கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: போது 2004.03-04

Page 1
SSSSSS S SSS S SSS
|-
S S S S
-
|-
-
 
 


Page 2
எண்ணிய முடிதல் வேண்டும்
நல்லவே எண்ணல் வேண்டும்
திண்ணிய நெஞ்சம் வேண்டும்
தெளிந்த நல்லறிவு வேண்டும்.
மகாகவி பாரதியார்
இடுச் சந்தா (G
வெளியீடு : professional PSYCHOLOGICAL COUNSeLLING CENTRE
BATTCAULOA.
 

義還驚帶****
MONTES
醬
*
போது ーl இதழ் -36
பங்குனி" சித்திரை *ー* 2004
தோற்றம் 5-5-18
*
ஆநிர்வாகம்
(Managing Editor) ச்சுவாமிஜி
*போல் சற்குணநாயகம்பே.ச.
ஆசிரியர்
悼 (Editor) பூ வாகரைவான ஓர்
幢
*நிர்வாகம்:
(Management) சி.எம்.ஒக்கஸ்
:பணிமனை
ஜெஸ்கொம் அச்சகம், ஆஇல, 1, யேசுசபை வீதி,
மட்டக்களப்பு.
曹
தொலைபேசி: if ( (5-22:23 822. Of5-2222983 *
悼
E-mail ppcc.(2diamond.lanka.net
". . . . . . . . . .
曹
*
வன்முறை நமது)
வழியல்ல! "
வெளி உலகிற்குத் தம்மை இடது சாரிகள் என்று விளம்பரம் செய்து கொண்டு உள் நாட்டில் அசல் இனவாதிகளாக உலாவரும் ஜே. வி. பி. யினரின் அரசியல் அழுத்தத்திற்கு அடிபணிந்த ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்கா திடீரென்று நாடாளுமன்றத்தைக் கலைத்துத் தேர்தல் திருவிழாவுக்கு உத்தரவிட்ட மக்கள் விரோதச் செயல், இரண்டு ஆண்டுகளாக இந்நாட்டில் நிலவிவரும் சமாதானத்தை இல்லாது ஒழித்துவிடுமோ என்ற அச்சத்தை தமிழர் மனதில் உருவாக்கியுள்ளதாகத் தெரிகின் T5.
நெருக்கடி மிக்க இந்தச் சந்தர்ப்பத்தில் தமிழ் மக்களுக்கு ஒன்றை நாம் எடுத்துரைக்க விரும்புகின்றோம். வன்முறை நமது வழியல்ல. சமாதான சகவாழ்வு வாழ்ந்த சான்றோரின் சந்ததிகள் நாம், சங்ககாலத்திலேயே எமது எதிரிகளான ஆரியர்களைச் சகோதரர்களாக ஏற்றுக் கொண்டு வாழ்ந்தவர்கள் நாம்.வட நாட்டு

Page 3
சமண, பெளத்த மதங்களை வரவேற்று எம்மத்தியில் அவற்றை வாழவைத்தவர்கள் நாம், இனவழியில் தெலுங்கனான வீரபாண்டிய கட்டப் பொம்மனைத் தமிழன் என்று ஏத்திப் போற்றுபவர்கள் நாம். ஏனென்றால் சகிப்புத் தன்மை, சகோதர உணர்வுதான் நமது சரித்திரம்.
இந்தச் சரித்ததிரத்தை நாம் உணர்ந்து கொண்டால் பயங்கரவாதத்தின் பக்கமே நம் பார்வை திரும்பாது. உண்மையான வீரம் என்பது எதிரிக்கு ஒரு துன்பம் வரும்போது அவன்மீது இரக்கம் காட்டுவதுதான். இதைத்தான் முதல் நாள்போரில் தன்னிடம் தோற்ற இராவணனிடம் "இன்றுபோய் நாளைவா’ என்று இராமனை இயம்ப வைத்தது.
இந்த உயர்ந்த பண்பினையே எங்கள் தமிழ்வேதம் திருக்குறள் இவ்விதம் எடுத்துச் சொல்கின்றது.
பேராண்மை என்ப தறுகண் ஒன்று உற்றக்கால் ஊராண்மை மற்று அதன் எஃகு
(குறள்)
அன்புடன் வாகரைவாணன்.
விதியே, விதியே தமிழச்சாதியை எண்செய நினைத்தாய் எனக்குரையாயோ?
-பாரதி

#bhfuil
விண்ணில் பறக்கும் வெள்ளைப் புறாக்கள்
விளம்பும் சமாதானமே. 器 கண்ணில் தோன்றும் அந்தக் காட்சி
器 கரும்பாய் இனித்திடுமே.
விதவிதமான மலர்கள் ஒன்றதழ்
沿 விடியலில் பூத்திடுமே
எதுவித வெறுப்பும் இல்லாப் பூக்கள்
இயம்பும் சமாதானமே.
எத்தனை வேற்றுமை ஈங்குள்ள போதும்
எல்லோரும் மனிதர்களே
நித்தம் இதனை நெஞ்சில் கொண்டால்
நிறைந்திடும் சமாதானமே.
稳赣 議 雙變變變變對對
°渐

Page 4
என்றும் இயற்கை அமைதியாய் இருக்கும்
எங்கும் சமாதானமே
நன்று இதனை நாமும் எண்ணில் நாளும் சமாதானமே.
சின்னஞ் சிறிய பிள்ளைகள் எங்கள்
சிந்தையில் பேதமில்லை
பென்னம் பெரிய மனிதர்களாலே பேதங்கள் வளர்ந்திடுமே
ஆண்டுகள் இருபது அனல் போர் நடக்கும்
அகதிகள் ஆனோமே
வேண்டும் சமாதானம் விரைவில் வேண்டும்
விடியல் தோன்றட்டுமே
இலங்கை எங்கும் வாழும் மக்கள் இதயம் ஒன்றாவோம்
துலங்கும் வாழ்க்கை துயரம் ஒடும்
தொடரும் இன்பமே
- ஞானி -
fffffffffffff
雙戀響慧響幾響議彎藝
藝
f
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

அறிய வேண்டிய அரிய மனிதர் -14
பன்மொழி அறிஞர் தாவீது அடிகளார்.
முப்பத்தி ஐந்து மொழிகளில் ஆழ்ந்த புலமையும் மேலும் சுமார் எழுபது மொழிகளில் பரிச்சயமும், பெற்றிருந்த வியத்தகு மனிதர் ஒருவர் 1981ம் ஆண்டு மே மாதம் 31ம் திகதி நள்ளிரவு யாழ்ப்பாணத்தில் காலமானார்.
1981ம் ஆண்டு மே மாதம் 31ம் திகதி இரவு யாழ்ப்பாண நூல் நிலையம் தீக்கிரையானதைக் கேட்டு அடைந்த அதிர்ச்சியினால் அவரது உயிர் போயிற்று என்று கூறுவர். அவர் இறக்கும் பொழுது அவருக்கு வயது எழுபத்து நாலு ஆகும்.
இந்த வியத்தகு மனிதர் வேறு யாருமல்ல. புகழ் பெற்ற மொழி வல்லுநர் நல்லூர் சுவாமி ஞானப்பிரகாசரின் சீடரும் அவருடைய வழியில் நின்று சொற்பிறப்பு ஒப்பியல் தமிழ் அகராதியை ஆக்கியவரும் தாவீது அடிகள் என்று தமிழ் மக்களால் அன்புடனும் பெருமையுடனும், அழைக்கப்பட்டு வந்தவருமான வணக்கத்துக்குரிய பிதா ஹயசிந்து சிங்கராயர் டெவிட் (தாவீது) என்பவரே அவராவார். தமிழ் மொழியின் சேைைவயில் அவர் தன்னை ஈடுபடுத்துவதற்கு முன்பு அவர் டேவிட் சுவாமி என்று அழைக்கப்பட்டு வந்தார். சம்பத்திரிசியார் கல்லூரி மாணவர்கள் அவரைத் தாடிக்கார சுவாமி என்று அழைத்ததுமுண்டு.
தாவீது அடிகள் 1907 ம் ஆண்டு ஜீன் மாதம் 18ம் திகதி பருத்தித் துறையில் உள்ள தும்பளை என்னும் ஊரில் யாழ்ப்பாணம் சம்பத்திரிசியார் கல்லூரியில் ஆசிரியராகவிருந்த ஆபிரகாம் பிள்ளை டேவிட் என்பவருக்கும் பாலுப்பிள்ளை என்பவரின் மகளாகிய எலிசபேத்து என்பவருக்கும் மகனாகப் பிறந்தார்.
கல்லுரரி ஆசிரியர்
தாவீது அடிகள் தமது முதலாம் வகுப்பிலிருந்து தனது

Page 5
தந்தையார் படிப்பித்துக் கொண்டிருந்த யாழ்ப்பாண சம்பத்திரிசியார் கல்லூரியில் படித்து வந்தார். 1912 ம் ஆண்டு அக்கல்லூரியில் அவர் சேர்ந்திருந்தார். 1924 ம் ஆண்டுவரை கல்லூரியில் பயின்று சரித்திரப் பாடத்தில் லண்டன் பல்கலைக்கழகத்தில் இளங் கலைமாணிப் (ஆனர்ஸ்) பரீட்சையில் தேறியதோடல்லாமல் பிரித்தானிய சாம்ராட்சியத்தில் முதல் மாணவனாகவும் தேறியிருந்தார். அதைவிட யுனிவேர்சிற்றிக் கல்லூரியில் பொருளாதாரப் பாடத்தில் தங்கப் பதக்கமும் பெற்றிருந்தார். அங்கு காலஞ்சென்ற கலாநிதி என். எம். பெரேரா, அடிகளுடைய விரிவுரை யாளர்களில் ஒருவராக இருந்தார்.
க்ொழும்பு யுனிவேர்சிற்றி: கல்லூரியில் தனது படிப்பை முடித்துக் கொண்ட தாவீது அடிகள் தனதுபழைய கல லுரியரில் ஓர் ஆசிரியராகச் சேர்ந்துகொண்டார்.அப்பொழுது அவருடைய தந்திை ஆபிரகாம் பிள்ளை அங்கு கடமையாற்றிக் கொண்டிருந்தார்.
நல்லுனர் அறிஞர்
தாவீது அடிகள் சம்பத்திரிசியார் கல்லூரியில் படித்துக் கொண்டிருந்த காலத்தில் நல்லூர் சுவாமி ஞானப்பிரகாசரின் புகழ் பரவி இருந்தது.
கொழும்பில் தனது படிப்புக்களை முடித்துக் கொண்டு யாழ்ப்பாணத்துக்குத் திரும்பிய பின்புதான் தாவீது அடிகள் சுவாமி ஞானப்பிரகாசருடன் நெருங்கிப் பழகலானார். தமிழ் மொழி ஒதுக்கப்பட் டிருந்த அந்தக் கால ஆங்கில இலங்கையில் படித்த தாவீது அடிகள் சுவாமி ஞானப்பிரகாசரிடம் தமிழை முறையாகக் கற்பதற்குப் போயிருந்தார். ஆனால் சுவாமி ஞானப்பிரகாசரோ அவரை முதலில் சமஸ்கிருதத்தைக் கற்றுக் கொள்ளும்படி சொன்னதோடு அல்லாமல் அதை ஒரு கட்டளையாகவும், கூறியிருந்தார். அத்துடன் தானே தாவீது அடிகளுக்குச் சமஸ்கிருதப் பாடம் சொல்லிக் கொடுக்கவும்.முன் வந்தார். சுவாமி ஞானப்பிரகாசரே வியக்கும் அளவிற்கு தாவீது அடிகள்
6
 

