கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: வாழ்வியல் வசந்தங்கள் 2

Page 1
லைப் பிரசுர
Def3LD5
(A)
 

ශ්‍රේගර්ඝ
வியல் தேட
வாவதிதன
()
W

Page 2


Page 3

1 1 ܛ
LLLLLL LLLLLLLLSS LLLLLL LSSSS L L L L S L SLSLSSASS
மணிமேகலைப் பிரசுரம் தபால் பெட்டி எண் 1447, 7 (ப.எ.4), தணிகாசலம் சாலை, தியாகராய நகர், சென்னை - 600 017 தொலைபேசி 24542928 தொலைநகல் 0091-44-24348082 LÉGIT S4 S5 SFäb : ma nimekalai@eth.net இணைய தளம் : www.manimekalaiprasuram.com

Page 4
ii
r
நூல் தலைப்பு
ஆசிரியர் மொழி
பதிப்பு ஆண்டு பதிப்பு விவரம்
מuתfl6_פ
தாளின் தன்மை
நூலின் அளவு
நூல் விவரம் KÉ
வி வாழ்வியல் வசந்தங்கள்
(பாகம் - I)
பருத்தியூர் பால, வயிரவநாதன்
தமிழ்
2005
முதல் பதிப்பு
ஆசிரியருக்கு
11.6 é8.é8.
கிரெளன் சைஸ் (12%x 18% செ.மீ)
அச்சு எழுத்து அளவு வி 11 புள்ளி
மொத்த பக்கங்கள்
so XXiii + 162 = 184
அட்டைப்பட ஓவியம் இ ஐஸ் கிராஃபிக்ஸ்
லேசர் வடிவமைப்பு
இ கிறிஸ்ட் கம்ப்யூட்டர்ஸ்
@23725639
அச்சிட்டோர் லீ ஸ்கிரிப்ட் ஆஃப்ஸெட்
சென்னை - 94.
நூல் கட்டுமானம் இ தையல்
வெளியிட்டோர் 3 மணிமேகலைப் பிரசுரம்
சென்னை - 17,
நூலின் விலை
esse

GO అరిస్థ சமர்ப்பனம் 颜
Tெனது அன்பான நண்பன் மறைந்து மறையாது என் நினைவுபூடாக வாழ்ந்துவரும் திரு. மாசிலாமணி சிவபாலன் அவர்களுக்கு இந்நூல் efLDfru60OT b.
காலமெல்லாம் நீ இருந்தால் எல்லாமே எனக்கு உண்டு வேதனைக்கு விளக்கமாகி பாதையில் கண்ணிர் விலங்கிட்டாய் தெருக்கள், மரங்கள், புழுதிநிலப் பரப்புக்கள் கொளுத்தும் வெயில் கருப்புத்தார் வீதி, கொட்டும் மழை கோயில், குளம், கீரிமலைக் கேணி வல்லிபுரக் கோயில், செல்வச்சந்நிதி தமிழ் தேசம் முழுதும் திரிந்த நாட்கள் காற்றாகத் திரிந்து கனகதை பேசினோம் இருந்து சிரிக்க வைத்து வருந்திக் கண்ணிர் மல்க வைக்கின்றாய் இருந்து எண்ண வைக்கிறாய் இறந்து இறவாத உற்ற நண்பர் நேற்றுச் சென்றவன் அல்ல.
என்றும் என்னோடு நீ.! S

Page 5
பொருளடக்கம்
எனது உரை V வாழ்த்துரை Χ வாழ்த்துரை. xii அணிந்துரை xiv மதிப்புரை xix இளமை அம்மா 9 சுயசிந்தனை 19 சிக்கனம், ஒரு வருமானம். 26 எல்லோரும் நம்மவரே . 34 மனம் முறிந்தால், மணமுறிவா? . 42 புறம் கூறுதல், அறம் ஒறுத்தலாகும். 55 காலம் தவறாத பணிகள் . 61 சந்தேகம் 70 தட்டிக்கேட்டல் 78 திறந்த இதயம், நிறைந்த வாழ்வு. 84 கடன் 9 முக்காலங்கள் 99 பொறுமை, நிதானம் . 106 வாக்குக் கொடுத்தல். 114 எதிர்மறை எண்ணங்கள். 121 சொர்க்கம் எங்கே?. 128 பலத்தினை வழங்குதல் . 134 எல்லை மீறாத உரிமைகள். 140 இங்கிதத்தைச் சொந்தமாக்குங்கள். 147
சட்டம் - கட்டுப்பாடான
சமூக கோட்டையைச் சமைக்கும். 154
 

GKPQ °一@0
ழ்ெக்கை சுவாரஸ்யமானது.
உண்மையாக வாழ்ந்து பார்ப்பவனுக்கு இதன் அனுபவம் நன்கு புரியும்.
நீங்கள் சந்தோஷமாக இருப்பதற்கு உங்களுக்கு உங்களது அனுமதி முதற்கண் தேவைப்படுகின்றது. ஐம்புலன்கள் வாயிலாகத் தேடும் இன்ப, துன்ப அனுபவம் மட்டுமே வாழ்க்கையா? எல்லாவற்றுக்கும் மேலாக அறிவு நிலை ஒன்று இருக்கின்றதல்லவா! அறிவு நிலைகொண்டு சிந்தித்தால் வாழ்க்கை இயல்பானதும் சாதாரணமானதும் ஆகும்.
நீங்கள் உங்கள் சொந்த பிரச்சினைகளை வைத்தே உலகை ஆராய்ந்து வருகின்றீர்கள். உலக நோக்கை மற்றவன் மனநிலையில் இருந்தும் இதனைப் பார்த்தால் அன்பு, கருணை, பாசம், நடுவுநிலைமை தானாகவே வந்துவிடுகின்றன.
எங்களுக்குள் அனைவருள்ளும் ஒரு நல்ல மனிதன் இருந்து கொண்டேயிருக்கின்றான். அவனைக் கட்டிவைப்பது முறையல்ல. எங்கள் அறிவுநிலை கொண்டு அவனைச் சுதந்திரமாக உலாவர அனுமதியுங்கள்.

Page 6
vi
தேடலுக்குரியவன் மனிதன். இவன் தேடுவது இன்பங்களை மட்டும்தான். அதுவும் தான் சார்ந்தோருக்காகவும் தனக்காகவுமே தேடலில் தீவிரவாதியாகின்றான்.
எமது தேடல் பார்வைகள் சமூக உலகோடு நோக்கி விரிபடுத்தப்படல் வேண்டும். வெறும் கடதாசிகள் கொண்டு கற்பதனால் இவன் முழு மனிதனாகவோ மனிதாபிமான மிக்கவனாகவோ உருவாக முடியுமா?
ஜீவன்களை மதிக்கத் தெரிந்தவனாக மனிதன் வாழ முயலவேண்டும். ஒரு சாதாரண நல்ல வசனம் கூட ஒருவனைச் சிந்திக்க வைத்து முழு மனிதன் ஆக்கக் கூடும்.
பிரபஞ்சங்களைத் தேடும் விஞ்ஞானிகள் கூட்டம் பஞ்சத்தில் அடிபடும் பராரிகளைப் பார்க்கவேண்டும். எங்கள் ஆய்வுகள், ஆணவ முனைப்போடும் எம்மை மிஞ்ச யார் என்ற வல்லாதிக்கம் மிக்க உணர்வு நோக்கிலேயே அமையலாமா?
சாதாரணமாக முன் நிற்கும் சாமான்ய மானுடனையே நோக்கியதாகவும் இவர்களை ஆக்கத்திறன் மிக்கவர்களாகவும் ஆக்க எம் முயற்சிகளை தளர்ச்சியின்றி செய்ய வேண்டும்.
நாம் இந்தப் பிரச்சினை மிகுந்த உலகின் நடப்புக்களைக் கண்டும் கூட, மனதுக்கு நல்லவைகளைக் கட்டளையிடத் தயங்குகின்றோம். எல்லாமே தெரிந்தும் தெரியாத மாதிரி நடிக்கப் பழகிவிட்டோம்.
நல்லதை நினைக்க அதனையே நடைமுறைப்படுத்த நாம் எம்மையே பயிற்சிக்குள்ளாக்க வேண்டிய நிலையில்

vii
உள்ளோம். கற்பனைவாதத்தை விடுத்து நிஜத்தில் எம்முன் இருக்கும் மனித அவலங்களைப் போக்க வேண்டும்.
எமது எதிர்காலச் சந்ததிக்கான வழக்கங்களை இன்றே செய்தல் வேண்டும். சீரிய வாழ்வு, நற்சிந்தனை மூலம் உருப்பெறும் சகல ஜீவன்களையும் அரவணைக்க அன்பு பாராட்ட, தேறுதல் சொல்ல, தயங்காமல் வாழ்ந்தால் உலகில் என்ன பிரச்சினைதான் வரமுடியும்? எங்களை அறியாமல் எந்தப் பிரச்சினைகளும் எம்மை விழுங்க முடியாது.
எல்லா மக்களும் சந்தோஷமாகவும் அன்புரிமையுடனும் ஒருவரை ஒருவர் புரிந்து, வாழ்வாங்கு வாழும் முறைகளை அறிந்து தெளிந்துகொள்ளவே நாமும் ஒருவராக மக்கள் நலன் விரும்பும் ஒரு அங்கத்தினராக பதிவு செய்து கொள்வோமாக.
எனது இந்த விருப்புதான் ஏதோ சில வரிகள் எழுதுமாறு தூண்டுகின்றது.
எனது முயற்சியை அனைத்து இதயங்களும் ஏற்று ஊக்குவிக்கும் என்பது என் அசைக்கமுடியாத நம்பிக்கையாகும்.
எனது ‘வாழ்வியல் வசந்தங்கள்’ நூலின் முதலாவது பகுதி வெளியானபோது நான் நினைத்ததைவிட சகல தரப்பினரின் உளமார்ந்த ஒத்துழைப்பு கிடைத்தமை இறைவன் எனக்களித்த வரப்பிரசாதமாகும்.
வெளியீட்டு விழாவின்போது நூலை வெளியீட்டு வைத்த மயூரபதி தேவஸ்தான அறங்காவலர் திரு. பொன் வல்லிபுரம் அவர்களுக்கும் நூலின் முதற் பிரதியை

Page 7
viii
பெற்றுக்கொண்ட புரவலர் அல்ஹாஜ் ஹாசிம் உமர், பிரதம விருந்தினர்களான நீதியரசர் திரு. தி.ஜே. விஸ்வநாதன், திருமதி ரஞ்சினி விஸ்வநாதன் அவர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றிகள்.
தற்போது எனது ‘வாழ்வியல் வசந்தங்கள்’ இரண்டாம் பாகம் வெளியாகின்றது.
தற்போது வெளியாகும் எனது இந்த நூல் மணிமேகலைப் பிரசுரம் மூலமாகவே வெளிவருகின்றது. நூல் வெளியீடு செய்ய அன்புடன் என்னை ஊக்குவிக்கும் மணிமேகலைப் பிரசுர அதிபர் திரு. ரவி தமிழ்வாணன் அவர்கட்கு எனது நன்றிகள்.
எனது கட்டுரைகளை பிரசுரித்த - இன்னமும் பிரசுரித்து என்னை வளர்த்துவரும் சுடர் ஒளி, தினக்குரல், வீரகேசரி, தினகரன் நிறுவனங்களுக்கு என் நன்றிகளைச் சொல்ல வார்த்தைகள் போதாது. அத்துடன் என்னைக் கெளரவித்த வெக்ரோன் ரிவி, சக்தி ரிவி, இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபனத்துக்கும் என் நன்றிகள். மேலும் தினக்குரல் ஆசிரியர் திரு. தனபாலசிங்கம், தினக்குரல் வார இதழ் ஆசிரியை செல்வி எம். தேவகெளரி, சுடர் ஒளி ஆசிரியர் திரு. என். வித்தியாதரன். வீரகேசரி செய்தி ஆசிரியர் திரு. ஆர் பிரபாகரன் வெக்ரோன் ரிவி நிறுவன இலங்கைப் பணிப்பாளர் திரு. இளையதம்பி தனயாந்தா ஆகியோருக்கு என் அன்பான நன்றிகள்.
என் ஆசிரியப் பெருந்தகை திரு. எஸ். ஏகாம்பரநாதன், மூத்த எழுத்தாளர் திரு. எஸ். யோகநாதன் அவர்களின் ஆசீர்வாதத்தை என்றென்றும் நான் நினைவு கொள்கின்றேன்.

ix
‘வாழ்வியல் வசந்தங்கள்’ இரண்டாம் பாகம் நூலிற்கு அணிந்துரை வழங்கிய பேராசிரியர் எஸ். தில்லைநாதன், மதிப்புரை வழங்கிய கல்வி அமைச்சின் மேலதிகச் செயலாளர், தமிழ்மணி திரு. எஸ். தில்லைநடராஜா, என்னை வாழ்த்தி அருளிய பேராசான்கள், பேராசிரியர் திரு. எஸ். பத்மநாதன், பேராசிரியர் கா. சிவத்தம்பி, சோ. சந்திரசேகரன் ஆகியோரின் மதிப்பார்ந்த எழுத்துக்கள் எனது எழுத்துக்குக் கிடைத்த பெரும் கெளரவம் ஆகும்.
கொழும்பு தமிழ்ச் சங்கத்தினர் தமது சொந்த விழவாகவே எனது முதலாவது நூல் வெளியீட்டு விழாவை நடாத்தினர். இந்தவகையில் சங்கத் தலைவர் திரு. பெ. விஜயரத்தினம், காரியதரிசியும் என் பாசமிகு நண்பருமாகிய திரு. ஆ. கந்தசாமி அவர்களையும் நான் நன்றியறிதலுடன் அன்பு பாராட்டுகின்றேன்.
என்னோடு இணைந்து எனக்காக தன் சிரமம் நோக்காத என் அன்பான தோழன் கவிஞன் திரு. ம. சண்முகநாதன் பலதரப்பட்ட வழிகளில் என் முயற்சியினை தன் கருமமாகக் கொள்கின்றார். இவர்கள் எல்லோருமே சிறியோன் ஆகிய என் மீது கொண்ட பற்றுதலை எண்ணி இறும்பூதெய்துகின்றேன்.
“வாழ்வியல் வசந்தங்கள்’ என்னும் கதம்ப மாலையை உங்கள் மீது சொரிகின்றேன். வாசத்தை நுகர்ந்து மகிழுங்கள்.
இவ்வண்ணம் பருத்தியூர் பால, வயிரவநாதன் இல-36, 2வது மாடி, E-5, பெர்னாண்டோ, மாவத்தை, கொழும்பு-06.

Page 8
வாழ்த்துரை
திரு. வயிரவநாதன் அவர்கள் மாணவர்களுக்கும் மற்றும் இளம் வாசகர்களுக்கும் பயன்தரும் வகையிலே நாள், வார இதழ்களில் எழுதிய கட்டுரைகள், “வாழ்வியல் வசந்தங்கள்” என்ற தலைப்பில் வெளிவரத் தொடங்கியுள்ளன.
முதலாவது தொகுதி மணிமேகலைப் பிரசுரத்தினால் விரும்பி வெளியிடப்பட்டதென்பது ஒரு முக்கியமான தகவலாகும்.
இப்பொழுது இரண்டாவது பாகம் வெளிவருகிறது.
திரு. வயிரவநாதன் போன்றோர் தமக்குள்ள தமிழ் ஆர்வம் காரணமாக இத்தகைய கட்டுரையாக்கத்தில் ஈடுபடுவது இன்று ஒரு வழக்காகத் தொடங்கியுள்ளது. பிள்ளைகளின் வயது, அவர்களின் மன வளர்ச்சி அந்த நிலையில் அவர்களுக்கு இயைந்ததான மொழி நடை ஆகியவற்றிற் கவனம் செலுத்துதல் மிக முக்கியமான ஒரு கல்விசார் பணியாகும்.
திரு. வயிரவநாதனின் இப்பணி மாணவர்களிடையே வாசிப்புப் பழக்கத்தை வளர்ப்பதற்கு உதவவேண்டும்

Xi
என்பது என் அவா. திரு. வயிரவநாதன் இத்துறையில் தொடர்ந்து செயற்பட்டு உரிய புகழமைப் பெற வாழ்த்துகின்றேன்.
தனது இளமைக் காலத்தில் இருந்தே ஓவியம் ஆக்க இலக்கியத் துறைகளில் ஈடுபட்டிருந்த திரு. வயிரவநாதன் இத்துறையிலே தொழிற்படுவது மிகுந்த மகிழ்ச்சியைத் தருகிறது. அவர் முயற்சிகள் வெல்க.
பேராசிரியர் திரு. கார்த்திகேசு சிவத்தம்பி
ராம்கேட் தொடர்மாடி, 27, 37-வது ஒழுங்கை, 6.45mlp by - O6.

Page 9
xii
வாழ்த்துரை
அன்பர் பருத்தியுர் பால. வயிரவநாதன் எமக்குப் பல்லாண்டுகளாக அறிமுகமானவர். இந்துசமய, கலாசார அலுவல்கள் திணைக்களத்தில் அவர் நெடுங்காலமாகப் பணிபுரிந்து வருகின்றார். எப்பொழுதும் மகிழ்ச்சியோடும் ஆரவாரத்துடனும் பழகிக் கொள்ளும் பண்புடையவர். கவிதா சக்தி கைவரப் பெற்றவர். எதுவித ஆயத்தமுமின்றி உடனடியாகவே சொற்களைப் பாமாலைகளாக வழங்கும் ஆற்றல் கொண்டவர். பல நூல்கள் மூலமாக வாசகர் பலருக்கு அறிமுகமானவர்.
‘வாழ்வியல் வசந்தங்கள்’ என்னும் அவருடைய நூலைப் படிக்கும் வாய்ப்பு எமக்குக் கிடைத்தது. கபடமற்ற உள்ளம் 685 T 600TL ééਘ, உயர்ந்த இலட்சியமுடையவர்களாகத் தம்மை ஆக்கிக் கொள்வதற்கு எம்மவர்கள் எவ்வாறு ஒழுகுதல் வேண்டும், எவ்வாறு செயற்படுத்தல் வேண்டும், எத்தகைய சிந்தனைகளைச் செயற்படுத்துதல் வேண்டும் என்று இந்த நூலிலே தெளிவாகவும், அழுத்தமாகவும் விளக்குகின்றார். மிக இலகுவான நடையிலும், எல்லோரும் புரிந்துகொள்ளும்

xiii
வண்ணமாகவும் கருத்துக்கள் முன் வைக்கப்படுகின்றன. அவரது நடை இளைஞர்களால் முன்மாதிரியாகக் கொள்ளத்தக்கதாகும்.
இந்நூலைப் படிப்பவர்கள் எல்லோரும் நல்ல பயன் பெறுவார்கள் என்பது எமது உறுதியான நம்பிக்கையாகும். நண்பன் வயிரவநாதன் போன்ற எழுத்தாளர்களுக்குச் சமுதாயம் பக்கபலமாக நிற்க வேண்டியது அவசியமானது.
பேராசிரியர் சி. பத்மநாதன் வரலாற்றுத்துறை பேராதனைப் பல்கலைக்கழகம் பேராதனை. 18.2.2OO4

Page 10
xiv
劉
4
LDனித 6)In փ6) மண்ணில் நல்லவண்ணம் அமைவதற்கான முயற்சிகளின் வரலாறுதான் பண்பாட்டின் வரலாறாகவும் அமைகிறது. பண்பாடு என்பது பொதுவாக ஒரு மக்கட் கூட்டத்தின் வாழ்க்கை முறையினைக் குறிப்பது என்று கொள்ளப்படும். ebLDšas கூட்டத்தின் சிந்தனைகள், நம்பிக்கைகள், செயற்பாடுகள் அனைத்தும் அதனை நிர்ணயிப்பனவாகும். U60oTurf G பற்றி நாம் பேசும்போது, பழக்க வழக்கங்கள். நம்பிக்கைகள், சமூக நிறுவனங்கள், நடையுடை பாவனைகள், மொழி. இலக்கியம், கலைகள் முதலானவற்றையெல்லாம் கருத்திற்கொண்டாலும், மனித உறவுகள் செம்மையாக அமைந்த ஒரு வாழ்க்கை ஒழுங்கினையே பிரதானமாகக் கருதுகிறோம். எல்லாக்
 
 

XV
கலைகளும் வாழ்க்கை என்ற எல்லாவற்றுக்கும் மேலான கலைக்குப் பங்களிப்பு நல்குவனவாக அமைதல் வேண்டும் என்று மாபெரும் ஜேர்மானிய நாடகாசிரியரான பேட்ரோல் பிறெஹற்ற் கூறியது இங்கு நினைவு கூரத்தக்கது.
வாழ்க்கை வசதிகளையும் தொழில் நுட்பங்களையும் எவ்வளவுக்குத்தான் வளர்த்துக்கொண்டாலும், உலகத்தோடு ஒட்டி ஒழுக மனிதருக்குத் தெரியவில்லையென்றால், மனித வாழ்வு சுமுகமாகவும் சீராகவும் அமைதல் சாலாது. பெரும்பாலானவர்கள்,
'தன்பெண்டு தன்பிள்ளை சோறுவீடு
சம்பரத்யம் இவையுண்டு தானுண்டு”
என்ற மனப்பாங்கினராய், மனித சமூகத்திலுள்ள குறைபாடுகளையும் முறைகேடுகளையும் பற்றி அலட்டிக்கொள்ளாமல் சொந்தச் சுகத்தில் மட்டும் கண்ணாய் இருக்கின்றனர். இன்னுஞ் சிலர் மனித அவலங்களையும் பலவீனங்களையும் எவ்வாறு தமக்குச் சாதகமாக்கிச் சுரண்டிச் சம்பாதிக்கலாம் என்பதில் கருத்துடையோராய் உள்ளனர். அவர்களைப் போலன்றி, உலகம் இன்புற்றிருக்க வேண்டும் என்ற வேணவாவுடன் வாழ்வியல் தேடல்களில் ஈடுபடும் சிலராலேதான் ‘உண்டாலம்ம இவ்வுலகம்.’
மனித நடத்தைகளையும் உறவுகளையும் ஒழுங்காக நெறிப்படுத்தி, அவர்களுடைய வாழ்வில் இணக்கத்தையும் அமைதியையும் நிலைநாட்டும் முயற்சிகள் நீண்ட காலமாகவே நடைபெற்று வருகின்றன.

Page 11
XVị
ஆயினும், வரலாறென்பது ‘மீண்டும் மறுபடியும் பட்ட அவற்றையே படுவிக்கும் தன்மைத்தாய் இருக்கிறதென்பர். அதற்குக் காரணம் மனிதவியல்புகள் மாறாமற் கிடப்பதே என்றும் கூறப்படுகிறது. அது எவ்வாறாயினும், மற்றவர்களிடத்து ஆர்வமுடையவர்கள் மனித வாழ்வில் முரண்பாடுகளும் மோதல்களும் மிகுந்து வருவது கண்டு வெறுமனே இருக்கமுடியாத நிலையில், வாழ்க்கை விளக்கத்தை மேம்படுத்தும் முயற்சிகளில் மீண்டும் மறுபடியும் ஈடுபட்டு வருகின்றனர். காலகதியில் வாழ்க்கை முறையில் தோன்றும் மாற்றங்களுக்கேற்ப மனித விழுமியங்களும் மாறுபடலாம் என்பதால், அவ்வக் காலத்துக்கேற்ற ஒழுக்கங்களையும் விளக்கங்களையும் வலியுறுத்த வேண்டிய தேவையும் தவிர்க்க முடியாததாகலாம்.
பருத்தியுநர் பால. வயிரவநாதன் சிறுவயது முதல் ஓவியம், கவிதை முதலான கலைகளில் ஆர்வமுடையவராய் இருந்து வந்துள்ளார். அந்த வகையில், அவர் சீரையும் செம்மையையும் அழகையும் விழைபவர் என்பது சொல்லாமலே போதரும். தனிமனித ஒழுக்கம், குடும்ப ஒற்றுமை, சமூக உறவு, உலக ஒழுங்கு அனைத்திலும் உண்மையும் நன்மையும் அழகும் விளங்கவேண்டும் என்று அவர் விரும்புகிறார். நெறிபிறழ்வுகளையும் கொடுமைகளையும் குரூரங்களையும் கண்டு அவர் உள்ளம் பொருமுகிறது.
போட்டிச் சந்தைப் பொருளாதாரமும், நுகர்வோரைப் பற்றிய கவலையின்றி நுகர்வினை ஊக்குவிக்கும் போக்கும், சிறிது காலப் பாவனையின் பின் பொருள்களை

XV
வீசியெறிந்துவிடும் மனப்பாங்கும் வளர்க்கப்படும் இன்றைய சூழலில், பொருள் சேர்க்கும் அவசரமும் போட்டி பொறாமையும் மிகுந்து வருவதாகக் கூறப்படுகிறது. மற்றவர்களை ஏய்த்தும் விழுத்தியும் பிழைப்பு நடாத்தப்படுமிடத்து மனித விழுமியங்கள் அடிபட்டும் மிதிபட்டும் போகின்றன. மனதைத் தீமையான வற்றினின்றும் விலக்கி நன்மையானவற்றின்பாற் செலுத்தும் அறிவுடைமைக்கு வித்திடுவதெனக் கொள்ளப்படும் கல்வி கூட மற்றவர்களைத் தோற்கடிப்பதற்கும், அவ்வப்போது விற்றுப் பிழைப்பதற்குத் தோதான திறன்களை வளர்ப்பதற்கும் உதவும் ஒரு கருவியாகவே நோக்கப்படுகிறது.
தனிமனிதரும் குடும்பங்களும் சமூகங்களும் உலகும் பகைமைகளையும் முரண்பாடுகளையும் புறங்கண்டு, இசைந்தும் இன்புறுத்தும் வாழவேண்டுமென்று விரும்பும் வயிரவநாதன், அன்பு, மனிதாபிமானம், வாய்மை, கடமையுணர்வு, பொறுப்புணர்வு முதலானவற்றை வலியுறுத்துகின்றார். அவை இல்லாதவிடத்து ஏற்படக்கூடிய அனர்த்தங்களையும் அவலங்களையும் வாழ்க்கை அனுபவங்களினூடாக எடுத்துக் காட்டுகிறார். பிரச்சினைகளையும் முரண்பாடுகளையும் தெளிவாக விளங்கிக்கொள்ளும் திறன், பாரபட்சமும் அச்சமும் அற்ற சுயசிந்தனை, தனிப்பட்ட வாழ்விலும் பொதுவாழ்விலும் காலவிரயத்தையும் பொருள் விரயத்தையும் தவிர்க்கும் தன்மை, அழுக்காறு, அவா, வெகுளி, இன்னாச் சொல் ஆகியவற்றை அடக்கும் ஆற்றல் முதலானவற்றின் 96 du Lb இந்நூலிற் பல்லாற்றானும்

Page 12
xviii
வற்புறுத்தப்படுகின்றது. வாழ்க்கையை இன்னாது என்று ஒதுக்கிவிடாது, துணிவுடனும் நேர்மையுடனும் பயன்படத்தக்க வகையிலும் வாழ்வதற்கான உற்சாகத்தையும் ஊட்டுவதாக இந்நூல் அமைந்திருப்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்நூலில் இடம்பெற்றுள்ள கட்டுரைகள் வாசிக்கத் தக்கனவாகவும் வாசகர்களை ஈர்க்கக் கூடியனவாகவும் இருப்பதற்கான ஏதுக்கள் இரண்டாகும். முதலாவது, அன்றாட வாழ்க்கை விவகாரங்களையும் மனித நடத்தைகளையும் அவர்களுடைய பலங்கள், பலவீனங்களையும் உன்னிப்பாக நோக்கும் பால. வயிரவநாதனின் அவதான சக்தி. இரண்டாவது, அவதானித்த விடயங்ககளைப் படிப்போரை உடன்படுத்தும் வகையில் விவரமாகத் துருவி அலசும் ஆற்றல்.
வையத்துள் வாழ்வாங்கு வாழும் விருப்புடையவர்கள் பால, வயிரவநாதனின் இம்முயற்சியைப் பாராட்டி வரவேற்பர். பேராசிரியர் எஸ். தில்லைநாதன் Professor Emeritus, University of Peradeniya.

xix
தினம் தினம் புதுமைகள் பல நிகழும் உலகம் இன்றைய 2 -6u esb. இருப்பினும் அவசரமான உலகமாகவும் நேரமில்லாத உலகமாகவும்
திகழ்கிறது. அதனால் பழமைகளைப் பற்றியும் அவற்றின் ce (b60)LD
பெருமைகளைப் பற்றியும் தெரியாதவர்கள் பலரைக் காணக்கூடியதாக உள்ளது. பழைய இலக்கியங்களில் காணப்படும் பண்பாடுகள், விழுமியங்கள் ஆகியவற்றின் நன்மைகள் - உண்மைகள் ஆகியவற்றையும் சரிவரத் தெரியாதவர்கள் பலரையும் காணக்கூடியதாகவும் உள்ளது.

Page 13
XX
விளைவித்தாலும், உள்ளத்தால் உண்மையான ஆனந்தத்தை அடையும் வாழ்க்கைதான் சிறந்த வாழ்க்கை. உள்ளத்தைப் பண்படுத்தவும் - உள்ளதைக் கொண்டு, திருப்தியாக வாழவும் பழகிக் கொண்டால் அதுவே சிறந்த வாழ்க்கை.
நல்லோர் உறவை ஏற்படுத்தி, அதனைத் தொடர்வதன் மூலமும் - அவர்களின் வழிமுறைகளைப் பின்பற்றுவதன் மூலமும் வாழ்வு வளம்பெறும். இதற்கெல்லாம் போதியளவு கால அவகாசமில்லாத அவசர யுகம் இது.
நல்ல வாழ்வுக்குப் பயனுள்ள பல விடயங்கள் பழம்பெரும் இலக்கிய நூல்களில் நிறையவே இருப்பினும், தேடிப்படிப்பதில் உள்ள சிரமங்களாலும் செய்யுள்களைப் புரிந்து கொள்வதில் உள்ள சிரமங்களாலும் நல்லவற்றை அறிந்துகொள்ளும் வாய்ப்பு அருகி வருகிறது.
எல்லோரும் நல்லவை எல்லாம் பெறவேண்டும் என்ற எண்ணத்துடன் திருமிகு பால. வயிரவநாதன் எழுதிய கட்டுரைகளின் முதலாவது தொகுப்பு நூல் - “வாழ்வியல் வசந்தமாக” வெளிவந்து வாசகர்களுக்கு விருந்தாகியது. வளமான வாழ்க்கை தொடரவேண்டும் என எண்ணும் திரு. வயிரவநாதனின் இரண்டாவது
தொகுப்பு நூல் - “வாழ்வியல் வசந்தங்கள்’ உங்கள் வசமுள்ளது.
வாழ்வின் பல பக்கங்களில் - நாம் காணும்
அம்சங்கள் - கடைப்பிடிக்க வேண்டிய அம்சங்கள்

XXi
இந்நூலில் இருபத்தொரு தலைப்புகளில் இனிய கட்டுரைகளாக மலர்ந்துள்ளன.
சிறுகதை, கவிதை, நாவல் எனப் பல வடிவங்கள் வெளிவந்து கொண்டிருக்கும்போது வயிரவநாதன் வேறு வடிவத்தில் தனது கருத்துகளை, கண்ணோட்டத்தை சற்று வித்தியாசமாக எழுதி வருகிறார்.
எழுத்தாற்றல் கைவரப்பெற்ற சிலர் தம்மைப்பற்றியும் - தமது அனுபவங்கள் பற்றியும் படைப்புகளை ஆக்கி வரும்போது - பருத்தியுநர் பால. வயிரவநாதன் சமூகத்தைப் பற்றியும், சமூக மேம்பாடு பற்றியும் சிந்திப்பதன் செயற்பாடே அவரது தொடர்ச்சியான எழுத்துருவங்கள்.
கட்டுரைத் தலைப்புகள் ஒவ்வொன்றும் படிக்கும் ஆர்வத்தைத் தூண்டுகிறது. சொல்லாட்சியும், இயல்பான இனிய நடையும், பொருத்தமான எடுகோள்களும் இவரின் படைப்புகளில் காணப்படும் சிறப்புகளாகும்.
காலத்தின் தேவை கருதி நாளாந்த வாழ்க்கையில் தான் ஆழ்ந்து அவதானித்தவற்றைப் பதிவுகளாக்கித் தந்துள்ளார்.
விடுதலைப் போராட்டங்களின் போது, யாழ்ப்பாணம் வன்னிப் பகுதிகளில் பெருத்த சிரமங்களுக்கும் உயிராபத்துகளுக்கும் மத்தியில் கடமையாற்றிய திரு. வயிரவநாதன் பல்துறை ஆற்றல் மிக்கவர். பல்வேறு அனுபவங்களைப் பெற்றவர். தற்போது அவர் கடமையாற்றும் இந்து சமயப் பண்பாட்டு அலுவல்கள்,

Page 14
XXi
திணைக்கள அனுபவங்கள், அறிமுகங்கள் நிறையவே
இருப்பதால் அறிவு பூர்வமான ஆக்கங்கள் பலவற்றை எதிர்பார்க்கலாம்.
இந்நூல், இளைஞர்களுக்கும் குறிப்பாக கல்லூரி
மாணவர்களுக்கும் பெரிதும் பயன்தரக் கூடுமென நம்புகின்றேன்.
பருத்தியுர் பால. வயிரவநாதனின் படைப்பாக்கப்
பணி சிறக்க வாழ்த்துகின்றேன்.
உருவை எஸ். தில்லை நடராசு
மேலதிகச் செயலாளர்,
கல்வி அமைச்சு,
இணுவை, கொழும்பு,

வாழ்வியல் வசந்தங்கள்
( UMTSh - II)
இளமை சுதந்திரமான இயந்திரம். இதற்கு ஆசை அபிலாசைகள் ஏராளம். அனைத்துப் பிரிவினரிடையேயும் இருந்து அன்பை மட்டும் எதிர்பார்க்கும் குணமும் தாராளம். இளையவர்களின் துணிச்சல்களை ஆணவமாகக் கருதவேண்டாம். இது இவர்களுக்கு இறைவனால் வழங்கப்பட்ட வரப்பிரசாதம். சகல உயிர்களுமே இளமையில் அழகும், மெருகும் கொண்டவை. இளமையின் வேகத்தை உற்சாகத்தின் உலகம் நன்கு பயன்படுத்தி கொள்ளவேண்டும்.
இளமை எழிலானது, வலுவானது, பொலிவானது, ஆரோக்கியமானது. இதன் அழகில் சொக்கித்துப் போகாதவர் யார்? புதியன எதுவுமே அழகுதான்.

Page 15
2 வாழ்லியல் வசந்தங்கள்
புதிதாகப் பூத்த பூக்கள், புதுப்புனல், புதிய ஊற்று நீர், புதுமழை. மெல்லன அரும்பும், புல் நுனி துளிர்ப்பு, அத்துடன்,
குருத்தாக விரிந்து, சிரிக்கும் குழந்தை, குமரியின் கண்கள், புது மனைவியின் புன்னகை, புதிதான காதலியின் 6iuurfly-b.
இளஞ்கரிய வெப்பம், இளம் தென்றல் காற்று, மூன்றாம் பிறை.
மேலும்,
புத்தம் புதிதாய்ப் பறித்த கனிகள், அன்றே சமைத்த அறுசுவை உணவுகள்.
புதிதான வாகனம், போட்டுக்கொள்ளும் நலுங்காத உடைகள், இத்தனையுடன் கூட மேலும் எத்தனை எத்தனையோ.
இளமை எப்பொழுதுமே மிடுக்கும், வனப்புமானதே. முதுமை கொண்டோரும், கழிந்த இளமையை நினைந்து உருகுகின்றார்கள். சற்றே மனம் சங்கடப்பட்டாலும், தம்முன்னே தவழும் குழந்தையைக் கண்டு, தாங்களும் குழந்தைகள் ஆகின்றார்கள். இளைய தலைமுறைகளின் குறும்புகளைப் பார்த்து, பெரியவர்கள் இறும்பூதெய்துகின்றார்கள்.

பருத்தியூர் பால. வயிரவநாதன் 3
வயது முதிர்ந்த தம்பதியிடையே வற்றாத அன்பு இருந்தால், என்றும் அவர்கள் இளமையைப் பரிமாறிக் கொள்ளுபவர்களாகவே ஆகிவிடுகின்றனர்.
இளமை, அழகாக அசையும்; துள்ளு நடை பயிலும்; தானும் ஆடும்; பிறரையும் ஆட்டுவிக்கும். தன்னையும் தன்னைச் சார்ந்தவர்களையும் சுறுசுறுப்பானவர்களாக மாற்றும்.
இளமை சுதந்திரமான யந்திரம்.
ஆனால் இதற்கு ஆசை. அபிலாசைகள் ஏராளம். அனைத்துப் பிரிவினரிடையேயும் அன்பை எதிர்பார்க்கும் ஆர்வம் தாராளம்.
இயற்கை எவர்க்கும் என எண்ணாது, அனைத்திற்குமே தானே வாரி வழங்குகின்றது. இளமையானது குறுகிய எண்ணங்களைக் குறைத்தே விடுகின்றது.
இளையவர்கள் தன்னலமற்று, நிமிர்ந்து நடப்பதைக் கண்டு ஆணவம் எனச் சொல்வதுதான் மடத்தனமானது. சின்னவர்களைக் கண்டு பெருமைப்படவேண்டும்; பொறாமைப்படலாமா?
இந்த வாழ்க்கை அழிந்து போவதில்லை. பதிவுகள் என்றுமே நிரந்தரமானவை.
எண்ணங்களில் இளமை கொஞ்சினால், எதுதான்
முதுமை? செயலில் புத்துணர்ச்சியையும், புதுமைகளையும் எந்த வயதிலும் கண்டு கொள்ளலாம்.

Page 16
4. வாழ்வியல் வசத்தங்கள்
இந்தக் காலத்துப் பையன்கள் ஆவேசம் கொண்டவர்கள் என்று கூறுகின்றார்கள். முதிர்ந்த சிலர் மூச்சுமுட்டப் பேசி, ஓய்ந்தபோதும், இவர்கள் தோள் கொடுக்கத் தயாராகி வருவதைக் கண்டு வரவேற்க வேண்டுமல்லவா? புதிய சிந்தனை செய்து, புது வாழ்வினை வாழத் திடசங்கற்பம் செய்து, அவ்வண்ணமே உலகையும், வாழ்விக்கப் புறப்பட்ட சிங்கங்களை நாம் தங்கம் எனப் போற்றி, ஊக்கம் நல்க வேண்டுமல்லவா?
வறுத்தெடுத்த கரு மனம் கொண்ட, வக்கிர புத்தி கொண்டோர், எதற்கெடுத்தாலும் நல்லவற்றைக் கூடப் பொல்லாதனவாகப் புனைகதை கூறுதல் சிறுமைக் குணமென்பதில் என்ன ஐயா, ஐயம் உண்டு?
வேகமும் தாகமும் கொண்டு உற்சாகமாகப் புறப்பட்ட இளம் தலைமுறைகள் புதிய பூமியை மீண்டும் மீண்டும் பிறக்கச் செய்ய வல்லவர்கள். இருக்கின்ற பூமிக்குள்ளே புதிய பூமிகளைப் பூக்கச் செய்வது இவர்கள் கடமையாகிவிட்டது.
கோழிக்குஞ்சின் குதூகலத்தைத்தான் சின்னக் குழந்தைக்கும் இறைவன் கொடுத்தான்.
குட்டி நாய் குதிபோட்டு ஓடி, வாலாட்டும் சந்தோஷ மிதப்பினைத்தான் சின்னக் குழந்தையும் கையசைத்து, வாயசைத்து சிரித்துக் காட்டுகின்றது.
எனவே இறைவன்,
எல்லோருக்கும் இளமை சந்தோஷங்களை ஒன்றாகத்தான் ஈந்தான்.

பருத்தியூர் பால, வயிரவநாதன் 引
அவன் ஒரே நோக்காகவே பார்க்கின்றான். இவை ரசிக்கத்தக்கவை; பொதுவானவை. இளமையே பொதுமைதான். எந்த நாட்டு இளைஞனும் தன் சுய வெளிப்பாடுகளைச் சுதந்திரமாக வெளிப்படுத்திக் கொண்டிருக்கின்றான். ஏன் ஆட்சிகளையே மாற்றிக் கொண்டிருக்கின்றான். மக்கள் தொகையில் கணிசமான சதவிகிதம் இவர்கள் ஆட்சிக்குட்பட்டதே. எனவே மாற்றத்தை உண்டாக்கவும், மாற்றத்தையே மாற்றியமைக்கவும் இவர்களால் முடியும். செய்து கொண்டும் இருக்கின்றார்கள். இவர்கள் கொடுப்பதை உலகம் ஏற்கத் தயாராகிக் கொண்டிருக்கின்றது. ஏன், மக்கள் பெற்றுக் கொண்டு மிருக்கிறார்கள். நாம் நினைக்க முடியாத அளவிற்கு களையோடும், புதுப்பொலிவோடும், பொலிந்து வளர்ந்து கொண்டுதான் இருக்கின்றனர். இவர்கள் சுகங்களை வழங்குவதைவிட, உலகிற்காகவும் தம் குடும்பங்களுக்காகவும் பெரும் துன்பங்களையும் ஏந்துபவர்களாகவும் இருக்கின்றார்கள். பண்டைய சிந்தனைகளைப் படிப்பதும், பெரியோரை மதிப்பதும் இன்றைய தேவையாக உள்ளது. இதனை உணர்ந்தாலே போதும். பழமையின் தாத்பரியத்தினைத் தனதாக்குவதுடன் அதனுள்ளே தனது சொந்த சிந்தனைகளையும் உட்புகுத்தினால் உலகம் புது வடிவம் பெறுமல்லவா? இதில் என்ன சந்தேகம்?
உழைப்பதும், வழங்குதலும் புதிய சமுதாயத்தினால் முடித்து வைக்கக்கூடிய காரியங்களே.
இளைஞர்களுக்குள்ளே பேதங்களைக் களையும் பணியினை பெரியோர் செய்யவேண்டும். இளைய சமூகம்

Page 17
6 வாழ்லியல் வசந்தல்கள்
கல்லூரிகள், பல்கலைக்கழகங்களுக்குள் மோதுவது, அவர்கள் பலத்தை, கல்வியை முளையிலேயே கருக வைக்குமல்லவா?
பெரியோர்கள், தங்கள் மூலம் பெற்ற இனங்களைக் குறை பேசாது, ஏதாவது உருப்படியாக நல்லன செய்தலே சிறப்பானதாகும். குறை காண்பது தங்களைத்தாமே தாக்கும் செயல். எல்லாமே பரிணாம வளர்ச்சி என்று கூறுபவர்கள், சின்னவர்கள் செயலைச் சினந்து நோக்கலாமா?
வளர்ந்து வரும் சமூகத்தைப் பார்த்து பழங்கதைகளை மட்டும் சொல்லிக்கொண்டா இருப்பது? எடுத்ததற்கெல்லாம், “அந்தக்காலத்தில்.’ என்று இனிமேலும் பேசலாமா?
அந்தக் காலத்துச் சொந்தக்காரர்கள் பேசுபவர்களே, கொஞ்சகாலத்தில் இளைஞர்களும் அந்தக் காலத்தவர்களாக ஆகப் போகின்றவர்கள். எனவே எந்தக் காலம் மட்டும் இனிமேல் பேசிக் கொண்டிருக்கப் போகின்றீர்கள்? காலத்தின் தேவைகளுக்கேற்ப உலகம் மாற்றமடைந்து வருகின்றது. மாறியே ஆகவேண்டியே சூழ்நிலை.
வளர்ச்சி என்பது கூட, முன்னைய காலத்தினைக் கிண்டலடிப்பது அல்ல. அதன் தொன்மைச் சிறப்பைத் தோண்டி எடுத்து. ஏற்பதுமாகும். உண்மையில், வளர்ச்சிகளின் மூலம்’ ஒன்றுதான். ‘அ’ என்றுமே ‘அ’ ஆகவே இருக்கும். இது மாறுவதில்லை. அதன் தொடர்ச்சியான சிந்தனைகள் தொடர்ந்தாலும், ஆரம்ப ஞானத்தின் அடிப்படையிலேயே புதுமைகள் புலப்பட ஆரம்பிக்கின்றன.

