கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: போது 2002.03-04

Page 1


Page 2
Burg
GUT5 - 1 இதழ் - 24
பங்குனி - சித்திரை 2002 தோற்றம் 5-5-1998
நிர்வாக ஆசிரியர்
(monoging Editor)
போல் சற்குணநாயகம், யே.ச.
ஆசிரியர்:
Editor) வாகரைவாணன்
நிர்வாகம்:
Management) எம். ஒக்கஸ்
U60s up 6O)60T: ஜெஸ்கொம் அச்சகம், இல, 1, இயேசு சபை வீதி, மட்டக்களப்பு.
தொலைபேசி:
Ꭴ65 - 23822, Ꭴ65 - 22983
E-mail ppccG)dian und.lanka.net
9,éforfUfĩ Uđể கம்
பட்டங்களும் விருதுகளும்
தமக்கு யாழ் பல்கலைக்கழகம் வழங்க முன்வந்த முதுகலைமாணிப் பட்டத்தைத் தாம் ஏற்பதற்கில்லை என்று அறிவித்த 'மல்லிகை ஜிவா, இலக்கிய கலாநிதிப்பட்டமே தமக்கு ஏற்றது என்று குறிப்பிட்டதும் பல்வேறு கருத்துக்களும் சர்ச்சைகளும் பத்திரிகைகளையும் மக்கள் மன்றங்களையும் பற்றிக் கொண்டன.
பத்திரிகை ஒன்றில் அவ்வாறு கருத்துத் தெரிவித்தவர்களில் முல்லை மணி என்பவர் ஒருவர். அடிப்படைத் தமிழ் அறிவே இல்லாத ஜீவா எந்தப்பட்டமும் பெறத் தகுதி இல்லாதவர் என்று 'சுடரொளி' நாளிதழில் அவர் மெத்தச் சூடாகவே எழுதியிருந்தார்.
இவரது இந்தக் கருத்து ஒரு புறம் இருக்க, ஒரு நல்ல இலக்கியத் தகைமை ஜீவாவுக்கு இருக்கிறது என்பது உண்மையே பல வருடங்களாகப் பயனுள்ள ஒரு சஞ்சிகையின் ஆசிரியராக இருந்து வருகிறார் என்பதுதான் அவரது அந்தத் தகுதி, பலம்
ஆனால், தகுதி எதுவுமே இல்லாத ப்லர் தங்கள் தலைகளில் தங்கக் கிரீடம் சூடிட முண்டியடிப்பதைப் பார்க்கும்போது அவர்கள் மீது நமக்கு பச்சாத்தாபம் தான் ஏற்படுகிறது. போலிகள் எல்லாத் துறைகளிலும் புகுந்துவிட்ட இக்காலத்தில் தகுதியானவர்கள் - இலக் கியக்கர்த்தாக்கள் வேண்டுமென்றே புறக் கணிக்கப்படுவதை நினைக்கையில் இதயத்தை யாரோ சக்கிப் பிழிவது போல் ஓர் உணர்வு உண்டாகிறது.


Page 3
இலக்கிய நூல் பரிசு பற்றிய விடயங்களிலும் இது போன்ற'தகிடுதத்தங்கள் இடம்பெறுவதை செ. யோகநாதன் கடந்த ஆண்டில் வெளியான "ஆதவன்’ பத்திரிகையில் பக்கம் பக்கமாக எழுதிக்காட்டியிருந்தார்.
பட்டங்கள், விருதுகள், பரிசுகள் என்பன வழங்குதலுக்குப் பொறுப்பாக உள்ளவர்கள் பக்க சார்பாக ஏன் நடந்துகொள்கிறார்கள் என்ற குமுறல் எல்லாத் திசைகளிலும் எழவே செய்கிறது. இதற்கும் ஒரு விசாரணைக் கமிஷன் நியமிக்க வேண்டுமோ, என்னவோ?
உண்மையிலேயே, தமிழ்ப்புலமை படைத்தவர்களுக்குப்பட்டங்களும், விருதுகளும் பெரிய அளவில் உதவப் போவதில்லை. திரு. வி.க., உ. வே. சாமிநாதைய்யர், மறைமலை அடிகள் முதலான தமிழ் மலைகளின் பேரறிவை எந்தப் பல்கலைக்கழகத்தாலும் அளந்திட முடியுமா என்ன?
மலைகள் இவர்கள் தமிழுக்காக நடந்த நடையை, நடத்திய போராட்டங்களை, பட்டம் விருகளுக்காகப் பறந்து திரிபவர்கள் அறிந்திருக்க நியாயமில்லை.
இதையெல்லாம் எண்ணிப் பார்க்கையில் கவியரசு கண்ணதாசனின் "யாரை எங்கே
வைப்பது என்று யாருக்கும் தெரியல்ல. அட, அண்டங் காக்கைக்கும் குயில்களுக்கும் பேதம் புரியல்ல" என்று பாடல் வரிகள் தாம் நம் நினைவுக்கு வருகின்றன.
ஆப் யாரை எங்கே வைப்பது என்று யாருக்கும் தெரியாததால்தான் ஈழத்து இலக்கிய உலகில் யார் யாரோ வெல்லாம் சிம்மாசனம் போட்டு அமர்ந்து கொள்ளமுடிகின்றது.
அன்புடன் வாகரைவாணன்.
அமெரிக்காவின் ஞானம்
ஒற்றை ஆட்சி அமைப்பினர் கீழ் இலங்கை இனப்
பிரச்சினையைத் தீர்க்க முடியாது. தமிழ் மக்களுக்குரிய உரிமை முற்றாக வழங்கப்பட வேணர்டும்.
ஆஸ்லி வில்ஸ்
அமெரிக்கத் தூதுவர்
Jரகேசரி 8-2-2002

சிறுவர் கதைவரிசை -
செட்டிகுளம் அழகிய கிராமம். அது வவுனியா மாவட் டத்தில் உள்ளது. உழைப்பால் உயர்ந்த மக்கள் வாழ்ந்தனர். குளங்கள் நிர்வள மூட்டின. செம்மண் பயிர்களுக்கு உர மூட்டின. வயலும் தோட்டமும் மக்களுக்கு வாழ்வளித்தன. பாலும் தேனும் பழங்களும் எங்கும் கிடைத்தன. அழகான விடுகள் இருந்தன. பல வசதிகளும் இருந்தன. ஆனால் நாட்டின் பிரச்சனை மக்களைப் பாதித்தது. மக்கள் இடம் பெயர்ந்தனர். அகதிகளாகி எங்கோ சென்று விட்டனர்.
மணியத்தார் வாழ்ந்த விடு மாளிகை போன்றது. அங்கு இப்போது யாரும் இல்லை. பாழடைந்து போய்விட்டது. பற்றைக் காடுகள் வளர்ந்து இருந்தன. அந்தப் பெரிய விட்டில் ஒரு நாய் வாழ்ந்தது. அதற்கு இரண்டு குட்டிகள் இருந்தன. ஒரு பூனையும் தன் இரு தட்டிகளுடன் வாழ்ந்தது. இரண்டு குஞ்சுகளோடு எலியும் வாழ்ந்தது. மனிதர்கள் இல்லை. அதனால் உணவும் கிடைப்பது இல்லை. உணவு தேடி அலைந்தன. இவை ஒன்றுக்கு ஒன்று பயந்து வாழ்ந்தன. நாய் மட்டும் தலைவியாய்த் திரிந்தது. பெரியவை வெளியில் சென்றால் குட்டிகளும் எலிக் குஞ்சுகளும் சேர்ந்து விளையாடும்.
T9FF 6 TT60T S53&Ob"T695
ஒரு நாள் நாயும் பூனையும் எலியும் உணவு தேடச் சென்றன. நேரம் போய்க் கொண்டு இருந்தது. குட்டிகளுக்கும் தஞ்சுகளுக்கும் சரியான பசி பிடித்து விட்டது. வாடிச் சோர்ந்து விட்டன. முதலில் நாய்தான் வந்து சேர்ந்தது. நாய்க் குட்டிகள் பாய்ந்து சென்றன. நாய் தன் குட்டிகளுக்குப் பால் ஊட்டியது. பூனைக் குட்டிகளும் எலிக் குஞ்சுகளும் எட்டிப் பார்த்தன. ஒன்றை ஒன்று பார்த்துக் கொட்டாவி விட்டன. இதனை

Page 4
நாய்க் குட்டிகள் கண்டன. நாய் கண்களை மூடிக் கொண்டு கிடந்தது. அது களைத்துப் போய் இருந்தது. ஒரு நாய்க் குட்டி சென்றது. பூனைக் குட்டிகளை அழைத்தது. முதலில் பூனைக் குட்டிகள் பயந்தன. பின் மெதுவாக நாய்க் குட்டியின் பின்னால் சென்றன. நாய்க் குட்டிகளும் பூனைக் குட்டிகளும் பாலைக் குடித்தன. எலிக் குஞ்சுகள் எட்டிப் பார்த்தன. பார்க்கப் பாவமாய் இருந்தது. ஒரு நாய்க் குட்டி தாயின் மடியில் இருந்து பாலை உறிஞ்சி வந்தது. எலிக் குஞ்சுகளுக்குப் பக்கத்தில் நிலத்தில் விட்டது.
எலிக்’ குஞ்சுகளும் பாலைக் குடித்தன. இவை யாவற்றையும் நாய் கண்களை மூடியபடி பார்த்தது. அதன் மனதில் சந்தோசம். பசியாறிய குட்டிகளும் குஞ்சுகளும் மகிழ்ந்து விளையாடின. பூனையும் எலியும் தாமதித்தே வந்து சேர்ந்தன. நாய்க் குட்டிகளும் பூனைக் குட்டிகளும் எலிக் குஞ்சுகளும் ஒன்றாய்ச் சேர்ந்து விளையாடுவதைக் கண்டன. பெரிய நாய் கண் விழித்து எழுந்தது. பூனை பதுங்கத் தொடங்கியது. எலிக்கு நடுக்கம் பிடித்தது. நமது பிள்ளைகளைப் பார்த்து நாம் ஒற்றுமையாக வாழ்வோம். மனிதர் இல்லாத இந்த விட்டில் நாம் ஏன் ஒற்றுமையாக வாழ முடியாது என்று நாய் கூறியது. குட்டிகளும் குஞ்சுகளும் கூச்சலிட்டுத் துள்ளி. விளையாடின. பேதத்தை மறந்து ஒற்றுமையாக வாழ்ந்தன. ஒரு நாள் விட்டினுள் விரியன் பாம்பு நுழைந்தது. குட்டிகளும் குஞ்சுகளும் கூச்சல் இட்டன. நாயும் பூனையும் எலியும் ஒன்று கூடின. எதிர்த்துப் போராடின. பாம்பினால் தாக்கும் பிடிக்க முடியவில்லை. எதிர்க்க் முடியாது பாம்பு ஓடி விட்டது. குட்டிகளும் குஞ்சுகளும் காப்பாற்றப்பட்டன. ஒற்றுமையின் உயர்வு அவைகளுக்குப் புரிந்து விட்டது. அங்கு சந்தோசம் நிலவியது.
இழ்UT
ஒருவர் : ஜனாதிபதி சந்திரிகா அமைதியாக
இருக்கிறாரே.
மற்றவர் : இம்Uச்மெனர் ருக்குப் பயப்படுகிறார்
போலத் தெரியிது.

