கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: சமர் 1980.01

Page 1

s-)
§ siiri — | sous ontae bildomąoon qoyan@og østołusowąonto
os-, uno
oo – syreae

Page 2
அதிர்வுகள்
fo சுரம் டிசம்பர் இதழில் அ. யேசுராசா வின் கடிதம் வெளிவந்திருந்தது. இ சில் இரு குறிப்புகளுக்கு பதில் அளிப்பது அவசியம் என நான் கருதுகிறேன். "மல்லிகை, சமர் இரண்டி அலுமே கைலாசபதியின் கருத்துக்களே விமர்சிக் கும் வாய்ப்புகளில்லே. ஒருவித தனி நபர் வழி பாடு' என்ற கருத்து. மற்றது படைப்பு:விமர் சனம் ஆகியவற்றில் ஆரேந்க்கியமான்தோர் இலக்கியச் சூழல் இங்கு நிலஷ்வதாக த்றியப் பட்டுள்ளது பலவும் மாயையே என்ற் மற் ருெரு கருத்து.
மல்லிகை ஏற்கெனவே 'கலாநிதிகள் ஆதிக் கம் என்னும் சுருத்தில் கைலாசபதி உட்பட பல விமர்சகர்களுக்கு எதிரான காட்டடித் தாக் குதலை அனுமதித்திருந்தது. இவ்வகையிலேயே அமைந்த மு. பொன்னம்பலம், மு. தளேயசிங் கம்போ ன்ருேளின் கருத்துக்களும் அவ்வப்போது வெளிவந்திருக்கின்றன. சமர் இரண்டில் கைலா சபதியின் முற்போக்கு இலக்கியமும் அழகியல் பிரச்சினேகளும்' என்னும் கட்டுரையும் திருமதி மெளனகுரு சித்திரலேகாவின் "ஈழத்து இலக்கி யமும் இடதுசாரிஅரசியலும்- சில குறிப்புகள்" என்னும் கட்டுரையும் வெளிவந்திருந்தன. இரு கட்டுரைகளுமே ஒன்றுக்கு-ஒன்று பதில் அளிப் பதுபோல் அல்லது-ஒன்று பார்க்க மறந்ததை மற்றது அழுத்துவதுபோல் அமைந்திருந்தன என்பது பலரது கருத்தாகும். இரு கட்டுரைக ளுமே தோழமையுணர்வுடன் முற்போக்குத் தளத்திலிருந்து பிரச்சினேகளே அணுகியிருந்ததா கவே நானும் கருதுகிறேன். யேசுராசா போன் ருேரின் கருத்துக்கள் மல்லிகை, சமர் போன்ற சஞ்சிகைகளினுல் சிலவேளைகளில் நிராகரிக்க நேரிடுமாகில் நிச்சயமாக அது கைலாசபதியின் கருத்துக்களுக்கு எதிரானது என்பதற்காகவல்ல என்ற உண்மை இவர்களின் நடைமுறைகளை முழு அளவில் ‘புரிந்து வைத்திருப்பவர்களுக் குத் தெரியும்.
ஈழத்து இலக்கியம் முற்றும் முழுதாக ஆரோக்கியமான சூழ்நியிேலிருந்து பிய்த்து எறியப்பட்டு விட்டது என நினைப்பதும் கூட இவர்கள் கொண்டுள்ள மாயையே சமூக இயக் கப் போக்குகளேயும், அதனுல் இலக்கியங்கள் பெறும் பாதிப்புகளேயும் சரிவர புரிந்துகொள்ள முடியாத "வக்கரிப்புத்தனம் இது. இதைவிட
 

ஆரோக்கியம்" என்ற பதத்திற்கு இவர்கள் கொள்ளும் அளவுகோல்ே வேறு போல் தெரி கிறது. அது இவர்களது ஞானகுரு வெங்கட் சாமிநாதன் சுற்றுக்கொடுத்தது. இவை யாவற் றையும்கூட கண்க்கில்கொண்டு இறுதியில் தேறு வது தனிப்பட்ட காய்ச்சல் தவிர வேறு என்ன இவர்களிடம் இருக்கிறது.
சமூக நேர்ன்மயுடன், தனிமனித உறவுகளே அதன் ஆழத்தில் பார்த்து, நவீன கலேப் பரிம்ா ணத்துடன். எழுதுபவர்கள் வண்ண நிலவன், பா. செயப்பிரகாசம், பூமணி ஆகியோர். இவர் களது படைப்புகள் தரும் அனுபவமே அலாதி யானது குறிப்பாக சிறுகதைகளேக் கொள்ள லாம். இந்த வகையில் நாஞ்சில் நாடன், அஸ் வஹோஸ் ஆகியோரை நினேவுபடுத்திப் பார்க் லாம். இங்கு பெரிதும் பிரபலப்பட்டுள்ள சு. சமுத்திரம், ஜெயந்தன் போன்ருேர் இன் னும் தமது ஆளுமையை நிரூபிக்கும்படியான சிருஷ்டிகளேத் தந்துவிடவில்லே என்பதே எனது கருத்தாகும். பெரும்பாலான இவர்கள் முற் போக்கு இயக்கங்களேச் சார்ந்தவர்கள் என்பதை அறிகையில் மகிழ்ச்சியே.
தெளிவத்தை யோசப்பின் "நாமிருக்கும் நாடே" சிறுகதைத் தொகுதி வெளிவந்திருக்கி றது. "காலங்கள் சாவதில்லை" என்னும் சினிமா த்தனமான நாவஃபத் தந்த இவரா? என இதி லுள்ள சில சிறுகதைகளேப் படித்த பலரும் ஆச் சரியம் தெரிவிப்பதில் நியாயம் உண்டு. அடுத்து மீலரன்டின்மாத்தளே வடிவேலன், மாத்தளே சோமு ஆகிே ாரின் *தோட்டக் காட்டினிலே', என்.எங். எம். இராமையாவின் "ஒரு கூடைக் கொழுந்து" ஆகிய சிறுகதைத் தொகுதிகளும் வெளிவர இருக்கின்றன.
சமர் மூன்றுவது இதழின் முகப்பில் வெளி வந்த, தாயும் சேய்களும் வெறும் பானையுட 'ஞன அந்த ஓவியத்தைப் பார்த்த பலர் பாராட் டுத் தெரிவித்திருத்தனர். அதை சமருக்காக வரைந்து உதவியவர் மட்டுவிலேச் சேர்ந்த 23 வயதான இளம் கலேஞர் கோ. கைலாசநாதன் ஆவார். இந்த இதழின் முகப்பு ஓவியமும் இவ ரது கைவுன்னமே, ஆற்றல் மிக்க இவரை அறிமுகஞ் செய்து வைத்தமையையிட்டு சமர் பெருமிதம் கொள்கிறது.
டானியல் அன்ரனி

Page 3
F
ரெஜி சிறிவர்த்தணு
Lடங்களின் எண்ணிக்கையைப் பொறுத்த அளவில், உலகின் மிக முக்கியமான பட உற் பத்தி நாடுகளில் ஒன்றுக இலங்கை இப் பத் தாண்டுகளில் இடம்பெற்றது. இக்காலத்தில் சினிமாத் துறையில் முதலீட்டிற்குப் பணம் நிறைய வந்துசேர்ந்தது. ஐக்கியமுன்னணி ஆட் சிக் காலத்தில் வழமையான முதலீட்டுத் துறை களில் தடை ஏற்பட்டமை இதற்கான ஒரு கார ணமாகும். மற்றது கறுப்புப் பணம் வெளியே வருவதற்கு சினிமாத் துறை வாய்ப்பாகியது. இப்பத்தாண்டுகளின் பிற்பகுதியில் திரைப்படக் கூட்டுத்தாபனத்தின் கடன் திட்டமும், இறக் குமதிக் கட்டுப்பாட்டால் சிங்களப் படங்களேத் திரையிட வசதி செய்தமையும் சினிமாத்துறை பின் செழிப்புக்கு உதவின. அமெரிக்க திரைப் பட இறக்குமதி நிறுத்தப்பட்டதும் கொழும்பு
நகரத்தின் புகழ்பெற்ற தியேட்டர்களில் முதற்
தடவையாக உள்ளூர்ப் படங்கள் திரையிடப் பட்டன.
சினிமாத் துறையின் தர உயர்விற்கு இந்த மாற்றங்கள் எந்தளவிற்கு உதவின? திரைப் படத் துறைறையில் செழிப்புநிலே உற்பத்தியா வளர்கள் தமது படங்களேத் திரையிடுவதற்கு நீண்டகாலம் தவங்கிடக்கும் நிஃயை (இன்னும் இப்பிரச்சினே நீடிக்கிறது) உருவாக்கியபோதும் சினிமாத்துறையில் இளம் இயக்குநர்கள் புகுவ தற்கு இச் செழிப்புநில உதவியது. தர்மசேன் பதிராஜ, வசந்த ஒபயசேகர, விஜயதர்மசிறி, சுனில் ஆரியரட்ண ஆகியோர் இளம் சந்ததியி னர். இவர்களின் வரவு இக்காலப் பகுதியின் முக்கியமான ஒரு வளர்ச்சி. ஏற்கெனவே (80ம் ஆண்டின் முன்) தயாரிக்கப்பட்டு திரையிடப் படுவதற்கு சந்தர்ப்பத்தை எதிர்நோக்கி நிற்கும் படங்கஃனயும் கணக்கில் எடுத்துக்கொண்டால் தர்மசிறி பண்டாரநாயக்க (ஹன்சவிலக்) சங்க தாச (காஞ்சணு) ஆகியோரையும் மேற்கூறிய இஃளஞர் குழுவில் சேர்த்தல் வேண்டும்.

இங்கள சினிமா 70 - 79 பிக்கைதரும் பத்தாண்டுகள்
ஏனைய கலேத்துறைகளில் குறிப்பாக நாடகம், புனேகதை, கவிதை ஆகியவற்றில் புரட்சிகர அரசியல் சார்பு முண்ப்பாக வெளிப்பட்டது. சினிமாவில் இவற்றில் ஏற்பட்டளவு தாக்கம் ஏற்படவில்ஃ. வர்த்தக ரீதியான உற்பத் தி முறையும், தீவிர தணிக்கையும் இருக்கும் பொழுது இதை எதிர்பார்த்தல் முடியாது. (எனினும் அரசியல் பற்றுகிப்பாடும் அக்கறை யும் இளம் விமர்சகர்களால் உற்சாகப்படுத்தப் பட்டது). எவ்வாறிருந்தபோதிலும் 70க்களில் வெளிவந்த சிறந்த தி  ைர ப் படங்களில் பொருள் அடக்கம், சமூக உணர்வு என்பன கூடிய அளவு வெளிப்பட்டது. வர்க்க உறவுகளே ஆராய்தல் என்ற முறையில் விரிவான ஒரு தளத்தை "அஹஸ் கவ்வ', "பம்பறு அவித்" "பலன் கெட்டியோ" ஆகிய படங்கள் ஏற்படுத் தின. கற்பணுவாதத் தன்மை உடையதாயினும் "டுகுலு மலக்' மரபுரீதியான ஒழுக்க வரம்புகளே மீறிய ஒரு பார்வையோடு, திரு ம ன பந்தத் திற்கு அப்பாற் பட்ட காதல் உறவுபற்றி ஆராய்ந்தது. இன முரண்பாடுகள் முந்திய காலத்தில் தீண்டப்படாத பொருளாக இருந் தது. இத்துறையில் கவனத்தைத் திருப்பிய "சறுங்கலே" நேர்மைத் துணிவுடைய முயற்சி. இப் பத்தாண்டுகளில் வெளி வந்த வற்றுள், சினிமா என்ற ஊடகத்தைக் கையாண்ட முறை யிலும், ஆழமான உளவியல் ஆய்வுமுறையிலும் தனித்துவத்தை வெளிப்படுத்திய சிறந்த படம் "ஹன்ச விலக்" ஆகும். இது இன்னும் திரையி டப்படவில்லே. திருமணம் வடபகுதியில் பெண் களின் சமூக அந்தஸ்து ஆகியன பற்றி ஆழமான ஆய்வொன்றை தமிழ் சினிமாவில் புகுத்தியது "பொன்மணி' திரைப்படம். இது கல்நுட்பத் திலும், உள்ளடக்கத்திலும் வெகுஜன ரசனைக்கு ரியதல்லாத உயர் மட்டத் தி ல் அமைந்தது. இருத்த போதும் இது முன்னுேடியான ஒரு திரைப்படம். கலேத்தரமான தமிழ் சினிமாவின் வளர்ச்சி இதில் இருந்துதான் எதிர்காலத்தில் ஆரம்பமாகும் 50க்களில் சிங்களசினிமா வளர்ச் சிக்கு முன்னேடியாக எப்படி "ரேக்காவ’ அமைந்
ததோ அதேபோல் தமிழ்சினிமாவின் மன்ைேம். "பொன்மணி" முனனுேடி

Page 4
இந்தப் பத்தாண்டுகளின் தொடக்கத்தில் வெளிவந்த லெஸ்டர் யேம்ஸ் பீரிசின் படம் 'நிதானய'. இது அவருடைய படங்களுள் மிக முக்கியமானது. தனிமனித சமூக உறவுகளேத் திறம்பட சித்தரித்த வகையில் "கம்பரலியா" விற்கு அடுத்து வெளிவந்த படம் 'நிதானய". அத்தோடு லெஸ்டரின் படங்கள் யாவற்றுள் ளும் சிறந்தது. இந்தப் பத்தாண்டுகளில் லெஸ் டர் தனது ஏனேய படங்களில் முக்கியமற்ற கதைப் பொருட்களேக் கையாண்டு தனது நெறி யாள்கைத் திறமைகளே வீணடித்துள்ளார். சரித் திரப் படங்கள் இரண்டை அவர் தயாரித்தார். இத்துறை எந்தளவுதூரம் இவரிற்கு ஒத்துவ ராத விடயம் என்பதை அவை வெளிப்படுத் தின. 80-ம் ஆண்டுத் தொடக்கமான இவ்வே ளேயில் லெஸ்டரின் "பெத்தகம"வை ரசிகர்க ளும், விமர்சகர்களும் எதிர்பார்த்த வண்ணம் இருக்கிறர்கள், 50க்களிலும் 60க்களிலும் எமது சினிமாவிற்கு வளமூட்டிய லெஸ்டரின் திறமை கள் "பெத்தகம'வில் திரும்பவும் வெளிப்படப் போகின்றது என்ற ஆவலோடு இவர்கள் காத் திருக்கிருர்கள்.
சுருங்கக் கூறின் 70-79 எமது சினிமாவின் நம்பிக்கை தரும் காலப்பகுதி. ர்ெத்தகமயப்ப டுத்தப்பட்ட டெலிவிசனின் விருகையும், அதன் தவிர்க்க முடியாத வி ஃாவா கப் பொதுமக்கள் ாசனே மலினப்படுவதும், ஏ ஐ ய துறைகளில் தடைகள் நீங்குவதால் சினிமாவை விட்டு மூல தீளம் வெளியேறுவதும் இன்றைய சூழலின் முக்கிய போக்கு எள். இந்நிஃtயில் 70-79 தந்த நம்பிக்கை 80க்களிலும் நி&க்குமா? இலாபத் தைத் திரட்டுவதல்லாமல் சினிமாவின் கலேத் தர உயர்வையும் மனதில்கொண்டு திரைப்படக் கூட்டுத்தாபனம் செயல்படுமா என்ப ைத ப் பொறுத்துத்தான் சினிமாவின் எதிர்காலம் இருக்கிறது.
தமிழில்: "சண்'
"உள்ளடக்கமும் உருவமும் பிரிக்கமுடியாதபடி இணந்த வகையினுல் சரியான உள்ளடக்கம் இல்லாமல் உருவம் மட்டும் சிறப்பாக அமைய முடியாது"
லூனுசாஸ்கி - மார்க்சிய விமர்சனமீது ஆய்வுரை

