கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: போது 2004.09-10

Page 1
జ3:
மறவழி தவிர்த
மகாத்மா
་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་།། ఖ
ஐ
 


Page 2
எண்ணிய முடிதல் வேண்டும்
நல்லவே எண்ணல் வேண்டும் திண்ணிய நெஞ்சம் வேண்டும்
தெளிந்த நல்லறிவு வேண்டும்.
மகாகவி பாரதியார்
GIGGO OJE இடுச் சந்தா ஹூ
வெளியீடு :
PROFESSIONAL PSYCHOLOGICAL COUNSELLING CENTRE
BATTICALOA.
 

ཨ་ རྫས་ཚ། ཝ་ ༈ ༈ ༈ཊ་ ༈ ནཱ་
ஹோது : REesan : 暫
போது -6 இதழ் -39
புரட்டாதி-ஐப்பசி 2004 IIIli 5-5-1998 III LI JIB LI 輯
Ilவாக ஆசிரியர் (Managing Editor) 臺 சுவாமிஜி |ci சற்குணநாயகம்.பேச*
யூசிரியர் Editor வாகரைவானதன்
Iவாகம்: (Management)
எம், ஒக்களப்
பணிமனை
ஜெனப்கொம் அச்சகம், இல, 1. யேசுசபை வீதி, மடடககளபடி
தொலைபேசி: (1.5-2223822, O65-2222983
E-mail ppcc.(2diamond.lanka.net
Il 4 Mb: r h = E
உலகின் தொண்மையான நாடுகளில் இலங்கையும் ஒன்று. ஒருகாலம் இந்தியாவின் தென்புலத்தின் ஒருபகுதியாக (குமரிக் கணிடம் ) இந்நாடு இருந்ததாகவும், பின் ஏற்பட்ட கடல்கோளினால் அது துண்டிக்கப்பட்டு ஒருசிறு தீவாக ஆனதாகவும் நில நால் வல்லார் கூறுவர். இதனைச் செந்தமிழ்க் காப்பீயம் சிலப்பதிகாரமும் எடுத்துச் சொல்லும்,
அறுபதுகளின் இறுதிவரை இந்நாடு தமிழில் இலங்கை என்றும், சிங்களத்தில் லங்கா என்றும் அழைக்கப்பட்டது. ஆன்ால் எழுபதுகளின் ஆரம்பத்தில் ஆட்சிக் கட்டிலில் ஏறி அமர்ந்த பரீமாவோ அம்மையார் இனவாதத்தின் ஓர் அடையாளமாக (சிலோன் எண்ணும் பெயரைத் தாக்கி எறிந்துவிட்டு) பரீலங்கா எண்ணும் பெயரைச் சூட்டி மகிழ்ந்தார்.
ஒருகுறிப்பட்ட இனத்தின் அடையாளமாக (நீலங்கா என்ற பெயர் திகழ்ந்தபோதும், நீ என்ம்ை அடைமொழி கொண்டிருக்கும் சிறப்பான அர்த்தம் அதன்பால் நம் கவனத்தை ஈர்க்கின்றது.
ஜீ எண்ணும் வடமொழிச் சொல்லுக்கு தமிழில் இலக்குமி அல்லது திருமகள் என்று பொருள். கண்கள் அல்லது சரஸ்வதி கல்வியின் தெய்வமாகக் கொண்டாடப்படுவதுபோல, திருமகள் செல்வத்தின் தேவதையாக வணங்கப்படுகின்றாள். இதன்படி

Page 3
பரீலங்கா என்பது செல்வத்தின் தேவதையான திருமகள் உறையும் தேசமாகவே கருதப்படல் வேண்டும். ஆனால் திருமகள் உண்மையிலேயே இந்த நாட்டில் உறைகின்றாளா?
முத்தமிழ் வித்தகர் விபுலாநந்தர், சின்னத்தம்பிப் புலவர், சோமசுந்தரப் புலவர், புலவர்மணி பெரியதம்பீப்பிள்ளை, முதலான புலவர் பெருமக்கள் பாடிமகிழ்ந்த இலங்கைத் தீவில்தானா நாம் இருக்கின்றோம்?
பளிக்கு மாளிகைத் தலந்தொறும் இடந்தோறும் பசு நீ தேவிர் துளிர்க் கும் கரப் பகத் தன்னறுஞ சோலைகள் தொறுமி
என்று, அனுமன் வாயிலாக இலங்கையின் செல்வச் செழிப்பைக் கம்பண் அழகுறப் பாடிக் களித்த பூமி தானா இது?
1983ம் ஆண்டில் இருந்து இந்நாட்டை அக்கினிதேவனல்லவா ஆட்சி செய்கின்றான்! அமைதித் தென்றல் வீசிய இம்மண்ணில் போர் என்னும் புயல் அல்லவா இருபதாண்டுகளாகப் புகுந்து வீசியது! இப்போதுகூட உண்மையான சமாதானமா இங்கே நிலவுகின்றது? சமாதானமும் யுத்தமும் இல்லாத "இரண்டுங்கெட்ட நிலையல்லவா இங்கு நீடிக்கின்றது !
இந்நாடு செழிப்புற்றுத் திகழவேண்டுமானால் இங்கு இருக்கவேண்டியவை ஒற்றுமையும் உண்மையான உழைப்பும்தான். இந்த இரண்டும் இந்த நாட்டில்
இருக்கின்றனவா? இல்லையே.
நீலான்கா உண்மையான நீலான்காவாக இருக்கவேண்டுமானாஸ் ஐம்பதுகளுக்குமுன்பு இந்நாட்டில் நிலவிய அமைதி உடனடியாக ஏற்பட வேண்டும். அப்போதுதான் இந்தத் தேசம் வளரும்; வாழ்வு பெறும். இடம்பெயர்ந்து சென்ற திருமகளும் திரும்பிவந்து இந்தத் தேசத்தை தெய்வலோகமாக்குவாள்.
இல்லையேல் - நீலங்கா எண்பது வெறும் பெயராகத்தான் இருக்கும். நிச்சயம் (நீ இருக்கவே இருக்காது.
அன்புடன் வாகரைவானன்.

அறியவேண்டிய அரிய மனிதர்17)
கியூபா ஜனாதிபதி பிடல் காஸ்ரோ.
நாற்பது வருடங்களாக ஒரு நாட்டை தனது இரும்புப் பிடிக்குள் த்திருக்கும் ஒரு தலைவன் உண்டு என்றால் இன்றையத் தேதிக்கு அது பிடல் காஸ்ரோ மட்டுமே!
காஸ்ரோவின் வாழ்க்கையில் பல விந்தையான நிகழ்வுகள் டந்திருக்கின்றன. தனது நாட்டைச் சுரண்டிக் கொண்டிருந்த ாவாதிகாரி பாடிஸ்டாவை எதிர்த்து காஸ்ட்ரோ கொரில்லாப் போரில் ட்டிருந்த சமயம் . அவர் தன்னை ஒரு கம்யூனிஸ்ட் என்றே ால்லிக் கொள்ள வில்லை. கியூபாவில் காஸ்ட்ரோ ஆட்சிக்கு வந்த தில் கியூபாவின் கம்யூனிஸ்ட் கட்சியே அவரைக் கடுமையாக மிர்த்தது. அப்படி யென்றால் காஸ்ட்ரோவை திடீரென்று கம்யூனிஸ்ட்
கியது யார்? சோவியத் ரஸ்யாவா? இல்லை, அமெரிக்கா!
கியூபாவில் காஸ்ரோ ஆட்சியைக் கைப்பற்றியபோது டிஸ்டாவின் ஆதரவாளர்களையும், அவருக்கு விசுவாசமானவர்க ளயும் கடுமையாக நடத்தினார். இவர்களைத்தேடி காஸ்ட்ரோவின் டகள் வீடு வீடாக வேட்டை நடத்தியபோது பலர் மூர்க்கத்தனமாகக் ால்லப்பட்டார்கள். இந்த அடக்குமுறைகளையும் கொலைகளையும்
ப்போது அமெரிக்கா கடுமையாக எதிர்த்தது.
இன்னொரு பக்கம் புதிதாக ஆட்சிப் பொறுப்பேற்ற காஸ்ட்ரோ மெரிக்கர்கள் கியூபாவில் நடத்தி வந்த அத்தனை சர்க்கரைத் |ழிற்சாலைகளையும் வர்த்தக நடவடிக்கைகளையும் அரசுடைமை பாக்கினார். இதற்குப் பதிலடி கொடுக்க அமெரிக்கா "இனி கியூபாவில் ருந்து சர்க்கரையை இறக்குமதி செய்யமாட்டோம்’ என்று றிவித்தது.கியூபாவைப் பொறுத்தவரை சர்க்கரை ஏற்றுமதிதான் அதன் வாசக் காற்றே. இந்தச் சமயம் "நான் உனது சர்க்கரையை வாங்கிக்

