கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: வாழ்வியல் வசந்தங்கள் 1

Page 1


Page 2


Page 3

பருத்தியூர் பால வயிரவநாதன்
மணிமேகலைப் பிரசுரம் தபால் பெட்டி எண் : 1447 7 (ப.எ.4), தணிகாசலம் சாலை, தியாகராய நகர்,
சென்னை - 600 017, தொலைபேசி : 24342926 தொலைநகல் 0091-44-24346082 L6l6ir 9 ĝ5&cio : manimekalai@eth.net Web Site : www.manimekalaiprasuram.com

Page 4
நூல் தலைப்பு Xح
ஆசிரியர் X<ح மொழி பதிப்பு ஆண்டு பதிப்பு விவரம்
e-flsmud
தாளின் தன்மை
நூலின் அளவு
அச்சு எழுத்து அளவு >
மொத்த பக்கங்கள் >
நூலின் விலை حز
அட்டைப்பட ஓவியம் P லேசர் வடிவமைப்பு >
அச்சிட்டோர் S.
நூல் கட்டுமானம் S. வெளியிட்டோர் S.
நரல் விவரம்
வாழ்வியல் வசந்தங்கள் பருத்தியூர் பால வயிரவநாதன் தமிழ்
2003
முதல் பதிப்பு ஆசிரியருக்கு
11.6 &ી.ટી.
கிரெளன் சைஸ் (12% x 18%. Gls.L6) 12 புள்ளி
172
ლენ. 2001=
சாய்
கிறிஸ்ட் கம்ப்யூட்டர்ஸ், சென்னை - 24. ஸ்கிரிப்ட் ஆப்ஸெட், சென்னை - 94.
தையல்
மணிமேகலைப் பிரசுரம், சென்னை - 17.
 
 
 

அவையத்தில் முந்தியிருக்கச் செய்த என் தாயார் திருமதி பா. இரத்தினம்
தந்தையார் திரு. மு. பாலகிருஷ்ணன் அவர்களுக்கும்
அன்பான சமர்ப்பணம்

Page 5
பலவீனங்கள் பலமாகுமா?. அனுசரித்து போதல் அடங்கிப் போதல் அல்ல. பாராட்டுதல் ஒரு சுக அனுபவம். அழகு என்பது நம்பிக்கையும் நம்பிக்கையின்மையும் . உண்மை சாஸ்வதமானது. சுய பாதுகாப்பு விசித்திரமான மனங்கள் . காதலைப் புரிந்தவன் மெளனமாகின்றான். தெரியாமை வேறு அறியாமை வேறு. மனிதத்துவ மாண்பு. முடிவு எடுத்தல் வெற்றி பெற வழி சமைப்போம் . முதுமை ஆற்றாமையல்ல. அச்சமின்மையும் அறிவார்ந்த செயற்பாடும் . பாலுணர்வும் பண்பும். நட்பு குற்றம் காணுதல். தியாகம் உலகை உருவாக்கித் தரவல்ல உயர்சக்தி கல்விதான் மனநோயாளரை மனிதராக நடாத்துவோம். மன்னித்தல் தெய்வீகம். . அன்புடன் பேசிப் பழகுக. பிள்ளைகளும் ஒழுக்கமும். மனையாள் இணையில்லா சொத்து. தனிப்பட்ட வாழ்க்கையும் சமூக எதிர்பார்ப்புகளும் அவசரம் அநாவசியம் , ·· நடிப்பும் நிஜமும் .
 

ணிந்துரை
சிறு வயதிலிருந்தே சமயம், ஆன்மீகம், இலக்கியம் என்று பல்வேறு அனுபவங்களை வழங்கக்கூடிய ஒரு குடும்பச் சூழலில் வளர்ந்த பருத்தியூர் பால வைரவநாதன் அவர்கள் வாழ்வியல் வசந்தங்கள் என்ற இந்த வாழ்க்கைப் பயனுடைய நூலை எழுதி வெளியிட்டுள்ளார். ஒழுக்கம், தியாகம், மனையாளின் முக்கியத்துவம் வெற்றிபெற வழிகள் தீர்மானம் மேற்கொள்ளல், பாலுணர்வை நல்வழிப்படுத்துதல், மனநோயாளரைக் கையாளும் முறைகள், தன்னம்பிக்கையின் முக்கியத்துவம், இசைந்து வாழ்தல், அழகு, நட்பு, காதல் எனும் தலைப்புக்களில் தமது சிந்தனைகளைத் தொகுத்து சிறிய கட்டுரை வடிவில் தந்துள்ளார் வைரவநாதன் அவர்கள்.
இன்று எழுத்துக்கள் என்று எடுத்தால் படைப்பிலக்கியம் (கவிதை, சிறுகதை) மாணவர்களுக்கான கல்விசார் நூல்கள் என்பனவே பெருமளவில் வெளியாகின்றன. மேற்கண்ட பயனுள்ள தலைப்புக்கள் நன்னெறி எதுவென சுட்டிக்காட்டும் கருத்தாழமிக்க வாழ்வியல் சிந்தனைகள் போன்ற நூல்கள்

Page 6
6
வெளிவருவது சற்றுக்குறைவு. இக்குறையை நிவர்த்தி செய்யும் வகையில் வைரவநாதன் இந்நூல் முயற்சியை மேற்கொண்டுள்ளது பாராட்டத்தக்கது. பல்வேறு சமூக பொருளாதார மாற்றங்களின் காரணமாகவும் பூகோள மயமாக்கத்தின் விளைவாகவும் இன்று தென்னாசிய நாட்டு இளைஞர்கள் சுயகட்டுப்பாடின்றி சீரழிவுக்கு இட்டுச் செல்லும் பல பாதகமான செல்வாக்கிற்குள்ளாகின்றனர். இவர்களை முறையாக நெறிப்படுத்தக்கூடிய குடும்பம், சமுதாயம், பாடசாலை என்பன வேறு முன்னுரிமைகளின் அடிப்படையில் செயற்படுவதால் அந்நிறுவனங்கள் காலங்காலமாக இளைஞர் மீதும் மக்கள் மீதும் செலுத்தி வந்த கட்டுப்பாட்டை இழந்து வருவதாகக் கூறப்படுகின்றது. பெற்றோர்கள் இளைஞர்களை நெறிப்படுத்தும் கடமையும் பணியும் பாடசாலைக்குரியது. பாடசாலை ஆசிரியர்களே அதற்கென விசேட பயிற்சி பெற்றவர் என நம்புகின்றனர். ஆனால் பாடசாலைகளோ பிள்ளை வளர்ச்சியில் பெற்றோரின் பங்கு மறைந்து விடவில்லை. பிள்ளைகள் ஓராண்டில் 90 சதவீதமான நேரத்தை பாடசாலைகளுக்கு வெளியே கழிக்கின்றனர். இந்நிலையில் பாடசாலையும் சமூகமும் இந்நெறிப்படுத்தற் பணியில் முக்கிய பங்கு கொள்தல் வேண்டும் என வலியுறுத்துகின்றனர்.
பாடசாலைக் கல்வி வளர்ச்சியில் ஆன்மீக உளவியல் தத்துவ கலாசார சமூகவியல் சிந்தனைகள் கொண்டிருந்த செல்வாக்கிற்குப் பதிலாக பாடசாலைப் பிள்ளைகளை பொருளுற்பத்திக்குப் பயனுள்ளது. மனித வளமாக மாற்ற முற்பட்டுள்ள பொருளியல் மற்றும் பூகோள மயமாக்கும் சிந்தனைகள் இன்று கல்வித்துறையில் ஆதிக்கம் செலுத்தி

7
வருகின்றன. மேலைநாட்டுப் பாணியிலான கற்றல் முறைகள் விஞ்ஞானம் தகவல் தொழில் நுட்பம் என்பன பாடசாலைகளில் செலுத்தி வரும் ஆதிக்கமானது வளர்முக நாடுகளின் கல்வி முறையில் காணப்பட்டு வந்த சுதேச மரபுகள் பாரம்பரியங்கள் இலக்கியங்கள் ஒழுக்கச் சிந்தனைகள் என்பவற்றை அகற்றிக் கல்வி முறையில் காணப்படும் சுதேச அம்சத்தை இல்லாதொழித்து (Delocaligation) வருகின்றன. சுதேச மொழிகள் முக்கியத்துவமிழக்கும்போது இயல்பாகவே சுதேச கலாச்சாரம் விழுமியங்கள் ஒழுக்கநெறிகள் என்பனவும் கல்வி முறைகளிலிருந்து விடுதலை பெற்று வரும் காட்சியையே நாம் இன்று காண்கிறோம். பண்டு தொட்டு வந்த சுதேசக் கல்வி மரபு மனித விழுமியங்களையும் ஒழுக்க நெறிகளையும் சிறந்த மனித நேயத்தையும் வலியுறுத்தியது என்றால் இன்றைய கல்வி முறை பொருளாதார பயனுடைய அறிவையும் திறன்களையும் முக்கியத்துவப்படுத்துகின்றது. கல்வி முறையில் எங்கோவொரு இடைவெளி தோன்றிவிட்டதால்தான் இன்றைய இளைஞர்கள் எதனைப் பின்பற்றுவது சீரிய வாழ்க்கைப் பயனுடைய சிந்தனைகள் யாவை என்பது பற்றிய வழிகாட்டல்களைப் பெறத் தவறிவிடுகின்றனர்.
இப் பின்புலத்தில் வைரவநாதனின் இந்த நூல் பெரு முக்கியத்துவம் பெறுகின்றது. கல்வி முறையில் விரிவடைந்து வரும் இடைவெளியை நிரப்ப இவரது நூல் ஓரளவிற்கு உதவும் என நம்புகின்றோம்.
ஆரம்ப காலத்தில் கல்லூரியில் சிறு வயதில் கையெழுத்துப் பத்திரிகையில் ஆசிரியராகப் பணிபுரிந்து தொடர்ந்து ஓவியம், கவிதை, சிறுகதை விமர்சனம் எனப் பல

Page 7
8
துறைகளில் புகுந்ததுடன் பல பத்திரிகைகளில் எழுதியும் பல தேசியப் பத்திரிகைகளுக்குச் செய்தியாளராகவும் தமிழிலக்கியக்குழு (சாகித்திய மண்டலம்) என்பவற்றின் செயலாளராகவும் பணிபுரிந்த வைரவநாதன் சமயப் பெரியாரும் திருவாசகக் கடலுமான பூரீ கெளரி சோதிடர் - மு. பாலகிருஷ்ணன் அவர்களின் புதல்வராவார். மனிதனின் வாழ்க்கை மேம்பாட்டிற்கான சீரிய சிந்தனைகளையும் வழிகாட்டல் விளக்கங்களையும் கொண்ட அவருடைய இந்நூல் தமிழ் கூறும் நல்லுலகின் பாராட்டை நிச்சயம் பெறும் என்பது எமது நம்பிக்கை.
பேராசிரியர் சோ. சந்திரசேகரள் கல்விப்பிடம்
கொழும்புப் பல்கலைக்கழகம் f0. 09, 2003

இந்த உலகம் ஒழுக்கநெறியினை ஆதார சுருதியாகக் கொண்டே இயங்கி வருகின்றது. மனித இனத்தின் ஒழுக்கக் கோட்பாடுகள், முழுமையாகத் தகர்ந்து போனால் வையகம், அழிந்தே போய்விடும். பண்டைய காலத்திலிருந்து இன்றுவரை அனைத்து சான்றோர்களும், மக்கள் இப்படித்தான் வாழ வேண்டுமெனப் பல கட்டுப்பாடுகள், கொள்கைகளைத் தாம் வாழ்ந்த நாட்டின் கலாச்சார மரபுக்கு ஏற்ப, ஏற்கனவே சொல்லிவிட்டுப் போனார்கள். இவர்கள் கூறாதது எதுவுமேயில்லை. புதிதாக நாம் சொல்வதற்கு அதிகமில்லா விடினும்கூட, வழிவழியாக இவர்கள் கூறியவைகளையே மீண்டும் மீண்டும் புதிய வடிவில், புதிய கோணத்தில், தமது அனுபவம் மூலமும், நூல்கள் வாயிலாகவும் எமக்கு தற்போதைய கல்விமான்கள், சமயச் சான்றோர்களும் வாழும் வழிகள் பற்றிச் சொல்லிக் கொண்டிருக்கின்றார்கள்.
நல்லவைகளை உரை செய்வதை நிறுத்திவிட முடியாது. இவைகள் எம்மனதில் ஆழமாகப் பதிவு செய்யப்படல் வேண்டும். தவிர எதிர்கால சந்ததியினருக்கும் எம் வாயிலாக, நல்ல செய்திகளை கொடுக்கவேண்டிய கடப்பாடு உடையவர்களாகவும் இருக்கின்றோம். இந்த வகையில் உலகின் பல பாகங்களிலும்,

Page 8
10
பல மொழி பேசும் எந்த இன அறிஞர் பெருமக்கள், சமூக விஞ்ஞானிகள், கவிஞர்கள் போன்றோரால் வாழ்வியல் கருத்துக்கள் சொல்லப்பட்டு, அவை பூரணமாக ஏற்கப்பட்டும் வருகின்றன. இந்தப் பணிகள் காலம் காலமாக இன்றுவரை, தொடர்ச்சியாகவே இயங்கும் ஒன்றாகவே வளர்ந்து வருகின்றது என்பதே உண்மையான திருப்தியளிக்கும் விடயமாகும்.
மனிதனுக்கு இன்பமோ, துன்பமோ மிகையாகும்போது அவனிடம் மாறுதல்கள் ஏற்பட ஆரம்பிக்கின்றன. முக்கியமாகத் துன்பங்களைச் சந்திக்கும்போது, தன் வாழ்க்கையே அஸ்தமித்து விட்டதாக குமுறுகின்றான். செயல்கள் ஸ்தம்பிக்கின்றன.
எனினும்,
இன்பம் வந்ததுமே அனைத்தையுமே மறந்து விடுகின்றனர். இன்பமோ, துன்பமோ இவை நிரந்தரமல்ல என உணர்ந்தும்கூட மனம் சடுதியாக வரும் உணர்வுகளுக்கே ஆளாகின்றது. இவை எல்லாமே, யதார்த்தமானவை. எல்லாமே, மனிதன் சந்திக்கும் நிகழ்வுகள் என்பதை எவரும் கருதிவிடுவது கிடையாது. துன்பத்தைக் கண்டதும், வாழ்க்கையே சிதைந்துவிட்டதாகக் கருதுவது தவறு என உணரக் காலம் தேவைப்படுகின்றது. சில சமயங்களில் மனிதன் அறிவுபூர்வமான முட்டாளாகி விடுகின்றான். எல்லாமே ஒன்று என்கின்ற துறவு மனப்பான்மை, சாமான்யமான மனிதருக்கு வந்துவிடமாட்டாது. என்றாலும்கூட,
மனிதன் வாழ்ந்தேயாக வேண்டும். எப்படியும், மனப்பக்குவம் பெற்றேயாக வேண்டும். துன்பங்களிலிருந்து விடுதலை பெறுவதற்கு எமக்கு ஆத்மபலம் தேவைப்படுகின்றது. இயல்பாகவே நல்லனவைகளை நினைப்பதும், அதனையே செய்வதிலும் ஈடுபட்டால், ஆத்மா, தானாகவே பக்குவநிலைக்கு வந்துவிடுகின்றது. தூய வெள்ளைக் காகிதத்தில்தானே அழகிய சித்திரங்கள் வரையமுடியும். கசங்கிய அழுக்கு

11
காகிதத்தில் அதை அழகாக எப்படி உருவாக்கமுடியும். மனித மனம் கூடத் தெளிவாக அமைந்த பின்னர், நல்லனவைகள் எல்லாமே, கல்லில் எழுதப்பட்டவையாக நிரந்தரமாகப் படிந்துவிடுமன்றோ?
நான் மனிதர்களை மட்டுமல்ல, அனைத்து உயிர்களையும்கூட நேசிக்க, நேசிக்க, எம்முள் ஏற்படும் மாற்றங்களை நாம் உணர ஆரம்பிக்கும்போது எல்லா உயிர்களுக்கும் உணர்வுகள் உணர்ச்சிகள் உண்டு. அவைகளுக்கும் சுதந்திர உணர்வு உண்டு. விஞ்ஞான ரீதியாகவே ஆராய்ந்து பார்த்தபோது, கண்ணுக்குத் தெரியாத அனைத்து ஜீவராசிகளுக்கும் உள்ள உணர்வுகள் வியப்பளிப்பனவாக உள்ளன. இவைகளில் இருந்து ஒன்று தெளிவாகப் புலனாகின்றது.
و [jینگ
வாழவேண்டும், வாழவேண்டும், நன்றாக வாழவேண்டும் என்பதுதான். சாதாரண, ஒரறிவு கொண்ட உயிரினங்களே வாழ்க்கையினை அனுபவிக்க நகருகின்றன. மனிதன் மட்டும் முட்டாள்த்தனமாக ஸ்தம்பித நிலையில் சதாகாலத்தை ஒட்டலாமா? புலனறிவு பூரணமாக இருந்தும், புற அழற்சிகளுக்குப் புத்தியை பேதலிக்க விடலாமா? வாழ்வியல் வழிகளை நன்கு அறிந்துகொண்டால், வாழ்க்கையே, ஒர் அமைதிப் பயணம்தான். இந்நல்வழிகள் ஒன்றும் சிக்கலானதல்ல; தெளிவானதும் சுலபமானவையும்தான். வரைமுறை வாழ்க்கையில் நாம் வாழ மனதைப் பக்குவப்படுத்திக் கொண்டால், அதுபோன்ற சந்தோஷமான விஷயம் பிறிதொன்றுமில்லை. A
இந்த வகையில் எளிமையான முறையில், வாழ்வோடு நாம் இணைந்து இருக்கின்ற காரணத்தால், வாழ்வியல் நெறிமுறைகள் பற்றி என்னால் இயன்ற அளவு எடுத்துச்சொல்ல

Page 9
12
இந்நூலை எழுதியுள்ளேன். இந்நூலில் உள்ள கட்டுரைகள் அனைத்தும் தினக்குரல், தினகரன், வீரகேசரி பத்திரிகைகளில் வெளிவந்தமையாகும். இது, முதன்முதல்ாக நூல் உருவில் வெளிவரும் எனது வெளியீடாகும். இம்மூன்று பத்திரிகை நிறுவனங்களின் ஆசிரிய பீடங்களுக்கு என் நெஞ்சார்ந்த நன்றிகள்.
இந்த வகையில் மேலும்,
எனது இம்முயற்சிக்கும், எனது வளர்ச்சியிலும் பெரும் அக்கறை கொண்டு வந்துள்ள எனது ஆசிரியப் பெருந்தகைகள், சான்றோர்கள் நண்பர்களை மறந்துவிட முடியாது. இந்நூலை வெளியிட்டே ஆகவேண்டுமென்ற, கட்டளையை, எனக்கு விதித்த, மூத்த எழுத்தாளர் என் மதிப்பார்ந்த அன்பர் திரு எஸ். யோகநாதன் அவர்களை என் நெஞ்சில் என்றுமே நிறுத்தி வருகின்றேன். என் எழுத்துக்களை அவ்வப்போது பாராட்டி என்னை உற்சாகப்படுத்திவரும், என் இனிய பழம்பெரும் எழுத்தாளர் உருவை எஸ். தில்லை நடராஜா அவர்களுக்கு நான் என்றுமே அன்புரிமை பூண்டவனாவேன்.
அத்துடன், என்னுடன் நீண்டகாலமாகப் பணிபுரிந்து வரும் திருமதி சாந்தி நாவுக்கரசன் திரு ரி. யோகநாதன் எஸ். தெய்வநாயகம், திரு குமார் வடிவேல், திரு ஏ. கோபிநாத் எஸ். சிவகணேசன், திரு எம். வாசகம்பிள்ளை, திருமதி கே. ஈஸ்வரராஜா ஆகியோருக்கும் நன்றிகள்.
நூல் வெளியீடு தொடர்பாக, உற்சாகம் நல்கிய திரு வி. விக்கிரமராஜா, திரு பி. ஆனந்தலிங்கம், திரு மானாமக்கீன் அவர்களுக்கும் இந்நூலை ஒப்புநோக்கிய என் உடன் பிறவா சகோதரர், கவிஞர் அன்புச் செல்வன் (திரு எம். சண்முகநாதன்) அவர்களுக்கு வார்த்தைகளால் மட்டுமே நன்றிகூற இயலாத ஒன்றாகும்.

13
மேலும், என்னுடன் பழகியமாத்திரத்திலேயே, உரிமை கொண்டு நேயம் பூண்டு, என்னை தன் நெருங்கிய நண்பனாகவே ஏற்று “வாழ்வியல் வசந்தங்கள்” என்கின்ற எனது நூலை வெளிக்கொணர பேரார்வம் பூண்ட, எனது நண்பர் திரு ரவி தமிழ்வாணன் அவர்களுக்கும், அவர்களது மணிமேகலைப் பிரசுரத்தார்களுக்கு எனது மனமார்ந்த நன்றிகள்.
இத்துடன்,
எனது இந்நூலிற்கு முகவுரை வழங்கிய என் பாசமிகு பேராசான், பேராசிரியர் திரு சந்திரசேகரன் அவர்களுக்கு நான் என்றுமே கடமைப்பட்டவனாவேன். தனது சிரமத்தினைப் பொருட்படுத்தாது, எனது நூலினிற்கு அவர் எழுதிய அணிந்துரை, என்னை மேலும், மேலும் கெளவரப்படுத்தியதாகவே கருதுகின்றேன்.
எல்லாவற்றிற்கும் மேலாக எனது இந்த முயற்சிக்கு ஒத்துழைத்த, என்னை மேன்மேலும் இது போன்ற முயற்சிகளில் தொடர்ந்தும் இயங்க வைக்க உதவுகின்ற அன்பு நெஞ்சங்களான வாசக நேயர்கள் என்னை ஆதரிப்பார்கள் என்றே, உறுதியுடன் நம்புகின்றேன். சமர்ப்பணமாக, என்னைப் பெற்றெடுத்த என் அன்புத் தெய்வங்களான திரு மு. பாலகிருஷ்ணன், திருமதி இரத்தினம் பாலகிருஷ்ணன் ஆகியோரின், பாதார விந்தங்களில் இந்நூலைக் காணிக்கையாக்குகின்றேன்.
அன்பன்
153/10, பிரான்சிஸ் வீதி . في مسمى A. கொழும்பு - 06. பருத்தியூர் பால வயிரவநாதன்

Page 10
14
பரதீப்புரை
கருவிலேயே திருவுடையார் என்று நாம் சிலரை அறிவோம். மகிழ்ந்து, மதித்துப் போற்றுவோம். இவர்கள் தமது மண்ணிற்கும், மக்களுக்கும், மொழிக்கும், பாண்பாட்டிற்கும் சிறப்பும் செம்மையும் சேர்ப்பவர்கள். இவர்களில் ஒருவராக நான் திரு. பால வயிரவநாதன் அவர்களை அடையாளம் காணுகின்றேன்.
வயிரவநாதன் குடத்துள் விளக்கு, பண்முகச் சிறப்பு வாய்க்கப் பெற்றவர் வயிரவநாதன் என்பதை அவரோடு நெருங்கிப் பழகும் எவரும் அறிவார்கள். நானும் அவரை நன்கு அறிவேன். அவர் அழகாகக் கவிதைகள் புனைவார். கற்பனை செய்வார். ஒவியம் தீட்டுவார். கட்டுரை எழுதுவார். ஆயினும் இந்த அழகியல் திறனையெல்லாம் செம்மையாகவும் சீராகவும் அவர் வெளிப்படுத்தவில்லை என்பதுதான் ஆதங்கத்துக்குரியது. தன் திறனையெல்லாம் உள்ளவாறு அவர் வெளிப்படுத்தி குன்றின் விளக்காய்த் திகழ அவர் பிள்ளையார் சுழி போட்டிருப்பது என் போன்றவர்களுக்கும் தமிழுக்கும் பேருவகை தரும் செய்தியாகும்.
தமிழிலே கட்டுரை இலக்கியம் வறுமை கொண்டிருக்கிறது. சிந்தனை வீச்சும் சொல்நயமும் செறிந்த

15
கட்டுரைகளை காண்பதே அபூர்வமாகிவிட்டது. இச்சூழலில், வயிரவநாதனின் கட்டுரைகள் பாலைவனத்திடையே பசுஞ்சுனையென மிளிர்கின்றன. தென்றலெனத் தழுவிச் செல்கின்றன.
வளரிளம் பருவத்திலேயே எழுதத் தொடங்கியவர் வயிரவநாதன். அரசு பணியில் இணைந்தவர், இதழியலோடும் இணைந்தவர், மானிட நேயம் அவரின் ஆளுமையென்பதால் நல்லவர்க்கெல்லாம் அன்பராயுள்ளவர்.
‘உள்ளத்தில் உண்மை ஒளி உண்டாயின் வாக்கினிலே ஒளி உண்டாகும்’ என்றான் பாரதி, வயிரவநாதனுக்கு அவரது ஆக்கங்களில் இது வசீகரமாகச் சித்தித்திருப்பதற்கான காரணம் வேறெதுவுமாயிருக்க முடியாது.
குடத்துள் விளக்கு, குன்றின் விளக்காக வாழ்த்துகிறேன் தமிழோடு சேர்ந்து.
GF, GII/75,1567
ஆசிரியர் - தமிழ் எம்.டி. குணசேன 217, ஒல்கொட் மாவத்தை கொழும்பு - 11.

Page 11
16 விற்பனையாகும் இதர நூல்கள்!
9.565i Gaong - Wisemen's Saying
அறிஞர்களின் சிலேடைப் பேச்சுக்கள் ---------------------------- 19.00 தமிழ்ப் புலவர்களின் சுவையான சொல் விளையாட்டுக்கள் ---------- 19.00 இரசிக்கத் தகுந்த கேலிகளும் கிண்டல்களும் ----------------------- 1800 21.00 ---------------------- فاڑ6)35Dp D) نق[0](Gufi|9ے bاہl5IT66160puہ) ,uthقgے பிறவிப் பயன் பெறச் சான்றோர் வாக்கு ---------------------- 20.00
'?' Surgiu Guong - Quotation அறிஞர்களின் பொன்மொழிகள் ---------------------------------- 15.00 உலகப் பொன்மொழிகளும் பொருத்தமான கதைகளும் ------------------ 26.00 மாணவ - மாணவியருக்கான பொன்மொழிகள் ---------------------- 22.00 மனதைப் பக்குவப்படுத்தும் மாமேதை பொன்மொழிகள் ------------------- 30.00 பொன்மொழிக் கதைகள் --- 32.00 siģpGir GT 99ū QLuīgir Gudrs Gir ----------------------------- 35.00 பொன்மொழிக் களஞ்சியம் ------------------------------------ 36,00 உலக மேதைகளின் உன்னதப் பொன்மொழிகள் --------------------- 29.00
7 (oliga, Tsin - Quotable Quote சிறந்த ஆங்கில மேற்கோள்கள் 30.00 ஆன்மீகப் பெரியோர்களின் பொன்மொழிகள் --------------------- 19.00 மேதைகளின் பொன்மொழிகள் 21.00 பேரறிவாளர்களின் பொன் மொழிகள் --------------------------- 29.00 * Lug6Muongo - Proverb So பணமொழிகள் 11.50 உலகப் பழமொழிகள் - பாகம்-1 -------------------------- 32.00 பசும்பொன் மற்றும் இராமநாதபுர மாவட்டப் பழமொழிகள் ----------------- 20.00 புதுமொழிகள் 13.00 o 6UTg 9ý6 - General Knowledge S ஜெனரல் நாலெட்ஜ் (பொது அறிவு விஷயங்கள்) பாகம்-1--------
Lit&b-2 ------- 77.00 பள்ளிப் பிள்ளைகளுக்கான பொது அறிவு விஷயங்கள் பாகம்-1--- 46.00
ursb-2 -- சொற்களும் சுவையான விளக்கங்களும் ---------------------------- 20.00 நெற்றியடி விஷயங்கள் ------------------------------------------ 40.00 நெற்றியடி விஷயங்கள் பாகம் - 2--------------------------- 55.00 36.00 --------------------------- نفاuL+5IT'5.برقے - Im6 26d6T60)LD|60ھیے guuLbھی ہو உலக நாடுகளும் விவரங்களும் 130.00
gђgumenoj upflu othern - odeo-asci -------------------------- 40.00

17
வாழ்வியல் 芝案 b ()
வசநதங்கள
O O .ܓܠ & LIG)b'ibbriiiiiiiiir LIG)DirtbjINr?
اور ، ۔ ァヘr
. %/ן \ Sי: ;%; ή
உங்கள் பலவீனங்களால் இன்னும் ஒருவர் பலமடைய அனுமதிக்காதீர்கள். ஒருவர் பலவீனத்தில் உரம் தேடுபவர்கள் நிச்சயமாக, அவர் சம்பந்தப்பட்ட மற்றவருக்கு உதவுபவராக இருக்கமாட்டார். ஒருவரது ஆற்றாமை மற்றை யோர்க்குத் தெம்பூட்டுபவையாக அமைவது எவ்வளவு பரிதாபகரமானது!
இதில் கவனிக்கப்பட வேண்டியது என்னவெனில், எமது பலவீனத்தை நாம் கண்டு கொள்ளாமல் இருப்பதுதான். சரி, அதை அறிந்த ஒருவர் நம்மீது கொண்ட அக்கறையுடன் சுட்டிக் காட்டினாலும் நாம் அதை ஏற்றுக் கொள்ளத் தயாராக இருப்பதில்லை.
இதுவும் ஒரு ஆணவ முனைப்புத் தானன்றி வேறில்லை. மாறாக -

Page 12
(18) வாழ்வியல் வசந்தங்கள்
سوابسته
அவர் மீது நாம் கோபித்துக்கொள்ளுகின்றோம்; அவர் உறவே தேவையில்லை எனத் துண்டித்துக்கொள்ளக்கூட ஆயத்தமாக இருக்கின்றோம். உதட்டில் சிரித்து, உள்ளுக்குள் கறுவிக் கொள்கிறோம். வீட்டில் நெருங்கிய உறவினர்கள், ஏன் - பெற்றோர் மனைவி, பிள்ளைகள் ஏதும் சரி என அறிந்து கூறினாலுங்கூட, கேட்கத் தயாராக இருக்கின்றோமா? இல்லையே.
உண்மைகளை ஏற்றுக் கொள்ளத் தயாராக இல்லாதவரை பிரச்சினைகளும் தொடர்ந்து வந்து கொண்டுதானிருக்கும்.
எமக்குள்ள குறைபாடுகளை ஏற்றுக் கொள்வதில் என்ன குறைவு வந்துவிடப் போகிறது?
பலவீனம் என்கின்ற குணாம்சம் பொதுவானது.
இது பல்வேறு வடிவங்களில் ஒவ்வொருவரிடமும் ஒட்டிக் கொண்டிருக்கும். இது இருக்கும் சிலர் அதனைத் தமது பலமாகக் கருதி தவறாக பெருமிதப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். இது ஒரு பொய்யான மயக்கமின்றி வேறென்ன?
é.
“எனக்கு கோபம் வந்தால், எல்லோரையும் தொலைத்து விடுவேன் தொலைத்து. என்னை என்னவென்று நினைத்துவிட்டீர்கள்’ என்று ஆரம்பித்துக் கொச்சையான பாஷைகளில் சிலர் திட்டுவதை நீங்கள் கேட்டிருப்பீர்கள். இவர்களுக்கு மனதுள் ஒரு மமதை.
எங்களது பலவீனங்களை, நாங்கள் ஒப்புக்கொள்ள வேண்டும். உண்மைகளை ஏற்றுக் கொள்ளாதவரை பிரச்சினைகள் தொடரவே செய்யும், பலவீனங்களை உணர்ந்தாலே போதும். அப்புறம் நாம் படிப்படியாக அதனில் இருந்து மீண்டுவிட முடியும். எமக்குள்ள குறைபாடுகள், பலவீனங்களை சதா நினைந்து மேலும் குறைபாடு உள்ள மனிதராகப் பலமிழந்து போகக் கூடாது. மனதை மடக்கும் சிந்தனைகளுக்கு இடமளிக்காது, தண்டகளை உடைப்பதே வெற்றிக்கு
வழி.

பருத்தியூர் பால வயிரவநாதன் Cઈ,
سعیسهها
*எனது கோபம்’ என்கிற ஆயுதம், என்னமாய் வேலை செய்கிறது! எனக்கு, எல்லோரும் பயப்படுகின்றார்கள். என்னைவிட்டால், வேறு யார் இருக்கிறார்கள், எனத்தவறாக, தமது பலவீனமான கோப உணர்வை தம் அதீத சக்தியாக எண்ணி, தம்மைத்தாமே மெச்சிக் கொள்ளுகிறார்கள். இதேபோல் -
பயம்’ என்கிற பலவீனம்;
சஞ்சலம் என்கிற பலவீனம் (இது மனக்குழப்பத்துடன் கூடியது);
சபலம் என்கிற பலவீனம்;
சலனம் என்கிற பலவீனம் -
இவை போன்ற தேவையற்ற குணாம்சங்கள், பல கிளைகளாக விரிவடைந்து, தனி மனிதனைத் துவம்சம் செய்கின்றன.
இதன் பாதிப்போ 色女 இருப்பவர்களை வேதனைக்குள்ளாக்குகின்றது. இவைகளை இல்லாமல் செய்வது என்பதே மனிதனுக்குள்ள தலையாய பிரச்சனையாகும்.
தேவையற்ற பலவீனங்கள் கூட 9GUን மாறாத தலைவலியாக சுமையாக, அவனை அமுக்கிவிடும். இந்த நிலையை மற்றவர்கள் ஆயுதமாக்கி, அவனை மடக்கி வென்று விடுகிறார்கள்.
எனவே நாம் எம்மைப் பற்றிப் புரிந்து கொள்ளவேண்டும். பிறர் எம்மைப் பற்றிக் கூறும்போது, இது சரியா? பிழையா? என நாம் எம்மையே கேட்டு, எம்முள் எம்மைப் பற்றிய ஒரு சுய விமர்சனத்தை உருவாக்கிக் கொள்ளல் வேண்டும். அவர்கள் சொன்னது சரி எனப்பட்டுவிட்டால், அதை அப்படியே வெட்கப்படாமல் ஏற்றுக் கொண்டு, எம்மை நாம் மாற்றி அமைக்க முயலவேண்டும்.

Page 13
(2) வாழ்வியல் வசந்தங்கள்
سمعہ
இத்தகைய ஏற்றுக் கொள்ளும் இயல்பினை வளர்க்க, உகந்த மனப்பக்கு வத்தினை படிப்படியாகப் பெற்றேயாக வேண்டும். இது கொஞ்சம் சிரமமானதுதான் என்றாலும் எம்மால் முடியாத ஒன்றில்லை.
நாம் போற்றும் பெரியார்கள், மகான்கள் பலரும் சாதாரண மனிதர்களாக இருந்தே, மகான்கள் ஆனார்கள். அவர்களிடமும் குறைபாடுகள் இல்லாமல் இருந்ததில்லை.
எனினும் - அனுபவ ஞானம், பொறுமை, -%քաn607 அறிவுத் தெளிவு, உண்மைகளை ஏற்கும் பண்பு, புலனடக்கம் போன்ற இயல்புகளால் தம்மிடமுள்ள குறைபாடுகளை உடைத்தெறிந்தனர்.
ஒரு மாபெரும் தத்துவஞானியைப் பார்த்த சோதிடர் ஒருவர் ‘நீர் காம வயப்பட்ட மனிதராக இருந்தீர் எனக்கூறிய போது, பக்கத்தில் இருந்த சீடர்கள் கோபம் கொண்டனர். அதைக் கண்ட ஞானி, அவர்களை அமைதிப்படுத்தி, வெகு சாந்தமாக, சகலரையும் நோக்கினார். பின் சோதிடரைப் பார்த்து, ‘நீங்கள் கூறியது மிகவும் சரியானதே. நான் இவ்வியல்பினை என் கூரிய
அறிவினால் வென்றுவிட்டேன்’ என்று கூறினாராம். இந்த ஒப்புக்
கொள்ளும் மனப்பக்குவம், ஞானிகளுக்கே உரித்தான தனிச் சிறப்பாகும். இத்தகைய ஞானிகள் பலவீனங்களைப் புரிந்து கொண்டவர்கள் மட்டுமல்ல; அனுபவ ரீதியாக உணர்ந்து, தெளிந்தும் கொண்டவர்கள். இதனால்தான் அவர்கள், எவரையும் முன்னிக்கும் இயல்பினையும் கொண்டிருந்தனர்.
ஆனால் நாமோ, எம்முள் குறைகளை வைத்துக்கொண்டு மற்றவர் மீது காட்டுதல் செய்கின்றோம். இதனால் நாம் தப்பிக்கப் போவதுமில்லை. ஏன் எனில் எமக்கு நாமே பொய் உரைத்தல் (toեԳաո5/.

பருத்தியூர் பால வயிரவநாதன் (2. NausMY
ஆயினும் எமக்குள்ள குறைபாடுகள் பலவீனங்களை மட்டும் சதா நினைந்து மேலும் குறைபாடுள்ள மனிதனாக, பலமிழந்து போகக்கூடாது. இவைகளை மீறி, தடைகளைத் தாண்டி, வெற்றிப்பாதையுடன் கூடிய முன்னேற்றத்துடன் நடைபோட வேண்டும். மனதை மடக்கும் சிந்தனைகளுக்கு இடமளித்தல் கூடாது.
எம்மை நாம் வசப்படுத்திக் கொள்ளப் பழகவேண்டும். எம்மை மீறி நாம் எச்செயலையும் ஆக்க இடமளிக்கக்கூடாது.
விதியைச் சொல்லித் தப்பித்துக் கொள்ளவும் கூடாது. குருட்டுச் சமாதானங்கள், அர்த்தமற்ற விதண்டாவாதங்கள், சதா நம்பிக்கையீனமான மனோபாவங்கள், இவை யாவும் செயல் திறன்மிக்க மனிதர்க்கு அழகுமல்ல.
நாம் ஒவ்வொருவருமே செயல் திறன் மிக்க வீரர்களே. இது சாத்தியமாக முடியாத ஒன்றல்ல. இதில் என்ன சந்தேகம் வேண்டியிருக்கின்றது?
தினக்குரல் - 06:082000
<>

Page 14
அனுசரித்துப் போதல் என்பது அடங்கிப் போதல் அல்ல. இது விட்டுக் கொடுத்தலின் வெளிப்பாடு. விட்டுக் கொடுத்தல் என்பது ஒரு விடயத்தில் மற்றையோருக்கு நாம் செய்யும் உபகாரங்கள் என்று கூடச் சொல்லலாம். ஒவ்வொருவருக்கும்
தனிப்பட்ட விருப்பு, வெறுப்புக்கள், கொள்கைகள் இருக்கும்.
கொள்கை, கோட்பாடுகளைக்கூட தமக்கென வகுக்க ஒருவருக்கு உரிமையுண்டு. இது ஒருவனுடைய உள்ளார்ந்த சுதந்திரம், ஒருவனுடைய நினைப்பில் நாம் தலையிட முடியுமா? அவன் நினைப்பதை நாம் கண்டு கொண்டுவிடத்தான் இயலுமா? ஆனால் ஒவ்வொருவனும் தான் நினைப்பதை எண்ணியவண்ணம் வெளிப்படுத்தல் என்பது நடைமுறை சாத்தியமும் இல்லை. அப்படியே வெளிப்படுத்தப் புகுந்தாலும் வேறு பற்பல பிரச்சனைகள் பூதாகாரமாக வெடித்துவிடவும் கூடும். எனவே நாம் நினைத்ததை உடன் நடத்திவிட முடியாத சூழ்நிலையை நாம் வாழும் சமூகம் உருவாக்கிவிட்டது. இதன் சரி, பிழைகளை ஆராய்தல் என்பது ஆய்விற்குரிய வேறு விடயமாகும்.
 

பருத்தியூர் பால வயிரவநாதன் '2'
سعسع مح
உண்மை நிலைதான் என்ன? எம்மால் ஏன் எதையுமே நினைத்தபடி செய்ய முடியாது.
உலகில் உள்ள சட்டதிட்டங்கள், சமூகங்களுக்கிடையேயான நெறிமுறைகள், கட்டுப்பாட்டு வரையறைகள், ஒழுக்க நெறியுடன் இயைந்த இதர அம்சங்கள் அனைத்துடனும் பின்னிப்பிணைந்து வாழுகின்றோம். இதுவே உலகியல் வாழ்வுமுறை. இவை அனைத்திற்கும் ஈடு கொடுத்தே மனிதன் வாழ்ந்தாக வேண்டும். அவன் சுற்றுச்சூழலுக்கு ஏற்ற விதத்தில் தன்னை ஆக்கிக்கொள்கின்றான். சமூகம் இன்றேல் அவன் இல்லை; அவனால் தனித்து இயங்க முடியாது.
முதலில் தனிமனிதன்; பின்னர் குடும்பம்; பின்னர் தன் கிராமம், நகரம், நாடு, உலகம் - என அவன் வியாபித்து, தன்னைப் பரந்த உலகிற்கு இட்டுச் செல்கின்றான்.
எனவே அவனது விருப்பு, வெறுப்புக்கள் அனைத்துமே ஒன்றுக்கொன்று இணைந்துபட்டுத் தொடர்புகளை வலுப்படுத்துகின்றன. அவனது, விருப்பு, வெறுப்பு, கடமைகள் போன்றவை உலகியலுடன் தொடர்புற்றனவையாகவே அமைந்தும் விடுகின்றன.
எனவே நாம் சூழ்நிலைக்கேற்ற விதத்தில் எம்மை நாம் மாற்றியேயாக வேண்டும். இம்மாற்றங்கள் யாவும் எமக்குத் தெரிந்தும், புலனாகாதவாறும் எம்மை மாற்றியமைக்கும். இது ஒரு
முரண்பாட்டிலும், உடன்பாடாக வாழ்வதுதானே வாழ்க்கை. எதிர்ப்பினை எதிர் கொண்டு, பக்குவமாக வாழ்வதில்தானே சுவாரஸ்யம் இருக்கிறது. நாம் இன்னுமொருவர் கருத்துக்கள் சரியானதாக இருக்கும்போது அதன்படியும் செயலாற்றும்போது ஒரு மாறுபட்ட அனுபவத்தையும் பெறலாம். பல்வேறுபட்ட சிந்தனைகளைக் கேட்டு அறிந்து பாகுபடுத்திச் செம்மையாக்க, நாம் எம்மை பக்குவப்படுத்திக்கொள்ள வேண்டும்.

Page 15
(24) வாழ்வியல் வசந்தங்கள்
سوسهها
நியதியாகிவிட்டது. நாம், எமக்காக மட்டுமின்றி ஏனையோருக்காகவும், அனுசரித்துப் போகும் இயல்பு விரிவடைந்து கொண்டே செல்கின்றது. எனவே முதலில் நாம் மனிதன், குடும்பம், சமூகங்களுக்கிடையே உள்ள அனுசரித்தல் போக்கினைப் பார்ப்போம்.
சின்னச்சின்ன விடயங்களில் கூட நாம் விட்டுக் கொடுக்கத் தயங்குகின்றோம். சிலவேளை இதுவும் ஒரு ஆணவத்தின் முனைப்பால் எழுந்த இயல்போ எனவும் சந்தேகம் கொள்ள வைக்கின்றது. நாம் சந்திக்கும் ஒவ்வொரு நபரும் இப்படியே இருந்துவிட்டால் உலகம் இயங்குமா என்ன? எனவே சுமுகமான ஒரு செயல்முறைக்கு, பணி செய்தலுக்கு இந்த அனுசரிக்கும் போக்கில் இன்றியமையாத் தன்மையினை நாம் நன்கு புரிந்து கொள்ளலாம்.
சாதாரணமாக மனிதர் ஒவ்வொரு வருக்கும் குண இயல்புகள், நடத்தைகள் தனித்தனியானவை. ஒரே குடும்ப அங்கத்தவர்களிடமே குண இயல்புகள் ஒருவர்க்கொருவர் வித்தியாசமாக இருக்கும். ஆயினும் இந்த வித்தியாசமான இயல்புகளுக்கும் - அப்பால் நின்று, யாம் இணைந்து, வாழ்ந்து வருகின்றோம் என்றால் எமக்குள்ள பிணைப்பின் வலிமையை நாம் அறிந்துகொள்ள வேண்டும். அன்பு கொண்டவர்களுக்காக நாம் எமது விருப்பங்களைத் துறந்து விட்டுக்கொடுத்து வாழ்ந்து வருகின்றோம் என்பதுதான் உண்மை.
மிகவும் அற்பமான விஷயங்களுக்காகவே ஆரவாரம் செய்து மனஸ்தாபப்படுவது சரியா? கணவன் மனைவி, பிள்ளைகளுடன் ஏற்படும் சிறு சிறு விஷயங்களில், யார் சொல்வதை யார் கேட்பது, என்பதுபோல் செயல்பட்டு வீட்டில் நிம்மதியைக் கெடுத்துக் கொள்கிறார்கள். இதன் பாதிப்பு அனைவரின் எதிர்காலத்தையே குழப்பிவிடுகின்றது. பிள்ளைகளின் கல்வி ஒழுக்க நெறி, வீட்டில் ஏற்படும் பொருளாதார பற்றாக்குறை

பருத்தியூர் பால வயிரவநாதன் (23) Ynx------~~~~Y
என்று எல்லாமே சரிந்து விடுகின்றன. மற்றவர்களின் நகைப்பிற்கும் இதுபோன்ற குடும்பங்கள் ஆளாகின்றன. சிலர் இது விடயங்களில் நடந்துகொள்ளும் விதமே சற்று வித்தியாசமானதும், விசனத்திற்குமுரியது. அதாவது,
இவர்கள் ஏனையோர் விட்டுக்கொடுத்து நடந்துகொள்வதனை தமது பலமாக எண்ணி விடுகின்றனர். தமக்குப் பணிந்தே எல்லாமே நடக்கிறது. தம்மை அசைக்க முடியாது எனத் தப்பான அபிப்பிராயத்தை தம் மனதுள் விதைத்து விடுகின்றனர். உண்மையில் எத்தகைய அதிகாரத்தில் உள்ளவர்களாலும் சக உறுப்பினர்களின் உதவுதல் இன்றிச் செயற்பட முடியாது.
அதிகாரங்கள் என்பதன் மூலம், கட்டளையிட்டுச் செயலாற்றுதல் என்பது எல்லாத் தருணத்திலும் சரிப்பட்டு வராது. கருமங்களை இயல்பாக, எளிதாகச் செய்யவேண்டும். இதற்கு ஒருவர்க்கொருவர் சிரமங்களை மறந்து செயல்படவேண்டும். இதனைப் புரிந்துணர்வுடன் செய்யவேண்டும்.
புரிந்துணர்வு என்பது எமது செயற்பாடுகளுக்கு பிரதான அம்சமாகும். சிலர் புரிந்துணர்வு என்பதைக் “கண்டு கொள்ளாமல் விடுவது’ என அர்த்தம் கொள்கின்றனர். இது சரியல்ல. தவறுகளைக் கண்டு கொள்ளாமல் இருக்கமுடியாது. அற்ப தவறுகளைப் பெரிதுபடுத்தாது, மன்னித்தல் என்பதே கண்டு கொள்ளாமல் விடுவது என எடுத்துக்கொள்ளலாம். நாம் பல வருடங்களாக ஒரு வருடன் பழகும்போது அவரின் குண இயல்புகளை ஓரளவு புரிந்து கொள்கின்றோம். சிலரைப் பூரணமாகவும், இன்னும் சிலரை ஓரளவும், பலரை அறவே புரிந்து கொள்ள முடியாமலும் இருந்து விடுகின்றோம். பலர் இத்தகைய ஆராய்தலைத் தவிர்த்து விடுகின்றனர். இந்த விஷயம் எமது குணாம்சத்திற்கும் உரிய, பொருத்தமான விடயமாகும். அதாவது, எம்மை எல்லோரும் தெளிந்து, புரிந்து விட்டார்களா என்பதே

Page 16
{26} வாழ்வியல் வசந்தங்கள்
سعه S . அதுவாகும். சிலர் தம்மைப்பற்றி இனம்காட்டிக் கொள்வதில்லை. இன்னும் சிலர் எல்லா இயல்புகளையும் தம்முள் புதைத்து வைத்துக் கொண்டு, வெளியில் வேறு ஒரு வடிவத்தில் நடமாடிக் கொண்டிருக்கின்றார்கள். இன்னும் சிலர் தமது ஒரு வடிவத்தை மட்டும் காட்டிக்கொள்வார்கள்.
மொத்தத்தில், பூரணமாக எல்லோரும், எல்லாச்
சந்தர்ப்பத்திலும் தம்மைத் துலக்கப்படுத்தல் என்பது கிடையாது. ஏதோ ஒரு விஷயத்தில் தம்மைப் பகிரங்கப்படுத்த முடியாதவர்களாக இருக்கின்றனர். இந்த நேரத்தில் இத்தகைய சந்தர்ப்பங்களில், நாம் ஒருவர்கொருவர் கூடிய மட்டும் புரிந்துணர்வுடன் வாழப்பழக வேண்டும்.
முரண்பாட்டிலும், உடன்பாடாக வாழ்வதுதானே வாழ்க்கை! எதிர்ப்பினை எதிர்கொண்டு, பக்குவமாக வாழ்வதில்தானே சுவாரஸ்யம் இருக்கின்றது.
ஒரு உண்மையினைத் தெரிந்துகொள்வோம். நாம் இன்னுமொருவர் கருத்துக்களை அது சரியானதாகப்பட்டால் செவிமடுத்து, அதன்படியும் செயலாற்றும்போது ஒரு மாறுபட்ட அனுபவத்தினைப் பெறலாம். ஒரே வித வழிகளால் அன்றி, பல்வேறுபட்ட சிந்தனைகளை அறிந்து கேட்டு, பாகுபடுத்தி, செம்மையாக்கி ஒரு வழியில் செல்லும்போது, புது வாழ்வியல் போதனை கிட்டுகின்றது. இப்படியின்றி, வேறு முறைகளைக் கைக்கொண்டு அலுவல் ஒன்றினைச் செய்தாலும்கூட வரும் அனுகூலங்கள், சிக்கல்களை முகம் கொடுக்கத் தயாராகவும் வேண்டும். எப்படியிருப்பினும் சமூக நடைமுறைகளினால் ஏற்படும் அனுபவங்களினால் நாம் அனுசரித்துப் போகும் மனப்பக்குவத்தினை அடைந்தே தீரவேண்டும்.
<>
தினக்குரல் 13.08:2000

27
பாராட்டுதல் ஒரு சுக அனுபவம்
67ம்மோடிணைந்த எவராயினும் சரி, அன்றி எம்மைச் சாராதவர்கள், சிறு பணிகள் செய்வோர், எளியோர் என எவ்வகையினராயினும் சரி - அவர் தம் பணி, ‘நன்று’ எனப்பட்டால் உடன் பாராட்டக் கற்றுக் கொள்ளுங்கள். பாராட்டுதல் என்பது உடன் கிடைக்கின்ற வெகுமதி அத்துடன் எமது பாராட்டுதல் என்பது மனப்பூர்வமாக அமைதல் வேண்டும்.
வெறும் உதட்டளவில் பாராட்டுதல் தகாது. பாராட்டும். பண்பு எம் உள்ளத்தின் விசாலத்தைக் காட்டி நிற்கின்றது. எவரையும் நாம் அவர்கள் எம்மிலும் உயர்ந்தவர்கள் என்ற நோக்கில் அணுகும்போது, எமது மமதை, அகங்காரம், ஆணவம் அருகிவிட ஏதுவாகின்றது.
பிறரின் செயலைப் பாராட்டுவதால் எமக்கு ஒன்றும் குறைவு வந்துவிடப் போவதில்லை. மாறாக, அவர்கள், எமது பாராட்டினால் பெறும் மனப்பூரிப்பினால் எம்மைப் பற்றி, ஒரு நல்ல நோக்கை, அபிப்பிராயத்தை உண்டாக்கி விடுகின்றது. அத்துடன், எமக்கு அவர்கள் ஏதோ ஒரு வகையில் உதவி செய்யவேண்டும்

Page 17
(28) வாழ்வியல் வசந்தங்கள்
کسعبههS என்கின்ற எண்ணங்களையும் மனதில் உதயமாக்கி விடுகின்றது. ஆயினும், நாம் உதவி பெறும் நோக்கில் மட்டும் நாம் புகழும் பழக்கத்தைக் கொண்டிருத்தல் கூடாது.
இது ஒரு அப்பட்டமான சுயநல இயல்பாகிவிடும். வெறும் புகழ்ச்சி, பொய்யான முகமன் கூறுதல், அவர்களிடம் உதவி பெறும் நோக்கில், தவறுகளை மறைத்து வேண்டுமென்றே பாராட்டுதல், பாராட்டும் மாண்புடன் பொருந்தியமையாது.
ஒருவர் பற்றிய சிறப்பம்சங்களைத் தெரிந்து கொண்ட பிறகும், அதுபற்றி நாம் கண்டு கொள்ளாமல் இருப்பது, அது ஒரு விதத்தில் பொறாமை, ஆற்றாமையின் வெளிப்பாடு அன்றிப் பிறிதில்லை என அறிதல் வேண்டும்.
ஒருவரின் வளர்ச்சியினை முடக்கி வைப்பதே ஒரு துரோகம் என்று கூறலாம். பாராட்டாமல் விடுவதுகூட அவர்கள் வளர்ச்சியை வேண்டும் என்றே தடுப்பது போலாகிவிடும். நாம் அறிந்தவரை எத்தனையோ, சாதனை செய்ய வல்லோர்கள், தகுந்த ஊக்குவிப்பு இன்றி குடத்துள் விளக்குபோல் அமிழ்ந்து தெரியாது போய் விடுகின்றனர்.
நாம் பிறரைப் பாராட்டத் தெரியாவிட்டாலும் பரவாயில்லை. திறமைசாலிகளை, முன்னேற விரும்புபவர்களைத் தூற்றாமல் இருப்பதே மேலானதாகும். சிலவேளை நாம் ஒருவரைக் கடிந்து கொள்ளாமல் இருப்பதே ஒரு ஆரோக்கியமான அம்சமாகிவிடும்.
ஒருவர் பற்றிய சிறப்பம்சங்களைத் தெரிந்து கொண்டு, அதுபற்றி நாம் கண்டு கொள்ளாமல் இருப்பது, அது ஒரு விதத்தில் பொறாமை, ஆற்றாமையின் வெளிப்பாடு அன்றிப் பிறிதில்லை. ஒருவரின் வளர்ச்சியை முடக்க நினைப்பது போலவும் கருத இடமுண்டு. பாராட்டுதல் ஒரு ஊக்குவித்தல் மட்டுமல்ல, பாராட்டுப் பெறுபவர் எங்களால் சந்தோஷப்படுகின்றார் என்கின்ற மனநிறைவும், எமக்குக் கிட்டுமல்லவா?

