கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: போது 2003.07-08

Page 1
அயர்ந்து தூங்கு அகதிக்கு
ஒரு சிலரின் கையில் இ உலகத்தை அலங்கே
 

- *引 空。 *’-’’
LSLS
*ருக்கும் அதிகாரம் ாலமாக்குகின்றது

Page 2
ܢܠ
PROFESSIONAL PSYCHOLOGICAL COUNSELLING CENTRE
எண்ணிய முடிதல் வேண்டும்
நல்லவே எண்ணல் வேண்டும்
திண்ணிய வநஞ்சம் வேண்டும்
தெளிந்த நல்லறிவு வேண்டும்.
- மகாகவி பாரதி
ஆண்டுச் சந்தா 100EO !
வெளியீடு:
BATTICALOA.
 
 
 

போது - 1 இதழ் - 32
ஆடி - ஆவணி 2003 தோற்றம் 5-5-1998
நிர்வாக ஆசிரியர் (Managing Editor) சுவாமிஜி
போல் சற்குணநாயகம், யேச.
ஆசிரியர் (Editor)
நிர்வாகம்: (Management) சி. எம். ஒக்கஸ்
பணிமனை: ஜெஸ்கொம் அச்சகம், இல, 1, இயேசு சபை விதி, மட்டக்களப்பு
தொலைபேசி:
O55-23822. O5-22.983
E-mail ppccG2diamond.lanka.net
GEFUurfò
அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் விஸ்தரிப்பும் அதனோடியைந்த உலக LDLLLDT is Egylf. (Globalization) BLDg இனத்தைப் பேணி பாதுகாக்கப் போராடும் பல்வேறு தேசிய இனங் களுக்கு விடுக்கப்பட்ட அச்சுறுத்தல் என்பதில் ஐயமில்லை.
இந்த அபாயகரமான சூழ் நிலையில் தான் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பிருந்தே ஈழத் தில் வாழ்ந்து வரும் தமிழினம் - ಖ್ವಗ@: மொழி, தேசியம்,
வாகரைவாணகொழும்புத் 蠶 கில்ாசாரம் (பண்பாடு) என்ப
வற்றைப் பாதுகாப்பதோடு அவற்றைப் ப்பிக்கவேண்டிய கட்டாய நிலைக்
[bIsIல்நீருேக்கிறது
ஆங்கில மொழியின் ஆதிக் கம், அதோடு நெருக்கமான அறிவி யல் தொழில்நுட்பங்களின் அதிரடிப் பாய்ச்சல் - இவை கண்டு அதிர்ந்து போன தமிழ் அறிஞர் சிலர் - இன் னும் சில ஆண்டுகளே தமிழ் உயி ரோடு இருக்கும் என்று ஆரூடம் கூறத் தலைப்பட்டுவிட்டனர்.
ஓர் இனத்தின் உயிர் அதன் மொழி. உயிர் அழிந்தால் உடம்பு இருக்கப் போவதில்லை. எனவே தான், ஈழத் தமிழர்களாகிய நாம் எமது வரலாறு, இலக்கியச் செழிப்புள்ள மொழி - இணையில்லாக் கலை,

Page 3
கலாசாரம் என்பவற்றை எந்த ஒரு நிலையிலும் பாதுகாத்து அவற்றை எமது சந்ததியினரிடம் கையளிக்க வேண்டிய பாரிய பொறுப்பை ஏற்றுக்கொண்டிருக்கிறோம்.
வீட்டில் கூட தாய் மொழியில் பேச விரும்பாத தமிழர்கள் வாழும் விசித்திரமான காலம் இது இந்த நிலையில் தமிழ்க் கலை, கலாசாரம் பற்றி அவர்கள் கவலைப்படப் போகின்றார்களா என்ன? ஆகவேதான் இனமொழி உணர்வுள்ள தமிழர்களாவது, 'காக்கைக்குத் தன் குஞ்சு பொன்குஞ்சு', 'குரங்கிற்குத் தன் குட்டி பொன் குட்டி' என்ற உணர்வோடு ஒன்றிணைந்து தம் கடமையைச் செய்ய வேண்டுமென்று கனிவோடு கேட்கின்றோம்.
உலகளாவிய சிந்தனையைச் சுவாசமாகக் கொண்டிருக்கும் கிறிஸ்தவம், மாக்ஸிசம் என்னும் சமய, அரசியல் நிறுவகங்கள் துண்டு துண்டாக உடைந்துவிட்டமை ஒவ்வொரு இனமும் குழுவும் சுயம் தேடும் முயற்சியில் இறங்கி விட்டமையையே காட்டுகின்றது.
இந்தத் தேடல் எவ்விதத்திலும் குறுகிய கண்ணோட்டம் ஆகாது. சோவியத் ஒன்றியம் இன்று பல நாடுகளாகக் காட்சியளிப்பது சுயத்தின் மீதிருந்த காதலால் தான். சுயம் சுவீகரிக்கப்படும்போது ஓர் இனம் அழிந்தொழிந்து போனமைக்கு அமெரிக்க அவுஸ்திரேலியப் பழங்குடிகளின் வரலாறே தக்க சான்று.
தமிழ் நாட்டில் சங்க காலத்தின் பிற்பகுதியில் தமிழர்கள் தம் சுயத்தை இழந்தமையால்தான் ஆரியம் அவர்களைத் தாக்கி அடிபணிய வைத்தது. இதன் விளைவை தமிழர்களின் சமய வழிபாட்டில் இன்றும் பரக்கக் காணலாம்.
ஆரியத்தின் தாக்கத்தைப் போன்றே பிற்காலங்களில் ஏற்பட்ட ஐரோப்பியரின் மேலாண்மையும் தமிழர்களைப் பல்வேறு துறைகளில் அவர்களின் சுயத்தை இழக்கச் செய்தது. இந்த நிலையில் இருந்து தமிழர்களால் எழுந்து நிற்கவே முடியவில்லை.
எழுந்து நிற்காத ஒரு சமுதாயத்துக்கு எதிர்காலம் இருக் கின்றதா? சுயம் இல்லாத இனம் சுதந்திரத்தைப் பூரணமாக அனு பவிக்க முடியுமா? தமிழர்கள் உரத்துச் சிந்திக்க வேண்டிய காலம் இது
வாகரைவாணன்.
CO2)

புதியவானம்,புதிய பூமி,போதுமா?
நாடுகள், எல்லைக் கோடுகள். வர்க்க வேறுபாடுகள், சாதி ஏற்றத்தாழ்வுகள், இனக் குரோதங்கள், மொழிப் பிரச்சினைகள் அனைத்தையும் தாண்டி உலகம் ஒரு கிராமமாயிற்று. உலகத்தில் எந்த மூலையிலிருப்பவர்க்கும் - தொடர்பும் சேவையும் கிடைத்து அவர் தேவை நிறைவாகும் ஆரோக்கிய நிலை உருவாயிற்று. இவற்றுக்கு ஆதார சுருதியாக, அடிப்படைத்தளமாக இன்று இருப்பது இணையமாகும். இணையமயமாகாத மொழி அழிவது திண்ணம் என்று பல அறிஞர்கள் ஆரூடம் சொல்லுமளவிற்கு இணையத்தின் முக்கியத் துவம் வளர்ந்துள்ளது, வந்துள்ளது. இணையத்தில் புகாத துறைகளே இல்லை என்று கூறுமளவிற்கு இணையம் எல்லாத் துறைகளிலும் புகுந்துள்ளது. அதன் காரணமாக இணையத்தில் எல்லாத் துறைகளும் இணைந்து கொண்டன.
நவீன யுகத்தில் உலகத்தைக் கிராமமாக்கி ஒவ்வொரு மனிதனையும் இணைக்கின்ற ஓர் ஊடகமே இணையம் எனலாம். எதையும் அறிந்து விடுவோம் என்ற உறுதியானது உலகை இன்று ஓர் கூரைக்குள் இணைக்கிறது. ஒரு கூரைக்குள் வாழும் மனிதன் ஒரு கிராமத்தவன் போலாகின்றான். இங்கு கிராமத்தவன் என்பது கிணற்றுத்தவளை என்றும், உலகம் தெரியாதவன் என்றும், இன்னும் எளிமையாகச் சொன்னால் நாட்டுக்கட்டை என்றும் கருதும் நிலையில் குறிப்பிடப்படவில்லை. ஆயின் தன்னிறைவு கொண்ட கிராம வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டதே இதன் கருத்து. தன்னுடைய சகல தேவைகளையும் (மிகச் சொற்பமானவையே ஆரம்ப காலம்) தன் கிராமத்தில் பூர்த்தி செய்து தன்னிறைவு கண்ட மனிதனையே மனதிற் கொண்டு இன்று உலகம் ஒரு கிராமமாயிற்று எனச் சிறப்பிக்கப்படுகிறது. இப்பணியை இணையம் செய்கிறது. இணைக்கும் தளம் இணைய தளமாகி இன்று இணையம் என்று உலகத்தைச் சுருக்கியதுபோல தானும் சுருங்கி நிற்கிறது.
அமெரிக்காவிலுள்ள கம்பனியில் பங்குகள் கொள்வனவு செய்ய வேண்டுமா..? அளவெட்டியில் உள்ளவர் தொடர்புகொள்ளலாம். கனடாவில் உள்ள மாப்பிள்ளைக்கு மணமகள் கொடுப்பதா? கரவெட்டியிலிருந்து விண்ணப்பிக்கலாம். இங்கிலாந்திலுள்ள மருந்து வேண்டுமாயின் இலங்கையிலிருந்தே பெற்றுக்கொள்ளமுடியும். இன்னும் என்னனென்ன

