன. இது வரை இந்த மரபுகள் நிலைத்து வருவதால் அவை சரியானவை யாக இருக்கவேண்டும் என்று ஏற்றுக்கொள்கின் ருேம். எனவேதான் நன்ருக விளங்கிக்கொண்ட மரபு ரீதியான கல்வியும் ஏனைய கல்விமுறையுடன் இணைக்கப்படவேண்டும் என்று விரும்புகின்ருேம்.

பண்டிதர் கடம்பேசுவரன் O 3
மரபுக்கல்வி மறக்கப்பட்ட இன்றைய காலகட் டத்தில் நீதி நூல்களைக் கற்பாரில்லை. ஒருசிலர் இதன் இன்றியமையாமையை வலியுறுத்திக் கற்ரு லும் கற்பித்தாலும் மனனஞ்செய்யும் பழக்கம் அற்று விட்டது. மனனஞ் செய்தால் அது வேண்டியபோது வந்துதவும்; மனதில் நின்று நிலைத்துத் தவறுசெய்ய இடம் தராது. மனச்சாட்சி தொழிற்பட, இம்மணனக் கருத்துக்கள் வந்து உதவும். நாமும் தூய்மையடை வோம்.
O o 0 தீதும் நன்றும் 0
ஒருவர் வாழ்வில் அவர் அறிந்தோ அறியா மலோ குற்றங்குறைகள் வந்து சேருகின்றன. தன் னிலை தடுமாறும் சந்தர்ப்பங்கள் எதிர்பாராத உணர்வுகள் தூண்டுதல்கள் என்பன குற்றங்குறை களை ஏற்படுத்துவதுண்டு. குற்றங்களை உடன் மறதி தல் நல்லது. அவை மனதிலிருந்து வளர்ந்து மிக்க தீங்குகளைத்தர வல்லனவாதலின். இதை எண் னியே குற்றமொன்றும் பாராட்டித் திரியவேண்டாம் என்கின்றர் உலகநாதர். பிறர் குற்றங்களைச் சாதா ரண மனிதர் மறந்துவிடுவதில்லை. அவற்றை மனதி லிருத்தித் தீங்கு செய்வர். சான் ருேர் அதனை உடன் மறந்து விடுவர்.
கடையாயார், இடையாயார், தலையாயார் குற் றங்களைக் கொள்ளும் முறையை மூதுரை விளக்கு கின்றது. பெரிய பாருங்கற்கள் பிளவுபட்டால் இணையவும் மாட்டா; இணைக்கவும் முடியாது. பொன்

Page 15
4 O மூலவேர்
துண்டு பிளவுபட்டால் நெருப்பைக் கண்டமாத்திரத் தில் இணைந்துவிடும். இது நெருப்புத் துணைநின்ற தால் இணைந்தது. நீரை ஊடறுத்து ஏதேனும் பொருளை உள்ளே செலுத்த முடியும். ஆனல் ஊட றுத்த சுவட்டை உணரமுன்னேயே அச் சுவடு மறைந்துவிடும். தலையாய மனிதன் பிரிவு நீரின் பிளவு போன்றும் இடையாய மனிதன் பிரிவு பொன்னின் பிளவு போன்றும். கடையாய மனி தன் பிரிவு கற்பிளவு போன்றும் இருக்குமென்பதை அப்பாடல் உணர்த்துகின்றது.
கற்பிளவோ டொப்பர் கயவர் கடுஞ்சினத்துப் பொற்பிளவோ டொப்பாரும் போல்வரே - விற்பிடித்து நீர்கிழிய எய்த வடுப்போல மாறுமே
சீரொழுகு சான்றேர் சினம்.
சினங்கொண்ட காலத்திற் கடையாயார் கூட்டினு லுங் கூடார். இடையாயார் ஒருவர் கூட்டக் கூடுவர் தலையாயார் பிரிந்த அப்பொழுதே தாமாகக் கூடுவர்.
நெடுங்காலம் ஓடினும் நீசர் வெகுளி கெடுங்காலம் இன்றிப் பரக்கும் - அடுங்காலை நீர்கொண்ட வெப்பம்போல் தானே தணியுமே சீர்கொண்ட சான்றேர் சினம்.
எனவரும் நாலடியாரும் இதனை வலியுறுத்தக் காண் கிருேம். கோபம் விரைவிற் தணியவேண்டியது. தலையாயார் போல நாமும் சான்ருேராய் நீதிநூற் கருத்துக்களைச் சிந்தையிற் பதிப்போம்.
உலக மக்கள் மூன்று பிரிவினர். அவர்களுள் வேறுபட்டுப் பிரிந்த காலத்தில் நிலைத்த கோபமுடை யோரைக் கயவர் என்றும் நிலையற்ற கோபம் உடை யோரைச் சான்ருண்மையுடையவரென்றும் உவமை யூடாக விள்ங்கிக்கொண்டோம்.

பண்டிதர் கடம்பேசுவரன் O 5
உவமைகள் இரண்டு:
வேறு வேருகி ஒன்றற்கொன்று தொடர்பு இல் லாமல் இருப்பது கற்பிளவு என்றும் வேறு வேருகி இருந்தாலும் ஏதேனும் காரணிகளால் ஒன்ருகவல் லது பொற்பிளவு என்றும் காரணி இல்லாமலே ஒன்று பட வல்லது நீர்ப்பிளவு என்றும் விளங்கினுேம். நீர், வாயு முதலியவற்றின் உந்தல்கள் இருந்தால் மட்டுமே அசையும். ஆற்று நீர் உந்தல்கள் இருப்ப தால் ஒடுகின்றது. இடையில் வேறு பொருள்களோ பிட்டிகளோ இருந்து திசை திருப்பி ஒடவைக்கலாம். இந்த இடத்தில் நீர் பிரிந்து சேராமல் இருந்துவிடு கின்றது. எனவேதான் ‘* நீர்ப்பிளவு’ என்று தனித்துச் சொல்லாமல் ' விற்பிடித்து நீர்கிழிய எய்தவடு* எனக் கூறுகின் ருர் எனக் கொள்ள வேண்டும்.
மனிதர் சடப்பொருள்களல்லர். உயிரால் இயங் கும் பொருள்கள். பிரிவுகளையும் உறவுகளையும் உணர்வாக்கி நினைவிற் தேக்குபவர். இத்தேக்கம் பிரிந்தார் உள்ளத்தைக் கசப்பாக்கி வெறுப்பெனும் உவாந்தியாக வெளிவரும். அல்லது சார்ந்தாரிடத் துப் பெரு விருப்பாக்கிப் பேருவகையாக வெளிப் படும் பேச்சாகும். நடுவு நிலையுடையோர் எவ் வகை வெறுப்பையும் சீர் தூ க் கி மன்னித் து மறந்துவிடுவர் ஆதலாலேதான் சீரொழுகு சான் ருேர் என்பதாகக் கொள்ளவேண்டும். நீர் என்ப தற்குச் சீர் என்று வெறும் எதுகையாக வைத்துப் பாடியதாக எடுத்துக்கொள்ளல் மட்டில் அமைந்து வி. க்கூடாது.

Page 16
6 O pavGauri
கொதிநீர் ஆறுவதற்குச் சற்று நேரம் பிடிக்கும். ஆறுவதற்குக் காற்றுப் போன்ற புறக் காரணிகள் உதவுகின்றன. சான்ருண்மைக்குத் துணைநின்ற அறிவு முதலாம் காரணிகள் கோபம் என்ற கொதிப் படங்கப் புறக்காரணிகளாக உதவுகின்றன. ஆத லால் நாலடியார் கொதி நீரைச் சான்றேர் கோபத் துக்கு உவமையாக்கிற்று. நல்லது கெட்டதை ஆராய்வது மென்மை உள்ளம். இது சான்ருண்மை யு டை யார் குணங்களிலொன்று. க ல் ம ன ம் நல்லது கெட்டதை ஆராய மாட் டா து என்ப தற்காகத்தான் கற்பிளவோடொப்பர் கயவர் என் றுரைத்தார். கல்மனதிற் பட்ட உணர்வுகள் கனிந்து விடுமா ? அல்லது செம்மைப்படுமா ? அது கயமை யாகவே வெளிவரும். கல்பிளந்தால் தனித்திருக் கும். கல்மனம் குரங்குப் பிடியாகப் பற்றிக் கனி வில்லாதிருக்கும். இங்ங்ணம் மனவியல்பு வேறுபா டுகள் உவமை முகத்தால் அறியப்பட இருத்தல் கருதத்தfகும்.
உவமை உயர்ந்ததாகவே இருக்கவேண்டும். தாழ்ந்ததாக இருத்தல் கூடாது.
அறுதியாக உயர்ந்தது அல்லது அறுதியாகத் தாழ்ந்தது எனச் சுட்ட உலகத்திற் தீர்மானித்து முடிந்த ஒரு பொருளுமில்லை. உவமான உவமேயங் களைத் தொடுக்கின்ற அளவில் உவமேயத்திலும் பார்க்க உவமானத்தை உயர்ந்ததாகக் கொள்ளு தலே முறை. நல்லன என்று எண்ணப்படுவன வற்றுள் உயர்ந்து நீர், அழுக்ககற்றித் தூய்மை செய்வதுநீர்.நீரே நீர்க்கடன் முதலானவற்றிற்கும் பயன்படுகின்றது.

பண்டிதர் கடம்பேசுவரன் () 7
" உயர்ந்ததன் மேற்றே உள்ளுங்காலை "
(தொல். உவமவியல்)
சான்ருேர் சினத்துக்கு நீர்ப்பிளவு உவமையாக்கப் பட்டது பொருத்தமானதே.
கயவர் - இழிந்தவர்கள் கல் - இறுக்கமான நிலைக்கிடமான மனதுக்கு உவமை கூறப்பட்டது. உயர்ந்ததுதானே உவமை யாக க் காட்டப் பட வேண்டும். கல் என்ற இழிந்த பொருளை உவமை யாக்கியது பொருத்தமற்றதாமேயெனில் உள்ளுங் காலை என் பதால் அதுவும் கடினத்தன்மையில் உயர்ந்ததென்பது குறிப்புப்பட நிற்றலின் அதனை உவமை கொளலும் பொருத்தமானதே எனக்கொள்க.
எந்தப் பொருளும் தன்னளவில் இழிந்ததன்று. மலங்கூட இழிந்ததன்று. அதன் இயற்கையது. இதை ஏற்க மறுப்பது நமது குறை. உயர்ந்ததன் மேற்றே என்பதில் உள்ள உயர்வு, நாம் கருதும் உயர்வு, தாழ்வு என்னும் பொருளுடையதன்று. உவமானம் உவமேயத்தை விட உயர்ந்ததாயிருக்க வேண்டும்.
தாமரை போன்ற முகம் என்னும் போது, தாமரை முகத்தைவிட அழகில் உயர்ந்ததாயிருக்க வேண்டும். கல்மனம் என்னும் போது, கடினத்தில் கல், மனத்தை விட உயர்ந்தது என்பதே பொருள்.
இறுக்கமுடையது கல். நெகிழ்ச்சியுடையது நீர், நெகிழ்வுடையோர் கணிவையே யாவரும் விரும்புவர் கனிவுடைய நல்லோரால் நன்மையும் ஏனையோரால் தீமையும் விளையும், தீயாரை யாரென இனங்காணு

Page 17
8 () மூலவேர்
விட்டால் தீங்கு அதிகரிக்கும். இனங்கண்டு பழகு வதால் தீங்கின் தாக்கங் குறையும். இந்த அவசர உலகில் நல்லவர் தீயவர் என்று ஆராய்ந்துகொள்ள அவகாசம் கிடைப்பதில்லை. ஒருவருடைய தன் மையை உண ராம லே யே பழகவேண்டிய நிலை ஒவ்வொருவரதும் வாழ்வில் ஏற்படுகின்றது. வெறும் பழக்கத்தை வைத்துக்கொண்டு உறவுகளை வளர்க்கக் கூடாது. உறவாக எண்ணிக் கூடிவிட் டால் பிறகு பிரிந்துவிடுவது இலகுவன்று. எனவே நண்பு பூணுதலை நீண்ட கால ஆராய்ச்சிக்கு உட் படுத்தவேண்டும். அதை ஆராய்ச்சிக்கு உள்ளாக்கு தலின் அவசியத்தை வலியுறுத்தும் பாடல்கள் நீதி நூல்களில் அநேகம். ஒரு பாடலைமட்டும் பார்ப்போம்.
** மரீஇப் பலரொடு பன்னுள் முயங்கிப்
பொரீஇப் பொருட்டக்கார் கோடலே வேண்டும் பரீஇ உயிர்செகுக்கும் பாம்பொடும் இன்னு மரீஇப் பின்னைப் பிரிவு'
[மரீஇ - மருவி; பொரீஇ - பொருந்தி; பரீஇ - பரிந்து
பலநாள் பலரொடும் சேர்ந்து ஒத்துக் கலந்து பழகிப் பொருளாகத்தக்கவரையே உறவாக்கிக்கொள் ளுதல் வேண்டும். வருந்துமாறு தீண்டி உயிரை அழிக்கும் பாம்போடாயினும் கூடிப் பின்னர் பிரிதல் அரிதாகும். ஆதலால் எவ்வாறேனும் தீயார் இணக்கம் தவிர்க்கப்பட வேண்டியதே. ‘தீயாரைக் காண்பதே தீது” என்ருல் இணக்கம் எவ்வளவு தீங்கைத்தரும் என்பது சொல்லப்பட வேண்டியதில்லை. இணக்கம் ஏற்பட மு ன்னர் க் காண்டல் நிகழும். காட்சி இல்லையால்ை இணக்கம் இல்லை. கண்டதும் இணக் கம் கொண்டதும் உறவா? இது அறியாமை பல்லவா?

