கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: போது 2001.01-02

Page 1
Ob - IDTj 2001
Di
ஆசி GITT, GOTG
 
 
 
 
 
 


Page 2
எண்ணிய முடிதல் வேண்டும்
நல்லவே எண்ணல் வேண்டும்
திண்ணிய நெஞ்சம் வேண்டும்
தெளிந்த நல்லறிவு வேண்டும்.
- மகாகவி பாாரதி.
 

போது
தை - மாசி 2001 தோற்றம் 5-5-1998.
米米冰冰
ஆற்றுப்படுத்துநர்: தவத்திரு.
போல் சற்குணநாயகம் யே.ச.
ஆசிரியர்: வாகரைவாணன்
ஆசிரியர்குழு: து. நகுலேஸ்வரன் திருமதி கே. சண்முகநாதன் திரு. ஜே. ஐ. சில்வஸ்டர்
நிர்வாகம்: சி. எம். ஒக்கஸ்
U600fp6060T: இல, 1A மேல் மாடி வீதி, மட்டக்களப்பு
தொலைபேசி:
O65 - 23822
065ー28442
ஒளி படைத்த
கண்ணினாய்.
இது புதுயுகம். விஞ்ஞானத் தொழில் நுட்ப விந்தைகள் காட்சிப் பொருளாக மனிதக் கண்களை விழுங்கிக் கொண்டிருக்கும் யுகம் இது இணையே சொல்ல இயலாத இந்த யுகத்தில் வாழ்வதில் நம் எல்லோருக்கும் ஒருவித இறுமாப்பும் மகிழ்ச்சியும் இருக்கத்தான் செய்யும் இல்லையா?
மனித அறிவின் உச்சத்தையும் மலைக்க வைக்கும் அதன் ஆற்றல்களின் வீச்சையும் கண்டு இயற்கையே இடிந்துபோய் விட்டதாகத் தெரிகிறது. அதேநேரம் -
மனிதனின் அந்த அசுர அறிவும் ஆற்றலும் அவனை எங்கே கொண்டுபோய் நிறுத்தியிருக்கின்றன? அழிவின் விளிம்பில் அல்லவா? அப்படியானால் சொர்க்கத்தின் திறவுகோல் இராயப்பரிடமும், நரகத்தின் திறவுகோல் நம்மிடமும் தானே இருக்கிறது?
காலம் காலமாக நம் முன்னோர் கட்டிக்காத்து நம்மிடம் கையளித்து விட்டுச் சென்ற மனிதப் பண்பாடு இன்று காணாமற் போனோர் பட்டியலில் அல்லவா
| இடம்பிடித்துக் கொண்டிருக்கிறது. இந்த
நிதர்சனம் - இறக்காமல் இருக்கும்வரை
I

Page 3
பயங்கரவாதம் நம் நாட்டில் புகுந்து விளையாடத் தானே செய்யும்?
புறத்தோற்றத்தில் மயங்கிப் போய்விட்டான் இன்றைய மனிதன். ஒவ்வொருநாளும் புதுப்புது அவதாரம் எடுப்பதில் திருமாலையே திணற அடித்துக்கொண்டிருக்கிறான். வேடம் போடும் மனிதனின் விற்பன்னத் திறம் தான் அவனுள் பிரகாசித்துக் கொண்டிருக்கிறது. இதன் விளைவுதான் - இன்று இந்த உலகத்தில் நடைபெற்றுக்கொண்டிருக்கும் அக்கிரமத்தின் விஸ்தரிப்பு.
இன்றைய யுகத்தின் இந்த அருவருக்கத்தக்க அசுரத்தனத்தை முற்றாக அழித்து உலகத்தை இரட்சிக்கும் பொறுப்பு இன்றைய இளைஞர்களிடம் தான் இருக்கிறது.
ஆனால் - வானத்தை வசமாக்குவதற்கு முன் பூமியைப் புனிதமாக்கும் பணியில் இன்றே நீங்கள் ஈடுபட வேண்டும். அதற்காகவே உங்களை “போது” பாரதிபாஷையிலே ஒளிபடைத்த கண்ணினாய் உறுதி கொண்ட நெஞ்சினனாய். என்ற அழைக்கிறது. வாருங்கள். பூமிப் பந்தைப் பிடித்து நாமே சுழற்றிவிடுவோம்.அதில் ஒட்டியிருக்கும் அசுத்தங்கள். அநாகரிகங்கள். அதர்மங்கள். அத்தனையும் உதிர்ந்து போகட்டும். வாருங்கள். வாலிபர்களே.வாருங்கள். இந்தப் பூமியைப் புதிதாகப் படைப்போம்.
அன்பன்
14 - O - 2001 வாகரைவாணன்
I

பதின் நான்கு
- வாகரைவாணன்
தை பதின் நான்கு
தமிழ் மகளிர் நாளில் வையமெல்லாடம்
வயிரமாய் மின்னும் GoNUTUI 65d 55 Gou 6üb6 Apr D
புதுத்தேன் சிந்தும் isoshas6uorru GosNLAD6üb6uo TLD
களிப்பினில் மிதக்கும்.
* சிரனி புனைந்து 義。
. Gla- LD su bi smrt опиш தாரணி விரியும்
தண்ணிளம் போதில் ஆரணி வந்தாளர்
-eupg5g 6025ul Grit உஹாரணி கூடும்
உற்சாகக் கடலே!
ံခွါ
தெருவினில் காற்று
தென்றலாய் வீசும் விரும்பியே பூக்கள்
வீழ்ந்தடி குடும் அருவிகளிர் குளிர்ச்சி
அளர்ளியே இறைக்கும் உருவினில் அழகி
ஒயிலாக வந்தாளர்.
C01D

Page 4
கிளர்ளையின் மழலை
கதேமாய் இனிக்கும் பிள்ளை போல் மைனா
L'influLDTUIL GSL I9ò களர்ளொன இனிக்க
கருங்குயில் பாடும் துள்ளியே மயில்கள்
தோகையை விரிக்கும்
இயற்கையின் வாழ்த்தை ஏற்றுமே தையாளர் மயக்கவே வந்தாளர்
மாதவளர் ஆரணி வியக்கவே உலகம்
விருந்ததினைப் போற்றி நயக்குமே நெஞ்சில்
நம் மகளிர் வாழ்க!
 

கொழும்பு மாநகரம்
இனி னும் ஒரு தடவை இயந்திரமயமாகும் நேரம். நீணி ட நெடிய தார்
றோட்டுக்களைத் தேய்த்தபடி ஒரு சில வாகனங்கள் தம் ஒட்டப் பந்தயத்தை ஆரம் பிக்கின்றன. வீதியின் ஒரமாக ஆங்காங்கே குன்றுபோல் குவிந்து கிடக் கும் குப்பைகளுக்குள் புதையலைத் தேடும் மாநகரத்தின் சில மகாஜனங்கள். அவர்களோடு போட்டிபோடும் சொறி நாய்கள்.
ஒட்டுப் போடுவோரின் ராஜாங்கம் ஒரு பக்கம். இவை பற்றி எவ்வித பிரக்  ைஞயும் இனி றி b 60) L பாதைகளைச் சொந்தமாக்கிக் கொண்டு நெடும் துயில் கொள்ளும் ஒன்றிரண்டு அரிய மானிட ஜென்மங்கள்.
கொழும்பு ஒயின்மன் றோட்டில் இருக் கும் தமது குச் சு மாடி வீட்டிலிருந்து இரைக்க இரைக்கக் கீழே இறங்கி வருகின்றார் பவள விழா வயதுக்காரரான பாக்கியநாதன். இறங்கியவர் வழக்கம் போல பண்டாரநாயக்கா மாவத்தையிலுள்ள
Scussiazza AZZAZ-autoMAYAN கிழிந்த செருப்பு, குடைகளுக்கு-க
VMySSN
இந் துக் கோயரிலன் எதிர்பக்கமாகப் போய் நிற்கின்றார். பணம் கைமாற தினசரிஒன்று அவரது கைக்கு வருகின்றது. அவ்விடத்திலேயே நின்று அவர் அதைப் புரட்டுகின்றார். அதில் ஒரு செய்தி அவரது முகத்தில்
கவலைக் கோடுகளை வேகமாகவே இழுத் து விடுகின்றது.
செய்தியைப் படித்ததும் பத்திரிகையை மடித்துக் கையில் எடுத்துக்கொண்ட பாக்கியநாதன்
C03)

