கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: போது 2004.05-06

Page 1
ആ
ബ
LEDOrgp6DL-lJIIJIII ċ56O6NOnlġ
se


Page 2
எண்ணிய முடிதல் வேண்டும்
நல்லவே எண்ணல் வேண்டும்
திண்ணிய நெஞ்சம் வேண்டும்
தெளிந்த நல்லறிவு வேண்டும்.
மகாகவி பாரதியார் 3
இடுச் சந்தா (G
வெளியீடு : LLzLLLLLLLLLL S SLLLLLLLL0LLLLL S S LLLLLLKaLLLLTS S S LLLLLL
ELI CLO. L LL L L L L L L L L LL LLLL LL L LLLL LLLL L LL L LL LL LL L LL L L L L L L L LLLL LLLL LL
 
 

*******擊
பாது -6
இ
岳
ழ்
ாவகாசி- ஆனி 2004 தொற்றம் 5-5-1998
ர்வாகம் (Managing Editor) wa ITL sig போல் சற்குணநாயகம்.யே.ச.
furi (Editor) வா கரைவாணன்
நிர்வாகம்: (Management) . ம்.ஒக்கஸ்
பாரிமனை: ஜெஸ்கொம் அச்சகம், இல, 1, யேசுசபை வீதி, மட க்களப்பு.
தொலைபேசி:
(15-222.3822, O65-2222983
| ||Thail
picco) diamond.lanka.net
རྭ་ 崔毒草量毒草普
*
சுயநலத்திற்குள் மனிதன் முழுமை யாகச் சுருண்டு கிடக்கும் காலம் இது. தான்
உண்டு ; தன் குடும்பம் உண்டு" என்ற தத்துவமே அவனது தலையையும், மனதை யும் தனதாக்கிக் கொண்டிருக்கின்றது. இதனால், இந்த நாடும் சமூகமும் நித்தம் அனுபவித்துக் கொண்டிருக்கும் இன்னல்களில் ஒன்றுதான் சுகாதாரக் கேடு அல்லது சூழல் மாசுறுதல்!
ஒரு மனிதனின் உருவாக்கத்தில் பெரும் பங்கு வகிக்கும் சூழலை உருக் குலைத்துவிடும் இந்தச் சுகாதாரக் கேடு, அதனைப் பல்வேறு நோய்களின் பண்ணையா கவே மாற்றிவிடுகின்றது. கொழும்பு மாநகரம் முதல் இந்த நாட்டின் குக்கிராமங்கள்வரை இந்த வியாதிப் பண்ணையின் விருத்தியை நன்கு நாம் காணமுடியும்.
குப்பை கூழங்களையும் கழிவுகளை யும் கண்ட கண்ட இடங்களில் கொட்டுவ தனாலும், வீசுவதனாலும்தான் சூழல் பெரும ளவு கேட்டிற்குள்ளாகின்றது என்ற உண்மை நம் அனைவருக்கும் தெரிந்திருந்தாலும் நமது சுயநலம் சும்மா இருப்பதாகத் தெரியவில்லை.

Page 3
வீட்டுக் குப்பையைக்கூட அது வேலிக்கு மேலால் வீதியில் வீசிவிட செய்கின்றது.
சுத்தம் அல்லது தூய்மையை நாம் ஒவ்வொருவரும் வாழ்க்ை நெறியாகவே கைக் கொள்வோமாயின் நமது சூழலைச் சொர்க்கமாகே வைத்திருக்க முடியும். சுத்தம் முற்றாகக் கைவிடப்படும்போதுதா சூழல் நரகமாகின்றது.
எந்த ஒரு விடயத்தையும் மேற் குலக மக்களில் வாழ்க்கைமுறையிலிருந்தே பிரதிபண்ணிக் கொள்ள விரும்பும் நா எதிலும் ஓர் ஒழுங்கைக் கடைப்பிடித்து வீட்டில் மட்டுமன்றி வெளியிலு தூய்மை பேணும் அந்த வெள்ளைக்காரனின் இந்த நல்ல பழக்கத்ை மட்டும் ஏன்விட்டுவிட வேண்டும்?
சூழலைச் சொர்க்கமாக நாம் வைத்திருக்க விரும்பின், எதிலு எப்போதும் ஓர் ஒழுங்கைக் கடைப்பிடித்தால்தான் அது சாத்தியமாகும் ஒழுங்குதான் ஒழுக்கம். ஒழுக்கம்தான் அழகு, தூய்மை, நமது தன்னலத்தை முற்றாகத் தள்ளிவைத்துவிட்டு இந்த உண்மைை உணர்ந்து இனியாவது செயற்பட வேண்டும்.
சுத்தம் ஈமானின் (இறை நம்பிக்கையின்) ஒரு பகுதி என்னு நபிகள் நாயகத்தின் வாசகம் நமது சிந்தனைக்குரியதாகும்
அன்புடன் வாகரைவானன்.
உபயோகப் படுத்தாத இரும்பு துருப்பிடித்து விடுகின்றது. தேங்கி நிற்கும் தண்ணிர் தூய்மையை இழந்துவிடுகின்றது. அதேபோன்று உபயோகப் படுத்தாது சோம்பி நிற்கும் மனமும் செயல் ஆற்றலை இழந்துவிடுகின்றது.
-லியோனார்டோ டாவின்ஸி

一母 வரி சிந்தனர் பTட்டு
நோய் தரும் நுளம்பு
நொடிப்போதில் நம்மை
மாய்த்திடப் பார்க்கும்
மறந்திட வேண்டாம்
டெங்கு எனும் காய்ச்சல்
தேசமெல்லாம் பரவ இங்கிந்த நுளம்பே
ஏற்றதொரு கருவி !
i பெண் நுளம்பே நோயைப்
பெற்றெடுக்கும் அன்னை கண் ஒன்றாய் இருந்து
காத்து நாம் வாழ்வோம்
நீர் நிலைகள், குப்பை
நிறைந்த இடமெல்லாம்
பேர் பெற்ற நுளம்பு
பெருகிவரும் அறிவிi !
மழைகாலம் வந்தால்
மார்னெல்லாம் நுளம்பு

Page 4
விளையாடும் ! நமது
விடெல்லாம் பறக்கும் !
நோப் தன்னைக் காவும்
நுளம்புதனை முற்றாப்
மாய்த்திட்டால் வேறு
மருந்தெண்ன தேவை ?
சூழல் தனை நீத்தம்
கத்தமாப் வைத்தால்
வாழலாம் ஆண்டு
வளமோடு தம்பி 4
சுத்தம்தான் மருந்து
சுகம் தரும் அதுவே !
புத்தியுள்ள தம்பி
புரிந்து நீ கொள்வாப்
 

பின்னேரம் நான்கு மணியிருக்கும். தனது இளைய மகன் சின்னத்துரையின் வீட்டின் பின்புற விறாந்தையில் வழக்கம்போல ஒரு கால் மடக்கி மற்றொரு ாலை நீட்டியவாறு அமர்ந்திருக்கிறர் கணபதிப்பிள்ளை வாத்தியார். அவர் கையில் வில்லிபாரதம் விரித்தபடி இருக்கின்றது. வில்லியின் அந்த மணிப்பிரவாள விருத்தங்களை இரசிகமணி டி.கே.சி. போல ஒருவித நாளலயத்தோடு வாய்விட்டுப்பாடத்தொடங்குகின்றார் அவர்.
வாத்தியார் ஐந்து அடி உயரம்தான் இருப்பார். ஆனால் நல்ல உடல் கட்டு இடுப்பில் எப்போதும் எட்டுமுழ காரிக்கன் வேட்டியும் தோளில் கரைபோட்ட சால்வையும் இருக்கும். வாத்தியார் பழைய காலத்தவர் என்று காட்டுவதுபோல் அவரது காதுகள் இரண்டையும் கடுக்கன்கள் அலங்கரிக்கும். அவற்றின் பளபளப்பு இந்தக்காலத்து இருபத்திநான்கு கரட்டின் பளபளப்பையும் மிஞ்சிவிடும். இதுபற்றி யாராவது வாத்தியாரிடம் கேட்டால் ஒரு சிரிப்போடு ஒல்ட் இஸ் கோல்ட் என்று தனக்குத் தெரிந்த
ஆங்கிலத்தில் சுருக்கமாய்ப் பதில் சொல்லிவிடுவார்.
வாத்தியார் எதை மறந்தாலும் வெற்றிலைபோடுவதை மட்டும் மறக்க மாட்டார். வாய் புளிக்கும் போதெல்லாம் வெற்றிலைபோட வேண்டும். அப்போது அவரது மனைவி தங்கம் ஆசையோடு பனையோலையால் அழகாக இழைத்துக் கொடுத்த குட்டானை அவிழ்த்துப் பாக்கு வெட்டும் சத்தம் கேட்கும்.
வாத்தியார் வெற்றிலை போடுவதே ஒரு தனி ரகம்தான். முதலில் பாக்கை எடுத்து முகர்ந்து பார்த்து அதை மெல்லியதாகச் சீவி கொடுப்புக்குள் போட்டுக் கொண்டு ஒரு நீர் வெற்றிலை எடுத்து அதன் காம்பைக் கிள்ளி எறிந்துவிட்டு இரண்டாக மடித்து அதன் முதுகில் கண்ணாம்பு வண்ணம் தீட்டிய பின் வாய்க்குள் தள்ளுவார். அதனோடு சிறு புகையிலைத் துண்டும், வாழைச்சேனையில் இருந்து மம்முறாயன் ாக்கா கொண்டு வந்து கொடுக்கும் வாசக் கய்ப்பில் ஒரு சிறு துண்டும்