பருத்தியூர் பால வயிரவநாதன் (2)
Nes/
அண்மையில் நான் ஒரு நவீன முகாமைத்துவம் என்கிற நூலைப் படித்தபோது, ஒரு முக்கிய விடயத்தினைப் பற்றித் தெரிந்து கொண்டேன். ஒரு முகாமைத்துவத்தின் சிறப்பம்சம் அதில் வலியுறுத்திக் கூறப்பட்டிருந்தது. பணியாட்கள், தம்பணிகளை, ஒரு நிறுவனத்தில் செய்கின்றனர். அவர்களது முக்கிய எதிர்பார்ப்பு என்ன என, விபரங்களைச் சேகரித்து ஆய்வு செய்தனர். முடிவு சற்றும் எதிர்பார்க்காத அளவில் இருந்தது. எல்லோருமே சம்பள உயர்வு வேண்டும், குடியிருக்க குடிமனை வேண்டும், போனஸ் அது, இதுவென எக்கச்சக்கமான கோரிக்கைகளையே எதிர்பார்த்திருந்தனர். மிகப் பெரும்பான்மையான ஊழியர்கள், எமக்கு, எமக்குரிய சேவையினைக் கெளரவிக்க வேண்டும். அதாவது எமது பணியினை நிறுவனம் தகுந்த மெச்சுரை வழங்கியும், பாராட்டுதல்களை வழங்கியும் அங்கீகாரம் செய்யவேண்டும். எமக்கு உள்ள திருப்தி, எம்மை நிறுவனம் தோழமையுடன் நடாத்த வேண்டும் என்பதனையே வலியுறுத்தியிருந்தனர். சம்பள உயர்வு போன்ற இதர கோரிக்கைகளை இரண்டாம் மூன்றாம் பட்சக் கோரிக்கையாகக் கொண்டிருந்தனர்.
இதில் கவனிக்கத்தக்கது என்னவெனில் ஒருவரது வேலைகள் பற்றி அநாவசிய ஆராய்வு செய்து, குறைந்த பட்சமான வேலை உயர்வு வழங்குவதென்பதே ஒரு அடிமைத்தனமானது என்றும், அத்துடன் இதுவும் ஒரு மறைமுக அடக்குமுறைப் போக்குமாகும் எனவும் ஊழியர்கள் கருதுவதாக அந்த அறிக்கையில் சுட்டிக் காட்டப்பட்டது. கடமை என்கிற பெயரில் ஒருவரைக் கணிப்பீடு செய்வதைப் பலரும் வெறுக்கின்றார்கள். ஆனால் திறமையுள்ள போது பாராட்டாமல் விடுவதையும் கண்டு வேதனையும், விரக்தியுமடைகின்றார்கள். குற்றம் காணுதலைப் பொதுவாக எவருமே விரும்புவதில்லை.
நாம் ஒருவருக்குச் செய்யும் மரியாதை என்பது, அவரது சேவையைப் பாராட்டுவது என்பதே இந்த ஆய்வின் முடிவாகும்.

Page 18
';'; வாழ்வியல் வசந்தங்கள் سعسعهد؟ அத்துடன் ஒருவரின் ஆத்மாவைத் தொட்டு நிற்பது வெறும் பணம் அல்ல. அன்பார்ந்த பரிவுடன் கூடிய பாராட்டுதல்களேயாகும்.
இந்தக் கலையினை ஒருவர் பூரணமாக உணரும் பட்சத்தில், அவரால் கூடுதலான சேவையினை சமூகத்திற்கு அளிக்க முடியும். மனவிசாலமுள்ளவர்களால் மட்டுமே, ஏனையோரை மனதாரப் பாராட்டவும் முடியும். எம்மிலும் பெரியவன் யார் என நினைத்தலும் கூடாது. அத்துடன் நாம் காணும் மிகச் சாமான்ய சாதாரண மனிதர்களை, அவர்கள் உள் பொதிந்த நல்ல சமாச்சாரங்களைப் பார்த்த மாத்திரம் கணித்துவிடவும் முடியாது. வெளிப்பார்வைக்கு மிகச் சாதாரணமாகத் தோன்றுபவர் மிகவும் திறமையுள்ளவர்களாக இருக்கவும் கூடும். எனவே நாம் கண்டபடி எடைபோட்டு ஒரு வரைத் தாழ்வாக நினைப்பது பேதமையாகும். அதேபோல் கனவான்கள் போல் படாடோபமாக இருப்பவரின் வெளிப்பூச்சினை நிஜமென நம்புதலும் ஆகாது. எங்கள் திறமையை மட்டும் வைத்துக்கொண்டு அல்லது அதனிலும் உயர்ந்த ஒருவரின் திறமையை மையமாக வைத்து எளியோரைக் கணிப்பீடு செய்தல் சரியானதல்ல.
மேடையில் ஒருவர் பிரசங்கம் செய்யும்போது, ‘‘அட இவர் என்ன பிரசங்கம் பண்ணுகிறார். கிருபானந்த வாரியார் சுவாமி மாதிரி பிரசங்கம் செய்வாரா’ எனக் கேட்கக்கூடாது. ஒப்பீடுகள் ஏற்றுக் கொள்ளக் கூடியதாக இருக்கவேண்டும் அல்லவா? எல்லாச் சந்தர்ப்பத்திலும் இது ஏற்றுக்கொள்ள முடியுமா? சரிப்பட்டு வருமா? சாதாரண போட்டிகளில்கூட நடுவர்கள் தோற்றுப் போனவர்களைப் பாராட்டுவதில்லையா? வெல்பவர் மட்டும் திறமையானவர்கள் அல்ல. திறமையுள்ளவர்கள், திறமைகளை நோக்கிப் போய்க் கொண்டிருப்பவர்கள், முயற்சிகளை அதற்காகச் செய்பவர்கள், யாவருமே கெளரவிக்கப்படவேண்டியவர்களாவர்.
சிறு குழந்தைகள் கூடப் பெரியவர்கள் தங்களை மெச்ச வேண்டுமென எதிர்பார்க்கின்றனர்; இது இயல்பு. நாம் அவர்களைச்

பருத்தியூர் பால வயிரவநாதன் ''
سعه؟
சதா கடிந்துகொண்டால் என்ன நடக்கும்? அவை எம்மை வெறுக்கும்; நல்ல குண இயல்புகளை மாற்றியமைக்கும்; காலப்போக்கில் அவை சிடுமூஞ்சிகளாக, சமூகத்தையே வெறுக்கவும் ஆரம்பிக்கலாம். எதிர்மறையான காரியங்களிலேயே ஈடுபடவும் முனையலாம்.
எனவே நாம், வாய் மூடி மெளனிகளாக இருக்காமல், தக்க தருணத்தில் புகழவேண்டிய சமயத்தில் புகழவேண்டும். நாம், பிடிவாதமாக இதற்கு எதிர்மாறாக நடக்க ஆரம்பித்தால், செருக்குப் பிடித்தவன் என்கின்ற அவப் பெயரை எடுப்பதுடன், எமக்கு நண்பர்கள் தொகை குறைந்து நாம் தனிமைப்பட்டே விடுவோம். சமூக உறவு பாதிப்படைந்தால் எமது நிலை என்ன? இத்தகைய துரதிருஷ்டசாலிகளையும் நாம் சமூகத்தில் பார்க்கின்றோம். அன்புணர்ச்சிதான் பாராட்டும் பண்பை வளர்க்க வல்லது.
எனவே நல்லவைகளை ஏற்றுக்கொள்ளுங்கள். அவைகளை மனதாரப் பாராட்டி மகிழுங்கள். உங்களுக்கு ஒன்றும் குறைந்து விடாது. மாறாக உங்கள் ஆத்மா விரிவடைந்து சுகானுபவம் பெறுவீர்கள். மற்றவர் பெறும் மகிழ்வு, படிப்படியாக உங்களையும் சார்ந்து பற்றிக்கொள்ளும். இதன் பயன்களை உங்கள் கண்முன்னே காண்பீர்கள் உண்மை!
தினக்குரல் 20082000
<>

Page 19
32
அழகு என்பது.
அழகாக இருப்பது எப்படி? இது பலருக்குமே புரிய இயலாத, பாரிய பிரச்சனையாகப்படுகிறது. பலரும், அழகாக இருப்பது என்பதே ஒரு கெளரவம் என்றும் எண்ணிக் கொண்டிருக்கின்றார்கள். கொஞ்சம் அழகு குறைந்துவிட்டால், வித்தியாசமாக வேறு பார்க்கின்றார்கள். இதில் என்ன வேடிக்கை என்றால், சற்று அழகாகத் தெரிபவர்கள்கூட, தமது அழகு பற்றிய ஐயத்தினால் இது விடயத்தில் மூளையைப் போட்டுக் குழப்பிக் கொண்டிருக்கின்றனர். இதை மேம்படுத்த, இதற்கான நடவடிக்கைகளில் வெகு மும்முரமாக இறங்குகின்றனர். பொதுவாக இம்முயற்சிகள் உலகம் பூராவும், வெகு சுறுசுறுப்பாக நடந்து கொண்டிருக்கின்றன. இதற்காக உலகம் செலவு செய்யும் தொகை கணக்கிட்டுச் சொல்லவும் முடியாது. ‘அழகு எல்லோரையும் ஆட்டி வைக்கின்றது. இதில் ஆண், பெண் என்ற பேதமும் கிடையாது.
உண்மையில் இந்த அழகு என்பதுதான் என்ன?
ஒருவர்க்கு, அழகு எனத் தெரிவது, மற்றவர்க்கு அழகாய் இருப்பதும் இல்லை. சிலருக்கு எல்லாமே அழகாகவும், இன்னும் சிலருக்கு எல்லாமே அவலட்சணமாகவும் தோன்றும். கொஞ்சம்
 

பருத்தியூர் பால வயிரவநாதன் (33
Ynu--------~~~Y பேருக்கோ, தாமும், தமக்கு வேண்டியவர்களும் மட்டுமே அழகாகப் புலப்படுவார்கள். மற்றவர்கள் எப்படியிருந்த போதும், அவர்களைக் கண்டு கொள்ளமாட்டார்கள்.
ஒழுங்காக இருப்பது எதுவோ அதுவே அழகு. ஒழுங்கற்ற எதிலும் அழகை நாம் காண முடியாது. மனித நடத்தைகள் கூட அப்படியானவையே. மனிதர்களின் அழகு விடயத்தில், இரண்டு பிரதான விடயங்கள் சம்பந்தப்படுகின்றன. அவை, புறத்தோற்ற அழகு, அக அழகு, இதய சுத்தி, இனிய பேச்சு, நல்ல நடத்தைகள், பழகும் பண்புகள் போன்ற குணாம்சங்கள், எவரையும் ஈர்க்கும் தன்மை வாய்ந்தன. 9ւման+ அமைபவர்களிடமிருந்தே வெறும் புற அழகுப் பார்வைகள் அடிபட்டுப் போய்விடுகின்றன.
ஒருவனின் ஆத்மா தூய்மையடையும்போது பெறப்படும் தேஜஸ், அனைவரையும் வசீகரிக்கும் வல்லமையுடையது. அகம் சிறக்காதுவிடின், புறம் சிறக்காது. இதையே அகத்தின் அழகு முகத்தில் தெரியும் என்பர் பெரியோர். நீங்கள் ஒன்றைச் சற்று உன்னிப்பாகக் கவனித்துப் பாருங்கள். அழகற்றவன் என நீங்கள் எண்ணும் சிலரைத் தேர்ந்தெடுங்கள். அவர்களுடன் நீங்கள் பழகிப் பாருங்கள். காலப்போக்கில் நீங்கள் அவர்கள் அழகு தொடர்பாக கொண்டிருந்த நோக்கு, இல்லாது போய்விடும். அது பற்றி சிந்தனை எப்படி மறைந்து போயிற்று என வியப்புமடைவீர்கள். ஒருவரது பழகும் தன்மை, போக்கு என்பவைகளால் நாம் காணும் வெறும் புறத்தோற்ற எண்ணங்கள், எமக்கு ஒரு போதனையாகவும்
ஒழுங்காக இருப்பது எதுவோ அது அழகு. ஒழுங்கற்ற எதிலும் அழகை நாம் காணமுடியாது. மனித நடத்தைகள்கூட அப்படியானவையே. நன்நடத்தை உள்ளவர்களுடன் பழகும்போது, புற அழகு, தோற்றம் எமக்குப் பெரிதாகத் தோன்றாது. ஆனால் நடத்தைப் பிசகுள்ளவர்கள் எத்தனை அழகுள்ளவர்களாயிருப்பினும், எமக்கு நாளடைவில் அவர்கள் மீது அருவருப்பே தீோன்றும்.

Page 20
'3' வாழ்வியல் வசந்தங்கள் سعه S புலப்பட ஆரம்பிக்கும். பார்த்த மாத்திரத்தே எழும் எண்ணங்கள் கூட முடிவில் தற்காலிக எண்ணங்களாகி விடுகின்றனவே.
கனிவான பேச்சுக்கள், பிறருக்கு உதவும் பண்புகள், பரந்த நோக்கு ஆகியன எமக்குப் பிடித்துப்போகும்போது, அவர்கள் அழகு நிறைந்த மகா புருஷராகவும் தெரிய ஆரம்பிப்பார். பழகும் விதமே எமது தவறான பார்வையை மாற்றி விடுகிறது. பெண்கள் விஷயத்திற்கும் இது பொருந்தும். பல அழகான ஆண்கள், அழகில்லாத பெண்களை எப்படி மணந்து கொள்கின்றார்கள் என வியப்பு அடைகின்றனர். வெறும் பணம் மட்டும், மனதை மாற்றி விடுவதில்லை. குடும்பத்திற்கேற்ற குணாம்சத்தை அவர்களுடன் பழகிய விதத்தில் தெரிந்துகொண்டும், கேள்விப்பட்டுமே சரியான இம்முடிவினை எடுத்து விடுகின்றனர். இதில் வியப்படைய எதுவுமில்லை.
சரி அடுத்த விடயத்திற்கும் வருவோம். அழகான சிலரிடம் பழகிப்பாருங்கள். அவர்களில் சிலரின் நடத்தைகள், பழகும் இயல்புகளை உற்று நோக்குங்கள். சிலரிடம் உள்ள ஆணவம், திமிரான பேச்சுக்கள், தம்மைப் பற்றிய மிதமிஞ்சிய பொருந்தாத எண்ணங்களைப் பார்த்தால், எமக்கு அருவருப்புத்தான் தோன்றும். வெறும் அழகையே ரசிக்கும் நாம், ‘‘அட போயும் போயும் இவர்களிடமா நாம் மயங்கிப்போனோம், என்ன மனிதர் இவர்? இப்படிப் பேசுகிறாரே, பழகுகிறாரே’ என எண்ணிக் கொள்வோம். அவர் மீது கொண்ட எண்ணம், அறவே மாறி நீங்களாகவே அவரிடமிருந்து விலக ஆரம்பிப்பீர்கள். இக்கருத்து, தவறான குணங்கள் உள்ளவர்களுக்கே பொருந்திவரும்.
ஆயினும் எடுத்த எடுப்பிலேயே புற அழகில் மயங்கிப் போதல் மனித இயல்பே. கவர்ச்சி, ஈர்ப்பு போன்றவை காந்தமென கவர்ந்தே விடுகின்றன.

பருத்தியூர் பால வயிரவநாதன் (3)
سعسعه؟
அறிவுநிலை கொண்டு சிந்திப்பவர்கள் மிகச்சிலரேயாவர். அதற்காக, அழகாய் உள்ளவர்கள் எல்லோருமே கெட்டவர்களாகவும், அழகற்றவர்கள் எல்லோருமே நல்லவர்கள் எனவும் அர்த்தம் கொள்ளமுடியாது.
இதயங்களை ஆகர்ஷிக்க, வல்லமை கொண்டவர்கள் அகத்தூய்மை கொண்ட நல்லோராகவேயிருக்கின்றனர். நாங்கள் விரும்பும் எல்லோருமே எமக்கு, வசீகரம் மிக்கவராகத் தெரிகின்றனர். தனது உயிர் நண்பனை, உற்ற உறவினர்களை, ! தாயை, சகோதரியை எவர்தான், அழகை நோக்கிய பார்வையிலே பார்க்கின்றார்கள்? இல்லையே. எமக்கு உகந்தவர்கள், எப்படிப்பட்ட தோற்றத்தில் இருந்தால்தான் என்ன?
மதத்தலைவர்கள், நாடு போற்றும் அரசியல் தலைவர்கள், ! விஞ்ஞான மேதைகள், கவிஞர்கள், கலைஞர்கள் - இவர்கள் வசீகரிக்கப்படுவது, வெறும் அழகினால் மட்டும் அல்ல. பிறரிடம் துலங்காத சிறப்பாம்சம், தெய்வீகம் இவர்களுள்ளே நிறைந்துள்ளது. இவை சாமான்யமான விடயமும் -96ύ6υ.
சதா புன்முறுவலுடன், மனப்பாரமின்றி இருக்கப் பழகுங்கள். எவருடனும் கோபதாபம், காழ்ப்புணர்வுகளை நீக்குங்கள். அன்பு, கருணை, ஜீவகாருண்யம் இவைகளை நாம் காணும் சகல ஜீவராசிகளுடனும் செலுத்துங்கள்.
உலகத்தை ரசியுங்கள் வீண் எரிச்சல், புகைச்சல் கொள்ளாதீர்கள். அப்பொழுது பாருங்கள் -
எமக்குள்ளே உருவாகும் களிப்பு எம்மைப் பிறரால் வசீகரிக்கச் செய்யும், அழகினை ஏற்படுத்திவிடும். இதுவே உண்மை அழகு.
தினக்குரல்
<>

Page 21
நம்பிக்கையும், ħtiāibbliLif GħrbbiDuqi
10ணிதன் தனக்குத்தான் விசுவாசம் மிக்கவனாக இருக்கவேண்டும். ஆனால், இவனோ, தனக்குத்தானே காயத்தை ஏற்படுத்திக்கொண்டிருக்கின்றான். தானே தன்னை நம்பாத போக்கு, சமூகத்தைக் கண்டு நொந்து கொள்ளுதல், எதற்குமே எரிச்சல் படுதல், அலுத்துக் கொள்ளுதல், எதற்கெடுத்தாலும் ஆதங்கப்பட்டுக் கொள்ளுதல்.
இத்தகைய விடயங்களில் தன்னை ஈடுபடுத்திக்கொண்டு, வெந்து தன்னைத்தானே, புண்படுத்திக்கொண்டு நம்பிக்கை யீனத்திற்கு அடிமையாகி விடுகின்றான். நம்பிக்கை யின்மை என்பது வந்துவிட்டாலே எல்லாமே இழக்கப்பட்டு விட்டது போன்ற மனப்பான்மை, அல்லது உணர்வு நம்மை ஆட்டிப்படைக்க ஆரம்பித்துவிடும்.
பலருக்குத் தம்மீது நம்பிக்கை இருக்காது. ஆனால் தம்மைச் சுற்றிவர எப்படிப்பட்ட குணாம்சங்கள் உள்ளவராயினும் சரி, அவர்கள் ஆற்றலை உணராமலேயே அவர்களை உடன் நம்பி விடுவார்கள். தன்னைவிடப் பக்கத்திலிருப்பவர் அதிபுத்திசாலிகள் என நினைந்து விடுவார்கள். எந்தவித அச்சமோ, கூச்சமோ இன்றி அவர்கள் தயவை நாடிவிடுவார்கள். இதன் சரி, பிழை பற்றிச்
 

பருத்தியூர் பால வயிரவநாதன்
سعسعه S சிந்திக்கக் கால அவகாசத்திற்குக் காத்திருப்பதில்லை. அவர்கள் சொல்லைச் சிரமேற்கொண்டு உடன் அடுத்த நடவடிக்கையில் ஈடுபட்டு விடுவார்கள்.
இன்னும் சிலரோ, தம்மையும் நம்புவதில்லை, பிறரையும் நம்புவதில்லை.
இது அவர்கள் தமது ஆத்மாவிற்கு இழைக்கும் துரோகமாகும். தம் அறிவினையும் உள் உணர்வினையும் மதிக்காத செயல் இது. அறிவினிற்கே கடிவாளம் போடுகின்ற அர்த்தமற்ற இயல்புமாகும்.
எம்மை நாம் தூய்மைப்படுத்தாதவரை, பிரச்சினைகள் ஏதோ ஒரு வழியில், துரத்திக் கொண்டுதான் இருக்கும். நாம் இருக்கும் வரை, அதாவது வாழும்வரை, நடக்கும் செயல்களில் பலர் எம்முடன் பங்கு கொண்டே வருவார்கள்.
ஆயினும், எனது வாழ்விற்கு, நானே கதாநாயகன். இதை ஒவ்வொருவரும் நினைவு கொள்ளவேண்டும். உங்கள் வாழ்வை நீங்கள், நிலையாக, ஸ்திரமாக வைத்திடுங்கள். வாழ்வு முறைகளை நியாய பூர்வமாக வைத்திடுங்கள். இவை போதும்.
நன்மை, தீமை இணைந்ததே வாழ்க்கை. சிலரை நாம் பார்க்கின்றோம். இவர்கள் வாழுவதே பிறருக்குத் தெரியாது. மிக்க அமைதியாகவும், பிறர்க்குத் தீங்கு புரியாமலும், பிறர் விடயங்களில் அநாவசியமாகத் தலையிடாமலும் வாழ்ந்து விடுகின்றார்கள்.
நீங்கள் நேர்மையாக வாழ்ந்தாலே உலகம் தானாக உங்களைப் புரிந்துவிடும், இந்த உண்மை நிலைதான். உங்கள் மீது வைக்கின்ற “நம்பிக்கை’ என்பதாகும். நீங்கள் சரியாக நடந்துகொண்டால் மக்களை நோக்கி நீங்கள் செல்லுமுன், உங்கள் திசைநோக்கி அவர்கள் வருவார்கள்,
இதற்காக வீண் சிரமமோ, பிரசாரமோ தேவையில்லை.

Page 22
YY வாழ்வியல் வசந்தங்கள்
Nao
அந்தரங்கமாக வாழ்ந்து, முடிந்து விடுவது என்பது, யதார்த்தமாகச் சரிபட்டு வராது. மன விரக்திக்கும், சலசலப்பிற்கும் ஆளாகாமல், வாழுதல் என்பதே சிரமத்திற்குரியவொன்றாக இருக்கின்றது. ஏனெனில், நாம் மனிதர் சடங்கள் அல்ல.
கண்டதைப் பார்த்துக் குதூகலிப்பதும், சற்றுப் பொருந்தாத சங்கதிகள் நடந்துவிட்டால், சஞ்சலப்படுவதும் மனித இயல்புதான்.
உண்மையில், பலர் வாழ்க்கையின் பிரச்சினைகளை எதிர்கொள்ளத் திராணியற்று, அதில் இருந்து தப்பித்துக் கொள்வதற்காக மெளனித்துக் கொண்டிருக்கின்றார்கள். சமூகத்தைச் சாராமல் விலகி நிற்பதால், இவர்கள் அந்நியப்பட்டே விடுகின்றார்கள். இந்த வாழ்வு முறை சரியானதா?
பிறரைத் தூக்கி விடாதவனும், தன்னை மட்டுமே நோக்குபவனும், தூக்கி எறியப்படுவதை உலகம் கண்டு கொண்டிருக்கின்றது. எத்தகையானவர்கள், வாழ்ந்து, மாய்ந்து போனாலும் உலக இயக்கம், நின்று போகப் போவதில்லை. எத்தகையான இயல்புள்ளவர்களையும், சுமந்து, அது தன் பாட்டிற்குச் சுற்றிக் கொண்டேயிருக்கின்றது.
ஆயினும்,
மனித மாண்புகள் மாயும்போதுதானே, சமூகப் பிரளயமே வெடிக்கிறது. ஒரு எல்லைவரைதானே இயற்கைகூடப் பொறுத்துக்கொள்கின்றது. இயற்கைகூட, மனித இனத்தை அடிக்கடி எச்சரிக்கை செய்துகொண்டுதான் இருக்கின்றது.
மக்கள் ஒருவர்க்கொருவர் ஆதாரமானவர்கள். ஒருவரில் ஒருவர் நம்பிக்கையும், உறவுகளும் வைக்கப்படவேண்டியவர்கள்.
எம்முடன் மட்டும், இந்த வையகம் முடிந்துவிடப் போவதில்லை. தொடர்ந்தும், உயிரோட்டத்துடன் ஜீவித்துக் கொண்டு இருக்க வேண்டியது.

பருத்தியூர் பால வயிரவநாதன் {36. ]
محسوب عهحS
இந்த இயற்கை எமக்கு, நல்லவைகளையும், ஆற்றலையும் நல்க எவ்வளவு சந்தர்ப்பங்களை அளித்துக் கொண்டிருக்கின்றது. அவை அளிக்கும் பலதரப்பட்ட சந்தர்ப்பங்களில் ஒன்றையாவது பற்றிக்கொண்டாலே போதும். அது எம்மை வளர்த்து, உயர்த்திவிடும்.
நம்பிக்கையுடன் நாம் தேடும் ஆதாரம், நியாயமாகவும் ஏற்றுக் கொள்ளக்கூடியனவையாகவும் அமைதல் வேண்டும். தெளிந்த சிந்தனையுடன், கூடிய செயல்களே ஆற்றலை வளர்க்கக்கூடிய, திண்ணிய நெஞ்சுரத்தினை உருவாக்கும். ஒருவன் தனக்காக, தன்னிடம் காட்டும் விசுவாசம் போன்றே. உலகிற்கும், உண்மையான விசுவாசியாக காட்ட அச்சப்படக்கூடாது. நீங்கள் நேர்மையாக வாழ்ந்தாலே உலகம் தானாக உங்களைப் புரிந்து கொண்டு விடும். இந்த உண்மை நிலைதான், உலகம் உங்கள் மீது வைக்கின்ற நம்பிக்கை’ என்பதாகும். நீங்கள் சரியாக நடந்துகொண்டால், மக்களை நோக்கி நீங்கள் செல்லுமுன் உங்கள் திசை நோக்கி அவர்கள் வருவார்கள். இதற்காக வீண் சிரமமோ, பிரசாரமோ தேவையில்லை.
தனிமனித வாழ்வுகூட முழு உலகையே பாதிக்கின்ற அம்சமானபடியினால், பிறருக்காக, நாம் புனிதர்களாக வாழத் தலைப்படுவது முக்கியமாகப்படுகின்றது. எம்மோடு மட்டும் இந்தப் பூமி இல்லை. அதை நம்புங்கள். தனி ஒருவனின் சக்தி மட்டும் விரயமானால் என்ன என்று மட்டும் கருதிவிடல் வேண்டாம்.
நம்பிக்கையின்மையால், சக்தியை முடக்கிக் கொள்ளல், இந்த உலகு, எமக்கு இட்ட கட்டளையினை மீறுகின்ற செயலுமாகும்.
அடிமனதை அசைக்கமுடியாத வலுவுடையதாக்கிக் கொள்ளுங்கள். விசையால், உந்தப்பட்ட அம்பு தன் செயலை

Page 23
(40) வாழ்வியல் வசந்தங்கள்
سعسعه முடித்துவிட்டே ஓயும், மனிதன் மட்டும், புறப்பட்ட பாதையை விடுத்து, உடன் முடங்கித் திரும்புதல் சரியானதா என்ன? வாழ்க்கை யாத்திரை இனிமையானது. நம்பிக்கையானது. இடர்கள் மேல் நடப்பதுகூட இனிமையானதே. ஏனெனில் அதை உறுதியுடன், வெல்லும்போதுள்ள மகிழ்வினை அனுபவிக்கும் போது, எமக்கு நன்கு புலப்படுத்தி விடுகின்றதே.
தினக்குரல் - 1709:2000
<>

B Bibribin Birbhill); Orbbroil
சிலர் சர்வ சாதாரணமாகப் பொய் பேசுவார்கள். கேட்டால், “அது வெறும் பகிடிக்காகப் பேசினேன்’ என்பார்கள். அதன் பாதிப்பு அவர்களுக்குப் புரிவதில்லை. பொய், புளுகு, கேலி இவற்றிற்குரிய வேறுபாடுகளை இவர்கள் உணர்கின்றார்களில்லை. எத்தனையோ உபதேசங்கள், நீதிக்கதைகளைக் கேட்டும், அறிந்தும்கூட பொய் பேசும் கொள்கையில் பலரும் தீவிரமாக இருக்கின்றார்கள். பொய் பேசுவதற்குச் சந்தர்ப்ப சூழ்நிலைகளைச் சாக்காகக் காரணம் வேறு காட்டுகின்றார்கள்.
உலகில் பொய் பேசாதவன் எவணுமே இல்லை என்று, தர்க்கித்து, தம்பக்கம் நியாயம் கற்பிக்கின்றவர்கள் தொகைதான் கூடி வருகின்றது. அதாவது பொய் பேசுவதுகூட இயல்பான, இயற்கை நியதி என்று சொல்லாமல் சொல்லி விடுகின்றார்கள். அரிச்சந்திரன் போன்ற பழைய கால நீதிக்கதைகளே வெறும் கற்பனை என்று விதண்டாவாதம் செய்பவர்களை என்ன செய்வது?
உண்மையில், இந்தக் கதைகள் ஏன் மக்கள் மத்தியில் பிரபல்யம் பெற்றன என்பதை, இவர்கள் அறியாதவர்கள் அல்லர். உண்மையின் தாத்பரியத்தை எடுத்தியம்பும்போது, அதை ஏற்றுக்

Page 24
வாழ்வியல் வசந்தங்கள் - لا 42 كم.
கொள்ள குருட்டுத்தனமான, மறுத்துரைக்கும் பண்பு, சமூக சீர்திருத்தத்திற்கு ஆரோக்கியமானதுமல்ல. இந்தப் பழக்கம் உண்மை நிலையில் இருந்து வாழ மறுத்து, தப்பித்துக் கொள்ளும் ஒரு வழியாகக் கருதி விடுகின்றார்கள்.
இதற்காக, உண்மை உறைந்து போவதுமில்லை. உண்மையில் உண்மை பேசுவது ஒன்றும் சிரமமான செயல் அல்ல. இது ஒரு கடினமான செயல் என்று பயப்படுதல், தம் மனதை அழுக்கடையச் செய்தல், அல்லது அதை முற்றாகவே சிதைத்து விடுதல் என்பதே பொருத்தமான கூற்றாகும்.
உண்மை பேசுதலை ஒரு பழக்கமாகக் கொண்டு வாழ்ந்தால், அதனைப்போல இலகுவான மார்க்கம் எதுவுமில்லை. எல்லாமே பழக்கத்தில்தான் தங்கியுள்ளது. நடைமுறையில் இதனைக் கைக்கொண்டு வந்தால், இதன் தாத்பரியம் நன்கு உணரப்படுவதுடன், எம்முள் ஒரு ஜீவசக்தி உருவாகிக் கொண்டு வருவதையும் உணருவீர்கள்.
மாறாக, பொய்யுரைத்தலையே தொடர்ந்து கடைப்பிடித்து வந்தால் காலப்போக்கில் உண்மை என்பதை என்னவென்றே அறியாத சூனிய இருட்டுக்குள் உட்தள்ளப்படுவதையும் அதில் இருந்து மீளமுடியாத அதன் கோர நாக்கில் சுவைக்கப்படுகின்ற அவலத்தையும் உணர ஆரம்பிப்பர். இது ஒரு பொறி மீண்டு வர நினைப்பதற்குள், எல்லாமே சிலவேளை முடிந்து, வாழ்க்கை பூஜ்யமாகிவிடும்.
பட்டால்தான் புரியும் என்பார்கள்.
உண்மை பேசுதலை ஒரு பழக்கமாகக் கொண்டு வாழ்ந்தால், அதனைப் போல இலகுவான மார்க்கம் எதுவுமில்லை. எல்லாமே பழக்கத்தில்தான் தங்கியுள்ளது. நடைமுறையில் இதனைக் கைக்கொண்டு வந்தால் இதன் தாத்பரியம் நன்கு உணரப்படுவதுடன். எம்முள் ஒரு ஜீவ சக்தி உருவாகிக்கொண்டு வருவதையும் உணர்வீர்கள்.

பருத்தியூர் பால வயிரவநாதன் CA3
سعه S
சிலர் கூறுவார்கள், ‘சத்தியம்’ என்பது கேட்க நன்றாகத்தான் இருக்கின்றது. ஆனால் அதைக் கடைப்பிடிக்க முடியவில்லையே என்கிறார்கள்.
சந்தர்ப்பவசத்தால், தம் இயலாமையின் பொருட்டு, ஒருவர் பேசும் வார்த்தைகள் வேறு; சாதாரணமாக, உண்மை பேசுவதற்கு எந்தவித இடைஞ்சலும் இல்லாதவிடத்து ஒருவர் அதைப் பேசாது, உண்மையை மறைத்துப் பொய் பேசுவது எவ்வளவு அநாகரிகமானது? 6)ւյոան பேசுவதற்கு ஒருவர் வெட்கப்படவேண்டும். அத்துடன் ஒரு பொய்யை மறைக்க ஒன்பது பொய் பேசி நடிக்கவும் வேண்டியிருக்கின்றதே. இது எமது உயிர்க்கு கருமை பூசுவதாகும். இது நிம்மதியை நாசமாக்குவதுடன், எம்மைப் பிறர் சதா சந்தேகக் கண்களுடன் பார்ப்பது போலாகிவிடும். இந்த நிலை தொடர்ந்தால், நாம் சொன்ன வீணான பொய்களினால், வெட்கம், பயம், கோபம் (யாராவது திரும்பத் திரும்ப சந்தேகமுடன் வினா தொடுக்கும்போது) என்பன எம்மை வியாபிக்க ஆரம்பிக்கும். உளவியல் ரீதியாக நாம் ஆய்வு செய்தால், ஒருவனுடைய மனம் பொதுவாக உண்மைகளையே பேசும். அத்துடன் 2H5/و உண்மையையே பேசு எனக் கட்டளையிட்டுக்கொண்டேயிருக்கும்.
மறுபுறத்தில், நாம் பலவீனமான நிலையில் இருக்கும்போது அந்தக் கட்டளையை ஏற்க மறுத்து விடுகின்றோம். இந்த நிலை மிகவும் மோசமானதும், அநாகரிக நிலைக்கு இட்டுச் செல்வதுமாகும்.
மனச்சாட்சிக்கு விரோதமாகச் செயற்படல் என்பது இஃதேயாகும். உண்மையே பேசுவது என்கின்ற லட்சியத்தில் இருக்கும்வரை, பொய்மைக்காக, மனப்போராட்டத்தில் அமுங்கிப் போதல் என்பதே நிகழாதுவிடும். கொழும்பு தமிழ்ச் சங்க
உண்மை பேசி வாழும்போது சில நடைமுறைச் சிக்கல்கள் வரத்தான் செய்யும். ஆனால் இது தற்காலிகமானதே. நூற்றுக்கு

Page 25
(...) வாழ்வியல் வசந்தங்கள்
كمعیسمح٦ நூறு சரிவர, சத்திய நெறியில் வாழுகின்றவர்களது. பெருமைகளை, உலகம் சற்றுத் தாமதமாகவே புரிந்து கொள்ளுகின்றது. புரிந்து கொண்டதும் தீய சக்திகள் எதுவும் அவர்களை அண்டமுடியாத நிலை ஏற்பட்டுவிடும். சோதனைகளும், வேதனைகளும் சத்தியவான்களுக்குத் தற்காலிகம் என்பது போலவே, வெற்றிகளும், களிப்புகளும் பொய்மைவாதிகளுக்கு தற்காலிகமானதேயாகும். இவர்கள், விடுபட முடியாத தோல்விகளால், அவமானமும் அல்லல்களும் பட்டே தீருவர்.
உண்மை பேசி வாழும் வாழ்வு சாஸ்வதமானது. இதில் கிடைக்கும் மனநிறைவும் சாஸ்வதமானது. ஏன் எனில் இறைவன் இயற்கை மூலம் ஒரு முடிவான வரைவிலக்கணம் வகுத்துள்ளான். அந்நியதிக்கு மீறி எந்நிகழ்வும் நடந்துவிட முடியாது. அந்த மாபெரும் உன்னத வரைவிலக்கணம் உண்மை ஒன்றேதான். இதற்கு மாறுபாடான வடிவங்கள் கிடையவே கிடையாது. ஏனெனில், எப்படித்தான் ஆடி, ஓடி, இஷ்டப்படி நடந்தாலும் ஈற்றில் வெல்லுவது ‘உண்மைதான்.
இதனைத்தான் சகல மதங்களுமே வலியுறுத்தி வருகின்றன. மதங்களூடாக பேசப்படுகின்ற கதைகள், வரலாறுகள் யாவுமே சத்திய வாழ்வு, அதன் மேம்பாடு பற்றி, மக்களுக்கு அடித்துக் கூறுவதாகவே அமைந்துள்ளன. இவை கற்பனையோ, உண்மைச் சம்பவங்களோ என்பதல்ல பிரச்சனை. உண்மை பற்றியும், அதற்கெதிரான போராட்டங்கள் எப்படி துவசமாகின்றன என்பது பற்றித்தானே சொல்லுகின்றன. இவைகளை நாம் வாசிப்பதுடன் சரி, ஏற்று கிரகிக்கின்றோமா என்பதுதான் சிந்திக்க வேண்டியுள்ளது.
குழந்தைப் பிராயத்திலிருந்தே பெரியவர்கள், உண்மை வெளிப்பாட்டின் சக்தியை அவர்களுக்குச் சொல்லிக் கொடுக்கவேண்டும். கதைகள் மூலம், பெரியார்கள் வரலாறுகள் மூலம் பக்குவமாகக் கூறி, அவர்கள் அடி மனதில் இது பற்றிய

பருத்தியூர் பால வயிரவநாதன் '4'
سعسعمحمد
அசைக்க முடியாத ஓர் உணர்வினை விதைத்தும் விடல்வேண்டும். இந்த நம்பிக்கை விதை வேரோடிவிட்டாலோ, அவர்கள் பெறும் தூய்மை உள்ளத்தினை, எதிர்காலத்தில் எந்தத் தீய சக்தியுமே களங்கப்படுத்திவிட முடியாது.
அண்ணல் மாகத்மா காந்தியடிகளுக்கு, 'அரிச்சந்திரன்’ கதை எப்படி அவர் இளவயது மனதில் நிரந்தரமாக இடம்பிடித்து, அவரை மகாத்மாவாக மாற்றியது என்பதை நாம் உணர்ந்து கொள்ளவேண்டும். தொட்டில் குழந்தையிடமும் தூய
விடயங்களைப் பேசுங்கள்.
குழந்தைகள் ஆரம்பத்திலே பொய், புளுகு அவர்கள் உரைப்பதை நீங்கள் ரசிக்காமல், அன் போடு பேசி, நல்லனவற்றையே சொல்லிக் கொடுங்கள். தவிர்க்க வேண்டிய குணாதிசயங்களைத் தவிர்க்க வேண்டியது பொறுப்பு வாய்ந்த பெரியோர் கடமையாகும். பழக்க தோஷம் பொல்லாதது. இதன் பிடியில் இருந்து மெள்ள மெள்ள விலக எத்தனித்தேயாக வேண்டும். தவறு என்று தெரிந்த பின்னரும் அதைத் தழுவுதல் siflum?
உண்மைதான் பேசமுடியும், உண்மையாகத்தான் வாழ முடியும். உண்மையைத்தான் நேசிக்கமுடியும். இது விடயத்தில் முடியாது என்று கூறிவிடல் வேண்டா.
தினக்குரல் 24-09-2000
<>

Page 26
சுய பாதுகாப்பு
தின்னைத்தானே தற்காத்துக் கொள்வதற்கு ஒருவன் உரிமையுடையவனாகின்றான். இது பிறர் நலம் பேனா வெறும் சுயநலம் அன்று. இவையிரண்டிற்கும் நிரம்ப வித்தியாசங்கள் உண்டு. தனது நலனை மட்டுமே ஒரே குறிக்கோளாகக் கொண்டுள்ள சுயநலத்தினால் பிறர் பாதிக்கப்படக்கூடிய ஏதுநிலையும் உருவாகலாம்.
சிலர், பிறர் மீதும், சமூகத்தின் சகல மட்டங்கள் மீதும் உள்ள அதீத ஆர்வம் காரணமாக, தம்மையே மறந்து, அதில் ஈடுபடும்போது, உதவிகளை நல்கும் போது இவர்கள் சங்கடங்களுக்கும் ஆளாகின்றனர். ஒருவன் பிறர்க்கு உதவும் போதுகூட, அவன் ஸ்திரமான நிலையில் இருக்கவேண்டியுள்ளது என்பதையே இது காட்டுகின்றது.
பிரச்சினைகளைக் கையாளு முன், அதற்குத் தகுந்தவிதத்தில் முகம் கொடுக்கத் தன்னை ஸ்திரப்படுத்திக் கொள்ள வேண்டியதும் அவசியமாகும். ஒருவன் நிலை
 

பருத்தியூர் பால வயிரவநாதன்
Na AM
உயர்வடைதல் என்பதுகூட, அவன் பிறரை உயர்வடையச் செய்வதற்காகவே என்று அறிக.
ஆளுமைகளை வளர்த்துக்கொள்வது என்பது அந்நியர்களை, மாற்றார்களை மடக்குதலுக்கு அல்ல. இது சுயநலத்திற்குட்பட்ட செயலன்றி வேறில்லை.
பொதுவான ஒரு நல்லியல்பு என்பது எம்மால் யாராவது பெறத்தக்க சேவைகளைப் பெற்றுக்கொள்ள வேண்டும் என்பதே. இதனால் எம் ஆன்மா வளப்படும். இது பலம்மிக்கதாக அமைய எம்மைத் திட சிந்தை மிக்கவர்களாக மாற்றிக் கொள்ளவும் வேண்டும்.
சாதாரண நிலையில் உள்ள எவருமே தன்னால் இயன்ற பங்களிப்பை சமூகத்திற்கு நல்க விழைவது வரவேற்கக் கூடியதேயாகும். எனினும் பலம் மிக்க ஒரு பிரச்சனையை நாம் கையாளும் போதுதான், எமது பரிமாணம், சக்தி எமக்கே புலனாகின்றது. இதன் பொருட்டு காரிய சித்தியானால் மகிழ்வும், மாறாக, சற்றுப் பின்னடைவாகப் போனால் ஏமாற்றம், தடுமாற்றம் ஆகியனவும் தோன்றி நம்மை வலுவிழக்கச் செய்கின்றன. தொடர்ந்தும் வெற்றிகளையே எதிர்பார்த்துக் கொண்டிருப்பதனால், ஏமாற்றங்களை நாம் ஏற்றுக்கொள்ள முடிவதில்லை.
மனவளம், உடல் வளம் ஆகிய இரண்டுமே சமூகத்திற்கான, உழைத்தலுக்கு அவசியம் தேவைப்படுகின்றது. உடல் வலுவை மட்டும் நம்பி, வளமற்ற சிந்தனைகளின்றி வாழ முடியாது. இதேபோல், எத்தனையோ புத்தி ஜீவிகளும் நல்லவர்களும் தகுந்த ஆரோக்கிய வாழ்வு முறைகளின்றி குறுகிய காலத்தினுள் வாழ்க்கையை சிதைத்துவிட்டார்கள்.