Page 5
நேராக வீடு திரும்புகின்றார். குழந்தைப் பிள்ளையரின் பாதம் போல அமைந்திருந்த மாடியின் குறுகிய படிகளில் ஏறும் போது அஸ்மாக்காரரான அவர் இன்னும் அதிகமாகவே இளைக்கின்றார். ஆனால் அதைப்பற்றியெல்லாம் கவலைப்படாத
அவர் மனம் நாட் டின் எதிர்காலத்திலேயே ஆழ்ந்துபோக அது அவரைப் பெரிதாகவே பயமுறுத்துகின்றது.
மாடியில் ஈசிச்சேரில் வந்தமர்ந்த பாக்கியநாதன் ஒரு குளிசையை எடுத்து வாய்க்குள் போட்டுக்கொண்டு தண்ணிர் இரண்டு மிடறு குடிக்கின்றார்.
அவர் கையில் பத்திரிகை புரள்கின்றது.
அதனோடு நாட்டின் கடந்தகால நிகழ்வுகளும் அவர் மனத்தில் அலையாக எழுகின்றன. அவற்றால் அவர்
ஒரு தேசத்தை இரணி டு தேசமாக்குவதற்கான விதையை ஊன்றிய ஆயிரத்துத் தொள்ளாயிரத்து ஐம்பத்தாறாம் ஆண்டு ஆனி மாதம் ஐந்தாம் நாள் அது. காலைப்பொழுது ஒருவித தயக்கத்துடனேயே கண் விழிக்கின்றது. காற்று உல்லாசமாக நடைபயிலும் காலிமுகக் கடற்கரை யிலும் அன்று சிறிதாக ஒரு புழுக்கம். கடலும் தன் ஆர்ப் பாட்டத்தை நிறுத்திவிட்டு என்னவோ ஏதோ என்று
அப்படியே அமைதியாக அடங்கி விடுகின்றது.
ஒரு குச் சி போன்ற மெல்லிய உயர்ந்த மனிதர் அவரைத் தொடர்ந்து இன்னம் பலர் கடற்கரையை நோக்கி நிதானமாகக் காலடி எடுத்து வைக் கண் றனர். எல் லார் முகங்களிலும் பெரிதாக ஒரு இறுக்கம். எதையோ சாதித்துவிடப் போவது போன்ற உணர்வு. நம்பிக்கை.
கூடிவந்த அனைவரும் ஒரு குடும்பம் போல அந்த வெளியரில் அமர்ந்து கொள்கின்றன்ர். சில மணித்தியாலம் தான். சீதை அமர்ந்திருந்த அசோகவனத்தை
அடித் துச் நோக்கித் திரண்ட செல்லப்படுகின்றார். ഗ്ര66തg அரக் கிகள் போல காட்ையர் கூட்டம்
ஒன்று தன் கைவரிசையை காட்டுகின்றது. ஆயுதபாணிகளிடம் நிராயுதபாணிகள் அகப்பட்டுப் பட்டபாடு. காலிமுகக் கடற்கரை 6 (5 யுத்த களமாகவே மாறிவிடுகின்றது.
இந்தக் கடற் கரைப் போரைத் தொடர்ந்து உருவான பண்டா - செல்வா என்னும் வெறும் காகித எழுத்துக்கள். இருந்து

அந்த எழுத்துக்களை எதிர்த்து புத்தபிரானின் சீடகோடிகள் செய்த போர்ப் பிரகடனம். அதிகாரத் துக்காக இலங்கையின் மாக்கிய வல்லி நட்த்திய கண்டி யாத்திரை. காகித எழுத்துக்கள் காணப் போதுள் கலைந்து போனமை. முதல் தடவையாக இந்நாட்டில் தமிழன் அகதி என்று அவன் முதுகில் முத்திரை குத் தய இனக் கலவரம் . வினைவிதைத்த அந்த ஒக்ஸ்போர்ட் அரசியல்வாதி அதை அறுவடை செய்த விதம்.
இதைத் தொடர்ந்து அறுபதுகளில் இன்னுமொரு அரசியல் அலை எழுகின்றது. சாத்வீகமான அந்த அலையைக் கண்ட ஆட்சிபீடம் மீண்டும் ஆயுதபாணியாகின்றது. களத்தின் துரோணர் போல ஆயுதங்களைத் தூக்கி எறிந்துவிட்டு அமர்ந்திருந்த சத்தியாக்கிரகிகள் மீது அது துட்டத் துய்மனாகப் பாய்கின்றது.
எழுபதுகளில் தமிழ் மாணவர்களை அபிமன்யுக்களாக, இந்திரஜித் துக் களாக மாற்றிய தரப்படுத்துதல் என்னும் அரசியல் அலை சுழன்றடிக்கின்றது. அது, யாழ் குடா நாட்டில் துவக்குகளின் ஆட்சியை ஆரம்பித்து வைக்கின்றது. வங்கிகளில் இருக்கும் பணம் . அதற்குள் இருக்கவே அச்சப்படு கின்றது.
இதனை த தாங் கரிக
கொள்ள முடியாத இலங்கையின் பாக்கியவல்லி எழுபத்தேழில், போரா சமாதானமா என்று பொங்கி எழுந்து கேட்க, போர்தான் என்று தமிழ் இந்திரஜித் துக் கள் எணர் பத்து மூன்றில் முரசு கொட்டுகின்றனர். கொழும்பு மயானமாகின்றது. ஆங்காங்கு தமிழர்கள் பிணங்களாக. தெருக் களில். வீடுகளில். பக்கத்து வீட்டுக்காரரான இந்தியாவால் இதனைப் பார்த்துக்கொண்டிருக்க முடியவில் லை. இந் தரா காந்தியின் கூரிய மூக்கு இலங்கை விவகாரத்தில் நுழைகின்றது.
இத்தனை அரசியல் வரலாற்று அலைகளாலும் இழுத்துச் செல் லப் பட்ட பாக்கியநாதனை அவரது மகள் சித்திராவின் குரல் வெளியே பல வந்த மாக கொணர் டு வருகின்றது. ஈசிச்சேரில் இருந்து எழுந்த பாக்கியநாதன் குளியல் அறைக்குள் நுழைகின்றார். மன உஸ் ணத்தினாலே அந்தக் காலையிலேயே வியர்த்துப் போன அவர் “வடிவரை”த் திறந்து விட்டு அதன் கீழே நெடுநேரமாக நிற்கின்றார்.
குளியல் அறையரில்
C05)

Page 6
வெளியே வந்த பின்பும் அவ்வுவடிணம் ஆப்படியே இருப்பதை உணர்ந்த பாக்கி ப நாதன், மன உஸ்ணத்திற்கு குளியல் ஒரு மருந்தல்ல என்று நினைத்தவராய், அன்றைய காலை sd 60060D 6) விரைவாகவே முடித்துக்கொண்டு வெளியே புறப்பட ஆயத்தமாகின்றார்.
தந்தையின் ஆயத்தத் தைக் கவனித்த சித் திரா, “அப்பா. இண்டைக்கென்ன வெள்ளணையி லேயே புறப் பட்டுத் திங் க.” என்கிறாள். அன்றைய பத்திரிகையின் அந்தச் செய்தியால் வெறுப்புற்றிருந்த பாக்கியநாதனுக்கு இப்போது மகள் மீது கொபம் வருகிறது. அது அவர் பதிலிலேயே தெரிகின்றது.
"ஏன் நீ பேப்பர் வாசிக்கிற தில்லையா. றேடியோ ரீ வி. ஏதும் எட்டுறேல் லையா. இண்டைக்கு விகாரமாதேவி பூங்காவில் புத்த பிக்குகள் கூடி நோர்வேயின் சமாதானத் திட்டத்தை எதிர்த்து ஊர்வலம் போகப் போறாங்களாம்.
அதை ஏன் நீங்க பார்க்கப் போறிங்க. கொழும்பு எரிமலையாக இருக்கிற நிலையில.
பிரச்சினை எப்பதான் இல்லை. நான் போயித்து வாறன்.
மகளின் மற்றுமொரு
பண்டாரநாயக் கா
குறுக் கீட்டை விரும் பாத பாக் கியநாதன் குடையை எடுத்துக்கொண்டு மாடிப்படிகளில் இருந்து மெதுவாக இறங்குகின்றார். அவர் கால்கள் மாவத்தை முஸ்லிம் மகளிர் வித்தியாலய ஒரமாகச் சென்று கெப்பிற்றல் தியேட்டருக்கு முன்பாகப் போய்த் தரிக்கின்றன. அங்கே அவர் வரவை எதிர்பார்த்திருந்ததுபோல 155ம் இலக்க பஸ் வருகிறது. அதில் அவர் ஏறிக்கொள்கிறார்.
பிக்கியநாதன் ஒரு நீண்ட காலக் கொழும்பு வாசி. அதனால் விகாரமாதேவி பூங்காவில் கூடியிருந்த மஞ்சள் மனிதர்கள் உதிர்த்துக் கொண்டிருந்த பொன்
மொழிகள் எல்லாம் அவர் இதய தி தை ஊடுருவிச் செல் கின்றன. அவற்றைத்
தாங்கமுடியாத அவர், தாம் அமர்ந்திருந்த சீமென்ற் பெஞ்சில் இருந்து எழுந்து பூங்காவின் வாயிலை நோக் கயவாறு சாந்தமாக அமர்ந்திருக்கும் புத்தபெருமானின் சிலை முன்பாக நிற்கின்றார். அவர் மனக்கண்ணில் தாம் படித்த புத்த பெருமானின் வாழக் கை வரலாற்றேட்டில் இருந்து ஒரு முக்கிய பக்கம் புரள்கின்றது.
G06)