Page 5
வாத்தியாரின் வாய்க்குள்ளே போகும். கொஞ்ச நேரத்தில் வாத்தியா வாயைப் பார்க்க வேண்டும்;ஒரே இரத்தச் சிவப்பு!
வாத்தியார் பெரிய தமிழ் வித்துவான். இராமாயணம், பாரதம் நிகண்டு, நன்னூல், எல்லாம் கரைத்துக் குடித்தவர். அந்த இலக்கண இலக்கியங்களைப் போல வாத்தியார் மந்திர தந்திரங்களிலும் மகாகெட்டிக்காரர். மாந்திரீகத்திற்காக மட்டக்களப்பிற்கு ஒரு பேர் கிடைத்ததென்றால் அதற்கு வாத்தியாரும் ஒரு காரணம் என்று நிச்சயமாகச் சொல்லலாம்.
ஊரில் யாருக்காவது காய்ச்சல், தலையிடி வந்துவிட்டால் போதும் வாத்தியாரிடம்தான் ஓடுவார்கள். வாத்தியாரும் சிரித்தமுகத்தோடு ஒரு செம்புத் தண்ணி ஒதிக் கொடுப்பார் வருத்தம் வந்தவழிபார்த்துப் போய்விடும். இதனால் வாத்தியாருக்கு நல்ல பேர்!
மட்டக்களப்பு - ஊறணிதான் வாத்தியாரின் பிறந்த ஊர் அங்குள்ள கொத்துக்குளத்து மாரியம்மன் கோயில் பூசாரி, பெருமாள் என்பவர் ஒரு பெரிய மந்திரவாதி. வாத்தியாரின் தகப்பன் என்ற பெருமையைப் பெற்றவர் சாட்சாத் இந்த மந்திரவாதிதான்.
சிறுகதை
ஒருமுறை அந்தக்காலத்து வெள்ளைக்கார ஏசண்டு ஒருவர் கேட்டுக் கொண்டதற்கிணங்க கருகப்பன்சேனை என்ற இடத்தில் ஒரு பெரிய வேப்பமரத்தையே தனது மந்திர சக்தியால் ஆட்டிக் காட்டியவர் இந்தப் பெருமாள். அதற்குப் பிறகு மந்திரவாதி பெருமாளைக் கண்டதும் வேப்பமரம் மட்டுமல்ல ஊரே நடுநடுங்கும்.
சின்னஞ்சிறு வயதிலேயே தன் தந்தை பெருமாளிடமிருந்து இந்த மந்திர சக்தியை வாலாயமாகப் பெற்றுக் கொண்ட கணபதிப்பிள்ளை எங்கள் ஊருக்கு ஓர் வாத்தியாராக வந்த போது அவர்வடிவில் ஒரு பெரிய வெளிச்சமே வந்ததுபோல இருந்தது. அதன்பிறகு அங்கு இருள் இருக்குமா என்ன?
இன்று எங்கள் ஊரில் ஒரு படித்த பரம்பரை இருக்கின்றது
O6)

f ன்றால் அதற்கு வாத்தியாரும் அவர் காலத்தில் ஆசிரியர்களாகப்
மணிபுரிந்த சின்னப்பு, செல்லப்பா என்பவர்களும்தான் காரணம். ஆனால்
ரில் வாத்தியார் என்றால் அது நிச்சயமாக கணபதிப்பிள்ளை ந்தியாரைத்தான் குறிக்கும். மறுபேச்சில்லை.
சுறுசுறுப்பிற்குப் பேர் போன வாத்தியார் சும்மா இருக்க மாட்டார். அதனால்தானே என்னவோ எழுத்தறிவுக்கும் தொழிலில் இருந்து ஓய்வு பெற்றதும் உபதபால் அதிபர் உத்தியோகம் அவரைத்தேடி வந்தது. Iத பதவியை வாத்தியாரும் விரும்பி ஏற்றுக் கொண்டார். ஊரின் Iதல் தபால் அதிபர் என்பதால் வாத்தியாரைவிட ஊருக்குத்தான் அதிக சந்தோசஷம்.
Tassogeiro
உபதபால் உத்தியோகத்திற்கு வாத்தியார் விடைகொடுத்தபிறகும். அவர் ஓர் உத்தியோகத்தைத் தேடிக் கொண்டார். அந்த உத்தியோகம் தென்னந்தோட்டம் உண்டாக்குவது என்று அவர் முடிவு செய்தபோது ந்ெத வயதில் உங்களுக்கு ஏன் இந்த வேலை என்று மனைவியும் மகளும் இரைந்தார்கள். ஆனால் இந்த இரைச்சல் வாத்தியார் காதில் விமவேயில்லை. அவர் தான் துணிந்த கருமத்தில் இறங்கினார். வெற்றியும் பெற்றார். ஐந்து ஆண்டுகளில் கண்டலடி எனும் ஊரில் ஐந்தாறு ஏக்கரில் அவர் நட்டு தண்ணிர் ஊற்றி வளர்த்த தென்னம் பிள்ளைகள் பாளை ாளி பருவ மங்கையாக எழில் குலுங்க நின்றபோது வாத்தியார் டைந்த ஆனந்தத்திற்கு அளவேயில்லை. இந்த ஆனந்தத்தை வெளிக்காட்டுவதுபோல பருவம் அடைந்த தனது தென்னம்பிள்ளை ாக்கு குடும்பசகிதமாய் ஒரு பெரும் சடங்கே செய்து மகிழ்ந்தார்.
வாத்தியார் ஒரு கத்தேலிக்கர், ஆனால் பிள்ளையார் காவிலுக்கும் போவார். தேங்காய் உடைப்பார். வயிரவர் சடங்கும் செய்வார். இதைப்பற்றியாராவது குத்தலாகக் கதைத்தால் நான் ஒரு இராமக்கிருஸ்ண பரமஹம்சர் எனக்கு எம்மதமும் சம்மதம்' என்பார்.
கட்டவர்கள் வாயடைத்துப் போவார்கள்.
கூத்து என்றதும் வாத்தியார் ஒரு குழந்தையைப்போல் காகலிப்பார் ஊரில் எந்த இடத்தில் கூத்து நடந்தாலும் வாத்தியார்தான் பிரதமவிருந்தினர். ஒரு கூத்திற்குச் சட்டம் போடுவதிலிருந்து அது

Page 6
அரங்கேறும் வரை களரியை வாத்தியார் வளைய வருவா அண்ணாவியாரில் இருந்து கட்டியக்காரன்வரை வாத்தியாரைப் பாரத பாடிய வியாச பகவானாகவே நோக்குவார்கள்.
எங்கள் ஊர் அண்ணாவிமாரில் வயிரமுத்து அண்ணாவிய வாத்தியாரைக் காணாமல் இருக்க மாட்டார். தனது கிராமம் வில்லி இருந்து பொல் ஊன்றிக் கொண்டு வயிரமுத்து அண்ணாவிய புறப்படுகின்றார் என்றால் அது வாத்தியாரைக் காண்பதற்காககத்தார் இருக்கும். வாத்தியார் அண்ணாவியாரைக் கண்டதும் வாங்க வாங் என்று ஒரு பெரிய வரவேற்பே அளிப்பார்.
வாத்தியாரும் அண்ணாவியாரும் சந்திக்கும் போதெல்லாம். பார இராமாயணக் கதைகள் புது அவதாரம் எடுக்கும். வாத்தியா வியாசபகவானாகவே மாறிவிடுவார். அவரது கற்பனையில் பாண்டவரு கெளரவரும் மறுபிறவி எடுப்பார்கள். அண்ணாவியார் அதைக்கேட் ஒரு குழந்தைபோல குலுங்கிக் குலுங்கிச் சிரிப்பார்.
வாத்தியார் நன்றாகக் கூத்தும் ஆடுவார். பப்ரவாகன் என்னு வடமோடி நாடகத்தில் வாத்தியார்தான் விடகேதன். வாத்தியார் புழுத பறக்க அப்படி ஆடுவார் என்று யாருமே எதிர்பார்க்கவில்லை. அடுத் நாள்முழுவதும் வாத்தியாரின் ஆட்ட பாட்டம் பற்றித்தான் பேச்சு. இந்த பேச்சைக் கேட்டு மகிழ்ந்த அவரின் அன்பு மனைவி தங்கா, என் தங்கம்மா தனது கணவரிடம் , சற்று வேகமாக வந்து "இஞ்ச பாருங் ஊரெல்லாம் உங்களைப் பத்தித்தான் கதைக்குது. இண்டைக்கு இரும்புபோட்டுக் கழுவித்துத்தான் சாப்பிடனும்,' என்று சொன்னபோது வாத்தியாருக்கு உண்மையிலேயே உச்சி குளிர்ந்து விட்டது.
வாத்தியார் பரவசத்தோடு வில்லியின் விருத்தங்களை அதே தாளலயத்தோடு பாடிக்கொண்டிருக்கின்றார். பாடலைக் கேட்ட தனது பேரப்பிள்ளைகள் சிலர் அங்கு ஓடிவருகின்றனர். பேரப்பிள்ளைகளை கண்ட வாத்தியார் அவரது பாட்டை நிறுத்திவிட்டு 'இண்டைக்கு உங்களுக்கு ஒரு புதுக் கதை சொல்லப் போறன்' என்கிறார். "அது என்ன கதை ஆத்தப்பு என்று வினவுகின்றார்கள் அவர்கள். வாத்தியா அருச்சுனன் மகன் அபிமன்யுவின் கதையைச் சொல்லத் தொடங்குகின்றார் அதைக் கேட்பதற்காக பேரப்பிள்ளைகளின் கேள்விச் செல்வப கூர்மையடைகின்றது.

அவற்றின் ால் புதிது பொருள் புதிது என்று சொன்ன மகாகவி பாரதி, புரட்சி, பாது உடைமை ஆகிய புதிய சொற்களைத் தமிழுக்குத் தந்தது போல், |lன் வழியில் நின்று 1937ல் பண்பாடு என்னும் புதிய சொல்லைத் தந்தவர் சிகமணி டி.கே. சிதம்பர நாத முதலியார் என்பார் பேராசிரியர் எஸ். ாயாபுரிப் பிள்ளையவர்கள்.(தமிழர் பண்பாடு கம்பன் காவியம் 5ம் தொகுதி
Ib)
இச் சொல் ( பண்பாடு ) பயன்படுத்தப்படுவதற்கு முன்பு, தமிழில் பாபு, பண்புடைமை, சால்பு சான்றாண்மை, ஆகிய சொற்கள் திருக்குறள்,
தொகை, கம்பராமாயணம், ஆகிய நூல்களில் பயின்று வந்துள்ளன.
பண்பாடு என்னும் சொல் லத்தின் மொழியிலுள்ள Cultura, Cultus புரிய சொற்களின் நேரடி மொழிபெயர்ப்பாகத் தோன்றினாலும் (இவ்விரண்டு லத்தின் சொற்களுக்கும் நிலத்தைப் பண்படுத்துதல் அழகு, ஆபரணம், ாட்டம் என்றெல்லாம் லத்தீன் அகராதியில் பொருள் தரப்பட்டுள்ளது.) சவு செவ்வை, பொருத்தம் என்னும் பொருட்களைக் கொண்ட பன் ாறும் சொல்லிலிருந்தே பண்பு, பண்பாடு, ஆகிய சொற்கள் பிறந்திருத்தல் ாடும். எனவேதான் அறிஞர்கள் பண்பாடு என்னும் சொல்லை = பன்ை + எனப் பிரித்து விளக்கம் தந்திருக்கின்றார்கள், ஆனால் பேராசிரியர் வாணன் அவர்கள் பண்பு, பண் அகிய சொற்கள் குறிக்கும் பொருளுக்கும் ாடு என்னும்சொல் தரும் பொருளுக்கும் இடையே இணக்கம் இருப்பதாகத் யவில்லை என்கிறார். மேலும் பண்பு + படுதல் - பண்பாடு ஆயிற்று பதில் பகரம் - உகரம் கெட்டதற்குத் தக்க காரணம் காட்ட இயலவில்லை. கையால் இவ்விரு சொற்களையும் மூலச் சொற்களாகக் கொண்டு பண்பாடு II சொல் உருவாயிற்று என்ற கருத்துப் பொருத்தமில்லை என்றுரைக்கும் II பண்படு என்னும் வினைச் சொல்லின் அடியாகப் பண்பாடு ான்றியிருக்கும் என்பார். இவரது இந்தக் கருதுகோளுக்கு அனுசரணையாக, படு - உடன்பாடு, வழிபடு வழிபாடு ஆகிய சொற்களை முன்வைப்பார். பண்பாடு என்னும் சொல் தோன்றுவதற்கு முன்பு Cultura என்னும் lன் சொல்லின் பொருளைக் குறிக்க கலாசாரம் என்னும் வட சொல் "தமிழில் பயன்படுத்தப்பட்டது. இன்றும் இச்சொல்வழக்கில் இருந்துவருகின்றது. ால் பண்பாடு, கலாசாரம் வேறு வேறு பொருளைக் கொண்டவை என்ற தத்தில் படித்தவர்களாலேயே எழுத்திலும், பேச்சிலும் இவ்விரு சொற்களும் பயன்படுத்தப்பட்டு வருகின்றமையைக் கற்றோர் அறிந்துகொள்வது நல்லது.