Page 4
தேவையோ, தாயையும் தந்தையையும் தவிர எல்லாம் பெறலாம். இருக்கவே இருக்கிறது இணையம். தேவை உள்ளோரை இணைத்துச் சேவை பெற வைக்கிறது. விருப்பமுள்ளவர்களை அவர்கள் விருப்பம் போலவே இணைய வைக்கிறது. இந்த இணையத்தின் அகராதியில் இல்லை என்ற சொல்லே இல்லை என்று கூறும் வகையில் எல்லாம் இருக்கிறது. இதனால் தான் இணையத்தை இன்பமேஷன் சுப்பர் ஹைவே (Information Super highway) என்று போற்றுகிறார்கள்.
வில்லியம் கிப்சன் (William Kipson) என்பவர் தனது நீரோ மென்சர் (Nero Mensor) என்ற விஞ்ஞான நாவலில் சைபர் ஸ்பேஸ்” (Zero Space) என்று குறிப்பிட்டுள்ளார். இது சமரசம் உலாவும் இடமே என்று காட்டப்படுகிறது. மேலும் இயல், இசை, நாடகம் என்று முத்தமிழாய்ப் போற்றப்பட்ட தமிழ் இன்று கணனித் தமிழால் நான்காவது தமிழாய்ப் பொலிந்துள்ளது என்கின்றனர். இன்னும் ஐவகை நிலமாயும், அதனால் ஐவகைத் திணையாயும் அதுவே ஐவகை ஒழுக்கம் எனவும் குறிப்பிட்டோர் இன்று சைபர் ஸ்பேஸ் (Zero Space) வரவின் மூலம் ஆறாம் நிலமாய், ஆறாந் திணையில், ஆறாவது ஒழுக்கமாய் அதிகரித்துவிட்டதென ஆர்ப்பரிக்கின்றனர். (மூன்றாவது கண், ஆறாந்திணை ஆகிய சஞ்சிகைகள் வருவதை வாசகர் அறிந்திருப்பர் என நம்புகிறேன்).
ஒழுக்கம் என்று வரும்போது தான் சற்று ஆழமாகச் சிந்திக்க வேணி டிய கடப்பாடு எமக் குள்ளது. இதன் காரணமாகவே இணையத்தளத்தில் இணைந்து கொள்பவர்கள் அன்னப்பறவைகளாக இருக்க வேண்டுமென இடித்துரைக்கப்படுகிறது. இனிவரும் காலம் இணையத்தின் காலம். இன்றைய இளஞ்சிறார்கள் எதிர்காலச் சிற்பிகள், சமுதாயத்தை உருவாக்கும் விற்பன்னர்கள் என்பது எப்போதும் சொல்லும் மொழி. இவர்கள் இணையத்தின் காலத்தோடு மோதுகிறார்கள். இயற்கையோடு மோதிச் சீரழிந்த எம்மினம் இனி இணையத்தோடு மோதி சீர்ப்படுமா? சீரழியுமா? என்ற கேள்வியில் சீரழிந்திடும் என்ற பதிலே மேலோங்கி நிற்கிறது. இப்படியும் இணையத்தினால் இன்று இளஞ்சிறார்கள் சீரழிகிறார்கள் என்ற புதிய தகவல்கள் - தரவுகள் இதயத்தைச் சுடுகின்றன. இடித்துரைக்கப்பட்ட போதும் இதுபற்றிச் சிந்திக்கத் தவறுகிறோம்.
இணையம் தீ போன்றது. இத்தீயினால் விளக்குக் கொழுத்தலாம். ஏன் வீடும் கொழுத்தலாமே. இளஞ்சிறார்கள் என்ற பஞ்சுகளை இந்த

இணையத்தியின் பக்கத்தில் விட்டுவிட்டு பெற்றோரும் - உற்றோரும் ஒதுங்கியிருக்கிறோம். இந்தப் பஞ்சுகள் பற்றிக்கொள்ளுமா? பக்குவமாய் வருமா? பதற்றப்பட எங்களுக்கு நேரம் இல்லை என்கிறோம். தொலைக்காட்சிப் பெட்டியும் (தொல்லைக்காட்சி) தொலைபேசியும் (தொல்லைபேசியும்) அத்தியாவசியப் பொருட்கள் என்று நியாயம் கற்பிக்றோம். இனி என்ன? "மொடம்” என்ற இணைப்புக்கருவியினுடு பிள்ளைகள் இணையத்தளத்தில் இணைந்து கொள்கிறார்கள். என் பிள்ளை ‘இன்ரநெற்றில்தான் நிறையப்படிக்கிறா(ன்/ள்) என்று பெருமை பேசுகிறோம். பிள்ளை படிக்கிறதா - பாலான விடயங்களைப் பார்க்கின்றதா என்பதில் யாமொன்றும் அறியோம் பராபரனே என்று இருந்துவிடுகிறோம்.
அறையில் இரகசியமாக நடைபெற வேண்டிய முதலிரவுக் காட்சியை இணையத் தரில் அம் பலமாகக் காட் டுவதற்கு இளஞ்ஜோடியொன்று தயாராகிறது. இந்தச் சோடியின் பரோபகாரத்தைப் பார்த்து ரசிக்க இளசுகள் ஆவலாய் இருக்கின்றன. பத்திரிகைச் செய்தி பரவசமூட்டுகிறதா? பயப்படச் செய்கிறதா? பதின்மூன்று வயதுப் பருவப்பெண் பக்குவப்பட்ட உடலினால் (உள்ளத்தினாலல்ல) அந்த உடலின் வனப்புகளைப் பலரும் பார்த்து ரசிக்க காட்டியுள்ளார். எத்தனையோ இளசுகள் பார்த்து இன்பம் அடைந்திருக்கிறார்கள். வசதி படைத்த பெற்றோரின் பிள்ளைகள் வீட்டிலிருந்து பார்க்க, வசதியற்ற பெற்றோரின் பிள்ளைகள் ‘இன்ரநெற் தொடர்புள்ள “கம்யூனிகேசன்’ (Communication) கடைகளுக்குச் சென்று கூட்டாகப் பணம் சேர்த்து பார்த்துப் பரவசப்படுகிறார்கள். இன்னும் இன்னும் எத்தனையோ சங்கதிகள் எதைச் சொல்வது..?
இந்நிலையில் இங்கிலாந்து அரசு இணையத்தில் நடக்கும் தவறுகளைக் கண்டறிந்து இல்லாதொழிக்க சர்வதேச இரகசியப் பொலிஸ் படையணியை உருவாக்கி இயங்கவைத்துள்ளது. இருந்தும் இணையத்தினுடாக ஹக்கிங் (Hagging) இன்ரநெற் கிரைம் (Internet Crime) போன்ற தவறுகள் இடைவிடாது காட்டப்படுகின்றன. இதனைத் தடுப்பதற்கு 337,000 ஸரோலிங் பவுண்களை (இலங்கை ரூபாவில் அண்ணளவாக 50550,000) இங்கிலாந்து அரசு ஒதுக்கியுள்ளது. இருப்பினும் இவ்வாறான தவறுகள் அதிகரித்தவண்ணமே உள்ளன. இதனை உணர வேண்டியவர்கள் யார்? திருடனாய்ப் பார்த்து திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாது என்ற சித்தாந்தம் இங்கு பொருந்தாது. இளஞ்சிறார்டrைஅங்கங்கரணமாக ஐ

Page 5
ஆவலாக இவற்றில் சிக்குண்டு போகிறார்கள். இதனைத் தடுப்பது யார்.? சிந்திக்கத்தானும் நேரமிருக்கிறதா?
“ஏட்டிலோ
சுவட்டிலோ
தேடாதே.
இணையத்தில்
தேடு
இன்றைய வரலாற்றை” என்று ஒரு கவிஞர் எழுதியிருந்தார். இணையத்தினூடாக வரலாறு தேடப்போய் எமது ஒழுக்க வரலாறு இடம் தெரியாமல் போகின்றதே. அன்னப்பறவைகளாக நாமிருந்தால் சரி. ஆனால் வயதும், இளமை வேகமும் கொண்டோர் பன்னாடைகளாகவே மாறுகிறார்களே சரியா..? புதிய வானம், புதிய பூமி புரட்சிகரமான சிந்தனை தான். உலகம் ஒரு கிராமமானது உண்மையான சங்கதிதான். ஆனால் ஒவ்வொரு மனிதனும் தனித்தனி உலகமாகிவிட்டார்களே இது பொய்யா..?
“மலரைவிட
மென்மையானது
மனிதனின் மனது
இணையம்
மென்மையானதுதான்
இதயம் அதைவிட
மென் மை யானது” என்று ஒரு கவிஞன் எழுதியிருந்தான். இந்த மென்மையான இதயத்திற்குச் சொந்தக்காரர்களாக நாம் நடந்துகொள்கிறோமா..? வாடிய பயிரைக் கண்ட போதெல்லாம் வாடினேன் என்றார் வள்ளலார். நாம் வாடிய மனிதரைக் கண்டாவது வாடுகிறோமா? இதயத்துக்கும் இரும்புப் பெட்டிக்கும் சம்பந்தமில்லை என்பது பழமொழி. இணையத்துக்கும் இதயத்துக்கும் சம்பந்தமேயில்லை என்பது புதுமொழி. வெறும் இலாப நோக்கில் இளஞ்சிறார்களை சீரழிக்காமல் சீர்படுத்த வேண்டிய சிந்தனையை எல்லோரும் கொண்டிருக்க வேண்டுமன்றோ தீபத்தின் ஒளியில் திருக்குறள் படித்தால் தீபத்தின் பெருமையன்றோ. அந்தத் தீபத்தினால் ஒரு நெஞ்சத்தை எரித்தால் தீபமும் பாவமன்றோ. தீ இனிது என்று பாரதி சொன்னது போல் இணையமும் இனிது தான். இதனை இங்கிதமாய்ப் பாவித்தால் புதிய வானமும், புதிய பூமி தேவைதான். அது புரட்சியை உலகுக்கு ஏற்படுத்தினால். இல்லையென்றால்..??? G06)

கொடுமையிலும் கொடுமை எது கொடுமை என்று யாரும் கேட்டதில்லை.
அழகின் தேவதை எட்டாவது உலகதிசயம் நீதான் என்னுயிர் பெண்ணுக்குச் சமவுரிமை என்றெல்லாம் சொல்கின்றான்.
ஆனால்
திருமணப் பந்தலில் அவன் சீதனம் எனும் வட்டிக்கடையில் உண்மைக் காதலையும் ஈடுவைக்கிறான்.
உன்னால் உழைத்துக்காப்பாற்ற முழயாவிட்டால் உனக்கெதற்குத் திருமணம்? உனக்கில்லை முதுகெலும்பு?
பெண்ணாகப் Uறந்தால் என்ன பாவமா?
அழகுதேவதை என்கிறீர்கள் உயிரே என்கிறீர்கள் - ஆனால்

