கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: போது 2002.11-12

Page 1

யேசு கிறிஸ்து

Page 2
எண்ணிய முடிதல் வேண்டும்
நல்லவே எண்ணல் வேண்டும்
திண்ணிய நெஞ்சம் வேண்டும்
தெளிந்த நல்லறிவு வேண்டும்.
- மகாகவி பாரதி
விலை 10/= ஆண்டுச் சந்தா 100/=
வெளியிடு:
PROFESSIONAL PSYCHOLOGICAL COUNSELLING CENTRE
BATTICALOA. N ノ
 

போது - 1 இதழ் - 28
சார்த்திகை - மார்கழி 2002 தோற்றம் 5-5-1998
நிர்வாக ஆசிரியர் (Managing Editor) சுவாமிஜி
போல் சற்குணநாயகம், யேச,
ஆசிரியர்: (Editor) வாகரைவாணன்
நிர்வாகம்: (Management) சி. எம். ஒக்கஸ்
U6Oxf'(D6006OT: ஜெஸ்கொம் அச்சகம்,
இல, 1, இயேசு சபை வீதி,
மட்டக்களப்பு
தொலைபேசி: O65, -23B22, O65-22.983
E-mail ppccG) diamond.lanka.net
ஒளியாக ஒருவர்
ஒளி - இதை வனைக் குறிக்கும் ஓர் அடையாளம். இதன் அடிப்படையி லேயே ஒரு காலம் உலகினர் பல பாகங்களிலும் சூரிய, சந்திர, அக்கினி எனும் ஒளி வழிபாடுகள் தோனிறி யிருத்தல் வேண்டும். இன்றுகூட இந்துக் களிடையே இவ்வழிபாடு பரிரபல்ய மானதொன்றாகும்.
ஒளி எனினும் சொல்லுக்குத் தமிழில் அறிவு என்றும் அர்த்தம் உண்டு. இறைவன் அறிவுமயமானவன். எனவே தானர், தமிழ்மறை தந்த வள்ளுவரும் இறைவனை "வாலறிவனர்' எனறு எழுதினார். மகாகவி பாரதியும் “சுத்த அறிவே சிவம் என்று கூறும் சுருதிகள் கேளிரோ" என்று பாடினார்.
கடவுட் கோட்பாட்டை மறு தலித்த கெளதம புத்தரும் நீண்ட தேடு தலினர் பினர்பே அவர்தம் உள்ளத்தில் ஒளியைக் கண்டடைந்ததாக அறிகின் றோம். இந்த அனுபவமே ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் ஒளி இருக்கின்றது என்று அவரைக் கூற வைத்தது.
கிறிஸ்தவத்திலும் ஒளி இறை வணினர் அடையாளமாகவே கொள்ளப்

Page 3
படுகின்"து. இதனை பழைய ஏற்பாடு (விடுதலைப் பயனம்) இவ் விதம் எடுத்துக் கூறுகிறது.
சீனாய் மலை முழுவதும் புகைந்து கொண்டிருந்தது. ஏனெனில் ஆண்டவர் அதன்மீது வநருப்பில் இறங்கிவந்தார். (விடுதலைப் பயணம் 20:18)
இற்றைக்கு இரண்டாயிரம் ஆண்டுகிளுக்கு முன்பு பலஸ்தீனத்தில் அவதரித்த இயேசு கிறிஸ்துவை ஒளியாகவே காண்கின்றார் அவரது நெருங்கிய சீடர்களில் ஒருவரான அருளப்பர் (1:1-10) கிறிஸ்து இயேசு பெத்லகேமில் பரிறந்த போது வானில் கிளர்ந்தெழுந்த அந்த அதிசய நட்சத்திரம் அவரை ஒளியாகவே அடையாளப்படுத்தியது.
இவற்றுக்கு மேலாக உலகினர் ஒளி நானே (அரு. 9:8) எனினும் இயேசுவின் ஓங்கி ஒலிக்கும் குரலையும் நாம் கேட்கின்றோம்.
ஆம் = இயேசு கிறிஸ்து உலகினர் ஒளியே தான். அதுவும் சாதாரன ஒளியல்ல - சர்வ வல்லமை படைத்த ஒளி
இந்த ஒளி - மனிதனை அவனது எல்லாவிதமான அடிமைத்தனம் எனும் இருளில் இருந்து மீட்டு சுதந்திரம் எனினும் வெளிச்சத்திற்குக் கொண்டு வரப் பிறந்த பேரொளி.
இந்தப் பேரொளி நம்மிடையே இருக்கும் வரை இருள் எனினும் அழமைத்தனத்திற்கு ஏது இடம்?
அன்புடன் வாகரைவாணன்.
O2

உரோமை சாம்ராச்சியத்தின் முதல்ாவது சக்கரவர்த்தி ஒக்ராவியன் அகஸ்து சீசரின் ஆணை ஒன்று அவனது வலதுகரமாக இயங்கும் அக்கிரிப்பாவினால் அறிவிக்கப்பட்டபோது பேரரசின் ஒரு நாடான கலிலேயாவில் ஒரு பெரும் பரபரப்பு ஏற்படுகின்றது. குடிக்கணக்கெடுப்பிற்காக ஒவ்வொருவரும் அவரவர் ஊர்களில் பெயரைப் பதிவு செய்ய வேண்டும் என்னும் அந்த ஆணையினால் சம்பந்தப்பட்ட அனைவரும் அவசர அவசரமாக முட்டை முடிச்சுக்களைக் கட்டத் தொடங்குகின்றனர்.
குன்றுகளும் பாறைகளும் ஒரு பெரும் குவியலாகக் காணப்படும் அந்தக் குறிஞ்சி நிலத்த்ை நெய்தலாக்கிக் கொண்டிருக்கும் யாழ் போன்ற தோற்றத்தை உடைய கெனரத் கடலில் இருந்து எழும் ஒவ்வொரு அலையும், கரையைக் காவல் செய்யும் கற்பாறைகளில் வந்து மோதும் வேகத்தைப் பார்க்கையில் அந்த அலைகளும் ஏதோ ஒன்றுக்காக அவசரப்படுவது போல் தெரிகின்றது.
மண்வாசம் வீசும் கலிலேயாக் கிராமங்களில் நசரேத்தும் ஒன்று. அகஸ்து சீசரின் ஆளுநன் அன்ரிப்பூசினால் ஆளப்படும் கலிலேயாவின்
O

Page 4
நசரேக், சூசை மரியாளின் சொந்த ஊர் இல்லையென்றாலும் இங்குதான் சில ஆண்டுகளாக அவர்கள் வாழ்ந்து வருகிறார்கள்.
இன்றோ நாளையோ ஒரு குழந்தைக்குத் தாயாகவிருக்கும் மரியாளை இயல்பாகவே சோர்வு பற்றிக் கொள்ளுகின்றது. இந்த நிலையில் தனது யூதேயா நாட்டுப் பயணத்தை நினைத்தபோது அவளால் மன உளைச்சல் அடையாமல் இருக்க முடியவில்லை. ஆயினும் யூதேயாவின் எருசலேம் ஆலயத்திற்குச் சமீபமாகத் தான் பிறந்த நிலத்தின் அடியில் உள்ள குகையையும் தனது தந்தையார் சுவக்கின் பெரிதும் விரும்பி வளர்த்த செம்மறி ஆட்டுக் குட்டிகளைத் தனது குழந்தைப் பருவத்தில் தாக்கி வைத்து விளையாடிய அந்தப் பசுமையான காலத்தையும் நினைவுகூர்ந்த அவளின் நெஞ்சில் ஆனந்தக் கடல் பெருக்கெடுக்கின்றது. இந்த மகிழ்ச்சி வெள்ளத்தில் மரியாள் திளைத்திருந்த வேளை, சிவபூசையில் கரடி புதுந்தாற்போல் யூதேயாவை ஆளும் பெரிய ஏரோதுவின் ஞாபகம் வரவே பீதியும் கலக்கமும் அவளை ஆட்கொள்கின்றன.
அகஸ்து சீசரின் ராஜப் பிரதிநிதியாக யூதேயாவை ஆட்சி செய்யும் பெரிய ஏரோது சாதாரணமானவனல்ல. உரோமைப் பேரரசின் ஒரு பெரிய படைத்தளபதி மார்க் அந்தோனியின் உதவியோடு யூதேயாவின் அதிகாரத்தைக் கைப்பற்றிக் கொண்ட அவன் அதர்மம் புரிவதையே ஓர் அரசனின் அழகு என்று கருதினான். பெருமை வாய்ந்த எருசலேம் ஆலயத்தை அவன் மீண்டும் கட்டி எழுப்பினாலும் அவனது "கிரேக்க மண் பற்று யூதரிடமிருந்து ஒருவித வெறுப்பையே சம்பாதித்துக் கொடுத்தது.
ஏரோதனின் ஆட்சியில் இடம் பெறும் சம்பவங்களைக் கதைகதையாகக் கேள்விப்பட்டிருந்த மரியாள் அவற்றையெல்லாம் தனது மனத்திலிருந்து முற்றாகத் துடைத்தெறிய விரும்பியவளாய் எருசலேமின் புகழ்மிக்க தாவீது மன்னனின் இனிய சங்கீதங்களில் ஆழ்ந்து போகின்றாள்
யூதேயா தேசத்து சுவக்கின் அன்னம்மாளின் இல்லறப் பூங்காவில் மலர்ந்த இனிய மலர்தான் மரியாள். எருசலேம் ஆலயத்திற்கு அண்மையில் மாரியில் சூடாகவும், கோடையில் குளிராகவும் இயற்கையாகவே அமையப் பெற்ற ஒரு குகையில் தனது பெற்றோருடன் வாழ்ந்து வந்த மரியாள் அவர்களோடு நசரேத்துக்கு குடிபெயர்ந்து ஆண்டுகள் பல ஆகின்றன. நரேத்துர் மரியாளைப் பொறுத்துரையில் என்றுமே மறக்க முடியாத