சமஸ்கிருதத்தைப் பயின்று கொண்டார்.
தாவீது அடிகள் தமிழ் மொழியை முறையாக ஆழமாகக் கற்றுக் கொள்ளத் தொடங்கியது 1948ம் ஆண்டில், அவர் இங்கிலாந்துக்குச் சென்றதன் பின்பேயாம். தனிநாயக சொற்பிரவாகங்களை 1947ம், 1948ம் "ஆண்டுகளில் கேட்க நேர்ந்த தாவீது அடிகளுக்குத் தானும் அவரைப் பின்பற்ற வேண்டும் என்று ஓர் உற்சாகம் பிறந்ததாக தாவீது அடிகள் இக்கழ் ரிலும் எழுதிய குறிப்புக்களின் மூலமும் தெரிவித் Ti.
சம்பத்திரிசியார் கல்லூரியில் படித்து வந்த தாவீது அடிகள் 1947ம் ஆண்டில் இந்தியாவிற்குச் சென்று அங்குள்ள அண்ணாமலைப் பல்கலைக் கழகம், மைசூர் பல்கலைக் கழகம், பம்பாய்ப்பல்கலைக் கழகம், ஆகிய பல்கலைக்கழகங்களில் 1948ம்ஆண்டு செப்டம்பர் மாதம் வரை மொழி ஆராய்ச்சிகள் செய்து வந்தார்.அதன் பின்பு அவர் அங்கிருந்து இங்கிலாந்துக்குச் சென்று இலண்டன் பல்கலைக் கழகத்தில் சேர்ந்து 1952ம் ஆண்டு ஜின் மாதம் வரை பயின்று வந்தார். 1949ம் ஆண்டில் அவர் சமஸ்கிருதம், பாளி முதலிய இந்தோ ஆரிய மொழிகளில் முதுமாணிப்பட்டத்தையும் 1951ம் ஆண்டில் தமிழ், தெலுங்கு முதலிய திராவிட மொழிகளில் செய்த ஆராய்ச்சிகளுக்கு கலாநிதிப் பட்டமும் பெற்றார். பின்னர் ஜெர்மன் நாட்டிற்குச் சென்று அங்குள்ள முயோன்ஸ்டா என்னும் பல்கலைக் கழகத்தில் டிசம்பர் மாதம் வரை ஜெர்மன் மொழி ஆராய்ச்சியில் ஈடுபட்டார்.
இருள் மா. இராசேந்திரன்.
அதன் பின்பு இலங்கைக்குத் திரும்பி தனது பழைய கல்லுரியில் படிப்பித்தலைத் தொடர்ந்து வந்தார். 1967ம் ஆண்டில் ஆசிரியத் தொழிலிலிருந்து ஓய்வு பெற்றுக் கொண்டார்.
மொழி ஆராய்ச்சி
தாவீது அடிகள் 1970ம் ஆண்டில் தனது சொற்பிறப்பு ஒப்பியல்
அகராதியில் திட்டமிட்டிருந்த ஒன்பது பாகங்களில் முதலாம் பாகத்தை
வெளியிட்டார். இரண்டாம் பாகம் 1972ம் ஆண்டில் வெளியிடப்பட்டது.

Page 6
மூன்றாம் பாகம் 1973ம் ஆண்டில் வெளியிடப்பட்டது. இம்மூன்று பாகங்களும் யாழ்ப்பாணம் ஆசிர்வாத அச்சகத்தில் பதிப்பிக்கப்பட்டன. நாலாம் ஐந்தாம் பகுதிகளை ஆட்டுப்பட்டித் தெருவில் உள்ள ஸ்பாட்டன் அச்சகத்தில் பதித்திருந்தார். அவர் இறப்பதற்கு முன்பு தனது அகரா தியில் ஒன்பது பாகங்களையும் வெளியிட்டிருந்தார்.
தாவீது அடிகளின் அறிவு வளர்ச்சியில் அவருக்கு உற்சாகம் அளித்தவர்களென்று தனது தந்தை ஆபிரகாம் பிள்ளையையும், சுவாமி ஞானப்பிரகாசரையும், தனிநாயகம் அடிகளையும், அவர் குறிப்பிட்டுள்ளார். தனிநாயகம் அடிகள்தான் தான் ஆங்கிலத்தில் வெளியிட்டு வந்த தமிழ்ப்பண்பாடு (Tamil Culture) என்னும் இதழில் தாவீது அடிகளின் பன்னிரண்டு ஆராய்ச்சிக் கட்டுரைகளை வெளியிட்டிருந்தார்.
தாவீது அடிகளைப் போன்று அபூர்வமான மூளையும் பல மொழிகளில் புலமையும் உடைய ஒருவர் தோன்றுவது அரிதினும் அரிது. அவர் ஒரு தமிழராகப் பிறந்தது தமிழ் மக்களின் பாக்கியமும். பெருமையுமாகும். அவர் ஆராய்ச்சி செய்து வைத்திருக்கும் எல்லாவற்றையும், அவை அழிந்தோ தொலைந்தோ போவதற்கு முன்பு, தேடிப்பிடித்து புத்தக வடிவில் கொண்டுவருவதோடல்லாமல், அவருடைய மொழி ஆராய்ச்சியின் முடிவுகளைக் கற்றறிந்த தமிழ் மக்கள் உலகத்துக்கு எடுத்துச் சொல்லவும் வேண்டும்.
நன்றி- ஓலை 1)
தெரிந்து கொள்ளுங்கள் பார்சலோனாவைச் சேர்ந்த 19 வயது இளைஞன் ஒருவன் முதன் முதலாக தான் வரைந்த ஓவியங்களைப் பொதுமக்களின் பார்வைக்கு வைத்தான்.
என்ன கன்றாவி இது? என்று பலர் முகம் சுழித்தார்கள். சுலபத்தில் புரியாத அந்த ஓவியங்களை வரைந்த இளைஞன் பெயர் - பிக்காஸோ!
-அணுவை முதன் முதலாகப் பிளந்தவர் ரூதர்ஃபோர்ட் என்ற விஞ்ஞானியாவார்.

F. y* #
ფ}ტJ5 GJITym டத்தின் sorar:
புகழ் பெற்ற ஆங்கிலக் கவிஞன் ஷெல்லியின் பெயரை முகுந்தன் தனது புனை பெயராகச் சூட்டிக் கொண்ட போது, ஷெல்லிதாசன் என்னும் புனை பெயரோடு வாழ்ந்த மகாகவி பாரதியின் நினைவு அவனுக்கு வந்தது. ஆனாலும், புனை பெயர் சூட்டிக் கொண்டதில், தான் எந்த வித்திலும் பாரதியைப் பின்பற்றவில்லை என்பது மட்டும் முகுந்தனுக்கு நன்றாகவே தெரிந்தது.
ஷெல்லியின் வாழ்க்கை வரலாற்றை, பாடசாலையில் படிக்கின்ற காலத்திலேயே தமிழில் வாசித்துத் தெரிந்து கொண்டவன் முகுந்தன். அப்போதிருந்தே அந்தப் புரட்சிக் கவிஞன்மீது அவனுக்கு அபார ஈடுபாடு ஏற்பட்டது. அந்த ஈடுபாடும், அவனிடம் இயல் பாகவே இருந்த போர்க்குணமுமே ஷெல்லியின் பெயரைப் புனைபெயராக்க அவனைத் தூண்டின.
ஷெல்லிக்கும் முகுந்தனுக்குமிடையே இன்னுமொரு ஒற்றுமையும் இருந்தது. லண்டன் ஒக்ஸ்போட் பல்கலைக்கழகத்தில் ஷெல்லி படிக்கின்ற காலத்திலே அவனது நாஸ்திகப் போக்குக்காக, அவன் பல்கலைக்கழகத்திலிருந்து வெளியேற்றப்பட்டதுபோல, மட்டக்ளப்பில் ஒரு பாடசாலையில் எஸ்.எஸ்.சி. படிக்கின்ற காலத்தில் என்னடா கடவுளும் கிடவுளும், என்று கிண்டலடித்ததற்காகவே நெஞ்சில் எப்போதும் சிலுவையைச் சுமந்து கொண்டிருந்த ஒரு கிறிஸ்தவக் குருவால் முகுந்தன் உடனடியாகவே வீட்டிற்கு அனுப்பிவைக்கப்பட்டான். நல்லவேளை, அவனின் தாயாரின் கண்ணிர்தான் அவனை மீண்டும் அந்தப் பாடசாலையில் கொண்டுவந்து சேர்த்தது.
தாயின் கண்ணிரில் கரைந்த முகுந்தன் நன்றாகப் படித்து பரீட்சையில் திறமைச் சித்தியடைந்த கையோடு ஒரு அரசாங்க உத்தியோகத்தில் அமர்ந்து கொண்டாலும், அவனால் அந்த கிறிஸ்தவக்

