கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: ஓலை 2001.03

Page 1
ஒலை 0 கொழும்புத் தமிழ்க்
கொழும்புத் தமி
7, 37 வது ஒழுங்கை (உ
கொழும்பு தொலைபேசி :
 
 
 
 

கொழும்புத் தமிழ்ச் சங்க ஸ்தாபகத் தலைவர்
ழ்ச் சங்கம்
ருத்திரா மாவத்தை)
- 06.
O1-5837.59
afløslav : 6),ugi D 946ði Lars

Page 2


Page 3

கொழும்புத் தமிழ்ச்சங்க மாதாந்த மடல்
Ꭶ606Ꭰ ol
கொழும்புத் தமிழ்ச் சங்க
ஸ்தாபகத் தலைவர்
(~~~~/~/~/~/~/~/~/~); sZZZZZOELOEL LLLL
AẦ劑肃
*\們砸而 -%、
河瀨口
கொழும்புத் தமிழ்ச் சங்கம் '7, 57 வது ஒழுங்கை (உருத்திரா மாவத்தை)
கொழும்பு - 06.
: 01-8375)
தொலைபேசி
Gí go Go

Page 4
சங்கத்தின் ‘ஓலை’க்கு வாழ்த்து
எங்கள் மண்ணினர் வாழ்வை வளர்ச்சியை பயனர்களை விளைப்பதில் “பனை” ஒரு குறியீடாகும். நெழுதுயர்ந்த பனையின் “ஓலை’ எழுத்து தமிழர் வரலாற்றை பதித்தது. எழுத்துப் பண்பாட்டை எங்கள் மத்தியில் வளர்த்தது.
இத்தகு வரலாற்றுப் பின்புலத்தில் கொழும்புத் தமிழ்ச்சங்கத்தின் அறுபதாவது அகவை எதிர்வரும் வருடம் கொண்டாடுவதற்கான முன்னோடி நடவடிக்கையாக இவ்வருட “ஸ்தாபக வாரம்’ அமைகிறது.
இவ் ஸ்தாபக வாரத்தினர் நிறைவாக மாதமொருமுறை சங்கச் செய்திகளையும் கலை. இலக்கிய நிகழ்வுகளையும் தாங்கி வரும் சங்கப் பலகையாக ‘ஓலை’ வருகிறது.
புத்தகப் பண்பாட்டுப் பாரம்பரியத்தில் படைப்பாளிகள் வெளி. யீட்டாளர் வாசகர் மத்தியில் உறவுப் பாலத்தை உருவாக்கி வளர்த்தெடுக்க நாம் எல்லோரும் ஒன்றுபட்டு உழைப்போம்.
வாழ்க தமிழ்! வளர்க தமிழ்ப்பணி !!
சோ. தேவராசா தலைவர் கொழும்புத் தமிழ்ச்சங்கம்.
ויר “ஸ்தாபக வாரம்” நிறைவு நாளான 25.03.2001 ஞாயிற்றுக்கிழமை காலை ஈழத்துத் தமிழ் எழுத்தாளர் கவிஞர் பத்திரிகையாளர் ஒன்று கூடலில் கலந்து கொள்ளத் தவறியவர்கள் தங்கள் பெயர். முகவரி, தொலைபேசி இலக்க விபரங்களை "ஒலை” க்கு அறியத் தரவும்.
الصـ ܢܬ
“ஓலை’ பக்தம் 2

பொதுச் செயலாளரிடமிருந்து.
கொழும்புத் தமிழ்ச் சங்கமானது ஆற்றி வரும் பணிகள் ஆற்றி முடித்த செயல்கள் எதிர்காலத் திட்டங்கள் எதிர்முன்னிற்கும் கடமைகள் குறித்த செய்திமடலாக ‘ஓலை’ மாதாந்தம் வெளிவரவுள்ளது. 59விதி ஆண்டைப் பூர்த்தி செய்து வைரவிழா ஆண்டை நோக்கிப் பயணித்திருக்கும் தமிழ்ச்சங்கம் நவீனமயப்படுத்தப்பட்ட 20,000 த்திற்கும் மேற்பட்ட பல்விதப் பயனுடை நூல்களடங்கிய நாளைய நற்பிரஜைகட்கும் நம் மக்கட்கும் பயன்தரும் விதத்தில் தமிழ்ச்சங்கநூலகமானது சித்திரைப் புத்தாண்டு தினமான ஏப்ரல் 15இல் அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்Uடவுள்ளது என்ற மகிழ்வான செய்திதனையும் உங்களனைவரோடும் பகிர்வதில் மகிழ்வெய்துகிறோம்.
தமிழ் மரயில் காலூனிரிநிற்கும் அதே சமயத்தில், புதுமையையும், நவீனத்தையும் புகுத்தி இளைஞர்களையும் ஒன்று சேர்த்து தமிழ்ச்சங்கத்தை நடாத்தும் பணியிலிடுபட்டிருக்கிறோம். இதன் முன்னோடியாகவே உங்கள் கைகளில் தவழும் இந்த ‘ஓலையும்’ தவிர, வாரம் தோறும் புதனி. கிழமைகளில் நடைபெறும் “அறிவோர் ஒன்றுகூடல்’ நிகழ்ச்சி, வெள்ளி தோறும் ஈழத்துப் படைப்Uாளர்களின் கலை, இலக்கிய நூல்கள் பற்றிய நூல்நயம் நிகழ்வுகளுக்கு மேலாக சிறுவர்களின் “கூழப் பயில்வோம்” நிகழ்வையும், படைப்பாளிகளின் “பயிற்சிப் பட்டறை’ நிகழ்வையும் சித்திரை முதல் ஆரம்பிக்க உள்ளோம்.
தொடர்ந்தும் உங்கள் அனைவரினதும் ஆதரவு, அன்பு, தேரளோடு தோள் நின்றாற்றும் சேவையை எதிர்பார்த்து விடைபெறும்
ஆ. இரகுபதி பாலழறீதரன் Uொதுச்செயலாளர் கொழும்புத் தமிழ்ச் சங்கம்
‘ஓலை’ பக்கம் 3