Page 7
கலாசாரம் என்னும் சொல்லிலிருந்தே கல்ச்சர் (Culture) என்னும் சொல் பிறந்ததாக ஜகத்குரு காஞ்சி சங்கராச்சார்ய சவாமிகள் குறிப்பிட்டுள்ளமைக்கு ( 'ஒலை" - கொழும்புத் தமிழ்ச் சங்க வெளியீடு) அவ்விரு சொற்கள் குறிக்கும் பொருள், அவற்றை உச்சரிக்கும் போது எழும் ஓசை ஆகியவற்றில் காணப்படும் ஒருவித ஒற்றுமை மட்டுமன்றி, சுவாமிகளுக்கு இயல்பாகவே வடமொழிமீது உள்ள பெரும் பற்றும் ஒரு காரணம் எனலாம்,
எனினும், சமஸ்கிருதமும், லத்தினும், சகோதர மொழிகள் என்பதால் அம் மொழிகளிலுள்ள சில சொற்களுக் கரிடையே ஒப்புமை (பொருளிலும், ஓசையிலும்) இருத்தல் கண்கூடு. இதற்கு எடுத்துக் காட்டாக Mater (லத்தின்) மாதா (வடமொழி) DEU8 (லத்தின்) தேவா ( வடமொழி) ஆகிய சொற்களைக் கொள்ளலாம். (Mater, DEUS) என்னும் சொற்களுக்கு மாதா, தேவன் என்று பொருள்.
கலாசாரம் என்னும் சொல்லை அறிஞர் பலரும் வடமொழி எனக் குறிப்பிடினும், அதன் பகுதியாகிய கலா, கலை என்னும் தமிழ்ச்சொல்லின் திரிந்த வடிவம்(நிலவு, நிலா ஆனது போல) என்பதே மறைமலை அடிகள், பரிதி மாற் கலைஞர் முதலானோர் கருத்தாகும். இதன் அடிப்படையிலேயே சூரிய நாராயண சாஸ்திரியார் பரிதிமாற் கலைஞன் என்று தனது பெயரை மாற்றிக் கொண்டார். இது தமிழுலகம் அறிந்த செய்தி.
மேலும் கலா என்பது, ஒரு தமிழ்ச்சொல் என்று புலவர் குழுவினர் தொகுத்த கழகத் தமிழ் அகராதியும், (பக்கம் 293) குறிப்பிட்டுள்ளமை அவதானிக்கத் தக்கது.
பண்பாடு என்னும் சொல் அதிகமாக எழுத்திலும், பேச்சிலும் அடிபடும் காலம் இது பண்பாடு என்றால் என்ன என்ற கேள்விக்கு பலரும் பலவிதமான விளக்கங்களைத் தருகின்றார்கள்.
ஆங்கில மொழியில் உள்ள Culture என்னும் சொல் லத்தின் மொழியில் Cultura என்னும் சொல்லை அடியொற்றிப் பிறந்ததாகும். இச்சொல் (Culture) பற்றி நூறு ஆண்டுகளுக்கு முன்பு ஒரு பெரும் விவாதமே நடைபெற்றது. மத்யூ ஆர்னல்ட் (Mathew Aாold) என்னும் பேரறிஞர் இச்சொல்லை (Culture) பிரபலப்படுத்திப் பேசியும் எழுதியும் வந்தபோது அவரது கருத்தை பிரடெரிக் ஹரிசன் (Frederic Harrison) என்பவர் மறுத்து எழுதினார்.
மத்யூவின் கருத்துப்படி (Cபயre) என்பது அறிவு, குனம் முதலியன
 

ாலும், மேலும் நிரம்பிச் சமுதாயத்தை மென்மேலும் பேணுகின்ற மனநிலை ாபா பேராசிரியர் எளில் வையாபுரிப்பிள்ளை அவர்கள்,
பண்பாடு என்னும் சொல்லுக்குப் பொதுவாக இரண்டுவிதப் ாருளினையே அறிஞர் தருவர். ஒன்று - மனிதரின் பழக்கவழக்கங்கள், ாபிக்கைகள், சமயச் சடங்குகள், பல்வேறு கோட்பாடுகள், அனைத்தும் பண்பாடு என்பார் ஒருசாரார். ஆனால் பிறிதொருசாரார் மனிதனின் திருந்திய
III osas 550) Gu(Buu (Intellectual Devolopment) LIGJäTLIITB 615äTLJi.
இவ்விரு கருத்துக்களையும் சீர் தூக்கிப் பார்க்கும்பொழுது மனிதனின் ாதிய அறிவு நிலையே பண்பாடு என்று சொல்வதே பொருத்தமாகும். lன் மொழியில் Cபltura, ஆங்கிலத்தில் Culture தமிழில் பண்பாடு ஆகிய ாகள் குறிக்கும் துல்லியமான பொருள் மனிதனின் திருந்திய பக்குவப்
நிலையே ஆகும்,
பண்பு எனப்படுவது பாடு அறிந்து ஒழுகுதல் என்று கலித்தொகையும், பாபுடையார் பட்டுண்டுலகம் என்று வள்ளுவமும் பேசுவதும் மேலே தரப்பட்ட
ான்று சொற்களின் கருத்தினையே என்பதைக் கற்றோர் அறிவர்.
இதனையே இரண்டாயிரம் ஆண்டுகளுக்குமுன்பு வாழ்ந்த வள்ளுவப் IE6)ah:
நிலத்திற் கிடந்தமை கால் காட்டும், காட்டும் குலத்திற் பிறந்தார் வாய்ச் சொல் என்றுரைத்தார். இவ்வினிய கருத்தை வள்ளுவருக்கு முன்பு வாழ்ந்த கிறிஸ்து பசவும், கெட்ட கனிதரும் நல்ல மரமுமில்லை, நல்ல கனி தரும் ாட்ட மரமுமில்லை (லூக்:ே43-44) என்று அழகாகக் குறிப்பிட்டுள்ளார். நிலத்தைப் பண்படுத்துதல் ஆங்கிலத்தில் Agriculture என்று க்கப்படும். இச் சொல் Ager, Cultura என்ற லத்தீன் சொல்லின் பாகும். (ager - வயல், cultura - பண்படுத்தல்) இச்சொல்லைப் பாலவே பண்பாடு என்னும் தமிழ்ச் சொல்லும் நிலத்தைப் ன்படுத்துவதிலிருந்தே பிறந்திருத்தல் வேண்டும் என்பார் தனிநாயகம் அடிகளார். மேலும் அவர் உழவுத் தொழில் நிலத்தை எவ்வாறு படுத்துகின்றதோ அவ்வாறே மக்கள் மனத்தையும் பண்படுத்துவது பாபு என்பார். அடிகளாரின் இவ்விளக்கம் பண்பட்ட நிலத்தில்தான் பlகள் நன்கு செழித்து வளரும் என்ற கூற்றை அப்படியே சரிசெய்கின்றது. ஆக, பண்பாடு என்பது பேராசிரியர் அறவாணன் ான்னதுபோல் தனிமாந்தரின் உயர்குணச் சீர்மையைக் காட்டும்
ாத்தின் இயல்பு. இது மனிதப் புருலுத்தின்இயற்கைக் குணம்.
OTTO "、

Page 8
மாந்தர்ப் பருவத்தின் தெய்வக் குணமாகும்.
பண்பாடு நாகரிகம் ஆகிய இரண்டு சொற்களும் ஒரே கருத்தினைக் கொண்டவை என்று சொல்வோர் இக்காலத்திலும் உளர். நாகரிகம் என்னும் சொல்லின் அடிச் சொல்லாக நகர் என்னும் சொல் அமைந்திருப்பதுபோல Civilization என்னும் ஆங்கிலச் சொல்லின் ELņă G=FITGioGuðITEE 56TTIÉJEUGDIGIT Civilis, Civilitas, Civitas gólu u Globf6SI சொற்களாகும். மேற்படி ஆங்கிலச் சொல் நகரத்து மக்களின் புறவாழ்க்கை முறையை எடுத்துச் சொல்கிறது. இதைப்போன்றே நாகரிகம் என்னும் சொல்லும் அதனை ஒத்த பொருளையே கொண்டுள்ளது. இதனை டாக்டர் மா. ராஜமாணிக்கனார் நாகரிக வளர்ச்சியின் காட்சிச்சாலை கடைத்தெருவே என்று சுருக்கமாகவும், சுவையாகவும் சொல்லிவிடுகின்றார்.
நாகரிகம் என்னும் தமிழ்ச் சொல், பண்பாடு என்னும் பொருளில் சங்க இலக்கியத்திலும், திருக்குறளிலும் பயன்படுத்தப்பட்டடிருக்கின்றது. இந்தப் பயன்பாடு ஒரு விதிவிலக்காகக் கொள்ளப்பட வேண்டும் என்பதை தனிநாயகம் அடிகளாரின் பின்வரும் வாசகம் உறுதி செய்கின்றது. நாகரிகம் நகர வாழ்க்கையையும், நகர வாழ்க்கையால் பெறப்படும் நலன்களையும் குறிப்பதுடன் அறிவியல் துறையால், பொருளியல் துறையால், மக்கள் அடைந்துவரும் மாற்றங்களையும் குறிக்கத்தான் பயன்படுத்தப்பட வேண்டும்.
முடிவாக, பண்பாடு - என்பது மனத்தோடு தொடர்பு கொண்டிருப்பது போல நாகரிகம் மனிதனின் புற வாழ்க்கையை எடுத்துக் காட்டும் கண்ணாடியாக விளங்குகின்றது.
இதனால் - பண்பாடுள்ளவன் நிச்சயமாக நாகரிகம் உள்ளவனாக இருப்பான் என்று எதிர்பார்ப்பதற்கில்லை. அதே போன்று நாகரிகம் உள்ளவன் பண்பாடு உள்ளவனாக இருப்பான் என்று எண்ணுவதும் பேதைமையாகும்.
**ன்ருன்ம்'நீண்ண்ேட்iநீர்ட்ன்” விவாதத்தில் ஈருபருவது மிகவும் கடின மான காரியம். ரேசினன்றால் வயிற்றுக்குக் காதுகள் இல்லை.
-மார்க்ஸ்மோரஜீயல்காட்டோ12

