கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: தேடிக் குவித்த திரவியங்கள்

Page 1
}
|-
|
\, \,|
||- |
|-
|
 


Page 2


Page 3

"
(சிந்தனைத் தொகுப்பு)
கவிஞர் யாழ் ஐெயம் (in. Giyir)
வெளியீடு
நாடகப் பயிலகம்
திருமறைக் களாமண்றம் 238, பிரதான வீதி
யாழ்ப்பாணம்
夺欧

Page 4
நூல் ஆசிரியர் முதற் பதிப்பு பதிப்புரிமை வெளியீடு
கணணி அச்சுக்கோப்பு: அட்டைப்படம் அட்டைப் பதிப்பு
அச்சாக்கம்
Name of Book Author First Edition CopyRight Published by
Type Setting Cover Design Cover Printed at
Printers
தேடிக்குவித்த திரவியங்கள் : ம. விக்ரர் (யாழ் ஜெயம்) : பெப்ரவரி 2002 : திருமதி விக்ரர் மரியாம்பிள்ளை : நாடகப் பயிலகம்,
திருமறைக் கலாமன்றம், 238, பிரதான வீதி, யாழ்ப்பாணம் தொலைபேசி 021-2393 g60600rul (p561 : www.cpateam.org ஜெயந்த் சென்ரர், யாழ்ப்பாணம்
ரஜினிகாந்த் ராமச்சந்திரன் லங்கா பப்ளிஸிங் ஹவுஸ்
கொழும்பு - 13
: புனித வளன் கத்தோலிக்க அச்சகம்,
யாழ்ப்பாணம்
: Thedi Kuvitha Thiraviyangal : M. Victor (Yarl Jeyam) : February 2002 : Mrs. Victor Mariampillai : School of Drama,
Centre for Performing Arts (Thirumarai Kalamanram) 238, Main Street, Jaffna T. P. O2-2393 website: www.cpateam.org
: Jeyanth Centre, Jaffna : Ramachandran Rajanikanth : Lanka Publishing House,
Colombo - 13
: St. Joseph's Catholic Press,
Jaffna

சமர்ப்பணம்
தந்தை மரியாம்பிள்ளைக்கும், அன்னை விக்ரோறியாவுக்கும்.

Page 5

முன்னுரை
கடந்த 35 ஆண்டுகளாக என்னுடனும் திருமறைக் கலாமன்றத்துடனும் கலைவழி இணைந்து செயற்பட்ட எங்கள் ஆஸ்தான கவிஞனை, அருளாளன் ஜெயத்தை, காலத்தால் அழியாத கவிதைகளின் மன்னவனை இழந்து நிற்கும் இவ் வேளையில், அவர் பல்லாண்டு 560 fff; எழுதிக் குவித்தவைகளை அச்சுவாகனமேற்றுவதில் மகிழ்வடை கின்றோம். இன்று எம் இனத்திற்குத் தேவையானதும் இதுவேதான். எத்தனையோ அற்புதமான கதைகள், கவிதைகள், கட்டுரைகள் எழுத்தாளனின் வறுமையாலும், எம் இனத்தை வாட்டிவதைக்கும் அகோர யுத்தத்தின் விளைவாலும் நூல்வடிவில் வராமலே மறைந்துவிடும் வேதனையான சூழ்நிலைகள் இந்த மண்ணில் ஏராளம் உண்டு. கைநிறையப் பணம் இருந்தும் கைகொடுக்க மனதில்லாதவர்களும் எம்முள் தாராளம் உண்டு. இத்தகைய நிலை இங்கு இல்லாதொழிய வேண்டும். கலைக்கும், கலைஞனுக்கும் கைகொடுக்கும் கனவான்கள் இந்த மண்ணில் பெருகவேண்டும். திருமறைக்கலாமன்றத்தின் பன்முகப்பட்ட பணிகளில் இதுவும் ஒன்று. இதுவரைக்கும் எத்தனையோ எழுத்தாளர்களின் ஆக்கங்களுக்கு ஆதரவு தந்துள்ளோம். காய்த்தல், உவத்தல் இன்றி கண்ணியமான இலக்கியப் படைப்புக்களை வலிந்து வரவேற்று அதனை இலக்கிய உலகிற்கு அறிமுகப் படுத்தியுள்ளோம். பணத்தினால் மட்டும் ஆகும் செயல் அல்ல இது. நல்ல மனத்தினாலும், கலை இலக்கிய ஆர்வத்தினாலும் ஈழத்தமிழ் இலக்கிய உலகின் இன்றைய நிலையை எண்ணிய ஏக்கதத்தினாலும் ஏற்படும் ஒரு வாஞ்சையே இத்தகைய அரும்பணிக்கு எம்மை ஆட்படுத்துகின்றது.
மறைந்த இம் மகா கவிஞர் என்னை மட்டுமல்ல, எங்கள் அனைத்து கலைஞர்களின் உள்ளங்களையும் கவர்ந்தவர். வாழும் பொழுதே பலமுறை 96.66 வரவேற்றோம் வாழ்த்தினோம். இன்று அவர் எம்முடன் இல்லை. ஆனால் அவர் வார்த்தைகளுக்கு வடிவம் கொடுத்துள்ளோம். அதுவே அவரில்லாத இடத்தும் நாம் தேடிக்குவித்த திரவியங்கள்!
நீ. மரியசேவியர் அடிகள் இயக்குனர், திருமறைக் கலாமன்றம்.

Page 6
வெளியீட்டுரை
திருமறைக் கலாமன்றம் இதுவரை காலமும் அச்சுருவாக்கிய ஆக்கங்கள் அநேகம், அந்த வரிசைகளில் ஒன்றாக மாறாது தனித்துவமாய், உயிர்த்துவமாய், உள்ளத்திலெழுந்த குருபக்தியின் வெளிப்பாடாய் வெளிவந்து நிற்பது இந்த 'தேடிக்குவித்த திரவியங்கள்’.
எமது மன்றத்தின் ஆஸ்தான கவிஞனாகவும், கலைக் குரலாகவும், நல்லாலோசகனாகவும் திகழ்ந்த அமரர் “யாழ் ஜெயம் ஈழத்தின் புகழ்பூத்த கவிஞர்களில் ஒருவர். அவர் இந்த மண்ணில் வாழ்ந்து மறைந்த ஓர் உன்னதம்மிக்க மனிதர். குறிப்பாக கிறிஸ்தவ கலை இலக்கிய உலகில் ஒர் தங்கத்தாரகை, பண்டைத் தமிழ்ப் பரணிக்கோர் ஜெயங் கொண்டார் போல, ஈழத்தமிழ் கவிதைக்கோர் யாழ்ஜெயம்’ என்று எம்மை பெருமைப்பட வைத்தவர். தொட்டெனத்தூறும் கவிப்புலமை கொண்டவர். இறைவன் அவருக்களித்த ஆற்றல்களை தனது இறுதி மூச்சுவரை பயன்படுத்தி சமூகத் தொண்டாற்றியவர். வாழ்வை எழுத்தாகவும், எழுதியதை வாழ்வாகவும் கொண்டு வாழ்ந்த அமரர் அவர்கள் படைத்த கலைப் பிரசவங்கள் பல. ஆனால் இது அனுபவ முத்துக்கள். வாழ்வின் நிறைவில் தன் வாழ்வனுபவத்தை தொகுத்துத்தந்த சிந்தனைத் துளிகள். இதனை இருகரமேற்று மனமகிழ்வோடு அச்சுவாகனமேற்றி மகிழ்வடைகின்றோம்.
அமரர் யாழ்ஜெயம்’ அவர்கள் இறைபதம் அடைவதற்கு ஒரு வாரத்திற்கு முன் எமது அலுவலகத்திற்கு வந்து அவர் தேடிக்குவித்த திரவியங்களை ஒப்படைத்து வெளியிடப் பணித்ததுடன், முகப்போவியம் எவ்வாறு அமைய வேண்டுமெனவும் கூறி, இதற்கு நீங்களே முன்னுரைகள் வரையவேண்டும் என என்னிடமும், செயலாளரிடமும் கூறி நின்றார். ‘சிறியவர்கள் நாங்களா..?’ என வியப்புடன் வினாவ, புன்சிரிப்புடன் சென்றவர் சென்றவரே. ஆத்மாவில் அவர் இழப்பின் துயர் கசிய, அவர் தந்த பணியை நிறைவேற்றி காணிக்கையாக்கி நிற்கின்றோம்.
ஈழத்தின் கலை இலக்கிய நெஞ்சங்கள் இந்த அனுபவ முத்துக்களை நிச்சயம் வரவேற்று, அவர் வாழ்வின் அனுபவச் சுவடுகளை முன்னுதாரணங்களாகக் கொள்ளுவர் என்பதில் எமக்கு அசையாத நம்பிக்கை உண்டு.
யோ. யோண்சன் ராஜ்குமார் பொதுச் செயலாளர், திருமறைக் கலாமன்றம்.

