கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: போது 2000.09-10

Page 1
ᎧlᎢᏧ560]
 
 

if 2000
fluusi. QITGOOIGir

Page 2
போது
புரட்டாதி -ஐப்பசி 2000
தோற்றம்:05-05-1998
ஆளும் வளரனும் அறிவும் வளரனும் அதுதான்டா வளர்ச்சி
- பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்
ஆற்றுப்படுத்துநர்: தவத்திரு. போல் சற்குணநாயகம் யே. ச.
வாகரைவானன்
துணை ஆசிரியர். }િ}. gિ. ઈ)િlai].i
நிர்வாகம்: சி.எம். ஒக்கஸ்
urংসলীL০তে সন্তা : இல, 1, மேல்மாடி வீதி, மட்டக்களப்பு. தொலைபேசி இல:
O65 - 23822
065 - 284 եւ Զ
ஆச்சு: ஜெஸ்கொம் அச்சகம், மட்டக்களப்பு
நான் பேச நினைப்பதெல்லாம்.
எல்லோரும் இந்நாட்டு ம என்றான் மகாகவி பாரதி மக்களாட்சி அரசியற் கோட்பாட்டிற்கு மகாகவி பாரதி நல்லதோர் வரைவிலக்கணம் என்றே இதனைக்கொள்ள முடியும். ஆனால், வ அழகாக இருக்கும் இந்த வயிர வார்த்தை குறிப்பிடப்படும் மன்னர்கள் இ படும் பாடென்ன? எத்தனை வகை சுரண்டலை அவர்கள் எதிர்கொள்கின்றா
அரசியல்வாதிகள் முதல் சின இருந்துகொண்டு ஆன்மீகம் பேசும் பிரேமா வரை எத்தனை வகையான மனிதர் இவர்கள் இடி இடியென இடி துவைக்கப்படுகின்றார்கள்?
ஏழைகள் - எழுத்தறிவிெ பாமரமக்கள் - ஏன் என்று கேட்க எ6 இல்லாதவர்கள் - என்னும் காரணங்கள் உயர்தர வர்க்கத்தால் எப்படி எல்லாம் வாய்பேசாப் பூச்சிகள் உதை உை உதைக்கப்படுகிறார்கள் என்பதை நாம் எ6 பாக்க வேண்டாமா?
சமத்துவம் - சரிநிக மனிதாபிமானம் - மணிதம் என்றெ சரமாரியாகப் பேசுபவர்கள் இந்த ஏெ விடயத்தில் என்னதான் செய்து விட்ட
 
 
 
 

ன்னர் எனும்
தந்த
நாம 5
களால் இன்று
3 U|| || (Ö|
ர்கள்?
றயில் னந்தா களால் த்துத்
ல் லாத வருமே ரினால்
இந்த 5GUGOT
സ്ത്ര
ல்லாம் ത്രങ്കി ார்கள்?

Page 3
பிச்சை போடுவதால் இவர்கள் பெருகுகிறார்களே தவிர பிரச்சினை தீர்ந்ததா?
முதலாளித்துவமும் கொம்யூனிசமும் அதிகாரப் போட்டிக்காக இன்றும் முட்டிமோதிக் கொண்டிருக்க அதனிடையே சிக்குண்ட இவர்களல்லவா தினமும் சிதைந்து போய்க்கொண்டிருக்கிறார்கள்
அனைத்துச் சமயவாதிகளும் தங்கள் அதிகார பீடத்தைத் தக்கவைத்துக் கொள்ளத்தானே இந்த ஏழைகளுக்கு எப்போதாவது ஒருநாள் அன்னதானம் வழங்கி, ஆகா எங்களைப்போல் யார் இருக்கின்றார்கள் என்று ஆர்ப்பரிக்கின்றார்கள்.
ஏழைகள் பக்கம் இறைவன்கூட இல்லை என்றல்லவா நாம் உரத்துச் சொல்லவேண்டியிருக்கிறது. ஏன், எத்தனையோ நூற்றாண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த வள்ளுவனும்,
இரந்தும் உயிர்வாழ்தல் வேண்டின் பரந்து கெடுக உலகியற்றியான் என்றுதானே சாபம் இட்டான்.
வள்ளுவன் வழிவந்த புரட்சிக்கவிஞன் பாரதியின், தனி ஒருவனுக்கு உணவில்லையெனில் ஜெகத்தினை அழித்திடுவோம்.
எனும் இடிமுழக்கத்தை எவர்தான் மறந்துவிட முடியும்?
ஏழை - பணக்காரன் என்போருக்கிடையே உள்ள இடைவெளியை எந்த அரசாங்கத்தாலும் இல்லாதொழித்துவிட முடியாது. ஏனெனில் ஊழல் இல்லாத ஒரு அரசு உலகில் எங்குமே இல்லை. எனவே - கார்மார்க்ஸ் போல - லெனின் போல - ரொஸ்கி போல - மகாத்மா காந்தி போல ஆற்றல்மிக்க தனி ஒரு மனிதனால் தான் உலக சரித்திரத்தை மாற்றி அமைக்க இயலும்.
இன்று, அப்படி ஒரு தனிமனிதன் இல்லவே இல்லை. தனக்காக - தன் சுகத்திற்காக வாழும் தன்னலக்காரரே தலைவர்களாகத் தம்மை விளம்பரப்படுத்திக் கொண்டிருக்கிறார்கள். மக்கள் பக்கம் எந்த மனிதனுமே இல்லை. இதுதான் உண்மை. இந்த உண்மை உயரத்தில் அமர்ந்திருக்கும் பலரை உறுத்தும் என்று நாம் நம்புகிறோம்.
அன்பன்
வாகரைவாணன்

கனவில் சிதைந்த மலர்கள்
என்னை ஒருவன் களங்கப்படுத்தினாற் போல்.
நாக்குளற சடுதியில் விழித்தேன் . கனவு !
சில நிமிட மெளனத்தில் சப்பாத்தின் சரசரப்பு.
தொண்டைக்குள் எதுவோ அடைத்தாற்போல் விக்கித்து இமை திறந்தால் -
வாசற் கதவண்டை பட்டாளம் ஒன்று.
தைரியம் மீள மிண்டுபிடித்தது.
“கதவைத் திற . அடோ,
கதவைத் திற T
ஆர்ப்பரிப்புகள் மத்தியில் விளக்கு எரிந்தது திறந்த கதவிடை காக்கிகள் நுழைந்தன.
சற்றுமுன்னே கனவில்வந்தது நனவாய்ப் போமோ. 2
வெறியனர் ஒருவனினர் கழுகுக் கண்கள் என்னில் மொய்த்தன.

Page 4
"செத்தேன். நான் செத்தேன் மரணUயம் என்னை வதைத்தது.
கரிக்கோடிட்ட திண்ணையின் குந்தில் என் சரித்திரம் சரியோ - ?
பரந்தாமணி காத்திட நானென்ன திரெளபதியா? கற்பினைக் காத்திட வெறுங்கைகள்தாம் போதுமா?
அபார மூள்ை ஆபத்தில் விழித்தது
மாதவிலக்கின் குருதிக் கசிவால் நனைந்த ஆடை தெரிய நின்றேன்.
நெருங்கிய காக்கி விலகிப் போனது.
"அப்பாடா..!
ஒரு கனவு போல் தானிருக்கிறது: ஆனால் -
இன்றைய இரவில்
எத்தனை மலர்கள்
கனவிற் போல சிதைந்து போயினவோ - ?
- விக்கேயெம்.

