கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: போது 2003.05-06

Page 1
@
○エリ
కి
is
நாங்கள்
தி
ك94jDك
 
 
 
 

}, , !, ()

Page 2
எண்ணிய முடிதல் வேண்டும்
நல்லவே எண்ணல் வேண்டும்
திண்ணிய நெஞ்சம் வேண்டும்
தெளிந்த நல்லறிவு வேண்டும்.
- மகாகவி பாரதி
ஆண்டுச் சந்தா 100/=
வெளியீடு: PROFESSIONAL PSYCHOLOGICAL COUNSELLING CENTRE BATTCALOA. ノ ܢܠ
 

Burg
31 - இதழ் 1 - ارIIIgہ 2
வைகாசி - ஆனி 2003 தோற்றம் 5-5-1998
நிர்வாக ஆசிரியர் (Managing Editor) சுவாமிஜி போல் சற்குணநாயகம், யே.ச.
(Editor) வாகரைவாணன்
நிர்வாகம்: (NACanagement) சி. எம். ஒக்கஸ்
பணிமனை: ஜெஸ்கொம் அச்சகம், இல, 1, இயேசு சபை வீதி,
மட்டக்களப்பு.
தொலைபேசி:
O65-23822, O65-22983
E-mail
ppccGDdiamond.lanka.net
(99. ஆரிக்கிப்படுகின்றன.
எந்தவித இலக்கும் இன்றி, எப்படியும் வாழலாம் என்ற எண் ணமும் , இருக்கும்போதே எல்லாவற்றையும் அனுபவித்துவிட வேண்டுமென்ற வேட் கையும் இன்றைய மக்கள் உள்ளங்களில் நிரம்பி வழிகின்றன. இந்த எண்ணத்தையும் வேட்கை யையும் நிறைவு செய்திட அவர்கள் செய்யும் திருகுதாளங்கள் ஊழல்கள் மோசடிகள் அரசியல் ரவுடித்தனங்கள் எத்தனையோ!
வாழ்க்கை பற்றிய மக்களின் இப் போக்கு அவர்கள் மத்தியில் என்றும் இல்லாதவாறு கொலை, கொள்ளை, பழிதீர்த்தல், பாலியல் வலமுறை முதலான பயங்கர வைரஸ்களைப் பல்கிப் பெருகச் செய்து எதிர்காலத் தையே கேள்விக்குறியாக்கிவிட்டது.
பண்பாடும் பெறுமதியும் மிக்க மக்கள் சமுதாயத்தின் அடிவேர்க ளையே அரித்துக்கொண்டிருக்கும் இந்த வைரஸ் களை - இன்று வியக்கத்தக்க அளவுக்கு முன்னேறி யிருக்கும் விஞ்ஞான தொழில் நுட்பங்களாலோ அல்லது புனித மெனப் போற்றப்படும் சமயத் தத்து வங்கள் நம்பிக் கைகள் என்ப வற்றாலோ தடுத்து நிறுத்த முடிய வில்லை என்பது வருந்தத் தக்க உண்மை!

Page 3
மானுடத்தின் அஸ்தமனத்திற்காக வெட்டப்பட்ட இந்த மரணப் படுகுழிக்கு சாதாரண மக்கள் மட்டுமல்ல சர்வ வல்லமை படைத்த தேசத் தலைவர்கள், சமயப் பெரியார்கள். சமூகத்தலைவர்கள் புத்தி ஜீவிகள், அரசியல்வாதிகள், ஊடகவியலாளர்கள், கலைஞர்கள் என்போரும் பொறுப்பேற்றிட வேண்டும்.
பசுமையாகத் திகழவேண்டிய மக்கள் சமுதாயம் பட்டமரமாகிக் கொண்டிருக்கையில் அதன் புறத்தேவைகள் பற்றிப் புலம்புவதாலோ, அல்லது அவற்றை நிறைவு செய்வதற்கான காரியங்களில் ஈடுபடுவதாலோ எந்தவித பயனும் விளையப்போவதில்லை.
முதலில் - பல்வேறு உளநோய்களால் மிக மோசமாகப் பாதிக்கப்பட்டிருக்கும் இந்த மூட சமுதாயத்தைக் குணப்படுத்துவதற் கான பணிகள் விரைவாகவே ஆரம்பிக்கப்படல் வேண்டும். ஒழுக்கம் முதலான உயர்ந்த விழுமியங்களை உதட்டளவில் வைத்துக்கொண்டிருக்காமல் செயலில் அவற்றை நிலைநிறுத்திட வேண்டும்.
இவ்வவசர சிகிச்சையை உடனடியாக மேற்கொள்ளாமல்,சமூக நலம் என்ற பேரில் கூட்டங்கள், மாநாடுகள், கருத்தரங்குகள் வெறும் காகிதத் திட்டங்கள், தீர்மானங்கள் என்று பழைய வழியிலேயே நாம் பயணிப்போமாயின் நமது மிகப்பெரிய தவறுகளில் இருந்து நாம் தப்பிப் பிழைக்க வழிவகைகளைத் தேடிக் கொண்டிருக்கிறோம் என்றுதான் அர்த்தம்.
தப்பிப் பிழைக்க வேண்டியது சமூகமேயன்றி தனி மனிதர்கள்
அல்ல என்பதை நம்மில் எத்தனை பேர் புரிந்துகொள்ளப் போகின்றார்கள்?
அன்புடன் வாகரைவாணன்.

எங்கள் தமிழ் மொழி இனிய தமிழ்மொழி
இயல் இசை நாடகமே
சங்கத் தமிழ்மொழி சான்றோர் புகழ்மொழி
சகமெலாம் வாழியவே.
பழமைத் தமிழ்மொழி பக்தி நனிமொழி
Uாரெலாம் சிறந்திடுமே
இளமைத் தமிழ்மொழி இணையத் தமிழ்மொழி
இவ்வுல காண்டிடுமே!
கன்னித் தமிழ்மொழி கணனித் தமிழ்மொழி
காலங்கள் வென்றிடுமே
அன்னைத் தமிழ்மொழி அறிவுத் தமிழ்மொழி
ஆண்டாண்டு வாழியவே.
வளரும் தமிழ்மொழி வாழும் தமிழ்மொழி
வானிலும் உயர்ந்திடுமே
அழகுத் தமிழ்மொழி அறிவுத் தமிழ்மொழி
அவையெல்லாம் நிறைந்திடுமே.

Page 4
நான்கு தமிழ்மொழி நமது தமிழ்மொழி நாளெல்லாம் வாழியவே
ஈங்கு தமிழ்மொழி இலங்கைத் தமிழ்மொழி
என்றென்றும் வாழியவே!
Uொங்கு தமிழ்மொழி பொதிகைத் தமிழ்மொழி
புகழுடன் பொலிந்திடுமே
எங்கும் தமிழ்மொழி எதிலும் தமிழ்மொழி இணையின்றி வாழ்ந்திடுமே!
Uாட்டுத் தமிழ்மொழி பாரதி தமிழ்மொழி Uாங்குடன் திகழ்ந்திடுமே
நாட்டுத் தமிழ்மொழி நல்ல தமிழ்மொழி
நானிலம் போற்றிடுமே.
எங்கள் தமிழ்மொழி இணையிலாத் தமிழ்மொழி
என்றென்றும் வாழியவே
தங்கக் கதிரென தவளுநில வென
தரணியில் வாழியவே.
தெய்வத் தமிழ்மொழி தென்னன் தமிழ்மொழி
சேர்ந்து நாம் துதித்திடுவோம்
பொய்யாத் தமிழ்மொழி புலவர் தமிழ்மொழி
போற்றி நாம் மகிழ்ந்திடுவோம்.
~ தமிழன்.

அறிய வேண்டிய அரிய மனிதர் - 10.
இருபதாம் நூற்றாண்டின் சரித்திரத்தைத் தெரிந்து கொள்ள வேண்டுமானால். விரல் விட்டு எண்ணக்கூடிய சில தலைவர்களின் வரலாற்றைப் படித்தால் போதும். இந்தத் தலைவர்களின் பட்டியலில் முன்னணியில் நிற்கும் பெயர் சர்ச்சில். இரண்டாம் உலக யுத்தத்தின் போது இங்கிலாந்து, பிரான்ஸ், அமெரிக்கா ஆகிய கூட்டு நாடுகளின் தளபதியாக இருந்தவர் சர்ச்சில்.
ஜெர்மன் குழந்தைகள் யூத இனத்தவரின் குழந்தைகளுடன் பேசுவது குற்றம். யூத இனத்தவர் நெய்த துணியை அணிந்தால்கூட தண்டனை. ஜெர்மனியில் இப்படி கொடுங்கோல் ஆட்சி நடத்திக் கொண்டிருந்த ஹிட்லர். முசோலினியோடு சேர்ந்து உலகத்தையே தன் ஸ்வஸ்திக் கொடியின் கீழ்க் கொண்டுவர வெறியோடு கிளம்பிய சமயம் உலகத்தைப் போராபத்துச் சூழ்ந்தது.
ஹிட்லரின் வெறுப்பு லிஸ்ட்டில் இங்கிலாந்தும் பிரான்ஸ9ம் முதல் இடத்தில் இருந்தன. காரணம் ஹிட்லரை இங்கிலாந்தும், பிரான்ஸஉம் முழு மூச்சாக எதிர்த்தன.
இந்தக் காலகட்டத்தில் இங்கிலாந்தின் பிரதமராக இருந்த சேம்பர்லன், ஹிட்லருடன் போர் புரியத் தயாராக இல்லை. அதனால் ஹிட்லருடன் அமைதிப் பேச்சுவார்த்தையை நடத்தினார். ஒப்பந்தங்கள் போட்டார். ஒப்பந்தங்களை மதிப்பவரா ஹிட்லர்? அமைதி ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுக் கொண்டே அவர் போருக்கான சகல ஆயத்தங்களையும் நடத்தினார்.
சேம்பர்லன் அமைச்சரவையில் அமைச்சராக இருந்த சர்ச்சில் இந்த அமைதிப் பேச்சுவார்த்தையைக் கடுமையாக எதிர்த்தார். “இந்த ஒப்பந்தம் போரைச் சந்திக்காமலேயே இங்கிலாந்து தோல்வி அடைந்தது விட்டதற்குச் சமம்” என்றார். சர்ச்சிலின் வார்த்தைகள்
HKOSà

Page 5
ஒரு சில நாளிலேயே உண்மையாயின. 1939ம் ஆண்டு செப்டம்பர் முதல் நாள் ஹிட்லரின் படைகள் போலந்து நாட்டின்மீது குண்டு மழை பொழிந்தன. இனிமேலும் கையைக் கட்டிக்கொண்டு ஹிட்லரிடம் அமைதி பற்றிப் பேசுவது வேஸ்ட் என்று லேட்டாக உறைக்க. இங்கிலாந்தும் பிரான்ஸஉம் ஜெர்மனியை எதிர்த்துப் போர் முரசு அறைந்தன. இரண்டாம் உலகப்போர் ஆரம்பமானது. ஹிட்லரின் போர்த் திட்டமும், தந்திரமும் அவருக்கு வெற்றிகளை அள்ளித் தந்தன.
ஹிட்லரின் படைகள் ஆக்ரோவடித்தோடு ஹாலந்து, பெல்ஜியம் என்று வரிசையாக பல நாடுகளைக் கைப்பற்றின. அப்போது ஹிட்லருக்கு எதிராக அத்தனை சக்திகளையும் ஒன்று திரட்டி அந்த மாபெரும் படைக்குத் தலைமை ஏற்று முழு வேகத்தோடு போராட வேண்டிய இங்கிலாந்தின் பிரதமர் சேம்பர்லனால் நாட்டையோ, போரையோ வெற்றிகரமாக நடத்த முடியவில்லை. அவர் பதற்றமடைந்து போனார். போர்க்காலத்தில் நாட்டின் பிரதமராக இருக்கக்கூடிய தகுதி இல்லவே இல்லை என்று அவரின் கட்சியைச் சேர்ந்த எம்.பிக்களே எதிர்ப்புக் குரல் எழுப்பினர். அதனால் அவர் பதவி விலக, பிரதமர் பொறுப்பு சர்ச்சிலைத் தேடி வந்தது. அப்போது சச்சிலுக்கு வயது 67. ஹிட்லரிடமிருந்து தங்களைக் காப்பாற்ற கடவுள் அனுப்பிய தேவதூதனாகவே இங்கிலாந்து மக்கள் சர்ச்சிலைப் பார்த்தனர். நிம்மதிப் பெருமூச்சு விட்டனர். சர்ச்சில் மீது மக்களுக்கு இருந்த நம்பிக்கைக்குக் காரணம், ஹிட்லரின் ராணுவ பலத்தை ராணுவ பலம் கொண்டே நசுக்க வேண்டும் என்ற சர்ச்சிலின் கொள்கை, சர்ச்சில் சிறுவனாக இருந்த போதே ராணுவப் பள்ளியில் படித்தவர். போயர் யுத்தத்தில் ஆரம்பித்து முதல் உலக யுத்தம் வரை போர்களைச் சந்தித்தவர். போர்க் களங்களில் பல சாகசங்களைப் புரிந்தவர்.
முதல் உலக யுத்தத்தின்போது கப்பல் படையின் மந்திரியாக இருந்து அதற்கு சர்வ பலம் சேர்த்தவர்.
எல்லாவற்றிற்கும் மேலாக சர்ச்சில் ஒரு சிறந்த ராஜதந்திரி. மக்கள் தன் மீது வைத்த நம்பிக்கையை சர்ச்சில் பொய்யாக்கவில்லை.
mO6