Page 4
கொள்கின்றேன்.” என ரஸ்யா ஆபத்பாந்தவனாக முன்வந்தது. அத்துடன் புதிய கனரகத் தொழிற்சாலைகள் அமைக்கவும் கியூபாவுக்கு ரஸ்யா பெரும் உதவி புரிந்தது.
கியூபாவைப் பணியவைக்க தான் எடுத்த முயற்சிகளுக்கு இப்படி எக்குத்தப்பாக விளைவுகள் ஏற்படுவதைப் பார்த்து எங்கே கியூபா கம்பனிஸ்ட் நாடாக மாறிவிடுமோ என அமெரிக்கா பயந்தது. அமெரிக்காவின் உளவுஸ்தாபனமான சி. ஐ. ஏ. தனது நரித்தனத்தைக் காட்டியது. அது சுமார் 1400 கியூபா நாட்டவருக்கு ஆயுதப் பயிற்சியும், ஆயுதங்களையும் கொடுத்து கியூபாவை முற்றுகையிட அனுப்பியது பே ஆஃப் பிக்ஸ் என்று பெயரிடப்பட்ட இந்தப் படையெடுப்புக்கு கியூபா நாட்டு மக்கள் பெருமளவில் ஆதரவு அளிப்பார்கள் என்று அமெரிக்கா போட்ட கணக்கு தப்பானது. தன்னை எதிர்க்க அமெரிக்காவிலிருந்து ஆயுதங்களோடு வந்தவர்களை காஸ்ரோ மண்டியிடவைத்து வெற்றி உரை நிகழ்த்தினார். அப்போதுதான் பிடல் காஸ்ரோ தன்னை ஒரு கம்யூனிஸ்ட் என்று முதன்முதலாக அறிவித்துக் கொண்டார். அன்றுதான் கியூபாவையும் கம்யூனிஸ்ட் நாட்ாகப் பிரகடனப்படுத்தினார். அதுமட்டுமல்ல . கண்டம் விட்டுக் கண்டம் சென்று தாக்கக்கூடிய ஏவுகணைகளை கியூபாவில் பொருத்த காஸ்ட்ரோ சோவியத் ரஸ்யாவிற்கு அனுமதி கொடுத்தார். அந்தச் சந்தர்ப்பத் துக்காகவே காத்துக்கொண்டிருந்த ரஸ்யா அமெரிக்காவை குறிபார்க்கும் ஏவுகணைகளைக் கியூபாவில் கொண்டுவந்து பொருத்தியது. அடுத்தடுத்து நடந்த இந்தச் சம்பவங்களைப் பார்த்து அமெரிக்கா அதிர்ச்சியடைந்தது. "உலகம் மூன்றாம் உலகப் போரை நோக்கிப்போய்க்கொண்டிருக் கின்றதோ? என்றுகூட அச்சம் எழுந்தது. அமெரிக்காவின் ஜனாதிபதியாக இருந்த கென்னடி, ரஸ்யாவின் அதிபர் குருசேவ் உடன் தீவிர பேச்சுவார்த்தை நடாத்தினார். அமெரிக்கா எடுத்த இந்த முயற்சிக்குப் பலன்கிடைத்தது. ரஸ்யா தனது ஏவுகணைகளை கியூபாவிலிருந்து திரும்பப் பெற்றுக் கொண்டது. இது நடந்தது 1962ம் ஆண்டு. ஆனால் அன்றிலிருந்து இன்றுவரை காஸ்ட்ரோவைப் பதவியிலிருந்து இறக்கவும் கியூபாமீது பதிந்திருக்கும் " கம்யூனிஸ்ட்நாடு” என்ற முத்திரையைத் துடைக்கவும் அமெரிக்கா எடுக்காத முயற்சிகளே இல்லை. ஆனால் இதில் எந்த முயற்சியுமே காஸ்ரோமுன் எடுபடவில்லை. (வாவ் 2000)
 

இன்றையச் சமாதானம் . இது இயல்பானதா? இல்Aை !
சிசயந்கை. சீருட்டிக்கப்பட்டது!
ஒப்பந்தம் ஒன்று உருவாக்கியது ! நிர்ப்பந்தம் இதன் நியாயமான காரணம் 1
நThஇ "岛 曜 畔 வி
மூசகர் விருமிபதற்கு. e'r ar y diw54 i gysylltibas)UD ஆயத்தம் சிசய்வதற்கு!
சமாதானம் சிலரை நண்நாகச் சம்பாதிக்க வைத்திருக்கின்றது.
சர்வதேச சமூகத்திந்கும் இது ஒரு நல்லி
தருணம் மிதந்கையும் வடக்கையும் நன்கு தெரிந்து சிகாள்ள

Page 5
திழக்கை இரண்டாகக்
திழிக்க இந்தச் சமாதானம் சிலருக்குத் தேவைப்பருகின்றது.
பிநநாடுகளிடமிருந்து பணம் பெறுவதற்கு இந்தச் சமாதானம் அரசாங்கத்திற்கு ஒரு பேருதவி !
ஆனால் லிங்களுக்கு? இது ஒர் இரண்டும் சிகட்ட நிலை
சமாதானத்ததால் லிங்களுக்குள்ளும் சில சறுக்கல்கள்
வரி
UUT
GF
T
ཕཁ་ཁམ་གང་མང་མཁར།
இன்றையச் சமாதானம் இலங்கையினர் பிதிர்காலத்தையே நிர்ணயிக்கப்போகின்றது .
இரண்டு நாடா ? இல்லை ஒன்றா?
இன்றைய சமாதானத்தின் தொணிப்பொருள் இதுதான் !
நோர்வே இல்லையேல் 6H treủáổuarSa συριτσ5τστώ
 

6 சிந்தனைப் பாட் الهس ))
ళ్ల
భజిక
மேகம்.முழக்கம்.மின்னல்
தண்ணீரத ஆவியாகி
தாவி மேல் எழுந்து
விண்ணில் மேகம் என்னும்
விந்தைப் பெயர் கொள்ளும்
குன்றுபோல் மேகம்
குவிந்து வான் வெளியில் ஒன்றோடொன்று மோதம்
அதுவே முழக்கம் ஆகும்
கரிய மேகம் பூமி
களிக்கும் வண்ணம் பெய்யும்
உரிய பயன் பெற்று
ஊரெல்லாம் வாழும்
இடியை முந்திக் கொண்டு
எவரும் அஞ்சும் வண்ணம்
படீரென்று மின்னல்
பற்றும் தீயாய் ஒளிரும்
: T

Page 6
மின்னல், இடியில் காந்தம்
மிக அதிகம் உண்டு கண்ணைப் பறித்தப் போடும்
கருகிப் போகும் மேனி
கொடிய பயம் ஊட்டும்
கோடைகால முழக்கம்
இடி இடிக்கும்போது
எச்சரிக்கை வேண்டும்
முழங்கும்போத வீட்டில்
முழுக்கவனம் வேண்டும்
விளங்கும் "எலக்ரிக்’ பொருளால்
விபத்த நேரக்கூடும்
இயற்கை என்னும் சக்தி
இதனைப் போன்று புதுமை
வியக்கும் வண்ணம் செய்யும்
விளங்கிக் கொள்ள வேண்டும்
 

யாழ்ப்பாண மன்னன்
சங்கிலியன்
யாழ்ப்பாண இராச்சியத்தின் சுதந்திரத் தமிழ் அரசில் உருவாகியிருக்கும் வாரிசுரிமைப் போட்டி குடிமக்களைப் பெரிதும் கவலைக்குள் தள்ளிவிடுகின்றது. மக்களின் இந்தக் கவலையைப் பகிர்ந்து கொள்வது போல கோட்டையில் உயரப் பறந்து கொண்டிருந்த நந்திக் கொடி கம்பத்தோடு கட்டுண்டு கிடக்கின்றது.
இதுபோன்று ஒரு வாரிகளிமைப் போட்டி தமிழகத்தின் பாண்டிய அரச குடும்பத்தில் ஏற்பட் ତ୯୭ [5ରି TUTE படுத்தி மாலிக் கபூர் என்னும் முஸ்லிம் படைத் தளபதி, மதுரையை ஆறலைத்தும், அக்கினிக்கு உணவாக்கியும், ஆடிய ஊழித் தாண்டவத்தை நன்கறிந்திருந்த யாழ்ப்பாணப் பெருங்குடி மக்கள் அப்படிஒரு அவலம் தங்களுக்கு நேர்ந்துவிடக் கூடாதென்று நல்லைக் கந்தனை நெஞ்சுருக வேண்டிக் கொள்கின்றனர்.
வயோதிப தசையை அடைந்துவிட்ட தன்தந்தை சிங்கைப் பரராசசேகரனால் கட்டிக் காக்கப்பட்ட சுதந்திரத் தமிழ் அரசை, முன்பு பாட்டன் கனக சூரிய சிங்கை ஆரியன் சப்புமல்குமரயாவிடம் பறி கொடுத்ததுபோல அந்நியர் எவரிடத்திலும் இனி இழந்து விடுவதில்லை என்று தனக்குள் ஒரு பெரிய சபதமே செய்து கொண்ட பரராச சேகரனின் இளைய மைந்தன் சங்கிலி அரியணையைக் கைப்பற்றும் ஒரே நோக்கில் தனது அரசியல் சூழ்ச்சி வலையை மிகுந்த சாதுரியத்தோடு பின்னலானான்.
மன்னன் பரராச சேகரனின் அந்தப்புரத்து ஆசை நாயகிகளில் ஒருத்தியான மனவக்குடியில் பிறந்த மங்கத்தம்மாளின் ஒரே மகன் சங்கிலி பின்னிய சூழ்ச்சி வலையில் அவனது தமையன்மார் சிங்கபாகுவும், பண்டாரமும் அகப்பட்டு அழிந்து போகின்றனர்.
அதன்பின் இன்னுமொரு தமையன் பரநிருப சிங்கன் கண்டி

Page 7
அரசனின் பட்டத்து ராணிக்கு வைத்தியம் பார்க்கச் சென்றமையை ஒரு நல்ல சந்தர்ப்பமாகக் கருதிய சங்கிலி, யாழ்ப்பான சுதந்திரத் தமிழ் அரசின் மன்னனாகத் தன்னைப் பிரகடனம் செய்து கொள்கின்றான்.
சங்கிலியின் இந்தச் சதி, கண்டியிலிருந்து திரும்பிய முடிக்குரிய இளவரசன் பரநிருபசிங்கனை அதிர்ச்சிக்குள்ளாக்குகிறது. இப்படி ஒரு நிலையை நன்கு எதிர்பார்த்திருந்த சங்கிலி, தனக்கே உரிய சாமர்த்தியத்தைச் சரியான விதத்தில் பயன்படுத்தித் தமைய னோடு,சமாதானம் செய்து கொண்டதோடு அவனைத் தன் தலைமை அமைச்சனாகவும் நியமனம் செய்கின்றான்.
தங்கள் இராட்சியத்தில் தோன்றிய வாரிசுரிமைப் போட்டியினால் விரக்தியும் வெறுப்பும் அடைந்திருந்த யாழ்ப்பாணத் தமிழ் மக்கள் அப்போட்டி ஏதோ ஒரு விதத்தில் முடிவுற்றது கண்டு நிம்மதிப் பெருமூச்சு விடுகின்றனர். இதனைப் புரிந்து கொண்டதுபோல் கம்பத்தில் கட்டப்பட்டிருந்த நந்திக் கொடி மீண்டும் காற்றில் அசையத் தொடங்குகின்றது.
ஒரு அரசனுக்கே உரிய கூர்ந்த மதியும் சூழ்ச்சித் திறனும் பெற்றிருந்த சங்கிலி யாழ்ப்பான இராச்சியத்தின் மன்னனானதும்இதுவரை காலமும் தனது தேசத்தில் வேண்டுமென்று குழப்பத்தை உண்டாக்கிக் கொண்டிருந்த சிங்கள மக்களை நாட்டைவிட்டேகுமாறு ஆணை பிறப்பிக்கின்றான். யாழ்ப்பாணம் தமிழரின் சுதந்திர பூமியாகின்றது.
LL LL LL LLL LLLS S LL LL LLL LLLL L SLS SL SLLL SYL SL S SY SL L LL SLL SLL SS SL SL SL S S
வரலாற்றுச் சிறுகதை
L L L L LL LLL S L LLLL LL LL S LL S LL LLL LL LSLL SLS LLS SLLS SL SL L LL SS S S SL தனது தலைமை அமைச்சனாக, பரநிருப சிங்கன் விளங்கினாலும், முடிக்குரிய இளவரசன் அவன் என்பதால் மக்களின் ஆதரவும் அனுதாபமும் அவன் பக்கம் இருப்பதை நன்கு புரிந்து கொண்ட சங்கிலி, மக்களைத் தன்பக்கம் திருப்பும் வண்ணம் பல்வேறு காரியங்களை மேற்கொள்ளலானான்.
உள்நாட்டுப் பிரச்சனைகளில் சங்கிலி தனது கவனத்தைத் திருப்பிக் கொண்டிருந்த இந்தச் சமயத்தில்தான் போர்த்துக்கீசப்
 