மலைப்பால் குடித்துச் செழித்து வளர்ந்த நாடு மகதம். இந்தியப் பேரரசுகளில் இது தான் இமயம், பிம்பராசன் இதன் பேரரசன். இந்த எவரெஸ் ரை நோக்கி ஒரு நாள் புத்தபிரான் எழுந்தருள்கின்றார். அவர் வரும் வழியில் ஆட்டு மந்தையின் பேரனி ஒன்று அணிவகுக்கின்றது. பிம்பராசன் நடத்தவிருக்கும் பெரு வேளிர் வரியில் உயிர்ப் பலியாக இருப்பவை இந்த அறிவில் லாப் பிராணிகள்தான் என்று நினைத்த புத்தபிரானின் கண்களில் இருந்து நீர் பெருக்கெடுக்கின்றது.
நாட் டின் எல் லையை அண்மித்த புத்தபிரானை ஓடி வந்து வணங்கி வரவேற்கிறான் பேரரசன் பிம்பராசன். அவர் அவனுக்கு அறிவுரை பகர்கின்றார்.
“அரசனே, உன் வேள் வியை நிறுத்து. உயிர்ப்பலியிடு தல் பெரும் பாவம். இறைவன் இரக்கம் உள்ளவன் என்றால் அவன் நிச்சயம் இந்தப் பலியை விரும் பவே மாட் டான். ஒவ்வொரு உயிரும் இந்த மண்ணில்
வாழப் பிறந்தவை. அதனை அழிக்க
யாருக்கும் உரிமையில்லை.
புத்தர் பிம்பிராசனுக்கு அறக் கருத்துக் களை போதித் துக் கொண்டிருக்கிறார். கருணாமூர்த்தியின் அந்தக் கருத்துக்களைக் கேட்ட
பிம்பராசன் கண்களிலிருந்து நீர் பெருக்கெடுக்கின்றது. அடிகளின் பாத கமலங்களில் வீழ்ந்து அவன் மன்னிப்புக் கேட்கிறான். அவர் அவனை ஆசீர்வதிக்கின்றார். பலிப்பொருளாக வந்த ஆடுகள் அனைத் தும் பத் திரமாகத் திரும்புகின்றன. அதனைக் கண்ட புத்தர் அன்பு வெள்ளத்தில் மிதக்கிறார்.
புத் தர் பெருமானினி வாழ்க்கை வரலாற்றில் ஒரு சிறு பகுதியில் திளைத்து நின்ற பாக்கியநாதனுக்கு சிலை வடிவில் இருந்த புத்தர் கண்ணிர் விட்டு அழுவது போன்ற பிரமை ஏற்படுகின்றது. அவர் அந்த இடத்திலேயே வெகு நேரமாக நிற்கின்றார்.
அடுத்த நாட் காலை, வழக்கம் போல, பண்டாரநாயக்கா மாவத்தையில் அதே இடத்தில் தினசரி ஒன்றை வாங்கிக்கொண்ட பாக்கியநாதர் அதன் முன் பக்கச் செய்தியையும் அதனோடு இருந்த வண்ணப்படம் ஒன்றையும் வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டிருக்கிறார்.
அந்தச் செய்தியில் முதல்
நாள் புத்த பிக்குகள் நடத்திய ஊர்வலம் - அவர்கள் எழுப்பிய
G07)

Page 7
கோஷம் அனைத்தும் விபரமாகச் சொல்லப்பட்டிருந்த அதேவேளை, இளம் புத்த பிக்கு ஒருவர் ஒருவித வெறித் தனத்தோடு நோர்வே நாட்டுத் தேசியக் கொடியைத் தீயிட்டுக் கொழுத்துவ  ைதயும் அந்த வணி ணப் படம் தெளிவாகக் காட்டுகின்றது.
பத்திரிகையோடு வீடு திரும்பிய பாக்கியநாதரின் மனத்தைப் பத்திரிகைச் செய்தியும் இளம் பிக்குவின் செயலுமே ஆட்டிப் படைக்கின்றன.
எத்தனை ஆண்டுகளாக இந்த மண்ணில் யுத்தம் நடக்குது. இதனால் வேதனை அடைந்த ஒரு அந்நிய நாடு உதவி செய்ய முன் வந்ததுக்கு இப்படியா கீழ்த்தரமாக எதிர்ப்பைக் காட்டுகின்றது? தொடர்ந்து எரியத்தானா வேணும்.? இதன் அடையாளமாகத்தானா நோர்வே நாட்டுத் தேசியக் கொடியை எரித்துக் காட்டியிருக்கிறார்கள்?
பாக்கிநாதனின் மனதில் இந்தக்
அப்ப இந்த நாடு,
கேளிர் விகள் பூதா கரமாக எழந்தபோது விகாரமாதேவி பூங்காவின் புத்தர் சிலை கண்ணிர் வடித்தது போல் தனக்கு ஏற்பட்ட பிரமையும் அவர் நினைவுக்கு வருகின்றது. அதே சமயம், அவர் மனதில் இன்னுமொரு கேள்வியும் தலைதுாக்குகின்றது. அன்று, புதிதர் அந்த அப் பாவி ஆடுகளுக்காக அவர் கண்ணிர் வடித்தார். அப்படியானால் , இப்போது எந்த ஆடுகளுக்காக அவர் கண்ணிர் வடிக்கின்றார்? இந்தக் கேள்விக்கான பதிலை அவரே கண்டு பிடித்தபோது அவரது உணர்ச்சியை அவரால் அடக்க முடியவில்லை. சற்றுத் துTரத் தரில் விளையாடிக் கொண்டிருந்த அவரது ஐந்து வயதுப் பேர்த்தியை ஒடிப் போய்த் தூக்கிக் கொள்கின்றார். வாய் கடவுளே எண் று கூவி அழைக்கின்றது. (கற்பனையும் கலந்தவை)
Ջ – 600i 60) ԼDեւյլն
எப்பொருள் யார் யார் வாய்க்கேட்பினும்
மெய்ப்பொருள் காண்பதறிவு ~
~ அப்பொருள்
- திருக்குறள்

falsessi éfye EU. I.
Rai starts.see
மாஸ்டர் சிவலிங்கம்
பாலர்களுக்கு - சிறுவர்களுக்கு இறைவன் அரிய ஆற்றலை வழங்குகிறான். பெரியவர்களையே திணற வைக்கும் அளவிற்கு சிறுவர்களின் ஆற்றல் சிறந்து விளங்குகிறது. அதற்குச் சில உதாரணங்கள்
பாலர் பாடசாலை ஒன்றிலே சிறுவன் ஒருவன் இடது கையால் எழுதிக்கொண்டிருப்பதை ஆசிரியை அவதானித்தார். சிறிது நேரத்தில் அந்தச் சிறுவன் வலது கையால் எழுத ஆரம்பித்தான்.
ஆசிரியை அந்த சிறுவனிடம் சென்று “தம்பி, நீங்க இடது கையால் நன்றாக எழுதுவீர்களா? அல்லது வலது கையால் நன்றாக எழுதுவீர்களா?” என்று கேட்டார்.
‘ரீச்சர்! நான் இடது கையாலும் நன்றாக எழுதமாட்டேன். வலது கையாலும் நன்றாக எழுதமாட்டேன். பென்சிலால் தான் நன்றாக எழுதுவேன்" என்றான் அந்தச் சிறுவன். அவனுடைய பதிலைக் கேட்டதும் ஆசிரியை அதிர்ந்துபோய் விட்டார்.
SSLSLLLSLSLLLSSeeSLLLLSSSLL LSeLSSSLLLSLLSS LSqeSSSLSLLSSLLSSLLSSLLSSLSLLSLSSLLSLSSL00LSS LSeAASLLLLLSL LSLSLLL0LLSSSSSSASHrSLrLLS
7S as W 7S7N 7S7s 787s as
சில சிறுவர்கள் விடுகதை, பொது அறிவுக் கேள்விகள் கேட்டு விளையாடிக் கொண்டிருந்தனர். அப்போது பிரபல கவிஞர் ஒருவர் அங்கு வந்தார். அவர் சற்றுத் தலைக்கணம் உடையவர்.
“குழந்தைகளே, பொது அறிவுக் கேள்வி கேட்டு விளையாடுகிறீர்களா?. சரி, என்னிடம் ஒரு கேள்வி கேளுங்கள் பார்க்கலாம். நீங்கள் கேள்வி கேட்டு முடிவதற்குள் நான் விடை கூறி முடித்துவிடுவேன்’ என்றார் கவிஞர்.
இரண்டு அடி நீளம், இரண்டு அடி அகலம், இரண்டு அடி ஆழம் உள்ள மடுவுக்குள் - கிடங்கிற்குள் எவ்வளவு மணல் இருக்கும்? சீக்கிரம் சொல்லுங்கள் என்றான் ஒரு குட்டிப்பையன்.
C09)