பருத்தியூர் பால. வயிரவநாதன் - 7
எனவே, முதியோர் இளையவர்கள் பற்றி பயம் கொள்ளத் தேவையில்லை. நல்லதுக்கென ஏற்றுக்கொள்ள வேண்டியதே.
புதிய பாதையில், புதியவர்கள் செல்லும்போது, நாமும்கூடச் செல்லுவோமே. பெரியோர்கள் பாதம் பதிந்த சுவடுகளிலேயே இளைஞர்கள் தங்கள் தடங்களை இட்டுச் சென்று கொண்டிருக்கின்றார்கள். புதுமைகள் எத்தனை செய்தாலும் அது பழமையின் சின்னத்தினை அடியொற்றியே அமைந்ததாகி விடுகின்றது. புதுமை, பழமைக்கு முற்று முழுதுமான எதிர்மறை அல்ல. பார்வைக்கு எல்லாமே மாற்றமாகவே புலப்பட்டாலும் உருமாற்றங்கள் "கருவைப் பாதிக்காமல் இருந்தாலேயே உலகை அது சென்றடைய முடியும். அதுவே ஆக்க சக்திக்கும் இடவல்லது.
பரந்த உலகம், விரிந்த எண்ணங்களுக்குள் ஆட்படவேண்டும். புதுமைகள் படைக்கப்படுதலை எல்லோருமே எதிர்பார்க்கின்றார்கள்.
முறுக்கேறிய நெஞ்சத்துடன் எழுந்து, கொள்கைப் பிடிப்பினை அழுந்தப் பற்றினால் அதன் ஆளுமைக்கு நிகர் ஏது? துணிவு, இளைஞர்களுக்குச் சொந்தம், வெற்றியை நோக்கிச் செல்லும் இளம் சந்ததியர்களாலேயே பயமின்றி பயணங்களை மேற்கொள்ள முடியும்.
அடுத்த வேளைக்கு நான் என்ன செய்ய எனத் தன்னை மட்டுமே கருதாது, சுயநலமற்ற தீர்க்க சிந்தனையுடன் செயல்படும் செயல்திறன் இள ரத்தங்களுக்கே உரித்தான, விசாலமான குணநலனுமாகும்.

Page 18
8 வாழ்விஸ்ல் வசத்தங்கள்
எந்த நீண்ட பயணங்களும் செயல் திறனால் பாதை குறுகியதாகிவிடுமன்றோ பயம் என்பது இல்ல. வயதில் தானே பெரும் சுமைகளையே, வெறும் தூசு என எண்ணும் இயல்பு வருகின்றது
யேசு கிறிஸ்துநாதர், முகம்மது நபிநாயகம், போன்றவர்களும், சம்பந்தர், மெய்கண்ட தேவர், மகா அலெக்சாந்தர், விவேகானந்தர், பாரதியார் என எல்லோருமே இளமையிலே உலகினை ஆட்கொண்டவர்கள்.
சாதனைக்கும், திறமைக்கும் எல்லைகள் உண்டா?
கருவிலேயே நல்லவற்றைகளையே நினைந்து பெற்றெடுக்கும் பெற்றவர்கள் அற்புதமான சிற்பங்களை உவந்தளித்து, நானிலத்தை மேலோங்கச் செய்கின்றார்கள்.
உலகம், பராயம் பார்ப்பதில்லை.
இங்கு எல்லோரும் கரம் கோர்த்து உலகை வலுமிக்கதாக மாற்றவேண்டும். இளமை அதற்குத் துணைபோகும். திறமைக்கு அணைபோட முடியுமா?
இது தொடர்ந்து வளர்ந்துகொண்டே.
வளர்ந்துகொண்டே.
来
- வீரகேசரி 25-2-2OO5

பருத்தியூர் பால, வயிரவநாதன் 9
ஆயிரம் கோடி வாத்தியங்களின் இசை வெள்ளமும், அத்தனை சங்கீத வித்துவான்களின் குரல் இசையும் அம்மா, எங்களை அழைக்கும்போது அழைக்கப்படும் குரல் முன் நிகராகிப்போமா? உலகின் அழகுகள் எல்லாம் திரண்டுவரினும்கூட ஒவ்வொருவனுக்கும், தனது தாய்தான் அதிகூடிய கொள்ளை அழகுடைய தேவதையாகத் தெரிகின்றாள். இவள் இதயசத்தம் ஒய்வதில்லை. இதன் சத்தமூடாகவே இன்னமும் இயங்கிக் கொண்டிருக்கின்றது இந்த உலகம்.
G
அம்மா”
இந்தச் சொல்லை நீங்கள் உச்சரித்ததும் ஒரு
வினாடி, உங்களுக்கு ஏற்படுகின்ற உணர்வு அலைகளைச்
சற்றே அனுபவித்துவிட்டுச் சொல்லுங்கள். எப்படிப்பட்ட துடிப்புடன் ஆகர்ஷிக்கவல்ல ஈர்ப்புச் சக்தி உங்கள்

Page 19
10 வாழ்விஸ்ல் வசத்தங்கள்
இதயத்துள் ஊடுருவி நாதம் எழுப்புவதை அறிந்துகொள்ள 6fisososour?
என்னே அற்புதம். ‘அம்மா’ என்ற சொல்லிற்கு இத்தனை காத்திரமான, இன்பம் தரும் பாசமான அழுத்தமா? மனிதனுக்குத் தெரியும் - முதல் முகம் இவள் அறிமுகத்துடன் ஆரம்பம். சூரியக் குடும்பத்தில் உள்ள கிரகங்களுக்கிடையேயும், அண்டசராசரத்து நட்சத்திரங்களுக்கிடையேயான ஈர்ப்பு விசையிலும் பார்க்க இந்தச் சின்னஞ்சிறு பாசப் பிழம்பின் முன் இவற்றின் ஈர்ப்புக்கள் எம்மாத்திரம்? அம்மா என்கின்ற விசையின் சக்திதானே இந்தப் புவியின் சக்தி. இந்தப் பாசப் பிணைப்பின்றி வாழ்வின் அர்த்தம்தான் ஏது? தாயற்ற குழந்தைகளும் கண்காணாத தாயின் அன்பு நினைப்பிலேயே வாழ்ந்து வருவது பெரிய அதிசயம்தான். இவள் மணிவயிற்றில் மிதந்து, உருண்டு, உதைத்துப் பிரசவிக்கப்பட்டதால் ஏற்பட்ட பிணைப்பு, மனிதன் மரணமடையும்வரை, அவள் ஈந்த நினைப்புடனேயே சஞ்சரிக்கின்றானே!
ஆயிரம் கோடி வாத்தியங்களின் இசை வெள்ளமும், அத்தனை சங்கீத வித்வான்களின் குரல் இசையும் அம்மா என அழைக்கும் குரல் அழைப்பின் முன் நிகராகுமா? இந்த அழைப்பு சிறு குழந்தைகளுக்கு மட்டுமல்ல, எமக்கும் சுகமானது, இதமானது, பரிவானது, கரிசனம் கூடியது.
உலகின் அழகுகள் எல்லாம் திரண்டுவரினுங்கூட ஒவ்வொருவனுக்கும் தன் தாய்தான் அதிகூடிய கொள்ளை அழகுள்ள தேவதையாகத் தெரிகின்றாள்.

பருத்தியூர் பால. வயிரவநாதன் 11
இவள் இதயம் அமைதியான படுசுத்தம். எனவே எல்லோருக்குமே தூய்மையின் திலகமாகத் தென்படுகின்றாள்.
பணத்தினைக் கருதாது, கண்டபடி திரியும் பிள்ளையைக்கூட ஓடோடி வந்து அரவணைக்கும் தன்மை வேறு எவர்க்கு வரும்? தான் பெற்றெடுத்த அனைத்துமே தாய்க்குப் பொக்கிஷங்களே.
தாய்மையைப் பொறுத்தவரை புராதன காலம், புதுமைக்காலம் என்ற வேறுபாடில்லை. அத்துடன் சகல ஜீவராசிகளும் தாய் அன்பை ஈந்தவண்ணமேயுள்ளன. வனத்துச் சிங்கம், புலிகளும், பறவை இனங்களும் கூட தாய்’ நிலையில் இருந்து தன் குட்டிகளையும், குஞ்சுகளையும் பாதுகாத்துக் கொண்டுதான் இருக்கின்றன. எக்காலத்திலும் தாய் அன்பு நிரந்தரம்.
அது அப்படியே. அப்படியே. என்றும் மாறாமலேயே,
இன்னும், நாம் தெரிந்து கொள்ளவேண்டியது, பெண்கள் எல்லோருமே ‘அம்மா’க்களே.
பகவான் இராமகிருஷ்ண பரமஹம்சர், பெண்கள் அனைவரையுமே அன்னையாக வழிபட்டார். இன்றைக்கும் தமிழ்நாட்டில் சின்னஞ்சிறு பெண் குழந்தையைப் பெரியவர்கள் ‘அம்மா’ என்றுதான் அழைக்கின்றனர். இப்படி நாம் அழைக்கின்றபோது ஒரு தூய்மையான அன்பு பளிச்சிடுகின்றது. அத்துடன் இதைக் கேட்கின்ற அனைத்து பெண்களும் கனிவுமயமாகி தம்மைச் சுற்றி உள்ளவர்களை உறவுகளாக, நிர்மலமான தாய்மையின் உணர்வுடன்
நோக்குகின்றனர். வழங்குபவள் தாய். இவள் இல்லை என்று

Page 20
12 வாழ்வியல் வசத்தங்கள்
உரையாது, ஈந்து வருவதாலேயே பிறர்க்கும் எவர்க்கும் தனிமை என்கின்ற தவிப்பு இல்லாமல் போகின்றது.
சிலர் சொல்வதைக் கேட்டிருப்பீர்கள். ‘ஐயாவை விடுங்கள், அம்மாவிடம் கேட்போம்’ என்பார்கள். வீட்டில் என்ன நடக்கின்றது? சின்னச் சின்ன விஷயங்களில் இருந்து காதல் சமாச்சாரம் வரை யாரிடம் மனம் விட்டுப் பேச முடிகின்றது. சமயத்தில் அந்தரங்க விஷயங்களைத் தாயாரிடம் கூறாமல் யாரிடம் போய்ச் சொல்ல முடியும்? அம்மா அடைக்கலம் கொடுக்கும் கலங்கரை விளக்காக இருக்கின்றபடியால்தான் எந்த மன உளைச்சலிலும் இவள் இருக்கும் தைரியத்தில் எதுவும் எம்மை அண்டாது. அத்தனை கரைச்சலையும் களைந்துவிடும் பலம் உண்டு என எண்ணுகின்றோம்.
அன்னை என்கின்ற மாதா உலகத்தவத்தின் உருப்பொருள். உலகம் இவளால் உருண்டு கொண்டு இருக்கின்றது. பிரசவங்களைச் செய்வதால் மட்டுமல்ல. கரிசனமாக வளர்ப்பதால், கனிவுடன் முழு மனிதனை ஆக்கித் தருவதனாலுமாகும். பெண்களைத் தெய்வமாக வழிபட்டது எமது சமூகமாகும். ஒவ்வொரு நாட்டிலும் சமூகத்திலும்கூடப் பெண்களைத் தெய்வமாக வழிபாடு செய்கின்ற முறைமையுண்டு. இங்கு ஒவ்வொரு பிரதேசங்களிலேயும் பாசத்தின், கருணையின் சின்னங்களாகவே போற்றப்பட்டு வந்தனர்.
மனித இனத்தை முழுமையாக சிருஷ்டிப்பதாலும் அதன் இயக்கத்தை நடாத்துபவளாக இருப்பதனாலும் அனைத்து மாந்தருமே பெண்மைக்கு முதலிடம் அளித்தனர்.

பருத்தியூர் பால. வயிரவநாதன் 13
அன்னையர் தினம் என்று ஒருநாள் ஒதுக்கினால் போதுமா? தினம், தினம் இவர்கள் வழிபாட்டிற்குரிய தெய்வங்கள் அல்லவா? முந்தைய காலங்களில் தம் தாய், தந்தையரை வீழ்ந்து நமஸ்கரித்த பின்னரே அடுத்த கடமையில் ஈடுபட்டு வந்தனர். இன்றைக்கு இந்தப் பழக்கம் அவ்வளவாக இல்லை. அண்மையில் தொலைக்காட்சியில் ஒரு விளம்பரப்படத்தில் மனதைத் தொடும் காட்சியைப் பார்த்தேன். ஒரு பிள்ளை பாடசாலைக்குப் புறப்படுமுன் தனது தாய், தந்தையரை வீழ்ந்து வழிபடுகின்றான். அந்த நினைவு, பிள்ளையின் தகப்பனுக்கு உடன் வரவில்லை.
தனது மகன் செய்கையினால் மிகவும் வெட்கப்பட்டுத் தன் நிலையறிந்து, மகன் செய்தது போலவே தனது தாய், தகப்பனாரின் காலில் விழுந்து ஆசீர்வாதம் பெற்றுக் கடமைக்குச் செல்லுகின்றான். இன்றைக்கும், சிங்களச் சமூகத்தினரில் பெரும்பான்மையானவர்கள் எந்தக் காரியத்திற்குச் செல்லுமுன்னரும் காலையில் முதற்கருமமாகத் தாய், தந்தையரை வழிபட்டுச் செல்வதை வழக்கமாகக் கொண்டு வருகின்றார்கள்.
ஒவ்வொரு பெண்ணும், ஒவ்வொரு உயிரையும் ஆதரிக்கும்போது அவள் தாய் ஆகின்றாள். திருமணமாகாத பெண்களும், குழந்தைகளைப் பெறாத பெண்களும், தமது குடும்பத்திற்கும், சமூகத்திற்கும், இயற்கையாகவே தன்னை அர்ப்பணித்துச் சேவைகள் செய்வதனால் இவர்களும் ‘அம்மா’ என்றே அழைக்கப்படுகின்றனர். பெண்களுக்கே உரிய நல் இயல்பே அனைவரையும் ஆதரித்தல்தானே. ஆண்டவன் செய்கின்ற அலுவல்களை இவர்கள் ஆண்டவன்

Page 21
14 வாழ்விஸ்ல் வசத்தங்கள்
பிரதிநிதிகளாகச் செய்து விடுகின்றனர். எல்லா இடங்களிலும், எப்போதும் கடவுளைக் கண்டுகொள்ள முடியாது. எனவே தாயாரைப் படைத்தான் இறைவன் என்பது ஒப்பற்ற பொன்மொழியாகும். இவர்கள் முழுமையாகத் தம்மை உலகிற்கே அர்ப்பணிப்பதால், மாதரசிகள் என்றும் ஏற்றுக் கொள்ளப்பட்டார்கள். நாடும், தேசமும் இன்றியே “அரசிகள்’ என்ற சொல் பெண்களுக்கு மட்டும்தானே உள்ளது.
திருமண பந்தம் மட்டும்தான் ஒருத்தியை ‘அம்மா’ ஆக்குவதில்லை. இன்று லட்சக்கணக்கான, இலட்சிய (36-605 கொண்ட, 8feyp ö5 G3LDLiblurTL’L m 6mTñt பெண்களாயிருந்தும் தம்மை முழுமையாக உலகிற்கு அர்ப்பணித்துக் கொண்டிருக்கின்றார்கள். இவர்கள் ஒரு குடும்பத்திற்காகவல்ல பல குடும்பங்களுக்காக - ஏன் முழு நாட்டிற்காகக்கூட சேவைகளைச் சுமக்கின்றார்கள். இது அவர்களுக்கு இனிய சுமைதான். வீட்டில் செய்த சேவைகளே இறுதியில் நாட்டிற்கும் செய்வதனால் தலைவி என்கின்ற நிலைக்கும் வருகின்றார்கள். அன்னை தெரஸா செய்த சேவைகளை உலகம் அறிந்ததே. அவர் உலகிற்கே தாயானார். அரசியலில் இருந்தபோதும், சகலருமே ஏற்றுக் கொண்ட இந்திராகாந்தி, அன்னை இந்திரா என்றே அழைக்கப்பட்டார். பெண்களுக்கே உரித்தான பண்புகளுடன், துணிச்சலும் இணைந்து பெருமைக்குரிய பெண்மணியானார். என்னதான் பெண்கள் உயர் பதவி வகித்தபோதிலும் ‘அம்மா’ என்கின்ற ஸ்தானத்திலேயே தொடர்ந்தும் இருப்பதையே பெருமையாகக் கொள்கின்றனர். தாய்மையில் என்றுமே சோதனைகள் வரத்தான் செய்யும். இருந்தும்கூட இதனால் இவர்கள் மனம் சோர்வு

பருத்தியூர் பால, வயிரவநாதன் 15
அடைவது கிடையாது. தனக்கு வாழ்வில் துன்பம் வருகின்றது என்று அறிந்தும்கூட அதனைச் சவாலாக ஏற்கின்ற பக்குவம் ஏற்படாது போனால், குடும்பங்களின் நிலை என்னவாகும். எதையும் எதிர்கொள்வதனாலேயே தாய் தாங்குபவளாக மாறுகின்றாள். கெட்டலையும் கணவன், புத்திகெட்ட பிள்ளைகள் என்பதனால் புறக்கணிக்காமல் இதயபூர்வமாக மன்னிப்பு அளிப்பதுடன் ஏற்றிப் போற்றி அவர்களை சமூகத்தில் வைக்க எத்தகைய இன்னல்களை, அவஸ்தைகளைப் படுகின்றாள்? உழைக்கின்ற கணவன் பணத்தைக் கொடுத்துவிட்டுப் போக, ஒவ்வொரு பிள்ளைகளும், ஒருவர் மாறி ஒருவராகத் தங்களுக்குரியதைக் கேட்க, கணவனுக்கும், பிள்ளைகளுக்குமாகவே வாழ்ந்து தன்னை கவனிக்காது தேக நிலை உணராது உழைக்கும் உத்தமிகள் அல்லவா? பணக்கார வர்க்கங்களின் நிலையினை விடுத்து, ஏனையவர்களின் குடும்பங்களின் தாய்மார்கள், பொருளாதார நெருக்கடியால், பிள்ளைகளை, கணவனை, கணவனைச் சார்ந்தோரைக் கவனிப்பதாலேயே உடல் நலம் கெட்டு உருக்குலைந்தே தேய்ந்து போகின்றார்கள். கற்பூரம் போல என்பார்களே, அது மாதிரி.
ஒரு நாளைக்கு மட்டும் அம்மா படுத்துவிட்டால் வீடுகளில் உள்ளவர்கள் படும் அவஸ்தைகளைப் பாருங்கள். பிள்ளைகளைப் பாடசாலைக்கு அனுப்புவது எப்படி? கணவனை வேலைக்கு அனுப்புவது எப்படி? அத்துடன் வீடு வீடாகவா இருக்கின்றது? இவை சாதாரண காட்சிகள். தனது அச்சில் சுழலும் ஜீவன்களுக்காக தன் ஜீவனைப்பற்றிச் சிந்திக்காத தியாக தீபம் இந்த ‘அம்மா’ அல்லவோ?

Page 22
16 வாழ்விஸ்ல் வசத்தங்கள்
ebLDIT...!
நீ, எங்களைப் பத்து மாதம் சுமந்து பெற்றுவிட்டதும் உன் வேலையை முடித்துவிடவில்லை. ஒவ்வொரு வினாடிப் பொழுதும், எங்கள் விடிவிற்காய் உயிர் துடிப்புகளை அத்தனையையும் ஈந்து வருகின்றாய். எங்கள் வாழ்க்கை வரைபவள் நீ நான் எங்கே இருக்கின்றேன், என்ன செய்யப் போகின்றேன் என்பது உன் உயிர் மூச்சோடு கலந்த எண்ணமாயிருக்கின்றபடியால், உன் எண்ணங்களின் வலுவினாலேயே நாங்கள் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம். உன் முந்தானைச் சுற்றி வந்து கொண்டிருக்கும் சிறு குழந்தைகளாகவே இந்த வயது கடந்தும்கூட எங்களை நோக்குகின்றாய்.
உன் மடிமீது படுக்கும்போது, பறந்துபோகும் துன்பங்களால் நாம் ஆறுதல் பெறுகின்றோம். அந்த நினைவின் பசுமைகள் என்றும் நிலையான நினைவலைகளாகவே தொடர்ந்தும் இருப்பதனால் உன் மடிமீது நாம் கண்ட சுகங்களின் பயனை உன் நிழல் மீது குளுமை பெற்றவர்களாகவே இன்றும் இருக்கின்றோம். என்ன வயதுதான் எங்களுக்கு ஆயிடினும், உனை நினைந்தால் கண்கள் ஏன் கேட்காமல் குளமாகின்றன?
உன்னை நினைந்து துங்குவது, நீ கனவில் வந்து என் கேசம் தடவ வேண்டும் என்பதற்காகவே. ஆயிரம் யானை பலத்திற்கும் மேலான பலம் உன் கருணைக் கண்களால் எமக்குக் கிடைக்கும். இந்தப் பாசமிகு பார்வை, பரிவான நோக்கு, என்னைக் குளுமைப்படுத்தி புதிய மனிதனாக மாற்றுகின்றது.
எந்த மனிதனையும் கேட்டுப் பாருங்கள்.

பருத்தியூர் பால. வயிரவநாதன் 17
‘ஏழு ஜென்மங்கள் உனக்கு உண்டு. எனில், நீ என்ன வரம் கேட்பாய்’ என்றால், அம்மா. உன் மடி மீதுதான் - உன் வயிற்றிலேயே தொடர்ந்தும் பிறந்து கொண்டேயிருக்க வேண்டும் என்றுதான் கூறுவார்கள். ஏன் எனில் எவர்க்குமே அவர்களது தாயின் அன்புதான் ஏனையவர்களது அன்பைவிட மேலானது எனக் கருதுகின்றனர். பணக்கார அம்மா வயிற்றில் பிறக்கவேண்டும் எனச் சொல்லமாட்டான். தான் வாழ்ந்த காலத்தில் தன்னை வளர்த்த தாய்தான் ஒருவனுக்கு உயர்ந்தவளாய் அமைகின்றாள். எந்த நிலையில் உள்ளவர்களுக்கும் இது விடயத்தில் மேல் வர்க்கம் நோக்கி மனம் பாய்வதில்லை. பிச்சைக்காரியின் குழந்தைக்கு அதன் தாய்தானே பெரிதான புதையலாகத் தெரியும்?
உலகை வெறுத்த ஞானிகள்கூடத் தாயின் பிரிவினைத் தாங்க முடியாதவர்களாகின்றனர். எவ்வளவுதான் ஞானம் பெற்றாலும்கூட அன்னையை இழந்ததும் சோர்ந்து விடுகின்றனர். பட்டினத்தார் போன்ற ஞானிகளே, தாயின் பிரிவினால் கதறி அழுததைப் படிக்கும்போது நெஞ்சமே நெகிழும். எல்லாமே பொய் என்பவர்கள், மெய்யான அன்பு அன்னையிடமே இருப்பதனாலேயே அன்னையின் இழப்பினைத் தாங்கும் சக்தியை இழந்தவர்களாகின்றனர். எனினும் தாய் எனும் தேவதை மறைவதில்லை.
தினம், தினம் தாய்மார்கள் உதயமாகிக் கொண்டிருப்பதாலேயே உலகமும் விழிப்புடன் இருக்கின்றது. புதுப்புது ஜீவன்கள் குதித்து எழுந்து கொண்டிருக்கின்றன. உழைப்பை, விழிப்பை, தெம்பை,

Page 23
18 வாழ்லிஸ்ல் வசந்தங்கள்
அன்பை அளிப்பதற்காகத் தன்னைத் தேய்த்து வாசனையுட்டும் சந்தனக் கட்டையாகின்றாள். நாம் உறங்க, தான் விழித்தபடி இருக்கின்றாள். நாங்கள் வளர, இவள் உரமாகின்றாள்.
எனினும், மறையாத நித்திய வாழ்வு நல்கும் சிரஞ்சீவியாக இவள் சேவை இருப்பதனால், அம்மா எனும் உறவு மறையாத நிறைவுதான். வேராகவும், விழுதாகவும் தாங்கும் தாய் கண்ணிர் விடுதல் என்பதே உலகம் உதிர்க்கும் உதிரமும் ஆகும். தூங்காவிழிகளில் கண்ணிர் வருதல் கூடாது. இவளது எண்ணங்கள், கற்பனைகளைப் பிள்ளைகள் நிறைவேற்றல் வேண்டும். தனக்காக அன்றி, உலகில் உத்தமர்களாகப் பிள்ளைகள் உருவாகுதலையே ஒவ்வொரு தாய்மாரும் எதிர்பார்க்கின்றனர்.
அவள் தியாகத்தின் விலை - நற்பிரஜைகள் உருவாக்கப்படுதலே. அம்மாக்களுக்குப் பல வடிவங்கள் - தாயாக, தங்கையாக, தாரமாக, இன்னமும் நம் கண்முன்னே காணும் அனைத்துப் பெண்களுமே இவளது சொரூபங்களே.
தாய்மையைப் போற்றுதல் நம் கடன். ஒவ்வொரு பெண்ணையும் நாம் மதிப்பளித்துக் கெளரவப்படுத்துவது என்பதே அம்மாவின் வடிவில் இவர்களைப் பார்ப்பதனால் என்பதை உணர்வோமாக.
米
- வீரகேசரி 25-2-2OO5

பருத்தியூர் பால. வயிரவநாதன் 19
சொல்லிக் கொடுத்தால் மட்டும் கருமங்களை ஆற்றும் நிலையில் இருக்கக் கூடாது. சுய சிந்தனை இல்லாவிட்டால், வெறும் ஜடமாகவே வாழ்ந்துவிட வேண்டியதுதான். சிந்தனை செய்த மகோன்னத புருஷர்களாலேயே, உலகம் உயிர்ப்புடன் வாழ்ந்து கொண்டிருக்கின்றது. எண்ணங்களை வளரவிடல் வேண்டும். முடக்கப்பட்ட எண்ணங்களால் மனித அறிவு வளம் வற்றி உலகை உயிர்ப்பின்றி வாழாமல் செய்துவிடும். சுயசிந்தனை வளமின்றி விஞ்ஞானமோ, மெய்ஞானமோ வளர்வதற்கு இடமேயில்லை.
சர்யசிந்தனை மனிதனின் எண்ணங்களின் வளர்ச்சியை நோக்கிச் செல்வது ஆகும். அவன் தன்னைப் பற்றியும், புற உலகு பற்றியும் ஆழமாகச் சிந்திக்க வேண்டியுள்ளான். எண்ணங்களைக் குவித்துப்

Page 24
20 வாழ்வியல் வசத்தங்கள்
புது மெருகேற்றி சிந்தனை செய்தல் ஆறு அறிவு படைத்த மனிதனின் சிறப்பு இயல்பாகும். சுயசிந்தனை செய்வதற்கு என்ன தகுதி இருக்கவேண்டும் என்பதில்லை. முதலில் அவன் சிந்தனைக்குட்படுத்தவல்ல மனிதனாக இருக்கவேண்டும். படித்தவன், பாமரன், பணம் படைத்தவன், இல்லாதவன், ஜாதி பேதங்கள் சிந்தனை செய்வதற்குத் தேவையில்லை. “நீ என்ன படித்தவனா பெரிதாகப் பேச வந்துவிட்டாய்” என்று கூறுதல் அழகல்ல.
சிந்திப்பதுதானே மனித சுதந்திரம் என்று பேச்சளவில் கூறிவிட்டு சிந்தித்தவற்றைச் சொன்னால் தண்டனை என்றால் என்ன நியாயம்? மனிதன் தூர நோக்குடன் புதிய புதிய எண்ணங்களை வெளிப்படுத்த வேண்டியவனாகின்றான். பிறர் மூளையை மட்டும் நம்பி வாழாமல் நடைமுறை வாழ்வுக்கு இயல்பாகவும், அதே நேரம் ஒரே மாதிரியான நீண்ட வழிமுறைகளில் காலம், காலமாகச் சமூகம் நடை பயில்வதனைத் தடுத்து நிறுத்தவும் வேண்டியுள்ளது.
எத்தனை கோடி மக்கள் வாழுகின்றார்கள்! அத்தனை பேரும் சிந்தனா சக்தியை ஒருமுகப் படுத்துகின்றார்களா? சொல்லிக் கொடுத்தால் மட்டுமே கருமம் ஆற்ற வேண்டிய நிலையில் உள்ளோம். சொல்லிக் கொடுத்ததையே கேட்டு மனப்பாடம் செய்து பரீட்சை எழுதினால் அது ஒருவனது ஆக்கத்திறனை வலுப்படுத்திவிடுமா? ஒரு சாதாரண ஐந்நூறு ரூபாய் பெருமானம் உள்ள ஒலிப்பதிவுக் கருவி செய்யும் வேலையை மட்டும் ஒரு ஆறறிவு படைத்த மனிதன்

பருத்தியூர் பால. வயிரவநாதன் 41
செய்ய வேண்டுமா? இதனால்தான் இன்று நுண்ணறிவு, உளவியல் தொடர்பான பாடநெறிகளை போதித்துப் பரீட்சை வைக்கின்றார்கள்.
உருவகித்தல், கற்பனை செய்தல் என்பது குழந்தைகளால் கூட முடியும் என்கின்றனர். வளர்ந்து வரும் மனிதன் தன் இயல்புக்கேற்ப பரிணாம வளர்ச்சியாகத் தொடர்ந்தும் சிந்தனை ஆற்றலை வளர்த்தும் வந்தால், உலகியல் புதிர்கள் எத்தனையோ விடுபட்டுப் போகும். படைப்பாளிகள், சிந்தனைகளைப் பிறர் மூலம் பெற்றும் கூடத் தமது சுய சிந்தனை மூலமே அதனை வளப்படுத்திக் கொண்டனர்.
விஞ்ஞானிகளும், ஞானிகளும், 85 6.O.T விற்பன்னர்களும் சுயசிந்தனை வெளிப்பாட்டினை உருவாக்காமல் போனால் உலகம் வெறும் சடமாகத்தான் சுற்றிக் கொண்டிருக்கும். சாதாரணமான வாழ்க்கை முறைகளைச் சற்றே பாருங்கள்.
கணவன் மனைவியைச் சிந்திக்க விடுவதில்லை. அல்லது மனைவி கணவனைச் சிந்திக்க அனுமதிப்பதில்லை. ஆசிரியர்கள் எல்லோருமே தாங்கள் சொன்னதையே, செய்யச் சொல்கின்றார்கள். சாதாரண ஊழியன் சொல்லும் கருத்தை உயர் அதிகாரி கேட்பதில்லை. ‘நான் சொல்வதைச் செய். அதுதான் உன் வேலை’ என்று கூறுவார்கள். எங்குமே மேலான ஆதிக்க நோக்கு அல்லது வேறு வழிகளில் காரியம் ஆற்றுதலுக்குப் பயம் என்கின்ற காரணங்களினால் எத்தனையோ நல்ல அறிவாளிகள், மேலும் தங்கள் கருத்தை, எண்ணங்களின்

Page 25
22 வாழ்விஸ்ல் வசத்தங்கள்
மேலான வெளிப்பாட்டினைச் சொல்லமுடியாமல் சோர்ந்தே போகின்றனர்.
கண்டுபிடித்தவனைக் கண்டுகொள்ளாத உலகம் கால ஓட்டத்தில் அவன் இல்லாதபோது, தலையில் வைத்துக் கொண்டாடுகின்றது. எனவே சுயசிந்தனை மூலம், நல்ல கருத்துகளைப் பிரசவிக்கின்ற கர்த்தாக்கள் எதற்கும் சோர்வடையக் கூடாது.
கிரேக்க ஞானி சாக்கிரடீஸ் கூறினார். ‘உன்னையே நீ எண்ணிப்பார். அவன் சொன்னான், இவன் சொன்னான் என்று கூறாதே. நீ என்ன எண்ணுகின்றாய்? எப்பேர்ப்பட்ட கூரிய சிந்தனை இது. நாம் கற்கும் நூலை வெறுமனே வாசித்து, மூளைக்குள் அடைப்பது மட்டுமா அறிவு? இல்லவே இல்லை. எக்கருத்தைப் பற்றியும் எடுத்து ஆராய்ந்து பார். பத்துப்பேருடன் இவை பற்றி உரையாடு, சிந்தனையைச் செதுக்கு, உலகோடு உறவாடி உன் அறிவை உராய்ந்து உண்மைகளைக் கண்டுபிடி. இதுவன்றோ தேடல். தேடல்தானே சுயசிந்தனைக்கு மூலாதாரம். கனவுகளை மறக்கக்கூடாது. கனவுகளைத் தேடி நனவாக்க முயல பெரும் வேட்டையில் ஈடுபடு.
சதா பறந்து கொண்டிருக்கும் உணர்வலைகளை முழுமையாக்கி - ஒன்றாக்கி எதுபற்றி நீ ஆராய எண்ணுகின்றாயோ அதில் மட்டும் புலனைச் செலுத்தி சிந்தனைக்குள்ளேயே உன்னை ஐக்கியமாக்கு. மனதால் முடியாதது எதுதான் உண்டு. மனம் தெளிவாக இருக்கும்வரை சுயசிந்தனைகளை பெருக்குவது எளிதானதே.

பருத்தியூர் பால. வயிரவநாதன் 23
இன்று உலகில், வெறும் கண்காட்சிக்காக சிந்தனை வளம் முடக்கப்படுகின்றது. ஆரவாரமான உலகில் எப்படியாவது நுழைந்து நாலு காசு சம்பாதிப்பதற்காக எதையுமே வர்த்தகமாக்குவதால் நல்ல காரியங்களை எண்ணாமல் மனங்கள் அலைந்து கொண்டிருக்கின்றன. ஊடகங்கள் கூட நல்ல விஷயங்களை மூடி மறைக்கின்றன. கீழ்த்தரமான காட்சிகளை - செய்திகளைக் கடதாசியில் காட்டியவர்கள். படங்களாகவே உயிராக உலவவிட்டு விடுகின்றனர். சின்ன வயதினரையே குற்றம் காண்பவர்கள் மலிந்த உலகில் வயது போனவர்களே எதிர்காலத்திற்கேற்ற நல்ல எண்ணங்களை எழில் வண்ணங்களாகப் படைக்கத் தவறிவிடுகின்றனர்.
ஆராய்ந்து அவஸ்தைப்படுவதிலும் இருப்பதை அனுபவிப்பது மேல் என்றாகிவிட்டது. புதிய உலகில் புதுமை காணும் கலையில் மேற்கு உலகத்தினர் மிஞ்சிவிட்டார்கள் என்கின்றோம். இன்றைக்குத் தரமான இலக்கியங்கள், சினிமாக்கள், தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் என்று எதனை எடுத்தாலும், நாம் அவர்களுக்கு ஈடாக இல்லை என்ற குறை உண்டு. அவர்கள் புதிதாகச் சிந்தனை செய்கின்றார்கள். படைக்கின்றார்கள். ஒவ்வொரு படைப்பாளியின் சிந்திப்பிற்கும் கெளரவம் அளிக்கப்படுகின்றது. இங்கே என்ன நடக்கின்றன? அரைத்த மாவையே அரைக்கின்றார்கள். ஒரே மாவில் பலவித வடிவ பலகாரங்கள் அவ்வளவே. தற்சமயம், புதிய கோணத்தில் ஆராய்ந்த ஒரு விஷயம் என்றால் அது நிச்சயமாக, மேற்கத்தையவர்களைப் பார்த்து நகலை

Page 26
24 வாழ்வியல் வசத்தங்கள்
எடுத்ததாகவே இருக்கின்றது. உதாரணமாக, ஒரு ஆங்கிலப்பாட்டினை எத்தனைவிதமாக நம்மவர்கள் நகல் எடுத்து தமது என உரிமை பாராட்டுகின்றார்கள்? இப்படியிருக்க,
ஏனைய துறைகள் பற்றிக்கேட்கவே வேண்டாம். சர்வதேச விருதுகளான நோபல், ஒஸ்கார் பரிசு போன்றவை எம்மால் பெறப்பட முடியாதவை அல்ல. இன்றைக்கு விஞ்ஞான, தொழில்நுட்ப கண்டுபிடிப்புகளில் நாம் முன்னேறி இருந்தாலும்கூட, ஏனைய நாட்டினருடன் சரி நிகராகப் போட்டியிடவேண்டும். நிச்சயமாக நம்மால் முடியும். நாம் சிந்திக்கும் சமூகத்தை வந்தனை செய்து வாழவைக்க வேண்டும்.
கேள்விப்பட்டேன், யாரோ சொன்னார்கள், அவன் அப்படிப் பேசினான் என்ற பேச்சுகளை விடுத்து, உண்மைகளை நோக்கி முன்னே ஓடி வருவோம். எங்கள் கிரகிப்புக்களை நற்சிந்தனை சார்ந்தவையாக அமைத்துக் கொள்வோம். ஞானம் ஒருவனைச் சிந்தனாவாதி யாக்குகின்றது என்பர். ஞானம் எங்கே இருக்கின்றது. அதுகூட உன்னுள்தான். அதனை வெளிப்படுத்திக் காட்டு, உன்னோடு பேசு. உலகத்தைத் தேடு. ஒளி பொருந்திய உலகில் இல்லாதது எதுவும் இல்லை. இருப்பதை உணராமல், முயற்சி செய்யாமல் எல்லாமே இல்லை என்று பேசிவிட முடியுமா? கையடக்கக் கருவியில், உலகை அளக்கும் மனிதன் தன்னை அளக்காமல் விட்டுவிடுதல் துரதிருஷ்டமன்றோ?

பருத்தியூர் பால. வயிரவநாதன் 25
விஞ்ஞானமோ, மெய்ஞ்ஞானமோ சுயசிந்தனை வெளிப்பாடுகள்தானே எதனையும் புரிய வைக்கின்றது. அக வாழ்க்கை, புற வாழ்க்கை எதற்குமே சுயசிந்தனைதான் எங்களைச் சுத்திகரிக்கின்றது. நாங்களாக எதனையும் தேடிக்கொள்வதில் உள்ள நிறைவே தனியான திருப்தியன்றோ? இது ஒளியூட்டும் இதயத்தை உருவாக்கும். சிந்தனை வளத்தினை நமது சொந்த பலமாக்குவோம்.
米

Page 27
26 வாழ்விஸ்ல் வசத்தங்கள்
நிகழ்காலத்தின் சிக்கன மூலமான வருமானங்கள்தான், எதிர்காலத்தின் வாழ்க்கையைத் தீர்மானிக்கின்றது. எல்லா காலத்திலும் ஒரே மாதிரியாக உழைத்துவிட முடியாது. வாழுகின்ற காலமே உழைக்கின்ற காலமாகக் கொண்டு, சிக்கனமாக வாழும் முறையைக் கடைப்பிடித்தேயாக வேண்டும். நாம் பாவிக்கும் பொருட்களைவிட வீணடிக்கும் பொருட்களே மிகையாக உள்ளன. இது உலக பொருளாதாரத்திற்கே ஊறு விளைவிப்பதாகும். சிக்கன வாழ்வு என்பது கெளரவக் குறைச்சலான வாழ்வு என்கின்ற மனோபாவம் மாறுதல் வேண்டும்.
சிக்கனம் என்பது தேவையான செலவுகளைச் செய்வதற்கும், ஈகைக்கும் எதிரான செயல்பாடு அல்ல. தேவையற்ற அநாவசிய செலவுகளைத் தவிர்த்து, ஆக்கபூர்வமான செலவுகளை மட்டுமே செய்தலாகும். சிக்கனம் என்பது சேமிப்பு மட்டுமல்ல. சொல்லப்போனால்,
 

பருத்தியூர் பால. வயிரவநாதன் 27
இது ஒரு வருமானமும் ஆகும். சிக்கன வாழ்வு மூலம் பெறப்படும் பணமோ, அன்றி பொருளோ தக்க சமயத்தில் பிறருக்கு வழங்கப்படுமாயின், இது ஈகையாகவும் பொருள்படுகின்றது. எனவே,
கட்டுப்பாடான சிக்கன வாழ்வுமுறை எமக்கு மட்டுமல்ல, கழ இருப்போருக்கும் உதவுவதாக அமைந்தால் சிறப்பானதாகும். தனக்கும் தனது தேவைக்கு மட்டும் செலவுகளைக் கட்டுப்படுத்தினாலும்கூட, முடிவில் இன்னும் ஒரு சாராரை இவை தாக்காதுவிட்டால், சிக்கனம் சிறப்பானதேயாகும். செலவு செய்தல் என்பது, வாழ்வில் சாதாரண நடைமுறைதான். உலகில் பொருட்களும், பணங்களும் ஓர் இடத்தில் நிற்கமுடியாது. இவற்றைப் பெறுவதில் உள்ள சிரமங்களை நாம் அறிவோம். எனவே பெற்ற பொருட்கள், பணங்களைச் செலவு செய்யும் போதுதான் மனிதன் அவதானத்துடன் இருக்க வேண்டியவனாகின்றான்.
உடலாலும், உள்ளத்தாலும் பங்கம் ஏற்படாதவாறு, சிக்கனமாக வாழ்வது என்பதே ஒரு பெரும் கலையாகும். முயற்சிகள் அனைத்துமே சிறந்த வகையில் பேணப்பட வேண்டுமல்லவா? துவாரம் உள்ள பாத்திரத்தில் நீரை ஊற்றலாமா? ஆற்றிலே புளியைக் கரைக்கலாமா? மனித முயற்சிகள் பயனற்ற வகையில் செலவு செய்யப்படுதல் உலகிற்கு உவப்பானது அல்ல. கஷ்டப்பட்டு உழைத்துக் கண்டபடி செலவு செய்தல் கெட்டிக்காரத்தனமா - இல்லை முட்டாள்தனமான வீம்பு வேலைதானே?
எப்படியும் அனுபவித்துவிட வேண்டும்; கஷ்டப்பட்டதன் பயன் அனுபவித்தலே என்று ஒரு சாரார்

Page 28
28. வாழ்விஸ்ல் வசத்தங்கள்
கூறலாம். ஆனால் அனுபவித்ததன் பின் நடக்கும் சங்கதிகளுக்கு யார் பொறுப்பாளி? இருப்பதை வகுத்துப் பிரித்து, உள்ளத்திற்கேற்ப தானும், தன்னைச் சார்ந்தவர்களும் வாழுவதே வாழ்க்கை. இருக்கும் செல்வத்தில் சிறு தொகையேயாயினும் சேமித்தலுக்காக ஒதுக்குதல் மனிதனின் கட்டாயக் கடமையாக வேண்டும். மனித முயற்சியின் பயன் என்பதே, வாழும் முறையில்தான் தங்கி உள்ளது. கண்டபடி செலவு செய்தலால் பொருள் நஷ்டம் மட்டுமல்ல, மனதுக்கும் கஷ்டம்தான். இதன் பலாபலனாக, உடல் நலன் மட்டுமல்ல, மற்றவரிடம் எதிர்பார்த்துக் கையேந்தும் அவலநிலைக்கும் ஆளாக வேண்டிவருமன்றோ.
சாதாரணமான ஒரு ஏழை கூட நல்லவிதமாக தன் வருமானத்திற்கேற்ப ஆசைகளைச் சுருக்கி, தேவைகளைக் குறைத்து வாழும்போது, வசதி படைத்தவர்களும், நடுத்தர வர்க்கத்தினர் மட்டும் ஏன் பொருத்தமான வாழ்க்கை வாழ முடியாது? எதிர்காலத்தில் காசு கிடைக்கும் என்கின்ற எதிர்பார்ப்பினால், இருக்கின்ற பொருளைத் தொலைத்து பின் வருத்தப்படுவது அறிவீனமாகும். நிகழ்காலத்தின் வருமானங்கள்தான் வருங்கால சிக்கலற்ற வாழ்வைத் தீர்மானிக்க உதவுகின்றன. எல்லா நேரங்களிலேயும் உழைப்பு நிரந்தரமானதல்ல. புரிந்து கொள்ளுவோம்.
பிறர் தருவார்கள் என நம்பி ஏமாறுபவர்களே ஏராளமாக உள்ளனர். தவிர, பெற்ற பிள்ளைகூட கடனை அடைப்பான் எனக் கருதிக் கடன் கேட்கலாமா? உங்களல் முடிந்தது உங்கள் உழைப்பு மட்டுமே. பிறர் மூலம் கிடைக்கும் உதவிகள் எந்த நேரத்திலும் கிடைத்துவிடாது.