Page 6
சீதனமின்றி அவளை கைப்Uழக்கத் தைரியமில்லை!
ஒரு தேவதைக்குத் கள்ளிப்Uால் கொடுக்கிறாள் ஒருத்தி!
ஒரு உலகதிசயத்தை உலக அழகியை நஞ்சுவைத்துக் கொல்கிறாள்!
என் சுவாசமே உயிரே என்பவளைப் பெற்ற தாயே திருமண சந்தையில் விலைபேசமுடியாததால் கொன்றாளென்று
பத்திரிகைச்
செய்தி சொல்கிறது.
உன்னைப் பெற்றவளும் உலகத்தில் றநல்லவளும் பெண்
அவளை விலை பேசாதே.
இதைப் புரிந்தால் மனிதன் நீ இல்லை யென்றால்.?
எஸ். பி. பாலமுருகன்

பொய்கை
- ഔ utfഞഖ -
இருபதாண்டு காலமாக இலங்கையில் இடம்பெற்ற உள்நாட்டுப் போரினால் உருக்குலைந்துபோன பழம்பெரும் கிராமங்களில் மட்டக்களப்பு மாவட்டத்தின் வடபுலத்தில் உள்ள வாகரையும் ஒன்றாகும்.
நிலவளத்தில் மட்டுமன்றி நிகர் இல்லாக் கிராமிய கலை வளத்திலும் சிறந்து விளங்கும் இக்கிராமம் கடந்த வருடத்தில் ஏற்பட்ட சமாதான உடன்படிக்கையின் பயனாக மெல்ல மெல்லக் கலகலப்பில் மிதப்பதைக் காணலாம். இதன் ஒரு வெளிப்பாடாகவே 02-08-2003ல் கண்டலடி வாகரையில் அரங்கேற்றப்பட்ட "நக்சுப்பொய்கை" வடமோடிக் கூத்து விளங்குகிறது.
வாகரை - பனிச்சங்கேணி கிராமங்களின் பொலிஸ் தலைமையாகவும், பின் கிராம அதிகாரி ஆகவும் பல்லாண்டுகள் பணிபுரிந்த அமரர் பேதுருப்பிள்ளை (உடையார்) சந்தியாப்பிள்ளை விதானையார் அவர்கள் கவித்துவம் மிக்க ஒரு தமிழ்ப் புலவர் என்பதை அவர் எழுதிய இளவரசி சரித்திரம், நச்சுப்பொய்கை, துரோணர் சபதம் என்னும் நாட்டுக்கூத்துக்கள் எடுத்துக் காட்டும்.
வாகரை ஊரின் ஒரே ஒரு நாட்டுக்கூத்து ஆசிரியரான விதானையார் அவர்களின் துரோணர் சபதம் எனும் நாட்டுக்கூத்து 1984ஆம் ஆண்டு வாகரையில் திரு. கணபதி இளையதம்பி அண்ணாவி அவர்களால் அரங்கேற்றப்பட்டது. நச்சுப் பொய்கை எனும் நாட்டுக் கூத்தும் இளையதம்பி அவர்களாலேயே மிகக் குறுகிய காலத்தில் பழக்கப்பட்டு அரங்கேற்றம் கண்டது.

Page 7
பதினெட்டுப் பாத்திரங்களைக் கொண்ட அந்தப் பாரம்பரிய நாட்டுக்கூத்தில் பங்கேற்ற கலைஞர்கள் அனைவரும் தம் பாத்திரத்தை உணர்ந்து நடித்திருந்த போதும் அவர்களில் திரு. அ. காளிக்குட்டி (வீமன்), திரு. சீ. வாமதேவன் (சயிந்தவன்), செல்வன் க. சுதர்ஸன் (சிவபெருமான்), திரு. ஆ, தவராசா (துரியோ தனன்) ஆகியோர் சிறப்பாகக் குறிப்பிடப்பட வேண்டியவர்கள்.
மேலும், இக்கூத்தில் அருச்சுனன், நகுலன், சகாதேவன் முதலான பாத்திரங்களை ஏற்றுத் தம் திறமையைக் காட்டி சிறப்பாக நடித்த சிறுவர்கள் அனைவரும் மனம் திறந்து பாராட்டப்பட வேண்டியவர்கள் என்பதில் இரு வேறு கருத்திற்கு இடமிருக்க முடியாது. மிக நீண்ட இடைவெளிக்குப் பின்பு வாகரையில் அரங்கேறிய இந்தக் கூத்தின் மையக் கருத்தை ஒட்டி ஏனைய கதை நிகழ்வுகளை ஒழுங்காக நகர்த்தி, ஒருங்கமைத்து பாத்திரங்களின் தன்மை, தாளக்கட்டுக்கேற்ப அருமையான பாடல்களும் அமைக்கப்பட்டிருந்தன. குறிப்பாக கூத்தின் இறுதிக் கட்டத்தில் கிருஸ்ணனுக்கும், தருமருக்கும் இடையே இடம்பெறும் பாடல்கள் அற்புதமான வேதாந்தக் கருத்துக்களைக் கொண்டிருந்தமை பாராட்டப்பட வேண்டிய ஒரு நல்ல அம்சமாகும்.
பல்வேறு விதங்களில் உள்நாட்டுப் போரினால் பாதிக்கப்பட்டு மிகக் குறைந்த வருமானத்தில் வாழ்க்கை நடத்தும் இக்கிராம மக்கள் தமது பாரம்பரியக் கலைகள் மீது கொண்டுள்ள பற்று அக்கலைகள் அழிந்துவிடாமல் பாதுகாக்க வேண்டும் என்னும் அவர்களின் ஆர்வம் - இவற்றின் அடையாளம் தான் இந் நாட்டுக்கூத்து அரங்கேற்றம்.
இந்நாட்டுக்கூத்தை அப்பகுதி மக்கள் இரவு முழுவதும் விழித்திருந்து பார்த்து மகிழ்ந்தமை வாகரைக் கிராமம் இன்றும் துடிப்போடு இருக்கின்றமையை வெளிச்சம் போட்டுக் காட்டியது.
அமரர் பே. சந்தியாப்பிள்ளை விதானையாரின் இவ் அமர காவிய அரங்கேற்றத்திற்கு அனுசரணை வழங்கிய மட்டக்களப்பு
எகெட் நிறுவகம் என்றென்றும் பாராட்டிற்குரியது.
- ரசிகண்.

தோஷமென விஜயனுடன்
தோழரவர் வந்ததன் Uன் நாசமது விளைந்து விடும்
நாகர் எனும் தமிழ் மக்கள் தாசர் என ஆவார்கள்
தமது நிலை இழப்Uார்கள் வீசு புகழ் வரலாறு
வீழ்ச்சியது காணுமம்மா!
நாகரவர் மலை மக்கள்
நானிலத்தில் மூத்த நிலம்! மோகமது ஊட்டும் பூ
மொய்த்திருக்கும் குறிஞ்சி நிலம் தேகமெலாம் புல்லரிக்கும்
தெய்வமதன் திருக்கோலம் வாகுமிகு முருகனவன்
வணங்கிடுவார் தமிழரெல்லாம்!
தீசனவன் ஆட்சியிலும்
தீவு எலாம் தமிழர்களே! Uாசமதை அறுத்த மதம்
Uெளத்தமது வந்த Uன்னும் ஈசனவன் சிவ வணக்கம்
இந்நாட்டில் சிறந்திருக்கும் பேசுமிதை வரலாறு
பெருமை மிகு தமிழினமே!

Page 8
புத்தரவர் கொள்கையெலாம்
பூமியிசில் செழித்தோங்கும் சுத்த சைவம் மெல்ல மெல்ல
சுருதியது அடங்கிப்போம் நித்தம் பல சண்டை எழும்
நிலமிதிலே இரண்டு இனம் அத்தனையும் விஜயன் வழி
ஆட்சியினால் வந்த வினை!
இந்தியாவில் இருந்து பல
இனங்கள் இங்கு குழயேறும் சந்ததிகள் நாடிதிலே
சரித்திரத்தில் முதன்மை பெறும் எந்தமிழர் சூழ்ச்சியினால்
இருந்த தெல்லாம் தாமிழப்பார் சிந்தையது கொதிக்கும் அம்மா
செய்வதென்ன நான் அறியேன்!
மன்னனவன் கைமுனுவும்
மறத்தமிழர் இனமாவான் என்ன இது கதை என்று
இங்கு சிலர் வினவுவரேல் அன்னவர்க்குச் சொல்வேன் யான்
அறிந்திடுக வரலாறு தென்னிலங்கைச் சிங்களவர்
செந்தமிழர் இனம்! உண்மை!
(கனவு தொடரும்)

ஒரு கிராமத்தின்
எழுபது வயதை எட்டிப் பிடித்துக்கொண்டிருக்கும் ஜீவரெத்தினம் மாஸ்டர் நன்றாகத் தளர்ந்துதான் போனார். ஆனாலும், அந்த தளர்ச்சியை அவரது வயதோடு தொடர்புபடுத்தி, இளந்தாரி யாராவது கதைத்துவிட்டால் போதும், மாஸ்ரரின் உடம்பில் உள்ள ஒவ்வொரு நரைமயிரும் வீரியம் பெற்று வேலாக நிமிர்ந்து நிற்கும். அதோடு மட்டும் விட்டுவிடுவாரா? “வாறாயா சண்டை பிடிச்சிப் பார்ப்போம்” என்று அந்த இளந்தாரிக்குச் சவாலும் விடுவார்.
அப்படியானால் மாஸ்ரரின் தளர்ச்சிக்கு என்னதான் காரணம்? இந்தக் கேள்வியை அவரை நன்கு அறிந்தவர்களிடம் கேட்டால் “எல்லாம் தான் பிறந்த ஊரில் உள்ள விசர்தான்’ என்று ஏக வசனத்தில் பதில் சொல்லிவிடுவார்கள்.
பிற்பகல் நான்கு மணியிருக்கும். வெயிலரசன் தனது ஆட்சிப் பீடத்திலிருந்து இன்னும் வெளியேறாமல் இருக்கிறான். வீட்டு வெளி விறாந்தையில் துண்டை விரித்துப் போட்டுப் படுத்திருந்த மாஸ்ரர் கண்விழித்துக் கொள்கிறார். ஒரே புழுக்கம். வியர்வை உடம்பில் ஆறாகப் பெருக்கெடுக்கின்றது. “என்னடா காகத்தைக்கூட காணம். அதுவும் அந்தக் குண்டுச் சத்தத்திற்குப் பயந்து போயித்தாக்கும்.” தனக்குத்தானே சொல்லிக்கொண்ட மாஸ்ரர் ஒரு சின்னச் சிரிப்புச் சிரித்தபடி றோட்டோரமாகத் தன் பாட்டிற்கு முளைத்து வளர்ந்து குளிர்ந்த நிழலை அள்ளிக் கொட்டிக் கொண்டிருக்கும் வேப்பமரத்தின் கீழ் போய் அமர்ந்து கொள்கின்றார். காற்றின் வரவு தெரிகின்றது. வேப்பம் குழைகள் விசிறியாகின்றன. தோளில் கிடந்த துண்டால் மாஸ்ரர் வியர்வையை நன்றாகத் துடைத்து விடுகின்றார்.
அடிக்கடி யாராவது சைக்கிளிலோ அல்லது கால் நடையிலோ செல்லும் அந்த தார் றோட்டு, சருகுகளுக்குள் புதைந்து கிடக்கின்றது. அதுபோதாது என்று பறவைகளின் எச்சங்கள் வேறு. ஒரு சுடுகாடாகவே தோன்றும் கிராமத்தை வெறுப்பும் விரக்தியும் கலந்த