Page 8
கவிஞர் மனதுக்குள் கணக்குப் பார்த்துக் கொண்டிருந்தார். “என்ன மொக்கு மாமா! இவ்வளவு நேரம் யோசிக்கிறிங்க. மடு - அதாவது கிடங்கிற்குள் மணல் இருக்குமா?’ என்று கேட்டுவிட்டு வெடிச் சிரிப்பு சிரித்தான் அந்தக் குட்டிப் பயல். கவிஞர் தலை குனிந்தார்.
YSASASYg Sog og Sog Sog Yg
涤亲亲米米米米※※※
அப்போது எனது மகனுக்கு மூன்றரை வயது. கொழும்பில் நாங்கள் வசித்த வீட்டிற்கு எதிர்ப்புறத்தில் அமர்ந்திருந்த வீட்டிலும் மூன்றரை வயதுடைய ஒரு சிறுவன் இருந்தான்.
எனது மகன் எங்கள் வீட்டு வாசலில் நின்றால் எதிர்வீட்டுச் சிறுவனும் அவர்கள் வீட்டு வாசலில் வந்து நிற்பான். எனது மகன் அந்தப் பையனைப் பார்த்ததும் “அடேய்!” என்று சத்தம் போடுவான். உடனே அந்தச் சிறுவனும் “அடேய்!” என்று கத்துவான். இது அடிக்கடி நடைபெறும் சம்பவம்.
ஒரு நாள், நான், எனது மகன் விவேகானந்தனைப் பார்த்து “விவே!” அடேய் என்று சொல்வது கூடாத பழக்கம். இனிமேல் நீங்கள் அந்தப் பையனைப் பார்த்ததும் “அடேய்’ என்று கூப்பிட்டால் பிரம்பால் அடிப்பேன்’ என்று கூறி, பிரம்பொன்றை மூலையிலே வைத்தேன்.
அடுத்த நாள் எனது மகன் வாசலுக்குப் போனான். அந்தப் பையனும் அவர்களுடைய வாசலுக்கு வந்தான்.
வழக்கமான “அடேய்” விளையாட்டு நடக்கப்போகிறது. ‘அடேய் என்று கூறினால் நமது மகனுக்குப் பிரம்பால் அடி கொடுக்க வேண்டும் என்று எண்ணிக்கொண்டு பிரம்பை ஓங்கியபடி பதுங்கிப் பதுங்கிச் சென்று அவனுக்குப் பின்னால் நின்றேன்.
அந்தப் பையனைப் பார்த்து அடேய்! என்று கூறியவன் என்னைக் கண்டுவிட்டான். உடனே அவன் ’அடேய்” என்று சொல்ல மாட்டேன். அது கூடாத பழக்கம். இல்லையா அப்பா?” என்று என்னிடம் கேட்டான்.
அடிக்க ஓங்கிய பிரம்பு என்னையும் அறியாது கீழே விழுந்தது.
Wszysg Ada Dogg Ogg VM IMAM ********************

பல துண்டுகளாகக் கிழிந்துவிட்ட உலகப் படம் ஒன்றைப் பொருத்துவதற்குப் படாதபாடு பட்டுக்கொண்டிருந்தார் ஒருவர். எவ்வளவு முயன்றும் அவரால் அந்த உலகப்படத்தை முன்போல் பொருத்த முடியவில்லை.
ஐந்தாவது வகுப்புப் படிக்கும் பையன் இதனை அவதானித்துக் கொண்டிருந்தான். “அப்பா இந்த உலகப்படத்தைப் பொருத்த முடிய வில்லையா? என்னிடம் அந்தத் துண்டுகளைத் தாருங்கள். நான் பொருத்தித் தருகிறேன்’ என்றான் அந்தப் பையன்.
‘என்னாலேயே முடியவில்லை உன்னால் எப்படி முடியும்?” என்று முணுமுணுத்தபடி மகனிடம் கிழிந்த உலகப்படத்துண்டுகளைக் கொடுத்தார். அந்த மனிதர்.
இரண்டு மூன்று நிமிடங்களுக்குள் அந்த உலகப் படத்தை முன்போலப் பொருத்திவிட்டான் அந்தச் சுட்டிப்பயல். அதைப் பார்த்த தந்தைக்குப் பெரிய ஆச்சரியம்.
“மகனே! துண்டு துண்டாகக் கிழிந்த உலகப் படத்தைப் பொருத்துவதற்கு நான் சுமார் அரை மணி நேரம் முயற்சி செய்தேன். முடியவில்லை. நீ எப்படி ஐந்து நிமிடங்களுக்குள் உலகப் படத்தை சரியாகப் பொருத்தினாய்?’ என்று ஆச்சரியத்துடன் கேட்டார் தந்தை.
“அப்பா! இந்த உலகப் படத்துக்கு பின்னால் ஒரு மனிதனின் படமும் இருக்கிறது. முதலில் அந்த மனிதனின் தலையை வைத்து இரு கைகளை வைத்து, வயிற்றை வைத்து, இரு கால்களையும் வைத்தேன். மனிதனின் உருவம் சரியாக அமைந்து விட்டது. மறுபக்கம் திருப்பினேன் உலகப்படம் சரியாக அமைந்துவிட்டது. அப்பா மனிதன் சரியாக இருந்தால் உலகம் சரியாக இருக்கும்”, என்றான் அப்பனை வென்ற அந்தச் சுப்பன். தந்தை, மகனைக் கட்டி அணைத்துப் பாராட்டினார்.
பாலப்பிராயத்திலே - சிறு வயதிலே பிள்ளைகளக்கு இறைவனால் வழங்கப்படும் இப்படியான ஆற்றல்களை மேலும் உற்சாகப்படுத்தி வளர்த்துவிட்டால், எதிர்காலத்திலே அவர்கள் பல துறைகளில் பெயரும் புகழும் பெற்ற விளங்குவார்கள்.

Page 9
சிறு வயதில் சிறந்து விளங்கும் அந்த ஆற்றலை மேலும் வளர்த்து விடுவதற்குப் பெற்றோரும் ஆசிரியரும் ஆவன செய்யாவிட்டால், அந்த ஆற்றல் படிப்படியாகக் குறைந்து மங்கி மறைந்துவிட நேரிடும்.
சிறுவயதில் அறிவுத்திறன் மிக்கவர்களாகத் திகழும் சிலர், பெரியவர்களானதும் ஆற்றல் குறைந்தவர்களாக விளங்குவதற்கு மூல காரணம் - அந்த ஆற்றலை திறமையை - பெரியவர்கள் உற்சாகமூட்டி மேலும் வளர்த்து விடாமையேயாகும்.
ஆகவே, பாலகர்களுக்கு - சிறுவர்களுக்கு இறைவன் அளித்துள்ள ஆற்றலை இனங்கண்டு அந்த ஆற்றல் மங்கிவிடாது வளர்த்துவிட வேண்டியது பெற்றோரதும் ஆசிரியரதும் முக்கிய கடமையாகும்.
- நன்றி - “விழுதுகள்' - 2, ஐப்பசி - 1997.
நானிர் தமிழனி என்பதால் சமத்துவத்தினர் அடிப்படையிலான ஐக்கியத்தையே விரும்புகிறேனர். அனைத்துத் தமிழ்ப் பேசும் மக்களினதும் நலனுக்கு அதுவே சிறந்த வழி என்பது எனது கருத்து, தமிழ்பேசும் மக்களின் பாரம்பரிய தாயகங்களை அங்கீகரித்து ஏற்றுக்கொள்வதும், தேசிய இனமாகிய இலங்கைத் தமிழருக்கு பிரிந்து செல்லும் உரிமையை வழங்குவதும் சமத்துவத்துக்கான முக்கிய முனி தேவைகள், சமத்துவத்தை நோக்கிய பயணத்துக்கான சாத்தியக் கூறுகள் எதுவுமே இல்லாத நிலையில் பிரிவினை தவிர்க்க முடியாததும் அவசிய தேவையுமாகிறது. அத்தகைய பிரிவினையை நான் ஏற்கிறேன் - பரீட்சையில் நுாறு புள்ளிகளுடன் திருப்தி அடைவதைப் போல
ட வ. பொன்னம்பலம்
செந்தமிழர் ஆகிடுவோம் பக்கம் - 27)