பிரியமானவளே.!
என் கைகளோ மிகவும் சிறியவை: அழகிற்றவையும் கூட. என்ருலும் அவைகளுக்கு - கடந்த காலங்களில் உன்னே ஸ்பரிசித்த அனுபவமுண்டு
என்மனமோ மிகவும் அழுக்கானது வறண்ட வாழ்வுப் பாலேயில் புரண்டு தன்ஃனயே தீய்த்துக் கொண்டது அது. என்ருலும் - இன்றும் உன் நிஃணவு வந்தால் அது எழும்பிச் சிறகடிக்காமலிருப்பதில்ஃ என் கால்களோ கவனமின்றி உருவாக்கப்பட்டவை சிறிதும் கூச்சமற்று ரத்தம் தோய்ந்த சுவடுகளேயே பதிக்கின்றன பிரியமானவளே - இருந்தபோதும், இந்த உலகத்தை நான் நேசிக் கின்றேன் ஏனென்ருல் - ஆதி ரொம்பவும் உண்மையானது: அதன் அழகோடும் குரூரத்தோடும் . . இன்னும் இந்த உலகத்தை நேசிக்கிறேன் அதனுல்தான் இன்னும் இந்த உலகத்தை நேசிக்கிறேன்
உன்னே அடைய விடாத இந்த உலகத்தைப் புரட்டிவிடலாமென்று இற்றுப்போன இந்த உடம்புடன் திரிகிறேன்
ஏனேன்ருல்
என் பிரியமுள்ள ஸ்கி உன் மகனுக்கும்
என் மகளுக்கும் நாம் சுமக்கும் முட்கிரீடமே திரும்பச் சூட்டப்பட்டு விடக்கூடாது.
다.
- வண்ணநிலவன் (நன்றி விகடன்)

Page 5
சிறுகதை
03லயிலிருந்து தொடர்ந்து - இரவு முழு வதும் பாட்டம் பாட்டமாகப் பெய்து அடம் பிடித்த பெருமழை, கிழக்கு வெளுக்கு முன் னரே அடங்கியிருந்தபோதும், வானம் வெளுக் கவில்ஃ. மழை இருட்டு அப்பிக்கிடகிறது. பிர காசமற்ற வானத்தில் மழைமேகம் கறையாய்ப் படிந்து கவிழ்த்துள்ளது.
விடிந்து வெகுநேரமாகிவிட்டது.
இஃல யுதிர்ந்து கள்ளிக்கம்பாய் நீட்டிக் கொண்டிருக்கும் றப்பர் மரங்கள் யாவும் ஈரம் சொட்டிக்கொண்டிருக்கின்றன. கான்கள், குட் டைகள் யாவற்றையும் நிரப்பி புதுவெள்ளம் பாய்கின்றது. கலங்கிப் பாயும் புதுவெள்ளத் தில் தென்னே மட்டை முதற்கொண்டு தகரப் பேணிவரை துடுப்பில்லாம் இணுமாக நீந்திக் களித்துக்கொண்டிருந்தன.
ராமையா புரண்டு படுத்தான். குளிர் உடம்பை ஊ சியாய் துளேத்து எடுத்தது. உடம்பு முழுவதையும் மறைக்க அந்தத் துண் டுக் கம்பளியால் முடியவில்லே. உடம்பை வஃளத் து குறுகிக் கம்பளிக்குள் அடக்கிவிட முயற்சி செய்தான் முடியவில்லே. தலேப்பா கத்தை மறைத்தால் கால் பகுதி அடங்காது. சில்விட்டது. கால்களுக்கு ஆதரவாக கொஞ் சம் இழுத்துவிட்டால் நெஞ்சுக்கு மேலே . கழுத் தோடு காதுகள் குடைய சில்லிட்டுத் தொண்டை கம்மி . . காதுகளில் கம்பிகளே சொறுகுவதுபோல. "ம் . ம். சிவ. சிவா." புற்கள் கிட்டித்து வெடவெடத்து நடுங்குகின் றன. கீழே விரித்திருந்த படங்குத்துண்டுவேறு ஈரம் பொசிந்து தரையில் ஊறி உடலில் நமைச் சஃ ஏற்படுத்துகின்றது . இனியும் படுக்க முடியாது. எழுந்திருக்க வேண்டியது தான். எழுந்து என்ன செய்வது . . அடுப்படியில் குந்தி குளிர்காய வேண்டியதுதான்.வேலை.?
சிகப்பியைப் பார்த்தான். அவள் எவ்வித சிரத்தையுமே இல்லாது படுத்துக் கிடந்தாள்.
 
 
 
 
 
 
 

வெட்டுமரங்கள்
மாத்தளே. வடிவேலன்
முதிர்ந்து தளர்ந்த உடம்பு சுரனே யற்றுக் கிடந்தது.
முன்பெல்லாம் குளிர் என்றல் இப்படியா..? அப்படியே சிகப்பியை அனேத்து. அன்னத்து. எத்தனே இன்பமாக . . அவள் இப்பொழுது அவனுடைய சிகப்பி மட்டுமல்ல . "தொங்க வீட்டுப் பாட்டி.." அவனும் "தொங்கவீட்டுப் பாட்டனுகி விட்டான். காலம்தான் எப்படி ஓடிவிட்டது.
அவன் நாட்டிய ஒட்டு மரங்கள் யாவும் வளர்ந்து கண்ணிர் வடித்து வாளி வாளியாக பாஃத் தருகின்றன.
அது பங்குனி மாதம் இலேயுதிர்காலம்!
ஒவ்வொரு வருடத்திலும் மாசி, பங்குனி மாதங்க விளில் றப்பர் தோட்டத்தில் வேலே "கம்மி" யாகிவிடும். இஃல யுதிர்ந்து தளிர் கொழுந்து விடுகின்ற காலமாதலால் கற்பகத் தருவாகப் பாஃவச் சுரந்து நிற்கும் பட்டைகள் ஊமைகளாகிவிடுகின்றன. எனவே பால்வெட் டுக்கு ஓய்வுகோடுத்துவிடுவார்கள்.
இந்த மாதம்தான் சீக்கில்லாமல் வே லே செய்தவர்கிளுக்கு "போ ன ஸ்" சோடு கூடிய வருட விடுமுறை கிடைக்கும். மற்றவர்களுக்கு ஏதோ இல்லேயென்று சொல்லாமல் இரண் டொருநாள் வேஃகிடைக்கும். இது அரிசிரேஷ் னுக்குத்தான் சரியாக இருக்கும்.
இந்த வருடம் நல்லமழை பால்வெட்டுக் காரர்களுக்கு சோதனேக்குமேல் சோதஃனயாகப் போய்விட்டது. இரண்டு மாதங்களாக ஒழுங் காக வேலே கிடைக்கவில்லே.
என்ன செய்வது . .?
நாலேந்துபேர் இரகசியமாக நாட்டுக்கு வேலேக்குப் போய்வந்தார்கள். என்ன வேலே, எங்கு வேலே என்பதெல்லாம் அவர்களுக்குள்ளே பரம இரகசியமாக இருந்து வந்தது. இன்னும்
". * 3

Page 6
"நாலுபேருக்குத் தெரிந்தால் வேலை நாட்கள் குறைந்து போய்விடும்" என் பது மட்டுமல்ல! "எங்களுக்கும் வேலே கொடுங்க.." என்று இவர் சுள் கேட்டுக் கொண்டு நிற்கும் அழகிலேயே நாட்கூலி குறைந்துவிடும். பின்னர் நாளொன் றுக்கு ஆறு ரூபாயும், பகல் சாப்பாடும் என்றி ருக்கும் வேலே, ஐந்து ரூபாதான் பகல் சாப் பாடு கிடையாது" என்ருகிவிடும்.
அப்படியொரு போட்டிச் சந்தை நாட்டுக் 3
தோட்டத்தில் "செக்ரோலில்" பதிவு உள்ள வர்களுக்கே வேலே இல்ஃ. ராமையா போன்ற "பென்சன்’ எடுத்த கிழடுகளே எங்கே கவனிக் சுப் போகிருர்கள்.
இரண்டு வாரங்களுக்கு முன்னர் தோட் டத்து இளேஞர்களுக்கு ஒரு யோகம் அடித்தது தொடர்ந்து பெய்கின்ற மழை தோட்டத்தை ஊடறுத்து நாட்டிற் செல்லும் தார்ப்பா தையை அடித்துக்கொண்டு போய்விட்டது.
"முேட்டுப் பிள்ளையார் கோவிலுக்கு மேல் இருக்கும் வளைவு சற்று பயங்கரமானது. கவன மில்லாமல் வந்துவிட்டால் வாகனங்கள் பிள்ளே யார் கோவிலுக்குக் கீழே பள்ளத்தில் தலைக்குப் புற தோப்புக்கரணம் போட்டு தி ற்கவேண்டிய துதான். இப்படி வருடத்தில் நாலோ, ஐந்தோ நடந்து தோட்டத்து வாண்டுகளுக்கு காட்சி கொடுக்கத் தவறுவதில்&ல.
முடக்கில் அமைந்திருக்கும் பாலம்தான் இப்படி என்ருல் பாலத்துக்கடியில் ஒடும் சிற் முறு எப்பொழுதுமே வஞ்சகம் செய்தது கிடை யாது. நிதானமாக நடந்துகொள்ளும். வருடம் முழுவதும் அதன் கருணையால்தான் தோட்டத் இல் நீர்விநியோகம் சீராக நடந்துகொண்டிருக் கிறது,
கோடையின் கொடுமை அகோரமாக தாண் டவமாடினுலும் அதில் கண்ணுடி போன்று தெளிந்த நீர் ஸ்படிகமாக ஓடிக்கொண்டிருக் கும். வேல் முடிந்து வீடுதிரும்பும் ஆயாசத்தில் அப்படியே இரண்டுதடவை உடம்பை நன்னத்து விட்டால் போதும் உடம் பில் புதுத்தெம்பு புகுந்துவிடும். களேப்பும் போஇைடம் தெசி யாது.
4

தோட்டத்தில் வளர்க்கப்படும் ஆடு மாடு கிள் மட்டுமல்ல, பால் ஸ்டோரே அதன் தய வில்தான் குளிர்ந்து போய் ஒடிக்கொண்டிருக் கிறது.
கொட்டும் மழையா . .? தாலு டிவிசன் அழுக்கையும் சுமந்து கொண்டுபோய் பள்ளத் தில் ஆற்றில் சேர்த்துவிட்டு இரண்டே நாட்க ளில் கட்டுக்கடங்கி நிதானமாக ஒடிக்கொண்டி ருக்கும். அப்படிப்பட்ட குணம் கொண்டது தான். இம்முறை பெய்த மழை போக்கை மாற் றிவிட்டது. மேற்கிலிருந்து வந்த வெள்ளம் கரைபுரண்டு . ஒடி . பெருக்கெடுக்க . மண் சரிந்து. அப்படியே வாரிச் சுருட்டி விடியற் காலேயில் பார்த்தபோது,
முேட்டுப் பிள்ளையார் கோவில் முடக்குப் பாலத்தைக் காணவில்லே. இரண்டு கரைகளி லும் ஒன்றையொன்று பார்த்தபடி பஸ்கள் நின்றுவிட்டன. கிராமசபை உறுப்பினர் எம். பி. யிடம் ஓடினுர், எம். பி. வீட்டிலிருந்து டெலிபோன் ஓடியது!
மறுநாளே பாதை புனரமைப்புவேலே ஆரம் பமாகியது. மண்நிரப்ப, கல்லுடைக்க . இப் படி வேஃகள் சுறுசுறுப்பாக நடந்தன.
இராமையாக் கிழவன் தலைப்பாகையைக் கட்டிக்கொண்கி அங்கேபோய் நின்றன். ஒவசி யர் ஆட்களே வாட்ட சாட் டம் பார்த்து பொறுக்கி எடுத்தான். "இந்த ருேட்டெல்லாம் இராஜா கூனி அடித்து, நான் வெட்டியது தானுங்க . . இராமையாக் கிழவன் முதலில் திறமையைக் கூறிநின்ருன். பின்னர் வறுமை யைக் கூறி கெஞ்சி நின்மூன். ஹ-ம். வேலே கிடைக்கவில்லே.
நான்கு நாட்களில் பொறுக்கி எடுத்த ஆட் களுக்கே மண்விழுந்தது. வேலை செய்யாதுவிட் டாலும் சம்பளப் பட்டியலில் இடம் பிடிக்க நற்சாட்சிக்கடிதங்களுடன் வந்தவர்களே சேர்க்க இவர்களில் பத்துப் பேரை நீக்க வேண்டியதா பிற்று.
தோட்டத்திலும் ஓய்வு மாதம். மழை வேறு

Page 7
இரவு பகலாக "சிங்கு. சிங்குன்னு ஓடிக் கொண்டு இருக்கும் இறப்பர் ஸ்டோர் வேறு அடங்கிப்போய் கிடக்கின்றது. மழை விட்ட பாடாக இல்ஃப், ஒட்டுப்பாலாக நீண்டுகொண் டிருக்கின்றது.
"என்னு . இந்த வருஷம் இப்பிடி மழை. வானம் பொத்துக்கிட்ட மாதிரி ..."
"ஆமா. ஒரு ஊரு அழிஞ்சாத்தான் நிற் கும் போல . மாரிமுத்துவும் இராமையாவும் நேற்று கடையிலிருந்து திரும்பும்போது கதைத் துக்கொண்டு வந்தார்கள்.
இருவரும் வியது ஐம்பத்தைந்து தாண்டிவிட் டபடியால் பென்சன் கொடுத்துவிட்டார்கள்.
இராமையாவுக்கு உறவு என்று சொல்லிக் கொள்ள மனேவி சிகப்பி மட்டுமே உள்ளாள். ஆணுல் மாரிமுத்துவிற்கு அப்படியல்ல. மகள் என்றும், மருமகன் என்றும், பேரன் பேத்தி என்றும் பலர் உள்ளனர். ஆணுல் இவனேக் கவ
னிப்பதுதான் கிடையாது.
இன்னமும் இவன் கையைப் பார்ப்பவர்க ளூம் உண்டு.
வருகிற பென்சன் கால்வயிற்றுக் கஞ்சிக்கே போதாது. எனவே கிடைத்த சில்லறை வேஃ கண் செய்து காலத்தை ஒட்டிவருகின்றனர்.
தோட்டத்தில் பதிவு பெற்றவர்களுக்கே வேலே இல்லே, புதிதாக வேறு ஐம்பது ஏக்கர், காணியில்லாத கிராமத்தவர்களுக்கு வழங்கப் போகிருர்கள் என்ற செய்தி உலாவி வயிற்றில் புளியைக் கரைத்தது.
வேலே இருந்தாலும் இல்லாவிட்டாலும் வயிறு இருக்கிறதே. பசி இருக்கிறதே .
இராமையாவும், மாரிமுத்துவும் நாலு மைல் கள் நடந்து டவுணுக்குப் போனுர்கள். புதிதாக மில் கட்டும் இடத்திற்குப்போய் எடுபிடிவேஃ! கிடைக்குமா என்று கேட்டுப் பார்த்தார்கள். முதலாளி கட்டிட கண்ட்ராக்டரைப் பார்க்கச் சொன்னூர், கண்ட்ராக்டர் இருவரையும் பார்த் துக் கையைவிரித்தார்.

