கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: புதையல்

Page 1
அமோரா வெளியீடு
 


Page 2

புதையல்
வி. பி.
அமோரா வெளியீடு

Page 3
Title:
st Edition:
Author;
Publisher:
Printers:
Price:
Subject:
Puthaiya
Marce 1998
David W. Patrick omi B. Th, B. A.
AMORA PUBLICATIONS 95 1/5, Ratnam Road, Colombo - 13, Shri Lanka.
Linraj's Printers 282/15, Dam Street, Colombo. 12
Rs. 20/-
Personal consciousness and socia awareness are essential elements in unfolding God's riches. Such expression is cuite evident in the life experience of Christ. Puthaiyal enriches the reader to be absorbed in the process of Conscientization and to be &CCU ainted with the intensified Cuality of life.

உள்ளே . . . . .
ருசித்துப் பாருங்கள் a மனித மேம்பாடு கொடுத்தல் 0 KM ) அறிவுசார் நல்வாழ் இறந்தோர் நினைவாக பாதச் சுவடுகள் உள்ளத்தில் மாற்றம் சுமைதாங்கிகள் இறையுறவில் நிறைவு உயிர்ப்பின் ம்கிமை மனம் சாயவில்லை நல்லவர்களின் வல்லமை வாழ்க்கைப் பரிசு அன்பின் அழியாத அர்த்தம் குறையப் ப்ேசி நிறையச் செய் மகிழ்ச்சிப் பரிமாற்றம் மனித வளர்ச்சி மனிதராய் வாழுங்கள் பாலும் பழமும் நாளைய தலைவர்கள் வெளிவேடம் வேண்டாம் மலரும் மனமும் கிறிஸ்து வாழ்கின்றார் பிலாத்துவும் புரோக்குலாவும் அழகி யார்? அன்புக் கட்டளைகள் தனிமையின் தணித்துவம் கோபம் தேவைதானா? நல் வாழ்க்கை புதிய பாதை! புதிய பயணம்! பசியின் பரிணாமம் இடைவெளி ஏற்பதா? எதிர்ப்பதா? இன்புறல் இயல்பானதே உன்னை நான் தேடுகின் றன் கனானேயப் பெண் தன்வயமாக்கல் பரிசேயனது பெருமை அன்புள்ள o UT & 888 மனிதன் மாறவில்லை பயணம் தொடர்கின்றது கூனிப் பெண்
துன்பம் துடைக்கப்படுகின்றது
சிறப்பான செபம் 56 45. அடிமைத்துவம் நம்பமுடியவில்லை 57 47. இறை இரக்கம் எண் குணத்தான் 60 49 இனி நிமிர்ந்து வாழ்வீர் 61
புதையல்
55 59
62.

Page 4
அன்புரை
இன்று மனிதன் இயந்திர வாழ்க்கை வாழ்கிறான். பொருள் சேர்க்கவும், வல்லமை, பட்டம், பதவியைப் பெறவும் இடி அலைகுறான். போட்டி, பொறாமை, பழி வாங்கும் எண்ணம் வளர்ந்து செல்கிறது. இப்படிப்பட்ட சூழ்நிலையில் வாழும் மனிதனுக்கு வி. பி. அடிகளாரின் 'புதையல்' என்ற நூல் சிந்திக்க உதவக்கூடியது.
இளம் எழுத்தாளராகிய இவரது இந்நூலில் சிறு சிறு பந்திகளாகச் சிந்திக்கத் நூண்டும் தலைப்புகளில் வடித் திருப்பது விரும்பத்தக்கது மேலும் விவிலியத்திலுள்ள சில வார்த்தைகளை மேற்கோள்காட்டி விளக்கியிருப்பது "புதையல்" என்ற தலைப்புக்குப் பொருத்தமானதே.
இன்று வாசகர்கள் மத்தியில் சுருக்கமான வெளி யீடுகளே விரும்பப்படுகின்றன காரணம் அவனுக்கு வாசிக்க நேரமில்லை வேகமாக ஒடும் சூழ் நிலையில் ஒவ்வொரு பக்கங்களிலும் ஒவ்வொரு தலைப்பை அமைத்து எழுதி யிருப்பது வாசிக்கத் தூண்டும் முயற்சியாக உள்ளது.
சமுதாயத்திற்குப் பணி செய்யவேண்டும் என்ற தாக மும் துடிப்பும் கொண்ட ஆசிரியர் பல நூல்களை எழுதி அனுபவம் மிக்கவர் அவரது பணி கெளரவிக்கப்படவேண்டிய ஒன்றாகும்.
ஆசிரியரின் எழுத்துப்பணி வளரவேண்டும் அதன் மூலம் வாசகர்களின் தாகம் தணிய வேண்டுமென வாழ்த்துகிறேன்.
எஸ். ஜே. யோகராசா
களனிப் பல்கலைக் கழகம், களனி 9 - 12 - 1992

அணிந்துரை
பார்வையிருந்தும் குருடனா! கேள்வியிருந்தும் செவிடனா! வாழ்விருந்தும் குறிக்கோள் இல்லையா! குறிக்கோளிருந்தும் கொள்கைஇல்லையா! கொள்கையிருந்தும் நாணயம் இல்லையா! வாழ்க்கை அனுபவத்தில் ஊன்றிய, பரந்த ஆழ்ந்த சிந்தனை முத்துக்களில் சிதறல்களை இணைத்துத் தொகுத் துக் கொடுக்கிறார் ஆசிரியர் வி. பி. அடிகள்.
முத்துக்களை உடைத்து, படித்து, உயத்துணரும் பொழுது சீரிய வாழ்க்கைக்கான ‘புதையல்" மிகுந்து கிடக்கின்றது.
மனித உள்ளத்தில் தேங்கிக் கிடக்கும் சுய உணர்வு, பிறர் உணர்வு, சமூக உணர்வு, இறை உணர்வு ஆகிய பண்புகளை தட்டி எழுப்பி புதிய விழிப்புணர்வுடன் வாழ வழி அமைக்கிறார் ஆசிரியர்.
இந்நான்கோண உணர்வுகள் தனித்தனியே செய லாற்றும் மனித உணர்ச்சிகள், அல்ல. இவையனைத்தும் ஒன்றோடு ஒன்று பின்னிப் பிணைந்து ஒன்றாகச் செய லாற்றும் வாழ்க்கை நெறியாக அமைந்து ஒருவனை முழு மானிடனாக மாற்ற வேண்டும். பிளவுபட்டு சிதறுண்டு வாழ்க்கையை ஒருங்கமைப்பதே ஆசிரியரின் நோக்க மாகிறது. 'மனித வளர்ச்சி” எனும் புதையலில் ஆசிரி யரின் நோக்கு தெளிவாகின்றது எமது சித்தையில், செயற் நிறனில், எமது கொள்கையில், எமது வாழ்க்கையில் மாற்றம் வேண்டும்.
நாணயமும் கொள்கையும் உள்ள வாழ்க்கையின் குறிக்கோளை அமைத்துக்கொள்ள, பார்வையையும் கேள் வியையும் அளிக்கும் புத்துணர்ச்சியை வெளிக்கோணரும் வயிைல் அமைக்கின்றது " " புதையல்'
ஆசிரியரின் செயற்றிறனையும் பாரிய முயற்சியை யும் பாராட்டி வாழ்த்துகையில், வாசகர்கள் தம் வாழ்க் கையில், புதிய கண்ணோட்டத்தையும் தென்மையும் பெறு வார்கள் என நம்புகிறேன்.
லொயிட் சாந்திக்குமார் அடிகள் கொழும்பு மறை மாவட்ட, மறைக்கல்வி இணைப்பாளர் (தமிழ்ப் பிரிவு), கொழும்பு - 08, 08 - 12 - 1992.

Page 5
பொன்னுரை
"புதையல்" எனும் கலாச்சாரச் செழுமைகள் ஒரு சேர அமைந்த நூலை வண. டேவிட் வி. பற்றிக் எழுதி யிருக்கிறார் இப்புத்தக வெளியீட்டின் பொழுது அதிதியாக நான் கலந்துகொண்டேன். ஆத்மீக மெஞ்ஞானமுடைய கலைகளும், பாரம்பரியங்களும், பண்பாடுகளும் பல்வேறு பரிமானங்களில் . கோணங்களில் பகுத்தாய்ந்து தொடுக்கப் பட்ட படைப்பு இதுவாகும்.
கவிதை நயமும், சிந்தனையாளர்களின் தழுவல்களும் ஆழவேரூன்றி செம்மைப்பட்ட இலக்கிய வடிவத்தை நூலா சிரியர் செழுமையாகவும், துல்லியமாகவும் வெளிப்படுத்தி யிருக்கிறார். இப்புத்தகத்தில் ஐம்பது ஆய்வுக்குரிய அம்சங் கள் அடங்கியுள்ளன. அவ்வளவும் அறிவுக்கு விருந்தாகும் தமது சுவடுகளை நமக்கே நினைவூட்டுகின்றன.
" "பறவையைக் கண்டான் விமானம் படைத்தான்; பாயும் மீனில் படகினைக் கண்டான்; எதிரொலி கேட்டான் வானொலி படைத்தான்; இத்தனை ஆற்றல்களின் பின்ன ரும் இன்றும் மனிதன் மாறவில்லை என்ற கவியரசர் கண்ணதாசன் கழன்ற கருத்துச் களஞ்சியத்தை நூலாசிரி பர் நுட்பத்தோடு நுணுக்கமாக கையாண்டிருப்பது வியக் கத்தக்க பிரமிப்பை ஊட்டுகின்றது. மதச் சார்பற்ற அறிவு நாலாகும் இது.
மனிதன்மாறவேண்டும் என்கிறார்.அவனது சிந்தன ன யில் மாற்றம் ஏற்பட மனிதன், மனிதனாக, மனிதர்களை வாழவைப்பவனாக, ஆணவத்திமிரைத் தகர்த்து ""நாம் ? என்ற பெரும் மனத்தினைப் பலப்படுத்தும்படி உணரவைக் கிறார்.
அன்பு ஒரு கொடை! அது வெகுமதி அல்ல! அணுக் குண்டைவிட அன்பற்ற இதயத்திலிருந்து வெளிப்படும் வார்த்தைகள் ஆபத்தானவை என்ற வரிகள் தமது சிந்தனை யைச் சலவைச் செய்கின்றன.
- 6 -

"அன்பர் பணிசெய்ய என்னை ஆள்ர்க்கி விட்டுவிட் டால் இன்ப நிலை தானே வந்தெய்தும் பராபரமே" என்ற தாயுமானவர் பாடல்; சீதேவி-மூதேவி அழகுக்கு தீர்ப் பளிக்கும் திருமால்: மனநோய் ஆய்வாளர் டாக்டர் வில்லி யம் கிளாசர்; கவியரசன் கண்ணதாசன் செப்பிய கவிதை யேசுநாதருடைய சத்தியப் போதனை பேர்ன்ற இன்னோ ரன்னவர்களின் உவமைகளை நெஞ்சம் மறவாது.
சரளமான நீரோட்ட நடையில் எளிமையையே அணி கலன்களாகக் கொண்டு ஆழமான கருத்துச்செறிவை அரு வியெனச்சொரியும் ஆய்ந்தெழுதப்பட்ட அரிய படைப்பு
"புதையல்’
நூலாசிரியரின் மன ஆழத்தையும், அனுபவத்தையும், அவர் கையாண்டுள்ள எழுத்தின் ஆளுமையையும் வியந்து பாராட்டுகின்றோம், இந்நூலை இளைய சமுதாயத்தினர் படித்துணரவேண்டியது அவசியம். இதுபோன்ற பல ஆக்சங் கள் வெளிவர எமது தல்வாழ்த்தை அன்புடன் தெரிவித் துக்கொள்கின்றோம்.
எம்: எஸ். செல்லச்சாமி கைத்தொழில் இராஜாங்க அமைச்சர்
பொதுச் செயலாளர், இலங்கை தொழிலாளர் காங்கிரஸ், கொழும்பு.