கிராமம். அங்குதான் அவளுக்கும் தாவீது பரம்பரையைச் சேர்ந்த சூசை என்பவருக்கும் திருமண ஒப்பந்தம் ஆகியிருந்த சமயத்தில் ஓர் அதிசயச் சம்பவம் நிகழ்ந்தது.
ஒரு நாள். அன்றலர்ந்த தாமரைப் பூவாக அந்தக் காலை வருகின்றது. உதயசூரியனின் பொனொளி பாருடைய உத்தரவுக்கும் காத்திராமல் ஏர் முழுவது பிரவேசிக்கின்றது. புட்களின் ஓசை பூபாளம்
|
மாயாளி இடுப்பில் ஒரு குடத்தோடு பாறை ஒப்றில் இருந்து பாய்ந்தோடும ஊற்று நீரை அள்ளுவதற்காக மெதுவாக நடை பயில் கின்றாள். அவ்வேளை. என்ன ஆச்சரியம்! ஒரு பெரும் சோதி வட்டம் அவளைச் சூழ்ந்து கொள்கிறது. எதிர்பாராத இந்தப் பிரகாசத்தால் திக்குமுக்காடிப் போன மரியாள் ஒரு மானுக்குரிய மருட்சியோடு சுற்றிவரப் பார்க்கிறாள். அங்கே. அவள்முன் ஓர் ஒளிமயமான வடிவம். இதனால் இன்னும் அதிகமாகவே கலக்கமும் பீதியும் அடைந்த மரியாளைப்பார்த்து
“மரியா. அஞ்சவேண்டாம் . கடவுளின் அருளைக் கண்டடைந்துள்ளிர். இதோ கருவுற்று ஒரு மகனைப் பெறுவீர். அவருக்கு யேசு என்னும் பெயரிடுவீர். அவர் பெரியவராக இருப்பார். உன்னத கடவுளின் மகன் எனப்படுவார்.” என்று ஒவ்வொரு வார்த்தையாகச் சொல்லி முடிக்கின்றது.
- ஆதிக்இஒ3ஆஆகுீ )
--
சற்றும் எதிர்பாராத வகையில் தன்முன் தோன்றிய அந்தச் சம்பூரண அழகு வடிவம் சிந்திய வார்த்தைகளால் உடல் சிலிர்த்துப் போன மரியாள், ஐயம் நிறைந்தவளாய் வினவுகின்றாள். “இது எப்படி நிகழும்? நான் கன்னி ஆயிற்றே.”
மரியாளின் இந்த மாற்றம் கேட்டு ஒரு மந்தகாசத்தை வீசிய அவ்வுருவம் மிகத் தெளிவாகவே சொல்கிறது. "தூய ஆவி உன் மீது வரும். உன்னத கடவுளின் வல்லமை உன்மேல் நிழலிடும். ஆதலால் உம்மிடம் பிறக்கப்போகும் குழந்தை தூயது. அக்குழந்தை இறைமகன் எனப்படுவார். கடவுளால் இயலாதது ஒன்றுமில்லை”.
உயிர் உள்ள இந்த வார்த்தைகளைக் கேட்ட மரியாளினால்

Page 5
இப்போது ஒன்றும் பேச முடியவில்லை. அவ்விளங் காலையிலேயே உடல் முழுவதும் வியர்த்தவளாய் இது தெய்வத்தின் நியதி என்று உறுதியாக நம்பிய அவள் ஒரு பெண்ணுக்கே உரிய அடக்கத்தோடு “நான் ஆண்டவனின் அடிமை, உன் சொற்படியே எனக்கு நிகழட்டும்” என்கிறாள். அவ்வடிவம் அக்கணமே மறைந்து போகின்றது.
எந்த ஒரு பெண்ணுக்குமே கிடைத்திராத இறை அருளைப் பெற்றபடி இல்லம் வந்து சேர்ந்த பதினான்கு வயதுப் பாவை மரியாள், தாய் அன்னம்மாளிடம் வழியில் நிகழ்ந்ததை ஒன்றும் விடாமல் உரைக்கின்றாள். அன்பு மகளின் அப்பழுக்கில்லாத வார்த்தைகளைக் கேட்டு உள்ளம் பூரித்த அன்னம்மாளுக்கு எத்தனையோ ஆண்டுகளுக்கு முன்பு எருசலேமில் வாழ்ந்த ஞானி எசாயாவின் சத்திய வார்த்தைகள் நினைவுக்கு வருகின்றன.
அந்த இளம் பெண் ஓர் ஆண் அக்குழந் தைக்கு அவள்
பெயரிடுவாள்”
“இதோ, கருவுற்றிருக்கும் மகனைப் பெற்றெடுப்பாள். இம் மானுவல் என்று
எசாயாவின் தீர்க்க டும் மீண்டும் அசைபோட்ட மட்டும் தெளிவாகத் தெரி பார்த்துக் கொண்டிருக்கும் போகின்றார். இந்த உள்ளம் பூரணமாக நம்பு
சிரியா நாட்டின் வின் காலத்தின் பின் கெடுப்பில் மக்கள் பெரி
தரிசன மொழிகளை மீண் மரியாளின் தாய்க்கு ஒன்று கின்றது. உலகம் எதிர் மெசையா பிறக் கப் உணர் மை யை அவளர்
கிறது.
ஆளுநன் குரோனியோ நடைபெறும் குடிக்கணக் தும் ஆர்வம் காட்டுகின்ற
னர் என்பதை நசரேத்துர் பரபரப்பு வெளிச்சம் போட்டுக் காட்டுகின்றது. பெறு காலத்தை நெருங்கிக் கொன்டிருக்கும் மரியாளும் அவள் துணைவன் சூசையும் யூதேயாவின் பெத் தலகேம் செல்ல ஆயத்தமாகின்றனர்.
அப்பவிடு’ எனப் பொருள் தரும் பெத்தலேகம் தனக்கே உரிய பெருமையோடு தலை நிமிர்ந்து நிற்கின்றது. குறிஞ்சி மணம் வீசும் அந்தக் குக் கிராமத்தில் திராட்சைக் கொடிகள், பந்தல்களில் அங்கும் இங்கும் நடந்து அழகு காட்டுகின்ஜ நீண்டு உயர்ந்து வளர்ந்த ஒலிவ
 

மரங்கள் நிழல் துாவுகின்றன. பேரரசர் தாவீது பிறந்த மண் என்ற பெருமை அதன் ஒவ்வொரு அசைவிலும் பளிச்சிடுகின்றது.
குடிசனக் கணக்கெடுப்பிற்காகத் தங்கள் பெயர்களைப் பதிவு செய்வதற்காக வந்து குவிந்த மக்கள் கூட்டத்தால் பெத்லகேம் நசிந்து கசங்குகிறது. ஊரின் சத்திரமெல்லாம் மக்கள் வெள்ளம்.
கலிலேயாவின் நசரேத்தில் இருந்து, மக்களோடு மக்களாகத் தான் பிறந்து வளர்ந்த பெத்தலேகம் வந்து சேர்ந்த சூசை, பயணத்தால் களைத்துச் சோர்ந்த மரியாளைப் பார்க்கின்றார். அவர் கண்கள் கலங்குகின்றன. எனது ஊரில் எனக்கு இடமில்லையா? என்று தன்னைத் தானே கேட்டுக்கொண்ட அவர் சற்றுத் துரத்தில் அநாதரவாகத் தெரிந்த சுண்ணாம்புக் கற்பாறையில் குடையப்பட்ட ஒரு குகையினை நோக்கி மரியாளின் கைகளைப் பற்றியபடி மெதுவாக நடக்கின்றார்.
இந்த இடமாவது கிடைத்ததே என்ற திருப்தியில் மரியாள் அந்தக் குகையைத் தனது வீடாகவே ஏற்றுக் கொள்கின்றாள். அன்று நள்ளிரவு. பெத்தலேகம் முழுவதுமே, எதிர்பாராத விதமாகத் தோன்றிய பேரொளியில் மூழ்கிப் போகின்றது. மரியாளின் குகைக்கு மேலே மங்கள கான மழை பொழிகின்றது.
“உன்னதங்களில் கடவுளுக்கு மகிமை உண்டாகுக. உலகில் அவருக்கு உகந்தோருக்கு அமைதி உண்டாகுக.”
இதயம் எல்லாம் இனிக்கச் செய்யும் இந்தக் கானம் கேட்ட மக்கள் வெள்ளம் அந்தக் குகையைச் சூழ்ந்து கொள்கிறது. பெத்லகேமில் இருந்து ஓரளவு தூரத்தில் தம் மந்தைகளைக் காவல் புரிந்து கொண்டிருந்த இடையர்கள் ஓடி வருகின்றனர். இவர்களைத் தொடர்ந்து வானில் தோன்றிய அதிசய வெள்ளியினால் வழிநடத்தப்பட்ட ஞானியர் மூவர் விரைந்து வந்து காணவிக்கை வைத்து காலடி பணிகின்றனர்.
“இத்தனை ஆண்டுகளாக எதிர்பார்த்திருந்த உலகப் பேரொளி உதயமாகி விட்டது. உற்சாகத்தால் மக்கள் வெள்ளம் இரைகின்றது. இந்த இரைச்சல் இருளின் மொத்த வடிவமான யூதேயாவின் மன்னன் ஏரோதனுக்கு எட்டுகின்றது. அவன் உறையில் இருந்த வாளை
உருவுகிறான்.
O7 (முற்றும்)

