கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: தோழன் 1994.04-07

Page 1

劉
· @ 历
9 4 նմ լ`

Page 2
மரணம் விழுங்கிய guay........
கம்பியை சூடேற்றி எனக்குள் குத்தி, இழுத்த துவாரங்களில் "மராம்" சொட்டு. சொட்டாக ஒழுகிக்
கொண்டிருந்தன.
輩
நிலத்தில்
வைக்காது நிர்வானமாய்தான் நின்றிருந்தேன்; "வெட்கம், ஒரு முடித்துண்டைப் -போலாவது முளைக்காதவனாய்.1
莺
தொண்டை கிழியகத்தியும் கேட்காத தொலையில் எனது நாக்கை இழுத்து
கயிற்றால் கட்டிக் கிடந்தது.
SU2
ޤلأعلދި<
ܒ .
ரோஷான் ஏ.ஜிப்ரி.
எனது நகங்கள் எல்லாம் அருகில் இருந்த
தட்டில்
._1 : 1 1 芷- அறுந்து கிடந்த
பல்லி வாலைப் போல் துடிதுடித்தன.
责
STSTSSISST முறைத்துப் பார்த்தவன் ஓங்கிவிட்ட குத்தின் பின் குடலும், ஈரலும் ஒன்றில் ஒன்று இடரி, மோதி வாய்க்குள்ளால் வெளியேறி நிலத்தில் வந்து விழுந்தது. ஒரு முண்டத்தைப் போல்.
வாலிபம் முதுமை விஷம் குடித்து இறந்து போகும் வரை இட்டு வைக்காது
கழுத்தறுப்பாய்த்தான் ஒவ்வொரு கனவும் தோன்றி. I தோன்றி
மறைகின்றன.

எண்ணிய முடிதல் வேண்டும் நல்லவே எண்னல் வேண்டும் திண்ணிய நெஞ்சம் வேண்டும் தெளிந்த நல்லறிவு வேண்டும்,
பாரதியார்.
இதய வாசல்கள்
அழகினால் அலங்கரிக்கப்பட்டதுதான் இயற்கை, அந்த இயற்கைக்கும் இதயம் இருக்கிறது. சோலையின் இதயம் தென்றல், மலர்களின் இதயம் வாசம், இரவின் இதயம் பெளர்ணமி, இருள், திருவிழா நடாத்தும் மேகங்களின் இதயம் குளிர்ச்சி விழிகளின் இதயம் பார்வை. ஒவ்வொரு படைப்பும் இதயங்களால் உதயமானவை. அந்த இயற்கையின் புதையல்களை புரட்டுவதற்கு இதயமுள்ள மனிதனே இரக்கப்படுகின்றானில்லை,
இதயத்தின் இதயம் மென்மை, அந்த மென்மையின் இதயம் உண்மை. இந்த மென்மையும் உண்மையும் மனிதனிடம் கண் மூடித் தூங்குகின்றன. அதனாற்றான் மனிதன் மயக்கத்தின் மடியில் கிடக்கின்றான். ஆசைகளின் ஒசைக்குள் காணாமற் போகின்றான்.
சந்திரனைக் கடந்தே சிந்தனையைச் செலுத்திவிட்டான். ஆனால் தனக்குள் கிடக்கும் இதயத்தை மனிதன் இன்னமும் நெருங்கவில்லை. எண்ணங்களில் முட்கள் பூக்கின்றன. பார்வையில் இருள் நிரம்பி வழிகின்றது. பேச்சில் பொய் புஷ்ப்பிக்கின்றது. செயல்கள் சுயநலக்கடலில் சங்கமமாகின்றன. சூதும் வாதும் கைகோர்த்துக் கொள்கின்றன. இதனால் உலகம் தன் இதயத்தை இழந்தே விழுந்து கிடக்கிறது. சூரியனைத் தொலைத்துவிட்டு விடிவைத் தேடுகின்றார்கள். விடிவும் முடிவும் இதயத்தின் இதழ்கள்! மனிதனுக்கு இது புரியவில்லை!
நறுமணம் நல்ல மலர்களில் இருக்கிறது. உதயம் நல் மனங்களில் இனைந்திருக்கிறது. தீயை அணைக்க நீரூற்றுவதை விட்டுவிட்டு நெய்வார்க்கலாமா? இருளுக்குள் வெளிச்சத்தோடுதான் செல்ல வேண்டும். முட்காட்டை செருப்பின் துணை கொண்டுதான் வெல்ல வேண்டும்.
ஒவியத்தில் அதனை வரைந்த ஓவியன் இருக்கின்றான். கவிதையில் கவிஞனின் இதயம் புதைந்திருக்கிறது. சிற்பத்தில் சிற்பியின் கற்பனை வீற்றிருக்கிறது. கலைகளிலிருந்து இதயத்தை கண்டெடுங்கள்! துருப்பிடித்த இதயத்தை மினுங்கச் செய்யலாம்.
கலை இலக்கியங்கள் உலகத்தின் வாசல்கள் இதயங்களைத் திறக்கும் திறவுகோல்கள்! உணர்வுகளுக்கு உயிர் கொடுக்கும் பிரம்மாக்கள்! இறைவனின் இயற்கை உலகம் என்றால் மனிதனின் இயற்கை கலை இலக்கியங்கள்! வேசங்களையும், துவேசங்களையும் ஆவேசத்தோடு எதிர்ப்போம்! பாசவாசகத்தை எம் இதயப் பலகையில் எழுதுவோம்.
(mዜ+ñ)

Page 3
நமது வானத்தின் கீழ் . - நவீனன் -
ர்த் பறும் பேராசிரிய
இன்றைய ஈழத்து விமர்சனத்துறையில் பல்கலைக்கழக ஆசான்களின் பங்களிப்பு குறிப்பிடத்தக்கதாக விளங்குகின்றது. பேராசிரியர்கள் கைலாசபதி, சிவத்தம்பி வரிசையில் குறிப்பிடத்தக்க ஒருவராக விளங்குபவர், பேராதனைப் பல்கலைக்கழகத் தமிழ்த்துறைத் தலைவர் பேராசிரியர் சி. தில்லைநாதன் ஆவார். யாழ்ப்பாணத்துக் கிராமிய மண்வாசனையை நுகர்ந்து வளர்ந்த அவர், படிப்படியாக உயர்ந்து பேராசிரியர் நிலையை எய்தியுள்ளார். எளிமையும், செயல்திறனும் வாய்ந்த பேராசிரியர் தில்லைநாதன் அவர்கள், தமக்கெனத் தனியான ஆளுமை மிகுந்தவராக விளங்குகின்றார். முற்போக்குக் கருத்துக்களைக் கொண்ட அவர், கலை - இலக்கியங்கள் பற்றிய தரமான விமர்சனப் பார்வை கொண்டவர். கவிஞராகவும், நாடக ஆசிரியராகவும் விளங்கும் அவர், பல்கலைக்கழக மாணவராக இருந்தபோது சிறுகதை எழுத்தாளராகவும் மிளிர்ந்தவர். அவரின் நூல்களும், கட்டுரைகளும் அவரது பன்முக ஆற்றலைத் திறம்பட இனங்காட்டுகின்றன. பத்திரிகையாளராகவும் விளங்கிய அவரது தமிழ்நடை தனித்துவமானது. இத்தகைய திறமை வாய்ந்த பேராசிரியர் தில்லைநாதன் அவர்களை இலக்கியச் செம்மல், கலாகிர்த்தி ஆகிய பட்டங்கள் அடைந்து, தமது தரத்தை உயர்த்திக் கொண்டுள்ளன.
மண்ணும் மடாதிபதிகளும்
எமது மண் பெற்ற "தவப்பயன்’களுள் ஒன்று, பெளத்த மடாதிபதிகளைத் தேவைக்கு அதிகமாகவே பெற்றிருப்பதாகும். புத்தபிரானை வசதியாக மறந்துவிட்டு, நன்கு தின்று கொழுத்துச் சொகுசாக வாழும் அவர்கள், தமது பொழுது போக்குக் கடமையாகக் கொண்டிருப்பது, பேரின வாதத்தையாகும். புத்தபிரான் அகிம்சை யையும், ஜீவகாருண்யத்தையும், அன்பையும் போதிக்க, இந்த மகானு பாவர்கள் அவற்றையெல்லாம் கிடப்பில் போட்டுவிட்டு, இலங்கை யின் சிறுபான்மை இனங்களான தமிழருக்கும், முஸ்லிம்களுக்கும் எந்த அரசியல் உரிமையும் கிடைத்து விடக்கூடாதென்பதில் வக்கிர உணர்வோடு செயற்பட்டு வருகின்றனர். பெரும்பான்மை இனத்தவ

ருக்கு மட்டுமே இந்த மண் சொந்தமானது என்பதே இந்த மடாதிபதிக ளின் உதட்டிலும், உள்ளத்திலும் ஒலிக்கும் தாரக மந்திரமாகும். இன வாதத்துக்கு இடமளிக்காத ஒரு சில பெளத்தத் துறவிகளும் இருக்கத் தான் செய்கின்றனர். ஆனால், பெரும்பான்மையோர் மேற்கண்ட “இலட்சணங்களை” உடையவர்களே. நாட்டின் அரசும், கட்சிகளும், மக்களும் தமது ஆணை கேட்டே அடங்கி ஒழுக வேண்டும் என்பது அவர்களது சர்வாதிகார எதிர்ப்பார்ப்பாகும். இம்மண்ணின் சகல அதிகாரங்களையும் மறைமுகமாகத் தமது கரங்களிலேயே எடுக்க விழையும் இவர்களை, இந்நாட்டின் ஒவ்வோர் அரசும் தேவையின்றிப் பணிந்து வளர விட்டுவிட்டன. அதனால் இந்த மடாதிபதிகள் எதைத் துறக்க முடிந்தாலும், அரசியலை மட்டும் இலகுவில் துறக்க இயலாமல் அவஸ்தைப்படுகின்றனர். இவர்களினால் இப்போது மஞ்சள் நிறமே மதிப்பிழந்து விட்டது. இந்த மண் படும்பாடோ சொல்லுந்தரமன்று.
இலங்கை வானொலி தனக்கெனத் தனித்துவமான சில சிறப்பியல்பு களைக் கொண்டு வளர்ந்து வந்துள்ளது. தரமான நிகழ்ச்சிகளையும் அது ஒலிபரப்பிவருகின்றது. அவ்வகையான நிகழ்ச்சிகளுள் ஒன்றே. வாராவாரம் புதன்கிழமை தோறும் இரவு ஒன்பதரை மணிக்கு ஒலிப்பரப்பாகிவரும் கலைப்பூங்கா என்ற நிகழ்ச்சியாகும். புதிய சுவையையும், அறிவையும், அனுபவத்தையும் இந்நிகழ்ச்சி சுவைஞர்க ளுக்கு வழங்கிவருகின்றது. அவ்வப்போது சில சிறப்பு நிகழ்ச்சிகளும் கலைப்பூங்காவில் இடம்பெற்று வருகின்றன. பல்துறை சார்ந்த அறி ஞர்களும், கலைஞர்களும், எழுத்தாளர்களும் இந்நிகழ்ச்சிக்கு உரமூட்டி வருகின்றனர். அதேவேளை கலைப்பூங்காவின் சிறப்புக்குப் பின்னணியாக விளங்கும் இருவரைக் குறிப்பிட்டேயாகவேண்டும், ஒருவர், இந்நிகழ்ச்சியின் தயாரிப்பாளர் ஜோர்ஜ் சந்திரசேகரன்; மற்றவர் நிகழச்சியைத் தொகுத்து வழங்கும் என்.எஸ்.எம். உதயச்சந்திரன். தரமானவர்களை நிகழ்ச்சியிற் பங்குபெறச் செய்வதிற் சிரமப்பட்டு உழைத்து, புதிய பரிமாணங்களைக் கலைப்பூங்காவுக்கு ஏற்படுத்தி வருகின்றார். அவ்வப்போது சிறப்பு நிகழ்ச்சிகளில் தொழில்நுட்ப உதவியாளராகக் கலந்து கொள்ளும் முத்துக்குமாரு வரதராஜன் இசையறிவும் தொழில் நுட்பத் திறனும் உடையவராவர். இவர்களுக்கு உறுதுணையாக விளங்கும் தமிழ்ச்சேவை மேலதிகப் பணிப்பாளர் வீ. என். மதியழகனும், தமிழ் நிகழச்சிப் பணிப்பாளர் என். சிவராசாவும் இவர்களோடு சேர்ந்து பாராட்டுக்குரியவர்கள்.