சொல்லுங்கள்; சுக்கிராச்சாரியார் யார்?
• 2 474????----------Pwer o அரசியல் வாதிகளே |ங்கள் எப்போது ாரரானிர்தர்?
ந்தனை வடிவங்கள் IVLIbaňdSaiŠtabari?
ந்தனையும் உங்கள் நாயத்திற்காக அல்லவா?
நர்தல் காலங்களில் மருத்சிதருவாக அலைகிறீர்கள் ரைக்கண்டாலும் ஆயிரம் கும்பீரு போருகின்றீர்கள்
பாவம், மக்கள்
மாந்து உங்களை பாராளுமனநததுக்கு Iணம் அனுப்புகின்றனர்.
Nort E. சிருக்கும் வதாரம் கண்டு
தத் திருமாலே நிர்ந்து போகின்றார்.
நவிச் சுகம் வந்ததும்
ாச் சுகம் உங்களைப் Iறிக் சிகாள்கின்றது.
CI)

Page 9
அதனால் பிதிரில் யார் வந்தாலும் இரண்டு கண்களையும் இறுக்கி மூடிக் சிகாள்கிறீர்கள்.
சிவாஜிகணேசனையே சிவன்றுவிரும் சிறந்த நடிகர்கள் நீங்கள்.
ஆட்சியைப்பீடிந்த நீங்கள் உருவாக்கும் காட்சிகள்தான் எத்தனை?
சிகாழும்பில் இருந்து சிகாண்டு பத்திரிகைகளுக்கு சிறிக்கைத் துண்டுகளை அனுப்புகின்றீர்கள்.
பாராளுமன்றத்தில் நீங்கள் போரும் சிசாந்தண்டுகள் மசித்த சத்தத்தோரு சிவழக்கின்றன ஆனாலும் பின்ன பலர்?
இந்தக் குண்டுகளால் தானே இலங்கை பிரிந்து சிகானர்டிருக்கிறது.
சிசால்லுங்கள் உங்கள் சுக்கிரியாச்சாரியார் பூார்?

மட்டக்களப்பு நகரத்தை அண்டினாற்போல் அமைந்துள்ள சாள்ஸ் மண்டபத்தின் முன்வாயிலில் கட்டப்பட்டுள்ள பனர் பிழைக்கத்தெரியாத ஓர் எழுத்தாளனின் நூல் வெளியீட்டுவிழா நடைபெறப்போகின்றது ான்பதை அறிவித்துக் கொண்டிருக்கின்றது.
இரண்டுயார் மஞ்சள்நிறப் பப்பிளின் துணியில் கறுப்புமையால் எளிமையாக எழுதப்பட்டு இரண்டு பக்கத்திலும் இருந்து கயிற்றினால் இறுக்கிக் கட்டப்பட்டுத் தொங்கவிடப்பட்டிருக்கும் அந்தப் பனர் கயிற்றின் பிடியிலிருந்து தன்னை விடுவித்துக் கொள்ள விரும்புவது போல மெல்ல மெல்ல நெளிகின்றது. வாயில் துனோடு பிணைக்கப்பட்ட குலைபோட்ட இரண்டு வாழை மரங்களும், தம்மை அடியோடு வெட்டியெடுத்தது போதாதென்று பிணைத்தும் வைத்த மனிதர்களின் கொடுரத்தை நினைத்து ாேர்ந்துபோய் நிற்கின்றன. கயிற்றில் தொங்கும் குருத்துப் பின்னல்களும் 1ரையிலே தூக்கியெறியப்பட்ட மீன்கள் போலத் துடிதுடித்துக் கொண்டிருக்கின்றன.
நேரம் காலை பத்துமணி. விழா ஆரம்பமாவதற்கான நேரமும் அதுதான். விழாவிற்கான ஆயத்தங்கள் இன்னும் முடிந்தபாடில்லைப் போலும், இரண்டொரு பேரின் உதவியோடு நூலாசிரியர் கவிஞர் ாண்டீபன் அங்கும் இங்கும் பரபரத்துக் கொண்டிருக்கின்றார்.நாற்காலி புழுங்கு. குத்துவிளக்கு . சந்தனம். குங்குமம். நிறைகுடம் அத்தனையும் சரியாக வைக்கப்பட்டிருக்கின்றனவா? என்று சிரத்தையோடு
வனித்துக் கொள்கின்றார்.
விழாவுக்கு வருவோரை வரவேற்பதற்கென இரண்டு இளம் பெண்கள் பன்னீர்ச் செம்பு, சந்தனக் கிண்ணம் சகிதம் துவாரபாலகர்களாக தங்கள் அனிச்சம்புப் பாதம் சிவக்க நின்று பொண்டிருக்கின்றார்கள். ஒலிபெருக்கி ஓங்கிக் கத்துகின்றது. அதனால் பொறுமையில்லாத நரம்புத் தளர்ச்சிக்காரரான கவிஞருக்குக் கோபம்
வே அவர் இரைகிறார். அது அடங்கிப்போகிறது.
is

Page 10
கவிஞர் மிக எளிதில் உணர்ச்சிவசப்படுபவர். இன்னும் ஒருவர்கூட விழாவுக்கு வரவில்லையே என்ற அவரது ஆதங்கம் முகத்தை இறுக்கமாக்குகின்றது. அச்சமயம் 'கவிஞரே கவலைப்படாதீர்கள் என்ற அபயம் அளிப்பதுபோல அவரது நண்பர்கள் இருவர் காலடி எடுத்து வைக்கிறார்கள். கவிஞர் அகமும் முகமும் மலர அவர்களை அழைத்து வருகிறார்.
நேரம் பத்தரை ஆகின்றது. மண்டபம் இருபத்தைந்து முப்பது இலக்கிய ஆர்வலர்களோடு நிறைவு காண்கிறது. கவிஞரை உணர்ச்சி ஆட்கொள்கிறது. . இந்த ஊர்ல என்னத்துக்கு புத்தக வெளியீடும். விழாவும்.இதைவிட வடிசாராயக்கடை திறக்கலாம்.நல்ல வருமான வரும். சனமும் குடிச்சிப்போட்டு சந்தோசத்தில நாலுகாலில் திரியும்.
ಕ್ಲೋಪ್ಕಾ கவிஞரின் பொருமலைக் கவனித்த அங்ரது நண்பர் ஒருவர் கவிஞரே கணக்க யோசியாதிங்க. இப்படிப்பட்ட விழாவுக்கு இதுக்கு சனங்கள் வராதுகள்.இவ்வளவு வந்ததே பெரிய காரியம். .இப்ப ய புத்தகம் படிக்கிறாங்க. . ரி.விக்கு முன்னால இருந்து கொண்டு ஒன் ரெண்டு என்று படம் பார்க்கிறதிலையே பொழுது போகுது.இது இல்லாட் கிறிக்கற். இந்த நாடு எங்க உருப்படப்போகுது. நம்மளப்போல ஆட் விசரர்கள். .பைத்தியங்கள். இதை நீங்கள் நல்லா விளங்கிகி கொள்ளணும்.
நண்பனின் ஒவ்வொரு வார்த்தையையும் தலையாட்டி ஆமோதித்துக் கொண்ட கவிஞர் இனியும் காத்திருக்க விருப்பமில்ல விழாவை ஆரம்பிக்கிறார்.
விழா குத்துவிளக்கேற்றத்துடன் ஆரம்பமாகின்றது அதைத்தொடர்ந்து மகாகவிபாரதியின் வாழ்க நிரந்தரம் வாை அளந்துகொண்டிருக்கின்றது. . பின்வரவேற்புரை.
கவிஞர் காண்டீபனின் நூல்வெளியிட்டுவிழாவில் வரவேற்புரை நிகழ் முன்வந்தவர் சாதாரணமானவரல்லர். கவிஞர் என்ற பட்டத்தைப்போல, கவியரச என்ற பட்டமும் மலிந்துபோய்விட்டதால் அவற்றிலிருந்து சற்று வித்தியாசமா கவிக்கோ " என்று எங்கள் பழங்காலத்து தமிழ் அரசர்களைப்போ தனக்குத்தானே பட்டம் சூட்டிக்கொண்டு வெற்று வசனங்களை அப்படியு இப்படியும் முறித்துப் புதுக்கவிதை என்ற பேரில் கவிதை உலகை திணறடித்துக் கொண்டிருக்கும் கவிஞர் வில்வன்தான் அவர் வில்வ இளைஞன், அந்த முறுக்கோடு தனது வரவேற்புரையையும் முறிக்கிவிட்ட EJEnlJIIط
 
 
 
 
 
 
 
 
 