பவுடர் பூச்சு கலேயாத பெண்கள் அலுங் காமல் குலுங்காமல் வேலைசெய்தனர். இருவரும் ஏமாற்றத்துடன் திரும்பினர்.
வரும்போது மழைவேறு பிடித்துக்கொண் டுவிட்டது. தெப்பமாக, நனேந்துவிட்டார்கள்.
"என்னண்ணே காலே யில் கழுவிவிட்ட மாதிரி வ்ானம் கெடந்திச்சு. இப்ப. சனியன் ஒரேயடியாகி பெய்யுது"
சுள்ளுன்னு வெயில் அடிக்கிற நேர மே G ந ன ச் சேண். எப்பதான் மழைவிடப் போவுதோ .
குன்றுகளேயும், மேடுகளேயும், சரிவுகளேயும் மறைத்து நிரை. நிரையாக அணி வகுத் து வளர்ந்து நிற்கும் பால் மரக் காட்டினூடே அமைந்த ஒற்றையடிப் பாதை வழியாக வீடு திரும்பினர்.
*காஃலப் பால்" "அத்தி வெட்டு" என்று நாளொன்றுக்கு இரண்டுபேர் போட்ட தோட் டம்தான் இன்று இப்படியாகிவிட்டது. மழை வேறு விடாது கொட்டிக்கொண்டு சோதனைப் படுத்துகின்றது.
அன்றுமாலே தஃலவர் வீட்டில் ஒரு சுட்டம் நடந்தது. கு டைகள் திண்ணேவர உள்ளே போய் விட, தலே பொத்த மட்டைகளும், பொலிதீன் கொங்கனிகளும், சேம்பு இலைகளும் வெளியே திண்ணைச் சுவற்றில் சாய்ந்து அழுதுக் கொண்டிருக்க, த லே வர் ஆலோசனேக் கூட் டத்தை நடத்தினூர்,
இதுக்குத்தான் மாசச்சம்பளம் வேணும்னு கேட்டுப் போராடினுேம் . காட்டிக் கொடுத் துட்டானுக..." தொண்டர் தலேவன் முத் து ஆத்திரமாகக் கூறினுன்.
இப்ப அதெல்லாம் பேசி பயனில்ல, நடக்கி வேண்டிய காரியத்தைப் பாருங்க . சிவனு காரியத்தில் கண்ணுய் இருந்தான். எல்லோரும் "ஆமாம்" போட்டார்கள்.
கூட்டத்தில் எடுத்த முடிவோடு தல்வர் கண்க்கப்பிள்ளேம்ைப சந்தித்தார். அந்த வருட
芋
5 7 ܗ

Page 8
எஸ்டிமேட்டில் புதிதாக சில்லறை வேஃலு ஒன் றும் இல்லாதபோதும், றப்பர் மரங்களுக்கிடை யில் கொக்கோ நட (வாரத்தில் இரண்டு நாள் பெண்களுக்கும், மூன்று நாள் ஆண்களுக்கும் கொடுப்பதென முடிவாயிற்று. H
இந்த முடிவை தலைவர் பெருமையோடு கூறினூர். மாத இறுதியில் மாவட்டக் கமிட்டித் தேர்தல்வேறு நடைபெற இருக்கின்றது. தலே வர் அதற்கு நிற்கிறர். எனவேதான் விட்டுக் கொடாமல் பேசிவந்தார்.
"எங்களுக்கு ஒண்ணும் இல்ஃயா . .?" ராமையா மாரிமுத்து, இண் ணும் பென்சன் எடுத்தவர்கள் கேட்டார்கள்.
"உங்களுக்கும் வழி பொறந்திருக்கு. நம்ப எட்டாம் நம்பர் பழைய மரம் இருக்கு தில் லேயா. அதை அடுப்புக்கு வெட்டப் போருங் களாம். யார் விறகிற்கு ஐம்பதுசதம் கைக்கா சுக்கு வெட்டுவீங்களாம் ."
"ஐயோ. இது அநியாயம். முன்பு யாருக்கு ஒரு ரூ பாய் க்கு வெட்ட முடியாதுன்ன மர மாச்சே. அதுவும் வரகட்டு. அங்கு லொறி, கரத்த வண்டிகூட போகமுடியாதே." முத்து மீண்டும் நியாயம் பேசினுன்,
"இந்தா முத்து. துரை சொன்னதைத் தான் நான்வந்து சொல்லுறேன் . . எனக்கு மட்டும் தெரியாதா..? தலேவர் தன் நியா யத்தைக் கூறினூர்.
தலைவர் சொல்றது நியாயம் . யாரோ கூட்டத்தில் ஒத்துப்பாடினர்கள்.
"இது பெரிய அநியாயம். "மொக்கு'ப்பத்தி முடிச்சிபோன நார் மரம். இந்த முடியாதது களாலே ஒரு மரத்தைக்கூட சாய்த்து துண்டு போட முடியாது. . " இன்னுெரு இளைஞன் எடுத்துக் கூறினுர்,
"இந்தாப்பா. விருப்பம்னு செய்யவேண் டியதுதான். இது ல ஒண்ணும் வற்புறுத்தல் கிடையாது." தீஃலவர் ஒருபடி மேலேபோனுர்,
"ஏன் இந்த கல்லுகட்ட, மண்பால் எடுக்க இப்படி ஏதாவது சில்லறை வேலே கேட்டுப்
பார்க்க வேண்டியதுதானே. இளேஞன் விட ఇు. -
6

"கேட்டதுதான். அவுங்க கொடுக்க ணுமே. தலைவரின் நியாயம் இது. .
சரி. சரி. எங்க தலைவிதி. இப்ப. நீங்க ஏன் சண்டை போடுறீங்க . . மாரிமுத்துக் கிழவன்தான் அமைதிப்படுத்தினுன்.
* கிழவர்களுக்கு ஏதோ வேலை கிடைத்த திருப்தி.
"எங்களால முடியாது . நாளொன்றுக்கு ரெண்டு இளந்தாரி சேர்ந்தாலும் ஐஞ்சி ரூபா வுக்கு விறகுவெட்ட முடியாது." இளேஞர்கள் பின்வாங்கிவிட்டனர். வேறுவேலே கிடைக்கும் என்ற தெம்பு அவர்களுக்கு.
நாலு டிவிசனுக்கும் கடைசித் தொங்கலில் அமைந்திருப்பதுதான் எட்டாம் நம்பர் மலே, கல்லுக்காடு. இடை இடையே பெரிய பழைய மரங்கள். எத்தனேயோ பழைய மரங்கள் அழிக் கப்பட்டு, புல்லும்லேகள் கொழுத்தப்பட்டு, புதிய ஒட்டு மரங்களே உண்டாக்கிவிட்டார்கள்.
ஆணுல் இது என்றும் பழைய ம ஃ'யாகவே உள்ள்து.
புதிதாக வெட்டு பழகும் அத்தினேபேரும் இங்கேதான்!
பெரிய மரங்கள், எட்டிய மட்டும் "கங்கு வெட்டில்” பட்டை சீவி பால் உறியப்பட்ட மரங்கள், இன்று பட்டையே இல்லாது, நெஞ் சைக் காட்டிக்கொண்டிருக்கின்றன.
தன் பாலே வாளி வாளியாக வழங்கிவிட்டு இன்று ஸ்டோர் அடுப்பு விறகிற்கு தயாராக நின்று கண்ணீர் வடிக்கும் பால்மரக் காடு அது.
ஆம்! எ ட் டாம் நம்பர் பழைய மலே. இராமையா கிழவன் நீண்ட நாட்களாக அங்கே பால் வெட்டியுள்ளான். தனக்குத் தொழில் கொடுக்கும் ஒவ்வொரு மரங்களையும் தன் இத யத்தில் இருத்தி நேசித்துள்ளான்.
சிரட்டை நிறைந்து வழியும் பாலே சேகரிக் கும்போது, அவை வெறும் மரங்கள் மட்டுமல்ல! அவனே வளர்க்கும் தாய்! அவனே வாழ்விக்கும் தெய்வம்! இந்த உணர்வு இன்றும் அவனைவிட்டு நீங்கவில்ஃ.

Page 9
மாயாகோஸ்கியும் நானும்
- வ. ஐ. ச ஜெயபாலன்
தனிமை நெருஞ்சிக் காட்டின் நடுவே ஆழ்ந்த இரவின் அமைதியை அஞ்சினேன். எங்கேனும் ஒருகுயில் வாய் திறக்காதா. எங்கேனும் ஒருசில நட்சத்திரங்கள் இருளாய் இறங்கும் இரவின் திரையில் ஒட்டைகள் போட்டு கண்சிமிட்டாதா. சன்னலின் வெளியே எலும்புக்கூடாய் வானேநோக்கி கைகளே விரித்து கோடை இரவின் வெப்பக்காற்றில் முதிரை மரங்கள் பெருமூச் செறியும். நிழலுருவாக இருளில் கரைந்த சருகுகள் நிலத்தில் காற்றுடன் புரள்வதை காதுகள் சொல்லும். இந்தத்தனிமை நெருஞ்சிக் காட்டில் ஆழ்ந்த இரவின் அம்ைதியை அஞ்சினேன். சூரியன் தன்னே வாடாஎன்று தேனீர் விருந்துக்கு அழைத்த ருசிய புரட்சிக் கவிஞன் மாயாகோஸ்கிபோல் இன்னும் சற்று இங்கே தரித்திடின் படுக்கை அறையில் திராட்சை மதுவை பகிர்ந்திட வாவென நிலவை அழைக்கலாம். எனினும் அந்தக் கவிஞனேப் போல காதல் இழப்பை சகிக்க ஒண்ணுது வாழ்வை மாய்த்திட நினேப்பது மில்வோம். உலகை வாழ்வை மாயமென்று அங்கவாய்ப்பது அதனிலு மில்லோம். கானல் பெருகும் வேனில் நாளிலும் எங்கள் சிற்றுார் எல்ஃயை அஃணந்து பாலியாறு ஊர்வது போல நாட்கள் மெதுவாய் மெதுவாய் நகரும். மக்கள் எழுச்சியில் முதல்வனுய் நிமிர்ந்தும் சொந்த வாழ்வின் தோல்வியில் குறுகி சாவை அஃணத்த மூடக் கவிஞா யாருக் கில்ஃப் நிராசைகள் வாழ்வில், என்னிடம் கேட்பின் எமக்குக் கிடைத்த உழைக்கும் மக்களின் எழுச்சியைப் பாடும் மகத்துவம் ஒன்றுக் காகவே உலகில் கோடி இன்னல் தாங்கலாம் என்பேன்.

இப்பொழுது அவைகளே வெட்டிசாய்த்து அறுத்து நெஞ்சு முட்டும் ஏற்றத்தில் உருட்டித் தான் கொண்டுவந்து அடுக்கவேண்டும்.
யார் விறகிற்கு கூலி ஐம்பது சதம். அதற் காசு அறுக்க வேண்டும்.
சிகப்பி எழுந்து தேனீர் தயாரித்து கொடுத் தாள். இராமையாக் கிழவன் படுக் கையில் அமர்ந்தபடியே தேனீரைப் பருகிஞன். பின்னர் சிறிது நேரம் அடுப்படியில் அமர்ந்து குளிர் காய்ந்தான்.
"ராமையா அண்ணே. புறப்படவியா..?"
அழைத்தபடி வந்தான் மாரிமுத்துக் கிழவன். தோளில் கோடரி இருந்தது.
"இதோ ந்ெதுட்டேன் மாரி . . அரம் வச்சி இருக்கியா ..?"
"ஹாம். கிடையாது. தண்ணி கல்லு இருக்கு தீட்டிக்குவோம் ."
வானம் பிரகாசமாய் இல்லே.
முதுமை அவர்களின் உடம்பில் கனிந்தி ருந்தபோதும் உழைப்பு என்ற உறுதி நம்பிக் கையோடு கொலுவிருக்க தீரத்தோடு அவர்கள் நடந்துக்கொண்டிருக்கின்றனர்.
மழை பொசிந்துகொண்டு வந்தது.
இஃலயை உதிர்த்து குச்சி. குச்சியாக நீட் டிக்கொண்டு இளமை போய் முதுமை யில் சோர்ந்து நிற்கும், தங்களே வாழ்வித்த அந்த பால்மரக் காட்டினே அழிக்க அவர்களுக்கு மனம் இல்லே . இருந்தாலும் வேறு வழி . .?
மரங்களுக்கு மட்டுமா இந்த நிலே . இத் தனே காலமும் உழைத்து. . உழைத்து . . இன்று உடலில் வலுவற்ற நிஃப்பிலும். தங்கள் நிலேமை அவர்களுக்குப் புரிந்தது . .
ஓர் இலக்கிய தரத்தை . .
வெட்டு மரங்கள் . .
அவர்கள் வேகமாக நடக்கிருர்கள்.

Page 10
தமிழ் நாவல்களில் மனித
மக்கள் போராட்டங்களும்
நீரிற்றுண்டுகால வளர்ச்சியைக் கண்டுள்ள தமிழ் நாவலிலக்கியத்தின் வரலாற்றை முறைப் பட எழுதும் முயற்சிகள் கடந்தசில வருடங்க ளாகவே மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. தமிழ் நாவல் வளர்ச்சி குறித்து வெளிவந்திருக் கும் பெரும்பான்மை நூல்களில் வளர்ச்சியின் ஏதுக்கள், இயல்பு ஆகியவற்றிலும் பார்க்க தனிப்பட்ட நாவலாசிரியர் சிலருடைய பங்க ளிப்புகளே பெரிதும் பேசப்பட்டுள்ளன. நாவ வின் வளர்ச்சியிலே காணப்படும் முக்கியமான போக்குகளும் உந்து சக்திகளும் பெரும்பாலும் பேசாப்பொருள்களாகவே இருந்துவந்துள்ளன. இந்நிலையில் மனித உரிமைகளும் அவற்றுக்கான போராட்டங்களும் தமிழ் நாவல்களில் சித்திரிக் கப்பட்டிருக்குமாற்றை ஆராய் வது சாலப் பொருத்தமாயிருப்பதோடு பயன்தரக் கூடியது மாகும்.
வழிவழிவரும் ஏனேய இலக்கிய வடிவங்க *ளப் போலவே, நாவலும் வரலாற்றின் வினே பொருளாகும். இடைக்கால இலக்கிய மரபின் கடைக்காலிலேதான் "செந்தமிழ்" இலக்கிய மரபு சென்று தேய்ந்திருந்த நிஃபயிலேதான் நடப்பியல் இலக்கியத்துக்கு முன்னறிவித்தல் கொடுப்பதுபோல நாவலிலக்கியம் எழுந்தது. ஆங்கிலத்தில் Novel என்ற பதம் புதுமையைக் குறிப்பதுபோலவே நவீனம் என்ற சொல் தமி |ழிலும் அதேபொருளேக் குறிப்பதை நாம் அறி வோம். நமது ஆரம்பகால நாவலாசிரியர்கள் இதனே நன்குணர்ந்திருந்தனர். நாவலும் புது யுகத்தின் சில போக்குகளேத் தொடக்கத்திலி ருந்தே பிரதிபலித்து வந்துள்ளது. அது மட்டு மன்று சமுதாய மாற்றங்களின் உந்துதலினு லேயே நவீன வடிவமாகிய நாவல் படைக்கப் பட்டது என்பதும் மனங்கொள்ள வேண்டிய தொன்றுகும்.
8