Page 27
ís) வாழ்வியல் வசந்தங்கள்
----
தோல்விகளால் ஏற்பட்ட வடுக்களை, ஏற்பதை விடுத்து, அதை மேலும் குத்தி, புண்ணாக்கிப் புரையோடச் செய்வதே சாமானிய மாந்தர்களின் வழக்கமாகிவிட்டது. வெற்றியும் சரி தோல்வியும் சரி வாழ்வில் நிகழக்கூடிய சம்பவங்கள் என்பதே உண்மை. இவைகளில் புதுமையோ, ஏதோ நடக்கக்கூடாததோ ஒன்றும் இல்லை. தோல்விகளால் ஏற்படும் பாதிப்புக்களைக் களைய எம்மை நாம் பாதுகாக்கும் உபாயங்களை கற்றுக் கொள்ளவேண்டும். இவைகள் வழி தவறிய, துன்மார்க்க தந்திரங்களாக அமைந்துவிடாதபடி வழிமுறைகளைத் தேடிக் கொள்வதும் அவசியமாகும்.
மனவளம், உடல் வளம், (வலிமை) ஆகிய இரண்டுமே, சமூகத்திற்கான உழைத்தலுக்கு அவசியம் தேவைப்படுகிறது. உடல் வலிமையற்று இருந்தால், மனவளம் இருந்தாலும் உழைக்க முடியாது. அதுபோலவே, வெறும் உடல் வலுவை மட்டுமே நம்பியும் வளமற்ற சிந்தனைகளின்றிக் கருமமாற்ற முடியுமா? பிறர் முன் எடுத்துக்காட்டாக வாழத்தான் முடியுமா? எத்தனையோ புத்தி ஜீவிகள் குறுகிய காலத்திலேயே தம் வாழ்க்கையையே முடித்து விடுகின்றனர். தமது உடலைத் தகுந்த முறையில் போனாது விடுவதுகூட, ஒரு விதத்தில் தற்கொலை செய்வதற்கு ஒப்பானதே.
கலைஞர்கள், எழுத்தாளர்களை இந்த இடத்தில் குறிப்பிடாமல் இருக்கமுடியாது. போதை வயப்பட்டும், கட்டு மீறிய நெறி தவறிய வாழ்க்கை முறையாலும், தாம் பின் தள்ளப்படுவதை உணராத பல படைப்பாளிகள் அநியாயமாய் அழிந்து விடுகின்றனர். இவர்கள் தங்களைக் காப்பாற்றிக் கொள்ளத் தெரியாதவர்கள். உலகிற்கு மேலும் பல உருப்படியான ஆக்கங்களை அளிக்க முடியாது, நடு வழியில் மறைந்து செல்பவர்கள். அத்துடன், தமது பிழைப்பிற்காக, இவர்களை

பருத்தியூர் பால வயிரவநாதன்
کسعهها
அணுகும் பிரபலங்களும் இவர்களைத் தம் தீய வழியில் இணைத்துக் கொள்வதனால் மேலும் அவர்கள் ஆபத்தை அணைத்து அணைந்துவிடுகின்றனர். இதனால் உண்மையான கலைஞன் வெந்து போவதும், அவர்களுடன் கூட இருந்தவர்கள் அவர்கள் நிலை கண்டதும் உடன் தொலைந்து போவதும் நாம் அறிந்தவொன்று.
எல்லாவற்றையுமே அறிந்த கலைஞர்களே இப்படியாக இருந்தால் சாமான்ய மனிதர்களின் நிலை என்ன? அனுபவ பாடங்களால் நாம் பல உண்மைகளை அறிந்து கொண்டு வருகின்றோம்.
ஆயினும், எமது அனுபவங்களாலும், பிறர் அனுபவங்களாலும் ஒவ்வொருவர் கொடுக்கும் விலையோ, மிக மிகப் பெரிது. துன்பங்களை வாங்கி இன்பங்களைச் செலவு செய்கின்றோம்.
அல்லது, ஒரு சிறிய லாபத்தை அல்லது மகிழ்வை அடைய பெரிய சுமைகளை ஏற்கவேண்டியும் இருக்கின்றது.
நல் நெறிகள்தான் ஒருவனைத் தற்காத்துக் கொள்கின்றது. வரையறைக்குட்பட்ட வாழ்வு, வரம்பு மிகுந்த உரிமைகள், இவைகளை மனிதன் தன் சுய கட்டுப்பாட்டிற்காக அமைத்துக்கொண்டால், அவனுக்கு எந்தத் தொந்தரவும் அவனை அண்டாது. சுதந்திரமாகவும், நெகிழ்ச்சித் தன்மையுடனும், சந்தோஷமுடனும், அச்சமின்றியும் வாழ இந்தக் கட்டுப்பாட்டு நெறி கட்டாயம் தேவையாகின்றது. இவை சிறை அல்ல. வலுவான சட்டங்கள் இவைகளின் கட்டுப்பாடுகள் மனித நாகரீகத்தைச் சிதைவுறாது வைக்க, என்றோ உருவாக்கப்பட்டவையாகும். நாம் தொடர்ந்து இயங்கிக் கொண்டிருக்கும் மனித இனம். சாதாரண வாழ்வு நெறி பற்றித்

Page 28
G03 வாழ்வியல் வசந்தங்கள்
مسیح؟ தர்க்கிப்பதில் அர்த்தமில்லை. வாழ்வியல் உரிமை பேணப்படும் போதுதானே, தனி மனிதனின் பாதுகாப்பும் வலுப்படுகின்றது. இது அனைவர்க்கும் பொதுவானதே. ܫ
ஒருவன் தன்னை வளப்படுத்திக் கொள்வதில் உள்ள நியாய பூர்வ உரிமைகள், அனைவரும், அவ்வண்ணமே பெறுவதில் தங்கியுள்ளது. ஒரு வருக்குக் கிட்டுவது, ஏனையோருக்கும் உரிமையானதே.
தனிமனிதர்கள் ஒவ்வொரு வருமே v6ivüL – வேண்டியவர்களே. இதுதான் அவர்களுக்குரிய பெரும்பாதுகாப்பு எனவே, சுய பாதுகாப்பு, ஒட்டு மொத்த உலகமே பலம் பெறும் ஒன்றாகிவிடுகின்றது.
தினக்குரல் - 08.10.2000
<>

51
Giförım GDI DEDrliği - *
في عي
ம்ேமுன்னே எத்தனையோ விசித்திரமான மனிதர்கள், பல்வேறுபட்ட வித்தியாசமான குணாதிசயங்களுடன் உலாவி வருவதை நாம் காண்கின்றோம். அவர்களில் ஒருவராக நாமும் இருக்கலாம். எங்கள் நடத்தைகள் பற்றிப் பிறர்தான் சொல்லவேண்டும். பிறருக்குப் பிரச்சனையில்லாது விடின், யார் யார் எப்படியாவது இருந்துவிட்டுப் போகட்டும். எவரும் கண்டு கொள்ளமாட்டார்கள்.
ஆனால், பிறர் சுதந்திரத்தில் மூக்கை நுழைத்துக் கொள்ளும்போதுதானே பிரச்சினைகளே உருவாகின்றன. நல்லபடி வாழ்வது என்பது, முதலில் நாம் பிறருக்கு உபத்திரவம் கொடுக்காமல் இருப்பதுதான். அத்துடன் உலகிற்கு நாம் செய்கின்ற தொண்டுகள், சேவைகள் என்பவைகளைப் பொறுத்துத் தனித்துவமான உன்னதமான இடத்தை பெற்றவர்களாகி விடுகின்றோம். பெரிய பணி, சிறிய தொண்டு எனப் பேதம் கருதாது, அந்த நேரத்து அத்தியாவசியம் கருதி எமக்குரிய பணியை முடித்துவிடல் வேண்டும். நன்மைகளைச் செய்யத் தெரியாமல் இருப்பது பேதமை. ஆயினும் நன்மை செய்ய முடியாதுபோயினும், தீமையாவது செய்யாது இருத்தல் உத்தமமானதன்றோ? இதனையே சுவாமி விவேகானந்தரும் கூறினார். தீமைகள் செய்யாதவன்

Page 29
(52) வாழ்வியல் வசந்தங்கள்
N---* ஈற்றில் நன்மைகளையே சமூகத்திற்கு வழங்க ஆரம்பித்து விடுகின்றான்.
கல்வி, செல்வம் என்று எதைத்தேட முனைந்தாலும், நாம் முன்னேற வேண்டும் என்கின்ற பேரவா எம்முள் எழுவது இயற்கையே. இதைத் தடை போட முடியாது. தடைபோடவும் கூடாது. என்றாலும் இதனைப் பெறுதற்காக, ஏனையோரை வருத்துதல், வஞ்சனை புரிதல் கூடாது. எல்லோரது நலன்களுமே பேணப்படல் வேண்டும் என்பதே பிரதானமானதாகும்.
இன்று நடப்பதுதான் என்ன? ஒருவரை ஒருவர் அடித்துக் கொள்வதன் மூலம்தான் நன்மைகள் பல கிட்டுமென தப்பான ஒரு எண்ணத்தினை அநேகர் விதைத்துக் கொண்டிருக்கின்றார்கள். இதனால் சிலருக்கு சில அனுகூலங்கள், தற்செயலாக நடந்துவிட்டால், அதுவே ஒரு வழியாகக் கொண்டு விடுகின்றார்கள். இவர்கள் இதன் தாக்கத்தினைக் காலம் கடந்தேனும் கட்டாயம் பெறுவார்கள்.
ஒவ்வொரு தாக்கத்திற்கும் ஒரு சம எதிர்த்தாக்கம் இருக்கும். இது ஒரு விஞ்ஞான ரீதியான தத்துவமாகும். என்றாலும் வாழ்க்கைக்குகூட இது பொருந்தி நிற்கும். செய்கின்ற வினைக்கும் எதிர்மறை வினை உண்டு. அதாவது, பாவம் செய்தவன் தப்பித்துக்கொள்ள முடியாது. நன்மைகள் செய்தவர்களும் அதன் பெறுபேறுகளை அடைந்தே தீருவர்.
சிலரைப் பாருங்கள், பெரிய தனவந்தராக இருப்பார். பிறரிடம் இல்லாத பல பொருட்களை வாங்கிக் குவித்து
தனிமனித நடத்தைகள் அனைத்தும் இணைந்தே உலகை இயக்குகின்றன. எனவே நாம் எம்மைக் கண்டுகொள்ளாமல் இருக்க முடியாது. எழுது, இயல்புகளை வளமாக்கிக் கொள்வோம். நாம் எமது கழகத்தின் பிரச்சனைகளை, குறைபாடுகளை அறியாமல் இருக்கக்கூடாது. எதிலும் விலகி இருத்தல் தகாது.

பருத்தியூர் பால வயிரவநாதன் {'s
کسعه
வைத்திருப்பார். ஆயினும் ஒரு ஏழையின் வாழ்வை, அவன் அனுபவிப்பதைக் கண்டால் பொறுக்காது. அவன் ஒரு சாதாரணமான பொருளை வைத்திருப்பதைக் கண்டாலும், ‘‘அடடா இது எனக்குத் தெரியாமல் போயிற்றே, என்னிடம் இல்லாத ஒரு அற்புதமான பொருளை இவன் எப்படி வைத்துக் கொள்ளமுடியும் என அங்கலாய்ப்பதுடன் நின்றுவிடாது, அதை எப்படிப் பிடுங்கிவிடுவது எனத் திட்டம் வேறு தீட்ட ஆரம்பிப்பான். உண்மையில், அவனிடம் உள்ள பொருள்போல் பல மடங்கு பொருள்கள் குவிந்திருக்கும். ஏன் அதனைவிடப் பெறுமதி வாய்ந்த சிறப்பானவைகளையும் வைத்திருப்பான். இருந்தும் என்ன, அவனிடம் உள்ள அவா அவனை விழுங்கிவிடும். எல்லாம் எனக்குத்தான் வேண்டும் என்கின்ற ஆசையுடன் கூடிய மமதை அவனை ஆட்டுகின்றது.
ஆசைப்படுவது மனித இயல்பு. என்றாலும் பிறர் பொருள் மேல் ஆசைப்படுவதும், அதன் பொருட்டுப் பொறாமையுறுவதும் ஒழுக்கக் கேடான நடத்தையல்லவோ? இதன் பெறு பேறுதான் என்ன? தன்னிடம் உள்ள செல்வத்தினாற் பெறும் சுகங்களையே, தன் மித மிஞ்சிய அங்கலாய்ப்பினால் துறந்து விடுகின்றான். சதா காலமும், காழ்ப்பும், கரிப்புணர்வுமாய் அவஸ்தையுற்று, தன் இதயத்தை எரித்துக் கொள்கின்றான்.
இவைகள் எல்லாம் மனத்துய்மை இழந்தவர்கள் தாமாகவே தேடிக் கொள்கின்ற வினைதானன்றி வேறில்லை. ஆயிரம் சேலை வாங்கி, விதவிதமாக உடுத்தி வரும் பெண்கள் சாதாரண சேலை கட்டி வரும், இன்னொருத்தியைக் கண்டு ஆசைப்படுவது சாதாரண நிகழ்ச்சி. சாதாரணமாகவே இதை எடுத்துக் கொண்டால் சரி. இதன் பொருட்டு மனதை அல்லாடவிடுவதுதான் சகித்துக்கொள்ளிதrழும்:தமிழ்ச்
உடலுக்கு ஏற்பட்டு விடுகின்ற நோய் மட்டும்தான் நோயல்ல. தேவையற்ற விடயத்திற்காக தம் இயல்பை

Page 30
{54} வாழ்வியல் வசந்தங்கள்
سعه S நடத்தைகளை மாற்றிக் குழம்புவதுகூட ஒரு மனோ வியாதியன்றி வேறென்ன? இவர்கள் தம் நிலை அறியாத மனோ வியாதிக்காரர்களே. இந்த இயல்புகளைக் களைவது எங்ஙனம்?
மனதைப் பரந்த அளவில் விரிவாக்கிக் கொள்ளல் வேண்டும். எல்லார்க்கும் எல்லாமே வேண்டும் என்பதைப் புரிந்து கொள்ளவேண்டும்.
நான் மனிதன், அடுத்தவனும் மனிதன், அவனுக்கும் தேவைகள் ஆசைகள், விருப்பு, வெறுப்புக்கள் உண்டு என உணருதல் வேண்டும்.
மற்றவர்களுக்கு வரும் இன்ப, துன்பம் தனக்கும் வரும் என அறிந்துகொள்ள வேண்டும்.
சரியானதை ஒப்புக்கொண்டு ஏற்றுக்கொள்ள வேண்டும்.
மனம், அறிவு என்பது எல்லோர்க்குமே பொதுவான ஒன்றேயாகும். எனவே சரியானதைச் சிந்திக்க இங்கு ஒருவரும் தடை போட மாட்டார்கள். நாமாகவே, வேண்டுமென்றே கெட்டுவிட, நாமே எம்மை அனுமதிக்க முடியுமா?
நான்தான், எனக்கு மட்டுமேதான் என எப்படி நாம் எண்ணமுடியும்? இப்படியே ஒவ்வொருவரும் எண்ணினால் தாக்கப்படுவதும், நாம் எல்லோருமே தான் - இதில் ஐயம் எதுவுமில்லை.
சற்றே எண்ணிப் பாருங்கள்.
தனிமனித நடத்தைகள் அனைத்தும் இணைந்து உலகை இயக்குகின்றது. எனவே நாம் எம்மைக் கண்டு கொள்ளாமல் இருக்க முடியாது. எமது இயல்புகளை வளமாக்கிக் கொள்வோம். பிரச்சினைகள் எழாது. அது போதும்.
マ少
தினக்குரல் 1102000

55
காதலைப் புரிந்தவள் GNOGIM BDIDIribryBirifir
கிIதல் இல்லாத வாழ்வே இல்லை என்கின்றார்கள். கனிந்த இதயங்களும், உயிர்ச் சுவாசங்களும் ஒருமித்துப் பரஸ்பரம் தூய அப்பழுக்கற்ற பரிமாற்ற சங்கமமே காதல் என்று பேசுகிறார்கள். காதலின் மென்மையும் உண்மையும் அது வருடிக் கொடுக்கின்ற இனிமை நினைவுகளும் உறவுகளும் என்றுமே சாஸ்வதமாக நிலைக்க வைக்கும் இயல்புடையது. பேராற்றலும் அசாத்திய துணிச்சலும், இனம், வயது, தகுதி இவைகளுக்கு அப்பால் நின்று மேலும் பல குண இயல்புகளை மிக அழுத்தமாகவே உணர்த்தி நிற்கும். இது ஒரு சாரார்க்கு மட்டும் இனிமையான சுகந்த உணர்வும் அல்ல. இதன் ஆட்சிக்கு எல்லோருமே கட்டுப்பட்டேயாக வேண்டுமென்கின்ற நிலை.
தவிர்க்க விரும்பாத இனிய வலை. சொர்க்கத்தின் சாவி,
வாழ்வின் அர்த்தத்தினைக் காட்டும் வேதம்.
அத்துடன்,

Page 31
(இ) வாழ்வியல் வசந்தங்கள்
سه سه؟
எமக்கே தெரியாமல், வந்து உட்கார்ந்து கொள்ளும் விசித்திர விருந்தாளி ஏற்றத்தாழ்வு, மொழி, இனம் என்கின்ற எதையுமே ஏறெடுத்துப் பார்க்காது வந்து ஒட்டிக் கொள்ளும் விந்தை உணர்வை என்னென்பது?
காதலைப் புரிந்தவன் மெளனமாகின்றான்; புரிந்து தெளிந்தவன் ஞானிகின்றான்; தெளிவற்றவன் சோர்ந்து தன் வயமிழக்கின்றான்.
காதலைப் பேசுவதைவிட, அதை அனுபவிப்பதே இனிமையானது. காதல் பற்றிச் சப்தமிடுபவன், அதைக் கண்டு கொண்டதும் மெளனித்து அதனுடன் சங்கமமாகி விடுகின்றான்.
இது எழிலான உயிர். உயிர் உருவம் பெறுவதுங்கூட உண்மைக் காதலுடாகத்தான். இதன் மெல்லிய காந்த அலைகளை மீட்டி ரசிப்பதில் காணும் சுகானுபவத்தினைப் பற்றித்தானே ஆயிரம், ஆயிரம் காதல் பூக்களை விரித்து இந்தக் கவிஞர்கள் தம்முடைய சிந்தையூடாகச் சுகவாசத்தை அள்ளித் தெளித்துக் கொண்டிருக்கின்றார்கள். இதன் சுகானுபவ இனிமைக்கு எல்லை இல்லை. இதன் சிரஞ்சீவித்தன்மை பவித்திரமானது.
இந்தப்பூமிக்கும், ஜீவன்களுக்கும் உள்ள தொடர்புகள் இருக்கும்வரை இந்த அன்பு நிலை அறுபடவே முடியா ஒரு உன்னத நிலையாக இயற்கை அமைத்துவிட்டது. மனிதன் முதல் சகல ஜீவராசிகளும், ஒன்று மற்றையதற்கு ஆதாரமாகவே ஜனிக்கின்றன. தனிமை வேதனை தகிக்கக்கூடியது. தனித்து
காதலின் முடிவு எத்தகையதாயினும், அதனுன் பிரவேசிப்பது, காதலுக்கு ஏற்பட்ட வெற்றியேயன்றி வேறில்லை. காதல் ஒருவரின் முரட்டுச் சுபாவம், வக்கிர புத்திகளை இல்லாதொழித்து, அவரை மென்மையான உணர்வுகளுக்கு, உரித்தாக்குகின்றது. அதே சமயம் தேர்ழைகளைக்கூட உலகையே உருட்டச் செய்யும் பலசாலியாக்கவும் செய்கிறதே! காதல் மென்மையானது மட்டுமல்ல. எம்மை ஆகர்ஷிக்கும், கம்பீரமானதும்கூட

பருத்தியூர் பால வயிரவநாதன் (37)
Ye
வாழுதல் பொருந்தாத ஒன்று. யாருடனுமாவது ஈடுபாட்டுடன் பழகாமல் இருக்கமுடியுமா? கணவன், மனைவி, நண்பர், சுற்றம், உறவு என்று ஒரு துணையை நாம் தேடிக் கொண்டிருக்கின்றோம். படிக்கலாம், பார்க்கலாம், கேட்கலாம் இவைகளை நாம் செய்யாமலும் இருந்துவிட முடியும். இவைகளோடிணைந்த எத்தனை கர்மாக்களை செய்தாலும் மனதும் உடலும் ஸ்பரிசிக்காது, உயிரினம் உலவுவது கடினமானதே.
இந்த ஸ்பரிசத்திற்காகத்தானே உயிர் ஏங்குகின்றது. வெறுமை பூச்சில் ஒளிந்து கொண்டிருப்பவனும், முடிவில் தன்னையும் மீறிய காதல் உணர்வினால், உள்ளத்திற்கு உள்ளதைச் சொல்ல வேண்டியவனாகின்றான். இது ஒன்றும் தப்பு இல்லை. என்றாலும்கூட,
காதல், இருட்டுக்குள் ஒளிவது அல்ல, உள் மன வெளியில், ஒளியோடு உலா வருவது. இதற்குள் பூட்டியபடி இருப்பவர்க்கு, புற உலகு பற்றித் தெரியாது. இதன் தாக்கம் அத்தகையது.
ஆத்மாக்கள் பேச மொழி வேண்டியதில்லை. மொழியில்லாத பரிபாஷையில் பேசப்படும் போது செயற்கைத் தனமில்லை. இது உணர்வு அலைகளின் மோதலால் ஏற்படும் மென் அசைவுகள். குறிப்பிட்ட அலை வரிசையில்தானே வானொலியில் இசை வருகிறது. காதலும் அத்தகையதே.
இது சம உணர்வுகளின் சங்கமம், உண்மையான, தெளிவான ஸ்வரங்கள் உண்டானால் அபஸ்வரங்கள் கிடைக்க வழியில்லை. அபஸ்வரங்கள் இசை ஆகாது; அவை வசை,
இவைகளை நாம் வெறும் உதாரணமாக எடுத்து இயம்புவதும், புகழ்வதும், யதார்த்த வாழ்வில் காதலைக் கத்தரிக்கும் செயல்களையே செய்வதும், காதலைக் கொச்சைப்படுத்தும்
செயல்களாகும். எனினும் இது சமூகத்தின் நியதியுமாகிவிட்டது.

Page 32
༩ 58 ༽ வாழ்வியல் வசந்தங்கள் کسعه S .
பொருந்தாத காதலினால், அதன் சீரழிவினால் நிஜக்காதல்களும் நிர்க்கதிக்குள்ளாக்கப்படுகின்றன. எங்கோ ஓரிரு சமாச்சாரங்களை, கதைகளை நாமாக உருவகித்து, காதல் பற்றிப் புதுப்புது அர்த்தங்களைப் புனைந்து கொள்கின்றோம். இதன் தூய்மை பற்றி எந்த அளவில் அளந்துவிட்டோம்?
தாய்மை, அன்பு இவைகளை உணர்த்துவதற்குத்தானே கடவுள்களுக்கே, ஆண் பெண் உருவம் இட்டு அம்மை, அப்பனாக வணங்கியும் வருகின்றோம். இறைவனைத் தலைவனாகவும், இறைவியைத் தலைவியாகவும் வழிபடுதல் செய்கின்றோம்.
காலங்களின் மாற்றத்திற்கு காதலை மாற்றியமைக்க முடியாது. இது கனவும் அல்ல. நினைவில் நிறுத்தி ஜீவித்துக் கொண்டேயிருக்கும். வற்றாத புது ஊற்று. பழமையும், புதுமையும் காதலுக்கு ஒன்றேதான். இது வாழ்ந்து கொண்டிருக்கும்போதும் இனிமேலும், இது பேசப்பட்டுக் கொண்டேயிருக்கும். தன் வலிமையை, தன் குன்றாத இளமைப் பொலிவுடனேயே இனம் காட்டிக் கொண்டிருக்கின்றது. முடிவுள்ள பொருளுக்கு மட்டுமே வரைவிலக்கணம் கூறி வகைப்படுத்தவும் முடியும். முடிவில்லா விடயங்களை எதற்குள் அடக்குவது?
காதலித்தவனைக் கேட்டுப் பாருங்கள். அவன் தன்னைவிட ஜெயித்தவன் எவனும் இல்லை என்பான். இதில் தோற்றவனைக் கேளுங்கள். தன்போல் இழந்தவன் எவனுமில்லை என்பான். ஆனால் ஒன்று - காதலைப் பெற்றுக் கொண்ட விடயத்தில், இருவருமே வென்று விட்டவர்கள்தான். காதலின் முடிவு எத்தகையதாயினும், அதனுள் பிரவேசிப்பது காதலுக்கு ஏற்பட்ட வெற்றியேயன்றி வேறில்லை. காதலியின் சுண்டு விரலின் அசைவு அவன் இதயத்தின் அசைவாகத் தோன்றுவது, பிறருக்குப் பார்த்தால் நகைப்பாக இருக்கலாம். அந்த சுண்டு விரல் சொர்க்க அனுபவம், அவனது மெல்லிய உணர்வுகளுக்கு, அவன் இதயச் சுவர்களின் மென்மைக்கு ஓர் உதாரணம். இங்கு இவனின்

பருத்தியூர் பால வயிரவநாதன் (3)
YNasM
முரட்டுச் சுபாவமும், வக்கிர புத்திகளும், எங்கே போய்ச் சரணடைந்துவிட்டன?
காதல் சமயங்களில், Luayat it 6 Slassif, புத்திசாலிகளைக்கூடப் பலமிழக்கச் செய்யும் என்றாலும் கோழைகளைக்கூட உலகை உருட்டித் தள்ளும் வீரன் ஆக்குகின்றது என்றும் பலர் சொல்லக் கேட்டிருக்கின்றோம்.
வியாக்கியானங்கள், கண்டனங்கள், விமர்சனங்கள், வரைவிலக்கணங்கள் என்று பலதரப்பட்ட வடிவங்களில் பேசப்பட்டு வருகின்றபோதிலும் கூட, இவைகளுக்கு அப்பால் நின்று, தனித்துவமான ஒரு வடிவத்தினைக் காதல் எமக்குக் காட்டி நிற்கின்றமையை நாம் மறுத்து விடமுடியாது.
காதல் வாழ்வு என்பது, திருமணத்தின் முன்பு மட்டும், பழகுவது பேசுவது, ஒன்றாக வலம் வருவது என்று தப்புக் கணக்குப் போட்டு விடுகின்றார்கள். காதலிக்காமல், திருமணம் செய்தவர்களுக்கு இது பற்றி ஒன்றுமே தெரியாத மாதிரி சிலர் பேசுகின்றார்கள். ஒருவர் முகத்தை மற்றவர்கள் பார்க்காமலேயே, திருமண பந்த மூலம் இணைந்து, கருத்தொருமித்த காதல் தம்பதியர்களாக, பன்னெடுங்காலம் வாழ்ந்து வரும் எத்தனை பேர்களைக் கண்டு வருகின்றோம். காலத்தை வென்றது காதல், அல்லவோ! அன்றியும் காதலித்துத் திருமணம் செய்த பின்னர் முரண்படுவது காதலையே களங்கப்படுத்துவது போல் அமைகின்றதல்லவா? தற்காலத்தில் இந்த அவல வாழ்வைத்தானே பலர் வாழ்ந்து வருகின்றனர். இதனால்தானே, சமூகத்தில் காதல் பற்றிய நம்பிக்கையீனமும் ஏற்பட்டுவிடுகின்றது. பெரியவர்களால் நிச்சயிக்கப்பட்டுத் திருமணம் செய்தவர்கள் ஒருவரை ஒருவர், முதன் முதலாக அறியப்படுவதும், உணரப்படுவதுங்கூட ஓர் இனிய சுகானுபவமான, விந்தைக் காதல் உணர்வினைப் பெறுவதேயாகும்.

Page 33
(30) வாழ்வியல் வசந்தங்கள்
سعه S
'திருமண வாழ்விற்கும், காதல் முன் அனுபவம்தான் எதற்கு? வயது முதிர்ந்தாலும், காதல் இளமையாக இருப்பதும், அதே சமயம், காதலின் பரிமாணம் பெரிதாக வலுப்படுவதுமே உண்மையானதாகும். தெய்வீகப் பிணைப்பு, பூர்வ ஜென்ம இணைப்பு என்றும் நாம் சொல்லுகின்றோம். இருந்தும்கூட, இன்று -
காதலின் தாத்பரியத்தினைப் பற்றிக் கதைப்பவர்கள், எழுதுபவர்கள் எல்லோருமே, திருமணத்திற்கு முன்பு ஏற்பட்ட அனுபவங்களையே, பக்கம் பக்கமாக எழுதுகின்றார்கள், கவிதை வடிக்கின்றார்கள். திருமணத்தின் பின்பு, ஏன் குழந்தை குட்டி, பேரப் பிள்ளைகளைக் கண்ட பின்னர்கூட இது தொடர்ந்து வளர்ந்து, பின்னிப் பிணைவதை நாம் அறியாதவர்களா என்ன? இதன் பெருமை பற்றி அறிய, தர்க்கிக்க இது ஒன்றும் உரை கல்லில் தேய்த்துப் பார்க்கக்கூடிய பொருள் அல்ல.
உதாரணங்களுக்காகக் கூறப்படும் பழங்கதைகள், தற்கால உண்மைச் சம்பவங்கள் எல்லாமே ஓர் எடுத்துக்காட்டு மட்டுமே. மற்றப்படி இது ஜிவித்துக்கொண்டேயிருக்கும் சத்திய சொரூபம்தான். ஒவ்வொரு ஜீவனிலும், வீட்டிலும், நாட்டிலும், என் உலகு பூராவுமே ஒளியூட்டிக் கொண்டிருக்கின்றது.
ஜனனம், மரணங்களில் இதன் உண்மையும், வலிமையும் புலப்படுகின்றன. உயிர்ப் பிறப்புக்கள், பாசம் மிக்க இவைகளின் இழப்புக்கள் மூலம் உள்ளத்து வேதனை, பிரிவுத் துயர்கள் எல்லாமே, காதலின் வேர் எவ்வளவு ஆழமானது. இதன் ஆணிவேரின் அந்தமே காணமுடியாதது என்பதை எமக்கு உணர்த்தும்.
பாசத்தினால் பலவீனமும் அடைகின்றோம், பலமுமடைகின்றோம். ஆனால் இவையின்றி உலகம் இயங்குமா?

பருத்தியூர் பால வயிரவநாதன் foY Yn --------s~Y இன்பம், துன்பம் இணைந்த கலவைத் அதுவாக அழுத்தும்; அதுவாக இழுக்கும், அதுவாக விழுத்தும்.
காதலில் கரைவது, நனவு வாழ்வில் மட்டுமல்ல, கனவு வாழ்வில்கூட ஒரு நிஜத்தைக் காட்டி நிற்கின்றதே? கனவில் மீண்டு விழிப்பு வந்த பின்புகூட காதல் கனவை இரைமீட்கவே நினக்கச் செய்வதிலிருந்து, காதலின் கம்பீரம் புரிகின்றது. தாய் அன்பு, சேய் அன்பு, நண்பர் உறவு, உறவுகளின் இணைப்பு எல்லாமே பரந்துபட்ட அன்புணர்வின் வெளிப்பாடுகளே. சகல பிறப்பிற்கும், உயிர்ப்பிற்கும், உந்து சக்தி, மகா சக்தி காதலே யன்றி பிறிதில்லை. உயிர்கள் ஒதும் பொது வேதமும் இதுவே.
தினகுரல் 15.10.2000
<>

Page 34
62
bljitiШfill Bill)
tijШtill Bill) ಜ್ಯ
ܟܠ
தெரியாமை அல்லது தெரிந்துகொள்ளாமை என்பதும், அறியாமை என்பதும் வெவ்வேறான விஷயங்களாகும். இவைகளுக்கிடையே சில ஒற்றுமைகள் இருப்பதனால், சற்று கருத்து மயக்கம் ஏற்படலாம். தெரியாமை என்பதைவிட, அறியாமை எம்மை மிகவும் பாதிப்படையச் செய்துவிடும். தெரியாமையில் இருந்து நாம் மீண்டுவிடலாம். ஆனால் படித்தவர்கள் பண்புடையவர்கள்கூட அறியாமையில் இருந்து மீளப் பிரியப்படுவதில்லை. முற்போக்குச் சிந்தனையாளர்கள் என்று கூறிக் கொள்பவர்களும், பிற்போக்கு வாதிகள் வர்ணிக்கப்படுபவர்கள், மிதவாதிகள், தீவிரவாதிகள் என்று விமர்சிக்கப்படுபவர்களுங்கூட அறியாமை வலையில் ஆழமாகப் பிடிபட்டு, புதைந்தே விடுகின்றார்கள். எமக்குத்தான் எல்லாமே தெரியும் என எண்ணும் எண்ணம், ஏதோ வகையில் மனதுள் சில வேளை புகுந்தும் விடுகிறதே.
நாம் அறிந்தவரைதான் எல்லாமே சரி என நமது மனது ஏன் கட்டளையிடுகிறது? இது தன்னம்பிக்கையா? தன் முனைப்பா? அல்லது ஆணவமா?
எல்லோருக்கும், எல்லாமே, எல்லாச் சந்தர்ப்பத்திலும் சரிவரத் தெரிந்து கொண்டிருப்பது நடைமுறைச்
 

பருத்தியூர் பால வயிரவநாதன் { 63 કે
محسوسعه د؟
சாத்தியமாயிருக்காது அல்லவா? தெரிந்தேயாக வேண்டுமென்கின்ற கட்டாயமும் இல்லை. கண்ட விஷயங்களையும், மூளையில் செலுத்தவே பிரியப்படுகின்றார்கள். அவசியமானதும், அவசரமுமான தேவைகளையே மனிதன் கற்றுக்கொள்ள ஆசைப்படுகின்றான். உலகம் என்கின்ற பரந்த பரப்பில் எதனை நாம் முழுமையாகப் படித்துத் தேறுவது?
எதனைப்பற்றியும் நாம் ஆழமாகப் Լյկ ծծ முற்படும்போதுதான் எமது அறியாமையின் ஆழம் நமக்கே, நன்கு புரிந்து விடுகிறது. அதன் கனம், பரிமாணம் இவைகளைக் கண்டதும் அசந்து போய் விடுகின்றோம். அட இதுநாள் வரை இதுபற்றிப் புலனாகாமல் போயிற்றே என மலைத்துத் தடுமாறுகின்றோம். இந்நிலையில், நாம் புரியாத சங்கதிகளைப் பற்றி, மிகவும் புரிந்து கொண்ட மாதிரி பிரசங்கம் பண்ணுகின்றோம். புரியாத விஷயங்களைப்பற்றிப் பேசுவதே சுவாரஸ்யமாக இருக்கின்றது. யாராவது தெரிந்தவர்கள் அதுபற்றி - அதன் நிஜம் பற்றிப் பேசினாலோ, நாம் விட்டுவிடுவதில்லை. யாரையாவது, தம் போன்றவர்களைத் துணைக்குச் சேர்த்துக் கொண்டும், உண்மையைச் சொன்னவன் வாயை அடைக்க முயற்சி செய்கின்றோம். இந்த அறியாமை எவ்வளவு சாதுர்யமாக, முட்டாள் தனங்களைச் செய்கின்றது தெரியுமா? எமது அறியாமையை சரி என நிரூபிப்பதில் உள்ள சந்தோஷத்திற்கு எல்லைதான் ஏது? அறியாமை உணர்வு அந்த நேரத்தில் எமக்கு, சரியானது என்ற பொய்த் தோற்றத்தைக் காட்டி எம்மை ஜெயித்து, உண்மையை அடைத்து விடுகின்றது.
அறியாமை மனிதன் மனங்களை இறுக்க முடி உண்மையை வெளிக்கொண்டு வராமல் இருக்கப் பகீரதப்பிரயத்தனம் செய்கின்றது. நோயின் தாக்கத்தை நோயாளியே புரியாமல் செய்து விடுகின்ற திறமை இதற்கு உண்டு. தன்னைச் சார்ந்தவர்களைத் தன்னிலைக்கு வரச் செய்கின்றது. ஆற்ற்லை அற்றுப்போகச் செய்துவிடுகிறது. படிக்காத பாமரர்களை மட்டுமல்ல, அறியாமை எவரையுமே ஈர்க்கும் சக்தி பெற்றது.

Page 35
(3) வாழ்வியல் வசந்தங்கள் "محمد سعيدخ"
ஆனால்,
அறியாமை நிறைவானதல்ல, அது இறந்துவிடும். என்றைக்கோ உண்மை வெளிப்படும்போது நாம் கூச்சப்பட்டு குறுகி, எம் நிலையை அறிந்ததும் அதிர்ச்சியடைந்தே தீருவோம். இந்த அறியாமையின் பாதிப்பினால் நாம் படும் சிரமங்கள் கொஞ்சமா என்ன?
நாம் கட்டாயமாக அறிந்துகொள்ள வேண்டிய விஷயங்கள் நிரம்பவுமுண்டு. எதனையுமே ஆராயாது, "ஆமாம் போடுவதும் சும்மா. சும்மா ஏற்க வொண்ணா கருத்துக்களை, யாரோ வேண்டப்பட்டவர்கள். தெரிவித்ததற்காக ஏற்பதும், பழைய கருத்துக்களே சரியானது, புதிய கருத்துக்கள் போலியானது என்று பிடிவாதம் பிடிப்பதும், அல்லது புதியனவைகளே இறுதியான முடிவு, பழைய விஷயங்கள் உதறி எறிய வேண்டியவை எனக் கருதிக்கொண்டு இருக்கின்றவரை அறியாமையும் எம்மைவிட்டு விலகமாட்டாது. கல்வித்துறையும், நாகரீக வளர்ச்சியும் மேலோங்கும் இன்றைய காலகட்டத்தில் கூட, இதன் வீச்சு வீழ்ச்சியடையாமல் இருப்பது வேதனைக்குரியதே.
ஒரு சங்கதியைத் தற்செயலாகத் தெரியாமல் இருக்கலாம். ஆயினும் அதைத் தெரிந்துகொண்டதும் எம்மைத் திருத்தி விடுகின்றோம். உதாரணமாக சமையல் பாகம் ஒன்று ஒருவர்க்குத் தெரியவில்லை. அதை இன்னொருவர் சரியாகச் சொல்லிக் கொடுக்கின்றார். அத்தோடு தெரியாமை என்கின்ற பிரச்சனை தீர்ந்து விடுகின்றது. ஆனால் இந்த அறியாமை அப்படியா என்ன?
மனிதர் JA) இறுக Pl+ உண்மையை வெளிக்கொண்டு வர முடியாது செய்ய பகீரதப் பிரயத்தனம் செய்கின்றது. நோயின் தாக்கத்தை நோயாளியே புரியாமல் செய்துவிடுகிற திறமை இதற்கு உண்டு. இதுவுங்கூட தன் வசமிழந்த நடவடிக்கையாகவே ஆகிவிடுகின்றது. அத்துடன்

பருத்தியூர் பால வயிரவநாதன் 83`၌
"مستقيم عسيدي"
தன்னைச் சார்ந்தவர்களையும் தனது நிலைக்கு கொண்டு வர முயற்சியும் செய்கின்றது.
ஆராயும் தன்மையற்று, சொன்னவற்றையே திரும்பவும் உபதேசம் போல் சொல்லி விடுவதும், அறிவை மேல் படிக்குச் செல்லவைக்க இஷ்டமின்றி அறிவு விழித்தால் ஆபத்து எனத் தன்னை மீறி நினைந்து கொள்வதும், அச்சப்படுதலும், அறியாமையின் ஆபத்தான செயற்பாடுகளாகும். அறிவு என்கின்ற மயக்கமற்ற ஆயுதத்தைத் தவிர, அறியாமை சூன்யத்தை உடைக்கும் வலிமை பிறிதொன்றிற்கும் கிடையவே கிடையாது.
இன்று நாம் செய்தித்தாள்களைப் படிக்கும்போது மலைப்புத்தான் ஏற்படுகின்றது. உலகில் கொந்தளிப்பு நிலைதான் நிரந்தர அலையாகிவிட்டது. தனி மனிதர்களின் நடத்தைகள் ஒன்றுகூடி உலகை உருக்குகின்றது; உலுக்குகின்றது. அறிவை இவர்கள் எங்கே அடமானம் வைத்துவிட்டார்கள். அறிவின் பயன் அற்றுப் போய்விட்டதா? அறிவு இருந்தும் அதனைப் பயன்படுத்தாமல் விடுவது அறியாமையை விட அசிங்கமானது. எல்லாமே தெரிந்தும்கூட, மனிதப் பயனை மனிதப் பெறுமதியை அறியாது அறிவிலியாக நடப்பது அறியாமையன்றி வேறென்ன? இன்று பலரும் தூங்குவதாகப் பாசாங்கு செய்கின்றார்கள் போல் தெரிகின்றது. இது தங்களைத் தாங்களே ஏமாற்றுவதாகவே படுகின்றது. உண்மையைச் சந்திக்கத் திரானியற்றவர்கள், உறக்கத்தை வலிய நாடுகின்றனர். இதன் பலாபலன்கள்தான் என்ன?
ஆற்றல் இழப்பு அவமானம், பரிகாசத்திற்கு ஆளாகுதல், பிறரின் ஆட்சிக்குட்படல், நல்ல வாய்ப்புக்களை இழத்தல், தெளிவின்மை, இதனால் ஏற்படும் சோர்வு,
இத்யாதி தாக்கங்கள் எப்படி வருத்துகின்றது என்பதை அறிந்து கொள்ளத்தான் வேண்டும். விடுபட முடியாத

Page 36
(6) வாழ்வியல் வசந்தங்கள்
سعیسها தொல்லைகள் என எதுவும் இல்லை. அறியாமை கூட ஒரு தொல்லைதானே. விடுபட்டேயாக வேண்டுமென்கின்ற உணர்வு வேண்டும். பழமை பற்றிய அதீத கற்பனை உணர்வுகள், அவை பற்றி மாறான எண்ணங்களைத் தமக்குள் வேறுபாடாக உருவகிக்கின்ற தன்மைகள் கூட அறியாமையை வளர்க்கவல்லன. இந்தப் பழமை சித்தாந்தங்கள் உண்மைகளின் தவறு அல்ல. முரண்பாடான கருத்துக்களைத் தெளிவற்று நோக்குவதும், பழமையை அதன் இயல்புக்கமைய நோக்கத் தெரியாத தன்மையுமேயாகும். பழமையினர் உண்மையினை உணர்ந்து கொள்வதுபோலவே, புதுமை உலகின் கருத்துக்களையும் சம அளவில் கிரகித்து ஏற்றுக் கொள்ளப் பழகவேண்டும். முரண்பாடுகள் தெளிவின்மையாலேயே அவதரிக்கின்றன. தெளிவானதும் முரண்பாடுகள் உடன்பாடாகி, சமநோக்குப் பெறுகின்றன.
செம்மையானவைகளைத் தேர்ந்தெடுப்பதிலேயே எமது புத்திசாலித்தனம் அடங்கியிருக்கின்றது. எவரும் எப்படியும் பேசிக் கொள்ளட்டும். சமூக நிலைப்பாடு என்ன? இந்தக் கருத்துக்கள் யதார்த்த செயல்முறைக்கு ஏற்றவையா? என நாம் எம்முடனேயே, எம் மனதுடனேயே பேசி, ஒரு முடிவிற்கு வரவேண்டும். அதே சமயம் மிகச் சின்ன விஷயங்களுக்கெல்லாம் பெரிதாக மூளையைப் போட்டு உடைக்கவேண்டிய அவசியமும் இல்லை.
கருத்துக்களைப் பரிமாற்றம் செய்யும்போது படிக்கும்போது, சமூகத்தில் சகஜமாகப் பழகும்போது, பழகும் மனிதர் எத்தகைய தரத்தினராய் இருந்தாலும்கூட எமக்குப் பல தகவல்கள் கிடைக்கின்றன. மாற்றுக் கருத்துக்கள் அறியும்போது, பல விடயங்கள் வெளிச்சமாகிவிடுகின்றன. எமக்குத் தேவை, பலதரப்பட்ட புதிய உண்மைதரும் விடயங்களைப் பெறுதலேயாகும். இங்கு நாம், மொழி, இன, மத உணர்வுகளைக் கடந்து ஒரு சமநிலையில் உள்ள நடுத்தர ஆத்மாவாக நின்று

பருத்தியூர் பால வயிரவநாதன் '7'
سه عهد؟
உள்ளதை உள்ளபடி அறியமுனையும் புத்தி ஜீவியாக உருவாகுதலேயாகும்.
இந்த நிலைக்கு நாம் எம்மை உருவாக்காத வரை அறியாமை எம்மைவிட்டு விலக வாய்ப்பேயில்லை. நாம் இதனை விரட்ட முயற்சி செய்யப் போவதுமில்லை. நிதர்சனமானவைகள் என்றுமே உள்ளவைகளை உள்ளபடியே காட்டி நிற்கும் தன்மை வாய்ந்தனவையாகும். எமது புத்திசாலித்தனங்கள் பணம், காசு தேடுவதும், புத்தகங்களை மொத்தமாகப் படிப்பதில் மட்டுமல்ல. தெளிவு, நிதானம், தூய்மை யோடிணைந்த மயக்கமற்ற அறிவிலுமே தங்கியுள்ளன. இவை கிடைத்தால் அறியாமை நீங்கி அர்த்தமற்றதாகிவிடும். உலகம் பூர்ணமயமாகிவிடும்.
தினக்குரல் 22.10.2000
<>

Page 37
68
Illbfiffiībll Isshstrl
Dன்னிப்பதற்கும், தமக்குச் செய்த தவறுகளை அறவே மறந்துவிடுகின்ற பண்பினிற்கும் எல்லையேயில்லை. கொடை வழங்கல் என்பது பணம், பொருளை மட்டுமல்ல, உயிர்களிடம் காட்டும் பாசமும், பரிவும்கூட கொடை வழங்கலேதான் என்பதை நாம் அறிந்துகொள்ளல் வேண்டும். இது இறைவனின் குணம். மனிதன் இந்த வழியில் நிற்பதனால், இறைவனின் பேரருளைப் பெற்றவனாகின்றான். சாதாரண இயல்புகளில் இருந்து உயர்ந்து வாழ்ந்து காட்டும் பண்பு, தெய்வீகமானது என்றுதானே பெரியோர்கள் கூறுகின்றனர். தெய்வத்தன்மையான வாழ்வு, நாம் செய்யும் நல்ல காரியங்களிலும், களங்க மற்ற சிறப்பான எண்ணங்களிலும் தங்கியுள்ளது.
மனப்பயிற்சி மூலம், மனதைப் பக்குவப்படுத்த முயலவேண்டும். இது சற்று சிரமமாகத் தோன்றினாலும்கூட, சின்னச்சின்ன மனித பலவீனங்களை அறிந்து அதனைக் களைய முனையவேண்டும். எமக்குச் சிறிதாகத் தோன்றும் சின்னத் தவறுகள்கூட எங்கள் உள்ளத்து உறுதியையே, நாளா வட்டத்தில் குல்ல்த்துவிட வல்லது என்பதை உணரவேண்டும். எல்லாமே
எமக்குச் சாதகமாக அமையவேண்டும் என நாம்
 

பருத்தியூர் பால வயிரவநாதன் {69
سعه S .
எதிர்பார்க்கின்றோம். இதற்குத் தடை ஏற்பட்டதும், நாம் எந்த வழியிலாவது, இவைகளைச் சரி செய்யாது, சிறிய தவறுகள்தானே என எம்மையே சமாதானம் செய்தபடி கருமமாற்ற ஆரம்பித்து விடுகின்றோம். கடைசியில் இந்த மனப்பான்மை நம்மைக் குற்றவாளியாகவே ஆக்கிவிடவும் கூடும்.
புலன் வழி செல்வதால் எம் சிந்தையிலும் செயலிலும் என்ன திறமை வந்து விடப்போகின்றது. சுய கட்டுப்பாடு இழத்தல் மூலம் ஒருவன் தன்னையே இழக்கின்றான். என்னதான் கல்வி கற்றாலும்கூட கட்டுப்பாடு இல்லா சிந்தையாலும், செயலாலும் என்ன பிரயோசனம் வந்துவிடப் போகின்றது?
ஆற்றல், வெளிப்பாடு என்பதே புலன் அடக்கம் மூலமே பெறப்படுகின்றது. எமது ஜீவ சக்திகள் சதா அலைந்து மோதும் எண்ணங்களால் சிதறடிக்கப்படுகின்றன. நற்சிந்தனையுடன் உள்ளத்தை உரமாயும், அதே சமயம் நற்கருமங்களை ஆற்றும் திறனில் நெகிழ்ச்சித் தன்மையுடனும், சீரான, சம நோக்கு நிலையிலும் வைத்துக்கொள்ள முனையவேண்டும்.
மனோபலமும் வைராக்கியக் கொள்கைகளும் சத்திய உணர்வுடன் புறப்படவேண்டும். அடிப்படையிலே மனிதன் வாழ்வில் இப்படித்தான் வாழ வேண்டுமென ஒரு ஆழமான அத்திவாரத்தை உருவாக்க முனைதல் மூலமே இவைகள் சாத்தியமாகும்.
மனப்பயிற்சி மூலம் மனதைப்பக்குவப்படுத்த முயலவேண்டும், இது சற்றுச் சிரமமாகத் தோன்றினாலும்கூட சின்னச் சின்ன மனிதப் பலவீனங்களை அறிந்து அதனைக் களைய முனைதல் வேண்டும், எமக்குச் சிறிதாகத் தோன்றும் சின்னத் தவறுகள்கூட எங்கள் உள்ளத்து உறுதியையே, நாளாவட்டத்தில் குலைத்துவிட வல்லது என்பதை உணரவேண்டும். பழக்கங்களே எம்மை வழி நடத்துகின்றன, இந்த வழியை நாம்தானே தீர்மானிக்கவேண்டும்.