Page 9
மாஸ்ரரின் பார்வை ஊடுருவுகின்றது. கண்கள் ஈரலிக்கின்றன.
மாஸ்ரரால் அழுகையை அடக்க முடியவில்லை. ஒரு குழந்தை யைப் போலத் தேம்பித் தேம்பி அழுகின்றார். ‘எப்படி இருந்த ஊர். எப்படி அழிந்து போயிற்று. இந்தக் கேள்விதான் மாஸ்ரரின் மென்மையான இதயத்தை மீண்டும் மீண்டும் குத்தி வலி ஏற்படுத்து கின்றது.
ஒரு வகையில் மாஸ்ரரின் ஊருக்கும் அமெரிக்காவுக்குமிடையே ஒரு சில ஒற்றுமைகள் இருக்கத்தான் செய்கின்றன. அமெரிக்காவின் வரலாற்றைப்போல அந்த ஊரின் வரலாறும் ஏதோ முந்நூறு ஆண்டு களுக்குள்தான் இருக்கும். ஸ்பானியாவில் இருந்து சாந்தாமரியா’ என்ற கப்பலில் புறப்பட்ட கிறிஸ்தோபர் கொலம்பஸ் தற்செயலாக ஒரு புதிய உலகத்தில் காலடி வைத்தது போல, தன் மனைவியோடு கோபித்துக்கொண்டு மட்டக்களப்பிலிருந்து ஒரு தோணியில் பயணித்த அந்தோச்சியார் எனும் வல்வெட்டித்துறை கப்பலோட்டி எதிர்பாராத விதமாகத் தரைதட்டிய சின்னஞ்சிறு கிராமம் தான் அது.
ஆற்றோரமாக முறுக்கேறி வளர்ந்த நின்ற முதிரை பாலை மரங்களைக் கண்டதும் அந்தோச்சியார் மனத்தை ஒருவித பயம் கிள்ளுகிறது. ஆனாலும் அந்தப் பயம் தன் மனுவழி மீது இருந்த ஆத்திரத்தால் இருந்த இடம் தெரியாமல் போகவே அவ்வூரின் ஒரு சில சுதேசிகளின் உதவியோடு ஒரு குடிலை அமைத்துக் கொண்டு தான் கண்டுபிடித்த புதிய பூமியைத் தன் சொந்தப் பூமியாகவே கொள்ளலானார்.
அந்தோச்சியார் ஒரு நல்ல பரிசாரியார்’. கைப்பிடியிலேயே என்ன வருத்தம் என்று கண்டுபிடித்துவிடுவார். நோயாளிக்குக் கொடுக்கும் மருந்துகூட ஏதோ ஒரு வகை ஊறல் சாறலாகத்தான் இருக்கும். வருத்தம் அதைக் கண்டதும் வந்த வழி தெரியாமல் ஓடிப் போய்விடும். பரிசாரியாரின் இந்தக் கெட்டித்தனம் அயல் கிராமங் களிலிருந்தும் அவருக்கு உறவைச் சம்பாதித்துக் கொடுத்தது.
அந்தோச்சியாருக்கு ஐம்பது வயதிருக்கும். என்றாலும்,
G14)

அவரிடமிருந்த ஆளுமையும் முறுக் கேறிவிட்ட தேகக்கட்டும், இன்னும் A/ பத்து வயதாவது குறைந்தவராகவே W4 காட்டின. அவரின் இந்த இளமைத் தோற்றம், கல்யாணம் பண்ணியும் பிரமச்சாரியாக இருந்த அவரை மீண்டும் சம்சார சாகரத்தில் தள்ளியது. நல்லகாலம் சாகரத் தினுள் அவர் ஒரேயடியாக அமிழ்ந்து விடாதது ஊரின் அதிஸ்ரந்தான்.
ஏதோ ஒரு சூழ்நிலையில் இன்னும் ஒரு பெண்ணைத் தன் இரண்டாம் மனைவியாக ஏற்றுக்கொண்ட போதும் அந்தோச்சியார் ஒரு நல்ல கத்தோலிக்கராகவே இருந்தார். அதனால்தான், தனது வீட்டிற்குச் சமீபமாக ஒரு சிறு குடில் கட்டி பக்தி சிரத்தையோடு தான் வழிபடும் பரிசுத்த இராயப்பரின் திருவுருவத்தை அதில் கொலு வைத்துத் தினமும் இலுப்பை எண்ணெய்த் தீபமேற்றி வணங்குவதை வழக்கமாகக் கொண்டிருந்தார்.
கணவனின் இந்த வழிபாட்டில் ஒன்றித்துவிட்ட அவர் மனைவி நாச்சியாருக்குப் பிற்காலத்தில் இதுவே ஒரு பெரும் கடமையாயிற்று. காலையில் எழுந்து முகத்தை அலம்பியதும் கிணற்றடியில் தான் நட்டு வளர்த்த செம்பருத்தி, மல்லிகைச் செடிகளிலிருந்து பூ ஆய்ந் தெடுத்துக்கொண்டு தனது ஆறெழு வயதுப் பேரன் சூசைமுத்துவோடு சென்று புனிதரின் பாதங்களில் அவற்றைப் படைக்காவிட்டால் அன்று சாப்பிடும் சாப்பாடும் அவர் தொண்டைக்குள்ளேயே இருந்துவிடும்.
ஸ்பானியாவின் கொலம்பஸாக அந்தோச்சியார் இருந்தா ரென்றால் அவரது மூத்த மகன் ஜோர்ச் வாசிங்டனாகவே ஜொலித்தார். முயற்சி செய்தால் முன்னேற்றம் என்னும் சிம்மாசனத்தில் அது கொண்டு போய் வைக்கும் என்பதற்கு உதாரணமான பேதுருப்பிள்ளை ஆரம் பத்தில் சின்னச் சின்ன அரசாங்க உத்தியோகங்களையெல்லாம் சீர னித்துவிட்டு, உடையாராகவும், நாற்பது, ஐம்பது ஏக்கர் தென்னந் தோட்டங்களின் நிலக்கிழாராகவும், விஸ்வரூபம் எடுத்தபோது, ஊரின் அரசனாகவே அவரை மக்கள் உற்சாகமாகக் கொண்டாடினர். உடை யாரின் வீட்டுக்கதவும், அந்த மக்களுக்காக எப்போதும் அடையாத
கதவாகவே இருந்தது.
G15)

Page 10
மகாகவி பாரதியின் ‘அன்னயாவினும் புண்ணியம் கோடி ஆங்கோர் ஏழைக்கெழுத்தறிவித்தல்’ எனும் பாடல் வரிகளை உடையார் படித்தாரோ, என்னவோ, கல்வியில் மிகவும் பின்தங்கிய தன் கிராம மக்களுக்கு ஒரு கைவிளக்காகத் தனது காணியில் ஒரு பாடசாலையைக் கட்டி எழுப்பியபோது ஊரெல்லாம் அவரைக் கையெடுத்துக் கும்பிட்டது.
இடுப்பில் எட்டு முழ மல்வேட்டியும், தோளில் ஒரு சால்வை யுமாகக் காட்சியளிக்கும் பேதுருப்பிள்ளை உடையாரிடத்தில் இப்படி ஒரு தீர்க்கதரிசனமா? அதைத்தான் அவருடைய அகன்ற நெற்றி அடையாளப்படுத்துகின்றதா? ஊரின் வியப்பு இன்னும் ஒரு படி அதிகமாகியது.
உடையார் பாரம்பரிய உணர்விலும் ஊறியவர். அந்த உணர்வு தான், தன் தந்தையால் குடில் ஒன்றில் வைத்துப் பூசிக்கப்பட்ட புனிதர் இராயப்பருக்குக் கல்லில் ஒரு கோட்டம் அமைக்கத் துண்டி யது. அந்த வகையில் முதன்முதலாக கடல் மல்லையில் “கற்ற கழி’ எடுத்த - பல்லவ சக்கரவர்த்தி மாமல்லவனாகவே உடையார் தோற்றம் தந்தார்.
உடையார் என்ற ஆலமரம் ஒருநாள் விருத்தாப்பியத்தால் வீழ்ந்து போயிற்று. அப்போது அதன் நிழலில் கவலையின்றி அமர்ந்திருந்த மக்கள் கூட்டம் பட்டபாடு இருக்கின்றதே, அதுவே ஒரு பெரிய சோகக்கதை!
உடையாரால் உருவான வெறுமையை இன்றுவரை ஒருவராலும் நிரப்ப முடியவில்லை என்பது உண்மைதான். ஆயினும், அவரது மூத்த மகன் சூசைமுத்து, அந்த ‘வெள்ளைக்காரன்’ காலத்து விதானையாராக பாட்டனைப் போல ஒரு நல்ல பரிசாரியாக அவர்கள் இருவரையும் நினைவுபடுத்தத் தவறவில்லை.
சூசைமுத்து விதானையார், ஒரு நல்ல கலாரசிகர். கூத்து என்றால் அவருக்குக் கொள்ளை ஆசை. அந்த ஆசையின் உந்துதலால் இரண்டு மூன்று வடமோடி நாட்டுக்கூத்துக்களையும் பாடியிருக்கிறார். அவற்றில் உள்ள ஒரு பெரிய சிறப்பு என்னவென்றால்
G16)