கவியுரை
வைரத்தின் மேலென்னைக் கவியெழுதச் சொன்னாயோ? இமயத்தை ஊடறுத்து இடம்பிடிக்கச் சொன்னாயோ? வலம்புரிச் சங்கிதனைக் கைகளிலே தந்தாயோ! கரும்பிதனைச் சுவைபார்க்க கட்டெறும்பைப் பணித்தாயோ! எழுத்தாணி ஆண்டவனை ஏழையிடம் தந்தாயோ எலும்பாகிப் போன எனை எழுதிவிடப் புகன்றாயோ கையிருந்தும் வரவில்லை வலிமை சொல்லிருந்தும் எழவில்லை வார்த்தை மெய்யிருந்தும் பெறவில்லை உணர்வு ஒ. கவிஞன் இறந்தான் அவன் கவிதை இறக்கவில்லை பூக்களின் நுனிகளில் மெல்ல மெல்லச் சேர்த்த தேன் துளிகள் இவையோ ஒரு மாணவன் எழுதும் முன்னுரை இது ஆசானின் இறுதிப் பிரியத்தை பேசாத சமாதியில் எழுதிப் படைத்தேனோ உன் கவிதைக்கும் எனக்கும் வயது ஒன்று ஆதியிருந்து நீயெடுத்த முத்துக்களை போதிமர ஞானமதாய் தேடிக் குவித்த திரவியமென தந்து விட்டுச் சென்றாயோ தமிழின் தந்தையே! அமிர்தம் இவை அருந்தக் குறையாத அமுத சுரபிகள் இவை வாழும் உயிர்க்கு வாழும் வரையில் வாழ்வை வாழ வார்த்த வழிகள் இவை.
ம. சாம் பிரதீபன் செயலாளர், திருமறைக் கலாமன்றம். 28.12.200

Page 7
வெளியீட்டுக்கான ஆசிரியரின் மடல்
--
اینده را فرا رد 8 . ۶ی
vu at i li u T 677 s
7. a 2- 2 o ot அஃuள் ஆருயிர்த் தாதா4. ܒܡܕܗܝ ܗܝ ܚ si i urrfar ti 47 a rt è si
ess. Fra on mT. Gɛ sɛ nv rt G “? --ể ts **?^^"ặão '. 'டிேத் தொங் தரவு தருவதாக *** வருங் தர நீர் க என் sta v7 L LJ Yní r* g కొg766 67 ? - array - a goss ചത9 زر نیو یشیک" کn.
es> uj n! آن ما او غ - ه v ۶۲۰ ق نام fols g-r-t és as 17r” és nうn rcm படித்த 1ge i g; ní cro SAeAAu M MqqAe i S JSAA g AA 00Gt ThTT M u AutA ALt0 6) lear y & Two ant غه و یا اعه روی آلا که نیروی او اوت gsrg t; u 999ޕކިތީ’ ന വ9 = പൂജ നെ 16r് മ ( *g " 9 , -്
'് ' ~ b v് ഇ 3 §1 , ചെവന് ധ. ' ? ' ( .re جو عہ نہ 7، علوی r7 فقہ ، وہ یم نہ ہو رہ نہ 67
நீப் கrர் கொடி பர் 4 கி ே PJg 6 coở orở து . 2.டபிரேர ே ل، كي 7 د g ? ? کی მუხიr» er “ اور سر کي هم كمهIه இருக்கும் போது நானுபூ பார்த்து மகிழல4 மே எார்g)
۔ سیخ و ? ہL قیم”2f 3یr2.gL ?6
g, ru 5 1 g cm é a rá ní é 8) is 7 6 * 8; rt, ó n) 6?g - éu ri G - - - - a c a s g- ég 3 fá G 1ó 2 rúsa; 0SAJ SASSA S 0hhyqLL AAAGGGGJ HtH MeL AA A L TA yeMLL LLS S00 LLLLLLLT LLAqAq qqqLLqS
Lo g. aš E 2D nr . Il C2 i 5 Two" . Go à il é? u rt us sanos 5 Los m% coun (s romá (Yv73 ,މޝި*914
• بیٹمپ صرہ متعہ ہمہ کر لیn
தங்க ள
gs n a 7 LD as 627
( خاں جو 67، تو tu n) لہ g چ" کہہ .Lp
*ـصح۔ مہ صے
ン
 
 
 
 

தேடிக் குவித்த திரவியங்கள்
ཊི་སི་ཊི་ལྷའི་ལྷའི་ལྷའི་རི་ལྷའི་ལྷའི་རི་མི་ནི་ལྷའི་ལྷའི་ལྷའི་ சிந்தனைத் தொகுப்பு ཕ།ཡང2>། ཕན།22>ཕུ- །ང2་ཤེ་ཕུལ། ཕཁམང22་ཕུ།
வருத்தமாகிய ஆலையில் இருந்து வாழ்க்கையில் இனிய இரசம் பொழிகிறது கணிணிர் வடியாத கணர்களால் பிரகாசம் அளிக்க (Լpւգ-եւմ/13/:
9
இயேசு இரட்சகர், சுத்திகரிப்பவர், சுகமளிப்பவர் விடுவிப்புவர் என்று ஏற்றுக்கொள்ளும்போது நாம் புதுவாழ்வு, புனிதவாழ்வு பெறுகினிறோம்.
தேவன், துக்கம் எனினும் தூரிகையாலும் சந்தர்ப்பம் :
வர்ணங்களினாலும் நம்மைப் பார்வைக்கு 9 uLuigiúġ5 மேனிமையான, அலங்காரமான ஒவியமாக உருவாக்குகின்றார்.
{
கிறிஸ்துவைப்போல் வாழ்ந்து, பிறரை நேசித்து, பிறருக்குக் கொடுத்து, பிறருக்காக வாழ்க்கையைத் தியாகம் செய்வே தேவனுக்குகந்த ஊழியமாகும். Xa
(အံ့)
ஒரு பெரிய துணிபத்தால் நமது விசுவாசம் சோதிக்கப்பட்டாலன்றி எம்மிடம் எவ்வளவு விசுவாசம் உணர்டெனர்டது எமக்குத்
தெரியாது.
தேடிக் குவித்த திரவியங்கள் 1.

Page 8
துன்பம் என்ற கலாசாலையில் இருந்துதான் மிகச்சிறந்த மேதாவிகள் பட்டம் பெற்று வெளியேறுகிறார்கள்.
வேதனைகளும் சோதனைகளும் மாறுவேடம் பூண்டுவரும் தேவனின் ஆசீர்வாதங்களே.
உணர்ணவும், பருகவும், உறங்கவும் தேவையில்லாமல் எப்போதும் இறைவனைத் துதித்து ஞானக்கருமங்களில் ஈடுபடுவது கிடைக்குமா? கிடைத்தால் எவ்வளவு நலம்.
எந்தச் சிருஷ்டியிடமும் ஆறுதலைத்தேடாதிருக்கும் நிலையை அடையும்போதுதான் மனிதனர் கடவுளைச் சுவைக்கத் தொடங்குகின்றானர். m
(ဎွိ
இறைவனின் அண்பையும், அயலானின் நன்மையையும் தேடு. உன் உள்ளேத்தில் அமைதி நிலவும்.
ഉ-ബാക്റ്റിങ്ങ് ஆனந்தம் துரய உள்ளம் உடையவனிடமே உணர்டு.
படிைத்தவர் உணர்னைக் கைவிடுவாரானால் படைப்புப்
பொருள்களினால் என்ன பயனர்?
உள்ளத்தில் நாம் குருடர் என்பதைப்பெரும்பாலும் நாம் உணர்வதில்லை.
2 • தேடிக் குவித்த திரவியங்கள்

சிலுவையும் பாடுகளும் இல்லாமல் சீவியம் நடத்திய புனிதர்கள் எவரும் இல்லை.
@ நித்தியத்துக்குரிய அலுவல்களையே செய்.
சிலர் தங்கள் உதடுகளில் தேவனை வைத்திருக்கிறார்கள். உள்ளத்தில் ஒன்றுமில்லை.
கலைஞானத்தை விட, தூயமனச்சாட்சி அதிக ஆனந்தம் அளிக்கும்.
தாழ்மையுள்ளவன் உலகை நம்பாது கடவுளை நம்புகின்றான்.
ଜୂତ ।
நல்லோரின் மகிழ்ச்சி அவர்களது மனச்சாட்சியில்.
ଜୂତ
அமைதிவேணர்டுமா? புகழ்ச்சியையும், இகழ்ச்சியையும் பொருட்படுத்தாதே.
9
என்னைத் துனர்புறுத்தும் அனிர்புக்கு நான் எப்போது இளைப்பாற வேணர்டும் எண்டது தெரியும்.
9
கிறிஸ்துநாதர் மகிமையில் தமது ஊழியத்தை நிறைவேற்றவில்லை. தாழ்விலேதான் அவரது ஊழியம் இருந்தது.
3 குவித்த திரவியங்கள் ة عtروه|