9ýlu GaJGóLQU 9fuU LOG:sfa5ĩ – 4.
ங்கற்பட்டு மாவட்டத்தில் நாவலூர் என்ற சிற்றுாரில் 22-9-1916ல் விந்தன் பிறந்தார். அவருடைய பெற்றோர் வேதாசலம் - ஜானகியம்மாள் தம்பதியினர். பெற்றோர் இவருக்குச் சூட்டிய பெயர் ‘கோவிந்தன்’ வறுமையும், அறியாமையும் மிகுந்த குடும்பத்தில் பிறந்து, நடுநிலைப் பள்ளியை முடிப்பதற்குக்கூட வசதி இல்லாமல் தந்தையுடன் பொற் கொல்லுப் பட்டறை வேலைக்கு சென்று வந்தார். இரவு நேரங்களில் இலவச இரவுப் பள்ளியில் படித்தார்.
ஒவியம் கற்று, ஜெமினி ஸ்டுடியோவில் விளம்பரப் பிரிவில் ஓவியராகச் சேர்ந்தார். ‘ஓவியர் வேலை தரித்திரமான தொழில் என பாட்டனார் தடுத்த பிறகு விந்தனின் நண்பர் ‘ராஜாபாதர்” என்பவர் மூலம் ‘தமிழரசு’ அச்சகத்தில் அச்சுக்கோக்கும் தொழிலாளியாகச் சேர்ந்தார். புரட்சிக் கவிஞர் பாரதிதாசனின் ‘தமிழுக்கும் அமுதென்று பேர்’ என்ற கவிதையை முதல் முதலாக அச்சுக் கோத்தவர் மக்கள் எழுத்தாளர் விந்தன்தான்.
அச்சுக்கோக்கும் தொழிலில் நாள் ஒன்றுக்கு ஆறணா கூலி மட்டுமே பெற்றார். தமிழரசு அச்சகத்துக்குப் பின் ஆனந்த போதினி, தாருல் இஸ்லாம் போன்ற அச்சகங்களுக்கு மாறி அனுபவம் மிக்க அச்சுக்கோப்பாளராக ஆனந்த விகடன் அச்சகத்தில் சேர்ந்தார். அங்கு சேர்ந்த பிறகே விந்தன் எழுத ஆரம்பித்தார்.
சிக்கனத்தோடு இருந்து சிறிது பணம் சேமித்து வைத்தார். குடும்பத்திற்கு நிரந்தர வருவாய் வேண்டு மென்பதற்காக 'ராயல் ஓட்டல் என்னும் பெயரில் மிலிட்டரி ஓட்டல் ஆரம்பித்து, அனுபவம் இல்லாததால் நட்டமடைந்தார். வேறு வழி இன்றி வேலூருக்கு நடை பயணமாகவே சென்று "புங்கு அச்சுத் தொழிலில் ஈடுபட்டார்.
5

Page 5
விந்தனை பேராசிரியர் கல்கியிடம் அறிமுகப்படுத்தி பணிக்குச் சேர்த்தார் ராஜாபாதர். தமிழ் இலக்கிய உலகிற்கு கல்கிதான் விந்தனை அறிமுகப்படுத்தினார். விந்தனை துணையாசிரியராக்கியதோடு வி.ஜி. என்று பெயர் வைத்துக்கொண்ட கோவிந்தன் பெயரை விந்தன் என்று மாற்றி கோவிந்தனை விந்தனாக்கினார் கல்கி. அப்பெயரே விந்தனுக்கு பாராட்டைப் பெற்றுத்தந்தது. கல்கி விந்தனுக்கு வாய்ப்பும் சுதந்திரமும் கொடுத்து வளர்த்தார். அதனால் அவரைத் தன் குருவாக ஏற்றுக்கொண்டார் விந்தன். விந்தனை துணையாசிரியராக கல்கி சேர்த்துக்கொண்டபோது ஒரு தொழிலாளி துணை ஆசிரியராவதா?’ என ஒரு சிலர் கல்கியிடம் வாதாடி தோற்றுப்போனார்கள்.
விந்தன் ‘பொன்னி’ இதழில் நக்கீரன் என்ற பெயரில் "கண் திறக்குமா?’ என்ற நாவலை தொடர்கதையாக எழுதியபோது, கல்கியிடம் பிடிபட்டார். தண்டனை என்ன தெரியுமா? 'கல்கி இதழுக்கு தொடர்கதை ஒன்று எழத வேண்டும் என்பதுதான். அதற்காக பாலும் பாவையும் என்ற கதையை எழுதினார். இது மக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. விந்தன் எழுதிய முதல் சிறுகதை முல்லைக் கொடியாள். இது தமிழ் வளர்ச்சிக் கழகத்தின் முதல் பரிசை வென்றதுடன், அக்கழகத்தில் பரிசு பெற்ற முதல் எழுத்தாளர் என்ற சிறப்பும் விந்தனுக்குக் கிடைத்தது.
விந்தன் பத்திரிகை உலகில் வெற்றிகரமாக இருந்தபோதுதான் சினிமா ஆசை அவரைத் தொற்றிக் கொண்டது. பிரச்சினை நிறைந்த வாழ்க்க்ைகு சினிமாவே ஆறுதல் அளிக்கும் ள்ன நம்பினார். பத்து ஆண்டுகளாக கல்கியில் துணை ஆசிரியராக இருந்ததை விட்டுவிட்டு ஏவிஎம் இன் கதை இலாகாவில் சேர்ந்தார். அங்கிருந்த கட்டுப்பாடுகள் ஒத்துவராததால் விலகி, சுதந்திர சினிமா எழுத்தாளராக முயன்றார். ஆனால் திடைத்ததோ தோல்விதான். சிவாஜி - எம்.ஜி.ஆர். நடித்த கூண்டுக்கிளி, சிவாஜி நடித்த 'அன்பு போன்ற சில படங்களுக்கு வசனமும், பாடல்களும் எழுதியிருக்கிறார் விந்தன். சகோதர எழுத்தாளர்களான ஜெயகாந்தன், சாணி டில் யண் போன்றோர் சிலரின் கதைகளைத் தொகுத்து வெளியிடுவதற்காகவே புத்தகப் பூங்கா’ என்ற பதிப்பகத்தை ஆரம்பித்து நட்டமடைந்தார். ན་
தான் சேமித்து வைத்திருந்த சினிமாப் பணத்தில் "மனிதன்' என்ற பத்திரிகையை ஆரம்பித்தார். ஒன்பது இதழ்களே வெளிவந்த மனிதன், விந்தனுக்குப் பெரும் பண இழப்பை ஏற்படுத்திவிட்டு வெளிவராமல் நின்றது. சுயமரியாதை மிக்கவரான விந்தனுக்கு சினிமா ஒத்துவரவில்லை. இடையில் வந்த செல்வங்கள் வேகமாகப் போய்விட்டன. அதன்பின் 25 ஆண்டுகாலமாக செத்துச் செத்து பிழைக்க வேண்டிய நிலையில் தவித்தார் விந்தன். ‘வாழ்க்கையின் பிரச்சினைகளுக்கு இடையே பிறந்தும் வளரமுடியாத என் நாவல்களை சர்வ வல்லமை உள்ள காசால் தான்
6 .

காப்பாற்ற முடியுமா? கடவுளே உன்னால் காப்பாற்ற முடியாதா?’ என கலங்கி கண்ணிர் விட்டவர் விந்தன். வறுமை விந்தனைப் பிடித்தது. ஒருவேண்ள் தேநீருக்கும் யோசிக்க வேண்டிய நிலை விந்தனுக்கு. உதவ வேண்டுமென்ற நோக்கத்தில் அவருக்கு பத்திரிகைகளும் பதிப்பாசிரியர்களும் பணம் கொடுத்து உதவி செய்தார்கள். ஆனால் விந்தனோ வறுமையின் பிடியில் சிக்கி, சிந்தனையைத் தொலைத்துவிட்டு கதை எழுத முடியாமல் கலங்கினார்.
விந்தன் சிர்கெட்டு வறுமை அடைந்த பின் அவருக்கு மறு வாழ்வளித்தவர். அப்போது தினமணிக்திர் ஆசிரியராகவும், இப்போதைய குங்குமத்தின் ஆசிரியராகவும் உள்ள ‘சாவி அவர்க்ள். தினமணிக்கதிரில் ஏழு ஆண்டுகள் உதவி ஆசிரியராகப் பணியாற்றினார் விந்தன். விந்தன் ஓரளவு மனநிறைவோடு வாழ ‘சாவியே காரணம்.
‘சேரிகள் நிறைந்த சென்னை மாநகரம்’ என்ற தொடர் கட்டுரை சென்னை நகரின் அவலத்தை உலகுக்குக் காட்டியது. ‘சிறைச்சாலை சிந்தனை’ என்ற தொடர் எம். ஆர்., ராதாவின் வாழ்க்கை வரலாற்றை காட்டியது. அவர் எழுதிய வடம் பிடிக்க வருகிறீர்களா?’ என்ற கட்டுரை திருவாரூரில் ஓடாத தேரை ஓடவைத்த கலைஞரின் கலைப்பண்பையும் மனித நேயத்தையும் காண திருவாரூருக்கு வாரிங்களா? என்பதாக வாசகரை அழைத்தது. கலைஞர் ‘நெஞ்சுக்கு நிதி என்ற தம் வாழ்க்கை வரலாற்றை தொடராக எழுத இசைந்தது அவர் விந்தனின் மேல் கொண்டிருந்த அன்பினால்தான். தியாகராஜ பாகதவரின் வாழ்க்கை வரலாற்றையும் எழுதினார்.
அவரது புரட்சி எழுத்துக்கள தங்களை புண்படச் செய்ததாக குமுறியவர்களும், விந்தன் பணக்காரர்களை வெறுத்து ஒதுக்கியவர் என்ற பிறரின் புலம்பல்களும் அவரை ஒரு வட்டத்திற்குள் கொண்டு வந்து அடைத்தது. ஏற்கனவே ஆஸ்துமா, காற்றழுத்த நோய் போன்றவைகளால் அவதிப்பட்ட விந்தன். தான் பெற்ற புகழையும், பணத்தையும் தக்க வைத்துக்கொள்ள தெரியாமல் தன் இறுதிக் காலத்தில் தன்னை நிலைநிறுத்திக் கொள்ளப் போராடினார்.
gy விந்தன் விளம்பரங்களை வெறுத்தவர். கடைசிவரை தனியாக ஒரு புகைப்படம் கூட எடுத்துக்கொள்ளாதவர். எப்போதும் முரட்டுக்கதர் உடை அணிந்திருப்பவர். ராஜாஜி பஜகோ விந்தம்’ என்ற நூலை எழுதி படிப்பாளர்களை சிந்திக்கத்துாண்டியவர். இத்தகைய சிறப்புமிக்க விந்தன் வறுமையால் செல்லாக்காசாகி 1975 ஜூன் 30ம் நாள் மாரடைப்பால் காலமானார்.
(வசந்தம் - தினகரன் தமிழ்நாடு 1996)
7