ரிமைகளும்
க. கைலாசபதி
மனிதன் படைத்துள்ள சுற்பஃனக் கதைகள் யாவற்றிலுமே - காவியங்களிலும் சரி, நாவல்க ளிலும் சரி, மாந்தருக்கும் சூழ்நிவேகளுக்குமி டையே தோன்றும் முரண்பாடுகளே கதையை நடத்துவதற்கு முக்கிய ஏதுக்களாகவும், சம்பந் தப்பட்ட மாந்தருடைய ஆளுமை வெளிப்படு தற்குரிய சந்தர்ப்பங்களாகவும் அமைகின்றன. கம்பனது இராகவன் முதல் இந்திராபார்த்த சாரதியின் "கஸ்தூரி வரை கதாபாத்திரங்க ளூக்கு ஏற்படும் இடர்களும் இரண்டக நிலேசு ரூம் அப்பாத்திரங்களுக்குச் சவாலாக இருக்கின் றன. அவற்றிற்குத் தீர்வுகாண்பதிலேயே அப் பாத்திரங்களின் குணவியல்பு துலக்கமடைகின் றன. தம்மை எதிர்நோக்கும் பிரச்சினேகளுக்குத் தீர்வுகாண முற்படும் கதாபாத்திரங்கள், வெறு மனே அனுபவத்தின் அடிப்படையிலோ அல் லது கணச்சித்தங்களின் உந்துதல்களினூலோ மட்டும் செயல்களேயும் முடிவுகளேயும் மேற் கொள்வதில்லை. உணர்ச்சி வழிப்பட்டு ஒவ் வொரு காரியத்தையும் செய்பவர்போலச் சில கதை மாந்தர் நோன்றினுலும், கூர்ந்து நோக் கினுல் அவர்களுக்கும் ஓர் உலகநோக்கு ஏதோ ஓர் அளவில் இருத்தல் புலப்படாமற்போகாது.
காலாகாலமாக வரும் புனே கதை சு ஃன ஆராய்ந்தால், பாத்திரங்கள் மேற்கொள்ளும் முடிவுகளே இருபெரும் பிரிவுகளில் அடக்கிவிட லாம். தனிமனிதருக்கும் சூழ்நிலைகளுக்குமி டையே தோன்றும் முரண்பாட்டை எதிர்நோக் கும் ஒருவர் சூழ்நிலேயே பெருவழக்காயிருப்ப தும், செல்வாக்குடன் விளங்கும் - விழுமியங்க ளுக்கும் மதிப்பீடுகளுக்கும் மதிப்புக்கொடுத்து அவற்றைப் பிரமாணமாக ஏற்றுக்கொண்டு தமது நிலப்பாட்டையும் ஒழுக்கலாற்றையும் மாறிக் கொள்ளுதல் ஒரு வகையான தீர்வு ஆகும். அங்கே தர்மம்; விதி; மரபு முன்னுேர் வழி முதலியனவற்றுக்கு முன்னுரிமை வழங்

Page 11
கப்பட்டுத் தனிமனிதனுே அல்லது பொதுவில் மனிதரோ அவற்றுக்கு அடங்கிநடத்தல் வேண் டும் என்னும் உணர்வு மேலோங்கிநிற்கக் காண லாம். இது ஒரு பிரிவு
முரண்பாடு தோள்நுங்கால் இரு தரப்பை பும் ஒப்பநோக்கி சூழ்நிலையில் உள்ள குறை பாடு காரணமாகவே மனிதனுக்குப் பிரச்சினே எழுகிறது. என்று கண்டு அச்சூழ்நிலயை மாற் றியமைக்க எண்ணுதலும் முற்படுதலுமே மற் ருெரு வகையான தீர்வாகும். அங்கே சமத்து வம், சுதந்திரம், சகோதரத்துவம், முன்னேற் றம், முதலியன அளவுகோல்களாக அமைகின் றன. வழக்கிலுள்ள ஆணுல் காலவழுப்பட்ட கருத்தோட்டங்களே ஏற்றுக்கொண்டு அடங்கி விடாமல் அவற்றுக்கு முடிவு காணவும், புதிய கோட்பாடுகளே வழக்கிற்குக் கொண்டு வரவும் முயலுவதே இப் பிரிவைச் சேர்ந்த பாத்திரங் களின் பொதுப்பண்பு எனலாம்.
நாவல் உலகம் நனவுலகமாகும். தொடக் கத்திலிருந்தே நாவலின் உரைகள் ஆனது, அது எந்த அளவிற்கு உலக அனுபவத்தோடு ஒத் துள்ளது என்பதைப் பொறுத்தே இருந்தது. குடும்பம், சாதி, சமூகம் அரசு இவற்றின் சுட் டுப்பாடுகளே உள்ளவாறே ஏற்றுக்கொள்ளா தது மட்டுமன்றி, அவற்றிலிருந்து விடு த லே பெறவும் துடித்த பல மாந்தரையே நாவல் முக்கிய கதாபாத்திரங்களாகச் சித்திரித்தது. இராஜா இரானிக் கதை வடிவிலே நாவல் எழு திய வேதநாயகம்பிள்ளே கூட சமூக சீர்திருத் தத்தையே நூலின் பொருளாய்க் கொண்டார் என்பது நினைந்துகொள்ள வேண்டியதாகும். அவர் பெண் கல்வியை வற்புறுத்தினூர் என்ருல் பெண்களுக்குக் கல்வி அவசியமன்று எனக் கரு தப்பட்ட மனுேபாவத்திற்கும். நடைமுறைக ளுக்கும் எதிராகக் குரல்கொடுத்து, அவற்றை மாற்றி அமைக்க விரும்பினுர் என்பதே அர்த் தமாகும், மாதவையா தமிழிலும் ஆங்கிலத்தி ஒரம் எழுதிய நாவல்கள் யாவும் ஏதோ ஒரு வகையில் மாற்றத்தை வேண்டி - விழைந்து நின்ற பாத்திரங்களேயே சிறப்பாகச் சித்திரித் துள்ளன. அவர் படைத்த நாராயணன், தில்லே கோவிந்தன் முதலிய ஆண் பாத்திரங்களும் சாவித்திரி, பத்மாவதி, முத்துமீனுட்சி முதலிய பெண் பாத்திரங்களும் ச. ம. நடேச சாஸ்திரி

யார் படைத்த தீனதயாளு, ராதை முதலிய பாத்திரங்களும் தமது சொந்த முயற்சியா லேயே தமக்குப் பாதகமா இருக்கும் சூழ்நிஃ கண் வென்று தாம் முன்னேறுகின்றன. அவர் சுள் பிறந்த சூழ்நிலையை மாற்றியமைக்க முயல வில்ஃ' என்பது உண்மையே. ஆணுல் அந்தச் சூழ்நிலையில் வாழ ஒருப்படாதவராய் அதிலி குந்துவிடுபட்டுத் தமது மனதிற்கிசைந்த வாழ்க் கையை மேற்கொள்ள முற்படுகின்றனர் என் பது கவனிக்கித்தக்கதே. மாற்றமும் வளர்ச்சி யும் உலகின் இயல்பு. மாற்றத்தினடியாகவே - இயக்கத்தின் வினேவாகவே - வளர்ச்சி உண் டாகிறது.
தமிழ் நாவல்களே வரலாற்று ரீதியாக நோக்குகையில் இரு போக்குகளே அவதானிக்க லாம். மாற்றத்தின் தேவையை உணரும் மாந் தரின் மனுேநில்யை இரு பிரிவுகளாக வகுத்தல் கூடும். முற்பட்ட நாவல்களில் வரும் முக்கிய மான பாத்திரங்கள் படிப்படியாக மாற்றம் ஏற்படும் என்று எண்ணுகின்றனர். பத்மாவதி சரித்திர நாவலிலே கதாநாயகன் நாராயணன் ஓரிடத்திலே கூறுவது இதனே எடுத்துக் காட்டு கிறது. "எல்லாம் நாளுக்கு நாள் அறிவு பரவிச் சீராய் விடுமென்று நம்புகிறேன். அதுவரையும் தர்மசங்கடந்தான்." இத்தகைய கூற்றுக்கள் எங்கிருந்து பிறக்கின்றன: கல்வியினுலும், நகர வாழ்க்கைப் பரிச்சயத்தினுலும், நிரந்தரமான ஊதியம் கிடைக்கும் உத்தியோகத்தினுலும், ஒரளவு "முன்னேற்றம் கண்டவர்களின் கருத் தேயிது. "லிபரவிஸம்" எனக் கூறப்படும் தாரா ளக் கொள்கையின் எதிரொலியே இத்தகைய கூற்றுக்கள். ஏற்கெனவே வசதியான குடும்பங் களிற் பிறந்து பழைமைக்கும் உறைவிடமான கிராமங்களிலிருந்து புதுமை மவிந்த நகரங்க ஞக்குச் சென்ற துரைத்தன உத்தியோகத் தரு டைய கூற்றுக்களே இவை. வாழ்க்கையில் கஷ் டப்பட்டவர்களின் குரல் அன்று. கிராமத்தி லும் இத்தகையோர் நன்னிலேயிலேயே இருந்த னர். ஆணுல் நவீன வாழ்க்கைமுறையும், அதிகா ரமும் போதாத நிவேயில் ஆங்கில அறிவும் சமூக அந்தஸ்தும் தேடி இவர்கள் குடிபெயர்கின்ற னர். எனவே அதற்குமேல் அவர் கள் மாற் றத்தை வேண்டினர் அல்லர். தாம் முன்னேற் றம் கண்டதைப் போலவே தமது சமுதாயமும் அதீத போராட்டம் இன்றி நன்னிலே அடைய
9.

Page 12
லாம் என்று கருதினர். இன்ஞெரு விதத்திற் கூறுவதானுல், ஐம்பதுகளின் பிற்பகுதி வரை யில், சமூகத்தின் அடிநிலைகளில் உள்ள மாந்தர் நாவல்களிலே பாத்திரங்களாக இடம் பெற வில்லை. அதனுல் இல்லாமையின் அடிப்படையில் உலகை நோக்கி மாற்றம் கோரியவர்கள் இலக் கிய உலகில் சஞ்சரிக்கவில்லை. மத்தியதர வர்க் சுத்தினரே தத்தம் குடும்பப் போராட்டங்களி ஆரம், போட்டா போட்டிகளிலும், மனப்போ ராட்டங்களிலும் ஈடுபட்டிருப்பதை நாவல்கள் சித்திரித்தன. அவர்களுக்குப் பிரச்சிஜனகள் இல் ஐாமல் இல்லை. குறிப்பாகப் பெண்கள் பலவித மான் அடக்கு முறைகளுக்கு ஆட்பட்டிருந்தனர் கூட்டுக் குடும்பம், சாதியாசாரம், கனவன் அதி காரம் ஆகியவற்றின் கட்டுப்பாடுகளிலிருந்தும் விதவைநீலே, சீதனக்கொடுமை போன்றவற்றி குனுத்தும் அவர்கள் வாழ்க்கை நரகமாயிருந்தது. அதிலிருந்து விடிவுகாண்பதே அசாத்தியமாய்த் தோன்றியது. அதுபோலவே மத்தியதர வர்க் கத்து ஆண்கள் பலருக்கும் "ஈரடிநிஃ" இருந் தது. மரபுவழிவந்த நம்பிக்கைகளுக்கும், சம்பி ரதாயங்களுக்கும், மனச்சாட்சிக்கும் இடையே பலவிதமான மோதல்கள் தோன்றின. இவை யெல்லாம் மனப் போராட்டங்களே உண்டாக் கின என்பதும் உண்மையே. லசர்மி, பி. எம். கண்ணன், அகிலன், அநுத்தமா. ராஜம் கிருஷ் னன் முதலியோரின் நாவல்களில் இப்பண்பி னேக் காணலாம். உண்மையில் இத் தகை ய நாவல்களில் வரும் பாத்திரங்களுக்கு ஏற்படும் பிரச்சினேகளும் போராட்டங்களும் அடிப்படை யான வாழ்க்கைப் போராட்டமல்ல. உழைக்க எம் ஊ திய ம் பெறவும், சாதாரன மனித உரிமைகளுடன் வாழவும் அவர்கள் போராட வில்லே. மனித உறவுகளின் அடியாகத் தோன் றும் உணர்ச்சிப் போராட்டங்களே அவர்களேக் கலக்குகின்றன.
இரண்டாவது பிரிவைச் சேர்ந்த நாவல்கள் காலத்தால் பிற்பட்டவை. ரகுநாதனுடைய பஞ்சும் பசியும் நாவலுடன் இவற்றின் காலம் தொடங்குகிறது எனலாம் அண்மைக் காலத் தில் வெளிவந்த நீண்ட பயணம், தாகம், கரிசல் என்பன இவ்வகை நாவல்கள் ஆழமும் அகலமும் பெறத் தொடங்கியுள்ளதைக் காட்டுகின்றன. இத்தகைய நாவல்களில், வர்க்க அடிப்படை யில் சுரண்டப்பட்டு அடக்கி ஒடுக்கப்படும் மக்
O

களிற் சிலர் தமது அடிப்படை உரிமைகளே உணர்ந்து அவற்றைப் பெற்றுக்கொள்வதற்கா கப் போராடுவதும் போராட முனைவதும் பிர தான பொருள்களாக அமைவதைக்காணலாம். பல காரணங்களால் அவர்கள் 'படிப்படியாக முன்னேற்றம் ஏற்படும்" என்ற எண்னத்தை நிராகரித்தவர்கள், பழைய சமூகத்திலும் புதிய சமூகத்திலும் அவர்கள் மனிதராக வாழும் உரிமை மறுக்கப்படவர்கள். எனவே கல்வி, உத்தியோ கம், குடிபெயர்வு, மேனுட்டுத் தொடர்பு முதலியவற்ருல், மேலும் சிறிது முன்னேறலாம் என்ற பிரமை அவர்களுக் இல்லை; மார்க்சிய வழக்கில் கூறுவதனுல் அவர் கள் "இழப்பதற்கு எதுவுமே இல்லாதவர்கள்" அதுமட்டுமல்ல போராட்டத்தின்போது ம ற் ருெரு உண்மையையும் அவர்கள் தெளிவாகத் தெரிந்துகொள்கின்றனர். ரகுநாதனின் நாவலி லிருந்து சின்னப்பபாரதியின் நாவல்கள் வரை போர்க்குணம் வாய்ந்த பாத்திரங்கள் அணி திரண்டு ஐக்கியப்பட்டு உரிமைக்குரல் எழுப்பு வதே உகந்தது என்று உணர்கின்றனர். இது தான் முதற்பிரிவைச் சேர்ந்த நாவல்களுக்கும் பின்னேயவற்றுக்கும் உள்ள பிரதான வேறுபாடு, முற்பட்ட நாவல்களிலே தனிமனிதர்கள் தமது வளர்ச்சிக்குத் தடையாயுள்ள சம்பிரதாயங்களி லிருந்து விடுபட்டுப் புதியபுதிய வாழ்க்கைமுறை சுளே நாடித் தேடிப் போக முற்படுகின்றனர். பழைய சமுதாயத்திலும் ஒரளவு உயர் நிலையி விருந்த அவர்கள் புதிய சமுதாயத்திலும் உயர் நிஜல எய்த இன்றியமையாத பொருத்துவாய்க ளைச் செய்து கொள்கின்றனர். முதலாளித்துவ அமைப்பின் தருக்க ரீதியான முடிவாக தனி மனித வாதத்தின் சில அம்சங்களேயே முற்பட்ட தமிழ் நாவல்களில் காண்கிருேம்.
"தந்திரபூமி"யில் கஸ்தூரிக்கும், பாரினாக் குப் போவில் சாரங்கனுக்கும் விரும்பமானபடி நடந்துகொள்ள வாய்ப்புக்கள் உண்டு. ஆணுல் மலரும் சருகும் நா வலில் மோசே, சுட&a, கன்னிமரியா முதலியோருக்குக் கூலிவேலே செய் யும் நிலத்தைவிட வேறு எங்கு போகவும் இய லாது, எத்தனே துன்பங்களும், தடைகளும், அடக்கு முறைகளும் வந்தாலும் அங்கிருந்தே தமக்குரிய உரிமைகளேப் போராடிப் பெற்ருக வேண்டும். நீதியையும் நியாயத்தையும் பாது

