கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: சமர் 1979.09

Page 1
கலே இலக்கிய விம
 

செப்ரெம்பர் - 79
விலே * Եր 1-5
ர்சன வெளியீடு.

Page 2
அதிர்வுகள்
"மார்க்சின் கல்லறையிலிருந்து ஒரு குரல்" கட்டுரையின் மூலம் இலங்கையில் பரவலாக தெரிய வந்தவர் வெங்கட் சாமிநாதன். எழுத்தாளர்களின் எழுத்தைவிட எழுத்துக் குப் புறம்பான நடவடிக்கைகளை ஆராய்வ தில் அக்கறை உள்ள விமர்சகர். மார்க்சிஸ்ட் டுகளின் இலக்கியங்களை (அரசியலையும் கூடத் தான்) நிர்த்தாட்சணியமாக தாக்குவதன் மூலம் மலிவாக விளம்பரம் தேடிக்கொள்ப வர். **வெங்கட் சாமிநாதன் பாணி" என் னும் மூன்றும்தர விமர்சன அணுகுமுறையை உருவாக்கித்தந்த இவரது கருத்துக்களில் சுய முரண்பாடுகளும், புரட்டல் வாதமும் அதி கம், கலை, இலக்கியம், சிற்பம், சினிமா எல்லாவற்றிலுமே தனது வித்துவத்தைத் தெரிவிக்க முனையும் சாமிநாதன் அரசியல், சமூகநோக்கு பற்றிய தனது நிலைப்பாட்டை வெளிப்படுத்துவதில் இன்னும் தான் மெள னம் சாதிக்கிருர், இலங்கையிலும் வெங்கட் சாமிநாதனின் கருத்துக்களினுல் பாதிப்புக் குள்ளானவர் ஒரு சிலர் இருக்கத்தான் செய் கின்றனர். ஏற்கனவே முற்போக்கு இலக்கி யவாதிகளினல் பெரிதும் பாராட்டப்பட்ட கு. சின்னப்ப பாரதியின் “தாகம்' என்னும் (சோஷலிச எதார்த்தவாத) நாவலை இப் போதுவெங்கட் சாமிநாதனும் எப்படியோ அதை உயர்ந்த படைப்பு என்று கண்டுபிடித்து தெரிவித்து விட்டார். இங்குள்ள அந்த "ஒரு சிலரும்' இப்பொழுதுதான் அந்நாவலைப் படிப்பதற்கு ஆர்வம் கொண்டுள்ளனர் இதை நினைக்கையில் வேடிக்கையாகத்தான் இருக்கின்றது. 'தாகம்’ இப்போது "புதிய அடிம்ைகள்' என்னும் பெயரில் "முள்ளும் மலரும்" மகே ந்திரனல் திரைப்படமாக எடுக்கப்பட்டு வரு கிறத. நம்மூர் நல்ல நடிகரான சிலோன் சின்னையாவும் முக்கிய வேடத்தை ஏற்று நடி ப்பதாக தெரிய வருகிறது. நல்ல நாவல் தான்! ஆனல் நன்ருக எடுக்கத் தெரிந்திருக்க வேண்டுமே! W
"யாழ் திரைப்பட வட்டம்’ என்னும் அமை ப்பு யாழ்ப்பாணத்தில் ஸ்தாபிதமானதிலி

டானியல் அன்ரனி ருந்து தென் இந்திய குப்பைப்படங்களின் ஆரவாரங்களைப் பார்த்து எரிச்சலுற்று சலிப் படைந்திருக்கும் சீரியசான சினிமா ரசிகர் களுக்கு சர்வதேசரீதியாக பெரிதும் கவனிப் புப் பெற்ற பல திரைப்படங்களைப் பார்க் கும் சந்தர்ப்பம் ஏற்பட்டுள்ளது. Fearless (பிரான்ஸ்) The Coward (செக்கோசிலவாக் கியா) Rak (பிரான்ஸ்) இந்திய கலைகள் பற் றிய ஆறு விவரணப்படங்கள். Battleship Potenkin (GFITeSud) Two Men in The city (பிரான்ஸ்) Wolf's Trap (செக்கோசிலவாக் கியா) ஆகிய திரைப்படங்களை இதுவரை தனது அங்கத்தவர்களுக்காக இத்திரைவட் டம் காண்பித்திருக்கிறது. இந்நல்முயற் சிக்காக இவ் வட்டத்தின் தலைவரான" ஏ. ஜே. கனகரெட்டினவை எவ்வளவு பாரட் டினலும் தகும்.
மஹாகவியின் "புதியதொரு வீடு', சுந்தர லிங்கத்தின் "விழிப்பு’, பெளசுல் அமீரின் 'ஏணிப்படிகள்' மாவை நித்தியானந்தனின் "ஐயா லெக்சன் கேட்கிருர், க லா நிதி கா. இந்திரபாலா மொழிபெயர்த்த ஜே.எம். ஸிங்கின் "கடலின் அக்கரை போறுோர் ?? குழந்தையின் “ கூடிவிளையாடு பாப்பா ? ஆகிய ஆறு சிறந்த மேடை நாடகங்களை தொகுத்து யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத் தமிழ் இலக்கிய மன்றம் வெகுவிரைவில் நூல் உருவில் வெளியிட உள்ளது. இவ்வே ளையில் இளம் நாடக நெறியாளரும். நல்ல நடிகருமான க. பாலேந்திராவின் "மேடைப் பிரச்சினைகள்' எ ன் னும் கட்டுரையை கொழும்பு நடிகர் ஒன்றியம் புத்தகமாக வெளியிட இருப்பதாக அறிகிருேம்.
கலாநிதி கைலாசபதியின் 'சமூகவியலும் இலக்கியமும்’ என்னும் பயனுள்ள நூலை என். சி. பி. எச். நிறுவனம் வெளியிட்டுள் ளெது. இந்நூல் இங்கு பரவலாக கிடைக்கு மாயின் நம்மவரின் ஆக்கங்களின் அழகியல் சமூகப் பெறுமானம் பற்றி நம்மிடையே உள்ள தழம்பல் நிலை நீங்குவதற்கு பெரி தும் உதவலாம்

Page 3
ஈழத்துப் புனை கதைகளில்
சமுதாயச் சித்திரிப்பும் பேச்சு மொ
சி. வன்னியகுலம்
தனிமனிதனுக்கும் சமுதாயத்திற்கும் இடை யிலான பாரம்பரிய உறவுமுறைகளில் பிறழ் வேற்படும்போது புனைகதை இலக்கியம் தோன்றுகின்றது. மேற்கைரோப்பிய நாடுக ளில் கைத்தொழில் வாணிக வளர்ச்சியினுல் நிலமானிய அமைப்பும், அதன் அங்கமான கூட்டு வாழ்க்கையும் சிதையலாயின. நிலத் தினை அடிப்படையாகக் கொண்டிருந்த வாழ்க்கைமுறையானது பணத்தினை மூலா தாரமாகக் கொண்டு இயங்க முயன்றபோது சமூக பொருளாதார உறவுகளில் பாரிய பிறழ்வு நிலைகள் தோன்றலாயின. இவ்வா ருன புதிய சமூக பொருளாதார உறவுநிலைக ளையும் அவற்றின் பிறழ்வு நிலைகளையும் சித் தரிக்கும் திறனைப் பாரம்பரிய (செய்யுள் வழக்கிலான) இலக்கியங்கள் இழந்துபோகவே புதியதொரு இலக்கிய வடிவம் வேண்டப்பட லாயிற்று. அவ்விலக்கிய வடிவமே, புதிய சமூக உறவுகளைச் சிறப்பியல்புகளுடன் சித் திரிக்கவல்லனவாயின.
இவ்வாருன ஒரு சமூக பொருளாதார உறவு நிலைமாற்றம் கீழைத் தேயங்களில் நிகழ்ந்த போது அங்கும் புனைகதை இலக்கியம் தோற் றம் பெறலாயிற்று. கீழைத் தேயங்களில், ஆங்கிலேயர் வருகையானது நில், மானிய சமூக அமைப்பின் வீழ்ச்சிக்கும். முதலாளித் துவ சமூக அமைப்பின் தோற்றத்துக்கும் காரணமாயம்ைந்தது. ஐரோப்பிய நாடுக ளில் சமுக மாற்றத்தோடு இலக்கிய மாற்ற மும் நிகழ்ந்தது போலவே, இங்கும் சமுக மாற்றத்துடன் புனைகதை இலக்கியமும் தோற்றம் பெறலாயிற்று.
தனிமனிதனுக்கும் சமுதாயத்திற்கு மிடையி லான பாரம்பரிய உறவுகள் பிறழும் நிலையி லேயே புனேகதை தோற்றம்பெறுவதால்

N வ ழக்கும்.
ஆற்றல்மிக்க ஒரு புனைகதையானது, தனிம தனுக்கும் அவன் வாழும் சமுதாயத்திற்கு மிடையிலான உறவுமுறையினையும், அதஞ லேற்படும பிரச்சினைகளையும், அப்பிரச்சினை களினல் எழும் போராட்டங்களையும், அவற் றின் நிலைப்பாட்டினையும், சித்திரிப்பதாக இருத்தல் வேண்டும். எனவே, புனைகதை களினின்றும். சமுதாயத்தை வேறுபடுத்தி நோக்கமுடிவதில்லை. சமுதாய நிலைமைகளை எவ்வளவு தெளிவாகவும், தீர்க்கமாகவும் ஒரு புனைகதை சித்திரிக்கின்றதோ அந்தள வுக்கு அதன் வெற்றிதோல்வியும் நிர்ணயிக் கப்படுகின்றன.
இவ்வாறு, மனித சமுதாயத்தைப் படம் பிடித்துக் காட்ட முயலும் புனைகதை இலக் கியமானது அச்சமுதாயத்தின் உறுப்புக்க ளான சமூகக்குழுக்களினதும், தொழிற் பிரிவுகளினதும் பேச்சு மொழியையும் சித்தி ரிப்பது இன்றியமையாததாகி விடுகின்றது. சமூகக் குளுக்களினதும், தொழிற் பிரிவு களினதும் பண்பாட்டுப் பாரம்பரியங்களை மிகத் தெளிவாகச் சித்திரிக்கும் ஆற்றல் அவற்றுக்கெனப் பிரத்தியேகமாக அமைந்த பேச்சுமொழிக்கே உண்டென்ற கருத்து இன்று வலுப்பெற்று வருகின்றது. w
புனைகதைகளில், சமுதாயச் சித்திரிப்பின் இயல்பினுக் கேற்பவே பேச்சுமொழி வழக்கும் அமைந்து விடுகின்றது. சித்திரிக் கப்படும் சமூகக் குழுக்கள், அவற்றினிடை யேயான உற்பத்தி உறவுமுறைகள் ஆகிய னவே பேச்சுமொழிப் பயன்பாட்டினைத் தீர் மானிப்பவையாகவுள. ஈழத்திண்ப் பொறுத் தவரையில் அதன் புனைகதை இலக்கிய வர லாறு 1875-ல் சந்தியாகோ சந்தியவர்ணம் பிள்ளையவர்களின் சிறுகதைத் தொகுப்பான

Page 4
*கதாசிந்தாமணி"யுடனேயே ஆரம்பமாகின்
Dăile
ஈழத் தி ன் ஆரம்பகாலச் சிறுகதை
நாவல்கள் எவையேனும் ஈழத்துச் சமூக
அமைப்பினைப் பொருளாகக் கொண்டன. வல்ல; அவை மக்களின் நாளாந்தப் பிரச்
சினைகளையோ, போராட்டங்களையோ பொரு
ளாகக் கொண்டனவுமல்ல. மாருக, அவை வரலாற்று நிகழ்ச்சிகளையும், நல்லுபதேசங் களையுமே காவியப்பாங்கில் சித்திரித்தன.
ஈழத்தின் ஆரம்பகால நாவல்களான த. சர வணமுத்துப்பிள்ளையவர்கள் எழுதிய மோக
ணுங்கி, சித்திலெவ்வை முகம்மது காசிம்
அவர்கள் எழுதிய அசன்பேகதை ஆகியின,
முறையே 17-ம் நூற்ருண்டுத்தமிழக நாயக்
கராட்சிக்கால வரலாற்றுச் சூ ழ லை யும் எகிப்து தேச இராச வம்சத்தைச் சேர்ந்த
அசன் என்ற இளைஞனின் வீரவாழ்க்கை
யையும் சித்திரிப்பனவே. இப் புனைகதை
களில் வரும் கதாபாத்திரங்களும் இயல்
பிழந்த மனிதப்பண்புகள் கொண்ட அற்புத சிரு ஷ் டி கனா க வே காணப்படுகின்றன.
எனவே, கதைப் பொருளிலும் சரி, பாத்திர
வளர்ப்பிலும் சரி ஆரம்பகால ஈழத்துப் புனை
கதைகள், எவ்வகையிலும் சமகால சமூகப்
பிரச்சினைகளைச் சித்திரிப்பனவாக அமைய
வில்லை. இதனுலேயே, இக்காலப் புனைகதை களில் இடம்பெறும் பேச்சு வழக்கும் இயல் பானதாகவன்றி காவியப் பாங்கானதாக
அமைந்துவிட்டது.
இவ்வாறு ஈழத்தின் ஆரம்பகாலப் புனை கதைகள் எமது மண்ணில் வேரூன்ருமைக் கான காரணமாக நாடு அந்நியர்வசம் அடி மைப்பட்டுக் கிடந்தமையைக் கூறலாம். தனி மனித சமூக முரண்பாடுகள் கூர்மை பெருத ஒரு காலகட்டத்திலேயே இப்புனை கதைகள் தோற்றம் பெற்றன. ஆயின், டொனமூர் ஆனைக்குழு தனிமனிதனுக்குச் சமுதாயத்தில் வழங்கிய சில."மதிப்புக்கள்" தனிமனித முக்கியத்துவத்தினை உணர்த்த ஆல்லதாயின் அத்துடன், ஆங்கில நாகரிகத்
4