Page 9
பரிசுத்தவாணர் தானர் செய்யும் ஒவ்வொரு செயலிலும்
Gög56)u6g)/60)L LuLu எப்பரிசத்தையும், பிரசனர்னத்தையும், விருப்பத்தையும், ஆசீர்வாதத்தையும் உணர்ந்தவனாக இருக்கிறானர்.
ပျွိမှိ)
துயரங்களால் நாம் நெருக்கப்படும்போது இறைவனது திருக்கரங்களில் நமது முகத்தைப் புதைத்து, வாய்பேசாது துயரைக் கணிணீரால் அவருக்கு அறிவித்துவிடுவது எவ்வளவு இனிமையாயிருக்கும்.
செபம் தேவனோடு நம்மை இணைக்கும் சங்கிலி. அபாயம், தேவை என்ற படுகுழிகளைத்தாணர்டிக் கரையேற உதவும் பாலம்.
பரலோகத்தில் என்னை நோக்கி உணர்இருதயத்தைத் திருப்பு. பூலோகத்தில் மனிதருடைய நிந்தைகள் உணர்னைத் அதுன்புறுத்தமாட்டா.
புனித உள்ளத்திலிருந்து நற்சீவிய கனிகள் சேகரிக்கப்படுகின்றன.
உலகை வெறுத்து, உடலை ஒறுத்து உம்மைப் பின்பற்றுபவர்கள் மெயப்யாகவே ஞானிகள். அவர்கள் உணர்மைக்காகப் பயனற்றவற்றை வெறுக்கிறார்கள்.
இறைமகனினர் அற்புதங்களை வியந்து பாராட்டுபவர்கள் பலர். ஆனால் அவரது சிலுவையினர் அவமானத்தை ஏற்றுக் கொள்ளுபவர்கள் மிகச்சிலர்.
4 தேடிக் குவித்த திரவியங்கள்

புணர்படுத்தப்பட்டவர்கள் பண்ப்டுத்தீiர். "நீதி போன்றவர்கள்.
ଜୂତ
இறைவனர் சந்நிதானத்தில் அதி உணர்னத ஸ்தானத்தில் இருக்கின்ற புனிதர்கள் தங்கள் சொந்த மதிப்பில் மிகவும்
தாழ்ந்தவர்களாய் இருந்தார்கள்.
புணர்ணியத்தில் விருத்தி பெற ஆசிக்கின்றாயா? தெய்வ பயங்கொள் பூரிப்புக்கு அடிமையாகாதே பொறிகளை அடக்கு,
୫ தற்காலமே மிகவும் விலையேறப் பெற்றது.
(မှိ)
பாவத்தில் இன்பம் தேடுபவன் ᏧfᎢ6/ᏯsᏊ5 அஞ்சுவது ஆச்சரியமில்லை.
ပျွိမွီး)
என்னை நேசித்து, எனக்காகத் தமது சீவனைத் தந்த இயேசுவை, எனர் சீவியத்தினர் சகல காரியங்களுக்கும் நம்பலாம்.
(ဎွိ
அற்புதம் நிகழுமுன் துதிசெலுத்துவது அற்புதம் நிகழ்வதற்கு ஒர் அவசியமான ஆயத்த ஊழியமாகும்.
தற்பெருமையுடன் கூடிய கல்விக் களஞ்சியத்தை விடத் தாழ்மையோடு சேர்ந்த சொற்ப அறிவு மிகவும் மேலானது.
ଜୂତ
5 குவித்த திரவியங்கள் قهوه|

Page 10
மானிடப் பெருமை, தற்கால மதிப்பு உலகமேன்மை எல்லாம் தேவனினர் நித்திய மகிமைக்கு முனர்பு வீணர்செருக்கும் மதியீனமுமாகும்.
பெருமையும், பேராசையும் மனத்தின் அமைதிக்குப் பகைவர்கள்.
பயனடைய விரும்புகின்றாயா? கல்விமானி என்று எணர்ணாதே பிரமாணிக்கம் உள்ளவனாயிரு உணர்மையைக் கடைப்பிடி பணிவை அணியாகக் கொள்.
ஈசுவரனுக்கு ஒர் எறும்பு கூட அடியெடுத்து வைக்கும் ஒசை கேட்கும்.
(မှိ9
இவ்வுலகில் நீ தனியாக நின்றாலும் உணர்மனச்சான்றுக்குப் பொய்யனாகிவிடாதே.
எது எப்போது தேவையெனிறு தாய்க்குத்தெரியும், தேவையான நேரத்தில் தேவையானதைத் தேவனர் தருவார்.
எழுத்து நெருப்புக்கும் உணர்மை நெருப்புக்கும் எவ்வளவு பேதமுணர்டோ அவ்வளவு வேறுபாடு வார்த்தைக்கும் வாழ்க்கைக்கும் உணர்டு
சேற்றுக்குள் நின்றவணர்ணம் சேற்றுக்குள் நிற்பவனைக் கரையேற்ற முடியாது.
6 தேடிக் குவித்த திரவியங்கள்

இயற்கையை வாசிக்கக் கற்றுக்கொடு இதயத்தை நேசிக்கக் கற்றுக்கொடு.
காவித்துணி வேண்டாம் பாவித்தல் போதும் பரமநிலை எய்துதற்கே.
பிறரை அடக்கியாள விரும்புவோர் தம்மை அடக்கியாளப் பழகவில்லை.
மோட்சத்துக்கு நானர் போனால் நீயும் போகலாம்.
அன்பு வாசம் செய்யும் வீடு தேவனர் தங்கும் திவ்விய தலம்.
மற்றவர்களுக்காக உணர்னை மறந்துவிடு மற்றவர்கள் உணர்னை மறக்கமாட்டார்கள்.
அழுகிப்போன மனம் உடையவர்களிடம் சிக்கினால் ஆச்சிரமங்களும் ஆபாசக்கூடங்களாக மாறும்.
ଜୂତ
பத்துப்பேரைப் பிரசங்கிக்கப் பழக்குவதைவிட ஒருவனைச் செபிக்கப் பழக்கு
இறைவனர் செய்த நன்மைக்கு நன்றியாயிரு செய்யப்போகும் உதவிக்கு நம்பிக்கையாயிரு.
தேடிக் குவித்த திரவியங்கள் 7

Page 11
இயேசு மதத்தைத் தாபிக்கவில்லை மனிதர்களைத் தாபித்தார்.
தன்னில் அனல் இல்லாதவனர் மற்றவனுக்கு அனல்தர முடியாது.
வாழ்க்கை இராச்சியத்தை ஞானி ஆளுகிறான்.
செபத்தை நாடிச்செல்வதில் தாமதம்செய்தால் பரலோக ஆறுதல் உணர்னை நாடி வராது. -
୫
பிற்கால வாதனைகளுக்குத் தப்ப, தற்கால வேதனைகளைச் சகித்துக்கொள்.
உள்ளத்தில் நல்லுணர்ச்சி ஏற்பட்ட துறவி இலட்சத்தில் ஒருவனே. عہ
உள்ளத்தை இழந்து உலகத்தைப் பெறுவதால் என்ன லாபம்?
ஆசைகள் முடியும்போதுதான் மகிழ்ச்சி ஆரம்பமாகும்.
பளிங்குக் கற்களிலன்று மற்றோர் இருதயங்களில் உங்கள் பெயர்களைச் செதுக்குங்கள்.
8 தேடிக் குவித்த திரவியங்கள்

பேசாது, அறிவிக்காது செயற்படுங்கள் மழைத் துளிகளைப் போல உயிர்களை வாழவையுங்கள்.
ஒழுக்கம் தவறுவதே ஒருவனுக்கு மரணதணர்டனை.
பொறுமையினர் கனிகள் மிகத் தித்திப்பானவை.
கேளாது கொடுக்கும் அனிர்பு விலையேறப்பெற்றது.
ஒரு பொய் ஈட்டியைவிட அதிக துன்பம் தரும்.
மங்காத மணிமகுடத்தைப் பூரணப்படுத்தும் மகத்தான ஆணி முத்து தாழ்மை.
பகலுக்குப் பகலவன் ஒளிமட்டும் போதாது ஞாலம் துலங்க ஞானதீபம் ஏற்றுங்கள்.
மனிதமொழியில் விபத்து என்பது தெய்வ மொழியில் சம்பத்து.
(ဋ္ဌ်) .
நான் என்று நினையாதீர்கள் இறைவனி தான் என்பதைக் காட்டிடுவார்.
தேடிக் குவித்த திரவியங்கள் 9