தன்னிடம் யாரும் வம்புக்கு வராத வரையில் இரண்டாம் உலக யுத்தத்தில் கலந்துகொள்ளப்போவதில்லை என்ற முடிவோடு ஒதுங்கி இருந்த அமெரிக்காவிடம் சர்ச்சில் தனது உறவைப் பலப்படுத்தினார். சர்ச்சிலின் அம்மா ஒரு அமெரிக்கன் என்பதால் சர்ச்சிலை பாதி அமெரிக்கன் என்றே அமெரிக்க மக்கள் பாசத்துடன் பார்த்தனர். அது சர்ச்சிலுக்கு மாபெரும் செளகரியமாக இருந்தது. சர்ச்சில் அமெரிக்க ஜனாதிபதி ரூஸ்வெல்ட்டுடன் தனிப்பட்ட முறையில் பலமான நட்பை ஏற்படுத்திக் கொண்டார். அதனால் இங்கிலாந்துக்குத் தேவையான அத்தனை ஆயுதங்களும், வெடி மருந்துகளும் அமெரிக்காவின் தொழிற்சாலையில் இருந்து இங்கிலாந்துக்கு வந்த வண்ணம் இருந்தன.
கம்யூனிஸ்டுக்கள் என்றால் சர்ச்சிலுக்கு மகா எரிச்சல். இருந்தாலும் 1941ம் ஆண்டு தன்னுடன் இரகசிய உடன்பாடு வைத்திருந்த ரஷ்யாமீது ஹிட்லர் பாய ரஷ்யாவை தன் கூட்டணியில் சேர்த்துக் கொள்ள சர்ச்சில் தயக்கம் காட்டவில்லை.
சர்ச்சில் மிகச் சிறந்த பேச்சாளரும்கூட. போர் முனையிலிருந்த இங்கிலாந்தின் வீரர்களை சர்ச்சிலின் றேடியோப் பேச்சுக்கள் கிளர்ந்து எழச் செய்தன. நாட்டு மக்களுக்கு நம்பிக்கையை ஏற்படுத்தின. போரின் பிற்பகுதியில் இங்கிலாந்து, பிரான்ஸ், அமெரிக்கா ஆகிய கூட்டணி நாடுகள் வெற்றியை நோக்கி முன்னேறிக் கொண்டிருந்த சமயம் விக்டரி’ என்ற ஆங்கில வார்த்தையின் V என்ற முதல் எழுத்தைக் குறிக்கும் வகையில் இரட்டை விரலை உயர்த்திக் காட்டுவார். பொது மக்கள் உற்சாகத்தில் சர்ச்சிலைச் சூழ்ந்து கொள்வார்கள். அவரை வாழ்த்திக் கோஷமிடுவார்கள்.
1941ம் ஆண்டு உலகப் போர் முடிவுக்கு வந்தது. போரில் இங்கிலாந்து மற்றும் அதன் கூட்டணி நாடுகளுக்கு மகத்தான வெற்றி கிடைத்தது. இதற்கு மிகப் பெரிய காரணம் சர்ச்சில். போர் முடிந்த கையோடு இங்கிலாந்தில் தேர்தல் நடந்தது. சர்ச்சில் போட்டியிட்டார். அதில் அவருக்குக் கிடைத்ததோ மாபெரும் தோல்வி.
(616, 2000) ܫ

Page 6
கூட்டத்தில் ஓர் இளைஞன்
குமரன் அவன் பேராகும் வாட்டமது இல்லாதான்
வதனமது தெளிவாக்கும் நாட்டமெலாம் வேறாகும்
நடக்கும் அவ்வேளையில் தேட்டமென ஓர் கனவு
6)gssfuloge) 66epsfusi
நாடு அதில் இருந்து பலர்
நாற்புறமும் பரவலானார் ஈடு இலா மெசபத்தேமியா
இவர் சென்று வசிக்கலானார் நீடு புகழ் பெற்றெங்கும்
நிகரின்றி வாழ்ந்திருப்பார் ஏடு எலாம் சொல்லும் இது
எவர் மறுத்துப் பேசுவரோ?
Uார் தனில் மூத்ததாகும்
பண்டையக் குமரி நாடு
வேரது மக்கட்கெல்லாம்
வித்துவும் அதுவேயாகும்
சீருடன் தமிழர் என்றும்
சிறப்புறு மக்கள் கூட்டம்
Uேருடன் வாழலானார்
பெருமைகள் கோழ கோழ.
HKOSà
 

ஆழ்கடல் கொள்ளும் இந்த
அழகுறு தமிழர் நாட்டை சூழ் கடல் கொடுமையாலே
சுந்தரத் தமிழரெல்லாம் ஏழ்கடல் போலும் கூடி
எழில்மிகு நகரமொன்று நாள் தனில் அமைக்கலானார் நாமமோ கபாடமாகும்.
இந் நகர் தனையும் அந்த
இரைகடல் விழுங்கிக் கொள்ள பொன்னகர் மதுரையெனினும்
பூமியின் தெற்குப் பக்கம் நன்னகர் அமைத்தக் கொண்டு நல்லரசாட்சி செய்வார் அந்நகர் தானும் நாளில்
ஆழ்கடல் வசமாய்ப் போகும்.
இந்திய தேசமெல்லாம்
இருந்தவர் தமிழராவார் சிந்துவின் கரையின் ஒரம்
சிறப்புறு மக்களாக அந்தநாள் வாழ்ந்த போது
அகிலமே வியந்து போகும் முந்தவர் வாழ்க்கை என்றும்
முழமணி போலவாமே!
விண்ணினை முட்டும் வண்ணம்
வியப்புறு மனைகள், கூடம்
கண்ணினை அள்ளிக் கொள்ளும்
கார் அதில் தங்கிச் செல்லும்

Page 7
மண்ணினில் இதுபோல் அன்று
மாநகர் கண்டார் இல்லை
பொன்னென ஒளிரும் மாடம்
பூமியே மயங்கிப் போகும்.
f+ყდტყouბ 6TrEjéზ6if prT06
இராவணனர் ஆண்ட நாடு நீளவே நாங்கள் இங்கு
நிலையாக வாழ்ந்தபோது தோழர்கள் பலரும் சேரத்
தோணியில் ஒருவன் வந்தான் ஆளவா? இல்லை. இல்லை
அகதிகள் போலத்தானே!
வந்தவன் விஜயன் என்னும்
வங்கத்தின் இளைஞன் என்Uார் இந்த மண் தன்னை ஆண்ட
இயக்கியாம் குவேனி தன்னை சொந்தமாய் அவனும் கொண்டான்
தோழர்கள் பாண்டியோடு பந்தமும் செய்யலானார்
பரம்பரை தோன்றுமாமே.
நம்பியதீசன் தானும்
நம்மவர் இனமேயாவான் அம்புவி இதனைச் சொல்லும்
அசோகனின் தூதனாலே தம்மதம் விட்டுவிட்டு
தழுவினான் பெளத்தந்தன்னை செம்மதம் அதுவும் இங்கே
செழிப்புற்று வளருமாமே! (கனவு தொடரும்)
HKIDà

ஒரு ரோனாடோவிலிருந்து வீசப்படும் குண்டொன்று ஏடனிலுள்ள ஆதாம், ஏவாளினது தோட்டத்திலோ அல்லது ஆபிரகாமின் பிறந்த பூமியிலோ விழக்கூடும்.
அந்த இடத்தில் உலகம் முதன் முதலாக குனெய்போர்ம் எனப்படும் எழுத்துக்கள் கண்டறியப்பட்ட இடத்தில் ஆயிரக்கணக்கான விமானங்கள் சக்திமிக்க குண்டுகளை வீசுகின்றன.
யூப்பிரட்டீஸ், தைக்கிறட்டீஸ் நதிகளுக்கிடையில் செழிப்பான கிறெசென்ற் என அழைக்கப்பட்ட தாவர இனங்கள், கால்வாய்கள், அணைக்கட்டுக்கள், நீர்ப்பாசன வசதிகள், கால்நடைப் பண்ணைகள் உருவாயின. பக்தாத் செல்லும் பாதையிலுள்ள இந்த ஆறுகளைத் தாண்டுவதற்குக் கூட்டுப்படைகள் முன்னேறிச் செல்கின்றன.
இன்று ஈராக் என்று வழங்கப்படும் மெசெப்பெத்தேமியாவின் தத்துவாசிரியர்கள், கணித மேதைகள், விண்வெளி விற்பன்னர்கள் ஆகியோரிடமிருந்து கிரேக்க அறிஞர்கள் தமது நுண்ணறிவைப் பெற்றுக்கொண்டனர்.
பக்தாத்தில் இரவு, குண்டுகளின் ஒளி வீச்சினால் பகலாகவும், அவற்றிலிருந்து எழும் புகை மண்டலத்தினால் பகல் இரவாகவும் ஆக்கப்படுகிறது. ஆனால், அந்த பக்தாத்தில் தான் ஒரு நாள் 24 மணித்தியாலங்களாகவும், ஒரு மணித்தியாலயம் 60 நிமிடங்களாகவும், ஒரு வட்டம் 360 பாகைகளாகவும் வகுக்கப்பட்டது. இங்கு தான் அட்சர கணிதமும், கேந்திர கணிதமும் உருப்பெற்றன.
கவச வாகன அணிகள் இன்று இப்பிரதேசத்தில் வலம் வருகின்றன. மெசெப்பெத்தேமியாவில் தான் நான்கு சில்லுகளுடன் சேர்ந்த வண்டி உருப்பெற்றது. இன்று நுண்ணிய தொழில்நுட்பவியலின் பெறுபேறு

Page 8
சக்திமிக்க குண்டுகள். ஆனால், அளவை, நில அளவைக் கருவிகளது பிறப்பிடம் மெசெப்பெத்தேமியாவாகும்.
ஒப்பந்தக்காரர்களினால் நிர்மாணிக்கப்பட்ட கட்டிடங்கள் இடிந்து விழுந்தால், யாரேனும் இடிபாடுகளினால் கொல்லப்பட்டால், 700 கி.மு. கால பபிலோனில் சம்பந்தப்பட்ட ஒப்பந்தக்காரர் மரண தண்டனை விதிக்கப்படுவர். இன்று அமெரிக்கக் குண்டுத் தாக்குதல்களினால் கட்டிடங்கள் கடதாசி மட்டைக் கட்டுகள் போல இடிந்து விழும்போது தண்டிக்கப்படுவோர் எவருமில்லை.
இன்று யுத்தக் காலநிலையில், சத்திர சிகிச்சை நிபுணர்கள் தங்கள் வைத்தியத் தவறுகளுக்காக மன்னிக்கப்படும் நிலையில், பபிலோனில் தவறான வைத்திய பராமரிப்புக்காக அவர்கள் தண்டனைக்குள்ளானார்கள்.
ஏறக்குறைய 6 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் மெசெப்பெத் தேமியா உலோக வேலைப்பாடுகளை, சிற்பக் கலைகளை, நகர அமைப்புகளை, பட்டினத் திட்டமிடலை, சட்ட முறையை, வைத்திய ரீதியான நூல்களை, கற்கள் பதித்த விதிகளை, வளைதல் வேலையை குடிவகை பியரையும் தந்துதவிற்று.
அமெரிக்க வரலாற்று ஆசிரியர் பிராட்லே பாக்கர் கூறுவதாவது: நாகரிக உலகம் ஆரம்பமான ஒரு நகரத்தின் இடிபாடுகளின் மேல் நின்று சகல நாகரிக அம்சங்களையும் அங்கேயே முடிவடைவதை உணர்வது விதியின் திருவிளையாடல்தான், மேற்கத்தைய நாகரிகத்தின் தொட்டில் ஈராக் தேசமே. இன்று நாம் உள்ள நிலைக்கு வழி சமைத்தது அத் தேசமே.
இங்கிருந்து நாகரிகம் கிரேக்கத்திற்கும், உரோமாபுரிக்கும் பின்னர் ஐரோப்பாவின் ஏனைய பகுதிகளுக்கும், கிழக்கிற்கும் பரவிற்று. ஈராக்கின் முழுப் பிரதேசமே தொல் பொருட் சாஸ்திரங்களின் இருப்பிடமெனக் கருதப்படுகிறது. புராதன உலகின் ஏழு அதிசயங்களுள் பபிலோனின் தொங்கு தோட்டமும் ஒன்று.
இந்த சகல முதலாம், இரண்டாம் யுத்தங்களின் அன்னை இந்த நாகரிகத்தின் தொட்டிலுக்கு ஒட்பிடக்கூடிய நிலையிலும் இல்லை. ஆனால், அதிர்ச்சியும் பயங்கரமும் இந்தளவு வேகத்திற்குப் பரவுவதற்கு அதற்கு எவரும் நிகராக முடியாது.
mCI