Page 5
கொழும்புத் தமிழ்ச்சங்கத்தின் தோற்றம்
கொழும்புத் தமிழ்ச் சங்க ஸ்தாபக வார ஆரம்ப நாளான 2032001 அன்று சங்கத்தின் ஆட்சிக்குழு உறுப்பினர் த. கோபால - கிருஷ்ணன் ஆற்றிய “கொழும்புத் தமிழ்ச்சங்கத்தின் தோற்றமும் வளர்ச்சியும், அதன் பணிகளும்" என்ற தலைப்பிலான சிறப்புரையிலிருந்து.
பண்டைத் தமிழர் வரலாற்றில் முதற்சங்கம், இடைச்சங்கம், கடைச்சங்கம் என முச்சங்கங்கள் காலத்திற்குக் காலம் கடல் கோள்கள் ஏற்பட்ட போது ஒன்றன் பின் ஒன்றாக நிறுவப்பட்டுத் தமிழ் வளர்த்ததாக அறிகிறோம். முதற்சங்கத்தில் ஈழத்தவரான முரஞ்சியூர் முடிநாகராயரும், கடைச்சங்கத்தில் ஈழத்துப் பூதந்தேவனாரும், இருந்து தமிழ் வளர்த்தார்கள் என்றும் அறிகிறோம். கடைச் சங்கம் நிலை குலைந்தபின் தமிழ்ச்சங்கம் ஒன்றினை யாழ்ப்பாண அரசர்கள் நிறுவினர். இச்சங்கமும் நிலைகுலைய ஐரோப்பியர் காலத்திலும், அதற்குப் பின்னரும் மதுரைத் தமிழ்ச் சங்கமும், யாழ்ப்பாண ஆரிய திராவிட பாஷா அபிவிருத்திச் சங்கமும் ஆற்றிய பணிகள் பதிவுக்குரியன. சங்கம் வைத்துத் தமிழ் வளர்த்த இத்தகைய பாரம்பரியப் பின்புலத்தில்தான் கொழும்புத் தமிழ்ச் சங்கமும் தோற்றம் பெற்றது.
ஆங்கிலேயர் ஆட்சியினால் ஏற்பட்ட பெருந்தோட்டப் பயிர்ச்செய்கை, அதனால் விளைந்த வெளிநாட்டு உள்நாட்டு வணிக விஸ்தரிப்பு, ஆங்கிலம் படித்தவர்களுக்கான அரச வேலைவாய்ப்பு போன்ற இன்னோரன்ன காரணிகளால் கணிசமான அளவு தமிழர்கள் இலங்கையின் தலைநகரான கொழும்பிலும் வந்து குவிய வேண்டிய சந்தர்ப்பங்களை உருவாக்கியது. அதனால் தமிழகத்திலும், யாழ்ப்பாணத்திலும் இலங்கையின் வடக்கு கிழக்கின் ஏனைய பிரதேசங்களிலும் இருந்து வந்த தமிழ்மொழி, இலக்கிய, கலை கலாச்சார, பண்பாட்டுப் பணிகள் கொழும்பிலும் பரவிற்று.
இதன் பெறுபேறாக கொழும்பில் வாழ்ந்த தமிழ் அறிஞர்களும், தமிழ் அபிமானிகளும் 1924 இல் தமிழ் மக்கள் செறிந்து வாழ்ந்த வெள்ள. வத்தையில் திருக்குறட் பயிற்சிக் கழகம்” என்னும் அமைப்பை நிறுவினர். சுவாமி விபுலானந்தர், சுவாமி சங்கரசுப்பிரமணியர், சச்சிதானந்தயோகி ஆகியோர் இம்முயற்சிக்கு ஆதரவு அளித்தனர். சேர். ஆ. மகாதேவா காப்பாளராகவும், திரு. இ. தம்பிராசா தலைவராகவும், திரு. மு. வயிரவப்
“ைெல’ பக்தம் 4