šiuo
வாகரைவாணன்
தமிழ் இலக் கிய வரலாற்றில் புலவர்கள் கவிச்சக்கரவர்த்திகள் என்போர், காவியங்கள், பிரபந்தங்கள், புராணங்கள் எனப் பல்வேறு இலக்கியப் பனுவல்களைத் தந்து தமிழின் பெருமையை உலகறியச் செய்திருக்கிறார்கள் என்பது உண்மையே. எனினும் இவ்விலக்கியங்கள் (தமிழ் இலக்கியங்களில் பெரும்பாலானவை சமயச்சார்புடையவை) தமிழர்கள் மத்தியில் பிளவு பிரிவினைக்கு வித்திட்டு அவர்களின் ஒற்றுமைக்கு உலை வைத்துள்ளமையைத் தமிழக வரலாற்றினை படித்தவர்கள் நன்கறிவர். உதாரணத்திற்கு காவிய மாளிகை என்று போற்றப்படும் கம்பராமாயணம், இராம அவதாரப் புகழ் பாட ஏறக்குறைய அதேகாலப்பகுதியில் சற்று முன்தோன்றிய பெரிய புராணம் சிவபிரான் புகழ்பாடி, சைவ வைஸ்ணவச் சண்டைக்குத் தூபமிட்ட வரலாற்று நிகழ்வை இங்கே சுட்டிக்காட்டலாம்.
ஆனால், இதற்கு மாறாக கடவுள், சமயம் சாத்திரங்கள் பற்றிப் புரட்சிகரமான சிந்தனைகளை மக்கள் மத்தியில் விதைத்து அவர்களைச் சரியான வழியில் நெறிப்படுத்தியவர்களாக சித்தர்கள் திகழ்வதை அதே தமிழக வரலாறு எடுத்துக்காட்டுகின்றது.
சிந்தனைச் செல்வர்களான சித்தர் பெருமக்களின் அறிவொளி வெள்ளம் தமிழகத்தில் எப்போது பாயத்தொடங்கியது என்பதை அறுதியிட்டுக் கூறல் அவ்வளவு எளிதல்ல. இதேபோன்று அவர்கள் எண்ணிக்கையை (பதினெட்டு என்பது மரபு) சொல்வதும் சுலபமல்ல. நெடுங்காலத்திற்கு முன்பே சித்தர் பலர் தோன்றி சமய மாயைக் குள்ளும் மூட நம்பிக்கைகளுக்குள்ளும் வீழ்ந்து கிடந்த தமிழ் மக்களைச் சீர்செய்ய முயன்றிருக்கின்றார்கள் என்பதே வரலாறு சொல்லும் உண்மைகளாகும்.
சித்தர்கள் சிந்தனைவானில் சிறகடித்துப் பறந்தவர்கள் கட்டற்ற
C03)

Page 5
வாழ்க்கைக்கு காட்டானவர்கள். எதனையும் எடுத்தெறிந்து பேசும் இயல்பும் இகழ் ச் சி நோக்கும் அவர்கள் பாடல் களில் எப்போதும் எதிரொலித்துக்கொண்டிருக்கும். சித்தர் சிந்தனைகளால் சிறைப்பிடிக்கப் பட்டவர்கள் பலர். அவர்களில் ஒருவரான இருபதாம் நூற்றாண்டின் மகாகவி சுப்பிரமணிய பாரதியார்
எனக்கு முன்னே சித்தர் பலர் இருந்தார் அப்பா
யானும் வந்தேன் ஒரு சித்தன் இந்த நாட்டில்
(பாரதி அறுபத்தாறு)
என்று உரிமை கொண்டாடுவதை நாம் அறிவோம்.
சித்தர் வாழ்க்கை தனியானது. இது போல் அவர்கள் இலக்கியமும் தனித்தன்மை வாய்ந்தது. இப்பெருமக்கள் தம் பாடல்களில் பயன்படுத்திய குறியீட்டுச் சொற்களான மாங்காய்ப்பால், தேங்காய்ப்பால் என்பன பல்வேறு அர்த்தம் தரக்கூடியவை. அவ்வளவு எளிதில் புரிந்து கொள்ளக்கூடியவை
அல்ல.
பலநூறு ஆண்டுகளாகப் பரம்பரை பரம்பரையாகத் தமிழகத்தில் வாழ்ந்து வந்த சித்தர்களில் கி. பி. 4ம் நூற்றாண்டைச் சோந்த திருமூலர் பிரசித்தமானவர். இப்பெரும் ஞானி படைத்த திருமந்திரம் ஒரு சிறந்த மெய்யியல் நூலாகும்.
தலைசிறந்த சித்தர்களில் இன்னுமொருவர் சிவவாக்கியர். திருமூலரின் வாரிசு எனப்போற்றப்படும் இவர் தாயுமானவரால் குறிப்பிடப்படும் பேற்றினையும் பெற்றவர். இவருடைய பாடல்களில் காணப்படும் எழுச்சிமிகு கருத்துக்கள் மனித சமுதாயத்தைப் பீடித்திருக்கும் மதம், சாத்திரம், உருவ வழிபாடு முதலான மடைமைப் பேய்களை அடித்து நொறுக்கும் ஆற்றல் வாய்ந்தவை.
இத்தகு சிறப்புப் பெற்ற சிவவாக்கியர் பாடல்களில் சிலவற்றையே
இக்கட்டுரை தன் ஆய்வின் மையமாகக் கொண்டுள்ளது.
இறைவன் பற்றிய கருத்துக்கள் எத்தனையோ. அவற்றில் ஒன்று ஒவ்வொரு உயிரிலும் இறைவன் இருக்கின்றான் என்பதாகும். இந்தியத் தத்தவக் கோட்பாடுகளில் ஒன்றான அத்வைதத்தின் அடிநாதமாக இருப்பது
C04)

மேற்படிச் சிந்தனையாகும். உபநிடதமே இதன் ஊற்றுக்கண் என்பது உலகப் பிரசித்தம். ஆனால் சிவவாக்கியர் இச்சிந்தனையிலிருந்து மாறுபட்டு, அறிவு வழி நின்று ஒழுகினால் ஒவ்வொருவனும் இறைவனைக் காணலாம் என்கிறார். இதனைப் பின்வரும் பாடல் தெரிவிக்கும்.
கோயில் பள்ளி ஏதடா? குறித்து நின்றது ஏதடா? வாயினால் தொழுது நின்ற மந்திரங்கள் ஏதடா? ஞானமான பள்ளியில் நன்மையாய் வணங்கினால் காயமான பள்ளியில் காணலாம் இறையையே.
இப்பாடலில் சிவவாக்கியர் குறிப்பிடும் இறை அத்வைதம் சொல்லும் பரமாத்மா அல்ல என்பதனை அவரது -
"நானும் அல்ல நீயும் அல்ல நாதன் அல்ல ஒதுவேன்
வானில் அல்ல சோதி நம்முள் உள்ளதே" எனும் பாடல் வரிகள் தெளிவாக்கும்.
இந்த வகையில் சிவவாக்கியர், கெளதம புத்தரையம் சில ஆண்டுகளுக்கு முன் நம்மை விட்டுப்பிரிந்த உலக தத்தவஞானி ஜே. கிருஷ்ணமூர்த்தியையும் ஒத்தவர் என நாம் பெருமை பேசலாம்.
மகாகவி பாரதி பிற்காலத்தில் 'அறிவொன்றே தெய்வமுண்டாமெனில் கேளிரோ என்று உலகப் பிரகடனம் செய்தமைக்கு சிவவாக்கியரின் சிந்தனைகளும் ஒரு காரணமாக இருக்கலாம். ஏனெனில் அவரும் ஒரு சித்தர் அல்லவா?
இறை பற்றிய தன் கருத்தினை எவ்வித தயக்கமுமன்றி தெரிவித்த சிவவாக்கியர் உருவ வழிபாட்டை எப்படி ஒப்பமுடியும்? எனவேதான், அவரது இதயத்திலிருந்து இப்படி ஒரு பாடல் எழுகின்றது. அந்தப்பாடல்:-
நட்ட கல்லைத் தெய்வமென்று நாலு புட்பம் சார்த்தியே சுற்றிவந்து முணுமுணென்று சொல்லு மந்திரம் ஏதடா? நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள் இருக்கையில் சுட்ட சட்டி சட்டுவம் கறிச்சுவை அறியுமோ?
கல் கடவுளாகுமா? என்று கணை கொடுத்த சிவவாக்கியர், கல் ஒன்றை எடுத்து உடைத்து அதில் ஒரு பாதியைப் பூசைக்கு வைத்துவிட்டு.