வளவன் மாறத்தான் போகிறது
கூவும் இளங்குயிலை கொத்திக் குதறுகின்ற காக்கையும் ஒர் கூட்டில் சேர்க்கையுடனே இருக்கும்
C w
சுகந்த மழை பொழியும் காணகத்துத் தாழைமர்ை
மெய் சிலிர்க்கும் நறுமணத்தான் எனினும் அங்கு சீறும் குறு நாகம் சுருண்டு குடி இருக்கும்
உச்சிமலைச் சரிவில் நீழ்கடலின் ஆழ்புவியில் உதிரம் வியர்வையென சிந்திவிடும் தொழிலாளர் கூட்டத்தில் கயவர் கூடிக் களித்திருப்பர்
அகரத்திற்கே சிகரம் வைக்கும் அதிசயங்கள் ஓட்டெடுக்கும் காலமதில் ஓங்கிஒலிக்கின்ற LJrrl Gu-TG LDrr til LorrøDub சொல்லடுக்கில் சுகங்கள்தமை கூடிக்குலவி வரும்
உழைப்போர் உதிரங்கள் ஏச்சுப் பிழைப்போரின் பன்னீர்க்கு வீழும் வியர்வை விசும்பும் கண்ணிர்
காக்கை குலநாகம் கயமை வார்த்தை சிலம்பம் இவையனைத்தும் ஏழை தொழிலாளர் எல்லோர்க்குமே எதிராய் நின்ருலும் நீள்புவியில் எல்லாம் தொழிலாளர் ஏற்றத்தினு லோங்கும் வல்லோர்தம் வரலாறு மாறத்தான் போகிறது.

Page 5
திற்கும் நமது மண்ணின் கலாசாரத்திற்கும் இடையே எழுந்த சமுதாய முரண்பாடுகள் நமது தேசத்தில் பல்வேறு பிரச்சினைகளைத் தோற்றுவிக்கலாயின. t
எனவேதான், 1929-ல் ம. வே. திருஞான சம்பந்தபிள்ளையவர்கள் இயற்றிய *காசிநா தன் நேசமலர்', "கோபால நேசரத்தினம்’ "துரைரத்தினம் நேசமணி" ஆகிய நாவல் களில் எமது சமூக வாழ்க்கை இடம்பெறு வதனை நாம் காணமுடிகிறது. *காசிநாதன் நேசமலர்', கோபால நேசரத்தினம்", ஆகிய இரு நாவல்களும் 20-ம் நூற்றண்டில் ஆரம் பகாலத்தில் கிறிஸ்தவ மிஷனறிமார் யாழ்ப் பாணத்தில் மேற்கொண்ட கிறிஸ்தவ சமயபி ரச்சாரத்தினை எதிர்த்துச் சைவ சமயிகள் போராடி வெற்றிகொள்வதனைச் சித்திரிக் கின்றன. துரைரத்தினம் நேசமணி" சீதனப் பிர்ச்சினைகளால் எழும் குடும்ப இன்னல் களைச் சித்திரிக்கின்றது. அடிப்படையில் இம் மூன்று நாவல்களும் ஈழத்து மக்களின் சமகாலப் பிரச்சினைகள் சிலவற்றைச் சித்தி ரிக்க முனைந்துள்ளமையை நாம் அவதானிக் கலாம். இதனலேயே இக்காலகட்ட நாவல் க்ளில் - சிறப்பாக இம் மூன்று நாவல்களி லும் - தராதர ஈழத்துத்தமிழும், யாழ்ப்பா ணப் பேச்சுவழக்கும் இடம் பெறுவதனை நாம் காணமுடிகிறது.
1940-ம் ஆண்டிலிருந்து 1960-ம் ஆண்டு வரையுள்ள காலப்பகுதியில் ஈழத்துப் புனை கதைகளில் சமுதாயச சித்திரிப்பும், பேச்சு மொழி வழக்கும் நன்கு வேரூன்றிவிடுகின் றன. தேசியவாதத்தின் தோற்றம், விடுதலை இயக்கம், காந்தீயம் ஆகியவற்றின் அருட் டுணர்வு, இக்காலப் பகுதிகளில் சமுதாய நிலைமைகளில் புதிய மாற்றங்களைத் தோற் றுவித்தது. தேச விடுதலைக்கு தேசிய ஐக்கியம் வற்புறுத்தப்பட்டது, காந்தீயக் கோட்பாடு களே போராட்ட ஆயுதமாகப் பயன்படுத் தப்பட்டது, காந்தீயக் கோட்பாடோவெ னின் சமுதாய சீர்திருத்தத்தினை அடித்தள மாகக் கொண்டது. எனவேதான் இக்காலப் பகுதியில் எழுந்த ஈழத்துப்புனைகதைகள் பல

வற்றின் சமுதாயச் சீர்திருத்தக் கருத்துக் களே இடம்பெறுவதனை அவதானிக்கலாம். அத்துடன்,இந்தியாவில் ‘மணிக்கொடிக்குழு" வின்ரின் முன்மாதிரியும் ஈழத்து எழுத்தா ளர்களுக்கு ஒர் ஆதர்சமாயமைந்துவிட்டது.
ஈழத்து இலக்கிய உலகின் முன்னேடிகள் என க், கருதப்படும் சோ. நடராசன்? சி. வைத்திலிங்கம், இலங்கையர் கோன்கு சோ. சிவபாதசுந்தரம், சம்பந்தன் ஆகி யோரும், மறுமலர்ச்சி எழுத்தாளர்களான அ. செ. முருகானந்தம், சு. வேலுப்பிள்ளை, அ. ந. கந்தசாமி, தி. ச. வரதராஜன், சு.இராஜநாயகன்,தாழையடி சபாரத்தினம், சொக்கலிங்கம் ஆகியோரும் தமது படைப் புக்களின் உயிர் நாடியாகச் சீர்திருத்தக் கருத்துக்களையே கொண்டனர். இவர்கள், ஈழத்து மக்களின் வாழ்க்கை முறையினையும், அவர்தம் பிரச்சினைகளையும் தத்துவார்த்த
ரீதியாகச் சித்திரித்தரெனக் கூறுவதற்கில்லை.
வாழ்வில், புரையோடிப்போன வர்க்க முரண் பாடுகள் என்ற புண்ணுக்கு, சமுதாய சீர் திருத்தம் என்ற கைமருந்தினல் ஒத்தடம் கொடுப்பதாகவே இவர்தம் படைப்புக்கள் அமைந்தன. எனவேதான், மக்களின் பேச்சு வழக்கினையும் தமது படைப்புக்களில் சீரிய முறையில் படம்பிடித்துக் காட்ட இவர்க ளால் முடியாதுபோயிற்று.
1960-ம் ஆண்டுகாலப் பகுதியில் நாட்டில் ஏற்பட்ட அரசியல், சமூக விளிப்புணர்வா னது தமிழ்ப் புனைகதை இலக்கியத்தினையும் புதியதொரு தடத்தில் செலுத்துவதாயிற்று. இக் காலப் பகுதியில் செயற்றுடிப்புடன் இயங்கிவந்த இலங்கை முற்போக்கு எழுத் தாளர் சங்கமானது மார்க்சீய சித்தாந்தத் தையே தனது கோட்பாடாக முன்வைத் தது. ஈழத்து எழுத்தாளர்களில் பெரும் பான்மையினர் இச் சங்கத்தின் உறுப்பினர் களாக விளங்கினர். மார்க்சீய சித்தாந்தம், வர் க்க க் கண்ணுேட்டத்துடனேயே சமூ கத்தை நோக்கவும், சமூகப்பிரச்சினைகளைத் தீர்க்கவும் முனைவது. எனவே, இக்காலப் பகுதி எழுத்தாளர் பலரும், வர்க்க, நோக்
5

Page 6
கின் அடிப்படையிலேயே எழுத முற்பட்ட னர். இளங்கீரன், டானியல், கணேசலிங் கன், டொமினிக் ஜீவா, பெனடிக்ற் பாலன், நீர்வை பொன்னையன், செ. யோகநாதன், செ. கர்காமநாதன் போன்ருேரே வர்க்கக் கண்ணுேட்ட்த்தல் புனைகதை எழுத முயன் ற்வர்களில் முதன்மையானவர்கள்.
தொழிலாள வர்க்க நலனைப் பேணும் இவர் தம் புனைகதைகள், கூர்மைபெறும் வர்க்க முரண்பாடுகளை எடுத்துக்காட்ட முனைந்த போது, அவர்தம் பேச்சுவழக்கினையும், சித் திரிக்க வேண்டியது தவிர்க்க இயலாததாகி யது. தொழிலாள வர்க்கத்தினரின் வாழ்க்கை முறை பண்பர்டு, பாரம்பரியங்கள், பழக்க வழக்கங்களை அவர்த்ம் பேச்சு மொழியே தெளிவுபடுத்தவல்லது என்பதனை 1960-ம் ஆண்டு காலப் பகுதியில் ஈழத்தில் நிகழ்ந்த மரபுப் போராட்டமும் தெளிவுபடுத்துவதா யிற்று. எனவேதான் 1960 ம் ஆண்டிற்குப் பிற்பட்ட ஈழத்துப் புனைகதைகளில் பேச்சு வழக்கானது பிரக்ஞை பூர்வமாக கை யாளப்பட்டு வருவதனை நாம் காணமுடி கிறது. இக்காலப் பகுதியிலேயே, மண்வ்ா சனை இலக்கியம், பிரதேச இலக்கியம் ஆகி யன தோன்றி வளர்ச்சி பெற்றுவருகின்றன, இவ்வகை இலக்கியங்களின் உயிர் நாடியாக விளங்குவது அவ்வப் பிரதேசப் பேச்சுத் தமி ழே என்பதையும் நாம் அவதானித்தல் வேண்டும்.
இக்கலா ஈழத்துப் புணைகதைகளில், சமுதா யச் சித்திரிப்பும் பேச்சுமொழி வழிக்கும் முதன்மைத்துவம் பெற்று வரினும் இவற் ருேடு தொடர்பான சில பிரச்சினைகளும் எழவே செய்கின்றன. அவை:-
1. இயற்பண்பினவான (Natural) புனை கதைகளிலேயே பெச்சுவழக்குச் செம்மையாக இடம்பெறுகிறது. w
2. முற்போக்குச் சிந்தனைகளைப் புலப்
படுத்துகையில் பேச்சு வழக்கு ஆற்றலற்ற தாகிவிடுகின்றது.
6