பிள்ளை செயலாளராகவும் பொறுப்பேற்றனர். இக்கழகத்தின் மாதாந்தக் கூட்டங்கள் தலைவரின் இல்லத்திலும், ஆண்டுக் கூட்டங்கள் வெள்ள. வத்தை சம்மாங்கோட்டார் ஆலயத்திலும் நடைபெற்றன. இக்கழகம் திருக்குறள் வகுப்பை வாரம் தோறும் நடாத்தியும், சொற்பொழிவுகளை ஒழுங்கு செய்தும், கலைமகள்" எனும் ஆண்டுச் சஞ்சிகையை வெளியிட்டும், "முருகன் பெருமை” எனும் நூலைப் பதிப்பித்தும் பணிகள் புரிந்தது. இக்கழகத்தை முன்னின்று வழிநடாத்திய அறிஞர்கள் இடமாற்றத்திற்கு உள்ளான காரணத்தால் 1936ம் ஆண்டின் பின் இக்கழகம் வலுவற்றுப் போயிற்று. எனினும் இடமாற்றத்தினால் இடம் பெயர்ந்த அறிஞர்களில் சிலர் மீண்டும் தலைநகருக்கு வந்த போது இங்கிருந்த வேறு அறிஞர்களும் அபிமானிகளும் இணைந்து 1942 மார்ச் 22ம் திகதி "கொழும்புத் தமிழர் முன்னேற்றக் கழகம்" எனும் சங்கத்தை நிறுவினர். கொழும்புத் தமிழ்ச் சங்கத்தின் தோற்றம் இதுவேயாகும். இச்சங்கத்தின் ஸ்தாபக தலைவராக முதலியார் சு. ச. பொன்னம்பலம் அவர்களும், துணைத்தலைவராக திருவாளர்கள் இ. தம்பிராசா, மு. வயிரவப்பிள்ளை ஆகியோரும் பொறுப்பேற்றனர். இவர்களே இச்சங்கத்தை நிறுவிய முன்னோடிகள்.
கொழும்புத் தமிழர் முன்னேற்றக் கழகம் ஆரம்பமானதும் தமிழ் உணர்வும், ஆர்வமும் உள்ள அறிஞர், அபிமானிகள் பலர் இச்சங்கத்தில் உறுப்பினர் ஆயினர். சங்கத்தின் முதலாவது ஆண்டுப் பொதுக் கூட்டத்தில் “கொழும்புத் தமிழர் முன்னேற்றக் கழகம்"கொழும்புத் தமிழ்க் கழகம்" எனப் பெயர் மாற்றம் பெற்றது. இதன் தலைவராக திரு. அ. சபாரத்தினம் அவர்களும், செயலாளராக திரு. சே. ச. சண்முகம்பிள்ளை அவர்களும், பொருளாளராக திரு. சி. வேலுப்பிள்ளை அவர்களும் தெரிவு செய்யப்பட்டனர். பின்னர் 1945 இல் கொழும்புத் தமிழ்க்கழகம் கொழும்புத் தமிழ்ச் சங்கம்" ஆயிற்று.
கொழும்புத் தமிழ்ச்சங்க நூலகம் தற்போது 18000 இற்கும் அதிகமான தொகுதிகளைக் கொண்ட கொழும்புத் தமிழ்ச்சங்க நூலகமானது இலங்கையிலுள்ள மிகப்பெரிய தமிழ் நூலகங்களில் ஒன்றாகும். பழந் தமிழ் இலக்கியம் பற்றிய நூல்களையும் மிக அரிதான பதிப்புக்களையும் மட்டுமல்லாது சமஸ்கிருத மொழி நூல்களையும் ஆங்கில நூல்களையும் கொண்டுள்ளது.
‘ஓலை’ (Jő5ű 5

Page 6
கொழும்புத் தமிழ்ச் சங்கம்
58ஆம் ஆண்டுப் பொதுக் கூட்டம்
கொழும்புத் தமிழ்ச் சங்கத்தின் 58ஆம் ஆண்டுப் பொதுக்கூட்டம் 2001ம் ஆண்டு ஜனவரி மாதம் 28ம்திகதி ஞாயிற்றுக்கிழமை மு. ப. 10.00 மணிக்கு தமிழ்ச் சங்கத்தில், சங்கரப்பிள்ளை மண்டபத்தில் கொழும்புத் தமிழ்ச் சங்கத் தலைவர் பேராசிரியர் திரு. சோ. சந்திரசேகரம் அவர்களின் தலைமையில் நடைபெற்றது. 2000/2001ஆம் ஆண்டிற்கான ஆட்சிக்குழுத் தெரிவு நடைபெற்றது.
ஆட்சிக்குழு 2000/2001
காப்பாளர் பேராசிரியர். கா.சிவத்தம்பி
துணைக் காப்பாளர் பேராசிரியர். சோ.சந்திரசேகரம் திரு. எஸ்.எம்.கமால்டீன் பண்டிதர் ஆர்.வடிவேல் திரு.மா.தவயோகராஜா வண. பிதா. மரியசேவியர்அடிகள்
ஒம்படைச்சபை திரு.வீ.எஸ்.துரைராஜா திரு.கே.கே.சுப்பிரமணியம் திரு.எம்.எம்.சமீம் திரு. ஆர்.பாலசுப்ரமணியம் திரு.இ.நமசிவாயம்
தலைவர் திரு.சோ.தேவராஜா
துணைத் தலைவர்கள் திரு.இ.சிவகுருநாதன் திரு.க.நீலகண்டன் திரு.பெ.விஜயரத்தினம் செல்வி.சற்சொரூபவதி நாதன் பண்டிதர். த.கனகரத்தினம் பேராசிரியர். இரா.வை. கனகரத்தினம்
‘ஓலை’ பக்கம் 6