Page 4
ஒரு கலைஞரின்தடுமாற்றம்
இலங்கைத் தமிழ் தினசரியொன்றின் வார மஞ்சரியில், புதிதாகப் பட்டம் பெற்ற கலைஞர் ஒருவர் கட்டுரையொன்றை எழுதி வருகின்றார். பட்டம் பெற்று விட்ட அவஸ்தையில் அவர் படும்பாடு மிகச் சுவாரசியமானது, அக்கட்டுரையில், குறிப்பிட்ட கலைஞர் நிலை தடுமாறி, தாம் பெரும் மேதாவி போலவும், மாபெரும் கலைஞர் போன்றும், கலையுலக விமர்சகர் போலவும் தம்மைச் சுற்றியே மகளிர் வட்டம் சுழல்வது போன்றும் கற்பனைப் பிரமையில் திளைத்து மனம்போன போக்கில் எதைஎதையோ எழுதிவருகின்றார். அக்கட்டுரைத் தொடரிற் குறிப்பிடத்தக்க ஒரு விடயம், அறிவிப்பாளர் அப்துல் ஹமீட்டை உயர்த்த வேண்டுமென்பதற்காகப் பிறரை மட்டந்தட்ட அவர் எடுத்துக் கொண்ட முயற்சியாகும், பீ.எச். அப்துல் ஹமீட் ஒரு சிறந்த அறிவிப்பாளர் என்பதில் யாருக்கும் கருத்து வேறு பாடு இல்லை. அவர் உண்மையில் பாராட்டப்படத்தக்க கலைஞரே, ஆனால், அதற்காகக் கட்டுரையாசிரியர் முன்னாள் இலங்கை surroe TreS அறிவிப்பாளர் மயில்வாகனத்தைக் மதிப்பிடவோ, தரக் குறைவாகக் குறிப்பிடவோ அவசியமில்லை. கட்டுரை எழுதிவரும் கலைஞரின் பார்வையில், மயில்வாகனம் அறிவிப்பாளர் என்ற வகையில் சைபர் மார்க் கூடப் பெறத் தகுதியற்றவர் எனக் குறிப்பிடப்படுவது, எழுதியவரைத் தவிர வேறு எவராலும் ஒப்புக் கொள்ள இயலாத ஒன்றாகும். பின்னால் வந்த இலங்கை வானொலி வர்த்தக சேவை அறிவிப்பாளர்களுக்கு முன்னோடியாகவும், தமது தனித்துவத் திறமையினாலும், குரல் வளத்தாலும் மிகப் புகழ் பெற்றும் விளங்கியவர் மயில்வாகனம் என்பதை எவராலும் மறுக்க இயலாது. வானொலி வர்த்தக சேவையை இலங்கையிலும், தமிழ்நாட்டிலும் செவிமடுக்கத் தூண்டியவரே மயில்வாகனம்தான். துணிவும், திறமையும் கொண்ட அறிவிப்பாளராக அவர் விளங்கினார். இந்த உண்மையை மறந்து, அல்லது மறுத்து, முழுப் பூசினிக்காயைச் சோற்றுக்குள் மறைக்க முயலும் குறிப்பிட்ட கலைஞர் போல்வார், கலையுலகுக்கே களங்கம் விளைவிப்பவராவர். குறிப்பிட்ட கட்டுரையை எழுதி வருபவர், தரமான ஒரு முன்னாள் வானொலி நாடக நடிகர் என்பதிற் சந்தேகமில்லை. ஆனால், பட்டம் பெற்றுவிட்ட அவஸ்தையில் அவர் படும்பாடு, அவரை மிக இறக்கிவிட்டது.

ஞானம் பிறக்கும்
தமிழ்மணி திருமதி நா. பாலேஸ்வரி
லமைக் கிளார்க்கர் நாகராஜன் தனது இருக்கையில் சிறிது நிமிர்ந்து அமர்ந்து கொண்டார். தமது முப்பதாம் வயதிற் பிரிந்து போன இளமை மீண்டுந்திரும்பிவிட்டது போன்றதோர் உற்சாகத்தோடு தனது சட்டைப்பைக்குள் இருந்த சிகறெற் பெட்டியை இழுத்துத் திறந்து ஒன்றைப் பற்ற வைத்து உதடு வழியாகப் புகையை அவர் ஊதித் தள்ளியபோது அவரைப் பார்த்தவர்கள் எவருமே ஐம்பது வயதைத் தாண்டியவர் என்று நினைத்து இருக்கமாட்டார்கள். அவர் கூட அப்படித்தான் நினைத்தார். அவர் உள்ளத்தில் என்றுமில்லாத நிம்மதி அன்று நிலவியது. எத்தனையோ மாதங்களாக எடுத்த முயற்சி பலனளித்ததில் அவருக்கு ஒரு தெம்பு ஏற்பட்டது.
ரகுராஜனை இவ்வளவு சுலபமாக வசப்படுத்தி எடுக்கலாம் என அவர் எதிர்பார்க்கவில்லை. அவன் அவரது கந்தோரில் அவருக்குக் கீழ் உத்தியோகமேற்று இன்றுடன் ஒன்றரையாண்டுகள் கழிந்துவிட்டன. அவனை அவர் முதன் முதற் கண்ட போதே தன் மகள் பிரேமாவுக்கு அவனை மாப்பிள்ளை ஆக்கிவிடவேண்டும் என்று கணக்குப் போட்டி ருந்தார். அவனிடம் காணப்பட்ட அழகும், குணமும், அறிவும், பண்புமே அவருக்கு அவன்மீது அப்படியொரு ஈடுபாட்டை ஏற்படுத்தி யிருந்தது. அவரது உள்ளத்தில் அவனுக்காக ஒரு தனியிடம் ஒதுக்கப்பட்டிருந்ததை அந்தக் கந்தோரில் உள்ளவர்கள் அறியா விட்டாலுங் கூட அவன் மேல் அவருக்கு ஒரு தனி அபிமானம் உண்டென்பதை யாவரும் அறிந்திருந்தனர். அதற்குரிய காரணத்தை சும்மா ஊகித்து அறிந்து கொண்ட விஷமிகள் சிலர் இருவரையும் சேர்த்து மாமா மருமகன் என்ற உறவு முறையில் குறும்பாகக் கேலி செய்ததை அவர் அறிந்திருந்தும் அறியாதவர் போல் நடந்து கொண்டார். மற்றவர்கள் அவர் உள்ளத்தை அறிந்த அளவுக்கு ரகுராஜன் தான் அறிந்து கொண்டதாகக் காட்டிக் கொள்ளவுமில்லை. அந்த ஒரு சலுகையை உபயோகித்து அவரிடம் ஒரு சிறு உதவியை நாடவுமில்லை. இந்த ஒரு காரணத்தால் அவனைப் புரிந்து கொள்வது அவருக்கு தர்மசங்கடமாக இருந்தது. ஆயினும் ரகுராஜனுக்கு ஒரு தங்கை உண்டென்பதும் அவளுக்கு திருமணம் செய்த பின்புதான்

Page 5
அவன் தனது திருமணத்தைப் பற்றிச் சிந்திப்பான் என்பதும் அவர் தனது பியோன் சிவலிங்கத்தின் மூலம் அறிந்த விடயம். அவர் கூட அவனிடம் தனது மகளது விவாகவிடயமாகப் பேசலாம் என்று நினைத்திருக்கவில்லைதான். ஆயின் அவன் ஏதோ அலுவலகவிடயமாக அவரிடம் தனியாகப் பேசவந்தது அவருக்குச் சாதகமாக அமைந்துவிட்டது. கிடைத்த சந்தர்ப்பத்தை நழுவிட விரும்பாதவர் போல் அவர் மெதுவாக ஆரம்பித்தார் பேச்சை
“தம்பி ஊர்திருகோணமலையாக்கும்.?” “ஆம் ஸார்,” ‘அப்பா அம்மா எல்லோரும் ஊரோடுதானாக்கும்”
"அம்மா மட்டுந்தான் உண்டு ஸார். அப்பா இறந்து ஐந்து வருடங்கள் ஆகின்றன.”
“ஒ. பாவம் சகோதரர்கள்.?” "ஒரேயொருதங்கைமட்டும்!”
"அதுகூட நல்லதுதான். அப்போ தங்கைக்குத் திருமணஞ் செய்து கொள்ளுகிற நோக்கமாக்கும்!"
'தம்பி தவறாக எடுத்துக் கொள்ளாவிட்டால். எனது மகளையும், மகனையும் உங்கள் இருவருக்கும் மாற்றுச் சடங்காகச் செய்யலாம் என்று எனக்கொரு ஆசை. தம்பி அம்மாவிடம் விருப்பத்தைக் கேட்டு வந்தால் கூடிய விரைவாகவே செய்து விடலாம்."
"அநேகமாக அம்மாவும் இதை விரும்புவார்கள் என்று தான் நினைக்கிறேன். எதற்கும் ஒருமுறை கேட்டுச் சொல்கிறேன்."
அவர்களது சம்பாஷனை நடந்து முடிந்தவிதமே அலாதிதான். இனித்திருமணமே நடந்து முடிந்த மாதிரிதான் என்று நாகராஜன் தன் மனதுக்குள் நினைத்து நினைத்து மகிழ்ந்தார். அவரால் அன்று தொழிற்படவே முடியவில்லை. உடனடியாக யாழ்ப்பாணஞ் சென்று நடந்ததைத் தன் மனைவியிடங் கூறி மகிழ்ந்தாற்தான் நிம்மதி வரும் போல் இருந்தது. தன் கைக்கடிகாரத்தை ஒருமுறை திருப்பிப்பார்த்தார். யாழ்தேவி புறப்பட இன்னுஞ் சில நிமிட நேரமிருந்தது. அலுவலகப் பொறுப்புக்களையெல்லாம் தன் உதவியாளரிடம் ஒப்புவித்து விட்டுப் போகத்தாமதமாய்விடும் என்ற எண்ணத்தில் தன் பயணத்தை அடுத்த நாளைக்கு ஒத்திப்போட்டு விட்டு ஏனைய வேலைகளைக் கவனிக்கத் தொடங்கினார்.

அப்போது அவரது பியோன் சிவலிங்கம் அவரிம் கூறிய செய்தி அவரை ஆச்சரியத்தில் மூழ்க வைத்தது. தன்னுடன் பலகாலம் பழகியதால் தன் மன உணர்ச்சிகளையறிந்து தன்னைக் குறும்பு செய்து வேடிக்கை பார்க்கின்றானோ என்று கூடச் சிந்திக்க தோன்றியது அவருக்கு, ஆயினும் அவரை அவன் இதுவரை அப்படியான குறும்புகள் எதுவுஞ் செய்ததில்லை. அதனால் அவன் கூறியதை அவர் நம்பவேண்டித்தான் இருந்தது. மறுபேச்சுக்கிடமின்றி அவர் மேல்மாடியில் இருந்து கீழே இறங்கி வந்த போது அவருக்காக அவரது மனைவி கோமதி நின்று கொண்டிருந்தாள் கந்தோர் வாயிலில், தன் மனக்குறிப்பறிந்து கடவுளே அவளை உடனடியாக அனுப்பி வைத்து விட்டாரோ என்று நினைத்த படி அவர் அவளை அணுகினார். ஆனால் வழக்கமாக அவள் முகத்தில் பிரதிபலிக்கும் மகிழ்ச்சியையும், சாந்தத்தையும் ஏனோ அவராற் காணமுடியவில்லை. ஒரு வேளை வீட்டிற்தான் ஏதாவது நடக்கக் கூடாதது நடந்து விட்டதோ..? இந்த முப்பது வருடகாலமாகக் குடும்பவாழ்க்கையில் கோமதி அவரைத் தேடி கந்தோருக்கு வந்ததென்றால் இதுதான் முதற்தடவை. யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்புக்கு வருவதாக இருந்தாலே முன்னறிவித்தல் கொடுத்துவிட்டு வரும் அவள் அன்று திடுதிப் என்று வந்து நிற்பதாக இருந்தால் ஏதோ பாரதூரமாகத்தான் நடந்திருக்க வேண்டும் என்று நினைத்துக் கொண்டார்.
இருவரும் சந்தித்த போது ஒருவரையொருவர் கேள்விக் குறியுடன் பார்த்துக் கொண்டனரே தவிர பேசிக் கொள்ள ஒருவராவது துணியவில்லை. இருவரது உள்ளத்திலும் ஒரு தவிப்பு ஆனால் யார் ஆரம்பிப்பது என்பதே அவர்களிடையே அப்போது பிரச்சனையாக இருந்தது. தன் மனைவி கோமதியைப் பார்த்த டோது அவளது கண்கள் குளமாகியிருப்பதைக் கண்ட நாகராஜன் "என்ன கோமதி. என்ன நடந்தது. ஏன் நீ தனியாக வந்தாய்’ என்று வினாவுக்கு மேல் வினாவாகக் கேட்டார். கோமதியின் கண்களில் இருந்து நீர் ஆறாகப் பெருகி ஓடியது.
"என்ன கோமதி. ஏன் இப்படி அழுகிறாய். உனக்கு என்ன நடந்தது. எதுவாக இருந்தாலும் எனக்கு விளக்கமாகக் கூறினாற் தானே புரியும்’ என்று அவளை ஆசுவாசப்படுத்தினார் அவர்.
"நான் என்னத்தைச் சொல்வது? எப்படிச் சொல்வது.? உங்கள் மகன். உங்கள் மகன்." மகன் என மிகுதியைக் கூற முடியாமல் கோமதி தயங்கிய போது, "மகனுக்கு என்ன..? நடந்து விட்டது "கோமதி என்று பதறினார் அவர்.