3. இயல்பான பேச்சுவழக்குப் பிரயோ கம் இன்றியே புனைகதை எழுப்பும் உணர் வினை நன்கு புரிந்து கொள்ள முடியும்.
இவற்றுக்கான சில உதாரணங்கள் மட்டும் கீழே தரப்படுகின்றன.
1. இயற்பண்பினவான புனைகதைகளிலேயே பேச்சுவழக்கு இயல்பானதாக அமைகின்றது. எஸ். பொன்னுத்துரை, கே. வி. நடராஜன் சு. முத்துலிங்கம் போன்ருேர் வாழ்க்கையின் உள்ளார்ந்த பிரச்சினைகளை ஆராய்வதில் காட்டும் ஆர்வத்திலும் பார்க்க நடை முறை வாழ்க்கையின் மேலோட்டமான இயல்புகளையே சித்திரித்துச் செல்வர். இது ணுல் பாத்திர உரையாடல்களும் இயல்பா னதாகவே அமைந்துவிடுகின்றன.
எஸ். பொன்னுத்துரையின் "மறு’ என்ற சிறுகதையில் இடம்பெறும் ஒரு உரையா L6:-
"சோக்கா இருக்கப்பா, இப்பதான் வீட்டுச் சாப்பாடு. சிங்களச் சாப் பாட்டிலை நாக்கு மரத்துப்போச்சு’ 'என்னெனை நீட்டுக் கயித்திலை யோசிக்கிருய்?*
'இல்லை ஐந்து மாசமா மாத்தனற யிலை இருந்து யாழ்ப்பாணப்பக்கம் கோச்சி வரேல்லையாம்."
2. முற்போக்குச் சிந்தனைகளைப் புலப்படுத்து கையில் பேச்சுவழக்கு ஆற்றலற்றதாகி விடுகின்
றது. w r ஈழத்து முற்போக்கு எழுத்தாளர் யாவரின தும் கதைகளை இதற்கு உதாரணமாகக் கொள்ளலாம். மிகச் சாதாரண கதாபாத் திரங்கள், சாதாரண விடயங்களை இயல்பான பேச்சுத் தமிழிலும் தத்துவார்த்தமான விட யங்களைச் செந்தமிழிலுமே பேசுவதனை நாம் அவதானிக்கலாம். செ. கணேசலிங்கனின் சாயம் என்ற சிறுகதையில் வரும் ஒரு பேச்சுவழக்கு:-

Page 7
"வெளி நாடுகளில் தேயிலையை விற்றுப் பணம் சேர்க்கும்போது எமது இரத்தத்தை விற்றுப் பணம் திரட்டுகிறீர்கள் என்று எண்ணுங் கள். தேயிலையைச் சுவைபார்ப்பவர் களெல்லாம் எமது இரத்தத்தைச் சுவைக்கிருர்கள் என்று கருதுங்கள். தேயிலைக்காகத் தமதுஇரத்தத்தைத் தானம் செய்து இரத்தம் சுண்டிப் போய் எலும்பும், தோலுமாகக் காட்சியளிக்கும் எழ் வர்க்கத்தி னரை வெளியே பாருங்கள்.
3. இயல்பான பேச்சு வழக்குப் பிரயோகம் இன்றியே புனைகதை எழுப்பும் உண்ர்வின நன்கு புரிந்து கொள்ளலாம்.
புனைகதையின் வெற்றியினைத் தனியே பேச்சு வழக்கு மட்டும் தீர்மானிப்பதில்லை. அக் கதை நிகழ்களம் சித்திரிக்கப்படும் பாங்கு, ஆசிரியன் கதையினை வழிநடத்திச் செல் லும் திறன், அவன் கையாளும் உத்திகள் ஆகியனவே முக்கியமானவை. என். கே. ரகு நாதனின் "நிலவிலே பேசுவோம்’ என்ற சிறு கதையை உதாரணமாகக் கொள்ளலாம். வடமராட்சிப் பகுதியில் நிலவும் மிக நுணுக் கமான சாதி உணர்வினை இக்கதை சித்தி ரிக்கின்றது. இதில் இயல்பான பேச்சுத்தமிழ் இடம்பெறவில்லை. ஆயினும், சாதி அமைப் பின் இறுக்கமான தன்மையை மிக நாகுக் காகப் புலப்படுத்துவதில் இக்கதை சிறந்து விளங்குகின்றது. இக்கதையில் இடம்பெறும் உரையாடல்:- .
**வேண்டாம் கந்தா கூப்பிடாதே! இதெல்லாம் இரண்டாம்பேர் அறி யக்கூடாத விஷயங்கள்: மனேவி மக் களென்ருலும் இந்தக் காலத்தில் ஜாக்கிரதையாய் இருக்கவேண்டும். எந்தப்புற்றில் எந்தப்பாம்பு இருக் கிறதென்று யாருக்குத் தெரியும்? அதோ பார்! வெளியே நல்ல நிலவு! அத்துடன் பால்போன்ற மணல். அங்கே போய்ப் பேசிக்கொள்ள сопгио сит!"*

அணுசிசு
மேமன்கவி கனவுப் பாலையில் சிசு- என்ருே வரையும் தரிசன வீச்சு கோடுகள் அது. ஒவியமல்ல அழிவு!
கல்லறைத் தொட்டிவில் தூங்கிப் போன ஆன்ம பூமிகளின் ஆசை மலைகளை கரைக்கும்
உஷ்ண கோளம்;
ஐன்ஸ்டீனின் கனவு நுரைவட்டங்களே சிதைத்து- நாளைய விந்துப் பூக்களை நார்- நாராய் கிழித் தெறியும் அணுநகம்;
இன்று= பரிணும குதிரையில் பயணம் செய்யும்சிந்தணுச் சிசு!
எப்போதும் கலைஞன் வெற்றி பெற்ருல் அது நல்ல விஷயமாகும். அல்லாமல் சிந்தனையா ளன் கலைஞனை வெற்றி கொள்ளுதல் மோச மானதாகும். ஆஞல் எழுத்தாளன் பெரிய சிந்தனையாளனுக இருக்க வேண்டியதும் அவசியம், இல்லையென்ருல் ஒருஇணைப்பான உலகப்பார்வையை இழந்து விடுகிருன் அல் லது தனித்துவம் பெற்ற கலைஞன் என்ற முறையில் சொந்தப் பார்வை இல்லாதவ ஞகிருன்.
- எங்கெல்ஸ் -

Page 8
மூன்று கவிதைகள்
1. முயல்வு
நீதி விரும்பும் நெறியாளன் இன்னல்களை மோதி விழுத்த முடிவெடுத்தான்.
*பாதி மனிதன்
தெருவில், வறுமையிலே! இழி
முனிதல் தான் அன்றே முறை?"
வேர்த்துப் பதைத்தும் விடிவொன்றும் காணுத ஆத்திரத்தாற் சீறி அனல் ஆனன். பார்த்திருக்க மாட்டாமற் போராளி மாற்றமொன்றை வேண்டினன், கூட்டாகச் சென்ருன், கொதித்து.
உழைத்தலுத்த மாந்தர் உழைப்பைத் திருடிக் கொழுத்திருப்போர் செய்யும் கொடுமை விழுத்தவென
ஆவேசம் கொண்டான்
தற்காய்ச் செயற்பட்டான், தீர்வொன்று காணத் திரண்டு.
முன்னர் அடிமை முறைமை ஒழிப்பதற்காய் உன்னி முயன்ற ஒரு போரும் பின்னர் நிலவுடைமைச் சொத்தமைப்பை நீக்க எடுத்த பல போரும் எண்ணுகிருன், பார்த்து
ஒடுக்கப்படுவோன்
ஒடுக்கம் களைந்து விடுக்கப் படுதலே வேண்டும்
அடுக்காத
வெங்கொடுமை தாங்கான், விடிவை எதிர் நோக்கினன். தன் கடமை மேல் எழுந்தான், தான்.
8

- முருகைகன் -
ஒவ்வாமை எல்லாம் ஒருங்கே பிடுங்கினன். பொய் சாய என்று புரட்சி செய்தான். நல்வாழ்வை நாட்டத் தொடங்கினன். நாசச் செயலை எல்லாம் ஒட்டித் தொலைத்தான், உடன்.
மூலையொன்றிற் பெற்றெடுத்த முன்னேற்றம் வையமெங்கும் சேரவென்று நூறு செயல் செய்தான். ஊரையெல்லாம் சேர்ந்தொருங்கே கூட்டிச் சிவப்பைப் பரப்பி வைத்தான், நேர்த்தியொன்றை மட்டும் நினைத்து,
போராளி செய்யும் புதுமைப் பணிகளால் ஏராளம் நன்மையாம், எல்லார்க்கும் பாராளும்
ஆட்சிகளே இல்லாத அன்பு நல நீதியினை நாட்ட முயல்வான், நயந்து.
2. ஆற்றல்
சத்திய நாதன் தலையைச் சொறிகின்ருன். புத்தறிவு தந்த பொதுமைகளால் எத்தனையோ
சிக்கல் அவிழ்ந்த சிறந்த அனுபவந்தான். உட்கருத்தைச் சொன்னன், உரத்து
"வேலை துன்பம் அல்ல. வினைகளே நல்லின்பம் ஊனல் அமைந்த உடல்
இன்பம்.
ஆனதால், விட்டிடுதல் மேண்டாம் இவற்றை

Page 9
விடாமையே உத்தமப் பேரின்பத்தின் ஊற்று.
**சோர்வால் எதுவும் சுகமில்லை. ஓயாத ஆர்வமே மேலான ஆற்றலாம். வேர்வையினுல் அற்புதங்கள் ஆகும். அறிவின் துணை கொண்டால், வெற்றி கண்டு செல்லலாம், மேல்
எண்ணம் செயலாய் விரியும். செயல் விரிவில் உண்மை விதிகள் உணரலாம். உண்மையினுல் அப்பாலும் எண்ணங்கள் ஆக்கம் பெறுதலால் அப்பாலும் உந்தும் அது
**விளங்கும் உலகை விளங்கி, விளக்கி, களங்கம் களைந்து கழற்றி விளைந்தவற்றை இன்னும் திருத்தி, இருப்பவற்றை மாற்றுவதே நன்மை பயக்கும் நடை."
3, இனிமை
இன்ப வசந்த எழுச்சித் திருப்பாட்டைச் சுந்தரனும் சுந்தரியும் பாடுகிறர். பொன் கலந்த வைகறை வேளைமனங் கனிந்த சந்தர்ப்பம். உய்வுணர்ச்சி பொங்கும் உளத்து.
மங்கலங்கள் மின்ன, மணியோசை கிண்னென்ன,
எங்கும் இனிய இளந்தென்றல் தங்கி வர
நானு விதமான
நாதக் கலவைகளும் தேஞய் ஒலிக்கும் சிறந்து.
மாயை அல்ல வையம் மனித உடல் மாயை அல்ல

நீயாயும் நாஞயும் நிற்பவைகள் மாயை அல்ல. அன்பும் பணிகளும் ஆர்வமுடன் ஊக்கமும் பண்பும் பயனும் அவை.
"நான் எனதென்னும் செருக்கு, தனிச் சொத்துப் பேணும் மரபின் பிறப்பஈக்கம். ஆனமையால்,
அந்த மரபை அறுத்தெறிந்து பார்ப்போமே! "வந்திருந்து பாடு மகிழ்ந்து.
கிண்ணம் நிரம்பக் கிறுக்கும் சுவைப்பிழிவை வண்ண வளைக் கையால் வாரடியே! உண் சிறிது
பின்னர் எனக்குப்
பிரியமுடன் தா
ஆகா, என்ன இனிமை இதற்கு!"
啤 啤,啤·
தத்துவ ஞானி, தகுதியுள்ள விஞ்ஞானி. புத்துலக கண்டமைக்கும் போராளி ஒத்துழைத்து
மூலரும் கூடி முயற்சிகளில் ஈடுபட்டார். தீவிரமாய் ஈடுபட்டார் சேர்ந்து.
எங்கெங்கும் ஓடி எழுந்து பறந்தார்கள். அங்கங்கே உள்ளவற்றை ஆராய்ந்தார் முன்பறிந்த மெய்மை திருத்தி விசேடித்தார். மிஞ்சியுள்ள பொய்மைகளைப் போக்கினர் போய்.
** * 啤
**வைகறை வேனில் மலரை விரிக்கட்டும்; - திவ்வியமாய்ப் பொங்கட்டும் தேன்."
女

Page 10
With best Compliments FROM
A PSA R A : ՏԱՃ կ0US3
19, Jubilee Bazaar JAFFNA
Space Donated By
-
Uftee Caine 3tates
35, KASTHURIAR ROAD JAFFNA

கீதா ອາຈານ ஹவுஸ்
ஒடர்நகைகள் குறித்த தவணையில்
உத்தரவாதத்துடன் செய்துதரப்படும்
பவுண், பொன், வெள்ளி
வாங்குவோரும், விற்பனையாளரும்
OG HA JEWELHOUSE
R. KANDASAMY
Kandy Road - CHAVAKACHCHERI
விஜயம் செய்யுங்கள்
X பாத அணிகள்
* தொப்பிகள்
* சூட்கேசுகள்
முதலியவற்றிற்கு
4 ટૂંક 喀· ※·
મક விமலா ஸ்
தனங்கிளப்பு றேட் - சாவகச்சேரி