Page 6
எத்தனை காலங்கள்
தேழக் கொண்டிருக்கின்றேன்
எனது முகவரியை,
சொந்தமாகக் காசு கொடுத்து T h−
எனக்குச் சொந்தமில்லையாம்ல)
வாங்கிய - அந்த வீடும்
வடக்கிலும் மலையகத்திலும் வாழும்
என் சொந்தங்களுக்கு முகவரியில்லாத காரணத்தால் அவர்களுக்கு கழதம் எழுத முழயவில்லை,
அரசுக்கு மனு அனுப்U உள்ளேன். - ஆனால் அது நிராகரிக்கப்பட்டுள்ளதாம்
அவசரகால ச்சட்டம் சொல்கிறது.
எனக்கும் ஆசையில்லையா என் காதலி உனக்கென - ஒரு கடிதம் எழுதிப்போட
LL SLLLS S S S SLSS 0S S L0L SLL SLSSL S SLSLS SLS SLSLS LLLLS LLLL S S S0LSS SLSLS SLS SLS SLS S SLLLLS00
ஒரு முகவரியில்லையே.
இந்த கருகிய வருடங்களில் என் இனத்தவர்கள் இப்பழத்தான் முகவரிகளைத் தொலைத்துவிட்டு தேடுகின்றார்கள்.
ஏ. நிலவே உனக்குக் கூட
ஜ
எஸ் பி. பாலமுருகன்
அந்த வானம் முகவரியாய் உள்ளது ஏ. நதியே உனக்குக் கூட அந்தக் கடல் முகவரியாய் உள்ளது எம்மினத்துக்கோ..??
பரவாயில்லை நாளை எனக்கு மயானம் சரி முகவரியாகுமா?
இல்லை இந்தத் தேசத்தில் - இப்போ எமக்கு ஆறடி இல்லை அரை அழகூட சொந்தமில்லையாம் அவர்கள் சொல்கிறார்கள்.
இன்னும் தொலைந்த முகவரிகளைத் தேடுகின்றோம். எதிர்பார்ப்புடன்.
O8
 
 
 
 

அறிய வேண்டிய அரிய மனிதர் - 7
(விருது பெற விரும்பாத பெரும்புலவர்)
e w
நோபல் பரிசு தேர்வு கமிட்டி பெர்னாட்ஷாவுக்கு இலக்கியத் துக்கான நோபல் பரிசு கொடுப்பதாக 1925ம் ஆண்டு அறிவித்தது. இந்த மாதிரிச் செய்தியைக் கேட்டால் சாதாரண இலக்கியவாதியாக இருந்தால், சந்தோஷத்தில் வானத்துக்கே எழும்பி இருப்பார். ஆனால், பெர்னாட்ஷா அப்படி நடந்து கொள்ளவில்லை.
“இந்த வருடம் நான் எந்த நாடகமும் எழுதவில்லையே. அதற்காகத்தான் இந்தப் பரிசா?” என்று தனக்கே உரிய கிண்டலோடு கேட்க. அதற்கு நோபல் பரிசு கமிட்டியினர் “அப்படியில்லை! இந்தப் பரிசு நீங்கள் ஏற்கனவே எழுதிய "செயின்ட் ஜான்’ நாடகத்திற்கு” என்று கூறினார்கள்.
“நடுக்கடலில் தத்தளிக்கும் ஒருவன் கஷ்டப்பட்டு கரைசேரும் வரை காத்திருந்து விட்டுப் பிறகு அவனுக்கு காற்றடித்த ரப்பர் டியூப் கொடுத்தால் எப்படியிருக்குமோ அப்படியிருக்கிறது அந்தப் பரிசு” இப்படிச் சொன்ன பெர்னாட்ஷா அந்தப் பரிசை நேரில்கூட போய் வாங்கவில்லையே.
பிறகு பரிசுத் தொகை இவரின் வீடு தேடி வந்தபோது, அதை அப்படியே இலக்கிய்ப் பரிைகளுக்காக செலவிடக் கொடுத்துவிட்டார். நோபல் பரிசு உட்பட கெளரவப்பட்டம், பதக்கம், பாராட்டு விழா, புகழ் உரை. போன்ற விஷயங்களுக்கு பெர்னாட்ஷா கடுமையான எதிரி.
ஷேக்ஸ்பியருக்குப் பிறகு ஆங்கில இலக்கிய உலகத்திற்கு கிடைத்த பொக்கிஷமாகக் கருதப்பட்ட ஷாவுக்கு “ஆர்டர் ஆஃப் O9

Page 7
மெரிட்” என்ற விருதை வாங்குவதற்காக அறிவிப்பு வந்தது. இதைக்
கேட்டதும் ஷா சொன்ன கருத்து என்ன தெரியுமா?
“இந்த விருதை நானே எனக்குக் கொடுத்துக்கொண்டு பல
வருடங்கள் ஆகிவிட்டன. அதனால் இப்போது தேவையில்லை!”
பேச்சில் சற்றே ஆணவம் இருப்பது மாதிரி தெரிந்தாலும் உலகம் பெர்னாட்ஷாவை ஆணவம் மிக்கவராகப் பார்த்ததே இல்லை. தனது கருத்து உறைக்க வேண்டும் என்பதற்காகத்தான் இப்படிச் சொல்லியிருக்கிறார்! என்றே அவரின் கருத்தை எடுத்துக்கொண்டது.
ஷா புகழின் உச்சத்தில் இருந்த சமயம். ஷாவின் நாடகங்கள் நாவல்கள் தவிர அவர் என்ன பேசினாலும், செய்தாலும் அது பத்திரிகைச் செய்தியானது. பிறகு இவை தொகுக்கப்பட்டு சரமாரியாகப் புத்தகங்களாக வெளிவந்தன.
பெர்னாட்ஷா நாடகம் எழுத வருவதற்கு முன்பு இசை நிகழ்ச்சிகளின் விமரிசகராக இருந்தார். ஷாவே நன்கு பாடக்கூடியவர். சிறுவனாக இருந்தபோது பக்கத்து வீட்டிலிருந்து ஜார்ஜ்லீ என்பவரிடம் அவர் இசை பற்றிய பல விடயங்களைக் கற்றுக்கொண்டார். பார்வையாளர் பக்கம் ஷா உட்கார்ந்திருப்பதைப் பார்த்தாலே பல இசைக்கலைஞர்களுக்கு ஜூரம் வந்துவிடும். தயவு தாட்சணியமே இல்லாமல் கூர்மையான வார்த்தைகளைக் கொண்ட ஷாவின் இசை விமரிசனம் பல இசைக் கலைஞரைச் செதுக்கி இருக்கிறது.
ஒருமுறை பெர்னாட்ஷா வழக்கம் போல ஒரு இசை நிகழ்ச்சிக்குச் சென்றிருந்தார். இசைக் கலைஞரோ திராபையாக வாசித்துவிட்டுப் பவ்யமாக ஷாவிடம் வந்து, “உங்களை மகிழ்விக்க bToi Gloirs.T Gla-Liu (3616)ii (Gio Gigiru Gog, "What shall I play next என்று ஆங்கிலத்தில் கேட்ட வடிா சொன்ன பதில் Dominoes' (கோலிக்குண்டு மாதிரியான ஒரு விளையாட்டு).
வடிாவின் விமரிசனம், கிண்டல், நையாண்டி போன்ற விஷயம் இந்த உலகில் ஒரே ஒரு நபரிடம் மட்டும்தான் எடுபட்டதில்லை.
1)

அவர் பிரிட்டிஷ் பிரதமராக இருந்த இலக்கியவாதி வின்சன்ட் சர்ச்சில். ' ஒரு முறை ஷா தன் நாடகத்திற்காக இரண்டு டிக்கட்டை ஒரு கவரில் போட்டு அத்துடன் "உன் நண்பரையும் அழைத்து வரவும். அப்படி - ஒருவர் இருந்தால்” என்று எழுதியிருந்தார். அதற்கு சர்ச்சில். இ என்னாள் உங்களின் நாடகத்திற்கு வரமுடியாது. அதனால் ந ဓါးနှီf அனுப்புங்கள் - அதுவரை நாடகம் நடந்தால்” என்று எழுதி டிக்க்ட்டை அனுப்பிவிட்டார்.
பத்திரிகையில் இசை விமரிசனம் எழுதிய ஷா, நாடக விமரிசனம் எழுத ஆரம்பித்தார். பிறகு நாமே ஏன் நாடகம் எழுதக்கூடாது என்றெண்ணி நாடகங்கள் எழுதத் தொடங்கினார் Candida, The devils Disciple, Arms and the man GLITsing BITLEE1355it Gu(5th Labog சம்பாதித்துக் கொடுத்தன. இந் நாடகங்களில் இடம்பெற்ற கருத்தினைப் பார்த்த இங்கிலாந்து மக்கள் "ஷாவை தம்நாட்டின் தத்துவ மேதை எனப் போற்றினர்” “பிரிட்டனின் பிளேட்டோ - என்று புகழ்ந்தனர். இத்தனைக்கும் 1856ம் ஆண்டு பிறந்த வடிா பள்ளிப் படிப்பைக்கூட முழுமையாக முடிக்காதவர். விளையாட்டில் ஆர்வம் இல்லாதவர். அதே சமயம் பத்து வயதைக் கடப்பதற்குள், பைபிள், ஷேக்ஸ்பியர் போன்ற புத்தகங்களைப் படித்தவர். சின்ன வயதில் மற்றவர்களுடன் பேசப் பயப்படுபவர். பேசுவதென்றால் கேட்கவே வேண்டாம். இதே ஷா தான் பிற்காலத்தில் சிறந்த சொற்பொழிவாள ரானார்.
ஷாவின் வாழ்வில் புரிந்து கொள்ளாத ஒரு விடயம் உண்டு. ஷா தனக்கு 42 வயது ஆகும்வரை திருமணம் செய்யவில்லை. கடைசியில் அவர் தன்னைப்போல் கார்ல் மார்க்ஸின் கருத்தில் ஈடுபட்ட கரோனெட் என்ற இளம் பெண்ணை திருமணம் செய்தார். மது, சிகரட் போன்ற தியபழக்கத்திற்கு இடம்கொடாத ஷா மனைவிக்குக்கூட கடைசி வரை தன் படுக்கையில் இடம் கொடுக்கவில்லையாம்.
(வாவ் 2000)
1

Page 8
நீநடப்பதற்கு தரையான எண்னை al ஓங்கி மிதித்தாய் நான் உனக்காக தீமிதித்தேன்.
நான் பூக்கிள் தந்த போது - நீ வீசிச் சென்றாய் நீஎச்சில் உமிழ்ந்த போது நான் ஏற்றுக்கொண்டேன்.
உனக்காக எண் சந்தோஷத்தை எல்லாம் தள்ளி வைத்தேன் உன் சந்தோஷத்திற்காக எண்னையே ரீதள்ளி வைத்தாய்.
நீஎண் தூக்கத்தினைக் கெடுத்தாய் நான் உனக்காகத் தாலாட்டுப் பாடினேன்.
நீஉன்னை கண்ணாடியில் பார்த்தா நான் எண்னை உண்ணில் பார்த்தேன்.
எண் தலைகுனிவைத் தாங்கிக் கொண்டேண் நீதலைகுனியாமல் பார்த்துக்கொண்டேன்.
நீஎண்னை அவமதித்து சந்தோஷம் கண்டாய்
ஆனால் - அவமானத்திற்காக நான் -2 S)த்திற் ந (செல்வி சரிதா تک d56).J60)6OUUU656.606). ལ། །ཟ ニイ ஏனென்றால் உனக்கு நான் நண்பன் இல்லை என்றாலும் எனக்கு நீதானி நண்பன்.
12
 