பண்டிதர் கடம்பேசுவரன் O 9
இணக்கம், பழக்கம், உறவு என வளர்கின்றது. ஆதலாற்றன் தீயாரைக் காணுதலையே நீக்கிவிட வேண்டும் என்கிறது நீதி நூல்.
* தீயாரைக் காண்பதுவுந் தீதே. திருவற்ற
தீயார்சொற் கேட்பதுவுந் தீதே - தீயார் குணங்க ளுரைப்பதும் தீதே அவரோ டிணங்கி இருப்பதுவும் தீது”
சிறுவர் சிலர் குளிக்கும் அறையிற் குளிக்கின் ருர்கள். அவர்கள் நண்பனுன துஷ்டன் ஒருவன் நீர்க்குழாய் செலுத்துவதற்காக விடப்பட்ட பெரிய துவாரத்திலே தலையை வைத்துக் கூவிக்கேலி செய் கின்றன். இதனைக் கண்ட சிறுவர் அதனைப் பொருட் படுத்தாமலே அலட்சியம் செய்திருந்தால் தொல்லை இல்லாதிருந்திருக்கும் துவாரத்திலே தலைவைத்த வன் துஷ்டன் எனத் தெரிந்திருந்துங்கூடச் சும்மா இருக்கவில்லை. ஆத்திரங்கொள்கின்றனர். துடிப் புள்ள சிறுவனுெருவன் தண் ணிரை வாரி இறைக் கின்றன். இதனுல் துஷ்டனுக்கும் சிறுவனுக்கு மிடையிற் சண்டை வளருகின்றது. பெற்ருேருக்கும் முறைப்பாடு வருகின்றது. சிறுவர் செயல்தானே எனக் கருதி வேடிக்கையாக விட்டுவிடுகின்றனர் பெற்றேர். கண்டிக்க முற்படவில்லை. பாடம் புகட்டி வந்த ஆசிரியருக்கும் இது எட்டியது. ஆசிரியரோ பண்பை வளர்ப்பதில் அக்கறையுடையவர். அன்று காலையிலேதான் ‘* தீயாரைக் காண்பதுவும் தீது* எனப் பாடம் புகட்டியவர். * நல்லிணக்க மல்லது அல்லற்படுத்தும்” எனக் கூறித் தண்டித்தார். துஷ்ட னுடன் உறவு இருந்தமையினுலேயே சேட்டையும் கேலியும் வளர்ந்தன எனப் புத்தி கூறிஞர். காலையிற்

Page 18
10 (C) Keyp G) G36urf
படித்ததின் உண்மையை மாலையில் அறிந்தீர்கள். ஆனற் சற்று வருந்தியே அறியவேண்டியதாயிற்று என்ருர், முளைத்தவுடனேயே முட்செடியை அகற்று வதுபோன்று ஆரம்ப காலத்திலேயே தீயார் சேர்க் கையை நீக்கவேண்டும். இவ்வாறு சந்தர்ப்பம் நோக்கி நீதி நூற் கருத்துக்களை மாணவர் மனதிற் புகுத்திவிட்டால் முதற் கட்டுரையிற் குறிப்பிட்டது போன்ற நல்லோரிணக்கப் பயிற்சியை இலகுவாக ஏற்படுத்தலாம்.
காணுகின்றபோதே நீக்குதலால் இணக்கம், பழக்கம், உறவு அனைத்தும் தவிர்க்கப்படும். உல கத்தின் வேகத்திற்கேற்ப நாமும் வேகமாகப் போக வேண்டியுள்ளதால் நல்லோர் இவரென ஆராய்ந்து செயற்பட முடியாத நிலையும் உண்டு. தீயார் இவ ரெனக் காட்டாத, உருவத்தால் நல்லவர்போன்ற தீயவரைக் காணுதலும் நிகழும். இச் சந்தர்ப்பங் களிலே, கெட்டோர் சேர்க்கையைத் தடுக்கமுடியா விட்டாலும், உறவு வளர்ச்சியை ஏற்படுத் தும் இணக்கத்தை நீக்கியேவிடவேண்டும். தீயவர்கள் தங்களது தீய கருமங்களுக்கு உதவியாயிருத்தற் பொருட்டு தீய உறவுகளைக்கூட வளர்க்கவே செய்வர். நல்லோர் இதனைக் கண்டஞ்சுவர். ந ல் லோ ராக விரும்புபவர் இதனைக் கண்டு அஞ்சி ஒதுங்கியே விடவேண்டும்,
* சிற்றினம் அஞ்சும் பெருமை சிறுமைதான்
சுற்றமாய்ச் சூழ்ந்து விடும் "
சிறியோரை ஏன் நீக்கவேண்டும் ?

பண்டிதர் கடம்பேசுவரன் () 11
தீயவர் எப்பொழுதும் தீயவர்களைச் சார்ந்து இருப்பதால் தீயவர் கூட்டம் பெருகிக் கொண்டே யிருக்கின்றது. இத்தகைய கூட்டத்தால் ஒருவன் மேலுங் கெடவும் பிற  ைரக் கெடுக்கவும் வாய்ப் புண்டே தவிரத் திருந்தவோ நன்மை செய்யவோ வாய்ப்பில்லை. கெட்ட கூட்டம் பெருகுவதால் கெட் டதையே பேசி, ஆராய்ந்து உலகம் முழுதுங் கெட் டதுதான் என்ற உணர்வு மேலோங்க வழி செய் கின்றது. கெட்டதைச் செய்தாற்ருன் வாழ்வுண்டு என்பதில் மனம் இலயித்து வருகின்றது. அதன் வசப்பட்டு உழலநேருகின்றது.
நல்லன எனக் கூறுவார் கூற்றை ஏற்கலாமா? உள்ளத் தூய்மை உடையவராய்ப் பிறர்க்கு நல்லது எது எனத் தெரிந்து கூறக் கூடியவர்களே பெரி யோரென்னும் பெயர்க்குரியர். நல்லன கூறும் தகுதி யுடையோர் அவரே. அத்தகையோர் கூற்றை ஏற்க லாம். ஏற்க முடியாதென்றல், அது எமக்குப் பிழை யாகத் தெரிகிறதென்றல், அது நமது அறிவின் விளக்கக் குறைவாக ஏன் இருக்கக் கூடாது?
O O
D திரு அற்ருர் சொல் D
உள்ளத் தூய்மை உடையவராய் நல்லது எது எனத் தெரிந்து ஆராய்ந்து கூறக் கூடியவர் பெரி யோராதலின் அவர்சொல் கேட்கத் தக்கதும் அல் லாதார் சொல் கேட்கத் தகாததுமாம். திரு வற்ற தீபார் சொற் கே ட் டல் தீதே என, ஒளவையார் குறிப்பிடுவது இந்த அல்லாதார் சொல்லையே குறிக்

Page 19
12 () மூலவேர்
கும். வெறுமனே தீயார் சொல் என்னுது திருவற்ற தீயாரென ஒளவையார் விசேடித்துள்ளமையானே தீயாரை இனங்காணுதற்கு ஏற்றதோர் உபாயமும் புலப்படக் காணலாம். இந்நிலையிற் திருவென்பது யாதெனத் தெரிந்து கொள்ள வேண்டிய அவசியம் எழுகின்றது தீங்கற்றனவும் நிலையான பேற்றைத் தருவனவுமான ஆத்மகுணப் பண்புகள் ஒத்திருக் கும் தன்மைக்குத் திரு என்று பெயராகும். அத் தகையதோர் தன்மை மற்றையோராலே தாமாக விரும்பப்படும் பண்பும் உடையதாகும்.
திரு என்பது கண்டோரால் விரும்பப்படும் தன்மை நோக்கம் எனப் பேராசிரியர் கூறுவதன் தாற்பரியம் இவ்வாற்ருன் உணரத்தகும்.
உறவும் நட்பும் ஒன்ரு? இல்லை; உறவுவேறு நட்புவேறு. உறவுகளை நட்பாக எண்ணக் கூடாது. உறவு புணர்ச்சியால் வளர்வது. நட்பு உணர்ச்சி யால் மேலோங்கிச் சிறப்பது. எனவே; சேர்க்கையை வைத்துக் கொண்டு தீர்மானிப்பது சில சந்தர்ப் பங்களிலே தவருகின்றது. நடைமுறையிற் சார்புக ளெல்லாம் நட்புக்களாகப் பேசப்படுகின்றன.
ஆதலால் நட்புறவு சம்பந்தப்பட்ட வரை யில் இத்திருவுடையார் திருவற்ருர் எ ன்ற பாகு பாட்டுணர்வு அவசியம் வேண்டப்படும். சந்தர்ப்ப குழ்நிலைக ளால் ஏற்படும் சார்பு நிலைமையை உண்மை உறவாகக் கருதி மேற்கொள்ளப்படும் நட்பிற் பெரும்பாலும் தீய பேறுகளும் நிகழ்தல் கண்கூடு. இவ்வகையில் நேரும் உறவு பெரும்பா லும் ஒருதலைப் பட்சமான சுயநலத்தை உள்ளிடா

பண்டிதர் கடம்பேசுவரன் () 13
கக் கொண்டிருத்தல் தவருது. ஆதலால் இருபக் கத்திலும் தன்னல முனைப்பில்லாது ஆன்ம நேய அடிப்படையில் ஒருவரோடொருவர் இன்றியமையா தவராகக் கொண் டு வரும் நட்பு திருவுடையார் நட்பும் திருவிலார் நட்புமாய் முடிதலின் அத்திரு வுடையார் சொல்லே கேட்கத்தகும் திருவிலார்சொல் கேட்கத் தகாததாதல் வெளிப்படை.
தமக்கையின் சார்பில் தம்பி என்ற அடிப்படை யில் ஒளவையார் கூறும் திருவற்ருர் சொல்கேட்கும் சூழ்நிலை எது? என்பதைத் திருவள்ளுவர் கூறும் தேரான் தெளிவு தீராவிடும்பை தரும் என்பதால் உணரத்தகும்.
சார்பு மாத்திரையால் ஏற்படும் மகிழ்ச்சி மட் டில் நின்று கொண்டு மேல் ஒருவனின் உள்ளீடான குணநலப் போக்குக்களை ஆராயாது ஒழியும் நிலையே தேரான்தெளிவு. அது தீரா இடும்பைதரும் என்பதன் மூலம், ஒளவையார் கூற்றுக்கிது விளக்கந் தருவதுமாம். உலகியல்பான பதவிமேன்மை படிப்பு மேன்மை, பொருளாதார மேன்மைகளைப் பொறுத்த வரையில் ஒருவரைப் பெரியார் என்று கணிப்பிடு வதும் சர்வசாதாரணம். அவரை நண்பேற்குமுன் அவர் திருவுடையாரோ திருவிலாரோ என்பது தேர்ந்து அறியற் பாலதாம். சார்பு தீயதானுல் அதனை முதற் சந்திப்பிலேயே நீக்க எத்தனிக்க வேண்டும். சாதாரண உலகப் பார்வையில் உயர்ந்தவர்களாகக் கணிக்கப்படும் பெரியவர்களின் கூடாவொழுக்கம் அந்த உயர்ந்த பார்வையினுள் மறைகிறது. அல் லது நமக்கேன் வீண் தொல்லையென மறைக்கப்படு

Page 20
14 () மூலவேர்
கிறது. இவர்களையும் பெரியவர்கள் என்கின்ருேம். இவர்களின் எண்ணிக்கை வயதால் மூத்தவர்களை விடச் சற்றுக்குறைவானதே.
பேரறிவும் ஒழுக்கமும் உள்ளவர்கள் எண்ணிக் கையில் மிகமிகக் குறைந்தவர்கள். சாதாரண சமூ கத்தவராலும் சான்றேராலும் ஒழுக்க சீலர்களாக அங்கீகரிக்கப்பட்டவர்கள். இவர்கள் கூற்றை ஆரா யலாமா? அப் படி யே ஏற்றுக்கொள்வதில் யாது இடர்? பெருமளவு எண்ணிக்கையான மக்களது பார்வையில் ஒருவன் கெட்டவணுணுல் அப் பெரும் பான்மையைக் கொண்டு, அவனை இழித்தல் தகுமா? யார் கூற்றை ஆராயக் கூடாதோ அவரினுலும் குறைவாக ஒருவன் எண்ணப்படுவாணுணுல் அவ னைக் கெட்டவன் என முடிவு செய்யலாம் என்பத ணுலேயே,
*உலகம் என்பது உயர்ந்தோர் மாட்டே’’
என்றமைந்து
இத்தகைய 'உலகந் தழீஇய ஒட்பம்’ உயர்ந்த தாயிற்று.
நீதியாளராகச் சான்றேரை அழைத்தல் ஏற்பு டையதென்ருல், இன்னவர் சான்ருண்மையுடையவர் எனத் தீர்மானிப்பது யார் என்ற விஞ எம்மிட முண்டு. எதிரியானுலும் போற்றப்படத் தக்கவன் இவன். எதிரியும் போற்றும் உயர்வானவன் இவன் என்ற ஒரு நிலையுண்டு. உண்மையான கருணையா ளரை எதிரியும் போற்றுவான். ஆதலாற் சான் ருண்மையைத் தீர்மானிக்க முற்பட்ட சான்றேர்