Page 7
குருவின் செயலை மறக்கமுடியவில்லை. அதன் காரணமாகத்தான் அறுபதுகளில் அரசாங்கம் தனியார் பாடசாலைகளைப் பொறுப்பேற்றுக் கொண்டபோது, ஆகாவென்றெழுந்ததுபார் யுகப்புரட்சி' என்று ரஷ்யப் புரட்சியை மனமார வரவேற்று பாரதி பாடியது போல இவனும் அரசாங்கத்தின் அந்தப் புரட்சிகரமான செயலைப் பாராட்டி பெரும் கொண்டாட்டமே நடாத்தினான்.
முகுந்தன் இப்போது ஒரு சுதந்திரப் பிறவி. எந்தவிதக் கட்டுப்பாடுமின்றி இவனிடம் இருந்து கவிதைப் பொறிகள் வெடித்துக் கிளம்பின. இந்தப் பொறியினால், தீண்டப் பட்ட இளைஞர்களின் நாவில் எல்லாம் முகுந்தன் இப்போது, ஷெல்லியாகவே உலாவந்தான்.
முகுந்தனின் கவிதைகளில் ஷெல்லியைப் போன்று நாத்திக வாடையும், அரசியல் நெடியும் சேர்ந்து வீசின.இந்த இருவித வாசங்களும், வாசகர்களின் மூக்கைத்துளைத்தபோது முகுந்தன் உண்மையிலேயே தன் இலக்கியப்பணி வெற்றி அடைந்ததாகக் கருதினான்.
- - அரவிந்தன் -
தன்னினம் உண்மையாக சுதந்திரம் அடையவேண்டுமானால், அது தன்னைப் பலமாக இறுக்கிவைத்திருக்கும் சமயச் சிறையிலிருந்து விடுவித்துக் கொள்ள வேண்டுமென்று விரும்பினான் அவன்.
முகுந்தனைப் பொறுத்தவரையில், சமயம் மனிதனைச் சிந்திக்கவிடாமல் தடுத்து வைத்திருக்கும் பெரிய சிறைக்கூடம். பலநூற்றாண்டுகளாக பெரும்பாலும் எல்லா மக்களையுமே அடைத்து வைத்திருக்கும் அந்தச் சிறைக்கூடத்தை உடைத்தெறியும்போதுதான், ஒவ்வொரு மனிதனுக்கும் உண்மையான சுதந்திரம் கிடைக்குமென்று உரக்கவே சிந்தித்தான் அவன்.
இந்தச் சமயத்தில் பராசக்தியையே தினமும் பாடிப்பரவிய மகாகவி பாரதியைவிட, தமிழ்நாட்டினை முழுமையாகப் பிடித்திருந்த மதம் என்னும் பெரும் நோயைத் தீர்க்க முயன்ற, பாரதிதாசனையே அவன் பெரிதும் நினைவு கூர்ந்தான். முகுந்தனைப பொறுத்தவரையில் ஆங்கிலக் கவிஞன் ஷெல்லியின் தாசனாகப் பிரகாசித்தவன் பாரதிதாசனே

அன்றிப் பாரதியல்ல. இந்தக் கருத்தை இலக்கியக் கூட்டங்களில் அவன் முன்வைக்க ஒருபோதும் தவறியதே இல்லை.
முகுந்தனின் இந்தப் போக்கு - சமய வட்டாரத்தில் பெரும் வாதங்களையும் அவன்மீது வெறுப்பையும் ஏற்படுத்தின. வயதான சமயவாதிகள் அவனைக் கண்டதும் தங்கள் முகத்தை வேறுபக்கமாக திருப்பிக் கொண்டனர். மதபோதகர்களுக்கு முகுந்தன் சிம்ம சொப்பனமாகவே காட்சியளித்தான்.
அது அறுபதுகளின் தொடக்கம். இலங்கையின் வடக்கிலும் கிழக்கிலும் தமிழ்த் தேசியவிதை பலமாக ஊன்றப் படுகின்றது. எங்கும் அறப்போராட்ட வீரர்களின் அணிவகுப்பு எங்கு பார்த்தாலும் பாரதிதாசன் பாடியதுபோல "வெள்ளம்போல் தமிழர்கூட்டம். ‘எங்கள் வாழ்வும் எங்கள் வளமும் மங்காத தமிழ் என்றே சங்கே முழங்கு என்னும் பாடல்வரிகளின் முழக்கம்.
அறப்போராட்ட முன்னணி வீரர்களில் முகுந்தனும் ஒருவன். அவன் பேனாவிலிருந்தும் பாரதிதாசன் பாணிக் கவிதைகள் பாய்ந்து வந்தன. அவன் பாடினான்.
முத்தாரத் தமிழுக்கு
முனைந்தின்னல் விளைத்தால்
செத்தார்கள் துரோகிகள்
செப்பு நீ தமிழா!
முகுந்தனின் இப்பாடல் வரிகள் மட்டக்களப்புப் பிரதேசத்தின் மூலைமுடுக்கெல்லாம் எதிரொலித்தது. முகுந்தன் இப்போது புரட்சிக் கவி என்றே அழைக்கப்பட்டான். இளம் கவிஞன் ஷெல்லியின் காதுகளில் இந்த வார்த்தைகள் விழுந்தபோது அவன் மனம் இறக்கை கட்டி ஆகாயத்தில் பறந்தது.
அறப்போராட்டம் ஆட்சியினரால் ஓர் இரவிலேயே அடக்கப்பட்டது. மிருகத்தனமான இந்த இராணுவ தர்பாரில் பாதிக்கப்பட்டவர்களில் முகுந்தனும் ஒருவன். அசையாமல் அந்த இடத்திலேயே அமர்ந்திருந்த

Page 8
சத்தியாக்கிரகி முகுந்தனை இரண்டு மூன்று இராணுவ வீரர்கள் கட்டிப்பிடித்து ஒரு மூட்டையைப் போல டரக்கில் தூக்கி எறிந்த அந்த நிலையிலும் தன்னை ஓர் உண்மையான சத்தியாக்கிரகியாகவே நிரூபித்தான் அவன்.
முகுந்தனின் கைது ஒவ்வொரு இளைஞன் மனதிலும் ஆத்திர நெருப்பை மூட்டியது. அவர்கள் ஒவ்வொருவரும் தங்களை முகுந்தனாகவே நினைத்துக் கொண்டு அவனது விடுதலைக்காக மறைமுகமான பிரச்சார நடவடிக்கைகளில் ஈடுபட்டனர். இதனால் மக்கள் மத்தியில் ஒரு எழுச்சியே உண்டாகியது. தமிழ்ப்பத்திரிகைகளும், தணிக்கையை மீறி அரசைக் கண்டித்து ஆசிரிய தலையங்கங்கள் எழுதின.
-சிறுகதை
முகுந்தன் தனது செயற்பாட்டின் விளைவை நன்கு அறிந்தே இருந்தான். அப்போதெல்லாம் தன் தாயைப்பற்றிய கவலையே அவனை வாட்டி எடுத்தது. ஒரே ஒரு மகனான தான் சிறை செல்ல நேர்ந்தால் அத்தாயின் நிலை என்னாகுமோ என்று நினைத்த போது, அவன் உண்மையிலேயே கண் கலங்கினான். ஆனாலும் தாய்மீது இருந்த பற்றைவிட, தாய்நாட்டின் மீது இருந்த பற்றே அவன்உள்ளத்தில் தலை தூக்கி நின்றது. பெரும் மனப் போராட்டத்தின் பின் அதுவே சரியென்றும் தீர்மானித்தான் அவன்.
சிறைவாசம் முகுந்தனைப் பொறுத்தவரையில் சிந்தனையின் வாசமாகவே பரிணமித்தது. அவ்வாசமே, சிறையில் ஒரு தமிழ்க்காவியம் பெற்றெடுக்கவும் வழி செய்தது.
ஓராண்டு சிறைவாசம் முடிந்து முகுந்தன் வெளியில் வந்தபோது தமிழ் நாட்டின் வ.உ.சி. சுப்ரமணிய சிவா போலன்றி, மக்கள் வெள்ளத்தால் அவன் மாலை மரியாதைகளோடு வரவேற்கப்பட்டான். அவனுக்கென்று உருவாகியிருந்த ஓர் இளைஞர் கூட்டம் - மட்டக்களப்புப் பிரதேசமெங்கும் அவனது விடுதலையைஒரு பெரும் விழாவாகவே கொண்டாடி மகிழ்ந்தது.

மக்கள் வெள்ளத்திடையே கழுத்து நிறைய மாலைகளோடு நீந்தி வந்த தன் மகனைக் கண்ட தாயின் மனதில் என்றோ ஒருநாள், சுபாஸ் சந்திரபோஸ் பற்றி அவன் தனக்குச் சொன்னது ஞாபகம் வந்தது. அவள் அப்படியே அவனைக் கட்டித் தழுவிக் கொண்டாள்.
கவிஞர் முகுந்தனின் சிறையில் பூத்த செந்தமிழ்க் காவியம் ‘விடுதலை தேடி எனும் நூலின் வெளியீட்டு விழா அது. ஆயிரக்கணக்கில் இளைஞர்கள் கூடியிருந்த அந்த விழா ஒரு இளைஞனின் தலமையிலேயே நடை பெற்றுக் கொண்டிருந்தது. தலைமை உரையாற்றிய இளைஞனின் ஒவ்வொரு வார்த்தையிலும், முகுந்தனைப் பாரதியாக - பாரதிதாசனாகஷெல்லியாக - கிரேக்க விடுதலைப் போரில் உயிர் நீத்த புரட்சிக் கவிஞன் பைரனாக- படம் பிடித்துக் காட்டுகின்றன. மக்கள் அந்தப் பேச்சு மழையில் நன்றாகவே நனைந்து போகிறார்கள்.
விழாத்தலைவனின் பேச்சு மழையில் நனைந்து குளிர்ந்து போன மனித உள்ளங்களை முகுந்தனின் ஏற்புரை தீப்பிழம்பாக்குகிறது. அந்தத் தீ ஒன்றே பகையை எரித்துவிடும் என்பதை உணர்ந்த கவிராஜன் முகுந்தன் கர்ஜிக்கிறான். M
சுதந்திரம் - நமது பிறப்புரிமை. அதுதான் நமது சுவாசம். இந்தச் சுவாசம் இல்லையென்றால் நாம் சுடுகாட்டுப் பிணங்கள்தான். ஆண்டாண்டு காலம் அடிமைகளாக வாழ்வதைவிட - ஒரு கணமேனும் பரிபூரண சுதந்திரத்தோடு வாழ்ந்து மடிவதே மேல்.
கவிஞன் ஒவ்வொரு வசனத்தையும் சொல்லிமுடித்தபோது கூட்டம் பெரும் ஆரவாரத்தால் அதிர்ந்தது. உணர்ச்சிவசப்பட்ட இளைஞர்கள் கவிஞனைக் கட்டித் தழுவ துடிக்கின்றனர். கூட்டம் எங்கும் அலைமோதுகின்றது.
விழா முடிவடைகின்றது. கவிஞன் முகுந்தன் இளைஞர்படை
ஒன்று பின்தொடர வீதியில் நிறுத்தப்பட்டிருந்த காரை நோக்கிக் கம்பீரமாக அடியெடுத்து வைக்கின்றான். அந்த நேரம் பார்த்து மின்விளக்குகள்
அனைத்தும் அணைந்து போகின்றன. அதைத் தொடர்ந்து அவல ஒலி.
is