Page 11
சிறுகதை
பன்காரிகள்
செல்லக்கண்டு தன் பரிவாரங்களுடன் புறப் பட்டுச் சென்ருள். தன் நரைத்த தலையை மூடி முக்காடு இட்டவாறு அவள் வீதியில் நடக்கத் தொடங்கினள். இரண்டு சிறு குச் சிகளில் நீண்ட கயிற்றை ஒரு முடிச்சாகக் சுற்றி, அதை முந்தானைப் புடை வையின் தொங்கலில் முடிந்து தொங்க விட்டிருந் தாள். அவளுடைய பரிவாரங்கள் அடிக்சடி வெற்றிலைத் துப்பலைப் பீச்சி அடித்தபடி அவளைப் புடை சூழ்ந்து சென்ருர்கள். எல் லோருடைய கைகளிலும் குச்சிசளைச் சுற். றிய கயிற்று முடிச்சுகள் இருந்தன. 96 it கள் கைவீசி நடப்பதற்கேற்ப முந்தானைச் சீலையுள் மறைந்தும் மறையாமலும் அவை ஊஞ்சலாடின. . காலைப் பொழுது இன்னும் குழுமையாக இருந்தது. மரங்களின் உச்சிகளிலும் தூரத் தில் பரவிக்கிடக்கும் வயல் வெளியிலும் இளவெயில் பொன்னிறம் பூசியது. வெயில் வீதியில் படியக்கூடிய அளவுக்கு இன்னும் சூரியன் மேலே வரவில்லை. அந்த இளங் காலைப் பொழுதில் - வெயிலின் உறைப்பும் சனங்களின் நடமாட்டமும் அதிகரிக்காத வீதியில், அந்தப் பெண்கள் ஒரமாக நடந்து சென்ருர்கள். ஒவ்வொரு பாதமாகப் பதிந்து கிளம்புகையில் வீதி ஒரத்துப் புழுதி மேலே கிளம்பி காற்றில் கரைந்து கலந்தது. செல்லக்கண்டு தன் இடுப்புச் சீலையுள் செருசி இருந்த மூக்குத்தூள் பட்டையை எடுத்துப் பிரித்தாள். வலதுகை ஆள்காட்டி விரலை யும் பெருவிரலையும் சேர்த்து சிறிது மூக்குத் தூளைக் கிள்ளி எடுத்து உதடுகளைப் பிரித்து காவியேறிப்போய் இருந்த பற்களில் வைத்து இரண்டு கொடுப்புகளுள்ளும் மாறிமாறித் தேய்த்து விட்டாள். எச்சில் படிந்தவிரலை அழுக்குத்திரண்ட முன்ருனையில் துடைத்த வாறே நடந்தாள்.

எம். ஏ. நுஃமான்
"வாயெல்லாம் இல்க்கிது எனக்கும் ஒளுப் பம் தாகாலாத்தர்' என்று கையை நீட்டிய வாறே முன்னல் வந்தாள் சின்னப்பிள்ளை. அவள் கறுத்து மெலிந்திருந்தாள். என்ரு லும் - வாலிபத்தின் கவர்ச்சி அவளிடத்திலும் குடிகொண்டிருந்தது.
"அடியேய் ஒனக்கு எத்தின நாளக்கிக் சொல்ற குமர்ப்பிள்ளயஸ் எல்லாம் இதத் தீட்டப்போடாடி. நாளக்கிக் கலியாணம் கேட்டுப்போன அவளுக்கு மூக்குத்தூள் வாங் கிக் குடுத்து நமக்குக் கட்டா எண்டு மாப் பிள்ள மாரெல்லாம் ஒண்ணுன்று வானு கள் ஹி' செல்லக்கண்டு அவளைப் பகடி பண்ணினுள். செல்லக்கண்டின் பகடி அவளுக்குப் பழகிப் போய்விட்டது.
"ஓங்கா இப்ப அதுதான் ஒரு கொற. எங் களுக்குக்குக் கலியாணம் கேட்டுப் போறத் துக்குள்ள ஒன்னப்போல எங்களுக்கும் தல நரச்சுப் பெயித்திரும். அது மட்டுக்கும் மூக் குத்தூள் தீட்டாம வாய் இலச்சிலச்சி குந் திக் கிருக்கச் சொல்றயா'
சின்னப்பிள்ளையின் பதிலைக்கேட்டு எல்லோ, ரும் சத்தமிட்டுச் சிரித்தார்கள். "சீ ரோசங்கெட்ட பொண்டுகளே சத்தம் போட்டுச் சிரிக்காதங்கடி' என்று உறுக்கி அடக்கினுள் செல்லக்கண்டு.
அவர்களுடைய பெரும் சிரிப்புக்கு இடையே செல்லக்கண்டு நீட்டிய மூக்குத்தூள் பட்டை யில் சிறிது தூளைக்கிள்ளி எடுத்து பற்களில் தேய்த்துவிட்டு எச்சில் விரலைப் புடைவை யில் துடைத்தவாறே சின்னப்பிள்ளை சொன் ஞள.
1.

Page 12
**அசறுக்கு தம்பிய கல்மினச் சந்தக்கு அனுப்பத்தாங்கா வேணும். நீ வாங்கற யாழ்ப்பாணத்தாண்ட கடயிலதான் நல்ல தூள் இரிக்கி. இவனுகள்ற கடயில இரிக் கிற தூள் சாம்பலைத் தேக்கருப்பல ஒரு . சதத்துக்கும் ஒதவா??
"ஒண்டி புள்ள இந்த அறவாப் போறவனு கள் உமிக்காந்தளக் கலக்கானுகளோ என் னமோ." என்ருள் செயினம்பு.
ஆளுக்கு ஒன்றைக் கதைத்தபடி அவர்கள் காரைதீவுச் சந்திவரை நடந்து சென்றர் கள். இவ்வாறு அவர்கள் தடந்து போவதில் ஓர் ஆதாயம் இருந்தது. ஊரில் இருந்து நெடுக சம்மாந்துறைவரை 'வஸ்' ஏறிப் போவதானல் அவர்கள் இருபத்தைந்து சதம் கொடுக்க வேண்டும். காரைதீவு வரை நடந்து வழிப்பயணத்தில் பாதியைகுறைத்து விட்டால் அப்பால் உள்ள தூரத்தைப பதி
னைந்து சதத்துடன் முடித்து விடலாம்.
திரும்பி வரும்போது அந்தப் பணச்செலவு கூட ஏற்படுவதில்லை. அவரவர் பிடுங்கிய ஆளுயரம் வளர்ந்த பன்களை இரண்டுபேர் வளைத்துப் பிடிக்கக்கூடிய பெரிய சுமைகளா கக் கட்டி, குச்சிகளை மாட்டி அவிழாது திருகி இறுக்கிவிட்டு முந்தானையைச் சுருட் டிச் சிம்மாடாக வைத்து தலைச்சுமையுடன் நடந்தே வீடுபோய்ச் சேர்ந்து விடுவது அவர் களுக்குப் பழகிப்போய்விட்டது.
அன்றும் அப்படித்தான் கானல் மிதக்கும் தார்வீதியில் நிறைமதியப் பொழுதில் தலைச் சுமையுடன் அவர்கள் நடந்து சென்ருர்கள் வெயில் சுட்டுக் கறுத்த அவர்கள் முகங்க ளில் வியர்வை கசிந்து வழிந்தது தலைச் சுமையின் அழுத்தத்தில் இடுப்பின் கீழே பின்புறமாகத் தி ரண் ட பிருஷ்டங்கள் தளம்பி அசைந்தன. இளம் பெண்களின் யேர்த்திய கைகளின் இடையே, திரண்டு தளம்பும் மார்பகங்கள் - அவர்கள் அடிக்கடி முன்முனையை இழுத்துவிட்ட போதிலும் ஒவ்வொரு பாதத்தின் அசைவுக்கிணங்க
12

மென்மையாக அசைந்து சென்றன. மாவ டிப் பள்ளியில் அந்தப் புடைவைக் கடை யைக் கடந்து செல்லும்போது கத்தரிக்கோ லைக் கையில் வைத்து உருட்டிக்கொண்டி ருந்த ஒருவன் அதன் நுனியைப் பிடித்துக் கொண்டு சத்தமாகச் சொன்னன்.
"பார்ரா என்ன கூருடா" சின்னப்பிள்ளையும் பூக்கண்டும் முன்ருனையை இழுத்து விட்டுக்கொண்டு நடந்தார்கள். செல்லக்கண்டு தெரு ஒரத்தில் காறித்துப் பிக்கொண்டு நடந்தாள்.
காரைதீவுச் சந்திக்கு வந்து நிழல் வாகை மரத்தின் கீழ் அவர்கள் வஸ்ஸுக்காகக் காத்து நின்ருர்கள். எதிர்ப்புறத்தில் வீதி யின் கீழே தேங்கி நின்ற நீரில் அடர்ந்து படர்ந்திருந்த செந்தாமரையின் நீண்ட தண் டுகளில் மலர்ந்தும் மலராத நிலையில் பூக் கள் ஆடிக்கொண்டிருந்தன. பின்புறத்தில் இருந்து பசுமையான வயலைத் துழாவிவந்த காலேப்பொழுதின் குளிர்ந்த காற்று மரக் கிளைகளை உசுப்பிவிட்டுக் கொண்டு அப்பால் சென்றது. ܀-
பூக்கண்டு, தன் தலையிலும், தோளிலும் உதிர்ந்த வாகை மலரின் சிதள்களைத் தட்டி விட்டவாறே மரத்தை அண்ணுர்ந்து பார்த் தாள்.
'உம்மாட கால் இப்ப எப்பிடி இருக்கிடி" என்று செல்லக்கண்டு பூக்கண்டைப் பார்த் துக் கேட்டாள்.
"அது அப்பிடித்தாங்கா இரிக்கி, நான் வரக் களையும் சுடுதண்ணி வெச்சி ஒத்திக்கிட்டுத் தான் இருந்தா, அட்ட கடிச்சித்தான் இப் பிடி ஆன எண்டு அவ சொல்ரு. இந்த ஒலகத்தில அட்ட்கடிச்சி அப்பிடியும் வீங்க றதா? “ அவக்குக் கால்ல நீர் இறங்கி இருக்" காக்கும், ‘பூக்கண்டின் பதிலே அடுத்து அவர் கள் பல வைத்திய ஆலோசனைகளைப் புரி மாறிக்கொண்டார்கள்.

Page 13
போன மாதம் சுங்கான் மீன்முள் ஏறி ஒரு கிழமை நடக்க முடியாதிருந்த நிலையை அப் போது சின்னப்பிள்ளை நினைத்துப் பார்த் தாள், உடனே காலை உயர்த்தி அந்தத் தழும்பு இன்னும் தெரிகிறதா என்று ஒரு தரம் குனிந்து பார்த்தாள். அதைத்தொடர் ந்து தனக்கு முதல்முதல் அட்டை கடித்த அநுபவம் அவள் நினைவுக்கு வந்தது.
முழங்கால் புதையும் அல்லைச் சேற்றில், சின்னப்பிள்ளை முதன் முதல் இறங்கிய அனு பவத்தை அவளால் மறக்க முடியாது. முழங் காலுக்கு மேலே சீலையை உயர்த்திப் பிடித் துக் கொண்டு சேற்றில் காலைத் தூக்கித் தூக்கி வைத்து அவர்கள் நடந்து சென்றர் கஅ. "பொதுக் பொதுக்" என்று சேற்றுள் கால்கள் போகும்போது முகத்தில் கூட சில வேளை சுரி தெறித்தது. சின்னப்பிள்ளை காலில் ஏதோ ஊர்வதை உணர்ந்து குனிந்து பார்த்தாள். முழங்காலுக்கு மேலே இரண்டு தொடைகளிலும் இரண்டு அட்டைகள் ஒட் டிக்கொண்டு இருந்தன. அருவருப்பும் பய மும் சேர்ந்து அவள் சத்தமிட்டுக் கத்தினுள்.
"எண்ட ராத்தாண்டேய் அட்டடி.”*
சிறிது தூரத்தில் நடந்து சென்று கொண் டிருந்த செல்லக் கண்டு திரும்பிப் பார்த்துச் சொன்னுள்.
*அதுக்கு ஏண்டி தொண்டை கிழி யக் கத்தருய். அட்டயெண்டா என்ன பூதமா? கையால இழுத்தெ றியாம் அதுர தலையில ஒளுப்பம் சுண்ணும்ப வெய்.'
எனினும் சின்னப்பிள்ளை கைகளை உதறிக் கொண்டு நின்றள். அருவருப்பாலும் பயத் தாலும் அவள் மயிர்க் கால்கள் குத்திட்டு நின்றன. பக்கத்தில் நடந்து வந்த செயி னம்பு சிறிது சுண்ணும்பைத் தடவி விட் டாள். அட்டைகள் உதிர்ந்து விழுந்தன கடிவாயில் இருந்து இரத்தம் கசிந்து வழிந் தது. அதன் பிறகு எல்லோரையும் போல அவளுக்கும் அது பழகிப் போய்விட்டது.