பண்டிதர் கடம்பேசுவரன் () 15
கூற்றுக்களையும் சான்றேர் நெறிகளையும் சாதாரண சமூகத்தையும் கருத்திற் கொண்டு இந்த இருவேறு உலகையும் சாட்சிக்கு அழைக்கின்ருேம். உயர்ந்த ஒருவர் கூற்று உலகக் கூற்ருனுல் அவர் கூற்றை ஆராயலாமா? இத்தகையோர் கூற்றைக்கூட ஏற்க எத்தனைபேர் முன்வருகின்ருர்கள்? எத்தனை பேர் அப்படியே ஏற்றிப் போற்றுகின்றர்கள்.
பெரியவர்கள் - தக்கவர்கள் இவர்களது இனத் திற் பொருந்தி ஒழுகினுல் பகைமை எண்ணத் துக்கோ அல்லது அதன் கருவுக்கும் பிறப்புக்குமோ இடமில்லையே. அப்படி ஒருகாற் பகைமை தோன்றி ஞலும் பகைவரால் எதுவுமே செய்ய முடியாது; ஏன்? தக்கவணுெருவனுக்கு இருவேறு உலகமாகிய சான் ருேர் உலகமும் சாதாரண உலகமும் பணிந்து ஏவல் செய்யுமன்றே. இதனுற்றன் பெரியவர் துணை வலி யுறுத்தப்படுகின்றது.
** தக்கா ரினத்தணுய்த் தானுெழுக வல்லானைச்
செற்றர் செயக்cகிடந்ததில்" (குறள்)
** கொல்லை யிரும்புனத்துக் குற்றி யடைந்தபுல்
ஒல்காவே யாகும் உழவ ருழுபடைக்கு மெல்லியரே யாயினும் நற்சார்வு சார்ந்தார்மேற் செல்லாவாம் செற்றர் சினம்’ (நாலடி)
மென்முறை :
உலகில் நன்மையால் விளைவது இன்பவுணர்வு, தீமையால் விளைவது துன்பவுணர்வு. இந்த இரண் டின் சுவையுள்ளும் உயிரின உணர்வுகள் எல்லா வற்றையும் அடக்கலாம். வாழ்வியலுக்குரிய ஒன்

Page 21
16 O மூலவேர்
பான் சுவையையும் உலகியலையும் அறம், மறம் இவற் றையுங்கூட உள்ளடக்கலாம். பண்டைய நூற்பகுப் பான அகத்தில், இன்பவுணர்வு - துன்பவுணர்வு, புறத்தில் துன்பவுணர்வு-இன்பவுணர்வு. இவை இரண் டினுள்ளும் இரண்டும் உண்டு. எனினும் அகத்திற் பெரும்பகுதி இன்பம். புறத்திற் பெரும்பகுதி துன் பம். இன்பம் துன்பம் இரண்டாலும் அமைந்ததே வாழ்வு, உணர்வுகள் அவரவர் பக்குவத்துக்கு ஏற் பவே மேலோங்குகின்றன. உணர்வால் ஏற்படுந் தாக்கம் துன்பத்தோடு ஒன்றி அறிவுணர்ச்சிக்கு அப்பாற் சென்று வன்முறைக்கும் தீர்வுக்கும் வித் திடும், உணர்வு மேலீட்டாலும் வன்முறை நிகழும். தீயார் சொற் கேட்டல் முதலானவற்ருலும் வன் முறை நிகழும். முள்ளை எடுப்பதற்கு முள் வேண்டும். இதுபோன்று வன்முறையைப் போக்க நாமும் வன் முறையைக் கடைப்பிடிப்பது பொருந்துமா ?
இன்ப துன்பத்துக்குத் துணையாக உள்ளான் தம்பியாதலாலே தம்பி உள்ளான் சண்டைக்கஞ் சான் என்கிறது முது மொழி. சண்டைக்குப் போ என்று வன்முறையைத் தூண்டுதல் இதன் குறிக் கோளாகாது. அதனில் மிளிரும் கூட்டு ற வின் உயர்வை, சகோதரத்துவ இணைப்பை, தார்மீக பலத்தை (Moral Strength) உணர்த்த வந்த தொடர் இதுவாகும். பொருள் என்ற பூதம் இந்த உறவு களைக்கூட விழுங்கிவிடுகின்றது. முது சொத்தில் அண்ணனுக்கு அதிக பொருள் நீதியற்ற முறையில் சந்தர்ப்பவசமாகக் கிடைத்தது விடுகின்றது. இத ணுற்தம்பி கோபமடைகின்றன். தன் நண்பர்களுடன் ஆலோசனை செய்கின்றன். அவர்களும், “உனக்குரி

பண்டிதர் கடம்பேசுவரன் O 17
யனவற்றை நீதியற்ற முறையிற் கவர்ந்த அவ. ணுக்கு அது சேராமற் செய்துவிடு” என ஆலோசனை வழங்குகிருர்கள். உடைமைகளை அழித்துவிடுவ தற்கான திட்டம் தீட்டுகிறன் தம்பி. ஆனல் அண்ண னது தொடர்பு தொடர்ந்தும் இருந்ததால் மெல்ல மெல்ல வஞ்சினம் மாறித் தான் ஏமாற்றப்பட்டதை மறந்து விடுகிறன். இல்லைத் தன்னைத்தானே சமா தானப்படுத்திக் கொள்கிருன். பாசத்துக்கு முக்கி யத்துவம் கொடுக்கிருன். இந்த வேளையில் ஆலோ சனை வழங்கிய நண்பர்களும் அயலில் இல்லை. ஆத லால், எல்லாம் சகஜமாகி விடுகின்றன. மீண்டும் திருவற்ற அந்த நண்பர்களது சேர்க்கை வந்தடை கின்றது. இவனுக்கும் ஓரளவு பொருளாதாரக் கஷ் டம் இருந்ததால் அவர்களது ஆலோசனையால் தனக்குரிய பங்கை அண்ணனிடம் கோருகின்றன். அண்ணன் மசியவில்லை. நண்பர்களுடன் சேர்ந்து கொண்ட தம்பி அண்ணனிடமிருந்த உடைமைகளுக் குத் தீவைக்கின்றன்.
நாள்களின் வளர்ச்சியில் குடும்பச் சண்டை நீதி மன்றத்தை நாடுகின்றது. த மீ பி யிடம் இருந்த சொத்தும் கரைகிறது. ஆத்திரமடைந்த தம்பி அண், ணனைக் கொலை செய்து விடுகிருன். அதனுல் இவ னும் ஆயுட் சிறைத் தண்டனை பெறுகிருன். இரு குடும்பங்களும் நடுத்தெருவில் நிற்கின்றன. ஏதோ அண்ணன் தானே எடுத்தான்; பரவாயில்லை எனத் தம்பிக்கு அறிவுரை கூறியிருந்தால், அல்லது தம் பிக்காக அண்ணன் இரங்கும் வகையில் அவனை வசப் படுத்தி, இவனுக்குரிய ஞாயமான பங்கை அந்த நண்பர்கள் கொடுப்பித்திருந்தால் இரு குடும்பங்க

Page 22
18 O மூலவேர்
ளுமே வாழ்ந்திருக்கும். அண்ணன் அல்லது தம்பி இருவரில் ஒருவருக்கென்றலும் தக்கார் சேர்க்கை இருந்திருந்தால் இருவருமே வாழ்ந்திருக்கலாமல் லவா? திருவிலார் சொற்கேட்டல் தீது என்பதற்கு இது பொருத்தமான உதாரணமாக அமையும். நல்ல னவற்றைக் காட்டிலும் தீயன விரைவில் வளரும், ஆதலாலே உலகில் நல்லன குறைந்தும் தீயன மிகுந் தும் உள்ளன. இதே போன்று தக்கார், தகவிலா ரைக் காட்டிலும் குறைவான எண்ணிக்கையுடை யோராயுள்ளனர். இதனுலேயே பெறுபேறுகள் அதா வது தீர்வுகள் வன்முறைக்கு - வன்முறை எ ன் று வளர்ந்து சமூகப் பொறுதியை நடுத்தெருவில் விட் டிருக்கின்றன. தக்கானுெருவ னெனில் இன்னுதன செய்தவரையும் இனியன செய்து தன்சால்பு வெளிப் பட நிற்பன்,
"இன்னு செய்தார்க்கும் இனியவே செய்யாக்கால்
என்ன பயத்ததோ சால்பு' என்ற இந்த அறக்கட்டளையின் (Moral Value) வழி நின்று இனியதைச் செய்தலென்னும் மென்முறை யால் வெல்ல எண்ணுது - வன்முறையாலே வெல்ல எண்ணுவாரும் உளராகின்றனரே, ஏன்?
பிறிதோர்முறை :
நிரந்தரத் தீர்வைப்பெற உதவுவது மென்முறை தான். ஆனல், அறுவைச் சிகிச் சையே நிரந்தர சுகத்தை ஏற்படுத்தும் எனத் தெரிந்து கொண்ட வைத்தியன்கூட, தற்காலிகமான உடனடித் தீர்வுக ளுக்கு மாத்திரைகளைப் பயன்படுத்திய பின்னரே அறுவைச் சிகிச்சையை மேற்கொள்கின்றன். மென்

பண்டிதர் கடம்பேசுவரன் O 19
முறையைக் காட்டிலும், மாத்திரை அளவில் நிற் கும் வன்முறையைக் கையாண்டு உடனடித்தீர்வை ஏற்படுத்துமளவில் திருப்திகாண நிற்கும் இன்றை யார் மனநிலை விபரீதமானதாகும். கூட்டுவாழ்க்கை யற்ற மயிர் கொட்டிகள் சந்தர்ப்ப சூழ்நிலைகளாற் குவியலாகக் காணப்படுதல் போல, சந்தர்ப்ப வசத் தரலாம் இன்ப துன்ப இணைப் புக் கள், மீண்டும் தொடர்புகளை ஏற்படுத்துதல் கூடும்; மேலும் பழக வேண்டிய நிலையை ஏற்படுத்தும் எனத்தெரிந்தால், மாத்திரை வழங்கும் வன்முறையில் மனஞ் செல்லு தற்கிடமில்லையாகும்.
இரண்டு பொருள்கள் ஒன்றையொன்று பற்றிக் கொள்ளும் போது திடமாகப் பிடித்துக் கொண்ட தெனப் பேசிக் கொள்வர். அல்லது இளக்கமாகப் பிடித்துக் கொண்டதெனக் கூறுவர். ஒவ்வொரு பொருளும் தன்னளவில் திண்மையான தன்மையோ அல்லது மென்மையான தன்மையோ கொண்டிருப் பதாலேயே இது நிகழ்கின்றது. இவ்வாறு நோக்கு கையில் திண்மையில் மிகக்கூடிய விகிதாசாரத்தை யுடையது புல்லினத்தைச் சேர்ந்த நெல். அத்தகைய நெல் உமி சிறிது பிரிந்து பொருந்தினுலும் (புல்லி ஞலும்) அதன் திண்மை போய்விடுகின்றது; தன் னிலையிலிருந்து தளர்ந்து விடுகின்றது. இதை உவ மானமாகக் கொண்டு இருவர் உறவு வேறுபட்டு மீண்டும் ஒன்றுசேர ஆரம்பிக்குமிடத்து இங்ங்ணம் எதிரெதிரான நிலைமை ஏற்படுமென்பதை உணர்த் துகின்றது அறக்கட்டளைகளில் ஒன்ருன நன்னெறி
*நீக்க மறுமிருவர் நீங்கிப் புணர்ந்தாலும்
நோக்கி னவர்பெருமை நொய்தாகும்-பூக்குழலாய் நெல்லி னுமிசிறிது நீங்கிப் பழமைபோற் புல்லினும் திண்மைநிலை போம்"

Page 23
20 O மூலவேர்
பக்க விளைவுகளான இவையும் வன்முறைக்கு முன் ஆராயப்பட வேண்டியவையே
வன்முறையால் உருப்பெறும் பின் விளைவான உணர்ச்சிகள் கிளர்ந்தெழுந்து அதிக சிக்கல்களை யும் ஆபத்துக்களையும் விளைவித்துக் கேடுகளைப் பெருக்குமென்பதால் வன்முறைப் பிரயோகம் நிரந் தர தீர்வான பலனைத் தராதெனல் தெளியப்படும். ஆதலாற் கூடியமட்டும் மென்முறையிலிருந்து வில குதல் கூடாது. எனினும் கடுஞ்சொல் முதலான வன்முறைகள் புரிந்துணர்வுகளால் வளர்ந்து விட்ட உறவுகளிற் பலன்தருதலும் உண்டு.
"காதலாற் சொல்லுங் கடுஞ்சொல் உவந்துரைக்கும்
ஏதிலார் இன்சொலிற் றீதாமோ?" (நாலடியார்)
ஓரளவு இதற்கு இணையான ஆங்கில மரபில் உள்ள தொடரையும் ஒப்பிடலாம்.
* A Friend's Frown is Better
Tham A Foe’s Smile '?
தீதில்லை என்பது உணரப்படுவதால் இத்தகைய இடங்களில் வன்முறை அறுவை சிகிச்சை போன்று உண்மையான பலன் தரும். பெரும் பாலும் அறுவை சிகிச்சையையும் ஏமாற்றி விடும் புற்று நோயைப் போன்ற குணமுடையோரை இழக்க முடி யாத ஒன்றை இழந்தேனும் அதாவது மாற்ருகக் கொடுத்தாயினும் ஒருவ வேண்டிய தொடர்பு விட்டுவிட வேண்டியதாகும். விட்டாலும் பலாத் காரமாக இவர்கள் தொடர்பு வலிந்து வந்தால் வன்முறையைத் தவிர வேறுவழியில்லை.