கூத்து மரபை ஒட்டி அவர் பாடியிருக்கும், பாயிரவிருத்தங்கள் தான். ஒரு கத்தோலிக்கராக இருந்தும் பிள்ளையார், சரஸ்வதி மீது அவர் பாடியிருக்கும் அப்பாடல்கள் இன்றும் அவ்வூர் மக்களின் இதயத்தில் இருப்பதே அவரது எழுத்துக்களுக்குக் கிடைத்த வெற்றி தான்.
ஊரின் எந்தப் பகுதியில் கூத்துக்குச் சட்டம்’ போடுவதென்றா லும் விதானையாருக்குத்தான் முதல் அழைப்பு வரும். சட்டம் போட்டதிலிருந்து கூத்து அரங்கேறும் வரை கையில் வெள்ளிப் பூண் போட்ட ஒரு கருங்காலித் தடியோடு களரியை விதானையார் அடிக்கடி வளைய வந்து கொண்டிருப்பார்.
அந்தக் காலத்தில்’விதானைய்ார்தான் ஊருக்க்திபதி. அவரது சொல் தான் சட்டம். அதன்ன எதிர்த்து எந்த மேல் முறையீடும் செய்ய முடி யாது. விதானையார் தன் தந்தை பேதுருப்பிள்ளை உடையார் போல ஊர் முழுவதையும் தனது கட்டுப்பாட்டில் வைத்திருந்த காலம் அது!
சூசைமுத்து விதானையார் அப்படி ஒன்றும் பெரிய சுந்தரவடிவம் அல்ல. ஆனால் அவரது சொல்லில் ஆளுமை கலந்த கம்பீரம் இருந்தது. கண்களும் தீட்சணியம் மிக்கவை.
விதானையாரை யாராவது எங்காவது கண்டு விட்டால் போதும், மெல்ல மரியாதையாக ஒதுங்கி நிற்பார்கள். சில சமயம் அவர்கள் தோளில் புரளும் சால்வை அல்லது துவாய் கமக்கட்டிற்குள் பதுங்கிக் கொள்ளும். முழங்காலுக்கு மேல் சாறனை மடித்துக் கட்டியிருந்தால் அந்தக் கட்டு தானாக அவிழும். அப்படி ஒரு மரியாதை அவருக்கு. இத்தனைக்கும் விதானையாரின் அங்கவஸ்திரம் இடுப்பில் ஒரு நாலுமுழ வேட்டியும் தோளில் ஒரு துண்டும் தான். தமிழ்நாட்டுக்கார ரோடு ஏற்பட்ட பழக்க தோசம் இது.
ஒரு நாள் விதானையார், பொன்னன், காளிக்குட்டி, இராசா என்னும் தனது பட்டங்கட்டிப் பரிவாரங்களோடு நடையில் இராஜ்ஜிய பரிபாலனம் செய்து கொண்டிருக்கையில் ஊரின் மேற்குப் புறத்தில் காடடர்ந்த பகுதியில் கட்டுச் சிதைந்துவிட்ட ஒரு பெரிய குளம்
C1)

Page 11
தெரிந்தது. குளத்தைக் கண்ட விதானையாருக்குப் பெரும் ஆச்சரியம். சந்தோஷம்.
நீண்ட நெடுங்காலத்திற்கு முன்பு இந்தக் குளத்தைக் கட்டி நெற்பயிர் செய்து இங்கே மக்கள் வாழ்ந்திருக்கிறார்கள் என்று நினைத்த விதானையார் இந்தக் குளத்தைச் சீர்செய்து அதனை அண்டிய பிரதேசத்தை ஒரு பெரிய நெற்களஞ்சியமாக்க வேண்டு மென்று ஆசைப்பட்டார்.
இந்த ஆசையோடு அங்கு கிடந்த பாரிய செங்கற்களைத் தொல்பொருள் ஆய்வுச் சின்னங்களாகவே கருதிய அவர் அவற்றில் இரண்டொன்றைத் தனது வீட்டிற்கு எடுத்து வந்து பத்திரமாக வைத்துக்கொண்டார்.
சூசைமுத்து விதானையார் காலத்தில்தான் பிரசவ வாட்டோடு கூடிய அரசாங்க ஆஸ்பத்திரி, கடலையும் ஆற்றையும் ஒரே நேரத்தில் கண்டுகளிக்கும் விதத்தில் எழுந்து நின்ற “ரெஸ்ற் ஹவுஸ் - போன்ற கட்டிடங்கள் எல்லாம் அந்த ஊரை அலங்கரிக்கத்தொடங்கின. அந்த அலங்காரங்களும், ஊருக்கு ஒரு அந்தஸ்தைத் தந்துகொண்டிருந்த சிறியதும் பெரியதுமான வீடுகளும் ஒரு நாள் விமானக் குண்டு தாக்குதலில் உடைந்து சிதறி கற்குவியல்களாக, மக்களும் உயிரைக் கையில் பிடித்துக்கொண்டு ஊரை விட்டே ஓடிப்போய் விட்டனர்.
இருந்த இடத்தைவிட்டு மாஸ்ரர் இன்னும் எழும்பவில்லை. அவரது பார்வையில் உடைந்து சிதறிய கற்குவியல்களும், மனத்தில் உடையார், சூசைமுத்து விதானையார் பற்றிய நினைவுகளும் அப்படியே ஒட்டிக்கிடக்கின்றன.
கலங்கிய கண்களை மாஸ்ரர் அடிக்கடி துடைத்துக் கொள்கிறார். அதேநேரம். தூரத்தில் இருந்து சீறிக் கொண்டு வரும் கனரக வாகனம் ஒன்றின் இரைச்சல் அவரைப் பயமுறுத்து கின்றது. ஆயினும் அந்த மண்ணை விட்டு மாஸ்ரர் அசையவேயில்லை.
வாகரைவாணன்

பழந்தமிழரின்
உணர்த்தும் கல்வெட்டு ஆராய்ச்சிநூல்
உலக நாடுகளில் எழுத்து முதன்முதல் உருவான மூன்று, நான்கு இடங்களில் இந்தியாவும் ஒன்றாகும்.
தமிழ் மொழிக்குச் சுமார் 2500 ஆண்டுகளுக்கு முன்பே எழுத்தை உருவாக்கி விட்டார்கள். அன்றைய மக்களில் பெரும்பாலானோர்க்கு எழுதப் படிக்கத் தெரிந்திருந்தது, வாழ்வில் பலதரப்பட்ட மக்கள் இலக்கியம் படைத்தார்கள். பெண்கள் இலக்கியம் படைத்தார்கள். தமிழ் அன்று அறிவுத்துறையிலும் ஆட்சித் துறையிலும் அரியணை ஒச்சியது. கல்வி மொழியாகத் தமிழ் விளங்கியது. தமிழர்கள் தனியரசாண்டார்கள். சங்க இலக்கியத்திலே சொல்லப்படுகிற செய்திகள் எல்லாம் ஆதாரம் இல்லாத கற்பனைகள் அல்ல. எல்லாவற்றிற்கும் கல் மேல் ஆதாரம் இருக்கிறது.
இவற்றையெல்லாம் நாற்பது ஆண்டுகட்கும் மேலாக ஆராய்ந்து பழந்தமிழ் கல்வெட்டியல் - பழங்காலந் தொட்டு கி.பி. ஆறாம் bTibbT60ir(S 616Og” (Early Tamil Epigraphy from the Earliest Times to the Sixth Century A.D.) 6T6ip g56D6ho'll so 760 Ludabstilibórisi) bugsLDITGOT நூலாக (2003) வெளியிட்டுள்ளார் இந்திய ஆட்சிப் பணித்துறையிலிருந்து ஓய்வு பெற்றவரும் தினமணி முன்னாள் ஆசிரியருமான ஐராவதம் மகாதேவன்.
இந்த ஆராய்ச்சியில் அவர் தென்னகத்தின் பல பாகங்களிலும் உள்ள 41 இடங்களிலுள்ள பாறைகளையும், மலைகளையும், குகைகளையும் நேரில் சென்று பார்த்து அவற்றில் எழுதியுள்ள இரண்டாயிரம் ஆண்டுகட்கு முற்பட்ட 89 தமிழ் பிராமிக் கல்வெட்டுக்களையும், 21 வட்டெழுத்துக் கல்வெட்டுக்களையும்