Page 13
காப்பையும் வழங்கக்கூடியோரும் உயர் சாதிக் க்ாரர் பக்கமே இருக்கும்பொழுது அவர்கள் எங்குதான் போகமுடியும்? குருதிப்புனல் நாவ வில் அப&லகளான பலரை நாயுடுவின் ஆட்கள் ஈவிரக்கமின்றிக் குடிசையில் உயிரோடு கொழுத் தும்போது பொலீஸ் பார்த்துக்கொண்டு நின்ற தாகவே காட்டப்பட்டுள்ளது. இத்தகைய சந் தர்ப்பங்களில் - காந்திமதி நாதபிள்ஃள, கன்ஃன பாநாயுடு, வேலுப்பிள்ளே (டானியலின் பஞ்ச் மர்) முதலியோருக்கு எதிராக ஒடுக்கப்பட்ட மக்கள் ஒன்றுபட்டுப் போராடுவதைத் தவிர வேறு மார்க்கம் இருப்பதாகத் தெரியவில்லை.
கால அடைவில் நோக்கினுல், தனிநபர்களு டைய "விமோசன" போராட்டங்களேச் சித்தி ரித்த நாவல்களும், சமூக ரீதியான வெகுஜனப் போராட்டங்களேப் பொருளாகக்கொண்ட பிற் பட்ட நாவல்களுக்கும் இடைப்பட்ட காலத்தில் சுதந்திரப் போராட்டத்தைப் பின்னணியாகக் கொண்ட நாவல்கள் எழுந்தன. இதற்கு உதா ரணமாகக் கல்கி, கு. ராஜவேலு முதலியோ ரின் படைப்புகளேக் குறிப்பிடலாம். ஆயினும் சுதந்திர வேட்கையும் அதற்கான போராட்ட உணர்வும் தமிழ்க் கவிதைகளில் வெளிப்பட்ட அளவு நாவல்க்ளில் புலப்படவில்லே என்றே கூறத் தோன்றுகிறது. கல்கியின் பெருநாவ லான அவே ஓசையில்கூட காந்தியடிகளின் தஃ: மையில் நடந்த போராட்டம் முக்கிய பொரு ளாக அமையவில்லே, வகுப்புக் கலவரங்களேக் கூட நாவலிலே குறியீட்டுச் சொற்களால் குறிப் பிட்ட கல்கி சமகால நிகழ்ச்சிகளே நாவலில் சரி வரச் சித்திரிக்க முனேந்தார் எனக் கூற விய லாது. கல்கியி ன் புனேகதைகள் பலவற்றில் பொதுப்பண்பாகக் காணப்படும் மர்மவேட்கை இந் நாவலிலும் குறைவின்றிப் பொருந் தி புள்ளது.
காந்தியுக நாவல்கள் போராட்டங்களே விவ ரிப்பதிலும் பார்க்க ஓர் இலட்சிய வாழ்க்கையி னேயும் அதனுல் ஈர்க்கப்படுகின்ற சில மாத்த ரையும் சிறப்பாகச் சித்திரிக்கின்றனவெனலாம். ஒருவகையான தார்மீகி அச்சில் அவை வார்க் கப்பட்டுவிடுகின்றன. இதற்கு இன்னுெரு கார னமும் இருக்கிறது என்றே நினேக்கின்றேன். காந்தியடிகள் போராட்டத்தை ஆன்மீகமயப் படுத்தியவர். சத்திய சோதனேயில் வாழ்நாள்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

முழுவதும் ஈடுபட்டிருந்த அவர் போராட்டம் என்பது ஆன்மீக சக்தியின் வெற்றி என்று எண்ணினூர், தன்னை வருத்தலே சத்தியாக்கிர கத்தின் சாராம்சம், எனவே சமூக ரீதியான போராட்டத்திற்கு அங்கு முதலிடமில்லை. காந் தீயத்தின் முக்கியமான இலட்சியங்களில் தீண் டாமை ஒழிப்பும் ஒன்று. மனித உரிமை சம்பந் தமிானது அந்த இயக்கம். ஆயினும் அதிலும் அடிகளின் ஆன்மீக அழுத்தம் ஓர் எல்லே க்கு மேல் அவ்வியக்கத்தை வளரவிடாமல் தி டு த் தது. காந்தியடிகளின் ஏ ஃனய கோட்பாடுகள் ஆச்சிரமவாசிகளுக்கே உகந்தன. நடைமுறை உலகின் பிரச்சினைகளுக்குத் தீர்வுகாண அவற் ரூல் இயலாது. அதனுலேயே மனித உரிமைகள் உணர்வு சம்பந்தமாகவும், அவ ற் று க்கான போராட்டங்கள் சம்பந்தமாகவும், காந்தியபுசு
நாவல்கள் ஆளித்தரமானவையாய் அமைய வில்லே,
ஏறத்தாள அறுபதுகளிலே மனித உரிமைக் கான போராட்டநாவல்கள் பிரக்ஞை பூர்வமாக எழத்தொடங்கின எனலாம். தேசிய விடுதலை போராட்டங்களில் உள்முரண்பாடுகள் இருந்த போதும், அந்நியருக்கு எதிரான எ ழு ச் சியே மேலோங்கியிருந்தது. அந்நியர் ஆட்சியில் மாத் திரமின்றி நம் வேர் அரசி லும் நசுக்குவோரும் நசுக்கப்படுவோரும் என இரு பிரிவினர் இருப் பது பிரத்தியட்சமாகிறது. இதன் விளே வாக வர்க்க முரண் பாடுகள் கூர்மையடைந்து போராட்டங்கள் வெடிக்கின் றன. போராட்டங் கள், கீறல்கள் (1975) முதலிய நாவல்கள் &Tւք தப்படுதல் ஏதோ தற்செயல் நிகழ்ச்சியல்ல.
கீடந்த பத்துப் பதினேந்து ஆண்டுகளுக்குள் ளேயே நாவல் இலக்கியத் தில் அரசியல் "அங்கீ கரிக்கப்பட்ட பொருளாக வந்தமைந்துள்ளது. முற்பட்ட நாவல்களில் அரசியல் விலக்கி வைக் கப்பட்டது என்றே கூறுதல்வேண்டும். அரசியல் தத்துவங்களும், அத் தத்துவங்களினுல் செய லூக்கம்பெறும் பிராதன பாத்திரங்களும் சமீப காலத்து நாவல்களிலேயே அதிகமதிகமாக வாக்கம் பெறுகின்றன. இப்போக்கு மேலோங் கிவரும் சூழ்நிலையில் உள்ளுணர்வுப் போராட் டங்களில் அமிழ்ந்திருந்த பாத்திரங்களைப் படைத்துவந்த நாவலாசிரியர் சிலர் "அரசியல் நாவல்" எழுத முற்பட்டுள்ளமை கவனிக்கத்
11

Page 14
தக் கது. எங்கே போகிருேம், காந்தியத்தை அவர் வழிவந்த ஆட்சியாளரும், கட்சியினரும் கிைளிட்டமையைக் காட்டுவதாய் அமைந்தது. அதே பொதுக் கருத்தையே காந்தீயம் மங்கி மதிப்பிழந்து கிடக்கும் அவலத்தையே ராஜம் கிருஷ்ணன், வேருக்கு நீர் (1972) நாவலில் பொருளாக எடுத்துக்கொண்டிருக்கிருர், கல்கி யின் அலே ஓசை தொடக்கிவைத்த போக்கிற்கு இயைய இந்நாவலிலும் பாத்திரங்கள் தமிழ் நாட்டிற்கு வெளியே பிற மாநிலங்களுக்குப் போய்வருகின்றன. இதிலும் காந்தீய இலட்சி யத்திற்கு அமைய வாழ முயலும் பாத்திரமான Աւք 3): கம்யூனிஸ்ட் சுதீர், நனட முறை த் தேவைகளுக்கு ஏற்பக் கொள்கைகளே மாற்றி அமைத்துக்கொள்ளும் துரை முதலியோர் வரு கின்றனர். ஜெயகாந்தனின் ஜயஜயசங்கர இத் தொடர்பில் நினேவுகூரத்தக்கது. அரசிய ஃ) ஆன்மீகப்படுத்தும் முயற்சியாகவும், காந்திய ஆச்சிரம வாழ்க்கை முறைக்கும் புறவு லக இடைமுறைகளுக்கும் உள் ன பாரதூரமான வேறுபாட்டை அழுத்திக்காட்டுவதாகவும் இந் நாவல் அமைந்துள்ளது. நா. பார்த்தசாரதி யின் ஆத்மாவின் ராகங்கள், ர. சு. நல்ல பெரு மாளின் போராட்டங்கள். ராஜம் கிருஸ்ண னின் ரோஜா இதழ்கள் (1973) இந்திரா பார்த் தசாரதியின் குருதிப் புனல் (1975) முதலியன அடிப்படையில் காந்திய நிவேப்பாட்டிலிருந்தும் புரட்சிகர சக்திகளே நிராகரிக்கும் போக்கிலும் எழுதப்பட்டவை. ஏறத்தாழ இதே கால ப் பகுதியில் இலங்கையிலே செ. கணேசலிங்கம் போர்க்கோலம், மண்ணும் மக்களும், செவ் வானம்) பெனடிக்ற்பாலன் (சொந்தக்காரன்) அகஸ்தியர் (இருளினுள்ளே) சுதந்திரராஜா (மழைக்குறி) கே. டானியல் (பஞ்சமர், போரா வளிகள் காத்திருக்கின்றனர்) முதலியோர் எழு நிய நாவல்கள் ஒடுக்கப்பட்ட மக்களின் பல் வேறு எழுச்சிகளேயும் இயக்கங்களேயும் பொரு னாகவும் பின்னணியாகவும் கொண்டவை. இந் நாங்களிடையே அரசியல் கேம், தெளிவு, சு ஃல ந ப ம் என்பவற்றில் ஏற்றத் தாழ்வுகள் உண்டு. எனினும் அரசியஃப் முதன்மைப்படுத் திய அளவில் இவை ஒப்புடமையுடையன. தமிழ் நாட்டிலே இவற்றின் சரிநேர் படைப்புகளாக டி. செல்வராஜ் எழுதிய மலரும் சருகும் (1987) தேனீர், கு. சின்னப்பாரதியின் தாகம் (1975) பொன்னிஸ்னின் கரிசல் என்பன விதந்துரைக்க
12

வேண்டியன. அரசியல் அரங்கில் சாதிப் பாகு பாடு எவ்வாறெல்லாம் பிரச்சினையாயிருக்கிறது என்பதனே இலங்கையிலும் தமிழ் நாட்டிலும் நாவல்கள் அல்சியிருப்பது குறிப்பிடத்தக்கது.
தனிமனிதப் பிரச்சினேகளேயும் உள்ளுணர் வுப் போராட்டங்களையுமே முதன்மைப்படுத் திய நா வல்கள் காலப் போக்கிலே குறுகிய உலகில் சஞ்சரிக்கும் பாத்திரங்களேக் கொண்ட னவாய் அமைந்தன. உதாரணமாக ஜெயகாந் தனின் ஒரு நடிகை நாடகம் பார்க்கிருள் என் னும் நாவலில் மூன்று முக்கியமான பாத்திரங் களே பேருகின்றன. நடிகைக்கும் ரங்கனுக்கும் இடையிலான உறவே பிரதான விசயம் ஆணுல் அரசியல் நாவல்கள் அவ்வாறு இரண்டொரு பாத்திரங்களால் ஆக்கப்பட முடியாது. களம் பரந்து விரிவதைப்போல பாத்திரங்களும் பல தரப்பட்டவர்களாய் இருக்கவேண்டிய தேவை 2.ண்டு. மலரும் சருகும், குருதிப்புனல் முதலிய நாவல்களில் பல்வேறு பொருளாதார, க வா சார ஆய்வறிவு நிலேயிலுள்ள மாந்தர் இடம் பெறுவதைக் கவனிக்கலாம். அத்தகையோரு டைய மோதல்களும் முரண்பாடுகளுமே நாவ லுக்கு உந்து சக்தியாய் விளங்குகின்றன. பல தரப்பட்ட பாத்திரங்களேப் படைத்தல் நாவ லாசிரியனுக்கு மாபெரும் சவாலாக அமைத்து விடுகிறது. சமுகத்தில் பரந்துவியாபித்திருக்கும் பாத்திரங்களே உயிர்த் துடிப்புடன் உருவாக்கு வதிலேயே நாவலிசிரியனுடைய ஆற்ற லும் ஆளுமையும் வெளிப்படுகின்றன. வரலாற்று அடிப்படையில் நோக்கும் பொழுது கடந்த சில தளபாப்தங்களால் பொதுவாகி இந்தியாவிலும் குறிப்பாகத் தமிழ் நாட்டிலும் உருவாகி வந் துள்ள முதலாளித்துவ வளர்ச்சியின் சிற்சி ல அம்சங்களே, அவை கூர்மையடைந்து வரும் கடந்த பத் துப் பதினேந்து வருடச் சூழ்நிஃபயில் நாவலாசிரியர்கள் அறிந்தும் அறியாமலும் பிர திட விக்கின்றனர் என்பது போருத்தமாகும் இப்போது வரலாற்றுப் போக்கு இருவகையாக நாவல்களில் எதிரொலிக்கிறது. ஒ ஃ து தனி மனித முயற்சியாலும் அரசாங்க நடவடிக்கை களினுலும் கி ரா மங்களும்-நாட்டுப்புறமும் நவீன கைத்தொழில் வளர்ச்சிக்கு உட்பட்டு வருகின்றனர். அமைதியாக இருத்த கிராமங்க ளும், வயல்வெளிகளும், குளங்களும் அடியோடு மாறிப்போய் விடுகின்றன. இதனடியாகத்

Page 15
மீண்டு மொருமுறை.
அரசன் எவ்வழி குடிகள் அவ்வழியென
முரசொலித்த புரவலர் வாக்கினே
சிரமேற் கொண்டு சிம்மாசன(ம்) மேறிய
பரம்பரை மன்னரின் பழக்க "தோசங்கள்"
மீண்டு மொருமுறை மீட்கப் படுகின்றன.
இருபதாம் நூற்றண்டில் இறுதி அத்தியாயத் ներ
இளசுகள் நாமென இறுமாந்திருக்கையிலே இழப்புகள் நிதமெனம வாட்டுவதனுல் வீரம்செறிந்த போராட்ட உணர்வுகள் மீண்டுமொருமுறை மீட்கப் படுகின்றன.
来
ஏர் பூட்டி அவனுழுதால் தரணியெல்லாம் வேர்விட்டு விழுதெறியும் . . என் ஊர்கூட்டி குத்து விளக்கேற்றி பேர் விழைச்சல் பெருகுமென்ற தத்துவார்த்தம் மீண்டுமொருமுறை மீட்கப் படுகின்றன.
al
புள்ளபடியால் பெரும்புள்ளியானுேர்!- கூப்பன் புள்ளினையித் தள்ளிவைத்து மக்களிடம் துள்ளி விளேயாடும் அனர்த்தங்களால் துள்ளியெழுத்த எழுச்சி நாள் மீண்டுமொருமுறை மீட்கப் படுகின்றன.
வரலாற்றுச் சக்கரத்தின் இறுதிக்கம்பம் ம்ருவி வருவதனே! மக்கள் விழிப்புறுவதினே பழங்கதை பேசி பாரினே ஏற்பவர்கள் நம்ப மறுப்பதனுல் வர்க்க உணர்வுகள் மீண்டு மொரு முன்ற மீட்கப் படுகின்றன.
- இதயராசா