“வன்முறையிலான அரசியல் மாற்றங்கள், படையெடுப்புக்கள், யுத்தங்கள், கலவரங்கள், சித்திரவதைகள் மெசெப்பெத்தேமியாவின் 6 ஆயிரம் வருட வராலற்றில் பரந்துபட்ட நிகழ்வுகளாகும் எனக் கூறுகிறார் மத்திய கிழக்கு அமெரிக்க அவதானிப்பாளர் கிட்மினி கிளியர்.
5,500 வருடங்களுக்கு முன் இந்தப் பிரதேசம் சுமேரியர்கள், பபிலோனிய அரசன் கமுறாபி, நிற்றிரைற்ஸ், அசீரியர்கள், நெசைட் நெசார், மகா சிறுஸ், மகா அலெக்சாண்டர், கிரேக்க செலூகிற் வம்சத்தவர், மொங்கோலியத் துருக்கியர், பாரசீகர், ஒட்டோமான், ஏகாதிபத்திய பிரித்தானியர் என்று சதாம் ஹஜூசையினும் அவரது கட்சியும் யுத்தத்தையும் சமாதானத்தையும் சந்தித்து வந்துள்ளது. இப் பிரதேசத்தில் 1,258இல் கி.பி. மொகாலய மன்னர்கள் 8 இலட்சம் பேரைக் கொலை செய்ததாக கூறப்படுகிறது. எவ்விதத்திலும், வேறு எவரிலும் இன்றைய கூட்டுப்படையினர்
உட்பட தோல்வி காணாத அரசன் மகா அலக்சாண்டர் ஆவார்.
பல நூற்றாண்டு காலப்பகுதியில் பக்தாத் ஒரு சிறப்புமிக்க இடத்தை வகித்து வந்துள்ளது. கி.பி. 762இல் ஸ்தாபிக்கப்பட்டு அது பல கொந்தளிப்பான நிலைகளைச் சந்தித்துள்ளது. ஆனால், அது இஸ்லாமிய உலகின் ஆன்மீக அரசியல், அறிவு, கலாசார நிலையமாக பெய்ரூட்டிலும் பார்க்க நீடித்த காலம் அது “கிழக்கின் பாரிஸ்” ஆக விளங்கியது.
ஒன்பதாம் நூற்றாண்டில் ஐரோப்பா இருண்ட யுகத்தில் இருந்த காலத்தில் பக்தாத் கலிபாக்கள் கருத்துக்களைச் சுதந்திரமாக பரிமாறிக் கொள்ளும் புத்திஜீவிகளையும், மாணவர்களையும் கவர்ந்திழுக்கும் அறிவில்லத்தை (“ஹவுஸ் ஒவ் விஸ்டம்”) அமைத்தனர். ஒட்டகங்கள் நீண்ட தூரங்களிலிருந்து இங்கு இலக்கியம் படிப்பதற்காகவும், மொழி பெயர்ப்பதற்காகவும், பாதுகாத்து வைப்பதற்காகவும் கொண்டு வரப்பட்டன.
இதே பக்தாத்தில் 786-809 வரை ஆண்ட அபாவழிற் கலிபா அரோன் அாறாவழிட் ஷெகெற சாடேயின் 1001 இரவுக் கதைகளைக் கேட்டு இன்புற்றார். இன்று பக்தாத் இரவுக் குண்டுத் தாக்குதல்களைக் காணுகிறது.
- ஐ.பி.எஸ். - தினக்குரல் 1-4-2003.
فقل كصص

Page 9
புலவரிடம் ஒரு அன்பர் தன் ஐயத்தைக் கேட்டார். ‘ஐயா உயிரினங்களில் பிராணி களிலிருந்து விலங்குகள் மற்றும் மனிதர்கள் வரை ஆயுள் கூடு தல் எந்த இனத்திற்கு?’ என்பதே அவர் கேள்வி.
இதற்குப் புலவர் தந்த விளக்கம் பின்வருமாறு:-
*ஆயுள் கூடுதல் மனிதர் களுக்குத் தான்!” யானைக்கு ஆயுள் நூற்றைம்பது ஆண்டுகள் வரை கூட உண்டு என்று சொல்வார்கள். அதைப்போல் சில பிராணிகள் முந்நூறு ஆண்டுகாலம் வாழ்ந்ததாகவும் சொல்வார்கள். ஆனால் மனிதனுக்கு நூறாண்டு காலம்தான் வாழ்க்கை. அபூர்வமாகச் சிலர் நூறு வருடத்தைத் தாண்டி சில வருடங்கள் வாழலாம். ஆனால் பெரும்பாலானோர் அறுபது எழுபது ஆண்டுகள் வாழ்ந்து காலமாகி விடுவதே உண்மை. இருப்பினும் ஆயுள் கூடுதல் மனித இனத்திற்குத்தான்.
இது எப்படி என நீங்கள் கேட்கலாம். மனிதனின் ஆயுள் என்பது உயிரோடு உலவுவது என்பதாக எண்ணக்கூடாது. புகழோடு உலாவுவது என்பதாக எடுத்துக் கொள்ள வேண்டும். ஒரு மனிதர் எப்போதோ மறைந்து விட்டாலும் அவர் இன்னும் நம்மிடையே வாழ்வது மாதிரியே அவரைப்பற்றி அடிக்கடி பேசிக்கொள்கிறோம் என்றால் அந்த மனிதர் வாழுகிற மனிதரே தவிர மறைந்து விட்ட மனிதரே 96)6).
இப்படிப் புகழால் ஆயுள் நீடித்து வாழும் மனிதர்கள்
 

அபூர்வமாகச் சிலர் தான். லட்சத்தில் ஓர் மனிதர் தான் புகழால் நிலைத்து வாழ்ந்து கொண்டிருப்பவராய் இருப்பர். இதை வைத்து எல்லா மனிதர்களுக்குமே ஆயுள் அதிகம் எனக் கேட்பீர்கள். ஆனால் புகழில் வாழுகிற தகுதியைப் பெறுகிறவர்கள் மட்டுமே மனிதர் என்ற தகுதியை அடைந்தவர் ஆவார். மற்றவரெல்லாம் எத்தனையோ பிராணிகள் உலகில் தோன்றி வாழ்ந்து தெரியாமல் மடிந்து போகின்றனவே அத்துடன் சேர்ந்தவர்கள் ஆவார்கள்!
அபூர்வமாகச் சில சமயம் ஏதாவது விலங்கோ, பறவையோ அல்லது மரங்கள் போன்ற உயிரினமோ அதிகமாக ஒரு காரியத்தை செய்ததாக புகழ் பெற்று அவைகளும் மனிதர்களைப் போல என்றும் வாழும் தகுதியோடு மனிதர்களால் பேசப்படுபவையாக பெருமை பெறுவது உண்டு.
ஆனாலும் சிந்திக்கிற அறிவுடைய மனிதனுக்குத்தான் தன் வாழ்வை சீர்துக்கிப் பார்த்து தான் எல்லோருடைய நினைவிலும் நிற்குமாறு வாழும் தகுதியைப் பெறமுடியும் என்பதை உணர்ந்து செயல்படும் வாய்ப்புள்ளது.
உயிர் வாழுகின்ற காலங்களில் மிக நல்லவர் ஒருவர் வறுமையோடு போராடலாம். ஆனாலும், அத்தகையோர் தங்கள் உயிர் வாழ்க்கை முடிந்து புகழ் வாழ்க்கையைப் பெறும்பொழுது அவர்கள் வசதியின்றி வறுமையோடு போராடினார்கள் என்பது ஒரு குறையாக கருதப்படுவதில்லை! ஏன் அதுவே அவர்களுக்கு நிறைவாகவும் பெருமைத் தேடித்தருவதாகவும் ஆகிவிடும்! அவ்வளவு வறுமையிலும் உறுதி குன்றாமல் வாழ்ந்திருக்கிறார்களே என்ற வியப்பை அவர்கள் ஏற்படுத்துவார்கள்.
எனவே, வாழ்வது என்பது எல்லோராலும் நினைக்கப்படுகின்ற புகழ் வாழ்வைப் பெற்றவர்கள் வையம் உள்ளளவும் வாழ்கிறார்கள். அதனால் அத்தகைய மனிதர்களுக்கே நீண்ட ஆயுள் என்பது பொருத்தமாகும் என்றார் புலவர்.
(தமிழ்நாடு - தினகரன்)
5لک=

Page 10
எண்ணெய்த் தேசமும் ஏகாதிபதி என்று மார் தட்டும் தேசமும் தன்னைத் தானே
தலைவன் என்ற
தலைக்கணத்தால்
எதையும் அறியாத
ஈராக்கின் இதயங்களையும் அமெரிக்காவின் அன்புகளையும் புரிந்து கொள்ளாது
ஏழையின் எதிர்காலத்தில் வேட்டு வைக்கிறது.
புஸ் எனும் பூதமும்
சதாம் எனும் சாத்தானும்
ஏசு பிரானின் உதயத்தையும் புனித நயிகளின் நாமத்தையும்
மாசுபடுத்துகின்றன!
ل
ஏசுவின் புத்திரர்களும் நUகளின் வாரிசுகளும் புஸ் - சதாம் வீட்டு சண்டையில் வீழ்கின்றனர்.
 

ஈராக்கில் ஏழ்மையான ஈரமான இதயங்கள் துழக்க அமெரிக்காவின் அப்பா, அத்தான் என்ற உறவுகள் வளைகுடாவில் வாழ்கின்றன வளைகுடா யுத்தகுடாவாகிறது.
89. BT. 6Tä66 மாங்காய் பிடுங்குகிறது? அணிசேரா அமைப்பு எங்கு அணி சேர்கிறது? நேட்டோ எங்கே நோட்டமிடுகிறது?
ஈராக் எங்கும் மயானமாகிறது அதற்கு பிரிட்ழகம் துருக்கியும் 65uégistrfassif (8UsT6) விளக்குப் பிடித்து நிற்கின்றன!
அமெரிக்கா - ஈராக் எனும் தேசம் இனி வேண்டாம்
இரண்டு சாத்தான்களையும் அழித்து
அந்நாட்டு ஜீவன்களுக்காக நாங்கள் படையெடுப்போம்.
எஸ். Uി Uസ്കpഗ്രർമ്

Page 11
6%faas/762.
அனுராதபுரத்து இளவரசன் காசியப்பனின் மேனியெல்லாம் ஆத்திர நெருப்பில் வெந்து கொண்டிருக்க, அவனது இரண்டு கண்களும் அக்கினித் குண்டங்களாக கனல்கின்றன. வெஞ்சினம் முகம் முழுவதும் வெறியாட்டம் ஆடுகின்றது.
தனயன் தான் இருக்க தம்பி முகலன் மகுடம் தரிப்பதா?. என் தாய் தாழ்ந்த குலத்தவளாம். அதற்காக நான் ஆட்சி உரிமையை இழக்க வேண்டுமா. உயிர் உள்ளவரை இதற்கு நான் ஒப்பமாட்டேன். காசியப்பனின் உள்ளம் கர்ச்சிக்கின்றது.
மன்னன் தாதுசேனன் தனது மூத்த மைந்தன் காசியப்பனைப் புறக்கணித்துவிட்டு, இளையமகன் முகலனுக்குப் பட்டாபிஷேகம் செய்யும் எண்ணத்தோடு இருப்பதை அறிந்த அவனது மருகன் மிகாரன், தனது தாயை முன்னொரு சமயம் அவமானப்படுத்திய மாதுலன் தாதுசேனனனைப் பழிதீர்க்க இதுதான் சரியான சந்தர்ப்பம் என்று கருதியவனாய் மகாபாரதத்துச் சகுனி போல காசியப்பனின் மாளிகைக்கு விரைகின்றான்.
“இளவரசே. என்ன ஏகாந்தத்தில்..?”
“ஒ. மிகாரனா? வா. உன்னிடம்தான் எனது உள்ளத்து வேதனைகளையும் கவலைகளையும் கொட்ட வேண்டும்.”
“தெரியும் இளவரசே. அரண்மனையில் நடப்பது அனைத்தும் எனக்குத் தெரியும். தங்கள் தாயார் தாழ்ந்த குலத்தவள் என்பதற்காகத் தங்களைத் தள்ளி வைத்துவிட்டு உயர் குலத்துப்
பெண்ணின் வயிற்றில் உதித்த தங்கள் இளவல் முகலனுக்கு Ki
 
 

சூட்டும் முயற்சி பகிரங்கமாகவே நடைபெறுகிறது. மன்னரின் இந்த அநியாயத்தை மனச்சாட்சி உள்ள யாரும் பொறுத்துக்கொள்ள மாட்டார்கள். உரிமைப் போராட்டத்தைத் தாங்கள் துணிந்து நடத்துவதுதான் இதற்கான ஒரே வழி.”
மைத்துனன் மிகாரனின் இந்த வஞ்சகப் பேச்சு காசியப்பனின் உள்ளத்தில் எரியும் ஆத்திர நெருப்பில் ஊற்றப்படும் எண்ணெய் ஆகின்றது. இருவரும் ஏதோ இரகசியம் பேசுகின்றார்கள். g9(መ5 வித வெறியோடு மிகாரன் காசியப்பன் அரண்மனையை விட்டு
வெளியேறுகின்றான்.
அரவிந்தன்
அடுத்த நாள் - அநுராதபுரத்தின் அரசனாக காசியப்பன் மகுடம் சூட்டிக்கொள்கின்றான். மிகாரன் அவனது படைத்தளபதி ஆகின்றான். தனது தந்தை தாதுசேனன் காசியப்பனால் சுரங்க அறை ஒன்றில் வைத்து உயிரோடு சமாதியாக்கப்பட்ட செய்தியினை அறிந்த முகலன், இந்தியாவிற்குத் தப்பி ஓடுகின்றான்.
அசாதாரண அமைதி அனுராதபுரம் முழுவதும் வியாபிக்கின்றது. சோகத்தை மக்களின் முகங்கள் சுமந்து கொண்டிருக்கின்றன. சந்திகளில் ஆங்காங்கு கூடி நிற்போர் தமக்குள் குசுகுசுப்பது தெரிகின்றது. மரண பயம் அவர்களின் வாயைக் கட்டிப் போடுகின்றது.
அரசனாக முடிசூட்டிக்கொண்ட காசியப்பன் அமைதி இழந்து தவிக்கலானான். அவனது மனச்சாட்சி கூரிய வேலாக அவனைக் குத்திக் குத்தி வதைக்கின்றது. வேதனை தாங்க முடியாத காசியப்பன் வெறிபிடித்தவனாக தனது தந்தையைச் சமாதி வைத்த சுரங்க அறையை நோக்கி ஓடுகின்றான். புலம்பி அழுகின்றான். ஆனாலும் என்ன? இழந்த அமைதி அவனிடம் திரும்ப மறுக்கின்றது. அரசன் தாதுசேனன் தன் மைந்தன் காசியப்பனின் மனம் முழுவதையும் ஆக்கிரமித்துக் கொள்கின்றான்.