Page 12
கல்லிலிருந்து நேரடியாக விளம்பியும் ஒற்றுப்படி எடுத்தும் புகைப்படம் எடுத்தும் மீளாய்வு செய்து தொகுத்து இனந்தெரியாத அவற்றைப் படித்துப் புரிந்து அதிலிருந்து ஒரு புது வரலாற்றை எழுதியுள்ளார். இத்துடன் அவர் மட்பாண்டங்கள், நாணயங்கள், முத்திரைகள், மோதிரங்கள் போன்றவற்றிலும் உள்ள தமிழ் பிராமி எழுத்துப் பொறிப்புகளையும் பயன்படுத்திக் கொண்டுள்ளார். இவை தென்னிந்தியா, இலங்கை, எகிப்து, தாய்லாந்து முதலிய இடங்களிலிருந்து கிடைத்தவை. இவற்றில் பலவும் முன் பே கணி டு பிடிக் கப்பட்டு வெளிக் கொணரப்பட்டிருந்தாலும் ஐராவதம் மகாதேவன் அவற்றையெல்லாம் தொகுத்து மீளாய்வு செய்த போது தாமாகப் புதிதாகக் கண்டுபிடித்தவையும் உண்டு. இதற்காக இவர் மேற்கொண்ட கள ஆய்வுகள் பல. இவற்றை எல்லாம் இரவு பகலாக ஆராய எடுத்துக்கொண்ட ஆண்டுகள் பல.
இவருடைய இந்த அரிய உழைப்பின் விளைச்சலை அவர் மாபெரும் வரலாற்றுக் களஞ்சியமாக உருவாக்கிய கதையை, எலும்பைப் பெண்ணாக்கிய சம்பந்தர் கதையோடு உவமிக்கலாம். பண்டைத் தமிழ் இலக்கியங்களை உலகுக்கு அறிமுகப்படுத்திய உ.வே.சா. பணியோடு உவமிக்கலாம். இதை வைத்துக்கொண்டு உலகின் எந்தப் பகுதியில் இருந்தாலும் நாம் நாற்காலியில் இருந்தபடியே கல்வெட்டு இருந்த இடத்திற்குப் போனதைப் போலவே எல்லா ஆராய்ச்சியையும் எத்தனை காலத்திற்கு வேண்டுமானாலும் செய்யலாம். இதற்காக தமிழர்களாகிய நாம் அவருக்கு என்ன கைமாறு செய்யப்போகிறோம்? அறிஞர்களும், ஆட்சியாளர்களும் இந்த நூலின் பெருமையையும், ஐராவதம் மகாதேவன் தமிழ் மொழி வரலாறு பண்பாட்டுக்கு ஆற்றியுள்ள மாபெரும் பணியையும் உணர்ந்துகொண்டு சிறப்புச் செய்ய வேண்டும். தமிழறியா ஹாவாட் அமெரிக்கப் பல்கலைக்கழகம் இவர் பெருமை அறிந்து இவர் நூலை வெளியிட்டுத் தமிழுக்குப் பெருமை சேர்த்திருக்கும் போது தமிழகத்தில் போட்டி போட்டுக்கொண்டு பட்டமும், பதவியும் ஈந்து சிறப்புச் செய்ய வேண்டாமா? “முன்னிவன் அப் பாண்டியர் நாள் இருந்திருப்பின் இவன் பெருமை மொழியலாமோ?’ என்று நாம் இன்று பாரதியைப் போல் அங்கலாய்க்க வேண்டுமா?
இந்த நூலின் முதல் முந்நூறு பக்கங்கள் அரிய ஆராய்ச்சியின் பிழிவாக அமைந்துள்ளன. முதற் பகுதியில் கல்வெட்டுக்கள் கண்டுபிடிக்கப்பட்ட வரலாற்றையும், படித்த முறைகளையும் துப்பறியும்
G20)

கதை போலச் சுவையாகச் சொல்லியுள்ளார். எகிப்தில் பிரமிட்டுக்கள் கண்டுபிடித்த கதை, சாக்கடல் சுருணைகளைக் கண்டுபிடித்த கதை போன்றவற்றிற்கு எள்ளளவும் சளைக்காத புதிர்களை விடுவிக்கும் கதை இது. தொடர்ந்து கல்வெட்டில் பயன்படுத்தப்பட்டுள்ள மொழியை இக்கல்வெட்டுக்களால் அறியலாம். அரசியல், சமுதாயம், பண்பாடு, சமயம், பொருளாதாரம் எல்லாவற்றையும் நுணுகி ஆராய்ந்து கூறியுள்ளார். இரண்டாம் பகுதி எழுத்து, மொழி பற்றிய செய்திகளை ஆராய்கிறது. மூன்றாவது பகுதியில் (400இற்கும் மேற்பட்ட பக்கங்கள்) கல்வெட்டுக்களின் நேரடியாக விளம்பிய வரைவுகளும், அவற்றின் பாடமும் குறிப்புகளும், அவற்றின் ஒற்றுப் படிகளும், புகைப்படங்களும் வழுவழப்புத் தாளில் உள்ளன. பின்னர் விளக்கவுரையும் பலவிதமான ஆராய்ச்சி அடைவுகளும் அகராதிகளும் , பட்டியல் களும் கொடுக்கப்பட்டுள்ளன.
பிழையே இல்லாத அழகான அச்சு. நல்ல கட்டு. நூலை எப்படி வெளியிட வேண்டும் என்பதற்கு இலக்கணமாக விளங்கும் இதை உருவாக்கித் தந்த க்ரியா இராமக் கிருஸ்ணனை எவ்வளவு பாராட்டினாலும் தகும். மேல் நாட்டவரைப்போல எம்மாலும் முடியும் என்று நூலாசிரியரும் சரி, பதிப்பாளரும் சரி நிரூபித்துக் காட்டியுள்ளார்கள்.
தமிழின் முதல் எழுத்தாகக் காணப்படுகிற எழுத்தைத் தமிழ்ப் பிராமி என அழைக்கிறார் மகாதேவன். இது அசோகர் காலத்தில் கி.மு. 3ஆம் நூற்றாண்டு மெளரிய பிராமி எழுத்திலிருந்து கி.மு. 2ம் நூற்றாண்டளவில் சமண மதம் இங்கு பரவியபோது தமிழ் மொழியின் தேவைக்கேற்ப மாற்றங்களுடன் தோன்றியது என்கிறார்.
சமண முனிவர்கள் வாழ்ந்த குகைகளிலும், பொது மக்கள் பயன்படுத்திய மட்பாண்டங்கள், முத்திரைகள், மோதிரங்கள், உரைகள் போன்றவற்றிலும் தமிழ்ப் பிராமியின் சிறு கல்வெட்டுக்களும், பெயர்களும் பொறிக்கப்பட்டுள்ளன. காலப்போக்கில் (கி.பி. 5) இந்த எழுத்திலிருந்தே சேர, பாண்டிய தொண்டை நாடுகளில் பெருவழக்கத்திலிருந்த வட்டெழுத்துத் தோன்றியது. பின்னர் கி.பி. 7இற்குப் பிறகும் தமிழகம் முழுவதற்குமுரிய பொது எழுத்தாக சோழர்களால் பரப்பப்பட்ட இன்றைய தமிழ் எழுத்தின் முன்னோடியான கிரந்த-தமிழ் எழுத்தும் அதில் இருந்து
G2D

Page 13
மலையாள எழுத்தும், சிங்கள எழுத்துக்கள் போன்றவையும் தோன்றின. தெலுங்கு, கன்னடத்திற்கு முன்னோடியான எழுத்து, தென் பிராமியின் இன்னொரு கிளையிலிருந்து தோன்றிற்று.
சி. நாச்சிமுத்து தமிழ்த்துறைத் தலைவர், கேரளப் பல்கலைக்கழகம்,
தமிழர்களுக்கு பிராமிக்கு முன்பு, தனியாக எழுத்து இருந்ததற்கான சான்றுகள் கிடைக்காதவரை எழுத்து வளர்ச்சியின் வரலாற்றை இம்முறையில் தான் அமைக்க வேண்டி இருக்கிறது. தொல்காப்பியம் தமிழ்ப் பிராமியில் புள்ளியிடும் முறை தோன்றிய கி.பி. 2 இற்குப் பிறகு எழுதப்பட்டிருக்கலாம் என்பது இவர் முடிவு. இவற்றில் எல்லாம் கருத்து மாறுபாடுகள் இருக்கலாம்.
இக் கல்வெட்டுக்களில் தமிழ் முக்கால், பிராகிருதம் கால் என்ற அளவில் மொழி அமைப்புக் காணப்படுகிறது. இக்கல்வெட்டுக் கள் எல்லாம் சமணரோடு தொடர்புடையவை. சமண சமயம் கன்னட நாடு வழியாக இங்கு வந்ததால் கன்னடச் சொற்களையும், கன்னட ஆட்களையும் இவற்றில் காணலாம்.
இக் கல்வெட்டுக்களில் சங்க இலக்கியத்தில் குறிக்கப்படும் மூவேந்தர், குறுநில மன்னர்கள், புலவர் பெயர்களைப் போன்ற பெயர்களைக் காணும்போது இக் கல்வெட்டுக்கள் சங்க காலத்தைச் சேர்ந்தவை என்பதை நாம் உணர்கிறோம். பதிற்றுப்பத்து 7, 8, 9 பத்துகளில் கூறப்படும் செல்வக் கடுங்கோ வாழியாதன், பெருஞ்சேரல் இரும்பொறை, இளஞ்சேரல் இரும்பொறை ஆகிய மூவரையும் புகழியூர் ஆறு நாட்டார் மலைக் கல்வெட்டுக்கள் குறிக்கின்றன. இதன் மூலம் சங்க நூல்களின் காலத்தை கி.பி. 2ஆம் நூற்றாண்டை ஒட்டி நாம் நிர்ணயம் செய்ய முதன் முதலாக வரலாற்றுச் சான்று கிடைக்கிறது. இந்த உண்மையை முதலில் சுட்டிக்காட்டியவர் அன்று கேரளப் பல்கலைக்கழகத்தில் பேராசிரியர் வ. அய். சுப்பிரமணியத்தின் மாணவராக இருந்த பேராசிரியர் இரா. பன்னீர்ச்செல்வம் என்பதை மகாதேவன் மறவாமல் சுட்டுகிறார். அது போன்றே 1995ல் கேரளாப் பல்கலைக்கழகத் தமிழ்த்துறைப் பொன்விழாவின் போது நடந்த கல்வெட்டுக் கருத்தரங்குக்கு வந்தபோது தான் இடக்கல்லில் புதிய கல்வெட்டுக்களைக் கண்டுபிடிக்க நேர்ந்தது என்பதை மகாதேவன்
G22)