பண்டிதர் கடம்பேசுவரன் () 21
தீயாரை அழிக்க வேண்டி வந்தால் அழிக்கு முன் திருத்தப் பலமுறை முயலவேண்டும். அவ்வா றுந் திருத்த முடியாது போஞல், நல்லனவற்றைக் காக்க இந்த அழிப்பைத் தவிர வேறுவழியில்லை. ஆராய்ந்து தெளிந்தபின் அழிப்பை மேற்கொள்வ தனை அறமாகக் கருதுகின்றனர். இது சிந்திக்க வேண்டிய தொன்றுதான். ஆனல் இதனை ஆதார மாக வைத்து இன்றைய நாள்களில் தனிப்பட்ட இலாபங்களுக்காக அறம் என்ற போர்வையில் எதிரிகளாக இருந்தால் நல்லவர்கள் கூட அழிக்கப் படுந் தந்திரம் விரும்பத்தகாததாகும்.
புற்று நோய் போன்ற இவர்கள் தொடர்பு நீங் குந் தன்மையால் வன்முறை தற்காப்பை அளிக் கின்றது, மனித மேம்பாட்டுக்கான அறக்கட்டளை களையுடைய நூல்களில் முதன்மையானது குறள். இந்நீதிநூல் வன்முறையை வற்பு று த் தும் இடம் *கயமை’ என்ற அதிகாரத்தில் உண்டு. கயவரிடத் தில் நல்லதொன்றைப்பெற முடியாது. சந்தர்ப்ப வசமாக அவரிடமே பிணிதீர்க்கும் பெருமருந்து சிக்கிவிட்டதென்றல், என்ன செய்வது கயவரிடத் தில் இருப்பதைப்பெற நினைப்பது துன்பம் என்று விட்டுவிட முடியுமா? இது பெரும் இழப்பல்லவா? மென்முறை செல்லாத இவரிடத்து வன்முறையைத் தவிர வேறு வழியே இல்லையாம்!
* சர்ங்கை விதிரார் கயவர் கொடிறுடைக்கும்
கூர்ங்கைதிய ரல்லா தவர்க்கு”

Page 24
22 0 மூலவேர்
ஆதலாலேதான் கயவரிடம் உள்ள பெருமருந்தான சமுதாயப் பிணி தீர் க்கும். நன்மருந்தைப்பெற அவரை முறுக்கி முஷ்டியைப் பிடித்துப் பிடுங்க வேண்டும் என்பதால் வன்முறையை எடுத்தாண் டார். கயவர் உறவு என்றும் வேண்டத்தகாததும் தானே! இவ்விடத்திற் 'குறள்” வன்முறையை வற் புறுத்துவதில் தவறில்லையே! வழிக்குக் கொண்டு வர நினைப்பது தவறில்லை. அழிக்க நினைப்பதே வேண்டாததாம்.
சொல்லுகின்ற அளவில் உணர்ந்து செயற்பட இவர்போல்வாரால் முடியாது ஆலையில் அகப்படுத் தித் துவையல் செய்துதான் கரும்பின் பயனைப் பெறலாம். * சொல்லப் பயன்படுவர் சான்ளுேர் கரும்புபோற்
கொல்லப் பயன்படுங் கீழ்
கொல்ல என்பது உயிரைப் பறிப்பதன்று வருத்துவது)
இதே பொருளில் நிற்கும் மேலும் ஒரு செய்யுள் இளந்தளிர்மேல் நின்ருலும் பிறர்தட்டினுலன்றி அத னுள் இறங்காத உளியின் இயல்பினை உடையவர் கயவர் ஏனெனில், பிறர்க்கு இரங்கும் இயல்பினை உடையோர்க்குச் சிறிதும் பயன்படாமல் தம்மை வருந்துவோர்க்கு மட்டும் பயன்பட்டு வேலை செய் பவராகையால்.
'தளிர்மேல் நிற்பினுந் தட்டாமற் செல்லா
உளிநீரார் மாதோ கயவர் - அளிநீரார்க்
கென்னுலுஞ் செய்யார் எனத்தானுஞ் செய்யவே
இன்னுங்குச் செய்வார்ப் பெறின்’
என்கின்றது

பண்டிதர் கடம்பேசுவரன் () 23
வன்முறையும் ஒரு சில இடங்களில் வேண்டியிருத் தலை ஏற்றதால் தனி மெல்லியலாளரின் மென் போர்களில் தோல்விகண்டு அதனுல் தம்நலம் பாதிப்புற்றமைக்குச் சரித்திரம் சான்றகும்.
மென்மைப் பண்புகலன் :
தீர்வுகளுக்கு வன்முறையும் இன்றியமையாது ஒரு சில இடங்களி ல் வேண்டியிருத்தலால், வன் முறையைச் சிறிதும் விரும்பாத மென்முறையாள ரும் மெல்லியலாளரும் தோல்வி காண்பர் எனவும் கண்டோம். தம் மி டம் வலிமையிருந்தாலுங்கூட, மென்முறையையே விரும்பித் தழுவி நிற்பவரும் தோற்றுப்புறங் கொடுத்தவராகவே தோற்றம் பெறு கின்றனர். இதுபோன்ற காரணங்களில்லாமல் இய லாமை ஒன்று மட்டும் மெல்லியலாளரைப் புறங் கொடுக்கச் செய்யுமானுல் இவ்வுலகில் இவர்கள் வாழும் வாய்ப்பையோ தகுதியையோ இழந்து பிறர் பின் செல்பவராகிவிடுவர்.
வன்முறையை விரும்பாத மென்முறையாளரோ வன்முறையாளர் தாமே வென்ருர் எனக் கொள்ளும் உணர்வை அவரே கொள்ள விட்டுத் தாம் அமைதி யாக இருப்பர். சாதார ண உலகப் பார்வைக்கு இவர்கள் கோழைகளாகத் தென்படுவர், உயர்ந் தோர் பார்வையில் சினங்காத்த பெருமை பெறுவர். வலிமையிருந்தும் மென்முறையால் வரும் நிரந்தர சுகத்தை எதிர்பார்த்து மென்முறையைப் பின்பற் றிச் செல்லிடத்தினுஞ் சினங்காத்த பெருமை பெறுவர். தம்மில் மெலியார் மேற்செல்ல வேண்டிய சூழ்நிலையிலும் வலியார்முன் தாம்நின்ற நிலையை

Page 25
24 () மூலவேர்
நினைப்பர். இத்தகையோர் மென்முறைக் கொள்கை யைக் கடைப்பிடித்து உயர்ந்தோர் பார்வைக்கு உள்ளாவர். தன்னுட்சி செல்லக்கூடிய இடத்தில் வன் முறைக்கு ஆதரவாகப்பேசியும் தன்னியலாமையுள்ள இடத்தில் மென்முறை பேசியும் இரட்டை நாக்குடன் செயற்படமாட்டார். கொள்கையின்றி இரட்  ைட நாக்குடன் பேசுதல்வேறு. நன்மையைக் கருதி உல கியலை அநுசரித்து மென்மையாகவும் வன்மையாக வும் இயங்கத் தகுதியுள்ளானுெருவன் பொய்யாரி டத்தில் வன்முறையாளனுகவும் மெய்யியல்பு உள்ள மேலோரிடத்தில் மென்முறையாளனுகவும் உலகத் தில் நடந்து கொள்வது வேறு.
** மெல்லிய னல்லாருள் மென்மை அதுவிறந்
தொன்னுருட் கூற்றுட்கும் உட்குடைமை எல்லாம்
சலவருட் சாலச் சலமே நலவருள் நன்மை வரம்பாய் விடல்'
மென்முறையாளர் என்றும் இருவேறு உலகத்தாரா லும் போற்றப்படுவர். இவரிடமுள்ள மெல்லியல் புகள் நல்லியல்புகளை வளர்க்கும். நல்லியல்புகள் வளர நற்சேர்க்கையும் உண்டாகும். இத்தகையோரே கெழுதகைமைக்குரியவர். பிரிந்தபோதும் தூற்ருத பேராண்மைப் பண்புள்ள பெருமைக்குரியவராவர்.
மேலும் சினம் சேர்ந்தாரைக் கொல்லும் ஆத லால், அதனை இன்றியமையாத வன்முறையாளரிடம் நல்லதன்மைகள் வந்துசேர வாய்ப்பில்லை. பழகும் போது நல்லது செய்பவராகத் தோன்றினுலும் பிரிந்து விட்டால் ஒருகாலத்தில் என்னையும் நம்பிப் பழகினவர் இவர் என்று கருதி அவர் அற்றத்தை

பண்டிதர் கடம்பேசுவரன் O 25
(குற்றத்தை) மறைக்கும் பேராண்மை இவரிடத்து இல்லையாதலால் இவ்வன்கணுளர் தொடர்பு துன்பஞ் செய்யும்
இசைந்த சிறுமை யியல்பிலா தார்கட் பசைந்த துணையும் பரிவாம் - அசைந்த நகையேயும் வேண்டாத நல்லறிவி ஞர்கண் பகையேயும் பாடு பெறும் : ஆதலாற் பெரியோரிடத்துப் பகை செய்தலினுஞ் சிறியோரிடத்து நட்புச் செய்தல் பெரு ந் தீங்கு பயக்கும் என்பது இ த ஞ ற் பெறப்படுகின்றது. எனவே பெரியவராக்கும் மென்மைப் பண்புகளை வளர்த்துக் கெழுதகைமைக்குரியவாறு, உவப்பத் தலைக்கூடும் உயர்ந்த பண்பு, பெரியார் சேர்க்கை யாலேயே வாய்ப்பதாம்.
கேண் மை - கெழுதகைமை - நட்பிற் சற்று உயர்ந்த எல்லையைக் காட்டுகின்றது.
உவப்பத் தலைக்கூடுதல் பண்பில் உயர்ந்த எல் லையில் உள்ளவர்களுக்கே ஆகும். தனித்து உடனி ருக்கும் போது உவப்பாகவும் நாலுபேர் முன்னிலை யில் உள்ளக்கரவாகவும் பேசுவதானுல் அறிவுதான் எதற்கு? கேண்மைதான் எதற்கு?
D பண்பும் உறவும் 0
கசப்பான மாத்தி  ைரக ஞ க்குப் புறப்பூச்சு வேண்டியிருக்கிறது ஆத லா ல், தயாரிப்பாளர்கள் நாவுக்கு இதமளிக்கும் புறப்பூச்சான அமிர்தத்தைச் சேர்த்துவிடுகின்றனர். இது போன்று, கரவுள்ளம்

Page 26
26 O மூலவேர்
பொருந்திய வஞ்சனையாளரும் நுனிநாவில் அமிர் தம் தோய்த்துக் கொள்வதால் அவர்தம் உள்ளத் தில் இருக்கும் கசப்பான நஞ்சு வெளித்தெரிவதில்லை. மாத்திரையிலே தோய்ந்த அமிர்தம் நன்மைபுரிய, இவர்நாத் தோய்ந்த அமிர்தமோ கேட்போர் செவி யில் நல்லதான உணர்வைத்தந்து கரவை மறைத் துப் பெருந்தீங்கை விளைவித்து விடுகின்றது.
அன்புள்ளவர்-என்மேல் நல்ல அபிமானமுடை யவர் - இவரென நம்பிப் பழகுவோரை வஞ்சனையா ளர் ஒருவர் தன் வளர்ச்சிக்காகப் பயன்படுத்திக் கொண்டு உறவு தேய்ந்து தொடர்பு குறைந்து விட் டதன்பின் ஏதோ சில காரணங்களுக்காக மறை முகமாகவோ நாலுபேர் முன்னிலையிலோ தூற்று தலைக் காண்கின்ருேம். பகைத்துப் பிரிந்துவிட் டாலோ மிக வேகமாகப் பல்வேறு உருவில் தாக்கு தலையும் காண்கின்ருேம். உயர்ந்தோர் கேண்மை பிரிந்த காலத்திலும் தீங்குதராது. பகையான காலத்திலும் இவர் கேண்மை பாடுபெறும் - மாட்சி தரும்.
*அற்றம் மறைக்கும் இவர் கேண்மை’. இவர்கள் உடனிருக்கும் போது உவந்து பேசுவர் புறத்தில் நாலுபேர் முன்பிலே தூற்ருத உயர்வுடையோராக இருப்பர்.
இழிந்தோரான வஞ்சனையாளர், தொடர்பு குறைந்த போதே, தூற்றத் தொடங்கிவிடுவர்.
தினைத்துணை நன்றியாளுலும் பனைத்துணையாகக் கொள்ள வேண்டும்