Page 38
(70) வாழ்வியல் வசந்தங்கள்
سعه
விதைக்கும் விதை தரமானதாகவும் அது முளைப்பதற்கு ஏற்றதாயும் இருத்தல் அவசியம். அது முளைப்பதற்கான சூழலை உருவாக்கவேண்டும். நீர், ஒளி, காற்று இவைகள் அதற்கு அத்தியாவசியமானது. இதுபோலவே, மனம் என்கின்ற விருட்சம் செழித்து வளர வேண்டுமாயின், ஒழுக்கம், இறையுணர்வு, கட்டுப்பாடு என்கின்ற மூல மருந்துகளை நாம் பயன்படுத்துதல் சாலச் சிறந்தது அல்லவா? நல்லவைகளை மட்டும் இனங்காணல், நல்ல நூல்களைக் கற்றுக் கொள்ளுதல், சிறப்பான வார்த்தைகளையே பேசுதல், கேட்டல், சிந்தித்தலை நாம் தேடி எம் வசமாக்குதல் வேண்டும்.
பழக்கங்கள் எம்மை வழி நடத்திச் செல்கின்றன. இந்த வழியை நாம்தானே தீர்மானிக்க வேண்டும். விதைத்த விதை எதுவோ அதன் பெயர் கொண்டே விருட்சம் உருவாகும். ஒன்று இருக்கப் பிறிதொன்று உருவாகுமா? எந்தக் கருமங்கள் செய்தாலும்கூட வழங்கப்படும் தீர்ப்பு அதன் வழிதான் இருக்கும். செய்கைகளை மீறி பலா பலன்கள் அமைந்துவிடப் போவதில்லை. இயற்கை வகுத்த கட்டுப்பாடு உடைந்தால் ஆபத்துதானே. வாழ்வை எம் பக்கம் சரியானதாக அமைக்க, தெளிவான, சரியான நோக்கங்களையே நமதாக்கிக் கொள்வோம்.
மனிதப் பண்புகள், மாண்புகள் இடத்திற்கு இடம் மாறுபட்டவையல்ல. இவை உலகிற்கே பொதுவானவை. எவருமே இது விடயத்தில் விலகி வாழ முடியாது. உலகின் எந்த மூலையில் வாழும் மக்களுக்கும் அன்பும், பாசமும், நல் நெறிகளும் பொதுவான ஒன்றுதானே? வாழும் தேசங்களின் தூரங்கள் மனிதப் பிணைப்பை, களைந்து விடமுடியுமா? உலகை ஒட்டுமொத்தமாக இணைப்பது, மக்களிடையேயுள்ள பவித்திரமான, கனிவான எண்ணங்கள்தான். செல்வம், செல்வாக்குகள் எல்லாம் அடுத்தபடியானவைகளேயாகும். மாறாக, இவை குன்றினால், உலக நல்லியக்கம், நாசகாரச் சக்தி வயப்பட்டுவிடும்.

பருத்தியூர் பால வயிரவநாதன் (7. t سعه ؟
எல்லாமே மனிதப் பண்புகளில்தானே தங்கி இந்த உலகு இயங்குகின்றது. நன்மையும், தீமையும் மனித மனங்களால்தானே உருவாகி, பூமியைப் புயலாகவும், தென்றலாகவும் மாற்றி விடுகின்றது. எல்லாமே எமக்கு வேண்டும், அது அனைத்தும் மற்றவனுக்கும் வேண்டும். உனக்குக் கிடைப்பது எனக்கும் வேண்டும்.
பொது நலன் மீதான அக்கறையும் அதன் செயற்பாட்டினால் பெறும் நன்மைகளும், இறுதியில் எம்மையே வந்தடைவதைக் காணுவீர்கள். எனவே எமது பரந்துபட்ட, அன்பின் வெளிப்பாடான கருமங்களினால் சிரமங்கள்தான் தோன்றும் என எண்ணவேண்டாம்.
மனிதத்துவ மாண்பு செத்து விடவில்லை. செத்துவிட்டால்
இந்த ஜெகம் அழிந்துவிடும். இதை அரணாக நின்று காவல் செய்வது யார்? வேறு யாரும் கிடையாது; நாமேதான்!
தினக்குரல் 29.10.2000
<>

Page 39
72
[]]]hìị h[[bjì
(UDடிவு எடுத்தல்' என்பது, எமது வாழ்வில், அன்றாடம் எழும் பிரச்சினைகளில் வந்து கொண்டேயிருக்கின்றது. எப்படி முடிவு எடுப்பது, என்பதில் அடையும் சஞ்சலங்களுக்கு அளவேயில்லை.
பிரச்சினைகளைத் தீர ஆராயாமை, தெளிவின்மை, தாமதமாகச் செயலாற்றும் போக்கு, பலவிதமான சிந்தனைகளால், பல்வேறு முடிவுகளால் குழம்புதல், சம்பந்தமில்லாத எல்லா விடயங்களிலும் தலையிடுதல், தெரியாத விஷயங்களில் ஈடுபடல் - இவை போன்ற காரணங்களால் சிக்கல்படுகின்றவர்கள் எந்த ஒரு முடிவுக்கும் வர சிரமப்படுவார்கள்.
இதனால் வாழ்வின் பெரும்பகுதி வீண் விரயமாவதுடன், அடுத்தவருக்கும் தீராத தலைவலியை உண்டு பண்ணிக் கொண்டிருக்கின்றார்கள். ஒரு தனிமனிதனின் முடிவு அவனை மட்டுமா பாதிக்கின்றது? இல்லையில்லை! அவனைச் சார்ந்தவர்களையும், ஏன் சிலவேளை ஒன்றுக்குமே சம்பந்தமில்லாதவர்களையுமே குழப்பியடித்து விடுகின்றது. நல்ல முடிவுகளை எடுப்பவர்களுக்கு இந்தப் பிரச்சினைகள் எழுவதேயில்லை.
 

பருத்தியூர் பால வயிரவநாதன் ( 7ο
۶ مهرهها
பொதுவாக தீர்மானம் செய்து கொள்வதில் பலருக்கு மேயுள்ள குறைபாடு என்னவெனில், தங்களது திறமைகளைக் கண்டு கொள்ளாமையேயாகும். அத்துடன் சிலர் விடயத்தில் ஆண்கள், தங்களைப் பற்றிய வெறும் கற்பனைப் பெருமிதத்தினை உண்டாக்கிக் கொள்பவர்களாகவும் இருக்கின்றனர். ஒரு சிறிய விஷயத்தைத் தெரிந்து வைத்துக் கொண்டு, பகட்டாக ஆரவாரம் செய்வதனால், அவர்களது தீர்மானங்களை, அவர்களே ரசித்து மெச்சிக் கொள்ளுவார்கள். இன்னும் சிலர் பிறருடைய விருப்பு, வெறுப்புக்களைக் கேட்டு, அவர்கள் கொள்கைகளுக்கு ஆட்பட்டு அத்துடன், தமது எண்ணங்களையும் அதனுடன் இணைத்து குழம்பிப்போய் விடுவார்கள்.
விசுவாசமான நண்பர்கள், கற்றறிந்த பெரியோர், நாம் கேட்கும் விடயங்களில் அனுபவம் மிக்கவர்கள் - இவர்களது ஆலோசனைகளைக் கேட்டறிவதில் தவறில்லை. ஆனால் மனிதன் முதலில் தன்னிடம் நம்பிக்கை வைத்த பின்னரே, பிறரை அணுகமுனைதல் வேண்டும்.
தன் திறமையில், தன் முயற்சியில், தன் இதய சுத்தியில், முதலில் நம்பிக்கை வைக்க வேண்டும். கல்வியறிவும், பொதுத்துறையில் திறமையும் கொண்டவர்கூட, சின்னச் சின்ன விஷயங்களுக்குக்கூட முடிவு எடுக்கத் திணறி யார், யாரிடமோ போய்ச் சரணைடைகின்றனர். காலையில் என்ன உணவு உண்ணலாம். பஸ்ஸில் போகலாமா, புகையிரதத்தில் போகலாமா?
தனது திறமையில், தனது முயற்சியில், தனது இதய சுத்தியில் நம்பிக்கை வைத்தல் வேண்டும், தன்னை நம்பாமல், பிறரை மட்டும் நம்புபவர்களால் சிறந்த முடிவுகளை ஒருபோதும் எடுக்கமுடியாது, பிறர் உதவி ஆலோசனைகளை பெறுவது தவறில்லை. ஆனால் எதிலுமே சந்தேகம், கவனம், சஞ்சலம் இவைகளை நெஞ்சிலே பாயவிட்டால், முடிவு எடுத்தலில் முட்டுக்கட்டை ஏற்படும். செயல்களைத் துணிச்சலுடன் எதிர்நோக்கத் தயாராகுங்கள்.

Page 40
(՞74`} வாழ்வியல் வசந்தங்கள்
سعه S . என்ன உடை உடுத்தலாம்? என்பதில்கூட அதிகம் யோசிக்கிறவர்களும் இருக்கிறார்கள்.
பெரிய காரியங்களைச் செய்ய முற்படும்போது, தெளிவு பெறுதல் என்பது இலேசுப்பட்ட காரியமல்ல என அச்சப்படுதல் இயல்பே. பலம் பொருந்தியவர்கள் கூட ஐயமும், அச்சமும் அடைந்தால் எவ்வளவு ஆபத்து தெரியுமா? எனவே தெளிந்த மனோநிலையில் திடமான முடிவு எடுக்கும் ஆற்றலை வளர்க்க வேண்டும். முடியும் என எண்ணியே, முயல ஆரம்பித்தலே ஆரோக்கியமாகும்.
அண்மையில் ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சியொன்றைப் பார்த்தேன். ஒரு வயதேயுடைய ஒரு குழந்தையைத் தந்தை நீச்சல் குளத்தில் விட்டு விடுகின்றார். சற்று நேரத்தில் அக்குழந்தை தன்னைச் சுதாகரித்துக் கொண்டு, மிக அழகாக நீச்சலடிக்கத் தொடங்கிவிட்டது. அந்தக் குழந்தை தன்னைத்தானே நம்பியதும் துணிச்சல் வந்துவிட்டது.
நாம் அதிகமாகப் படிக்க, படிக்க, சம்பவங்கள், செய்திகளைப் பார்க்க, கேட்க சந்தேகங்களே வலுத்த வண்ணமிருக்கின்றன. கல்வியும் அனுபவங்களும் சந்தேகங்களையும், அச்சங்களையும் நீகுகுவதற்கே பயன்படல் வேண்டும். பலதரப்பட்ட காரியங்கள் தொடர்பான ஆலோசனைகளை, செயற்பாடுகளை எந்த வடிவிலும் அறிந்து கொள்ளலாம். ஆயினும் எடுக்கின்ற முடிவுகள் ஒன்றாகவும், வலுவானதாகவும் அமைதல் வேண்டும். உடன் பயன் தராத செயல்களை நிதானமுடன் செய்து கொள்ளலாம். முடிவு எடுத்த பின்னர் செயல் தீவிரமாக இருக்கவேண்டும் என்பதில் குறியாக இருத்தல் அவசியமானதாகும். செயலில் தொய்வு ஏற்படும்போதுதான் உற்சாகம் குன்றி மேலே அதனைக் கொண்டு செல்லவிடாது மனம் தடுக்கின்றது. இந்த நிலைக்கு ஆளாகாது தப்பிப்பதில்தான் மனிதனின் விசேட திறமைகளே இருக்கின்றது.

பருத்தியூர் பால வயிரவநாதன் டே
موسسه ؟
இது மனதின் எர்திரத்தில் தங்கியுள்ளது. இதை ஒரு பயிற்சியாக நாம் ஏற்படுத்திக் கொள்ளவேண்டும்.
ஓரிரு செயலில் நாம் ஈடுபட்டு தெளிவும், வெற்றியும் கண்டுவிட்டால், அப்புறம் நம் மனம், ஒருபோதும் கண்டபடி அலையமாட்டாது. எம் கட்டளைக்கு அது கட்டுப்படும்.
செயலில் இறங்கும்போது ஆரம்பத்தில் ஏற்படும் கணப்பொழுது சலனங்களைப் பொருட்படுத்தாதுவிட்டால், அப்புறம் எது வந்தாலும் கருமங்களிலேயே எம்புலன் செல்லும். இதனை நாம் எமது நெஞ்சில் நிலையாக இருத்திக்கொள்ள வேண்டும்.
செயல் உருப்பெறும் போது ஏற்படும் ஆனந்தம், நிறைவு என்பது வார்த்தைகளில் கூற முடியாது. எமது முயற்சியில் நாம் பெறும் பயன், பிறர் உதவியுடன் பெறுவதால் ஏற்படும் மகிழ்ச்சியை விடப் பன்மடங்கானதே என்பதை அறிந்துகொள்வோம். கூடியவரை நாமே எமது சொந்த அலுவல்களைச் சொந்தப் புத்தியில் செய்து கொள்ளப் பழகுவோம். எங்கள் சக்தியில், திறமையில் நாமே அவ நம்பிக்கை கொண்டுவிட்டால், பிறர் எம்மை என்ன நிலையில் நோக்குவார்கள் என்பதனைக் கொஞ்சம் சிந்தித்துப் பாருங்கள். எமது சக்திக்கு எட்டியபடி, எமக்குள்ளேயே எமது செயல்களை ஆய்வு செய்யப் பழகுவோம். பிறரிடமும் தகவல்களைப் பெற்றுக் கொள்ளுங்கள். கூடியவரை சாதாரண விஷயங்களில் இருந்து முடிவுகளை நீங்களே எடுக்க முயன்று பாருங்கள். ஆலோசனை பெறுதல் தவறு அல்ல. ஆனால், முடிவு எடுத்த பின்னர் செயலாற்றுகை ஆரம்பித்த பின்னர், எந்தவித சஞ்சலம், சலனம், சந்தேகம் எதனையும் உங்கள் நெஞ்சினில் பாய அனுமதிக்காதீர்கள். இதனால் அடைவது - துணிச்சலான வெற்றிக்கான வழிதான் என்பதில் சந்தேகம் என்ன இருக்கின்றது?
<>
தினக்குரல் 12112000

Page 41
76
Biblj blLIB bli u FGDLDůBLJirih
ருவர் அடைந்த வெற்றிகளைப் பார்த்ததுமே, அது வெறும் குருட்டு அதிர்ஷ்டத்தால் விளைந்தது எனச் சிலவேளை கூறிவிடுகின்றோம். மனதில் எழுந்த மாத்திரத்தே, ஆராயாது கூறிவிடுவது எமது அறியாமையாக இருக்கலாம், சிலவேளை பொறாமையாகக் கூட இருக்கலாம். ஆராய்ந்து பார்த்தால், ஒவ்வொருவர் வெற்றிக்குப் பின்னாலும், வெற்றி பெற்றோரின், பிரத்தியேக சக்தி இருப்பது புலனாகும். ஏதோ ஒரு வகையில் வெற்றி வாய்ப்புக்களை அள்ளிக் குவிப்பவர்கள், ஏனையவர்கள் செய்து வருகின்ற செய்கையினின்றும் மாறுபாடாகவும், அதே சமயம் குறிக்கோளில் குறியானவர்களாகவும், தன் முனைப்புடன் செயல் புரிபவர்களாகவே இருக்கின்றனர். எல்லாச் சிறப்பான செய்கைகளையுமே குருட்டு அதிர்ஷ்டம் என்று கூறிவிட முடியுமா
estarany ?
திறமைமிக்க மனோதிடம், ஆளுமைப் பண்பு, தனித்துவப் பண்பை, உள்ளபடியே காட்டும் செயல் - இவற்றின் மூலம் வெற்றிகளைப் பெறும் கலையை, அறிந்து கொண்டவர்கள், சாதுர்யமாகவும் மெச்சும் வண்ணமும் அடைந்துவிடுகின்றனர். உலகத் தலைவர்கள், மாபெரும் கலைஞர்கள், மக்கள் போற்றும்
 

பருத்தியூர் பால வயிரவநாதன் 77)
سمعهد
ஆன்மீகவாதிகள் போன்றோரின் வாழ்வு முறையைக் கூர்ந்து படித்தால் இவை புலனாகும். ஆனால் இவர்கள் போலவே ஏன் நாம் வரமுடியாதா எனச் சந்தேகத்துடன் அங்கலாய்க்கின்றனர். உண்மையில், அவர்கள் பின்பற்றி வந்த வாழ்வியல் ஒழுங்கு முறைமை, ஆர்வம், பற்றுதல், இலட்சிய வேட்கை பற்றி நாம் தெளிவாக அறிந்துணராமல், அவர்போல் ஏன் வரமுடியாது என்று மட்டும் நினைப்பதால் அர்த்தமில்லை.
மனித சக்தி மகத்தானது; சொல்லில் இயம்புதற்கரியது. நம்முடையை ஆற்றலை வெளிப்படுத்துகின்ற கலையை அறிந்துகொண்டால் வெற்றி நிச்சயமானதே.
ஆயினும், சுய கட்டுப்பாடு, ஆளுமையை நாம்தான் வளர்த்து வர வேண்டும். இன்னும் ஒருவர் வந்து உதவுவர் என்பது இரண்டாம் பட்ச அம்சமேயாகும். ஒருவரை ஊக்குவித்தல் மட்டுமே செய்யமுடியும். ஆற்றலை வளர்த்தலும், சாதனை செய்வதை நோக்கிப் பயணிப்பதும் எமக்குரிய கடமையாகவே கருதவேண்டும். சிறிய பொறியில் இருந்து பெரு நெருப்பு உருவாகுதல் போலவே, உருப்பெறும் ஆற்றல் வெளிப்பாடு, சாதனையாக மாறும்.
பொதுவாக தனிமனிதனின் ஆற்றல்கள், அவனுக்குள்ளேயே வளர்ந்து வரவேண்டும். ஒழுக்கம், கட்டுப்பாட்டு எல்லைகளை அறிந்து அதன் பிரகாரம் தம்மைப் பூரணப்படுத்த முனைய வேண்டும். வரையறை மீறிய எச்செயலும், வெற்றி வாய்ப்பினை அளிக்காது. ஒழுக்க
திறமைமிக்க மனோதிடம், ஆளுமைப் பண்பு, தனித்துவப்பண்பை உள்ளபடியே காட்டும் பண்பு, ஆர்வம், இலட்சிய வேட்கை, வாழ்வியல் ஒழுங்கு முறைமை போன்றவைகளால் முன்னேறியவர்கள் பற்றி சரியாகப் புரிந்துகொள்ளாமல், வெறுமனே நாம் அவர்களைப்போல் ஏன் வர முடியவில்லை என நினைப்பது அர்த்த மற்ற ஒன்றாகும். போராடாமல், கஷ்டப்படாமல், வெற்றிகள் சும்மா கிட்டுமா?

Page 42
7` வாழ்வியல் வசந்தங்கள் ---- கட்டுப்பாடுகளைக் கண்டிப்பாகக் கடைப்பிடித்தால், ஏதோ ஒரு வழியில் புதிய திருப்பமாக நல்லவழி நிச்சயம் பிறக்கும்.
எவருமே எள்ளி நகையாடும் வண்ணம் மனிதன் படைக்கப்படவில்லை. எமது அறியாமையினால், பிறருக்கு நாம் பிழையான தீர்ப்புக்களைக் கூற, அதற்குத் தகுந்தாற்போல், ஆதாரங்களையும் சோடிக்கின்றோம். எளிமையாகத் தோற்றம் கொண்டவர்கள் தாழ்ந்தோரில்லை. அவ்வண்ணமே வெளிப்பார்வைக்கு செயற்கைத் தன்மையாக பெரியவனாகத் தன்னைக் காட்டிக் கொண்டவன் உயர்ந்தவனும் ஆகான். நாம் பார்க்கும் பார்வை எச்சமயத்திலும் சரியாக இருப்பதுமில்லை.
எனக்குத் தெரிந்த நண்பர் கூறிய தகவல் இது. தம்முடன் ஒன்றாகப் படித்த நண்பர் ஒருவர், கல்வியில் மிகவும் பின்தங்கிய நிலையில் இருந்தான். வகுப்பில் சக மாணவர்கள் பலரும் அவனைக் கேலி பேசினர். அவனோ மிகவும் அமைதியானவன். கல்வியில் நாட்டமின்றி இருந்தபோதிலும் ஒழுக்கத்தில் சிறந்தவன். இவனிடம் உள்ள சிறப்பு என்னவெனில் குறித்த நேரத்தில் பாடசாலைக்கு வந்துவிடுவான். பாடசாலைக்கு லீவு போடுவது என்பது கிடையவே கிடையாது. எச்சந்தர்ப்பத்திலும், மழையோ, காற்றோ பாடசாலைக்கு ஆஜராகிவிடுவான். இது அவனது இயல்பான குணாம்சமாகும். பாடசாலையில் ஒரு தடவை ஆண்டுவிழா நடைபெற்றது. பாடசாலையில் சிறப்புத் தேர்ச்சி பெற்றவர்களுக்கு பரிசில்களும், பாராட்டுதல்களும் அளிக்கப்பட்டன. அப்போது இந்த மாணவனைச் சக தோழர்கள் கேலியுடன் நோக்கிப் பார்த்தனர். அப்போது திடீரென கல்லூரி அதிபர் ஒரு அறிவித்தல் கொடுத்தார். இந்த ஆண்டின் சிறந்த பண்புள்ள ஒழுக்கமிக்கோருக்கான பரிசிலும் கொடுப்பதாகத் தெரிவித்து, அதற்கான காரணத்தையும் கூறினார். நேரம் தவறாது பாடசாலைக்கு வருகை தருவதுடன் எவருடனும், பழகும் விதத்தில் உள்ள குணாம்சங்களை விதந்துரைத்து, அவனை அழைத்து பிரதம

பருத்தியூர் பால வயிரவநாதன் s
سعسعه கல்வி அதிகாரி மூலம் பரிசில் பெற அழைத்தார். அங்கு எல்லோரும் மெளனமாகினர். இவர் விடயத்தில் பின்னர் ஆச்சரியம் கலந்த உண்மை. பல ஆண்டுகளின் பின் தான் தெரியவந்தது.
தலைநகரின் மாபெரும் வர்த்தகராக அந்த மாணவர் உருவாகியிருந்தார். சமூக நலப் பணிகளிலும் அவரே முன்னின்று உழைத்தார். அத்துடன் கல்வித்துறைக்கும் பெரும் பங்காற்றி பெயரும், பெறற்கரிய பேறுகள் பலவும் பெற்றார். அவரது இந்த வெற்றிக்கு என்ன காரணம் என நான் சொல்லாமலே உங்களுக்குப் புரியும். குறித்த நேரத்திற்குக் கடமைக்குச் செல்லும் மனப்பாங்கு, ஏனையோரின் கேலிச் சொற்களைச் செவி மடுக்காமை, தமக்கேயுள்ள ஒழுக்கத்தின் பேரில் உள்ள அசைக்கமுடியாத நம்பிக்கையும், அதன்படி ஒழுகி வந்தமையுமே இவரது இந்த வெற்றிக்கு மூல காரணங்களாகும். கல்வியில் தான் பின் தங்கியுள்ளது பற்றிய குறைபாட்டினைக் கருத்தில் கொள்ளாது, தமக்குரிய இதர திறமைகளை வளர்த்துக் கொண்டமையே இவரது வெற்றியின் இரகசியமாகும்.
எல்லோருக்குமே சிற்சில குறைபாடுகள் இருந்தாலும்கூட, தமக்கு விருப்பமான துறையினைத் தேர்வு செய்து கொள்ளவேண்டும். பிடிக்காத - மூளையில் செல்லாத கருமங்களுக்காக, மூளையை உடைக்க வேண்டிய அவசியமில்லை. இந்த விரும்பாத செயல் எமது ஆற்றலை முடக்கிவிடும். தவிர சவாலாகச் சில கருமங்களையும் ஆற்ற வேண்டியுள்ளது. அதற்கு நாம் அடிப்படையான நோக்கங்கள், கருமங்களில் தெளிவுடன் இருக்கவேண்டும். அப்படியாயின்தான் சவால்களைச் சமாளிக்கமுடியும்,
அங்கவீனர்களாக இருப்போர்கூட தங்கள் ஆற்றல்களை, ஆர்வத்துடன் வெளிப்படுத்தி வருவதனை நீங்கள் அறிவீர்கள். ஒரு உறுப்பு உடலில் செயல் இழந்திருந்தாலும்கூட, ஏனைய தம் உறுப்புக்களைக் கூர்மையாகப் பயன்படுத்தி, தங்கள் திறமையை

Page 43
C803 வாழ்வியல் வசந்தங்கள்
سعه S மிகப் பிரமிக்கும் வண்ணம் வெளிப்படுத்துகின்றனர். கண் இழந்தவர்கள்கூட, பல்கலைக்கழக பட்டதாரிகளாகவும், பட்ட மேல்படிப்பு படிப்பவர்களாகவும் இருப்பதை நாம் அறிவோம்.
இப்படியிருக்க, தேக ஆரோக்கியமுள்ளவர்கள் சும்மா செயலற்று இருப்பது சரியாகுமா? கொஞ்சம் சிந்தித்தால் எமது பலம் எத்தகையது என உணரலாம். மனதை எந்த வேளையிலும் துடிப்புள்ளதாக வைத்துக்கொள்வதன் மூலமே எதையாவது செய்துவிட வேண்டும் என்கிற ஆர்வம் ஏற்பட வழிபிறக்கும்.
தவிர, சிலருக்கு சோம்பித்திரிதல், உறங்குதல் இனிய பொழுதுபோக்கு ஆகிவிட்டது. இதனால் படும் சுமைகளைக் காலம் அவர்களுக்கும் போதித்துவிட்டே செல்லும். உறுதியை உள் மனதுள் செலுத்து. அறிவு இருக்கும்வரை அச்சமின்றிச் செயல்படு. உடலும், உள்ளமும் முழுமையாக இறைவன் படைத்தது. விரைந்து செயல்படுக வெற்றி பெறுக!
தினக்குரல் 19.11.2000
<>

81
(Pதுமையுற்றதும் பலர் முடங்கிப் போகின்றார்கள், அல்லாது விடின் முடக்கி வைக்கப்படுகின்றார்கள். முதுமை முடங்கி விடுவதற்கல்ல. இந்தச் சமூகத்தை மேலும் நெம்புகோலாக நிமிர்த்துவதற்காக.
முதுமை ஒரு ஆற்றாமையுமல்ல. முதுமை ஒரு இயற்கை நிகழ்வு. இதில் வருத்தப்படுவதற்கு ஒன்றும் இல்லை. முதுமை ஆற்றாமை, தள்ளாமையாகவே கணிக்கப்பட்டுவிட்டது. சமூகம் நெகிழ்வுற்று இந்த நிலையைத் தடுக்கவேண்டும். நோயுற்றுப் படுப்பது என்பது வேறு. ஆனால் முதியவர்களைக் கட்டிப் போடுவது போல் நடாத்துவதென்பது ஒப்புக் கொள்ள முடியாதவொன்று. மிகவும் கெளரவத்துடனும், நல்ல நடத்தையுடனும் வாழ்ந்தவர்களும் கூட, ஏன் கல்வி கேள்விகளில் ஞானமுற்று இருந்தவர்கள் கூட நாமே ஆச்சரியப்படும் வண்ணம், அநாதைகள் போல் முடங்கி, அடங்கி நொடிந்து கேட்பாரற்றுக் கிடப்பதை நாம் கண்டுகொண்டுதானிருக்கின்றோம்.
வயது முதிர்வு அடைவதைக் காட்டிலும், மனம் முதுமையடைந்து அல்லல்படுவது ஆபத்தானது. அட இவரா

Page 44
{82 வாழ்வியல் வசந்தங்கள் محصہY | இப்படி, இவர் நடந்து வரும்போதே, நாம் எதிரே வரவே பயப்படுவோமே! இவருக்கு என்ன நடந்துவிட்டது எனப் பலர், முதிய சிலர் பற்றி ஆதங்கத்துடன் கவலையுடன் கதைப்பதை நீங்கள் கேட்டிருப்பீர்கள். முதுமை என்பது புதிதான ஒன்றா?
அல்லாது விடின் வரக்கூடாத ஒரு விஷயமா என்ன?
என்ன கோளாறு இந்தச் சமூகத்திற்கு? முதுமை என்பதே ஒரு நோய் எனப்பலரும் முடிவு கட்டிவிட்டார்கள்.
உழைக்கும் காலத்தில் அவர்கள் சமூகத்திற்கு ஆற்றிய செயல்களையும், தியாகங்களையும் எப்படி மறந்துபோய் விடுகின்றார்கள்? சில வீடுகளில் நீங்கள் அவதானித்திருப்பீர்கள், கணவனை விட மனைவி வயது மட்டும் குறைவாக இருப்பார். ஆயினும் அவர்கூடச் சற்று வயது கூடிய கணவனை இழிவுபடுத்தி, உதாசீனம் செய்வார். *சும்மா தொண தொணக்காதீர்கள். வயசு வந்தால் சும்மா வாயை மூடிக்கொண்டு கிடக்க வேண்டியதுதானே என்பார்.
சும்மா இருப்பது என்பது லேசுப்பட்ட காரியமா என்ன? சதா ஓடி ஆடிய கை, கால்களைக் கட்டிப் போடுதல் ஆகுமா? சரி, அவர்கள் தான் ஏதோ, தெரிந்தும் தெரியாமல் பேசினால் கண்டு கொள்ளாமல் இருந்தால் என்ன என்று கருதுவதில்லை. அவர்களால் உச்சரிக்கப்படும், ஆகாத வார்த்தைகள் கூர்மையாகச் செவிக்கு ஏறும், உறைக்கும்! அப்புறம் வயது வந்தவர்களுக்குச் சதா மன உளைச்சல் இன்றி வேறென்ன?
மனம் பலவீனப் படும்போது தள்ளாமை வந்துவிடுகின்றது. இளம் வயதில் இயங்காத சோம்பேறியும், முதுமை வயப்பட்டவனேயாவான். வயதைக் காட்டி மட்டும் முதுமை எனக் கூற விட முடியாது. இளவயதிலேயே முடங்கி இருப்பவனைவிட முதுமையில் இயங்குபவன் இளைஞன் போன்றவனே. எல்லோருமே நீண்டகாலம், வாழ ஆசைப்படுகின்றார்கள். ஆனால் கிழவர்களாக வர விரும்புவதில்லை.

பருத்தியூர் பால வயிரவநாதன் {
سعیخ
எங்கோ வாசித்தது ஞாபகத்த்த்கு வருகிறது. எல்லோருமே நீண்ட காலத்திற்கு வாழ ஆசைப்படுகிறார்கள், ஆனால் கிழவர்களாக வர விரும்புவதில்லை. செயல்களைச் சிந்தனைகளை இளமையாக வைத்துக் கொள்ளும்வரை, முதுமை நம்மை ஒன்றும் செய்துவிட முடியாது.
மனம் பலவீனப்படும்போது தள்ளாமை வந்துவிடுகிறது. இளம் வயதில் இயங்காத சோம்பேறியும் முதுமை
வயப்பட்டவனேயாவான்.
எனவே வெறும் வயதைக் காரணம் காட்டி முதுமை பற்றிப் பேச முடியாது.
இளவயதில், வீட்டிற்கும், நாட்டிற்கும், ஏன் தனக்கும் مچھ ஆகாதவனால் என்ன பயன் வந்துவிடப் போகிறது.
செயல்தான் முக்கியமானது. எந்த வயதிலும் செயல்
வீரனாக திகழமுடியும். வயது முதிர்ந்தவர்கள்கூட இளைஞர்போல் கரும மாற்றுவதை நீங்கள் பார்ப்பதில்லையா?
முதுமை அனுபவஞானத்தை உண்டாக்குவதனால், இள வயதுள்ளவர்களுக்கு, பெரியவர்களின் ஆலோசனை தேவைப்பட்டேயாக வேண்டும். இளையவர்களாலேயே எல்லாம் முடியுமென்றால் அனுபவ ஞானம் என்பதே அர்த்தமில்லாத பேச்சாகிவிடுமே. இன்று நாம் உலகில் பார்த்துக் கொண்டிருக்கின்ற பெரும் தலைவர்கள் பெரும்பாலும் முதிர்ந்த வயதுக்காரர்கள்தான்.
கால ஓட்டத்திற்கேற்றவாறு மனிதர்கள் புதுப்புது விஷயங்களை கற்றுக்கொண்டு வருகிறார்கள். நாம் தினம் தினம் படிக்கின்ற அத்தனை விடயங்களுக்குமே ஆதாரம் எல்லாமே, முன்பு சொல்லி வைத்த உண்மைகளின் ஆதாரங்களேயாகும். இவைகளை அனுபவம், அறிவுகூடிய பெரியவர்கள்தான் சொல்லித் தந்தார்கள். இன்னமும் சொல்லிக்கொடுத்தும் வருகின்றார்கள்.

Page 45
(8. வாழ்வியல் வசந்தங்கள்
سوابسته கலை, கலாசாரம், மதம், அரசியல் எதுவுமே படிப்படியாக இவர்கள்
போதித்து எம்மால் அறியப்பட்டவையாகும்.
ஆரம்ப காலத்தில், குடும்ப நலன் கருதி சற்றுக் கண்டிப்பாக ஒருவர் இருந்திருக்கலாம். அநேக வீடுகளில், இந்த பழைய கதைகளை மனதில் வைத்துப் பழி தீர்ப்பது போல், பிள்ளைகள் நடந்து கொள்கின்றார்கள். தங்கள் முன்னேற்றத்திற்காக, அவர் எத்தகைய தியாகங்களைச் செய்திருப்பார் என ஒரு கணமாவது சிந்திக்கத் தயாராக இருப்பதில்லை. உண்மையில் பெற்றோர் சிற்சில. தவறுகள் செய்திருக்கலாம். அதற்காக அவர் இயலாமையில் இருக்கும்போது, பழைய கதைகளைத் தூக்கிப் பிடித்துப் பேசி, மனசை நோகடித்து வதைக்கலாமா?
அவர்கள் கட்டிய வீட்டிலேயே, அவர்கள் சிறை வைக்கப்படுகின்றார்கள். இது என்ன கொடுமை.
ஒரு பெரியவர் ஒருவர் தான் கட்டிய வீட்டிலேயே மின் விசிறியைப் போட்டுவிட்டு படுத்திருந்தார். அங்கு வந்த அவரது மருமகள், உமக்கு இப்போ கட்டாயம் மின் விசிறி வேண்டுமா என்ன? என்று கேலியாகக் கூறி அதை உடன் அணைத்துவிட்டுச் சென்றார். இத்தனைக்கும் அவர் தன் இளைப்பாற்றுகை சம்பளத்திலேயே வாழ்பவர். பெருத்த செல்வாக்குடன் வாழ்ந்தவர். அவரது தள்ளாமை இவர் மருமகளை இப்படிப் பேச வைத்தது. மனச் சாட்சியற்ற எத்தனையோ பேர் இப்படித்தான் நடந்து கொள்கின்றார்கள். இது நான் கண்ட உண்மைச் சம்பவம்தான்.
நாம் நடந்துகொள்ளும் விதங்களால்தான், முதியவர்களின் ஆரோக்கியமே தங்கியுள்ளது. உதாசீனமான போக்கு, குத்தலான பேச்சு, உடல் ஆரோக்கியம் பற்றிய பாராமுகம் எல்லாவற்றிற்கும் மேலாக அவர்களைப் பாரமாக அவர்கள் முன்பாகவே எடுத்துரைப்பது இத்தகைய நடத்தைகள், அவர்கள் மூச்சை உடன் நிறுத்தி அவர்களை மயானத்திற்கே இட்டுச் சென்றுவிடும்.

பருத்தியூர் பால வயிரவநாதன் (35)
محسوسهها இவர்களின் மனக்கொதிப்பில், அந்த வீட்டில் உள்ளவர்கள் நிம்மதி காணவும் முடியாது.
செய்தவர் மனம் குன்றினால், எந்த நல்வினையை நாம் செய்த போதும், அது சித்திக்கப் போவதில்லை. மிகவும் முன்னேறிய மேற்கத்திய நாடுகள்தான் இது விடயத்தில் மிக மோசமாக நடந்துகொள்கின்றன.
முதுமையின் ஏக்கங்கள், இளமைக்குத் தெரிவதில்லையே ஏன்? மேலை நாடுகளில் பிள்ளைகள், பெற்றோரை வயோதிபர் இல்லங்களில் கொண்டு சேர்ப்பதும், வருடத்தில் பெற்றோர் தினங்களில் மட்டும் போய் வாழ்த்துக் கூறுவதும், வேடிக்கையான வேதனைதான். நேரே போக நேரம் இல்லையென்று கூறி, வெறும் வாழ்த்து மட்டையை மட்டும் தபாலில் அனுப்பவர்கள்கூட இருக்கின்றார்கள். தனக்கும் இந்த நிலைவரும் என அந்தப் பிள்ளைகள் நினைப்பதில்லை.
நாம் இளவயதிலேயே, நமது பிள்ளைகளும் பெரியவர்களை மதிக்கக் கற்றுக்கொடுக்க வேண்டும். அவர்கள் செய்த பணி, தியாகங்களை எடுத்துச் சொல்லி வளர்க்கவேண்டும். பெற்றோர் தினம், முதியோர் தினம் என எமக்கு அறிவுறுத்தத்தானே உலகம் பல விழாக்களை எடுத்து வருகின்றது.
நாகரீக உலகில் அநாகரீகமாக முதியவர்கள் விடயத்தில் நடந்து கொள்பவர்களைப் பார்க்கும்போது அரு வருப்புத் தோன்றுகின்றது. மனித நேயமில்லா பண்பினால், உலக முன்னேற்றம் பற்றிப் பேச முடியுமா? அன்பில்லா இதயங்கள் உள்ள அவனியில் ஜீவிதம் செய்தலே இதயத்தை உறுத்தும் செயலாகும்.
முதுமைக்கு முன்னுரிமை கொடுத்தால்தான், அவர்கள் ஆசியும் கிடைத்து அவனி சிறக்கும்.
-4-

Page 46
BÈFFFIGHTEDLOui அறிவார்ந்த செயற்பாடும்
ரெப்போகும் மரணத்தை எண்ணி இருக்கின்ற வினாடிகளில் பலர் மரணித்துக் கொண்டிருக்கின்றார்கள். மரணம் என்பது எப்பொழுதும் வரும் ஒரு சாதாரண நிகழ்ச்சிதான். எனினும் இதனை ஜீரணித்துக்கொள்ள இந்த மனம் ஒப்புக் கொள்கிறது இல்லை. பலாத்காரமாக ஆண்டவன் உயிரைப் பிடுங்கி எடுத்துக்கொண்டு போவதுபோன்ற ஒரு கோபம், அவனிடத்தில் ஏற்பட்டு வருகின்றது. இருக்கின்ற கடைசி வினாடி வரை துணிச்சலுடனும், மகிழ்ச்சியுடனும் மனிதன் வாழ்ந்து கொண்டிருக்கவேண்டும். இது எல்லோருக்குமே முடிகின்ற காரியமா என்ன? நடக்கிறது நடக்கும் என்றால் வேதாந்தமா பேசுகிறாய் என்பார்கள்.
இயற்கையில் இருந்து விடுபட்டு வாழ முடியாது. மரணம்கூட அப்படித்தான். சற்று ஆழமாகச் சிந்தித்துப் பார்த்தால், இதில் பயப்பட ஒன்றுமில்லை என்று புரிந்து கொள்ளலாம். ஆனால் இந்த மனோபக்குவம் எல்லோருக்குமே வந்துவிடுமா என்ன?
எல்லோருமே ஏதோ ஒரு சமயத்தில் நீதியைப் பேசிவிட்டு அதற்கு முரணாக, எம்மையும் மீறிச் செயல்படுகின்றோம். சங்கடப்படுத்திக் கொண்டிருக்கின்ற சாவை, அறிந்தும்
 
 

பருத்தியூர் பால வயிரவநாதன் 87
کسعه S
சாவதானமாகத் தப்பும், தவறும் தினமும் செய்து கொண்டுதானிருக்கின்றோம்.
எம்மால் பிறர் செய்யும் துன்பங்களை ஏற்றுக் கொள்ள முடியாது. அவை அற்பமாக இருந்தாலும்கூட எமது வெறுப்புணர்ச்சி பன்மடங்காகி பழிதீர்க்க முயல்கின்றோம். இவைகளைத் தாண்டி, சிக்கல் இன்றி வாழ்க்கையை மகிழ்வுடன் கழித்தல் என்பதே ஒரு பெரும் சாவலாகிவிட்டது.
அச்சம் நீங்கிய திறந்த மனது மகிழ்வான வாழ்விற்கு முதல் படியாகும். பாரமின்றி நெஞ்சை வைத்துக் கொள்ளவேண்டும். வீணான நினைவுகளால் அனுதினம் அல்லல்படுகின்றோம். நினைவுகளை அழிக்க முடிவதில்லை. துன்ப நினைவுகளும், வேண்டாத கற்பனைகளும் மட்டுமே ஆழமாகப் பதிந்து போக, சந்தோஷங்களும், நற்சிந்தனைகளும் உடன் தொட்டு மறைவதுமேன்? நல்ல விடயங்களை மட்டும் இதயத்தில் பூட்டி வைத்து, தேவையற்ற குப்பைகளைத் துரத்தி பிடிப்பது எங்கனம்?
கேட்பதை, பேசுவதை, பிறரிடம் பழகுவதை சிறந்த முறையில் பயன்படுத்திக் கொண்டாலே போதும். தொடர்ந்தும் நாம் தூய்மையற்ற பேச்சுக்களைக் கேட்டாலோ, அந்த பாஷைகள் எம்மை அறியாமலேயே தொற்றிக் கொண்டுவிடும். இப்படியேதான் பிறரிடம் பழகுதலுமாகும். நல்லவர்கள், பெரியோர்களிடம் மட்டுமே பழக வேண்டும் என்று சிறு வயதிலிருந்தே எமக்குச் சொல்லித் தந்திருக்கின்றார்கள். அப்படியாயின் ஏனையோரை ஒதுக்கிவிடுவதா என்கின்ற கேள்வியும் எழுகின்றது.
உலகினை உய்விக்க வந்த தீர்க்கதரிசிகள் அச்ச உணர்வின்றி உபதேசித்தனர். ஆனால் பாவிகள் இவர்களைக் கண்டு பயந்தனர். ஒளி வந்தால் இருள் விலகுதல் இயல்பு. நியாயங்களைக் காணநேர்ந்தால் அநீதி அரண்டுவிடும். ப்ோலிவேடம் புரண்டுவிடும். உண்மையாக வாழ்பவனை அச்சம் ஆக்கிரமிக்காது.

Page 47
(88. வாழ்வியல் வசந்தங்கள் Y-----”
ஒதுக்கப்பட்டவர்கள் என்று ஒருவருமேயில்லை. எத்தகைய குணாம்சங்களைக் கொண்டவர்களையும் சமூகம் ஒதுக்குவது தகாது. அவர்களுக்குள்ள பிரச்சனைகளை, அதன் தாக்கத்தை நாம் தெரிந்துகொள்ள முயலவேண்டும். எல்லோரையுமே சமூகத்திற்கு உகந்தவர்களாக மாற்றுவதே, சமூகத்திற்கு உள்ள முதல் பணியாக இருந்தால், தேவையற்ற ஆத்மாக்கள் sts எவருமே இருக்கமாட்டார்கள். குற்றமிழைத்தவர்களை ஒதுக்கி வைத்துவிடுவதால், அவர்கள் மட்டுமல்ல, சமூகமும் ஒதுங்கி விடுகின்றது. சமூகத்திற்கு என ஒரு பொறுப்பு உள்ளது அது வெறுப்பினை உமிழ்வது அல்ல. அரவணைத்துச் சமூகத்தில், ஏற்றவர்களாக, ஏற்றுக்கொள்ள வைக்க முயற்சி செய்தலே உகந்ததாகும்.
எல்லாமே நிலையானது என்கின்ற தப்பான எண்ணம் கொண்டிருப்பவர்கள், செய்கின்ற தப்புக்களுக்குத் தீனி போடுபவர்கள்தான். இந்த குறுகிய வட்டத்திலிருந்து வெளிவர பலர் விரும்புவதுமில்லை. இவர்கள் பொய்யான இந்த முகமூடி வாழ்வு உடைபடும் என அச்சப்பட்டுக் கொள்பவர்கள். திறந்த மனதுடன் செயல்படுபவனுக்கு, அச்சம் விலகிய எதனையும் ஏற்கின்ற துணிவும், சத்தியத்தின் சேவைகளை முன்னெடுத்துச் செல்லும் பக்குவநிலையும் தானே வந்து விடுகின்றது. இவர்கள் இயற்கையின் பாதிப்புக்களை ஏற்பார்கள். பொய்யான கற்பனை வாதங்களைக் கண்டிப்பார்கள். எவரையுமே சமமாக நோக்குவார்கள். பாவங்களை எதிர்க்க - பொசுக்கப் பயம் கொள்ள மாட்டார்கள்.
மனிதர்கள் அசுத்தப்படாமல் வாழ உலகம் எத்தனை வழிவகைகளைச் சொல்லிக்கொடுத்து வருகின்றது. வழிபாடுகள் என்றும், அனுஷ்டானங்கள், கிரியைகள் என்றும் மனப்பக்குவத்திற்காக வழி வழியாக பல நூற்றாண்டுகளாக ஒதிக் கொடுத்தும்கூட, இவை வெறும் ஆசாரத்துடன் நின்று விடுகின்றன. பொய்மை, நீதியற்ற வாழ்விற்கு முடிவு எடு, இந்த அநீதியான இயல்பிற்கு மட்டும் அச்சப்பட்டு, உன்னைத் தூய்மை

பருத்தியூர் பால வயிரவநாதன் '89
Ynxt-a-us-Y செய் என்பதை மக்கள் ஏற்காதவரை, உலகம் தெளிவற்றதாகேவே போய்விடும்.
பாவம் புரிய, அஞ்சாமல் இருப்பதே வீரம் என்றாகிவிட்டது. ஆணவத்துடன் உலா வருவதே வரவேற்கத்தக்க வீரமாகிவிட்டது. தீமைகளைப் பாவங்களை எதிர்ப்பவர்கள் வாழத் தெரியாதவர்கள் போல் பார்க்கின்றார்கள். எத்தனையோ நபர்கள் நன்மைகள் செய்வதைக் காட்டிலும், தீமைகளைச் செய்வதில் உற்சாகம் காட்டுகிறார்கள். இவர்கள் தீமை செய்யுமுன் ‘அறிவு வந்து தடுக்குமெனப் பயந்து உடன் கெடுதல் செய்வதில் முனைப்பாக இருக்கின்றார்கள். தாங்கள் கொடுக்கின்ற தண்டனை வீரம் என்று வீராப்பு வேறு பேசுகிறார்கள். இவைகளை நாம் ஆராய்ந்து பார்த்தால், இவர்கள் நல்ல செயல், நன் நடத்தைகள், நேர்மை இவைகளின் மேல் குரோதமும், பயமும் கொண்டவர்களாகவே இருப்பர். பாவ காரியங்களைத் தடுப்பவர்களை இவர்களுக்குப் பிடிக்காது.
உலகினை உய்விக்க வந்த தீர்க்கதரிசிகள் அச்ச உணர்வின்றி உபதேசித்தனர். ஆனால் பாவிகள் இவர்களைக் கண்டு பயந்தனர். ஒளி வந்தால் இருள் விலகுதல் இயல்பு நியாயங்களைக் கண்டால் அநீதி அரண்டு விடும். போலி வேடம் புரண்டுவிடும். நேர்மை நோக்கும், நிதான புத்தியும் இருக்கும்வரை அச்சத்திற்கு இங்கு இடமேயில்லை. உச்சி மீது வான் இடிந்து வீழுகின்ற போதிலும் அச்சமில்லை, அச்சமில்லை அச்சமென்பதில்லையே என்றான் பாரதி எதையும் ஏற்கின்ற பக்குவத்தை நாம் பெற்றேயாக வேண்டும். ஏன் எனில் நாம் இயற்கையுடன் இணைந்தவர்கள். அதன் ஓட்டத்திற்குட்பட்டவர்கள். தெரிந்துகொண்டு தெளிந்தால், பயமற்ற சீரிய வாழ்வுதானே?
தினக்குரல் 05.11.2000
<>

Page 48
பாலுணர்வும் பண்பும்
கிளர்வினையூட்டுவதும், இன்பகரமானதும், அதே சமயம், பிரச்சனைக்குரிய சமாச்சாரமாக, இன்றுவரை பாலுணர்வு என்பது தலையாய இடத்திலேயே உள்ளது. உலகில் உயிர்கள் தோன்றியவுடனேயே பாலுணர்வு என்கின்ற இந்தத் தகிக்கும் தாகம் கூடவே எழுந்துவிட்டது. இது ஒன்றும் கேவலமானதோ, அருவருக்கத்தக்கதோ அல்ல. இது உடலுடனும், மனதுடனும் சங்கமிக்கும் அத்தியாவசிய தேவையாக உள்ளது.
ஆயினும், ஒரு எல்லைக்குள், ஒழுக்க வரம்பிற்குள், சமூக நியதிக்குள் உள்ள கலாசார வட்டத்தினுள் இருக்கின்றவரை, ஆபத்தில்லாத பாலியல் என்கின்ற செக்ஸ் இனிமையானதுதான்.
கட்டுப்பாட்டினைக் கடக்கும்போதுதான், சச்சரவு, பழிப்பு, இழிநிலை என்பன சூழ்ந்து கொள்கின்றன. காதல் வாழ்வின் ஆரம்பமே பாலுணர்வில்தானே முளைவிடுகின்றது. உடல் கூற்று நிபுணர்கள் இதனையே வலியுறுத்துகின்றனர் என்றாலும் காதல் தெய்வீகமானது, பவித்திரமானது, பூர்வ ஜென்ம பந்தம் அது, இது என்றும் இதன் புனிதம் பற்றிப் பேசப்படுகின்றது.
ஈர்ப்பு இன்றிக் காதல் வந்துவிடுமா என்ன?
 