Page 6
"உங்கள் மகன் தன் விருப்பப்படி பதிவுத் திருமணம் செய்துவிட்டான்" என்று அவள் தடுமாற்றத்துடன் கூறி முடித்தபோது அவரால் காதுகளையே நம்பமுடியவில்லை.
"என்ன. நம்ம மகன் பாலனா அப்படிச் செய்துவிட்டான்.” என்று அவர் திருப்பிக் கேட்டபோது அவருக்கு நாக் குழறியது. அவர் இதயத் துடிப்பதிகரித்து அவர் உடலெங்கும் வியர்த்துக் கொட்டியது.
"ஆமாம்! நம்ம பாலன் தான் திருமணஞ் செய்து கொண்டு விட்டான். நான் எவ்வளவோ அழுது மன்றாடியுங் கூட அவன் என் சொல்லை தட்டிவிட்டான். கலட்டிப் பொன்னம்பலத்தின் மகளுடன் இவன் நெடுநாட்களாக வைத்திருந்த தொடர்பால் அவள் கர்ப்பம் அடைந்துவிட்டாளாம். அதனால் அவள் பெற்றோர் இவனை நெருக்க இவன் அவளைப் பதிவுத் திருமணஞ் செய்துகொண்டுவிட்டான்."
அவ்வளவு தான் நாகராஜன் நடைப்பிணமாகிவிட்டார். அவரால் எதுவுமே செய்யமுடியவில்லை. அலுவலகத்திற்கு இரண்டுநாள் லீவு எழுதிக் கொடுத்துவிட்டுத் தன் மனைவியையும் அழைத்துக் கொண்டு தான் தங்கியிருந்த வீட்டை அடைந்தார். அடுத்த நாள் இருவரும் யாழ்ப்பாணம் பயணமானார்கள். அவர் வரவை அறிந்து பலர் அவரைப் பார்த்துப் பேசிப் போக வந்தனர். அவர்களில் ஒரு சிலர் உண்மையாகவே அவரது நிலைக்காக வருந்திச் சென்றனர். மற்றவர்கள் அனுதாபந் தெரிவிக்கும் சாட்டில் புதினம் அறிய வந்திருந்தார்கள். ஆனால் நாகராஜனும் அவர் மனைவியும் நடந்ததையிட்டு எதுவுமே பேசிக் கொள்ளவில்லை. பேசிக் கொள்ள விரும்பவில்லை. ஏதோ ஒரு குற்ற உணர்ச்சி அவர்களை உறுத்திக் கொண்டேயிருந்தது. அப்போதுதான் அவர்களை நோக்கி ஓர் உருவம். வந்து கொண்டிருந்தது.
கூனிய முதுகை நிமிர்த்த முடியாத நிலையில் பஞ்சுக்குவியல் போல் வெளுத்திருந்த தலையும் பொக்குவாயும் சுருங்கி உரமேறிய பொருக்கு வெடித்த தோலுமாக ஒரு மூதாட்டி வந்துகொண்டிருந்தாள். "டேய் ராஜா எண்டா நீ இப்படிச் சோர்ந்து விட்டாய். உனக்கு அப்படி நடக்கக் கூடாதது என்னதான் நடந்துவிட்டது.? உன் மகனுக்குத் தானேடா திருமணம் நடந்தது. அதற்குப் போய் ஏன் இப்படிப் நடைப்பிணமாக உட்கார்ந்து விட்டாய். அவன் விரும்பிய பெண்ணைத்தானே தெரிந்தெடுத்திருக்கிறான். அவனது வாழ்வும் மகிழ்ச்சியும் தானே உன் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும்.? எழுந்திருடா. முப்பது ஆண்டுகட்கு முன்பு நான் உன் நிலையில் இருந்து கண்ணிர் வடித்த போது நீ எனக்கு கூறிய சீர்திருத்தச் சொற்பொழிவு இப்போ எங்கேயடா போய்விட்டது.? அன்று நானும் உன் நிலையிற்தான் இருந்து

கலங்கினேனடா. இன்று நீ எனது இடத்தில் இருந்து அன்று நானும் உனது அப்பாவும் அனுபவித்ததை உணர்ந்து பார்க்க வேண்டும் என்பது கடவுள் கட்டளையாக்கும். அன்றும் இன்றும் தோற்றத்திற்தான் மாறிவிட்டதே தவிர உணர்வுகள் இன்னும் பசுமையாகவே இருக்கின்றன” என்று அவள் கூறி முடித்த போது, நாகராஜன் தலைகுனிந்து கொண்டார். அந்நேரம் அவள் அவருக்குத் தாயாகவே தோற்றவில்லை. ஒரு பேசுந் தெய்வம் தீர்ப்பளிப்பது போல் இருந்தது. ஆமாம் அந்தப் பெற்ற தெய்வத்தின், சொல்லைத் தட்டி அவள் வடித்த கண்ணிரையும் ஒரு சிறிதும் பொருட்படுத்தாமல் முப்பது ஆண்டுகளுக்கு முன்பு இதே தவற்றை செய்தவர் தான் அவர். “என்னடா நான் என்பாட்டுக்கு சொல்லிக் கொண்டிருக்கிறேன், நீ பேசாமல் இருக்கிறாய் எழுந்திருடா, நாளைக்கு உன் மகனும் அப்பனாவான். அதன் பின் இன்றுநான் உன்முன் என் கூனிய முதுகை நிமிர்த்தி நிற்பது போல் நீயும் அவன் முன் நிமிர்ந்து நிற்கலாம். அவனுக்கு ஞானம் பிறக்கும்." நாகராஜனின் தயார் பேசிக் கொண்டிருந்தார். அவளது பேச்சின் வேகம் அவரது தலையைப் பூமியைக் நோக்கி தாழ்த்திக் கொண்டேயிருந்தது. 'அவனும் அப்பாவாகட்டும் என்று மட்டும் அவர் உள்மனம் கர்விக்கொண்டது.
r
|----------------------------ஒரு துளி) பிரியமுடன் ஆசிரியர், தோழன் இதழ் 8 கிடைத்தது. தோழனின் இலக்கிய பரிணாம வளர்ச்சி பெரிதும் திருப்திகரமாய், வரவேற்கத்தக்கதாய் உள்ளது. குறிப்பாக நம் நாட்டு, கலைஞர்களின் பேட்டியுடன், கூடிய தகவல்களை தொடர்ந்து அனுமதிப்பதன் மூலம், தோழனின் கனதி, தோரணமாகும். இருந்தும், கணிசமான பக்கங்களை விழுங்காமல் இருக்க சிரமமெடுத்தல் நன்று அல்லது பக்கங்களை அதிகரிக்க யோசித்தல் உகந்தது. ஈழத்தின் எல்லைகளையும் தோழன் தாண்டுவது சந்தோஷிக கத்தக்கது. இறுதியாக - எனது 'எல்லைக் கோடுகள்’ சிறுகதையை பிரசுரித்தமைக்கு மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன்.
நன்றி நிறைவுடன். ஒட்டமாவடி அறபாத்.
判 9.

Page 7
தொகுப்பு:கே மொஹமட்
* 1903ஆம் ஆண்டு எட்டு நிமிடங்கள் காட்டப்பட்ட "ரயில் கொள்ளை' (THE TRAN ROBBERY) என்ற திரைப்படமே முதல் சினிமாப் படமாகும். தொடர்ந்து பல வருடங்கள் ஓடிய இப்படத்தை தயாரித்தவர் "எட்வின் போர்டர்’ படமாக்கியவர் "தோமஸ் அல்வா எடிசன் * இலங்கையில் திரையிடப்பட்ட முதல் சிங்கள திரைப்படம் "கடவுணு பொரொந்துவ (1947) இதில் நடித்த கதாநாயகி 'ருக்மணி தேவி இவர் இந்திய நடிகை, இலங்கையில் முதன் முதலாக சிலை வைக்கப்பட்ட ஒரே நடிகையும் இவரே. * இலங்கையில் தயாரிக்கப்பட்ட முதல் வண்ணத்திரைப்படம் "ரன்முது தூவ (1962) * அதிக திரைப்பட அரங்குகள் உள்ள நாடு சோவியத் ரஷ்யாவாகும். இங்கு 1,50000 திரைப்பட அரங்குகள் உள்ளன. * சினிமாப் படத் தயாரிப்பில் முதல் இடம் வகிப்பது இந்தியாதான். அதிகமான திரைப்பட அரங்குகள் உள்ள நாடுகளுள் மூன்றாவது இடமும் இந்தியாவுக்கே, இரண்டாவது இடம் சீனாவுக்கு. * திரைஅரங்கு இல்லாத ஒரே ஒருநாடு சவுதி அரேபியா. * 93 மில்லியன் டொலர் செலவில் ரஷ்யாவில் தயாரிக்கப்பட்ட WAR AND PEACEஎன்ற திரைப்படமே உலகிலேயே அதிக செலவில் தயாரிக்கப்பட்ட படமாகும். * இன்று வரையில் திரையிடப்பட்ட திரைப்படங்களில் 31.2 கோடி டொலர் வசூல் சாதனையை நிலைநாட்டிய திரைப்படம் "GONEWITHTHE WINDஆகும். இப்படம் 1939ல் திரையிடப்பட்டது. * அதிக திரைப்படங்களில் நடித்து கின்னஸ் சாதனை படைத்த மனோரமாவின் முதல் திரைப்படம் ஒரு சிங்கள மொழிப்படந்தான். * அதிக ஒஸ்கார் பரிசுகள் கிடைத்த திரைப்படம் பென்ஹர் என்ற ஆங்கிலப் படமாகும். இப்படத்திற்கு 1959இல் பதினொரு பரிசுகள் கிடைத்தன. * பிரான்ஸ், பெல்ஜியம் நாடுகளில் திரைப்படத்திற்கு தணிக்கை (சென்ஸார்) கிடையாது.
O
 
 
 

* முதன் முதலாக திரையிடப்பட்ட வண்ணப்படம் கினிமா கலர் (KNEMA COLOUR)என்ற, நெப்போலியனின் வாழ்க்கையை சித்தரிக்கும் படமாகும். இரண்டு வண்ணங்களை மாத்திரமே கொண்ட இப்படம் 1909 ஜனவரியில் லண்டன் திரையரங்குகளில் திரையிடப்பட்டது.
* முதல் சர்வதேச திரைப்படவிழா நடைபெற்ற இடம் வெனிஸ்’
* உலகில் முதன் முதலாக கட்டப்பட்ட திரைப்பட அரங்கு அமெரிக்காவில் ஜோர்ஜியா மாநிலத்தில் அட்லண் டோஷோ நகரில்
* இந்தியாவில் தயாரிக்கப்பட்ட முதல் வண்ண ஹிந்தித் திரைப்படம் 'ஆன்', தமிழ்த் திரைப்படம் அலிபாபாவும் 40 திருடர்களும் ஆகும். * முதன் முதலில் சலனப்படம் எடுத்தவர் ‘மைபிரிட்ஜ்’
* புகைப்படம் எடுக்க வண்ண படச்சுருளை கண்டுபிடித்தவர் ஈஸட்மென்ட் என்பவராவார். இதிலிருந்தே ஈஸ்ட்மென்ட் கலர் வழக்கத்தில் வந்தது. * டேவிட் ஹாஃப்மேன்' என்பவரே உலகின் முதல் தொலைக்காட்சி அறிவிப்பாளர் ஆவார். இவர் இந்தியாவில் பிறந்தார். ஆனால் இந்தியர்
966). Y.
நூல் மேடை
அழகான வண்ண அட்டையுடன் தரமான இலக்கியப் புதையல் ஒன்று தமிழ் இலக்கியத்திற்கு அணி சேர்க்க வெளிவந்துள்ளது. நாடறிந்த எழுத்தாளர் அகளங்கனின் "செல்” “வா’ என்று ஆணையிட்டாய் (அஞ்சலிக் கவிதைகள்), "சேரர் வழியில் வீரர்காவியம்" (குறுங்காவி யம்), சமவெளி மலைகள் (கவிதைகள்), வாலி (ஆய்வுநூல்), தென்றலும் தெம்மாங்கும் (கவிதை), பன்னிருதிருமுறை அறிமுகம், மகாகவி பாரதியாரின் சுதந்திரப்பாடல்கள், இலக்கியத் தேறல் (கட்டுரைகள்), நளவெண்பா (கதை), அன்றில்ப் பறவைகள் (நாடகங்கள்), முத்தமிழ் வித்தகர் சுவாமி விபுலானந்தர், இலக்கியச் சிமிழ் மேற்குறிப்பிட்ட அகளங்கனின் நூல் வரிசையில் இலக்கிய நாடகங்கள் வெளிவந்துள்ளது. இந்நூலில்; பப்புருவாகனன், பாரி வள்ளல், புத்திர சோகம், செஞ்சோற்றுக்கடன், சிலம்பு பிறந்தது, ஆனை கட்டிய அரியாத்தை எனும் ஆறு இலக்கிய நாடகங்கள் உள்ளன. மாணவர்களும் ஏனை யோர்களும் கற்றும் சுவைத்தும் பயன்பெற:
நா.தர்மராஜா,
9, கரப்பங்காடு, வவுனியா. என்ற முகவரியுடன் தொடர்புகொள்ளலாம். விலை70/-