குன்றில் ஒரு குறிஞ்சி மலர் நெடுங்கவிதை
பச்சை இலை பூக்கள்
பல நூறு வண்ணம் இச்சை மிக எழுப்பும்
இனிய மலை நாடு அச்சமிலை என்று
அண்டவெளி தனையும் எச்சரிக்கை செய்யும்
எழுந்து மலை எல்லாம்.
வான மதன் தோலை
வார்ந்தெடுப்போம் நாங்கள் கூனலுள மனிதர்
குன்றமெமைப் பார்த்து மானங் கொள்ளல் வேண்டும்
மயில்வா கனன் தானும் தான மெமைக் கேட்டுத்
தஞ்சமென வந்தான்.
என்று மலை எல்லாம்
எழுச்சி மிகவாக
நின்று கதை சொல்லும்
நிலமெல்லாம் பணியும்
குன்று அதன் மீது
குறிஞ்சிப் பூ சிரிக்கும் நன்று என மேகம்
நாட்டியமே ஆடும்.
மலையாளும் நாடு
மரம் ரப்பர், தேயிலை நிலையாளும் நாடு
நீல வான் பொழியும் அலையாளும் நாடு
அழகு தமிழ் மூன்று கலை யாளும் நாடு
கண் பட்டுப் போமே!
மேகச் சடை தொங்க
மெத்தை அதன் மீது தோகை என அருவி
தூய முகம் காட்டும் பாக மதை உமைக்குப்
பகிர்ந்த சிவன் போல நாக மது தோன்றும்
நளிர் மிக்க நாடு.
C13)

Page 10
குளிர்ந்த பனி மலையில்
குளிக்கும் மாஞ் செடிகள் நெளிந்து மெய் சிலிர்க்கும்
நெருடி விடும் காற்று வழிந்து வரும் வாசம்
வைய மிது கொள்ள அழிந்து போம் உள்ளம்
அதில் மூழ்கும் போதே,
இந் நாடு செழிக்க
இந்தியா விலிருந்து வந்த தமிழ் மக்கள்
வாழ்வொன்று காண நொந்தார்கள் நித்தம்
நோயாலே மடிந்து வெந்தார்கள் இங்கே
வெள்ளையர்களாலே.
வெள்ளையர்கள் அன்று
வியாபாரியாக கொள்ளையது அடித்தார்
குவலயமே வென்று உள்ளதெலாம் இழந்த
உற்ற தாய் நாட்டான் கள்ளரவர் அணியும்
கால் செருப்பானான்.
ஒரு நூறாண்டு முன்
உணர்வில்லாத் தமிழன்
திரு வெல்லாம் பொலியும்
தீவு தனை ஆள்வோர்
ஒரு வார்த்தை சொல்ல
ஓடோடி வந்தார்
கருநீலக் கடலும்
கைக் குள்ளே அடங்கும்.
ஆங்கிலேயர் ஆட்சி
அடிமை என இவரை ஈங்கு வரச் செய்து
எண்ணம் போல் நடத்தும் தாங்கி அவை எல்லாம்
தம்முயிரும் தந்து ஓங்கி எழச் செய்தார்
உலகில் மலை நாட்டை.
வெள்ளையர்கள் செல்ல
வேறு ஒரு சமூகம் உள்ளரசு செய்யும்
உரிமை தனைக் கொள்ளும் எள்ளளவும் நன்றி
இல்லை அதன் நெஞ்சில் கொள்ளி அது வைக்கும்
குன்றவருக்(கு) அன்றே.
கள்ளரவர் படகில்
கடல் தாண்டி வந்தார் இல்லை அவர்க்குரிமை
இந்தியனே ஓடு
C14)

சொல் இதனை நாளும் சுருதி என ஒத
எல்லையில்லாத் துயரில்
எந்தமிழர் வீழ்ந்தார்.
அட்டைக் கடியோடு
ஆன கடியெல்லாம் பட்டவரின் வீடு
பட்டினியால் வாடும் கொட்டுமழை வெள்ளம்
கொதிக்கும் வெயில் வியர்வுை தொட்டவரின் வாழ்வில்
சுகமென்றும் இல்லை.
ஏடறியா மழலை
எத்தனையோ உண்டு வீடு எலாம் இதனால்
விளக்கெரிய வில்லை கேடு இது போல
கிடைத்திடுமோ யார்க்கும் மூடு இருள் உள்ளே
முழுப் பேரும் சுருள்வார்.
கூடுண்டு பறவைக்கு
குழியுண்டு நண்டுக்கு
மாடு அது தானும்
மர நிழலில் ஒதுங்கும்
நாடு என ஒன்று
நமக்கில்லை இன்னும்
தேடு வார் இல்லாத்
தெரு நாயா தமிழன்?
அன்னவரில் ஒருவன்
அழகப்பன் என்பான் முன்னவரின் வழியில்
முதுகெலும் பொடிய சொன்ன பணி யெல்லாம்
சோர்வின்றிச் செய்வான் உண்ண ஒரு கவளம்
உயிர் வாழ வேண்டும்.
ஆட் கூலி என்ற
அவமானப் பேரில் நாட் கூலி பெற்றான்
நாயாக உழைத்தும் வாட் கூரைப் போல
வார்த்தைகளை நித்தம் நீட்டுவான் அந்த
நெஞ்சில்லாத் துரையே
பஞ்சையவன் மீது
பணக்காரத் துரைக்கு கொஞ்ச மல வெறுப்பு
குற்றந் தான் என்ன? அஞ்சுகத்தைப் போலும்
அவன் மனைவி, அதனால் நெஞ்சமதில் ஆசை
நெருப்பாக எரியும்.
(இன்னும் வரும்)
C15)

Page 11
தமிழ் என்ற சொல் தொல்காப்பியத்தில் உள்ளது. ‘தமிழ் என் கிளவியும் அதனோரற்றே (383) என்பது நூற்பா. தமிழ் என்ற சொல்லோடு பிற சொற்கள் சேரும்போது வல்லொற்றுமிக்கு வரும். அக்குச் சாரியைப் பெற்று வரும். தமிழ்க் கூத்து, தமிழ்ச் சாதி என்பன எடுத்துக் காட்டுகள்
தமிழ், தமிழர் போன்ற சொற்கள் திருக்குறளில் இல்லை.
தமிழ் என்ற சொல், தமிழ் மொழி, தமிழரசர், தமிழ்நாடு, தமிழ்ப்பற்று போன்ற பொருள்களில் சிலம்பில் பயன் பெறுகிறது. தமிழ் வரம்பு அறுத்த தண்புனல் நல்நாட்டு (8-2) என்ற இடத்தில் தமிழ் மொழியையும் தென் தமிழ் நாடு ஒருங்கு காண் (23-க-15) நாட்டையும், அருந்தமிழ் ஆற்றல் அறிந்திலர் ஆங்கு எனக் கூற்றம் கொண்டு இச்சேனை செல்வது' என்ற பகுதியில் தமிழரசரையும் வட ஆரியரோடு வண் தமிழ் மயக்கத்து’ (25158) என்பதில் தமிழ்ப் படையையும் குறித்தது. ܐ
தொல்காப்பியம் ‘செந்தமிழ் நிலத்து வழக்கொடு சிவணி’ (881) எனவும், ‘செந்தமிழர் சேர்ந்த பன்னிரு நிலத்தும் (883) எனவும் தமிழைச் செந்தமிழ் எனக் குறிக்கிறது. சிலம்பு “தண் தமிழ்’ ப-10, 25-66, 28-153) எனவும். ‘வண்தமிழ்’ 23-63, 26-221, எனவும், ‘தென்தமிழ் 10-58, 25-171 எனவும். ‘அருந்தமிழ்’ 26-121, 27-189 எனவும் குறிக்கும். கண்ணகியைத் தென்தமிழ்ப்பாவை 12-1-48 என்று குறிப்பிடுவார் அடிகள். செந்தமிழ் கொடுந் தமிழ் (நூ.க-3) என்ற வழக்கும் சிலம்பில் உள்ளது.
- முனைவர்.
ச. வே. சுப்பிரமணியன் (தொல்காப்பியம் - திருக்குறள் சிலப்பதிகாரம் எனும் நூலிலிருந்து)
 