Page 12
தனினை அறிவதே அறிவு மற்றையவை கிளிப்பிள்ளைப் பாடம்.
எனக்குத்துணை இருவர் - கடவுள் - நானர்.
தனர் ஆதரவு முழுவதையும் ஆண்டவனிடம் கணிடடைவதே விசுவாசம்.
நெஞ்சினிலே கருணை சுரந்தால் நீரிலும் தேனி ஊறும்.
பாறையில் நெல் விதைக்க முடியாது பாவத்தில் வந்த இன்பம் நிலைக்காது.
ပျွိမွီး)
சமயம் சமுதாயத் தொணர்டாக மலரவேணர்டும்.
அனர்பெங்கும் விலையின்றி உலவும் - அதை அடை வோர்க்கே இன்பங்கள் நிலவும்.
(မ္ဘ
தனர்னடக்கம் கொள்கின்ற மனிதனர் - என்றும் தரணிக்குப் பெருமைதரும் புனிதனர்.
இயேசு அன்பு உள்ளவர் மட்டும் அல்லர் அனிர்புக்காக ஏங்குபவரும் அவர்.
(ဎွိ
10 தேடிக் குவித்த திரவியங்கள்

மனிதர்கள் எல்லா மதங்களிலும் இருக்கிறார்கள்.
உங்களுக்குள் ஒளிந்திருக்கும் அகல்விளக்கை அன்புவிளக்கை நீங்கள் அடையாளம் காணர்டது எப்போ?
உலகை நம்பாதீர்கள் உங்களை நம்புங்கள்.
வாழ்க்கையில் ஏற்படும் துன்பம் ஒவ்வொன்றும் கடவுள் தருகின்ற முத்தம்,
மதத்திலிருந்து மதம் பிரிந்தபிற்பாடுதான் மனிதகுலம் சமநிலை பெறும்.
அலங்கார வார்த்தைகளைவிட ஆறுதலான வார்த்தைகளே உயர்ந்த பயனர் தரும்.
அந்நியனின் துயர்பார்த்து அழும்தன்மை இருந்தால் அது தான் புணர்னியக் கணி.
கருணை பொங்கும் உள்ளம் கடவுள் வாழும் இல்லம்.
பாடுபடுவதற்காக அனுப்புபவனே அப்போஸ்தலனர் எனர்டது தெரிந்தால் யார் இந்தப்பதவியை விரும்புவார்?
ပျွိမွီ)
11 குவித்த திரவியங்கள் ہوتا

Page 13
நல்லோர், உயர்ந்தோர், சான்றோர், ஞானிகள் இச் சொற்களில் வாழ்வின் முழுவரலாறும் அடங்கி உள்ளது.
நிறைவாழ்வு வாழ்ந்தவருக்கு மறைவில்லை.
வெற்றி பெறுவதே விசுவாசிக்கு கிடைக்கும் தண்டனை.
கடவுளைக் குறைவாக நேசிப்பவர்களே மனிதரையும் குறைவாக நேசிக்கிறார்கள்.
சிறுமையான சுகத்தைவிட உணர்னதமான துயரத்தில் உயர்ந்த ஆனந்தம் இருக்கின்றது.
(ငှါ)
நாவையடக்கு நலம்பல விளைக்கும் உணர்மை பேசு உள்ளொளி சிறக்கும் இனிசொல் கூறு இன்பம் பிறக்கும்.
உன்னை உயர்த்து உலகம் உயரும்.
இறைவனை அடைய ஒர்ே பாதைதான் உணர்டு அதுதானர் பணிவு.
ஆராதனைகளை நியமமாகச் செய்துகொணர்டு உள்ளத்திற் சத்தியம், அன்பு, கருணையை வளர்க்காவிடில் யாவும் வெளிவேடம்.
(ဎွိ .
2 தேடிக் குவித்த திரவியங்கள் -

பிறரைச் சீர்திருத்தும் கடமையைவிடத் தன்னைச் சீர்திருத்துவதே Cupg52)35L60)LD.
தேவையைக்குறை தெய்வத்தன்மை அடைவாய்.
ஆணர்டவனை ஆகாயத்தில் வைத்திருக்கும் மனிதனிடம் ஏமாந்துவிடாதே.
உயர்ந்த தவம் - பொறுமை, உயர்ந்த இன்பம் - திருப்தி, உயர்ந்த அறம் - கருணை, உயர்ந்த ஆற்றல் - மன்னிப்பு.
விலை உயர்ந்த உடையோடு நரகத்துக்குப் போவதைவிடக் கந்தையோடு மோட்சம்போவது மேல்.
கடமையைச் செய் புகழானது உன் காலடியிற் கிடக்கும்.
காவியம் படைக்கும் கைகளை விடக் கணிணீர் அதுடைக்கும் கைகளையே நானர் காதலிக்கினிறேனர்.
ଜୂତ
அன்புக்குப் பாத்திரமாய் இருப்பதை விட நம்பிக்கைக்குப் பாத்திரனாவது மேல்.
ပျွိတ္တိံ)
மாசற்ற மனமே ஒழுக்கத்தின் பீடம்.
ଜୂତ
கேடிக் குவித்த திரவியங்கள் , 13

Page 14
ஏழைகளுக்கு உணவளிக்காமல் உணர்ணுவோமானால் இறைவனை வணங்குவதில் பயனர் எதுவும் இல்லை.
பொதுநலம் வளரப் பொண்மனம் ஒளிரும்.
மனத்தை வென்றவனர் மரணத்தை வென்றவர்ை.
நெஞ்சத் துறவிலேல் வஞ்சத் துறவாம்.
ஞானியைத் தேடி நல்லோர் வருவர்.
స్త్ర ஏழையை இகழ்தல் இறைவனைப் பழித்தல்.
9
போலித் துறவி சமுதாயத்தின் எலும்புருக்கிநோய்.
.
மனித நேசந்தான் வாழ்க்கை.
ပျွိစ္စံ)
கைகளில் விலங்கு பூட்டி, கால்களில் ஆணியடிக்கும் சாதிவெறி.
எல்லாச் சாதியும் இவ்வுலகில் உணர்டு இல்லாத சாதி மனித சாதி.
4. தேடிக் குவித்த திரவியங்கள்

உணர்னைக் காணவைப்பதை நீ காண முடியாது எனர்னைக் காண வைக்க முடியுமா?
பார், நேசி, வளர் மனிதனை.
உணர்னைச் சோதித்துக் கொள் சோடித்துக் கொள்ளாதே.
மக்களிடம் மக்கள் காட்டும் மதிப்புத்தானி அன்புச் செல்வக் கொடை
வாய்ப்பந்தல் நிழல் தருமா?
அகந்தை மனத்தில் அருள் இருக்காது.
மனினுயிர் ஈசனை மறந்தால் அழியும்.
ஒருவரை ஒருவர் உயர்த்தலே வாழ்வு.
(မှိ)
உணர்மைக்குத் திரைபோட ஒருநாளும் முடியாது.
@
நல்லவன் உள்ளம் நல்ல நீதிமன்றம்.
தேடிக் குவித்த திரவியங்கள் 15

Page 15
படித்து உணர்பவனைவிடப் பட்டறிபவனர் அறிஞனர்.
நமது வாழ்வைத் துறந்து, பலருக்கு வாழ்வைத் திறந்துவிட வேணர்டும்.
இயேசுவின் மூன்றாணர்டு வாழ்வுதான் இன்று பரவியுள்ள சத்திய வேதம்.
சொந்த வாழ்க்கைக்கும், சொல்லும் வார்த்தைக்கும் ஒற்றுமை இருக்கவேணடும்.
ஓர் ஒழுங்கை, ஒருமந்திரத்தை, ஒருபாடத்தை எப்போதும் பின்பற்றும் மனம் உணர்மையைக் காண முடியாது.
9
தினமும் கற்றுணர்வதே தியானம்.
வாழ்ந்து இறந்தவர்க்கே உயிர்த்தெழும் வாய்ப்பு உணடு.
ஏழைகளின் கணிணீரைப் போக்காத மதம் இருந்தென்ன? போயெனர்ன?
அறியாமைதானர் எனர் ஆராதனை. அறிந்துகொணர்டேன் எனர்பவனர் அறியவில்லை.
16 தேடிக் குவித்த திரவியங்கள்