Page 6
விடுதலை வீரன்
须领 ஏழு தசாப்தங் களுக்கு மேலாக s {P
ஈழத்தின் பெரும் பகுதியை மும் முடிச் சோழ மண் டலமாக்கி அரசு புரிந்த தமிழக சோழ சாம்ராஜ்ஜி *பத்தைத் தனது நிண்டகாலப் போரில் தோற்கடித்த முத லாம் விஜயபாகு வின் முகத் தில் அவ்வரிய வெற்ற
யின் பெருமிதம் அழகாகவே பிரகாசித்தது.
முதலாம் பராந்தக சோழனால் முதன்முதலில் முற்றுகையிடப்பட்ட தனது தாயகத்தை, அவனது வாரிசுகளில் ஒருவனான முதலாம் குலோத்துங்கன் காலத்தில் ரோகணையின் அரசு பிடத்தில் அமர்ந்தவாறு நடத்திய பதினைந்து ஆண்டுகால விரப்போரில் முழுமையாக மிட்டெடுக்க முடிந்ததை நினைவுகூர்ந்த விஜயபாகு, இத்தகையதொரு அரிய வாய்ப்பு தனக்குக் கிடைத்ததைப் பெரும் பாக்கியமாகவே கருதினான். ஆனால், வேற்று நாட்டின் ஓர் அரச வம்சத்துக்கெதிரான வெற்றி, நிச்சயமாக அவ்வினத்தவரான ஈழத்தமிழரின் இதயங்களில் கசப்பை ஏற்படுத்தியிருக்கும் என்பதை உணர்ந்து கொண்ட அவன், இந்த நாட்டின் இரு பெரும் சமூகங்களுக்கிடையே நெருங்கிய பிணைப்பை உருவாக்கி, ஈழத்தை ஒரு சமாதான ராஜ்யமாக்க வேண்டுமென்று ஒரு பெரும் கனவே கண்டான்.
அந்தி நேரம் அது. ராஜரட்டையின் இதயப் பகுதியான ஜனநாதமங்கலத்தில் அமைந்திருந்த தனது அழகிய அரண்மனை நந்தவனத்தில் தன்னந்தனியாக இருந்தான் விஜயபாகு. அது இளவேனில் காலம். சுதந்திரமாகவே தென்றல் அங்கு சுற்றித்திருந்தது. மரம், செடி, கொடிகளெல்லாம் புத்தம் புது மலர்களாலும், செந்துளிர்களாலும் தங்களை அலங்கரித்தபடி தம் யெளவனத்தை அனைவருக்கும் காட்டிக்கொண்டு நின்றன. குயிலிசை அந்தப் பிரதேசம் முழுவதுமே தேனைக் கொட்டிக் கொண்டிருந்தது.
 
 
 

இயற்கையின் இந்த வனப்பைத் தன் இரு விழிகளாலும், செவிகளாலும் பருகியபடி தன் கனவுலகில் மிதந்து கொடிருந்த விஜயபாகுவை அந்தத் தண்டைகளின் கிண்கிணி ஒலி திசை திருப்பி விடுகின்றது. ஐயமில்லை. நந்தவனத்தின் நறும் பூக்களின் அழகையெல்லாம் தன் புன்னகைப் பூவொன்றினாலேயே வென்றபடி அவனது அரசமாதேவி திரிலோகசுந்தரி அவனை நோக்கி ஒரு தேராக அசைந்து வந்தாள். அந்த எழில் ரதத்தின் அசைவில் தன்னை இழந்துவிட்ட விஜயபாகு, ஒரு கணம் கிறங்கித்தான் போனான். மன்னவனின் அந்த மாலை நேரத்து மயக்கத்தைப் புரிந்து கொண்ட மங்கை சுந்தரி ஏதும் அறியாதவள் போல, இந்த நாட்டின் அரசனுக்கு ஏகாந்தத்தின் மிது என்னதான் பற்றோ? ஏதாவது நாட்டின் மீது படை எடுக்கத் திட்டமோ?’ என்று கேட்டு அமைதியாகவே நகைத்தாள்.
Yதனது பட்டத்து ராணியின் கிண்டலான கேள்வியை உள்ளுர ரசித்த விஜயபாகு ‘படையா? என்னிடமா? அவை எல்லாம் உன்னிடம் தானே ஒட்டிக்கொண்டிருக்கின்றன.’ என்ற அவன், அவளை விழுங்கி விடுவதுபோல பார்த்தான். அந்தப் பார்வையின் உஷ்ணத்தைத் தாங்க இயலாத அரசியின் கண்கள் தாமாகவே தர்ையை நோக்கின. கன்னங்கள் இரண்டும் அந்தி வானம் ஆகின.
உணர்ச்சிவசமான தன் ராணியை உரிமையோடு அள்ளிக்கொண்ட விஜயபாகு தான் அமர்ந்திருந்த மயிலாசனத்துக் கொண்டுபோய் இருத்தித் தானும் அமர்ந்து கொண்டான். கனவுலகு மூடிக்கொள்கிறது.
திரிலோக சுந்தரி தான் முதலில் தன் கணவன் காதில் குயிலாகக் கூவினாள்.
‘அது சரி. எதற்காக இங்கே வந்து தனியாக அமர்ந்திருந்தீர்கள்.? லிலாவதியை எதிர்பார்த்துத் தானே.
‘சே.சே. உனக்கு எப்போதும் இந்தக் குறும்பு தான். தனியாக அமர்ந்திருந்தால் தான் கனவு தாராளமாக வரும்.
*கனவா?’ வரலாற்றுச் சிறுகதை \છોefup.િ lિe૨૦છે?
ஆமாம்.நான் ஒரு பெரிய கனவு காண்கிறேன். உனக்கும் அதை உரைக்கத்தான் வேண்டும். கேள். சோழர்களை இந்த நாட்டைவிட்டு வெளியேற்றிவிட்டதால் இங்குள்ள தமிழர்கள் சோர்ந்து போய் இருப்பதாக அறிகிறேன். அவர்களின் வேளக்காாரர், அகம்படியார் மனங்களிலும் அதிருப்தி ஏற்பட்டிருப்பதாகத் தெரிகின்றது. இதனால், இந்த நாட்டிலுள்ள இரு பெரும் இனங்களுக்கிடையே ஏதாவது பெரிய மோதல் தோன்றிவிடுமோ என்று அஞ்சுகிறேன்.
9

Page 7
‘அப்படியா..?’
$ s y
9, DITUD....
‘அதற்கு என்ன செய்யப்போகிறீர்கள்.?
“இரண்டு இனங்களுக்கிடையேயும் பலமான இணைப்புப் பாலம் அமைக்கப்போகின்றேன்.”
"பாலமா?. என்ன இன்றைக்குப் புதிது புதிதாகப் பேசுகிறீர்கள்.
‘புதிது தான். எப்போதும் பழையதிலேயே இருக்கக்கூடாது. எனது சகோதரி மித்ராவை பாண்டிய இளவரசன் வரகுணனுக்கு மணம் செய்து வைக்க எண்ணியுள்ளேன். இதன் வழியாக தமிழகமும் ஈழமும் மட்டுமல்ல, இங்குள்ள தமிழருக்கும் சிங்களவருக்குமிடையே இறுக்கமான இணைப்பு ஏற்பட்டுவிடும்.
"ஆமாம், அருமையான யோசனை. அப்புறம்.
இனிமேல் எனது படைத்தளபதிகளாக தமிழர்களும் நியமிக்கப் படுவார்கள். м
‘இன்னும் என்ன செய்யப்போகிறீர்கள்..?’
'அரியாசனத்தில் சிங்கள மொழியோடு தமிழுக்கும் சரியாசனம். தமிழகத்துப் பிராமணர்கள், கந்தளாய் விஜயராஜ சதுர்வேத மங்களத்தில் தக்க விதத்தில் குடியமர்த்தப்பட்டுப் பேணிப் பாதுகாப்படுவார்கள்.
"அப்பப்பா, ஆக்கபூர்வமான யோசனை.
இன்னும் கேள். சோழரோடு இங்கு வந்து சேர்ந்த வேளாளர், செட்டிகள் என்போர் நமது சோதரர்களாக, பதவியா, கந்தளாய், ஜனநாதமங்களம் போன்ற இடங்களில் சிங்கள மக்களோடு சினேகபூர்வமாக வாழ வகை செய்யப்படும். பொலநறுவை புனித தந்தக் கோயிலைப் பாதுகாக்கும் பொறுப்பு வேளக்காரரிடம் ஒப்படைக்கப்படும்.
“உங்கள் உயர்ந்த உள்ளத்தை இந்த உலகமே பாராட்டும்.”
‘சுந்தரி. நான் சோழருக்கெதிராகத் தான் பேரிட்டேனே தவிர இங்குள்ள தமிழருக்கெதிராக அல்ல. இனபேதம் என்னிடம் என்றைக்குமே இல்லை. ஏன்? நீ கூட இந்திய கலிங்க இளவரசிதான். உன சக்களத்தி லிலாவதி அயோத்தி ராஜபுத்திர வம்சத்தைச் சேர்ந், வள்.
10