Page 6
மறுபாதியை வாசற்படியாக்குகின்றீர். இவ்விதம் இரண்டான கற்களில் எந்தக் கல் இறைவனுக்கு உகந்தது என்று இன்னுமொரு கேள்வியையும் அவர் எழுப்பாமல் இல்லை. சிந்தனையைத் தூண்டும் சிவவாக்கியரின் அந்தப் பாடல் வரிகள் இவை:-
ஓசை உள்ள கல்லை நீர் உடைத்திரண்டாய்ச் செய்துமே வாசலிலே பதித்த கல்லை மழுங்கவே மிதிக்கிறீர் பூசைக்கு வைத்த கல்லில் பூவும் நீரும் சாத்துகிறீர் ஈசனுக்கு உகந்த கல் எந்தக் கல்லு சொல்லுமே!
அனைத்துச் சமயத்தையும் சேர்ந்தவர்களில் ஒரு குறிப்பிட்ட தொகையினராவது தூர இடங்களுக்கு புனித யாத்திரை மேற்கொள்வதை நாம் அறிவோம். சிவவாக்கியருக்கு இதனைக் காணும்போது சிரிப்போடு சினமும் சேர்ந்து வருகின்றது. எனவேதான் அவர் இப்படிக் கேள்வி மேல் கேள்வி எழுப்புகிறார்.
இந்த ஊரில் இல்லை என்று எங்கு நாடி ஒடுர்? அந்த ஊரில் ஈசனும் அமர்ந்து வாழ்வது எங்கனே?
இவ்விதம் கேள்வி எழுப்பும் சிவவாக்கியர் மலை ஏறிக் கடவுளைக் காண விரும்பும் மனிதரிடம், காணவேண்டும் என்று நீர் கடல் மலைகள் ஏறுவீர் ஆணவம் அதல்லவோ அறிவில்லா மாந்தரே. என்று இடித்துரைக்கவும் தவறவில்லை.
சமயச் சண்டை செய்வதிலும் சளைத்தவர்கள் அல்ல நாங்கள். ஒவ்வொருவரும் ஒவ்வொரு தெய்வத்தை உயர்த்திப் பிடித்து அதற்கென்று கோயில் கட்டி கொண்டாட்டம் நடத்துவதே நமது சமயக் கொள்கையாகக் கொண்டிருக்கின்றோம். இந்த அற்பத்தனத்தை சிவவாக்கியர் எவ்வாறு எள்ளி நகையாடுகின்றார் என்று பாருங்கள்:-
எங்கள் தேவர் உங்கள் தேவர் என்றிரண்டு தேவரோ?
அங்கும் இங்குமாய் இரண்டு தேவரே இருப்பரோ?
உள்ளத்தூய்மை இல்லாதவன் உண்மையான துறவியாகமாட்டான். காட்டில் வாழ்ந்தாலும் கடுந்தபம் செய்தாலும் அவன் கபட ஞானியே. இப்படிப் பிரகடனம் செய்கின்றார் சிவவாக்கியர். பாட்டைப் படியுங்கள்:-
C06)

மனத்தகத்து அழுக்கறாத மவுன ஞான யோகிகள் வனத்தகத்து இருக்கினும் மனத்தகத்து அழுக்கறார் மனத்தகத்து அழுக்கறுத்த மவுன ஞான யோகிகள் பிணத்தகத்து இருப்பினும் பிறப்பறுத்து இருப்பரே.
சமயச் சடங்கு சாத்திரங்களில் அளவுகடந்த நம்பிக்கை கொண்டது தமிழர் சமூகம். பஞ்சாங்கம் படிக்கும் பழக்கம் இன்னும் நம்மை விட்டுப் போகவில்லை. சிவவாக்கியரால் இதனைச் சிறிதும் பொறுக்கமுடியவில்லை. எனவேதான். அவர் சீற்றம் ஒரு பாடலாக வெளிவருகிறது.
சாத்திரங்கள் ஒதுகின்ற சட்டநாத பட்டரே வேர்த்து இரைப்பு வந்தபோது வேதம் வந்து உதவுமோ?
புலால் உண்ணாமை எனும் கோட்பாடு சமண சமயத்தினர்க்குரிய தாகும். இந்துமதம் பிற்காலத்தில் இதனை ஒரு அறமாக ஏற்றுக்கொண்டது. சமணரான வள்ளுவரும் இக்கோட்பாட்டைச் சார்ந்து குறள் எழுதினார். ஆனால் சிவவாக்கியருக்கு இதில் எல்லாம் உடன்பாடு இல்லை. வள்ளுவர் வார்த்தையிலும் வழு உண்டு என்பது அவரது வாதம். அவர் பாடுகின்றார்
மீன் இறைச்சி தின்றதில்லை அன்றும் இன்றும் வேதியர் மீன் இருக்கும் நீரிலோ முழ்வதும் குடிப்பதும் மான் இறைச்சி தின்றதில்லை அன்றும் இன்றும் வேதியர் மான் உரித்த தோலிலோ மார்பு நூல் அணிவதும்
புலால் உண்ணாமைக் கோட்பாட்டினைப் போலவே இந்துக்களால் பெரிதும் போற்றப்படும் மறு பிறப்புக் கோட்பாட்டிலும் சிவவாக்கியர் நம்பிக்கை யற்றவர். இதனை அவரது பின்வரு பாடல் தெளிவாகப் பேசும்.
கறந்தபால் முலைபுகா கடைந்த வெண்ணெய் மோர் புகா உடைந்துபோன சங்கின் ஒசை உயிர்களும் உடற்புகா விரிந்த பூ உதிர்ந்த காயும் மீண்டும் போய் மரம் புகா இறந்தவர் பிறப்பதில்லை இல்லை இல்லை இல்லையே.
இவ்வளவு சிறப்பு வாய்ந்த கருத்துக்களைத் தந்து சென்ற சிவவாக்கியர் தமிழகத்தில் எக்காலப்பகுதியில் வாழ்ந்தவர் எனும் கேள்வி