படையொன்று குடாநாட்டின் நெடுந்திவில் வந்து இறங்குகிறது. மாட்டீன் \போன்சா என்பவனின் தலைமையில் எழுந்த அந்தப் படையெடுப்பை பாராத சங்கிலி, சற்று அதிர்ந்துபோனாலும், தன்னை உடனடியாகச் ாளித்துக் கொண்டு வியாபாரம் செபப் வந்தவர்களை ஒரு வியாபாரியாகவே சந்திக்க விரும்பினான்.
சங்கிலியின் அந்த "வியாபாரம் ஒரு பெரும் திரவியமாகவே அவனிடமிருந்து போர்த்துக் கீசருக்குக் கைமாறுகிறது. திரவியத்தைப் பெற்றுக் கொண்டதனால் மிகுந்த திருப்தி அடைந்த அந்நியப்படை அடுத்த கணமே கப்பலேறியதைக் கண்ட யாழ்ப்பாணத்து மக்கள் அரசனின் இராச தந்திரம் வென்றதாகக் குதூகலிக்கின்றனர்.
இக்குதூகலத்தின் மத்தியில், நாட்டின் ஆட்சியைக் கைப்பற்றுவதற்காக பரநிருப சிங்கன் போர்த்துக் கீசரின் உதவியை நாடினான் என்று கேள்வியுற்ற மக்கள் திகைத்துப் போகின்றனர்.
பாண்டிய நாட்டு அரசுரிமைப் போட்டியில் இளவரசர்களில் ஒருவன். மாலிக் கபூரை உதவிக்கழைத்ததால் அந்நாடு மயானமானதை Iண்டும் நினைவு கூர்ந்த தமிழ் மக்கள் அப்படி ஒரு பேரிடி தங்கள் ராட்சியத்தின் மீதும் வீழ்ந்துவிடக்கூடாதென்று நல்லைக் கந்தனிடமே
வேண்டுகின்றனர்.
தமையனின் துரோகத்தைப் பொறுத்துக்கொள்ள முடியாத ாங்கிலி பொங்கி எழுகின்றான். உறையில் இருந்த வாளை அவன் கைகள் உருவுகின்றன. மன்னன் மட்டுமன்றி நாடுமுழுவதுமே தனக்கு எதிராகத் திரண்டெழுந்ததைக் கண்ட பரநிருப சிங்கன் வேறு வழியின்றி போர்த்துக் கீசரை நாடி ஒடுகின்றான். கோவா அவனைக் கைநீட்டி ஏற்றுக் கொள்கின்றது.
பரபரப்பான இந்தச் சூழ்நிலையில் ஆடி, ஆவணி மாதங்கள் வேகமாகவே வந்து சேர்கின்றன. நல்லூர்க் கந்தனின் திருவிழா ஆரம்பமாகும் முதுவேனில் காலம் அது. கோட்டை மன்னன் ஆறாம் பராக்கிரமபாகுவின் காலத்தில் யாழ்ப்பாண இராச்சியத்தில் அரசு செய்த
○

Page 8
ரீசங்கபோதி புவனேகபாகு வால், மீளக் கட்டி எழுப்பப்பட்ட நல்லூர்க் கோயில் திருவிழாவிற்காக யாழ்ப்பாணம் முழுவதுமே தன்னை அலங்கரித்துக் கொள்கின்றது.
இருபத்தைந்து நாட்கள் தொடர்ந்து நடைபெறும் அவ்விழாவிற்காக கோயிலைச் சுற்றிக் கட்டப்பட்ட தோரணங்கள், வண்ண வளைவுகள், தாகம் தீர்க்கும் தண்ணிர்ப் பந்தல்கள். நல்லூர் முழுவதையுமே பரவசத்தில் ஆழ்த்துகின்றன.கற்பூர வெளிச்சத்திலும் நறுமணத்திலும் மூழ்கியிருக்கும் கந்தன் கோட்டத்தைச் சுற்றி இடம்பெறும் அங்கப் பிரதட்சணம், காவடி ஆட்டம், சுவாமி வீதி உலா, பக்தர்களின் அரோகரா முழக்கம், யாழ்ப்பாண இராச்சியம் முழுவதையுமே ஒடு சைவத்திருத்தலமாக ஆக்கிக் காட்டுகின்றன.
மக்களோடு மக்களாக நல்லூர்க் கந்தனை வழிபட வந்த மன்னவன் சங்கிலியனை இன்னுமொரு விழாக்கான மக்கள் அழைத்துச் செல்கின்றனர். ஆலயத்தின் ஒரு பக்கமாக சிற்ப வேலைப்பாடுகளோடு அழகுற அமைக்கப்பட்டிருந்த வசந்த மண்டபத்தில் தேவதாசிகளின் நாட்டியக் கலைவிருந்தை மக்களோடு சேர்ந்து மன்னனும் அனுபவித்துக் கொண்டிருக்கின்றான்.
இந்தக் குதூகலத்திலிருந்து யாழ்ப்பாணம் இன்னும் விடுபடாத நிலையில் மீண்டும் ஒரு போர்த்துக் கீசப்படை, கொன்ஸ்தாந்தின் என்பவன் தலைமையில் எழுபத்தேழு கப்பல்களுடன் கரை ஊரில்
தரையிறங்குகின்றது.
போர்த்துக் கீசரின இந்த முற்றுகையை ஓரளவு எதிர்பார்த்திருந்த சங்கிலியின் மறவர்படை அப்படையை எதிர்த்துப் போராடுகின்றது. ஆனாலும் பீரங்கிப் படையை எதிர்த்து நிற்க முடியாத தமிழர் சேனை பின்வாங்குகிறது. அரசன் கோப்பாய்க்குத் தப்பிச் செல்கின்றான்.
நல்லூர் இராசதானி போர்த்துக் கீசரின் வசமாகின்றது. மாலிக்கபூர் பாணியில் அரண்மனைப் பொருட்கள் கொள்ளையடிக்கப் படுகின்றன.

பராக்கிரமபாகுவின் காலத்தில் யாழ்ப்பாண இராச்சியத்தில் அரசு செய்த ராணியும் அங்கிருந்த பெண்களும் கைது செய்யப்படுகின்றனர்.
மிழ்ப்பெருமக்களால் தாங்கிக் கொள்ளமுடியவில்லை. குங்குமப் பொட்டும், மாங்கல்யமும் அணிந்த குலமாதுபோலத் திகழ்ந்த தமிழ் இராச்சியம், கைம்பெண் கோலம் பூண்டதைக் கண்ட அவர்கள் கண்ணிர் வடிக்கின்றனர். யாழ்ப்பாணம் சோகமயமாகின்றது.
தங்கள் தேசத்துக்கு விளைந்த இழிவை யாழ்ப்பாணத்து
மன்னன் சங்கிலி கோப்பாய்க்குத் தப்பிச் சென்ற செய்தி போர்த்துக் கீசப் படைக்குக் கிடைக்கின்றது. அவர்கள் மோப்பம் பிடிக்கும் மாயாகின்றனர். ஆனால் அரசனோ எதிரிகள் கண் ணில் மண்ணைத் தூவிவிட்டு பச்சிலைப் பள்ளிக்குச் சென்றுவிடுகின்றான்.
பச்சிலைப் பள்ளியில் மறைந்திருந்த சங்கிலியன் யாழ்ப்பாண இராச்சியம் முழவதையுமே பகைவர்களை அழித்தொழிக்கும் பாசறையாக ஆக்கும் பணியில் தீவிரமாக ஈடுபடுகின்றான். அவன் பின்னால் மக்கள்படை அணிவகுத்து நிற்கின்றது.
தமிழில் அரபியும், பார்ஸியும்.
தமிழில் கலந்துள்ள பிற மொழிச் சொற்கள் என்று வழங்கப்படும் இத்தகைய சொற்களில், கிஸ்தி, வசூல், அசல், பாக்கி, ரசீது, வக்கீல், தாக்கல், மாமூல், காப்பி, சரிகை, பேஷ், சபாஸ், தயார், வகையறா, குல்லா, மேசை, தரம், காகிதம், கடதாசி, சாமான், முலாம், வாபஸ், ஆசாமி, சிபார்சு, இனாம், ஜாமீன், திணிசு, பதில், சுமார், தராசு, குஸ்தி, ரகம், வாரிசு, ஆகிய சொற்கள் அரபி அல்லது பார்ஸி மொழிச் சொற்களாகும்.
ஆதாரம்: இராஜாஜியின் கட்டுரைகள் என்னும் நால்,
آیر

Page 9
ஏகனின் அருள் போற்றி எம் கோமானின் நாமம் நவின்று சாந்தம் தந்த தாயைப் பணிந்து சலாமெனும் சாந்திச் சரங்களை உதிர்த்தவளாய்
ஆசிரியர் நீங்கள் - எம் ஆசுக்களின் இரியரும் நீங்கள்
அரிச்சுவடி அறியோம் அகிலம் யாதென்றும் தெரியோம் அமாவாசைகளாயிருந்தோம் அறிவின் தொலைதுாரமாயிருந்தோம்
ஏட்டுக் கட்டுகளுடன் ஏதுமறியா வயதில் - அடி எடுத்து வைத்தோம் ஏக்கம் மிகுந்த கண்களுடன்
கல்விக் கூடம் தனில் கருணைமிகு அன்னையாய் கண்டிப்புடன் கூடிய தந்தையாய் கரம் பற்றி அழைத்தீர்
 