பொதுச் செயலாளர் திரு. ஆ.இரகுபதிபாலழறீதரன் துணைச் செயலாளர் திரு.ஆ.கந்தசாமி
நிதிச் செயலாளர் திரு.தி.கணேசராசா
துணை நிதிச் செயலாளர் திரு.சி.கந்தசாமி
கல்விச் செயலாளர் புலவர். அ.திருநாவுக்கரசு
உறுப்பாண்மைச் செயலாளர் திரு.எஸ்.பாஸ்கரா
நிலைய அமைப்புச் செயலாளர் 5) (1b. uD/T. d#LTL' 5FJJaöT
நூலகச் செயலாளர் திரு.க. குமரன்
இலக்கியச் செயலாளர் திரு.தி.கேசவன்
அங்கத்தவர்கள் திரு.த. இராஜரட்ணம் திரு.எஸ்.இரட்ணவேல் திரு. க.க.உதயகுமார்
திரு. வை.சிவஜோதி திரு.த. கோபாலகிருஸ்ணன்
திரு.ச. பாலேஸ்வரன் திரு.இ.க.கந்தசாமி திரு.ஜே.திருச்சந்திரன் திருமதி. பூ.ஏனாதிநாதன் திருமதி. அ. புவனேஸ்வரி திரு.மு.கதிர்காமநாதன் திரு.வீரபாண்டியசர்மா திரு.க.ஞானகாந்தன் திரு. எஸ்.சரவணமுத்து திரு. கோ. ஏழுமலை திரு. த.சிவஞானரஞ்சன் திரு. எஸ்.தேவராஜா திரு. ஜின்னாஹ் ஷரிபுத்தீன் திரு. கே.எஸ்.பாலகிருஸ்ணன்
‘ஓலை’ பக்தம் 7

Page 7
சங்கப்பலகை
சிறப்புச் சொற்பொழிவு - எதிர்நீச்சல் இலக்கியம்
தமிழக தமிழ்ப் பேராசிரியர் டாக்டர். இரா. செல்வகணபதி அவர்களின் "எதிர்கால இலக்கியம்" எனும் தலைப்பிலான சிறப்புச் சொற்பொழிவு 29.01.2001 அன்று திங்கட்கிழமை பி. ப. 5.00 மணிக்குச் சங்கத்தின் முன்னாள் தலைவர் பேராசிரியர் சோ. சந்திரசேகரம் அவர்களின் தலைமையில் நடைபெற்றது.
الص
தமிழ்ச்சங்க முன்னாள் காப்பாளர் சட்ட வல்லுநர் செ. இரங்கநாதன் கியூ சி. பிறந்த தின நினைவு விழா
தமிழ்ச்சங்க முன்னாள் காப்பாளர் சட்ட வல்லுநர் செ. இரங்கநாதன் கியூ. சி. பிறந்த தின நினைவு விழா 11.02.2001 அன்று ஞாயிற்றுக்கிழமை பி.ப. 5.00 மணிக்கு நடைபெற்றது. சட்டக் கல்லூரி விரிவுரையாளரும், கொழும்புத் தமிழ்ச்சங்கத்தின் முன்னாள் தலைவரும். இன்னாள் துணைத்தலைவரும், தினகரன் முன்னாள் ஆசிரியருமான கலாசூரி இ. சிவகுருநாதன் அவர்களின் தலைமையில் நடைபெற்றது. பிரதம அதிதியாக முன்னாள் பிரதம நீதியரசர் மாண்புமிகு எஸ். சர்வானந்தா அவர்களும், சிறப்பு அதிதிகளாக மேன்முறையீட்டு நீதிமன்ற முன்னாள் தலைவர் மாண்பும்கு கி. பாலகிட்னர் அவர்களும், மேன்முறையீட்டு நீதியரசர் மாண்புமிகு சி. வி. விக்கினேஸ்வரன் அவர்களும் கலந்து கொண்டு சிறப்பித்தனர். தமிழவேள் க. இ. க. கந்தசுவாமி அவர்களால் எழுதப்பட்ட "சட்டவல்லுனர் - செ. இரங்கநாதன் கியூ. சி. அவர்களின் பன்முகப் பணிகள்” எனும் நூலும் வெளியிடப்பட்டது. அமரர் செ. இரங்கநாதனின் மகன் சட்டத்தரணி க. ரீநிவாசன் அவர்களும் ། ། முகமளித்திருந்தார்.
أص
"ợ606v” Uắốứ 8