காயினும் ஆபேலும் சகோதரர்கள். ஆதாம் ஏவாளின் புதல்வர்கள். இவர்களில் ஆபேல், ஆடு மேய்க்கும் தொழில் செய்து வாழ்ந்து வந்தான். காயின் நிலத்தைப் பண்படுத்தி மரக்கறிகளைப் பயிரிட்டு பயிர்த்தொழில் செய்து வந்தான்.
இவ்வாறு இரு சகோதரர்களும் வாழ்ந்து வரும் நாளிலே, ஆபேல் ஆண்டவருக்கு நன்றி செலுத்த விரும்பினான். தனது மந்தையிலிருந்து கொழுத்த ஆட்டுக்குட்டிகளை அவன் ஆண்டவனுக்குக் காணிக்கையாக்கினான்.
காயினும், செழித்து பலன் தரத் தொடங்கியிருந்த தனது தோட்டத்தின் அறுவடையிலிருந்து ஆண்டவருக்குக் காணிக்கை செலுத்தினான்.
ஆனால் ஆண்டவர் ஆபேலையும் அவனது காணிக்கையையும் அன்புடன் நோக்கியருளினார். அவனுக்கு ஆசியைப் பொழிந்தார். காயினையோ அவனது காணிக்கையையோ அவர் பெரிதுபடுத்தவில்லை.
J09 Boisgau)
இதைக் கண்ட காயின் மிகவும் கோபமடைந்தான். வெறுப்புற்றுக் காணப்பட்டான். ஆத்திரத்தாலும் அவமானத்தாலும் அவனது முகம் சிவந்து காணப்பட்டது. சிறுத்துப் போய்க் காணப்பட்ட அவனது முகத்தைக் கண்ட ஆண்டவர், காயினை நோக்கி. “காயின் நீ ஏன் வாட்டமுற்றிருக்கிறாய்? ஏன் நீ கோபப்படவேண்டும்? நீ நல்லதைச் செய்ய வேண்டும். அப்போதுதான் நீ உயர்வடைவாய்” என்று அறிவுரை வழங்கினார்.
ஆண்டவரின் வார்த்தைகளைக் கேட்ட காயின் சமாதானமடையவில்லை. அவன் மேலும் கோபமுற்றான். அதை அறிந்துகொண்ட ஆண்டவர் அவனுக்குக் கூறினார். “காமீன். கோபம் பாவத்தைத் தேடும். பாவம் உன்னை ஆட்சிசெய்ய விடாதே. கோபத்தை அடக்கியாளாவிட்டால் நீ பெரும் பாவத்தில் விழவேண்டி எற்படும். எனவே நீ எச்சரிக்கையாயிரு. கோபத்தைக் கட்டுப்படுத்து. உன்னை நிதானப்படுத்திக் கொள். பாவத்தில் விழுந்துவிடாதே. என்றார்.
ஆனாலும், இந்த அறிவுரைகளோ, எச்சரிக்கை வார்த்தைகளே காயினிடம் எடுபடவில்லை. அவன் தன் சகோதரன் மீது வெஞ்சினம் கொண்டான்.

Page 12
ஒருநாள். காயின் தனது சகோதரனையும் அழைத்துக் கொண்டு வயல் வெளிக்குச் சென்றான்.
சகோதரன் மனதில் இருப்பதை அறியாத ஆபேலும் காயினுடன் கூடச் சென்றான். வயல்வெளில் ஒருவருமில்லா இடத்தில் காமீன் ஆபேல் மீது பாய்ந்து அவனைக் கொன்றான். பின்பு எதுவும் அறியாதவன்போல வீட்டுக்குத் திரும்பிவிட்டான்.
எல்லாம் அறிந்த ஆண்டவர் காயினைப் பார்த்து, “உனது சகோதரன்ஆபேல் எங்கே?” என்று கேட்டார். இதைக் கேட்ட காமீன் ஆத்திரமடைந்தவனாக “எனக்கு என்ன தெரியும்? நான் என்ன அவனுக்குக் காவலாளியா?” என்று ஆண்டவரிடம் எரிந்து விழுந்தான்.
ஆண்டவர் காமீனை நோக்கி. காமீன் நீ என்ன காரியம் செய்துவிட்டாய்? உனது சகோதரனை ஏன் இப்படிச் செய்தாய்?. உனது சகோதரனின் இரத்தம் மண்ணிலிருந்து என்னை நோக்கிக் கதறிக் கொண்டிருக்கிறதே. ஏன் இப்படிப் பாவத்தைச் செய்தாய். என்று கேட்டார்.
காமீன் மெளனமாக இருந்தான். “உன்னைப் பாவஞ் செய்யாதே என்று எத்தனைமுறை தடுத்தேன். நல்லதைச் செய் என்று எவ்வளவு அறிவுரை கூறினேன்? பொறாமையாலும் ஆத்திரத்தாலும் அறிவிழந்து பாவத்தை தேடிக் கொண்டுவிட்டாயே காமீன். உனது சகோதரனையே கொல்லுமளவிற்கு உன்னிடம் பொறாமை குடிகொண்டு விட்டதே.’ என்று ஆண்டவர் வேதனையுடன் கூறினார்.
அவர் மீண்டும் காயினைப் பார்த்து “உனது சகோதரனை நீ கொலை செய்ததை முன்னிட்டு நீ சபிக்கப்பட்டுள்ளாய். நீ என்னிடமிருந்து விலக்கப்பட்டிருப்பாய். நீ மண்ணில் பயிரிடும்போது அது உன்ககு எந்தவிதமான பலனும் தராது. இனிமேல் நீ கஸ்ரப்பட்டு வாழ வேண்டும். எனது பாதுகாப்பில் சுகமாக வாழமுடியாது. மண்ணுலகில் நீ நாடோடியாக அலைந்து திரிவாய். நீ தேடிக்கொண்ட பாவத்தின் விளைவு இதுதான். என்றார்.
இதைக் கேட்ட காயின் மிகவும் அச்சமடைந்தவனாக வேதனையுடன் கதறினான். “ஆண்டவரே எனக்கக் கொடுக்கப்பட்ட இந்தத் தண்டனை மிகவும் கொடியது. என்னால் இதைத் தாங்கமுடியாது. உமது பாதுகாப்பின்றி நான் எவ்வாறு வாழ்வேன். என்னைக் காண்கின்ற எவனும் என்னைக் கொல்வானே என்று அழுதான்.
ஆண்டவர் அவன்மேல் இரக்கப்பட்டார். அவரது கருணை உள்ளம் அவனுக்காக இரங்கியது. “காயின். என் முன்னிலையில் நீவாழ முடியாது. ஆனாலும் உன்னை எவனும் கொல்ல முடியாது. உன்னைக் கொல்லும் எவனும் ஏழு முறை பழிவாங்கப்படுவான்.” என்று கூறிய ஆண்டவர் அவனை யாரும் கொல்லாமலிருக்க அவன்மேல் அடையாளமிட்டார்.
காயின் அவரை விட்டு விலகி வேறிடம் சென்று வாழ்ந்தான்.
- மகேஸ்வரி அரியரத்தினம்.

உண்ணும் உணவைப் பொறுத்து நமக்கு சுபாவங்களும் உருவாகும் என்று கூறுவார்கள்.
மகாபாரத யுத்தத்தில் பீஷ்மர் மரணத் தருவாயில் அம்புப் படுக்கையில் படுத்திருக்கும் நேரம் ராஜ குடும்பத்தின் மிக மூத்த உறுப்பினர் என்ற வகையிலே பஞ்ச பாண்டவர் அவரை வணங்கி அவருடைய அறிவுரைைையப் பெறுகின்றார் - ஆனால் திரெளபதி மட்டும் பீஷ்மரை வணங்கத் தயாரில்லை என்பதுபோல் ஆங்காரமாய் நிற்கிறாள்.
‘பிதாமகர் பீஷ்மரை வணங்கி மரியாதை செய்’ என அவளுக்குத் தருமன் கட்டளையிடுகிறான். ஆனால் அதைக் கேட்டு சிரிக்கும் திரெளபதி ‘அன்று அரசசபையில் துச்சாதனன் என் துகிலை உரிய முயன்றபோது இந்தப் பெரியவரும்தானே அங்கிருந்தார். பிழை செய்த துரியனை கண்டித்தாரா?” என்று கேட்கிறாள்.
O స్లో O 2600TOD 2 (Elé56T (5600CDUD
அதற்கு பீஷ்ம்ரே பதில் சொன்னார்.
அம்மா நீ கேட்பது சரியான கேள்வியே. அந்த நேரத்தில் அதர்மத்தை தட்டிக்கேட்காமல் நான் மவுனியாகிவிட்டதற்கு காரணம் அதர்மன் துரியோதனின் சோற்றை சாப்பிட்டுக் கொண்டிருந்தேன் அல்லவா? அந்தச் சோறு என் சுபாவத்தை ஊமையாக்கிவிட்டது! என்றார்.
அப்படியானால் உண்கிற உணவைப் பொறுத்துத் தான் உணர்வுகளும் செயல்படும் என்று தெரிகிறது.
அதே சமயம் நமக்கு இன்னொரு குழப்பம்! ஹிட்லர் உலக நாடுகளைப் பிடிக்கும்பேராசையின் காரணமாக லட்சோப லட்ச மக்களை கொன்று குவித்தான். இவ்வளவு மூர்க்கத்தனமாக ஹிட்லரின் குணம்