Page 7
எழுதல் இயல்பே. இக்கேள்விக்கு அவர் பாடலில் பயன்படுத்தியுள்ள பல்வேறு சொற்களில் புத்தகம் என்னும் சொல்லே பதில் தரப் போதுமானது.
போத்துக்கீசர் தமிழ்நாடடிற்கு வருவதற்கு முன்பு (கி. பி. 15ம் நூற்றாண்டிற்குமுன்பு) பனை ஒலையில் எழுதும் வழக்கமே அங்கு புழக்கத்தில் இருந்தது. இவ்விதம் எழுதப்படுபவை ஏடுகள் எனவும் அழைக்கப்பட்டன. ஆனால் போத்துக்கீசரோடு தமிழகத்திற்கு வருகைதந்த அந்நாட்டுக் கத்தோலிக்க, கிறிஸ்தவ மதத் தறவியர் தம் சமயப் பணிக்கென ஆரம்பித்த அச்சுக்கலையினால் தான் புத்தகம் எனும் புதிய சொல் பயன்பாட்டிற்கு வரத் தொடங்கியது.
இதிலிருந்து சிவவாக்கியர் தமிழ்நாட்டில் போத்துக்கீசரின் வருகைக்குப்பின்பே வாழ்ந்தவர் என்று நாம் கொள்ள முடியும். இது தவிர வேறு சில ஏதுக்களும் இவரின் பாடல்களில் உள்ளன.
சமூக சீர்திருத்தத்தையே தம் பாடல்களின் தொனிப் பொருளாகக் கொண்டிருந்த சித்தர்களில் ஒருவரான சிவவாக்கியர் இருபதாம் நூற்றாண்டில் ஈ. வே. ரா. பெரியார் வடிவில் தமிழ் நாட்டில் எழுந்த சமூக சீர்திருத்தக் கருத்துக்கு அடிகோலியவர்களில் மிக முக்கியமானவர் என நாம் கூறமுடியும்.
சமூக சீர்திருத்தம் என்பது எப்போதும் மக்களைச் சார்ந்தது. எனவேதான் சாதாரண மக்கள் பயன்படுத்தும் பேச்சு மொழிச் சொற்களை (மூணு நாலு அஞ்சு, சாவல், சட்டுவம் போன்றவை) சிவவாக்கியர் பயன்படுத்தியிருக்கின்றமையை நாம் அவர் பாடல்களில் கண்டு இன்புறலாம்.
சிவவாக்கியர் பாடல்களின் சிரஞ்சீவித்தன்மைக்கு இதுவும் ஒரு காரணம் அன்றோ?

ஆண்டவர் உயிரினங்களுக்காகப் பூமி ஒன்றைப் படைத்துக் கொடுத்திருந்தார். அக்காலத்தில் நோவா என்றொரு மனிதர் வாழ்ந்து வந்தார். அவர் நீதி மானாகவும் ஆண்டவருக்கு ஏற்பு டையவராக வும் வாழ்ந்தார். அக்காலகட்டத்தில் அச்சமுதாயம்மிகவும்
கீழ்த் தரமான கப்பட்டது. கொலைகளும் G பெருங் குற்றங்களும்
மலிந்திருந்தன.
நோவா மிகவும் நல்லவராகவும் நீதிமானாகவும் விளங்கியபடியால் ஆண்டவர் நோவாவில் (7 இரக்கமாயிருந்தார். அவர் நோவாவைப் பார்த்துப் x- •४ பின்வருமாறு கூறினார். "இந்த மக்கள் மிகவும் சீர்கெட்டுப்போயிருப்பதால் நான் இவற்றை முற்றாக அழித்துவிடப்போகிறேன். ஆயினும் உனது நன்மைத்தனத்தை முன்னிட்டு உன்னையும் உனது குடும்பத்தையும் நான் காப்பாற்றுவேன். நான் சொல்கிறபடி நீ எல்லாவற்றையும் செய்து முடி’ என்றார்.
é.
நோவா அவர் கூறுவதைக் கவனமாகக் கேட்டார். "உனக்காக மரத்தால் ஒரு பெரிய பேழையைச் செய். அந்தப் பேழையில் மூன்று தட்டுக்கள் இருக்கட்டும். நான் மண்ணுலகின் மீது மாபெரும் வெள்ளப்பெருக்கை ஏற்படுத்துவேன். அப்போது மண்ணுலகில் உள்ளவை யாவுமே அழிந்து விடும். நீயும் உனது குடும்பத்தினரும் உயிர் பிழைக்கும் பொருட்டு அப்பேழைக்குள் நுழைந்துகொள்ளுங்கள். எல்லா உயிரினங்களிலிருந்தும் வகைக்கு இரண்டாக ஆணும் பெண்ணுமாக அப்பேழைக்குள் விட்டுவிடு உண்பதற்கு தேவையானவற்றையும் அதற்குள் வை. அவை உனக்கும் அந்த உயிரினங்களுக்கும் உணவாகட்டும்” என்று கூறினார்.
ஆண்டவர் கூறியபடி நோவா எல்லாவற்றையும் செய்து முடித்தார். ஊரிலுள்ளவிர்கள் நோவாவின் செயலைக் கண்டு எள்ளி நகையாடினர். நோவாவுக்கு ஆண்டவர் சொன்னதையோ, செய்யப்போவதையோ அவர்கள் நம்பவில்லை. அவர்கள் நோவாவைப் பைத்தியக்காரன் என்று ஏசினர்.
நோவா மனம் நொந்து அழுதார். அப்போது ஆண்டவர் அவர்முன் தோன்றினார். "இத்தலைமுறைக்குள் நீரே மிகவும் நேர்மையானவர் என நான் அறிகிறேன். நீ நான் கூறியபடி எல்லாவற்றையும் பேழைக்குள் அனுப்பிவை. நான் தொடர்ச்சியாக மழை பெய்வித்து வெள்ளப்பெருக்கை ஏற்படுத்தப்போகிறேன்” என்றார். ஆண்டவர் கூறியபடி எல்லாம் பேழைக்குள் அனுப்பப்பட்டதும் நோவாவும் அவர் குடும்பத்தினரும் அதற்குள் சென்றனர். ஆண்டவர் பேழையின் கதவை மூடிவிட்டார்.
நாற்பது நாட்களாகத் தொடர்ந்து மழை பெய்தது. வெள்ளம் பாய்ந்து ஓடியது. மண்ணுலகில் எதுவுமே மிஞ்சவில்லை. நோவாவின் பேழை மட்டும் நீந்திச் சென்றது. அதற்குள்
C09)

Page 8
இருந்தவர்கள் மட்டும் பிழைத்துக் கொண்டனர்.
நூற்றைம்பது நாட்களுக்குப் பிறகு ஆண்டவர் நோவாவையும் அவருடன் பேழைக்குள் இருந்தவற்றையும் நினைத்து மண்ணுலகில் காற்று வீசச் செய்தார். வெள்ளம் குறையத் தொடங்கியது.
வெள்ளம் வற்றிக்கொண்டு செல்ல ஒரு மலைத்தொடரில் நோவாவின் பேழை தங்கியது. மலை உச்சிகள் தெரியத் தொடங்கியபின் நோவா பேழையின் யன்னலைத் திறந்து காகம் ஒன்றை வெளியே அனுப்பி வைத்தார். அது அங்கும் இங்கும் அலைந்து திரிந்தது.
சிறிது நாட்கள் செல்ல, நோவா புறா ஒன்றை அனுப்பி வைத்தார். அது கால் வைக்கத் தரை இல்லாமல் மீண்டும் பேழைக்கே திரும்பி விட்டிது. நோவா இன்னும் சில நாட்கள் காத்திருந்தார்.
மீண்டும் நோவா ஒரு புறாவை வெளியே அனுப்பி வைத்தார். மாலையில் அது திரும்பி வந்தபோது அதன் அலகில் ஒலிவ இலை இருந்தது. நோவா வெள்ளம் சிறிது வற்றிவிட்டதை உணர்ந்து கொண்டார். சிறிது காலம் கழித்து திரும்பவும் அந்தப் புறாவை வெளியே அனுப்பினார். அது அவரிடம் திரும்பி வரவில்லை.
நோவா அதன்பின் பேழையின் மேற் கூரையைத் திறந்து பார்த்தார். வெள்ளம் வற்றியிருந்தது. நிலம் உலர்ந்திருந்தது.
அப்போது ஆண்டவர் நோவாவிடம் வந்தார். "இனி நீயும் உனது குடும்பத்தினரும் உன்னுடன் பேழைக்குள் இருந்தவையும் வெளியே வாருங்கள். இனி இப்பூமி உங்களுக்கே சொந்தம். நீங்கள் இப்பூமியில் வாழ்ந்து பல்கிப் பெருகுங்கள். gif Suliga * உங்கள் வழித் தோன்றல்கள் பூமியில் பெருகட்டும். சமாதானமும் சத்தியமும் நிறைந்த பூமியாக இது விளங்கட்டும். அக்கிரமங்களும் அநியாயங்களும் நிறைந்ததாலேயே உலகை நான் அழித்தேன். இனி, நீங்கள், ஆண்டவருக்கு எற்புடைய உலகை உருவாக்குங்கள்” என்று வாழ்த்தினார்.
நோவா நீதிமானாகவும், கடவுளுக்குப் பணிந்து நடந்தமையாலும், அக்கிரம உலகம்
அழிக்கப்பட்ட போதும் ஆண்டவர் அவரைக் காப்பாற்றினார். அவர் நீதியுடனும், நேர்மையுடனும் பன்னெடுங்காலம் மகிழ்ச்சியுடன் வாழ்ந்து வந்தார்.
C10)