“உங்கள் கனவு நிச்சயம் பலிக்கும் அரசே."
தனது பட்டத்து ராணியின் உள்ளத்திலிருந்து ஓடிவந்த வார்த்தைகள் விஜயபாகுவை உற்சாகப்படுத்துகின்றன. அவன் அவளை அன்போடு அணைத்துக் கொள்கின்றான்.
ஒன்றிரண்டு மாதங்கள் ஓடிப்போகின்றன.
ஜனநாத மங்களம் முழுவதுமே பொற்கோலம் பூணுகின்றது. எங்கு நோக்கினும் காற்றில் அசைந்தாடும் எழில் மிகு தோரணங்கள். வண்ண மலர்களின் வாசம் மூக்கைத் துளைத்தெடுக்கின்றது. வாயிலிலே பிரமாண்டமான வரவேற்பு வளைவு. வாத்தியங்களின் இன்னிசை. ஆடல் List L6).... V
ஜனநாத மங்களம் மட்டுமன்றி, ராஜரட்டை முழுவதுமே மகிழ்ச்சிக் கடல் பொங்கிப் பிரவாகிக் கின்றது. தங்கள் அரசனின் தங்கை மித்ரா, பாண்டிய இளவரசன் வரகுணனுக்கு மணமாலை சூடி, அந்நாட்டு அரசி யாகப் போகிறாள் என்ற செய்தி மக்கள் மனங்களில் எல்லாம் மதுர மாக இனிக்கிறது.
திருமணம் ஜனநாத மங்களத்தில் ஒரு குட்டித் தமிழகத் தையே கொண்டு வந்து நிறுத் து கிறது. பாண்டிய ’ நாட்டு அரச பரம்பரை மட்டுமல்ல - நேற்றுவரை எதிரியாக இருந்த சோழ அரச வம்சம் கூட, திருமண மண்டபத்தில் நிறைந் திருப்பதைக் கண்ட விஜயபாகுவின் மனம் நெகிழ்ந்த போகின்றது. அதுதான் தமிழ்ப் பண்பாடு என்று நினைத்த அவன், அவர்களையெல்லாம் அன்போடு வணங்கி வரவேற்கின்றான்.
மிதி ரா வினி 霄。
திருமண வைபவத்தில் விஜயபாகுவின் இரண்டு ராணிகளும் தங்கள் அந்தஸ்தையும் மறந்து அனைவரிடமும் அளவளாவுகின்றனர். கலிங்கம், அயோத்தியில் இருந்து வந்த அரச குடும்பத்தினரைக் கண்ட இருவரும் ஆனந்தக் கண்ணிா வடிக்கின்றனர். நிண்ட நாட்களுக்குப் பிறகு சொந்தங்களைக் கண்டதில் அவர்களின் நெஞ்சம் நிறைந்து போகின்றது.
அது ஒரு அமா வாசை இரவு. வழக்கம் போல, தன் நாட்டு நடப்பு அறிவதற்காக மாறு வேடம் பூண்ட மன்னன் விஜயபாகு, ஜன நாத மங்க ளத்தைச் சுற்றிவரப் புறப்படுகின் றான். அரண்மனையை விட்டு ஓர் அசல் யாசகனாக வெளியேறிய அவனை, உயரத்தில் இருந்து உற்று நோக்கிய வெள்ளிப் பூக்களுக்குச் சிரிப்பு வருகின்றது. விதியின் ஒரமாகப் படுத்துக்கிடந்த ஒரு சில நாய்களுக்கும் அவன் மீது என்ன கோபமோ, குரைக்கின்றன.
ஆனால், அரசன் விஜயபாகு இதையெல்லாம் கவனித்ததாகத் தெரியவில்லை. தொடர்ந்து நடக்கின்றான். அங்கே ஜனநாத மங்களத்தில் 11

Page 8
ஒரு புறமாக அமைந்திருந்த ஒரு சிறிய விட்டின் திண்ணையில் அமர்ந்திருந்தவாறு இருவர் பேசிக் கொண்டிருக்கின்றனர். அவர்களின் பேச்சில் தனது பெயரும் வரவே, அவன் மறைந்து நின்று உற்றுக் கேட்கின்றான்.
அவ்விருவரினதும் உரையாடலிலிருந்து நிர்வளம் நிறைந்த ராஜரட் டையில் நிறைந்திருக்கும் நெல் வளம் - ஈழத்திற்கும் தமிழகத்திற்குமிடையே தொடர்ந்து நடைபெறும் வாணிபம் - அதில் இந்த மண்ணின் இரத்தினங்கள், முத்துக்கள், யானைத் தந்தங்கள். அவற்றுக்கிடாக தமிழகத்திலும், வேறு நாடுகளிலிருந்தும் இங்கே வந்து குவியும் - கண்ணைப் பறிக்கும் தங்கம், பொன், இரும்பு போன்ற கணிப்பொருட்கள் . இவற்றால் இந்நாட்டில் ஏற்பட்டுள்ள செல்வச் செழிப்பு - அரசன் ஒரு பெளத்தனாக இருந்தும் அவன் இந்து மதத்திற்கு நீட்டும் ஆதரவுக் கரங்கள். அதன் அடையாளமாக விளங்கும் கந்தளாய் விஜயராஜேஸ்வரம் - தமிழகக் கலைஞர்களின் கைவண்ணத்தால் சிறந்தொளிரும் பதவியா, பொலநறுவை பெளத்த கோயில்கள் - இவற்றுக்கு மேலாக, அரசனின் படைத் தளபதிகளாக நியமிக்கப்பட்டிருக்கும் அபிமனராமன், மழவராஜன் என்னும் வேளக்காரத் தமிழ் மறவர்கள். சிங்களவருக்கும் தமிழருக்குமிடையே வளர்ந்து வரும் சினேக உறவு.
இப்படி - நாட்டின் பல்வேறு சிறப்புக்கள், பெருமைகள் அவர்களின் உரையாடலில் ஒன்றன்பின் ஒன்றாக பின்னிப் பிணைகின்றன. ஒளிந்து நின்று அனைத்தையும் உற்றுக்கேட்ட விஜயபாகுவின் கண்களில் அந்த அமாவாசை இருளையெல்லாம் விழுங்கிவிடக்கூடிய புத்தொளி விசிப் பிரகாசிக்கிறது. அதே நேரம் அவன் மனத்தில் -
“சோழரிடமிருந்து இந்த நாட்டுக்கு சுதந்திரம் பெற்றுக் கொடுத்ததோடு என் பணி முடியவில்லை. இன்னும் எவ்வளவோ இருக்கின்றது.’ என்ற எண்ணம் மேலோங்கவே, அவன் வேகமாக அரண்மனை நோக்கித் திரும்புகின்றான். அங்கே அந்தப்புரம் அவனுக்காக
விழித்துக் கொண்டிருக்கிறது.
இற்UST
ஒருவர் ஆணிடிப்பட்டியில் ஜையலலிதா வெல்லுவாரா?
மற்றவர் : தமிழ் நாட்டில் ஆணர்டிகள் இருக்கும் வரை
ஜெயலலிதாவுக்கு வெற்ரிதானர்.
f2
 

சின்ன வயதிலேயே சிந்தித்தவனர்
தனினைத் தமிழுக்காகத்
தந்தவனர்.
Uேச்சினாலேயே தமிழ் நாட்டினர் ஆட்சியைப் Uழத்தவனர் மூச்சுள்ள வரை
தமிழ் முழக்கம் செய்தவனர்.
பகுத்தறிவே இவனர் வகுத்த பாதை 6)Usfu (Tsf60i Uரதம சீடனர்.
ஆத்திகத்தினர் அழுக்குகளைப் போக்க நாத் திகப் பாதையில் நடந்தவனர்.
உருவத்தில் இவனர் கூர்ம அவதாரம் ஆனால் அரசியல் அரங்கில் இவனர் எடுத்தது 6))"6ύ 6)Jebυωδ.
3.
இன உணர்வு இவனர் இதயத்தில் இருந்தே ஊற்றெடுத்தது. தணல் நெருப்பாக அதைத் தந்தவனும் இவனே!
எழுத்தாலும்
பேச்சாலும்
தமிழனை விழித்தெழச் செய்தவனர்,
இனிறையத் தமிழினர் தந்தை இவனர் இல்லாமல் இருபதாம் நூற்றாண்டுத் தமிழே இல்லை!