தோன்றும் மாற்றங்கள் மாந்தர் வாழ்க்கையில் உண்டாகும் ஏற்ற இறக்கங்கள். சலனங்கள் என்பன நாவலுக்குகந்த பொருளாகக் கருதப் படுகின்றன. அண்மைக் காலத்தில் வெளிவந்த சில நாவல்களே உதாரண விளக்கத்துக்காக இங்குகூறலாம். சா. கந்தசாமியின் சாயாவனம் (1989) சுந்தரராமசாமியின் ஒரு புளியமரத்தின் கதை (1986) த. சுப்பிரமணியத்தின் வேரும் விழுதும் (1970) க. அருள்சுப்பிரமணியத்தின் அவர்களுக்கு வயது வந்துவிட்டது (1973) முத லியவற்றில் இயற்கையும் மனிதரும் மாற்றம டைதல் சித்தரிக்கப்படுகின்றது.
விஷயங்கள் மரபுவழி நடைபெருமல் புதிய சம்பவங்களும் வாழ்க்கை முறைகளும் சமுதா யத்திற் பரவலாகக் காணப்படுன்கயில் கால ஒட்டமும் கால மாற்றமும் துவக்க மா ப்த் தோன்ற ஆரம்பிக்கின்றன. சமீபத்து நாவல்கள் சிலவற்றில் காலஉணர்வு வெவ்வேறு வகைகளிற் புலப்படுகிறது. நீலபத்மனுபன் எழுதிய தலேமு நைக்ள் (1968) பள்ளி கொண்டபுரம் (1970) இந்திரா பார்த்தசாரதியின் கால வெள்ளம் ஹெப்சிபா ஜேசுதாசனின் புத்தம்வீடு (1984) முதலியன. காலவெள்ளத்தில் சிற்சில குடும்பங் கள் சிதைவுறுவதைச் சித்தரிப்பதன் மூலமும் தஃமுறைகளுக்குள்ள வேறுபாடுகளே விபரிப்பு தன் மூலமும், சரித்திர ஓட்டத்தின் ஒரு பகு தி  ைய இலக்கியத்தில் தேக்க முற்படுகின்றன. நேரடியாகவும் மறைமுகமாகவும் கால உணர்வு இத்தகைய நாவல்களில் கூறப்படுகின்றது.
இந்திய சுதந்திரப் போராட்டம், இரண் டாவது உலகப் போர் முதலிய நிகழ்ச்சிகளில் பங்குபற்றும் பாத்திரத்தை மையமாக வைத்து எம். எஸ். கல்யாணசுந்தரம் எழுதிய இருபது வருஷங்கள் (1965) பல வழிகளில் நினைத்துக் கொள்ளவேண்டிய ஒரு படைப்பாகும். அயல் நாடுகளின் தொடர்பை ஆதாரமாகக்கொண்டு இரண்டாவது உலக யுத்தத்தின் பணிகப்புலத் தில் சுவையான இரு நாவல்களே எழுதியிருக் கிருர் ப. சிங்காரம் கடலுக்கு அப்பால்(1963) புயலிலே ஒரு தோணி ஆகியன தமிழுக்குப் புதிய அனுபவங்களே அறிமுகப்படுத்தியுள்ளன. ஈழத்தில் செ. கணேசலிங்கனின் நீண்டபயணம் வரலாற்றுணர்வுடன் எழுதப்பட்டதெனலாம்.
அண்மைக் காலத்தில் சிற்சில புதிய போக் குகளே ஐயத்துக்கு இடமின்றிப் பிரதிபலிக்கும்
13

Page 16
தமிழ் நாவலிலக்கிய உலகம் இருதுருவங்களாக பிளவுபட்டுக் கிடக்கிறது. அதீத தனிமனித நாவல்கள் ஒருபுறம், வேகம் பெற்றுவ்ரும் சமு தாய சக்திகளேக் கூட்டாக எடுத்துக் காட்டும் நாவல்கள் மறுபுறம். இவை ஒன்றுக்கொன்று முரண்படுவனவ்ே. ஆயினும் நாவலிலக்கியம் தனிமனிதரையும் சமூக இயக் கங்களே யும் இஃனக்சுவல்லது.
மொழிபெயர்ப்பு நாவல்களும் போராட்ட உணர்விற்கு உணவாயமைந்தன. காட்டாக நிரஞ்சனுவின் நினேவுகள் அழிவதில்லே குறிப் பிட வேண்டியது.
கவிதையிலும், நாவலிலும், நாடகத்திலும் ஏற்பட்டுவரும் இம்மாற்றங்கள் எமது எழுத் தாளருக்கு அடிப்படையான சவாலே முன்வ்ைத் துள்ளன. பழைமை, புதுமை என்ற முரண் பாட்டில் முகிழ்ந்தெழுந்த நாவ விலக்கியம் நூருண்டு வளர்ச்சியின்போது உள்ளடக்கத்தில்
"கலேயும் இலக்கியமும் மக்களின் மனுேபாவத் தால் நிர்ணயிக்கப்படுகின்றன. அந்த மக்கள் வாழ்கின்ற சூழ்நிலைதான் அவர்களின் மனுேபா வத்தை உருவாக்குகிறது; இந்தச் சூழ்நிலையை நிர்ணயிப்பது எது? இறுதியாக ஆராயும்போது மக்களின் சூழ்நில உற்பத்தி சக்திகளின் தரத் தாலும், உற்பத்தி உறவுகளின் தன்மையாலு.ே நிச்சயிக்கப்படுகிறது".
- முகவரியிடப்படாத கடிதங்கள் - பிளகானுேப்
பல மாற்றங்களேயும் கண்டுள்ளது. மத்தியதர வர்க்கத்துப் பாத்திரங்களேயே பெரும்பாலும் படைத்தளித்துவந்த நாவலாசிரியர்கள் விவசா பிகளேயும் வாழ்வுவேண்டித் துடிக்கும் வேறுபல ரையும் பாத்திரங்களாக்க முற்பட்டுள்ளனர். இவர்களேயெல்லாம் மெய்மை குன்ருத உயிர்ச் சித்திரங்களாக வடித்தல் இலகுவான காரிய மன்று. பழையமரபு இங்கு உதவிக்கு வராது. எனவே இம்முயற்சிகளினூடாகவே நம் காலத் துக்கு உகந்த அழகியலேயும் சிருஷ்டி க்கு ம் மாபெரும் பொறுப்பு இவ் எழுத்தாளர்களுக்கு இருக்கிறது. மனித உரிமைகளின் தன்மையை யும், போராட்டங்களின் ஊற்றுக்களேயும் எவ் வளவுதூரம் உன்நின்று உணர்ந்துகொள்கின்ற னர் என்பதைப் பொறுத்தே அவற்றை அழகி யல் அடிப்படையில் ஆக்கும் சக்தியும் அவர்க ளூக்கு வந்து அம்ை யு ம். அப்பொழுதுதான் உலக நாவல் இலக்கிய வரிசையில் தமிழ் நாவல் களுக்கும் உரிய இடம் கிடைக்கும்.
14

பலஸ்தீனக் கவிதை
நான் பிரகடினம் செய்கிறேன்
- மஹ்மூட் தர்வீஸ்
எனது நாட்டில் ஒருசாண் நிலம் எஞ்சியிருக்கும் வரை என்னிடம் ஒரு ஒலிவமரம் எஞ்சியிருக்கும் வரை ஒரு எலுமிச்சை மரம் - ஒரு கிணறு - ஒரு சப்பாத்திக்கள்ளி எஞ்சியிருக்கும் வரை
ஒரு சிறு நினேவு
ஒரு சிறு நூலகம் ஒரு பாட்டனின் புகைப்படம் - ஒரு சுவர் எஞ்சியிருக்கும் வரை
அரபுசொற்கள் உச்சரிக்கப்படும் வரை நாட்டுப் பாடல்கள் பாடப்படும்வரை கவிஞர்கள் அந்தர் - அல் - அப்ஸ் கதைகள் பாரசீகத்துக்கும் ரோமுக்கும் எதிரான யுத்த காவியங்கள் எனது நாட்டில் இருக்கும்வரை
எனது கண்கள் இருக்கும்வரை உதடுகள், கைகள் எனது தன்னுணர்வு இருக்கும்வரை விடுதலேக்கான பயங்கரப் போரை எதிரியின் எதிரில் நான் பிரகடனம் செய்வேன் சுதந்திரமான மனிதர்கள் பெயரால் தொழிலாளர்கள்- மானவர்கள் - கவிஞர்கள் நான் பிரகடனம் செய்வேன் (பெயரால்
கோழைகள் சூரியனின் எதிரிகள் அவமான ரொட்டியால் ஊதிப் புடைக்கட்டும் நான்வாழும் வரை எனது சொற்களும் வாழும் சுதந்திரப் போராளிகளின் கைகளில் ரொட்டியாயும் ஆயுதமாயும் என்றும் இருக்கும்.
தமிழில் - எம். ஏ. நுஃமான்

Page 17
இரு கவிதைகள்
விரியுது ஒரு பாதை . . .
காற்றிற்சங்கூதும்
பனேகள் மிதந்தோடும் பறவைகளின் ஓசை
அதன் நடுவே,
தனியாக
நெளிந்தபடி
பாதை தொடரும்
பரந்திருக்கும் புல்வெளியின் பாய்விரிப்பை வகிடெடுத்த ஒற்றையடிப்பாதை இது
நெளிந்தபடி நெளிந்தபடி தொடர்ந்தேகும்
மழையோடும் வெய்யிலோடும் மேனி, தோய்ந்திட்ட கதையெல்லாம் பறந்தோடி புதிய சிலர்
அங்கே, மேனி தொட்டனர்
செவ்வான் சிதறி பிறந்த அதிகாலேப் போதில், கரங்கள் கணக்க வயல் நோக்கி நீண்டபயணம்

- பாலசூரியன்
தொடர்ந்தும் நீளும் பகலில் வெப்பிலோடு தொடரும் உழைப்பு என்றும்,
பொன்மேனிப் புலரல் କTଙ୍ଗtwortå! -
FFiჯrill மதஃயில் கரம் கனக்சு ப8ண்டும் பயணம் குடில் நோக்கி
புல்வெளியில்
புதிதாய் சில சுவடு தொடர்ந்து பின், பலப்பலவாய் தொடர
காஃள சுமை இழுக்கும் தோளில் ஏர்கனக்கும் வரிசையென எந்நாளும் பனேயூடே நடைபழகும் மனிதர்கள்
இவ்வாறு மீண்டும் தொடரும்: தொடர்கையில் கனக்கும்
சுவட்டின் பதிவு
பனேயூடே
கனக்கும்
சுவட்டின் பதிவு
தொடர்ந்தபடி தரிைக்குது ஒருபாதை புல்வெளிப் பரப்பில் வகிடுபிரித்து புதிய ஜனனம் பண்வெளிக்குள்
ஒருபாதை -
15

Page 18
விழித்திருக்கிறேன் . .
சிறகடித்த சேவலொன்று கூவும் நிசப்தத்தை கலேத்து ஒரு ஆந்தை அலறி அடிமனதில் அச்சம் உருவெடுத்து விரிய நிர்மல வானின் நிலவொளி முகட்டோரம் கசியும்
கருவிழியில்
கசிந்து காய்ந்து படர்ந்தஉப்பை
நனத்து,
நனத்து,
கசிந்த துளிகள் தொடர்ந்து
உப்பாய்
LJL-[''L''' LJL-T நான் விழிதிறந்து வரவுக்காய் தேக்கிய நினைவை
தேடிப் போகிறேன்
கரந்தொட்ட அன்றிலிருந்து இடையில், கோபம் முளேக்கையில் வெகுண்டெழுவாய் பின், அடங்கிவிடுவாப்
நேற்றும்
வெகுண்டாய் சீறினுய் மாருக -
பிரிந்து, என்ஃனப் பிரிந்து தொலைதுாரம் சென்றதை பார்த்திருந்தேன் இப்போ காத்திருக்கிறேன்
16

நீளும் இருளில், அலேந்து அலேந்து எண்ணெய் தீர பிழம்பு மறைந்து திரியின் நுனியில் சிவப்பாய்க் கனலும் குப்பி விளக்கு என்னேப் பார்த்து சொந்தம் கூறும்
முற்றத்தில், திடுமென ஓர் ஆள்காட்டி வீரிட்டுக் கத்தும்,
ந்தெழுவேன் 蠶 கூந்தலே நீவி தொஃவை நோக்க, நிலவு சிரிக்கும் இருள் ஊரும்
பூண் அடுப்பைப் பிராண்டும் சிரசைத்து, நிலவு
foL ஆயர் பூக்க இருள் கலேயும் கிழக்கே வாய்ைப் பிளக்கும் விழிகள், தரம் வற்றி திறந்திருக்கும்.
இலக்கியத்தில் உள்ளடக்கத்தைவிட உருவத் திற்கு முக்கியத்துவம் கொடுக்கும் முதலாளி: துவத்தின் கொள்கையானது அதன் அரசி கொள்கையின் நடைமுறையின் ஒர் பிரயோக மென்றே கொள்ள வேண்டும். முதலாளித்துவ ஆளும் வர்க்கம் தன் சுரண்டல் அதிகரிக்கும் போதெல்லாம்; அடக்குமுறையைக் கட்ட விழ்த் துவிடும் போதெல்லாம்; அரசியல் அமைப்பின் ஜனநாயகத்தைப் பாதுகாப்பதற்காக என்ற போர்வையில் அதன் அடக்குமுறையைச் செய் கிறது. இலக்கியத்தில் இதி" உருவவாதமாக உருவெடுக்கிறது.
- ஆக்க இலக்கியமும் அழகியலும் என் சண்முகரத்தினம்

Page 19
புரட்சி காலத்து இலக்கியம்
தமிழில் கோ. கேதாரநாதன்
இன்று இங்கு "புரட்சிக் காலத்து-இலக் கியம் என்னும் பொருளில் சிற்றுரை ஆற்ற வந்துள்ளேன். இந்தக் கல்லூரி என்னைப் பல தடவைகள் உரையாற்ற அழைத்திருந்த போதி லும் நானே இதனே ஒத்திப்போட்டும் வந்துள் ளேன். எதற்காக? நான் சில சிறுகதைகள எழுதியிருக்கிறேன் என்றும் -இலக்கியம் பற்றி என்னிடத்திலிருந்து ஏசாவது கேட்க விரும்பி யுமே அழைத்ததாக நம்புகிறேன். உண்மையில் நான் அத் த ைகய சிறுகதையாசிரியனுமல்ல அதைப்பற்றிய விசேட அறிவும் எனக்கில்ஃ. நான் பு தலாவதாக சிரத்தையோடு சுற்று க் கொண்டது சுரங்கத்தொழில் பற்றியேயாகும். எனவே இலக்கியத் ைசுவிட கரிச்சுரங்கம் அகழ் தலைப்பற்றிய சிறந்த உரையை என்னுல் வழங்க பூழியு' என நான் கருதுகின்றேன். உண்மை யில் இலக்கிய விருப்பின் கீாரணமாகத்தான் நான் சுரிை சம T ரை அளவு வாசித்துள்ளேன். ஆணுல் உங்களுக்குப் பயன்படத்தக்கதான எத னேயும் நான் அந்த வாசிப்பி விருந்து கற்றுக் கொள்ளவில்லே. அண்மைக் காலங்களில் க்ர்ெ நகரில் எனது அனுபவங்கள் நான் வளர்ந்து வந்த பழைய இலக்கிய கோட்பாடுகளின் மீதான எனது நம்பிக்கையை படிப்படியாக சிதைத்தே வந்துள்ளன. இது எப்போதெனில் மாணவர் கள் சுடப்பட்டு இறந்கபோதும் கடுமையான தணிக்கைகள் அமுலிலிருந்தபோதும் இலக்கியத் தைப்பற்றிப் பேசுபவர்கள் மிகவும் பலவின் மான- எதற்கும் லாயக்கற்றவர்களேயென என க்குப் படுகிறது. உறுதியானவர்கள் பேசுவ தில்லே அவர்கள் போராடுவார்கள். நசுக்கப்ப டுபவர்கள் சிலவார்த்தைகளே எழுதவோ பேச வோ கூடும் அதன் விளேவாக அவர்கள் உயிரி ழக்கவும் கூடும். அவர்கள் பிழைக்கக் கூடிய அதிர்ஷ்டசாலிகளாக இருந்தால் அவர்கள் செய் யக் கூடியதெல்லாம் உரக்கச் சித்தமிடுதலோ அல்லது கண்டனம் செய்வதோதான். அதே
வேளை பலம் வாய்ந்தவர்கள் அவர்களே தகிக்கிய
வாறும் மோசமாக நடத்தியவாறும், கொன் ,נח
வண்னமும் இருக்கிருர்கள். அப்படியானுல்
இந்த மக்களுக்கு இலக்கியத்தால் ஏ ற்படும் நன் மைதான் என்ன?