வளரும் தமிழை வாரி அணைப்போம்
வருங்காலம் அதற்கே என்போம் தளரும் தமிழைத் தள்ளி வைப்போம்
தக்க புது நூல்கள் செய்வோம்.
விஞ்ஞானத் தமிழை விருத்தி செய்வோம்
விதவித சொற்கள் ஆயிரம் செய்வோம்
அஞ்ஞான இருளில் அமிழ்ந்தது போதும்
அறிவுத் தமிழை அள்ளி எடுப்போம்.
மக்கள் தமிழே மனதில் இருக்கும்
மண்ணுலகெல்லாம். அதுவே கேட்கும்
சிக்கலில்லா நடையில் தமிழைச்
செய்து தருவோர் அறிஞராவார்.
புலவர் தமிழைப் போற்றும் வாயால்
புதிய தமிழை வருக என்போம்
மலரும் தமிழால் மண்ணிது சிறக்கும்
மழலை நாமும் அதனைப் படிப்போம்.
தொழில் நுட்பத் தமிழைத் தொழுது படிப்போம்
தூய தமிழால் வளர்ச்சி இல்லை
மொழியில் மேலைக் கலைகளெல்லாம்
முறையாய் நாமும் பெயர்த்து வைப்போம்.
- ஆரணி -
C11)

Page 9
கடந்த நூற்றாண்டில் தமிழுக்குத் தொண்டு செய்தவர்கள் பலர் இவர்களில் 1வது இடம் உ. வே. சா வக்கு (1855-1942) உரியது. இரண்டாவது இடம் மகாகவி பாரதிக்கு உரியது.
தமிழ்தாத்தா என்றும், உ. வே. சா. என்றும். ஐயரவர்கள் என்றும் தமிழறிஞர்களால் போற்றப்படும் 2 வே. சாமிநாதையரின் வாழ்க்கை வரலாறு அண்மையில் தொலைக்கட்சியில் தொடராக ஒளிபரப்பப்பட்டது.
தமது குருவாகிய மகாவித்துவான் மீனாட்சி சுந்தரம் பிள்ளையின் மீது உ. வே. சா. எல்லையற்ற குருபக்தி கொண்டிருந்தார்.தமது குருவின் 、リ*** **。。。 ४ * * * * * ஆபெயரை எழுதும் போதே குருபக்தி え.x. ベ ^z:: ? காரணமாக மரியாதை காரணமாக தமது கை நடுங்கும் என்று அவர் குறிப்பிட்டு இருந்தார்.
தாம் கும் பகோணம் அரசினர் |கல்லூரியில் தமிழாசிரியர் ஆவதற்கு காரணமாக இருந்த தியாகராச
செட்டியார் மீதும் ஐயரவர்கள் மிகுந்த & பக்தி கொண்டு இருந்தார். அந்தப் பக்தி காரணமாகவே அவர் தமது |திருவல் லிக் கேணி வீட்டிற்கு *தியாகராச விலாசம்” என்று பெயர் |வைத்திருந்தார்.
உ. வே. சாவின் மாணவர்கள் எேன்றால், முதலில் நமது நினைவுக்கு உ.வே. சா. ஐயர் 'கலைமகள்" கி. வா. ஜகந்நாதன்
2
 
 
 
 
 

தான் நினைவுக்கு வருகிறார்.
கி. வா. ஜகநாதனுக்கு தமது குருநாதராகிய தமிழ்தாத்தா மீது இருந்த குருபக்தி மிகமிக ஆழமானது. தமது சொற்பொழிவுகளின் ஆரம்பத்தில் அவர் குரு வணக்கமாக உ. வே. சா. வைப் பற்றிப் பாடுவது வழக்கம்.
குருபக்தி என்பது கி. வா. ஜகநாதனிடமிருந்த பெரும் பொக்கிஷமாகும். அந்த குருபக்தியே கி. வா. ஜகநாதன் வாழ்க்கையில் பெற்ற எல்ல; வெற்றிகளுக்கும் மூலகாரணம் என்று நான் உறுதியாகவும் திட்ட வட்டமாகவும் நினைக்கிறேன்.
சிறந்த தமிழறிஞராகிய சுவாமி விபுலாநந்தர் சென்னை பூரீர மகிருஷ்ண மடத்தில் இருந்தபோது ‘பூரீராமகிருஷ்ன விஜயம்? பத்திரிகையின் ஆசிரியராகவும் பணி புரிந்தார். அப்போது அவருக்கும் தமிழ்த்தாத்தா உ. வே. ச. அவர்களுக்கும் நட்பு நிலவியது.
இந்தத் தகவலை பி. சி. கணேசன் எழுதிய 'தமிழ் வளர்த்த பேராசிரியர்கள்" என்ற நூலின் மூலம் அறிகிறோம். பூரீராமகிருஷ்ண மடத்துடன் தொடர்பு கொண்டு இருந்த தமிழ்த் தாத்தாவின் சீடர்களாகிய வாசிக கலாநிதி கி. வா. ஜகநாதன். செல்லம் ஐயர் ஆகியோருடன் நெருங்கிப் பழகும் வாய்ப்பு திருவருளால் எனக்கு கிடைத்துள்ளது. அவர்கள் உ வே. சாவின் அயராத தமிழ்ப் பணியைப்பற்றி உள்ளம் நெகிழக் கூறக் கேட்டிருக்கிறேன்.
போக்குவரத்து சரியாக இல்லாத அந்தக் காலத்தில் தமிழ்த்தாத்தா தமிழ்நாட்டின் பட்டி தொட்டி எல்லாம் கிராமம் கிராமமாக வயல் வரம்புகளில் அலைந்து திரிந்து படாதபாடெல்லாம்பட்டு - மூலைமுடுக்குகளில் ஒளிந்தும் நலிந்தும் கிடந்த ஏட்டுச் சுவடிகளைப் பரிசோதித்து உரை எழுதி பணவசதி இல்லாத நிலையில் மிகவும் சிரமப்பட்டுப் போராடி அவற்றை நூல்களாக வெளியிட்டார்.
ஐயரவர்கள் இல்லாமல் இருந்திருந்தால் இன்று நமக்குப் பெரும்பாலான சங்க இலக்கியங்களே கிடைக்காமல் போயிருக்கும்.
13