Page 9
வீட்டுப் பற்றை 6մմ (66շՐՎ` (6 நாட்டுப் பற்றை நாளும் வளர்த்தவனி.
*ரங்கோனர் ராதா க்கள் இங்கும் தானி இருக்கிறார்கள்!
கலைஞர் கருணாநிதியினர்
திரை உலகிற்கு '65-66t &6660Trff சினினையா கனேசனை திருப்பு முனை genrag as(3600re 60Trré Guy sp6D 560U-60U சிருஸ்டி கர்த்தா. ஓர் ஆயுதமாக்கியவனி அண்ணா தானி
- ფნup?ყძ?6of "G866D6desstrf (8U அகரம் தமிழ்த் திரைப்பட உலகினர் அது இல்லாமல் 6P6)naud. ஏது அறிவு?
"சொர்க்கவாச'லில் சொக்கிப் போகாதவர்கள் - ஆரணி uj (Tf?
மின்சாரம் படும் பாடு
மட்டக்களப்பில் 56 சதவீத மின்சாரம் சட்ட விரோதமாகப் பெறப்படுகிறது.
வீரகேசரி 11-01-2002
மூன்று லட்சத்து ஐம்பது ஆயிரம் பேர் மீற்றர் இன்றி மின்சாரத்தை உபயோகித்துள்ளனர்.
- நிதி அமைச்சர் கே. என். சொக்ஸி
தினக்குரல் 8-2-2002

தமிழ் மொழியிலே கவிதை நாடக இலக்கியங்களைத் தவிர்த்துப் unriggs Tso shaf6OTib (PROSE) gilisab6605 (BLANKVERSES) dias605 நாவல், அனைத்தும் மேலைத்தேசங்கள் நமக்கு வழங்கிய அருங்கொடைகள் என்பதில் ஐயமில்லை. இவற்றில் நாவல் (NOVEL) என்னும் இலக்கிய வடிவம் தோன்றி வளர்ந்த தேசம் இத்தாலியாகும். 1350ல் BOCCACCIO) sissuri NOVELLA STORIA OFFRESH STORIES STSiro 56osofisò DECAMERON என்னும் தன் கதைத்தொகுதிகளை நூலாக வெளியிட்டார் என சென்னை லொயலாக் கல்லூரியின் தமிழ்ப் பேராசிரியர் திரு. எம். ஆர். அடைக்கலசாமி அவர்கள் தமது இலக்கிய வரலாறு எனும் நூலில் குறிப்பிட்டுள்ளார். (பக்கம் 129)
நாவல் என்னும் சொல் NOVELLA என்னும் லத்தின் சொல்லிலிருந்து பிறந்ததாகும். இச் சொல்லுக்குப் புதிது, இளமை என்று பொருள் உண்டு. நாவல் புதினம் என்று அழைக்கப்படுவதும் மேற்படி லத்தின் சொற்களின் பொருளை ஒட்டியே என்பது வெளிப்படை. ஆயினும், கலாநிதி நா. சுப்பிரமணியன் அவர்கள் நாவல், புதுமை எனப் பொருள் தரும் நோவா (NOVA) எனும் இந்து ஐரோப்பிய மூலமொழியின் சொல்லடியிலிருந்து உருவாகியது என்பார். ( ஈழத்து தமிழ் நாவல் இலக்கியம் பக். 1).
ஆனால் புதுமை என்பதும் புதிது என்பதும் வெவ்வேறு பொருள் தரும் சொற்கள். புதுமை (அற்புதம்) என்பது ஆங்கிலத்தல் MIRACLE என்றும் லத்தின் மொழியில் (MIRACULUM) என்றும் குறிக்கப்படும். புதிது என்னும் தமிழ்ச் சொல் ஆங்கிலத்தில் NEWNESS அல்லது FRESH என வழங்கும்.
நாவல் எனும் சொல்லின் தொடர்பாக இந்தோ ஐரோப்பிய மொழிகளில் ஒன்றான வடமொழியில் உள்ள நவ என்னும் சொல்லுக்கும் அதே குடும்பத்தைச் சேர்ந்த லத்தின் மொழிச் சொற்களான NOVUS அல்லது NOVTAS என்னும் சொற்களுக்குமிடையே இருக்கும் நெருக்கம் அவதானத்திற்குரியது.
S

Page 10
நாவல் என்பது வசதியான ஒரு மாடிவிட்டைப் போன்றது, என்னும் எழுத்தாளர் அனுராத ரமணனின் கூற்று சரியானதோர் வரைவிலக்கணம். ஒரு நாவலாசிரியர் தனது விருப்பம் போல் நிகழ்வுகளை உருவாக்கவும், அவற்றை விரிவாக்கவும், கற்பனை வர்ணனைகளில் ஈடுபடவும் நாவல் அவருக்குப் பெரிதும் இடம்கொடுக்கிறது. அதாவது ஒரு நல்ல காவியத்தில் இருப்பது போன்ற ரசனை உணர்வுகளை நிரப்பி அவரால் ஒரு நாவலைப் படைக்க முடிகிறது. அத்தகைய நாவல்கள் வாசகர்கள் மனத்தில் அழியாச் சித்திரங்களை ஆக்கிவிடுகின்றன. கல்கியின் சிவகாமியின் சபதம் இதற்கு g(b நல்ல எடுத்துக்காட்டு.
தமிழ் நாவல் இலக்கியத்தின் தோற்றம் மயூரம் வேதநாயகம்பிள்ளை அவர்களின் பிரதாப முதலியார் சரித்திரம் எனும் நாவலுடன் ஆரம்பமாகின் றது. பிள்ளை அவர்கள் எழுதிய இன்னுமொரு நாவலின் பெயர் சுகுணசுந்தரி என்பதாகும். இவற்றைவிட ராஜமய்யரின் கமலாம்பாள் சரித்திரம், மாதவைய்யரின் பத்மாவதி சரித்திரம், பண்டித நடேச சாஸ்திரியாரின் தினதயாளு என்பன முன்னோடி நாவல்களில் சிலவாகும்.
தமிழ் வாசகர்களுக்கு வரலாற்று நவீனம் (Historical Novel) எனும் புதிய இலக்கியவகையைத் தந்த பெருமை கல்கி என்றழைக்கப்படும் பேராசிரியர் கிருஸ்ணமூர்த்தி அவர்களையே சாரும். தமிழகத்தின் “வால்டர்ஸ்காட்’ என்றழைக்கப்படும் கல்கி அவர்கள் மக்கள் மனதைக் கொள்ளை கொள்ளும் விதத்தில் கதையை நடத்திச் செல்வதில் வல்லவர். பேராசிரியரின் நாவல்களை, ஜனரஞ்சகமானவை (ROMANTIC) என்றும் மர்ம வேட்கை கொண்டவை என்றும் சில விமர்சகர்கள் எழுதியபோதும் அவரது நாவல்கள் சில அழியாப் புகழ்பெற்றவை.
தமிழ் இலக்கிய வரலாற்றில் பாரதி, பாரதிதாசன், புதுமைப்பித்தன் போல் சிறப்பானதோர் இடத்தைப் பிடித்துக்கொண்ட கல்கி அவர்கள் தொடர்கதைகள் (நாவல்கள்) எழுதுவதன் மூலம் பத்திரிகைகள்ை வெற்றிகரமாக நடத்திக்காட்ட முடியும் என்று நிரூபித்துக்காட்டியவர். தமிழக நாவலாசிரியர் திரு. பொன்னிலன் குறிப்பிட்டுள்ளதுபோல (வீரகேசரி 17-07-1996) தமிழ் இலக்கியத்தை மக்கள் இலக்கியமாக்கிய பெருமை கல்கி அவர்களையே சாரும்.
காவியங்கள் செய்யுள் வடிவத்தில்தான் அமைய வேண்டியதில்லை.
உரை நடையிலும் அமையலாம் என்ற கருத்து வடமொழியிலுள்ள அலங்கார
நூல்களில் தான் முதன்முதலில் தோன்றியது எனத் துணிந்து கூறலாம்
எனும் டாக்டர் கா. கைலாசநாதக் குருக்களின் கூற்றுக்கு (வடமொழி
6

இலக்கிய வரலாறு பக். 07) இலக்கிய வடிவங் கொடுத்த முதல் தமிழ் நாவலாசிரியர் கல்கி அவர்களே என்று நாமும் நிச்சயமாகத் துணிந்து கூற முடியும்.
கல்கியியால் பிரசவிக்கப்பட்ட வரலாற்று நாவல்களின் பாணியில் எழுதியவர்களில் சாண்டில்யன், அகிலன், பார்த்தசாரதி (மணிவண்ணன்), கோவி. மணிசேகரன், சோமு, கி. ராஜேந்திரன், ஜெகசிற்பியின் முதலானோர்கள் முக்கியமானவர்கள். இந்நாவலாசிரியர்களில் சாண்டில்யன் வர்ணனைக்குப் பேர் போனவர். இதற்குக் காரணம் அவர் பெற்றிருந்த வடமொழி இலக்கிய அறிவு என்பர்.
மேற்படி வரலாற்று நாவலாசிரியர்களில் கல்கி, அகிலன், பார்த்தசாரதி (மணிவண்ணன்) முதலானோர் படைத்த சமூக நாவல்களான அலைஓசை, பாவை விளக்கு, குறிஞ்சி மலர் ஆகியவை மனித உணர்வுகளை மையமாகக் கொண்டவை. அதனால்தான் அவை ஒருவித பரவசத்தோடு படிக்கப்பட்டன. இந்நாவலாசிரியர்களைப் போல, ஜெயகாந்தன், சிவசங்கரி, வண்ணநிலவன், பொன்னிலன், வாசந்தி, சுஜாதா, அனுத்தம்மா, பிரபஞ்சன், லட்சுமி, ராஜம் கிருஸ்ணன், நில. பத்மநாதன், இந்திரா பார்த்தசாரதி முதலானோரின் சில நாவல்களும் மக்கள் உள்ளங்களில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியவை என்பது வரலாறு.
நாவல் உலகின் முன்னோடிகளில் ஒருவரான கல்கியின் படைப்புக்கள் மட்டுமன்றி, அத்துறையில் அவரது வாரிசுகளாக விளங்கிய அகிலன், பார்த்தசாரதி, சாண்டில்யன் முதலானோரின் ஆக்கங்களும் ஜனரஞ்சகமானவை என்பதே இன்றைய சில விமர்சகர்களின் திர்ப்பாகும். குறிப்பிட்டதொரு காலகட்டத்தில் வாசகர்களால் பெரிதும் விரும்பிப் படிக்கப்பட்ட மு.வ.வின் நாவல்களையும் அதே விமர்கர்கள் வெறும் போதனை நூல்கள் என்று துக்கிப்போட்டு விட்டதையும் பார்க்கின்றோம். ஆனால், மக்கள் உள்ளங்களில் நிரந்தரமான இடத்தைப் பிடித்துக் கொண்ட எந்த ஒரு இலக்கியத்தையும் எப்படிப்பட்ட மேதாவித்தனமான விமர்சகர்களாலும் எதுவும் செய்ய முடியாது என்னும் உண்மையை கல்கியின் சிவகாமியின் சபதம், அகிலனின் வேங்கையின் மைந்தன், கொத்தமங்கலம் சுப்புவின் தில்லானா மோகனாம்பாள் போன்ற நூல்களின் நிலைத்த வாழ்வு நமக்கு நிதர்சனமாக்குகிறது.
பொதுவாகத் தமிழ் நாவல்களின் பண்பு நலன்களை பின்வரும்
நான்கு அம்சங்களுக்குள் அடக்கி விடலாம். ஒன்று - மனித உறவு
களுக்கிடையே ஏற்படும் உரசல்கள் - இரண்டு - அடக்கு முறைக்கெதிரான 17