Page 9
மக்கள் ஒருவரை ஒருவர் தள்ளிக் கொண்டு கால்போன போக்கில் ஓடுகின்றார்கள்.தலையில் பலமாகத் தாக்கப்பட்ட முகுந்தன் நிலத்தில் சாய்கிறான்.
முகுந்தனின் மரணம் மக்கள் மத்தியில் பெரும் ஆத்திரத்தையும், கலவரத்தையும் உண்டாக்குகின்றது. இனி இது பொறுப்பதில்லை என்று இளைஞர்கள் சபதம் செய்கின்றனர்.
ஒவ்வொரு வீட்டிலும் முகுந்தனின் புகைப்படம் அலங்கரிக்கப்பட்டு விளக்கேற்றி வைக்கப்படுகின்றது. அதனோடு சேர்ந்து இலங்கையின் வடகிழக்குப் பிரதேசம் முழுவதும் ஒரு கொடி உயர ஏற்றப்படுகின்றது. அது இலங்கையின் வரலாற்றையே மாற்றிவிடக்கூடிய ஒரு போராட்டத்தின் அடையாளமாக காற்றில் ஒருவிதப் படபடப்புடன் பறந்து கொண்டிருந் حسي ، ، ، ، ، ، ، لتتخاطب
- - . LLLLLL S S L S ASA LS Y S Y L S S L S Y J Y uu கிறிஸ்தவத்தைப் பற்றிக் காந்தி
“ *、 புதிய ஏற்பாட்டைப் படித்தபோது எனக்கு முற்றும் மாறான உணர்ச்சி ஏற்பட்டது. முக்கியமாக மலைப்பிரசங்கங்கம் நேரடியாகவே 5i உள்ளத்தைக்கவர்ந்துவிட்டது.அதைக் கிதையுடன் ஒப்பிட்டுப்பார்த்தேன். தீமைக்குப் பதிலாக திமையைச் செய்யாதே என்று உங்களுக்குக் கூறுகின்றேன். உன்னை வலது கன்னத்தில் அறைந்தால் மற்றொரு နှီးကြီးပွါ திருப்பிக் காட்டு எவனாவது உன் சட்டையை எடுத்துக் கொண்டுவிட்டானாயின் உன்போர்வையையும் அவனுக்குக் கொடு என்பது போன்ற உபதேசங்கள் எனக்கு அளவுகடந்த ஆனந்தத்தைக் அளித்தன. உண்ணும் நீர் தந்த ஒருவனுக்கு கைமாறாய் விண்ணமுதத்தைப்போல அன்னம்விரும்பிப் படைத்திடுவாய் என்ற ஷாமல்பட்டின் பாடல்:டே என் நினைவுக்கு வந்தது. கிதை, ஆசியயோதி மலைப்பிரசங்கம் ஆகிய மூன்றும் ஒன்றே என்று கருத என் இளம் மனம் முயன்றது. துறவே, சமயத்தின் தலைசிறந்த அம்சம் என்பது என் மனதை மிகவும் கவர்ந்தது.
மகாத்மாகாந்தியின் (சத்திய சோதனை பக்கம் 84)
 
 

பொருளாதார கபீட்சமும்
சமாதானமும்.
ஒரு தேசத்தின் " உயிர் வாழ்வுக்கு" ஒர் உறுதியான பொருளா தாரக் கட்டமைப்பு இன்றியமையாததாகும். இந்தப் பொருளாதாரக் கட்ட மைப்பினை உலகின் பெரும்பாலான அரசாங்கங்கங்கள் தனியார் துறையி னருடன் இணைந்தே உருவாக்குகின்றன.
பொருளாதாரக் கட்டமைப்பு இரு பெரும் துறைகளைக் கொண்டது. ஒன்று அரசு சார்பான துறைகள், மற்றது - தனியார்துறை. இவ்விரண்டு துறைகளிலும் அரசு சார்பு துறைகள் பெரும்பாலும் கொம்யு .ணிச நாடுகளிலும் (உ-ம் சீனா, கியூபா) தனியார் துறைகள் முதலா னித்துவ நாடுகளிலும், (உ-ம் அமெரிக்கா, யப்பான்) முன்னணி வகிக் கின்றன.
ஒவ்வொரு நாடும் அதனதன் அரசியல் சமூக கலாசார விழுமியங்களுக்கமைவான பொருளாதாரக் கோட்பாட்டைக் கொண்டு இருப்பினும், அவ்வமைப்பு மக்களின் பரிபூரண ஒத்துழைப்புடன் முன் எடுக்கப்படும்போதே, அந்நாட்டில் துரித பொருளாதார வளர்ச்சி ஏற்பட முடியும். ஆசியாவில் இதற்கு உதாரண நாடுகளாக சிங்கப்பூர், மலேசியாவை நாம் கொள்ள முடியும்.
ஒரு அரசாங்கம் தனது நடவடிக்கைகளுக்கு மக்களின் ஒத்துழைப்பைப் பெறவேண்டுமாயின் அம்மக்கள் அனைவரையும், அது சமத்துவமாக நடத்த வேண்டும். சமாதானம், சமத்துவக் கோட்பாட் டிலிருந்தே உதயமாகிறது. இவ்வுண்மையை ஒரு நாடு உணராத நிலையில் அந்நாடு எத்தகைய வளங்களைக் கொண்டு இருப்பினும், அது பொருளாதாரச் சுபீட்சத்தைப் பற்றிக் கனவு கூடக் காண இயலாது. ஆசிய நாடுகளில் சிங்கப்பூர் பெரும் பொருளாதார வளர்ச்சியைக் கண்ட ஒரு நாடாகும். பருகும் நீருக்குக் கூட பக்கத்து நாடான மலேசியாவை எதிர்பார்க்கும் நிலையில் உள்ள இச் சின்னஞ்சிறிய நாடு, இன்று உலகின் பொருளாதார வளர்ச்சி கண்ட முன்னணி நாடுகளில் ஒன்றாகத் திகழ்கின்றதெனில் அதற்குக் காரணம் அந்நாட்டில் நிலவும்
s

Page 10
நிரந்தர சமாதானமேயாகும். இனங்களிடையே எத்தகைய பிளவுகளையும் பூசல்களையும் உண்டாக்கக்கூடிய சமூக அரசியற் காரணிகள் எதுவும் அந்நாட்டில் இல்லை. சிறுபான்மை இனத்தவரான ஒருவர் அந்நாட்டின் ஜனாதிபதியாக இருப்பது சமாதான தேவதைக்கு மக்களும் அரசும் ஒன்று சேர்ந்து சூட்டிய மகுடம் என்பதில் ஐயமில்லை.
ஆசியாவின் இன்னுமொரு நாடான மலேசியாவில் பெரும்பான் மையினரான முஸ்லிம்கள் வாழ்ந்தாலும் சிறுபான்மையினருக்கு போதிய வாயப்புக்கள் வழங்கப்பட்டிருத்தல் அனைவரும் அறிந்ததொன்று. சிங்கப் பூரைப் போன்று இந்நாட்டிலும் இன பேதத்திற்கு இடமளிக்காமை அதன் சீரிய வளர்ச்சிக்கான முக்கிய காரணிகளில் ஒன்றாகும்.
தென் கிழக்கு ஆசியாவைப் பொறுத்தவரையில் இலங்கை பங்களாதேஸ் ஆகிய நாடுகளில் தொடர்ந்து நிலவும் அமைதியின்மை அந்நாடுகளின் பொருளாதார வளர்ச்சியைப் பெருமளவில் பாதித்து விட்டதென்பது தெளிவு.
இவ்விரு நாடுகளிலும் பங்காளதேசம் ஒரு முஸ்லிம் நாடாக இருப்பினும் அந்நாட்டில் இருபெரும் அரசியல் கட்சிகளிடிையே உள்ள மிக மோசமான பகைமை உணர்வு அந்நாட்டு மக்களை இரு கூறாகப் பிரித்து விட்டது. அதனால் அங்கு எவ்வித பொருளாதார அபிவிருத்தியையும் ஏற்படுத்த முடியவில்லை. உலகின் ஏழைமை மிக்க நாடுகளில் ஒன்றாக இந்நாடு இன்னும் இருப்பதற்கு இதுவும் ஒரு முக்கிய காரணமாகும்.
தென்கிழக்காசிய நாடுகளில் அணுஆயுதங்களைக் கொண்ட நாடுகளாக விளங்கும் இந்தியாவிலும், பாகிஸ்தானிலும், அடிக்கடி தோன் றும் கலவரங்களும் மிக மோசமான இன வன்செயல்களும் அந்நாடு களின் பொருளாதார வளர்ச்சிக்கு பெரும் தடைக்கற்களாக இருப்பதைக் கண்கூடாகக் காண்கின்றோம். உள்நாட்டில் காணப்படும் இந்த விரும்பத்தகாத சூழ்நிலை, பாதுகாப்பிற்காக பெருமளவு U50015605 இவ்விரு நாடுகளும் செலவழிக்க வேண்டிய நிலையை உண்டாக்கி விட்டது.
காணப்படுகின்றது. இந்நாடுகளில் பெருமளவு கணிப்பொருட்கள் இருப்பினும், அடிக்கடி அந்நாடுகளில் தோன்றும் வன்முறைகளும், ஆயுதப்
 
 

போரட்டங்களும், மக்களை வறுமைக் கோட்டிற்குக் கீழ் தள்ளிவிட்டன. (உதாரணம்-அங்கொலா, உகண்டா போன்ற நாடுகள்)
ஆபிரிக்க நாடுகளில் ஒன்றான தென் ஆபிரிக்கா ஆங்கில ஆட்சியிலிருந்ததைவிட பன்மட்ங்குமுன்னேறி உள்ளமைக்கு நெல்சன் மண்டேலாவின் தலைமையில் அங்கு தோற்றுவிக்கப்பெற்ற ஒற்றுமையும், சமாதானமுமே காரணம் என நிச்சய்மாகக் குறிப்பிடமுடியும்.
அமெரிக்கா இன்று முதன்மையான வல்லரசு நாடாகத் திகழ்கின்றதென்றால் அதற்கான அடிப்படைக் காரணம் அந்நாட்டில் நிலைத்துவிட்ட சமத்துவமும், சமாதானமும்ே. இணைப்பாட்சி எனும் அரசியல் தத்துவத்தின் கீழ் அதிகாரங்கள் யாவும் மாநில அரசுகளுக்குப் பங்கிடப் பட்டதனால் அந்நாட்டில் அமைதியும், சமாதான்முழ் நிரந்தரமாகி விட்டன. அதனால் மக்கள் ஒன்றுபட்டு உழைத்து அந்நாட்டை உலகிலேயே முதல்தர நாடு ஆக உயர்த்த முடிந்தது. '
19ம் நூற்றாண்டில் அமெரிக்காவின் ஜனாதிபதியாக விளங்கிய ஆபிரகாம் இலிங்கன் காலத்தில் அந்நாட்டில் உருவான உள்நாட்டுப் போருக்கு அவர் ஒரு நிரந்தர முடிவினைக் கண்டபின்பே அமெரிக்கா உலக வல்லரசானது என்பது வரலாறு.
அமெரிக்காவைப் போன்று மேற்கு ஐரோப்பிய நாடுகளும், (உதாரணம்- பிரான்ஸ், ஜேர்மனி) கனடா, ஜப்பான், தென்கொரியா. முதலான நாடுகளும், இன்று பொருளாதாரத்தில் தன்நிறைவு பெற்று விளங்குகின்றமைக்கு அந்நாடுகளில் நிலவும் சமாதான சமூக வாழ்வே காரனம்,
இரண்டாவது உலக மகா யுத்தத்தின் பின் இரண்டாகப் பிளவுண்ட ஜேர்மனி (கிழக்கு மேற்கு என்று) இன்று ஒரே நாடாகப் பொருளாதாரத்தில் துரித வளர்ச்சி பெற்று விளங்குகின்றமைக்கு அந்நாட்டில் ஏற்பட்ட நிரந்தர ஒற்றுமையே அடிப்படை என்பதை யாரும் மறுப்பதற்கில்லை.
பல நூறு தீவுகளின் ஒன்றிணைப்பின் மூலமே யப்பான் மாலைதீவு, போன்ற நாடுகள் உலகத்தில் தலைநிமிர்ந்து நிற்கின்றன. தொழில் வளர்ச்சியிலும், பொருளாதார மேம்பாட்டிலும், அமெரிக்காவையே மிஞ்சிவிடும் அளவிற்கு இன்று யப்பான் நிற்கின்றமைக்கு அதன் ஒற்றுமை
டணர்வே காரணம் என்பது சொல்லாடிலுே விளங்கும்.
இந்நாடுகளிலிருந்து நமது நாடு இல்நிக்க தற்கவேண்டியூ