Page 12
தாதுசேனன் என்ன சாதாரணமானவனா? மெளரிய வம்சத்தைச் சேர்ந்த பெருமன்னன். அவன் இருபது ஆண்டுகளாக அந்நிய இனத்தவரோடு போரிட்டு வென்று இலங்கையில் தனது இனத்தவரின் ஆட்சியை நிறுவியவன். வளங்கொளிக்கும் நாடாக இலங்கையை மாற்றும் பொருட்டு ஜயகங்கை என்ற ஒரு கால்வாயை வெட்டி அனுராதபுரத்தில் உள்ள திசவாவியோடு இணைத்தவன். இவற்றுக்கு மேலாக அவன் செய்த ஈடு இணையற்ற சமயப்பணியின் அடையாளமாக அனைவரையும் கவர்ந்து இழுத்துக்கொண்டிருக்கிறது
d வி O 魏 அநத அமயததல வகாரை வரலாறறுச சிறுகதை
தன் தந்தையைப் பற்றிய இந்தக் கம்பீரமான நினைவலைகள் தனது உள்ளக் கடலில் ஓங்காரமிடவே, என்ன செய்வது என்று தெரியாமல் தடுமாறிய காசியப்பன் ஒரு திடீர் முடிவுக்கு வருகின்றான். ஆம்! அனுராதபுரத்துச் இராசதானியில் இனியும் நான் அமர்ந்திருக்கக் கூடாது. அதனை உடனடியாக சிகிரியாவுக்கு மாற்ற வேண்டும். கற்குன்று சிகிரியாவை ஒரு கலைக்கோட்டையாக உருவாக்க வேண்டும். எனது கவலைகளைத் தீர்க்க இது ஒன்றுதான் வழி.
காசியப்பனின் முடிவை அவன் தளபதி மிகாரனும் ஏற்றுக் கொள்கின்றான். அடுத்த கணம். சிகிரியா எங்கும் சிற்பிகளின் உளிச் சத்தம் கேட்கத் தொடங்குகிறது.
சிங்கக் குன்று என்று பெயர் பெற்ற சிகிரியா பசுமையான மரம் செடிகளின் இலைகுழைகளால் தனது உடலின் யவ்வனத்தை மறைத்துக் கொண்டு தலையை மட்டும் வெளியே காட்டியபடி நிற்கிறது.
விருட்சங்களின் சின்னச் சின்னக் குடையாக விரிந்து நறுமணம் கமழும் மலர்கள். அந்த மலர்களை சங்குகளாக நினைத்துக் கொண்டு ஊதி மகிழும் வண்டுகள். இரவும் பகலும் அந்தக் காட்டையே தம் உலகமாக்கியபடி இன்னிசை எழுப்பும் பறவைகள். வீர உலா நடத்தும் வேழங்கள். அந்தப் பிரதேசம் முழுவதையுமே - ஓர் இன்ப புரியாக்கிக் கொண்டிருக்கின்றன.
20 كص

மனிதர்களால் இலகுவில் எட்டமுடியாத அந்த மலைக் குன்றின் உச்சியில் நின்றவாறு இயற்கையின் இன்பத்தை அணு அணுவாக அனுபவித்துக் கிறங்கிப்போன காசியப்பன் அந்தச் சிங்கக் குன்றில்தான் அழகுற அமைத்த ஆலகமந்தா எனும் அரண்மனையையும் அங்கே உருவாகிக் கொண்டிருக்கும் சிற்பங்கள் ஒவியங்களை, ஒவ்வொன்றாக நீண்ட நேரம் பார்த்துத் தனக்குள்ளே வியந்து கொள்கிறான்.
ஆண்டுகள் பதினெட்டு அசுர வேகத்தில் மறைந்து போகின்றன. அரசன் காசியப்பன் உருவத்திலும் காலம் பல மாற்றங்களைப் பதித்து விடுகிறது.
வழக்கம் போல, ஆழமான அகழியால் சூழப்பெற்ற தனது வனப்புமிகு ஆலகமந்தாவில் நின்றபடி, அப்பிரதேசம் முழுவதையுமே விழுங்கி விடுவதுபோல பார்த்துக்கொண்டு நிற்கிறான் காசியப்பன். அப்போது ஒவ்வொரு கணமும் அவன் எதிர்பார்த்துக்கொண்டிருந்த அந்தச் செய்தி அவன் காதுகள் இரண்டையும் கய்க்கச்செய்கிறது
இந்தியாவிலிருந்து தம்பி முகலன் பெரும் படையோடு இலங்கை திரும்புகிறான்.
இந்தச் செய்திய்ை சீரணிக்கும் திராணியை இழந்துவிட்ட காசியப்பன் - மீண்டும் ஓர் திடீர் முடிவுக்கு வருகிறான்.
அடுத்த நாள்.
சிகிரியா என்ற சிங்கக் குன்றை, சிற்பங்களாலும் , ஒவியங்களாலும் அலங்கரித்து அழகு பார்த்த ஓர் உண்மைக் கலைஞனின் உயிரற்ற உடல் அந்தக் குன்றின் அடிவாரத்தில் அநாதரவாகக் கிடக்கின்றது. அது கண்டு ஆலகமந்தாவின் ஒவ்வொரு ஒவியப் பெண்ணின் கண்களிலும் நீர் பொங்கி வழிகின்றது.!
2Dک=

Page 13
ஆசிரியர் > ‘போது சஞ்சிகை அன்புடையீர்! Jhs IIJ
நலம், நாடலும் அஃதே உங்களது போது சஞ்சிகை கிடைத்தது. மிக்க மகிழ்ச்சி தொடரட்டும் உங்கள் பணி மட்டக்களப்பு மண்ணின் மறுமலர்ச்சி இதழ் என்று முன் அட்டையில் போட்டிருந்தீர்கள். ‘போது’ என்பதும் புதுமையான பெயர் தான். வளர்க "போது’.
ஆக்கங்களைப் படித்தேன். நன்றாக இந்தன. குறிப்பாக சிவத்தம்பியின் கட்டுரையை தினக்குரலில் பார்த்தேன். 'போது சஞ்சிகையில்தான் தான் படித்தேன். சிறு சஞ்சிகைகளில் வரும்போது படிக்க வேண்டும் போல் ஓர் ஆர்வம் பிறக்கிறது. களுத்துறை மாவட்டத் தமிழர்கள் பற்றிய பிரக்ஞை தானும் இந்திய வம்சாவளித் தமிழர்களை பிரதிநிதித்துவம் செய்யும் கட்சிகளுக்கு இதுவரை வரவில்லை எனக் குறிப்பிட்டிருந்தார். இந்திய வம்சாவழித் தமிழர்களைப் பிரதிநித்துவம் செய்யும் கட்சிகளுக்கு மலையகத் தமிழர்களைப் பற்றிய பிரக்ஞையேனும் வந்ததா? என்று கேட்க வேண்டும் போல் இருப்பதோடு ஏன் இலங்கைத் தமிழர்களால் பிரதிநிதித்துவம் செய்யும் கட்சிகளுக்கும் வரத்தானே வேண்டுமென்றும் குறிப்பிட வேண்டும் போல் இருக்கிறது. அடுத்து, சிறு சஞ்சிகை வெளிமீட்டு முயற்சியென்பது கரடுமுரடான பாதையில் செய்யும் பயணந்தான். பயணம் தொடரட்டும் என்றே வாழ்த்துகிறேன். தோற்றம் 5-5-1998 என்று போட்டிருந்ததோடு, இதழ் 29 என்றும் குறிப்பிட்டுள்ளீர்கள். முன்பு வந்த இதழ்களைப் பார்க்க வேண்டும் என்ற ஆவல் பிறக்கிறது. இச்சஞ்சிகையை எங்கள் கல்வியியற் கல்லூரி நூலகத்தில் போட்டிருந்தேன். ஏற்கனவே 'தாயகம்’, ‘ஞானம்’, ‘மல்லிகை’ என்பன தொடர்ந்து வருவதால் எடுத்துப் போட்டுள்ளேன். ஆசிரியப் பயிலுநர்களின் ஆர்வம் இதற்கொரு காரணம் எனலாம். தற்போது “போது சஞ்சிகையையும் எடுத்துப் போடுங்கோ எனக் கேட்டுள்ளார்கள். இதற்கான சந்தாவை கல்லூரி நூலகத்தினூடாக விரைவில் அனுப்பி வைக்கிறேன்.
இறுதிப் பக்கத்தில் வந்த "எண்ணெய்த் தேசம்’ என்ற கவிதையை எழுதியவரின் பெயர் போடப்படவில்லை. எளிமையான, அருமையான கவிதையாய் அமைந்துள்ளது. அதேபோல் நடுகல்’ என்ற வரலாற்றுச் சிறுகதையும் நன்றாக அமைந்திருந்தது. காமினி அபயனைத் துட்ட(ன்) கைமுனு என்றே நாமஞ்சூட்டிபழியுடன் நோக்கிய வாசகர்களுக்கு தமிழர்கள் தம்மை அறியாமலேயே தலை வணங்கி நிற்கின்றனர் என்ற முடிவு வித்தியாசமாக அமைந்திருந்தது.
மீண்டும் சிறு சஞ்சிகையின் வரவு மழைக்குத் தோன்றும் புற்றீசல்கள் போன்ற நிலையை வரவிடாது தொடர்ந்து செய்யுங்கள். பாரதி கூற்றுப்போல எண்ணிய முடிதலும், நல்லவை எண்ணலும் திண்ணிய நெஞ்சமும், தெளிந்த நல்லறிவும் கொண்டு தொடர எனது பங்களிப்பையும், எங்கள் கல்வியியற் கல்லூரியின் ஒத்துழைப்பும் வழங்குவேன் எனக்கூறுகிறேன்.
நன்றி தேசிய கல்வியியற் கல்லூரி நட்புடன், வவுனியா, ந. பார்த்திபன். H2

* UosJuð
மண் மாதா பெற்ற வரம்.
தரையில் நீரைத் தேக்கி வைக்கும் தாங்கிகள்.
குருவிகளின் குழயிருப்புக்கள் வீடுகளின் கூரை.
மழை பொழியச் செய்யும் மண் முகில்கள் uசியெடுக்கும் வண்டுகளின்
UsT609Fs6)6O.
வீசும் காற்றில் தலை சீவும் விருட்சங்கள் கோடை காலத்துக் g560.
இனம் வேறாயினும் இணைந்திருக்கும்
குணம் வேறாயினும் குடும்பமாக வாழும்.
பச்சை வண்ணத்தின் அத்தாட்சிப் பத்திரங்கள் இச்சை மிகவூட்டும் இயற்கை.
ஆதிகால மனிதரின் ஆடை
Uரம ஞானியரின் Usfooresto06).
பூக்கள்
மரங்களின் புன்னகை
காலையிலே இது ஓர் 60&60ՈԱյսծ.
மண்ணுக்குள் புதையும் மரங்கள் கண்ணைப் பறிக்கும் வயிரங்கள்.
மரம் ஒரு மருந்து அருந்துவோருக்கு அமுதம்.
இது இல்லாவிடில் இந்த உலகம் ՅԹզԵ ԱշԱյՈ60TՓ.
மரம் மனிதரின் வணக்கத்தலம் தரம் குறைந்தவர்க்கும் 966 ഉ_ഖDTങ്ങTD வள்ளுவன், அவ்வை வார்த்தைகளே போதும்.
மர நிழலே மாடுகளின் வீடு இரை மீட்டல் இங்குதான் நிகழும்.
மரம் - வெட்ழப் போட்டாலும் விறகாகும் அதனால் நட்டு
வளர்ப்போம் நாம்!!
فق2كص