இருந்தாலும் செல்லக்கண்டு அவளைக் கேலி செய்யாமல் இருப்பதில்லை. "சின்னப்புள்ள கவனமா நில்றி. புடவைக்குள்ளால அட்ட
நெடுகப் பெயித்திரும். மறுகா இழுத்தெடுக் கிறதுக்கும் ஆள் தேடிப் போகணும்." ததற்கு சின்னப்பிள்ளை கொடுத்த பதிலைக் கேட்டு எல்லோரும் சத்தமிட்டுச் சிரித்தார் ó@T。
தொடைவரை உயர்த்திய சேலையை இரண்டு தொடைகளுக்கும் இடையில் சுருட்டிவைத்து சுரியில் விழுந்து விடாமல் இறுக்கிப் பிடித்த வாறே அவர்கள் பன்பிடுங்கினர்கள். ஆள் அரவம் கேட்டு பக்கத்தில் நாணற் பற்றை களுள் இருந்து கொக்குகள் எழுந்து பறந்து சென்றன.
"அல்லையில பன்புடுங்கி ஆபரணப் பாய்இழச்சி போட்டுப் படுக்க ஒரு புள்ள தாடா ஆண்டவனே."
ஒருத்தி இந்தப் பழைய நாட்டுக் கவியை உரத்துப் பாடினள். 'ஏன்டி நீ புள்ள கேக் கயா இல்லாட்டி புரிசன் கேக்கயா ' என்று இன்னெருத்தி அவளைக் கேலி பண்ணினள். இவ்வாறுதான் ஆளை ஆள் கேலி பண்ணுவ திலும் விரசமான வார்த்தைகளைக் கூறிச் சிரிப்பதிலும் அவர்கள் அந்த வெயிலையும்" சுரியையும் மறந்து போனுர்கள்.
வாகை மரக் கிளைகள் ஊடு காலை வெயில் உறைப்பாக விழுந்தது. பக்கத்துத் தேனீர்க் கடைகளில் "டீ" அடிக்கும் ஒசை அடிக்கடி கேட்டது. செயினம்பு ஒரு பெரிய பசிக் கொட்டாவி விட்டாள். இரவு ஆக்கிய பானைக்குள் ஒன்றும் மிஞ்சிக் கிடக்காததி ஞல் வெறும் தேனீரைக் குடித்து விட்டுத் தான் அவள் புறப்பட்டு வந்தாள்.
செல்லக் கண்டு மூன்முவது தடவையாக மூக்குத்தூளை எடுத்து பல்லில் தேய்த்து விட்டு எச்சில் படிந்த விரலை ஊத்தைப் பிட வையில் துடைத்துக் கொண்ட போது
*வஸ் சும் வந்து நின்றது.

Page 14
எல்லாரும் ஏறிக் கொண்டார்கள். இன்னும் சுறுசுறுப்பு ஏருத காலை நேரத்தில் வஸ்ஸில் சனக்கூட்டம் அதிகம் இல்லாவிட்டாலும் ஆட்கள் இங்கும் அங்குமாக எல்லா சீற்று களிலும் கலைந்திருந்தார்கள்.
*"அடியே புள்ள நீ இஞ்சால வா, நீ அதிலை இரி. டீயேய் செயினம்பு இஞ்சவாடி இதில இடமிரிக்கு. தம்பி இதில பெர்ம்பிள இரிக் கட்டும் நீ கொஞ்சம் அதுக்குப் போவன்.'
என்று செல்லக் கண்டு அதிகாரம் செய்து கொண்டிருந்தாள். ஒருவன் சிறிது ஒதுங்கி செயினம்பூவுக்கு இடம் கொடுத்தான். சின்
னப்பிள்ளை இரண்டு பேர் இருந்த சீற்றில் மூன்ரும் ஆளாக ஒருக்களித்து உட்கார்ந் தாஅ.
எல்லோரும் ஏறியானதும் 'வஸ்' ஒரு குலுக் கலுடன் விரைந்தது. இருபுறமும் பசுமை யான நெற்பயிர்கள் காற்றுக்கு அலையடித் தன. செல்லக் கண்டு சன்னலூடு வய்ல் வெளியைப் பார்த்தாள். தன் பரிவாரங்க ளுடன் வயலுக்குள் இறங்குவதற்கு வெட் டுக்காலம் நெருங்கிக் கொண்டு இருந்ததை அவள் கண்டாள்.
'ஆ ஆச்சி சல்லி கண்ட - சல்லி எடுங்கோ' என்றவாறே கண்டக்டர் உள்ளே வந்தான். செல்லக்கண்டு எல்லோரிடமும் இருந்து, காசைத் திரட்டி எடுப்பதற்கிடையில் வஸ் மாவடிப் பள்ளியில் வந்து நின்றது.
"கெதியா எடுங்களன்டி' என்று சத்தமிட் டாள் அவள். 'உனக் கென்னகா துடிக்கிது கொஞ்சம் பொறன்' என்றவாறே இடுப் புச் செருகலில் இருந்த முடிச்சை அவிழ்த்து, அவிழ்க்க முடியாதவிடத்து குனிந்து பல்லால் கடித்து இழுத்து காசை எண்ணிக் கொடுப் பதற்கிடையில்; எல்லாவற்றையும் கண்ணு யில் பார்த்துக்கொண்டிருக்கும் றைவர் வழக் கம்போல் பொறுமை இழந்து போனன்.
"எரும மாடுகள். எப்பவும் இப்பிடித்தான் காசக்கையில எடுத்துக்கிட்டு ஏறின என்ன?" என்று அவன் புறுபுறுத்தான். அவன் எப்
14

போதும் சொல்வதைத்தான் கண்டக்டருக்கு விளங்கக்கூடிய பாசையில் சத்தமிட்டான். "மேக்கட்ட தமாய் மங்கியன்னே மேக் கொல்லேரவ தாண்ட எப்பாகியலா’ (இதுக் குத்தான் நான் சொல்லுற இவளுகள ஏத்த வேணும் எண்டு) ரிக்கற் கொடுத்து காசு வாங்குவதற்காக மீண்டும் மாவடிப் பள்ளி யில் சுணங்கிய ஆத்திரம் அவனுக்கு. "ஏன் காக்கா இப்பிடி நம்மட சோனகப் பொண்டுகள் ஆம்பிள யளோட வஸ் ஏறி ருேட்டு வழிய திரியறத்த நீங்களெல்லாம் கண்டிக் கப் போடாதா? இது மார்க்கத்துக்கு விரோதமான காரியம் இல்லவா? ஊரொத்து பள்ளிவாசல்ல நீங்க இதுக்கொரு நடவடிக்க எகுக்க வேணும். இஸ்லாமான பொம்பிள யள் இப்பிடி ஆம்பிளயளப் போல வெளியால திரியறது எவளவு கேவ லம்,?? றைவர் தனக்கு இடதுபுறம் அமர்ந்திருந்த வரிடம் தனது மார்க்க ஞானத்தை வெளிப் படுத்தி இவ்வாறு குறைபட்டுக் கொண் டான். கேட்டவருடைய தோற்றம் அவர் ஒரு மெளலவி என்று மதிக்கக்கூடியதாக இருந்தது. தலைக்கு வெள்ளைத்தொப்பி அணிந் திருந்தார். முகத்தில் தாடி இருந்தது. ஏற் கனவே அவர்கள் அறிமுகமானவர்கள் போல் தெரிந்தது. றைவருடைய குற்றச்சாட்டு அடைபட்டுப்போய் இருந்த அவருடைய உணர்ச்சிகளைத் திறந்து விட்டது போல் இருந்தது.
"இந்தக் காலத்தில யாரயார் கட் டுப்படுத்தற தம்பி ஒங்கட பெண் டாட்டிய ஒங்களால கட்டுப்படுத் திக்க ஏலாம இருக்கு இப்ப, பொம் யிளயளெல்லாம் பொம்பிளயளா கவா இருக்கிருளுகள் இப்ப, ஒவ் வொருத்தியும் ஆம்பிளையளாக இல் லவா மாறிப் பெயித்தாளுகள். இது காலம் அப்பிடித் தம்பி. பொல் லாத காலம். ஷெ ய் தாண்ட காலம்?"

Page 15
வஸ்ஸின் இரைச்சலையும் மீறிய குரலில் எல்” லாருக்கும் , கேட்க வேண்டும் என்பதுபோல் அவர் மிகுந்த உணர்ச் சி யு டன் பேசிக் கொண்டிருந்தார். "இந்தக் காலத்தப்பத்தி ஒரு பாட்டே இருக்கு தம்பி.' மஸ்தான் சாஹிபு பாடல் ஒன்றை அவர் உரத்துப் படித்தார். "காலம் இப்பிடி கெட்டுப் போச்சி. அல்லாஹ்வுடைய மார்க்கத்த இப்ப எவள் தம்பி மதிச்சி நடக்காள். அவ ளுட்ட நாம பேசத்தான் ஏலுமா? மூதேசி கள் எல்லாம் ஷெய்த்தாண்ட மார்க்கத்தி இல்லவா போருளுகள்."
செல்லக் கண்டு, பேசுவது யார் என்று ஒரு தரம் எட்டிப் பார்த்துவிட்டு இருந்தாள். மற்றவர்கள் கேளாதது போல் தலைகுனிந்து கொண்டு இருந்தார்கள். அவருடைய பேச்சு மேலும் தொடர்ந்து கொண்டு சென்றது. பெண்களுக்குரிய ஒழுக்கத்  ைத ப் பற்றிய மார்க்க விதிகளை அவர் உரத்துச் சொல்லிக் கொண்டு வந்தார். அதற்கிடையில் சம் மாந்துறைச் சந்தி வந்துவிட்டது. றைவர் வஸ்சை நிறுத்தினுன் செல்லக் கண்டு தன் எல்லா ஆத்திரத்தையும் சேர்த்து வெளியே காறித் துப்பிக் கொண்டே இறங்கிச் சென்ருள்.
'பன்டடுங்கப் போறவளுகள தனிக்காறு
புடிச்சுப் போகச் செல்ருருடி?" என்ருள் அவள், எல்லோரும் சத்தமிட்டுச் சிரித் தார்கள். 'செரி செரி வாங்கடி போவம்"
என்று முன்னுல் நடந்தாள் செல்லக்கண்டு.
தூரத்தில் இருக்கும் - சுரியும் அட்டையும் நிறைந்த அல்லையை நோக்கி பசிய வயல்க ளின் ஊடே அவர்கள் நடந்து சென்ருர்கள்.
..இவர்கள் நம்மிடம் எதிர்பார்ப்பது சிறிய அளவிலான மனநெகிழ்ச்சியே இக் கதைகள் நம்மைப் புரட்டுவதில்லை. இன்று நமது தேவை இரக்க உணர்வல்ல: கேலியும் எரிச்சலும் கூட அல்ல ஒரு தீவிரமான உணர்வு; சமுதாயத்தின் அடிப்படைகளை s6)Gó) Lurrrifjš5th ? "Radical Thinking

www.
புதிய குழந்தை
சி.இரா. தனபாலசிங்கம்
காய்ந்த வயறுகளில் எரியும் ஆத்மாக்கள் புதிய குழந்தையொன்றை ஜனிப்பதற்கு தயாராகின்றன.
விடிவுதேடி நடக்கையிலே விளக்குப் பிடிப்பாரின் தடுமாற்றம் இடையிடையே பயம் காட்ட தெளிவான சிக்தனைகளின்
வழிகாட்டல்கள்.
ஊழிக்காற்று வீசி விளக்கை அணைக்க
இருட்டினிலே கற்களதும் முட்களதும் வரவேற்புகள்.
செங்குருதி வெள்ளம் LítrusöSI சதைப்பிண்டங்கள் வீழ்ந்து மாய அழுக்கு நாற்றங்கள் துடைத்தெறியல்கள்.
எத்தனையோ ஜீவன்களின் விடிவுக்காக W
புதிய குழந்தையொன்றின் ஜனனம்
மேற்போக்குக்காக நுனிப்புல்லை வாய்சலிக்க மேய்வதில் உள்ள அழகல்ல, இன்று நமக்கு வேண்டியது மனிதனை அவனது ஆழத்திலி ருத்து பார்த்துத் தொடுக்கும் கனல் தெறிக் கும் உண்மைகள். -ஞானி (வண்ணதாசனின்கலைக்க முடியாத ஒப்பனைகள் பற்றி) நன்றி: விழிகள்.
15