ஒரு சமுதாயத்தின் அறிவு வளர்ச்சியை எடுத்துக் காட்டும் அளவு கோலாக விளங்குவது புத்தக வெளியீட்டுவிழா. .ஆனால், இந்தக் கூட்டத்தைப் பார்க்கும்பொழுது இந்தச் சனங்களுக்கும் அறிவுக்கும் ஏதாவது சம்பந்தம் இருக்கின்றதா என்ற கேட்கத் தோன்றுகின்றது.
கவிக்கோ வில்லவனின் இந்தக் கேள்வியே அதிரடியாக இருந்தது. கூட்டத்தில் இருந்தவர்கள் ஒருவர்முகத்தை ஒருவர் பார்த்துக் கொண்டார்கள். வில்வன் விடுவாரா விடவேயில்லை.
இந்த நூலை எழுதிய காண்டீபன் ஒரு பணக்காரர் அல்ல. ஓர் ஏழை எழுத்தாளன். இன்னும் சொல்லப்போனால் பிழைக்கத்தெரியாத மனிதன். கவிதைகள் எழுதி அதைத்தானே அச்சிட்டுப் புறுாவ் பார்த்து இந்த விழாவையும் தன் செலவிலேயே நடாத்திக் கொண்டிருக்கின்றாரே இதுதான் அறிவை, கல்வியை இந்தச் சமுதாயம் மதிக்கின்ற லட்சணமா?
கவிஞரின் இந்த இரண்டாவது கேள்வியிலேயே சபை அப்படியே மாதியாகிவிட்டது. இதைக் கவனித்த கவிக்கோவிற்கு மட்டற்ற மகிழ்ச்சி. தொடர்ந்து சொல்மழை சொரியலானார்.
"இந்த மண்ணிலே எதற்குப் புத்தக வெளியீட்டுவிழா? இதைவிட்டுத்து டெக் எடுத்து இந்தக்காலத்து சினிமாப்படங்களைக் ாாட்டிப் பணம் சம்பாதிப்பது சுலபமான வேலை. இந்தப் படங்களைப் பார்த்து ரசிக்கும் அளவுக்குத்தான் நம்ம சனங்களுக்கு அறிவு இருக்கு.
அதுக்குமேல இல்லவே இல்லை."
கவிக்கோ வில்லவன் தன் வரவேற்புரையை முடித்தபோது அவர் உடல் வியர்த்துக் கொட்டியது. கண்கள் சிவந்திருந்தன. |தச் சனங்கள்மீது அவ்வளவு கோபம் நமது கவிக்கோ வில்லவனுக்கு.
வரவேற்புரையைத் தொடர்ந்து தலைமைப் பொழிவு பெய்யத்தொடங்கியது. கூட்டம் உசாரானது. இண்டைக்கு யார்

Page 11
முகத்தில முழிச்சம்? ' என்று முணுமுணுத்தார் கூட்டத்திற்கு வரு தந்திருந்த இலக்கிய சிகாமணியொருவர்.
தலைமைப் பொறுப்பை ஏற்றுக் கொண்டிருந்தவ சாமானியமானவரல்ல. பழம் பண்டிதர் முருகேசனார் தான் அ இலக்கியம் எதுவும் படைக்காமலேயே இலக்கியக் கலாநிதி எ பட்டத்தை இலங்கையின் புகழ்பூத்த பல்கலைக் கழகம் ஒன் அண்மையில்தான் அவருக்கு வழங்கியிருந்தது. அப்படிப்ப கலாநிதியவர்கள், சங்க இலக்கியங்களை எல்லாம் எரித்து சாம்பரா கரைத்துக் குடித்தவர். உண்மையிலேயே இந்தவிழாவிற்கு வருகை அவருக்கு விருப்பமில்லைதான். புதக்கவிதையா அது என்ன என் கிண்டலடித்துப் பழக்கப்பட்டவர் அவர் அப்படிப்பட்டவரின் பெய அழைப்பிதழில் பார்த்ததில் கவிஞர் காண்டீபனின் நண்பர்களுக்கு ஒ அதிர்ச்சி. கான்டீபனுக்கு பைத்தியம் பிடித்துவிட்தோ என் கவலைப்பட்டவர்களும் உண்டு.
பண்டிதர் முருகேசனார் ஒரு பழம் பங்சாங்கம், புதிது புதுை என்ற சொற்களைக் கேட்டாலே வாந்தி எடுக்கத்தொடங்கிவிடுவ அப்படிப்பட்டவர் புதுக்கவிதை நூல் வெளியீட்டுவிழாவிற்குத் தலைை தாங்குகிறார் என்றால் நிச்சயமாக ஒரு காரணமாவது இருக்க வேண்டு அந்தக் காரணம் இதுதான். கொஞ்சக் காலம் அவர் பெய பத்திரிகைகளில் அடிபடவில்லை. அதனால் இந்த விழாவோடையான பெயர் வரட்டுமே என்று ஓர் ஆசை பண்டிதருக்கு. ஆசை யாரைத்தா விட்டது? பண்டிதர் முருகேசனார் தன் தலைமை உரையை பொழியலானார்.
நான் பழைய காலத்து மனிதன். அதனால் எனக்கு பழை செய்யுட்கள்தான் பிடிக்கும். செய்யுளைக் கவிதையாக்கியவர் சுட்ரமணி. பாரதியும் அவரது முன்னோடிகளும்தான். இந்தப் பாரதி செ வேலையால்தான் எல்லோரும் கவிஞராகிவிட்டார்கள். இந்த நாட்டி ஜனத்தொகையைவிட கவிஞர்கள் தொகைதான் அதிகமாகிவிட்ட இந்தக் கவிஞர் சிகாமணிகளால் கவிதை இலக்கியம் மலிந்துபோ விட்டது. செய்யுள் செய்யச் சிறந்த இலக்கண இலக்கியப் Լ|Ճնճն՝
 
 
 
 
 
 
 
 
 

தேவை. இது கவிதைக்குத் தேவையே இல்லை. இந்தக் கவிதையின் வரவால் தமிழின் மரியாதையே போய்விட்டது. இப்போது எல்லோருமே கவிஞர்கள். கவியரசர்கள். கம்பன் இன்றிருந்தால் நஞ்சருந்திச் செத்துப்போயிருப்பான்.
இப்போது எழுதும் தமிழ் எழுத்தாளர்களுக்கு அடிப்படை இலக்கண அறிவுகூட இல்லை. இவர்களின் வழக்கு இழிசனர் வழக்கு. எங்கள் வழக்கு செந்தமிழ் வழக்கு. அப்படியானால் ஏன் தலமை ஏற்க வந்தேன் என்று நீங்கள் கேட்கலாம். திருவாளர் காண்டீபன் எனது நண்பர். நண்பர் அழைத்தபோது அதனைத் தட்டுவது நாகரிகமல்ல
என்றே தலைமை ஏற்க இசைந்தேன்.
நண்பர் காண்டீபன் பெரிய கெட்டிக்காரர். அதனால் அவர் யாப்பு இலக்கணத்தைப் படித்து மரபுச் செய்யுள் படைத்துத் தமிழ் அன்னையை மகிழ்விக்க வேண்டும். இது என் வேண்டுகோள்.
பண்டிதர் தமது தலைமைப் பொழிவை நிறுத்தியபோது, காண்டீபனின் கண்கள் இரத்தக் குண்டாக இருந்தன. எங்கே காண்டிபன் பண்டிதர் மீது பாய்ந்துவிடுவாரோ என்று அவரது நண்பர்கள் பயந்து கொண்டே இருந்தார்கள்.நல்ல வேளை, கவிஞர் காண்டிபனை அவரது தமிழ்ப் பண்பாடு தடுத்து நிறுத்திவிட்டது.
அடுத்து, விழாவின் முக்கிய ஓர் நிகழ்வாக நூலை விமர்சனம் செய்ய வந்தார் ஒருவர். அவர் ஒரு முற்போக்காளர். இலக்கியத்தோடு மாக்ஷிசத்தையும்இரண்டறக் கலந்தவர் அவர் எடுத்த எடுப்பிலேயே பண்டிதரை ஒருபிடி பிடித்தார் அந்த முற்போக்காளர்.
இந்த நாட்டில் இன்றும் சிலர் பழைய காலத்திலேயே 'ருக்கின்றார்கள். அவர்களுக்கு நாம் எழுதுவதெல்லாம் இழிசனர் வழக்காகவே தெரிகின்றது. இந்த இலக்கிய மேதைகளைப் பொறுத்தவரையில், நாம் மகாகவி என்று கொண்டாடுகின்ற பாரதியும் 'மிசனர்தான் என்பதை அவர்கள் உணரவேண்டும். இப்படிப்பட்ட பழம் பஞ்சாங்கங்கள் என்ன சொன்ன போதும் இன்றைய தமிழ் இலக்கியம்
மிதனுர் இலக்கியந்தான் என்று சொல்லிக் கொள்வதில் நாம்
()

Page 12
உண்மையிலேயே பெருமையடைகின்றோம்.
இவ்விதம் பண்டிதரை வாங்கு வாங்கு என்று வாங்கிய
முற்போக்காளர் இவ்வளவும் போதும் என்று எண்ணினாரோ என்னவோ,
தன் பார்வையை உடனடியாக கவிஞர் காண்டிபனின் பக்கம் திருப்பினார்.
கவிஞர் காண்டீபனின் கவிதைகள் அற்புதமானவை. நிகழ்காலத்தில் நின்று எதிர்காலத்தைத் தரிசிப்பவை. இன்றைய பிரபல கவிஞர் வைரமுத்து காண்டீபனிடம் பிச்சை எடுக்க வேண்டும். காண்டீபனின் ஒவ்வொரு வரியும் வயிரம்.முத்து. என்றெல்லாம் கவிஞர் காண்டிபனைப் புகழ்ந்து தள்ளிக் கொண்டே போனார். முற்போக்காளர். .காண்டீபனுக்கு உண்மையில் உச்சிகுளிர்ந்து போய்விட்டது. மேடையிலே முற்போக்காளரைக் கட்டிப்பிடித்து முத்தம் கொடுக்கலாமா என்று கூட யோசித்தார். அடுத்த கணம், சே. அது எல்லாம் தமிழர் பண்பாடாகாது என்று தனக்குத்தானே சமாதானம் சொல்லிக் கொண்ட அவர் தனது ஏற்புரையைப் பெளவியமாகத் தொடங்கினார்.
புத்தபெருமானுக்குப் போதிமரம் எப்படியோ அப்படித்தான் இவ்விழா எனக்கு. அதனால் ஏற்பட்ட ஞானோதயம் எதிர்காலத்தில் எனக்குப் பெரும் துணையாகவே இருக்கும். இந்த மேடையிலேயே கவிதை பற்றிப் பலவிமர்சனங்கள் நிகழ்த்தப்பட்டன. அவற்றையெல்லாம் நான் விமர்சிப்பது நாகரிகமல்ல என்று கவிஞர் தமது ஏற்புரையை நிறைவு செய்தபோது மண்டபத்தில் ஐந்தாறுபேர்மட்டுமே இருந்தனர்.
இந்த ஐந்தாறுபேரும் கவிஞரிடம்விடைபெற வந்தபோது அவர்கள் கையில் தமது கவிதை நூலைக் கண்ட கவிஞருக்கு உண்மையிலேயே அதிர்ச்சி ஏற்பட்டது.
மேசையில் அடுக்கிவைக்கப்பட்ட கவிதை நூலை யாரும் காசு கொடுத்துவாங்கவில்லை என்பதை கவிஞர் நன்கறிவார். அப்படியானால் இந்த நூலகள் இவர்களிடம் எப்படி வந்தன? என்ற ஆராய்ச்சியில் கவிஞர் இறங்கியபோது, கவிஞர் மட்டுமே அந்த மண்டபத்தில் தனியாக நின்றார்.
பாவம் கவிஞர். நூல் வெளியீட்டுக்காகத் தான்போட்ட கோலங்களைத் தானே தன்னந்தனியாக நின்று கலைத்துக் கொண்டிருந்தார்.
 