 

ஆசிரியர் நீங்கள் - எம் ஆசுக்களின் இரியரும் நீங்கள்
பெற்றவளைப் பிரிந்து பேதைகளென வந்தோம் - எமை மேதைகளென மாற்றிடும் மேன்மையான உமை நாடி
சூனிய உலகில் - முடி சூட்டிய வேந்தர் யாம் சுவர்க்க வாசலைத் திறந்தீர் சுகந்தம் பலவும் தந்தீர்
ஆசிரியர் நீங்கள் - எம் ஆசுக்களின் இரியரும் நீங்கள் நாசுக்காக அன்றி - உண்மை நாட்டத்துடன் கல்வி தந்தீர்
வசந்தத்தின் வாசல் நீங்கள் - கல்வி வறுமையில் செல்வமும் நீங்கள் கசந்திடும் எம் சிந்தையை கசக்கிப் பிழிந்தே அறிவு தந்தீர்
வரண்டு போன எம் - அறிவு வாய்களைப் பேசவைத்தீர் செவிடாகிப் போன - எம் சிந்தையை விந்தையாக்கினிர்
ஆசிரியர் நீங்கள் - எம் ஆசுக்களின் இரியரும் நீங்கள்

Page 10
இருண்ட எம் கல்வி வானில் இலங்கிடும் சூரியனாய் பட்டுப்போன அறிவு மரங்களில் மொட்டுவிடும் பூக்களாய் ஆணீர்
இறுதி மூச்சு வரை இலட்சியமாய்க் கொண்டி கல்வி பரப்பும் கொள்கையை கடந்தும் வந்தீர் பெரும் தொல்லை
ஆசிரியர் நீங்கள் - எம் ஆசுக்களின் இரியரும் நீங்கள்
பாடுபட்டுப் பாடுபட்டு பாடாய்ப் போனிர் பலவிழுது கொண்ட ஆலமரமாய் பாருக்கு உவந்தளித்த பட்டதாரிகளுடன்!
மாணாக்கரின் கண்கள் நீங்கள் மாண்பு தந்த சரிதமும் நீங்கள் விடியாதிருந்த எம் வாழ்வில் விழித்திருந்து ஒளி தந்தீர்
ஆசிரியர் நீங்கள் - எம் ஆசுக்களின் இரியரும் நீங்கள்.
எழுதுகோலைப் பிடித்துத் தந்து ஊன்று கோலைக் கைக் கொண்டிர் சான்றுகள் பல சரித்திரமாய்ப் படைத்திட்டீர்
 

உலகமுள்ளவரை - எம் உயிர் நிலைக்கும் வரை காலம் வாழும்வரை - எம் கண்களின் பனித்துளி சமர்ப்பனமுமக்கு
சுவடுகள் பதித்துவர சுடராய்க் கைபிடித்திடுங்கள் சாதனை பல நிகழ்த்திட சத்திய வழி உணர்த்திடுங்கள்
ஆசிரியர் நீங்கள் - எம் ஆசுக்களின் இரியரும் நீங்கள் - எமை հll J67)ITԱյl LITLգLவாழ்வளித்த வள்ளல்களும் நீங்கள்.
ஆக்கம் முறசித் ஜுஸ்ஸா தரம் 12 கலைப்பிரிவு மட் மீரா பாலிகா மகாவித்தியாலயம் காத்தான்குடி - 6ெ,
SSSSSSS SLSSS SS SS SS ────────────────ཡང་།།
11.10.2004ல் காத்தான்குடி பிரதேசக் கல்வி அலுவலகம், காத்தான்குடி பள்ளிவாயல்கள், முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளனத்துடன் இணைந்து நடாத்திய சர்வதேச ஆசிரியர் தினம் - 2004 நிகழ்வில் வாசிக்கப்பட்ட கவிதை.

Page 11
山、
1919இல் அந்நியர் அடக்குமுறை ஆட்சிக்கெதிராகஆட்சியாளரின் அடக்குமுறையை எதிர்த்து டில்லியில் நடந்த ஹர்த்தால் ஆங்கிலேயரை அதிர வைத்தது. அடக்குமுறை ஆட்சியில் இந்திய மக்களை மதரீதியாகப் பிளவுபடுத்தும் பிரிட்டிஸாரின் தந்திரம் பலிக்காமல் போனது அரசுக்கெதிராக அன்றையப் போராட்டத்தில் பல்லாயிரக்கணக்கான இந்துக்களும், முளல்லிம்களும் ஒற்றுமையுடன் பெருமளவில் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது. அந்நிய ஆட்சியை எதிர்த்து அவர்களது போராட்டம் ஓர் உச்சநிலையை அடைய வேண்டிய காரணத்துக்காக காந்திஜி காங்கிரஸ் விவகாரங்களை சற்று ஒதுக்கி முன்கூட்டியே பம்பாய் நகருக்குப் போய் சேர்ந்து ஹர்த்தால் போராட்டத்துக்கான பணிகளில் ஈடுபட்டார். அந்நிய ஆட்சியிலிருந்து மக்கள் மீளவும், அவர்களது அடக்குமுறை ஆட்சியை ஒரு முடிவுக்குக் கொண்டுவர வேண்டுமானால் இந்திய மக்கள் சாதி, மத, இனவேறுபாடுகள் அடியோடு விட் டொழித்து திண் டாமை போன்ற குறுகிய எண்ணங்கள் மூடப்பழக்கங்களைக் கைவிட்டுவிட வேண்டும். எனும் காந்தியியின் தீவிரமான பிரசாரங்களும் போதனைகளும் அன்று மக்களின் மனதில் மிக ஆழமாகவே பதிந்தன. பிரிட்டிஸ் ஆட்சியாளர்களின் மனதில் இந்திய மக்களை மதரீதியாகப் பிரிக்கமுடியாது என்பது உறுதியா கிவிட்டது. காந்தியின் தடைசெய்யப்பட்ட நூல்கள் பகிரங்கமாக பயமே அச்சமோ இன்றி மக்கள் அதிக விலைகொடுத்து வாங்கினர். காந்தியியின் பிரதான கொள்ளை அகிம்சை, இதன் அடிப்படையே அஞ்சாமை எனும் தாரகை மந்திரம்தான். இதனை அரசியல் கிளர்ச்சிகளில் வெற்றிகரமாகச் சமாளிக்க முடியுமென தென் ஆபிரிக்காவிலே நிரூபித்துக் காட்டியவர் காந்திஜி,
இந்திய நாடு நாம் பிறந்த நாடு. இந்த புண்ணிய பூமி நமக்கே சொந்தம். நாம் எவருக்குமே அடிமையில்லை. அந்நியர் யாரும் நம்மை ஆளமுடியாது. ஆளக்கூடாது.
 

எவருக்கும் நாம் அஞ்சத்தேவையில்லை. சுதந்திரம் என்பது நமது பிறப்புரிமை. அந்நியர் ஆட்சி ஒழியவேண்டும். நமது மக்கள் ச்சமின்றி நடக்க வேண்டும். நமது இந்தியதேசம் நமக்கே சொந்தமாக வண்டும். இதற்காக மக்கள் ஓரணியில் திரளவேண்டும். இது ஒன்றே பாதும். அஞ்சாமை நமது பலம் என்று எளிமையான அருமையான ரக மந்திரத்தை இந்திய நாடு முழுதும் பயணம் செய்து மக்களின் மனதில் மிக ஆழமாக சுதந்திரத்தைப் பதியச் செய்தமை இந்திய சிய வாழ்வின் வெற்றிக்கு காந்திஜியின் மாபெரும் சாதனை என்றே றலாம்.
ஆட்சியாளர் அஞ்சி மனமாற்றம் அடையக்கூடிய வகையில் ாந்தியின் எதிர்ப்புப் போராட்டங்கள் எழுந்தன. அவரது தாரக மந்திரத்தை மனதில் கொண்ட மக்கள் ஓரணியில் திரண்டு ஆட்சியா ார்களுக்கெதிராகப் போராடத் தொடங்கியமை பின்னர் பிரிட்டிசாரை ருளவும் வைத்தது. மக்கள் மனதில் வேரூன்றிய துணிச்சலானது லப்போக்கில் ஆயுதமேந்தி அரசுக்கெதிரான பல போராட்டங்களை டத்தவும் துணைபுரிந்தது. பிரிட்டிஸாரின் அரசியல் தர்பாரை தைக்கவும் சட்ட மீறல்களும். அவர் நேருக்குநேர் எதிர்க்கவும் மக்களிடம் துணிவும் மேலோங்கியது. காந்திஜி என்னும் புதிய ந்திரவாதியின், அகிம்சை என்னும் மந்திரத்தை ஆட்சியாளர்கள் |றிந்திருக்கவில்லை. மக்கள் கொதித்தெழுந்து பல வீதிப் பாராட்டங்களில் ஈடுபட்டனர்.
நாடுமுழுவதும் ஒரே எதிர்ப்பு அலை வீசத்தொடங்கியது. சிப்பாய்களைக் கண்டால் ஓடி ஒளியும் இந்தியர்கள் அரசுக்கெதிரான பியல் போராட்டங்களிலும் சட்டத்தை மீறும் அரச எதிர்ப்பு டவடிக்கைகளிலும் துணிந்து செயல்பட்டமை பிரிட்டிஸ் ம்ராட்சியத்தை உலுக்கிவிட்டது. இதனால் அடக்குமுறை, சித்திரவதை, ப்பாக்கிக் குண்டு தாக்குதல், தூக்குமேடை. பழிவாங்கல். தலியவற்றால் மக்களின் தேசிய உணர்வை இல்லா தொழிக்க பற்சித்தனர். காந்தியை மக்களிடம் கலந்துரையாடாமல் தடுக்க
பட்டனர்.
பொங்கி எழுந்த பாஞ்சால தேசத்து மக்களிடம் செல்ல ரயிலில் பனம் செய்த அவரை பால்வால் என்னும் ஊரில் இறக்கி மீண்டும்