Page 14
உலகின் பழமைமிக்க சமயங்களில் இந்து மதமும் ஒன்று. இது தனி ஒரு மனிதனால் உருவாக்கப்பட்டதல்ல. எந்தவொரு தத்துவக் கோட்பாட்டிற் குள்ளும் இந்து மதத்தை அடக்கிவிட முடியாது. இதன் காரணமாகவே இந்துமதம் என்பது, இந்திய மக்களின் சிந்தனைகள், எண்ணங்கள், அவர்களின் வாழ்க்கை அனுபவங்கள் கலாசாரம் என்பவற்றின் மொத்தத் திரட்டு என்று அறிஞர் கூறுவர்.
இந்து சமயத்தின் அடி வேர்களை இற்றைக்கு ஐயாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்டதாகக் கூறப்படும் சிந்துவெளியிலே தெளிவாகக் கண்டுணரலாம் என ஆய்வாளர் கூறுவர். அங்கு நடத்தப்பட்ட அகழ்வாராய்ச்சியின் போது கண்டெடுக்கப்பட்ட யோக நிலையில் இருக்கும் ஆண் கடவுளின் வடிவம், நடன உருவம், எருது வடிவம், லிங்க, மர வழிபாட்டிற்குரிய ஆதாரங்கள் என்பவை ஆய்வாளரின் கூற்றை உறுதி செய்வனவாகும்.
உலகப் புகழ்பெற்ற இந் நாகரிகத்தின் மூலகர்த்தாக்கள் ஆரியர் இல்லாத வேறு ஓர் இனம் (பெரும்பாலும் திராவிடர்கள்) என்பர் ஆராய்ச்சியாளர். இந்நாகரிகமும் இதன் நிலைக்களனாக விளங்கிய ஹரப்பா, மொஹஞ்சதரோ எனும் நகரங்களும் அழிக்கப்பட்ட பின்பே இந்து மதத்தின் பொது நூல்களாக இன்று கணிக்கப்படும் நான்கு வேதங்களும் அவற்றின் அந்தமாகிய உபநிடதங்களும் தோற்றம் பெற்று இந்திய மக்களின் வாழ்க்கையில் இருந்து பிரிக்க முடியாத அளவுக்கு இரண்டறக் கலந்தன. இவ்வரலாற்று நிகழ்வு இற்றைக்கு 3500 ஆண்டுகளுக்கு முந்தியது என்பார் தத்துவஞானி டாக்டர் எஸ். இராதாகிருஸ்ணன் அவர்கள்.
23كص=
 

வேதகாலத்து இந்து மதம் சிந்து வெளி மக்களின் கடவுட் கோட்பாட்டையும் தன்னகத்தே கொண்டே வளர்ந்து சிறப்புற்றது. எனினும் காலகதியில் மக்களின் அறிவுத்திறன், சிந்தனை என்பன காரணமாக சைவம், வைணவம், பாசுபதம் எனப்பல பிரிவுகளைக் கொண்டதாக அது பரிணாமம் பெற்றது.
வேதகாலத்து இந்துமதம் வேதத்தை அடிப்படையாகக் கொண்டு விளங்கியமையால் அது வைதீகம் என்றும் அழைக்கப்பட்டது. வேதம் என்பதற்கு அறிவு என்றே பொருள். இதிலிருந்து இந்துமதம் அறிவு ரீதியானது என்று நாம் கொள்ளலாம்.
வேத காலத்தில் இந்திரன், அக்கினி, வருணன் முதலான தெய்வங்களே முதன்மை பெற்று விளங்கின. இத்தெய்வங்களைத் திருப்திப்படுத்தும் விதத்தில் பல்வேறு சடங்குகளும் வேள்விகளும் அக்காலத்தில் பெருமளவில் நடத்தப்பட்டன. அவை மக்கள் வாழ்வோடு அதிகளவில் ஒன்றிக் காணப்பட்டன. இவ்வாறான ஒரு சூழ்நிலையில் வட இந்தியாவில் பெளத்தம், சமணம் முதலான மதங்கள் தோற்றம் பெற்றன. இந்து மதத்தின் கடவுட் கோட்பாட்டை நிராகரித்த இம்மதங்கள் உயிர்க் கொலையை கண்டித்ததுடன் மக்கள் மத்தியில் செல்வாக்குப் பெறவும் தொடங்கின. இந்த நிலையில் - இந்து மதம் விழித்துக் கொண்டது. தன்னைப் புனருத்தாரணம் செய்து கொண்டது. காரைக்காலம்மையாரின் வருகைக்குப் பின்பு (கி.பி. 5ம் நூற்றாண்டு) புத் துணர்ச்சி பெற்று ஞானசம்பந்தர், அப்பர் முதலான சிவனடியார்களால் ஒரு பெரும் மக்கள் இயக்கமாகவே தமிழ் நாட்டில் வளர்ந்து வந்தது.
இந்து சமயத்தின் செல்வங்களாக இருப்பவை அதன் தத்துவங் களும், தத்துவங்களை மையமாகக் கொண்ட புராணங்களுமேயாகும். இவை இரண்டிலும் தத்துவங்கள் அறிஞர்களால் மட்டுமே அணுகக்கூடியவை. புராணங்கள் பாமரர்களால் பெரிதும் போற்றப் படுபவை. மக்கள் வாழ்வோடு இணைந்து நிற்பவை. இந்து சமயம் இன்றும் நிலைத்து நிற்பதற்கு இந்தப் புராணங்களும் ஒரு பெரும் காரணமாகும்.
HGS

Page 15
தனது அடிப்படைக் கோட்பாடுகளில் கொல்லாமையை ஒன்றாக ஏற்றுக்கொண்ட இந்து மதம், அன்பையே பிரதானமாக வலியுறுத்து கின்றது. உலகில் உள்ள அனைத்து உயிர்களிலும் இறைவன் இருக்கின்றான் எனும் வேதாந்தச் சிந்தனையும், தன்னைப் போல் ஏனைய உயிர்களும் உலகில் வாழும் உரிமை கொண்டவை எனும் உயர்ந்த நோக்கும் இதன் அடிப்படைகளாகும். இந்தக் கோட்பாடே தமிழர் வாழ்விலும் பின்னிப் பிணைந்து காணப்படுவதை நாம் கண்டுணரலாம். தம் உணவுக்கு முன் பசுவுக்கு உணவு கொடுத்தல் காகத்திற்கு உணவிடுதல் இதற்கான சான்றுகளாகும்.
இந்தக் கோட்பாடு தமிழர் வாழ்வோடு பிரிக்க முடியாத அள வுக்கு இணைந்துள்ளது என்பதற்கு அவர்களின் சைவ உணவே நல்லதொரு சான்று. சைவம்’ எனும் சொல் குறிப்பிட்ட ஒரு மதத்தை மட்டுமன்றிக் கொல்லாமையையும் குறித்து நிற்கும்.
சங்க காலத்தின் பின் தோன்றிய தமிழராகிய திருவள்ளுவரும்,
கொல்லான் புலாலை மறுத்தானைக் கைகூப்பி
எல்லா உயிரும் தொழும். என்று கூறியுள்ளமை இங்கு நோக்கத்தக்கது.
இந்து மதத்தின் அச்சாணியாக விளங்குவது அன்பு எனும் கோட்பாடாகும். அன்பே சிவம் எனும் வழக்கு இதனை வலியுறுத்தம். அன்புக்கு இறைவன் ஆட்பட்ட கதையை சிவனடியார்கள் பலரின் வாழ்க்கை வரலாறுகள் நமக்கு எடுத்துக் காட்டுகின்றன.
தமிழரின் இல் வாழ்க்கை அன்பு மயமானது என்பதைப் பண்டைத் தமிழர் வாழ்க்கையில் இருந்து அறிய முடிகிறது. தாய் தந்தை மக்கள் என்று மட்டும் இல்லாது சுற்றம் தழுவி நின்று விருந்தினரை அகமும் முகமும் மலர வரவேற்று உபசரித்தல் அவர்களின் அன்பு வாழ்க்கையை வெளிச்சம் போட்டுக் காட்டும்.
சங்க காலத் தமிழர் தம் வாழ்க்கையை அகம் (அன்பு) புறம் (வீரம்) என்று வகுத்து வாழ்ந்தமை இங்கு குறிப்பிடத்தக்கதொன்று.
ه20 كص=

இந்து சமயம் இறைவன் ஒளி வடிவானவன் எனும் கோட் பாட்டைக் கொண்டதாகும். அக்கினி, சூரியன் எனும் தெய்வ வழிபாடு களும் சிவராத்திரி, தீபாவளி, கார்த்திகை விளக்கீடு, தைப்பொங்கல் முதலான விழாக்களும் மேற்படிக் கருத்தினை வலியுறுத்தும்.
ஆதிகாலம் தொட்டு தமிழர் ஒளியினையே இறைவனாகக் கருதி வழிபட்டு வந்துள்ளனர் என்பதை அவர்களின் பழந்தமிழர் தெய்வத்தின் பெயரான சேயோன் எனும் சொல்லே காட்டும். சிவன் எனும் சொல் சேயோன் எனும் சொல்லின் திரிபு என்பர் மறைமலை அடிகள்.
பிற்காலத்தில் தோன்றிய அப்பர், மாணிக்கவாசகர், முதலான சிவனடியார்களும் இறைவனை ஒளியாகவே கண்டு வணங்கினர் என்பதை அவர்களின் பாடல்கள் மூலம் நாம் அறியலாம்.
இந்து சமயத்தின் மிக முக்கிய கோட்பாடுகளில் ஒன்று ஊழ்வினை என்பதாகும். ஒவ்வொரு மனிதனின் வாழ்வும் ஊழ்வினைப் படியே இயங்குகிறது என்பதனை இக்கோட்பாடு காட்டி நிற்கும்.
பண்டைக் காலத்தில் இருந்தே தமிழரும் இக்கோட்பாட்டைப் பற்றி வாழ்ந்து வருகின்றனர் என்பது நாம் அறிந்த உண்மையாகும். எல்லாம் உணர்ந்த திருவள்ளுவரும் 'ஊழிற் பெருவலி யாவுள' என்றே கேட்டார். கண்ணகி கோவலன் கதையும் ஊழ்வினையின் முக் கியத்துவத்தைக் காட்டி நிற்கும்.
இந்த ஊழ்வினைக் கோட்பாடு தமிழர் வாழ்வோடும் இரண்டறக் கலந்து இருப்பதனை அவர்களின் வாழ்க்கை பற்றிய நம்பிக்கை, வாயில் இருந்து அடிக்கடி வரும், விதி, கர்மவினை முதலான சொற்களும் எடுத்துக்காட்டும்.
இந்து சமயம் கோயில் வழிபாட்டை மையமாகக் கொண்டது. கோயில் வழிபாடும் அதனுடன் இடம்பெறும் சடங்குகளும் இந்து மதத்தின் புறவழிபாட்டு அடையாளமாகும். “கோயில் இல்லா ஊரில் குடியிருக்க வேண்டாம்’ ‘ஆலயம் தொழுவது சாலவும் நன்று’ என்னும்
mC

Page 16
இடத்தைப் பெற்றுள்ளது என்பதை நிரூபிக்கப் போதுமானவை.
இறைவனைத் தாயாகக் கண்டு வணங்கும் ஒரே மதம் இந்துமதம். இந்தத் தாய்க் கடவுள் வழிபாடு சிந்துவெளியில் இருந்ததாக நாம் அறிகிறோம். தாய்க்கடவுள் வழிபாட்டின் பல்வேறு வடிவங்களாகவே மாரி அம்மன், கண்ணகி, சக்தி, காளி, துர்க்கை எனும் தெய்வங்கள் இந்து மதத்தில் சிறப்பிடம் பெறுகின்றன.
இயற்கையையும் இந்து மதம் தாயாகவே மதித்துப் போற்றுகின்றது என்பதனை பூமாதேவி, சமுத்திராதேவி எனும் சொற்றொடர்களே காட்டி நிற்கும். இது போன்றே அறிவு, செல்வம் என்பவற்றையும் சரஸ்வதி, லட்சுமி என்று இந்து மதம் பணிந்து வணங்குகிறது.
அ. கலைநிலா தரம் 12 (விஞ்ஞானப் பிரிவு) மட். விவேகானந்தா மகளிர் மகா வித்தியாலயம்.
தமிழர் தம் வாழ்வில் தாய்க்கு முக்கியத்துவம் கொடுப்பவர்கள். இதனை 'தாயிற் சிறந்ததொரு கோயிலும் இல்லை’ ‘தாய் சொல் துறந்தால் வாசகம் இல்லை’ ‘மாதா பிதா குரு தெய்வம்’ ‘அன்னையும் பிதாவும் முன்னெறி தெய்வம்’ எனும் பழமொழிகள் உணர்த்தி நிற்கும்.
இந்த வகையில் இந்து சமயம் தமிழர் வாழ்வில் இருந்து எந்த வகையிலும் பிரிக்க முடியாதபடி இரண்டறக் கலந்துள்ளது என்றே குறிப்பிடவேண்டும். மதம் வேறு வாழ்வு வேறு என்றில்லாமல் மதமே வாழ்வாக வாழ்வே மதமாக வாழ்ந்து காட்டுவதுதான் இந்து மத வரலாறு. வரலாற்றுக் காலம் தொட்டு இற்றை வரை - சமூக, அரசியல் மாற்றங்களுக்கும் ஈடுகொடுத்து நெகிழ்ச்சியுடையதாக - ஏனைய மதங்களையும் தன்னுள் சேர்த்துக்கொண்டு, தமிழர் வாழ்வோடு ஒன்றித்து வாழ்வதே இந்து மதம் எனக் கூறிக்கொள்ள 6)TD.
ه28كص=
 