Page 8
Kaw o no w we wa ubi Mo wo as * b m m பட்ைபோனபிறகு கண்ட்”
என் அலரிமாமி.
சோலைக்கிளி.
கண்ணாடி போட்டிருந்தாள் மாமி யாரோ ஒர் ஆமிக்காரன் வாங்கிக் கொடுத்திருந்தான்.
அவளின் முத்துப் போன்ற பற்களில் சிலதை
முன் முரசில் காணவில்லை!
தலைக்கு நிறச்சாயம்
இருந்தாலும், முகம் சுருங்கி, புன்னகைக்கும் பூவெந்து
STS).5 ரு நூலில் கட்டி அவள் உடம்பில் வைத்தது போல்
இே இன்று நான் பார்க்க
மாமி என்னைத் தெரிகிறதா உங்களுக்கு? நானதான, வெயில் மங்கி நிலாவிதைக்க, இருள் வானம் உழும் நேரம்
இந்தப் பெருங்கொப்புள் குந்தியிருந்த தினம் வரும் குருவி.
நீங்கள் என்னைக் கக்கத்தில் இடுக்கி இருப்பதுபோல இருக்கும். உங்கள் கொப்புக்குள் இருந்தால் நான், பார்ப்போருக்கு uprLôlt ஆமிவந்து உங்களைத் தமது படைவளவுள் சிறைப்படுத்த, அறுந்ததுநமது தொடர்பு. ஆரமபததில காற்றில் இரண்டொரு கடிதம்; 燃 கேட்டு
வரில் சப்பாத்துக் காலால் உதைக்கிறான் என்று சொல்லி அழுதெல்லாம்.
பின் காற்றும் இறந்தது நாம் கடிதம் எழுதி வாசிக்கும் எழுத்துக்களும் மறந்தன. དད་
மாமி என்னைத் தெரிகிறதா உங்களுக்கு?
懶 醫 醫 轉 骨骨骨骨 خلار
2.

-------ళ్లా#FFFF"ూ*
Tష్ట్రాషి -| . * کميسمبر (மாதர்! தம்மை இழிவு செய்யும்)
அருண் அந்தக் கதவைத் தட்டினான் கதவு இமை திறந்தது. ஒளிபோன்ற அகல்யாவின் முகம் பளிச்சிட்டது. அவளின் முகத்தில் புன்னகை பிறந்து தவழ, “அருண்! வாங்க..!" வார்த்தை அழைப்பிதழை அச்சடித்தாள். அருண் அந்த மண்டபத்தில் போடப்பட்டிருந்த சோபாவில் அமர்ந்தான். “என்ன - யோசிக்கிறிங்க?" மெளனத்தை விரட்டினாள் அகல்யா, “உங்கட வீட்டை அழகா வெச்சிருக்கீங்க. வெரி நைஸ்’ அவனின் ரசனை சுரமீட்டியது. "தைங்ஸ்’ அவளின் நன்றித் தென்றல். w அவனின் மனநிலை குழம்பிக் கொண்டிருந்தது. வார்த்தைகளெல்லாம் எங்கோ ஓடி ஒளிந்து விட்டது போன்ற பிரமை, இதயம் பலமாக அடித்துக் கொண்டிருந்தது. அவனுக்குள் ஒரு சூறாவளி வீசிக்கொண்டிருப்பதை அகல்யா எப்படி உணர்வாள்? “அருண் கொஞ்சம் இருங்க. நான் வாரன்." அவள் குசினிக்குள் புகுந்தாள். அருண் மனதிற்குள் புகுந்து புதைந்து கிடந்தான். அகல்யாவின் நினைவில் புதைந்து கொண்டிருந்தான். சின்ன சின்ன வார்த்தைகள். சிம்பிளான ஆடை அலங்காரம், அகல்யாவின் வடிவம் சுமாரான அழகு இருந்தாலும் அவளின் விழிகள்தான் விலைமதிக்க முடியாத சொத்து. அது கடிதம் வரையும் விழிகளல்ல. ஆண்களின் இதயத்தை சுண்டியிழுக்கும் வண்டுகளுமல்ல அந்தக் கண்கள். கண்களும் புன்னகைப்பதை அருண் அவளிடந்தான் கண்டான். இலச்சியங்கள் கலந்த கூர்மையான கண்கள் அவை. ஒளிப்புதையல் இதயத்தின் அந்தப்புரத்தை விளக்கும் கண்களாகவும் அருணுக்குத் தோன்ற
S)66). சுவரை அவனது கண்கள் மேய்ந்தன. கம்பி வேலிகளுக்குள் விலங்கு மாட்டப்பட்ட ஒரு பெண்ணின் ஓவியம் அருணின் இதயத்தில் ஆசனம் போட்டு அமர்ந்து கொண்டது. அந்த ஓவியத்தின் பக்கத்தில் எழுத்துப் பூக்கள் பூத்து நின்றன. "ಜ್ಜಣ್ಣ: பக்கத்தில் சென்று விழிகளால் விழுங்கினான். பாரதியின் போர்க்கவிதை பெண்களின் விடிவுக்காக விதையிட்டவரின் கவிதை.
13

Page 9
மாதர்தம்மை இழிவு செய்யும் மடமையைக் கொழுத்துவோம். வைய வாழ்வு தன்னில் எந்த வகையினும் நமக்குள்ளே தாதர் என்ற நிலமை மாறி ஆண்களோடு பெண்களும்
&Fiff52osir Pudsorres
வாழ்வம் இந்த நாட்டிலே! அந்தக் கவிதைகளை புத்தகம் படிப்பதுபோல படித்தான், எத்தனையோ தடவைகள் அந்தக் கவிதையை அவன் படித்தான். இன்று ஏதோ ஒரு அர்த்தம் கோலம் போடுதே "அருண்!" அகல்யா குரல் கடிதம் வரைந்தாள். அருண் மீண்டான். "என்ன? அதையே பார்க்கிறீங்க? அவளின் வினா அவனின் இதயத்தில் விழுந்தது. VM "வெரி. வெரி பியூட்டிபுள்" இதயத்தைத் திறந்தான். அந்த ஒவியத்திற்கு தனது கைதட்டல்களை சமர்ப்பித்தான். அகல்யா தேனிரைக் கொடுத்தாள். அவன் வாங்கிப்பருகினான். மெளனம் சிறிது நேரத்தை விழுங்கியது. "அகல்யா நான் வாரன்” அருண் விடைபெறும் நோக்கத்தில் சொன்னான், "அருண்! நீங்க. வந்த.?" காரணத்தைக் கண்டறிய வினா எழுப்பினாள். "சும்மா. பார்க்கலாம் எண்டுதான் ." சமாளிப்பு. அருண் சென்றுவிட்டான். அகல்யாவின் இதயத்தில் பல கேள்விகள் முற்றுகையிட்டன. அருணைப் பற்றி அவளால் புரிந்து கொள்ள முடியவில்லை. விடை தேடினாள் முடியவில்லை. அருண் அவள் விலாசத்திற்கு வந்த நேரத்திலிருந்து அகல்யாவின் மனதில் இனம் புரியாத ஒரு உணர்வு, “அருண்! நீங்க இங்க வேல செய்யுறதினால எனக்கு வேலைக் கஸ்டமே இல்லை' அருண் சில சந்தர்ப்பங்களில் அவளுக்கு உதவி புரிவதனால் கூறிய வார்த்தைகள்! 'அருண்! நீங்க எனக்கு வித்தியாசமானவராகத் தெரியுறீங்க?" இன்னுமொரு சந்தர்ப்பத்தில் மலர்ந்த பூக்கள். இப்போது அவற்றை மீட்டிப் பார்க்கின்றாள்! ராகம் வேறாக ஒலிப்பதைப் போல. "அகல்யா! நீங்க ஏன் இன்னும் மெரி பண்ணிக்கல்ல." அவளின் இதயத்தை திறந்து பார்ப்பதற்கான அருணின் ஆரம்ப முயற்சி. அவள் மெளனத்தை மரியாதைப் படுத்தினாள். "அகல்யா! உங்களுக்கு
 

கணவனாக வருகிறவர் ரொம்பக் கொடுத்து வெச்சவர்." உதிர்ந்து போன வார்த்தைச் சிதறல்கள். இப்போது அகல்யா அசைபோட்டுப் பார்த்தாள். அவனின் தடுமாற்றம், முகத்தில் குடிகொண்டிருந்த பதட்டம் எல்லாம் அவளின் கண்முன் படமாக ஒடிக்கொண்டிருந்தது. அகல்யா அருணைப் பற்றிப் படித்துக் கொண்டிருந்தாள். அவன் தன்னை விரும்புகிறான் என்று அவளுக்குத் தெரிந்தாலும் அவளால் அதை உறுதிப்படுத்த முடியவில்லை. மூன்று அக்காமார்களுக்குள் மலர்ந்த இறுதி ரோஜா அவள். ஒரு லட்சத்தையே இலட்சியமாகக் கொண்டவன் மூத்தவளைக் கைப்பிடித்தான், விலையாக வாங்கப்பட்ட ஒரு மிருகம் அவன். விலையாக வாங்கிய அடிமைக்கே இல்லறத்தில் எஜமான் பாத்திரம், சொன்னதே சட்டம் கிறிய கோட்டைத் தாண்ட முடியாது. ஆணாதிக்கக் கொடி அவனில் பறந்தது. இரண்டாவது அக்கா, மூன்றாவது அக்கா, இவர்களின் தலைவர்களும் லகரங்கள் கொடுத்து வாங்கப்பட்டவர்கள்தான். பணத்தை மையமாக வைத்துப் பிணைக்கப்பட்ட உள்ளங்கள் அவை. அன்பின் ஆதிக்கத்திற்கு இடமில்லை. கணவன் அடித்தாலும் அவன் உதைத்தா லும் ஒரு மரம்போல பட வேண்டும், 'கல்லானாலும் கணவன் புல்லானாலும் புருஷன் முதியோர்களின் இந்த வாக்கை வேத வாக்காகப் பிரகடனப்படுத்தியவர்கள். விழிகள் சோக நெய்யில் எரியும் விளக்காகத்தான் இருக்க வேண்டும். ஆசைகள், விருப்புகள், வெறுப்பு கள் எல்லாம் தொலைந்துபோன ஜடங்களாகத்தான் பெண்களினம் காலத்தைக் கண்ணிரால் தழுவிக் கொண்டிருந்தது. இதயத்தை நேசிக்கும் இதயங்களைத்தான் அகல்யா விரும்பினாள், புனிதமான இதயங்களை அவள் இதுவரை சந்திக்கவில்லை. அவளது அக்காமார்க ளின் இல்லறத்தைப் பார்த்து வேதனைப்பட்டாள் அகல்யா "அக்கா அத்தான் எதுக்கெடுத்தாலும் உனக்கு ஏசுகிறதையும் பேசுகிற தையும் என்னால பொறுக்க முடியாது- நீங்க எப்படி அக்கா தாங்கிக் கொண்டிருக்கிங்க?"
பொறுமை இழந்து பொங்கினாள் அகல்யா, "இம்! என்ன செய்யுற. பொம்புளையாய் பொறந்தா இப்படித்தான்.” அக்காவின் மன உணர்வுகள் வார்த்தைகளாக உதிர்ந்தன. "சீ என்ன வாழ்க்கை இது' வெறுப்பு வாசகம் வரைந்தாள் அகல்யா, "வாழ்வது ஒரே ஒருதரம், சந்தோசத்திற்காகத்தானே வாழ்றம். அது அந்த வாழ்க்கையில கிடைக்காட்டி என்னத்துக்கு அந்த வாழ்க்கை? அதவிட வாழ்க்கைப் படாம இருக்கிறதே பெற்றர்’ அகல்யாவின் இதயமே வாய்திறந்து பேசியது. இவற்றையெல்லாம் இதயத்தில் எழுதியவள் அவள். அனுபவத்தைப் பழகியவள். அதனால்தான் அவளின் இதயம் அருணைப் பற்றி அலசிக் கொண்டிருக்கிறது. இதயம் என்பது அருவி போன்றது. அதில் அன்பின் சலசலப்புச் சத்தந்தான் கேட்க வேண்டும். இடிமுழக்கம் கேட்கக் கூடாது இதுதான் அகல்யாவின் எதிர்பார்ப்பு இதயத்தில் ஆசைகளை
15