உள்ளம், உரை, செயல்களில் இயேசுவினர் அடிச்சுவட்டைப் பின்பற்றி நட.
9
மடாதிபதிகளும், சந்நிதானங்களும் தங்கள் தொந்தி வளருவதை ஞானம் வளர்வதாக எணர்ணியெணர்ணி ஆனந்தமடைகிறார்கள்.
சாதி, மக்களிடை பாதியில் வந்தது ஆதியில் வந்ததில்லை.
அமுதகலசங்களைப் பற்றிப் பெருமை பாராட்டாதீர், நாம் அருந்தவேண்டியது அமுதமே. m
சொற்பதங்கடந்த ஞானஒளி காணவேண்டுமா? தியானந்தான் அந்தத் திருப்பாதை.
பற்றற்று இறைவனைப் பற்றுதல் இன்பம்.
மனித மாணர்பற்ற நிலையானது, மக்களிடையே வளர்ந்து வரும் நாகரிகத்துக்குச் சவுக்கடி
மானிடத்தின் பரிபூரண விடுதலைக்குப் பலியாவதே வாழ்வின் உன்னத இலட்சியம்.
9
சத்திய நாவுகளைக் கத்தரிக்க முடியாது.
தேடிக் குவித்த திரவியங்கள் 17

Page 16
பள்ளத்தை நிரப்பவே நாம் மேட்டுக்கு வந்திருக்கிறோம்.
வாழவேணர்டியவர்களுக்கு வாழ்பவர்கள் கைகொடுப்பதே வாழ்க்கைத் தத்துவம். வாழ்க்கைத் தர்மம்.
நோயாளி பதவியைத் துறப்பதும், சாகப் போகிறவனர் பொருளைத் அதுறப்பதும், ஆற்றாமையினர் விளைவுகள் அனைத்திலும்
வல்லவனர் அனைத்தையும் துறப்பதே ஆணர்மை மிக்கதுறவு.
பொறுமை பூண்டார் புகழ்முடி பூணர்டார்.
நானும் தேவனும், தேவனும் நானும் என்ற பல்லவியைப் பாடு. இருதயத்தை அமைதியாயிருக்கப் பழக்கு.
வெகுசிறந்த குணங்கள் துனர்பங்களிலிருந்து உணர்டாகினர்றன.
وي
செபம் உன் மகிழ்ச்சிக்குப் பரலோக வாசனையூட்டும்.
ပျွိမှိ)
கடவுளையன்று, மனிதரை வாழ வைக்கவேண்டும் மதம்.
தெய்வீக மருத்துவரே, விடிந்து இருள் நீங்கும்வரை எங்களை உமதருகே வைத்திரும்.
ଦ୍ବୈତ
தேடிக் குவித்த திரவியங்கள்
 

ஆணர்டவருக்கு நம்முடைய பலம் தெரியும் அடுத்துவரும் துனர்பங்களுக்கு அஞ்சாதே.
செபத்தோடு, விசுவாசத்தோடு, நம்பிக்கையோடு காத்திரு. கட்டாயம் காட்சி கிடைக்கும்.
ပျွိတ္တိံ) "
இதயமெலாம் அனிர்பு நதியினிலே நனைப்போம்.
அறமே வாழ்வினர் அரியணையாகும் அறவழி என்றால் அச்சமேயில்லை.
தனர் வார்த்தையளவு செயல் உயரவில்லையானால் பணர்புள்ளவனர் வெட்கமடைவானர்.
பிரார்த்தனையினர் போது இதயமில்லாத சொற்கள்
இருப்பதைவிடச் சொற்களில்லாத இதயம் படைத்திருப்பதே
தனினைத் துறக்கும் தொணர்டே தவம்,
.
உருசியைக் கட்டுப்படுத்தாவிடில் மிருக இச்சையையும் கட்டுப்படுத்த முடியாது.
(အံ့) உணர்மையும், அன்பும் ஒருநாணயத்தினர் இரண்டு பக்கங்கள்.
தேடிக் குவித்த திரவியங்கள் 19

Page 17
காலையில் கடமை வழுவாதவர்களுக்கு மாலையில் மகிழ்வு உணர்டு.
அகந்தையை அடியோடு அகற்றியவனுக்கு அணுவளவும் துன்பம் இல்லை.
இறைவனை நோக்கி நாம் ஒரடி சென்றால் அவர் நம்மை நோக்கிப் பத்தடி வருகிறார்.
உன்னிடத்தில் எது இருக்கிறதோ அதையே நீ உலகிலும்
காணர்கிறாயப்.
இறையுணர்வில் நிறைய உடல் உணர்வு மறையும்.
ஏற்பதைவிட வழங்குபவன் இகபர நலங்களை ஏராளமாகப் பெறுகிறான்.
முழுமனத்தையும், முழுஆற்றலையும், முழுஅறிவையும் ஓரிடத்திலே செலுத்து நிச்சயம் முழுவெற்றி காணர்பாய்.
g
கணிணீரின் ஜெபம் கர்த்தரின் உள்ளத்தை உருக்கும்.
ଜୂତ
இறைவனின் கரம் இரட்சிப்பின் கரம் இரக்கத்தின் கரம் இளைப்பாற்றியினர் கரம்.
ଞ
20 தேடிக் குவித்த திரவியங்கள்

கரைமணலைக் காலால் உதைத்து விட்டுக் கலகலவெனச் சிரித்தோடும் அலையைப்போலக் கவலையை உதறிவிடு.
என்னை நான் மாற்றினால் ஒர் அயோக்கியன மறைவானர்.
இழந்ததை எண்ணி வருந்துவதை விட இருப்பதை எண்ணி மகிழ்ந்திடல் சிறந்தது.
ஆணர்டவனை நம்பி ஆணர்டியாபவர்களால் உலகம் பயனடைகிறது.
பாதம் அறிந்தோர்க்கே வேதம் விளங்கும்.
உள்ளத்தின் ஆழத்திலிருந்து கிடைக்கும் அநுதாபத்திற்கு விலையில்லை.
இண்டதுன்பம் நிறைந்த உணர்வுகளைச் சுமப்பதுதான் உயிர்ப் பயணம்.
குழந்தைக்கிருக்கும் நம்பிக்கையும் குற்றமற்ற தனிமையும் இருந்தால் கடவுளை அடையலாம்.
பேராசை பாவத்துக்கு வாகனம்.
தேடிக் குவித்த திரவியங்கள் 21

Page 18
துன்பம் அநுபவிக்கும்போது குயரப்படுபவண்போல் நடந்து
கொள்ளாதே.
துனர்பங்களை மறந்துவிடு துன்பங்கள் போதித்த நீதிகளை
மறந்துவிடாதே.
கீழ்ப்படியக் கற்றுக்கொள் மேற்படியைப் பெற்றுக் கொள்வாய்.
அன்பு தடித்துப் பருத்து அருளாகக் கணிகிறது.
எப்போது நாம் நினைத்து நடக்கவில்லையோ அப்போது எங்கள் நினைவுக்கு மேல் வேறு ஒன்று உணர்டு எண்டது பொருள்.
நான் ஒரு புல்லிதழுக்கும் புல்லியன் எண்று நினை.
இயற்கைக் குணங்களைச் சீர்ப்படுத்தவே இன்னல்கள் ஏற்படுகின்றன.
இறைவனர் நம்மைக்குணமாக்க மருத்துவர்கள் சம்பளம் பெறுகிறார்கள்.
மனநிறைவற்றவனி மகா தரித்திரனர்.
22 தேடிக் குவித்த திரவியங்கள்

தர்ைனலம் தீர இன்னலும் தீரும்.
မွီ)
சலசலப்பில்லாத சாதனை நன்று.
ଜୂତ
அடங்கிய ஞானி சடங்குகள் வேணர்டானர்,
ஆசை மனத்திலா? பூசை எதறகு?
பிறவியினர் பயனெது? பிறர்தம் சேவையே.
&
நம்பிக்கை தளர்ந்தால் நாடி தளரும்.
ଜୂତ
கோயிலுக்குள் மக்களை அழைக்கும் மணி கோயிலுக்குள் நுழைவதில்லை.
அப்பமும் மீனும் போலப் பெருகுவதே அன்பினர் இலக்கணம்.
அறஒழுக்கத்தின் அடிப்படைத் தத்துவம் வேற்றுமையை அழிப்பதே.
ஆறு வற்றிப்போகும் போதுதான் மேகம் நினைவுக்கு வரும்.
[×¢ಹ குவித்த திரவியங்கள் 23