r
மணிவிழாப் பாராட்டுக் கூட்டம் 25.01.2001 இல் மணிவிழாக் கண்ட ஈழத்து முதுபெரும் எடுத்தாளர் செங்கை ஆழியான் க. குணராசா அவர்களைப் பாராட்டிக் கெளரவிக்குமுகமாக தேநீர் விருந்துபசார நிகழ்வு சங்கத் துணைத் தலைவர் கலாசூரி இ. சிவகுருநாதன் அவர்களின் தலைமையில் 16.02.2001 அன்று வெள்ளிக்கிழமை பி. ப. 5.30 க்கு நடைபெற்றது. பேராசிரியர் சோ. சந்திரசேகரம், திரு. த. கோபாலகிருஸ்ணன் ஆகியோர் பாராட்டுரைகள் வழங்கினர், கவிஞர் ஜின்னாஹற்
ஷரிபுத்தீனின் வாழ்த்துப்பாவும் இடம்பெற்றது. أم
r ད། உள நெருக்கீடுகளும் - முகம் கொடுக்கும் வழிமுறைகளும் கருத்தரங்கு
மேற்படி கருத்தரங்கும் அதையொட்டிய கலந்துரையாடலும் 04.03.2001 அன்று ஞாயிற்றுக்கிழமை மு. ப. 9.30 தொடக்கம் பி. ப. 12.30 வரை சங்கத் தலைவர் சோ. தேவராசா தலைமையில் நடைபெற்றது. விடய ஆலோசகர்களாக வைத்திய கலாநிதி எஸ். சிவயோகன், சிரேஸ்ட விரிவுரையாளர் ஜயவர்த்தனபுர மருத்துவபீடம் சர்வகலாசாலை, பேராசிரியர் டேவிட் என். இரட்னவேல், உளவியலாளர் கொழும்பு -3 திரு. கா. வைத்தீஸ்வரன், இளைப்பாறிய சுகாதாரக் கல்வி அதிகாரி ஆகியோர் கலந்துரையாடலை
வழிப்படுத்தினர்.
أم ܢܠ
N அமரர் வ. அ. இராசரத்தினம் அவர்களின்
நினைவாஞ்சலிக் கூட்டம்
22.02.2001 அன்று காலமான முதுபெரும் எழுத்தாளர் அமரர் வ. அ. இராசரத்தினம் அவர்களின் நினைவாஞ்சலிக் கூட்டம் 11.03.2001 அன்று ஞாயிற்றுக்கிழமை பி. ப. 5.00 மணிக்கு சங்கத்தலைவர் சட்டத்தரணி சோ. தேவராசா தலைமையில் நடைபெற்றது. அஞ்சலி உரைகளை த. கோபாலகிருஸ்ணன் (செங்கதிரோன்), இளையதம்பி தயானந்தா (இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம்), செ. யோகநாதன் (நாவலாசிரியர்) ஆகியோர் நிகழ்த்தினர். கவிஞர் ஜின்னாஹற் ஷரிபுத்தீன் கவிதாஞ்சலி நிகழ்த்தினார்.
أص ܢܠ
‘ஓலை’ பக்கம் 9