Page 11
மிக முக்கிய பாடம் அவை பல்லாண்டுகளாகக் கட்டிக் காத்துவரும் ஒற்றுமை சமாதானம், எனும் அதி உயர் மனிதப் பண்பாடாகும்.
இந்து சமுத்திரத்தின் முத்து என்றும், எல்லாவிதமா வளங்களைக் கொண்ட ஓர் அழகு மிக்க தீவு என்றும் பேர் பெற்ற நமது அன்னை நாடு கடந்த ஐம்பது ஆண்டுகளுக்கு மேலாக கொழுந் விட்டெரியும் இனப் பிரச்சனையால் பொருளாதார வளர்ச்சியில் பெரும் பின்னடைவைக் கண்டதுடன் அயல் நாடுகளிடம் கையேந்தும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது.
இலங்கையில் நீண்ட நெடுங்காலமாக வாழ்ந்து வரும் இ பெரும் சமூகங்களான சிங்களவர் தமிழருக்கிடையே நீறு பூத்த நெருப்பாக இருந்துவரும் இந்த இன மோதல் இன்று நேற்று ஏற்பட்டதல்ல இலங்கை யின் பூர்வீக வரலாற்றை எடுத்துக் கூறும் நூல் என்று கருதப்படும் மகாவம்சத்திலே இதற்கான வேர்களை நாம் காணலாம் இந்நூலில் விரிவாகச் சொல்லப்படும் எல்லாளன் - துட்டகைமு யுத்தம் அந்த வேர்களில் மிக முக்கியமானதாகும்.
ஆனால் சிங்கள இனத்தவரின் மூதாதையர் என்று கருதப்படும் விஜயன் என்பவன் வட இந்தியாவிலிருந்து இலங்கை வந்தடைந் பின் இங்கு வாழ்ந்த இயக்ககுலத் தலைவி குவேனியை மணந் ஆரிய தமிழ் இரத்தக் கலப்பினை உருவாக்கி விட்டமையை இரண் இனங் களும் மறந்து போனமை பெரும் துர்ப்பாக்கியமாகும்.
விஜயனைப் போலவே அவனது தோழர்கள் எழுநூறு பேரும் பாண்டிய நாட்டுப் பெண்களைத் திருமணம் செய்து ஏற்கனவே உருவா ஆரிய - தமிழ் இரத்தப் பந்தத்தை உறுதியாக்கியதும் அவ்விரத்த பந்தம் காலகதியில் பல்வேறு வளர்ச்சிகளைப் பெற்று வந்ததும் ஒரு தனி வரலாறு.
எனினும் அதிகார ஆசை கொண்ட அரசியல்வாதிகளின் சுய நலங்களுக்காக மேலே சுட்டிக்காட்டப்பட்ட வரலாற்று உண்மை குழிதோண்டிப் புதைக்கப்பட்டமையால் ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பு தோன்றிய இந்த இனப்பிரச்சனை மீண்டும் புத்துயிர் பெற்று விஸ்வரூபம் எடுக்கத் தொடங்கியது.
இவ்விதம் புத்துயிர் பெற்ற இந்த இனவிரோதம் இருபது ஆண்டுகளாக இந்நாட்டில் பெரும் உள்நாட்டுப் போரையே நடத்திக் காட்டியது. இந்தப் போரினால் நாடு கண்ட உயிர், உடைமை அழிவுகள்,
 
 
 
 
 
 
 
 
 
 
 

பாராலும் மறக்க முடியாதவை.
இந்தப் பேரழிவிலிருந்து நாட்டை மீட்டெடுத்து பொருளாதார சுபீட்சத்தை கண்டடையவே 2001 டிசம்பர் 5ல் இலங்கையில் நடைபெற்ற பொதுத் தேர்தலில் மக்கள் ஆணையைப் பெற்று ஆட்சிக்கு வந்த ஐக்கியதேசிய முன்னணி அரசு தமிழர் விடுதலைப் போராட்டத்தை முன்னின்று நடாத்திய விடுதலைப் புலிகளுடன் 2002 ம் ஆண்டு மாசி மாதம் 22ம் திகதி சமாதான ஒப்பந்தம் ஒன்றைச் செய்து கொண்டது. இந்த ஒப்பந்தத்தின் பின் நாட்டின் பொருளாதாரம் மெல்ல மெல்லக் கட்டியெழுப்பப்பட்டது. அமெரிக்கா, யப்பான், நோர்வே முத லான நாடுகள் பெருமளவில் இலங்கைக்கு உதவ முன்வந்தன. இவ் வாண்டு ஆனிமாத்தில் யப்பான் தலைநகர் டோக்கியோவில் நடைபெற்ற மாநாடு இதனை உறுதி செய்தது.
சமாதான ஒப்பந்தத்தின் பயனாக இலங்கையில் வெளிநாட்டு முதலீடுகளுக்குப் பெரும் வாய்ப்புக் கிடைத்தது. உல்லாசப் பயணிகள் வரவும் அதிகரித்தது. மொத்தத்தில் கடந்த இரு ஆண்டுகாலச் சமாதானம் நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு அடித்தளம் அமைத்துக் கொடுத்தது என்பது உண்மை.
ஆயினும் இந்த அடித்தளத்தை 4.11.2003 ல் திடீரென நாட்டில் இடம்பெற்ற விரும்பத்தகாத அரசியல் நிகழ்வு அடித்து நொறுக்கிவிட்டது போன்றதொரு நிலமை தோன்றியது. இதனை அதே மாதம் 5ம், 6ம் திகதிகளில் கொழும்பு பங்குச் சந்தையில் ஏற்பட்ட வீழ்ச்சி நிதர்சனமாகக்
ாட்டியது.
இவ்வீழ்ச்சியினால் இலங்கைக்கு ஏற்பட்ட இழப்பு எட்டாயிரம் கோடி ரூபா ஆகும். மேற்படி அரசியல் நெருக்கடியினால் 1500 கோடி ருபா (150 மில்லியன் டொலர்) பெறுமதியான வெளிநாட்டு முதலீடுகளை யும், இலங்கை பறிகொடுத்துவிட்டது. மேலும், வெளிநாடுகளின் உதவியோடு இலங்கையில் மேற்கொள்ளப்பட்ட பல்வேறு அபிவிருத்தித் திட்டங்களும் கைவிடப்பட்டதாகத் தெரிகின்றது. உதாரணத்துக்கு மலேசியா அரசாங் கத்தினால் மேற்கொள்ளப்படவிருந்த 2800 கோடிருபாசெலவிலான கொழும்பு, கண்டி அதிவேக நெடுஞ்சாலைத் திட்டம் நிறுத்தப்பட்டமையை இங்கு சுட்டிக்காட்டலாம்.
தற்போதைய அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்பட்ட சமாதான நடவடிக்கைகளினால் நாட்டில் உருவான பொருளாதார வளர்ச்சியை

Page 12
19.11.2003ல் ஐக்கிய தேசிய அரசாங்கத்தினால் பாராளுமன்றத்தி சமர்ப்பிக்கப்பட்ட வரவுசெலவுத் திட்டம் எடுத்துக் காட்டியது. அரசி மூன்றாவது வரவு செலவுத் திட்டத்தை சபையில் சமர்ப்பித் நிதியமைச்சர் கெளரவ கே.என்.சொக்ஸி அவர்கள் பேசும் போது எம வலுவான முயற்சியானது ஆண்டின் முதல் ஆறு மாதங்களில் 5.6 வளர்ச்சியை எய்துவதற்கும். இலங்கை மற்ற நாடுகளின் நம்பிக்கைை ஈட்டிக் கொள்ளவும், நம்மை இயங்கச் செய்தது என்று குறிப்பிட்டுள்ளன இந்நாட்டின் பொருளாதார வளாச்சியை நன்கு எடுத்துக் காட்ட போதுமாகும்.
மேலும், அரசும். விடுதலைப்புலிகளும், செய்து கொண் சமாதான ஒப்பந்தத்தினால் 2001ல் 14.2% இருந்த பணவீக்கம், 2002 7.6% மாகவும் 2003ல் 72%ஆகவும் வீழ்ச்சியடைந்தமையும், கொழும் பங்குச் சந்தை உலகின் 2வது மிகச் சிறந்த செயலாற்று பங்கு சந்தை என்ற சர்வதேச அங்கீகாரத்தை Н+ L l L} கொண்டமையையும்(தினக்குரல் 20.11.2003) ஓர் நாடு பொருளாதாரத்தி கபீட்சமடைய வேண்டின் அந்நாட்டில்அமைதி, சமாதானம், நிலவுதல் மிக அவசியம் என்பதனை உள்ளங்கை நெல்லிக்கனி போல் தெளிவா எடுத்துக் காட்டுகின்றன.
தமிழர் மலை இலங்கையில் உள்ள மலைகளில் சிவனொளிபாத மலையும் ஒன்று. இது பலரும் அறிந்த செய்தி. இந்த மலையை எல்லாச் சமயத்தவரும் தமது என்று சொந்தம் கொண்டாடுவது வெறும் ஐதீகத்தின் அடிப்படையில் தான். மற்றப்படி இதில் உண்மை இல்லை !
சிவன் ஒளி பாதமலை என்றால் சிவந்த கதிர்களை உடைய சூரியனின் கதிர்கள் படும் இடம் என்றுதான் பொருள். பண்டைக்காலத் தமிழர்கள் (இன்றும்கூட) சூரியனைத் (ஒளியை) தெய்வமாக வழிபடுபவர்கள். இந்த வரலாற்றின் அடிப்படையில் சிவனொளிபாதமலையைத் தமிழர்மலை என்று சொல்வதுதான்
Frf.
 