பருத்தியூர் பால வயிரவநாதன் (9)
سوسهها
இது அழகுடன் மட்டும் சம்பந்தப்பட்டதுமல்ல. மேலும் ஆண், பெண் ஈர்ப்பிற்குப் பற்பல காரணம் கூறுகின்றார்கள். இது இறைவனால் இணைக்கப்பட்ட பிணைப்பு. இறைவனால் கொடுக்கப்பட்ட வரம் என்றவாறுதான் இதன் தாத்பரியமும் துலங்குகின்றது.
கலைஞர்களும், கவிஞர்களுமே தம் பங்கிற்கு காதல், காமம் பற்றி அக்குவேறு, ஆணிவேறாகவும் பிரித்து, அறுவை சிகிச்சை புரிந்து, அதனுள் என்ன இருக்கின்றது என ஆராய்ந்து தத்தம் கண்டுபிடிப்புக்களை, முடிவுகளை கவிதையாகவும் காவியமாகவும் வடித்து விடுகின்றார்கள். ஆயினும் எல்லோரும் சேர்ந்து ஒரு பொது முடிவினை சொல்ல முடியாது திணறினாலும்கூட, அடிப்படையான விஷயத்தில் ஒத்துப் போகின்றார்கள். காதலுடன் இணைந்தது காமம் எனினும், வாழ்வின் இளவயதின், இறுக்கமான பிணைப்பினை காமமும் கூடவே பிணைந்துவிடுகின்றது.
எனினும், காதலும், காமமும் கொச்சைப்படுத்தக்கூடிய ஒன்றுமல்ல. அனுபவமும், முதிர்ச்சியான அறிவு நிலையும்கூடி விடுகின்றபோது காமம் கழன்று காதல் பிணைப்பு இறுதிவரை துணை நிற்கின்றது.
இதுதான் உண்மை,
எனினும், காதல் வாழ்வை, வாழ்வுப் பிணைப்பின், பாலுணர்வுதானே ஆதாரமாக ஆரம்பித்து வைக்கின்றது?
ஒரு எல்லைக்குள், ஒழுக்கவரம்புக்குள், சமூக நியதிக்குள் உள்ள கலாசார வட்டத்தினுள் இருக்கின்றவரை, ஆபத்தில்லாத பாலியல் என்கின்ற "செக்ஸ் இனிமையானதுதான். கட்டுப்பாட்டினைக் கடக்கும்போதுதான், பாலுணர்வே பழித்தலுக்கு ஆளாகின்றது. உண்மையில் கட்டுப்பாடான பாலியல் உறவுகூட ரசனையுடன் கூடிய ஒரு கட்டுப்பாட்டு நெறிதான். தன் ஆத்மாவிற்கும், உடலுக்கும் தீங்கிழைக்காமல் இந்நெறி காக்கப்படல் வேண்டும்.

Page 49
'g2', வாழ்வியல் வசந்தங்கள்
ممستعمخ . எப்படியிருப்பினும், இது பற்றிப் பேசினால் மட்டும் பலர் முகம் சுழிக்கின்றனர். பாலுணர்வு வயப்பட்டு இதன் ஆட்சியில்லாமலா இந்த உலகம் உதயமானது?
இது வெறும் களிப்பூட்டலுக்காக மட்டுமல்ல; வாழ்வுக் கொரு அர்த்தத்தையே, இவ்வுணர்வு சொல்லிக் கொடுக்கவில்லையா? நாம் ஆசைகளைத் துறந்த ஆத்மாக்களைப் பற்றி இந்த இடத்தில் பேசுவது பொருத்தமானதும் அல்ல. சாமான்ய மனித நிலையில் இருந்து இதுபற்றிச் சிந்திப்போம்.
உலகம் எப்படியும் இயங்க வேண்டியுள்ளது. அதுவும் சுறுசுறுப்பாக இயங்க வேண்டும். ஜனனம், மரணம் சாஸ் வதமானதே. மரணம் தொடர்ந்து செல்லச் செல்ல ஜனனங்களும் அறிமுகம் செய்து கொள்ளுகின்றன. எனவே ஏதோ ஒரு வழியில் இந்த நிகழ்வுகளைத் தடை போடமுடியாது. இவை மனிதனுக்கு மட்டுமே பொருந்துவன அல்ல. Fasa ஜீவராசிகளுமே ஆண் பெண் உறவை நாடி ஒன்றை ஒன்று எப்படியோ கண்டு கொண்டு இணைகின்றன. தாவரம், செடி, கொடிகூட இதற்கு விதிவிலக்கல்ல. தாவரங்கள் தம் இனத்தைப் பெருக்க, தன் பூவினுள் மகரந்தச் சேர்க்கை நடத்த எத்தனை உத்திகளைக் கையாளுகின்றன? இவை இதனை யாரிடம் போய் கற்றுக் கொண்டன? இயற்கை என்கின்ற ஆசான், சொல்லாமல், சொல்லித் தருகின்ற காரியங்கள்தான் எத்தனை? வயது வந்த பின் நாம் இது பற்றிச் சொல்லிக் கொடுக்கவா வேண்டும்?
ஆயினும், தற்போது, இளவயதினருக்கு பாலுணர்வு (செக்ஸ்) பற்றிய அறிவை ஊட்டவேண்டுமென உலகில் உள்ள அரசுகள் நினைத்து, அதுபற்றிய அறிவையும் தெளிய வைக்கப் பற்பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. ஒரு கட்டுப்பாடான சமூகத்தினை உருவாக்குதல் என்பதே இதன் நோக்கமாகும்.

பருத்தியூர் பால வயிரவநாதன் 693 )
سعیسها எந்தவிதமான உதவியுமின்றி வெறும் மந்திரங்களாக மனிதன் வாழமுடியாது. சரி, தவறு பற்றியும் தெரிந்து கொள்ளல் வேண்டும்.
இயற்கையான அறிவு கிடைப்பினும்கூட, பலர் அதை மீறி மனம் போனவழி, கட்டுப்பாடற்ற விதத்தில் புறச்சூழலாலும் உந்தப்பட்டு சீரழிவதை நாம் கண்டு வருகின்றோம். முன்பு எல்லாம் இதுபற்றிய அறிவு மூடப்பட்டேயிருந்து வந்திருந்தது எனக் கூறுவதை நாம் ஏற்க முடியாதுள்ளது.
பொது இடங்கள், கோவில்கள், ஏடுகளில் எல்லாம் காதல், காமம், பாலியல் பற்றி குறிப்பிடப்படாமல் இல்லை. வாத்ஸாயனரும், கொக்கோக முனிவரும் இன்று பிறந்தவரில்லை. கஜீராஹோ, எல்லோரா சிற்பங்கள் இன்றா வடித்தெடுக்கப்பட்டன? இவை கூறும் உண்மைகளும், தத்ரூப வடிவங்களும் பிரமிக்கத்தக்கவையே. இவை பற்றிய ஏராளமான விளக்கங்கள் எல்லாம் உலகிற்கு எப்போதோ கிடைத்துவிட்டன. சிற்பங்கள், சிலைகள் கலை நுட்பத்துடன் காதல் உணர்வைத் தட்டி எழுப்பவில்லையா? இதில் என்ன தப்பு?
எல்லாமே ஒரு காரணத்தினால்தானே மனிதன் இவைகளை ரசனையுடன் படைத்து வைத்தான். இப்போது மட்டும் ஏன் செய்யக்கூடாத தவறுகள் போல், அரு வருப்புடன் நோக்குகின்றனர். இவை எல்லாம் இதனால் மறைந்துவிடுமா என்ன? அடுத்து இவைபற்றிய தெளிவான அறிவை, நோக்கை எப்படி இளவயதினருக்கு ஊட்டவேண்டும் என்பதில் கூட பிரச்சினைகள் உள்ளன. இது ஒன்றும் புதுமையான விஷயமில்லை என்று கூறிக்கொண்டு, விகற்பமின்றி, சர்வ சாதாரணமாக லட்ஜையின்றி, சங்கோஜமின்றிச் சொல்லிக் கொடுத்துவிடக்கூடிய சங்கதிகளுமல்ல. மிகவும் பக்குவமாக, அவர்களைத் தீயவழிக்கு இட்டுச் செல்லாதிருக்கும் விதத்தில் புரியும்படி சொல்லிக்

Page 50
'9' வாழ்வியல் வசந்தங்கள்
تصحیح கொடுக்கவேண்டும். அவர்களிடம் தெளிவு பிறந்துவிட்டால், பிரச்சினைகள் எழ வாய்ப்பில்லை.
அண்மையில், பள்ளிக்கூட மாணவர்களுக்கு, சமூக நல நிறுவனம் ஒன்றினால் வழங்கப்பட்டிருந்த, பாலியல், உடல் கூறு தொடர்பான நூலைப் படித்தேன். இதை படித்த சில மாணவர்கள், மாணவிகளைக் கிண்டலடித்ததாக அறிந்தும் கொண்டேன். நல்ல ஒரு விஷயத்தினை அழகாக, தெளிவாக எழுதியிருந்தும் கூடச் சிலர் அதன் நோக்கத்தை அறியாது கீழ்த்தரமாக நடந்து கொள்ளுகின்றனர். இதனை ஆசிரியர்கள்தான் மாணவர்களுக்கு எடுத்துக் கூறவேண்டும்.
மேற்கத்திய நாகரீகம் எம் கலாசாரத்தைப் பொறுத்தவரை, மிகவும் வித்தியாசமான ஒன்று என்பதில் எதுவித சந்தேகமும் இல்லை. எதையுமே பகிரங்கப்படுத்தல் என்பதில் மேலை நாட்டவர்கள் சிரத்தையாக இருக்கின்றனர். இதற்காக இவர்கள் தமது உடலைக்கூட அம்பலப்படுத்திக் கூத்தாடுவதை சிறந்த நாகரிகம் என ஏற்றுக் கொள்ளமுடியுமா? பண்பாடு என்பது ஒழுக்க நெறியுடன் ஒன்றிணைந்தது. கற்பு நெறியுடன் வாழ்தல் மட்டும் ஒழுக்க நெறியல்ல. உண்மையாக வாழுதல், உலகிற்கு உதவுதல், சேவை என்பனவும் ஒழுக்க நெறியுடன் பிணைக்கப்பட்டவையேயாகும். இதற்காக, மேற்கத்திய நாட்டினர், அனைவருமே, எம்மவரைவிடக் குறைவுபட்டவர்கள் அல்லர். ஒழுக்க நெறியில் அவர்களும் முதன்மையானவர்களே.
எனினும்,
இவர்கள் குடும்ப உறவு நிலை, ஒரு குறைபாடாகவுள்ள போதும், இதுவும்கூட கால வோட்டத்தில், இக்குறைபாடுகள், எமது கலாசாரங்களைப் புரிந்து கொள்வதன் மூலம் சீராகலாம். வரம்பு மீறிய பாலியல் தொடர்புகள், அதீத நாட்டங்கள், வசதி வாய்ப்புக்களால் இவர்கள் குடும்பங்களில் குழப்பம் ஏற்பட்டு,

பருத்தியூர் பால வயிரவநாதன் í s?
سعسع بعد
ஒருவரை ஒருவர் திருத்தமுடியாத சூழ்நிலையில் தன்னிச்சையாக நடந்து வருகின்றனர். தங்கள் கலாசார பாரம்பரியத்தில் ஆரம்பத்தில் இருந்தே ஒரு அசைக்கமுடியாத சமூகக் கட்டுப்பாட்டினை இது விடயத்தில் ஸ்தாபிக்கத் தவறியமையே ஒரு காரணமாகக் கூறலாம். பாசப் பிணைப்புக்கள் அங்கே அருகி வருவதற்கும் கூட யந்திரமயமான வாழ்வோடு கூடிய, உடல் இச்சைக்கு மட்டுமே முதன்மை கொடுக்கின்ற இயல்பும் பிரதான காரணம் என்பதில் சந்தேகமும் இல்லை. குடும்பத்தினைவிட நாட்டை நேசிக்கின்ற ஒரு விசாலமான மனப்பாங்கு இவர்களிடமிருந்து நாம் கற்கவேண்டிய ஒரு நெறியாகும். எனினும் இவர்கள் வாழ்ந்து வரும் சூழ்நிலைகள், வசதி, வாய்ப்புக்கள் குடும்ப கட்டுக்கோப்பினைப் பாராமுகமாக, அல்லது திசை திருப்பிவிடும் மனோநிலைக்கு இட்டுச் செல்லுகின்றது. இதனால் விரக்தியுற்று, இங்கே ஓடி வருகின்றனர். அகவாழ்வையும் புறவாழ்வையும் நன்கு புரிந்துகொண்ட நம்மவர்கள் குடும்ப வாழ்வில் பெரும்பாலும் சந்தோஷமாகவே வாழ்ந்து வருவதை நாம் மறுக்க முடியாது.
தமக்குரிய கடமைகளையும், தமக்குரிய உடல் தேவைகளையும் தெரிந்து வைக்காதுவிடின் வாழ்வின் முறைகளே திசை திரும்பிவிடும்.
புலன் வழி செல்லல், அதீத ஆசைகள், உடனே அனுபவித்துப் பார்த்துவிடல் வேண்டும் என்கின்ற வேட்கை, கூடா நட்பு, எப்படி இருக்கும் என, துர்நடத்தைகளையே ஆய்வு செய்யும் மனப்பாங்கு, மிதமிஞ்சிய கற்பனை, படிக்கக்கூடாத பார்க்கக்கூடாத உணர்ச்சிகளை அலைக்கழிக்கும் விடயங்களையே நோக்குதல் போன்ற செயல்கள் பாலுணர்வினைத் தூண்டி தப்பான காரியங்களில் மனிதனை அடிமைப்படுத்திச் சிறுமைப்படுத்தியே விடுகின்றன.

Page 51
{96 வாழ்வியல் வசந்தங்கள்
کسعه தூயமென்மையான காதலும், காமமும் இணையும் போதுதான் களங்கம் கற்பிக்க முடியாத கூடல் சங்கமமாகின்றது. இந்த இரண்டும் அற்ற சேர்க்கை பவித்திரமானதும் அல்ல. காதல் இல்லாத கூடல் வெறும் சடங்குகளின் சந்திப்புத்தான். காதல் இல்லாத தம்பதிகள்தானே இடை நடுவில் கலைந்து போகின்றார்கள். தூய காதலுக்கு இளமை, முதுமையில்லை. மாறாக முதுமை வரும்போதுதானே, கணவன் மனைவியரிடம் ஐக்கியம் வலுப்படுகின்றது? ஆரம்ப காலத்தில் வெறும் இனக்கவர்ச்சியால் உந்தப்பட்டவர்கள்கூட இறுதியில், காலம் என்கின்ற இயற்கை நிகழ்வின் ஆட்சியினால், வெறும் பாலியலுக்கும் அப்பாற்பட்ட, தூய வாழ்வின் முழுமையை நுகர்ந்து கொள்கின்றார்கள். இந்த வாழ்வில் ஒரு புதுமை என்னவெனில், முதுமையின் பின் இளமையான அன்பு பரிணமிப்பதுதான். இத்தகைய நிறைவாழ்வை வாழ்பவர்களைக் காலம் ஒன்றும் செய்துவிட முடிவதில்லை. மாறாக முதுமையிலும் உளவியல் ரீதியாக, சுகவாசிகளாகவே ஜீவித்துக் கொண்டுமிருக்கின்றார்கள்.
வெறும், பாலியல் வாழ்வே வாழ்வு என வாழ்ந்து வருபவர்களின் அவல வாழ்வைக் கண்டபின்னும் இதுபற்றிச் சிந்திக்காதுவிடுவது பேதமையன்றோ! ஒருவனுக்கு ஒருத்தி என்பதுதானே எமது ஒழுக்கக் கோட்பாடு. இதனை மீறி வாழ்ந்து வந்தமையினால் இறைவன் கொடுத்த சாபங்களை மக்களில் பலர் அனுபவித்து வருகின்றனர். எயிட்ஸ் என்றும், வேறும் பலவித பாலியல் நோய்களால், தீர்க்க முடியாத தொல்லைகளை விலைக்கு வாங்கி, விடுபடமுடியா முடிவினைத் தேடிக்கொள்கின்றார்கள். இந்த அவல நிலை தேவைதானா?
இறைவன் படைத்தல் என்கின்ற செயலில் எதை நினைத்தானோ அதன் பொருட்டு மனிதனையும், சகல ஜீவராசிகளையும், உணர்வுகளுக்குள் பூட்டி, தான் கருதியதன்

பருத்தியூர் பால வயிரவநாதன் ίο
Ys-sur-Lo-~Y
பிரகாரம் ஜகத்தினைத் தினம் தினம் புதுப்பித்துக் கொண்டிருக்கின்றான்.
எனவே,
இயக்கும் இறையின், சித்தத்தினை குறை காணமுடியுமோ? படைப்பின் ரகசியம், பரமரகசியமாயினும் கூட ரகசிய உணர்வுடனேயே பாதுகாக்கப்படுவதே சிறப்பானதும், புனிதமானதுமாகும். இரகசியமில்லாத, உறவில் இன்பமில்லை. ஆண், பெண் உறவினைப் பகிரங்கப்படுத்துதல் என்பது கூட ரசனையற்றதேயாகும்.
ரகசியப்படுத்தப்பட வேண்டியவை, பாதுகாக்கப்பட வேண்டியனவையேயாம். ஆனால் இவை வெட்கப்படத் தக்கவையல்ல. இவைகளின் தூய்மை வெட்ட வெளியில் காயப்படுத்தப்படக்கூடாது. செக்ஸ் என்கின்ற ஆண், பெண் உறவுகளைக் கொச்சைப்படுத்துதல் என்பது, இதனைக் கண்டபடி திசைகள் தோறும் உலாவரச் செய்யும் செயலால் ஏற்பட்டதேயாகும்.
இத்தகைய தவறான செய்கையினால் காலப்போக்கில் இந்த உறவின் மீதும், இதன் தனித்துவ புனித்ததன்மை மீதும் சலிப்பு ஏற்பட்டுவிடலாம். இதனால் ஏற்படும் விளைவுகள் கூடப் பாரதூரமாக அமைகின்றது. விரக்தி, தோல்வி, தனிமையுணர்வு ஆகியன மனதைக் கசக்கிவிடும். பொருட்களின் தேவைகள் என்பதுகூட அவைகளைத் தகுந்த தருணத்தில் பாவிக்கும் விதத்தையும் சூழ்நிலையையும் பொறுத்ததே. சின்ன வயதில் இத்தகைய உறவுகளினால் ஏற்படும், கசப்பான நிகழ்வினால், பிஞ்சில் பழுத்த காயாய் வாழ்வே சப்பென்று போய்விடுகின்றதே. இந்த நிலை தொடரக்கூடாது என்றுதானே, பெரியோர்கள் எவ்வளவோ பாடம் புகட்டிக் கொண்டு வருகின்றார்கள். சமூகத்தில் உள்ள சகல தரத்தினரையும், இயல்பான மிதமான சகவாழ்விற்குத் தயார்ப்படுத்தலே, எல்லோருக்குமே உரிய முக்கிய பொறுப்புமாகும். י , ,

Page 52
(33) வாழ்வியல் வசந்தங்கள் ”سبق یہ“
உண்மையில் கட்டுப்பாடான பாலியல் உறவுகூட ரசனையுடன் கூடிய ஒரு கட்டுப்பாட்டு நெறிதான். ஆனால், ஒழுக்கமும் எவரையும் பாதிக்காமலும், தன் ஆத்மாவிற்குத் துரோகம் செய்யாமலும் அமையவேண்டும். இது மானுடத் தேவையாதலால், பண்பு பேணல் மேலோங்கி நிற்றலும் முதன்மையுறுகின்றது. பண்பு காக்கா எச்செயல்களுமே துன்பம் சுமக்கின்ற ஈனச் செயல்களே,
தினகுரல் - 25-11-2000

血
திமக்கு நண்பர்கள் எவருமே கிடையது எனச் சிலர் பெருமையுடன் கூறிக் கொள்கின்றார்கள். இது, இவர்கள் பிறர் மீதும், தம்மீதும் கொண்டுள்ள நம்பிக்கையீனமான போக்கும், ஒருவித மமதையான குணவியல்புகளின் வெளிப்பாடுமேயாகும்.
ஒருவர் துணையின்றி இன்னொருவர் வாழுதல் என்பது நடைமுறைச் சாத்தியமற்றதே. தன்னிடத்தே நம்பிக்கை கொள்ளாதவன், பிறரிடத்தே எப்படி நம்பிக்கையுடன் பழகமுடியும்?
எதையுமே எதிர்பார்த்துத்தான் நட்பு உருவாகவேண்டும் என்பதில்லை, நட்பு அன்பின் அடித்தளத்திலே சமைக்கப்பட்டுள்ளது. உண்மை நட்பு கொண்டவர்கள் எதிர்பார்ப்பதெல்லாம், பரஸ்பர தூய அன்பினை மட்டும். இதில் இருந்து பிறக்கும், ஆறுதல், பரிவு பிணைப்பு என்பதனைத்தான். எனவே பொருள், பண்டத்தினை மட்டுமே மையமாக நட்பு உருவாதல் என்பதுகூட போலித்தனமானதே.
மனதில் உள்ள இறுக்கம் குறைந்து, அதனால் ஆறுதல் பெறும் மார்க்கத்தினை நட்பைப் பெற்றவர்கள் தேடிக் கொள்ளுகின்றனர். எனவே துன்பம் தொலையும், வடிகாலாக அமைய நல்ல நண்பர் சகவாசம் தேவைப்படுகின்றது.

Page 53
வாழ்வியல் வசந்தங்கள் , جریمه»
எதையும் சார்ந்திருத்தல் என்பது தவிர்க்கமுடியாத வாழ்வு முறையாகிவிட்டது. எத்தனையோ பேர் சும்மா சுற்றியிருந்த போதும்கூட சமயத்தில் துணை செய்ய, உதவி நல்க நல்ல நண்பர்களை நாம் இனங்கான வேண்டியவர்களாயிருக்கின்றோம். இது ஒரு சிரமமான காரியம்தான்.
எல்லோருமே தம்மை நல்லவனாகவே கருதிக் கொள்கின்றார்கள். தங்களின் செயல், நடத்தைகளை சரி எனவே நம்புகின்றார்கள்.
தம்மை ரகசியமாக வைத்துக்கொள்பவர்கள், தம்மீதே மட்டும் அக்கறை செலுத்துபவர்கள், பிறர் ரகசியங்களை அறிய ஆவலாக இருப்பார்கள். இதற்காகவே தமது நேரங்களைக் கழிக்கச் சித்தமாயிருப்பார்கள். இவர்கள் மற்றவரிடம் இருந்து பெறுதல், என்பதிலேயே கரிசனமாக இருப்பர். இவர்கள்கூட, தங்கள் திறந்த மனதுக்கு ஒருவருமே நிகரில்லை, என்னைப்போல என்னுடன் ஒத்துழைத்து நடக்க நல்ல மனுஷர் எவருமே இல்லையே என ஏக்கத்துடன் நடிப்பர்.
நல்ல சினேகிதராக நாம் இருக்கத் தயாரானால்தான் நல்ல நண்பர்கள் எமக்குக் கிடைப்பார்கள். எல்லோரையும் நாம் பார்க்கின்றோம். நாம் பார்க்கும் தோற்றத்தில் தம்மை உயர்ந்தவர்களாகவே காட்டிக் கொள்வார்கள். ஒருவனைப்பற்றிக் குறைகள், கோள்களைக் கூறினாலே தமக்கு வேண்டியவர்களின் நட்பை மிக இலகுவாகத் தேடலாம் எனவும் சிலர் கருதுகின்றனர்.
மனதில் உள்ள இறுக்கம் குறைந்து அதனால் ஆறுதல் பெறும் மார்க்கத்தினை நட்பைப் பெற்றவர்கள் தேடிக்கொள்கின்றார்கள், எனவே துன்பம் தொலையும் வடிகாலாக அமைய நல்ல நண்பர் சகவாசம் தேவைப்படுகிறது. நல்ல சினேகிதர்களாக நாம் இருக்கத் தயாரானால், நல்ல நண்பர்கள் எமக்குக் கிடைப் பார்கள், வலிமை, வசதியுள்ளவர்களைக் காக்கா பிடிப்பதே தமது நட்பில் சாதனை படைப்பதாகச் சிலர் கருதிக்கொண்டிருக்கின்றார்கள்.

பருத்தியூர் பால வயிரவநாதன்
ஒரு வருக்கு ஒரு வரைப் வைத்துக்கொள்ளுவோம். அவர்கள் மூலம் ஏதாவது அனுகூலம் பெற நினைக்கும் ஒருவர், இருவரிடமும் இவர்கள் குறைகள் பற்றியே அவர், சொன்னார் இவர் சொன்னார் எனக் கூறி குரோதத்தை பெற்றுத் தமக்கு வேண்டிய நன்மைகளை பெற்றுக்கொள்வதில் எவ்வளவு சமார்த்தியத்தை சிலர் கையாளுகின்றார்கள் தெரியுமா? வலிமை, வசதியுள்ளவர்களைக் காக்காய் பிடிப்பதே தமது நட்பின் சாதனை என்று கருதுபவர்களும் உள்ளார்கள்.
பண்பாடற்ற விதத்தில் கோள்களைக் கூறுபவன், அதனைக் கேட்பவர்கள் நட்பினில் என்ன தூய்மை இருக்கப்போகின்றது?
நட்புறவை உருவாக்குதல், வளர்த்தல், வலுப்படுத்தல் என்பது இன்னுமொரு சாராரை வலுவிழக்கச் செய்தலோ அன்றி அவர்களைக் கவிழ்ப்பதற்காகவோ அமைதல் தகாது. சுயநல சிந்தனைப் போக்குடையவர்களுக்கு, இது வெறும் லாபகரமான ஒரு தொழில் முயற்சியாகவே தென்படுகின்றது. இவர்கள் பெறுகின்ற சினேகிதர்கள்கூட கைகழுவிவிட்டு விடுவர் என்பதே 2-66ծ76օտպաnծա5.
பலர், பலருடன் கூடி வம்பளக்கும்போது, நேரில் கதைக்கத் தெம்பில்லாமல், தம்முடன் உரையாடிக் கொண்டிருந்தவரைத் தவிர, தமக்குப் பிடிக்காதவர்களை விமர்சனம் செய்கின்றனர். இவர்கள் அனைவருமே ஒரு வருக்குத் தெரியாமல் ஒவ்வொருவராக இவர்களைக் காணாத வேளைகளில் மற்றவர்களை மட்டம் தட்டிப் பேசி தங்கள் சினேகிதத்தினை வளர்த்துக் கொள்ளுகின்றனர். இது ஒருவர் மீது மற்றவர் சேறு பூசும் செயலைப் போன்றதுடன் தங்களைத் தாமே ஏமாற்றிக் கொள்வதுமாகும். சாதாரண குறுகிய மனித பலவீனம் உள்ளவர்கள் சிறந்த நண்பர்களாக இருக்கத் தகுதியற்றவர்களாவர்.

Page 54
( ́†02`) வாழ்வியல் வசந்தங்கள்
NesMY
ஆயினும், சிறிதளவாவது விட்டுக்கொடுத்து, மனிதநேயமுடன் நடந்துகொள்ள ஆரம்பித்தால் அகம்பாவம், தன்னை மிஞ்சி ஒருவருமே இல்லை என்கின்ற நினைப்புக்கள், குற்றம் காணும் மனப்பான்மை, தமது நோக்கத்திற்காகவே ஒரு வரை அண்டிக்கொள்ளும் இயல்புகள், சதா சந்தேக மனப்பான்மை, பொறாமை, காழ்ப்பு போன்ற இயல்புகள் நட்புறும் இயல்பினைப் பாதிக்கின்ற குணவியல்புகளாகும்.
என்னதான் நாம் ஜாக்கிரதையாக இருந்தாலும்கூட நண்பர்களிடத்தே அபிப்பிராய பேதங்கள் வரத்தான் செய்யும். எந்த நேரத்திலும் மனித மனோ நிலைகள், ஒரே நிலையில் இருக்கமுடியாது. இந்த நிலையைக் கடந்து, வாழப் பழகவேண்டும் மனதைப் பக்குவப்படுத்தி, ஒரே சீரான இயல்பினை உருவாக்கி, ஏனையோருடன் பழகத் தெரிந்து கொள்ளல் வேண்டும். இது கொஞ்சம் சிரமமாயினும்கூடப் பிறருக்கு எமது மன அழுத்தத்தைத் திணிக்காமல் இருக்கச் செய்தல் என்பது ஒரு பிரதான பண்பு என்பதை நாம் மறக்கக்கூடாது. அவர்கள் எங்களிடம் இருந்து எதிர்பார்ப்பது எங்களது நச்சரிப்புக்களையோ உறுத்தல் தரும் பேச்சுக்கள் ஏச்சுக்களையோ, குதர்க்க வாதங்களையோ அல்ல என உணர்ந்து கொள்ளுங்கள். பிரச்சினைகளுக்கான தெளிவினைப் பிறர் உதவி மூலம் கேட்டு, ஆலோசனைகளைக் கேட்டால் ஒன்றும் குறைந்துவிடப் போவதில்லை. இதற்காக ஒரு படி இறங்கி வந்து ஆலோசனை கேட்பதால், உண்மை நண்பர் கரிசனையாகப் பரிவாக அதை நோக்குவதால், மேன்மேலும் இரு வரிடையே பிணைப்புத்தான் வலுவடையும், விருப்பமில்லாதோரிடம் பேசுவதால் பிரயோசனமில்லை. இதனால் அவர்கள் கேலி பேசுவதும், இவர்கள் துன்பத்தினால் மன வேதனை பெறுதலுமே மிச்சமாகும்.
எனவே தூயநட்பை நாம் தேடியேயாக வேண்டும்.

பருத்தியூர் பால வயிரவநாதன் (10ો ܐܦܝܫܢܘܠ
ஏற்றத்தாழ்வு, ஜாதி, சமய வேறுபாடுகள் அனைத்தும் எல்லோரையுமே பாதிக்கின்றது. இது ஒரு தீராத நோய் என எல்லோருமே கூறி வந்தாலும்கூட இதிலிருந்து விடுபட பலரும் தயாராவதில்லை.
பணக்காரன் ஒருவன் பரம ஏழையுடன் நட்புக்கொள்ளத் தயாராவதில்லை. சினிமாக்களிலும் கதைகளிலுமே இதைப் பார்த்திருக்கலாம். காசு உள்ளவன், தன் சொந்தச் சகோதரர்கள் ஏழை என்றாலும் அண்டுகின்றானா? தன் போன்ற ஒருவனுடனேயே அவன் தொடர்புகளை வளர்த்துக் கொள்ளுகின்றான். உயர் பதவியில் உள்ளவன் தன் நிலையிலும் பல படி கீழேயுள்ள பணியாட்களுடனேயா சினேகம் வைத்துக் கொண்டிருக்கின்றான்? இவை நடைமுறை வாழ்க்கைக்கு ஒத்து வருகின்றதா?
தனது நிலைக்கும் கீழ் நிலையில் உள்ள ஒருவன் தனது நண்பர் என்று சொல்லவே தயங்குகின்றான்.
இந்த நிலையில், இந்த ஏற்றத்தாழ்வுநிலைகளைத் தகர்த்து நட்பு என்ற உன்னத உறவுகள் உருவாகும் என எதிர்பார்ப்பது கூடச் சிரமமானதாகவிருக்கின்றது.
இதனிடையே, படித்தவன் படிக்காதவன், சாதி சமய ஏற்றத்தாழ்வு போன்ற குறுக்கீடுகள் வேறு இந்த உன்னத உறவைப் பாதிக்கச் செய்கின்றன. என்றாலும் இவைகளை உடைத்துக் கொண்டு, ஒருவர் மீது ஒருவர் சினேகிதம் பாராட்டி நட்பை வளத்தாலும்கூட சமூகம் இதற்கு வரவேற்புக் கொடுத்தல் என்பதே பெரிய சவாலாக உள்ளது.
தங்கள் தரத்துடன், தங்கள் வர்க்கத்துடன் மட்டும் தொடர்பு வைத்துக்கொள்வதனால், பரந்த இந்த உலகம், என்ன ஒருமைப்பாட்டினைக் கண்டுவிடப் போகின்றது. குறுகிய வட்ட நேயப்பாடு என்பதே ஒரு ஏமாற்று வேலைபோல் ஆகாதா?

Page 55
(104) - வாழ்வியல் வசந்தங்கள் Ynx-...--~~~~Y
பாகுபாடற்ற நிலை தெய்வீகமானது. ஆயினும், இதுபற்றி கேட்க, வாசிக்கத்தான் இனிமையாக உள்ளது. இவை நிஜ வாழ்வினில் ஏற்றுக்கொள்ளும் நிலை எப்போது வரப்போகின்றது?
தெய்வீக அன்பினுள் நுழைந்து, நட்பினை இறுகப் பற்றி, உலகிற்கு எடுத்துக்காட்டாக வாழ்ந்து வந்தவர்கள், வாழுபவர்களைக் கூட நாம் கண்டிருக்கின்றோம். வெவ்வேறான திசைகளில், கருத்துக்களில் முரண்பாடானவர்கள்கூட நட்பைத் தங்களுக்குள் வளர்த்து வருவதை நாம் அறிவோம்.
நல்ல மனங்களின் முன் திரை எதற்கு?
அவரவர்க்குரிய கருத்துக்கள், கொள்கைகள் எல்லாம் சினேகிதர்களாக இருந்துகொள்ளத் தடைகளுமல்ல. ஒவ்வொருவர் கருத்துக்களுக்காக மோதிக்கொண்டு நட்பை உடைத்துக் கொள்ள வேண்டிய அவசியமும் கிடையாது.
எங்களைச் சுற்றியுள்ள போலியான சில சமூக திரைகளில் நாம் மறைந்து கொள்ளத் தேவையுமில்லை. இவைகளை உணர்ந்து உளப்பூர்வமாக ஏற்றுக்கொண்டால் நல்ல உறவுகள் எம்மை நாடிவரும். மன்னிக்காத மனமும், அடக்கவொண்ணா சினமும், அகங்காரமும், பொறாமையும் அடி மனதில் குடியமர்ந்து கொண்டால், நாம் சிரிப்பது, மகிழ்வது எல்லாமே நடிப்பு அன்றிப் பிறிதில்லை. இதைத்தான் சிலர் செய்து கொண்டிருக்கின்றார்கள்.
விட்டுக் கொடுக்காதவனுக்கு, நட்புக் கிட்டுவதில்லை. எட்ட நிற்பவனுக்கும் நட்புத் தொடுவதில்லை. கிட்டே வந்து, மானுடத்தை நேசிப்பவனுக்கோ கண்ணில் பட்டவர்கள் எல்லோருமே ஒட்டி உறவாடும் நல்ல நண்பர்களே.
<>
தினகுரல் 10.12.2000

105
才
குற்றம் காணுதல் M
67ங்களில் Lu sui வித்தியாசமான அல்லது தவறான நபர்களைப் பற்றிப் பேசும்போது, தங்களுக்குப் பிடிக்காதவர்களையே உதாரணம் காட்டிப் பேசிக்கொள்வார்கள். அத்துடன் நிற்காது, அவர்களுடன் தொடர்புடைய குடும்ப உறுப்பினர்கள், அவர் சார்ந்த ஊர், ஊர் மக்கள் போன்றவர்களை சர்வசாதாரணமாகக் கொச்சைப்படுத்திப் பேசிவிடுவார்கள்.
உண்மையில் இது விடயங்களில், விவகாரங்களில், எம்மையறியாமலே அதி சுவாரஸ்யமாக ஈடுபாட்டுடன் கதைத்து விடுவோம். எங்களால் விமர்சிக்கப்படுபவர்களைவிட நாம்கூட அதைவிட பலவீனம் உள்ளவர்களாகவோ, தவறுகள் உடையவர்களாகவோ இருந்து விடுவதுமுண்டு.
ஒவ்வொரு தனிமனிதனுக்கும், ஒவ்வொரு சமூகத்திற்கும் தனிப்பட்ட குணாதிசயங்கள், பழக்கவழக்கங்கள் பிரத்தியேகமாக அமைந்தும் இருக்கின்றன. இவை தனித்துவமானவை. ஏன் பிரதேச ரீதியாகவும் கூட சில வித்தியாசமான வாழ்வுமுறைகளும் உண்டு.

Page 56
வாழ்வியல் வசந்தங்கள் 106 كم YNISM
எமக்குரிய ஒழுக்க, கலை, கலாசார விடயங்களில் தனித்துவம் பேணப்படுவது போலவே ஏனைய சமூகங்களுக்கும் உண்டு. இதை நாம் ஏற்றுக்கொண்டு, அதற்குக் கெளரவம் அளிக்கவேண்டும்.
மாறாக எமக்கு மட்டுமே, ஒரு தனித்துவமான பண்புகள் உண்டு. ஏனைய சமூகங்களுக்கு அது இல்லை என விதண்டாவாதம் பேச முடியுமா?
ஒரே ஊரிலேயே, ஒவ்வொரு குடும்பங்களுக்கிடையே வேறுபாடான அம்சமான குண நலன்கள் இருக்கத்தான் செய்யும். எமது செயல்களைத் தவிர பிறர் செயல்கள் எமக்கு நகைப்பூட்டுவனவாக நாம் கருத முடியாது. ஒரே பலவீனம் எல்லோரையும் பிடித்திருந்தாலும்கூட மற்றவரைப் பற்றிக் கிண்டலடித்து, அலசி ஆராய்தல் சரியானதல்ல.
இந்தச் செயல் குற்றம் காணுதல் என்ற இயல்புடன் பொருந்தியதே. குடும்பத்தில் மாமியார், மருமகள் பிரச்சினைகளைப் பாருங்கள். மாமியார் முன்னர் செய்த எந்தச் செயல்களை, மருமகள் வந்து புதிதாகச் செய்துவிட்டார். தனது, கணவருடன் ஈடுபாடாகவும், நெருக்கமாகவும் உரிமை எடுத்து இதே மாமியார், தானும் கல்யாணமான பின்னர் நடந்து கொள்ளவில்லையா? மருமகள் மட்டும், தனது மகனுடன் இப்படி நடந்துகொண்டால், புருஷனை மடக்கிப் போட்டுவிட்டாளே
சதா நச்சரிப்புக்கள் போன்ற கண்டிப்பு. குறை கூறுதலைப் பழக்கமாக்கிக் கொள்ளுதல், சமூகத்தில் இருந்து எம்மை விலக்கி வைத்து விடுமன்றோ? புத்திமதிகளைக்கூடச் சந்தர்ப்பத்திற்குத் தகுந்த மாதிரித்தான் கூறுதல் வேண்டும். சந்தர்ப்பம் அறியாமல் இலவச ஆலோசனைகள்புத்திமதிகளை உபதேசித்தல் எல்லா நேரத்திலும் சரிப்பட்டு வராது. இவை உற்ற துணையையே உதறும் செயலாக மாறிவிடும்.

பருத்தியூர் பால வயிரவநாதன் {{|07}}
محسومح؟ என்னைப் பிள்ளையுடன் பிரிக்கச் சூழ்ச்சி செய்கின்றாளே எனப்
புலம்பிக் குதித்துக் கொதித்தெழுகின்றாள்.
இந்தப் பொறாமையுணர்வு, அதிகாரப் போட்டியாக மாறி மருமகளுடன் குற்றம் காணும் இயல்பினை உருவாக்குகின்றது. எம்மைப் பிடிக்காதவர்களிடம் மட்டுமல்ல. சாதாரண சாமானியவர்களிடம் கூட இந்தக் கசப்பான கைங்கர்யத்தினை பலரும் செய்து வருகின்றனர். பழக்க சகவாசத்தில் சிலர் குறை காணுதல் என்பதைக் கைக்கொண்டு, காலப்போக்கில் அவர்களின் மனதில் நிரந்தரமாகவே இந்த நோய் பீடித்து அவர்களை அரித்து விடுகிறது. நல்ல செயல்கள்கூட எல்லாம் பொல்லாதவையாகத் தோற்றம் காட்டி விடுகின்றன.
அது மிகவும் கொடிய ஒரு நிலை. காமாலைக் கண்ணுக்குக் கண்டதெல்லாம் மஞ்சள் நிறமாயிருக்கும் அல்லவா? இந்தக் குற்றம் காணும் நோய், அதிகார வர்க்கத்தில் போய் ஒட்டிக்கொண்டால் இதன் தாக்கம் பற்றி இயம்பவே முடியாததாகிவிடும்.
கல்விக்கூடத்தில்கூட கல்வி கற்பிக்கும் ஆசான்கள் சிலர் வேண்டுமென்றே, சில தமக்குப் பிடிக்காத மாணவர்கள் மீது வஞ்சம் தீர்க்கும் விதத்தில் தவறுகளை மிகைப்படுத்தி விடுவதால், ஒரு மாணவ சமூகமே பெரும்பாதிப்புக்குள்ளாகி விடுகின்றது. பேசிப் பிணக்குகளைத் தீர்ப்பதை விடுத்து, தப்புக்களையே, தொடர்ந்தும் அறிவுரை என்ற பெயரில் எச்சரிக்கை செய்வதால், மாணவர்கள் எரிச்சலடைந்து அதன் தாக்கத்தால், கல்வியிலேயே கோபமடைந்து விடுவதுபோல் நடந்து கொள்ளுகின்றார்கள். ஆனால் தனி நபர்கள் மீது கொண்ட வெறுப்பு தம் வாழ்வின் அடித்தளத்தையே, தகர்க்கும் விதமாக மாணவர்களும் நடந்துகொள்வது, மிகவும் பரிதாபத்திற்குரிய விஷயமாகும்.

Page 57
}ே வாழ்வியல் வசந்தங்கள் Ynu---------~~Y
இந்த விடயத்தில் ஒரு முக்கியமான விஷயத்தினை நாம் மனதில் இருத்திக் கொள்ளுதல் நல்லது. நமது எதிரிகளின் விமர்சனங்களுக்கு காது கொடுக்காமல் இருப்பதைக் கற்றுக் கொள்ளுதல் வேண்டும். நாம் அநாவசிய விஷயங்களைத் தூக்கிப் பிடிக்கும்போது, எதிரிகள் உற்சாகமடைந்து விடுகின்றனர். ஆத்திரப்பட வைப்பதை, அவர்கள் நோக்கமாக வைத்திருக்கும் போது, நாமும் அவர்களின் வழிச் செல்வது, உத்தமமானது அல்லவே.
தங்களை மேன்மைப்படுத்துவது என்பது இன்னும்
ஒருவரைச் சிறுமைப்படுத்துவதேயாகும் எனச் சிலர் தப்பாகக்
கருதுவதும் குற்றம் காணும் இயல்பினை வலுப்படுத்தும் காரணியாக அமைந்துவிட்டது.
மேலும் குற்றம் காணும் இயல்பினைப் பின்வரும் காரணிகளே மேலும் வலுப்படுத்துகின்றன.
போட்டி, பொறாமை மனப்பான்மை, தம்மை மட்டுமே நினைப்பதும், தங்களைப் பற்றிய எண்ணமே அலாதியானது, மேன்மையானது என்ற தவறான கருத்தினை உள்ளத்தில் புதைத்து வைத்திருத்தல், எதிரில் உள்ளவர்களின் தகைமை, பெருமைகளைப் புரிந்துகொள்ளாமை, தங்களுக்கு மட்டுமே எல்லாமே தெரியும் என்கின்ற தன் முனைப்பு, அளவுக்கு மீறிய செல்வாக்குகள் பணபலம், ஆட்பலம், பதவி பலம் சமூகத்தில் இவர்கள் எதிர்பார்த்த அந்தஸ்து கிடைக்காமையும், அப்படி ஏதாவது அந்தஸ்து கிடைத்துவிட்டால் அதனைக் காப்பாற்றிக் கொள்ள தவறான உத்திகளைப் பயன்படுத்தல், பிறர் செய்கின்ற நல்ல காரியங்களையும் ஏற்றுக் கொள்ளும் மனப்பக்குவம் இன்மை, அதிகாரங்களை விட்டுக் கொடுக்காத மனப்பான்மை, போன்ற காரணங்களில் ஏதாவது ஒரு காரணியை கடைப்பிடித்தாலே, இந்தப் பலவீனத்திற்கு ஆளாகி, ஒரு மன நோயாளி நிலைக்கே

பருத்தியூர் பால வயிரவநாதன் {ါ06ပြဲ
سحابسته
தள்ளப்பட்டு விடுவர். கண்டபடி பிழை சொல்லிக் கொண்டிருப்பவர்களுடன் ஜீவிக்கத்தான் முடியுமா?
விசுவாச உணர்வுடன் அன்பாக அக்கறையுடன், நன்மைகளேயே குறிக்கோளாகச் செய்கின்ற பணிகளுக்கும், புத்திமதி உரைத்தலுக்கும், இந்தப் பொருந்தாத குற்றங்காணும் இயல்பும் முற்றிலும் முரணானதேயாகும். அது வேறு இது வேறு. நல்லவைகளை உணர்த்துதல் குற்றம் காணுதல் அன்று. இரண்டையும் நாம் இனம் காணாது குழம்பக்கூடாது. ஒருவரை ஒருவர் நற்பயன்பெறச் செய்ய, பரஸ்பரம் தவறுகளைச் சுட்டிக்காட்டும் உரிமையுமுண்டு. சொல்பவர்க்கும், அதைக் கேட்டவர்க்கும் உள்ள உறவு, நெருக்கம் போன்றவைகளுடன் இது தொடர்புபட்டது. சொல்லுபவருக்கு ஏற்ற பொறுப்பு, பக்குவமும், கேட்பவர் அதை ஏற்றுக் கொள்ளும் மனவளம் இயல்பு கொண்டவராக இருக்காதவரை இதனால் எந்தப் பிரயோசனமும் வந்துவிடப் போவதில்லை.
தாய், தகப்பன், தங்கள் பிள்ளைகளைக் கடிந்து கொள்ளுதல், குரு சிஷ்யன் உறவு நிமித்தம் கண்டித்தல், நண்பர்களிடையே உள்ள உரிமையுடனான கண்டிப்புக்கள், அத்துடன் உறவினர்கள், வேண்டப்பட்டவர்கள் தம்மிடையே அன்பான உரிமையுணர்வுடன் கூடிய வார்த்தைப் பிரயோகங்கள் போன்றவைகளை ஏற்கக்கூடியவைகளை, ஏற்க வேண்டியவர்கள் ஏற்றுக் கொண்டேயாக வேண்டும். கணவன், மனைவியிடையே பரஸ்பரம் குற்றம் காணாது, விட்டுக்கொடுத்து, ஏற்கவேண்டிய கருத்துக்களைப் பக்குவமாக எடுத்துரைப்பதில் தவறு என்ன வந்துவிடப் போகின்றது.
சதா நச்சரிப்புக்கள் போன்ற கண்டிப்பு, குறை கூறுதலை பழக்கமாக்கிக் கொள்ளுதல், சமூகத்தில் இருந்து எங்களை விலக்கி வைத்து விடுமன்றோ. புத்திமதிகளைக் கூடச் சந்தர்ப்பத்திற்குத்

Page 58
110 வாழ்வியல் வசந்தங்கள்
தகுந்த மாதிரித்தான் கூறுதல் வேண்டும். சந்தர்ப்பம் அறியாமல், இலவச ஆலோசனைகள், புத்திமதி உபதேசித்தல் என்பது எல்லா நேரத்திலும் சரிப்பட்டு வருமா? இதனால் பிறருக்கு ஏன், பிள்ளைகளுக்கே எரிச்சல்தான் வரும்.
சகலருக்குமே சுயபுத்தி உண்டு. எனினும் தெரியாத நுட்பமான சங்கதிகளை எமது அனுபவ வாயிலாக, பொருத்தமான இடத்தில் பிரயோகிக்க வேண்டும்.
வயது, அனுபவம் உள்ளவர்களுடன் பேசும் போது, பதவி, செல்வாக்கு உள்ளவருடன் பழகும்போது, வலிமையுள்ளவர்களுடன், துஷ்டர்களுடன் கதைக்கும்போது, புதிதாக காணும் ஒருவருடன் பழகும்போது, எம்மைப் பிடிக்காத நபர்களுடன் உரையாடும்போது, ஒரு குடும்பத்தைப்பற்றி, அவர்கள் சார்ந்த சமூகம் பற்றி எமக்கு ஒன்றுமே தெரியாமல், பொது இடங்களில் பத்துப் பேர் பேசிக்கொண்டு இருக்கும்போது, எமக்குப் பரிச்சயம் இல்லாதவர்களே வந்து உரையாடும்போது, நாம் சர்வ ஜாக்கிரதையுடன் பேசுதல் வேண்டும். அப்போது நாம் கண்டபடி குற்றங் குறைகளை கூறிவைத்தல் ஆபத்தாகவே Փկ պա5.
எந்த விஷயத்தினைக் கையாளும்போதும் அதில் ஒரு கட்டுப்பாடு இருத்தல் வேண்டும். எங்கள் நியாயங்களை எல்லாச் சந்தர்ப்பங்களிலும் நிலை நிறுத்த முயலக்கூடாது. இதனாலேயே பிறர் தவறுகளை நாம் தேவையற்ற விதத்தில் சொல்லப்போய், பிரச்சினைகளில் மாட்டி விடுகின்றோம். பிறருக்குரிய உரிமைகளை எமது உபதேசங்களினால் தகர்க்க முயலாதீர்கள். அவர்களையும் சிந்திக்க விடுங்கள். இவைகளை நாம் பொறுப்புணர்வுடன் அவர்களுக்குரிய ஆற்றலை மதித்து, கெளரவித்தல் மூலமே செயற்படுத்த முடியும். உங்கள் செயல் வழிகாட்டியாக அமையவேண்டுமே ஒழிய, வழி மறித்தலாக அமையக்கூடாது.