Page 10
அவள் விதைத்ததில்லை. காதல் வாசலை திறந்து வைத்ததில்லை. வீணான சோகங்களின் சொந்தமாகிட அவள் தயாரில்லை. அருணின் வார்த்தை நட்சத்திரங்கள் அவளின் இதயத்தில் அவ்வப்போது மின்னியதுண்டு. அவன் பழகும் விதம் ஒரு தென்றலைப் போல் அவளின் சோலையில் வீசியதுண்டு. ஒரே அலுவலகத்தில் இருவரும் வேலை செய்த போதிலும் அதிகமாக அவள் வார்த்தைகளைக் கொட்டுவதில்லை. அருணின் உதவி மனப்பான்மை அவளை வசீகரித்ததுண்டு. ஆனால் அவள் இதயத்தை இழக்கவில்லை. இதயத்தைப் பத்திரமாகப் பாதுகாத்தாள் அகல்யா. எந்த ஆண்களுடனும் நெருங்கிப் பழகுவதில்லை அவள். ஆனால் அருணின் நடத்தை சந்தேகச் சித்திரம் வரைந்தது அவளில். அடுத்த விநாடியில் அகல்யா வேலைக்கு புறப்பட்டாள். "குட் மோனிங்" அருணின் தரிசனம். அவனின் காலை வந்தனம். “குட் மோனிங்" பதிலுக்காக பரிமாறிக் கொண்டாள். அதனை அவளின் இதயம் எழுதும் போது புது உணர்வு ஒன்று பிறப்பது போல உணர்ந்தாள். வேலையில் மூழ்கிய போதும் அருண் என்ற நாமம் அவளின் இதயத்தில் ஒலித்துக் கொண்டிருந்தது. "ஏன் இப்படி? அவளால் அறிந்து கொள்ள முடியவில்லை. 'இதுதான் காதலா? அவளுக்குள் பேசினாள். இத்தனை நாளும் பாதுகாத்த இதயத்தில் ஒரு துளை விழுந்து அதனுள் ஏதோ ஒன்று நுளைவதை அகல்யா உணர்ந்து கொண்டாள். அவளின் இதயம் விழுந்து அலைந்து கொண்டிருந்தது. "அகல்யா" நிமிர்ந்தாள். எதிரே புன்னகை விதைத்து நின்றான் அருண். அவனின் விழிகளில் ஒரு கடிதம் குடி கொண்டிருந்தது. அது காதல் கொடி ஏற்றி நின்றது. அவள் விழிகளால் அவனை உழுதாள், இரு சோடிக் கண்களும் மோதின. ஒருகோடி வசனங்கள் பேசின. "நான் உங்களோட கொஞ்சம் பேசனும்' அருண் சிக்குப்பட்ட வார்த்தைகளை ஒருவாறு உமிழ்ந்தான். "என்ன விசயம்? வேண்டும் என்றே வினா தொடுத்தாள். "அகல்யா? என்னைப் பத்தி என்ன நினைக்கிறீங்க?" அவன் காதல் கேள்விக்குள் நின்று காதல் தவம் செய்தான். "உங்களைப் பத்தி நினைக்க ஒண்டுமில்லையே! நீங்க என்னோட வேலை செய்யுற ஸ்ராப்' அவன் எதிர்பார்க்காத வார்த்தைகளை அகல்யா அச்சடித்தாள். "அவ்வளவுதானா?" கெஞ்சுவது போல அவனின் தொனி ஒலித்தது. “எஸ்! அவ்வளவுதான்!” அவள் உறுதியாகச் சொன்னாள். இறுதியாகச் சொன்னாள். அவளை அறியாமல் நுளைய முற்படும் ஆசைக்கு அணைக்கட்டுப் போட்டாள். அவளுக்குள் ஒலிக்கும் ஓசை வெளியில் கேட்காத வண்ணம் தடுத்தாள். 'இதெல்லாம் ஏன் கேக்கிறீங்க?" அவன் எதிர்பார்க்காத சொற்கள்தான் கற்களாய் இதயத்தில் விழுந்தன. அவனின் இதயம் முட்களுக்குள் விழுந்தது. "அகல்யா! ஐ லவ் யூ பிலிவ்மீ”
16

இதயத்தைப் பற்றிப் பிடித்திருந்த அந்த வார்த்தைகளை அவளில் இறக்கிவிட்டான் அருண். அவள் எதிர்பார்த்தவை அவனால் அரங்கேறின. “அருண்! என்ன மன்னிக்கனும் என்னை ஏன் விரும்புறீங்க?" அவள் புதிர் போட்டாள். அவனின் மனதைப் படிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் கேட்டாள். "உங்கட அழகு நடத்தை எல்லாமே எனக்குப் புடிச்சிருக்கு அதனால் தான்.” காரணத்தை அவன் முன்வைத்தான். "இதெல்லாம் விட வேற என்ன எதிர்பார்க்கிறீங்க?" அவனின் இதயத்தின் அடித்தளத்தை தோண்ட முயற்சித்தாள். “அதப் பேரண்ஸ்தான் முடிவுசெய்யனும்!” அவனின் வார்த்தைகளில் விசம் வடிவது போலிருந்தது. அவளின் இதயம் உடைந்தது. "அப்ப உங்கட பேரண்ஸ்கிட்டக் கேட்டுத்தானா என்ன இப்ப விரும்பினிங்க?
"ஏன் பேசாம இருக்கீங்க? சொல்லுங்க?" அவள் உணர்ச்சி வசப்பட்டுப்பேசினாள். “இப்ப லவ் எண்டு பின்னாலசுத்துவீங்க கல்யாணம் எண்டா இத்தன லட்சம் தந்தாத்தான் மெரி பண்ணுவன் எண்டு சொல்லுவீங்க! இல்லாட்டி உட்டுட்டு ஆள் மாறிடுவீங்க..? அப்படித்தானே.?” கோபத்தைக் கலந்து பேசினாள். அவளின் எதிர்பார்ப்புச் சரியா இருந்தது. அதனால் அகல்யா சந்தோசத்தைக் தழுவிக் கொண்டாள். 6) இருந்த சோகத்தை இனங்கண்டு தடுத்த திருப்திதான் அவளுககுள. "அருண்! சீதனம், பணம், இதனால ஒண்டு சேர்ர வாழ்க்கையில எனக்கு நம்பிக்கை இல்லை. தன்மானம் உள்ளவன் எவனும் பொம்புளட பணத்தில குடும்பம் நடத்த மாட்டான். நீங்க என்ன விரும்புறிங்க எண்டு எனக்குக் தெரியும். நீங்களாவது ஆண்மகனாக இருப்பீங்க எண்டு எதிர்பார்த்தன். ஆனா நீங்களும் ஒரு சராசரி ஆம்புளயா இருப்பீங்க எண்டு நான் எதிர்பார்க்கல்ல." மனஉணர்ச்சிகளை வார்த்தைகளால் வடித்தாள். அவளின் இதயத்தின் ஒசையினை அவனுக்குப் படிப்பித்தாள். "அகல்யா. நான். உங்கட வீட்டுக்கு நேற்று வந்தபோது கூட உங்கள ஒரளவு புரிஞ்சி கொண்டன். பாரதியாருடைய அந்தக் கவிதை, அங்கே வரையப்பட்டிருந்த ஓவியம் உங்கட மனநிலையையும், கொள்கைக ளையும் எனக்கு உணர்த்தி விட்டன.” அவளைப்பற்றி அவன் கதைத்தான். அவளின் கொள்கையின் தன்மைக்கு விளக்கம் கொடுத்தான். . "அப்ப, ஏன் என்னை விரும்பினிங்க?’ புதிரினைப் புரியும் நோக்கத்தில் கேட்டாள் அகல்யா.
7ך

Page 11
"இதெல்லாத்தையும் விட வேற என்னத்த எதிர்பார்க்கீங்க எண்டு நீங்க கேட்டபோது அதப் பேரண்ஸ்தான் முடிவு செய்யனும் எண்டு நான் சொன்னன். அது உண்மைதான்!” அவன் உறுதிப்படுத்தினான். "அது உண்மையெண்டா இனியும் ஏன் பேசிட்டு நிற்கிறீங்க?" வெறுப்பை அரங்கேற்றினாள் அகல்யா. "அவசரப்படாதீங்க. அகல்யா பேரண்ஸ் தீர்மானிக்க வேணும் எண்டு நான் சீதனத்தைக் குறிப்பிட்டுச் சொல்லல்ல, நம்மடதிருமண நாளைத் தீர்மானிக்கிறதை நினைச்சித்தான் தான் அப்படிச் சொன்னன்.” உண்மைக்கு விளக்கேற்றி வைத்தான். அருண் அவனின் மனதை படம் பிடித்துக் காட்டினான். கருமேகத்தை விலக்கி நிலவை அழைத்தெடுத்தான். “அரு.ண்." அவள் ஆச்சரியத்தில் மூழ்கினாள். 'அகல்யா நான் உனக்கிட்ட இருந்து மனசைத்தான் எதிர்பார்க்கன். அன்பும் பண்புந்தான் ஒரு பெண்ணுக்கு நிறைஞ்ச செல்வம் பணமில்ல. பணத்தை எப்பவும் தேடிக்கலாம் எல்லா ஆண்களும் சீதனத்த விரும்புறதில்ல. சீதனத்தை விரும்புறவர்களால மத்தவர்களையும் பொம்புளைகள் அப்படி நோக்குறாங்க.” தன்னை ஒரு ஆண்மகனாகப் பிரகடனப்படுத்தினான். அதை வார்த்தைகளால் அவளுக்கு விளங்கப்படுத்தினான். “அருண் ஐயம் வெரிசொறி அருண்!” அவள் மன்னிப்பு விண்ணப்பம் செய்தாள். "பரவாயில்லை. பெருந்தன்மையை அவன் முன்வைத்தான். “அருண்! எங்கட அக்காமார் சீதனம் கொடுத்து மெரி பண்ணியும் அவங்க அத்தான்மார்களோட படுறதுன்பத்தை நான் நேரடியாக அனுபவித்தவள். அடக்குமுறை. அடிமைத்தனம் போன்ற கொடுமைகளை என்னால் தாங்கிக்க முடியாது. பொம்புளைகளும் மணிசர்கள்தானே! பூவைப் போன்றவர்கள், மென்மை இதயம் படைத்தவர்கள். அப்படியானவர்களுக்கிட்டயிருந்து பணத்தையும் வாங்கிட்டு கொடுமையும் படுத்துற எண்டால் மிருக வாழ்க்கைதானே! அந்த வாழ்க்கை எனக்கு வேண்டாம் எண்டுதான் நானிருந்தேன். ஆனா. நான் உங்கள நம்புறன். அருண் நம்புறன்.” அகல்யா தன்நிலையை அவனுக்கு உணர்த்தினாள். பெண் நிலையைப் புலப்படுத்தினாள். 'அகல்யா. இந்த மாசத்துக்குள்ள பெண் பார்க்க எங்கட பேரண்ஸ் வருவாங்க. அவர்களும் சீதனத்தைப் பற்றி ஒரு வார்த்தை கூடப் பேசமாட்டாங்க.." அவன் வார்த்தைகளை கொட்டவில்லை பொன்னைக் கொட்டினான், அன்பைக் கொட்டினான், அதைத் திறந்து காட்டினான். ஆனந்தம் அகல்யாவைக் கைப்பற்றியது. தென்றலாக அவளின் இதயம் மாறிவிட்டது. சோலைப் பூக்களாக அவளின் நினைவுகள் மலர்ந்தன. அவளின் இதயம் உதயமானது. அதில் அருண் ஒளிவீசிக் கொண்டிருந்தான்.
责演*责***演责责宽
8