பருத்தியூர் பால, வயிரவநாதன் 29
எனவே சந்தர்ப்பங்களுக்கு ஏற்றவாறு இருப்பதைக் கொண்டு வாழுவதுடன் மிச்சம் பிடித்து வாழ்ந்தால் எதற்காகவும் அச்சம் வந்துவிடாது அன்றோ?
மனிதருக்குக் கையில் காசு இருந்தால்தானே மனோபலம் வருகின்றது. ஒரு வினாடிப் பொழுதுதான் ஆகட்டும். தகுந்த நேரத்தில் ஒரு சல்லிக்காசு தேவைக்கு இல்லாதுவிட்டால் எப்படித் தவித்துப் போகின்றோம்? இருக்கின்றபோது பொருட்களின் அருமை எங்கே தெரிகின்றது? ஒவ்வொரு தனிமனித வருமானம், செலவுகள், நாட்டின் தேசிய வருமானத்தையே பாதிப்படையச் செய்யும் என்பது பொருளாதார வல்லுனர்களின் கூற்றாகும்.
இன்று அரசாங்கங்கள் செலவினங்களைக் குறைத்தல் பற்றி அவ்வப்போது அறிவித்தல்களை - சுற்றறிக்கைகள் மூலம் விடுத்த வண்ணமேயுள்ளன.
மின்சார பாவனையில்,
நீர் வழங்கலில், உணவுப் பொருள் விநியோகத்தில், அரசு சொத்துக்களின் பாவனையில், இயற்கைப் பொருள்களின் பயன்பாடுகளில்,
என்றவாறே பல்வேறு விஷயங்களில் மக்கள் வீண் விரயம் செய்யாது, சிக்கனத்தைக் கடைப்பிடிக்க வேண்டும் என அறிவுறுத்தப்படுகின்றனர் என்றாலும் இவற்றை யார் பொருட்படுத்துகின்றார்கள்? ஒரு வாளி தண்ணிரை ஊற்றினால் குடியா மூழ்கிவிடும்? அரைமணித்தியாலம் மின் குமிழ் பற்றினால் என்ன குறைந்துவிடும்? ஒரு துண்டு பாணை வீசினால் பஞ்சமா வந்துவிடும் என்று கேட்கும்

Page 29
30 வாழ்விஸ்ல் வசத்தங்கள்
நபர்களும் இருக்கவே இருக்கின்றார்கள். சிறுதுளிகள்
8siri rளம் வ அறிந்தும் Sol Lię bli கொள்வது நாட்டைத் தற்கொலைக்கு இட்டுச் செல்லும் நடவடிக்கை அன்றோ?
நாட்டின் கணிசமான சதவிகிதம் உணவுப் பொருட்களும், ஏனைய பாவனைப் பொருட்களும் வீணாக விரயமாகுதல் அதிகரித்துக் கொண்டே செல்கின்றது. சொல்லப்போனால், கூடிய விரைவில் பாவிக்கின்ற பொருட்களைவிட, வீணடிக்கும் பொருட்களே அதிகமாகிவிடும் போலிருக்கின்றது. கழிவுப் பொருட்களையே உரமாக்கியும், சேதனப் பொருளாக்கி வேறுவிதமான பாவனைப் பொருட்களக்கவும் மாற்ற ஒவ்வொரு நாடுகளும் முயற்சிக்கின்றன.
தகுந்த விநியோக முறை இன்மையால் இரசாயனப் பொருட்கள், மருந்து வகைகள், உணவுப் பொருட்கள் என எத்தனை கோடி பெறுமானமான பணம் வீணடிக்கப்படுகின்றது தெரியுமா? இவை மக்களைச் சென்றடையாமையினால் யாருக்கு நஷ்டம்? ஏதோ வழியில் முடிவில் இந்தச் செலவினங்கள் பொதுமக்கள் தலையில் தானே விழுந்து விடுகின்றது.
சும்மா சுற்றித் திரியும் வாகனங்கள், அலுவலக நேரம் கடந்தும் சுற்றும் மின் விசிறிகள், மாதக்கணக்காக வீதி திருத்த கொட்டிக் கிடந்து வீணாகும் மணல் குவியல்கள், கேட்பாரற்றுப் பொது இடங்களில் வீணாகும் அரச சொத்துக்கள் இவை எமது நாட்டின் ஊதாரித்தனமான செலவினங்களின் வெளிப்பாடுகள். இவற்றைக் கண்டு

பருத்தியூர் பால. வயிரவநாதன் 31
கொள்ளாமல் விடுவதன் பலாபலன்களை ஒவ்வொரு வரவு - செலவுத்திட்ட வாசிப்பின்போதும் நாம் கண்டு கொள்ளலாம். மேலே சொல்லப்பட்ட உதாரணங்கள் மிகச்சில பகுதிகளேயாகும். இன்னும் எத்தனை எத்தனையோ மனதை வருத்தும் அநியாயக் காட்சிகளைத் தினசரி பார்க்கின்றோம் அல்லவா? பணக்காரர் சிக்கனமின்றி வாழ்வதால், அது ஏழைகளை ஈற்றில் வருத்துவதை இவர்கள் ஏன் இன்னமும் உணர்வது இல்லை. எனினும் வசதி படைத்தவர்களில் பலர் தமது கடந்த காலத்தை மறக்காதும் வாழ்ந்து வருகின்றனர்.
நான் ஒருமுறை ஒரு செல்வந்தர் வீட்டிற்குச் சென்றிருந்தேன். இவர்கள் பிறருக்கு உதவுவதிலும், வந்தோரை விருந்தோம்பி வரவேற்பதிலும் சிறந்தவர்கள். அன்று அவர்கள் வீட்டில் தங்கியிருந்தபோது, முகம் கழுவுவதற்காகக் குளியல் அறைக்குச் செல்ல நேர்ந்தது. அந்த அறையின் சவர்க்காரம் வைக்கும் பெட்டியில் கரையாத ஈயப் பேப்பரினால் ஒட்டி வைக்கப்பட்டிருந்தது. சவர்க்காரம் ஈரலிப்பாக இருக்கும்போது. கடதாசியை ஒட்டினால் அது வலுவாக அழுந்தப் பிடித்துவிடும். சவர்க்காரத்தின் ஒரு பகுதியால் மட்டுமே பூசிப்பாவிக்குமாறு செய்திருந்தனர். அநாவசியமாகச் சவர்க்காரம் கரைவதைக் கட்டுப்படுத்தவே இந்த உத்தியாகும். நான் வியந்து போனேன். இவ்வளவு வசதிகள் இருந்தும், இவர்கள் ஏன் இப்படிச் செய்யவேண்டும்? இந்தச் சிக்கன முறையினால் சவர்க்காரம் கரைந்து போகின்ற விரயம் ஓரளவு தடுக்கப்படுமல்லவா? இது ஒன்றும் கேலிக்குரிய சமாச்சாரமல்ல.

Page 30
32 வாழ்விஸ்ல் வசந்தங்கள்
ஒரு வருடத்தில் பாவிக்கப்படும் சவர்க்காரங்களில் இந்த முறையைக் கையாண்டால் எத்தனையோ சவர்க்காரங்கள் மீதப்படும் தெரியுமா? இந்த விஷயம் புத்திசாலித்தனமாக இருந்தும்கூட எம்மில் எத்தனை பேர் இந்த முறையைத் தெரிந்தும் கையாளப் போகின்றார்கள். அவசியமான இடத்தில் பொருளைச் செலவு செய்வதில் நஷ்டமில்லை. அநாவசியமான செலவுகள்தான் அநியாய விரயமாகின்றன.
வறுமைக்கு மூலகாரணமே உழைப்புக் குறைவு என்றும், தொழில் இன்மை என்றும் காரணம் கூறிக் கொள்கின்றனர். இருக்கின்ற பொருளைக் கரைக்காது செலவினைச் சுருக்குவதாலேயே வறுமையின் தாக்கம் ஒருவருக்கும் இருக்காது என்பதனை உணர்வார்களாக.
சிக்கன வாழ்வு பற்றிச் சொல்லிக் கொண்டு இருப்பதிலும் பார்க்க, நடைமுறையில் செய்து காட்டவேண்டும். மகாத்மா காந்தியடிகள் இதன் வழியே நடந்தும் காட்டினார். செல்வம் இருந்தால் செலவு செய்து காட்டி, மேன்மைப் பட்டம் சூட்டிக் கொள்ளவேண்டும் என எவரும் எண்ணினால் அதைவிடத் தப்பான அபிப்பிராயம் வேறில்லை. தனக்காகச் செய்யப்படும் மேலதிக செலவுகளால் பிறர் ஏன் பெருமைப்படப் போகின்றார்கள்? தனக்கு அது பெருமை என எண்ணும்போது, பிறர் அது கண்டு நகையாடுவரே அன்றி வேறில்லை. தவிர, இந்த நடவடிக்கையினால் કી 6o fi பொறாமை கொண்டு, அநாவசிய தொல்லைகளுக்கும் ஆளாக்குவார்கள். ஒருவரைப் பொறாமை உணர்வுக்கு ஆளாக்கும் செயலில்

பருத்தியூர் பால. வயிரவநாதன் 33
ஈடுபடுத்துவதற்காகவே, அந்தஸ்தை உயர்த்திக்காட்டிச் செலவு செய்வது புத்திசாலித்தனமானதா?
செலவைக் குறைத்து வாழ்வதுகூட தியாகம்தான். ஏன் எனில் தம் ஆசைகளைக் கண்டபடி பெருக்காது, மனக்கட்டுப்பாட்டுடன் வாழ்வது ஒரு சமூக நலன் கருதிய வாழ்வாகவே அமைந்து விடுகின்றது.
ബ68ഖ,
சிக்கனம் தூய்மையான எண்ணங்களை விரிவடையச் செய்கின்றது. பிறர் படும் கஷ்டங்களை உணரச் செய்கின்றது. இல்லாதவன், இருப்பவன் எல்லோருக்கும் ஒரு சமநிலை வாழ்வு முறையை இது அமைக்கின்றதல்லவா? மாபெரும் மன்னர்கள்கூட சாதாரண மனிதர் போல வாழ்ந்து காட்டியதாகச் சரித்திரங்கள் கூறுகின்றன. காசை வைத்துக் கொண்டு கூரையில்லா வீட்டில் வாழவேண்டியதில்லை. இது உலோபித்தனமாகும். உலோபித்தனம், கஞ்சத்தனம் என்பதற்கும், சிக்கனம் என்பதற்கும் சம்பந்தமேயில்லை. தனக்கும் பிறர்க்கும் உதவாமை கஞ்சத்தனம், கருமித்தனம் என்பார்கள். ஆனால் சிக்கனம் என்பது, தனக்காகத் தான் வாழும் சமூகத்திற்காக, நாட்டிற்காக வாழுகின்ற ஒழுக்க அறநெறியாகும். நாங்கள் எங்களுக்காகவும், பிறருக்காகவும், அனுசரணையாக - கருணை கொண்டு வாழ வேண்டும். இதற்காக, தேவைக்காக மட்டுமே செலவு செய்து வாழ்தலே சிறப்பு.

Page 31
34 வாழ்விஸ்ல் வசத்தங்கள்
நாம் காணும் எல்லோரையுமே எமது சொந்த இனமாகக் கொள்வோமாக. பூமித்தாய் பெற்று எடுத்த மக்கள் செல்வம் அவளது சொத்து. எனவே இவளது பிள்ளைகளிடையே தொடர்புகள் நிரம்பவும் உண்டு. பூமியின் உயிர்கள் அன்னிய முகங்கள் என்பது ஒருபோதும் ஏற்றுக் கொள்ளமுடியாது. ஏற்றத்தாழ்வுகள், சுயநலன்களினால் மனிதன் கூறுபடுவதை அனுமதிக்கவும் கூடாது. மனித உணர்வுகளை மதித்தால் இந்த விதமான கீழ்நோக்கான எண்ணங்கள் எழவே எழாது. சகலரது இன்ப துன்பங்களையும் பகிர்ந்து கொள்ளும் மனோநிலை வந்தால், பார்க்கும் அனைவருமே நல்லவர்களாகவே தெரிவார்கள்.
தெரிந்தவர்களைக் கண்டால் மட்டும் முகம்மலரச் சிரிப்பதும் புன்முறுவல் பூப்பதும், ஆனால்
 

பருத்தியூர் பால, வயிரவநாதன் 35
தெரியாதவர்களைக் கண்டால் வேண்டப்படாதவர்களாகக் கருதுவதுபோல முகத்தை 'உம்' என்று வைத்தபடி வன்மம் கொண்டவர் போல் மனிதத் தன்மையற்ற பாவனையில் நடந்து கொள்ளலாமா?
எந்த முகங்களுமே அந்நியங்கள் அல்ல.
எவரையுமே எங்கள் சொந்த இனங்களாகக் கருதுவோமாக.
பூமி மாதாவிற்கு நான் மட்டும் குழந்தை அல்ல. அவள் பெற்று எடுத்தவைதான் இந்த மக்கள் பெருவெள்ளம். எனவே பூமியின் உயிர்கள் அந்நிய முகங்களே அல்ல. பிரபஞ்சத்தில் ஒன்றுக்கொன்று, நீரால், நெருப்பால், காற்றால், நிலத்தால் ஏதோ ஒரு வழியில் தொடர்புபட்டே இருக்கின்றோம் - என்றாலும் நாம் ஒரு இணைப்போடு பிணைக்கப்பட்டும், பிரிந்து வாழவே ஆசைப்படுபவர்களாக இருக்கின்றோம்.
அறிந்தவனுக்கு ஒரு நீதி. நன்கு தெரிந்தவனுக்கு ஒரு நீதி உறவினர், தம் பிள்ளைகளுக்கு என பிறிதொரு கருத்துமாகவே கொண்டு மனிதன் வாழப் பழகிவிட்டான். உலகம் எங்களை ஒன்றாகவே நோக்குகின்றது. ஒவ்வொருவருக்கும் இது பாதகம், ஒரவஞ்சனை செய்வதில்லை. காற்று, வெயில், நிலம் என்பவைகளை அனுபவிக்கும் மனிதன் தன் அறிவிற்கு ஏற்பவும், சந்தர்ப்ப சூழ்நிலை, அதிர்ஷ்டம் என்று ஏதேதோ காரணங்களைக் காட்டியும் வாழ்ந்து வருகின்றான்.
கடவுள் தந்த எல்லாவற்றையும் அனுபவித்துவிட்டு, ஏற்றத்தாழ்வு சுயநலங்களை மட்டும் தனக்குள் பூட்டி

Page 32
36 வாழ்லிஸ்ல் வசந்தங்கள்
வைத்துப் பிரகாசம் பெற எண்ணுவது முறைதானா? தனக்கு நல்லது வந்தால் மட்டும் சிரிக்கின்றான். தனக்கு ஏற்ற, தெரிந்தவர்களைக் கண்டால் மட்டும் மனம் திறந்து புன்னகைக்கின்றான். எல்லோரையும் சரிசமனாக எங்கே பார்க்கின்றான்?
பாமரத்தன்மை என்பது, படிக்காமையால் மட்டும் வந்து விடுவதன்று. மனித உணர்வுகளை மதிக்காமலும் இது உட்கார்ந்து கொள்கின்றது. அதிகம் படித்துவிட்டு சடமாக இருப்பது புத்திஜீவித்தன்மையா? அதைவிட எவரையும் முழுமையாக ஈர்ப்பவனே மேலான மனிதனாகின்றான். உத்தமமான, சலனமற்ற நன்னோக்குடையவனே மனிதன். மற்றவன் சூன்யமானவன். எந்தவிதத்திலும் உங்களுடன் தொடர்பு இல்லாத ஒருவனை நீங்கள் காணுகின்றீர்கள். அவன் முகவாட்டத்தின் மூலம் அவன் நெஞ்சின் நோவை அறிந்துவிட்டீர்கள். நல்லது, இனி அந்த வினாடி அதே விநாடித் துளிகள் கருணைமிகு எண்ணங்களால் அவனை நோக்கிப் பாருங்கள். அவன் தனிமை தொலைந்து உங்கள் மூலம் ஓர் இனிய அனுபவம் பெறுவதை அறிவீர்கள். நீங்கள் கொடுப்பது பொருள் அல்ல. அருள்மிகுந்த அன்பினைத்தான். இந்த அனுபவத்தினை நேரிடையாகவே பெறச் சந்தர்ப்பங்களை நீங்கள் பெற்றும் இருப்பீர்கள். அநேகமான வேளைகளில், இத்தகையவர்களைக் கண்டுகொள்ளாத சந்தர்ப்பங்களே மிக அதிகமாகும்.
அல்லாவிடில், இத்தகைய துன்பம் கொண்டோரைப் பார்த்து நகைப்பவர்களையும் கண்டிருப்பீர்கள். ஒரு

பருத்தியூர் பால. வயிரவநாதன் 37
மனிதனின் விழிநீரைத் துடைத்தல் என்பது, அவன் வாழ்வை விழிப்படைய உதவுவது போலாகும் என எண்ணுக, நாங்கள் மட்டும் காணும் திருப்தியைவிடப் பிறர் திருப்தியில் நாங்கள் பெறும் திருப்தியே வலுவானதாகும். “இந்த உதவிக்குக் கோடி புண்ணியம் கிடைக்கும்’ என வாழ்த்தும்போது ஏற்படும் நிறைவு. ഉ_sണിങ്ങ് செயலாற்றுகைக்குக் கிடைத்த நற்சான்றிதழாகும். அதுவும், வலிமையில்லாத நலிந்தவர்களுக்கு எம்மால் இயன்றவைகளை வழங்கும்போது ஏற்படும் நிறைவே தனியான இனிய அனுபவமாகும்.
வீணான கற்பனைகளாலும் விடாது துரத்துகின்ற துன்ப அலைகளாலும், சஞ்சலமடைந்தவர்களும் ஏதோ 89 (5 ஆறுதல் கிடைக்கவேண்டும் 66OTC36 அங்கலாய்க்கின்றனர். இன்று சோகங்களால் பலமிழந்தவர்களுக்கு என்ன விதத்தில் ஆறுதல் அளிக்கலாம் என்பதே பெரிய பிரச்சனையாகும். எல்லோருமே ஆன்மீகவாதிகளாக முடியாது. ஒருவன் கண்ணிரைத் துடைக்கும் பணியில் எத்தனை பேர் ஆர்வமாக இருக்கின்றார்கள். துன்பம் வந்ததுமே எல்லோரும் தனிமைப்பட்டுப் போகின்றார்கள். திருமணி வீட்டிற்கு, பட்டும் நகையுமாக ஜொலிக்கச் செல்கின்ற
சந்தோஷமடைந்ததும் அவர்கள் பணி நிறைவேறி முடிகின்றது. அதன் பின்னர் என்ன நடக்கின்றது?
அதே வீட்டில் ஒருவன் கஷ்டம் - துன்பம் வந்த பின்னர் எத்தனை விதமானவர்கள் அவர்கள் துன்பங்களில்

Page 33
38 வாழ்விஸ்ல் வசந்தங்கள்
பங்கு எடுக்கின்றார்கள்? தேறுதல் கொடுக்கின்றார்கள். மரணச் சடங்கில் ஒரு அம்மாள் இப்படி அழுதாள், ‘நீங்கள் எல்லோருமே இன்று போய் விடுவீர்கள். நாளை எனக்கு எவர் ஆறுதல் சொல்லப் போகின்றார்கள். இது எவ்வளவு யதார்த்தமான பேச்சு? கேளிக்கைகளில் பங்கு கொண்டவர்கள் ஒரு நாழிகைப் பொழுதும் துன்பங்களைத் தாங்கச் சம்மதிப்பதில்லை. ஏன்? தனக்கு வேண்டப்பட்டவனையே நோக்கத் தயங்குபவன், தனக்குத் தெரியாதவனிடம் கருணை கொள்வான் என எப்படி எண்ணமுடியும்?
மேலைநாட்டு மக்களின் பல பண்புகளைக்கண்டு நாம் கட்டாயம் பின்பற்றியே ஆகவேண்டும். அறிந்தவரோ, அறியாதவரோ எவரேயாயினும் காலை, நண்பகல், மாலை, இரவு என எந்த நேரங்களில் கண்டு கொண்டாலும், “காலை வந்தனம்’ அல்லது அந்த அந்த நேரங்களுக்கு ஏற்பச் சிரித்த முகத்துடன் அந்த நேரத்திற்கான வந்தனங்களைச் சொல்லுவார்கள். பதிலுக்கு மற்றவரும் அதே பாணியில் நன்றி கூறி வந்தனம் கூறிவிடுவார்கள். நம்மவர்கள் இப்படிக் கூறாமல்விட்டால், அவர்கள், இவர் ஊருக்குப் புதிது என இனம் கண்டுவிடுவார்கள். ஏன் எனில், மேலை நாடுகளில் வேலை பார்க்கும் இடங்கள், பொது இடங்கள், வீதிகளில் கூட ஒருவரைக் கண்டுவிட்டால் முகம்மலர இரண்டு சொல் சொல்லியே தமது காரியங்களைச் செய்வார்கள்.
தெரியாத எவரையாவது நாம் கண்டு கொள்ளுகின்றோமா? எவராவது எமக்காகச் செய்கின்ற காரியங்களுக்கு உடனுக்குடன் நன்றி கூறுகின்றோமா?

பருத்தியூர் பால. வயிரவநாதன் 39
எதிரில் வரும் ஒருவன் சிரிக்கும்பேர்து, புன்முறுவல் பூக்கும்போது, எமக்குள் ஒரு மலர்ச்சி தோன்றும் அல்லவா? எதிரில் வருபவர் எதிரிகள் அல்ல. அவர்கள் முகம் மலர்ந்தால் எம் அகம் மலரும் அல்லவா? சரி, உங்களுக்கு வேண்டாதவரே ஆகட்டும். கொஞ்சம் புன்முறுவல் பூத்தால் என்ன? அவர்களது கோப, தாப, இறுக்க இயல்பு தளர்ந்து போகாதா என்ன? உள்ளத்தை இறுக்கப் பூட்டி என்ன பயன்? அதை அன்பு என்ற திறவுகோலினால் திறந்து வைத்தால் என்ன? உடைக்க முடியாத உள்ளத்தைக்கூட கனிவான அன்பு கொண்டு உடைப்பதே அறிவாகும். கனிவு அற்றவன், உடலில் பிணி இல்லாதுவிட்டாலுங் கூட சமூகத்திற்கு அவன் குணம் மாறாத பிணிதான்.
நாம் காலையில் இருந்து மாலைவரை எவ்வளவு மனிதர்களைச் சந்திக்கின்றோம். இவர்கள் எத்தனை எத்தனை பிரச்சினைகளைச் சுமந்து கொண்டு திரிகின்றார்கள். அப்போது நாம் அவர்களது பிரச்சனை என்ன என்றே தெரியாமல், கண்டபடி நடந்து கொள்ளலாமா? காலையில் நீங்கள் வீட்டை விட்டுப் புறப்படுகின்றீர்கள். எதிரில் பலர் வருகின்றார்கள். அவர்களில் சிலரை உங்களுக்குப் பிடிக்காமலும் இருக்கலாம், பிடித்தும் இருக்கலாம். நீங்களும் பல பிரச்சினைகளுக்கு முகம் கொடுக்கவேண்டி உள்ளதால், பல அழுத்தங்களுடன் புறப்பட்டு வந்துகொண்டு இருந்தாலும்கூட எதிரில் வருபவரிடம் உங்கள் கோபதாபம், புழுக்கங்கள், விரக்தி, வேதனை, காழ்ப்பு உணர்ச்சிகளைத் $600flass cypu606 on LDm?
gाlि,

Page 34
40 வாழ்விஸ்ல் வசத்தங்கள்
இந்த நேரத்தில் எதிரே வருபவர் உங்களிடம் பாய்ந்தால் முகம் கோண நடப்பதை நீங்கள் விரும்புவீர்களா? அல்லது அனுமதிப்பீர்களா? சொல்லுங்கள். உங்களுக்கு ஒரு நீதியும் சமூகத்தின் பால் ஒரு நீதியையும் எதிர்பார்க்கலாமா?
“அதிர்ஷ்டமற்றவன் பார்த்துவிட்டான். எல்லாமே போச்சு” என்பார்கள். இதே கருத்தைப் பிறர் உங்கள் மீது வைப்பதை நீங்கள் விரும்புவீர்களா? மனத்தில் உள்ளதைக் கண்களால் பார்க்க முடியாத காரணத்தால் நாம் தப்பித்துப் போய் விடுகின்றோம். அல்லாது விடின், மனிதன் ஒவ்வொருவரின் வக்கிரபுத்திகள், கபட எண்ணங்கள் எல்லாமே தெரிந்துபோனால் உலகமே ஒரு நொடியில் ரணகளமாகிவிடுமே? கண்ணுக்குத் தெரியாத குணங்களை எமக்கு மட்டுமே எடைபோடும் திறன் இருப்பதாக வேறு கருதுகின்றோம். இதனால் சதா மற்றவர்களிடம் இருந்து மட்டுமே நியாயங்களை எதிர்பார்த்து எங்கள் நியாயங்களைத் துறந்துவிடத் தயாராக இருக்கின்றோம்.
காரியத்திற்காகச் சிரிக்கும் மனிதன் நேசிப்பதற்காகச் சிரிப்பதில்லை. 'மலரனைய உணர்வுடன் மனம் வீசவேண்டும் இறைவா’ எனப் பெரியோர் எண்ணுவார்கள். நாம் மலரின் மென்மையாகவும் எதிரில் உள்ளவர்களுக்கு வாசனைகளைத் தெளிப்பவர்களாகவும் இருப்போமாக. இரக்கம் பகிரப்பட்டால் ஆண்டவன் பொக்கிஷம் எமக்காகப் பகிர்ந்தளிக்கப்படும். இதயங்களைப் பூட்டி வைத்து ஆண்டவனிடம் கையேந்தலாமா? கொடுக்காமல் கை ஏந்தல் சிறப்பாகுமா?

பருத்தியூர் பால. வயிரவநாதன் 41
பார்ப்பவர் அனைவரையும் ஒன்றாக நோக்க அவர்களை உங்களுக்குள் பரிச்சயமாக்க முயலுங்கள். தினசரி நல்ல நல்ல நண்பர்களைச் சம்பாதித்துக் கொள்ளுங்கள். தினம் தினம் எத்தனை பேரிடம் முகச் சுளிப்பினை ஏற்படுத்தி இருப்பதைவிடக் கேவலமான நிலைமை வேறென்ன உண்டு? நேரிய, பரிசுத்த பார்வை மூலம் உங்கள் உள்ளேயும் ஒரு வெளிச்சம் உருவாகும். அது பிறரால் எமக்கு வழங்கப்படும் பிரதிபலிப்பான ஒளியேயாகும்.
இதில் எந்தக் களங்கமும் கிடையாது.
இதனைப் பரிபூரணமாக நம்பலாம்.
米

Page 35
42 வாழ்லிஸ்ல் வசந்தங்கள்
பூட்டிய இதயங்களுடன் உடல்கள் மட்டும் இணைந்து கொள்வது திருமணபந்தம் அல்ல. கனமான இதயங்களால் இனிமையான திருமண வாழ்வை ரசிக்க முடியாது. அன்பை எதிர்பார்க்கின்ற கணவனுக்கு அதனைத் தாராளமாக வழங்கவும் அதேபோல அன்பே உருவான மனைவிக்கு உரிய கெளரவம் கொடுத்து என்றைக்கும் மாறாத காதலைப் பகிர்ந்துகொள்வதே உன்னதமான இல்வாழ்வு நெறியாகும். விட்டுக் கொடுப்புடன் நேயமுடன் ஜீவிக்கப்பழகினால், வாழ்நாள் முழுவதுமே சந்தோஷகரமான வாழ்க்கைதான். இந்த வாழ்வு இவர்களின் எதிர்காலத்தின் சந்ததியினரையும் வழி நடத்தும்
பDனம் முறிந்தால் மணமுறிவா? வாழ்வாங்கு வாழ்வதற்காக இணைந்து கொண்ட தம்பதிகள் தமக்கிடையே உள்ள பிணக்குகளைத் தீர்த்துக்கொள்ள வழி தேடாமல் திருமண பந்தத்தினையே உடைத்தெறிந்து
 

பருத்தியூர் பால. வயிரவநாதன் 43
கொள்வது சாதாரணமான விஷயமல்ல. திருமணம் என்பது ஆண் - பெண் சுதந்திரமாகச் சிந்தை ஒன்றாகச் சந்தோஷமாக ஜீவிப்பதற்கே. இதில் யார் பெரியவர், சிறியவர் என்கின்ற எண்ணங்கள் ஆரம்பமானதுமே குரோதங்களும் சூழ்ந்துவர ஆரம்பிக்கின்றன.
திருமணம் என்பதே ஒருமணமாக இணைதலே அன்றி பிரிவதற்கு ஆதாரங்களைத் தேடுதல் அல்ல. எனினும், நியாயபூர்வமான பிரச்சனைகள் இருசாராரிடையேயும் தோன்றவே செய்யலாம். இவை மனங்கள் மட்டும் சார்ந்தவையன்று. உடற்கூறுபட்ட பிரச்சினைகளாகவும் இருக்கலாம். உற்றார், உறவினர், தாய், தகப்பன், மாமன், மாமிகளால் தோன்றுகின்ற விவகாரங்களை வைத்து மட்டும் விவாகரத்துக் கேட்கலாமா?
வாழ்வதற்குப் பொருளாதாரம் இன்றியமையாதது. கல்யாணமானவுடன் தோன்றாத பொருளாதாரப் பிரச்சினைகளும் இதர சாதாரண விடயங்கள்கூட, நாள் ஆக ஆக இவை பூதாகாரமாகத் தோன்றுகின்றதே? மனங்கள் சம்பந்தப்பட்ட பிரச்சினைகளை - கோளாறுகளை - உள்ளக் கிடக்கைகளை ஆண், பெண் இருவருமே பேசித் தீர்க்கமுடியும். அல்லாதுவிடின்,
பெற்றோர், தமக்கு நம்பிக்கையானவர்கள் எனச் சிலர் மூலமாகவேனும் மனம்விட்டு பேசிவிட முடியும். இன்று பொதுவாகப் பூட்டிய உள்ளங்களோடு, உடல் மட்டுமே இணைந்து கொள்வதால் தவறுகள் மேலும் ரணங்களாகின்றன. உறுத்தல் இல்லாமல் இன்பம் துய்த்தலே முறையாகும். கனமான இதயங்களால்

Page 36
44 வாழ்விஸ்ல் வசந்தங்கள்
இனிமையான திருமண வாழ்வை ரசிக்கமுடியாது. உடல் ஆரோக்கியம் காரணமான பிரச்சினைகளால் கல்யாண வாழ்வில் கரைச்சல் வரலாம். எனினும் தற்கால நவீன மருத்துவ உலகில் இவை எல்லாம் தீர்த்துக்கொள்ளக் ബgധങ്ങഖg6',
கணவனும், மனைவியும் எந்தவிதமான மனஸ்தாபங்களும் இல்லாமல், இருக்கும்போதும், கூடவே வந்து போகின்ற உறவுகளும், ஏன் நெருங்கிய உறவினர்களுங்கூட கரிசனையாக நடப்பதுபோல் நடந்து, குடும்பத்தில் விரிசல்களை உண்டாக்கிவிடுகின்றனர். நிர்மலமான சிந்தனையுடன் வாழ்கின்ற தம்பதியினரிடம் அநாவசியமான சந்தேகங்களையும், வீண் ஆசைகள், கோபங்களை ஊட்டி விடுவதாலேயே கணிசமான குடும்பங்கள் நடுத்தெருவிற்கு வந்து அவமானப்பட்டுப் போகின்றன. கணவன், மனைவியும் தம்மை எவர் நேசிக்கின்றார்கள், எவர் கழுத்தை அறுக்கின்றார்கள் என்கின்ற வேறுபாட்டை உணராமல் போகின்றார்கள். மனைவியைக் கணவன் நம்பாமலும், கணவனை மனைவி நம்பாமலும் வாழ்ந்தால், பிறர் பேச்சு இவர்கள் வாழ்க்கையில் குறுக்கிடத்தான் செய்யும். நம்பிக்கை கொண்டு வாழ்ந்தால் எவரும் ஒருவருக்கு ஒருவர் துரோகம் செய்ய எண்ணுவார்களா? பலவீனமான கரவு என்கின்ற காரணி உறுதியான தம்பதிகளைத் தாக்க முடியாது. நோய்கூட பலம் இழந்தவனைத்தானே பலமாகத் தொற்றிக்கொண்டு தாக்குகின்றது?
“எனக்கு இவரோடு வாழப்பிடிக்கவில்லை. ஒத்துப்போகாத, விட்டுப்போகாத மனுஷனிடம் என்ன

பருத்தியூர் பால. வயிரவநாதன் 45
வாழ்க்கை வேண்டிக் கிடக்கின்றது' என மனைவியும், ‘அடங்கிப் போகாத இவளுடன் என்ன வாழ்க்கை? தினம் தினம் பிறந்த வீட்டுப் புராணத்தை எவ்வளவு காலம்தான் கேட்பது' என்கின்ற கணவனும் பேசும் பேச்சுக்களை நாம் அறிந்திருக்கின்றோம். அதீதமான அன்பைப் பொழியும் பெண், தனது கணவன் தன் மீது மட்டும் அன்பைக் காட்டவேண்டும் என எதிர்பார்க்கின்றாள். இன்றைக்கு, விவாகரத்துக் கேட்கும் பெரும்பாலான பெண்கள் கூறும் காரணம் இதுதான். 'எனது கணவருக்கு என்மீது கரிசனை இல்லை’ என்பதுதான். ஆனால் கணவன் என்பவன் இதை ஒத்துக்கொள்ளமாட்டான். அன்பைக் காட்டத்தவறிய, அதே FLD uu ub அதனைத் தெரிவிக்கத் தெரியாத அப்பாவிகளுங்கூட இருக்கத்தான் செய்கின்றனர்.
அன்பை எதிர்பார்க்கின்ற கணவனுக்கு அதனைத் தாராளமாக வழங்கவும், அதே சமயம் அன்பே உருவான பெண்ணுக்கு ஆண்மகன் மாறாத காதலைப் பகிர்ந்து கொண்டும் வாழ்ந்தால் என்ன? இன்னும் சில வயது முதிர்ந்த பெண்கள் கூறுவார்கள். “இந்த வயதிலும் இவர் என்ன வாலிபர் மாதிரி நடந்து கொள்கிறாரே” என்பார்கள். இளவயதில் ஆடிப்பாடி, ஓடி உல்லாசமாக வாழ்கின்ற காலம் மட்டும்தான் காதல் வாழ்க்கையா? உடல் தளர்ந்தாலும் அன்பு வற்றாத நிலையில் கணவன், மனைவி காதலோடு வாழ்வது, பரிகசிக்கக் கூடிய ஒன்றல்ல. வாலிப வயதில் கட்டிப்புரண்டு விட்டு, வயது வந்ததும், ஒருவர் கரத்தை மற்றவர் தொட அருவருப்பதும், வெட்கப்படுவதும் ஒரு வாழ்வா? குழந்தை குட்டிகள் என்கின்ற வாரிசுகள் வந்ததும், கணவன் - மனைவி

Page 37
46 வாழ்லிஸ்ல் வசந்தங்கள்
நெருக்கம், ஸ்பரிஸ உணர்வு, அருகிக் காதல் ஸ்தம்பிதமாகிவிடுதல் சரியாகுமா?
இன்றைய உலகில் நடப்பது என்ன? ஏழெட்டுப் பிள்ளைகளைப் பெற்று, ஏன் பேரப்பிள்ளைகளைக் கண்டுங் கூட விவாகரத்துக் கேட்கின்றார்கள். அல்லது பிரிந்து வாழ்கின்றார்கள். அப்படியாயின் இவர்கள் இதுநாள்வரை வாழ்ந்த வாழ்க்கைக்கு அர்த்தம்தான் என்ன? எல்லாமே போலியானதா? இவர்கள் இப்படி வாழுவது, தமது சமூகத்திற்கே வாழ்க்கை பற்றிய துர்ப்போதனையினைக் கற்பிக்க முனைவதாகும்.
எல்லோரும் இன்று சொல்லுகின்றார்கள். இன்று மணமுறிவுகளுக்குக் காரணம், மேலைத்தேய நாகரீகமான பழக்க வழக்கங்களே என்கின்றார்கள். நீங்கள் உங்கள் வாழ்க்கையைக் கட்டி அமைக்கத் தவறிவிட்டு, ஏன் மேலை நாட்டு நாகரீகத்தினை மட்டும் காரணம் காட்டுகின்றீர்கள்? அவர்கள் எப்படியாவது வாழ்ந்துவிட்டுப் போகட்டும். அதற்காக, அவர்கள் காட்டும் காரணத்தை நீங்கள் ஏற்க வேண்டுமா?
விட்டுக் கொடுக்காத தன்மை,
எல்லை மீறிய சுதந்திரங்களை எதிர்பார்த்தல்,
ஆடம்பர வாழ்க்கையைக் கண்டு அங்கலாய்த்தல்,
சீதனப் பிரச்சினை,
பொருளாதார நெருக்கடிகள் -
போன்ற பிரதான அம்சங்கள் மணமுறிவினை ஏற்படுத்தினாலுங்கூட நியாயபூர்வமான விடயங்களும்,

பருத்தியூர் பால. வயிரவநாதன் 47
விவாகரத்துப் பெற போதிய காரணங்களாக அமைந்து விடுகின்றன. திருமண வாழ்வில் சில ஆண்களால் பெண்கள் மட்டும் பாதிப்பு அடைவதில்லை. ஆண்கள் கூடச் சில பெண்களால் பாதிப்பு அடையக்கூடும். முறை தவறிய ஆண்கள், குணங்கெட்ட பெண்கள் இன்று பலர் இருக்கத்தான் செய்கின்றார்கள். குடித்து, வெறித்து மனைவியைத் துன்புறுத்தி, குடும்பத்தைக் கவனிக்காமல் சொத்துக்களைச் சேதாரமாக்கிக் கண்டவள் பின்னால் சுற்றுபவனோடு எத்தனைக் காலத்திற்குத்தான் பொறுத்து வாழ முடியும்? தவிர குடும்பத்தைக் கவனிக்காமல் விட்டாலும் பரவாயில்லை. மனைவி கஷ்டப்பட்டு உழைக்க, அதனையும் சுரண்டி கண்டபடி அவதூறுகளை அள்ளி வீசுகின்ற உலுத்தர்களுடன் பெயரளவிற்குக் கணவன் மனைவியாக வாழமுடியுமா? சீதனத்திற்காக, சீதேவியைத் துரத்துபவர்களை என்ன செய்வது?
கணவனை மதிக்காமல், பிள்ளைகளையும் பார்க்காது, நாகரீக மோகத்திற்கு ஆட்பட்டு, கற்பு நெறியில் இருந்து தவறிய பெண்களின் நடிப்புப் பேச்சுக்காக ஒருவன் தன் வாழ்க்கையையே பணயம் வைக்க முடியுமா? பெண்ணடிமை கொள்ள நினைக்கும் பித்தர்களுடனும் பெண்மைக்கே களங்கமாக இருக்கும் அசிங்கங்களுடனும் வாழ நினைப்பதுகூட அவமானமாகும். கலாசாரத்திற்கு ஒவ்வாத நடத்தை நெறியுள்ளவர்களை மீண்டும் நல்ல வழிக்குக் கொண்டுவர பெரிய போராட்டமே செய்ய வேண்டியுள்ளது. சிலர் இது விடயத்தில் பட்ட அனுபவங்கள் மூலம் திருந்தியும் விடுகின்றார்கள். ஒரு சிலர் மட்டும் திருந்த மாட்டேன் என அடம்பிடித்து அழிகின்றார்கள்.

Page 38
48 வாழ்லிஸ்ல் வசந்தங்கள்
ஆண், பெண் இருசாராரும் தங்கள் குறை, நிறைகளை மதிப்பீடு செய்யத் தவறுவதாலேயே குழப்பங்கள் வருகின்றன. பண்பாடுகளில் நம்பிக்கை கொண்டவர்கள், தாம் வாழுகின்ற முறைமைகள் பற்றியும் எடை போடத் தெரிந்தவர்களாவர். தாம் வாழுகின்ற சமூக கலாசாரத்தின் பால் ஈடுபாடு இன்றித் தாமாகவே பிற நாட்டுக் கலாசாரங்களில் வீழ்ந்து பின்னர், தமது சமூகம் பற்றியே தாழ்வு மனப்பான்மைக்கு ஆளாகின்றனர். இன்று கீழைத்தேய சமூகப் பிணைப்பு, குடும்ப இணைப்பு போன்ற பாசமிகு வாழ்க்கையை அந்நிய நாடுகளே வியந்து நோக்க, நாமோ, எமது வசதிக்காக - ஆடம்பர வாழ்விற்காக - குடும்ப வாழ்வு முறைகளையே மாற்றிக் கொள்ளத் தயாராகிவிட்டோம். இணைவதும், பிரிவதும் ஒரு சாதாரண நிகழ்வாக - சம்பவமாக அவர்கள் கொள்கின்றார்கள். இந்த அவசரபுத்தி வாழ்வு அஸ்தமனமாகிவிடுகின்றபோது, வெறும் யந்திரமாக உழைத்து வாழ்ந்தாலும் நிம்மதி கிட்டிவிடுமா? வீடு, வீடாக இல்லாதபோது, நாடு பற்றி எப்படிச் சிந்திக்க முடியும்? அழிவு பற்றியே எண்ணங்கள் ஓடும். வீட்டில் சண்டை போடுகின்றவன் வெளியில் சிரிக்கமுடியுமா?
மேலைநாடுகளின் வாழ்க்கை முறை வேறானது. அங்கு குடும்பம் வேறு, கடமை வேறு. அவர்கள் இரண்டையும் பொருத்திப் பார்ப்பது இல்லை. எங்களால் அப்படி வாழ முடிவதில்லை. அங்கே ஒருவன் தினம் ஒரு புது வாழ்வு அமைக்கின்றான். ஆனால் அவன் தனது வேலைகளை மறுபக்கம் பார்த்துக் கொண்டு இருக்கின்றான். தற்காலிகமான இந்தச் சந்தோஷங்கள் நிரந்தரமானது இல்லை என்று எண்ணுவதாலேயே இன்று

பருத்தியூர் பால, வயிரவநாதன் 49
எங்கள் குடும்பப் பிணைப்பின் சூட்சுமங்களை அறிய ஆவல்படுகின்றான். பார்க்கப்போனால், கொஞ்ச காலங்களில் நாங்கள் அவர்களாகவும், அவர்கள் நாங்களாகவும் மாறினாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.
விவாகரத்து விஷயத்தில், காதலித்துத் திருமணம் செய்தவர்கள் மட்டுமல்ல, பெற்றோர் பேசி முடித்து வைத்த திருமணங்கள்கூட, முறிந்துபோகின்றன. எனவே மணமுறிவிற்கு, திருமணம் செய்யும் முறைகளை மட்டும் காரணம் காட்டிவிட முடியாது. ஒவ்வொரு ஆணும், பெண்ணும் தமக்கு இசைவாகவே ஒவ்வொருவரும் நடக்க வேண்டுமென்கின்ற, எல்லைமீறிய அவாவினால் தம்மிடையே இசைந்து போக மறுக்கின்றார்கள். கொஞ்சமாவது அனுசரணை உணர்வுடன் விட்டுக் கொடுத்துப் போக மறுக்கின்ற நாகரீகத்தை சில ஆண்களும், சில பெண்களும் விரும்பமாட்டார்கள். மிகச்சிலர் நாகரீகத்தின் உச்சிக்கே சென்று வாழத் தலைப்படுகின்றனர். சாமான்ய உலகில் நாம் கொஞ்சம் நகர்ப்புற வாழ்க்கையையும் புரிந்துதானே ஆகவேண்டும். இதில் வேடிக்கை என்னவெனில், பட்டிக்காட்டுத்தனமாக வாழாதே என்று சொல்லி, சும்மா இருந்த மனைவியை நாகரீக மோகத்தினுள் திணித்து, பின்னர் அவனுக்கே வினையாகி, முடிவில் விவாகபந்தமே வேண்டாம் என்கின்ற அளவிற்கு வாழ்க்கை வீணாகி விடுவதுண்டு. இதேபோலவே, சாதாரண வாழ்க்கை வாழ்ந்து வந்த கணவனை அடுத்தவர்களைப் பார்த்து, அவனையும் நடக்கச் செய்து முடிவில், மனைவியையே மறந்து, சகல

Page 39
50 வாழ்விஸ்ல் வசந்தங்கள்
கெட்ட சகவாசங்களையும் கைக்கொள்ளுபவர்களையும் நீங்கள் அறிந்திருப்பீர்கள்.
ஆழமான அன்பும் பரிசுத்தமான மனமும் இருந்தால், தம்பதியினரிடையே ஏற்படும் நம்பிக்கை உணர்வை எந்தச் சக்தியாலும் தகர்த்துவிட முடியாது! தாங்கள் நினைத்தபடியே வாழ்ந்து, விடாப்பிடியாகக் கெட்டு அழிவதில் என்ன லாபம் இருக்கின்றது?
இது ஒரு உண்மைக் கதை. கொஞ்சம் கேளுங்கள். எனக்குத் தெரிந்த ஒரு நண்பருக்குப் பெற்றோர் பேசித் திருமணம் செய்து வைத்தார்கள். இவர்களுக்குப் பெண் குழந்தை பிறந்து எட்டு ஆண்டுகள் இப்போது முடிவடைந்துவிட்டன. குழந்தைக்கு நாலு வயது நடந்து கொண்டிருக்கும்போது நண்பரின் மனைவி விவாகரத்துக் கோரினார். மனைவி இயல்பாகவே நாகரீக மோகத்திற்கு ஆட்பட்டவர். கணவனின் சம்மதம் கிடைக்காமையினால் கொஞ்சகாலம் விவாகரத்துக் கிடைக்காமல் காலம் இழுபட்டாலும் இறுதியில் மனைவியின் பலத்த வற்புறுத்தல் காரணமாக விவாகரத்திற்கு அவர் சம்மதிக்க, விவாகரத்தும் கிடைத்தது. அதன் பின்னர், அவர் வேறு ஒரு பெண்ணைத் திருமணம் செய்து குழந்தைகளையும் பெற்றுக் கொண்டு நல்ல வசதியாக வாழ்ந்து வருகின்றார்.
இவர்கள் பிரச்சனையில் சமரசம் செய்து தோற்ற ஒரு நண்பரை, ஏற்கனவே விவாகரத்துப் பெற்ற நண்பரின் மனைவி சந்தித்தார். அந்தப் பெண் கண்ணிருடன் சொன்னார்: ‘'இப்படி, நான் முட்டாள்தனமாக அவசரப் பட்டுவிட்டேன். அவர் மறுத்துங்கூட நான்தான் விவாகரத்துப்