Page 11
ஆவேசம். மூன்று - பழமைக்கெதிரான மாறுபட்ட போக்கு நான்கு - அரசியல் பிரக்ஞை. இந்த நான்கு அம்சங்களும் இலக்கிய படைப்டாளியின் மனப்போக்கிற்கேற்ப கூடியும் குmைந்தும் காணப்படுவது இயல்பு.
தமிழக நாவல்கள், மேற்படி அம்சங்களில் சீர்திருத்தம், பிராமணிய ஆதிக்கத்துக்கெதிரான எதிர்ப்பு, இந்திய விடுதலைப் போராட்டம், காந்திய பொதுவுடைமைச் சிந்தனைகள் ஆகியவற்றையே ஆரம்ப காலங்களில் எதிரொலித்தன. ஆனால், தற்போது எல்லாத் துறைகளிலும் அரசியலின் ஆதிக்கம் கொடிகட்டிப் பறப்பதனால் அது நாவல்களிலும் பெருமளவு இடம்பிடித்துள்ளது.
ஈழத்தில் 1956ம் ஆண்டுக்குப் பின்னரே தமிழ்ச் சிறுகதை, நாவல், இலக்கியத்துறையில் இன உணர்வு கூர்மையடையத் தொடங்கியது. அதுவரை மனித உறவுகள் - சிதனப் பிரச்சனை - சாதி எதிர்ப்பு முதலானவையே இலக்கியங்களின் தொனிப்பொருளாக இருந்தன. குறிப்பாக, வடபகுதியின் யாழ் குடாநாட்டில் சாதி உணர்வு மிகத் தடிப்பாக இருந்தமையால், அதனால் பெரிதும் பாதிக்கப்பட்ட வர்க்கத்தைச் சேர்ந்த எழுத்தாளர்கள் கிளர்ந்தெழுந்தார்கள். இந்த எழுச்சி இயல்பானதேயாயினும் அதற்குப் பொதுவுடைமைச் சிந்தனை பெரிதும் காரணமாக இருந்தது. அதுவே அவ்வெழுத்தாளர்களின் படைக்கலமாகவும் மாறியது. குறிப்பிட்ட அவ்வர்க்க எழுத்தாளர்கள் மாக்ஸியக்குடையின் கிழ் ஒன்றுகூடவும் அதுவே வழி செய்தது.
முற்போக்கு எனும் அடைமொழியைக் கொண்டவர்கள் என்ற ஒரே காரணத்திற்காக அவர்களின் படைப்புக்களை சில மாக்ஸியத் திறனாய்வாளர்கள் தாக்கிவிட்டதுமுண்டு. இக் கூற்றினை டொமினிக் ஜிவாவின் ‘பேராசிரியர் சிவத்தம்பியும் கைலாசபதியும் இல்லை என்றால் நானும் இல்லை டானியலும் இல்லை என்ற சுயமதிப்பிடே நிரூபிக்கவல்லது. (வீரகேசரி 29.06.1996) திறனாய்வாளர்களிடையே காணப்படும் இக்குழு மனப்பான்மை, கலாநிதி. நா. சுப்பிரமணியன் குறிப்பிட்டுள்ளது போல (புதுமை இலக்கியம் ஏப். யூலை. 1994. பக்.17) ஈழத்தில் மட்டுமன்றித் தழிழகத்திலும் காணப்படுவது வெளிப்படை. இதன் காரணமாக எந்தக் குழுவிலும் இணையாத திறமையான எழுத்தாளர்கள் வேண்டுமென்றே தொடர்ந்து இருட்டடிப்புச் செய்யப்படுகிறார்கள் என்பதை யாரும் மறுக்கப் போவதில்லை.
இலங்கையில் தமிழர்கள் எண்ணிக்கையில் அதிகமாக வாழும் இன்னுமொரு பிரதேசமான கிழக்கிலங்கை, குறிப்பாக - மட்டக்களப்பு
8

யாழ் குடா நாட்டுச் சமூக அமைப்பிலிருந்து பெரிதும் மாறுபட்டிருப்பதால் பொதுவுடைமைச் சிந்தனை இங்கு பெரிதும் போற்றப்படவில்லை. எனவே, இங்கு தோன்றிய இலக்கியங்களைப் பெரும்பாலும் மனித உறவுப் பிரச்சனைகனே ஆட்கொண்டிருந்தன. முற்போக்குக் கோஷமும் எதிரொலிக்கவில்லை.
ஈழத்து நாவல் இலக்கிய வரலாற்றில் இளங்கிரன், டானியல், செ. யோகநாதன், எல். பொன்னுத்துரை, செங்கை ஆழியான், நந்தி, கே. எஸ். ஆனந்தன், வ. அ. இராசரத்தினம் அகஸ்தியர், பெனடிக்ற் பாலன் செ. கணேசலிங்கன், தாமரைச்செல்வி, நா. பரமேஸ்வரி முதலானவர்கள் தங்கள் முத்திரையை அழுத்தமாகவே பதித்துள்ளார்கள். எனினும் உலக நாவல்களின் தரத்துக்கு நமது நாவல்கள் உயரவில்லையோ எனும் உண்மை நம்மனத்தை உறுத்தவே செய்கின்றது.
இந்திய சுதந்திரப் போராட்டத்தை இனங்காட்டும் விதத்தில் படைக்கப்பட்ட தமிழ் நாவல்களில் கல்கியின் அலை ஓசை, ர. சு. நல்ல பெருமாளின் கல்லுக்குள் ஈரம், அகிலனின் புதுவெள்ளம், ஆகியவை குறிப்பிடத்தக்கவை. இந்நாவல்கள் தோன்றக் காரணமாக இருந்த பின்புலம் ஆழல் இன்று இலங்கைத் தமிழர் வாழும் பிரதேசங்களில் உருவாகி யுள்ளமையை உலகமே அறியும். இந்தச் ஆழ்நிலையை அடித்தளமாகக் கொண்டு ஏற்கனவே எண்ணற்ற புதுக்கவிதைகளும், பல சிறுகதைகளும் தோன்றிய அளவுக்கு (இவையெல்லாம் தரமானவையா என்பது வேறு விடயம்) நாவல் இலக்கியம் உருவாகவில்லை என்பதும் கசப்பான உண்மையே.
இலக்கிய ஆக்கம் என்பது வேறொன்றுமில்லை. வாழ்க்கை மறுபடியும் படைக்கப்படுகிறது எனும் தகழி சிவசங்கரன்பிள்ளையின் கூற்று உண்மையானால் இன்றைய ஈழத்தமிழர் வாழ்க்கை மறுபடியும் ? :ருள்ள வார்த்தைகளால் திட்டப்பட்டே ஆகவேண்டும். அதற்கான களம் ஆயத்த மாகவே இருக்கின்றது.
இந்நாட்டில் மேலதிகமாக 14 ஆயிரம் சிங்கள் ஆசிரியர்கள் இருக்கும் அதேவேளை 10 ஆயிரம் தமிழ் ஆசிரியர்களுக்குத் தட்டுப்பாடு நிலவுகிறது.
- த. மகாசிவம் (வீரகேசரி 16-2-22)
19

Page 12
மட்டக்களப்பு மண்ணின் மறுமலர்ச்சி இதழான போது அண்மையில் தான் என் கரம் கிட்டியது. முதற்கண் இதழ்க் குழுவிற்கு என் நன்றிகள். எமது பிரதேசத்தில் இருந்து வெளியாகும் இந்தக் குட்டி இதழைப் பார்த்தபோது மகழ்வாக இருந்தது.
தங்கள் மலரின் முகப்பில் சர்வசமய சமரஸம் சமாதானம் தரும் என்ற வாக்கியம் மனதிற்கும் கண்ணுக்கும் விருந்தாக இருந்தது. வாசகர் வாசகம் பகுதியில் சர்வ மதத்தினரதும் வாழ்த்து இடம் பெற்றதும் மகிழ்வான விடயம். உள்ளே பாரதியின் முகம் கண்டதும் முழுக்க முழுக்க தமிழ் மணம் விசத்தான் போகிறது என்ற ஆவலில் பக்கங்களைப் புரட்ட புரட்ட தரமான விடயங்களை வாசித்து இன்புற்றேன். தமிழ் வளர்ச்சிப் பணியில் கிறிஸ்தவ துறவியான அருட்சகோதரர் மத்தியூ அவர்கள் பற்றிய கட்டுரை நல்ல விடயங்களை உள்ளடக்கியிருந்தது. அதைவிட மேலாக அவர் பெற்ற பட்டங்கள் ஆன்மீக வாழ்வின் அருட்பணியிலும் அவரது கல்வி வாழ்க்கை மகத்தானது.
V நமக்கு வேண்டும் நம்பிக்கை யில் நல்ல உளவியல் சம்பந்தப்பட்ட வினாக்களும் வரவேற்கத்தக்கன. இன்னும் பல்வேறு விடயங்களை இவ்விதழ் சுமக்க வேண்டும் எனப் பணிவாக வேண்டி வாழ்த்துகின்றேன். இம் மலர் பூக்க மணம் பரப்ப,
20
 
 