கலாநிதி துரைமனோகரனுடன் சில நிமிடங்கள்
செவ்வி காண்பவர் : -நிந்ததாசன்
கேள்வி: உங்களது ஊரைப்பற்றியும், ஆரம்பகாலக் கல்வி பற்றியும் கூறுங்கள்.
பதில்: எனது சொந்த ஊர் யாழ்ப்பாணத்திலுள்ள உரும்புராய். நான் எனது ஆரம்பக் கல்வியை உரும்பராய் சைவத் தமிழ் வித்தியாசாலை, கண்டி இந்து சிரேஷ்ட பாடசாலை, யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி, உரும்பராய் இந்துக் கல்லூரி ஆகியவற்றில் பெற்றேன். கேள்வி: தமிழ் மொழியிலும், இலக்கியத்திலும் உங்களுக்கு ஆர்வம் ஏற்படக் காரணம் என்ன?
பதில்: தமிழ் மொழியிலும், இலக்கியத்திலும் மிகச் சிறுவயது முதலே எனக்கு இயல்பான ஈடுபாடு ஏற்படத் தொடங்கியது. நான் சிறுவயது முதலே வாசிப்புப் பழக்கத்தை மேற்கொண்டிருந்தமையும் இத்தகைய ஆர்வம் என்னுள் வளர்வதற்கு ஒரு காரணமாகலாம். எனது எழுத்தார்வம் பத்தாவது வயதில் கண்டி இந்து சிரேஷ்ட பாடசாலையில் ஐந்தாம் வகுப்புப் படித்துக் கொண்டிருந்தபோது முளைவிடத் தொடங்கியது. பின்னர் சில ஆண்டுகள் யாழ் இந்துக் கல்லூரியில் படித்துக் கொண்டிருந்த போது, என்னுள் கவிதை எழுதும் ஆர்வம் ஏற்படத் தொடங்கியது. சுமார் பதினொரு வயதிலிருந்து இந்த ஆர்வம் என்னுள் முகிழ்க்கத் தொடங்கியது. எனக்கு ஞாபகம் இருக்கிறது. ஏதாவது என்பாட்டில் கவிதை என எண்ணிக் கிறுக்குவேன். உண்மையில் நான் கவிஞனானது சுமார் பதினைந்து வயதிலிருந்துதான்.
வகுப்பில் கற்கும் போது 'பாவையின் பரிசு’ என்ற நாவலை எழுதி வெளியிட்டேன். எனது பெற்றோரும், உரும்பராய் இந்துக் கல்லூரி ஆசிரியர்களும் எனது முயற்சிகளுக்கு ஊக்கமளித்தனர். நாடகங்கள், கவிதைகள், சிறுகதைகள், விமர்சனங்கள் எழுதினேன். ஒரு குறிப்பிடத்தக்க விடயம் உண்டு. உயர் வகுப்பில் கற்றுக் கொண்டிருந்த போது, நா. பார்த்தசாரதியின் பொன்விலங்கு என்ற நாவலை வாசித்தேன். அதில் இடம் பெறும் தமிழ் விரிவுரையாளர் பாத்திரம் என்னை மிகவும் கவர்ந்தது. நானும் அதுபோல எதிர்காலத்தில் பல்கலைக்கழக விரிவுரையாளராக விளங்க வேண்டும் எனக் கல்லூரியில் கற்றபோது கனவு கண்டேன். அந்தக் கனவே, நான் இப்போது வகிக்கும் பல்கலைக்கழகத் தமிழ் விரிவுரையாளர்
9

Page 12
பாத்திரம். எனது வளர்ச்சியில் எனக்குக் கற்பித்த எனது ஆசான்களுக்கும் பெரும் பங்குண்டு. உரும்பராய் இந்துக் கல்லூரியும், பேராதனைப் பல்கலைக்கழகமும் எனது வளர்ச்சிக்கு உயிரூட்டிய முக்கிய கலாநிலையங்கள். கேள்வி. நீங்கள் எத்தனை நூல்கள் எழுதியுள்ளீர்கள்? அதுபற்றிக் கூறுங்கள.
பதில்: நான் இரண்டு நூல்கள் எழுதியுள்ளேன். ஒன்று, பாவையின் பரிசு என்ற நாவல். உரும்பராய் இந்துக் கல்லூரியில் மாணவனாக இருந்தபோது எழுதியது. மற்றது, தமிழ் இலக்கியம் - பார்வையும் பதிவும் என்பது. சென்ற வருடம் வெளிவந்தது. கேள்வி. நீங்கள் இந்தியாவில் கலாநிதிப் பட்டத்திற்காகப் படிக்கச் சென்றீர்கள். உங்களுடைய ஆய்வு பற்றியும், தமிழ் கலை இலக்கிய அம்சங்கள் பற்றியும் குறிப்பிடுங்கள்.
பதில்: தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் கலாநிதிப்பட்ட ஆய்வை மேற்கொள்வதற்கு எனக்கு வாய்ப்புத் தரப்பட்டது. அங்கு ஆய்வை மேற்கொண்டிருந்த போது, இலக்கியத்தைச் சமூகவியல் அடிப்படையில் நோக்கத்தக்க அனுபவத்தை நான் பெற முடிந்தது.
தமிழ்நாட்டில் பழமைவாதம், திராவிட இயக்கப் பின்னணி போன்றவற்றால் பாதிக்கப்பட்ட கலை இலக்கியவாதிகளும் உள்ளனர். அதே வேளை, மார்க்சீய நெறியில் முற்போக்குச் சிந்தனை கொண்ட கலை இலக்கியவாதிகளும் உள்ளனர். அறிவு உரம் கொண்ட புதிய பரம்பரையொன்று தமிழ் நாட்டில் உற்பத்தியாகி வருவதை காண முடிகின்றது. கேள்வி: இலங்கையில் விமர்சனத்துறையில் குறிப்பிடத்தக்க பங்காற்றி வருகின்றீர்கள். விமர்சனத்தைப் பற்றியும், இலங்கை விமர்சகர்களின் நிலைபற்றியும் உங்கள் கருத்து யாது?
பதில்: விமர்சனம் என்பது, அறிவாரோக்கிய நிலையில், உணர்ச்சிகளுக்கு ஆட்பட்டது, துணிவுடனும், அழகியலுணர்வுடனும் முற்போக்கான முறையில் செம்மையாகச் செய்யப்பட வேண்டியது. கலை இலக்கியவாதிகளுக்கும், வாசகருக்கும் இடையே பாலமாகச் செயற்பட வேண்டியவர்கள், விமர்சகர்கள் வேண்டிய சிலரைப் போற்றுவதற்கோ, வேண்டாத சிலரைத் தூற்றுவதற்கோ விமர்சனம் சில வேளைகளிற் பயன்படுத்தப்படுவது கண்டிக்கத்தக்கது.
இலங்கையைப் பொறுத்தவரை, விமர்சனத்துறை இயன்றளவு ஆரோக்கியமானதாகவும், முற்போக்கு அடிப்படையைக் கொண்டதாகவும், ஆக்க இலக்கிய வளர்ச்சிக்கு உதவுவதாகவும் வளர்ந்து வந்துள்ளது. இவ்வகையில், பேராசிரியர்கள் கையலாசபதி, சிவத்தம்பி போன்றோரின் பங்களிப்பு குறிப்பிடத்தக்கது.
2O

கேள்வி: நாடகத்துறையில் உங்களுக்குள்ள ஈடுபாடு பற்றிக் குறிப்பிடுங்கள்.
பதில்: எனது நினைவைப் மீட்டிப் பார்க்கும் போது, கண்டி இந்து சிரேஷ்ட பாடசாலையில் நான் ஐந்தாம் வகுப்பில் கற்றுக் கொண்டிருந்தபோது முதன் முதலாக நாடக ஆர்வம் ஏற்பட்டது. இப்போதும் நினைவில் இருக்கிறது. நானும், என்னோடு கூடப் படித்த பாண்டியன் என்ற நண்பரும் பாடசாலையில் நடிப்பதற்கென எமக்குத் தோன்றிய வகையில் நாங்களாகவே ஒரு நாடகத்தை எழுதினோம். அந்நாடகத்துக்கு 'மன்னிப்பு கேட்ட மகாராஜா என நான் பெயரிட்டேன். சிறு பையன்களாகிய நாங்கள் எழுதிய அந்த நாடகம், பாடசாலை ஆசிரியர்களின் ஒத்துழைப்புடன் அதே பாடசாலையில் மேடையேறியது. எங்களுக்கு மிகவும் மகிழ்ச்சி. நானும் அதில் நடித்தேன். பாரதக் கதையின் ஒருபகுதி அப்பாடசாலை ஆசிரியர்களால் தயாரிக்கப்பட்ட போது, அதிலும் சிறுவயதிலேயே நடிக்கும் வாய்ப்பு ஏற்பட்டது. பின்னர் உரும்பராய் இந்துக் கல்லூரியில் உயர்வகுப்பு மாணவனாகப் படித்துக் கொண்டிருந்த போதும், சில நாடகங்களை எழுதி, மேடையேற்றினேன். பேராதனைப் பல்கலைக்கழகத்திலும் எனது சில நாடகங்கள் மேடையேறியுள்ளன. நானும், எனது நாடகம் ஒன்றிலும் கலாநிதி இந்திரபாலா, கலாநிதி திரு கந்தையா ஆகியோர் தயாரித்த நாடகமொன்றிலும் பல்கலைக்கழக மாணவனாக இருந்த போது நடித்துள்ளேன். நாடகத்துறை தொடர்பான சில விமர்சனக் கட்டுரைகளும் எழுதியுள்ளேன். கேள்வி: கவிதை, சிறுகதை, நாவல் ஆகியவை நம் நாட்டில் எந்த நிலையினை இதுவரை எய்தியுள்ளன?
பதில்: நம்நாட்டைப் பொறுத்தவரையில், கவிதைத் துறையிலும், சிறு கதைத்துறையிலும் நாம் முன்னணியில் நிற்கிறோம். பாரதி வழிவந்த நவீன கவிதையாயினும் சரி, புதுக்கவிதையாயினும் சரி, சிறந்த ஆளுமைகளை இலங்கையில் காணமுடிகின்றது. சிறுகதைத்துறையிலும் தரமான வளர்ச்சிநிலை காணப்படுகின்றது. நாவலைப் பொறுத்தவரை உள்ளடக்கத் தரத்தில் சில பெறுமதிமிக்க நாவல்கள் தோன்றியுள்ள போதிலும், கலைச் செழுமையில் நமது எழுத்தாளர்கள் இன்னும் அதிக அக்கறை செலுத்த வேண்டியுள்ளது. கேள்வி: புதுக்கவிதையின் போக்கும், அதன் தாக்கமும் பற்றிக் குறிப்பிடுங்கள்?
பதில்: புதுக்கவிதையின் தோற்றம் காலத்தின் தேவையாக அமைந்துவிட்டதெனக் கூறலாம். எப்போதும் ஒரு நல்ல புதுக்கவிதை உள்ளடக்கச் சிறப்பும், அளவறிந்து புகுத்தப்பட்ட படிமங்களும், ஒத்திசையும் கொண்டு விளங்கும். தமிழ்நாட்டிலும், இலங்கையிலும் புதுக்கவிதைத்துறையில் சில சிறந்த ஆளுமைகள் உள்ளன. இன்றைய
2.

Page 13
இலக்கியவுலகில் அது பெருந்தாக்கத்தை ஏற்படுத்தி வருகின்றது. அதேவேளை, தகுதியில்லாத வேட்பாளர்களும் தேர்தலுக்கு நிற்பதைப் போல, கவித்துவமே இல்லாதவர்களும் புதுக்கவிதை என எதையெதையோ கிறுக்குகின்ற பரிதாப நிலையும் உண்டு. பலர், வசனங்களை முறித்து முறித்து எழுதினால் அது புதுக்கவிதை ஆகும் எனத் தடுமாறுவதும் உண்டு. கேள்வி: இலங்கைத் தேசியத் தமிழ்ப் பத்திரிகைகளின் தரத்தினையும் அவற்றின் பங்களிப்பினையும் பற்றி என்ன கருதுகிறீர்கள்?
பதில்: தமிழ்நாட்டுத் தமிழ்ப் பத்திரிகைகளோடு ஒப்பிடுகையில் இலங்கைத் தமிழ்ப் பத்திரிகைகள் தரமுடையனவாகவே உள்ளன. தமிழ்நாட்டில் தினமணி போன்ற ஒரிரு பத்திரிகைகளைத் தவிர, பெரும்பாலான பத்திரிகைகள் உணர்ச்சிகலந்தே செய்திகளைத் தருகின்றன. இலங்கைத் தமிழ்ப் பத்திரிகைகளில் அக்குறைபாடு இல்லை எனலாம். தமிழ்நாட்டுத் தேசிய பத்திரிகைகளில் கலை இலக்கியச் செய்திகளுக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்படுவதில்லை. ஆனால், இலங்கைத் தேசியப் பத்திரிகைகள் அவ்விடயத்தில் சிறப்பான சேவையை நல்குகின்றன. ஆயினும், சில பத்திரிகைகள் ‘கண்டதையும்’ வெளியிடாமல் தமது தரத்தைப் பேணிக் காப்பதில் கருத்தூன்றிச் செயற்படுவதே நல்லது. கேள்வி: 'நம்நாட்டுச் சஞ்சிகைகள் நிலைப்பதில்லை தரமாக வருவதுமில்லை’ என்ற கருத்தைப் பற்றிய உங்களது அபிப்பிராயம்?
பதில்: நம்நாட்டில் மட்டுமல்ல, பல நாடுகளிலும் பல சஞ்சிகைகள் நிலைப்பதில்லை. அதற்குப் பல்வேறு காரணங்கள உண்டு. ஆனால், நம்நாட்டில் நிலைத்து நிற்கின்ற தமிழ்ச் சஞ்சிகை உண்டு. அதுதான் மல்லிகை. நம்நாட்டுச் சஞ்சிகைகள் தரமாக வருவதில்லை என்ற கருத்தை நான் ஒப்புக் கொள்ள மாட்டேன். இலங்கையின் குறுகிய வாசகர் மத்தியில், பொருளாதாரப் பிரச்சினைகளோடு வெளிவரும் சஞ்சிகைகளின் உருவம் கவர்ச்சிகரமாக அமையாமல் இருக்கலாம். ஆனால், அவற்றுட் கணிசமானவை காத்திரமான உள்ளடக்கத்தைக் கொண்டவையாக வெளிவருகின்றன என்பதை மறுப்பதற்கில்லை. கேள்வி: இலங்கை வானொலியிலும் உங்களது விமர்சன உரைகள் ஒலிபரப்பாகி வருகின்றன. ஒலிபரப்புக் கூட்டுத்தாபன தமிழ்ச் சேவை பற்றிய உங்கள் கருத்து என்ன?
பதில்: இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனச் தமிழ்ச் சேவை பற்றி, எனக்குப் பொதுவாக நல்ல அபிப்பிராயம் உண்டு. மிகத் திறமையான அறிவிப்பாளர்கள் சிலர் நமது ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தில் பணிபுரிந்து வந்துள்ளனர். அதுபோன்று, நிகழ்ச்சிகளைத் சிரமத்துடன் சிறப்பாக அமைத்துத் தரும் தயாரிப்பாளர்கள் சிலரும் உள்ளனர். கேள்வி: தமிழ்த் திரைப்படங்கள் பற்றிய உங்களது கணிப்பு என்ன?
22