Page 6
என்னுரை
இன்று நேற்று அல்ல, என்றுமே மனிதன் மாறு கின்றான். மனிதன் பல்வேறு நிலைகளில் மாற்றம் பெறு கின்றான். தேங்கி நிற்காமல் தொடர்ந்து ஒடுவதனால் ஆற்று நீர் புனிதமடைகின்றது. அதேபோன்று மனித மன மும் தேங்கிய குட்டை போலல்லாது தெளிந்த நீரோடை போன்று மாற பற்பல நற்சிந்தனைகளால் மாற்றம் பெறு வது அவசியமாகும். இந்த வகையில் நல்ல மாற்றங் களை உங்கள் மனதில் 'புதையல்" தோற்றுவிக்கும் என் பது எனது நம்பிக்கையாகும்.
இறைவனின் தாராள மனப்பான்மை,நிபந்தனையில்லா அன்பு, அளவுகடந்த கரிசனை போன்ற நற்பண்புகள் இந் நூலில் சிறப்பாகக் கூறப்பட்டுள்ளது. மேலும் இந்தப் "புதையல்' உங்கள் இதயங்களில் நல்ல இரசனையை வாழ்வினில் நல்ல திருப்பத்தை ஏற்படுத்தும் என்பது எனது எதிர்ப்பார்ப்பாகும்"
இறுதியாக இந்நூல் வெளிவருவதற்குப் பக்கபல மாயிருந்து உற்சாகமூட்டிய லூசியன் றெயினோல்ட் அடிகளாருக்கும் பல்வேறு வழிகளில் உதவி நல்கிய மல்கம் செலர் லொயிட் சாந்திக்குமார் அடிகளாருக்கும் அன்புரை தந்த எஸ்.8 யோகராசா அவர்களுக்கும் அனுமதியும், ஆசீரும் அருளிய அதிவன பி.பி. பிலிப்அடிகளாருக்கும் இந்நூலினை இரண்டாம் தடவை அச்சிடுவதற்கு அதன் உள்ககுத் துக்களை அறிந்து சிறப்பான முறையில் பொன்னுரை வழங்கிய மாண்புமிகு எம். எஸ். செல்லச்சாமி அவர்களுக் கும், சிறப்பாக அச்சிட்டு உதவிய லின்ராஜ் அச்சகத்தின்
ருக்கும் எனது மனமார்ந்த நன்றிகள்.
அனைவருமே அன்பைச் சுவைத்து இன்புற இதயத்திலிருந்து நல்வாழ்த்துக்கள்.
159 புதுசெட்டித் தெரு, . . கொழும்பு - 13 3 - O3 - 1993

ருசித்துப் பாருங்கள்
** கடவுள் இல்லை; "கடவுள் இருக்கிறார்" என்பது ஒரு கட்டுக்கதை , பிழைப்புக்காக மனிதனால் உருவக்கப் பட்டவரே கடவுள்' என்று ஒரு பேச்சாளன் மேடையில் முழங்கினான். அவனது பேச்சுத்திறன் சண்டு மக்கள் திரள் திரளாகக் கூடினர். கடைசியாக ** கடவுளும் இல்லை கத் தரிக்காயும் இல்லை. யாராவது கேள்வி கேட்க விரும்பி னால் மேடைக்கு வரலாம்** என்றான்.
அந்நகரில் குடிகாரன் ஒருவன் குடிவெறியிலிருந்து குணப்பட்டு நல்ல கிறிஸ்தவனாக மாறியிருந்தான். அவன் மேடைமீது ஏறினான். ஒரு தோடம்பழத்தை எடுத்து தோலை மெதுவாக உரித்தான். கேள்வி கேட்காமல் தோலை உரிக்கின்றாயே என்று ஆத்திரமடைந்தான் பேச் சளான். ‘* பழத்தை உரித்தவன் தின்று கொண்டே, தின்று முடித்து விட்டுக்கேள்வியைக் கேட்கின்றேன்? “ என்று சொல்லியவாறு சுளை சுளையாக சுவைத்து உண்டான்" பின்னர் பேச்சாளனைப் பார்த்து ** பழம் நன்றாய் இருக் கிறதா? " என்று கேட்டான்.
** பைத்தியக்காரா, பழத்தை நான் தின்று பார்க்கா மல் அதன் சுவையை எவ்வாறு சொல்லமுடியும்? ' என் றான்க
கடவுள் நல்லவர், என்பதை நீ சுவைத்துப்பார்த்தால் தானே தெரியும். பின் ஏன் கடவுள் இல்லை என உளறு கின்றாய்? என்று உரைத்தான் ஒரே கைதட்டல், ஆர வர்ரம் நாத்திகன் நாணிப்பேனான் *கத்தவர் நல்லவர் என்பவரை ருசித்துப் பாருங்கள்"
(FA 3 4/8)

Page 7
மனித மேம்பாடு
"யூதாஸ் நமதாண்டவரை மரணத்துக்குக் கையளித் த்து பண ஆசையால்; பரிசேயர் பொறாமையால்; பிலாத்து கோழைத்தனத்தினால்; ஆனால், கிறிஸ்துநாதரோ சிநேகத்தினாலேயே தம்மை நமக்கு கையளித்தார்' என் கிறார் எழுத்தாளர் யோசுவே.
ஆம் கல்வாரி மலையின் காட்சியைப் பாருங்கள், அதன் ஒவ்வொரு அம்சத்திலும் ஆழமான அன்பினையே காண்கின்றோம். அன்பே அதன் அடிப்படை அன்பே அதன் கொடுமுடி, அன்பே அவரது சிரசில் முள்முடியை சூட்டியது; அன்பே அவரைச் சிலுவையில் அறைய வைத்தது.
அன்பில்லாமையால் இன்று எமது சமுதாயம் சிதை வுற்று வருகின்றது. பண ஆசையினால் பழிவாங்கும் உணர்வினால், பொறாமையினால், பேராசையினால் மனிதன் மனிதனை எதிரியாக எதிர் கொள்கின்றான் மனி தன் மனிதனை அவமானப்படுத்துகின்றான்; அழிவிற்கு உட்படுத்துகின்றான்; சித்திரவதைப்படுத்துகின்றான, சின்னாபின்னமாக்குகின்றான். எனவே மனித சமுதாயம் அழிவுறுதலிருந்து விடுதலை எய்த மனித மாண்பு பேணிப் பாதுகக்கப்பட, மனித மேம்பாடு மதிக்கப்பட ஆவன செய்வோம்.
அழிவை அல்ல ஆக்கத்தையே
இழிவை அல்ல ஊக்கத்தையே இன்றே நாங்கள் நன்றால் அளிப்போம்.
ー 10ー

கொடுத்தல்
"சிறுசு விதைப்பவன் சிறுக அறுப்பான்; பெருக விதைப் பவன் பெருக அறுப்பான்; ஒவ்வொருவனும் தனக்குள் முடிவு செய்தவாறு மொடுக்கட்டும். முகவாட்டத்தோடோ கட்டாயத்தினாலோ கொடாதீர்கள். ஏனெனில் முகமலர்ச் சியுடன் கொடுப்பவன் மேல்தான் கடவுள் அன்பு கூர்கிறார் (2 கொரி. 9 : 6 - 7).
நலமான வாழ்விற்கு, வளமான வாழ்விற்கு ஒரே யொரு வழி, கொடுப்பதும் கொடுத்துக்கொண்டேயிருப்ப துமாகும். நல்மனத்தோடு, தாராள மனப்பான்மையோடு பிறர் நல்வாழ்வினை முன்வைத்து எம்மை, எம்மிடம் உள் ளனவற்றைக் கொடுக்க முற்படுவது எமது ஆளுமையின் ஆரோக்கியமான வளர்ச்சிக்கு இட்டுச்செல்வதாகும். எமது சுயநல நோக்கிற்காகப் புதைத்து வைக்கப்படும் ஒவ்வொன் றும் இழந்துபோன பொருளுக்குச் சமானமானதாகும். எமது சொந்த மகிமைக்காக கட்டிப் பிடித்துக் கொண்டி ருப்பவை அனைத்தும் காலகட்டத்தில் பறிக்கப்படும்; அன் றேல் பயனற்றதாக்கப்படும். எனவே.
இருப்பதைப் பயன்படுத்துவோம் அன்றேல் இழந்து விடுவோம் பிறர் பயன்படுத்தும்படி
-ell -

Page 8
அறிவுசார் நல்வாழ்க்கை
‘எள்ளா விருப்பா இழிஞர் போற்றற்குரியர் வள்ள வறிஞரது வேண்டாரே - தள்ளார் கரைகாப் புள துநர் கட்டுருள மன்றிக் கரை காப் புள தா கடல்"
என்றார் நன்னெறிதுறைமங்கலம் சிவப்பிரகாசம் சுவாமி பகள். அதாவது தண்ணிரை கட்டி வைக்கும் நீக்கப்ப டாதஅ கரையாகிய காவலை உடையதாயிருக்கிறது. அதே வேளை சமுத்திரமானது கரையாகிய காவலை உடைத் தாயில்லை. அதே போல் கீழோர் தம்மைப் பிறர் இகழா மல் இருக்குமாறு காக்கப்படுதற் குரியவராவர். நீங்காத அறிவுடைய பெரியோர் அங்ங்ணம் காக்கப்படுதலை விரும் பார். சுருங்கச சொல்லின்.
அறிவற்றவர்கள் தம்மை மற்றவர்கள் இகழாதிருக்கும் படி பாதுகாத்துக் கொள்ளல் வேண்டும். அறிவுடை யோர்க்கு அது வேண்டுவதில்லை.
ஆனால் நாமோ பிறர் எம்மை பிழையாக விளங்கிக் கொள்ளக் கூடாது என்ற எண்ணத்தோடு தற்பாதுகாப்பு நடவடிக்கைகளில் அடிக்கடி ஈடுபட்டு வருகின்றோம். எமது இயல்பான தன்மையை வெளிக்காட்ட மறுத்துவருகின் றோம். மற்றவர்கள் எம்மைக் காக்க வேண்டும் என கங் கணம் கட்டிக் கொண்டு வாழ்கின்றோம். பிரறது புகழ் பாக்களா, வே போற்றுதல்களாலே மயக்கமுற்று காணப்ப குன்றோம். எனவே,
வாழ்ந்தர்லும், தாழ்ந்தாலும் நிலை ஒன்று தான்
என்ற ஒருமித்தநல்லமன நிலையில் வையத்தில் வாழ் வாங்கு வாழ்ந்திடுவேர்ம்.
- 12 -

இறந்தோர் நினைவாக
உங்களது உள்ளக்கதவுகளை மெல்லத்திறவுங்கள், உயி ருக்கு உயிராய் உங்களோடு உறவாடி உலகை விட்டுப் பிரிந் தாலும் உங்கள் உள்ளத்திலிருந்து மறையாத உற்றார். உறவினர் நண்பர்களுக்காக விசேடவிதமாகச் செபிக்கும் கார்த்திகை மாதத்திலே கல்லறைகளை அலங்கரிப்பதி லேயே உங்களது பணி முடிந்துவிட்டது என்று எண்ண வேண்டாம். அன்றேல் உங்கள் உறவினரோடு சேர்ந்து உண்டு உறவினருக்கே தானம் செய்து உங்கள் பெருமை யைப் பறை சாற்றுவதன் மூலம் அவர்களது ஆன்மா சாந்தியடையும் என்று எண்ண வேண்டாம். அன்றேல் அவர்களது நினைவாகத் திருப்பலிக்குக் காசு கட்டியதன் மூலம் நான் எனது கடமையை நிறைவேற்றி விட்டேன் என்று திருப்தியடைய வேண்டாம்.
மாறாக ஒறுத்தல், மன்னித்தல், உறவாடுதல், இல்லா தோர்க்கு ஈதல் போன்ற நன்முயற்சிகளில் ஈடுபடுங்கள்: அன்பைத் தேடும் இதயங்களை நாடிச் செல்லுங்கள் இதையே இறைமகன் கிறிஸ்து அன்று கூறினார்:
'பசியாய் இருந்தேன் எனக்கு உண்ணக் கொடுத்தீர்கள் தரகமாய் இருந்தேன் எனக்குக் குடிக்கக் கொடுத்தீர்கள் அன்னியனாய் இருந்தேன், என்னை வரவேற்றிர்கள் ஆடையின்றி இருந்தேன், என்னை உடுத்தினிர்கள் நோயுற்றிருந்தேன், என்னைப் பார்க்கவந்தீர்கள் சிறையிலிருந்தேன், என்னைக் காண வந்தீர்சுள்"
-- unà. 25: 35 -- 36
- I3 -

Page 9
பாதச் சுவடுகள்
ஒரு மனிதன் சமுதாய ஏற்ற இறக்கங்களில் பங்கேற்று, சிறப்பாகப் பணியாற்றி வாழ்ந்து வந்தான். அவன் அன்பு, நீதி, இரக்கச் செயற்பாடுகள் ஆகியவற்றுக்குச் சான்று பகர்ந்து மனித வளர்ச்சியை மேம்படுத்தினான், அவன் திடீரென இறந்து விட்டான். உடனடியாக மோட்சத் துக்கு எடுத்துச் செல்லப்பட்டான். அங்கே கடவுள் அவனி
- L.
**உனது, வாழ்க்கைப் பயணத்தைப் திரும்பிப்பார் உனது வாழ்நாள் பூராவும் நானும் உன்னோடு சேர்ந்து பயணம் செய்துள்ளேன். நம் இருவரது பாதச் சுவடுகள் தெரிகின்றது அல்லவா என்று அவனது வாழ்க்கை வர லாற்றுக் காட்சியை முன்வைத்தார். அவன் மிகவும் அவ தானமாக உற்று நோக்கினான்.
"ஆம் ஆண்டவரே, ஆனால் நீரும் மனிதர்களைப் போல் பொல்லாத பேர்வழியாய்த்தான் இருக்கின்றீர். நான் மிகவும் துன்பப்பட்ட சந்தர்பங்களில் மனிதர்களோடு சேர்ந்து நீரும் என்னைத் தனியே விட்டு விட்டீரே! அவ்வேளைகளில் எல்லாம் எனது காலடிகள் மட்டுமே காணப்படுகின்றன" என்று அவன் வேதனையோடு கூறி னான்.
இல்லை மகனே நீ தனியாக காணுகின்ற பாதச் சுவடுகள் என்னுடையவை; அத்துன்பமான சந்தர்பங்களை நீ தாங்க முடியாது அவதிப்பட்டதால் உன்னை நான் தூக்கிச் சென்றேன் என்பதை இப்பவாவது புரிந்து கொள்" என்று ஆண்டவர் அவனுக்கு உண்மையை உணர வைத் தாா .
- 14

உள்ளத்தில் மாற்றம்
தாய் தனது ஆறு வயதுப் பையனுக்கு நல்ல அறி வுரைபுகட்டினாள் ‘ஈற்றில் ஒன்றை மட்டும் எப்பொழுதும் நினைவில் வைத்துக் கொள்ளும், நாம் இவ்வுலகில் வாழ் வது மற்றவர்களுக்கு உதவி புரிவதற்காக" என்றாள், பையன் சற்று சிந்தித்த பின்னர் தாயிடம் கேட்டான் "அப்படி என்றால் மற்றவர்கள் எல்லாம் ஏன் இருக்கினம்?"
உதவி செய்து வாழ்வது, பிரறது நலனை முன்வைத்து வாழ்வது, பிறருக்காகத் தம்மை அர்ப்பணித்து வாழ்வது இலகுவானது அல்லாததோடு மிகவும் பிரச்சினைக்குரிய விடையமாகும் என்பதே இன்று பலரது அனுபவமாகக் காணப்படுகின்றது. உதவி செய்யப் போய் உபத்திரவத்தில் மாட்டுப்பட்டோரின் எச்சரிக்கைகள் தொடர்ந்து கேட் கின்றன.
“பெரிசா நீ எதையோ செய்து இந்த உலகத்தையே மாற்றியமைக்கப் போவதாக எண்ணிக் கொண்டிருக்கிறீர், சும்மா நீர் உம்முடபாட்டில உம்முட வேலையைச் செய் யும். அநாவசியமாக அதில இதில என்று தலையிடா தேயும் மிரட்டுதல்கள் விரட்டுகின்றன. எனினும் அன் பர்களே! அஞ்சாதீர்கள்.
உலகத்தை உங்களால் மாற்ற முடியாது உண்மைதான். ஆனால் நிச்சயமாக உங்கள் உள்ளங்களில் மாற்றத்தை ஏற்படுத்துவது என்பது உங்களால்தான் முடியும்.
- 15 -