 
 
 
 
 

கல்லைக் கலையாக மட்டுமன்றி, வரலாற்றாகவும் ஆக்கியிருக் கிறார்கள் நம் முன்னவர்கள். கலையைக் காண்பதற்கு நல்ல ரசனையும், கண்களும் போதும். ஆனால், வரலாற்றைக் காண ஆழமான பயிற்சியும் பொறுமையும் வேண்டும். ஐராவதம் மகாதேவனுக்கு இரண்டும் இருக்கின்றன என்பது தான் தமிழின் அதிர்ஷ்டம்.
96ft 6 (pg5usion "The Early Tamil Epigraphy 6Tsigo T6) அண்மையில் வெளிவந்துள்ளது. சென்னை “க்ரியாவும், ஹாவர்ட் பல்கலைக்கழகமும் இணைந்து பிரசுரித்துள்ளன. தமிழைப் பற்றிய முதல் நூலை வெளியிட்டிருக்கும் ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தின் முதல் நூலே அரிய நூல் என்பது பற்றிப் பெருமை கொள்ளலாம்.
செல்லரித்துப் போன ஏடுகளைச் சேகரித்து, பரிசோதித்து அந்த ஒப்பற்ற பழைய நூல்களைப் பதிப்பித்து, தமிழின் தொன் மையையும் வளமையையும் உலகறியச் செய்தார் டாக்டர் உ.வே.சா. அதேபோல் சிதைந்து போன கற்களை எல்லாம் தேடி அலைந்து, பொறுமையுடன் அவற்றை ஆய்ந்து, தமிழ் பற்றி இதுவரை அறிந்திராத பல புதிய உண்மைகளைப் புலப்படுத்தியுள்ளார் மகாதேவன். பொதிகை மலை பிறந்த மொழி வாழ்வறியும் காலமெல்லாம் இவ்விருவர் பெயரும் வரலாற்றில் நிலைத்து நிற்கும் என்பதில் சிறிதும் ஐயமில்லை.
ஆராய்ச்சி செய்வதில் இரண்டு வகைகள் உண்டு. ஒன்று முடிவுகளை வரையறுத்துக் கொண்டு, அவற்றை நிரூபிக்க வேண்டி, காரணங்களைத் தேடுவது. இரண்டு திறந்த மனத்துடன் ஆராயத் தொடங்கி, கிடைக்கிற விபரங்களைக் கொண்டு இவை தாம் முடிந்த முடிவுகள் என்று அறிவிக்காமல், இது வரை அறியும் காரணங்கள் மூலம் இவை தாம் முடிவுகளாக இருக்கக்கூடும் என்று சொல்வது அறிவு உலகத்தில் இது தான் முடிந்த முடிவு என்று எதுவுமே கிடையாது. கேள்விகள் விடையைத் தேடுவதும் கிடைக்கின்ற விடைகள்

Page 17
புதுக் கேள்விகளை எழுப்புவதுந்தான் அறிவுப் பயணம். அறியும் தொறும் அறியாமை கண்டற்று என்றார் வள்ளுவர்.
மகாதேவன் இரண்டாவது வகைப்பட்ட ஆராய்ச்சி அறிஞர். கல்வெட்டு ஆய்வுமூலம் விஞ்ஞானக் கண்ணோட்டத்தில் பார்க்கும் போது, தர்க்க ரீதியாக இன்ன இன்ன முடிவுகள் தாம் சாத்தியம் என்று கூறுகிறார். சமன் செய்து சீர்தூக்கும் கோல் போல், எப்பக்கமும் கோணாமல், அறிவுத் தளத்தில், நடுவு நிலைமை பிறழாமலிருக்கின்றன அவர் வாதங்கள். பன்மொழிப் பயிற்சியும், பன்முகப்பட்ட துறைகளில் முதிர்ந்த அறிவும் அவருக்கு இருக்கின்றன என்பதால் தான் அவரால் தம் கருத்துக்களைக் கோவையாக நிறுவ முடிகிறது.
பண்டையக் கல்வெட்டுக்கள், இவற்றைப் பற்றி இதுவரை வெளி வந்துள்ள ஆய்வுகள், தொகுக்கப் பெற்ற அவற்றின் வரிவடிவுத் தோற்றம், புகைப்படப் பதிவுகள், இவற்றைப் பற்றிய சமூகவியல் பார்வைகள், இவற்றின் மொழி அமைப்பு, இலக்கணம் என்று பல வகைகளில் ஆராய்ந்து எழுதப்பட்டுள்ள இந்நூல் 719 பக்கங்களைக்
கொண்டது. - இந்திரா பார்த்தசாரதி -
- நாற்பதாண்டு காலத்திய கல்வெட்டு ஆய்வுக் காதல் ஈன்ற பணி இது.
சங்க நூல்களில் வரும் பல பாடல் செய்திகளை இவருடைய கல்வெட்டு ஆய்வுகள் நிறுவுகின்றன. கி.மு. இரண்டாம் நூற்றாண்டி லிருந்து கி.பி. ஆறாம் நூற்றாண்டு வரை உள்ள கல்வெட்டுக்களை மட்டும் இவர் தம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்டிருக்கிறார். சங்க இலக்கியக் காலத் தொடக்கமும் கி.பி. இரண்டாம் நூற்றாண்டை ஒட்டித்தான் இருந்திருக்க வேண்டுமென்று தோன்றுகிறது.
பழம் கல்வெட்டுக்களில் பெரும்பான்மையானவை ஜைனத் துறவிகளுக்குக் கொடுக்கப்பட்ட கொடையைத்தான் குறிப்பிடுகின்றன. முதல் கல்வெட்டு (மாங்குளம் கி.மு. இரண்டாம் நூற்றாண்டு) நெடுஞ்செழியன் என்ற அரசனின் அரச அதிகாரி கடலன் வழுதி என்பவன் சமணத் துறவி நந்தசிரிகுவன் என்பவருக்கு அளித்த கொடையைக் குறிப்பிடுகிறது. கல்வெட்டுக்கள் தற்காலத்திய தமிழ்

வரிவடிவம்.
*கணிப் நந்த அளவிரிய் இ குவ்அன்கே தம்மம் இத்தா அ நெடுஞ் சழியன் பணஅன் கடன்அன் வழுத்திய்
கொட்டுபித்தஅ பளி இய்”
இது வட்டெழுத்துக்கும் முந்திய தமிழ் - பிராமி வரிவடிவத்தில் எழுதப்பட்டிருக்கிறது. மகாதேவன் கருத்தின் படி தமிழ் - பிராமியிலிருந்து தான் வட்டெழுத்துத் தோன்றியிருக்க வேண்டும்.
தமிழ் எழுத்துக்களின் வரிவடிவம் தமிழ் - பிராமியிலிருந்து நேரடியாக வந்தது என்று சொல்ல முடியாவிட்டாலும் அதன் தொடக்கம் பிராமியிலிருந்து தான் என்று கூறுவதில் தவறேதும் இல்லை என்கிறார் மகாதேவன். வட்டெழுத்தை தமிழ் - பிராமியுடன் இணைத்துச் சொல்வதற்கான கல்வெட்டுக்கள் இல்லை. தமிழ் வரிவடிவம் தென்னாட்டுப் பிராமியிலிருந்து உருவான கிரந்த வரி வடிவத்தை எளிமைப்படுத்தி உண்டாகியிருக்க வேண்டும் என்பது ஆசிரியர் கருத்து. கி.பி. எட்டாம் நூற்றாண்டைச் சார்ந்த செந்தலைத்துரண் சாசனங்களே இக் கருத்தை அரண் செய்யும் என்கிறார் மகாதேவன். மகேந்திர பல்லவன் (கி.பி. 590-630) காலத்திற்கு முந்திய தமிழ் வரிவடிவக் கல்வெட்டுக்களே கிடைக்கப்பெறவில்லை என்றால் அவை இருந் திருக்கும் என்றும் கூற இயலாது.
பிராமியிலிருந்து (கி.மு. 3ஆம் நூற்றாண்டு) தென்னாட்டுப் பிராமி, தமிழ் - பிராமி கி.மு. 2 ஆம் நூற்றாண்டில் கிடைத்தன. தமிழ் - பிராமியிலிருந்து கி.பி. 5ஆம் நூற்றாண்டில் வட்டெழுத்துத் தோன்றியது. கி.பி. 6ஆம் நூற்றாண்டில் தோன்றிய கிரந்தத்தின் எளிய வடிவமும் வட்டெழுத்தும் இணைந்து கி.பி. 7ஆம் நூற்றாண்டில் தமிழ் வரிவடிவம் உருவாவதற்குக் காரணமாயிருக்க வேண்டும் என்ற மகாதேவன் கருத்தை மறுப்பதற்கு வலுவான காரணங்கள் இதுவரை எவையும் இல்லை என்று தான் கூறவேண்டும்.
தொன்று தொட்டே நல்ல இலக்கிய வளம் பெற்ற தமிழில்
فDقک==

Page 18
கல்வெட்டு மொழி மட்டும் இந்தோ - ஆரியன் மொழிகளுடன் சம்பந்தப்பட்ட ஒரு கலப்பின் (Hybrid) மொழியாக ஏன் இருந்திருக்க வேண்டும் என்ற கேள்வியை டாக்டர் கமில் ஸ்வெலப்பில் போன்ற இந்திய மொழியியல் அறிஞர்கள் எழுப்பியிருக்கிறார்கள். இது ‘கலப்பின மொழி’ என்று மாங்குளம் கல்வெட்டு (கி.மு. 2ம் நூற்றாண்டு) முதற்கொண்டே இக் கல்வெட்டு மொழி, திராவிட மொழி வேர்ச் சொற்களை தரம் அடிப்படையாகக் கொண்டிருக்கின்றன என்பதை அற்புதமாக நிறுவியிருக்கிறார் மகாதேவன். இக் கல்வெட்டு ஆய்வுமூலம் சங்க காலத்தில் பொதுமக்களின் கல்வியறிவுச் சதவீதம் தமிழகத்தில் மிக அதிகமாக இருந்திருக்கின்றது என்றும் ஆசிரியர் கூறியிருப்பது இதுவரை நாம் அறிந்திராத ஒரு புதிய உண்மை.
தமிழ்ச் சமூக வரலாற்றில் இக்கல்வெட்டு மூலம் பல புதிய செய்திகள் நமக்குக் காணக்கிடைத்திருப்பதை புலப்படுத்தியிருக்கிறார் ஆசிரியர். கர்நாடகம் வழியாக கி.மு. 3ம் நூற்றாண்டிலிருந்து சமண மதம் பாண்டிய நாட்டுக்கு (மதுரை) வந்திருக்க வேண்டும் என்கிறார். மாங்குளம், அழகர் மலைக் கல்வெட்டுக்கள் மூலம் சமணம் பரவி யிருப்பதை அறிய முடிகிறது. சமணத் துறவிகளுக்குக் கொடை வழங் கிய அரசர்களோ குறுநிலத் தலைவர்களோ சமண மதத்தைச் சார்ந்திருக்க வேண்டுமென்ற அவசியம் இல்லை என்பதால் அக் காலத்திய சமய இணக்கம், இக்காலச் சூழ்நிலையுடன் ஒப்பிட்டுப் பார்க்கும்போது நமக்கு அக்காலம் குறித்து பெருமையும், இக்காலம் பற்றிய வேதனையும் ஏற்படுகின்றன. w
தொல்காப்பியம் கி.பி. 2ஆம் நூற்றாண்டுக்கு முன்பு
தோன்றியிருக்கவியலாது என்பது ஆசிரியரின் கருத்து. ஏனெனில், கி.பி. 2ஆம் நூற்றாண்டுக்கு முந்திய கல்வெட்டுக்களில் மெய் எழுத்துக்கள் புள்ளிகளால் குறிக்கப்படவில்லை. ஆயுத எழுத்தும் இருந்ததாகத் தெரியவில்லை. தொல்காப்பியம் தான் முதற்தடவையாக மெய் எழுத்துக்கள், புள்ளி கொண்டு குறிக்கப்படவேண்டுமென்று கூறுகிறது. ‘ஏ’ கரத்துக்கும்'ஓ' கரத்துக்கும் புள்ளி வேண்டுமென்கிறது.
1. மெய்யின் இயற்கை புள்ளியோடு நிலையல்
2. எகர ஒகரத்தியற்கையு மற்
3. முப்பாற் புள்ளியும் எழுத் தோரன்ன
فققک==