 
 
 
 
 
 
 
 

அதிகாரம் 11
ஈழத்திலிருந்து சோழனின் ஆதிக்கத்தை முற்றாக இல்லா தொழித்துவிட்டு நாட்டின் ஏக மன்னனாகப் புராதன நகரமாம் அனுராத புரத்தில் மகுடம் தரித்துக் கொண்ட விஜயபாகு - தான் பெற்ற சுதந் நிரத்தை தனிப் பெரும் விழாவாக தரணி எங்கும் கொண்டாடி மகிழ்ந்தான்.
ஈழத்தின் மூலைமுடுக்கெல்லாம் பெரும் எழுச்சியோடு கொண்டாடப்பட்ட இவ்விழாவில் அடிமைத்தளையை உடைத்தெறிந்து விட்ட மக்கள் அனைவரும், எவ்வித வேறுபாடுமின்றி இணைந்தமை கேட்டு, பாண்டிய சேரர் மட்டுமன்றி, அயோத்தி, கலிங்கம், கன்னோசி, மேலைச் சாளுக்கிய மக்களும், ஆனந்த வெள்ளத்தில் ஆழ்ந்தனர்.
நாட்டு மக்களின் பரிபூரண ஒத்துழைப்போடு பன்னிரண்டு ஆண்டுகளுக்கு மேலாக பல துன்பங்களுக்கு மத்தியில் போராடி விடுதலையைச் சுவீகரித்துக் கொண்ட விஜயபாகு தேசத்தினை பல்வேறு வகையில் புனரமைக்க வேண்டிய நிலையில் இருந்தான்.
(வாய் நிறைந்த வாழ்த்த)
அந்நிய ஆட்சிக் காலத்தில் பெளத்த கலாசாரத்தின் அடையாளமாக விளங்கிய அனுராதபுரம் அழிக்கப்பட்டதோடு பெளத்த விகாரைகளும் பாழாக்கப்பட்டன. இதனை நேரிலே பார்த்த விஜயபாகு அவற்றையெல்லாம் மீண்டும் கட்டியெழுப்ப வேண்டிய அவசரத் தேவையைத் தெளிவாகவே உணர்ந்தான். மேலும், புத்த பிக்குகள் மிகக் குறைந்த எண்ணிக்கையில் இருந்ததால் காம்போஜத்திலிருந்து புரத பிக்குகளை வரவழைக்கவும் திட்டமிட்டான்.
ஈழத்தில் எழுபது ஆண்டுகளுக்கு மேலாக ஆட்சி நடாத்திய சோழர்கள், அந்த மண்ணில் தமது இந்து கலாசாரத்தை ஆழமாக்கும் பணியில் மும்முரமாகவே ஈடுபட்டிருந்தார்கள். இதன் பொருட்டு ஊர்களின்

Page 13
பெயர்களை மாற்றுதல், சிவாலயங்கள் கட்டல்,தமிழர்களைக் குடியேற்றுதல், போன்ற நடவடிக்கைகளைத் தீவிரமாகச் செயற்படுத் தினார்கள். இந்த வகையிலேயே பொலநறுவை, இராஜராஜ சோழனால் ஜனநாதமங்கலமாகப் புதுப்பிறவி எடுத்தது.
இத்தகைய கலாசாரத்திணிப்பில் ஈடுபட்ட சோழர்கள் ஈழத்தின் வளங்களைச் சுரண்டிக் கொள்வதிலும், பெரிதும் ஆர்வம் காட்டினார்கள் மேன்மை கொள் சைவநிதி பேசிய இந்த மேலாண்மைக் காரர்களும் அந்த நீதிக்கு விரோதமாகவே ஈழத்தின் கிராமங்கள் சிலவற்றை அதே கோயிலுக்கு இறையிலியாகவும், வழங்கி தங்கள் வள்ளல் தன்மையைப் பகிரங்கிப் படுத்திக் கொண்டனர்.
இத்தகைய அநாகரிகங்களோடு ஈழத்தில் தம் ஆதிக்கங்களைக் காட்டும் விதத்தில் ஈழக்காக என்னும் நாயணத்தை பரவலாக புழக்கத்தில் விட்டிருந்தது இந்தச் சோழ சாம்ராட்சியம்.
அந்நிய அரசின் இந்த ஆதிக்கச் செயற்பாடுகளையெல்லாம் எண்ணிப்பார்த்த விஜயபாகு சுதேச கலாசாரத்தையும், பழம் பெருமைக ளையும் மீண்டும் தம் மண்ணில் கட்டியெழுப்பியே திர வேண்டுமென்று கங்கணம் கட்டிய போது அவனின் தன்மான உணர்வு பீறிட்டு எழுந்தது
விடுதலை பெற்ற தனது நாட்டைப் பற்றி விதம் விதமாக விஜயபாகு, சிந்தித்துக் கொண்டிருந்த இந்த வேளையில்தான் குலோத் துங்க சோழனிடம் இருந்து அவனக்கு ஒரு செய்தி வந்தது. செய்தியைக் கேட்டதுமே விஜயபாகுவின் செவிகள் கய்க்கத் தொடங்கின. இத்தனை ஆண்டுகளாக எங்களை அடிமைகளாக நடத்திய ஒரு நாட்டினோடு திருமண உறவா? விஜய பாகுவால் அதனைச் சீரணிக்கவே முடி வில்லை. ஆனாலும் அவ்வப்போது அவன் அதுபற்றி யோசிக்கே செய்தான்.
சோழராட்சியிலிருந்து விடுபட்டு ஈழம் சுதந்திரம் பெறவதைத் துளியேனும் விரும்பாத குலோத்துங்க சோழன் மீண்டும் வல்லடிப் போர் செய்து ஈழத்தை வெல்லும் எண்ணத்தைத் தன் இதயத்திலிருந்து
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

முற்றாக ஒதுக்கித் தள்ளினான். இத்தகைய போர்முறை இனி இயலாத காரியமாகவே இருக்கும் என்பதை எண்ணிப்பார்த்த அவனால் நாட்டின் அபிவிருத்தியும், மக்கள் வாழ்க்கை நலனும், பெரிதளவு பாதிக்கப்படு வதை உணர்ந்து கொள்ள அவ்வளவு நேரம் பிடிக்கவிலை. என்றாலும் ஈழத்தை ஓர் வகையில் சோழப் பேரரசோடு இணைத்துவிட வேண்டும் என்று எண்ணிய அவனுக்கு இராஜராஜன் காலத்திலிருந்து பின்பற் றப்பட்டுவரும் திருமணத் தொடர்பு நினைவுக்கு வரவே தனது மகள் சுத்தவல்லியை விஜயபாகுவின் நெருங்கிய உறவினனான விரப் பெருமாளுக்கு மணம் முடிக்க விரும்பினான்.
இவரலாற்றுக் குறுநாவல்
இந்தத் திருமண உறவு, ஈழ மன்னன் விஜய பாகுவிற்கு மட்டுமன்றி அவனது மக்கள் அனைவருக்குமே வேம்பாகக் கசந்த போதிலும், வடக்கே வேங்கி - தெற்கே முன்னீர்ப் பழந்தீவுகள் - தென்கிழக்கே ஈழம் - தென் மேற்கே துங்கபத்திரை- இவற்றை வரம்பாகக் கொண்ட சோழப் பேரரசிற்கு பாண்டியர், சேரர், சாளுக்கியர், ஆகியோர் இன்னும் அடங்கியிருப்பதைக் கவனத்திற் கொண்ட விஜயபாகு குலோத்துங்கன் விரும்பியபடியே அவன் மகள் சுத்தவல்லியை தனது நெருங்கிய உறவினனான வீரப்பெருமாளுக்கு விவாகம் செய்து வைக்க இனங்கினான்.
விடுதலை விழாவோடு - இரு தேசங்களையும் இணைக்கக்கூடிய விவாக விழாவிற்கான ஏற்பாடுகள் யாவும் ஈழத்தில் மிகத் துரிதமாகவே நடைபெற்றன. இரு துருவங்காளாக இருந்த இரண்டு தேசங்களும் இந்தத் திருமணத்திற்காகக் கைகோத்துக் கொண்டிருப்பதை ஆச்சரியத்தோடு கவனித்த அண்டை நாடுகளான மதுரையும், வஞ்சியும், இராஜதந்திரம் என்பது இதுதானோ என்று வியந்தன.
திருமண விழாவுக்காக புலத்தி நகரம் தேவலோகமாகக் காட்சி
அளித்துக் கொண்டிருக்கிறது. எங்கு நோக்கினும் எழில்மிகு கோலங்கள்
மலர்ப்பந்தல்கள் . அலங்கார வளைவுகள் - பொங்கும் மகிழ்ச்சி வெள்ளத்தில் அந்த நகரம் நீந்தி விளையாடுகின்றது.

Page 14
இன்னுமொருதடவை - சிங்களவரையும் தமிழரையும் சேர்த் வைக்கும் ஒரு திருமண விழாவிற்கு மதுரை, வஞ்சி, கலிங்கம் சாளுக்கியம், கன்னோசி, காம்போஜம், ஆகிய நாடுகளில் இருந்தெல்லா இராஜப்பிரதிநிதிகள் வந்து குவிகின்றனர். இவற்றுக்கு மேலாக குலோத்துங்க சோழனின் மைத்துனனும், அவனது திருமணவிழாவி கலந்து கொண்டு வாழ்த்த வந்த போது அனைத்து விழிகளுமே அக திறந்து கொண்டன.
மணம் - மக்களெல்லாம் மகிழ இனிது நடந்தேறுகிறது. வாழ்த் மழைக்குள் மணமக்கள் மட்டுமல்ல சுதந்திர ஈழமும் மூழ்கிப் போகின்ற
வேத நன்நெறி பரக்கவே அபயன்
வென்ற வெங்கலி சுரக்கவே
பூதலம் புகழ் பரக்கவே புவி
நிலைக்கவே புயல் சுரக்கவே!
இலங்கையில், 6000 ஆண்டு பழமை வாய்ந்த பாவ ஆதம் என்ற பெயரில் ஒரு மலை இருக்கிறதாம்.
(ஆதாரம் -
சமாதானம்
சஞ்சிகை
5. O1. 2003
 
 
 
 
 
 
 