எப்படியிருந்தபோதிலும் இன்றைய புரட் சிக் காலகட்டத்து எழுத்தாளர்கள் இலக்கியம் புரட்சியில் பெரும்பங்கினே வகிக்கமுடியுமென்று கருதுகிருர்கள். ஆணுல் எனக்கு இவ்வகை இலக் கியங்களில் வீரியம் இருப்பதில்லையென்றே படு கின்றது.
புரட்சிக்கு புரட்சிவாதிகளே தேவை. புரட்சி இலக்கியங்கள் தாமதித்தும் வரலாம். ஏனெ னில் புரட்சிவாதிகள் எழுத ஆரம்பிக்கும்போது தான் புரட்சி இலக்கியங்கள் உருவாகின்றன. என்னைப் பொறுத்தமட்டில் புரட்சிதான் இலக் கியத்தில் பாரிய பங்கின வகித்த சிடியும், புரட் சிக்ர காலத்து இலக்கியம் என்பது சாதாரண காலகட்டத்தின் இலக்கியங்களி லிருந்து வேறு பட்டனவே. புரட்சியின்போது இலக்கியங்களும் மாறுதல்களுக்குள்ளாகின்றன. ←﷽ ካd}&ቪ] [ Jrr ዘፃሠሠ புரட்சிகளே இவ்வாறு மாற்றங்களக் கொண்டு வர வல்லது. சிறுசிறு கிளர்ச்சிகளால் இத்த கைய மாற்றங்கள் சாத்தியமில்ஆ.
புரட்சி என்ற பதத்தை இங்குள்ள ஒவ்வொ து வரும் கேட்டுப் பழக்கப்பட்டிருக்கிறீர்கள். ஆணுல் இதே பதத்தை கியாங்கு அல்லது செக் கியாங்கில் பாவித்தீர்களானுல் நீங்கள் மக்கஃா பயமுறுத்தியவர்களாவீர்கள். புரட்சி என்பது ஒன்றும் வினுேதமானதல்ல: சிசிலசமுகமாற்றங் றங்களும் புரட்சியிலிருந்தே பிறக்கின்றன. இவ் வகையிலேயே மனுக்குலம் மெதுவாக வளர்ச்சி யடைந்து காட்டுமிராண்டி நிலேயிலிருந்து நாக ரிசு நிலேக்கு தன்னை உயர்த்திக் கொள்ளக் கூடிய தாகஇருந்தது. இறக்குந் தறுவாயிலில்லாத சகல
இனங்க ளு ம் ஒவ்வொரு நாளும் கிளர்ந்து கொண்டேயிருக்கின்றன. 岛
மாபெரும் புரட்சிகள் இலக்கியத்தில் எத்த கைய தாக்கத்தை ஏற்படுத்துகின்றன: இதை மூன்று காலகட்டங்களா? குெக்கிாைம்.
ஒரு மாபெரும் புரட்சிக்குமுன் இலக்கியங் கள் சமூக நிலேமைகளின் மீதான கிரிவித்தை பும், அதிருப்தியையும் வெளிப்படுத்தி வேதனைக் குரல் எழுப்புகின்றன. Di A55DAFI, பரிடப்புகள் உலகம் முழுவதும் நிறைய இருக்கின்றன இவற் முல் புரட்சிக்கு எதுவித நன்மையுமில்லே. வெறு மனே முறையீடுகளோ அல்லது புலம்பலோப னற்றவை. உங்களே அடக்கி நிசுக்குபவன் இவற் பிறப் பொருட்படுத்தப் போவதில்&ல. புலம்பல்
7

Page 20
இலக்கியங்கள் ஒருவனுடைய முனகலேயும் விரக் தியையும் வெளிப்படுத்தும் அகே வே&ளகளில் அடக்கி நசுக்குபவர்களுக்கு வேண்டியபாது காப்பையும் வழங்கிவிடுகின்றன. சிலதேசங்கள் இத்தகைய புலம்பல்கள் பயனற்றன என்று கண்டபோது அதற்கு முற்றுப் புள்ளி வைத்து விட்டன. மேலும் மேலும் வீழ்ச்சியைத் தழுவு கின்ற இந்நாடுகள் மெளனமான தேசங்களாக மாறுகின்றன. புரட்சியின் குரல்கள் ஓய்ந்து போன எகிப்து, அரேபியா, பாரசீகம், இந்தியா போன்ற நாடுகள் இதற்கு நல்ல சாட்சிகள் ஆணுல் உள்ளார்ந்த வீறுகொண்ட வேறுநாடு களோ புலம்ப&லக் கைவிட்டுப் போராடத் துணி கின்றன. யதார்த்த நிலேளே நேருக்கு நேர் எதிர்கொள்கின்றன. முனகல் கோபாக்கினியாக மாறுகின்றது. இத்தகைய இலக்கியங்களின் வரு கையே புரட்சிகர மாற்றங்களுக்கு சுட்டிய ங் கூறுகின்றன. புரட்சிக்கு சற்று முந்திய இலக் கியங்கள் மக்களின் கோபாவேசத்தையும் மாற் றத்தை வேண்டிநிற்கும் உறுதிப் பாட்டையும் வெளிப்படுத்துங்கின்றன. இத்தகைய இலக்கியங் கள்தான் ஒக்டோபர் புரட்சிக்கு விடிவெள்ளிக ளாக மலர்ந்தன. இதற்கு விதிவிலக்குகளும் இல் லாமவில்லை. வஞ்சம் தீர்க்கவேண்டுமென்ற இத் தகைய இலக்கியத்திற்கு போலந்தில் நீண்ட பாரம்பரியம் இருந்தபோதும் அதனுடைய மீட் சிக்கு முதலாவது உலகப் போரே வித்திட்டது என இTம்,
2. ஒரு பாரிய புரட்சி நிகழ்ந்துகொண்டிருக் கும் வே&ளயில் இலக்கியம் பின்தள்ளப்பட்டுவிடு கிறது. புரட்சி அலே வீறுகொள்கிறது. வெறும் கூச்சல்கள் செயல்களாக மாறுகின்றன. மக்கள் புரட்சியை முழுமைப்படுத்துவதில் மூழ்கிப்போ கிருர்கள். வறுமை தலைவிரித்தாடும் போது இலக்கியம் பற்றிப் பேச மக்களுக்கு அவகாசம் இருப்பதில்லை. பழமை வாதிகளும் புரட்சியின் வீச்சினுல் அதிர்ச்சியடைந்து நிலகுலைந்துவிடு வார்கள். "வறுமை எங்கிருக்கிறதோ அங்கி ருந்தே இலக்கியங்கள் பிறக்கும்’ என்பது சிலர் கூற்ருகும். இது ஒரு தவருன கருத்தாகும். ஏழ் மையில் எழுத முடிவதில்லை. எனக்கு பணக்கஷ் டம் ஏற்படும் போதெல்லாம் கடன் கேட்டுப் பீக்கிங் நகர வீதிகளைச் சுற்றித் திரிந்திருக்கின் றேனே தவிர், ஒரு சொல்கூட எழுதவில்லே. சுமையைக் காவிச் செல்பவனும், ரிக்ஷோ வண்
8

டியிழுப்பவனும் இலக்கியம் எழுத வேண்டுமெ ரில் அவர்களுடைய சுமைகளே முதலில் இறக்கி வைக்கவேண்டும். புரட்சியும் இத்தகையதே. அதிகார வர்க்கத்தினரோடு மக்கள் போராடிக் கொண்டிருக்கும் சமயத்தில் நில்பெற்றுள்ள சமூக அமைப்பை மாற்றுவதே முதன்மைபெறு கிறது. எழுதுவதற்கான அவகாசமோ அன்றி முன்ப்போ இருப்பதில்லை. இதனுல்தான் இலக் கியம் புரட்சிக் காலகட்டத்தில் தற்காலிக மெளனத்தில் ஆழ்ந்துவிடுகிறது.
3. புரட்சி வெற்றியடைந்த பின் நிலேமை ஒரளவு சுமுகமடைந்து மக்கள் நலம் பெறுகின் றனர். இலக்கியம் மீண்டும் எழுதப்படுகிறது. இக்காலகட்ட இலக்கியங்கள் இரு வகையாக அமைகின்றன. ஒன்று புரட்சியில்திளேத்து புகழ் பாடுவது. ஏனெனில் சமூகத்தின் மாறுதல்களி ஞலும் முன்னேற்றங்களினுலும், பனி ழய அமைப்பின் சிதைவாலும், புதிய அமைப்பின் நிர்மானத்தினுலும் முற்போக்கு எழுத்தாளர் கள் ஈர்க்கப்படுகின்றனர். இண்டாவது வகை பழைய சமூக அமைப்பின் சிதைவிற்காக - கழி விரக்கம் கொண்டு புலம்புவது. புரட்சி ஏற்பட் டபோதும், நீண்ட காலமாகவே பழைய மரபு களிலும், சிந்தனைகளிலும் ஊறியவர்கள். திடீ. ரென மாறிவிடுவார்கள் என்று கூறமுடியாது. அவர்களுடைய சூழல் படிப்படியாகி மாறி அவர்களுடைய வாழ்க்கைப் போக்கையும் மாற் றத்திற்கு உள்ளாக்குகிறது. இதனுல் விரக்தி புற்று கடந்தகால வாழ்க்கை நிலையை நினைவு கூர்ந்து தங்கள் இயலாமையையும் முணுமுணுப் பையும் காலத்திற்கு ஒவ்வாத புலம்பல் இலக்கி பங்களாக வடிக்கிருரர்கள். இவ்வகையான இலக் இயங்கள் ஒரே பிரலாபங்களாகவும் புதியமாற் றத்தைச சகித்துக்கொள்ளாததன் வெளிப்பாடு களாகவும் இருக்கும். இவையே புரட்சி நடந்து முடிந்திருப்பதற்கான நிலமையைத் தெரிவிக் கின்றன.
இத்தகைய இரு வகை இலக்கியங்களும்
இன்று சீனுவிலில்லே. எனவே சீனப்புரட்சி இன் னும் முழுமையடையவில்லை. இது ஒரு மாறும் காலகட்டமேயாகும். புரட்சியாளர்கள் தீவிர மாகச் செயற்பட வேண்டிய நேரமிது. பழைய இலக்கியங்கள் இன்னும் நிறையவே எஞ்சியுள் ளன. இன்று பத்திரிகைகளில் வெளிவருவனவும்

Page 21
பழைய இலக்கியங்களே அடியொற் நியே எழு தப்படுகின்றன. சீனப் புரட்சி எமது சமூகத்தில் மிக்க் குறைவான மாறுதல்களையே ஏற்படுத்தி யுள்ளது. பழமைவாதிகளின் சிந்தனைகள் எது வித பாதிப்பிற்கும் உள்ளாகவில்லை. "கான்ரன்" பத்திரிகைளில் நாம் காணும் எழுத்துக்கள் இன் னும் பழைய பாணியிலமைந்திருப்பது எதனைக் காட்டுகிறதெனில், புரட்சி அலைகள் இன்னும் எமது சமூகத்தை தழுவிச் செல்லவில்லே என்ப தையே. புதுமையைப் பாடும் இலக்கியங்களோ அல்லது, பழமைக்காக ஏங்கும் இவக்கியங் களோ வெளிவரவில்லை. "குவாங்டங் மாநில மும் பத்து ஆண்டுகளுக்கு முன் எப்படியிருந் ததோ அவ்வாறே இப்பொழுதும் காட்சி தருகி றது. இதுமட்டுமல்ல - கிளர்ச்சிகனோ, ஆர்ப் உட்களோ ஒன்றும் நிகழவில்லை. ெ தாழிற் சங்கங்கள் ஆர்ப்பாட்டங்கள் நடத்தியபோதும் அவற்றை அரசாங்கத்தின் அனுமதி பெற்றே தான் செய்கின்றன. அட க்கு முறைக்கு எதி ரான கிளர்ச்சியல்ல இது. அரசின் அனுமதி யோடு நடக்கும் புரட்சி இது. சீனு இன்னும் மாறவில்லை. ஆகலால்தான் கடந்த காலத்திற்கு ஏங்கும் இலக்கியங்களோ, புரட்சியைப் போற் றும் புதுமை இலக்கியங்களோ இன்று இல்லே. ஆனுல் சோவியத் ரஷ்யாவில் இவ்வகை இலக்கி யங்கள் உண்டென்றே கூறவேண்டும். ஏனெ வில் வெளிநாடுகளுக்கு ஒளித்தோடிச் சென்ற பழைய ரஷ்ய எழுத்தாளர்கள் அங்கிருந்து கொண்டு பெரும்பாலும் கடந்தகால வாழ்வுக்கு ஏங்கும் இலக்கியங்களேயே படைக்கும் அதேநே ரத்தில் புதிய இலக்கியங்கள் அங்கு தலையெடுக்க முனைகின்றன. உன்னதமான படைப்புகள் இன்னும் வெளிவராவிடி னும், புதிய இலக்கியங் களின் எண்ணிக்கை கணிசமான அளவு பெருகி யேயுள்ளன. முழுமையான புரட்சிக்குப் பிறகே முற்றிலும் புதிய நிர்மாணிப்பைப் புகழுவார் கள். இருந்தும் இதற்குப் பிறகு என்ன நிகழு மென்று சொல்ல முடியாது. புரட்சியினுல் முயூ உலகும் மக்களுக்குச் சொந்தமாகிறபடியால் மக்கள் இலக்கியம் மலருமென்று நான் நிரே!
கிறேன்.
இன்று சில எழுத்தாளர்கள் தொழிலாள் களேயும், விவசாயிகளையும் தங்களுடைய நாவல் களுக்கும், கவிதைகளுக்கும் உரிய மாந்தர்கள் கப் படைக்கிருர்கள். இவை மக்கள் இலக்கி