 

D
அலைபாடும் அழகிய கிராமம்
தேனகத்தின் வடக்கில்
திகழுமொரு கிராமம் வானகமும் பார்த்து
வாயூறிநிற்கும் கானகத்தில் பூக்கள்
கண்சிமிட்டும் ; பேசும் மீனகமாம் கடவில்
மேவும் நிலாத் தோணி!
முப்புறமும் ஆறு
முழங்கு கடல் ஒசை எப்புறமும் அழுத
இயற்கை கோலுவிருக்கும் ஒப்பில்லாக் கிராமம்
ஓவியம்போல் நெஞ்சில் எப்பொழுதும் வாழும்
எந்தன் உயிர் அல்லோ!
ஊரெல்லாம் காற்று
உலாவரும்; அதனால் வேர்வையது அறியார்
வேனில் அதன்போதும் கார்கால மேனும்
காற்று அதன் வரவில் ஒர்ககம் உண்டு
உள்ளமது சொல்லும்

Page 13
காற்றது தென்றல்
கன்னலது பிழிந்த சாற்றென இனிக்கும்
சாய்ந்தாடும் தாழை கீற்றதில் அமர்ந்து
கிள்ளை தமிழ்ப் பேசும் ஆற்றோரம் எங்கும்
ஆனந்த வெள்ளம்
ஆற்றோரம் தானும்
அமுத நீர் பாயும் ஊற்றதன் மகிமை
ஊரெல்லாம் கூறும் சேற்று நீர்குடிக்கச்
செங்கரும்புபோல சோற்று நீர் அதுவே
சொல்லும் போதினிக்கும்
தாழை மலர் வாசம்
தழுவிவரும் காற்றில் நாளெல்லாம் இன்பம்
நரம்பெல்லாம் புடைக்கும் சூழல் அது என்றும்
சொர்க்கம் போலாகும் நீளும் அதன் பெருமை
நிகரேதும் இல்லை
(இன்னும்பாடும்.)
 

உடற்பலத்தினால் வீரதீரச் செயல்களைப்புரிந்து தீன்க்கு இலங்கையில் ஒப்பாரும் மிக்காரும் இன்றித் திகழ்ந்த சாண்டோ வேல்முருகு பூரீதாஸ் என்னும் மாமலை சரிந்துவிட்டது.
சாண்டோ சங்கரதாஸ் போன்ற வீரர்கள் இருக்கும்போதே தமிழ் அன்னைக்கு ஏன் இந்த அடிமைத்தளை என்று இந்திய மண்ணில் புகழப்பட்ட இரும்பரசன் சங்கரதாஸின் பிரதம சீடர் சாண்டோ வேறிதாளம், ஆரையம்பதியில் உள்ள தனது நண்பனான வேல்முருகுவின் வீட்டுக்குச் சென்ற சங்கரதாஸ் வேல்முருகுவின் மகனான ரீதாசைப் பார்த்து நெத்தலிப் பயில்வான் என்று அழைத்து 13 வயது நிரம்பிய அவனைத் தன் சீடனாக ஏற்றுக் கொண்டார்.
தான் ஒரு பலசாலியாக வரவேண்டும் என்று இளமையிலேயே எண்ணம் கொண்டிருந்த பூரீதாஸ்"க்கு இது ஒரு வரப்பிரசாதமாக அமைந்தது. எனினும் 5 வருடங்களுக்கே சங்கரதாசின் சீடனாக இருக்கும் வாய்ப்பு ரீதாஸாக்குக் கிடைத்தது.
சீடனான 5 வருடத்தில் சங்கரதாஸ் அமரராகி விட்டார். இதுவரை 50ற்கு மேற்பட்ட தடவைகள் நாட்டின் பல பாகங்களிலும் தனது சாகசங்களைப் புரிந்துள்ள ரீதாஸின் 1வது நிகழ்வு தற்செயலாக நடைபெற்றது.
இங்கினியாகலையில் மின்சார சபையில் கடமையாற்றிக் கொண்டிருந்த அவர் உடவளவையில் நடைபெற்ற வீரவிஜய சேர்கஸ் குழுவின் காட்சி காணச் சென்றார். நிகழ்ச்சிமுடிவில் உணர்ச்சிமேலிட்டால் டந்தப்பட்ட ரீதாஸ் மேடையில் ஏறி அனைத்து நிகழ்ச்சிகளையும் ானும் செய்து காட்டியதுடன் உழவு இயந்திரத்தையும் மார்பில் Iற்றினார். இதனைக் கண்ணுற்ற வீரவிஜய அவரைக் கட்டித்தழுவிப் பாராட்டினார்.
திருமலையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றின்போது கார் ஒன்றை முத்து நிறுத்தினார். பின்னர் காருடனான பிணைப்பைக் கழற்றுவதற்கு முன்னர் அதன் சாரதி பொறாமை காரணமாக காரைச் செலுத்திவிட்டார்.

Page 14
இதனால் பூரீதாஸ் இழுபட்டுச் சென்று காயத்திற்கு இலக்காகினார். ஆத்திரமடைந்த பூரீதாஸ் மீண்டும் காரை இழுத்து நீண்ட நேரம் நிறுத்தினார். அன்று அவரது தொடையில் ஏற்பட்ட தழும்பு மாறாமலேயே இருந்தது.
கம்பியைப் பல்லினால் கடித்தல்;மூக்கில் வைத்து வளைத்தல், உடலை இறுகப் பிணைத்த சங்கிலியை உடைத்தல்; புயத்தில் அடித்து இரும்புப் பட்டத்தை வளைத்தல், 1500 இறாத்தல் கருங்கல்லை மார்பில் வைத்து 28 இறாத்தல் சுத்தியலால் அடித்து உடைத்தல், 56 இறாத்தல் எடையுள்ள குண்டை பத்துஅடி உயரத்தில் இருந்து வயிற்றில் போடுதல், யானை கட்டும் சங்கிலியை இழுத்து அறுத்தல், தசைக் கோளங்களை நடனமாடச் செய்தல், ஒடும் வாகனத்தை இழுத்து நிறுத்துதல்; உழவுஇயந்திரங்களை மார்பில் ஒன்றன்பின் ஒன்றாய் ஏற்றுதல், தேங்காயை நகத்தினால் உரித்தல்; அத்தேங்காயை பிளேட் அலகினால் ஒரு நிமிடத்தில் இரு பாதியாக்குதல் என்பன அவர் நிகழ்த்திய வீர திர பராக்கிரமச் செயல்களாகும்.
இவருடைய கடைசிச் சாகச நிகழ்ச்சி கடந்த வருடம் சந்திவெளியில் இடம்பெற்றது. இந்த நிகழ்வில் யானையை மார்பில் ஏற்றுவதாக ஏற்பாடாகி இருந்தது. இதற்காக தாந்தாமலை முருகன் ஆலய யானையும் கொண்டுவரப்பட்டிருந்தது.
யானை அவரது மார்பில் ஏறியது. ஆனால் அப்பால் செல்லாது அப்படியே அழுது கண்ணிர் சொரிந்தது பின்னர் ஏறியபடியே பின்வாங்கிவிட்டது.
இது நிகழ்ந்து சில நாட்களில் யானையும் இறந்துவிட்டது. அன்று யானை தன்னைக் கடந்து செல்லாததையும் இறந்ததையும் ஒரு தெய்வ நிகழ்வாகப் பின்னர் ஒரு தடவை நான் அவரைச் சந்தித்தபோது கூறினார்.
கடந்த வருடம் அவர் இந்தியா சென்றிருந்தபோது திடீர் என இருதயநோய் ஏற்பட்டு பாரிய இருதய சத்திர சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டார். சத்திர சிகிச்சை நடக்கும்போது மட்டக்களப்பில்
24
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

அவருடைய பூஜை அறையில் சுவாமி படங்கள் வைக்கப்பட்டிருந்த பப்கைத் தட்டு அப்படியே நிலத்தில் விழுந்துவிட்டது.
ஆனால் ஒருபடம்தானும் உடையவில்லை. மட்டக்களப்பிற்குத் மிரும்பியபின் இதையும் அவர் என்னிடம் கூறிச் சத்திர சிகிச்சையின்போது விக்கு எந்த ஆபத்தும் இல்லை என்பதை தனது வீட்டாருக்கு இந்த நிகழ்வு உணர்த்தியதாக மிக உருக்கமாக என்னிடம் தெரிவித்தார்.
தனது சாதனைகளுக்கெல்லாம் தேகாப்பியாசம், தியானம், விக்கட்டுப்பாடு, இவற்றுக்கு மேலாக இறைபக்தி, குருபக்தி என்பனவே ாரணம் என்று அடிக்கடி கூறுவார்.
இ. பாக்கியராஜன். சர்வதேச கராத்தே- யூடோக்கள் கழகத்தினால் சான்றிதழ் Iங்கப்பட்ட முதல் இலங்கையர் என்ற பெருமையைப் பெற்ற தாஸினால் மகாவீர பராக்கிரமன், வீரதிலகம், நவயுக பராக்கிரமன், சிங்கக்குருளை, விரேந்திர மாமணி, வீரக்குரிசில், கிழக்கிலங்கை இரும்பு மனிதன், ஆகிய பட்டங்கள் பெருமை பெற்றுள்ளன. இந்து கலாசார
மைச்சும் அவருக்குப் பட்டம் வழங்கிப் பெருமை பெற்றது.
குருவின்மீது இவருக்கு அபார பக்தியிருந்தது. இதன்காரணமாக குருவான சாண்டோ சங்கரதாஸின் சிலையினை அவரின் பிறந்த ஊரான ாவற்குடாவில் நிறுவியுள்ளார். குருவின் நினைவாக நூல் ஒன்றை வெளியிட முனைந்தபோதும் அது கைகூடவில்லை.
குருவின் நினைவாக பயிற்சிக்கூடமும், நினைவாலயமும் நிறுவ வேண்டும் என்ற அவரின் கனவு கனவாகவே போய்விட்டது. கின்னஸ் தகத்தில் தனது சாதனை இடம்பெற வேண்டும் என்று பாய்த்துடித்தார். எனினும் அதற்கான வாய்ப்புக் கிடைக்காமையினால் மினாகப் பிறந்துவிட்டேனே என்று மனதைத் தேற்றிக் கொள்வார்.
சத்திர சிகிச்சையின் பின்னரும் கடந்த மார்ச் மாதம் மாத்தளை மி வித்தியாலயம் அவரை அழைத்தது. அங்கு ஒரு சொற்பொழிவை
|பினார்.
உடல் நிலை காரணமாக நிகழ்ச்சி எதனையும் செய்ய அவரால் டியவில்லை. இதுவே அவர் கலந்துகொண்ட இறுதி நிகழ்வாகும்.
(வீரகேசரி 26.05.2004)

Page 15
நல்லவனுக்கும் வில்லன் ஒருவன் விரைந்துவருவான்
இராமனுக்கும் இப்படித்தான்
கூனிக்கு அவள்மீது 35TU3ur (SITU
கோதண்டராமன் கொற்றம் இழக்க இந்தக் கோபமே காரணம்
வனத்திலும் ஒரு பகை ராமனை வம்பிற்கிழுத்தது
விலகநினைத்தும் அதுவிடவேயில்லை ஆனாலும் வெற்றி அவன் பக்கமே வீற்றிருந்தது இதுதான் இராமாயணம் கூளி இல்லையேல் அந்தக் கொடும் போரே நிகழ்ந்திருக்காது.
 