பருத்தியூர் பால வயிரவநாதன்
سعهها வரையறைக்குட்பட்ட எமது கருத்துக்களைப் பகிர்தல் முறை, அன்புடன் கூடிய எமது ஆலோசனைகளை கொடுக்கவேண்டிய சந்தர்ப்பங்களில் பகிர்ந்து கொண்டால் பிறரும் எமக்கு வழங்க வேண்டிய கெளரவம், மரியாதைகளைத் தாராளமாகவே வழங்குவார்கள். மற்றபடி,
குற்றங் காணுதல் என்பது, உற்ற துணைவர்களையே உதறிடும் செயலாகும். எம்மைச் சுற்றிச் சூன்யத்தையே வரவழைக்கும் செயலுமாகும். ஆகாத பழக்கத்தை அகற்றுதல் சிறப்புத்தானே!
தினக்குரல் - 17.12.2000
<>

Page 59
112
தங்கள் சிரிப்பதற்காகப் பிறர் அழுவதை எதிர்பார்க்கின்ற ரசித்து மகிழ்கின்றவர்கள் உள்ள இந்த உலகில் நாம், தியாகம் பற்றிச் சிந்திக்க வேண்டியவர்களாக இருக்கின்றோம். தன்னலமற்ற தியாக உணர்வுள்ளவர்களால்தான், இந்த வையகம் வீழ்ந்துவிடாது, உயர்ந்து உயிரோட்டமாக இருந்து வருகின்றது.
தனிமனிதனுக்காக, முழு சமூகத்திற்காக, பரந்துபட்ட பூமிக்காக, தனக்கு வரவேண்டிய, நன்மைகளை இன்பங்களை விட்டுக் கொடுப்பதுதானே, தியாகம் என்கின்ற தூய வழியாக அமைகின்றது. இவைகளை விட்டுக் கொடுப்பது என்பது, சாமான்ய விஷயம் என்று கூறிவிட முடியுமா? இது அர்ப்பண சிந்தையால் எழுந்த இயல்பு. தியாகத்தின் மூலம் ஒருவர் பெறும் மன நிறைவுதான், அவருக்குக் கிட்டுகின்ற பெரும் பயனாகும். இவர்கள் தமக்கு வரவேண்டிய வாய்ப்புக்கள், வரவுகளைப் பற்றிச் சிந்திப்பது கிடையாது. அத்தகைய சிந்தனைகளை உருவாக்கும் எண்ணங்களை வேரோடு அடி மனதில் இருந்து அகற்றியும் விடுகின்றார்கள். பெரும் தலைவர்களான, தியாக சீலர்கள் செய்துவிட்டுப்போன சேவையின் பயனைத்தான் நாம் இன்று அறுவடை செய்துகொண்டு இருக்கின்றோம். எனவே, இனிவரும் தலைமுறையினருக்கு நாங்கள் என்ன செய்துவிட்டோம், அல்லது
 

பருத்தியூர் பால வயிரவநாதன் (13.
سعه செய்யப் போகின்றோம் என நாம் எம்மையே கேட்டுக் கொள்வோமாக. பயன்களை மட்டுமே பெறுதல் எமது வேலையா? நாங்கள் பெற்றுக்கொண்ட பயனுக்காக, உலகிற்கு என்ன பிரதி உபகாரம் செய்துவிடப் போகின்றோம்?
எல்லா விஷயங்களையும் நாம் சொல்லிக் கொடுத்து, கற்க வேண்டுமா என்ன? உலகோடு ஒன்றி வாழும்போது இங்கு நடக்கும் நடப்புகளை உணர்ந்து செயற்படுகின்றோம். பசித்தால் சாப்பிடுகின்றோம், தாகமாக இருந்தால் நீர் அருந்துகின்றோம். இவைகளைச் சொல்லிக் கொடுப்பதில்லை. இதற்கெல்லாம் அனுபவம் தேவையுமில்லை. இதேபோல்தான் பிறருக்காக நாம், அர்ப்பணிப்புடன் சேவை செய்தலை, சாதாரண நடைமுறைக் கருமமாகச் செய்யவேண்டும். துன்பங்களை ஏற்காத தியாகமில்லை. ஆண்டாண்டு காலமாகவே வாழ்ந்துவிட்டுப் போனவர்கள் சுலபமாக எதனையும் சாதித்துவிட்டுச் செல்லவில்லை.
எமது உழைப்பு, எமது ஈகையாக மாற வேண்டும். தியாகம் என்பதே ஈகைதான். வேண்டப்பட்டவர்களுக்கு மட்டுமல்ல, விலங்கினங்கள், பறவைகள் என்கின்ற அனைத்து உயிரினங்களாகட்டும், இவைகளுக்கான நியாயபூர்வமான தேவைகள் கிட்ட நாமும் ஒரு கருவியாக இருந்து செயல்படுவோமாக. எமக்கென ஓர் இடத்தினை நாம் ஆற்றுகின்ற தொண்டு செய்தல் மூலமே பெற்றுக்கொள்ள முடியும். கற்றுக் கொள்வதும், பணம், புகழ் பெறுவதும் இன்றியமையாதவைகள்
தனி மனிதனுக்காக, முழுச் சமூகத்திற்காக, பரந்துபட்ட பூமிக்காக தனக்கு வரவேண்டிய நன்மைகளை இன்பங்களை விட்டுக் கொடுப்பதுதானே தியாகம் என்கின்ற தூய வழியாக அமைகிறது. இவைகளை விட்டுக்கொடுப்பது என்பது சாமான்ய விடயமா என்ன? இத்தியாக மனப்பான்மை தனிமனிதனுக்கு மட்டுமல்ல நாடுகளுக்கும்தான். சுரண்டும் நோக்குடன் நாடுகள் தம்மை வளர்க்காது, உலகம் முழுமையும் தியாக உணர்வுடன் வளர்க்க முற்படல் வேண்டும்.

Page 60
வாழ்வியல் வசந்தங்கள்
Nu-s-Y என்பதில் சந்தேகமில்லை. அத்துடன் எங்களுடன் மட்டும் நின்று கொள்ளாது, குடும்பம், நண்பர்கள், உறவினர் தேவைகளும் என விரிவடையும்போது மனிதன் எல்லோர் பொருட்டும் சேவை செய்ய, உழைக்க வேண்டிய பொறுப்புக்குள்ளாகின்றான்.
இந்தப் பின்னலுடன் மனிதன் வாழும்போது, இவன் சார்ந்து வாழும் நிலைக்குத் தள்ளப்படுகின்றான். செடி கொடி, ஜீவராசிகள் அனைத்துமே வாழத்தான் அவதரித்தன. இவைகளின் ஜீவியம் ஒன்றுடன் ஒன்று பிணைந்து, சார்ந்து இருப்பதனால், ஒன்றின் துன்பத்தில் இருந்து மற்றையது தப்பிக்கமுடியாது. இதை நாம் உணர்ந்தால் போதும், தியாக சிந்தனை தானாய் மலரும். எமக்காகவே எல்லாம் ஆக்கப்பட்டன. இவைகளின் உயர்ச்சி, மலர்வு, வாழ்வினால்தான் வையகம் வாழுதலும் சாத்தியமாகும் என நினைத்தல் வேண்டும்.
இலக்கியங்களிலும், நாடகம், சினிமாக்களிலும் காணுகின்ற பாத்திரங்களில் தியாக உணர்வின் பிரதிபலிப்பைக் கண்டு மனம் நெகிழ்ந்து கண்ணர் மல்குகின்றோம். இவைகளில் இருந்து எமது அனைவரின் நெஞ்சங்களிலும் இயல்பான பச்சாதாபங்கள் இரக்க, ஈர உணர்வுகள் இருப்பது உண்மையேதான் என்றாலும், யதார்த்த நிலையில் மாறுபாடாகச் செயல்படுவது விந்தையேயாகும். தியாகம் செய்ய, கொடை வழங்க, உடன் மனம் தயாராவதில்லை.
நம்ப முடியாமல் எத்தனையோ காரியங்கள் நடக்கின்றன. நல்ல பெரிய காரியங்களை, இப்படிக்கூட நடக்கின்றதா என நாம் நினைந்து ஆச்சரியப்படுகின்றோம். பெரியோர் வாழ்க்கையைப் பற்றி நாம் படிக்கும்போது இவைகளைப் புரிந்து கொள்ளலாம். இத்தகைய அருஞ்செயல்களைச் செய்தமையினால்தான், அவர் எடுத்துக்காட்டாகத் திகழ்கிறார். செயற்கரியன செய்வோர், பெரியோர், இவைகளை இவர்கள் கஷ்டமுறாது செய்து முடிக்கவில்லை. தியாக உணர்வின்றி, உழைத்தல் இன்றி இறைவனிடம் போய் இறைஞ்சி வரம் கேட்பதில் என்ன வந்து

பருத்தியூர் பால வயிரவநாதன் 115
سحسعه S விடப்போகின்றது. உண்மையில் சொல்லப்போனால் தியாக சேவைதான் இறைவனிடம் பெறும் வரத்தினைவிட மன நிறைவுடன், பெறும் பெரும் பேறாகும். இந்த உள்ளத்தை அருளுமாறு இறைவனிடம் வரம் கேட்பதே உத்தமம்ானது. தியாகிகள், பிறர்க்கு இல்லை என்று கூற வைக்காத உதவும் நிலையினைத் தா இறைவா எனவே வேண்டுதல் செய்தனர்.
தியாகம் புரிந்தவர் தன்னையே கொடுத்தவர் ஆகின்றார். இவை மனம், வாக்கு, காயத்தினை முழுமையாக அர்ப்பணம் செய்வதேயாகும். இங்கு பிரதிபலன் என்ற பேச்சிற்கே இடமில்லை. ஆயினும் நாம் தொழில் மூலம் ஆற்றும் சேவைக்கான, செல்வங்களைக்கூட தகுந்த வழியிலேயே பிறர் பயனடையுமாறு கொடுத்துதவுதல் வேண்டும்.
கசிவான மனதுள்ள பண்பாளர்கள் தாம் விரும்பும் பொருளைக் கூட, அது பிறருக்கு உதவும் எனின் உடன் இழக்கச் சித்தமாய் விடுவார்கள். பணம், பொருள் ஆகட்டும், ஏன் காதலைத் தானாகட்டும் உடன் பாசத்தின் நிமித்தம், மனிதாபிமானத்தின் பொருட்டு அளித்துவிடுவதுடன், அதன் பொருட்டு வலிந்து இன்னல்களையும் தேடிக்கொண்டு விடுகின்றனர்.
இன்னும் ஒரு சாரார், தமக்கு இஷ்டமானதை மட்டும் வைத்துக்கொண்டு, தேவையற்றதை கட்டிக் காத்துக் கொண்டிருக்காமல் பிறருக்கு அது தேவை என்றால் கொடுத்து விடுவார்கள்.
இப்படி இருக்க, நம்மிடம் வந்து ஒருவர் நன்மை பெறுகின்றார் என்ற திருப்தியானது, எமக்கு ஏற்படும் இழப்பினால் ஏற்படும் துன்பத்தினையே தோன்றாமல் செய்யும் ஆற்றல் மிக்கது எனத் தெரிந்து கொள்ளுங்கள். பிறரது துன்பங்களில், பெறும் குரூரத் தன்மையான இன்பம், தாம் அடைந்த வெற்றி எனச் சிலர் கருதுவது மடமையிலும் மடமையின்றி வேறென்ன? இந்த

Page 61
வாழ்வியல் வசந்தங்கள்
سعسع مح அலுவல்களைத்தானே உலகின் நாடுகள்கூடச் செய்து கொண்டிருக்கின்றன? ஒரு நாட்டிற்கு இடுக்கண் புரிவதும், அந்தத் தொல்லை தாங்காது, இடுக்கண் செய்த நாட்டிடமே வலிமை குறைந்த நாடுகள் போய் சரணடைந்து மண்டியிடுவதும் எவ்வளவு பரிதாபமான நிகழ்ச்சிகள்! தனிமனிதனுக்கு மட்டுமா தியாக உணர்வு தேவைப்படுகின்றது. ஏன் நாடுகள், வல்லரசுகள்கூட தியாக உணர்வுடன் செயல்பட்டால் என்ன? தங்கள் நலன் மட்டுமே பேணப்பட்டால் தியாகமாகுமா? உலகிற்கு உதவுதல் போல் காட்டி நிற்பதும், சூழ்ச்சி செய்வதும் தியாகம் செய்தலையே கொச்சைப்படுத்தல் போல் ஆகாதா? வேதனை என்னவெனில்
வேறுவழியின்றி இந்த நாடுகளைக் கூடத் தியாகபூமி என்று சொல்ல வேண்டியிருக்கின்றது. செல்வம், வலிமையினால் எல்லாவற்றையுமே வெல்ல முடியுமா? இவைகள் சும்மா இருந்தாலே போதாதா? தியாக உள்ளத்துடன் கூடிய தலைமைத்துவத்தினால்தானே இந்த அவல நிலைமாறும். உலக கவலைகளும் போகும்.
தியாகத்தின் பரிமாணத்தினைப் புரிந்து கொள்ளுவோம். இது வெறும் பெயர் சம்பாதிக்கும் கருவியல்ல. அறத்தின் உருவம் தியாகம். மதங்கள் அனைத்தின் வேதமும் அதுவே!
தினக்குரல் - சிறப்பிதழ் 01.01.2001
<>

117
B) ĥ)GDÈ5 B) [Dj Gillrää jblib B us rii
சில்வி தொடர்பாக, நம்மவரில் பலர் இப்போது பேசுகின்ற பேச்சுக்களைக் கேட்க, எரிச்சலும் திகைப்புமாக இருக்கின்றது.
படிப்பு என்ன ஐயா, படிப்பு, படித்து என்ன கிழிச்சுவிடப் போகிறீர்கள். முதலில் நாலு காசு சம்பாதிக்கிற வழியைப் பாருங்கள். உழைக்கின்றவனுக்குத்தான் இப்போ மதிப்பு. இப்போ படித்தவனைவிட, படிக்காதவன் எதில் குறைந்துவிட்டான். சொல்லப்போனால் அவர்கள் தானே கூடச் சம்பாதிக்கின்றார்கள்.
இப்படிச் சொல்லுகின்றவர் தொகை நாளுக்கு நாள்கூடிக் கொண்டுதான் வருகின்றது. இப்படிச் சொல்பவர்களின் வார்த்தைகள் வெறும் விதண்டாவாதம் மட்டுமல்ல, அறியாமையின் உச்சக் கட்டப் பேச்சாகவும், ஏன், சற்றுத் தாழ்வு மனப்பான்மையால் எழுந்த ஆதங்கமான பேச்சுக்களேயாகும்.
கல்வியினால் பெறப்பட்ட சகல சலுகைகளையுமே அனுபவித்துக்கொண்டு, இப்படியான தவறான எண்ணங்களை கொண்டிருப்பது, எதிர்காலத்தில் ஆபத்தான பின் விளைவுகளைத் தோற்றுவிக்கலாம். கல்விதான் எமக்கு அடிப்படைத் தேவையான காலகட்டத்தில், நவ யுகத்தின் புத்தாயிரமாம் ஆண்டின்

Page 62
{{1}} வாழ்வியல் வசந்தங்கள்
7 ܐܫܝܫܢܓܠ தொடக்கத்திலேயே பிழையான கருத்துக்களை அகத்துள் புகுத்துதல் பாரதூரமான செயலேயன்றி வேறென்ன?
இன்றைய நாட்டின் சூழ்நிலைகள், காரணமாக சில நடவடிக்கைகளால் பாதிக்கப்பட்டவர்கள் பணத்தின் தேவையை நன்கு அறிந்தமையினாலும், வெளிநாடுகளில், உடல் உழைப்பின் மூலம் மேலதிக பணங்களை அனுப்பிக் கொண்டிருப்பதனாலும் கல்வி, சம்பளம் குறைந்த அரச, தனியார் தொழில் தொடர்பாக, மாறான அபிப்பிராயம் தோன்ற ஆரம்பித்துவிட்டன. தவிர, தனியார் தொழில் மூலமும், சுய வியாபார மூலமும் கல்வி இன்றியே உழைத்துவிட முடியும் என நம்புகின்றார்கள்.
அப்படியாயின் உண்மை நிலை என்ன? கல்வி இன்றியே நம்மால் சீவித்து விட முடியுமா? அரசியல் சூழ்நிலைகளால் ஏற்படும் மாற்றங்கள், நிகழ்வுகள் நிரந்தரமானதா? இப்படியே ஏதாவது பணம் புரட்டும் தொழில்தான் வாழ்க்கையா? சிந்திப்போம்.
சொல்லப்போனால் இத்தவறான கருத்துக்கள் யாவும் ஒரு ஆற்றாமையின் வெளிப்பாடாகவே இருக்கின்றது. முன்னேறி வரும் இந்த உலக ஓட்டத்திற்கு ஈடு கொடுக்கும் விதத்தில் நாமும் மாறித்தான் ஆக வேண்டும். கல்வி தொழில் நுட்பம் போன்றவைகளின் அபரிமிதமான வளர்ச்சியுடன் போட்டி போடாமல் நாம் வாழ்ந்துவிட முடியாது. ஐந்து வயதுப் பிள்ளைகள்கூடக் கணனி வயப்பட்டுவிட்டனர். நேற்றைய சந்ததியினரின் மூளை ஓட்டத்திலும் பார்க்க, தற்போதைய தலைமுறை படு வேகத்தில் இயங்கிக் கொண்டிருக்கின்றது.
இன ரீதியான, மொழி ரீதியான பிரச்சனைகளால் கல்வி மேம்பாடுகளில் ஒரு சாரார் பாதிப்படைந்து வருவது கவலை தரும் விடயமாகும். ஆயினும் இத்தடையினை மீறி எழும் கல்வி கற்பதான எழுச்சி மிகவும் அதிசயிக்க வைத்துள்ளது. ஒரு துறையில் புறக்கணிக்கப்படும் இவர்கள் தமது முயற்சியினால், தாம் விரும்பிய ஏதோ ஒரு துறையில் கல்வி கற்றுப் பிரகாசிப்பதை எவருமே தடுத்துவிட முடியாது கல்விகூட ஒரு தாகம்தான்.

பருத்தியூர் பால வயிரவநாதன் {6}
۶ سعسعه S | மக்கள் தொகை அதிகரிப்பு, பொருளாதார போட்டி, இவைகள் கூடி வரும்போது, நாம் நினைத்ததைப் பெற, கடும் முயற்சி எடுத்தாகவேண்டிய கட்டாய சூழ்நிலை வந்துவிட்டது. எப்பாடுபட்டாவது கல்வி கற்றால்தான், சமூக அந்தஸ்து, பதவி கிடைக்கும் என்கின்ற நம்பிக்கையுடன், கடும் உழைப்புடன் மாணவ சமூகம் பெரும் பிரயத்தனப்பட்டுக் கொண்டிருக்கின்றது.
தொழில் வாய்ப்புக்கள் எவ்வளவுதான் கூடிக்கொண்டே வந்தாலும் கூடப் போட்டி போடுபவர்களின் எண்ணிக்கை, அதைவிடக் கூடிக் கொண்டே செல்கின்றது.
எனவே,
தகைமைகள், தகுதிகளை அரசுகளும், நிறுவனங்களும் மிகைப்படுத்திக்கொண்டே செல்கின்றன. இருந்தும் என்ன, இந்தப் பிரச்சனைகள் தீர்ந்தபாடில்லை. இவை ஆக்கபூர்வமாக, ஆய்ந்து, புது புது முயற்சிகளை திட்டங்களை உருவாக்கியும் வருகின்றன. கல்வியையும், அதன் மூலம் பொருளாதார அபிவிருத்தியையும் முழுமையாகப் பெற இவை போராடி வருகின்றன.
இப்படியிருக்க - சிலர் விடயம் புரியாமல், கண்டபடி எழுந்த மாதிரி, கல்வி கற்பது பற்றி வீண் வியாக்கியானம் செய்து விடுகின்றார்கள்.
ஆயினும் கூட மாணவ சமூகத்தில் படிப்பின் வேகம் கூடி வருவது, மனதுக்கு ஆறுதல் அளிக்கும் விஷயமாக இருக்கின்றது.
தொழில் செய்பவர்களுக்கு அதாவது உடல் ரீதியாகக் கஷ்டப்பட்டு உழைப்பவர்களுக்கு மேற்கத்திய நாடுகளில் பாரபட்சம் காட்டப்படாமல் வேதனம் மிகையாக வழங்கப்படுவது உண்மையே. கல்வி கற்றவர்களைவிட கல்வி கற்காதவர்கள் உடலால் வருந்தி உழைத்து மேலதிகமாக சம்பாதிப்பது

Page 63
(20) வாழ்வியல் வசந்தங்கள்
کسعهها ؟
வரவேற்கத்தக்க அம்சமானதுதான். இது தொடர்பாக வெளிநாட்டில் கல்வி பயின்ற பேராசிரியர் ஒருவர், தங்கள் பல்கலைக்கழகப் பேராசிரியர்களைவிட சில மாணவர்கள்கூட, மிகவும் கஷ்டப்பட்டு சம்பாதித்து கொள்வதைத்தான் பார்த்ததாகத் தெரிவித்தார். ஆயினும் இத்தகைய கடின உழைப்பு எவ்வளவு காலத்திற்குச் செய்ய முடியும். இதே வாய்ப்பு தொடர்ந்து நிரந்தரமாக இருக்குமா என்பது கேள்விக்குறியேயாகும். தொழில் ரீதியாக மனிதர்களை வேறுபடுத்திப் பார்க்கும் இயல்பு அங்கு கிடையவே கிடையாது. எமது நாட்டிலிருந்து வெளிநாடுகளுக்குச் சென்று, அதிகமாக உழைத்து அனுப்பும்போது, அங்குள்ள உண்மை நிலை, மெய் வருத்தம், உளவியல் ரீதியான மனக்கொந்தளிப்பு, ஆதங்கம் இவைகளை உணராது, பணத்தை மட்டுமே மையமாக வைத்து கல்வியை கொச்சைப் படுத்துதல் நியாயமானதுதானோ?
கல்வி கற்றல் என்பது வெறும் உழைப்பது, பதவி வகிப்பது என்பதுடன் மட்டும் சம்பந்தப்பட்டதல்ல. இது தலைமுறை தலைமுறையாகத் தொடர்ந்து செல்வது. நாம் கல்வி பயில்வது இவற்றுடன் மட்டும் நின்று விடுவது அன்று. எமக்குப் பின்னே ஒரு சந்ததியினர், நாங்கள் தமக்கு என்ன வழங்கப்போகின்றோம் என்பதை எதிர்பார்த்துக் காத்துக்கொண்டிருக்கின்றார்கள். கல்வியறிவற்ற ஒரு சமூகம் உருவாவது ஒரு பரம்பரைக்கு நாம் செய்யும் நீடித்த தவறாகக் கருதப்படும்.
எனவே, தற்காலிக நிவாரணங்களுக்காக கல்வியின் அத்தியாவசியத் தன்மையை உணராது போவது, ஏற்றுக் கொள்ளத்தக்க ஒன்றல்ல.
ஏன் எனில், கிடைப்பதைக் கொண்டு வாழ்ந்தால் சரி என்றில்லாமல், எதிர்கால சந்ததிக்கான வழக்கங்களை, காரணங்கள் கூறி மழுப்பாமல் கல்விக்கான பாதைகளை சீராக வழி சமைக்கவேண்டும். ஒரு பிள்ளை படிக்காது விடுதல் என்பதே, ஒரு பரம்பரை படிக்காமல் போவது போலாகும் என அறிக.

பருத்தியூர் பால வயிரவநாதன் (12
۶ سعسعه கல்விக்கான பாதைகள் எவ்வளவோ உண்டு. நாம் அறிந்தவரை, மிகவும் புத்திசாலியான ஊக்கமுள்ள பிள்ளைகள், பல்கலைக்கழக அனுமதி கிட்டவில்லை என சோர்ந்து போகாது, தமக்குப் பிடித்த ஒரு துறையைத் தெரிந்தெடுத்துப் பலரும் வியக்க அதில் பயின்று தேர்ந்து, நல்ல நிலைக்கு வந்து விடுகின்றனர். கற்காமல் விடுவதற்குக் காரணம் சொல்லக்கூடாது.
தியாக உணர்வுள்ள பெற்றோர்கள் எவர் எது சொன்னாலும், சமூக அந்தஸ்து, உயர்நிலை நோக்குக் கருதி தம் பிள்ளைகளை பலத்த சிரமத்தின் மத்தியில் பயிற்றுவித்தலை நாம் காணுகின்றோம்.
அரசியல் சூழ்நிலைகள், பொருளாதார கஷ்டங்கள் காரணமாக கல்வி நிலை பாதிப்படைவது சகிக்க முடியாத மன வேதனை தரும் விஷயம்தான். ஆயினும், இதன் பொருட்டு நாம் சோர்ந்துவிட முடியுமா?
இனரீதியான, மொழி ரீதியான பிரச்சினைகளால் கல்வி மேம்பாடுகள் குறுகுவது போலவே தென்படுகின்றன. எவ்வளவு படித்தாலும் தொழில் கிடைக்கவில்லையே என்கின்ற ஏக்கம், ஆதங்கம் எம்மை அரிக்கின்றது. ஆயினும் இவைகள் எல்லாவற்றையும் மீறி, எழும் எழுச்சி கல்வி மீதான முட்டுக்கட்டைகளை உடைத்தெறிந்தே தீரும். ஒரு துறையில் புறக்கணிக்கப்படும் மாணவர்கள், வேறு ஏதோ ஒரு கல்வித்துறையில் பிரகாசித்து வருவதே இக்கருத்துக்கு முன் உதாரணங்களாகும். கல்வி கூட ஒரு தாகம்தான். கல்வியினுள் நுழைந்துவிட்டால், இந்த உணர்வு அதிகரித்துக்கொண்டே போகுமே ஒழிய, குறைவுபடாது.
கல்வி முறைகளில் தேர்வு செய்யும் முறையில்கூட உலகம் இப்போது முழுமையாக மாறிவிட்டது. நாம் முன்னர் அத்தியாவசியமாகத் தேவையில்லை என நினைத்திருந்த

Page 64
122 வாழ்வியல் வசந்தங்கள்
கல்வித்துறைகள் பல, இப்போது பலருமே விரும்புகின்ற துறைகளாகிவிட்டன. உதாரணமாக, நுண்கலைகள் கவின் கலைகள், சமயத்துறைகளில் போதிய தகுதியானவர்களைக் கண்டு பிடிப்பதே சிரமமாயிருக்கின்றது. எனவே இதன் அத்தியாவசியத்தை உணர்ந்து, தற்போது இவைகளை ஆர்வமுடன் பலர் பயில்வதனை நாம் அறியக்கூடியதாக இருக்கின்றது. காலத்திற்கு ஏற்றவாறு கல்வி கற்பவர்களும் மாற வேண்டியுள்ளது. விருப்பமான துறைகளைத் தெரிவு செய்ய வேண்டியுள்ளது.
கல்விக்கூடங்கள், பல்கலைக்கழகங்கள், தொழில்நுட்பக் கல்லூரிகள், நுண்கலைக்கல்லூரிகள் பலவும் மாணவர் தொகைக்கேற்ப பல்கிப் பெருகி வருகின்றனர். இங்கு காலத்திற்கு ஏற்றாற்போல் பலவித கற்கை நெறிகளும் அறிமுகப்படுத்தப்பட்டு வருகின்றன. இவையெல்லாம் கல்வி மறுமலர்ச்சியின் அடையாளங்கள் அல்லவா?
இன்று மாணவ சமூகத்திடையேயுள்ள விரக்திக்கு முக்கிய காரணம், எதிர்காலத்தில் தமது கல்விக்கு ஏற்ற தொழில் வாய்ப்பு கிட்டுமோ இல்லையோ என்ற அச்சமும் ஒரு காரணமாகும். இன்று நடைமுறையில் நாம் காண்பது என்ன படித்த படிப்பிற்கும், செய்யும் தொழிலுக்கும் பெரும்பாலும் சம்பந்தமேயிருப்பதில்லை. தொழில் வாய்ப்புக்கள் குன்றியதால் அகப்பட்ட தொழிலை ஏற்றுக் கொள்கின்றார்கள். இதனால் காலப்போக்கில் தாம் கற்ற கல்வியையே மறந்து விடுகின்றனர். இதனால் இவ்வளவு காலமும் படித்த படிப்பு, காலம், முயற்சிகள்கூட வீணாக்கப்படுவதுபோல் தோன்றுகின்றது. எவராயினும் தமது கல்வி மூலம் பெற்ற பயனைப் பிறருக்கு சமூகத்திற்கு வழங்காதுவிடின், என்ன பயன்? அன்றியும் தாம் பயின்ற கல்வியுடன் தொடர்பில்லாத தொழிலைச் செய்வதனால், செய்கின்ற தொழிலில் கூட பூரண திருப்தியின்மையும், ஈடுபாடு இன்மையும் தோன்றுகின்றது. இதனால் தாம் செய்யும் கடமையில் முழுமையுறாது, தொழில்

பருத்தியூர் பால வயிரவநாதன் (123)
Y-u1 நிறுவனத்திற்கோ, ஏன் அரசாங்கத்திற்கோ ஒரு விதத்தில் பாரமாகிவிடுகின்றனர்.
தொழில் புரிதல் என்பது பூரண மன நிறைவுடன் ஆற்றவேண்டிய ஒன்றாகும். இன்றும் கூட எமது நாட்டில் கல்வியில் முறை பூரணமானது, திருப்திகரமானது என்று கூறிவிட முடியுமா? காலத்தின் அவசியத்திற்குத் தகுந்த விதத்தில் கல்விச் சீரமைப்பு அமைதல் வேண்டும். நாம் இன்னமும் மூன்றாம் மண்டல நாடுகளிடையே, பின் தங்கியோரில் முன் வரிசையில் அமரவே போட்டி போடுவதுபோல் நடப்பதாக சில சமயம் தோன்றுகிறது. நவீன தொழில் நுட்பம், விஞ்ஞானக் கண்டுபிடிப்புகள் இன்றி எந்த நாடுமே உருப்பட முடியாது.
கல்வித்துறைகளில் பாகுபாடு இல்லை. AVFé5 Aj) துறைகளுமே ஒவ்வொரு விடயத்தில், தனித்துவமான பெருமைக்குரியனவே என்றாலும், மிக அவசியமற்ற சில கல்வித் துறைகளுக்கு கோடிக்கணக்கான நிதிகளை செலவழிப்பதனால், முன்னேற்றமடைந்த நாடுகளுடன், கல்வி வளர்ச்சியில் போட்டி போட முடியாதுள்ளது. காலத்துடன் இயைந்த கல்விச் சீர்திருத்தங்களை நாம் கண்டு கொள்ளவேண்டும், பல்கலைக் கழகங்களில் எத்தனை ஆயிர பட்டதாரிகள் உருவாகின்றனர் என்பது பெரிதல்ல. இவர்களில் எத்தனை பேர் சமூகத்திற்கும், நாட்டிற்கும் பூரணமாகப் பிரயோசனப்படுத்தப்படுகின்றார்கள் என்பதே முக்கியமானதாகும். இவர்களைப் பூரணமாகப் பிரயோசனப்படுத்தாமையினால், சாதாரணமான தரத்தில் உள்ள படித்தவர்களின் பங்களிப்பினைவிட, இவர்களின் சேவை மிகவும் குறைபட்டதாகவே அமையலாம்.
இன்று கல்வியில் முன்னேற்றமடைந்துவிட்டதாக பெருமிதமடைந்தாலும்கூட தொழில்முறை பாகுபாட்டு நோக்கு எம்மை மிகவும் பாதிப்படையச் செய்துள்ளது. குறிப்பிட்ட ஒரு கல்வித்துறைக்கு உள்ள கிராக்கி, அல்லது மவுசு இன்னொரு

Page 65
124 வாழ்வியல் வசந்தங்கள்
துறைக்கு இருப்பதில்லை. தொழில் ரீதியாக, அறிவையே அளவிடும் அறியாமையின் விளைவுதான் இது. பலராலும் சிலாகிக்கப்படும் தொழிலை ஒருவர் செய்தால் மற்றத் தொழில் செய்பவர்கள் சற்று மட்டமானவர்கள் எனக் கருதுகின்றார்கள். எல்லோரும்தான் கெளரவமான தொழில் கிடைக்கப்படுகின்றார்கள். இதில் என்ன உயர்வு, தாழிவு வேண்டிக் கிடக்கின்றது. ஒரு கெளரவமான தொழிலுக்குள்கூட எத்தனை சதவீதம் பெரிசு, சிறிசு பார்க்கிறார்கள். இது ஒரு படு பிற்போக்குத்தனமான நினைப்பு அன்றி வேறென்ன? புதிதாக எதைத்தேடிக் கற்றாலும் அது கல்விதானே? இன்று கணனித்துறை, நவீன இலத்திரனியல் என்றெல்லாம் புதிது புதிதான கல்வியில் சாதனைகள் நடந்து கொண்டிருக்கின்றன. நாமோ எமக்குத் தெரிந்த ஓரிரு தொழிலை மட்டும் கூறி அதுதான் உயர்ந்தது, மற்றதைப் படிப்பதால் பிரயோசனமே இல்லை என்று பிறர் கூறுவதை நம்பியும் விடுகின்றோம்.
கல்வித்துறையில் மட்டுமல்ல, ஏனைய பல விஷயங்களில் நாம் பாகுபாட்டோடு, முரண்பாடான, தவறான சிந்தனைகளை வளர்த்து வருகின்றோம். வளர்ச்சியடைந்த நாடுகளில் இத்தகைய சிந்தனை இல்லை என்றே கூறவேண்டும். முக்கியமாக,
இன்று எமது நாட்டில் நிலவுகின்ற சாதிப் பாகுபாட்டினைக்கூட கல்வி ஒன்றினால் மட்டுமே தீர்த்து வைத்துவிடமுடியும். ஒருவன் சமூகத்தில் பெரும் கல்விமான் ஆக வந்துவிட்டால், எவருமே தயங்காது அவரிடம் சென்று அவரிடம் கிடைக்கும் கல்விச் செல்வத்தை அள்ளத்தான் முனைவார்கள். அப்போது எவருமே சாதிப் பாகுபாட்டினைக் கிஞ்சித்தும் நோக்குவது கிடையாது. அத்துடன் கல்வி கற்ற எவரையுமே மிக்க கெளரமாகவே எவருமே நோக்குவர். இன்று கல்வியினால், உயர் பதவி பெற்றவர்கள், எந்த தரத்தினராயினும்கூட அவர்கள் நிலையினை தரம் மதித்து, தக்க மரியாதையுடனேயே சமூகம் தலை

பருத்தியூர் பால வயிரவநாதன் (125)
Yeவணங்குகின்றது. திறமைகளை வளர்த்துக்கொண்டால் மட்டுமே சாதியில் பின் தள்ளப்பட்டு, இம்சிக்கப்படுபவர்களின் தரம்கூடி உயர்நிலை அடையமுடியும். ஒருவர் திறமைக்கும் ஆற்றலுக்கும் மடங்காதவர் இருக்கமுடியாது. ஜாதிக் கொடுமையிலும் கூடத் தமது கல்வியறிவினால் இந்த சமூக ஏற்றத்தாழ்வு விலங்குகளை உடைத்து எறிந்த அறிஞர்கள், மேதைகள், எழுத்தாளர்கள், கலைஞர்களை நாம் கண்டுகொள்ளவில்லையா? இவை எல்லாமே கல்வியினால் பெற்ற உயர் வெற்றியன்றிப் பிறிதல்ல. கல்வி, சாதிப் பாகுபடுகளைச் சங்கரிக்கும்.
ஒரு ஒழுக்கமுள்ள கட்டுக்கோப்பான சமூகம், அது நாட்டிற்கு ஆற்றவேண்டிய பயன் அளப்பரியது. இதை உருவாக்கித் தரவல்ல ஆணிவேரை பலமுள்ளதாக்கச் செய்வதே, இந்த உலகிற்குச் செய்யும் பேருபகாரமுமாகும். உலகை உருவாக்கித்தரவல்ல ஆணிவேர் கல்விதான். இதில் இருந்து உருவாகும் விருட்சத்தில் பயனடையப் போவது முழு உலகமுமேயாகும். எமக்கு மட்டுமே கல்வி என்று எண்ணாது, சகலருக்குமே இது போய்ச்சேர வேண்டும். பின் தள்ளப்பட்ட மக்கள், எளிய மக்கள் என்று உலகு ஒதுக்காது, அனைவருக்குமான கல்வியூட்டல் மூலமே பரந்துபட்ட பூமி, ஒளியூட்டப்பட்ட புண்ணிய பூமியாக மாறும். கல்வி ஒருவரிடம் மட்டுமே முடங்கும் பொருள் அல்ல. ஒருவரிடம் பெற்ற கல்வி ஒளி ஒரு கோடி பேரைச் சென்றடையும் தன்மை வாய்ந்தது. பலகோடி செல்வத்தை ஈந்து விடுவதிலும் பார்க்க, சிறு குடிலில் வாடும் ஒரு ஏழைக்குக் கல்விச் செல்வத்தை அள்ளிக்கொடுக்க முடிவு செய்தல் கோடிப்
பெருமையன்றோ.
தினகரன் 03.06.2001
v

Page 66
126
IDEbrGirlfrif5b) LDBbfiri ririb
வெளி உலகில், அதிபுத்திசாலிகள் போல் நடித்துக் கொண்டு, ஆனால் செய்கின்ற காரியங்களில் முற்றிலும் முரணான முறையில் செயல்படுபவர்களைக் காட்டிலும், சித்த சுவாதீனமுள்ள நோயாளிகள் ஒன்றும் பிரச்சனைக்குரியவர்கள் அல்லர். இவர்கள் சமூகத்திற்கு குற்றம் இழைக்க அவதரித்தவர்களோ அன்றி தேவையற்ற பிரகிருதிகள் என உதாசீனப்படுத்தப்பட வேண்டியவர்களும் அல்லர். சட்ட விரோதச் செயல்களில், கொடூர குற்றங்களைச் செய்பவர்களில் பலர் இன்று, சித்த சுவாதீன முகமூடியை அணிந்து சாதுரியமாகத் தப்பித்துக் கொள்வதுதான் இன்று கேள்விப்படுகின்ற சங்கதிகளாகிவிட்டன.
ஆனால் -
இன்று மனநோயாளிகளின் அதிகரிப்பிற்கு சமூகமே ஒரு காரணமாகிவிட்டதும் மறுப்பதற்கில்லை. இவர்கள் மீது இரக்கப்பட்டு, அனுசரித்துப் போகின்றோமா? இவர்களைப் போஷிக்கின்ற, பராமரிக்கின்ற பொறுப்புக்களில் இருந்து சமூகம் விடுபட நினைப்பது எந்த விதத்திலும் நியாயமாகாது.
ஏன் எனில்,
 

பருத்தியூர் பால வயிரவநாதன் (127 . S----
சித்த சுவாதீனம் என்பது ஒரு நோய். எல்லாமே நிரந்தரமானது, என எண்ணி நம்முன்னே காணும் பரிதாபத்திற்குரியவர்களைப் பார்த்து நகைத்தல் அழகாமோ? எந்த நிலையும் எவர்க்கும் வரலாம். எந்த நிலையும் மாறுதலடையலாம். இது இயற்கை நியதி. இவை புதிதான கருத்துமன்று.
நாட்டில் நடக்கின்ற நடப்புக்களைப் பார்த்தால், மனநோயாளிகளாகக் கண்ணுக்குத் தெரிபவர்களைவிடக் கண்ணுக்குப் புலப்படாத நோயாளிகள்தான் அதிகமாக இருக்கின்றார்கள். இவர்கள் சாதாரணமாக உலவுகின்ற மக்களைக் கூடத் தமது நடிப்பாற்றலாலால் மேலும் குழப்பியடித்து வருகின்றனர்.
உண்மையான நோயாளிகளைப் பூரணமான மனிதர்களாக மாற்றிவிடலாம். வெளியில் நடிப்புடன் உலா வரும் இவர்களைக் கண்டு கொள்வது எங்ஙனம்? இனம் காண்பதே கஷ்டம்தான்
எதிர்பார்த்த பயன் கிட்டாமை, விபத்துக்கள், பரம்பரை, போன்ற காரணங்களினால் மனநிலை பாதிப்படைவதாகக் கூறப்படுகின்றன. இத்துடன் சமூக அழுத்தங்கள் அரசியல் பிரச்சனைகளால் ஏற்படும் குழப்பங்கள், யுத்த சூழ்நிலைகள், பிரிவுத்துயர்கள் போன்றவைகளும் ஏனைய பிரதான காரணியாக அமைகின்றன. எவ்வித வயது வித்தியாசமுமின்றி இந்நோய்க்களாகுபவர்கள் நிலைபற்றி மனிதாபிமானக் கண்ணோட்டத்துடன் நோக்கல் வேண்டும். இது என்ன
மனநோயாளிகளைக் கேலி செய்வதும் ஒரு வகையில் மனித உரிமை மீறலேயாகும், எல்லாமே நிரந்தரமானது என எண்ணி நம்முன்னே ... காணும் பரிதாபத்திற்குரியவர்களைப் பார்த்து நகைத்தல் அழகாமோ? எந்த நிலையும் எவர்க்கும் வரலாம் - எந்த நிலையும் மாறுதலடையலாம், இது இயற்கை நியதி இவை புதிதான கருத்துமன்று.

Page 67
@ வாழ்வியல் வசந்தங்கள்
குணமாக்க இயலாத ஒன்றா? எத்தனையோ பேர், அதிசயிக்கும் வண்ணம் குணமாகி, தங்கள் கடமைகளைச் செய்வதை நாம் பார்த்துக் கொண்டுதானே இருக்கின்றோம்.
அப்படியிருக்க,
தெருவில் செல்லும் மனநோயாளிகளைக் கண்டால், கல் எறிவதும் கேலி பேசுவதுமாக, அவர்கள் உள்ளத்தையும் உடலையும் வருத்தலாமா? அவர்கள் இடுகின்ற கூக்குரல், கத்தல் எப்படி, வருத்துபவர்களுக்குச் சுகானுபவமாகின்றதோ தெரியவில்லை.
ஒன்று மட்டும் உண்மை!
மனம் வருந்தியமும், மனநோயாளியின் அழுகைக்குரல் இறைவனைப் போய் அடையும். வருத்துபவர்கள், வருத்தமடைவார்கள்.
சிலர் செய்கின்ற செய்கையாலும், சேஷ்டைகளாலும் சாதாரண மனிதனே முட்டாளாகிப் புத்தி பேதலித்து விடுகிறான். அப்படியிருக்க சற்று வித்தியாசமான நிலையில் உள்ளவர்களை மேன்மேலும் கிண்டலடித்து அவர்களைக் கோமாளியாக்கி, முடிவில், சித்த சுவாதீனமான நிலைக்கே தள்ளியும் விடுகிறார்கள். ஒருவன் சற்று ஏமாளியானால் போதும், அவனை வதைத்தே விடுகிறார்கள்.
மனநோயாளிகளைக் கேலி செய்யும் விதமான செயல்களைப் பத்திரிகைகள், சினிமாக்கள் நிறுத்தி விடவேண்டும். இதுவும் கூட ஒரு மனித உரிமை மீறல் செயலாகவேபடுகின்றது. பெரிய மூளைசாலிகளே கூட மித மிஞ்சிய உழைப்பு, ஓய்வு இன்மையால் சித்தம் பாதிப்புக்குள்ளாகும்போது, சாமான்ய மனிதர் எம்மாத்திரம்?

பருத்தியூர் பால வயிரவநாதன் (129
குடும்பத்தில் ஒருவருக்கு மனநிலை பாதிப்படைந்தால் ஒட்டு மொத்தமாக, அந்த குடும்ப உறுப்பினர்களை நிந்தனை செய்து உதாசீனமாக ஒதுக்கி விடுகின்றனர். இவர்கள் தக்க பராமரிப்பின்றி வீதிக்குத் தள்ளப்படுகின்றனர். இவர்களுக்கு குணமாகும் சந்தர்ப்பங்கள் அளிக்கப்படுவதில்லை. நோயாளி தன் நிலையில் இருந்து விடுபட நினைந்தாலும், சமூகம் அளிக்கின்ற அகெளரவம், அவனை மீண்டும் நோயாளி நிலைக்கே திருப்பி அனுப்பி விடுகிறது. தனிமை, விரக்தியால் அவன் சித்திர வதைக்கும் மேலான மன உழைச்சலுக்கு ஆளாகின்றான். மேலும்,
மனநோயாளிகளை, தகுந்த சிகிச்சையளிக்காமல், மந்திரம், மாயம் என்கின்ற சடங்குகளுக்குட்படுத்தி மேன்மேலும், அவன் மனதை ரணப்படுத்தி விடுகின்றனரே. பூரண சுகமடைந்த நோயாளியைக்கூட கடந்த கால வாழ்வை நினைவூட்டுவதன் மூலம், அவனைப் படுகுழியில் தள்ளுகின்ற நடவடிக்கை ஒருபுறமிருக்க,
குணமடையாத இத்தகைய மனநோயாளிகளைப் பாசம், பற்றுதல் காரணமாகப் பெற்றோர், உற்றோர் திருமணபந்தத்தில் இணைத்து விடுவதனால், ஏற்படும் விபரீதங்கள் சொல்லும் தரமன்று. நோய் மாறிவிடும் என நினைத்துப் பரீட்சார்த்த நடவடிக்கையில் இறங்கி விடுவது, ஒரு சுயநலப் போக்கு மட்டுமன்றி, குடும்பத்தையும், சமூகத்தையுமே பாதிப்புக்குள்ளாக்கும் ஒரு நடவடிக்கையுமாகும். இன்றும், நாகரீகமடைந்த காலத்தில் கூட, வைத்திய ஆலோசனையின்றி இது போன்ற சம்பவங்கள், நடைபெறுவதை அறிந்திருக்கின்றோம். தமக்கு வேண்டியவர்களுக்கு நன்மை செய்கின்றோம் என எண்ணி, நோயாளியையும், அவரைத் திருமணம் செய்பவரையும், ஏன் சுற்றி நிற்பவர்களையும், அமைதியின்மைக்கு ஆளாக்குதலை இவர்கள் உணர்கின்றார்கள் இல்லை. இதில் மிகவும் வேதனை தரும் விஷயம் என்னவெனில்

Page 68
{{30,} வாழ்வியல் வசந்தங்கள்
خمسسلسعيد" மனநிலை பாதிப்படைமந்தவர்களுக்கு குழந்தைகள் பிறந்து, அதனால் அக்குழந்தைகள் கூட நல்ல பராமரிப்பின்றி அவஸ்தைப்படுகின்ற நிகழ்வுகளைக் கண்டும், கேள்விப்பட்டுமிருக்கின்றோம்.
சாதாரண நிலையில் உள்ள குடும்பங்களில் கூடப் பெற்றோர் பிள்ளைகளை கண்மூடித்தனமாக தண்டனை என்கின்ற பெயரில் தாக்குவதும், ஏசுவதும் கூடப், பிஞ்சு உள்ளங்களைப் பாதிப்படையச் செய்கின்றமையினை அறிதல் வேண்டும். அத்துடன் பிள்ளைகளுக்கு அளவுக்கு மீறிய பாசம், செல்லம் கொடுத்து வளர்ப்பதனால் கூடச் சில பின்விளைவுகள் ஏற்பட்டு விடுகின்றது.
கடுமையான கண்டிப்புக்கள், எல்லைமீறிய செல்லங் கொடுத்தல், இத்தகைய வளர்ப்புக்களால் பிள்ளைகள், பயத்தினாலும் சுதந்திர உணர்வு அற்ற நிலையில் சிந்தித்தலை, தாமே முடிவு எடுக்கும் ஆற்றலை இழக்கக்கூடும்.
இதுபோலவே, கூடிய செல்லம் கொடுத்து வளர்ப்பதால், எவரையுமே சார்ந்திருக்கும் பழக்கமும், துன்பங்களுக்கு முகம் கொடுக்கப்பயப்படும் போக்கும் அதிகமாகி, ஈற்றில் சமூக நெளிவு, சுழிவுகளை அறியாதவர்களாகி விடுகின்றனர். இந்த இரு சாரார் மூலம் வளர்க்கப்படும் பிள்ளைகள் சமூகத்தில், மற்றவர்கள் போல் இயங்க முடியாது, சோதனைகளுக்கு ஆளாகும் போது, தோல்வி மனப்பான்மை, தன்னம்பிக்கை இன்மையினால் துவண்டு, மனோநிலை பாதிப்படையும் நிலைக்குத் தள்ளப்படுகின்றனர்.
எனவே,
வளரும் சமூகத்தில், உதயமாகும் சிறார்களுக்கு, மனோ வளர்ச்சி. பக்குவ நிலையைப் பேன, இறை தியானம், பக்தி, பிரார்த்தனை போன்ற நற்பழக்கங்களைப் போதிக்க வேண்டும்.