Page 12
பம்பாய்க்கே திருப்பி அனுப்பிவிட்டனர். கபட பாஞ்சாலம் என்னும் பஞ்சாப்பில் அந்நிய ஆட்சி அடக்குமுறை கோரதாண்டவமாடியது. (பலதலைவர்கள் விசாரணை எனும் பெயரில் அழைத்துச் செல்லப்பட்டு ஒழிக்கப்பட்டனர்) அமிர்தசரஸ், லாகூரிலும் பொலிஸ் தடியடிப் பிரயோகம், குண்டுத் தாக்குதல் நடத்தி மக்கள் மிருகங்கள்போல் வேட்டையாடப்பட்டு கொல்லப்பட்டனர். பஞ்சாப்பில் நெஞ்சை உறையவைக்கும் கோரச் சம்பவங்களும் படுகொலைகளும் தலையெடுத் தன. கோரதாண்டவமாடியது. மக்கள் வெகுண்டெழுந்து துணிச்சலோடு போராடத் தொடங்கினர். பல உயிர்கள் பலியாகின. பொது மக்கள் துன்புறுத்தப் பட்டனர்.
பாஞ்சாலத்தில் நடக்கும் அட்டூழியங்களை ஒரு முடிவுக்குக் கொண்டுவர எண்ணிய காந்திஜி 1919ல் மக்களை ஆசுவாசப்படுத்தி நாட்டில்அமைதியை ஏற்படுத்தி நிம்மதியை நிலைநாட்ட அமிர்தசரஸ் நகருக்கு ரயிலில் புறப்பட்டார். ஆனால் அவர் அங்கு சென்றதால் தங்களுக்கு ஏதும் விபரீதம் ஏற்படுமென அஞ்சிய பொலிஸ் அதிகாரிகள் பஞ்சாபில் அமைதி குலைந்துவிடும் எனக்கூறி அண்ணலை பால்வால் எனும் ஊரிலேயே இறக்கியதுடன் மீண்டும் பம்பாய்க்கே திருப்பி அனுப்பிவிட்டனர்.
A.ஜெயக்குமார்
பம்பாயில் காந்திஜி கைது செய்ப்பட்டதாக கேள்வியுற்ற மக்கள் கொதித்தெழுந்தனர். கடையடைப்பு, ஹர்த்தால் செய்து பல ஆங்கிலேயர்களைத் தாக்கினர். எங்கும் அமைதி இழந்து மக்கள் கொதித்தெழுந்து பிரிட்டிஸ் பொலிசாரைத் தாக்கினர். எனவே கல்கத்தாவிலும் அசம்பாவிதங்கள் தலைதுாக்கின. பல ஆயிரக் கணக்கான மக்கள் ஆங்கிலேயரால் சுட்டுக் கொல்லப்பட்டனர். நிலமை மிக மோசமாகிவருவதை உணர்ந்த காந்திஜி பம்பாய் வந்து சேர்ந்தார். அங்கு மக்களை ஆசுவாசப்படுத்தி அமைதியாக இருக்கும்படி வேண்டி னார். மக்கள் பொறுமையிழந்து தாக்கியதால் ஏற்பட்ட அசம்பா விதங்களை ஒரு முடிவுக்குக் கொண்டுவருவதாகக் கூறி தங்களின்
 

சத்தியாக்கிரகப் போராட்டத்தை நிறுத்தி வைப்பதாக ஆங்கிலேயருக்கு அறிவித்தார் காந்திஜி அமைதிவழி பிறந்தது. அதுவும் சொற்ப காலம்தான்.
அமிர்தசரளப் நகரில் "ஜாலியன் வாலாபாக்' என்னும் மைதானத்துக்கு ஒரேயொரு வாசல்மட்டுமே உண்டு. அங்கே காங்கிரஸ் கூட்டம் ஏற்பாடாக பல்லாயிரக்கணக்கான மக்கள் அலையலை யாய்த்திரண்டிருந்தனர். அந்த நேரத்தில் துப்பாக்கிகளுடன் பீரங்கிப் படைகளுடனும் அங்கு வந்த ஆங்கிலேய அதிகாரி ஜெனரல் டயர் என்பவன் மக்கள் வெள்ளத்தைக் கண்டு வெகுண்டு அடிமைப்பூச்சி களுக்கு எப்படி தைரியம் இந்தளவு வந்தது? இவர்களை எல்லாம் கட்டுப் பொசுக்குங்கள் "பயர் ஒல் இன்டியன் டோக்ளஸ்' எனப் பணித்தான். அவ்வளவுதான் இடிமுழக்கம்போல் தாக்கப்பட்டு இந்திய மக்கள் துப்பாக்கிகளுக்கும் பீரங்கிகளுக்கும் பலியாகி படுகாயமுற்று விழுந்து துடித்தனர். அங்கிருந்து கிணற்றுக்குள் பாய்ந்து உயிரை விட்டவர்கள் பலி லாயிரம் பேர். மக்களைப் பணயக் கைதிகளாக வைத் து நிராயுதபாணிகளான அவர்களை நயவஞ்சகமாகக் கொன்றுகுவித்து தங்கள் வெறித்தனத்தை அடக்கி புகழ் சேர்த்த ஆங்கிலேய அதிகாரிகள் ஆட்சிக்கு ஒர் முற்றுப் புள்ளிவைக்கும் சம்பவமாக இதனையும் எடுத்துக் கொள்ளலாம்.
அன்றைய அகோர சம்பவங்களுக்குப் பின்னர் காந்திஜி ஆங்கிலேய அதிகார வர்க்கத்துக்கெதிராக பல கண்டனக் கூட்டங்களை நடத்தினார். பல காங்கிரஸ் தலைவர்களையும், அரசியல் வாதிகளையும் டையறாது சந்தித்தார். மக்கள் சுதந்திரமாக வீதியில் இறங்கி நடமாட அடக்குமுறைக்கு முற்றுப் புள்ளிவைக்க என்ன செய்யவேண்டுமோ. அதற்கான பலவித ஆக்கபூர்வ நடவடிக்கைகளில் தன்னை அாப்பணித்தார் காந்திஜி படிப்பறிவற்ற பாமர மக்களுக்கு அவரது
டயர்வான இலட்சியங்களைப் போதித்தார்.
கொடுங்கோலாட்சியை எதிர்த்து உண்மைக்காகவும் அநீதியான ஆட்சி அடக்குமுறைகள் அடியோடு ஒழியவும் மக்களுக்கு ஓர் விழிப்புணர்ச்சியைக் காட்டினார். அனைத்து சக்திகளும் மக்களேயன்றி

Page 13
அது அரசாங்கத்தின் சக்தியல்ல என்பதை உணர்த்தி ஆங்கில நாட், மக்களோடு அந்நியோன்னியப்படுத்தி அவர்களிடம் ஒவ்வொரு இந்திய ணுக்கும் உண்மையான விசுவாசத்தை உண்டு பண்ண வேண்டுமென்பது அண்ணல் காந்தியின் இறுதி ஆசையாக இருந்தது. ஆயினும் தனது மக்களின் சுதந்திரக் காற்றை அனுபவிக்கும் மகிழ்ச்சியான காலகட்டத்தி அவரால் உயிர்வாழமுடியாமல் போனது விதிவசமே.
அப்படியிருந்தும் அவர் கட்சி வேலைகளிலும் மக்க தொண்டையும் மறக்கவில்லை. உணவு மருந்துகூட அவர் உட்கொள்ளாமல் தனது ஆச்சிரமத்தில் பல கூட்டங்களைக் கூட்டி சத்தியத்தையு அகிம்சையையும் மக்கள் மனதில் நிலைபெறவேண்டி பாடுபட்டார்.
அண்ணல் காந்தியடிகளின் உண்மை அன்பினாலும் உரிய தத்துவங்களின் அடிப்படையிலும் இன்று நாம் ஓர் உலகளாவிய ஒப்பற்ற இந்தியாவைக் காண்கிறோம். மானுட வாழ்வின் மக்களின் சேவகனா தன்னையே மாற்றிக் கொள்ள எவராலும் முடியும் என்பதை காந்தியடிகளின் வாழ்க்கைநெறி எடுத்துக் காட்டுகின்றது.
(வீரகேசரி 2.10.2004)
函 تهتم (தாரணவருடப் பலன்)
தாரணத்தில் மாரியறும் தாரணியில் கேடு உண்டாம் ஓராய் நீ சீவன் உய்யாது ~ பார் பிணியால் அய்யோ மடியும் அகவிலை கூடுமே வெய்யார் பயமே மிகும்.

எந்த மொழியிலும் கவிதை எனும் இலக்கியமே முதலில் ான்றியது என்பர். இதன் காரணமாக கலைகளுக்கெல்லாம் தாய் என்னும் பெரிய அந்தஸ்து கவிதைக்கு வழங்கப்பட்டது. இச் சொல் விதை) பல்லவர்கால ஆழ்வார் இலக்கியங்களிலிருந்து முகிழ்த்ததாகத் தெரிகின்றது. கவிதை, பா, பாட்டு, செய்யுள் என்னும் சொற்கள் தகருத்துடையனவாகத் தோன்றினாலும் கவிதை மற்றவற்றிலிருந்து வறுபட்டதென்பது தெளிவு.
இரண்டாயிரம் ஆண்டு பழமைவாய்ந்த தமிழ்க்கவிதை, பற்றிய பக்கங்களும் வரைவிலக்கணங்களும் பல்வேறு வகையின. இதனால் வை ஒன்றுக்கொன்று முரண்படுதல் இயல்பு இந்நிலையில் கவிதை என்றால் என்ன? என்ற கேள்வி எழுப்பி அதற்கு இதுதான் சரியான ாக்கம் அல்லது வரைவிலக்கணம் என்று தர முற்படுதல்
விதத்திலும் அறிவுடைமையாகாது.
கவிதையைப் படிப்பது அல்லது சுவைப்பது என்பது ஒரு பெரிய பவம் இந்த அனுபவமும் ஒருவருக்கொருவர் வேறுபடும். ஏனென்றால் த மனங்கள் அப்படி, மிகக் குறைந்த தெரிந்தெடுத்த சொற்களில் நிறைந்த பொருளை, கற்பனை வளத்தை, அழகியலை, ஆனந்தத்தை ளித் தருவது கவிதை. இந்தப் பண்பு நலன்களையே கவிதையின் பயன்பாடாக நாம் கொள்ள முடியும்.
தமிழ் இலக்கிய உலகில் தடம் பதித்த எழுத்தாளரும், ஞருமான பிச்சமூர்த்தி அவர்கள் ஆங்கில இலக்கியத்தில் வருக்கிருந்த பயிற்சி காரணமாக புதுக்கவிதை என்னும் ஒருவகை கவிதை இலக்கியத்தை 1943ல் கு.ப. ராஜகோபாலுடன் இணைந்து, மிழ் உலகிற்கு தரமுன்பு யாப்பமைதி கொண்ட செய்யுள் வடிவங்களே Iக்கில் இருந்தன. இச்செய்யுள் வடிவங்களும் கால ஓட்டத்தினால், ருவத்திலும் உள்ளடக்கத் திலும் - மாற்றம் பெற்றமையினை
ধ্ৰুবৰ 2:39,