Page 13
இருக்கக் காரணம் அவன் சாப்பிட்டு வந்த உணவாக இருக்கலாமோ? அவன் உயிர்ப் பிராணிகளைக் கொன்று முழுசாக விழுங்குபவனோ? இல்லை. இல்லை! ஹிட்லர் சுத்த சைவமாம். சைவ உணவிற்கு இவ்வளவு வெறிக் குணமா?
ஒரு சமயம் ஜின்னாவைக் காந்தியடிகள் தன்னொடு உணவருந்த அழைத்தார். ஜின்னா வீட்டில் போய் சாப்பிடுவதாகச் சொன்னார்
உடனே காந்தியடிகள் ஆமாம்! ஆமாம்! நீங்கள் புலிச் சாப்பாடு சாப்பிடக் கூடியவராயிற்றே! என்று அவர் அசைவ சாப்பாட்டைக் குறிப்பிட்டார்.
அதற்கு ஜின்னாவோ, உண்மைதான்! எனக்கு உங்கள் குரங்கு சாப்பாடு பிடிக்காது! என்றார். அதாவது காந்தியடிகளின் சாப்பாடு பழங்கள், பருப்பு, கொட்டை - இவற்றை அப்படி கேலியாக குறிப்பிட்டார்.
புலிச்சாப்பாட்டை ஜின்னா சாப்பிட்டு வந்தாலும் தனது கடைசிக் காலத்தில் உறுதி இழந்து குழம்பினார். பாகிஸ்தானில் தன்னால் பிரதமராய் வந்தவர் தன்னை அலட்சியப்படுத்துகிறார் என்ற கோபத்திற்கு ஜின்னா ஆளானார். அதனால் இந்தியாவை விட்டுப் பிரிந்தே ஆகவேண்டும் என்றவர், மறுபடியும் சேரவேண்டும் என்று பேசினார். இந்தியரோடு வாழமுடியாது என்றவர் பம்பாயில் தனக்கிருந்த பங்களவை காப்பாற்றித் தருமாறு இந்தியப் பிரதமரை வேண்டினார். அதேசமயம் காந்தியடிகள், நான் ‘மரணத் தருவாயிலும் இறைவன் நாமத்தையே உச்சரிப்பேன்’ என்று சொன்னதை கடைசியில் நிரூபித்துக்காட்டினார். இதையெல்லாம் பார்க்கும்போது சைவ சாப்பாட்டிற்கு உறுதி அதிகமோ என்ற சந்தேகம் ஏற்படுகிறது.
வாரியார் கூடச் சொல்லுவார் இலை, தழைகளை சாப்பிடுகிற மானும் குதிரையும் எவ்வளவு தூரம் ஒடி நின்றாலும் நாக்கைத் தொங்கவிட்டு இளைப்பாறுவதில்லை. ஆனால் மாமிசம் சாப்பிடும் நாயும், புலியும் நாக்கை தொங்கவிட்டுத்தான் இளைப்பாறுகின்றன! என்று அவர் கூறுவார். அசைவமா? சைவமா? அசைக்க முடியாத பலம் எதற்கு? இது குழப்பமாகத்தான் இருக்கிறது.
水水水水水水水米米米米米米米米来水水米米米米米水米米米米米米水米水米水米米米米米米米米米米本
“ஆயுள் கூடுதல் மனிதர்களுக்குத் தான்’! யானைக்கு ஆயுள் 150 ஆண்டு வரை கூட உண்டு என்று சொல்வார்கள். அதைப் போல

சில பிராணிகள் 300 ஆண்டுகாலம் வாழ்வதாகவும் சொல்வார்கள். ஆனால் மனிதனுக்கோ 100 ஆண்டுகாலம் தான் வாழ்க்கை. அபூர்வமாக சிலர் நூறு வயதைத் தாண்டி சில வருடங்கள் வாழலாம். ஆனால் பெரும்பாலானோர் 60, 70 ஆண்டுகள் வாழ்ந்து காலமாகி விடுவதே உண்மை. இருப்பினும் ஆயுள் கூடுதல் மனித இனத்துக்குத்தான்.
இது எப்படி என நீங்கள் கேட்கலாம். மனிதன் ஆயுள் என்பது உயிரோடு உலவுவது என்பதாக எண்ணக்கூடாது. புகழோடு உலவுவது என்பதாக எடுத்துக்கொள்ள வேண்டும். ஒரு மனிதர் எப்போதோ மறைந்து விட்டாலும் அவர் இன்னும் நம்மிடையே வாழ்வது மாதிரியே அவரைப் பற்றி அடிக்கடி பேசிக் கொள்கிறோம் என்றால் அந்த மனிதர் வாழ்கிற மனிதரே தவிர மறைந்துவிட்ட மனிதர் அல்ல.
இப்படி புகழால் ஆயுள் நீடித்து வாழும் மனிதர்கள் அபூர்வமாக சிலர்தான். லட்சத்தில் ஓர் மனிதர்தான் புகழால் நிலைத்து வாழ்ந்து தொண்டிருப்பவராய் இருப்பர். இதை வைத்து எல்லா மனிதருக்குமே ஆயுள் அதிகம் எனக் din B6) TLD T 2 6T 6ð B (335 offi ஆகள். ஆனால் புகழில் வாழ் ஜ் கண் ற தகு தியைப் பெறுகிற வர்கள் மட் டுமே மனிதர் ஆவார். மற்றவரெல்லாம் எத்தனையோ பிராணிகள் உலகில் தோன்றி வாழ்ந்தது தெரியாமல் மடிந்து போகின்றனவே அதனுடன் சேர்ந்தவர்கள் ஆவர்ர்கள்.
அபூர்வமாக சில சமயம் ஏதாவது விலங்கோ பறவையோ அல்லது மரங்களோ அதிசயமாய் ஒரு காரியத்தை செய்தால் அவைகளுக்கு வாழும் தகுதியோடு மனிதர்களால் பேசப்படுபவையாக பெருமை பெறுவதும் உண்டு.
ஆனால் சிந்திக்கின்ற அறிவுடைய மனிதனுக்குத் தான் தன் வாழ்வை சீர்தூக்கிப் பார்த்து தான் எல்லோருடைய நினைவிலும் நிற்குமாறு வாழும் தகுதியைப் பெற முடியும் என்பதை உணர்ந்து செயல்படும் வாய்ப்புண்டு.
உயிர் வாழ்கிற காலங்களில் மிக நல்லவர் ஒருவர் வறுமையோடு போராடலாம். ஆனாலும் அததகையோர் தங்கள் வாழ்க்கை முடிந்து புகழ்

Page 14
வாழ்வைப் பெறும்போது அவர்கள் வசதியின்றி வறுமையோடு போராடினார்கள் என்பது ஒரு குறையாக கருதப்படுவதில்லை! ஏன் அதுவே அவர்களுக்கு நிறைவாகவும், பெருooம தேடித் தருவதாகவும் ஆகிவிடும். அவ்வளவு வறுமையிலும் உறுதி குன்றாமல் வாழ்ந்திருக்கின்றார்களே என்ற வியப்பை ஏற்படுத்துவார்கள்.
எனவே, வாழ்க்கை என்பது எல்லோராலும் நினைக்கப்படுகின்ற புகழ் வாழ்க்கையையே குறிக்கும். அத்தகைய வாழ்வைப் பெற்றவர் வையம் உள்ள வரை வாழ்கிறார்கள். அதனால் அத்தகைய மனிதர்களுக்கே நீண்ட ஆயுள் என்பது பொருத்தமாகும்.
தொகுப்பு - அ. கலைநிலா.
'உலகத் தமிழர்களின் உச்சநீ
1969 Guj6)
தலைமீதுவானம் உடைந்து வீழ்ந்த நாள் துயரத்தால் ஒவ்வொரு தமிழனும் துடித்துப்போன நாள்.
ஆம் - தாழ்ந்த தமிழகமே என்று தமிழனைத் தட்டி எழுப்பியவன் - தமிழ்த் தேசிய உணர்வைத் தமிழர் மனங்களிலே விதைத்தவன் - தனக்காக அன்றி - தன்னினத்துக்காக வாழ்ந்த ஒரே தலைவன். பேரறிஞர் அண்ணா அமரத்துவம் அடைந்த நாள் அது.
ஒவ்வொரு தமிழனின் உள்ளத்திலும் ஒட்டிக்கொண்டிருக்க வேண்டிய நாள் பெப்ரவரி - 3.
 