பதில்: தமிழ்த் திரைப்படங்கள் ஏறத்தாழ அறுபது ஆண்டுகால வளர்ச்சியினைக் கொண்டிருந்த போதிலும், சர்வதேச ரீதியில் சாதனை பதிக்கத் தவறிவிட்டன. தமிழ்த் திரைப்படத்துறை, கலைத்துறையின் பெறுமானங்களை மதிப்பதைவிட, தொழில்துறை இலாபங்களையே முக்கியமாகக் கருதிச் செயற்படுகின்றது. கலாசாரச் சீரழிவின் ஒரு சின்னமாகத் தமிழ்த் திரைப்படத்துறை விளங்குகின்றது. ஆயினும், குறைகளுக்கு மத்தியிலும் சில தரமான திரைப்படங்கள் தமிழில் வெளிவரத்தான் செய்கின்றன என்பதை மறுப்பதற்கில்லை. கேள்வி: தற்போதைய தமிழ்த் திரைப்படப் பாடல்களில் இலக்கியநயம் இல்லை என்ற கூற்றைப் பற்றிய உங்கள் கருத்து என்ன?
பதில்: உண்மையில் என்னை மிகவும் கவர்ந்தவை பழைய திரைப்படப் பாடல்களே. இலக்கிய நயத்திலும், இசைச் சிறப்பிலும் அவற்றுட் கணிசமானவை சிறந்து விளங்குகின்றன. இன்றைய திரைப்படப் பாடல்கள் கவிஞர்களிடமிருந்து அவசர வேகத்தில் பிறப்பெடுக்கின்றன; அவசர நிலையில் பாடல் ஒலிப்பதிவுகள் நடைபெறுகின்றன. அதனால், பல பாடல்களில் இலக்கிய நயத்தைக் காண்பது அரிதாகவுள்ளது. பல பாடல்களில் பின்னணி வாத்தியங்கள் எல்லாம் சேர்ந்து, அவற்றின் பொருளை அமுக்கிவிடுகின்றன. பல பாடல்களில் சத்தத்தை மட்டுமே கேட்க முடிகிறது. ஆனால், இவற்றையெல்லாம் மீறி, அருமையாகச் சில பாடல்கள் இலக்கிய நயமும் இசைச் சிறப்பும் கொண்டு, விளங்குகின்றன. கேள்வி: தொலைக்காட்சி நாடங்கள் பற்றிய உங்கள் மதிப்பீடு?.
பதில்: தமிழில் தொலைக்காட்சி நாடங்கள் இன்னும் வளர்ச்சி பெற வேண்டியுள்ளன. தமிழ்நாட்டில் சில தரமான முயற்சிகள் நடைபெற்றுள்ளன. இலங்கையைப் பொறுத்தவரையில் தமிழில் சில தொலைக்காட்சி நாடக முயற்சிகள் நம்பிக்கை தருவனவாக உள்ளன. ஆனால், இலங்கை ரூபாவாஹினிக் கூட்டுத்தாபனத்தின் பேரினவாதப் போக்கும், விளம்பரதாரர்களின் பாராமுகமும் தொலைக்காட்சி நாடகங்கள் தமிழில் போதிய வளர்ச்சி பெறாமைக்கு முக்கிய காரணங்களாகும். சிங்களத்தில் தொலைக்காட்சி நாடகத்துறை நல்ல வளர்ச்சி கண்டுள்ளது. ஆனால், அநேகமான சிங்களத் தொலைக்காட்சி நாடகங்களில் காணப்படும் மெதுவான காட்சி நகர்வுகள் சலிப்பையே தருகின்றன. கேள்வி: பேராசிரியர் க. கைலாசபதியின் மாணவர் நீங்கள் அவரைப் பற்றிக் கூறுங்கள்.
பதில்: நான் கைலாசபதி அவர்களின் நேரடி மாணவன் அல்ல. ஆனால், யாழ். பல்கலைக்கழகத்தின் தலைவராக அவர் இருந்தபோது, அதன் தமிழ்த்துறையில் கடமையாற்றியுள்ளேன். அதற்கு முன்னரே அவரது கருத்துக்கள் என்னைப் பாதித்திருந்தாலும், அங்கு
23

Page 14
கடமையாற்றிய போது அவரது ஆளுமையும், ஆற்றலும் என்னை மிகவும் கவர்ந்தன. இளந் தலைமுறையினரின் இயல்புகள், திறமைகளை இனங்கண்டு ஊக்கப்படுத்துவதில் அவர் தனிச்சிறப்புப் பெற்றவர். கைலாசபதி சிறந்த பல்கலைக்கழக ஆசான்; சிறந்த விமர்சகர்; சிறந்த நிர்வாகி - இவை அனைத்துக்கும் மேலாகச் சிறந்த மனிதர். கேள்வி: பேராதனைப் பல்கலைக்கழகத் தமிழ்த்துறை பற்றிக் கூறுங்கள்.
பதில்: பேராதனைப் பல்கலைக்கழகத் தமிழ்த்துறை இலங்கைப் பல்கலைக்கழகத் தமிழ்த்துறைகளுள் மூத்த துறையாக விளங்குகின்றது. பல்வேறு சிறந்த பேராசிரியர்களும், விரிவுரையாளர்களும் இத்துறையில் பணியாற்றி வந்துள்னர். இப்போது, பேராசிரியர் தில்லைநாதன் அவர்களின் தலைமைத்துவத்தின் கீழ் ஆற்றலுள்ள விரிவுரையாளர்கள் இத்துறையில் கடமையாற்றி வருகின்றனர். மாணவரைச் சிறந்த முறையில் ஆற்றுப்படுத்துவதோடு, பல்துறை ஆய்வுகளிலும் ᏯᏠᏚᎧᎼᎠᎧᏍ இலக்கியம் தொடர்பாக சமூக நடவடிக்கைகளிலும் ஈடுபாட்டுடன் அவர்கள் உழைத்து வருகின்றனர். கேள்வி: சாகித்தியப் பரிசும் கலை இலக்கியவாதிகள் கெளரவிப்பும் பற்றிய உங்களது அபிப்பிராயம் என்ன?
பதில்: சாகித்திய பரிசு குறித்து எனக்கு கருத்து வேறுபாடு இல்லை. அது நடுவர்களால் தீர்மானிக்கப்படுவது. ஆனால், கலை, இலக்கிய வாதிகள் கெளரவிப்புப் பற்றி எனக்கு நிறையக் கருத்துவேறுபாடுகள் உள்ளன. கலைஞர்களையும், இலக்கியவாதிகளையும் கெளரவிக்க விரும்புவோர், அவர்களை முறையறிந்து கெளரவிக்க வேண்டும். தகுதியானவர்களைப் பத்தோடு பதினொன்றாகக் கெளரவிக்க நினைப்பது முறைகேடானது. இந்துக் கலாசார, தமிழ் அலுவல்கள் இராஜாங்க அமைச்சும், முஸ்லிம் கலாசார இராஜாங்க அமைச்சும், போட்டி போட்டுக் கொண்டு கெளரவிக்கிறது என்று வருடாவருடம் கெளரவிக்கப்படுவோர் தொகை கூட்டிக் கொண்டே செயற்பட்டமை ஆரோக்கியமானதல்ல. பட்டம் பெற்ற சிலருக்கு தாம் எதற்காக கெளரவிக்கப்பட்டோம் என்றே புரிவதில்லை. கேள்வி: எதிர்காலக் கலை இலக்கியத்துறையில் எத்தகைய பங்களிப்புச் செய்ய நினைத்துள்ளிர்கள்?
பதில்: எதிர்காலத்தில் இன்னும் அதிகமாகக் ᏧᎦᏏᎶᏪᎠᎧᎸᎩ இலக்கியத்துறையில் உழைக்க வேண்டும் என்ற ஆர்வம் எனக்கு நிறையவே உண்டு. அதற்கேற்ற முயற்சிகளில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறேன்.
f • - நன்றி.
24

முன்அட்டையில்
கலை இலக்கியத் துறையில் கலாநிதி துரை மனோகரன்
எம். எஸ்.எம். அனஸ்.
LS Sq qSqqSqqSSSS SSqS SLS SqS qqq qSqqSq qqqS qSS S Sqq qqq qqqS SqqSqqqS qqqq S qqqq S qqqqq SqqS qSq SqSqqqSqS SqqqqS qqqq qLS SS S SqS qqq qSqq qqSq qSq qSqq SqS qqq qSqqS SS SSAASS SS SS SqqSq SS SSqSS qS S q SS SS qS SSL LLLLL qqqL LSLL TSSLLSqSq SqSL LqSqqq qqSSL LSL LSL qqq qqq qqSq qqSq
பேராதனைப் பல்கலைக்கழகத் தமிழத்துறையில் முதுநிலை விரிவுரையாளராகப் பணிபுரியும் கலாநிதி துரை. மனோகரன் அவர்கள், பேராசிரியர்களான சு. வித்தியானந்தன், ஆ. வேலுப்பிள்ளை, சி. தில்லைநாதன், அ. சண்முகதாஸ் போன்றோரின் மாணவர். இவர்க ளின் வழிகாட்டுதலில் தமிழைச் சிறப்புப் பாடமாக பயின்று, பேரா தனைப் பல்கலைக்கழகத்தில் துணை விரிவுரையாளராக நியமனம் பெற்றார். சில வருடங்கள் யாழ். பல்கலைக்கழகத்திலும் பணியாற்றி யுள்ளார்.
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் பேராசிரியர் அ. சண்முகதாஸ் அவர்களின் மேற்பார்வையில், 'ஈழத்துத் தமிழ் நாவல்களிற் கதைத் தலைவன் பாத்திரப்பண்பு என்ற தலைப்பில் அவர் மேற்கொண்ட ஆய்வு, அவருக்கு முதுமாணிப் பட்டத்தை ஈட்டித் தந்தது. யாழ். பல்கலைக்கழகத்தின் முதல் முதுமாணிப் பட்டதாரி துரை. மனோகரன் என்பது குறிப்பிடத்தக்கது.
1983 - 1986 காலப்பகுதியில் தமிழ்நாடு தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் ஆய்வாளராக நியமனம் பெற்றார். சமூகவியற் பேராசிரியர் தேக்கமலை, பேராசிரியர் வி.ஐ. சுப்பிரமணியம், கலாநிதி சாரங்கபாணி முதலியோரின் வழிகாட்டுதலில் அவரது ஆய்வு முயற்சி இடம் பெற்றது. பள்ளு இலக்கியத்தைச் சமூகவியல் நோக்கில் ஆராய்ந்து, பேராதனைப் பல்கலைக்கழகத்தில் கலாநிதிப் பட்டத்தையும் அவர் பெற்றார்.
பல்கலைகழகத்தில் வரன்முறையாக ஆய்வு முயற்சிகளுக்கு அப்பால், கலாநிதி துரை. மனோகரன் கலை இலக்கிய விமர்சனத்துறை யில் அதிக ஈடுபாடு காட்டி வருகிறார். 1993இல் வெளிவந்த இவரது தமிழ் இலக்கியம் பார்வையும் பதிவும் எனும் நூல், அவரது இவ் ஈடுபாட்டினை நன்கு பிரதிபலிக்கிறது.
மலையகத்தின் கடந்தகால, தற்கால இலகியப் பங்களிப்புகள் பற்றிக் கரிசனையுடன் கருத்துக்களை வெளியிடுவதுடன், மலையகக் கலை இலக்கிய முயற்சிகளுக்கு உந்துதல் அளிக்கும் முயற்சிகளிலும்
25