Page 8
r சர்வதேச மகளிர் தினம் N சர்வதேச மகளிர் தினம் கொழும்புத் தமிழ்ச் சங்கத்தில் இம்முறை முதன் முறையாகக் கொண்டாடப்பட்டது. 08.03.2001 (வியாழக்கிழமை) பி. ப. 5.30 மணிக்கு சங்கத்தின் துணைத்தலைவர் செல்வி. சற்சொருபவதிநாதன் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இம்மகளிர் தின விழாவில் பின்வரும் பெண் பிரமுகர்கள் உரையாற்றினர். நம் நாட்டில் பெண்களுக்கான சட்டப் பாதுகாப்பு" - சட்டத்தரணி திருமதி சுகந்தி இராஜகுலேந்திரன் "பெண்கள் ஏன் சட்டத்தை நாட வேண்டும் " - சட்டத்தரணி செல்வி குமுதினி குமாரசிங்கம் "முகாமைத்துவத்தில் பெண்களின் பங்களிப்பு" - திருமதி. கிறேஸ் சடகோபன் இஸ்லாமில் பெண்களுக்குரிய அந்தஸ்து - திருமதி. பரீதா ஷரிபுத்தீன் "யாழ்ப்பாணச் சூழலில் பெண்கள்" - திருமதி சந்திரா தனபாலசிங்கம் (தமிழ்ச் சங்கப் பணியில் பெண்கள்"-திருமதி அரியரத்தினம் புவனேஸ்வரி
r
இலங்கையில் தமிழ்ப் புதினப் பத்திரிகையின் வளர்ச்சி - நூல் வெளியீடு
கொழும்புத் தமிழ்ச்சங்கத்தின் முன்னாள் தலைவரும், இன்னாள் துணைத்தலைவருமான கலாசூரி இ. சிவகுருநாதன் அவர்கள் எழுதிய இலங்கையில் தமிழ்ப் புதினப் பத்திரிகையின் வளர்ச்சி என்ற நூலின் வெளியீடு 17.03.2001 அன்று சனிக்கிழமை பி. ப. 5.00 மணிக்கு கொழும்புத் தமிழ்ச்சங்கத்தின் தலைவர் சட்டத்தரணி சோ. தேவராசா அவர்களின் தலைமையில் நடைபெற்றது. பேராசிரியர் கா. சிவத்தம்பி காப்பாளர், கொழும்புத் தமிழ்ச் சங்கம், பேராசிரியர் சோ. சந்திரசேகரம் துணைக்காப்பாளர், கொழும்புத் தமிழ்ச் சங்கம். பேராசிரியர் ஜே. பி. திசநாயக்கா, கொழும்புப் பல்கலைக்கழகம், திரு. க. சிவநேசச் செல்வன், பிரதம ஆசிரியர் தினக்குரல், ஜனாப். எஸ். எம். கமால்தீன் தேசிய நூலக சபை ஆகியோர் சிறப்புரை. யாற்றினர்.
இந்நூல் விற்பனை மூலம் பெறப்பட்ட நிதி முழுவதும் திரு. இ. சிவகுருநாதன் அவர்களால்தமிழ்ச்சங்கப்பணிகளுக்காக அன்பளிப்புச் Uசெய்யப்பட்டது.
ھر۔
'pada' cJá súil 10

ஈழத்தமிழர் வரலாறு தொடர் ஆய்வரங்கு
ஆய்வரங்கு - 1
கொழும்புத் தமிழ்ச் சங்கம் ஏற்பாடு செய்துள்ள ஈழத்தமிழர் வரலாறு தொடர்பான தொடர் ஆய்வரங்கின் 1வது நிகழ்வாக 18.03.2001 அன்று ஞாயிற்றுக்கிைைம மாலை 5.30 மணிக்கு சங்கத்தலைவர் சட்டத்தரணி சோ.தேவராசா அவர்களின் தலைமையில் யாழ்ப்பாணப் பல்கலைக்
கழக வரலாற்றுத்துறைத் தலைவர் பேராசிரியர் திரு. சி. க. சிற்றம்பலம்
அவர்கள் பண்டைய ஈழத்தில் தமிழர்" எனும் தலைப்பில் ஆய்வுரை
நிகழ்த்தினார். ܢܠ
أص
நிகழவிருப்பவை - 30.03.2001
குற்றமே இல்லாத இறைவா - பழி உற்றதேன் சொல்வாய் எம் தலைவா"
30.03.2001 வெள்ளி மாலை 7.00 மணிக்கு கொழும்புத் தமிழ் சங்க மண்டபத்தில் திருமறைக் கலா மன்றம் வழங்கும்
நீ, மரிய சேவியர் அடிகளாரின்
“களங்கம்’ (தவக்கால நாடகம்)
ஏப்ரல் 2001 முதல்.
8-12 வயதிற்குட்பட்ட சிறுவர்களுக்கென “கூடிப் பயில்வோம்” நிகழ்ச்சியும்.
12வயதிற்கு மேற்பட்டோருக்கென “பயிற்சிப் பட்டறை" நிகழ்ச்சியும்
பிரதி சனிக்கிழமை காலையில் 930 - 1230 வரை நடைபெறவுள்ளன.
பொதுச்செயலாளர் திரு. க. இரகுபதி பாலழறிதரனுடன் தொடர்பு கொள்ளவும்.
الم ܢܠ
"galp6v” cJá3ó 11