 

ஜெசுவிற்இளைஞர் ஆய்வுநிறுவகமும் அதன் செயற்பாடுகளும்
656)uTu 86-60 D
ஏறக்குறைய 20 வருட காலமாக இளைஞர் உருவாக்கத்திலும், வழிகாட்டுதல்களிலும் முழு இலங்கையிலும் பணி செய்துவரும் ஜெசுவிற் இளைஞர் ஆய்வு நிறுவகம் தனது கடந்த 2000ம் ஆண்டின் சந்திப்புக்களை தொட்டுப் பார்க்கிறது.
இந்த இருபது (20) வருடகாலமும் இயக்குநராக இருந்து வருகின்ற யேசுசபைத் துறவியும், உளவியலாளருமான அருட்தந்தை போல் சற்குணநாயகத்துடன் பல இளம் பருவத்தினர் வளம்மிக்க இலகுபடுத்துனர் களாகச் செயற்பட்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
அருட்தந்தை போல் சற்குணநாயகம் யே. ச. (இயக்குநர்) திரு. A. ஜெயநாதன் திரு. P. புனிதராஜ் - (நிறுவகச் செயலாளர்) திரு. I. J. சில்வஸ்டர் - (நிகழ்ச்சிகள் இணைப்பாளர்) திரு. M. தவப்பிரகாசம்
செல்வன் S. அகிலன்
செல்வி கயல்விழி யேசுதாஸன்
செல்வி K. பிறமிலா
செல்வி N. கிறிஸ்டீனா,
1-010-2000 தொடக்கம் 31-12-2000 வ எமது செயற்பாடுகளும், பணிகளு
களம் - 1 சந்தித்த வேளை 03-02-2000 தொடக்கம் 05-02-2000 வரை
(மண்ரேசா தியான இல்லம்) மட்டக்களப்பு.
G:

Page 15
சந்தித்த முகங்கள்
களம் - 2 சந்தித்த வேளை -
சந்தித்த முகங்கள்.
களம் - 3. சந்தித்த வேளை -
சந்தித்த முகங்கள் -
களம் - 4. சந்தித்த வேளை -
சந்தித்த முகங்கள் -
ф6ѣй) — 5. சந்தித்த வேளை -
சந்தித்த முகங்கள் -
தளம் - தீ. சந்தித்த வேளை -
புனித மிக்கேல் கல்லூரி மாணவத் தலைவர்கள் (65) மாணவத் தலைவர்கள்.
14-04-2000 தொடக்கம் 16-04-2000 வரை (புனித யோவான் சுயதொழில் பயிற்சி நிலையம், திருப்பெருந்துறை). பொத்துவில் பிரதேசத்தில் ‘உலக தரிசன நிறுவ கத்தோடு பணிசெய்யும் ஆசிரியர்கள் (38) ஆசிரி யர்கள்.
12-05-2000 தொடக்கம் 14-05-2000 வரை
(மன்ரேசா தியான இல்லம்)
“EHED’ நிறுவகத்தின் சிறுவர் பராமரிப்பு நிலையங்களில் உள்ள சிரேஷ்ட மாணவர்கள்.
09-06-2000 தொடக்கம் 11-06-2000 வரை (மன்ரேசா தியான இல்லம்)
மட்/புனித மிக்கேல் கல்லூரி தேசிய பாடசாலை மாணவத் தலைவர்கள். (72 மாணவர்கள்)
11-05-2000 தொடக்கம் 12-06-2000வரை (மன்ரேசா தியான இல்லம்)
திருக்கோவில், பொத்துவில் பகுதி உலக தரிசன நிறுவக வெளிக்கள உத்தியோகத்தர்கள். (51) உத்தியோகத்தர்கள்.
30-06-2000 தொடக்கம் 27-08-2000வரை (இந்தக் கல்லூரி, வாழைச்சேனை)

சந்தித்த
களம் - 7 சந்தித்த
சந்தித்த
d56Lit - 8 சந்தித்த
சந்தித்த
தளம் - 9 சந்தித்த
சந்தித்த
முகங்கள் - கோறளைப்பற்று பிரதேச மாணவர்கள்
வேளை -
முகங்கள் -
வேளை -
முகங்கள் -
வேளை -
முகங்கள் -
(59) மாணவர்கள்
24-08-2000 தொடக்கம் 27-08-2000 வரை (புனித மரியாள் பெண்கள் கல்லூரி, திருகோணமலை) புனித மரியாள் பெண்கள் கல்லூரி, புனித வளனார் கல்லூரி, புனித வளனார் வித்தியாலய மாணவத் தலைவர்கள். (42) மாணவர்கள்.
6-10-2000 தொடக்கம் 8-10-2000 வரை
(மன்ரேசா தியான இல்லம்)
வண்ணத்துப்பூச்சி சமாதானப் பூங்கா இலகுபடுத் துநர்கள். (16) இலகுபடுத்துநர்கள்.
17-10-2000 தொடக்கம் 19-10-2000வரை
(மன்ரேசா தியான இல்லம்)
உலக தரிசன நிறுவக மன்னார் மாவட்ட வெளிச் கள உத்தியோகத்தர்கள். (34) உத்தியோகத்தர்கள்
ஒன்பது பயிற்சிக் களங்களில் 440 பேர் எமது நிறுவகத்தோடு தொடர்புபட்டுள்ளனர்.இதில் 289 ஆண்களும்.151 பெண்களும் என்பது குறிப்பிடத்தக்கது. இதுதவிர நிறுவகத்தின் கீழ் இயங்கிவரும் மட்டக்களப்பு மாவட்ட மாணவர் நலன்புரிச் சங்கம் தனது செயற்பாடுகளோடு கல்குடr கல்வி வலயத்திலும் உருப்பெற்றுள்ளது.
ஐ. ஜே. சில்வஸ்டர் (நிகழ்ச்சிகள் இணைப்பாளர்)
C2S)

Page 16
எங்கள் தேசியக் கொடி
கறுப்பும் வெள்ளையுமாகக் காற்றில் அசைகின்றதே அதுதானர் எங்கள் தேசியக் கொழ!
வீதியோரமாக வேலிகளில் கேற் வாசல்களில் ஆதரவில்லா அநாதுைபோல மெல்ல அசைகின்றதே அதுதானர் எங்கள் தேசியக் கொடி!
இந்தக் கொழயை எங்கள் மண்ணில் ஏற்றச் செய்பவர்கள் யார்? அந்த மனிதர்கள் இருக்கும்வரை இங்கே எப்போதும் அளப்தமனந்தான்!
இந்தக் கொடிகள் தான் எங்கள் தேசத்தினர் சொந்தக் கொடிகள் இது எப்போதும் அரைக் கம்பத்தில்தான் அசையும்!
ஒவ்வொரு நாளும் ஏதோ ஒர் இடத்தில் இந்தக் கொடி பறக்கினிறது இது எப்போது கீழே இறக்கப்படும?"
- சிவந்தி.

கவிஞர் ஒருவர் சொற்பொழிவாற்ற மேடையில் அமர்ந்திருந்தார். அவரை முதலில் அறிமுகம் செய்தவர் "இவர் ஒரு அருங் கவிஞர், கவியரசர்" என்று பாராட்டி அமர்ந்தார். கவிஞர் பேசுவதற்கு எழுந்தார். "என்னை அருங்கவிஞர் என்றும் கவியரசர்" என்றும் பாராட்டினார்கள். அவ்வுரையை நான் அப்படியே ஒப்புக்கொள்கிறேன். நான் அருங்கவிதான், கவியரசன் தானி என்று தனி பேச்சைத் தொடங்கினார்.
இவர் தற்பெருமைக்காரர் போல் தோன்றுகிறதே! தம்மைத் தாமே அருங்கவி என்றும், கவிஅரசன் என்றும் கூறிக்கொள்கிறரே! என்று அவையினர் கவிஞரை நோக்கினர்.
அதைக்கணிட கவிஞர் "திருக்குறளில் அருங்கேடனி" என்ற ஒரு சொற்றொடர் வருகிறது. அதற்கு பரிமேழலகர் கேடு இல்லாதவன் என்று உரை கணிடுள்ளார். அவர் உரைப்படி அருங்கவி என்பது கவி இல்லாதவன் என்று பொருள்படுமன்றோ? அதன்படி கவிஞர் அல்லாத நான் அருங்கவிதானே!
அரசன் என்றால் ரசம் இல்லாதவன் என்று காவடிச் சிந்து பாடிய அணிணாமலை ரெட்டியார் பொருள் கணர்டு உள்ளார். அதன்படி ரசமில்லாத கவி பாடும் நான் கவியரசன் தானே. அதனால் இந்தப் பாராட்டுச் சொற்களை ஏற்பது சரிதானே! என்று கூறிச் சபையினரை நோக்கினார்.
கவிஞரினர் சொல்லாற்றல் கணிடு சபையினர் கைதட்டித் தம் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

Page 17
மட்டக்களப்பில்
இரு மா
ஓர் இதழி ருபா பத்து (10/
வாங்குங்கள். வாசகர் அ
ஆண்டு
ՎԵԼIII [b
ஆறு LIT:
ՎԵԼIII
வெ6
Professional Psych
Ce BATTI
Printed by: Jes.com Printers, Battical
 

இருந்து வெளிவரும்
இதழ்.
ன் விலை ") மாத்திரந்தான்.
. வாசியுங்கள் ஆகுங்கள்.
ச் சந்தா I) 100
தச் சந்தா
55/-
--
ரியீடு:
ological Counselling
Er'e CALOA.
—
王。