பருத்தியூர் பால வயிரவநாதன் {{3}
گئ===ہ
இள வயது, தெளிந்த மனநிலையில் உள்ளது. இதே உணர்வுடன், இந்தப் பழக்கங்களை நாம் ஊட்டி வளர்த்தால், எதிர்காலத்தில் இவர்கள் அப்பழுக்கற்ற தூய நெறியாளனாகத் திகழுவார்கள் ான்பது திண்ணம்.
தீய நண்பர்கள் சேர்க்கை, போதை வஸ்த்துக்கள் பாவனை போன்றவைகளால் இன்று இளம் சமூகத்தின் ஒரு பிரிவினர். முடங்கி ஒரு மனநோயாளியின் நிலைக்கே தள்ளப்பட்டு விட்டார்கள். பொருளாதார வசதி குன்றிய நாடுகள் என்று இல்லாமல் செல்வம் கொழிக்கும் நாடுகளில் கூட இன்று மன இயல்பு பாதித்தவர்கள் தொகை கூடித்தான் வருகின்றது. எந்த வர்க்கத்தையும் மனநோய் விட்டு வைப்பதில்லை. ஒவ்வொரு சமூக நடத்தைகளின் இயல்புக்கேற்ப காரணங்கள் மாறுபடும்.
நிம்மதி எல்லோருக்குமே வேண்டப்படும் ஒன்றாகும். எந்த நிலையில் பிறந்தாலும், நிம்மதியைப் பெற்றுவிட முடியும். இங்கு அந்தஸ்து, குல, ஜாதி பேதமில்லை. நிம்மதியை பெறும் விதத்தைக் கண்டறிதலே பிரதானமாகும்.
ஏதோ ஒரு விதத்தில் மனம் சஞ்சலப்படுகின்றது. வேண்டப்பட்டவர் மரணிக்கின்றார், காதல் அஸ்தமனங்கள் சொத்துக்கள் அழிதல், விபத்துக்கள், போன்றவையினால் பாதிப்படைதல், இடப்பெயர்வுகள், யுத்த சூழ்நிலைகளால் மனம் பேதலித்தல், பரீட்சைகளில் தோல்வி, வேலையின்மை, பொருளாதார கஷ்டம், அந்தஸ்து இன்மை, பீதி மிகையான சத்தங்கள், மற்றவர் மீது எல்லை மீறிய பொறாமை, அதிர்ச்சி போன்ற இன்னல்களை அனுபவிக்கும் போதுதான் அதன் தாக்கம் எத்தகையது என்பதை மனிதன் அறிகின்றான். இவைகளில் ஏதாவது ஒரு காரணத்தால் தாக்கப்படாமல் எவர் இருக்கின்றார்கள். ால்லோருமே எல்லாவற்றிற்குமே கவலைப்பட்டுக் கொண்டிருக்க முடியுமா? கிடைப்பதைக் கொண்டு திருப்திப்படுவதுதானே வாழ்க்கை. இதையறிந்தால் மனிதவாழ்வில் பிரச்சனைகள் ஏது?

Page 69
வாழ்வியல் வசந்தங்கள் { 132 ـ தங்களுக்கு மட்டுமே, கஷ்டங்கள் தொடருவதாக நினைப்பதால் என்ன பயன் வந்துவிடப் போகின்றது.
கவலை இருக்கின்றது என்று கூறிக்கொண்டே கவலைப்படுகிறார்கள். இது மேலும் ஒரு புதிய கவலையை உண்டு பண்ணுவதாகவே அமையும்.
கவலைகளைத் தோழமை ஆக்க முயலவேண்டாம். கவலைகள் களையப்படவேண்டியவைதான், தூக்கிச் சுமக்க வேண்டியவைகள் அல்ல.
மனத்தாக்கத்தினால் பாதிப்படைந்த எவருக்கும், ஆறுதல் அளித்தல் எம் கடன், சாதாரண நிலையில் உள்ள மனிதர்களே, தவறு இழைக்கும் போது, மண் இயல்பு பாதிப்படைந்தவன், செய்கின்ற செயலுக்கு, நாம் முகம் சுளிப்பதும், எள்ளி நகையாடுவதும், அவர்களை ஒறுத்தலும், நியாயமான ཀྱི་:
அமைந்திடுமா? மன வளமுடன் வாழ்தல் என்பதே, மனிதனாக வாழ முனைதல் என்பதாம். விசாலமான சிந்தனைகள்தான் மனிதனை மண்ணுக்குரியவன் ஆக்குகின்றது. நாம் பிறர்க்கு வழங்கும் ஆறுதல்களால், தேறுதல்களால், பிறர் பயன் பெறுதல் என்பது எமக்கு நாம் வழங்கும் மன அமைதி என்று அறிவோம். மனநோயாளர்க்கும் உணர்வு உண்டு. மனிதர்தான் இவர்கள் சுனிவோடு நோக்குவோம், தனிமைப்படுத்தி, அவர்களை வாழ்வை வெறுமைப்படுத்த வேண்டாம்.
தினகரன் - 1706.2007
/>

133
மன்னித்தல் தெய்வீகம்
llo
இது ஒரு உண்மையான நிகழ்ச்சியாகும். உங்களுக்கு நம்பமுடியாத சம்பவமாகவும் இருக்கும். ஒருவனுக்கு தூக்குத் தண்டனை விதித்துத் தீர்ப்பு வழங்கப்பட்டது. இதனால் அவனது தீய செய்கையின் பொருட்டு அவனது உறவினர்கள் அவனை வெறுத்து, சிறைச்சாலையில் சென்று பார்க்கவே மறுத்து விட்டனர். எவருமே அற்ற நிலையில் இவன் தனித்துப் போனான். சிறையில் தன்னந்தனியனாக, உறவினர், நண்பர்களை நினைந்து வாடினான். சின்னதான் தான் தப்புச் செய்தாலும் கூடப் பெயரளவில் கூட தன்னை விசாரிக்காத கொடுமையை அவன் அனுபவித்தான். தனக்குத் தூக்குத் தண்டனை விதித்ததனால் ஏற்பட்ட மனத்துயர், விரக்தி என்பனவற்றை விட, எவருமே தன்னை வெறுத்துப் பார்க்கக் கூடாத நிலை எற்பட்டதை நினைந்தே மேலும் துயரமடைந்தான்.
இவனது பரிதாப நிலையை அறிந்த, இவனால் கொலையுண்டவரின் பிள்ளைகள் எப்படியோ அறிந்து கொண்டனர். அந்தக் குடும்பம் வசதிபடைத்த கெளரவமான, தெய்வ பக்தியுள்ள குடும்பமாகும். இவர்கள் சிறை அதிகாரிகளிடம் அனுமதி பெற்று
அவனைச் சென்று பார்த்தனர். தமது தகப்பனாரைக்

Page 70
{{3 } வாழ்வியல் வசந்தங்கள் "سعلى عيخ"
கொன்றவனை, நீதிமு ன் நிறுத்திப் பிள்ளைகள், அவனுக் மரணதண்டனை வழங்க முயற்சி செய்து, வெற்றி கண்டாலும் கூட தம் பொருட்டு ஒரு உயிர் தூக்கில் தொங்கப் போவதைக் கண்டு பச்சாதாப நிலைக்குத் தள்ளப்பட்டனர். இந்தப் பிள்ளைகள் தீ பக்தியுணர்வு மிக்கவர்கள். ஆதலினால், சிறைச்சாலைக்கு சென்று அவனுக்கு ஆறுதல் வார்த்தைகளைச் சொல்லித் தேற்றி
இதயத்தில் அன்புகொண்டவர்களுக்கு மன்னிக்கு இயல்பு தானாகவே வந்து விடுகின்றது. மன்னித்தலுக்கு எல்லையே இல்லை என்றார் பெரியோர். இறைவன் எம்மை மன்னிக்கும் போது, நாம் எம்மைச் சார்ந்த உயிர்களை, இறைவ பொருட்டு மன்னித்தால் என்ன?
சிறைச்சாலைக்குச் சென்றவர்கள், அந்தக் கைதிக் விசேட உணவு வழங்க ஏற்பாடுகளைச் செய்தனர் இவர்களுடைய பண்பையும், மன்னிக்கும் இயல்பையும் கண் இக்கைதி, கண்ணி"ர் விட்டுக் கதறினான். தன் செய்கைக்காக மனப்பூர்வமாக வருந்தியதுடன், தான் இவர்கள் அளித்த ஆறுதல் மூலம் தன் துன்பத்தினை மறந்து வரப்போகும் தண்டனையைக் கூட உளமார ஏற்றுக் கொள்ளும் பக்குவநிலையை, அவன், பேச்சின் மூலம் ஏனையோர் அறிந்தனர். இச்சம்பவத்தினால், கைதி
கொலையுண்டவர்களின் பிள்ளைகளும், மன அழுத்தங்களில் இருந்து விடுபட்டனர். ஒருவர் துன்பத்தில் இன்னும் ஒருவர் சுகம் கான முடியாது.
குற்றங்களுக்குத் தண்டனை வழங்குதல் கூட ஒரு வித கருணையினால் எழுந்த செயலாகவே அமைதல் நன்று, கொடுக்கப்படும் தண்டளை அவனைத் திருத்தவே பயன்பட வேண்டும் என்று மனதார நினைவு கொள்ள வேண்டும். இறைவன் அன்பின் நிமித்தமே உயிர்களுக்கு. நற்பேறு பெற தண்டனை வழங்குகின்றன வெறும் உணர்ச்சிக்கு ஆளாகி தண்டனை வழங்கப்படல் ஆகாது. நிகழ்வின் உண்மைத் தன்மையை ஆராய்ந்தே தண்டனை வழங்கப்பட வேண்டும், மன்னித்தல் மூலமும், குற்றமிழைத்தவன், மனச்சாட்சி மூலம் திருந்தி விடுகிறான்.
 
 
 
 
 
 
 
 

பருத்தியூர் பால வயிரவநாதன் {{3}
சாதாரண மனித இயல்பிற்கு மேலான மன்னிப்பு வழங்கும் இயல்பினால் மனிதன் தெய்வ நிலைக்கு உயர்த்தப்படுகின்றான். இத்தகைய செயல்களை எல்லோராலும் செய்ய முடியாதுதான். இதற்கு மனப்பக்குவம் வேண்டும். கோபம் வருவது எமக்குள் சாதாரண இயல்புதான். ஆயினும், கோபம் கொள்வதால், இன்னும் ஒருவரைத் தண்டித்தேயாக வேண்டும் என்கின்ற எண்ணம், வெறும் பழிதீர்த்தலாக அமையலாமா? குற்றங்களுக்குத் தண்டனை வழங்குதல் கூட ஒருவித கருணையினால் எழுந்த செயலாக அமைதல் நன்று. கொடுக்கப்படும் தண்டனை இவனைத் திருத்தவே பயன்படவேண்டும் என்று மனதார நினைவு கொள்ள வேண்டும்.
பெற்றோர் குழந்தைகளைத் தண்டித்தல், ஆசிரியர் மாணவர்களைத் தண்டித்தல், குற்றவாளிகளை நீதிமன்றம் தண்டித்தல், அதிகாரிகள் பணியாளர்களைத் தண்டித்தல், இவை போன்றவை நல்ல நோக்கிற்காக அமைவதில் எந்தவிதத் தவறும் கிடையாது.
எனினும், தண்ட ைஇனயை ஏற்கின்ற மனப்பக்குவம் எல்லோருக்குமே, வருவதில்லை. எதற்காக இத்தண்டனை என்கிறானே. ஒருவன் தான் செய்த தவறைக் கூட, தம்மால் பாதிப்புக்குள்ளானவரே பெரிய மனதுடன் மன்னிப்பது சாமானிய செயல் அல்ல, ஆனால்,
முழுச் சமூகத்திற்குமே, பாதிப்பு அடையச் செய்பவர்களை, சமூகம் மன்னித்தல் என்ற நோக்கில் பார்க்கச் சிரமப் படுகின்றது. இன்று சிறு சிறு குற்றங்களுக்குக் கூட மன்னிப்பு வழங்கி அரவணைக்காமையினால், பலர் சமூக விரோதிகளாகி விட்டனர்.
நாம், நல்ல நண்ப ர்களையும், உற்றார், உறவினர்கள் அன்பையும் பெற்றேயாக வேண்டும். விட்டுக் கொடுத்தல் என்பதே, மன்னித்தலின் ஒரு பிரிவு என்றாலும், சிறு குற்றங்களை

Page 71
(13.6) வாழ்வியல் வசந்தங்கள்
Yn-sur-...--~~~Y மன்னிப்பது என்பதும், அவைகளைச் செய்யத் தூண்டுவதாக அமையக் கூடாது.
எங்கள் உணர்ச்சிகளுக்கு மட்டுமே கெளரவம் கொடுத்து வாழ்வதால் ஒரு பலனுமில்லை. எமக்குச் சாதகமாக அமையாத விஷயங்களுக்காக, மற்றவர் விஷயங்களைப் பெரிதுபடுத்தி நாம் அவர்களுக்குத் தண்டனை வழங்கலாமா?
மனித நேயம் என்பதே, எம்மீது பிறர் எப்படி அன்பு செலுத்த வேண்டும் என நீங்கள் எதிர்பார்க்கின்றீர்களோ, அவ்வண்ணமே, நீங்களும் பரஸ்பரம் அன்பைச் செலுத்துவதாகும். இவை தூண்டுதல் இன்றிச் சாதாரணமாக, சகல மனிதர்களையுமே நேசிக்கும் ஒரு செயலேயாகும்.
ஒருவர் மீது ஒருவர் சார்ந்து வாழ்தல் என்பது, அன்பைச் செலுத்துதல் மூலமே சாத்தியப்படும். அன்பு, காருண்யம் இல்லாதவர்கள், தனிமைப்பட்டுப் போவார்கள். இந்தச் சிறைவாழ்க்கை, உள்ளத்தைத் தகர்ப்பதுடன் சமூகத்தையே வெறுப்பாக நோக்கத் தலைப்படும். சமூகத்தை உதறி, அதனிடம் குற்றங்களையே காண்பவர்கள், வசீகரம், பொலிவிழந்து, ஒருவித மனநோயாளர் நிலைக்கே தள்ளப்படுகின்றனர். அன்புடன் வாழ்வதில் தானே அர்த்தம் உண்டு. ஒருவர் உள்ளத்தைப் புண்ணாக்குபவர்கள், அவர்களை மட்டுமல்ல தம்மையே ஒரு குற்றவாளியாக்கிவிடுகிறார்கள். பிழைகளையே தூக்கிப் பிடிப்பதனால் அண்டைநாடுகளுக்கிடையேயும் இத்தகைய சச்சரவுகள் மன்னிக்கும் இயல்பு மறைந்த வண்ணமிருக்கின்றன.
ஒவ்வொருவரும், தமது தவறுகளையே மறைக்கின்றனர். ஆனால் பிறர் தவறுகளை மன்னிக்கத் தயாராகயில்லை. தனிமனிதன், சமூகம், பிரதேசங்கள், நாடுகள், இவை அனைத்துமே மன்னித்தல் என்கின்ற பொதுவான சாத்வீக கொள்கையினைக் கடைப்பிடித்தேயாக வேண்டும். முழு உலகிற்குமே மனிதன் சொந்தமானவன் என்கின்ற நிலைவருதல் வேண்டும். ஒருவரில்

பருத்தியூர் பால வயிரவநாதன் リ
معسعسمح
மற்றவர் உளமார்ந்த ஈடுபாடு, கருணை கொள்ள வேண்டும். கோபம், காழ்ப்பு, சுயநலம், ஆசை இன்றேல் இவை சாத்தியமாகும். இவைகளைப் போக்குதல் எளிதான காரியம், அல்ல. என்றாலும், இதன் தகிப்பை படிப்படியாகப் போக்கியேயாக வேண்டும். மானுட மாண்பு மேலோங்க வேண்டும் எனில், உலக நன்மைகளின் பொருட்டு, ஒவ்வொருவருமே தன்னை விடப் பிறரை நேசிக்கக் கற்றுக் கொண்டேயாக வேண்டும். அப்படியாயின், மன்னித்தல் என்கின்ற மாண்பு எம்மை வந்தடைந்தே தீரும்.
வீரகேசரி
<>

Page 72
138
அன்புடன் பேசிப் பழகுக!
யா, அவரிடம் மட்டும் பேச்சுக் கொடுத்து விடாதீர்கள். மனுஷன், வள்ளென்று எரிந்து விழுவார்; எடுத்தெறிந்து பேசிவிடுவார். எதற்கும் நீங்கள் சற்று ஜாக்கிரதையாகவே இருங்கள்!
இப்படியாகச் சிலர் வியாக்கியானம், செய்து அச்சப்பட்டுப் பேசுவதை நாம் கேட்டு வருகின்றோம். நல்ல வார்த்தைகளைப் பேசுவதையும், முகத்தைச் சதா சந்தோஷமாக வைத்துக் கொள்வதையும் நாம் பழக்கமாக வைத்துக் கொள்ளல் வேண்டும். முகத்தைச் சந்தோஷமாக வைத்துக் கொள்வதே, சிலருக்குச் சிரமமான காரியமாக இருக்கின்றது. நாம் பேசும் போது நல்ல வார்த்தைகளைப் பேசுவதுடன் நின்றுவிடாது, முகத்தினை மலர வைத்துப் புன்முறுவலுடன் தோற்றமளிக்க எம்மை ஆக்கிச் கொள்ளவும் வேண்டும்.
சுடு சொல் பேசுதல் என்பது தமது கெளரவத்தினை மேம்படுத்துகின்றது எனச் சிலர் தப்புக் கணக்குப் போடுகின்றனர். தாங்கள் உரையாடும் பாங்கினைத் தாமே மெச்சிக் கொள்வதும்,
 

பருத்தியூர் பால வயிரவநாதன் (3)
محسعهها
எனக்கு வரும் கோபத்தில் என்ன பேசுவேன் என்பதும் தெரியாது
என சத்தமிடுபவர்களையும் நாம் அறிவோம்.
அடக்கு முறைப் பேச்சுக்கள், மனதை நெருடும் வக்கிரப் பேச்சுக்கள், ஒருவரின் குறைகளை அம்பலப்படுத்திக் கதைத்தல், தனது கருத்துக்களையே மிகைப்படுத்தி உரத்திக் கத்துதல், பொய்களை, உண்மை போல அடித்துப் பேசுதல், எதிரில் இருப்பவர் தகுதி, தராதரம் உணராது உரத்துக் கத்துதல், குரலை வேண்டும் என்றே மாற்றி, தொனியைக் கடுமையாக்குதல், இத்தகைய குணாதிசயங்களைக் கொண்டவர்களைக் காணும் போது, சராசரி மனிதன் அச்சமடைவதில் வியப்பில்லை. இதனால் இவர்கள் அடைகின்ற பயன்தான் என்ன?
எரிச்சல், ஆத்திரம், இவர்களிடமிருந்து விலக வேண்டும் என்கின்ற எண்ணம் இவைகள் தான் உடன் தோன்ற ஆரம்பிக்கும்.
ஒருவர் என்னதான் பணம், பொருள் பதவி பெற்றாலும் கூட, பழகும் விதத்தில் தான் பெற்ற செல்வங்களை மேன்மைப் படுத்திக் கொள்கின்றனர் என்பதை அறிந்து கொள்ளல் வேண்டும். ஆண்டவனால் கிடைத்த செல்வங்களை நாம் நன்கு அனுபவிக்க வேண்டுமேயானால், பெரியோர், மற்றையோரின் அன்பும், ஆசியும் எங்களுக்குக் கிடைத்தேயாக வேண்டும். இன்னும் ஒருவரை பகைத்தோ, எரிச்சலுட்டும் வார்த்தைகளைப் பேசி பேசியே, நாம் களிப்படைந்து விட முடியாது எனத் தெரிந்து கொள்வோம்.
வாழ்வின் அர்த்தமே, நாம் பிறருடன் பண்பாடாகப் பழகுதலேயாகும். அன்புடன் பழகுதல் என்பதே தனிக் கலையாகும்.
இதயத்தில் கணிவைக் கொண்டு மக்களை நோக்கியமையினாலேயே சாதாரண மனிதனாகத் தோன்றியவர்கள், மகான்களாக மாறினார்கள். சாதாரண நிலையில் உள்ளவர்கள் பிரபல்யமான அரசியல் தலைவர்களாக மாறியமைக்கான மூலகாரணமே கனிவான - தெளிவான தூய்மையான பேச்சுக்களும் நன்னடத்தைகளுமேயாகும்.

Page 73
140 வாழ்வியல் வசந்தங்கள் کسعه S . ஏன் என்றால், மிகவும் நல்ல மனிதராக வாழ்ந்து, பேருதவி, புரிந்தவர்கள் கூட தமது வார்த்தைப் பிரயோகங்களினால் கெட்ட பெயர் பெற்றுவிடுகின்றனர். இன்னும் சிலர் பேச்சு மட்டும் இனிமையாக இருக்கும் செயல் எதிர்மறையாக இருக்கும். இவர்கள் சக மனிதர்ளால் சீக்கிரம் இனம் காணப்பட்டு விடுவார்கள் நற்செய்கை புரிகின்றவர்கள், தங்கள் உடல், உளச் சிரமங்களினால் கூடாத வார்த்தைப் பிரயோகங்களைப் பேசுவதைத் தவிர்த்தால் அவர்கள் மகான்களாகி விடுவர் என்பதில் சந்தேகமில்லை.
எல்லோருமே, எல்லோருக்குமே ஏதோ ஒரு வகையில் நல்லன செய்து கொண்டுதான் இருக்கின்றார்கள். மிகுந்த சிரமத்துடன், எத்தனை நன்மைகள் செய்தாலும் கூட, ஒரே ஒரு வார்த்தைப் பிரயோகமே, அத்தனை நன்மைகளையும், சின்னா
பின்னப்படுத்தி விடுமன்றோ.
எனவே, எந்த வேளையிலும் எமது உள்ளத்தில் உளைச்சல், கோப உணர்வுகளைத் தவிர்த்தேயாக வேண்டும். விசுவாசமாக அன்பு செலுத்துதல், கருணையுடன், பிறர் துன்பங்களை அணுகுதல், போன்ற செய்கையினால் எமது உள்ளமும் படிப்படியாகப் பக்குவப்பட ஆரம்பிக்கும். இச்செய்கைகளே மானுட சமூகத்திற்கேற்ற வாழ்வியலுக்கான அணுகுமுறையுமாகும். தீய நடவடிக்கை, பேச்சுக்களால் நாம் எதையும் கற்றுவிட முடியாது, சாதித்து விடவும் முடியாது.
அன்புக்காக ஏங்காத ஜீவன்களே இல்லை. பிறர் எம்முடன் எதிர்பார்ப்பதே இதனைத்தான். வாய் பேசாத ஜீவராசிகள் கூட அன்புக்குக் கட்டுப்பட்டேயிருக்கின்றன. பறவைகள் மிருகங்கள் கூட தமது இனத்தைக் கனிவுடனேயே நோக்குகின்றன. வெளிப்படையாய் அன்பைக் காட்ட முனையாதவர்கள் கூட உள்ளுர அதனையே நாடுகின்றனர்.
தமது வாழ்வில் ஏற்பட்ட பாதிப்பு, தொல்லைகளினால் பேச்சுக்கள், பழகும் முறைகள் ஒருவரிடம் மாற்றமடைகின்றன.

பருத்தியூர் பால வயிரவநாதன் (a)
محسویهحS
இதைப் புரிந்து கொள்ளாமல் நாமும் அவரிடமிருந்து விலகி, அவர் வழிச் செல்லுதல் முறையல்ல.
அத்துடன்,
ஒரு சாராரிடம் பெற்ற தோல்வி அனுபவங்களால், ஒட்டுமொத்த சமூகமே இப்படித்தான் எனத் தப்புக் கணக்குப் போடுவதாலேயே, பலர் சமூகத்திற்கு முரணான மனிதர்களாகத் தென்படுகின்றார்கள். இத்தகையவர்களுடன், நாம் குரோதம் கொள்ளாது நட்புறவை வளர்த்துக் கொண்டேயாக வேண்டும். இதயம் கசியும் போதுதான் அன்பின் பரிணாமம், ஆற்றல் என்பனவற்றையும் புரிந்து கொள்கின்றோம். மனதை விசாலமாக்கக் கனிவுடன் பேச ஆரம்பிப்போம்.
பழக்கம் என்பது நல்ல செய்கைகளை நாம் செய்வதாகவே அமைதல் வேண்டும். பிறருடன் பேசுதல், பழகுதல் என்பதனைச் சிறுகுழந்தைகளுக்கும் கற்றுக் கொடுக்கவும் வேண்டும். இது இவர்களது எதிர்கால வாழ்வையும் சிறப்படைய வைக்கும். இதயத்தில் எவ்வித விகற்பமின்றியும், பரஸ்பர நல்லுறவை மட்டுமே பகிர்ந்து, சொற்களைத் தூய்மையாகப் பேசிக் கொள்வோமாக.
இதயத்தில் கணிவைக் கொண்டு uo disso em நோக்கியமையினாலேயே, சாதாரண மனிதனாகத் தோன்றியவர்கள் மகான்களாக மாறினார்கள். சாதாரண நிலையில் உள்ளவர்கள் பிரபல்யமான அரசியல் தலைவர்களாக மாறியமைக்கான மூலகாரணமே கனிவான, தெளிவான தூய்மையான பேச்சுக்களும் நன்நடத்தைகளுமேயாகும். அன்பாகப் பேசுவதால் செலவு ஒன்றும் ஏற்பட்டு விடப் போவதில்லை.
மாறாக,
மக்கள் நன்மதிப்பும், ஆதரவும் என்கின்ற லாபமுமே எமக்குக் கிட்டுகின்றது.

Page 74
142 வாழ்வியல் வசந்தரிகள் Ya-1
பேசுமுன் சற்றுச் சிந்திப்போமாக, ஏவி விடப்பட்ட சொல் சிதறல்களைப் பொறுக்கி எடுத்து விட முடியாது. இவை மற்றவர்களின் இதயங்களில் நிரந்தரமாகவே தங்கி விடுகின்றன. பேசப்படும் வேச்சிற்கும், சிந்தனைக்கும் தொடர்பின்றிப் பேசுவதிலும் பார்க்க பேசாது மெளனிப்பதுவே சாலச்சிறந்ததாகும். இடம், பொருள், அறியாது, மனதினை அடக்காது தான் தோன்றித் தனமாகப் பேசுவதனால் ஏற்படும், விபரீதங்களை நாம் அறிவோம். எமது கருத்துக்களையே பிறர் ஏற்றுக் கொள்ள வேண்டும் எனச் சண்டித்தனம் புரிவதும், இதனால், எம்மைச் சுற்றி இருப்பவர்கள் எம்மை ஏளனமாகவும், அருவருப்புமாக நோக்குவதை தெரிந்தும், பிடிவாதம் பிடிப்பதனால் என்ன கெளரவம் கிடைத்து விடப் போகிறது? நாம் நன்கு பேசத் தெரியாமல் விடுவதால், எங்களின் உண்மையான கருத்துக்கள் கூடச் செத்து விடுகின்றன. அழகாகவும் அமைதியாகவும் பேசுதல் சிரமமான பணி என எண்ண வேண்டும்.
வீரகேசரி 19.6.2002
マ少

143
பிள்ளைகளை எப்படி ஒழுங்காகவும் கட்டுப்பாட்டுடனும் வளர்ப்பது என்றே பெரும்பாலான பெற்றோர்கள் அங்கலாய்ப்புடன் கேட்டுக் கொண்டிருக்கிறார்கள். முதலில் அவர்கள் ஒழுங்கான, பெற்றோர்களாக பிள்ளைகள் முன் வாழ்ந்து காட்ட வேண்டும்.
எல்லோருமே பிள்ளைகளிடத்தில் அன்பாக இருங்கள் என்றுதானே சொல்கிறார்கள். நாங்களும் அப்படியே, கொஞ்சம் செல்லம் கொடுத்து வந்தோம். இப்போது பாருங்கள், பிள்ளைகள் எல்லாம் கெட்டு குட்டிச்சுவராகி விட்டனவே என்று சிலரும், மற்றும் ஒரு smyn(8um,
‘நாங்கள் பிள்ளைகள், கண்ட, கண்ட கெட்ட பழக்கங்கள், பழகக் கூடாது. தீய நண்பர்களுடன் சகவாசம் வைத்துக் கொள்ளக் கூடாது என்கிற நல்ல எண்ணத்தில் கொஞ்சம் கண்டிப்பாக இருந்தோம். இப்போது என்னடா என்றால் பையன் வரம்பு மீறி எங்கள் பேச்சைக் கேட்காமல் ஏதேதோ செய்து வருகின்றானே. அவனிடம் பேசவே பயமாக இருக்கின்றது. எப்படி இருந்தவன் இப்படி ஆகிவிட்டானே’ என்று புலம்புவதையும் நாம் கேட்டு வருகின்றோம்.

Page 75
(?) வாழ்வியல் வசந்தங்கள்
محاسبه
கண்டிப்பு, அன்பு, பரிவு, கரிசனையான கண்டிப்பு, இவற்றை நன்கு தெரிந்து கொண்டே, பெற்றோர்கள் பிள்ளைகளுடன் பழக வேண்டியுள்ளது. சந்தர்ப்பங்களுக்கேற்ப, இவர்களது மன இயல்பு, நோக்கங்களைப் புரிந்து கொண்டு, கண்டிக்க வேண்டியுள்ளது. எந்த நேரத்திலும் வெறும் கோபங்களையோ அன்றி மிதமிஞ்சிய செல்லத்துடனோ, பிள்ளைகளை வளர்த்து விட முடியாது.
தவிர, தற்போதைய நவயுகத்தில், பெற்றோர் - குழந்தைகளின் போக்குகளும், முழுமையாக மாற்றமடைந்துள்ளன.
மிதமிஞ்சிய சுதந்திர உணர்வு, பெற்றோரிடமும், ஏனைய வயதுவந்த பெரியோர்களிடத்தே பயமின்மை, ஒழுக்கக் கேட்டைத் தூண்டவல்ல, புத்தகங்களை வாசித்தல், அத்துடன், திரைப்படங்கள், தொலைக்காட்சிகளில் அதீத ஈடுபாட்டுடன் பார்ப்பதனால் ஏற்படும் விளைவுகள், மேற்கத்தைய கலாசாரங்களைப் பற்றி, தவறாகப் புரிந்து கொள்ளல், அங்குள்ள சிறப்பான அம்சங்களை விடுத்து, தேவையற்ற விடயங்களை மட்டுமே மனதுள் பதித்து வைத்தல்,
சிறுவயதில் இருந்தே மத, நம்பிக்கையை வளர்க்காது இருத்தல், கலாசார சிறப்பியல்புகளை அறிவுறுத்தப்படாதிருத்தல், ஒழுக்கத்தை முதன்மைப்படுத்தாது, பணம், கல்வி தேடலை மட்டும் கைக் கொள்ள வைத்தல், நடைமுறை வாழ்வில், பொது விடயங்கள், வைபவங்கள், கழக நிகழ்வுகளில் பங்கு
தவறுகளை ஒத்துக் கொள்ளும் பக்குவத்தினை நாம் சிறார்களுக்கும் போதிக்க வேண்டும், செய்த தவறுகளைத் திருத்த வேண்டும், ஆரம்பத்திலேயே பிழையான வழியில் தவறுகளை மறைத்து விடக் கற்றுக் கொடுக்கலாமா? பொய், களவு செய்யும் பழக்கத்தினை அறவே களைய வேண்டும், பிறருடைய சிறு துரும்பையேனும் வீட்டிற்குக் கொண்டுவரும் பழக்கத்தின் ஆரம்பத்திலே இல்லாமல் செய்யவும் வேண்டும், பாவ கருமங்களில் பயத்தை ஏற்படுத்தி தெய்வ நம்பிக்கையை ஊட்டல் வேண்டும்.

பருத்தியூர் பால வயிரவநாதன் (45)
کسیسهح
கொள்ளாதிருத்தல், தனிமைப்பட்டே வாழ நினைத்தல், வாழும் சூழ்நிலையை உருவாக்குதல்,
இத்தகைய காரணங்களினால் எதிர்கால இளைய சமூகம், முரணான வாழ்வு முறைகளைத் தாம் உணர்ந்து கொள்ளாமலேயே, கெட்டழிந்து போகின்றது.
பிள்ளைகள் என்ன கருத்துகின்றார் என்பதே எமக்குப் புரியவில்லை. கொஞ்சம் நாங்கள் கூடுதலாகக் கண்டித்தால், தற்கொலை செய்து விடுவதாக வேறு மிரட்டுகிறார்கள் என ஒருவர் புலம்பினார். பிள்ளைகளுக்காகப் பெற்றோரா அல்லது பெற்றோருக்காகப் பிள்ளைகளா என்பதுபோல் எதிரும் புதிருமாக வாழ்வது எப்படி?
உரிமை எடுத்துக் கொள்ளுதல் என்பதின் அர்த்தம் தான்
என்ன? பெற்றோர், பிள்ளைகளிடத்தும், பிள்ளைகள் பெற்றோரிடத்தும் மிதமிஞ்சிய உரிமைகள், சலுகைகளை, அல்லது ஏதாவது தேவைகளை எதிர்பார்க்கின்றனர். இவைகள்
நடைமுறைக்குச் சாத்தியப்படாவிட்டால் தொல்லைகளே மிஞ்சும். தமது பெற்றோரின் நிலையை இவர்கள் உணர வேண்டும். அதே வேளை, பிள்ளைகளின் எதிர்பார்ப்புகளைப் பூரணமாக உதாசீனம் செய்து விடக்கூடாது. முடிந்தவரை தமது பிள்ளைகளுக்குரிய கடமைகளை நிறைவேற்றியேயாக வேண்டும். பிறரிடம் பிள்ளைகள் உதவிகோருதல் தவிர்க்கப்படல் வேண்டும்.
பெற்றோர் இருந்தும், அவர்களால் செயலாற்ற வசதி வாய்ப்புக்கள் இருந்தும், பிறரிடம் போய் பிள்ளைகள் உதவி கோருதல், சமூகத்தில் அவர்கள் ஒருபாரமாகக் கருதப்படுவதுடன், ஈற்றில் தாய், தகப்பன் உறவில் ஒரு நிரந்தர விரிசல், அல்லது இடைவெளி ஏற்படச் சாத்தியம் உண்டு. அத்தியாவசிய தேவையான கல்வி, உணவு, உடை ஆகியனவிற்குப் பெற்றோர் செய்கின்ற தியாக உழைப்பினை, இவர்கள் உணர வேண்டும். தமது பிரயத்தனங்களைப் பூரணமாக மறைத்து தமது குழந்தைகளுக்குக் கணக்கற்ற பணச் செலவினைச் செய்வதனால்,

Page 76
14 வாழ்வியல் வசந்தங்கள் YN--~~~~Y பணம் பற்றிய பிரச்சனைகளே இவர்களுக்குப் புரிவதில்லை. ஈற்றில் திடீர் எனப் பொருளாதாரச் சிக்கல் ஏதோ ஒரு தருணத்தில் வரும் போதுதான், எற்கனவே சந்தோஷங்களையே அனுபவித்து வந்த பிள்ளைகள், வீட்டின் நிலையை ஜீரணிக்க இயலாது, முரண்பட்ட வாழ்வை நோக்கிச் செல்வதும், தாய் தகப்பனாரை அவமதிப்பதுமான செயலும் செய்துவிடுகின்றனர்.
குழந்தைகள் வளர்ந்து வரும்போதே வசதிகளை மட்டுமே நோக்கும் நாம், அவர்கள் வளரும் சூழல் பற்றித் தெரிந்து கொள்ள முயற்சி செய்வதில்லை. புறச் சூழல் மட்டுமல்ல, வீட்டின் உள்ளேயே ஆரோக்கியமான மன வளர்ச்சி சந்தோஷங்களை உருவாக்க வல்ல சூழ்நிலைகளை உருவாக்க வேண்டுமல்லவா? சதா கணவன், மனைவியிடையே சண்டை சச்சரவுகள், வீட்டுப் பெரியவர்களிடையே உள்ள குடி, கெட்டவார்த்தை பேசுதல் போன்ற செயல்களைக் கண்ணுற்றால், வளரும் பிள்ளைகள் எதிர் காலம் என்னாவது. அத்துடன் வெறும் பொழுது போக்கிற்காக, வீட்டைச் சுத்தமாக வைத்திருப்பதும், வீட்டிற்கு வருகின்ற அந்நியர்களின் தீயபழக்கங்கள் சிலவற்றை, குழந்தைகள் ஒரு நாகரீகமாக நோக்கி பழகுதலும் தவிர்க்கப்பட வேண்டியவையே. குழந்தைகள் சிறு வயதில் இருந்தே அவரவர் வயதொத்த, நல் இயல்புள்ள ஏனைய குழந்தைகளுடன் பழக விடலாம். சில பிள்ளைகள் தம்மிலும் பார்க்க வயது முதிர்ந்தவர்களுடன், பழகி பெரியவர்கள் போல் பேசுவதைக் கண்டிருப்போம். சில வேளை, அவை வீணான வார்த்தைப் பிரயோகங்களையே, இந்த பழகும் இயல்பினால் கற்றுக் கொண்டு விடுகின்றன. குழந்தைகள் நல்ல பண்புகளையும், தீய பண்புகளையும் இந்தச் சமூகத்தின் மூலமே கற்றுக் கொள்கின்றன. எனவே, வீடு மட்டுமல்ல, அனைத்து சமூக உறுப்பினர்களுமே ஒவ்வொரு பிள்ளைகளையும், நற்பிரஜையாக்க உருவாக்குவதற்குக் கடமைப்பட்டவர்கள். எனது பிள்ளை மட்டுமே ஒழுக்கமானது எனச் சுய திருப்திப்பட்டு பிறர் குழந்தைகள் நலனை அந்நியத்தனமாக நோக்குதலும் நாகரீகமன்று.

பருத்தியூர் பால வயிரவநாதன் _{{{47)
سعه S
கல்விக்கூடங்கள், சமூக நல நிறுவனங்கள் ஆகியனவற்றின் பங்களிப்பானது, எதிர்கால நற்பிரஜைகளை உருவாக்கும் விடயங்களின் பெரும் பொறுப்பினை வகிக்கின்றது. பாடசாலைகளில் ஆசிரியர்கள் பண்பைப் போதிப்பதிலேயே சிரத்தை எடுக்க வேண்டும். ஒரு மாணவனை ஒழுங்கானவனாக மாற்றினாலே போதும் அவன் கல்வியில் தானாகவே நாட்டம் கொண்டவனாக வந்து விடுகின்றான். மனக்கட்டுப்பாடு இன்றேல் கல்வி மூளையில் பதிந்து விடுமா? நல் நெறி இன்றேல் மனக் கட்டுப்பாடு, சிரத்தை எப்படி வந்துவிடப் போகிறது? அத்துடன் இன்னும் ஒருவிடயத்தினைக் கவனத்தில் கொள்ளல் வேண்டும். பாடசாலையில், மாணவர்கள் குறைபாடுகளைப் பற்றி ஆசிரியர்கள் பெற்றோரிடம் கூறினால், பெரும்பாலான பெற்றோர் அதனை ஏற்றுக் கொள்வதேயில்லை. சகல பெற்றோருமே இத்தகைய இயல்பு கொண்டவர்கள் அல்லர். பொதுவாக, பிள்ளைகள் தமது குற்றங்களை மறைத்துப் பொய் பேசும் போது, அதையே சரி எனக் கொண்டு, வாதாடும் பலரை நாங்கள் கண்டிருக்கின்றோம். தவறுகளை ஒப்புக்கொள்ளும் பக்குவத்தினை நாம் சிறார்களுக்குப் போதிக்கவேண்டும்; செய்த தவறுகளைத் திருத்தவேண்டும்.
மத நம்பிக்கையில் மனிதன் அதீத நம்பிக்கை வைத்திருக்கின்றான். இந்த நம்பிக்கையினை உளமார ஏற்கும் போது, பாவங்களுக்கு அஞ்சும் பண்பும் அவனிடம் வளர்கிறது. எல்லா மதங்களுமே பாவமான காரியங்களை விலக்குமாறே வலியுறுத்துகின்றன. மத உணர்வுடன், இவை வலியுறுத்தப்பட்டு மனிதனின் உள்ளத்தில் வேரோடவிட்டால், செய்யத் தகாத செயல்களை கடவுளுக்குப் பயந்து விலக்கியே விடுகின்றான். இறை அச்சம் என்பது கூட ஒரு மனச்சாட்சிக்குட்பட்ட ஒரு சத்திய வெளிப்பாடேயாகும். அந்த உண்மையுணர்வை, எவ்வாறு சிறார்களுக்கு ஊட்டுவது என்பதை நாம் கண்டு கொண்டால் நற்பிரஜைகளை உருவாக்குதல் என்பதே சிரமமான பிரச்சினை
966.

Page 77
68 வாழ்வியல் வசந்தங்கள் YN-------~~~~Y
பாவ சிந்தனைகளை அறுக்கவே மத வழிபாடு துணையாயின. எனவே தெய்வ நம்பிக்கை என்பது குருட்டு நம்பிக்கை என்கின்ற அர்த்தமற்ற பேச்சை விடுத்து, எம் முன்னோர்கள் வகுத்த வழிப்படி, தெய்வ நம்பிக்கையுள்ள ஒரு சமூகத்தின் இளஞ் சிறார்கள் மூலம் உருவாக்க முனைய வேண்டாமா? தெய்வ சிந்தனையுள்ளவன், பண்பாடாக வாழ்பவனாகவே இருக்கின்றான். வெறும் நாத்தீக வாதம் பேசுவதால் பெரிதாகப் பயன் ஒன்றும் வரவே மாட்டாது. பாவம் புரிதலை, எண்ணுதலைத் தடுக்க மத நம்பிக்கை உதவுகின்றது என்பதை மறுக்க முடியுமா? தெய்வ நம்பிக்கையீனம் என்பது ஒரு முற்போக்கான சிந்தனை என்றுதப்புக் கணக்குப் போடவும் கூடாது.
பக்தி, இறையுணர்வு மனதைப் பக்குவப்படுத்துவதால், சிறுவயதிலேயே மதக் கல்வியை ஊட்டுதல் அவசியமாகும். இதனால் பணிவு என்கின்ற பண்பு தானாகவே வந்துவிடுகின்றது. இறைவழிபாட்டின் மூலமே பணிவும், உயிர்களை நேசிக்கும் குணமும் இணைந்து வருகின்றன.
ஒவ்வொரு வீடும் கோவிலாக மாற வேண்டும். அப்போதுதான் மாசற்ற மாணிக்கங்களாக இளம் தலைமுறைகள் உருவாகும்.
சீரிய சிந்தனை, பரந்த நோக்கு, ஒழுக்கமே உயிர் என்பதில் நம்பிக்கை, இவைகளின் அடிப்படையில், உலகில் ஒவ்வொருவமே, அனைத்துச் சிறார்களுமே உருவாக்கப்படுதல் வேண்டும். முழு உலகும் ஒவ்வொரு குழந்தைகளின் நலனிலும் அக்கறை கொள்ள வேண்டும்.
அனைத்துப் பிள்ளைகளுமே எமது வருங்கால உலகை வாழவைக்கும் சொத்துக்கள் இதை மறக்க வேண்டாம்.
<>
வீரகேசரி

149
IDBb) 6brLIJM 6ir ĥGb)Gbbri FifiiGar G.Ermioj
ஜிவியப்பரியந்தம், ஜீவனோடிணைந்து நிற்கின்றவளும், அகத்திற்கு அகல்விளக்காகவும், குலம் தழைக்கச் செய்கின்ற தலைமகளாகவும் துலங்கும் தூய்மையான, தாய்மைச் சின்னம் மனைவி எனில் அது மிகையாகுமா? இவள் உயிர்க்கு உருக்கொடுக்கும் தாய் மட்டுமல்ல, அனைத்து நலன்களும் எமைச் சேர வைக்கும், படைத்ததலின் பாரிய பங்காளி. இவள் சிரித்தால் நிம்மதி மனம் கரித்தால் அதோ கதி சினந்து கொள்ளாதவரை, துன்பங்கள், சுமைகள் அல்ல. அன்பால் ஆக்கிரமிப்பவள், நொந்தால் நோய்கள் கோடி. இன்பம் வழங்குதற்காய், துன்பங்களை ஏந்துபவள் தாயாக நற்சினேகிதனாய், ஆலோசகராய்
அனைத்துமாய் இருப்பவள்.
நாட்டின் பெரும் தலைவர்கள் கூட தம் மனைவியர் தயவினால்தான், தாம் உணர்வு கண்டதாகப் பெருமையாக மனம் திறந்து பேசுகின்றனர். வீட்டு அரசிகள் தான் நாட்டிற்கு அரசர்களை ஆக்கித் தருகின்றார்கள். உள்ளத்தின் ஆழமும், ஆளுமையும், மனைவியின் செயல்களை மாட்சிமைப்படுத்துகின்றன.

Page 78
வாழ்வியல் வசந்தங்கள் کسعه S
எனவே,
மனைவியின், பற்றுதல் இன்றி இருந்தால் வாழ்வே இற்றுப் போய் விடுகிறது. எச் செயலிலும் இவளது செல்வாக்கு உட்பிரவேசித்தல் இன்றி நடைபெறுவதாக இல்லை.
தன் தூய அன்பினால், எத்தகைய பிணைப்பை, வளர்த்து வளைத்துக் கட்டி வைத்திருக்கின்றாள்?
அடங்காத முரட்டுத்தனமான, வரட்டு வேதாந்தம் பேசும் கொழுநனைக் கூட, மலராக, மென்மையாகத் தன் கரங்களில் பூட்டி வைத்து விடுகிறாளே? வாழ்வதற்கு லாயக்கற்றவர் என்று பேசப்பட்டவர்களைக் கூட, உலகமே மதிக்கத்தக்க பொக்கிஷங்களாக மாற்றியமைத்த கதைகளை நாமறிவோம்.
தனது பாசத்தாலும், பரிவாலும், ஊக்கத்தாலும், ஆக்கத்திறத்தாலும் தன்னோடிணைந்து குடும்பத்திற்கு மனைவி எனப்பட்டவள் ஆற்றும் சேவைகள் அவள் குடும்பத்துடன் நின்று விடுவதில்லை. இதன் நன்மைக்கு முழு சமூகத்திற்கும் சென்றடைந்துவிடுகின்றன.
ஒவ்வொருவரின் வீடும் நிம்மதியாக இருந்தால் தானே சமூகமும் இருக்க முடியும்? எனவே வீட்டிற்கு நிம்மதி கொடுக்கச் செய்யும் பெரும்பங்கு பெண்மையின் அன்புப் பிம்பமான மனைவியின் பங்களிப்புத்தான் எவ்வளவு பவித்திரமானது தெரியுமா? வீடுகள் சரியில்லாமல் விட்டால் நாடுகள் சுடுகாடுகள் தானே?
ஒவ்வொரு வீடும் நிம்மதியாக இருந்தால் தான் சமூகம் அமைதியாக இருக்க முடியும். எனவே வீட்டுக்கு நிம்மதி கொடுக்கச் செய்யும் பெண்மையின் அன்புப் பிம்பமாகிய மனைவியின் பங்களிப்புத்தான், சேவைகள்தான் எவ்வளவு பவித்திரமானது? வீடுகள் சரியில்லாது விட்டால் நாடுகளே சுடுகாடுகள் தான்.