Page 14
யாப்புக்களின் தோற்றம், வளர்ச்சிபற்றி ஆராய்ந்த அறிஞர்கள் எடுத்துக் கூறுவர்.
தமிழ் இலக்கியம் தோற்றம் பெற்றதாகக் கொள்ளப்படும் சங்ககாலத்தில் அகவல், கலிப்பா, ஆகிய செய்யுள் வடிவங்களே பிரபல்யம் பெற்றுத் திகழ்ந்தன. இவற்றின் பின் வெண்பா(கி.பி.1ம், 2ம் நூற்றாண்டு) விருத்தம் (கிறிஸ்துவுக்குப் பின் 6ம், 7ம், 8ம் நூற்றாண்டு.) என்னும் செய்யுள் வடிவங்கள் தோற்றம் பெற்று செல்வாக்குடன் விளங்கின. இவை இரண்டிலும் விருத்தம் அதன் இயல்பு காரணமாக இன்றும்நிலைத்து நிற்கின்றமையை இங்கு சுட்டிக் காட்டுதல் தகும்.
யாப்பமைதி பெற்ற பா வடிவங்களைக் கொண்டு தமிழ் இலக்கியங்கள் புனையப் பட்டாலும் அவற்றில் நாட்டார் பாடல்களின் செல்வாக்கு இருப்பதை அறிஞர் எடுத்துக் காட்டுவர். (பார்க்க மு.வ, வின் இலக்கிய வரலாறு) சங்க இலக்கியங்களிலிருந்து, இன்று பிரபல்யம் பெற்றுத் திகழும் கவியரசு வைரமுத்துவின் கவிதைகள் வரை, நாட்டார் பாடல்களின் தாக்கத்திற்குட்பட்டே தமிழ் இலக்கியம் வளம் பெற்றுவருகின்றமை ஒரு தனிவரலாறு
இதற்கான காரணம்தான் என்ன? ஓசை இன்பமே என்று இரண்டு சொற்களில் நாம் இக்கேள்விக்கு பதில் சொல்லிவிட முடியும். ஆம்! காதிற்கினிய ஓசைக்குக் கட்டுப்பட்ட தமிழன் கடவுளையே ஒசையாகவும், இசையாகவும் கண்டு மகிழ்ந்தவன் (ஓசை ஒரு ஒழுங்கிற்குள் கொண்டுவரப்படும்போது அது இசையாக வடிவமெடுக்கின்றது. )
ஓசையையும் உணர்ச்சியையும், கவிதையின் இருபெரும் இலட்சணங்களாக ஏற்றுக் கொண்ட பண்டையக் கவிஞர் பெருமக்கள் அவற்றை நன்கு புலப்படுத்தும் யாப்பமைதிக் கவிதைகளில் கட்டுண்டு கிடந்தமை ஒன்றும் வியப்புக்குரியதல்ல.
கம்பன், இளங்கோ,சயங்கொண்டார், பாரதி முதலான கவிச்ச க்கரவர்த்திகள் கவிதையின் ஓசை உணர்ச்சி இன்பத்தில் திளைத்துக் கிடந்தமைக்கு அவர்களின் படைப்புக்களே தக்க சான்று. பாரதி இன்றும் வாழ்ந்து கொண்டிருப்பது அவரது வசன கவிதைகளில் அன்றி .
 
 

இனிய சந்தம் நிறைந்த சிந்துகளிலும் கண்ணிகளிலும்தான் என்பதைத் தமிழ் உலகம் நன்கறியும்.
தமிழ் இலக்கியத்திற்குப் பெருமையையும் சிறப்பையும் நந்துகொண்டிருக்கும் இந்தக் கவிஞர்களே கருவில் திருவுடையவர்கள். கவிஞன் பிறக்கின்றான் என்னும் புகழ் பூத்த வாக்கியத்திற்கு இவர்களே மிகமிகப் பொருத்தமானவர்கள். வார்த்தைகள் எப்போதும் இவர்களுக்கு வசப்பட்டவை. கற்பனையும் அழகும் பொருட்சிறப்பும் இந்தப் பெருங் கவிஞர்களின் கவிதைகளில் கட்டுண்டு கிடக்கும். இரசிகமணி டி.கே.சி. கம்பனிடமும் முத்தொள்ளாயிரம் முதலான இலக்கியங்களிலும் தன்னை முற்றாக இழந்தமைக்கு இதுதான் காரணம், கவிதைகள் அவரைப் பொறுத்தவரையில் செவிநுகர் கணிகளே. இதனைப் பெரிய விமரிசகர் பேராசிரியர் கைலாசபதி அவர்கள் அமைச்சூர்(AMATEURE) முறை என்று எள்ளி நகையாடியமையை இலக்கிய அன்பர்கள் பெரிதாக எடுத்துக் கொள்ள வேண்டியதில்லை. (பார்க்க பேராசிரியர் கைலாசபதியின் இலக்கியமும் திறனாய்வும்) செய்யுள், காரிகை இலக்கணத்திற்கேற்ப செய்யப்படுவதென்றும், கவிதை அதிலிருந்து மாறுபட்ட ஓர் வடிவம் என்பதும் கற்றவள் அறிந்ததுதான். எனினும் கம்பன் செய்யுள் மரபை மீறி கவிதைபடைத்தவன் என்பார் பேராசிரியர் கே.கே. பிள்ளையவர்கள். (பார்க்க தமிழக - வரலாறு மக்களும் பண்பாடும்) பேராசிரியரின் இக்கூற்று கம்பனின் படைப்புக்கள் செய்யுள் வடிவில் இருந்தாலும் அவை எப்போதும் சுவைக்கக் கூடிய இறவாக் கவிதைகளே என்பதை உறுதி செய்கின்றது.
பேராசிரியர் எளில் வையாபுரிப்பிள்ளையவர்கள் கம்பராமாயணம் பற்றிப் பேசும்போது இக்காவியம் தமிழரது கவித்துவத்தின் பேரெல்லையை உணர்த்துகிறது. எத்தனைமுறை இவ்வுண்மையை வற்புறுத்திக் கூறினும் தகும் என்று குறிப்பிடுவார். (கம்பன் காவியம் பக்-9)
பாரதியின் "வசன கவிதை' பிச்ச மூர்த்தியின் "புதுக்கவிதை' என்பன தமிழ் கி கவிதை எடுத்த புதிய அவதாரங்கள் தான்.இவ்வவதாரத்திற்கு அமெரிக்க கவிஞன் வால்ட்விட்மனின் (1855) "புல்லின் நுனிகள் என்னும் கவிதைத் தொகுப்பு ஆதர்ஸமாக இருந்திருக்கலாம் என்பார் சி.சு. செல்லப்பா அவர்கள். ந.பிச்சமூர்த்தியின்
سيتك تستحمسـ

Page 15
கவிதைகளிலன்றி, தேர்ந்தெடுத்த கவிதைகள் -பக் 144) எனினும் அந்நவீன கவிதைகளை ஒட்டித் தோன்றியவைகளில் மிகப் பல "கானமயிலாடக் கண்டிருந்த வான்கோழிகளாகவே காட்சி தருகின்றன. *கண்டவன் நின்றவன் எல்லாம் கையில் பேனா எடுத்ததன் விளைவு என்று இதனைச் சுருக்கமாகக் கூறிவிடலாம்.
இலக்கிய வரலாற்றாசிரியர்கள், தமிழ்க் கவிதையின் வரட்சிக்கு நாயக்கர் காலச் (கி.பி 16ம், 17ம் நூற்றாண்டு) செய்யுட்களை எடுத்துக் காட்டுதல் வழக்கம். ஆயினும் இதுபோன்றதோர் வரட்சி மகாகவி பாரதியின் காலத்திலும் நிலவியமையை அவன் மிகுந்த மனவேதனையோடு இப்படி எடுத்துக் காட்டுகின்றான்.
“இங்கே கம்பனைப் போன்ற கவிஞர்கள் இக்காலத்தில் யாவர் இருக்கின்றார்கள்? கம்பனைப் போன்ற கவிஞன் அடிக்கடி தோன்றுவதில்லை என்பதைச் சிலர் ஆட்சேபமாகக் கொண்டுவரலாம். கம்பனுடைய பெருமையில் நூற்றிலொரு பங்கு கொண்டவர் யாவர் இருக்கின்றார்கள்?
பாண்டித்தியம் உடையோர்களும் பாண்டித்தியம் இருப்பதாக நினைத்துக் கொள்வோரும் கவிகள் கூறத் தொடங்கிவிடுகின்றார்கள். கவித்திறமை இருப்பதற்கு பாண்டித்தியம் ஒருவாறு அவசியம் என்றாலும், பாண்டித்தியம் இருப்போர்களுக்கெல்லாம் கவிதா சக்தி இருப்பதில்லை என்பதை நம்மவர்கள் மறந்துவிட்டார்கள்.
இலக்கண வித்துவான்கள் கூடத் தாம் கவிபாடாதிருந்தால் அது மதிப்புக் குறைவென்று நினைத்துக் கொள்கிறார்கள்.
இங்கனமாக உண்மையான கவிதை நாட்டிலே மறைந்து போய்விட்டது.(ந.பிச்சமூர்த்தியின் தேர்ந்தெடுத்த கவிதைகள் பக்-13) பாரதியின் இந்த எழுத்தைப் படிப்பவர்களுக்கு இன்று தமிழ்க்கவிதை உலகில் தாண்டவமாடும் மிக மோசமான கவிதை வரட்சி நிச்சயம் நினைவுக்கு வரும். புதுக்கவிதை என்ற பேரில் பத்திரிகைகளையும், சஞ்சிகைகளையும் ஆக்கிரமித்துக் கொண்டிருக்கும் அடியும் முடியுமில்லாத வெற்று வசனங்கள் அன்றையக் காகிதச் செய்யுட்களையும்விட பலமடங்கு தரம் குறைந்தவை.
இந்தத் துர்ப்பாக்கிய நிலையில் இருந்து தமிழ்க்கவிதை உலகை மீட்டெடுக்க, ஒரு கம்பனோ. பாரதியோதான் நமக்குத் தேவை. காலம் கைகொடுக்குமா?
ستتكدس.
<ඳුම බං>

அலைபாடும் அழகிய கிராழர்
வயல் எல்லாம் கதிர்கள்
வரம் பெல்லாம் கரும்பு
கயல் எல்லாம் மிண்னும்
கார் எல்லாம் நீலம்
அயல் எல்லாம் குளுமை
அவை எல்லாம் கண்டு
DuM6 øllaðistr66Ivarsi uusráðgar?
மண்போலும் உண்டோ ?
uaf uDaof upScióGuib
பசும் புல் தரைகள் தனி ஒரு அழகு
தங்கமும் தோற்கும் நனி இளங் காலை
நஞ்சை சூழ் மண்ணில் இனிய நந் காட்சி
இருவிழி போதா 1
சோணையதில் குளித்து
சொகுசாக வளரும் சேனையதில் சோழர்
செல்லப் பயிர் இதனை ஆணையது திரண்டு
அமுத சிமணத் திண்னும் ஊணையது தாதத
ஊர் ஒண்று கூரும் !