Page 10
சுமைதாங்கிகள்
'ஒசான்னா! தாவீதின் குமாரனுக்கு ஒசான்னா!" என்று பாடியவர்கள் பவனியிலே பங்கேற்றவர்கள் இறுதி யில் "இவன் வேண்டாம் இவனைச் சிலுவையில் அறைந்து கொல்லுங்கள்’’ என்று கூச்சலிட்டார்கள். வாழ்வதற்குத் தகுதியற்றவர் எனக் கிறிஸ்துவை வதைப்படுத்தினார்கள் சிலுவைப் பயணத்தில் அவரது இயலாமையைச் சுட்டிக் காட்டி ஏளனப்படுத்தினார்கள்.
இன்றும் அதே தொனியில் இறையன்பை, இறைய ருளை, இறையிரக்கத்தை ஏற்காமல் நாம் வாழ்ந்து வருகின் றோம். கல் நெஞ்சன், யூதன் என்று சொல்லிக்கொண்டு கல்மனம் கொண்டவர்களாய் நாம் வாழ்ந்து வருகின்றோம். இறைவனின் சாயலாய் படைக்கப்பட்ட மனிதர்களை. எமது சகோதரங்களாய் வாழவேண்டிய எமது அயலவரை வதைப்படுத்தி வாழ்ந்து வருகின்றோம். வாழ்வைத் கொடுக்க அழைக்கப்பட்ட நாம் மனித வாழ்வினை அழித்து வருகின் றோம்.
எனவே, கிறிஸ்துவின் சிலுவைப் பயணத்திலே எமக் கும் பங்குண்டு என்பதை உணர்வோம்.
நாங்கள் சுமைகள் அல்ல, சுமைதாங்கிகள், பிறருக்குச் சிலுவைகள் அல்ல, சிலுவை சுமப்பவர்கள் என்பதை ஏற்று கிறிஸ்துவின் இரட்சணிய செயலாற்றலிலே
பங்கு கொள்வோம்.
- 16 -

இறையுறவில் நிறைவு
ஓர் இடைவெளி நிலவியது. அன்று தனிமனிதன் தன் னிலே நிறைவு காணாமல் ஒரு வெறுமையை அனுபவித் தான். மனிதனும் மனிதனும் ஒன்று சேரா நிலையில் மனிதன் மனிதனை எதிரியாக எதிர் கொண்டான். மனிதன் இறைவனிடம் இருந்து பிரிக்கப்பட்ட நிலையில் அமைதியை இழந்து அந்தரித்தான், அந்நிலையில்.
மனிதனுக்கு நிறைவான மகிழ்வைக் கொடுக்க, அன் பின் சுவையை அனுபவரீதியாகப் பெற்று இன்புற, உறவின் இறைவனை வரலாற்றில் எதிர் கொள்ள இறைமகன் கிறிஸ்து மனிதனாக அவதரித்தார். பாவத்தினால் இறைவ னிடமிருந்து அந்நியமாக்கப்பட்ட மனிதன் மீண்டும் இறை வனோடு சங்கமமாகும் சம்பவமாக கிறிஸ்துவின் பிறப்பு அமைகின்றது, ஆம் சிறிஸ்துவின் பிறப்பு.
உள்ளத்திலே உவப்பினை
உலகினிலே அமைதியினை
உறவினிலே இறைவனை
- 17

Page 11
வெளிப்படுத்துகின்ற ஒரு வரலாற்று நிகழ்ச்சியாக அமைகின்றது. எந்த ஒரு மனிதனும் தனிமையிலே இனிமை காண முடியாது! இரட்சணியம் அடைய முடியாது. அதாவது மனிதன் ஏனைய மனிதர்களிடமிருந்து அந்நிய மாக்கப்பப்பட்ட நிலையிலே, இறையுறவில் இருந்து பிரிக்கப் பட்ட நிலையிலே, அவன் மீட்பினை எய்த முடியாது. அவன் தன்னிலே அமைதி காணல் வேண்டும். ஏனைய மனிதர்களோடு நல்லுறவு கொள்ள வேண்டும். இறைவ னோடு இணைய வேண்டும். அப்பொழுது தான் அவன் இரட்சணிய நிலைக்கு ஆளாக்கப் படுவான். இந்த உயரிய நிலைக்கு மனித இனத்தை இட்டுச் செல்லவே இறைவ னாய் இருந்த கிறிஸ்து மனிதனாகப் பிறந்தார்.
இன்னும் எமக்கு கிறிஸ்துவின் பிறப்பு நிகழ்ச்சி அர்த் தமுடையதாகவே காணப்படுகின்றது. இருளில் வாழ்ந்த மக்கள் இரக்கத்தின் ஊற்றாகிய இறைவனை அன்றாடம் தரிசனம் செய்ய, இறைவனும் மனிதனும் இணைந்த ஒரு திருப்பயணத்தை மனுக்குலம் மேற்கொள்ள பாலகன் இயேசு அழைப்பு விடுக்கின்றார்.
எனவே, அன்பினிற் பிறந்த இறைகுலமாக அவனியில் வாழ்வோம். சமத்துவம், சகோதரத்துவம், சுதந்திரம் நிறைந்த ஒரு சமுதாயத்தை உருவாக்குவோம். "ஒன்றே குலம், ஒருவனே தெய்வம்" என இறைவனில் ஒன்றாகி நன்றே மகிழ்வோம்.
- 18 -

உயிர்ப்பின் மகிமை
"கிறிஸ்து உயிர்த்தெழவில்லை என்றால் எங்கள் துTதுரை பொருளற்றதே, உங்கள் விசுவாசமும் பொரு ளற்றதே"
-1, கொரி, 15/14.
கிறிஸ்துவின் உயிர்த்தெழுதலே உலக மக்கள் "அணை வரதும் மீட்பை உறுதிப்படுத்தும் நிகழ்வாக அமைகின்றது" கிறிஸ்துவின் பாடுகள், மரணம் அனைத்தும் அவரது உயிர்ப்பிலே முற்றுப் பெறுகின்றது.
இருளினின்று ஒளிக்கு
பொய்மையிலிருந்து மெய்மைக்கு
சாவிலிருந்து வாழ்விற்கு
மன்தன் கடத்தப்படல் கிறிஸ்துவின் e uriosivrQ2s சாத்தியமாகிறது. பாவத்திற்கு அடிமையாகி வாழ்ந்த மனித இனத்தின் முழுமையான விடுதலை கிறிஸ்துவின் உயிர்ப்பினாலே நிறைவு பெறுகின்றது.
உயிர்த்தெழுந்த கிறிஸ்துவின் மகிழ்விலே நாமும் பங்கு கொள்ள பற்பல அடிமைத் தனங்களிலிருந்து விடுதலைய டைய வேண்டியவர்களாயுள்ளோம். எம்மை நாமே பெரி யவர்கள் என எண்ணிக் கொள்வதிலிருந்து ஆணவம், அகம்பாவம் போன்ற துர்க்குணங்களினால் மனித மனங் களைப் புண்படுத்துவதிலிருந்து ஆவலாதி, அவநுாறு பேசி மனிதரின் நல்ல பெயரைக் கெடுப்பதிலிருந்து தாம் விடுத லையடைய வேண்டியவர்களாயுள்ளோம்.
19

Page 12
மனம் சாயவில்லை
துயரம் உறுவோர் பேறுபெற்ரோரெனத் துரயமகன் சொன்னார் - அந்தத் துயரம் அடைவோர் ஆறுதல் பெறுவர் துன்பங்களை எண்ணார்! அயராச் சுகமும் மதுவும் கீதமும் ஆயிரம் இன்பங்கள் - அதை அடைவது தானே பெருமை யென்றெண்ணும் மானிட உள்ளங்கள் ! வயிறே பெரிதாம் வாழ்ந்திடும் வாழ்வில் ஓடிடும் எண்ணங்கள் - இது வாழ்வல என்பது இயேசுவின் வார்த்தை கூறிடும் சின்னங்கள்,
- இயேசு காவியம்.
துன்பத்தில் இன்பங் காணுதல், சுமைகளில் சுவையினை அனுபவித்தல் என்பது இறை இயேசுவில் இணைவதிலேயே சாத்தியமாகின்றது. எத்தனை துன்பங்கள், எதிர்பாரத் தடங்கல்கள் வாழ்வினில் தொடர்ந்தாலும் இறைவன் எம் மோடு இருக்கின்றார் என்ற உணர்வு மனித வாழ்க்கை நிகழ்வுகளில் இறைவனின் துணைக்கரக்தினைக் காணும் வாய்ப்பினைத் தருவதாய் அமைகின்றது.
மனங்கள் சாய்ந்து விடாமல் மகிழ்வினில் நிலைத்துநிற்க இறைவனின் அருள் உள்ளம் அன்பினில் பொங்கிவழிகிறது
- 20 -

நல்லவர்களின் வல்லமை
சாந்தம் உடையோர் பேறு பேற்றோரெனத் தத்துவமும் சொன்னார் - இந்தத் தாரணி முழுவதும் அவர்களுக் குசியது தலைவர்கள் அவரென்றார் ! ஏந்தும் கோபம் பழிவாங்கும் குணம் எத்தனை எத்தனையோ - இங்கே இடறி விழுந்தால் கொடுமை நடத்தும் வித்தகர் எத்தனையோ ! மாந்தரின் வாழ்வில் தேவைப்படுவது சாந்தம் தான் என்றார் - அது மண்ணையும் ஆளும் விண்ணையும் ஆளும் மகத்துவம் பாரென்றார்.
- இயேசு காவியம்
உள்ளத்தில் சாந்தம் உடையோரைப் பேறு பெற்றோர் என இறைமகன் கிறிஸ்து போற்றுகின்றார். அவர்கள் நன்மை செய்வதில் வல்லவர்களாக விளங்குகின்றார்கள். அவர்கள் இறை இராட்சிய மதிப்பீடுகளை முதன்மைப் படுத்தி இறைவனுக்கு ஏற்புடையவர்களாக வாழுகின்றார் கள். அமைதியான போக்கு, ஆழமான சிந்தனை, அன்பு நிறைந்த செயற்பாடு போன்றவை அவர்களது இயல்பான தன்மைகளாகக் காணப்படும், அகங்கா ரம், ஆணவம், ஆத் திரம், பிடிவாதம், பழிவாங்குதல், பிறரில் குறைகாணும் மனப்பாங்கு போன்றவை அவர்களில் அருகிக் காணப்படும்.
சாந்த குணம் உடையோராய் சலிப்பின்றி வ |ாழ்ந்திடுவோம்.
- 21 -

Page 13
வாழ்க்கைப் பரிசு
நீதியின் பாலே தாகங் கொண்டோரே பேறு பெற்றோரென்றார் - அவர் நிறைவே பெற்று முறையாய் வாழ்பவர் அறமே தலையென்றார்! சாதிகளாலும் பேதங்களாலும் தள்ளாடும் உலகம் - அது தர்மம் ஒன்றே நம்பிய பிறகே அடங்கி விடும் கலகம்! ஒதும் பொருளாதாரம் தனிலும் உன்னத அறம் வேண்டும் - புவி உயர்வும் தாழ்வும் இல்லாதான வாழ்வினைப் பெறவேண்டும்
- இயேசு காவியம்
உயர்வு தாழ்வு இல்லா சமதர்ம சமுதாயத்தை, உண் மைக்கு, நேர்மைக்கு நீதிக்கு முக்கியத்துவம் கொடுக்கின்ற நாணயமிக்க மனித குலத்தை உருவாக்க கிறிஸ்து முனைத் தார். இது ஆபத்தான பாதை எனத் தெரிந்திருந்தும் இறைவன் மீது அசையாத நம்பிக்கை கொண்டிருத்ததால் அவர் அவ்வாறு செயற்பட்டார். ஈற்றில் அவருக்குப் பரி சாகச் சிலுவை மரணம் கொடுக்கப்பட்டது! நீதியின் சார் பாகப் பணிபுரியும் ஒவ்வொரு தனிமனிதனுக்கும் எதிராகப் பற்பல தாக்கங்கள் எழலாம். அவனை அழிப்பதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படலாம். எனினும் மனம் தளராது நற்பணி புரிய இறைவன் தொடர்ந்து பாதுகாப்பு அளிப்பார் என்ற நம்பிக்கை அவனது மகிழ்வான வாழ் விற்கு இன்றியமையாத பண்பாகும்.
- 22

அன்பின் அழியாத ஆர்த்தம்
இன்று பல உள்ளங்கள் உண்மையான அன்பைத்தேடித் அலைகின்றன. அன்பைக் கொடுக்காமல் அன்பைப் பெறத் துடிக்கின்றனர். அன்பு என்பது பலவந்தமாகப் பெறக் கூடிய ஒன்றல்ல. சுதந்திரமான உலப்பரிமாற்றமே அன்பின் ஏற் புடமையை நிர்ணயிக்கும் தன்னையே மறுத்துப் மிறருக் காக வாழுதல். தியாகத்தின் வெளிப்பாடாய் வாழ்க்கை மலருதல், பிறர் நலன் செறிந்த அர்ப்பணித்தல், தன்னை முழுமையாக வெறுமையாக்கியதன் மூலம் நினைவு பெறு தல் போன்றவைதான் கிறிஸ்து காட்டிய அன்பின் சிவப் பம்சங்களாகும். அன்பின் அழியாத அர்த்தத்தை அனு பவரீதியாகக் கிறிஸ்து தனது தியாக வாழ்வின் மூலம் சிலுவை மரணத்தின் மூலம் தெளிவுபடுத்துகின்றார்.
எனவே, அன்பர்களே! நாமும் எமது வாழ்வின் உள் நோக்கினைப் புரிந்தவர்களாக வாழவேண்டும் எனில் அன்பின் அர்த்தத்தை அனுபவரீதியாகக் கற்க வேண்டிய வர்களாயுள்ளோம். அன்பின் வழி எமது வாழ்க்கையை மேற்கொள்ள வேண்டியவர்களாயுள்ளோம்.