Page 9
சங்கச் செயற்பாடுகள் சில.
* அறிவோர் ஒன்று கூடல்
சங்கத்தின் கல்விக்குழுவினால் மேற்கொள்ளப்படும் இந்நிகழ்வு பிரதி புதன்கிழமைகளில் மாலை 5.30 மணிக்கு நடைபெறும். இந்த நிகழ்ச்சியில் திருக்குறளின் ஒவ்வொரு அதிகாரமும் ஒவ்வொரு தினத்தில் ஆராயப்படும். பல்வேறு தரப்பட்ட தமிழறிஞர்களும், ஆர்வலர்களும், தமது அறிவு, அனுபவ நிலைகளில் நின்று பல்வேறுகோணங்களில் எடுத்துக் கொள்ளப்படும் ஒவ்வொரு குறட் பாவினையும் அங்கு ஆராய்வர். அவ்வேளை திருக்குறளுக்கு எழுதப்பட்ட உரைகள் ஒப்பு நோக்கப்படுதலும் உண்டு.
தற்போது இந்நிகழ்ச்சியின் விடய ஆலோசகர்களாக சங்கத் தலைவர் திரு. சோ. தேவராசா, துணைத்தலைவர்களான திருவாளர்கள் கலாசூரி இ. சிவகுருநாதன், புலவர் த. கனகரத்தினம் ஆகியோருடன், கல்விச் செயலாளர் திரு. அ. திருநாவுக்கரசும் இருந்து நெறிப்படுத்துகின்றனர்.
"அறிவோர் ஒன்று கூடல்" நிகழ்ச்சியின் முதலாவது ஒன்று கூடல்
02.09.98 இல் ஆரம்பித்து 21.03.2001 அன்று 118வது நிகழ்வை எய்தி. யிருக்கிறது.
米 "நூல்நயம்” காண்போம்
05.05.2000 இல் ஆரம்பித்து பிரதிவெள்ளிக்கிழமை தோறும் மாலை 5.30 மணிக்கு இந்நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. இலங்கையில் வெளியிடப்படும் அல்லது இலங்கை எழுத்தாளர்களால் எழுதி வெளியிடப்படும் நூல்கள் இங்கு நயம் காணலுக்காக எடுத்தாளப்படுகின்றன.
இந்நிகழ்ச்சியினுடாக ஈழத்து எழுத்தாளர்கள், படைப்பாளிகள் தமது சமூகத்தால் அறியப்படுகின்றனர். அவர்களது படைப்புக்கள் மக்களால் வாசிக்கப்படும்படி துண்டப்படுகின்றன. கருத்துக்கள் பரிமாறப்படுகின்றன. அதாவது ஒரு நூல் பற்றிய நூல்நயம் காண்போம் நிகழ்ச்சி எனின் அந்த நூல் சார்ந்த துறையில் ஈடுபாடு உள்ள ஒருவர் சிறப்புரையாகத் தமது நூல்நயத்தினைச் சபையில் சமர்ப்பிப்பார். அதைத் தொடர்ந்து சபையில் உள்ளவர்கள் தமது கருத்துக்களை விமர்சனப் பாங்கில் ஒட்டியும், வெட்டியும் முன்வைப்பர். இங்கு சபையில் உள்ளவர்கள் யாவரும் பல்வேறு
"நிலை” பச்சம் 12

தரப்பினைச் சார்ந்தவர்களாக இருப்பர். அனுபவம் சார்ந்த அறிவு, இலக்கிய ஈடுபாடு என்ற விரிந்த தளத்தில் இருந்து அந்நூல் ஆராயப்படும். அனைவரும் ஆர்வலர்களாகவே பங்குகொள்வர். அனேகமாக நூலாசிரியர்களும் சமூகமளித்திருப்பர். குறிப்பிட்ட நூலானது நிகழ்ச்சித் திகதிக்கு முன்னராகவே சபையினரால் வாசிக்கப்படுகின்றது. அதற்கான ஏற்பாட்டினையும் தமிழ்ச்சங்கத்தின் கல்விக்குழு (தற்போது இலக்கியக்குழு) முன்னேற்பாடாகச் செய்து தருகின்றது. இந்தச் சபையில் பேசப்படும், அலசப்படும் விடயங்கள் பரஸ்பர கருத்தாடலுக்கு இடம் தருவதால் அந்த நூல்களின் வாசகப்பரப்பு அதிகரிக்கப்படுகின்றது. இதனால் புத்தகப்பண்பாடு என்பது வளர்க்கப்படுகின்றது. நூலின் வாசிப்பு பற்றிய தேவை, கேள்வி உணரப்படுகிறது.
அத்துடன் இந்நிகழ்ச்சியில் முக்கியமாக இளைஞர்களும் தம் கருத்தை முன் வைப்பதற்குச் சந்தர்ப்பங்கள் வழங்கப்படுகின்றன. இதனால் எதிர்காலப் படைப்பாளிகள், விமர்சகர்கள் அறிவாளிகள் உருவாக்கப்படுகின்றனர். கூடவே நமது இலக்கியம் பற்றிய சிந்தனை, சமூக, சமுதாயச் சிந்தனை பற்றிய தாக்கங்கள் இலக்கிய பகிர்வு மூலமாக ஏற்படுகின்றன. இறுதியாக, 16.03.2000இல் கே. விஜயன் அவர்களால்நயம் காணப்பட்ட அருணா செல்லத்துரை எழுதிய நன்றி உடையார்" (நாடக நூல்) இந்நிகழ்ச்சித் தொடரின் 40வது நூலாகும்.
மாவை வரோதயன்.
30.03.2001 வெள்ளி மாலை 5.30 மணிக்கு கொழும்புத் தமிழ் சங்க மண்டபத்தில் நூல்நயம் காணர்போம்" நிகழ்வில் "உயிர் வெளி கவிதைத் தொகுப்பு நூல் ஒளவை விக்னேஸ்வரனால் நயங்காணப்படும்
பணிடித வகுப்புக்கள் சனி, ஞாயிறு தினங்களில் பண்டித வகுப்புக்கள் கொழும்புத் தமிழ்ச்சங்கத்தில் இலவசமாக நடாத்தப்படுகின்றன. கல்விச் செயலாளர் திரு. அ. திருநாவுக்கரசு அவர்களுடன் தொடர்பு கொள்ளவும்.
‘ஓலை’ பக்கும் 13