என்பன தொல்காப்பிய சூத்திரங்கள்.
இலக்கியம் கண்டதற்கே இலக்கணம் என்பதால் பல சங்க நூல்களுக்குப் பின்பு தான் தொல்காப்பியம் தோன்றியிருக்க வேண்டும். மொழி ஆய்வில் உணர்ச்சிகள் குறுக்கிடக் கூடாது என்பது மொழி நூல் பாலபாடம்.
எழுத்து, சொல் அமைப்பியல் (Orthography) இந்நூலில் குறிப் பிடத்தக்க பகுதிகளில் ஒன்று. தொடக்க காலத்திலிருந்து வட பெருங் கல், தென்குமரி வரை கலாசார பரிவர்த்தனைகள் தொடர்ந்து மிதந்து வந்திருக்கின்றன. சமஸ்கிருத கோட்பாடுகளுடன் உடன்பட்டோ அல்லது மறுத்தோ இயங்கி வந்திருந்தாலும் மொழியின் தனித்தன்மையைத் தொடர்ந்து காப்பாற்றி வந்திருக்கும் தமிழ் மொழி எந்தெந்த வகைகளில் இதைச் சாதித்திருக்கிறது என்பதை ஆசிரியர் மிக விளக்கமாகக் கூறியுள்ளார். மொழியின் உச்சரிப்புச் சாத்தியத்தின் அடிப்படையில் தான் எழுத்து - சொல் அமைப்பின் விதிகள் உருவாக்கப்படுகின்றன. ‘இலக்கணம்” என்ற பகுதியில் இதை மிக விரிவாக ஆராய்ந்துள்ளார் ஆசிரியர்.
தனித்தன்மையைக் காப்பாற்ற வேண்டுமென்றால் மொழி வெறுப்பு இதற்குக் காரணமாக இருந்திருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. காலனி ஆட்சி, அரசியல் காரணங்களுக்காக நமக்குத் தந்துவிட்டுப் போயிருக்கும் நன்கொடை இந்த வெறுப்பு. தமிழைப் பற்றி நாம் நியாயமாகப் பெருமைப்பட வேண்டிய விடயங்கள் கூட, தேவையில்லாத இவ் வெறுப்பின் காரணமாக இந்தியப் பிற மொழியாளர் பார்வையில் கொச்சைப்படுத்திப் போகக்கூடிய வாய்ப் புண்டு என்பதை நாம் மறந்து விடக்கூடாது.
சூழ்ந்து, அகன்று, ஆழ்ந்து, உயர்ந்து விளைந்த பார்வையே இந்நூலின் அடிக்கல். கல்வெட்டு ஆய்வுகளில் இதுவரை நான் அறிந்த நூல்களின் இறுதிக் கல், எல்லை நிலம், மேலும் மேலும் இத்தகைய ஆய்வுகள் தொடர்ந்து நிகழ அடிகோலும் அற்புதமான நூல். இதை சாத்தியமாக்கியிருக்கும் மகாதேவனுக்கு தமிழ் உலகம் மிகவும் கடமைப்பட்டிருக்கிறது. - நன்றி தினமணி.
فققک=

Page 19
தலைப்Uாகைப் பாரதி தந்த தமிழ் இன்றும் பலருக்கு மலைப்பாக இருக்கிறது.
ஆசைத் தமிழை அள்ளி அள்ளித் தந்த மீசைக்காரன் அவன்.
UsTupgrf6OUGSU நறுமணம் வீசிய பூமரம்.
Unggigsstaff நவீன கவிதையின் வேர்.
இராவணர்களுக்கும் இனித்த பிராமணத் தமிழ்.
3)Uguo6ofu unggo தோன்றியிருக்கா விட்டால் தமிழ்க் கவிதை சுவாசிக்க முடியாது செத்துப் போயிருக்கும்.
Umgooèsi அழகிய பட்டாடை ஆனால் கந்தலுக்குள்ளேயே
அவன் வாழ்க்கை கழிந்தது.
எட்டயபுரத்தின் இமயம் கட்டுப்பாட்டைக் காலின் கீழ் போட்டு மிதித்த கவிஞன்.
மாந்தோப்பில்
கனிந்த
தீந்தமிழ் அதைத் தின்னாதவர்களே இல்லை.
சுதந்திரதாகம்
Ungg5uj6of சொந்தமாகியதால்தான் அவன் இதயத்தில் இருந்து கவிதை எப்போதும் பெருக்கெடுத்தது.
சுதந்திரப் போர் மேகம் இந்தியாவைச் சுற்றி வளைத்த போது எட்டயபுரத்தில்
இவன் இழயாக முழங்கினான் அது கேட்ட வெள்ளையன் வீட்டுக்குள்ளேயே இருந்து விட்டான்.
~ கம்மதாசன்.
فق3كص=
 
 

Eழதீதுறிப் பரணி
அதிகாரம் - 6.
விஜயபாகுவின் தலைமையில் ஈழத்தில் நடைபெறும் விடுதலைக்கான கிளர்ச்சியை அடக்கி - வாகை சூடிய அதிராஜேந்திரன் உடனடியாகவே அந்நாட்டை விட்டுத் திரும்பாமைக்கு வலுவான காரணங்கள் இரண்டு இருந்தன. ஒன்று - கடலால் சூழப்பட்ட அந்தத் தீவின் கண்கொள்ளா அழகு. - மற்றது - அவன் இதயத்தில் இடம்பிடித்துவிட்ட சிங்களத்து எழில் நங்கை சித்திராங்கி.
குன்றுகளும், பாறைகளும் - அவற்றின் மேல் பன்னிரண்டு ஆண்டுக் கொரு தடவை அரியாசனம் போட்டு அமர்ந்துகொள்ளும் குறிஞ்சி மலர்கள் - அரவம் போல் அப்படியும் இப்படியும் நெளிந்து படரும் இளம் கொடிகள் - பற்றைகள் - ஓர் அழகிய மங்கையைப் போல ஒசிந்து ஒசிந்து நடை பழகும் ஆறுகள், அருவிகள் - அதிராஜேந்திரனுக்கு ஒன்றும் புதியவையல்ல. - இவற்றையெல்லாம் பாண்டிய நாட்டில் - சேரத்தில் - சாளுக்கிய நாடுகளில் நன்றாகவே பார்த்து மகிழ்ந்திருக்கிறான். ஆனாலும் - ஈழத்தின் ராஜரட்டையிலும், ரோகணத்திலும் அதே பாறைகளையும்
குன்றங்களையும், பசிய மரங்களையும் பார்த்தபோது அது அவனுக்கு வித்தியாசமாகவே தோன்றின. அவன் உள்ளத்திலும் பசை போல் ஒட்டிக்கொண்டன.
தரையெல்லாம் நிழல் தூவும் தருக்கள். தருக்களின் தலைகளை அலங்கரித்துகொண்டிருக்கும் அழகிய மலர்கள் - மலர்களில் மதுவுண்டு மயங்கி அங்கும் இங்குமாக ஆடிப்பாடும் பொன் வண்டுகள் - நிலத்தில் தலை குப்புறக் குதித்து தற்கொலை செய்துகொள்ளும் அருவிகள் - நிசப்தமான ஆறுகள் - அவற்றில் மெல்லெனத் தவழ்ந்து
35كص=

Page 20
வரும் அலைகள் - அலைகள் கரையில் கொண்டுவந்து கொட்டும் வெண்நுரைப் பூக்கள்.
இரண்டு வயிரமான கொம்புகளை ஏந்திக் கொண்டு எங்கே பகைவன் என்று எட்டி நடைபோடும் மத களிறுகள் - சிறு அரவம் கேட்டாலே சிலிர்த்து எழும் சிறுத்தைகள் - கண்டால் கண்கெட்டுப் போகுமென்று உடலெல்லாம் பொட்டுக்களோடும், தலையில் ஒரு பெரிய கொம்புக் கிரீடத்தோடும் திருஷ்டி பரிகாரம் செய்யும் கலைமான் கள் - கார்முகிலைக் கண்டால் மட்டும் ஆடுவதற்காகத் தன் தோகைக் காவடியைக் கவனமாக மறைத்து வைத்திருக்கும் கலாபங்கள் - பாலகர் போல பேசி மயக்கும் பஞ்சவர்ணக் கிளிகள் - நாகணவாய்கள் கழுத்திலே மணியாரம் சூடிய கள்ளம் கபடமில்லாத புறாக்கள் -
இவற்றையெல்லாம் ரோகணையின் இருண்ட காட்டிற்குள் கண்டு பரவசம் அடைந்து கொண்டிருந்தபோதுதான் சோழ சாம்ராச்சியத்தின் இளவரசன் இன்னுமொரு அழகில் சொக்கிப்போய் நின்றான்.
சேரத்துப் பெண்ணையும், பாண்டிய நாட்டுப் பாவையையும் சேர்த்தெடுத்த ஒரு கலவைபோல தோற்றம் அளித்த சிங்களத்துச் சிங்காரியைக் கண்டதும் அதிராஜேந்திரன் ஒரு கணம் கதிகலங்கிப் போனதில் ஆச்சிரியமே இல்லை.
யார் இவள்? இந்திரலோகத்துத் தேவதையா? இல்லை கந்தர்வ கன்னியா? என்று தனக்குள்ளேயே கேள்வி எழுப்பிய அதிராஜேந்திரன் சற்றுத் துணிவை வரவழைத்துக் கொண்டு அந்த ஆயிழையின் பக்கமாக நெருங்கிப் போனான். அப்போதுதான் அவன் காலடியில் கிடந்த ஒரு குடமும் சிறிது தூரத்தில் தாமரை மலர்கள் நிறைந்த தடாகமும் அவன் கண்களில் தெரிந்தன. ஒ. நீர் மொள்ள வந்திருக்கிறாள் போலும். என்று நினைத்த அதிராஜேந்திரன் - அவளோடு இரண்டொரு வார்த்தைகளாவது பேச ஆசைப்பட்டான். ஆனால், அவளோ மந்தகாசத்தை மட்டும் சிந்திவிட்டு, கீழே கிடந்த குடத்தை எடுத்து இடுப்பில் வைத்துக்கொண்டு இடக்கையால் அதனை லாவகமாகப் பிடித்தபடி அந்தப் பொய்கையை நோக்கி அடி எடுத்து வைத்தாள்.
فO یکس =

அவள் இடுப்பில் குடம் எடுத்து வைத்த விதமும், அதைப் பிடித்தபடி அவள் நடந்த நேர்த்தியும் அதிராஜேந்திரன் மனத்தை அப்படியே கவ்வி இழுக்கவே அவன் அந்த இடத்திலேயே அசையாது நின்று விட்டான்.
அன்றிரவு.! ஜனநாத மங்கலத்தில் கம்பீரமாக எழுந்து நிற்கும் சோழரின் அரண்மனையில் ஓர் அறையில் சந்தன மரத்தில் அழகுறச் செய்யப்பட்டு பசும்பொன்னும் மணியும் பதிக்கப்பட்ட அந்தப் பஞ்சு மெத்தைக் கட்டிலில் படுத்திருந்த அதிராஜேந்திரனை உறக்கம் தழுவ மறுத்தது. வெகு நேரமாக புரண்ட புரண்டு படுத்த அவன், வெறுத்துப் போனவனாய் பக்கத்தில் இருந்த சாளரத்தைத் திறந்து வெளியே பார்த்தான். நிலாப்பால் பொங்கி நிலமெல்லாம் வழிந்து கொண்டிருந்தது. இயல்பாகவே இயற்கையில் அதிக ஈடுபாடு கொண்ட அதிராஜேந்திரன், அந்த வெண்ணிலாவை இன்னும் அதிக வேட்கையோடு பார்த்தான். அங்கே அந்த இளமங்கை நின்று கொண்டிருந்தாள். அவ்வளவுதான். சோழ இளவரசன் தன் சுயநினைவை இழந்தே போனான்.
வரலாறுக குறுநாவல
அடுத்த நாளும் அந்த இடத்திற்கு, அதே வேளையில் போன அதிராஜேந்திரன், தாமரைத் தடாகத்தின் பக்கத்தில் கிடந்த பாறை ஒன்றின்மீது ஏறி அமர்ந்து கொள்கிறான். தண்டு ஏந்தி நின்ற தாமரைப்பூ என்னும் விளக்குகள் அந்த காட்டுப்பிரதேசம் முழுவதும் ஒளி அள்ளி வீசிக் கொணடிருக்கின்றன. அதனால் இருளுக்கு இருக்கவே இடம் இல்லாமற் போகின்றது. குளத்திற்குள் பனையான்களுக்கும் விரால்களுக்குமிடையே ஒரு பெரிய ஒட்டப்போட்டி நடைபெறுகின்றது. போட்டியில் எப்படியும் வெற்றி பெற வேண்டுமென்று எண்ணிய சில மீன்கள் நீருக்கு மேலாலேயே பாய்ந்து விழுந்ததனால் சில மலர்விளக்குகள் கவிழ்ந்து போகின்றன.
பாறையின் மீது அமர்ந்திருந்த அதிராஜேந்திரன் இந்தக் காட்சியை ரசிக்கும் மனநிலையில் இல்லை என்பதனை அவன் முகம் எடுத்துக்காட்டுகின்றது. கண்களிலும் ஒருவித ஏக்கம் - ஆனால் பார்வை மட்டும் அந்த ஒற்றையடிப் பாதையிலே படிந்து கிடந்தது.
mGà