நினைவுகூர்வதையும் இங்கு குறிப்பிடலாம்.
அடுத்தது சங்க கால அதியமான் நெடுமான் அஞ்சியின் ஜம்பைக் கல்வெட்டு முக்கியமானது.
புகழுர் கல்வெட்டில் குறிக்கப்பெறும் குறும் மகள் என்பதற்கு மலையாள வழக்கை ஒட்டிப் பேத்தி எனப் பொருள் கொண்டால் பிட்டன் என்பவன் தந்தை ஆகவும் பிட்டந்தை என்பவள் மகளாகவும் ஆவார்கள். சாத்தான்-அப்பன், சாத்தப்பன்-மகன் என்பது போல அமையும். அந்தை சிறப்புப் பெயர் விகுதியாதலால் இதில் முரண்பாடு இல்லை. கீரன். கீரந்தை, கொற்றன்-கொற்றந்தை நோக்குக.
தமிழ்ப் பிராமிக் கல்வெட்டுக்கள் சிறு சிறு தொடர்களாகவும் வாக்கியங்களாகவும் அமைகின்றன. சிலவற்றில் பெயர் மட்டும் உள்ளது. சிலவற்றில் யாருக்கு யார் எதைத் தானம் செய்தார்கள் என்பது உள்ளது.
அந்துவன் கொடுப்பித்தவன் (53) குற கொடுப்பித்தவன் உபச அன் உபறுவன் (11) போன்ற தொடர்களில் வரும் கொடுப்பித்தவன் என்பதை வினையாலணையும் பெயராக மகாதேவன் கொள்கிறார். ஆனால், அதை வினைமுற்றாகவும் கொள்ளலாம் என்று தோன்றுகிறது. பரிபாடல் இலங்கைத் தமிழ் வழக்கு போன்றவற்றில் இத்தகைய வடிவங்கள் உள்ளன.
மகாதேவன் கொண்ட பாடங்கள் பல இடங்களில் பொருத்தமாகவே உள்ளன.
இந்த நூலில் கண்ட முக்கியமான செய்திகளை வாசகர்களுக்குச் சுட்டிக்காட்டலாம்.
1. பாண்டிய நாட்டைச் சேர்ந்த மாங்குளம் கல்வெட்டு (கி.மு. 3-2) மிகவும் பழமையானது.
2. அன்று கல்வி பரவலாக இருந்தது. தமிழே அனைத்துத் துறையிலும் ஆட்சி செலுத்தியது.
3. அரசியல் தனியாட்சி இருந்ததாலே இது சாத்தியமாயிற்று. 4. சமண மதம் கன்னட நாட்டு வழியாகத் தமிழகத்திற்கு
G23)

Page 14
வந்தது.கல்வெட்டுக்களில் சமண மதத்தைச் சார்ந்தவையே மிகுதி.
5. சோழ நாட்டில் பிராமிக் கல்வெட்டு இல்லை. 6. மதுரையின் பழைய வடிவம் மதிரை. 7. புறுநாநூற்றில் வரும் (71:4) இயகடகனட என்ற சொல்லுக்கு வியக்கன் என்பது புதிய பாடம் ஆகும். 8. உப்பு வாணிகன், அறுவை வாணிகள், பாணித வாணிகன் என்று பல வணிகர் வகையினர் இருந்தனர். 9. சேவற் சண்டையில் வீரமரணம் அடைந்த இரண்டு சேவல்களுக்கு நடு கற்கள் எடுக்கப்பட்டுள்ளன. அவற்றில் ஒன்றின் பெயர் பொற்கொற்றி. 10. தமிழிசைக்கும் கல்வெட்டு உள்ளது.
தமிழ்க் கல்வெட்டு ஆய்வு 1965 அளவில் ஒரு மக்கள் இயக்கமாக மாறியது. அதைத் தொடக்கி வைத்தவர் நாகசாமி. அவர் நடத்திய அகழ்வாய்வுகள் கோடை வகுப்புக்கள் மூலம் தொல்லியல் ஆய்வு வல்லுநர்கள் மட்டுமல்ல பிறரும் பொழுது போக்காக செய்து கண்ட அரிய கண்டுபிடிப்புகள் பல இந்தத் துறையில் இன்று ஓர் இளைஞர் பட்டாளமே பணி செய்து கொண்டிருக்கிறது. இத்துறையில் பணிசெய்து வருவோர் பெயரை எல்லாம் உரிய இடங்களில் மகாதேவன் நன்றி பாராட்டிக் குறிப்பிட்டுச் சென்றுள்ளார். பிராமிக் கல்வெட்டு மொழி தமிழே என்று சொன்ன கெ. வி. சுப்பிரமணிய அய்யருக்கு இந்நூலை படையல் செய்திருக்கிறார். இவற்றின் மூலம் அவர் தன் நன்றியுணர்வையும், நேர்மையுணர்வையும் வெளிப்படுத்தியுள்ளார். ஆய்வின் முடிவுகளைச் சான்றுகளின் அடிப்படையில் மாற்றிக்கொண்ட ஒரு நல்ல ஆராய்ச்சியாளர் என்பதை ஆசிரியர் நூல் முழுவதும் நிலைநாட்டியுள்ளார்.
தமிழர் போற்றிக் கொண்டாடவேண்டிய இந்நூலை அரசு தமிழில் வெளியிட வேண்டும். இளம் இயக்குநர்கள் இவற்றைப் பற்றி ஒரு குறும்படம் தயாரித்து அனைத்தையும் பதிவுசெய்ய வேண்டும். இளைஞர்கள் இவரைப் பார்த்து இன்னும் கற்களையும் பாறைகளையும் தேடிச் சென்று வரலாற்றுச் சுவடுகளைப் பதிவு செய்ய வேண்டும். இறுதியாக இந்நூலை தவம் இருந்து பெற்ற ஐரவதம் மகாதேவனைப் பற்றித் தமிழர்கள் “எம்முளும் உளன் ஓர் அறிஞர்” என்று கொலரை தூக்கிவிட்டுக்கொள்ளலாம். வாழ்க ஐராவதம் மகாதேவன்! பரவுக அவர் நூல் தமிழ் உலககெங்கும்!
நன்றி - தினமணி
Ꮳ4Ꭷ

துறி பரணி
வேங்கியில் மட்டுமன்றி, மேலைச் சாளுக்கியத் தலைநகர் கல்யாணியிலும் சோழ சாம்ராச்சியத்தின் வெற்றியை நிலைநிறுத்திய வீரராஜேந்திரன், ஈழத்துப் போரில் விஜயபாகுவிடமிருந்து வெற்றிக் கனியை எளிதாகவே பறித்துக்கொண்ட தன் மைந்தன் அதிராஜேந்திரன் ஓர் இதயக்கனியையும் சோழநாட்டுக்கு ஏந்திவருவது அறிந்து உண்மையிலேயே உள்ளம் பூரித்தான்.
அதிகாரம் - 7.
இரண்டு சாளுக்கிய தேசங்களிலும், ஈழத்திலும் தான் ஈட்டிய வெற்றி தனது வல்லடிப்போருக்கு மட்டுமன்றி, இராஜதந்திரத்திற்கும் கிடைத்த பெரும் வெற்றியாகவே கருதிய் வீரராஜேந்திரன் இதற்கு முன் தன் பாட்டன் முதலாம் ராஜராஜன், தந்தை ராஜேந்திர சோழன், தமையன் இரண்டாம் ராஜேந்திரன் ஆகியோர் கீழைச் சாளுக் கியத்தோடு மட்டும் திருமண உறவு கொண்டிருந்த நிலையில் தான் மேலைச் சாளுக்கியத்தோடும், ஈழத்தோடும் ஏற்படுத்தியுள்ள மணத் தொடர்பு சோழர் வரலாற்றில் ஒரு பெரிய ராஜதந்திரப் புரட்சியே என்று எண்ணிய அவன் - இப்புரட்சி சோழ சாம்ராச்சியத்தை நிச்சயம் வலுப்படுத்துமென்று நம்பினான்.
போர்க்களத்தில் தான் சூடிய முப்பெரும் வாகை மாலையை அடுத்து ஓரளவு நாட்டில் அமைதி தோன்றிய நிலையில் தனக்கு மிக விருப்பமான தமிழ்ப்பணியில் சிறிது கவனம் செலுத்த விரும்பினான் சோழ மன்னன்.
தமிழ்ப்பணியும் சைவ நெறிப்பணியும் சோழ மன்னர்களுக்கு
G25)

Page 15
ஒன்றும் புதியதல்ல. முதலாம் ராஜராஜன் காலத்திலேயே நம்பியாண்டார் நம்பியின் மூலமாகப் பல்லாண்டு காலமாகத் தில்லைக் கோவிலிலே அடைபட்டுக் கிடந்த திருப்பதிகங்களைத் தொகுத்து ஒழுங்குபடுத்தி நாள்தோறும் கோயிலில் நாவினிக்கப் பண்ணோடு பாட வைத்ததில் இருந்து - சோழர்கால ஆட்சியில் ஏதோ ஒரு வகையில் தமிழ் முழக்கம் கேட்டுக்கொண்டே இருந்தது.
இராஜராஜனைப் போலவே பண்டிதசோழன் என்று பாராட் டப்பட்ட முதலாம் இராஜேந்திரனும், கங்காபுரி சோழேச்சுரத்தில் மூலவர் மேல் கருவூத் தேவரால் பாடப்பட்ட திருவிசைப்பாக்களைத் தொடர்ந்து பாடச் செய்தமை அவர்களுக்குத் தமிழ்மேல் இருந்த பற்றினை அளந்து காட்டப் போதுமானதாகும்.
இது போன்றே தன் தந்தையர் காலத்தில் தஞ்சைப் பெரிய கோயிலின் வரலாற்றை எடுத்துச் சொல்லும் ராஜ ராஜ நாடகம் தனது காலத்திலும் அரங்கேற ஏற்பாடு செய்த இராசேந்திரன் அதற்கு நூற்றி இருபது கலம் நெல் மானியமும் வழங்கி மகிழ்ந்தான்.
இவ்விரு சோழப் பெருமன்னர் வழியில் வந்த வீரராஜேந்திரன் தமிழ்ப் புலமை பெற்றிருந்தமை அவனுடைய தனிச்சிறப்புகளில் ஒன்றாகும். இந்தத் தமிழ் உணர்வினாலும் ‘உவப்பத் தலைக்கூடி உள்ளப் பிரிதல் அனைத்தே புலவர் தொழில்’ என்னும் வள்ளுவன் வாய்மொழிக்கிணங்கவும், புலவர் பெருமக்கள் அரசனை நாடிவந்து தமிழ் நூல் நயத்தல் ஒரு முக்கிய நிகழ்வாகவே விளங்கியது.
நெல்வளம் கொழிக்கும் நிலம் தஞ்சை. காவிரி பாயும் இந்தக் கழனி நாட்டின் பொன் பற்றி என்னும் ஊரில் குறுநில மன்னனாகத் திகழ்ந்தவர் புத்தமித்திரனார். இவ்வரசன் தமிழ் மொழியில் மட்டுமன்றி, வடமொழியிலும் புலமைமிக்கவனாக இருப்பதை அறிந்த வீரராசேந்திரன் தமிழுக்கு புதியதோர் இலக்கணம் செய்து தரும்படி வேண்டியிருந்தான்.
அரசனின் வேண்டுகோளைச் செவிமடுத்த புத்தமித்திரனாரும், வடமொழி இலக்கணத்தை ஓரளவு ஒட்டியதாக எழுத்து, சொல், பொருள், யாப்பு, அணி என்னும் ஐந்து பகுதிகளையும், உள்ளடக்கிய அரியதோர் தமிழ் இலக்கண நூல் ஒன்றைச் செய்து அதற்கு வீரராஜேந்திரனை
ᏣᏜᎧ