பருத்தியூர் பால. வயிரவநாதன் 51
பெற முனைந்தேன். நான்தான் அறிவிழந்துவிட்டேன். அந்த நேரத்தில் இவர் எனக்கு நாலைந்து அடி அடித்துத் திட்டித் திருத்தி இருக்கலாம். எனது செயலைக் கண்டிக்க வேண்டிய முறையில் கண்டிக்கத் தவறிவிட்டார். இன்று நான் தனித்துவிட்டேன். எனது பெண் பிள்ளையும் வளர்ந்து வருகின்றாள். எனது பிள்ளைக்கு இவர் வாரி, வழங்கி வந்தாலும் இனிமேல் நான் எப்படி ஒன்றாக வாழமுடியும்? அவர் ஏற்கனவே எனது தவற்றினால் திருமணம் செய்து பிள்ளைகளையும் பெற்றுவிட்டார். எனது எதிர்காலம் என்ன? ஒரு தகப்பன் துணையின்றி வாழ வேண்டி ஆகிவிட்டதே?’ என்றார். அவசரபுத்தியுடைய பெண்கள் இத்தகைய வாழ்க்கையை அறிந்தேயாகவேண்டும்.
விவாக விலக்கு வாழ்க்கையின் இழப்பு அல்லவா?
ஒரு சுமாரான தோற்றமுள்ள மனைவியைப் பற்றி ஒருவர் பெருமையாக இப்படிச் சொன்னார். ‘இந்த உலகில் எனது மனைவிதான் அழகானவள், சிறந்தவள். இவளைப் போல் ஒருத்தியும் இல்லை’ என்றதும் நான் சிரித்தேன். அவர் தொடர்ந்தார். ‘ஏன் என்றால், நான் அவளை விரும்புகின்றேன். மனதார நேசிக்கின்றேன். என்னைப் புரிந்தவள், என்மீது பாசம் கொண்டவள். எனவே என் மனைவிதான் அழகாகவும் நல்லவளாகவும் தெரிகின்றாள்' என்றார்.
"உண்மை அன்பு, பாசம் உள்ளத்தில் மேலோங்கினால், காதல் மனைவி கட்டழகிதான். ஆரவாரமான அழகிகள் குணம் நிரம்பியவர்களாக

Page 40
52 வாழ்லிஸ்ல் வசந்தங்கள்
இருந்தால் சரி, இல்லாவிட்டால், வாழ்க்கை என்னாவது? ஆணும், பெண்ணும் சுய ஆதிக்க உணர்வுடன் வாழ நினைப்பதும், தங்கள் நிலைதான் உயர்வானது என்றும் கருதி வாழ்ந்தால், எக்காரணங் கொண்டும் இவர்களிடையே பிணைப்பு ஏற்ப்டாது. ஒருவரிடம் ஒருவர் அக்கறை செலுத்தினால்தான் அவர்களுக்கிடையே கெளரவமான, எண்ணங்கள் பரிமாறப்படும். என்னுள் அவள், அவளுள் நான் என்கின்ற உணர்வுகூட, இவர்கள் மற்றவர் மீது செலுத்தும் அக்கறையிலேயே தங்கி உள்ளது. இங்கு மமதைகள் மாயமாக அடிபட்டு மாய்ந்து போகும்.
பிரிந்துபோனவர்கள் பிரச்சினைகள், பிரிந்தவுடன் முடிந்து விடுவதில்லை. இது அவர்களது குடும்பங்கள் சார்ந்த குழப்பமான பிரச்சினையாகி, தொடர்ந்து தலைமுறை, தலைமுறைக்கான தீராத நோயாகப் பரவி விடுகின்றது. இவை மானப்பிரச்சினையாகி அவமானப்பட்டுப் போகின்றனர். குடும்பங்களைப் பிரிக்க முற்பட்டவர்கள், இவர்கள் பிரிந்த பின்னர் கேலி பேசுவார்களே ஒழிய, தங்களின் அடாத செயலுக்கு ஆதாரமாக மேன்மேலும் இவர்கள் பற்றி குற்றங்களையே, சேற்றை வாரி வீசுதல் போல் வீசுவார்கள்.
‘எல்லாமே தலை எழுத்து’ என்று விலைமதிப்புள்ள குடும்ப வாழ்வைக் குழப்பலாமா? ஏதாவது குடும்பங்களில் குழப்பங்கள் ஏற்பட்டால், காலங்கள் நாளடைவில் குற்றங்களை மறந்துபோகச் செய்துவிடும். இதனாலேயே குடும்ப நீதிமன்றங்களில் விவாகரத்து வழக்குகளில் உடனடியாக விவாக விலக்குச் செய்து தீர்ப்பு வழங்கி விடுவதில்லை. இவர்களுக்குப் புத்திமதி கூறி, போதிய கால

பருத்தியூர் பால, வயிரவநாதன் 53
அவகாசங்கள் வழங்குகின்றார்கள். என்ன வினோதம் என்றால் மெத்தப் படித்தவர்கள் கூடச் சாதாரண பிரச்சினைகளை நீதிமன்றங்களின் முன்கொண்டு வருவதாகும். உலகிற்குப் புத்திமதி கூறத்தக்க வல்லவர்களே, குடும்பப் பிணக்கை அணைக்க முடியாமல் நீதிமன்றத் தீர்ப்பிற்காகக் காத்திருப்பதும், வாழ்க்கையைக் கிழித்துக் கூறாக்க நாள் கேட்டு நிற்பதும் எவ்வளவு பரிதாபம் தெரியுமா?
இன்று குடும்பப் பிணக்குகளைக் கோமாளித்தனமாகச் சித்திரிக்கும் திரைப்படங்களும், கதைகளும், படிப்படியாகப் பார்ப்பவர் மனதில் குடும்பம் என்கின்ற உன்னதமான அமைப்பு பற்றிய மாறுபாடான கருத்தைத் தோற்றுவித்துவிடுகின்றன. கற்பு, ஒழுக்கம் பற்றி கண்டபடி கதை எழுதுகின்றார்கள். சில கதைகளில் குடும்பங்களில் “மன்னித்தல்’ என்ற வார்த்தைக்கே அர்த்தம் இன்றி, பகை, பழிவாங்கல்தான் சரியான பாதையாகச் சித்திரிக்கப்படுகின்றது. குடும்பப் பிணைப்பை, கணவன் க் மனைவி உறவைப் பலமாக்கச் செய்ய, புதிய தம்பதியினருக்கு நல்ல வரைபடத்தினை முன் வைக்க வேண்டும் அல்லவா?
பிரிவதுதான் தீர்வு என்றால், காலப்போக்கில் உங்கள் மனங்கூட உங்களைவிட்டுப் பிரிந்து, உங்களை வேற்று மனிதனாக்கி நிர்வாணமாக்கும். இந்தத் தனிமைப் பிணி எங்களை இயங்க வைக்க விடாது. மனதைத் தொலையவிட்டால், நீங்கள் பாலைவனத்தில் மிதக்கும் ‘தூசு ஆவீர்கள். மனசு இனிமையாக இருந்தால்தான் எம்மைச் சுற்றி வசந்தங்கள் வட்டமிடும். புதுப் புஷ்பங்கள்

Page 41
54 வாழ்விஸ்ல் வசத்தங்கள்
முத்தமிடும். குடும்பத்தை விட்டால் எல்லாமே விலகிச் செல்லும். மாயமான, சூன்ய வலையில் விழுதல் போன்ற உணர்வு ஏற்படுவதுடன், பலவீனமான, பய உணர்விற்கும் ஆளாவோம். உலகியல் ஈடுபாட்டிற்கு குடும்பப் பிணைப்பு மிகவும் அவசியமாகின்றது.
திருமண உறவின் மூலம், துணைகள் ஏற்படுகின்றன. எங்கு போய் வந்தாலும் வீட்டினுள் வந்து ஆறுதல் தேடவே அனைவரும் விரும்புவர். அது கிட்டாத போது என்னதான் வாழ்க்கை என்றாகி விடுகின்றது. சமூக ஏன், உலக வளர்ச்சிக்குக்கூட ஆண், பெண் இருபாலரின் ஒன்றிணைந்த குடும்ப வாழ்வு ஒரு வலுவான சக்திதான் என்பதில் சந்தேகமில்லை.
பரஸ்பர அன்புப் பரிமாற்றம் - இதனால் ஒருவர்க்கொருவர் ஏற்றத்தாழ்வு அற்ற முற்று முழுதான பிரிக்கவொண்ணா ஆண், 6ույ6ծor உறவு திவ்யமானதொன்றாகும். புரிந்துணர்வும், விட்டுக் கொடுத்தலும் அன்பினை ஈந்து கொள்வதால் மட்டுமே சாத்தியப்படும். இந்த அடிப்படை விஷயம் இல்லாதவிடத்து நான், எனக்கு என்கின்ற கீழ்த்தரமான, சங்கட நிலைக்கு ஆளாகிச் சீரழிய வேண்டியதுதான்.
திருமணத்தில் ஆரம்பமாகும் பந்தம் ஜீவன்கள் பிரிந்தாலும் இந்த அன்பு வாழ்க்கை, பதிவுகளாகப் பதிவு செய்யப்பட்டு வரப்போகும் சந்ததிக்கு ஆசான்களாக, வாழ்வியல் பற்றி சொல்லிக் கொண்டேயிருக்கும்.
米

பருத்தியூர் பால. வயிரவநாதன் 55
fv
(Mഭ്ര
எவரையுமே பகைமையுணர்வுடன் நோக்கலாகாது. புறம்
கூறுதல் என்பதே எமது உள்ளத்தின் மறைமுகமான வக்கிரபுத்திதான். நல்ல நோக்கத்துடன் ஒருவருக்குப் புத்தி சொல்லுபவன் புறம் கூறமாட்டான். நெஞ்சில் உரமும் இன்றி நேர்மைத்திறனும் இல்லாதவர்களே கண்டபடி பேசி கண்டபடி நடந்து கொள்வர். ஒருவர் எம்மீது வைத்துள்ள நம்பிக்கை நாம் பேசும் புறம் கூறுதலினால் அந்த எண்ணம் சிதைவடைந்து விடுமன்றோ? ஒருவர் மனங்களை நோகடிப்பதில், எமக்கு என்ன சந்தோஷம் வந்துவிடப் போகின்றது.
புறங்கூறுதல் அறம் ஒறுத்தலாகும். மனத்தினை உறுத்துவதும்கூட. இது ஈனச்செயல் மட்டுமின்றி கோழைத்தனமான கொடுஞ்செயலுமாகும். நெஞ்சில் கறையும், பிறரிடம் சதா குறைகளைத் தேடுவதும் இவர்களின் பணி. முகத்திற்கு நேரே பேச

Page 42
56 வாழ்லிஸ்ல் வசந்தங்கள்
அச்சப்படுபவர்கள் முதுகுக்குப் பின்னால் முக்காடிட்டுப் பேசலாமா? பூனை கண்களை மூடி திருட்டுத்தனம் செய்தல் போல, தமது குருட்டுச் செயல்களை ஏனையவர்கள் தெரியாமல் இருக்கின்றார்கள் என மனப்பால் குடிக்கின்றனர். இவர்கள் பிறரிடமிருந்து காலப்போக்கில் காலாவதியாகிவிடுவது மட்டுமல்ல. தனிமைப்பட்டு தவித்துச் சிறுமைப்பட்டுப் போகின்றார்கள்.
“இன்று யார் யாரையோ எங்கள் முன்னிலையில் திட்டுகின்றனர். நாளை, வேறு நபர்கள் முன்னிலையில் எங்களையும் இதே மாதிரிப் பேசமாட்டார் என்பது என்ன நிச்சயம்” என்று புறம் கூறுபவர் பற்றி பலர் பேசிக் கொள்ளுவார்கள். எந்தவிதமான காரணமுமின்றி கூடச் சிலர் புறம் கூறுவது அதிசயமான ஒன்றேயாகும். மனதில் பழைய பகை, கோப, தாபம் ஒருபுறமிருக்க, எந்த விதத்திலேயும் சம்பந்தப்படாதவர்களை முகமறியாது பகையுணர்வுடன் ஏசலாகுமா?
பொறாமை, வஞ்சக உணர்வு, இயலாமை, காழ்ப்புணர்ச்சி போன்ற காரணங்களால் மட்டுமல்ல; சிலர் பொழுதுபோக்கிற்காகவும் கண்டபடி பேசித் திரிவார்கள். எந்தவிதமான கோபமும் இன்றி வாயில் வந்த வார்த்தைகளைக் கொட்டுவது இவர்களது சுபாவம். இவர்களிடம் " பக்குவமாகப் பேசி இத்தகைய குறைபாடுகளைக் களைந்துவிட முடியும்.
“அதோ போகின்றானே அவனை எனக்குத் தெரியாதா? என்னிடம் கைநீட்டிப் பிழைத்தவன்தானே. இப்போ என்ன பெரிய மனுஷன் ஆகிவிட்டானா?” என்று கண்டபடி புளுகுவார்கள். இவர்கள் கூற்றில் உண்மை

பருத்தியூர் பால. வயிரவநாதன் 57
இருக்காது. பிறரிடம் மேலானவர்களாகக் காட்டுவதற்கு இப்படிப் பேசுவார்கள். சிலவேளை ஏதாவது அற்ப உதவிகளை யாருக்காவது செய்துவிட்டு, அதன் பிரதிபலன் தமக்குக் கிட்டாதுவிட்டால் இப்படிப் பேசித் தீர்ப்பார்கள்.
எனவே, உதவி பெறுபவர்களிடம் அவதானமாக இருக்காதுவிட்டால், இத்தகைய எதிர் விளைவுகளுக்கு முகம் கொடுக்க வேண்டி நேரிடலாம். அத்துடன் எவர் மூலம் என்ன பயன்களைப் பெற்றாலும் அவர்கள் திருப்திப்படும் வண்ணம் ஏதாவது நல்ல வார்த்தைகளையோ, அல்லது சமயம் வரும்போது திருப்பி நல்ல உதவிகளையோ செய்துவிட்டால், இத்தகைய அவதூறுகளை எவரும் சந்திக்க நேராது அல்லவா? குணம் அறிந்து கொள்ளது உதவி கோரக்கூடாது.
ஒருவர் பற்றிய விமர்சனங்களைக் கண்டபடி தூவிவிட்டு, சம்பந்தப்பட்டவர் ஏதேச்சையாக எதிர்ப்பட்டதுமே அவர் முன் சாஸ்டாங்கமாக விழுந்துவிடுதல் சிலரது அருங்கலையாக இருக்கின்றது. “உங்களைத் தெரியாதா எனக்கு கண்ட நாய்கள் குரைக்கும். நீங்கள் பயப்பட வேண்டாம் ஐயா, நான் இருக்கின்றேன்’ என்று கூறுபவர்கள், தம்மையே கேவலப்படுத்துபவர்கள் ஆவர். நன்றிக்குரிய பிராணியையே, தவறாக உதாரணம் காட்டுவது, நன்றி கெட்டதனமாக நடப்பது ஒன்றும் இவர்களுக்குப் புதிதல்ல. மனம் வக்கரித்துப் போனவர்களிடம் பெரும் குணம் கொண்ட இயல்பை எதிர்பார்க்கலாமா? ஆதாயம் தேடுபவர்கள், ஆதாயம் பெற்றும் கூட நாராசமாகப் பேசினால் சமூகத்தில் சரி ஆசனம் இவர்களுக்கு எப்படிக் கிடைக்கும்?

Page 43
58. வாழ்விஸ்ல் வசந்தங்கள்
அடிமனதில் வஞ்சனையுடன் மறைமுக அம்புகளைப் பாய்ச்சுபவர்கள், எந்தப்பக்கமும் சேர்த்துக் கொள்ளப்படாத அந்தரத்தில் தொங்கும் நிலைக்கே ஆளாவர்.
சரி, அடுத்த விஷயத்திற்கு வருவோம். எல்லோராலும் எல்லாமே சாதிக்கமுடியும் என்கின்ற சிந்தனைகளை வளர்க்காதுபோனால், இயலாமை என்கின்ற வீண் பிரமைக்கே உட்படுகின்றனர். இதற்கு என்ன ஒளடதம்? யாரையாவது திட்டினால் தமக்குத் தீட்டுப்போய் விடும் என்பதுபோல நடந்தால் வெற்றி கிட்டிவிடுமா? மாறாக ஆதங்கமும், மனக்குழப்பம் மட்டும்தானே மிஞ்சுகின்றன? தங்களது செய்கையினால் ஏனையவர் மனம் வெதும்பவேண்டும் என எதிர்பார்க்கின்றார்கள். இதன் முதற்படியாக ஏதாவது குற்றச்சாட்டு வதந்திகளை விதைக்க முற்படுகின்றார்கள். இதனைச் சட்டை செய்யாமல் போனால் இவர்களுக்கு அறவே பிடிக்காது. தங்கள் வார்த்தைகளால் மற்றவர்கள் G3&T fre e60Du வேண்டும், துன்பப்படவேண்டும் என மனதார விரும்புகின்றார்கள். என்ன விந்தை மனிதர்கள்!
என்றாலும்கூட, பெரியோர்கள் இவர்களைக் கூட மன்னித்து விடுகின்றனர். ஒருவர் மீது வீசப்படும் வார்த்தைகளுக்கு, வீசுபவனே சொந்தக்காரனாவான். அதனை ஏற்காமல் விட்டாலும் சரி, கேட்டுத் துன்பப்பட்டாலும் சரி - வார்த்தைப் பிரயோகங்களுக்கு, பிரயோகித்தவனே பொறுப்பானவன். இனிய வார்த்தை இதயத்திற்குத் தெம்பூட்டும்; அன்பு ஊட்டும். கண்டபடி பேசுபவன் தனது இதயத்தைத் தானே துண்டாடுகின்றான். எனவே புறம்

பருத்தியூர் பால. வயிரவநாதன் 59
கூறுபவர் பேச்சிற்காக நாம் வருத்தப்படுதல் அறிவீனமாகும், எந்த வகையிலும் காரணப்படாமல், ஒருவர் கூற்றிற்காக மட்டும் வருந்துதல் என்பது துன்பத்தைத் தேடிக் கொள்வது போலாகும் அல்லவா?
நீங்கள் முன்னேறுவது சிலருக்குப் பிடிக்காமல் போகலாம். ஒருவரை அடித்து வீழ்த்துவதிலும் பார்க்க, வார்த்தைகளுக்கே வலிமை அதிகம் என்பார்கள். இந்த உத்தியை அறிந்தவர்கள் வெகு சாமர்த்தியமாகக் கையாளும் தந்திரமாகக் கூடப் புறஞ்சொல் பயன்படுத்தப்படுகின்றது. எப்படியும் தங்களைப்பற்றி வெளியே சொல்லவேண்டாம் என்று கூறிவிட்டே, ரகசியம் சொல்வதுபோலக் குறைகளை அடுக்கி விடுகின்றனர். ஆதாரம் பற்றி ஆதாயம் தேடும் இந்த ஆத்மாக்கள் சிந்திக்க வேண்டியதுமில்லை. சோடனை வார்த்தைகளைச் சுதந்திரமாகப் புனைவார்கள். இதில் குறிப்பிட வேண்டியது ஒன்று உண்டு. இத்தகைய கதைகளைச் சுவாரஸ்யமாகக் கேட்டுக் கொள்ளப் பிரியப்படுபவர்களின் தொகையும் மிக அதிகமாக இருக்கின்றது. ஒருவர் மீது அபாண்டங்களை அள்ளிவீசச் சந்தர்ப்பம் பார்ப்பவர்களுக்கு இத்தகையோரின் நடவடிக்கைகள் ரொம்பவும் பிடிக்கும். எனவே இதுபற்றி எவரும் அலட்டிக் கொள்ளாமல் இருப்பதே புத்திசாலித்தனமானதாகும்.
இன்னும் ஒரு விஷயம், சிலர் உண்மையாகவே தமக்கு ஒருவர் மீது ஏற்பட்ட பாதிப்பு காரணமாக உணர்ச்சிவயப்பட்டு யாரிடமாவது சொல்லி முறையிடும் சந்தர்ப்பங்களும் வருவதுண்டு. இதனை நாம் புறந்தள்ளிவிட முடியாது. எப்படியும் இத்தகைய

Page 44
60 வாழ்விஸ்ல் வசத்தங்கள்
பிரச்சனைகளை சமாதான உணர்வுடன்தான் தீர்த்துக் கொள்ளவேண்டும். நியாயபூர்வமான ஒருவரின் மனத்தாங்கல்களை களைய முனைதல் மனிதநேயமாகும். அதுவும் எங்கள் மீது தவறுகள் அல்லது தப்பு அபிப்பிராயங்கள் ஏற்பட வாய்ப்புகள் அளித்தலாகாது. ஒருவரின் புறம் கூறும் தன்மைக்கு நாங்கள் காரணமாக - கருவியாக இருக்கக்கூடாது. ஒருவரின் கோபத்தை அதிகரிக்கச் செய்வதற்கு முனைதல் என்பது எங்களுக்கு நாமே இட்டுக்கொள்ளும் சாபமாகவும் அமையலாம். ஏன் எனில் நியாயபூர்வமாக ஒருவன் கோபப்பட்டு அதனை அவன் வெளிக்காட்டாது, உள்ளுக்குள் கோபிக்க வைத்தா குதுகலம் அடைவது? தனக்குள் கோபம் கொள்வதை ஆரம்பத்திலேயே இல்லாதொழிக்கச் செய்வதே வல்லவனின் திறமையாகும். கோபம், பொறாமை, ஆற்றாமைதானே எந்தப் பிரச்சனைகளையும் உருவாக்குகின்ற மூலாதாரமாகின்றன.
எனவே, தவறான செய்கைகளை இனங்கண்டு களைவதே சமூகக் கடப்பாடாகும். நடப்பதனைப் பார்ப்பதுவே எமது தொழிலாகக் கூடாது. எவரையும் பகைத்தோ, எவரையும் விலக்கி வைத்தோ சமூகம் வாழ நினைக்கக் கூடாது. எதிர் எதிரே எதையும் கண்டு பேச, எதிர்கொள்ளத் துணிச்சலையே துணிவாக்குவோம்.
துணிச்சல் மிக்க எவரும் புறம் சொல்லமாட்டார்கள். சமூகத்தை மதித்தவர்களாகவே இருப்பர்.
米

பருத்தியூர் பால. வயிரவநாதன் 61
நேரங்களை வீணடித்தல் கடமைகளைச் சாகடித்தலேயாகும். பிரபஞ்ச இயக்கம் ஒரு கணப்பொழுது காலதாமதமானால் என்ன விளைவு ஏற்படும் தெரியுமா? வாழ்க்கையிலும் நாம் தொலைக்கும் காலங்கள் எங்களை அலங்கோலமாக மாற்றிவிடும். திட்டமிட்டுக் குறித்த நேரங்களில் குறித்த அலுவல்களைக் கவனிப்பவர்கள் வாழ்க்கையிலும் வெற்றி பெற்றுவிடுகின்றார்கள். நாம் செய்யும் 5 IT GR) விரயங்கள் உலகத்தையே பாதிப்புக்குள்ளாக்கும் என்பதனைப் புரிந்து கொள்ளுங்கள்.
வீட்டிற்குள் நீங்கள் அவசரம், அவசரமாக நுழைகின்றீர்கள். உங்களை அங்கு, வண்ணமயமான அழைப்பிதழ் ஒன்று வரவேற்கின்றது. எடுத்து விரித்துப் படிக்கின்றீர்கள். உங்களுக்கு வேண்டப்பட்ட பிரமுகர் ஒருவரினால் அனுப்பப்பட்ட வரவேற்பு அழைப்பு இதழாகும். முன்பக்கத்திலேயே கூட்ட ஆரம்பம்

Page 45
62 வாழ்விஸ்ல் வசந்தங்கள் அன்றைய தினத்தில் உள்ளதாகவும், தொடங்கும் நேரம் சரியாக ஐந்து மணி ஒரு நிமிடம் எனத் துல்லியமாகக் காட்டப்பட்டதுடன், அழைப்பிதழின் அடியில் கூட்டம் சரியான நேரத்தில் ஆரம்பமாக உள்ளதால் அன்பர்கள் முன்னதாகவே வந்து ஆசனத்தில் அமருமாறும் எச்சரிக்கை விடுவதுபோல் ஒரு குறிப்புக் காணப்படுகின்றது. உடனே நீங்கள் என்ன செய்வீர்கள்?
அரக்கப்பறக்க, வீட்டிற்கு வந்த கையோடு கூட்டம் நடைபெறும் மண்டபத்திற்குச் செல்கின்றீர்கள். அங்கே உங்களுக்கு எரிச்சலும், மன உளைச்சலுமான காட்சிகளைக் காணுகின்றீர்கள். கூட்டத்திற்கு எவருமே வந்து சேரவில்லை. ஏன் கூட்ட அமைப்பாளர்கள் எவருமே அங்கு இல்லை. ஒலி பெருக்கி அலுவல்களைக் கவனிப்பவர் மட்டும், அசட்டுச் சிரிப்புடன் உங்களை வரவேற்பதுபோல் பார்த்து அப்பால் போய்விடுகின்றார்.
இன்றைக்கு, பொதுவாகப் பெரும்பான்மையான நிகழ்ச்சிகள் இந்த லட்சணத்தில்தான் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. சற்று நேரத்தில் பொதுமக்கள் சேர்ந்தும் கூடத் தலைவர் இன்னமும் வந்து சேரவில்லை. அப்படி, இப்படி எனக் கதைபேசி ஒருவாறாகக் கூட்டம் ஆறேகால் மணிக்கு ஆரம்பிக்கின்றது.
சரி, இனி எமக்கு ஏற்பட்ட நேரவிரயம் பற்றி ஆராய்வோம். கூட்டத்திற்கு அன்று கிட்டத்தட்ட ஐந்நூறு பேர் வந்திருப்பார்கள். குறைந்தது சராசரியாக ஆளுக்கு அரைமணித்தியாலங்கள் நேர தாமதத்தால் ஏற்பட்ட நேர விரயங்கள் இருநூற்று ஐம்பது மணித்தியாலங்கள் ஆகும்.

பருத்தியூர் பால, வயிரவநாதன் 63
இவை செலவழிந்தது செலவழிந்ததுதான். இவைகளை ஈடு செய்யவே முடியாது. இந்த நேரத்தை அநியாயமாகக் கெளவியவர்கள், இதற்கு என்ன பதில் சொல்லுவார்கள்? இதுபற்றி ஏதேனும் தெரிந்தும் மீண்டும் மீண்டும் இந்தத் தவறினைத்தான் செய்து கொண்டும் இருப்பர். நேரத்தை வீணடித்தல் கடமைகளைச் சாகடித்தலாகும்.
கோடிக்கணக்கானவர்கள் வாழுகின்ற இந்தப் பூமியில் தலைக்கு ஒருவர், சில செக்கன்கள் தங்களது நேரத்தினைப் பின்னடிப்பார்களேயானால், எத்தனை தூரம் இவர்கள் வாழ்க்கை பின்னால் தள்ளப்பட நேரிடும் என்பதை உணர்வோமாக. தனி ஒருவனின் கால இழப்புக்கள், விலை கூறமுடியாத சொத்து இழப்பிற்கும் மேலானவையே. இழக்கப்படும் மொத்த நேரங்களைக் கணக்கீடு செய்கின்றபோது, இந்தப் பூமி அநாவசியமாக இவர்களைத் தூக்கிக்கொண்டு ஏன்தான் கஷ்டப்படுகின்றதோ என எண்ணத்தோன்றும். ஏன் பூமிக்குப் பாரமாக இருக்கின்றாய்’ என சொல்லப்படுவதை நாங்கள் கேட்பது இல்லையா?
சூரியனைச் சுற்றி வருகின்ற கிரகங்களும், துணைக் கோள்களும் ஒரு குறித்த நேரப் பிரகாரமே ஈர்ப்புச் சக்தியினால் சுற்றி வருகின்றன. இந்தப் பிரபஞ்சம் பூராவுமே இந்த மாதிரியே, ஒரு இம்மியளவு பிசகாமல் காரியங்கள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. இவைகள் ஒன்றுக்கொன்று பராக்குப்பார்த்து, ஒரு செக்கன் காலதாமதம் செய்தால், கண் இமைப்பொழுதில் என்ன நடக்கும்? கிரகங்கள் மோதுவதை கற்பனை செய்து பார்க்க, மனித மூளைக்கு என்ன சக்தி இருக்கின்றது?

Page 46
64 வாழ்விஸ்ல் வசத்தங்கள்
இயற்கை நிகழ்வுகள் எல்லாமே சரிவர, எமக்கு இசைவாக நடக்கவேண்டும் என எண்ணும் நாங்கள், ஏன் சரியாக, முறையாக, செயல்களை ஆற்றுதற்குப் பின்னடிக்கின்றோம்? விதைகள் முளைப்பதும், வளருவதும், பருவகால மாற்றத்திற்கேற்ப பூச்சி, புழு, பறவை இனங்கள்கூட சரியான நேரக் கணக்கீட்டின்படியே ஒழுகி வருகின்றன. இவை முறை தப்பி வாழுவதுமில்லை. நாங்கள் மட்டும் பதினெட்டு வயதில் செய்ய வேண்டியவற்றை, பத்து வருடம் பிந்திச் செய்தால் என்ன, என எண்ணலாமா?
சாதாரணமாக, கல்யாண வைபவங்களில்கூட என்ன நடக்கின்றது. திருமணத்திற்கு முகூர்த்தம் வைக்கின்றார்கள். எந்தக் கருமங்களையும், அந்த அந்த நேரத்தில் செய்ய வேண்டும் என்பதற்காக நேரங்களை ஒதுக்கீடு செய்தார்கள். ஆனால் எம்மவர்கள், வாழ்க்கையின் முக்கிய நிகழ்வுகளான, திருமணங்களில் கூட முகூர்த்தம் பிந்தியே சகலதும் சகட்டுமேனிக்கு நடக்கின்றது. ஆசாரத்தை மதிப்பவர்களே, நேரத்தை நினைப்பதில்லை. கண்டம் விட்டுக் கண்டம் பாயும் வெட்டுக்கிளி, பறவைகள் கூட சரியான நேரத்தில் தங்கள் இடத்தைச் சென்றடைகின்றன. மனிதன் மட்டும், தூங்கி எழுந்து சென்றுபோன பேருந்தினை இனிமேல் நாளை பிடிக்கலாம் என்று கூறி மறுபடி புரண்டு படுக்கின்றான். என்ன ஐயா இந்த மனுஷன்?
குறித்த நேரத்தில் காரியம் நடக்காமல் பாதிப்படைந்தவர்கள், அடுத்தவரைக் குறை கூறுவார்கள். ஆனால் இதே தவற்றினைத் தங்களே செய்வதுதான்

பருத்தியூர் பால. வயிரவநாதன் 65
வேடிக்கையானதாகும். இன்னும் ஒரு சாரார் இருக்கின்றார்கள். தங்களது கருமத்தில் மட்டும் குறியாக கருமங்களைச் சரியான நேரத்தில் செய்து முடித்து விடுவார்கள். ஆனால் பிறர் விஷயம் என்று வரும்போது மட்டும், ஏனோதானோ என எண்ணி ஒழுங்கைக் கடைப்பிடிக்க மாட்டார்கள். இவர்கள் பிறரது காலங்களை மதிக்காமல் விடுவதால், தமக்கு என்ன விரயம் வந்துவிட்டது என எண்ணினாலும், இவரை நம்பியவர்களுக்கும், அவரோடிணைந்த மற்றையவர்களுக்கும் ஏற்பட்ட சிரமங்களுக்கு யார் பொறுப்பு கூறுவது இன்று தனிமனிதனின் தாமதங்களே பலரையுமே பாதிக்கின்றது.
முகாமையாளர் தனது நிறுவனத்திற்கு ஒழுங்காகக் குறித்த நேரத்திற்கு வரத் தவறினால் நிர்வாக யந்திரம் சீராக ஓடுமா? பணியாளர்கள் அனைவருமே அவரையே பின்பற்றி நடந்தால், யார், யாரைக் கண்டிப்பது? சேவைப் பெறுமான நஷ்டங்கள், உடனடியாகத் தெரிவதில்லை. நேரத்தை வீணடித்துப் பின்னர் வேலை குவிந்துவிட்டது எனக்கூறும் அலுவலர்களின் காரணங்களை ஏற்க முடியாது. வீட்டிற்கும், நாட்டிற்கும், எல்லாவற்றிற்குமே காலத்திற்கேற்ற, குறித்த செயல்கள் ஒழுங்காகவே செய்யப்பட வேண்டும். அலுவலக வேலை நேரத்திற்கு ஒதுக்கிய நேரத்தில், வேறு கருமங்கள் பார்க்க நேர்ந்தால் ஒழுங்குகளே செயல் இழந்துவிடும்.
இதேபோலவே, வீட்டில் மனைவி, மக்களுக்காக ஒதுக்கிய நேரத்தில் அவர்களுக்குரிய பணிகளையே செய்ய வேண்டும். இன்று பல குடும்பங்கள் குழம்பிப் போவதற்கு, சதா குடும்பங்களைப் பாராது அலுவலகப்

Page 47
66 வாழ்விஸ்ல் வசத்தங்கள்
பணியுடன் இதர பணிகளில் மூழ்குவதும் ஒரு காரணமாகும். அன்பிற்காக ஏங்கும் மனைவி, பிள்ளைகளுக்கு அதனை வழங்காமலும், அதேபோல குடும்பத்தைக் கவனிக்க முடியாமல் இதர சமூகப் பணிகளில் மட்டும் ஈடுபடும் பெண்களால் ஏற்படுகின்ற பிரச்சினைகளையும் கதைகளில் படித்திருக்கின்றோம்.
திட்டமிட்டபடி கருமங்களை ஆற்றுவதற்காகவே தொழில் அதிபர்கள், அரசியல்வாதிகள் போன்றோர் தமக்கென உதவியாளர்களை வைத்துக் கொள்கின்றார்கள். இன்ன நேரத்தில் இன்ன வேலைகளைச் செய்து முடிக்க இவர்கள் தகுந்த முறையில் வழிகாட்டுகின்றார்கள். நேர அட்டவணை மூலம் அலுவல்கள் சீராக்கப்படுகின்றன. ஒரு விமானம் பறந்து கொண்டிருக்கின்றது. அதன் இயந்திரத்திற்கு விமானி கட்டளையிடுமாற்போல் செயல்பட்டுக் கொண்டிருக்கின்றார். இயந்திர உள் உறுப்புக்களும், வினாடி பிசகாமல் இயங்கிக் கொண்டிருக்கின்றன. தவிர, விமானிக்குத் தரையில் இருந்து கட்டளையிடும் செயலகம் மூலமும், பொருத்தமான கட்டளைகள் இடப்பட்டவண்ணம் இருக்கின்றன. இவைகள் யாவும் ஒழுங்காக இருந்தால்தான் விமானம் சீராகப் பறக்கும்; பயணமும் சிரமமின்றி நடக்கும்.
இதுபோலத்தான், உலக இயக்கமும், நாங்கள் எமக்கென கால அட்டவணைகளை உருவாக்க வேண்டும். நாங்கள் மட்டுமல்ல, எங்களைச் சார்ந்தவர்களும் அருகே இருக்கின்றார்கள். இசைவாக, ஒருமித்துச் செயல்கள் நடந்தால்தான் நினைத்த கருமங்கள் நன்றாக நடக்கும்.

பருத்தியூர் பால. வயிரவநாதன் 67
நேரப் பெறுமதியை அறிந்தவர்களே மேதைகள் ஆனார்கள். காலத்தைக் கரைத்தவர்கள், கலங்கிக் கரைந்து போவார்கள். குறித்த காலத்திற்கேற்ப பயிரை பராமரிக்காதுவிட்டால் பட்டுப்போகும். எங்களை நாம் பராமரிப்பது என்பது, காலதாமதமின்றியும், குறித்த நேரத்தில் குறித்த பணியினை ஆற்றுவதிலும் தங்கி இருக்கின்றது.
குறித்த வேலையை ஏன் செய்யவில்லை என்றால் ஐயய்யோ. நான் மறந்துவிட்டேன் என்கின்றார்கள். மறதிக்காரர்கள் தங்களுக்கென குறிப்பேடுகளை வைத்துக் கொண்டால் என்ன? சிலர் தமது கையோடு சின்னக் குறிப்புப் புத்தகம் வைத்திருப்பார்கள். நேர சூசியைச் சின்னவர்கள்தான் வைத்திருக்க வேண்டும் என்பதில்லை. மறதி, வயது வந்தவர்களுக்கே வரக்கூடியது என்பதால், இவர்கள்தான் உடனுக்குடன் செய்யவேண்டிய வேலைகளை என்ன நேரத்தில் செய்யவேண்டும் எனக் குறிப்பு எடுத்து வைக்க வேண்டும். நேரப் பெறுமதியை உணர்ந்து கொண்டால், சில நல்ல நடைமுறைகளைக் கடைப்பிடித்தே ஆகவேண்டும். சொன்ன சொல் பிரகாரம் உங்கள் மூலம் பெறப்படும் சேவைகள், நீங்கள் செய்யும் சேவையினைவிட இரண்டு மடங்கு மனநிறைவினைத் தரவல்லது. இதன் பொருட்டு ஏற்படும் திருப்தி நன்மைகளைப் பெற்றுக் கொள்பவரைவிட, நன்மையளிக்கின்ற உங்களுக்கே கூடுதலாகக் கிடைக்கும் என்பதையறிக.
நீங்கள் ஒரு செயலை முடிக்கக் காத்துக் கிடப்பதும், இதேபோல் நீங்கள் மற்றையோரைக் காக்க வைப்பதும்

Page 48
68 வாழ்விஸ்ல் வசத்தங்கள்
கூடாது. குறித்த நேரத்தில் பிரசன்னமாயிருந்து பூர்த்தியாக்கப்படும் கருமங்கள், எங்கள் எதிர்பார்ப்புகளை விட மேலதிகமானதாகவே இருக்கும். எமக்குப் பின்னே ஆயிரம் வேலைகள் இருக்கின்றன. அனைத்துமே உங்கள் மூலம் பயன்பெற உரித்துடையவை. எனவே எதனையுமே தட்டிக் கழிக்காமல் இருக்க வேண்டுமேயானால், இருக்கின்ற வேலைகளை, உடனுக்குடன் குறித்த நேரத்தில் ஆரம்பித்து விடுங்கள். இதுதான் ஆரோக்கியமான நடைமுறைக்கு வழிசமைக்கும். ஒருவனுக்கு நேரடியாகச் செய்யும் கெடுதலைவிட, மறைமுகமாக எங்கள் மூலம் கிடைக்கும் பயன்பாடுகளைக் காலதாமதத்தின் மூலம் முடக்குவதே மிக மோசமானதாகும். இழுத்தடித்தல், பொழுதுகளைப் பூச்சியமாக்கும் செயல். இது கடவுளின் உள்ளத்தையே குடைந்து கோபங்காண வைக்கும்.
சமூகத்தில் ஒருவரால், ஒருவர் பாதிப்படையலாமா? ஒருவன் தனக்குத்தான் தீங்கு செய்வதும், ஒருவகையில் சமூகத்திற்குச் செய்யும் தீங்கு போலத்தான் கருதப்பட வேண்டும். நேர விரயம் என்கின்ற விஷயத்தில்கூட, எமது செளகரியத்திற்காக செய்கின்ற காலதாமதங்கள், நேரத்தின் அவசியத்தன்மை பற்றியே சிந்திக்க வைப்பன, இவை எமக்கு மட்டும் செய்கின்ற தீமைகள் அல்ல. மாறாக நீங்கள் வாழுகின்ற சமூகத்தின்பால், உங்களின் அக்கறையின்மையின் வெளிப்பாடாகும். இது எங்கே கொண்டு சென்றுவிடும்? நீங்கள் வேண்டப்படாதவராக ஒதுக்கப்படவும், நம்பிக்கைக்குரியவர் அல்லாத நபராகக் கணிக்கப்பட்டும் விடுவீர்கள். காலத்தை மதிப்போம்,

பருத்தியூர் பால. வயிரவநாதன் 69
நேரங்கள் கடக்கும்போது, அவை உரியமுறையில் எங்களால் செலவு செய்யப்படுகின்றதா எனக் கணிப்பீடு செய்வோம். நேரங்கள் போகும்போது முன்னேற்றங்களும் கூடவே வளர்த்துக் கொண்டே போகுதல் வேண்டுமன்றோ?
ஆற்றல்கள் அனைத்தும் கழிக்கும் நேரங்களில்
முழுவதிலும் செய்கின்ற முழு வீச்சான அர்ப்பணிப்பான பணியில் தங்கியுள்ளது.
நேரத்தில் செய்யப்படுவது, காலத்தைத் துதிப்பது போலாகும்.
米

Page 49
70 வாழ்விஸ்ல் வசத்தங்கள்
அதிகூடிய நம்பிக்கையிலேயே சிறுகீறல் விழுந்தால் போதும். அதனூடாக சந்தேகம் உள் நுழைந்து விடுகின்றது. நாடுகளுக்கிடையே பூசல்கள், இனங்களுக்கிடையே இடிபாடுகள் அனைத்துமே சந்தேகங்களூடாகவே பிரசவமாகின்றன. அறிவின் மூலம் சந்தேகங்களில் இருந்துவிடுபடல் வேண்டும். சூழ்ச்சி, கெடுதல் போன்ற எண்ணங்கள் அறவே இல்லாத போது சந்தேகங்கள் ஏன் தோன்றப் போகின்றது? மனிதன், மனிதனை மதிக்கவேண்டும். பரஸ்பரம் நம்பிக்கையுடையவனாக வாழவேண்டும்.
சந்தேகங்கள், பல சரித்திரங்களையே திசை திருப்பியிருக்கின்றன. பல இலக்கியங்கள் உருவாகக் கருப்பொருளாகவும் அமைந்திருக்கின்றன. குடும்பங்களில், குழப்பத்தையும், நேயங்கொண்டோரிடம் கோபப்பட
 

பருத்தியூர் பால, வயிரவநாதன் 71
வைக்கவும், பாசங்கொண்டவர்களையே பேசாமல் செய்கின்ற வேலைகளையும் சந்தேகமானது சர்வ சாதாரணமாகச் செய்துவிடுகின்றது.
அதிகூடிய நம்பிக்கையின் மீது சிறு கீறல் விழுந்தாலே போதும். சந்தேகம் அதனூடாக நுழைந்து கொள்கிறது. சலனமற்ற நீரில் சிறு கல்லைப் போட்டாலும் பல அலைகள் எழுவதில்லையா? அதுபோலத்தான், ஆனால் சலனமற்ற நீர் சற்று நேரத்தில் நிர்மலமாகிவிடும். மனம், மாறுபட்டால் என்னென்னவெல்லாம் மாறிவிடுகின்றது.
நாடுகளுக்கிடையே பூசல், இனங்களுக்கிடையே இடிபாடு என விஸ்தாரணமான விஷயங்களில் சந்தேகம் தன் பலத்தை நிரூபிக்கின்றது. ஒரு குடும்பத்தில் ஆரம்பித்து, அது சிலவேளை சமூகப் பாதிப்பாகும் சங்கடங்களும், சந்தேகங்களால் நிகழ்வதுண்டு. சந்தேகம் கொள்ளும் இயல்பு முடிவில்லாத, முடிவாகவும் போவதுண்டு உண்மை துலங்கும்வரை இதன் ஆதிக்கத்திலிருந்து விடுபடவே முடியாது.
அறிவாளிக்கும் கற்ற கல்வியில் சந்தேகம்.
அரசியல்வாதிக்குத் தன்னை ஆதரித்த மக்கள் மீதும் சந்தேகம்.
மக்களுக்கோ, தாம் வாக்களித்துத் தெரிவு செய்த தலைவர்கள் மீது சந்தேகம். அதிகாரிகளுக்கு, ஊழியர்கள் மீதும், ஊழியர்களுக்கு நிர்வாகத்தின் மீதும் எனச் சந்தேகங்களின் எல்லை நீளமானது. ஏன் எல்லையில்லாதது என்றும் கூறலாம்.

Page 50
72 வாழ்விஸ்ல் வசத்தங்கள்
எதிர்பார்ப்புகள் ஏமாற்றமாகும்போது அதிகூடிய பாசம், சற்று வித்தியாசமாகத் தடம் புரளும்போது, தமக்கிடையே பிறரிடையே ஒட்டுதல் இல்லாமல் புரிந்துணர்வு இல்லாதபோது எனப் பலதரப்பட்ட காரணங்களால் சந்தேகம் கிளைவிட்டு வளரலாம். ஒரு சிறு கரும்புள்ளியானது விஸ்வரூபமாகி முழுமையுமே கரு நிறமாகிப் போகும்.
தனிமனிதன், குடும்பம், சமூகம், நாடு என இது எங்கும் பரந்துபட்ட குணாதிசயமாக இருப்பதனால் இது விடயத்தில் மிகுந்த அவதானம் தேவைப்படுகின்றது.
வெளிப்படையாகப் பேசாமல் செயல்களை மூடி மறைப்பதால், உள் ஒன்றும் புறம் ஒன்றுமாக நடந்து கொள்வதனால், தனிமனிதன் பிறர் பார்வைக்குச் சந்தேகம் கொள்ள வைக்கும் ஆன்மாவாகக் கணிக்கப்படுகின்றான். பிறர் பார்வைக்கு ஒருவர் சற்று வித்தியாசமாகப் புதிரானவர்களாகத் தோன்றும்போது கூடச் சாதாரணமானவர்கள் இவர்களைச் சந்தேகக் கண் கொண்டு நோக்க ஆரம்பிக்கின்றார்கள்.
காவல்துறையினர் சந்தேகக் கண் கொண்டு குற்றவாளிகளை நோக்காதுவிட்டால் காரியமாற்ற முடியுமா? சந்தேகப்படுவதனாலும் சாதகமான பயன் கிடைக்கும். எதையும் நம்பிவிடுவதால் குற்றவாளிகளும், சமூக விரோதிகளும் சமூக விசுவாசிகள் போல் தோற்றம் காட்டி நிற்பர் அன்றோ. நடிக்கும்போது எப்படியும், உண்மை, பொய் எதுவெனப் புரிந்து விடுகின்றது. எனவே ஐயப்பாடுகள்கூட நம்மை உஷாரடையச் செய்து விடுகின்றன. அதே சமயம் வீணான முடிவுகள் விபரீதமாகியும் விடும்.