Page 21
அதிராஜேந்திரனை ஆவலோடு எதிர்பார்த்தவாறே அங்கே காலடி எடுத்து வைத்த சித்திராங்கி, பொய்கையின் அருகில் இருந்த பாறையில் அவனைக் கண்டதும் அளவுக்கதிகமாகவே சங்கோஜம் அடைந்தாள். முன்பின் தெரியாத ஒரு இளஞனை மிகச் சமீபமாகப் பார்த்தால் வெட்கம் மட்டுமல்ல - அச்சமும் பீடித்துக் கொள்ளவே அவள் உம்மெல்லாம் வியர்த்துக் கொட்டியது.
சிங்களப் பெண்ணாக இருந்தாலும் ஒரு தமிழச்சி போலவே நான்கு குணங்களையும் நான்கு படையாகவே தாங்கி நின்ற சித்திராங்கியின் அருகில் சென்ற அதிராஜேந்திரன், ‘தங்கள் வருகைக்காகவே இத்தனை நாழிகளும் தவம் இயற்றினேன்’ என்றான். அவன் குரல்களில் விரகதாபம் தொனித்தது.
சோழ இளவரசனிடமிருந்து இந்த வார்த்தைகளைக் கேட்ட சித்திராங்கி இன்னும் அதிகமாகவே மிரண்டாள். வாயின் கதவுகளான உதடுகள் ஒன்றோடு ஒன்று ஒட்டிக் கொண்டன. இப்படி ஒரு நிலையைச் சற்றும் எதிர்பார்த்திராத அந்தப் பேதை, பொழுதுபோய் கொண்டிருப்பதையும் தன் தாய் தனக்காகக் காத்துக்கொண்டிருப்பாள் என்பதையும் உணர்ந்ததும் அதிராஜேந்திரன் மீது ஒரு வசீகரப் புன்னகை வலையை வீசிவிட்டு வெகு வேகமாக குளத்தில இறங்கி நீர் மோந்திக் கொண்டு, அந்த ஒற்றையடிப் பாதையில் அடிமேல்
அடி எடுத்து வைக்கலானாள். 6).JsT660)(6).JsT600T60I
அவள் போவதை ஆசையோடு பார்த்துக் கொண்டு நின்ற அதிராஜேந்திரன் அடுத்த நாளின் விடியலுக்காக ஏங்கத் தொடங்கினான்.
அடுத்த நாளும் வந்தது. அந்த இளங்காலைப் போதில் சொல்லி வைத்தாற்போல இரு சோடிக் கண்களும் அதே இடத்தில் சந்திக்கின்றன. ஒருவர் உள்ளத்தில் மற்றவர் அனுமதி இன்றி உட் கார்ந்து கொள்கின்றனர். ஓர் அழகிய காதல் நாடகம் ரோகணையின் அந்தக் காட்டுப்பிரதேசத்தில் சத்தமின்றி அரங்கேறுன்றது.
(தொடரும்)
r 3ଞ୍ଚି

தவரும் உண்மைகள்.
கடந்த ஒன்றரை மாதங்களாக நடைபெற்ற உலகக் கிண்ணப் கிரிக்கற் போட்டி பல புதிய நாடுகளின் உள் நுழைவால் உலகம் முழுவதும் பரந்துபட்டு பலரை தன்வசப்படுத்தியுள்ளது. அத்துடன் நாளாந்தம் பல புதிய ரசிகர்களையும் உருவாக்கி இருக்கிறது. உலகக் கிணி ணப் போட்டி முடிந்த கையோடு சார்ஜா கிணி ணம் தொடங்கியுள்ளது. இவைபோன்ற கிண்ணங்களும் கோப்பைகளும் ரெஸ்ட் போட்டி, ஒருநாள் போட்டி என்று மாறி மாறி வரப்போகின்றன. ஆனால் இதில் சிந்திக்க வேண்டியது என்னவெனில் இவை பல மணிநேரங்களை எங்களிடமிருந்து அபகரிக்கப்போகின்றன. இதனைவிட கிரிக்கற் போட்டிகளைப்பற்றிக் கதைப்பதிலும் விவாதிப்பதிலும் இன்னும் பல மணிநேரங்கள் கொள்ளையடிக்கப்படப்போகின்றன. வீணடிக்க இருக்கின்ற இந்த நேரங்களால் நாம் இழக்கின்ற இழக்கப்பேகின்ற சமூகப்பணிகள், சமூக வேலைத்திட்டங்கள் ஏராளம்.
பெரும்பாலான கட்டிளமைப் பருவத்து மாணவர்கள் தம்மைப் பற்றியே சிந்திப்பதற்கு நேரத்தை ஒதுக்காமல் இருக்கிறார்கள். வாழ்வின் இலட்சியத்தையும் இலக்கையும் தீர்மாணிக்க இப்பருவமானது இலக்கில்லாமல் அழிகின்றது. அழிவது நேரம் மட்டுமல்ல இலட்சியங்களும் தான். அண்மையில் வெளிவந்த க.பொ.த. சாதாரண முடிவுகள் இதனையே சுட்டிக்காட்டுகின்றன. நடைபெறப் போகும் உயர்தரப் பரீட்சையின் புள்ளிகளையும் இவை கடுமையாக பாதிக்கத்தான் போகின்றன. இம் மனவேதனையை எழுதுவதற்கு காரணம் எமது வீட்டின் இயங்கு நிலை கிரிக்கட் சந்தையாக மாறி இருக்கிறது. எமது மகன் இம்முறை A/L பரீட்சை எடுக்கின்றான். ஆனால் அவனோ கிரிக்கட் கனவிலயே மூழ்கி இருக்கின்றான். எமது கவலையெல்லாம் எனது மகன் பற்றியது மட்டுமல்ல. அவனைப்போல் எதிர்காலத்தை இழக்கப்போகின்ற பிள்ளைகளைப் பற்றியதுமே.
திரு. மு. குலசிங்கம் (தந்தை) சண்டிலிப்பாய்.

Page 22
மீண்டும் யாழ்ப்பாணம் தனது சுயமுகத்தைக் காட்ட வெளிக்கிட்டிருக்கிறது. 80களில் யாழ் நகரை ஆக்கிரமித்திருந்த வாள்வெட்டு, கத்திவெட்டு, சாதிச்சண்டை என்பன மீண்டும் களைகட்டி இருக்கின்றன. தெருச்சண்டியர்களும் வாள்வெட்டுக்காரர்களும் தமது கைவரிசையைக் காட்டத் தொடங்கி இருக்கின்றனர். நன்கு திட்டமிட்டு நடைபெறுகின்ற கொலைகளைப் பார்க்கும்போது கொலை ஒரு தொழிலாக மாறிவிடும் நிலை ஏற்படும் என்பதில் ஐயமில்லை.
அண்மையில் சாவகச்சேரியில் நடைபெற்ற கொலை பல அதிர்வுகளை ஏற்படுத்தி இருக்கிறது. நன்கு திட்டமிட்டு இக்கொலை நடைபெற்றிருக்கிறது. மற்றும் அநாமதேய கொலைகளும் பலத்த சந்தேகங்களை ஏற்படுத்தி வருகிறது. அமைதியும் இல்லாத சமாதானமும் இல்லாத இரண்டும் கெட்டான் சூழ்நிலைகளில் இவ்வாறான கொலைகள் தொடாச்சியாக முன்னர் வடபகுதியில் நடைபெற்றதை எவரும் மறந்துவிட முடியாது.
தனிமனித பழிவாங்கல்களுக்காப்பால் அரசியல் பின்னணிகள் இக் கொலைகளுக்கு பின்புலமாக இருக்குமோ என்றும் கூட சந்தேகப்படவேண்டி இருக்கிறது. சமாதானச் சூழல் ஒரு இறக்க நிலையை நோக்கி நகர்கின்ற நிலையை சாதகமாக்கி பல விடயங்கள் பலவிடயங்கள் வடபகுதியை முற்றுகையிடப் போகின்றன. வெள்ளை வான் மர்மக் கொலைகளின் குறியீடாக மாறிவிடும் அபாய நிலை மீண்டும் வடபகுதியில் ஏற்படுவதற்கு அதிக நாட்கள் இல்லை. போருக்குப் பின்னர் எழும் வன்முறைக் கலாசாரம் சிறுவர்கள் தொடக்கம் பெரியவர்கள் வரை பல்வேறுபட்ட பிறழ்வுப் போக்குகளை உருவாக்கி வருகிறது. ஒரு புறம் சட்டங்கள், விசாரணைகள் எனத் தொடங்கப்படுவதும் மறுபுறம் கருத்தரங்குகள், வெளியீடுகள் என்று பிரசாரப்படுத்துவதும் ஒருவகை தப்பித்தல் முயற்சியே நேர்மையற்ற அரசியல் தளங்களும் கபடமான தலைமைகளும் இருக்கும் வரை உண்மை நிலை மக்களுக்குத் தெரியப்போவதில்லை. பாவம் மக்கள். எப்போதும் பத்திரிகைச் செய்திகளைப் பார்த்து வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் என்பதுதான் உண்மை.
வி. பரந்தாமன் தென்மராட்சி.

எழுத்தாளனின் நிலை
உலகக் கவிஞர்களும் எழுத்தாளர்களும் பல்வேறுமொழிகளில் தமது ஆக்கங்களைப் படைத்தாலும், அவர்களின் பொதுமொழி கணிணிரும், புனினகையும் கலந்த மொழியாகும். அதுவே அவர்களினி இதய மொழியாகவும் உள்ளது. எழுத்தாளர்கள் சமூகத்தின் கண்கள் போன்றவர் கள் எனப் பேரறிஞர் அல்லாமா இக்பால் கூறியுள்ளார். எனவே கண்களை இமை பாதுகாப்பதுபோல் சமுதாயம் எழுத்தாளர்களைப் பாதுகாக்க வேண்டும். ஆனால் சமுதாயம் அவ்வாறு செயற்படுவதில்லை. சங்ககாலம் தொட்டு இன்று வரை எழுத்தாளர்கள் வறுமைப்பிழக்குள்ளேயே வாழ்ந்து வருகிறார்கள்” என்று மாத்தளை இஸ்லாமிய கலை இலக்கியப் பேரவையினி செயலாளரும், இலக்கிய ஆர்வலருமான எம். எம். Uர் முஹம்மத் தெரிவித்தார்.
அன்றுமுதல் இன்று வரை எழுத்தாளன் வீட்டில் தான் வறுமை வசதியாக வாழ்ந்துகொண்டிருக்கின்றது. அதற்கு நல்லதொரு உதாரணமாக இந்தப் புத்தக வெளியீட்டு விழாவை எடுத்துக்கொள்ளலாம். இந்நூலாசிரியை லறினா ஹக். தான் பயன்படுத்திவந்த கணினி இயந்திரமொன்றை விற்பனை செய்து அதன்மூலம் பெறப்பட்ட பணத்தைக் கொண்டே இவ்விரு நூல்களையும் அச்சிலேற்றியுள்ளார்.
சமுதாயத்திற்குக் காயம் ஏற்படும்போது எழுத்தாளனின் பேனை கண்ணிர் வழக்கின்றது.அந்த எழுத்தாளன் பொருளாதார சுமையைத் தாங்க முடியாது கணிணிர் வழக்கும்போது சமுதாயம் கண்களை மூடிக்கொள்கிறது. தமது படைப்புக்கள் மூலம் சமுதாயத்தை சிந்திக்க வைப்பவன் அறிஞன். சிந்தித்த விடயங்களைச் சிறப்பாக வடிவமைப்பவனி கவிஞனர். இந்நூலாசிரியையிடம் இந்த இரு ஆற்றல்களும் இருப்பதனால் அவர் கவிஞர் மட்டுமல்ல ஒரு அறிஞரும் கூட
பேராதனைப் பல்கலைக்கழக விரிவுரையாளரும், மாத்தளை ஆமினா தேசிய கல்லூரியின் பழைய மாணவியுமான செல்விலறினா ஏ.ஹக் எழுதிய “எருமை மாடும் துளசிச் செடியும்” என்னும் சிறுகதைத் தொகுதி மற்றும் “வீசுக புயலே” எனும் கவிதைத் தொகுதி ஆகியவற்றின் வெளியீட்டு விழாவின்போது வரவேற்புரை நிகழ்த்தும் போதே Uர்முகம்மத் இவ்வாறு கூறினார்.

Page 23
டோக்கியோ ம 60t_төрff ц ՍՈëáաԺՈa556 Uтоји су
♔ 0ഞ്ഞുശ്രൂ ബൈ இலங்கை எப்பக்கம் ஒரும் бT62јффó5
பணக்கார நாடு
எங்கள் ந பங்கு போட்டுக்
இந்தப் Կ
வர்த்தக வலைக் இலங்கை இந்தியாவும் லை
சுத்தமாக சுதந்திரத்தை இ
முதலாளி வர்க்க எதிர் கால 6Tőg-fő606!

ԴՖՈ6/76762յՈ: ஒன முதலீடு
56i
65u
த்திருக்கும் (5ՈIEI356IT քՍ6ՍՈւծ:
முகத்தோடு 2த்தில் இலங்கை
- காண் டீபன்