Page 16
தமிழில்: கே. சண்முகலிங்கம்
திரைக்கதை வசனம் என்ருல் என்ன? அதை எப்படி எழுதுவது? என்ற கேள்விகளுக்குப் பதில் சொல்வது கடினம். திரைக்கதை வச னத்தின் அடிப்படை அம்சங்களை, தந்துவங் களை அதை எழுதும் முறையை வரைவிலக் கனப் படுத்தல் இயலாது. இது பற்றி எந்த வழிகாட்டல்களும், நாங்கள் சிறுவர்களாய் இருந்தபோது கடிதம் எழுதுவது எப்படி என் பது பற்றிக் கற்று மறந்த வழிகாட்டல்கள் போலத்தான் இருக்க முடியும்.
கடத்த பதினைந்து வருடங்களாக சுமார் பதினைந்திற்கு மேற்பட்ட கதை வசனங்களை எழுதியிருக்கிறேன். இருப்பினும் கதை வச னம் என்ருல் என்ன என்ற கேள்வி என்னைக் குழம்பச் செய்கின்றது. இதன் அடிப்படை கள் இவை தான் என்று சொல்ல மூடியாது. ஒரு நாவலாசிரியனுக்கு நீண்ட மரபு - பாரம் பரியம் உண்டு. அத்தகைய மரபு அவனிற்கு வழிகாட்டியாயும் ஆதர்சமாகவும் உள்ளது. இதே போன்றுதான் நாடகம், ஓவியம், இசை போன்ற கலைகளிற்கும் நீண்ட வர ாைறுகள் உள்ளன. புதிய கற்காலம் முத லாக உள்ள இக்காலங்களில் நீண்ட வர லாற்றில் இவற்றின் நெறி முறைகளும் விதி களும் உருவாகி வளர்ந்து வந்தன. திரைக் கதை வசனத்திற்கு இத்தகைய வரலாறு கிடையாது. திரைக்கதை வசனம் சுமார் ஐம்பது வருட வரலாற்றை மட்டும் உடை காது. அமெரிக்க சினிமாவின் ஆரம்ப காலத் தில் மெளனப் படங்களுக்கு கதைப் போக்கை விளக்கும் முறையில் எழுத்து உருவில் விவ ரனத்தைத் திரையில் காட்ட முயன்ற போதுதான் அதாவது Subtitles எழுதுவ தோடு தான் திரைக்கதை வசனம் ஆரம்ப மாயிற்று. 1918-ம் ஆண்டில் தான் முதன் த லாக கிரிவித்ஸின் "இன்ரொலறன்ஸ்”

திரைக்கதை எழுதும் கலை
-சிலகுறிப்புகள்
ஆங்கிலமூலம்: திஸ்ஸ அபயசேகரா
படத்தின் இம்முயற்சி ஆரம்பமாயிற்று. அனிட்டாலூஸ் என்ற பதின்மூன்று வயதுச் சிறுவன் இதற்கான கதை வசனத்தை ஒழு தினுன். இவன் தான் திரைக்கதை வசனத் தின். தந்தை மெளனப் படக்காலத்தில் கதை வசனப் பிரதி என்று ஒன்று இல்லாமலே படப்பிடிப்புக்கள் நடத்தப்பட்டன. சப்ளின் லியோட், கீற்றன் முதலிய நகைச்சுவை மன்னர்கள் பேசும்படம் தோன்ற முன்னர் கதை வசனப்பிரதி என்று ஒன்றை வைத்துக் கொண்டு நடிக்க ஆரம்பிக்கவில்லை.
பேசும்படம் வந்ததும் படத்தில் பேச்சு இடம் பெறலாயிற்று. இதனுல் இலக்கியக்காரர்கள் இயக்குநரின் துணைக்கு அழைக்கப்பட்டனர். உரையாடல் எழுதுவதில் பழக்கப்பட்ட நாடக ஆசிரியர்களுக்கும், கதை எழுதுவதில் வல்ல நாவலாசிரியர்களுக்கும் திரையுலகில் தேவை ஏற்பட்டது. இந்த பேசும்பட யுகத் தின் ஆரம்பகாலத்தில் நிலைமை ஒரே குழப் பமாகத்தான் இருந்தது. இலக்கிய உலக விற்பன்னர்கள் பலர் பெருந் தொகைப்பணம் கொடுத்து வரவழைக்கப்பட்டார்கள். திரை உலகின் மதிப்பை உயர்த்த எடுக்கப்பட்ட இம்முயற்சி பயன்தரவில்லை. இந்த விற்பன் னர்கள் புதிய துறையில் சற்றேனும் பயிசிற் அற்றவர்களாக இருந்தார்கள். சொல்லேர் உழவர்களிற்கு புதிய மொழியாகிய திரைப் படத்தின் சொற்கள் விளங்கிக் கொள்ள முடியாதனவாய் இருந்தன. இலக்கிய உல கின் மதிப்புப் பெற்ற இவர்கள் மிகச்சாதர னமான தவறுகளைக் கூடச் செய்தனர். இந்தத் தவறுகள் சாமானியர்களின் வெட் டல் திருத்தங்களுக்கு உட்பட வேண்டிய தாயிற்று. w
ஆரம்பகால சிக்கல்களில் இருந்து விடுபட்டுத் தனித்தோர் கலை என்ற முறையில், 1930க்
16

Page 17
களில் திரைக்கதை வசனம் தன்னை முகங் காட்டிக் கொண்டது. திரைக்கதை F6 கர்த்தா நாவலாசிரியன் போன்று முழுமை யாக ஒரு இலக்கியக் காரணுகவோ, திரைப் பட இயக்குநர் போன்று ஒரு தொழில்நுட் பக் காரணுகவோ இல்லாமல் இவ்விரண்டி லும் இருந்து வேறுபட்ட ஒரு நிலையில் இருந் தான். இவன் நாவலாசிரியனின் கதை சொல் லும் திறமையும் நாடக ஆசிரியனின் உரை யாடல் எழுதும் திறனையும் கொண்டவனுக இருந்தான். கலைத்திறன் மிக்க ஒரு சிலர் இசையில் இருந்தும் பயன்பெற்றனர். சிறந்த ஒரு திரைக்கதை வசனம் இசைக் கச்சேரி ஒன்றின் தன்மைகளைந் தன்னகத்தே கொண் டது. ஆரோகண அவரோகண கதிகளில் ஏறி இறங்கும் நாடகத்தன்மை, உணர்வின் ஏற்ற இறக்கங்கள் உச்சகட்டம் ஒன்றை நோக்கி முன்னேறல் என்பன திரைக்கதைக் கும் இசைக்கும் உள்ள நெருங்கிய ஒற்றுமை கள் ஆகும். சத்தியஜித்ராய் இக்கருத்தைத் தமது கட்டுரை ஒன்றில் கூறியிருக்கிறர். தனது படங்களை எப்போதும் மோஸாற்றின் இசையின் மாதிரியில் அமைக்க முயன்றிருப் பதாக அவர் எழுதினர். யப்பானிய திரை யுலகமேதை அகிரு குருெசோவா டொனல்ட் றிச் எழுதிய நூலின் ஒரு அத்தியாயம் முழுவதிலும் அவரது படங்களிற்கும் செம் மைக்கால இசைக்கும் உள்ள ஒற்றுமைகள் பற்றி விபரிக்கப்படடுள்ளது.
இதுவரை குறிப்பிட்டவற்றில் இருந்து திரைக்கதை வசனத்தின் சில அம்சங்கள் எமக்கு மங்கலான காட்சியாக வெளிப்படு கின்றன. நாவல், நாடகம், இசை என்ற மூன்றினதும் அம்சங்கள் ஒரு சிலவற்றை கொண்டமையும் கலைவடிவம்தான் திரைக் கதை வசனம். அதே வேளை கமரா, ஒலிப் பதிவுகருவி (ரெக்கோடர்) என்ற அற்புத மான இரு கருவிகள் விதிக்கும் கட்டுப்பாடு களின் எல்லைக்குள் தான் இது செயல்பட முடியும். இவை கீறும் கோடுகளைத் தாண் -டுதல் முடியாது. இதுதான் திரைக் கதை வசனம் பற்றி நாம் கூருக் கூடிய வரைவிலக் கணம். இந்த இறுக்க மற்றதும் தெளிவற்

றதுமான வரைவிலக்கணத்தின் உதவியுடன் இவ்விடயத்தை மேலும் பகுத்துப் பார்க்கும் போது திரைக்கதை வசனத்தை வேறு கலை களில் இருந்து பிரித்துக் காட்டும் அடையா ளங்கள் குணங்குறிகளாக எவையாவது தென்படுகின்றனவா? இந்தக் கலைக்கும் நாவ லுக்கும் இடையிலான வேறுபாடுகள் என்ன? இதன் தனித்துவங்கள் எவை? -
முதல் பாரவையிலேயேய, தென்படும் சில அம்சங்களை நாம் இணம் கண்டு கொள்கி ருேம். திரைக்கதை வசனம் மிகவும் சாதா ரணமாக உரை நடையில் எழுதப்படுகின் றது. கிட்டத்தட்ட சுருக்கெழுத்தின் தன் மையில் இது அமைகின்றது. காட்சிகள் பற்றிய வருணனையில் மொழிநயம் இருக்க மாட்டாது. கதைஅத்தியாயங்களாக பிரிக் கப்பட்டிருப்பதில்லை. காட்சிகளாகப் பகுக் கப்பட்டிருக்கும் காட்சிகள் நிகழ்காலத்தில் வருணிக்கப்படும்.
திறமைமிக்க திரைக்கதை வசன கர்த்தா கதைவசனம் எழுதும்போது திரைப்படத்தை எடுப்பவனின் நிலைக்குத்தன்னை மாற்றிக் கொள்கிருன். ஆயிரக்கணக்கான அடி நீள படச் சுருளில் வெளிப்படப் போகும் காட்சி களைத் தன் மனத்தில் கற்பனை செய்து உரு வாக்குகிருன் இவற்றை எழுத்துருவில் அமை ந்தபின் திரைக்கதை வசன கர்த்தாவின் வேலை முடிந்து விடும். இதுதான் இதில் உள்ள துரதிஷ்டமான விடயம். பலபடிகள் கொண்ட் ஒரு தொடர் இயக்கத்தின் ஒரு கட்டத்துடன் கதைவசன கர்த்தாவின் பணி முடிந்து விடுகின்றது. அதன்பின் திரைப் பட நெறியாளரும் வேறுசிலரும் பொறுப்பை ஏற்றுக் கொள்கின்றனர். திரைக்கதை வச னத்திற்குத் தனித்து ஒரு மதிப்பு கிடையாது. ஷேக்ஸ்பியரின் ஹம்லத்தை அல்லது ரெனசி வில்லியம்ஸின் நாடகத்தை மேடையில் பாக்காமலே படித்து ரசிக்கலாம். ஆணுல் திசைப்படத்தைப் பார்க்காமல் கதை வச னத்தை வாசித்து உண்மை அனுபவத்தைப் பெற முடியாது. அதற்கென ஒரு தனித்து வம் கிடையாது. நாவல், நாடகம், $868שuפ
. 17

Page 18
என்ற கலைகளுக்கும் திரைக்கதை வசனத்திற் கும் இடையிலான பிரதான வேறுபாடு இது தான். இவை ஒவ்வொன்றும் மு டி ந் த பொருட்கள்; தனித்துவமான திரைக்கதை வசனம் திரைப்படம் என்ற முடிபொருளின் இடை நிலையில் உள்ள கச்சாப் பொருள் தான். இதற்கென ஒரு தெளிவான வரை விலக்கணம் இல்லாமல் போனதே இதனல் தான்.இந்தக் கசப்பான உண்மை ஒருதிரைக் கதைவசன எழுத்தாளனின் சுயமரியாதையை உறுத்தும விடயம். அவன் இதைச் சகித்துக் கொள்ள வேண்டியது தான். திரைக்கதை வசனத்தின் இந்த இயல்பு தான் அதைவேறு கலைகளில் இருந்து பிரித்துக் காட்டும் பிர தான அம்சம்.
திரைக்கதை வசனப் பிரதியொன்றை எடுத் துப் படித்துப் பாருங்கள் உங்களுக்கு உட னடியாக இரண்டு விடயங்கள் தெளிவாகப் புலப்படும். ஒன்று உங்கள் கட்புலனுக்கு வெளிப்படும் காட்சிகள். மற்றது உங்கள் செவுப்புலனிற்கு வெளிப்படும் ஒலிகள். ஆம்! கண் காது என்ற இரு புலன்களுக்கு உரிய விடயங்கள் தான் திரைக்கதை வசனத்தில் இருக்க முடியும். அதாவது வசன கர்த்தா கமரா மூலமாக படமாக பிடிக்கக் கூடியதை யும், ஒலிப்பதிவு நாடாவில் பதிவு செய்யக் கூடியதும் அல்லாத எதையும் தன் எழுத்தில் சேர்க்க முடியாது. ஒரு குணச்சித்திரத்தின் அக உணர்வுகளையும் எண்ணங்களையும் நாவ லாசிரியனே, கவிஞனுே சித்தரித்தல் இய லும். அதற்கான சுதந்திரம் அவர்களுக்கு உண்டு. இந்தச் சுதந்திரம் திரைக்கதை வசன கர்த்தாவிற்குக் கிடையாது. இது தொடர்பாக சுவையான கதை ஒன்றுள்ளது. பிரபல அமெரிக்க நாவராசிரியர் ஸ்கொட் பிற்ஸ் ஜெரல்ட்லூயிஸ் பி. மெயரின் படம் ஒன்றிற்கு திரைக்கதை வசனம் எழுதினர். பெரிய சன்மானம் பேசித்தான் இவர் இவ் வேலையில் அமர்த்தப்பட்டார். கதைப் பிர தியை வாசித்த மெயர் சொன்னர் "ஆகா! என்ன அருமையாக எழுதியிருக்கிருர் பிற்ஸ் ஜெரல்ட்- ஆனல் என்ன செய்வது இதைப் படமாக எடுக்க முடியாது. அடை
18