Page 14
குறையப் பேசி நிறையச் செய்
* "நீங்கள் எதையாவது பேச வேண்டும் என்பதற்காக வாயைத் திறவாதீர்கள். சொல்ல வேண்டிய அவசியம் வரும்போது மட்டுமே பொருத்தமாக பேசுங்கள் சொல்வ தையும் அழுத்தமாக, அர்த்தமுள்ளதாக மகிழ்ச்சியைக் கலந்து சொல்லுங்கள்’’ என்றார் பிரைரா,
எவ்வளவிற்கு எவ்வளவு எமது பேச்சுக்களைக் குறைத் துக் கொள்கின்றோமோ அவ்வளவிற்கு அவ்வளவு எமது ஆற்றல்கள் பெருகும். அதிகமாகப் பேசிப்பழகியவன் தொடர்ந்து பேசிக்கொண்டேயிருப்பான். பேசுவதில் அவ னுக்குச் சலிப்பே தட்டாது. வாசிப்பதற்கோ அன்றேல் யோசிப்பதற்கோ அவனுக்கு மனமே வராது.
அத்தகைய மனநிலை எமக்கு வராமல் பார்த்துக் கொள்
வோம்: ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை அதிக செய் Gaumrub.
24

மகிழ்ச்சிப் பரிமாற்றம்
எதிர்பார்த்து எதிர்பார்த்து ஏமாந்தவர்களுக்கு வாழ்க்கை அமைதியற்றதாகவே அமைந்துவிடும், ஆனால் எதிர் பாராமல் கிடைக்கும் எந்த மகிழ்ச்சியும் வாழ்க்கையில் மறக்க முடியாத நிகழ்வாகவே நிலைத்து நிற்கும்.
திருமண விழாக்கள், பிறந்த நாள் கொண்டாட்டங் கள் போன்ற விருந்துபசாரங்களில் அழைக்கப்பட்டவர்க ளிடமிருநது அழைப்பு விடுத்தோர் எதிர்ப்பார்ப்புக்கேற்ப பரிசுப் பொட்டலங்கள் அல்லது பணப் பரிசில்களோ கிடைக்கலாம். இதில் ஏற்படும் மகிழ்ச்சியைவிட
வீதியில் விபத்தில் சிக்கிய பாதசாரிக்கு கிடைக்கும் உதவி ஏழை விவசாயிக்கு கிடைக்குப் மான்யம் அகதிகளாய் அநாதையாக்கப்பட்டோர்க்குக் கிடைக் கும் சோற்றுப் பார்சல் முதியோர் இல்லத்தில் தனிமையில் வருத்துவோருக்குக் கிடைக்கும் அன்புப் பரிமாற்றம். ஐஸ்கிறீம் விற்பவனுக்குக் கிடைக்ரும் அமெரிக்க வீசா போன்ற எதிர்பாறா நிகழ்வுகள் மனதில் தோற்று விக்கும் மகிழ்ச்சி அளப்பரியது.
சமூக சம்பிரதாயங்களால் விளையும் மகிழ்வு நிலையற்றது
மாறாக தியாக உணர்வால் உத்தப்பட்டு வெளிப்படுத்தப் படும் மகிழ்ச்சியே என்றும் நிலைத்து நிற்கும்
- 25 -

Page 15
மனித வளர்ச்சி
"அழிவே அவர்கள் முடிவு வயிறே அவர்கள் கடவுன். மானக் கேடே அவர்கள் மகிமை அவர்கள் எண்ணுவதெல்லாம் மண்ணுலகைச் சார்ந் ததே" - பிலிப்பியர் 3; 19 - 20
வயிற்றுப் பிணைப்பிற்காக வாழும் சராசரி மனிதர் களால் கீழ்மட்டத்தில் சிந்தித்து செயலாற்றும் மட்டமான மனிதர்களாக நாங்கள் வாழ்ந்து வருகின் றோம். வானகமே எமது தாய்நாடு" என்பதை நம்பு கின்றோம் எனச் சொல்லிக்கொண்டாலும் மண்ணுலக செல்வங்களுக்கு அடிமையானவர்களாக வாழ்ந்துவரு கின்றோம் அழிவுக்குரிவவற்றில் பற்றுவைத்தவர்களாய் அழியாத செல்வங்களை நாளுக்கு நாள் இழந்துவரு கின்றோம்.
ஆம் அன்புச் செல்வங்களே! எமது வாழ்க்கையில் மாற் றம் வேண்டும்
எமது சிந்தனையில், எமது செயற்றிறனில் எமது கொள்கையில் மாற்றம் வேண்டும் மனித வரலாறு ஒருபோதும் பின் நோக்கிப் போவதில்லை மனித வளர்ச்சி என்பது வாழ்வின் ஒவ்வொரு கட்டத்திலும் நிகழும் ஒழுங்கான மாற்றமாகும்
அனைத்து மனிதர்களையும் சமமானவர்களாக சகோதரர்களாக மதித்துவாழும் முழுவாரியான சமு தாயப் போக்கினையே நாம் எதிர்பார்த்து வாழுகின் றோம் எனவே
நல்லவை செய்வதில் வல்லவர்களாய்
பொல்லாதனவற்றைப் புறக்கணிப்போம் வாழ்வோம்! வாழவைப்போம்!
- 26 -

மனிதராய் வ ாழுங்கள்
வானத்தைப் பார்த்தேன், பூமியைப் பார்த்தேன் மனிதனை எங்கும் காணவில்லையே என்று ஒரு கலைஞன்பாடுகின்றான் வாழ்க்கை என்னும் பூங்காவிலே பல மனிதர்களை அவன்சந் திக்கின்றான் உடலால், உள்ளத்தால் ஊனமுற்றோர் பட் டியலில் உள்ளடங்குவோராக அனைவரையும் அவன் காணுகின்றான் வாழ்விலே முழுமையான நிறைவு பெற்ற எந்தவொரு மனிதனையும் அவனால் காணமுடியவில்லை
ஆம், அன்பர்களே, நாம் ஏதாவதொரு வகையிலே குறைபாடு உள்ளவர்கள் பலவீனமானவர்கள் பாவிகள் என்பதை ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டும் "நான் ஒரு போதும் பாவம் செய்யேன்" என்று நாள் தோறும் செபித்தா லும் பலதடவைகள் எமக்கு எதிராகவும் பாவம் செய்து வருகின்றோம் திருந்துவதற்கு முதற்கட்டமாக நாம் எமது பாவ நிலையை ஏற்றுக் கொள்வோம்
மனித மனங்களைப் புண்படுத்தி வாழ்ந்த நாம் எமது பாவச் செயல்களுக்காக மனம் வருந்தி மன்னிப்புக் கேட் போம் எம்மை வருத்தி துன்புறுத்துவோரை மன்னித்து மறப் போம். "இந்தக் கலிலேயர் இத்தகைய சாவுக்கு உள்ளா னார்கள் என்பதால் மற்றெல்லாக் கலிலேயரையும்விட இவர்கள் பாவிகள் என்று கருதுகிறீர்களா? அப்படியன்று என நான் உங்களுக்கு சொல்லுகிறேன் மனந் திரும்பா விடில் நீங்கள் எல்லோரும் அவ்வாறு அறிவீர்கள்" (லூக் 132 - 3) என்று கிறிஸ்து கூறுகின்றார் எனவே
திருந்திய உள்ளத்துடன் இறைவனிடம் திரும்பி வருவோம்
பாவத்திலிருந்து விடுவிக்கப்பட்ட மனிதராக எமது சகோத ரங்களுடன் சேர்ந்து வாழுவோம்
- مـسـ 27 صـ

Page 16
பாலும் பழமும்
ஒருமுறை "இளைஞர் உலகம் வாசகநேயன் ஒருவன் வாராந்தம் வெளிவரும் "அன்பு இளம் உள்ளங்களுக்கு" வரியை வாசிப்பதில்லை என்று கூறினான்.
*அவ்வரியை மட்டும் வாசிக்காமல் விடுகின்றீர் என்பது உண்மையல்ல; அவ்வரியை மிகவும் விரைவாக வாசித்து விடுகின்றீர். நீர் வாசிக்கவில்லை என்று எண்ணு மளவிற்கு மிக வேகமாக வாசித்து விடுகின்றீர்" என்று எனது கருத்தைக் கூறினேன்.
* பழகப் பழக பாலும் புளிக்கும்" என்றாற்போல சில நல்ல தன்மைகள் எமது பழக்கதோஷத்தின் காரண மாக ஏனோதானோ என்ற மனநிலையில் கைவிடப்பட்ட மனநிலையில் காணப்படுகின்றன. அன்பு செய்ய வேண்டும் அறநெறியில் வாழவேண்டும், உண்மை பேச வேண்டும் , உயர்ந்த நல் அறிவை வளர்க்க வேண்டும் போன்ற கூற் றுக்களைச் சில சமயங்களில் வேண்டா வேறுப்புடன் கேட் கின்றோம்.
நல்லவை சார்பாக நாம் என்றுமே சலிப்படையக் கூடாது பாலில் ஊறிய பழம்போல எமது வாழ்க்கை அன்பினில் சுவறியதாக அமைய வேண்டும்.

நாளைய தலைவர்கள்
'நல்ல ஆயன் நானே, நல்ல ஆயன் ஆடுகளுக்காகத் தன் உயிரையே கொடுப்பான்
கூலிக்கு மேய்ப்பவன் ஆடுகளைச் சொந்தமாகக்கொண் டுள்ள ஆயனாயிராததார் ஒநாய் வருவதைக் கண்டு ஆடு களை விட்டுவிட்டு ஒடிப் போகிறான் ஏனெனில் கூலி யாள் கூலியாள்தான் ஆடுகளின் மீது அவனுக்கு அக்கறை யில்லை”*
13 - 1 و 10 ygو 1 مس .
நல்ல ஒர் ஆயன் தனது ஆடுகளின் நல்வாழ்வினை முதன்மைப்படுத்திவாழ்வான் என்ற உண்மையைக் கிறிஸ்து உறுதிப்படுத்துகின்றார். மாணவர் இல்லாது ஆசிரியன் ஆசிரியனாக இயங்க முடியாது. மந்தை இல்லாது மேய்ப் பவன் மேய்ப்பனாக இருக்க முடியாது.
நாளைய தலைவர்களாக மலர இருக்கும் இளைஞரா
கிய நீங்கள் நல்ல தலைவனுக்குரிய நற்பண்புகளைக் கொண்டு பாரினில் பணிபுரிய முன்வாருங்கள்
- 29 -

Page 17
வெளிவேடம் வேண்டாம்
' வெளிவேடக்கார மறைநூல் அறிஞரே! பரிசேயரே உங்களுக்கு ஐயோ கேடு!
ஏனெனில் நீங்கள் வெள்ளையடித்த கல்லறைக்கு ஒப் பானவர்கள் அவை வெளியே மனிதருக்கு வனப்பாகத் தோன்றுகின்றன; உள்ளேயோ இறந்தோர் எலும்புகளும் எல்லாவகை அசுத்தமும் நிறைந்துள்ளன" (மத்தேயு23:27) எனக் கிறிஸ்து எச்சரிக்கை விடுத்தார்
உள்ளே அழுக்கு, வெளியே அழகு நேரில் கண்டதும் "ஐயா வாருங்கள்" என்று வணக்கத் துடன் வரவேற்றவர்கள் அவர் வெளியே சென்றதும் சனியன் தொலைஞ்சுது’’ என்று கூறும் முன் முரணாக வாழும் மனிதர்களா நீங்கள்?
ستمه 30 س

மலரும் மணமும்
நல்ல பண்புகளில் ஊறிய நல்ல மனிதர்களாக நாம் வாழ முற்பட வேண்டும் மனம் சோர்வுற்று அல்லல் படுவதை விட்டுவிட்டு தாராள மனத்தோடு கொடுத்து இன்புற்று வாழ்வதன் நிறைவினில் அகம் மலர வேண்டும் தேய்க்கத் தேய்க்க நறுமணம் கொடுக்கும் சந்தணம் போல நற்பண் புகளைப் பரிணமிக்கும் பெரும் மனத்தோராய் வாழ்ந்திட வேண்டும்
மலரோடு சேர்ந்து நாரும் மணப்பது போல நல்லவரோடு சேர்ந்து நாமும் மகிழவேண்டும் கடந்தகாலச் சுமைகள் களையப்பட நிகழ்காலத்தில் நினைவலைகள் நெஞ்சினில் ஆட நல்லவராய் வாழ்ந்து, நல்லவரோடு உறவுகொண்டு உயர்ந்தோராய் தாயகத்தில் திகழ நாம் அனைவரும் முயற்சி எடுப்போம்
முயற்சியில் வளர்ச்சிகான தளர்ச்சியைத் தவிர்த்து விட்டு உயர்ச்சியில் மகிழ்வுபெற்று உயர்ந்த நல் வாழ்வைக் காண்போம்
- 31 -