Page 16
சோழனுடன் மையர்
சுந்நிவர நிந்கும் நீரும் அதன் கைகள்
நிகர்க்கும் நம் கையை சூழும் ஒரு இனிமை
தூக்கம் விழி மூரும் ഖrg ഗ്ലൈക് ബfൺ
வாகு மிகு திழங்கு
தேன் ஒரும் காரு
தெரிந்து அதை வண்டு தான் ஒடி மாந்தும்
தருமாறி விழும் ஆண் பாலைச் சிசாரியும்
அதன் இளைய மண்று மாண் போலப் பாய்ந்து மயக்குகின்ற பூமி
தனி நூறு வகைகள்
காணும் மரமல்லாம் மணி மணியாய்த் தாங்கும்
மதுரமதில் சிசாட்ரும் பணி நூங்கும் காலை
பவளவாய்க் கிளிகள் இனிது என உண்ணும்
Aviape15i uDariasfail
 

uDara sørøsü urugub
மரை ஒழ மறையும் வான் தண்ணைப் பார்த்து
வண்ண மயில் ஆரும் தானி லில்லாம் பன்றி
கர2, முயல், சிறுத்தை ஊண் திண்ணும் நரிகள்
உநவாரும் தாரு
காரைப் பழம்; நண்கு
கனிந்த பழம் கறுக்கா
சூரைப் பழம்; மதுரம்
கிசாட்ருப் பழம் பாலை
வீரைப் பழம், இலந்தை
αδιδώι{ώ υιρώ υιούαρώ
ஆரமென அணியும்
அழகு மிகு கிராமம் !
கருநாவல் பழங்கள்
கணிதிராட்சை போல
குருவியது திண்று
தொட்டையது போடும்
அருகிருந்து குயில்கள்
அமுத இசை பொழியும்
விருட்சமதண் நிழல்
விழி தூங்கச் சிசய்யும்
(இண்றும் பாரும்)

Page 17
-வாசகர்” , S
என்றென்றும் அன்புடன் >வாசகம்.
நலம். நாடலும் அஃதே.
உங்கள் போது சஞ்சிகை ஆடி ஆவணி இதழ்" கிடைத்தது. மற்றவை | ஒழுங்காகக் கிடைத்தன. நான் நேரப்பிரச்சனை காரணமாக பதிலோ, ஆக்கமே அனுப்பவில்லை. அது உண்மையில் உங்களைப் போன்ற முயற்சியாளர்களுக்குப் பெரும் கவலையை அளிக்கும். முன்பு "ஞான' த்தில் உதவி ஆசிரியராக இருந்த வேளையில் நாம் அனுப்பும் சஞ்சிகைக்காக சந்தா வேண்டாம், கிடைத்தது என ஒரு கடிதம் போடவில்லையே என்ற ஆதங்கம் பிறப்பதுண்டு. இருந்தும் நானும் அந்தது, தவறை விட்டிருக்கின்றேன்என்பது சங்கடமாயிருக்கின்றது.
அடுத்து. இந்த இதழில் ஆக்கங்கள் எல்லாம் நன்றாக அமைந்துள்ளேன் குறிப்பாக அப்பு சிறுகதையினூடாக அமைதியான வாழ்க்கையை, கிராமப்பு நிலையை, இன்று பலரும் விரும்பும் சூழ்நிலையை அழகாகப் படம்பிடித்துள்ளிர்கள் மேலும் கதையின் முடிவில் பெரும் திருப்பம் ஏதுமின்றி இயல்பாக முடித்து இருப்பது மிகச் சிறப்பு அப்புவின் உடல் உழைப்பிற்கும், அவரின் வஞ்சகமில்லாத தன்மைக்கு 4 பெண் பிறந்தும் நல்ல வாழ்க்கை அமைந்து, இன்பமாக வாழ்கின்றார்கள் என்பது சாத்தியப்பட்டுள்ளது. உழைப்பு - உழைப்பு. இது ஒன்றுதான் அப்புவுக்குத் தெரியும் என்பது உழைப்பின் மகத்துவத்தைக் காட்டியுள்ளது.
இன்னும், சிறுவர் சிந்தனைப் பாட்டுகள் என்ற தலைப்பில் அறிவாளன் என்ற பெயரில் நீங்களாகவே இருக்கும்) அருமையான சிறுவர் பாடல் இடம்பெற்றுள்ளது சிறுவர் பாடல் மிகவும் தட்டுப்பாடு, ஏன் சிறுவர் இலக்கியங்களே பெரும் தட்டுப்பாடான நேரத்தில் இவ்வாறான ஆக்கங்கள் நூலுருப் பெறுவது அவசியம், நான் தாய்மொழி என்ற பாடத்தைக் கற்பிக்கின்றேன். அதுவும் ஆரம்பக் கல்வி ஆசிரியப் பயிலுனர்க்க அவர்களுக்கு சிறுவர் ஆக்கங்களைத் தயாரிக்கும்படியோ, முழுக்க முழுக்க சிறுவர் தொடர்பான சஞ்சிகைகளைத் தயாரிக்கும் பிரதியைக் கொடுக்கும் வேளைகளில் உதாரணமாகக் காட்டப் போதியளவு நூல்கள் இல்லாத நிலையில் சிறுவர்கள் தொடர்பான ஆக்கங்கள் நூலுருப்பெற வேண்டியதன் அவசியம் உணரப்படுகிறது. உங்களைப் போன்ற அனுபவம் மிக்கவர்கள்தான் இப்பணியைத் திறம்படச் செய்யவேண்டும் எனக் கேட்டுக்கொள்கின்றேன்.
"ஈழதேசத்தில் ஒரு சோழ தேசம் வரலாற்றுச் சிறுகதை எதையோ உணர்த்துவதாக இருக்கின்றது. மேலும் ஆசிரியர் தலையங்கத்தில் NT way ற்கு நல்லதொரு விளக்கம் எழுதியிருக்கின்றீர்கள். அக்கறை இல்லாத சிலர் Ny Way என்று குறிப்பிட்டதைப் படித்த ஞாபகம், எங்கள் பிரச்சனையில் NarWay தலையிட்டு முக்குடைபட்டதால் N Way என்று கருத்துரைத்ததாக நாள் நினைக்கின்றேன். வேறென்ன? நல்ல முயற்சி. பரந்து செல்ல வேண்டும். வாசக வட்டத்தை அதிகரிக்க வேண்டும். தொடர்ந்து முயற்சி செய்யுங்கள். சாத்தியமாகும்
அன்புடன் கல்வியியல் கல்லூரி வவுனியா_ நபார்த்திபன்,
تھی-r
 
 
 
 
 

புத்தகம்
அறியாமைப் பூட்டைத் திறக்கும் அற்புதக் கருவி !
இருளைப் போக்கும் இரவி !
சிந்திக்க வைக்கும் சீரிய ஆசானர் !
நல்ல நண்பனி நாளும் இனியது
தங்கத்திலும் தரம் உயர்ந்தது ! ट> 言
பேதையையும் B மேதையாக்கும் (ES பேரதிசயம் Sd
புதுப்புது உலகங்களை கணிமுனர் காட்டும் பூதக் கண்ணாடி
வீடு தோறும் இருக்க வேண்டிய ஞான விளக்கு
ל-13 3}>

Page 18
தொண்மை மிகு தமிழர் வரலாறு சில சாண்றுகள்
திருநெல்வேலியிலிருந்து திருச் செந்தூர் செல்லும்பாதை இருக்கின்றது. அந்தச் சிற்றுார் கறுப்பு, சிவப்பு, மண்மேடுகள் பரந்திருக்கும் பகுதி. ஆற்று நீர்ப்பாசனம், மயில்களின் உற்சாக நடனத்தை சாதாரணமாகப் பார்க்கமுடிகின்றது. தமிழ் வரலாற்றில் நீங்காத இடம்பிடிக்கப் போகின்றது என்பதற்கான எந்த ஆர்ப்பாட்டமும் இல்லாமல் அமைதியாக இருக்கின்றது அந்த ஊர். அங்குள்ள நிறையப் பேருக்குக் கூட அவ்வூரின் பெருமை தெரியவில்லை. தெரிந்தவர்களிடம் கிராமத்துக்கே உரிய ஒரு பெருமிதம்.
அப்படியென்ன பெருமை அந்த ஊருக்கு? அந்த ஊர் ஆதிச்ச நல்லூர், இங்கு இரண்டு நூற்றாண்டாகத் தொடர்ந்துநடைபெற்றுவரும் அகழாய்வில் கிடைத்துள்ள அரிய பொருட்கள் மிகவும் முற்கால தமிழ் நாகரிகம் செழித்தோங்கிய ஊர் ஆதிச்ச நல்லுர்தான் என்பதை உறுதி செப்கின்றன என்பதுதான் விசேஷம், விஞ்ஞான அணுகுமுறையுடனும் மிகுந்த கவனத்துடனும் ஆதிச்சநல்லூரில் செய்யப்பட்டுள்ள அகழ்வாய்வில் 600 சதுர கி.மீற்றர் பரப்பில் மட்டும் 160ற்கும் மெலான தாழிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. தாழிகள் என்பது இறந்தவர்களின் உடலைவைத்து அடக்கம் செய்யப்பட்டுள்ள பானைகள், உடலை அப்படியே கட்டி நிற்கும் நிலையில் தாழிக்குள் வைத்துப் புதைத்துவிடுவார்கள்.
எலும்புக் கூடுகள் உடையாத நல்லமுறையில் உள்ள பானைகள், பலவகையான கிண்ணங்கள், குடுவைகள், உருளைவடிவப் பாத்திரங்கள், பெரிய ஜாடிகள், கல்லினால் ஆன குழவிகள்,மாவரைக்கும் கல், காதணிகள், கடகம்; காப்புகள், வளையல்கள். மோதிரம், மகுடங்கள் போன்றவையும் ஆதிச்சநல்லூரில் கிடைத்துள்ளன. "இங்கு கிடைக்கும் தடையங்களை முன்வைத்து நம் முன்னோர்களின் கலாசாரத்தையும், சமூகப் பொருளாதார கட்டமைப்பையும் அறிந்துகொள்ள வாய்ப்புகள் கிடைக்கும்” என்கிறார் இந்த அகழ்வாய்வை மேற்கொண்ட தொல்லியல் துறைக் கண்காணிப்பாளர் சத்தியமூர்த்தி.
தமிழ்நாடு வரலாற்றுக்கு முந்தைய காலத்தின் பிறப்பிடம் என்பது ஏற்கனவே நிரூபணமாகியுள்ளது. என்றாலும் இப்போது ஆதிச்ச நல்லரில்
Fr ستخك؟