பண்டிதர் கடம்பேசுவரன் O 27
காலத்தினுற் செய்த நன்றி அருமையுடையது என்றெல்லாம் எண்ணும் பண்பு இவரிடத்துக் கிடை யாது நன்றி கொன்றவர் உய்வடைய மாட்டார்’ என்பதிலும் நம்பிக்கையில்லாதவராகவே இருப்பர். இவர்களிடத்து நீதி செல்லாது, மற்றையோராலேயே நாம் உயர்ந்தோம் என்பதனையும் மறந்து விடுவர்
தம் பழைய நிலையை மீட்டுப் பார்க்குந் திறனும் அவரிடத்து இல்லாமல் இருக்கும். எம்மிடத்தில் ஒரு காலத்தில் அன்பாய் இருந்து எமக்காகத் தம்வாழ் நாளின் ஒரு பகுதியைக் கழித்தவர்கள், தம் உயர் வையே மறந்து எமக்காகச் செயற்பட்டவர்கள் அவர்கள், என்றெல்லாம் எண்ணிப்பார்க்கமாட்டார் இந்த இழிபிறப்பாளர். இவர்களுக்கு நன்றி செய்தல் எங்ங்ணம் பொருந்தும்? இதனுற் போலும், பெரிய வர்கள்-மகான்கள் எல்லாரும் நன்றி யை வலியு றுத்த, நன்றி என்ருல் எல்லோருக்கும் செய்துதான் ஆக வேண்டுமோ? என ஒரு வினுவைத் தன்னுள் எழுப் பிக் கொண் டு எங்கே அதனைச் செய்ய வேண்டும் எனவும் துணிபொருள் உரைக்கும் வள்ளுவர்,
*" நன்றுஆற்றல் உள்ளும் தவறுண்டு அவரவர்
பண்புஅறிந்து ஆற்றக் கடை'
என்றர். மனிதப் பிறவி நன்று செய்யவே எமக்குக் கிடைத்தது என்ருலுங்கூட. நன்றி பாராட்டக்கூடத் தெரியாத பண்பிலார்க்கு உதவுதல் கேடுதரும். பண் பில்லாதவர் படித்தவராக இருந்தாலும் - தகவல்கள் (Facts) தெரிந்தவராக இருந்தாலும் கல்வியாலாம் பயனற்றவரே யாவர். தம் சுயநலக் குறிக்கோளின் நிறைவுக்காகத் தாம் அறிந்த தகவல்களைச் சாதக

Page 27
28 O மூலவேர்
மாக்கிப் பயன்படுத்துவார்கள். தவறிழைத்து விட் டுத் தம்மை நியாயப்படுத்துபவர்களும் இவர்களே! இவர்களிடத்திலுள்ள அறிவு வெறும் தகவல்களாகத் தானிருக்கும். புடமிடப்பட்டுச் சிந்தனை வயப்பட்ட தாக இருக்கமாட்டாது. இத்தகையோரைப் பார்த் துப் படித்திருந்தும் பிழை விடுகின்றயே! என்று மற் றையோர் இழித்துரைப்பர். படித்திருந்தும் பிழை விடுவதாற் கல்விப் பய னு கிய நீதியில் - அறத் தில் நம்பிக்கையில்லாதவர்கள் என்பது பெறப்படும்.
கல்வியால் வாழ்வியல் உண்மை உணரப்பட வேண்டும். வெறும் வாழ்வு நோக்கத்தை மட்டும் ஈடேற்றக் கல்வி பயன்படக்கூடாதன்றே!
விழிப்பாயிரு :
பண்புகள் வளர இளமைக் காலத்திலேயே சிந் தனைக் கல்வி - பண்பாட்டுக் கல்வி, மனனக் கல்வி என்பன ஊட்டப்பட வேண்டும் என்பது முன்பே வலியுறுத்தப்பட்டது, அகலமாகக் கற்றுப் பல விட யங்களைத் (Information) தெரிந்தவர் அறிவில் உயர்ந்தவர் என்பது இன்றைய கணிப்பு விடயங் களைத் தெரிந்தும் உலகியலை அறிந்தும் சிந்தனை வழிப்படுபவர் பேரறிஞர். இப் பேரறிவு பண்பாட் டைத் தோற்றுவிக்கும்; சான்ருண்மையை உண் டாக்கும்.
கற்றவருக்குப் பண்பாடு தோன்றவில்லையானல் அவர் கரவுள்ளத்தோடு பழகுபவரானுல் அவர்க்கு அவ்வறிவால் வரும் பயன் யாதோ! படித் தும் பண்பாடு இல்லாதவர்கள் தம்சுயநலத்துக்காக மென்

பண்டிதர் கடம்பேசுவரன் O 29
முறையாளருடன் ஊடுருவிப் பழகுவர். உவப்பத் தலைக் கூடுவதற்காக நாவில் அமிர்தம் தோய்ப்பர் மாத்திரை போன்று நன்மைபயக்காத அமிர்தம் தோய்த்த நஞ்சை உள்ளத்திற் பொருந்தியவராக இருப்பர். ஆதலால் உவப்பத்தலைக்கூடிய அவர்க ளின் உறவு எல்லாம் உயர்ந்தன வல்லவாகும். மென் முறையாளர் தமது உறவுக்காக உதவிக்கொண் டிருக்க நுனிநாவிற் தடிப்பாக அமிர்தம் தோய்த்த வஞ்சனையாளர் இதயத்தோடு ஒன்ருத வார்த்தை களைக் கொட்டித் தம்வலையில் அம்மேன்முறை யாளர்களை வீழ்த்திக்கொள்வர். உண்மையென நம்பி நெகிழ்ந்துபோய் அவர்கள் கருமமெல்லாம் தம் கருமமென எண்ணிக்கொண்டு செயற்படுபவர். இவர் களுக்கு நல்லதையும் தீயதையும் ஆராயும் அவ காசம் இருப்பதில்லை. போலிகளை அசலாக எண்ணி விடுவர். அநுபவம் கிடைக்கின்றபோதுதான் தமது மடைமைக்காக வருந்துவர்.
வேலைகளைப் பொறுப்பேற்றுச் செய்துகொள் பவர் ஒருவரிடம் வேலை செய்விக்கக் கருதி ஒருவர் வருகின் ருர், முகவரும் (வேலை கொள்பவர்) “சரி நாளை பார்ப்போம்” என்கின் ருர் வழமையான தோரணையில். மின்சாரத்தின் உதவியினுல் அவ் வேலையை இலகுவாகச் செய்துவிட முடியும். ஆனல் மறுநாள் மின்சாரம் தடைப்பட்டு இல்லாதிருக் கவே சமாதானமாக வீணுக ஏன் காய்ச்சித் தட்டிச் சிரமப்பட வேண்டும் என்று இருந்துவிட்டார் முக வர். செய்விப்பவர் மறுதினம் மதியவேளை தாண்டித் தமது பிரதிநிதி ஒருவரை அநுப்புகின்றர். முக வரும் சந்தர்ப்ப சூழ்நிலையை உணர்த்த அவரும்

Page 28
30 () மூலவேர்
நிலைமையை உணர்ந்து கொண்டு காரணத்தை ஒப்புக் கொண்டு திரும்புகின்ருர். அது ஒரு சங்கப் பொது வேலையாகையால் வேருெருவர் அது விடயமாக வருகின்ருர். திருத்தத் தந்த அச்சில்லு இவ்வளவு காலமும் அவ்வண்டியில் இருந்து இயங் கியது தானே ! இன்றும் அங்ங்னமே பயன்படுத் துங்கள், நாளை திருத்தலாம் என்ருர் முகவர். சரி அப்படியே செய்வோம் என்று ஒப்புக்கொண்டு சென்றவர் பொது வைபவத்தில் வண்டியைச் சுற்றி நாலு பேர் நிற்கையில், ஏனுே முகவரை எடுத் தெறிந்து தாழ்த்தியுரைக்கின் ருர். முகவரும் இத னைக் கேள்விப்பட்டு வருந்துகின்ருர், வீணுகக் கழிந்த தன் இளமை நினைவை மீட்டுக்கொள்கின் ருர், சிறுவனுக இருந்த போது என்னை நன்ருகக் கறிவேப்பிலையைப் போலப் பயன்படுத்தியவர் இவர் பகையெதுவும் இல்லை ஏன் தாழ்த்துகின்றரோ ! என் முன்னிலையில் ஏசிய முன்னவர் போல இவ ரும் ஏசியிருக்கலாமே ! நாலுபேர் முன்னிலையிலா இழித்துரைப்பது. செல்லிடத்துச் சினங்காத்தலே பெருமை, என்னை எண்ணியும் என் தொடர்பை எண்ணியும் இவரேன் இருந்திருக்கக் கூடாது என் றெல்லாம் முகவரின் மனம் எண்ணிக்கொண்டது. மேலும் இவரைக் காட்டிலும் ** என்னை என் முன்னி லையிலே தாக்கியவரே இவரைவிடப் பெரியவர் ” என்ற அந்த முகவரது மனம் வள்ளுவரையும் நினைத்தது.
*" எனத்தும் குறுகுதல் ஓம்பல் மனக்கெழீஇ
மன்றிற் பழிப்பார் தொடர்பு"

பண்டிதர் கடம்பேசுவரன் O 31
சோர்வாக இருக்கும்போது - நெகிழ்ந்து இருக்கும் போது - விழிப்பாக இருக்கவேண்டுமே யல்லாமல் சினத்தினலோ ஆற்றமையினலோ பகைத்துவிடக் கூடாது. பொருந்தாத உறவை ஒன்றைக் கொடுத் தேனும் விலக்க வேண்டும். நல்லது தீயதை உண ரும் திருவுடையார் முன்னிலையில் முகஸ்துதிகளா கிய புளுகுரைகளை வைத்துக்கொள்ளக் கூடாது. இதயத்தோடு ஒன்றிய உண்மை உரைகள் கூட அருமையாக இயல்பாக உதிப்பனவாய் இருத்தல் வேண்டும். அல்லாது போனுல் நட்பின் தகுதியைக் குறைத்துவிடும்.
* இணையர் இவரெமக் கின்னம்யாம் என்று
யுனையினும் புல்லென்னும் நட்பு'
என்பது குறள் நெறியன்றே ! உணர்வுகள் இதயங் களில் இறங்கித் தவழ்ந்து மெளனமாகப் பேச வேண்டுமே தவிர, அளவு கடந்த புளுகு மொழிக ளாகும் புனைதலைப் பெறக்கூடாது. கருத்து ஒருமித் தலும் உய்த்துணர்வுமே நட்பின் உயர் எல்லையுட் சேர்க்கும். அதுதானே உயர்ந்தது.
ஈட்பெனும் உப்பு:
நல்லுறவுகளைத் தேர்ந்து கொண்டதன் பின்ன ருங் கூட பெரும்பாலான சந்தர்ப்பங்களிற் கருத் தொருமைப்பாடு, குறிப்புணர்வுகள் அல்லது புரிந் துணர்வுகள் என்பவற்றைப் பொறுத்தே உறவுகள் வளர்ந்து நட்பாக உயர இடமுண்டாகிறது. ஒரு வனது வாழ்வும் தாழ்வும் மற்றெல்லாவற்றைக் காட்டிலும் அதிகமாகச் சேர்க்கையிற்ருன் தங்கி யுள்ளன.

Page 29
32 O மூலவேர்
அறிவின்மையாற் கெட்டவர் ஆயிரத்தில் ஒரு வர் கூட இருக்க முடியாது. சந்தர்ப்பம் சூழ்நிலை வாழ்க்கை வசதிகள் என்பனவே நல்லனவாம்போது ஒருவரைக் கைதூக்கி விடுகின்றன. அவையே தீயன வாம் போது கெடுத்தும் விடுகின்றன என்ற கருத்தை பும், இவ்விடத்தில் ஒப்பு நோக்க லாம்.
சேர்க்கையுயர்வுடையதாய்க் கொள்ள வேண்டும் நட்பைத் தேர்ந்துகொள்ளும்போது மிக விழிப்பா யிருத்தல் வற்புறுத்தப்படுகின்றது. நட்புரிமை கொள் ளுந் திறன் உயிரினங்கள் அனைத்துக்கும் உண்டு மனித நேயங்கள் சந்தர்ப்பம், சூழல் சுய தேவைகள் என்பனவற்ருல் ஏற்படும். பிறந்தநாள் தொடக்கம் இறக்கும் வரையும் மனிதன் மற்ருெருவனை நேசித்த வண்ணம் இருக்கின்றன். நட்பை எந்த வயதில் ஏற்படுத்த வேண்டும் என்பதற்கு விதி இல்லா விட் டாலுங்கூட, தன்னையும் சூழலையும் உணர்ந்து அறி வாற் பாகுபடுத்தத் தெரிந்த காலத்தின்பின் ஏற்படு வதுதான் நல்லது. இத்தகைய நேயங்களே அழி வைத் தடுத்து ஆக்கங் கொடுக்கும், அறிவாலும் வயதாலும் பக்குவப்படாமல் வெறுஞ் சூழலால் ஏற் படும் உறவுகளே குறிப்பாகச் சிறுவரிடத்திலே ஏற் படுகின்றன. இவை நாளாவட்டத்தில் இறுக்கமடை கின்றன. நல்லதோ தீயதோ அதுவே தொடர்ந்து, வாழ்வையோ தாழ்வையோ தரும். எனவே அவனை யும் அவனது சூழலையும் பெற்ருேரும் அபிமானி களும் நெறிப் படுத் துதல் எல்லாவற்றிலும் மேலானது.