மொழிகளை எப்படி படம் பிடிப்பது?** மெய ரின் இந்தக் குறிப்பு திரைக்கதை வசனத் தின் தன்மையை அழகாகச் சுட்டிக்காட்டு கிறது. வசனகர்த்தாவின் பிரதான சிககலை அவர் வெளிப்படுத்திக் காட்டியிருக்கிருர். கதை வசன கர்த்தா கண், செவி என்ற இரு புலன்களின் எல்லையைத் தாண்ட முடியாது என்ருல் அவன் புறத்தே புலணுகும் பெளதிக உலகின் எல்லைக்கு அப்பால் போக முடியாது. எம்மைச் சுற்றியுள்ள உலகின் மேலோட்ட மான புறத்தோற்றங்களைத்தான் அவன் சித்தரிக்க முடியும். அப்படியானல் இதுஒரு பெரிய பிரச்சினையான கேள்விக்கு இடம் தரு கிறது. உண்மையான கலையின் அடிப்ப டையே பாத்திரங்களின் அக உணர்வுகளை எண்ண ஓட்டங்களை வெளிப்படுத்திக் காட்டு வது தானே? காட்சி, கேள்வி என்ற எல்லை களை தாண்ட முடியாத வசன கர்த்தா அக உலக எண்ணங்களை வெளிக் கொணருவது எப்படி? பெளதீக உலகை மட்டும் காட்டக் கூடிய கலை வடிவம் ஒன்று கலை என்ற அடை மொழியைச் சூடிக்கொள்ளும் அருகதை உடையதா? இந்தக் கேள்விக்குரிய பதிலில் தான் சிறந்த திரைக்கதை வசனத்தின் தன் மைகள் புலப்படும். சினிமாவின் ஆரம்ப வளர்ச்சிக் காலத்தில் அதற்கு கலை என்ற அந் தஸ்து மறுக்கப்பட்டதன் காரணம் இது தான். கலை ஊடகம் என்ற வகையில் பெளதீக உலகின் எல்லைகளைத் தாண்டும் திறன் அதற்கு இல்லை. இலக்கியம் ஒவியம் போன்று மனித மனத்தின் ஆழத்தை அத ஞல் தொட முடியாது. ஆணுல் சினிமா காலப்போக்கில் கலை உலகில் தனக்கு ஒரு அந்தஸ்தை தேடிக் கொண்டது. இதற்கு ரிய பெருமையில் ஒரு பங்கு கதை வசன எழுத்தாளர்களிற்கும் உரியது. யேம்ஸ் யோய்ஸ் யூலிசஸ் நாவலில் சித்தரித்தது போல் அல்லது அதையும் விட மேலாக சினி மாவினல் காட்ட முடியும் என்பதை அவர் கள் நிரூபித்துக் காட்டினர்கள். இதை சாதிக்க முடிந்தது எப்படி? கமராவும், ஒலிப் பதிவு கருவியும் விதிக்கும் கட்டுப்பாடுகளுக் குள் நின்றே இச்சாதனை செய்யப்படல் வேண்டும். சத்யஜித் ரேய்யின் பதேர் "பாஞ் ,

Page 19
சவி' யில் ஒரு காட்சியை உதாரனமாகக் காட்டி இனத விளக்க விரும்புகிறேன்.
அபு என்ற சிறுவனின் தந்தை கிராமத்தை விட்டு பனூரிஸ் நகருக்குப் புறப்படும் கட்டம் பதேர் பாஞ்சாலி படத்தில நடுப்பகுதியில் வருகிறது. இக்கட்டம் வரையான கதைக்கு முன்பே தந்தைக்கும் மகனுக்கும், தாய், சகோதரி, குழந்தைகள் ஆகியோரிற்கும் இடையில் உள்ள உறவுகளேயும் அன்புப் பினேப்பையும் ரே சித்தரித்து வி ட் ட | ரீஆஞல் அபுவின் தாய்க்கும் அவள் கணவ னுக்கும் இடையிலான உறவு இதுைெர வெளிப்படுத்தப்படவில்ஃ. இது வெளிப் படுத்தப்படுவதில் உள்ள தாமதம் நியாய மானதே. ஏனேனில் இந்திய சமூகத்தில் முதியவர்களினடயான உறவு - குறிப்பாக கணவன் மனைவி உறவு வெளிப்படையாக புலப்படுத்தப்படுவதில்ஃl, புற நடவடிக்கை யாலோ சைகைகளாலோ வெளிட்டுத்தப்ப டாத மெளனமான இரகசிய உறவாக - அன் பாசு இது அமையும். தூர உள்ள பனூரிஸ் நகரத்தை நோக்கிக் கண்வன் புறப்படுகிருன் " மனேவி மெளனமாக வெறித்தே பார்ததபடி நிற்கிருள். அவளின் முகத்திலோ, நடத்தை யிலோ அவளது உள் உணர்வுகள் பற்றிய குறிகள் எதுவும் இல்ல்ே. இவ்விருவரிடை யிலும் மனத்தில் ஏற்படும் பரஸ்பர உணர் வுகள் பற்றிஅறிய எமக்கு ஒருவழியும் இன் லே, கணவன் புறப்பட்டுப் போகும் காட்சிக்கு அடுத்து குப்பிவிளக்கு ஒன்றின் மீது திபரா விழுகின்றது. நடுச்சாமம் ஆகிவிட்டது. சிறுவன் அபு ஆழ்ந்த உறக்கத்தில் கிடக்க கீரன். தாய் அவனுக்குப் பக்கத்தில் இருக் கிருள். அவள் ஏதோ தைத்துக் கொண்டி ருக்கிருள். துரப்போகும் ரெயினின் சத்தம் சேட்கிறது. ரெயில் பாதை கிராமத்தின் மத்தியால் செல்கிறது என்பது எ ம க்கு முன்பே உணர்த்தப்பட்ட செய்தி, வண்டி யின் சத்தம் கூடிக்கூடி வருகிறது. தாய் தைப்பதை நிறுத்திவிட்டு அச்சத்தத்தைக் கவனித்துக் கேட்கிருள். தூர வெறித்த பார்வையோடு சத்தம் மறையும்வரை கேட்ட

சாஹித்யவான்
- ஏ. ஆர். ஏ. ஹசுமீர் -
விசுவ பரிமான பார்வைப் பரப்பில் முகத்தை மீறிய விழிகள்-; எழுத்தின் சுகந்த - நுகர்வுக் கஃபயும் பரிணும நாசிபிரபஞ்ச வெளியின் சர்வத்தையும் - - வார்த்தைகளாக சேமிக்கும் வசிய மூன்-; எரிமவேகளேயும் , தளிர் நிலாக்களேயும் தேவைக்கேற்ப சிருஷ்டிக்கும் வாமனக் கைகள்தாள்களின் மீது தவமியற்றும் அந்தத் தபசி
LITrif?
யாருமல்ல. அட்ஷரங்களே அஸ்திரமாக்கும் அற்புத ஜீவி! அவனதுநினைவுகள் நிற்பது நிகழ்வுகளேக் காவி!
படி இருக்கிருள். பின் ன ர் மெதுவாக குனிந்து சிறுவனே முத்தமிடுகிருள். அவள் தன் கனவன் மீது கொண்டுள்ள அன்பின் இயல்பும் ஆழமும் உடனே எமக்குத் துவக்க மாகிறது. அற்புதமான சில கனங்களுக்குள் காட்சியையும் ஒலியையும் பயன்படுத்தி இந்த நுட்பமான உணர்வை வெளிப்படுத்தி இந்தச் சாதனையைச் செய்துவிடுகிறர் ரே. அதேவேளே திரைப்படம் என்ற ஊடகத்தின் எல்லேக் கோடுகளே மீருமலும், வங்காளக் கிராமத்தின் பழக்க ஒழுக்க விதிகளே மீரு மலும் இதைக் காட்டுகிருர், பெளதீக உல
19

Page 20
கின் எல்லைகளுக்கு அப்பால் ஒரு காலத்தில் இலக்கியம் இசை என்பவற்ருல் மட்டும் தொடமுடியும் எனக் கருதப்பட்ட உல குக்கு எம்மை அழைத்துச் செல்கிருர், ர்ே முழுமையாக பூரணம் பெற்ற கதைவசனப் பிரதியுடன் தான் படம் எடுக்க ஆரம்பிப் பார் என்று சொல்லப்படுகிறது, அப்படி யானுல் சிறந்த கதைவசனத்திற்கு இது பொருத்தமான உதாரணமாகும்.
மேற்படி காட்சியின் இயக்கம் சிக்கலானது ஆளுல் தெளிவான்து. இங்கு இரு குறியீடு கள் உள்ளன. ஒன்று றெயின் மற்றது சிறு வன். கிராமத்தின் ஊடே நடுராத்திரியில் சத்தமிட்டுச் செல்லும் ரெயின் புறத்தே உள்ள உலகைச் சுட்டுகிறது. இதுதான் பணுரிஸ் என்ற தூரத்தேயுள்ள தொழில் தகரம். ரெயின், அந்த நகரத்தை நோக்கிச் செல்லும் கணவனேடும் தொடர்புறுகிறது. அதில்தான் அவன் பிரயாணம் செய்கிருன் சிறுவன் அபு தந்தையை பிரதிநிதித்துவப் படுத்துகிழுன். தாய் அவனைக் கொஞ்சும் போது கணவன் மீதுள்ள காதலையே வெளி விடுகிருள். இந்தக் காட்சியின் சூழலில் இருந்து இயல்பாகவும் சுயேச்சையாகவும். இக்குறியீடுகள் எழுகின்றன. இவை வலிந்து புகுத்தப்பட்டவையல்ல.
ரேய் உரையாடலை இந்த இட த்தில் துணைக்கு இழுக்காததை நாம் முக்கியமாகக் கவனித்தல் வேண்டும். இதை நான் வற் புறுத்த விரும்புகிறேன். ஏனெனில் பேசும் படத்தில் பேச்சு அநாவசியமாக தலையிடும் ஆபத்து உண்டு. பாத்திரங்கள் தங்கள் கருத்துகளையும் உணர்ச்சிகளையும் வசனம் பேசி வெளிக்காட்டும் முறை கையாளப் படலாம். ஆனல் நிஜ வாழ்க்கையில் இப் படி வசண்ம் பேசப்படுவதில்லை. சுத்தமான தெளிவான வசனங்களால் உணர்வுகள் வெளிப்படுவதில்லை. மேடை நாடகத்தில் உணர்வுகளை வசனங்களால் வெளியிடுதல் மரபு. ஆளுல் சினிமாவில் இப்படி செய்ய முடியாது. இதன் பொருள் திரைப்படம் மெளனப்படமாக இருக்க வேண்டும் என்
20