Page 10
இந்த நூற்றாண்டில் தமிழ் உரை நடையில் ஏற்பட்ட மறுமலர்ச்சிக்கு அடிகோலியவர் - இந்த நூற்றாண்டின் தமிழ் உர்ைநடையின் மூலகர்த்தா என்ற பெருமை உ. வே. சா. அவர்களுக்கே உரியது. தமிழ்ப்புலமையில் இமயமாக விளங்கிய அவர் - அரைகுறைத் தமிழ்ப் பண்டிதர்களைப் போல கரடுமுரடான தமிழ் எழுதி, மணிப்பிரவாளம் எழுதி மக்களைப் பயமுறுத்தாமல் - மக்களுக்குப் புரியும் எளிய உரை நடையிலேயே எழுதினார். அவரைப் பின்பற்றி பலரும் எளிய தமிழ் எழுத முற்பட்டதன் விளைவாகவே இன்றைய தமிழ் உரைநடை தோன்றி வளம் பெற்றது எனலாம். இந்த உண்மையை இன்றைய தலைமுறையினர் பலரும் அறிய மாட்டார்கள்.
ஒலைச் சுவடிகளில் மக்கி மடிந்து கொண்டிருந்த தமிழிலக்கியங்களை ஆாய்ந்து வெளியிட்டு உதவியதன் மூலம், அந்த நூல்களுக்கு உ. வே. சா. சாகாவரம் வாங்கிக் கொடுத்தார். ேேக 2. ஆனால் இந்தப் பணியை விடவும் தமிழ் மகாவித்துவான் மீனாட்சிசுந்தரம் பிள்ளை உரைநடைக்கு தமிழ்த்தாத்தா செய்த தொண்டே மகத்தானது என்று கல்கி ரா. கிருஷ்ணமூர்த்தி குறிப்பிட்டு இருக்கிறார்.
జజ్ఞాఃఖ్య
கல்கி ரா. கிருஷ்ணமூர்த்தி பின்வருமாறு எழுதுகிறார் - "இந்த அரும்பெரும் தொண்டைக் காட்டிலும் ஐயரவர்கள் செய்த மிகப் பெரும் தொண்டு என்னவென்றால், தற்காலத்திற்குரிய தமிழ் வசன நடை எப்படி இருக்க வேண்டும் என்பதைக் காட்டியதுதான். சங்க நூல்களைப் பதிப்பித்த ஐயரவர்கள் இறையனார் அகப்பொருள் உரையின் வசன நடையைப் பின்பற்றி எழுதவில்லை. சங்கப் புலவர்கள் கையாண்ட சொற்களை எல்லாம் தமது தமிழ் வசன நடையில் அவர் புகுத்தவில்லை. தற்கால தமிழ்மக்கள் நாவில் நடமாடும் சொற்களைக் கையாண்டு எளிமையான வசன நடையை எழுதினார்.?
உ. வே. சா.வின் வரலாறு பல ஆண்டுகளுக்கு முன்பு எனக்குத்
 

தெரிய வந்தபோது தமிழுக்கு நாம் ஏதேனும் ஒரு விதத்தில் தொண்டு செய்ய வேண்டும் என்ற எண்ணம் என் உள்ளத்தில் தோன்றயது. இந்த எண்ணம் உ. வே. சா.வின் வரலாற்றை அறியும் எவருக்கும் தோன்றும் என்று நினைக்கின்றேன்.
1960ஆம் ஆண்டு திருவல்லிக்கேணியிலுள்ள தமிழ்த் தாத்தாவின் வீடாகிய தியாகராசா விலாச’த்திற்கு புத்தகங்கள் வாங்கும் பொருட்டு முதன் முறையாக நான் சென்றேன். இந்த நூற்றாண்டில்தமிழ்த்தாயின் மூத்த மகன் என்ற பெருமை உ. வே. சாவுக்கே உண்டு.
ஆங்கிலேயர் காலத்திலேயே அவரது தமிழ்ப்பணியின் பெருமை உணர்ந்து அவருக்கு 'மகாமகோ பாத்யாய” பட்டமும் 'டாக்டர் பட்டமும் கொடுத்தார்கள். ஆனால் நாடு விடுதலை அடைந்த பிறகு அவரது பணிக்குத் தமிழ் மக்களிடையே கிடைக்க வேண்டிய மரியாதை கிடைக்கவில்லை என்பது வேதனைப்பட வேண்டிய ஓர் உண்மைதான்.
உ. வே. சா. தமிழுக்கு ஆற்றிய அருந்தொண்டைதமிழ் பேசும் நாம் மறந்தால் நன்றி கொன்ற பாவமே நமக்கு வந்து சேரும்.
தமிழ்மொழி பேசும் நாம் ஒவ்வொருவரும் நமக்குப் பின்வரும் தலைமுறையினரும் - உ. வே. சாவை நன்றியுடன் நினைவுகூரக் கடமைப் பட்டிருக்கின்றோம். சென்னை, திருவான்மியூரிலுள்ள டாக்டர் உ. வே. சா.வின் நூலகத்தில் 1996ம் நவம்பர் மாதத்தில் தமிழ்த்தாத்தாவின் திருவுருவச் சிலை ஒன்று திறக்கப்பட்டது.
தமிழ்த்தாத்தா தொடர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டதும், உ. வே. சா. திருவுருவச் சிலை சிறப்பு விழாவும் சமீப காலத்தில் தமிழ் நாட்டில் நடந்த 2 நல்ல காரியங்களாகும்.
பகிரதன் செய்த கடுந்தவம் வானதி கங்கையைப் பூமிக்கு வரவழைத்தது. அதனால் பெரிய அளவில் முயற்சிகளை மேற்கொண்டு சாதனை புரிவதை “பகிரதப் பிரயத்தனம்" என்று குறிப்பிடும் வழக்கம் ஏற்பட்டது.

Page 11
பகிரதப் பிரயத்தனம்" என்பது போல் தமிழுக்கு உ. வே. சா. ஆற்றிய தொண்டை உ. வே. சா. பிரயத்தனம்" என்று ஒரு சொற்றொடரையே தமிழர்கள் உருவாக்கிப் பயன்படுத்தலாம்.
ஓர் அரசு செய்யவேண்டிய தமிழ்ப் பணியை ஓர் அரசால் மட்டுமே செய்யக்கூடிய தமிழ்த் தொண்டை தனியொரு மனிதராக இருந்து தமிழ் தாத்தா செய்து இருக்கிறார்.
தமிழ்மொழி உள்ளவரை உ. வே. சா.வின் பெயரும் தமிழர் உள்ளங்களில் நிலைத்திருக்கும். W
நன்றி:- !ழரீராமகிருஷ்ண விஜயம்? - டிசம்பர் - 1996.
காரிருளால் சூரியன்தான் மறைவதுண்டோ?
கறைச்சேற்றால் தாமரையின் வாசம்போமோ?
பேரெதிர்ப்Uால் உண்மைதான் இன்மையாமோ?
Uறர் சூழ்ச்சி செந்தமிழை அழிப்பதுண்டோ?
- பாரதிதாசன்,