கிடைத்துள்ள தடயங்கள் கிட்டத்தட்ட கி.மு.100 வரைக்கும் செல்கின்றன என்பதுதான் விசேஷம்.அதாவது 3000 வருடங்களுக்கு முந்தையவை. இது தமிழர்களின் முற்கால நாகரிகம் என்பதுடன் உலகில் மனிதன் வாழ்ந்த தொன்மையான இடங்களில் தமிழகமும் ஒன்று என்பதை உலகத்துக்குச் சொல்ல மீண்டும் நமக்கொரு வாய்ப்பாக அமையும் என்று அறிஞர்கள் கருதுகின்றார்கள் “இந்த ஆய்வு மூலம் சங்க காலத்திற்கு நம்மால் திகதி குறித்துவிட முடியும். ஏனெனில் கண்டெடுக்கப்பட்டுள்ள புதைகுழிகளில் சங்க இலக்கியங்களில் கூறப்படும் அடக்குமுறைகள்தான் பின்பற்றப்பட்டுள்ளன.” என்கிறார் சத்தியமூர்த்தி,
திருநெல்வேலிப் பகுதிகளில் மட்டும்தான் இதுபோல் ஈமச்சடங்கு அதிகம் காணப்படுகின்றன என்பதும் குறிப்பிடத்தக்கது. ஈமச்சடங்கு கல் நடுகிற பழக்கம் முற்காலத்தில் தமிழகத்தில் இருந்திருக்கின்றது. ஆதிச்ச நல்லூரில் கிடைத்துள்ளவை கல்நடுகிற பழக்கம் உருவாவதற்கு முந்தைய காலகட்டத்தைச் சேர்ந்தவை. சில தாழிகளில் எலும்புக் கூட்டின் பகுதிகள் மட்டும்தான் காணப்படுகின்றன. இது உடலை எரிக்கும் பழக்கம் அப்போது இருந்திருக்கலாம் என்ற எண்ணத்தை ஏற்படுத்துகின்றது. எரித்து மிஞ்சிய எலும்புகளை தாழிக்குள் வைத்துப் புதைத்திருக்க வேண்டும் . இந்த எலும்புக் கூடுகளின் ஆய்வு முடிவுகள் இங்கு வாழ்ந்த மக்கள் நீண்ட தாடையை உடையவர்கள் என்று தெரிவிக்கிறது. எலியட் ஸ்மித் என்பவர் இங்கு வாழ்ந்த மக்கள் ஆல்பைன் இனத்தின் ஒரு பிரிவினரான ஆர்மினிய மக்கள் எனக்கூறியுள்ளார். திராவிட இனத்தின் ஒருகலவைக்கூறாக இந்த ஆர்மினிய இனக்கூறு கருதப்படுகின்றது.
வாள், கத்தி, உளி போன்ற இரும்புச் சாமான்களும் செப்பு வளையங்கள், கடுமண், மற்றும் கல் மணிகளும் பெருமளவில் கிடைத்துள்ளன. பானையின் வெளிப்புறத்தில் மென்புடைப்பு சிற்பமாக பெண் உருவமும், மான், மற்றும் பறவை, செடிகள் உள்ளன. "புடைப்பு சிற்ப பெண் உருவங்கள் தாய்த் தெய்வமாகக் கருதப்படுகின்றன. மேலும் வனப்பகுதியாக இருப்பதால் வள்ளி குறத்தியாக இருக்கவும் வாய்ப்பிருக்கின்றது. சிற்பத்தின் வரிவடிவம் சிந்து சமவெளி பானை ஒடுகளில் காணப்படும் சிற்ப வரிவடிவ ஒவியங்களுக்கு நிகராக உள்ளன. இவை ஆதிச்சநல்லூர் கலாசாரத்தின் தொழில் நுட்ப மேலாண்மையையும் அக்காலப் படைப்பாளியின் அழகியல் மற்றும் படிப்புத் திறன் நேர்த்தியையும் மக்களின் ரசனையையும் காட்டுவதாக இது உள்ளது.” என்கிறார் சத்தியமூர்த்தி.

Page 19
அடக்கம் செய்யப்பட்ட இடங்கள் கிடைத்துள்ளதால் பக்கத்திலேயே மனிதர்களின் வாழிடங்களும் கிடைக்க வாய்ப்புக்கள் உள்ளன எனக் கருதுகின்றார்கள் தொல்லியல் துறையினர். "அநேகமாக அது தாமிர பரணிக்குஇந்தப் பக்கம் இருக்கலாம். இனி அதைக்கண்டுபிடிக்க வேண்டுஎனும் திட்டத்துடன் இருக்கிறோம். தாமிரபரணிப் பாதை மாறியுள்ளது. எனவெ முதலில் அதன் பழைய பாதையைக் கண்டறிய வேண்டும் கிடைத்துள்ள மட்பாண்டங்கள் மணிப்பூர் பல்கலைக்கழகத்திற்கு ஆய்வுக்காக அனுப்பப்பட்டுள்ளன. அதன்முடிவு தெரியவரும்போது, அச்சமூகத்தின் ஈமச்சடங்குகளையும், நம்பிக்கைகளையும் வெளிப்படுத்து மாறு இருக்கும்’ என்கிறார்கள் அவர்கள்.
" ஆதிச்ச நல்லூர் அகழ்வாய்வின் தற்போதைய முக்கிய கண்டுபிடிப்பு தமிழ் எழுத்துவடிவம் தாழிக்குள் கிடைக்கப் பெற்றுள்ளதுதான். இந்த எழுத்துக்களின் காலத்தைக் கண்டறிய கார்பன்-14 என்ற சோதனைகளுக்கு அனுப்பப்பட்டுள்ளன.இதனால் காலம் கணிக்கப்பட்டு வெளியாகும்போது, தமிழ் எழுத்தின் முற்காலத்தைக் கணிக்கவும் இயலும்,
தமிழைச் செம்மொழி என்று சொல்கிறோம். இலங்கையில் கிடைத்துள்ள கல்வெட்டைக் வைத்து கிமு2ம் அல்லது கிமு 1 இலேயே தமிழ் செழுமையான ஒரு மொழியாகிவிட்டது என்று சொல்லப்படுகின்றது என்றால் அதற்கு எவ்வளவு காலத்துக்குமுன்பிருந்து கொஞ்சம் கொஞ்சமாக வளர்ந்த அது அந்த நிலையை அடைந்திருக்க முடியும், அதுபோல் நிச்சயம் அந்தக் கல்வெட்டை இரும்பு கொண்டு தான் செதுக்கியிருக்க வேண்டும் என்றால் , இரும்பும் கிமு2க்கு மிக முன்பிருந்தே ஆதிச்ச நல்லூரில் பழக்கத்திலிருந்திருக்க வேண்டும். அந்த வகையில் இவ்வாய்வின் முடிவு மிக முக்கியமானதாக இருக்கும்’ என்கிறார் சத்தியமூர்த்தி,
கல்தோன்றி மண்தோன்றாக் காலத்துக்கு முன் தோன்றிய முத்த குடிமக்கள் தமிழர்கள் என நாம் இனி கொலரைத் தூக்கிவிட்டுக் கொள்ளலாம்.
தளவாய் சுந்தரம், நன்றி: மினிகுமுதம் 25.1). 2004 .

சமாதான மேளம் சகலரும்
அடிக்கிறார்கள்
ஆனால்
சத்தந்தான் சரியாகக் கேட்கவில்லை
மேளச்சத்தத்தை மிஞ்சும் இன்னுமொரு ஊழைச் சத்தம் தெற்கில் உரத்துக் கேட்கிறது
அது இனவாதச் சத்தம் எங்களுக்கு எதிரான சத்தம்!
புத்த பெருமானே உன் புண்ணிய சீடர்கள் போர்க்கோலமா பூணுகிறார்கள் ?
இதுதான் உன் போதனையா ? போதிமர ஞானம்
இந்தப் பூமிக்குத் தேவைதானா ?

Page 20
s/
56 lb
づつージッ
குடியரச7. ஜனந/ அமெரிக்காவில் எ
நவம்பர் 2 அமெரிக்காவின் நாளைய வரலாற்சு
புளிற் வென்றால் போர்தான் !
மத்திய கிழக்கு மீண்டும் யுத்தகள
(gypsmona UTITZ Ž மீசை முறுக்குவா
சிங்கப்பூர், பிலிப் முறிலங்காவும்
அதன் கைக்குள்
ஆசியாக் கண்டம் அமெரிக்கத் தேச
ஜோன் கெறி தெ சில சமயம் ஜொ
என்றாலும், உலக
அமெரிக்கா ஏறி
 

ASA/ ந்தக் கொடி பறக்கும் ?
2ற மாற்றுமா ?
ртер .
DL6367ở GA IMATG)
élágtö
மாகும் !
ரிவானால் ர் எவி. கெனடி ஆகலாம் !
ன் முதுகில் நிற்கும் !
- LDLL3,356TL. -