பது அல்ல. பாத்திரங்கள் வசனம் பேச மாட்டார்கள். அதாவது வாழ்க்கையில் எப் படி நடக்கிருேமோ அப்படித்தான் செய் வார்கள். கமராவும், ஒலியும் மிகுதி வித்தை யைச் செய்ய வேண்டும் இதன் பொருள் நிஜ வாழ்வின் பேச்சுப்போலவே திரைப்பட வச னம் இருக்க வேண்டும் என்பதல்ல. அப் படியிருந்தால் உயிரற்றதாயும் அலுப்புத்தட் டுவதாகவும் தான் இருக்கும். குண இயல்பு களை வெளிக் கொணரும் வகையில் அமை வதாயும் அதேசமயம் உரையாடலின் லயம் கெடாததாயும் அமைவதே சிறந்த திரை வசனம்.
நான் மேலே கூறியவையாவும் திரைக்கதை
-
வசனம் பற்றிய ஒரு கோட்பாட்டு ரீதியான "
வரையறைகள் எனக் கொள்ள வேண்டாம் என்ற எச்சரிக்கையை முடிவாகக் கூறவிரும் புகிறேன். ஏனெனில் திரைக்கதை வசனத் தில் இயல்புகள் வரையறை ஒன்றினுள் வசப் படாதவை. நான் இரு கேள்விகளுடன் பேச்சை ஆரம்பித்தேன். திரைக்கதை வச னம் என்ருல் என்ன? என்ற கேள்விக்கு சில விவரணங்களைத் தத்திருக்கிறேன். ஆனல் திரைக்கதை வசனம் எழுதுவது எப்படி என் பதற்கு என்னல் திருப்திகரமான ப தி ல் சொல்ல முடியாது.
எலினேர் கிளின் என்பார் தமது - நூலில் திரைக்கதை வசனம் எழுதுவது"எப்படி என்ற அத்தியாயத்தில் இந்த வித்தையைப் பற்றி சூத்திரம் ஒன்றைச் சொஅகி ருர், தைக் கூறி என் பேச்சை முடிக்கிறேன். "மற்றவர் களால் நீங்கள் தொந்தரவு பண்ணப்பட முடியாத அமைதியான இடம் ஒன்  ைற தெரிவு செய்யுங்கள். கண்ணை மூடிக் கொண்டு உங்களது கதைபற்றிய எண்ணத்தில் கவ னத்தைச் செலுத்துங்கள். கனவு வேண் டாம். மனத்திரையில் கற் பனை செய்து பாருங்கள்.
(திஸ்ஸ அபயசேகர சிங்கள திரையுலகில் சிறந்த கதை வசன எழுத்தாளராகப் புகழ் பெற்றவர், அண்மையில் நடைபெற்ற கருத்தரங்கு ஒன்றில் அவர் படித்த கட் டுரையின் சுருக்க மொழிபெயர்ப்பை இங்கு வெளியிடு சிருேம்.) V,

Page 21
*உதயன்
தாசிசியசின் "பொறுத்தது போதும்’ புதிய நாடகம் சமீபத்தில் மேடையேறியிருந்தது. நாடக அரங்கக்கல்லூரி ரசிகர் அவைக்காக தயாரித்தளித்த ஐந்தாவது நிகழ்ச்சி இது. மீனவ களத்தில் நிகழும் வர்க்கப் போராட் டங்களின் சில அம்சங்கள் தெளிவுபடுத்தப் படுவது, தமிழ் நாடக மேடைக்கு சற்று புதிதுதான். அ. த, சித்திரவேலுவின் "செவ் வானத்தில் ஒரு ." வைத் தவிர.
சம்மாட்டி (முதலாளி) ஒருவன் உழைக்கின்ற பெரும்பாலான தொழிலாளரை கரவலைத் தொழில் மூலம், சுரண்டுவதும் அதிகாரம் செலுத்துவதும் அத்தகைய அநீதிக்கு எதி ராக விழிப்புணர்வு பெற்ற சிலர் கலகக் குரல் கொடுப்பதும், இதனல் ஏற்படும் மோதல்கள் முரண்பாடுகளை இந் நாடகத் தில் வெளிப்படுத்தப்படுகிறது.
இசைநாடக, கூத்து முறைகளைக் கையாண்டு அபத்த நாடகத்தக்குரிய மிகை உணர்வை அசைவுகளை இணைத்து புதிய உருவமைக் கின்ற உத்திமுறைகள் பரவலாக, நவீன நாடகங்களில் கையாளப்பட்டு வருகின்றமை தெரிந்ததே. இவை கதைக்கருவின் வெளி யீடு, உருவ அமைப்பு மேடை என்ற சாத னத்தின சாத்தியமான எல்லை வரைக்குட் பட்டு நிகழ்களத்திற்கு பங்கமின்றி, நாடக ஒருமைக்கு குந்தகம் ஏற்படாத வகையில் நடாத்திக் காட்டப்படும்போது இ  ைவ பெரும்பாலும் வெற்றியளிப்பது சாத்தியமே.
இந்நாடகத்தில் குறிப்பாக சம்மாட் டித்தனத்தின் செழித்த உருவத்தையும், அதி காரத்தனத்தின் மிடுக்கையும் மிகவும் கச்சி தமாகவும் எளிமையாகவும் வெளிப்படுத்தி யிருந்தார் ஜெனம் பிரான்சீஸ். வேலைப்பழு வில் உடல் சோர்ந்து போன நிலையில் மெலிந்து எலும்பு தட்டிய அந்த இளைஞன் தொழிலுக்குச் செல்ல மறுப்பதும் - அதை
க இயல்பாக வெளிப்படுத்திய கனகரெத் மினமும் சலுகை பெற்றுசேவகம் செய்யும்

நாடகம் "பொறுத்தது போதும்” நெறியாள்கை;- அ. தாசிசியஸ்
வர்க்கத்தினரின் குழைவும், போலித்தனமும் மன்ருடியாக வரும் நவரெத்தினத்திடம் நன்ருக வெளிப்படுகிறது.
குறைபாடுகள் சில குறிப்பிடத் தகுந்தன உள்ளன. இசை நாடகங்களிலும், நாட்டுக் கூத்துகளிலும் நடிகர்களின் குரல் வளம் மிகவும் கவனிக்கப்படவேண்டியது. பாடல் களின் போது நடிகர்களின் குரல் சகிக்க முடியாமல் பிசுறுபடுவது போதிய பயிற்சி இன்மையும், கூட காரணமாக இருக்கலாம். வசனம் பேசப்படும்போது இக்குறை இருப் பினும் அவ்வளவாகத் தெரிவதில்லை, முழு நிலை ஆட்டங்களின் போது நடசர்களின் அங்க அசைவுகள் சீர்தவறி தடுமாறு வதை யும் வெளிப்படையாக பார்வையாளரின் கவனிப்பைப் பெறுகிறது.
ஒளிப் பொட்டுகள் உரிய நேரத்தில் பாச்சப் படாமையினுல், பாத்திரங்கள் சில வேளை களில் இருளில் நிற்க நேரிடுகின்றது. பாத் திரங்களின் உணர்வு நிலை அவ்வேளைகளில் தெளிவற்றுப் போகின்றது. நிகழ்வு மாற் றங்களிலும், பாடல்களின் உச்சஸ்தாயிதத் திலிருந்து திடீர் இறக்கங்களில் ஒலி வெளிப் படும் தன்மைக்கு இசைவற்று தாமதமாக வோ, மூன்பாகவோ முறையற்று ஒளி பாச்சப்படுவதும் கூட தயாரிப்பு நிலையில் தவிர்க்க வேண்டிய குறைபாடுகளே.
மொழி பெயர்ப்பு நாடகங்கள், நாடகக் கலை பற்றிய பிரக்ஞையை, அறிவை, அனு பவங்களை ஆழப்படுத்துகிறது. அவற்றிலி ருந்து கற்றுக் கொள்ள வேண்டிய பலவும் எம்மவர்க்கு உண்டு. இவை அடிக்கடி நிகழ வே ண் டிய ன வே. அதே வேளை சுயமாக எழுதப்பட்ட நாடகங்கள் எம்மக் களின் வாழ்க்கையிலிருந்து நேரிடையாக முகிழ்வது. வாழ்க்கையைக் கண்டுகொள்ள உதவுவது. அதை மேலும் முன்னெடுத்துச் செல்லும் சாத்தியம் அதிகம் உள்ளது. அந்த வகையில் தாசிசியசின் "பொறுத்தது போ தும்' கிராமிய மட்டத்திலும் கொண்டு செல்லக் கூடியது. நாடகக் கலையில் அவரது முயற்சி சாதாரண, மக்கள் மத்தியில் பெரி தும் கவனிப்புப் பெற்று வருவதே இதற். குச் சான்ருகும்.

Page 22
SILVA WAT
Dealers, in all of Watches, Clo
Servicing Watches Importers, Exporters, Indent
Residence *ANNAI VELANKANNE 15, 1st Lane
Power House Road, Jaffna. (Sri Lal
0- ན་ S l/its best lishes from
s w TIDWEIR
Coffee & Cool Bar
324, Clocktower Road, JAFFNA. 68 7891
 

CH WORKS } ck to their spares Specialist in
and Clock Agents ing and Commission Agent.
TELE (Esit: 7862 PHONE Residence: 7706
مجھ2 2
%
ea
10, People's Model Market, Hospital Road, JAFFNA,
nka) SRI LANKA.
சறே ஜ т தங்கமாளிகை
அழகிய தங்க வைர
நகைகளுக்கு உத்தரவாதமுள்ள இடம்
பவுண், பொன், வெள்ளி, வாங்குபவரும் விற்பனையாளரும் கண்டிவீதி - சாவகச்சேரி

Page 23
கண்ணுடி வார்ப்புகள்
f3 ASS 3ASS)
BY TENNESSEE WLLIAMS
ஒரு பாலை வீடு 'fil3 lDUS3 DF 38illADA
BY GARCIA LORCA
மழை - இந்திரா பார்த்தசார போன்ற தரமான நாடகங்களின் வரிசையில்
இலங்கை அவைக்காற்று கலை கழ PERFORMING ARTS SOC அளிக்கும்
யுக தர்மம்
TIE IX (CIPION BY BERTOLT BRECHT
தமிழில்: ச. வாசுதேவன்
நிர்மலா நித்தியானந்தன்
இசை: எம். கண்ணன் விபரங்களுக்கு: 330, நாவலர் வீதி, நல்லூர், யாழ்ப்பாணம்.
இப்பத்திரிகை 712, 2-ம் குறுக்கு வீதி, நாவாத்துறை அவர்களால் சமர் இலக்கிய வட்டக் குழுவினருக்காக 3 அச்சகத்தில் அச்சிட்டு வெளியிடப்பட்டது. நிர்வாக ஆசிர் சநாதன், છે

}கம்
ΕΤΥ of SRI LANKA
ANR TEIL RULL
நெறியாள்கை: க. பாலேந்திரா
வடக்கு யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த டானியல் அன்ரனி 10, மளிக்கூட்டு வீதி, யாழ்ப்பாணத்திலுள்ள சித்திரா 1யர்: டானியல் அன்ரனி, முகப்பு ஓவியம்: கோ. கைலா

Page 24
ܐܝܠܐܝܥ¬ ܝ¬ܓܡܝܢ.
இலங்கைப் வெளிநிலைப் LI L LI சட்டம்/கலை/வர்த்
கல்விப் பொதுத் தராதர (உ யில் 4 பாடங்களில் சித்தி பெற்ற (மூன்றும் ஒன்றுமாக அல்லது ஒ: சித்தி பெற்றவர்கள் அல்லது 21 மூன்று பாடங்களில் சித்தி பெற்றவ சான்றிதழ் உடையவர்கள் அல்லது டிப்ளோமாப் பட்டம் பெற்றவர்க பல்கலைக் கழக வெளிநிலைப் பட்டட் 18-12-1979 வரை என்னுல் ஏற்றுக்
பெற்றுக்கொள்வதற்கு ரூபா 2/-க்க ^ “EXTERNA, IL STUDIES ORGA 27-11-79 க்கு முன் சொந்த முகவரி 9' X 4’ அளவுடைய அஞ்சலுறை
REGIS
EXTERNAL STUDI
148/1 STAl | JAF
s
י גל, \ **** ז י"•"
SSqSASMqSMSqSMqMeSSMqSqSqAAS
s (
S.
s
(
விண்ணப்பப் படிவங்களையும்,
 

SSASSASSASSASSASSASSAS MSASASqLASeMSLLSLqSLLLSqqSqqS
ல்கலைக் கழக ப் படிப்புகள் - 1980 தகம்/விஞ்ஞானம்
வர்கள் அல்லது இரு அமர்வுகளில் ன்றும் மூன்றுமாக) 4 பாடங்களில்
வயதிற்கு மேற்பட்டவர்களாயின் பர்கள் அல்லது ஆசிரியர் பயிற்சியில் தொழில் நுட்பக் கல்லூரிகளில் 5ளிடமிருந்து மேற்படி இலங்கைப் 1 படிப்புகளுக்கான விண்ணப்பங்கள்
கொள்ளப்படும்.
பர்தர)ப் பரீட்சையில் ஒரே နှီး ၊
விபரக் கொத்தையும் தபால் மூலம் ான தபாற் கட்டளை / காசுக்கட்டளை ANIZATION' என எழுதப்பட்டு எழுதி, முத்திரையொட்டப்பட்ட ) அனுப்பிப் பெற்றுக்கொள்ளவும்.
TTRAR
ES ORGANIZATION
NLEY ROAD. FNA.
qSASMqASSMeSASASqSqSAA qSq SMA SASMASASASASASASASASASASAJAMSSAASSASSASSASSASSMAA SqSqATSqTSqqS SqqSMSASMS SqqS SqqS SqASAS AAAASS SS SS - ܢ