பருத்தியூர் பால, வயிரவநாதன் 73
எனினும், சந்தேகத்தினைச் சந்தர்ப்பமாகவும், சந்தர்ப்பவாதமாகவும் ஆக்கிக் கொள்ளக்கூடாது. சில விரும்பத்தகாத நிகழ்வுகள் நடந்துவிடும் என்கின்ற அச்சத்தினால், சந்தேக நினைப்புகளை மூடி மறைத்தாலும்கூட, இது சுதந்திரமாகவும், யந்திர கதியுடனும், அதே சமயம் மர்மமாகவும் வளருகின்றது. முதலில் குடும்ப விஷயத்திற்கு வருவோம்.
எந்த விஷயத்தினையும் ஆரம்பத்திலேயே தீர்த்துவிடாமல் அதனை மென்மேலும் வளரவிடக்கூடாது. கணவன், மனைவியிடையேயுள்ள மனஸ்தாபங்கள், காதலர்களிடையேயான கசப்பான சிறு சிறு விஷயங்கள், மிகச்சிறிய ஊடல்களாக ஆரம்பித்து பின்னர் வளர்ந்து, அழிக்கமுடியாத விரிசல்களாகி, சந்தேக மனோ நிலையை நிரந்தரமானதாக்கிவிடும். தற்காலிகமான காரிய சித்திக்காக எதனையும் மூடி மறைத்தால் முடிவு உடைந்து நொருங்கிய கண்ணாடி ஆகிவிடும்.
சந்தேகம் தொட ஆரம்பித்ததும் எப்போதோ முடிவடைந்த பிரச்சினைகள்கூட, மீண்டும் உயிர் பெற்று அதனைப்பற்றியே இருசாராரும் விவாதிக்கத் தலைப்படுகின்றனர். ஒரு தடவை ஏற்பட்ட ஐயங்கள் பல கதைகளை உருவாக்கிக் கொள்கின்றன. “இப்போ எதற்குப் பழங்கதைகள்’ எனப் பலர், பேச்சுக்கு முற்றுப்புள்ளி வைக்க முயல்வதை நாம் காணுகின்றோம்.
ஏற்கனவே, மன்னிக்கப்பட்டவைகள், வேதாளம் பழையபடி முருங்கை மரத்தில் ஏறிய கதையாக, வடுவாக

Page 51
74 வாழ்லிஸ்ல் வசந்தங்கள்
மன்னிக்கும் நினைப்பே அற்ற நிலைக்கு சந்தேக அரக்கன் மனிதரை வைத்துவிடும்.
மறைத்து வைக்கப்படுபவை சந்தேகத்துக்குரிய மூலப் பொருளாகின்றன.
பல பெற்றோர், பிள்ளைகள் விடயத்தில் ஒளிவு மறைவாகச் செயல்படுவதால், அவர்களின் மனோநிலை பாதிப்படைகின்றன. வீட்டின் நிலவரம் பற்றி ஒரு தகவல்களையும் வெளிப்படுத்துவதில்லை. பிள்ளைகள் கவலைப்படுவார்களே என்ற நியாயபூர்வமான எண்ணம் ஒரு புறம் இருக்க, வயது வந்த பிள்ளைகள் எதனையும் கண்டுகொள்ளாமல் செய்து விடுவது அவர்களது அனுபவ ஞானத்தை வளர்க்காமலும் ஆக்கிவிடுகின்றது. பெற்றோரின் எதனையும் மறைத்து வைக்கும் இயல்பு அவர்கள் மீது பிள்ளைகள் நம்பிக்கை வைக்கவே சிரமப்படவேண்டியுள்ளது. எல்லாமே பிள்ளைகளுக்கு என்று ஆனபோது இதில் மறைக்க என்ன வேண்டியுள்ளது? எனினும் சொல்லக்கூடாதவை என்கின்ற, மனதை நெருட வைக்கும் கதைகளைச் சொல்லாமல் இருப்பது தவிர்க்கப்பட வேண்டியவைதான்.
நல்ல விஷயங்களை மறைத்து வைப்பதனால் அவை இறந்துபோகின்றன. சரியான விஷயங்களில், வீண் சந்தேகம் கொண்டுவிட்டால் எல்லாமே தவறாகி, எடுக்கும் முடிவும் பிழையாகிவிடும்.
இரண்டு நாடுகளிடையே பிணக்குகளை ஏற்படுத்த, வல்லரசு நாடுகள் தமக்கு ஆதாயம் தேட, சந்தேக உணர்வுகளை அந்த நாடுகளிடையே துளிர்க்கச்

பருத்தியூர் பால, வயிரவநாதன் 75
செய்கின்றன. அதற்கான நடவடிக்கைக்குத் தூபமிட்டு, அவைகளை மோதவிட்டு லாபம் சம்பாதிக்கின்றன. இதை மக்கள் உணர்ந்தும் சம்பந்தப்பட்ட நாடுகள் பெரிதும் உணர்வதாகத் தெரியவில்லை. இவை யுத்தமாக வெடித்து, அழிந்த பின்னர்தான் உண்மை உணர்ந்து சமாதானம் பேச முனைகின்றன. இதில் வேடிக்கை என்னவெனில், சந்தேகத்தை விதைக்கும் நாடுகளே சமாதானம் செய்து வைக்க முனையும் நடிப்பான நடவடிக்கைகள்தான்.
சந்தேகங்கள் வளர்ந்துவிட்டன. பல சந்தேகங்கள் நியாயபூர்வமானவையும், உண்மையானவையும்கூட. எனினும் இவை தீர்க்கப்படக் கூடியவைகள்தான். இனங்கள், மதங்கள், மொழிகள் எனப் பலதரப் பட்டவைகளிடையே சமரசம் காண்பதே சாலச் சிறப்பானது. மக்கள், பலதரப்பட்ட பிரிவுகளுக்குட்படினும், உலகின் முன் மனிதர்கள் ஒரே பிறப்புக்கள்தான். சுயநலமிகளின் குழப்ப நடவடிக்கைகளை மனித இனம் புரிந்து கொள்ளவேண்டும். சாதாரண கிராமங்களில்கூட, சாதிப்பாகுபாட்டை வளர்க்க ஒவ்வொரு சாரார் இடையே சந்தேகங்களை வளர்த்து விடுகின்றனர். ஒரு குடும்பப் பிணக்குகூட ஒரு பிரதேச உணர்வாக வளர்ந்து பெரும் சண்டையாக முடிவடைகின்றது.
மாணவன் சந்தேகம் கொண்டால் படிப்பில் நிறைவு காணமுடியுமா? சந்தேகம் வரவும் வேண்டும். அதனைத் தீர்த்துக் கொள்ளவும் வேண்டும். அதுபோலத்தான், முழு வாழ்க்கையிலும் சந்தேகங்கள் தவிர்க்க முடியாதவை. எனினும் தீர்க்கக் கூடியவையே. தொழிற் போட்டிகளில் உட்பூசல், அரசியல் உட்பூசல், மதங்களுக்கிடையே,

Page 52
76 வாழ்விஸ்ல் வசத்தங்கள்
இனங்களுக்கிடையே உட்பூசல் போன்ற சகல தீய சக்திகளையும், வெற்றிகரமாக நகர்த்தும் கலையை மனிதன் கற்றுக் கொண்டுவிட்டான். என்னதான் ஆன்மீகம் பற்றிப் பேசினாலும், குரோதங்களை சந்தேகங்களை உருவாக்குவதே மேல் என கீழ்த்தரமாக எண்ணுகின்றான். அன்னி யோன்னியமானவர்களை, அவஸ்தைப்பட வைப்பதில் என்ன நன்மை இருக்கின்றதோ தெரியவில்லை.
தற்செயலாக நடக்கும் சம்பவங்களே புது வியாக்கியானமாக்கப்படுவதும், அவை திட்டமிட்டுச் செய்யப்படுவதாக உருவகிக்கப்படுவதால். இருசாரார் மோதுவது சர்வசாதாரணமாகி விட்டது. இந்த உண்மைகளை எப்போது மனிதன் உணரப்போகின்றான்? சூழ்ச்சிகள் சந்தேகத்தை வலுப்படுத்தும். மனிதன் தன்னைத்தானே குழப்புவதிலும் சூழ்ச்சிகளினால் தன்னை வெப்பமடையச் செய்கின்றான். ஒழுக்க நெறியும் துணிவும், பிறரிடத்தே பரிவுடன் கூடிய நம்பிக்கையும் கொண்டால் பிறர் மீது இருந்து புறப்படும் எதிர்க்கணைகள் களையப்பட்டு 6f(6G3LD.
சமூகத்தின் மீதான கரிசனை உணர்வுகள் மேலோங்க வேண்டும். உங்கள் மீது உங்களுக்குள்ள ஆதிக்கம் உறுதியாக்கப்படல் வேண்டும். உங்களுக்கு நீங்கள் கட்டளையிடுங்கள். தவிர, இத்தகைய உறுதியுடன் வாழ்தலுக்குத் தூய்மையான வாழ்வு முறையின்றிச் சாத்தியமில்லை. இந்த முறைமையின்படி எம்மை ஆக்கிக்கொண்டால், எத்தரப்பினரும் எம்மீது எந்தவிதமான சந்தேகங்கள், காழ்ப்புகளைக் கொள்ள முடியவே முடியாதுவிடும். இவர்கள் மீது சந்தேகம், கதவு தட்ட

பருத்தியூர் பால. வயிரவநாதன் 77
அஞ்சும். இதயம் முழுவதும் தெளிவு நிறைந்தால் அதனூடாக உட்புகுந்து கொள்ள தூய்மை சாரா உணர்வுகளுக்கு அனுமதியே கிடைக்காது அல்லவா?
எனவே, அறிவின் மூலம் தெரிந்துகொள்வோம். ஆதாரமற்ற சந்தேகங்களை விரட்டிவிடுவோம். நல்லதை நினைக்கும்போது பொல்லாதவை போய்விடும். சந்தேகமும் அப்படியே.

Page 53
78 வாழ்விஸ்ல் வசந்தக்கள்
சரியான பாதையில் செல்கின்றவன் துணிச்சலுடன் தட்டிக் கேட்கின்றான். கண் எதிரே காணும் அநியாயங்களைக் காணாமல், கண்டு கொள்ளாமல் விடுவது என்பது, செய்யப்படும் அநீதிகளைவிட அக்கிரமான செயலாகும் என்பார்கள். நடக்கும் அநியாயங்கள் உடனே எம்மைப் பாதிக்கவில்லை எனக்கருதி மெளனமாக இருந்தால் ஏதோ ஒரு மறுதிசையில் இதன் விளைவுகளை நாம் கண்டு கொண்டு அனுபவித்தேயாக வேண்டும்.
ட்டிக்கேட்டால் முட்டப்பகை என்றும், எட்ட நின்று விலகிச் செல்வதே புத்திசாலித்தனம் எனவும் நினைத்துக் கொள்கின்றோம். தட்டிக்கேட்டல் என்பது, ஒருவர் மனத்தைக் கறுக்க வைத்து வெறுப்பேற்றும் பணியல்ல. நியாயபூர்வ விஷயங்களுக்காக, நியாயங்கள், நேர்மைகளுக்கு முரணாகச் செயல்படுபவர்களை அதைச் செய்யாமல் தடுக்கும் சமூகப் பணியேயாகும். தனக்காக மட்டுமின்றி,
 

பருத்தியூர் பால, வயிரவநாதன் 79
பிறருடைய நன்மைகளுக்கும் குரல் கொடுப்பது போலாகும். ஏனையவர்கள் முன், எங்களுக்கு எல்லாமே தெரியும் என்ற நோக்குடனும், ஒரு வீரனாகக் காட்டுவதற்காக மட்டும் இந்தத் தட்டிக்கேட்கும் செயல் அமையக்கூடாது.
விளம்பர நோக்கோடு, தம்மை உயர்ந்தோராகவும், தலைவராகவும் காட்டும் தந்திரோபாயமாக இச்செயல் காட்டப்படுவதுண்டு. சரியான காரியங்களுக்காக மட்டும் சமூகத்தின்பால் பிரியப்பட்டு, நியாயம் கேட்டேயாக வேண்டும். உண்மைகளைத் திரிபுபடக் கூறுபவர்கள் எப்படியும் பேசுவார்கள். இவர்கள் மீட்டு, மீட்டுச் சொல்லும் வார்த்தைகளுக்குள் கட்டுண்டு போனவர்கள், நியாயம் கேட்க மாட்டார்கள். இவர்கள் மத்தியில் நியாயம் கேட்க, தட்டிப் பேசினால் அது எடுபடவே சிரமமாகின்றது. இம்மயக்க நிலைக்கு உட்படுத்துபவர்கள் சாதுர்யமான துன்மார்க்கர்கள்.
சமூக வழக்கங்கள் சமயக் கோட்பாடுகள் விடயத்தில் தேவையில்லாமல் நுழைந்து, சரியான பாதைக்கு வழிகாட்டுகின்றேன் எனக்கூறி பாரம்பரிய கலை, கலாசாரம், நெறிமுறைகளையே உடைத்தெறியும் கைங்கரியத்தினைச் செய்ய முற்படுபவர்களை முளையிலேயே களை பிடுங்குவதுபோல் கிள்ளி எறிய வேண்டும்.
பேசுமுன் யோசிக்கவேண்டும். கண்டதையும் கதைக்கக்கூடாது.
உண்மையிலேயே மூடப் பழக்க வழக்கங்கள் எங்கேயும் உண்டுதான். எனினும் இதனுள், சரி, பிழை எது என ஆராய வேண்டுமல்லவா? தவறுகளைச் சுட்டிக்காட்டவே முற்போக்குச் சிந்தனையாளர்கள், ஞானிகள்

Page 54
80 வாழ்விஸ்ல் வசத்தங்கள்
உருவாகினர். இவர்கள் சுட்டிக் காட்டியவிதம் தனித்துவமானது. உபதேசங்களைக் கையாண்ட முறையில் சாத்வீகத்தினைக் கையாண்டார்கள். முரட்டுத்தனம், வரட்டுப் பிடிவாதம் மூலம் எதையும் சாதித்துவிட முடியாது. சாத்வீகத் தன்மையுடன் மக்களை அணுகியமையினாலேயே சமய உணர்வுகள் ஆன்மீக நெறிகள் இன்னமும் அருகிப்போகாமல், நிலைத்து வாழ்ந்து கொண்டிருக்கின்றன.
தெரிந்தோ, தெரியாமலோ நாம் விரும்பத்தகாத செயல்களைச் செய்து விடுகின்றோம். அத்துடன் அருவருக்கத்தக்க செயல்களும் எம்முன் நடந்து கொண்டிருக்கின்றன. எனவே, எம்மையும் திருத்தி, பிறர் செயல்களையும் சுட்டிக் காட்டவேண்டியவர்களா யுள்ளோம். வெறுமனே பார்த்துக் கொண்டிருப்பதுகூட அச்செயல்களை அனுமதிப்பது போலாகவும் ஆகிவிடும். தீமைகளைப் பார்த்துச் சும்மா இருப்பதே மிகப்பெரிய பாவமாகும் எனப் பெரியோர் கூறுவர்.
“அநியாயங்கள் மத்தியில் வாழப் பழகிவிட்டோம். இனி என்ன செய்வது?’ என்கின்றார்கள். தட்டிக்கேட்டால் விட்டுவிடுவார்களா? தட்டிக்கேட்டால் தலைபோகும், விட்டு விடுவோம் என்றும் பேசுகின்றார்கள். யேசு கிறிஸ்துநாதருக்கு என்ன நடந்தது? இந்த வாதம் சரிதான். இப்படியே பேசினால் உலகில் எதனைத்தான் சாதிக்க முடியும்? தவிர இதன் பலாபலன் எம்மை வந்தடையும் போதுதானே விழிப்படைந்து வேதனைப்படுகின்றீர்கள்.
உடனே உங்களைத் தீமைகள் தாக்காதவரை தப்பித்துப் போனதாகக் கருதவேண்டாம். பின் விளைவாக,

பருத்தியூர் பால. வயிரவநாதன் 81
நாம் வேடிக்கைப் பொருளாகி, வீணர்களாகத் தூக்கி எறியப்படும் நிலைக்கும் உள்ளாக்கப்படலாம். அந்த, அந்த நேரங்களில் போலிகளுக்குப் பலத்த அடி கொடுக்காது விட்டால், அவை காலங்கடந்த சமாச்சாரங்களாகி எம்மைத் தருணத்தில் விழுங்கிவிடும். நோய் மறைந்திருந்து தாக்குவதுபோல, எமக்குத் தெரிந்த இயலுமான, எதிர்ப்புகளைப் தொடுக்க வேண்டிய சமயம் தொடுத்தேயாக வேண்டும். மெளனம், பயம் சிலவேளை எம்மை வெறுமைப்படுத்திவிடும். மனத்தை மென்மையாக்கும் மெளனமும், பயத்தினால் ஏற்படும் மெளனமும் வெவ்வேறானவை.
எங்கள் முன் எவன் செத்தால் என்ன. எமது கருமங்களில் மட்டும் நாம் கண்ணாயிருப்போம் என்ற கருத்து சமூக விரோதக் கருத்தே. ஒருவனைத் தாக்குவது என்பது, பிறர் என்னை என்ன செய்யமுடியும் என்ற ஆணவ முனைப்பாய் அமைந்துவிட்டது. இறப்பர் பந்தினை அமுக்கும் போது அது மறுபக்கம் பிதுங்கும். சற்றுக்கூட அமுக்கினால் உடைந்தே போகும். சமூகத்தில் கூடப் பிரச்சினைகளை அமுக்கும் போது எதிர் விளைவுகள் தோன்ற ஆரம்பிக்கும். வாய் பேசாமல் இருப்பவர்களை வதைத்தால் அவர்கள் தட்டிக் கேட்பதுடன் நிறுத்தமாட்டார்கள், மோதி உதைத்தும் விடுவார்கள். தட்டிக் கேட்பது ஒருவனை ஒடுக்குவது அல்ல. அவன் மீது குற்றம் கண்டு பகைத்தலும் அல்ல. அதட்டி, வெறுத்தலும் அல்ல.
கேட்கவேண்டிய முறையில் கேட்கவேண்டும் என்பார்கள். ஒரு குழந்தையில் நமக்கு காரியம்

Page 55
82 வாழ்விஸ்ல் வசத்தங்கள்
ஆகவேண்டும் என்றால், அதனைத் தட்டிக் கொடுத்துக் கேட்கவேண்டும். தட்டிக் கேட்டல் தட்டிக் கொடுத்துக் கேட்டல், இரண்டுமே வெவ்வேறான அணுகுமுறைகளாகும்.
அத்துடன்,
தட்டிக் கொடுத்தும், இதயத்தைத் தொடும்படியாக அணுகுவதாலே பல பிரச்சனைகள் தீர்ந்துபோகின்றன. அன்பு, ஆதரவு, கனிவு இவைகள் காரியங்களைச் சாதிக்கும் கருவிகளாகும். கோபமாக இன்றி, ஆரம்ப நிலையிலேயே தட்டிக் கொடுத்துப் பேசுவது கஷ்டமானதல்ல. முரட்டு ஆசாமிகள் எடுத்த எடுப்பில் எதையும் பேசுவார்கள், செய்வார்கள். நாம்தான் சற்று நிதானமுடன் செயல்படவேண்டும். சாதாரணமானவர்களே, சில சமயம் முரட்டுத்தனங்களுக்குச் சூழ்நிலை காரணமாக ஆளாகும்போது, இயற்கையில் முரட்டுச் சுபாவம் உள்ளவர்களிபம் சாதுர்யமாகவே பழக வேண்டியுள்ளது. கோப உணர்வுடன், கோபம் மோதினால் குழப்பமே. ஆனால் நிதானத்தை கோப உணர்வுகள் சந்தித்தால், நிதானம் நிலைபெற்று வென்றுவிடும்.
பெரும்பான்மையினர் கூடி நின்று, தவறுகளைச் சரி எனக் கொள்ளும்போது உண்மை ஊமையாகின்றது. இந்த நிலை கல்வியற்ற சமூகத்திடையே மட்டுமல்ல, கற்றறிந்த சமூகத்திடையேயும் உள்ளது. பெரும்பான்மையான, தவறான கருத்துக்களும் அவர்களால் ஏற்றுக்கொள்ளப்படுகின்றன. இத்தகையோர் மத்தியில் உண்மைகளைச் சுட்டிக் காட்டும்போது துணிச்சலுடன் கூடிய நிதானம் தேவைப்படுகின்றது. அத்துடன் புரிய வைக்கக் கால அவகாசமும் தேவைப்படுகின்றது. காலம் எப்போதாவது ஒருநாள் உண்மைகளை உணர்த்தும். அதற்காக, நாம் செய்யும் பணியைக் காலதாமதம் செய்தல் கூடாது. ஆமாம் சாமி போடும் பரிதாபச் சனங்களைக் காப்பாற்றவேண்டும்.

பருத்தியூர் பால. வயிரவநாதன் 83
மிகவும் சிரத்தையுடன் கட்டி எழுப்பப்பட்ட சமூகம் உடைந்துபோக அனுமதிக்கலாகாது. பதவி, அந்தஸ்து மூலம் நியாயங்களுக்குத் தடைபோடச் சம்மதிக்கக் கூடாது. இன்று, அரசியல், சமய நிறுவன அமைப்புகளில் இருப்பவர்களில், ஒரு சிலர் பதவி அந்தஸ்து நிலையில் இருந்து சூறையாடுதலும், அதை மறைக்கப் பக்கத்தில் உள்ளவர்க்குக் கிள்ளிக் கொடுத்து, வாயடைக்கச் செய்வதுமாயிருக்கின்றார்கள். தட்டிக் கேட்பவர்களை முட்டாள் ஆக்கி அடக்கியும் விடுகின்றனர்.
சமூக நீதி கோருதல், மனிதனுக்குச் சுபாவமானதாக இருக்கவேண்டும். நாம் எதனையும் அணுகும் விதத்தில் அணுக எம்மைத் தயார்ப்படுத்தவேண்டும். எடுத்த எடுப்பிலேயே துஷ்டர்கள் விடயத்தில் தலையிடும்போது, எங்கள் மீதான நியாயத்தில் அசைக்கமுடியாத நம்பிக்கை வைத்தபின்னரே நிதானமாகப் பேசவேண்டும். கொள்கைகளில் அழுத்தம் இல்லாது போனால், நீங்கள் எதிராளிகளின் வசப்பட்டு உண்மைகளையுங்கூட உதறிவிடும் நிலைக்குள்ளவீர்கள். தெரிந்து கொள்ளுங்கள்.
நியாயங்களை, மற்றவர்கள் ஏற்கும் நிலையை உருவாக்குவதே எங்கள் சாமர்த்தியமாக அமைய வேண்டும். நியாயங்களுக்கான போராட்பங்கள் உடன் பயன் அளிக்காதுவிட்டாலும்கூட, இதற்கான முயற்சிகள் என்றுமே திருப்தி அளிப்பவை. சாதாரண வாழ்வைவிட சாதித்து எழுவதே மேல்.
来

Page 56
84 வாழ்விஸ்ல் வசத்தங்கள்
சின்ன மூளைதான் ஆனால் சிங்காரமானது. இதனைப் போஷிப்பதற்காக நல்ல நல்ல தகவல்களை அதனுள் பதிவு செய்து கொள்ளல் வேண்டும். எண்ணங்களில் வலு இருக்குமேயானால் மயில் இறகைக் கொண்டே மலையை இழுக்க வளைக்கமுடியும். மனிதன் எதற்கும் அஞ்சுதல் கூடாது. இதயம் மென்மையாகவும், வன்மையாகவும் இருக்கவேண்டும். “ஒரு தனிமனிதனில் புலம்பல் உலகின் விசும்பல்” எனக் கருதித் துன்பம் உற்றோரைத் தூக்கிவிடல் எம் பணியாகக் கொள்ளவேண்டும்,
இந்த மூளைக்கு நாங்கள் கொடுக்கின்ற உணவு பற்றாது என்றுதான் கூறவேண்டும். ஆனால் தேவையற்ற, ஈத்து அற்ற தீனிகளைத் திணித்து விடுகின்றோம். கவலை, ாக்கம், விரக்தி, மயக்கம், கோபம், மமதை என்றவாறு 1லதரப்பட்ட, மனிதனுக்கு அறவே ஒவ்வாத பலவற்றை
 

பருத்தியூர் பால, வயிரவநாதன் 85
பக்குவமாக ஊட்டி விடுகின்றோம். பிறகு என்ன நடக்கும்? இவைகளை ஜீரணிக்க முடியாத நாம் ஜீவனற்ற வாழ்விற்கே விலை போகின்றோம்.
சின்ன மூளைதான். ஆனால் சிங்காரமானது. எனவே, இதனைப் போவழிப்பதற்காக, நல்ல நல்ல தகவல்களைப் பதிவு செய்ய முனைய வேண்டுமல்லவா? எமக்கே தெரியாதவாறு, எம்முன் உள்ள பல தகவல்களை நாம் கிரகித்துக் கொள்ளுகின்றோம். நாம் விரும்பியும், விரும்பாமலும்கூட கேட்கின்ற - உணருகின்ற விஷயங்கள் ஏராளம். தூக்கத்தில்கூட நாம் சில காட்சிகளைக் காண்பதில்லையா? எப்பவோ பார்த்த காட்சிகள், நிகழ்வுகள் அனைத்துமே ஒரு திரைப்படம்போல் உருவாகுதல் அல்லவா?
எனவே,
நாங்கள் நல்ல விஷயங்களுக்கு மட்டுமே எம்புலன்களைத் திருப்பப் பயிற்சி எடுக்கவேண்டும். உலகில் எத்தனையோ நிகழ்ச்சிகள் நடக்கின்றன. இவற்றுள் குற்றவியல் சம்பந்தமானவைகளை மட்டும் சிலர் படித்துச் சந்தோஷப்படுகின்றனர். இன்னும் சிலர் பாலியல் தொடர்பான செய்திகள், ரகசியங்களை, ரகசியமாகவும், பரகரியமாகவும் படித்தும், புத்தகங்கள், திரைப்படங்களைப் பார்த்தும் திருப்திபட்டதுடன் மனதைச் சபல சிந்தனைக்குட் படுத்தியும் விடுகின்றனர். கேட்பால் எல்லாமே தெரிய வேண்டியதுதானே என்பார்கள். ፥}”
ஆன்மீக சிந்தனைக்குரிய செய்திகள், அரசியலுக்குரிய விஷயங்கள், விஞ்ஞான, கலை, இலக்கிய

Page 57
86 வாழ்லிஸ்ல் வசந்தங்கள்
விடயங்கள் என நல்ல தகவல்களுக்கா இங்கு பஞ்சமில்லை? இப்படியிருக்க, காம, குரோத, கோப, துர்நடத்தை போன்ற செயல்களைத் தூண்டும் வகையிலான கதைகளை - தகவல்களை மிகையாக அறிய முற்படுதல் சரியானதுதானா?
நல்லது, கெட்டதுகளைக் கண்டுகொள்ளாதுவிட்டால் வாழ்க்கைபற்றி தெரிந்து போகாது. உண்மைதான். ஆனால் இவைகளைப் பற்றிய செயல்களை ஆழமாகப் பார்த்து லயிப்பதில்தானே எமது எண்ணங்களுக்கு ஊறு ஏற்படுகின்றது. இதயத்தைத் தெளிந்த நீரோடை போல வைத்துக் கொள்ளல் வேண்டும். இதனுள் தீயது என்ற கல் கொண்டு எறிந்து குழம்பவிடக்கூடாது. நல்லதைச் சொல்லும்போதும், கேட்கும் போதும் நற்சிந்தனை இயல்பாக உருவாவது அசைக்கமுடியாத பெரியோரின் கருத்தாகும்.
கவர்ச்சியான காரியங்களிலேயே இளையவர்கள் மட்டுமல்ல, முதியவர்களும் முனைப்பான நாட்டங்களைக் கொண்டிருக்கின்றனர். ஒருவரை ஈர்த்து எடுப்பதற்காக, பரபரப்பானது, சுவையானது என்ற பெயரில் கண்ட கண்ட சமாச்சாரங்களை வர்த்தக நோக்கோடு கொடுக்க பல சாதனங்கள் வந்துவிட்டன. இவைகள் நூல்களாக, பத்திரிகைகளாக, தொலைக்காட்சிகளாக ஒவ்வொரு வினாடிகளும் புதுப்புது வடிவங்களில் தயாராகி நமக்குத் தந்து கொண்டிருக்கின்றன.
இவைகளுள் எது சரி, எது பிழை என்று எண்ணுமுன்னரே இவைகள் எமது மூளைக்குள் நுழைந்து

பருத்தியூர் பால. வயிரவநாதன் 87
எங்களைச் சிறைப்பிடித்துத் தங்கள் ஆட்சிக்குள் வீழ்த்தி விடுகின்றன. சிந்திக்கச் செய்யாமல் இருக்கும் சூட்சும வித்தைகளை தந்திரமாக, வர்த்தக நோக்குடன் பரப்புவதால் மனிதனின் பணம் - குணம் மட்டுமல்ல, ஒட்டு மொத்த கலாசார அழிவிற்கும் இட்டுச் செல்கின்றது.
சேற்றுக்குள்ளே, எண்ணெய் கழிவும் புகுந்து, கூழானதுபோல, ஏற்கனவே நொந்துபோன மனித மனம், துன்பம் தரவல்ல, இன்பத்தினைப் போக்கிற்காகக் காட்டி நிற்கும் மயக்கப் பிரச்சாரத்தில் மூழ்கிவிடுவது துன்பமோ பெரும் துன்பம்.
இளமையின் ஜொவனமாக, அன்று மலர்ந்த ரோஜா போல், இதயத்தை உலரவிடாமல் என்றும் புதிதாக புதுமணத்துடன் வைக்க வேண்டியது எமது பொறுப்பாகும். நல்ல நல்ல எண்ணங்களை உட்செலுத்துதலே இதற்குரிய வழியாகும். இதயங்களைச் சுத்தப்படுத்துதல் என்பது. அதனைத் திறந்து வைத்திருப்பது. புனிதமான இதயத்துள் அன்புதான் அகப்படும். இதயக்கதவு பூட்டப்பட்டால், கண்ட குணங்களும் கன்னம் வைத்துத் திருடன் உட்புகுதல் போல புகுந்து கொள்ளும். நல்ல உபதேசங்கள், சாத்வீகத் தன்மையினை உண்டாக்கும்.
நல்ல அறிவு, மெய்ஞ்ஞானம், இவைகளை எமை ஈன்ற உலகிற்கு முன்னோர் ஈந்து சென்றமை போலவே இன்று வாழ்ந்து கொண்டிருக்கும் சான்றோரும் செய்த வண்ணமுள்ளனர். செயல் இழந்த மின்கலத்திற்கு, மின் வலுவூட்ட மின்சாரம் பாய்ச்சப்படுதல் போலவே, இவர்களும் பணிகளைத் தொடர்ந்த வண்ணமுள்ளனர்.

Page 58
88 வாழ்விஸ்ல் வசந்தங்கள்
உயரப்போய்க் கொண்டிருக்கும் மனிதன் உருண்டு, பின், நின்ற இடத்திற்கும் கீழே விழுவது கூடாது. அறிவுக்கு வேலை கொடுக்க, சுதந்திரமான சிந்தனை துணைபுரிகின்றது. ஆரவாரத்தன்மையான பேச்சுக்கள், பிரச்சாரங்கள் சிந்தனைகளைக் கூறுபோடவல்லன. மென்மையான, கனிவுப் போக்கிலான எண்ணங்களை நாடுவது சிரமமானது என சிந்திக்கத் தொடங்கினால், அராஜக உணர்வுகள் உட்கார்ந்து கொள்வதில் என்ன தடை ஏற்பட்டுவிடப் போகின்றது.
அறிவு, ஞானம் உடனே ஊட்டப்படக்கூடியது அல்ல. எனினும் இதனைப் பெறுவதற்கு மூளையைத் திறந்து வைக்கின்ற சக்தியை எமக்கு இறைவன் அளித்துள்ளான். கொடுக்கவேண்டிய நல்விருந்தைப் புசிக்க அது தயாராக உள்ளது.
மூளை வேறு, இதயம் வேறு என்று கூறுகின்றார்கள். எமது இதயம் நன்கு வேலை செய்தாலே, மூளை என்ன, முழு உறுப்புகளுமே சரிவர இயங்கமுடியும். ஆனால் மூளை செய்யும் வேலைத்திறனுக்குரிய பெயர் இதயத்திற்கே முழுமையாகக் கிடைக்கின்றது. மனிதர்களின் நற்பண்புகள், ஆளுமைகளை விருத்தி செய்யும் பேராற்றல் மூளை மூலம் கிடைக்கும்போது எமது மனமும் முழுமையடைகின்றது. ஒருவன் திருப்திப்பட்டுக் கொள்ளும் போது, தன் நெஞ்சைத் தொட்டுக் கொள்ளுகின்றான்.
மனம் அமைதியான நிலையில்தான் இதயம் நல்
ஓசையுடன் சீராக இயங்குகின்றது. அதன் இனிய ஒலிநயம், எம் இயக்கத்தையே வழி நடத்துகின்றது. இதன் ஒவ்வொரு

பருத்தியூர் பால, வயிரவநாதன் 89
துடிப்பிலும் அவனி அசைந்து கொண்டிருக்கின்றது. ஒட்டு மொத்த இதயங்களுமே ஒன்றாக, நன்றாக, நல்லதை எண்ணிக்கொண்டால் பெரும் அலையே உருவாகி மனித கனவுகளை நனவாக்கும்.
எண்ணங்களில் வலு இருக்குமேயானால் மயில் இறகைக் கொண்டே மலையை இழுக்கமுடியும், வளைக்க முடியும். எங்கோ தொலைவில் உள்ள உறவுகளை இங்கே இருந்துகொண்டு எண்ணும்போது அதன் தாக்கத்தினை அவர்கள் புரிந்துகொள்வது இல்லையா? தன் இடைவிடா எண்ணங்களின் வலிமையினால், கடலினுள் உள்ள ஆமை கரையில் உள்ள தன் முட்டைகளைப் பொரித்து வெளிவரச் செய்வதில்லையா? நினைப்பே வலுவானது. உண்மைக் காதலின் எண்ணங்கள், உறுதி அதன் வெற்றியில் முழுமையாகின்றது. குழந்தைகள் விழுவது பற்றிப் பயப்படுவதில்லை. அவர்களின் தீவிர முயற்சி அவர்களை நடக்கவும் ஓடவும் செய்கின்றது. அவர்களின் பிஞ்சு இதயத்திற்கே, அஞ்சாமை, துணிவு எண்ணங்கள் அவர்களை வழிநடத்தும்போது, பெரியவர்கள் திடமாக இருப்பதில் என்ன தடை வேண்டிக் கிடக்கின்றது.
உருப்படாதவன் என்று எவரையும் கருதக்கூடாது. அவனுள் உள்ள திறமையை எப்படி வெளிக்கொண்டுவர முடியும் என எண்ணுங்கள். எமது நினைப்புகள் என்றும் எங்களை மட்டும் சுழன்று கொண்டிருக்கக்கூடாது. எடுத்த எடுப்பில், எவர் இதயத்தையும் கீறி அறுவை சிகிச்சை செய்வது போல் விமர்சனம் செய்யவேண்டாம். இதயம் இரும்பைவிட உறுதியானது. ஆயினும் மலர்கூட இதன் மென்மைக்கு ஈடு இல்லை. சின்ன வார்த்தை போதும்,

Page 59
90 வாழ்விஸ்ல் வசத்தங்கள்
உரம் கொண்ட உறுதியுள்ள மனிதனைத் திறன் அற்றதாகிவிடும். அவன் பலவீனங்களைக் குடையாது, அவனை முழுமையாக்க நாம் என்ன செய்யவேண்டும் என எண்ணவேண்டும். தனி மனிதனின் புலம்பல். உலகின் விசும்பல். தட்டிக் கேட்டு உட்கார வைப்போம். அல்லாதுவிடின் தள்ளிவிடாமல் இருப்பது சிறப்பே. எண்ணங்களுக்கு வலுவூட்டுதல் எமக்கு மட்டுமல்ல பிறருக்குமே என உணர்வோமாக. எனவே இதயங்களைத் திறந்து கொள்ளுவோம். உலக உறவும் நிறைந்து கொள்ளும். பலம் இறைவனின் கொடையாக வழங்கப்படும்.
来
- வீரகேசரி 2-4-2005

பருத்தியூர் பால, வயிரவநாதன் 91
தனிமனிதனின் உழைப்பும், தியாகமும் குறைந்து வருவதனால், நாடு இன்று கடனாளியாகி வருகின்றது. தனது சொந்த வாழ்விலேயே உழைக்க கஷ்டப்பட்டுக் கடன்கேட்டே வாழுபவர்கள் நாட்டின் நலன்பற்றிக் கவலைப்படமாட்டார்கள். உண்மையான பரிதாபத்திற்குரியவர்கள். நியாயபூர்வமாக கடன் கேட்கும் போது, தவறான வழியில் வாழ்பவர்களின் போக்குக் காரணமாக ஏனையோர் கஷ்டமுறுபவர்களையே சந்தேகம் கொண்டு நோக்குகின்றனர். வரவுக்கேற்ற செலவு செய்தலே ‘கடன்’ என்கின்ற தொல்லையில் இருந்து மீள ஒரே வழியாகும். வாழ்க்கைச் செலவினம் கூடும்போது, வரவை அதிகரிக்கப் புதிய உபாயங்களைக் கண்டறிய வேண்டும்.
5ாலன் தேடி வந்து கதவைத் தட்டினாலும் கலக்கம் கொள்ளாதவர்கள், கடன்காரர் வந்து கதவைத் தட்டினால்

Page 60
92 வாழ்விஸ்ல் வசத்தங்கள்
அச்சமுற்றுக் கதவடைப்புச் செய்ய முற்படுகின்றார்கள். கடன்காரரைக் கண்டாலே வெறுப்படைந்து போகின்றார்கள். கடன் கொடுப்பதும் கொடுத்த கடனைக் கேட்பதும் கல்லில் நார் உரிப்பது போலத்தான். விருப்பமுடன் கடன் கொடுக்கப் பலரும் விரும்புவதில்லை. அதேபோல், கொடுத்த வாக்குப் பிரகாரம், கொடுத்த கடனைத் திருப்பி ஒப்படைக்க எத்தனை பேர் தயாராக இருக்கின்றார்கள்?
எனினும், நல்லவர்கள் நாணயமானவர்களுக்கு இந்தக் கூற்றுப் பொருந்தாது. கடன் பெறுதல் என்பது ஒரு வெட்கக்கேடான செயலா? அரசாங்கங்கள் கடன் வாங்குவதில்லையா? அவை பொதுமக்களுக்குக் கடன் கொடுப்பதில்லையா? பெரிய, பெரிய நிறுவனங்கள் கடன்பட்டால்தான் இயங்கமுடியும் என்கின்ற நிலையை பொருளாதார நிபுணர்களே ஒத்துக் கொள்ளுகின்றார்கள். பல புதிய திட்டங்களைச் செயல்படுத்த, ஏனைய நிறுவனங்களுடன் போட்டி போட, எதிர்பாராத நெருக்கடிகளைச் சமாளிக்க, இப்படிப் பலவாறான காரணங்களுக்காகக் கடன்படுதல் கூட ஒரு உடன்பாடான கெளரவமாக மேற்கொள்ளப்படும் நடைமுறைகளாகிவிட்டன. ஒவ்வொருவரின் தகுதிகளுக்கேற்ப, கடன் தொகைகள்தான் மாறுபாடடையும்.
சில்லறைக்கடன், சீட்டுக்கடன், காப்பி, மிளகாய் பொடிக் கடன் என்றவற்றுடன் கைமாற்றுக்கடன் என்று கூறுவதற்குட்படுகின்ற பலதரப்பட்ட கடன்வகைகள் உண்டு.
‘அண்ணை, மின்சார, நீர் வரி கட்டவேண்டும். கட்டாவிட்டால் வெட்டி விடுவார்கள்’ என்றும் “பிள்ளைக்குப்

பருத்தியூர் பால. வயிரவநாதன் 93
புத்தகம் தவணைக்காசு உடனே செலுத்தாதுவிட்டால், படிப்பே பாழாகிவிடும்’ என்றும் நெஞ்சத்தைத் தொடும் வசனங்களைப் பேசிவிட்டுக் கடன்கேட்கும் முறைகளுமுண்டு. ஆயினும், உண்மையான நபர்களுடன், பொய்யான காரணங்கள் கூறும் கனவான்களும் கலந்து விடுவதனால், கடன்களை, எவர் நியாயபூர்வமாகக் கேட்கிறார்கள் என்பது தெரியாமல் போய்விடுகின்றதே. சரியான முறையில் வாழத்தெரியாமல் கடனோடு வாழ்வது முறையா? சிக்கன வாழ்வு இன்றேல் சீரழிவுதானே? இன்னும் ஒருசாரார் இருக்கின்றார்கள்.
சில்லறைக் கடன்கேட்டால் அது கெளரவக் குறைவு என எண்ணி மொத்தமான ஒரு தொகையைக் கேட்டுக் கறந்துவிடுவார்கள்.
இன்னும் சிலரோ,
நூறு ரூபாய் கேட்பார்கள். அதைப் பெற்றதும் செலவு செய்யமாட்டார்கள். உடனே சொன்ன தவணைக்கு முன்னரே அதைத் திருப்பிக் கொடுத்து விடுவார்கள். அடுத்த தடவை அவரிடமே வந்து ஐந்நூறு ரூபாய் கடன் கேட்டு, அதனையும் மேற்சொன்னதன்படியே திருப்பிக் கொடுத்து விடுவார்கள். அடுத்த மூன்றாம் தடவையோ இவர்கள் முழுதாகப் பத்தாயிரம் ரூபாய் கேட்டால், கொடுப்பவர் அவரிடம் உள்ள நம்பிக்கையில், பூரணமாக மதித்துப் பணத்தைக் கொடுத்துவிடுவார். அப்புறமென்ன? பணம் கொடுத்தவரிடம் திருப்பிக் கொடுக்க அவர் என்ன முட்டாளா? சின்ன மீனைப் போட்டுத் திமிங்கிலங்களையே கெளவுகின்ற அசகாய சூரர்கள் இவர்கள்?