மென்றும் அழைக்கப்படுகின்றன. உண்மையில் இவை அவ்வாறில்லை. மக்கள் தங்கள் வாயைத் திறந்து இன்னும் ஒன்றையும் வெளியிடவில்ஃ. இவ்வகைப் படைப்புகள் பார்வையாளர்களது உணர்வு நிலையையே சித்தரிக்கின்றன. எங்களு டைய எழுத்தாளர்களிற் சிலர் ஏழைகளாக இருந்தபோதிலும் அவர்கள் ெ தாழிலாளர்களே யும் விவசாயிகளேயும்விட வசதிபடைத்தவர்க ளாவே இருக்கிருர்கள். அவர்களுடைய படைப் புக்கள் மக்களிடமிருந்து வருவதுபோல் தோற் றினுலும் உண்மையில் அவை அவ்வாறில்லை. அவை சாமானியர்களது உண்மையான கதைக ளல்ல. இன்று சில எழுத்தாளர்கள் நாட்டுப் பாடல்களே பொதுமக்களின் இதயத்திலிருந்து வருவன என்று கூறிப் பதிவுசெய்ய முற்பட்டுள் னார்கள். எது எவ்வாறிருப்பினும் பழைய இலக்கியங்களின் மறைமுகமான பிடிப்புகளிலி ருந்தும் அவற்றின் உள்ளார்ந்த நம்பிக்கைகளி லிருந்தும் அவர்கள் இன்னும் விடுபடவில்லை. ஏனென்ருல் மூவாயிரம் ஏக்கர் நிலப் பரப்புக் கொண்ட நிலவுடமையாளன்மீது வைத்திருக் கும் எல்லேயில்லா பிரமிப்பு நீங்கவில்லே. இதை விட அந்தக் கனவானுடைய கருத் துகளேயே தம் முடையனவாகக் கூறும் போக்கும் மாற் வில்ஃ. நாட்டுப் பாடல்களினுடைய உருவமும் அவற் றினுடைய உள்ளடக்கமும் சீரழிவுற்றனவாயே இருக்கின்றன. இத்தகைய படைப்புகளே உண் மையான மக்கள் இலக்கியம் என்று சொல்ல முடியாது. இங்கு கவிதை, புனேகதை போன் றன வேறுநாடுகளைப்போல் நன்ருக ஆளரவில்லே என்றே சொல்ல வேண்டியுள்ளது. இவற்றை இலக்கியங்கள் என்று அழைத்தாலும், புரட்சி கரகாலத்து இலக்கியமென்ருே அல்லது மக்கள் இலக்கியமென்ருே கூறமுடியாது. இன்றைய எழுத்தாளர்கள் எல்லோரும் கல்வியறிவுள்ள வர்கள். தொழிலாளர்களும், விவசாயிகளும் பூரண விடுதலே பெறும்வரை இலக்கி பவாதிக 2ளப் போன்றே சிந்திப்பார்கள். உண்மையான விடுதலை உழைக்கும் வர்க்கத்தினருக்கு என்று சாத்தியமோ, அதற்குப்பிறகே உண்மையான மக்கள் இலக்கியம் தோன்றும். இதனுல்தான் "எங்களிடம் இப்பவே மக்கள் இலக்கியம் இருக் இன்றது" என்று சொல்லுதல் தவருகும்.
19

Page 22
நீங்கள் உண்மையான போராளிகள். புரட் சிக்காக போராடுகிறவர்கள். இலக்கியம் படிப் பதோ அன்றி நய்ப்பதோ போராடுவதற்கு துணைபோகாது. போர்முனைக் கவிதையொன் நினே நீங்கள் எழுதக்கூடும். நன்முக எழுதியி ருந்தால் போராடியதன் பின்பு நீங்கள் ஒய்வாக இருக்கும்பொழுது வாசித்தல் ஒருநல்ல அனுப வமே. சீனுவின் இன்றைய நிலையில் உண்மை யான புரட்சிப்போரே மிகமிக அவசியம். சன் சுவான்பாங் என்ற யுத்த பிரபுவை கவிதை பய முறுத்தவில்லே, துப்பாக்கி வேட்டே அவனே விரட்டியது. சிலர் இலக்கியம் புரட்சியில் பெரும் பாதிப்பையேற்படுத்தும் என்று நம்புகிருர்கள். என்னேப் பொறுத்தவரையில் எனக்கு இதில் சந்தேகமே. இறுதியில் இலக்கியம் ஒரு தேசத் , தின் கலாசாரத்தை பிரதிபலிக்கிறதுதானென் மூலும் ஓய்வுள்ளபோதே செய்யப்பட வேண் = التقلLL L
சில கட்டுரைகள் எழுதியதைவிட நான் ஒன்றையும் சாதிக்கவில்லே. நான் சலிப்புற்றி ருக்கிறேன். இருந்தும் துப்பாக்கியை ஏந்தும் நீங்கள் இலக்கியம்பற்றி அறிய அவாக்கொண் டுள்ளிர்கள். ஆணுல் நானுே துப்பாக்கி வேட்டு களின் சத்தத்தையே கேட்க ஆர்வங்கொண்டுள் ளேன். ஏனெனில் துப்பாக்கி வேட்டுகளின் சத் தம் இலக்கியத்தைவிட கேட்பதற்கு நன்முக இருக்கும். இதைத்தான் நான் உங்களுக்குக் கூற விரும்புகின்றேன்.
ஏப்ரல் 8, 1927இல் இலக்கிய மேதை ஆாசின் ஹாங்பு 3) TT &gJ EJ É a á EĤ Ĥaea!!!uu'āśĝă: "Literature of a Revoj - lutionary Pariod" என்னும் பொருளில் ஆற்றிய உண்ர யின் சுருக்கி வடிவம் இது. ஒரு புரட்சிகர ஐாேநாயக போதியாக இருந்த இலக்கிய" மேதை இட ஈன் கம்யூனிஸ்டாக மாறிக்கொண்டிருந்த காலத்தில் சீருவில் மிகவும் கடுமையான போராட்டங்கள் நிகழ்ந்துகோண்டிருந்தன. இந்நிகழ்வுகள்.இவரை பேசி தும் பாதித்துள்ளன் புரட்சிபற்றியும், அதில் இலக்கியம் பதிக்கின்ற பங்கிாேப்பர்ரியும் .இவர் கொண்டிருந்த கருத்து சில அடிப்படையான இலக்கியக் கோட்பாடுகள் பற்றிய விவாதத்துக்குரிய புதிய சிந்த&ண்கள் கண் முன் வைக்கின்றது. - ஆசிரியர்
2()

சினிமா . .
பழைய இயக்குநர்கள்கூட கனவுகளோடு
தான் திரைப்படவுலகில் காலடி வைத்திருக்கி ருர்கள்.
ஆணுல் நட்சத்திர ஆதிக்கம் அவர்கள் முயற் சியை முறியடித்து விட்டதெனலாம். தமிழில் சில நல்ல படங்கள் வந்திருக்கின்றன. இந்த திசை வழியை நோக்கி முன்னேறுகிறது என்று கூறலாம்.
ஆனுல் புதிய ஆர்வத்தோடு ஏதாவது செய்ய வேண்டும் என்ற ஆவேசத்தோடு வருகிறவர் கண் நசுக்குகிற மாதிரி, டிஸ்கிறேஜ் செய்கிற மாதிரி கமர்ஷியல் செற்அப் அமைந்துள்ளது. கமர்ஷியல் ரீதியில்-இல்லை என்று கூறலாம்.
தமிழகத்தில் சிறு பத்திரிகைகள் தரமான இலக்கியத்திற்கான போராட்டத்தை நடத்தி வருவதுபோல தரமான படங்களையும் எடுத்து ஒரு நீண்ட போராட்டத்தை நடத்தவேண்டும்.
சத்தியஜித்ரே வித்தியாசமான பார்வை யோடும் மனிதாபிமான த்தோடும் சமூக இருப்பை ஒரு கவிஞனுக்குரித்தான நளினத் தோடும் திரைக் கஃபை கவிதா நயத்தோடும் செய்வார்.
மிருணுள்சேன் பிடிவாதமிக்க முாட்டுத் தனத்தோடு சமூகப் பிரச்சினேகளை சித்தரிப்பார்.
ஷியாம்பெனகல் கமர்ஷியலாகவும் படம் வெற்றி பெறும் வகையிலும் அதே சமயத்தில் தெளிவான பார்வை கொண்டதாகவும் படைப் பைத் தருவார். இன்றைய தேவை ஷியாம் பெனகலே ஷியாம் பெனகலின் சமரசத்தை த் தான்-அதுமாதிரியான ஒரு சமரசத்தைத்தான் நான் வரவேற்கிறேன்.
அறிவு ஜீவிகளுக்குத்தான் எல்லா விஷய மும் தெரியும். தெரிந்த விஷயத்தை அதைத் தெரிந்தவர்களிடமே அவர்கள் மட்டுமே புரிந்து கொள்ளும் வகையில் எடுப்பதால் என்னபயன்? பொதுமக்களின் தரத்தை உயர்த்தும் வகையில் படம் எடுப்பதுதான் அவசியம்.
தங்கப்பதக்கம் பற்றியெல்லாம் எனக்கும் பெரிய மரியாதையில்லை. அசஞலேயே தங்கப் பதக்கம் பெறும் படங்களெல்லாம் தரத்தில் குறைந்தவை என்று கூறவில்லே.
- ருத்தரய்யா (நன்றி - "சிகரம்")

Page 23
❖ፉ¢ ***❖ቋዱፏ❖ፉፏፏፏሩቋኞ ❖❖❖ፉኞቋኞ❖❖❖ፉፉፉቆኞ❖
ಹೈ
சாவகச்சேரியில்
சகலவிதமான கட்டிடப் பொருட்களுக்கும்
நியூ சிற்றி ஹாட்வெயர் ரே டேர்ஸ் 3, தனங்கிளப்பு ருேட்,
சாவகச்சேரி.
is 219
With the best Complim
RadioslPa
58, θίασίμαία θεααά, Jafna.
❖ሩኑፉቆቋሩዱሩ፦ኞቋኞ❖ቋ ❖ኞዯዯፉቋ÷÷*❖❖❖❖*❖ኞዳ*❖❖ኞ

******************************ᏕᏐᏐ*Ꭶ
-- ta ஒடர் நகைகள் உத்தரவாதத்துடன் & *ಸ್ಟಿ
செய்துகொடுக்கப்படும்,
N/
வீ.எம்.கே. தங்க மாளிகை * தங்க வைர நகை வியாபாரம் *
ØVR 288 கண்டி வீதி, சாவகச்சேரி.
ents of
thy
*ᎹᎹ**************ᏐᏱᏐᎹᏱ**Ꮥ********ᏐᏱ
曹

Page 24
密 தொழில் நுட்பப் பயிற்சிக
வெல்டிங், இலெக்றிக் வய
C. E. I. CITY GULDS,
NATIONAL ]
57, பாங்சோல் வீதி,
G.C. E. A|L - 1980 ÅÄÖsr |
கலே, வர்த்தகம், விஞ்ஞானம்
பாடசாஃ செல்லாத மாணவர்களுக்கான
பகல்நேர வகுப்புகள் KDAY CLASSESX
ஆரம்பம்: S-380
மாணவர்கள் தங்கள் பெயர்களேப் பதிவு செய்துகொள்ளவும்
நிர்வாகி"
உயர் படிப்புகள் நிறுவனம்
39/17, மின்சார நிலைய வீதி, யாழ்ப்பாணம், ※昶、 இப்பத்திரிகை 7/2, 2-ம் குறுக்கு வீதி, நாவாந்துவ அன்ரனி அவர்களால் சமர் இலக்கிய வட்டக் கு
கத்தில் அச்சிட்டு வெளியிடப்பட்டது. நிர்வாக கோ. கைலாசநாதன்.

பறிங், P. M. G. ரேடியோ,
BUILDING TECHNOLOGY
NSITITUTES
யாழ்ப்பாணம், !
அன்பளிப்பு
VICTOR & sons விக்ரர் அன் சன்ஸ் : பாடல்கள் றெக்கோடிங் 裘 மின்சார றிவைன்டிங்
AS 7346
| 100, ஸ்ரான்லி வீதி,
யாழ்ப்பாணம்.
ಸಿà ቇቇቇቇቇቇቇቇቇቑ awawesi was றை வடக்கு யாழ்ப்பாணத்தைச்சேர்ந்த டானியல் ழுவினருக்காக, சாவகச்சேரி திருக்கணித அச்ச ஆசிரியர் டானியல் அன்ரனி, முகப்பு ஓவியம்

Page 25
அச் சக ம்
226, காங்கேசன்துறை வீதி, யாழ்ப்பாணம்.
ப்ாழ்நகரில் தலைசிறந்த உபசரிப்புக்கு
*பிறிஸ்டல் ஹோட்டல்'
* சுவைமிகுந்த | si |
ருசியான சர்பத் * ஐஸ் கிறீம் ة- ..
மற்றும் சிற்றுண்டி வகைகளுக்கு
இன்றே விஜயம் செய்யுங்கள்
* பிறிஸ்டல் ஹோட்டல்
66B, கஸ்தூரியார் வீதி,
"י *
யாழ்ப்பாணம்.
LLAkLSeALSLALLLkLLLALSLSLSLeLeSALALALeLeASALSLSSLSLSSLALASLSLeALeSASALeA ALeLeALSLeLSLS
 

قيقية طبيعي في القيعي عتيقيقي "في جميعي
WCTORY ATC WORK
Speclaists in: Watches & Clock Repearing 105 1, IY a sth le riar Road, Jaffa.
* மணிக்கூடு இ கைக்கடிகாரம் பழுதுபார்த்துக் கொள்வதற்கு
உத்தரவாதமும் நம்பிக்கையும் உள்ள இடம்
விக்ரர் வாச் வேக் 105/1, கஸ்தூரியார் வீதி, யாழ்ப்பாணம்.
சகலவிதமான
டிரான்ஸ்ஸ்ரர் உபகரணங்களும் . எலக்றிக் அயன் Hot-plate
வகைகளேயும் சிறந்தழறையில் திருத்திக்கொள்ள : ஒருமுறை நாடுங்கள்
AVO Electronics
c.20, Jubilee Bazaar, 구 .. Power House Road, la li lJAFFNA. f : ... -:
eLeLAkeSeAeeLeLeeLeLeeLeLeeLeLeeLeAeAeLeLeAeAeAeALeLeAeAeAeAeeeAe eAeeAeALALAeA

Page 26
Space Donated by
TRIMMER HALL CLASSES
21/6, WEMPADY ROAD, JAFFNA.
LSLSLSLSLSLSLSLSLSLLGLLLSLLLSLSLSSLSLSSLSLSSLMLSSSLS
* நிதிலாஸ் அழைக்கிறது *
நவநாகரீகமான தரமான, உயர்வான பாதணிகள் அழகுசாதனங்களுக்கு
இன்றே நாடுக
* நிதி லாஸ் *
இல, 1, நவீன சந்தை பண்டத்தரிப்பு.
SLLLeSLSLeLeLeeLee LLeLeALeLeAeAeALAeALeLeALALAALeeLeALe eALAM ALA AeLeLeeLeLe eA AeA eA eALALeLeLeLeeLeLeeLeeeLeLSeLeee ee e e eLA eA eAeA
 

FWIWWF.W.
W*Weithwyr wyfwyfwyf
With ihe best Comptiments of
=""" : - ہ:چی. یہ ” بربر
ל-F-אי
GREENLANN DOS
COOL BAR 8. COFFEE BAR No. 1, BUS STAND, NELLIADY.
MANI VIII e Runo SERVICE
சகலவிதமான கைக்கடிகாரம் மேசை மணிக்கூடு, சுவர் மணிக்கூடு றேடியோக்கள், மின்சார உபகரணங்கள்
உத்தரவாதத்துடன் செய்து கொடுக்கப்படும்.
=
மணி வோச் அன் றேடியோ சேவிஸ்
100, ஜும்மா பள்ளிவாசல் ஒழுங்கை,
யாழ்ப்பாணம்.