ஐவர் மீது துரியோதனனுக்கு அழுக்காறு. செய்வது என்னவென்று சிந்தித்தான். மாமன் சகுனி மருந்தாகின்றான். சூதாட்டம் நடக்கின்றது சாது தருமனுக்கு அது பெரும் சறுக்கல்.
கணக்கு முடிந்ததும் கண்ணன் கைகொடுக்கின்றான் காண்டிபன் வில்லெடுக்கின்றாள். விரள் கர்ணனே வீழ்ந்துபோகின்றான் சூரர்கள் பலரும் சொர்க்கம் போகின்நார்கள்
பாரதம் கதையல்ல
அது ஒரு பெரிய பாடப்புத்தகம்.
வாழ்க்கையில் அதன் ஒவ்வொரு வரியும் EnJ Enfog Lo.
-வியாசன்

Page 16
C. 2.பரரஹமஐழுமs
--- ." V سے "سی சனநாயக நாடுகளில் தனிமன்ரித உரிமைகளுக்கு ஆபத்து எற்படும் சந்தர்ப்பங்களில்அவற்றைத் தடுத்து நிறுத்தி தனிமனித உரிமைகளை உறுதிப்படுத்துவது நீதிமன்றங்களேயாகும். இதனாலேயே நீதி மன்றங்கள் சுதந்திரமானவையாகவும், அதிகாரம் மிக்கவையாகவும் விளங்க வேண்டுமென்று கருதி சனநாயக நாடுகளின் அரசியல் அமைப்புக்களில் நீதித் துறைக்கு அதிகளவு சுதந்திரங்களும் அதிகாரங்களும் வழங்கப்படுகின்றன
அமெரிக்கா, பிரித்தானியா, இந்தியா போன்ற நாடுகளில் நீதி மன்றங்கள் பாராளுமன்றங்கள் இயற்றிய சட்டங்களையே வலுவிழக்கும் தீர்ப்பை வழங்குகின்றன. ஆனால் வேறு சில நாடுகளில் நீதி மன்றங்களின் சுதந்திரத்தையும், அதிகாரத்தையும் அவை அங்கீகரித்துள்ளதோடு நீதி மன்றம் பாராளுமன்ற செயல் நடவடிக்கைகளில் தலையிட முடியாதவாறு கட்டுப்படுத்தப்பட்டுள்ளன. இலங்கையில் நீதி மன்றங்களின் சுதந்திரம் அரசியல் அமைப்பில் அங்கீகரிக்கப்பட்டுள்ளதுடன் நீதி மன்றங்களில் செல்வாக்குச் செலுத்த முற்படுபவர்கள் தண்டனைக்குள்ளாகும் பிரிவுகளும் ஏற்படுத்தப் பட்டுள்ளன.
நீதிச் சேவைக்குழு, அரசியலமைப்புப் பேரவை, நீதிபதி ஒருவரை அகற்றும் முறைக்குள்ள கடுமையான கட்டுப்பாடுகள் என்பன அதன் சுதந்திரத்தை உறுதிப்படுத்துவதை நாம் எமது அரசியல் அமைப்பில் காணலாம். ஆனால் அதேசமயம், நீதி மன்றங்கள் பாராளுமன்ற நடவடிக்கைகளில் பங்குகொள்ளக்கூடாது அல்லது தலையிடக்கூடாது என்ற பிரிவுகளும் எமது அரசியல் அமைப்பின் 80ம் உறுப்புரையின் (3)ம் உய பிரிவு பின்வருமாறு கூறுகிறது.
-80(3)ம்பிரிவு"சட்டமூலமொன்று விடயத்திற்கேற்றாற்போல ஜனாதிபதியின் அல்லது சபாநாயகரின் சான்றுரை எழுதப்பட்டதன் மேல் சட்டமாக வருகின்றவிடத்து எத்தன்மையான எவ் ஏதுவின்மீதும் நீதி மன்றம் அல்லது, நியாய சபை எதுவும் அதன் செல்லுபடி பற்றி விசாரித்தாலோ தீர்ப்பளித்தாலோ அல்லது எவ்விதத்திலும் கேள்விக்குட்படுத்தலோ ஆகாது” என்கிறது இப்பிரிவு பாராளுமன்ற விவகாரங்களில் நீதி மன்றங்களின் நியாயாதிக்கத்தை நீக்கியுள்ளதைக் காணலாம்.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

பாராளுமன்ற அங்கத் தவர்களினதும் சிறப் புரிமைகள் , விடுபாட்டுரிமைகள், தத்துவங்கள் பற்றிய விடயத்திற்கென ஒரு சட்டமுண்டு. இது 1953ம் ஆண்டு 21ம் இலக்கச் சட்டமெனவும் " LAW OF IPARLIMENTARY PRIVILEGES 51601 611 Ö el 60 pa, a Lü LIGLi.
இதன் கீழ் குற்றம்புரியும் ஒருவரை விசாரித்துத் தண்டனை வழங்க பாராளு மன்றத்திற்கே அதிகாரம் உண்டு. பாராளுமன்றம் அந்த அதிகாரத்தைப் பிரயோகிக்காமல் உயர் நீதிமன்றம் மூலம் பிரயோகிக்க வேண்டுமென நினைத்தால் மட்டுமே நீதி மன்றம் அதனை விசாரிக்கலாம். இவ்வாறு இலங்கைப் பாராளுமன்றம் நீதி விசாரணை செய்யவும் தண்டனை வழங்கவும் முடியும். இலங்கை அரசியல் அமைப்பின் 4(இ) ப் பிரிவு பின்வருமாறு ாறுகின்றது.
4(இ) மக்களது நீதிமுறைத் தத்துவமானது பாராளுமன்றத்தினதும் அதன் உறுப்பினர்களினதும் சிறப்புரிமைகள் விளையாட்டுரிமைகள் சத்துவங்கள் என்பன பற்றிய கருமங்களின் விடயத்தில் தவிர அரசியல் அமைப்பினால் உருவாக்கப்பட்டு தாபிக்கப்பட்ட அல்லது அரசியல் அமைப்பினால் அங்கீகரிக்கப்பட்ட நீதிமன்றங்கள், நியாய சபைகள், நிறுவனங்கள், ஆகியன மூலம் பாராளுமன்றத்தினால் பிரயோகிக்கப்படுதல் வேண்டும்,
விகே, ஜீஜோனி
量
இசட்டத்த
பாராளுமன்றத்தினதும், அதன் உறுப்புரிமைகளினதும் சிறப்புரிமைகள் விளையாட்டுரிமைகள், தத்துவங்கள் என்பன பற்றிய கருமங்களில் மக்களது பித்துறைத்தத்துவமானது பாராளுமன்றத்தினால் சட்டத்துக்கிணங்க ரடியாகப் பிரயோகிக்கப்படலாம்" என்கிறது.
பாராளுமன்றம் பல சந்தர்ப்பங்களில் இவ்வாறு அதன் அதிகாரத்தை பாவித்து குற்றம் செய்தவர்களை இலங்கையில் தண்டித்துள்ளது. ாக்கப்பட்ட முதலாவது வழக்கு இதுவாகும். 1978ம் ஆண்டு ஜனவரிமாதம் திகதி வெளியான " CEYLON 0BSERVER” என்ற மாலை நேரப் பரிகையில் ஒரு செய்தி வெளியாகியிருந்தது.
இளம் வாலிபர் ஒருவரும் இளம் மங்கை ஒருவரும் காட்சி தரும் ஒன்று அப்பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்டு இருந்ததுடன் அப்படமானது ாகையில் வெளிவிவகார அமைச்சராக உள்ள ஏ.சி.எஸ். ஹமீட் அவர்கள்