Page 19
ஆணவ தேசங்களில் எஞ்சியது அக்கினி,
(မြှ) சமயத்தாற் போகாத சாதி அழுக்குச் சவர்க்காரத்தாற் போகுமா?
୫ வழங்காச் செல்வம் வறுமையிற் கொடிது.
வடியாத வெள்ளம் வரலாற்றில் இல்லை,
(မှိ)
பவித்த மட்டும் பயனுள்ள வினை செய்.
தீயகாற்று வெளியே போகவேண்டுமாயின் தூயகாற்று உள்ளே புகவேண்டும்.
(ဎွိ
மலருக்கு மணம் மனிதனுக்குக் குணம் அவசியம்.
இறைவா நீர் எனினிடம் தாழ்மையை வேண்டுகின்றீர் நான் அந்த உயர்ந்த பொருளை இன்னும் எட்டவில்லையே.
မွိုက္ကံ
காலையில் மலர்ந்து மாலையிற் சுருங்கி நிலத்தில் விழும் பூவுக்குக்கூட வாழத்தெரிகிறது.
விஷம் தோய்ந்த அம்பை ஏவினானர் ஆதிமனிதனி விஷவாயுவை ஏவுகிறோம் நாம் இதுதானர் நமது மகத்தான முன்னேற்றம்.
தேடிக் குவித்த திரவியங்கள்
 

எனர்னி எணர்ணி எணர்னிப்பார்க்கிறேனர் எணர்ணுக் கடங்கவில்லையே இயேசுராசா உம் இரக்கத்தினர் பெருக்கம்.
(၄)
நீ செய்யும் பாவம் உனது தற்பெருமையினர் வடிவந்தான்.
மலையில் உயரத்தைக் காணர்பவனே உணர் மனத்தில் உயரத்தைக்
ქE/T6 Öö7,
ଝିତ பிறர் கொடுக்க முடியாததை அவர்களிடமிருந்து எதிர்பார்க்கும் போது நீ ஏமாறுகிறாய்.
வழிகாட்டியே தவறான வழியைக் காட்டினால் பயணிகள் என்ன செய்வர்?
அன்புக்கும் மன்னிப்புக்கும் அளவு கோல் கிடையாது.
। ଝିତ இது துன்பமில்லை நான் பின்னால் ஏதோ ஒர் இன்பத்தை அநுபவிக்க எண் பரமபிதா இப்பாத்திரத்தை எனர் கையிற் கொடுத்திருக்கிறார்.
அன்பின் தேவனி தகுதி எண்று கணிடாலன்றி ஓர் அம்பும் உணர்னைத் தாக்காது.
நாம்காணாத கரம் எங்கள் கணிகளைத் திறந்து ஒரு காட்சி காணச் செய்தது.
தேடிக் குவித்த திரவியங்கள்

Page 20
தேவனி பூரண கனியானபின் கொடுக்க விரும்புகிறார் மனிதனோ அதைக் காயாக எடுக்க ஆசைப்படுகிறானர்.
ଝିତ
தேவனினர் ஆபரணங்கள் யாவும் பளிங்காகப் பளபளக்கும் கணர்ணரே,
છે நடிது கடமைகள் நம்மைப் பரலோகத்துக்குத் தூக்கிச் செல்ல இறைவனாற் கொடுக்கப்பட்ட இறக்கைகள்,
பஞ்ச பூதங்களின் போராட்டத்தால் உணர்டாகும் புயலின் மத்தியில் விசுவாசம் வளர்கிறது.
ଦ୍ବୈତ
மானிட வாழ்க்கையினர் மகத்துவம் அவர்கள் அநுபவித்த துனர்பங்களினர் பயனர்,
நாம் காணாதவற்றை நம்புவதே விசுவாசம் நாம் நம்புவதைக் காண்பதே விசுவாசத்தினர் பரிசு.
மூடியிருக்கும் இதழ்களை விரித்துவிடாதே காலம் வரும் இதழ்கள் மலரும் நறுமணம் கமழும்.
ଜୂତ
தேவனுடைய ஆபரணங்கள் யாவும் பளிங்குகளான கணிணிரே,
எனினுடைய சித்தம் என்பதொன்றில்லை இம்மையிலும் மறுமையிலும் அவரது சித்தமே நிறைவேறட்டும்.
မွီ)
தேடிக் குவித்த திரவியங்கள்
 

உறுதியாயிரு அவர் உணர்னை முனர்பு ஒருபோதும் கைவிட்டதில்லை.
துனர்பங்களால் நாம் கணர்ட பயனர் என்ன? இறைவனர் ஒருவரே எங்கள் உதவி என்ற உர்ைமையைக் கணர்டோம்.
ଦ୍ବୈତ
இர்ைன இடத்தில் இர்ைண சமயத்தில் இன்ன பொருளால் இர்ைனது தீரவேணர்டும் எணர்டது தொப்வசித்தம்,
ပျွိတ်္တိ)
வைகல் தோறும் இண்பமும் இளமையும் எய்கணை நிழலினர் கழியும்,
(င့)
எல்லாரும் அர்ைபர் என்ற நிலை வரவேணர்டும் இல்லையிங்கு சாதிஎண்ற குரல் எழவேணர்டும் பொல்லாத நெஞ்சந்தனை மறந்திடவேண்டும் புனிதரினர் இறையரசு மலர்ந்திட வேணர்டும்.
କୁଁ உறுதியும் பொறுதியும் மலைகளையும் தகர்க்கும்.
அனர்பற்ற இடத்தில் விசுவாசம் இல்லை விசுவாசமற்ற இடத்தில் அர்ைடரில்லை.
இறந்துவிடுவோமோ என்று அஞ்சுவதை விட இறந்தபினர் இறைவனை விட்டுப் பிரிந்து விடுவோமோ என்பதை நினைத்து அஞ்சு,

Page 21
ஓர் உணர்மையான விசுவாசியினர் முகத்தில் துக்கம் இருக்காது.
வயது அதிகமாகிறதே என்று வருத்தப்படாது ஆணர்டவன் அருகே சென்று கொண்டிருப்பது குறித்து மகிழ்ச்சி கொள்.
r$2Y <چ>
சொல்லும் செயலும் இணைந்ததுதானர் முழுமையான போதகம்.
விளக்கினர் ஒளி காற்றில் ஆடியசைந்தாலும் அணையும் வரை ஒளி கொடுக்கத் தவறுவது இல்லை.
{
அறத்தினர் Լյսյ60ծrւb துரிதமாக இருக்காது ஆனால், தூய்மையானதாய் இருக்கும்.
ஆசைகளை வளர்ப்பவனி அழிவுகளையும் வளர்க்கிறான்.
ஊஞ்சலில் ஆடுபவனர் முன்னேபோவது போலப் பினர்னேயும் போகிறான் ஆகவே, அவன் முன்னேறுவதில்லை.
உலகிருளை ஊடுருவிச்சென்று இறையொளியில் உறவு கொள்வதே துறவு, இனம் மதம் மொழி நிறமென்ற பல வணிணங்களையும் குழைத்து மனம் விரும்பும் புனிதநிறத்தை உருவாக்குவதே துறவு, ஊரும் எறும்புக்கும் உயரும் பருந்துக்கும் நடுவேகாணும் உயிர்கள் மீது கருணைகூர்வதே துறவு, கொள்கைக்கு முதலிடம் கொடுக்கரமல் மக்கள் அழுகைக்குப் புகலிடம் கொடுப்பதே தியாகத் திருப்பணித் திலகங்களினர் Ֆlմ06Վ.
28 தேடிக் குவித்த திரவியங்கள்

நம்முள்ளத்தில் ஒரு கடவுள் உணர்டு நம் மனச்சான்றே அது.
9
மரணத்துக்கு அஞ்சாத பெண்ணை எவனும் மானபங்கம் செய்ய Cւpւգ-եւմՈ35/.
k 9
இறைவனை என்றும் தேடிக்கொணர்டிருப்பேனாக தேடிச் சந்திக்காமலும் இருப்பேனாக,
பொருளைக் கொடுத்து அருளைப் பெற்றுக்கொள்.
இறைவன் எனர் உள்ளக் கோவிலில் இருக்கிறார் அதனாலேயே எனிபடத்தை நானர் எப்போதும் வணங்குகிறேனர்.
(မှိ
இறைவனிடம் பெற்ற கடனை எப்படித்தீர்ப்பது? வாயார வாழ்த்தி நெஞ்சார நினைத்து தலையார வணங்கித் தீர்க்கவேண்டும்.
அன்புப் பூங்கொடிமலர் வாடாது மணம் போகாது அழியாது வாழும்.
தியாகத்தைப் போலத் தெய்வீக இன்பம் வேறில்லை.
ଜୂତ
கட்டடங்கள் கட்டும் மதத்தை விட மனிதரை புனிதமாக்கும் மதமே மேலானது. . . −
29 குவித்த திரவியங்கள் شعبوها