பண்டிதர் கடம்பேசுவரன் O 33
ஒருவனது வாழ் நாளில் ஏற்படும் சிறிய திருப் பங்கள் பெரிய மாறுதல்களை ஏற்படுத்துகின்றன. ஒவ்வொருவர் வாழ்வு வரலாற்றையும் புரட்டிப்பார்த் தால் இதனை உணரலாம். பெரியோர் வாழ்க்கை வரலாறுகள் எழுத்துருவம் பெற்றவை உள. அவர் களையெல்லாம் சிறியதிருப்பங்களும் சூழலும் மாற்றி யுள்ளனவென்பதைப் படித்துணரலாம்.
வாழ்க்கையிலே திருப்பங்களை ஏற்படுத் தும் முதற்காரணி நட்புத்தான். இரண்டாம் மூன்றம் இடங்களிலேதான் சூழல் முதலியன. நட்புக்கு இலக் கணங்கூறும் இடங்களிலே கோப்பெருஞ் சோழன் பிசிராந்தையார் நட்புப்போல் எனச் சுட்டிக்காட்டு வார்கள். இவர்கள் புணர்ச்சி இல்லாமல் உணர்ச்சி யால் ஒன்றியவர்கள். இவர்கள் நட்பு அமரத்துவம் பெற்றது. பார்த்தறியாமலே கேள்வியறிவொன்றல் நட்புக்கொண்டவர்கள் எனினும் ஒருவர்மேலொருவர் உயிரையே வைத்தனர்.
கோப்பெருஞ் சோழன் தன்னுயிரை நீக்கும் இக்கட்டான நிலைக்குத் தள்ளப்பட்டான். தான் இன்பமாய் இருந்தவேளையில் தன்னிடம் வராமல் இருந்த நண்பன் துன்பங் கண்டும் வராமலிருப் பானு ? என்று கூறித் தன்னருகே இடம் ஒதுக்கி ஞன். உடனிருந்தோர் சோழநாடு பாண்டி நாடு களுக்கிடையில் உள்ள தூரத்தை எண்ணிப்பார்த்து, வருவது இயலாத காரியம் என்றனர். அதற்குச் சோழன், பிசிராந்தை என்போன் உயிரோம்புபவன் இன்பப்பொழுதில் வாரான் ஆயினும் துன்பம் கண்டவிடத்துச் சும்மாவிரான் என்று கூறித் தன் னுேடிருக்க இடமொதுக்கினுன்.
5

Page 30
34 O மூலவேர்
இன்னும் ஒரு செய்தி. குந்தி தன்தாய், பாண் டவர் தன் தம் பியர் என்றறிந்த கன்னன் தன் தம்பியரிடம் தான் யாரென்று கூறி அவர்களுக்குத் தலைமை பூண்டிருக்கலாம்? பெரும்பதவி ஏற்றிருக்க லாம். ஆனல் அவன் அப்படிச் செய்யவில்லை. ஆதரவு தந்து அவ்வப்போது அன்புகாட்டிய துரியோதன னின் நட்புக்காக, அருச்சுனன் தன்தம்பி என்றறிந் துங் கூட அவ னுட ன் போராடி உயிர்துறந்தா னன்றே ! இது எத்தகைய நட்புப் பாருங்கள். நீக்க வேண்டியவை எவை? இதோபதேசக் கதையிலேவரும் நரிக்கும் மானுக்கும் இடையிலான நட்புப்போன்ற தீயவை நீக்குதற்குரியவை. கொள்ளவேண்டியவை கோப்பெருஞ் சோழன் - பிசிராந்தையார், கன்னன்துரியோதனன் போன்ருேர் நட்புக்களே. நட்புக் கொள்வதில் எவ்வளவு விழிப்புத் தேவையோ அதே போல நட்பைத் துறப்பதிலும் விழிப்பு வேண்டும் என்பதை மனதில் இருத்திக்கொள்ளல்வேண்டும்.
நல்லுறவும் நன்றியும் உயர்ந்த நட்பை ஏற் படுத்துவதற்கு, அறிவு, அநுபவம், பெரியோர் துணை, கருத்தொருமைப்பாடு முதலியன வேண்டியிருக் கின்றன வென்பதுவும், தன்னையும் சூழலையும் உணர்ந்து அறிவாற் பாகுபடுத்த முடியாத இளமைப் பருவம் நட்புக்கொள்வதற்கு உரிய காலமல்ல என் பதுவும் முன்னைய கட்டுரைகளாற் தெளிந்தோம். எனினும் இளமை யுறவுகள் விலக்கமுடியாத தொடர் பாகி இறுக்கமடைந்து விடுவதாற் பெரும்பாலும் கெடுதலைச் செய்வனவாயும் விட்டுவிட முடியாதன வாயும் இருக்கின்றன். இதனுல் இளமையுறவுகள் வரவேற்க முடியாதனவாயுள்ளன.

பண்டிதர் கடம்பேசுவரன் O 35
கெடுதல்களை எவரும் விரும்புவதில்லை. ஆத லாலே தற்பாதுகாப்புக் கருதியும் தன்னிலையை உயரச் செய்யக் கருதியும் தீய நட்புக்களை விலக்க வேண்டியுள்ளது. நல்ல நட்பை அடைவதற்கு எவ் வளவு விழிப்பு வேண்டுமோ அதைவிட, தீய நட்பை விலக்குவதற்கும் அவ்வளவு அவதானமும் விழிப்பும் வேண்டும். தீய நட்பானது நட்பு உள்ளபோதும் பிரிந்தபோதும் தீங்குதர வல்லது. இத ஞலேயே மிகுந்த தேர்வு வேண்டியுள்ளது. ஒரு பொருளை இழந்ததென்றலும், உன்னுல் இழக்க முடியாத தொன்றை இழந்துவிட நேர்ந்தாலும் பரவாயில்லை. அறியாமற் செய்த தீய நட்பை விரைந்து விட்டு விடுதல் வேண்டும்.
* மருவுக மாசற்றர் கேண்மை ஒன்றித்தும்
ஒருவுக ஒப்பில்லார் நட்பு.
நட்பு வளர்ந்து இறுகியபின் ஒப்பில்லாதது எனக்கண்டு நீக்குவதிலும் பார்க்க ஆரம்ப காலத்தில் உறவுகளை இதாகிதந் தெரிந்து தவிர்த்துக் கொள்ளல் இலகுவல்லவா? இளமையில் ஆராய்வற்ற நட்பு களைத் தவிர்த்தலால் நட்புக்காக, அன்புக்காக, உற வுக்காக, பிறரைத் திருப்திப்படுத்துவதற்காக என்று செலவு செய்யும் நேரம் தன்னை வளர்க்கப்பயன்படு மன்ருே ஒருவன் தன்னை வளர்ப்பது தன் இளமைக் கால அறிவுத் தேட்டத்தினுலேதான். நல்ல பண்பு களை வளர்த்தற்குரிய இந்தப் பருவம் இளமையறி வோடு கூடிய நல்ல பண்புகளை மேலோங்கச் செய் யும். தன்னைத்தான் வளர்த்துக் கொண்டால் உலகம் தன்பின்னே வரும் என்று ஒவ்வொரு உள்ளமும் உணரவேண்டும். உணர்வதால் தன் கருமங்களைத்

Page 31
36 () மூலவேர்
திட்டமிட்டுச் செய்யும் இயல்பூக்கம் ஏற்படும். நேரம் வீண்விரயமாவது தவிர்க்கப்படும் அநுபவ முதிர்ச் சியோ அறிவு முதிர்ச்சியோ இல்லாத இந்தப் பரு வத்தில் தனக்கு நல்வழி காட்டும் உண்மை அறிவு மிக்க விசுவாசமான அன்பு கொண்ட பெரியோர் துணை இருத்தல் வேண்டும். அவர் வழிப்பட்டு அவர் வழிகாட்டலோடு உறவுகளைத்தேடி ஓய்வு நேரத்தைச் செலவு செய்யலாமே தவிர அர்த்தமற்ற முறையில் ஒப்பாசாரமாக, நேரத்தை ச் செலவு செய்தல் பொருத்தமற்றது என்பதே இங்கு கருதத்தக்கது.
விதைகள் நல்லினத்தைச் சேர்ந்தன என்பதா லும் நல்ல தரமானவை என்பதாலும் மாத்திரம் முளைப்பதில்லை. நல்ல பாத்தியை - நாற்றங்காலைச் சேரவேண்டும். சேராத விதையாற் பய னில் லை. மேலும் விதை தன் கருவைப் பாதுகாக்கக் கருதிக் கடினமான ஓ" "டயும் நாற்றங்காலை யடைதற்குரிய (கணிப்பகுதி, புறத்தோல், பரவுதற்குரிய ஈர்ப்புச் சக்தி முதலியன) வழிமுறைகளையும் கொண்டிருக் கின்றது. பிராணிகளாலோ, காற்றுப் போன்றவற் ருலோ எடுத்துச் செல்லப்பட்டு நாற்றங்காலை (நீர், ஒளி, காற்று, முதலியன சீராகவுடைய பாத்தியை) யடைந்த போது ஒடு இளகுகின்றது. கருமுளைத் தெழுகின்றது. இதுபோன்று மனித உணர்வாகிய விதை நட்பாகிய நாற்றங்காலைச் சேரும்போது ஒடு போன்ற அதன் கடினத்தன்மை நெகிழ்ந்து நல்வாழ்வாகிய கருவை முளைத்தெழச் செய்கின்றது. உறவுகளில் உயர்ந்தது ந ட் புற வு. இவ்வுறவுக்கு உயிரூட்டந்தருவது நன்றியுணர்வு. நன்றி பாராட்டும் பண்பில்லாதவரைச் சேரக்கூடாது.

பண்டிதர் கடம்பேசுவரன் () 37
நன்றியைப் பெற்றவன் நன்றியைப் பாராட்ட வேண்டும். நன்றியைச் செய்தவன் அதனைச் சொல் லிக் காட்டக் கூடாது. சொல்லித்திரிபவனுடன் கூடவுங் கூடாது. ஆணுல் நன்றி பெற்றவன் எல் லாவகையாலும் அதைப் பாராட்டிக்கொள்ள வேண் டியவனுவான்.
நன்றியுணர்வானது வாழுங்காலம் வரை உயி ரோடு ஒன்றுபட வல்லது. ஒன்றுபட வேண்டியது மாகும். இந் நன்றி யுணர்வு பிரதியுபகாரத்தோடு முடிந்து விடுவதன்று. அவன் உதவி செய்தான், பதி லாகப் பல உதவிகளைச் செய்துள்ளேன்; தீர்ந்தது என் கடன் எனப்பலர் கூறக் கேட்கின்ருேம். இவ் வாறு, என் கடமை தீர்ந்தது என்றிருக்க விடாத உணர்வே யதார்த்தமான நன்றியுணர்வு.
செய்யாமற் செய்த வுதவிக்கு வையகமும் வானகமும் ஆற்றல் அரிது.
இதனைப் புனைந்துரை வகையான, வள்ளுவர் புல னெறி வழக்காகக் கொள்வாருமுளர். அது அங்ங்ன மாகாமை இங்கு குறிப்பிடத்தக்கது.
உதட்டளவில் நன்றி எனச் சொல்பவன் அந்தக் கணமே மறந்துவிடுதலுங் கூடுமாத லால் உள்ளம் பொருந்திய நன்றியுணர்வு எவ்வாறு வெளிப்படுகின்றதென்பதனையும், ஒருவர் செய்யும் நன்றியாற் பெறப்படும் பயனையுணர்ந்தவன் அத னைத்தன் வாழ்நாளில் மறத்தல் எங்ங்ணம் கூடும் என்பதுபற்றியும் இனிக் காண்போம்.