Page 17
கொரிய நாட்டில் உள்ள பிரபல்யமான கைத்தொழில் அதிபர் ஒருவரை சந்திக்கிறார் எனவும் கூறியது.
மேலும் இன்னுமொரு படமானது போக்குவரத்து அமைச்சரான எம். * எச். முகமட் அவர்கள் நீர் கொழும்பில் புகையிரத நிலையத்திற்கு அடிக்கல் நாட்டுகிறார் என்று கூறி ஹமீட் அவர்கள் தென்கொரியாவில் கைத்தொழில் நிலையம் ஒன்றுக்கு விஜயம் செய்ததைக் காட்டியது.
இவ்விரு படங்களுக்கும் படங்களின் கீழ் கொடுக்கப்பட்டிருந்த விளக்கங்களுக்கும் எந்தவித அர்த்தமோ தொடர்போ இருக்கவில்லை. இதனால் ஆத்திரமுற்ற வெளிவிவகார அமைச்சரான ஹமீட் அவர்கள் அப்பத்திரிகை ஆசிரிகளுக்கெதிராக பாராளுமன்றச் சிறப்புரிமைச் சட்டத்தின் கீழ் ஒழுங்குப் பிரச்சனை ஒன்றைக் கிளப்பினார்.
பாராளுமன்றம் இதனை விளங்கி பத்திரிகை ஆசிரியர்கள் இருவருக்கும் தண்டனை வழங்கியது.பாராளுமன்றமே இத்தண்டனையை சபையின் படைக்கலச்சேவிதர் மூலம் வழங்கியது.
இன்னுமொரு வழக்கு கடுவலைத் தொகுதிப் பாராளுமன்ற அங்கத்தவராக இருந்த எம்.டி. எச். ஜயவர்த்தனா அவர்களுக்கு அப்போதைய இரும்புக் கூட்டுத்தாபனத் தலைவர் கலாநிதி, பி. டி. ஏ.சில்வா அவர்கள் செய்ததாகக் கூறிய அச்சுறுத்தல் சம்பந்தமான வழக்காகும். எம்.டி.எச். ஜயவர்த்தன அவர்கள் பாராளுமன்றத்தில் 1980ம் ஆண்டு டிசம்பர் மாதம் 12ம் திகதி மேற்படி இருப்புக் கூட்டுத் தாபனத் தலைவரின் நடவடிக்கைகளைக் கண்டித்து உரையாற்றினார்.
அன்று பாராளுமன்ற சபைக்கு சமூகமளித்திருந்த தலைவர் தேநீர் இடைவேளைக்குச் சென்றபோது பாராளுமன்ற அங்கத்தவர்களை சந்தித்து அவரைக் கடிந்து பேசியதுடன் அச்சுறுத்தலும் செய்தார். இதனால் கோபமடைந்த எம்.டி.எச். ஜயவர்த்தன சபாநாயகரிடம் இது பற்றிமுறையிட்டார். அதனைத் தொடர்ந்து நடைபெற்ற விசாரணையில் பாராளுமன்றம் டாக்டர் சில்வாவை குற்றவாளியாகக் கண்டு அவருக்கு ருபா8000/-தண்டனைப் பணமாக விதித்ததுடன் மறியலையும் விதித்தது.
மேற்படி வழக்குக்களைப் போல் இன்னும்பல வழக்குகள் உள்ளன. ஆகவே பாராளுமன்றம் நீதி மன்றமாகவும் இயங்க இலங்கை அரசியல் அமைப்பில் இடமுண்டு. ஆனால் நீதி மன்றங்கள் பாராளுமன்றத்தைப் போல் சட்டங்களை ஆக்கமுடியாது.இவ்வாறு பாராளுமன்றமும், நீதி மன்றமும் அதிகாரம் வாய்ந்த நிறுவனங்களாக விளங்குவதால் சில சந்தர்ப்பங்களில் நீதி மன்றங்கள் பாராளுமன்ற விவகாரங்களில் தலையிட்டு விடுகின்றன. பாராளுமன்றம் அவற்றை பொறுக்காது நீதிமன்றத் தீர்ப்புக்களை உதாசீனமும் செய்துவிடுகின்றன. 1983ம் ஆண்டு இலங்கையில் " ப விதிஹண்ட” என்ற
30

புக்கு ஒன்று நடந்தது.
இது அரசுக்கும் நீதி மன்றத்திற்கும் ஒரு போட்டியாக இருந்ததுபோல் ப்போது விளங்கியது. நீதி மன்றம் வழங்கிய தீர்ப்பைப் பாராளுமன்றம் துச் செய்தது. அதேபோல் விவியன் குணவர்தன வழக்கிலும் நீதிமன்றத் ாப்பு வலுவிழக்கம் செய்யப்பட்டது. அனுராபண்டாரநாயக்க சபாநாயகராக Iத காலத்தில் உயர் நீதிமன்றம் வழங்கியதிர்ப்பு ஒன்றை ஏற்கமுடியாது ாறு கூறியதும் நாம் அறிந்ததே.
மிகச் சமீபத்தில் புத்தபிக்கு ஒருவர் சத்தியப் பிரமாணம் ாயக்கூடாது என்ற தடையை பொருட்படுத்தாதது நாம் அறிந்ததே. இவ்வாறு மன்றங்கள் எடுக்கும் சில தீர்ப்புக்களை பாராளுமன்றம் ஏற்பதில்லை. தகைய நிலை இலங்கையில் மட்டுமல்ல , இந்தியா, பாகிஸ்தான், களிலும் நடைபெறுவதுண்டு. பாகிஸ்தான் பிரதம நீதியரசர் அந்நாட்டுப் ாளுமன்றத்தால் நவாஸ்சரிப்பின் ஆட்சிக்காலத்தில் பதவி நீக்கம் ாயப்பட்டது எல்லோரும் அறிந்ததே.
இந்தியாவில் உத்தரப்பிரதேச மாநிலத்தின் சட்டசபைக்கும் றத்திற்கும் இடையே அதிகாரப் போட்டி நடைபெற்றதும் நீதிபதி ார்களைக் கைது செய்யுமாறு பாராளுமன்றம் ஆனைபிறப்பித்த சம்பவம் AVIIJILi) வரலாற்றில் உள்ளது. கேசவ்சிங் வழக்கு என அழைக்கப்படும் வாழக்கானது உத்தரப்பிரதேச மானில சட்டசபை உறுப்பினர் ஒருவரின் மைகளைக் குறைகூறி கேசவ்சிங் என்பவரும் (இவர் பாராளுமன்ற ாத்தவர் அல்லாதவர்) இவருடன் வேறு இருவரும் சேர்ந்து ஒரு துண்டுப் ாரத்தை வெளியிட்டனர். பாதிப்புக்குள்ளான அங்கத்தவர் தனது சிறப்புரிமை யப்படுவதாக தலைவருக்கு முறையிட்டார். அதனைத் தொடர்ந்து மானில டசபை அம்மூவரையும், சட்டசபைக்குமுன் ஆஜராகுமாறு கூறி 1963,1218 திகதி அழைப்பானையை அனுப்பியது. அவர்கள் ஆஜராகவில்லை. 0204ம் திகதியன்று மீண்டும் அழைப்பாணையை அனுப்பி அவர்களை ராகுமாறு கேட்டுக் கொண்டது.
கேசவ்சிங் தவிர்ந்த ஏனைய இருவரும் ஆஜராகினர். அவ்விருவரும் க்கப்பட்டனர். கேசவ்சிங் அழைப்பானையைப் புறக்கணித்ததால் அவரைக் ய்து கொண்டுவருமாறு மானில அவைத் தலைவர் பொலிசாருக்குக் ளையிட்டார். கைது செய்யப்பட்டு பின்னர் செய்யப்பட்ட விசாரணையில் வாளியாகக் காணப்பட்டு லக்னோ என்ற சிறையில் அடைக்கப்பட்டார், சிங் சொலமன் என்ற சட்டத்தரணி மூலம் பிண்ைமனு ஒன்றைத் தாக்கல் து தன்னைப் பிணையில்விடுமாறு கேட்டுக் கொண்டார். நீதிபதிகள் வையில்விட உத்தரவிட்டனர்.
கேசவ்சிங் பிணையில் விடப்பட்டது மானில அவையை அவமதிக்கும்

Page 18
செயல் என்றும் இதனால் கேசவ்சிங்கை பிணையில் விடுமாறு கே சட்டத்தரணியையும், பிணையில் விட்ட இரண்டு நீதியரசர்களையும், தி செய்யுமாறு மானிலசபை தீர்மானம் நிறைவேற்றியது. 28 நீதியரசர்கள் இவ்வழ விசாரித்து நிதியரசர்களைக் கைது செய்யும் வாரண்டை அதற்காலிக நிறுத்தியதுடன் இந்தப் பிரச்சனையைத் தொடர்ந்துவிடவும் விருப்பமில்ல சில நடவடிக்கைகளை எடுத்தனர். இதனால் மானில அவை நீதிபதிக கைது செய்யும் வாரண்டை திரும்பப் பெற்றுக் கொண்டது.
இந்நிலையில் நீதி மன்றத்திற்கும், பாராளுமன்றத்திற்கும் அதிக போட்டி நடைபெறுவது நாட்டுக்கு நல்லதல்ல என்று கருதிய ஜனாதிபதி இந் அரசியல்அமைப்பு பிரிவின் 143இன் கீழ் தனக்கு வழங்கப்பட்டுள்ள அதிகார சில வினாக்களை உயர் நீதிமன்றத்திடம்கோரி விளக்கத்தைப் பெற்றுக் கொ இந்த அதிகாரப்போட்டியை முடிவுக்குக் கொண்டுவந்தார்.
காவேரி நீர்ப் பிரச்சனையில் உயர் நீதிமன்றத் தீர்ப்பை கர்நாடக மானி இன்றும் அமுல்படுத்தாததும் நாம் அறிந்ததே. ஆகவே பாராளுமன்றத்திற் நீதி மன்றங்களுக்குமிடையே அதிகாரப்போட்டி நடைபெறுவது முன்னர் சகஜம இருந்தது. ஆனால் தற்போது இந்நிலைமாறியுள்ளது. அவை ஒவ்வொன் தத்தமது எல்லைக்குள் நின்றே கருமமாற்றுகின்றன. அதனால் போட்டி தவி கப்படுகின்றது. ஜனநாயகத்திற்கு இத்தகைய போட்டிகள் ஆரோக்கியமானத என்பதால் பலரும் இப்போட்டிகளைத் தவிர்க்கவேண்டுமென்றே விரும்புகின்ற
இலங்கையில் இத்தகைய போட்டிகள் தற்போது முற்ற ஒழிந்துபோய்விட்டன என்றே கூற வேண்டும். ஆயினும் சிலரது சுயநலத்திற்க நீதிமன்றத்தைத் தவறாக வழிநடத்த முயலுபவர்களும் இல்லாடமல் இல்: என்பது சமீப சம்பவங்களால் புலப்படுகின்றது. எனவே சட்டத்தரணிகள், பு ஜீவிகள், பொதுநலன் விரும்புவோர் மற்றும் இன்னோரன்னவர்கள் நிதி மன்றமு பாராளுமன்றமும், ஒன்றுடன் ஒன்று மோதாமல் கருமமாற்றக் கூடிய சூழ்நிலை உருவாக்க வேண்டுமென்பது அவசியமானதும், அவசரமானதுமாகும்.
(வீரகேசரி 25.6.2004)
2

இருட்டிற்குள்ளே.
இருட்டிற்குள்ளேயே உலகம் இருக்கிறது
வெளிச்சத்தைக் ETTIGT அதற்கு வெட்கம் ஏன் தெரியுமா?
அது
எல்லாவற்றையும் வெளிக்கொணர்ந்துவிடும்
ஆதியிலும் இருளின் ஆட்சியில்தான் அண்டம் இருந்தது
இந்த இருளில் இருந்துதான் பரமபிதா 595 rfsourii பிரித்தெடுத்தார்
சூரியனும் நட்சத்திரங்களும் அய்போதுதான் சுடர்விட்டுப் பிரகாசித்தன
ஆயினும் இருளின் ஆதிக்கம் அகலவேயில்லை
இருள்தான் இன்றைய மனிதனின் இருப்பிடம்
ஒளி அவனைக் கண்டதும்
ஒழப்போகின்றது!

Page 19