 

இறைவனின் மனித அவதாரமே
யேசு கிறிஸ்து
N אחווה)). FD 5 5 வரலாற்றினை மாற்றி அமைத்த ஒ W. ) பெரும் சக்தியாக விளங்குபவர் இயேசுகிறிஸ்துட\? இதனை கி.மு. கி.பி. என ஆண்டுகள் வகுக்கப்பட்டதிலிருந்து நாம்
உணர்ந்து கொள்ளலாம்.
இத்தகைய சிறப்புக்குரிய கிறிஸ்துவின் வாழ்க்கை ஒர் உயர்ந்த புனித நாடக இலக்கியத்தைப் போன்றதாகும். ஒரு நாடக இலக்கியம் முதல், இடை, முடிவு என்னும் மூன்று பகுதிகளைக் கொண்டதாக இருக்க வேண்டுமென கிரேக்கப் பேரறிஞன் அரிஸ்டோட்டில் கூறியுள்ளதுபோல கிறிஸ்துவின் வாழ்வும் அவதாரம், ஆயத்தம், பணி, போராட்டம், வெற்றி என்னும் ஐந்து அங்கங்களைக் கொண்டதாக விளங்குகின்றது. இவற்றில் அவதாரம் என்னும் ஆரம்பப் பகுதி இரண்டு நற்செய்தியாளர்களினால் (மத்தேயு, லுக்காஸ்) மட்டுமே எடுத்துரைக்கப்படுகின்றது. ஏனைய இருவரும் இதுபற்றி எழுதாததற்கு வேறு நோக்கம் இருந்திருக்கக்கூடும்.
இறைவன் மனிதனான நிகழ்வே இயேசு கிறிஸ்துவின் வாழ்க்கை வரலாறாகும். இந்த வரலாறு மனித மீட்பையே மையமாகக் கொண்டது. இயேசு கிறிஸ்து என்னும் இரண்டு பெயர்ச் சொற்களும் இரட்சணியம் - திருநிலை என்னும் பண்பு நலன்களைக் குறிப்பதனால் அவரின் அவதாரத்தின் நோக்கத்தை மிக எளிதாகவே புரிந்து கொள்ள முடியும்,
இயேசுவின் வாழ்க்கையோடு தொடர்புடைய சில அற்புத நிகழ்ச்சிகளைத் தவிர்த்துப் பார்த்தாலும்கூட அவரது வாழ்க்கை ஏட்டின் ஒவ்வொரு வரியும் தங்கமாகவே பிரகாசிக்கின்றது. இறைவனின் மனித அவதாரத்தை அடுத்து வருவது அவரது இறைபணிக்கான ஆயத்தமாகும். அதாவது புனித லூக்காசின் நற்செய்தியின்படி (3:23) இயேசு தமது பணியைத் தொடங்கும்போது அவருக்கு வயது முப்பது.
13

Page 9
பெத்லேகம் என்னும் ஒரு சிறு கிராமத்தில் பிறந்த ஒரு குழந்தை சூழ்நிலை காரணமாக எகிப்து சென்று பின் கலிலேயாவின் நசரேத்தில் தன் வாழ்க்கையைத் தொடங்குகின்றது. இந்த நிலையில் ஒரு பெரும் நீண்ட இடைவெளிக்குப் பின் அந்தக் குழந்தையைப் பன்னிரண்டு வயதுப் பாலகனாக எருசலேம் ஆலயத்தில் சந்திக்கும் , வாய்ப்பு நமக்குக் கிடைக்கின்றது. என்வே முப்பது வயதிற்குட்பட்ட அவரது இளமைக்காலம் பற்றிய வேறு செய்திகள் எதுவும் நமக்குக் கிடைக்காமல் இருந்தபோதும்கூட அந்தக் காலப் பகுதியையே அவரது இறைபணிக்கான ஆயத்த காலப்பகுதி என நாம் கொள்வது மிகவும் பொருத்தமானதொன்றாகும். ஏனென்றால் அத்திபாரம் இல்லாமல் எதுவும் அமைவதில்லை. இயேசுவின் இந்த ஆயத்த காலத்தை (Retreat) புலன்ஒடுக்கம் என நாம் கொள்ளலாம். இயேசுவின் வரலாற்றில் மிக முக்கியமான காலப்பகுதியை புனித லூக்காஸ் ஒரு வாக்கியத்தில் முடித்து விடுவது நமக்கு ஆச்சரியத்தையே தருகின்றது.
எனவே இந்த ஆயத்தகாலப்பகுதி இயேசுவைப் பொறுத்த வரையில் எப்படிப்பட்டதாக இருந்திருக்கும் என்பதை நாம் உய்த்துணர வேண்டுமானால் அவர் பிறந்த யூத இனத்தின் அன்றைய வாழ்க்கை முறைகளை நாம் அறிந்தாக வேண்டும்.
இயல்பாகவே தாம் வாழும் சமுதாயத்தின் சட்டதிட்டங்களுக்கு உட்பட்டு வாழும் தன்மை உடையவர் இயேசு கிறிஸ்து. இதற்கான சான்றுகளை நாம் நற்செய்தி ஏடுகளில் காணலாம். உதாரணத்திற்கு செசாருக்கு வரி செலுத்தலாமா? (மத். 22:17-22) என்ற கேள்விக்கு இயேசு அளித்த பதிலைக் காட்ட முடியும்.
இந்த நல்லியல்பு சின்னஞ்சிறு வயதிலேயே இயேசுவின் உள்ளத்தில் நிச்சயமாக குடியிருந்திருக்கும். மேலும் அவரது தாய், தந்தையரும் அத்தகைய இயல்புகளால் நிரம்பப் பெற்றவர்கள் என்பது வெளிப்படை. எனவே இயேசு தமது குழந்தைப் பருவத்தில் தம்மைச் சூழ இருந்த குழந்தைகளைப் போலவே தமது வாழ்க்கையையும் அமைத்திருப்பார். இதனை மனதில் கொண்டே இயேசுவின் ஆயத்த கால வாழ்க்கை இப்படி இருந்திருக்கலாம் என நாம் கொள்ளலாம்.
14

யூத இனத்தைச் சார்ந்த ஒவ்வொரு குழந்தையும் பாடசாலை சென்று பின்வரும் ஐந்து பாடங்களைப் படித்தாக வேண்டும்.
(அ) Shema (சீமா) எனப்படும் யூத மதக் கொள்கை. இது (Shema) கீபுரு மொழியில் ஒரு வினைச் சொல்லாகும். “கேள்’ என்னும் பொருளுடையது. இதுவே யூத மறை நூலின் முதற்சொல்லாக விளங்குகின்றது.
(ஆ) Hallel என்னும் வணக்கப்பாடல். இதில் 113-118 வரையுமுள்ள பாடல்கள் பரமனைப் பாடிப் பரவுகின்றன.
(இ) "Genesis’ என்னும் மனித இனத்தின் தொடக்க வரலாறு.
(FF) “Leviticus” 6T6örg அழைக்கப்படும் சட்டத் தொகுப்பு.
(உ) மாணவர்கள் அனைவரும் தங்கள் கல்வி சம்பந்தமாக மேற்கொள்ளும் சுய முயற்சி.
அதாவது ஒரு பெயரின் முதல் எழுத்தைத் தொடக்கமாகவும் இறுதி எழுத்தை முடிவாகவும் இடை எழுத்துக்களை இடையிலும் வைத்து அமைக்கும் ஒரு வாக்கியமே சுயமுயற்சி என்று சொல்லப்படும். இத்தகைய ஞான வளர்ச்சியை ஏனைய யூத இனக் குழந்தைகளைப் போல இயேசுவும் பெற்றிருக்கக்கூடிய சூழ்நிலையில், பின்வரும் வழிகளிலும் அவரின் ஆயத் தகால வாழி க் கை மேலும் மெருகூட்டப்பட்டிருக்கலாம். அவ்வழிகள்:
(அ) பெற்ற தாய் ஒருத்தி தன் மகனைப் பெருமைமிக்க ஒருவனாக வளர்க்க முடியும் என்பதற்கு உலக வரலாற்றில் பல சான்றுகள் உள. இதற்கிணங்க தாய் மரியாளிடமிருந்து தனது எதிர்காலப் பணி தொடர்பாக எத்தனையோ அனுபவ மொழிகளையும் பாடங்களையும் இயேசு பெற்றிருக்க முடியும். இது போன்று தனது தந்தையின் தச்சுத் தொழிலிலும் அவர் தக்க உதவியாளனாக இருந்திருப்பார். இதனால் ஏற்பட்ட அனுபவமே “வருந்திச் சுமை சுமக்கிறவர்களே என்னருகே வந்து எனது நுகங்களை எடுத்துக்
15