Page 15
அவர் ஈடுபட்டு வருவது குறிப்பிடத்தக்கது. அதேபோல, முஸ்லிம்க ளின் ஆக்க இலக்கிய முயற்சிகளிலும், முஸ்லிம் இலக்கிய வரலாற்றி லும் அண்மைக்காலமாகத் துரை. மனோகரன் காட்டிவரும் ஈடுபாட்டை, அவரது உரைகளும் எழுத்துக்களும் தெளிவாக உணர்த்துகின்றன. விபுலானந்த அடிகள் முதல் பேராசிரியர் தில்லை நாதன் வரை தமிழ்த்துறையில் தொடர்ந்து வளர்ந்துவரும் உயர்ந்த இலட்சியங்களின் வெளிப்பாடுகள் என இவற்றைக் கூறுவது பொருத்த மாகும்.
தற்போது விமர்சனத்துறையில் ஆழ்ந்த ஈடுபாடு காட்டிவரும் துரை. மனோகரனின் கல்லூரி நாட்கள், கவிதை, சிறுகதை, நாடகம் முதலிய ஆக்க இலக்கியம் சார்ந்ததாகவே காணப்பட்டன. க.பொ.த. உயர்தர வகுப்பு மாணவராய் இருக்கும் போதே, அவரது பாவையின் பரிசு என்ற நாவல் வெளிவந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
கல்லூரி நாட்களில் நாடகங்களை எழுதித் தயாரித்த அனுபவம் பல்கலைக்க'க பட்டதாரி மாணவரின் நாடக முயற்சிகளுக்கு ஊக்கம ளித்து வருவதையும் முக்கியமாகக் குறிப்பிடலாம். பல்கலைக்கழக மாணவராய் இருந்தபோது அவர் எழுதிய சமுதாய விலங்கு, பல்கலைக்கழக ஆசிரியராக இருக்கும் போது எழுதிய இருளில் தேடும் ஒளிகள் முதலிய நாடகங்கள் இவற்றுட் சிலவாகும். பாடசாலை, பல்கலைக்கழக மாணவராய் இருந்தபோது தாம் எழுதிய நாடகங்கள் சிலவற்றிலும் துரை. மனோகரன் நடித்துள்ளார்.
பல்கலைக்கழகத்தில் தமக்கெனத் தனியான பாணியில் விரிவுரை யாற்றுபவராகக் கலாநிதி துரை. மனோகரன் விளங்குகிறார். மாணவ ரின் கல்வியிலும், கலை இலக்கிய முயற்சிகளிலும் அக்கறை செலுத்தி, ஊக்கமூட்டி உற்சாகப்படுத்துவது அவரது தனி இயல்பாகும்.
இலங்கை வானொலியூடாக அவர் வழங்கிய பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம் பாடல்கள் - ஒரு பார்வை, திரையிசையில் நாட்டார் இலக்கியம் போன்ற நிகழ்ச்சிகள், பொது மக்களின் ரசனை வளர்ச்சிக்குப் பங்களிப்புச் செய்யக் கூடிய சிறந்த நிகழ்ச்சிகள் என இனங்காணக் கூடியனவாகும்.
பொது மக்களினதும், மாணவர்களினதும் இலக்கிய ரசனையும், இலக்கிய அறிவும் வளர வாசிப்புப் பழக்கத்திற்கு வழி செய்யும் வாய்ப் புக்களும், பயிற்சி முறைகளும் அவசியம் எனக் கருதும் துரை. மனோகரன், ஈழத்தமிழ் இலக்கியம் பரந்த தேசியத் தன்மை பெற்றதா கவும், இனங்களுக்கிடையிலான ஐக்கிய உணர்வினை வளர்ப்பதா கவும் அமையவேண்டும் என்ற உறுதியான கொள்கை கொண்டவர்.
26

திருவள்ளுவரும் வர்க்க சார்பும் சில குறிப்புகள்.
- லெனின் மதிவானம் -
புராதன குலமரபுகள் தகர்த்தப்பட்டு உருவானது சமுதாயமாகும். சமுதாயத்திலிருந்து தோற்றம் பெற்று அதனை விட மேலான சக்தியாக விளங்கும் அரசின் நிலைபேறுக்கு வேண்டிய நெறிமுறைகளை வகுத்து சென்ற வள்ளுவரின் வர்க்க சார்பினை ஆராய்வதே இக்குறிப்புரையின் நோக்கமாகும்.
ܐ
வலுக் கொள்கையின் அடிப்படையில் தோற்றம் பெற்ற அரசு சங்கமருவிய காலத்தில் மேலும் நிலைபேறு அடைந்தது. இச்சந்தர்ப்பத்தில் அரசு தன்னை மேலும் பாதுகாத்துக் கொள்ள மக்களை அறமயக்கத்தில் வைக்க வேண்டிய தேவை ஏற்பட்டது. எனவேதான் அக்கால கட்டத்தில் ஏராளமான அறநூல்கள் தோற்றம் பெற்றன. தவிரவும் இரும்பின் உபயோகம் ஏற்பட்டதுடன் வெளிநாட்டவருடன் கொண்டிருந்த வர்த்தக தொடர்பு என்பன புதிய வாணிக வர்க்கம் தோற்றம் பெற ஏதுவாக அமைந்தது. இத்தகைய வணிக வர்க்கத்தினரின் செல்வாக்கை அக்காலத் தோற்றம் பெற்ற திருக்குறள், சிலப்பதிகாரம் என்பவற்றில் நோக்கியறியலாம்.
"தள்ள விளையுளும் தக்காரும், தாழ்விலாச் செல்வரும் சேர்வது நாடு" என சொத்துடைமையை (போற்றிய) திருவள்ளுவர் அறம் என்ற பெயரில் கடுமையான சுரண்டலை உக்கிரப்படுத்துகின்றார், விரிவாக நோக்கின் ஏழைக்கும் பணக்காரர்களுக்கும் இடையில் நோக்கின் ஒரு சமரசத்தை ஏற்படுத்தி அமைதி காண்கின்றார். ‘કણpઠ சிந்தனையாளனாகிய திருவள்ளுவர் வர்க்கப் போராட்டத்தை தடுக்கவும், கூர்மழுங்கச் செய்யவும் முயன்றார்" என்ற அமரர் க. கைலாசபதியின் கூற்று மேற்குறிப்பிட்ட திருவள்ளுவர் பற்றிய கருத்துக்கு வலிமை சேர்க்கின்றது.
கொல்லாமை புலால் உண்ணாமையும் வலியுறுத்திய பொய்யா மொழியார் மனிதக் கொலையை வரவேற்பதன் பின்னணி ஆராய வேண்டிய ஒன்றாகும். அன்றைய நிலவுடமை சமூக அமைப்பில் மாடு, மிக முக்கியமான பொருளாதார பொருளாகக் காணப்பட்டது. எனவே மாடு கொலை என்பது உடமையாளர்களுக்கு ஏற்பட்ட பேரிழப்பாக அமையும். ஆனால் உடமையற்றவர்கள் தங்கள் உரிமைகளுக்காக
27

Page 16
வேந்தனை எதிர்த்து போராட வேண்டிய நிலையும் ஏற்படும். இத்தகைய ஒடுக்கப்பட்டவர்களே கொடியவர்; கிளர்ச்சிக்காரர்கள் என்ற பதம் கொண்டு அழைக்கப்பட்டு வருவதை இன்றும் காணலாம். அவர்களை உழவன் பயிர் நிலத்தில் முளைக்கும் களைகளை களைந்து பயிரை பாதுகாப்பது போல இவர்களை வேந்தன் அழித்துவிட வேண்டும் என்கின்றார். இது திருவள்ளுவரின் வர்க்க சார்பு எந்த தளத்தின் மீது விழுகின்றது என்பது புலனாகும். இது தொடர்பாக ஆய்வாளர் விந்தன் தனது கட்டுரையில் சிறப்பாக ஆராய்கின்றார்.
நிலவுடைமை சமூக அமைப்பில் காணப்பட்ட சாதிய அமைப்பு முறையினை எதிர்த்த திருவள்ளுவர் மனிதரிடையே ஏற்றத் தாழ்வினை ஏற்படுத்தியவர், குறிப்பாக லெனின் கூறுவது போல இலக்கியம் என்பது "இலக்கியம் சமூக காரணங்களின் பலாபலனாக அமைவது மாத்திரமல்லாது சமூகபலாபலன்கள் ஏற்படுவதற்கும் அதுவே காரணமாக அமைகின்றது” என்ற அடிப்படையில் திருவள்ளுவரின் படைப்பை அக்கால சமூக அமைப்புடனும் கால கட்டத்துடன் நிலைநிறுத்தி நோக்கும் போது திருக்குள் சமூக மாற்றம் பற்றிக் கூறிய ஒன்றல்ல, பழைய சமூக அமைப்பினை பாதுகாக்கப்படுவதுடன் தனியுடைமையான அரசின் நிலைபேறுக்கும், வணிக வர்க்கத்தினரின் செல்வாக்குக்கும் வழிவகுத்தது என்பதே எனது கருத்து.
திருவள்ளுவர் பெண்ணடிமைத் தனத்தையும் அவரது கால கட்ட சூழ்நிலைக்கு ஏற்றவகையில் இறுக்கமடையச் செய்பவர் என்பது கவனத்திற் கொள்ளத்தக்கது. "தெய்வம் தொழா அள் தொழு நற் தொழுவாள் பெய்யனப் பெய்யும் மழை" என்ற மனைமாட்சி என்ற பெயரில் பெண்ணடிமைக்கு வலுவூட்டுவதையும் காணலாம். இன்றைய பெண்ணடிமைத் தனத்துக்குக் கூட திருவள்ளுவர், திருவள்ளுவர் V வாசுகியின் வாழ்க்கை உதாரணமாக கொள்ளப்படுவதைக் காணலாம்.
மேற்குறிப்பிட்ட அடிப்படையில் திருவள்ளுவரின் வர்க்கச் சார்பினை வர்க்க பிரச்சினை, வர்க்க முரண்பாடு என்ற அடிப்படையில் நோக்காமல் கல்வியரங்குகளிலும் ஆய்வுகளிலும் அவரை பொது மக்கள் சார்பானவராக காட்டப்பட்டு வருகின்றது. இது திருவள்ளுவர் பற்றிய தத்துவ வறுமையும், தெளிவின்மையும் ஆகும்,
责*女
கதைகளில் வரும் பெயர்கள், சம்பவங்கள் யாவும் கற்பனை. ஆக்கங்களைத் திருத்தவும், சுருக்கவும் ஆசிரியருக்கு உரிமை உண்டு.
28

சதை தின்னும் கழுகு
கரிமாறாஹில்"
எழுத்துக்களில் ரத்தம் வடியும் கவிதை சொற்களின் எலும்புகள் உடைந்து கிடக்க கருத்துக்கள் கதறி அழுது கண்ணீர் வடிக்கும்.
இந்த கவிதை கண்கள் குண்டுகள்தான்
நாக்கு விஷப்பாம்பு முடிகள் மின்சாரம் பாயும் கம்பிகளாக பற்கள் சயனைற்’கத்திகள்; சந்தேகமேயில்ல்ை!
மனிதம் மரணித்துக் கொண்டிருக்க இந்த யுகம் சதைதின்னும் கழுகு.
சூரியன் சந்திரன் வெள்ளிகள் இல்லாத வானம் இனி வேண்டும் காற்றுக் கூட தேவையில்லை மழைமேகங்களே மன்னியுங்கள் நீங்களும் வேறு கிரகத்திற்குச் சென்று விடுங்கள்t
சுவர்க்கம் எப்போதோ சுவாசம் இழந்து அழிந்திருக்கும் இறைவன், அவசர அவசரமாக நரகத்தை விஸ்தரிப்புச் செய்திருப்பான் இடநெருக்கடியைத் தவிர்ப்பதற்காக,
'ဇွိုင္ကို ဖြိုး சொற்கள் கருத்துக்கள் செத்துப் போன கவிதைதான் இந்த நரகம்.
இனி; இங்குள்ள தாவரங்களும் மாமிச உ. மாறுவதற்கிடையில், தி
று குழந்தை சாப்பிட்ட பாத்திரத்தி పిట్ట மிஞ்சியுள்ளவர்களே! செத்துப்போன இந்த உலகத்தை புறாக்கூடு செய்து கொள்வோம்.

Page 17
ଶ୍ରେଷ୍ଠି
影
இலக்கியத் தாகங்கொ உங்கள் முயற்சிக்கு எமது பாராட்டுக்கள். இது சமூகத்தின் வளர் குறைந்த செ குறித்த நேர 22 கரட் தங்க பெற்றுக்கொ நம்பிக்கைய
ST JEWE
82 SOVER EIGN GOLD, SIL.
FANCY
శ్లో
密 శ్లో ல வரும் பெயர்கள், சம்ப ைேளத் திருத்தவும், சுருக்கவும் ஆ
ཙམ་ ཤུ་ 337༽ ཚིགས་
28
 

శతశతి
器
|L
ச்சிக்கு வித்திடட்டும்!
நகைகளைப்
ான் ஒரே இடம்!
AR LLERS
VER JEW ELLERS AND
GO O DS.
Street,
ჭა 649
密
密
密
密
恩
密
密
密
லயில் வசிக்கும் A C றாஹில்
M. அச்சகத்தில் அச்சிட்டு ப்பட்டது. 演