ஒரு பொலிஸ் அதிகாரியின்
இலக்கிய நெஞ்சம் இங்கே பேசுகிறது.
பாடலைப்பூர்த்தி செய்த சம்பவம் நடந்தது 1965ல். அப்போது நான் உயர் வகுப்பில் கற்றுக் கொண்டிருந்தேன். இலக்கியப் பாடம் என்றால் எனக்கு உயிர். நான் ஒரு முஸ்லிம் பாடசாலை யில்தான் கல்வி கற்றேன். அங்கு எனக்கு இலக்கியத்தைக் கற்றுத் தந்த திரு. வை. எல். எம். சாதிக் என்ற ாங்கள் தலைமை ஆசிரியரும் ஓர் இப் க்கியப் பிரியர். பாட்டுப்பிரியர். ாலைப்பிரியர். அவரிடம் கற்றதினால் இலக்கிய ஆர்வம் மேலும் வளர்ந்தது. தனி பிறகு 1969 ல் என்று னைக்கின்றேன். ரம்புக்பிட்டிய என்று ாங்கள் வசித்த பகுதியின் கோவிலிலே ரிவராத்திரி விழா ஒன்று நடந்தது. அந்த விழாவிலே விடியவிடிய பாடல்கள் பாட வேண்டும் என்று கேட்டுக்கொண்டார் ாள்தேவாரம், திருவாசகம், திருப்பல் ான்டு, திருப்புகழ் இவைகள் பாடிப்பாடி அலுத்துப் போனவை. சரி வேறு என்ன பெலாம் என்று போசித்தபோது நான் பற்றிய பாடல்கள் சில இருந்தன. ாட்டு இசைப்பாடல்கள். இவற்றிற்கு ானே இசையமைத்திருந்தேன்.அவற்றை ான் அங்கு பாடினேன். ஓரிரு பாடல்கள்
/
ஆறுமுகம் என்பது இவருக்குப் பொருத்தமான பெயர். கவிதை பாடல் எழுதுவது மாத்திரமன்றி பாடுவதிலும், இசையமைப்பதிலும் பாடல்களை பல்வேறு வாத்தியக் கருவிகளை சுருதி பிசகாமல் வாசிப்பதிலும் வல்லவர். பழைய பாடல்களை வாத்தியங்களில் அவர் வாசிக்கத் தொடங்கினால் கால நேரக் கவலை படியாமல் கேட்டுக் கொணர் டேயிருக்கலாம். இவை எல்லாவற்றிற்கும் மேலாக அவர் ஒரு நேர்மையான பொ விளப் அதிகாரி. பாடசாலையில் படிக்கும் காலத்தில் ஆசிரியர் பலகையில் எழுதிவிட்டுப் போன பாடலை முடித்துக் கொடுத்துப் பாராட்டுப் பெற்றதை நமது சந்திப்பில் நினைவு கூர்ந் தவர். சங்கீத வித்துவானான தந்தை சேகரித்து வைத்திருந்த இசைக்கருவிகள் அவரது உடன் பிறப்புக்களாகவும், நண்பர்களா கவும் இருந்தன. எளிமையோடும் தோழமையோடும் பழகும் பனர்பு கொண்ட இந்த மனிதாபிமானி ால்கிறார் கேளுங்கள். 又
25

Page 15
ஹிந்தி திரைப்பாடல்களின் மெட்டிலேயே அமைந்தவை. ஆனால் அவையாவும் பக்திப்பாடல்கள். இவற்றை இந்து இளைஞர் மன்றத்தின புத்தகமாகவும்வெளியிட்டார்கள்.அதுவும் எனது ஆரம்ப இலக்கிய வாழ்வில் முக்கியமானவிடயம். நான் பாடசாலைக் கல்வியை முடிப்பதற்கும் இந்தத் தொழிலுக் வருவதற்குமிடையில் ஏறக்குறைய பத்து வருடங்கள் நாடகங்கள் போடுவ: இசைக்கருவிகளை வாசிப்பது இசைக் குழுக்களுடன் சேர்ந்து பாடல்கள் பாடுவது என்றுதான் காலங்கள் சென்றன. 1985ம் ஆண்டு இனிமே தொடர்ந்து கவிதை எழுத வேண்டும் என்று தீர்மானித்துக் கொண்டே அதற்குக் கால்கோளாக அமைந்ததுஒரு நிகழ்ச்சி, சிரில் சந்திரகுமா என்று என்னுடன் பொலிசில் கடமையாற்றிய ஒரு அழகிய இளைஞ வவுனியாவிற்கு மாற்றம் பெற்றுச் சென்று அங்கு கண்ணிவெடியில் சிக் உயிரிழந்தான்.அந்த நிகழ்ச்சி என்னை மிகவும் பாதித்தது. நான் பொலி நிலையம் முன்னால் காவல் கடமையில் இருந்த பொழுது இச்செய் எனக்குக் கிடைத்தது. அது என்னால் தாங்கமுடியாத துயராக இருந்தது உடனே தாள்களையும் பேனையையும் எடுத்து வந்து எனது இ. தோளிலிலே துப்பாக்கியைச் சுமந்துகொண்டு அக்கட்டடச் சுவரில் தாள்கை வைத்தபடியே விறு விறு என்று எழுதினேன். எழுதிய பின்பு அக்கவிதைன் திரும்பப் படித்தபோது செப்பமிடும் அவசியமில்லாத ஓர் கவிதையா அது இருந்தது. இறந்த அந்த அன்பனின் புகைப்படத்துடன் தினகர வாரமஞ்சரியில் இரு வாரங்களாக அக் கவிதை பிரசுரமானது அக்கவிதையைப் படித்த சில நண்பர்கள் தொடர்ந்து என்னை எழுதுமா தூண்டினார்கள்.பின்னர் டாக்டர் தாஸிம் அகமது, மேமன் கவிழரீறித பிச்சையப்பா, கவின் கமல், கலைக் கமல், போன்றவர்களா வளர்த்தெடுக்கப்பட்ட வலம்புரிக் கவிதா வட்டத்தில் இணைந்தேன். ஒவ்வொ பெளர்ணமிச் சந்திப்பின்போதும் கவிதை பாடினேன். அதன்பிறகுதான் கவிை உலகில் நிரந்தரமாக நான் நுழைந்தேன் என்று கூற முடியும். இதுவரைக்கு என்னுறுக்கும் அதிகமான பாடல்கள், கவிதைகள் எழுதியிருக்கின்றே
இவற்றையெல்லாம் இன்னும் ஏன் வெளியிடாமல் வைத்துக் கொன டிருக்கின்றீர்கள்? உங்களுக்குத் துக்ககரமான ஒரு செய்தியைச் சொல்லப்போகின்றேன் 1990ம் ஆண்டு மட்டுநகரிலே விடுதலைப் புலிகள் தாக்குதை
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

நடாத்தினார்கள். அது கொழும்பு நகரிலும் எதிரொலித்தது. பொரளைப் பொலிஸ் நிலையத்தில் ஒரு அட்டைப் பெட்டியில் நான் அதுவரை எழுதிய கவிதைகளை எல்லாம்பத்திரப்படுத்தி வைத்திருந்தேன். ஆனால் நான் கடமை புரிந்தது வேறு இடத்தில், அந்த வேளையில் எனது படைப்புக்கள் யாவும் பெட்டியோடு எரிக்கப்பட்டன. எனக்குத் திருப்தி தரக்கூடிய கவிதைகள் எல்லாம் எழுதியது பொரளைப் பொலிஸ் நிலையத்தில் கடமை புரிந்த போதுதான். அந்தக் கவிதைகளை எல்லாம் நான் வெளியே சென்ற சமயத்தில் எனது பெரும்பான்மையின அருமை நண்பர்கள் எரித்து நாசமாக்கிவிட்டார்கள். அதன்பிறகு எழுதிய கவிதைகள் மாத்திரமே என்னிடமுள்ளன.
எரிக்கப்பட்டது சம்பந்தமாக ஏதாவது நடவடிக்கை மேற்கொண்டீர்களா? 83 ஜீலைக் கலவரத்தின் போது நான் கண்டியிலே கடமை புரிந்த வேளை என் கண்முன்னாலேயே எட்டுக் கொலைகள் நடந்தேறின. அது பற்றி வாய் திறந்து சொல்ல முடியாத ஊமையாகி நான் கட்டுப்பட்டுக் கிடந்தேன். அவ்வளவுதான் சொல்ல முடியும்.
மிகள் இசைப்பாடல்களுக்கு எழுதும் கவிஞர். புதுக் கவிதைகள் எழுதியிருக்கின்றீர்களா? அது பற்றிய உங்கள் கருத்து என்ன? புதுக்கவிதை எழுத மாட்டேன். அதை என்னால் ճlԱք5 (ԼՔԼբLLITցե|- ஏனெனில் பேனாவைத் தூக்கியவுடன் சந்தத்துடன் மரபுக் கவிதைதான் பிரசவிக் கின்றது. புதுக் கவிதை என்பது வசன அடுக்கு என்பதே எனது அபிப்பிராயம், மகாகவி பாரதியாரின் பாடல்களைத் தமிழ் நாட்டிலே பாமர ஜனங்கள் பாடிக் கொண்டிருந்த போது ஆங்கில மொழியிலே எழுதிக் கொண்டிருந்த புதுக் கவிதையின் பிதாமகராகப் போற்றப்படும். பிச்சமூர்த்தி அவர்கள் பாரதியின் பாடல்களின் பாணியில் தாமும் புதக்கூடாது என்று அவரும் எழுதத் தொடங்கினார். அவருக்கு மரபுக் கவிதை எழுத வராது. எனவே புதுக்கவிதையை அவர் யாண்டார். அது ஏன்பிரபலமாகியது எனில் அவர் ஒரு பத்திரிகையை மதிக் கொண்டிருந்தார். அவரது பிரசுர பலமும் பிரசார பலமும் ந்ெதுதான் அதற்குப் பிறகு புதுக்கவிதை எழுதியவர்களுக்கு ஒரு மிய உற்சாகத்தை தந்தது. புதுக் கவிதை இன்று எல்லாராலும் Iட்படுகின்றது. ஆனால் போற்றப்படுகின்றது என்று சொல்லமுடியாது.