தாத்தாவுக்குத் தொல்லை தாங்கமுடியாமல் போய்விட்டது. அவரது பேரப்பிள்ளைகள் ராகவனும், நித்தியாவும் எப்போது பார்த்தாலும்
சண்டை பிடித்தனர். சின்னச் சின்ன
விசயங்களுக் கெல்லாம் எதிர் எதிராய் நின்று அடம்பிடித்தனர். மொத்தத்தில் ஒற்றுமை அவர்களிடத்தில் கர்ணாமல் போய்விட்டது. இவ் வளவிற்கும் அவகளது வயது குறைவுதான் . ராகவனுக்கு பதி து 6hj uU 5í , நித்தியாவுக்க எட்டு. இவர்களை எப்படியாவது
(3) 60)
99 IB
டும் .
போது இப் படி என்றால் ... வளர்ந்தால் . நினைக்கவே தாத்தாவுக்குப் பயமாக இருந்தது.
(கலாமணி ரஜீவ் மட்டுநகர்)
ராக வனையும் , நித் தியா வையும் அழைத்தார் தாத் தா. மரக் குச்சிகள் எடுத்துவரும் படி கூறினார். ஒரு குச்சியைக் கொடுத்து உடைக்கச் சொன்னார். ராகவன் படு சுட்டி. தாத்தா சொல்ல வரு வதை உடனே புரிந்து கொணி டான் , இருவரும் இலகுவாக அதனை உடைக்க, கட்டாக்கிக் க்ொடுத்தார் தாத்தா. அவர்களால் உடைக்க முடியவில்லை. ‘பாத்திங்களா ஒரு குச்சிய லேசா உடைச்சிங்க, பல குச்சிகள் ஒன்றா இருக்கக்குள்ள அத அழிக்க ஏலாம போயிட்டுது. இதுதான் ஒற்றுமையின் பலம். நீங்கள் இப்படி. தாத்தா முடிக்க வில்லை. ராகவன் அக் கட்டுக் குச் சியை தூக்கிக்கொண்டு சமையலறையை நோக்கி ஓடினான். தாத்தாவுக்கு ஒன்றும் புரியவில்லை பின்தொடர்ந்
தார். சமையலறை அடுப்பில் அக் குச்சிகளைப் போட்டான் ராகவன். "இப்ப பாத்திங்களா தாத்தா. இப்படி ஒத்துமையா இருந்த குச்சிகள இந்த நெருப்பு அழிச்சிட்டது. இப்ப மட்டும்
ஒற்றுமையின் பலம் எங்க "தாத்தா
ujTëbab juyú குச் களும்
21
என்றான் ராமு.
தாதி தா விக் கலித் துப்
போனார். பதிலை மூளை கொண்டு
தேடினார். ’ திடீரென ஞாபகங்கள் அவரது
Լ 6ծ) {ք ա மூளையை வந்திடித்தன. ஐந்து வருடங்க ளுக்குமுன் யாழ்ட்டாணத் தில் அவர்களது நான்கு பிள்ளைகளின் குடும்பம் - ஒற்றுமையாக மனமகிழ்ச்சி யுடன் வாழ்ந்தன. திடீரென ஒருநாள் விழ்ந்த செல் வீச்சுக்கள், வெட்டுக்கள். இதனால் இறந்துபோன அவரது மனைவி, பிரச்சினை வலுத்ததால் வெளிநாடு பறந்த அவரது நான்கு பிள்ளைகளின் குடும்பம், எல்லாம் சிதறி அவர் தனது கடைசி மகளின் குடும் பத்தோடு மட்டக் களப்புக்கு இடம்பெயர்ந்தது. இவை எல்லாம் சங்கிலிக் கோவையாக வந்தன. எவ்வளவு ஒற்றுமையாக இருந்தனர் அவரது பிள்ளைகள். இப்போது சிதறி
ஒன்று, அமெரிக்கா, இன்னொன்று 85 6 ft 6T 6i (3.... எல் லாபம் பாழாய்ப்போன போரால்!
திடீரென்று நிகழ் காலம் வந்தார் தாத்தா. “உம்மதாண்டா ($uj[[T. அழிக்கிறவங்க இருக்கமட்டும் ஒற்றுமையா இருந்து எந்த பயனுமில்ல’ பேரனை கட்டிக்கொண்டு அழத்தொடங்கினார் தாத்தா.

Page 13
உலக சுகாதார நிறுவனம் (WHO) வெளியிட்டுள்ள ஒரு திருக்கிரும் செய்தி. உலகில் ஒவ்வொரு பத்து நொடிக்கும் ஒருவர் புகையிலை சம்பந்தமான Gp6ru IIrao இறக்கிறார். இன்னும் 30 வருடத்தில் வருடத்திற்கு ஒரு கோடிட்பேர் இறப்பார்கள். 1990
ஆரம்பம் வரை புகையிலை தயாரிப்புகளால் வருடத் திற்கு 30 இலட்சம் பேர் இறந்திருக் கிறார்கள். இது வரும் வருடங்களில் 70 இலட்சம் வரை உயரும். அமெரிக்கா, கனடா, டென்மார்க், பிரிட்டன் ஆகிய நாடுகளில் தான் பெண்கள் அதிகம் புகையிலைப் பொருட்களை பயன்படுத்தி உயிரை இழக்கிறார்கள்.
టి
لاالطانٹرنیٹ (انٹرنیشنل !!ن
25 Gaьптцp coфGDóг сb களுக்கு முன்பு உலகில் சக்தி
வாய்ந்த மிகப்பெரிய எரிமலை வெடித்திருக்கிறது. இது 1815ம் ഷങ്ങ് (b தம் போராவில் ஏற்பட்ட எரிமலை வெடிப்பைய் போல முப்பதாயிரம் மடங்கு அதிகம் ஆகும். இதனால் டைனோசர் போன்ற உயிர்கள் அழிந்து போயின. கடல் கொதித்து நீரிலிருந்த ஒக்ஸிஜன்களை அகற்றியது. எல்லாக் கடல் உயிர்களையும் கொன்ற இந்த எரிமலை வெடிப்பின் விளைவு ஒரு மில்லியன் ஆண்டு வரை நீடித்தது. நான்கு கால் விலங்குகளில் உருவில் சிறிய பாலூட்டி இனங்களே மிச்சமாயின.
22
 
 
 
 
 

சில் வியா Uைலிஸ் ஆதம் என்கிற 88 வயது பெண்மணி அல்சைமர் எனர்கிற நோயால் தாக்கப்பட்டு ஹெர்ட்போர்ட்ஷயர் மருத்துவமனையில் சேர்க்கப் பட்டி ருந்தார். இறக்கும் போது யாருக்கா வது உதவி செய்ய வேண்டும் என்ற 6τ60ο 600τώ தோனிறியது. |ව් 2O605 செய்யப்பட்ட வெண்கல ஹெர்குலிஸ் சிலை ஒனர்று அவரிடமிருந்தது. தனக்குப் Uறகு வாரிசு யாருமே இல்லை. மருத்துவ ஆராய்ச்சிக்கும், அது சம்பந்தமான வளர்ச்சிக்கும் இதை விற்று பணம் கொடுக்க முழவு செய்தார். ஹெர்குலிஸ் விலை மூன்று மில்லியனர் பவுண்டு களுக்கு மேல் விலை போனது. அதை விற்ற செய்தி கூட தெரியாமல் கோமா நிலயில் இருக்கிறார். சிலை எக்ஸ்ரே கருவி மூலம் சோதிக்கப்பட்டு உணர்மையான ஹெர்குலிஸ் சிலைதானி எனர்று தெரிந்த பிறகுதானர் ஏலம் போனது.
பூமிக்கு (8up(86b உள்ள ஓசோனி படலம் சூரிய ஒளியிலிருந்து வெளிப்படும் புற ஊதாக் கதிர்களில் இருந்து பூமியைப் பாதுகாக்கிறது என்பது உங்களுக்குத் தெரியும். அதே N போல தரையில் உள்ள ஓசோனர் நமக்கு தீங்கு விளைவிக்கிறது எனர் பது தெரியுமா? ஓசோனும், வாகனங் களில் இருந்து வெளிவரும் ரசாயன தூசுக்களும் சேர்ந்து காற்று மாசுக்களாக மாறுகின்றன. காற்றில் கலந்துள்ள பல வகையான பூக்களின் மகரந்தங்கள் ஆகியவையும் காரணிகளாகி அலர்ஜியை ஏற்படுத்து கினர்றன. இதனால் ஆஸ்த்துமா, மார்புசளி (Uராங் கைழஸ்) மற்றும் நாட்பட்ட சுவாசக் குழாய் அடைப்பு நோய்கள் ஆகியவை வருவதாக லணி டனில் செயினர்ட் ஜோர்ச் மருத்துவ மனையைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளார்கள்.
23

Page 14
| தாய்ப்பாலில் லாக்டோஸ் என்ற స్క్ర్కీ స్నో சர்க்கரைப் பொருள் சுமார் ஏழு சதவீதமும், "சீ% பசும்பாலில் இது சுமார் ஐந்து வீதமும் இருக்கின்றது. இதை செரிப்பதற்கு தேவையான லேக்டேஸ் எனும் என்சைம் சில குழந்தைகளுக்கு உடலில் தற்காலிகமாக இல்லாமல் போவதால் பால் அவர்களுக்கு ஒத்துக்கொள்வ தில்லை. இது வயிற்றுப்போக்கு உட்பட அனேக பிரச்சினைகளுக்கு േ \ காரணமாக இருப்பதாகத் தெரிய வந்துள்ளது. அநேகருக்கு இதனால் அஜிரணம் ஏற்படுகிறது. இதைக் குணப்படுத்த ஹைட்ராலிசிஸ் செய்யப்ட்ட லாக்டோசுடன் குளுக்கோஸ், சேலக்டோஸ் என்ற சர்க்கரைப் பொருள் கலந்து பயன்படுத்த வேண்டும் இதில் பேடா-கேலக் டோஸிடேஸ் போன்ற என்சைம்களை பயன்படுத்தியும் லாக்டோசாஸ் வரும் பிரச் சினைகள் சரி செய்யலாம் என் கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள்.
མ།༽
அடிக் கடி ரத்த ஓட்டத்த தடை ஏற்படுவதால் அநேகர் இறந்து விடுகிறார்கள். இதற்குக் காரணம் ரத்த உறைதலுக்குக் காரணமான செல் கள் மொத்தமாக திரளுவதுதான். இதைத் தடுப்பதற்கான பொருள் ஒன்றை பென்சில்வேனியா மற்றும் ரட்ஜெர்ஸ் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித் துள்ளார்கள். பாம்பு விஷத்தின் புரோட்டீன் 'எகிஸ்டேடின்’ எனப்படுகிறது. இது 49 அமினோ அமிலங்களையும், நான்கு சிஸ்டைன் தடுப்புகளை (Cystime bridges)யும் கொண்டிருக்கும். .ந்த புரோட்டின் கலவையுடன் புரோட்டான் நியூக்கிளியர் மேகனடிக் ரெசோனான்ஸ்' என்ற முறையில் 90 சதவிகிதம் நீர், 10 சதவிகித கடின நீர் ஆகியவற்றை கலந்து சிகிச்சையளிக்கப்படுகிறது. பாம்பு விஷத்தில் உள்ள புரொட் டினைக் கொணர் டு ரத்த உறைதலுக்கு சிகிச்சையளிப்பது இதுவே முதல் தடவை என்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள்.
24
 
 
 
 
 