Page 10
கொள்ளுங்கள். ஏனெனில் அவை மிகவும் இலகுவானவை” என்று அவரைப் பிற்காலத்தில் Cசால்லத் தூண்டியிருக்கலாம். மேலும் தந்தையின் தொழிலினுடாகப் பல்வேறுபட்ட மனிதர்களோடு பழகும் வாய்ப்பு அவருக்குக் கிட்டியிருக்கும். இந்தப் பழக்கமும் அவரது பொதுப் பனிக்குப் பயன்பட்டிருக்கும்.
(ஆ) இயேசு தனிமையை விரும்புபவர். இதற்கான சான்றுகள் நற்செய்தி ஏடுகளில் இருக்கின்றன. எனவே. தாய், தந்தையரோடு அவர் வாழ்ந்த காலத்தில் தனிமையில் இருந்து தனது எதிர்கால வாழ்க்கை பற்றி நிறையச் சிந்தித்திருக்கலாம். இவை தவிர ஆண்டு தோறும் நடைபெற்று வந்த ஜெருசலேம் யாத்திரை. அதையொட்டி ஆலயத்தில் இடம் பெற்ற நிகழ்ச்சிகள் அனைத்தும் அவரது வாழ்க்கையில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியிருக்க வேண்டும். எப்படி?
யூத இனச் சிறுவர்கள் பன்னிரண்டு வயதை எட்டியதும் தங்கள் சமூகத்தில் சில பொறுப்புக்களை ஏற்பது வழக்கமாயிருந்தது. இதன்படி இயேசுவின் காலத்தில் கொண்டாடப்பட்ட வாரங்களின் திருநாள், அறுவடைத் திருநாள், அடிமை மீட்பின் திருநாள் என்னும் முப்பெரும் விழாக்களில் பங்கேற்பதும் அவரது கடமைகளில் ஒன்றாகிவிட்டது. இந்தக் கடமையை நிறைவேற்றும் பொருட்டே தமது பன்னிரண்டு வயதில் தாய், தந்தையரோடு எருசலேம் சென்றார். இங்கே அவர் பெற்ற அனுபவம் அவர் வாழ்க்கையில் ஒரு திருப்புமுனை என்றே
கருதப்பட்டது செம்மறி ஆட்டுக் குட்டியாகும். இது ஒரு புனிதமான பலிப்பொருளாகப் போற்றப்பட்டதால் இதை யாரும் இறைச்சிக் கடைக்காரரிடம் வருங்குனதில்லை. எனவே கோயிலுக்குக் கொண்டுவரப்படும் செம்மறி ஆட்டுக் குட்டியைக் கொன்று அதன் குருதியை இறைவனுக்கு அர்ப்பணித்துவிட்டு வெற்றுடலை குருக்கள் அதற்குரியவர்களிடம் கையளிப்பது அன்றைய ஒரு வழக்கமாகும்.
அன்பே மயமான இயேசுவுக்கு இந்நிகழ்ச்சி நிச்சயம் அதிர்ச்சியைத் அளித்திருக்கும். பிற்காலத்தில் ஆடு ஒன்று காணாமல்
16
 

போனதற்காக அகம் நெகிழ்ந்த ஒருவனைப் பற்றிய கதை ஒன்றை உவமை மூலம் வெளிப்படுத்திய இயேசுவிற்கு இந்நிகழ்ச்சி (உயிர்ப்பலி) பெரும் அதிர்ச்சியாக இருந்திருக்கும் என்பதில் ஐயமில்லை.
இந்நிகழ்வு தவிர அங்கு நிகழ்ந்த இன்னுமொரு சம்பவமும் அவரது இதயத்தைக் கீறி ரணமாக்கியிருக்கும். அடிமை மீட்புத் திருநாள் வாரத்தில் மட்டுமே யூதர்களின் நீதிமன்றம் பகிரங்கமாக நடைபெற்றது. அந்நீதிமன்றத்தில் கூட மறைநூல் அறிஞர் பயனற்ற விவாதங்களிலேயே ஈடுபட்டனர். உதாரணத்திற்கு ஒய்வுநாளில் ஒருவர் எவ்வளவு துரம் நடக்கலாம்; எவ்வளவு பாரத்தைச் சுமக்கலாம்; யாருக்கு விதிவிலக்களிக்கலாம் அளிக்கக்கூடாது என்பன போன்ற உரையாடல்களே அந்த நீதிமன்றத்தில் இடம்பெற்றன. இவ்விவாதங்கள் இயேசுவுக்கு வெறுப்பைத் தந்திருக்கும் என்பதையே லூக்காஸ் நற்செய்தி 2ஆம் அதிகாரம் 46ஆம், 47ஆம் வசனங்களில் நாம் பார்க்கின்றோம்.
இயேசுவின் ஆயத்த காலத்தை வளப்படுத்திய இந்நிகழ்ச்சிக ளோடு இன்னும் சில முக்கிய நிகழ்ச்சிகளையும் நாம் இணைத்துப் பார்க்க வேண்டும். அந்நிகழ்ச்சிகளை மத்தேயு போல் அருளப்பர் தவிர்ந்த ஏனைய இரு நற்செய்தியாளர்களும் குறிப்பட்டுள்ளனர். அவற் றில் ஒன்று இயேசுவின் திருமுழுக்கு, அடுத்தது அவருக்கு ஏற்பட்ட சோதனை. -
ஸ்நாபக அருளப்பரின் வருகைக்கு முன் யூதர்கள் திருமுழுக்குப் பெற்றதாக வரலாறே கிடையாது. எனவே இயேசுவும் அன்றைய யூதச் சமூகத்தின் பழக்க வழக்கங்களுக்கு உட்பட்டு தன்னை மிகவும் தாழ்த்தி திருமுழுக்கினை அருளப்பரிடம் பெறுகிறார். இம்முழுக்கு துT யப் மையரின் அடையாளமாகக் கொள்ளப்பட்டது. இத்துய்மைப்படுத்தல் நிகழ்ச்சிக்குப் பின்பே இயேசுவுக்கு அப்படி ஒரு சோதனை ஏற்படுகிறது. இது உண்மையில் அவரது உள்ளத்தில் நடைபெற்ற ஒரு இயல்பான போராட்டம் என்றே சொல்ல வேண்டும். நன்மைக்கும் தீமைக்கும் இடையே நடைபெற்ற இப்போராட்டத்தில் நன்மையே இறுதியில் வெற்றி பெறுகின்றது. அதாவது இயேசு என்ற தங்கம் சோதனை என்ற தீயிலே புடம் போடப்பட்டு தனது பொதுப் பணிக்கு ஆயத்தமானதையே இந்நிகழ்ச்சி காட்டுகின்றது.

Page 11
திருமுழுக்கு - சோதனை ஆகிய இருபெரும் நிகழ்ச்சிகளாலும் தன்னைத் தயார் பண்ணிக்கொண்ட இயேசு மூன்று ஆண்டுகள் மட்டுமே நடைபெறப்போகும் எதிர்கால இறைபணியை ஆரம்பிக்கின்றார்.
இயேசுவிள் இந்த மூன்று ஆண்டுகால வாழ்க்கையைத் திறந்த புத்தகத்திற்கு ஒப்பிடலாம். நற்செய்தியாளர் நான்கு பேரும் இந்த மூன்று ஆண்டுகால வாழ்க்கையையே பேசுகின்றனர். இந்தச் சமயத்தில் நாம் ஒன்றை மனதிற் கொள்ள வேண்டும். இயேசுவின் முப்பது ஆண்டுகால வாழ்க்கையை நாம் மறைந்த வாழ்க்கை அல்லது ஆயத்த காலம் என்று குறிப்பிட்டால் மிகுதி மூன்று ஆண்டுகால வாழ்க்கையை பகிரங்க வாழ்க்கை என்று சாற்றுதலே பொருந்தும். எனினும் இப்பகிரங் வாழ்க்கை அவரது பணியோடு பின்னிப்பிணைந்தது; பிரிக்க முடியாதது. அதாவது அவர் வாழ்ந்ததே இப்பணிக்காக என்று சொல்லுவதே சாலப் பொருந்தும். எனவே இயேசுவின் மூன்று ஆண்டுகால வாழ்க்கையை வெறுமனே வாழ்க்கை என்று குறிப்பிடாமல் இறைபணி வாழ்க்கை என்று கொள்ள வேண்டும். இந்த இறைபணியின்போது அவர் பயன்படுத்தும் சொற்களிலிருந்தே அவரது வாழ்க்கை எப்படிப்பட்டதாக இருந்தது என்பதனை நம்மால் மிக எளிதில் அனுமானிக்க முடிகின்றது.
ஓர் ஏழைத் தச்சனால் வளர்க்கப்பட்ட இயேசு இறுதிவரை ஓர் ஏழையாகவே வாழ்ந்தார். இதனை பறவைகளுக்குக் கூடும் நரிகளுக்கு வளைகளும் உண்டு. ஆனால் மனுமகனுக்கோ தலைசாய்க் இடமில்லை என்ற அவரின் வார்த்தைகளே நிருபிக்கின்றன. இது போன்றே இயேசு எவ்விதப் பற்றும் அற்றவராக எல்லாம் துறந்தவராக வாழ்ந்தார் என்பதை எழுபத்திரண்டு சீடருக்கு அவர் அருளிய உபதேசத்தின் (லூக்காஸ்-10:1-12) மூலம் நாம் தெளிவாக உணர்ந்து கொள்ளலாம்.
இயேசு எல்லாவிதமான உயர்ந்த பணி புகளையும் கொண்டவராக விளங்கினார் என்பதை அவரது மலைப்பிரசங்கமே எடுத்துக்காட்டுகிறது. எளிமை, தூய்மை, உண்மை, நேர்மை, அன்பு, கருணை, அநீதியைச் சகியாமை, சமத்துவம், தன்னல மறுப்பு, மக்கள் பணி, தியாகம் ஆகியனவே அந்த உன்னதமான மனித நேயப்
18