Page 18
கிறிஸ்து வாழ்கின்றார்
1925 ஆண்டு மெக்ஸிகோ நாட்டிலுள்ள ஜாலிஸ்கோ மாகாணத்தில் இச்சம்பவம் இடம் பெற்றது பதினெட்டு வயதுள்ள ஒரு வாலிபனை கைது செய்து அவனைப் பார்த்து "கிறிஸ்து ஒழிக, காலெஸ் வாழ்க, சான்று கலகக் காரர்கள் சொல்லச் சொன்னார்கள் ஆனால் அவன் மறுத்து விட் டான் அவன் கையைப் பின்பக்கம் வைத்துக் கட்டி விட்டு லொறியை ஒட்டினார்கள் லொறியைப் பையனுடைய வீட் டுக்கு முன்னால் நிறுத்தினார்கள் இப்போது சொல்வாயா? * "கிறிஸ்து ஒழிக காலெஸ் வாழ்க’ என்று கேட்டார்கள் நான் ஒரு கத்தோலிக்கன் ஆகையால் கிறிஸ்து வாழ்க’ என்றான் வாலிபன், s
இதைப் பார்த்துக் கொண்டிருந்த ஒரு பெண் வீட் டிற்குள் போய் "ஐயோ வந்துபார் வேதத்தை மறுதலிக்கச் சொல்லி உன் மகனைச் கொல்கிறார்கள்” என்றால், தாய் ஓடிவந்து பார்த்தால் மக்கப்பேடர் ஏழு பேரின் தாய்க்கு இருந்த வீரம் இவளுக்கும் உண்டானது 'உன்னைக் கொன் 7 லும் சரி வேதத்தை மறுதலியா தே, உயி ரைவிட விசுவாசமே உனக்கு மேல்' என்று மகனை உற் சாகப்படுத்தினால்:
பையன் தன் பலமெல்லாம் கூட்டி "கிறிஸ்துநாதர் வாழ்க" என்று உரக்கக் கூவிக் கொண்டே உயிர்நீத்தான் இன்றும் கிறிஸ்து தனக்காகக் குரல் கொடுக்க எம்மை அழைத்தவண்ணம் இருக்கிறார் வாழ்க்கையாலும் வார்த் தையாலும் அவரது அன்புக்குச் சான்று பகரக் கூப்பிடுகிறார்
அவர் வாழ்க! அவரது பெயர் என்றும் போற்றப்படுக!
- 32

பிலாத்துவும் புரோக்குலாவும்
பிலாத்து நீதியிருக்கைமீது வீற்றிருந்தபொழுது அவன் மனைவி ஆளனுப்பி அந்நீநிவானின் காரியத்தில் தலை யிடவேண்டாம் ஏனெனில் அவன் பொருட்டு இன்று கனவில் மிகவும் துன்புற்றேன்" என்று கூறினாள்,
- மத் 27, 19
யூதரும் தலைமைக் குருக்களும் தன் இனத்து இயே சுவைக் கொல்ல முயலுகையில் புறவினத்துப் பெண் பிலாத்துவின் மனைவி அவரை சாவினின்று விடுவிக்க முய லுகின்றாள்; "நீதிமான்' என அவரை அழைக்கின்றாள்? மத்தேயு நற்செய்தியாளரினால் இவர் பெயர் சொல்லி அழைக்கப்படாவிடினும் ஏற்றுக்கொள்ளப்படாத நற்செய் திகளில் (Apocryphal Gospels) ஒன்றான நிக்கோ தேமு எழுதிய நற்செய்தியில் புரோக்குலா என்று இவள் அழைக் கப்படுகின்றாள்.
- 33

Page 19
நீதி வழுவிப் பிலாத்து இயேசுவைக் கொன்று விட் டான் என்பதைக் கேட்ட உரோமப் பேரரசன் சீசர் பிலாத்துவுக்கு மரண தண்டனை கொடுத்தான் மரண தண் டனை பெறும் இடத்திற்கு வந்ததும் பிலாத்து பின்வரு மாறு செபித்தான்
"ஆண்டவரே, தீய எபிரேயர்களோடு என்னையுன் அழித்துவிடாதேயும், நீதி வழுவிய யூத இனத்தார் எனக்குக் கலகம் செய்ததினாலேதான் நான் உன்னைச் சாவுக்கு கையளித்தேன் நான் அறியாமையால் இவ் வாறு நடந்தேன் என்று அறிவீர் எனவே இந்தப் பாவத்துக்காக சன்னையும் எனது மனைவியும் உமது அடியாளுமான புரோக்குலாவையும் மன்னித்தருளும் பிலாத்துவின் தலை வெட்டப்பட்டவுடன் ஆண்டவரின் விண்ணவர் அத்தலையைப் பெற்றார் அதைக்கண்ட புரோக்குலா மகிழ்ச்சிப் பெருக்கால் நிரம்பித் தானும் உயிர் நீத்தாள் கணவனோடு அவளும் புதைக்கப்பட் டாள் இவ்வாறு நிக்கோ தேமு எழுதிய நற்செய்தியில் கூறப்படுகின்றது
நீதியின் குரல் இன்றும் எதிரொலித்துக் கொண்டிருக் கின்றது அறியாமையினாலோ அன்றேல் ஆணவத் தினாலோ நீதிக்குச் சமாதிகட்ட முயல்வது எவ்வகை யிலும் நியாயமாகாது
உயிரைக் கொடுத்தேனும் உண்மையைக் காப்போம் உண்மை ஒருபோது ம்உறங்குவதில்லை
- 34 -

அழகி யார்?
ஒரு முறை திருமாலிடம் சீதேவியும் மூதேவியும் சென்று எங்கள் இருவரில் யார் அழகி? என்று கூறுங்கள் என்றார் as air
சீதேவியைப் பார்த்துத் திரூமால் கூறினார்: *நீ வரும்பொழுது அழகாய் இருக்கின்றாய்?" மூதேவியைப் பார்த்துத் திருமால் கூறினார்; 'நீ போகும்பொழுது அழகாய் இருக்கின்றாப்"
அன்பர்களே எம் உள்ளத்தில் அன்பு, அருள், விருந் தோம்பல், மன்னித்தல், பகிர்தல், நீதி, நேர்மை போன்ற நற்பண்புகள் உட்புகும் போது நாம் அழகாக இருக்கின் றோம் அதேபோன்று எம் உள்ளத்தை விட்டு ஆணவம் அகந்தை, பிடிவாதம், வைராக்கியம் பிறரது தல்வாழ் வினைக் கெடுத்தல் போன்ற தீய பண்புகள் வெளியேறும் பொழுது நாம் அழகாக இருக்கின்றோம் கள்ளமில்லா வெள்ளை உள்ளங்கொண்டவர்களாய் குழந்தை உள்ளம் கொண்டவர்களாய் நாம் வாழின் நலம்பெறலாம்
"வெள்ளை நிற மல்லிகையோ வேரெந்த மாமலரோ வள்ளல் அடியினைக்கு வாய்த்த மலர் எதுவே வெள்ளைநிறப் பூவுமல்ல வேறெந்த மலருமல்ல உள்ளக்கமலமடி உத்தமனார் வேண்டுவது"
- சுவாமி விபுலானந்தர்.
۔۔۔ 35 -----

Page 20
அன்புக் கட்டளைகள்
'உன் கடவுளாகிய ஆண்டவருக்கு முழு உள்ளத் தோடும் முழு ஆன்மாலோடும் முழு மனத்தோடும் அன்பு செய்வாயாக. உன் மீது அன்பு காட்டுவதுபேர்ல் உன்மு அயாலான் மீதும் அன்புகாட்டுவாயாக. திருச்சட்டம் முழு வதற்கும் இறைவாக்குகளுக்கும் இவ்விரு கட்டளைகளும் அச்சாணி போன்றவை'
-மத், 22:37-40.
மோயீசன் சீனாய் மலையில் பெற்றுக்கொண்ட 613 சட்டங்களையும் இவ்விரு கட்டளைகளும் உள்ளடக்கு கின்றன. ஆண்டவனை அன்பு கெய்தலும் அயலவரை அன்பு செய்8 லும் ஒரு நாணயத்தின் இரு பக்கங்கள் போன்றவை மீட்பின் சின்னமாகிய சிலுவையும் இறைவனை அன்பு செய் தலை நிலைகுத்து அச்சாகவும் அயலவரை அன்பு செய் தலை கிடை அச்சாகவும் கொண்டே சித்தரிக்கப்படுகின்றது என்றால் அது மிகையாகாது.
'உன்வீடு உனது பக்கத்து வீட்டின் இடையில் வைத்த சுவரை இடித்து எங்கும் பாரடா இப்புவி மக்களை விசாலப் பார்வையால் விழுங்கு மக்களை உலகம் உண்ண உண் உடுத்து உடுப்பாய் -шту5 д табет.
- 36 -

தனிமையின் தனித்துவம்
இயற்கை விஞ்ஞானம் சார்பான விதிகள் சர்வ வியா கத்தன்மை உடையனவாகக் காணப்படுகின்றன; இடம் மாறினாலும் சரி காலம் மாறினாலும் சரி குறிப்பிட்ட நிபந்தனைகள் நிறைவுபெறின் அவற்றை ஒத்த நிகழ்வுகள் நிகழ்ந்தே ஆகின்றன, "என்னை புவியிர்ப்பு லீதி எது வும் செய்யமுடியாது' என்று கூறிக் கொண்டு பையன் ஒருவன் 40 அடி உயர மாடியிலிருந்து பாய்வானாயின் அவன் ஆபத்துக்குள்ளாவான் என்பதில்ஆச்சரியம் இல்லை,
ஆனால் மனிதன்-அவனது சிந்தனைகள் செயல்கள், உணர்ச்சிகள், மனநிலை-சார்பான எதிர்வு கூறல் எப் பொழுதும் சிக்கலானதே. அவன் இடத்துக்கு இடம், நிமிடத்திற்கு நிமிடம் மாறுபட்டே காணப்படுவான். பல சந்தர்ப்பங்களில் பலரோடு சேர்ந்து கலகலப்பாக நட மாடும் ஒருவன் சில சந்தர்ப்பங்களில் தனிமையை விரும் பியே நாடுவான். அது அச் சத்தர்ப்பத்தில் அவனது உளச் சமநிலைக்கு அவசியமான ஒன்றாக அமையலாம். எனவே தனிமை என்பது முழுமையாகவே விரட்டியடிக்கப்பட வேண்டிய ஒன்றல்ல. விரக்தியின் வெளிப்பாடாகக் காணப் படும் தனிமையே வேண்டப்படாதது. அதுவே அழிவின் ஆரம்பம், அதேவேளை ஆழமான உறவிற்கு, அறிவார்ந்த ஆராய்விற்குத் துணை தருவது தனிமையேயாகும்.
ஒருவன் தன்னை முழுமையாக எடைபோடல், தனது முடிவுகளை முன்வைத்தல். வாழுதற்கான தீர்மானத்தை எடுத்தல், தனது ஆற்றல்களை இயல்பான முறையில் வெளிக்கொணருதல் போன்றவை சாத்தியமா ன து தனிமையிலே என்றால் அது மிகையாகாது. ஒருவன் தனிமையிலே.
- தன்னைத் தானாகவே காண்கிறான்,
தனது ஆற்றல்களை இனம் காணுகின்றான். தொடர்புகளின் தேவையை உணர்கின்றான்.
- 37 -

Page 21
கோபம் தேவைதானா?
கோபம் அடக்கப்படும்பொழுது பக்கவிளைவுகளாக அல்ஷர், அஸ்மா, வாதம், ஒருபக்கத் தலையிடி, மன நோய் போன்றவை ஏற்படுகின்றன. இவ்வாறு கோபத்தை அடக்குதல் உளரீதியாகப் பல பாதிப்புக்களை ஏற்படுத் துடதால் கோபம் நெறிப்படுத்தப்பட்டு வெளிப்படுத்தப் படுவது அவசியமானதாகும் ஆரோக்கியமானதாவும் அமைகின்றது,
1. அளவுக்கதிகமாக பொறுப்புக்கள், சுமைகள் காணப்
படும்போது,
2. இலகுவில் கோபத்தை ஏற்படுத்தும் தொழில்களை மேற்கொள்ளும்பொழுது உ - ம் ஆசிரியத்தொழில்,
3. அநீதிகள், அக்கிரமங்கள் நீதியை, தர்மத்தை நசுக்க
முற்படும்பொழுது,
4. நானே உலகின் இரட்சகர் என்ற எண்ணத்தோடு இயந்திரமயமாக்கப்பட்ட மனிதனாய் ஒய்வு,பொழுது போக்கின்றி செயற்படும்பொழுது. கோபம் ஏற்படுகின்றது.
பிற ஊடகங்கள் மூலம்(உ-ம் பத்திரிகைகளை கிழித்து எறிதல், மேசையை அடித்தல்) அல்லது தண்ணிர் குடித் தல் மூதம் (உடலில் ஆற்றுப்படுத்துதல் நிகழ்கின்றது: செயல் தாமதிக்கப்படுகின்றது! அல்லது சத்தம் போட்டு பேசுதல் மூலம் கோபம் நெறிப்படுத்தப்பத்டு வெளிப்படுத் தப்படலாம். இதனாம்
1. சூழல் சமநிலையடைகின்றது. 2. உள்ளம் ஆற்றுப்படுத்தப்படுகின்றது.--
ー39ー

நல் வாழ்க்கை
இருள் சூழ்ந்த உலகில் அருள் தேடும் மனிதர்களாய் நாங்கள் வாழவேண்டும் என்பதளை, இகழ்வாற்றல், பாவம் செறிந்த வாழ்க்கையிலிருந்து விடுவிக்கப்பட்டு பரிசுத்த தனத்தில் வளரவேண்டும் என்பதனை, இன்னா செய்தார்க்கும் நன்னயம் செய்து நானிலத்தை நன்னில மாக்க வேண்டும் என்பதனை, இழிவான பாவ வாழ்க் கைக்குப் பரிகார முயற்சியாக சமுதாய நலன் சார்பாக தியாகச் செயற்பாடுகளை மேற்கொள்ள வேண்டும் என் பதனை கிறிஸ்தவ நல் வாழ்க்கை உணர்த்திநிற்கின்றது.
** மனந் திரும்பி மன்னிப்புப் பொறுங்கள்.
உள்ளவன் எவனும் இல்லாதவனோடு பகுர்ந்து கொள்ளட்டும்?"
என்ற இறைவார்த்தைகளை அர்த்தம் மிகுந்த வாழ்வின் யதார்த்த நிலைகளாக வெளிப்படுத்துங்கள். அன்புசார் வாழ்க்கையை, அறன்சார் வாழ்க்கையை மேற் கொள்ள,
அதர்மத்தின் பிடியைத் தளர்த்துங்கள் ஆணவத் திமிரைத் தகருங்கள்:
"நான்" என்ற அகந்தையை அழியுங்கள்: "நாம்" என்ற பெரும் மனத்தினைப் பலப்படுத்துங்கள்
- 40 -