Page 22
மதத்தினர் பெயரால் கட்டுப்பாடுகளை ஏற்படுத்துவதற்கு முனர் இருதயு கமலத்தில் இருக்கும் கடவுளை தெரிந்து கொள்ளுங்கள்
(င့)
அணர்பு ததும்பி அனிர்பு வெளர்ளத்தில் பகைவர்களையும் மறந்துவிடும் மார்க்கந்தானி மனத்தைக் கவரும்.
ஒருவனது ஆசாரங்களில் சத்தியம் இல்லாவிட்டால் ஆணர்டவனும் அவனும் சம்பந்தமற்றவர் ஆகின்றனர்.
வாழ்க்கையினர் ஊடே சத்தியம் கலந்து புகுந்துவிட்டால் அணர்டவனர் அருகே துணை அளிக்கிறார்.
ஆணர்டவனர் அருள்மிகு செயல்களை காண வேணர்டுமானால், ஏழைகளுக்கு உணவும், உடையும் கொடு, ஒடுக்கப்பட்டவர்களுக்கு
விடுதலைகொடு,
கனவிலும், நனவிலும் இர்ைபத்திலும் ஆர்ைபத்திலும் இறைவனது அருட்பிரகாச வெள்ளத்தில் நடப்பதே ஆத்தும வித்தையைச் செவ்வையாய் உணர்ந்தோர் அநுபவிக்கும் ஆனந்தம்.
வயிறார ஆணர்டவனைப் புசிப்பதும் தாகந்தீர ஆணர்டவனைப் பருகுவதுமே உணர்மை ஆண்மாவினர் நன்னிலை.
மதச் சணர்டைக்காரர் சுவடிகளைப் படித்து ஆணர்டவனைத் தேடமுயல்கிறார்கள். எளிய மக்களுக்கிடையேதானர் அவர் காட்சி தருகிறார்.
30 தேடிக் குவித்த திரவியங்கள்

பொய்ப்புலவர்களும், பொய்க்குருக்களுமே ஆணர்டவன் அருளை மறைக்கிறார்கள். மறக்கவைக்கிறார்கள்.
9 பிறர் அனர்புக்குப் பாத்திரமாய் இருக்கவேண்டும் என்ற ஆசையைவிடப் பிறரிடம் உணர்டாகும் அர்ைபுதானர் ஆசையாகப்
பெருகவேணர்டும்.
பார்த்தால் எணர்னவோ மனித ரூபம் தானர் ஆனால், நெஞ்சமோ மிருக சுபாவமே,
காலம்தானி ஊக்கத்தினர்தாப், ஆக்கத்தினர்தந்தை, மனமே உணர் துயர்நாளில் காலம் உனக்கு எண்ன செய்யப் போகிறது என்பதைச் சிந்தித்துப் பொறுமையோடு காத்திரு.
ပျွိတ္တံ' துனர்பக்கரையேறியபினர் கர்வம் அடையாதிருக்கவும் துனர்பங்களில் திகிலடையாமலிருக்கவும், பரம்பொருளினர் அன்பு வெள்ளத்தில் ஆழ்ந்தோருக்கே இயலும்.
ஆத்தும பரிபக்குவம் அடையாதோருக்கு இயற்கையிற் பொதிந்து கிடக்கும் தத்துவ நிதிகள் எட்டுவதில்லை.
@
எந்தவயதிலும் ஒரு பொருளினர் உபயோகத்தைப் பொறுத்திருக்கிறது அப்பொருளிலுள்ள அவா.
சிறைச்சாலையில் தவிப்பவர்களை, சிகிச்சைச் சாலையில் துடிப்பவர்களை, வீட்டுவாசலில் இரப்பவர்களை எவர்ை மறக்கிறானோ அவனர் ஆணர்டவனையே மறந்தவனாகிறான்.
(9)
தேடிக் குவித்த திரவியங்கள் 3.

Page 23
ஆணர்டவனர் தரிசனம் வேணர்டுமா? ஆலயத்துக்குச் செல்லுமுனர் மிகமிகத் தாழ்ந்தோர் மத்தியில் ஈசனி வாசமாயருக்கிறார் அங்கே போய்ப்பார்.
வேதபுராணம் படிப்பதை நிறுத்து வீட்டுவாசலில் நிற்கும் ஏழைக்குப் பிச்சையிடு,
துயரம், தரித்திரம், தொல்லைகள் ஒவ்வொன்றும் வாழ்க்கைக்கு
வேணர்டிய அணிகலனர்கள் சுகபோகநர்களில் தலைகால் தெரியாமல் ஈடுபட்டிருப்போர்க்குத் அதுயரம் பெரும் சோதனையாகும்.
sg),16) 13:FfUTLD/T607 அலுவல்களைச் சற்றுஅகற்றிவிட்டு ஆணர்டவனின் ஆன்மபோதகங்களைக் கொஞ்சம் உற்றுக்கேள். ஆனந்தம் பெருகும் ஆண்மசாந்தி ஏற்படும்.
நாள் காட்டியில் ஒவ்வொரு நாளாகக்கிழிக்கலாம் கடைசிநாள் அப்புறம்கிழிக்க முடியாது.
உணர்டதே உணர்டும் உடுத்ததே உடுத்தும் உரைத்ததே அடுத்தடுத் துரைத்தும் கணர்டதே கண்டும் கேட்டதே கேட்டும் கழிந்தன கடவுளிர்நாளெல்லாம்.
அன்பு நன்றி கருணை கொணர்டவனர் மனித வடிவில் தெய்வம்.
မွီး9
32 தேடிக் குவித்த திரவியங்கள்

கள்ளம் கபடமற்ற வெள்ளை உள்ளங்களே மதத்தினர் பிள்ளைகள்,
ပျွိစုံ)
வார்த்தைகளில் நிறந்தீட்டி வானவில்லை வரைவது பயனற்ற வாழ்க்3ை.
@ அறநெறி தழுவிய ஆண்மீக இயக்கமே இர்ைபத்தினர் அடிப்படை
- ပျွိမွီ)
அறச்செயல்களாற்றும் போது அடையும் ஆனந்தம் உறுதியானது, உயர்வானது, உணர்மையானது.
ஆன்மீகபலம் துணிபந்துடைக்கும் தூய்மையுள்ளது.
இருளில் ஒளloயறறவும், முட்புதரிற் பூஞ்செடி நாட்டவும், அக்கிரமக் கட்டவிழ்க்கவும், ஒடுக்கப்பட்டோரை விடுவிக்கவும், பசித்தோர் பசித்துயர் தீர்க்கவும் உன்னை நான் சிருட்டித்தேனர்.
அமரிக்கையும், நம்பிக்கையும் உள்ளத்தை ஆட்கொணர்ட பின்னரே ஆண்டவரினர் அற்புத உதவியும் அருளப்படும்.
-
ஒனர்றென்றும் நன்றென்றும் என்றென்றும் உணர்னையே உள்ளொன்றி நிற்க அருள்வாயப்.
ଜୂତ
அன்னை அப்பணி அரசனி அருந்துணை அருட்குருவும் நீயே,
(ပြဲ
தேடிக் குவித்த திரவியங்கள் 33

Page 24
கடவுள் நமக்களிப்பது கடவுள் அளவு நாம் அவருக்களிப்பது நம்மளவு.
கள்ளங்கபடமற்ற வெள்ளையுள்ளங்களே எண் பிள்ளைகள்.
வாழ்வினர் வெற்றி இரகசியம், பறருக்காகத் தன்னை இழந்து இன்பம் காணபதே.
ଓଁ ।
ஏற்றத் தாழ்வான சமூக அமைப்பில் மாற்றம் செய்யாது எழுப்பப்படும் நீதியும் போதனையும் போலித்தனமானவை.
· §
தியாகமனம், சேவையுணர்வு பற்றற்ற வாழ்வு பொதிந்ததே ஆன்மீகம்.
(9) பற்றற்று வாழக் கற்றவனுக்கு மரணபயமில்லை.
(ဎွိ
அன்பு செலுத்துவது என்றால் மலரோடு விளையாடுவதில்லை நெருப்போடு விளையாடுவது.
ଞ
வெறும் தோற்றத்திலிருந்து மெய்ப்பொருளைப் பகுத்தறிவதே தத்துவம் S.
ସ୍ପିତ அளிப்பது மட்டுமன்று தன்னை பிறருக்காக அழிப்பதும் அன்பு.
தேடிக் குவித்த
 