பண்புகள் என்பதை நாம் மறத்தல் கூடாது. அதன் காரணமாகவே நானே உலகின் ஒளி என்று சொல்லும் தகைமை அவரிடம் தாராளமாக இருந்தது. இருதய சம்பூரணத்தால் வாய் பேசுகிறது என்னும் அவரின் வாக்கிற்கு அவரது எளிய தூய்மையான வாழ்க்கையே நல்ல சான்று.
இயேசு தமது இறைபணியின்.ோது பல புதுமைகளையும் செய்தருளினார்.அவற்றைக்கூட அவர் இறைவனின் மாட்சிமைக்காகச் செய்தாரே தவிர தமது புகழுக்காகவோ பெருமைக்காகவோ செய்யவில்லை. இக்கூற்றினை மத்தேயு 9ஆம் அதிகாரம் 30ஆம், 31ஆம் வசனங்கள் நிரூபிக்கின்றன.
இயேசுவின் இந்த இறைபணி வாழ்க்கையிலே அவரது போராட்டம் , வெற்றி என்னும் ஏனைய இரு பகுதிகளும் அடங்கிவிடுகின்றன. அவருடைய போராட்டத்தை மூன்று விதமாகக் கொள்ளலாம்.
(அ) அன்றைய பெரிய மனிதர்கள் எனக் கணிக்கப்பட்ட குருக்கள் மூப்பர்மாரின் கருத்துக்களோடு அவரால் பல விதங்களிலும் உடன் பட்டுப்போக முடியவில்லை. மோயீசனின் சட்ட திட்டங்களோடு அவர் பெரிதும் மாறுபட்டார். அவரது மலைப்பிரசங்கங்களே இதற்கு நல்ல GFITGörgB. (s) + b) Ldg. 5:38-42)
(ஆ) தமது நற்செய்திகளை விடத் தாம் செய்யும் புதுமைகளே சனங்களைப் பெரிதும் கவருகின்றன என்று அவர் மிகவும் வேதனைப்படுவதை நாம் நற்செய்தி ஏடுகளில் பார்க்கின்றோம். (உ+ம்) 13:10-15)
(இ) உரோமைப் பேரரசின் கீழ் தமது மக்கள் அடிமைகளாக வாழ்வதை இயேசு விரும்பியிருக்கவில்லை என்பதை அவரது நசரேத் செபக்கூட வாசகம் உறுதிப்படுத்துகின்றது. (லூக் 4:19) ஆனால் அவரது இந்தப் போராட்டம் அறவழி சார்ந்ததொன்றாகவே காணப்படுகிறது. இதற்குக் காரணம் அவரது இயல்பும் அவர் இறைவனிடம் வைத்த மிக ஆழமான நம்பிக்கையுமே என்றால் மிகையாகாது.
நாம் நினைப்பதுபோல இயூேசுவின் பாடுகள் அவர் யூதாசினால்

Page 12
காட்டிக்கொடுக்கப்பட்டதிலிருந்து (மக். 26-27) ஆரம்பமாகவில்லை. உண்மையில் அவரது பாடுகள் அவர் பகிரங்க வாழ்க்கையை ஆரம்பித்தபோதே கருவாகிவிட்டது.
அநீதிக்கெதிராகத் தனிமனிதன் ஒருவன் நெஞ்சு நிமிர்ந்து நின்று நடத்திய ஓர் அறவழிப் போராட்டமே இயேசுவின் பாடுகள் என நாம் வகைப்படுத்தலாம். இந்தப் போராட்டத்தில்கூட தான் தோற்றுவிடுவோமோ என்ற ஐயம் அவருக்கு ஏற்பட்டதையே ஜெத்சமனித் தோட்ட நிகழ்வு நமக்கு நமக்கு எடுத்துக்காட்டுகின்றது. (மத். 26:34-40) அப்போதும் அவர் காட்டும் இறைநம்பிக்கை உணர்வு நமக்கு ஒரு சவாலாகவே அமைந்து விடுகின்றது. துன்பம் வரும்போது இறைவனைத் துளசிப்பதையே பழக்கமாகிக் கொண்டுள்ள மானிடப் பூச்சிகளாகிய நாம் எங்கே? இயேசு எங்கே?
பாடுகளின் முடிவில் இயேசு அவரது சீடர்கள் எதிர்பார்க்காத விதத்தில் வெற்றி பெறுகின்றார். இந்த வெற்றியோடுதான் அவரது தெய்வீகத்தன்மை சுடர்விட்டுப் பிரகாசிக்கின்றது.
நம்மைப்போல் முழுமையான மனித இயல்போடு பிறப்பிலிருந்து இறப்புவரை அனைத்து பிரச்சினைகளும் சந்தித்துத் தமது எதிரி களையே (குருக்கள், மூப்பர், சமய அறிஞர்கள்) ஆச்சிரியத்துக்குட் படுத்திய அவர் தமது அவதாரத்தின் நோக்கம் நிறைவேற வேண்டும் என்பதற்காக சிறுமைகளையும், சிலுவை மரணத்தையும் ஏற்றுக் கொண்டார்.
இறுதியில் சிலுவையில் தொங்கிக் கொண்டிருந்தபோது “எல்லாம் நிறைவேறிற்று’ (அரு. 19:30) என்று அவர் உதிர்த்த வாக்கியம் அவரது வாழ்வும், பணியுட் வையகத்தில் முழுமை அடைந்து விட்டமையை நமக்குத் துலாம்பரமாக எடுத்துக்காட்டுகின்றது.
ஆம், இயேசுவின் வாழ்வும் பணியும் ஒன்றையே நோக்கமாகக் கொண்டிருந்தன. அந்த ஒன்று இறைவனின் நற்செய்தியை உலகிற்கு எடுத்துச் சொல்வதே. அதனை முழுமையாக அவர் நிறைவேற்றிவிட்டார் என்பதே கிறிஸ்தவன் ஒருவனுக்குக் கிடைக்கக்கூடிய பெருமையும் வெற்றியும் எனலாம். 2O

Bl
ஒற்றன் சொன்ன செய்தியாஸ் விஜயபாகுவைவிட அதிக விசனமும் ஆத்திரமும் அடைந்தவள் அயோத்தி இளவரசி லீலாவதிதான். இந்தச் சோழர்கள் ஒருகணமேனும் சும்மா இருக்கமாட்டார்களா என்று தன்னைத்தானே கேட்டுக்கொண்ட லீலாவதியின் மனத்தில் சோழரோடு தொடர்புடைய கடந்தகால கசப்பான சம்பவங்களும் பின் ஏற்பட்ட இனிய நிகழ்வுகளும் ஒன்றன்
அதிகாரம் - 3.
歪
పీపు : %რ:* சோழ சாம்ராச்சியத்திற்கு எதிராக ஈழம் நடத்தும் விடுதலைப் போராட்டத்திற்குத் துணை நின்ற வடஇந்திய அரச குமாரர்களில் ஒருவன்தான் அயோத்தியின் இளவரசன் ஜகதிபாலன்.
இந்திய தேசத்தைச் சேர்ந்த ஜகதிபாலன் தங்கள் எதிரிநாட்டு மக்களோடு இணைந்து நின்று தம்மை எதிர்ப்பதைத் தாங்கிக்கொள்ள முடியாத தமிழ் நாட்டுச் சோழசேனை ஈழத்தில் நடந்த போரில் அவ னைக் கொன்றுவிட்டதோடு அவன் மனைவியையும், மகள் லீலாவதியை யும் பிடித்துக் கொண்டுவந்து சோழநாட்டுச் சிறை ஒன்றில் அடைத்து வைத்தது.
சோழ நாட்டின் இருண்ட சிறையில் வாழ்க்கையின் சுகத்தைச் சில திங்களாக இழந்து தவித்த தாயும் மகளும் எப்படியோ அந்தச் சோதனையிலிருந்து தப்பிப் பிழைத்து ஈழம் வந்து சேர்கின்றனர். இவர்களின் வருகையைக் கேள்வியுற்ற விஜயபாகு தன் இதயத்தில் எப்போதோ அமர்ந்துவிட்ட அயோத்தி இளவரசி லீலாவதியைக் காணத் துடித்தான்.
மகாவலிகங்கை என்னும் மாதரசி தனது நீர் எனும் பால் ஊட்டி வளம் செய்யும்ரோகணை நாட்டின் கோகர்ண பிரதேசத்தின் 21

Page 13
வெருகல் என்னும் கிராமம் எல்லாவித வனப்பையும் ஏந்திக் கொண்டு ரிற்கின்றது. அதை ஆசையோடு தழுவியபடி நான்கு குணமுடைய ஒரு இளநங்கை போல, கங்கை, அதன் இரண்டு கரங்களுக்குள்ளும் அடங்கி நடை பயின்று கொண்டிருக்கின்றாள். அந்த அழகிய மாலை வேளையில், மெல்லென வீசிய காற்றுப்பட்டதனாலோ என்னவோ, கூச்சமடைந்த கங்கை இன்னும் ஒதுங்கி ஒதுங்கி நடை பயில்வது ஒரு அழகிய நடனமாகவே மனதை அள்ளுகிறது.
கங்கை நடந்து பழகும் இந்தக் கிராமத்தில் தான் கந்தவேளின் பழம்பெரும் கோட்டம் அமைந்திருக்கிறது. கையில் வேலோடு எப்போ தும் காட்சி தரும் முருகப் பெருமானைத் தினமும் கண்டு துதிக்கத் தன் தாய், தந்தை ஜகதிபாலனுடன் லீலாவதி வந்து போவது வழக்கம். அப்போதெல்லாம் அந்த மண்ணில் குதித்தோடும் கங்காதேவியைப் பார்த்து ஒரு குழந்தை போலப் பரவசப்பட்டிருக்கிறாள்.
ஆனால், சோழர் படையெடுப்பால் தந்தை கொல்லப்பட்டு தானும் தாயும் கைதிகளாகச் சிறைப்பிடிக்கப்பட்டு - தமிழ் நாட்டிலிருந்து தப்பிவந்த பின், இப்போதுதான் தான் முதன் முறையாக அந்தக் கிராமத்திற்கு வந்த லீலாவதி, நதிமங்கையின் பளிங்கு மேனியின் வனப்பிலும், அதன் நடை ஒயிலிலும் தன்னைப் பறிகொடுத்தவளாய் அந்த வெண்மணற் பரப்பில் அப்படியே அமர்ந்து கொள்கிறாள்.
சுற்றிவர உயர்ந்து நிற்கும் மரங்கள், செடி கொடிகள் அவை சுமந்து கொண்டிருக்கும் சுந்தரப் பூக்கள் - அவற்றோடு உறவாடிக் களிக்கும் பொன் வண்டுகள் - மரங்கள் மீது அமர்ந்து மழலை மொழி பேசி அந்தக் காடு முழுவதும் ஒருவித சலசலப்பை உண்டாக்கும் கிளி மைனாக்கள் - பூக்களோடு புரண்டெழுந்து அந்தப் பிரதேசம் முழுவதும் நறுமணத்தை அள்ளி வீசிக் கொண்டிருக்கும் நனி இளங்காற்று - இவை எதனாலும் ஈர்க்கப்படாது நதியின் அழகிலேயே தன் நயனங்களைப் பதித்திருந்த லீலாவதி தன்னை நோக்கி யாரோ வரும் காலடிச்சத்தம் கேட்டு அதிர்ந்தவளாய் எழுந்து ஒதுங்கி நிற்கின்றாள்.
அழகும் தனிமையும் அமைதியும் நிறைந்த அந்த வேளையில் அங்கு வந்தவன் வேறு யாருமல்ல. ரோகனை நாட்டின் அரசன் 22