Page 22
புதிய பாதை புதிய பயணம்
புதியதோர் ஆண்டு பிறந்து விட்டது. புன்னன ச பூச் கின்ற முகங்கள் அகமகிழ்கின்றன, புதிய புதிய திட்டங் களும் சீர்திருத்தச் கிந்தனைகளும் வாழ்க்கை பூங்காவில் மீண்டும் பரவிவிவுடப்படுகினறன. என்னை நானே கேட் கிறேன். நான் சென்றபாதை சரிதானா? எனது வாழ்க் கையில் திருப்பம் தேவைதானா? அவசரப்பட்டு, ஆத் திரப்பட்டு, பிறரது தவறுகளை பெரிதுபடுத்தி அவ்வுள்ளங் களை ஊனப்படுத்திய நாட்களை நினைத்து வருந்து கின்றேன். எத்தனையோ சாதனைகளை செய்ய வேண் டும் என்று எண்ணியதை நினைவு கூருகின்றேன். அவற் றுள் நிறைவேற்ற முடிந்தவை ஒன்று இரண்டு என எண் னிச் சொல்வலாம், மீதியானவை பாதியிலேயே சிதை வாகிவிட்டன. சரிபழையதைப்பற்றிய பார்வை போதும்!
இனிப் புதிய பார்வை ஆம்!
என்னை என்னைக் சூழவுள்ளவாகளைப் புதிதாய்ப் பார்க் கின்றேன், பார்த்துப் பார்த்துப பழகிய எல்லோரும் எம்மவரே எவரையும் புறக்கணிக்கலாகாது!
புதிய உறவை ஆரம்பி கின்றேன். புதியதோர் B கை உருவாக்கும் முயற்சியில் நானும் ஒரு பங்காளியாக முன் நிற்கின்றேன். எனது சிந்தனையில் மீண்டும் ஒரு புதிய உணர்வு அரும்புகின்றது. ஒன்றின் பின் ஒன்றாக, சிறு சிறு முயற்சிகளாக நின்றவு செய்யும் எண்ணத்தோடு சமுதாய மறுமலர்ச்சிப் பயணத்தைத் தொடர்கின்றேன்.
காண்போம் புது உலகை1
களைவோம் குறை முறையை வளர்வோம் நிறை நெறியில்!
வாழ்வோம் புது ஒளியில்!
AI
 
 

பசியின் பரிணாமம்
ஒவ்வொரு தனி மனிதனும் தனது வாழ்க்கையில் பல்வேறு வகைப்பட்ட உளத்தாக்கங்களுக்கு ஆளாக்கப் பட்டு வருகின்றான் அவனது விருப்பு வெறுப்புக்களுக்கு அப்பாற்பட்ட நிலையில் அவனுக்குப் பல தேவைகள் உடற் தேவைகள் உளத்தேவைகள் ஆன்மீகத் தேவைகள் எழு வதும் அவற்றை நிறைவு செய்ய விளைவதும் அவை நிறைவு செய்யப்படாவிடத்து மனச் சோர்வு அடைவதும் இயல்பே.
ஒரு குழந்தை ஆரம்பத்தில் வாக்கியங்களால் தனது உணர்வு நிலைப்பாட்டைத் தொடர்வுபடுத்திக் சிற முடியாத நிலையிலுள்ளது அது அழுகையின் மூலம் தனது உள்ளக்கிடக்கையை வெளிப்படுத்துகின்றது. கால கட்டத்தில் அது உணர்வு நிலையைத் தொடர்வுபடுத்தி வாக்கியங்களால் பேசக் கற்றுக் கொள்கிறது. "அம்மா பசிக்கிறது" என்று கூறித் தனது தேவையை நிறைவு படுத்தத் தாய்க்கு அழைப்பு விடுக்கின்றது.
இவ்வாறே ஒரு தனிமனிதன் தனது வாழ்வின் வர லாற்றுப்படிவத்தில் பல்வேறுபட்ட கட்டங்களில் பசி என்ற உணர்வின் பல வடிவங்களை அனுபவ ரீதியாக நிறம் தீட்டு கின்றான் இந்த உடல் உளத் தோற்றப்பாட்டின் தனிப் பாக பசி பரிணாமம் பெறுகின்றது. இதன் விளைவாக உடலில் எடைக்குறைவு ஏற்படுகின்றது. மனதில் சோர்வு
எழுகின்றது.
எனவே அவன் தனது தவிப்பிற்குத்தகுந்த உணவைத் தேடுவது தவிர்க்க முடியாததே! அதேவேளை அவன் தனது பசியினின்று விடுபட ஆரோக்கியமான முறையில் அடைய விளைவதே அவசியமாகும்
- 42 -

Page 23
இடைவெளி
*அனைத்து மனநோய்களுக்கும் அறிகுறி, பரிமாணம் எம்மை நாம் விரும்பாமையே' என்கின்றார் டாக்டர் வில்லியம்
smrtsm)ř.
அறப் பிரச்சினையின் உள்ளிடாகவும் எமது வாழ்வு பற்றிய நோக்கின் அடிப்படையாகவும் எம்மை ஏற்றுக் கொள்ளுதல் உள்ளது. பசியானவர்களுக்கு உணவளிக்கி றேன்; துன்புறுத்தியவரை அன்புசெய்கின்றேன் கிறீஸ் துவின் பெயரால் பகைவர்களை அன்புசெய்கின்றேன். இவை தல்ல பண்புகள். ஆனால் எனது நடைமுறை வாழ்க்கை யில் நானே அந்தக் கொடியவனாக, பரம ஏழையாக, பிச்சைக்காரனாக, இருப்பின் அன்பு செய்யப்படவேண் டிய பகைவனாக நான் இருப்பின் என் நிலை என்ன?
** மனநோய் ஒரு உள்ளகப் பிளவு - ஒருவர் தன்னு
டன் போர்புரியும் நிலை. இந்த இடைவெளி பெரிதாக்கப்
படும்பொழுது நோயாளி மோசமாகின்றான். இடைவெளி
குறைக்கப்படும்பொழுது நோயாளி குணமடைகின்றான்'
- காள் யுங்.

ஏற்பதா? எதிர்ப்பதா?
ஒலைக் குடிசைகளில் வழ்ந்தவர்கள் மாளிகைகளுக்கு மாறலாம். ஒய்வின்றி அலைந்தவர்கள் சாய்ந்து படுக்கலாம சிறுகடை வியாபாரிகள் பிரபல வர்த்தகர்கள் ஆகலாம்" எனினும் சிந்தனையில் சிறந்தோரே சீரிய வாழ்க்கை வாழலாம்.
எண்பது வயதில் தனது இறுதிமூச்சை விட்டுகொண் டிருப்பவனும்தான் இன்னும் சில நிமிடங்கள் ஏன் வாழக் கூடாது என்றே ஏங்குகின்றான் ஆரோக்கியமான மன நிலையில் வாழும் எந்தவொரு தனிமனிதனும் தான் வாழ வேண்டும் என்றே விரும்புகின்றான். இந்த உந்துளிகயே அவனது வாழ்வில் ஆற்றலைத் தூண்டுகின்றது. அவன் வாழ்வின் ஒவ்வொரு கட்டத்திலும் பல திருப்பங்களைச் சந்திக்கின்றான். எதிர்பார்த்தபடி நிகழ்வுகள் இடம்பெறும் பொழுது திட்டமிட்டபடி வாழ்க்கை அமையும் பொழுது எழும் ஆற்றல் சக்தி அளப்பரியது. விளைவாக நேரிய நோக்கோடு வாழ்க்கையை அணுகப் பயிற்றப்படுகின்றான் அதே வேளை அவன் எதிர்பார்ப்புக்கள், ஏக்கங்கள் ஏமாற்றங்கள், போன்றவற்றை எதிர்கொள்ளும் பொழுது எதிர் நீச்சல் போடும் ஆற்றலைப் பெறுகின்றான். அதாவது அவன் நிலைமையை ஏற்று வாழப் பழகுகின்றான் அன் றேல் எதிர்த்து வாழப் பழகுகின்றான். முன்னையது இல குவானது. பின்னையது ஆபத்தானது.
எனவே எந்த நிலையிலும் சூழல் சார்பானதாய் அன் றேல் முரணானதாய் அமையினும் அவன் வாழும் ஆற் றலை பெறுகின்றான்
வறுமையிலும் வளமையிலும் வசந்தத்திலும் வாடலிலும் ஏற்றத்திலும் ஏமாற்றத்திலும் இன்பத்திலும் துன்பத்திலும்
நல்ல மனநிலையில் வாழும் ஒவ்வொரு தனி மனிதனும்
வல்லவனாய் வாழவேண்டும் என்ற ஆற்றலையே தீவிரப் படுத்திக் கொள்கின்றான்.
- 44

Page 24
இன்புறல் இயல்பானதே!
அன்பு ஒரு கொடை: அது வெகுமதி அல்ல.
கட்டாயப்படுத்தலும் கொடுமைப்படுத்தலும் கடந்து நிலையில் அன்பு வெளிப்படுத்தப்படும் பொழுது அதுவே சிறப்பானது. இருவர் ஒருவர் ஒருவரை உண்மையாக அன்பு செய்யும் பொழுது ஒருவரது குறைகள், கறைகள், பாவங்கள் பலளினங்கள் போன்றவை மற்றவரது மனத் திரையில் புலப்படா அவர் எப்பொழுதும் நல்லவராகவே தோற்றம் அளிப்பார். மனிதன் சமச்சீரான தொடர்பு நிலையில் வாழுகின்ற பொழுதே மனித சமுதாயத்தில் நிறைவான மகிழ்வு பெருக்கெடுத்து ஓடும்
அணுக்குண்டுகளைவிட அன்பற்ற இதயங்களிலிருந்து வெளிப்படுத்தப்படும் வார்த்தைகள் ஆபத்தானவை அதே வேளை கொடுக்கக் கொடுக்கக் கூடுவதும் இறைக்க இறைக்க ஊறுவதும் அன்பின் இயல்பான தன்மையே யாகும். உயர்வான வாழ்வின் உயிர்நாடியாக விளங்குவது அன்பிற்கே உரியதாகும்.
அன்பின் வழியதாய்
அவனியில் வாழ்வு அமையின் அனைவரும் இன்புறல் இயல்பானதே!
- 45

உன்னை நான் தேடுகின்றேன்
உள்ளத்தாலே உரசவிட்டாய் உன்மூச்சால் இதயம் தொட்டாய் எண்ணத்தால் எழுச்சி பெற்று என் நண்பன் நீயே என்று உன்னை நான் தேடுகின்றேன்
உன் ஆளில் நான் பாதி என் ஆளில் நீ பாதி என்பதே நம் நீதி என்ற உறவினில் மறைந்தன எம் சுய தேடல்களே
உன்னையே நீ கொடுத்தாய் உன் வாழ்வால் எனை வளர்த்தாய் உன் அன்புத் தரிசனத்தால் என் உள்ளம் மகிழ்கின்றதே
என்னை நீ அறிபவன் என்னை நீ புரிபவன் என்னை நீ அன்புசெய்டவன் என்பதிலோ ஐயம் இல்லை
எனவே நான் தொடர்கின்றேன் என் நண்பன் உனைத் தேடி, என் உணர்வை நெறிப்படுத்த உன்னை நான் தேடுகின்றேன்
- 46 -

Page 25
கனானேயப் பெண்
கனானேயப் பெண் இயேசுவிடம் வந்து, "ஆண்ட வரே, எனக்கு உதவிபுரியும்’ என்றாள். அவர் மறுமொழி யாக, "பிள்ளைகளின் உணவை எடுத்து நாய்க்குப் போடு தல் நல்லதன்று" என்றார். அவளோ, "ஆமாம் 'ஆண்டர் வரே, தாய்க்குட்டிகளும் உரிமையாளரின் மேசையினின்று கீழே விழும் சிறுதுண்டுகளைத் தின்னுகின்றனவே" என் றாள்.
அப்போது இயேசு அவளுக்கு மறுமொழியாக, 'அம்மா உன் விசுவாசம் பெரிது - உன் விருப்பப்படியே ஆகட்டும்" என்றார். அந்நேர முதல் அவள் மகள் குணமாயிருந்தாள்
- மத்தேயு 15 ; 2 -28;
தன் மகளுக்கு இரக்கம் காட்டுவது தனக்கு இரக்கம் காட்டுவதாகும். தன் மகளுக்கு உதவிசெய்வது தனக்கு உதவி செய்வதாகும். என்ற நிலையில் தாய் மகளுக்காகப் பரிந்து பேசுவதை இந்நிகழ்ச்சியில் காணுகின்றோம். யூத பாரம்பரியப்படி பிற தெய்வங்களை வழிபடும் புறவினத் தார் நாய் கிளெனக் கருதப்பட்டார்கள். கிரேக்க மூலப்படி இயேசு "நாய்' என்று சொல்லாது 'நாய்குட்டி' என்ற சொல்லைப் பயன்படுத்துகின்றார். இது இயேசு கனானே யப் பெண்ணை வெறுக்கவில்லை எனக் காட்டுகின்றது. மேலும் இச்சொல் வீதிகளில் கவனிப்பாரற்றுத் திரியும் * பொறுக்கி நாய்களை குறிக்காது “வளர்ப்பு நாய்களைச் சுட்டுவது இங்கு குறிப்பிடத்தக்கது இதிலிருந்து இயேசு கனானேயப்பெண் சார்பாக வெறுப்பை வெளிப்படுத்த வில்லை அல்லது அவளை இழிவுபடுத்த வில்லை என்பது தெளிவாகின்றது புறவினத்துப் பெண்ணாயிருந்தும் இயேசுவின் இரக்கத்தைப் பெறப் பின்வாங்கவில்லை ஆழ்ந்த விசுவாசத்தோடு ஆண்டவன் இயேசுவைத் தேடி வரும் எவரும் அருள் பெறுவான், இரட்சணியம் அடை 'வான் என்பதே உண்மை
-47