Page 32
D கூறற்க: பேணுக 10
* உயிர் எத்தன்மைத் தென்றவழி உணர்தற் தன்மைத்து என்ப* பண்புக்கு உயிரூட்டந்தரும் நன்றியுங்கூட உணர்வால் உணர்ந்து கொள்ளப் படுவதே. நன்றியைப் போற்றும் உள்ளம் உடை யாற்கு இவ்வுணர்வு உள்ளத்தோடுறைந்து பண் பனைத்தையுஞ் சிறக்கச் செய்கின்றது. தகுந்த நேரத்தில் அன்பாகக் காதலாகப் பத்தியாக வெளிப் பட்டு, பல்வேறு வகையில் உதவி செய்யும் மனுே நிலையைத் தோற்றுவிக்கின்றதுவும் இந் நன்றி யுணர்வே ! இத்தகைய நன்றியுணர்வைப் பலரும் பேணிவருதல் வியப்பன்று.
துன்ப நிகழ்வுகளைப் போக்க வேண்டி அடி யார்கள் கடவுள் அருளை இறைஞ்சி நின்று அவற் றைப் போக்கிக் கொள்கின்றனர். அந்த நன்றியை நினைந்து நினைந்துருகிப் பாடல்களாற் பாடி ப் பரவுகின்றனர்.
பிள்ளைகளின் வளர்ச்சிக்குத் தாய் தந்தையர் உதவுகின்றனர். குழந்தைகள் வளர்ந்து பெரியவர் களாகித் தாம் பெற்ற நன்றியை நினைந்து செயற் படுகின்றனர். ஒவ்வொரு உதவியின் போதும் * நன்றி நன்றி” என்று சொல்வதில்லை. *புன் சிரிப்பு முகமலர்ச்சி போன்ற மெய்ப்பாடுகளால் வெளிப்படுத்துவதோடு நின்றுவிடுகின்றனர்.

பண்டிதர் கடம்பேசுவரன் O 39
கம்பனுக்குச் சடையப்ப வள்ளல் உதவிஞர். ஆயிரத்தில் ஒருவராகச் சடையப்ப வள்ளலை நினைந் தார் கம்பர். இதனை உணர்த்தக் கருதி தன் காவியத்தில் ஆயிரத்தில் ஒரு பாடலில் அவரை அமைத்துப் போற்றினுர்.
அரியணை அநுமன் தாங்க
அங்கதன் உடைவாள் ஏந்தப் பரதன்வெண் குடைக விக்க
இருவரும் கவரி பற்ற விரைசெறி குழலி ஓங்க
வெண்ணையூர்ச் சடையன் தங்கள் மரபுளோர் கொடுக்க வாங்கி
வசிட்டனே புனைந்தான் மெளலி.
கம்பன் புகழ் உள்ளவரை காவியம் வாழும்வரை சடையப்பரும் வாழ்வார். இந்த வள்ளலின் கருணை இல்லாதிருந்தால் கம்பன் திறமையை யாரறிந் திருக்க முடியும்.
ஒவ்வொருவர் வாழ்விலும் அவர் உயர்வடைய அல்லது திறமை வெளிப்பட்டுப் புகழ்பெறப் பின்ன ணியிலே தூண்டுதல் ஒன்று இருந்தே தீரும்.
இதையே,
“Talent alone cannot make a man' 6T6örp G5ITL-CD,b உணர்த்துகின்றது. மனித ஞ ன வ ன் சமூகச் சேர்க்கையுள்ளவன். ஒரு சமூகப்பிராணி அவன். தனித்து வாழுகின்றேன் என்று சொல்ல இயலாத வன். பணபல முடையவனுக்குக் கூட தன் நன்றிக் குப் பாத்திரமான தொழிலாளர் சேர்க்கையில்லா விடில் அவனது காரியம் பூரணத்துவம் பெறுவ தில்லை. ஆதலால் பரஸ்பர சேர்க்கையும் உதவியும் இந்த நன்றியறிதலாலேதான் வளம் பெறுகின்றன.

Page 33
40 O மூலவேர்
உதவி செய்தாரை மறவாது அவர் செய்த நன்மையைப் போற்றுவது உயர்ந்தது. இதனை மகாபாரதப் பாத்திரங்களில் ஒருவனுன கர்ணனின் செய்தியைக் கொண்டே விளங்கிக் கொள்ளலாம். துரியோதனன் ஆகியோர் பக்கத்திலிருந்து விலகிப் பாண்டவர் பக்கமே சேர்தல் தக்கது என்று கிரு பாச்சாரியார் உணர்த்திய போதும் நன்றியறி தலையே பெரிதாகக் கொண்டு அதற்கிசைந்திலன்.
பின் தன்தாய் குந்தி பாண்டவர்களுக்குத் தலைமை பூண உரிமையுண்டு என்று அழைத்த போதும் தான் பேணவேண்டிய நன்றியறிதலை மறந்தானில்லை. பத்தாம்நாள் யுத்தத்தின்போது பீஷ்மர் கர்ணனை நோக்கிப் பாண்டவர் பக்கம் சேர்தல் நீதியும் தர்மமுமாகும் என்று உணர்த்திய போதும் துரியோதனன் தன்னை அதிபதியாக்கி மானங் காத்ததை மறந்தானில்லை. செஞ்சோற்றுக் கடன் தீர்த்தலின் இன்றியமையாமை துன்பத்தின் போது துணையாவதுதான் ! அதுவே உயர்ந்தது எனப் பேணிய நன்றியறிதலே அவர்களின் உயரிய நட்பை எமக்கு உணர்த்துகின்றது.
உயர்தர அ ன் பின் போது மி, காதலின் போதும், பத்தியின் போதும் நன்றியுணர்வு வார்த்தைகளாக வெளிப்படுவதில்லை. உணர்வாக உள்ளத்திற் தேக்கப்படுகின்றது. நன்றி என்று உள்ளம் பொருந்தக் கூறுபவர் இல்லையா? உண்டு. அப்படியானுல் நன்றி என்று கூறுவது குற்றமா?
வழி நடந்த களைப்பு மேலீட்டாலே தாக மடைந்த ஒருவன்,

பண்டிதர் கடம்பேசுவரன் O 41.
* உண்ணிர் வறப்பப் புலர்வாடும் நாவிற்குத் தண்ணீர் வேண்டுகின்றன்” தண்ணீர் பெற்ற போது முகம் மலர்தலாகிய மெய்ப்பாடு வெளிப் படுகின்றது. சந்தர்ப்ப வசமாகத் துன்ப நிகழ்ச்சி யொன்றின் போது அறியாத ஒருவர் உதவுகின்றர். இச் சந்தர்ப்பங்களில் மெய்ப்பாட்டுடன் சேர்ந்து உள்ளத்தில் தேங்கிய உணர்வோடு நன்றியை உணர்த்தும் பதங்கள் வெளிப்படும். இவ்வாறு, அருமையாக வெளிப்படவேண்டிய “நன்றி’ என்ற உணர்வுப் பிரயோகம், வெறும் அர்த்தமற்ற சம் பிரதாய வார்த்தைப் பிரயோகமாகக் கையாளப் பட்டால், அதன் வலுக் குன்றுதலும் மறக்கப்படு தலும் நேரவாய்ப்புண்டு என்பதால், நன்றி கூறு வதிலும் அதைப் பேணுதல் அதிகபலன் உள்ள தாகின்றது. பேணுதலே உயர்பலன். அதுவே, உயர்ந்த சமுதாய உருவாக்கத்துக்கு வேண்டியது மாகும்.
D-(36OTub:
நன்றி நலம் பயப்பது ; அதனைப் பேணுவது உயர்வானது. இதற்கு எதிர் மா ருக அமைவது உலோபம். உலோபமணம் உள்ளவர்களிடம் உயர் குணங்கள் வந்தடைய வாய்ப்பில்லை.
சாதாரண உறவிற் பற்று ஓரளவு நலந்தரு கின்ற போதிலும் கேடுகளனைத்துக்கும் முதற் காரணமாக அமைவதும் அஃதே! பற்றுக்களிற் பொருளிலே வைக்கும் பற்று ஒருவரை முழுமை யாக அழிக்கக் கூடியது. பொருளில்லையாயின் வாழ்வில்லைத்தான். அதற்காகப் பொருளுக்காகவே

Page 34
42 O மூலவேர்
வாழ்வதில் எந்தவித அர்த்தமுமில்லை. வாழ்வின் செந்நெறிகளை உணரவிடாமற் செய்துவிடுகின்றது பொருளாசை.
பெற்ருேர் தமது பிள்ளைகளிடம் பற்றுக் கொள் கின்றர்கள். அவர்களுக்காக உழைத்துத் தேடி அவர்களுக்காகவே வாழுகின்றர்கள். அப் பிள்ளை களின் வளர்ச்சியிலே தமது பங்களிப்பு இருப்ப தைக் கண்டு பூ ரிக் கின் ருர் கள். இதனுலேயே கொடுப்பதிற் குறைவில்லாத உள்ளம் பெறுகின் ருர்கள். இவ்வாறு நலந்தரும் பற்று அளவை மீறு கின்ற போது கேடாகும்.
குழந்தைகளால் அடைந்த இன்பம் - (குழந்தை காட்டிய கள்ளங் கபடமற்ற அன்பினுல் வந்த இன்பம் - அக் குழந்தைகளை வள ர் ப் பதிற் சிரத் தையை உண்டாக்கிப் பின்னர் அவர்களுக்காகவே தியாகஞ் செய்யத் தூண்டுகின்றது. இவ்வுணர்வுகள் பரஸ்பர அன்புடன் குழந்தைக்காகப் பெற்ருேரும் பெற்றேர்களுக்காகக் குழந்தையும் என்று வாழ்ந்து வர வாய்ப்பளிக்கின்றது. பண்பு நலம் வாய்ந்த பெற்ருேருக்கு இவ்வுணர்வு சற்று விரிந்த போக்கில் அமைந்து பிற குழந்தைகளையும் தமது குழந்தைக ளாக நேசிக்கும் மனப்பான்மையைக் கொடுக் கின்றது. இவர்களில் மிக உயர்ந்த பண்பும் அறிவும் வாய்க்கப் பெற்றேர் உலகையே நேசிக்கத் தலைப் படுகின்றனர் ; நேசிக்கின்றனர்.
* உலகந் தழீஇய (து) ஒட்பம்’ என்ற நிலைக்கு வந்து விடுகின்றனர். இந் நலங்களினூ டாகத் தமது கல்வியறிவை விருத்திசெய்யும் இயல்

பண்டிதர் கடம்பேசுவரன் O 43
புடையவராகவும், எல்லா உயிர்கள் மாட்டும் அன்பு கொண்டவராகவும் உயர்ந்து உலகையே ஒரு தன் மைத்தான பார்வையுள் - நடுநிலைப் பார்வையுள் - நிறுத்துவர். அவருக்கு எவ்வூரும் தம்மூராகத் தெரியும்.
குழந்தை களு டாகக் கிடைக்கும் இவ்வுயர் உணர்வு குறுகிய உள்ளமுடையார்க்கோ, நலன மைந்த கல்வி இல்லாதவர்களுக்கோ இலகுவில் வருவதில்லை. தமது குழந்தைகள் அளவினதாக நின்றுவிடும். இவர்களிலும் கீழ்ப்பட்டவர்க்குத் தம் குழந்தைகள் துன்பமுற்ருலும் தம்முணர்வு மட்டத் திலிருந்து மேலே போக முடிவதில்லை. இவர்கள் தம் குழந்தைகளுக்குக் கூட உதவுவதில்லை; போதிய சிரத்தை கொள்வதில்லை.
இவ்வாறு தம்மளவிலும் தம் குழந்தைகள் என்ற அளவிலும் நின்றுகொண்டு தனித்ததம் இன்பமே மேலானது என்று நிற்பவரே உலோபித் தனமுள்ள வராக மாறுகின்றனர்.
ஒருவர் வருகின்ருர் மின்சார நிலுவையைச் செலுத்துவதற்காக, எழுபத்தைந்து ரூபா இருபத் தாறுசதம் என்று காசாளர் கூறுகின்றர். எழுபத் தைந்து ரூபா இருபத்தாறு சதம் போக மீதியான இருபத்து நான்கு ரூபா எழுபத்து நான்கு சதத் துக்குப் பதிலாக இருபத்து நான்கு ரூபா எழுபத் தைந்து சதத்தைக் கொடுத்து விடுகின்ருர் காசா ளர். வந்தவர் ஏதோ தத்துவம் பேசுகின்ருர், கந்தோர்க் காசிலே ஒருசதங் கூட எனக்குத் தேவை யில்லை. அதே போல என்னுடைய ஒருசதத்தை