முதலாம் விஜயபாகு தான். தனது அருகில் வந்து நிற்பவன் அரசன் என்பதை உணர்ந்து கொண்ட லீலாவதியை அச்சமும் நான்னமும் பீடித்துக் கொள்ளவே அவள் முகம் அந்த அந்தி வானத்தைவிட இன்னும் அதிகமாகவே சிவந்து போகின்றது.
அயோத்தி இளவரசியின் சங்கடமான நிலைமையைப் புரிந்து கொண்ட விஜயபாகு - அவளை மேலும் அவஸ்தைப்படுத்தக்கூடாது
என நினைத்தவனாய் - வரலாற்றுக் குறுநாவல
மன்னிக்க வேண்டும், இளவரசியாரே - தங்கள் மாலை வேளைத் தனிமையையும் அமைதியையும் நான் குழப்பிவிட்டேன். என்றான் இதமான குரலில்.
விஜயபாகுவின் இந்த வார்த்தைகள் லீலாவதியின் அவஸ்தையைக் குறைப்பதற்குப் பதிலாக - இன்னும் அதிகரிக்கச் செய்துவிட்டன என்பதை அவளின் காதளவு ஓடிய கண்களே அவனுக்குக் காட்டிக் கொடுத்தன. இதனை நன்கு அவதானித்துக் கொண்ட விஜயபாகு -
“அயோத்தி நாட்டின் இளவரசியாருக்கு என்னதான் அச்சமோ?. என்றான்” இன்னும் இளகிய குரலில்.
அச்சத்தாலும் நாணத்தாலும் அவதிப்பட்டுக் கொண்டிருந்த லீலாவதி - இனியும் பேசாமல் இருப்பது நல்லதல்ல என்று நினைத்தாலும் தனிமையில் இருக்கும் ஒரு பெண்ணிடம் இப்படி வந்து ஒரு ஆண் பேசுவது அழகல்ல என்பதைச் சுட்டிக்காட்ட வேண்டும் என்று நினைத்த அவள் - சுற்றிவளைக் காமல் அதை வெளிப்படையாகவே சொன்னாள்.
“தாங்கள் இந்த நாட்டின் அரசன். ஆனால் நானோ ஒர் பெண்
அதுவும் அந்நிய தேசத்தவள். இந்த நிலையில் முன் பின்
அறிமுகமில்லாத தாங்கள் என்னிடம் நெருங்கி வந்து பேசும் போது நான் அச்சப்படாமல் இருக்க முடியுமா?”
லீலாவதியின் இந்தக் கேள்விஜநல்,சற்றுத் “தடுமாறிப்போன் விஜயபாகு -
23

Page 14
“தனிமையில் இருந்த தங்களோடு அறிமுகம் இல்லாத நான் உரையாட வந்தது தவறுதான் இளவரசி. அதற்குத் தாங்கள் எந்தத் தண்டனை தந்தாலும் ஏற்றுக்கொள்ளச் சித்தமாயிருக்கிறேன்.”
என்றான் ஒருவித தாப உணர்வோடு.
ஒரு நாட்டினை ஆளும் அரசன் தன்னிடம் மன்னிப்புக் கேட்கும் பாவனையில் பேசுவதால் = மனம் நெகிழ்ந்து போன லிலாவதி தலை குனிந்தவாறு -). - "ma-...-as-ar-e-r-le-e, ------.
പ്രrടങ്ങമഭടജ്ള
" " - مصمسيين. سه. ... مم-سسسسسسسسسسس------
நான் ஏதோ உணர்ச்சிவசப்பட்டுப் பேசிவிட்டேன். தயவு செய்து மன்னித்துக் கொள்ளுங்கள்.
என்றாள் தனக்குரிய அதே குரலில்.
லீலாவதியின் இந்த வார்த்தைகளைக் கேட்டு உள்ளங்காலில் இருந் உச்சந்தலைவரை குளிர்ந்து போன விஜயபாகு - சற்று நெருங்கியபடி,
“மன்னிப்பா. எதற்கு மகாராணி.?.” என்றான்.
“மகாராணி.?’ பதற்றத்தோடு கேட்டாள் லீலாவதி.
و و
“ஆமாம். மகாராணிதான். இப்போது என் இதயத்தில் தாங்கள் சம்மதம் தெரிவித்தால் இன்னும் சில நாளில் ரோகனை நாட் 10 ன் மகாராணியாக எண்னோடு சிம் மாசனத் தில் அமாந்திருப்பீர்கள்.”
இந்த வார்த்தைகளைக் கேட்டு உணர்ச்சிவசப்பட்ட லீலாவதி யால் ஒன்றுமே பேசி முடியவில்லை. அவள் ஒரு சிலை போலவே நின்று கொண்டிருந்தாள்.
லீலாவதியின் மெளனம் அவள சம்மதத்தின் அறிகுறி என்று
எண்ணிய விஜயபாகு - நிலத்தைப் பார்த்துக் கொண்டிருந்த அவள்
நிலவு முகத்தைத் தன் இரண்டு கைகளாலும் மெதுவாக ஏந்தினாள்.
ஈடவன் ஒருவனின் ஸ்பரிசத்தை முதன் முறையாக அனுபவித்த
லீலாவதி - அந்த ஸ்பரிசத்துக்குரியவனிடம் கட்டுப்பட்டவளாய்த் தன்னை முழுமையாகவே அவனிடம் இழந்து கொண்டிருந்தாள்.
(இன்னும் வரும்)
24
 

"முற்போக்கு’ எனும் வாசகம் பத் திரிகைகளிலும் கருத்தரங்குகளிலும் மீண்டும் புதுப்பிக்கப்பட்டு வருவதைக் காண்கின்றோம். இந்த வாசகம் ஏன் முன் வைக்கப்பட்டது எனும் கேள்விக்குப் பலரும் பலவிதமான ஏதுக்களை எடுத்துச் சொன்னாலும் - அவை எழுந்த வரலாற்றுப் பின்னணியை யாராலும் மூடி மறைத்தவிட முடியாது என்பது மட்டும் உண்மை.
இலங்கையின் யாழ்ப்பாணக் குடாநாட்டுச் சமூக அமைப்பு ஏனைய பிரதேச சமூக அமைப்புக்களிலிருந்தும் பெரிதும் மாறுபட்டது. இச் சமூக அமைப்பின் ஓர் இலட்சணமாக இன்னும் நீறுபூத்த நெருப்பாகக் கனன்று கொண்டிருப்பது இதன் சாதி முறைமையாகும். இன்றைய அரசியல் சூழ்நிலையில் இவ்வுணர்வு அடக்கி வாசிக்கப்பட்டாலும் - வெளிநாடுகளில் பெருமளவு குடியேறியுள்ள யாழ்ப்பாணத்தவரிடையே இடம்பெறும் சாதிக் கலவரங்கள் இவ்வுணர்வு என்றைக்குமே சாகாது எனும் எதார்த்த நிலையையே சுட்டிக்காட்டுகின்றது.
யாழ்ப்பாணத்துச் சமுதாய அமைப்பில் உயர்ந்த வர்க்கம் எனக் கருதப்படும் வெள்ளாளரின் பிடியில் குடாநாடு முழுவதுமே சிக்குண்டிருந்த காலம் ஒன்றிருந்தது. எனவே இந்தப் பிடியிலிருந்து விடுபட இந்த வெள்ளாளர்களால் தாழ்த்தப்பட்டவர்களாக தள்ளிவைக்கப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்தவர்களில் ரோசமுள்ள ஒரு சிலர் முயன்று கொண்டிருந்த நேரத்தில் முப்பதுகளில் எஸ். ஏ. விக்கரமசிங்க, என் எம். பெரேரா முதலானவர்களால் இங்கு கொண்டு வரப்பட்டஇமதுசாரிச் சிந்தனைகள் அவர்களுக்குப் பெரும் வரப்பிரசாதமாக அமைந்தன. இந்த இடதுசாரிச் சிந்தனைகளால் யாழ்ப்பாணத்து வெள்ளாளர்களிலும் ஒரு சிலர் ஈர்க்கப்பட்டபோது, தாழ்த்தப்பட்ட மக்களுக்கு அது இன்னுமொரு உந்து சக்தியானது.
இச் சூழ்நிலையில்தான் இலக்கியத்தில் ஈடுபாடு காட்டிய தாழ்த்தப்பட்ட மக்களில் சிலர் தமது விடுதலைக்கு ஏற்ற கருவியாக மாக்ஸ் - லெனின் சிந்தனைகளை வரித்துக் கொண்டு அவற்றை