பருத்தியூர் பால வயிரவநாதன் (15.
محسوس صحیح؟
எனவே நிம்மதியின் ஆதார சுருதி இல்லத்தரசிகள் அல்லவோ. பத்தாம் பசலித்தனமான, வரட்டுக் கெளரவம் பேசுவதும், பழமை கலாசாரம் பற்றி தவறான கருத்துக்களை வைத்துக்கொள்ளுவதும் ஆண்மையின் அடையாளம் என எண்ணுதலும், பெண்மையைக் கெளரவிக்காமையே பெரும் கெளரவம் என எண்ணிக் கொள்பவர்கள்கூட ஒருவிதத்தில் மன நோயாளிகள்தான். தங்களைப்பற்றிய மிதமிஞ்சிய தன் முனைப்பு கொண்டவர்கள் சரியானவைகளை ஒருபோதும் ஏற்றுக் கொள்ளப் போவதுமில்லை.
மனைவியரை அசிங்கப்படுத்தி, நடாத்துபவர்களிடம் பேசிப்பாருங்கள் - அவர்களின் வக்கிர புத்தி அடிமனதில் வேரூன்றி நிற்பதால் வெளி உலகில் வேஷம் பூணும் தன்மை புரியும்.
நாகரீக சமூகத்தில், எவரையும் வைது கொள்வதற்கும், வதைப்பதற்கும் உரிமை வழங்கப்படவில்லை.
ஏன், நம்மையே நாம் வதை செய்வதற்கும், உயிரைப்போக்குவதற்கும் கூட உரிமை கிடையாது. இப்படியிருக்க, மனைவியை வதைக்கின்ற ஆத்மாக்கள் கூட. தப்பித்துக் கொண்டிருக்கின்ற குற்றவாளிகளேயாவர். ஆனாலும், இந்த நிலையைக்கூட இவள் சகித்துக் கொண்டிருக்கிறாள். வரம்பு மீறிய பொறுமையும், எல்லையில்லா அன்புணர்வுமே இதற்குக் காரணமாகும்.
இதனால்தானோ என்னவோ, வாலிப வயதில் மிடுக்காக நடந்து இடர் புரிந்தவர்கள் காலம் கடந்த பின்னர் ஞானம் வந்ததும் மனையாள் பற்றிய மதிப்பு அறிந்து, அவள் தயவின், அன்பின் தீட்சண்யத்தினைப் புரிந்து கொள்கின்றனர்.
இன்னும் சிலரோ, இருக்கும்வரை மனைவியின் பெருமையை உணராது, அவள் இறந்ததும், கண்கெட்டபின் சூர்ய நமஸ்காரம் என்பதுபோல் அவளையே எண்ணி, எண்ணி மாய்ந்து

Page 79
(152 வாழ்வியல் வசந்தங்கள்
کومهله S . போகின்றனர். இருக்கின்ற பொக்கிஷத்தை, இருந்தபோது அதன் பெறுமதியை உணராது, அது தொலைந்ததும் புலம்புவதில் பயனேது?
எனினும், வாழ்வின் குட்சுமத்தை அறிந்த தம்பதிகள் இறுதிவரை ஒருவர்க்கொருவர், விட்டுக் கொடுத்து இல்லற சுகத்தின் இனிமைதனை இறுதி மூச்சுவரை நுகர்ந்து, இறந்த பின்பும் துலங்கி நிற்கின்றனர். இவர்கள் வாழ்ந்து காட்டிய பாதையில்தான் பின்வருகின்ற சந்ததிகளும், இதுதான் குடும்பம், உறவு என்று தெரிந்து கொள்கின்றனர்.
இதனாலேயே, கணவன், மனைவி இரு சாராரும் இணைந்து வாழுகின்ற வாழ்வுமுறைகள், நிறைவுகளை நோக்கியே முன் செல்லவேண்டும். சோதனை, வேதனைகளால் உறவுகளை நெருடி அதற்கு அடிமையாகி ஒருவர்க்கு ஒருவர் முரண்டு பிடிப்பது மனம் வழி செல்வதுபோலாகும். துன்பம் துயர் வரும்போதுதானே பிரச்சனைகளைத் தாங்குகின்ற தைரியமும் வரவேண்டும்.
மனைவியின் செயல்திறன் இங்குதான், ஆக்கபூர்வமாக இருத்தல் வேண்டும். ஆரோக்கியமான, மன விசாலம் இல்லாத இல்லத்தலைவியால், குடும்ப நிர்வாகத்தைச் சீராகச் செய்ய (tpեԳեւմո5/.
பிறர் வாழுகின்ற வசதிகள், செல்வச் செழிப்புக்களை தமது குடும்ப நிலையுடன் ஒப்புநோக்கி வாழத் தலைப்படக்கூடாது. இதனால்தான், கணவன் மனைவியரிடையே ஆரம்ப உரசல் தோன்ற ஆரம்பிக்கின்றது.
அத்துடன், எதிலும் மிதமிஞ்சிய எதிர்பார்ப்புக்கள், ஆசைகள், அபிலாசைகள், கண்மூடித்தனமான நாகரீக மோகம், தனது குடும்பத்தைவிட இதர குடும்பங்களே மேலானது என எண்ணுகின்ற தாழ்வு நோக்கு, இருக்கின்ற நல்ல வசதிகளிலேயே திருப்தியுறாமை, வசதிகளை மேலும் வளப்படுத்த விரும்பாமை,

பருத்தியூர் பால வயிரவநாதன் (153)
سعی سهحS
சோம்பல், எதற்குமே ஏங்குதல், இல்லாத பொருள்களுக்காக நச்சரித்தல், இவை போன்ற நடவடிக்கைகள் வீட்டின் நிம்மதியை குலைத்துவிடும்.
வெளிப்படையாகக் கூறாதுவிட்டாலும்கூட கணவன்மார்கள் தம்மை விட, மனைவியிடமே நம்பிக்கை வைத்துக் கொண்டிருக்கிறார்கள். இருவரிடையேயும், யார் பெரியவர் என்கின்ற விவாதங்களை முடக்கி விடவேண்டும்.
மனைவி என்பவள் இந்த எண்ணத்தைத் துறந்தேயாக வேண்டும். ஏன் எனில், மனைவியைத் திட்டுபவர்கள்கூட அவள் தயவின்றி நிம்மதியாக வாழ்ந்துவிட முடியாது. எனவே கணவன் ஆத்திரத்தில், முற்கோபத்தில் பேசுகின்ற பேச்சுக்களைப் பெரிதுபடுத்தத் தேவையில்லை. அவன் இதயத்தில் ஆழமாகப் பதிந்துள்ள அன்பை, காதலைப் புரிந்துகொள்ளவும் வேண்டும்.
இதுபோலவே, மனைவியின் தியாக உள்ளத்தை, சேவையை, உழைப்பை கணவன் புரிந்து வைத்திருக்க வேண்டும். சிலர் இதை உணர்ந்தாலும் வெளிக்காட்ட விரும்புவதில்லை. தயக்கம் காட்டுகின்றார்கள். இதனை வெளிப்படுத்தினால், ஏதும் கெளரவம் குறைந்துவிடுமோ அல்லது, அவன் தன்னையே சார்ந்திருப்பதாக எண்ணி, வீம்புடன், கணவனான தன்னை மதிக்கமாட்டாள் எனவும் கருதிவிடுகின்றான். alaitaptoute 7 அன்பின் முன் வீம்புக்கும் வீராப்புக்கும் இடமேயில்லை. சில கணவன்மார்களுக்கோ மனைவியிடம், பிள்ளைகளிடம் அன்பை உணர்த்தும் விதம் தெரியாமல் இருக்கலாம். இவைகளை மனைவி எனப்பட்டவளே புரிந்து சமாளித்து வாழப் பழகவேண்டும். இவைகள் வேண்டும் என்றே ஒருவரால் செய்யும் தவறும் அல்ல. எல்லோருக்குமே சாதுரியமாகவும், இயல்பாகவும் பழக, பேச வராது. இதனால் தப்பபிப்பிராயம் ஏற்படாமல் பார்த்துக் கொள்ளவேண்டும். நல்ல குடும்ப உறுப்பினர்கூட இந்தப் புரிந்துணர்வின்மையால், பாதிப்படைந்திருக்கிறார்கள். as Tauritas air மாறிக்

Page 80
(16) வாழ்வியல் வசந்தங்கள் Yu-Y கொண்டேயிருந்தாலும்கூட, உலகம் எங்கணும் உள்ள கணவன், மனைவி பரஸ்பர உறவு இருந்து கொண்டேயிருக்கும். மேற்கத்திய நாடுகளில் நாம் கணவன் - மனைவி பிணக்குகள், குடும்ப அமைதியின்மை பற்றித் தெரிந்திருக்கின்றோம்.
ஆனால்,
எல்லா நாடுகளிலேயும், குடும்ப பிணைப்பு விடயத்தில் எம்மைவிட ஏனைய நாட்டவர்கள் குறைந்துபட்டது எனக் கருத முடியாது. அங்கும் குடும்ப பிணைப்பு, பாசம் இறுக்கமானதாகவே இருக்கின்றது. எங்கும் இவர்கள் வாழ்ந்து கொண்டு தானிருக்கின்றார்கள். கூடாத விஷயங்களை மட்டுமே பேசிக் கொண்டிருக்க வேண்டுமா? யப்பான் நாட்டுப் பெண்களே, குடும்பத் தலைவியரில் முதன்மை ஸ்தானத்தில் இருப்பதாக, அண்மையில், சஞ்சிகை ஒன்று நடாத்திய ஆய்வில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இவர்கள் நாட்டிற்கும், வீட்டிற்கும் ஆற்றும் சேவை அளப்பரியது. எனவே, இல்லத்தரசிகளின் பெருமை, அந்தந்த நாட்டின் வளங்களின் மூலமும் தெரிந்து கொள்ள முடியும் அல்லவா?
சிறந்த மனைவி தன் நன்நடத்தை நெறியினால் சமூகத்திலும் நேசிக்கப்பட்டே வருகின்றாள்.
இவள் ஒரு அழகிய வீணை. இதை மீட்டும் விதத்திலேயே இதன் தன்மையும், இனிமையும் இருக்கின்றது. கருவியும் இசைப்பவனும் ஒன்று சேர சங்கமிக்கும்போதுதானே சுகஸ்வரம் உதயமாகின்றது. நல்ல மனைவி, குடும்பத்தின் தலைவி தியாக சிந்தையே இவளது குணங்கள், இணையில்லா மனையாள் வாய்த்தால் இனிமைக்குக் குறைவேது? இல்லாமையை, இல்லாதொழிக்கும் இவள் செயலால், நல்லன அனைத்தும் தானாய் வரும். ஏன் எனில், பெண்மையின் பேராற்றல் வடிவமே தாயும், தாரமும்தானே?

155
தனிப்பட்ட வாழ்க்கையும் சமூக எதிர்பார்ப்புக்களும்
Iங்கள் செய்யும் தப்பான காரியங்களுக்கெல்லாம், அது தனிப்பட்ட விடயம், அதில் எவருமே தலையிட முடியாது என்று, ஒரு பொய்யான முக மூடிகளைத் தமக்குத்தாமே போட்டுத் தப்பித்துக்கொள்ள முனைபவர்களை நாம் அறிவோம். நாட்டின் தலைவர்களும், பொது நல அமைப்புக்களில் உயர் பொறுப்புக்களில் உள்ளவர்கள், அரசியல்வாதிகள், மதத்தலைவர்கள் இப்படி அந்தரங்கமான விடயம், தனிப்பட்ட விடயங்கள் என்று கூறி எப்படியும் நடந்து கொள்ளலாமா? இப்படியே சாக்குப் போக்காகவும், புத்திசாலித்தனம் என நினைத்துச் சமாளித்து, தங்களை ஒளித்து, வெளியே வேடம் புனைந்தால், இந்த உலகம் உருப்படுமா? கழகத்தையும் முழுநாட்டையும், தனிமனித நடத்தை நெறிகள் கூடப் பாதிக்கச் சந்தர்ப்பம் உண்டு. எனவே தலைமைத்துவத்தில் உள்ளவர்களிடம், மக்கள் அந்தரங்கங்களை எதிர்பார்க்கமாட்டார்கள்; சகித்துக் கொள்ளவும் மாட்டார்கள். இவர்களை மக்கள் புனிதர்களாக நோக்கும்போது, இவர்கள் வெளிப்படையான தூய்மை நிறைந்தவர்களாகவே இருக்க உலகம் எதிர்பார்க்கின்றது.

Page 81
(166 வாழ்வியல் வசந்தங்கள்
محسومحN
ஒரு குடும்பத்தில் கணவனுக்கு என்று ஒரு தனிப்பட்ட வாழ்க்கையும், அந்தரங்கங்களும், மனைவிக்கும் இதே போலவே அமைந்தால் குடும்பங்களில் குழப்பம்தானே மிஞ்சும்? தங்கள் பலவீனங்களை மறைக்கவே 9ւնակ աnծ நடந்து கொள்கின்றார்கள். ஆனால் நடப்பது என்ன? இவை வெளித்தெரியும் போது, ஒரு பூகம்பமே வெடிக்கின்றது. இதனால் அல்லலும், அவமானமும் படுகின்றனர்.
எனவே எவருமே தூய்மையாக, வாழ்வை அமைக்க முற்பட்டால் இந்தப் பிரச்சினைகளுக்கு இடமில்லை.
ஆயினும்,
தனிமனித வாழ்வில், தற்செயலாக நடந்த தவறுகள், தோல்விகள், எதிர்பாராத சம்பவங்கள் போன்றவைகளைப் பாரதூரமான விஷயங்களாக, பலவீனமான, அந்தரங்கங்களாகக் கருதிவிட முடியாது.
ஒவ்வொருவருக்கும் எனத் தனித்தனி ஆசைகள், அபிலாசைகள், விருப்பு, வெறுப்பு, ரசனை உணர்வுகள் இருக்கும். இது ஒவ்வொருவரினதும் தனிமனித சுதந்திரமாகும். இவை இன்னும் ஒருவரது சுதந்திரங்க்ளில் குறுக்கிடாமல் பார்த்துக் கொள்ளல் வேண்டும். எமக்குப் பிடிப்பது, பிறருக்குப் பிடிக்காமலும் போகலாம். அவர்களுக்கு இசைவானது எமக்குப் பொருந்தாமலும் இருக்கலாம். நாம் எல்லோரது கருத்துக்கள், செயலுடன் இசைந்து போவது என்பதும் சங்கடமான விஷயமே. எங்கள் தனிப்பட்ட விஷயங்களை எல்லோருக்குமே சொல்லிப் பகிர்ந்து கொள்ளவும் முடியாது. இவை கூச்சப்படத்
கீர்த்தி மிக்க திறமைசாலிகள்கூட ஆரம்பகால அந்தரங்கங்கள் நீண்ட காலங்களின் பின்னர், அவை வெளித் தெரிந்த பின்னர் அல்லலுறுகின்றனர். இதனால் இவர்களது அப்பெருஞ்சேவையை உலகம் முழுமையாகப் பெற்றுக்கொள்ள முடியாமலிருக்கின்றது.

பருத்தியூர் பால வயிரவநாதன் (157
~പ്പ് தக்கனவாகவும், பிறருக்குச் சங்கடங்களை உண்டு பண்ணத்தக்கதானவையாகக் கூட இருக்கலாம். சில விஷயங்களை வெளிப்படுத்தலைத் தவிர்த்தே ஆக வேண்டியுள்ளது.
ஒருவர் தம்மிடையே, கருதும் தவிர்க்க விரும்பும் விடயங்களை நாம் துருவித் துருவி ஆராய்தல் என்பது நாகரீகமற்ற செயலேயாகும். எமக்குப் பிரச்சனையில்லாத விஷயத்தையும், எமக்கே தேவையில்லாத சங்கதிகளையும் நாம் ஆராயலாமா? இதைக் கண்டுகொள்ள நினைத்து என்ன ஆகப்போகின்றது. சில நேரங்களில் பொருந்தாத விஷயங்களில் ஆராய்ச்சி செய்து, புதினம் பிடுங்குவதால், தேவையற்ற மனச்சஞ்சலமும், மனஸ்தாபங்களும் கூட எழ வாய்ப்பு இருக்கின்றது என அறிந்து கொள்ளவேண்டும்.
எமக்குத் தனிப்பட்ட எம்மைப் பாதிக்கின்ற விஷயங்களில் மட்டும், நாம் அனேக கலாச்சாரங்களைத் துருவித் துருவி ஆராய வேண்டியிருக்கின்றது. எங்கள் வாழ்க்கைப் பிரச்சினை என்றால் கண்டு கொள்ளாமல் இருக்கமுடியாது. உங்கள் பிள்ளைக்குத் திருமணம் செய்யவிருக்க ஏற்படும் சந்தர்ப்பங்களில், நீங்கள் சர்வ ஜாக்கிரதையாகவே செயல்படுவீர்கள். உங்கள் பிள்ளைக்கு ஏற்ற வரன் அமைய நீங்கள் சர்வ உரிமையும் எடுத்துக்கொண்டு அவர்கள் குணநலனை ஏதோ வழிமுறையில் கண்டு கொண்டேயாக வேண்டும். ஆணுக்கோ, பெண்ணுக்கோ, தனிப்பட்ட வாழ்க்கைப் பிரச்சினைகள், நடத்தைகள், குடும்ப கெளரவம் போன்றவைகள் இங்கு சீர்தூக்கிப் பார்க்கப்படுகின்றது. இது விடயத்தில் இவர்கள் தனிப்பட்ட விடயங்கள் என்று கூறி எதையுமே ஒதுக்கி வைத்து, கல்யாணம் நடந்தால் சரி என எந்தப் பெற்றோரும் கருதிவிடமாட்டார்கள்.
அருவருக்கத்தக்க தீய ஒழுக்கங்கள், அதை தனிப்பட்ட அந்தரங்கம் என எண்ணி, சமூகம் இவைகளை ஏற்றுக் கொள்வதில்லை. சமூகம் மன்னிக்கக்கூடியவைகளை மட்டுமே மன்னித்துவிடுகின்றது.

Page 82
(158ો வாழ்வியல் வசந்தங்கள்
محمسمصعحS
சமூக நலனுக்காக ஒருவர் சில காரியங்களை மறைத்து வைத்திருக்கலாம். இவை நோக்கத்தின் தன்மைகளைப் பொறுத்ததாகும். அரச பதவிகளில் உள்ளவர்கள், பாதுகாப்புத் துறையைச் சேர்ந்தவர்களுக்கு இவை பொருந்தும். சில குடும்ப நலனுக்கு ஊறு விளைவிக்கும் விஷயங்களை, அதனால் தேவையற்ற வீண் விவகாரங்கள் வரும் என உணர்ந்தால், மறைக்கப்பட்ட வேண்டிய சங்கதிகள் மறைக்கப்பட்டேயாக வேண்டும்.
அலுவலக மேலதிகாரிகள் தமது ஊழியர்களுக்குத் தெரியப்படுத்த வேண்டிய விஷயங்களைத் தெரியப்படுத்தியே யாகவேண்டும். ஆயினும் சில நிர்வாக செயல்களை அந்தரங்கமாக வைத்துக் கொள்ளும் சந்தர்ப்பங்களுமுண்டு. எல்லா காரியங்களையுமே மூடி மறைத்தால் நிர்வாகம் நடந்து விட முடியுமா? குழப்பங்களும், சந்தேகங்களுமே மிஞ்சும்.
அரசுத் தலைவர்க்குச் சொந்தமாக அந்தரங்கங்களும் தனிப்பட்ட பிறர் விரும்பாத நடத்தைகளும் வெளித் தெரியும்போது ஆட்சியே ஆட்டம் காணுகின்றது. அரச நிர்வாகங்கள்கூட மக்கள் ஆணை மூலம் பெறப்பட்டதாகையினால் அவர்களைப் பாதிக்கும் எச்செயலையும், அரசுகள் செய்துவிட முடியாது. கடமையும், தனிப்பட்ட வாழ்க்கையும் இணைகின்ற போதுதான் சிக்கல்கள் உருவாகிவிடுகின்றன.
புத்திசாலித்தனம், அனுபவம், தைரியம், இவை மூலம், நாம் பொது வாழ்வில் இந்த இரண்டு விசயங்களையும் கையாளும் விதத்திலேயே சுமுகமான பிரச்சினைகளைப் பெரிதாக்காது தீர்த்துக் கொள்ளமுடியும்.
நெறி பிறழா வாழ்வுமுறையைக் கடைப் பிடிப்பவர்களுக்கு எந்த விஷயங்களுமே, பெரிய பிரச்சனைகளாகப் புலப்படமாட்டாது. துரதிருஷ்டவசமாக, இன்று உலகில் கீர்த்தி மிக்கவர்கள், பெரியவர்கள் எனப் பேசப்படுபவர்கள் கூட பற்பல

பருத்தியூர் பால வயிரவநாதன் 150
YNu-...--~~~~Y
சிக்கல்களுக்குள் மாட்டிக்கொண்டு விடுகின்றார்கள். இதில் பரிதாபம் என்னவெனில் மிகவும் திறமைசாலிகள்கூட ஆரம்பகால அந்தரங்கங்களால், நீண்ட காலங்களின் பின்னர் இவை வெளிவந்த பின்னர் அல்லலுறுகின்றார்கள். இதனால் இவர்களது அளப்பெருஞ் சேவைகளையே உலகம் முழுமையாகப் பெற்றுக்கொள்ள முடியாதிருக்கின்றது.
எனவே, சின்ன வயதிலிருந்தே பண்பான வாழ்வுமுறையை நாம் கடைப்பிடித்து ஒழுகியேயாக வேண்டும். தனிப்பட்ட வாழ்க்கையைத் தூய்மை நிறைந்ததாக வைத்துக்கொள்ள வேண்டிய அவசியத்தை, இத்தகையின் மூலம் படித்துக்கொள்ளலாம். ஒருவர் நடத்தைகளை உலகம் கண்மூடியபடி கண்காணிக்கவில்லை என எண்ணுதல் தவறாகும். இவை என்றாவது ஒரு நாள் வெளிச்சத்திற்கு வந்தே தீரும்.
எவ்வளவு நாள் நல்லவைகளை நாம் செய்துகொண்டாலும்கூட அடிப்படையான எமது குணாதிசயங்களில் குற்றங்கள் இருந்தால், எமது சேவைபற்றிய நம்பிக்கையே பிறரிடமிருந்து தகர்ந்து போகின்றது.
ஆரம்பகாலம் முதலே, அதாவது நாம் உருவாக்கும் பொழுதிலேயே, தூய்மைப் பண்பு நேர்மை, முதலான நெறிகளின் அத்திவாரத்திலேயே வாழ்வைக்கட்டியெழுப்பவேண்டும்.
எமக்கென உரித்தான சின்னச் சின்னக் காரியங்களில் பிறர் தலையீடு தேவையில்லை. இதனால் எமது தனித்துவமும், சுதந்திரமாக இயங்கும் உரிமை, திறமை, துணிவு என்பன பாதிக்கப்படவும் கூடும். சத்தியத்திலும், தார்மீக ரீதியிலும் எம்மை நாம் காப்பாற்றிக் கொள்ளவும், அதிலேயே பரிபூரணமாக ஈடுபாட்டுடன் செயலாற்றவும் உரிமைகளும், வழிகளும் உண்டு. இது ஆன்ம சுத்தியுடன் கூடிய பவித்திரமான செயலுமாகும். இது பற்றிப் பிறர் வீணான குறுக்கீடு செய்தலால் லாபம் ஒன்றும் கிடையாது. எமது தூயவழிப் பயணங்களில் ஏற்படும் குறுக்கீடுகள்

Page 83
(6) வாழ்வியல் வசந்தங்கள்
-ی کسعه به S யாவும், சத்திய சோதனையாக வந்து சென்றாலும், எமது சரியான வாழ்வுமுறை முடிவில் வெற்றியையும், துணிவையும், நன்மைகளையுமே ஈட்டித்தரும் என்பதில் சந்தேகமில்லை. ஒரு வரைச் சீண்டும் காரியங்களால் மனம் புண்படுமாறு செய்யக்கூடாது. யாராவது அப்படிச் செய்தால், அதைக் கண்டு கொள்ளாமல் விடுவதே அவர்களுக்குக் கொடுக்கும் பதிலடியாகும். நாம் கவலைப்படுவதையிட்டுப் பிறர் நகைப்பதற்கோ, ஏளனம் செய்வதற்கோ இடமளித்தல் கூடாது. தேவையற்ற தலையீடுகளும் விசாரணைகளும் தானே துன்பங்களை வரவழைத்து விடுகின்றன.
சுதந்திரத்தைக் கெளரவிக்கின்ற சமூகம், அது அனைவருக்கும் கிடைப்பதை ஆட்சேபிக்கக்கூடாது. தனிமனிதனின் வாழ்வை விமர்சனம் செய்யுமுன் அதன் சரி, பிழைகளை அறிதல் வேண்டும். அதன் பாதிப்புக்களை உணரவேண்டும். ஒருவன் வாழ்விற்கும், தனிப்பட்ட எண்ணங்களுக்கும் மதிப்பு அளிக்க கற்றுக்கொள்ள வேண்டும். இது அவசியமான, மற்றவர் உணர்விற்கு கெளரவம் கொடுக்கும் செயலுமாகும்.
ஒவ்வொருவருக்குமே தத்தமது வாழ்வு அமைத்தல் முறை சரியானதாகவே படும். அவர்களது வாழ்வுமுறை எமக்குப் பொருந்தாதுவிடின், அவரகள் மீது எமது வாழ்வு முறைகளைத் திணிக்க முடியாது. அவர்களால் ஏதும் பிரச்சினைகள் எழாதுவிடின், நாம் எதற்கு உபதேசம் செய்ய முயலவேண்டும்? எமக்கு என எத்தனை எத்தனையோ கருமங்கள் நிரம்ப கிடக்கின்றன. எங்களை, நாமே இன்னமும் பூரணமாகக் கண்டு கொள்ள முடியவில்லை. இந்த லட்சணத்தில் வலிந்து, எம்மனதை கலைக்கும், கெடுக்கும் சங்கதிகளில் சிக்கிக் கொள்ளலாமா?
பிறருக்கு எரிச்சலூட்டும் செயலால், பாதிக்கப்படப்போவது
நாமேதான். ஒவ்வொரு வருடனும் பழகும்போதும், ஒரு எல்லையை வகுத்துக் கொள்ளவேண்டும். பிள்ளைகள், கணவன்

பருத்தியூர் பால வயிரவநாதன்
تسمم م٦
மனைவி, நண்பர்கள், உறவினர்கள் முகம் தெரியாதவர்கள், படித்தவர்கள், பாமரர்கள் ஒவ்வொருவருடனும், எமது ஈடுபாடு எத்தகையது, அவர்கள் எம்மை எப்படி மதிக்கின்றார்கள், எங்கள் தொடர்பின் வலிமை எத்தகையது, என்பதைத் தெரிந்து அளவோடு பழகுவதையும், புத்திமதிகள் சொல்வதையும், வைத்துக் கொள்ளவேண்டும். எத்தகைய நெருக்கமானவர்களுடனும்கூட, எமது உரிமை எடுக்கும் தன்மையை நாம் தான் அளவீடு செய்தல் வேண்டும். அவர்களது தனிப்பட்ட வாழ்வு, அந்தரங்கம், உரிமைகளில் நாம் பிரவேசிக்கும் போது சர்வ ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். நல்ல நினைப்புகளை நாம் வைத்துக் கொண்டிருக்கும்வரை எல்லா தரப்பு மக்களும் எம்மை நேசிக்கத் தொடங்கிவிடுவர். நாம் பழகும் விதத்திலேயே, எங்கள் பண்புகளும் பளிச்சிடும். இதை உணர்ந்து நடப்போம்.
<>

Page 84
162
அவசரம் அநாவசியம்
அவசரப் புத்திக்காரர்களுக்கு நிதானமாகச் சிந்திப்பதற்கே போதிய அவகாசம் கிடைப்பதில்லை. இவர்கள் தமது செயல்களைப்பற்றிச் சிந்திக்காமல், ஏதோ வெட்டி விழுத்துவதாகச் செயல்பட்டு, வீண் வம்புகளை விலைக்கு வாங்கி அவமானப்பட்டும் போகிறார்கள். இன்னும் சிலர் அவசரபுத்திச் செயல்பாடுகளைத் தாமே மெச்சிக் கொள்ளுவார்கள். அது எந்த வடிவத்தில் வந்தாலும் கூடக் கவலைப்பட்டுக் கொள்ளமாட்டார்கள். செய்யும் செயல்களின் பூரணத்துவத்தை புரியாதவர்களுடன் பேசிப் பயனில்லை என்பது போலவே தோன்றும்.
இவையெல்லாம் ஒரு அசட்டுக் காரியமாகவே இருக்கின்றதெனினும் பலரை இந்தப் பழக்கத்திலிருந்து விடுவிக்க Gyptg. 46?p6?aö09 Av. இவர்கள், தம்மையும், தம்மைச் சுற்றியிருப்பவர்களையும் மன அழுத்தத்திற்கு ஆளாக்குவதில் திருப்திப் பட்டுக்கொள்கிறார்கள் என்றே எண்ணத் தோன்றும்.
 

பருத்தியூர் பால வயிரவநாதன்
YNesM
இத்தகையவர்கள் முழுமையாக காரியத்தைச் செய்து
முடிக்க மாட்டார்கள். அத்துடன், சுதந்திரமாக, மனம் லயிப்புடன் காரியமாற்றத் தம்மைப் பழக்கப்படுத்திக் கொள்ளவும் மாட்டார்கள்.
எதையும் நிதானத்துடன் செய் என்று பெரியோர்கள்
கூறுவார்கள். நிதான புத்தி, நிதானமான செயல்கள் என்பது மந்தமான, சோம்பலான வேலை எனக் கருதல் வேண்டாம். ஒரு செயலைச் சிறப்பாகவும், நிதானமாகவும், அதே வேளை கூடிய அளவு கணிக்கப்பட்ட, தன் சக்திக்கு உகந்த வேகத்துடன் ஆற்றல்
வேண்டும்.
t அநாவசிய தாமதங்கள்
d முன்கூட்டியே செய்யும் செயல்பற்றிய தெளிவின்மை.
எடுத்த கருமத்தைக் கண்டு பயப்படுதல்,
d எடுத்த கருமத்தின் அளவைக் கண்டு, மிதமிஞ்சிக் கற்பனை
செய்தல்.
as ஒருவருமே, இந்தச் செயலைச் செய்யமாட்டார்கள். தான் மட்டுமே இதைச் செய்யப் போகின்றேன் எனக் கர்வம் கொள்ளுதல்.
t படிப்படியாகக் கருமங்களைச் செய்யாது விடுத்து, ஒரேயடியாக அசட்டுத் துணிச்சலுடன் ஈடுபட முனைதல்.
d பொறுப்பான, பாரிய கருமங்களை லேசாக எடுப்பதும்,
லேசான காரியங்களை, கடுமையான வழிமுறைகளில் சிரமத்துடன் செய்ய முற்படுதல். (பனங்கிழங்கை ஆப்புக்கொண்டு கிழிப்பது போல் என்பர்)
அவசரப்புத்திக்காரர்கள் தம்மை மட்டுமல்ல, தம்மைச் சுற்றி இருப்பவர்களையும் மன அழுத்தத்திற்கு ஆளாக்குகின்றார்கள். இத்தகையவர்கள் முழுமையாகக் காரியத்தை செய்து முடிக்க uoTusTtassir.

Page 85
(16ો வாழ்வியல் வசந்தங்கள்
کسعه
அநாவசிய பதட்டங்கள்.
கண்டவர்களின், வீணான உபதேசங்களை நம்புதல். அனுபவம் இல்லாதோரிடம் ஆலோசனை கேட்டல். விஷயம் தெரிந்தவர்களுடன் கேட்கக் கூச்சப்படல்.
செய் கருமங்களைக் குறித்த நேரத்தில் செய்யாதுவிடல்.
பின் விளைவுகளை ஆராயாது விடல்,
இவை போன்ற பலவீனங்கள் அவசர புத்திக்காரர்களை ஆட்டிப் படைக்கின்றது. இவர்கள் தம்மையும் நம்புவதில்லை, பிறரையும் முழுமையாக நம்புவதில்லை.
எழுந்த வேகத்தில் செயல்படுதல் சிறப்பு அல்ல. கருமங்கள் ஒவ்வொன்றும், படிப்படியாகத் திட்டமிட்டபடி ஆரம்பித்தல் அவசியமாகும். எமக்குள் ஒரு வரைபடத்தை உருவாக்கி, அதனை எப்படியும் செய்து முடிப்பேன் எனக் கங்கணம் கட்டிக்கொள்ள வேண்டும்.
மிகச் சாதாரண விடயங்களுக்கு ஆராய்ச்சி செய்தல் அவசியமல்ல. அது கருமங்களைத் தாமதத்துக்குள் ஆளாக்கிப் பெரிது படுத்திவிடும். வேளையை ஆரம்பிக்குமுன் சற்று சிந்தித்தால் என்ன குறைந்தா விடுவோம்?
பேருந்தில் ஏறிவிட்டு, போகின்ற இடத்தைப்பற்றிச் சிந்திக்கலாமா? பெயர் பலகையைப் பார்க்காமலேயே, பேருந்தில் பாய்ந்து ஏறலாமா? அப்படி ஏறிவிட்டுக்கூட, நடத்துனரிடம் தான் ஏறியது சரி என்று வாதிடக்கூடாது. அவசர சங்கதிகள் இப்படித்தான் நடக்கின்றது.
தெரிந்த விஷயங்கள் கூட எமது அவரச புத்தியில் தெரியாமல் போய் விடுகிறது. கற்ற கல்வியும், அனுபவங்களும் கூட இந்தப் பலவீனத்தினால், நம் காலை வாரிவிடுகின்றன.

பருத்தியூர் பால வயிரவநாதன் )ே
کسرویسها
பரீட்சைக்கு விண்ணப்பிப்பவர்கள், விண்ணப்பத்தை சரியாக கை ஒப்பத்தை இடமறப்பதும், அப்படியே சரியாக எழுதி, முகவரி எழுதாமலே சாதாரண தபாலில், சும்மா அனுப்பி விடுவதும்கூட நடப்பதுண்டு. எதிலும் நிதானம் தப்பி அவசரப்பட்டால், ஆகப்போவது என்ன? பரீட்சை மண்டபத்தில் மிகையான அவசரத்திலும், மனதை நிதானமுடன் வைத்துக் கொள்ளாமலும் செல்லும் மாணவர்கள், மிக எளிதான வினாக்களைக்கூட எழுத மறப்பதை நாம் அறிகின்றோம் அல்லவா?
திருத்தமுடியாத தவறான பலவீனங்கள் எதுவுமில்லை. இவை குற்றங்கள் அல்ல. பலவீனங்களை எண்ணியே மனம்
மேலும் பலவீனப்பட்டு விடக்கூடாது. நாம் எமது பலவீனத்தை உணர ஆரம்பித்ததுமே, இவைகளை மெல்ல மெல்லக் களைய முனையவேண்டும்.
சற்று நிதானமாகச் சிந்தியுங்கள். மனம் குழம்ப வேண்டாம். பதட்டமின்றிக் கருமங்களை ஆற்றத் தொடங்கிவிடுவீர்கள். செய்கின்ற செயலில் வெற்றியை ஈட்டத் தொடங்கிவிடுவீர்கள். ஆரம்பத்திலேயே குழறுபடிகளுடன் செயலாற்ற முனைந்தால், எமது சிந்தனை வசமிழந்து, தப்பும் தவறுமாகக் கருமமாற்றத் தொடங்கிவிடும். பிறர் எமது, செயல்களால், அவஸ்தைப்படாமல் பார்த்துக் கொள்ளுங்கள்.
இந்த உலகில் எமது கருமம் மட்டுமே நடந்து கொண்டிருக்கவில்லை. ஒவ்வொருவரும், தத்தமது பணிகளில் கண்ணும் கருத்துமாக உள்ளனர். அவரவர்க்கு அவரவர் பணி உயர்ந்தது.
எனவே,
கோடிக்கணக்கான மக்கள் அலுவல்களில், உங்களது அலுவலும் ஒன்று என எண்ணுங்கள். எனவே மற்றவர் செயல்களுக்கும் மதிப்பளிக்கக் கற்றுக் கொள்ளவேண்டும்.

Page 86
{166 வாழ்வியல் வசந்தங்கள் Yn - ~~~~Y
எமது வேலை மட்டுமே இந்த உலகில் நடப்பதில்லை. நாம் நிதானமாகச் செயல்பட்டால், எமது கருமங்களும் பூரணத்துவம் பெறும். அது ஏனையவர்களையும் பாதிப்படையச் செய்யாது. தேவையற்ற அவசரங்கள், அநாவசியமானவைகள். சிலவேளை அநாகரிகமாகவும் பிறருக்குக் காட்டும். செயல்களின் வெற்றிக்கு இவை உதவாது. அவசிய பணிகளை, கட்டுப்பாடான வேகத்துடன் செய்வோம்.
எம்மை மீறிய உணர்வுடன் கூடிய கருமங்கள் சுய கட்டுப்பாட்டை மீறிவிட வாய்ப்பு உண்டு. துரிதமான பணி என்பது, அவசரம், அவசரமாக கண்டபடி ஆற்றும் செயல் அல்ல; ஆற்றலும், கட்டுப்பாடும் தான் வேகமுடன் பணியாற்ற எம்மை வழிநடத்தும்.
கட்டுப்பாடு இன்றேல், வேகமுடன் செயலாற்ற முடியாது.
மோட்டார் வண்டி வேகமாகச் செலுத்த வேண்டியவருக்கு நிதான புத்தியும் திறமையும் வேண்டும். அத்துடன், வாகனத்தினை உடன் கட்டுப்படுத்த வாகனத்தின் இயந்திரத்தில் சகல அம்சங்களும், * பிறேக்கும் தகுந்த முறையில் செயல்படவேண்டும்.
இவை போலத்தான் எமது கருமங்களின் செயல்பாடுகளை வழிநடத்துதலுமாகும்.
சகல கருமங்களையும் மெதுவாக ஆற்ற முடியாது. அதுபோலவே, சகல வேலைகளையும் வேகமாகச் செய்ய முடியாது. அளவறிந்து தேவைகளின் பரிமாணம் அறிந்து, உகந்தபடி பணியாற்றுவோமாக.
w

167
血血血崎gU血
|-
நாம் சந்தர்ப்பத்திற்குத் தகுந்த மாதிரி, நடிக்கவும் வேண்டியிருக்கின்றது. இது போலியானதா அல்லது உண்மையானதா என்பது வேறு விடயம், நாங்கள், மற்றவர்கள் மனம் கோணக்கூடாதே என்பதற்காக நடிக்க வேண்டியிருக்கின்றதே. எல்லோருமே இந்த விஷயத்தில் இந்தக் காரியத்தை விரும்பியோ விரும்பாமலோ செய்து கொண்டிருக்கின்றார்கள்.
எல்லா நியாய அநியாயங்களையுமே தட்டிக்கேட்க முடிகிறது இல்லை. நாம் நினைத்ததை, மனதில் பட்டதைக் கொட்டித் தீர்த்துவிட முடியாது. நாம் ஒவ்வொருவருமே நினைத்தபடியே, எங்கள் எண்ணங்களை வெளிப்படுத்துதல் முடிகின்ற காரியமா என்ன? அப்படியே நான் சகலத்தையுமே சொல்லித் தீர்த்தால், இந்த உலகம் அமைதியாக இருந்துவிட முடியுமா? அனைத்து சங்கதிகளையும், பிறருக்கு அது உண்மையாக இருந்தாலும் சொல்ல முடியாத நிலையில்தான் அனைவருமே இருக்கின்றோம்.
உண்மைகளைக்கூட சந்தர்ப்பம் அறிந்தே சொல்ல வேண்டியிருக்கின்றது.
ஆனால் உண்மை வெளிச்சத்திற்கு வரும்வரை பொய்தான் ஆட்சி புரிகின்றது. நல்ல விஷயங்களைத் தெளிவாகப் பக்குவமாக எடுத்துரைக்க வேண்டும்.

Page 87
168 வாழ்வியல் வசந்தங்கள் محسومحN
உண்மையை உள்ளபடி சொல்லுவதற்கும், அதைச் சொல்லவேண்டிய வழிகளில் சொல்வதற்கும் நிதானமும், தெளிவும் வேண்டியிருக்கின்றது.
ஆனால், நன்மை செய்யப் புறப்பட்டவர்கள், அதை நடிப்பாகச் செய்யத் தலைப்படக்கூடாது. நன்மையை அடைவதற்காக, தீய செயல்களை ஆதாரமாக்கக் கூடாது.
தமக்கு நியாயம் கற்பிக்க, வேண்டாத குற்றங்களைக் கூட சரி, என்று வாதிடுபவர்கள் தொகை கூடுவதனாலேயே குற்றவாளிகள் தொகையும் கூடிக்கொண்டே செல்கின்றது. சமாதானம் பேசி சமாளிப்பது. உண்மைகளை மறைப்பது என்பது உடனடியாகவே தெரிந்து விடுகிறது. என்றாலும் இதை தவறு இழைப்பவர்கள் ஒத்துக் கொள்ளுவதில்லை.
பிறரிடம் இருந்து மட்டும் உண்மைகளை எதிர்பார்க்கும் நாம், உண்மையாக வாழ முனைதல் அவசியமல்லவா? எமது ரகசியங்களைப் பூட்டி வைக்கும் நாம், பிறர் ரகசியங்களை ஆராயத் sapauliullounion?
எப்படியாயினும்,
ஒருவர் தனிப்பட்ட சங்கதிகளை ஆராயாது இருப்பது நல்லதுதான். ஆயினும் ஒருவருடைய பண்பு, இயல்புகள் திரிபு பட்டு, கெட்டழிந்து செல்லுமிடத்தும், பிறர் அதைக்கண்டு பேசாதிருக்க முடியுமா?
உண்மை வெளிச்சத்திற்கு வரும்வரை பொய்தான் ஆட்சி புரிகிறது. பிறரிடமிருந்து மட்டும் உண்மைகளை எதிர்பார்க்கும் நாம், நாமும் உண்மையாக வாழ முனைதல் அவசியமான ஒன்றல்லவா? எமது இரகசியங்களைப் பூட்டி வைக்கும் நாம் பிறர் இரகசியங்களை ஆராயத்
தலைப்படலாமா?

பருத்தியூர் பால வயிரவநாதன் (16)
معه
எனினும், பிறர் விஷயங்களில் புகுந்து கொள்ளுதல் நாகரீகமன்று. இதனாலேயேதான், இறைவன், பிறர் மனதில் உள்ள ரகசியங்களை மற்றையோர் அறியாவண்ணம் பூட்டி வைத்திருக்கின்றானோ என எண்ணத் தோன்றுகின்றது.
இதனாலேயே தான் நாம் எல்லோரிடமும் சகஜமாகப் பழக முடிகிறது. ஒருவர்க்கொருவர் என்ன எண்ணம் கொண்டாலும் சரி, உலகம் இயங்குவதற்கு, மனத்திரை அவசியமாகின்றதே.
என்றாலும், சில வேளைகளில், ஏதோ ஒரு சந்தர்ப்பத்தில், ஒருவர் பற்றிய எண்ணக் கிடக்கைகள், மற்றவர்க்கும் தெரிய வரும்போது நடைபெறும் அவலங்களைக் காணும்போதுதான் பிரச்சினைகள் எல்லாமே வெளிவருவதில் உள்ள தாக்கங்கள் எமக்குப் புலப்படுகின்றன.
கணவன் மனைவிக்கும், பெற்றோர் பிள்ளைகளுக்கும், நண்பர்கள் தமக்கிடையேயும் கூடச் சில விஷயங்களை மனதில் பூட்டி வைப்பதே சரிபோலப் படுகின்றது. சில ரகசியங்கள், அம்பலமாவதால், அவை மரணத்தில் முடிகின்ற கதைகளை, நீங்கள் பத்திரிகைகளில் படித்திருப்பீர்கள்.
நாம், தொண்டு செய்கின்றோம் எனக் கூறிக்கொண்டு பிறர் காரியங்களில் மூக்கை நுழைக்கக்கூடாது. கண்டிப்பதற்கும் திருத்துவதற்கும், உண்மையை வெளிக்கொண்டு வருவதற்கும் கூடச் சில வழிமுறைகள் உண்டு.
சாதாரண வாழ்வில் நாம் சில விஷயங்களைச் செய்து முடிப்பதற்காக, எம்மை நாம் மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கின்றது. இதில் தப்புக் கிடையாது. அலுவலகத்தில் மேலதிகாரி தன் பணியாட்களைக் கடிந்து கொள்கின்றார். அப்போது அந்தப் பணியாள் பணிவோடு அதைக் கேட்டுக் கொண்டிருக்கின்றார். உண்மையச் சொல்லப்போனால், அவன்

Page 88
{70} வாழ்வியல் வசந்தங்கள் سعه S .
உள் மனது, அவ் அதிகாரியைத் திட்டித் தீர்த்துக்கொண்டிருக்கும். இருப்பினும், அதை வெளியே காட்டிக் கொள்ளாது, சிரித்து, மழுப்பி சரி. ஐயா, சரி. ஐயா. நீங்கள் சொல்வதுதான் சரி. என்று ஒத்து ஊதி, சமாளித்து வெளியே வந்துவிடுகின்றார். இந்த நேரத்தில் தன் மனதில் பட்டதைக் கூறினால், அவ்வதிகாரி அதை ஏற்பாரா. அதை ஏற்கும் மனநிலையில் இருப்பாரா? சரி. சரி பின்னர் பார்ப்போம் என நடித்துச் சமாளிப்பதைத் தவிர வேறு வழியில்லை. இப்படி எதிரும், புதிருமாகச் சண்டை போட்டால் காரியமாகுமோ? யார் அல்லல் படுவார்கள்?
குழந்தை அழுகிறது; வீட்டில் சுவாரசியமாக நாவல் படித்துக் கொண்டிருக்கும், தாய் உடனடியாக ஓடிவந்து அதனைச் சமாதானப்படுத்துகிறாள். தனது அலுவல் பாதித்ததினால் ஏற்பட்ட கோபத்தை உடன் வெளிப்படுத்த முடியுமா? உடன் தன் கோபத்தை எண்ணத்தை மறைத்துச் சிரித்து ஏதேதோ, செல்லக் கதைகளைக் கூறி குழந்தை அழுகையை நிறுத்தி விடுகின்றாள்.
எமது உணர்ச்சிகளை எல்லா இடங்களிலும் உடன் வெளிப்படுத்திவிட முடியுமா? நாம் பொய்மை கலவாத நடிப்பு நடிக்க வேண்டியிருக்கின்றது. வஞ்சகம், காழ்ப்பு உணர்வுடன் கலந்த நடிப்பு ஏமாற்றுகின்ற வேலையே தவிர வேறில்லை.
எங்களால் முடியாத கருமங்களைச் செய்யமுடியும் எனக் கூறுதல் கூடாது. எல்லாம் தெரிந்தவர்கள் போல் பாசாங்கு செய்பவர்களாலேயே, சமூகம் அல்லல்படுகின்றது. தெரியாததைத் தெரிந்ததாக காட்டிக்கொள்பவர்களும், அதனையே நம்பிப் பலர் நட்டாற்றில் கைவிடப்படுவதையும், மேலான கஷ்டம் அனுபவிப்பதனையும், நடைமுறை வாழ்வில் கண்டிருப்பீர்கள்.
பொய்மையான ஏமாற்றுக்காரர்களைவிட, ஏமாறுபவர்களே அதிக தவறு விடுகின்றார்கள். ஏமாற்றுபவர்களுக்குச் சந்தர்ப்பம் அளிப்பதே மிகப் பெரிய தவறு ஆகும். சுய லாபத்திற்காக

பருத்தியூர் பால வயிரவநாதன் {74}
ஒருவரைத் தகுதிக்கு மீறி இந்திரன் என்றும், சந்திரன் என்றும் முகமன் கூறுவதையும், அதனைப் பாராட்டுப் பெறுபவர் தலையாட்டி அங்கீகாரம் கொடுத்து ஏற்றுக் கொள்ளுவதும், எவ்வளவு கீழ்த்தரமான வேலை! சுமுகமான இயல்பு வாழ்விற்காகவும், பிறரையும், சமூக பொது நலன்களைப் பாதிக்காமலும், அனுசரித்துப் போவதற்காக, எம்மை நாம் மாற்றிக் கொள்ளுதல் அவசியமாகின்றது. செயற்கைத்தனமான, வேண்டுமென்றே செய்யப்படும் செய்கைகள் எந்த நேரத்திற்குமே பொருந்தி வராது. இதனை உணர்ந்து கொள்ளல் வேண்டும்.
போலியான வாழ்வு வாழ்ந்து, நடிப்பவர்கள் செய்யும் காரியங்களால், நிஜமான மனிதர்கள்கூட, நம் கண்முன் மறைந்து போய் விடுகின்றனர். அத்துடன் விபரம் தெரியாது நடிப்பவர்கள், அகப்பட்டுக் கொண்டதும், அவர்களின் உண்மை வாழ்வைக்கூடச் சமூகம் சந்தேகக் கண்கொண்டு பார்க்கத் தொடங்கிவிடும். நடிப்பு நிஜமல்ல எனத் தெரிய வரும்போது, அவனது நிஜங்கள்கூட அஸ்தமித்து விடுகின்றன. இது ஒரு பரிதாப நிலை. நல்லவர்கள் போலியாக நடிக்கமாட்டார்கள். சந்தர்ப்பவசமாக நடிக்க முற்பட்டாலும் அகப்பட்டுக் கொள்கின்றார்கள். உண்மையான தொண்டு செய்யாத அரசியல்வாதிகளும், பொதுநல வாதிகளும் தம்மை மறைத்துவைத்துக் கொள்ளும் கலையினால் நிஜங்களைப் பொசுக்கிவிடலாம் என எண்ணுகின்றார்கள். ஆயினும், அவன் விரித்த வலையில் அவனே சிக்கும்போதுதானே சமூகம் விழிப்படைகின்றது. உலகம் பல சந்தர்ப்பங்களில், சரியானவைகளைக் கண்டுகொள்ள, நீண்ட கால அவகாசத்தை எடுத்துக் கொள்கின்றது.
நிஜங்களை மட்டும் நம்பி வாழ்கின்றவர்களுக்குத் தொல்லைகளும் தோல்விகளும் இல்லை. தற்காலிகமாகத் தப்பித்துக் கொள்ளப் பொய்களிடம் புகலிடம் தேடாதீர்கள். நீண்ட கால வெற்றிகளைப் பெற குறுகிய கால நன்மை தரும்

Page 89
வாழ்வியல் வசந்தங்கள்
کوسهها பொய்மைகள், எமது ஆத்மாவை அலைக்கழிக்கும். எமக்கு நாம் சொல்லும் பொய்களே மிகவும் கொடூரமானவை. இந்தப் பொய்கள் உள் இருந்தே அரித்து உருக்குலைக்கும். புறத் தாக்கங்களைவிட, அகத்துள் நடக்கும் போராட்டங்கள் வலுவானவையாகவும், தாங்கிக் கொள்ள இயலாதவையாகவும் இருக்கின்றன.
உண்மையைச் சொல்லப் போனால், எமது பொய்மைகளால் பிறரைவிட நாங்களே தகிக்கப்படுவோம்.
நிஜங்களே எமக்குச் சொந்தங்கள் என்போம்.
 


Page 90


Page 91