(p305ut 360Tub 62áiG3urUT I
سسہ /
அ. கலைநிலா (ஆண்டு 10, மட்/புனித சிசிலியா மகளிர் வித்தியாலயம்)
Cத்தோர் சொல் வார்த்தை அமிர்தம்" என்பார்கள். முதுமை என்பது கனிந்த நிலை, இயற்கையில் எதை எடுத்துக்கொண்டாலும் கனிந்த பருவமே அதிக பலனைத் தருகிறது. காயை விட கணிக்கு சுவை அதிகமல்லவா? முற்றி விளைந்த நெற்கதிர் தானே அறுவடைக்குத் தயாராகிறது? இந்த வகையில் முதியவர்களும் இயற்கை அன்னை நமக்களித்த கொடையே ஆவர். தங்கள் அனுபவங்களைக் கொண்டு முட்களை விலக்கி மலர்களினால் எமக்கு படுக்கை போட்டுத்தரும் அற்புதப் பிறவிகள் அவர்கள். அவர்களுக்கு கை கொடுப்பது நமது கடமையல்லவா?
வயோதிபன் ஒருவன் இருக்கும் குடும்பத்தில் ஒரு இரத்தினம் இருக்கிறது என்று கூறுவார்கள். அந்த அளவுக்கு முதியவன் ஒருவன் பெறுமதியாக இருக்கிறான். உலகப் புகழ்பெற்ற ஒரு அறிஞர் இவ்வாறு கூறினார். முன்னோர்களின் தோளுக்கு மேல் நின்றதால்தான் நான் இவ்வளவு உயரத்தை தொட முடிந்தது". ஆமாம்! எவரஸ்ட் மலை இவ்வளவு உயரமாக வளர்ந்ததற்குக் காரணம் அதன் அடித்தளம் தான். அவ்வடித்தளத்தால்தான் அது புகழ்பெற்று இருக்கிறது. அடித்தளத்தை மறப்பது பாருக்கு நல்லதல்ல. எனவே எமது அடித்தளமாகிய முதியோரைப் பேணி அவர்களுக்குக் கைகொடுப்போம்.
C17)

Page 12
'வயோதிபர்களுக்குச் சேவை செய்வது கடமை. ஒத்த வயதுடையோருக்குச் சேவை செய்வது பணிவு" என்கிறது யூகோஸ்செலேவி யாப் பழமொழி. பணிவையும். கருணையையும் கைவிட்டாலும் நாம் கடமையை மறக்கலாமா?
சிலர் முதியவர்களைப் பாரமாகக் கருதி வயொதிப மடங்களில் கொண்டு போய் விடுகின்றனர். அவர்கள் இளமையில் செய்த சேவைகளை அறியாமலா இப்படிச் செய்கின்றனர். இல்லவே இல்லை. அறிந்தே இப்படிச் செய்கின்றனர் என்று நிச்சயமாகக் கூறலாம். மனம் முதுமையடையாது. உடலே சோர்ந்துபோய் முதுமையாகக் காட்சியளிக்கின்றது. மனதில் தைரியம் நம்பிக்கை உள்ளோர் மிகவும் சுறுசுறுப்பாகவே இருக்கின்றனர். அறிஞனைக் கேட்காதே அனுபவசாலியைக் கேள்" என்று சும்மாவா சொல்லி வைத்தார்கள்? முதியோரை அவ்வளவு பெரிதாக மதித்தமை அல்லவா காரணம்? முதியோர் அனுபவசாலிகளாக இருக்கின்றனர். அதாவது அறிஞரைவிட புத்திசாலியாகக் காணப்படுகின்றனர்.
இளமையில் நம்பிக்கை; முதுமையில் பழைய நினைவு. இவ்வாறு பழைய நினைவுகளில் தேங்கிக் கிடக்கும் எம் முதியவர்களுக்கு கை கொடுப்பது நம் கடமை அல்லவா? நீ வயோதிபனாக இருந்தால் புத்திமதி கூறு அல்லது இளைஞனாக இருந்தால் புத்திமதி கேள்” என்றார் சீன அறிஞர். ஆமாம்! இதில் எத்தனை உண்மைகள். 'காவோலை விழ குருத்தோலை சிரிக்கும்" என்று சும்மாவா சொல்லி வைத்தார்கள். குருத்தோலையாகிய நாமும் காவோலையாக மாட்டோமா? இதைச் சற்று சிந்திக்க வேண்டாமா?
நம்மில் சிலர் முதியோருக்குக் கை கொடுக்க மாட்டார்கள். ஆனால் அவர்களுக்கு இடைஞ்சல் கொடுப்பாகள். முதியவர்கள் - ஆனால் உடலுறுப்புகளும் தளர்ந்துவிடும். இப்படிப்பட்டவர்களுக்கு நாம் தொல்லை கொடுப்பது ஏன்? இதைச் சிந்திக்க வேண்டாமா?
ஒருவன் உயரக் கைகொடுப்பது முதியவரே. அவர்கள் சற்று தளர்ந்த போதும் இளைய சமுதாயமாகிய நாம் அவர்களுக்கு கை கொடுப்பது மட்டுமன்றி பேணிக்காப்பதும் நமது கடமையும் பாரிய பொறுப்பும் ஆகும். உபயோகித்துவிட்டு அவர்களைப் குப்பை என நினைத்து கூட்டித்

தள்ளுவதேன் எம் சமுதாயம். நாம் இவ்வாறே சென்றால் முதியவர்களின் நிலை என்ன? முக்கியமாக நமது நிலையும் கவலைக்குரியதே. ஏனெனில் முதியவர்களின் சொற்களை மதியாமல் அதை உதறித் தள்ளிவிட்டுச் சென்றால் நாம் ஓர் பாதாளத்துக்குள்ளே காலடி வைக்கின்றோம் என்றே நினைக்க வேண்டும்.
முதியோர் தினத்தில் மட்டும் "முதியோருக்கு கைகொடுப்போம், உதவுவோம்” என்றெல்லாம் அட்டைகளில் எழுதி தொங்கவிட்டால் காரியம் முடிந்து விடுமா? அதைச் செயலில் காட்ட வேண்டாமா?
நாம் மனிதர்களாக - மனிதத்தன்மை உடன் வாழ வேண்டும் என்றால் எமது செயல்கள் முதியோர்களைப் பேணுவதற்கு ஏற்றதாக அமையவேண்டும். இல்லாவிடின் மனித சமுதாயம் அதாவது இளையவர்கள் இருப்பதைவிட்டு வேறு எதையோ தேடி அலைந்து திரியும் ஒன்றாகி மாறிவிடும். எனவே வளரும் சுமுதாயமாகிய நாம் முதியோருக்கு கைகொடுக்க ஆவன செய்வோமாக! ی

Page 13
ஒற்றுமையே பலம்
ஒரு கோழி தனது ஐந்து குஞ்சுகளுடன் ஒரிடத்தில் வாழ்ந்து வந்தது. இரை தேடுவதற்காக அக்கம்பக்கம் அவற்றைக் கூட்டிச் செல்லும், தாய்க்கோழி மிகவும் கவனமாக அவற்றை வளர்த்தாலும் அக்குஞ்சுகள் தமக்குள் சண்டை இட்டுக் கொண்டன. தன் குஞ்சுகள் ஒற்றுமையில்லாமல் சண்டை போட்டுக் கொள்வதைக் கண்ட கோழி மிகவும் வருந்தியது.
கோழியும் குஞ்சுகளும் இரைதேடும் பற்றைக்குப் பக்கத்திலே ஒரு பெரிய மரம் இருந்தது. அந்த மரத்திலே காகங்கள் பல வாழ்ந்து வந்தன. கோழி தனது குஞ்சுகளை அழைத்து அந்தக் காகங்களைக் காட்டியது. “பாருங்கள் எவ்வளவு ஒற்றுமையாகக் கிடைத்த உணவை உண்ணுகின்றன. நீங்களும் இவற்றைப்
!--