 
 

சொற்களும் அவற்றுக்குத் தரப்படும் தவறான விளக்கங்களும்
தினகரன் இலவச இணைப்பிதழின் (ஆவணி 19-25-2001) 11ம் பக்கத்தில் NEWS PAPER எனும் ஆங்கிலச் சொல் உருவான விதம் பற்றிக் குறிப்பிடப்பட்டிருந்தது. அது ஒரு தவறான விளக்கமாகும்.
NEWS 61stib GafsTsi) NORTH, EAST, WEST, SOUTH 61solid biT6ing சொற்களின் முதல் எழுத்துக்களால் ஆனது அல்ல என்றும், அச்சொல் NOVUM அல்லது NOVUS எனும் லத்தின் சொல்லில் இருந்தே தோன்றியிருத்தல் வேண்டும் என்றும் ஏற்கனவே ஒரு தமிழ்ப்பத்திரிகையில் எழதியிருந்தேன்.
இச் சொல் போலவே, PAPER எனும் சொல்லும் PAPYRUS எனும் லத்தின் சொல்லில் இருந்தே உருவானது. PAPYRUS எனும் சொல் ஒரு மரத்தைக் குறிக்கும். இம்மரத்தின் பட்டை (Bark)யில் இருந்து பத்திரிகைகளுக்குத் தேவையான காகிதம் செய்யப்பட்டதாலேயே அக்காகிதம் PAPER என அழைக்கப்படலாயிற்று. இது தான் PAPER எனும் சொல் உருவான விதம்.
26-8-2001ல் வெளியான ‘செந்தூரத்திலும் BULB எனும் ஆங்கிலச் சொல் பற்றி தவறான விளக்கம் ஒன்று தரப்பட்டுள்ளது. இது தொடர்பான எனது கருத்து வருமாறு.
BULB 61 solid griassog Gafts ONION DAFFODIL, SNOWDROP எனும் தாவரங்களையே குறித்து நிற்கும். (THE WORDSWORTH, ENCYCLOPEDIA, Page-337) S3 Gafnisi (BULB) BULBUS 61solub suggbai சொல்லில் இருந்து பிறந்தாகும்.
1914ல் தோமஸ் எடிசன் எனும் விஞ்ஞானியால் கண்டுபிடிக்கப்பட்ட ஒரு சிறிய மின்குமிழ், மேற்படித் தாவரங்களில் ஒன்றான வெங்காயத்தின் வடிவத்தினை ஒத்திருந்ததால் அதற்கு BULB என்று பெயரிடப்பட்டதாகத் தெரிகிறது.
மற்றப்படி, BULBUS எனும் லத்தின் சொல்லுக்கும், பல் எனும்
25

Page 15
தமிழ்ச் சொல்லுக்குமிடையே எவ்வித தொடர்பும் இருக்க நியாயமில்லை. சொற்களுக்கிடையே இருக்கும் ஒத்த ஓசை இயல்பை மட்டும் வைத்துக் கொண்டு மொழி ஆய்வில் ஈடுபடல் ஓர் ஆபத்தான விளையாட்டு மட்டுமன்றி, படிப்பவர்களை முட்டாள் ஆக்கும் காரியமுமாகும்.
பல் எனும் சொல்லில் இருந்துதான் BULBOS எனும் கிரேக்கச் சொல் உருவானது என்று செந்துாரம் சொல்வதை ஏற்றுக் கொள்வதாயின் BUD எனும் ஆங்கிலச் சொல், மொட்டு எனும் தமிழ்ச் சொல்லில் இருந்துதான் தோன்றியது என்று ஏன் கூறமுடியாது? (இது போன்ற பல உதாரணங்களைத் தர முடியும்.)
சொல்லாய்வு முறையையே கேலிக் கூத்தாக்கும் இது போன்ற தகவல்களை தினகரன் இலவச இதழில் வெளியிடல் தினகரனின் நம்பகத் தன்மையினை கேள்விக்குரியதாக்கிவிடும்.
- வாகரைவாணன்.
கரும்பும் கறுப்பும்
கருமை அல்லது கறுப்பு எனும் சொல்தான் கரும்பு எனும் சொல்லாகத் திரிந்திருக்க வேண்டும். காரணம் - அத்தாவரத்தினர் (கரும்பு) நிறம் கறுப்பாக இருப்பதுதான். கரும்பு, கன்னல் என்றும் அழைக்கப்படுகின்றது. இதற்கும் (கனர்னல்) கருமை என்று பொருள் உணர்டு. இவை மட்டுமல்ல கரும்புவில் ஏந்தியிருப்பதாகச் சொல்லப்படும் காமனர் நிறமும் கறுப்புத் தானாம்.
நல்ல பாம்பும் நல்ல எண்ணெய்யும்
நல்லம் எனினும் சொல்லுக்கு கருமை என்றும் பொருள் உணர்டு. இதனர் காரணமாகவே, கரிய நிறமான எள்ளில் இருந்து வழக்கப்படும் எண்ணெய், நல்ல எண்ணெய் என்று வழங்கப்படுகிறது. இது போன்றே கரிய நிறத்தையுடைய பாம்பும் (கருநாகம்) நல்ல பாம்பு என்று குறிக்கப்படுகின்றது.
26

புலவர்மணி ஒரு பா ஒரு பஃதது
கலாபூசணம் S.A.E.M. செய்யத ஹஸன் மெளலானா
சங்கத் தமிழ்க் கவிதைச் சாகரத்தில் பேராறாய்ச்
சங்கமித்த ஐயா தரணியிலே - கங்கையைப்போல
காவிரிபோல் சான்றோர் கவிளத்தால் வாழ்வளிக்கும்
பாவிகமா முனிறனுயர் பாட்டு.
இலங்கைவளம் Uாட்டு இதயநெடும் வானக்
கலையரங்கில்நர்த்தனஞ்செய் காட்சி - இலக்கியப் பூஞ்
சோலையிலே பூத்தவொரு சுந்தரப்பூ வண்ணமுன்றனர்
மாலையிலே வாடா மலர்.
கிழக்கிலங்கை மக்கள் தம் கீர்த்திசைால்வெண்பா
அழகியற்கைக் காட்சிகளின் ஆரம் - பழகுதமிழ்ச்
சொல்லாட்சி உள்ளழகு தூண்டுமினர்பக் கற்பனைகள்
எல்லார்க்கும் நெஞ்சையள்ளுமே.
நீதிநூற் கொள்கையினால் நேர்வழிகாணி மக்களெல்லாம் தீதின்றி வாழ்கின்றார் செந்நெறியில் - ஒதக்கேள்
நற்பகவத் கீதைவெண்பா நாவினிக்கப்பாடியதால்
கற்கமனப் பாடமாங் காணி
திருமால் அவதாரம் செங்கமலக் கண்ணனி
பெருமைசேர் காவியத்தைப் பேசும் - ஐயாபோல்
கம்பனி புகழ்பாடிக் கணினித் தமிழ் வளர்த்து செம்மனச் சொற் சித்திரங்கள் தீட்டு.
நாற்பொருளின் நூற்Uயனர்கள் நல்லதமிழ் வெண்பாக்கள்
சாற்றுநெறி கற்Uரிக்கும் சால்பனைத்தும் - ஏற்படுத்தும்
பேதமிலா உள்ளுணர்வால் பாரதப்போர் பேசுமுயர் கீதைநெறித் தத்துவத்தைக் கேள்.
27

Page 16
இந்து முஸ்லிம் மக்கள் இதயத்தின் ஈரிதழ் போல்
சந்ததமும் வாழுமொரு தாய்மக்கள் - என்ற வெண்பா
ஒற்றுமைக்கு காரணமாம் ஒன்றுUடுஞ் சமூகஞ் சுற்றமெனக் காணுமவர் சொல்.
மீன்பாடும் வாவியெழில் வீசுதென்றல் சோலையெழில்
மீன்விழிகாணி பாவையெழில் விஞ்சுகின்ற - தேன்கவியால்
கேட்டுவக்கப்பாடும் புலவர் மணிக்கென்றும் கூட்டுங் கவியரங்கங் காண்.
சீர்விபுலானந்தர் சிறந்த நட்பினர் பேறாய் நற்
பேர் சொல்லும் உண்வாழ்க்கை Uருறவே - ஆர்வமித
Uாட்டும் உரைவளமும் Uைந்தமிழர் நற்பணியும்
நாட்டமுடன் செய்தீர் நயந்து
சங்கத் தமிழ்ப்Uலகை சான்றோர் அவைக்காட்சி
மங்காப் புகழ்சேர்க்கும் வாக்கமுதம் - தங்கியொளிர்
எங்கள் கலைவிளக்கம் ஏபெரிய தம்பிவழி
இங்குபணி செய்வோம் இயம்பு.
பிரபாகரனின் குடும்பத்தின் வாழ்க்கையைச் சாதாரண வாழ்க்கை என்று சொல்ல முடியாது. பிள்ளைகளின் பாதுகாப்பு, அவர்களின் எதிர்காலம் பற்றிய கவலை ஆகியவையே இப்பொழுது பிரபாகரனினதும், அவரது துணைவி மதியினதும் உள்ளங்களில் வேரூன்றிப் போயிருக்கின்றன. தங்கள் பிள்ளைகளுக்கு கல்வி அளித்து அவர்களை ஊக்கப்படுத்த வேண்டுமென்ற சராசரி யாழ்ப்பாணத்தவரின் சிந்தனையும், அபி லாஷைகளும் தான் மதிக்கும் பிரபாகரனுக்கும் இருக்கின்றன.
- அடேல் பாலசிங்கம்
(சுடரொளி - நவம்Uர் 12, 2001)
28


Page 17
சண்டையத நிற்கும் சமாதானம் பிறக்கு
பண்டாவை முருகன் பார்த்தச் சுகம் ே
கண்ணி வெடி யாவு
காணாமல் போகு வன்னியிலே மக்கள் வாய்விட்டுச் சிரிப்
கைதினலாம் வெளிே களிப்போடு வருவ பொய் வழக் கெல்ல போகும் ஒரு பக்க
வெளிநாட்டுத் தமிழர் விரைவாக வருவா மொழிஎல்லாம் மறந் முதல்நின்று படிப்
வட கிழக்குத் தமிழ * வசமாகிப் போகும்
அட, இது நிஜமா?
ஆண்டவனே சே