தன்வயமாக்கல்
நான் நல்லவனாக வாழ விரும்புகின்றேன்; நான் மகிழ்வுற்று வாழ விரும்புகின்றேன். நான் எதற்கும் எவருக்கும் by L9-60 Lot Lullint Lodi alrtle விரும்புகின்றேன். எனது எதிர்பார்ப்புக்கள் நியாயமானவைதான் ஆனால் இவை எப்படி சாத்தியமாகலாம்?
நிலத்திலே நீரை ஊற்றியதும் நிலம் நனைகின்றது நன்நிலத்திலே, அதாவது, பண்படுத்தப்பட்ட பசளையி டப்பட்ட தண்ணிர் ஊற்றப்பட்ட நிலத்திலே பழுதந்ற விதை விதைக்கப்படும்பொழுது அது முளையா கின்றது. வளர்ந்து மரமாகின்றது மனித மனத்திலே நல்ல பண்பு கள் விதைக்கப்படும்பொழுது நல்ல மனம் உருவாக்கப் படுகின்றது. நான் பொதுவான நற்பண்புகளை என தாக்கிக் கொள்ளும்பொழுது எனது எதிர்பார்ப்புக்கள் நிறைவு எய் துவது சாத்தியமாகின்றது இது சார்பாக நான் என் மனக் கண்முன் நிறுத்தவேண்டிய மீளவும் மீளவும் நினைவிற்குக் கொணர வேண்டிய சில கூற்றுக்கள் இதோ!
நான் நல்லவன். நான் சந்திக்கும் ஆட்களும் நல்லவர்களே. என் ம்னம் மகிழ்வுற்றே காணப்படுகின்றது; ஏனைய மனிதர்களும் மகிழ்வுற்றே
காணப்படுகின்றார்கள். என்னை, எனது ஆற்றல்களை நம்புகின்றேன் ஏனையவர்களும் நம்பிக்கையின் அடிப்படையிலேயே வாழ்வில் நிறைவு பெறுகின்றார்கள் நான் சமுதாய மட்டத்தில் நிலவுகின்ற ஏற்றத் தாழ் வுகளை நீக்கி சமதர்ம சமுதாயத்தை உருவாக்க முனைகின்றேன் நான் அறியாமையைப் போக்கி அறிவார்ந்த ரீதி
யாகச் செயற்பட எத்தனிக்கின்றேன். நான் நானாகவே வாழ விரும்புகின்றேன்.
வாழ்வதும் வாழவைப்பதும் மகிழ்வதும் மகிழவைப்பதும் நம்பிக்கையோடு வாழ்வினை மேற்கொள்வதும் ஏனைய மக்களை வாழத்துண்டுவிப்பதும் நிகழ்கால நிறைவிற்கு இட்டுச்செல்லுபவையாகும்
حسن 48 سب

Page 26
பரிசேயனது பெருமை
ஒரு பரிசேயன் பற்றிய கதை "இந்த உலகத்திலே பத்து நல்லவர்கள் இருக்கிறார்கள் என வைத்துக்கொள் வோம். அவர்களுள் நானும் எனது மகனும் நிச்சயமாய் இடம் பெறுவோம். அதேவேளை, இந்த உலகத்தில் இரு நல்லவர்கள்தான் உள்ளார்கள் என வைத்துக்கொள் வோம். அப்படி எனின் அந்த இருவரும் நானும் எனது மகனுமாகத்தான் இருக்க முடியும் மேலும் இந்த உல கத்திலே நல்லவர் ஒருவர்தான் உள்ளார் எனின் நிச்சய மாக அந்த நல்லவன் நானாகத்தான் இருக்கமுடியும்' என்று பரிசேயன் பெருமையாகச் சொல்லிக் கொண்டான்
இன்று கூட எம்மத்தியில் பரிசேயத் தன்மையுடைய ஆட்களை நாம் சந்தித்திருக்கலாம். குலப் பெருமை, குடும் பப்பெருமை என்று கூறிக்கொண்டு மனித உணர்வுகனை மதிக்காது மட்டம்தட்டி வெளிவேடம் போட்டு வாழும் இவர்களும் தங்களை நல்லவர்கள் என்றுதான் சொல்லு கின்றார்கள்
- 49 --

அன்புள்ள அப்பா
இறைவனது இரட்சணியம்மிக்க அன்பு எமக்கு வளம் மிக்க வாழ்வினை வழங்குகின்றது. நாம் நல்லவர்களாய் இருக்கிறோம் என்பதற்காக இறைவன் எம்மை அன்பு செய்கின்றார் என்று சொல்வதைவிட நாம் நல்லவர் களாய் இருப்பதற்கு இறைவனது அன்பு அவசியமானது என்று சொல்வதே பொருத்தமானது, இறைவனைப் பற் றிய நோக்கும் எம்மைப் பற்றிய நோக்கும் அன்பைப் பற்றிய விளக்கத்தில் ஆதிக்கம் செலுத்துகின்றன. இறை வனை எமது பண்பாடு, கலாச்சாரத்தினுளடாக எடை போடுகின்றோம். தீர்ப்பிடும் நடுவர், சண்டிப்பவர் என்ற கருத்திலேயே எம்மில் பலர் இறைவனுக்கு அர்த்தம் காணு கின்றார்கள். ஒரு பொறுப்பற்ற குடிகாரனின் மகனுக்கு இறைவனை "அப்பா" என்று சொன்னால் விளங்காதுகாரணம் தன் தந்தையிடம் இருந்து அம்மைத்தன் பெற்றுக் கொண்டது. வேதனையும் வெறுப்புணர்வுமேயாகும். மேலும், சாதாரணமாக, ஒரு தந்தை நிபந்தனையுடன் அன்பு செய்வதால், நிபந்தனையில்லாமல் அன்பு செய்யும் இறைவனை "அப்பா என்ற சொல்லினால் வி ைங்கிக் கொள்வது இலகுவன்று. எனவேதான், புனித சின்னத் திரேசம்மாள், இறைவனை "அப்பா, நல்லதாய்' T அழைப்பது இறைவன் எப்பொழுதும் நல்லதோர் அன்புத் தந்தையாக விளங்குகின்றார் என்பதையே காட்டுகின்றது
- 50 -

Page 27
மனிதன் மாறவில்லை
பறவையைக் கண்டான் விமனாம் படைத்தான் பாயும் மீனில் படகினைக் கண்டான் எதிரொலி கேட்டான் வானொலி படைத்தான் சந்திரனைத் தொட்டான் சரித்திரமும் ப்டைத்தான் இத்தனை ஆற்றல்களின் பின்னரும் இன்னும் மனிதன் மாறவில்லை. அவனது சுயநல போக்கிலிருந்து இன்னும் அவன் விடுபடவில்லை
தனக்காகவே வாழ்கின்றான். தன்னை துன்புறுத்துவோரைத் துன்புறுத்துகின்றான். பாரம்பரியமாக வாழ்ந்து விட்ட பாதையிலேயே பயணத்தைத் தொடர்கின்றான். புதுமை, மாற்றம், மறுமலர்ச்சி என்று பேசுகின்றான்.
ஆனால் வாழ்க்கையிலோ பழையனவற்றை பலருக்கு அழிவாயிருப்பனவற்றையே கட்டிப் பிடித்து கொண்டு கண்ணிர் வடிக்கின்றான்; கண்ணிர் வடிக்க வைக்கின்றான். வறுமையில் வாழ்வோருக்கு
வாழும் வழிகளைக் காட்ட மறுக்கின்றான்;
மனிதன் மாறவேண்டும் அவனது சிந்தனையில் மாற்றம் வேண்டும் அவன் மனிதனாக, மனிதர்களை வாழவைப்பவனாக மனித சமுதாயத்தில் நல்ல மாற்றங்களை நிலை நாட்டுபவனாக மிாறவேண்டும்,
- 51 -

பயணம் தொடர்கின்றது!
பல்லாக்கு இல்லாமல் பயணம் தொடர்கின்றது! பாதை மாறுகின்றது! போதை தலைக்கேறுகின்றது! வாதை வலுவடைகின்றது! தீதை வெல்ல வலுவில்லாமல் தனி மனிதனின் வேதனை தொடர்கின்றது. மோதும் உணர்வலைகள் பாதியிலே மூழ்கடிக்க போதும் என்ற பேச்சில்லாது, வீதியிலே வலம் வருகின்றான் குறிக்கோள் இல்லாத முறையில் நெறிகெட்டுத் தடுமாறுகின்றான், இவ் இழி நிலையை மாற்றியமைக்க பலவீனர்சளின் தோற்றத்தில் மாற்றத்தை ஏற்படுத்துவோம், தீரமான வீரத்துடன் தீமைகளை விரட்டிடுவோம். தூற்றுவோர் தூற்றினாலும் போற்றுவோர் போற்றினாலும் ஏற்றத்தில் மயங்கிடாது, முன்செல்வோம்! துணைவருவீர்!
- 52

Page 28
கூனிப் பெண்
18 ஆண்டுகளாகப் பேயால் நோயுற்றிருந்த கூனிப் பெண் ஒருத்தியை இயேசு அழைத்து, "அம்மா. உன் நோயினின்று விடுபட்டாய்" என்று கூறித் தம் கைகளை அவள் மேல் வைத்தார். உடனே அவள் நிமிர்ந்து கடவுளை மகிமைப் படுத்தலானால். ஆனால் செபக்கூடத்தலைவனோ ஒய்வு நாளின் இயேசு குணமாக்கியதைக் கண்டு சோபவெறி கொண்டு மக்களை ஏசினான். இயேசு மறுமொழியாக * வெளிவேடக்காரரே! ஒய்வுநாளிலே உங்களுள் ஒவ்வொரு வனும் எருதையோ கழுதையையோ தொழுவத்திலிருந்து அவிழ்த்துக்கொண்டு போய் தண்ணிர் காட்டுவதில் லையோ?" (லூக். 13:10-17) என்று கூறி எதிரிகள் அனை வரையும் வெட்கிப் போகச் செய்தார்.
எருதுக்கும் கழுதைக்கும் ஒய்வுநாளில் இரக்கம் காட்டத் தவறாத செபக்கூடத் தலைவனும் பரிசேயரும் எருதுக்கும் கழுதைக்கும் மேற்பட்ட ஆபிரகாமின் வழிவந்த கூனிக்கு இயேசு காட்டிய இரக்கத்தைக் கண்டு குமுறுகின்றனர். இன்றும் வளர்ப்பு மிருகங்களுக்கும் வீட்டுப் பிராணிகளுக் கும் காட்டப்படும் அன்பு, கரிசனை, ஏழைகள், எளியவர் கள் எனப் பட்டம் பெற்றவர்கள், நோயாளிகள், வயோ திபர் சார்பாக வெளிக்காட்டப்படாதது கவலைக்குகியதே
'அன்பர்பனி செய்ய என்னை ஆளாக்கி விட்டுவிட்டால்
இன்பநிலைதானே வந்தெய்தும் பராபரமே'
-தாயுமானவர்;
- 53 -

துன்பம் துடைக்கப்படுகின்றது
நல்லவர்கள் தம் வாழ்விலே எதிர்கொண்டவை இரண்டு எனக் கூறலாம்.
1. துன்பத்தை அனுபவித்தமை 2. துன்பத்தைத் துடைக்கத்
துன்பத்தையே பயன்படுத்தியமை
இவர்கள் தம் வாழ்விலே துன்பத்தை அனுபவித்தார்கள் சந்தர்ப்பவசத்தால் பல துன்புறுத்தல்களுக்கு ஆளாக்கப் பட்டார்கள். அதே துன்பத்தை , அதே வேதனையை ஏனைய ஆட்கள் அனுபவிக்கக்கூடாது என்ற நோக்கத் தோடு பிறர் துன்பத்தைத் துடைக்கும் சருவிகளாகச் செயற்பட்டதையே நாம் காணக்கூடியதாயுள்ளது. துன் பத்தை முடிவாக அல்ல, துன்பத்திலிருந்து விடுபடும் மார்க் கத்தையே இவர்கள் முன்வைத்தார்கள்.
மாற்றமுடியாதவற்றை ஏற்றுக்கொள்ளும் மனப்பக்குவத்தை யும் மாற்றக்கூடியவற்றை மாற்றும் தைரியத்தையும் இரண் டினதும் வேறுபாட்டினை அறியும் ஞானத்தையும் இறைவ எனக்குத் தந்தருளும்.