Page 61
94 வாழ்வியல் வசத்தங்கள்
இத்தகைய கதைகளை நீங்கள் கேட்டு இருக்கலாம். ஆயினும், மிகவும் நெருக்கடிக்குள்ளானவர்கள் பணம் பெறுவதற்காக கடனைவிட, வட்டிக்குப் பெறலாம் என எண்ணி, முடிவில் இருக்கின்ற நகை, நட்டு, காணிகளை அப்படியே வட்டியும் முதலுமாகத் தொலைத்த கதைகள் ஏராளம்.
இதனால்தான் அரசாங்கங்கள் நியாயபூர்வமாக, வங்கிகள் மூலமாகவும் அரச ஊழியர்களுக்குக் கடன் வழங்குதலைத் தனது அமைச்சினுடாகவும் வழங்குகின்றது.
குடும்ப சூழ்நிலை, எதிர்பாராத செலவுகள், கடன் தொல்லையில் இருந்து மீள மீண்டும் கடன் கேட்டல், டாம்பீக வாழ்வு, இத்தகைய காரணங்களுடன் மேலும் பல காரணங்களுடன் ஏழை, எளியவர்களுடன் நடுத்தர, மேல் மட்ட வர்க்கத்தினரும் அல்லாடுகின்றனர்.
மிகவும் வசதியாக வாழ்ந்துவிட்டு, பின்னர் ஏதோ சில காரணங்களால் நலிவுற்றதும், அந்தப் பழைய வாழ்வில் இருந்து மீள வழி தெரியாமல், கடன்படும் பலர், ஏனையவர்களிடம் கையேந்தும் போது பரிகாசத்திற்கும், அவமதிப்பிற்கும் ஆளாகின்றார்கள். வசதியாக வாழ்ந்த காலத்தில் சிக்கனத்தையும் சேமிப்பையும் பற்றி தெரிந்திருந்தும், அதை உதாசீனம் செய்தமையின் பலாபலன்களைப் பிறர் மனம் புண்படுமளவுப் பேசும்போதுதான் புரிந்து கொள்ளுகின்றார்கள். உறவுக்குப் பகை கடன் என்பார்கள். ஒருவரிடம் வைத்திருக்கும் உண்மையான, அபிமானம், மதிப்பை அவரிடம் நீங்கள் உதவியாக எதைக்

பருத்தியூர் பால. வயிரவநாதன் 95
கேட்டாலும், வரும் பிரதிபலிப்பின் மூலம் புரிந்து கொள்ளலாம். பணம் மட்டும் கடன் அல்ல. Ф_L6йт எந்த உதவியை எவர் செய்தாலும் அதுவும்கூட ஒருவிதத்தில் கடன்தான்.
பணம், பொருள் கொடுக்காது விட்டாலும் பரவாயில்லை. வேறு உபகாரமூலமாவது, எதையாவது செய்து துன்பம் துடைத்தல் மேலான அறம் ஆகும்.
பசிக்காகக் கடன் கேட்பவர் தொகையைவிட, பகட்டிற்காக இதனைக் கேட்பவரே அதிகம். "கடன்’ கூச்சத்திற்கு அச்சப்படுவதில்லை. தமது உழைப்பை ஈந்து கொள்ளாது, பிறர் உழைப்பினைக் கடன் மூலம் கவருதல் கவலைக்குரியது. இது சோம்பேறிகளின் சுரண்டல் சுபாவம்.
கல்வி, தொழில் சம்பந்தப்பட்ட பல இன்றியமையாத விஷயங்கள், இவைகளால் ஏற்படுகின்ற பணப் பிரச்சினைகள் பொதுவானவை. இவைகளை எவரும் தட்டிக் கழிக்க முடியாது. எனவே சமயமறிந்து உதவுதல் எல்லோரது கடமையுமாகும். எமது தகுதிக்கமைய உதவுதல் நல்லதே.
படிப்புக்குப் பணம் தேவைப்படுவதும், விவசாய வேலைக்குப் பசளை வாங்கக் காசு அவசியமாகப் படுவதுமான பல தரப்பட்ட திடீர் செலவுகள் எல்லோரையுமே தாக்கலாம். திடீர்த் திருமணங்கள், பயணங்கள், காணி, நிலப் பிரச்சினைகள், நீதிமன்ற விவகாரங்கள் எனப் பலவகையான செலவினங்கள் வரும்போதுதான் எங்களது இயலாமையின் தாக்கம் புலப்படுகின்றது. என்ன செய்யலாம் என்கின்ற ஏக்கமும் தொட்டு விடுகின்றது. யாரிடம் போய்க்

Page 62
96 வாழ்விஸ்ல் வசத்தங்கள்
கேட்பது? யார் காலில் விழுவது? துன்பங்கள், பிரச்சினைகளை முன்னரே அறியும் திறன் இருந்தும், அதனைப் பொருட்படுத்தாமல் விடுவதன் தாக்கம் எவ்வளவு மோசமானது?
இருக்கும்போதே எங்களைப் பலப்படுத்துவதும், வரும் முன் காப்பதற்கான உபாயங்களைக் கையாளத் தெரிந்திருப்பதுமே அவசியமானதாகும். அரசு வங்கிகள், நிறுவனங்களின் சேவைகளை முழுமையாகப் பயன்படுத்தத் தெரிந்து கொள்ளுதலும் வேண்டும்.
இன்று பலர் கடன் கொடுத்துவிட்டு கடன் பெற்றவனைக் கண்டு பயப்பட்டுக் கொண்டிருக்கின்றார்கள். கொடுத்த கடனைத் திருப்பிக் கேட்டால், நான் என்ன சும்மாவா கேட்டேன். கடன்தானே கேட்டேன். இப்ப வசதியில்லை. கட்டாயம் தருவேன்’ என்று சர்வ சாதாரணமாகத் தமது பழைய சம்பவங்களை அறவே மறந்து பேசுவார்கள். சிலருக்குத் தொழிலே அடுத்தவனை மிதிப்பதாகும். கொடுத்தவனைக் கெடுப்பதும் துடுக்குத் தனமன்றி வேறென்ன? மேலும் இப்படியும் சிலர், கடையில் சாமான்களைக் கடனுக்குக் கொடுப்பார்கள். அவர்களுக்குப் பணத்தை மீள அறவிடும் கலை நன்கு தெரியும். கடனுக்கு வாங்கிய பொருட்களை விலை கூடுதலாக விற்றுவிட்டுப் பின்னர் பலர் முன்னிலையில் கொடுத்த கடனைக் கேட்டுப் பணத்தை வெகு சாமர்த்தியமாகப் பறித்து விடுவார்கள்.
தமது சிரமங்களுடன் பிறர் உழைப்பின் உயர்வினையும் பெரிதென . மதிப்பவர்கள்

பருத்தியூர் பால, வயிரவநாதன் 97
நாணயமானவர்கள். ஈகை என்பது ஒருவர்க்கு உவந்து அளிப்பது, துன்பம் நேருங்கால், சமயமறிந்து, கடனுக்குக் கொடுப்பதுகூட ஈகைதான். சிலர் சொல்லுவார்கள் “இப்படி கடன் வாங்குவதைவிடப் பிச்சை எடுக்கலாம்’ என்பர்.
கடன் பெறுதல் கூடச் சிலசமயம் பிச்சை எடுத்தலாக உருமாறுகின்றது. கொடுத்தலைத் தடுத்தலும், கொடுக்காமல் விடுவதைவிட மோசமானதே. தருணத்தில், தயவுடன் உதவுதல், ஆண்டவன் கட்டளையிட்ட செயல் போல் ஆவதுடன் அவரது அருள் கொடையை நாமும் பெற்றவர்களாவோம். “கொடுக்கும் போது நாம் அருளைப் பெற்றவர்களாவோம்.’
வழங்கும் பொருளின் பெறுமதி பெரிதல்ல. உயிர்காக்கும் மருந்து நூறு ரூபாய் என்றால், உயிரின் பெறுமதி நூறு ரூபாய் அல்ல. அடிப்படையில் எந்த லட்சியமும் இல்லாமல், ஊதாரித்தனமானவர்களை விட்டு விடுவோம். பிரச்சனைக்குரியவர்களைத் தெரிந்து உதவிகள் செய்வோம்.
இன்று, தனிமனிதனின் உழைப்பும், தியாகமும் இன்மையால், நீாடு கடனாளியாகிவிட்டது என்று, எல்லா நாட்டு அரசாங்கங்களும் சமாதானம் கூறிச் சமாளிக்கின்றன. ஆனால் சுரண்டல் புத்தியுள்ள அரசியல்வாதிகளிடம் நாடுகள் சிக்குண்டு அனைத்து வளங்களும் முடங்கி அழிக்கப்படும் அவலத்தை எங்கே போய்ச் சொல்வது? கடன் வாங்காமலே பிழைக்கும் வித்தை அரசியலுக்குப் பொருந்தலாம். இருக்கின்ற சொத்துக்களை விற்றுக் கடன்பட்டு ஒருவனிடம் கொடுக்க, அவன் எந்தவித

Page 63
98 வாழ்விஸ்ல் வசத்தங்கள்
விவஸ்தையும் இல்லாமல் கார், பங்களா என்று வாழ்ந்து கொண்டிருக்கின்றான். இவர்களிடம் காசு கொடுத்தவன் கிட்டே போகவே அஞ்சுவது மிகவும் வேதனையும், அருவருக்கத்தக்கதுமாகும்.
“லட்சத்தைக் கொடுத்துவிட்டேன். அலட்சியமாய் அவனைப் பேசமுடியுமா? சற்று இசகு, பிசகாக ஏசினால், அவன் என்ன அநியாயமும் செய்துவிடுவானே” என்று புலம்புபவர்களை நீங்கள் பார்ப்பதில்லையா?
தவித்த முயலை அடிப்பது சாமர்த்தியமல்ல. நரகம்கூட இவர்களைக் கண்டு அருவருக்கும்.
பிறருக்கு ஏற்படும் சோதனைகள், எங்களுக்கான சந்தர்ப்பங்கள் அல்ல.
உள்ளதை வைத்து, திட்டமிட்டு வாழ்வதை விடுத்து, அடுத்தவனைப் பார்த்து அனைத்தையும் இழப்பது அறிவுடைமையன்று. நலிந்தவனுக்கு உவந்து உதவுதலும் எம் கடனாகும். செய்யக்கூடியதைச் செய்யவேண்டியது மனிதாபிமானம்.
எனினும், கடன் மனதை ஒடித்துவிடுவதால் கூடியவரை வரவுக்கேற்ற செலவு, சிக்கன, சீரான வாழ்க்கைமுறை சரியாக எம்மை வழிநடத்தும். அறிக
ઝેફનઃઉત્તી jo- ol-QOOS

பருத்தியூர் பால. வயிரவநாதன் 99
காலங்கள் விழிப்போடு இருப்பவை. இவை ஒடிக் கொண்டேயிருப்பவை. காலத்தின் ஓட்டத்தை வீணடிக்காது வாழ்ந்தால் அது யோகம். இதை வீணாக்கினால் நாம் பரிதாபகரமானவர்களாவோம். *காலம்’ எம்மைப் பார்த்துச் சிரிக்கும்படியாக வாழக்கூடாது. நாம் சேவை செய்யும்போது காலங்கள் களிப்படைகின்றன. காலங்கள்தோறும் மனிதன் வாழ்ந்த வாழ்வு முறைகள், அழிக்கப்படாத எதிர்காலத்திற்கான பதிவுகளாக நோக்கப்படும்.
முக்காலங்கள் பற்றி மெய்ஞ்ஞானிகள் ஞானமார்க்கம் மூலமும், விஞ்ஞானிகள் விஞ்ஞான அறிவு மூலமாக நிறுவிக்கொண்டு வருகின்றார்கள். விஞ்ஞானிகள் தமது கண்டுபிடிப்புகளின் பின்னர் மக்களுக்குத் தகவல்களைத் தெரிவிக்கின்றனர். ஆனால் எமக்கு பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே வாழ்ந்த

Page 64
1OO வாழ்வியல் வசந்தங்கள்
மெய்ஞ்ஞானிகள் கூறிய தகவல்கள், தற்போதுதான் விஞ்ஞானிகளால் நிறுவப்பட்டு வருகின்றன. உலகில் என்ன நடந்தன, நடக்கப்போகும் என்பனவைகளை ஆன்மீகவாதிகள் கூறும்போது அவைகளை நம்பாதவர்கள், விஞ்ஞானம் இவைகளை நிறுவியபோது நம்புகின்றார்கள். இவைகள் பற்றிய அறிவு ஆன்ம ஞானிகளுக்கு எப்படிச் சாத்தியமாயிற்று? எல்லா விடயங்களுக்கும் சிலசமயம் உகந்த பதில் சொல்லிக்கொள்ள முடியாமல் இருக்கின்றது.
உண்மையில் காலங்கள் என்பது என்ன?
நிகழ்காலம் என்பது மட்டும் நிஜம்தானா? இறந்த காலம் என்பது முடிந்துபோன காலமா?
எதிர்காலம் என்பது கண்டுகொள்ள முடியாதபடியால் வெறும் எதிர்பார்ப்பு மட்டும்தானா?
எப்படி ஆகும் எனத் தெரிந்து கொள்ளமுடியாத கற்பனைக் காலமா இது?
ஆனால்,
காலங்கள் தோறும் நடக்கும் சம்பவங்கள் அழிந்து போகக்கூடியவை அல்ல.
இவை நிஜமானவை; சரித்திரங்களை உண்டு பண்ணியவை; தற்போதைய சம்பவங்கள் எதிர்கால சரித்திரங்களாகக் கூடியவை.
இறந்த காலம் சொன்ன அனுபவங்கள், நிகழ்காலத்திற்கான வழிகாட்டல்களாக அமைந்து

பருத்தியூர் பால. வயிரவநாதன் 101
விடுகின்றன. எதிர்காலத்தில் செய்யப்பட வேண்டியவை, நிகழ்காலத் திட்டமிடல் மூலம் வழிவகுக்கப்படுகின்றன.
எதிர்காலம் என்பது, எமது சந்ததிக்காகச் செய்யப்படும் செயல்கள், சேவைகள் என்பதுடன் சற்று மேல் நோக்கிய பார்வையுடன் சிந்தித்தால் இது தியாகமாகவும் சொல்லலாம். எனவே தற்போது நாம் செய்கின்ற கருமங்கள், எல்லாமே இப்போது உண்மையாகச் செய்யப்படுவது போலவே, இறந்த காலத்தில் செய்யப்பட்டவையும் உண்மையாகவே செய்யப்பட்ட செயல்களே. சொல்லப்போனால் இறந்தகாலம் என்பது அப்போதைய நிகழ்காலச் செயல்களேயாகும்.
எனவே, இதன்படியே நாம் எதிர்காலத்தை வெறும் கற்பனையாகக் கருதாது, அது என்ன எதிர்காலம், கண்ணுக்குத் தெரியாத காலம் என வரட்டுப் பிடிவாதமாக வாழக் கூடாது. இந்தப் போக்கு எமது அறிவை மேலே செல்லவிடாமல் செய்கின்ற ஒரு தடையாகவும் அமையக்கூடும். பிடிவாதமாக நாம் எம்மை முடக்கக்கூடாது. இந்நிலை எமக்கு நாமே விதிக்கும் அடக்குமுறையும்கூட
அறிவை அடக்குதல் அடாத செயலாகும்.
நடப்பது மட்டும்தான் வாழ்க்கையா? எங்கள் மூதாதையர் தந்த செல்வங்களை அனுபவித்துக்கொண்டே, முரணாக நடப்பது ஏற்கக்கூடியதன்று. நம் முன்னோர்கள் என்ன என்ன சாதித்தார்கள் என்பதை உணர்ந்து, நாமும் நிகழ்காலத்தினை எதிர்காலத்திற்காகத் தியாகம் செய்தேயாக

Page 65
102 வாழ்வியல் வசந்தங்கள்
காலத் தாயின் மூன்று பிள்ளைகள்தான் இறந்த காலம், நிகழ்காலம், எதிர்காலம் என்பன.
நாங்கள் தேடும் உழைப்பின் மூலம் புகழ், செல்வம் எல்லாமே காலம் எனும் தாயாருக்கே உரித்தானது. யுகங்கள் தோறும் உலகம் வாழ, முக்காலமும் மனிதர்க்கும், சகல உயிர்க்கும், ஏன் இயற்கைப் படைப்புக்கள் அனைத்திற்குமே எல்லோரும் தங்கள் பங்களிப்பினைக் கொடுக்கவேண்டும்.
நேற்று இன்றாகி அது நாளையாகின்றது. கெட்ட காரிங்கள் நேற்று நடந்திருந்தால் விடுபடவும், தவறானவை அது எதிர்காலத்தைப் பாதிக்குமென அறிந்தால் அதனைத் தடுத்துவிடவும். நாம் நிகழ்காலத்தை வலுமிக்கதாக ஆக்க வேண்டியுள்ளது.
தோல்விகள் நேற்று நடந்திருந்தால் இன்று நாம் அதன் வழி செல்லமாட்டோம். புதுப்புதுவிதமாகச் சரியானபடி அமைக்க நாம் திட்டமிட்டேயாக வேண்டியவர்களாக
d 6it(36TITib.
‘எப்படியாவது வாழ்ந்தால் சரி’ என்று வாழ்வதிலும் கரைச்சல் இல்லை என்றால், மற்றவர்கள் இந்த வழியைக் கைக்கொள்ள நீங்கள் அனுமதிப்பீர்களா? சோம்பல்காரரின் தூங்கல் கதைகளை சில அப்பாவிகள் நம்பி விடுவதுண்டு. செத்தபின்பு மனிதன் வாழவில்லை. எனவே எதிர்காலமே இல்லை என்பார்கள். செய்த சேவைகள் சாவதில்லை. தனக்காக வாழ்ந்தவனுக்கே மரணம், பிறர்க்காக வாழ்ந்தால் அது யோகம்.
காலங்கள் விழிப்போடு இருப்பவை.

பருத்தியூர் பால. வயிரவநாதன் 103.
‘ஓடிக் கொண்டேயிருக்கும் காலத்தைப் பற்றிச் சிந்திக்காமல், சேவை செய்’ என்றுதான் நன்மார்க்க சிந்தனையாளர்கள் சொல்லுகின்றார்கள்.
காலம் சிரிக்கும்படியாக வாழக்கூடாது. அப்படி வாழ்ந்தால் காலம் எங்களை உருத்தெரியாமல் அழித்துவிடும். சேவை செய்யும்போது காலம் களிப்படையும். அதே வேளை முடங்கிக் கிடப்பவரை உடைத்து நொருக்கி விடும்.
நாம் இன்று விதைக்கும் விதை, நாளை எல்லோருக்கும் அது மரமாக வளரும்போது பயன் தருகின்றது. இன்றைய விருட்சம் நேற்று எம்முன்னவர் இட்டவிதை, விருட்சத்தின் பயன்பாடுகளைப் பறவைக் கூட்டமும், விலங்குகளும் எல்லா உயிர்களோடிணைந்து மனிதர்களும் பெற்றுக் கொள்ளவேண்டும்.
இதன் நிழல் எல்லோருக்குமே சொந்தமானது. இங்கு கட்டப்படும் குருவிக்கூட்டைப் பார்த்து நீ சந்தோஷப்பட்டால் உனக்கு மாளிகை இனாமாக இறைவனால் வழங்கப்படும். கணிகளைக் குரங்குகளும், வெளவால்களும், காக்கைகளும் உண்ண உரிமை கொடு. உன் வீட்டு வாயிலில் கூடை கூடையாகச் செல்வங்களை, நீ கேட்காமலேயே இறைவன் கொட்டுவான். செல்வங்கள் எல்லாக் காலத்திலும் எல்லோருக்குமே சொந்தமானவை. நாம் பிறர்க்கு வழங்க இஷ்டமின்றி ஆண்டவனின் அனுமதியின்றிப் பிடுங்கிக் கொள்ளுகின்றோம்.
காலம் இதனைக் கண்டுகொள்ளாமல் இல்லை. தகுந்த தண்டனை வழங்கிவிடும். இறைவன் நின்று

Page 66
104 வாழ்விஸ்ல் வசத்தங்கள்
அறுப்பான் என்பதன் பொருள்கூடக் காலம் கொடுக்கின்ற
தண்டனையை வைத்துத்தான் கூறப்பட்டது போலும்.
காலக் கண்கள் விசாலமானவை.
எனவே,
தூசியளவு செயல்களையும் இது கண்டு விடுகின்றது.
ஒவ்வொரு வினாடிப் பொழுதுமே அற்புதமானவை. இது சென்றால் பிடித்துவிட முடியாத மாய வஸ்து.
நாம் இழக்கின்ற ஒரு வினாடிப் பொழுதில், யார் யாரோ எத்தனை எத்தனையோ விஷயங்களைச் சாதித்துக் கொண்டிருக்கின்றார்கள்.
ஒரு வினாடி கோடிக்கும் மேலானது.
நமக்கு மட்டும் வினாடிகள் வீணடிக்கப்பட அனுமதித்தல் அநியாயமானது. ஒவ்வொருவரும், நேரங்களில் கருமங்களை நன்றாகச் சிருஷ்டிக்கும்போது பார்வையாளராக, “அவன் அதிர்ஷ்டம் அப்படி’ என விமர்சனம் செய்யக்கூடாது.
பொழுதுகள் அமிர்தமானவை. இதனை உரிய முறையில் பயன்படுத்தினால் சாகாவரம் பெற்றவர்கள் ஆவோம்.
பொழுதுகள் உலரக்கூடாது. இது வாழ்தலுக்கு வகையாக அமைய வேண்டும்.
அழிக்கமுடியாத காலங்கள் எங்கள் காலடியில் இருக்கும்போது நாம் அதனைக் கண்டுகொள்ளது விட்டால்

பருத்தியூர் பால, வயிரவநாதன் 105
அது ஓடிப்போகும். பின்னர் முதுமை தொட்ட பின்பு உடல் கெட்டபின்பு, காலத்தைச் சபிப்பது. இறைவனின் கோபத்தையே வரவழைப்பது போலாகும்.
எனவே,
எக்காலத்திலுமே, காலம் வழங்கும் கொடைகளை சேவைகள் மூலம் பெற்று ‘இக்காலத்தில் நன்றாக வாழ்ந்தோம் நாம்’ என்று பெருமை கொள்ள வாழ்தலே வாழ்வு.
முக்காலங்களுமே, இப்பரந்த பூமிக்கு உகந்ததாக ஆக்க நேற்று நன்றாகவே, இன்றும் செழிப்பாக, நாளையும் நல்லதாகவே வாழ்வோம் எனத் திடம் கொள்வோமாக.
米
- 6i/Gassif, 123.2OOs

Page 67
106 வாழ்விஸ்ல் வசத்தங்கள்
பொறுமையின்மை, பிறரிடம் இருந்து வெறுப்பையும் சம்பாதித்துக் கொடுத்துவிடுகிறது. எங்களது வேலை மட்டும்தான், உலகில் ஒவ்வொருவனுக்கும் அவனுக்கென்று பணிகள் குவிந்து இருக்கின்றது. எமது பணிகளை மட்டுமே முதன்மைப்படுத்தி, அவசரப்படுத்த முனையும்போது, பொறுமையின்மை எம்மிடையே தலைதூக்குகின்றது. மற்றவர்களின் மன இயல்பைப் புரிந்து, நாம் பொறுமை, நிதானத்துடன் செயல்படுதல் வேண்டும். இந்தப் பொறுமை காக்கும் இயல்பினை நல்பழக்கமாகக் கொண்டேயாக வேண்டும்.
னெது நண்பர் ஒருவர் அவசரம், அவசரமாக என்னிடம் தேடி வந்தார். வந்தவர் சொன்னார், ‘என்னால் பொறுமையாக எதனையும் செய்ய முடியவில்லை, பேச முடியவில்லை. நான் நிதானமாக இயங்க என்ன வழி?’ இவ்வாறு கேட்கவும் நான் மெளனமானேன்.
 

பருத்தியூர் பால. வயிரவநாதன் 107
கேட்கக்கூடாத ஒருவரிடம் இக்கேள்வியைக் கேட்டுவிட்டாரே என எண்ணிக்கொண்டேன்.
நண்பரோ, திடீரெனப் பாய்ந்தார்.
“எவ்வளவு நேரம் நான் கேட்டுக் கொண்டிருக்கின்றேன், நீர் உமது பாட்டிற்குச் சும்மா இருக்கின்றீர். நான் என்ன வேலை மினக்கட்டு உம்மிடம் கதை கேட்க வந்தேனா? நான் உம்மிடம் வந்ததே வீண். என் நேரம் அநியாயமாகப் போய்விட்டது.’ எனப் பொரிந்து தள்ளினார்.
அவரால் ஒரு அரை நிமிடநேரம் பொறுக்க முடியவில்லை. இவரிடம் எப்படிப் பேசிப் புரிய வைப்பது?
உண்மையிலேயே பொறுமை, நிதானம் என்றால் என்ன?
எமக்கு வேளைவரும் என எண்ணிக் காத்திருப்பதா?
தீமைகள், அநீதிகளைக் கண்டும் அமைதி காப்பதா?
எமக்குள்ள பங்கு எப்போதும் கிடைத்தே தீரும் என எண்ணிக் கண்களை மூடிக்கொண்டு சும்மா இருப்பதா..?
கதைத்தால் வீண் வம்பு சற்றுப் பொறுப்போம் அல்லது எமக்காக யாரேனும் பரிந்து பேசி, எமக்கான உரிமைகளை, அவர்கள் பாதுகாத்துக் கொடுப்பார்கள் என எண்ணுதலா?
அல்லது,

Page 68
108 வாழ்லிஸ்ல் வசந்தங்கள்
விட்டுக் கொடுத்தலே பொறுமையானது, நிதானமானது, அன்பின் வெளிப்பாடு என ஒதுங்கிக் கொள்ளுதலா?
பயந்தாங்கொள்ளித்தனத்தின் வெளிப்பாடா?
இப்படிப் பலதரப்பட்ட காரணங்களுக்காகப் பொறுமையைக் கையாளமுடியும். நியாயமான காரணங்களுக்காக மட்டும் பொறுமை காட்டுதல் என்பதே சரியான செயலாகும்.
கோழைத்தனம் பொறுமையல்ல. இது ஆற்றாமை. நல்லவர்கள்கூட ஆற்றாமையால் அவதிப்படுவதுண்டு.
நெஞ்சில் உரமின்றி வஞ்சனை செய்வோர்க்கும் சிறிது பொறுமை காட்டித் திருந்துவதற்குச் சந்தர்ப்பம் வழங்கி விடுதல் நன்மை பயக்க வழிவகுக்கலாம். ஒருவரின் பொறுமையை அவரின் கோழைத்தனமாகத் தப்பு அபிப்பிராயம் கொள்வதும், பின்னர் பொறுமை கொண்டவர் போர் வெறி கொண்டால் அதனை அடக்க முடியாமல், எதிரிகள் திணறுவதும் நாம் காணும் காட்சிகள். அடித்தால்தான் அடங்குவது சிலரது போக்காகும். வஞ்சகர் பிறர் அமைதியைக் கொஞ்சமும் பொருட்படுத்துவதில்லை.
எந்த இடத்தில் எப்படிப் பொறுமை காப்பது என்பதே பெரிய விஷயமாகும். “பொறுத்தார் பூமி ஆள்வர்” என்கின்றனர்.
அனுகூலமாக, எதுவும் நடக்கவேண்டுமேயாயின், பின் விளைவுகள் பற்றி முன்னரேயே யூகித்துக் கொள்ளவேண்டும்.

பருத்தியூர் பால. வயிரவநாதன் 109
பொறுமை என்பதே நாம் அடுத்தவன் சிந்திக்கக் கொடுக்கின்ற கால அவகாசமாகும். காலம் ஒருவனைக் கனியவைக்கும்.
அடுத்தவன் எனக்காகச் சற்று ஒதுங்குகின்றானே என்பதனால் பல இக்கட்டான, தீர்க்க முடியாத பிரச்சினைகள் மலையை மசிய வைப்பதுபோல் அசைந்து விலகி விடுகின்றன.
பொறுமை ஒரு தனித்துவமான பண்புதான்.
நல்ல முடிவினைத் தரவல்ல மிகச் சின்ன விஷயங்கள்கூட பொறுமையின்மையால் சிக்கலடைந்து விடுகின்றன.
ஓவியன் ஒருவன் சித்திரம் வரைகின்றான். அல்லது சிற்பி ஒருவன் சிற்பம் செதுக்குகின்றான். இவை இரண்டு தொழிலுமே பொறுமையுடன் கையாளவேண்டிய கலைகளாகும். உதாரணமாகச் சிற்பத்தின் சகல வேலைகளுமே பூர்த்தியடைந்த பின்னர், ஏதோ சற்றுக் குழப்பமடைந்து ‘கண்‘ வைக்கச் சென்றவன் உளியை அவசரமாக ஓங்கி அடித்தால் சிற்பம் என்னாவது? அதேபோல ஓவியன், சித்திரம் தீட்டி முடிந்ததும், சற்றே பொறுமை இழந்து கருமை நிறத்தைக் கண்டபடி தீட்டிவிட்டால் சித்திரமே குழம்பிவிடுமே. வாழ்க்கை கூட இப்படித்தான்.
இது அழகாகத் தீட்டப்பட வேண்டியவை.
மெத்தென்ற, மென்மையான பூக்கள், அதைத் தொட்டு உருளும் மழைத்துளிகள், பஞ்சு போன்ற பனிக்

Page 69
110 வாழ்விஸ்ல் வசந்தங்கள்
கற்றைகள், பச்சைப் பசேலென்ற பசுமை காட்டும் மரங்கள், மலைகள், மடு, காடு, கடல், நீண்ட பாதைகள். அத்துடன் மனிதர்கள். விலங்குகள். இத்தனையும் கொண்ட இயற்கைக் கொடைகளால் நிரம்பிய உலகத்தை ஆண்டவன் அவசர அவசரமாகப் படைக்கவில்லை. எத்தனை கோடி ஆண்டுகளின் முன்னர், நெருப்புக்கோளமாகப் பிரபஞ்சத்திலிருந்து வெளிவந்த பூமிப்பந்து இப்படி உருமாறி இத்தகைய அழகுச் சோலைகளாக மாற எத்தனை ஆண்டுகள் பிடித்திருக்கும். எண்ணிப்பார்க்க வேண்டும்.
அடுத்தவன் ஓடுகின்றானே என்பதற்காக அவனைக் காரணமின்றி முந்த நினைத்து, பொறுமையின்றி ஓடினால் இடறி விழ வேண்டியதுதான். சரி ஏதோ வேகத்தில் முந்தி வந்ததும், பின்னால் இருப்பவனைக் கண்டு, தன் முயற்சி வென்றதாகக் கருதிச் சந்தோஷப்படுவதுகூட ஒரு அற்பமான விஷயம்தான். நிதானமின்றி விரைவது சரியானதா?
நாம் விரைவாகச் செயல்படவேண்டும். இது கருமத்தின் தன்மையைப் பொறுத்தது. பொறுமை, காரணத்துடன் கூடிய விரைவிற்கு விரோதியல்ல. சொல்லப்போனால், எம்மைச் சுதாகரித்து நிதானமாகச் செயல்படும்போது, செயல்களில் வேகம் தானாகவே வந்து விடுகின்றது. அவசர புத்திக்காரனைவிட நிதான புத்திக்காரன் முழுமையான அர்ப்பணிப்புடன் சேவையாற்றுகின்றான்.
பொறுமை, காரியங்களை ஆரோக்கியமாக நடத்தி முடிக்கின்ற உபாயமாகும். பொறுமையானவர்களால்
வேலைகளைத் திட்டமிட்டபடி ஆற்ற முடிகின்றது.

பருத்தியூர் பால. வயிரவநாதன் 111
நீண்ட கால வெற்றிக்கு, சில மணித்தியால, நிமிட பொறுமைகள் நல்ல வழிகளை அமைக்கின்றன.
அதேவேளை, பொறுமையின்மை பிறரிடம் வெறுப்பை ஏற்படுத்தும் சாத்தியத்தினையும் ஏற்படுத்துவதுடன், மற்றவர்களின் ஒத்துழைப்பின்மையால் கருமங்கள் எதிர்பார்த்தபடி அமையாது சில கணப்பொழுதில் பொடிப்பொடியாகவும் அமைய வழிகோலுகின்றது.
எங்களை ஒரு சுறுசுறுப்பானவர் என்று காட்டுவதற்காகவே சற்று மிகையாக இயங்கிக் கொள்வதால் பிறர் கணிப்பிற்கு உட்பட்டு, பலவீனங்களை வெளிச்சம் போட்டுக் காட்டும் நிலைக்குத் தள்ளப்படுவோம். எங்களைப் பற்றிய வெளிப்படுத்துகைகள் சரியானவையாகவே அமையவேண்டும். ஏனையவர் பார்வைக்குப் படுபவையாக அமைவதில் என்ன லாபம்? அசட்டுத் துணிச்சலும், ஆரவாரமும் பொறுமைக்கு எதிரானவை.
என்ன கருமங்களைச் செய்து கொண்டிருந்தாலும் முழுமையான வேலைகளின் அளவு எப்படியோ தெரிந்துவிடத்தான் செய்யும்.
சிலர் பரீட்சைக்கு விழுந்து விழுந்து படிப்பதாகத் தோற்றம் காட்டுவார்கள். எனினும், பரீட்சை முடிவுகள் அவர்கள் தோற்றத்தை வெளிச்சம் போட்டுக் காட்டிவிடும்.
நிதானமாக, ஆரவாரமின்றிப் படிப்பவன் முழு - வெற்றியையும் பெற்று விடுகின்றான். வித்தை பெறும்
பக்குவம் நிதானத்தில் நிறைந்துள்ளது.

Page 70
112 வாழ்விஸ்ல் வசத்தங்கள்
தியானம், மூச்சுப்பயிற்சி, மென்மையான இசையை இரசித்தல், நல்ல நூல்களை ஆறுதலாக வாசித்தல் போன்றவைகளினால், நிதானமும் பொறுமையும் கிடைப்பதாகச் சொல்லப்படுகின்றன. பதட்டமின்றி இருப்பதே நல்ல பயிற்சியில் தங்கியுள்ளது. பொறுமை காத்துப் பழகினால் தேக ஆரோக்கியமும் வலுவாகி விடுமல்லவா?
நேரம் குறித்து, அதன்படி நடந்தால் தாமதமின்றி எதனையும் செய்ய முடியும். இதனால் அவசரம் என்ற பிரச்சினைகளுக்கே இடமில்லை. நேரம் பிந்துவதாலேயே கோபமும், ஆவேசமான போக்கும் எம்மைத் தாக்குகின்றன. நேர காலத்தின் முன்னரே எழும்பிக் கொள்ளும் பழக்கத்தை முதலில் கடைப்பிடிப்பது மிகவும் சிறப்பானதாகும். பிந்தி எழும்பினால், அன்றைய காரியங்கள் அனைத்துமே பிந்திவிடும். நாம் பிந்தி வந்து, பிறர் மீது பாய்வது, பின்னர் அவசரம், அவசரமாகக் கருமங்களைத் தாறுமாறாகச் செய்து முடிக்க விழைவது எவ்வளவு சிக்கலானது தெரியுமா? எமது தாக்கத்தைப் பிறர் மீது அழுத்துவது கூடாது.
நல்ல ஓய்வு, நிதானமாக மனிதனைச் சிந்திக்க வைக்க உதவுகின்றது. சரியானபடி கருமங்களைச் செய்து முடிக்கும்போதுதான் நேரமும் மீதப்படுகின்றது. எனவே ஓய்விற்கான நேரம் கிடைப்பதனால் தேக ஆரோக்கியமுடன், அடுத்த செயலுக்கும் எம்மைத் தயாராக வைக்கும் இயல்பும் எமக்குச் சிரமம் இன்றி வந்து விடுகின்றது. மேற்படி நாம் நடந்துகொள்ளாதுவிடின் அவசர புத்திக்கே நாம் அடிமையாவோம். அத்துடன் நேரங்களும்

பருத்தியூர் பால. வயிரவநாதன் 113
நாசமாக்கப்படுகின்றன. கோபங்கள் சேர பிறகென்ன? கஷ்டங்கள்தான். பொறுமை இன்மையின் உற்ற நண்பன் கோபம்தானே?
நேர்முகப் பரீட்சைக்குச் செல்லுவதற்காக முண்டியடித்து பஸ்ஸில் ஏற, விழுந்து காயப்பட்டுப் பரீட்சையைக் கோட்டை விடுவதும் அலுவலகத்தில் ஒரு கடிதத்தைத் தேட ஒன்பது கடிதங்களைத் தொலைப்பதும், வாகனங்கள் முந்தி ஓட, ஒன்றை ஒன்று விரட்டி மோதி விபத்துக்குள்ளாக்குவதும் இன்றைய சாதாரண சமாச்சாரங்கள். இதில் வேதனை தருவது என்னவெனில், ஒருவரது பொறுமையின்மையால் பலர் வீணாகப் பலியாவதுதான். இதனால் ஒவ்வொரு வினாடிப் பொழுதும் ஒருவரோ பலரோ பாதிக்கப்பட்டே வருகின்றனர். கடமை செய்ய நல்ல கருவி பொறுமை. வேகத்தை வேளை அறிந்து செய்வோம்.
பொறுமை காத்தலால் பிறர் உங்கள் மீது அபிமானம் கொள்வதுடன் உங்களை நீங்களே நேசிப்பவர்களாகவும் மாறுவீர்கள். எங்களது நற்செயல்கள் பிறருக்கு வழங்கல்களாக அமைதல் வேண்டும்.
பொறுமைகூட அருமையான வழங்கலே,
米

Page 71
114 வாழ்விஸ்ல் வச கள்
சுற்றி இருப்பவர்களைத் திருப்திப்படுத்த நீங்கள் பொய், புளுகு பேசுபவர்களாக மாறக்கூடாது. மற்றவர்கள் பூரணமான எங்களிடம் விசுவாசமாக இருக்க வேண்டுமேயானால், நாம் வாக்கு நாணயமானவர்களாக இருக்கவேண்டும். எமது பொய்யான வாக்குறுதிகள் பிறரைக் காயப்படுத்தக் கூடாது. பொய்யான வாக்குறுதிகளால் மக்கள் படும் அவஸ்தைகளைக் கண்டு கொண்டிருக்கின்றோம். செய்யக்கூடியவைகளைச் செய்து காட்டவேண்டும். நல்லதைச் செய்பவர்கள் கண்டபடி
வாக்குக் கொடுக்க மாட்டார்கள்.
IெTக்குக் கொடுத்தல் விளையாட்டு அல்ல. இது வினையாகி உயிரையே அணைப்பது போலாகியும் விடும்.
இவை நாம் தெரிந்துகொண்டவைகள்தான்.
 

பருத்தியூர் பால. வயிரவநாதன் 115
முடியாத காரியத்தை முடியும் எனக் கூறி ஏமாற்றுதல் கொடுமையான குற்றம்.
பிறரைத் திருப்திப்படுத்துவதற்காகச் சொல்லப்படும் இந்தப் பொல்லாத பொய்யுரைகள் பாதிக்கப்பட்டவரின் பெரும் சாபத்தையே கொடுக்கின்றது.
வாக்குக் கொடுத்துப் போக்குக் காட்டுதல் போக்கிரித்தனமென்றே சமூகம் சொல்கின்றது.
அரிச்சந்திரன், வாக்குக்கொடுத்து பின்னர் அவன் கண்ட சோதனைகளைப் படித்துவிட்டுப் பொருமி அழுகின்றவர்களில் எத்தனை பேர் சத்தியத்தின் அர்த்தப்படி வாழுகின்றார்கள்?
இன்று வாக்குக் கொடுப்பதுகூட வேடிக்கையாகப்
பொருட்களை விற்கும் வியாபாரி எத்தனை விதமான உறுதிமொழிகளை அள்ளி வீசுகின்றான், இவை இறைவனையே அசரவைக்கும் சொற்களகும். தகரத்தைத் தங்கமாக்கும் இந்த வித்தையில் படைத்தவனே மயங்கி மடங்கிவிடுவான். இது வெறும் சொற்திறமை மட்டுமல்ல, பிறரை மட்டம் தட்ட அவர்கள் பயின்ற, பயின்று கொண்டிருக்கின்ற வித்தைகளுமாகும். வாக்குத் தவறுபவர்கள் - இவர்கள் தமக்குத்தாமே ஆத்ம விரோதிகள்.
பிறர் ஆத்மாவைச் சூடேற்றும் சோம்பல் புத்திக்குச் சொந்தக்காரர்கள். பிறரது இயலாமை, தெரிந்து கொள்ளாமை என்கின்ற விஷயத்தைச் சாதகமாக்கி ஒரு

Page 72
116 வாழ்விஸ்ல் வசத்தங்கள்
நிராயுதபாணியையே கொலை செய்வது போன்ற கொடுமைக்காரருமாவர்.
ஒரு விதத்தில் பார்த்தால் தாம் வாழ பிறரது மனங்களை உடைப்பவர், கெடுப்பவர் கொலைக் குற்றவாளியைவிட மோசமானவர்களாகப் படுகின்றது.
உடலைச் சிதைப்பதைவிட நம்பியவர் மனதைச் சிதைப்பது சகிக்க முடியாததாகும்.
சாத்தான்கள் சுவாமி வேடம் போடுவது ஒன்றும் புதிது அல்ல என்றாலும், தெரிந்தவர்கள் சில அவசிய தேவைகளின் பொருட்டு வேறு வழியின்றிப் பிறர் பேச்சை நம்புவதுமுண்டு.
எங்கள் திறமைகளை ஆரம்பத்தில் ஏமாற்றுப் பேர்வழிகள் கொஞ்சம் பரீட்சித்துப் பார்ப்பார்கள். தங்கள் வித்தை பலிப்பதாகக் கண்டுவிட்டால் போதும், அப்புறம் ஆளைக் காலி பண்ணிவிடுவார்கள்.
காசுக்காகத் தெய்வத்தையே காசாக்கும் கூட்டம் இருந்துகொண்டுதான் இருக்கும். என்ன கஷ்டம் பாருங்கள் வாக்குக் கொடுத்து வேதனைப்படுத்துபவர்கள் தங்கள் சாமர்த்தியத்தால் தலைவர்களாகவே வந்து விடுகிறார்கள். அரசியல்வாதிகளைப் பாருங்கள். -
w இவர்கள் ஒருவருக்கு மட்டுமா வாக்குறுதிகளை வழங்குகிறார்கள்? ஒட்டுமொத்தமாக, முழு நாட்டு
மக்களுக்குமே உறுதிமொழி பகன்று நாட்டை இறுதி யாத்திரைக்கே இட்டுச் செல்கின்றார்களே.

* பருத்தியூர் பால. வயிரவநாதன் 117
விளக்கில் விழும் விட்டில் பூச்சிகள் போல, மக்கள், தெரிந்தும், புரிந்தும் மீண்டும் மீண்டும் விழுந்து புழுவாக மடிகின்றார்களே.
இவர்கள் அதிகாரம் பெற்ற பொய்யுரையாளர்கள்.
பொய்யுரையாளரின் சக்தி நாட்டையே கவ்வி ஏப்பமிடுவதிலிருந்து அதன் பாரிய செயல் திறன்! புரிகின்றதல்லவா?
எங்கள் திருப்திக்காக, எங்கள் தேவைக்காக, எங்கள் அமைதிக்காக பொய்யான வாக்குறுதிகளை, கட்டாயமாக நம்பவேண்டும் என்கின்ற நிர்ப்பந்தத்திற்கு ஆளாகி விடுகின்றோமே.
‘நம்ப நட, நம்பி நடவாதே’ என்பார் சான்றோர். துன்பப்படுபவர்கள் அதில் இருந்து விடுபட ஒருவரின் உதவியை நாடுதல் இயல்பேயாகும். பலவீனமாக இருக்கும் ஒருவனை பம்பரமாகச் சுற்றவைத்து களைப்படையச் செய்தல் முறையா? பாதிப்படைந்தவன் பரிதாப நிலைக்கு ஆளாகுவதால் இறுதியில் சலிப்பு, வெறுப்பு, கோபம், ஏக்கம், சோகம் என வலைப் பின்னலாகவே அதனுள் சிக்குண்டு போகின்றான். இந்த நிலையினால் நல்ல ஆரோக்கியமானவர்கள் கூட, மற்றவன் கண்டு. கொள்ளமுடியாத அளவிற்கு மாற்றமடைந்து போகின்றான்.
சிலவேளை, நல்லவர்கள் கூடப் பொல்லாதவர்களாக உருமாறும் சாத்தியமும் ஏற்படலாம். ஒரு வல்லமையுள்ள பொறியியலாளர் என்னிடம் சொன்னார், நான் என்ன படித்தும் என்ன பயன்? என்னிடம் தொழில் செய்த ஒரு

Page 73
118 வாழ்விஸ்ல் வசத்தங்கள்
சாதாரண சிற்றுாழியன், என்னைத் தன் பேச்சால் மடக்கி என் தொழிலுக்கே கெட்ட பெயர் ஏற்படுத்திவிட்டானே’ என்றார். நான் கூறினேன், ‘நீங்கள் மனம் உடைந்து போகவேண்டாம். செய்யும் தொழிலுக்கும் உங்கள் தோல்விக்கும் சம்பந்தமில்லை. பேச்சுக்கலை மூலம் அவன் ஏமாற்றிவிட்டான். அதனை அவன் தவறான வழியில் குருவிடமே உரைத்துப் பார்த்துவிட்டான். நீங்கள் சற்று ஜாக்கிரதையாக இருக்கவேண்டும்’ என்றேன். எத்தகைய படித்தவர்களை, மேதாவிகளைக் கூட சர்வ சாதாரணமாகப் பேசியே நம்ப வைக்கின்றார்களே.
காதலன், காதலியிடம் சொல்கின்ற உறுதிமொழிகள் அதேபோல் காதலி காதலனுக்குச் சொல்லிக் கொள்ளும் உறுதிமொழிகள்; மன்னர்கள் எழுதி வைத்த கல்வெட்டுக்கள் போது செதுக்கி வைத்துப் பின்னர் மறுத்து வெறுத்து ஒதுங்குதல் ஒன்றும் புதுமையில்லை.
இவர்கள் போலியை வேலியாகப் போடுபவர்கள்.
வேட்டுக்கள்.
ஆனால் இவர்கள் தம் வாழ்க்கையைத் தாமாகவே வீழ்த்துபவர்களுமாவர். வேலையில்லாமல் திரியும் அப்பாவிக்கு வேலை கொடுப்பேன் எனச் சொல்லுவதும், வெளிநாடு அனுப்ப கொடு பணம் எனக் கேட்டுப் பறித்து உரித்து ஓட விரட்டுவதும், நாம் காணும் அன்றாட அவலம்.
இதனால் எத்தனை குடும்பங்கள் சாவை சந்தித்து விட்டன? காணியை விற்றுப் பூமியை விற்று, இருந்த நகை நட்டை விற்றுச் சேர்த்த காசை கண்டவன் கையில்

பருத்தியூர் பால. வயிரவநாதன் 119
கொடுத்து, இறுதியில் இருப்பதையும் இழந்து கையேந்தும் நிலை என்ன கொடுமை. அட கடவுளே?
விசா இல்லாமலே விமானம் ஏற்றுவேன் என்று உறுதி பேசி கொள்கலனில் அவனை ஏற்றி, அடைத்து, உயிரைக் கசக்கி, ஒரு வழியில் கடலில் எறிவதும் பொய் மொழியை நம்பியதன் விளைவு அல்லவோ?
காரியம் ஆகுமுன்தான் பொய்கள் பந்தல் போடும். காரியம் முடிந்ததும் பொய் நிர்வாணமாகும். ஆயினும் இதனால் அல்லல்பட்டவன் துயரை மீட்டுக் கொடுக்க ՓtջակLDո?
பெற்ற பிள்ளைகளுக்குக்கூட முடியாத செயலுக்காகப் பொய் பேசல் வேண்டாம். அப்பா எனக்கு அதுவேண்டும், இதுவேண்டும் எனக் கேட்டால், பொறுமையாகப் புரிகின்ற விதத்தில் உண்மையைப் புகட்டுங்கள். உங்கள் பொய்யுரைகள், வாக்குகள் அவர்களை ஏமாற்றத்துக்குள்ளாக்க நீங்கள் காரணமாக இருக்க வேண்டாம்.
காலப்போக்கில், ஒருவனைத் திருப்திப்படுத்த கண்ட கண்ட உறுதிகளை வழங்குவதும், அதைக் களைவதும், உங்கள் பிள்ளையின் சொந்தக் குணமாகி விடுமன்றோ? முடிந்ததை மட்டும் கூறவேண்டும். முடியாததை விலக்கி விடவேண்டும். முடியாத காரியத்தில் வெட்கம் என்ன இருக்கின்றது? எங்கள் இயலாமையை மறைக்கச் சொல்லப்படும், செயல், சொற்கள் கூட எமது இயலாமையைத் தொடர்ந்து வெளிப்படுத்திய வண்ணமேயிருக்கும்.