Page 14
பாரசீகக் கவிஞன் உமர்கையாம்
பாரசீகத்திலே கி. பி. 11ம் நூற்றாண்டிலே தத்துவக் கவிஞனாக வாழ்ந்தவர் உமர்கையாம். இஸ்லாத்தில் மிகுந்த பற்றுக் கொண்டு வாழ்ந்த இவர் சிறந்த கணித மேதையுமாவார். புரட்சிகரமான கருத்துக்களைக் கவிதைகள் மூலம் வெளியிட்ட இவரை மக்கள் இவர் வாழ்ந்த காலத்தில் மதிக்கவில்லை.
மக்கள் இவரைப் பரிகாசம் தெய்தார்கள். இவரை ஒரு கவிஞனாகவோ இவரது கவிதைகளை ஒரு பொருட்டாகவோ அவர்கள் எண்ணவில்லை. உமர் கையாமின் பாடலுக்குருபாயத்” என்று பெயர். தேடுவாரற்றுக் கிடந்த இந்த கவிச் செல்வத்தை 1809ல் ஈ. பிட் ஜெரால்ட் என்னும் ஆங்கிலேயர் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து வெளியிட்டார். ஆங்கில மொழிபெயர்ப்பில் வந்த பின்பே இவரது கவிதைகள் போற்றப்படத்தொடங்கின. மூலநூல் தேடிப் போற்றப்பட்டது. உமர்கையாம் சிறந்த கவிஞராக பெருமைப்படுத்தப்பட்டார்.
தமிழ் மொழியில் இக்கவிதைகளை முதன்முதலில் மொழிபெயர்த்த பெருமைக்குரியவர் வி. எம். சம்சுதீன் என்பவராவார். 'தினகரன்’ பத்திரிகையின் உதவி ஆசிரியராகக் கடமையாற்றிய
இவர் 1936ல் இதனை ஆங்கிலத்திலிருந்து தமிழுக்கு மொழிபெயர்த்தார்.
மக்கள் வாழ்வாங்கு வாழ்ந்து ஆனந்தமாய் இறைவனை அடைய வேண்டும் வழிகளைச் சொல்வனவே இவரது பாடல்கள் என்று அறிஞர் குறிப்பிடுவர். ஆயினும் இவரது பாடல்களின் உட்கருத்தை ஆழ்ந்து நோக்காது உமர்கையாம் ஒரு மதுப்பிரியன் என்றும் மது மயக்கத்தை ஏற்படுத்தும் வழி சமைப்பவை இவரது பாடல்கள் என்றும் கருத்துத் தெரிவிப்போரும் உண்டு. ஆயினும் சிறந்த தத்துவக் கருத்துக்களைக் கொண்டு அவை திகழ்வதை யாராலும் மறுக்கமுடியாது. ஒரு தரம் பூ த்த பூ மறுதரம் பூ க்காது. எங்கே உன் கோப்பையை நிரப்பு மனிதன் ஒருதரம் பிறந்தவன்; மறுதரம் பிறக்கமாட்டான். எங்கே உன் நன்மைகளை நிரப்பு.
இவைபோன்ற கருத்துக்கள் அவரது கவிதைகள் முழுவதும் விரவி நிற்பதைக் கவனிக்கலாம்.
மக்களைப் பாவ வழியில் செல்லாது நன்மைத் தனத்தால் நிரப்ப வைக்கும் நோக்கம் கொண்டவையே அவரது பாடல்கள் என்று தெளியலாம்.
இந்த நிலையில் சாமி சிதம்பரனார் என்னும் அறிஞர் உமர்கையாம் பற்றிக் குறிப்பிடுவதை இங்கே கவனிப்பது அக்கவிஞனை மேலும் தெளிவாக்கும். “உமர்கையாம் என்னும் பெரியோன். பாரசீக மொழிப் புலவன். உலகநிலை ஆய்ந்த தூயவன். அமர உள்ளம் வாய்ந்திட்டோன், ஆனந்தமாய் மக்கள் வாழ வழி அறிந்த வள்ளல், கம கமவென மணம் வீசும் வாடாத மலர்கள் எனக் கவி மலர்களை உதிர்த்து வைத்தான்”
○

சவப் பெட்டிக்குள் சமாதானம்
சமாதானம் இன்று
சவப்Uெட்டியில் வைக்கப்பட்டுள்ளது
குண்டுகளுக்கும் துப்பாக்கிகளுக்குமே
குதூகலம்
விலங்குகளே இந்த மனிதனைக் கண்டு விலகி நடக்கின்றன.
ஏன் இந்த மனிதனைப் படைத்தேன் என்றெண்ணிக் கடவுள் கண்ணிர் வழக்கின்றார்.
இன, மொழி, வெறி தினமும் தேசத்தை எரிக்கின்றது.
கொலன்னாவை கொழுந்துவிட்டெரிந்த போது யாழ்ப்பாணம் குதுகலத்தால் குளிர்ந்து போனது.
பகை பல்லக்கில் ஏற அன்பு தெருத் தெருவாய் அலைகிறது.

Page 15
யேசு கிறிஸ்துவுக்கு இங்கு என்ன வேலை?
புத்தன் ஏன் இந்தப் பூமியில் பிறந்தான்?
மோயீசன் பக்கமே முழு உலகமும்.
வாளெடுத்தவனே வாழ்கிறான்.
துப்பாக்கிக்கு எப்பக்கமும் வரவேற்பு.
இனத்திலும் மொழியிலும் என்ன இருக்கிறது? மனதைக் கெடுக்கலாமா மனிதன்?
சாதி மதங்கள் மனிதனுக்குக் கிடைத்த சாUங்கள்.
எல்லோரும் மனிதர் எல்லோரும் ஒன்று இந்நிலை எப்போது வரும் சொல் இறைவா! நீதானே சூத்திரதாரி?
- சிவந்தி

பட்டம் கட்டி ஆடுவோம்
பட்டம் ஒன்று கட்டுவோம் பறக்க விட்டுக் காட்டுவோம்
எட்டு மூலைப் பட்டத்தை ஏற்றி விளையாடுவோம்.
L Duílson6ALU GLUIT 6U LILLLADTL id வண்டு போன்ற பட்டழஈர் குயிலைப் போன்று பூAட்டமாடம்
கூவும் வண்ணம்
LLŶD 6nīNGLD GLU TL | qu u TL b
ir6oT L D ĠILI T6Ab Lu Li L u 966ri
வானில் பறக்குது.
○

Page 16
ஆளுக்கொரு கையிலே ஆடும் பட்டம் வானிலே ருபாலைக் கையில் ஏந்தியே நீட்டி இழுத்துப் பிடிக்கிறார்.
வால் தொலைத்த பட்டங்களர் வட்டபம் அடித்துச் சுழலுது ருபால் அறுந்த பட்டங்களர் நுாறு பமீற்றர் போகுது
வானம் நிறைந்து பட்டமாய் வண்னக் காட்சி காட்டுது வானைப் பார்த்துக் கூட்டமாய்
வந்து மக்கள் ரசிக்கிறார்.
ச. அருளானந்தம் ('சின்னச் சின்னப் பாட்டு' எனும் நூலிலிருந்து)
 


Page 17
மட்டக்களப்பில் இரு
இரு மாத
ஓர் இதழின் ரூபா பத்து (10/4)
வாங்குங்கள்.
வாசகர் ஆ
ஆண்டுச்
ebLIT DI
ஆறு மாத
dbi III
SponS( by
Profession Cal Psycho Cerat BATTICA
(ഖണി கலை பண்பா
I0 / ẩ.
Printed by: Jescom Printers, Batticaloa.

ந்து வெளிவரும் இதழ்.
விலை - மாத்திரந்தான்.
வாசியுங்கள்
குங்கள். .
சந்தா
100/-
ச் சந்தா
55/-
pred -
logical Counselling
re ALOA.
I (S ட்டுக் களரி 5ளப்பு