Page 10
கவிதாஞ்சலி 22.02.2001 அன்று காலமான முதுபெரும் எழுத்தாளர் அமரர் வ. அ. இராசரத்தினம் அவர்களின் மறைவு குறித்து கொழும்புத் தமிழ்ச்சங்கம் நடாத்திய நினைவாஞ்சலிக் கூட்டத்தில் படிக்கப்பட்டது. 11.03.2001
தாய்த்தமிழைக் காக்கும் கொழும்புத் தமிழ்ச்சங்கம் தாய்த்தமிழைக் காத்துலகு நீத்தவுயர் - சேய்ராச ரத்தினத்தின் தொண்டெண்ணிச் செய்ந்நன்றி போற்றியவர் வித்துவத்தைக் கூறுமிந்த நாள்.
நாவல் சிறுகதைகள் நாடகங்கள் நற்றமிழில் பாவும் மொழிபெயர்ப்பும் பற்பலவாய்ச் - சேவையெனச் செய்தாரெம் தாய்த்தமிழின் சீர்மை நிலைபெறவே வையத்துயர்ந்த மகன்
婚 射 Ο (e • 8xe 0.
காலத்தால் மாளாக் கதைகளினால் தன்பெயரும் காலத்தால் மாளா திருக்கவைத்தார் - ஞாலம் புகழ்ந்தேற்றும் அன்னார் படைப்புகளை மண்ணின் புகழ்கூறும் சான்றாம் அவை
&O {
(x-
•
Х•
சாகித்திய மண்டலத்தோர் தேர்ந்தவர்தன் ஆக்கத்தின் வாகறிந்தே சான்றும் வழங்கினாராம் - பாகின் சுவைதோற்கும் சொல்லின்தேன் ஊற்றாமே கற்றோர் அவையேற்கும் பொக்கிஷங்க ளாம்.
X» ● (X X X
s (X-
0.
X
மண்வளத்தின் சொற்கள் மிகுமவர்தம் காதைகளில் மண்மீது பற்று மிகுந்ததனால் - மண்மிசைதன் வாழ்ந்தநா ளெல்லாம்தன் வாழ்பதியை நேசித்தே வாழ்ந்தார் வளமார் வழி.
● ex- {-
{
&-
‘ஓலை’ பக்கம் 14

தனக்கென்றொர் கொள்கை தனைத்தாங்கித் தம்மின் மனத்துதித்த தெஃதோ அதனைத் - தனக்குரிய பாங்கில் உறுத்திப் பிறர் கூற்றும் ஆய்ந்தறிந்தே ஓங்குவதும் ஏற்றார் உவந்து.
8 0 1 0.
Kd (X- (x- (x- {X-
ஆளறியாப் போழ்தும் அறிந்தால் திறனவர்தம் தோள்தட்டிப் பாராட்டும் தன்மையினால் - தாள்பற்றி ஆசி கொள்வார் வல்லவரும் ஆகும் நலமொன்றே சேப்பார் தாதைநிகர்த் தே.
தானும் வளர்ந்து தனைச் சாந்து நற்றமிழ்த்தாய் தானும் வளரத் துணை நின்றார் - வானுலகு சென்றாலும் பேர் சொல்லும் வாகாம் அவர் வாழ்க்கை பொன்றாப் புகழ்கொண்ட பேர்.
Κ ● 0. d ΚΣ
8X- 8X- •X
செந்தமிழின் ஆன்றோர் திகழ்கிழக்கின் மூத்தமகன் சொந்தம் தமிழ்கூறும் சீர்புலத்தின் - முந்தையோர் கொண்ட மரபுவழி குன்றாத புத்திலக்கும் கண்டுயர்ந்த பேராம் அவர்.
(X-
Κ
s
8X
4.
X
«Ο
போற்றும் தமிழ்உலகம் பொன்வரியால் பேர்பதிக்கும் போற்றும் பெருமைகொள்ளும் பெற்றமண்ணும் - போற்றும்நாம் போற்றுதமிழ்ச் சங்கம் பெயர்நிலைக்க வேண்டுமெனப் போற்றுஞ்சான் றோரென்பதால்.
- ஜின்னாஹ்
‘ஓலை’ பக்கம் 15

Page 11


Page 12

அன்பளிப்பு
Su
asses