Page 15
அடையாளப்படுத்தும் விதத்தில் இலக்கியத்தில் முற்போக்கு' எனும் e "ாசகத்தை முன்வைத்தனர். உண்மையிலே இவ்விாசகழ
வெள்ளாளரின் பிடியை உடைத்தெறியவும் தாழ்த்தப்பட்ட மக்களை ஓரணியில் திரட்டும் நோக்கத்துடனும் தான் முன்வைக்கப்பட்டது என்பதற்கு டானியலின் கதைகளும் நாவல்களுமே தக்கசான்றாக விளக்குகின்றன. மற்றப்படி, தமிழ் இலக்கியத்திற்கு வளம் சேர்ப்பது இவர்களின் எண்ணமல்ல என்பது தெளிவு.
தமிழ் இலக்கியத்தில் முற்போக்குச் சிந்தனைகள் நாற்பது ஆண்டுகளுக்கு முன்புதான் தலைகாட்டத் தொடங்கியது என்பது வெறும் அபத்தம். ஏனெனில் - இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட சங்க இலக்கியங்களிலே முற்பே முகங்களை நாம் தரிசிக்க முடியும். ? A%878്
பழந்தமிழ் இலக்கியங்களில் பயிற்சியும் அறிவும் இல்லாத முற்போக்காளர் பலர் (டொமினிக் ஜிவா, டானியேல், இளங்கீரன் போன்றோர்) அவ்வணியில் இருந்தமையால் தான் தமிழ் இலக்கியத்தில் முற்போக்குச் சிந்தனைகள் ஏதோ சில தசாப்தங்களுக்கு முன்புதான் தலைகாட்டின என்பது போன்ற மாயையை அவர்களால் உருவாக்க முடிந்தது. இவ்வுண்மையை யாப்பிலக்கண அறிவும் பயிற்சியும் இல்லாமையால்தான் பிச்சமூர்த்தி, கு.ப.ரா. போன்றோர் புதுக்கவிதை போன்ற மாயரூபங்களை உருவாக்கினர் எனும் கைலாசபதியின் கூற்றோடு (இலக்கியத் திறனாய்வு பக்கம் 135) ஒப்பிட்டுப் பார்க்கவேண்டியதொன்றாகும்.
"முற்போக்காளர்' என்று தமக்குத் தாமே முத்திரை குத்திக்கொண்டவர்கள் மாக்ஸ், மாசேதுங் (பின்னாளில்) ஆகியோரின் விசுவாசிகளாய் விளங்கியமையால், தங்களின் சொந்தப் படைப்புக்களை மட்டுமல்ல - பிறரின் இலக்கியங்களையும் . அந்த விசுவாசக் கண்கொண்டே பார்த்தனர் என்பது நிச்சயம். பேராசிரியர்  ைகலாசபதி இக் குழுவின் முக்கியஸ் தர்களில் முதன்மையானவரானபடியால் அவரது இலக்கியத் திறனாய்விலும் மார்க்ஸ் பார்வையே பளிச்சிட்டது. இதன் காரணமாகவே அ. ச. ஞானசம்பந்தன், டி.கே.சி., டாக்டர் மு. வா. ஆகிய அறிஞர்களின் விமர்சனப் பார்வை இவரின் பலத்த கண்டனத்திற்குள்ளாகியது.
மார்க்ஸிஸம் ஒடுக்குமுறைக்கெதிரானது எனபது உலகப் பிரசித்தம். ஆனால், நமது முற்போக்காளர்கள் இந்த உண்மையை 26
 
 

ஒதுக்கிவிட்டு - தமிழினத்தின் உரிமைக்காக குரல் கொடுத்த தமிழரசுக் கட்சியையும், அதன் பத்திரிகையான சுதந்திரனையும் தீண்டத்தகாதவையாகவே நோக்கினர். இதைப் போன்றே, தமிழரசுக் கட்சியின் உதயத்திற்கு ஒரு வகையில் ஏதுவாகவும் தமிழின உணர்வின் நிலைக்களனாகவும் விளங்கிய தமிழகத்திராவிட முன்னேற்றக் கழகத்தையும் தரக்குறைவாக விமர்சித்தனர்.
அனால், இன்று - சூழ்நிலை காரணமாக இலங்கைத் தமிழர்களின் சுதந்திரப் போராட்டத்தைஒரு தேசிய இனத்தின் விடுதலைப் போராட்டம் என்று வர்ணிப்பது இவர்கள் வாடிக்கையாகிவிட்டது. முற்போக்காளரின் இந் முக மாற்றத்திற்கு சூழ்நிலைதான் காரணமே தவிர சுயூ பரிசோதனை அல்ல என்பது தெளிவு. இது மட்டுமன்றி, இந்த முற்போக்காளர்களால் ஒருகாலத்தில் தூக்கி எறிந்து பேசப்பட்ட திராவிட முன்னேற்றக் கழகத்தின் சிந்தனை செயற்பாடுகளை இவர்கள் மீள் பரிசோதனை செய்யப் புறப்பட்டிருப்பதும் தமிழர் வரலாற்றிலேயே ஒரு வேடிக்கையான நிகழ்வாகும். அதில்கூட, மு. பொன்னம்பலம் என்பவர், அண்ணாதுரை, ஈ.வே.ரா. பெரியாரை MEDIOCRE என்று குறிப்பிட்டுள்ளமை அவரது அபட்டமான காழ்ப்புணர்வையே காட்டுகின்றது.
இப்போது முற்போக்கு என்பது ஒரு வாழ்க்கை நோக்கு என்று முழங்குகின்றார் முருகையன். எந்த ஒரு மனிதனின் சிந்தனைகளும் செயற்பாடுகளும் வாழ்க்கையை நோக்கமாகக் கொண்டிருக்கும் போது, முற்போக்கை மட்டும் அதில் இருந்து பிரித்துப் பார்ப்பது ஏன் என்று தெரியவில்லை. ஒருவேளை - இது சூழ்நிலையை ஒட்டிய நழுவல் போக்காகவும் இருக்கலாம்.
முற்போக்காளர்களின் பலவீனம் இதுதான் - தொல்காப்பியம், புறநானூற்றைத் தொடுவது அவர்களைப் பொறுத்த வரையில் தோஷமான காரியம். பணடிதர்களும் வித்துவான்களும் பழம் பஞ்சாங்கங்கள் - சிறுகதைகளும், நாவல்களுமே சிறந்த இலக்கியங்கள். மார்க்சும், லெனினுமே உலகம் கண்ட மாபெரும் சிந்தனையாளர்கள்.
இந்தப் பலவீனங்கள் இருக்கும் வரை - முற்போக்கு பற்றி இவர்கள் எத்தனை விளக்கம் கொடுத்தாலும் அவை பலவீனமாகவே இருக்கும். இது உண்மை.
ス。ア

Page 16
அள்ளித்தந்தது ஒஸ்லோ ,
அடுத்து ஜப்பான் தேசம்
வெள்ளி திசையே நமக்கு
விடியல் தோன்றும் நாளை.
அமைதிப் பயணம் தொடரும்
அதனை உலகம் போற்றும்
நமையே ஆள்வோம் நாமே
நமது தளைகள் உடையும்.
ஒரு தாய் மக்கள் நாங்கள்
ஒற்றுமை எங்கள் வேதம்
Uரிவினை என்Uதே இல்லை
பிறந்த தேசம் காப்போம்.
இனங்கள் எத்தனையேனும்
இதயம் மட்டும் ஒன்றே
குணங்கள் எத்தனையேனும்
குடும்Uமாக வாழ்வோம்.
சகுனி, கூனி என்னும்
சமுக்கர் உறவு வேண்டாம்
அகம் மகிழ நாளும்
அன்போழயைந்து வாழ்வோம்.
- - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - -ل
28
 

“இலங்கையில் இப்போது எத்தனை அரசாங்கங்கள்?
இரண்டல்ல - மூன்று.
*முன்னாள் அமைச்சர் கதிர்காமர் எப்படி?
ஒரு தமிழன் நல்லா இருப்பதை இன்னுமொரு தமிழன் விரும்பமாட்டான். கதிர்காமரும் தமிழன் தானே!
“ரணில் என்ன செய்கின்றார்?
ஒவ்வொரு நாடாக ஒடிக்கொண்டிருக்கிறார். களைக்காமல் இருந்தால் சரி.
“ஜனாதிபதியின் பேச்சுக்கள் எப்படி?
நேற்று ஒன்று, இன்று ஒன்று, நாளை ஒன்று. முக்காலமும் உணர்ந்து பேசும் ஆற்றல் உடையவர்.
“முன்னாள் பாதுகாப்பு அமைச்சர் ரத்வத்தை என்ன செய்கின்றார்?
விதைத்ததை அறுவடை செய்கிறார்.
"முஸ்லிம் காங்கிரஸ் மூன்றாகி விட்டதே.
பாவம் அவழ்ரப்
*அமெரிக்காவுக்கு சதாம் உசைன் மீது ஏன் இவ்வளவு ஆத்திரம்?
மத்திய கிழக்கின் 'மகுடம்' அவர் கையில்தான் இருக்கிறது. அதனால்தான்.
“வாழ்க்கை என்றால் என்ன?
பலருக்கு அது யுத்த களம். ஒரு சிலருக்கு மட்டும்தான் அது விளையாட்டு மைதானம்.
“இலங்கைக்கு இனி சமஷ்டி அரசியல் அமைப்புத்தானாமே? அகிம்சை கேட்டது, அலட்சியப்படுத்தினார்கள். திம்சை கேட்கின்றது, அஞ்சுகிறார்கள்.
“இந்த நாடு உருப்படுமா?
அரசியல்வாதிகளைத்தான் கேட்கவேண்டும்.
"மதம், கடவுள் - இரண்டுக்கும் என்ன தொடர்பு?
மதம் ஒரு வழி - இறைவனை அடைய வேறு வழிகளும் 2-60G.

Page 17
இருபதாண்டுகள விழித்திருந்த துல் இப்போதாவது து
பேரிரைச்சல் இட் பிளந்து தள்ளிய ஓரிரைச்சலுமின்றி ஒதுங்கட்டும்!
EEST6C5OTTLD6ů) GESLUIT 63 இனியாவி கண்டுபிடிப்போம்.
— - ა. ఇsణ. ஜப்ப எங்கும் ெ சமாதானத்தைத் அதுதான் தெய்வத்தின் சந்த
உடைந்து போன
ஒன்றுபடு: சமஷ்டிதான் சரிய
அப்பொதே கேட்ே தந்திருந்த இப்போதைய துல் ஏற்பட்டிரு
ஞானம் இல்லா
DSM6UT Lb g9 தீர்க்கதரிசனம் இ
சீக்கிரம்
உண்மை இதை இல்லைெ இலங்கை இருக்
 
 
 
 

fTS பக்குகள் ாங்கட்டும்!
டு பீரங்கிகள்
சமாதானத்தை
து
|t6tit சன்றேனும் தத்திப்போம்
நிதானம்,
தேசத்தை த்த ான வழி.
BLITTLò }ff6ử) tub க்குமா?
চTO . /
\、丁い○/ \ல்லா தேசம் ན་། , /_/<ހަ 圈 அழியும்
ன உணர்ந்தால் சரி யன்றால் கவே இருக்காது.