Page 29
சிறப்பான செபம்
அன்புசெய்யும் இறைவனிடம் எமது எல்லா உணர்வுக ளையும் பகிர்ந்துகொள்ள முடியும். உணர்வுகளை உள்ள வாரே வெளிப்படுத்துவோம் இறைவனுடன் பேசும் பொழுது திறக்கப்பட்ட புத்தகமாக எமது இதயம் இருக்க வேண்டும் என்பதையே எம் மனதில் கொள்வோம். சிறப் பான செபத்திற்கு அவசியமானது எது எனக் கேட்கப் பட்டபொழுது மாட்டீன் லூதர் "கடவுளுக்குப் பொய் சொல்லாதீர்" எனப் பதிலளித்தார். இதயத்தில் உள்ள வற்றைச் சொல்லாது இப்படித்தான் உணரவேண்டும் எனச் சிந்திப்பதாகச் சொல்லுதல் இறைவனுக்குப் பொய் சொல்லுதலே ஆகும். "இறைவா! விசுவாசம் நம்பிக்கை அன்பு ஆகியற்றின் உச்சவெளிப்பாடோடு உம்முன்னால் நிற்கின்றேன்" எனச் செபித்தல் பக்திப்பொய்யாகும்.
"இறைவா! பாவி என் மேல் இரக்கம் வையும்" எனச் செபிப்பதே சிறப்பானதாகும் எமது தகைமைகளைப் பெரிது படுத்தாது இறைவனில் தங்கி வாழுகின்றோம் என்ற மனப் பான்மையில் வளர்ந்து வாழ்வுபெறுவோம் .
--- 55 -ب

அடிமைத்துவம்
* லிடாவிற்குப் போக வேண்டுமாயின் நான் எந்த வழியை எடுக்கவேண்டும்?" எனக் கலிலேயன் ஒருவன் ஒரு பெண் ணிடம் கேட்டதற்கு அவள், ‘முட்டால் கலிலேயனே ஒர் ஆண் ஒரு பெண்ணிடம் அதிகம் பேசக்கூடாது என்று மறைநூல் வல்லுனர் கூறியது உனக்குத் தெரியாதா? நீ கேட்க வேண்டியது, "முடாவிற்கு எவ்வழி?" என்பது மட்டுமே" என்றாள்.
மேலும் "எந்த ஆணும் எப்பெண்ணுடனும் அப் பெண் தனது மனைவியாயிருந்தாலும் சரி பிற பெண் ணாயிருந்தாலும் சரி, தெருவிலே கதைத்துக் கொண்டு செல்லக்கூடாது' இவை யூத பாரம் பரியத்திலிருந்து எடுக்
Lillo).
"" தன் மகளுக்குச் சட்டத்தைக் கற்றுக் கொடுப்பவன் முட்டாள்தனத்தையே அவளுக்குப் புகட்டுகின்றான் என் பதும் அதே யூத பாரம்பரியம். பெண்களை எவ்வளவு இழிவாக யூதர்கள் கருதினார்கள் என்பதற்கு இவை சான்றாகும் ,
இன்றைய காலகட்டத்தில் எமது சமூகங்களில் பெண் அடிமைத்துவம் எவ்வளவோ குறைந்துள்ளது என்றே கூற வேண்டும். அதேவேளை ஆண் அடிமைத்துவம் சில குடும் பங்களில் தலைதூக்கியுள்ளது. அடிமைத்துவம் எவ்வடிவத் தில் இருந்தாலும் எவர்மேல் சுமத்தப் பட்டாலும் அது விரட்டியடிக்கப்பட வேண் டிய தே .
- 56 -

Page 30
நம்ப முடியவில்லை
அவளுக்கு வயது இருபது, பார்வைக்கு அழகு : பழகுவதற்கு இனிமை, பேச்சிலோ குழந்தை. கண்களை வெட்டி வெட்டியே பேசுவாள்.
'அண்ணா நீங்கதான் எனக்கு எல்லாம் உங்க அன்பு தான் எனக்கு எடபவும் வேண்டும்' என்று தனது உறவை இரு மாதம் ஒருமுறை புதுப்பித்துக்கொள் வான். தாய்க்கு ஒரு பிள்ளையான அவள் எனக்குத் தங்கையாயிருப்பதிலே பெருமகிழ்ச்சி இப்படி எனக்குப் பல தங்கைமார் எனக் குச் சொந்த தங்கச்சி இல்லை என்ற குறையைத் திர்த் துவைப்பார்கள் 'இடையில் வரும் உறவுகளே உன்னதமா னவை" எனக் கவிஞர் கண்ணதாசன் கூறினாலும் திருமண
st
மான பின்னர் "நீ யாரோ நான் யாரோ' என்ற மன நிலையில் முழுமையாகப் பிரிந்துவிடுவார்கள்.
இலகுவிலே பலருடன் பழகும் இயல்பு எனக்குண்டு அதே போல் இலகுவில் அவர்களை இழந்துவிடும் அனுபவமும் எனக்குண்டு உறவும் பிரிவும் தொடர்கதையாகிவிட்ட வாழ்விலே விடைகான விளைகின்றேன். பலரால் ஏமாற் றப்பட்டதால் இனி எவரையும் நம்பக்கூடாது என சில வேளைகளில் சிந்திப்பதுண்டு அச்சிந்தனை சில கணங்கள் தான் நடைமுறையில் எல்லோரையும் நம்புவதுதான் எனது பழக்கம்.
*" நீயில்லாத உலகத்திலே நிம்மதியில்லை" என்று அவன் அடிக்கடி பாடுகின்ற பாட்டு அன்று வானொலியில் ஒலித்துக் கொண்டிருந்தது. ஓ! அவளே வந்து விட்டாள்; கையில் போட்டோ அல்பத்துடன் வளமைக்கு மாறான முகத்தோற்றத்துடன் பிரமை பிடித்தவள் போலக் காணப்பட்டால்.
- 57

ன்னால் நம்பமுடியவில்லை
கழுத்திலே தாலிக்கொடி நெற்றியிலே குங்குமப் பொட்3 போட்டோவிலே திருமணக் கோலம். எனக்கு அவள் சொந்தத் தங்கச்சி இல்லைதானே என்று என்னை நான் நொந்துக்கொள்கிறேன். எனக்குச் சொல் லாமல் கல்யானம் செய்துகொண்டால் என்ற கோபம் என் முகத்தில் வழிகின்றது. முகத்தை நிலம் பார்க்க சில நிமிடங்கள் பேசாமலே இருந்துவிட் டோம்.
அவளாலும் நம்பமுடியவில்லை
கனடாவிலிருந்து வந்தாராம்: கல்யாணம் நடந்ததாம்: 3ம் நாள் கனடாவிற்கே தனியாகச் சென்றுவிட்டாராம் ஓ! நான் அவசரப்பட்டுவிட்டேன். இன்னும் அவள் என் தங்கச் சிதான்; அவளது புன்னகைக்காகக் காத்திருக்கின்றேன்.
என்னைப் பிறர் நம்புவதற்கும் அன்புசெய்வதற்கும் ஆரம்பக் கட்டமாக என்னை நானே நம்பவும் அன்பு செய்யவும்வேண்டும்.
-- 58 -س-

Page 31
இனி நிமிர்ந்து வாழ்வீர்!
அஞ்சி அஞ்சி வாழ்வில் இழந்துவிட்டது போதும் கொஞ்சம் கொஞ்சம் என்று எஞ்சிவிட்டது போதும் கஞ்சத்தனமாக வஞ்சித்தது போதும் நெஞ்சம் குளிர வாழ்வில் இனி நிமிர்ந்து வாழ்வீர்!
பஞ்சப் படை கொள்ளை நோய்கள் பல வந்தாலும் வஞ்சம் நி ைமனிதர் ஷாதை பல செய்தாலும் தஞ்சம் என்றும்கூடத் தடி எடுத்து அடித்தாலும் நெஞ்சம் குளிர வாழ்வில் இனி நிமிர்ந்து வாழ்வீர்!
பாசமென்று பகட்டுடனே வார்த்தை பல சொன்னாலும் நீசராக வாழ்ந்தும் கூட நீலிக்கண்ணிர் சொரிந்தாலும் வேசம் போட்டு நாசம் செய்து வேங்கை போஸ்ப் பாய்ந்தாலும்
நெஞ்சம் குளிர வாழ்வில் இனி நிமிர்ந்து வாழ்வீர்!
- 59 -

எண் குணத்தான்
* கோள் இல் பொறி இல் குணம் இலவே எண் குணத் தான் தானை வணங்காத் தலை”
--திருவள்ளுவர்
பரிமேழலகர் உரையின்படி, தன் வயத்தனாதல், தூய உடம்பினனாதல், இயற்ாை உணர்வினனாதல், முற்று முணர்தல், இயல்பாகவே பாசங்களின் நீங்குதல், பேரருள் உடைமை முடிவிலாற்றல் உடைமை வரம்பில் இன்பம் உடைமை ஆகியவை இறைவனின் என்குஒனங்களாகக் கருதப்படுகின்றன. மேலும் ,
'இமைப் பொழுதும் என் நெஞ்சில் நீங்காதான்
'கண்ணால் யானும் கண்டேன் காண்க?" எனவும் ஆளுடைய அடிகள் இறைவனை வர்ணிக்கின்றார். உயிர் களுடன் ஒன்றாய், வேறாய், உடனாய் நிற்பவனே இறை வன் அவன்தான் பணித்து, தன்னை மனிதன் இறைவளில் இழந்து நிற்கும் பொழுதே மனிதன் நிறைவு எய்துகின்றான் முக்திநிலை அடைகின்றான்.
இறை இரக்கம்
"இரைத் தந்தை நிறைவுள்ளவராய் இருப்பது L. f. 6 நீங்களும் நிறைவுள்ளவராய் இருங்கள்" (மத் 548 என்ற கிறிஸ்துவின் கூற்று 'இறைத்தந்தை இரக்முள்ள வராய் இருப்பதுபோல் நீங்களும் இசுக்கமுள்ளவராய் இருங்கள்” (லூக் 6/36) என்ற கிறிஸ்துவின் கூற்றோடு தொடர்புபடுத்தப்பட்டு விளக்கப்படவேண்டும் (என நற் செய்தி ஆய்வாளர்கள் கூறுகின்றார்ாள், பூரணத்துவம் எனும் பண்பு இறைவனது சிறப்புப் பண்பாயிருக்க இரக்கம் காட்டுதல் இறைவனிலும் மனிதனிலுய் காணப்படுப்பொதுப் பண்பாக அமைகின்றது. அதாவது நிறைவுள்ளவர்களாயி ருத்தல் என்பது அன்பு செய்வதிலும் எமது பகைவர்க . ளுக்கு இரக்கம் காட்டுவதிலே யும் அர்த்தம் பெறுகின்றது
- 60

Page 32
"ยงโง
விண்ணரசு, நிலத்தில் மறைத்துள்ள புதையலுக்கு ஒப்பாகும். அதைக் கண்டுபிடித்தவன் அதை மறைத்து விட்டு அதைக் கண்ட மகிழ்ச்சியில் தனக்குள்ளதெல்லாம்
விற்று அந்நிலத்தை வாங்கிக் கொள்கிறான்"
மத்தேயு (13:44)
உலகினில் வாழும் பொழுது நாம் அரிய பல செல்வங் களைச் சேர்த்து வைக்க முயற்சி எடுக்கிறோம் எத்த முயற்சி யில் கூடுதலான இலாபம் பெறமுடியும் எனத் தேடி ஒடி அலைகின்றோம். ஆனால் நடைமுறை வாழ்க்கையிலோ ஆத்மீக வாஞ்சை இன்றி பிறர் துன்புறுத்தப்படும்பொழுது மரத்துப்போன மனநிலையில் கரிசனை சிறிதும் காண்பி யாது அசட்டைத்தனமாக இருக்கிறோம் என்றால் ஆடம் பரமான கொண்டாட்டங்களுக்கு ஆதரவு அளித்துவிட்டு ஏழையரின் கண்ணிர் துடைக்கப் பின்வாங்குகின்றோம் என்றால், எமது முயற்சி பெரும் தோல்வியாகவே முடி வடையும்; எனவே,
அழிவுக்குரிய செல்வங்களின் பயன்பாடு அழியாத செல்வத்தின் நுகர்வுக்கு இட்டுச் செல்லட்டும் இரக்கத்தை வெளிக்காட்டுவோம் அன்றேல் நீதியை வெளிக்காட்டுவோம் இரண்டையுமே வெளிக்காட்ட இயலாமையே இல்லாமற் செய்வோம் எம் அக இல்லத்தில் இறைவணும் மனிதனும் இணையப்பெரிள் அதுவே பெரும் புதையலாகும்

பக்
10
11
12
12
A 19
2O
23
25
தவறுக்கு வருந்துகின்றோம்
2
இறுதிவரி
13
20
24
25
இறுதிவரி
21 23 22 12
21
கலைப்பு
11
14
தவறு
St இடி அழைகிறான் நூண்டும் உயததுணரும் தென்மையும் பரிமானங்களில்
«sF6U69pau 4f
உருவக்கப்
s' ஈண்டு
பேச்சளான் ,
றான்க GuoSu7 nT sir கத்தவர் என்பவரை நன்றால் சிறிசு சுவாமிபகள் டாத அ.
பிரறது
சத்தா பங்களை
திருத்தம்
2nd
F : syGO MU ápr7 air
தூண்டும் உய்த்துணரும் தென்பையும் பரிமாணங்களில்
6. உருவாக்கப்
கண்டு
பேச்சாளன்
நான் போனான்
கர்த்தர் என்பதை நன்றாய் சிறுக சுவாமிகள்
பிறரது
கி
சந்தர்ப்பங்களை
மண் தன் உயிர்பினாலே மனிதன் உயிர்ப்பி
அவதூறு பேறுபெதரோ ஆர்த்தம்
Li கிடைக்ருப்
னாலே
JABi 6? !g5/I Oy பேறுபெற்றோர் அர்த்தம்
கிடைக்கும்
வருத்துவோருக்குக் வருந்துவோருக்குக்

Page 33
26
27
30 32
35 36
51 53 54 56 60
6
2
22
a-ágí கிடைக்கும் எதிரிபாறா syHurgrær
as day (sav. 4L6Qasív
aupaw fibarrs பிழைப்பிற்காக
அழிவுக்குரிவவற்றின் அழிவுக்குகியவற்றில்
ayó)ofriřadilir அழிவீர்கள்
முன்
என்றால் என நாள்
பார்த்தால் lurrrfŠAS Pyar i சாகப்படுத்தினால் சாகப்படுத்தினான் Owg 0au gray(Beau"
allotrop aloir
aste surrrio விமானம் _uOšs av nr 67 fraio иОд земrтеатта"
இறைவ Qasparr
முடாவிற்கு விடாவிற்கு பரிமேழலகர் பரிமேலழகர் அவன் தான் அவன்தாள் இறைவளின் இறைவனின் இரைத்*ந்தை இறைத்தந்தை இசுக்க Språkas கூறுகின்றார்ாற் கூறுகின்றார்கள்
மனிதனிலுப்காணப்படும்
மனிதனிலும் காணப்பCம்
77öAs எந்த
பெரின் Guajaba


Page 34
எண்பதிலிருந்து, எண்பத்ெ
அளவையியல்
 
 

súl. 17. uî sör-21(3 vom Jim Glou súluĵo*'. Ismaeusử ''
|
•