Page 16
சங்க காலத்திலும் சங்கமருவிய காலத்திலும் அதற்குப் பின்வந்த புலவர்களாலும் கவிஞர்களாலும் பாடப்பட்ட, இலக்கணமுறையில் அமைந்த இந்த மரபுக் கவிதைதான் இன்றும் உயிர் வாழ்கின்றன. ஒன்று நான் சொல்கின்றேன்.திருப்புகழில் ஒரு பாடல். ஏறுமயில் ஏறிவிளையாடு முகமொன்று - ஈசனுடன் ஞானமொழி பேசுமுகமொன்று - கூடுமடியார்கள் வினை தீர்க்குமுகமொன்று - குண்டுருவ வேல்வாங்கி நின்ற முகமொன்று. எத்தனையோ நூற்றாண்டுகளுக்குமுன் அருணகிரிநாதரால் எழுதப்பட்ட திருப்புகழ், இன்றும் கோவில்களிலே இதைக் கடைசியாகப் பாடுவார்கள். யாராவது இன்று சொன்னார்களா இது பல நூற்றாண்டுகளுக்கு முற்பட்ட பாடல். இதை ஏன்பாடுகிறீர்கள் என்று? இந்தியாவிலும் இலங்கையிலும் வாழும் முஸ்லிம் மக்களின் தாய் மொழி தமிழ்தான். நபிபெருமானின் வாழ்க்கைச் சரித்தை சீறாப்புராணம்" என்ற பெயரில் உமறுப்புலவர் எழுதினார். சீறாப்புராணம் பழமையானது. இன்றைய புதுக்கவிதையே சிறந்தது என்று யாராவது கூறினால் எந்தத் தமிழ் கற்ற முஸ்லிங்களாவது ஏற்றுக் கொள்வார்களா?
அதே போன்று ஆங்கிலம் கற்ற பெஸ்கி பாதிரியார் வீரமாமுனிவர் என்ற பட்டத்தோடு தேம்பாவணி ' என்ற கிறிஸ்தவ நூலை எழுதினார். அவருக்கு தமிழ் இலக்கியத்திலும். தமிழ் மொழியிலும் மரபுக் கவிதையிலும் உள்ள பற்றுத்தான் அதற்குக் காரணம், ஆங்கிலம் கற்ற அவர் ஏன் புதுக்கவிதையாக எழுதியிருக்கக் கூடாது?ஏனெனில் புதுக்கவிதைகள் என்றுமே உயிர் வாழா. காலகட்டத்துக்குப் பொருத்தமான ஒரு உரை வீச்சாக அமையுமே தவிர புதுக்கவிதை கவிதையாகாது. தமிழுக்கு எந்தளவ இலக்கணம் முக்கியமோ அந்தளவு தமிழ்க்கவிதைக்கும் இலக்கணம் முக்கியம். எனவே இலக்கணம் அற்ற தமிழ் எப்படித் தமிழாகாதோ அதே போல இலக்கணமற்ற கவிதையும் கவிதையாகாது என்பது எனது தாழ்மையான கருத்து.
ஆனால் அற்புதமான புதுக் கவிதைகள் வந்துதானே இருக்கின்றன? அற்புதமான புதுக் கவிதைகள் உரைவீச்சாக வெளிவந்திருக்கின்றன. அதன் கருக்கள் போற்றக்கூடியவைதான். ஆனால் அவற்றை இசைப்பாடல் TTL TLL LLL S Tk TL S LLLS S TTTTTS LLL TTTSTTTT aLLLLLL TT
கவிதையாக முடியும்?

エ ஆனால் புதுக்கவிதைகள் இசைப்பாடல்களாநிதி ந்துள்ளின் இன்று பாடல் துறையில் புகுந்திருக்கும் பலர் புதுக் கவிஞர்கள் அல்லவா? தமிழ் இசையென்பது காலத்துக்குக் காலம் வேறுபட்டுக் கொண்டு மாறுபட்டுக் கொண்டு வந்திருக்கின்றது. எளிமையாக இருந்தால் அதை ரசிப்பவர்கள் உண்டு. சரி. நீங்கள் சொல்வது போன்று வைரமுத்து எழுதிய ஒரு பாடலைச் சொல்கின்றேன். இது ஒரு பொன்-மா. லைப்பொழுது என்று அவர் எழுதியிருக்கின்றார். பொன் என்ற இரண்டு எழுத்துக்கு ஒரு இசைத் தாளம். இப்படி அசையமைத்தேதான் அந்தப் பாடலை ஒப்பேற்றியிருக் கின்றார்.என்னைக் கேட்டிருந்தால் இதைவிடச் சிறப்பாக எழுதி நானே இசையமைத்துக் கொடுத்திருப்பேன். தற்பெருமை அல்ல. தற்போது வரும் இசைப்பாடல்களைக் கவனியுங்கள். ஆங்கில இசைக்கருவிகளைப் புகுத்தி கேட்க முடியாத அளவிற்கு இருக்கின்றது. இசை என்பது எல்லோராலும் கேட்கவும் பாராட்டப்படவும் கூடியதாக இருக்க வேண்டும். ஆலய மணியின் ஓசையை நான் கேட்டேன். என்பது போன்ற அந்தக் காலப் பாடல்களையும் இன்று வெளிவந்துள்ள திரைப்படப் பாடல்களையும் கேட்டுப் பாருங்கள். அது இனிமையா? இது இனிமையா? ஆங்கில இசை கொண்டு இசையமைக்கக்கூடிய இசையமைப்பாளர்கள் இல்லாதிருந்தால் புதுக் கவிதைகள் பாடல்களாக வந் திரா என்பது எனது கருத்து.
இப்படி நீங்கள் சொல்லும்போது இப்படித் தோன்றுகின்றது. உங்களுக்கு வயதாகி விட்டது. நாகரிக வளர்ச்சியை புதியவற்றை ஏற்றுக் கொள்ளாத தலைமுறைப்பிரச்சனைதான் இது என்ற இளைய தலைமுறை நினைக்கக்கூடும் அல்லவா? இன்றைய நாகரிகம் எப்படியிருக்கின்றது என்பதற்கு ஒரு உதாரணம் சொல்கின்றேன். நான் கிருலைப்பனை பொலிஸில் கடமைபுரியும்போது ஒரு இளைஞனும் யுவதியும் வந்தார்கள். அந்த யுவதி முறைப்பாடு செய்தாள். பாருங்கள் இவருக்கு அவ்வப்போது 5000.00, 10,000.00 என்று நான் கொடுத்திருக்கின்றேன். இவர் இப்போத என்னை வேண்டாம் என்று சொல்கின்றார். இதுதான் இன்றைய நாகரிக வளர்ச்சியடைந்த சமுதாயத்தின் நிலை,
f இன்றைய புதிய தலைமுறை புதுக் கவிதையில் மிகப் பெரிய
29

Page 17
அளவில் ஈடுபாடு காட்டக் காரணம் என்ன? . |լի 1 - 1
r . H、 இன்றைய'கல்விமுறையில் ಡ್ಗಿಳ್ದ குறைபாடுதான் காரணம்.
- . . . . - அந்தக்காலத்திலே தாங்கள் தா மொழியை மாணவர்கள் சிறப்பாகக்
கற்றுக் கொள்ள வேண்டும் என்பதற்காக இலக்கணத்தோடு தமிழ்
1- ܪ̈ܺܝܢ. ܠܘ ܠܡ மொழியையும், தனியாக இலக்கியத்தையும் கற்றார்கள். ஒவ்வொரு தமிழ் பேசும் மாண்வரும் தங்களது மொழியைத் தெளிவாகக் கற்றார்கள்.
அந த வாயபடி இப்போது இல்லை. լի է, եւ ուկ " | Այլ որ Ա։ | :
It is | உங்களது கவிதைநூல் வெளிவருமா? in F og i
நிச்சயமாக.எனக்கு அந்த எண்ணம் உண்டு. சமூகத்தில் நேர்மையாக
Li" ... . . 。卓*。 வாழும் மனிதர்கள் எல்லாம் எந்தத் தொழிலைச் செய்தாலும் அவர்க்ள் சிறந்த பொருளாதாரத்தோடு வாழ்வது கிடையாது. எனது நிலையும் அப்படித்தான். ಶಾಟ್ಗಳು விரைவில் கவிதை நூலை உங்கள் முன் கொண்டுவருவேன். நிச்ச கொண்டுவரு ಇಂ நிச் யமாக, (யாத்ரா 12)
t இந்தியாவில் முஸ்லீம்கள்
- : ¬ ܕ¬
சிந்து மாகாணத்துக் கணிமையில் இலங்கைக்கு வெகுமதிகளைக் கொண்டு சென்ற சில அராபியக் கப்பல்கள்"கடலில் கொள்ளையிடப்பட்டமைக்காக அராபியக் கலிபாவினால் அனுப் பப்பட்டமுகம்மது இபின் காசிம் என்பான் பஞ்சாப்வரை படையெடுத்துச் சென்று வெற்றியீட்டினான். சிந்துவைக் கைப்பற்றியபின், அம்மாகாணத்தை அராபிய இராணுவத் தலைவர்கள் ஆட்சி செய்தனர். ஆனால் அராபியர்களின் இவ்வெற்றி நிலையான்' அரசியல் மாறுதல் எதையும் ஏற்ப்டுத்தவில்லை. எனினும், அரசியல் பண்பாட்டு அம்சங்கள் இந்தியாவிற்குப் பரவ இது ஏதுவாக
இருந்ததெனக் கூறுவர். (வே.க.நடராசாவின்
"பண்டைய ஈழம்" இரண்டாம் பாகம். I llllll II | L | | III Ալl- பக்கம் 144)
so
ܠܐ ܩܡ ܒܡܩܕܢ-1
 
 
 
 
 
 
 
 
 

பிடிக்கலானான் இலக்கியப் பழனந் தன்னில் நிரது பாயும் நன்கு
நிறைந்த நல் ஆற்றலாலே வேரது காயுமாமோ
விளைச்சலும் அதிகமாகும் ஊரது போற்றும் இந்த
உழவனின் செயலைத்தானே!
ஆரணி
எத்தனை ஆண்டு காலம் இப்பணி செய்யலானான் முத்தமிழோடு நல்ல முயற்சியும் சேர்ந்ததாலே வித்தகன் பயிர்கள் நூறு விருதுகள் குவிக்குமாமே பித்தனே செய்கை தன்னில் பெயர் வ. அ. என்பாரே
*
பண்டு தமிழ் இலக்கியமும்
பாரதியின் நவீனமும் கொண்டவன் வாழ்ந்ததாலே
குடை நிழல் அமர்ந்திருந்தான் கண்டவை எல்லாம் தேடிக்
கற்றதால் இவனை மக்கள் பண்டிதன் என்றே சொல்வார்
பாரது அறியுமாமே
எழுத்ததன் உயிரேயாக இருப்பது முதூராகும் பழுத்ததோர் பழமேயாக பைந்தமிழ் அறிஞனாக வளர்த்ததோர்தமிழும் அந்த வான் புகழ் சூடிக் கொள்ளும் வழுத்துவோம் இவனை நாமும் வாழ்கவே வானா. ஆனா

Page 18
இந்தியா ,蕊 独 இன்னுமொரு அடிெ
தென்கிழக்கு இந்தத் தேசம்
எஜமான்,
ஈழத் தமிழர் தலைவிதியை இதுதான் எழுத வேண்டுமாம். 裘兹
தமிழர் என்றாலே புதுடில்லிக்குத் தாங்காது
புழக்ஸ்சனரியில் ஒன்றுதான்!
ஜெஸ்கொம்