Page 74
120 வாழ்வியல் வசந்தங்கள்
ஒரு தவறை மறைக்க ஓராயிரம் தவறுகளா?
எங்கள் அந்தஸ்தைக் காப்பாற்றப் போடும் வேடம் எத்தனை நாளைக்குப் பொருந்தும்?
இவை சாமர்த்தியம் அல்ல. சந்தர்ப்பத்தில் செய்யும் தவறுகள். மற்றவன் சிரிக்கவும், கேலி பேசவும், அவமதிக்கவும் செய்ய நாமே அனுமதிப்பது என்பதே வெட்கக்கேடான விஷயம்.
எங்கள் பெருமையை, பலத்தினை, உண்மையான செயலினைக் காப்பாற்ற, போற்றப்பட வேண்டுமேயாயின் கொடுத்த வாக்குகளைக் காப்பாற்றவேண்டும்.
கண்டபடி சிந்தித்து முடிவு எடுக்காமல் உறுதியுரைகள் கூற வேண்டாம். முடிந்த அளவு சொல்லாமலேயே பிறருக்கு உதவி செய்து முடித்தலே சாலவும் சிறந்ததாகும்.
சுற்றி இருப்போரைத் திருப்திப்படுத்த நீங்கள் பொய் பேசுபவராக, புளுகுபவர்களாக மாறிவிடவேண்டாம்.
சுயகெளரவத்தைக் காப்பாற்றுவது என்பதே, மற்றவர்கள் எங்களிடம் பூரண விசுவாசம் மிக்கவர்களாக எண்ண நாங்கள் அவ்வண்ணம் வாக்கு நாணயம் உள்ளவர்களாக இருப்பதேயாகும்.
米
- 6fy(assifi, 19-3-2OO5

பருத்தியூர் பால. வயிரவநாதன் 121
ஒரு விஷயத்தில் இறங்கு முன்பு அது சரிப்பட்டு வராது என்று எண்ணிவிடலாமா? நல்லதையே எண்ண வேண்டும். என்றாலும் ஒரு கருமத்தில் நல்லது எது, கெட்டது எது என்று தெரிந்து கொண்டேயாக வேண்டும். புத்திசாலிகளாகக் காட்டுவதற்காகவே சிலர் எதிர்மறையான கருத்துகளைக் கூறிக் கொண்டே இருப்பார்கள். இதனை நாம் பொருட்படுத்தாமல் சரியான பாதையில் நல்ல குறிக்கோள்களுடன் சென்று கொண்டே இருக்க வேண்டியதுதான்.
னெது நண்பர் ஒருவர் சற்று வித்தியாசமானவர். இவரது பேச்சுக்கள் வேடிக்கையாகவும் சில சமயங்களில் எரிச்சலூட்டுவனவாகவும் இருக்கும். காலையிலேயே வாசகசாலைக்குச் சென்றுவிடுவார். அனைத்துப் பத்திரிகைகளையும் மொத்தமாகப் படித்துவிடுவார். பொதுவாகப் பத்திரிகையில் வரும் பரபரப்புச் செய்திகள்

Page 75
122 வாழ்விஸ்ல் வசத்தங்கள்
பற்றி எங்களுக்குத் தெரியும்தானே. குற்றவியல் செய்திகளைத்தானே குறைவில்லாமல் குதூகலத்துடன் பிரசுரிக்கின்றன!
இவரிடம் சென்று பத்திரிகைச் செய்திகள் பற்றி கேட்டால்தான் பிரச்சினையே உருவாகும். ஏன்தான் கேட்டோம் என்று ஆகிவிடும்.
‘ஐயா, என்ன செய்தி இது. கேட்கவே ஆத்திரம் பற்றிக் கொண்டு வருகிறது. ஒரு பெண்ணை இப்படியா கற்பழித்துக் கொலை பண்ணுவார்கள். படுபாவி, படுபாவி. என நான் வயிற்றெரிச்சலுடன் சொன்னதுதான் தாமதம். மனிதர் வரிந்து கட்டிக்கொண்டு பொரிந்து தள்ளுவா. “இப்படி தம்பி. சும்மா இரும், உமக்கு எல்லாமே தெரியுமா? சரி பிழை சொல்லுகின்றீர்களே, அவனிடம் என்ன தப்பு கண்டீர்? அவன், அவளை ஏமாற்றியிருப்பான். அவன் தீவிரமாகக் காதலித்திருப்பான். இவள் இவனை ஏமாற்றி டிமிக்கி விட்டிருப்பாள். இவன் ஏதோ ஆத்திரத்தில் கொலை செய்திருப்பான். அவர் இப்படிக் கூற நான் குறுக்கிட்டு, ‘அப்படிப் பேசப்படாது- கொலை செய்திருக்கின்றான். அப்புறம் கற்பழித்தும் இருக்கின்றானே.”
‘சரி கொலை செய்திருக்கிறான் என்கின்றீர். அவள் விரும்பியே அவனுடனும் தொடர்பு வைத்துப் பின்னர் வாய்த் தர்க்கத்தில் கொலை நடந்திருக்கலாம்.
‘அப்படியென்றால் அவன் செய்தது தவறு &6606)um?'
'இல்லையில்லை. காரணம் இல்லாமல் காரியம் இல்லை. கொலை செய்தவன் சும்மா செய்யமாட்டான்."

பருத்தியூர் பால. வயிரவநாதன் 123
இவ்வாறு எதிர்மறை எண்ணங்கள் கொண்டவர்களிடம் ஜீவிப்பதே கொஞ்சம் கஷ்டம்தான். எதற்கெடுத்தாலும் எதிர்மறையாகவே சிந்தித்து, வரப்போகின்ற நல்ல வரவுகளைத் துறந்து போகின்றனர். இதே எண்ணங்கள் கொண்ட கணவன், மனைவி இணைந்தால் வாழ்க்கை என்ன ஆகும்? சிந்திக்கவே கஷ்டமாக இருக்கின்றது. ‘நல்லதையே நினை’ என்று பேசிக்கொண்டே, தீமைகள் தங்களை அணைத்துக் கொள்ளுவதாக நினைத்தே பலர் ஜீவித்துக் கொண்டிருக்கின்றார்கள்.
ஒரு விஷயத்தில் இறங்குமுன், அது சரிப்பட்டு வராது என்று கருதிவிட்டால் எப்படி முயற்சி பலிக்கும்?
ஆயினும், மிகப்பெரிய விஷயங்களை கைக்கொள்ளுமுன் எம்முன் உள்ள இடர்ப்பாடுகளைத் தெரிந்தேயாக வேண்டும்.
எப்போதுமே சார்பு நிலையில் சிந்தித்தாலும் கஷ்டங்கள் எதிர்பாராமல் வருவதை, வந்த பின்னர் சகித்துக் கொள்ளமுடியாது. " தீர ஆராய்தல் என்பது எதிர்மறைச் சிந்தனையல்ல. எதிர்மறைச் சிந்தனையாளர்கள் பலர் தம்மைப் புரட்சிகரமான சிந்தனையாளராகவும் காட்ட முற்படுகின்றனர். தவறாகக் கருத்துகளைப் பற்றி விவாதம் செய்து, அது சரி என்று கூறுவது, அது புரட்சிக் கருத்து அல்ல, புரட்டுக் கருத்தேயாகும்.
சார்பாகச் சிந்திப்பதும், எதிர்மறையாக, பொருந்தாது கருதுவதும் தீர்க்கமற்ற முடிவாக விடிவைத் தராது.

Page 76
124 வாழ்விஸ்ல் வசந்தங்கள்
நடுநிலை உணர்வுடன் முடிவு செய்து வாழுதலே பொருத்தமானதாகும்.
எமக்குச் சார்பான நிலையில் நின்று கொண்டு நாம் பிரச்சினைகளை அணுகமுடியுமா? சில வேளைகளில் எல்லாமே சரியாகவும், சில சமயம் எல்லாமே பிழையாகவும் தோன்றுகின்றதே? அரசாங்கங்கள் ஒவ்வொரு காலப்பகுதியிலும் மாற்றமடைகின்றது. இன்றைக்கு இருக்கும் அரசு நாளைக்கு இல்லை.
என்றாலும், மக்கள் ஒரே நிலையில் நின்று கொண்டு ஆட்சிகளை மாற்றிவிடுகின்றனர். ஒவ்வொரு அரசாங்கத்தையும் மக்கள் தெரிவு, செய்து கொஞ்சகாலத்தின் பின்னர்தான் முரண்பாடாக அரசுகள் நடக்கும்போது வேறுவிதமாகச் சிந்திக்க ஆரம்பிக்கின்றார்கள்.
இங்குதான் தனிமனிதர்களினதும் ஒட்டு மொத்தமான மக்கள் அனைவரினதும் நிலையும் ஒருமித்த கருத்தாக எண்ணங்கள் முளைவிடுகின்றன. இதில் உண்மை என்னவெனில்,
ஒவ்வொரு தடவையும், மக்கள் சிந்தனை ஒரே நிலையில் முடிவு எடுக்கின்றது. இங்கு நாம் எதிர்க் கட்சிகளைப் பற்றி அதிகம் கவனம் எடுக்க வேண்டியதில்லை. பெரும்பான்மை மக்களின் சார்பு சிந்தனை, ஒருவயப்படுகின்றது. அந்த நேரத்தில் அந்த நிலையில் மக்கள் நிலைப்பாடு ஏற்கக்கூடியதே.
எனினும், தனித்தனியாக ஒவ்வொருவருக்கும் பிரச்சினைகள் வரும்போது மட்டும் ஏன் சிக்கல் எழுகின்றது?

பருத்தியூர் பால. வயிரவநாதன் 125
அப்போது மட்டும் ஏன், மனிதன் பயப்பட்டு தனக்கு ஆரோக்கியம் இல்லாத முடிவுகளுக்கு ஆட்படுகின்றான்? கூட்டாக எடுக்கின்ற முடிவுகள் ஒன்றாகவும், தனித்து எடுக்கும் முடிவுகளுக்குத் தயங்குபவனாகவும் இருக்கின்றானே.
தமக்குச் சாதகமான விஷயங்கள் முரண்பாடாக அமையுமிடத்து, அதுவும் தொடர்ந்து அவனுக்கு எல்லா விஷயங்களிலுமே பாதகமாக அமைந்துவிட்டால், சமூகத்தின் சகல நடப்புகளையும் எதிர்மறையாகக் கருதத் தலைப்படுதல் வேதனைக்குரியதே.
எல்லா விஷயங்களிலும் பொருத்தமில்லாமல் பேசுபவர்களை அவதானித்தால், அவர் வாழ்க்கையில் அடிபட்டவராக, நொந்து போனவராக இருக்கக்கூடும்.
ஆனால்,
எதிர்மறைப் பேச்சு என்பது ஆரோக்கியம் என்று கருதுபவர்களுக்கு மேற்சொன்ன விஷயம் பொருந்தாது.
புத்திஜீவிகளகக் காட்டிக் கொள்ளுவதற்காகவே பலர் சித்தத்தைக் குட்டை குழப்பும் இவர்களை கவனத்திற்கு எடுக்கவேண்டாம்.
சின்னச் சின்ன விஷயங்களுக்கு பொய்மையான மெருகூட்டி அதனை விஸ்வரூபமாக்குபவர்கள் மனச்சாட்சிக்கு மரண அடி கொடுப்பவர்களே. தவறாக நடந்து கொள்ளுகின்ற எதிர்மறை எண்ணமுடையவர்கள் மத்தியில் மிகவும் வேடிக்கையான நல்ல மனிதர்களும் இருக்கத்தான் செய்கின்றார்கள். இவர்களுடன் அவதானமாக

Page 77
126 வாழ்லியல் வசந்தக்கள்
புத்திசாலித்தனமாக நடந்தால் நல்லபடி இவர்களைப் பயன்படுத்த முடியும்.
எனது நண்பர் ஒருவர் நல்லத் புத்திசாலி. அவர் ஒரு தனவந்தரிடம் உதவி கேட்டு, அதில் வெற்றி கண்டும் விட்டார். எப்படி என்று நான் கேட்டேன். அவர் சொன்னார். ‘நான் ஒரு நிதியுதவிக்காகச் சென்றேன். முன் ஏற்பாடாக நண்பர் ஒருவரை எனக்குப் பின்னே வருமாறு கேட்டுக் கொண்டேன். நான் ஏற்பாடு செய்த நண்பரோ ஒன்றும் தெரியாதவர் போல, அந்த தனவந்தர் முன் சென்று. இந்த நிதியுதவி எனக்குப் பிடிக்காது என்று கதை கொடுத்தார். அவ்வளவுதான், எதற்குமே எதிர்வாதம் செய்யும் தனவந்தர் கோபாவேசப்பட்டு ‘என்ன அப்படிப் பேசுகின்றீர். நல்லதற்கு உதவவேண்டும். அப்புறம் மனிதனாகப் பிறந்து என்ன பயன்’ என்று அவர் கேட்கவும், சமயம் பார்த்து நண்பர் பக்குவமாகத் தான் வந்த காரியத்தினைச் சொல்லவும், அப்புறம் என்ன? காரியம் முழுவெற்றி!”
சில விஷயங்களை இப்படிக்கூடக் கையாள வேண்டியுள்ளது.
கோவிலைத் திருத்திப் புனருத்தாரணம் செய்வோமா என்று கேட்டால், இருக்கின்ற கோவிலில் போய் வழிபடு என்பார்கள்.
சரி, கோவிலைக் கட்டுவோமா என்றால், பழையதைப் புதுப்பிப்போம் என்பார்கள்.
பிள்ளைகளை பல்கலைக்கழகம் அனுப்ப வழி செய்வோம் என்றால் பல்கலைக்கழகம் களேபர பூமி, அங்கே விட்டால் பிள்ளைக் குட்டிச்சுவர் என்று

பருத்தியூர் பால. வயிரவநாதன் 127
சொல்லுவார்கள். சரி, பிள்ளைகளுக்கு எதற்குக் கல்வி என்றால் கட்டாயக் கல்வி அவசியம் என்று பேசி விடுவார்கள்.
எனவே இத்தகையோரிடம், அணுகும் முறைகளை சற்று வித்தியாசமாக வைத்துக் கொள்ளவேண்டும்.
புத்திக்கும் வார்த்தைக்கும் தொடர்பேயின்றி, மின்சாரம் பாய்ச்சுவதுபோல் பிறரைச் சுருண்டு விழச் செய்து விதண்டாவாதம் செய்வதால் நாம் மிரண்டுவிடாது, சமூகத்தில் இவர்களையும் இணைத்துக் கொள்ளவே முயற்சிக்க வேண்டும்.
எல்லோரும் ஒரே தரத்தில் வாழ்ந்துவிட முடியுமா? என்றாலுங்கூட எதிர்மறைச் சிந்தனையாளர்களின் கருத்துக்களை உதறிவிடக்கூடாது.
இதனால் சில நல்ல புத்திசாலிகளைக்கூட நாம் இழந்தவர்கள் ஆவோம்.
சரியானது கசந்தாலும் அது காரிய சித்திக்கு உகந்தது என்றால் ஏற்கத்தானே வேண்டும்.
எனவே மனதை நெருடும் சில பேச்சுகளால் நாங்கள் ஒடிந்துவிடக் கூடாது.
சற்று நிதானமாக யோசிப்போம். நல்ல கருத்துகளை மட்டுமே எமது மனம் ஏற்றுக்கொள்ளும்.
எதிர்மறைச் சிந்தனைகளும், ஒத்த சிந்தனைகளும் நல்ல வழிகாட்டலுக்கே என அறிந்துகொள்வோம்.
来
- தினக்குரல்

Page 78
128 வாழ்விஸ்ல் வசத்தங்கள்
பாவம் செய்தலைத் தடுக்கவே 'சொர்க்கம்’ என்பது சிருஷ்டிக்கப்பட்டதாகக் கூறப்படுகின்றது. எந்தச் சூழ்நிலையிலும் மனம் அழிக்கப்படாமல், விகாரப்படாமல் வாழும் வாழ்வு தான் சொர்க்கமாகும். பரந்த மனம், எதனையும் உணர்ந்து கொள்ளும் நிறைந்தகுணம்
இருந்திட்டால் கோடி, கோடி சொர்க்கமாக வாழ்வு இனித்திடும்.
சொர்க்கம் என்ற சொல்லே சந்தோஷமிக்கதாகும். வயதில் முதிர்ந்தவர்கள் கூட, தங்கள் இளமை மீளளிக்கப்பட்டு அங்கே புகுந்துகொண்டால் என்ன என்று அங்கலாய்த்துக் கற்பனையில் வலம்வர ஆரம்பிப்பார்கள். சிற்றின்ப சமாச்சாரம் மிக அதிகமாக உள்ளதென நம்பிக் கொள்கின்றார்கள்.
 

பருத்தியூர் பால. வயிரவநாதன் 129
அநேகமாக மதங்களில் கூட இதுபற்றிப் பேசப்படுகின்றது. சந்தோஷமாகச் சுகமாக இருக்க யாருக்கு இஷ்டமில்லாமல் இருக்கிறது? ஆனால்,
பாவம் செய்தலைத் தடுக்கவேதான் சொர்க்கம் சிருஷ்டிக்கப்பட்டது என எண்ணத் தோன்றுகின்றது. இதுதான் உண்மையும் கூட. தீமைகளை ஒடுக்கவும், நன்மை செய்வதற்காகப் புண்ணியம் என்ற பெயரில் அதனை முதன்மைப்படுத்தவுமே சொர்க்கம் நல்லவர்களுக்காக ஆக்கப்பட்டது என்று அறிக.
இது இருக்கின்றதோ, இல்லையோ என்பது ஒரு புறம் இருக்கட்டும். சொர்க்கம் என்பதன் அர்த்தம் என்ன? சுகபோக வாழ்வுதான் இதன் பொருளா?
செயற்கையாக இது இன்று உருவாக்கப்படுகின்றது. பணம் பத்தும் பண்ணும் என்கிறார்கள். LDTuft உலகவாசமே உத்தரவாதமானது என எண்ணி, காசைக் கண்டபடி செலவு செய்து, சொர்க்கத்தின் சுவை அறிந்து கொள்ள முற்படுகின்றனர்.
இந்த நவ உலகில் பாவ புண்ணியம் பற்றி இதனுள் புகுந்த பின்னர் பேச மனம் வராது. இங்கு மனம்கூட மரணிக்கும் சம்பவங்களே அதிகமானது. கடவுள் படைத்த உலகைவிட மனிதன் படைத்த மாய உலகு பெறுமதி மிக்கதாகக் கருதுகின்றார்கள்.
மனிதன், மனிதனுக்கே கொடுக்கும் போலி வெகுமதிகளும் உத்தரவாதங்களுமாக இவைகளைக் கணிக்கலாம்.

Page 79
130 வாழ்லியல் வசந்தங்கள்
சகல பழக்கங்களும் படைத்தவன் அனுமதி பெறத் தேவையில்லை. ஏன் என்றால் தீமைகள் செய்ய கடவுள் அனுமதிப்பதும் இல்லை. கெட்டது செய்வதற்கும் கூடக் கடவுளைக் கூப்பிடும் காலம்.
இதனாலேயே, ஆடம்பரப் பகட்டு, போலி வாழ்வுகூட ஆண்டவன் கொடுத்தான் என அவரையே சாட்சிக்கு அழைக்கின்றார்கள். தங்களின் இந்தப் பொய் வாழ்வு புதைந்து போன பின்புகூட போற்றிய இறைவனைத் தூற்றிக் கொள்கின்றார்கள்.
இவர்களில் பலருக்கு ஆன்மீகம் பற்றித் தெரிந்தும்கூடத் தற்காலிக வருமானங்களுக்காக இருக்கின்ற இதயத்தை விற்று விடுகின்றார்கள். அல்லல்களை அரவணைப்பவர்களை ஆண்டவன் என்ன செய்யமுடியும்?
இதில் வேதனையானது, மெத்தவும் படித்தவர்கள்கூடப் பொருத்தமான முகமூடி அணிந்து பொய்த்தனங்களை மிக அழுத்தமாகப் பிடித்து வெளுப்பான மனிதராக வெளியுலா வருவதுதான்.
எனினும், இன்று ஆடம்பரமான வாழ்வில் மேலைத்தேசம், கீழைத் தேசம் என்கின்ற வேறுபாடே இல்லாமல் போய்விட்டது. இதில் எந்த நாட்டினருமே சகட்டுமேனிக்கு, பகட்டு வலையில் விழுந்து, தம்மை வலுவிழக்கச் செய்யவே பகீரதப் பிரயத்தனம் செய்கின்றனர்.
கெட்டு அலைவதிலும் கூடத் தீவிரம் காட்டுவது வேடிக்கையாக இல்லையா?

பருத்தியூர் பால. வயிரவநாதன் 131
இறந்தபின் என்ன நடக்குமென உத்தரவாதம் இல்லை. நல்லது, கெட்டதை இங்கேயே பார்த்துக் கொள்வோம் என்றும் சிலர் கூறுகிறார்கள். நல்லதையும், தீயதையும் நாமே பார்த்துக் கொள்வோம் என்று கூறி, ஆனால் செய்வது அனைத்துமே முரண்பாடாக, தமக்கு இசைவாக ஆக்கி சொர்க்க மாளிகை எங்கே என்று முகவரி தேடி மூச்சுமுட்ட ஓடுகிறார்கள். இது என்ன புத்திசாலித்தனமோ புரியவில்லை.
நல்ல நடத்தையில் வாழ்தலே சுகம் என்கின்ற உணர்வை விடுத்து, பிறர் முறைகேடாக நடந்து கொள்வதனைப் பார்த்து ஒழுகும் அக்கறையினால் கைக்கு எட்டிய சுகங்களே கிட்டாமல் போய்விடுகின்றன. இது துர்ப்பாக்கியமேயன்றி வேறென்ன? மறுபிறப்பு, இந்தப் பிறப்பு என எண்ணாது எந்த நிலையிலும் சரியானது எதுவென உணர்ந்து, தீமைகளுக்கு அஞ்சி வாழுதலே நிலையான சொர்க்க வாழ்வு ஆகும்.
மாய உணர்வுகள் மயக்கும்போது பாவம் என்பதே வெறும் கற்பனை என எண்ணத்தோன்றும்.
எதைச் செய்தாலும் கேட்கக் கடவுள் எங்கே என்றும் நினைக்கின்றார்கள்.
கடவுள் என்பதே, "உண்மை’ என்பதுடன், ‘நன்மை’ என்பதன் மொத்த வடிவம் “கடவுளே’ என மனதாரப் புரிந்துகொண்டால், பாவ உணர்வுக்கு நாம் உட்படுவோமா? எங்களைப் பார்க்கிலும் மேலானவர்கள் யார் என
இறுமாப்புடன் இருப்பவர்கள் இறுதி யாத்திரைக் காலம் வரை சம்பாதிப்பது பண மூட்டைகளை அல்ல. பாவ

Page 80
132 வாழ்லிஸ்ல் வசந்தங்கள்
மூட்டைகள்தான். தேவையின்றிப் பாரமான வாழ்வு வாழ்ந்தே பயனற்று இறந்துபோனவர்கள். இருக்கும் இடத்தை வைத்து சொர்க்கம் சிருஷ்டிக்கப்படுவதில்லை. ஒலைக் குடிசையிலும் கூட உலகம் வியக்கம் வண்ணம் வாழமுடியும். ஞானிகள், மேதைகள் உல்லாச விடுதியில் உட்கார்ந்து கொண்டு உபதேசம் செய்யவில்லை.
எந்த நிலையில் இருந்தாலும்கூட நல்லமுறையில் வாழ்ந்து வந்தால் அந்த இடம் கடவுள் வாழ்வதற்கு உகந்த இடம்தான்.
பொருந்தாத இடங்களில் அட்டகாசமாக ஜீவித்தாலும் அது யாசகம் செய்தலை விடக் கேவலமானது.
இருக்கும் இடங்களில் யோக்கியர் சூழ இருந்தால் அது ஆரோக்கியமான சூழல்தான்.
வறட்சியான மனநிலையில் வாழ்ந்துகொண்டு பளிங்குத் தரையிலும், மலர் வனத்திலும், பாதம் பதித்தாலும்கூட முட்புதர், கொடும் வெயில், கடும் குளிர், உறைபனியில் இருப்பதைவிட மோசமானதேயாகும்.
தீய வழிகளில் சுதந்திரத்திற்கான பாதை மூடப்படுகின்றன. சுதந்திரமாகச் சுவாசிக்க முடியாத வாழ்வும் ஒரு வாழ்வா?
களங்கமேயில்லா ஏழை ஒருவன் தலையில் மழை நீர் சொட்டச் சொட்ட, சேற்று நீர் உடலை மெல்லத் தட்ட வெற்று உடம்புடன் மார்பு சிலிர்த்திட, அடுத்த வேளைக்கு என்ன என்று தெரியாமலும்கூட சுதந்திரமாக இனிமையாகச் சிரிக்கின்றானே! அவன் இருக்கும் இடம் புண்ணிய பிரதேசமாகப் பிரகடனப்படுத்தப்படல் வேண்டும்.

பருத்தியூர் பால. வயிரவநாதன் 133
ஏழைகள் கூடும் இடத்தை அவர்கள் வாழ நல்ல இடமாக அமைத்தாலே, அமைக்க எண்ணங்கொண்டாலே அவர்கள் சொர்க்கத்தில் நிரந்தர குடிஉரிமை பெறத் தகுதியுடையவராவர்.
தனக்காக வாழ்ந்து தனக்கெனப் புது இடம் அமைத்தும், அதற்கும் மேலாக புதிய பூமி எங்கே பிறக்கின்றது அதில் புகுந்து கொள்ள என எண்ணி எண்ணியே புதையல் தேடுவதும், ஓடி ஓடி, அலைந்து களைத்து, இறுதியில் முன்னர் கால்கள் இருந்த இடத்திலும், சொர்க்கம் இருக்கும் என எண்ணத மனிதரை என் செய்ய?
'செர்க்கம்’ மேலே அல்ல. கீழே, எம்முன்னே, எமக்குள்ளே என அறிக. இதன் அடிப்படையிலேதான், எம் முன்னோர்கள் நன்மைக்கு வழிகாட்டும் அறவாழ்வை வலியுறுத்தினர். நாங்கள் தேடும் அனைத்துமே மனித குலத்தின் மத்தியில் அவர்கள் உத்தமமான அரவணைப்பிலும் கிடைக்கும் என்பதைத் தெரிந்து கொள்ளல் வேண்டுமன்றோ?
கற்பனையிலாவது சொர்க்கம் சிருஷ்டிக்கப்பட்டாலும் அது ஏன் அப்படி மக்களுக்காகக் கூறப்பட்டது என அறிவோமாக.
பரந்த மனம், எதையும் உணர்ந்துகொள்ளும் நிறைந்த குணம் இருந்திட்டால், கோடி சொர்க்கமும் இதன்முன் ஈடுகொடுக்குமா?
米
- தினக்குரல்

Page 81
134 வாழ்விஸ்ல் வசத்தங்கள்
எங்கள் ஐம்புலன்களின் இயல்பான தொழில்களைச் சரிவரச் செய்ய நாம் அனுமதிப்பதில்லை. எங்கள் பலத்தை நாமே உணர்ந்து கொள்வதுமில்லை. சிந்தனைகளை விரியச் செய்ய சிலவேளைகளில் நாம் சம்மதிப்பதுமில்லை. ஒரே சிந்தையுடன், மனதைக் குவித்துப் பலத்தை கையில் ஏந்திப் பெரும் பாறையைக் கூடத் தகர்க்கின்றார்களே. மனிதனால் எல்லாமே முடியும். எம்மை நாம் வசப்படுத்த வேண்டும். மனமும், உடலும்கூட இணைந்து செயல்பட்டால் பலம் பன்மடங்காகிவிடும்.
பலத்தை சகலருக்குமே, சமனாகவே இறைவன் தந்துள்ளான். குருவிக்கும் கூடுகட்டும் திறன் வைத்தான். நாங்கள் கட்டும் மாளிகையைவிடக் குருவிக்கூடு வெகு சிரத்தையாக அமைக்கப்படுகின்றது. அது அதன் பலத்திற்கேற்ப வாழ்க்கை இயற்கையாக உருவாக்கப்படு கின்றது.
 

பருத்தியூர் பால. வயிரவநாதன் 135
எனவே, உண்மையாகவும் சரியாகவும் வாழச் சிரமப்பட வேண்டியுள்ளது எனக் கூறுதல் ஏற்கக்கூடியதல்ல. நிரந்தரமானதைப் புரிந்துகொள்ளாமல் விடுதல் சிறந்தது அல்ல.
சத்திய வாழ்வில் சங்கடங்களைத் தவிர்த்தல் மனிதர் கடமையாகும்.
மகாத்மா காந்தி இதனையேதான், சத்திய சோதனை என்ற தமது நூலில் நுட்பமாக விவரித்துள்ளார்.
மனித பலம் இதனூடாகப் புரிகின்றது. எங்கள் ஐம்புலன்களின் இயல்பான தொழில்களைச் சரியாகச் செய்ய நாம் அனுமதிப்பதில்லை.
நல்லதைச் செய்யவும், அதையே நினைப்பதையும், நல்ல சொற்களை உரைக்கவும் மட்டும் நாம் காலத்தினை செலவழிப்பதில்லை.
எமக்குச் சாதகமானவைகளை மட்டுமே உண்மைகளாகக் கருதுவதால், எங்கள் பலத்தை முழுமையாகப் பிரயோகம் செய்ய முடியாமல் போய்விடுகிறது.
சிந்தனைகளை விரியச் செய்ய நாம் சில வேளைகளில் சம்மதிப்பதில்லை. உதாரணமாக,
இலகுவான, சரியான ஒருவழி கட்டாயமாக இருக்கும். உடன் அது மூளைக்கு எட்டவில்லை என்றால், பரபரப்புக்குள்ளாகி இது சரிவராது என்று சொல்லி விடுகின்றோம். இதனை வாயால் சொல்வதுடன்

Page 82
136 வாழ்வியல் வசந்தங்கள்
நின்றுவிடாது, மூளைக்கும் கூட முழுவதுமாய்ச் செதுக்கி விடுகின்றோமே?
இது எவ்வளவு தப்பானது 65fuq DIT?
எடுத்தவுடன் சில காரியங்களைச் செய்ய முடியாதுவிடினும் நிதானமாக அதை நிறைவேற்றலாம். எனக்கும் என்னைச் சார்ந்த சிலருக்குமே என எண்ணும்போது எமது பலமான செயல்கள் பலமிழந்து போகின்றன.
ஒரு பிரபல தனியார் நிறுவனம் நஷ்டத்தில் போய்க் கொண்டிருந்தது. அதன் ஸ்தாபகர், மிகவும் பிரயாசைப்பட்டு நிறுவிய நிறுவனம். அடிமட்டத் தொழிலாளியாக இருந்து அவர் பட்டபாடு கொஞ்ச நஞ்சமல்ல. அவரது நிறுவனம் அவர் கண்முன்னே நஷ்டத்தில் ஏன் இயங்குகின்றது என்று ஆராய்ந்தார். தமது நிறுவனத்தைத் தனது பேரனிடம் ஏற்கனவே ஒப்படைத்ததால் நிர்வாகத்தில் அவர் தலையிடாமல் விட்டுவிட்டார்.
எனவே, அவர் இதுவிடயமாக ஆராய சுதந்திரமான ஒரு ஆலோசகர் ஒருவரை நியமித்தார். அவர் தமது நியமனத்தை ஏற்குமுன், போட்ட நிபந்தனைக்கு ஸ்தாபகர் கட்டுப்பட்டுக் கொண்டார். ஆலோசகரின் அறிக்கையில் இவ்வாறு கூறப்பட்டது:
‘நிறுவனத்தில் இயக்கம் முழுமையாகச் செயல்படவில்லை. நிறுவனச் செயல்பாடுகள் திறமைசாலிகளிடம் ஒப்படைக்கப்படவில்லை. உறவுக்காரர்களுக்கே கொடுக்கப்பட்ட பதவிகளைப் பறித்து புத்திசாலிகளான அனுபவஸ்தர்களிடம் கொடுங்கள்.

பருத்தியூர் பால. வயிரவநாதன் 137
பதவிகளைக் கொடுப்பதை விடுத்துப் பணத்தைக் கொடுத்து வீட்டுக்கு அனுப்புங்கள். நிர்வாகம் வேறு, உறவுக்காரர் வேறு. இப்படியாக ஆதார பூர்வமாக அறிக்கை தொடர்ந்தது. இவ்வாறான செயல்கள் எல்லோர் வாழ்க்கைக்கும் பொருந்தும். பொருந்தாதவர்கள் புகுந்துகொண்டால், வாழ்க்கையே சரிந்துவிடும். சிலரைச் சரிக்கட்ட வேண்டும் என்பதற்காக, ஒழுங்காக நடக்கும் அமைப்புகளே கூட நிலைகுலைந்து போகின்றன.
வேண்டப்பட்டவர்களுக்காகவே வழங்கப்படும் உதவிகளால் பொதுநலனும் பாதிக்கப்படுகின்றன.
சுயநலன்கூடச் சூதாட்டத் தோல்விகளாக முடிந்துவிடும். பலருக்காக வாழ்பவன் பாராட்டப்படுகின்றான்.
பொதுநலனுக்காகவே உழைக்கும்போதுதான் ஆத்மாவும் பலம்பெறுகின்றது. உடல் பலம் என்பது பற்றிக் கவனிக்காது ஆத்ம பலம் பெற்றவர்கள் உலகிற்குப் பயன்களைப் பெற்றுத் தந்த வண்ணமாகவே இருக்கின்றார்கள்.
அவர்கள் இறந்த பின்னரும்கூட உயிர் துறந்தவராகக் கருதப்படுவதில்லை. அவர்கள் உழைப்பினால் உலகம் இன்னமும் வாழ்ந்து கொண்டிருக்கின்றது.
எடை குறைந்த மனிதர், ஆங்கிலேயரிடம் பிடிபட்ட நாட்டை தன் ஆத்ம பலத்தினால் திருப்பி எடுக்கவில்லையா?
ஒருவரின் பலப் பிரயோகம் எந்தளவிற்கு உயிரூட்டப்படுகின்றது பார்த்தீர்களா?

Page 83
138 வாழ்விஸ்ல் வசத்தங்கள்
சரி ஆத்ம பலத்தை விட்டுவிட்டு உடல்பலம் பற்றிப் பார்ப்போம்.
கொஞ்ச காலத்தின் முன்பு, அண்மையில் காலமான மட்டக்களப்பு சாண்டோ ருரீதாஸ் அவர்களைச் சந்தித்தேன். இவர் உடல்பலத்துடன், ஆன்ம பலத்திற்காகவும் தியானம், யோகம் செய்பவர் என அறிந்தேன். அழகிய தோற்றம் கொண்டவர்.
நான் அவரைப்பற்றிக் கேள்விப் பட்டிருக்கின்றேன். அன்றுதான் முதன்முதலாகப் பார்த்தேன். நான் நினைத்ததற்கு மாறாக அவர் தோற்றம் இருந்தது. ரொம்பவும் கனிவான தோற்றம். பணிவு அத்துடன் அன்பு அவர் முகத்தில் பிரகாசித்தது. பொதுவாகச் சாண்டோ என்பவர்கள் முரட்டு ஆசாமிகளாகவே தோற்றமளிப்பர்.
இவரா இப்படி என நான் அசந்துபோனேன். நான் கேட்டேன், ‘எப்படி ஐயா, இத்தனை உடலைத் தாக்கும் வேலைகளைச் செய்து காட்டுகிறீர்கள். இரும்பை வளைக்கிறீர்கள், பாறாங்கல்லை மார்பினில் உடைக்கச் செய்கிறீர்கள், பார ஊர்திகளை நெஞ்சில் ஏற்றுகிறீர்கள்’ என்றேன். அவர் சொன்னார், "மனதை ஒருமுகப்படுத்தினால் பலம் தானாகவே வரும். இதற்கு உடற்பயிற்சியுடன், மனப்பயிற்சி, மன ஒடுக்கம் தேவை. இவைகள் இல்லாதவரை எமது பலம் ஒருமுகப்படாது. சித்தம் சிதைந்தால் பலம் விரயமாகும்’ என்ற கருத்துப்பட உரைத்தார். இதே கருத்தையே, கராட்டே கலையில் தேர்ச்சி பெற்ற முதல்தர ஆசிரியரும் கூறினார்.

பருத்தியூர் பால. வயிரவநாதன் 139
ஒரே மனதுடன் மனதைக் குவித்து பலத்தை கையில் ஏற்றி கருங்கல்லில் பதித்தாலே அது பட்டென உடைந்துவிடுகின்றது. நான் சந்தேகத்துடன் அவர் கைகளைப் பார்த்துத் தடவிக் கொண்டேன். அது சாதாரண கைதான். பிரத்தியேகமான சிருஷ்டியில்லை. உடற்பயிற்சியும், மனப்பயிற்சியும் அதனை ஒடுக்கும் தன்மையுமே இவர்கள் பலத்திற்கான முழுக்காரணமுமாகும்.
எனவே உடலும் மனமும் கூட இணைந்தால் பலம் பன்மடங்காகின்றது. அந்த மனம் செம்மையாக இருக்கவேண்டும்.
மனசு செம்மையாக இல்லாதுவிட்டால் உடல்பலம் சமூகத்திற்கு முடக்கப்பட்ட ஒன்றாகவே கருதப்படும்.
கடல் போன்ற இதயமும், உடல் பொடியாகப் போகும்வரை அது அடுத்தவருக்கே என்ற மனப்பாங்கும் இருக்கும் வரை, எங்கள் பலம் விரயமாகப் போவதில்லை.
சேருமிடத்தில்தான் எதுவும் சேரவேண்டும். எவையுமே உலகிற்கு உகந்ததாக்கப்படல் வேண்டும். கோடிக்கணக்கான மக்களின் பலம் ஒட்டுமொத்தமாக ஒருமுகப்பட்டால், உலகம் ஒரே ஆட்சிக்குள், அன்புக்குள் அகப்பட்டுவிடும். இதுவும் சாத்தியப்படக்கூடியதே.
米
- தினக்குரல்

Page 84
140 வாழ்விஸ்ல் வசந்தங்கள்
நாம் கேட்காமலே எடுத்துக் கொள்கின்ற உரிமைகள் சில
வேளைகளில் அத்துமீறல்களாகிவிடுகின்றன. அன்பாக எடுத்துக் கொள்ளும் உரிமைகள் பிறரை அவஸ்தைக்கு இட்டுச் செல்லக்கூடாது. மற்றவரைச் சிந்திக்க விடவேண்டும். எல்லாவற்றிற்கும் நாமே தலையீடு செய்வது, பிறரது சுதந்திரத்தைப் பறிப்பது போலாகும். உரிமைகளை எடுப்பது தப்பு இல்லை. இவை பரஸ்பரம் மற்றவர்களால் ஏற்றுக் கொள்ளப்பட வேண்டுமல்லவா? அத்துடன்
அவர்களின் நலன்களையும் பாதிப்பதாக அமையக்கூடாது.
நாம் ஒருவர் மீது எடுத்துக் கொள்ளுகின்ற உரிமைகள் விடயத்தில் ஒரு எல்லையை வகுத்துக் கொள்ளல் வேண்டும். பிள்ளைகள், நண்பர்கள் விடயத்தில் மட்டுமல்ல, தமது மனைவி, பெற்றோர் விடயத்திலும் கூட எல்லை மீறிய உரிமைகளை எடுத்தால் தொல்லைகள் எதிர்பார்க்காமலேயே அல்லல்படுத்திவிடும்.
 