கல்வி மனிதனினர் கணிகள் கணிணினி மணியே ஒழுக்கம்,
உடற்றவம், செயற்றவம், மனத்தவம், உயர்தவங்கள்.
(ဎွိ
கற்ப எணர்டது அங்குச உருக்கு,
မွီး)
அைைனபரும் தந்தையருமே நாம் பெற்ற கலைச்செல்வங்கள், ஞானத்திரவியங்கள், நல்லொழுக்கப் பெட்டகங்கள், கணிகண்ட தெய்வங்கள்.
၊ မွီး)
பலவீடுகள் இருப்பினும் படுப்பது ஆறடி நிலமேதானர்.
9
பேச்சளவில் நிற்காதே உள்ளம் உருகி ஆணர்டவனிடம் மனத்தைச் செலுத்து.
မွီ)
கருணை எனர்டது வருணனை ஒத்தது கடவுள் தனிமையினர் கணர்னெனத் திகழ்வது.
မွီး)
போதுமெனிறருத்தலே புணர்ணிய வீடு,
ଖୁଁ
உணர்மையே உந்தனர் திணர்மையினர் கவசம்,
ပျွိမွီ)
நீ நல்லவனாயினி நாளர்களும் நல்லன,
தேடிக் குவித்த தீவியங்கள்

Page 25
எணர்னவா மர்ைனவா நீயினர்றி நானில்லை எனவாழும் இனிபம் அருளாப்,
வழிதெரிந்தாற் போதாது வழியால் நட
&
உள்ளத்தைத் துரப்மையாக வைத்துக்கொணர்டால், அதில் ஆணர்டவனர் முகத்தைக் காணலாம்,
ஆசைகளைப் பிடுங்கு. ஆனர்மப் பயிர் வளரும்.
କୁଁ படிப்பும் புலமையும் வேறு, பக்தி உணர்வு வேறு.
இச09 இல்லாதவரிடம் சாத்தானிபுகாது பிறரை வரவேற்கக் கருணை காட்டுவதே இல்லக்கோவில்.
}
நார்ைபெரியவனர் எனர்பவனுக்கும் நாள் குறித்துக் கூட்டிச் செல்பவனி இறைவனர்,
င္ငံမ္ဘ
பணக்காரனர் சிந்தித்துப் பார்க்கப் படைக்கப்பட்டவை மின்மினி - தாரகை - மின்னல் துரியனி - சந்திரனி - மலர்கள்.
(ဎွိ
உலகைப் படைத்தவனுக்கு உள்ள ஓர் உருவம் உணர்மை,
தேடிக் குளித்த திரவியங்கள்
 

மக்களிடம் மக்கள் காட்டும் மதிப்புத்தானி அர்ைபுச் செல்வக் கொடை
܊ அற ஒழுக்கத்தின் அடிப்படைத் தத்துவம் வேற்றுமையை ஒழிப்பதுதானர்.
பரம்பொருள் நம்மைக் கைவிடுவதில்லை நாமும் பரம் பொருளைக் கைவிடக்கூடாது. . . .
ပျွိမှိ
அனைவரிடமும் தன்னையும் தன்னிடம் அனைவரையும் காணர்பவனர் என்றுமே மறைவதில்லை.
9
மனிதருக்கு நன்மைகள் புரிவதே ஆணிடவனுக்குச் செய்யும் தொணர்டாகும். . . .
மண, பெண, பொன் எனக்குப் பர்ம்புப் புற்று இறைவனி திருவடிகளே எனக்குப் பற்று.
அறநெறி தழுவிய ஆன்மீக இயக்கமே ஆனந்தம்.
சமுதாய நலனுக்கு உழைக்காத சமயம் சாரமற்றது.
୫ ।
காணக்கூடியது உள்ளங்கையளவு காணக்கூடாதது உலகினளவு.
தேடிக் குவித்த திரவியங்கள் 37

Page 26
உமக்கு உடனர்படுவோரை மட்டும் அனிர்பு செப்வதில் எணர்ன சிறப்புணர்டு?
பதவியும் பணிவும் தகுதியும் தாழ்ச்சியும் ஓரிடத்து நிலைத்து
விட்டால் அதுவே பேரின்பம்.
ஒரு குழந்தையின் உள்ளம் அமைந்து விட்டால் படைப்புக்கள்
யாவும் பரமனி எழுதிய கவிதைகள். -
இறைவனுக்கு வெளியே வாழ்வில்லை.
இளகியமனமும் இரும்புத்திடனும் பொதுநலத் தொணடனின் இருபெரும் பணிபுகள்.
மானிடம் பெறுவதே மாதவமென ஒளிவிட்டு மிளிர்வதே மகத்தான வேதாந்தம், V
9
பணிவுகொணர்ட நெஞ்சம் பரமனி தங்கும் மஞ்சம்.
(မှိ பிறருக்காக வாழ்ந்து வாழ்விழப்பதிலேதானி வாழ்வின் பயன் வாழ்கிறது.
மனிதரை மனிதராக வாழவிடுவதே மனிதப் பணிபு.
မွီး)
தேடிக் குவித்த திர்லிடங்கள்
 

ஆசிரியரின் ஏனைய நூல்கள்
புறாவே பற (அன்னை மரி மீது கன்னிக் கவிதை)
முதற்பதிப்பு : 1974 இரண்டாம் பதிப்பு : மே 2000
யாழ்ப்பாணம்
இதய வீணை (கவிதைத் தொகுப்பு)
முதற்பதிப்பு : 1980 யாழ்ப்பாணம்
சிந்தை இனிக்கும் செல்வம் (சிறு கட்டுரைகள்)
முதற்பதிப்பு : 1995
வெளியீடு : திருமறைக் கலாமன்றம்
238, பிரதான வீதி யாழ்ப்பாணம்
&y:ë »Tak afwÝ. MN-Matxe
யோசேவ்வாஸ் முனிவர் அம்மானை முதற்பதிப்பு : 1984 வெளியீடு : யாழ் கத்தோலிக்க இலக்கியக் கழகம்
ஆயர் இல்லம், யாழ்ப்பாணம்.
Goflöö GGDơULÜJUs 691òUDTD60f முதற்பதிப்பு : 1989 வெளியீடு : யாழ் கத்தோலிக்க இலக்கியக் கழகம்
ஆயர் இல்லம், யாழ்ப்பாணம்
புனித ஆசீர்வாகுப்பர் அம்மானை
முதற்பதிப்பு : 2000
வெளியீடு : அருள்திரு அன்ரன் மத்தாயஸ்
பங்குத்தந்தை - புனித ஆசீர்வாதப்பர் ஆலயம் கச்சேரி நல்லூர் வீதி, யாழ்ப்பாணம்.

Page 27
360, பிரதான வீதி, யாழ்ப்பாணம்.
புனித வளன் கத்தோலிக்க அச்சகம்,
தொலைபேசி இல. 021-2378


Page 28


Page 29

அமரர் ம. விக்ரர் அவர்கள் அமுதகவி என ன் அழைக்கப்பருபவர். அவள் ஈழத்தின் மூத்த pப்பத்திரண்ரு ஆண் h ஆசிரியப் பணியில் ஐம்பது வருடங்களுக்கு மேலாக இலக்கிய குடன் தன்னைப் பிணைத்துக் கொண்டவர்.
ாதும் புன்சிரிப்பு, இனிமைமிகு சிந்தனைகள், தல் உவத்தலற்ற கண்ணியம், ஆன்மீகத்தில் றும் கவிதைப்புலமை, மற்றவரை வாழ்த்தும் இவையனைத்தும் இவரின் சிறப்பியல்புகள்.
ப மேடைகளில், கவியரங்குகளில் பலராலும் ம்புத் தமிழ்ச் சங்கம், அவுஸ்திரேலிய தமிழ்ச் வ நடத்திய உலகளாவிய தமிழ்க் கவிதைப் ளைப் பெற்றவர். கவிதை, நாடகம், கட்டுரை, ான முத்தமிழிலும் வித்தகராய்த் திகழ்ந்தவர்.
நீதி செல்வி, ராஜி, பொன், அமரநாத் முதலிய த்திற்கும் மேற்பட்ட கவிதைகளை எழுதியவர். கசரி, சுதந்திரன், ஈழநாடு, தினகரன் போன்ற விவேகி புதிய உலகம், கலைமுகம் போன்ற களிலும் இவரது கவிதைகள் வெளிவந்தன.
ணை, புனித சூசையப்பர் அம்மானை, புனித வில் அம்மானை, சிந்தை இனிக்கும் செல்வம், அம்மானை போன்ற இவரது பல நூல்கள் ா. இவரது பல பாடல்கள் பல்வேறு ழைகளில் இசைவடிவம் பெற்றுள்ளன.
ܓ