நினைவுகூரூம் வகையில் வீர சோழியம் என்று பெயரிட்டார். இந்நூலில்
சந்திப்படலம் ஏழாம் பாடலில் “வெண்குடை செம்பியன் வீரராஜேந்திரன்
நாவியல் செந்தமிழ்ச் சொல்' என்று குறிக்கப்பட்டிருந்தமையால் குதூகலம் அடைந்த அரசன், தான் கங்கை கொண்ட சோழ புரத்தில் புதிதாக
அமைத்த சோழசேரனின் மாளிகை யிலே அதை அரங்கேற்றம் செய்து
வைத்தபோது, புத்தமித்திர னாருக்கும் பல நூறு பொற் கழஞ்சுகளைப்
பரிசாக அள்ளி வழங்கி னான். அவ்வரங்கேற்றத்துக்கு யாப்பெருங்கல
விருத்தி ஆசிரியரும் தீபன் குடியைச் சேர்ந்தவருமான அமிர்தசாகரர்,
தென் தமிழ்த் தெய்வப் பரணி என்று பிற்காலத்தில் ஒட்டக்கூத்தரால்
பாராட்டப்பட்ட ஜெயங் கொண்டார் முதலான புலவர் பெருமக்கள்
வருகை தந்து வீரசோழியம் படைத்த புத்தமித்திரனாரை உளமார வாழ்த்தி மகிழ்ந்தனர்.
போர் வாழ்க்கைக்குள் புதைந்து கிடந்த கங்கை கொண்ட சோழபுரம் அன்று முழுவதும் கலகலப்பாகவே காணப்படுகின்றது. காலையில் வீரசோழியம் இலக்கண ஆய்வில் மூழ்கிக் கிடந்த அந்நகரம் மாலையானதும் ராஜராஜநாடகம் பார்க்கத் தன்னைத் தயார்படுத்திக்
கொள்கிறது.
C வாகரைவாணன் )
இரண்டு ஆண்டுகளாக கங்கைப் படையெடுப்பை நடத்திய இராசேந்திரசோழன் - வடபுலத்து மண்னன் மகிபாலன் போன்றோரை களத்தில் வாகை சூடியதன் நினைவாக நிறுவப்பட்ட கங்கை கொண்ட சோழபுரத்தில் அம்மன்னனாலேயே அமைக்கப்பட்ட சோழேச்சுரம் அனைத்துச் சோழ அலங்காரங்களோடும் திகழ்கின்றது.
அந்தியானதும், அழகாக ஆடை அணி பூண்ட ஆண் பெண் சிறுவர் சிறுமியர்கள் அனைவரும் சோழேச்சுரத்தை நோக்கி சாரி சாரியாக நடந்து செல்கின்றார்கள். அவர்கள் அவ்விதம் செல்கையில் நீண்ட காலத்திற்குப் பின்பு அரங்கேற இருக்கும் ‘ராஜராஜ நாடகம்’ பற்றி உரையாடிக்கொண்டு போவது தெரிகிறது.
சில நாழிகைகளில் சோழேச்சரத்தின் வசந்த மண்டபம் மக்கள் கூட்டத்தால் நிறைந்து வழிகிறது. வல்லடிப் போரில் மட்டுமன்றி - கலை இலக்கியத்திலும், ஈடுபாடு காட்டிய இராசேந்திரன் சேழேச்
G2)

Page 16
சுரத்தின் ஒரு புறமாகக் கட்டிய அம்மண்டபம், ஆடல் பாடல் நிகழ்வுக் கென்றே அழகுற அமைக்கப்பட்டிருந்தது.
தனது பாட்டன் காலத்திலிருந்தே நடிக்கப்பட்டு வரும் ராஜராஜ நாடகம் கண்டு களிக்க வீரராஜேந்திரன் அவனது பட்டத்துராணி அருள்மொழி மங்கை, மைந்தன் அதிராஜேந்திரன் ஆகியோரோடு வீரசோழியம் ஆசிரியர் புத்தமித்திரன், ஜெயங் கொண்டார், அமிர்தசாகரர் முதலான புலவர் பெருமக்களும் வசந்த மண்டபத்தில் எழுந்தருளியதைக் கண்ட மக்கள் கூட்டம் உற்சாகப் பெருக்கில் ஆர்ப்பரிக்கின்றது.
நாடகம் ஆரம்பமாகின்றது. அதன் ஒவ்வொரு காட்சியும் பார்ப்பவர்களை சோழப் பெருமன்னன் ராஜராஜன் காலத்தில் கொண்டு போய் நிறுத்துகிறது. ராஜராஜன் - அவன் மைந்தன் இராஜேந்திர சோழன் - நடத்திய போர்கள் - பெற்ற வெற்றிகள் கண்டு உணர்ச்சி வசப்பட்ட அரசனும் - மக்களும் அவற்றில் ஒன்றிப் போகின்றனர். நாடகத்தில் தனது பாட்டனையும், தந்தையையும் நேரில் கண்ட்து போன்ற உணர்வு வீரராஜேந்தரனுக்கு ஏற்படவே, இந்த இரு பெரு மன்னர்காாலும் உருவாக்கப்பட்ட சோழ சாம்ராஜ்சியம் இன்னும் பல்லாண்டு காலம் நிலைபெறச் செய்ய வேண்டும் என்று அவன் நினைத்தபோது அதற்கு ஒரு பெரும் சவாலாக நிற்கும் ஈழம் பற்றிய கவலை அவன் மனதில் ஒரு மலையாகவே எழுந்து நிற்கிறது.
(இன்னும் வரும்)
(இயேசு கிறிஸ்து ஒரு வரலாந்று நாயகன் ཡོད
2ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்திய பெட்டி ஒன்று சமிபத்தில் இஸ்ரேல் நாட்டில் கண்டுபிடிக்கப்பட்டது. இந்தப் பெட்டியின் நீளம் 20 அங்குலம். இதன்மீது ஜேம்ஸ், யோசப்பின் மகன், இயேசுவின் சகோதரர் என்று அராமிக் மொழியில் எழுதப்பட்டுள்ளது.
இந்தப் பெட்டி சுண்ணாம்பினால் செய்யப்பட்டதாகும். இறந்தவர்களின் எலும்புகளை இதற்குள் வைத்துப் பாதுகாப்பது அக்காலத் வழக்கமாக இருந்துள்ளது.
இந்தப் பெட்டி கண்டுபிடிக்கப்பட்டதின் மூலம் யேசு கிறிஸ்து உலகத்தில் வாழ்ந்தார் என்பதற்கான ஆதாரம் கிடைத்திருக்கிறது. இந்தப் பெட்டியை டெல் அவிவில் இருந்து அமெரிக்கா வழியாக கனடாவில் உள்ள ரொரண்டோ நகருக்குக் கொண்டு சென்றனர். அப்போது பெட்டியில் கீறல் விழுந்துவிட்டது. இதை ரொரண்டோவில் உள்ள அருங்காட்சியகத்தில் வைத்துள்ளனர். இதன் மதிப்பு ரூபா 18 கோடி இருக்கும் என்று அருங்காட்சியக இயக்குநர் தெரிவித்துள்ளார். (பெட்டியை பாதுகாக்க முழு நடவடிக்கையும் எடுக்கப்பட்டிருப்பதாக அவர் கூறினார். ノ
G8)

LLLLLL LL LLL L LLL L LL LLL LLL LLL LLL LLL LLL LLL LLLL LL LLL LLL L L L L L L L L L L L L L LLLLL LLLL L L L L L
வேரறுந்தவர்களாக
நம்மவர்கள் வெளிநாடுகளில்
ஊரறுந்து. உறவறுந்து.
புலம் Uெயர்ந்தவர்களா இவர்கள்? இல்லை
பூர்வீகமே இழந்தவர்கள்.
வாழையடி வாழை இவர்கள் வாழ்வில்
இனி இல்லை!
பரம்பரை, வம்சம் என்பதெல்லாம்
பழம் கதைதான்!
கயிறறுந்த பட்டங்கள்
காற்றுத்தான் வழிகாட்டி!
சுகத்தை வாங்கச் சுயத்தை விற்றவர்கள்.
ஒரு வகையில்
இறந்தவர்களும் இவர்களும்
ஒன்றுதான்!
தாய்நாடு சிலசமயம் தங்கு மடமாகலாம் ஆனால். இரவல் நாட்டில்தான்
இடுகாடு!
உலகமயமாக்கலுக்குள் உட்Uரவேசித்தவர்கள் ஒரே மயமாகி விட்டார்கள்!
யாதும் ஊரே யாவரும் கேளிர் இந்தப் பிரகடனம் இவர்களுக்காகவே வாசிக்கப்பட்டது!
கணியன் பூங்குன்றனாருக்குக் கை கொடுக்கலாம்.
வேரனுந்த மரங்கள்
எந்த மண்ணிலும் எழுந்து நிற்பதில்லை!
- கம்பதாசன்.

Page 17
a mas asme sa sama sa sa sa masa sa sa sama sem
Qò (6IIBJé56
பொங்குகிறது புத்துன சங்கத் தமிழு சாவேது
ஈழம் முழுவ
எங்களர்
வாழும் நிச்ச வரலாறு
தமிழ் என்ற தர்கம் 6 அடமிழ்தடம் அ - Sisyrir som f.
6 TBiU 856mi -- S26
எது தெ மங்காத் தப மறவாத
பொங்கு தப புதிய ச இங்கு 6A 165) J. " எதிர்கா

LL LLL LLL LLL LLL LLLL LSL LLLLL LL LLL LLLL S SLS
ர் தமிழ்
தமிழ் ர் வெங்கும் ழக்குச்
εν
- காண்டீபன் -