பருத்தியூர் பால. வயிரவநாதன் 141
நாங்கள் கேட்காமலேயே எடுத்துக் கொள்ளுகின்ற உரிமைகளால், அவர்களது தனிப்பட்ட வாழ்க்கைக்குள் நாம் அத்துமீறிப் பிரவேசிக்கின்றவர்களாகின்றோம். பெற்ற பிள்ளைகளுக்கே தெரியாமல் பெற்றோர் திருமணத்திற்கு முடிவு எடுப்பதும், ஒருவரின் தனிப்பட்ட நிலவரம் புரியாமல், நண்பர் என்று உரிமை கொண்டு தேவையற்ற கஷ்டங்களை விலைகொடுத்து வாங்குவதும், சாதாரணமாக நேரிடையாகவும் கதைகள் வாயிலாகவும் கேட்கின்ற அனுபவபூர்வமான உண்மைகள்.
அன்பாக எடுத்துக் கொள்ளும் உரிமைகள் கூட அவர்களது உரிமைகளைப் பறிப்பது போல் அமையக்கூடாது. இது நாகரீகமற்ற செயல் மட்டுமல்ல தங்களால்தான் எதுவும் நடக்கும் என்கின்ற செருக்கான இயல்பாகவும் மாறிவிடும். பாசத்தின் முன் எடுக்கின்ற நடவடிக்கைகள் கூட மிகக் கொடுமையான முடிவுக்கு இட்டுச் செல்வதை நாம் அறிந்திருக்கின்றோம். ஒருவர் தனது அறிவுக்குட்பட்ட, வயது வந்து முதிர்ச்சியடைந்த நிலையில் பெரியவர்கள், தம்மிஷ்டத்திற்கு உரிமையை எடுத்து எல்லா விஷயங்களிலும் தலையீடு செய்தால் வெறுப்பு, கோபம் ஏற்படும். இதனைச் சிலர் வெளிக்காட்டாது போகலாம். ஆனால் உண்மை இதுதான்.
சின்ன வயதிலிருந்தே சிந்திக்கவிடாத பெற்றோர் அன்பு என்ற பெயரில் அதிகாரமாக உரிமைகளைப் பறிப்பது, அவர்கள் சிந்தனைகளையே நிந்திப்பது போலாகாதா?
சின்னவர்கள் முதிர்ச்சியடையப் பெரியவர்கள் சிலர் சம்மதிப்பதில்லை. திருமணமான பிள்ளையைக் கூட,

Page 85
142 வாழ்விஸ்ல் வசத்தங்கள்
பாசத்தின் நிமித்தம் பேதலிக்க வைத்து உலகைப் புரியாமல் செய்து விடுகின்றனர்.
ஒருவனை நல்ல வழியில் நடாத்த வேண்டும் என்பதற்காக தாமே வலியச் சென்று, தமக்குத் தெரிந்த வழிமுறைகளைக் கூறுவது எல்லா நிலையிலும் பொருந்துமா?
எம்மீது அன்பு செலுத்துபவர் விடயங்களில் கூட கவனத்துடனும் கண்ணியத்துடனும் பழகவேண்டும். ஒருவர் இதயத்தை அழுத்துவது போல் எங்கள் நடவடிக்கைகள் அமையக் கூடாது.
எமது செயல்கள் பிறர் நன்மைகளுக்காகவே செயல்படுவதாக அமைந்தாலும் கூட, எங்கள் வழங்கல்கள் மற்றயோர்க்கு பாரங்களாக இருக்கலாமா?
நீங்கள், உங்களிடம் அன்புகாட்டும் நாயைத் தடவிக் கொடுத்தால் அது நன்றியுடன் தனது வாலை ஆட்டிக் காட்டும். அட. நான் வளர்க்கும் நாய் தானே என்று எண்ணி அதன் வாலை இழுத்துப் பாருங்கள். என்ன நடக்கும்? அது திரும்பி உங்களையே கெளவப் பார்க்கும். இதுபோலத்தான், நாமும் பிறரை நேசித்துப் பின்னர், fiscold என்கின்ற தோரணையில் எரிச்சலூட்டும் காரியங்களில் ஈடுபட்டால் அவர்களே எங்களிடம் தமது எதிர்ப்பினைக் காட்ட முனைவர். இது யதார்த்தபூர்வமான உண்மை. இதனைப் புரிந்து கொள்ளாத குடும்பங்கள் படும்பாடு கொஞ்ச நஞ்சமா?
எங்களைச் சுற்றியுள்ள அன்பு, பாசம், காதல் இவைகளைக் காப்பாற்றியேயாக வேண்டும். உறவுகள்

பருத்தியூர் பால. வயிரவநாதன் 143
அறுந்து போக, கண்டபடி உரிமையைப் பிரயோகம் செய்யலாமா? ஓடும், புளியம் பழமும் போல வாழ நாம் ஒன்றும் ஞானிகள் அல்ல. இயல்பாக வாழ வேண்டும். அதேவேளை அத்துமீறலாக உரிமை எடுத்தலைக் கட்டுப்படுத்தவும் வேண்டும்.
மற்றவர்களுக்கு தாங்கள் மட்டுமே சலுகைகளை, உரிமைகளை வழங்க வேண்டும் என எண்ணுபவர்கள், தங்களுக்கு ஏனையவர்கள் இப்படி நடப்பதை அனுமதிப்பார்களா?
முன்னைய காலங்களின் பழக்க, வழக்க, ஒழுக்க நெறிகள், கட்டுப்பாடுகள் இன்றை காலத்தில் இல்லை என்கின்றார்கள். மேலை நாடுகளில் வயது வந்த இளைஞர்களை மட்டுமல்ல, சின்னஞ்சிறிய குழந்தைகளைக் கூட கண்டிக்க முடியாதுள்ளது. சாதாரண கண்டிப்புகள் கூடத் தண்டனை என அர்த்தப்படுகின்றது. வெளிநாட்டில் உள்ள அன்பர் ஒருவர் என்னிடம் ஒரு சம்பவத்தைக் கூறினார்.
‘ஒரு தடவை காலை தமது வீட்டிற்குத் திடீரெனப் பொலீசார் வந்து கதவைத் தட்டினார்கள். கேட்டபோது பக்கத்து வீட்டு முதியவர், நீங்கள் உங்கள் குழந்தையைத் திட்டி இம்சைப்படுத்துகின்றீர்களாம், உண்மையா’ என்று கேட்டார். நீங்கள் இதனை எனது குழந்தையிடமே கேளுங்கள் என்றேன்.”
நல்ல வேளை எனது குழந்தை சிரித்தபடி, ‘அப்படி ஒன்றுமேயில்லை. எனக்கு அப்பா, அம்மாவை ரொம்பப் பிடிக்கும்’ என்றபடியே ஓடிவந்து என்னைக் கட்டியணைத்தது,

Page 86
144 வாழ்வியல் வசத்தங்கள்
பொலீசார், “மன்னிக்க வேண்டும்’ என்று கூறி நகர்ந்து விட்டார்கள். தற்செயலாக, சில சந்தர்ப்பங்களில் எங்கள் பிள்ளைகளைக் கடுமையாகப் பேசுவதை ஒரு மனித உரிமை மீறல்களாகக் கருதி, அந்த முதியவர் பொலீசாருக்குத் தகவல் கொடுத்துவிட்டார். எனவே,
மேற்கத்திய கலாசாரத்தில் சாதாரணமான நிலையில் கூட உரிமை எடுத்தல் என்பதே சாத்தியமற்ற செயலாகும். பிழைக்கு புத்தி சொல்லக் கூடப் பெற்றோருக்கு உரிமையில்லை. இது வேதனைக்குரிய நெருடலான, ஏன் சற்று நகைப்புக்கு முரிய விஷயம்தான். எந்த நிலையில் நாம் எமக்கு வேண்டப்பட்டவர்கள் விஷயத்தில் தலையிட முடியும் என்பதுகூடப் புரியாமல் இருக்கின்றது.
“என் மீது உரிமை எடுத்துப் பழகுவதில்லை. வெறும் சடம்போலவே இருக்கின்றார். அன்பைக் கூட சரியாகக் காட்டுவதில்லை” என்று ஒரு பெண், தனது கணவனை விவாகரத்துக் கேட்டு வழக்குத் தொடர்ந்தபோது இவ்வாறு கூறினாள். கணவனும், மனைவியும் உரிமை கொண்டு பழகுவதை எமது கலாசாரம் அனுமதிக்கின்றது. எனினும் இவை புரியாதபோது, பிரச்சினை எழும்பும்போது, சற்று அவதானம் தேவைப்படுகின்றதே.
“虚 எதற்காகத் திருமணம் செய்ய ஆசைப்படுகின்றாய்’ என்று ஒருத்தியைப், பத்திரிகையாளர் கேட்ட போது, அந்தப் பெண் கூறினாள்; “என்னை ஆக்கிரமிக்க, என்னைத் தன் அன்பில் அடக்க, என் இஷ்டம்போல் நான் வாழுவதைத் தடுக்க எனக்கு ஒரு உண்மையான ஆண் துணை தேவை’ என்றாள். இது

பருத்தியூர் பால. வயிரவநாதன் 145
ஒரு பெண்மையினை அவள் இழிவுபடுத்தக் கூறியது அல்ல. தனக்கு அன்பு காட்ட தனது இன்ப - துன்பங்களை அவன் தோள்மேல் போட அவள் ஏங்கும் ஏக்கமேயன்றிப் பிறிதல்ல.
காதல், அன்புக்கு முன்பு அதிகாரமும், ஆணவமும் எம்மாத்திரம்? பிறரைப் புரிந்து, தன்னையும் புரிந்து, எளிமையாக, கடுமைப் போக்கு இன்றி வாழுதலே ஒரு பெரும் கலையல்லவா?
தொடர்ந்து குற்றவியல் வழக்குகளில் குற்றவாளிகளாகக் காணப்படுபவர்களும், ஊதாரித்தனமாக ஊர் சுற்றுபவர்களும் கூட தமது செயல்களுக்குப் பெற்றோரே காரணம் எனக் கூறிவிடுகின்றனர். தங்களைக் கண்டிக்காமல் அவர்கள் விட்டுவிட்டதாகக் கூறுகின்றனர்.
அளவுக்கதிமாக உரிமைகள் வழங்கப்பட்டதாகக் கூறப்படுவதற்கும், உரிமைகளில் தலையிடுவதற்கும் இடையே உள்ள முரண்பாடுகளை நோக்குமிடத்து, சுதந்திரத்தின் பங்குதான் என்ன என்று கேட்கத் தோன்றுகின்றதல்லவா? உண்மை என்னவெனில்,
ஒவ்வொருவருடைய தன்மைகளுக்கேற்ப எமது நடைமுறைகளை மாற்றி அமைக்க வேண்டியவர்களாக இருக்கின்றோம். இந்நடைமுறைகள் கூட நாட்டிற்கு நாடு வேறுபாடாக இருக்கின்றது. இவை தாம் பிறந்து வளர்ந்த நாட்டின் கலாசாரத்திற்கும் கூடச் சவால் விடுகின்றன.
இதன் பொருட்டு, “பல பெற்றோர்கள் பிள்ளைகள் தம் தாய் நாட்டிலேயே கல்வி கற்க வேண்டும்; வளர்ந்து

Page 87
146 வாழ்லிஸ்ல் வசந்தங்கள்
நல்ல நிலையில் கட்டுப்பாடாக உருவாக வேண்டுமெனப் பிரியப்படுகின்றனர். இச்செய்தியை நீங்கள் கேள்விப்பட்டிருக்கலாம்.
தனது விடயத்தில் தலையிட்ட மகள் தமது பெற்றோருக்கு எதிராக பொலீசில் புகார் கொடுத்தார். பெற்றோர் பின்னர் மகளுடன் சமரசமாகி, தந்திரமாக மகளைத் தாய் நாட்டிற்கு அழைத்து வந்தனர். பின்னர் மகளை, அவரது பேத்தியாருடன் ஒப்படைத்து திரும்பிச் சென்றுவிட்டனர். குழந்தைகளின் உரிமையில் கூடப் பெற்றோர் தலையிட முடியாமைக்கு இச்சம்பவம் ஒரு நல்ல சான்றேயாகும்.
எனினும்,
நாகரீக வளர்ச்சியுற்ற உலகில் நாம் வாழ்ந்துதான் ஆக வேண்டும். எதிர்த்திசைப் பயணங்களில் அறிவின் முதிர்ச்சி பெற்றவர்கள் தோற்றுப் போய்விடுகின்றனர். பாசம் கூட இங்கு எடுபடுவதில்லை. சாதுரியமாகச் சமாளிக்க வேண்டியுள்ளது. சோர்ந்து போகத் தேவையில்லை. கொஞ்சம் அவதானம் தேவை; அவ்வளவுதான். உரிமைகளைக் கையாளுதல் கூட அத்தகையதே. எவரது இதயங்களையும் இடிக்கக் கூடாது. மாறாக, எல்லோரது இதயங்களும், புரிந்துணர்வுடன் தொடுக்கப்படல் வேண்டும்.
அன்பு உரிமை, பெரும் நன்மைதான்; புரிந்து கொள்வோம்.
来
- 45607éguis, fo. O4.2OO5

பருத்தியூர் பால. வயிரவநாதன் 147
இ2தத்தைச் இ9ழ்தமாக்குங்கள்
சற்றுமே சங்கோஜமின்றி, இங்கிரமின்றிப் பேசுபவர்களைக்
கண்டால் தூர ஓடிவிட்டால் என்ன என்று எண்ணத் தோன்றுகின்றது. சமூகம் எங்களிடம், நாம் சமூகமாகப் பழகுதலையே எதிர்பார்க்கின்றது. இங்கிதமின்றிப் பழகுபவனை ஒருவருமே நேசிக்க மாட்டார்கள். நாம் சாதாரண நிலையில் இருந்தபடியே உலகைப் பார்க்க வேண்டும். வித்தியாசமான மனிதராக நடந்து கொள்ளக்கூடாது.
Lசியோடு இருக்கும் கூட்டத்தின் முன் பழங்கதைகள் பேசக்கூடாது. திருமண வீட்டிற்கு வந்து மரண வீட்டுச் சம்பவங்கள் பற்றி தருணமறியாது கதைக்கக் கூடாது. பரீட்சைக்குப் படிக்கும் மாணவன்முன், ‘இது விஷப் பரீட்சை, படித்து என்ன கிழிக்கப் போகிறாய்” எனத் தர்க்கிக்கக் கூடாது.

Page 88
148 வாழ்விஸ்ல் வசத்தங்கள்
சற்றுமே சங்கோஜமின்றி பிறரைச் சங்கடப்படுத்துகின்ற இங்கிதமற்றுப் பேசுபவர்களைக் கண்டால் தூர ஓடிவிட்டால் என்ன என்று எண்ணத் தோன்றும்.
சமூகத்தில் ஒருவரைப் பற்றி பிறர் எந்த நிலையில் அவரை வைத்திருக்கின்றார்கள் என்கின்ற கருத்தை அவர்களுடைய ‘இங்கிதம்’ என்கின்ற இயல்பினுடாக வெளிப்படுத்திக் கொண்டிருக்கின்றார்கள். மிகவும் நல்ல இயல்பினராகவும், உதவி புரிவதில் மிக விசாலமான மனத்தினராக இருந்தாலும் கூட இங்கிதமாகப் பேச, பழகத் தெரியாதுவிடின் இவர்கள் நாகரீகம் தெரியாத, அகசைப் பிரகிருதிகளாகப் பிரகடனப்படுத்தப்படுவார்கள். கொஞ்சம் பொறுமையாக, நிதானமாகப் பழகப் பழகி கொண்டால், இங்கித இயல்பு தங்கு தடையின்றி வெளிக் கொணரப்படுமென அறிக.
இது போலியான, முகஸ்துதிக்கான குண இயல்பு அல்ல.
சமூகம் எங்களிடம், நாம் சுமூகமாகப் பழகுதலை எதிர்பார்க்கின்றது. நாம் எத்தகைய மன அழுத்தத்தில் இருக்கின்றபோதும் எம்முன்னே வருகின்ற நபர்களிடம் எங்கள் மனக் கொதிப்பினைக் காட்டுதல் எவ்வகையிலும் சரியானது அல்ல. எந்த நேரத்திலும் நாம் கொஞ்சம் அனுசரணையாகவும் நிதானமாகவும் எம்மைப் 11க்குவப்படுத்திக் கொண்டால், தானாகவே மென்மையான சுபாவம் எமக்கு வசப்பட்டுவிடும்.

பருத்தியூர் பால. வயிரவநாதன் 149
எந்த நேரத்திலும் இங்கிதமாகப் பழக முடியும் கனிவான நடத்தையினாலேயே காரியங்களை சரியாக நடத்த முடியும். பிறர் மனதைப் புரியாமல், எங்களையறியாமலேயே எந்த நேரத்தில் எப்படிப் பேசுவது எனத் தெரியாமல் சில பிரச்சனைக்குள் புகுந்தும் விடுகின்றோம். ‘இடத்துக்குப் பொருத்தமாக உணரச் செய் எனப் பெரியோர் கூறுவர். " சரியானபடி பேச முடியாது போனால் மெளனித்து விடுதலே மேலானது. எமக்குத் தொடர்பில்லாத புதிய இடத்தில் புகுந்து நியாயம் பேசுவது கூட இங்கிதமில்லாத செயல்தான். பல நேரங்களில் ஒருவரது குறைகளை அவர் எதிரிலேயே பிறர் முன்னிலையில், அவர் நெஞ்சம் புண்படும்படி பேசுகின்றோம். குறைகளைச் சொல்லித் திருத்தவும் ஒரு வழிமுறையுண்டு. தெரிந்து கொள்வோமாக!
பிறர் காரியங்கள், நடத்தைகள், பேசும் பாங்கினை உற்று நோக்கும் நாம் எங்கள் விஷயத்தில் அலட்சியமாக இருந்துவிடலாமா? பெற்ற மகன் பெரிய இடத்தில் வேலை செய்கின்ற போதும் கூட நீங்கள் அவரைக் காணப்போகும் போது, அட மகனே. என்று திடீரென உள் நுழையக்கூடாது. அந்தச் சமயம் அவர் உங்கள் மகன் என்றாலும், அவர் தொழிலுக்குரிய அதிகாரி. தெரிந்து கொள்ள வேண்டும். உங்கள் நண்பர்கள், உறவினர் எனத் எத்தகைய தரங்களில் எவர் இருப்பினும், எங்கள் நடத்தைகளால் அவர்களைச் சங்கடப்படுத்தக் கூடாது. தனிப்பட்ட ரீதியில் பழகுதல் என்பது வேறு விஷயம்.
‘இந்த மனுஷனுடன் பேசினால் இருக்கின்ற தலையீடு மேலும் கூடிவிடும்’ என்று பலர் பேசுவதைக்

Page 89
150 வாழ்லிஸ்ல் வசந்தங்கள்
கேட்டிருக்கின்றோம். அந்த மனுஷன் நாங்களாக இருக்கக் கூடாது. நல்லபடி நயமாக நடந்தால், ஒருவன் பிறரால் தெம்பூட்டப்படுகின்றான். எல்லோரும் ரசிக்கின்றபடி நடந்தால் எவரையும் அன்பால் அசைக்க முடியும்.
நாம், வேண்டப்பட்டவர்களுக்கு ஒரு உதவியை செய்ய முடியாத சந்தர்ப்பங்களும் உருவாகலாம். சொல்ல வேண்டிய முறையில் சொன்னால் அவர்கள் புரிந்து கொள்ளுவார்கள். முகத்தில் அடிப்பது போல் என்னால் இது முடியாது என்று சொல்வதிலும், பார்க்கச் செய்ய முடியாமைக்கான காரணத்தையும் முடிந்தால் கூறி, அவர்களது கோரிக்கை தொடர்பான சாதக - பாதகங்களையும் கூறலாம். பிறர் அகத்தை அதட்டும் தொனியில் பேசுவது, முன்னர் நீங்கள் அவர்களுக்குச் செய்த உதவிகளைக் கூட, அவர்களை மறக்கடிக்கச் செய்வது போலாகும். நல்லவர்கள் பொல்லாப்புக் கேட்பது கூட இவ்விட நடத்தைகளாலேயாகும்.
ஏனையோரின் தவறுகளை, அவர்கள் பற்றி அவதூறாகப் பேசப்படுவதைச் சுட்டிக் காட்டுவதற்கும் பல வழிகள் உண்டு. எமக்கு நாமே மேதாவிப்பட்டம் சூட்டிக் கொண்டு பஞ்சாயத்துப் பேசலாமா? எங்கள் தோரணை கலந்த வார்த்தைகள் பிறர் பார்வையில் வறட்சியாக, வீண் முரட்டுப் பேச்சாகி மூச்சிழந்துவிடும். சிக்கலான விஷயங்களை, நாகக்காகப் பேசி, உட்புகுத்தல் வேண்டும். பதட்டப்படாமல் பக்குவமாகப் பேசு என்பார்கள்.
மிகவும் துன்பமான விஷயத்தையும், சந்தோஷகரமான செய்தியையும் ஒரே தொனியில் சொல்லிவிட முடியுமா?

பருத்தியூர் பால. வயிரவநாதன் 151
சொல்ல வேண்டிய சங்கதிகளைப் பிறர் ஏற்றுக் கொள்ள வேண்டுமாயின் இங்கிதமாக, நாகக்காகப் பேசியாக வேண்டும். இங்கு அதிகாரமும் ஆணவ நடத்தையும் செல்லுபடியாகாது.
மிகவும் உயர்ந்த மட்டத்தில் உள்ளவர்களின் வெற்றிக்குக் கூட இயல்பாகப் பழகும் தன்மைதான் பிரதான காரணமாக அமைகின்றது. உள்ளொன்று வைத்துப் புறம் ஒன்று பேசுபவர்களின் தரம் தருணத்தில் அவர்களது காலை வாரிவிடும். பொதுவாகப் பாமர மக்கள் நகரத்தில் வந்து, அப்பாவித்தனமாகப் பேசுவதைக் கிண்டலடிக்கும் காட்சிகளை நாம் திரைப்படங்களில் பார்த்திருக்கின்றோம். அவர்களது இயல்பான சில பழக்கங்களை நாம் புரிந்து கொண்டால் இது எமக்குத் தவறாகத் தெரியாது. வெளி உலக நடப்புகள் பற்றி இவர்கள் அதிகம் புரியாமல், இருந்தாலும் கூட மனிதாபிமானத்தில் இவர்கள் மேலானவர்களே. எனவே,
நாம் கண்டு கொண்டிருக்கின்ற நபர்களுக்கேற்ப கதைத்துப் பேச தெரிந்தவர்களாகவும் இருக்க வேண்டும். எங்கள் முன் சற்று இசகுபிசகாகப் பேச முற்பட்டால் எங்கள் வார்த்தைப் பிரயோகங்களால் நாமும் அவர்களைப் புண்படவைத்தால் ஒன்றும் பயன் கிடைக்கப்போவதுமில்லை. கைக்கு வரவேண்டிய நன்மைகள் எங்கள் கனிவான, இங்கிதமான மொழிகளிலேயே தங்கியுள்ளன. வார்த்தைகள் கூட வற்றாத செல்வங்கள் என்பதை அறிவோமாக.

Page 90
152 வாழ்வியல் வசத்தங்கள்
எள்ளி நகையாடும் பழக்கம் கூட மெள்ள மெள்ள
மனிதர்களிடம் இருந்து அந்நியப்படுத்திவிடும். புரிந்து கொள்வோம்.
பத்துப் பேர் எங்களை மதிக்க வேண்டும் என்கின்றோம். தனித்திறமைகளை நாம் எப்படி வளர்த்துக் கொண்டாலும் கூட பிறரிடம் அது செல்வாக்குப் பெற வேண்டும். உங்கள் திறமைகளில் ஏதாவது சிறுபகுதி மக்களுக்குப் பயன் பெற வேண்டாமா? இங்கித இயல்பினைச் சொந்தமாக்குங்கள். உங்களைச் சுற்றிப் பத்துப் பேர் சூழ்ந்து கொள்வார்கள். கொஞ்சம் பரீட்சித்துப் பாருங்கள்.
எம்மை நாமே மெச்சி, பிறரைக் கண்டு கொள்ளாமல் விடுவது எங்கள் வளர்ச்சியை நாங்களே அறுத்துக் கொள்ளும் செயலாகும். பணமும், பகட்டுமே எங்களைச் சுற்றி நின்றால் போதும் என்று கருதுபவர்களிடம் இங்கிதமான சுபாவத்தினை சுவீகரிக்க இயலுமா?
முதலில், நாங்கள் இயல்பான, சாதாரண நிலையில் எங்களை வைத்துக் கொள்ள வேண்டும். எமது பார்வை மக்களோடு இசைவாகக் கொள்ள வேண்டும். பேசுகின்ற சில நிமிடத்துளிகளிலாவது எங்கள் பிரச்சனைகளை அப்புறப்படுத்திவிட்டு வருகின்ற நபர்களை முதன்மைப்படுத்துவோம். உங்களோடு நீங்கள் பேச எவ்வளவோ நேரம் இருக்கின்றது. தனித்திருக்கும் போது, மனதை விழிக்க வைத்து உங்களுக்கு உள்ள சகல பிரச்சினைகளையும் உரித்தெடுக்க முயற்சி செய்யலாமே. எங்களைப் பற்றி எமக்குள்ள பார்வைகளை நிதானமாக,

பருத்தியூர் பால. வயிரவநாதன் 153
சரியாக வைத்துக் கொள்வோம். அப்போதுதான் எங்கள் மனது கனிவாகும். கனிவான மனது இருந்தால் செயல்கள் இங்கிதமாக மிளிரும்.
பிறர் சந்தோஷங்களுக்காகவே நாங்கள் பிறந்தோம் என அடிக்கடி நினைவு கொண்டால் ஆத்மார்த்தமாக எமக்குள்ளே ஒரு பூரிப்பினைப் பெற்றவர்களாவோம்.
எனவே, சந்தோஷப் பறவைக்கு இங்கிதச் சிறகுகளைப் பூட்டுவோம்.
- தினக்குரல்
来

Page 91
154 வாழ்வியல் வசத்தங்கள்
Ge©UnC0ഞ്ഞ 6്കneഞ്ഞുCഞ്ഞുa/
ஒவ்வொருவருமே, தமக்குச் சாதகமான சட்டங்களை வகுத்து வாழ முடியாது. சட்டத்தை நாமே கையில் எடுக்கவும் கூடாது. நாடுகளிடையே பேணப்படும் சட்டதிட்டங்கள் பொதுவானவையாக இருப்பதனாலேயே, அங்கு ஒழுங்குமுறைகளும் கடைப்பிடிக்க இலகுவாகின்றது. நீதியான சட்டங்களின் நன்மைகள் எல்லோருக்குமே கிட்ட வேண்டும். நியாய, நீதியாக எல்லோருமே வாழ்ந்து வந்தால் நீதிமன்றங்கள் தான் எதற்கு?
LDக்கள் குற்றமிழைக்காது சட்டப்படி நடந்து கொள்வதை உறுதி செய்யவும், இயற்றப்பட்ட சட்ட விதிகளை மீறாதபடி கண்காணிக்கவுமே சட்டத்துறை உருவாயிற்று. ஆனால், இன்று சட்டத்தில் எத்தனை ஓட்டைகள் உண்டு. எப்படி செய்த குற்றங்களில் இருந்து தப்பித்துக் கொள்ள அவைகளைப் பயன்படுத்திக் கொள்ளலாம் என மூளைசாலிகள் யோசித்துக் கொண்டும் செயலாற்றிக்
 

பருத்தியூர் பால. வயிரவநாதன் 155
கொண்டும் அதில் வெற்றி கண்டும் வருகின்றார்கள். சாதாரண பாமரன் இந்தத் தில்லுமுல்லு வேலைகள் பற்றி அறிந்திருக்க மாட்டான். படித்தவர்கள்தான் இந்தக் கைங்கரியத்தைச் செய்து கொண்டிருக்கின்றார்கள். குற்றம் இழைத்தவர்களும், சில சுரண்டல் பேர்களும் காசு கையில் வந்தவுடன் இந்தச் சட்டம் பயின்றவர்களிடம் போய் சரணடைந்து, சேர்த்து வைத்திருந்தவைகளைக் கொட்டி அளக்கின்றார்கள்.
மொத்தத்தில், அறிவு பெறுதல் அநியாய முயற்சிக்காகவா என்று கேட்கத் தோன்றுகின்றது. இவை எல்லாம் நல்லதற்குத்தானா? சட்டங்கள் இயற்றப்படும் போதே, அவற்றின் பலவீன அம்சங்களைத்தான் இவர்கள் தேடுவார்களே ஒழிய, நீதி நிலைநாட்டப்பட வேண்டியமையின் அவசியத்தை உணரத் தலைப்படுவது கிடையாது. ஆதாயம் பெற அநியாயங்களுக்கு ஆட்படலாமா? சட்டம் என்பது நீதியை நிலைநாட்டல் என்பதற்காகவேயன்றி வேறு எந்த உள்நோக்கங்களுக்காகவுமானதல்ல. அது நீதியின் பாதுகாப்புக் கவசம். உலகை ஒழுங்காக இயங்கவைக்கும் சாதனம்.
ஒவ்வொரு நாட்டின் அரசும் தனது வசதிக்கேற்பவும், தேச வழமைக்கேற்பவும் சட்டங்களை அமைத்துக் கொள்கின்றது. அனைத்து அரசுகளுமே சமனான, ஒத்த நோக்குடைய நீதியான எண்ணங்களைப் பிரதிபலிப்பன எனச் சொல்லிவிட முடியாது. தமக்குச் சரியானது எனச் சொல்லி அதன்படி ஒழுகுமாறு மக்கள் கேட்கப்படுகின்றார்கள்.
நீதி அமைப்பு மாறும்போதுதான் ஒழுக்கம், சமூகக் கட்டமைப்பு என்பன சிதைவுறுகின்றன. எப்படியும் வழக்குப்

Page 92
156 வாழ்வியல் வசத்தங்கள்
பேசி ஜெயித்து விடலாம் என்கின்ற மனோநிலை குற்றமிழைப்பவர்களை மட்டுமல்ல, சாதாரணமான, நியாயப்படி நடக்கும் சிலரது மனோநிலையையும் சலனமடையச் செய்கின்றது. இனத்திற்கு இனம், மொழிக்கு மொழி, ஏன் ஜாதிக்கு ஜாதி என்கின்ற பாகுபாட்டிலேயே நீதியமைப்பு, சட்டங்கள் உலகம் பூராவும் உருவாக ஆரம்பித்துவிட்டன. வெளிப்பார்வைக்கு மட்டும் இந்தப் பாகுபாடுகள் தோன்றாமல் பூசி மெழுகிவிடப்படுகின்றன. சாதிப் பாகுபாட்டு பட்டியலே இந்தியாவில் இருப்பதை நீங்கள் அறிவீர்கள். உயர்வகுப்பு சாதியினரின் ஒடுக்குமுறையினால் இவை எல்லாம் உருவாயின எனச் சொல்லப்படுகின்றது. சாதி அடிப்படையில் கட்சிகள் அமைக்கப்படுவதும், மன்றங்கள் திறக்கப்படுவதும் அங்கு சர்வ சாதாரணமாகிவிட்டன. ஒத்தநோக்கு, ஒருமைப்பாடு என்கின்ற பார்வை, பேச்சு எல்லாமே ஒரு கண்துடைப்பு போலவே படுகின்றது. இவை எல்லாம் நடைமுறைக்கு ஒத்துவராது என்று மக்களில் பலர் கருதுகின்றார்கள்.
மக்கள் தொகை கூடக்கூடப் பிரச்சனைகளும் கூடும். பல்வேறு குழுக்கள் பிரிந்து தத்தமக்கு என பல்வேறுபட்ட அமைப்புகளை உருவாக்குகின்றன. இவை கொஞ்சம் செல்வாக்குப் பெற்றுவிட்டதுமே சலுகைகள், பதவிகளைக் கைப்பற்றி ஆட்சியில் இடம் பிடிக்க முனைகின்றன. இவை ஆரம்பத்தில் மெதுவாகத் தலையை நுழைத்து, பின்னர் வலுவாகக் கால் ஊன்றி மிக அந்தரங்கமான, நுணுக்கமான சட்டவிரோத, தில்லுமுல்லுகளில் ஈடுபட்டு நாடுகளையே குட்டிச் சுவராக்குகின்றன. மக்களுக்கு இவை தெரிவதில்லை. கிளர்ச்சியயூட்டும், போதையுட்டும் பேச்சுக்களால் மக்களை ஆவேசப்படுத்தி, நினைத்த

பருத்தியூர் பால. வயிரவநாதன் 157
காரியங்களை நிறைவேற்றிக் கொள்கின்றன. இவர்கள் மீது எந்தவித சட்ட நடவடிக்கைகளுமே எடுக்க முடிவதில்லை. எடுத்தாலும்கூட எப்படியோ தப்பிக் கொண்டு விடுகின்றன. ஆட்சியில் உள்ளவர்களுக்கு அநியாயம் புரிகின்றவர்களது தயவு தேவைப்படும் வரை எந்த நாட்டிலுமே சட்டத்தினைப் பூரணமாக அமுல்படுத்திவிட முடியுமா? சாதாரண பாமரன் பத்து ரூபாய் திருடினால் பத்து மாதம் சிறைக்குப் போகின்றான். ஆனால் செல்வாக்குள்ளவர்கள் கோடி கோடியாய்க் கொள்ளையடித்தாலும் சிறையில் கம்பி எண்ணிக் கொண்டா இருக்கின்றார்கள்? சட்டம் இந்த அநியாயத்தைப் பார்த்து மெளனமாகக் கண்ணிர் விடுவதைத் தவிர, வேறு என்ன செய்ய முடியும் என எண்ணத் தோன்றுகிறதல்லவா?
சட்டம் குற்றங்களைக் கண்டுகொள்ளாமல் விட்டு விடுவதில்லை. சகல குற்றச் செயல்களுக்குமே கடுமையான தண்டனைகள் உண்டு. குற்றமிழைக்கும் பெரிய திமிங்கலங்களை விடுத்து, குஞ்சு மீன்களை பிடிப்பதுதான் எங்குமே நடைபெறுகின்றது. இந்தச் செயல் சட்டத்தின் குற்றம் அல்ல. சட்டவிரோதப் பெருஞ்சாளிகளைச் சுற்றி மக்கள் சுற்றுவதைத் தவிர்ப்பதன் மூலமே, சட்டத்தை மக்கள் காப்பாற்ற முடியும்.
நீதிமன்றத்தில் நிறுத்தப்படும் குற்றவாளிகள் பற்றி நீதிமன்றமே முடிவு எடுக்கின்றது. இங்கு இருசாராரின் நியாயங்கள் கேட்கப்பட்டு விசாரணை செய்யப்படுகின்றன. எனினும், ஒருவன் நிச்சயமாகக் குற்றம் செய்தவன் என அறிந்தும்கூட அவர் பொருட்டு ஒருவர் வாதாடுவதும், அதற்காக இல்லாத பொல்லாத பழிகளை மற்றவர்மீது

Page 93
158 வாழ்வியல் வசந்தங்கள்
சுமத்திப் பேசுவதும் என்ன நியாயமோ தெரியவில்லை. இச் செயல் நீதிக்கே விடுக்கப்படும் சவால் போல் அல்லவா படுகின்றது? அண்ணல் மகாத்மா காந்தியடிகள் தமது வழக்கறிஞர் தொழிலையே தமது நேர்மையுடன் பொருந்திவராது எனத் தோன்றியதால் கைவிட்டு விட்டார் என்பதை அனைவருமே அறிவர். நீதியை மட்டுமே வலியுறுத்தும் வழக்கறிஞர்களின் மதிநுட்பம், வாதத்திறமைகள் தப்புச் செய்தவன் தப்பித்துக் கொள்ளவே வழி செய்வதாக அமையலாமா? குற்றங்கள் மறைப்பதற்கும், மறுக்கப்படுவதற்கும் நீதிமன்றங்கள் அமைக்கப்படுவதில்லை. இவை புனித ஸ்தலங்கள் போல் கணிக்கப்படுகின்றன. விசாரணைகள் என்பது, செய்த குற்றங்களில் இருந்து விடுபடுவதற்கல்ல. குற்றவாளிகள் குறுக்கு வழியில் தப்பித்துக் கொள்வதற்குமல்ல. சட்டவாதிகளின் அங்கிகளுக்குள் நீதியும் ஒளிந்து கொள்ளக் கூடாது. வசதி படைத்தவன் சட்டத்தை இசைவாக்கினால் இல்லாதவன் நீதியை எங்கே தேடி ஓடுவது? குற்றங்களைக் கண்டுபிடித்தலும் அவைகளை இல்லாதொழித்தலும், குற்றங்களுக்கான தண்டனை பெறச் செய்தலுமே நீதித் துறையின் முழுக் கடமையும் பொறுப்புமாகும். மக்களின் பங்களிப்பு இன்றி இவைகளைத் திருப்திகரமாக நிறைவேற்றி விடமுடியுமா என்ன?
எல்லோருமே தமக்கும், தமது குழுக்கள், கட்சிகளுக்கும் எனத் தனித்தனியே சட்டங்களை இயற்ற முடியாது. எனவே முழு நாடுமே தமக்கு என பொதுச் சட்டங்களை உருவாக்கி, நீதியை ஒருமுகப்படுத்துகின்றன. ஒரே பாதையில் செல்லும் பயணமே இலகுவானதும், சரியானதுமாகும். எனவே, சட்டத்தின் பயன் சகலருக்குமே

பருத்தியூர் பால. வயிரவநாதன் 159
கிட்ட வேண்டும். சட்டத்துறை என்பதே பெரிய இடத்துச் சமாச்சாரத்திற்கு என நினைத்து, பாமரர்களுக்கு அதன் பயன்கிட்டாது போய்விடக்கூடாது. சாதாரண நடுத்தர, வறிய குடும்பத்தைச் சேர்ந்த சகலருமே இதுபற்றித் தெளிவாகத் தெரிந்து கொள்வதுடன், இவை தொடர்பான கற்கை நெறியிலும் பிரவேசிக்க வேண்டும். முன்னர் எல்லாம் வசதி படைத்தவர்கள் மட்டுமே சட்டக்கல்வி பயின்று வந்தார்கள். இதனால் இவர்களிடம் ஒரு மேலாதிக்க நிலை இருந்து வந்திருந்தது. இவர்களே அரசியலில் குதித்து எழுச்சி பெற்றார்கள்.
ஏற்கனவே எளியவர்களை நசுக்கி, ஒடுக்கிவிடும் சுபாவம் உள்ளவர்களிடம் சட்ட அறிவு கிடைத்தால் கேட்கவா வேண்டும்? ஊரில் உள்ள மக்களிடையே கலவரங்களைத் தூண்டிவிடவும் இந்தக் குட்டைக் குழப்பும் காரியங்களால் தங்கள் சொத்துக்களைப் பெருக்கவுமே வழி அமைத்துக் கொண்டனர். இப்படிப்பட்ட ஒரு சிலர் அரசியலில் புகுந்து கொண்டதாலேயே நிலைமை மேலும் மோசமடைவதாக அமைந்தது எனலாம். இது உலகம் முழுவதிலுமே நடைபெற்ற, நடந்து கொண்டிருக்கும் சங்கதிகள்தான். மக்களிடமிருந்த தலைமைப் பொறுப்புகளைத் தாமே பிடுங்கி எடுக்க சட்ட ஞானத்தை ஆயுதமாகப் பயன்படுத்தியும் கொண்டனர்.
ஆனால், இந்த நடைமுறை ஏமாற்றுவேலைகள் தற்காலச் சூழலில் பொருந்திவரப் போவதில்லை. இன்னும் சகல தரப்பு மக்களுமே சட்டத்துறையில் நாட்டமுற்று, கல்விகற்று முன்னணிக்கு வந்துவிட்டனர். எளிதாகவே தமக்குரிய சட்ட ஆலோசனைத் தேவைகளைப் பெற்று வருகின்றனர். பெரிய குடும்பத்துப் பின்னணியில்தான்

Page 94
160 வாழ்விஸ்ல் வசந்தங்கள்
சட்டம் படிக்க, தெரிய முடியும் என்ற நிலை இல்லை. ஆயினும், சட்டம் பற்றிய முழு விழிப்பு இன்னமும் பெறப்படல் வேண்டும். இதன் மூலம் பெறப்படும் பூரண பயன்பாட்டை இவர்கள் அடைதல் வேண்டும். நீதியில் மக்கள் நம்பிக்கை கொள்ள வேண்டும். நாங்கள் நீதியாக ஒழுகாதவரை, பிறர் மீது நீதியை எதிர்பார்த்துவிட முடியுமா? ஒவ்வொரு தனிமனிதனும் நீதியை மதித்து ஒழுக வேண்டும்.
எப்படியும் வாழ்ந்து, எப்படியும் ஜெயித்து விடுவோம் என்று எண்ணாது, சட்ட வரையறுக்குள், ஒழுக்க வரம்பிற்குள் வாழுதல் வேண்டும். ஒழுக்கம் என்பதே சட்டம் காட்டும் வழிதானே? ஒழுக்கத்தை வலியுறுத்தி, கட்டுப்பாட்டின் கழக நெறியை உருவாக்கத்தானே சட்டம் உருவானது. இது மக்களை வருத்த அல்ல. அன்றியும் மக்களை அடிமைப்படுத்தவும், அச்சுறுத்தவும் அல்ல. தனிமனித சுதந்திரங்களையோ, சமூகச் சுதந்திரங்களையோ சட்டம் பறிப்பது என்ற பேச்சிற்கே இடமிருக்கக் கூடாது. இதன் பார்வை நேரியது; கூரியது. சரியாக நடந்து கொள்பவர்கள் இதைக் கண்டு அச்சமடைவதில்லை. உப்பைத் தின்றவன்தான் தண்ணிர் குடிப்பான். முழு உலகுமே நீதியின் வழி சென்றால் நீதிமன்றங்கள், காவல் துறைதான் எதற்கு?
சட்டம் - கட்டுப்பாடான சமூகக் கோட்டையைச் சமைக்கும். சட்டத்தை மதிக்கத் தெரிந்தவரை, கட்டுப்பாடுகளும் வாழ்க்கை நெறிமுறைகளும் திசை தொலைந்து அலைவதில்லை.
米
- தினகரன்

பருத்தியூர் பால. வயிரவநாதன் 161
வாழ்வியல் வசந்தங்கள்
Töib - I
நூல் வெளியீட்டின்போது ஒத்துழைப்பு
நல்கிய எனது நன்றிக்குரியவர்கள்
* திரு. பொன் வல்லிபுரம், அறங்காவலர், மயூரபதி
VK அம்மன் தேவஸ்தானம் * புரவலர் அல்ஹாஜ் ஹாசிஉமர் * திரு. தி.ஜே. விஸ்வநாதன், உயர் நீதிமன்ற
நீதியரசர் * திருமதி ரஞ்சினி விஸ்வநாதன் * திருமதி சாந்தி நாவுக்கரசன், பணிப்பாளர், இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களம் * திரு. கே. மகானந்தன், செயலாளர், இந்து சமய 666J85TJ é96oo Dëör * திருமதி திலகவதி மகானந்தன் * திரு. கே. சண்முகலிங்கம், முன்னாள் மேலதிகச்
செயலாளர், புனர்வாழ்வு அமைச்சு. * திரு. எம். பரஞ்சோதி, முன்னாள் மேலதிகச்
6&Fuj6)neriff, 85665 B6DITSFTJ &60LD&or

Page 95
162 வாழ்வியல் வசத்தங்கள்
* திரு. கே. தயாபரன், முன்னாள் செயலாளர், இந்து
FLDuu 6565Tg eleoLDötör
* திருமதி ஆர். கைலாசநாதன், முன்னாள் மேலதிகச் செயலாளர், இந்து சமய கலாசார eleoLD&ai
டாக்டர் எஸ். குணரத்தினம்
திரு. எஸ். தெய்வநாயகம், உதவிப் பணிப்பாளர், இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களம்
* திரு. வி. விக்கிரமராஜா, உதவிப் பணிப்பாளர், இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களம்
திரு. எஸ். யோகநாதன், கணக்காளர், இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களம்
திரு. நா. கோணேஸ்வரன், உதவிப் பணிப்பாளர், இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களம்
திரு. தே. கண்ணன், இந்து சமய கலாசார
அலுவல்கள் திணைக்களம் திரு. ஐ. கஜமுகன், சக்தி ரிவி திரு. ஆர். ரவீந்திரன், உதவிப் பணிப்பாளர்,
ரூபவாஹினி கூட்டுத்தாபனம் திரு. ஈஸ்வரராஜா, ரூபவாஹினி கூட்டுத்தாபனம்
திருமதி ரேலங்கி செல்வராஜா, ரூபவாஹினி
Bin LGB55 TugoTub


Page 96


Page 97
ஆதிரியரை
* திரு. வயிரவநாதன் போன்றோர் தமக்குள்ள காரணமாக இத்தகைய கட்டுரையாக்கத்தில் ஈடு ஒரு வழக்கமாகத் தொடங்கியுள்ளது. பிள்ளை அவர்களின் மன வளர்ச்சி அந்த நிலையில் இயைந்ததான மொழி நடை ஆகியவற்றிற் கவன மிக முக்கியமான ஒரு கல்விசார் பணிய வயிரவநாதனின் இப்பணி மாணவர்களிடை பழக்கத்தை வளர்ப்பதற்கு உதவ வேண்டும் என்
- பேராசிரியர் கார்த்திகேசு சிவத்தய ஓய்வுநிை * அன்பர் பாலவயிரவநாதன் எப்பொழுதும் பு ஆரவாரத்துடனும் பழகிக்கொள்ளும் பண்புடை சக்தி கைவரப் பெற்றவர். எதுவித ஆ உடனடியாகவே சொற்களைப் பாமாலைகளாக உள்ளம் கொண்ட ஆசிரியர், உயர்ந்த இ6 கொள்வதற்கு எம்மவர்கள் எவ்வாறு ஒழுகுதல் ே என்று இந்த நூலிலே தெளிவாகவும், அழுத்தம் பேராசிரியர் சி. பத்மநாதன், வரலாற் * பல்துறை ஆற்றல்மிக்க திரு வயிரவநாத பற்றியும் சிந்திப்பதன் செயற்பாடே அவரது ெ தலைப்புக்கள் ஒவ்வொன்றும் படிக்கும் ஆர்வத்ை இனிய நடையும் பொருத்தமான எடுகோள்க சிறப்புகளாகும்.
- திரு எஸ். தில்ைைநடராசா, * ஆசிரியர் சிறுவயது முதல் ஓவியம், கவிை இருந்து வந்துள்ளார். இவர் சீரையும், செம்ை சொல்லாமலே போதரும், தனிமனித ஒழுக்க ஒழுங்கு அனைத்திலும் உண்மையும் நன்மைய விரும்புகிறார். நெறி பிறழ்வுகளையும், கொடுை உள்ளம் பொருமுகிறார்.
* கருவிலேயே திருவுடையார் எனப்படுவோை சார்ந்தவராக ஆசிரியரை அடையாளம் காண்க்
- - தி * மனித வாழ்க்கை மேம்பாட்டிற்கான
அமைந்துள்ளது.
- பேரர

ாகும். திரு. யே வாசிப்புப் பது என் அவா. பி - தகைசார் 1 (uffിfluff ! மகிழ்ச்சியோடும் நூலாசிரியர் யவர். கவிதா வயிரவநாதன் யத்தமுமின்றி வழங்கும் ஆற்றல் கொண்டவர். கபடமற்ற oட்சியமுடையவர்களாகத் தம்மை ஆக்கிக் வேண்டும், எவ்வாறு செயல்படுதல் வேண்டும் Dாகவும் விளக்குகின்றார்.
றுத்துறை, பேராதனைப் பல்கலைக்கழகம் ன், சமூகத்தைப் பற்றியும் சமூக பல்துறை தாடர்ச்சியான எழுத்துருவங்கள். கட்டுரைத் த தூண்டுபவை. சொல்லாட்சியும் இயல்பான ளூம் இவரின் படைப்புக்களில் காணப்படும்
மேலதிகச் செயலாளர், கல்வி அமைச்சு த முதலான கலைகளில் ஆர்வமுடையவராக மையையும் அழகையும் விழைபவர் என்பது ம், குடும்ப ஒற்றுமை, சமூக உறவு, உலக பும் அழகும் விளங்க வேண்டும் என்று அவர் Dமகளையும், குரூரங்களையும் கண்டு அவர்
- பேராசிரியர் சி. தில்லைநாதன் ர நாம் அறிவோம், போற்றுவோம். பல்துறை ன்ேறேன். ரு. செ. யோகநாதன், மூத்த எழுத்தாளர் சீரிய சிந்தனை வெளிப்பாடாக இந்நூல்
சிரியர் சோ. சந்திரசேகரன், கல்விப் பிடம் - கொழும்புப் பல்கலைக்கழகம்