Page 35
44 O மூலவேர்
யேனும் நீங்கள் எடுப்பது நியாயமன்று எனக் கூறுகின்றர். கடைக்குச் சென்று மாற்றிவந்து ஒரு சதத்தைக் கொடுக்கின்ருர். இது எதனை உணர்த்து கின்றது ? இன்று ஒருசதத்தைக் கூடத்தந்து அடுத்த முறை ஐந்து சதமோ அல்லது அதற்குக் கூடவோ எடுத்து விடுவார் காசாளர் என்ற நோக் காலேயே இவ்வாறு நடந்து கொள்கின்றர் வந்தவர். அடுத்தவர் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டு மென்று எதிர்பார்க்கின்ருேமோ அதேபோல நாமும் நடந்துகொள்ளவேண்டும். கொடுக்க விரும்பும் உள்ளம் உயர்ந்ததும் பெறுவதையே நோக்கமாக மட்டும் உள்ள உள்ளம் தாழ்ந்ததுமாகும்.
அடுத்தவன் பொருளுக்காக ஆசைப்படாதவன் அதேபோல தன்னுடையதையும் விட்டுவிட மாட் டான் என்று ஏதோ உயர்வாகச் சொல்லுவது போலப் பலர் பேசியும் விடுகின்றனர். தன் பொருளை அடுத்தவருக்காகச் செலவு செய்யாதவன் நல்லவணு ? இவ்வாறு செலவுசெய்ய நினைக்காதவன் உயர் குணங்களையெல்லாம் படிப்படியாக விட்டு விடுகின்றனே! பொருளைத் தேடுவதற்காக எத்த கைய இழிசெயலையும் செய்யக்கூடியவனுகவும் மாறு தல் உலகத்தில் காணக்கூடியதோர் நிகழ்ச்சி யன்ருே ! காலப்போக்கில் இவர்கள் சமுதாயத் துக்கு வேண்டப்படாதவராகின்றனர்.
உலோபித்தனமுடையவர் பொருளற்றவரைக் காட்டிலும் கீழானவர் என்று யாவராலும் உணரப் படுவர்.
பொருளற்றவரைச் சாதாரண மக்கள்தான் கணக்கெடுப்பதில்லை. உலோபித்தன முள்ளவரை எவருமே கணக்கெடுப்பதில்லை. உலோபிகள் இந்த இழிவைக்கூட உணருவதில்லை. மற்ற வர்கள்

பண்டிதர் கடம்பேசுவரன் O 45
உணர்த்த முற்பட்டாலும் அவர்கள் அதனை வேறு வகையிலேயே சிந்திப்பார்கள். இவர்கள் தம் பொருளை அழிக்கவே வழிதேடுகின்றர்கள் என எண்ணுவர். அல்லது தம்மீது பொருமை கொண்டே இவ்வாறு பேசுகின்றர்கள் எனக்கருதுவர். நல்லவர் சேர்க்கைகூட இதனுற் பாதிக்கப்படும் ; பாழாகும். அறிவில்லாதவர் தம்முடன் உறவு கொள்ளும்போது ஏதோ ஒரு பற்றுக்கோடு வேண்டும் என்ற மட்டில் அதனை உவந்தேற்கும் தன்மையுடையவர்களாக இருப்பர் ; காக்கை உகக்கும் பிணமாக உலகில் மிளிர்வர்
** நற்ற மரைக்கயத்தில் நல்லன்னம் சேர்ந்தாற்போல்
கற்றரைக் கற்றரே காமுறுவர் - கற்பிலா
மூர்க்கரை மூர்க்கர் முகப்பர் முதுகாட்டிற்
காக்கை உகக்கும் பிணம்."
கல்விநலப் பொருளுணர்ந்த பண்புள்ள ஒருவனுக்கு இருக்கும் குழந்தைப் பாக்கியம் அவனை எவ்வாருே, எல்லாக் குழந்தைகளையும் நேசிக்கும் மனப்பான் மைக்கு இட்டுச் செல்கின்றது. குழந்தைப் பாக்கி யம் இல்லாதவனுக்குப் பெரும்பாலும் தியாகசிந்தை மலர்வதில்லை எனலாம்.
தியாக சிந்தை வளராததினுலும் பொருள் ஒன்றே அவரது எண்ணம் ஆதலினுலும் பொரு ளின் பற்று அவரை இறுக்க முள்ளவராக்குகின்றது. இதனுலேயே குழந்தைகள் இல்லாத பெரும்பான்மை யோர் உலோபித்தன முடையவர்களாகக் கானப்
படுகின்றர்கள்.
இதற்கு மாருக, கல்விநலப் பண்புள்ள ஒருவர் அல்லது இயற்கையாகவே பண்பும் அறிவும் உள்ள ஒருவர், குழந்தைப் பாக்கியம் இல்லாதவராக இருந்

Page 36
46 O மூலவேர்
தாலுங்கூட, அவரது அறிவும் கல்வியின் உண்மைப் பொருளை நம்பும் இயல்பும், பொருளிலே பற்று இல் லாத தன்மையுஞ் சேர்ந்து உலகத்தையும் அதன் துயரங்களையும் ஊடுருவிப் பார்க்குந் திறன்களை வளர்த்துத் தியாக சிந்தைக்கு ஊட்டமும் அளிக் கின்றன.
இந்தத் தியாக சிந்தையானது அவரை நெகிழச் செய்து ஊருணி நீர் போல அவரது திரு, உதவுந் தன்மையையடையச் செய்கின்றது. இத் தகையோர் எண்ணிக்கையில் மிகக் குறைந்த அள வினரே! இவர்களுக்கு இயற்கையின் படைப்பில் இவ்வாறு குழந்தைகள் இல்லாது போய்விடுவதும் சமூதநலத்துக்காகத்தான் போலும் !
இவர்களுட் சிலர் உலகம் வாழ்வதற்குத் தம்மை அர்ப்பணிக்கின்றனர். இதனுலே குழந்தைகள் இல் லாதது ஒரு குறையாகக்கூட இவர் களுக்குத் தோன்றுவதில்லை. குழந்தைப் பாக்கியம் இல்லா விடினும் ஏனைய பாக்கியங்கள் உடையவராய் மானிட வாழ்வை உணர்ந்தவராய் பிறப்பின் அருமையை அறிந்தவராய் உலகம் உவப்ப வாழ்தலைக் காண லாம்.
குழந்தைப் பாக்கியம் இல்லாதவர்கள் அநாதைக் குழந்தைகளை வளர்த்தல் வேண்டும். தம் பெயரி லேயே வளர்க்க ஆசையிருந்தால் காலங்கடத்தாது மனம் இறுக்கமடையுமுன்னர் சுவீகாரம் எடுத்து வளர்த்தல் நல்லது. அவ்வாறு இல்லாது போனுல் குழந்தைகளற்ற இவர்களதுமனம் இறுக்கமடைந்து உலோபித்தனம் மிகுந்து மாறிவிடுவதால் வேறு குழந்தைகளுக்கு வாழ்வு அளிக்குந் தன்மையையோ தம்குழந்தைகள் போல நேசிக்கும் மனப் பான்மை யையோ இழந்துவிடுகின்றனர்.

பண்டிதர் கடம்பேசுவரன் O 47
சிக்கனம் உள்ளவர்கள் உலோபிகளல்லர். வர வுக்குள் வாழ்ந்து ஒரு பகுதியைச் சேமித்து அதனைப் பிறருக்கு உதவி வாழ்பவர் சிக்கனகாரர். ஊதாரி, பயனற்ற, வேண்டாத செலவு செய்பவர் ; போலித்தனங்களை நேசிப்பவர். எனவே,
* ஆனமுதலில் அதிகம் செலவு செய்யாது” வருவாய்க்குள் வாழ்ந்து சிக்கனமாயிருந்து உலோ பிகளாகவோ ஊதாரிகளாகவோ காலம் முழுவதும் பயனற்ற வாழ்வு வாழாதிருத்தல் வேண்டும்.
O O
0 வாழ்வின் பயன் 0
வாழ்நாளிற் கிடைத்த அநுபவங்களை யும் கேட்டறிந்த உண்மைகளையும் சான்றேர் வாய்மொழி களுடன் பொருத்திப் பார்க்க வேண்டும். அவ்வாறு பொருத்திப் பார்க்கும் போது அவ்வுண்மைகளாகிய அறக் கட்டளைகள் நம்மைத் தாங்கி வழிநடத்திச் செல்லும் ஆற்றல் கொண்டவை என்பது தெளி வாகும்.
தமிழ் நூலுயர்வுக்கும் உண்மைக்கும் வரம்பு தொல்காப்பியம். நமக்குக் கிடைத்த இந்த முதல் நூல் தொடக்கம் சிறப்புப் பொருந்திய சிற்றிலக்கியம் வரை அறத்தினைக் கருப்பொருளாகக் கொண்டே ஆக்கம் பெற்றுள்ளன. அறநூல்கள் நீதியை நேரிடையாகச் சொல்ல, பெருங்காப்பியங் களும் ஏனையவும் கதைகளின் வாயிலாகவும் சம்ப வங்களின் வாயிலாகவும் சுவைப்படுத்தி மக்கள்

Page 37
48 O மூலவேர்
மனதில் நின்று நிலைக்க வழிசெய்துள்ளன. வாழ் வின் பயன் உயிரை அதன் இலட்சியத்தில் நிலை நிறுத்துதலே.
உயிர் உடலோடு கூடாத இடத்து உடலுக்கு இயக்கமில்லை. உயிர் உடலின்றி உணரப்படுவதில்லை உடலுயிர் வாழ்வில் மானிட வாழ்வே உயர்ந்தது. இவ்வுயர்வு உயர் இலக்கியத்தில் நிலைபெருவிடின் பயனேது. நூலின் பயனும் அது. இவ்வாறு நூலின் பயணுகிய வீடுபேற்றை உணர்த்தும் நூல்களி லும் அறமே முதலில் வலியுறுத்திப் பேசப்படுகின் றது. அதுவே வாழ்வருசரணைகளில் முதலாக வைத்து வலியுறுத்தப்படுவதுமாகும். இவற்ருலாகும் வீடுபேறு விளம்ப முடியாததினுல் அது பேசப்படுவ தில்லை; உய்த்துணரப்படுவது.
வையத்துள் வாழ்வாங்கு வாழஉதவுவது அறம் வாழ்வெனும் பெருங்கடலுட் சிக்கல்களாக வரும், துன்ப அலைகளுக்குத் தாக்குப்பிடித்து நீந்தி க் கரைசேரத் தெப்பமாகிய அறநூல்களில் இருந்து வரும் பேரறிவுப் புனைகள் துணைசெய்ய வல்லன. வாழ்வின் மூலவேராக அமையும் இத்தகைய அற நூல்களைத் துணைக் கொண்டு வாழ்வில் நலம் எய்துவோம்! r
அறம் ஒன்றே வாழ்வின் நிலைப் பொருள்.
அதனை அநுசரித்து ஒழுகும் நடைமுறைப் பண்பே சமயம்; விளைவே தெய்வப் பேறு.


Page 38


Page 39
தானரசிரியர், நற தந2த ΑδάότA- ιδΑρπ, σπαρτσ7 சொல்கிவந்தன். சிச2/சல7 മ4ച്ചുബത്രക്രമ ക2മ മേര്) ഖ
മeെ മr്യക്ര ♔േ2-െന്ന6 <മ്മളശ്ശ) ക്ലബ് ക്രമങ്ങഥ മിത്രക്റ്റ് മൃത്ര7 ീക്ഷണീzáപ്ര0്ത്ര മ ീഠഭഖ67]ജ്ജ്വ ഡ്ഢ, കമ്മ്@്ക്രമൈമ, 67െ 4ഗ്ഗ/r4%) മൃ4:മര பத்திரிகை வானராம் வாவது Ezravở 2y ᒝ ബ്രzമ്മ گھبراعے அனமத்தவர் என்பதனே அவ3 efഖമുTബഴ്ചശ്ര/ള് ീബ് മൃzzതു്.
4%7@ഗ്ഗമി-30.16.99 f και η (ി/
 

த. வேவன், M.A., BG.L.PAற இன்/ள்ள கடம்பறுக்கு, ரன்டு உவம்ைகள் படித்தன் நரிவிலே 2தனிy என்ப7ள் r/7á”. Carczy e/z/éoz974zs ன்பதும் அதத7ன் 2ன்னி மச் lബക സ്ഥൂ', சுேம் ாைதனுக்கிருத்த தடை യരുക്കെ മൃശ്z-ശ്രീ
ല്ല മലമ്ര ഒള്ള" (് ട്രൂ - മ്പ്രേത്ര്"ക്രമത്രമങ്ങ னைக்கங்கள் பிரன்தம்,
ச72துக - சதுத் தீத உன் னத் திறவுகோல்.
ޝަ ބަހުހީހا,}}
ர்ரமிழ்ப் பண்டிதர். இவர் கிாவே, இரதத்தரந்தரன். '൭'g60-ല് ക്രജrഞ്ചു09 7്ക്രീകൃഷ്ണവേഴ്സ്) ബ്ജീ, *திரு ச.சிவாசன்னுத்துரை 7്. ഋഴ്ച കൃമീ7G6്കബ് 0 , മൃe 4fമഥമ ബ്ല5 ജ? சிப7 டே, இனிதே வெளிவரம் இந்த நூ2லக் கற்வவர்கள் ് മര്ചുഴ ജൂലമല്ക്ക, ഭൂരൂ 0ffff- தானகி விவனாராம் ഴ്ചശ്രീബ) ബഉമ്രഗ്രം കന്നമ്മഗ്ര ഴ്ച, ഭുമ്മ/ഴ്സമഗ്രസ്ഥ ffരമബേന്ന് ക്രെഗ് െയ്- J/മ ഭ൧?? ബ്ള
, .n) r് 79ഭ 27,
ീഗ്ഗര മമ്മ7:4/ഞ്ചബ)